Dinamani - புதுச்சேரி - https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3235498 விழுப்புரம் புதுச்சேரி ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டோம்: முதல்வர் உறுதி DIN DIN Monday, September 16, 2019 03:14 AM +0530 ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டோம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: 
 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டுக்கு ஒரே மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடு பல மதங்களை, மொழிகளை, பண்பாடுகளை ஒருங்கிணைத்துள்ள நாடு. இங்கு, பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து ஹிந்தி மொழியைத் திணிக்கும் விதமாக உள்ளது. இந்தக் கருத்துக்கு தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் ஹிந்தியை திணிக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.  ஒரே நாடு,  ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணிக்கின்றனர். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு, எம்மதமும் சம்மதம். அதேபோல, அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
இணைப்பு மொழி ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விரும்பப்படும் மொழியும் இருக்கலாம் என்பது நேருவின் கொள்கை. ஆனால், இதற்கு மாறாக, ஹிந்தியை திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து.
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையில் ஹிந்தி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என வலியுறுத்தியிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன்,  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர், மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டது. அடுத்ததாக, அஞ்சல் துறையில் ஆள்கள் தேர்வுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் கேள்வித் தாளை தயாரித்து தேர்வு நடத்தினர். இதற்கும் தமிழகம்,  புதுவையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு,  இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இதையடுத்து, அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. தற்போது, மூன்றாவது முறையாக அனைத்து மாநிலங்களிலும் ஹிந்திதான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஹிந்தி மொழி திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எனவே, மத்திய உள்துறை அமைச்சர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
புதுவையில் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
மத்திய அரசின் அனுமதி பெற்று தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளுக்கு காப்பீடு செய்திருக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி ரத்து செய்யும் நிலை ஏற்படும். புதுச்சேரி சுற்றுலா நகரமாக உள்ளது. இங்கு பதாகைகள் வைத்தால் அரசே அகற்றிவிட்டு, பதாகை வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். பதாகைகள் வைப்பதற்கான இடங்களை மறுபரிசீலனை செய்வது குறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/ஹிந்தி-திணிப்பை-ஏற்கமாட்டோம்-முதல்வர்-உறுதி-3235498.html
3235497 விழுப்புரம் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை DIN DIN Monday, September 16, 2019 03:14 AM +0530
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று புதுச்சேரி மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலர் இரா.முருகானந்தம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு அவர் சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்: 
மருத்துவமனைகளை இயக்குவதற்கு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் ஏதும் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடைப்பிடிக்கப்படவில்லை. குறிப்பாக, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 349 செவிலியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய செவிலியர் பணிக்கு பிற மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் அயல் பணி (டெபுடேஷன்) அடிப்படையில் பணியிட மாற்றம் செய்து அழைத்து வரப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.
இதனால் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அந்த செவிலியர் பணிபுரிந்த மருத்துவமனைகளிலும் செவிலியர் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள அனைத்து செவிலியர் பணியிடங்களையும் நிரப்ப உத்தரவிட வேண்டும்.
மேலும், அயல் பணி அடிப்படையில் பிற மருத்துவமனைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட செவிலியர்களை அந்த மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டும். 
கரு வளர்ச்சியை முதல் மாதத்தில் இருந்து அறிந்து கொள்ள வசதியாக மகளிர் மருத்துவமனைகளில் ரேடியோலஜி பிரிவு தேவை. புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ரேடியோலஜி பிரிவு இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் போக்க வேண்டும்.
மருந்துகள் கொள்முதலுக்கு கடந்த 2018 - 19 பட்ஜெட்டில் ரூ. 6.65 கோடி ஒதுக்கப்பட்டு, மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆராய வேண்டும். 
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் 626 நோயாளி படுக்கைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. 45 சிறப்பு மருத்துவர்களில் 13 இடங்கள் காலியாக உள்ளன. 78 பொது மருத்துவ அதிகாரி பணியிடங்களில் 8 காலியாக உள்ளன. 
எனவே, அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்களாக கடந்த 2012 முதல் 18 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 பேர் குறித்து எந்தப் பதிவும் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த 5 பேரின் நிலை என்ன என்பது குறித்து ஆராய வேண்டும்.
ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய சுகாதாரத் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. 
எனவே விதிமீறியுள்ள இந்தத் தகவல்களின் பேரில் நடவடிக்கை எடுத்து, புதுவையில் உள்ள ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சையும்,  மருந்தும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/இந்திரா-காந்தி-அரசு-மருத்துவமனையில்-காலிப்-பணியிடங்களை-நிரப்பக்-கோரிக்கை-3235497.html
3235496 விழுப்புரம் புதுச்சேரி கல்லூரியில் பொறியாளர் தின விழா DIN DIN Monday, September 16, 2019 03:12 AM +0530
மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இதில், தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 50 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று 300- க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை சமர்ப்பித்தனர். 
சிறந்த திட்டங்களை சமர்ப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், கடந்த கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களின் பல்வேறு சிறந்த செயல் திட்டங்கள் துறை வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு திட்டத்துக்கும் பரிசுத் தொகையாக மொத்தம் ரூ. 70 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நேடிவ் ஏஞ்ஜல்ஸ் நெட் வொர்க்ஸ் அசோசியேட் இயக்குநர் சிவராஜா ராமநாதன் தலைமை வகித்தார். நிதி மென்பொருள் நிறுவன இணை துணைத் தலைவர் சித்தார்த்த சத்பதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக, ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநரும், முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்றார். 
ஸ்ரீ மணக்குள விநாயகா கல்விக் குழுமத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னனு மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்புமலர் உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இயந்திரவியல் துறைத் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/கல்லூரியில்-பொறியாளர்-தின-விழா-3235496.html
3235495 விழுப்புரம் புதுச்சேரி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை DIN DIN Monday, September 16, 2019 03:12 AM +0530
புதுச்சேரியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அருகே உள்ள நெட்டப்பாக்கம் விஎஸ் நகரைச் சேர்ந்தவர் சிங்காரம் (58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். 
இதனால், மனமுடைந்து காணப்பட்ட சிங்காரம் சனிக்கிழமை தனது வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிங்காரம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/தொழிலாளி-தூக்கிட்டுத்-தற்கொலை-3235495.html
3235494 விழுப்புரம் புதுச்சேரி இலவச மருத்துவ முகாம் DIN DIN Monday, September 16, 2019 03:12 AM +0530
பாஜக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் லாசுப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பிரதமர் நரேந்திர மோடியின் 68 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் வருகிற 20 -ஆம் தேதி முதல் சேவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாஜக மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார்.  பொதுச் செயலர் தங்க.விக்ரமன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை சுனில் திமோதர் தொடக்கி வைத்தார். சட்டப்பேரவை நியமன உறுப்பினர் சங்கர், துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், மாநில, மண்டல, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/இலவச-மருத்துவ-முகாம்-3235494.html
3235493 விழுப்புரம் புதுச்சேரி நாளை காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம் DIN DIN Monday, September 16, 2019 03:11 AM +0530
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (செப். 17) நடைபெறுகிறது. 
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் 
ஆ. நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை: புதுவை காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி செவ்வாய்க்கிழமை (செப். 17) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளர்கள் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத், முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள், செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள், மாவட்ட மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என அந்தச் 
செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/நாளை-காங்கிரஸ்-அவசர-செயற்குழுக்-கூட்டம்-3235493.html
3235492 விழுப்புரம் புதுச்சேரி அண்ணா பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சியினர் மரியாதை DIN DIN Monday, September 16, 2019 03:11 AM +0530
தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் 111 - ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் வே.நாராயணசாமி மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான அண்ணாதுரையின் பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள் ஆ. நமச்சிவாயம், மு. கந்தசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியைதை செலுத்தினர்.
இதேபோல, புதுச்சேரி தெற்கு மாநில திமுகவினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக ஒதியஞ்சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில் கோவிந்தசாலையில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வுகளுக்கு புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். 
இதில்  மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், பொருளாளர் சண். குமாரவேல், எம்எல்ஏ வெங்கடேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோமளா, தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
புதுவை மாநில அதிமுக சார்பில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு அண்ணா உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று ஒதியஞ்சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
நிகழ்வுக்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஆ. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.பி. கோகுலகிருஷ்ணன்,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராஜாராமன் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல, அதிமுக சார்பில் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள அதிமுக கழக அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில், அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/அண்ணா-பிறந்த-நாள்-முதல்வர்-அரசியல்-கட்சியினர்-மரியாதை-3235492.html
3235491 விழுப்புரம் புதுச்சேரி சொந்த நிலத்தில் காடு வளர்ப்போருக்கு ரூ. 10 ஆயிரம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு DIN DIN Monday, September 16, 2019 03:11 AM +0530
சொந்த நிலத்தில் காடு வளர்ப்பவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
புதுவை அரசு, ஈஷா அறக்கட்டளை ஆகியவை சார்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்குரு ஜக்கி வாசுதேவ் நதிகளை மீட்போம் என்ற பெயரில் நாடு முழுவதும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர், அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் தயார் செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்து நதிகளை மீட்பதற்கு அழுத்தம் கொடுத்தார்.
வாழ்க்கைக்கு ஜீவாதாரமாக உள்ள காவிரி ஆறு, தலை காவிரியில் தொடங்கி கர்நாடகம், தமிழகம் வழியாக காரைக்கால் கடை மடைப் பகுதிக்கு வருகிறது. கடந்த கால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், காவிரி நீருக்காக மாநிலங்கள் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லாத சூழ்நிலையும், நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லாத சூழ்நிலையும் இருந்ததை அறிய முடியும்.
இந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதற்கான காரணம் என்ன? காவிரி படுகையிலிருந்த மரங்களை வர்த்தக ரீதியாகவும்,  சொந்த காரணத்துக்காகவும் வெட்டியதால் பருவநிலை மாறி, மழை பொழிவது குறைந்தது. இதனால், காவிரி நீருக்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய நிலை உருவாகிவிட்டது. சுற்றுப்புறச் சூழலைச் சரியாக வைத்திருந்தால் இயற்கை நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும். ஆனால், நாம் சுய நலத்துடன் செயல்படுவதன் காரணத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மழையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர்.
நீர் நிலைகளைக் காக்க, மரங்களை வளர்க்க வேண்டும். இதை அரசால் மட்டுமே செய்துவிட முடியாது. மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். புதுவையில் தனியார் பங்களிப்புடன் மாநில அரசு நீர்நிலைகளை தூர்வாரி வருகிறது. கரியமாணிக்கம் கிராமத்தில் அரசின் எந்தவிதமான உதவியுமின்றி, ஒரு குளத்தை பொதுமக்களே ஒன்றிணைந்து தூர்வாரியுள்ளனர்.
இதுபோன்ற நிலை அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும். இதைத்தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் உருவாக்கி வருகிறார். மக்கள் அமைதியாக, எல்லா வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான் சத்குருவின் எண்ணம். மரக்கன்றுகளை நடும் அவரது பயணத்தில் புதுவை அரசின் பங்கும் நிச்சயம் உண்டு.
விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக புதுவை அரசு திகழ்கிறது. ஓர் ஏக்கர் நிலத்துக்கு எப்போதும் இல்லாத அளவில் இந்தாண்டு ரூ. 10 ஆயிரம் மானியம் அறிவித்துள்ளோம். இதேபோல, சொந்த நிலங்களில் காடு வளர்ப்பவர்களுக்கு இந்த மானியம் வழங்க வேண்டும் என்று சத்குரு கூறியுள்ளதை கண்டிப்பாகச் செய்வோம்.
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் வந்தது போன்று புதுவைக்கு வந்ததில்லை. இது புதுவைக்கு இயற்கை அளித்த வரம். புதுச்சேரி நகரப் பகுதியில் சாலையோரங்களில் மரங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக தானே புயலின் போது, ஏராளமான மரங்கள் வேரோடு விழுந்தன. அந்த இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பணியில் ஈஷா யோகா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் புதுவை அரசுடன் இணைந்து புதுவையை பசுமையான மாநிலமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/சொந்த-நிலத்தில்-காடு-வளர்ப்போருக்கு-ரூ-10-ஆயிரம்-முதல்வர்-நாராயணசாமி-அறிவிப்பு-3235491.html
3235490 விழுப்புரம் புதுச்சேரி தாறுமாறாக ஓடிய கார்: 3 மாணவர்கள் காயம் DIN DIN Monday, September 16, 2019 03:11 AM +0530
புதுச்சேரி அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை தாறுமாறாக ஓடி, கடைக்குள் புகுந்த காரில் இருந்த 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
வேலூரில் இருந்து சனிக்கிழமை 2 கார்களில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த பின்னர் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் வேலூர் புறப்பட்டனர். 
அண்ணா சாலையில் இருந்து காமராஜர் சிலை நோக்கி அதிவேகமாகச் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வலதுப்புறம் இருந்த நோ பார்க்கிங் பதாகையை இடித்துவிட்டு, நடைபாதையில் ஏறியது. இதில் புதை வடிகால் கால்வாய் சிமென்ட் கட்டை பெயர்ந்தது. பின்னர், அதே வேகத்தில் திரும்பிய கார், அருகிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையின் இரும்பு கதவில் மோதியது. இதனால், காரின் முன்பகுதி, பின்பகுதி நொறுங்கியது.
விபத்துக்குள்ளான காரில் இருந்த 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். மற்றொரு காரில் வந்த மாணவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனராம். இதனிடையே விபத்துக்குள்ளான காரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதால், எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இதைப் பார்த்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். கார் மோதியதில் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குள் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. காரை ஓட்டிச் சென்றவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸார் வந்து விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு சாலையோரமாக நிறுத்தியதுடன், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியவர்களின் பெயர்களைக் கூற போலீஸார் மறுத்துவிட்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/தாறுமாறாக-ஓடிய-கார்-3-மாணவர்கள்-காயம்-3235490.html
3235489 விழுப்புரம் புதுச்சேரி தனியார் தொழிற்சாலையில் பிளாட்டினம் திருட்டு DIN DIN Monday, September 16, 2019 03:10 AM +0530
காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாட்டினத்தைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, காலாப்பட்டு மாத்தூர் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிடங்கில் விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதை கடந்த மாதம் 31 -ஆம் தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
திருடு போன 47 கிராம் பிளாட்டினத்தின்  மதிப்பு ரூ. 2 லட்சம்.
இதுதொடர்பாக தொழிற்சாலை அதிகாரி செல்வகுமார் காலாப்பட்டு காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/தனியார்-தொழிற்சாலையில்-பிளாட்டினம்-திருட்டு-3235489.html
3235488 விழுப்புரம் புதுச்சேரி அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் கவியரங்கம் DIN DIN Monday, September 16, 2019 03:10 AM +0530 அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க புதுச்சேரி கிளை சார்பில், அறிவொளி தரும் ஆசான்கள் என்ற தலைப்பில் கவியரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு சென்னை த.ஹேமாவதி தலைமை வகித்தார். சொ.ஏழுமலை வரவேற்றார். செயலர் க.கண்ணன் அறிமுகவுரைற்றினார். சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவி.மாசிலாமணி கவிதைத் தொகுப்பை வெளியிட்டு பேசினார்.
நிகழ்வில் புதுச்சேரி, திண்டிவனம், திருவண்ணாமலை, பண்ருட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.
தமிழ் ஆர்வலர் கே.தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.கோவலன், கவிஞர் ராமதாசு காந்தி, கோவிந்தம்மாள், புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சங்கப் பொருளாளர் கோ.குணசேகர் நன்றி கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/அனைத்திந்திய-தமிழ்-எழுத்தாளர்கள்-சங்கம்-சார்பில்-கவியரங்கம்-3235488.html
3235487 விழுப்புரம் புதுச்சேரி தூய்மை இந்தியா ஓவியக் கண்காட்சி DIN DIN Monday, September 16, 2019 03:09 AM +0530 காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமையாசிரியர் கே.ராஜசேகரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா குறித்தும், தூய்மைக்கு தங்களுடைய பங்களிப்பு குறித்தும் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கற்பனைத் திறனுக்கேற்ப, ஓவிய ஆசிரியர் என்.காமராஜ் வழிகாட்டலின்படி ஓவியம் வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். ஓவிய ஆசிரியர் என்.காமராஜ், விரிவுரையாளர் டி.பாஸ்கரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து 3 ஓவியங்களைத் தேர்வு செய்தனர்.
மேலும், சூரிய ஒளியின்றி தொட்டாற் சிணுங்கி வளர்த்தல் மற்றும் அதன் மருத்துவ குணங்கள், இன்குபேட்டர் கொண்டு செயற்கை முறையில் கோழிக்குஞ்சு உற்பத்தி, உடல் நலத்துக்கு தீங்கான பொருள்கள், குளிர் பிரதேசங்களில் தோன்றும் பனியிலிருந்து குளிர்வித்தல் முறையில் நீரைப் பிரித்தெடுத்தல், வினிகர் மற்றும் இனோ உப்பு பயன்பாட்டின் தீமைகள், நீரியல் அழுத்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
பள்ளி விரிவுரையாளர் எஸ்.சித்ரா, ஏ.ஆபிரகாம்லிங்கன், டி.பாஸ்கரன், வி.விஜயராணி, என்.சத்யா, பட்டதாரி ஆசிரியர்கள் எஸ்.மகாதேவன், எஸ்.ராஜேந்திரன், எம்.கிருஷ்ணராணி, என்.காமராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/தூய்மை-இந்தியா-ஓவியக்-கண்காட்சி-3235487.html
3235325 விழுப்புரம் புதுச்சேரி இரும்புக் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது DIN DIN Monday, September 16, 2019 01:32 AM +0530
புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அருகே சோம்பட்டு அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (38). இவர், அதே பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தியின் மகன் ராம்குமார் (24), பார்த்தசாரதியை மிரட்டி, மாமூல் கேட்டு, ரூ. ஆயிரத்தைப் பறித்துச் சென்றாராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து பார்த்தசாரதி திருக்கனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, ராம்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/இரும்புக்-கடைக்காரரை-மிரட்டி-பணம்-பறித்தவர்-கைது-3235325.html
3235214 விழுப்புரம் புதுச்சேரி அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயம் செய்ய ஆளே இருக்காது: ஜக்கி வாசுதேவ் DIN DIN Monday, September 16, 2019 12:17 AM +0530
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயம் செய்ய ஆளே இருக்காது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் இடம்பெறுவதற்காக, இவர் கடந்த 3-ஆம் தேதி தலைக் காவிரியில், தனது குழுவினருடன் மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்கினார்.
மைசூரூ, பெங்களூரு, ஓசூர், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட நகரங்களின் வழியாக சனிக்கிழமை இரவு அவர் புதுச்சேரிக்கு வந்தார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பொது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தப் பண்பாடு விவசாயிகளால்தான் வளர்ந்தது. ஆனால், தற்போது இருக்கும் விவசாயிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே அவர்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால், அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயம் செய்வதற்கு ஆளே இருக்கமாட்டார்கள்.
 இந்தியாவில் 100 ஆண்டுகளாகப் பெய்யும் பருவ மழை அளவில், பெரிதாக எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், பெய்யும் மழைநீரை மண்ணில் பிடித்து வைத்துக் கொள்வதற்கு மரங்கள் இல்லாமல் போய்விட்டன. மண் வளம் பெற மரங்களின் இலை, தழைகளும், ஆடு, மாடுகளின் சாணமும் வேண்டும். மரங்களை அழித்துவிட்டோம். மாடுகளை எல்லாம் வெளிநாடுகளுக்கு இறைச்சிக்காக விற்றுவிட்டோம். மரங்களும், மாடுகளும் இல்லாமல் மண்ணை வளமாக்க நம்மிடம் வேறு என்ன தொழில்நுட்பம் உள்ளது? என்றார் ஜக்கி வாசுதேவ்.
நிகழ்ச்சியில், முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி,  மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, புதுவை ஆளுநர் மாளிகைக்கு மோட்டார் சைக்கிள் குழுவுடன் சென்ற ஜக்கிவாசுதேவுக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வரவேற்பு அளித்தார். 
புதுச்சேரி நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜக்கி வாசுதேவ் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். காவிரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி கோவையில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/அடுத்த-25-ஆண்டுகளில்-இந்தியாவில்-விவசாயம்-செய்ய-ஆளே-இருக்காது-ஜக்கி-வாசுதேவ்-3235214.html
3235152 விழுப்புரம் புதுச்சேரி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு DIN DIN Monday, September 16, 2019 12:04 AM +0530
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை ஏற்க முடியாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
புதுவை மாநில மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அனுப்பிய கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கையெழுத்திடாமல், பணமாகத்தான் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்த போது, பாஜகவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரிசிதான் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அந்தத் தீர்மானத்துடனான கோப்புடன் நானும், அமைச்சர்களும் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து, மக்கள் அரிசிதான் கேட்கின்றனர். பணத்தை வங்கியில் செலுத்தினால் குடும்பத் தலைவர்கள் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 
இதனால், ஏழை மக்கள் பட்டினியால் வாடும் நிலை உள்ளது. எனவே, அரிசி வழங்க வேண்டும் என்றும், அரிசி வாங்குவதில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சேபம் இல்லை என்றும் தெரிவித்தோம்.
ஆனாலும், ஆளுநர் கிரண் பேடி இதற்கு ஒப்புக் கொள்ளாமல், அந்தக் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது.  
அதற்குத் தடையாக இருப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல். சட்டப்பேரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாதது, அதன் மாண்பைக் குலைத்து, அவமானப்படுத்துவதாகும்.
அரிசிக்கு பதில் பணம் தர முடிவு: இலவச அரிசி விவகாரம் குறித்து மத்திய உள்துறைச் செயலரிடம் விளக்கமாகக் கூறியுள்ளேன். தேவைப்பட்டால், நீதிமன்றம் சென்று மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற ஆளுநர் தடையாக உள்ளார் என்று தெரிவிப்போம். 
தற்போதைய நிலையில், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரிசிக்கு பதிலாக பணம் தரப்படும்.
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  இது மத்திய அரசின் கல்விக் கொள்கையில் உள்ளது. பொதுத் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கக் கூடாது. 
3 மாதங்களுக்கு  ஒரு முறை மாணவரின் திறமையை பள்ளி அளவில் சோதிப்பதுதான் ஏற்றுக் கொள்ளக் கூடியது.  ஆகவே, 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது. புதுவையைப் பொருத்தவரை, இது தொடர்பாக கல்வித் துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/16/5-8-ஆம்-வகுப்புகளுக்கு-பொதுத்-தேர்வு-புதுவை-முதல்வர்-நாராயணசாமி-எதிர்ப்பு-3235152.html
3234967 விழுப்புரம் புதுச்சேரி அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் DIN DIN Sunday, September 15, 2019 04:57 AM +0530
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுவை சமூக நலத் துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அளவில் தனிப்பட்ட தகவல்களை உருவாக்குவதற்கும்,  அரசு வழங்கும் திட்டங்கள், சலுகைகளை எளிய முறையில் சென்று சேர்ப்பதற்கும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழி வகுக்கிறது.
 புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான பிரத் யேக அடையாள அட்டையைப் பெறுவதற்கு  ள்ஜ்ஹஸ்ப்ஹம்க்ஷஹய்ஸ்ரீஹழ்க்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு எண். 1,  சாரதாம்பாள் நகர் (பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில்) எல்லைப்பிள்ளைச்சாவடி,  புதுச்சேரி என்ற முகவரியில் இயங்கும் சமூக நலத் துறை அலுவலகத்தை அணுகலாம் எனஅந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/அடையாள-அட்டை-பெற-விண்ணப்பிக்கலாம்-3234967.html
3234965 விழுப்புரம் புதுச்சேரி அனுமதியின்றி பதாகைகள் வைப்பவர், அச்சகத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை DIN DIN Sunday, September 15, 2019 04:56 AM +0530
புதுச்சேரியில் உரிய அனுமதி இன்றி பதாகைகளை வைத்தாலோ, அச்சடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் (பொ) அர்ஜூன் சர்மா எச்சரித்தார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:  நகராட்சியின் அனுமதி இன்றியும், சட்ட விரோதமாகவும் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்,  கட் அவுட்டுகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றமும் சட்ட விரோதமாக, உரிய அனுமதியின்றி பதாகைகள் வைத்தால், அவ்வாறு வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, புதுச்சேரியில் பதாகைகள், கட் அவுட்டுகள் போன்றவை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.  இதற்கு 144 பிரிவின்படி தடை விதிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பொதுப் பணித் துறையினர் உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகள், கட் அவுட்களை காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும்.
பதாகைகள் தயாரிக்கும் அச்சகங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதியின்றி வழங்கப்படும் பதாகைகள் போன்றவற்றை அச்சிட்டு தரக் கூடாது.  அவ்வாறு செய்தால் தனி நபர்கள், சங்கங்கள், அமைப்புகள் மீதும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/அனுமதியின்றி-பதாகைகள்-வைப்பவர்-அச்சகத்தினர்-மீது-குற்றவியல்-நடவடிக்கை-மாவட்ட-ஆட்சியர்-எச்சரிக்கை-3234965.html
3234964 விழுப்புரம் புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் 913 வழக்குகளுக்குத் தீர்வு DIN DIN Sunday, September 15, 2019 04:55 AM +0530
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 913 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற தொடக்க நிகழ்ச்சியில், புதுவை மாநில  சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி வரவேற்றார்.
புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும்,  புதுச்சேரி தலைமை நீதிபதியுமான தனபால் தொடக்கி வைத்தார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள்,  தலைமைக் குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நடுவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், நீதிபதிகள்  அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ராபர்ட் கென்னடி ரமேஷ் முன்னிலை வகித்தார்.  சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள்,  வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன் - மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என நிலுவை மற்றும் நேரடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதற்காக புதுச்சேரியில் 8 அமர்வுகளும், காரைக்கால், மாஹேவில் தலா ஓர் அமர்வும் செயல்பட்டன. மொத்தம் 6,238 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 913 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
இதன் மூலம் ரூ. 5 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 203-க்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் 722 நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/மக்கள்-நீதிமன்றத்தில்-913-வழக்குகளுக்குத்-தீர்வு-3234964.html
3234963 விழுப்புரம் புதுச்சேரி வெள்ளை நகரம் பகுதியில் வாகனங்களை நிறுத்தத் தடை: அதிமுக கண்டனம் DIN DIN Sunday, September 15, 2019 04:55 AM +0530
புதுச்சேரி வெள்ளை நகரப் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கொறடா வையாபுரி மணிகண்டன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி வெள்ளை நகரம் பகுதியில் வாகனங்களை எந்தச் சாலையிலும் நிறுத்தக் கூடாது என போலீஸார்  தடை விதித்து வருகின்றனர். புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வார இறுதி நாள்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கடற்கரைச் சாலையையொட்டியுள்ள பகுதியில்தான் வாகனங்களை நிறுத்துவர்.
ஆனால், போலீஸார் அவ்வாறு நிறுத்தக் கூடாது என்றும், 
ஆம்பூர் சாலையில் வாகனத்தை நிறுத்தும்படியும் கூறுகின்றனர். ஆம்பூர் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு  நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்கரையையொட்டியுள்ள சாலைகளில் ஏதேனும் ஒரு சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பே இல்லாத நிலை உள்ளது. புதுச்சேரியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் மரங்கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் விழுந்தன.
அவ்வாறு விழுந்த மரங்களை அகற்ற தீயணைப்புத் துறையை நாடினால், அவர்கள் வனத் துறையை அணுகும்படி கூறுகின்றனர். வனத் துறையை அணுகினால், அந்தச் சாலை நகராட்சிக்குள் வருகிறதா? பொதுப் பணித் துறைக்குள் வருகிறதா எனப் பார்த்து, அவர்களை அணுகும்படி கூறுகின்றனர்.
நகராட்சி, பொதுப் பணித் துறையை அணுகினால் மரங்களை அகற்ற சாதனங்கள் இல்லை எனக் கூறுகின்றனர். இப்படி ஒரு துறையினர் மற்றொரு துறையைக் கைகாட்டி வருகின்றனர். 
இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை அகற்றுவது தொடர்பாக யார்? என்ன பணியைச் செய்ய வேண்டும்? என சுற்றறிக்கை வெளியிடவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/வெள்ளை-நகரம்-பகுதியில்-வாகனங்களை-நிறுத்தத்-தடை-அதிமுக-கண்டனம்-3234963.html
3234559 விழுப்புரம் புதுச்சேரி கஞ்சா விற்ற 4 பேர் கைது; 6 கிலோ பறிமுதல் DIN DIN Sunday, September 15, 2019 01:05 AM +0530
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு அதிரடிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிறப்பு அதிரடிப் படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், காவல் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்,  சந்தோஷ் மற்றும் உருளையன்பேட்டை போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது, ரகசிய இடத்தில் வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் (23), ருத்ரேஷ் (எ) ருத்ரேஷ் மணி (21) என்பதும், அவர்கள் மொத்த வியாபாரிகளான விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த சேகர்(66), வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த பாலாஜி (46) ஆகியோரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
 இதையடுத்து, கேசவன், ருத்ரேஷ் மணி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீஸார்,  அவர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிமான கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கஞ்சா மொத்த வியாபாரிகளான சேகர் மற்றும் பாலாஜியை தேடி திருக்கோவிலூர் சென்ற  தனிப்படை போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4.50 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்தம் ரூ. 2.25 லட்சம். கைது செய்யப்பட்ட 4 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா விற்றவர்களை மடக்கிப் பிடித்து சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆகன்ஷா யாதவ், காவல் கண்காணிப்பாளர் மாறன் ஆகியோர் பாராட்டினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/கஞ்சா-விற்ற-4-பேர்-கைது-6-கிலோ-பறிமுதல்-3234559.html
3234558 விழுப்புரம் புதுச்சேரி தொடர் பைக் திருட்டு: கடலூர் இளைஞர் கைது DIN DIN Sunday, September 15, 2019 01:05 AM +0530
கிருமாம்பாக்கம் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டதாக, கடலூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பைக்குகள் மீட்கப்பட்டன.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலைய சரகப் பகுதிகளில் தொடர்ந்து பைக்குகள் திருடு போயின. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பைக் திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கிருமாம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தன்வந்திரி தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பரிக்கல்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக மோட்டார் பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை மடக்கி ஆவணங்களைச் சோதனையிட்டனர்.
அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், அவர் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நத்தம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் தண்டபாணி (38) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பதும், அதை அவர் கடந்த 12-ஆம் தேதி முள்ளோடை போக்குவரத்து சுங்கச் சாவடி அருகே திருடியதும் தெரிய வந்தது.
தீவிர விசாரணையில், கிருமாம்பாக்கம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் ஓட்டி வந்த பைக் உள்பட 5 பைக்குகளும்,  தவளக்குப்பம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 2 மோட்டார் பைக்குகளும், மற்ற இடங்களில் 3 பைக்குகளும் என மொத்தம் 10 மோட்டார் பைக்குகள் திருடியது தெரிய வந்தது. திருடப்பட்ட பைக்குகளின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சமாகும்.
இதையடுத்து, தண்டபாணியை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 10 மோட்டார் பைக்குளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட தண்டபாணி மீது தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/தொடர்-பைக்-திருட்டு-கடலூர்-இளைஞர்-கைது-3234558.html
3234557 விழுப்புரம் புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு DIN DIN Sunday, September 15, 2019 01:05 AM +0530
அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 9-ஆம் வகுப்பு பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம், அந்தப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான ராஜசேகர் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவிகள் தரப்பில் புதுச்சேரி குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பள்ளியில் குழந்தைகள் நலக் குழு நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். இதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுத் தலைவர் ராஜேந்திரன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் மீது வில்லியனூர் போலீஸார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியரை தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/அரசுப்-பள்ளி-ஆசிரியர்-மீது-போக்சோ-சட்டத்தின்-கீழ்-வழக்கு-3234557.html
3234555 விழுப்புரம் புதுச்சேரி பதாகை கலாசாரத்துக்கு தீர்வு காண கூட்டு முயற்சி தேவை: புதுவை ஆளுநர் DIN DIN Sunday, September 15, 2019 01:05 AM +0530
பதாகை கலாசாரத்துக்கு முடிவு கட்ட கூட்டு முயற்சி தேவை என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து மொபெட்டில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளிக்கரணை அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில், நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். 
அப்போது, வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றமும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பதாகை வைக்கும் கலாசாரம் சமூகத்துக்கு கேடு விளைவிக்கிறது. உயிரிழப்புகளுக்கும் காரணமாக உள்ளது. இதற்குத் தீர்வுகாண கூட்டு முயற்சி தேவை. இரவு ரோந்து பணியால் மட்டுமே 
இந்தக் கலாசாரத்துக்கு தீர்வுகாண முடியும். 
அதுவும் பொதுப் பணித் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே இதைத் தடுக்க 
முடியும் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/பதாகை-கலாசாரத்துக்கு-தீர்வு-காண-கூட்டு-முயற்சி-தேவை-புதுவை-ஆளுநர்-3234555.html
3234554 விழுப்புரம் புதுச்சேரி மரக்கன்றுகள் நடும் விழாவில் புதுவை ஆளுநர் கிரண் பேடியின் மாயமான செல்லிடப்பேசி உடைந்த நிலையில் மீட்பு DIN DIN Sunday, September 15, 2019 01:04 AM +0530
புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் விழாவின் போது, மாயமான ஆளுநர் கிரண் பேடியின் செல்லிடப்பேசி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியை பசுமை மிக்கதாகவும், நீர்வளம் மிக்கதாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பாகூர் ஏரியைச் சுற்றி 3.7 கி.மீ. தொலைவுக்கு 3 ஆயிரம்  மரக்கன்றுகளை மூன்று வார காலத்துக்குள் நடும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைப்பதற்காக பாகூருக்கு சனிக்கிழமை ஆளுநர் கிரண் பேடி சென்றார்.
பாகூர் ஏரி அருகேயுள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் மரக்கன்றுகளை நடுவதற்காகக் கூடியிருந்த 200 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், என்.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்டோருடன் ஏரியை நோக்கி அவர் நடந்து சென்றார். ஏரிக்கரையில் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
பின்னர், ஏரி நீர் நிரம்பி வழியும் இடத்தில் உள்ள சிங்காரி, பங்காரி சிலைகளுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்தார். 
பின்னர், தன்னார்வலர்கள், மாணவர்களிடையே அவர் பேசியதாவது:
புதுச்சேரியின் நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், உருவாக்கவும் பெண்களின் பங்கு இருந்ததற்கான உதாரணமாக சிங்காரி, பங்காரி, ஆயி ஆகியோர் திகழ்கின்றனர். பாகூர் ஏரி மட்டுமன்றி, அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிய வேண்டும் என நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான களப் பணியை ஆற்ற வேண்டும். அடுத்த ஆண்டு தைப் பொங்கல் தினத்தில் நாம் மீண்டும் இங்கு கூடி, பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் என்றார் அவர்.
பின்னர், மாணவர்கள் தன்னுடன் சுயபடம் (செல்பி)  எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார். அப்போது, தனது செல்லிடப்பேசியை எடுத்துப் பயன்படுத்த விரும்பினார். ஆனால், அதைக் காணவில்லை. இதையடுத்து, போலீஸாரும், உயரதிகாரிகளும், விழாவுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளும் காணாமல் போன செல்லிடப்பேசியைத் தேடினர். அது கிடைக்காததால், செல்லிடப்பேசி எங்குள்ளது என்பதைக் கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு போலீஸாருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
பின்னர், பாகூர் ஏரி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டதை அவர் பார்வையிட்டார். பாகூர் கன்னியக்கோயில் சாலையில் உள்ள நீர்நிலை வாய்க்கால்களையும், அங்குள்ள குப்பைக் கிடங்குக்கும் சென்று பார்வையிட்டார். 
ஆய்வின் போது, பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர்க்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, காணாமல் போன செல்லிடப்பேசி குப்பைக் கிடங்கில் உடைந்த நிலையில் கண்டறியப்பட்டதாகக் கூறி, போலீஸார் ஆளுநரிடம் அந்தச் செல்லிடப்பேசியை ஒப்படைத்தனர்.
ஏற்கெனவே, பாகூர் பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற போது, இலவச அரிசி வழங்கக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாராவது இப்படிச் செய்தார்களா? ஆளுநர் கிரண் பேடி அனைத்து விதமான தகவல் பறிமாற்றத்தையும் செல்லிடப்பேசி வழியாகத்தான்  மேற்கொண்டு வருகிறார். இதையறிந்து, அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக யாரேனும் அவரது செல்லிடப்பேசியை எடுத்து உடைத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/மரக்கன்றுகள்-நடும்-விழாவில்-புதுவை-ஆளுநர்-கிரண்-பேடியின்-மாயமான-செல்லிடப்பேசி-உடைந்த-நிலையில்-மீட்பு-3234554.html
3234553 விழுப்புரம் புதுச்சேரி பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது அளிப்பு DIN DIN Sunday, September 15, 2019 01:04 AM +0530
பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
அந்த மாநில அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய திரைப்பட விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. தொடக்க விழாவில், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில செய்தி - விளம்பரத் துறை இயக்குநர் வினயராஜ் வரவேற்றார். 
சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி விழாவைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம், சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கான சான்றிதழ், ரொக்கப் பரிசு ரூ. ஒரு லட்சம் ஆகியவற்றை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., நவதர்ஷன் திரைப்பட க் கழகச் செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் வங்க மொழித் திரைப்படம் நகர்கீர்த்தன் சனிக்கிழமை திரையிடப்பட்டது. மலையாள மொழித் திரைப்படம் சூடானி ப்ரம் நைஜீரியா ஞாயிற்றுக்கிழமை (செப். 15) திரையிரப்படவுள்ளது. 
தெலுங்கு மொழித் திரைப்படம் மகாநதி திங்கள்கிழமையும் (செப். 16), ஹிந்தி மொழித் திரைப்படம் ராக்ஜி செவ்வாய்க்கிழமையும் (செப். 17) திரையிடப்படவுள்ளன.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/பரியேறும்-பெருமாள்-திரைப்படத்துக்கு-சங்கரதாஸ்-சுவாமிகள்-விருது-அளிப்பு-3234553.html
3234552 விழுப்புரம் புதுச்சேரி ராணுவ உதவியுடன் காஷ்மீர் நிர்வகிக்கப்படுவது வெட்கத்தை தருகிறது: முன்னாள் நீதிபதி சந்துரு DIN DIN Sunday, September 15, 2019 01:04 AM +0530
ராணுவ உதவியுடன் காஷ்மீர் நிர்வகிக்கப்படுவது வெட்கத்தை தருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.
புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில், ரோஜாக்களின் கண்ணீர் துடைக்க என்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: 
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியா? இல்லையா? என்ற கேள்வியைவிட, சிறப்பு அந்தஸ்து உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. சிலர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை என்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து உள்ளது. இந்தச் சிக்கல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புதுவை யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு, ஆளுநரும் முதல்வரும் யாருக்கும் அதிகாரம் என மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். 
இங்கு, மாநில அந்தஸ்தை கோரும் நிலையில், ஒரு மாநிலத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றுகின்றனர்.
மத்திய அரசுக்கு காஷ்மீரின் மொழி, மக்கள், வாழிடம், சமயம் ஆகியவை முக்கியமல்ல. அதிகாரப் பங்கீடாகத்தான் மாநிலங்களைப் பார்க்கின்றனர். யூனியன் பிரேதசத்துக்கு என்று இங்கு சட்டப்பேரவை இருக்கிறது. ஆனால்,  யூனியன் பிரதேசம் என்று சொல்லக்கூடிய லடாக் மாநிலத்தில் சட்டப்பேரவை இல்லாத சூழலை உருவாக்கிவிட்டனர்.
காஷ்மீரில் தலைவர்களைச் சிறை வைத்துள்ளனர்.  மக்கள் வெளியே வரமுடியவில்லை. அங்கு, இருண்ட காலம் போன்ற சூழல் நிலவுகிறது. இதை நாம் கண்டிக்க வேண்டும்.
காஷ்மீரில் ராணுவத்தைக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். அங்கு, உள்ளூர் போலீஸார் 65 ஆயிரம் பேர். ஆனால், ராணுவத்தினர் ஆறரை லட்சம் பேர். ராணுவத்தைக் கொண்டு ஒரு மாநிலம் நிர்வகிக்கப்படுவது வெட்கத்தைத் தருகிறது. இதை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. இன்றைய இளைஞர்களுக்கு எது அவசியம், எது அவசியமில்லை என்பது தெரியவில்லை என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளன கெளரவத் தலைவர் பாலமோகனன் தலைமை வகித்தார். புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம்,  மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலசுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி,  மனித நேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி பஷீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/ராணுவ-உதவியுடன்-காஷ்மீர்-நிர்வகிக்கப்படுவது-வெட்கத்தை-தருகிறது-முன்னாள்-நீதிபதி-சந்துரு-3234552.html
3234550 விழுப்புரம் புதுச்சேரி சென்னை விபத்து சம்பவம்: பதாகைகளை அகற்றிய பாஜகவினர் DIN DIN Sunday, September 15, 2019 01:03 AM +0530
சென்னையில் பதாகை சரிந்து விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தால், புதுச்சேரியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பாஜகவினர் சனிக்கிழமை அகற்றினர்.
புதுவையில் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, பொதுமக்கள், இளைஞர்கள் என தங்களது பிறந்த நாள், வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பதாகைகளை வைக்கின்றனர். அந்த வகையில், வருகிற 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை பள்ளிக்கரனையில் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்பவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை பகுதியில் பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில், அந்தக் கட்சியினர் அகற்றினர்.
இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், இனி பாஜக சார்பில் எந்தவிதமான பதாகைகளும் வைக்கப்படமாட்டாது என்றும், பிற கட்சியினர் வைத்தாலும் அவற்றை அகற்றுவோம் என்றும் கூறினார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/15/சென்னை-விபத்து-சம்பவம்-பதாகைகளை-அகற்றிய-பாஜகவினர்-3234550.html
3234148 விழுப்புரம் புதுச்சேரி தவளக்குப்பத்தில் செப். 29-இல் இலவச வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Saturday, September 14, 2019 07:32 AM +0530 புதுச்சேரி தவளக்குப்பத்தில் வருகிற 29 ஆம் தேதி வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ராம் சில்க்ஸ் நிறுவனத்துடன் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து தவளக்குப்பத்தில் உள்ள சுபமங்களா மஹாலில் வருகிற 29 ஆம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 
இந்த முகாமில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் கணினி, தொழில்நுட்பம், கணினி அறிவியல் பொறியியல் நிறுவனங்கள், வர்த்தகம், விற்பனை, சந்தைப்படுத்துதல், தயாரிப்பு, உற்பத்தி, ஹோட்டல் மேலாண்மை, சில்லறை வணிகம், வங்கிப் பிரிவு, சிவில் மற்றும் கட்டுமானம், விநியோகம் தொடர்பான 60 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன.
இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல், பொறியியல், ஹோட்டல் மேலாண்மை, நர்சிங், வாழ்க்கை அறிவியல் படித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் h‌t‌t‌p://‌v‌v‌v‌s‌i.‌p‌o‌s​b‌e​a‌n.​c‌o‌m என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களை 97514 43139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/தவளக்குப்பத்தில்-செப்-29-இல்-இலவச-வேலைவாய்ப்பு-முகாம்-3234148.html
3234147 விழுப்புரம் புதுச்சேரி காலணி விற்பனையகத்தில் பண மோசடி: மேலாளர் மீது வழக்கு DIN DIN Saturday, September 14, 2019 07:31 AM +0530 புதுச்சேரி காலணி விற்பனையகத்தில் ரூ. 1.80  லட்சம் மோசடி செய்ததாக, அதன் மேலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி நேரு வீதியில் பிரபல காலணி விற்பனையகம் உள்ளது. இங்கு மேலாளராக சென்னையைச் சேர்ந்த அசுதோஷ் ஷர்மா பணிபுரிந்தார். இந்த நிலையில், விற்பனையக கணக்கு விவரங்களை காலணி விற்பனையக தென்மண்டல மேலாளர் ஆஷிஷ் ஆப்ரகாம் ஆய்வு செய்தார்.
அப்போது, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி நடந்திருப்பதும், ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான காலணிகள் இருப்பில் குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 நவம்பர் முதல் 2019 மார்ச் வரை இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக ஆஷிஷ் ஆப்ரகாம் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் விற்பனையக மேலாளர் அசுதோஷ் ஷர்மா மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/காலணி-விற்பனையகத்தில்-பண-மோசடி-மேலாளர்-மீது-வழக்கு-3234147.html
3234146 விழுப்புரம் புதுச்சேரி ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி DIN DIN Saturday, September 14, 2019 07:31 AM +0530 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ரத்த சோகை, வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  வையாபுரி மணிகண்டன் தொடக்கிவைத்தார். 
இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி மாலதி, அங்கன்வாடி மைய ஊழியர்கள்,  அரசு ஆரம்ப சுகாதார நிலைய நல வழி ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி அங்கன்வாடி மையத்தில் தொடங்கி காந்தி வீதி, பாரதிதாசன் வீதி, ரொசாரியா வீதி வழியாக மீண்டும் அங்கன்வாடி மையத்தை அடைந்தது.
 பேரணியில் பங்கேற்றவர்கள் மகளிருக்கு ரத்த சோகை வராமல் காப்பது, சுகாதாரக் கேட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/ரத்த-சோகை-தடுப்பு-விழிப்புணர்வுப்-பேரணி-3234146.html
3234145 விழுப்புரம் புதுச்சேரி கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை DIN DIN Saturday, September 14, 2019 07:30 AM +0530 புதுச்சேரி முதலியார்பேட்டை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி வேல்ராம்பட்டு நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி - மீனா தம்பதியின் மகன் பிரசாந்த் (18). வில்லியனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரசாந்த்துக்கும், அவருடன் படிக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்துடன் அவரது நண்பர்கள் பேசவில்லையாம். இதன் காரணமாக, மனவருத்தத்தில் இருந்து வந்த பிரசாந்த், கடந்த 10 ஆம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மறுநாள் காலை வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை, பெற்றோர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து தீவிரசிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/கல்லூரி-மாணவர்-விஷம்-குடித்து-தற்கொலை-3234145.html
3234144 விழுப்புரம் புதுச்சேரி தொமுசவில் இணைந்த பாமக தொழிற்சங்க நிர்வாகிகள் DIN DIN Saturday, September 14, 2019 07:30 AM +0530 பாமக தொழிற்சங்க நிர்வாகிகள், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தொமுச-வில் இணைந்தனர்.
 புதுச்சேரி சேதராப்பட்டில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில் இயங்கி வரும் பாமக தொழிற்சங்க நிர்வாகிகள் சித்திரவேல், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், ஆனந்தன், விஜயபாஸ்கர், ராஜசேகர் உள்ளிட்ட 60 தொழிலாளர்கள் சிவக்குமார் தலைமையில், அந்த சங்கத்தில் இருந்து விலகி,  எல்பிஎப் தொழிற்சங்க கெளரவத் தலைவர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தொமுசவில் இணைந்தனர்.
 புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொமுச மாநில தலைவர் அண்ணா அடைக்கலம் வரவேற்றார். தொமுச மாநிலச் செயலர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், வானூர் ஒன்றிய திமுக செயலர் முரளி, தொகுதிச் செயலர்கள் நடராஜன், சக்திவேல், கலியகார்த்திகேயன்,  தொமுச துணைச் செயலர் காயா ரோகணம், ஏஎப்டி தொழிற்சங்கத் தலைவர் ரவி, ஆட்டோ தொழிற்சங்க பொதுச்செயலர் மிஷேல்  உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/தொமுசவில்-இணைந்த-பாமக-தொழிற்சங்க-நிர்வாகிகள்-3234144.html
3234143 விழுப்புரம் புதுச்சேரி கைக்கடிகார கடையில் ரூ. 10 லட்சம் மதிப்பு கடிகாரங்கள் திருட்டு DIN DIN Saturday, September 14, 2019 07:30 AM +0530 புதுச்சேரியில் உள்ள கைக்கடிகாரக் கடை ஒன்றில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கடிகாரங்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
புதுச்சேரி காந்தி வீதியில் பிரபல தனியார் கைக்கடிகாரக் கடை உள்ளது. வியாழக்கிழமை இரவு விற்பனையை முடித்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர். கதவுக்கு வெளியில் படுத்திருந்த காவலாளி, இரவு மழையால் கடையின் அருகே சென்று உறங்கியுள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்தி, கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடைக்குள் இருந்த 30-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை திருடிவிட்டு, கதவை மீண்டும் மூடிவிட்டு தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை காலை ஊழியர்கள் வந்து கதவைத் திறக்க முற்பட்ட போதுதான், கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் நிர்வாக அதிகாரி பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/கைக்கடிகார-கடையில்-ரூ-10-லட்சம்-மதிப்பு-கடிகாரங்கள்-திருட்டு-3234143.html
3234142 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசி வழங்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு: அதிமுக அறிவிப்பு DIN DIN Saturday, September 14, 2019 07:29 AM +0530 இலவச அரிசி வழங்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என புதுவை மாநில அதிமுக அறிவித்துள்ளது.
 இது குறித்து புதுவை சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 புதுவை முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான செயற்கையான மோதல் போக்கால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச அரிசி அல்லது அதற்குரிய பணம் வழங்கப்படவில்லை. புதுவையில் காங்கிரஸ் அரசு அமைந்து 40 மாதங்கள் ஆகின்றன.  அதில் 22 மாதங்களுக்குத்தான் அரிசி அல்லது பணம் வழங்கப்பட்டுள்ளது.
 மீதமுள்ள 18 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.11 ஆயிரம் பணம் தர வேண்டும். அரிசிக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை, உபயோகமற்ற வேறு திட்டங்களுக்கு செலவு செய்து,  பல லட்சம் குடும்பங்களை இந்த அரசு ஏமாற்றி உள்ளது. சட்டப்பேரவையில் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் பெற்ற நிதியை வேறு திட்டத்துக்கு செலவு செய்வது என்பது தவறான ஒன்று. காங்கிரஸ் அரசு ஏழை மக்களுக்கு சேர வேண்டிய ரூ.300 கோடியை வீணடித்துள்ளது.  
மக்களுக்கு சேர வேண்டிய இலவச அரிசிக்குரிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.  இல்லையென்றால் அதிமுக தலைமையிடம் அனுமதி பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். மேலும், அதிமுக தலைமையின் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் 1.92 கோடி குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை தடையின்றி வழங்கி வருகிறது. ஆனால், புதுவையில் வெறும் 3.4 லட்சம் குடும்பங்களுக்கு அரசால் அரிசி வழங்க முடியவில்லை. இதற்கு முறைகேடான டெண்டர்,  தரமற்ற அரிசி, காலத்துடன் அரிசியை வழங்காதது ஆகியவையே காரணம்.
 டெண்டரில் முறைகேடு நடந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்.  அரிசி கொள்முதல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெற துணை நிலை ஆளுநர் கண்காணிக்க வேண்டுமே தவிர, அந்தத் திட்டத்தையே அழித்துவிடக் கூடாது. 
 சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஆய்வு நடத்தி, அரசால் இலவச அரிசி வழங்க முடியாவிட்டால் மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் அரிசிக்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அந்த பரிந்துரையை அரசு அமல்படுத்தவில்லை.  கடந்த ஆண்டு அரிசிக்கு ரூ.216 கோடி ஒதுக்கியதில் ரூ.84 கோடி அளவில் மட்டுமே அரிசி வழங்கப்பட்டது. மீதி ரூ.130 கோடி பணம் அந்தத் திட்டத்துக்கு செலவு செய்யப்படவில்லை.  என்.ஆர்.காங்கிரஸ் அரசு இலவச அரிசி திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. அதே நிலைதான் தற்போதைய காங்கிரஸ் அரசுக்கும், அதற்கு ஆதரவு அளிக்கும் திமுகவுக்கும் ஏற்படும் என்றார் ஆ.அன்பழகன்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/இலவச-அரிசி-வழங்காவிட்டால்-நீதிமன்றத்தில்-வழக்கு-அதிமுக-அறிவிப்பு-3234142.html
3234141 விழுப்புரம் புதுச்சேரி நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Saturday, September 14, 2019 07:29 AM +0530 புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசு தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்புத் துறை இயக்குநருமான இ. வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் புதுச்சேரி தொழிலாளர் துறை வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 15 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 10 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, நேர்முகத் தேர்வு மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுக்கவுள்ளன.
இதற்கு 18 வயது நிரம்பிய பிஎஸ்ஸி, பிசிஏ, பிடெக், பிபிஏ, நர்சிங், ஹோட்டல் மேலாண்மை, கணினி அறிவியல், வேதியியல், தொலைத்தொடர்பு, உயிரிவேதியியல் மற்றும் அனைத்து இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், எம்எஸ்சி, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ, கணினி அறிவியல், தொலைத் தொடர்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 20,000 வரை ஊதியத்திலான வேலைக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன் முகாம் நடைபெறும் 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/நாளை-தனியார்-துறை-வேலைவாய்ப்பு-முகாம்-3234141.html
3234140 விழுப்புரம் புதுச்சேரி அறிவியல் இயக்க திறனறிதல் தேர்வு: செப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Saturday, September 14, 2019 07:29 AM +0530 புதுவையில் அறிவியல் இயக்கம் நடத்தும் திறனறிதல் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:  மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை அதிகப்படுத்தும்  நோக்கில், புதுவை அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்தி வருகிறது.  பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாகவும், பயிற்சி பெறும் வகையிலும், இருந்து வரும் இத்தேர்வில், தமிழகம் மற்றும் புதுவை முழுவதுமிருந்து லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தொடக்க  நிலை (4, 5-ஆம் வகுப்புகள்), இளநிலை (6, 7, 8-ஆம் வகுப்புகள்),  உயர் நிலை (9, 10-ஆம் வகுப்புகள்), மேல்நிலை (11, 12-ஆம் வகுப்புகள்)  என நான்கு பிரிவுகளாக தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் பள்ளி மூலமாகவோ தனி மாணவராகவோ பங்கேற்கலாம். 
தேர்வில் பதிவுக்கட்டணமாக தொடக்க நிலை மாணவர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்கள் ரூ.125 செலுத்த வேண்டும். வினாத்தாள் இரு மொழிகளில் இடம்பெறும். தேர்வுக் கட்டண மதிப்புக்கு தேர்வர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பங்கேற்பாளரின் விருப்பத்துக்கேற்ப துளிர்-அறிவியல் மாத இதழ் (தமிழ்)  அல்லது ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) ஓராண்டுக்கு அனுப்பப்படும்.
முதல் பத்து இடங்களைப் பெறும் மாணவர்கள் மற்றும் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும்.  பங்கேற்க விரும்பும் பள்ளிகள்,  மாணவர்கள் செப்டம்பர் 
29-ஆம் தேதிக்குள் மாநில துளிர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளரை (செல்லிடப்பேசி எண்-9894926925) அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார் அருண் நாகலிங்கம்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/அறிவியல்-இயக்க-திறனறிதல்-தேர்வு-செப்29-க்குள்-விண்ணப்பிக்கலாம்-3234140.html
3234139 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க ஆளுநர் நெருக்கடி: விசிக கண்டனம் DIN DIN Saturday, September 14, 2019 07:28 AM +0530 புதுவையில் இலவச அரிசிக்கு பதில் பணம்தான் வழங்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நெருக்கடி கொடுப்பதை கண்டிப்பதாக விடுதலைச்சிறுத்தைகள்கட்சி தெரிவித்துள்ளது. 
இது குறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் தேவ.பொழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வங்கியில் செலுத்த வேண்டும் என அரசுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.
மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் சட்டப்பேரவையில், ஒருமனதாக அனைத்துக்கட்சியினரும் வேறுபாடு இல்லாமல் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பியும், அந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்தை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது.
இந்நிலையில் முதல்வர்,  எம்.பி., அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கேட்டும், மத்திய அரசை காரணம் காட்டி திசை திருப்புவது என்பது, வேண்டுமென்றே இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் செயலாகும். மேலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. கட்சியிடம் நற்பெயர் சம்பாதிக்கும் நோக்கில் ஆளுநர் செயல்படுகிறார்.
 அது மட்டுமல்லாமல், மாநில அரசு எடுக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு எந்த வகையிலும் ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது, சட்டப்பேரவை நடவடிக்கையில் தலையிடவும் 
அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியும்,  அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும்,  மக்களாட்சிக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் இந்த ஆட்சி இயங்கக் கூடாது என்று அவர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
 எனவே, கிரண் பேடியின் இந்த சர்வாதிகாரப்போக்கு தொடருமேயானால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேடிக்கை பார்க்காது. மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் 
தேவ.பொழிலன்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/இலவச-அரிசிக்கு-பதிலாக-பணம்-வழங்க-ஆளுநர்-நெருக்கடி-விசிக-கண்டனம்-3234139.html
3234138 விழுப்புரம் புதுச்சேரி எம்.ஜி.ஆர். சாலை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, September 14, 2019 07:28 AM +0530 புதுச்சேரி நூறடி சாலைக்கு எம்ஜிஆர் பெயரை, மாற்றி வேறு பெயர் வைக்கும் காங்கிரஸ் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் பாலத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமை வகித்து பேசியதாவது:
 புதுவையில் ஏராளமான பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், யாரையோ திருப்திப்படுத்த சாலையின் பெயரை மாற்ற முதல்வர் முயற்சிக்கிறார். 
புதுச்சேரியின் மையப்பகுதியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டே கோரிக்கை விடுத்தோம். அதைப்பற்றி முதல்வர் கண்டுகொள்ளவில்லை.
நாராயணசாமி முதன் முதலில் எம்பியாக தேர்வானது அதிமுக தயவால்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, உடனடியாக அராசணையை மாற்றி, எம்ஜிஆர் சாலை என்று பெயர் தொடரச் செய்ய வேண்டும். இல்லாவிடில், முதல்வர் வீடு அல்லது சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இதில் மாநில இணைச் செயலர்கள், துணைச் செயலர்கள், செயற்குழு, மாணவரணி, வழக்குரைஞர் பிரிவு, தொகுதிச் செயலர்கள், மகளிரணி, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், எம்ஜிஆர் பெயரில் உள்ள சாலையின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/எம்ஜிஆர்-சாலை-பெயர்-மாற்றத்துக்கு-எதிர்ப்பு-அதிமுகவினர்-ஆர்ப்பாட்டம்-3234138.html
3234137 விழுப்புரம் புதுச்சேரி துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: விசிகவினர் 50 பேர் கைது DIN DIN Saturday, September 14, 2019 07:28 AM +0530 வருவாய்த் துறை சான்றிதழ் வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தி, புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் துணை ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர குடியிருப்பு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் விண்ணப்பித்துவிட்டு நீண்டநாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், மாணவர்களுக்கு விரைவாக சான்றிதழ்கள் கிடைக்கவும், சான்றிதழ் வழங்குவதை எளிமையாக்கவும் புதுவை அரசு இணையதளம் மூலம் சான்றிதழ் பெறும் திட்டத்தை கொண்டு வந்தது. 
இருப்பினும், இணையதளம் மூலம் சான்றிதழ்கள் பெறுவதிலும் அடிக்கடி குளறுபடிகள் நிகழ்கின்றன. இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், இலவசமாக பெற்று வந்த சான்றிதழ்களை ரூ. 200 முதல் ரூ. 400 கொடுத்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய முறைப்படி சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில், வருவாய்த் துறை சான்றிதழ் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும், பழைய முறைப்படி சான்றிதழ்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வில்லியனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பழைய முறைப்படி வருவாய்த் துறை சான்றிதழ்களை வழங்க வேண்டும், மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையறிந்து, அங்கு வந்த வில்லியனூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். இதனால் போலீஸாருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/துணை-ஆட்சியர்-அலுவலகம்-முற்றுகை-விசிகவினர்-50-பேர்-கைது-3234137.html
3233724 விழுப்புரம் புதுச்சேரி புதுவையில் விளம்பர பதாகைகளுக்குத் தடை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு DIN DIN Saturday, September 14, 2019 02:50 AM +0530 புதுவையில் விளம்பரப் பதாகைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் நிலைதடுமாறி விழுந்து, லாரியில் சிக்கி இறந்துள்ளார்.  இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
ஆகவே, புதுவையில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க, சாலையோரம் விளம்பரப் பதாகைகள் வைப்பதை அரசியல் கட்சியினரோ, தனி நபர்களோ தவிர்க்க வேண்டும். பதாகை வைப்பது விதி மீறிய செயல். 
விளம்பரப் பதாகைகள் வைப்பதால் போக்குவரத்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளன. ஆகவே, பதாகை வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அவற்றை அகற்றுவதற்கான செலவை பதாகை வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும். விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் அகற்றாவிட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.  இதை உள்ளாட்சித் துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். இந்த உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதலே அமலுக்கு வருகிறது.
நகர்ப்புறம், கிராமப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள்  உடனடியாக அகற்றப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியின்றி எந்த விளம்பரப் பதாகையும் வைக்கக்கூடாது.  மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/14/புதுவையில்-விளம்பர-பதாகைகளுக்குத்-தடை-முதல்வர்-நாராயணசாமி-உத்தரவு-3233724.html
3233512 விழுப்புரம் புதுச்சேரி மயானப் பாலம் கட்டித் தரக் கோரி நூதனப் போராட்டம் DIN DIN Friday, September 13, 2019 10:15 AM +0530 பாகூர் அருகே மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள பாலத்தை உடனடியாக கட்டித் தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி அருகேயுள்ள பாகூர் கொம்யூன் பகுதிக்குள்பட்ட சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தென்பெண்னை ஆற்றின் கரையோரம் உள்ள மயானத்தை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த மயானத்துக்கு ஆற்றின் கரையோரமாகத்தான் செல்ல முடியும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்தமழையில் மயானத்துக்குச் செல்லக்கூடிய சாலை, கான்கிரிட் பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மழைநீரால் அடித்து செல்லப்பட்ட பாலத்தையும், குண்டும் குழியுமான சாலையும் அமைப்பதுடன், மயான சுற்றுச்சுவரையும் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து போராடி 
வருகின்றனர். 
இந்த நிலையில்,அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து கோரிக்கையை வலியுறுத்தி பாகூரில் சவப்பாடையை சுமந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிளை செயலாளர்கள் சாம்பசிவம், வெங்கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து, குருவிநத்தம், சோரியாங்குப்பம் ஆகிய கிராமங்கள் முழுவதும் தாரை தப்பட்டை முழங்க, பெண்களின் ஒப்பாரியுடன் சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. 
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலர் ராஜாங்கம், கொம்யூன் செயலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பிரதேச குழு உறுப்பினர்கள் சரவணன், ராமமூர்த்தி, இளவரசி, குணசெல்வி, வளர்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/மயானப்-பாலம்-கட்டித்-தரக்-கோரி-நூதனப்-போராட்டம்-3233512.html
3233511 விழுப்புரம் புதுச்சேரி பல்கலை. மாணவர் பேரவை நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு DIN DIN Friday, September 13, 2019 10:15 AM +0530 புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் ஆக.31-ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக 9 ஆயிரம் மாணவர்கள் வாக்களித்து 70 பிரதிநிதிகளை தேர்வு செய்தனர். பின்னர், தேர்வு செய்யப்பட்ட 70 பிரதிநிதிகள்11 பேர் கொண்ட மாணவர் பேரவை நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த செப்.3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தலைவர், பொதுச்செயலர் உள்பட 11 இடங்களுக்கான நிர்வாகிகள் தேர்தலில் திமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் கடந்த செப்.4-ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டன.
இதில், மொத்தமுள்ள 11 இடங்களில் 10 இடங்களை திமுக மாணவர் கூட்டணி கைப்பற்றியது. இதில் பொதுச்செயலராக திமுக மாணவர் அணியை சேர்ந்த குரல் அன்பன், பேரவைத் தலைவராக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பரிட்சை யாதவ், துணைத் தலைவராக பென் மமதா, துணைச் செயலராக குரியாக்கோஸ்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் துணைத் தலைவர் குமார், செயற்குழு உறுப்பினர்களாக ரூபம் ஹசாரிக்கா, அல் ரிஷால் ஷாநவாஸ், ரித்தீஷ், சுவேதா, அனகா, தனவர்த்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற  பல்கலைக் கழக மாணவர் பேரவை நிர்வாகிகள் புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., தலைமையில் வியாழக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 இந்த சந்திப்பின்போது, திமுக மாநில மாணவர் அணிச் செயலர் சி.வி.எம்.பி. எழிலரசன், துணைச் செயலர் ஜெரால்டு, புதுவை தெற்கு மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி,  குணாதிலீபன், பொருளர் சண். குமரவேல், வடக்கு மாநிலப் பொருளர் வழக்குரைஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/பல்கலை-மாணவர்-பேரவை-நிர்வாகிகள்-முகஸ்டாலினுடன்-சந்திப்பு-3233511.html
3233510 விழுப்புரம் புதுச்சேரி அமைச்சர் தொகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளிடம் எம்எல்ஏ வாக்குவாதம் DIN DIN Friday, September 13, 2019 10:15 AM +0530 அமைச்சர் தொகுதியில் வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் ஆளும் கட்சி எம்எல்ஏ திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி  எதிரில் புதுச்சேரி - கடலூர் சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை வியாழக்கிழமை புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் குமரன் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனவேலு எம்எல்ஏ, காரில் இருந்து இறங்கி, சம்பவ இடத்துக்கு வந்தார். அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
தொடர்ந்து, அவர், "சாலையோரமாக இட்லி கடை வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஏழைகளிடமா உங்கள் அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டுவீர்கள்? இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பெரிய தொழிலதிபர்கள் ஏக்கர் கணக்கில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உங்களால் அகற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடைய தொகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் வேலையை வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால், பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என ஆவேசமாகப் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி அமைச்சர் கந்தசாமியின் தொகுதிக்குள்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது
நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/அமைச்சர்-தொகுதியில்-ஆக்கிரமிப்பு-அகற்றம்-அதிகாரிகளிடம்-எம்எல்ஏ-வாக்குவாதம்-3233510.html
3233509 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி ரயில் நிலையத்தில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் DIN DIN Friday, September 13, 2019 10:14 AM +0530 புதுச்சேரி ரயில் நிலைய முதலாவது நடைமேடை நுழைவு வாயிலில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் புதன்
கிழமை நிறுவப்பட்டது. 
 குளிர்சாதன பெட்டி போல் காட்சியளிக்கும் இந்த இயந்திரம், ஒரே நாளில் 5,000 புட்டிகள் வரை நசுக்கும் திறன் கொண்டது.  பயணிகள் தங்களது நெகிழிப் புட்டிகளை இந்த இயந்திரத்தில் வைத்தால், அது தானாக நசுக்கி பொடியாக்கிவிடும். இந்த துகள்களை மறுசூழற்சிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த இயந்திரம் குறித்து ரயில் பயணிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணிகள் தங்களிடம் இருந்த காலி தண்ணீர் புட்டிகளை இயந்திரத்தில் போட்டு நசுக்கினர்.
 பயணிகளுடன் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து, "ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம்', "நெகிழிப் பொருள்களை தவிர்ப்போம்',  "நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்ய கைகோப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.
 புதிய இயந்திரம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு தேவைக்காக நெகிழிப் புட்டிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக, தண்ணீர் பயன்பாட்டுக்கு நெகிழிப் புட்டிகள் மிக முக்கியமானவையாக மாறிவிட்டன. 
தண்ணீர் புட்டிகளை பயன்படுத்திய பிறகு பொது இடங்களில் வீசி எறிவது மக்களின் இயல்பான ஒன்றாக, நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அடையும் என்ற அக்கறை பெரும் பாலானோருக்கு இருப்பதில்லை.
 ஆகவே, இதை மாற்றும் எண்ணத்தில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 
இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விவரம் அந்த இயந்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட புட்டிகளை மட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். 
அட்டை பெட்டி, கண்ணாடி குவளைகள், துணிகள், தகர டப்பாக்கள் போன்றவற்றை இதில் போடக்கூடாது என்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/புதுச்சேரி-ரயில்-நிலையத்தில்-நெகிழிப்-புட்டிகளை-நசுக்கும்-இயந்திரம்-3233509.html
3233508 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதி நினைவு தினம் கடைப்பிடிப்பு DIN DIN Friday, September 13, 2019 10:14 AM +0530 புதுச்சேரி வ.உ.சி. வீதியில் அமைந்துள்ள புதுவை அருங்காட்சியகத்தில், தேசிய மரபு அறக்கட்டளை சார்பில், மகாகவி பாரதியாரின் 98 -ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெத்திசெமினார் பள்ளியில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாணவரான கெளதம் மோகன்ராசு, பாரதியின் ஆத்திச்சூடியில் இடம்பெற்ற, அச்சம் தவிர் தொடங்கி, சரித்திர தேர்ச்சிக்கொள் வரையிலான வரிகளை எழுதவும் வாசிக்கவும் செய்தார். அமலோற்பவம் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் அன்புச்செல்வன் மகேசுவரமூர்த்தி, சாதி, மத வேறுபாடுகளை களையும் சமுதாய ஒற்றுமைக்கான பாரதியாரின் பாடல்களில், வெள்ளை நிறத்தொரு பூனை என்ற பாடலை மனப்பாடமாக ஒப்பித்தார்.
இதே போல, பாரதியின் தேச உணர்ச்சிப் பாடல்களை அருங்காட்சியக ஆர்வலர்களும்,  ஊழியர்களும், படிக்கவும் பாடவும் செய்தனர். தேசிய மரபு அறக்கட்டளையின் நிறுவனரும், புதுவை அருங்காட்சியக காப்பாளருமான அறிவன், பாரதியின் படைப்புத் தொண்டுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். எட்டையபுரம், புதுச்சேரி பாரதி அருங்காட்சியகங்களை பற்றி விளக்கினார்.
இந்தியாவை குறிப்பாக புதுவையை ஆட்சி செய்த பிரெஞ்சுக்காரர்களின் தேசிய கீதத்தை இரண்டு முறை பாரதியார் மொழிபெயர்த்தது நினைவுகூரப்பட்டது. தேசிய மரபு அறக்கட்டளையினர், பாரதியின் "வாழ்க நீ எம்மான்' என்ற பாடலைப் பாடி நிகழ்வை நிறைவு செய்தனர்.  இந்நிகழ்ச்சியில், திலகப்பிரியா நாட்டியக் கலைக்கழக மாணவிகள் எலன் கிறிஸ்டினா, இலிஷாந்தி, மர்சினா ஏஞ்சல், மகிந்தனா, மோகன ஸ்ரீ, இருஃபினா ஒதிபெர் மற்றும் தலைமை ஆசிரியர் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மனோரஞ்சனி ஒருங்கிணைத்தார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/புதுச்சேரி-அருங்காட்சியகத்தில்-பாரதி-நினைவு-தினம்-கடைப்பிடிப்பு-3233508.html
3233507 விழுப்புரம் புதுச்சேரி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல் DIN DIN Friday, September 13, 2019 10:13 AM +0530 புதுவையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என புதுச்சேரி சமூகநீதிப் பேரவை வலியுறுத்தியது. 
புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் கூட்டம் முதலியார்பேட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். விசுவநாதன் தலைமை வகித்தார். 
இதில் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு. சலீம், ஒருங்கிணைப்பாளர் து.கீதநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பூர்வீக புதுச்சேரி மக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்க வேண்டும், தமிழகத்தைப் பின்பற்றி, புதுவையிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர வேண்டும். விடுபட்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும். 
அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவைக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில, மத்திய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக மாற்றிட வேண்டும். 
புதுவையில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் பொருளாதாரம், சமூக நிலை மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை துல்லியமாக அறிய, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதற்காக புதுவை அரசு அமைத்த குழுவின் காலம் காலாவதியாகிவிட்டது. இதற்காக புதிதாக சமூக சிந்தனையாளர்கள், மானுடவியலாளர்கள் உள்ளடங்கிய குழுவை அரசு நியமனம் செய்ய வேண்டும். நியமனத்துக்குப் பின்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/ஜாதிவாரி-கணக்கெடுப்பை-நடத்த-வலியுறுத்தல்-3233507.html
3233506 விழுப்புரம் புதுச்சேரி விதை நெல் மானியத் தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, September 13, 2019 10:13 AM +0530 விவசாயிகள் விதை நெல்லுக்கான மானியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை தெரிவித்தது. 
இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) கே. சிவசண்முகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு:
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், புதுவை பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில், தேவைப்படும் நெல் விதைகளை புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனம் (பாப்கோ) மூலம் வழங்கி வந்தது. 
தற்போது, போதிய சான்று விதை கையிருப்பு இல்லாத சூழலில், நெல் சாகுபடிக்கு தேவைப்படும் விதைத் தேவையை கருத்தில் கொண்டு, புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், விதை நெல் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு மட்டும் நேரடி நெல் விதைகளை மானிய முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையில், விதைக்கான மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாப்கோ மூலம் விதைநெல் கிடைக்கப்பெறாத புதுவை பகுதியைச் சேர்ந்த நடப்பு சம்பா பட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை மானியத் தொகை கோரும் விண்ணப்பப் படிவத்தை தங்கள் பகுதியில் அமைந்துள்ள உழவர் உதவியகத்தில் வருகிற 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அந்தந்த உழவர் உதவியகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மானியத் தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி, அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைப்படி மானியம் கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/விதை-நெல்-மானியத்-தொகை-பெற-விவசாயிகள்-விண்ணப்பிக்கலாம்-3233506.html
3233505 விழுப்புரம் புதுச்சேரி தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை: சிறுமி உள்பட 9 பெண்கள் மீட்பு DIN DIN Friday, September 13, 2019 10:12 AM +0530 புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளில் புதன்கிழமை இரவு போலீஸார் திடீரென நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடத்தியதாக 15 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுமி உள்பட 9 பெண்கள் மீட்கப்பட்டனர்.
புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் சிலவற்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, புதன்கிழமை இரவு முதுநிலை எஸ்பி அகன்ஷா யாதவ் தலைமையில் தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக தட்டாஞ்சாவடி ரவிசங்கர் (45), நெல்லித்தோப்பு சிவசங்கர் (34), கருணாகரன் (40), ரெட்டியார்பாளையம் ஜான்பால் (37), ராஜா நகர் ரஞ்சித்குமார் (40) ஆகியோரும், 
அரும்பார்த்தபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்த வீடு கொடுத்த உருளையன்பேட்டை வேலுமணி (68), இடைத்தரகர்கள் தேங்காய்த்திட்டு ராஜேஷ் (எ)ராஜேஷ்வரன் (25) ஆகியோரும், எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள விடுதியில் பாலியல் தொழில் இடைத்தரகர்களான கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த கெவின் (எ) செல்வம் (38), புதுச்சேரி தேங்காய்திட்டு நாகராஜ் (31), கம்பன் நகர் பாலமுருகன் (40) ஆகியோரும், 100 அடி சாலை மேம்பாலம் அருகே உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்தியதாக காஞ்சிபுரம் டெல்லி பாபு (42), உணவக மேலாளர் முருங்கப்பாக்கம் ரமேஷ் (36) , கரசூர் செல்வம் (எ) 
வீரமணி (32), துரைராஜ் (41), தட்டாஞ்சாவடி சுந்தர் (39) ஆகியோரும் என 15 இடைத்தரகர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களது பிடியிலிருந்த 17 வயது சிறுமி 
உள்பட 9 பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களை இடைத்தரகர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரிக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/தங்கும்-விடுதிகளில்-திடீர்-சோதனை-சிறுமி-உள்பட-9-பெண்கள்-மீட்பு-3233505.html
3233184 விழுப்புரம் புதுச்சேரி புதுவை குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகம் முற்றுகை: எம்எல்ஏ உள்பட 50 பாஜகவினர் கைது DIN DIN Friday, September 13, 2019 07:16 AM +0530 புதுவையில் இலவச அரிசி வழங்காதது தொடர்பாக, வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடக் கோரி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட நியமன எம்எல்ஏ வி.சாமிநாதன் தலைமையிலான பாஜகவினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 17 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச அரிசி வழங்குவது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் தராததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிடில், போராட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர். 
அதன்படி, மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசி வழங்காத நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? இதுதொடர்பாக புதுவை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலவச அரிசிக்கு பதிலாக பணத்தை தீபாவளிக்கு முன்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். தகுதியற்ற குடும்ப அட்டைகளை உடனே ஆய்வு செய்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டம் நடத்திய அவர்களை வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான தன்வந்திரி நகர் காவல் துறையினர் தடுத்ததால், போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வி.சாமிநாதன் எம்எல்ஏ, பாஜக பொதுச்செயலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம், மகளிரணி கோகிலா உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/13/புதுவை-குடிமைப்பொருள்-வழங்கல்-அலுவலகம்-முற்றுகை-எம்எல்ஏ-உள்பட-50-பாஜகவினர்-கைது-3233184.html
3232578 விழுப்புரம் புதுச்சேரி புதுவையின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு DIN DIN Thursday, September 12, 2019 08:37 AM +0530 புதுவையின் வளர்ச்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
 புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை, புதுச்சேரி நகர அமைப்பு குழுமம், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி கட்டுமானப் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பம் ஊக்குவிப்புக் கழகம் ஆகியவை இணைந்து  "தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய இந்திய நிலப்படத் தொகுப்பு மற்றும் பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள்' என்ற தலைப்பில் புதுச்சேரியில் ஒரு நாள் பயிலரங்கை புதன்கிழமை நடத்தின.
இதனை தொடக்கிவைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக புதுவை உள்ளது. சுனாமி, தானே புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, புதுவையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. ஆகவே, வெள்ளம், புயல், நில நடுக்கம், சுனாமி போன்றவற்றை தாங்கக் கூடிய கட்டடங்களை புதிய தொழில்நுட்பத்தில் புதுவையில் கட்ட வேண்டும். கட்டுமானப்பணியில் முறைகேடுகள் நடந்தால் அந்தத் திட்டங்கள் நிறுத்தப்படும். புதுவையின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. புதுவை மேலும் வளர உதவ வேண்டிய மத்திய அரசு, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.  
கருப்புப்பண நடமாட்டத்தை தடுப்பதாகக் கூறி மனை வணிக (ரியல் எஸ்டேட்) மற்றும் கட்டுமானத் தொழிலை முடக்கி விட்டது. இதனால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கட்டடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்கு புதுச்சேரி நகர திட்ட குழுமத்துக்கு மக்கள் பல முறை வந்து அலைய வேண்டியுள்ளது. அதுபோல் இல்லாமல் அந்த அலுவலகம் மக்களுக்கு சேவையாற்றும் நண்பனாகச் செயல்பட வேண்டும். அரசு ஒப்பந்ததாரர்கள் கட்டும் கட்டடங்கள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து பயனற்றுப் போய்விடுகின்றன. அவ்வாறு இல்லாமல் மிகத் தரமான கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 முன்னதாக,  ஊக்குவிப்புக் கழக நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் அகர்வால் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், மத்திய அரசுச் செயலர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, புதுவை அரசின் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 இந்திய தொழில்நுட்ப நிறுவன நீரியல் துறை பேராசிரியர் கோயல், வெள்ளத்தை தாங்கக் கூடிய வீடுகளை கட்டுவது குறித்தும் அறிவியல்-தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மற்றும் கட்டுமானப் பொருள் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி) அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி செல்வி ராஜன், காற்று மற்றும் சூறாவளியை தாங்கக் கூடிய கட்டுமானம் பற்றியும், இந்திய தொழில் நுட்ப நிறுவன சென்னை கட்டுமானத் துறை பேராசிரியர் மெஹர் பிரசாத்,  நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வீடுகளை கட்டுவது பற்றியும் உரையாற்றினர். இதில் பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/புதுவையின்-வளர்ச்சிக்கு-எதிராக-செயல்படுகிறது-மத்திய-அரசு-முதல்வர்-நாராயணசாமி-குற்றச்சாட்டு-3232578.html
3232483 விழுப்புரம் புதுச்சேரி மெக்கானிக் மர்மச் சாவு DIN DIN Thursday, September 12, 2019 07:20 AM +0530 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மெக்கானிக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (45), மெக்கானிக். இவருக்கு சுமதி என்ற மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீடு திரும்பிய ரமேஷை, அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரமேஷுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, சுமதி கூலி வேலைக்குச் சென்றார். அவர் பிற்பகல் வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் ரமேஷ் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரமேஷை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/மெக்கானிக்-மர்மச்-சாவு-3232483.html
3232482 விழுப்புரம் புதுச்சேரி பாஜக உள்கட்டமைப்புத் தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு தீவிரம் DIN DIN Thursday, September 12, 2019 07:20 AM +0530 புதுவை மாநிலத்தில் பாஜக உள்கட்டமைப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, தொகுதிவாரியாக கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பாஜக உள்கட்டமைப்பு தேர்தல் நாடு முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. அதன்படி, புதுவையிலும் அந்தக் கட்சியின் உள்கட்டமைப்பு தேர்தல் பணிகளை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். 
புதுவையின் 4 பிராந்தியங்களிலும் உள்ள 970 கிளைகளுக்கான தேர்தல், அந்தந்த பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மாநில தேர்தல் அதிகாரி ஏம்பலம் ஆர்.செல்வம் கிளைத் தேர்தலை தொடக்கி வைத்தார். 
இதில், தொகுதி தேர்தல் அதிகாரி அசோக்பாபு, தேர்தல் பார்வையாளரான மாநிலத் தலைவர் வி. சாமிநாதன் எம்.எல்.ஏ., தொகுதித் தலைவர் முருகன், இணை தேர்தல் அதிகாரி சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் 1, 2, 3 கிளைத் தலைவர்களாக முத்துராஜ், சுபாஷ், மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல, மணவெளி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி, மணவெளி, கட்டபொம்மன் நகர், தந்தை பெரியார் நகர், திருவள்ளுவர் வீதி, சிவலிங்கபுரம் ஆகிய 6 கிளைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், தேர்தல் அதிகாரி இந்திரன், மணவெளி தேர்தல் அதிகாரி லட்சுமி முருகானந்தம் ஆகியோர் வேட்பு மனுக்களைப் பெற்று தேர்தலை நடத்தினர். இதில் அனைத்து கிளை அமைப்புகளுக்கும் போட்டியின்றி தலைவர், செயலர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் விவசாய அணி தேசிய உறுப்பினர் பாரதிமோகன், 
தொகுதித் தலைவர் லட்சுமிகாந்தன், பொதுச் செயலர்கள் கலைவாணன், சுகுமாறன், தொகுதிச் செயலர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள பாஜக கிளைகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/பாஜக-உள்கட்டமைப்புத்-தேர்தல்-புதிய-நிர்வாகிகள்-தேர்வு-தீவிரம்-3232482.html
3232481 விழுப்புரம் புதுச்சேரி மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி முகாம் DIN DIN Thursday, September 12, 2019 07:19 AM +0530 புதுச்சேரி முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில், பெண்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செல்வகணபதி வரவேற்றார். 
இதில் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மடிப்பு நுண்ணோக்கியின் முதன்மை ஆராய்ச்சியாளர் அரவிந்தராஜா, மடிப்பு நுண்ணோக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பெண்களுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தார். ரெட்டியார்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் பாரதிராஜா நுண்ணோக்கிக்கான ஸ்லைடுகள் செய்யும் பயிற்சி அளித்தார். 
பின்னர், நடைபெற்ற நிறைவு விழாவில், புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடனசபாபதி கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற பெண்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/மடிப்பு-நுண்ணோக்கி-பயிற்சி-முகாம்-3232481.html
3232480 விழுப்புரம் புதுச்சேரி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா DIN DIN Thursday, September 12, 2019 07:19 AM +0530 புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா, புதுச்சேரி அருந்ததிபுரம் அங்கன்வாடி மையத்தில் அண்மையில் நடைபெற்றது. குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி ஆர். ரத்னா தலைமை வகித்தார். 
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, போஷன் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொம்மலாட்டம் மூலமாக ஊட்டச்சத்து தொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், நிகழ்வில் பங்கேற்ற பெண்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. 
இதில் நல அதிகாரி எஸ்.சிவக்குமார், புள்ளிவிவர ஆய்வாளர் காங்கேயன், மைய பொறுப்பாளர் விஜயலட்சுமி, அங்கன்வாடி ஊழியர்கள், திரளான பெண்கள் பங்கேற்றனர்.  

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/அங்கன்வாடி-மையத்தில்-ஊட்டச்சத்து-மாத-தொடக்க-விழா-3232480.html
3232479 விழுப்புரம் புதுச்சேரி பள்ளியில் அறிவியல் ஆய்வு பயிற்சி DIN DIN Thursday, September 12, 2019 07:19 AM +0530 புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல் நிலைப்பள்ளியில், அறிவியல் ஆய்வுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் துணை முதல்வர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  பள்ளி அறிவியல் ஆசிரியர் குலசேகரன்  முன்னிலை வகித்தார்.  புதுவை அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம்,  அறிவியல் ஆய்வுகள் என்ற தலைப்பில் பேசினார்.
 முகாமில் அருண்நாகலிங்கம் பேசும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள்தான் அறிவியலில் முன்னோடி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ராமன் விளைவு அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இந்த விளைவுதான் இப்போதும் பல்வேறு சமன்பாடுகள் மூலம் கணக்கிட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.  இருப்பினும் வளர்ந்து வரும் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போட்டியின் காரணமாக சற்று பின் தங்கியுள்ள நிலையில் உள்ளோம். 
இந்த நிலையை மாற்றவும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் உதவி வருகின்றன.  இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும் புதிக கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் அறிவியல் உருவாக்குவோம் போன்ற திட்டங்கள் வழிவகுக்கின்றன என்றார் அருண் நாகலிங்கம்.
 பயிற்சி முகாமில், அறிவியல் கல்வியில் அறிவியலின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம், மேம்படுத்த வேண்டிய அறிவியல் மனப்பான்மையின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.  அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபடவும், மாணவர்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்தவும், பல்வேறு ஆராய்ச்சிகளை நழுவுப் படக் காட்சிகளுடன் விளக்கமும் அளிக்கப்பட்டது. இறுதியாக, மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்த அறிவியல் கட்டுரைகளை வாசித்தனர்.  விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/பள்ளியில்-அறிவியல்-ஆய்வு-பயிற்சி-3232479.html
3232478 விழுப்புரம் புதுச்சேரி சுமை தூக்கும் தொழிலாளிக்கு வெட்டு: இருவர் மீது வழக்கு DIN DIN Thursday, September 12, 2019 07:18 AM +0530 புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அருள் (21), சுமை தூக்கும் தொழிலாளி. இவர் மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியில் வசிப்பவர்கள் சுனில் (21), ரஜினி (20). இவர்களுக்கும், அருளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்த நிலையில், ஆட்டுப்பட்டி நகராட்சி கழிப்பிடம் அருகே செவ்வாய்க்கிழமை மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சுனில், ரஜினி இருவரும் அருளை ஆபாசமாகத் திட்டி, கத்தியால் அவரது தலையில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் அருளை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அருள் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸார், சுனில், ரஜினி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/சுமை-தூக்கும்-தொழிலாளிக்குவெட்டு-இருவர்-மீது-வழக்கு-3232478.html
3232477 விழுப்புரம் புதுச்சேரி பள்ளிக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மேம்பாடு நிகழ்ச்சி DIN DIN Thursday, September 12, 2019 07:18 AM +0530 புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திட்டம் -3, அரியாங்குப்பம் மண்டலம் -2 அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சங்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் மூளை உள்ளிட்ட உடலுறுப்புகளை உபயோகப்படுத்துகின்றனர். இவர்களுக்கு சத்தான உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
டி.என்.பாளையம் அங்கன்வாடி ஊழியர் நர்மதா நன்றி கூறினார். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/பள்ளிக்-குழந்தைகளுக்கானஊட்டச்சத்து-மேம்பாடு-நிகழ்ச்சி-3232477.html
3232476 விழுப்புரம் புதுச்சேரி தூர்வாரப்பட்ட  கோயில் குளம் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு DIN DIN Thursday, September 12, 2019 07:18 AM +0530 புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அருகேயுள்ள சோம்பட்டு கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் தூர்வாரப்பட்ட கோயில் குளத்தை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.
சோம்பட்டு ஏழை மாரியம்மன் கோயில் குளம் ரூ.7 லட்சத்து 1,372 செலவில் தூர்வாரப்பட்டது. இந்த குளத்தை ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை காலை பார்வையிட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். இதற்கான கல்வெட்டை திறந்து வைத்த அவர், குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார். 
இந்த நிகழ்ச்சிக்கு மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் தலைமை வகித்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
குளத்தை திறந்து வைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: 6 மாதங்களுக்கு முன்பு இந்தக் குளத்தை பார்வையிட்டபோது சுகாதாரமற்று கிடந்தது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை இருந்தது. 
இதையடுத்து, இந்தக் குளத்தை தூர்வார தானம் அறக்கட்டளை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பொதுமக்கள் முன்வந்தனர். குளத்தை தூர்வார உதவியவர்களுக்கு பாராட்டுகள். பசுமையான புதுச்சேரி, நீர்வளமிக்க புதுச்சேரி என்ற இலக்கை அடைய இதுபோன்ற முயற்சிகள் உதவும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/தூர்வாரப்பட்ட--கோயில்-குளம்-பயன்பாட்டுக்கு-ஒப்படைப்பு-3232476.html
3232475 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரிக்கான மாஸ்டர் பிளான் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் DIN DIN Thursday, September 12, 2019 07:17 AM +0530 புதுச்சேரிக்கான மாஸ்டர் பிளான் விரைவில் வெளியிடப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
 புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற  பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள் என்ற தலைப்பிலான பயிலரங்கத்தில் அவர் பேசியதாவது:
இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வாழ திட்டமிடுதல் அவசியம். அதேபோல, கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு சவால்களை முறியடிக்க திட்டமிடுதல் வேண்டும்.  ஊரின் வளர்ச்சிக்கு சிங்கப்பூரை உதாரணமாகக் கூறுகிறோம்.  அதற்கு காரணம் அங்குள்ள அழகான கட்டடங்கள்தான்.
கட்டடங்கள்தான் ஊரின் தோற்றத்தை மாற்றும். சிறந்த முறையிலான கட்டுமான வடிவமைப்புகளால் ஊரின் தோற்றம் மாறும்; அதன் மதிப்பும் உயரும்.  இயற்கை சீற்றங்களை தாங்கக்
கூடிய கட்டடங்களை உருவாக்க வேண்டியது பொறியாளர்களின் கடமை.  புதுவையில் மனை விற்பனையை வரைமுறைப்படுத்தியுள்ளோம். முன்பு, மனைகள் முறையற்று விற்கப்பட்டன. தற்போது அதுபோல் விற்க முடியாது. முறையாக சாலை மற்றும் பொதுஇடத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் மனைகளை விற்க முடியாது. 
 புதுச்சேரி நகர திட்ட குழுமம் மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளது. அதற்கு ஒப்புதல் பெறுவதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற்று ஒரு மாதத்துக்குள்ளாக மாஸ்டர் பிளான் அறிவிக்கப்படவுள்ளது.  விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு ஒருமுறை முறைப்படுத்துதல் திட்டம் மூலம் வாய்ப்பு அளிக்க உள்ளோம்.   புதுச்சேரியில் குடிநீர் சவாலான விஷயமாக உள்ளது. தரமான குடிநீர் கொடுப்பது அரசின் லட்சியம். அதனால்தான் மழைநீர் சேமிப்பை முக்கியமாக வலியுறுத்தி வருகிறோம்.  பசுமை கட்டடங்களையும் ஊக்குவித்து வருகிறோம். 
எம். சான்ட் மணலை ஏற்கும் மனப்பக்குவத்துக்கு மக்கள் இன்னும் வரவில்லை. வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய 7 பேருக்கு அனுமதி அளித்தோம். ஒருவர் அரை குறையாக மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்திலேயே வைத்துள்ளார்.  அது அரசின் தவறு அல்ல என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.
ஏனாமுக்கே முன்னுரிமை: விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது: புதுச்சேரியில் பொலிவுறு நகர திட்டம், அம்ருத் திட்டம் ஆகியவற்றுக்குள் வராத பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்தும் ஆலோசித்து வருகிறேன். நான் முன்னுரிமை அளிப்பது ஏனாமுக்குதான் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/புதுச்சேரிக்கான-மாஸ்டர்-பிளான்-விரைவில்-வெளியிடப்படும்-அமைச்சர்-3232475.html
3232474 விழுப்புரம் புதுச்சேரி விஷ குளவிகள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு DIN DIN Thursday, September 12, 2019 07:17 AM +0530 புதுச்சேரி சின்ன காலாப்பட்டில் விஷ குளவிகள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்தார். மற்றொரு பெண் காயமடைந்தார்.
புதுச்சேரி அருகேயுள்ள சின்ன காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (73). இவர், செவ்வாய்க்கிழமை மாலை சுனாமி குடியிருப்புக்கு செல்வதற்காக பிரதான சாலைக்கு வந்தார். அப்போது அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி பின்புறம் உள்ள பனை மரத்தில் இருந்து காய்ந்த ஓலை விழுந்தது. அந்த ஓலையில் இருந்து கிளம்பிய விஷ குளவிகள் மகேஸ்வரியை விரட்டி விரட்டி கொட்டின.
இதனால், அவர் குளவிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்த கலையரசி என்பவர் வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது, கலையரசியையும் குளவிகள் கொட்டின.
 இதில் தலை மற்றும் உடலில் காயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நள்ளிரவில் இறந்தார். 
காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/விஷ-குளவிகள்-கொட்டியதில்-மூதாட்டி-உயிரிழப்பு-3232474.html
3232473 விழுப்புரம் புதுச்சேரி மருத்துவ சேர்க்கையில் போலிச் சான்று மோசடி:  கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தல் DIN DIN Thursday, September 12, 2019 07:17 AM +0530 புதுவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தொடரும் போலிச் சான்றிதழ் மோசடியை தவிர்க்க, கடுமையான சட்டங்கள் தேவை என பொதுமக்களும், சமூக அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். 
புதுவை மாநில மருத்துவப் படிப்பில் ஜிப்மரில் உள்ள 200  இடங்களில் புதுவை மாணவர்களுக்கு 54 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. புதுவை மாநிலத்தில் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதியை வெளிமாநில மாணவர்கள் மீறி, குறுக்கு வழியைப் பின்பற்றி, மருத்துவ இடங்களைப் பெற்று வருகின்றனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கான இடஒதுக்கீட்டை பெறுவதை தடுக்க கடுமையான சட்டம் உள்ளது. ஆனால், புதுவையில் எந்த சட்டமும் இல்லை.
2014-15 ஆம் ஆண்டு சென்டாக்கில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விழுப்புரம், மதுரை, தென்காசி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் குழந்தைகள் போலி ஆவணங்கள் மூலம் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். அப்போது, இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சிபிசிஐடி வழக்கு முறையாக கையாளப்படவில்லை. இதே போல, கடந்த 
2016 ஆம் ஆண்டு புதுச்சேரி அதிகாரிகள் மீது பதிவு செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அண்மையில் ஜிப்மரில் போலிச் சான்றிதழ் அளித்து சேர்க்கை பெற்ற மாணவி ஒருவரின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
இதுபோன்ற முறைகேடுகளையும், போலிச் சான்றிதழ் மோசடிகளையும் தடுக்க புதுவை மாநிலத்தில் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. 
இது தொடர்பாக புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலச் சங்க தலைவர் வை. பாலா தெரிவித்ததாவது: 
புதுவையில் மருத்துவ மாணவர் மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேட்டை தடுக்க 
எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை புதுவை மாநிலத்தில் படித்திருக்க வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை புதுவையை இருப்பிடமாகக் கொண்டு எழுத வேண்டும். இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் பெற்றோர், பொறுப்பாளர்கள் கண்டிப்பாக 
புதுவையை இருப்பிடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 
இருப்பிடச் சான்றிதழ், உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அனைத்து ஆவணங்களும் வழங்க முற்படும்போது, வருவாய்த் துறையினர் தீர விசாரிக்க வேண்டும். போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள், பெற்றோர்கள், இடைத்தரகர்கள் மீது கடுமையான சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மீண்டும் மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/மருத்துவ-சேர்க்கையில்-போலிச்-சான்று-மோசடி-கடுமையான-சட்டங்களை-இயற்ற-வலியுறுத்தல்-3232473.html
3232472 விழுப்புரம் புதுச்சேரி பத்ம விருது: முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை DIN DIN Thursday, September 12, 2019 07:17 AM +0530 பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு சார்பில் உயர்நிலைக் குழுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை பரிந்துரைகளை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுவை மாநில அரசின் சார்பில் விருதுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதற்கான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விருதுக்கு பெறப்பட்ட தகுதியானவர்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசின் பத்ம விருது முடிவுகளை பரிந்துரைக்க வருகிற 15 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/பத்ம-விருது-முதல்வர்-தலைமையில்உயர்நிலைக்-குழு-ஆலோசனை-3232472.html
3232471 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் பாரதியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மரியாதை DIN DIN Thursday, September 12, 2019 07:16 AM +0530 பாரதியாரின் 98ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில், கடந்த 1908 - 1918ஆம் ஆண்டு வரை புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள தலைச்சிறந்த அழகியல் அமைப்புடன், தட்பவெட்ப நிலைக்கு ஏற்றபடி, அழகிய முற்றம், தாழ்வாரம், நன்னீர் ஊறும் கிணற்றுடன் கூடிய சிறிய அளவிலான அழகிய வீட்டில் பாரதியார் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அப்போது, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல படைப்புகளை எழுதினார். அவர் வாழ்ந்த பழைமையான கட்டடமான பாரதியாரின் இல்லம், பாரதியார் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக கலை பண்பாட்டுத் துறையால் மாற்றப்பட்டது.
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி பாரதி 
பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், பாரதியார் சிலைக்கு, பாரதிதாசனின் பேரனும், கவிஞருமான கோ.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பாரதி இல்லத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார். மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், இலக்கியவாதிகள் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/12/புதுச்சேரியில்-பாரதியார்-சிலைக்கு-முதல்வர்-நாராயணசாமி-மரியாதை-3232471.html
3232044 விழுப்புரம் புதுச்சேரி பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுவை அரசு விருது DIN DIN Wednesday, September 11, 2019 11:01 AM +0530 புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில், இந்திய திரைப்பட விழாவும், 2018-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் வரும் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 36 ஆண்டுகளாக தொடர்ந்து சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அந்தத் திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், வரும் 13-ஆம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வே.நாராயணசாமி வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் இந்தத் திரைப்படத்தையும் இலவசமாக பார்வையிடலாம் என்று செய்தி விளம்பரத் துறை தெரிவித்துள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/11/w600X390/Pariyerum_Perumal4.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/பரியேறும்-பெருமாள்-திரைப்படத்துக்குபுதுவை-அரசு-விருது-3232044.html
3232055 விழுப்புரம் புதுச்சேரி 22-இல் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டி DIN DIN Wednesday, September 11, 2019 09:35 AM +0530 புதுவையில் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டிகள் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ரகெளடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு புதுவை அரசின் ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில், மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருது ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளில் 9 முதல் 16 வயது வரை உள்ள புதுவை மாநிலப் பள்ளிகளில் (அரசு மற்றும் தனியார்) பயிலும் மாணவர்கள் படைப்பாற்றல் கலை, நிகழ்கலை, எழுத்து மற்றும் அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பங்கேற்கலாம்.
இந்த விருதுக்கான சிறந்த குழந்தைகளைத் தேர்வு செய்ய கொம்யூன் அளவிலான போட்டிகள், கீழ்கண்ட இடங்களில் வரும் 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும்.
பாகூர், அரியாங்குப்பத்துக்கு அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், வில்லியனூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டுக்கு வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும், உழவர்கரை நகராட்சிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி நகராட்சிக்கு புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த மையங்களில் நடைபெறும் போட்டிகளில் தேர்வாகும் குழந்தைகளுக்கு புதுச்சேரி ஜவஹர் சிறுவர் இல்லத்தில் வரும் 30, 31-ஆம் தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும். போட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நுழைவுப் படிவம் அந்தந்தப் பள்ளிகளில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளித் தலைமையின் கையொப்பத்துடன் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் வரும் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும், விவரங்களை 0413 - 2225751 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும், இணையதளத்திலும் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/22-இல்-சிறந்த-படைப்பாளி-குழந்தை-விருதுக்கான-போட்டி-3232055.html
3232054 விழுப்புரம் புதுச்சேரி பொதுப்பணித் துறை தினக்கூலி ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி DIN DIN Wednesday, September 11, 2019 09:35 AM +0530 புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் தினக்கூலி ஊழியர் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் விஜயசாரதி (35). பொதுப்பணித் துறையில் வாரிசுதாரர் அடிப்படையில் தினக்கூலி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இது தொடர்பாக, அவர் தலைமைப் பொறியாளரிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த விஜயசாரதி செவ்வாய்க்கிழமை காலை தனது மனைவி கலைவாணி மற்றும் குழந்தையுடன் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, திடீரென தன் மீதும், குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த சக ஊழியர்கள், அவர்களைத் தடுத்து, பெரியக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த பெரியக்கடை போலீஸார், தீக்குளிக்க முயன்ற தினக்கூலி ஊழியர் விஜயசாரதி மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர்.
அப்போது, தனக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னை தரக்குறைவாகப் பேசிய துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விஜயசாரதி முறையிட்டார். அவரிடம் புகாரைப் பெற்ற போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/பொதுப்பணித்-துறை-தினக்கூலி-ஊழியர்-குடும்பத்துடன்-தீக்குளிக்க-முயற்சி-3232054.html
3232053 விழுப்புரம் புதுச்சேரி 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம் DIN DIN Wednesday, September 11, 2019 09:35 AM +0530 புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினரும், மாவட்ட சார்பு நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பாப் டே உத்தரவுப்படியும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின்படியும் புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அதேபோல, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாஹே நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இவற்றில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன. சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை தொடர்பான வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் என 6,114 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 7 அமர்வுகளும், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாஹேவில் தலா ஒரு அமர்வும் என மொத்தம் 10 அமர்வுகள் செயல்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான தனபால், வழக்குரைஞர்கள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்க உள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/14-இல்-தேசிய-மக்கள்-நீதிமன்றம்-3232053.html
3232052 விழுப்புரம் புதுச்சேரி பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு DIN DIN Wednesday, September 11, 2019 09:35 AM +0530 புதுச்சேரியில் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு கப்பல் மாலுமி லோகேஷ். இவரது மனைவி பிரசன்னா (34). இவர், திங்கள்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, வீடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வைத்திக்குப்பத்தை அடுத்த செங்கேணியம்மன் கோயில் அருகே சென்ற போது, இவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர், பிரசன்னா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து பிரசன்னா அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/பெண்ணிடம்-5-பவுன்-சங்கிலி-பறிப்பு-3232052.html
3232051 விழுப்புரம் புதுச்சேரி மொஹரம் பண்டிகை: ஆளுநர் வாழ்த்து DIN DIN Wednesday, September 11, 2019 09:34 AM +0530 மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மொஹரம் பண்டிகையின்போது, இஸ்லாமிய நாள்காட்டி தொடங்குகிறது. 
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மொஹரம் விளங்குகிறது. மொஹரத்தில் இருந்து 10-ஆவது நாள் முகம்மது நபியின் பேரன் இமான் ஹூசைன் வீரமரணம் அடைந்த நாளாகும். அவரது வீரமரணம் என்பது மனச்சோர்வு, அநீதிக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகும்.
இந்த நாளில் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான அநீதிகளை களையவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதி ஏற்போம். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது மொஹரம் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/மொஹரம்-பண்டிகை-ஆளுநர்-வாழ்த்து-3232051.html
3232050 விழுப்புரம் புதுச்சேரி இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் DIN DIN Wednesday, September 11, 2019 09:34 AM +0530 இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் புதுச்சேரி பாக்கமுடையான்பட்டில் அண்மையில் நடைபெற்றது.
முகாமை வங்கியின் சென்னை தலைமை அலுவலக பொது மேலாளர் டி.தேவராஜ் தொடக்கிவைத்தார். இந்தியன் வங்கி வழங்கி வரும் கடன், சேவைகள் குறித்து மண்டல மேலாளர் பி.வீரராகவன் வாடிக்கையாளர்களுக்கு விளக்கினார். இதில், முன்னாள் பொது மேலாளர் ஜெயபால், முதன்மை மேலாளர் (கடன்) மீனாட்சிசுந்தரம், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில், அடமானம், கார், வீடு, தனிநபர், தொழில் என 
பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. கடனுக்கு பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மற்ற வங்கியில் இருக்கும் கடன் தொகையை மாற்றியும் கொடுத்தனர். விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு, கடன்கள் வழங்கப்பட்டன. இதேபோல, புதுச்சேரி மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம், திண்டிவனம், காரைக்கால், செஞ்சி பகுதிகளிலும் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், ரூ.52 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டன.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/இந்தியன்-வங்கி-சார்பில்கடன்-வழங்கும்-முகாம்-3232050.html
3232049 விழுப்புரம் புதுச்சேரி ஆளுநருக்கு இந்திய  கம்யூனிஸ்ட் கண்டனம் DIN DIN Wednesday, September 11, 2019 09:34 AM +0530 புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இலவச அரிசி திட்டத்தை தடுத்து மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த இலவச அரிசி திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுக்கான உத்தரவாதம் இருந்தது. இதனால், நியாயவிலைக் கடைகளின் ஊழியர்களுக்கும் வேலை கிடைக்கிறது.
இந்த நிலையில், இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற ஆளுநர் கிரண் பேடியின் கருத்து மக்கள் விரோதமானது. ஒரு குடும்பத்துக்கு அரிசிக்குப் பதிலாக பணம் கொடுத்தால், ஒரு கிலோ அரிசியின் விலையை மதிப்பிடும்போது, பணம் கொடுப்பதால் அந்த அளவுக்கு அரிசி கிடைக்காது. மேலும், அரிசி வாங்கப்படாமல் அந்த பணம் வேறு விதத்தில் செலவு செய்யப்படும். இதனால், உணவுப் பாதுகாப்பு என்ற  உன்னதத் திட்டம் பாழாகும்.
சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து இலவச அரிசி திட்டத்தை தடுக்காதீர்கள் எனக் கோரிய பிறகும், இந்தப் பிரச்னையை மத்திய  அரசுக்கு திசை திருப்புவது, கிரண் பேடி பகிரங்கமாக பாஜக ஆதரவு அரிசியல் செய்யும் நடவடிக்கை ஆகும்.
மக்களாட்சிக்கே அதிகாரம்; ஆளுநருக்கு அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், கிரண் பேடியின் ஜனநாயக விரோத செயல்கள் நின்றபாடில்லை. அனைத்துக்கும் மேலாக, இந்த இலவச அரிசி திட்டம் நிறுத்தப்பட்டால், குடும்பப் பெண்களுக்கு இது பேரிடியாக அமையும்.
மக்களாட்சியின் கொள்கை முடிவுக்கு எதிராக முட்டுக்கட்டை போடும், இலவச அரிசி திட்டத்தை தடுத்து மக்களுக்கு விரோதமாக செயல்படும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/ஆளுநருக்கு-இந்திய-கம்யூனிஸ்ட்-கண்டனம்-3232049.html
3232048 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசிக்குப் பதில் பணம் என்ற அமைச்சரின் அறிவிப்புக்கு அதிமுக வரவேற்பு DIN DIN Wednesday, September 11, 2019 09:33 AM +0530 இலவச அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்படும் என்ற சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமியின் அறிவிப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை அதிமுக சட்டப் பேரவை கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:
புதுவையை ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி சட்டப் பேரவைத் தேர்தலின்போது, 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதியைக் கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பதவியேற்று 39 மாதங்களாகியும் ஒரு மாதம் கூட 30 கிலோ அரிசி வழங்கவில்லை.
சிவப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ முதலில் வழங்குவோம், பின்னர் படிப்படியாக உயர்த்துவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றினர். 39 மாதங்களில் 17 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டது. 
5 மாதங்களுக்கு அரிசிக்குப் பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. எஞ்சிய 17 மாதங்கள் அரிசி வழங்கவில்லை.
அரிசி வழங்கப்படாத 17 மாதங்களுக்கு சுமார் ரூ.100 கோடி வரை பட்ஜெட்டில்  ஒதுக்கிய பணம் என்னவானது? ஒதுக்கிய பணத்தில் அரிசி கொள்முதல் செய்யாவிட்டால், அந்த நிதியை பயனாளிகளுக்கு வழங்குவதில் ஏன் காலதாமதம் செய்ய வேண்டும்? அரிசிக்கான  நிதியை காலத்தோடு வழங்காததன் பின்னணி மர்மம் என்ன? அரிசிதான் வழங்குவோம் என அரசு விடாப்பிடியாக உள்ளது. 
அரிசி வழங்குவதில் ஊழல், முறைகேடு நடக்கிறது என புகார் வந்துள்ளதால், பணம்தான் வழங்க வேண்டும் என ஆளுநர் கூறுகிறார்.
அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்படுத்தும் இலவச அரிசி உள்ளிட்ட  அனைத்துப் பிரச்னைகளுக்கும் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களின் எண்ணப்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி காலம் கடந்து மத்திய உள் துறை அமைச்சகம் அரிசி வழங்க அனுமதி வழங்கும் வரை பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில், அரிசி வழங்கப்படாத 17 மாதங்களுக்கான தொகையாக ஒவ்வொரு  பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.10 ஆயிரத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/இலவச-அரிசிக்குப்-பதில்-பணம்-என்றஅமைச்சரின்-அறிவிப்புக்கு-அதிமுக-வரவேற்பு-3232048.html
3232047 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரியில் செப்.14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம் DIN DIN Wednesday, September 11, 2019 09:32 AM +0530 புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினரும், மாவட்ட சார்பு நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பாப் டே உத்தரவுப்படியும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின்படியும் புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அதேபோல, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாஹே நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இவற்றில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன. சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை தொடர்பான வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் என 6,114 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 7 அமர்வுகளும், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாஹேவில் தலா ஒரு அமர்வும் என மொத்தம் 10 அமர்வுகள் செயல்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான தனபால், வழக்குரைஞர்கள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்க உள்ளனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/புதுச்சேரியில்-செப்14-இல்-தேசிய-மக்கள்-நீதிமன்றம்-3232047.html
3232046 விழுப்புரம் புதுச்சேரி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிறுவனத்தை மூட உத்தரவு: சமூக நலத் துறை அமைச்சர் நடவடிக்கை DIN DIN Wednesday, September 11, 2019 09:31 AM +0530 புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தனியார் எண்ணெய் நிறுவனத்தை மூட சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி  செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தான், தனது தொகுதியில் உள்ள தொழில்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் அரசின் அனுமதியின்றி நீரை அதிகளவு எடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதாகவும், எனவே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தன்னுடன் அந்த தொழில்சாலைகளுக்கு வந்து பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று, சமூகநலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி செவ்வாய்க்கிழமை துத்திப்பட்டு, சேதராப்பட்டு ஆகிய தொழில்பேட்டைகளில் உள்ள தொழில்சாலைகளில் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, துத்திப்பட்டு தொழில்பேட்டையில் உள்ள முந்திரிக் கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக மாசுக் கட்டுப்பாட்டு உரிமத்தை 
புதுப்பிக்காமல் இருந்து வருவதும், மின் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் பாக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த நிறுவனத்தில் சட்டத்துக்கு புறம்பாக ரசாயனப் பொருள்கள் தயார் செய்யப்படுவதும், 2 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அவற்றின் மூலம் ரசாயனக் கழிவுகளை பூமிக்கடியில் செலுத்தி நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருவதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் கந்தசாமி, அந்த நிறுவனத்தை மூடி "சீல்' வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அந்த நிறுவனத்துக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தீப்பாய்ந்தான்,  தொழிலாளர் நலத் துறை ஆணையர் வல்லவன், வில்லியனூர் கொம்யூன்  பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கார்மேகம், நிறுவன ஆய்வாளர் ஞானவேல் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/சுற்றுச்சூழலுக்கு-பாதிப்பு-ஏற்படுத்திய-நிறுவனத்தை-மூட-உத்தரவு-சமூக-நலத்-துறை-அமைச்சர்-நடவடிக்கை-3232046.html
3232045 விழுப்புரம் புதுச்சேரி புதுவை அரசு மீது ஆளுநருக்கு காழ்ப்புணர்வு: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு DIN DIN Wednesday, September 11, 2019 09:31 AM +0530 புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு மீது துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுவை அரசின் பொதுப் பணித் துறை சார்பில், தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சாலைகள், கட்டடங்களைப் பழுதுபார்த்தல், மேம்படுத்துதல் மற்றும் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து, மத்திய அரசின் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய மீன்வளம், வேளாண் துறை சார்பில், இந்தத் திட்டத்தை ரூ.15.63 கோடியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிக்காக ரூ.6.53 கோடிக்கும், பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக ரூ.4.45 கோடிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இலங்கைக் கடற்படையினராலும், கடலோரக் காவல் படையினராலும் காரைக்கால் மீனவர்களும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படும்போது, முனைந்து செயல்பட்டு அவற்றை மீட்டு வருகிறோம். புயல் கால சேமிப்புத் திட்ட நிதிக்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறி, நிதியை மத்திய அரசு தர மறுத்தது. இரண்டு முறை மத்திய அமைச்சரைச் சந்தித்தும் நிதி கிடைக்காத நிலையில், விடாமல் மீண்டும் மூன்றாவது முறையாகச் சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் அதிகாரிகளை அழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
அப்போது, அந்தத் திட்டத்தில் நிதி செலவு செய்யப்படாமல் இருப்பது தெரிந்து, நிதியை புதுவைக்கு வழங்கச் செய்தார். மேலும், மழை நிவாரணம், ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மீனவர்கள் ரூ.50 லட்சத்துக்கு படகு வாங்குகின்றனர். ஆனால், ரூ.50 ஆயிரத்துக்கு மட்டுமே காப்பீடு செய்கின்றனர். இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, மீனவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறது. எனவே, குடும்பத்தைக் காப்பாற்றும் வகையில், காப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கட்ட வேண்டும். எவ்வளவோ பேர் சுனாமியின் போது, வீடு கட்டுவதற்கான ரூ.3.25 லட்சத்தை பயனாளிகளிடம் நேரடியாக அளிக்கக் கூறினர். ஆனால், நான் நேரடியாகப் பணத்தை அளித்தால் வீணாகப்போகும் என்பதை உணர்ந்து, வீடு கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனால்தான், தற்போது சுனாமி குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
புதுச்சேரியில் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவந்துதான் ஆக வேண்டும். அதற்காக, ரூ.17 கோடியில் மணல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மீனவர்களின் படகுகளும் சென்றுவர முடியும். அடுத்து, வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மீன்களைப் பதப்படுத்தும் மையமும் அமைத்துத் தரப்படும்.
இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதன்படி, ரூ.160 கோடி நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் விடுவதற்காக துணை நிலை ஆளுநரிடம் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அரிசிக்குப் பதில் பணம்தான் வழங்க வேண்டும் என்று கூறி, ஆளுநர் அனுமதி தர மறுத்து வருகிறார். சந்தையில் அரிசியின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதேபோல, பணம் குடும்பத்தலைவரின் வங்கிக் கணக்குக்கு போகும்போது, அதை அவர்கள் வீண் செலவு செய்வர். அதுமட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களுக்கும் அரிசிக்கான பணம் தொடர்ந்து சில மாதங்களுக்கு தேவையின்றி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதுவே அரிசி வழங்கினால், வெளிமாநிலங்களுக்கு சென்றிருப்பவர்கள் வந்து வாங்க மாட்டார்கள். இதனால்தான் அரிசியை மக்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் பணம் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால், இலவச அரிசி வழங்க போராட்டம் நடத்தவும், நீதிமன்றத்தை அணுகும் நிலையிலும் உள்ளோம்.
ஏனாமில் மத்திய அரசின் நிதியுதவியில் வெள்ளத் தடுப்புத் தடுப்புச் சுவர் ரூ.123 கோடியில் கட்டப்பட உள்ளது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக இந்தத் திட்டத்துக்கு ஆளுநர் அனுமதி தர மறுத்து காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறார் என்றார் முதல்வர் நாராயணசாமி.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ணா ராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., பொதுப் பணித் துறைச் செயலர் ஸ்ரன், தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், மீன்வளத் துறை இயக்குநர் முனுசாமி உள்படப் பலர் பங்கேற்றனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/11/புதுவை-அரசு-மீது-ஆளுநருக்கு-காழ்ப்புணர்வு-முதல்வர்-நாராயணசாமி-குற்றச்சாட்டு-3232045.html
3231314 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசி: மாற்றுத் திட்டத்தை  செயல்படுத்த மநீம வலியுறுத்தல் DIN DIN Tuesday, September 10, 2019 10:12 AM +0530 இலவச அரிசி திட்டத்துக்கு மாற்றாக வேறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் 
எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு, இலவச அரிசிக்குப் பதிலாக மானியத்தை குறிப்பிட்ட மக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசிடம் பணத்துக்குப் பதிலாக அரிசியை வழங்க வலியுறுத்த வேண்டும்.
புதுவை துணைநிலை ஆளுநர் தரமற்ற அரிசி கொள்முதல் செய்து வழங்குவதால், ஊழல் நடைபெறுகிறது என குற்றஞ்சாட்டி வருகிறார். எனவே, முதல்வர், அமைச்சர்கள் தரமற்ற அரிசியை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிந்து, ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும். 
மாற்றுத் திட்டத்தை யோசித்து, இலவச அரிசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமே தவிர, ஆளுநருடன் மோதல் போக்கை கொண்டிருக்கக் கூடாது. இதனால், புதுவை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/இலவச-அரிசி-மாற்றுத்-திட்டத்தை--செயல்படுத்த-மநீம-வலியுறுத்தல்-3231314.html
3231312 விழுப்புரம் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா DIN DIN Tuesday, September 10, 2019 10:12 AM +0530 புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் துணை முதல்வர் செல்வசுந்தரி வரவேற்றார். தொடர்ந்து, ஆசிரியர்களின் பெருமைகளை மாணவிகள் பாடல்களால் பாராட்டினர். புதுச்சேரி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் கல்பனா வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினரும், பிப்டிக் தலைவருமான இரா. சிவா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் வாழ்த்திப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் விரிவுரையாளர் ஜெயசீலி நன்றி கூறினார். 
இதேபோல, பாக்கமுடையான்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வட்டம் ஒன்றைச் சேர்ந்த பள்ளித் துணை ஆய்வாளர் மல்லிகா கோபால் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்.
இதில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக, பாக்கமுடையான்பட்டு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை எஸ்.ஜெயந்தி வரவேற்றார். முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை பி.அமுதா ஏற்புரை வழங்கினார். காலாப்பட்டுகுப்பம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை சி.இலக்கியா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலர்களும் செய்திருந்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/அரசுப்-பள்ளிகளில்-ஆசிரியர்-தின-விழா-3231312.html
3231311 விழுப்புரம் புதுச்சேரி ப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, September 10, 2019 10:11 AM +0530 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துரை அமைச்சருமான ஆ. நமச்சிவாயம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும், புதுவை பிரதேச பொறுப்பாளருமான சஞ்சய் தத், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினர். முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த 
ப.சிதம்பரத்தின் மீது எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், பொய் வழக்கில் கைது செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் வே.நாராயணசாமி பேசியதாவது:
சிபிஐ அதிகாரிகளை 
ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதிக்க வைத்து, கைது செய்யும் செயலில் ஈடுபடுத்தி, அதிகார துஷ்பிரயோக செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டது. நாட்டின் பொருளாதாரத்தை அதிகபட்சமாக 9 சதவீதமாக உயர்த்தியவர் ப.சிதம்பரம். எப்போதும் விதிமுறைகளின்படிதான் செயல்படுவார். தலைசிறந்த வழக்குரைஞர். அவர் மீது எந்தவொரு முகாந்திரமுமின்றி, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.  
இலவச அரிசி திட்டம் தொடர்பாக புதுவை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது, எதுவும் கூறாத பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள், தற்போது ஆளுநர் மாளிகையில் கிரண் பேடியைச் சந்தித்த பிறகு, அரிசி கொள்முதலில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்கின்றனர். ஊழல் என்று கூறுகின்றனர். 
இந்த விஷயத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து பாஜகவின் இந்தச் செயலை நுனியிலேயே கிள்ளி எரிய  வேண்டும். பதவி இன்று இருக்கும்; நாளை போகும். கட்சிதான் முக்கியம், கட்சிக்காக ரத்தம் சிந்த தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். 
பிரதமர் நரேந்திர மோடியையும், கிரண் பேடியையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும் என்றார் அவர்.


 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/பசிதம்பரம்-கைது-காங்கிரஸ்-கட்சியினர்-ஆர்ப்பாட்டம்-3231311.html
3231310 விழுப்புரம் புதுச்சேரி மருத்துவப் படிப்பில் மோசடியாக சேர முயற்சி: தமிழக மாணவியின் தந்தைக்கு ஜிப்மர் நோட்டீஸ் DIN DIN Tuesday, September 10, 2019 10:11 AM +0530 புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மோசடியாகச் சேர முயன்றதாக தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் நிகழாண்டு சேர்க்கை பெற்றார். இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கம் புகார் அளித்ததால், இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைப் பெற்ற 54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், மாணவி கிருத்திகா, தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் இரு முகவரி பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்த் துறைச் செயலர் உத்தரவின் பேரில், விசாரணை நடைபெற்றது. கோரிமேடு காவல் நிலையத்திலும் சமூக நல அமைப்புகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம் விளக்கம் கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கத் தலைவர் வை.பாலா கூறியதாவது:
 மாணவி கிருத்திகா மீது புகார் அளித்து 2 மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. இதில், முதல் குற்றவாளி வருவாய்த் துறை. 
தற்போது இந்த முறைகேட்டின் மீது காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவப் படிப்பு பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலிச் சான்றிதழ் அளித்த அதிகாரி உள்ளிட்ட ஒவ்வொருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/மருத்துவப்-படிப்பில்-மோசடியாக-சேர-முயற்சிதமிழக-மாணவியின்-தந்தைக்கு-ஜிப்மர்-நோட்டீஸ்-3231310.html
3231309 விழுப்புரம் புதுச்சேரி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தில் மட்டுமே தேர்வு DIN DIN Tuesday, September 10, 2019 10:10 AM +0530 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இனி புதிய பாடத் திட்டத்தில் மட்டுமே பொதுத் தேர்வுகளை எழுத முடியும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்
ம.குப்புசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் அரசாணைப்படி 2018 - 19 ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1,  2019 - 20  ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனவே, மார்ச் 2020 முதல் நடத்தப்படும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆண்டு பொதுத் தேர்வுகள் புதிய பாடத் திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். 
மார்ச் 2020 பருவம் முதல் பழைய பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது.
ஏற்கெனவே, பழைய பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத பாடங்களை, புதிய பாடத் திட்டத்தின் கீழ் மார்ச் 2020-இல் நடைபெறும் தேர்வுகளில் எழுதிக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/பிளஸ்-1-பிளஸ்-2-மாணவர்களுக்கு-புதிய-பாடத்-திட்டத்தில்-மட்டுமே-தேர்வு-3231309.html
3231308 விழுப்புரம் புதுச்சேரி அருங்காட்சியக நூலகப் பிரிவின் ஆண்டு நிறைவு விழா DIN DIN Tuesday, September 10, 2019 10:09 AM +0530 உலக கல்வியறிவு நாளையொட்டி, தேசிய மரபு அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அருங்காட்சியக சிறப்பு நூலகப் பிரிவின் ஓராண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் கல்வித் துறை இணை இயக்குநர் அ. ராமதாஸ் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, நூலக உறுப்பினர் படிவங்களை மாணவர்களுக்கு வழங்கினார். கல்வெட்டு ஆய்வாளர் ந. வேங்கடேசன், நூலகர் வே. சிவா, தன்னார்வலர்கள் மனோ, பிரியா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/அருங்காட்சியக-நூலகப்-பிரிவின்-ஆண்டு-நிறைவு-விழா-3231308.html
3231226 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசி வழங்கியதில் ஊழல்: புதுவை ஆளுநரிடம்  நியமன எம்எல்ஏக்கள் புகார் DIN DIN Tuesday, September 10, 2019 08:57 AM +0530 புதுவையில் இலவச அரிசி வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
இலவச அரிசியை தொடர்ந்து வழங்க புதுவை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த 7-ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து அளித்தனர். இதை ஆளுநர் ஏற்கவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வே.நாராயணசாமி, இலவச அரிசித் திட்டத்தை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த ஆளுநர் கிரண் பேடி, அரிசி வழங்குவதில் ஊழல் புகார் வந்ததால், அதற்கான பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துமாறு கூறினேன் என்றும், இதைப் பயன்படுத்தி மக்களே கடைகளில் அரிசியை வாங்கிக் கொள்வார்கள் என்றும், அரிசி வழங்க தான் ஒருபோதும் தடையாக இல்லை என்றும் தனது கட்செவி அஞ்சலில் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாஜக நியமன எம்எல்ஏக்கள் வி.சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் கிரண் பேடியைச் சந்தித்தனர்.
 இதையடுத்து, மீண்டும் திங்கள்கிழமை  நியமன எம்எல்ஏ சாமிநாதன் உள்ளிட்டோர் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்தனர்.
பின்னர், சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலவச அரிசி விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். அரிசி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. தரமற்ற அரிசியை வழங்குகின்றனர். நியாய விலைக் கடைகளில் 80 சதவீத அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. 20 சதவீத அரிசி வழங்கப்படவில்லை.
நிகழாண்டு ரூ. 160 கோடி அரிசிக்காக ஒதுக்கப்பட்டது. கடந்த 17 மாதங்களாக மக்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அந்தப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை. 17 மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 9 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்க வேண்டும். ஒரு கிலோவுக்கு ரூ. 2 வீதம் ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் மனு அளித்தோம்.
இந்த ஊழல் குறித்து சிபிஐயிடம் புகார் தெரிவிப்போம். முதல்வர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமியிடம் விசாரணை நடத்த பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என்றார் அவர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/இலவச-அரிசி-வழங்கியதில்-ஊழல்-புதுவை-ஆளுநரிடம்--நியமன-எம்எல்ஏக்கள்-புகார்-3231226.html
3231225 விழுப்புரம் புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Tuesday, September 10, 2019 08:55 AM +0530 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். இதில், திரளான பொம்மை உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொம்மைகளுடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களிடம் ரூ. 5 ஆயிரம் கட்டணம் வசூலித்து, ஈஸ்வரன் கோயிலில் பொம்மைகள் கண்காட்சி நடத்துவதைக் கண்டித்தும், 
இந்தக் கண்காட்சியை இலவசமாக நடத்தக் கோரியும், நுகர்வோர் மற்றும் சங்கத்துக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்குவதை நிறுத்தி, 15 சதவீத தள்ளுபடியில் பொம்மைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரியும், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சங்கத்தின் பெயரில் நடைபெறும் விற்பனை மூலம் திரட்டப்படும் ரூ. 2.50 லட்சத்துக்கு கணக்கு காட்ட வலியுறுத்தியும் பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 6- ஆம் தேதி ஈஸ்வரன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த தற்போதைய சங்கத் தலைவர் ரங்கராஜன் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். 
ஆனால், இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 
இதைக் கண்டித்தும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வலியுறுத்தியும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொம்மை உற்பத்தியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/பொம்மை-உற்பத்தியாளர்கள்-ஆர்ப்பாட்டம்-3231225.html
3231224 விழுப்புரம் புதுச்சேரி மருத்துவப் படிப்பில் மோசடியாகச் சேர முயற்சி: தமிழக மாணவியின் தந்தைக்கு ஜிப்மர் நோட்டீஸ் DIN DIN Tuesday, September 10, 2019 08:55 AM +0530 புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மோசடியாகச் சேர முயன்றதாக தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் நிகழாண்டு சேர்க்கை பெற்றார். இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கம் புகார் அளித்ததால், இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைப் பெற்ற 54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், மாணவி கிருத்திகா, தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் இரு முகவரி பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்த் துறைச் செயலர் உத்தரவின் பேரில், விசாரணை நடைபெற்றது. கோரிமேடு காவல் நிலையத்திலும் சமூக நல அமைப்புகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம் விளக்கம் 
கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 
ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பெற்றோர் - மாணவர்கள் நலச் சங்கத் தலைவர் வை.பாலா கூறியதாவது:
 மாணவி கிருத்திகா மீது புகார் அளித்து 2 மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. இதில், முதல் குற்றவாளி வருவாய்த் துறை. 
தற்போது இந்த முறைகேட்டின் மீது காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவப் படிப்பு பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலிச் சான்றிதழ் அளித்த அதிகாரி உள்ளிட்ட ஒவ்வொருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/மருத்துவப்-படிப்பில்-மோசடியாகச்-சேர-முயற்சிதமிழக-மாணவியின்-தந்தைக்கு-ஜிப்மர்-நோட்டீஸ்-3231224.html
3231223 விழுப்புரம் புதுச்சேரி ஏழைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் கிரண் பேடி: காங்கிரஸ் தேசியச் செயலர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு DIN DIN Tuesday, September 10, 2019 08:55 AM +0530 இலவச அரிசி விவகாரத்தில் புதுவை ஆளுநர் கிரண் பேடி, ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாக காங்கிரஸ் தேசியச் செயலரும், புதுவை  மாநில மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதியில் நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் எனக் கூறித்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதற்குத் தடையாக உள்ளார். இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குங்கள் என்று கூறுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அரிசி வழங்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களான பாஜகவினர் பணம் தர வேண்டும் என்று கூறுகின்றனர்.
இலவச அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இலவச அரிசி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், துணைநிலை ஆளுநர் பணமாக வழங்க வேண்டும் என்று கூறுவது விநோதமாக உள்ளது. ஆளுநர் கிரண் பேடி மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். ஏழை மக்களுக்கு எதிராகவும், புதுவை மாநிலத்துக்கு எதிராகவும் செயல்படுகிறார். கடந்த 3 ஆண்டுகளாகவே பாஜகவின் தலைமையகமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது.
இலவச அரிசி விவகாரத்தில் அரசின் தீர்மானத்தால் மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால், பாஜக எதிர்ப்பு நாடகம் நடத்துகிறது என்றார் சஞ்சய் தத்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/10/ஏழைகளுக்கு-எதிராகச்-செயல்படுகிறார்-கிரண்-பேடி-காங்கிரஸ்-தேசியச்-செயலர்-சஞ்சய்-தத்-குற்றச்சாட்டு-3231223.html
3230187 விழுப்புரம் புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடு குறித்து மாதம் ஒருமுறை அமைச்சரவை கூடி ஆய்வு: முதல்வர் DIN DIN Sunday, September 8, 2019 06:01 AM +0530 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாதம் ஒருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் 
வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் தனது துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து  முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை இரவு பேசியதாவது:
புதுவை சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி, நிதி ஆதாரத்தை ஆய்வதற்கு முயற்சி செய்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.   தகுதி வாய்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது நிகழாண்டிலேயே வழங்கப்படும். 
தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வூதியத்தைத் உயர்த்துவது தொடர்பாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசி முடிவு எடுப்போம். வீட்டுமனைப் பட்டா வழங்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்ற வழக்குகளில் தோல்வியடைவது தொடர்பாக வழக்குரைஞர்கள், காவல் துறை அதிகாரிகளை தனித் தனியே அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதியம் வழங்குவது, காவலர் பணி நிரந்தரம், புதிய காவலர் தேர்வு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினாலே 95 சதவீதம் நிறைவு பெற முடியும். அதற்காக 15 நாள்களுக்கு ஒரு முறை துறைச் செயலர்கள், இயக்குநர்கள், அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
திட்டங்களை நிறைவேற்றுதல், அதன் செயல்பாடுகள் குறித்து மாதம் ஒரு முறை அமைச்சரவையைக் கூட்டி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/பட்ஜெட்டில்-அறிவித்த-திட்டங்களின்-செயல்பாடு-குறித்து-மாதம்-ஒருமுறை-அமைச்சரவை-கூடி-ஆய்வு-முதல்வர்-3230187.html
3230186 விழுப்புரம் புதுச்சேரி ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் DIN DIN Sunday, September 8, 2019 06:00 AM +0530 புதுவையில் கலை, அறிவியல் உள்பட அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேரும் ஆதிதிராவிடர் மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில்  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கலை, அறிவியல் சார்ந்த படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், துணைப் படிப்புகள், பொறியியல் மற்றும் துணைப் படிப்புகளுக்கு கல்லூரிக் கட்டணத்தை முழுமையாக இந்த ஆண்டு முதல் அரசே ஏற்கும்.  இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 
ரூ. 6 கோடி கூடுதல் செலவாகும்.
 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, பாகூர் மற்றும் கரையாம்புத்தூரில் தலா ஒரு மாணவியர் விடுதி ரூ. 5 கோடி செலவில் கட்டப்படும். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர், மாணவிக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 30 ஆயிரம் ஊக்கத் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் பெண்களின் திருமண நிதி ரூ. 75 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இலவச துணிகளைக் கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும். ஆரம்ப கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை தவறாமல் செலுத்தும் பொதுப் பிரிவினர்களுக்கு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையில் 4 சதவீதம் வட்டி கழிவு போக மீதியுள்ள தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, அட்டவணைப் பிரிவில் கடனுக்குரிய மாதாந்திர தவணை தவறாமல் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மாதாந்திர தொகையில் 5 சதவீதம் வட்டி மானியம் போக வசூலிக்கப்படும்.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தமிழ்ப் புத்தாண்டுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுக்கு இருமுறை வேட்டி, சேலை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரண உதவித் திட்டம் உருவாக்கப்படும்.
70 முதல் 79 வயது வரையான முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 2,500 -ஆக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 1.75 கோடி செலவாகும். தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல்,  பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் டிஜிட்டல் வடிவத்தில் குடும்ப அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கூலி தொடர்பான சட்டத் தொகுப்பின் அடிப்படையில் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். மேட்டுப்பாளையம் ஆண்கள் பயிற்சி நிலையம் ரூ. 5 கோடியில் தரம் உயர்த்தப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச் சங்கம் வாரியமாக மாற்றப்படும்.
சிறுநீரகம்,  கல்லீரல் கோளாறு, புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிலிகோசிஸ் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து கண்டறிய கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 75 ஆயிரம் வரை வழங்கப்படும். கருச்சிதைவு ஏற்படும் பெண் தொழிலாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கவும், நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசு உத்தேசித்துள்ளது. நிகழாண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அரிசி வழங்க நிதி கோரப்பட்டுள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப அரிசி வழங்கப்படும். 
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் அடையாள அட்டை 
வழங்கப்படும் என்றார் அமைச்சர் கந்தசாமி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/ஆதிதிராவிடர்-மாணவர்களின்-கல்விக்-கட்டணத்தை-அரசே-ஏற்கும்-3230186.html
3230185 விழுப்புரம் புதுச்சேரி அலுவல் ஆய்வுக் கூட்ட முடிவின்படி பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தவில்லை DIN DIN Sunday, September 8, 2019 06:00 AM +0530 அலுவல் ஆய்வுக் கூட்ட முடிவின்படி, புதுவை பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தவில்லை என்று புதுவை அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து புதுவை பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு சட்டப்பேரவையைக்கூட முழுமையாக நடத்த முடியாமல் முழு தோல்வி அடைந்துள்ளது. தோல்வி பயத்தால் சட்டப்பேரவை நடத்தை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,
கூட பட்ஜெட் கூட்டத் தொடரை அரசு நடத்தவில்லை.
சனிக்கிழமை வரை உறுப்பினர்களின் கேள்வி மற்றும் தனி நபர் தீர்மானம் தொடர்பான விவாதங்களை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கும் அளவுக்கு பூகம்பம், சுனாமி, பேரிழப்பு எதுவும் நிகழவில்லை. அவசரமாக ஒத்திவைத்தது சிறு பிள்ளைத் தனமானது.
புதுவை முதல்வர் எழுதிக் கொடுத்ததை பேரவைத் துணைத் தலைவர் பேசி, பேரவையை  ஒத்திவைத்தனர். பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட பதில் ஜனநாயக விரோதம்.  நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவை அளித்தால் 14 நாள்களுக்குள் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அளித்தவரை அழைத்துப் பேசலாம்.
அப்போது, அந்தத் தீர்மான மனுவுக்கு 5-இல் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், தீர்மானம் குறித்து விவாதிக்கலாம். ஓட்டெடுப்பு நடத்தலாம். ஆட்சியாளர்களின் உச்சபட்ச அதிகாரம் சட்டப்பேரவையில்தான் எடுபடும். மக்களிடம் எடுபடாது.
அதிமுகவுக்கு இந்த அரசைக் கலைக்கவோ,  குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவோ எண்ணம் இல்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்கள்தான் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த எண்ணத்தை மாற்ற முடியாது. பேரவைத் துணைத் தலைவர் பாலன் 3 முறை தான் வகித்து வந்த வாரியத் தலைவர் 
பதவியை ராஜிநாமா செய்வேன் என்றார்.  
தனவேலு எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்வேன் என்றார்.  திமுக எம்.எல்.ஏ. சிவா இந்த அரசின் செயலைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று எச்சரித்தார். இவை ஆட்சிக்கு எதிரான மனநிலையில் ஆளும் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் உள்ளதற்கான உதாரணங்கள் என்றார் 
அன்பழகன்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/அலுவல்-ஆய்வுக்-கூட்ட-முடிவின்படி-பட்ஜெட்-கூட்டத்-தொடரை-நடத்தவில்லை-3230185.html
3230184 விழுப்புரம் புதுச்சேரி பல்கலை.யில் கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் DIN DIN Sunday, September 8, 2019 05:59 AM +0530 புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் மேற்கொண்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தலில் பயன்படுத்தப்படும் நவீன முறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் கல்வியியல் அறிஞர்கள் பங்கேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 320 கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். 
இதன் தொடக்க விழா புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் இணைச் செயலர் அர்ச்சனா தாக்கூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார்.
கருத்தரங்குக்கு  புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர்  குர்மீத் சிங் தலைமை வகித்தார்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.என்பாண்டா சிறப்புரையாற்றினார். பயிலரங்கில் புதுவைப் பல்கலைக்கழக மனித வள மேம்பாட்டு மையப் பேராசிரியர் வேங்கட ரகோத்தம் வரவேற்றார்.  
 இணைப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரையாற்றினார். மூன்று அமர்வுகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் தேசிய தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.என்பாண்டா ஆக்கப்பூர்வமான ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்பித்தல் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
குஜராத் பல்கலைக்கழக மனித வள மேம்பாட்டு மைய இயக்குநர் ஜெகதீஷ் ஜோஷி, நவீன கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள் குறித்து உரையாற்றினார். கேரளத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகக் கல்வியியல் துறைப் பேராசிரியர் அம்ருத்குமார், கற்பித்தல் மற்றும் கற்றலில் நவீனத்துவம் குறித்துப் பேசினார்.
சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகத் துறைப் பேராசிரியர் அருண்குமார், நிலையானகல்வி மேம்பாடு குறித்து உரையாற்றினார். நிறைவு விழாவில் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாடு மற்றும் உறவுகள் இயக்குநர் ராஜீவ் ஜெயின் நிறைவுரையாற்றினார். பயிலரங்கில் தென்னிந்திய மனித வள மேம்பாட்டு மைய இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/பல்கலையில்-கல்லூரி-ஆசிரியர்களுக்கான-கருத்தரங்கம்-3230184.html
3230183 விழுப்புரம் புதுச்சேரி புதுச்சேரி ஞாயிறு சந்தையில் இன்று கடையடைப்பு DIN DIN Sunday, September 8, 2019 05:59 AM +0530 புதுச்சேரி ஞாயிறு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) கடையடைப்பு நடத்தப்படும் என்று புதுவை ஏஐடியூசி தொழிற்சங்கம் அறிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரியில் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் கே.சேதுசெல்வம் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
புதுச்சேரியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஞாயிறு சந்தை (சண்டே மார்க்கெட்) இயங்கி வருகிறது. 
இது புதுச்சேரியின் அடையாளமாக உள்ளது. இந்தச் சந்தையை மூடப்போவதாக முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஞாயிறு சந்தையில் வெளிமாநிலத்தவர்கள்தான் தொழில் செய்வதாகவும், இதனால் புதுவை அரசுக்கு வருமானம் ஏதுமில்லை என்றும் முதல்வர்  தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஞாயிறு சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். 
70 சதவீதம் பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். புதுவையில் முன்பு வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்பட்டிருக்கும். அப்போது, வியாபாரம் செய்ய தொடங்கியதுதான் ஞாயிறு சந்தை. அங்கு, குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கிறது என ஏழை மக்கள் பொருள்களை வாங்கிப் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், ஒரு மீட்டர் இடத்துக்கு ரூ. 10 நகராட்சி கட்டணமாக வசூல் செய்து வருகிறது. 
அந்தப் பகுதியில் கடை வைத்துள்ளவர்களும் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதனால், ஞாயிறு சந்தையை மூடினால் அங்கு வியாபாரம் செய்பவர்களும், பொருள்களை வாங்கும் ஏழைகளும்தான் பாதிக்கப்படுவர்.
எனவே, ஞாயிறு சந்தையை மூடக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும். ஞாயிறு சந்தை வியாபாரிகள், தொழிலாளர்கள் ஒன்று கூடி முதல்வர் வீடு அல்லது சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிப்போம் 
என்றார் சேதுசெல்வம்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/புதுச்சேரி-ஞாயிறு-சந்தையில்-இன்று-கடையடைப்பு-3230183.html
3230182 விழுப்புரம் புதுச்சேரி லாட்டரி விற்றவர் கைது DIN DIN Sunday, September 8, 2019 05:59 AM +0530 காரைக்கால் பகுதியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் மற்றும் 3 எண் முறையில் செல்லிடப்பேசி வழியாக லாட்டரி விற்பனை பரவலாக நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள், குடும்பத்தினர் பலரும் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
போலீஸார் அண்மை காலமாக கண்காணிப்பில் ஈடுபட்டு, இத்தொழில் செய்வோரை கைது செய்துவருகின்றனர். இவ்வகையில், காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார், வெள்ளிக்கிழமை காரைக்கால் நகரப் பகுதியில் திருநள்ளாறு சாலை சந்தைத் திடல் அருகே ஒருவர் 3 எண் லாட்டரி விற்பனை செய்துவருவதை அறிந்து சென்று அவரை பிடித்தனர்.  
போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், கண்ணன் (55), புதுக்குளம் பகுதி காரைக்காலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து  3 எண்கள் எழுதப்பட்ட காகிதம், செல்லிடப் பேசி, ரூ.11,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/லாட்டரி-விற்றவர்-கைது-3230182.html
3230181 விழுப்புரம் புதுச்சேரி காரைக்கால் வந்தடைந்த காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு DIN DIN Sunday, September 8, 2019 05:59 AM +0530 காரைக்காலுக்கு சனிக்கிழமை (செப்டம்பர் 7)  வந்தடைந்த காவிரி நீருக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர். 
பாசனத்துக்காக கல்லணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள நூலாறுக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. தொடர்ந்து, நல்லம்பல் அணை அருகே நூலாறு தடுப்பணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு, காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பளித்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
கடந்த மாதம் கல்லணை திறப்பு நிகழ்வில் பங்கேற்றபோது, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறப்பால் காரைக்காலுக்கு தண்ணீர் வந்தடையாது, கூடுதலாக திறக்கவேண்டுமென வலியுறுத்தினேன். புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் காரைக்காலுக்கான தேவை குறித்து வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காரைக்காலுக்கான 7 டிஎம்சி அளவில், பிரேக் அப் முறையில் ஒவ்வொரு மாதமும் தரவேண்டிய தண்ணீர் குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் நண்டலாறில் 489 மில்லியன் கியூபிக் ஃபீட், நாட்டாறில் 310, வாஞ்சியாற்றில் 306, நூலாற்றில் 1032, அரசலாற்றில் 13, திருமலைராஜனாற்றில் 621, பிரவடையனாற்றில் 84 என தருவதாக தமிழக அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி காரைக்கால் விவசாயிகள் வேளாண் பணியை செய்யவேண்டும். அத்துடன் குளம், குட்டை, ஏரிகளில் தேக்கி வைக்க வேண்டும்.
காரைக்காலில் பாசிக் நிர்வாகம் சில காரணங்களால் முறையாக செயல்பட முடியவில்லை. எனவே, வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையத்தில் தரமான விதைகள் வழங்கப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல சலுகைகளை முதல்வர்  அறிவித்துள்ளார்.  இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தேவையான சாதனங்கள் வாங்க வேளாண் துறை மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் எம்மாதிரியான சான்று விதைகளைப் பயன்படுத்த வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் எஸ். பழனி உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். தற்போதைய தண்ணீர் திறப்பால் 9,301 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/காரைக்கால்-வந்தடைந்த-காவிரி-நீருக்கு-மலர்-தூவி-வரவேற்பு-3230181.html
3230180 விழுப்புரம் புதுச்சேரி மின்சாரப் பேருந்துகளுக்கு விரைவில் அனுமதி DIN DIN Sunday, September 8, 2019 05:58 AM +0530 புதுவையில் மின்சாரப் பேருந்துகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் ஷாஜகான் வெளியிட்ட அறிவிப்புகள்:
வருவாய்த் துறையில் இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க ஏதுவாக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 40 கணினிகள், 8 ஸ்கேனர் கருவிகள் வழங்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 15 மடிக் கணினிகள் வழங்கப்படும்.
நிகழாண்டில் புதுச்சேரி முழுவதும் உள்ள நிலங்கள் மறு அளவை செய்யப்படும். அதைத் தொடர்ந்து காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் நிலங்கள் மறு அளவை செய்யப்படும். நிகழாண்டில் 27 நில அளவை உதவியாளர்கள், 30 நில அளவையர்கள், 11 வரைவாளர்கள் பதவிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ. 10 கோடியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை, தொகுப்பூதியம் மற்றும் மூலப்பொருள் சேதாரத்துக்கான தொகை உயர்த்தி வழங்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை புதுவை மாநிலத்தில் தொடங்கும் வகையில், மின்சார வாகன தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
மகளிரின் பொருளாதார மேம்பாடு கருதி, ஆட்டோ ரிக்ஷா உரிமம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியில் இயக்கப்பட்டு வரும் தனியார் டெம்போ வாகனங்கள் மிகவும் பழுதடைந்தும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகவும் உள்ளன. அவற்றை மாற்றுமாறு டெம்போ உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்படும்.
தற்போது ஒருசில வழித்தடங்களில் மட்டும் டெம்போக்கள் ஓடுகின்றன.  எனவே, போக்குவரத்து வசதி தேவைப்படும் மற்ற நகரப் பகுதிகளுக்கும் டெம்போக்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 8.40 கோடியில் 23 புதிய பேருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரிக்கு 15 தொலைதூரப் பேருந்துகளும், காரைக்காலுக்கு 4 பேருந்துகளும், மாஹேவுக்கு 4 பேருந்துகளும் வாங்கப்படும். ரூ. 50 லட்சம் செலவில் புதுச்சேரி, காரைக்கால் பணிமனைகள் நவீனப்படுத்தப்படும்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், உள்ளூர் பயணிகளின் நலனைக் கருதியும் ஓலா, ஊபர் போன்ற போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா மற்றும் சுற்றுலா வாகனம் இயக்க அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு சிறிய மற்றும் பெரிய மின்சாரப் பேருந்துகளுக்கு அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ஷாஜகான்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/மின்சாரப்-பேருந்துகளுக்கு-விரைவில்-அனுமதி-3230180.html
3230179 விழுப்புரம் புதுச்சேரி அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் DIN DIN Sunday, September 8, 2019 05:58 AM +0530 புதுவையில் அரசுக் கல்லூரி  ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் எம்.பி.ஏ. (சுற்றுலா மேலாண்மை) பிரிவு தொடங்குவதற்கான செயற்குறிப்பு அரசின் கருத்துகையில் உள்ளது.  
பல்கலைக்கழக மானியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் 2020-21 ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்படும்.
ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் மாதமொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் ஊதியத்துடன் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்படும்.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்காக அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் 50 சதவீத சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டது. 
எஞ்சிய 50 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் படித்து முடித்துள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 44 தீயணைப்பு வீரர்கள், 5 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
புதிதாக 4 சிறிய ரக உயர்மீட்பு வாகனங்கள் மத்திய அரசின் நிதியுதவி மூலம் வாங்கப்படும். பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் நிகழாண்டு கட்டி முடிக்கப்படும்.
மணிலா சாகுபடியாளர்களுக்கு செலவின மானியம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் பரிசீலிக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டயப் படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
அனுமதியின்றி ஆழ்துளைக் குழாய் கிணறுகளைப் பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, தவறு செய்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
நடப்பாண்டில் 60 மின் மாற்றிகள் அமைக்கப்படும். பணிக் காலங்களில் விபத்துக்குள்ளாகும் மின் துறை ஊழியர்களின் நலனுக்காக ரூ. 10 லட்சம் வரை விபத்துக் காப்பீடு கிடைக்கும் வகையில் குறைந்த மாதாந்திரக் கட்டணத் தொகையுடன் கூடிய விபத்துக் காப்பீடு செய்து தரப்படும். 
24 மணி நேரமும் செயல்படக் கூடிய கணினி மயமாக்கப்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும். விவசாயப் பண்ணைக் கருவிகள் கொண்ட மையம் தொடங்கப்படும்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/அரசுக்-கல்லூரி-ஆசிரியர்களுக்கு-நல்லாசிரியர்-விருது-வழங்கப்படும்-3230179.html
3230178 விழுப்புரம் புதுச்சேரி சித்தர் சித்தானந்த சுவாமிகள் மகா குருபூஜை விழா DIN DIN Sunday, September 8, 2019 05:58 AM +0530 காரைக்கால் அருகே உள்ள அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தர் சித்தானந்த சுவாமிகளின் 105 -ஆவது மகா குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கிராமத்தில், சௌந்தரியவள்ளி சமேத சோமநாதர் கோயிலுக்கு எதிரிலுள்ள மாமரத் தோப்பில், ஒரு மரத்தின் கீழ் இருந்தவாறு அருளாசி வழங்கி வந்த இவர், கடந்த 30.8.1914-இல் முத்தியடைந்தார். இவரது சமாதி உள்ள பகுதியில் சிறிய மண்டபம் எழுப்பப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இவரது சமாதியில் ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் மகா குருபூஜை 2 நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை திருவிளக்கு வழிபாடு,  சிவ சித்தர் மகா ஹோமத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை திருமலைராஜன் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/சித்தர்-சித்தானந்த-சுவாமிகள்-மகா-குருபூஜை-விழா-3230178.html
3230177 விழுப்புரம் புதுச்சேரி சந்திரயான் 2 முயற்சி படிப்படியாக வெற்றி பெறும்:   ஆளுநர் கிரண் பேடி DIN DIN Sunday, September 8, 2019 05:57 AM +0530 சந்திரயான்- 2 முயற்சி படிப்படியாகத்தான் வெற்றி பெறும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு செய்து வருகிறார். தனது 233-ஆவது வாரக் கள ஆய்வாக பாகூர் ஏரிக்கரைக்கு சனிக்கிழமை ஆய்வுக்குச் சென்றார். அங்கு மரக்கன்றுகள் நடும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதைக் காண நாடே காத்துக் கொண்டிருந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். 
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, நாம் இதுவரை செய்தது மிகப் பெரிய செயல். தைரியமாக இருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிய அவர், இஸ்ரோ தலைவர் சிவனை ஆரத் தழுவி ஆறுதல் 
கூறினார்
சந்திரயான் - 2 படிப்படியாகத்தான் வெற்றி பெறும். தொடர்ந்து, சந்திரயானின் பயணங்கள் இருக்கும். நிச்சயம் இந்தியா இந்த முயற்சியில் தடம் பதிக்கும். இந்த நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திர  மோடிக்கு எனது நன்றி என்றார் ஆளுநர் கிரண் பேடி.
 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/சந்திரயான்-2-முயற்சி-படிப்படியாக-வெற்றி-பெறும்---ஆளுநர்-கிரண்-பேடி-3230177.html
3230176 விழுப்புரம் புதுச்சேரி அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் DIN DIN Sunday, September 8, 2019 05:57 AM +0530 அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டம் புதுவையில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் வகிக்கும் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை இரவு முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
அரும்பார்த்தபும் மேம்பாலம், உப்பனாறு மேம்பாலம், திருக்காஞ்சி மேம்பாலம், கொம்மந்தான்மேட்டில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செட்டிப்பட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை ஆகியவை இந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். 
தனியார் பங்களிப்புடன் புதுவை பிராந்தியத்தில் பல்வேறு பகுதிகளில் 125 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைக்கவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
முதலியார்பேட்டை, பூமியான்பேட்டை ஜவகர் நகர் ஆகிய பகுதிகளுக்கான புதைச்  சாக்கடை பணிகள் இந்தாண்டு முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 
ரூ. 500 கோடி செலவில் புதுச்சேரி நகரப் பகுதிக்கு தரமான குடிநீர் வழங்குவதற்கான பணிகள் இந்தாண்டு மேற்கொள்ளப்படும். காமராஜர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படும். சட்டத்தின்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லாத காரணத்தாலும், மேலும் இந்த நடவடிக்கைகள் சமூகக் கேடுகளை ஏற்படுத்தும் என்பதாலும், தமிழகம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை புதுவை யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தத் திட்டம் அறிவிக்கை செய்யப்படும் நாள் வரை அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, அந்தக் கட்டடம் கட்டப்பட்ட ஆண்டின் நில மதிப்பின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படும்.
மாதிரி தீவனப் புல் வளர்ப்பு செயல்விளக்கப் பண்ணை 
10-இல் இருந்து 20 யூனிட்டுகள் அசோலா வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக் முறையில் தீவன உற்பத்தியைப் பெருக்கும் முறைகளை நிலமற்ற கால்நடை வளர்ப்போரின் நலனுக்காக தொடங்கப்பட உள்ளது.
மேலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் குட்டிகளுக்கான "பப் மாஸ்டர் ஹெல்த் பிளான்' என்ற ஒருங்கிணைந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/அனுமதியை-மீறி-கட்டப்பட்ட-கட்டடங்களை-வரைமுறைப்படுத்தும்-திட்டம்-அமல்படுத்தப்படும்-3230176.html
3230031 விழுப்புரம் புதுச்சேரி புதுவை கம்பன் கழகத் தலைவர் கோவிந்தசாமி முதலியார் காலமானார் DIN DIN Sunday, September 8, 2019 03:16 AM +0530 புதுவை கம்பன் கழகத் தலைவர் ந.கோவிந்தசாமி முதலியார் (100), உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (செப். 6) காலமானார்.
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோயில் வீதி - காந்தி சாலை சந்திப்புப் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை கம்பன் கழகத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
ஹோமியோபதி மருத்துவரான கந்தசாமி முதலியார் கலைமாமணி,  சேவா ரத்னா உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். இவரது மனைவி பட்டம்மாள் 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். தமிழ் (எ) சரோஜா என்ற ஒரே மகள் உள்ளார்.
மறைந்த கோவிந்தசாமி முதலியாரின் உடலுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணனன், காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பேராசிரியர் கிருங்கை சேதுபதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கோவிந்தசாமி முதலியாரின் விருப்பப்படி அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆராய்ச்சிக்காக தானமாக சனிக்கிழமை மாலை வழங்கப்பட்டது. தொடர்புக்கு பா.ராஜாக்கண்ணு: 94442 23338.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/08/புதுவை-கம்பன்-கழகத்-தலைவர்-கோவிந்தசாமி-முதலியார்-காலமானார்-3230031.html
3229511 விழுப்புரம் புதுச்சேரி இலவச அரிசியைத் தொடர்ந்து வழங்க வேண்டும்: புதுவை பேரவையில் தீர்மானம் DIN DIN Saturday, September 7, 2019 08:56 AM +0530 இலவச அரிசியைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மாஹே சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் இலவச அரிசி வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.  அப்போது, நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் கந்தசாமி, இலவச அரிசியை வழங்குவது முக்கிய பிரச்னையாக உள்ளதால், வெள்ளிக்கிழமை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து பேச பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, அதிமுக உறுப்பினர் அன்பழகன் ஆளுநரை சந்திப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, அதனால் நாங்கள் வரமாட்டோம். அனைவருக்கும் இலவச அரிசியை வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதிமுகவும் ஆதரிக்கும் என்றார்.
இதையேற்று முதல்வர் நாராயணசாமி புதுவை பேரவையில் உடனடி கேள்வி நேரத்துக்குப் பிறகு இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:
இலவச அரிசி வழங்குவது புதுவை அரசின் முக்கிய நலத் திட்டங்களில் ஒன்று. முதலில் அனைத்து குடும்பத்தினருக்கும் 20 கிலோ அரிசியும்,  பின்னர் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு  20 கிலோவும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டது. ஆளுநர் கிரண் பேடி, அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டும் என்று கூறியதால், கிலோவுக்கு ரூ. 30 வீதம் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு 600 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அரிசியின் விலை உயர்ந்து வருவதாலும், அரிசிக்கு வழங்கப்படும் பணத்தை வீண் செலவு செய்து விடுவதாலும், மக்கள் அரிசியையே வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, கடந்த 7.6.2019 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், தொடர்ந்து இலவச அரிசியை வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.
அப்போது பேசிய அதிமுக குழுத் தலைவர் அன்பழகன், அரிசியை வழங்காவிட்டால் அதற்குரிய பணம் 10 நாள்களுக்குள் பொதுமக்களுக்கு தரப்படும் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், இலவச அரிசி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார் என்றார். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயபால், செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/07/இலவச-அரிசியைத்-தொடர்ந்து-வழங்க-வேண்டும்-புதுவை-பேரவையில்-தீர்மானம்-3229511.html
3229510 விழுப்புரம் புதுச்சேரி டிஜிபி அலுவலகம் எதிரே ஆம் ஆத்மி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி DIN DIN Saturday, September 7, 2019 08:55 AM +0530 புதுவை டிஜிபி அலுவலகம் எதிரே ஆம் ஆத்மி நிர்வாகி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் மணிமாறன் (43). ஆம் ஆத்மி கட்சியியின் தொழிற்சங்கத் தலைவர். வெள்ளிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த அவர், திடீரென கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், உடனே அவரை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றினர். தகவலறிந்த பெரியக்கடை போலீஸார் அங்கு வந்து, மணிமாறனை கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், புதுச்சேரியில் "போராளிகள்' என்ற கட்செவி அஞ்சல் குழு இயங்கி வருகிறது. இந்தக் குழுவில் உள்ள சிலர் தனது செல்லிடப்பேசியை வயப்படுத்தி (ஹேக்) தகவல்களைத் திருடினர். அதை வைத்து தன்னையும், தனது குடும்பத்தையும் கட்செவி அஞ்சலில் (வாட்ஸப்) தரக்குறைவாக வெளியிட்டு, ரூ. 5 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாகவும், அதன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறிவுரை கூறிய போலீஸார், உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/07/டிஜிபி-அலுவலகம்-எதிரே-ஆம்-ஆத்மி-நிர்வாகி-தீக்குளிக்க-முயற்சி-3229510.html