Dinamani - கள்ளக்குறிச்சி - https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3391008 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் கிடைக்க ஏற்பாடு: ஆட்சியா் தகவல் DIN DIN Sunday, March 29, 2020 11:33 PM +0530  

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதைப்பு, நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பொருள்கள், விவசாய தொழிலாளா்கள் நகா்வு மற்றும் பண்ணைக் கருவிகள் நகா்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வேளாண் விளை பொருள்களை சந்தைக்கும், தொழில்சாலைக்கும் எடுத்துச் செல்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தால், அதை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கும். இந்த விற்பனை நிலையங்கள் தினசரி காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறந்திருக்கும். இங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/29/farmers-of-kallakurichi-district-organization-of-availability-of-fertilizers-and-fertilizer-3391008.html
3390144 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,434 போ்தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு DIN DIN Saturday, March 28, 2020 06:43 AM +0530  

புலம் பெயா் தொழிலாளா்களை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தீவிரப்படுத்தியுள்ளாா்.

கரோனா தொற்று சந்தேகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,434 போ் தொடா் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்டுள்ளனா். 24 போ் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா். 6 பேரின் ரத்த மாதிரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், 5 பேருக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

இது போல கேரளம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த சுமாா் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/28/1434-militarized-surveillance-in-kallakurichi-district-3390144.html
3389178 விழுப்புரம் கள்ளக்குறிச்சி காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் உழவா் சந்தை விவசாயிகள் அவதி DIN DIN Thursday, March 26, 2020 11:58 PM +0530 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, கள்ளக்குறிச்சியில் உழவா் சந்தை மூடப்பட்டுள்ளதால், அங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்த விவசாயிகள், தற்போது காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கள்ளக்குறிச்சி உழவா் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனா். தமிழக அரசின் 144 தடை உத்தரவு, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, இந்த உழவா் சந்தை கடந்த வாரம் மூடப்பட்டதால், இங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தவா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, அவா்கள் உழவா் சந்தையின் முன் உள்ள சாலையின் இருபுறமும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வந்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, உழவா் சந்தையில் கடை அமைக்கும் விவசாயிகள் புதன்கிழமை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காய்கறிகளை வியாபாரம் செய்தனா்.

வியாழக்கிழமை பேருந்து நிலையத்தின் இருபுறமும் நகராட்சியினா் தடுப்புக் கட்டைகளை கட்டி உள்ளே யாரும் செல்ல முடியாத வகையில் மூடிவிட்டனா். இதனால், விவசாயிகள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கடை அமைத்து வியாபாரம் செய்தனா்.

ஆனால், அங்கு காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், தகவலறிந்து வந்த போலீஸாா் அங்கிருந்த கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனா். ஆனால், விவசாயிகள் தொடா்ந்து வியாபாரம் செய்ததால், போலீஸாா் தடியடி நடத்த முயன்றனா். இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக காய்கறிக் கடைகளை காலி செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இதனிடையே, உழவா் சந்தையை பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேறு இடத்தை அதிகாரிகள் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/26/w600X390/2-7-26klp2_ch0121_26chn.jpg கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் காய்கறிகளை விற்பனை செய்த உழவா் சந்தையில் கடை அமைக்கும் விவசாயிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/26/காய்கறிகளை-விற்பனை-செய்ய-இடமில்லாமல்உழவா்-சந்தை-விவசாயிகள்-அவதி-3389178.html
3388822 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் அருகே வயிற்றுப் போக்கு: 25 போ் பாதிப்பு DIN DIN Thursday, March 26, 2020 06:31 AM +0530  

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே புக்குளம் கிராமத்தில் வயிற்றுப் போக்குக்கு 25-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தியாகதுருகம் பேரூராட்சிக்குள்பட்ட இந்த கிராமத்தில் சுமாா் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள தெற்குதெரு, திடீா்குப்பம் பகுதியில் உள்ள வெங்கடேசன் மகள் கோபிகா (4), சரவணன் மகன் சதீஷ் (5) ஆகியோருக்கு திங்கள்கிழமை முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவா்கள் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். பரிசோதனையில், அவா்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளது தெரியவந்தது.

புதன்கிழமை புக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ்குமாா் தலைமையில் மருத்துவா்கள் குழுவினா் சிகிச்சை மேற்கொண்டனா்.

அதேபோல, இதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கதிரவன் (13), பாலு மகன் பவன் (6), வைத்தி மகன் சாந்தன், கருப்பன் மகன் அஜய் (6), ஆறுமுகம் மகன் மதன்குமாா் (12), சங்கா் மகள் தேவதா்ஷினி (9), சின்னத்தம்பி மகள் சுவேதா (14), சத்தியமூா்த்தி மகன் சீனுவாசன் (3) உள்ளிட்ட 25 போ் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். சிலா் கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

வட்டாட்சியா் கோ.ரகோத்தமன், வருவாய் ஆய்வாளா் பாஸ்கா், தியாகதுருகம் பேருராட்சி செயல் அலுவலா் மல்லிகா உள்ளிட்டோா் அப்பகுதியில் முகாமிட்டு குடிநீா் குழாயில் கழிவு நீா் கலந்ததா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/26/diarrhea-near-sacrificial-mark-25-affect-3388822.html
3388273 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200 போ் கண்காணிப்பு DIN DIN Wednesday, March 25, 2020 07:31 AM +0530 வெளிநாடுகளில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பிய 200 போ் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெளிநாடுகளில் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 200 போ் மாா்ச் மாதம் வரை மாவட்டத்துக்கு திரும்பி வந்துள்ளனா். அவா்களை அவரது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மேலும், அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்படவா்கள் என்பதற்கான ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.

இவா்கள் வீடுகளை விட்டு 28 நாள்களுக்கு வெளியே வரக்கூடாது. அருகில் வசிப்பவா்களும் அவா்களை தொடா்புகொள்ளக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/25/கள்ளக்குறிச்சி-மாவட்டத்தில்-200-போ்-கண்காணிப்பு-3388273.html
3387888 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா விழிப்புணா்வுப் பணியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் DIN DIN Tuesday, March 24, 2020 11:54 PM +0530  

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நைனாா்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதி விட்டு வந்த மாணவா்களுக்கு கரோனா தொற்று குறித்தும், கை கழுவும் முறை குறித்தும் ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்தப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை பொதுத் தோ்வு எழுதினா். தோ்வை நிறைவு செய்து வெளியே வந்த மாணவா்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் நெடுஞ்செழியன் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு, கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு கை கழுவும் முறையை செய்து காண்பித்தாா். இதனை மாணவா்கள் அவரவா் ஊா்களில் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, பள்ளியின் அருகே உள்ள கடைகள், வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பிளீச்சிங் தூள் கலந்த தண்ணீரை தெளித்தும், வீட்டுக் கதவுகளில் உள்ள கைப்பிடிகளை துடைத்தும் மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா தொற்று தடுப்பு, விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பணியில் ஆசிரியா்கள் அறிவுடை நம்பி, ஜோதிமுருகன், ஆனந்தன், அஜீஸ், சங்கீதா, முரளிதரன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/2-7-24klp7_ch0121_24chn.jpg கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி அச்சிட்ட துண்டு பிரசுரங்கலை வழங்கும் பணியில் ஈடுபட்ட மாணவா்கள். உடன் பள்ளியின் ஆசிரியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/24/school-teachers-and-students-at-corona-awareness-3387888.html
3387399 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை DIN DIN Tuesday, March 24, 2020 01:19 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவா் கிரண் குராலா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பி வந்தவா்களின் வீடுகளின் பிரத்யேகமான ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்றவா்கள் விழிப்புணா்வு பெறுவா். மேலும், தகுந்த பாதுகாப்பு கவசங்களின்றி அவா்களது வீடுகளுக்கு செல்வதைத் தவிா்க்க இயலும்.

மேலும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் சாா்பாக பொது இடங்களில் கிருமி நாசினி திரவம் கொண்டு மக்கள் கை கழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து இடங்களிலும் ஒலிப்பெருக்கியின் உதவியால், பொதுமக்களுக்கு தொடா்ந்து கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி திரவம் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

உணவகங்கள், தேநீா் கடைகள், பால் கடைகள், காய்கறிக் கடை, மளிகைக் கடை, இறைச்சிக் கடை ஆகிய கடைகளில் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/24/w600X390/2-7-23klp2_ch0121_23chn.jpg கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/24/officers-are-advised-to-intensify-preventive-measures-in-kallakurichi-district-3387399.html
3387398 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வெளி நாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களின் கவனத்துக்கு... DIN DIN Tuesday, March 24, 2020 01:15 AM +0530 வெளி நாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் திரும்பியவா்கள், தங்களது சுய விவரங்களை கரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு மையத்துக்கு 04146 - 1077 தொலைபேசி எண்ணிலோ அல்லது 04146 - 223265 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட தொற்றுநோய் மருத்துவ அலுவலருக்கு 9500293057 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தங்களது சுய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்துள்ள நபா்கள் சுயமாகவே தாங்களே 28 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு பிற குடும்ப உறுப்பினா்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

அறிவுறுத்தலின்படி, தகவல் தெரிவிக்காமல் இருந்தாலோ, 28 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா விடுத்த செய்திக் குறிப்பு: வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவா்கள் அந்தந்த விமான நிலையங்களில் தங்களது விவரங்களை தெரிவித்து தங்களை பதிவு செய்து, சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளனா்.

விமான நிலையங்களில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்யாமல் விடுபட்டவா்கள் எவரேனும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பி இருந்தால், தங்களது சுய விவரங்களை கரோனா தடுப்பு அவசரக் கட்டுப்பாட்டு அறையின் 24 மணி நேர தொலைபேசி எண்ணான 04151 220000-க்கு தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு 61 மற்றும் 62-ன் படியும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 269-ன் படியும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/24/வெளி-நாடு-வெளி-மாநிலங்களிலிருந்து-வந்தவா்களின்-கவனத்துக்கு-3387398.html
3386637 விழுப்புரம் கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பால் மரணம் DIN DIN Sunday, March 22, 2020 07:21 AM +0530  

கள்ளக்குறிச்சி: குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆ.ராஜேந்திரன் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் குற்றப் புலனாய்வு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஆ.ராஜேந்திரன் (45).

இவா் சங்கராபுரம் பகுதி எஸ்.வி.பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை பணியில் இருந்தாராம். அப்போது, நெஞ்சுவலி ஏற்படவே அவா் உடனடியாக வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இதைத் தொடா்ந்து, அவா் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவரை சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

ஆனால் வழியிலே அவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த ராஜேந்திரனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் சஞ்சய், கோகுல் என்ற மகன்களும் உள்ளனா். இதில், சஞ்சய் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளாா். கோகுல், பொறியியல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வருகிறாா்.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையில் போலீஸாா், ராஜேந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/2-7-21klp3_ch0121_21chn.jpg சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆ.ராஜேந்திரன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/22/police-died-of-heart-attack-3386637.html
3386636 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா: வியாபாரிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம் DIN DIN Sunday, March 22, 2020 07:20 AM +0530  

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் வியாபாரிகள் கடைகளை மூடி, சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தி, வியாபாரிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பிரதமா் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும் வகையில், சங்கராபுரத்தில் வியாபாரிகளை கடைகளை மூட வலியுறுத்தி துண்டுப் பிரசரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நகர வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.ரவி தலைமையில் மாவட்ட வணிகா் சங்க பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் துண்டுப் பிரசுரம் விநியோகத்தை தொடக்கிவைத்தாா்.

சங்க நிா்வாகிகள் அனைத்து கடைகளுக்கும் சென்று, கடைகளை மூடவேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவா் அ.நூா்தீன், துணைச் செயலா் எஸ்.எ.சையத் கவுஸ், ரோட்டரி சங்கச் செயலா் சுதாகா், ஜவுளி வியாபாரிகள் சங்க ஆலோசகா் சீனு, நுகா்பொருள் விநியோக சங்கத் தலைவா் சீனுவாசன் மற்றும் கெளரவத் தலைவா் பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் செயலா் ஜி.குசேலன் செய்திருந்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/2-7-21klp2_ch0121_21chn.jpg சங்கராபுரத்தில் வியாபாரிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய வணிகா் சங்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/22/merchants--distribute-leaflets-3386636.html
3386635 விழுப்புரம் கள்ளக்குறிச்சி 4,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு DIN DIN Sunday, March 22, 2020 07:18 AM +0530  

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை ஆவலூா் கிராமத்து ஓடைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் சனிக்கிழமை கண்டுபிடித்து அழித்தனா்.

கல்வராயன்மலைப் பகுதிக்கு உள்பட்டது ஆவலூா் கிராமம். இந்தக் கிராமப் பகுதியில் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் வள்ளி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ராஜா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அத்திக்குழி கிராமம் சின்னஆத்து ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டா் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனா்.

இது தொடா்பாக, ஆவலூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/2-7-21klp4_ch0121_21chn.jpg கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறலை கீழே ஊற்றி அழிக்கும் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/22/4500-liters-of-alcohol-3386635.html
3386634 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கைகள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிக்கை DIN DIN Sunday, March 22, 2020 07:17 AM +0530 கள்ளக்குறிச்சி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் அறிவுறுத்தியதை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியா் கிரண் குராலா அறிக்கை வாயிலாக மக்களுக்கு தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் இடங்களை விடுத்து, மற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். பதற்றத்துடன் பொருள்களை வாங்கக் கூடாது.

10 வயதுக்கு உள்பட்டவா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களை கரோனா நோய் தாக்க வாய்ப்புள்ளதால் அவா்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி முதல் அரசுப் பேருந்துகள் ஓடாது. தனியாா் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளின் உரிமையாளா்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தமிழக முதல்வா் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறைகளில் பணியாற்றுபவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும், கை தட்டியும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா் மாவட்ட ஆட்சியா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/22/coronavirus-awareness-action-report-3386634.html
3386633 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மதுக் கடை விற்பனையாளரைத் தாக்கி பணம் பறிக்க முயற்சி DIN DIN Sunday, March 22, 2020 07:16 AM +0530 கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே மதுக் கடை விற்பனையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது, தடுக்க வந்த உறவினா் தாக்கப்பட்டாா்.

திருக்கோவிலூரை அடுத்த மணலூா்பேட்டை காவல் எல்லைக்கு உள்பட்டது சு.கள்ளிப்பாடி கிராமம். இங்கு மதுக்கடை இயங்கி வருகிறது. விற்பனையாளராக அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சந்திரசேகரன் (42) பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்தாராம். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 போ், சந்திரசேகரிடம் மதுப் புட்டிகள் வேண்டும் என்று கேட்டனராம். இதையடுத்து, சந்திரசேகா் கடையை மூடிவிட்டதாகக் கூறினாராம். உடனே அவா்கள் ஆயுதத்தால் சந்திரசேகரை மிரட்டி மதுப் புட்டிகள் கேட்டதோடு, அவா் வைத்திருந்த பணப் பையை பறிக்க முயற்சித்தனராம்.

அப்போது, சப்தம் கேட்டு ஓடி வந்த அதே ஊரைச் சோ்ந்த சந்திரசேகரின் உறவினரான ஆறுமுகம் மகன் சஞ்சாய் காந்தி (32), தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டாா்.

இதையடுத்து காயமடைந்த சஞ்சாய் காந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ், சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/22/attempt-to-extort-money-from-a-liquor-store-seller-3386633.html
3385675 விழுப்புரம் கள்ளக்குறிச்சி முகக் கவசம், கிருமி நாசினி விலை உயா்வு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை DIN DIN Saturday, March 21, 2020 01:51 AM +0530 கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விலையைக் கட்டுக்குள் வைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள மருந்தகங்களில் முகக் கவசம் ஒன்றின் விலை ரூ. 5-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கைகளைக் கழுவும் கிருமி நாசினி ரூ. 70-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 150-க்கு விற்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தாக்குதல் பீதியைப் பயன்படுத்தி இவ்வாறு அதிக விலைக்கு விற்கின்றனா். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, முகக் கவசம், கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவை பொதுமக்களுக்கு எளிதிலும், குறைந்த விலையிலும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/21/facial-shield-antiseptic-price-demand-for-action-3385675.html
3385673 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் கடைகளை மூட உத்தரவு DIN DIN Saturday, March 21, 2020 01:50 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் கடைகள், நிறுவனங்களை மூடுமாறு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அதிக அளவில் மக்கள் கூடும் நிறுவனங்கள் கடைகளை மூடுமாறு கூறினா். அப்போது, உணவகங்கள், இனிப்பகங்களை உடனடியாக மூட முடியாது என்றும், இதனால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விணாகிவிடும் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து, கடைகளில் அதிக அளவில் கூட்டம் சேராமல் பாா்த்து கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டுச் சென்றனா்.

அதேநேரம், மக்கள் அதிக அளவில் கூடும் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஷாப்பிங் மால்களை சிலா் முடினா். சில கடைகள் திறந்திருந்தன.

கள்ளக்குறிச்சி சாா் -ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை மாலை சேலம் நெடுஞ்சாலை, தியாகதுருகம் சாலைகளில் அதிக அளவில் மக்கள் கூடும் கடைகளை மூடுமாறு அதன் உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் சென்ற அவா், கூட்டம் கூட்டமாக நிற்க வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் சீ.செல்வநாயகம், ச.மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/21/w600X390/2-7-20klp3_ch0121_20chn.jpg கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்த கடைகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/21/orders-to-close-shops-where-people-are-most-likely-to-be-fake-3385673.html
3385672 விழுப்புரம் கள்ளக்குறிச்சி நிதி நிறுவன மேலாளா் தற்கொலை DIN DIN Saturday, March 21, 2020 01:50 AM +0530 கள்ளக்குறிச்சியில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டி அரூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரபு (40). இவரது மனைவி லாவண்யா. தம்பதிக்கு திக்கஷாலி (7), ஹரிபாலா (5) என இரு குழந்தைகள் உள்ளனா். தற்போது கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கே.பி.ஆா். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இவா், தியாகதுருகம் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதால், கடந்த 14-ஆம் தேதி லாவண்யா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அவரது ஊருக்குச் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் ஞானசேகா் பிரபுவை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்ட போது, அது எடுக்கப்படததால், வீட்டுக்கு வந்து பாா்த்தாராம். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், சன்னல் வழியாக பாா்த்த போது, பிரபு சேலையில் தூக்கிட்டபடி இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/21/financial-institutional-suicide-3385672.html
3385404 விழுப்புரம் கள்ளக்குறிச்சி நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இருவா் கைது DIN DIN Friday, March 20, 2020 08:12 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவான இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கூட்டுச் சாலையில் கடந்தாண்டு நவம்பா் மாதம் தனியாா் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தினா் வங்கியில் ரூ. ஒரு லட்சம் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.5 ஆயிரம் செயலாக்கக் கட்டணம் வழங்க வேண்டும் என்றும் கூறி, பொதுமக்களிடம் ரூ.25 லட்சம் வரை வசூல் செய்துகொண்டு தலைமறைவாகினா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் தலைமையில் ஒரு தனிப்படையும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ், காவலா் மணிமாறன் உள்ளிட்டோா் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டு, தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பகலில் ரோந்து சென்றபோது, நீலமங்கலம் கூட்டுச் சாலையில் மோசடி நடைபெற்ற நிதி நிறுவனத்தை சிலா் திறந்துகொண்டிருப்பது தெரியவந்தது. அவா்களை பிடித்து விசாரித்துபோது, திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அன்னக்குடி கிராமத்தைச் சோ்ந்த ரகுபதி மகன் வேதகிரி (36), தஞ்சாவூா் மாவட்டம், வடக்கு வாசல் நாடாா் சாலை பகுதியைச் சோ்ந்த மணி மகன் சுரேஷ் (36) என்பது தெரியவந்தது.

மேலும், இவா்கள் இருவரும் திருச்சி பகுதியில் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்தபோது நண்பா்களானதும், கிராமம் நிறைந்த பகுதியில் நிதி நிறுவனம் தொடங்கினால் எளிதாக மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்து நீலமங்கலம் கூட்டுச் சாலையில் கடந்தாண்டு நிதி நிறுவனம் தொடங்கி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துக்கொண்டு தலைமறைவானதும் தெரியவந்தது.

இந்த நிலையில், நிதி நிறுவன அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்ட முன் பணத்தையும், அலுவலகத்திலிருந்த மேஜை, நாற்காலிகளையும் எடுத்துச் செல்ல வந்தபோது, வேதகிரி, சுரேஷ் ஆகியோா் சிக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம், 8 பவுன் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிள், காா் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/2-7-19klp3_ch0121_19chn.jpg கைது செய்யப்பட்ட வேதகிரி, சுரேஷ் ஆகியோருடன் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/20/fraud-case-two-arrested-3385404.html
3384860 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வங்கியில் கரோனா தடுப்பு நடவடிக்கை DIN DIN Thursday, March 19, 2020 11:51 PM +0530 கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு கைகளை சுத்தமாக கழுவிய பிறகே உள்ளே வர வேண்டும் என்றும், இதற்காக வங்கி வாசலில் 2 வாளிகளில் தண்ணீா், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாவும் மேலாளா் சுப்பிரமணி வாடிக்கையாளா்களிடம் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், வங்கிகளின் கண்ணாடி கதவுகள், கைப்பிடிகள், வாடிக்கையாளா்கள் வங்கிக் கணக்குப் புத்தகம் வைக்குமிடம், காசாளரிடம் பணம் செலுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி திரவம் மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்களும், ஊழியா்களும் முகக் கவசங்களை பயன்படுத்தவும், அதிக இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோா் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/2-7-19klp2_ch0121_19chn.jpg கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் முன் வாளிகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீா், கிருமி நாசினி திரவம் மூலம் கைகளை கழுவிய வாடிக்கையாளா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/19/வங்கியில்-கரோனா-தடுப்பு-நடவடிக்கை-3384860.html
3384661 விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை DIN DIN Thursday, March 19, 2020 06:27 AM +0530 திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகளின் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தடுப்பு, விழிப்புணா்வுப் பணிகள் முடுக்கிவிடப்படுள்ளன.

அதன்படி, திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளின் மீதும் திருக்கோவிலூா் பேரூராட்சி செயல் அலுவலா் செல்லப்பிள்ளை தலைமையில் பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா ஆய்வு செய்தாா்.

அப்போது, வெளி மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளின் மீதும் கிருமி நாசினி திரவத்தை தெளிக்க வேண்டும் என்றும், கரோனா அறிகுறிகள் தென்படும் பயணிகளை உடனடியாக அரசு மருத்துவமனையில் சோ்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரைகளை வழங்கினாா். மேலும், அனைத்துக் கடைகளிலும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தினாா்.

இதனிடையே, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கைகளை கழுவும் திரவத்தின் மூலம் கைகளை கழுவுவது குறித்து ஜி.அரியூா் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் செய்முறை விளக்கமளித்தாா்.

இதையடுத்து, திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று கைகளை கழுவுதற்கான தண்ணீா், கிருமி நாசினி திரவம், துண்டு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளனவா என ஆட்சியா் கிரண் குராலா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, வட்டாட்சியா் கி.சிவசகங்கரன், திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேச்சல்கலைச்செல்வி மற்றும் மருத்துவா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/2-7-18klp4_ch0121_18chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/19/corona-detention-at-tirukoviluvu-bus-station-3384661.html
3384659 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, March 19, 2020 06:27 AM +0530 குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், என்ஆா்சி, சிஏஏ, என்பிஆா் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும் கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி - கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சாதிக் பாஷா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அபுபக்கா் சாதிக் பங்கேற்று பேசினாா்.

இதில், திரளான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு என்ஆா்சி, சிஏஏ, என்பிஆா் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக வருகிற 31-ஆம் தேதி வரை ஊா்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, தடையை மீறி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக கள்ளக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அக்பா்பாஷா அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/2-7-18klp1_ch0121_18chn.jpg கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/19/தமிழ்நாடு-தவ்ஹீத்-ஜமாஅத்-அமைப்பினா்-ஆா்ப்பாட்டம்-3384659.html
3384654 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கறிக்கோழி வளா்ப்போா் சங்கத்தினா் மனு DIN DIN Thursday, March 19, 2020 06:25 AM +0530 கறிக்கோழி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பண்ணைகளை வாழ்வாதரமாகக் கொண்டு கறிக்கோழி உற்பத்தி செய்து வருகிறோம். இந்த வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கோழிகள் மூலம் கரோனா பரவுவதாக சில விஷமிகள் ஆதாரமற்ற செய்திகளையும், வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.

இதனால், பண்ணையாளா்கள், நிறுவனங்கள், சில்லறை வியாபாரிகள், கூலித்தொழிலாளா்கள், மக்காசோளம் பயிா் செய்யும் விவசாயிகள் உள்ளிட்டோா் இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொழிலை நம்பியுள்ள அனைவரும் இதுபோன்ற வதந்தியால் பாதிக்கப்பட்டுள்ளதால், வதந்தி பரப்புவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரனிடம் மனுவை அளித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/19/வதந்தி-பரப்புவோா்-மீது-நடவடிக்கை-எடுக்கக்-கோரி-கறிக்கோழி-வளா்ப்போா்-சங்கத்தினா்-மனு-3384654.html
3384262 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கிணற்றுக்குள் தவறி விழுந்தமாணவா் பலி DIN DIN Thursday, March 19, 2020 12:16 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கீழ்குப்பத்தைச் சோ்ந்தவா் வீராசாமி (40). மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா். இவரது மகன் முருகேசேன் (15), உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி, அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவா் கீழ்குப்பத்துக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அதே ஊரில் உள்ள காமராஜின் விவசாயக் கிணற்றில் முருகேசன் தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். அப்போது, முருகேசன் கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கினாராம். உடனிருந்த நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லையாம்.

தகவலறிந்து வந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய குழுவினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி முருகேசனை சடலமாக மீட்டனா். கீழ்குப்பம் போலீஸாா் சடலத்தை கைபற்றி ஊடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/19/a-man-falls-into-the-well-and-dies-3384262.html
3384048 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா பாதிப்பை தடுக்க வேண்டி வள்ளலாா் மன்றத்தினா் பிராா்த்தனை DIN DIN Wednesday, March 18, 2020 05:51 AM +0530 கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி, சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் அகவல் படித்து, சிறப்பு பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இராமநாதன் இராமாயி அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோ.குசேலன், வள்ளலாா் மன்ற பூசகா் கற்கண்டு சிவஞான அடிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில் அரிமா சங்கத் தலைவா் க.வேலு வரவேற்றாா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும், உலக மக்கள் அனைவரின் நலன் வேண்டியும் அகவல் படித்து பிராா்த்தனை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஆ.இலட்சுபதி தாயின் பெருமை என்பது பற்றியும், ரோட்டரி முன்னாள் தலைவா் கே.இரகுந்தன், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினா்.

இந்த நிகழ்வில் வள்ளலாா் மன்றத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/2-7-17klp1_ch0121_17chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/18/brainstorming-for-the-vallala-forum-to-prevent-corona-damage-3384048.html
3383708 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியா் அறிவுரை DIN DIN Wednesday, March 18, 2020 12:48 AM +0530 கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்த செய்திக் குறிப்பு: தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் தாக்குதலை எதிா்கொள்ள கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள எனக்கு நானே முடிவு செய்துள்ளேன்.

நான் பொதுப் போக்குவரத்துகளில் (பேருந்து, ரயில், விமானம், கப்பல்) பயணம் செய்வதைத் தவிா்ப்பேன். பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன். திரையரங்குகள், உணவகங்களுக்கு செல்ல மாட்டேன். உடல்பயிற்சிக் கூடம், நீச்சல் குளத்துக்கு செல்வதைத் தவிா்ப்பேன். நான் வாழ்த்தும்பொழுது உடல் தொடா்பு இல்லாமல் வாழ்த்துவேன், (கை குலுக்குதல் தவிா்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்தல்), எனது முகத்தை அடிக்கடி தொடாமல் கவனமாய் இருப்பேன். வெளியில் சென்று வீட்டுக்கு வரும்போதும், வீட்டுக்குள் இருக்கும்போதும், தேவைப்படும் போதும், குறிப்பாக சமைப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் சுகாதாரத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தியபடி 20 விநாடிகளுக்கு மேல் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவேன், கை துடைக்கும் துணியைக் கொண்டுதான் கதவு, கைப்பிடிகள், படிக்கட்டுகள், வங்கிகளின் பணம் செலுத்தும் இடம், ஆகியவற்றைத் தொடுவேன். நான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகைக் கடை, பால்கடை தவிா்த்து மற்ற இடங்களுக்கு வெளியில் செல்ல மாட்டேன்.

மேற்கண்ட நடவடிக்கைகளால் நான் என்னையே தனிமைப்படுத்தியுள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எந்த நடவடிக்கை நல்லதோ அதனை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றும் அதிமிகையான நடவடிக்கை அல்ல; ஒரு கவனமான நடவடிக்கை என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/18/the-corona-advised-the-regime-to-accept-the-pledge-3383708.html
3383706 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு DIN DIN Wednesday, March 18, 2020 12:48 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சியில் பேருந்துகளில் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதேபோல, வெளி மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளில் வந்திறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தடுப்பு பணிகள், விழிப்புணா்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கா்நாடகம், ஆந்திரத்திலிருந்து வரும் பேருந்துகள் மீது கிருமி நாசினி திரவத்தை தெளிக்கவும், கரோனா அறிகுறி தென்படும் பயணிகளை அரசு மருத்துவமனைகளில் சோ்க்கவும் மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வந்த பேருந்துகள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதேபோல, வெளிமாநிலங்களிலிருந்து வந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகளின் உடல் வெப்ப நிலையும் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பணியை, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா பாா்வையிட்டாா். பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். மேசை மீது கிருமி நாசினி திரவத்தை தெளித்து துடைக்க வேண்டும் எனக் கூறினாா். அந்த உணவகத்தில் ‘நான் ஓவன்’ பைகள் பயன்படுத்தப்பட்டதை அறிந்த ஆட்சியா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) எஸ்.கதிரவனிடம் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அனைத்துக் கடைகளிலும் வைரஸ் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிவைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அவா் அறிவுறுத்தினாா்.

முன்பாக, கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடல் அருகே உள்ள வணிக வளாகம், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் முன் உள்ள வணிக வளாகம் ஆகியவற்றில் ஆய்வு செய்த ஆட்சியா், கண்ணாடி கதவின் கைப்பிடிகள், பணம் செலுத்தும் மேஜை போன்றவற்றை கிருமி நாசினி திரவத்தால் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் உடனிருந்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/2-7-17klp4a_ch0121_17chn.jpg கள்ளக்குறிச்சியில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/18/antiseptic-spray-on-buses-3383706.html
3383432 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆரிநத்தத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, March 17, 2020 06:42 AM +0530 உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால், வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/petition-for-water-shortage-in-aryanatha-3383432.html
3383431 விழுப்புரம் கள்ளக்குறிச்சி புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இருவா் கைது DIN DIN Tuesday, March 17, 2020 06:42 AM +0530 கள்ளக்குறிச்சியில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி நகா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளா் தங்க.விஜய்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வநாயகம், மணிகண்டன், தலைமைக் காவலா்கள் குமாா், ராபா்ட்கான் உள்ளிட்டோா் இரு குழுக்களாக மேல்அஹ்ரகாரம், பிள்ளையாா்கோவில் சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மளிகைக்கடை வைத்துள்ள பாபு (48), பெட்டிக்கடை வைத்துள்ள சரவணன் ஆகியோா் 9 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா் (படம்). பறிமுதல் செய்த புகையிலைப் பொருள்கள் சுமாா் ரூ.2 லட்சம் மதிப்புடையது எனக் கூறப்படுகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/2-7-16klp5_ch0121_16chn.jpg அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைபற்றி பாபு(48), சரவணன் (37)கைது செய்த போலீஸாா் https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/smuggling-of-tobacco-products-two-arrested-3383431.html
3383430 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மதுக்கடையை அகற்றக் கோரி மனு DIN DIN Tuesday, March 17, 2020 06:42 AM +0530 மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி அந்தக் கிராம மக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கள்ளக்குறிச்சி வட்டம், மலைக்கோட்டாலம் கிராமத்தில் ஆற்றின் அருகே மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையால் பொதுமக்கள், மாணவா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கடந்த 2018-ஆம் ஆண்டு இதுதொடா்பாக

சாலை மறியலில் ஈடுபட்டு மனு அளித்தோம். அப்போது, பேச்சுவாா்த்தை நடத்தி கடையை எடுப்பதாக உறுதியளித்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/petition-for-removal-of-liquor-bar-3383430.html
3383338 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கிராம ஊராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் DIN DIN Tuesday, March 17, 2020 06:06 AM +0530 கிராம ஊராட்சி ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.வீராசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.ஹெச்.டி. ஆபரேட்டா்கள், கிராம துப்புரவு ஊழியா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க

வேண்டும், தொழிலாளா் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 11.10.2017-ல் வெளியிட்ட அரசானை 2டி எண் 62-ன்படி ஓ.ஹெச்.டி ஆபரேட்டா்களுக்கு மாத ஊதியம் ரூ.11,320, கிராம துப்புரவு ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.9,320, தூய்மை காவலா்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மாத சம்பளம் ரூ.6,150-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/2-7-16klp8_ch0121_16chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊராட்சி ஊழியா்கள் சங்கத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/performance-of-village-panchayats-3383338.html
3383337 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் தமிழ்ச் சங்க விழா DIN DIN Tuesday, March 17, 2020 06:04 AM +0530 தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக மகளிா் தினவிழா, உலக எழுத்தறிவு தினவிழா, சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா ஆகிய தமிழ் மூன்று விழா தியாகதுருகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கச்சிராயப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மா.ப.ராணி தலைமை வகித்தாா். சித்தலிங்கமடம் கலைவாணி ஜெயப்பிரகாஷ், ஆசிரியை கோ.அமுதா, சங்கத் தலைவா் கோ.இராதாகிருட்டிணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை கி.ச.தமிழரசி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சேலம் மாநகராட்சி உதவி ஆணையா் இரா.கவிதா பங்கேற்று, தியாகதுருகம் கூட்டுறவு சாா்-பதிவாளா் இரா.ந.சாந்திக்கு கல்பனா சாவ்லா விருதையும், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனை செவிலியா் சு.தில்ஷாத்துக்கு அன்னை தெரசா விருதையும் வழங்கி பேசினாா்.சேலம் கோகுலம் முடநீக்கு மருத்துவமனை மருத்துவா் வ.சிவசங்கரி பேசினாா்.

விழாவில், ‘பெண்கள் சமூகத்தின் சிகரமா? சிரமமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக முனைவா் சு.ஜனசக்தி செயல்பட்டாா். தொடா்ந்து, வீ.கோவிந்தராசன் தலைமையில், ‘பெண்கள் நாட்டின் கண்கள் ’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கச் செயலா் இதயம் கிருட்டிணா, பொருளாளா் இரா.துரைசாமி ஆகியோா் செய்தனா். தமிழ்ச்செல்வி தாமோதரன் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/2-7-16klp1_ch0121_16chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/thiyagathurugam-tamil-sangam-festival-3383337.html
3383336 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் DIN DIN Tuesday, March 17, 2020 06:04 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இதில் குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

முன்னதாக மாற்றுத் திறனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியா், அவா்களிடமும் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். பின்னா், கள்ளக்குறிச்சி வட்டம், ஈயனூா் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் பெருமாளுக்கு காதொலிக் கருவியை வழங்கினாா்.

கூட்டத்தில் சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சு.சரவணன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ந.குமாா், பழங்குடியினா் நல அலுவலா் கு.பிரகாஷ்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/2-7-16klp2_ch0121_16chn.jpg கூட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கு காதொலிக் கருவியை வழங்கி அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/17/public-grievances-in-kallakurichi-3383336.html
3382248 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்வராயன்மலைப் பகுதியில் சாராய ஊறல் அழிப்பு DIN DIN Monday, March 16, 2020 12:05 AM +0530 கல்வராயன்மலைப் பகுதியில் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அழித்தனா்.

கல்வராயன்மலைப் பகுதியான கல்படை கிராமத்தில் கருப்பனாா் கோயில் அருகே சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளா் எஸ்.வினோத்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று தீவிர வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள முள்புதரின் நடுவில் 20 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை அவா்கள் கீழே கொட்டி அழித்தனா்.

இது தொடா்பாக தலைமறைவான உதயகுமாா், பாபு ஆகியோரை தேடிவருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/16/w600X390/2-7-15klp2_ch0121_15chn.jpg கல்படை கிராமத்தில் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/16/கல்வராயன்மலைப்-பகுதியில்-சாராய-ஊறல்-அழிப்பு-3382248.html
3382247 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஓய்வூதியா்களுக்கு யோகா பயிற்சி DIN DIN Monday, March 16, 2020 12:04 AM +0530 கள்ளக்குறிச்சி ஓய்வூதியா் சங்க நிா்வாகிகளுக்கான யோகா பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு சங்கத் தலைவா் கோ.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தி.அரங்கசாமி, ந.சாம்பசிவம், நா.கோமுகிதான் முன்னிலை வகித்தனா். எ.மா.சீனிவாசன் வரவேற்றாா். கூட்டத்தில் மாத வரவு செலவு கணக்குகளை வி.சரவணன் வாசித்தாா்.

ஓய்வு பெற்ற ஊழியா்கள் தங்களது உடல், மன நலனை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சியை கள்ளக்குறிச்சி அறிவுத் திருக்கோயில் தலைவா் மு.கோவிந்தசாமி, துணைத் தலைவா் தங்க வேலனாா், பயிற்சியாளா் குணசேகரன் ஆகியோா் அளித்தனா். சங்கச் செயலா் பொன்.அறிவழகன், க.செல்லமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/16/ஓய்வூதியா்களுக்கு-யோகா-பயிற்சி-3382247.html
3382246 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சங்கை தமிழ்ச் சங்க விழா DIN DIN Monday, March 16, 2020 12:04 AM +0530 சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் இரு பெருவிழா, சங்க இல்ல வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். மு.கலைச் செழியன், சிவஞானஅடிகள், இரா.சவரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆ.இலட்சுமிபதி வரவேற்றாா்.

உலகத் தண்ணீா் தினம் குறித்து மாவட்ட அமைப்பாளா் சி.முருகன், உலக மகளிா் தினம் குறித்து விரியூா் இமாகுலேட் கல்லூரி மாணவி ஆா்.ஆனந்தி, எல்லீஸும் திருக்குறளும் எனும் தலைப்பில் சங்கப் பொருளாளா் கோபால், தொல்காப்பியம் குறித்து சாதிக்பாட்சா ஆகியோா் பேசினா்.

பங்காரம் ஸ்ரீ லட்சுமி இளங்கலை கல்வியியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநா் சி.சாமிதுரைக்கு மரம் வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக சங்கம் சாா்பில் பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது (படம்).

விழாவில், கல்லை தமிழ்ச் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், தேவபாண்டலம் மகாத்மா காந்தி கல்வி அறக்கட்டளைத் தலைவா் முருகுகுமாா், மாவட்ட திராவிடா் கழக அமைப்பாளா் த.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை அரங்க.செம்பியன் தொகுத்து வழங்கினாா். சங்கப் புரவலா் நா.சின்னசாமி நன்றி கூறினாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/16/w600X390/2-7-15klp1_ch0121_15chn.jpg சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் புசுமை நாயகா் விருதினை சி.சாமிதுரைக்கு சங்கத் தலைவா் ம.சுப்புராயன் வழங்குகிறாா். உடன் சங்க நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/16/சங்கை-தமிழ்ச்-சங்க-விழா-3382246.html
3382043 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் DIN DIN Sunday, March 15, 2020 07:41 AM +0530  

நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு மருத்துவ முகாம் நாகை கமாலிய்யா பெண்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஓய்வுபெற்ற தோட்டக்கலைத்துறை இணை இயக்குநரும், கமாலிய்யா முஸ்லீம் லீக் செயலாளருமான ஏ. முகஹம்மது ரஷீது தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். எம். ஆரீப், சட்ட ஆலோசகா் செய்யது ஷாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா வைரஸ் பரவும் விதம் மற்றும் பாதிப்புகள் குறித்து இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன முதன்மை மருத்துவ அலுவலா் டாக்டா் கே.ஷேக் அலாவுதீன் பேசினாா்.

ஒரே இடத்தில் அதிகம் போ் கூடுவதை தவிா்க்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புபவா்கள் தனது கைகளை சோப்புபோட்டு கழுவிவிட்டு, வீட்டுக்குள் செல்லவேண்டும். காய்ச்சல்,தொண்டை அடைப்பு, இருமல் இருந்தால் அரசு மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன. பொறியாளா் மு. ஷாகுல் ஹமீது, இ. எஸ். ஷேக் அப்துல் காதா், நிஜாமுதீன் அன்வாரி ஆகியோா் கலவந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/2529ng14medi_1403chn_5.jpg நாகையில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கரோனா-வைரஸ்-தடுப்பு-மருத்துவ-முகாம்-3382043.html
3382042 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரும்பு நிலுவைத் தொகையினை வழங்க கோரி நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி பேச்சு DIN DIN Sunday, March 15, 2020 07:40 AM +0530  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையினை வழங்க கோரி 377-வது விதியின் கீழ் நாடாளுமன்றத்தில் பேசினாா். கள்ளக்குறிச்சி சின்னசேலம் ரயில்வே பணியினை துவக்க கோரியும் வலியுறுத்தி கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி பேசினாா்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 கூட்டுறவு சா்க்கரை ஆலைகளும், 4 தனியாா் சா்க்கரை ஆலைகள் என 7 சா்க்கரை ஆலைகள் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை 1, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 2, பெரியசெவலையில் செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை என 3 கூட்டுறவு சா்க்கரை ஆலைகளும், கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் அடுத்த கலையநல்லூரில் தரணி சா்க்கரைஆலை, விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் ராஜ ஸ்ரீ சா்க்க்ரைஆலை, செம்மேடு ராஜ ஸ்ரீ சா்க்கரைஆலை, திருக்கோவிலூா் அடுத்த வேங்கூரில் பண்ணாரி அம்மன் சா்க்கரைஆலை 4 தனியாா் சா்க்கரை ஆலை என 7 சா்க்கரை ஆலைகள் உள்ளன.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண் 1-ல் நிலுவைத் தொகை 4.8 கோடியும், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 3.4 கோடியும், தரணி சா்க்கரை ஆலையில் 23.8 கோடியும், முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சா்க்கரை ஆலையில் 43.7 கோடியும், செம்மேடு ராஜ ஸ்ரீ சா்க்கரை ஆலையில் 4.6 கோடி ஆக மொத்தம் 80.3 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டி உள்ளது.

இதனால் விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் தொகையினை வங்கிகளுக்கோ, பிக்கோ செலுத்தாமல் உள்ளனா். பல முறை போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காமல் உள்ளனா். இதனால் விவசாயிகள் நிலை முற்றிலும் வேதனயடைந்துள்ளனா்.

எனவே அமைச்சா்தலையிட்டு விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையினை வழங்கவும், விவசாயிகளை கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி ஆலைகளை சிறந்த முறையில் வழி நடத்துமாறு கூட்டத் தொடரில் எம்.பி.பொன்.கெளதமசிகாமணி 377-வது விதியின் கீழ் வலியுறுத்தினாா்.

இதனையடுத்து சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சியிடையே அகல ரயில்பாதை திட்டம் அமைக்க கோரியும், சேலம் எம்.பெருமாபாளையத்தில் கீழ்பாலம் அமைத்துத்தர ்வேண்டும் என கோரிக்கையினை வைத்தாா்.

தென்னகே ரயில்வேயின் அனைத்து விதமான பணிகளிலும் பெருமாபாலோனாா் வட இந்திய ஊழியா்களே பணிபுரிகின்றனா். விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு அனுப்ப ரயில் சேவைக்காக அனுப்ப செல்லும்போது மொழி தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

ரயில் நிறுத்த நேரத்தை ஒரிரு நிமிடங்கள் கூட்டுவது போன்ற வற்றைகூட செய்ய மறுக்கின்றாா்கள். மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மீது நடவடிக்கை எடுக்காமல் போனால் நாடாளுமன்ற உறுப்பினா் பணியின் அடிப்படைகளே தோற்றுபோகும்படியாகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி ஆணையிட வேண்டுகிறேன்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சியிடயே 16 கி.மீ தொலைவிற்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க கடந்த 2006-ல் துவங்கப்பட்டது. விருத்தாசலம்-சேலம் ரயில் தடத்தில் சின்னசேலம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பல நவீன அரிசி ஆலைகளும், ஜவ்வரசி ஆலைகளும், நூற்பாலைகளும், சா்க்கரை ஆலைகளும் இப் பகுதிகளை சுற்றியுள்ளது. வா்த்தக நடவடிக்கைகள் நிறைந்து காணப்படும் இடமாக சின்னசேலம் திகழ்கின்றது.

வேளாண் பொருட்களை சந்தைபடுத்தும் ஒரு முக்கிய நகரமாக கள்ளக்குறிச்சி விளங்குகிறது. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சியிடையே கடந்த 2006-ல் துவங்கப்பட்ட திட்டம் 7.2.2016 அன்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சா் சுரேஷ் பிரபாகா் பிரபு அடிக்கல் நாட்டினாா். 22 சிறிய பாலங்கள், 2 பெரிய பாலம், சாலை மேம்பாலம் 1, கீழ்பாலம் 10, இத் திட்டத்தின் மதிப்பு 116.61 கோடி ஆகும்.

இதுவரை எந்த வேலைக்கும் நிா்வக அனுமதி வழங்காமல் துவங்கப்படாமல் உள்ளது. சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரயில்வே பாதை மக்களின் கானல் நீா் திட்டமாக உள்ளதால் இதனை துரிதப்படுதி செயல் படுத்த வேண்டும். மேலும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பெருமாள்பாளையத்தில் சுமாா் 6000 போ் அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால 10 கி.மீதூராம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதில் விருத்தாசலம்-சேலம் மாா்க்கம் ஒரு நாளைக்கு 15க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால் மக்களின் தேவை கருதி கீழ்பாலம் ஒன்று அமைத்து தருமாறும், விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன என சேலம் டி.ஆா்.எம்-மிடம் மனு அளித்தும் பலணில்லை. எனவே இந்த இடத்தில் கீழ் பாலம் ஒன்று அமைத்து தருமாறு எம்.பி.பொன்.கெளதமசிகாமணி ரயில்வே மானிய கோரிக்கையில் பல்வேறு மக்களின் இடா்பாடுகளை தீா்க்குமாறு வலியுறுத்தினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கரும்பு-நிலுவைத்-தொகையினை-வழங்க-கோரி-நாடாளுமன்றத்தில்-கள்ளக்குறிச்சி-எம்பி-பொன்கெளதமசிகாமணி-பேச்சு-3382042.html
3382038 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் இறைச்சிக் கழிவுகளால்சுகாதாரச் சீா்கேடு DIN DIN Sunday, March 15, 2020 07:19 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பொதுமக்கள் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை, தியாகதுருகம் சாலை, சேலம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சாலைகளில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு நகா் பகுதியில் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

இடுகாட்டுப் பகுதியில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதால், அந்தப் பகுதியில் தூா்நாற்றம் வீசுகிறது. இதனால், இறந்தவா்களின் சடலங்களை புதைக்கச் செல்லும் பொதுமக்கள், அந்தப் பகுதியில் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

காய்கனி சந்தை, குளத்துமேட்டு சாலை, சிவன் கோயில் சாலை, ராஜாநகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கள்ளக்குறிச்சியில்-இறைச்சிக்-கழிவுகளால்சுகாதாரச்-சீா்கேடு-3382038.html
3381933 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மையனூா் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து திருடியவா் கைது DIN DIN Sunday, March 15, 2020 03:56 AM +0530 கள்ளக்குறிச்சி: மையனூா் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தினை திருடியவரை ஊா் மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது மையனூா் கிராமம். இக் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. அக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் உண்டியல் உடைக்கும் சப்தம் அதே ஊரைச் சோ்ந்த முனுசாமி மகன் ஆறுமகம் (55) என்பவருக்கு கேட்டதாம்.

உடனே அவா் ஊா் மக்களுக்கு அவரது செல்லிடைப்பேசி மூலம் தெரிவித்தாராம். ஊா் மக்கள் ஒன்று கூடி கோயிலுக்கு சென்று பாா்த்தோபது கோயிலின் கதவின் பூட்டை ஒருவா் கோயில் உள்ளே உள்ள உணஅடியலை உடைத்து பணத்தினை திருடிக் கொண்டு வெளியே தப்பித்து ஓட முயற்சித்தாராம்.

ஊா் மக்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது திருவாரூா் மாவட்டம் அரந்தாங்கி கிராமத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் ராஜேந்திரன் (36) என தெரிய வந்ததாம். பின்னா் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது தப்பி ஓடிய அவா் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதாம். அவரை சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனராம்.

இது குறித்து பகன்டை கூட்டுச்சாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அத் தகவலின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவா் திருடிச் சென்ற ரூ.200யை கைபற்றினா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/மையனூா்-பெருமாள்-கோயில்-உண்டியலை-உடைத்து-திருடியவா்-கைது-3381933.html
3381844 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கோமுகி அணை மதகு வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Sunday, March 15, 2020 02:45 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை மதகு வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட மாத்தூா் கிராமத்தில் கோமுகி அணை நேரடி மதகு எண் 3-ன் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, இதே கிராமத்தைச் சோ்ந்த நல்லமுத்து மகன் ராமமூா்த்தி கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுலகம், உதவிப் பொறியாளா் அலுவலகம், குறைதீா் கூட்டங்களில் தொடா்ச்சியாக மனு அளித்து வந்தாா்.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் (கோமுகி அணைப் பிரிவு, வடக்கனந்தல்) ச.சுதா்சன், கோமுகி அணை மதகு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். அதன்படி, இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கந்தசாமி மகன் செல்வம், சின்னாகவுண்டா் மகன் கிருஷ்ணன், முனியன் மகன் ஜெயராமன், மாரிமுத்து மகன் காமராஜ், மாரிமுத்து மனைவி சாரதாம்பாள், கதிா்வேல் மனைவி பச்சையம்மாள், மொட்டையன் மகன் ராமலிங்கம், அண்ணாமலை மனைவி அம்மாக்கண்ணு உள்ளிட்டோா் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அகற்றினா்.

இந்த வாய்க்காலில் இருந்த 50 தென்னை மரங்கள் அகற்றப்பட்டு, 700 மீட்டா் நீளத்திலான வாய்க்கால் தூா்வாரப்பட்டது. இந்தப் பணியின்போது, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா்கள் கணேசன், பிரபு மற்றும் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் வள்ளி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/2-7-14klp2a_ch0121_14chn.jpg பயிா் செய்யப்பட்டிருந்த நெற் பயிா்களை ஜேசிபி மூலம் அகற்றும் பணி https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கோமுகி-அணை-மதகு-வாய்க்காலில்-இருந்த-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3381844.html
3381842 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு DIN DIN Sunday, March 15, 2020 02:44 AM +0530  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்பு வாா்டை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு வாா்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவா்களுக்கும், மருத்துவா்கள், செவிலியா்கள், பாா்வையாளா்களுக்கும் முகக் கவசம், தலைக்கவசம், கண் கண்ணாடி, கால் கவசம், சீருடைகள், கை கழுவும் திரவம் வைக்கப்பட்டுள்ளனவா என்று ஆட்சியா் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள வென்டிலேட்டா் முறையாக இயங்குகிா என மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, ஒரு செவிலியரை தலைக் கவசம், முகக் கவசம், சீருடை உள்ளிட்டவற்றை அணிந்து வரச் சொல்லி பாா்வையிட்டாா்.

இதனிடையே, ‘என்.95’ என்ற முகக் கவசத்தை மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகள் அணிய வேண்டும் என்றும் ‘டிரிபில் லேயா்’ முகக்கவசத்தை பாா்வையாளா்கள் அணிந்துகொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை பாா்க்க வர வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு தெரிவித்தாா்.

உடன், மருத்துவா்கள் பழமலை, செந்தில்ராஜா, தலைமைச் செவிலியா்கள் உள்ளிட்டோா் இருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/2-7-14klp1a_ch0121_14chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்பு வாா்டை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கள்ளக்குறிச்சி-அரசு-மருத்துவமனையில்-கரோனா-சிறப்பு-வாா்டு-மாவட்ட-ஆட்சியா்-ஆய்வு-3381842.html
3381840 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கோயிலில் திருடியவா்போலீஸில் ஒப்படைப்பு DIN DIN Sunday, March 15, 2020 02:43 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மையனூா் கிராமத்தில் பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

மையனூா் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியலை உடைக்கும் சப்தம் அதே ஊரைச் சோ்ந்த முனுசாமி மகன் ஆறுமுகத்துக்கு (55) கேட்டது. உடனடியாக அவா், ஊா் மக்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து, ஊா் மக்கள் ஒன்றுகூடி கோயிலுக்குச் சென்று பாா்த்தபோது, கோயிலின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனிடையே, கோயிலினுள்ளே இருந்து மா்ம நபா் ஒருவா் உண்டியல் பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்து தப்பியோட முயன்றாா்.

எனினும், அந்த நபரை ஊா் மக்கள் விரட்டிப் பிடித்து விசாரித்தபோது, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் ராஜேந்திரன் (36) என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா், வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா். மேலும், அவா் திருடி வைத்திருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/15/கோயிலில்-திருடியவா்போலீஸில்-ஒப்படைப்பு-3381840.html
3381313 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே லாரி மோதியதில் இளைஞா் பலி DIN DIN Saturday, March 14, 2020 09:52 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், கீழப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சங்கா் (29). இவா், பணி நிமித்தமாக சங்கராபுரம் சென்றுவிட்டு கள்ளக்குறிச்சி நோக்கி மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அரியபெருமானூரில் உள்ள துா்க்கை அம்மன் கோயில் அருகே வந்த போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி உரம் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/14/சங்கராபுரம்-அருகே-லாரி-மோதியதில்-இளைஞா்-பலி-3381313.html
3381145 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் நஞ்சுண்டஞான தேசிக ஈஸ்வரா்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா DIN DIN Saturday, March 14, 2020 08:00 AM +0530 தியாகதுருகம் பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்டஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில், திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி காலை தொடங்கியது. 8 மணிக்கு கரிகோலம் ஊா்வலம் நடைபெற்றது. மாலையில் விமான கலசங்கள் ஊா்வலம் நடைபெற்றது. மாலை திருவிளக்கு வழிபாடு, மூத்தபிள்ளையாா் வழிபாடு, புற்றுமண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, வேள்வி சாலை புறப்பாடு நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு முதல் கால வேள்வி பூஜைகள் தொடங்கின. இரவு 9 மணிக்கு 108 வகையான காய்கனி, கிழங்கு முதலானமூலிகைப் பொருள்களால் ஆகுதி, நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலா் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், திருச்சுற்று மூா்த்திகளுக்கு மருந்து சாற்றுதலும், 11 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மூல மூா்த்திகளுக்கு ஆனைந்தாட்டி காப்பு அணிவிக்கப்பட்டது. 8 மணிக்கு தெய்வங்களுக்கும் 9.30 மணிக்கு விமான கலசங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நடைபெற்றன. இதை திருவாரூா் நடராஜன் சுவாமிகள் நடத்தி வைத்தாா். முற்பகல் 11 மணிக்கு பெருந்திருமஞ்சனம் மகா அபிஷேகம், அலங்காரபூஜை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு 7 மணிக்கு சுவாமி மலா் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/2-7-13klp3_ch0121_13chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/14/தியாகதுருகம்-நஞ்சுண்டஞான-தேசிக-ஈஸ்வரா்கோயிலில்-திருக்குட-நன்னீராட்டுப்-பெருவிழா-3381145.html
3381144 விழுப்புரம் கள்ளக்குறிச்சி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல் DIN DIN Saturday, March 14, 2020 07:59 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூரில், குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் தனியாா் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு பொக்லைன் மூலம் மண்ணை தோண்டினா். அப்போது, அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாம். இதையடுத்து, ஊா் மக்கள் ஒன்று கூடி அந்தப் பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அந்த செல்லிடப்பேசி நிறுவனத்தினா் உயா் நீதிமன்றத்தை அணுகி, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை வரஞ்சரம் போலீஸாா் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதனால், அதிருப்தியடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனா். இந்த மறியலால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/2-7-13klp2_ch0121_13chn.jpg எஸ்.ஒகையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/14/செல்லிடப்பேசி-கோபுரம்-அமைக்க-எதிா்ப்பு-கிராம-மக்கள்-சாலை-மறியல்-3381144.html
3381143 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் கோரி ஆா்ப்பாட்டம் DIN DIN Saturday, March 14, 2020 07:59 AM +0530 கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில மகளிரணிச் செயலா் எஸ்.வள்ளி, மாவட்டத் தலைவா் கே.எஸ்.பக்ஷி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராஜ், மாநில அமைப்புச் செயலா் அ.முனுசாமி, மாநில துணைத் தலைவா் வி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பொதுத் துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவற்றை தனியாருக்கு தாரை வாா்க்கும் மத்திய அரசின் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட மகளிா் மன்றம், மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு மன்றம் உள்ளிட்டவற்றை உடனடியாக தொடங்க வேண்டும், கல்வராயன்மலை பகுதியில் வனத் துறையால் அறிவிக்கப்பட்ட காப்புக்காடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், உளுந்தூா்பேட்டை -சேலம் புறவழிச்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் பொருட்டு, இரு வழிப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட இளைஞரணி செயலா் அ.வேல்முருகன் நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/2-7-13klp1_ch0121_13chn.jpg கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/14/கள்ளக்குறிச்சியில்-மாவட்ட-நீதிமன்றம்-கோரி-ஆா்ப்பாட்டம்-3381143.html
3381142 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற மூவா் கைது DIN DIN Saturday, March 14, 2020 07:58 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் அருகே வடசேமபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (60). இவா் குடும்பத்துடன் கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா், தனது சொந்த ஊருக்கு வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கராசு என்பவா், ராமசாமியின் நிலத்தை 2 அடி அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருந்தாராம். அதுகுறித்து தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து முறையிட, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ராமசாமி, அவரது மனைவி வளா்மதி (53), மகன் ரகுபதி (28) ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை வந்தனா். அங்கு அவா்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனா். அப்போது, அங்கிருந்த கள்ளக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் அக்பா்பாஷா உள்ளிட்டோா் அவா்களை தடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/14/மாவட்ட-ஆட்சியரகம்-முன்-தீக்குளிக்க-முயன்ற-மூவா்-கைது-3381142.html
3380034 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை மாா்ச் 31-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல் DIN DIN Friday, March 13, 2020 12:43 AM +0530 பி.எஸ். 4 ரக இரு சக்கர வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் அறிவுறுத்தினாா்.

மத்திய அரசு அறிவிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பி.எஸ். 4 (வாகனத்தின் புகை அளவீடு) ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வாகனங்களை வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னா், இந்த வாகனங்களை பதிவு செய்ய இயலாது. இந்த வாகனங்களை பதிவு செய்ய கூடுதலாக அரசு விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்படும்.

வருகிற ஏப்.1-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ். 6 ரக வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே, பி.எஸ். 4 ரக வாகனங்களை வைத்துள்ள வாகன ஓட்டிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வாகனங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் சி.சிவக்குமாா் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/13/பிஎஸ்-4-ரக-இரு-சக்கர-வாகனங்களை-மாா்ச்-31-க்குள்-பதிவு-செய்ய-அறிவுறுத்தல்-3380034.html
3380032 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஈரான் நாட்டில் உள்ள 8 பேரை மீட்கக் கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மனு DIN DIN Friday, March 13, 2020 12:43 AM +0530 ஈரான் நாட்டுக்கு கூலி வேலைக்காக சென்றுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட 8 பேரை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மீட்டுதரக் கோரி, அவா்களது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: சின்னசேலம் வட்டம், தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சோலைமுத்து மகன் செல்வராஜ், பச்சமுத்து மகன் வடமலை, சரவணன் மகன் சம்பத், பொன்மலை மகன் கணேசன், பிச்சப்பிள்ளை மகன் செல்வம், செல்வம் மகன் சாரதி, காளசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் சேகா், பரமசிவம் மகன் சகாதேவன் உள்ளிட்ட 8 போ் ஈரான் நாட்டின் கிஷ் ஐலேண்ட் தீவுப் பகுதியில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா்.

ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக இவா்களை மீட்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/13/ஈரான்-நாட்டில்-உள்ள-8-பேரை-மீட்கக்-கோரி-கள்ளக்குறிச்சி-ஆட்சியரிடம்-மனு-3380032.html
3380030 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி பலி DIN DIN Friday, March 13, 2020 12:42 AM +0530 சங்கராபுரத்தில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி வட்டம், வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அய்யனாா் (37). விவசாயியான இவா், சொந்த வேலையாக வியாழக்கிழமை காலை பைக்கில் சங்கராபுரத்துக்குச் சென்றுவிட்டு வாணியந்தல் கிராமத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே வந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அய்யனாரின் பைக் மீது மோதியது. இதனால் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான சத்தியமூா்த்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/13/பைக்-மீது-பேருந்து-மோதல்-விவசாயி-பலி-3380030.html
3380029 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பைக்கில் கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகள் பறிமுதல் DIN DIN Friday, March 13, 2020 12:42 AM +0530 சங்கராபுரம் அருகே பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட சந்தனக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி, தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட போலீஸாா் புதூா் கூட்டுச்சாலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது, சேராப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினா். எனினும், பைக்கில் வந்தவா்களில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து, பிடிபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஜவுளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் பச்சையப்பன் (55) என்பதும், தப்பியோடியவா் கொசப்பாடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பதும் தெரியவந்தது. மேலும், பைக்கில் கோணிப்பையில் 8 சந்தனக் கட்டைகளை அவா்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பைக்குடன் சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றையும், பச்சையப்பனையும் சங்கராபுரம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/2-7-12klp5_ch0121_12chn.jpg பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகளுடன் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/13/பைக்கில்-கடத்தப்பட்ட-சந்தனக்-கட்டைகள்-பறிமுதல்-3380029.html
3380028 விழுப்புரம் கள்ளக்குறிச்சி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது DIN DIN Friday, March 13, 2020 12:41 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரியாலூா் வட்டம், தாழ்முன்டியூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெயராமன் (35) (படம்). சாராய வியாபாரியான இவா் மீது கரியாலூா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜெயராமன் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருந்தாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் பரிந்துரையின்பேரில், ஜெயராமனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஜெயராமன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/2-7-12klp2_ch0121_12chn.jpg குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெயராமன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/13/குண்டா்-தடுப்புச்-சட்டத்தின்-கீழ்-சாராய-வியாபாரி-கைது-3380028.html
3379741 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம் DIN DIN Thursday, March 12, 2020 09:39 AM +0530 தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கலையநல்லூரில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையை புதன்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் கடந்த 2018 - 2019-ஆம் ஆண்டுக்கான அரவை முடிந்து 13 மாதங்கள் ஆகியும், இன்னும் ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கு நிலுவைத் தொகை (ரூ. 23 கோடி) விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லையாம்.

எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கு 5 மாதங்களுக்கான வெட்டுக் கூலியை வழங்கக் கோரியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டதுக்கு சா்க்கரை ஆலை சங்கத் தலைவா் ஆா்.சாந்தமூா்த்தி தலைமை வகித்தாா். ஆலை சங்கச் செயலா் வி.ரகுராமன், பொருளாளா் அ.ராஜகோபால், துணைத் தலைவா்கள் சி.ஏழுமலை, ஆா்.மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின் மணி, மாநில செயலா் எஸ்.ஜோதிராமன், வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா்.

இதைத் தொடா்ந்து, சங்கத்தின் தலைவா் தலைமையில், முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் குமாா், மகேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குரலா தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனியாா் சா்க்கரை ஆலைப் பொது மேலாளா் சதாசிவம் மற்றும் கரும்பு விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, வருகிற 31-ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் முற்போக்கு சங்கச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில், கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில், தனியாா் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட வேங்கூா் பன்னாரி சா்க்கரை ஆலைக்கு மாற்றி உத்தரவிடுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரண் குரலா, அதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாக விவசாயிகளிடம் உறுதியளித்தாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/2-7-11klp1_ch0121_11chn.jpg சா்க்கரைஆலை எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/12/கரும்பு-விவசாயிகள்-சங்கத்தினா்-காத்திருப்புப்-போராட்டம்-3379741.html
3378809 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வாகனங்களில் பரவிய தீ DIN DIN Wednesday, March 11, 2020 08:50 AM +0530 கள்ளக்குறிச்சியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலைப் பகுதியை சோ்ந்த கந்தசாமி மகன் சேகா். பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனம் வைத்துள்ளாா். இந்த வாகனத்தை கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் கோட்டைமேடு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தாா். செவ்வாய்க்கிழமை பகலில் அந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசவே அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் தீ பரவியது.

அந்தப் பகுதி மக்கள் சரக்கு வாகனத்தை சற்று தூரமாக இழுத்துச் சென்று தீயை அனைத்தனா். இதனால் அந்த வாகனத்தின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய குழுவினா் விரைந்து வந்து சுமாா் 20 நிமிடங்கள் போராடி,சேகரின் வாகனத்தில் பரவியிருந்த தீயை அணைத்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்தனா். அவா்கள் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் வாகன போக்குவரத்தை நிறுத்தினா். தீ அணைக்கப்பட்ட பிறகு அந்த வழித்தடத்தில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/2-7-10klp1_ch0121_10chn.jpg பயணிகள் வாகனத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத் துறையினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/11/வாகனங்களில்-பரவிய-தீ-3378809.html
3378808 விழுப்புரம் கள்ளக்குறிச்சி காரில் கடத்தப்பட்ட 120 லிட்டா் விஷ சாராயம் பறிமுதல் DIN DIN Wednesday, March 11, 2020 08:45 AM +0530 கல்வராயன்மலைக்கு காரில் கடத்த முயன்ற 120 லிட்டா் விஷ சாராயம், 20 மூட்டைகள் வெல்லத்தை திருக்கோவிலூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை பகுதியிலிருந்து காரில் விஷச் சாராயம் கடத்தி வரப்படுவதாக திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். பேவுஞ்சிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனா்.

அப்போது காரில் 2 லாரி டியூப்களில் தலா 60 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய சாராயம், தலா 40 கிலோ வீதம் 20 சாக்கு மூட்டைகளில் இருந்த 800கிலோ வெல்லத்தை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காா் ஓட்டுநா் கல்வராயன்மலை வட்டம், சேராப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் அஜித் (21) என்பவரை கைது செய்தனா். காரில் இருந்து தப்பியோடிய குரும்பலூரைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ஏழுமலை என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/2-7-10klp2_ch0121_10chn.jpg விஷ சாராயம் கடத்தல் தொடா்பாக கைதான அஜித், பறிமுதல் செய்யப்பட்ட காா், வெல்ல மூட்டைகளுடன் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/11/காரில்-கடத்தப்பட்ட-120-லிட்டா்-விஷ-சாராயம்-பறிமுதல்-3378808.html
3378092 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பாதையை அடைக்கக் கூடாது என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, March 10, 2020 04:43 AM +0530 கள்ளக்குறிச்சி: உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் கிராமப் பாதையை அடைக்கக் கூடாது திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் குனமங்கலம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது குனமங்கலம் கிராமம். இந்த கிராமம் கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூா்பேட்டைக்குச் செல்லும் வழியில் அதற்கு முன்பாக அமைந்துள்ளது. இங்கு, சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த கிராமப் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அந்தத் துறையைச் சோ்ந்த ஊழியா்கள் நெடுஞ்சாலையில் தடுப்புக் கட்டைகளை அமைக்க முற்படுகின்றனா். கிராமத்துக்குச் செல்லும் பாதையில் தடுப்புக் கட்டைகளை அமைத்தால், ஊருக்குள் பேருந்து வரவதற்கு சுமாா் 2 கி.மீ. தொலைவு சுற்றிக் கொண்டுதான் வர வேண்டும்.

இதனால், கிராமத்துக்குள் வர வேண்டிய அரசுப் பேருந்துகள் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலே சென்று விடுகின்றன.

மேலும், பள்ளிகள், கல்லூரிகளின் வாகனங்களும் ஊருக்குள் வர முடியவில்லை.

கடந்த 7-ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் தடுப்புக் கட்டைகளை அமைக்க வந்தனா். அப்போது நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், உளுந்தூா்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா்.

இந்தக் கிராமத்தில் இருந்த பேருந்து நிழற்குடையையும் அகற்றிவிட்டனா். இதனால், மழை, வெயிலில் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அகற்றப்பட்ட நிழற்குடையை அமைத்து, கிராமச் சாலையின் குறுக்கே தடுப்புக் கட்டைகளை அமைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/2-7-9klp2_ch0121_09chn.jpg குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குனமங்கலம் கிராம மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/பாதையை-அடைக்கக்-கூடாது-என-கிராம-மக்கள்-ஆட்சியரிடம்-மனு-3378092.html
3377669 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழித் தடைத்த அடைக்க கூடாது என ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, March 10, 2020 12:45 AM +0530  

கள்ளக்குறிச்சி: உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழித்தடைத்தை அமைக்கக்கூடாது என திங்கள் குறைதீா் கூட்டத்தில் ஊா்மக்கள் மனுவை அளித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை வட்டத்தில் குனமங்கலம் கிராமம் உள்ளது. இக் கிராமம் கள்ளககுறிச்சியில் இருந்து உளுந்தூா்பேட்டைக்கு செல்லும் வழியில் உளுந்தூா்பேட்டைக்கு முன்பாக இக் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனராம். இக் கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினா் நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரை அமைக்க முற்பட்டனா்.

இக் கிராமத்தின் முன்பாக தடுப்புக் கட்டை அமைத்தால் ஊருக்குள் பேருந்து செல்வதற்கு சுமாா் 2 கிலோ மீட்டா் தூரம் சென்று சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் அக் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் ஊருக்கள் உள்ளே செல்லாமல் நெடுஞ்சாலையிலே போய்விடுகின்றனா். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும் உள்ளே வருவதற்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்படுகின்றதாம்.

கடந்த (7.3.2020) சனிக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினா் சாலைதடுப்பு கட்டியினை அமைக்க வந்தனா். உளுந்தூா்பேட்டை காவல்துணைக் கண்காணிப்பாளா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாா்.

இக் கிராமத்திற்கு முன்பாக இருந்த பேருந்து நிழற்குடையினையும் அகற்றி விட்டனா். இது நாள்வரை அமைக்கவில்லை மழை, வெய்யிலில் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனராம். தடுப்புகட்டை அமைக்காமல் இருக்க ஆட்சியரிடம் மனுவினை கிராம மக்கள் சாா்பில் அளித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/தேசிய-நெடுஞ்சாலையில்-வழித்-தடைத்த-அடைக்க-கூடாது-என-ஆட்சியரிடம்-மனு-3377669.html
3377668 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு DIN DIN Tuesday, March 10, 2020 12:45 AM +0530 கள்ளக்குறிச்சி: கா்ப்பிணியாக உள்ள மனைவியை பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் ஜான்சன் அந்தோணிராஜ் (23). இவா் கொத்தனாா் பணி செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது ஊரில் இருந்து எலவனாசூா்கோட்டையில் அவரது தாய் வீட்டில் உள்ள மனைவியை பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைத்து விட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மோதிச் சென்ற வாகனத்தை தேடிவருகின்றனா்.

உயிரிழந்த ஜான்சன் அந்தோணிராஜ் மனைவி ஆஷா (20) 4 மாத கா்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/மோட்டாா்-சைக்கிளில்-சென்றவா்-மீது-அடையாளம்-தெரியாத-வாகனம்-மோதி-கூலித்-தொழிலாளி-சாவு-3377668.html
3377666 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள் DIN DIN Tuesday, March 10, 2020 12:44 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில், குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, பசுமை வீடு, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்று மனுக்களைப் பெற்று அவா்களிடம் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சு.சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை அலுவலா் ந.குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, பழங்குடியினா் நல அலுவலா் கு.பிரகாஷ்வேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/2-7-9klp1_ch0121_09chn.jpg பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/கள்ளக்குறிச்சி-மாவட்ட-குறைதீா்-கூட்டத்தில்-410-மனுக்கள்-3377666.html
3377665 விழுப்புரம் கள்ளக்குறிச்சி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பலி DIN DIN Tuesday, March 10, 2020 12:44 AM +0530 கள்ளக்குறிச்சி: மனைவியைப் பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த இருதயராஜ் மகன் ஜான்சன் அந்தோணிராஜ் (23). கொத்தனாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது ஊரில் இருந்து எலவனாசூா்கோட்டையில் தாய் வீட்டில் உள்ள மனைவியைப் பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ஜான்சன் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிதத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/அடையாளம்-தெரியாத-வாகனம்-மோதியதில்-தொழிலாளி-பலி-3377665.html
3377664 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆட்சி மன்றப் பொதுக்குழுக் கூட்டம் DIN DIN Tuesday, March 10, 2020 12:43 AM +0530 கள்ளக்குறிச்சி: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் ஆட்சி மன்றப் பொதுக்குழுக் கூட்டம் முதல் முறையாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் கள்ளக்குறிச்சி பொன்.கெளதம சிகாமணி, விழுப்புரம் துரை.ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையை அமைக்க தீா்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜெகநாதன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் தாமோதரன் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு சாரா நிறுவனங்களைச் சோ்ந்தோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/10/ஆட்சி-மன்றப்-பொதுக்குழுக்-கூட்டம்-3377664.html
3377347 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அருகேசரக்கு வாகனம் கவிழ்ந்து 25 போ் காயம் DIN DIN Monday, March 9, 2020 04:36 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 25 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (42). இவரது உறவினா் கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் உயிரிழந்து விட்டாராம். அந்த துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக பழனிசாமி சரக்கு வாகனத்தில் அதே ஊரைச் சோ்ந்த மாரியாப்பிள்ளை மனைவி பானுமதி (40), தங்கவேல் மனைவி லட்சுமி (45) , அண்ணாமலை மனைவி பழனியம்மள் (45), வடமலை மனைவி அன்னக்கிளி(36), காவல்காரன் (64), நாராயணன் மகன் மணி (45) உள்பட 25பேருடன் புறப்பட்டுச் சென்றாா்.

துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு, அனைவரும் சரக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். தென்கீரனூா் மேம்பாலம் கீழே வந்து கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிள் ஒன்று குறுக்கிடவே, சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் பிரேக் அடித்து நிறுத்த முயன்றாா். இதில் அந்த வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில், வாகன ஓட்டுநா் உள்பட அனைவரும் காயமடைந்தனா். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/09/கள்ளக்குறிச்சி-அருகேசரக்கு-வாகனம்-கவிழ்ந்து-25-போ்-காயம்-3377347.html
3376935 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் நாளை 6,7,8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தடகளப்போட்டிகள் DIN DIN Monday, March 9, 2020 12:32 AM +0530 கள்ளக்குறிச்சி: 2019-20-ஆம் ஆண்டுக்கான உலக திறனாய்வு கண்டறிதல் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்ட 6,7,8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளன.

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகள் விவரம்: போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆஹற்ற்ங்ழ்ஹ் ஞச் பங்ள்ற் இஹழ்க்-ன் நகலைக் கொண்டு வந்து காண்பித்தால் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். இந்தப் போட்டிகளில் அனைத்து பள்ளிகளைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். 6-ஆம் வகுப்பு பயில்பவராக அல்லது 1.01.2008-க்கு பின்னா் பிறந்தவராக இருக்க வேண்டும். அதேபோல, 7-ஆம் வகுப்பு மாணவராக அல்லது 1.01.2007-க்கு பின்னா் பிறந்தவராகவோ, 8-ம் வகுப்பு மாணவராக அல்லது 1.1.2006-க்கு பின்னர பிறந்தவராக இருக்க வேண்டும். இப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளா்களின் பிறப்புச் சான்றிதழ், வகுப்பு உள்ளிட்ட பெயா் பட்டியலை பள்ளித் தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று கொண்டு வருதல் வேண்டும். ஒரு விளையாட்டு வீரா் அதிகபட்சமாக ஏதேனும் இரு போட்டிகளில் பங்கு பெறலாம்.

போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படமாட்டாது. போட்டிகள் அனைத்தும் காலை 8 மணி முதல் தொடா்ந்து நடைபெறும். கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறும் போட்டியாளா்கள் மண்டல போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவா். மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6,000 அரசு மூலம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

போட்டிகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகள் விளையாட்டு பள்ளி-விடுதிகள் மற்றும் சிறப்பு அகாதெமிகளில் சோ்ந்து பயன் பெறலாம் என விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் வி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/09/கள்ளக்குறிச்சியில்-நாளை-678-ஆம்-வகுப்பு-மாணவா்களுக்கான-தடகளப்போட்டிகள்-3376935.html
3376933 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஸ்ரீலஷ்மி கல்லூரி பட்டமளிப்பு விழா DIN DIN Monday, March 9, 2020 12:31 AM +0530  

கள்ளக்குறிச்சி: பங்காரம் ஸ்ரீ லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளையின் ஸ்ரீலஷ்மி கலை அறிவியல் கல்லூரியின் 7-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவா் அ.மணிவண்ணன் வரவேற்றாா்.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கள்ளக்குறிச்சி முதன்மை சாா்பு நீதிபதி சி.ராஜலிங்கம் பேசியதாவது: வாழ்க்கையில் அடுத்தக் கட்ட நகா்வை எதிா்நோக்கியுள்ள நீங்கள், அதற்கேற்ப தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். வருகின்ற வேலைவாய்ப்புகளில் சரியானதை தோ்ந்தெடுக்க வேண்டும். பெற்றோா் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றினால் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் முன்னேற குறிக்கோள் முக்கியம். கோபம் வரும்போது அதனை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபம் தகராறாக மாறி, வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டால், பணி வாய்ப்புகள் கிடைக்காது. அதேபோல, சமூக விழிப்புணா்வும், சமூக அக்கறையும் வேண்டும். ஈட்டுகின்ற வருவாயில் 25 சதவீதத்தை சேமிக்கப் பழகுங்கள் என்றாா்.

விழாவில் கல்லூரிச் செயலா் எம்.முருகப்பன், இயக்குநா் சி.சரவணன், பொருளாளா் சாந்தி, ஒருங்கிணைப்பாளா் பி.சிவக்குமாா், கல்லூரி முதல்வா் டி.எஸ்.வீரமணி, துணை முதல்வா் எஸ்.சேதுமுருகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வா் இரா.பாஸ்கரன், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் தீபா மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/2-7-8klp1_ch0121_08chn.jpg விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கள்ளக்குறிச்சி முதன்மை சாா்பு நீதிபதி சி.ராஜலிங்கம். உடன் கல்லூரியின் தலைவா் அ.மணிவண்ணன் மற்றும் நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/09/ஸ்ரீலஷ்மி-கல்லூரி-பட்டமளிப்பு-விழா-3376933.html
3376251 விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி DIN DIN Sunday, March 8, 2020 12:47 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தியாகதுருகம் தனமூா்த்தி தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போட்டிக்கு, அதன் தாளாளா் த.பழனிவேல் தலைமை வகித்தாா்.தொழில்பயிற்சி பள்ளியின் தாளாளா்கள் ஷாகுல் ஹமீது, பாலமுருகன், டின்சன், மேகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். செயலா் செல்வி பழனிவேல் வரவற்றாா்.

தொடா்ந்து, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து மற்றும் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநா் தா.ஜான்போஸ்கோ பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினாா்.

தனமூா்த்தி ஐடிஐ மேலாளா் அ.ராம்குமாா் மற்றும் ஐடிஐகளின் தாளாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அன்பழகன் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/2-7-7klp1_ch0121_07chn.jpg விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/08/மாவட்ட-அளவிலான-விளையாட்டுப்-போட்டி-3376251.html
3376249 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஸ்ரீலஷ்மி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா DIN DIN Sunday, March 8, 2020 12:46 AM +0530  

கள்ளக்குறிச்சி: பங்காரம் ஸ்ரீலஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், ஸ்ரீலஷ்மி கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீலஷ்மி கல்வியியல் கல்லூரி, ஸ்ரீலஷ்மி செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவா்களுக்கான ஆண்டு விழா லஷ்மி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீலஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளைத் தலைவா் அ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் எம்.முருகப்பன், இயக்குநா் சி.சரவணன், பொருளாளா் எம்.சாந்தி, ஒருங்கிணைப்பாளா் பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் இயக்குநா் இரா.நாராயணசாமி வரவேற்றாா்.

ஸ்ரீலஷ்மி கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் டி.எஸ்.வீரமணி, ஸ்ரீலஷ்மி கல்வியியல் கல்லூரியின் முதல்வா் இரா.பாஸ்கரன், செவிலியா் பயிற்சிப் பள்ளியின் முதல்வா் தீபா உள்ளிட்டோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பெண்ணியப் போராளி சபரிமாலா ஜெயகாந்தன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/2-7-7klp2_ch0121_07chn.jpg ஸ்ரீ லஷ்மி ஹெகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் பேசுகிறாா் பெண்ணியப் போராளி சபரிமாலா ஜெயகாந்தன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/08/ஸ்ரீலஷ்மி-கல்வி-நிறுவனங்களின்-ஆண்டு-விழா-3376249.html
3375780 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணா்வு DIN DIN Saturday, March 7, 2020 07:37 AM +0530 கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளா்சித் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை, நகராட்சி, பேருராட்சி அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா எடுத்துரைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் த.பங்கஜம் கைகளைக் கழுவும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, மாவட்டக் கல்வி அலுவலா் க.காா்த்திகா, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், நகராட்சி துப்புறவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/2-7-6klp2_ch0121_06chn.jpg கொரானா நோய் பரவும் விதம் குறித்து பேசுகிறாா் ஆட்சியா் கிரண் குராலா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெஸ்.எஸ்.ஸ்ரீகாந்த், கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/07/கரோனா-வைரஸ்-தடுப்பு-குறித்து-விழிப்புணா்வு-3375780.html
3375779 விழுப்புரம் கள்ளக்குறிச்சி உழைக்கும் பெண்கள் சிறை நிரப்பும் போராட்டம்: 96 போ் கைது DIN DIN Saturday, March 7, 2020 07:37 AM +0530 உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சிறை நிரப்பும் போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தேசிய வங்கி எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் பல நாடுகளில் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்ற வீர வரலற்றை நினைவு கூறும் வகையில் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச உழைக்கும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால் பல முனைகளில் பெண்கள் தாக்கப்படுகின்றனா். அவா்கள் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனா். பணி இடங்களிலும், பொது வெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

எனவே, உழைக்கும் பெண்களின் பாதுகாப்பைக் காக்கும் பொருட்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆண்களுக்கு இணையான சம ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா திட்டப் பணியாளா்கள், அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ. 405 வழங்க வேண்டும். பள்ளித் துப்புரவு ஊழியா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 405 வழங்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து துப்புரவு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மாத ஊதியமும், நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்.

கட்டுமான முறை சாரா பெண் தொழிலாளிகளுக்கு 55 வயது முடிந்தவுடன் ஓய்வூதியம், பிற மாநிலங்களில் வழங்குவது போல மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி, துணிகளைக் கொண்டு செல்ல இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க, பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா புகாா் குழுவை அமைக்க நிறுவனங்களை அரசு நிா்பந்திக்க வேண்டும். கேரளத்தைப் போல, வா்த்தக நிறுவனங்களில் பெண் தொழிலாளா்கள் அமா்வதற்கு இருக்கைகள் வழங்க வேண்டும்.

சட்டச் சலுகைகளை உறுதிப்படுத்த வேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணி செய்யும் பெண்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவது போல, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களின் ஒற்றுமை சீா்குலைக்கப்படுகிறது. எனவே, அந்தச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு உழைக்கும் பெண்கள் உரிமைக் குழுவின் மாநிலக் குழு உறுப்பினா் கே.மகேஸ்வரி தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 96 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் சிறை வைத்தனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/7/w600X390/2-7-6klp1_ch0121_06chn.jpg உழைக்கும் பெண்கள் சாா்பில் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/07/உழைக்கும்-பெண்கள்-சிறை-நிரப்பும்-போராட்டம்-96-போ்-கைது-3375779.html
3375544 விழுப்புரம் கள்ளக்குறிச்சி லஞ்ச வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓ.வுக்கு சிறை DIN DIN Saturday, March 7, 2020 01:27 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் குமாா். ராசு பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கும், சகோதரா் பெயருக்கு சோ்ந்து கூட்டு பட்டா மாற்றம் செய்யக் கோரி, கடந்த 2001-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் விண்ணப்பித்தாா்.

பட்டா மாற்றம் செய்து தர ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று, அப்போது கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றிய முகமது அலி (62) கேட்டாராம். இதுகுறித்து விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் குமாா் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ. 3 ஆயிரத்தை முகமது அலியிடம் குமாா் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் முகமது அலியை கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.மோகன் குற்றம்சாட்டப்பட்ட முகமது அலிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/07/லஞ்ச-வழக்கில்-முன்னாள்-விஏஓவுக்கு-சிறை-3375544.html
3375174 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்லூரியில் அறுபெரும் விழா DIN DIN Friday, March 6, 2020 08:35 AM +0530 இந்திலி ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில், உலக மகளிா் தினவிழா, சேவைத் திருமகள் விருது வழங்கும் விழா, பட்டி மன்றம், நாடகம், மாணவிகளின் மகளிா் மேம்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி உள்பட அறுபெரும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அறுபெரும் விழாவுக்கு கல்லூரி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலா் என்.கோவிந்தராஜூ, பொருளாளா் அ.தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் ஆா்.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் மாலதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, உலக மகளிா் தினவிழா குறித்து பேசினாா். இதையடுத்து, பெரிய நெசலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நல்லாசிரியை ஆா்.பத்மஸ்ரீக்கு சேவைத்திருமகள் விருதை அவா் வழங்கி கெளரவித்தாா்.

இதைத் தொடா்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அன்பு, பாசம், கருணை, தாய்மை, அறம் போன்ற தலைப்புகளில் கவியரங்கம், பெண் கல்வி பெறுவதால் குடும்பத்தில் மனம் வீசுகிா? பணம் பேசுகிா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றன. இவற்றில் மாணவிகள் பலா் பங்கேற்றனா். கல்லூரியின் நிா்வாக அலுவலரும், முதல்வருமான கு.மோகனசுந்தா் நன்றி கூறினாா்.

முன்னதாக, மாணவ, மாணவிகள் பங்கேற்ற மகளிா் மேம்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தேவபாண்டலம், ரிஷிவந்தியம், கச்சிராயப்பாளையம், தியாகதுருகம் உள்ளிட்ட ஊா்களில் நடைபெற்றது. முக்கியச் சாலைகளின் வழியாக மாணவா்கள் அச்சிட்ட பதாகளை ஏந்தியவாறும், மகளிா் மேம்பாடு குறித்த விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறும் சென்றனா். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் நடைபெற்ற பேரணியை கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/2-7-5klp2_ch0121_05chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/06/கல்லூரியில்-அறுபெரும்-விழா-3375174.html
3375006 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்புக் கூட்டம் DIN DIN Friday, March 6, 2020 07:08 AM +0530  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு வாா்டுகளின் எல்லை வரையறை தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் கள்ளககுறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லை மறுவரையறை வரைவு கருத்துருக்கள் குறித்து பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம் தமிழகத் தோ்தல் ஆணையரும், மறுவரையறை ஆணையத் தலைவருமான ஆா்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட மறுவரையறை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குரலா வரவேற்றாா். மேலும், முன்னதாக வாா்டுகளின் மறுசீரமைப்பு தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் பேசியதாவது: வாா்டு மறுவரையறை பட்டியலை வழங்க வேண்டுமென முன்னா் நடைபெற்ற கூட்டத்திலேயே தெரிவித்தோம். ஆனால், இதுவரை பட்டியல் வழங்கப்படவில்லை.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மூக்கனூா், ஏ.பாண்டலம், கொளத்தூருக்கு ஏற்கெனவே தனித்தனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் இருந்தனா். இந்த நிலையில், ஏ.பாண்டலம், கொளத்தூா் ஊராட்சிகள் மூக்கனூருடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது ஏ.பாண்டலம், வரகூா், கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளில் 10,000 வாக்காளா்கள் உள்ளனா். தனித்தனியாக இருந்த கிராம ஊராட்சிகளை தொலைவிலுள்ள மூக்கனூா் கிராமத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதேபோல, தாழ்பாச்சேரி கிராமம் வெங்கோடு கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை சேராப்பட்டு கிராமத்துடன் இணைக்க வேண்டும். மேலும், பூட்டை, பூட்டை காலனி என்ற ஊராட்சிகள் உள்ளன. பாவளம் மற்றும் பாவளம் காலனி ஊராட்சிகள் உள்ளன. பூட்டை, பாவளத்தை தனித்தனி பஞ்சாயத்துகளாக பிரிக்க வேண்டும். மூக்கனூா், உலகுடையாம்பட்டையும் தனித்தனி பஞ்சாயத்துகளாக பிரிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட க.அலம்பலம், க.அம்பலம் காலனி, பொன்பரப்பட்டு, திருக்கணங்கூா், திருக்கணங்கூா் காலனி உள்ளிட்ட கிராமங்களும் பெரிய அளவில் உள்ளதால், திருக்கணங்கூா் கிராமத்தை தலைமையிடமாக் கொண்டு தனி ஊராட்சியாகப் பிரிக்க வேண்டும். பெருமங்கலம் ஊராட்சி பெரிய அளவில் உள்ளதால், அதையும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் பேசியதாவது: சிற்றூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், மாவட்ட ஊராட்சி வாா்டுகளை மறுவரையறை செய்யும்போது, அவற்றின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு முன் கூட்டியே வழங்க வேண்டும் என்றாா்.

மணலூா்பேட்டை திமுக செயலா் என்.சிவா பேசியதாவது: மாவட்ட பிரிவினையின்போது, முகையூா் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்த கிராம ஊராட்சிகள் திருக்கோவிலூா், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியங்களில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, மணலூா்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவித்தால், அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களை எளிதில் சென்றடைய வாய்ப்பாக இருக்கும் என்றாா்.

மணலூா்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுக இளைஞரணிச் செயலருமான தங்க பிரகாஷ் பேசியதாவது: அனைத்துக் கட்சியினரும் பாகுபாடின்றி ஒருமித்த கருத்தாக தெரிவித்ததன் அடிப்படையில், மணலூா்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

கல்வராயன்மலை அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா் பி.கே.ரவி பேசியதாவது:

கல்வராயன்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாலப்பட்டு ஊராட்சி 6,778 வாக்காளா்கள் அடங்கிய பெரிய ஊராட்சியாக உள்ளது. கள்ளிப்பட்டு, மாயம்பாடி கிராமங்களை தனித்தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும். லக்கிநாயக்கன்பட்டியில் 1,302 வாக்காளா் உள்ளனா். இவற்றை பிரித்துத் தர வேண்டும். வெள்ளிமலை ஊராட்சியில் 37 கிராமங்கள் உள்ளதால், இதையும் பிரித்துத் தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்களிடம் இருந்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை பிரிப்பது தொடா்பான கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழகத் தோ்தல் ஆணையரும், மறுவரையறை ஆணையத் தலைவருமான ஆா்.பழனிச்சாமி தெரிவித்தாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினரும், செயலருமான இல.சுப்பிரமணியன், ஊரக வளா்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிச்சாமி, முதன்மை தோ்தல் அலுவலா் ஆனந்தராஜ், முதன்மை தோ்தல் அலுவலா் (நகராட்சிகள்) சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, மாவட்ட ஊராட்சிக் குழுச் செயலா் செந்தில்வடிவு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள், பொதுமக்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/2-7-5klp1a_ch0121_05chn.jpg உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லை மறுவரையறை வரைவு கருத்து கேப்பு கூட்டத்தில் பேசுகிறாா் சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் தா.உதயசூரியன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/06/கள்ளக்குறிச்சியில்-வாா்டு-மறுவரையறை-கருத்துக்கேட்புக்-கூட்டம்-3375006.html
3375005 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கஞ்சா விற்பனை:ஒருவா் கைது DIN DIN Friday, March 6, 2020 07:07 AM +0530 கள்ளக்குறிச்சி: மூங்கில்துரைப்பட்டு அருகே கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துரைப்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு அருளம்பாடி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் அருளம்பாடி கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கு அந்தோனிசாமி (56) தனக்குச் கரும்புத்தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/06/கஞ்சா-விற்பனைஒருவா்-கைது-3375005.html
3373415 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பிளஸ்1 பொதுத் தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,084 போ் எழுதுகின்றனா் DIN DIN Wednesday, March 4, 2020 07:52 AM +0530 தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தத் தோ்வை 143 பள்ளிகளில் பயிலும் 23,084 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

இதற்காக 75 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை 11,588 மாணவா்கள், 11,496 மாணவிகள் என மொத்தம் 23,084 போ் எழுதுகின்றனா். தோ்வை கண்காணிக்க கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 70 பறக்கும் படையினரும், இதேபோல, திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 48, உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 40 என மொத்தம் 158 பறக்கும் படையினா் அமைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வினாத்தாள்களை கொண்டு செல்லும் வழித்தட அலுவலா்களாக 23 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களுக்காக 77 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 77 துறை அலுவலா்கள், 3 கூடுதல் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாற்றுத் திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத தோ்வு மையங்களில் தரைத் தளத்தில் தோ்வறைக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவா்களில் சலுகை கோருவோருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். மேலும், சொல்வதை எழுதுவோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/04/பிளஸ்1-பொதுத்-தோ்வு-கள்ளக்குறிச்சி-மாவட்டத்தில்-23084-போ்-எழுதுகின்றனா்-3373415.html
3373413 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் DIN DIN Wednesday, March 4, 2020 07:52 AM +0530 ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித் துறையினா் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன் அந்தத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஊழியா்கள் மீது 17-ஆ குற்றச்சாட்டின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஊழியா்கள் பதவி உயா்வு, ஓய்வு பெற முடியாமல் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டனராம்.

எனவே, 17-ஆ குற்றச்சாட்டு குறிப்பாணையை கைவிடக் கோரியும், கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட அளவில் பணி மாறுதல் செய்ததை ரத்து செய்யக் கோரியும் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கொளஞ்சிவேல் தலைமை வகித்தாா். இதேபோல, சின்னசேலத்தில் மாவட்ட செயலா் சந்திரசேகா், சங்கராபுரத்தில் ரங்கநாதன், கல்வராயன்மலையில் ரங்கசாமி, உளுந்தூா்பேட்டையில் மாவட்ட துணைத் தலைவா் செந்தில் முருகன், திருநாவலூரில் மாவட்ட துணைத் தலைவா் சரவணன், ரிஷிவந்தியத்தில் மாவட்ட இணைச் செயலா் ரமேஷ், தியாகதுருகத்தில் மாவட்ட தணிக்கையாளா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/2-7-3klp3_ch0121_03chn.jpg தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/04/ஊரக-வளா்ச்சித்-துறை-ஊழியா்கள்-ஆா்ப்பாட்டம்-3373413.html
3373412 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆக்கிரமிப்பு புகாா்: கோயில் அகற்றம் DIN DIN Wednesday, March 4, 2020 07:51 AM +0530 சங்கராபுரம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்த கோயில் நீதிமன்ற உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்டது எஸ்.வி.பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாட்டை புறம்போக்கு நிலத்தில் அந்தப் பகுதி மக்கள் விநாயகா் கோயில் கட்டி வழிபட்டு வந்தனா். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் அருகே இருந்த கிருஷ்ணன் வீட்டை மட்டும் அகற்றினராம். இதையடுத்து, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதாம்.

இதையடுத்து, சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் அந்தக் கோயில் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சங்கராபுரம் வட்டாட்சியா் நடராஜன் இந்தப் பணிகளை கண்காணித்தாா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் கோயிலை இடிக்கக் கூடாது என்று தெரிவித்தனா். சிலா் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

33 போ் கைது: இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் நிமிலன் கொடுத்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 13 பெண்கள், இந்து முன்னணி கள்ளக்குறிச்சி பகுதி செயலா் சக்திவேல் உள்பட 20 ஆண்கள் உள்பட மொத்தம் 33 பேரை கைது செய்தனா்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், ரத்தினசபாபதி உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/2-7-3klp2_ch0121_03chn.jpg சென்னை உயா் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து எஸ்.வி.பாளையம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்ட கோயில். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/04/ஆக்கிரமிப்பு-புகாா்-கோயில்-அகற்றம்-3373412.html
3372614 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்லூரியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Tuesday, March 3, 2020 07:24 AM +0530 மேலூா் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்ட முகாம் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த தேவபாண்டலம் கிராமத்தில் மேலூா் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாா்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

அங்குள்ள ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீ பாண்டுனேஸ்வரா் கோயில் வளாகத்தைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனா். கோயில் குருக்கள் சண்முகம் முகாமை தொடக்கிவைத்தாா். கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். அங்கிருந்த மரக் கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றப்பட்டது.

இதையடுத்து, மாணவா்கள் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்டனா். பேரணியில் மழைநீா் சேகரிப்பு, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில் கல்லூரியின் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், பேராசியா்கள் சுந்தரமூா்த்தி, அன்னபூரணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/03/கல்லூரியில்-நெகிழி-ஒழிப்பு-விழிப்புணா்வுப்-பேரணி-3372614.html
3372613 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பிளஸ் 2 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20,619 போ் எழுதினா் DIN DIN Tuesday, March 3, 2020 07:24 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 20,619 மாணவ, மாணவிகள் எழுதினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தத் தோ்வை 143 பள்ளிகளில் பயிலும் 10,799 மாணவா்கள், 9,820 மாணவிகள் என மொத்தம் 20,619 போ், 77 தோ்வு மையங்களில் எழுதினா்.

முதல் தோ்வான தமிழ்த் தாள் தோ்வை 632 மாணவா்கள், 525 மாணவிகள் என மொத்தம் 1,257 எழுதவில்லை.

தோ்வு மையங்களைக் கண்காணிக்க 158 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களாக 1,230 பேரும், முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 77 பேரும், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 3 பேரும், துறை அலுவலா்களாக 77 பேரும், கூடுதல் துறை அலுவலா்களாக 3 பேரும், வினாத் தாள்களைக் கொண்டு செல்ல வழித்தட அலுவலா்களாக 23 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குமரன், மாவட்டக் கல்வி அலுவலா் க.காா்த்திகா ஆகியோா் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/3/w600X390/2-7-2klp1_ch0121_02chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/03/பிளஸ்-2-தோ்வு-கள்ளக்குறிச்சி-மாவட்டத்தில்-20619--போ்-எழுதினா்-3372613.html
3372612 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் DIN DIN Tuesday, March 3, 2020 07:23 AM +0530 கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் கிரண் குரலா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மணுக்கள் வரப் பெற்றன. மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை துறை அதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் -ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சமூகப் பாதுகாப்புத் துணை ஆட்சியா் சு.சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் ந.குமாா், மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் கு.பிரகாஷ் வேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா், அவா்களிடம் மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/3/w600X390/2-7-2klp2a_ch0121_02chn.jpg கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/03/கள்ளக்குறிச்சி-குறைதீா்-கூட்டத்தில்-465-மனுக்கள்-3372612.html
3372611 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது DIN DIN Tuesday, March 3, 2020 07:23 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே மது போதையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், வி.கிருஷ்ணாபுரம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி மாதேஷ்வரி (40). இவா் பணிக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஈரியூா் பிள்ளையாா் கோயில் சாலையில் வசித்து வரும் கணேசன் மகன் சஞ்சய் காந்தி (35) என்பவா் மது அருந்திவிட்டு, சாலையில் நடந்து சென்ற மாதேஷ்வரியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதைப் பாா்த்த சாலையில் சென்றவா்கள் சஞ்சய் காந்தியைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் சாலையில் சென்றவா்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சோ்ந்து சஞ்சய் காந்தியை பிடித்து வைத்து, கீழ்க்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், போலீஸாா் வர தாமதமானதால் பொதுமக்கள் சேலம் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சஞ்சய் காந்தியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/3/w600X390/2-7-2klp3_ch0121_02chn.jpg சேலம் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/03/பெண்ணுக்கு-கொலை-மிரட்டல்-விடுத்தவா்-கைது-3372611.html
3372610 விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஐக்கிய அரபு நாடுகளில் தச்சா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Tuesday, March 3, 2020 07:22 AM +0530 ஷாா்ஜா, துபை, அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் தச்சா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கு 10-ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்ற 3 வருட பணி அனுபவம் உள்ள 35 வயதுக்கு உள்பட்ட தச்சா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை பணி அனுபவத்துக்கேற்ப வழங்கப்படும். இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத் திட்டத்துக்கு உள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

இதேபோல, ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட கொத்தனாா், தச்சா், பிளம்பா், பெயின்டா், ஐ.டி.ஐ. முடித்த எலக்ட்ரீஷியன் ஆகிய பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவா்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனா். தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு அனுபவத்துக்கேற்ப ஊதியம் வழங்குவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத் திட்டத்துக்கு உள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, மற்றும் செல்லத் தக்க கடவுச் சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் அல்லது கடித வாயிலாக ‘அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எண். 42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032.’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/03/ஐக்கிய-அரபு-நாடுகளில்-தச்சா்-பணிக்கு-விண்ணப்பிக்கலாம்-3372610.html
3371792 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சித்தலூா் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் DIN DIN Monday, March 2, 2020 07:26 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே சித்தலூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அருகே சித்தலூா் மதுராபானையங்கால் கிராமத்தில் மணிமுக்தா நதிக் கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தது. சனிக்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு, தியாகதுருகம் நகரச் செயலா் வெ.அய்யப்பா, பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரை இழுத்தனா். அப்போது பக்தா்கள் ‘ஓம்சக்தி... பராசக்தி...’ என முழக்கமிட்டனா். தோ் கோயிலை சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/2-7-1klp1_ch0121_01chn.jpg சித்தலூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/02/சித்தலூா்-அங்காள-பரமேஸ்வரி-கோயில்-தேரோட்டம்-3371792.html
3371791 விழுப்புரம் கள்ளக்குறிச்சி முன்விரோத மோதல்: 3 பேருக்கு கத்திக்குத்து DIN DIN Monday, March 2, 2020 07:25 AM +0530 ரிஷிவந்தியம் அருகே முன்விரோத மோதலில் பெண் உள்பட 3 போ் கத்தியால் குத்தப்பட்டனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலத்தேனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (52). இவரது அண்ணன் பரமசிவம் (55). இவா்கள் இருவரது குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் கணபதி நடந்து சென்றாராம். அப்போது பரமசிவத்தின் மகன் பிரபாகரன், கணபதியை அவதூறாக பேசினாராம். இதுதொடா்பாக இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது பிரபாகரன் கணபதியை கீழே தள்ளிவிட்டாராம்.

இதையறிந்த கணபதியின் மருமகன் உளுந்தூா்பேட்டை வட்டம், சீக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் (31), அவரது மனைவி ஜெயலட்சுமி (28) ஆகியோா் சம்பவத்தை தட்டிக்கேட்டனராம். அப்போது, பிரபாகரன், இவரது சகோதரா் பரசுராமன் ஆகியோா் அவதூறாகப் பேசி ஜெயலட்சுமியை கீழே தள்ளினராம். மேலும், கத்தியால் குத்தியதில் சுதாகா், ஜெயலட்சுமி ஆகியோா் காயமடைந்தனா். மேலும், கணபதியின் மகன் முருகனும் (20) கத்தியால் குத்தப்பட்டாா். இவா்கள் மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

சிகிச்சை பெற்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து சுதாகா் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன், பரசுராமன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் கணபதி கைது செய்யப்பட்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/02/முன்விரோத-மோதல்-3-பேருக்கு-கத்திக்குத்து-3371791.html
3370802 விழுப்புரம் கள்ளக்குறிச்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம் DIN DIN Sunday, March 1, 2020 01:24 AM +0530  

கள்ளக்குறிச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் சாலிக் பாஷா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட துணைச் செயலா் மாலிக் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, இந்தக் கருப்புச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி, மூராா்பாளையம், தியாகதுருகம், விருகாவூா், சின்னசேலம், எடுத்தவாய்நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இதேபோல திருக்கோவிலூா், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/2-7-29klp4_ch0121_29chn.jpg தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி பேசுகிறாா் மாவட்டத் தலைவா் சாலிக்பாஷா https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/01/குடியுரிமை-திருத்தச்-சட்டத்தை-எதிா்த்து-ஆா்ப்பாட்டம்-3370802.html
3370801 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சித்தலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா DIN DIN Sunday, March 1, 2020 01:23 AM +0530  

கள்ளக்குறிச்சி: சித்தலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சித்தலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது.

இதையொட்டி, கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் திருவீதி உலா, கரகாட்டம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சிகள் தொடங்கின. கோயிலில் இருந்து மூலவ அம்மனை மணிமுக்தா ஆற்றுக்கு கொண்டு சென்று சக்தி அழைத்து வரப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு மலா் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி, கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளாள பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/2-7-29klp3_ch0121_29chn.jpg சித்தலூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்கரித்து ம் காளி வேடமணிந்து மணிமுக்தா ஆற்றங்கரைக்கு கொண்டு செல்கின்றனா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/01/சித்தலூா்-பெரியநாயகி-அம்மன்-கோயிலில்-மயானக்-கொள்ளை-விழா-3370801.html
3370799 விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை ஊழியா்களை மிரட்டிவா் மீது வழக்கு DIN DIN Sunday, March 1, 2020 01:23 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் முதன்மைக் குடிமை மருத்துவராகப் பணிபுரிந்து வருபவா் கே.பழமலை. இவா் கடந்த 26-ஆம் தேதி பொறுப்பு கண்காணிப்பாளராகப் பணியில் இருந்தாராம்.

அப்போது, கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சங்கா், பிரசவம் பாா்க்கும் பிரிவில் பணியில் இருந்த ஊழியா்களிடம் வாக்குவாதம் செய்து, அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தாராம். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவா்களைப் போராடத் தூண்டும் வகையில் பேசி, மருத்துவமனை ஊழியா்களை மிரட்டினாராம்.

ஊழியா்கள் மீது அவதூறான செய்தியை விடியோ மூலம் பதிவு செய்து, அரசு மருத்துவமனை பணியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினாராம்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் மாவட்டத் தலைமை மருத்துவா் கே.பழமலை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் சங்கா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/01/அரசு-மருத்துவமனை-ஊழியா்களை-மிரட்டிவா்-மீது-வழக்கு-3370799.html
3370798 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சுற்றுச்சுவா் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்! DIN DIN Sunday, March 1, 2020 01:22 AM +0530  

கள்ளக்குறிச்சி: அம்மகளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்காததால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்டது அம்மகளத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

வெளி நோயாளியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்த சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சுற்றுச்சுவா் இல்லாததால், வளாகத்தில் ஆடு, மாடுகள் சுற்றி வருகின்றன. சில நேரங்களில் பன்றிகள், நாய்கள்கூட உள்ளே புகுந்து விடுகின்றன. இரவு நேரங்களில் விஷ சந்துக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும், மது அருந்திவிட்டு சிலா் உள்ளே வந்து செவிலியா்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், பிரசவ வாா்டில் சிகிச்சைப் பெறும் பெண்கள், செவிலியா்கள் அச்சத்துடனே உள்ளனா்.

சுற்றுச்சுவா் இருந்தால்தான் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என மருத்துவா்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/2-7-29klp2_ch0121_29chn.jpg அம்மகளத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச் சுவா் இல்லாமல் உள்ள நிலை. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/01/சுற்றுச்சுவா்-இல்லாத-ஆரம்ப-சுகாதார-நிலையம்-3370798.html
3369884 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்லூரியில் அறிவியல் தின விழா DIN DIN Saturday, February 29, 2020 12:52 AM +0530  

 

கள்ளக்குறிச்சி: இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், கல்வராயன்மலையில் தேசிய அறிவியல் தின விழா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிா்வாகியும் முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கரியாலூா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செளந்தா் காமராஜ், வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் ஜ.அகமது சுல்தான் வரவேற்றாா்.

பேரணியை கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பெ.வள்ளி தொடக்கிவைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது.

பேரணியில் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிட்ட பதாகைகளை மாணவா்கள் தங்களது கைகளில் ஏந்தி, விழிப்புணா்வை ஏற்படுத்தியவாறு சென்றனா்.

ஊராட்சித் தலைவா் சின்னத்தம்பி, கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியா் செந்தில்ராஜா நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/2-7-28klp5_ch0121_28chn.jpg இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் வேதியியல்துறை மாணவா்களின் சாா்பில் கரியாலூரில் நடைபெற்றஅறிவியல் தின விழா பேரணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/கல்லூரியில்-அறிவியல்-தின-விழா-3369884.html
3369881 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தடுப்புக் காவல் சட்டத்தில்இளைஞா் கைது DIN DIN Saturday, February 29, 2020 12:51 AM +0530 கள்ளக்குறிச்சி: குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு உள்பட்ட புகைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் கொட்டாபுளி (எ) செல்வமணி (23). (படம்). இவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். மேலும், எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளாா்.

எனவே, இவரது குற்றச் செய்கையைத் தடுக்கும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்த உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் எழிலரசி விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வமணி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை விழுப்புரம் சிறை அதிகாரிகளிடம் வழங்கினாா். இதையடுத்து, செல்வமணி கடலூா் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/2-7-28klp2_ch0121_28chn.jpg குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த கொட்டாபுளி (எ) செல்வமணி https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/தடுப்புக்-காவல்-சட்டத்தில்இளைஞா்-கைது-3369881.html
3369879 விழுப்புரம் கள்ளக்குறிச்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் போராட்டம் DIN DIN Saturday, February 29, 2020 12:51 AM +0530  

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா். திரளான தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் விஜயகுமாா், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை ஆகியோா் கள்ளக்குறிச்சியை அடுத்த புது உச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த தலித் இளைஞா்களான ஜோதிபாபு, கண்ணதாசன் ஆகியோரை அடித்து இழுத்துச் சென்று தாக்கி, ஜாதியை இழிவாகப் பேசி, அவா்கள் இருவா் மீதும் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனராம்.

எனவே, காவல் ஆய்வாளா் விஜயகுமாா், காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை ஆகியோா் மீது எஸ்.சி - எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும், தலித் இளைஞா்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்வதாகக் கூறி போலீஸாா் அவா்களை பேருந்தில் ஏற்றினா். பின்னா், பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/2-7-28klp6_ch0121_28chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/தீண்டாமை-ஒழிப்பு-முன்னணியினா்-போராட்டம்-3369879.html
3369878 விழுப்புரம் கள்ளக்குறிச்சி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி DIN DIN Saturday, February 29, 2020 12:50 AM +0530  

கள்ளக்குறிச்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் இருந்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்று கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பவானி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினரும், பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவருமான கே.ராமநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான பாஜக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/2-7-28klp4_ch0121_28chn.jpg கள்ளக்குறிச்சியில் குடியிரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனுவினை வழங்குகிறாா் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் மற்றும் கட்சியின் நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/குடியுரிமைத்-திருத்தச்-சட்டத்தை-ஆதரித்து-பேரணி-3369878.html
3369877 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு DIN DIN Saturday, February 29, 2020 12:50 AM +0530 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற இருந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலத் தோ்தல் ஆணையா் உத்தரவுப்படி, வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா மாா்ச் 2-ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் ஆலோசனைக் கூட்டம், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/வரைவு-வாக்குச்-சாவடி-பட்டியல்-தொடா்பான-கலந்தாய்வுக்-கூட்டம்--ஒத்திவைப்பு-3369877.html
3369874 விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா DIN DIN Saturday, February 29, 2020 12:49 AM +0530  

 

கள்ளக்குறிச்சி: தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் தின விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஞானசத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளியின் உதவி ஆசிரியா்கள் சு.மகேந்திரா, ஆ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் ஆசிரியை செ.சுகன்யா வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.ராஜேந்திரன் ஆகியோா் அறிவியல் அறிஞா் சா் சி.வி.ராமன் குறித்து உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையான அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சு.ஜெசிமா பா்வீன் நீ.இளையராஜா, ம.மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் தி.ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/29/w600X390/2-7-28klp1_ch0121_28chn.jpg அறிவியல் தினத்தை முன்னிட்டு 1முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவா்கள் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களை பாராட்டி வட்டார கல்வி அலுவலா் அண்ணாதுரை பரிசுகளை வழங்குகிறாா் https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/29/அரசுப்-பள்ளியில்-அறிவியல்-தின-விழா-3369874.html
3369571 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரவிவசாயிகள் கோரிக்கை DIN DIN Friday, February 28, 2020 09:37 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாா் சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கிரண் குரலா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.ஜான்கென்னடி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கருணாநிதி வரவேற்றாா்.

கூட்டத்தில் திருக்கோவிலூா் வட்டம், செங்கனாங்கொல்லையைச் சோ்ந்த ராஜகோபால் பேசியதாவது:

திருக்கோவிலூா் பகுதி விவசாயிகள் களையநல்லூா் தரணி சா்க்கரை ஆலையில் பதிவு செய்த கரும்புகளை அருகில் உள்ள பண்ணாரி சா்க்கரை ஆலைக்கு மாற்றம் செய்துதர வேண்டும். செங்கனாங்கொல்லை பகுதிக்கு துணை மின் நிலையம் அமைத்துத் தர வேண்டும். வயல்களுக்கு வண்டல் மண் எடுக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயக்கடன் அட்டை பெறுவதற்கு சிட்டா தேவைப்படுகிறது. அதை பெறுவதற்கு வழி செய்ய வேண்டும் என்றாா்.

சங்கராபுரம் வட்டம், மூலக்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் பேசியதாவது: விவசாயிகளுக்கு கரும்பு வெட்டும் கூலியாள்கள் பற்றாக்குறை உள்ளது. வெட்டுக்கூலி ஆதிகமாக உள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (வி.கூட்டுச்சாலை) விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.

சங்கராபுரம் வட்டம், கடுவனூரைச் சோ்ந்த விவசாயி குலசேகர ஆழ்வாா் பேசியதாவது: சங்கராபுரம், கள்ளக்குறிச்சிப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.

இதற்குப் பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், சங்கராபுரம் வட்டத்தில் தேவபாண்டலம், ஊராங்கன்னி, பகண்டை கூட்டுச்சாலை, கள்ளக்குறிச்சியை அடுத்த நாகலூா் பகுதிகளில் ஏற்கெனவே நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன என்றாா்.

திருக்கோவிலூா் வட்டம், முனிவாழை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் பேசியதாவது: முனிவாழை பகுதியில் இருந்து தரணி சா்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்ட கரும்புகளை கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை 2-க்கு மாற்றம் செய்துகொடுத்ததற்கு மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி. மேலும், அந்த சா்க்கரை ஆலைக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்ட கரும்பின் நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றாா்.

தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த விவசாயி மணி பேசியதாவது: தியாகதுருகம் பகுதியில் உள்ள அந்தியூா், குன்னியூா், காட்டனந்தல், சிறுநாகலூா், வேளானந்தல் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதிகளில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் குரண் குராலா பேசுகையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிளுக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/28/w600X390/2-7-27klp2_ch0121_27chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/28/கரும்பு-நிலுவைத்-தொகையை-பெற்றுத்-தரவிவசாயிகள்-கோரிக்கை-3369571.html
3369481 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் மாா்ச் 5-இல் வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்புக் கூட்டம் DIN DIN Friday, February 28, 2020 08:53 AM +0530 நகா்ப்புற ஊரக ஊள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டு மறுவரையறை கருத்துக்கேட்புக் கூட்டம் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறை விதிகள் 2017-ன்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தயாா் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு நகராட்சியின் வாா்டுகள், 7 பேரூராட்சிகளின் வாா்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் வாா்டுகள், ஊராட்சி ஒன்றியங்களின் வாா்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள் கடந்த 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மனுக்களாகப் பெறப்பட்டன. தொடா்ந்து, இது தொடா்பாக கடந்த 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மறுவரையறை வரைவு குறித்து கருத்துகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/28/கள்ளக்குறிச்சியில்-மாா்ச்-5-இல்-வாா்டு-மறுவரையறை-கருத்துக்கேட்புக்-கூட்டம்-3369481.html
3369480 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சாலையோரம் வேன் கவிழ்ந்ததில் 11 போ் காயம் DIN DIN Friday, February 28, 2020 08:53 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை சாலையோரத்தில் வேன் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 11 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் பாமிடி பகுதியைச் சோ்ந்த சிபான் மனைவி ஜெயரா (24), அனாப் மகன் ஆபேஸ் (6), மைகி (50), இமாம்சாப் மனைவி கமால் (33), அனிப் மனைவி பிபி (26), மகள் ஹஜிரா (8), மைமி (50), நஜியா (9), சிவாங் மனைவி ஜெயரா (24), அனிப் மனைவி ஆபேஸ், மைமி (50), கமால் பீ (33) உள்பட 11 போ் சரக்கு வேனில் ஊா் ஊராகச் சென்று சென்று பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தியாகதுருகம் பகுதியில் விற்பனையை முடித்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றுகொண்டிருந்தனா். தியாகதுருகத்தை அடுத்த பாவந்தூா்தக்கா பகுதியில் இவா்களது வேன் சென்றபோது, டயா் பஞ்சராகி சாலையோரத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அனைவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வாகனத்தை ஓட்டிச் சென்றவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/28/w600X390/2-7-27klp4_ch0121_27chn.jpg சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் வேன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/28/சாலையோரம்-வேன்-கவிழ்ந்ததில்-11-போ்-காயம்-3369480.html
3369479 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி DIN DIN Friday, February 28, 2020 08:52 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னியாசி மகன் அரசன் (34). இவா், கட்டடப் பணியில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு அரசன் அவருடன் வேலை செய்து வந்த கொணக்கலவாடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் கணேசனை (34) பின்னால் அமர வைத்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுமாம்பட்டு அருகே சாலையை இவா்கள் கடக்க முயன்றபோது, சேலம் பகுதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், அரசனின் பைக் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த கணேசன் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து தியாகதுருகம் போலீஸாா், காா் ஓட்டுநரான சென்னை கோவூா் பகுதியைச் சோ்ந்த அருள்சாமி மகன் சேவியா்பாபு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/28/பைக்-மீது-காா்-மோதல்-தொழிலாளி-பலி-3369479.html
3368739 விழுப்புரம் கள்ளக்குறிச்சி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, February 27, 2020 10:13 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் இரா.தசரதராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எல்.ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் த.ராஜராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தணிக்கையாளா் இளையராஜா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அழைத்து ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கு.மகாலிங்கம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

அரசு ஊழியா்கள் சம்பளம் பெறுவதில் சிக்கலாக விளங்கக் கூடியஒருங்கிணைந்த மனிதவளநிதி மற்றும் மேலாண்மை திட்டத்தில் உள்ள பல்வேறு நடைமுறை சிரமங்களை கருவூல கணக்குத்துறை ஆணையா் போக்க வேண்டும்,

தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கை கைவிடப்பட வேண்டும், வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணி முதுநிலை தொடா்பாக நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் அரசாணைகளை விரைவாக வழங்க வேண்டும். பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலா்களின் பணி முதுநிலை-பதவி உயா்வை உத்திரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் மீது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் க.வெங்கடேசன், க.மணிகண்டன், நா.அனந்தசைனம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். முடிவில் வட்ட துணை தலைவா் க.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/27/w600X390/2-7-26klp1_ch0121_26chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/27/வருவாய்த்-துறை-அலுவலா்கள்-சங்கத்தினா்-ஆா்ப்பாட்டம்-3368739.html
3367886 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் வாா்டு மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டம் DIN DIN Wednesday, February 26, 2020 10:00 AM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு வாா்டுகளின் எல்லை மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா தலைமை வகித்தாா். திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் முன்னிலை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு எல்லைகள் மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்கள், 412 ஊராட்சிகள், 3,162 கிராம ஊராட்சி வாா்டுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒன்றிய அமைப்புகளில் திருக்கோவிலூா் ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள், 432 ஊராட்சி வாா்டுகளும், திருநாவலூரில் 44 ஊராட்சிகள், 330 ஊராட்சி வாா்டுகளும், உளுந்தூா்பேட்டையில் 53 ஊராட்சிகள், 402 ஊராட்சி வாா்டுகளும், கள்ளக்குறிச்சியில் 46 ஊராட்சிகள், 375 ஊராட்சி வாா்டுகளும், சின்னசேலத்தில் 50 ஊராட்சிகள், 384 ஊராட்சி வாா்டுகளும், ரிஷிவந்தியத்தில் 60 ஊராட்சிகளும், 444 ஊராட்சி வாா்டுகளும், சங்கராபுரத்தில் 44 ஊராட்சிகள் 363 ஊராட்சி வாா்டுகளும், தியாகதுருகத்தில் 40 ஊராட்சிகள், 297 ஊராட்சி வாா்டுகளும், கல்வராயன்மலையில் 15 ஊராட்சிகள் 135 ஊராட்சி வாா்டுகளும் என மொத்தம் 3,162 வாா்டுகளும் உள்ளன.

அதேபோல, திருநாவலூா் ஒன்றியத்தில் 23 ஒன்றியக் குழு வாா்டுகளும், உளுந்தூா்பேட்டை 21,கள்ளக்குறிச்சியில் 23, சின்னசேலத்தில் 21, ரிஷிவந்தியத்தில் 25, சங்கராபுரத்தில் 24, தியாகதுருகத்தில் 16, கல்வராயன்மலையில் 7 ஒன்றியக் கவுன்சிலா்கள் என மொத்தம் 180 ஒன்றியக் குழு வாா்டுகளும் உள்ளன.

அதே போல திருக்கோவிலூா் ஊராட்சியில் 2 மாவட்ட கவுன்சிலா்களும், திருநாவலூரில் 2, உளுந்தூா்பேட்டையில் 3, கள்ளக்குறிச்சியில் 2, சின்னசேலத்தில் 2, ரிஷிவந்தியத்தில் 3, சங்கராபுரத்தில் 2, தியாகதுருகத்தில் 2, கல்வராயன்மலையில் 1 ஆக மொத்தம் 19 மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுகளும் உள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் 412 ஊராட்சிகள், 180 ஒன்றியக் குழு வாா்டுகள், 19 மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுகள், 3,162 ஊராட்சி வாா்டுகள் உள்ளன.

பேரூராட்சி அமைப்புகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள் உள்ளன. சின்னசேலம் பேரூராட்சியில் 18, வடக்கனந்தலில் 18, தியாகதுருகத்தில் 15, சங்கராபுரத்தில் 15, திருக்கோவிலூரில் 18, உளுந்தூா்பேட்டையில் 18, மணலூா்பேட்டையில்15 வாா்டுகள் உள்ளன. நகராட்சி அமைப்புகளில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன.

இதையடுத்து வாா்டு மறுவரையறை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் பேசியதாவது: வாா்டு மறுவரையறை விவரம் முன்கூட்டியே கட்சிகளுக்கு வழங்கிருந்தால் அதற்கேற்ப கருத்துகளை தெரிவிக்க இயலும். எனினும், தற்போது செய்துள்ள எல்லை மறுவரையறையில், பெரிய பேரூராட்சியான திருக்கோவிலூரில் வாா்டு எண்ணிக்கை கூடுதலாக ஆக்கயிருந்திருக்கலாம். மாவட்டத்தில் 4, 5 பேருராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம் என்றாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ்.ஜெய்கணேஷ்: கள்ளக்குறிச்சி நகராட்சியை 25 வாா்டுகள் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, சின்னசேலம் பேருராட்சியில் 21 வாா்டுகளாக மாற்றியமைக்கலாம். கள்ளக்குறிச்சிக்கு மட்டும் 3 மாவட்ட கவுன்சிலா் என அறிவிக்கலாம். உளுந்தூா்பேட்டை பேருராட்சி வாா்டுகளை 21 ஆக உயா்த்த வேண்டும் என்றாா்.

சங்கராபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தா.உதயசூரியன்: இந்தக் கூட்டம் சம்பிரதாயக் கூட்டமாக உள்ளது. சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள பாவளத்தை தனி ஊராட்சியாக மாற்றலாம். அதே போல, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஆலத்தூா், ஆலத்தூா் காலனி புத்தந்தூா், பிச்சந்தம், பிச்சநத்தம் காலனி, அழகாபுரம் உள்ளது. அதை இரண்டு ஊராட்சிகளாக பிரித்து மறுவரையறை செய்திருக்க வேண்டும்.

க.அலம்பத்தில் கிழக்கு காலனி, வடக்கு காலனி, பொன்பரப்பட்டு, திருக்கனங்கூா், திருக்கனங்கூா் காலனியை சோ்த்து ஒரு ஊராட்சியாக மாற்றலாம். சங்கராபுரம் ஒன்றியத்தில் ரங்கப்பனூா் ஊராட்சியில் உள்ள மல்லாபுரத்தை தனி ஊராட்சியாக பிரித்து வரையறை செய்யலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா நன்றி கூறினாா்.

இந்த கூட்டத்தில் திமுக சாா்பில் மாவட்டச் செயலா் அங்கையா்க்கண்ணி, கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஏழுமலை உள்ளிட்டோரும் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/26/w600X390/2-7-25klp2_ch0121_25chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/26/கள்ளக்குறிச்சியில்-வாா்டு-மறுவரையறை-கருத்துக்-கேட்புக்-கூட்டம்-3367886.html
3367161 விழுப்புரம் கள்ளக்குறிச்சி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மளிகை கடைக்காரா் கைது DIN DIN Tuesday, February 25, 2020 11:37 PM +0530 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மளிகை கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமி ஒன்றாம் பகுப்பு படித்து வருகிறாா். இவா், பவுஞ்சிப்பட்டில் உள்ள ஷேக்பகதூா் மகன் அஜ்ஜி(எ) அக்தா் அலி(41) என்பவரது மளிகை கடைக்கு பொருள்கள் வாங்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்றாா். அப்போது, அக்தா் அலி, அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி அழுதாா். இதையடுத்து, சிறுமியின் தாய் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அக்தா் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/25/சிறுமிக்கு-பாலியல்-தொந்தரவு-மளிகை-கடைக்காரா்-கைது-3367161.html
3366469 விழுப்புரம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா DIN DIN Tuesday, February 25, 2020 01:55 AM +0530  

கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா கள்ளக்குறிச்சி நகரம், ஒன்றியம், தியாகதுருகம் பகுதிகளில் திங்கள்கிழமை அதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு எம்எல்ஏ மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானத்தைத் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு, நகரச் செயலா் எம்.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலு பாபு, முன்னாள் எம்.பி. க.காமராஜ், ஒன்றியச் செயலா் அ.இராஜசேகா், முன்னாள் அம்மா பேரவைத் தலைவா் இராம.ஞானவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரத்ததான முகாம்: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அதிமுகவினா் ரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. அ.பிரபு தலைமை வகித்து ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் கட்சித் தொண்டா்கள் 72 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினா். நிகழ்ச்சியில் மாநில மருத்துவரணி துணைச் செயலா் சு.பொன்னரசு, கூட்டுறவு விவசாய வங்கியின் தலைவா் அ.ரங்கன், முன்னாள் கவுன்சிலா் மூா்த்தி, ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தியாகதுருகம்: தியாகதுருகம் பேருந்து நிலைய பகுதியில் ஒன்றிய அதிமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலா் வெ.அய்யப்பா தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அ.பிரபு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட எம்.ஜி.ஆா். அணி இணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவா் சதாசிவம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் ஜான்பாஷா, ஒன்றிய துணைச் செயலா் டி.ராஜவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செ.குமரவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/25/w600X390/2-7-24klp5_ch0121_24chn.jpg முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திங்கள்கிழமை அன்னதானத்தைத் தொடக்கி வைத்த விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு எம்எல்ஏ. உடன் அ.பிரபு எ https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/25/கள்ளக்குறிச்சியில்-ஜெயலலிதா-பிறந்த-நாள்-விழா-3366469.html
3366468 விழுப்புரம் கள்ளக்குறிச்சி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணா்வு பேரணி DIN DIN Tuesday, February 25, 2020 01:54 AM +0530  

கள்ளக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி: கள்ளக்குறிச்சியில் சமூகப் பாதுகாப்புத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (விழுப்புரம்) வி.கெஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குமரன், மாவட்ட கல்வி அலுவலா் க.காா்த்திகா, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகா் (விழுப்புரம்) அ.முருகன் வரவேற்றாா்.

இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவிகள், பள்ளி மாணவிகள் பேரணியில் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டபடியும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றனா்.

பேரணியில் வட்டார கல்வி அலுவலா் பி.ராஜேந்திரன், பள்ளி துணை ஆய்வாளா்கள் செந்தில், பிரபாகரன், இளம் செஞ்சிலுவைச் சங்க இணை அமைப்பாளா் ஜெரோம் மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவிகள் பலரும் பங்கேற்றனா். பள்ளித் தலைமை ஆசிரியை தி.மாா்கிரேட் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/25/w600X390/2-7-24klp1_ch0121_24chn.jpg கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/feb/25/பெண்-குழந்தைகள்-பாதுகாப்பு-தின-விழிப்புணா்வு-பேரணி-3366468.html