Dinamani - விருதுநகர் - https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3158485 மதுரை விருதுநகர் குடிநீர் கோரி கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை DIN DIN Sunday, May 26, 2019 12:42 AM +0530
 ராஜீவ் காந்தி தேசிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சனிக்கிழமை கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சியில் அல்லம்பட்டி, பாரதி நகர், கந்தன் தெரு, ஸ்ரீராம் தியேட்டர் சாலை, மாத்தநாயக்கன்பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் ராஜீவ் காந்தி தேசிய குடிநீர்த் திட்டத்தின் மூலம் 2 ஆயிரம் குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் குடிநீர் கட்டணமாக வீடுகள் தோறும் மாதம் ரூ.70 செலுத்தி  வருகின்றனர். 
இத்திட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாலவநத்தம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, வாரம் ஒரு முறை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாதம் ஒருமுறை கூட குடிநீர் வருவதில்லை. அதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனியார் வியாபாரிகளிடம் ஒரு குடம் குடிநீரை ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதற்காக மாதம்தோறும் ரூ. 700 வரை செலவு செய்வதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில்  அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் விநியோகிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் கூறியது: ராஜீவ் காந்தி தேசிய குடிநீர்த் திட்டம் ஊராட்சியுடன் செயல்படும் திட்டம் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்த தனிக்குழு உள்ளது. அக்குழுவை சேர்ந்தவர்கள் குடிநீர் வியாபாரம் செய்து வருவதால், அரசு திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, இத்திட்டத்திற்கு புதிதாக தலைவர் தேர்வு செய்து முறையாக குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இதையடுத்து ஊராட்சிச் செயலர் அல்போன்ஸ், இரண்டு நாள்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/குடிநீர்-கோரி-கூரைக்குண்டு-ஊராட்சி-அலுவலகத்தை-பெண்கள்-முற்றுகை-3158485.html
3158483 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல்: தொழிலாளி கைது DIN DIN Sunday, May 26, 2019 12:42 AM +0530 விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில்  மணல் கடத்திய லாரி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  2 பேர் மீது போலீஸார்  வழக்குப்பதிவு 
செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.
ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த  லாரி ஒன்றில் சோதனை செய்த போது, அரசு அனுமதி பெறாமல் 4 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 
வட்டாட்சியர் அளித்தப் புகாரின் பேரில்  கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்த பிரதீப் (28), நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த முத்தரசு (38) ஆகிய 2 பேர் மீதும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரதீப்பை  கைது 
செய்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ராஜபாளையத்தில்-மணல்-கடத்திய-லாரி-பறிமுதல்-தொழிலாளி-கைது-3158483.html
3158482 மதுரை விருதுநகர் திருச்சுழியில் கல்குவாரி உரிமையாளர் வெட்டிக் கொலை DIN DIN Sunday, May 26, 2019 12:42 AM +0530
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கல்குவாரி உரிமையாளரை சனிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சுழி அருகே ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் சாமுவேல் மரிய செல்வராஜ். இவர் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வந்தார். இந்நிலையில் இவர், சனிக்கிழமை இரவு ஆலடிபட்டியில் இருந்து திருச்சுழிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். 
அப்போது  இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், திருச்சுழி காவல்நிலையம் அருகே சாமுவேல் மரிய செல்வராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
உடனே அங்கு வந்த திருச்சுழி போலீஸார் சடலத்தை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/திருச்சுழியில்-கல்குவாரி-உரிமையாளர்-வெட்டிக்-கொலை-3158482.html
3158478 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் ரூ.5 லட்சம் மோசடி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு DIN DIN Sunday, May 26, 2019 12:41 AM +0530 விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் ரூ.5  லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்தவர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜபாளையம் முனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்கனி. இவரது உறவினர் சோழராஜபுரம் தெருவைச் சேர்ந்த புதியராஜ்.  இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்வக்கனியிடம்  ரூ.6 லட்சம் செலுத்தினால், மாதம் தோறும் ரூ.60ஆயிரம் வீதம் 20 மாதத்தில் ரூ.12 லட்சம் திருப்பித் தரப்படும் எனக் கூறியுள்ளார்.
அதனை நம்பிய செல்வக்கனி ரூ.5 லட்சம் கொடுத்தாக கூறப்படுகிறது. அதன்பின்னார் 3 மாதம் மட்டும் ரூ.20ஆயிரம் வீதம் ரூ.60ஆயிரமும், அதன் பின்னர் ரூ.30ஆயிரம் என மொத்தம் ரூ.90 ஆயிரத்தை புதியராஜ் திருப்பிக் கொடுத்துள்ளார்.  
இந்நிலையில் புதியராஜ்  ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை  திருப்பிக் கொடுக்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வக்கனி மனுத்தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மூவேந்திரன் பணத்தை மோசடி செய்ததாக புதியராஜ் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ராஜபாளையத்தில்-ரூ5-லட்சம்-மோசடி-நீதிமன்ற-உத்தரவின்-பேரில்-வழக்குப்பதிவு-3158478.html
3158477 மதுரை விருதுநகர் விருதுநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்கக் கோரிக்கை DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
விருதுநகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் பாண்டியன் நகர் செல்லும் சாலையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிகிச்சைக்காகவும், உடல் பரிசோதனைக்காகவும் தினந்தோறும் வருவது வழக்கம். 
இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு மருத்துவர் விடுமுறை எடுத்தால், மற்றொரு மருத்துவரால் அன்றைய தினம் வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்களை மற்றொரு நாளில் வருமாறு அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 
இதன் காரணமாக நோயின் தன்மை அதிகம் உள்ளவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவசர சிகிச்சைக்காக மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.  
எனவே, விருதுநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு மருத்துவர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/விருதுநகர்-இஎஸ்ஐ-மருத்துவமனையில்-கூடுதல்-மருத்துவர்-நியமிக்கக்-கோரிக்கை-3158477.html
3158476 மதுரை விருதுநகர் குமராபுரத்தில் சாலை அமைக்கும் பணி தாமதம்: பொதுமக்கள் அவதி DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
விருதுநகர் அருகே குமாரபுரத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தாமதம் அடைவதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள குமராபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. விருதுநகர் கால்நடை மருத்துவமனை வழியாக குமராபுரத்திற்கு செல்லும் சாலை பள்ளம், மேடாக இருந்தது. இதையடுத்து அச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. 
அப்போது, பெரிய ஜல்லிக்கற்கள் மட்டும் பரப்பியுள்ளனர். அதன் பின்னர் சிறிய ஜல்லி கற்கள் மற்றும் தார் ஊற்றும் பணி எதுவும் நடைபெறவில்லை.
 இப்பகுதியில் ஏராளமான பரும்பு ஆலைகள் உள்ளன. இதனால், அவ்வழியே கனரக வாகனங்கள் செல்லும் போது, தூசி பறப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால், குடம் ரூ.12 கொடுத்து வாங்கி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
அதேபோல், பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் வரவே அச்சப்படுகின் றனர். எனவே, புதிய சாலையை விரைந்து சீரமைப்பதுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமராபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/குமராபுரத்தில்-சாலை-அமைக்கும்-பணி-தாமதம்-பொதுமக்கள்-அவதி-3158476.html
3158474 மதுரை விருதுநகர் தொல்.திருமாவளவன் வெற்றி: ஸ்ரீவிலி.யில்  கொண்டாட்டம் DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அக்கட்சியினர் சனிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் துரை ரவிகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சீனியாபுரம், கீழ்ப்பட்டி, சந்தைப்பேட்டை, ரைட்டன்பட்டி பகுதிகளில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அக்கட்சியின் நகரச் செயலர் மைக்கேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சதுரகிரி, கிறிஸ்தவ சமூகநீதி பேரவையின் மாநில துணைச் செயலர் ராஜன் பாபு, அருட்பணி சத்யராஜ்  ஆகியோர் உரையாற்றினர். 
இதனைத்தொடர்ந்து  பறையடித்து, பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்வில் முற்போக்கு மாணவர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் எழில் வளவன், தியாகு, ஆரோ அருள் ஆனந்த், கீழ்ப்பட்டி ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் சுடர் கே.எஸ்.முத்து பாடல்கள் பாடினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/தொல்திருமாவளவன்-வெற்றி-ஸ்ரீவிலியில்--கொண்டாட்டம்-3158474.html
3158473 மதுரை விருதுநகர் திருச்சுழி அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
நரிக்குடி அருகே உள்ளது பள்ளப்பட்டி கிராமம். இங்குள்ள அய்யனார் அரிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகாசித்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பூஜையில் கோயில் காளைக்கு சிறப்பு மாலையைச் சூடிய பின், ஜல்லிக்கட்டுத் திடலில் முதல் காளையாக பாரம்பரிய முறைப்படி கோயில் காளை வலம் வந்தது.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சுமார் 350-க்கு மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட  மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, எவர்சில்வர் அண்டா, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு  பொருள்கள் பரிசாக வழங்கப் பட்டன. இப்போட்டியில் மாடுபிடி வீரர்கள் காயமடையவில்லை.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காயம்பட்டோருக்கு சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவும்,  தீயணைப்பு  வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 
சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியைக் நரிக்குடி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/திருச்சுழி-அருகே-கோயில்-திருவிழாவில்-ஜல்லிக்கட்டு-3158473.html
3158472 மதுரை விருதுநகர் சிவகாசி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: ஓட்டுநர் கைது DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர். 
சிவகாசி-செங்கமலப்பட்டா சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்தது. போலீஸார் அதனை நிறுத்தி  சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து,  செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராமசாமியைக் (36) கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/சிவகாசி-அருகே-மணல்-கடத்திய-டிராக்டர்-பறிமுதல்-ஓட்டுநர்-கைது-3158472.html
3158471 மதுரை விருதுநகர் சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் தரமற்ற பொருள்கள் விற்பதாகப் புகார் DIN DIN Sunday, May 26, 2019 12:40 AM +0530
சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில்நிலையங்களில் வெகுநாள்களாக நடைமேடை கடை இல்லாமல் இருந்தது.  கடந்த சில மாதங்களாக இரு ரயில் நிலையங்களிலும் நடைமேடை கடைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த கடைகளில் தரமற்ற பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியது: இதுபோன்ற நடைமேடை கடைகளில், ரயில்வேத் துறை அதிகாரிகளின் ஆதரவுடன் சந்தையில் இல்லாத பொருள்களை வாங்கி விற்பனை செய்கிறார்கள். 
  இதுகுறித்து கேள்வி எழுப்பினால், கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாகும் என பதில் கூறுவார்கள். இதனால் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களை மட்டுமே பயணிகள் வாங்கிச் செல்ல முடியும் என்ற நிலை தான் உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/சிவகாசி-திருத்தங்கல்-ரயில்-நிலையங்களில்-தரமற்றபொருள்கள்-விற்பதாகப்-புகார்-3158471.html
3158470 மதுரை விருதுநகர் கஞ்சநாயக்கன்பட்டியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை DIN DIN Sunday, May 26, 2019 12:39 AM +0530
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பெரிய கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி கிராமம். இங்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய்தான், இக்கிராமத்திற்கு நிலத்தடி நீராதாரமாக உள்ளது.  இக்கண்மாயில் 2 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில் இக்கண்மாய்க்குள்  சிலர் சிறுகுடில் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் சமூகநல ஆர்வலர்கள புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதேநிலை நீடித்தால் மேலும் புதிய ஆக்கிரமிப்புகள் தோன்றுமெனவும், அத்துடன் நிலத்தடி நீராதாரமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென  சமூகநல ஆர்வலர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/கஞ்சநாயக்கன்பட்டியில்-கண்மாய்-ஆக்கிரமிப்புகளை-அகற்றக்-கோரிக்கை-3158470.html
3158468 மதுரை விருதுநகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே 27 இல் விண்ணப்பம் வழங்கல் DIN DIN Sunday, May 26, 2019 12:39 AM +0530
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 27 ஆம் தேதி கல்லூரியில் வழங்கப்படும் என அக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு)சோ.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி.கணிதம், எம்.எஸ்.சி.கணினி அறிவியல் ஆகிய முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 27 ஆம் தேதி கல்லூரியில்  வழங்கப்படும். மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கல்லூரியில் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/அரசு-கல்லூரியில்-மாணவர்-சேர்க்கை-மே-27-இல்-விண்ணப்பம்-வழங்கல்-3158468.html
3158467 மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் அரசுக் கல்லூரிகள் அமைக்கக் கோரிக்கை DIN DIN Sunday, May 26, 2019 12:39 AM +0530
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என  தமிழக கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.தங்கவேல் சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் 6 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன.  விருதுநகர் மாவட்டம் வறட்சி பகுதியாக உள்ளதால், இந்த பகுதி மக்கள் விவசாயக் கூலியாகவும் தொழிற்சாலை சார்ந்த கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இதனால் போதிய வருவாய் இல்லாததால், தங்களுடைய குழந்தைகளை அருகில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியாமல், நெடுந்தொலைவில் உள்ள அரசுக் கல்லூரிகளை நாடவேண்டியுள்ளது. 
மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தைப் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், காலை ஒரு பிரிவு, பிற்பகல் ஒரு பிரிவு என 2 பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. 
ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழராஜகுலராமன், புதூர் கோபாலபுரம், கிழவிகுளம், செந்தட்டியாபுரம், முறம்பு, தளவாய்புரம் போன்ற பகுதிகளில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம் மகாராஜபுரம், கோட்டையூர், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், காடனேரி, அழகாபுரி போன்ற பகுதிகளிலிருந்தும் அரசு கல்லூரிகளுக்குச் செல்ல 3 பேருந்துகளில் பயணம்  வேண்டிய நிலை உள்ளது.
பிற்பகல் வகுப்புக்குச் செல்லும்  மாணவிகள் வீடு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. 
எனவே தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பெயரிலும்,  ராஜபாளையத்தில் அய்யனார் பெயரிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது தொழில் நுட்பக் கல்லூரி தொடங்க  வேண்டும் என  கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம்-பகுதியில்-அரசுக்-கல்லூரிகள்-அமைக்கக்-கோரிக்கை-3158467.html
3158466 மதுரை விருதுநகர் விருதுநகர் நகராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை  குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் அவதி DIN DIN Sunday, May 26, 2019 12:39 AM +0530
விருதுநகர் நகராட்சிப் பகுதியில்  10 நாள்களுக்கு ஒரு முறை மட்டும் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 73 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம்  20 லட்சம் லிட்டர், ஆனைக்குட்டம் நீர்த் தேக்க கிணறுகளிலிருந்து 5 லட்சம் லிட்டர் மற்றும் ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்திலிருந்து 7 லட்சம் லிட்டர் என மொத்தம் 32 லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் கிடைக்கிறது. ஆனால் விருதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் 50 லட்சம் லிட்டர் வரை குடிநீர் தேவைப்படுகிறது. 
தற்போது, ஆனைக்குட்டம் அணை வறண்டதால் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. அதேபோல், தாமிரவருணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டிய நிலையில், பாதியளவு மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஒண்டிப்புலி நீர்தேக்கம் மூலம் குடிநீர் தேவையை நகராட்சி நிர்வாகம் ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.
இதன் காரணமாக விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் 7  முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் முழுமையான குடிநீர் வழங்கக்கூடிய நிலை இருந்தும், அதை சேமித்து வைக்க பெரிய அளவிலான குடிநீர் தொட்டிகள் இல்லை.  
தற்போது, கல்லூரி சாலை, அகமது நகர் ஆகிய பகுதிகளில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 பெரிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொட்டிகளுக்கான குழாய் இணைப்பு வழங்கப்படாததால் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/விருதுநகர்-நகராட்சியில்-10-நாள்களுக்கு-ஒருமுறை--குடிநீர்-விநியோகம்-பொதுமக்கள்-அவதி-3158466.html
3158465 மதுரை விருதுநகர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி  போக்ஸோ சட்டத்தில் கைது DIN DIN Sunday, May 26, 2019 12:39 AM +0530 திருத்தங்கலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்ஸோ' சட்டத்தின் கீழ் அச்சுத் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த அச்சுத் தொழிலாளி லோகநாதன்(59).
  இவர் அப்பகுதியில் உள்ள 15 வயது பள்ளி மாணவிக்கு வீடுபுகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லோகநாதனை போக்ஸோ' சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/மாணவிக்கு-பாலியல்-தொந்தரவு-தொழிலாளி--போக்ஸோ-சட்டத்தில்-கைது-3158465.html
3158463 மதுரை விருதுநகர் ராமானுஜபுரம் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Sunday, May 26, 2019 12:38 AM +0530
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ராமானுஜபுரம் கிராமத்தில் பயனற்ற நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமானுஜபுரம் கிராமத்தில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் தொடர்ந்து 6 மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாமலே உள்ளது. இதனால் சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் திறந்தவெளிப் பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. 
இந்நிலையில் உரிய பராமரிப்பின்றி சுகாதார வளாகத்தின் சுவர்கள் மற்றும் தரைத்தளம் ஆகியவை சேதமடைந்து வருகின்றன. அதனால் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பெண்கள், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
எனவே மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுத்து ராமானுஜபுரம் மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ராமானுஜபுரம்-மகளிர்-சுகாதார-வளாகத்தை-சீரமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3158463.html
3158462 மதுரை விருதுநகர் ஸ்ரீவிலி. மத்திய  கூட்டுறவு வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து  சேதம் DIN DIN Sunday, May 26, 2019 12:38 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைக்குளம் தெருவில்  மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
  இந்த வங்கியின் பின்புறப் பகுதியில் உள்ள தெருவில் குப்பைக்கழிவுகளில் சிலர் தீ வைத்துள்ளனர். எரிந்து கொண்டிருந்த தீ, எதிர்பாராதவிதமாக திடீரென வங்கிக்குள் பரவியது. இதனால் தீ மளமளவென பிடித்து எரியத் தொடங்கியது.
 இதில்  ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையில் தீ பரவி, முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் தப்பியது.  
இதுகுறித்து தகவறிந்து அங்கு வந்த  ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ஸ்ரீவிலி-மத்திய--கூட்டுறவு-வங்கியில்-தீ-விபத்து-ஆவணங்கள்-எரிந்து--சேதம்-3158462.html
3158460 மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயணிகள் நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Sunday, May 26, 2019 12:37 AM +0530
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மூவரை வென்றான் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சீல் நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நிழற்குடைக்குள் செல்லவே அச்சப்படுகின்றனர். 
அதனால் இந்த நிழற்குடையை  சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/26/ஸ்ரீவில்லிபுத்தூர்-அருகே-பயணிகள்-நிழற்குடையை-சீரமைக்கக்-கோரிக்கை-3158460.html
3158136 மதுரை விருதுநகர் சின்னவள்ளிக்குளத்தில் சாலையோர மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கக் கோரிக்கை DIN DIN Saturday, May 25, 2019 07:24 AM +0530 விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் இத்திட்டத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சின்னவள்ளிக்குளம் செல்லும் சாலையின் இருபுறமும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடுப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறாததால் இப்பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏராளமான மரக்கன்றுகள் வறட்சியால் கருகி வருகிறது. எனவே இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க  ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/சின்னவள்ளிக்குளத்தில்-சாலையோர-மரக்கன்றுகளுக்கு-தண்ணீர்-ஊற்றி-பராமரிக்கக்-கோரிக்கை-3158136.html
3158135 மதுரை விருதுநகர் தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Saturday, May 25, 2019 07:24 AM +0530 சாத்தூர் அருகே நென்மேனி- வண்ணிமடை இடையே வைப்பாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பாலம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் கட்டப்பட்ட 3 மாதத்தில் இடிந்தது. இதையடுத்து வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி, நீராவிபட்டி, கலிங்கபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்த பாலம் இடிந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிக்கு செல்வோர் அனைவரும் பாலத்தின் கீழே வைப்பாற்றில் பாதை அமைத்து வண்ணமடை உள்ளிட்ட கிராமத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் நென்மேனியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி உள்ளிட்ட கிராமத்திலிருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
வைப்பாற்றில் தண்ணீர் செல்லாததால் பாலத்தின் கீழே நடந்து செல்ல முடிகிறது.  தண்ணீர் சென்றால் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/தரைப்பாலத்தை-சீரமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3158135.html
3158134 மதுரை விருதுநகர் திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு DIN DIN Saturday, May 25, 2019 07:23 AM +0530 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் வீரசூரன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இதையொட்டி கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வாடிவாசல் மூலம் முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகங்கை, மானாமதுரை ,விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 200-க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடிவீரர்களுக்கு பீரோ, கட்டில், எவர்சில்வர் அண்டா, வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/திருச்சுழி-அருகே-ஜல்லிக்கட்டு-3158134.html
3158133 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே இலவச மருத்துவ முகாம் DIN DIN Saturday, May 25, 2019 07:23 AM +0530 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு சோழபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
தனியார் அறக்கட்டளை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமை பஞ்சாலை துணைத் தலைவர் எஸ்.ராமசுப்பு, பொது மேலாளர் லட்சுமணன், மனிதவள மேலாளர் ஆர்.ரமேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 
முகாமில் 350-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும்  ஈசிஜி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 
முகாம் ஏற்பாடுகளை தனியார் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் மணிகண்டன், களப்பணியாளர்கள் சத்யா, கனகலட்சுமி, கிராம வழிகாட்டுநர் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/ராஜபாளையம்-அருகே-இலவச-மருத்துவ-முகாம்-3158133.html
3158132 மதுரை விருதுநகர் கிருஷ்ணர் ரத யாத்திரை ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை DIN DIN Saturday, May 25, 2019 07:22 AM +0530 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கிருஷ்ணர் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை வந்தது.
வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் 100 ஆவது திவ்ய தேசம் நேபாளத்தில் முக்திநாத் அருகே உள்ள தாமோதர குண்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு எளிதாக சென்று தரிசிக்க முடியாது. குதிரை அல்லது ஹெலிகாப்டர் மூலம் தான் 
செல்ல முடியும்.  
இங்கு சக்கர, தாமோதர தீர்த்தங்கள் உள்ளன. 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் ஒருவர்தான் இந்த திவ்ய தேசம் சென்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
இங்கு வைணவப் பெரியோர்கள்,  ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலையை எழுந்தருளச் செய்ய வேண்டி முடிவு செய்தனர். இதையடுத்து கிருஷ்ண பகவானின் திருஉருவச்சிலை கொண்ட ரத யாத்திரை கடந்த மே மாதம் மேல்கோட்டையில் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திவ்ய தேசங்களுக்கு சென்று 
வருகிறது. 
இந்த யாத்திரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்தது. இந்த ரத யாத்திரையில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை யிலுள்ள சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி சென்டு அலங்கார ஜீயர் சுவாமிகள், அமெரிக்காவைச் சேர்ந்த யதீந்திரா மகா தேசிக ஜீயர் சுவாமிகள், கோரக்பூர் பராங்குச ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்தனர்.
இந்த ரத யாத்திரையை கண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து ரதத்துடன் வந்த ஜீயர் சுவாமிகள் ஆண்டாள் கோயில் மற்றும் வடபத்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். 
இந்த ரதயாத்திரை 45 நாள்கள் இந்தியா முழுவதும் உள்ள திவ்ய தேசங்கள் சென்று இறுதியில் ஜூலை 7ஆம் தேதி நேபாளத்தில் உள்ள தாமோதர குண்டம் என்ற இடத்தை அடைந்து, அங்கு ரதத்தில் வைத்து எடுத்து வரப்படும் கிருஷ்ண பகவானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 
நேபாளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இந்த கிருஷ்ணனின் சிலையை பக்தர்கள் அனைவரும் சென்று தரிசனம் செய்வது மிகவும் கடினம். எனவே ஒவ்வொரு திவ்யதேசத்திற்கும் கொண்டு சென்று அங்கு உள்ள பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ரத யாத்திரை மேற்கொண்டுள்ளதாக ஜீயர் சுவாமிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/கிருஷ்ணர்-ரத-யாத்திரை-ஸ்ரீவில்லிபுத்தூர்-வருகை-3158132.html
3158131 மதுரை விருதுநகர் விருதுநகர் மக்களவைத் தொகுதி 26 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு DIN DIN Saturday, May 25, 2019 07:22 AM +0530 விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 28 பேர்களில், காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்களை தவிர்த்து 26 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
 விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் முதலான ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 14,59,316 வாக்காளர்கள் உள்ளனர். 
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10,75,925 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கு பெற்றவர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும். எனவே ஒரு வேட்பாளர் 1,79,320 வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் கிடைக்கும். அந்த வகையில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி 3,16,329 வாக்குகள் பெற்றதன் மூலம் அவருக்கு டெபாசிட் கிடைத்துள்ளது. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட வாக்குகளை பெறாததால் டெபாசிட் இழந்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/விருதுநகர்-மக்களவைத்-தொகுதி-26-வேட்பாளர்கள்-டெபாசிட்-இழப்பு-3158131.html
3158130 மதுரை விருதுநகர் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது DIN DIN Saturday, May 25, 2019 07:22 AM +0530 திருத்தங்கலில் முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல்  சத்யா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் செல்வகணேஷ் (23). கூலி தொழிலாளி. இவரது  தந்தை ராஜ்குமாரை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலா ஊரணிப் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் கொலை செய்தாராம். இதனால் செல்வகணேஷுக்கும், முத்து கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த செல்வகணேஷை, முத்துக்கிருஷ்ணன், தனது நண்பர்களான கார்த்திக், சூர்யா, பாலமுருகன் உள்ளிட்ட 5 பேருடன் இணைந்து கொலை செய்து கழிப்பறை தொட்டியில்  வீசிச் சென்றனராம்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருத்தங்கல் - விருதுநகர் சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நகராட்சி அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆலா ஊரணிப் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (29) மற்றும் அவரது நண்பர் சூர்யா (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் செல்வகணேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்களாம். இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/கூலி-தொழிலாளி-கொலை-வழக்கில்-2-பேர்-கைது-3158130.html
3158129 மதுரை விருதுநகர் சாரத்திலிருந்து தவறி விழுந்து வர்ணம் பூசும் தொழிலாளி பலி DIN DIN Saturday, May 25, 2019 07:22 AM +0530 சிவகாசியில் சாரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த வர்ணம் பூசும் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி திருமேனிநகரைச் சேர்ந்தவர் ஞானசேகர் (48). வர்ணம் பூசும் தொழிலாளியான இவர் கடந்த 21 ஆம் தேதி சிவகாசி காத்தநாடார் தெருவில் உள்ள செண்பக்குட்டி என்பவரது வீட்டில் கம்பால் சாரம் அமைத்து சுவரில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஞானசேகர் மகன் பியூலா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/சாரத்திலிருந்து-தவறி-விழுந்து-வர்ணம்-பூசும்-தொழிலாளி-பலி-3158129.html
3158128 மதுரை விருதுநகர் நகராட்சி வணிக வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிக்கை DIN DIN Saturday, May 25, 2019 07:21 AM +0530 சாத்தூரில் செயல்படாமல் உள்ள நகராட்சி வணிக வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் காமராஜபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த கட்டடத்துக்கான வாடைகையும் குறைவாகவே இருந்தது வந்தது. இருப்பினும் நகராட்சி நிர்வாகம் கடைகளை முறையாகப் பராமரிக்காததால் கட்டடம் அனைத்தும் சிதலமடைந்தன. இதனால் பெரும்பாலான கடைகள் காலி செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்த ஒரு சில கடைகளுக்கும் வாடகை உயர்த்தப்பட்டதால் அந்த கடைகளின் உரிமையாளர்கள் வாடைகை செலுத்தாமல் கடைகளை காலி செய்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் இந்த வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து வணிக வளாகம் மிகவும் சிதிலமடைந்தது. மேலும் இப்பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் செய்யப்படும் தீப்பெட்டிகள் உலர வைக்கும் இடமாகவும், தெருக்களில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு மணல், கற்கள், செங்கல் கொட்டி வைக்கும் இடமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வணிக வளாக கட்டடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/நகராட்சி-வணிக-வளாகத்தை-செயல்பாட்டிற்கு-கொண்டுவரக்-கோரிக்கை-3158128.html
3158127 மதுரை விருதுநகர் கள்ளிக்குடி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் மாற்றம்: விருதுநகரில் எரிவாயு உருளை கிடைக்காமல் 250 குடும்பங்கள் தவிப்பு DIN DIN Saturday, May 25, 2019 07:21 AM +0530 விருதுநகர் வாடிக்கையாளர்கள் கள்ளிக் குடிக்கு மாற்றப்பட்டதால் பதிவு செய்து 15 நாள்களாகியும் எரிவாயு உருளை பெற முடியாமல் சுமார் 250 குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் எரிவாயு உருளை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்ஜிஓ காலனி, ஆர்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தனியார் அரசு உதவி பெறும் பெண்கள் கல்லூரி எதிரே உள்ள எரிவாயு உருளை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ள 250 பேரை மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் எரிவாயு உருளை நிறுவனத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு மாற்றிவிட்டனர். மேலும் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லையாம். 
விருதுநகருக்கும், கள்ளிக்குடிக்கும் சுமார் 15 கி.மீ., தூரம் என்பதால், அங்கிருந்து விருதுநகருக்கு எரிவாயு உருளை கொண்டு வர தயங்குகின்றனர். எரிவாயு உருளை வேண்டி வாடிக்கையாளர்கள் பதிவு செய்து 15 நாள்கள் கடந்தும் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டால், ஆள்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நாளை வரும் எனக் கூறி ஒவ்வொரு நாளும் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு முறையான பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். இல்லையென்றால் கள்ளிக்குடிக்கு நேரடியாக வந்து பெற்று செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். இதன் காரணமாக பதிவு செய்து பல நாள்கள் கடந்தும் எரிவாயு உருளை கிடைக்காமல் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேநேரம் எரிவாயு உருளை கொண்டுவருபவர், தான் நீண்ட தூரத்திலிருந்து வருவதால் உரிய கட்டணத்தை விட ரூ. 100 கூடுதலாகக் கேட்பதாகவும் வாடிக்கை யாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே ஏற்கெனவே விருதுநகரில் செயல்பட்டு வந்த தனியார் எரிவாயு உருளை நிறுவனத்தின் மூலம் எரிவாயு உருளைகளை வழங்க மாவட்ட வழங்கல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார் கூறுகையில், கள்ளிக்குடியில் புதிதாக எரிவாயு உருளை நிறுவனம் தொடங்கி இருப்பதால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பெயரை அந்த நிறுனவத்துக்கு மாற்றி இருக்கலாம். இதுகுறித்த தகவல் தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே இந்த வாடிக்கையாளர்களை மீண்டும் விருதுநகரில் உள்ள  தனியார் எரிவாயு உருளை நிறுவனத்திற்கு உடனடியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/கள்ளிக்குடி-நிறுவனத்துக்கு-வாடிக்கையாளர்கள்-மாற்றம்-விருதுநகரில்-எரிவாயு-உருளை-கிடைக்காமல்-250-குடு-3158127.html
3158126 மதுரை விருதுநகர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி DIN DIN Saturday, May 25, 2019 07:21 AM +0530 விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ப.மாணிக்கம் தாகூர் 1,54, 554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணம் பணி வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் தபால் வாக்குகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கான வாக்குகளை ஸ்கேன் செய்தபோது இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாக்கு எண்ணும் பணியானது நள்ளிரவு 1.30 வரை நீடித்தது. 10 ஆயிரத்து 584 தபால் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அதில் 1191 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன. இதன் மூலம் 9393 தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. நோட்டாவுக்கு 17 ஆயிரத்து 292 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதன் இறுதிச் சுற்றில் மாணிக்கம் தாகூர் ( காங்கிரஸ்) 4,70,883 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16, 329 வாக்குகளும்,  அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் 1,07,615 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி 57,129 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழித் தேவன் 53,040 வாக்குகளும் பெற்றனர். இதில் 2 ஆவது இடம் பெற்ற தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை விட காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார். இவருக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் அ.சிவஞானம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நள்ளிரவு வழங்கினார். அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு (திருச்சுழி), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர்), காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/25/விருதுநகர்-மக்களவைத்-தொகுதியில்-154554-வாக்குகள்-வித்தியாசத்தில்-காங்கிரஸ்-வெற்றி-3158126.html
3157364 மதுரை விருதுநகர் விருதுநகர் மக்களவைத் தொகுதி: காங். வேட்பாளர் வெற்றிமுகம் DIN DIN Friday, May 24, 2019 07:27 AM +0530 விருதுநகர்  மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ப. மாணிக்கம் தாகூர் 1,49,010 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 
  விருதுநகர் மக்களவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி,  அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மொத்தம் 14,80, 600 வாக்காளர்கள் உள்ளனர். 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 18 இல் தேர்தல் நடைபெற்றது. 
அதில் 10,66,208 வாக்காளர்கள் வாக்களித்தனர். 72.01 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு, ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. 
இந்த நிலையில், வியாழக்கிழமை வாக்கு எண்ணும் பணி  நடைபெற்றது. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. 252 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  
முதல் சுற்றில் காங்.,  வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் 6715 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இரவு 8 மணி அளவில் 22 ஆவது சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது காங். வேட்பாளர் ப. மாணிக்கம் தாகூர் 4,62, 882 பெற்று இருந்தார்.  
தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,13,872, அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் -1,06,470, நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழிதேவன் 52,383, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி 56,612 வாக்குகள் பெற்றிருந்தனர். தேமுதிக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1,49,010 வாக்குகள் கூடுதல் பெற்றிருந்தார்.  இதையடுத்து தபால் வாக்குகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பிறகு இறுதிச் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு வரையில் வாக்கு எண்ணும் பணி நீடித்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/விருதுநகர்-மக்களவைத்-தொகுதி-காங்-வேட்பாளர்-வெற்றிமுகம்-3157364.html
3157328 மதுரை விருதுநகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு: வெம்பக்கோட்டை அணையை தூர்வாரக் கோரிக்கை DIN DIN Friday, May 24, 2019 01:23 AM +0530 சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணையை தூர்வார வேண்டும் என சிவகாசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சிவகாசி நகரிலிருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை அணை. 7 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையின் நீர்ப் பிடிப்பு பகுதி சுமார் 370 சதுர கி.மீ. ஆகும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் மிதமான மழைக்கு கூட அணைக்கு நீர்வரத்து இருந்தது. காலப்போக்கில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், நீர் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பாலும், வரத்துக் கால்வாய் மற்றும் அணைப் பகுதி தூர்வாரப்படாததாலும், அணையில் தண்ணீர் தேங்குவதில்லை. 
 கடந்த பத்து ஆண்டுகளில் மழைப் பொழிவு சராசரியாக இருந்த கால கட்டத்திலும் 4 இல் ஒரு பங்கு கொள்ளளவு கூட நீர் நிரம்பவில்லை. இந்த குறையை தீர்க்க முதல் கட்டமாக அணையின் நீர்வரத்துக் கால்வாய் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பகுதி நீர்ப் பிடிப்பு பகுதியின் தொடக்கமாகும். இப்பகுதியிலிருந்து, வெம்பக்கோட்டை அணைவரை வரத்துக் கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் அணைப்பகுதியியிலும் தூர்வார வேண்டும். அணையின் மதகுகளை சீரமைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் மழைக்காலங்களில் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் சிவகாசி நகரின் குடிநீர் பிரச்னை தீருவதற்கு வாய்புள்ளது. எனவே அணைப்பகுதி மற்றும் நீர்வரத்துக் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/நீர்ப்பிடிப்பு-பகுதிகளில்-ஆக்கிரமிப்பு-வெம்பக்கோட்டை-அணையை-தூர்வாரக்-கோரிக்கை-3157328.html
3157327 மதுரை விருதுநகர் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, May 24, 2019 01:23 AM +0530 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 32 ஆவது வார்டுக்குள்பட்ட ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலுள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடைக் கட்டடத்தைச் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
 அருப்புக்கோட்டையில் 32 ஆவது வார்டுக்குள்பட்ட ராமசாமிபுரம் பேருந்துநிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாததால் இக்கட்டடத்தின் இடப்பக்கச்சுவரானது கட்டடத்திலிருந்து அரையடி பிளவுபட்டு எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. இதுதவிர பயணிகள் அமர்வதற்கான சிமெண்டாலான பலகைகளும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. மேற்கூரையும் விரிசல் கண்டுள்ளதால் இந்நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுவிட்டது. 
எனவே இக்கட்டடத்தை முற்றிலும் அகற்றிவிட்டுப் புதிய நிழற்குடைக் கட்டடம் அமைக்குமாறு  அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது. எனவே ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலுள்ள சேதமடைந்த நிழற்குடைக் கட்டடத்தை அகற்றிவிட்டு அங்குப் புதிய நிழற்குடைக் கட்டம் அமைக்கவேண்டுமென மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/பயணிகள்-நிழற்குடையை-சீரமைக்க-வலியுறுத்தல்-3157327.html
3157324 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதிய சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை DIN DIN Friday, May 24, 2019 01:22 AM +0530 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. உடன் அக்கட்டத்திற்குத் தேவையான மின் மோட்டார், மின் இணைப்பு ஆகியவையும்  தயாரான நிலையில்  பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் முறையான பராமரிப்பும் இல்லாததால் இக்கட்டடம் படிப்படியாகச் சேதமடைந்து வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டு அதை  விரையம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கென இந்த சுகாதார வளாகத்தை உடனடியாகத் திறந்து வைக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/அருப்புக்கோட்டை-புதிய-பேருந்து-நிலையத்தில்-புதிய-சுகாதார-வளாகத்தை-திறக்கக்-கோரிக்கை-3157324.html
3157320 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Friday, May 24, 2019 01:22 AM +0530 ராஜபாளையம் அருகே முறம்பு சோழபுரத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், இரு கால யாக பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கருமாரி அம்மனுக்கும் கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/ராஜபாளையம்-அருகே-கோயில்-கும்பாபிஷேகம்-3157320.html
3157317 மதுரை விருதுநகர் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி: 456 வாக்குகள் வித்தியாசம் DIN DIN Friday, May 24, 2019 01:21 AM +0530 சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த எஸ்.ஜி. சுப்பிரமணியன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  
இதில் அதிமுக சார்பில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், திமுக சார்பில் சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ்.ஜி. சுப்பிரமணியன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுந்தரராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ் குமார் உள்பட 30  வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி  நடைபெற்றது. 
இதற்கான வாக்குகள் எண்ணும் பணி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. 
இதில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவற்றின் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ். ஆர். ராஜவர்மன் 76,977 வாக்குகள் 
பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக திமுக வேட்பாளர் சீனிவாசன் 76,521 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரை விட 456 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்: 
மொத்த வாக்காளர்கள்- 2,36,696, 
பதிவான மொத்த வாக்குகள்: 1,86,860.  
எம். எஸ். ஆர். ராஜவர்மன் (அதிமுக)- 76,977
சீனிவாசன் (திமுக) -76,521 
எஸ்.ஜி. சுப்பிரமணியன் 
(அமமுக)-12,511
சுரேஷ்குமார் (நாம் தமிழர்)- 5,042
சுந்தரராஜ் (மக்கள் நீதி 
மய்யம்)- 3,934
நோட்டா :1,728

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/சாத்தூர்-சட்டப்பேரவைத்-தொகுதி-இடைத்தேர்தலில்-அதிமுக-வெற்றி-456-வாக்குகள்-வித்தியாசம்-3157317.html
3157312 மதுரை விருதுநகர் கலசலிங்கம் பல்கலை.யில் 37 ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை DIN DIN Friday, May 24, 2019 01:21 AM +0530 விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை, 37 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 
2018 மார்ச் முதல் 2018 டிசம்பர் வரையில் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்தல், புத்தகம் எழுதுதல், காப்புரிமை பெறுதல் போன்றவற்றில் ஈடுபட்ட ஆராய்ச்சி  மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில், சிங்கப்பூர், நேஷனல் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சியாளர் சுந்தரராஜன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.நாகராஜ், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப் பேசினர். 
இதில் சுந்தரராஜன் பேசுகையில், இந்தியாவிலேயே ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் உள்ளது. இதனால் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சியாளர்களின் வருகை அதிகரிக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், 37 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகையை பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த் வழங்கினார். அவர் பேசுகையில், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை, ஆராய்ச்சியில் பங்கு, பல்கலைக்கழக இதர நிர்வாகச் செயல்பாடுகளில் பங்கு ஆகிய மூன்று நோக்கங்களில் செயல்பட்டு தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்றார். 20 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட கே.சங்கர் ரூ.2,85,000, தேவேந்திரன் ரூ.75,000,  ஆக்னஸ் இதயச் செல்வி ரூ.50,000 பெற்றது குறிப்பிடத்தக்கது. 
பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை தலைவர் பாலமுரளி வரவேற்றார்.  அனைத்துத் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/கலசலிங்கம்-பல்கலையில்-37-ஆராய்ச்சி-மாணவர்களுக்கு-கல்வி-உதவித்தொகை-3157312.html
3157310 மதுரை விருதுநகர் ராஜபாளையம் காந்திநகரில் வாருகால் வசதி செய்து தரக் கோரிக்கை DIN DIN Friday, May 24, 2019 01:20 AM +0530 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்திநகர் பகுதியில் வாருகால் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அந்தத் தெருக்களில் வாருகால் வசதி செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. 
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: 
எங்கள் தெருக்களில் முறையான வாருகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் தெருக்களில் ஓரம் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. 
மேலும் உரிய வாருகால் வசதி செய்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, காந்தி நகரில் உரிய வாருகால் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/ராஜபாளையம்-காந்திநகரில்-வாருகால்-வசதி-செய்து-தரக்-கோரிக்கை-3157310.html
3157309 மதுரை விருதுநகர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது DIN DIN Friday, May 24, 2019 01:20 AM +0530 விருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது 2 இயந்திரங்கள் பழுதானது.
 விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9.05 வரை தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை. மேலும், சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ண முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இறுதியில் ஒப்புகை சீட்டு இயந்திரம் மூலம் சரிபார்க்கப்படுவதாக உதவி தேர்தல் அலுவலர் அறிவித்தார்.  
பத்திரிகையாளர்கள் முற்றுகை: பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த எஸ்இடி தொலைக்காட்சி செயல்படாததால் வாக்கு  எண்ணிக்கை குறித்து தகல்களை அறிய முடியவில்லை. மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதியும் இல்லை. இதனால் பத்திரிகையாளர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் இருந்த அறையை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து அவர், மக்கள்  தொடர்பு அலுவலரை அழைத்து பிரச்னையை தீர்க்க அறிவுறுத்தினார்.
தேமுதிக வேட்பாளர் புகார்: திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி எண்-293 இல் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரத்தில் வாக்குச்சீட்டுகள் இல்லாதது தெரியவந்தது.  மாதிரி வாக்குப்பதிவுக்கான இயந்திரம் தவறுதலாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
 இது குறித்து தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையத்தில் பணி புரிந்த அலுவலர்கள் மீது விசாரணை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/24/விருதுநகர்-மக்களவைத்-தொகுதியில்-2-வாக்குப்-பதிவு-இயந்திரங்கள்-பழுது-3157309.html
3156886 மதுரை விருதுநகர் திருத்தங்கலில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை DIN DIN Thursday, May 23, 2019 06:53 AM +0530 திருத்தங்கலில் முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் செல்வகணேஷ் (23). கூலி தொழிலாளியான இவர் மீது திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்வகணேஷ் தந்தை ராஜ்குமாரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலாஊருணிப் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்  கொலை செய்தாராம். இதனால் செல்வகணேஷுக்கும், முத்துகிருஷ்ணனுக்கும் விரோதம் இருந்து வந்ததாம். 
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி செல்வகணேஷ், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் அமர்ந்து மது அருந்திவிட்டு, எனது தந்தையை கொலை செய்தவர்களை விடமாட்டேன் எனக் கூறிக் கொண்டே இருந்தாராம். அப்போது அப்பகுதிக்கு வந்த முத்துகிருஷ்ணன் தனது நண்பர்களான கார்த்தி, சூர்யா, பாலமுருகன் உள்ளிட்ட 5 பேருடன் இணைந்து செல்கணேஷை கம்பாலும், கத்தியாலும் அடித்து, கழிப்பறை தொட்டிக்குள் வீசி சென்றனராம். இந்நிலையில் புதன்கிழமை கழிப்பறை தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று  தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது கழிப்பறை தொட்டிக்குள் ஆண் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் செல்வகணேஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து செல்வகணேஷ் சகோதரர் காளீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/திருத்தங்கலில்-கூலி-தொழிலாளி-அடித்துக்-கொலை-3156886.html
3156885 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டையில் கோயில் தெப்பக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு DIN DIN Thursday, May 23, 2019 06:53 AM +0530 அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள இக்கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் தெப்பக்குளம் அக்கோயிலிலிருந்து சுமார் 30 அடி தொலைவில் உள்ளது. இத்தெப்பக்குளத்தில் மழைநீருடன் கழிவுநீர் சேர்வதைத் தடுக்க பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 ஆனால் அதேசமயம் சிலர் இத்தெப்பக்குளத்தில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டு வருவதைக் கண்ட பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 
எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை வேண்டுமென பக்தர்கள்  பலமுறை கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  எனவே கோயிலின் புனிதத்தைக் காக்கும் விதமாக தெப்பக்குளத்தைச் சுற்றிலும் உரிய வேலி அமைத்துப் பாதுகாப்பதுடன், 
குப்பைகள் கொட்டாதீர் எனும் எச்சரிக்கைப் பலகையும் வைக்க வேண்டுமென மீண்டும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/அருப்புக்கோட்டையில்-கோயில்-தெப்பக்குளத்தில்-கொட்டப்படும்-குப்பைகளால்-சுகாதாரக்-கேடு-3156885.html
3156884 மதுரை விருதுநகர் விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி DIN DIN Thursday, May 23, 2019 06:52 AM +0530 விருதுநகர், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் நகரில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலம்மாள் நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் போடப்பட்ட தார் சாலை தற்போது குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு மற்றும் சாலைகளில் தேங்கி விடுவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் ஒரு சில தெரு விளக்குகள் மட்டுமே எரிவதால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். அதேபோல் இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் தனியார் வாகனங்கள் மூலம் விற்கப்படும் தண்ணீரை குடம் ரூ. 10-க்கு விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பிற உபயோகத்திற்கு டிராக்டரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ரூ. 500 விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் சிறிய நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை  ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகித்து வந்தனர். தற்போது அங்கிருந்தும் தண்ணீர் பெற முடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்திற்கு புதன்கிழமை சென்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமைக்குள் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/விருதுநகரில்-குடிநீர்-தட்டுப்பாடு-பொதுமக்கள்-அவதி-3156884.html
3156883 மதுரை விருதுநகர் விருதுநகரில் முன்னறிவிப்பின்றி 7 மணிநேரம் ரயில்வே கேட் மூடல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு DIN DIN Thursday, May 23, 2019 06:52 AM +0530 விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்புப் பணிக்காக எவ்வித முன்னறிவிப்பின்றி புதன்கிழமை சுமார் 7 மணி நேரம் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் - சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு தினமும் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கிடையே ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இவ்வழியாக ரயில்கள் கடந்து செல்லும் போது அந்த பாதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை அடைக்கப்படும். 
இந்நிலையில் தண்டவாள பராமரிப்புக்காக எவ்வித முன்னறிவிப்பின்றி இந்த ரயில்வே கேட் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் இதுகுறித்த விவரம் தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் மாற்று வழியில் திரும்பிச் சென்றனர். 
இதையடுத்து பிற்பகலுக்கு பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அணுகுசாலையில் தடுப்புக் கம்பி வைத்தனர். 
ஆனால் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற ஏராளமான வாகன ஓட்டிகள் எம்ஜிஆர் சாலை வழியாக நான்குவழிச் சாலை சென்று பிற பகுதிகளுக்கு செல்ல நேர்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர். 
எனவே இதுபோன்ற பராமரிப்பு பணிகள் குறித்து ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/விருதுநகரில்-முன்னறிவிப்பின்றி-7-மணிநேரம்-ரயில்வே-கேட்-மூடல்-வாகன-ஓட்டிகள்-பாதிப்பு-3156883.html
3156882 மதுரை விருதுநகர் கோவிலாங்குளம் பெரிய கண்மாயை தூர்வாரக் கோரிக்கை DIN DIN Thursday, May 23, 2019 06:51 AM +0530 அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலாங்குளம் கிராமத்தில் முக்கிய நிலத்தடி நீராதாரமாக பெரிய கண்மாய் உள்ளது. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி உள்ளதால் இக்கண்மாயில் அதிக அளவில் செடிகள் வளர்ந்துள்ளன. 
இதனால் இக்கண்மாய்க்கு  வரும் மழைநீரை இந்தச் செடிகள் உறிஞ்சி விடுவதால் கண்மாயில் நீர் தேங்குவதில்லை. இதன் விளைவாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 
இதுதவிர இக்கண்மாய் அருகே உள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பஞ்சாலைகளுக்குக் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதியும், நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரிய கண்மாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, கண்மாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/கோவிலாங்குளம்-பெரிய-கண்மாயை-தூர்வாரக்-கோரிக்கை-3156882.html
3156881 மதுரை விருதுநகர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி DIN DIN Thursday, May 23, 2019 06:51 AM +0530 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி விருதுநகரில் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் தனியார் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் சம்பவ இடத்தில் 13 பேரும், மருத்துவமனையில் இருவரும் என 15 பேர் உயிரிழந்தனர்.
 மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 
இதில் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
அதேபோல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் கணேசமூர்த்தி தலைமையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பி. லிங்கம், ஒன்றியச் செயலர் வீராச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி ஜீவா மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். 
இதில் பங்கேற்றவர்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/ஸ்டெர்லைட்-ஆலைக்கு-எதிரான-போராட்டத்தில்-இறந்தவர்களுக்கு-அஞ்சலி-3156881.html
3156880 மதுரை விருதுநகர் திருத்தங்கல் அருகே  பட்டாசுத் தொழிலாளி மாயம் DIN DIN Thursday, May 23, 2019 06:51 AM +0530 திருத்தங்கல் அருகே பட்டாசுத் தொழிலாளியை காணவில்லை என புதன்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கல் அருகே அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புரிந்து வந்த இவர் கடந்த 20 ஆம் தேதி வேலைக்கு செல்வதாகக் கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். 
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவரது மகன் செல்வம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/திருத்தங்கல்-அருகே--பட்டாசுத்-தொழிலாளி-மாயம்-3156880.html
3156879 மதுரை விருதுநகர் மொட்டமலை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதிகள் செய்ய கோரிக்கை DIN DIN Thursday, May 23, 2019 06:51 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலை, எம்.ஜி.ஆர். நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
ராஜபாளையம் ரயில்வே நிலையம் அருகே குடியிருந்து வந்த நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 6  ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை அகதிகள் முகாமிற்கு பின்புறம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு, ஒன்றரை சென்ட் வீதம் நிலம்  வழங்கப்பட்டது. இதில் மேற்கு பகுதியில் உள்ளவர்களுக்கு நிலம் அளந்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட பின்பும், எந்த நிலம் யாருக்கு என இன்னும் அளந்து தரப்படவில்லை.
தூய்மை பாரத இயக்கத்தின் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தில் மேற்கு பகுதியில் உள்ளவர்களுக்கு கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால்  கழிப்பறையை பயன்படுத்த போதுமான தண்ணீர் வசதிகள் இல்லை. 
தனித் தீவு போல இருக்கும் எம்ஜிஆர் நகருக்கு அகதிகள் முகாமில் இருந்து இரவு நேரத்தில் செல்ல தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இருக்கும் இரு மின்விளக்குகளும் ஒளிர்வதில்லை.  ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே வழங்கப்பட்ட பட்டாவிற்கு நிலங்களை அளந்து தரவும், குடிதண்ணீர் கிடைக்கவும், அகதிகள் முகாமில் இருந்து எம்ஜிஆர் நகர் வரை சாலையும், தெருவிளக்குகள் அமைக்கவும், ஒரு குடும்பத்திற்கு மூன்று சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/மொட்டமலை-எம்ஜிஆர்-நகரில்-அடிப்படை-வசதிகள்-செய்ய-கோரிக்கை-3156879.html
3156878 மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு ஆலோசனைக் கூட்டம் DIN DIN Thursday, May 23, 2019 06:50 AM +0530 கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் தொடங்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சிக்காக விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற கல்வி தொலைக்காட்சிக்கான மாநில மைய ஒருங்கிணைப்பாளர்கள் அமலன் ஜெரோம், ஆபிரகாம் மேசாக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறை, கற்றல், கற்பித்தலில் மாறிவரும் காலசூழ்நிலைக்கேற்ப, டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப தேவையான பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு அந்தந்த மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களோடு சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொலைக்காட்சி மற்றும் அதற்கான வயர்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியானது ஒவ்வொரு பாடத்தையும் அந்தந்த பாடவேளையில் இணைத்து கற்பிக்க ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களையும்  கருத்துகளாக எடுத்துக் கூறி பாடம் நடத்த முயற்சி செய்து வருகிறோம். அதற்காக மாநிலம் முழுவதும் பாடவாரியாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர் கல்வித் தொலைக்காட்சியின் முழுமையான செயல்திட்ட வடிவம் வெளியிடப்படும்.
கல்வித் தொலைக்காட்சியில் மாணவர்களின் கற்றலை மையப்படுத்தியே நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீதம் மாணவர்களின் கற்றல் நிகழ்ச்சிக்கும், 20 சதவீதம் தனித்திறனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களிடம் திறமைகள் இருந்தால் போதும். அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பல்வேறு மேடைகளை உருவாக்கி, பேசப் பேச தமிழ் அழகு, கீரிடம் தலைப்பில் பாடும் வானம்பாடிகளுக்கான குரல் தேடல், ஒன்னாப்பு டீச்சர் உள்ளிட்ட பல  தலைப்புகளில் நிகழ்ச்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டவும், அவர்களை சிந்திக்க வைக்கவும் இயலும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/ஸ்ரீவில்லிபுத்தூரில்-கல்வி-தொலைக்காட்சி-படப்பிடிப்பு-ஆலோசனைக்-கூட்டம்-3156878.html
3156877 மதுரை விருதுநகர் சாத்தூரில் லாரி மோதி மூதாட்டி பலி DIN DIN Thursday, May 23, 2019 06:50 AM +0530 சாத்தூரில் புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி உயிரிழந்தார்.
சாத்தூரில் உள்ள முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் நாகூரம்மாள் (60). இவர் புதன்கிழமை தனது வீட்டிலிருந்து சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகூரம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் (58) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/சாத்தூரில்-லாரி-மோதி-மூதாட்டி-பலி-3156877.html
3156876 மதுரை விருதுநகர் விருதுநகரில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் 1079 போலீஸார் DIN DIN Thursday, May 23, 2019 06:50 AM +0530 விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 1079 போலீஸார் மற்றும் 15 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு இடங்களிலும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தேர்தல் பார்வையாளர் (பொது) முகேஷ்குமார், மாவட்ட தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. 
இதில் தேர்தல் நுண்பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என 500 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் தலைமையில் 1079 போலீஸார் மற்றும் 15 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/விருதுநகரில்-வாக்கு-எண்ணும்-மையத்தில்-பாதுகாப்புப்-பணியில்-1079-போலீஸார்-3156876.html
3156875 மதுரை விருதுநகர் விருதுநகரில் சாலை மையத் தடுப்பை உடைத்து குறுக்கே செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் DIN DIN Thursday, May 23, 2019 06:49 AM +0530 விருதுநகரில் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே நான்குவழிச் சாலையில் உள்ள மையத் தடுப்பை உடைத்து குறுக்காக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. இதனால் விபத்தில்லாமல் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட ஊருக்கு பயணிகள் விரைந்து சென்று வருகின்றனர். அதில் முக்கிய ஊர்கள் உள்ள இடம் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் ஆங்காங்கே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே நான்குவழிச் சாலையின் மையத்தில் இருந்த தடுப்புகள் எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டைவைகள் குறுக்காக செல்வதால் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலையுள்ளது.
 ஏற்கெனவே இந்த இடத்தில் பயணிகள் ஆட்டோ குறுக்காக சென்றபோது எதிர் திசையில் வந்த லாரி மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார். 
இதையடுத்து அந்த இடத்தில் வாகனங்கள் குறுக்காக செல்ல முடியாதவாறு தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே இருந்த தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது மீண்டும் குறுக்காக வாகனங்கள் சென்று வருவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சாலை மையத் தடுப்பின் உயரத்தை அதிகரிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/விருதுநகரில்-சாலை-மையத்-தடுப்பை-உடைத்து-குறுக்கே-செல்லும்-வாகனங்களால்-விபத்து-அபாயம்-3156875.html
3156874 மதுரை விருதுநகர் சாத்தூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? DIN DIN Thursday, May 23, 2019 06:49 AM +0530 சாத்தூரில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்துக்கு வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் சிவன்கோயில் முன் உள்ள தெப்பக்குளத்திற்கு சாத்தூர் வைப்பாறு மற்றும் பிரதான சாலையில் உள்ள மரிய ஊருணி பகுதியிலிருந்து மழை காலங்களில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் இங்கு கார்த்திகை தீபத்தன்று தீபத்திருவிழா மற்றும் மரணமடைந்தவர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்து வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்திற்கு வைப்பாற்றிலிருந்தும், மரியஊருணியிலிருந்து வரும் நீர்வரத்துப் பாதை, கடைகளின் ஆக்கிரமிப்பு, முறையாக பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால் அடைபட்டு தண்ணீர் செல்ல பாதையே இல்லாமல் காணாமல் போய்விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் இந்த பகுதியில் நல்ல மழை பெய்தும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க முடியமால் போனது. எனவே நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்துக்கு வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/23/சாத்தூர்-தெப்பக்குளத்தில்-தண்ணீர்-தேக்க-நடவடிக்கை-எடுக்கப்படுமா-3156874.html
3156258 மதுரை விருதுநகர் தேசிய அளவிலான தொழில்நுட்பப் பயிற்சிக்கு சிவகாசி கல்லூரி மாணவிகள் தேர்வு DIN DIN Wednesday, May 22, 2019 07:25 AM +0530 தேசிய அளவிலான தொழில்நுட்பப் பயிற்சிக்கு, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவிகள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் பாஸி -2019 என்ற பெயரில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு, இந்திய அளவில் 68 மாணவ-மாணவிகளை தேர்வு செய்துள்ளது. இதில், எங்கள் கல்லூரி மாணவிகள் பி. பிரியதர்ஷினி மற்றும் எஸ். திவ்யா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். 
முன்னதாக, பிரியதர்ஷினி விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும், திவ்யா தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு இணையதளம் மூலம் ஆய்வறிக்கை அனுப்பி வைத்தனர். அதையடுத்து, இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை சென்று 6 வார காலம் புதிய மென்பொருள்கள் குறித்து பயிற்சி பெறுவர். இந்த மாணவிகளுக்கு, இந்திய தொழில்நுட்பக் கழகம் ஊக்கத் தொகையாக தலா ரூ.15 ஆயிரம் வழங்கும். இந்த மாணவிகளை, தாளாளர் ஏ.பி. செல்வராஜன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/தேசிய-அளவிலான-தொழில்நுட்பப்-பயிற்சிக்கு-சிவகாசி-கல்லூரி-மாணவிகள்-தேர்வு-3156258.html
3156257 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டையில் அடிப்படை  வசதிகள் செய்து தர கோரிக்கை DIN DIN Wednesday, May 22, 2019 07:25 AM +0530 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை 9ஆவது வார்டுக்குள்பட்ட கணேஷ் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணேஷ் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் முறையான வாருகால் வசதி செய்துதரப்படவில்லை எனப் புகார்கள் கூறப்படுகின்றன. இதனால், வீடுகளின் முன்புறம் ஆழமான தொட்டிபோன்ற பள்ளம் அமைத்து, அதில் வீட்டில் புழங்கும் தண்ணீரை அந்தந்த வீட்டினரே விடுகின்றனர். சில வீடுகளில் இத்தொட்டி நிரம்பிவிடுவதால், வீதியில் வழிந்தோடிதேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. 
இந்நிலையில், மழைக் காலத்தில் இக்கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து நகர் முழுவதும் தேங்குவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும், இங்கு போதிய தெருவிளக்குகள் இல்லாததால், சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. 
எனவே, கணேஷ் நகரில் முறையான வாருகால் வசதியுடன், பாதுகாப்பு கருதி வீதிகளில் கூடுதல் மின்விளக்குகளும் அமைத்துத் தரவேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/அருப்புக்கோட்டையில்-அடிப்படை--வசதிகள்-செய்து-தர-கோரிக்கை-3156257.html
3156256 மதுரை விருதுநகர் ஸ்ரீவிலி.யில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு DIN DIN Wednesday, May 22, 2019 07:25 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பாக ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர், கட்சியின் நகரச் செயலர் பக்ஷிராஜா வி.சி. வன்னியராஜ் தலைமையில், தொண்டர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்  விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பெ. பெரியசாமி, மாவட்டச் செயலர் சுப்பையா, முன்னாள் மாவட்டச் செயலர் முருகேசன், நகரச் செயலர் ராமநாதன், வழக்குரைஞர் சதீஸ்குமார், மூத்த தலைவர் சஞ்சீவி செட்டியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/ஸ்ரீவிலியில்-ராஜீவ்-காந்தி-நினைவு-தினம்-அனுசரிப்பு-3156256.html
3156255 மதுரை விருதுநகர் ஆனைக்குட்டம் அணையில் பணிபுரிந்த  பாசன உதவியாளர் மர்மச் சாவு DIN DIN Wednesday, May 22, 2019 07:24 AM +0530 சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் பாசன உதவியாளராகப் பணிபுரிந்து வந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞர் திங்கள்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செல்வக்குமார் (35). இவர், சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையில் பாசன உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர், தினமும் காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவாராம். 
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து, அணையில் காவலாளியாகப் பணிபுரியும் மணி என்பவர் செல்வக்குமாரின் ஆடைகள் அணையின் அருகே காணப்படுகின்றன. ஆனால், அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினருக்கு செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே, செல்வக்குமாரின் சகோதரர் மகேந்திரன் மற்றும் உறவினர்கள் அணை பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
செவ்வாய்க்கிழமை, கதவணை அருகே தண்ணீரில் மூழ்கிய நிலையில் செல்வக்குமார் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே, அவரை தண்ணீரிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வக்குமார் அணையில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/ஆனைக்குட்டம்-அணையில்-பணிபுரிந்த-பாசன-உதவியாளர்-மர்மச்-சாவு-3156255.html
3156254 மதுரை விருதுநகர் பள்ளிக்கு மருத்துவ உபகரணம் வழங்கும் விழா DIN DIN Wednesday, May 22, 2019 07:24 AM +0530 ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மகாத்மா வித்யாலயா பள்ளியில், ஸ்ரீவில்லிபுத்தூர் சுழற்சங்க கிரீன் சிட்டி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பள்ளிக்கு மருத்துவ முதலுதவிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சுழற்சங்க கீரின்சிட்டி தலைவர் எம். ராஜசேகர் தலைமை வகித்தார். முகாமில், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, மகாத்மா வித்யாலயா பள்ளித் தாளாளர் முருகேசனிடம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான மருத்துவ முதலுதவிப் பெட்டியை சுழற்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், சுழற்சங்க கிரீன் சிட்டி துணைத் தலைவர் என். ஆனந்தகுமார், முன்னாள் தலைவர் ஆர். செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/பள்ளிக்கு-மருத்துவ-உபகரணம்-வழங்கும்-விழா-3156254.html
3156253 மதுரை விருதுநகர் விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் அமைதிப் பேரணி DIN DIN Wednesday, May 22, 2019 07:24 AM +0530 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. 
விருதுநகர் நகராட்சி அலுவலகப் பகுதியிலிருந்து புறப்பட்ட இப் பேரணியை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் ப. மாணிக்கம் தாகூர் தொடக்கி வைத்தார். இப்பேரணியானது, நகராட்சி சாலை, பஜார் வழியாக வி.வி.ஆர். சிலை முன்பாக நிறைவடைந்தது. அங்கு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை காங்கிரஸ் கட்சியினர் எடுத்துக்கொண்ட னர். 
இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு மாநிலத் தலைவர் நவீன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், நகரத் தலைவர் வெயில்முத்து உள்பட அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/விருதுநகரில்-காங்கிரஸ்-கட்சியினர்-அமைதிப்-பேரணி-3156253.html
3156252 மதுரை விருதுநகர் விருதுநகர் ரயில் நிலையத்தில் கழிப்பறை பூட்டப்பட்டதால் பயணிகள் அவதி DIN DIN Wednesday, May 22, 2019 07:24 AM +0530 விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை பூட்டிக் கிடப்பதால், ரயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் ரயில் நிலையம் வழியாக தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, இந்த ரயில் நிலையத்தில் தினமும் வெளியூர் செல்வோரும், வெளியூரிலிருந்து விருதுநகர் வருவோரும் என பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. 
இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையிலிருந்த பொது கழிப்பறையை, ரயில்வே நிர்வாகம் இடித்துவிட்டது. இதனால், முதலாவது நடைமேடையில் உள்ள கட்டணக் கழிப்பறையை பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இதில், ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என தனித்தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது, இக்கழிப்பறையை எவ்வித முன்னறிவிப்புமின்றி பூட்டுபோட்டு மூடி விட்டனர். இதனால், விருதுநகர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ரயில் நிலைய நடைமேடையில் இலவசக் கழிப்பறை கட்டுவதுடன், பூட்டப்பட்டுள்ள கட்டணக் கழிப்பறையையும் திறக்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/விருதுநகர்-ரயில்-நிலையத்தில்-கழிப்பறை-பூட்டப்பட்டதால்-பயணிகள்-அவதி-3156252.html
3156251 மதுரை விருதுநகர் மழைநீர் ஓடைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து அபாயம் DIN DIN Wednesday, May 22, 2019 07:23 AM +0530 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் மழைநீர் ஓடைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட ராமசாமிபுரத்தில் சுக்கிலநத்தம் சாலைப் பிரிவு அருகே மழைநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையானது, பிரதானச் சாலையைக் கடக்கும் இடத்தில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பாலத்தில் போதிய நீளத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், அதிக அளவு வாகனப் போக்குவரத்து நடைபெறும் இப்பாலத்தில், இரவு நேரங்களில் வாகனங்கள் மழைநீர் ஓடைக்குள் இறங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து நிகழ்வதற்கு முன் மழைநீர் ஓடை பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/மழைநீர்-ஓடைப்-பாலத்தில்-தடுப்புச்-சுவர்-இல்லாததால்-விபத்து-அபாயம்-3156251.html
3156250 மதுரை விருதுநகர் சாத்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்:13 பேர் காயம் DIN DIN Wednesday, May 22, 2019 07:23 AM +0530 சாத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 13 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மங்கத்தாய் (45). இவரது உறவினர்களான சுகந்தி, கீர்த்திகா, மாரிகண்ணன், விஜயலட்சுமி உள்பட 8 பேர், மங்கத்தாயை மதுரை மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். 
சாத்தூர் அடுத்துள்ள பெத்துரெட்டிபட்டி சந்திப்பு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தில் பணம் நிரப்பும் வாகனத்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது. இதில், மங்கத்தாய் உறவினர்களான சுகந்தி, கீர்த்திகா, மாரிகண்ணன், விஜயலட்சுமி உள்பட 8 பேரும், ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் வாகனத்தின் ஓட்டுநர் சாகுல்ஹமீது, ராஜப்பன், சரண்ராஜ், வங்கி ஊழியர்கள் விக்னேஷ்வரன், மாரியப்பன் ஆகிய 5 பேரும் என மொத்தம் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களிலும் சிக்கி காயமடைந்த அனைவரையும் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இவர்களில் மாரியப்பன், சாகுல்ஹமீது, மாரிகண்ணன் உள்பட 7 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/சாத்தூர்-அருகே-2-கார்கள்-நேருக்கு-நேர்-மோதல்13-பேர்-காயம்-3156250.html
3156249 மதுரை விருதுநகர் பட்டாசு ஆலை கண்காணிப்பாளர்களுக்கு நாளை பாதுகாப்பு பயிற்சி தொடக்கம் DIN DIN Wednesday, May 22, 2019 07:23 AM +0530 தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தால், பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு மே 23 ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் ராமமூர்த்தி  செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இப்பயிற்சி வகுப்பு,  ஆனையூரில் உள்ள பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. இதில், 38 ஆவது தொகுதி பயிற்சி வகுப்பு ஒரு மாத காலம் நடைபெறும். பட்டாசு ஆலையில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் என ஆலைக்கு 2 பேர் வீதம், ஆலை உரிமையாளர்கள் இந்தப் பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைக்க வேண்டும். 
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 94454-05350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/பட்டாசு-ஆலை-கண்காணிப்பாளர்களுக்கு-நாளை-பாதுகாப்பு-பயிற்சி-தொடக்கம்-3156249.html
3156248 மதுரை விருதுநகர் விருதுநகரில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் DIN DIN Wednesday, May 22, 2019 07:22 AM +0530 விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புக் கம்பிகள் அமைத்து, ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 14,80,600 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10,66,208 வாக்காளர்கள் வாக்களித்ததன் மூலம் 72.01 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகிய அனைத்தும், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 
அதேபோல், சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்த 2 கல்லூரிகளிலும் இரவு பகலாக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வியாழக்கிழமை (மே 23) வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரியின் முன்புற வாசலில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலரால் அடையாள அட்டை பெற்ற கட்சி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்ல முடியும். 
மேலும், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல், அரசு அலுவலர்கள், முகவர்கள் செல்லிடப்பேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னில் கல்லூரியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக தனித்தனியாக வாக்குகளை எண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தடுப்புக் கம்பிகள் அமைத்து, முகவர்கள் வாக்கு எண்ணுவதை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதில், ஒரு மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் (மைக்ரோ அப்சர்வர்), உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஒவ்வொரு சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரத்தை அறிவிப்பர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, விருதுநகர் 19 சுற்று, சாத்தூர் 21 சுற்று, அருப்புக்கோட்டை 18 சுற்று, சிவகாசி 20 சுற்று, திருப்பரங்குன்றம் 22 சுற்று, திருமங்கலம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 
விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ. சிவஞானம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சுரேஷ் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/விருதுநகரில்-வாக்கு-எண்ணும்-மையத்தில்-பாதுகாப்பு-ஏற்பாடுகள்-தீவிரம்-3156248.html
3156247 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி DIN DIN Wednesday, May 22, 2019 07:22 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. 
ராஜபாளையத்தில், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தளவாய் பாண்டியன் தலைமையிலும், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர்கணேஷ் முன்னிலையிலும், சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஜவஹர் மைதானத்திலிருந்து அமைதிப் பேரணி புறப்பட்டது.
 இதில், காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு பட்டை அணிந்து, காங்கிரஸ் கட்சிக் கொடி ஏந்தியவாறு அமைதியாகப் பேரணி சென்றனர். இந்த பேரணியானது, காந்தி கலை மன்றம், எல்.ஐ.சி. அலுவலகம், ஸ்டேட் வங்கி, தெற்கு காவல் நிலையம், காந்தி சிலை, ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, காமராஜர் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான நேரு பவனம் வந்தடைந்தது.
அங்கு, தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை அக்கட்சியினர் எடுத்துக்கொண்டனர். பின்னர், ராஜீவ் காந்திக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/ராஜபாளையத்தில்-ராஜீவ்-காந்தி-நினைவு-தின-பேரணி-3156247.html
3156246 மதுரை விருதுநகர் நாய்க்கு விஷம் வைத்ததாக தகராறு: 5 பேர் மீது வழக்கு DIN DIN Wednesday, May 22, 2019 07:22 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வளர்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்றதாக ஏற்பட்ட தகராறில், போலீஸார் திங்கள்கிழமை 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (37). இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை, மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக, வீட்டின் முன்பு பேசிக் கொண்டிருந்துள்ளார். 
அப்போது, அதே பகுதியிலுள்ள அருந்ததியர் காலனியை சேர்ந்த மாணிக்கம், கண்ணன், பால்பாண்டி, மதுரைபாண்டி, மாரிமுத்து ஆகியோர், நாயை கொன்றதாக தங்களை எவ்வாறு கூறலாம் எனக் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர்.  
இதில், லட்சுமணன் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கண்ணன் மற்றும் மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/நாய்க்கு-விஷம்-வைத்ததாக-தகராறு-5-பேர்-மீது-வழக்கு-3156246.html
3156245 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே ரூ.7 லட்சம் மோசடி DIN DIN Wednesday, May 22, 2019 07:22 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளரிடம் ரூ. 7 லட்சம் சரக்குகளைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றியவர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
      ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துகலுசலிங்கம் (45). இவர், மருத்துவத் துணி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரிடம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புத்ததேவ் சர்மா என்பவர் 6 மாதங்களுக்கு முன் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான மருத்துவத் துணிகளைக்  கொள்முதல் செய்துள்ளார். இதற்கு, 2 மாதங்களில் பணம் தருவதாகக் கூறியவர் இதுவரை தராமல் ஏமாற்றியுள்ளார்.      இது குறித்து, முத்துகலுசலிங்கம் ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின்படி, கீழராஜகுலராமன்  காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் முத்துக்குமரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/ராஜபாளையம்-அருகே-ரூ7-லட்சம்-மோசடி-3156245.html
3156244 மதுரை விருதுநகர் குறைந்த இடைவெளியில் அதிக வேகத்தடைகள்: வாகன ஓட்டிகள் அவதி DIN DIN Wednesday, May 22, 2019 07:21 AM +0530 அருப்புக்கோட்டையில் பேருந்து நிலையம் செல்லும் பிரதானச் சாலையில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக, சமூகநல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகரின் மையப் பகுதியான அகமுடையர் மகால் பேருந்து நிறுத்தத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பிரதானச் சாலையில் சுமார் 300 மீட்டர் இடைவெளிக்குள் 5 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இச்சாலையில் முக்கியமாக பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இல்லாத நிலையில், தேவையின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
ராமநாதபுரம், கமுதி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் இப் பிரதானச் சாலையைக் கடந்துதான் சென்றாக வேண்டும். இந்நிலையில், குறைந்த இடைவெளியில் அதிகமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வெளிப் பகுதிகளிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கர்ப்பிணிகள், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், வேகத்தடையின் மீது அடையாளத்துக்காக வெண்பட்டைக் கோடுகள் இல்லாததால், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, வேகத்தடைகளை போதிய அளவும், சரியான இடைவெளியிலும் அமைக்குமாறு சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/குறைந்த-இடைவெளியில்-அதிக-வேகத்தடைகள்-வாகன-ஓட்டிகள்-அவதி-3156244.html
3156243 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து DIN DIN Wednesday, May 22, 2019 07:21 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தகராறில் ஒருவரைக் கத்தியால் குத்திய நபரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). கடந்த 17 ஆம் தேதி நடந்த கோயில் தேரோட்டத்தின்போது, செல்வகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் கத்தியால் குத்தியதில் செல்வகுமார் காயமடைந்தார். அதையடுத்து, செல்வகுமார் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், அருண்குமார் மீது சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/22/ராஜபாளையம்-அருகே-தகராறில்-ஒருவருக்கு-கத்திக்-குத்து-3156243.html
3155795 மதுரை விருதுநகர் விருதுநகர் அருகே செயல்பாடின்றி காட்சிப் பொருளான அரசுப் பால்பண்ணை DIN DIN Tuesday, May 21, 2019 05:39 AM +0530
விருதுநகர் அருகே சின்ன மருளூத்து கிராமத்தில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட பால் பண்ணை பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
 விருதுநகர் அருகே சின்ன மருளூத்து கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பசுமாடுகள் வளர்ப்பதற்கு அரசு சார்பில் வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த 60 பேர் கொண்ட மகளிர் குழுவினர், பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டனர். இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக  அரசு சார்பில் பால் பண்ணை  கட்டி கொடுக்கப்ப ட்டது. இங்கு பெறப்படும் பாலை ஆவின் பாலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் விற்பனை செய்து வந்தனர். 
இந்நிலையில், பசுமாடுகளுக்கான பசுந்தீவனம் வளர்த்தல், பராமரிப்பு செய்தல், பாலை சந்தைப்படுத்துதல் குறித்து கால்நடை துறையினர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு எந்த அறிவுரையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வைக்கோல், தவிடு முதலானவற்றை கொண்டு பசுமாடுகளை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். இதனால், போதுமான பால் கிடைக்க வில்லையாம், மேலும், பல்வேறு காரணங்களால் பசுமாடுகள், கன்றுகள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
 இதனால், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் தெலுத்த முடியாமல் பெண்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி, ஒரு சிலர் பசு மாடுகளை விற்று வங்கிக் கடனை அடைத்து ள்ளனர். 
மேலும், சிலர் வங்கிக் கடனை அடைக்க விவசாய நிலங்களை விற்பனை செய்ததாக புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தற்போது, பால் கொள்முதல் செய்வதற்காக கட்டப்பட்ட பால் பண்ணை செயல்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதில், தற்போது மழை நேரங்களில் இக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களது மாடுகளை கட்டி வைக்கும் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். 
எனவே, பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு சார்பில் மீண்டும் வங்கி கடன் வழங்கி பசுமாடுகள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, கண்காணிக்கும் பணியில் கால்நடை துறை அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/விருதுநகர்-அருகே-செயல்பாடின்றி-காட்சிப்-பொருளான-அரசுப்-பால்பண்ணை-3155795.html
3155794 மதுரை விருதுநகர் விருதுநகரில் ஓடும் ரயிலில் படியில் சிக்கிய பெண்: காயமின்றி மீட்ட போலீஸார் DIN DIN Tuesday, May 21, 2019 05:39 AM +0530
 விருதுநகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயிலிலிருந்து இறங்க முயன்றபோது படியில் சிக்கிய பெண்ணை போலீஸார் காயமின்றி மீட்டனர்.
 திருநெல்வேலி கக்கன் தெருவை சேர்ந்தவர் தவசிமணி மனைவி ஜோதி மேரிபாய்(60). இவர் சமூக சேவகர், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் வைகை ரயில் என நினைத்து பல்லவன் ரயிலில் ஏறி விட்டராம். இதையடுத்து, அவர் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இறங்கியுள்ளார். அப்போது, அவ் வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர ரயிலில் ஏறி, விருதுநகர் வந்துள்ளார். பின்னர், இங்கிருந்து திருநெல்வேலி செல்ல திட்டமிட்டுள்ளார். விருதுநகர் ரயில் நிலையத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு அந்த ரயில் வந்து நின்றது. அப்போது ஜோதி மேரிபாய் சற்று தாமதமாக இறங்க முயற்சித்துள்ளார். 
அப்போது, ரயில் புறப்பட்டதால், படியில் உள்ள கைப்பிடியை பிடித்து தொங்கிய நிலையில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை சென்றுள்ளார். இதைக் கண்ட, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் பிரபு, சத்யராஜ் ஆகியோர் விரைந்து சென்று, அப்பெண்ணை காயமின்றி மீட்டனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், எர்ணாகுளம் ரயில் சிறிது நேரம் தாமதமாக அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றது. 
ஓடும் ரயிலில் படியில் சிக்கி அபாயத்தில் இருந்த பெண்ணை மீட்ட போலீஸாரை, ரயில்வே நிர்வாகத்தினர், பயணிகள் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/விருதுநகரில்-ஓடும்-ரயிலில்-படியில்-சிக்கிய-பெண்-காயமின்றி-மீட்ட-போலீஸார்-3155794.html
3155793 மதுரை விருதுநகர் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது DIN DIN Tuesday, May 21, 2019 05:38 AM +0530
சிவகாசி அருகே திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே கொத்தனேரியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். அவரை சோதனையிட்ட போது அந்த பையில் 20 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் மதுரையைச் சேர்ந்த ஹரிமார்க்ஸ்(28) என தெரியவந்தது. 
அதோ போல, குமிழங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர் பையில் 20 மதுப்பாட்டில்கள் வைத்திருந்தாராம்.விசாரணையில், அவர் மதுரையைச் சேர்ந்த முத்துச்சாமி(31) என தெரியவந்தது.
 இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/சட்ட-விரோதமாக-மதுபாட்டில்கள்-வைத்திருந்த-2-பேர்-கைது-3155793.html
3155792 மதுரை விருதுநகர் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு DIN DIN Tuesday, May 21, 2019 05:38 AM +0530
விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு குப்பைகள் குவிந்து, கழிவு நீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதார கேடு காரணமாக பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். 
  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து தினமும் சுமார் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் இரவில் பராமரிப்பு பணிக்காக வரும். இதனால் பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர் ஓய்வெடுப்பர்.மேலும்,  பணியாளர்கள் இரவில் பேருந்து பராமரிப்புப் பணியை மேற்கொள்வது வழக்கம்.  
   இந்நிலையில் பணிமனை முன்பு கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பணிமனை முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் தேங்கியே காணப்படுகிறது. இதனால்,  கொசுத் தொல்லை, சுகாதாரக் கேடு காரணமாக இரவில் பணியாளர்கள் பணியாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது என பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கழிவுநீர் கால்வாயை முறையாக சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் சு. தங்கவேல் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/அரசுப்-போக்குவரத்து-பணிமனை-முன்பு-கழிவுநீர்-தேங்குவதால்-சுகாதாரக்-கேடு-3155792.html
3155791 மதுரை விருதுநகர் விருதுநகரில் மின் மோட்டார் பழுதால் செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்: பொதுமக்கள் அவதி DIN DIN Tuesday, May 21, 2019 05:38 AM +0530
விருதுநகர் பராசக்தி நகரில் ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மின் மோட்டார் பழுது காரணமாக செயல்படாத நிலையில் உள்ளதால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
  விருதுநகர் அருகே நகராட்சி எல்லை முடியும் பகுதியில் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பராசக்தி நகர் உள்ளது. இங்கு, சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
   இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் நலன் கருதி ரூ. 4 லட்சம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.5 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இச்சுகாதார வளாகம், மின் மோட்டர் பழுது காரணமாக அதன்பின்னர் செயல்பட வில்லை. இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இச்சுகாதார வளாகத்தை பூட்டி வைத்து விட்டனர். ஏற்கெனவே, பராசக்தி நகரில் பல வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
 தற்போது, பெண்களுக்காக செயல்பட்டு வந்த சுகாதார வளாகமும் பூட்டப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் கவுசிகா ஆற்றுப்பகுதியில் உள்ள திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இப் பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், அங்கு பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை  உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.   எனவே, மின் மோட்டாரை சரி செய்து, சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/விருதுநகரில்-மின்-மோட்டார்-பழுதால்-செயல்படாத-மகளிர்-சுகாதார-வளாகம்-பொதுமக்கள்-அவதி-3155791.html
3155790 மதுரை விருதுநகர் சிவகாசி அருகே மணல் கடத்தல் 2 டிராக்டர்கள் பறிமுதல்: 4 பேர் கைது DIN DIN Tuesday, May 21, 2019 05:38 AM +0530
சிவகாசி அருகே திங்கள்கிழமை இரு வேறு  இடங்களில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2  டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் 4 பேரை கைது செய்தனர்.
திருத்தங்கல்-சுக்கிரவார்பட்டி சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
 அப்போது, மணல் ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வந்த டிராக்டரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 
இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, முத்துராமலிங்கம்(41), ரவி(38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல சிவகாசி -நாரணாபுரம் சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல் ஏற்றிக்கொண்டு அவ்வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,  உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 
இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மகேஸ்வரன்(40), செல்வம்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/சிவகாசி-அருகே-மணல்-கடத்தல்-2-டிராக்டர்கள்-பறிமுதல்-4-பேர்-கைது-3155790.html
3155789 மதுரை விருதுநகர் மதுபோதையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி பலி DIN DIN Tuesday, May 21, 2019 05:38 AM +0530
திருத்தங்கலில் திங்கள்கிழமை மதுபோதையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் ரயிலின் முன் விழுந்து உயிரிழந்தார். மேலும், ஒருவரின் 2 கால்களும் துண்டாகின.
   திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் தேர்ந்த சாமிபிள்ளை மகன் ஏசுராஜ்(25). திருத்தங்கல் சத்யாநகரைச் சேர்ந்த முனியண்டி மகன் கார்த்திக்(30). நண்பர்களான இருவரும் கட்டுமானத் தொழிலாளர்கள். இந்நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தினர். பின்னர் திருத்தங்கல் ரயில் நிலையம் வந்துள்ளனர். சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3 மணிக்கு திருத்தங்கல் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இருவரும் மது போதையில் நடைமேடையில் இருந்து மறுபுறம் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர்.
  இதில், ரயிலில் அடிபட்டு ஏசுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதில், ரயில் சக்கரத்தில் சிக்கி கார்த்திக்கின் 2 கால்களும் துண்டாகின.  இதையடுத்து, கார்த்திக் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.  
  இது குறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/மதுபோதையில்-தண்டவாளத்தைக்-கடக்க-முயன்ற-இளைஞர்-ரயில்-மோதி-பலி-3155789.html
3155788 மதுரை விருதுநகர் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றக் கோரி சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூ. நூதனப் போராட்டம் DIN DIN Tuesday, May 21, 2019 05:37 AM +0530
சிவகாசியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி நகராட்சி எல்லையில் உள்ளது விசாலாட்சி நகர். இப்பகுதி சாலை வழியே, முத்துராமலிங்கபுரம் காலனி, பள்ளபட்டி, சிவகாந்திநகர், விவேகானந்தாகாலனி, பத்திரகாளியம்மன்காலனி, சேனையாபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு  பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், மிதமான மழைபெய்தாலும், இச் சாலை மிகவும் பள்ளமான பகுதியாக இருப்பதால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு, அப்பகுதி மக்கள் பல முறை  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் இச்சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கியது. 
இதையடுத்து, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரியும், சாலையை சீரமைக்க கோரியும், தேங்கிய நீரில் காகித கப்பல் விடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர். 
இதற்கு அக்கட்சியின் நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதையடுத்து, அங்கு வந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினர். மேலும், விரைவில் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/சாலையில்-தேங்கிய-மழை-நீரை-அகற்றக்-கோரி-சிவகாசியில்-மார்க்சிஸ்ட்-கம்யூ-நூதனப்-போராட்டம்-3155788.html
3155787 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் புகார் DIN DIN Tuesday, May 21, 2019 05:37 AM +0530
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தங்கள் சமுதாயத்திற்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் புகார் அளித்தனர்.
கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தினருக்குச் சொந்தமான 46 சென்ட் நிலம் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அருகே  உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்த நிலத்தில் ஒரு பகுதியை அதே ஊரைச் சேர்ந்த, அதே சமுதாயப் பிரிவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த, அச்சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர்,  அதற்குரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவர் பிரிதிவிராஜை திங்கள்கிழமை சந்தித்து முறையிட்டனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை உடனடியாக  மீட்டுத் தரவேண்டுமென வலியுறுத்தி அவரிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து உரிய ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக கிராம நிர்வாக அலுவலர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/அருப்புக்கோட்டை-அருகே-நிலத்தை-மீட்டுத்-தரக்-கோரி-கிராம-மக்கள்-புகார்-3155787.html
3155786 மதுரை விருதுநகர் சாலை ஓரம் உள்ள தரைமட்ட கிணற்றால் விபத்து அபாயம் DIN DIN Tuesday, May 21, 2019 05:37 AM +0530
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து ஏற்படும் வகையில் சாலை ஓரம் உள்ள தரை மட்ட கிணற்றிற்கு தடுப்புச்சுவர் அமைத்துத் தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்காபுரத்திலிருந்து  தொட்டியபட்டி செல்லும் சாலையில் காவத்தோப்பில் சாலையின் இடது புறம்  தரைமட்ட நிலையில் கிணறு ஒன்று உள்ளது. இவ்வழியே, இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் பெருமாள்பட்டி, மங்காபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் காவத்தோப்பிற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், டிராக்டர், மினி பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் இச்சாலையில் வந்தால், விலக வழியற்று, அருகில் தரைமட்டக் கிணறு இருப்பது தெரியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த கிணற்றுக்கு முன்பாக பாதுகாப்புத் தடுப்புச் சுவர் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/சாலை-ஓரம்-உள்ள-தரைமட்ட-கிணற்றால்-விபத்து-அபாயம்-3155786.html
3155785 மதுரை விருதுநகர் குளியல் நீர்த் தொட்டி அமைக்க வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 21, 2019 05:37 AM +0530
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ராமலிங்காபுரத்தில் ஆண்களுக்கான குளியல்நீர்த் தொட்டி கட்டித்தர  கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தில் சுமார் 900 பேர் வசிக்கின்றனர். இங்கு ஆண்களுக்கான பொது குளியல் அறையோ, குளியல் நீர்த் தொட்டியோ அமைக்கப்படவில்லை. இதனால் இக்கிராமத்தினர் வெகுதூரம் நடந்து சென்று விவசாயக் கிணறுகளில் நீரிறைத்துக் குளிக்கின்றனர். அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள தொட்டியில் நீரெடுத்துக் குளிக்க அக்கிராமத்தினர் அனுமதி தருவதில்லையாம். அதற்கு பராமரிப்புச் செலவைக் காரணம் காட்டி பணம் கேட்கின்றனராம்.  இதனால், இக் கிராமத்தினர் அவதிக்கு  ஆளாகின்றனர். எனவே, ராமலிங்காபுரத்தில் ஆண்களுக்கான குளியல் நீர்த் தொட்டி அமைத்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/குளியல்-நீர்த்-தொட்டி-அமைக்க-வலியுறுத்தல்-3155785.html
3155784 மதுரை விருதுநகர் திருத்தங்கல் கார் ஓட்டுநர் கொலை நெல்லையில் பதுங்கியவர் கைது DIN DIN Tuesday, May 21, 2019 05:37 AM +0530
சிவகாசி அருகே கார் ஓட்டுநர் கொலை வழக்கில் திருநெல்வேலியில் பதுங்கியவரை திருத்தங்கல் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதிநகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கருப்பையா(50). இவர் சனிக்கிழமை  மதுபோதையில் இருந்துள்ளார்.
 அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் சுடலை(21) என்பவரும் மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பையாவை தலையில் கல்லைப் போட்டு சுடலை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சுடலை தலைமறைவானார். 
இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுடலையை தேடி வந்தனர். இந்நிலையில் சுடலையின் செல்லிடப்பேசி மூலமாக அவர் திருநெல்வேலியில் பதுங்கி யிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. 
 இதையடுத்து, திருநெல்வேலி சென்ற திருத்தங்கல் போலீஸார் அங்கு பதுங்கியிருந்த சுடலையை கைது செய்தனர். விசாரணையில், கருப்பையாவை சுடலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/திருத்தங்கல்-கார்-ஓட்டுநர்-கொலை-நெல்லையில்-பதுங்கியவர்-கைது-3155784.html
3155783 மதுரை விருதுநகர் விருதுநகர் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் DIN DIN Tuesday, May 21, 2019 05:36 AM +0530
விருதுநகர் நகராட்சியில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக 6 பேட்டரி வாகனங்கள் திங்கள்கிழமை வாங்கப்பட்டுள்ளன.
 விருதுநகரை, குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வியாபாரிகள் மற்றும் வீடுகளில் வசிப்போர் பிரித்து வழங்கவேண்டும். மேலும், தெருக்கள், சாலைகளில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பகல், இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளைச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், குப்பைகளை ச் சேகரிப்பதற்காக பேட்டரி மூலம் இயங்க கூடிய 57 வாகனங்கள் வாங்க நகராட்சி சார்பில் ரூ. 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தற்போது, 6 பேட்டரி வாகனங்கள் விருதுநகர் நகராட்சிக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. 
இதில், ஒவ்வொரு வாகனத்திலும் 2 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் மக்கும் குப்பையையும், மற்றொன்றில் மக்காத குப்பையையும் துப்புரவு பணியாளர்கள் சேகரிக்க உள்ளனர். 
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கூறியது: பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த வாகனங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக செல்ல முடியும். இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் மூலம் நுண் உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்காக புல்லலக்கோட்டை மயானப் பகுதி, சவுந்திரபாண்டியன் சாலை, நகராட்சி சத்திரம், விஎன் பிஆர் பூங்கா, மாத்தநாயக்கன்பட்டி குப்பைச் சேகரிக்கும் நிலையம் என 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/விருதுநகர்-நகராட்சியில்-குப்பைகளை-சேகரிக்க-பேட்டரி-வாகனங்கள்-3155783.html
3155782 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை சாலை மையத் தடுப்புச் சுவரில் ஒளிர்மின் விளக்குக் கம்பம் அமைக்க வலியுறுத்தல் DIN DIN Tuesday, May 21, 2019 05:36 AM +0530
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பிரதானச் சாலையில் விபத்து அபாயம் உள்ள சாலை மையத் தடுப்புச் சுவரில் ஒளிர் விளக்குக் கம்பம் அமைக்க சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
                    அருப்புக்கோட்டை பெரியகண்மாய் அருகே நகருக்குள் நுழையும் பகுதியில் உள்ள பிரதானச் சாலையில் மையத் தடுப்புச்சுவர் தொடங்குகிறது. அச்சுவரின் தொடக்கப் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த ஒளிர் விளக்குக் கம்பத்தின் மீதே வாகனம் மோதியதில் அக்கம்பம் சேதமானது. 
     இதைத் தொடர்ந்து, அதே இடத்தில் மீண்டும் ஒளிர்விளக்குக் கம்பம் அமைக்கப்படவில்லை. 
   மேலும், நகரின் எல்லைப் பகுதியான இங்கு போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததால், இரவில், இச்சாலையில் வரும் வாகனங்கள் அடிக்கடி இச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன . 
  எனவே, இத் தடுப்புச் சுவர் மீது ஒளிர் விளக்குக் கம்பம் அமைத்து, விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/அருப்புக்கோட்டை-சாலை-மையத்-தடுப்புச்-சுவரில்-ஒளிர்மின்-விளக்குக்-கம்பம்-அமைக்க-வலியுறுத்தல்-3155782.html
3155781 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது DIN DIN Tuesday, May 21, 2019 05:36 AM +0530
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு -ஆய்வாளர் சண்முக பாண்டியன் மற்றும் போலீஸார் சொக்கர்கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்வகையில் நின்றிருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை நூதன முறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆண்டத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சித்தநாதன்(51), சின்னசுரைக்காய் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(49), கருப்பஞானியார் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யாவு(49) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/ராஜபாளையத்தில்-தடைசெய்யப்பட்ட-லாட்டரி-சீட்டு-விற்றவர்கள்-கைது-3155781.html
3155780 மதுரை விருதுநகர் ராஜபாளையம் அருகே கோயில் நிர்வாகி தற்கொலை முயற்சி DIN DIN Tuesday, May 21, 2019 05:36 AM +0530
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கோயில் நிர்வாகி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராமு(54). இவர், இதே கிராமத்தில் சமுதாய செயலாளராக இருந்துள்ளார். கோயில் பணத்தை முறைகேடு செய்ததாக, அண்மையில் செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியதாக கூறப்படுகிறது. 
தற்போது கட்டுராக்கன் என்பவர் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்தாண்டு கோயில் திருவிழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை கட்டுராக்கன் கோயிலை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த முத்துராமு கோயில் கருவறைக்குள் சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. 
இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக கட்டுராக்கன் அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/ராஜபாளையம்-அருகே-கோயில்-நிர்வாகி-தற்கொலை-முயற்சி-3155780.html
3155779 மதுரை விருதுநகர் ராஜபாளையத்தில் துப்புரவுத் தொழிலாளி தற்கொலை DIN DIN Tuesday, May 21, 2019 05:36 AM +0530 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
   ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (30). இவர் துப்புரவுத் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது சித்ரா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இசக்கி முத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது மனைவி சித்ரா கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த இசக்கிமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில்ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/ராஜபாளையத்தில்-துப்புரவுத்-தொழிலாளி-தற்கொலை-3155779.html
3155778 மதுரை விருதுநகர் பணம் வைத்து சூதாடிய  7 பேர் மீது வழக்கு DIN DIN Tuesday, May 21, 2019 05:35 AM +0530
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
  ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆண்டத்தம்மன் கோயில் பின்புறம், மதுரை ராஜா கடைத் தெருவைச் சேர்ந்த பழனிவேல்(41), கோபி(42), ராமசுப்பு(34), செல்வம்(50), சுரேஷ்(48), கருப்பையா(55), நல்லசிவம்(61) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
   இது குறித்து 7 பேர் மீதும் வழக்குப் பதிந்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.54,500 -ஐ பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/பணம்-வைத்து-சூதாடிய--7-பேர்-மீது-வழக்கு-3155778.html
3155777 மதுரை விருதுநகர் காட்டுயானைகள் அட்டகாசம் ராஜபாளையத்தில்  மாமரங்கள் சேதம் DIN DIN Tuesday, May 21, 2019 05:35 AM +0530
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாய தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 300- க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தின. 
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வண்டிப் பண்ணை. இங்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன், சேவியர், சந்திரன், வெங்கலம் மற்றும் துரைசாமி உள்ளிட்டோர் மாங்காய்  சாகுபடி செய்து வருகின்றனர். 
தற்போது மாங்காய்கள் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து உணவு தேடி வரும் காட்டு யானைகள் மாந் தோப்புகளில் புகுந்து விடுகின்றன.  குட்டிகள் உள்ளிட்ட 7 யானைகள் இரவு நேரங்களில் தோப்புகளில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தி உள்ளன. 
ஒரு மரத்தை வேருடன் சாய்த்து சேதப்படுத்தியதுடன், அதில் விளைந்திருந்த மாங்காய்களை தின்றுள்ளன. காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக சுமார் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, விவசாயத் தோப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/காட்டுயானைகள்-அட்டகாசம்-ராஜபாளையத்தில்--மாமரங்கள்-சேதம்-3155777.html
3155776 மதுரை விருதுநகர் சாத்தூர் அருகே நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Tuesday, May 21, 2019 05:35 AM +0530 விருதுநகர் மாவட்டம், சாத்தூர்அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை கட்டடத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடை செயல்பட்டு வந்தது. இக்கடையின் கட்டடம் கட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாகக் கூறப்படுகிறது. இதனால், இக் கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், நியாயவிலை கடையின் வெளிப்புறம் உள்ள சுவர்களில் சிமென்ட் சிறிது சிறிதாக பெயர்ந்து விழுந்து வருகிறது.
இதனால், தற்போது இங்கு செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடையை அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. எனவே, நியாயவிலை கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/21/சாத்தூர்-அருகே-நியாய-விலைக்-கடை-கட்டடத்தை-சீரமைக்கக்-கோரிக்கை-3155776.html
3154955 மதுரை விருதுநகர் பூசாரிபட்டியில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை DIN DIN Monday, May 20, 2019 07:25 AM +0530 விருதுநகர் அருகே பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்- சாத்தூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் பூசாரிபட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழில் செய்து வருவதால், தினந்தோறும் விருதுநகர், ஆர்ஆர் நகர் பகுதிக்கு சென்று வருகின்றனர். 
இந்நிலையில், பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில்  நிழற் குடை அமைக்கக் கோரி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
தற்போது  கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.  இதனால்  வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அக்கிராம மக்களே, நான்கு வழிச் சாலையின் ஓரத்தில் கற்களை ஊன்றி, அதன் மேல் தட்டி வேய்ந்து தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளனர். ஆனாலும், மழை காலங்களில் இந்த நிழற்குடையில் நிற்க முடியாத சூழல் உள்ளதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பூசாரிபட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/பூசாரிபட்டியில்-பயணிகள்-நிழற்குடை-அமைக்க-பொதுமக்கள்-கோரிக்கை-3154955.html
3154954 மதுரை விருதுநகர் சாத்தூர் வைப்பாற்றுப் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை DIN DIN Monday, May 20, 2019 07:25 AM +0530 சாத்தூரில் புதிதாக கட்டபட்டுள்ள வைப்பாற்று பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்  அமைக்கபட்ட பாலம் குறுகலாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  புதிய பாலம் அமைக்க, கடந்த ஆட்சியில் ரூ.13.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. புதிய பாலம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்தும் பல மாதங்களாக  திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறையினரின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யபட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி  காணொலிக் காட்சி மூலம் பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து இந்த புதிய பாலத்தின் வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது. 
ஆனால் இந்த பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கபடவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே புதிய பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/சாத்தூர்-வைப்பாற்றுப்-பாலத்தில்-மின்விளக்குகள்-அமைக்கக்-கோரிக்கை-3154954.html
3154953 மதுரை விருதுநகர் காமராஜர்புரத்தில் மின்கம்பம் அருகே  குடிநீர் குழாயால் விபத்து அபாயம் DIN DIN Monday, May 20, 2019 07:25 AM +0530 விருதுநகர் அருகே காமராஜர்புரத்தில் மின்கம்பம் அருகே பள்ளம் தோண்டி குழாய் அமைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
   விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூரிலிருந்து முதலிபட்டி செல்லும் சாலையில் காமராஜர்புரம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த பலர் பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர். காலையில் பட்டாசு ஆலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாலை 6 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவர்.    இந்நிலையில் காமராஜபுரத்தில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இக்கிராமத்தில்  மின் கம்பம் அருகே, பெரிய பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இப்பள்ளத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் மண் சரிந்து விழுவதாக கூறப்படுகிறது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. 
  எனவே  குடிநீர் குழாயை வேறு இடத்தில் மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/காமராஜர்புரத்தில்-மின்கம்பம்-அருகே--குடிநீர்-குழாயால்-விபத்து-அபாயம்-3154953.html
3154952 மதுரை விருதுநகர் திருத்தங்கல்லில் தலையில்  கல்லை போட்டு ஓட்டுநர் கொலை DIN DIN Monday, May 20, 2019 07:24 AM +0530 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் சனிக்கிழமை இரவு கார் ஓட்டுநரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். 
  திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கருப்பையா (50). இவர் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவராம். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு, கருப்பையா மது அருந்தியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சுடலை என்பவரும் மது அருந்தியுள்ளார். 
   இதையடுத்து இருவரும் சந்தித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டதாம். 
  பின்னர் கருப்பையா அருகில் உள்ள திண்ணையில் படுத்து விட்டாராம். அப்போது சுடலை அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கருப்பையாவின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுடலையைத் தேடி 
வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/திருத்தங்கல்லில்-தலையில்--கல்லை-போட்டு-ஓட்டுநர்-கொலை-3154952.html
3154951 மதுரை விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஜூனியர் பூப்பந்து அணி மே 25 இல் தேர்வு DIN DIN Monday, May 20, 2019 07:24 AM +0530 தமிழ்நாடு மாநில அளவிலான "ஜூனியர்' ஆண், பெண்களுக்கான பட்டய போட்டியில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட "ஜூனியர்' பூப்பந்து அணி தேர்வு மே 25 இல் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது. 
  இதுதொடர்பாக  மாவட்ட பூப்பந்தாட்ட கழகத் தலைவர் முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:  தமிழ்நாடு மாநில அளவிலான "ஜூனியர்' ஆண்கள், பெண்களுக்கான பட்டயப் போட்டிகள் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற உள்ளது.  இதில், கலந்து கொள்ள உள்ள விருதுநகர் மாவட்ட "ஜூனியர்' பூப்பந்து அணி தேர்வு, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மே 25 ஆம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
  இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் படிப்பவராகவோ இருக்க வேண்டும். 
  மேலும், வீரர்கள் 02.01.2000 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்.   அதற்கான சான்றுகளை தேர்வின் போது கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 98439-12012 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/விருதுநகர்-மாவட்ட-ஜூனியர்-பூப்பந்து-அணி-மே-25-இல்-தேர்வு-3154951.html
3154950 மதுரை விருதுநகர் சாத்தூர் அருகே சிலோன் காலனியில்  அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல் DIN DIN Monday, May 20, 2019 07:24 AM +0530 சாத்தூர் அருகே சிலோன் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி ஊராட்சியில் உள்ளது சிலோன்காலனி. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள  வாருகால் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் குடியிருப்புகள் அருகே தேங்கி நிற்கிறது. 
இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் ஊராட்சி  சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர்தொட்டியும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் வீடுகள் தனி நபர் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த கழிப்பறையும் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம்  இப்பகுதியில் வாருகால், குடிநீர்தொட்டி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/சாத்தூர்-அருகே-சிலோன்-காலனியில்--அடிப்படை-வசதிகள்-செய்து-தர-வலியுறுத்தல்-3154950.html
3154949 மதுரை விருதுநகர் சிவகாசியில் குழந்தைவேலன்  காவடித் திருவிழா DIN DIN Monday, May 20, 2019 07:23 AM +0530 சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குழந்தை வேலன் காவடித் திருவிழா நடைபெற்றது.
 இந்த விழாவையொட்டி காத்த நாடார் தெரு முத்தாலம்மன் கோயிலில் இருந்து சிறுவர், சிறுமியர் காவடி சுமந்து, சிவசுப்பிரமணியன் கோயில், பத்திர காளியம்மன் கோயில், திருத்தங்கல் ஐயா நாராயணசுவாமி கோயில் 
ஆகிய கோயில்களுக்குச் சென்றனர். இதனைத்தொடர்ந்து திருத்தங்கல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடியை இறக்கி வைத்து சுவாமியை வழிபட்டனர்.  இதில் சுமார் 48 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை வி.சி.டி. கதிரேசன், கே.சமுத்திரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/சிவகாசியில்-குழந்தைவேலன்--காவடித்-திருவிழா-3154949.html
3154948 மதுரை விருதுநகர் சிவகாசியில் குப்பை கிடங்காக மாறிவரும் பெத்துமரத்து ஊருணி DIN DIN Monday, May 20, 2019 07:23 AM +0530 சிவகாசியில் குப்பைக் கிடங்காக மாறிவரும் பெத்துமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே  உள்ளது பெத்துமரத்து ஊருணி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஊருணியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது இந்த ஊருணி கழிவு நீர் கிடங்காகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவர்கள் வழங்கிய நன்கொடை மூலம், இந்த ஊருணியை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது.  இரண்டு நாள்கள் இயந்திரம் மூலம் ஊருணியை தூர்வாரும் பணி மட்டும் நடைபெற்றது. அதன் பின்னர்  பணிகள் நடைபெறவில்லை.
விருதுநகரில் ஊரின் நடுவே உள்ள தெப்பத்தை தொழிலதிபர்கள்  இணைந்து, மழைநீரைச் சேகரிக்கும் வகையில் உருவாக்கி விட்டனர். அதனால்  தெப்பம் அப்பகுதியில்  நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. அதேபோல சிவகாசி பெத்துமரத்து ஊருணியை நகராட்சி நிர்வாகம் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சிவகாசி பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி.ஆறுமுகச்சாமி கூறியது: 
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பெத்து மரத்து ஊருணியில் சிறுவர்கள் நீச்சலடித்து குளிப்பார்கள். தற்போது அதில் கழிவு நீர் தேங்கியுள்ளது. நான்குபுறமும் ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த ஊருணியில் குப்பை கொட்டி வருவது வேதனைக்குரியது. 
சிவகாசியில் ஏற்கெனவே இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊருணிகள் தற்போது இல்லை. அதனால் பெத்துமரத்து ஊருணியை  பாதுகாக்க வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தொழிலதிபர்கள் இணைந்து பெத்துமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/சிவகாசியில்-குப்பை-கிடங்காக-மாறிவரும்-பெத்துமரத்து-ஊருணி-3154948.html
3154947 மதுரை விருதுநகர் ஸ்ரீவிலி. அருகே மனைவி கொலை: கணவர் கைது DIN DIN Monday, May 20, 2019 07:23 AM +0530 விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணசாமி (35). இவரது மனைவி ராதிகா (30). இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் ராதிகா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வெளியே இருந்து வீட்டிற்கு வந்த மகள், தாய் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கூக்குரலிட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணன்கோவில் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் ராதிகாவின் சடலத்தை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/ஸ்ரீவிலி-அருகே-மனைவி-கொலை-கணவர்-கைது-3154947.html
3154946 மதுரை விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி வாருகாலில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி DIN DIN Monday, May 20, 2019 07:22 AM +0530 விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட முத்தால் நகரில் வாருகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதால்  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது.  இங்குள்ள பாண்டியன் நகர், காந்தி நகர், முத்தால் நகர், ஜக்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப் பெரிய ஊராட்சியான இங்கு, அடிப்படை வசதிகள் இல்லை. ஜக்கம்மாள்புரம், முத்தால் நகர் செல்லும் சாலை பள்ளம் மேடாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்  சிரமப்படுகின்றனர். 
மேலும், இந்த ஊராட்சியில் போதுமான குடிநீர் இல்லாததால், டிராக்டரில் தனியார் விற்பனை செய்யும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 
மேலும், பல இட ங்களில் தெரு விளக்குகளும் எரியாததால், இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் வர அச்சப்படுவதாக கூறுகின்றனர். அதேபோல், முத்தால் நகர் பகுதியில் கட்டப்பட்ட வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் மழை நேரங்களில் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
எனவே, முத்தால் நகர் பகுதியில் வாருகால் சுத்தம் செய்வதுடன், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/ரோசல்பட்டி-ஊராட்சி-வாருகாலில்-கழிவுநீர்-தேக்கம்-பொதுமக்கள்-அவதி-3154946.html
3154945 மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டையில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல் DIN DIN Monday, May 20, 2019 07:22 AM +0530 அருப்புக்கோட்டையில் திருநகரம் மாரியம்மன் தெற்குத் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   அருப்புக்கோட்டை நகரில்  மாரியம்மன் தெற்குத்தெரு முக்கியச் சாலையாக உள்ளது.
     இந்த சாலை  உரிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது.  இந்த சாலையில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அதனால் நாள்தோறும் இப்பள்ளிக்கு செல்லும்  மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மிதிவண்டிகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விரைவில் மாரியம்மன் தெற்குத்தெரு தார்ச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/20/அருப்புக்கோட்டையில்-சேதமடைந்த-சாலையைச்-சீரமைக்க-வலியுறுத்தல்-3154945.html
3154215 மதுரை விருதுநகர் சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள்-போலீஸார் அச்சம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள் DIN DIN Sunday, May 19, 2019 04:15 AM +0530 சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது ஏழாயிரம்பண்ணை ஊராட்சி. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பழைய ஏழாயிரம் பண்ணை, ஏழாயிரம் பண்ணை பகுதியில் உள்ள வடக்கு தெரு, தெற்கு தெரு, ராஜீவ்நகர், அரண்மனை தெரு, பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. 
 இதனால் தெருக்களில் பொதுமக்கள் நடமாடவும் சிறுவர்கள் விளையாடவும் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்களை தெரு நாய்கள் துரத்துவதால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. நாய்கள் கடித்து ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் செல்லும் காவல் துறையினரையும் தெரு நாய்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் முழுமையாக இரவு நேரங்களில் ரோந்து செல்ல முடியவில்லை என்று காவல் துறையினரும் குற்றம்சாட்டுகின்றனர். நாய்களை கட்டுபடுத்த ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சாத்தூர் பகுதியில்...: இதே போன்று சாத்தூர் நகராட்சிகுட்பட்ட அண்ணாநகர், குருலிங்காபுரம், படந்தால், மாரியம்மன் கோயில், முருகன்கோயில், பிள்ளையார்கோயில் தெரு, மேலகாந்திநகர், வெள்ளகரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் நடமாட முடியவில்லை. பிரதான சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. ஏராளமானோரை நாய்கள் கடித்து காயப்படுத்தியுள்ளன. 
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/19/சாத்தூர்-ஏழாயிரம்பண்ணையில்-தெரு-நாய்கள்-தொல்லை-பொதுமக்கள்-போலீஸார்-அச்சம்-கண்டுகொள்ளாத-அதிகாரிகள்-3154215.html
3154214 மதுரை விருதுநகர் கோயில்களில் வைகாசி விசாக பூஜை DIN DIN Sunday, May 19, 2019 04:15 AM +0530 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோயில்களில் பெளர்ணமி மற்றும் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை  நடைபெற்றது.
அம்பலப்புளி பஜார் சுப்பிரமணியர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் 
நடைபெற்றன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/may/19/கோயில்களில்-வைகாசி-விசாக-பூஜை-3154214.html