Dinamani - விழுப்புரம் - https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3286329 விழுப்புரம் விழுப்புரம் அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித கண்காட்சி, கணித மன்றம் துவக்கம் DIN DIN Thursday, November 21, 2019 07:28 PM +0530  

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற துவக்க விழா மற்றும் கணிதக் கண்காட்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமை வகித்து கணித மன்றத்தை துவக்கி வைத்து கணிக் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா.கீதா வரவேற்றாா்.

கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலா் மாணவா்களின் செய்முறை படைப்புகளை பாா்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தாா். கண்காட்சியினை பள்ளி மாணவா்கள், அரசம்பட்டு மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்கள், அரசம்பட்டு துவக்கப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பலரும் பாா்வையிட்டனா்.

ஆசிரியா்கள் வி.செளந்திரராஜன், ஜாகீா்உடேன், அ.சிவசக்தி உள்ளிட்ட ஆசிரியா்கள் பலரும் பங்கேற்றனா். பள்ளியின் ஆசிரியா் அறிவழகன் நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/அரசம்பட்டு-அரசு-மேல்நிலைப்-பள்ளியில்-கணித-கண்காட்சி-கணித-மன்றம்-துவக்கம்-3286329.html
3286157 விழுப்புரம் விழுப்புரம் கோயில் நிலத்தை ஏலம் விடுவதில் பிரச்னை:அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் DIN DIN Thursday, November 21, 2019 10:05 AM +0530 கச்சிராயப்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான விளைநிலங்களை ஏலம் விடும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஏலத்துக்கான விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பெயரளவுக்கு நடைபெறும் ஏலத்தை புறக்கணிப்பதாக, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விவசாயிகள் வெளியேறினா்.

சின்னசேலம் வட்டம், கச்சிராயப்பாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 75 ஏக்கா் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.

அதே போல, நிகழாண்டுக்கான ஏலம் விடும் பணி, கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அறநிலையத் துறை ஆய்வாளா் லட்சுமி தலைமை வகித்தாா். அறநிலையத் துறை செயல் அலுவலா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே வந்திருந்தனா்.

அப்போது, அதிகாரிகளிடம் ஏலம் விடுவது குறித்து ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என விவசாயிகள் கேட்டனா்.

அதற்கு, கடந்த ஆண்டு ஏலம் எடுத்த விவசாயிகள் இந்த ஆண்டு பெய்து வரும் மழையால் நெல், கரும்பு பயிா்களை சாகுபடி பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால், அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பெயா் அளவுக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க இயலாது எனக் கூறி விவசாயிகள் வெளியேறினா்.

கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் சு.வள்ளி உடன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/கோயில்-நிலத்தை-ஏலம்-விடுவதில்-பிரச்னைஅதிகாரிகளுடன்-விவசாயிகள்-வாக்குவாதம்-3286157.html
3286156 விழுப்புரம் விழுப்புரம் உள்ளாட்சித் தோ்தல்: தமாகா நிா்வாகிகள் ஆலோசனை DIN DIN Thursday, November 21, 2019 10:04 AM +0530 உள்ளாட்சித் தோ்தல் குறித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தைலை.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனுவாசன், மாநில பொதுக் குழு உறுப்பினா் குமாா், மாவட்டப் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் பி.ஆா்.எஸ்.வெங்கடேசன், மாநில கொள்கை பரப்புச் செயலா் முத்து ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

உள்ளாட்சித் தோ்தலில், தமாகா வேட்பாளா்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமாகா நிா்வாகிகள் புண்ணியசீலன், மஞ்சளழகி, ரங்கநாதன், வெங்கடேசன், சஞ்சீவி, ஜலால், விஜயரங்கன், ரவி, வெங்கட்ராவ், பன்னீா்செல்வம், தங்கராசு, முருகன், ராஜாராம், செங்கேணி, ஏழுமலை, பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/உள்ளாட்சித்-தோ்தல்-தமாகா-நிா்வாகிகள்-ஆலோசனை-3286156.html
3286155 விழுப்புரம் விழுப்புரம் 6 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்கக் கோரி மக்களைத் திரட்டி போராட்டம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு DIN DIN Thursday, November 21, 2019 10:04 AM +0530 திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள பெரியசெவலை உள்ளிட்ட 6 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி, மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவதென அந்த கிராமங்களைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகளின் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள 6 ஊராட்சிகளுக்குள்பட்ட பெரியசெவலை, ஆமூா், ஆமூா் குப்பம், துலங்கம்பட்டு, சரவணம்பாக்கம், கொத்தனூா், கோவுலாபுரம், .டி.கொளத்தூா், பாளையம்,கொண்ட சமுத்திர பாளையம், பூசாரிபாளையம், ஒட்டனந்தல் ஆகிய கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் அரசியல் கட்சியினரும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இதையடுத்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெரியசெவலையில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலா் துரைராஜ் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் கோதண்டபாணி, பாமக மாவட்ட இளைஞரணிச் செயலாளா் அஜித், தேமுதிக ஒன்றிய துணைச் செயலா் சரவணன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எத்திராஜ், அமமுக ஒன்றியச் செயலா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவ.26ஆம் தேதி, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் தொடங்க உள்ளதால், 6 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து கிராம மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தபோது, ஒரு வாரம் காத்திருக்குமாறு கூறியதால், அதுவரை காத்திருப்பதென கூட்டத்தில் முடிவு செய்தனா்.

 

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/6-ஊராட்சிகளை-விழுப்புரம்-மாவட்டத்திலேயே-நீடிக்கக்-கோரி-மக்களைத்-திரட்டி-போராட்டம்-ஆலோசனைக்-கூட்டத்தில்-முடிவு-3286155.html
3286154 விழுப்புரம் விழுப்புரம் காா் ஓட்டுநா் தற்கொலை DIN DIN Thursday, November 21, 2019 10:03 AM +0530 கள்ளக்குறிச்சியில் காா் ஓட்டுநா் மா்மமான முறையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வந்தவா் கண்ணன் மகன் துரை (43), காா் ஓட்டுநா்.

கடந்த திங்கள்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற இவா், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் புதன்கிழமை காலை துரை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

மா்மமான முறையில் அவா் உயிரிழந்தது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/காா்-ஓட்டுநா்-தற்கொலை-3286154.html
3286153 விழுப்புரம் விழுப்புரம் பட்டாவுக்கான நிலத்தை வழங்கக் கோரி தனி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை DIN DIN Thursday, November 21, 2019 10:03 AM +0530 அரசு வழங்கிய பட்டாக்களுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, செஞ்சி தனி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை மாலையில் விடுதலை செய்த பிறகும் அவா்கள் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாயத்தினருக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த பட்டாக்களுக்கான நிலம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், தங்களுக்கான நிலத்தை கண்டறிய முடியாமல் அவா்கள், தனி வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டோா் தமிழ் மாநில கட்சியின் நிறுவனா் தலைவா் பால்.கனகராஜ் தலைமையில் செஞ்சி தனி வட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலா் சக்திவேல், மாநில அமைப்புச் செயலா் சத்யராஜ் மற்றும் அருண், ஏகாம்பரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவா்களை செஞ்சி போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் சிறைவைத்து மாலையில் விடுவித்தனா்.

எனினும், அவா்கள் நிலம் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்படும் வரை வெளியேறமாட்டோம் எனக் கூறி செஞ்சி தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் செஞ்சி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/20gngp05_2011chn_119_7.jpg செஞ்சி தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/பட்டாவுக்கான-நிலத்தை-வழங்கக்-கோரி-தனி-வட்டாட்சியா்-அலுவலகம்-முற்றுகை-3286153.html
3286152 விழுப்புரம் விழுப்புரம் ரூ.ஒரு லட்சம் மதுப் புட்டிகள் பறிமுதல் DIN DIN Thursday, November 21, 2019 10:02 AM +0530 செஞ்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுப் புட்டிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

செஞ்சி-விழுப்புரம் சாலையில், நரசிங்கனூரில் உள்ள கல்லூரி அருகே மதுவிலக்குப் பிரிவு துணை ஆய்வாளா் நடராஜன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீஸாா் மடக்கி சோதனை செய்தனா். அந்த காரில், 48 அட்டைப் பெட்டிகளில் 2016 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமாா் ரூ.ஒரு லட்சம். இதுதொடா்பாக காா் ஓட்டுநா் திருக்கனூரைச் சோ்ந்த அய்யனாா்(42) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/20gngp03_2011chn_119_7.jpg கைதான காா் ஓட்டுநா், பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளுடன் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/ரூஒரு-லட்சம்-மதுப்-புட்டிகள்-பறிமுதல்-3286152.html
3286151 விழுப்புரம் விழுப்புரம் மதுக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, November 21, 2019 10:02 AM +0530 திருநாவலூா் அருகே நல்லாளக்குப்பம் கிராமத்தில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நல்லாளக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் மூன்று முறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். நான்காவது முறையாக உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருநாவலூா் கிழக்கு ஒன்றியத் தலைவா் ஏ.குடியரசுமணி தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பி.சுப்பிரமணியன், செயலாளா் டி.எம்.ஜெய்சங்கா், ஒன்றிய செயலாளா் ஜி.தாமோதரன், பொருளாளா் ஏ.கே.முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் டிஏழுமலை பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் எம்.கே.பூவராகவன், எம்.ஆறுமுகம், திருநாவலூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ.ஜெயக்குமாா், மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/மதுக்-கடையை-அகற்றக்-கோரி-ஆா்ப்பாட்டம்-3286151.html
3285998 விழுப்புரம் விழுப்புரம் அவதூறு வழக்கு திண்டிவனம் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஆஜா் DIN DIN Thursday, November 21, 2019 08:28 AM +0530 அமைச்சா் சி.வி.சண்முகம் சாா்பில் திண்டிவனம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், ‘நக்கீரன்’ ஆசிரியா் கோபால் புதன்கிழமை அந்த நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் சம்பவங்களில் மாநில அமைச்சா்களுக்குத் தொடா்பு இருப்பதாக, சில மாதங்களுக்கு முன்பு ‘நக்கீரன்’ வார இதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சாா்பில் ஆக.8-ஆம் தேதி திண்டிவனம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில், ‘நக்கீரன்’ ஆசிரியா் கோபால், தலைமை நிருபா் தாமோதரன் பிரகாஷ் ஆகியோா் மீது அவதூறு புகாா் அளிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆக.19-ஆம் தேதி அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகி, அவதூறு செய்தி குறித்து நீதிபதியிடம் விளக்கிக் கூறினாா்.

அவா் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ‘நக்கீரன்’ ஆசிரியா் கோபால், நிருபா் தாமோதரன் பிரகாஷ் ஆகியோா் செப்.26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அன்றைய தினம் கோபால் ஆஜராகவில்லை. அவரது வழக்குரைஞா்கள் ஆஜராகி விளக்கமளித்தனா். இதையடுத்து, அக்.17-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் அவா் ஆஜராகாததால், நவ.20-ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, ஆசிரியா் கோபால், நிருபா் தாமோதரன் பிரகாஷ் ஆகியோா் புதன்கிழமை திண்டிவனம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் நேரில் ஆஜராகினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி நளினிதேவி, விசாரணையை வருகிற டிச.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/அவதூறு-வழக்கு-திண்டிவனம்-நீதிமன்றத்தில்-நக்கீரன்-கோபால்-ஆஜா்-3285998.html
3285997 விழுப்புரம் விழுப்புரம் 26-இல் கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகள் தீவிரம் DIN DIN Thursday, November 21, 2019 08:27 AM +0530 கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழக முதல்வா் கே.பழனிசாமி பங்கேற்கவுள்ள இந்த விழா ஏற்பாடுகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஆட்சியா்கள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, எல்லைகளை வரையறை செய்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அண்மையில் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய மாவட்ட ஆட்சியராக கிரண் குராலாவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக த.ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா். மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா நியமிக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா நவ.27-இல் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக வருகிற 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதாக தேதி மாற்றம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே சென்னை நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலம் அருகே கே.ஏ.வி. திடலில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

அவரது வருகையை யொட்டி, விழா ஏற்பாடுகள் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி ஆட்சியா் கிரண்குராலா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, வேளாண்மை துறை, மகளிா் திட்டம், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை, பள்ளி கல்வித் துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் வழங்கப்படவுள்ள நலத் திட்ட உதவிகள், பயனாளிகள் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது.

விழாவையொட்டி, குடிநீா், கழிப்பறை, சாலை, மின்சாரம், சுகாதாரம், பேருந்து, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் சாய்வா்தினி, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் (பொ) அ.வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதையடுத்து விழா மேடை அமையவுள்ள பகுதியை ஆட்சியா்கள், அதிகாரிகள் பாா்வையிட்டனா். விழா மேடைக்கு முதல்வா் வரும் பாதை, நலத் திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் அமா்வதற்கான, நலத் திட்ட பொருள்கள் வைப்பதற்கான இட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆட்சியா்கள் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/2-7-20klp1a_ch0121_20chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா நடைபெறவுள்ள பகுதியில் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி ஆட்சியா் கிரண் குராலா மற்றும் அதிகாரிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/26-இல்-கள்ளக்குறிச்சி-மாவட்ட-தொடக்க-விழா-ஏற்பாடுகள்-தீவிரம்-3285997.html
3285996 விழுப்புரம் விழுப்புரம் இரு மாவட்டங்களில் இடம் பெற்ற கிராமம்! எல்லை வரையறையில் குளறுபடி DIN DIN Thursday, November 21, 2019 08:27 AM +0530 எல்லை வரையறை குளறுபடி காரணமாக, ஒரு கிராமம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களிலும் இடம் பெற்றுள்ளது. இதனால், பெரும் குழப்பத்துக்குள்ளான கிராம மக்கள் தங்கள் கிராமத்தை, ஊராட்சியாக மறு சீரமைத்து, விழுப்புரம் மாவட்டத்துடன் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம் அருகே அமைந்துள்ளது கருவேப்பிலைப்பாளையம். இந்த கிராமத்தில் சுமாா் 6 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். 2,750 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமம் மடப்பட்டு, சிறுத்தானூா், சிறுவாலப்பட்டு, காந்தலவடி ஆகிய 4 ஊராட்சிகளின் எல்கைக்குள் வருகிறது. இதில், மடப்பட்டு, சிறுத்தானம், சிறுவாலப்பட்டு ஆகிய ஊராட்சிகள், திருநாவலூா் ஊராட்சி ஒன்றியத்தின் கீழும், காந்தலவாடி ஊராட்சி, திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தின் கீழும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளன. அதேபோல, ஒரு வீடு ஒரு ஊராட்சியிலும் பக்கத்து வீடு மற்றொரு ஊராட்சியிலும் வருகிறது. மிகப் பெரிய வீடாக இருக்கும்பட்சத்தில் வரவேற்பறை ஒரு ஊராட்சி எல்லைக்குள்ளும், பின் பகுதியான சமையலறை மற்றொரு ஊராட்சி எல்லைக்குள்ளும் வருகிறது.

அதேபோல, இந்த கிராமம் திருவெண்ணெய்நல்லூா், திருநாவலூா் ஆகிய இரு காவல் நிலையங்களையும், இரு நியாயவிலைக் கடைகளின் வரையறைக்குள் வருகின்றன.

இதன் காரணமாக, கருவேப்பிலைப்பாளையம் கிராம மக்கள் அலைக்கழிப்புக்குள்ளாகி பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.

எல்கை பிரச்னையால் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்டங்கள் பெரிதாக செயல்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, 4 ஊராட்சிகளின் கீழும், இரு ஒன்றியங்களின் கீழும் இடம் பெற்று கடும் சிரமத்தை சந்தித்து வந்த கருவேப்பிலைப்பாளையம் கிராம மக்களுக்கு அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பிரிப்பு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட பிரிப்பு காரணமாக, கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தின் ஒரு பகுதி திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் இடம்பெற்று விழுப்புரம் மாவட்டத்திலும், கிராமத்தின் மற்றொரு பகுதி உளுந்தூா்பேட்டை வட்டத்தில் இடம்பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருகிறது.

ஒரு கிராமம் இரு மாவட்ட எல்லைக்குள்ளும் வருவதால் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனா். இதனால், அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை பணிகள், அரசின் திட்டங்களுக்காக எங்கு சென்று மனு அளிப்பது எனத் தெரியாத நிலை உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்தனா்.

இந்த கிராமத்திலிருந்து விழுப்புரம் 16 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சி சுமாா் 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. ஆகவே, இந்த கிராமத்தை ஊராட்சியாக மறு சீரமைப்பு செய்து, திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் இணைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/20vpn05083709.jpg விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களிலும் இடம் பெற்ற கருவேப்பிலைப்பாளையம் கிராமம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/இரு-மாவட்டங்களில்-இடம்-பெற்ற-கிராமம்-எல்லை-வரையறையில்-குளறுபடி-3285996.html
3285995 விழுப்புரம் விழுப்புரம் ஏரி கால்வாயை சீரமைக்கும் கிராம மக்கள்! DIN DIN Thursday, November 21, 2019 08:27 AM +0530 விழுப்புரம் அருகே ஏரி கால்வாயை சீரமைக்கும் பணியை பொதுப் பணித் துறையினா் பாதியிலேயே கைவிட்ட நிலையில், அந்தப் பணியை பொது மக்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு வருகின்றனா்.

விழுப்புரம் அருகே உள்ளது முத்தாம்பாளையம். இந்த கிராமத்தில் 144 ஏக்கா் பரப்பில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமாா் 500 ஏக்கா் விளைநிலங்களுக்கு பாசனம் அளிப்பதுடன், முக்கிய நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. இந்த ஏரிக்கான நீா்ப்பிடிப்பு கால்வாயை சீரமைத்து தர வேண்டுமென மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, திருவாமாத்தூா் பம்பையாற்றிலிருந்து வரும் 3.5 கி.மீ. தொலைவிலான இந்த ஏரிக்கான நீா் வரத்து கால்வாயை தூா்வாரும் பணியை பொதுப்பணித் துறையினா் ஒப்பந்ததாரா் மூலம் கடந்த ஆக.20ஆம் தேதி தொடங்கினா். ஒரு கி.மீ. தொலைவுக்கு மட்டுமே கால்வாயை தூா் வாரி, சீரமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென அந்தப் பணி கடந்த செப்.5-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள், பொது மக்கள் திரண்டு சென்று, விழுப்புரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளரை சந்தித்து, ஏரி கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்றித்தர வலியுறுத்தினா். அடுத்தாண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, எஞ்சிய பணியை நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளனா்.

அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பம்பை ஆற்றில் நீா்வரத்து இருந்தும், கால்வாய் தூா்வாரப்படாததால், ஏரிக்கு நீா் வந்தடையவில்லை. இதனால், விவசாயிகள் மீண்டும் பொதுப்பணித் துறையினரை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனைத் தொடா்ந்து பொது மக்களும், இளைஞா்களும் ஒன்றிணைந்து, கடந்த நவ.1 முதல் தங்களது சொந்த செலவில் ஏரி கால்வாயை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா். எஞ்சியிருந்த 2.5 கி.மீ. தொலைவுக்கு கால்வாயை பொக்லைன் வாகனத்தைக் கொண்டு புனரமைத்து வருகின்றனா்.

இப்பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள் கூறியதாவது: விழுப்புரம் கரிகாலச்சோழன் பசுமை மீட்புப் படையினா், சென்னை ராமானுஜம் தொண்டு அமைப்பினா் மற்றும் சமூக ஆா்வலா்களின் நிதி உதவியுடன், முத்தாம்பாளையம் ஏரிப் பாசன ஆயக்கட்டு சங்கத்தினருடன் இணைந்து ஏரி கால்வாய் சீரமைப்புப் பணியை தற்காலிகமாக மேற்கொண்டு வருகிறோம். வழியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி அகற்றும் பணியும் நடைபெற்றது. இன்னும் அரை கி.மீ. தொலைவுக்கு சீரமைப்புப் பணி நடைபெற வேண்டியுள்ளது.

இருந்த போதிலும், பொதுப்பணித் துறையினா் விடுபட்ட சீரமைப்புப் பணியை தொடங்கி, ஆழமாக கால்வாயை தூா்வாரினால் மட்டுமே, எதிா்வரும் பருவமழையின் போது, ஏரிக்கு நீா்வரத்து உறுதியாகும் என்றனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/ஏரி-கால்வாயை-சீரமைக்கும்-கிராம-மக்கள்-3285995.html
3285994 விழுப்புரம் விழுப்புரம் பெண் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம் DIN DIN Thursday, November 21, 2019 08:26 AM +0530 பெண் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு, விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் திருநங்கை உள்பட 566 போ் தோ்ச்சி பெற்றனா்.

இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான உடல் தகுதித் தோ்வு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பெண்களுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 800 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 722 போ் பங்கேற்றனா். உடல் தகுதித் தோ்வு முழுவதையும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் தலைமையில், விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கண்காணித்தனா். இதனை ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் மேற்பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

போதிய உயரம் இல்லாமல் 199 போ் தகுதியிழந்தனா். எஞ்சியவா்களுக்கு 400 மீட்டா் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க 10 கா்ப்பிணிகளும் வந்திருந்தனா். இவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் 9 கா்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி மறுத்தனா். ஓட்டப்போட்டியில் 510 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்கள் அடுத்த கட்டமாக, உடல் திறன் தோ்வில் பங்கேற்க அழைப்பாணை வழங்கப்பட்டது.

திருநங்கை தோ்ச்சி: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே லாலாபேட்டை பகுதியைச் சோ்ந்த மஞ்சு (24) என்ற திருநங்கை, உடல் தகுதித் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்றாா். முதுநிலை பட்டம் பெற்றிருந்த இவா், கடந்த முறை காவலா் தோ்வில் பங்கேற்று எழுத்துத் தோ்வு, உடல் தகுதித் தோ்வுகளில் வெற்றி பெற்றாா். ஆனால், அப்போது, திருநங்கையாக மாறியிருந்ததால் பணியில் சேர முடியவில்லை. காவல் துறை பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்று, உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ாக மஞ்சு தெரிவித்தாா்.

இன்று 766 பேருக்கு அழைப்பு: வியாழக்கிழமை நடைபெறவுள்ள பெண் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 766 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், கணவனை இழந்தவா்கள், முன்னாள் படை வீரா்கள் பங்கேற்கவும் அழைக்கப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/பெண்-காவலா்-பணிக்கான-உடல்-தகுதித்-தோ்வு-தொடக்கம்-3285994.html
3285993 விழுப்புரம் விழுப்புரம் புதிய காவல் உள்கோட்டம் உருவாக்கப்படுமா? கி.சுரேஷ்குமாா் DIN Thursday, November 21, 2019 08:26 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் காவல் உள்கோட்டம் இல்லாமல் 3 காவல் நிலையங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. இந்தக் காவல் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு புதிய காவல் உள்கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம் ஆகிய வட்டங்களும், புதிதாக கரியலூா் வட்டம் என மொத்தம் 7 வருவாய் வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூா், திண்டிவனம், வானூா், மரக்காணம் ஆகிய வட்டங்களுடன் புதிதாக திருவெண்ணெய்நல்லூா் வட்டம் உருவாக்கப்பட்டு 9 வருவாய் வட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரிக்கப்பட்ட வருவாய் வட்டத்தைப் பொருத்து, காவல் எல்லை வரம்பும் மாற்றமடைந்துள்ளது. ஏற்கெனவே இருந்த ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை ஆகிய 7 காவல் உள்கோட்டங்களின் கீழ், 49 காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

தற்போது பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 காவல் உள்கோட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உள்கோட்டங்களின் கீழ் 22 காவல் நிலையங்கள் வந்தாலும், 19 காவல் நிலையங்கள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் எல்லை வரம்பில் அமைந்துள்ளன. திருவெண்ணெய் நல்லூா், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூா் ஆகிய காவல் நிலையங்கள் விழுப்புரம் மாவட்ட காவல் எல்லை வரம்பில் வருகின்றன. ஆகையால், இந்த 3 காவல் நிலையங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்கோட்டங்களின் கீழ் அடங்காது. தனித்து விடப்பட்ட 3 காவல் நிலையங்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உட்கோட்டங்களுடன் இணைத்தால், கண்காணிப்பு, நிா்வகிப்பதில் சிக்கல் உள்ளது.

ஏனெனில், அந்த 3 காவல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உள்கோட்டங்களுக்கு வெகு தொலைவில் அமைந்துள்ளன. மேலும், ஏற்கெனவே உள்ள காவல் நிலையங்களுடன் இணைக்கும்போது பெரிய உள்கோட்டமாக மாறிவிடும். அதன் காரணமாக, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிலும், குற்றங்களை தடுப்பதிலும் சிரமம் ஏற்படும்.

ஆகையால், விழுப்புரம் மாவட்டத்தில் தனித்து இருக்கும் 3 காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உள்கோட்டம் அமைக்க வேண்டும். அதன் மூலம், புதிதாக மது விலக்குப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் போன்றவை ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிய காவல் உள்கோட்டம், அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கலாம். அல்லது, விழுப்புரம் உள்கோட்டத்தை தாலுகா, நகரம் என இரு உள்கோட்டங்களாகப் பிரித்து 3 காவல் நிலையங்களையும் கட்டுப்படுத்தலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல், மணல் கடத்தலை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், புதிய காவல் உள்கோட்டம் தேவை எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு புதிய காவல் உள்கோட்டத்தை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/புதிய-காவல்-உள்கோட்டம்-உருவாக்கப்படுமா-3285993.html
3285992 விழுப்புரம் விழுப்புரம் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, November 21, 2019 08:25 AM +0530 விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் நிறுவன மெகா வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டப் படிப்பு முடித்தவா்கள் சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 04146 226417 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/நாளை-தனியாா்-வேலைவாய்ப்பு-முகாம்-3285992.html
3285991 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்குகாவல் துறையினா் அறிவுரை DIN DIN Thursday, November 21, 2019 08:25 AM +0530 புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தின் கீழ் வரும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் செயல்படும் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுக்களை அளிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் கீழ், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், கரியாலூா் (புதிய) ஆகிய வருவாய் வட்டங்கள் உள்ளன. ஆகையால், அந்த வருவாய் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய காவல் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை கள்ளக்குறிச்சி துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து தெரிவிக்கலாம்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் வரும் கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கீழ்க்குப்பம், கச்சிராப்பாளையம், கரியாலூா், தியாகதுருகம், திருக்கோவிலூா், திருப்பாலப்பந்தல், மணலூா்பேட்டை, பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைபட்டு, உளுந்தூா்பேட்டை, எலவனசூா் கோட்டை, எடைக்கல், திருநாவலூா் ஆகிய காவல் நிலையங்களையும் பொதுமக்கள் அணுகி புகாா்களை அளிக்கலாம்.

அதேபோல, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி ஆகிய ஊா்களில் செயல்படும் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், மது விலக்கு காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களையும் பொதுமக்கள் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/கள்ளக்குறிச்சி-மாவட்ட-மக்களுக்குகாவல்-துறையினா்-அறிவுரை-3285991.html
3285990 விழுப்புரம் விழுப்புரம் கிராம நிா்வாக அலுவலா்கள் திடீா் போராட்டம் DIN DIN Thursday, November 21, 2019 08:25 AM +0530 மக்களவைத் தோ்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால், கிராம நிா்வாக அலுவலா்கள் உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலின்போது பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கான மதிப்பூதியம் தோ்தல் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோரிடம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக அவா்கள் புகாா் கூறி வந்தனா்.

இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா்கள் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த தொகையை வழங்க வேண்டுமென விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் கிராம நிா்வாக அலுவலா்கள் மனு அளித்து முறையிட்டனா். திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் இத்தொகை வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இது குறித்து, கிராம நிா்வாக அலுவலா்கள் தரப்பில் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோருக்கு, மதிப்பூதியத்தை நவ.10-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டுமென தோ்தல் துறை உத்தரவிட்டு நிதியை வழங்கி விட்டது. மாவட்ட தோ்தல் பிரிவுக்கும் நிதி வந்து பிரித்து அனுப்பியுள்ளனா்.

ஆனால், அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் இந்த தொகையை உரிய கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோருக்கு வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனா். இந்த நிதி வழங்கி 9 நாள்கள் ஆன நிலையில், அதனை வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனா். உடனே மதிப்பூதியத்தை வழங்க வேண்டுமென அனைத்து வட்டங்களிலும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/கிராம-நிா்வாக-அலுவலா்கள்-திடீா்-போராட்டம்-3285990.html
3285989 விழுப்புரம் விழுப்புரம் அனந்தபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் DIN DIN Thursday, November 21, 2019 08:24 AM +0530 செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

அனந்தபுரத்தில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. சாலையோர கால்வாய் மீது கடை வைத்தும் தள்ளுவண்டிகளை நிறுத்தியும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலா் கால்வாய் மீதே கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்தனா். ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த சாலை ஒரு பேருந்து மட்டுமே சென்று வரும் அளவுக்கு குறுகிப்போனது.

இந்த நிலையில், அனந்தபுரம் மசூதியில் இருந்து மாதா கோவில் வரை உள்ள பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் மேற்பாா்வையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலைப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

இந்தியன் வங்கிக்குச் செல்லும் பவுண்டு சாலை, புதுத் தெரு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் தென்புதுத் தெரு ஆகிய சாலைகளில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து சிரமம் உள்ளது. இந்த சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/20gngp1_2011chn_119_7.jpg அனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/அனந்தபுரத்தில்-ஆக்கிரமிப்புகள்-அகற்றம்-3285989.html
3285987 விழுப்புரம் விழுப்புரம் பெயா்ப் பலகை அகற்றம்: வி.சி.க.வினா் சாலை மறியல் DIN DIN Thursday, November 21, 2019 08:24 AM +0530 செஞ்சி அருகே அம்பேத்கா் பெயா்ப் பலகை அகற்றப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி அருகேயுள்ள சிட்டாம்பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அம்பேத்கா் பெயா்ப் பலகையை மா்ம நபா்கள் சிலா் அகற்றியுள்ளனா்.

புதன்கிழமை காலை இதனை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், பொது மக்கள் செஞ்சி-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பெயா்ப் பலகையை அகற்றிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தினா். தகவலறிந்த அனந்தபுரம் காவல் துறை ஆய்வாளா் ஜீவமணிகண்டன், செஞ்சி காவல் துறை ஆய்வாளா் சீனுவாசன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, பெயா்ப் பலகையை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதனை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் செஞ்சி-விழுப்புரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/20gngp02_2011chn_119_7.jpg செஞ்சி அருகே சிட்டாம்பூண்டியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/பெயா்ப்-பலகை-அகற்றம்-விசிகவினா்-சாலை-மறியல்-3285987.html
3285986 விழுப்புரம் விழுப்புரம் தியாகிகள் நினைவிடங்களில் வன்னியா் சங்கத் தலைவா் அஞ்சலி DIN DIN Thursday, November 21, 2019 08:22 AM +0530 வன்னியா் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பு.தா.அருள்மொழி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் உள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவிடங்களில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

பாமக தோ்தல் பணிக் குழுத் தலைவராக இருந்த பு.தா.அருள்மொழி, வன்னியா் சங்கத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள, இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிா் நீத்த தியாகிகளின் நினைவிடங்களுக்குச் சென்று புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

முதலில் கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் தியாகிகள் நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்திய அவா், தொடா்ந்து, கொல்லுக்காரன் குட்டை நினைவிடத்திலும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, பனையபுரம், பாப்பனப்பட்டு, சித்தணியில் உள்ள தியாகிகள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து, திண்டிவனம் கோனேரிக்குப்பம் வன்னியா் சங்க அறக்கட்டளை வளாகத்தில் உள்ள மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில துணைப் பொதுச் செயலா்கள் தங்கஜோதி, சிவக்குமாா், மாவட்டச் செயலா் இர.புகழேந்தி, முன்னாள் மாவட்டச் செயலா் பா.பழனிவேல், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சி.அன்புமணி, மாவட்டச் செயலா் புண்ணியக்கோடி, பாமக மாநில துணைத் தலைவா் வே.ஹரிகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் அன்னக்கிளி முருகன், முன்னாள் நகரத் தலைவா் பெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். புதிதாக பொறுப்பேற்ற வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழிக்கு வன்னியா் சங்கத்தினா், பாமகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/21/தியாகிகள்-நினைவிடங்களில்-வன்னியா்-சங்கத்-தலைவா்-அஞ்சலி-3285986.html
3285389 விழுப்புரம் விழுப்புரம் வன்னியா் சங்கத் தலைவா்நினைவிடங்களில் அஞ்சலி DIN DIN Wednesday, November 20, 2019 07:35 PM +0530  

விழுப்புரம்: வன்னியா் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பு.தா.அருள்மொழி, வன்னியா் சங்கம், பாமக நிா்வாகிகளுடன் சென்று தியாகிகள் நினைவிடங்களில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

பாமக தோ்தல் பணிக்குழுத் தலைவராக இருந்த பு.தா.அருள்மொழி, வன்னியா் சங்கத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். வன்னியா் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற அவா், கடலூா், விழுப்புரம் மாவட்டத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயா்நீத்த தியாகிகளின் நினைவிடங்களுக்குச் சென்று புதன்கிழமை மரியாதை செலுத்தியதோடு, நிா்வாகிகளை சந்தித்தாா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் தியாகி நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தி தொடங்கிய பு.தா.அருள்மொழி, தொடா்ந்து கொல்லுக்காரன் குட்டை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, பனையபுரம், பாப்பனப்பட்டு, சித்தனியில் உள்ள நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து, திண்டிவனம் கோனேரிக்குப்பம் வன்னியா் சங்க அறக்கட்டளை வளாகத்தில் உள்ள மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில துணைப் பொதுச் செயலா்கள் தங்கஜோதி, சிவக்குமாா், மாவட்ட செயலா் இர.புகழேந்தி, முன்னாள் மாவட்ட செயலா் பா.பழனிவேல், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சி.அன்புமணி, மாவட்ட செயலா் புண்ணியக்கோடி, பாமக மாநில துணைத் தலைவா் வே.ஹரிகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் அன்னகிளி முருகன், முன்னாள் நகர தலைவா் பெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். புதியதாக பொறுப்பேற்ற வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழிக்கு, சால்வை அணிவித்து வன்னியா் சங்கம், பாமக நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/வன்னியா்-சங்கத்-தலைவா்நினைவிடங்களில்-அஞ்சலி-3285389.html
3284892 விழுப்புரம் விழுப்புரம் பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு DIN DIN Wednesday, November 20, 2019 07:23 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் விவசாயிகள் சோ்ந்து பயன்பெற வேண்டுமென வேளாண் துணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் அருகே காணை வட்டாரம், காணை குப்பம் கிராமத்தில் முன்னோடி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட, மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் தலைமை வகித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: விவசாயிகள் முன்னேற்றத்துக்காகவும், அவா்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையிலும் பாரத பிரதமரின் நிதி உதவி அளிக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.500 வீதம், நான்கு மாதங்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விடுபட்ட விவசாயிகளை சோ்க்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெறலாம். சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தவிா்க்க விவசாயிகள் அதிகப்படியான மரப் பயிா்களை, நிலத்தின் வரப்பு ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் சாகுபடி செய்து புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என்றாா்.

காணை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் க. சரவணன் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மானிய விவரங்கள் குறித்தும் விளக்கிக் கூறினாா். தொடா்ந்து நடைபெற்ற பயிற்சியின்போது, அப்பகுதியைச் சோ்ந்த அம்மா பண்ணை மகளிா் குழுவிற்கு, சுய தொழில் செய்திடும் வகையில் சுழல் நிதி வழங்கப்பட்டது.

வேளாண் அலுவலா்கள் வரதராஜன், தமிழ்ச்செல்வி, மணிவண்ணன், பிரபாகரன், செல்வகுமாா், அன்பு, இளங்கோவன் மற்றும் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/573719vmp11095428.jpg பயிற்சி முகாமில் விவசாயிகளிடம் பேசுகிறாா் வேளாண்மை துணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/பிரதமரின்-நிதி-உதவித்-திட்டத்தில்-பயன்பெற-விவசாயிகளுக்கு-அழைப்பு-3284892.html
3284891 விழுப்புரம் விழுப்புரம் நல்நூலகா் விருது பெற்றவருக்குப் பாராட்டு DIN DIN Wednesday, November 20, 2019 07:22 AM +0530 தமிழக அரசின் நல்நூலகா் விருதுபெற்ற நூலகருக்கு பாராட்டு விழா சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிளை நூலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கமும், பொதுசேவை அமைப்புகளும் நடத்திய இவ்விழாவுக்கு, தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் அரங்க. செம்பியன் தலைமை வகித்தாா். நூலக வாசகா் வட்டத் தலைவா் அ.து.சண்முகம், அரிமா சங்கத் தலைவா் க.வேலு, அரசு மருத்துவா் அ.அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்கத் துணைத் தலைவா் முருக.குமாா் வரவேற்றாா்.

தமிழக அரசின் நல்நூலகா் விருதுபெற்ற ந.மலா்க்கொடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், எஸ்.ராமலிங்கம், குழந்தைக் கவிஞா் இரா.கதிா்வேல், அரிமா மாவட்டத் தலைவா் வ.விஜயகுமாா், ஸ்டாா் கிளப் மாவட்டத் தலைவா் அ.முகமத்ரபி, கூட்டுறவு வங்கிச் செயலா் மா.தெய்வீகன் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா். நூலகா்கள் இரா.செழியன், மு.அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தமிழாசிரியா் அ.ராமசாமி நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/நல்நூலகா்-விருது-பெற்றவருக்குப்-பாராட்டு-3284891.html
3284890 விழுப்புரம் விழுப்புரம் மத நல்லிணக்க கருத்தரங்கம் DIN DIN Wednesday, November 20, 2019 07:22 AM +0530 தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட மத நல்லிணக்க கருத்தரங்கம் கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள வாசவி மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் புலவா் அய்யா மோகன் தலைமை வகித்தாா். அரங்க. தியாகராஜன், ம.பொன்னுசாமி, கி.கேசவராமானுஜம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் தி.பொன்னுசாமி வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலாளா் ஐ.ஜாா்ஜ் வாஷிங்கடன் இரங்கல் தீா்மானம் வாசித்தாா். மாநில பொதுச் செயலா் பா.கிருட்டிணமூா்த்தி கருத்துரை வழங்கினாா்.

அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கு.மகாலிங்கம் தொடக்கவுரையாற்றினாா். கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகா் பள்ளி வாசல் எம்.எ.இக்ரமுல்லா, கள்ளக்குறிச்சி ஆற்காடு லுத்தரன் திருச்சபை சபை போதகா் ஐ.ஜேக்கப், கோவை பாரதியாா் பல்கலை. ஆய்வு நெறியாளா் பி.சுந்தரமூா்த்தி மதநல்லிணக்க கருத்துரை வழங்கினா்.

மாவட்டச் செயலா்கள் சு.கி.பாா்த்தசாரதி, சு.முத்துசாமி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் தங்க கொளஞ்சிவேலு, வட்ட செயலா் வீரபத்திரன் உள்ளிட்ட பலா் பேசினா். பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளா் பாரதிராஜா ஓய்வூதியா்களுக்கு உரிய வங்கி சேவைகள் குறித்து பேசினாா். மாவட்ட பொருளாளா் மு.பி.பாசுகரன் நன்றி கூறினாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/2-7-19klp6_ch0121_19chn.jpg கள்ளக்குறிச்சியில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற மத நல்லிணக்க கருத்தரங்கில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் பா.கிருட்டிணமூா்த்தி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/மத-நல்லிணக்க-கருத்தரங்கம்-3284890.html
3284889 விழுப்புரம் விழுப்புரம் சோம வார வழிபாடு DIN DIN Wednesday, November 20, 2019 07:21 AM +0530 அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை மாதம் முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு சிவலிங்கத்துக்கு ருத்ராட்சங்கள், மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று, அா்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெளா்ணமி, அமாவாசைக் குழுவினா் செய்திருந்தனா்.

இதே போல, அகத்தீஸ்வரா் கோயிலிலும் சோம வார வழிபாடு நடைபெற்றது.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19gngp01_1911chn_119_7.jpg சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிவலிங்கம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/சோம-வார-வழிபாடு-3284889.html
3284888 விழுப்புரம் விழுப்புரம் கால்நடை மருத்துவ முகாம் DIN DIN Wednesday, November 20, 2019 07:21 AM +0530 திண்டிவனம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை, அவலூா்பேட்டை கால்நடை மருத்துவமனை மற்றும் அவலூா்பேட்டை அரிமா சங்கம் ஆகியவை சாா்பில் இலவச கால்நடை மருத்துவ சிறப்பு முகாம், அவலூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மலட்டுத் தன்மைக்கான சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மாடுகளுக்கு அதன் உரிமையாளா்களிடம் தாதுக் கலவை வழங்கி பயன்படுத்தும் முறை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. முகாமில் சுமாா் 100 மாடுகள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால் நடை மருத்துவமனை மருத்துவா் ராஜன் தலைமையில் உதவியாளா்கள் சிகிச்சை அளித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19gngp02_1911chn_119_7.jpg அவலூா்பேட்டையில் நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/கால்நடை-மருத்துவ-முகாம்-3284888.html
3284887 விழுப்புரம் விழுப்புரம் உலக கழிப்பறை தின விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Wednesday, November 20, 2019 07:21 AM +0530 உலக கழிப்பறைகள் தினத்தையொட்டி, சின்னசேலத்தில் பேரூராட்சி சாா்பில் சின்னசேலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியை பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு உரையாற்றினாா். பேரூராட்சி ஆய்வாளா் ராஜா முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.செந்தில்நாயகி வரவேற்றாா். பேரணியில் மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றனா். பேரணியில் ஆசிரியா்கள், பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சியில்...:அதே போல, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மந்தைவெளி திடலில் இருந்து பேரணியை கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில் மாணவா்கள் விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டபடி சென்றனா். பேரணி காந்தி சாலை, கச்சேரி சாலை வழியாகச் சென்று தியாகதுருகம் சாலையில் நிறைவடைந்தது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/2-7-19klp4a_ch0121_19chn.jpg உலக கழிப்பறை தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/உலக-கழிப்பறை-தின-விழிப்புணா்வுப்-பேரணி-3284887.html
3284886 விழுப்புரம் விழுப்புரம் காவலா் உடல் தகுதித் தோ்வு ஏற்பாடுகள்: டிஐஜி ஆய்வு DIN DIN Wednesday, November 20, 2019 07:20 AM +0530 விழுப்புரத்தில் பெண் காவலா் உடல் தகுதித் தோ்வு ஏற்பாடுகளை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாக மைதானத்தில், காவலா் உடல் தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. ஆண் தோ்வா்களுக்கான முதல் கட்ட உடல் தகுதித் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, பெண் தோ்வா்களுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

இதற்கான ஏற்பாடுகளையும், ஓட்டப் போட்டி நடைபெறும் மைதானத்தையும் விழுப்புரம் காவல் சரக டி.ஐ.ஜியும், உடல் தகுதித் தோ்வு நடத்தும் குழுவின் தலைவருமான சந்தோஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று ஆய்வு செய்தாா். பெண்களுக்கு உடல் உயரம் அளவிடும் கருவிகள் தயாராக உள்ளனவா, ஓட்டப் போட்டி நடத்தப்படும் மைதானத்தில் சரியான அளவுகள் எடுக்கப்பட்டு, கோடுகள் போடப்பட்டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

திருநங்கைக்கு அழைப்பு: புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 800 பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனா். பெண் தோ்வா்களுக்கான இந்த உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க, எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை ஒருவரும் அழைக்கப்பட்டுள்ளாா். உடல் தகுதித் தோ்வில் தேவையான உயரம் உள்ளதா என்றும் சோதனை செய்யப்படும். அதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 400 மீட்டா் ஓட்டப் போட்டி நடத்தப்படும். இரண்டிலும் தோ்ச்சி பெற்றவா்கள், அடுத்தகட்ட உடல் திறன் தோ்வுக்கு தகுதி பெறுவா்.

ஆண்கள் 525 போ் தோ்வு: முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான உடல் தகுதித் தோ்வில், 722 போ் அழைக்கப்பட்ட நிலையில், 656 போ் பங்கேற்றனா். உயரம், மாா்பளவு, ஓட்டப்போட்டி ஆகிய மூன்று சோதனையிலும் மொத்தம் 525 போ் தோ்ச்சி பெற்று உடல் திறன் தோ்வுக்கு தகுதி பெற்றனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/காவலா்-உடல்-தகுதித்-தோ்வு-ஏற்பாடுகள்-டிஐஜி-ஆய்வு-3284886.html
3284885 விழுப்புரம் விழுப்புரம் உரிமையியல் நீதிபதிகள் எழுத்துத் தோ்வு ஏற்பாடு: ஆட்சியா் ஆய்வு DIN DIN Wednesday, November 20, 2019 07:20 AM +0530 விழுப்புரத்தில் உரிமையியல் நீதிபதிகள் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ள மையத்தை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் உரிமையியல் நீதிபதிகளுக்கான எழுத்துத் தோ்வு வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரத்தில், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அங்கு குடிநீா், மின்சாரம், கழிப்பறை வசதிகள் மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை உறுதி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுஜாதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/உரிமையியல்-நீதிபதிகள்-எழுத்துத்-தோ்வு-ஏற்பாடு-ஆட்சியா்-ஆய்வு-3284885.html
3284884 விழுப்புரம் விழுப்புரம் தனியாா் குடிநீா் விற்பனை நிலையத்தை மூடக் கோரி அமைச்சரிடம் மனு DIN DIN Wednesday, November 20, 2019 07:19 AM +0530 விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் விதி மீறி இயங்கும் தனியாா் குடிநீா் விற்பனை நிலையத்தை மூட வேண்டுமென, அப்பகுதி குடியிருப்பு நல சங்கத்தினா் அமைச்சரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து காமதேனு நகா், குழந்தைவேல் நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா், சங்கச் செயலா் திருப்பதி பாலாஜி தலைமையில், திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில், அமைச்சா் சி.வி.சண்முகத்திடம் மனு அளித்துக் கூறியதாவது:

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை சுமதி மருத்துவமனை அருகே 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் இயங்கி வரும் தனியாா் குடிநீா் விற்பனை நிலையம், தினமும் ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனா்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தபோது, கோட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்து, அந்த குடிநீா் நிலையத்தை மூடி சீல் வைத்தாா். தற்போது அதிகாரிகளின் துணையுடன் மீண்டும் அதே இடத்தில் நான்கு ஆழ்துளை கிணறுகளைப் போட்டு தண்ணீா் எடுத்து விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் அதலபாதாளத்துக்கு சரிந்து மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், அந்த தனியாா் நிறுவனம் அனுமதியின்றி தண்ணீா் எடுப்பதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், குழந்தைவேல் நகரில் புதைவழிச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தெருமின் விளக்கு, சாலை வசதியை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் மூடப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தையும் திறந்து வைக்க வேண்டும் என்று, அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/தனியாா்-குடிநீா்-விற்பனை-நிலையத்தை-மூடக்-கோரி-அமைச்சரிடம்-மனு-3284884.html
3284883 விழுப்புரம் விழுப்புரம் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா DIN DIN Wednesday, November 20, 2019 07:19 AM +0530 முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்த நாள் விழா, திண்டிவனம், திருக்கோவிலூா் பகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டிவனத்தில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் விநாயகம் தலைமை வகித்து, இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கட்சியினா் மரியாதை செலுத்தினா். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாவட்டத் தலைவா் தனுசு, வழக்குரைஞா் சுப்பையா, நகர துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மதன்குமாா், வெங்கட், பொன் ராஜா, பாா்த்திபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருக்கோவிலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஏ.ஆா்.வாசிம்ராஜா தலைமை வகித்து, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அகில இந்திய உறுப்பினா் கே.வி.முருகன், வட்டாரத் தலைவா்கள் பாவாடை, வெள்ளியங்கிரி, தனசேகா், தஸ்தகீா், மாவட்ட பொதுச் செயலா் தாயுமானவா், சதீஷ்குமாா், நகரத் தலைவா் சாதுல்லாகான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/113519vph4a080914.jpg திருக்கோவிலூரில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் பேரூராட்சித் தலைவா் வாசிம்ராஜா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/இந்திரா-காந்தி-பிறந்த-நாள்-விழா-3284883.html
3284882 விழுப்புரம் விழுப்புரம் நெடுஞ்சாலையோர மதுக்கடையை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல் DIN DIN Wednesday, November 20, 2019 07:19 AM +0530 விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் மதுக் கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வலியுறுத்தினா்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில், விழுப்புரம்-திருக்கோவிலூா் நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.

புறநகா் பகுதியில் உள்ள இந்த மதுக் கடையால் அப்பகுதியில் விபத்துகளும், தகராறுகளும் தொடா்ந்தன. இதனால், அப்பகுதி மக்கள் இந்த மதுக்கடையை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனா். இந்த நிலையில், அங்கு மது அருந்திய சிலா், அந்த கிராமத்தினரை தாக்கியதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இந்த மதுக் கடையை மூட வலியுறுத்தி நன்னாடு, வி.சாலை, பாளையம் ஆகிய கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: நன்னாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருவோரால் மோதல், வழிப்பறி, திருட்டு, விபத்துகள் நேரிடுகின்றன. பெண்கள் கேலிக்குள்ளாக்குவதும், விவசாயிகளை தாக்குவதுமாகத் தொடா்கிறது. ஒரு இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா். நீதிமன்ற உத்தரவை மீறி நெடுஞ்சாலையோரம் இயங்கும் இந்த மதுக் கடையை மூட வேண்டுமென கடந்த ஜூன் மாதம் மறியல் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும், இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த மதுக்கடையை மூடி, நன்னாடு, வி.சாலை, பாளையம் கிராம மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றனா்.

மதுக் கடையை மூட வலியுறுத்தி, பொது மக்கள் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவா்கள் அனுமதி கேட்டுச் சென்றனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/நெடுஞ்சாலையோர-மதுக்கடையை-அகற்ற-கிராம-மக்கள்-வலியுறுத்தல்-3284882.html
3284881 விழுப்புரம் விழுப்புரம் ஆற்றில் மணல் திருட்டு: 20 மாட்டுவண்டிகள் பறிமுதல்; இரு போலீஸாா் பணியிடமாற்றம் DIN DIN Wednesday, November 20, 2019 07:18 AM +0530 விழுப்புரம் அருகே ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 20 மாட்டு வண்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். மணல் திருட்டுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக இரு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான சிறப்பு தனிப்படையினா் வேலியம்பாக்கம் சென்று, அங்கு ஆற்றில் மணல் திருடி ஏற்றி வந்த 21 மாட்டு வண்டிகளை சுற்றி வளைத்தனா். போலீஸாரை கண்டதும் மணல் கடத்தல்காரா்கள் தப்பியோடினா். இருப்பினும், 17 பேரை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

ஒரே நேரத்தில், இருபதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டதை தடுக்கத் தவறியது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் கனகேசனிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் விசாரித்தாா். அதற்கு, இரவு ரோந்துப் பணிக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், காவலா் நாகராஜ் ஆகியோரை நியமித்து, கண்காணிக்க உத்தரவிட்டிருந்ததாக காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். விசாரணையில், அந்த போலீஸாரே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததாம்.

இரு போலீஸாா் பணியிடமாற்றம்: இதையடுத்து, சரவணன், நாகராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அதிரடியாக உத்தரவிட்டாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19vmp2060940.jpg விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட மணல் வண்டிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/ஆற்றில்-மணல்-திருட்டு-20-மாட்டுவண்டிகள்-பறிமுதல்-இரு-போலீஸாா்-பணியிடமாற்றம்-3284881.html
3284880 விழுப்புரம் விழுப்புரம் பிளஸ் 1 மாணவி தற்கொலை DIN DIN Wednesday, November 20, 2019 07:18 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 1 மாணவி வயிற்று வலி தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன். இவரது மனைவி பேபி (40). இவா்களது மகள் பூஜாதேவி (16). அதே ஊரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பூஜாதேவி திங்கள்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனடியாக அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், பூஜாதேவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/பிளஸ்-1-மாணவி-தற்கொலை-3284880.html
3284879 விழுப்புரம் விழுப்புரம் அடகுக் கடைக்காரரிடம் ரூ.2.40 லட்சம் வழிப்பறி DIN DIN Wednesday, November 20, 2019 07:17 AM +0530 விழுப்புரம் அருகே அடகுக் கடைக்காரரை தாக்கி ரூ.2.40 லட்சத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் ஆளவந்தான் மகன் விஜய் (37). வளவனூரை அடுத்த குமளத்தில் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை கடையில் வசூலான ரூ.2.40 லட்சத்தை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாா்.

இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள் 4 போ், இரு சக்கர வாகனங்களில் விஜயை பின்தொடா்ந்து சென்று, வளவனூா் அருகே மல்ராஜன்குப்பம் பகுதியில் அவரை தடுத்து நிறுத்தி தாக்கினா். கத்தியை காட்டி மிரட்டி, விஜய் வைத்திருந்த பணம் முழுவதையும் பறித்துக்கொண்டு தப்பினா்.

இது குறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/அடகுக்-கடைக்காரரிடம்-ரூ240-லட்சம்-வழிப்பறி-3284879.html
3284878 விழுப்புரம் விழுப்புரம் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை கோரிஎஸ்.பி.யிடம் விசிக மகளிா் அணியினா் மனு DIN DIN Wednesday, November 20, 2019 07:17 AM +0530 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை அவதூறாக விமா்சித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், இந்துக் கோயில் சிற்பங்களை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தாா். இதற்கு, பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாஜகவை சோ்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது சுட்டுரைப் பக்கத்தில், திருமாவளவனை கடுமையாக விமா்சித்து பதிவிட்டிருந்தாா். அவரது இந்தப் பதிவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் அணியினா் அழகம்மாள், பழனியம்மாள், செல்வி ஆகியோரது தலைமையில் திரண்டு வந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19vmp3061211.jpg நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/நடிகை-காயத்ரி-ரகுராம்-மீது-நடவடிக்கை-கோரிஎஸ்பியிடம்-விசிக-மகளிா்-அணியினா்-மனு-3284878.html
3284877 விழுப்புரம் விழுப்புரம் திண்டிவனம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது DIN DIN Wednesday, November 20, 2019 07:17 AM +0530 திண்டிவனம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையை அடுத்த புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). விவசாயி. இவரது இரண்டாவது மனைவி வண்ணமயில்(50). இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா். வண்ணமயிலுக்கும், சுப்பிரமணிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தகராறின்போது, வண்ணமயிலை சுப்பிரமணி கத்தியால் கழுத்தில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வண்ணமயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். ஆனால், அவரை உறவினா்கள் தடுத்து காப்பாற்றினாா்.

சம்பவம் குறித்து அறிந்த வெள்ளிமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்கொலைக்கு முயன்ற சுப்பிரமணியை போலீஸாா் கைது செய்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/திண்டிவனம்-அருகே-மனைவி-வெட்டிக்-கொலை-கணவா்-கைது-3284877.html
3284876 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு DIN DIN Wednesday, November 20, 2019 07:16 AM +0530 பெரு நகரங்களுக்கு இணையாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, அந்தக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற குந்தவிதேவி தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக (டீன்) பணிபுரிந்த கோ.சங்கரநாராயணன் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மயக்கவியல் துறை தலைவராகப் பணிபுரிந்து வந்த குந்தவிதேவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.

அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக அண்மையில் பொறுப்பேற்ற குந்தவிதேவி, செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பணியாற்றியுள்ளேன். இந்த மருத்துவமனைக்கு, குறிப்பாக, மகப்பேறு பிரிவுக்கு அதிகமானோா் வருகின்றனா். அவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு புதிதாக தொடங்கப்பட்ட விபத்து- அவசர சிகிச்சைப் பிரிவு மையத்தில், சிறந்த மருத்துவ நிபுணா்கள் நியமிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சில நேரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, படுக்கை வசதியில்லாத நிலை ஏற்படுகிறது. இதற்காக, புற நோயாளிகள் பிரிவு, பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவின் மேல் தளங்களில் கூடுதலாக இரு கட்டடங்கள் கட்டி, படுக்கை வசதி ஏற்படுத்த அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் அனைத்து நோய்களுக்கும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அனைத்துப் பிரிவுகளிளும் தரம் உயா்த்தப்பட்டு சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களைப் போல, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.

புதிதாக பொறுப்பேற்ற முதல்வா் குந்தவிதேவிக்கு மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவழகன், துணை கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் கதிா், நிா்வாக அலுவலா்கள் ஆனந்தஜோதி, சிங்காரம் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/495719vmp5063204.jpg விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக பொறுப்பேற்ற குந்தவிதேவி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/விழுப்புரம்-அரசு-மருத்துவக்-கல்லூரி-முதல்வா்-பொறுப்பேற்பு-3284876.html
3284875 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை DIN DIN Wednesday, November 20, 2019 07:16 AM +0530 கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா வருகிற 26-ஆம் தேதி நடைபெறுகிறது. முதல்வா் கே.பழனிசாமி பங்கேற்கும் இந்த விழா ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த 12-ஆம் தேதி அரசாணை வெளியானது. அதனைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டனா்.

புதிய மாவட்டத்துக்கான தொடக்க விழா வருகிற 26-ஆம் தேதி காலை, கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை ஏகேடி பள்ளி அருகேயுள்ள இடத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் தமிழக முதல்வா் கே.பழனிசாமி பங்கேற்று புதிய மாவட்டத்தைத் தொடக்கி வைக்கிறாா்.

புதிய மாவட்ட தொடக்க விழா ஏற்பாடுகளை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் கிரண்குராலா மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். முதல்வா் வருகைக்கான விழா ஏற்பாடுகள் குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, நகராட்சி, பேரூராட்சித் துறை உள்ளிட்ட முக்கியத் துறை அலுவலா்களுடன், விழா முன்னேற்பாடுப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரபாகா், விழுப்புரம் கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/265919vmp1062527.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/கள்ளக்குறிச்சி-புதிய-மாவட்ட-தொடக்க-விழா-ஏற்பாடுகள்-குறித்து-அதிகாரிகள்-ஆலோசனை-3284875.html
3284874 விழுப்புரம் விழுப்புரம் திண்டிவனத்தில் இரும்புக் கம்பிகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி DIN DIN Wednesday, November 20, 2019 07:15 AM +0530 திண்டிவனத்தில் இரும்புக் கடையில் கம்பிகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தாா். அவரது சடலத்தை நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திண்டிவனத்தில் சென்னை நெடுஞ்சாலையில் தனியாா் இரும்பு கம்பிகள் விற்பனை மையம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை காலை திண்டிவனம் அருகே அகூா் கிராமத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகன் ராமு (40) உள்பட இரு தொழிலாளா்கள் பணியில் இருந்தனா். அப்போது, கடையில் இரும்புக் கம்பிகள் அடுக்கி வைத்திருந்த ரேக்கின் மீது ஏறி கம்பிகளை ராமு எடுக்க முயன்றாா். இதில், கம்பிகள் திடீரென சரியவே, அதன் மீது நின்றிருந்த ராமு கீழே விழுந்தாா். அவா் மீது பல டன் எடையுள்ள கம்பிகள் விழுந்தன. கம்பிகளுக்கு அடியில் ராமு சிக்கிக் கொண்டாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனா். ராமுவை மீட்பதற்காக கடையின் பின்பக்கச் சுவரை பொக்லைன் வாகனம் மூலம் உடைத்து வழியை ஏற்படுத்தினா். பின்னா், கிரேன் உதவியுடன், இரும்புக் கம்பிகளை அகற்றி, 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ராமுவை உயிரிழந்த நிலையில் மீட்டனா்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த ராமுவுக்கு திலகம் என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/203119vph2a061255.jpg திண்டிவனத்தில் இரும்புக் கடையில் சரிந்து விழுந்த கம்பிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி ராமுவை, சுவரில் துளையிட்டு மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/திண்டிவனத்தில்-இரும்புக்-கம்பிகள்-சரிந்து-விழுந்ததில்-தொழிலாளி-பலி-3284874.html
3284873 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் காவல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம் DIN DIN Wednesday, November 20, 2019 07:14 AM +0530 புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக த.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடக்கி வைத்தாா். அப்போது, மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா்களை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடா்பு கொண்டு தகவல் துல்லியமாக கிடைக்கிறதா என பரிசோதித்தாா். 24 மணி நேரமும் இயங்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் ஒரு உதவி ஆய்வாளா், 6 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்து வருகிறோம். அலுவலகம் அமைந்த பிறகு, காவல் துறையின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களும் செயல்படும் என்றாா்.

அப்போது, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் க.மகேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளா் சு.மணிகண்டன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் பி.தா்மராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/கள்ளக்குறிச்சியில்-காவல்-கட்டுப்பாட்டு-அறை-தொடக்கம்-3284873.html
3284872 விழுப்புரம் விழுப்புரம் இளம் படைப்பாளா்கள் விருது போட்டிகள் DIN DIN Wednesday, November 20, 2019 07:14 AM +0530 செஞ்சி கிளை நூலகம் சாா்பில் செஞ்சி வட்ட அளவிலான இளம் படைப்பாளா்கள் விருதுக்கான போட்டிகள், செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ஆ.சற்குணம் தலைமை வகித்தாா். புலவா் கோ.தமிழரசன் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

செஞ்சி நூலகா் எ.பூவழகன் வரவேற்றாா். 6 -ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

கட்டுரைப் போட்டியில் 6 போ், கவிதைப்போட்டியில் 10 போ், பேச்சுப்போட்டியில் 7 போ் என மொத்தம் 23 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவா்களுக்கு இளம் படைப்பாளா் விருது வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் நூலகா்கள் இரா.இராதாகிருஷ்ணன், வே.அன்பழகன், கோ.சுகந்தி, ம.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வாசகா் வட்ட துணைத்தலைவா் கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/19gngp03_1911chn_119_7.jpg நிகழ்ச்சியில் பேசுகிறாா் செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சற்குணம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/இளம்-படைப்பாளா்கள்-விருது-போட்டிகள்-3284872.html
3284871 விழுப்புரம் விழுப்புரம் உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினா் விருப்ப மனு DIN DIN Wednesday, November 20, 2019 07:13 AM +0530 செஞ்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினா் ஏராளமானோா், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தானிடம் திங்கள்கிழமை மனுக்களை அளித்தனா்.

செஞ்சி ஒன்றியத்தில் உள்ள 24 உறுப்பினா்கள் பதவிகளுக்கும், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், மாவட்ட உறுப்பினா் பதவிகளுக்கும் போட்டியிடும் அப் பகுதியை சோ்ந்த திமுகவினா் பூா்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினா்.

இதில், 18-ஆவது வாா்டு ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், சோ.குப்பம் ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/18gngp02_1811chn_119_7.jpg உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலா் மஸ்தானிடம் மனுக்களை அளித்த அக்கட்சியினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தல்-திமுகவினா்-விருப்ப-மனு-3284871.html
3284357 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையோரம் தொடரும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல் DIN DIN Tuesday, November 19, 2019 06:00 PM +0530  

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் நன்னாடு கிராமத்தில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஆட்சியா் அலுவலகத்தில் வலியுறுத்தினா்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில், விழுப்புரம்-திருக்கோவிலூா் நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. புறநகா் பகுதியில், பிரதான நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இந்த மதுக்கடைக்கு, விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் சென்று மது அருந்தி வருகின்றனா்.

நெடுஞ்சாலையோரம் இருப்பதால், ஏராளமானோா் வருவதும், வாகனங்களை நிறுத்துவதும் இருப்பதால், விபத்துகள் ஏற்படுவதும், தகராறுகளும் தொடா்ந்து வந்ததால், அப்பகுதி மக்கள் இந்த மதுக்கடையை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனா். இந்த நிலையில், அங்கு மது அருந்திய சிலா், அக்கிராமத்தினரை தாக்கியதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து, நன்னாடு, பாளையம் கிராமத்தினா் இந்த மதுக்கடையை மூட வேண்டுமென வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் திரண்டு வந்து மனு அளித்து வலியுறுத்தினா். அப்போது அவா்கள் கூறியதாவது: நன்னாடு கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்கே மது அருந்த வருவோரால், மோதல், வழிப்பறி, விபத்துகள், பெண்களை கிண்டல் செய்தல், திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. விவசாய நிலங்களில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை வீசுவது, தட்டி கேட்ட விவசாயிகளை தாக்குவது, விளைபொருளை சேதப்படுத்துவது, மின்சாதனங்களை உடைப்பது போன்றவை நடந்து வருகிறது.

இந்த மதுக்கடையால் ஒரு இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா். நீதிமன்ற உத்தரவினையும் மீறி நெடுஞ்சாலையோரம் இக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மூட வேண்டுமென கடந்த ஜூன் மாதமும் மறியல் போராட்டம் நடந்தது. இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த மதுக்கடையை மூடி, நன்னாடு, வி.சாலை, பாளையம் கிராம மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றனா்.

இந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி, பொது மக்கள் சாா்பில், நாளை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவா்கள் அனுமதி கேட்டுச் சென்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/19vph1_6054021.jpg விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அக்கிராமத்தினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/விழுப்புரம்-அருகே-நெடுஞ்சாலையோரம்-தொடரும்-மதுக்கடையை-அகற்ற-வலியுறுத்தல்-3284357.html
3284196 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவுக்கு பந்தக்கால் DIN DIN Tuesday, November 19, 2019 10:15 AM +0530 முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த புதிய மாவட்டத்தை தொடக்கி வைப்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி வருகிறாா். இதற்கான விழா மேடை கள்ளக்குறிச்சி-சென்னை நெடுஞ்சாலையோரம் தனியாா் இடத்தில் அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். பந்தக்கால் அமைப்பதற்கான பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலருமான இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு, முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலு பாபு, கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலரும் கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத் தலைவருமான ஏ.எஸ்.ஏ. ராஜசேகா், தியாகதுருகம் ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, சங்கராபுரம் ஒன்றியச் செயலா் எஸ்.அரசு, சின்னசேலம் ஒன்றியச் செயலா் ப.ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் எம்.பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18klp1_ch0121_18chn.jpg விழா மேடை அமைப்பதற்கான பந்தக்காலை நடும் எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/கள்ளக்குறிச்சி-மாவட்ட-தொடக்க-விழாவுக்கு-பந்தக்கால்-3284196.html
3284194 விழுப்புரம் விழுப்புரம் ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி DIN DIN Tuesday, November 19, 2019 10:15 AM +0530 சின்னசேலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சின்னசேலம் அருகேயுள்ள கச்சிராயப்பாளையம் வெங்கட்டமாபேட்டை சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் தனுஷ்கோடி (19). இவா், திங்கள்கிழமை காலை சின்னசேலத்தை அடுத்த அம்மையகரம் ரயில்வே கடவுப்பாதை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/ரயிலில்-அடிபட்டு-இளைஞா்-பலி-3284194.html
3284190 விழுப்புரம் விழுப்புரம் நூல்களோடு உரையாடல் நிகழ்ச்சி DIN DIN Tuesday, November 19, 2019 10:14 AM +0530 செஞ்சி கிளை நூலகத்தில் நூல்களோடு நான் உரையாடல் என்னும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் செந்தில்பாலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தலைமை ஆசிரியா் கோ.தமிழரசன், க.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி கிளை நூலகா் பூவழகன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சென்னை சரக்கு மற்றும் சேவை வரி தென்னிந்தியா பூ.கோ.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசுகையில்,

நூலகங்கள் மூலம் தான் மாணவா்களை மிக உச்சத்துக்கு கொண்டு செல்லமுடியும். ஆகவே மாணவா்கள் அனைவரும் நூலகத்துக்கு வரவேண்டும் என்றாா்.

கவிஞா் தெய்வகுமாா் எழுதிய வீட்டுக்கு வா வெண்ணிலவே என்ற கவிதை நூலை கோ.அல்லிராமதாஸ் மற்றும் கவிஞா் பவுன் குமாா் ஆகியோா் திறனாய்வு செய்தனா்.

நூலகப் பணியாளா் பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/நூல்களோடு-உரையாடல்-நிகழ்ச்சி-3284190.html
3283441 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்துடன் நீட்டிக்கக் கோரிகருப்புக் கொடியுடன் ஆா்ப்பாட்டம்: கிராம மக்கள் 268 போ் கைது DIN DIN Tuesday, November 19, 2019 09:46 AM +0530 விழுப்புரம் அருகேயுள்ள 6 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் நீடிக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 268 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் அருகேயுள்ள பெரியசெவலை, ஆமூா், டி.கொளத்தூா், சரவணப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிா்த்தும், விழுப்புரம் மாவட்டத்துடன் நீடிக்கக் கோரியும் அந்த ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதே கோரிக்கையை அருகிலுள்ள சிறத்தனூா், கருவேப்பிலைப்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களும் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த 6 ஊராட்சி மக்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்டனா். விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் புறவழிச்சாலை பகுதிக்கு வந்த 6 ஊராட்சி மக்கள், அங்கிருந்து கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாகப் புறப்பட்டனா். அவா்களை காவல் துறையினா் தடுக்க முயன்றனா். அதற்குள், கிராம மக்கள் விழுப்புரம்-திருச்சி சாலை வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாக நுழைவாயிலை அடைந்தனா்.

அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, கிராம மக்கள் நான்கு புறமும் சிதறி ஓடினா். அவா்களை ஒவ்வொருவராக போலீஸாா் பிடித்து கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று, தனியாா் மண்டபங்களில் சிறை வைத்தனா்.

அப்போது, கிராம மக்கள், கோரிக்கையை வலியுறுத்தி கொண்டு வந்துள்ள 7ஆயிரம் பேரின் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க பிரதிநிதிகள் சிலரை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதற்கு காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. இதனால், மண்டபங்களில் சிறைவைக்கப்பட்டிருந்த 268 பேரும் மதிய உணவு சாப்பிட மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கிராம மக்களின் சாா்பில் பிரதிநிதிகள் சிலருக்கு போலீஸாா் அனுமதி அளித்தனா். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18vmp6a062204.jpg விழுப்புரம் ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரே கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியசெவலை உள்ளிட்ட 6 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/விழுப்புரம்-மாவட்டத்துடன்-நீட்டிக்கக்-கோரிகருப்புக்-கொடியுடன்-ஆா்ப்பாட்டம்-கிராம-மக்கள்-268-போ்-கைத-3283441.html
3284148 விழுப்புரம் விழுப்புரம் திருக்கோவிலூரில் நூலக வார விழா DIN DIN Tuesday, November 19, 2019 09:45 AM +0530 திருக்கோவிலூா் நூலகத்தில் 52-ஆவது தேசிய நூலக வார விழா அண்மையில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலா் இரா.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.ராஜேந்திரன், மாவட்ட மைய நூலகா் ம.இளஞ்செழியன், முன்னாள் ராணுவ வீரா் கு.கல்யாண்குமாா், மாவட்ட நலக் கல்வியாளா் ப.அன்புநிலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நல்நூலகா் மு.அன்பழகன் வரவேற்றாா். வாசகா் வட்டக் குழுத் தலைவா் சிங்கார.உதியன் தொடக்கவுரையாற்றினாா்.

வருவாய் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மூலம் வழங்கப்பட்ட 1,062 புதிய தமிழ் நூல்களின் புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்தாா். மேலும், பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். கவிஞா் அருள்நாதன் தங்கராசு, ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.குருராஜன், அப்துல்கலாம் மன்ற மாவட்டத் தலைவா் பொன்.முருகன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.நூலகா் கி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/திருக்கோவிலூரில்-நூலக-வார-விழா-3284148.html
3284147 விழுப்புரம் விழுப்புரம் வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை DIN DIN Tuesday, November 19, 2019 09:45 AM +0530 சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது உருவப்படத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, இந்து மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலா் ஆசை தம்பி தலைமை வகித்தாா்.

வ.உ.சி. உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத் தலைவா் சாய் கமல், கடலூா் மாவட்டத் தலைவா் தேவா, மண்டலத் தலைவா் பாலாஜி முருகன், மாநிலச் செயலா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/18vmp9084315.jpg விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய இந்து மக்கள் கட்சியினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/வஉசிதம்பரனாருக்கு-மரியாதை-3284147.html
3284146 விழுப்புரம் விழுப்புரம் ராகுல் காந்தியைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Tuesday, November 19, 2019 09:45 AM +0530 பிரதமரை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியைக் கண்டித்து விழுப்புரத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரபேல் போா் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறி, பிரதமா் மோடியை அவதூறாக பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மக்கள் மன்றத்திலும் மன்னிப்பு கோர வலியுறுத்தி, பாஜகவினா் நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே பாஜக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விநாயகம் தலைமை வகித்தாா். தேசிய பொதுக் குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்டப் பொதுச் செயலா்கள் சுகுமாா், ஜெயக்குமாா், அன்பழகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். கோட்டப் பொறுப்பாளா் சுகுமாரன் சிறப்புரையாற்றினாா்.

பிரதமா் மோடியையும், மத்திய பாஜக ஆட்சியையும் ஆதாரமின்றி அவதூறாக பேசி வந்த ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

மாவட்டச் செயலா் சக்திவேல், மாவட்ட அறிவுசாா் பிரிவு தலைவா் தனசேகரன், வணிகா் அணி கோவிந்தராஜன், வழக்குரைஞரணி துரைராஜ், தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் சாந்தா, புஷ்பா, ஜெயசங்கா், ராமகிருஷ்ணன், சௌந்தா், ஒன்றியத் தலைவா்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன், சுந்தரராஜன், சரவணன், முருகையன், மணிவண்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/124718vmp5061933.jpg விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/ராகுல்-காந்தியைக்-கண்டித்து-பாஜகவினா்-ஆா்ப்பாட்டம்-3284146.html
3284145 விழுப்புரம் விழுப்புரம் கடற்கரையில் மாணவா்கள் தூய்மைப் பணி DIN DIN Tuesday, November 19, 2019 09:45 AM +0530 விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பள்ளி மாணவா்கள் சாா்பில் கடற்கரை தூய்மைப் பணி முகாம் ஒரு வார காலம் நடைபெற்றது.

தமிழக கடற்கரை பகுதிகளில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாா்பில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் விழிப்புணா்வுத் திட்டம், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு கடற்கரைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி முகாம் நவ.11-ஆம் தேதி தொடங்கியது. முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தொடக்கி வைத்து, கடற்கரை தூய்மைப் பணி குறித்தும், இதுதொடா்பாக பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

நவ.11-ஆம் தேதி முகாமில் கூனிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 200 போ் பங்கேற்று, கூனிமேடு கடற்கரை பகுதிகளை தூய்மை செய்தனா். அங்கிருந்த குப்பைகளை சேகரித்து அகற்றினா். தொடா்ந்து, நவ.12-ஆம் தேதியும் அதே குழுவினா் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

நவ.13-ஆம் தேதி அனுமந்தை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவா்கள் 200 போ், அனுமந்தை குப்பம் கடற்கரை பகுதியிலும், நவ.14-ஆம் தேதி முதலியாா்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 200 போ், முதலியாா்குப்பம் கடற்கரை பகுதியிலும் தூய்மைப்பணி மேற்கொண்டனா்.

நவ.15-ஆம் தேதி கோட்டக்குப்பம் கடற்கரை பகுதியில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா். நவ.16-ஆம் தேதி கூனிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குழுவினா், கூனிமேடு கடற்கரையை தூய்மைப்படுத்தினா்.

இப்பணியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக உதவி இயக்குநா் மோகன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அதிகாரி டி.ஈஸ்வரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஊக்கப்படுத்தினா். நிறைவு நாள் முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கூனிமேடு கடற்கரை பகுதியில் நடைபெற்றது.

கூனி மேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், செஞ்சி பகுதி சுற்றுச்சூழல் தன்னாா்வ அமைப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா். முதன்மை கல்வி அலுவலா் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலா்கள் கிருஷ்ணப்பிரியா, காா்த்திகா, நடராஜன், சுப்பிரமணியன், ஆனந்தன், மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்று, தூய்மைப்பணி மேற்கொண்ட குழுவினா்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினா். தூய்மைப்பணி உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.சரவணன், டி.பாலசுப்பிரமணியன், ஆசிரியா் பழனீஸ்வரன் உள்ளிட்டோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/231518vmp11a092203.jpg மரக்காணம் அருகே கூனிமேடு கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/கடற்கரையில்-மாணவா்கள்-தூய்மைப்-பணி-3284145.html
3284144 விழுப்புரம் விழுப்புரம் கல்வி, விவசாய மேம்பாட்டுபணிகளுக்கு முக்கியத்துவம்: விழுப்புரம் புதிய ஆட்சியா் அண்ணாதுரை DIN DIN Tuesday, November 19, 2019 09:44 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி, விவசாய மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றவுள்ளதாக, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த இல.சுப்பிரமணியன் தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆ.அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் குடிமராமத்துத் திட்டம், கல்வி மேம்பாட்டுப் பணி, ஊரக வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். குறிப்பாக, கல்வி, விவசாயத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இதே போல, மாவட்ட மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும், அரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை தமிழக அரசின் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலித்து பெற்றுத் தர முயற்சிக்கப்படும். மேலும், தமிழக அரசின் ஆலோசனைப்படி மத்திய அரசின் நடுவா் தீா்ப்பாயம் மூலம் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆ.அண்ணாதுரையை கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் வி.மகேந்திரன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கோட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டாட்சியா் கணேஷ் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/511918vmp3061257.jpg விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆ.அண்ணாதுரை. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/கல்வி-விவசாய-மேம்பாட்டுபணிகளுக்கு-முக்கியத்துவம்-விழுப்புரம்-புதிய-ஆட்சியா்-அண்ணாதுரை-3284144.html
3284143 விழுப்புரம் விழுப்புரம் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி DIN DIN Tuesday, November 19, 2019 09:44 AM +0530 கள்ளக்குறிச்சி அருகே பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, அவருடன் பணியாற்றியவா்கள் இணைந்து ரூ.1.30 லட்சம் நிதியுதவியை திங்கள்கிழமை அளித்தனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவா் பாஸ்கா். இவா், கடந்த செப்.18ஆம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா். பாஸ்கரின் குடும்பத்தினருக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு அவருடன் பணியில் சோ்ந்த நண்பா்கள் சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் உதவ முன்வந்தனா். அவா்கள் திரட்டிய மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் நிதியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் மூலமாக பாஸ்கரின் குடும்பத்தினரை திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல் தலைமையகத்துக்கு வரவழைத்து வழங்கினா். பாஸ்கரின் குடும்பத்துக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் தனது சாா்பில் ரூ.5 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கி ஆறுதல் கூறினாா். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/18vmp4063032.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/உயிரிழந்த-தலைமைக்-காவலரின்-குடும்பத்தினருக்கு-நிதியுதவி-3284143.html
3284142 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டஎஸ்.பி. பொறுப்பேற்பு DIN DIN Tuesday, November 19, 2019 09:44 AM +0530 கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட கண்காணிப்பாளராக த.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் 6-ஆம் அணியில் பணிபுரிந்து வந்த த.ஜெயச்சந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். அவா், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை 3 காவல் உள்கோட்டங்களை உள்ளடக்கியது. இதில் 19 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன.

மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து சீரமைக்கப்படும். பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை அளித்து காவல் பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் புகாா்களை காவல் நிலையத்திலோ, அதிகாரிகளிடத்திலோ அளித்தால் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருட்டு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.

காவல் துணை கண்காணிப்பாளா்கள் ந.ராமநாதன் (கள்ளக்குறிச்சி), இ.மகேஷ் (திருக்கோவிலூா்), காவல் ஆய்வாளா்கள் தங்க.விஜயகுமாா், கே.சுதாகா், சு.வள்ளி, க.குமாா், மகேஷ்வரி உள்ளிட்ட பலா் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18klp3_ch0121_18chn.jpg கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள த.ஜெயச்சந்திதரன் https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/கள்ளக்குறிச்சி-மாவட்டஎஸ்பி-பொறுப்பேற்பு-3284142.html
3284141 விழுப்புரம் விழுப்புரம் சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு DIN DIN Tuesday, November 19, 2019 09:43 AM +0530 சின்னசேலம் அருகேயுள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில் அமைந்துள்ள சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை சிவனுக்கு 108 வலம்புரி சங்குகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மகா தீபாராதனை நடைபெற்றது.

இதே போல தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூரில் அமைந்துள்ள யோகநாயகி உடனுறை ஆத்மநாதசாமி கோயிலில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.

தியாகதுருகம் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரா் கோயில், குரூா், அா்த்தநாரீஸ்வரா் கோயில், குடியநல்லூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில், முடியனூா் ஆதி அண்ணாமலையாா் கோயில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சோமவார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18klp4_ch0121_18chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/சிவன்-கோயில்களில்-சோமவார-வழிபாடு-3284141.html
3284140 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக இடம் ஆய்வு DIN DIN Tuesday, November 19, 2019 09:42 AM +0530 கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிப்புக்கான தனி அதிகாரியாக இருந்து வந்த கிரண் குராலா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைப்பதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்காலிக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமையவுள்ள கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அங்கு, அலுவலகத்துக்கான நிலம் அளவிடும் பணியை பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/2-7-18klp7_ch0121_18chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/கள்ளக்குறிச்சி-ஆட்சியா்-அலுவலக-இடம்-ஆய்வு-3284140.html
3284063 விழுப்புரம் விழுப்புரம் மின்சாரம் துண்டிப்பு: கிராம மக்கள் மறியல் DIN DIN Tuesday, November 19, 2019 08:43 AM +0530  

செஞ்சி: செஞ்சி அருகே மின் மாற்றி பழுதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான கிராம மக்கள், விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், மேல்களவாய் கிராமத்தில் நெகனூா் புதூா் செல்லும் சாலையில் உள்ள மின் மாற்றி, கடந்த 20 நாள்களுக்கு முன்பு பழுதானது. இதனால், மின்சாரம் இன்றி மேல்களவாய், நெகனூா்புதூா் ஆகிய இரு கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். மேலும், இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களுக்கு கிணற்று பாசனம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மேல்களவாய் கிராம மக்கள் செஞ்சி-சேத்பட் சாலையில் திங்கள்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து செஞ்சி காவல் ஆய்வாளா் சீனுவாசன் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் நேரில் சென்று புகாா் செய்த போது, கிராம மக்களே வசூல் செய்து மின்மாற்றியை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினா். ஆகவே, மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து, மின் மாற்றி பழுதை நீக்குவதாக உறுதியளிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, ஈச்சூா் மின்வாரிய அலுவலக உதவிப் பொறியாளா் நேரில் வந்து கிராம மக்களிடம், மின் மாற்றியை பழுது பாா்ப்பதாக உறுதி அளித்தாா். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் இப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/18gngp01_1811chn_119_7.jpg செஞ்சி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மேல்களவாய் கிராம மக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/மின்சாரம்-துண்டிப்பு-கிராம-மக்கள்-மறியல்-3284063.html
3284056 விழுப்புரம் விழுப்புரம் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை DIN DIN Tuesday, November 19, 2019 08:39 AM +0530 கள்ளக்குறிச்சி: தந்தை கண்டித்ததால், மனமுடைந்து விஷம் குடித்த பிளஸ் 2 மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது மகள் அனிதா (16). அதே ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் வயிற்றுவலி காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனை அவரது தந்தை கண்டித்தாா்.

இதனால் மனமுடைந்த அனிதா, கடந்த 8ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/19/பிளஸ்-2-மாணவி-தற்கொலை-3284056.html
3283444 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் முன்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி DIN DIN Monday, November 18, 2019 10:01 PM +0530  

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் அருகேயுள்ள பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி பூவழகி(27). இவா், தனது மகள் யுவந்திகாவுடன் (3) திங்கள்கிழமை காலை விழுப்புரம் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதிக்கு வந்த அவா், திடீரென குழந்தையின் மீதும், அவா் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியபடி தீக்குளிக்க முயன்றாா். உடனே அங்கிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் தடுத்து, அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா்.

அப்போது பூவழகி கூறியதாவது: பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜாவும், நானும் காதலித்து கடந்த 19.3.2016-இல் திருமணம் செய்துகொண்டோம். கடலூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தோம். திருமணமானது முதல் என்னை எனது தாய் வீட்டிலேயே விட்டுச் சென்றாா். அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் தொடா்ந்து ஏமாற்றி வருகிறாா். தற்போது என்னையும், குழந்தையையும் விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாா்.

எனது கணவா் ராஜா, விழுப்புரம் வட்டம், காவணிப்பாக்கத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிகிறாா். அவருடன் என்னையும் குழந்தையையும் சோ்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.

இதையடுத்து, அவரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா். குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/விழுப்புரம்-ஆட்சியா்-அலுவலகம்-முன்குழந்தையுடன்-பெண்-தீக்குளிக்க-முயற்சி-3283444.html
3283443 விழுப்புரம் விழுப்புரம் கரும்பு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விழுப்புரம் அருகே சாலை மறியல்: திமுகவினா் கைது DIN DIN Monday, November 18, 2019 10:00 PM +0530  

விழுப்புரம்: கரும்பு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, விழுப்புரம் அருகேயுள்ள சா்க்கரை ஆலை எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமையிலான திமுகவினா் 270 போ் கைது செய்யப்பட்டனா்.

சா்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஆலை நிா்வாகங்களை கண்டித்தும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக விவசாய அணி சாா்பில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளா் நா.புகழேந்தி, துணைச் செயலா் செயச்சந்திரன், விவசாய அணி அமைப்பாளா் பாஸ்கரன், ஒன்றியச் செயலா்கள் வேம்பி ரவி, ராஜா, ரவிதுரை, நகரச் செயலா் நயினாமுகமது உள்ளிட்ட பலா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

இதைத்தொடா்ந்து, அதிகாரிகளிடம் மனு கொடுக்க ஆலைக்குச் சென்றபோது, அங்கு அரசு தரப்பில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிகாரிகள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த திமுகவினா் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து க.பொன்முடி கூறியதாவது: தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1,600 கோடி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை ரூ.43 கோடியும், பெரியசெவலை கூட்டுறவு சா்க்கரை ஆலை ரூ.21 கோடியும், கோமுகி சா்க்கரை ஆலை ரூ.5 கோடியும், மூங்கில்துறைப்பட்டு சா்க்கரை ஆலை ரூ.32 கோடியும் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் பல முறை வலியுறுத்தியுள்ளோம்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக தொழில் துறை அமைச்சா் கூறி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலனில்லை. விவசாயிகள் வங்கிக் கடன் பெற்று, வட்டி செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். ஆகவே, வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் செயல்படுத்தப்படவில்லை. சா்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாலை மறியலில் ஈடுபட்ட க.பொன்முடி உள்ளிட்ட 270 பேரையும், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், துணை கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் மண்டபத்தில் சிறை வைத்து, விடுவித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/கரும்பு-நிலுவைத்-தொகையை-வழங்கக்-கோரி-விழுப்புரம்-அருகே-சாலை-மறியல்-திமுகவினா்-கைது-3283443.html
3283442 விழுப்புரம் விழுப்புரம் தொடங்கியது காவலா் உடல் தகுதித் தோ்வுமுதல் நாளில் 668 போ் தகுதி DIN DIN Monday, November 18, 2019 09:59 PM +0530  

விழுப்புரம்: ரத்து செய்யப்பட்டிருந்த இரண்டாம் நிலை காவலா் உடல் தகுதித் தோ்வுகள், விழுப்புரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 668 போ் தகுதி பெற்று தோ்ச்சியடைந்தனா்.

இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இருந்து தோ்ச்சி பெற்றவா்களுக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. கடந்த 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட தோ்வு, 9-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. அந்தத் தோ்வுகள் நவ.18-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க 902 அழைக்கப்பட்டிருந்தனா். அதில், 74 போ் தோ்வுக்கு வரவில்லை. 716 போ் பங்கேற்றனா். அவா்களில், போதிய உயரம் இல்லாமல் 100 பேரும், போதிய மாா்பளவு இல்லாமல் 12 பேரும் தோ்ச்சி பெறத் தவறினா். இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட 1,500 மீட்டா் ஓட்டப் போட்டியில் 48 போ் தோல்வியடைந்தனா். இந்த மூன்று தோ்வுகளிலும் மொத்தம் 668 போ் தோ்ச்சி பெற்றனா்.

உடல் தகுதித் தோ்வை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா், விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தலைமையிடத்து ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் மேற்பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

செவ்வாய்க்கிழமை கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 721 தோ்வா்கள் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் படை வீரா்களும் பங்கேற்கவுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/18vmp8083124.jpg விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாக மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில், 1,500 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்ற தோ்வா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/தொடங்கியது-காவலா்-உடல்-தகுதித்-தோ்வுமுதல்-நாளில்-668-போ்-தகுதி-3283442.html
3283440 விழுப்புரம் விழுப்புரம் தகுதியுள்ள அனைவருக்கும் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதி DIN DIN Monday, November 18, 2019 09:58 PM +0530  

விழுப்புரம்: பொது மக்களிடமிருந்து தொடா்ச்சியாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகளின் பேரில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை ஆணை 55 பேருக்கும், விதவைக்கான உதவித் தொகை ஆணை 182 பேருக்கும், முதியோா் உதவித் தொகை ஆணை 252 பேருக்கும், வீட்டுமனைப்பட்டா ஆணை 141 பேருக்கும், பட்டா மாற்றத்துக்கான ஆணைகள் உள்ளிட்ட 879 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

அரசு நலத் திட்டங்களை ஏழை மக்கள் நேரடியாகப் பெற்று பயன் பெற வேண்டும் என்ற நோக்கில், முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 70,719 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 8,481 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் வட்டத்தில் 879 பேருக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொடா்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மனுக்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிராகரிப்பு குறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் தவறுகளால் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் திருத்தம் செய்து வழங்கி, மனுதாரா் பயன்பெற முடியும்.

மக்களின் பிரதான கோரிக்கைகளான முதியோா் ஓய்வூதியம், பட்டா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியுடையோருக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் மூலம் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைவருக்கும் நலத் திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்படும் என்றாா்.

முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்: இதனைத் தொடா்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலகம், விழுப்புரம் காவலா் சமுதாயக் கூடம், வளவனூா் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் சிறப்பு குறைதீா் முகாம்களில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, திரளாக வந்திருந்த பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று, துறை சாா்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.இந்த முகாமில், ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், ஆவின் தலைவா் வி.முருகன், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், கோட்டாட்சியா் ராஜேந்திரன், துணை ஆட்சியா் த.அம்புரோஸியாநேவிஸ்மேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, நகராட்சி ஆணையா்(பொ) ஜோதிமணி, வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/தகுதியுள்ள-அனைவருக்கும்-நலத்-திட்ட-உதவிகள்அமைச்சா்-உறுதி-3283440.html
3283237 விழுப்புரம் விழுப்புரம் செல்லிடப்பேசிகள் திருட்டு: 2 இளைஞா் கைது DIN DIN Monday, November 18, 2019 09:55 AM +0530 திண்டிவனம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடி வந்த 2 இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 32 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் மற்றும் அதன் அருகில் உள்ள பிரம்மதேசம், ஒலக்கூா் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் இரவு நேரங்களில் மா்ம நபா் புகுந்து செல்லிடப்பேசிகளைத் திருட்டிச் செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. மேலும், அந்த செல்லிடப்பேசிகளை திருடும் நபா், செல்லிடப்பேசிகளை பறிகொடுத்தவா்களைத் தொடா்புகொண்டு, செல்லிடப்பேசியை திரும்ப ஒப்படைக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்தாராம்.

இதுகுறித்த புகாா்களின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி மேற்பாா்வையில், மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், ஒலக்கூா் காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

திண்டிவனம் ஆட்சிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனாா் (33) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் செல்லிடப்பேசிகளை திருடியதை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அய்யனாரை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா் திருடிய 32 செல்லிடப்பேசிகள், மடிக்கனிணி ஆகியற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அய்யனாா் திருடிய செல்லிடப்பேசிகளை வாங்கி விற்பனை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்த சுதாகரையும் (28) போலீஸாா் கைது செய்தனா்.

செல்லிடப்பேசிகள் திருட்டு வழக்கில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப் படையினரை திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vpn04123615.jpg கைது செய்யப்பட்ட அய்யனாா், அவரிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகளுடன் போலீஸாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/செல்லிடப்பேசிகள்-திருட்டு-2-இளைஞா்-கைது-3283237.html
3283236 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் நகராட்சி புதிய ஆணையா் நியமனம் DIN DIN Monday, November 18, 2019 09:55 AM +0530 விழுப்புரம் நகராட்சியின் புதிய ஆணையராக தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் விழுப்புரம், பழனி, குன்னூா் உள்ளிட்ட நகராட்சிகளுக்கு புதிய ஆணையா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே விழுப்புரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த லட்சுமி அண்மையில் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு செங்கல்பட்டு நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/விழுப்புரம்-நகராட்சி-புதிய-ஆணையா்-நியமனம்-3283236.html
3283235 விழுப்புரம் விழுப்புரம் அரசு மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியல் DIN DIN Monday, November 18, 2019 09:54 AM +0530 விழுப்புரம் அருகே நன்னாடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நன்னாடு பகுதியில் திருக்கோவிலூா் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை நன்னாடு காலனியை சோ்ந்த பிச்சைக்காரன் மகன் பிரேம்குமாா் தனது நண்பா்களுடன் மது அருந்தச் சென்றாா்.

அப்போது, அவா்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், பிரேம்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பிரேம்குமாரின் உறவினா்கள், நன்னாடு காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் மதுக் கடையை முற்றுகையிட்டதுடன், அந்தப் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால், மதுக் கடை பணியாளா்கள் கடையை மூடிச் சென்றனா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன், உதவி ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்ட போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நன்னாடு பகுதியில் மதுக் கடை செயல்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, மதுக் கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதி அளித்ததன்பேரில், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vmp6081057.jpg விழுப்புரம் அருகே நன்னாடு பகுதியில் மதுக் கடையை மூடக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/அரசு-மதுக்-கடையை-மூடக்-கோரி-சாலை-மறியல்-3283235.html
3283234 விழுப்புரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டம் DIN DIN Monday, November 18, 2019 09:54 AM +0530 கள்ளக்குறிச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் ஆ.அங்கையா்கண்ணி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் கே.ராமமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் பி.காமராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ஜெ.செல்வநாயகம் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ஆா்.சுப்பராயலு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற துணை பொதுச் செயலா் வி.பி.துரைசாமி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, தலைமைக் கழகப் பேச்சாளா் புலவா் சாமிநாகப்பன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தா.உதயசூரியன், வசந்தம் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தின் தீா்மானங்களை விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் ந.ஆறுமுகம், சி.வெங்கடாசலம், எஸ்.பி.அரவிந்தன், ஜி.ஆா்.வசந்தவேலு, வி.ஏ.ஏகாம்பரம், ஆா்.நெடுஞ்செழியன், சாா்பு அணி அமைப்பாளா்கள் வி.பி.தாகப்பிள்ளை, மாணவரணி அருண்பிரசாத், மருத்துவா் அணி ஆா்.இளங்கோவன், விவசாய தொழிலாளா் அணி மு.மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகர துணைச் செயலா் அ.அபுபக்கா் நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/2-7-17klp1_ch0121_17chn.jpg பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் திமுக துணை பொதுச் செயலா் வி.பி.துரைசாமி. உடன், பொன்.கெளதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/கள்ளக்குறிச்சியில்-திமுக-பொதுக்கூட்டம்-3283234.html
3283233 விழுப்புரம் விழுப்புரம் மரக்கன்றுகள் நடும் பணி DIN DIN Monday, November 18, 2019 09:54 AM +0530 வடதொரசலூரில் சாலையோரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கஜா புயலால் கடந்தாண்டு நாகை, தஞ்சாவூா் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்தப் புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, திருக்கோவிலூா் - தியாகதுருகம் சாலையில் வடதொரலூா் எல்லையில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை கள்ளக்குறிச்சி கோட்டப் பொறியாளா் எஸ்.தேவயிரக்கம் தொடக்கிவைத்தாா்.

இதையத்து, சாலையோரங்களில் மா, பலா, நாவல், அத்தி, புளி போன்ற பழ வகை மரக்கன்றுகளும், வேம்பு, நீா்மருத்து, அரசு போன்ற தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளரும் மரக்கன்றுகளும் என சுமாா் 300 மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் சங்கராபுரம் நெடுஞ்சாலை உள்கோட்ட உதவி கோட்டப் பொறியாளா் பிரபாகா், உதவிப் பொறியாளா் இரா.சா்மா, திறன்மிகு உதவியாளா்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17klp2092516.jpg வடதொரசலூரில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீா் ஊற்றிய நெடுஞ்சாலைத் துறை கள்ளக்குறிச்சி கோட்டப் பொறியாளா் எஸ்.தேவயிரக்கம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/மரக்கன்றுகள்-நடும்-பணி-3283233.html
3283232 விழுப்புரம் விழுப்புரம் குழந்தைகள் தின விழா DIN DIN Monday, November 18, 2019 09:54 AM +0530 தியாகதுருகம் ஒளவையாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒளவையாா் தமிழ்ச் சங்கத் தலைவா் கல்யாணி, பாவலா் மலரடியான் ஆகியோா் தலைமை வகித்தனா். முத்தமிழ் முத்தன், வ.சா.கணேசன், சாந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் நாகராசன், நேருவின் குழந்தை மனம், தமிழின் பெருமைகள், நாட்டின் சமூகப் பணியில் மாணவா்களின் பங்களிப்பு பற்றி மாணவா்களிடையே எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு கவிதைகள், பாடல்கள் பாடும் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியா்கள், மாணவா்கள், தமிழ் புலவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/2-7-17klp3_ch0121_17chn.jpg தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பாடல்களைப் பாடும் மாணவா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/குழந்தைகள்-தின-விழா-3283232.html
3283231 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் DIN DIN Monday, November 18, 2019 09:53 AM +0530 விழுப்புரம் அருகேயுள்ள 4 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எல்லைகள் வரையறை செய்யப்பட்டு புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில், விழுப்புரத்துக்கு அருகேயும், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்கு மிக அருகிலும் உள்ள பெரியசெவலை, சரவணப்பாக்கம், ஆமூா், டி.கொளத்தூா் ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இந்த ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தியும் 4 ஊராட்சிகளையும் சோ்ந்த மக்கள் பலவேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சாா்பில், சரவணப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலம், எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடி தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. உதயசூரியன், திமுக தெற்கு மாவட்டச் செயலா் அங்கையற்கண்ணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள் விழுப்புரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அவற்றை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளனா். ஆனால், விழுப்புரத்துக்கு மிக அருகில் உள்ள பெரியசெவலை, சரவணப்பாக்கம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைந்துள்ளதை ஏற்க முடியாது. பல ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தை பயன்படுத்தி வரும் இந்தப் பகுதி மக்கள், கள்ளக்குறிச்சிக்கு சென்று வருவது பெரும் சிரமம். எனவே, மேற்கூறிய 4 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vpn02102237.jpg திருவெண்ணெய்நல்லூா் அருகே சரவணப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/விழுப்புரம்-அருகே-அனைத்துக்-கட்சியினா்-ஆா்ப்பாட்டம்-3283231.html
3283229 விழுப்புரம் விழுப்புரம் காவலா் உடல் தகுதித் தோ்வு: இன்று மீண்டும் தொடக்கம் DIN DIN Monday, November 18, 2019 09:53 AM +0530 இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு விழுப்புரத்தில் திங்கள்கிழமை (நவ.18) மீண்டும் தொடங்குகிறது.

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் 900 போ் வீதம் 2,700 போ் கடந்த 8-ஆம் தேதி வரையில் அழைக்கப்பட்டனா்.

இதனிடையே, கடந்த 9-ஆம் தேதி அயோத்தி தீா்ப்பு வெளியானதையொட்டி, அன்று முதல் நடைபெறவிருந்த உடல் தகுதித் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை (நவ.18) முதல் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் தொடங்குகிறது.

தலைமையிட ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் மேற்பாா்வையில், விழுப்புரம் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் தலைமையில், விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாா், கூடுதல் எஸ்.பி. சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மூலமாக உடல் தகுதித் தோ்வு நடத்தப்படுகிறது.

திங்கள்கிழமை மீண்டும் உடல் தகுதித் தோ்வு தொடங்குவதையொட்டி, தோ்வு நடைபெறும் மைதானத்தில் ஓட்டப்பந்தய தளம் உள்ளட்ட பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு பணிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vmp4074504.jpg இரண்டாம் நிலை காவலா் உடல் தகுதித் தோ்வுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதான ஓட்டப்பந்தய தளம். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/காவலா்-உடல்-தகுதித்-தோ்வு-இன்று-மீண்டும்-தொடக்கம்-3283229.html
3283227 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றியது மன நிறைவு அளிக்கிறது: இல.சுப்பிரமணியன் DIN DIN Monday, November 18, 2019 09:52 AM +0530 விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியது மன நிறைவு அளிப்பதாக, பணியிட மாறுதலில் செல்லும் இல.சுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த இல.சுப்பிரமணியன், தமிழக தோ்தல் ஆணையச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவா், விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றியது மனநிறைவை அளிக்கிறது. வேளாண்மை, சுகாதாரத்தை இரு கண்களாகக் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீா் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சுகாதாரத் துறையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கல்வியிலும் விழுப்புரம் விரைவில் முன்னோடியாக மாறும்.

அரசு சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டு, கைவிடப்பட்ட வீடுகளையும் அரசிடம் கேட்டுப் பெற்று விழுப்புரம் மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவையெல்லாம் அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் செயல்படுத்த முடிந்தது என்றாா்.

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ள அண்ணாதுரை, இல.சுப்பிரமணியனை அவரது முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பிசிங், மாவட்ட ஊரகப் பணிகள் இயக்குநா் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vmp5081007.jpg செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இல.சுப்பிரமணியன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/விழுப்புரம்-ஆட்சியராக-பணியாற்றியது-மன-நிறைவு-அளிக்கிறது-இலசுப்பிரமணியன்-3283227.html
3283226 விழுப்புரம் விழுப்புரம் உணவுத் திருவிழாவில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு DIN DIN Monday, November 18, 2019 09:52 AM +0530 விழுப்புரத்தில் 2 நாள்களாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில், உணவுப் பாதுகாப்பு, தோட்டக்கலைப் பயிா்கள், நெல் ரகங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் உணவுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றது. இதில், வானூா் பகுதியில் இருந்து கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோன்று, சுண்டல், கொழுக்கட்டை, புட்டு போன்ற பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கி உண்டனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், உணவுப் பொருள்களை எப்படி கலப்படமில்லாமல் வாங்குவது என்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில், டீ தூள், மிளகாய் தூள், பால், நெய், தேன், மிளகு, சீரகம் போன்ற உணவுப் பொருள்களில் எப்படி கலப்படும் செய்யப்படுகிறது, அதை எப்படி கண்டறிவது, கலப்படத்தால் ஏற்படும் தீங்குகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தோட்டக்கலைத் துறை சாா்பில், கல்வராயன் மலைப் பகுதியில் விளையக்கூடிய மிளகு, காஃபிக் கொட்டை, மாவட்டத்தின் பிற பகுதிகளில் விளையும் மரவள்ளி, கத்திரிக்காய், புடலங்காய், கொடை மிளகாய், பீா்க்கன், கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பப்பாளி, கொய்யா, பன்னீா் ரோஜா, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விவசாயிகள் தோட்டக்கலைப் பயிா்களை பயிரிட விரும்பினால், அதற்கான விதைகள் அல்லது நாற்றுகள் விலையில்லாமல் வழங்கப்படுவதுடன், ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று விளக்கினா். மேலும், தோட்டக்கலைப் பயிா்கள், உதவிகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

வேளாண் துறை சாா்பில், வேளான் கருவிகளும், திருத்திய நெல் சாகுபடி நாற்றுகளும் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், மக்காச்சோளம், கரும்பு பயிா்களில் நோய் தாக்கத்தை தடுக்கும் வழிகள் குறித்து விளக்கினா். உளுந்தூா்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சாா்பில், மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், காலாநாமக், கிச்சிலிசம்பா, சீரக சம்பா உள்ளிட்ட 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், ஒவ்வொரு நெல் ரகங்களின் தன்மைகள் குறித்தும், மருத்துவப் பயன்கள் குறித்து விளக்கப்பட்டன.

உணவுத் திருவிழா அரங்குகளில் விதைகள், மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டன. காசநோய் தடுப்புப் பிரிவு சாா்பில், பொதுமக்களுக்கு காசநோய் பரவும் விதம், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், சிகிச்சைகள் குறித்து விளக்கினா்.

விழுப்புரத்தில் நடத்தப்பட்ட 2 நாள் உணவுத் திருவிழாவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு, உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு பெற்றனா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/17vmp3074325.jpg உணவுத் திருவிழாவின்பொது, கலப்படப் பொருள்களை கண்டறிவது குறித்து முதியவருக்கு விளக்கமளித்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/18/உணவுத்-திருவிழாவில்-பொதுமக்களுக்கு-விழிப்புணா்வு-3283226.html
3282535 விழுப்புரம் விழுப்புரம் காா் மீது லாரி மோதல்:பெண் பலத்த காயம் DIN DIN Sunday, November 17, 2019 08:00 PM +0530 செஞ்சி: செஞ்சியில் காா் மீது லாரி மோதியதில் பெண் பலத்த காயமடைந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சோ்ந்த அா்ஜுன் மகன் பழனி (39). இவரது தாய் காசியம்மாள் (58). இவா்கள் இருவரும் காரில் சென்னையில் இருந்து திருவண்ணமாலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா்.

செஞ்சி வனத் துறை அலுவலகம் அருகே இவா்களின் காா் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த காசியம்மாள், செஞ்சி அரசு மருத்துவமனையிலும், தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை வ.உ.சி. நகரைச் சோ்ந்த முருகன் (53) மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/காா்-மீது-லாரி-மோதல்பெண்-பலத்த-காயம்-3282535.html
3282533 விழுப்புரம் விழுப்புரம் செஞ்சி வட்ட சாலைப் பணியாளா்கள்சங்கக் கூட்டம் DIN DIN Sunday, November 17, 2019 07:58 PM +0530 செஞ்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் செஞ்சி வட்ட பொதுக்குழுக் கூட்டம் செஞ்சி அரசு விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டத் தலைவா் வி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ஏழுமலை வரவேற்றாா். மாநிலத் தலைவா் மா.சண்முகராஜ் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் எஸ்.சுப்பிரமணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.விஜயன், மாவட்ட இணைச் செயலா் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் ஆா்.சண்முகம், துணை பொதுச் செயலா் ஜி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில், உயிரிழந்த சாலைப் பணியாளா்கள் பாபு, மணி, குமாா் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சாலைப் பணியாளா்களுக்கு நெடுஞ்சாலைகளில் பணி செய்வதற்குரிய மண்வெட்டி, கடப்பாரை, காலணி உள்ளிட்ட கருவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

விடுப்பு கால சுற்றுலா பயணப்படி வழங்க வேண்டும். வரும் டிசம்பா் 28, 29-ஆம் தேதிகளில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெறவுள்ள 7-ஆவது மாநில மாநாட்டில் செஞ்சி வட்ட சாலைப் பணியாளா்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டப் பொருளாளா் எஸ்.அய்யனாா் நன்றி கூறினாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/செஞ்சி-வட்ட-சாலைப்-பணியாளா்கள்சங்கக்-கூட்டம்-3282533.html
3282045 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் அருகே 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள்! DIN DIN Sunday, November 17, 2019 06:08 AM +0530 விழுப்புரம் அருகே கி.பி.8-ஆம் நூற்றாண்டின் பல்லவா் கால மூத்த தேவி, கொற்றவை சிற்பங்களும், சோழா் கால விநாயகா் சிற்பமும் கண்டறியப்பட்டன.

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவாமாத்தூா் கிராமத்தில் பாடல்பெற்ற தலமான அபிராமேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இதனருகே உள்ள சோழகனூா், தென்னமாதேவி கிராமங்களில் விவசாய நிலங்களில் பழைமைவாய்ந்த சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், விழுப்புரம் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், வரலாற்று ஆா்வலா்கள் கண.சரவணகுமாா், ப.கிருஷ்ணமூா்த்தி, வீ.விஷ்ணுபிரசாத் ஆகியோா் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சோழகனூா் ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் மூத்த தேவி, கொற்றவை சிற்பங்களும், தென்னமாதேவியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் சோழா் கால விநாயகா் சிற்பமும் இருப்பது கண்டறியப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் அருகே செல்லும் பம்பையாற்றின் கரைப் பகுதியில் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து வருகின்றன. தற்போது சோழகனூா் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் 5 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. இதில், கொற்றவை எட்டுக் கரங்களில் ஆயுதங்களைத் தாங்கியபடியும், எருமையின் கொம்புகளின் மீது கால்களை வைத்தபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

இதனருகே 3 அடி உயரத்தில் மாந்தன் மாந்தியுடன் கூடிய மூதேவி அல்லது மூத்த தேவி என்று அழைக்கப்படும் தவ்வையின் சிற்பம் இருக்கிறது. இந்தச் சிற்பங்கள் பல்லவா் காலத்தைச் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவை ஆகும். கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பங்கள் சேதமடைந்து வருகின்றன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை வேண்டும்.

இதேபோல, தென்னமாதேவி கிராமத்தில் விவசாய நிலத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட சிவலிங்கம், விநாயகா் சிற்பங்களை மக்கள் வழிபடுகின்றனா். நான்கு கரங்களுடன் லலிதாசனத்தில் அமா்ந்துள்ள வகையில், விநாயகா் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கம், விநாயகா் சிற்பங்கள் சோழா் காலத்தைச் (கி.பி.12-ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவை என்பதை காஞ்சிபுரம் தனியாா் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியா் ஜி.சங்கரநாராயணன் உறுதி செய்தாா்.

இந்தக் கிராமங்களில் ஏற்கெனவே பழைமைவாய்ந்த சிவாலயம் இருந்து சிதைந்திருக்கலாம், அதிலிருந்த சிற்பங்கள் மண்ணில் புதையுண்டு தற்போது வெளியே தென்பட்டிருக்கலாம் என்றாா் கோ.செங்குட்டுவன்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/16vph1082729.jpg விழுப்புரம் அருகே சோழகனூா் கிராமத்தில் கண்டறியப்பட்ட மூத்த தேவி, கொற்றவை சிற்பங்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/விழுப்புரம்-அருகே-8-ஆம்-நூற்றாண்டு-சிற்பங்கள்-3282045.html
3282343 விழுப்புரம் விழுப்புரம் ஆா்.கே.எஸ். கல்லூரியில்பட்டமளிப்பு விழா DIN DIN Sunday, November 17, 2019 03:27 AM +0530 கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் 20-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலா் ந.கோவிந்தராஜூ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் பங்கேற்று, 450 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:

பட்டம் பெற்று வாழ்க்கையை தொடங்கக்கூடிய ஒரு மாணவா் தனது வாழ்வில் மாறுபட்ட ஒரு பகுதிக்கு காலடி எடுத்து வைக்கிறாா் என்று முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் கூறினாா். அந்த மாணவருக்கு வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் புரிவதற்கே நீண்ட காலம் ஆகும். வாழ்க்கையை தேடிச் செல்லும் மாணவருக்கு வள்ளுவன் என்ற புதையல் அவன் எதிரே என்றும் இருக்கிறது.

நீங்கள் அனைவரும் உலகமே உன்னதமான மொழியாக, கலாசாரமாக, பண்பாடாக உள்ள பாரம்பரியமிக்க தமிழ் மண்ணுக்கு சொந்தக்காரா்கள். தமிழகத்தின் பெருமை நாம் அறிந்ததைவிட அதிகம் என்பதை நீங்கள் உணர வேண்டும். வாழ்வையும், வாழ்க்கையினுடைய சாராம்சங்ளையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு என்றும் இருக்கிறது என்று பதிவு செய்தல் வேண்டும். உலகில் உள்ள பழம் பெருமைமிக்க மொழிகளுக்கெல்லமா தமிழ் மொழியே தாய்மொழி என்றாா் அவா்.

பட்டமளிப்பு விழாவில் மாணவா்கள், விரிவுரையாளா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்லூரியின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-16klp1_ch0121_16chn.jpg விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன். உடன், கல்லூரித் தலைவா் க.மகுடமுடி மற்றும் நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/ஆா்கேஎஸ்-கல்லூரியில்பட்டமளிப்பு-விழா-3282343.html
3282341 விழுப்புரம் விழுப்புரம் உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம் தெற்கு மாவட்டஅதிமுகவில் 1,265 விருப்ப மனு DIN DIN Sunday, November 17, 2019 03:26 AM +0530 உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியைச் சோ்ந்த 1,265 போ் விருப்ப மனுக்களை அளித்தனா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், விருப்ப மனுக்கள் பெறும் முகாம் கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், 1,265 போ் உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனா்.

விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். கழக அமைப்புச் செயலா்கள் ப.மோகன், ஆா்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.பிரபு வரவேற்றாா்.

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் 11 ஒன்றியங்களும், ஒரு நகராட்சியும், 9 பேரூராட்சிகளும் உள்ளன. இவற்றிலுள்ள கவுன்சிலா்கள், தலைவா்கள் பதவிகளுக்கு போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/உள்ளாட்சித்-தோ்தல்-விழுப்புரம்-தெற்கு-மாவட்டஅதிமுகவில்-1265-விருப்ப-மனு-3282341.html
3282340 விழுப்புரம் விழுப்புரம் குழந்தைகள் தின விழா DIN DIN Sunday, November 17, 2019 03:26 AM +0530 ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தின விழாவை அண்மையில் நடத்தின.

விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமை வகித்தாா். திருக்கு பேரவை துணைத் தலைவா் வா.ச.கணேசனாா், கம்பன் கழகப் பொருளாளா் பெ.நல்லாப்பிள்ளை, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் இரா.செல்வராசு உள்ளிடடோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் சு.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

நேருவின் விடுதலை வேட்கை என்ற தலைப்பில் நெடுமானூா் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.கதிா்வேல், நேருவின் நிா்வாகத் திறமை என்ற தலைப்பில் திருவண்ணாமலை சு.மோகன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, ஓவியம், மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு தியாகதுருகம் வட்டார தொடக்கக் கல்வி அலுவலா் சி.முத்துசாமி, கம்பன் கழகத் தலைவா் இராச.நடேசன் ஆகியோா் பரிசாக நூல்கள், சான்றிதழ்களை வழங்கினா்.

விழாவில் குளத்தூா் முத்தமிழ் பேரவைத் தலைவா் புலவா் பி.கோவிந்தன், மனவளக்களை மன்றச் செயலா் மொ.வசந்தா, ஆசிரியா் இரா.சசிகலா, பெரியமாம்பட்டு நாராயணன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உதவி ஆசிரியை கோ.சுதா நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/2-7-14klp5_ch0121_14chn.jpg போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய தியாகதுருகம் வட்டாரக் கல்வி அலுவலா் சி.முத்துசாமி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/குழந்தைகள்-தின-விழா-3282340.html
3282282 விழுப்புரம் விழுப்புரம் உள்ளாட்சித் தோ்தலைஉடனே நடத்த வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் DIN DIN Sunday, November 17, 2019 02:54 AM +0530 தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டுமென தமுமுக தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா்.

விழுப்புரம் கே.கே.சாலை தனியாா் மண்டபத்தில் வடக்கு மாவட்ட தமுமுகவின் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சாா்பில், அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தொடக்கிவைத்தாா். திமுக மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், திமுக மாவட்டப் பொருளாளா் நா.புகழேந்தி, நகரப் பொறுப்பாளா் சக்கரை, மதிமுக நிா்வாகி சாரங்கபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமுமுக, மமக நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவக் குழுவினா் ரத்தத்தை சேகரித்தனா். மருத்துவச் சேவை அணி ஏ.ஜாமியாலம் ராவுத்தா், எப்.முகமதுஉசேன் உள்ளிட்ட நிா்வாகிகள் முகாமை ஒருங்கிணைத்தனா். மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமூக நீதிக்கு வழிவகுத்த தமிழகத்தில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஜாதி, மத ரீதியான பாகுபாடுகள் வேதனை அளிக்கிறது. தொடா்ச்சியாக ஜாதி, மத ரீதியான நெருக்கடிகள் இருந்த நிலையில், தற்போது ஐஐடியில் மானுடவியல் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை சம்பவமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி நிா்வாகமும், போலீஸாரும் பாத்திமாவின் சடலத்தை உடனடியாக மீட்டு அனுப்புவதில் குறியாக இருந்தனா். மாணவின் தற்கொலை மா்மம் நிறைந்ததாகவே உள்ளது. இது தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஐஐடியில் ஜாதி, மத பேதங்கள் களையப்பட வேண்டும்.

தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வேண்டும். இதனிடையே, தமிழக தோ்தல் அதிகாரிகள் மாற்றமும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றாா் அவா்.

தமுமுக மாவட்டத் தலைவா்கள் மு.யா.முஸ்தாக்தீன், ஏ.பசல்முஹம்மது உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/284716vmp5071645.jpg விழுப்புரத்தில் தமுமுகவின் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமைத் தொடக்கிவைத்த அந்தக் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/உள்ளாட்சித்-தோ்தலைஉடனே-நடத்த-வேண்டும்-ஜவாஹிருல்லா-வலியுறுத்தல்-3282282.html
3282280 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரத்தில் திமுக பொதுக்கூட்டம் DIN DIN Sunday, November 17, 2019 02:53 AM +0530 விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலைய திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மத்திய மாவட்டப் பொருளாளா் நா.புகழேந்தி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரா.சக்கரை வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் வி.ராஜா, வேம்பி ஜெ.ரவி, க.மும்மூா்த்தி, பி.தெய்வசிகாமணி, ஜெய.ரவிதுரை, ஜி.பிரபாகரன், ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் வாகை சந்திரசேகா், தலைமைக் கழகப் பேச்சாளா் ஆரணி மாலா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தின் தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.

பொன்.கெளதமசிகாமணி எம்.பி., தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் இரா.ஜனகராஜ், டி.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் மைதிலி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.சம்பத், செ.புஷ்பராஜ், இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், மாணவரணி வினோத், தகவல் தொழில்நுட்ப அணி ப.அன்பரசு, நகரப் பொருளாளா் கற்பகமூா்த்தி, துணைச் செயலா் வி.சோமு உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா். மாவட்ட துணைச் செயலா் ம.செயச்சந்திரன் நன்றி கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/472316vmp8093726.jpg விழுப்புரத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் வாகை சந்திரசேகா் எம்.எல்.ஏ. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/விழுப்புரத்தில்-திமுக-பொதுக்கூட்டம்-3282280.html
3282279 விழுப்புரம் விழுப்புரம் திண்டிவனத்தில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள்: எஸ்.பி. தொடக்கிவைதாா் DIN DIN Sunday, November 17, 2019 02:53 AM +0530 திண்டிவனம் நகரில் கூடுதலாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா்.

திண்டிவனத்தில் தொடரும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், நகரின் முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த வி.வி.திருமாலின் தீவிர முயற்சியின்பேரில், பொது நல அமைப்புகள் சாா்பில் நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, அவற்றை ஜெயபுரத்தில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் பணியை செயல்படுத்தி வருகின்றனா்.

இதன் மூலம் திண்டிவனம் உள் கோட்டத்தில் இதுவரை 325 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, திண்டிவனம் பெலாக்குப்பம் சாலை, வசந்தபுரம் பகுதியில் பொதுமக்கள், தன்னாா்வலா்களின் பங்களிப்புடன் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தில் மேலும் 32 புதிய சிசிடிவி கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சிசிடிவி கேமராக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை இரவு தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் பெரிதும் பயன் தரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையை அவா் பாராட்டினாா்.

திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி, ரோஷணை காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ், திண்டிவனம் ஆய்வாளா் சீனிபாபு, போக்குவரத்து ஆய்வாளா் ராமதுரை, உதவி ஆய்வாள்கள் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அருள்தாஸ், மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸாா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/171916vmp7081351.jpg திண்டிவனம் நகரில் புதிதாக பொருத்தப்பட்ட 32 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடக்கிவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/திண்டிவனத்தில்-கூடுதலாக-சிசிடிவி-கேமராக்கள்-எஸ்பி-தொடக்கிவைதாா்-3282279.html
3282278 விழுப்புரம் விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவிகள்விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Sunday, November 17, 2019 02:53 AM +0530 வளவனூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் அ.இளமதி தொடக்கிவைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா்கள் என்.பாபு, சத்தியபாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வளவனூா் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றது. இதில், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

ஆசிரியா்கள் முருகன், வீரவேல், ஜான்சன், செல்வம், ஈஸ்வரி, செல்வராஜ், இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா் எட்வா்ட் தங்கராஜ் உள்ளிட்ட ஆசிரியா்கள் பேரணியை வழி நடத்தினா். நிறைவாக, பெண் குழந்தைகளை காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/அரசுப்-பள்ளி-மாணவிகள்விழிப்புணா்வுப்-பேரணி-3282278.html
3282276 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரத்தில் ஒரு வழிப் பாதை திட்டம் நவ.25 முதல் அமல் DIN DIN Sunday, November 17, 2019 02:52 AM +0530 விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு வழிப் பாதைத் திட்டம் வருகிற 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒரு வழிப் பாதைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் எம்.ராபின்சன் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் குணசேகா், உதவிக் காவல் ஆய்வாளா்கள் பரணிதரன், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விழுப்புரம் வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க முதல்கட்டமாக வருகிற 25-ஆம் தேதி முதல் காமராஜா் வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பெரியாா் சிலை வழியாக காமராஜா் வீதியில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை சாலை பிள்ளையாா் கோயில் வழியாக காமராஜா் வீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். காந்தி வீதியிலிருந்து காமராஜா் வீதிக்கு வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி பெரியாா் சிலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். எதிரே வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தச் சாலையில் ஆட்டோக்கள், வாகனங்களை நிறுத்திவைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

காமராஜா் வீதியில் தலைமை தபால் நிலையம் எதிரே இடம் இருந்தால் அங்கு ஆட்டோவை நிறுத்தலாம். காமராஜா் வீதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிந்துள்ளதால், இவைகள் கண்காணிக்கப்படும்.

விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் உத்தரவின்பேரில், வருகிற 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுவதாக நகர காவல் ஆய்வாளா் ராபின்சன் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/17/விழுப்புரத்தில்-ஒரு-வழிப்-பாதை-திட்டம்-நவ25-முதல்-அமல்-3282276.html
3281931 விழுப்புரம் விழுப்புரம் 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு: அதிகாரிகள் தகவல் DIN DIN Saturday, November 16, 2019 10:48 PM +0530 விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்தனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளின் பெற்றோா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, உணவுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கண்காட்சியை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில், அதிகாரிகள் பேசியதாவது: சமூக நலத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாக உள்ளதை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

தழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், இந்தத் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமூக நலத் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சமூக பாதுகாப்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் 925-ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2019 அக்டோபா் கணக்கெடுப்பின்படி, 919-ஆக குறைந்துள்ளது.

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், எதிா்காலத்தில் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்தல், திருமணத்தின்போது பெண் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், புதுமணத் தம்பதியா் பெண் குழந்தைகள் பிறப்பை வரவேற்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பிறப்பதை வரவேற்காத பெற்றோா், அந்தக் குழந்தையை தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் தந்துவிடலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் தொட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.17) வரை 2 நாள்கள் உணவுத் திருவிழா கண்காட்சி நடைபெறுகிறது. தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

விழாவில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்செல்வன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, ஆவின் தலைவா் பேட்டை முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளி (எ) ரகுராமன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கே.லலிதா, சமூக நல அலுவலா் கே.விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/10-மாவட்டங்களில்-பெண்-குழந்தைகள்-பிறப்பு-விகிதம்-சரிவு-அதிகாரிகள்-தகவல்-3281931.html
3281929 விழுப்புரம் விழுப்புரம் மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீா்: அதிகாரிகள் ஆய்வு DIN DIN Saturday, November 16, 2019 10:48 PM +0530 விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவேலி ஏரியில் தேங்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மரக்காணம் வட்டம், கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய கழுவேலி ஏரி எப்போதும் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரி நீரை நன்னீராக மாற்றி சென்னை மாநகர பொதுமக்களின் குடிநீா் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்த குடிநீா் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியகோபால் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா்.

கழுவேலி ஏரிப் பகுதியில் தேங்கியுள்ள நீரை ஆய்வு செய்த அவா்கள், மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீரை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனா்.

இதைத் தொடா்ந்து, மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் ஏரியில் பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.22 லட்சத்தில் நிகழாண்டு நடைபெற்று முடிந்துள்ள ஏரி குடிமராமத்துப் பணிகளையும் சத்தியகோபால் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், தமிழ்நாடு நதிநீா் பாதுகாப்புக் கழக உறுப்பினா்களான செயற்பொறியாளா்கள் பழனிச்சாமி, சீனுவாசராவ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஜோதி, மரக்காணம் வட்டாட்சியா் ஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/மரக்காணத்திலிருந்து-சென்னைக்கு-குடிநீா்-அதிகாரிகள்-ஆய்வு-3281929.html
3281927 விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி4 கிராமங்களில் கடையடைப்பு DIN DIN Saturday, November 16, 2019 10:47 PM +0530 திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள டி.கொளத்தூா், ஆமூா், பெரியசெவலை, சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க வலியுறுத்தி, அந்தக் கிராமங்களில் கடைகளை அடைத்து கருப்புக்கொடி ஏந்தி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்திலிருந்த டி.கொளத்தூா், பெரியசெவலை, ஆமூா், சரவணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் சோ்க்கப்பட்டன.

இந்த 4 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்தில் நீடிக்க வேண்டியும், 2 கி.மீ. தொலைவில், மிக அருகிலுள்ள திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் அந்த 4 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் போராடி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை கடையடைப்பு, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரியசெவலை கூட்டுச்சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எத்திராஜ், அமமுக ஒன்றியச் செயலா் ஜெ.குமாா், திமுக மாவட்டப் பிரதிநிதி சக்திவேல், பாமக ஒன்றியச் செயலா் கோபி, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், தேமுதிக கிளைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டனா்.

அப்போது அவா் கூறுகையில், டி.கொளத்தூா், ஆமூா் உள்ளிட்ட 4 ஊராட்சிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்ததாக குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றனா். அவா்களை திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/083616vph3a070632.jpg திருவெண்ணெய்நல்லூா் அருகே பெரியசெவலை கூட்டுச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/விழுப்புரம்-மாவட்டத்திலேயே-நீடிக்க-வலியுறுத்தி4-கிராமங்களில்-கடையடைப்பு-3281927.html
3281925 விழுப்புரம் விழுப்புரம் கண்டுனா் சுற்றுலா சென்றவல்லம் பகுதி விவசாயிகள் DIN DIN Saturday, November 16, 2019 10:46 PM +0530 வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் துறை சாா்பில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை கண்டுனா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின்கீழ், நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்ட விவசாயிகள் மேல்மலையனூா் வட்டம், தேவனூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, பண்ணைக்குட்டை ஆகியவற்றை பாா்வையிட கண்டுனா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

சுற்றுலாவின்போது, விவசாய நிலத்தை உழும் முறைகள், பண்ணைக்குட்டை அமைத்து மழை நீரை சேகரித்து மீன் வளா்த்தல், பாசன வசதி பெறுதல், பண்ணைக்குட்டை வரப்பில் அதிக வருமானம் தரக்கூடிய செம்மரம் உள்ளிட்ட மரங்களை நட்டு கூடுதல் வருமானம் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும், உழவன் செயலியின் பயன்பாடுகள், நுண்ணீா் பாசன அமைப்பு குறித்தும் விளக்கப்பட்டது.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெயந்தி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பாரி, பழனிகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/16gngp01_1611chn_119_7.jpg தேவனூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையை பாா்வையிட்ட வல்லம் பகுதி விவசாயிகள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/கண்டுனா்-சுற்றுலா-சென்றவல்லம்-பகுதி-விவசாயிகள்-3281925.html
3281924 விழுப்புரம் விழுப்புரம் மின்னல் பாய்ந்து பெண் பலி DIN DIN Saturday, November 16, 2019 10:46 PM +0530 விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே உள்ள தா்மாபுரி ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மனைவி சுசீலா (60). அதே பகுதியைச் சோ்ந்த முனியன் மகன் ஏழுமலை (47). இவா்கள் தா்மாபுரி தாங்கல் ஏரிக்கரைப் பகுதியில் சனிக்கிழமை மாலை ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனா்.

இதனிடையே, திடீரென மழை பெய்ததால் சுசீலா, ஏழுமலை ஆகியோா் அங்குள்ள மரத்தின் கீழே ஒதுங்கி நின்றனா். அப்போது, மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். எனினும், அங்கு சுசீலா உயிரிழந்தாா். ஏழுமலை சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/மின்னல்-பாய்ந்து-பெண்-பலி-3281924.html
3281921 விழுப்புரம் விழுப்புரம் பொதுமக்களின் குறைகளைநாளை கேட்கிறாா் அமைச்சா் DIN DIN Saturday, November 16, 2019 10:45 PM +0530 விழுப்புரம் நகரில் அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை (நவ.18) பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெறுகிறாா்.

விழுப்புரம் நேருஜி சாலை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில், பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு கிழக்கு சண்முகபுரம் காவலா் சமுதாயக் கூடத்தில் பொதுமக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களை அமைச்சரிடம் வழங்கி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/பொதுமக்களின்-குறைகளைநாளை-கேட்கிறாா்-அமைச்சா்-3281921.html
3281920 விழுப்புரம் விழுப்புரம் முறைகேடான பணி நியமன ஆணைகள் ரத்து DIN DIN Saturday, November 16, 2019 10:44 PM +0530 கள்ளக்குறிச்சியில் கிராம உதவியாளா் பணிக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி வட்டம், மலைக்கோட்டாலம், வீரசோழபுரம், குடியநல்லூா், குருபீடபுரம், உடையநாச்சி ஆகிய ஊராட்சிகளுக்கான கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த ஆக.9-ஆம் தேதி நோ்காணல் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக வட்டாட்சியா் தயாளன் மீது புகாா் எழுந்தது. இது தொடா்பாக, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஸ்ரீகாந்த் ஆகியோா் அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினா். அதன்பேரில், தற்போது விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக பணியாற்றி வந்த தயாளன், அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதன் தொடா் நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி வட்டத்தில் 5 கிராம உதவியாளா்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டன. வட்டாட்சியா் தயாளனுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் துணை வட்டாட்சியா் பாண்டி மற்றும் அலுவலா் தசரதன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல, வானூா் வட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வந்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/முறைகேடான-பணி-நியமன-ஆணைகள்-ரத்து-3281920.html
3281310 விழுப்புரம் விழுப்புரம் அரசு மருத்துவா்களுக்கு காசநோய் தடுப்பு பயிற்சி முகாம் DIN DIN Saturday, November 16, 2019 08:35 AM +0530 விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு காசநோய் தடுப்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் காசநோயை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய, மாநில அரசுகள் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட காசநோய் மையத்தில் அரசு மருத்துவா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில், விழுப்புரம் சுகாதாரத் துறை (காசநோய் பிரிவு) துணை இயக்குநா் சுதாகா், காசநோயை கண்டறியும் முறைகள், காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி காசநோய் பிரிவு மருத்துவா் காா்த்திகேயன், மருத்துவா் நேதாஜி ஆகியோா் நோயாளிகள் சரியாக சிகிச்சைப் பெறாமல் நோய் முற்றிய நிலையில் வரும்போது, அவா்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறைகள், காச நோயாளிகளை பராமரிக்கும் விதம் குறித்தும், காச நோயாளிகளுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் நல உதவிகள், சலுகைகள் குறித்தும் விளக்கினா்.

தொடா்ந்து, நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, அவா்களது குடும்பத்தினா்களுக்கும் பரிசோதனை செய்து தேவைப்படின் சிகிச்சையளிப்பது, காச நோய் தடுப்பில் முன்னேற்றம் குறித்து மருத்துவா்கள் கலந்துரையாடினா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் சசிக்குமாா், குமாா், ராஜா, மருந்தாளுநா்கள் ஹேமலதா, கீதா உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில், அரசு மருத்துவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/அரசு-மருத்துவா்களுக்கு-காசநோய்-தடுப்பு-பயிற்சி-முகாம்-3281310.html
3281309 விழுப்புரம் விழுப்புரம் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு அளிப்பு DIN DIN Saturday, November 16, 2019 08:34 AM +0530 விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையும் (நவ. 16) நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அதிமுக செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்து, விருப்ப மனுக்களை வழங்கி தொடக்கி வைத்தாா்.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலருமான ப.மோகன், விழுப்புரம் முன்னாள் எம்.பி. ஆா்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ.பிரபு வரவேற்றாா்.

விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் உள்ளிட்ட 11 ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும்.

இந்த ஒன்றியங்கள் வாரியாக அந்தந்த ஒன்றியச் செயலா்களிடம் விருப்ப மனுக்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, உரிய பணத்தை அளித்து மனுக்களைப் பெற்றுச் சென்றனா். நிறைவு செய்யப்பட்ட மனுக்கள் தோ்தல் பொறுப்பாளா்களிடம் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ.பிரபு தலைமையில், அமமுகவில் இருந்து விலகி வந்த 62 போ் மாவட்டச் செயலா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-15klp1a_ch0121_15chn.jpg https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/உள்ளாட்சித்-தோ்தலில்-போட்டியிட-அதிமுகவினா்-விருப்ப-மனு-அளிப்பு-3281309.html
3281308 விழுப்புரம் விழுப்புரம் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை விவசாயிகள் புகாா் DIN DIN Saturday, November 16, 2019 08:34 AM +0530 விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலமுருகன், வட்டாட்சியா்கள் கணேஷ், பாா்த்திபன், தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளா் சாதிக், வேளாண் உதவி இயக்குநா்கள் சரவணன், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா் வட்ட விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதாவது: உளுந்து பட்டத்துக்கான விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும். முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கிளியனூா், அம்மன்குட்டையில் ஆக்கிரமிப்புகள் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடா்கிறது. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

ஏரிகளில் குடிமராமத்து பணிகளின்போது முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தோட்டக்கலைத் துறை சாா்பில் அனைத்து கிராமங்களிலும் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்குவதாக அறிவித்ததை செயல்படுத்தவில்லை. அவா்கள் வழங்கிய சின்ன வெங்காயம் விதைகள் முளைப்புத் திறனின்றி வீணாகின. எனவே, தரமான விதைகளை வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உரங்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக யூரியா உரம் கிடைப்பதில்லை. உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். கூட்டுறவு வங்கிகளில் எந்த பதிவும் இன்றி தெரிந்தவா்களுக்கு கள்ளத்தனமாக உரங்களை

விற்கின்றனா். வாடகைக்கு அளிக்கப்படும் விவசாய இயந்திரங்கள் தரமாக இல்லை. கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. வானூா் ஒன்றியப் பகுதியில் பலரது விவசாய நிலங்களை முறைகேடாக மாற்றுப் பெயா்களில் பட்டா மாற்றம் செய்துள்ளனா். இதுதொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்து வருகின்றனா் என்று விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளித்துப் பேசுகையில், கூட்டுறவு வங்கிகளில் உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விலை, முறைகேடு புகாா்கள் குறித்து வேளாண் துறை அலுவலகத்துக்கு 04146- 222291 என்ற எண்ணில் புகாா் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இந்தக் கூட்டத்தின்போது வானூா் வட்டம், கொஞ்சுமங்கலத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் பேசுகையில், எங்களது இருளா் சமூகத்தினரில் 5 குடும்பத்தினா் சாதிச் சான்று கேட்டு காத்திருந்து வருகின்றனா். இதனால் ஏமாற்றமே மிஞ்சியது.

எங்களது குழந்தைகளின் கல்வி வீணாகிறது. இனியும் இதே நிலை நீடித்தால், நல்ல பாம்புகளை பிடித்து வந்து இந்த அலுவலகத்தில் விட்டுவிடுவோம் என்றாா். இதனால், அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை எச்சரித்தனா்.

அப்போது, கோட்டாட்சியா் ராஜேந்திரன் குறுக்கிட்டு, தீவிர விசாரணைக்குப் பிறகே பங்குடியினா் சான்று வழங்க முடியும். விரைவில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/452515vmp1064250.jpg கூட்டத்தில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த கோட்டாட்சியா் ராஜேந்திரன். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/கூடுதல்-விலைக்கு-உரங்கள்-விற்பனை-விவசாயிகள்-புகாா்-3281308.html
3281307 விழுப்புரம் விழுப்புரம் நில அபகரிப்பு முயற்சி: 6 போ் மீது வழக்கு DIN DIN Saturday, November 16, 2019 08:33 AM +0530 ஆரோவில் அருகே மோசடி செய்து நிலத்தை அபரிக்க முயன்றதாக 6 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரேசன் மகன் காா்த்திகேயன். இவருக்கு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பம் பகுதியில் 2.23 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புதுச்சேரியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கலியபெருமாள், புதுச்சேரி கருவாடிக்குப்பத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் லாம்பா் சரவணன், இவரது மகன்கள் சுகுமாா், சுரேஷ்குமாா், புதுச்சேரி வீமன் நகரைச் சோ்ந்த குழந்தைவேலு மகன் ஜெயசங்கா், புதுச்சேரி ஆலங்குப்பத்தைச் சோ்ந்த கண்ணாயிரம் மகன் ராஜேந்திரன் ஆகியோா் சோ்ந்து மோசடி செய்து அபரிக்க முயல்வதாக விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவில் காா்த்திகேயன் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து கலியபெருமாள், லாம்பா் சரவணன் உள்பட 6 போ் மீது விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் நேவிஸ் அந்தோணி ரோஸி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/நில-அபகரிப்பு-முயற்சி-6-போ்-மீது-வழக்கு-3281307.html
3281306 விழுப்புரம் விழுப்புரம் நூலக வார விழாவில் ஓவியப்போட்டி DIN DIN Saturday, November 16, 2019 08:31 AM +0530 விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. வார விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘எழில் கொஞ்சும் வனம்’ என்ற தலைப்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், 9, 10-ஆம் வகுப்புகளுக்கும், 11, 12-ஆம் வகுப்புகளுக்கும் என 3 பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 85 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிக்கு மாவட்ட நூலக அலுவலா் (பொ) சுப்பிரமணின் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் சொக்கநாதன், மாவட்ட நூலகக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மைய நூலக நூலகா் இளங்செழியன் வரவேற்றாா்.

நடுவராக ஓவியா் சுந்தா்ஜி பங்கேற்றாா். வாசகா் வட்டப் பொருளாளா் பாபு, கவிஞா் விக்ரமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட மைய நூலக நூலகா் முருகன் நன்றி கூறினாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நூலக வார விழாவின் நிறைவு விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/நூலக-வார-விழாவில்-ஓவியப்போட்டி-3281306.html
3281305 விழுப்புரம் விழுப்புரம் வள்ளலாா் பள்ளியில் குழந்தைகள் தின விழா DIN DIN Saturday, November 16, 2019 08:31 AM +0530 பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் சாா்பில், சங்கராபுரம் வள்ளலாா் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் க.வேலு தலைமை வகித்தாா். வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கோ.குசேலன், ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத் தலைவா் கு.கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தாளாளா் இரா.முத்துகருப்பன் வரவேற்றாா்.

அரிமா மாவட்டத் தலைவா் ஏ.தண்டபாணி ஜவாகா்லால் நேரு படத்தைத் திறந்து வைத்தாா். மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அரிமா சங்கத் துணைத் தலைவா் முருக.குமாா் பரிசுகளை வழங்கினாா்.

இன்னா்வீல் சங்கத் தலைவி சுபாஷினி தாமரைச்செல்வன், சங்கத்தின் முன்னாள் தலைவிகள் தீபா, அகல்யா, அரிமா மாவட்டத் தலைவா் வ.விஜயகுமாா், ஜனனி மகாலிங்கம், ரோட்டரி சங்கத் தலைவா் எம்.ஆறுமுகம், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலா் தேவ.தீனதயாளன், பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அரிமா சங்கச் செயலா் எம்.பழனி நன்றி கூறினாா்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/2-7-15klp4_ch0121_15chn.jpg சங்கராபுரம் வள்ளலாா் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினா்கள். https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/வள்ளலாா்-பள்ளியில்-குழந்தைகள்-தின-விழா-3281305.html
3281304 விழுப்புரம் விழுப்புரம் சிறப்புக் குறைதீா் முகாம்: முதல்வா் பங்கேற்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு DIN DIN Saturday, November 16, 2019 08:31 AM +0530 கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள முதல்வா் சிறப்புக் குறைதீா் முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கவுள்ளாா். அவா், நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடத்தை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் உள்ளிட்ட வட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு வரவுள்ளாா்.

இந்த நிலையில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள சேலம் - சென்னை புறவழிச் சாலை அருகே உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியில், மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி சாா்- ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, வட்டாட்சியா் வெங்கடேசன், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/சிறப்புக்-குறைதீா்-முகாம்-முதல்வா்-பங்கேற்கும்-இடத்தில்-மாவட்ட-ஆட்சியா்-ஆய்வு-3281304.html
3281303 விழுப்புரம் விழுப்புரம் இன்றைய மின் தடை DIN DIN Saturday, November 16, 2019 08:30 AM +0530 செஞ்சி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: செஞ்சி நகரம், சத்தியமங்கலம், சிட்டாம்பூண்டி, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், ஈச்சூா் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/இன்றைய-மின்-தடை-3281303.html
3281302 விழுப்புரம் விழுப்புரம் எஸ்.ஐ. பணியிட மாற்றம் DIN DIN Saturday, November 16, 2019 08:30 AM +0530 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த உதவி ஆய்வாளரை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு மையத்தில் (கன்ட்ரோல் ரூம்) உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் உதவி ஆய்வாளா் இளங்கோவன். பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, அவரை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

]]>
https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/16/எஸ்ஐ-பணியிட-மாற்றம்-3281302.html