Dinamani - ஆட்டோமொபைல்ஸ் - https://www.dinamani.com/automobiles/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3005653 ஆட்டோமொபைல்ஸ் 3 சக்கரங்களுடன் கூடிய 'யமஹா நிகேன்' பைக் அறிமுகம் Raghavendran DIN Saturday, September 22, 2018 03:00 PM +0530  

இருசக்கர வாகன விற்பனையில் முதன்மையாகத் திகழும் யமஹா நிறுவனமாகத் திகழும் யமஹா, தற்போது புதிய கண்டுபிடிப்புடன் களமிறங்கியுள்ளது. இளைஞர்களின் பெரும் ஆதரவு பெற்ற யமஹா நிறுனத்தின் பைக்குகள் தான் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமிக்கின்றன. இவை ஆர்எக்ஸ் 100-ல் தொடங்கி தற்போது உள்ள ஆர்15 வரை பொருந்தும். 

இதே வேளையில் ப்ரீமியம் வகைகளிலும் பலதரப்பட்ட விதமான பைக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இருசக்கர வாகனத்திலேயே பெரும் புரட்சியையும் ஏற்படுத்திவிட்டது. 3 சக்கரங்களுடன் கூடிய 'நிகேன்' எனும் புதிய வகை பைக்கை யமஹா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பொதுவாக இதுபோன்ற 3-ஆவது சக்கரம் பின்பகுதியிலேயே அதிகம் காணப்படும். ஆனால், யமஹா நிறுவனம் சற்றே புதிய முயற்சியாக அதை முன்பக்கம் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது. இவ்வகை பைக்குகள் ரூ.11 லட்சம் முதல் விற்பனைக்கு வருகின்றன.

 

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

]]>
yamaha, Niken, யமஹா, நிகேன் https://www.dinamani.com/automobiles/2018/sep/22/3-சக்கரங்களுடன்-கூடிய-யமஹா-நிகேன்-பைக்-அறிமுகம்-3005653.html
3002851 ஆட்டோமொபைல்ஸ் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன? இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது! DIN DIN Tuesday, September 18, 2018 01:58 PM +0530 தற்போது பலரின்  மனதில் இருக்கும் ஒரே கேள்வி,  எப்போது பெட்ரோல், டீசல் விலை பழைய நிலைக்குத் திரும்பும் என்பதுதான். அந்த அளவுக்கு வாகனப் பயன்பாட்டுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். பெட்ரோலிய பொருள்கள் இல்லை என்றால் துரும்பும்  நகராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசலின்  தேவையும், விலையும், அதனால் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது.  தற்போதுதான் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

விஞ்ஞான   வளர்ச்சி அதிகரித்து வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை யோசித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்காவைச் சேர்ந்த 'ஏர்பாட்' என்ற நிறுவனம் காற்றில் செல்லக் கூடிய காரைத் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

பலூனில் காற்றை அடைத்து ஊசியால் உடைத்தால் எப்படி காற்று வேகமாக வெளியேறுகிறதோ, அதே போல் உயர் அழுத்த காற்றை அடைத்து அதை வெளியேற்றி அதன் மூலம் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி இந்தக் கார் இயக்கப்படுகிறது.

காற்றை  உயர் அழுத்த நிலையில் இந்த  ஏர்பாட் கார்களுக்கு நிரப்பினால் போதும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு முறை காற்றை நிரப்பினால் 160 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்தக் கார்களுக்கு தனியாக ஏ.சி. தேவையில்லை. ஏனென்றால், உயர் அழுத்த காற்றின் மூலம் கார்களில் தானாக குளிச்சி ஏற்படும்.

ஏர்பாட் கார்களின் விலை சுமார் ரூ.7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காற்றில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

]]>
அமெரிக்கா , petrol, america, car, கார், பெட்ரோல் https://www.dinamani.com/automobiles/2018/sep/18/டீசல்-இல்லாமல்-வாகனங்களை-இயக்கவே-முடியாதா-என்ன-இந்தப்-புதுமையான-கார்-அதற்கு-ஒரு-தீர்வாகிறது-3002851.html
2999617 ஆட்டோமொபைல்ஸ் வெஸ்பா, ஏப்ரிலியா ஃபெஸ்டிவ்: இலவச காப்புறுதி உட்பட ரூ.10 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு DIN DIN Thursday, September 13, 2018 06:38 PM +0530  

வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் சிறப்பு பிக் பெஸ்டிவ் சலுகையின் கீழ் 10,000 ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது, ஐந்து ஆண்டு இலவசமாக கட்டாயமான காப்புறுதி மற்றும் உத்தரவாதத்தை உள்ளடக்குகிறது மேலும் பல சலுகைகளை வழங்குகிறது.

சென்னை பியாஜியோ இந்தியா செப்டம்பர் முதல் அக்டோபர் வரை கவர்ச்சிகரமான பண்டிகை சலுகைகளை வழங்குகிறது. முதல் முறையாக பியாஜியோ  '5X பான் சலுகை' அதன் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா இரு சக்கர வாகனங்களின் வரம்புகளில் அறிமுகப்படுத்துகிறது.  இந்த தனித்துவமான சலுகை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மூன்று விருப்பத் தேர்வை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பியாஜியோவின் இரண்டு பிராண்டிற்கும் ரூபாய் 10,000  மற்றும் அதற்கு மேற்பட்ட சலுகைகளை பெறமுடியும்.

வெஸ்பா ஸ்கூட்டர் வரம்பு எஸ்எக்ஸ்எல்  125, எஸ்எக்ஸ்எல் 150, விஎக்ஸ்எல் 125, விஎக்ஸ்எல் 150, எலெகான்ட் ஆகியவை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  நாட்டே இதன் விலை ரூபாய் 68,845 (எக்ஸ் ஷோரூம் புனே) மற்றும் ஏப்ரிலியா எஸ்ஆர் 125, எஸ்ஆர் 150 மற்றும் எஸ்ஆர் 150 ரேஸ் பண்டிகை பருவ விளம்பரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. '5X பான் சலுகை' 125 சிசி வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான உத்தரவாதம் மற்றும் காப்பீட்டை உள்ளடக்குகிறது மற்றும் 150 சி.சி மாடல்களுக்கு சலுகைகளை வழங்குகிறது.

இதன் '5X பான் சலுகை' கீழ், வாடிக்கையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உத்தரவாதத்தை அனுபவிக்கலாம், இதில் இரண்டு ஆண்டுகளுக்கு நிலையான உத்தரவாதமும், மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் இதில் உள்ளடங்கியுள்ளன. கூடுதலாக, முதல் வருடம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ் சேவையைப் பெற முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு 'ஆன் ரோடு உதவி' மற்றும் 5,000 ரூபாய் மதிப்புள்ள பேடிஎம் நன்மைகள் அல்லது ஸிரோ காஸ்ட் ஈ.எம்.ஐ அலல்து ரூபாய் 3,999-க்கன அளவில் குறைவான டவுன் பெமென்ட் போன்ற லாபகரமான கட்டண முறைகள் உள்ளன.

இந்த சிறப்பு பண்டிகை சலுகை பற்றி பேசிய திரு. டீகோ க்ராபி, சிஇஓ மற்றும் எம்டி பியாஜியோ இந்தியா கூறியது "பியாஜியோ வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வரம்பு ஸ்கூட்டர்களில் அதன் பிரதான உள்ளடக்கிய சலுகைகளுடன் பண்டிகை காலத்தை வரவேற்கிறது. நுகர்வோர் அவற்றின் ஸ்டைலான தோற்றம், உறுதியான வடிவமைப்பு மற்றும் இத்தாலிய நேர்த்தியுடன் இரு ப்ராண்டுகளையும் மதிப்பீடு செய்கின்றனர். எங்கள் தனித்துவமான பண்டிகை சலுகை இந்த திசையின் ஒரு படியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது மற்றும் இது  வாடிக்கையாளர்களுக்கு உணர்ச்சிகரமான தேர்வுகளை வழங்கி கொண்டாடுகிறது"

திரு ஆஷிஷ் யக்மி, தலைமை அதிகாரி - இரு சக்கர வாகன வணிகம் கூறியது, "நுகர்வோர் நம் மரபுகளை சொந்தமாக வைத்து வாழ்கையின் உயர்வு மற்றும் சுதந்திரத்தை கொண்டாட முடியும். எங்கள் '5X பான் சலுகை' என்பது ஒரு லாபகரமான தொகுப்பாக மட்டுமல்லாமல் உரிமையாளரின் செலவிற்கு ஒரு மதிப்பினை சேர்க்கிறது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு நிதி நன்மைகளையும் வழங்குகிறது. பியாஜியோ ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீட்டு செலவை ஏற்றுக்கொள்கிறது. மேலும் கூடுதலாக எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஐந்து ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது. இது அதனை ஒருவகையான சிறந்த வாய்ப்பாக உருவாக்குகின்றது".

மேலும் தொடர்புக்கு அனுகவும்:

சந்தோஷ் மல்லையா

9841638757

]]>
வெஸ்பா, Vespa https://www.dinamani.com/automobiles/2018/sep/13/வெஸ்பா-ஏ-ஃபெஸ்டிவ்-இலவச-காப்புறுதி-உட்பட-ரூ10-ஆயிரம்-வரை-சலுகை-அறிவிப்பு-2999617.html
2992269 ஆட்டோமொபைல்ஸ் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை நிலவரம் DIN DIN Sunday, September 2, 2018 12:58 AM +0530  

புது தில்லி: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸூகி தவிர்த்து பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.

மாருதி சுஸூகி விற்பனை 3.4% சரிவு

வாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸூகியின் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்து 1,58,189-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 1,63,701-ஆக காணப்பட்டது.

உள்நாட்டில் கார் விற்பனை 1,52,000-லிருந்து 2.8 சதவீதம் குறைந்து 1,47,700-ஆனது. குறிப்பாக, ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிûஸயர் விற்பனை 74,012-லிருந்து 3.6 சதவீதம் சரிந்து 71,364-ஆக இருந்தது.  அதேசமயம், சிறிய ரகத்தைச் சேர்ந்த ஆல்டோ, வேகன் ஆர் விற்பனை 1.3 சதவீதம் அதிகரித்து 35,895-ஆக காணப்பட்டது. நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 10.4 சதவீதம் சரிவடைந்து 10,489-ஆனது என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 58,262 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனையான 45,906 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும்.
பயணிகள் கார் விற்பனை 28 சதவீதம் உயர்ந்து 18,420-ஆகவும், வர்த்தக வாகன  விற்பனை 31,566-லிருந்து 26 சதவீதம் வளர்ச்சி கண்டு 39,859-ஆகவும் இருந்தன. பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் மொத்த ஏற்றுமதி 78 சதவீதம் உயர்ந்து 5,478-ஆக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


அசோக் லேலண்ட் விற்பனை 27% வளர்ச்சி

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 27 சதவீதம் உயர்ந்து 17,386-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வாகன விற்பனை 13,637-ஆக காணப்பட்டது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 13,158-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 38 சதவீதம் உயர்ந்து 4,228-ஆகவும் இருந்ததாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.


ஃபோர்டு விற்பனை 31% அதிகரிப்பு

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஆகஸ்டில் 31.18 சதவீதம் அதிகரித்து 20,648-ஆக இருந்தது. கடந்தாண்டில் வாகன விற்பனை 15,740-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 58.30 சதவீதம் உயர்ந்து 12,606-ஆக இருந்ததாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.


ஹுண்டாய் விற்பனை  3.4% உயர்வு

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 61,912 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதேகால அளவு விற்பனையான 59,905 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் விற்பனை 2.8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 25.8 சதவீதம் அதிகரித்து 16,111-ஐ எட்டியுள்ளதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.


மஹிந்திரா விற்பனை 14% வளர்ச்சி

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 48,324 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான 42,207 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 45,373 ஆகவும், ஏற்றுமதி 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,951-ஆகவும் இருந்தது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.


டிவிஎஸ் மோட்டார் விற்பனை 8% ஏற்றம்

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 3,43,217-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மாத கால அளவில் விற்பனை 3,17,563-ஆக காணப்பட்டது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,09,146-லிருந்து அதிகரித்து 3,30,076-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 2,75,688-ஆக இருந்தது.  மூன்று சக்கர வாகன விற்பனை 8,147 என்ற எண்ணிக்கையிலிருந்து 56 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,141-ஆனது. ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரித்து  66,028-ஆக இருந்தது. அயல் நாடுகளுக்கான இருசக்கர வாகன ஏற்றுமதி 41 சதவீதம் உயர்ந்து 54,388-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/automobiles/2018/sep/02/ஆகஸ்ட்-மாத-வாகன-விற்பனை-நிலவரம்-2992269.html
2812190 ஆட்டோமொபைல்ஸ் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 அறிமுகம் DIN DIN Tuesday, November 21, 2017 12:59 PM +0530 கோவாவில் நடைபெற்று வரும் ரைடர் மேனியா அரங்கில் கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்யகி வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம், கோவாவில் நடைபெற்று வரும் மேனியா 2017 அரங்கில் தனது கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களை இந்தியாவுக்கு அறிமுகம் செய்துள்ளது.  கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல் எஞ்சின் சிறப்பம்சமானது 'பேரலல்-ட்வின்' தொழில்நுட்பத்தில் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் இல்லாமல் 198 கிலோ கிராம் எடை கொண்டுள்ள கான்டினென்டல் ஜிடி 650 மாடலில் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 

கிளாசிக் தோற்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மோட்டார் சைக்கிள் மாடல்களும் அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சந்தைகளில் விற்பனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/automobiles/2017/nov/21/ராயல்-என்ஃபீல்டு-கான்டினென்டல்-ஜிடி-650-மற்றும்-இன்டர்செப்டர்-650-அறிமுகம்-2812190.html
2791973 ஆட்டோமொபைல்ஸ் மாருதி சுஸூகியின் புதிய டிசையர்: ஐந்தரை மாதங்களில் 1 லட்சம் கார் விற்பனை DIN DIN Wednesday, October 18, 2017 12:44 AM +0530 மாருதி சுஸூகி இந்தியாவின் புதிய டிசையர் கார் விற்பனை அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களில் 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ஆர்.எஸ். கல்ஸி தெரிவித்ததாவது:
மேம்படுத்தப்பட்ட புதிய டிசையர் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் ஐந்தரை மாதங்களில் அதன் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது சாதனையாகும். இன்றைய இளம் தலைமுறை வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான காரை தயாரித்து வழங்குவதில் நிறுவனத்தின் வெற்றியை இது எடுத்துக்காட்டுகிறது. 
கடந்த ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் டிசையர் வாடிக்கையாளர்களில் ஆட்டோ கியர் ஷிப்ட் (ஏஜிஎஸ்) தொழில்நுட்பத்தை 17 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது சந்தையில் அதற்குண்டான வரவேற்பை பிரதிபலிப்பதாக உள்ளது.
புதிய டிசையர் கார் விற்பனை அதிகரிப்புக்கு எரிபொருள் சிக்கனமும் ஒரு முக்கிய காரணம். டீசலில் இயங்கும் டிசையர் லிட்டருக்கு 28.4 கி.மீ.யும், பெட்ரோலில் இயங்கும் கார் 22 கி.மீ.யும் வழங்குவது அவற்றின் தனிச்சிறப்பு என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/automobiles/2017/oct/18/மாருதி-சுஸூகியின்-புதிய-டிசையர்-ஐந்தரை-மாதங்களில்-1-லட்சம்-கார்-விற்பனை-2791973.html
2687949 ஆட்டோமொபைல்ஸ் புதிய மாடல் கார் அறிமுகத்துக்காக ரூ.5,000 கோடி முதலீடு: ஹுண்டாய் DIN DIN Friday, April 21, 2017 02:41 AM +0530 இந்தியாவில் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக ஹுண்டாய் மோட்டார் தெரிவித்துள்ளது.
புதிய எக்ùஸன்ட் மாடல் கார் அறிமுக நிகழ்ச்சி புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஒய்.கே. கூ தெரிவித்ததாவது:
வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் ஹுண்டாய் கார் விற்பனையை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, 2020-ஆம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளோம். அதில் புதிய பிரிவில் உயர்வகை தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மூன்று மாடல்களும் அடங்கும். 2020-ஆம் ஆண்டு வரையில் ஆண்டுக்குத் தலா இரண்டு புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். 2021-க்குள் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.
கடந்த ஆண்டில் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 6.62 லட்சமாக இருந்தது. அதில், உள்நாட்டில் மட்டும் 5 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
அதன் மூலம், இந்தியாவில் பயணிகள் கார் சந்தையில் 17 சதவீத பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டோம்.
தற்போதைய நிலையில், இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனத்தின் 10 மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
வேகமாக மாறி வரும் கால சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு தக்கவாறு செயல்பட்டு வருவதே ஹுண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை. அதன் ஒரு பகுதியாகவே தற்போது எக்ùஸன்ட் காரை புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளோம்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் எக்ùஸன்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது முதல் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 2.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்களிடம் காணப்பட்ட வரவேற்பை கருத்தில் கொண்டே நவீனரக தொழில்நுட்பத்தில் புதிய வடிவில் எக்ùஸன்ட் காரை அறிமுகம் செய்துள்ளோம்.
பகல் பொழுதில் எரியக்கூடிய எல்.இ.டி. விளக்குகள், சுத்தமான காற்றோட்ட வசதிக்கான சக்கர காற்று திரைகள், ஷார்க் ஆன்டனா உள்ளிட்ட பல நவீன தொழிநுட்ப வசதிகள் புதிய மாடல் எக்ùஸன்ட் காரில் அமைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலில் இயங்கும் ஆறு மாடல்களில் அறிமுகமாகியுள்ள எக்ùஸன்ட் காரின் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் பிரிவில் ஐந்து மாடல்களின் விலை ரூ.6.28 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஒய்.கே. கூ மேலும் தெரிவித்தார்.

 

 

]]>
https://www.dinamani.com/automobiles/2017/apr/21/புதிய-மாடல்-கார்-அறிமுகத்துக்காக-ரூ5000-கோடி-முதலீடு-ஹுண்டாய்-2687949.html
2687279 ஆட்டோமொபைல்ஸ் ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது DIN DIN Wednesday, April 19, 2017 08:06 PM +0530 ரூபாய் 1,60,500 விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சினுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின் சக்கரத்தில், மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. முன்புற டயரில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் டயரில் ஒற்றை பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தபட்டுள்ளது. வண்டியின் முன்பக்க சக்கரம் 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.

அனைத்து புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளும் பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூபாய் 6,000 வரை விலை அதிகரித்துள்ளது.

முந்நைய மாடலை விட சற்று விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொண்டால் மே மாத மத்தியில் டெலிவரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

]]>
https://www.dinamani.com/automobiles/2017/apr/19/royal-enfield-f1-himalayan-motorcycle-on-sale-2687279.html
2679918 ஆட்டோமொபைல்ஸ் 23,157 கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா! DIN DIN Friday, April 7, 2017 02:54 AM +0530  

இந்தியாவிலிருந்து டெயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 23,157 கார்களைத் திரும்பப் பெறுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகெங்கிலிருந்தும் 29 லட்சம் கார்களை திரும்பப் பெற்று அவற்றை சரி செய்து தரும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் விற்பனை செய்த கொரோலா ஆல்டிஸ் வகையைச் சேர்ந்த 23,157 கார்களை திரும்பப் பெற்று அவற்றில் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் உள்ள கோளாறுகளை நிறுவனம் சரிசெய்து தர உள்ளது.
இந்த கார்கள் அனைத்தும் 2010 ஜனவரி - 2012 டிசம்பர் மாதங்களுக்கிடையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையான கொரோலா ஆக்சியோ மற்றும் ஆர்ஏவி4 கார்களில் பொருத்தப்பட்ட காற்றுப்பைகளில் ஏற்பட்ட கோளாறு சரி செய்து தரப்படும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
ஜப்பானைச் சேர்ந்த டகாட்டா கார்ப்பரேஷன், கார்களில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் காற்றுப் பைகளைத் தயாரித்து பல முன்னணி நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் காற்றுப் பைகள், பி.எம்.டபிள்யூ., கிரைஸ்லர், டெய்ம்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா, மாஸ்தா, மிட்ஸுபிஷி, நிஸான், சுபரு மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கார்களில் பொருத்தப்பட்டுள்ளன. காற்றுப்பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும் அதன் தயாரிப்புகளைத் திரும்பப் பெறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
நடப்பு ஆண்டு ஜனவரியில் ஹோண்டா நிறுவனம், காற்றுப் பை கோளாறை சரிசெய்து தருவதற்காக இந்தியவில் விற்பனை செய்த அக்கார்டு, சிவிக், சிட்டி,மற்றும் ஜாஸ் வகையைச் சேர்ந்த 41,580 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

]]>
https://www.dinamani.com/automobiles/2017/apr/07/23157-கார்களை-திரும்பப்-பெறுகிறது-டொயோட்டா-2679918.html
2678009 ஆட்டோமொபைல்ஸ் பஜாஜ் ஆட்டோ விற்பனை 11% சரிவு DIN DIN Tuesday, April 4, 2017 02:43 AM +0530  

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற மார்ச் மாதத்தில் 10.98 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பஜாஜ் ஆட்டோ சென்ற மார்ச்சில் 2,72,197 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 3,05,800 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 10.98 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டில் வாகன விற்பனை 2,04,281 என்ற எண்ணிக்கையிலிருந்து 17.13 சதவீதம் சரிவடைந்து 1,69,279-ஆக காணப்பட்டது.
ஒட்டுமொத்த மோட்டார் சைக்கிள் விற்பனை 7.57 சதவீதம் குறைந்து 2,44,235-ஆகவும், உள்நாட்டில் இதன் விற்பனை 14.33 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1,51,449-ஆகவும் காணப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை சென்ற மார்ச்சில் 27,962 -ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 41,551 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 32.70 சதவீத சரிவாகும்.
அதேசமயம், வெளிநாடுகளுக்கான பஜாஜ் வாகன ஏற்றுமதி அந்த மாதத்தில் 1,01,519 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.37 சதவீதம் உயர்ந்து 1,02,918-ஆக காணப்பட்டது என்று பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

]]>
https://www.dinamani.com/automobiles/2017/apr/04/பஜாஜ்-ஆட்டோ-விற்பனை-11-சரிவு-2678009.html
2673837 ஆட்டோமொபைல்ஸ் நிஸானின் புதிய டெரானோ அறிமுகம் DIN DIN Tuesday, March 28, 2017 02:38 AM +0530  

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ காரை புது தில்லி அருகே நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
நிஸான் இந்திய நிறுவனத்தின் தலைவர் கிலோம் சிகூர்ட் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் எட்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்தோம். திட்டமிட்டபடி புதிய மாடல்களை ஒவ்வொன்றாக விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதன்படி, இப்போது மேம்படுத்தப்பட்ட டெரானோ விற்பனைக்கு வருகிறது. மாடலுக்கு ஏற்ப ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.6 லட்சம் வரை இவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் எஸ்.யு.வி. ரக பயணிகள் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். உலகம் முழுவதும் அந்த வகையான எங்களது 'பெட்ரோல்', 'கஷகாய்', 'முரானோ' மாடல் கார்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இதற்கு அடுத்தபடியாகப் புதிய ஹைப்ரிட் மாடலான எக்ஸ்-டிரெயில் விற்பனைக்கு வரும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆண்டு இறுதிக்குள் எக்ஸ்-டிரெயில் விற்பனை தொடங்கும். இந்த மாடல் காரை உலகில் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யவிருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாத அதிநவீன ரக மாடல் இது.
இவை தவிர, நிஸானின் டாட்ஸன் ரக காரில் மேம்பாடுகளுடன் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ரக ஹாட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

 

 

]]>
https://www.dinamani.com/automobiles/2017/mar/28/நிஸானின்-புதிய-டெரானோ-அறிமுகம்-2673837.html
2558970 ஆட்டோமொபைல்ஸ் அக்டோபரில் வெளிவரும் டாடா ஹெக்ஸா எஸ்யூவி! dn DIN Tuesday, September 13, 2016 06:51 PM +0530 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான, டாடா ஹெக்ஸா, அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டாடா மோட்டார்ஸின் ஆர்யா எம்பிவிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் ஹெக்ஸா எஸ்யூவி, 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் இஞ்சினுடன் வெளிவருகிறது. அதிகபட்சமாக 154 பிஹெச்பி ஆற்றலையும், 400 என்எம் இழுவைத்திறனையும் கொண்ட ஹெக்ஸா, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளிவரும்.  

 

ஹெக்ஸா எஸ்யூவி 4764 மிமி நீளமும், 1895 மிமி அகலமும், 1780 மிமி உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸானது 2850 மிமி ஆகும்.  நல்ல கட்டுமஸ்தான தோற்றத்துடன் வரும் ஹெக்ஸா, டூயல் டோன் டேஷ்போர்டுடன் ஹர்மான் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமராவுடன் கூடிய 5.0 இஞ்ச் டச் ஸ்கிரீன், 3.5 இஞ்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் (உயர் வேரியண்ட்களில்) என பல சிறப்பு வசதிகளை கொண்டிருக்கும். 

மேலும் டைனமிக் வெஹ்கிள் கண்ட்ரோல், டிசிஎஸ், இஞ்சின் ட்ராக் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் வசதிகளுடன் வெளிவருகிறது ஹெக்ஸா.  

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹெக்ஸா, இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது.  ஹெக்ஸாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் வேரிகார் டீசல் இஞ்சினுக்கு மாற்றாக நல்ல ஆற்றல் வெளிப்படுத்தம் 2.0 லிட்டருக்கு குறைவான டீசல் இஞ்சின் டாடா மோட்டார்ஸிடம் இல்லாததாலும், சந்தைப்படுத்தலை அந்நிறுவனம் தள்ளிவைத்திருந்தது.  தற்போது அந்தத்தடை விலக்கப்பட்டு, இத்தகு வாகனங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீகிதம் அதிகமான பசுமைவரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், இஞ்சினில் மாற்றம் செய்யமாலயே அறிமுகப்படுத்த டாடா மோட்டர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.  சந்தைப்படுத்தப்படும்போது விலை ரூ. 12 லட்சத்திலிருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Credits: Tata Car Dealers

]]>
dinamani , automobiles, Tata Motors, SUV, Hexa https://www.dinamani.com/automobiles/2016/aug/30/அக்டோபரில்-வெளிவரும்-டாடா-ஹெக்ஸா-எஸ்யூவி-2558970.html
2557284 ஆட்டோமொபைல்ஸ் ஆகஸ்ட் 22ல் அறிமுகமாகும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்! DIN DIN Tuesday, September 13, 2016 06:50 PM +0530 இந்தியாவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகமாகிறது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின், அப்ரிலியா பிராண்டின் கீழ் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது

150சிசி, 3 வால்வ், ஏர்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இஞ்சினுடன் வெளிவரும் எஸ்ஆர் 150 அதிகபட்சமாக 11.39 பிஹெச்பி ஆற்றலையும், 11.5 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது.  முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் போர்க்ஸையும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட்டையும் கொண்டிருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸூடன், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூல் டேங்கையும் கொண்டிருக்கும் எஸ்ஆர் 150யில், இரு பக்கத்திலும் 120/70 செக்ஷன் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேட் பிளாக் மற்றும் வைட் ஆகிய இரு வண்ணங்களில் எஸ்ஆர் 150 கிடைக்கிறது.

 

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் பெரும் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.  அப்ரிலியா எஸ்ஆர் ஸ்கூட்டரை நாடு முழுவதுமுள்ள வெஸ்பா ஷோரூம்களிலும், Paytm இணையத்தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் அறிமுக விலையாக, ரூ. 65,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் பாராமதியிலுள்ள பியாஜியோவின் ஆலையில் தயாரிக்கப்படும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் அப்ரிலியா மாடலாகும்.  எஸ்ஆர் 150ஐ தொடர்ந்து மேலும் சில எஸ்ஆர்  வகை ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த அப்ரிலியா திட்டமிட்டுள்ளது.  மேலும் இங்கு உற்பத்தியாகும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அப்ரிலியா திட்டமிட்டிருக்கிறது.

Credits: Upcoming Scooters

]]>
தினமணி, ஆட்டோ மொபைல்ஸ் , பியாகியோ, ஸ்கூட்டர் , அப்ரில்லா , SR 150 https://www.dinamani.com/automobiles/2016/aug/19/ஆகஸ்ட்-22ல்-அறிமுகமாகும்-அப்ரிலியா-எஸ்ஆர்-150-ஸ்கூட்டர்-2557284.html
2557138 ஆட்டோமொபைல்ஸ் "ரீகால்" ஆகும் 539 ஸ்கோடா ஆக்டாவியா கார்கள்! DIN DIN Tuesday, September 13, 2016 06:49 PM +0530 ஸ்கோடா இந்தியா நிறுவனம், நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 வரை தயாரிக்கப்பட்ட 539 ஆக்டாவியா செடான் கார்களுக்கு "ரீகால்" என்னும் திரும்ப அழைத்தலை மேற்கொண்டிருக்கிறது. 

சைல்ட் லாக் பழுது காரணமாக இந்த திரும்ப அழைத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கோடா ஆக்டாவியாவின் பின் கதவுகளிலுள்ள சைல்ட் லாக் சிஸ்டம் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் புதிய சைல்ட் லாக் சிஸ்டம் மாற்றித்தரப்படுகிறது. சைல்ட் லாக் சிஸ்டத்தை பரிசோதனை செய்ய மொத்தமே 12 நிமிடங்களும், புதிய சைல்ட் லாக் சிஸ்டத்தை மாற்ற அதிகபட்சமாக 45 நிமிடங்களே ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலவசமாகவே செய்து தரப்படும்.  அந்தந்த பகுதி ஸ்கோடா டீலர்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து இலவச பழுது பார்த்தலை செய்து தருவார்கள் எனவும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

Credits: Skoda Octavia

]]>
https://www.dinamani.com/automobiles/2016/aug/17/ரீகால்-ஆகும்-539-ஸ்கோடா-ஆக்டாவியா-கார்கள்-2557138.html
3329 ஆட்டோமொபைல்ஸ் இன்னோவா க்ரிஸ்டாவின் பெட்ரோல் இஞ்சின் அறிமுகம்! DIN DIN Tuesday, September 13, 2016 06:44 PM +0530 டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா டீசல் வாகனத்திற்கு சந்தையில் பெரிய வரவேற்பு கிட்டியதை தொடர்ந்து, இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியண்ட்களை அந்த நிறுவனம் இன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

2.7 லிட்டர் விவிடி-ஐ பெட்ரோல் இஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்ட், , 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் என 2 கியர் தேர்வுகளுடன் வெளிவந்திருக்கிறது. அதிகபட்சமாக 166 ஹெச்பி ஆற்றலையும், 245 என்எம் இழுவைத்திறனையும் கொண்டிருக்கிறது.

ஆட்டோமெட்டிக் தேர்வு மற்றும் மேனுவல் தேர்வுடன் கூடிய இன்னோவா க்ரிஸ்டாவானது , 7 இருக்கைகளுடன் கூடிய Zx வேரியண்ட், 7 மற்றும் 8 இருக்கைகளுடன் கூடிய Gx வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களாக கிடைக்கிறது. ஆட்டோமெட்டிக் வேரியண்ட் 10.83 கிமீ மைலேஜையும், மேனுவல் வேரியண்ட் 9.89 கிமீ மைலேஜையும் தரும். கார்னெட் ரெட், வொயிட் பியர்ல் க்ரிஸ்டல் ஷைன், அவண்ட்-கார்டே ப்ரான்ஸ் என மூன்று புதிய வண்ணங்களுடன் கிடைக்கிறது.

பொதுவாக அனைத்து வேரியண்ட்களிலும் மூன்று ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகள் இருக்கும். முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட டீசல் க்ரிஸ்டா இரண்டே மாதங்களில் 24,000 எண்ணிக்கைகள் விற்பனையானது. 9000 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பெட்ரோல் க்ரிஸ்டாவும் அதேயளவுக்கான வரவேற்பை பெறும் என நம்புவதாக டெயோட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Credits: Innova Crysta Petrol

]]>
dinamani , new launch, auto mobiles, Toyota, Crysta, diesel engine https://www.dinamani.com/automobiles/2016/aug/11/இன்னோவா-க்ரிஸ்டாவின்-பெட்ரோல்-இஞ்சின்-அறிமுகம்-3329.html
2549216 ஆட்டோமொபைல்ஸ் எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம் dn DIN Tuesday, September 13, 2016 06:44 PM +0530 இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி), சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

maruti-suzuki-super-carry-truck-front-view.jpg

சூப்பர் கேரி பிக்கப் டிரக் 3800 மிமீ நீளமும், 1562 மிமீ அகலமும், 1868 மிமீ உயரமும் கொண்டது. 740 கிலோகிராம் வரையிலான எடையை இழுக்கும் திறன் கொண்டது. 793 சிசி , 2 சிலிண்டர்களை கொண்ட சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 32 பிஹெச்பி ஆற்றலையும், 75 என்எம் இழுவைத்திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 22.07 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 80 கிமீ வரை செல்லக்கூடியது.

ஸ்டீரியோ வாதி, ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ப்யூவல் மீட்டர், சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் கிளாக் போன்ற அம்சங்கள் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் கொண்ட சூப்பர் கேரி எல்எஸ்பிவி என்னும் பிரேக்கிங் நுட்பத்தில் இயங்குகிறது

சூப்பர் வெள்ளை, சூப்பர் சில்வர் என இரு வண்ணங்களில் சூப்பர் கேரி பிக்கப் ட்ரக் வெளிவருகிறது. இதன் லூதியானா எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 4.01 லட்சம்.

துவக்கத்தில் கொல்கத்தா, அஹமதாபாத், லூதியானா உள்ளிட்ட மூன்று நகரங்களில் விற்பனை செய்யப்படும் இந்த டிரக்கின் விற்பனை படிப்படியாக நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்படும்.

Credits: Maruti Truck

]]>
https://www.dinamani.com/automobiles/2016/jul/29/எல்சிவி-சந்தையில்-களமிறங்கும்-மாருதி-நிறுவனம்-2549216.html
2855 ஆட்டோமொபைல்ஸ் எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம் DIN DIN Tuesday, September 13, 2016 06:24 PM +0530 இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி) , சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் கேரி பிக்கப் டிரக் 3800 மிமீ நீளமும், 1562 மிமீ அகலமும், 1868 மிமீ உயரமும் கொண்டது. 740 கிலோகிராம் வரையிலான எடையை இழுக்கும் திறன் கொண்டது. 793 சிசி , 2 சிலிண்டர்களை கொண்ட சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 32 பிஹெச்பி ஆற்றலையும், 75 என்எம் இழுவைத்திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 22.07 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 80 கிமீ வரை செல்லக்கூடியது.

ஸ்டீரியோ வாதி, ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ப்யூவல் மீட்டர், சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் கிளாக் போன்ற அம்சங்கள் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் கொண்ட சூப்பர் கேரி எல்எஸ்பிவி என்னும் பிரேக்கிங் நுட்பத்தில் இயங்குகிறது

சூப்பர் வெள்ளை, சூப்பர் சில்வர் என இரு வண்ணங்களில் சூப்பர் கேரி பிக்கப் ட்ரக் வெளிவருகிறது. இதன் லூதியானா எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 4.01 லட்சம்.

துவக்கத்தில் கொல்கத்தா, அஹமதாபாத், லூதியானா உள்ளிட்ட மூன்று நகரங்களில் விற்பனை செய்யப்படும் இந்த டிரக்கின் விற்பனை படிப்படியாக நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்படும்.

Credits: Maruti Truck]]>
automobiles, LCV, Maruti, super carry pick up, new launch https://www.dinamani.com/automobiles/2016/jul/29/எல்சிவி-சந்தையில்-களமிறங்கும்-மாருதி-நிறுவனம்-2855.html
2699 ஆட்டோமொபைல்ஸ் ஒரு மில்லியன் ஐ20 கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை DIN DIN Tuesday, September 13, 2016 06:21 PM +0530 இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான  ஹூண்டாய் நிறுவனம், தனது ப்ரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் ஐ20 கார் மாடலை, உலகளவில் ஒரு மில்லியன் அளவில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது.  இந்தியாவில் முதன்முறையாக 2008-ம் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின், இரண்டாம் தலைமுறை 2014-ம் அறிமுகப்படுத்தப்பட்டது.  அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இந்திய அளவில்  ஹூண்டாயின் முதல் இரண்டு அதிக விற்பனையாகும் கார்களுள் ஒன்று என்னும் சிறப்புபெற்றது குறிப்பிடத்தக்கது. பிரிமியம் செக்மென்ட் பிரிவில் நீண்ட நாட்களாக முதல் இடத்திலிருந்த ஹூண்டாய் ஐ20, சமீபத்தில் மாருதியால் பலீனோ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் முதலிரண்டு இடங்களுக்குள் இருந்துவருகிறது. இந்தியாவில் அதிக விருதுகளை வென்ற மாடல் என்ற பெருமை கொண்ட ஐ20, அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரை 34 விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மற்றும் எலைட் ஐ20 ஆகிய கார்கள் மத்திய-கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள 29 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முதல் தலைமுறை ஐ20 உள்நாட்டில் 3,67,146 கார்களும், ஏற்றுமதி செய்யப்பட்டு அயல்நாடுகளில் 3,89,889 கார்களும் விற்பனையானது. எலைட் ஐ20 உள்நாட்டில் 2,05,441 கார்களும், அயல்நாடுகளில் 16,603 கார்களும் விற்பனை செய்யப்பட்டது. ஐ20 ஆக்டிவ் உள்நாட்டில் 30,877 கார்களும், அயல்நாடுகளில் 7,154 கார்களும் விற்கப்பட்டு, இதுவரை மொத்தமாக 10,17,110 கார்கள் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

Credits: i20 Mileage]]>
hyundai, i20, hatchback series, premium brand, one million https://www.dinamani.com/automobiles/2016/jul/27/ஒரு-மில்லியன்-ஐ20-கார்களை-விற்பனை-செய்து-ஹூண்டாய்-நிறுவனம்-சாதனை-2699.html
2700 ஆட்டோமொபைல்ஸ் 15 ஆண்டு பழைய டீசல் வாகனங்களுக்கு தடை DIN DIN Tuesday, September 13, 2016 06:19 PM +0530 நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 10 ஆண்டு பழைய டீசல் வாகனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அறிவுறுத்தியிருந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதன் முதற்கட்டமாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கான அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.  மேலும் இந்த வாகனங்களை நாட்டிலுள்ள வேறெந்த பகுதிகளிலும் விற்பனை செய்யவும் தடை விதித்திருக்கிறது.

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு டெல்லி ஆர்டிஓ மறுவிற்பனை செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளதால், பழைய பொருட்களை வாங்கும் ஸ்கிராப் கடைகளில் விற்பதை தவிர உரிமையாளர்களுக்கு வேறு வழி கிடையாது.  10-15 வருட வாகனங்களை டெல்லி-என்சிஆர் பகுதிகளில் இயக்கத் தடையிருந்தாலும், பிற பகுதிகளுக்கு விற்பனை செய்துகொள்ள முடியும். பெருநகரங்களில் வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை குறைக்கும் பொருட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Credits: Car Service Station]]>
delhi , NGT, diesel vehicles, ban, air pollution https://www.dinamani.com/automobiles/2016/jul/27/15-ஆண்டு-பழைய-டீசல்-வாகனங்களுக்கு-தடை-2700.html
2701 ஆட்டோமொபைல்ஸ் புதிய உத்திகளுடன், சரிவிலிருந்து மீள திட்டமிடும் மஹிந்திரா DIN DIN Tuesday, September 13, 2016 06:18 PM +0530 மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவின் விற்பனை கடும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த வருடம் 12.7 சதவீதம் விற்பனை சரிவைச் சந்தித்த இந்நிறுவனம், இந்த வருடத்தின் ஏப்ரல்-மே மாதங்களின் விற்பனை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் விற்பனையைவிட 38 சதவீதம் வரை சரிவைச் சந்தித்திருக்கிறது.  ஸ்கூட்டர் பிரிவில் 19.24 சதவீதமும், மோட்டார் சைக்கிள் பிரிவில் 60.72 சதவீதமும் விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது. இதன் விளைவாகப் புதிய உத்திகளுடன் முழுவேகத்தில் களமிறங்கி, சரிவிலிருந்து மீள திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

முதல்கட்டமாக தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையில் தனது 250 ஊழியர்களை வெளியேற்றியிருக்கும் அந்நிறுவனம், தனது கவனத்தையும் பிரிமியம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.  அடிப்படை மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ கார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் முழு ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. இந்த செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா நிறுவன மாடல்களால், அவற்றுக்கு ஈடுகொடுத்து சந்தையைக் கைப்பற்ற இயலவில்லை.  பிரிமியம் மோட்டார் சைக்கிள்களில் மஹிந்திராவின் மோஜோவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 15 நகரங்களில் தற்போது விற்கப்பட்டு வரும் மோஜோ 200 முதல் 250 எண்ணிக்கையளவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகிவருகிறது. இதனை 500 வாகனங்கள் என்றளவில் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிடுகிறது.

ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தளவில், பியூஜியட் நிறுவனத்தின் மாடல்களை இந்தியச் சந்தையில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் ஃபிரான்ஸை சார்ந்த 120 வருட பாரம்பரியமிக்க பியூஜியட் ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கியது நினைவிருக்கலாம்.  பியூஜியட்டின் டான்ஜோ, ஸ்பீடுபைட், மெட்ரோபோலிஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Credits: Mahindra Bike]]>
two wheeler, Mahindra, sales decline, new method, improvement plan https://www.dinamani.com/automobiles/2016/jul/27/புதிய-உத்திகளுடன்-சரிவிலிருந்து-மீள-திட்டமிடும்-மஹிந்திரா-2701.html
2702 ஆட்டோமொபைல்ஸ் இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ DIN DIN Tuesday, September 13, 2016 06:16 PM +0530 இந்திய கார் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, தனது பிரசித்திபெற்ற ஸ்கார்பியோ மாடலில் இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்கார்பியோவின் 2.2 லிட்டர் எம்ஹாக் இன்ஜினுடைய அனைத்து வேரியன்ட்களிலும் இந்த நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நுட்பம் பொருத்தப்படுவதன் மூலம் எரிபொருள் பயன்பாடு 7 சதவீகிதம் வரை குறையும் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்தில் காரின் இன்ஜின், வாகனம் நிலையிலிருக்கும்போது தானாகவே அணைந்து பின்னர் தேவைப்படும் நேரத்தில் இயங்கும். மேலும், காரின் வேகப்படுத்தலுக்கு எலக்ட்ரிக் பவர் உபயோகமாகும். பிரேக் ஆற்றலை சேமித்து திரும்பப் பயன்படுத்தும் பிரேக் ரீஜெனரேட்டிவ் ஆப்ஷனும் இருப்பது இதன் சிறப்பம்சம்.

ஸ்கார்பியோவின் S4, S4+, S4+ 4WD, S6+, S8, S10 2WD & S10 4WD ஆகிய அனைத்து வேரியன்ட்களிலும் இந்த நுட்பத்துடனான கார் வெளிவருகிறது. துவக்க நிலை மாடலான S2வில் மட்டும் இந்த நுட்பம் கிடைக்காது. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், சுத்தமான, பசுமையான உலகை உருவாக்கும் முயற்சியில் மஹேந்திரா நிறுவனமும் பங்குகொள்கிறது என தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இன்டெலி-ஹைபிரிட்டுடனான ஸ்கார்பியோ ரூ. 9.28 லட்சத்திலிருந்து ரூ. 14.01 லட்சம் வரைக்கும் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) கிடைக்கும்.

Credits: Mahindra Scorpio]]>
Mahindra, scorpio, intel hybrid, emhac engine, new launch https://www.dinamani.com/automobiles/2016/jul/27/இன்டெலி-ஹைபிரிட்-நுட்பத்துடன்-வெளிவரும்-மஹேந்திரா-ஸ்கார்பியோ-2702.html
2703 ஆட்டோமொபைல்ஸ் மாருதி சுசூகி ஸ்விப்ட் DLX சிறப்பு எடிசன் அறிமுகம் DIN DIN Tuesday, September 13, 2016 06:15 PM +0530 இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி, தனது ஸ்விப்ட் காரின் DLX என்னும் சிறப்பு பெட்ரோல் எடிசனை இந்தியச் சந்தையில் 4.54 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்திருக்கிறது. மாருதி ஸ்விப்டின் பேஸ் வேரியன்ட்களான LXi (பெட்ரோல்) & LDi (டீசல்) ஆகிய வேரியன்ட்களில் கூடுதல் வசதிகளை இணைத்து DLX என்னும் இந்த சிறப்பு வேரியன்டை அறிமுகம் செய்திருக்கிறது. சிறிய கார்களின் ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் நிலவிவரும் கடும் போட்டி காரணமாக, குறைந்த விலையில் நிறைய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தக்கவைக்க திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

ஜூன் மாத விற்பனையை பொறுத்தளவில், இந்தியாவில் அதிகமாக விற்கும் டாப் 5 கார்களின் பட்டியலில் மாருதியின் ஸ்விப்டுக்கு இடமில்லாமல் போனது. போட்டியாளரான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நான்காவது இடத்துக்கு முன்னேற, ரெனோ க்விட் முதல் 5 பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. இந்நிலையில் ஸ்விப்டின் அதிக விலை வேரியன்ட்களில் மட்டுமே இடம்பெற்றிருந்த சிறப்பம்சங்களை, துவக்க நிலை வேரியன்ட்லேயே தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. எப்எம் ரேடியோ, ப்ளூடூத்துடன் கூடிய சோனி ஆடியோ சிஸ்டம், யூஎஸ்பி மற்றும் முன்பக்கக் கதவுகளில் ஸ்பீக்கர்கள், நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், ஃபாக் விளக்குகள், குழந்தைகள் பாதுகாப்பு லாக்கிங் சிஸ்ட்ம், எரிபொருள் சிக்கனம் போன்ற தகவலை வழங்கும் தகவல் அமைப்பு, சென்ட்ரல் லாக்கிங், ஸ்மார்ட் எச்சரிக்கை இண்டிகேட்டர்ஸ்  என பல சிறப்பம்சங்கள் DLX வேரியன்ட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது.

இன்ஜினை பொறுத்தளவில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளிவந்திருக்கிறது DLX. 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 84 PS ஆற்றலையும், 114 Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 75 PS ஆற்றலையும், 190 Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும்.

மாருதி ஸ்விஃப்ட் DLXன் விலை (டெல்லி எக்ஸ் ஷோரூம்):

பெட்ரோல் - ரூ. 4.54 லட்சம்.

டீசல் - ரூ. 5.95 லட்சம்

Credits: Mahindra Swift]]>
maruthi suzuki, swift deluxe, special edition, petrol edition, lowest price https://www.dinamani.com/automobiles/2016/jul/27/மாருதி-சுசூகி-ஸ்விப்ட்-dlx-சிறப்பு-எடிசன்-அறிமுகம்-2703.html
3031 ஆட்டோமொபைல்ஸ் மாருதி கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்வு! DIN DIN Tuesday, September 13, 2016 06:10 PM +0530 இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகி, தனது கார் மாடல்களின் விலையை ரூ. 20,000 வரை உயர்த்தியுள்ளது. 

சந்தையிலிருக்கும் தேவையின் அடிப்படையிலும், அந்நிய செலவாணியின் ஏற்ற இறக்கம் மற்றும்  நிறுவனத்தின் திட்டங்களின் அடிப்படையிலும் இந்த விலை உயர்வு அமைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமையிலிருந்து அமுலுக்கு வருகிறது.

பெரும்பாலான மாருதி கார் மாடல்களின் விலை ரூ. 1500லிருந்து ரூ. 5000 வரை உயர்த்தபட்டிருந்தாலும், மாருதியின் அதிக விற்பனையாகும் மாடல்களான விடாரா ப்ரீஸா, பலேனோ ஆகியவற்றின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி விடாரா ப்ரீஸாவின் விலை ரூ. 20,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதிக விற்பனையாகும் ஹேட்ச்பேக்கான பலேனோவின் விலை ரூ. 10,000 உயர்த்தப்பட்டிருக்கிறது.

மாருதி கார்களின் விலை கடந்த ஓராண்டில் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாருதியை தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும் தங்களது மாடல்களின் விலை உயர்வை  வரும் தினங்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Credits: Maruti Cars]]>
Maruti, auto mobiles, new cars, price increase https://www.dinamani.com/automobiles/2016/aug/03/மாருதி-கார்களின்-விலை-ரூ20000-வரை-உயர்வு-3031.html
3029 ஆட்டோமொபைல்ஸ் மாருதி சுஸூகி இக்னிஸ் அறிமுகம் தள்ளிவைப்பு ? DIN DIN Tuesday, September 13, 2016 06:09 PM +0530 இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸூகியின் ஹேட்ச்பேக் தயாரிப்பான இக்னிஸ், விற்பனைக்கு அறிமுகமாவது தாமதாமாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 

மாருதியின் விடாரா ப்ரீஸா மற்றும் பலேனோ கார்களின் முன்பதிவுகள் ஒரு லட்சம் கார்களை கடந்திருப்பதால், இந்த முடிவை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.  மார்ச் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விடாரா ப்ரீஸாவிற்கு துவக்கம் முதலே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. புதிய ப்ரிஸா வாங்க காத்திருப்பு காலம் தற்போது 8 மாதங்களாக இருக்கிறது. மற்றோரு பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு காத்திருப்பு காலம் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இருக்கிறது. இதனால்  இந்த இரு மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்க மாருதி நிறுவனம் பெருமுயற்சி செய்து வருகிறது. 

அதன் குர்கான் மற்றும் மானசேர் ஆலைகள் ஏற்கனவே முழு உற்பத்தியளவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.  இச்சூழலில் இக்னிஸின் உற்பத்தியை துவக்க முடியாத நிலையிலிருக்கிறது மாருதி நிறுவனம்.  செப்டம்பர் இறுதியில் இக்னிஸ் உற்பத்தியை துவக்க திட்டமிட்டிருந்த மாருதி நிறுவனம், தற்போது நவம்பர் இறுதிக்கு உற்பத்தி துவக்கத்தை தள்ளி வைத்திருக்கிறது. அதனால் இக்னிஸின் அறிமுகம் இந்த ஆண்டின் இறுதியிலிருந்து அடுத்தாண்டிற்கு தள்ளிப்போகிறது.

Credits: Maruti Ignis]]>
new launch, automobiles, Maruti, delay, MarutiIgnis https://www.dinamani.com/automobiles/2016/aug/03/மாருதி-சுஸூகி-இக்னிஸ்-அறிமுகம்-தள்ளிவைப்பு--3029.html
2556402 ஆட்டோமொபைல்ஸ் இன்னோவா க்ரிஸ்டாவின் பெட்ரோல் இஞ்சின் அறிமுகம்! dn DIN Friday, August 19, 2016 06:23 PM +0530 டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா டீசல் வாகனத்திற்கு சந்தையில் பெரிய வரவேற்பு கிட்டியதை தொடர்ந்து, இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியண்ட்களை அந்த நிறுவனம் இன்று சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

 

innova-crysta-petrol-vicky.jpg

2.7 லிட்டர் விவிடி-ஐ பெட்ரோல் இஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்ட், , 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் என 2 கியர் தேர்வுகளுடன் வெளிவந்திருக்கிறது. அதிகபட்சமாக 166 ஹெச்பி ஆற்றலையும், 245 என்எம் இழுவைத்திறனையும் கொண்டிருக்கிறது.

ஆட்டோமெட்டிக் தேர்வு மற்றும் மேனுவல் தேர்வுடன் கூடிய இன்னோவா க்ரிஸ்டாவானது , 7 இருக்கைகளுடன் கூடிய Zx வேரியண்ட், 7 மற்றும் 8 இருக்கைகளுடன் கூடிய Gx வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களாக கிடைக்கிறது. ஆட்டோமெட்டிக் வேரியண்ட் 10.83 கிமீ மைலேஜையும், மேனுவல் வேரியண்ட் 9.89 கிமீ மைலேஜையும் தரும். கார்னெட் ரெட், வொயிட் பியர்ல் க்ரிஸ்டல் ஷைன், அவண்ட்-கார்டே ப்ரான்ஸ் என மூன்று புதிய வண்ணங்களுடன் கிடைக்கிறது.

பொதுவாக அனைத்து வேரியண்ட்களிலும் மூன்று ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகள் இருக்கும். முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட டீசல் க்ரிஸ்டா இரண்டே மாதங்களில் 24,000 எண்ணிக்கைகள் விற்பனையானது. 9000 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பெட்ரோல் க்ரிஸ்டாவும் அதேயளவுக்கான வரவேற்பை பெறும் என நம்புவதாக டெயோட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Credits: Innova Crysta Petrol

]]>
https://www.dinamani.com/automobiles/2016/aug/11/இன்னோவா-க்ரிஸ்டாவின்-பெட்ர-2556402.html
120 ஆட்டோமொபைல்ஸ் "ரீகால்" ஆகும் 539 ஸ்கோடா ஆக்டாவியா கார்கள்! DIN DIN Wednesday, August 17, 2016 04:38 PM +0530 ஸ்கோடா இந்தியா நிறுவனம், நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 வரை தயாரிக்கப்பட்ட 539 ஆக்டாவியா செடான் கார்களுக்கு "ரீகால்" என்னும் திரும்ப அழைத்தலை மேற்கொண்டிருக்கிறது. 

சைல்ட் லாக் பழுது காரணமாக இந்த திரும்ப அழைத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கோடா ஆக்டாவியாவின் பின் கதவுகளிலுள்ள சைல்ட் லாக் சிஸ்டம் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் புதிய சைல்ட் லாக் சிஸ்டம் மாற்றித்தரப்படுகிறது. சைல்ட் லாக் சிஸ்டத்தை பரிசோதனை செய்ய மொத்தமே 12 நிமிடங்களும், புதிய சைல்ட் லாக் சிஸ்டத்தை மாற்ற அதிகபட்சமாக 45 நிமிடங்களே ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலவசமாகவே செய்து தரப்படும்.  அந்தந்த பகுதி ஸ்கோடா டீலர்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து இலவச பழுது பார்த்தலை செய்து தருவார்கள் எனவும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

]]>
Dinamani, Automobiles, Skoda India, SKoda Octavia, Recall, Child lock https://www.dinamani.com/automobiles/2016/aug/17/ரீகால்-ஆகும்-539-ஸ்கோடா-ஆக்டாவியா-கார்கள்-120.html