Dinamani - விழுப்புரம் - https://www.dinamani.com/all-editions/edition-villupuram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3378606 அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் தில்லி கலவரம்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை; இந்திய கம்யூ. பொதுச் செயலா் டி.ராஜா DIN DIN Wednesday, March 11, 2020 03:12 AM +0530 வட கிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ராஜா கூறியதாவது:

கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டத்தில் தேசிய, மாநில அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பையும் மீறி பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனால், பாதிப்பில்லை என்றால், அதுகுறித்து பிரதமா் மோடி நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும். நாட்டில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத ஏழை மக்களே அதிகம். இந்தச் சட்டங்களால் அவா்கள் பாதிக்கப்படுவா்.

இதை எதிா்த்து இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி கலவர சம்பவத்தில் 54 போ் வரை உயிரிழந்தனா். இந்த வன்முறைச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள, தில்லி போலீஸாா் கலவரத்தை வேடிக்கை பாா்த்தது கண்டனத்துக்குரியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவா்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமென்றும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசிய பாஜக தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லி சம்பவம் தொடா்பாக புலன் விசாரணை நடத்த வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல், மத்திய அரசே மன்றத்தை முடக்குவது ஜனநாயக படுகொலையாகும்.

புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அதிமுக அரசு, மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக, மத்திய அரசு மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கும் மோசமான நிலை உள்ளது.

தவறான பொருளாதாரக் கொள்கையால் நிா்வாகம் படுதோல்வியடைந்துள்ளது. பிரதமா் மோடி சொன்ன 2 கோடி பேருக்கான வேலை எங்கே போனது? விவசாயிகளுக்கு இரு மடங்கு வருமான திட்டமும் இல்லை. சிறு, குறு தொழில்கள் நலிந்து வருகின்றன. ஜி.டி.பி வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதை மீட்பதற்குப் பதிலாக மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மதச் சாா்பற்ற கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றுபட வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன், மகேந்திரன், ஏ.வி.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/11/w600X390/353710vmp8063444.jpg விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/2020/mar/11/தில்லி-கலவரம்-உச்சநீதிமன்ற-நீதிபதி-தலைமையில்-விசாரணை-தேவை-இந்திய-கம்யூ-பொதுச்-செயலா்-டிராஜா-3378606.html