Dinamani - கட்டுரைகள் - https://www.dinamani.com/religion/religion-articles/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3277919 ஆன்மிகம் கட்டுரைகள் பிரதோஷத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்! Tuesday, November 12, 2019 03:57 PM +0530 சிவபக்தர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான குணம் என்னவென்றால் எப்படியாவது அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று சிவனை கண்குளிர மனம் நெகிழ தரிசனம் செய்து விடுவர். சிவனை நினைக்காமல் ஒரு பொழுதும் அவர்களால் இருக்க முடியாது, சிவ சிவ என்று மனத்துக்குள் சொல்லில் கொண்டே சிவ பக்தியில் தங்கள் கவலைகளை மறப்பார்கள். ஆழமான இறைபக்தி இருப்பின்,  மலை போல வந்த பிரச்னைகள் யாவும் பனி போல் கரைந்துவிடும் என்பதை பலர் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்துள்ளார்கள். 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பல பல நன்மைகளைப் பெறுவோம். சிவன் கோவிலில் நந்தி வழிபாடு என்பது தொன்றுதொட்டு நடந்து வருவது. அதுவும் பிரதோஷத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளைப் பார்க்கலாம்.

 • நந்தி தேவனுக்கு பாலில் அபிஷேகம் செய்தால் உடல்நலம் மேம்படும். நீண்ட ஆயுள் கிடைக்கும்
 • சந்தனத்தில் அபிஷேகம் செய்ய அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கும், அதிகாரமும் உள்ள பதவி கிடைக்கும்
 • மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடைப்பட்டு இருப்போருக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்
 • நந்திக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்ய கடன் தொல்லை நீங்கும். தீராத வியாதிகள் தீரும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்கும்
 • பன்னீர் அபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும். சஞ்சலமான மனம் அமைதியடையும். மகிழ்ச்சி பெறுகும். குடும்ப வாழ்க்கை சிறக்கும்.
 • இளநீர் அபிஷேகம் செய்தால் குடும்பப் பிரச்னையால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்கள் இழுவையில் இருந்த வழக்குகளில் வெற்றி பெறலாம்.
 • வாசனை திரவிய அபிஷேகத்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும்.
 • நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உயர்வான கல்வி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

நந்தியை வழிபட்டு சிவபெருமானின் அருளை அனுதினமும் பெறுவோம். ஓம் நமசிவாயா!

]]>
Siva Temple https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/12/w600X390/nandhi.jpg nandhi bhagawan https://www.dinamani.com/religion/religion-articles/2019/nov/12/prayers-to-nandi-during-auspecious-pradosham-3277919.html
3247968 ஆன்மிகம் கட்டுரைகள் சரஸ்வதி ஸ்தாபனம்: குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் Monday, October 7, 2019 11:56 AM +0530 ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் 12ம் தேதி கடந்த ஞாயிற்று கிழமை (29/09/2019)  ஆரம்பமாகியது. 

தக்ஷிணாயன புண்ய காலத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், புரட்டாசி மாதத்தில்  கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம்  தேவர்களுக்கு இராக்காலமாகும்.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். நாளை சாரதா நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்குறிய நாட்களாகும். அதனை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (5/10/2019) சரஸ்வதி ஸ்தாபன தினமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் வரும் மூல நக்ஷத்திரத்தில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது விஷேஷமாகும். 

நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் கொலு வைத்து பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் கொலு வைத்து சரஸ்வதியை ஆவாஹனம் செய்து,  ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, விஜயதசமி நாளில் வித்யாரம்ப பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.

நவராத்திரி கொண்டாட்டம்:
நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்களான மஹா சப்தமி, துர்காஷ்டமி எனப்படும் மஹா அஷ்டமி மற்றும் விஜய தசமி எனப்படும் மஹா நவமி ஆகிய மூன்று நாட்களும் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

கூத்தனூர் சரஸ்வதி கோயில்,வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பகதர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபம் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். 

சரஸ்வதி ஸ்தாபனம்:
நவராத்திரி தினங்களில் வரும் மூல நட்சத்திரமே சரஸ்வதியின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சரஸ்வதியின் அவதார தினம் என்பதால் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். அதற்கு அடுத்த நாள்தான் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜையும் வருகிறது.  வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதீ பூஜை. 

" மூலேன ஆவஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்" 

என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புனர்பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.

நாளை (05/10/2019) நவராத்திரியின் ஏழாம் நாளாகிய சரஸ்வதி சப்தமி எனப்படும் மஹா சப்தமியில்  சரஸ்வதி தேவிக்குரிய பூஜா மத்திரங்களில் மிக அற்புத சக்திமிக்கதாகவுள்ள வாக்வாஹினிக்குரிய சுலோகங்களை பிலகரி இராகத்தில் பாடி எலுமிச்சம்பழம் சாதம் பிரசாரமாக படைத்து பழங்களில் பேரீச்சையும் புஷ்பங்களில் தாழம்பூவும் பத்திரங்களில் தும்மை இலைகளாலும் அர்சித்து வணங்க நல்ல கல்வி ஞானம் வாக்கு சித்தம், தெளிவு என்பன உண்டாகி ஒரு பூரணத்துவம் மிக்க மனிதராக பிரகாசிக்க முடியும்.

பாற்கடலில் வெண் தாமரையோடும் வேதச் சுவடிகளோடும் தோன்றிய கலைமகளை பிரம்மனே முதலில் பூஜித்து தனக்கு இணையாக்கிக்கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. கல்வி, கலைகளின் நாயகியான சரஸ்வதியின் பெருமைகளை பலவாறு கூறுகிறது சரஸ்வதி மகாத்மியம் என்ற நூல். அஞ்ஞான இருளை நீக்கும் இந்த தேவி, எட்டு வடிவங்கள் கொண்டு அன்பர்களை காக்கிறாள் என்று தாரா பூஜை என்ற சாஸ்திரம் தெரிவிக்கிறது. வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா என்ற சியாமளா, கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, கினிசரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கடசரஸ்வதி என எட்டு சரஸ்வதி வடிவங்கள் எட்டுவித குணங்களை அளிப்பதாக தெரிவிக்கிறது. 

கல்வி கடவுள் சரஸ்வதி:
கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

ஆயுத பூஜை:
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அறுபத்து நான்கு கலைகள்:
கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்"

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம்:
தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது.  பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல்  தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையாகவும் உண்டாகும். 

கல்வி தரும் பிற யோகங்கள்:

பத்ர யோகம் 
வித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு  வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு  அமையும். 

புத ஆதித்ய யோகம்:
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று கலை பல கற்று புகழுடன் விளங்குவோமாக!

- Astro Sundara Rajan
Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/4/w600X390/saraswathi7.jpg Saraswati pooja special https://www.dinamani.com/religion/religion-articles/2019/oct/04/saraswati-pooja-special-3247968.html
3228366 ஆன்மிகம் கட்டுரைகள் ஆசிரியர் தினம்: ஆசிரியர் ஆகும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா? Thursday, September 5, 2019 06:37 PM +0530 இந்த ஆசிரியர் தின நன்நாளில் எல்லா நேரங்களிலும் எனக்கு கற்பித்து வரும் எண்ணிலடங்கா அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது குரு வணக்கத்தை செலுத்தி இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்! 

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்று கல்வி கண்களை திறந்த ஆசிரியர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் குருவான ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்பதோடு முக்கியத்துவமும் பெறுகிறது.

ஆசிரியர் தினம்: 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கெளரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.

இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேதம் போற்றும் குரு:

குருவின் நாளில் அமைந்துள்ள ஆசிரியர் தினத்தில் நமக்கு ஏட்டுக்கல்வியை கற்பித்தவர் மட்டுமல்லாது வாழ்க்கை கல்வியை கற்பித்த அனைத்து குருவின் சிறப்பையும் உணர்ந்து போற்றவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்!

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

எவர் குருவோ அவரே பிரம்மா! அவரே விஷ்ணு! அவரே சிவன்!  குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை.

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் என சாஸ்திரங்கள் குருவை போற்றுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என வேதம் போற்றுகிறது. தெய்வத்தின் காரகர் ஆசார்யன் எனப்படும் குரு. தெய்வத்தை காண்பிப்பவர் குரு.

ஜோதிடத்தில் குருவின் சிறப்பு: 

குருவை காண்பிப்பவர் யார்? பெற்றெடுத்த தந்தை. அறிவுலக குருவை அறிமுகம் செய்பவர் தந்தை! தந்தையை காண்பிப்பவர் தாய். அவரே ஆதி குரு. நமக்கு முதல் குரு நமது தந்தையாவார். இந்த உலகத்தை நமக்கு உணர்த்துபவரும் நமது தந்தைதான் என்பது அனைவரும் அறிந்ததே!  அதன் பிறகு குரு நமக்கு அனைத்து நன்மை தீமைகளையும் தந்தை ஸ்தானத்தில் நின்று போதிப்பதால் குரு நமது மற்றோரு தந்தையாகிறார். இதை விளக்கும் புராண கதை இராமாயணத்தில் உள்ளது.

விஸ்வாமித்திரர். சீதையின் தந்தை ஜனகரிடம் ராமரை அறிமுகப்படுத்தும்போது தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன். ராம சகோதரர்கள் நால்வரையும் வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு (ஆசிரியர்) வசிஷ்டரையே சாரும், என்று புகழ்ந்தார். 

ப்ரச்நோபநிஷத் என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், த்வம் ஹி ந: பிதா என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு நீங்கள் அன்றோ எங்களின் தந்தை என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையிலும், விஸ்வாமித்திரரின் சொல்லின் அடிப்படையிலும் ஆசிரியரும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது தெளிவாகிறது.

ஜாதகத்தில் நாலாம் பாவம் மாத்ருஸ்தானம் எனப்படுகிறது. ஒன்பதாம் பாவம் பித்ருஸ்தானம் எனப்படுகிறது.  புத்திரம் உதிக்குமிடம் தாயின் கருவறையில். புத்திரகாரகன் உச்சமாகுமிடம் காலபுருஷனுக்கு நான்காம் பாவமான தாயின் மடியான கடகத்தில்.

ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பித்ரு ஸ்தானம். தனுசு ராசி கால புருஷனுக்கு ஒன்பதாமிடம் குருவின் ஆட்சி மற்றும் மூல திரிகோண வீடு. குருவின் மற்றொரு ஆட்சி வீடு மீனம். தாய் தந்தையரை வணங்கினால் தெய்வத்தின் அருள் எனும் மோக்ஷத்தை வழங்குமிடம். காலபுருஷனுக்கு அயன சயன போக மோக்ஷ ஸ்தானம். குருவிற்கு மட்டுமே தாயின் வீடாகிய கடகம் ஒரு திரிகோண வீடாகவும் தந்தையை குறிக்கும் சூரியனின் வீடாகிய சிம்மம் ஒரு திரிகோணமாகவும் அமைந்திருக்கிறது.

ஜோதிடத்தில் ஆசிரியராகும் கிரஹ அமைப்பு யாருக்கு?

ஆசிரியரை குறிக்கும் கிரஹம் குருபகவான் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் குரு ஆட்சியோ உச்சமோ வர்க பலமோ பெற்றுவிட்டால் அவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது ஆசிரியராக விளங்கும் அமைப்பு ஏற்பட்டுவிடும். 

1. ஒருவர் ஜாதகத்தில் கர்ம காரகன் சனி பத்தாம் பாவாதிபதி மற்றும் குரு இருவரையும்  தொடர்பு கொண்ட அமைப்பை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கும் அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்களோடு வித்யாகாரகன் புதன் தொடர்பு கொண்டிருந்தால் பள்ளி,கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரியனும் தொடர்பில் இருந்தால் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் அமைப்பை பெற்றிருப்பார்கள்.

2. பத்தாம் அதிபதி புதனாகவோ, சூரியனாகவோ இருந்து குருவின் நவாம்சத்தில் நின்றாலும் ஆசிரியர்களாகும் அமைப்பை பெறுவார்கள்.

3. உபய ராசிகளை லக்னமாக  கொண்டவர்களுக்கு பத்தாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது புதனின் வீடாகவோ வருவதால் அவர்களுக்கு ஆசிரியராகும் அமைப்பு அதிகமாக காணப்படும். அதிலும் லக்னாதிபதி, மற்றும் பத்தாமதிபதியாக வரும் குருவும், புதனும் ஆட்சி உச்சமாகிவிட்ட்டால் ஆசிரியர் பணியை உறுதி செய்துவிடலாம்.

4. ஒருவரது ஜாதகத்தில் பத்தாமதிபதி, பத்தாம் வீடு, கர்ம காரகன் சனைச்சரன், காரகாம்சத்தில் நிற்கும் கிரஹம் போன்ற கிரஹங்களின் காரகங்களில் ஆசிரியராக விளங்குவார், உதாரணமாக பத்தாமதிபதி புதனாக இருக்கும் பட்சத்தில் கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், தத்துவம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் ஆசிரயராக விளங்குவார்கள்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஜாதகம்:

பிரஹஸ்பதி எனும் தேவ குருவின் வீடான தனுர் ராசியையே லக்னமாக கொண்டு வித்யாகாரகன் புதனின் கன்னிராசியை கர்மஸ்தானமாக கொண்டு பிறந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்ச மூல திருகோன வீட்டில் நின்றது அவருக்கு  தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றுதந்தது. தத்துவத்திற்கான காரகர் புதன் என்பதும் தத்துவத்திற்கான பாவம் கால புருஷனின் ஒன்பதாம் பாவமான தனுசு என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திர கல்வி மற்றும் உயர்கல்வியின் காரகரான சுக்கிரன் பத்தாம் வீட்டில் நீசபங்கம் அடைந்து நிற்பது ஒன்பதாம் அதிபதி தனது வீட்டில் ஆட்சி பலத்துடன் நிற்பதும்,  குரு பகவான் விருச்சிக ராசியில் சனிஸ்வர பகவானின் அனுஷ நக்ஷத்திரத்தில் நின்று தனது திரிகோண பார்வையால்  சனியை தொடர்பு கொள்வதும் சனீஸ்வர பகவான் தனது மூன்றாம் பார்வையால் வித்யாகாரகன் புதனையும், சுக்கிரனையும் தொடர்பு கொள்வதும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை  சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர வைத்ததோடு அல்லாமல் இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரர் ராமானுஜர், மத்வர்வர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார்.

கேந்திர திரிகோணாதிபதிகளான குரு பகவானும் செவ்வாயும் இணைந்து காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் குரு மங்கள யோகமும் ராஜ யோக அமைப்பும் பெற்று நின்றதும் அது அவருக்கு பன்னிரெண்டாம் வீடானதும் இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க காரணமாக அமைந்தது. மேலும் இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ எனும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. மேலும் அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டதற்க்கும் காரணமானது.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு மாணவன் தொடர்ந்து படித்து எந்த ஒரு உயர்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர், ஆனால் ஒரு ஆசிரியர் கடைசி வரை ஆசிரியராகவே இருப்பர் என்பது அவர்களின் தியாகத்திற்க்கு ஒரு சான்றாகும்.

Astro Sundara Rajan
Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com

]]>
teachers day, குடியரசுத் தலைவர், ஆசிரியர் தினம், jadhagam, jodhidam, who will be teachers, ஆசிரியர் ஆகும் ஜாதகம், சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியர் தினக் கொண்டாட்டம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/5/w600X390/teacher2.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2019/sep/05/who-will-be-teachers-jadhagam-and-jodhidam-3228366.html
3225256 ஆன்மிகம் கட்டுரைகள் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பிள்ளையார் சிலைகள் வைக்க 24 விதிமுறைகள் என்னென்ன? C.P.சரவணன், வழக்குரைஞர் Saturday, August 31, 2019 01:14 PM +0530
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

செப்டம்பர்  2-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சிலைகளைச் செய்து பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். மூன்று நாட்கள் கழித்து ஆறு, குளம் அல்லது கடலில் அந்தச் சிலைகளைக் கரைப்பார்கள். 

விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது தொடர்பாக 24 விதிமுறைகளை கடந்த ஆண்டே தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைப் பற்றி தெரிந்து நடந்துகொள்வோம்.

 • பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல், தீயணைப்பு, உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். 
 • சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களையோ, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன வண்ணங்களையோ சிலைகளில் பயன்படுத்தக்கூடாது.
 • சிலை வைக்கப்படும் பந்தல் எரியும் தன்மை உடையதாக இருக்கக்கூடாது. 
 • வெடி பொருட்களை சிலை அருகே வைக்கக்கூடாது.
 • சிலையின் உயரம் மேடையிலிருந்து பத்தடி வரை தான் இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயமாக சிலைகள் வைக்கக்கூடாது.
 • கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. காலை, மாலை வேளைகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடல்கள் ஒலிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும். 
 • சட்டவிரோதமாக மின் இணைப்பை ஏற்படுத்தக்கூடாது.
 • குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பக்கூடாது.
 • ஐந்து நாட்களுக்குள் சிலை கரைக்கப்பட வேண்டும்.
 • மசூதி, தேவாலயங்கள் இல்லாத வழிகளில் விநாயகர் சிலையைக் கொண்டுசெல்ல வேண்டும். 
 • வாண வேடிக்கைகள் பயன்படுத்தக்கூடாது.
 • சிலை வைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு முன்பு, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
 • தனியார் இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் சிலை வைத்தால் உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் தடையில்லா சான்று பெற வேண்டும். 
 • சிலை வைத்தல் மற்றும் ஒலிப்பெருக்கி அமைப்பது தொடர்பாக போலீசாரிடமும், தற்காலிக பந்தல் அமைப்புகள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது என தீயணைப்பு துறையிடமும் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
 • சட்டவிரோதமாக மின் இணைப்பு எடுக்கக்கூடாது. எங்கு இருந்து மின் இணைப்பு எடுக்கப்படுகிறது என்பது குறித்து மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதுபோன்ற தடையில்லா சான்றுகளை சமர்ப்பித்து ஆர்.டி.ஓ.விடம் முன் அனுமதி பெற வேண்டும்.
 • விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் போர்வையில் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
 • அரசியல் கட்சியினரின் பெயர்களில் சிலை அமையும் இடத்தில் பெயர் பலகைகள் வைக்கக்கூடாது. 
 • சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பை சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.
 • பிற மத வழிபாட்டு தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. 
 • போலீஸ் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி துறை ஆகிய துறைகளால் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்கப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டு 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.
 • வாகனங்களில் உரிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஊர்வலத்தில் செல்ல வேண்டும். 
 • சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஊர்வலப் பாதையில் பட்டாசு போன்ற வெடி பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
 • விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தபின்னர், பூ மற்றும் அலங்காரப் பொருட்களை அகற்றிய பின்னரே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும்
 • கடல், ஏரி, குளங்களில் கரை ஒதுங்கும் சிலைக் கழிவுகளை உள்ளாட்சி துறையினர் 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

]]>
vinayagar chadurthi, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/28/w600X390/vinayakar.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/religion/religion-articles/2019/aug/31/vinayagar-chadurthi-special-3225256.html
3193675 ஆன்மிகம் கட்டுரைகள் குரு பூர்ணிமாவில் இவர்களை எல்லாம் வழிபடுவது நல்லது! Tuesday, July 16, 2019 01:16 PM +0530  

ஆடி மாதம் வரும் முதல் பெளர்ணமி தினம்தான் ‘குரு பூர்ணிமா’. இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம். குரு பூர்ணிமாவை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இது பல காலங்களால கொண்டாடப்பட்டு வருகின்றது. குரு பூர்ணிமா தினத்தில் கல்வியை போதித்த ஆசிரியரை வணங்கும் ஒரு நாள். 

இந்த தினத்தில் வேதம் படித்த மாணவர்கள் தங்களுடைய குருவை நினைத்து வணங்கும் ஒரு நாளாக இதை அனுஷ்டிக்கலாம். நம் பாரம்பரியத்தை நினைவில் வைத்துள்ள சில பள்ளிகள் இன்றளவும் குருவுக்கு பாத பூஜை செய்து குரு பூர்ணிமாவை பின்பற்றிவருகின்றன. அது இயலாவிட்டாலும் இன்றைய தினத்தில் குறைந்த பட்சம் நம் பள்ளி / கல்லூரி ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூரலாம். 

கல்வி அளித்த நம் குருவை வழிபடுவதுடன், குரு பகவானை, தட்சிணாமூர்த்தியை., பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, ஆதி சங்கரர், ராமானுஜர், வியாசர் உள்ளிட்டவர்களை இந்நாளில் வழிபடலாம். புத்தரை வழிபடுவதும் நல்லது.

]]>
guru purnima 2019, Guru, Guru Purnima https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/16/w600X390/guru_purnima.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2019/jul/16/guru-poornima-day-3193675.html
3187550 ஆன்மிகம் கட்டுரைகள் 'ஆனித்திருமஞ்சனம்'- அறிவோம் நடராஜ தத்துவம்! எஸ். எஸ். சீதாராமன் Sunday, July 7, 2019 04:46 PM +0530  

உலகை தற்போது திகைக்க வைப்பது அணுத்துகள்கள். அணுவின் பலவிதமான சேர்க்கைகளே மூலக்கூறுகள் ஆகும். பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் அனைத்திலும் இந்த அணுக்கூறுகள் உள்ளன. இதனை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் எனப் பிரிக்கின்றார்கள். அணுவின் மையப்பகுதியான அணுக்கருவில் சம அளவு எதிரெதிர் மின்சக்தியுள்ள புரோட்டானும், நியூட்ரானும் உள்ளது; எலக்ட்ரான் இதனை சுற்றிவரும். இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது. இந்த அமைப்பே இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறது. இதனை, சென்ற நூற்றாண்டில் நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

நம் மெஞ்ஞானிகள் சித்தர் பெருமகனார்களோ இந்த பிரபஞ்ச சக்தியை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து, அவன் தூணிலும் உள்ளான் ஒர் அணுத்துகளிலும் உள்ளான் என்று கூறியுள்ளனர். இதனை நடராஜ தத்துவம் தன் ஆட்டத்தின் மூலம் தத்வரூபமாக விளக்குகிறது. நடராஜரின் வலக்கையிலுள்ள உடுக்கை, படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்). இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது -அருளும் ஆற்றலை குறிக்கும். இடக்கையிலுள்ள நெருப்பு -அழிக்கும் ஆற்றலை குறிக்கும். இன்னொரு இடக்கை துதிக்கைபோல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது- மறைக்கும் ஆற்றலை குறிக்கும். தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும்; இன்னொரு பாதமும் தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.

நம் சித்தர் பெருமகனார் திருமூலர் "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், வள்ளர் பெருமானுக்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே' என சொன்னார். நம் மனித உடலில் 96 தத்துவங்கள் உள்ளது என்று நம் இந்திய சித்த மருத்துவம் கூறுகிறது. நம் சித்தர் பெருமக்களின் அசைக்க முடியாத, ஆதாரபூர்வமான கருத்தென்னவெனில் மனிதன் வேறு, இவ்வுலகம் வேறு என்பது இல்லை; இரண்டரக்கலந்த இரண்டும் ஒன்றே.

ஐம்புலன்கள் மற்றும் ஞானேந்திரியம் என்பது, பார்த்தல், கேட்டல், நு(மு)கர்தல், ருசித்தல், தொடுதல் ஆகும். கண்மேந்திரியம் என்பது; கை, கால், வாய், காது மற்றும் பிற உடல் உறுப்புகள் ஆகும். கரணம் என்பது, நம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பகுத்தறியும் நம் அறிவு ஆகும். இந்த உடல் மற்றும் அண்ட சராசரங்கள் எல்லாம் ஐந்து வகையான இயக்கங்களைக் கொண்டு, பஞ்சபூதங்கள் தான் ஆள்கின்றன என்பதை உணர்ந்து; இவை எல்லாவற்றையும் சித்த புருஷர்கள் தன் கைப்பிடியில் கட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்கள் இந்த பஞ்சபூதங்களையும் தன்னாட்சி செய்தனர். வீரசைவர்கள் "திருச்சிற்றம்பலம்' என்று சொல்லித்தான் பின் பேசுவார்கள். அவ்வளவு புனிதமானது இச்சொல். அவர்கள் கோயில் என்றால் அந்த வார்த்தைக்கு "சிதம்பரம்' என்று மட்டுமே பொருள் கொள்வார்கள். 

பஞ்சபூதத்தலங்களில் இது ஆகாயத்தலம் ஆகும். சிதம்பரம் நகரத்தின் நடுநாயகமாக இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சபாநாயகர் திருக்கோயில் என்று பெயர். நடராஜர் சிவகாமியுடன் தெற்கு பார்த்து ஆடுகின்ற இடத்தினை சிற்சபை, கனகசபை, சிவநடராஜ சபை என்றும் கூறுகின்றனர். சிதம்பரம் கோயிலுக்கு 4 திசைகளிலும் 4 கோபுர வாயில்கள் உண்டு. மாணிக்க வாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் இந்த நடராஜப்பெருமானை வழிபட்டனர். பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களும், தேவர்களும் இந்த ஈசனின் ஆட்டத்தை காணமாட்டோமா என்று தவமாய் தவமிருந்து பெரும் பேற்றினைப் பெற்றனர். இதன் கோபுரங்களில் பரத நாட்டியத்தின் 108 முத்திரைகளும் சிலை வடிவில் உள்ளன. இங்கு மொத்தம் ஐந்து பிரகாரங்கள் இருந்தாலும், நான்காவது பிரகாரத்தின் வழியாக உள்ளே சென்றால் நடராஜ மூர்த்தியின் சிற்சபை உள்ளது. சிற்சபைக்கு வெளியே கனக சபை உள்ளது. இங்கு தான் அபிஷேக ஆராதனைகளெல்லாம் நடைபெறுகிறது. 

நடராஜரின் சிற்சபையின் ஓடுகள் மொத்தமும் தங்கத்தினால் வேயப்பட்டது. சிதம்பரம் கோயில் மற்றும் சிற்சபையை மனித உடலாக கூறுகிறார்கள். அவை: சிற்சபையின் மேற்கூறை 21,600 தங்க ஓட்டினால் வேயப்பட்டது. இது சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றின் அளவு. இதன் ஓடுகள் 72,000 தங்க ஆணிகளால் பொருத்தப்பட்டுள்ளது. இது நம் உடம்பிலுள்ள, ரத்தத்தை கொண்டு செல்லும்; கண்ணிற்குத் தெரியாத நாடிகளின் எண்ணிக்கை. நம் இடப்புறம் இதயம் உள்ளது போல் அவன் ஆடும் சந்நிதியும் இடப்புறம் ஒதுங்கியுள்ளது. 

நம் உடலை இயக்கும் ஒன்பது சக்தியைப் போன்று, இந்த சிற்சபையின் மேல் ஒன்பது கலசங்கள் உள்ளன. ஆயக்கலை அறுபத்தி நான்கினை குறிக்குமுகமாக, இந்த சபையின் விட்டத்தின் குறுக்கு 64 மரங்களால் ஆனது. பொன்னம்பலத்தை 28 ஆகம சாஸ்திரங்கள் 28 தூண்களாக நிற்கின்றது. பதினெட்டு புராணங்களை குறிக்குமுகமாக இந்த அர்த்த மண்டபத்தை சுற்றி 18 தூண்கள் உள்ளன. "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை குறிக்கும் வகையில் ஐந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்சபையின் கூரையைத்தாங்கும் நான்கு பெரிய தூண்கள், நான்கு வேதங்களாக நிற்கின்றன. இக்கோயிலுக்கு ஒன்பது வாயில்கள், நம் உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளைக் குறிக்கின்றது. இதன் கொடிமரம்; சூக்க்ஷம நாடி என்று சொல்லப்படும் மூலாதாரம், சஹஸ்ராரம் ஆகியவற்றை தூண்டி பேரின்பத்தைத் தரக்கூடியது.

இங்கிருந்து மூன்றாவது பிரகாரத்தில் நிருத்த சபை, தேவ சபை என இரு மண்டபங்கள் உள்ளது. இதைத் தாண்டி சென்றால் மகாலஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது. அதனருகில் தான் இக்கோயிலின் சிவலிங்க சொரூபம் கொண்ட கருவறை உள்ளது. நான்காவது பிரகாரத்தில் திருமண மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு தான் ராஜ சபை, சிவகாம சுந்தரி அம்மன், முக்குருணி விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சந்நிதியெல்லாம் உள்ளது. 

இக்கோயிலின் சரித்திரப் பின்னணி பல ஆராய்ச்சியாளர்களால் பரிசீலிக்கப்பட்டாலும்; விடை காணாத புதிராகத்தான் ஆரம்ப காலம் தொட்டு இருக்கின்றது. நாம் முதலிலேயே கூறிய ஐந்து மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்கள் நம் உடம்பின் ஐந்து கோசங்களைக் குறிக்கின்றது. முதல் கோசம், அன்னமய கோசம் - இது நம் உடலைக் குறிக்கின்றது. இரண்டாவது, பிராணமய கோசம் - இது நம் உடலிலுள்ள உயிர் சக்தியைக் குறிக்கின்றது. மூன்றாவது, மனோமய கோசம் - இது நம் மனதின் ஓட்டத்தைக் குறிக்கின்றது. நான்காவது, விஞ்ஞானமய கோசம் - இது நம் புத்திசாலித்தனத்தை குறிப்பது. ஐந்தாவதும், கடைசியானதும் ஆனந்தமய கோசம் - நம் பரிபூரண சந்தோஷமான ஆனந்தத்தைக் குறிக்கின்றது. 

இவை அனைத்தையும் தற்போது இணைத்துப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லையில் உள்ளனர். தினமும் நடக்கும் பூஜைகளை இதன் தலைமை தீஷிதர் இறைவனாகவே - "சிவோகம்பவ' என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக வழிபாடு செய்கிறார். சிவ, அகம் என்றால் நான்/ நாம், பவ என்றால் ஒருநிலைப்படுதல். எனவே "நீ உன் மனதை ஒரு நிலைபடுத்தி சரணாகத தத்துவத்தில் அவன் பாதம் பணிந்தால், உன் உள்ளே இருக்கும் கர்ம வினைகளை அவன் பிடிங்கி வெளியே தூக்கி எறிந்து பரிபூரண சந்தோஷத்தை அளிப்பான்' என்பதே ஆகும். 

ஆண்டுதோறும் தில்லையம்பலத்தானுக்கு முக்கியமாக ஆறு திவ்ய அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அவையாவன: 1) சித்திரை திருவோணம், 2) ஆனித் திருமஞ்சனம், 3) ஆவணி சதுர்த்தசி, 4) புரட்டாசி சதுர்த்தசி, 5) மார்கழி ஆருத்ரா, 6) மாசி சதுர்த்தசி ஆகும். கடுமையான வெயிலின் தாக்கம் சென்று, குளிர்ச்சியான மழை பொழியும் காலம் ஆனி மாதம். அதனால் நம்மை ரட்சிக்கும் ஆடல்வல்லான் நடராஜனுக்கு அவனது தகிக்கும் உடல் சூட்டை தணித்தால் இப்பூவுலகம் குளிர்ந்து சுபிட்சம் அடையும் என்பதால் இந்த ஆனித்திருமஞ்சன உற்சவம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது (இந்த வருடம் ஆனி மாதம் 23 - ஆம் தேதி (8-7-2019) திங்கட்கிழமை வருகிறது). அருகில் இருக்கும் ஆலயங்களிலுள்ள நடராஜரை இந்த நாளில் பணிந்து வழிபட்டு அவனருள் பெறுவோம்.
 

]]>
Chidambaram, Chidambaram Temple, Natrajar, Natraj, Chidambaram Natrajar Theory, Chidambara Ragasiyam https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/1/w600X390/Shri-Lord-Chidambaram-9.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2019/jul/07/ஆனித்திருமஞ்சனம்--அறிவோம்-நடராஜ-தத்துவம்-3187550.html
3186749 ஆன்மிகம் கட்டுரைகள் வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை DIN DIN Saturday, July 6, 2019 10:30 AM +0530
வான் கலந்த மாணிக்க வாசகர். 
இவர் சைவம் தழைக்க வந்த 

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க, இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.

மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.

இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில்,   சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

நரியைப் பரியாக்கியது

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.

மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அல்ல)

'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.

'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

வைகை வெள்ளமும் வந்தியும்

சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. 

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார். 

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. 

கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான். 

அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.

இறைவன் எழுதியவை

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார். 

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார். 

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். 
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். 

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

 அற்புதங்கள்

 சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும்
   மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
 பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப்
   பேசவைத்தமை.
 தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும்
   சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
 எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து
   சிவத்தோடு கலந்தது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த வள்ளலார் உள்ளத்தை மாணிக்கவாசகரின் திருவாசகம் கொள்ளை கொண்டிருக்கிறது.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"

"வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!."

என வள்ளலார்  புகழாரம் சூட்டி மகிழ்கிறார். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பொன் மொழியும் உண்டு.

மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 அழைப்பிதழ் 

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம்  ஆனி  மாதம் 21 ஆம் நாள் 06/07/2019 சனிக்கிழமை அன்று மக  நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 9:30 மணி முதல்  சென்னை,  குன்றத்தூர்,   நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் மாணிக்கவாசகருக்கு   அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளார்கள்.  

 தொடர்புக்கு : 7904612352
 tut-temples.blogspot.in

குன்றத்தூர் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? குமரன் இருக்கும் இடம். சைவம், வைணவம் என பக்திக்கு பஞ்சம் இல்லாத ஊர். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர். இன்னும் என்னென்ன சிறப்புகள் இந்த குன்றத்தூருக்கு உண்டோ யாம் அறியோம் பராபரமே என்று தான் சொல்லத் தோன்றுகின்றது.
..


ராகேஷ் TUT

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/manickavasagar.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2019/jul/06/வான்-கலந்த-மாணிக்க-வாசக---மாணிக்கவாசகர்-குரு-பூசை-3186749.html
3186747 ஆன்மிகம் கட்டுரைகள் எம்பாவாய்... மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் Saturday, July 6, 2019 10:01 AM +0530
இன்று மாணிக்கவாசகரின் குரு பூசை. இன்று நாம் மாணிக்கவாசகர் பாடிய எம்பாவாய் பற்றி அறிய உள்ளோம். 

திருவெம்பாவை,  900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. “தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று  பாடப்படுகிறது.

மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவரது காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இல்லை. மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பிற் பட்டவராக இருக்க வேண்டும்.  ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது பொதுவான முடிவு. அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் புலமை  பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பதன் வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியன் தென்னவன் பிரமராயர் என்னும் உயரிய விருதை அளித்துப் பெருமை படுத்தினான்.   அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார்.

சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை. மார்கழி மாதத்தில் அவர் சிவனைக்  குறித்துத்  தீந்தமிழில் பாடிய  திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.

திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து  மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.

திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது. எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது. நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது.  ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால்  ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது.  ஏலோரெம்பாவாய்  என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் – விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,ஆண்டாளின் திருப்பாவை இரண்டின் பாடுபொருள் ஒன்றுதான், பாடப்படும் கடவுள்தான் வேறு. மாணிக்கவாசகர் காண்பிக்கும் பெண்கள்,சிவனைப் போற்றி  நோன்பு நோற்கிறார்கள். கோதை நாச்சியாராகிய ஆண்டாளும் அவளது தோழியரும் கண்ணனை எண்ணிப் பாவை நோன்பு இருக்கிறார்கள். இந்த இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாய் பாடப்பட்டனவாக தோற்றம் அளிக்கின்றன.

இந்தப் பெண்கள் எல்லாரும் இளம் வயதினர். குறும்பும் வேடிக்கையுமாகப் பேசிச் சிரிக்கிற விளையாட்டுத் தோழிகள். ஆனால் கடவுள் பணி என்று வந்துவிட்டால், அனைவரும் தீவிரமாகி விடுகிறார்கள், ‘‘நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுக் கோயிலுக்குப் போகணும்’’ என்று திட்டமிடுகிறார்கள். பாவை நோன்புக்காகச் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியல் போட்டுத் தயாராகிறார்கள்.

மறுநாள் காலை, சில பெண்கள் சொன்னபடி சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்காக அழைத்துச் செல்வதுதான் திருவெம்பாவையின் முதல் பகுதி.

மாணிக்கவாசகர் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு திருவண்ணாமலை வந்து  சேர்ந்தார். அது மார்கழி மாதம். திருவாதிரைக்கு இன்னும் பத்து நாட்கள்தான் எஞ்சி இருந்தன. அந்த ஊரில் இளமங்கையர்கள் விடியற் கருக்கலில்  எழுந்து வீட்டைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் குளத்துக்கு நீராடச் செல்கிறார்கள். அந்த அழகான காட்சியை மாணிக்கவாசகர் பார்க்கிறார். உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்து ஓடியது. அந்த உவகை திரு எம்பாவைப் பாடல்களாக வடிவெடுத்தன.

முதல் எட்டுப் பாடல்களும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாகச் சேர்ந்து குளிக்கச் செல்லும் காட்சி வருணிக்கப்படுகிறது. அடுத்து எல்லோரும் கூடி இறையருளைப் பாடுவதாக அமைந்துள்ளது.


திருவெம்பாவை ஆன்மா தன்னைப் பீடித்துள்ள மாயையிலிருந்து விடுபட்டு இறைவனையடைய முயற்சிப்பதை விளக்குகின்றது என்பது தத்துவக் கருத்து ஆகும்.


முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்.         

திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன. முதல் பாட்டு:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும்,உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!அடுத்த பாடல்

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
 பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
 நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
 சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
 ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
 கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
 தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
 ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்! 

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுதுஅருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம்இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்துஇறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி 
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி 
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் 
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன் 
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட, (அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளைப்  பாடி, இறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி, கவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள்!

 

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவற்றைக் கண்டு அதைப் போன்றே சமணரான அவிரோதி நாதரால் இன்னொரு திருவெம்பாவை அதே சந்தத்தில் இயற்றப்பட்டிருக்கிறது.  இந்தத் திருவெம்பாவையில் அருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.  இந்த நூலில்  சமணர்களது  வழி காட்டிகளாகிய தீர்த்தங்கரர்களைப்  போற்றிப் புகழப்பட்டுள்ளது.   இருபது  பாடல்கள் மயிலைநாதர் மேல் பாடப்பட்டுள்ளன. மயிலைநாதர் என்பது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதரைக் குறிக்கிறது.  சான்றாக ஒரு பாடலைக் பார்ப்போம்.

கரக் குழலாட மாணிக்கப் பூணாடச் 
சிகரக் குழலாட செறிவண் டிசைபாட 
முகரப் புனலாடி முக்குடையான் தாள்பாடி 
விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச் 
சகல சிநத் திறைவன் தன்னனைய தாள்பாடிப் 
புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி 
இகலார்ந் தெனையளித்த வெற்கையான் தாள்பாடி 
பகரும் பிறப்பறவே பாடேலோ ரெம்பாவாய்   

திருவெம்பாவையின்  கடைசிப் பாடல் (20)  போற்றி, போற்றி என ஒவ்வொரு அடியும் தொடங்குகிறது.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.
திருவெம்பாவை, திருப்பாவை,   அவிரோத நாதர் பாடிய திருவெம்பாவை ஆகிய பாடல்களில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் தமிழின் இனிமையையும் ஓசைச் சிறப்பையும் பொருள் நயத்தையும் பரக்கக் காணலாம்.  இந்த பக்தி இலக்கியங்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த கொடை ஆகும்.

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்.  
            

எனக்கூறித் தமக்கு வேண்டியவற்றைக் கேட்கின்றார்கள். பக்தி என்னும் தண்ணீரில் பாவங்கள் கழுவப்படுகிறதாம்.  இதை மாணிக்கவாசகர் இலக்கிய நயத்தோடு “ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்று வருணிக்கிறார். கடவுள் நம்பிக்கை, பக்தி,  நோன்புகள் போன்ற மிகப்பெரிய சங்கதிகளை மிக இலகுவாக மக்களிடையே மாணிக்கவாசகர் புகுத்தி விடுகிறார். முக்கியமாக இளம் வயதினரிடம் பக்தியைக் காண்பது கடினம். அவர்களுடைய பல அய்யங்களுக்குப் பதில்சொல்ல முடியாது. ஆனால் மாணிவாசகரோ இளநெஞ்சங்களின் போக்கிலே சென்று மணிமணியான வாசகங்களின் மூலம் தன்கருத்தைச் சொல்லுகிறார்.

எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம் அழிந்த பின்னும் இருப்பவன் இறைவன். இறைவா நீ! பழமைக்குப் பழமையானவன். பிற்காலத்தில் தோன்றிய புதுமையான பொருட்கள் அனைத்திற்கும் புதுமையானவன். எம்பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள் உன்னுடைய அடியார்களின் பாதங்களை வணங்குகிறோம். அவர்களுடன் இணைந்து தொண்டு செய்வோம். அவர்களே எங்களின் கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பிக் கூறுவதை ஏற்று பணி செய்வோம். இப்படிப்பட்ட நல்ல நிலையை தந்தால் எங்களுக்கு குறை ஒன்றும் இருக்காது. அடியார்க்கும் அடியாளர்களைப் பணிவது இறைவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும் என்பது தத்துவக் கருத்து.

மாணிக்கவாசகருக்கு தமிழ் அன்னை கேட்டதெல்லாம் கொடுக்கிறார் போல் தெரிகிறது. அவருக்கு சொற்பஞ்சம் பொருட் பஞ்சம் இப்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ எனப் பாடிய மாணிக்கவாசகர் இறைவனை ஏகன், அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன், தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன், சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன், ஒப்பிலாமணி, அன்பினில் விளைந்த ஆரமுது, காண்பரிய பேரொளி, நுண்ணர்வு, ஆற்றின்ப வெள்ளமே, சுடரொளி, மெய்யன், விடைப் பாகன், அய்யன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லைக் கூத்தன், தென் பாண்டி நாட்டான் போன்ற பல திருநாமங்களால் குறிக்கிறார்.

 

இறைவன் கருணைக் கடலா?  என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் தித்திக்கும் சொற்றமிழில் விடை பகர்கிறார்.

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து
அழுத்தி வினை கடிந்த வேதியன்!
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் 
பரிந்து  நீ பாவியேனுடைய 
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவ பெருமானே!

மேலும் ஒரு திருவெம்பா பாடலைப் பார்ப்போம்.

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று  உரைப்போம் கேள்
எம் கொங்கை  நின் அன்பர்  அல்லார்  தோள்  சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு  எழில் என் ஞாயிறு  எமக்கு ஏலோர்  எம்பாவாய்!

திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது ஆதி அண்ணாமலை என்று சொல்லப்படும் அடி அண்ணாமலை என்ற இடத்தின் அருகில் நாம் இந்த மாணிக்கவாசகர் கோயிலை காணலாம். புதிது புதிதாக பல  முளைக்கின்றன. ஆனால் கிரிவலத்தின் போது யாரும் இங்கே செல்வதில்லை. சைவம் தழைக்க தொண்டாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது நம் அவா. இரவின் மடியில் இந்த கோயிலை காண்போமா?

மாணிக்கவாசகர் குரு பூசை அன்று அவர் ப(பா)தமும் கண்டோம்.கேட்டோம். 

திருசிற்றம்பலம்.

..

 

ராகேஷ் TUT

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/decotee.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2019/jul/06/எம்பாவாய்-மாணிக்கவாசகர்-திருக்கோயில்-தரிசனம்-3186747.html
2690837 ஆன்மிகம் கட்டுரைகள் அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் மாலதி சந்திரசேகரன் Friday, April 28, 2017 10:36 AM +0530  

'அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். 

சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. 

இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது. 

இன்றைய தினத்தில்தான்... 

ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார். 

ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. 

குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார். 

ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள். 

ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள். 

ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள். 

இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது. 

அதுதான்,  நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது. 

காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? 

ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார். 

செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார். 

மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார். 

அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும்,  விளையாடத் தொடங்கினார். 

ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார். 

ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார். 

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார். 

நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார். 

ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது.

'பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி. 

பதியின் 'இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், 'நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை. 

அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது. 

ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை,  அன்னை, கண்ணுற்றார்.  

லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை. 

காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார். 

அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார். 

ஸ்ரீ சிவபெருமானும், கப்பரையைக் கையில் ஏந்தி, ஸ்ரீ பார்வதியிடம் பிக்ஷை பெற்றார். 

பகவானின் லீலை எல்லாமே ஒரு நன்மைக்காகத்தான் என்பதை நாம் உணரவே, நாடகம் அரங்கேற்றப்படுகிறது. எல்லாமே தேவ கைங்கர்யம். 

அட்சய திருதியை அன்று நகைக் கடைக்குப் படையெடுப்பதைத் தவிர்த்து,  ஸ்ரீ லக்ஷ்மி குடியிருக்கும், மஞ்சள், பச்சரிசி, கல் உப்பு ஆகியவைகளை வாங்க வேண்டும். 

அன்றைய தினம், தன்னால் இயன்ற தானத்தைச் செய்ய வேண்டும். 

அன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகம். 

சங்க சக்ர கதாபாணே 
த்வாரகா நிலையாச்யுத 
கோவிந்த புண்டரீகாட்ஷ 
ரக்ஷமாம் சரணாகதம். 

எந்த இக்கட்டான நிலையிருந்தாலும், இந்த ஸ்லோகத்தைக் கூறினால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். 

அட்சய திருதியை அன்று,  அன்ன  தானம், வஸ்திர தானம் செய்து  அட்சயமாக வளத்தைப் பெருக்கிக் கொள்வோம். 

- மாலதி சந்திரசேகரன்

]]>
Atchaya Tritiya 2017, அட்சய திருதியை, அன்னபூரணி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/Akshaya-Tritiya.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2017/apr/25/atchaya-tritiya-2017-2690837.html
2721 ஆன்மிகம் கட்டுரைகள் ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா dn Thursday, July 28, 2016 12:11 PM +0530 தமிழ் மாதங்களில் "ஆடி'க்கும், "மார்கழி'க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

அந்த வகையில், ஆடிக்கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா.

சூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன.

"கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்' என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் "கிருத்திகை' என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா? அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்.

வேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். "மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்'' என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார்.

இந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.

"ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் க்ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்' என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் "கார்த்திகை மலை'' என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று அழைக்கிறார்கள்.

அனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் ஆடிக் கிருத்திகையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவதும், பல விதமான காவடிகள் சுமந்து வந்து தண்டபாணியை வழிபடுவதும் அரங்கேறுகிறது.

மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர் கண்ட சிறந்த நெறிகளே விரதங்கள் எனப்படும். இறைவனிடம் பக்தி பூண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப்போல ஒருவருக்கு வேறு எதுவும் துணை புரிவதில்லை. "வரிக்கப்படுவது விரதம்' "உடலளவு விரதம்' "காப்பது விரதம்' என்ற ஆன்றோர் வாக்குகளை நாம் சிந்திக்க வேண்டும். புலன்களை வெல்லுதலும் ஆன்மாவின் வெற்றிக்கு உற்ற துணையாகும். "புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்'' என்பது முதுமொழியல்லவா?

விநாயகப் பெருமான் கூறியபடி கிருத்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அருளால் தேவரிஷியாக உயர்ந்தார். இவ்விரதத்தை மேற்கொண்ட மனு என்பவன் மன்னன் ஆனான். எனவே கிருத்திகை விரதம் மிக மிக உயர்ந்தது. ஆகவே ஆடிக் கிருத்திகையில் நாமும் விரதமிருந்து ஆறுமுகனின் அருள் பெறுவோம்.

]]>
ஆடிக்கிருத்திகை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/murugan.jpg https://www.dinamani.com/religion/religion-articles/2016/jul/28/ஆறுமுகப்-பெருமானுக்கு-அணி-சேர்க்கும்-முக்கியத்-திருவிழா-2721.html
2690 ஆன்மிகம் கட்டுரைகள் அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா dn Wednesday, July 27, 2016 02:35 PM +0530 செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் அண்மையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி கரக ஊர்வலமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தீமிதி விழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

24 ஆம் தேதி கடும்பாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கே.ஜெயவேல், ஜே.பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதேபோன்று, செங்கல்பட்டு காட்டுநாயக்கன் வீதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு 56-ஆம் ஆண்டு உற்சவத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் பூங்கரகம் வீதிவலமும், 24 ஆம் தேதி கூழ்வார்த்தில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இரவு உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.பாலகுமார், ஆர்.வீரராகவன், காட்டுநாயக்கன் கிளை சங்கத் தலைவர் கே.எஸ்.முருகன், செயலாளர் இ.செல்வம், தர்மகர்த்தா கே.வெங்கடேசன், துணைத் தலைவர் ஓ.குமார் உள்பட கோயில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

செங்கல்பட்டு முருகேசனார் தெருவில் உள்ள கங்கையம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் காப்புகட்டுதல், கரக ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

24 ஆம் தேதி கூழ்வார்த்தலைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ரத வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

]]>
ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் https://www.dinamani.com/religion/religion-articles/2016/jul/27/அம்மன்-கோயில்களில்-ஆடித்திருவிழா-2690.html