Dinamani - செய்திகள் - https://www.dinamani.com/religion/religion-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3097747 ஆன்மிகம் செய்திகள் திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி தெப்பத்தில் வலம் DIN DIN Monday, February 18, 2019 12:33 AM +0530 திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, தெப்பத்தில் வலம் வந்தார்.
 தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி புதன்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் கோயில் எதிரில் உள்ள திருக்குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜர் தெப்பத்தில் 7 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் குளக்கரையில் திரண்டனர்.
 குளக்கரை படியில் நின்று அவர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தனர். விழாவை முன்னிட்டு, திருக்குளம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தின் கலைஞர்கள் சார்பில் ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/18/திருப்பதி-கோவிந்தராஜ-சுவாமி-தெப்பத்தில்-வலம்-3097747.html
3097746 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப்.27-இல் தொடக்கம் Monday, February 18, 2019 12:31 AM +0530 காளஹஸ்தீஸ்வரர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக இக்கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் கோயிலில் நடைபெற்று வருகின்றன. மேலும் பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகனச் சேவை விவரங்கள் அடங்கிய சுவரொட்டியை கோயில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டனர். பிரம்மோற்சவ வாகனச் சேவை விவரம்:

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/18/காளஹஸ்தி-கோயிலில்-வருடாந்திர-பிரம்மோற்சவம்-பிப்27-இல்-தொடக்கம்-3097746.html
3097119 ஆன்மிகம் செய்திகள் தோகூரில் அருள்புரியும் மாவிலங்கேஸ்வரர்!  Saturday, February 16, 2019 04:20 PM +0530  

தோகூர் விரிந்த காவிரி ஆற்றின் நடுவில் உள்ள ஆற்றிடை தீவாகும். கல்லணைக்கு மேற்கில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தீவூர் என்பது மருவி தோகூர் ஆனது. 

சுமார் 403 ஆண்டுகளின் முன் நடந்த ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் இந்த தோகூர் தீவில் நடந்ததைச் சற்று பின்னோக்கிச் சென்று பார்க்கப்போகிறோம். இந்தப் போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும்.

தென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை முஸ்லிம் மன்னர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாசார சின்னங்கள் அழிக்கப்படாமல் காக்கப்பட்டதற்கு காரணம், விஜயநகர மன்னர்கள் பலமானவர்களாக இருந்ததே நமது தமிழகத்தை நாயக்கர்கள் 1734 வரை ஆண்டு வந்தனர். டெக்கான் பகுதியில் சுல்தான்கள் விஜய நகரத் தலைமை பகுதிகளை அழித்தனர். அதனால் விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .

இந்த விஜயநகர அரசனாக 1600-ம் ஆண்டு வேங்கடபதி தேவராயன் தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்கராய என்பவனை அரசன் ஆக்கினான். வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன், இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினான்.

அரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் சிலர், சிறையில் இருந்த ஸ்ரீரங்க சிக்க ராயரின் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர். விஷயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன், தன் மனைவி, தனது பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான். அப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன. தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்கள்.

தஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிகப் புகழ்வாய்ந்த இரகுநாத நாயக்கன். சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை விஜய நகர தளபதி யக்ஷமநாயக்கர் தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர். அதைப் போற்றும் விதமாகவே கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன் இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான்.

ஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான். இந்தச் செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான். இதனைத் தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து தஞ்சாவூரின் பெரும் பகுதியை வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

இரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியான இந்த தோகூரில் பெரும் சண்டையில் இடுபட்டன. ஒரு போர்சுகீசியர் இந்த சண்டையை பற்றிக் குறிப்பிடும் போது தென்இந்தியாவில் நடந்த போர்களில் மிக அதிகமான மக்கள் ஈடுபட்ட போர் இதுவாகும் எனக் கூறியுள்ளார்.

ஆம், சுமார் பத்து லட்சம் படையினர் இருபுறமும் போரிட்டனர். போர் தோகூரில் இருந்து ஸ்ரீரங்கம் வரை நடைபெற்றது, காவிரி ரத்த சிவப்பானது. இந்தப் போரில் ஜக்கராயன் படைகள் தோல்வியுற்றன. இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் திருச்சியின் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமமான தோகூரின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது.

தற்போது சிறிய அமைதியான ஆற்றோர கிராமமாக தோகூர் உள்ளது. காவிரி கரையை ஒட்டியபடி உள்ளது மீனாட்சி-சுந்தரேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவி பெயர் மீனாட்சி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சிவாலயத்தினை ஒட்டியவாறு உள்ளது ஐயனார் கோயில்.

சுதையுடன் கூடிய நுழைவாயில், சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததும் உள் பிரகாரத்தின் வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் பலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். சில படிகள் ஏறினால் நந்தி மண்டபம். நந்தியின் எதிரில் இறைவனின் கருவறை சிறிய லிங்க மூர்த்தியாக சுந்தரேஸ்வரர். இவருக்கு மற்றோர் பெயரும் உள்ளது அது மாவிலங்கேஸ்வரர் என்பதாகும். மாவிலங்கம் தல விருட்சமாக இருந்திருக்கலாம்.

வலதுபுறம் அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் உள்ள மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், கைலாசநாதர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர்.

இதையடுத்த தனி சிற்றாலயத்தில் பெருமாள் நான்கு கரங்களுடன் இங்குச் சேவை சாதிக்கிறார். அவரது வலது மேல் கரத்தில் சக்கரமும் இடது மேல்கரத்தில் சங்கும், வலது கீழ் மற்றும் இடது கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் சன்னிதியின் எதிரே சிறிய சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும், இறைவியின் சன்னிதிக்கு அருகே சண்டிகேசுவரியின் தனிச் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு திசையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். அருகில் பைரவர் சன்னிதியும் உள்ளது. காலை மாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/தோகூரில்-அருள்புரியும்-மாவிலங்கேஸ்வரர்-3097119.html
3097115 ஆன்மிகம் செய்திகள் ஸ்ரீ படேசாகிப் சுவாமிகள் மகா குருபூஜை Saturday, February 16, 2019 03:43 PM +0530  

மகான் ஸ்ரீ படேசாகிப் சுவாமிகள் குருபூஜை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் பிப் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறன்றது. 

இதனை முன்னிட்டுஅன்று நடைபெறும் நிகழ்வுகள்:

காலை 7.30 மணி - நாதஸ்வர மேளம், மங்கலவாத்தியம் தொடர்ந்து அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் 

காலை 11 மணி - சுவாமிகளின் திருஉருவப்படம், திருத்தேர் சித்தர் ஆலயத்தை வலம் வருதல்.

காலை 11.45 மணி - துவாஜரோகன மகா கொடியேற்றுதல்.

விபரங்களுக்கு - 7868047049, 94443460460

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/ஸ்ரீ-படேசாகிப்-சுவாமிகள்-மகா-குருபூஜை-3097115.html
3097103 ஆன்மிகம் செய்திகள் ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை விழா DIN DIN Saturday, February 16, 2019 03:11 PM +0530  

திருவள்ளூர் ஊத்துக்கோட்டைசாலையில் (பூண்டி நீர்த்தேக்கம் அருகில்) நெய்வேலி கிராமம். சூர்யோதயா நகரில் உள்ள ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு (த்விதீய) ப்ராதுர்பவ உற்சவ விழா பிப்ரவரி 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. 

இதனையொட்டி பஞ்சாம்ருத அபிஷேகம், ஸ்தோத்ர பாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு சேவா, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் அன்று காலை 4 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெறுகின்றது. 

மேலும் தகவல்களுக்கு - அம்மன் சத்தியநாராயணன் 9445952585, 9884552585
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/ஸ்ரீராகவேந்த்ர-க்ரந்தாலயாவில்-இரண்டாம்-ஆண்டு-பிரதிஷ்டை-விழா-3097103.html
3097089 ஆன்மிகம் செய்திகள் மாசி மாதப்படி நன்மை அடையும் ராசிக்காரர்கள் எவை?  DIN DIN Saturday, February 16, 2019 01:15 PM +0530  

12 ராசி அன்பர்களுக்கும் மாசி மாத ராசிபலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலை:
ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
தேவையான உதவிகளைப் பெறும் மேஷ ராசியினரே, இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும்.  எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த  பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். 

தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர். 

கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இருக்காது.

பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

அஸ்வினி:
இந்த மாதம் புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

பரணி:
இந்த மாதம் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கார்த்திகை 1 - ம் பாதம்:
இந்த மாதம் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி20, 21
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 26, 27

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:
ராசியில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
தன்னம்பிக்கையை  மனதில் கொண்டுள்ள ரிஷப ராசியினரே, இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது  எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

கார்த்திகை 2, 3, 4, பாதங்கள்:
இந்த மாதம் உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும்.

ரோகிணி:
இந்த மாதம்  நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.

மிருகசீரிஷம்1, 2 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி22, 23
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 28; மார்ச்1, 2

{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
அலைச்சல் அதிகமாக கொண்டிருக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான  பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உடல் ஆரோக்யம்   ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். 

திருவாதிரை:
இந்த மாதம் முக்கியமான   விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும்   உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள்.

புனர்பூசம்1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம்  சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.   குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். 

பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி24, 25
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 3, 4

{pagination-pagination}
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரக நிலை:
ராசியில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை தோன்றினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இந்த மாதம் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள்.

புனர்பூசம் 4 -ம் பாதம்:
இந்த மாதம் பழைய கடன்களைத்   திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும்   கூட்டிக்கொள்வீர்கள். 

பூசம்:
இந்த மாதம்  உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு   வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.   

ஆயில்யம்:
இந்த மாதம் சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய   சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவருவீர்கள்.  

பரிகாரம்: திங்கள் கிழமையில் அம்மனுக்கு மல்லிகை மலரை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி26, 27
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்5, 6, 7

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலை:
சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
வாக்கு, வன்மை அதிகரிக்கும் திறனுடைய சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகம்:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.   போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற   சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.

பூரம்:
இந்த மாதம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.  பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

உத்திரம் 1 ம் பாதம்:
இந்த மாதம்  ஆதாயங்கள் கிடைக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி28; மார்ச்1, 2
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்8, 9

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுகஸ்தானத்தில் சுக்ரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
மன வளத்தை பெருக்கிக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.  வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு இந்த மாதம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு கிடைக்கும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம்   தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.  

சித்திரை 1, 2 பாதம்:
இந்த மாதம்  உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 3, 4
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்10, 11, 12

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
சோம்பேறித் தனத்தை உதறித் தள்ளும் துலாராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். மாத தொடக்கத்தில் எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். 

தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். 

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். கஷ்டமில்லாத  சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மேலதிகாரிகள் நீங்கள் பார்க்கும்  வேலையைப்பற்றி  நன்கு அறிந்து இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. 
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மேலதிகாரிகளின் அனுசரனை இருந்து வரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். 

ஸ்வாதி:
இந்த மாதம் புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு.  இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.  புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. 

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் உடன் இருப்போரால்  பிரச்சனைகள் வரலாம். எதிர்ப்புகள் நீங்கும். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். 

பரிகாரம்: துர்க்கை தேவிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள்
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 5, 6, 7
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி13, 14; மார்ச்    13, 14

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரக நிலை:
ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நேர் வழியில் சாதிக்க காத்திருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். கோபத்தைக் கட்டு படுத்துதல் நல்லது. வீண் செலவை குறைப்பது நல்லது

விசாகம் 4 ம் பாதம்:
இந்த மாதம் நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்வீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக்   கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய  திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும்   வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.

அனுஷம்:
இந்த மாதம் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும்.

கேட்டை:
இந்த மாதம் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் காரிய அனுகூலமும்  நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக  நடந்து கொள்வர்.  

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 8, 9
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி15, 16, 17

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலை:
ராசியில் சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
போட்டிகளை எளிதில் சமாளிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் பாரட்டைப் பெறுவீர்கள்.

மூலம்:
இந்த மாதம் மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும்  ஆனந்தமும்  பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். 

பூராடம்:
இந்த மாதம் கணவன்-மனைவி இடையே அன்பும்  பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும்.

உத்திராடம் 1 ம் பாதம் :
இந்த மாதம் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். 

பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச்10, 11, 12
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி18, 19

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரக நிலை:
ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
மறைமுக எதிர்ப்புகளை சந்திக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

மாணவர்கள் வெளியூர் செல்லும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் உறவு பலப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள்   சட்டென்று  குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை  செலுத்துவீர்கள். 

திருவோணம்:
இந்த மாதம் எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். 

அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக  இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். 

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம்
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி13, 14; மார்ச் 13, 14
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 20, 21

{pagination-pagination}
கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கிரக நிலை:
ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்ரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புதிய ஒப்பந்தங்களை பெறக் காத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக்கவலை  உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். 

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள்  விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். 

மாணவர்கள் வாகனங்களைக் கையாள்வதைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.  நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம்   அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். 

சதயம்:
இந்த மாதம் குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களின்  நினைவாற்றல் அதிகரிக்கும். வேலை இல்லாமல்  இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற கால கட்டம்.  

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி15, 16, 17
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி22, 23

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புகழைப் பெறக் காத்திருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.

பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.    
மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரியும். உங்களின் கவனம் ஒருமுகப்படும். இதனால் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். 

பூரட்டாதி 4 ம் பாதம்:
இந்த மாதம் பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். 

உத்திரட்டாதி:
இந்த மாதம் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு   மாற்றுவீர்கள். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும்.

ரேவதி:
இந்த மாதம் உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அசையாச்சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையலாம். 

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி18, 19
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி24, 25 

]]>
மாசி, கிரக நிலை, பலன், பரிகாரம், Maasi month prediction https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/மாசி-மாதப்படி-நன்மை-அடையும்-ராசிக்காரர்கள்-எவை-3097089.html
3097080 ஆன்மிகம் செய்திகள் உங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்துவிட்டீர்களா? மாசிப்பூணூல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் Saturday, February 16, 2019 11:44 AM +0530
உத்திராயணம் பிறந்துவிட்டாலே விவாகம், உபநயனம் போன்ற முகூர்த்தங்கள் கலைகட்டிவிடும். அதிலும் மாசி மாதத்தில் நிறைய உபநயனங்களைக் காணமுடியும். "மாசி பூணூல் பாசி படரும்" என்பது பழமொழி. இந்த மாசி மாத முகூர்த்தங்களில் அனேக திருமண மண்டபங்களில் திருமணத்தை விட உபநயமே அதிகம் நடப்பதையே காணமுடியும். மாசி மாதத்தில் உபநயனத்தைச் செய்வது மிகச்சிறப்பு. முடியவில்லை என்றால் உத்திராயண காலத்திற்குள் செய்துவிட வேண்டும் என்கிறது வேதம்.

குருகுலவாசம்

குழந்தைகளை அதிலும் முக்கியகாக ஆண் குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும். சகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாசம் என்று ஒரு ஆசாரியனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். 

மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கற்றுக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தருவார்கள். வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தைத் தருபவர் ஆச்சாரியர்தான். அதனால் அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கவோ அபசாரம் செய்கிறதோ கூடாது.

உபநயனம்

'உபநயனம்' என்றால் 'சமீபத்தில் அழைத்துப் போகிறது'. எதற்கு, அல்லது யாருக்கு சமீபத்தில்? குருவுக்கு சமீபத்தில்தான். இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதன் ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்

உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரமத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள். பிராமணர்கள் 8 வயதிற்குள்ளும், க்ஷத்திரியர்கள் 12 வயதிற்குள்ளும், வைஷ்யர்கள் 16 வயதிர்குள்ளும், காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும் என்பது வழக்கம்.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரி மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்திரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், பிரமோபதேசம் என்று சொல்லுகிறோம்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு காரியங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின்பற்றுவதில்லை. முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

உபநயனத்தில் குரு சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச் சொல்லி ஆசீர்வதிப்பதாவது "இக்கல்லைப் போல் வலிமை கொண்ட உடலும், உறுதி படைத்த நெஞ்சம் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். நீ பிராமச்சாரியாகி விட்டாய். சந்தியாவந்தனத்தையும், மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யவேண்டும். அறியாமையினின்று விழித்தெழு"  என்பது போல் ஆகும்.

உபநயனம் பண்ண வேண்டிய வயதை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பது

உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராமணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும். அதாவது பிறந்து ஏழு வயசு இரண்டு மாசம் ஆனவுடன் பண்ண வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

க்ஷத்திரியர்கள் பன்னிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

உபநயனமும் உத்திராயணமும்

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் சூரியன் பூமியின் வடக்குப் பாதியில் சஞ்சரிக்கிற ஆறு மாசத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும். இந்த ஆறு மாசத்தில்தான் செய்யலாம். இதிலும் வசந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்' என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது சாஸ்திர சம்மதமல்ல என்று மகா பெரியவர் உபநயனம் செய்யும் காலம் பற்றி கூறியிருக்கிறார்.

வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்

மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.

பிரமோபதேசம்

உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படுகிறது. அதனாலேயே இதற்கு பிரமோபதேசம் என்று பெயர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் கூறுகிறார் இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்க்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது. காயத்ரி ஜபத்தால் மனது ஒருமைப் படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது.

ஞான ஒளியைத் தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன. காமம் உள்புகுந்த பின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதைச் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். எண்ணைப் பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதைக் காமம் அதிகம் பாதிக்காது.

காயத்ரி ஜெபம்

காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமகக் கொண்டது. எனவே சூரியனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும். சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவதனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். (சம்ஸ்க்காரம் எண் 21). 

ஸந்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும். காயத்ரி தியான முறையும், தண்ணீரால் செய்யப்படும் அர்க்யமும் இந்த கர்மாவில் செயல் முறை மையமாக உள்ளன. 

சந்தியாவந்தனம் எப்படி செய்யவேண்டும்

சந்தியாவந்தனம் (அ) சந்த்யோபாசனை முறைப்படி குருவிடமோ/ சாஸ்த்திரிகளிடமோ உபநயன தின முதல் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஸ்வரத்துடன் கூடிய வேத மந்திரங்கள் அடங்கியுள்ளது. அதன் பிறகு பெரியோர்களிடமோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ கற்று கொள்ளலாம். 

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" எனக் கூறுவார்கள். அதாவது காலை சந்தியாவந்தனம் சூரியன் உதிக்கும் முன் (காணாமல்) சாவித்ரிதேவியை மதியம் உச்சிப்பொழுதில் (சூரியன் கோணாமல்) காயத்ரி தேவியை தியானிப்பது சாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரத்தைப் பார்க்கும் வரையிலும் சந்தியா தேவியை பூஜையை செய்தல் வேண்டும். பசுகொட்டிலிலும், நதி கரையிலும், கோவில் அருகிலும் சந்தியாவந்தனம் செய்வது பன்மடங்கு பலனைத் தர வல்லது. வீட்டிலும் (கொல்லை) சுத்தமான சூரிய ஒளி வரும் இடத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம். அப்படியும் இடம் இல்லை எனில் வீட்டில் உள்ள கடவுள் சன்னிதானத்தில் செய்யலாம். 

ஜாதகப்படி யாருக்கு உபநயனம் செய்யும் அமைப்பு இருக்கும்?

ஒருவருக்கு ஆன்மீக உலகத்தில் பிரவேசம் செய்ய ஜாதகத்தில் குரு சூரிய சேர்க்கை முக்கியமானதாகும். உபநயனம் எனும் பிரமோபதேசமும் இறைவனை அடையும் ஆன்மீக பயணத்தின் முதல்படி என்பதால் உபநயனம் செய்துகொள்ள ஒருவர் ஜாதகத்தில் சூரியன் குரு இணைவு முக்கியமானதாகும்.

1. லக்னம்/ராசி மோக்ஷ திரிகோணங்களாகிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய வீடுகளாகிய லக்னத்தில் அல்லது திரிகோணத்தில் குரு நின்று ஆட்சி/உச்சம் பெற்று நிற்பது  மற்றும் ரிஷபம் துலாம் லக்னமாகி லக்னத்தில் குரு நிற்பது.

2. லக்னம் மற்றும் திரிகோண பாவங்களில் குரு சூரியன் சேர்க்கை பெற்று நிற்பது.

3. லக்னம் மற்றும் திரிகோண பாவங்கள் குரு வீடாக அமைந்து சூரியன் அங்கு நிற்பது அல்லது சூரியன் வீடுகளாகி அங்கு குரு நிற்பது.

4. குருவும் சூரியனும் சுப பரிவர்தனை பெற்று நிற்பது.

5.  குருவோ அல்லது சூரியனோ ஆட்சி உச்சம் பெற்றும் இரண்டும் இணைந்து ஒரு திரிகோணத்தை பார்ப்பது.

6. குருவோ சூரியனோ திரிகோணங்களில் நின்று சமசப்தம பார்வை பெறுவது. இவற்றில் ஒன்று ஆட்சி உச்சம் பெற்றால் கூடுதல் பலமாகும்.

7. குரு லக்னத்திலும் சுக்கிரன் நான்காம் வீட்டிலும் திக்பலம் பெற்று செவ்வாயின் சேர்க்கை பெற்று குரு மங்கள யோகம், ப்ருகு மங்கள யோகம் பெற்றும் நிற்பது.

ஜனன ஜாதகத்தில் மேற்கண்ட வகையில் இணைவு பெற்று நின்று குரு தசா சூரிய புத்தி மற்றும் சூரிய தசா குரு புத்தி காலங்களில் உபநயனம் நிகழும். மேலும் 1/5/9 அதிபதிகள், மற்றும் சூரியன், குரு ஆகியவர்களின் தசா புத்தி அந்தரம் ஆகியவை நடைபெறும்போதும் ஒருவருக்கு உபநயனம் மற்றும் குருகுல வாசம் போன்ற அமைப்புகள் ஏற்படும்.

உபநயனம் செய்யும் வயதாகியும் அதற்கான சூழ்நிலை அமையவில்லை எனில் சென்னை வியாசர்பாடியில் உள்ள சூரிய ஸ்தலமான ரவீஸ்வரரையும் அங்குள்ள வேதவியாசரையும் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் வணங்கி வர ப்ரம்மோபதேசமும் வேத அத்தியயனமும் குருகுல வாசமும் ஏற்படும். தனியாக உபநயனம் செய்ய வசதியில்லாதவர்கள் சமஸ்டி உபநயனத்தில் பூணல் போட்டுவிட வேண்டும். போடாமல் காலம் தாழ்த்தக்கூடாது என்கிறது சாஸ்திரம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/உங்கள்-குழந்தைக்கு-உபநயனம்-செய்துவிட்டீர்களா-மாசிப்பூணல்-பற்றி-ஜோதிடம்-கூறும்-ரகசியங்கள்-3097080.html
3096583 ஆன்மிகம் செய்திகள் வினை தீர்க்கும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் Saturday, February 16, 2019 02:32 AM +0530
உத்தரமேரூர் அருகே மருத்துவான்பாடியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர்- திருப்புலிவனம் சாலையில் மருத்துவான்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில் உள்ளது.
சிதிலமடைந்திருந்த இக்கோயிலை புனரமைக்கும் பணிகள்  நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
இதையொட்டி, கடந்த இரண்டு நாள்களாக புண்யாவாசனம், வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. 
பின்பு, மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இரவு வேளையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வினை தீர்க்கும் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

அமிர்தகடேஸ்வரர் கோயில்...
மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் உள்ள அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயில்  கும்பாபிஷேகம் வெள்ளிக்
கிழமை நடைபெற்றது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாள்களாக வாஸ்து பூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. 

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/16/வினை-தீர்க்கும்-விநாயகர்-கோயில்-கும்பாபிஷேகம்-3096583.html
3096453 ஆன்மிகம் செய்திகள் கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்) DIN DIN Friday, February 15, 2019 11:40 AM +0530  

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பிரயாணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்னைகள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட்டு சிலர் அசையாச் சொத்துகளையும் வாங்குவார்கள். அனைத்து விஷயங்களிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ]

மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.  சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான விஷயங்களில்  சுமுகமான நல்ல தகவல்கள் வந்துசேரும். சிலருக்கு சுமுகமான ஒப்பந்தங்கள்  கிடைக்கும். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள்.

உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் நண்பர்களுக்கு பயன்படும். தெரியாத தொழிலிலும் தைரியமாக ஈடுபடலாம். அதிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். வாழ்க்கைத்தரம் இந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு  உயர்ந்துவிடும். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்திலுள்ள கஷ்டங்கள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகிவிடும். உடலில் பொலிவும் முகத்தில் உற்சாகமும் நேர்கொண்ட பார்வை, மனதில் தெளிவு ஆகியவைகள் உண்டாகும். ஏமாற்ற நினைக்கும் நண்பர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகுவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்கி புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். ரிஸ்க் எடுத்து பொருளாதார வளர்ச்சியை அடைவீர்கள். 

பங்குவர்த்தகத் துறை பலனளிக்கும்.  அரசாங்கத்திலிருந்து பேராதரவு கிடைக்கும். மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். கடமைகளை சரிவர ஆற்றுவீர்கள். முன்யோசனை இல்லாமல் ஒரு செயலைச்செய்துவிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வீர்கள். 

திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு உடனடியாக நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். மனதில் உள்ள பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டாமல் பகைவர்களுடன்  இன்முகத்துடன் பழகுவீர்கள். அனாவசியச் செயல்களைச் செய்ய வேண்டாம். வீண்விவாதங்களிலிருந்து தள்ளி இருக்கவும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக்கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் யாவும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். வேலைகளை கவனம் சிதறாமல் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளைப் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்தவர்கள் தனித்து தொழில் செய்யும் நிலையை காண்பார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பேச்சினால் பகை உண்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும். கைநழுவிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சைக் கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். குழப்பங்களும் கருத்துவேறுபாடுகள் மறையும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு உயர் கல்வி படிப்பதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராமல் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். செய்தொழிலையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வீர்கள். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் வருவது வரட்டும் என்கிற தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு உழைத்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்களுடன் நல்ல முறையில் பழகி அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் எந்த சுணக்கமும் ஏற்படாது. பழைய அசையாச் சொத்துகளை விற்று விட்டு புதிய நல்ல சொத்துகளை வாங்குவீர்கள். 

உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை நல்வழிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர் உயரக் காண்பீர்கள். மனநிறைவுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.  எவரையும் எடுத்தெறிந்து பேசமாட்டீர்கள். 

பக்குவமாகவும் கண்ணியத்துடனும் நடந்துகொண்டு உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். அரசு உதவிகள் தேடிவரும். பொதுநலப் பணிகளிலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். முக்கிய காரியங்கள் நிறைவேறக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது. 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறக் காண்பீர்கள். தொழில் வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் கரைந்து உடல் ஆரோக்கியம் உயரத்தொடங்கும். யோகா பிராணாயாம் போன்றவைகளையும் பயின்று உடல்நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள். 

மனதில் உற்சாகம் நிறையும். மனதிற்கினிய பயணங்களையும் செய்வீர்கள். மதிப்பு, அந்தஸ்து உயரும். உடன்பிறந்தோர் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். சமுதாயத்தில் பிரபலஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கையும் மேன்மையடையும். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடிவரும். செயல்களை வேகமாகவும் விவேகமாகவும் செய்து முடிப்பீர்கள். 

குழந்தைகளின் தவறுகளைப் பக்குவமாகப் பேசி திருத்துவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். விழிப்புணர்ச்சியுடன் இருந்து பாதகங்களை சாதகங்களாக மாற்றிக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழல்களைக் காண்பார்கள். கடமை தவறாமல் உழைப்பீர்கள். தலை நிமிர்ந்து நடந்து தன்னம்பிக்கையுடன் உலா வரும் காலகட்டமிது. வியாபாரிகளின் யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும். 

வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கூட்டாளிகளின் அபிமானத்தையும் பெறுவீர்கள். வங்கியிலிருந்து கடன் கிடைத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவார்கள். கொள்முதல் லாபம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக அமையும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள்.  கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். புதிய நட்புகள் புதிய வாய்ப்பைப் தேடித்தரும். 

பெண்மணிகள் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்வீர்கள். ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவமணிகள் புத்திசாலித்தனத்துடன் படிப்பார்கள். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் சுறுசுறுப்பு கூடும். சலிப்பில்லாமல் கூடுதல் கவனத்துடன் உழைப்பீர்கள். இதுவரை தொடர்ந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக மகிழ்ச்சியுடன் செலவு செய்வீர்கள்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிரிகளாக இருந்தவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். கோர்ட் வழக்குகளும் சாதகமாக முடிவுபெறும். பல வருடங்களாக கைக்கு கிடைக்க வேண்டிய அசையாச் சொத்து கைவந்து சேரும்.  நல்ல பெயர், புகழ் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் சுமுகமாக பாகப்பிரிவினை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். குறிப்பாக, மூத்த உடன்பிறப்புகளுக்கு வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். 

குழந்தை இல்லாது இருந்தவர்களுக்குக் குழந்தை பிறக்கும். அரசாங்க உதவிகள் சிரமமின்றி கிடைக்கும். அன்னை வழியில் சில நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். மனதில் இருந்த பெருஞ்சுமை இறங்கிவிட்டாற்போல் உணர்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உதவிகளைச் செய்வீர்கள்.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள், கூட்டாளிகளுடன் இருந்த சண்டைச் சச்சரவுகள்  குறைந்து சமாதானம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். வருமானம் சீராக இருக்கும். ஒரு பகுதியை புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். செய்தொழிலில் இருந்த போட்டிகளும் குறையும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளும் பெருமளவுக்குக் குறைந்துவிடும். வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கும். வாங்கும் சக்தி அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சரியான நேரத்தில் ஆகாரம் எடுத்துக் கொள்வீர்கள். தக்க ஓய்வும் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க தேவையான பணஉதவியும் புதிய நண்பர்களிடமிருந்து தாராளமாகப் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் சமரசமாகச் சென்று சாதகமாக முடித்துக் கொள்வீர்கள். சிலர் புதிய வீடு மனை வாங்குவார்கள். சிலர் வேறு ஊருக்கு மாறிச் சென்று அங்கு வசிக்கும் பாக்கியமும் உண்டாகும். அரசு அதிகாரிகளிடமும் உங்கள் செல்வாக்கு நல்ல முறையில் இருக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரச்னைகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வர். வேலைகளை திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். வியாபாரிகள் சுக சௌகர்யங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும். குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் வரும் வருமானம் திருப்தி தரும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்படும். மாற்றுக் கட்சியினரும் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். இதனால் மனம் தளர வேண்டாம். கட்சித் தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு பொறுப்பான பதவிகள் வந்து சேரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். தகுதிக்குக் குறைவானவர்களிடம் சேர்க்கை வேண்டாம்.

பெண்மணிகள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது சிறிது யோசித்து எடுக்கவும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் உங்கள் எண்ணங்களைச் சீர்படுத்தி தெளிவாகச் சிந்தித்து படிக்கவும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். நண்பர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் சுறுசுறுப்புடன் ஓடியாடி சம்பாதிப்பீர்கள். செய்தொழிலை அடுத்த நிலைக்கு உயர்த்துவீர்கள். தற்காலிகமாக செய்து வந்த ஒப்பந்தங்களை நிரந்தரமாகச் செய்யத் தொடங்குவீர்கள். என்றோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி இந்த காலகட்டத்தில் வந்தடையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பரஸ்பர ஒற்றுமை நிலவும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கை வந்து சேரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். அந்த சொத்துகளிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். 

செய்தொழிலுக்கு அரசாங்கத்திலிருந்து எந்த குறுக்கீடும் உண்டாகாது. சமுதாயத்தில் ராஜபாட்டையில் சிறப்பாக பீடுநடை போடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். சவால்களை லாகவமாக எதிர்கொள்வீர்கள். சிலருக்கு திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய பாக்கியம் உண்டாகும். ஞானிகள் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய சொகுசான  வாகனங்களை வாங்குவீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் உபரி வருமானம்  கிடைக்கும் காலமிது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய அளவு முதலீட்டில் பெரிய அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும்  அவைகள் உங்களை பாதிக்காது. சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் பேச்சின் உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் சூட்சும அறிவு புலப்படும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு பலிதமாகும். குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். நெடுநாளாக தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். 

குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிவரும். நெடுநாளாக விற்காமலிருந்த பூர்வீகச் சொத்து விற்பனை ஆகும். தனித்து காரியங்களைச் செய்வதை விட  நண்பர்களுடன் சேர்ந்து காரியங்களைச் செய்வதே நல்லது. சமூகத்தில் பொறுப்புகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். குடும்பத்திலும் வெளியிலும் மதிப்பு மரியாதை உயரும். பெற்றோர்களாலும் நன்மைகள் உண்டாகும். அவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தகுதிக்கு மீறி பெரும் அதிர்ஷ்டம் உண்டாகக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வேலைகளையும் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். சிலர் அலுவலக ரீதியான பயணங்கள் செய்து நற்பெயரெடுப்பார்கள். 
வியாபாரிகள் வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி தடைகளைக் களைந்து செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முதலீடுகளை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து செயல்படவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பயிர்களில் புழுபூச்சிகளில் பாதிப்பு  தெரியவந்தால் உடனே பூச்சிமருந்துகளை பயன்படுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக வெற்றியைத் தேடித் தரும். இதனால் பெயரும் புகழும் கூடத்தொடங்கும்.  கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை வைத்துக் கொள்வது அவசியம். கலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவார்கள். சக கலைஞர்களால் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

பெண்மணிகள் கணவருடன் சிறப்பான ஒற்றுமையை காண்பார்கள். கணவரின் உறவினர்களிடம் நல்ல பெயரெடுப்பீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். மாணவமணிகள் படிப்பில் வெற்றிவாகை சூடுவார்கள். ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெருகும். விளையாடும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும். 

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

*****

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

*****

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

 

]]>
rahu kethu, ராகு கேது, தனுசு, மகரம், கும்பம், மீனம் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/15/கேசிஎஸ்-ஐயர்-கணித்த-ராகு---கேது-பெயர்ச்சி-பலன்கள்--2019-தனுசு-மகரம்-கும்பம்-மீனம்-3096453.html
3096445 ஆன்மிகம் செய்திகள் இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!! Friday, February 15, 2019 11:15 AM +0530  

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.15 - பிப்.21) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகைமுதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். பெற்றோர் வழியில் திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்பார்த்த ஊதியத்தைப் பெறுவீர்கள். 

வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு,  வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய முதலீகளில் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கும். கொள்முதல் லாபங்கள் அதிகரிக்கும். கால்நடைகளை மிக்க கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின்  பாராட்டுகளைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வார்கள். 

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்லதும் கெட்டதும் கலந்து வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். விளையாட்டிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 15, 16.  சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பெயரும் புகழும் உயரும். இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மன பாரம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். சிக்கல்கள் விலகி பொருளாதாரம் உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை இருக்கும். 

அரசியல்வாதிகள் புதிய பதவியில் அமர்வர். இதன்மூலம் மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவர். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வர். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உல்லாச பயண வாய்ப்புகள் ஏற்படும். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டில் ஈடுபடுவர்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். இருப்பினும் மறைமுக எதிர்ப்பையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாய  உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.  

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.  

பரிகாரம்: பெசன்ட நகர் ரத்தின கிரீஸ்வரரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பணவரவு சீராக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண முடியாது. யோசிக்காமல் வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு  வேலைப்பளு அதிகரிக்கும். வேலைகளில் குறை காணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகளின் புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பார்கள். கால்நடைகளுக்காகவும் பூச்சி மருந்துக்காவும் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் எதிரிகளின்  தொல்லைகளுக்கு ஆளாவார்கள். கட்சி மேலிடம்  உங்கள் பேச்சைக் கண்காணிக்கும். கலைத்துறையினர் நன்கு பரிசீலித்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். 

பெண்மணிகள் நன்மதிப்பு பெறுவார்கள். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 

மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் கவனமாக இருக்கவும். எனினும் பொறுமையாக செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசிக்கவும். உறவினர்கள் உதவிகரமாக இருக்கமாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும்.  கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். விவசாயிகள் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். அதிகச் செலவுகள் செய்து பயிரிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்தவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு கணவருடனான ஒற்றுமை சீராகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். 

மாணவமணிகளுக்கு  வெயிலில் தோல் நோய்கள் உண்டாகலாம். செயல்களை உற்சாகத்துடன்  செய்வீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இருப்பினும் அலைச்சலும் திரிச்சலும் உண்டாகும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். பெற்றோர் வழியில் சோதனைகள் உண்டாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். 

வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய  நேரிடலாம். கொடுக்கல் வாங்கல்கள் மந்தமாக இருப்பதால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து காணப்படும். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு.

அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்துகொள்ளவும். கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில்  முடித்துக் கொடுத்தாலும் பணவரவுக்கு தாமதமாகும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில்  சாதகமான நிலை தென்படும். பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவ
மணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். 

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை  வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

செயல்களில் நிலவி வந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். தீயவர்களின் சேர்க்கையை தவிர்த்துவிட்டால் குழப்பங்களில் இருந்து தப்பிக்கலாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவியோடு சில முக்கியமான வேலைகளையும் முடிப்பீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்துக் கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். வாய்க்கால் வரப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆகவே எதையும்  தீர ஆலோசித்துச் செய்யவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

பரிகாரம்: வளசரவாக்கம் ஸ்ரீவேங்கட சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15, 19.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சுபச்செய்தி ஒன்று தேடி வரும். இருப்பினும் பேச்சில் கவனம் தேவை. உறவினர்களின் அலட்சியப்போக்கு மன வேதனையை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஏற்றவாறு உழைக்க நேரிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். ஆனாலும் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். கூட்டாளிகளின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போகும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும்.  தொண்டர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும். 

கலைத்துறையினருக்கு  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு இல்லத்தில் நிலவும் அமைதியால் உற்சாகம் அடையலாம். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 20.  

சந்திராஷ்டமம்: 15,16.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கவலைகளை மறந்து செயலாற்றுங்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பதவி  உயர்வுகள் கிடைக்கும். அனைவரும்  உதவ முன் வருவார்கள். வியாபாரிகளுக்கு போட்டிகளால்  பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தை அள்ளுவார்கள். கால்நடைகளை வாங்கி உபரி வருமானத்தைப் பெருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவிகளும் கிடைக்கும். எதிரிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் நண்பர்களின் உதவிகளைப் பெறுவார்கள். 

பரிகாரம்: தினமும் ராமபக்த அனுமனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 21. 

சந்திராஷ்டமம்: 17, 18.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நினைத்த செயல்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.  வருமானம் அதிகரிக்கும். ஆன்மிக பலம் உயரும். வாகனங்கள் வாங்க இது உகந்த காலமாகும். உறவினர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே நடைபெறும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். 

விவசாயிகள் கொள்முதல் லாபத்தை அள்ளுவார்கள். வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். விவசாயக் கூலிகளை கௌரவத்தோடு நடத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். இருப்பினும் அவர்களைச் சீண்டிப்பார்க்க வேண்டாம். சமூகத்தில் கௌரவமான பதவிகளைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். அவர்களின் திறமைகள் பளிச்சிடும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். சேமிப்பைக் கூட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். 

மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும்.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 21.  

சந்திராஷ்டமம்: 19, 20.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உற்சாகம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உடன்பிறந்தோர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.  வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்குக் கடன் வாங்க நேரிடும். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். இருப்பினும் புதிய குத்தகைகளைப் பெறவேண்டாம்.

அரசியல்வாதிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ற வரவேற்புகளைப் பெறுவார்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.  மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தேவையில்லாத அலைச்சலையும் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவியினால் அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். பணவரவு சீராகவே இருக்கும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை நாடிச் செல்லவும். விவசாயிகளுக்கு வருமானம் 
திருப்திகரமாக இருக்கும். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை  நிலவுவதால் அவர்களின் கண்களில் படாமல் அமைதியாகச் செல்லவும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வார்கள். 

பெண்மணிகள் கணவரிடம்  ஒற்றுமையோடு பழகுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். ஓய்வு எடுத்துக்கொண்டு செயல்பட்டால் திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18,  21.  

சந்திராஷ்டமம்: இல்லை.
 

]]>
இந்த வாரம், ராசி பலன்கள், ஜாக்பாட் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/15/இந்த-வாரம்-எந்த-ராசிக்காரர்களுக்கு-ஜாக்பாட்-வாங்கப்-பார்க்கலாம்-3096445.html
3095928 ஆன்மிகம் செய்திகள் திருமலை திருக்குளத்தில் புதிய இரும்புத் தடுப்பு அமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Friday, February 15, 2019 01:32 AM +0530
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் திருக்குளத்தில் புதிய இரும்பாலான தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 
ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இக்குளத்துக்கு மாலை வேளையில் தேவஸ்தானம்  சார்பில் ஆரத்தி காட்டப்படுகிறது. 
குளத்தில் நீராடும் பக்தர்கள் அதிக ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காக தேவஸ்தானம் குளக்கரையை சுற்றி இரும்பு தடுப்புக் கம்பிகளை ஏற்கெனவே பொருத்தியிருந்தது. அந்தத் தடுப்புகள் பழுதடைந்து விட்டதால் எளிதில் துருப்பிடிக்காத கம்பிகளை தேவஸ்தானம் தற்போது அமைத்து வருகிறது. ரூ.4.50 கோடி செலவில் இப்பணிகள் வியாழக்கிழமை முதல் கிழக்கு மாடவீதியை ஒட்டியுள்ள குளத்தில் நடைபெற்று வருகின்ரன. இப்பணிகள் மார்ச் மாத பௌர்ணமிக்குள் முடிவடையும். அதன் பின் மற்ற பக்கங்களில் பணிகள் நடைபெற உள்ளன. திருக்குளத்தில் நீராட வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். 6 அடி உயரம், 4 அடி நீளம் என திருக்குளத்தை சுற்றி 1260 அடி தூரத்துக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட உள்ளன.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/15/திருமலை-திருக்குளத்தில்-புதிய-இரும்புத்-தடுப்பு-அமைக்கும்-பணி-தொடக்கம்-3095928.html
3095927 ஆன்மிகம் செய்திகள் திருப்பதி தெப்போற்சவம்: 2ஆம் நாளில் பார்த்தசாரதி பெருமாள் பவனி DIN DIN Friday, February 15, 2019 01:31 AM +0530
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளில் பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வலம் வந்தார்.
தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி புதன்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் குளக்கரையில் திரண்டனர். அவர்கள் குளக்கரை படிகளில் நின்று கற்பூர ஆரத்தி எடுத்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு, திருக்குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தினர் சார்பில் ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/15/திருப்பதி-தெப்போற்சவம்-2ஆம்-நாளில்-பார்த்தசாரதி-பெருமாள்-பவனி-3095927.html
3095926 ஆன்மிகம் செய்திகள் காளஹஸ்தி கோயிலில் 19-இல் அனைத்து சேவைகளும் ரத்து Friday, February 15, 2019 01:31 AM +0530
காளஹஸ்தி கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அனைத்து சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அன்று காலையில், அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் வலமும் நடைபெற உள்ளதால் அன்று முழுவதும் கோயிலில் நடைபெறும் அனைத்து கால அபிஷேகங்களையும், ஆர்ஜித சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அவை அனைத்தும் கோயில் சார்பில் தனிமையில் நடத்தப்படும். ராகு-கேது பரிகார பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/15/காளஹஸ்தி-கோயிலில்-19-இல்-அனைத்து-சேவைகளும்-ரத்து-3095926.html
3095814 ஆன்மிகம் செய்திகள் முகப்பேர் சந்தான சீனிவாசப்பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா (புகைப்படங்கள்) DIN DIN Thursday, February 14, 2019 03:57 PM +0530 முகப்பேர் அருள்மிகு சந்தான சீனிவாசப்பெருமாள் கோவிலில் கோவில் வரலாற்றில் முதல் முறையாக இன்று ரதசப்தமி உற்சவம் பொதுமக்க்ள் நாடும் ஊரும் சுகமாக இருக்க வேண்டி துவங்கப்பட்டது. 

காலை 600 மணிக்கு பெருமாள் சூரிய பிரபையிலும் 

பகல் 10.30 மணிக்கு கருட வாகனத்திலும் 

மாலை 6.30 மணிக்கு சந்திரப்பிரபையிலும் எழுந்தருளி காட்சி தந்தார். 

 

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/முகப்பேர்-சந்தான-சீனிவாசப்பெருமாள்-கோவிலில்-ரதசப்தமி-விழா-புகைப்படங்கள்-3095814.html
3095803 ஆன்மிகம் செய்திகள் இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!  DIN DIN Thursday, February 14, 2019 01:22 PM +0530

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் பிரவேசித்துள்ளார். 

பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். உத்திராட நக்ஷத்திரத்தில் ராகுவும் - பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் - புதன் ராசியில் சஞ்சரிக்கிறார்.

கேது சூரியனுடைய நக்ஷத்திரம் - குருவின் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது. சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். 

இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். 

]]>
rahu kethu, வெப்பம், ராகு, கேது https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/இந்தாண்டு-வெப்பம்-அதிகரிக்குமாம்-உஷார்-3095803.html
3095800 ஆன்மிகம் செய்திகள் திருப்பதிக்கு கைக்குழந்தைகளோடு செல்பவர்களுக்கு மட்டும்! Thursday, February 14, 2019 12:57 PM +0530 திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனத்தை வழங்கி வருகிறது.

அந்தவகையில், பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள் மற்றும் பிப். 20-ம் தேதி கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

வரும் பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது. 

அதேபோல் பிப். 20-ம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

]]>
திருப்பதி, மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள், திருமலை , Tirupathi , தேவஸ்தானம் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருப்பதி-கைக்-குழந்தைகளோடு-செல்பவர்களுக்கு-மட்டும்-3095800.html
3095273 ஆன்மிகம் செய்திகள் திருத்தணி முருகன் கோயில் பிரம்மோற்சவம்: பல்லக்கு சேவையில் உற்சவர் வீதியுலா DIN DIN Thursday, February 14, 2019 02:46 AM +0530
முருகன் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதன்கிழமை பல்லக்கு மற்றும் வெள்ளி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்தார்.
 திருத்தணி முருகன் கோயிலில், மாசி பிரம்மோற்சவம், கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
 தினமும், காலை, மாலை வேலைகளில் உற்சவர் முருகப் பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். 
இந்நிலையில், புதன்கிழமை காலை, உற்சவர் முருகப்பெருமான் பல்லக்கு சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி,  மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார்.  இரவு, 7 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்தார். புதன்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ விழா மற்றும் மாசி கிருத்திகை விழா என்பதால் மலைக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பக்தர்கள் மூலவரை பொதுவழியில் தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
 விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருத்தணி-முருகன்-கோயில்-பிரம்மோற்சவம்-பல்லக்கு-சேவையில்-உற்சவர்-வீதியுலா-3095273.html
3095272 ஆன்மிகம் செய்திகள் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை பூஜை DIN DIN Thursday, February 14, 2019 02:45 AM +0530
மாசி கிருத்திகையையொட்டி திருப்போரூர் கந்தசாமி கோயிலில்  புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
  திருப்போரூர் முருகன் கோயிலில் தற்போது 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாசி கிருத்திகையையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. காலையில், முருகர், வள்ளி தெய்வானை உற்வச மூர்த்திகளுக்கு  சிறப்பு  அபிஷேகம்  அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.   
 பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடிகளை எடுத்து வந்தனர். பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.  
 மாலையில், முருகர் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மயில்வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு வந்து தங்கியிருந்த பக்தர்களுக்காக ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றி, அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருப்போரூர்-கந்தசாமி-கோயிலில்-மாசி-கிருத்திகை-பூஜை-3095272.html
3095271 ஆன்மிகம் செய்திகள் நட்சத்திரக் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி மகாயாகம் DIN DIN Thursday, February 14, 2019 02:45 AM +0530
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நட்சத்திரக்கோயிலில் மகாயாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராகு, கேது பெயர்ச்சி புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,  நவ கலச ஸ்தாபனம், ராகு,கேது பெயர்ச்சி மகா யாகம் நடத்தப்பட்டது. அத்துடன், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தோஷமுள்ள 21 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/நட்சத்திரக்-கோயிலில்-ராகு-கேது-பெயர்ச்சி-மகாயாகம்-3095271.html
3095270 ஆன்மிகம் செய்திகள் கோவிந்தராஜ சுவாமி கோயிலில்  தெப்போற்சவம் தொடக்கம் DIN DIN Thursday, February 14, 2019 02:44 AM +0530
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை மாலை விமரிசையுடன் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி,  தேவஸ்தானம் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை முதல் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு திருக்கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் கோதண்டராம சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் திரண்டனர். திருக்குளக்கரையில் அமர்ந்தபடி, கற்பூர ஆரத்தி எடுத்தனர். 
விழாவையொட்டி, திருக்குளம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிக்ஷித் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தினர் சார்பில், ஆடல், பாடல், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/கோவிந்தராஜ-சுவாமி-கோயிலில்--தெப்போற்சவம்-தொடக்கம்-3095270.html
3095269 ஆன்மிகம் செய்திகள் பிப்.19-இல் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனம் DIN DIN Thursday, February 14, 2019 02:44 AM +0530
திருமலையில் பிப்.19-ஆம் தேதி மூத்த குடிமக்கள் மற்றும் பிப். 20-ஆம் தேதி கைக்  குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
 திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு  தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி, வரும் பிப். 19-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது. 
  அதேபோல் பிப். 20-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/பிப்19-இல்-மூத்த-குடிமக்களுக்கு-சிறப்பு-தரிசனம்-3095269.html
3095268 ஆன்மிகம் செய்திகள் திருமலை : 84,148 பக்தர்கள் தரிசனம் Thursday, February 14, 2019 02:43 AM +0530
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 84,148 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 21,789 பேர் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி, 2 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். 
அவர்களின் தரிசனத்துக்கு 4 மணி நேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர். 
 செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,753 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,616 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18,861 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,327 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

உண்டியல் காணிக்கை ரூ. 2.65 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 2.65 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. 
அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு, ரூ. 2.65 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 24.27 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 23.27 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 24.27 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சோதனைச் சாவடியில் ரூ.1.95 லட்சம் வசூல்
 அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு 12 முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 82,583 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 10,402 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம், ரூ. 1.95 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 11,833 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருமலை--84148-பக்தர்கள்-தரிசனம்-3095268.html
3095176 ஆன்மிகம் செய்திகள் திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி DIN DIN Thursday, February 14, 2019 12:58 AM +0530
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீசுவரர் கோயிலில் புதன்கிழமை ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு-கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் தங்கியிருந்து, பலன்களைத் தருவர். அதன்படி, இதுவரை கடக ராசியிலிருந்த ராகு பகவான், மிதுன ராசிக்கும், மகர ராசியிலிருந்த கேது பகவான் தனுசு ராசிக்கும் புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு இடம் பெயர்ந்தனர். இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராகு-கேது சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
நன்னிலம் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீசுவரர் கோயிலில், ராகு-கேது தனிச்சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ராகு காலங்களில் இச்சந்நிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்பதால், தினசரி ராகு கால நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல் ராகு-கேது பெயர்ச்சி நாளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முன்னதாக ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. ராகு-கேது சன்னிதி வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு கடம் புறப்பாடாகி, ராகு-கேது சன்னிதியை அடைந்தது. இதைத் தொடர்ந்து ராகு-கேது பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பாலாபிஷேகம் நடைபெற்றது. பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை பக்தர்களுக்கும் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருப்பாம்புரம்-சேஷபுரீசுவரர்-கோயிலில்-ராகு-கேது-பெயர்ச்சி-3095176.html
3095175 ஆன்மிகம் செய்திகள் திருநாகேசுவரத்தில் ராகு பெயர்ச்சி விழா - சிறப்பு வழிபாடு Thursday, February 14, 2019 12:58 AM +0530
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் கோயிலில் ராகு பெயர்ச்சியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவக்கிரகங்களில் முக்கியமானவரான திகழும் ராகு பகவான் நாகவல்லி,  நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் புதன்கிழமை பிற்பகல் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் புதன்கிழமை காலை பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள இசையுடன் புறப்பட்டு சன்னிதியை அடைந்தன. இதையடுத்து, ராகு பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும்,  ராகு பெயர்ச்சியையொட்டி, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து,  புதன்கிழமை இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. 
தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்.14) முதல் 16-ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/14/திருநாகேசுவரத்தில்-ராகு-பெயர்ச்சி-விழா---சிறப்பு-வழிபாடு-3095175.html
3095135 ஆன்மிகம் செய்திகள் கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா: சைவ, வைணவ தலங்களில்  கொடியேற்றத்துடன் தொடக்கம் Wednesday, February 13, 2019 03:11 PM +0530  

சோழ வளநாடான தஞ்சை மாவட்ட  காவிரி ஆற்றின்  தென்கரையில் உள்ள குடந்தை மாநகரில்  1000 வருடங்கள் கடந்து மிளிரும் மூர்த்தி, தலம்,  தீர்த்தம் என மூன்றிலும் மட்டுமல்லாமல்,  சைவ நாயன்மார்கள் மற்றும் வைணவ ஆழ்வார்களாலும்  பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைந்தது. 

கும்பகோணத்தில்   அமையப்பெற்றுள்ள உலகபுகழ் பெற்ற  மகா மகக்குளத்தில் இந்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள  மாசிமகப் பெருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு, சைவ சிவாலயங்களிலும்  மற்றும்  வைணவத் தலங்களிலும் மாசிமக உற்சவம்  திருக் கொடியேற்றத்துடன் துவங்கியது.  

- படங்கள் உதவி (குடந்தை ப.சரவணன் 9443171383)

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/கும்பகோணத்தில்-மாசி-மக-தீர்த்தவாரி--பெருவிழா-சைவ-வைணவ-தலங்களில்--கொடியேற்றத்துடன்-தொடக்கம்-3095135.html
3095132 ஆன்மிகம் செய்திகள் உங்கள் குழந்தைகளும், உங்கள் கர்மாவும்.. ஜோதிடம் மூலம் அறியலாம்!! - ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன் DIN Wednesday, February 13, 2019 02:40 PM +0530  

முந்தைய பிறவிகளின் சாபங்கள்:- அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்  "பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா"  போன்ற ஜோதிட மூல  நூல்களில், எந்த இடத்திலும் தோஷங்கள் என்று குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை. அனைத்தையும் அவர்கள் (ரிஷிகளும், முனிவர்களும், ஜோதிட வித்தகர்களும். )  யோகங்கள் என்றே குறிப்பிடுகின்றனர். 

குழந்தை இன்மைக்கான யோகங்கள்:- 

விதி -1 :- யாரொருவரின் ஜாதகத்தில், புத்திர காரகர் ஆன குரு, லக்கின அதிபதி, 7 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் வீட்டு அதிபதி போன்ற இவர்களின் வலிமை பறிக்கப்பட்டு  உள்ளதோ , அது குழந்தையின்மை யோகத்தை அளிக்கும். 

விதி -2 :- சூரியன், செவ்வாய், ராகு மற்றும் சனி போன்ற கிரகங்கள் முறையாக வலுப்பெற்று 5 ஆம் வீட்டில் இருந்ததென்றால் , மேலும் புத்திர காரகர் ஆகிய குரு,   பலவீனம் அடைந்திருப்பார் என்றால் ; இந்த நிலை குழந்தையின்மை யோகத்தை உயர்த்தும். பொதுவாக சாபங்களை பின்வருவனவற்றால், ஒருவரின் ஜனன ஜாதகத்தைக் 
கொண்டு காணலாம். 

1. லக்கினம், 5 ஆம் வீடு இவற்றின் அதிபதி, புத்திர காரகரான குரு ஆகிய இவர்கள் ஒருவரின் ஜனன  ஜாதகத்தில் வலு இழந்தோ, 6 ,8 , 12 போன்ற தவறான இடத்தில் 
(மறைவிடங்கள்) அமர்ந்தோ இருப்பின் அந்த ஜாதகர் ஏதோ ஒரு சாபத்தினை பெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். 

2. ராகு, செவ்வாய் அல்லது / மற்றும் சனி யுடன் லக்கினம், சந்திரன், 5 ஆம் வீடு, 5 ஆம் வீட்டு அதிபதி அல்லது குருவுடன் தொடர்பு இருப்பின், அந்த ஜாதகர் ஏதோ ஒரு  சாபத்தினை பெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். பலவிதமான சாபங்களால் ஒருவருக்கு ஆண் வாரிசு மறுக்கப்படும். அவை எவ்வாறு என்பதனை பின்வருவனவற்றுள்  காணலாம்.

1. பாம்புகளால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள் :-

(சர்ப சாபம்) ஒரு  பாம்பின் சாபத்தால் ஜாதகருக்கு ஆண் குழந்தைக்கான பாக்கியம்  மறுக்கப்படுகிறது. இந்த வகை குறிப்பானது ராகுவின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும் இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும்.  பாம்பைக் காணவோ அல்லது பாம்பு கடிக்குமோ எனும் பயம் தோன்றலாம். இதனைத் தெளிவாக காண முக்கிய இடம் ஒரு ஜாதகரின் 5 ஆம் இடம் ஆகும். 5 ஆம் வீடு, 5  ஆம் அதிபன் ராகுவுடன் தொடர்பு.

2. பித்ரு சாபம் :-(முன்னோர்கள் -தகப்பனார் / பாட்டனார் / இரண்டாம் பாட்டனார் ..):-

இந்த வகை குறிப்பானது சூரியனின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தந்தையுடன் சரியான உறவு இல்லாமல் போதல், தந்தையின்  அகால மரணம், தந்தையிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய இடங்கள்,  ஒரு ஜாதகரின் 5 ஆம் இடம் 9  ஆம் இடம் மற்றும் 10 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு, 5 ஆம் அதிபதி இவர்கள் 10 ஆம் வீடு , 10 ஆம் அதிபதி மற்றும் சூரியனுடன் இணைந்திருந்தால். 10 ஆம் வீடு, 10  ஆம் அதிபதி, சூரியன் வலு இழந்து 6 , 8 , 12 ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருப்பின்.

3. தாயால் (மாத்ரு சாபம் ) ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள் :-

இந்த வகை குறிப்பானது சந்திரனின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தாயுடன் சரியான உறவு இல்லாமல் போதல், தாயின் அகால மரணம், தாயிடம்  இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இதனைத் தெளிவாக காண முக்கிய இடங்கள்,  ஒரு ஜாதகரின் 4ஆம் இடம் 5 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு , 5 ஆம் அதிபதி - 4 ஆம் வீடு அல்லது 4 அதிபதி அல்லது  சந்திரனுடன் தொடர்பு கொண்டிருப்பது. 4 ஆம் வீடு அல்லது 4 ஆம் அதிபதி அல்லது சந்திரன் பலம் குன்றி 6 . 8 . 12 உடன் தொடர்பு கொண்டும்  இருப்பது.  

4. சகோதரரால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது இளைய சகோதரருக்கு செவ்வாயும் , மூத்த சகோதரருக்கு குருவும்,  இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் சகோதர / சகோதரியுடன்  சரியான உறவு இல்லாமல் போதல், சகோதர / சகோதரியிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இந்தச் சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் சகோதர / சகோதரிக்கு இழைத்த தவறுகள் ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய  இடங்கள்,  ஒரு ஜாதகரின் 3 ஆம் இடம் 5 ஆம் மற்றும் 11 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 3 / 11 ஆம் வீடு அல்லது 3 / 11 ஆம் அதிபதி  அல்லது செவ்வாயுடன் தொடர்பு கொண்டு இருப்பது.  3 / 11 ஆம் வீடு அல்லது 3 / 11 ஆம் அதிபதி அல்லது செவ்வாய் வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு  பெற்றிருப்பது.

5. தாய் வழி உறவுகளால்  ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, புதனின் மற்றும் சனியின் இருப்பிடம் மற்றும் அதன்  நிலைகளைப் பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தாய்வழி உறவுகளுடன் சரியான உறவு இல்லாமல்  போதல்,  தாய் வழி உறவுகளிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இந்த சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் தாய் வழி உறவுகளுக்கு இழைத்த தவறுகள் காரணம் ஆகும். இதனை தெளிவாக காண  முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 5 மற்றும் 6 ஆம் இடமே ஆகும்.5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 6 ஆம் வீடு அல்லது 6 ஆம் அதிபதி அல்லது புதனுடன்  தொடர்பு  கொண்டு இருப்பது. 6 ஆம் வீடு அல்லது 6 ஆம் அதிபதி அல்லது புதன்  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

6. மனைவியால் / பத்தினி (மனைவி)  சாபம் அல்லது பெண்களால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, சுக்கிரனின் இருப்பிடம்  மற்றும் முக்கிய அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு தற்போதைய நிலையில், குழந்தை பேறு இல்லாமல் போகும், திருமண தடை; மனைவியால்  மற்றும் பெண்களால் தொல்லைகள், விவாகரத்து, பெண்களால் அவதூறு போன்றைவைகளே ஆகும். 

இந்த சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் மனைவி மற்றும் பிற பெண்களுக்கு  இழைத்த தவறுகள் காரணம் ஆகும். இதனை  தெளிவாக காண முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 5 / 7 ஆம் இடமே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 7 ஆம் வீடு அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரனுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. 7 ஆம் வீடு அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன்  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

7. ஆன்மீக நபர்களால் (ப்ரம்ம  (பூசாரி / குருக்கள் /  ஆசிரியர்) ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, குருவின்  இருப்பிடம்  மற்றும் முக்கிய அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும்.  

இதனால் ஜாதகருக்கு தற்போதைய நிலையில், குழந்தை பேறு   இல்லாமல் போகும், ஆசிரியர்களின் கோபத்துக்கு / பிரச்சினைகளுக்கு ஆளாகுதல், வாழ்க்கையில் மகிழ்ச்சி  இன்மை மேலும் பொதுவான அதிருப்தி ,  போன்றைவைகளே ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 9 ஆம் இடமே  மற்றும் 9 ஆம் அதிபதி இருக்கும் இடமுமே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 9 ஆம் வீடு அல்லது 9 ஆம் அதிபதி அல்லது குருவுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. 9 ஆம் வீடு  அல்லது 9 ஆம் அதிபதி அல்லது குரு  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

8. தீய ஆவிகளினால் ஏற்படும் சாபங்களை   குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, சனி, சூரியன், தேய்பிறைச்  சந்திரன்  இவர்களின் இருப்பிடம் மற்றும் முக்கிய அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும். ஒரு நபர், தனது கடமைகளில் ஒன்றான பித்ரு கர்மாக்களை ( தாய்க்கோ / தந்தைக்கோ) போன பிறவியில்  செய்யாமல் இருந்தால், அவ்வாறு பிரிந்த அந்த ஆன்மாக்கள் தீய சக்திகளாக மாறி , அடுத்த பிறவியில் ஆண் குழந்தை பெற மறுக்கப்படுகிறது.

5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி -    சனியுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. சனி  வலிமை குன்றி   6 , 8 , 12 உடன்  தொடர்பு பெற்றிருப்பது. மேற்கூறியவை அஷ்டவித கர்மாக்கள் ஆகும். முற்பிறவிகளில் நாம் செய்த ஒவ்வொரு செயல்களின் விளைவால் பெற்ற சாபங்களை மட்டுமே குறிப்பிடப்பட்டது . தற்போது நாம் பெறும்  துன்பங்களுக்கும் நாம் வாழும் வாழ்க்கை நிலைகளுக்கும் முற்பிறவியில் செய்த பல்வேறு காரணங்கள் / இணைப்புகள் இருக்கவே செய்யும். 

கடவுளரை வணங்குவதாலும் , தவமியற்றுவதாலும், தானங்கள் செய்வதாலும், நற்செயல்களாலும் முற்பிறவியில் செய்த தவறுகளுக்கான பதிவேடுகளில் இருந்து  சாபங்களை தூக்கியெறிய முடியும். மேலே கூறப்பட்டவை ஒரு சில விதிகளே . அனைத்தையும் இங்கு கூறினால் அது ஜோதிட பயிற்சி வகுப்பு போல் ஆகிவிடும். எனவே  உங்கள் அருகாமையில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை அணுகிச் சிறந்த பரிகாரங்களைப் பெறவும். 

ஒன்று மட்டும் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டும், அதாவது, பரிகாரங்களை செய்வதன் மூலம் நமது ராசி, அம்ச கட்டங்களில் உள்ள கிரக அமர்வு மாற்று நிலையோ ,  பார்வை பலமோ பெற்றுவிட முடியாது. ஆனால் பரிகாரம் செய்யும் காலங்களில் நமது மனம் ஒன்றிணைந்து நம்மை மருத்துவரை நாடல் போன்ற அடுத்த கட்ட  நடவடிக்கைக்கு அழைத்து செல்லும் அல்லது சகித்துக்கொள்ளும் / தாங்கும்  நிலை பெறுவோம். நன்றும் தீதும் பிறர் தடுக்க வாரா, என்பதனை அறிந்து கொள்ளவும்.  விதித்தவை விதி பயனால் அடைவதை அடைந்தே தீருவோம்.  

நற்செயல்களால், இறை வழிபாட்டாலும் தீமையின் பாதிப்புகளை குறைக்கவோ அல்லது அதிலிருந்து மீளவோ செய்ய நம் கையில் / நம் செயல் பாட்டில் தான் உள்ளது. 

கர்மாக்களின் தொடர்ச்சி :-

எப்படி ஒரு கன்று குட்டி தனது தாய் பசுவினை , ஆயிரமாயிரம் பசுக் கூட்டங்களுக்கு நடுவிலே இருந்தாலும் தேடி செல்லுமோ, அதனை  போன்றதே நமது கடந்த பிறவிகளில் செய்த தீ வினைகளின் பதிவு , தற்போது புதிதாக உருவான இப்பிறவியில் அதனை செய்தவரை  தேடி, நாடி வந்து சேரும். 

கர்மாக்களின் தொடர்ச்சியை அறுத்தெறிய அல்லது அதிலிருந்து வெளிவர:- யார் ஒருவர், வெகு காலம் தவ வாழ்வு வாழ்கிறார்களோ, துறவிகளுக்கும் , மகான்களுக்கும்  
சேவை செய்கிறார்களோ, அவர்களாகவே அவர்களின் பாவங்களை (தெரிந்தோ, தெரியாமலோ தமது பாவச்  செயல்களால் ஏற்பட்ட கர்மங்களை / பாவங்களை ) கழுவச்  செய்து , அவர்களின் மனதில் ஏற்படுத்திக் கொண்ட பொருளினை / நிலையை அடைந்து வெற்றிபெறச் செய்கின்றனர். 

எப்படி வான வீதியில் பறக்கும் பறவைகளின் பாதையினை காண இயலாதோ, எப்படி நீரினுள் செல்லும் மீன்களின் பாதையினை காண இயலாதோ, அதே போன்று ஒரு  ஆன்மா தனது கர்ம வினைகளிலிருந்து தான் மீளும் அறிவையும் குறிப்பிடவோ / உணரவோ  இயலாது. 

( மஹாபாரதம் , தொகுதி ...8 , சாந்தி பர்வம் , பாகம் ..1) தொடர்ந்து குல தெய்வ வழிபாடும், பித்ருகளுக்கான  கர்மாக்கள் செய்வதாலும், எந்த இடையூறும் இன்றி அனைத்து  நலனும் பெறுவதோடு, பிரச்சினை இன்றி வாழ்வும் அமையப்பெறுவதை உணர முடியும். அதனைச் செய்த பின்னரும் தொல்லைகள் இருப்பின், ஜோதிடத்தை / ஜோதிடரை  நாடலாம். இது எனது கருத்து மட்டுமல்ல,  அனைத்து ஜோதிட சாஸ்திரங்களும் / ஜோதிடர்களும் கூறுபவைகளாகும்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

சந்தேகங்களுக்கு - 98407 17857

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/உங்கள்-குழந்தைகளும்-உங்கள்-கர்மாவும்-ஜோதிடம்-மூலம்-அறியலாம்-3095132.html
3095130 ஆன்மிகம் செய்திகள் ராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் பிரவேசம்!  DIN DIN Wednesday, February 13, 2019 01:32 PM +0530
வாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி இன்று நிகழ்ந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1-ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசித்துள்ளார். 

ராகுவைப் போல் கொடுப்பவர் இல்லை, கேதுவைப் போல் கெடுப்பவர் இல்லை என்பர், அப்படிப்பட்ட ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகிறார்கள். அந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இதையொட்டி, திருநாகேஸ்வரம், கும்பகோண நாகநாத ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. 

ராகு-கேது பெயர்ச்சியில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாகநாத ஸ்வாமி கோயிலில் கூடியுள்ளனர். 

இந்தாண்டு ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்

மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம்

ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள் 

ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம்

சரி, பொது பரிகாரமாக என்ன செய்யலாம்?

ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் நாகதேவதையை வணங்குவது நல்லது. 

ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மையைத் தரும்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/ராகு-மிதுன-ராசிக்கும்-கேது-தனுசு-ராசிக்கும்-பிரவேசம்-3095130.html
3095120 ஆன்மிகம் செய்திகள் 12 ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பரிகாரங்கள்! Wednesday, February 13, 2019 12:47 PM +0530 2019-ம் ஆண்டு ராகு-கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

ராகு - கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகளைப் பற்றி தெரிந்துகொள்ள விடியோவை பாருங்கள். 

மேஷம் 
இந்த ராசிக்காரர்கள் முடிந்த வரை செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

மலர் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

{pagination-pagination}

ரிஷபம் 

இவர்கள் முடிந்த வரை வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும் நவக்கிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

{pagination-pagination}

மிதுனம்
முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

{pagination-pagination}

கடகம்
இந்த ராசிக்காரர்கள் பரிகாரமாக திங்கட்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று இலுப்பை எண்ணெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

{pagination-pagination}

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும்.

மலர் பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ர்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

{pagination-pagination}

கன்னி
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வரவும்.

மலர் பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

{pagination-pagination}

துலாம்
இந்த ராசிக்காரர் வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 

மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோவிலுக்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

{pagination-pagination}
விருச்சிகம்
செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: நவக்கிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

{pagination-pagination}

தனுசு
குருபகவானை ஆதிக்கமாகக்கொண்ட தனுசு ராசிக்காரர்கள் ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 

மலர் பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

{pagination-pagination}

மகரம்
இவர்கள் சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். 

மலர் பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

{pagination-pagination}

கும்பம்
சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 

மலர் பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

{pagination-pagination}

மீனம்
இந்த ராசிக்காரர்கள் வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

மலர் பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு தாமரை மலரைச் சமர்ப்பிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

]]>
ராகு கேது பெயர்ச்சி , பரிகாரங்கள், பலன்கள் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/12-ராசிகளுக்கான-ராகு-கேது-பெயர்ச்சி-பரிகாரங்கள்-3095120.html
3095111 ஆன்மிகம் செய்திகள் திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு DIN DIN Wednesday, February 13, 2019 11:31 AM +0530  

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி,  திருப்பாம்புரம் கோயிலில் பிப்.13 நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ராகு-கேது பெயர்ச்சி புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு நடைபெறுகிறது. ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி, நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ராகு-கேது தனிச் சன்னிதியில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். 

ராகு காலங்களில் இச்சன்னிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்பதால், தினசரி ராகு கால நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல, பெயர்ச்சி நாளிலும் திரளான பக்தர்கள் வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, ராகு-கேது சன்னிதியில் பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கோயிலுக்குள் பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையிலும், சேஷபுரீசுவரரை தரிசிக்கும் பகுதியிலும், வரிசையாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெயர்ச்சி நடைபெறுவது பிற்பகல் நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, கோயிலுக்கு வெளியிலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர கோயிலுக்கு அருகிலேயே குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் கால பூஜையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை நடைபெறும் இரண்டாம் கால பூஜையில் சிறப்பு பரிகார ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்படுகின்றன. பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/திருப்பாம்புரம்-கோயிலில்-ராகு-கேது-பெயர்ச்சி-சிறப்பு-வழிபாடு-3095111.html
3089931 ஆன்மிகம் செய்திகள் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019  Wednesday, February 13, 2019 11:21 AM +0530 12 ராசிக்காரர்களுக்குமான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் நமக்குத் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடையுங்கள்

ராகு - கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகளைப் பற்றி தெரிந்துகொள்ள விடியோவை பாருங்கள். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - ராகு சுக ஸ்தானத்திலும் - சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.

23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.

நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக  நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர்.

பூர்வீக சொத்துக்களால் லாபம்  அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.  செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

குடும்ப பொருளாதாரம்:
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக  சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும். 

கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும்  போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில்  துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு  முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர்,  வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.

உத்தியோகம்:
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும்.  கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு  எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய  வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 

அரசியல்:
பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள்  ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது.  எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய  நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி உறவில்  அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் - உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம்  கிட்டும்.

கலைஞர்கள்:
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு,  சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ - மாணவியர்:
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும்  பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

உடல் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள்.  தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

அஸ்வினி:
நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம்  எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  

பரணி:
வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்   வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.  குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. 

கார்த்திகை 1ம் பாதம்
கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு  நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது   நல்லது.  

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். 
மலர் பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! 

கிரகநிலை:
குருபகவான் சப்தம ஸ்தானத்திலும் - ராகு தைரிய ஸ்தானத்திலும் - சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.    

இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் - மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் - உறவினர்களை அனுசரித்துச்  செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம்  குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச்  செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

குடும்பப் பொருளாதாரநிலை:
கணவன் - மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற  தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றிபெற முடியும். அசையும்-அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.  பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக  சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே  தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன்  செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகம்:
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெற்று  மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத  இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

அரசியல்:
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை  மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச்  செயல்படவும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள்  கிடைக்கமாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்ப  பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும் மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

கலைஞர்கள்:
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள்  உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவ-மாணவியர்:   
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு  காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

உடல் ஆரோக்கியம்:
தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல்நிலை சோர்வடையும்.  குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும்,  அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு  ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான  கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

ரோகிணி:
உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது  நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம்  மனகவலை  ஏற்படலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.  மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம்  உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். 

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும் நவக்கிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - ராகு தனவாக்கு ஸ்தானத்திலும் - சனி பகவான் சப்தம ஸ்தானத்திலும் - கேது அஷ்டம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் ராசிக்கும் - கேது பகவான் சப்தம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் -  மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்  தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில்  சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். 

தொழில் வியாபார செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பணம்  கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.  உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமத்த்ப்படும். சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.

பொருளாதார் நிலை:
கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்  பின் வெற்றிகிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத  உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனக்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.

கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச்  செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள்  தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின்  உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத்  தவிர்க்கவும்.

உத்தியோகம்:
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறாப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.  உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும்  உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்,

அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும்  முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஓரளவுக்கு ஆதாயப் பலனையே அடையமுடியும். உடல்  ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.

விவசாயிகள்:
விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு பட வேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள்  கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை  அனுசரித்துச் செல்லவும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள்  அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.

கலைஞர்கள்:
தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்ப்ர  வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ-மாணவியர்:
கல்வியில் மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு  மாறிச்செல்லும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய  ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது  நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு  கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம்  தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

திருவாதிரை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.   குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்   மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.    

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய  தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

{pagination-pagination}
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் பஞ்சம பூர்வ ஸ்தானத்திலும் - ராகு ராசியிலும் - சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - கேது சப்தம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.

23.11.2019 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தாலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி  கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள்  கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். 

சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் - வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும்  முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடையமுடியும். அபிவிருத்தியும்  பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.

பொருளாதார நிலை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவி ஒற்றுமையுடன்  செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும்  உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.  பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு  வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில்  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.

உத்தியோகம்:
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும்  கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும்.  பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிச்சி தரும்.

அரசியல்:
பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.  மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும்.  புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.  மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை  வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்குவராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம்  ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவ மாணவியர்:
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.  விளையாட்டும் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.  நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு  வன்மையால் எடுத்த காரியத்தை  சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள்  விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  

பூசம்:
சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது  நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

ஆயில்யம்:
குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.   மாணவர்களுக்கு கல்வி,  விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். மனகுழப்பம் நீங்கி. காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்டை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!

இந்த பெயர்ச்சியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட்டப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும்.  குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.  உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும்.

பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது  நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம்  என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பொருளாதார நிலை:
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.  பூர்வீக சொத்துக்களால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினர்களுக்கு  தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

கொடுக்கல்-வாங்கல்:
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும்  பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி  வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்சினைகளில் சிக்கிகொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி  நிலையிலிருக்கும்.

தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில்  செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம்  தேவை.

உத்தியோகம்:
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால்  வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல  விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்:
பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே  முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில்  தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றர்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது.  வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது.

பெண்கள்:
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும்.  திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச்  செலவுகளைக் குறைக்கவும்.

கலைஞர்கள்:
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது  நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்

மாணவ-மாணவியர்:
கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற  நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு  போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள்  ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

மகம்:
தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும்  திறமை  அதிகப்படும்.  உடல் நலம் சீரடையும்.  மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். 

பூரம்
அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்   பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்  அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி  கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து  வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.   

உத்திரம் 1ம் பாதம்:
கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும்,  துன்பமும் நீங்கும்.   பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும். மாணவர்களுக்கு  கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.

பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும்.

மலர் பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ர்பணிக்கவும். 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

அழகிய உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - ராகு லாப ஸ்தானத்திலும் - சனி பகவான் சுக ஸ்தானத்திலும் - கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் - கேது பகவான் சுக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.

23.11.2019 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள்  கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்  அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

கணவன் - மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில்  ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு,  வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். 

பொருளாதார நிலை:
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே கருத்து  வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில்  தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்:
பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில்  ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற  பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில்  எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அலைச்சல்கள்  அதிகரிக்கும்.

உத்தியோகம்:
பணியில் சற்று வேலைப் பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர்பார்க்கும்  ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்துகொண்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். புதிதாக  வேலைதேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

அரசியல்:
பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துகோள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண்  பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத்  தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.

விவசாயிகள்:
பயின் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள்  சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பண வரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல்  ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள்  அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் - அசையா சொத்துக்களால் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம்  கிட்டும்.

கலைஞர்கள்:
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிரிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல  பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.

மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்றுவிட முடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை  தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்டநாள்  பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
நிம்மதியும், சுகமும் அதிகமாகும்.  புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி  வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி  கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.   யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள்  பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி  இருக்கும்.    

அஸ்தம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி   ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான  அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.   

சித்திரை 1, 2, பாதம்:
செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.  காரிய தடை  நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி  வரவும்.
மலர் பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும். 
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

அனைவரையும் கவர்ந்திழுக்ககூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - ராகு தொழில் ஸ்தானத்திலும் - சனி பகவான் தைரிய வீர்ய  ஸ்தானத்திலும் - கேது சுக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திகும் மாறுகிறார்கள். 23.11.2019 அன்று குரு பகவான் தைரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக  வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உடல்  ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். பல இடையூறுகளைச் சந்தித்து வந்தாலும் தொழில், வியாபாரம்  செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியொகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த  உயர்வுகள் தற்போது கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

பொருளாதார நிலை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு  வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும்  யோகம் உண்டாகும்.

கொடுக்கல்-வாங்கல்:
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள்  அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில்  தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள்  மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்
    
உத்தியோகம்:
பணியில் தடைபட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும், புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய  விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிகேற்ற வேலை  வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.

அரசியல்:
பெயர், புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வரவேண்டிய பணவரவுகள்  வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து  தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.  பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்

கலைஞர்கள்:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்க் வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆத்ரவுகளால் மனநிறைவு  உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.

மாணவ-மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும்  பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.  குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.

சித்திரை 3, 4 பாதம்:
எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால்  திடீர்  உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும்  நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும்.  கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு  காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது.  

சுவாதி:
தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.   வீண் அலைச்சலும்  கூடுதல்  உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனமாக  படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  நன்மைகள் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.  

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 
மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோவிலுக்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் ராசியிலும் - ராகு பாக்கிய ஸ்தானத்திலும் - சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் -  மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 

சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார் - உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்  தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.  தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பொருளாதார நிலை:
பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் -  மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுகொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம் எதிர்பாராத  உதவிகள் கிடைக்கப்பெறும் சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி  கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்தவரை  தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு  வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்  போது கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்:
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய  சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை  வாய்ப்பு  தாமதமாக கிடைக்கும்.
 
அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும்.  கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது  நல்லது.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள்  சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார  நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.
    
கலைஞர்கள்:
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற  பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.

மாணவ - மாணவியர்:
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று  கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும்.  எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விசாகம் 4ம் பாதம்:
மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம்  இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.   நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம்  முன்னேற்ற மடையும்.  

அனுஷம்:
தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

கேட்டை:
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன்,  மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.   பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன்  இருந்த தகராறுகள் நீங்கும்.  பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு  எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். 
மலர் பரிகாரம்: நவக்கிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வபக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் விரைய ஸ்தானத்த்திலும் - ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - சனி பகவான் ராசியிலும் - கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ராசிக்கும் மாறுகிறார்கள்.

23.11.2019 அன்று குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியின் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை  ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும்  தடைபட்டுக் கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

பொருளாதார நிலை:
கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும்  ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.  குடும்பத்தில் சுபிசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் - வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும்  எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை  ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில், வியாபாரம்:
செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால்  லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகம்:
பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால்  வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும்.  புதிய வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.

அரசியல்:
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட  செயல்படுத்துவீர்கள். மேடைப் பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.  அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர  வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் - அசையா சொத்துக்களால்  ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.

கலைஞர்கள்:
இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு  வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ - மாணவியர்:
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன்  செயல்படுவது நல்லது. பெற்றொர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு கவலைதரும் சம்பவங்கள்  நடைபெறும். தேவையற்ற அலைச்சலகள் அதிர்கரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

மூலம்:  
எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும்.  தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.  தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.   

பூராடம்:
வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய  பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு  உண்டாகும். நீண்ட தூர  பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும்.  மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  

உத்திராடம் 1ம் பாதம்:
கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை  காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில்  காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில்  உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம்  உண்டாகும்.   

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
மலர் பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் லாப ஸ்தானத்த்திலும் - ராகு சப்தம ஸ்தானத்திலும் - சனி பகவான் விரைய ஸ்தானத்திலும் - கேது ராசியிலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் விரைய ஸ்தாந்த்திற்கும் மாறுகிறார்கள்.
23.11.2019 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் அதீதமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள்  ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள்  பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.

தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பொருளாதார நிலை:
குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும்,  அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால்  ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.

கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு  வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்:
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க  வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளை  அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகம்:
பணியில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது  நல்லது.  எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத  இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

அரசியல்:
மக்களின் தேவையறிந்து செயல்பாட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும்.  தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும்  ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.

விவசாயிகள்;
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும்.  சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெறுவதில் தடைகள்  ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.

கலைஞர்கள்:
புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிகேற்றதாக இருக்கது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார்,  பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை  உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.  தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில்  வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக  இருக்கும். 

திருவோணம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை   கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில்  சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்   திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். 

அவிட்டம் 1,2 பாதம்:
உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும்.  திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.  
மலர் பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

{pagination-pagination}
கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் தொழில் ஸ்தானத்த்திலும் - ராகு ரண ருண ரோக ஸ்தானத்திலும் - சனி பகவான் லாப ஸ்தானத்திலும் -  கேது விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும்  மாறுகிறார்கள்.

23.11.2019 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியின் மூலம் பணவரவுகளுக்கான பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி  கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும்.

கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.  வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்  உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள்  போன்றவை கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது உற்றார் -  உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.

பொருளாதார நிலை:
பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு  நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். புத்திர  வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்:
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி  வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர்,  வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம்:
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி  உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு  தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். சக நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்:
பெயர், புகழ் உயர்க்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல்  உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு  வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகளின் மகிழ்ச்சியளிக்கும்,. கடன்கள் குறையும்.

கலைஞர்களுக்கு:
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம்  ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

பெண்கள்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் - மனைவியிடையே  அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை  உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.

மாணவ - மாணவியர்:
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா  தலங்கலுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும்  உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல்  செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்   கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  

சதயம்: 
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு  தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும் அதே நேரத்தில்  அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது   நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.   மாணவர்களுக்கு மிகவும்  கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.  

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
மலர் பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!

கிரகநிலை:
குருபகவான் பாக்கிய ஸ்தானத்த்திலும் - ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் - சனி பகவான் தொழில்  ஸ்தானத்திலும் - கேது லாப ஸ்தானத்திலும்  இருக்கிறார்கள்.    

கிரகமாற்றம்:
13.02.2019 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும் - கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும்  மாறுகிறார்கள். 

23.11.2019 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியின்  மூலம் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.  குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில்  அனுகூலப்பலன் கிட்டும்.

செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்  ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.

பொருளாதார நிலை:
குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் - உறவினர்களால் வீண்  பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.  திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்:
பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க  சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம்  செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம்:
தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற  மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகம்:
பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை  குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

அரசியல்:
மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும்  எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்:
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து  குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை  ஏற்படும்.

பெண்கள்:
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.

கலைஞர்கள்:
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி  நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

மாணவ - மாணவியர்:
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு  ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.

உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும்  மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன்  மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம்  வியாபாரத்தில்   கூடுதல் லாபம் பெற முடியும். 

உத்திரட்டாதி:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்   அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்   ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

ரேவதி:
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை  குறைப்பது நல்லது.  மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து  கொள்ளவும். 

மலர் பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு தாமரை மலரை சமர்ப்பிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

]]>
பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி, Rahu Kethu Peyarchi, கிரகநிலை, கிரக மாற்றம் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/05/பெருங்குளம்-ராமகிருஷ்ணன்-கணித்த-ராகு---கேது-பெயர்ச்சி-பலன்கள்--2019-3089931.html
3094562 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா Wednesday, February 13, 2019 02:55 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் 3-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழந்தருளி வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
3ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி  வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று...: மாசித் திருவிழா 4-ஆம் நாளான புதன்கிழமை (பிப். 13) காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வர உள்ளனர். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனர்.

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/திருச்செந்தூர்-மாசித்-திருவிழா-முத்துக்கிடா-அன்ன-வாகனத்தில்-சுவாமி-அம்மன்-வீதி-உலா-3094562.html
3094535 ஆன்மிகம் செய்திகள் திருமலையில் ரதசப்தமி உற்சவம்:  7 வாகனங்களில் வலம் வந்த மலையப்பர் DIN DIN Wednesday, February 13, 2019 02:43 AM +0530
திருமலையில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
சூரியன் தன் பாதையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடத்தப்படுகிறது. தை அமாவாசை முடிந்த 7ஆம் நாள் சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் அதை ரதசப்தமி என்று அழைக்கின்றனர். அதன்படி, திருமலையில் செவ்வாய்க்கிழமை ரதசப்தமி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை 7 வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்தார்.
அதிகாலை 5.30 மணிக்கு 7 குதிரைகள் பூட்டிய சூரியப்பிரபை வாகனத்தில் செந்நிற மாலைகள் அணிந்தபடி அவர் மாடவீதியில் வலம் வந்தார். 
சூரிய உதயம் தொடங்கியபோது கிழக்கு மாடவீதியில் சூரியனின் கதிர்கள் மலையப்ப சுவாமி மேல் விழுந்தன. 
அப்போது அவருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வேட பாடசாலை மாணவர்கள் இணைந்து ஆதித்ய ஹிருதயம், சூரிய அஷ்டகம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்தனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். அதன்பின் சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், தீர்த்தவாரி, கல்பவிருட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திரப்பிரபை வாகனம் ஆகியவற்றில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
ஒரு நாள் பிரம்மோற்சவம் எனப்படும் இவ்விழாவைக் காண பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாடவீதியில் காத்திருந்து வாகனச் சேவைகளைக் கண்டனர். சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீர்த்தவாரியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி திருக்குளத்தில் புனித நீராடினர். வாகனச் சேவையின்போது இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பஜனைப் பாடல்களைப் பாடியதோடு, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். 
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் தர்மதரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்டவை தவிர அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. 
மாடவீதியில் காத்திருந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி, அன்னப் பிரசாதம், குடிநீர், மோர், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக 4 ஆம்புலன்ஸ்கள், 4 பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 4 முதன்மை சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டன. 
திருமலையில் கி.பி.1564- ஆம் ஆண்டு முதல் ரதசப்தமி உற்சவம் நடைபெற்று வருவதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஏழுமலையான் கோயிலைப் போல் தேவஸ்தானம் நிர்வகிக்கும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளாய
குண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாகலாபுரம் வேதநாராயணர் கோயில் ஆகியவற்றிலும் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஏழு வாகனச் சேவைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/திருமலையில்-ரதசப்தமி-உற்சவம்--7-வாகனங்களில்-வலம்-வந்த-மலையப்பர்-3094535.html
3094534 ஆன்மிகம் செய்திகள் ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.58 கோடி DIN DIN Wednesday, February 13, 2019 02:43 AM +0530
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.58 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.58 கோடி  கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரூ.4.51 லட்சம் நன்கொடை 
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.3.51 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4.51 லட்சம் நன்கொடையாகப் பெறப்பட்டது.

72,256 பேர் தரிசனம்
 ஏழுமலையானை திங்கள்கிழமை 72,256 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,674 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். 


சோதனைச் சாவடியில் ரூ.2.20 லட்சம் வசூல் 
அலிபிரி சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 94,041 பயணிகள் கடந்துள்ளனர். 10,024 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.20 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.9,370 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/ஏழுமலையான்-உண்டியல்-காணிக்கை-ரூ258-கோடி-3094534.html
3094533 ஆன்மிகம் செய்திகள் திருமலையில் ராஜபக்சே தரிசனம் DIN DIN Wednesday, February 13, 2019 02:42 AM +0530
ஏழுமலையானை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார். 
அவர் திங்கள்கிழமை மாலை ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/திருமலையில்-ராஜபக்சே-தரிசனம்-3094533.html
3094532 ஆன்மிகம் செய்திகள் திருக்கழுகுன்றம் கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி பால்குட ஊர்வலம் DIN DIN Wednesday, February 13, 2019 02:42 AM +0530
பட்சிதீர்த்தம் எனப்படும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு மீண்டும் கழுகுகள் வர வேண்டும் என்று வேண்டி பக்தர்கள் நடத்திய சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை வழிபாடும், 2,008 பால்குட ஊர்வலமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் தொன்மை வாய்ந்த கோயிலாகும். பட்சிதீர்த்தம், வேதமலை போன்ற பல்வேறு பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற இத்தலத்தில் உள்ள நான்கு மலைக் குன்றுகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. அதர்வண வேதமாக அழைக்கப்படும் மலைக் குன்றின் மீது வேதகிரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.
பல நூறு ஆண்டுகளாக இக்கோயிலை இரண்டு கழுகுகள் வட்டமிட்டு வேதமலையைச் சுற்றி வந்து, உணவருந்திச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இதைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து கழுகுகளை தரிசித்துச் செல்வர். குன்றில் வசித்து வந்த ஒரு முனிவர் மதிய நேரத்தில் கழுகுகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவின் மீதத்தையும், கழுகுகளுக்கு வைக்கப்படும் தீர்த்தத்தைப் பெறுவதற்காக பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த தீர்த்தத்தை அருந்தியவர்களின் பிணிகள் தீரும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. பக்தர்கள் இறைவனோடு கழுகுகளையும் வணங்கி வந்தனர். 
எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருப்பணியின்போது கழுகுகள் உணவருந்தும் வட்டப் பாறை மாற்றி வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கழுகுகள் வருவது நின்று விட்டதாகக் கூறப்படுகிறது. கழுகுகள் வராததற்கு அருகில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன. 
இந்நிலையில், திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழாக் குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து, கழுகுகள் மீண்டும் வர வேண்டி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். யாக குண்ட பூஜைகள், கூட்டுப் பிரார்த்தனை, பால்குட ஊர்வலம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
அதன்படி, பெருவிழாக் குழுவின் தலைவர் தி.கா.துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2,008 பால்குட ஊர்வலத்தை அதன் செயலர் தி.து.அன்புச்செழியன் கோபூஜையுடன் தொடங்கி வைத்தார். திருக்கழுகுன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து வந்த 2,008 பெண்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டு, வேதகிரீஸ்வரர் மலைக்கு சென்றனர். அங்கு வேதகிரீஸ்வரருக்கும், முனிவருக்கும் நடைபெற்ற பாலாபிஷேக நிகழ்வில் அவர்கள் பங்கேற்று, வழிபட்டனர். இது தவிர, கழுகுகள் மீண்டும் வர வேண்டி திருக்கழுகுன்றம் தாழக் கோயிலான பக்தவத்சலேஸ்வரர் கோயிலின் ஆமை மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. 
இந்த சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் வேதமலை வல பெருவிழாக் குழுவின் நிர்வாகிகள், கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் இந்து முன்னணியின் காஞ்சி தெற்கு கிளை நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/திருக்கழுகுன்றம்-கோயிலுக்கு-கழுகுகள்-மீண்டும்-வர-வேண்டி-பால்குட-ஊர்வலம்-3094532.html
3094531 ஆன்மிகம் செய்திகள் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் DIN DIN Wednesday, February 13, 2019 02:40 AM +0530
உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் தெப்போற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.  
பல்வேறு பூக்களால் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பின்பு, மாட வீதி வழியாக உலா வந்த பெருமாளை பக்தர்கள்  வழிபட்டனர். 
அதன் பின், கோயில் குளத்தில் வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பெருமாள் (உற்சவர்) வலம் வந்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.  

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/சுந்தர-வரதராஜப்-பெருமாள்-கோயிலில்-தெப்போற்சவம்-3094531.html
3094530 ஆன்மிகம் செய்திகள் தன்வந்திரி பீடத்தில் சூரியநாராயண ஹோமம் Wednesday, February 13, 2019 02:40 AM +0530
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ரத சப்தமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பாவங்கள் நீங்க சூரியநாராயண ஹோமம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி கண்கள் பிரகாசமாக இருக்கவும், உடலிலும், உள்ளத்திலும் உள்ள மறைமுகப் பிணிகள் நீங்கவும், ஒளிக் கதிர்களால் நன்மைகள் ஏற்படவும், சூரிய பகவானின் அருள் கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், சூரிய தசை, சூரிய புக்தி போன்றவற்றால் ஏற்படும்  தோஷங்கள் அகலவும், நவக்கிரக தோஷங்கள் விலகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. 

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/13/தன்வந்திரி-பீடத்தில்-சூரியநாராயண-ஹோமம்-3094530.html
3094432 ஆன்மிகம் செய்திகள் உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Tuesday, February 12, 2019 06:05 PM +0530  

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 14-ல் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்தே ரோஜா பூக்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு காதலையும் ரோஜா பூவின் மகத்துவத்தையும் பறை சாற்றும். இந்த ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்த ரோஜா பூக்களை வாங்கிய வண்ணம் இருப்பதால் ரோஜா பூவிற்கு திடீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விலையும் விற்றென்று உச்சத்திற்கு சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினம்

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.  

சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த காதலர் வாரம்

பொதுவாக நாம் பிப்ரவரி 14-ஐ மட்டும் தான் காதலர் தினமாக்க கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஒரே நாளில் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் காதலை கூறி அதே நாளுக்குள் அவரும் முடிவு செய்து காதலித்து விட முடியுமா என்ன? அதனால் தான் காதலர் வாரம் என்று ஒன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 7-ம் தேதி இந்த காதலர் வாரம் தொடங்கும். தொடர்ந்து 7 நாட்கள் முடிந்ததும் 14-ம் தேதி காதலர் தினமாக இருவரும் கைகோர்க்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் நாள் தொடங்கும். அன்றிலிருந்து 7 நாட்களும் ஏழு விதமான காதல் கொண்டாட்டங்கள் இருக்கும். 

பிப்ரவரி 7 - ரோஸ் டே (ரோஜா தினம்)

பிப்ரவரி 8 - பிரபோசல் டே (காதலை கூறும் தினம்)

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்

பிப்ரவரி 10 - டெடி டே (டெடி பியர்)

பிப்ரவரி 11 - பிராமிஸ் டே ( சத்தியபிரமான நாள்)

பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம் (கட்டிப்பிடிக்கும் நாள்)

பிப்ரவரி 13 - கிஸ் டே (முத்த தினம்)

பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

காதல், காதலர்கள் இரண்டிற்குமே காரகர் சுக்கிரனேதாங்க! அது மட்டுமா? இந்த காதலர் வாரத்தின் கொண்டாட்டங்களுக்கு காரணமான ரோஜாவிற்கும், காதலுக்கும். சாக்லேட்டிற்கும், கட்டிப்பிடி வைத்தியத்திற்கும் முத்தத்திற்கும் கூட காரகர் சுக்கிரன் தானுங்கோ!

காதலர் தினத்திற்கும் ரோஜா பூவிற்கும் உள்ள ஜோதிட தொடர்பு

காதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா. ரோஜா செடிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் அற்புதமான மனதிற்கு இதமான செயல். ரோஜா செடிகளை நேர்த்தியாகப் பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். பெண்களை பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். ரோஜா பூக்களின் அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ரோஜாப்பூக்களின் அழகில் மயங்குவதும் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இரண்டிற்குமே காரகர் சுக்கிர பகவான் தாங்க! 

வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் அள்ளித்தருவதால் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது, அன்பை அறிவிப்பது வரை ரோஜாப்பூங்கொத்து அளிக்கப்படுகிறது. 

குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். விழாக்கள் எதுவானாலும்  மணம் மிக்க எழிலான ரோஜாப்பூங்கொத்து வழங்குவது நிறைவான வாழ்த்துகளாகத் திகழ்கிறது.

விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்கும் காரகர் சுக்கிரன். மணம் வீசி மனம் கொள்ளைகொள்ளும் மயக்கும் ரோஜா சமையலிலும் இடம் பிடிக்கும் .கேக், புடிங், பானங்கள், ரோஸ் வாட்டர், எசன்ஸ், என மணக்கும் ..! மலர்களின் ராணியான ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. 

ஜோதிடத்தில் செவ்வாய் ஆண்மகனையும், சுக்கிரன் அழகிய இளம்பெண்ணையும் குறிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் எந்த விதத்தில் சேர்க்கை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் காதலில் ஒரு வேகத்தோடு இருப்பதோடு அதிகமாக சிகப்பு ரோஜாவையே தன் காதலிக்கு வழங்க விரும்புவார்கள். சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது.    

ரோஜாப்பூவின் மருத்துவ குணங்கள்

ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாகச் செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. உடல் சூட்டினால் ஏற்படும் பித்தத்தை சுக்கிரனின் காரகம் நிறைந்த குல்கந்து குளிர்ச்சியளிப்பதினால் குறைக்கிறது.

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. ஆண்மைக்கும் விந்து உற்பத்திக்கும் காரகர் சுக்கிரன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்தானே! 

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).காலபுருஷனுக்கு ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன்தான் பெண்களின் அடிவயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கும் காரகராவார்.

குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாகச் செயல்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றைக் குறைக்கும். குல்கந்தைச் சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது. என்னங்க! நல்ல சுகமான தூக்கத்திற்கு காரகரும் சுக்கிரபகவான் தானுங்கோ!

ஜோதிட ரீதியாக ரோஜா பூவை அதிகம் விரும்புபவர்கள்

1. சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள்.

2. சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க மடைந்தவர்கள்.

3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.

4. பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.

5. சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்.

6. குருவும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றவர்கள் ரோஜா பூவை விரும்பாவிட்டாலும் குல்கந்தின் சுவையில் மயங்கிடுவர்.

7. எந்ந லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.

8. ரிஷப, துலாம் வீடுகளை 2,5,7,9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2,5,7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள்.

9. ரோஜாவின் ராஜா என்றும் "நேரு மாமா" என்றும் செல்லமாக அழைக்கப்படும் முன்னால் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு தனது சட்டையில் எப்போதும் ஒரு ரோஜா பூவை குத்திவைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திரு ஜவஹர்லால் நேரு கடக ராசி கடக லக்னம் பெற்று சுக்கிரன் துலாராசியில் ஆட்சி பெற்று மாளவியா யோகம் பெற்றவர் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.

இந்த காதலர் வாரத்தில் இளம் காதலர்கள் மட்டும்தான் ரோஜா பூ கொடுக்க வேண்டும் என்பதில்லை. கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து நிற்கும் கணவன்மார்கள் கூட சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த ரோஜாப்பூவை காதலுடன் தங்கள் மனைவிக்கு வழங்கி கட்டிப்பிடி வைத்தியம் செஞ்சா கருத்துவேறுபாடு போயே போச்சு!

அட எங்க கிளம்பிட்டீங்க? ரோஜா பூ வாங்கத்தானே! வாழ்த்துக்கள்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

]]>
காதலர் தினம், ரோஜாப்பூ https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/உங்கள்-மனைவியோடு-கருத்துவேறுபாடா-ரோஜாப்பூ-வாங்கிகொடுங்க-ரோஜாப்பூவை-பற்றி-ஜோதிடம்-கூறும்-செய்திகள்-3094432.html
3094418 ஆன்மிகம் செய்திகள் 2019-ம் ஆண்டு ராகு - கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்! Tuesday, February 12, 2019 03:42 PM +0530  

வாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி எப்போது? பொது பரிகாரம் என்ன? பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் எவை? பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள் எவை என்று பார்க்கலாம். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

யார் அந்த ராகு கேது? வாங்க பார்க்கலாம்..

ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. ராகும் கேதுவும் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம் - களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

இந்தாண்டு ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்

மேஷம் - மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம் 

ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்

ரிஷபம் - விருச்சிகம் - கும்பம் - மீனம் 

சரி, பொது பரிகாரமாக என்ன செய்யலாம்? 

ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் - கேதுவிற்கு வினாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மையை தரும்.

]]>
பரிகாரம், ராகு கேது, தனுசு, கடக ராசி, மகர ராசி https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/2019-ம்-ஆண்டு-ராகு---கேது-பெயர்ச்சியால்-நன்மை-அடையும்-ராசிகள்-3094418.html
3094395 ஆன்மிகம் செய்திகள் பாவங்களைப் போக்கும் இரதசப்தமி திருநாள்! (விடியோ) DIN DIN Tuesday, February 12, 2019 11:51 AM +0530  

சூரியனை நாம் தினந்தோறும் வழிபடுகிறோம் ஆனாலும் ரதசப்தமியன்று சூரியனை வழிபடுவது மேலும் சிறப்பானது. தை மாதத்தில் வளர்பிறை சப்தமி நாளை இரதசப்தமி என்று அழைக்கிறோம். சூரியத்தேர் வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கும் நாள் என்றும், பாரதயுத்தத்தின்பொழுது, பீஷ்மர் அம்புப் படுக்கையில் காத்திருந்து முக்தி எய்திய நாள் என்றும் கூறுவர்.

யாரெல்லாம் இந்த ரதசப்தமியை கடைப்பிடிக்கலாம்? 

ஆரோக்கியமான வாழ்வு முக்கியமாக நோய் நோடியில்லாத வாழ்வு, புத்திரபேறு, நீண்ட ஆயுள், எடுத்த காரியத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். 

ரதசப்தமியில் எப்படி ஸ்நானம் செய்தால் சிறப்பு?

ரத ஸப்தமியன்று காலையில் எழுந்து ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வதால் பாவங்கள் நீங்கும். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். பாவங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஸப்த ஸப்த ப்ரியே தேவி

ஸப்த லோக ப்ரதீயிகே

ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன

மம பாபம் வ்யபோஹய”

ஸ்ரீ சூரிய காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ

திவாக்ராய நம: இதமர்க்யம்

திவாக்ராய நம: இதமர்க்யம்

திவாக்ராய நம: இதமர்க்யம்

என்று மூன்று முறை சொல்லி சூரிய பகவானை வழிபட வேண்டும். மேலும், சூரிய நமஸ்காரம், ஆத்திய ஹிருதயம், கோளாறு பதிகம் ஆகியவை சொல்லி சூரியனை வழிபடலாம். சூரியனுக்கு உகந்த சர்க்கரை பொங்கலும், கோதுமையில் செய்து பண்டங்களையும் நிவேதனம் செய்யலாம். 

ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரதசப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காகப் பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது ஐதீகம்.

]]>
ரதசப்தமி, சூரிய காயத்ரி https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/பாவங்களைப்-போக்கும்-இரதசப்தமி-திருநாள்-விடியோ-3094395.html
3094392 ஆன்மிகம் செய்திகள் திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம்: கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு Tuesday, February 12, 2019 11:27 AM +0530  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை ரத சப்தமி விழா நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான கோயிலில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் எம்பெருமான் வீதிஉலா நடைபெறுகிறது. அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 

இன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய ஜெயந்தி விழா நடைபெற்றது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி கோஷத்துடன் வழிபாடு செய்தனர். 

இதைத் தொடர்ந்து சிறிய சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட 7 வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருள உள்ளார். 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருப்பதியில்-ரதசப்தமி-விழா-கோலாகலம்-கோவிந்தா-கோவிந்தா-கோஷத்துடன்-பக்தர்கள்-வழிபாடு-3094392.html
3093961 ஆன்மிகம் செய்திகள் திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் DIN DIN Tuesday, February 12, 2019 02:39 AM +0530
திருப்பதி ஏழுமலையான கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்புக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவின் நெய் பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ஆவின் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு ஆவின் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதில், சேலம்-ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்து கொண்டது. நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் ஆவின் தேர்வு செய்யப்பட்டது. ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 2003-04-ஆம் ஆண்டுக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இப்போது ஆவின் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருப்பதி-லட்டு-தயாரிக்க-ஆவின்-நெய்-3093961.html
3093960 ஆன்மிகம் செய்திகள் நாகூர் கந்தூரி விழா: சந்தனக் கூடு வடிவமைப்புப் பணிகள் தீவிரம் Tuesday, February 12, 2019 02:38 AM +0530
நாகூர் தர்காவின் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்துக்கான பிரதான அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் நாகையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆன்மிக மகிமைகளால் உலகப் புகழ்ப் பெற்ற தர்காக்களுள் ஒன்றாகவும், மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டுக்கான (462-ஆம் ஆண்டு) கந்தூரி விழா, பிப். 6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் பிப்ரவரி 15-ஆம் தேதியும், சந்தனம் பூசும் விழா 16-ஆம் தேதி அதிகாலையிலும் நடைபெறுகின்றன.
இதையொட்டி, சந்தனக் கூடு அலங்கார அமைப்பின் கட்டுமானப் பணிகள், நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சந்தனக் கூடு ஊர்வலத்தில் பல்வேறு அலங்கார அமைப்புகள் வலம் வரும் என்றாலும், சந்தனக் குடத்துடன் வரும் சந்தனக்கூடு அலங்கார அமைப்பே ஊர்வலத்தில் பிரதானம் பெறும். 
மரத்துண்டுகளால் ஆன வளைவுகள், கண்ணாடிகள், வண்ண பேப்பர்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு, இந்தச் சந்தனக் கூடு தயாரிக்கும் பணிகள் நடைபெகின்றன.  மின் விளக்குகள் அலங்காரத்துடன், வரும் 14-ஆம் தேதி இந்த அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் முழுமை பெறும் எனக் கூறப்படுகிறது. 
நாகூர் தர்காவின் சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.எப். அக்பர், கே. அலாவுதீன் மற்றும் நாகூர் தர்காவின் பரம்பரை அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகிறன்றனர்.

 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/நாகூர்-கந்தூரி-விழா-சந்தனக்-கூடு-வடிவமைப்புப்-பணிகள்-தீவிரம்-3093960.html
3093957 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூர் மாசித் திருவிழா: சிங்கக் கேடய சப்பரத்தில் சுவாமி வீதியுலா Tuesday, February 12, 2019 02:35 AM +0530
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
திங்கள்கிழமை காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, அருள்மிகு தூண்டுகை விநாயகர் கோயில் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்தில் சேர்ந்தனர்.
தொடர்ந்து, அம்மன் மட்டும் 8 வீதிகளிலும் உலா வந்து மண்டபம் சேர்ந்தார். இரவு மண்டபத்திலிருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர்.
மாசித்திருவிழா 3-ஆம் நாள்: மாசித்திருவிழாவின் 3-ம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேருகின்றனர். மாலையில், மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி  உலா வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருச்செந்தூர்-மாசித்-திருவிழா-சிங்கக்-கேடய-சப்பரத்தில்-சுவாமி-வீதியுலா-3093957.html
3093951 ஆன்மிகம் செய்திகள் நன்கொடை வழங்குவோருக்கு அடையாள அட்டை: காளஹஸ்தி கோயிலில் புதிய நடைமுறை அமல் DIN DIN Tuesday, February 12, 2019 02:32 AM +0530 காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை அக்கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை நடைமுறைப்படுத்தியது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோயில் நிர்வாகம் நாள்தோறும் செயல்படுத்தும் அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் ரசீது வழங்குகிறது. திருப்பதி தேவஸ்தானம் நன்கொடையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது போல் காளஹஸ்தி கோயில் நிர்வாகமும் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்நிலையில், காளஹஸ்தீஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்துக்கு காளஹஸ்தி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுப்ரமணியம், ராதிகா தம்பதியர் 
ரூ.1 கோடியே, 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 112-ஐ நன்கொடையாக வழங்கினர். அவர்களுக்கு நன்கொடைக்கான ரசீதுடன் கோயில் முத்திரை  அச்சிடப்பட்ட அட்டையையும் அதிகாரிகள் வழங்கினர். 
முன்னாள் எம்எல்ஏ தம்பதியை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் அமர வைத்து வேத ஆசீர்வாதம் செய்வித்து, காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசூனாம்பிகை வஸ்திரங்கள், பிரசாதம், உருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவர்கள் இனி கோயில் நன்கொடையாளர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன் தரிசனம் உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/நன்கொடை-வழங்குவோருக்கு-அடையாள-அட்டை-காளஹஸ்தி-கோயிலில்-புதிய-நடைமுறை-அமல்-3093951.html
3093950 ஆன்மிகம் செய்திகள் திருமலையில் பொள்ளாச்சி ஜெயராமன் வழிபாடு DIN DIN Tuesday, February 12, 2019 02:32 AM +0530
ஏழுமலையானை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திங்கள்கிழமை தரிசித்தார். 
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக சுயசார்புள்ள இயக்கம். எனவே, மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வர்.  மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டால் கமல்ஹாசனுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்ன? என்பது தெரியும் என்றார் அவர்.
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் சி. ரெட்டியும் திங்கள்கிழமை காலையில் ஏழுமலையானை தரிசித்தார். 
திருமலையில் ராஜபக்சே...
ஏழுமலையானை தரிசிக்க இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே திங்கள்கிழமை திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கும் அவர் செவ்வாய்க்கிழமை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருமலையில்-பொள்ளாச்சி-ஜெயராமன்-வழிபாடு-3093950.html
3093949 ஆன்மிகம் செய்திகள் திருமலை: இன்று அங்கப் பிரதட்சண டிக்கெட் வழங்கப்படாது DIN DIN Tuesday, February 12, 2019 02:32 AM +0530
திருமலையில் செவ்வாய்க்கிழமை அங்கப் பிரதட்சண டிக்கெட் வழங்கப்படாது தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி என்ற சூரிய ஜெயந்தி உற்சவம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழு வாகனச் சேவைகள் நடைபெற உள்ளன. சூரியப் பிரபை, அதன்பின் சின்னசேஷன், அனுமந்த, கருட, கல்பவிருட்ச, சர்வபூபால, சந்திரபிரபை உள்ளிட்ட வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளனர். ஒரே நாளில் ஏழு வாகனச் சேவை நடைபெறுவதால் தேவஸ்தானம் இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று குறிப்பிடுகிறது. எனவே இதைக் காண பக்தர்கள் திருமலையில் கூடுவர். அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. 
ரதசப்தமி விழா காரணமாக, அங்கப் பிரதட்சண டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருமலை-இன்று-அங்கப்-பிரதட்சண-டிக்கெட்-வழங்கப்படாது-3093949.html
3093948 ஆன்மிகம் செய்திகள் நவசபரி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நிறைவு DIN DIN Tuesday, February 12, 2019 02:31 AM +0530
சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில்  8-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் மூன்று நாள் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.
ராணிப்பேட்டை, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில்  8-ஆம் ஆண்டு தொடக்க விழா 8ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் முன்னிலையில், சபரிமலை தலைமை தந்திரி குமாரர் கண்டரரு மோகனரரு தந்திரி தலைமையில் நாள்தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து ஆண்டு விழாவில் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை ஆகியவை நடைபெற்று 12 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர், மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 18ஆம் படி பூஜை, மகா தீபாராதனை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றன. 


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/நவசபரி-ஐயப்பன்-கோயிலில்-சிறப்பு-பூஜைகள்-நிறைவு-3093948.html
3093947 ஆன்மிகம் செய்திகள் பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயிலில் ராஜகோபுர நுழைவு வாயில் அமைப்பு DIN DIN Tuesday, February 12, 2019 02:30 AM +0530
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரப் பணியின் நுழைவுவாயிலை அமைக்கும் வாசக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த, ஒரே கல்லில் குடையப்பட்ட முக்கண்ணுடன் காணப்படும் பெருமாள் வீற்றிருக்கும் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் இது வரை ராஜகோபுரம் இல்லை. எனவே, ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்நிலையில், கோபுரத்துக்கு கருங்கல்லால் வாசக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி பாடலாத்ரி நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கோயிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வாசக்கால் வைப்பதற்காக பூஜைப் பொருள்களுடன் ராஜகோபுரப் பணி நடைபெறும் இடத்துக்கு அர்ச்சகர்கள் ஊர்வலமாக வந்தனர். அங்கு கருங்கல் வாசக்காலுக்கு அவர்கள் மஞ்சள், குங்குமம், புஷ்பமிட்டு பூஜைகளை நடத்தினர். அதன்பின் ராஜகோபுர நுழைவு வாயிலில் வாசக்கால் நிறுத்தப்பட்டது. 
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவசண்முகப் பொன்மணி, சிவப்பிரகாசம் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ராஜகோபுரக் குழுவினர், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/பாடலாத்ரி-நரசிம்மப்-பெருமாள்-கோயிலில்-ராஜகோபுர-நுழைவு-வாயில்-அமைப்பு-3093947.html
3093946 ஆன்மிகம் செய்திகள் 27 நட்சத்திரக் கோயிலுக்கு புதிய இணையதளம்: காஞ்சி பீடாதிபதி தொடங்கி வைத்தார் DIN DIN Tuesday, February 12, 2019 02:29 AM +0530
செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயிலுக்கான இணையதளத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி  சுவாமிகள் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
காஞ்சிபுரம் -  வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள், சனீஸ்வரர், ராகு கேது பகவான் கோயில்.
இந்தக் கோயிலைப் பற்றி பொதுமக்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் நடைபெற்றது. 
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கோயில் இணையதளத்தைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
இந்தக் கோயிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும்  
www.27nakshatratemple.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/27-நட்சத்திரக்-கோயிலுக்கு-புதிய-இணையதளம்-காஞ்சி-பீடாதிபதி-தொடங்கி-வைத்தார்-3093946.html
3093945 ஆன்மிகம் செய்திகள் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் 16-இல் ரத உற்சவம் DIN DIN Tuesday, February 12, 2019 02:29 AM +0530
திருமால்பூர் அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்றுவரும் மாசி மக பிரம்மோற்சவ விழாவில், வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) ரத உற்சவம் நடைபெற உள்ளது .
அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் இக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டுத் திருத்தலங்களில் 16-ஆவது தலமாக விளங்கும் திருமால்பூரில் திருமால், சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்றதாக ஐதீகம். இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திங்கள்கிழமை காலை சூரியப் பிரபையிலும் மாலை சந்திரப் பிரபையிலும் சுவாமி வீதியுலா வந்தார். 
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பூத வாகனத்திலும் மாலை மயில் மற்றும் அன்னவாகனத்திலும், புதன்கிழமை காலை சேஷ வாகனம் மாலை ரிஷப வாகனத்திலும் வியாழக்கிழமை காலை அதிகார நந்தி மீதும், மாலை கைலாய வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை அறுபத்து மூவர் வீதியுலாவும் மாலை கஜவாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளன. சனிக்கிழமை காலை ரத உற்சவமும் மாலை தோட்ட உற்சவமும் 19-ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடத்தப்படும். விழா ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினருடன் இணைந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பா.விஜயா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருமால்பூர்-மணிகண்டீஸ்வரர்-கோயிலில்-16-இல்-ரத-உற்சவம்-3093945.html
3093944 ஆன்மிகம் செய்திகள் கடம்பூர் கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் Tuesday, February 12, 2019 02:28 AM +0530
செங்கல்பட்டு வட்டம் கடம்பூர் கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் கும்மபாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து திருக்கல்யாண வைபவ உற்சவமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. 
தொன்மை வாய்ந்ததும், பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் வழிபடப்பட்டதுமான இக்கோயிலை புனரமைக்கும் பணி கிருஷ்ணதேவராய மன்னர் காலத்தில் தொடங்கப்பட்டது. அகத்திய மாமுனிவர் வணங்கிய சிறப்பையும் இக்கோயில் கொண்டுள்ளது.
கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல மேள வாத்தியம், சிவநாதங்கள், திருக்கழுகுன்றம் சிவ தாமோதரன் முற்றோதல் பாடல்கள் ஒலிக்க கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 
சென்னை, காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், திருப்போரூர், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.   
அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்ற  சித்தி விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, பாலாம்பிகை, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, நந்தியம்பெருமான், பைரவர், நவக் கிரகங்கள், அகத்திய மாமுனிவர் ஆகிய சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மேல் நாட்டுமக்கள் நலனுக்காகவும்,மக்கள் அனைத்து வளங்களைப் பெற்று வாழவும் வேண்டி 180 சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. இரவு 9 மணிக்கு பாலம்பிகைக்கும், கைலாசநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்தனர். மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ரிஷப வாகனத்தில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் ஆகியோர் காட்சியளித்தனர்.
அதன் பின், பக்தர்களுக்கு திருக்கல்யாணப் பிரசாதமும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், முன்னாள் காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஜி.சம்பந்தம், சுதர்சன், தர்மகர்த்தா கே.பிச்சுமணி, சிவாச்சாரியார்கள், ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/கடம்பூர்-கைலாசநாதர்-கோயிலில்-திருக்கல்யாண-உற்சவம்-3093944.html
3093848 ஆன்மிகம் செய்திகள் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு DIN DIN Tuesday, February 12, 2019 12:48 AM +0530
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 
நிடத நாட்டு மன்னன் நளச்சக்கரவர்த்தி பரத்வாஜ முனிவரின் உபதேசத்தால் சனிதோஷம் நீங்கப் பெற்றதான சிறப்பை பெற் தலமான காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா 2006-ஆம் ஆண்டு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. பிரதான கோயில், சார்புக் கோயில் குடமுழுக்கு விழா இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. 
இதன் சார்புக் கோயில்களாக விளங்கும் ஸ்ரீ சன்னதி விநாயகர், ஆக்னேய, கன்னிமூலை, வாயு, ஈசானிய மூலையில் அமைந்திருக்கும் விநாயகர், நளன் தீர்த்தக் குளம் அருகே அமைந்திருக்கும் நளன் கலி தீர்த்த விநாயகர், கிராம தெய்வங்களாகிய ஸ்ரீ பாலசாஸ்தா (ஐயனார்), ஸ்ரீ சப்த மாதா பீடாபஹாரி (பிடாரி), ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆகிய 9 சார்புக் கோயில்களுக்கான குடமுழுக்கு விழா ஜன. 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு திருப்பணிகள் நிறைவுபெற்று, திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் விமானங்களில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். 
சரியாக 9.20 மணிக்கு  அனைத்து விமானங்களின் கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை செய்தனர். குடமுழுக்கின்போது பக்தர்கள் மீது புனிதநீர் படும் வகையில் கோயில் உள்புறம், வெளிப்புறங்களில் குழாய் அமைத்து ஸ்பிரே முறையில் தெளிக்கப்பட்டது. 
குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, அமைச்சர்கள் ஆர். கமலக்கண்ணன், எம். கந்தசாமி, சட்டப் பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, தருமை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கட்டளை தம்பிரான் கந்ததாமி தம்பிரான் சுவாமிகள்,  புதுச்சேரி மாநில டிஜிபி சுந்தரி நந்தா, அரசு செயலர் அன்பரசு, மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சுதாகர், பொதுப்பணித் துறை மாநில தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
குடமுழுக்கு நிறைவடைந்து மாலை 5 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/திருநள்ளாறு-ஸ்ரீ-தர்பாரண்யேசுவரர்-கோயில்-குடமுழுக்கு-ஆயிரக்கணக்கானோர்-வழிபாடு-3093848.html
3093847 ஆன்மிகம் செய்திகள் சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Tuesday, February 12, 2019 12:48 AM +0530
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 சிதம்பரம்  ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமி அம்மனுக்கு சோழ மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவகாம கோட்டம் எனும் தனிக் கோயில் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்தன. 
 திங்கள்கிழமை காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் நடைபெற்று, பின்னர் கட யாத்ராதானம் புறப்பட்டது. இதையடுத்து,  ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீஸப்தமாதா, ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீசித்ரகுப்தர், ஸ்ரீநடுக்கம் தீர்த்த விநாயகர், ஸ்ரீசக்ரம், த்விஜஸ்தம்பம் ஆகிய பரிவார சந்நிதிகளுக்கும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமாரசுவாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  பொது தீட்சிதர்கள் கோயில் விமான கலசத்துக்கு கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. 
 திங்கள்கிழமை இரவு சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.  இதேபோல, சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்திரிதேவி கோயிலில் திங்கள்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/சிதம்பரம்-சிவகாமசுந்தரி-அம்மன்-கோயில்-கும்பாபிஷேகம்-3093847.html
3093846 ஆன்மிகம் செய்திகள் வைத்தீஸ்வரன்கோயிலில் புஷ்பத் தேரோட்டம் Tuesday, February 12, 2019 12:47 AM +0530
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தை செவ்வாய் உத்ஸவத்தையொட்டி புஷ்பத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். 
இக்கோயிலில் ஆண்டுதோறும் செவ்வமுத்துக்குமாரசுவாமிக்கு நடைபெறும் தை செவ்வாய் உத்ஸவம் பிப்ரவரி 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
விழாவின், முக்கிய நிகழ்வான புஷ்பத் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 11) நடைபெற்றது. இதையொட்டி, கிருத்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி எழுந்தருளியதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் செல்வமுத்துக்குமார சுவாமி எழுந்தருளியதும், கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பிற்பகலில் நிலையை வந்தடைந்தது. 
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/12/வைத்தீஸ்வரன்கோயிலில்-புஷ்பத்-தேரோட்டம்-3093846.html
3093818 ஆன்மிகம் செய்திகள் சூரியனை வணங்குவதில் இவ்வளவு நன்மைகளா? ரத சப்தமி கூறும் ஜோதிட ரகசியங்கள்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் DIN Monday, February 11, 2019 04:16 PM +0530
ரத சப்தமி எனும் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி என்பது சூரியனுக்குரிய விசேஷ தினமாகும். இது பொங்கலை போன்றே சூரியனை வணங்கும்தினம் என்பதால் மறுபொங்கல் என்றும் கூறுவர். இன்று சூரிய ஜெயந்தியாகவும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இன்று ரதஸப்தமி என்று பெயர். இந்நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். 

நாம் பல பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ரத சப்தமியை எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

காலவ முனிவரும் தொழுநோயும்

மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார். இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.

காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. ஸ்வாமி… நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?”என்று வினவினார். “நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?” என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார்.

உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவக்கிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவக்கிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவக்கிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.

இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவக்கிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது. ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவக்கிரகங்கள் தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டனை உண்டே. அதனால் காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை என்றார் பிரம்மா.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி அன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரிப்பதை முன்னிட்டு தொழுநோய் பற்றியும் அதற்கான ஜோதிட காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

தொழு நோய் அல்லது குஷ்ட ரோகம்

ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த் தன்மை. தசை இழப்பு ஏற்பட்டு இறுதியாக ஹேன்சென் நோய் எனும் உறுப்புகளின் உருக்குலைவு உண்டாகும். இத்தொற்று மைக்கோபேக்டீரியம் லெப்ரே மற்றும் மைக்கோபேக்டீரியம் லெப்ரோமெட்டோசிஸ் எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. நுனி நரம்புகள் அல்லது மேல் மூச்சுமண்டல சளிச்சவ்வுகளில் உண்டாகும் திசுக்கட்டி நோயாகும். தோல் புண்களே இதன் வெளிப்படையான அறிகுறி. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், தொழு நோய் வளர்ச்சி அடைந்து, தோல், நரம்புகள், அவயவங்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர சேதத்தை உண்டாக்கும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சி தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயைக் குட்டம், குஷ்ட நோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

தொழுநோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்:

தொழுநோய்க்கான காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையைக் கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையைச் சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாகக் கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்துக் கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர்.

தொழுநோய்க்கான காரக கிரகங்கள்

சூரியன்:

கால புருஷனுக்கு ஆத்மகாரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்குக் காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன்: 

நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநாய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்:

காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநாய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

புதன்:

அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்கு தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

குரு:

குருவினால் நேரடியாகப் பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையைக் கொண்டு கர்ம வினையை அறிந்துகொள்ள முடியும். மேலும் லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய் பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சுக்கிரன்:

தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிறார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்துத் தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிரங்கு, கொப்புளங்கள் எனப் பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

சனி:

உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும்.

ராகு/கேது:

சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோயுக்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்திலும் தெரிவித்து அதை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே!

தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்:

1.  சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன்  தொடர்பு கொள்வது.

3. லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5. சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது.

7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமே அல்லது  சந்திரனும் செவ்வாயுமே எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வெண்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்

9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10,லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரண்டாம் வீட்டில் நிற்பது.

11.குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.

14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15.சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது

16. பலமிழந்த குருவும் சனியும்  முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்தக் கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம்  போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தொழுநோய் தீர ஜோதிட பரிகாரங்கள்

1. அருள்மிகு சிவசூரியப் பெருமான் திருக்கோவில்  சூரியனார் கோயில், திருவிடைமருதூர்:

2. காலவ முனிவருக்கு அருளியதால் பிரம்மனின் சாபப்படி தொழுநோய் நவக்கிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.

பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் ஏற்பட்ட நவக்கிரகங்கள்  பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.

“திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்றார் அகத்தியர். நவக்கிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தைப் புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, “”அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்” என்றார் அவர்.அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான்.

வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவக்கிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.

ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஸப்த ஸப்த ப்ரியே தேவி

ஸப்த லோக ப்ரதீயிகே

ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன

மம பாபம் வ்யபோஹய”

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ “திவாக்ராய நம: இதமர்க்யம்” என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.

வைத்தீஸ்வரர் கோயில்:

செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் . இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.

வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு   தோஷத்திருக்கு மட்டும்  அல்லாது  மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும்  கோவிலாகவும் உள்ளது.

செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க  சிவ பெருமானே  தானாக தோன்றி  அவருக்கு மருத்துவம் பார்த்து  குணமடைந்ததால்  செவ்வாய் ஈச  பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு  மிகவும் சிறப்பாக உள்ளது .

சீர்காழி : 

சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார். திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்  ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவதலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்த ரத சப்தமி மற்றும் சூரிய ஜெயந்தி நாளில் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் மற்றும் சூரியனார் ஜோயில் போன்ற ஸ்தலங்களில் வணங்கிவர அரசியலில் வெற்றி, அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும்.  சிவப்பு மலர்களால் சூரியானாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள். மேலும் தொழுநோய் போன்ற தோல் நோயின் உபாதையிலிருந்தும் விடுபடலாம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/சூரியனை-வணங்குவதில்-இவ்வளவு-நன்மைகளா-ரத-சப்தமி-கூறும்-ஜோதிட-ரகசியங்கள்-3093818.html
3093813 ஆன்மிகம் செய்திகள் தேர்தலிலும் தேர்விலும் வெற்றிபெறச் செய்யும் சூரிய ஜெயந்தி! DIN DIN Monday, February 11, 2019 03:24 PM +0530  

சூரிய ஜெயந்தி எனும் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. சூரிய ஜெயந்தி சூரியனுக்குரிய விசேஷ தினமாகும். அதிலும் ரத சப்தமியோடும் இணைந்து வருவது மிகவும் சிறப்பாகும். நாம் பல பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். 

அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் சூரிய ஜெயந்தியை எதற்காகக் கொண்டாடி வருகிறோம் என  அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. சூரிய ஜெயந்தி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள்,  ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

சூரிய பகவான் பிறந்த கதை

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு  பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, ''இருங்கள் கொண்டு வருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு  உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள். ''ஏன் இவ்வளவு தாமதமாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை  உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான்.

பிராமணனின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு  மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாகப் பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில்  ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  

சூரிய ஜெயந்தி நாளில் காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய  ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை  தானம் செய்தால் பார்வை சரியாகும்), சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய கண்களில் உள்ள  கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில்  ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து  விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை  அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.

பார்வையருளும் சூரிய ஜெயந்தி

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரண்டாம் வீடு  இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும்  சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.  சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள்  நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது  மாலைக்கண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் சூரிய ஜெயந்தியில் சூரிய பகவானை வணங்கி வரப் பார்வை கோளாறுகள் நீங்கும்.

அரசு வேலைக் கிடைக்க சூரியன் வழிபாடு

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை  சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலைக் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன்  சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலைக் கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக  அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு  மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சூரிய ஜெயந்தி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை  விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் பிரகாசிக்க சூரியன் வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி,  கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான  சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல்,  அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றைக் குறிக்கும் சூரியன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை,  வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றை தரும் செவ்வாய் பகை வீடான கன்னியில் பலமிழந்து நிற்கின்றது. இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள்  சூரிய ஜெயந்தியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.

இந்த ரத சப்தமி மற்றும் சூரிய ஜெயந்தி நாளில் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் மற்றும் சூரியனார் ஜோயில் போன்ற ஸ்தலங்களில் வணங்கிவர அரசியலில் வெற்றி,  அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம்.  ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

]]>
சூரிய ஜெயந்தி https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/தேர்தலிலும்-தேர்விலும்-வெற்றிபெறச்-செய்யும்-சூரிய-ஜெயந்தி-3093813.html
3093783 ஆன்மிகம் செய்திகள் 108 சக்தி பீட ஆலய மகா கும்பாபிஷேகம் (புகைப்படங்கள்) DIN DIN Monday, February 11, 2019 11:41 AM +0530  

காஞ்சிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட 108 சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சுங்குவார்சத்திரத்தை அடுத்த கண்ணந்தாங்கல்-மதுரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணந்தாங்கல் கிராமத்தில் 108 சக்தி பீட ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நான்கு ராஜகோபுரங்களுடன், மூலவராக ஸ்வர்ண காமாட்சி அம்மன் காட்சியளிக்கும் இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பிப்.1-ம் தேதி காலை கோபூஜையுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து 6-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 7-ம் தேதி காலை மூன்றாம் கால யாக பூஜையும், மாலை 4-ம் கால யாகபூஜையும், தொடர்ந்து 8-ம் தேதி காலை 5-ம் கால யாகபூஜையும், மாலை 6-ம் கால யாக பூஜையும், 9-ம் தேதி காலை 7-ம் கால யாக பூஜையும், மாலை 8-ம் கால யாகபூஜையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9-ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமானங்கள் மற்றும் மூலவர் ஸ்வர்ண காமாட்சி அம்மனுக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 108 சக்தி பீடங்களில் வழிபட்டார். முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வர்ண காமாட்சி அம்மனை வழிபட்டனர். விழாக் குழுவினர் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.

]]>
108 சக்தி பீடம், காஞ்சிபுரம், மகா கும்பாபிஷேகம் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/108-சக்தி-பீட-ஆலய-மகா-கும்பாபிஷேகம்-புகைப்படங்கள்-3093783.html
3093775 ஆன்மிகம் செய்திகள் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு Monday, February 11, 2019 11:10 AM +0530 திருநள்ளாறு: திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழ்ந்தனர். 

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை (பிப்.7) இரவு தொடங்கி, நடைபெற்றுவருன்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

யாகசாலையில் நிறைவாக 8-ஆம் கால பூஜை திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.15 முதல் குடமுழுக்காக புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றும் பணி விமரிசையாக நடைபெற்றது. 

யாகசாலை பூஜையில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முற்கால சோழர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில் இது. மூவரால் பாடல் பெற்ற தலம். கோயிலுக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலத்தில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. குடமுழுக்குக்காக காரைக்கால் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கைக் காண பொதுமக்கள் திரளாக திருநள்ளாற்றில் குவிந்துள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

]]>
திருநள்ளாறு, தர்பாரண்யேசுவரர் https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/திருநள்ளாறு-தர்பாரண்யேசுவரர்-கோயிலில்-விமரிசையாக-நடைபெற்ற-கும்பாபிஷேகம்-திரளான-பக்தர்கள்-பங்கேற்பு-3093775.html
3093301 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்: 19-இல் தேரோட்டம் Monday, February 11, 2019 03:00 AM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
 அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஆவணி, மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நிகழாண்டு மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையை அடுத்து கொடிப் பட்டம் வெள்ளிப் பல்லக்கில் 9 சந்திகள் வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக் கட்டிய சு. சண்முகம் சிவாச்சாரியார் கொடியை ஏற்றினார்.
 கொடிமரத்துக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்கள் உள்பட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத பாராயணமும், ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர்.
 இதில், திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சிபுரம் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் பா. பாரதி, கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி, உள்துறை மேலாளர் விஜயன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், காயாமொழி பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் அறங்காவலர் மு.இராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு. சுரேஷ்பாபு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்தல், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா ஆகியவை நடைபெற்றது.
 குடவருவாயில் தீபாராதனை: பிப். 14-ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமி, அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆறாம் திருநாளான பிப். 15-ஆம் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதத்தில் வீதி உலா, ஏழாம் திருநாளான பிப். 16-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குள் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, இதைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார்.
 பிப். 19-இல் தேரோட்டம்: பிப். 18ஆம் தேதி சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பிப். 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/திருச்செந்தூர்-முருகன்-கோயிலில்-மாசித்-திருவிழா-கொடியேற்றம்-19-இல்-தேரோட்டம்-3093301.html
3093241 ஆன்மிகம் செய்திகள் கோயில்களில் கும்பாபிஷேகம்...  மதுராந்தகம் Monday, February 11, 2019 12:25 AM +0530 மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 தொண்டை மண்டலத்தில் முப்புரம் எரிப்பதன் பொருட்டு புறப்பட்ட சிவபெருமானின் திருத்தேர் அச்சு இற்ற (முறிந்த) காரணத்தால் அச்சிறுப்பாக்கம் என்று பெயர் பெற்ற இத்தலத்தில் இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். திரிநேத்திரதாரி என்ற முனிவரால் பூஜிக்கப் பெற்றதும், அருணகிரிநாதர், வடலூர் வள்ளலார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் பாடல் பெற்றதுமாக இத்தலம் விளங்கி வருகிறது.
 கடந்த 2001ஆம் ஆண்டு பிப். 11-க்குப் பின் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதனால் இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திருப்பணிக் குழுவினர், கோயில் செயல் அலுவலர், கிராம மக்கள் ஆகியோரின் முயற்சியால் 18 ஆண்டுகளுக்குப் பின் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும், சுவாமி சந்நிதிகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோயிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-இல் பாலஸ்தான விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரமைக்கப்பட்டன.
 இந்நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை, கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கியது. அதையடுத்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூர்த்தி ஹோமம், ஆசார்ய விசேஷ சந்தி , நாடி டி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) காலை 10 மணிக்கு மேளதாளம் முழங்க, யாகசாலையில் இருந்து கோயில் ஸ்தானிகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் புனித கலசங்களை ஏந்திச் சென்றனர். அவர்கள் அனைத்து ராஜகோபுரங்கள், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
 விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் வெங்கடேசன், சரவணன், அதிமுக மாவட்டச் செயலர்கள் எஸ்.ஆறுமுகம், கணேசன் மற்றும் ஆயிரக்கணக்காôன பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி வீதியுலா, பரதநாட்டியக் கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் ஸ்தானிகர், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 காவாத்தூர் ஆதிகேசவ
 பெருமாள் கோயிலில்...
 மதுராந்தகத்தை அடுத்த காவாத்தூர் அம்புஜலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் மகா சம்ரோக்ஷண விழா (கும்பாபிஷேகம்) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
 இக்கோயிலின் அநைத்து சந்நிதிகளையும் சீரமைத்து, மகா கும்பாபிஷேகத்தை நடத்த அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி முதல் கிராமத்தார் சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், கும்பாராதனம், ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஞாயிற்றுக்கிழமை காலை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் யாகசாலையில் இருந்து புனிதக் கலசங்களை வேத விற்பன்னர்கள் சுமந்தபடி கோயிலை வலம் வந்தனர். அனைத்து சந்நிதி கோபுரக் கலசங்களுக்கும் அவர்கள் காலை 8.30 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், அறங்காவலர்கள், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 கைலாசநாதர் கோயிலில்...
 செங்கல்பட்டு அருகே கடம்பூர் கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மறைமலைநகரை அடுத்த கடம்பூர் கிராமம், விஜிலன்ஸ் நகரில் ஸ்ரீபாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கைலாயதீர்த்தம் மற்றும் கடம்பதீர்த்தம் ஆகிய இருதீர்த்தங்களும் உள்ள சிறப்பு வாய்ந்தது.
 இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, தர்மகர்த்தா கே.பிச்சுமணி, ஓய்வுபெற்ற காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் ஜி.சம்பந்தம், சி.சுதர்சன், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் உபயதாரர்களின் உதவியுடன் திருப்பணி நிறைவுபெற்றது.
 இதையடுத்து, செங்கல்பட்டு ராமகிருஷ்ண மடம் சர்வசதானந்த சுவாமிகள், காவல்துறை முன்னாள் இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மங்கள வாத்தியம், சிவநாதங்கள் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவில், அதிமுக மாவட்ட செயலர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், காவல்துறை டிஐஜி தேன்மொழி, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, டிஎஸ்பி வளவன், சம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். திருக்கழுகுன்றம் சிவதாமோதரனின் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் செந்தில்குமார், பிச்சுமணி, கே.பி.ராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/கோயில்களில்-கும்பாபிஷேகம்-3093241.html
3093239 ஆன்மிகம் செய்திகள் திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் DIN DIN Monday, February 11, 2019 12:22 AM +0530 திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
 அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாசித் திருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம், வேல் உள்ளிட்டவற்றை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
 அடுத்ததாக, திங்கள்கிழமை (பிப். 11) காலை 9.30 மணிக்கு வெள்ளி சூரியப் பிரபை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் முருகன் காட்சியளிப்பார். புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறும். அன்று இரவு 7.30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும், வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அன்ன வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகத்திலும், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்திலும், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தேரிலும், ஞாயிற்றுக்கிழமை (பிப். 17) 9.30 மணிக்கு யாளி வாகனத்திலும் முருகப் பெருமான் காட்சியளிப்பார்.
 பிப். 17 அன்று மாலை 5 மணிக்கு திருத்தணி ஆறுமுக சுவாமி கோயிலில் பாரிவேட்டை நடைபெறும். அன்று நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகன் காட்சியளிப்பார். அதையடுத்து வள்ளி திருமணமும், திங்கள்கிழமை (பிப். 18) காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப்பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும் நடைபெறும். பிப். 19ஆம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரி, சுப்பிரமணிய சுவாமி உற்சவம், மாலை 5 மணிக்கு கேடய உலா, 20ஆம் தேதி மாலை சப்ராபரணம் ஆகியவை நடைபெறும்.
 இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/திருத்தணி-முருகன்-கோயிலில்-மாசிப்-பெருவிழா-கொடியேற்றத்துடன்-தொடக்கம்-3093239.html
3093238 ஆன்மிகம் செய்திகள் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது Monday, February 11, 2019 12:21 AM +0530 திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் புராதனப் பெருமை கொண்ட கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விநாயகர் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
 அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர்கள் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சந்தனம், பால் தயிர், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்து கொடிமர பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கொடிமரத்தையும், சுவாமியையும் வழிபட்டனர்.
 இதன் முக்கிய நிகழ்வுகளாக, வரும் 16-ஆம் தேதி காலையில் ரத உற்சவமும், 22-ஆம் தேதி திருக்கல்யாண உற்வசமும் நடைபெற உள்ளன. விழா நாள்களில் காலை, மாலை ஆகிய இருவேளையும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வாகனங்களில் இரவு வீதி உலா ஆகியவை நடத்தப்படும்.
 விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம்.சக்திவேல், தக்கார் க.ரமணி, மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ஆலய சிவாச்சாரியார்கள், ஊர்ப் பொதுமக்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஆகியோர் செய்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/திருப்போரூர்-கந்தசாமி-கோயிலில்-பிரம்மோற்சவம்-தொடங்கியது-3093238.html
3092911 ஆன்மிகம் செய்திகள் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் இன்று மாசிப் பெருவிழா கொடியேற்றம் Sunday, February 10, 2019 02:35 AM +0530 திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோயில் மாசி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
 பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாகும். இக்கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசிப் பெருவிழா முக்கியமானதாகும். 11 நாள்கள் நடைபெறும் இவ்விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோயில் உள் பிராகாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் இரவு 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது.
 இதனைத் தொடர்ந்து விழாநாள்களில் காலையும், இரவும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் சந்திரசேகரர் வீதி உலா தினமும் நடைபெறும். அதன்படி திங்கள்கிழமை- சூரிய, சந்திர வாகனம், செவ்வாய்க்கிழமை-பூத, சிம்ம வாகனம், புதன்-நாக, ரிஷப வாகனம், வியாழன்-நந்தி, அஸ்தமானகிரி வாகனம், வெள்ளி-யானை வாகனம், சனி- திருத்தேரோட்டம், ஞாயிறு-குதிரை, இந்திர விமானம் உள்ளிட்டவைகளில் உற்சவமூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
 பிப்.18-ல் திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம் ஒன்பதாம் நாளான பிப்.18-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்று மாலையே சுந்தரர்-சங்கிலி நாச்சியாருக்கு குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி உற்சவமும், இறுதியாக 11-ஆம் நாளில் புதன்கிழமை பந்தம்பறி உற்சவமும் நடைபெற உள்ளது.
 மாசிப் பெருவிழாவினையொட்டி நகரத்தார் சங்கம் சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மற்றும் தக்கார் கே.சித்ராதேவி தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/10/திருவொற்றியூர்-தியாகராஜர்-கோயிலில்-இன்று-மாசிப்-பெருவிழா-கொடியேற்றம்-3092911.html
3092901 ஆன்மிகம் செய்திகள் 24-இல் சீனிவாச மங்காபுரத்தில் பிரம்மோற்சவம் தொடக்கம் DIN DIN Sunday, February 10, 2019 02:09 AM +0530 திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரம் பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதியும், கபில தீர்த்தம் பகுதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வரும் 25-ஆம் தேதியும் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி, தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில்களில் மாசி மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம்.
 இந்நிலையில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு வரும் 24-ஆம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இவ்விழா மார்ச் 4-ஆம் தேதி நிறைவடையும். அதேபோல், கபிலேஸ்வர சுவாமிக்கு வரும் 25-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இவ்விழா மார்ச் 6-இல் நிறைவடையும். இதற்கான முன்னேற்பாடுகள் அந்தந்த கோயில்களில் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவம் தொடர்பான சுவரொட்டிகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
 பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். இந்த விழாவையொட்டி திருப்பதி நகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
 பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 23-ஆம் தேதி அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 பிரம்மோற்சவ நாள்களில் அன்னமாச்சார்யா திட்டம், இந்து தர்ம பிரசார பரிஷத் ஆகியவை சார்பில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/10/24-இல்-சீனிவாச-மங்காபுரத்தில்-பிரம்மோற்சவம்-தொடக்கம்-3092901.html
3092900 ஆன்மிகம் செய்திகள் திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு Sunday, February 10, 2019 02:08 AM +0530 திருநள்ளாறு கோயில் குடமுழுக்கையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர்.
 திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது. இதற்காக 8 கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, சனிக்கிழமை காலை மற்றும் இரவில் 4 மற்றும் 5-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் யாகசாலையில் கலாகர்ஷனம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவதால், மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவுபெறும் வரை, பக்தர்கள் சந்நிதிகளில் வழிபடமுடியாது என்பதால், யாகசாலையில் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இதனால், சனிக்கிழமை கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் சென்று, யாகசாலையில் வழிபட்டனர்.
 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோரும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
 மூலவர், அம்பாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் பக்தர்கள் தரிசிக்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், சுவாமிகளை யாகசாலையில் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/10/திருநள்ளாறு-கோயில்-குடமுழுக்கு-யாகசாலை-பூஜையில்-ஆயிரக்கணக்கானோர்-வழிபாடு-3092900.html
3092607 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்  DIN DIN Saturday, February 9, 2019 05:56 PM +0530 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. 

நிகழாண்டில் மாசி திருவிழா ஞாயிற்றுச்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12ஆம் திருவிழா மண்டபத்தில் பூஜை செய்யப்பட்டு யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஞாயிற்றுகிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக பிப் 14ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். ஏழாம் திருநாளான பிப் 16இல் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். 

தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

எட்டாம் திருநாளான பிப். 17இல் காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும்போது, மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

பின்னர் முற்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.  ஒன்பதாம் திருநாளான பிப். 18இல் சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தேரோட்டம்: பத்தாம் நாளான பிப். 18இல் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. 

காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். பிப் 20ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும். பிப் 21ஆம் தேதி 12ஆம் திருநாளில் திருவிழா நிறைவு பெறுகின்றது.  ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நடைதிறப்பு நேரம்:  திருவிழாவின் முதல் மற்றும் 7 ஆம் நாள்களில் (பிப். 10, 16) அதிகாலை 1 மணிக்கும், பிற நாள்களில் அதிகாலை 5 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படும். இரண்டாம் நாள் மற்றும் திருவிழா நிறைவில் 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். 

பிற நாள்களில் உதயமார்த்தாண்ட அபிஷேகம் மட்டும் 6.15 மணிக்கும், மற்றவை வழக்கம்போலும் நடைபெறும்.
 

]]>
திருச்செந்தூர் , சுப்பிரமணிய சுவாமி , மாசித் திருவிழா , கொடியேற்றம்  https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/திருச்செந்தூர்-சுப்பிரமணிய-சுவாமி-திருக்கோயிலில்-மாசித்-திருவிழா-நாளை-கொடியேற்றம்-3092607.html
3092606 ஆன்மிகம் செய்திகள் திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்: பாதுகாப்புப் பணியில் 500 போலீஸார் DIN DIN Saturday, February 9, 2019 05:03 PM +0530  

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் திங்கள்கிழமை காலை 9.10 முதல் 10.10 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான 8 கால யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கின.

குடமுழுக்கு விழாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 350 போலீஸாரும், புதுச்சேரியிலிருந்து 150 போலீஸாரும் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், காவலர்கள் எவ்வாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்பது குறித்து கோயில் வளாகத்தில் பயிற்சி அளித்தார்.

காவல்துறையினர் இதுகுறித்து கூறும்போது, 

"கோயிலின் உள் பகுதியிலும், வெளிப்புறத்திலும் குறிப்பிட்ட இடங்களில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கென கண்காணிப்பு, பாதுகாப்பு தரும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்றுள்ளது. 
அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போலீஸார் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். 

மகளிர் போலீஸார் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக உள்ளனர். சீருடையில்லா காவலர்களும் பக்தர்கள் இருக்கும் பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபடுவர். கோயில் வளாகத்தில் சிறப்புக் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தவிர, 250-க்கும் மேற்பட்ட என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களும் பக்தர்களை ஒழுங்குப்படுத்துதல், உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். இவர்களுக்கு அதற்கான பயிற்சியை காவல்துறை அளித்துள்ளது.

தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த விவரம் புகைப்படத்துடன் ஆங்காங்கே பதாகையாக வைக்கப்படுகிறது. பதாகையில் இருப்போர் பக்தர்களிடையே உலாவுதல் தெரியவந்தால், அருகில் உள்ள போலீஸாருக்கு தெரிவிக்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் தங்களது விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள், உடைமைகள் மற்றும் குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்தனர். 

ஆய்வின்போது, மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/திருநள்ளாறு-கோயில்-கும்பாபிஷேக-பணிகள்-தீவிரம்-பாதுகாப்புப்-பணியில்-500-போலீஸார்-3092606.html
3092605 ஆன்மிகம் செய்திகள் ரத சப்தமியன்று எருக்க இலைக்கொண்டு ஸ்நானம் செய்வது ஏன்? - மாலதி சந்திரசேகரன் Saturday, February 9, 2019 04:30 PM +0530  

ஏழு என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 'சப்த' ரிஷிகள், 'சப்த' கண்ணியர், 'சப்த' நகரங்கள், 'சப்த' ஸ்வரங்கள் என்கிறோம்.அதுமட்டுமின்றி, வாரத்தின் நாட்கள், வானவில்லின் நிறங்கள், சூரிய பகவானின் தேர்க் குதிரைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் கிரணங்கள் என அனைத்துமே ஏழு.

இதில் சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாளாக ரத ஸப்தமி கொண்டாடப்படுகிறது. உத்ராயண தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.

பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’  நாளில்தான் ஆரம்பமாகிறது.

திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. சூரியனின் ஒற்றைச் சக்கர ரதத்தின் உத்தராயணப் பயணம் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால், ‘ரத சப்தமி’ என்று கொண்டாடப்படுகிறது இந்தத் திருநாள்.

சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம்  கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம்  அவசியம் செய்யவேண்டும். நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை.

இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானைப் பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர பலம் தேஹிமே சதா! என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்கியம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். வைசம்பாயனர் சூரியனிலிருந்துதான் சுக்ல யஜுர் வேதம் பயின்றார். 

பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்ம காரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த விரதம், உடல் நலம், மன நலம், நற்குணப் பெருக்கம், செல்வ வளம், காரிய  வெற்றி ஆகியவற்றைத் தரவல்லது. சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்பதியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன். இந்த ரத சப்தமி சமயத்தில், 'ஒரே நாளில் ஏழு வாகன உலா' என்பதால், 'அர்த்த பிரம் மோத்ஸவம்' என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள்.

அன்று....

* ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். * சூரியனுக்கு அர்ச்சனைகள் செய்யலாம். * பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கலாம். * சூரியப் பிரபையில் எழுந்தருளி  சூரியநாராயணனாக காட்சி தரும் சென்னை திருமழிசை ஜகந்நாதப் பெருமாளைத் தரிசிக்கலாம்.

ரத சப்தமிக்கும் எருக்க இலைக்கும் என்ன சம்பந்தம்? 
 
ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்த்தாள்.  ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, 'இரு கொண்டுவருகிறேன்'' என்று கூறிய அதிதி மாதா மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து   கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்.

ஆத்திரம் கொண்ட பிராமணன், "என்னை உதாசீனம் பண்ணியதால் உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான். பிராமணரின்  சாபம் கேட்டு  அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தைச் சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்குக் கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியனே  மகனாகப்  பிறந்தான்.  

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகைச் சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று  ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது  வழக்கம். 12.02.2019 அன்று  அதிகாலை ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை  மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்குப் பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை  இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.  சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

கீழ்க்கண்ட சூரிய காயத்ரியை காலை வேளையிலும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சொல்வது பன் மடங்கு பலனைத் தரும். 

ஸ்ரீ சூரிய காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

மகாபாரதப் போரில் அர்ஜுனனால் /அம்பையால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப்  படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார். ''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று பீஷ்மர் கேட்டார். 

"பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.''  என்கிறார் வியாசர்.

சபை நடுவே பாஞ்சாலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த  மிகப்பெரிய தவறு என  பீஷ்மர் உணர்ந்தார்.

''வியாஸா இதற்கு விமோசனம் எது? 

'பீஷ்மா, எப்பொழுது உன் தவற்றை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள்,  கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு  வேண்டுகிறார் பீஷ்மர்.

''இதற்கு எருக்க இலையைக் காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன். இதை  தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையைத் தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

- மாலதி சந்திரசேகரன்

]]>
காயத்ரி, புண்ணியம், சூரியன், ரதசப்தமி , எருக்க இலை, பீஷ்மர், ஞாயிற்றுக்கிழமை https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/ரத-சப்தமியன்று-எருக்க-இலைக்கொண்டு-ஸ்நானம்-செய்வது-ஏன்-3092605.html
3092602 ஆன்மிகம் செய்திகள் சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்,12-ல் நடை திறப்பு  DIN DIN Saturday, February 9, 2019 03:55 PM +0530  

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார். 

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோயில் நடை  திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து  5 நாட்கள் நடைபெறும் சிறப்பு  பூஜைகளுக்கு பின் 17-ம் 

தேதி  இரவு 10.30 மணித்துஅத்தாழபூஜைக்குபின் அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/சபரிமலை-ஐயப்பன்-கோயில்-மாசி-மாத-பூஜைக்காக-பிப்12-ல்-நடை-திறப்பு-3092602.html
3092105 ஆன்மிகம் செய்திகள் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 13 -ல் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம் Saturday, February 9, 2019 12:25 PM +0530
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் 13-ஆம் தேதி வருடாந்திர தெப்போற்சவம்  தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வரும் 13 முதல் 19-ஆம் தேதி வரை 7 தினங்களுக்கு வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உற்சவர்கள் தெப்பத்தில் வலம் வருவர். 

இவ்விழாவுக்காக கோயில் குளத்தில் உள்ள பழைய நீரை வெளியேற்றி சுத்தம் செய்து புதிய நீரை தேவஸ்தானம் நிரப்பியுள்ளது. மேலும் தெப்போற்சவம் நடைபெறும் தினங்களில் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் சார்பில் ஆடல், பாடல், ஹரிகதை, பஜனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குளக்கரையில் நடைபெற உள்ளன. 

தெப்பத்தில் வலம் வர உள்ள உற்சவர்கள் விவரம்:

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/திருப்பதி-கோவிந்தராஜ-சுவாமி-கோயிலில்-13--இல்-வருடாந்திர-தெப்போற்சவம்-தொடக்கம்-3092105.html
3092104 ஆன்மிகம் செய்திகள் திருமலையில் பிப்.19-இல் கருடசேவை Saturday, February 9, 2019 12:24 PM +0530
திருமலையில் வரும் 19ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. 

அதன்படி வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு அன்று  இரவு 7 மணி முதல்   9 மணி வரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

மேலும் அன்று குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/திருமலையில்-பிப்19-இல்-கருடசேவை-3092104.html
3092103 ஆன்மிகம் செய்திகள் வைத்திய வீரராகவர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் Saturday, February 9, 2019 02:46 AM +0530
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
இக்கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில் 9-ஆம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் குளத்தில் உற்சவர் வீரராகவர் எழுந்தருளியபோது அவருக்கு புனித நீராட்டல் சடங்கை அர்ச்சகர்கள் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று  புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு உற்சவர் விஜயகோடி விமானத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை வெட்டிவேர் சப்பரத்தில் உற்சவர் வீதியுலாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/வைத்திய-வீரராகவர்-கோயில்-தீர்த்தவாரி-உற்சவம்-3092103.html
3092016 ஆன்மிகம் செய்திகள் ராகு-கேது பெயர்ச்சி: திருப்பாம்புரத்தில் ஏற்பாடுகள் தீவிரம் DIN DIN Saturday, February 9, 2019 12:46 AM +0530
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள வண்டுசேர்குழலி உடனுறை அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள ராகு - கேது பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
ராகு-கேது பெயர்ச்சி பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அதாவது, விளம்பி ஆண்டு மாசி 1-ஆம் தேதி பிற்பகல் 2.02 மணிக்கு இராகு கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருப்பாம்புரம் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ராகு-கேது இருவரும் ஒரே உடலெடுத்து, இறைவனை வணங்கி அருள் பெற்ற தலம். எனவே, இத்தலத்தில் உள்ள இறைவன் மற்றும் இறைவியை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்குவதுடன், நினைத்த காரியம் கை கூடும் என்பது ஐதீகம். மேலும்  இங்கு ராகுவும், கேதுவும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். ராகு காலங்களில் இச்சன்னிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்றும் கூறுவர். 
இத்தகைய சிறப்புகள் நிறைந்த சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பிப்.12 முதல் பிப்.14-ஆம் தேதி வரை சிறப்பு யாகம், அபிஷேகம், அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. விழாவையொட்டி, கோயிலில் பந்தல் அமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பக்தர்களின் வசதிக்காக சுமார் 200 அடி நீளத்துக்கு இப்பந்தல் அமைக்கப்பட உள்ளது. மேலும், நெரிசலின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.  தவிர, தற்காலிக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 
பூஜை தொடர்பான விவரங்களுக்கு 0435-2469555, 8754756418 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/ராகு-கேது-பெயர்ச்சி-திருப்பாம்புரத்தில்-ஏற்பாடுகள்-தீவிரம்-3092016.html
3092015 ஆன்மிகம் செய்திகள் திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா கொடியேற்றம்: பிப்.19-இல் தேரோட்டம் Saturday, February 9, 2019 12:45 AM +0530
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. நிகழாண்டில் மாசி திருவிழா ஞாயிற்றுச்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12ஆம் திருவிழா மண்டபத்தில் பூஜை செய்யப்பட்டு யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஞாயிற்றுகிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக பிப் 14ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். ஏழாம் திருநாளான பிப் 16இல் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் கும்ப லக்கனத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். 
தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
எட்டாம் திருநாளான பிப். 17இல் காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும்போது, மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
பின்னர் முற்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.  ஒன்பதாம் திருநாளான பிப். 18இல் சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
தேரோட்டம்: பத்தாம் நாளான பிப். 18இல் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். பிப் 20ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும். 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/09/திருச்செந்தூர்-கோயிலில்-நாளை-மாசித்-திருவிழா-கொடியேற்றம்-பிப்19-இல்-தேரோட்டம்-3092015.html
3091943 ஆன்மிகம் செய்திகள் ஜோதிட ரீதியாக காதல் திருமணம் வெற்றி பெறுமா! பெறாதா? - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன் DIN Friday, February 8, 2019 04:41 PM +0530  

1. காதல் திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவர்களாகவே ஒருவரை ஒருவர் மனமார விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் இணைவு / பந்தம் ஆகும். இதனை ஜோதிடத்தில் காந்தர்வ திருமணம் என்று கூறுவர். அப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு திருமணப் பொருத்தம் பார்க்க அவசியம் இல்லை தான். காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. காதலிக்கும் இருவரின் மனப் பொருத்தம் ஒன்றையே கவனிக்க வேண்டும். 

2. காதல் கொள்பவர்கள், அவர்களின் பெற்றோர்களை, அவர்தம் கருத்துக்களை, விருப்பங்களை கேளாமல் அவர்கள் பிறந்த சாதி, மதம், பழக்க வழக்கம் இவற்றினை புறந்தள்ளி அவர்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் சொந்தம் / பந்தம் ஆகும். 

3. ஒரு ஆண் அல்லது ஒரு பெண் காதல் கொள்ள ஜாதகத்தில் குறிகாட்டுமா என்றால் நிச்சயம் குறி காட்டும் என்றே கூற முடியும். இதனை முன்கூட்டியே பெற்றோர்கள் அறிந்து வைத்துக் கொண்டால் தமது பெண், பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வுக்குப் பெற்றோர் தடை இல்லாமல் இருந்து இவர்களின் ஆசியோடு திருமணத்தை நடத்தி வைத்து விட்டால் நாம் பெற்று வளர்த்த நமது அருமை குழந்தைகள் தனிமைப்படாமல் குடும்பத்தோடு இணைந்து மகிழ்வோடு வாழலாம். பெற்றோர்களின் இறுதிக்காலமும் ஒரு இன்பமயமான சூழலுக்குக் கொண்டு செல்லும். ஜாதகத்தில் 5-ஆம் வீடு என்பது ஒருவரின் சம்பிரதாயங்கள் மற்றும் அவர் தம் பழக்க வழக்கங்களைக் குறிக்கும். இங்கு மத சம்பிரதாயங்களை 9ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும்.

4. சம்பிரதாயங்களைப் புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளைத் தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு.

5. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை / சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.

6. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ, செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பைப் பொறுத்தது.

7. காதல் திருமணத்தை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையைப் பெற்றோர்கள் முதலில் கைவிட வேண்டும். காதல் திருமணம் மட்டுமே நிலைக்கும் அமைப்பு சில ஜாதகங்களுக்கு உண்டு. பழங்கால நூல்களில் 7-ல் சனி இருந்து, செவ்வாய் அதனைப் பார்த்தால், அந்த ஜாதகர் தன்னைவிடத் தகுதி, குணம், ஒழுக்கம், அந்தஸ்தில் குறைந்தவரை திருமணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. (ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாயும், சனியும் பாபர்கள், எனவே இவர்களின் கூட்டு / தொடர்பு தாம் பிறந்த குடிக்கு / குலத்துக்கு கேடு செய்ய தூண்டும்.)

8. இங்கு, தகுதி குறைவானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது , ஜாதியை வைத்து அல்ல. ஏனென்றால் உயர்ந்த ஜாதியிலும் (உயர்குடி பிறப்பிலும்) குணத்தில் தகுதி குறைவானவர்கள் உண்டு.  

9. ஜோதிடத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி ஆகியவை ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும். செவ்வாய் நெருப்புக்கு உரியது. சனி நீருக்கு உரியது. எனவே, இந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்க்கும் அமைப்பு உள்ள ஜாதகர்களும், ஒரே வீட்டில் இருக்கப் பெற்ற ஜாதகர்களும், தங்கள் நிலை / தகுதிக்கு எதிரான முடிவுகளை எடுப்பர்.

10. ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தாலும், அதில் மணமுறிவு ஏற்பட்டு, பின்னர் பெற்றோர் பார்த்த வரனைத் திருமணம் செய்து இறுதி வரை ஒன்றாக வாழ வேண்டிய நிலையும் ஜாதக ரீதியாக அமையும். 

11. இது ஒருபுறம் என்றால், பெற்றோர் நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், தாமாகவே விரும்பிய வரனை 2வது திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஜாதக அமைப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர், என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

12. எனவே, எந்த மாதிரியான கிரக அமைப்பு உள்ளது என்பதை திருமண வயது நெருங்கும் துவக்கத்திலேயே ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போன்ற திருமணத்தை அமைத்து 
தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும். 

13. தனது பிள்ளைக்கு (ஆண் / பெண் இருபாலருக்கும்) காதல் திருமணம்தான் நடக்கும் என்ற கிரக அமைப்பு காணப்பட்டால், அவர்களது காதலை பெற்றோர்கள் எதிர்க்காமல், அது நல்ல வரனாக இருப்பின் (எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாத பட்சத்தில்)  அதனையே தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பதே நல்ல பலனைத் தரும். அல்லது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட உடல் சுகம் மட்டுமே கருதி பெற்றெடுத்தது போன்று பெற்றோர்களின் நிலை அமைந்து விடுமேயன்றி அன்புக்கும், பாசத்துக்குமான பிணைப்பு இல்லாமல் போய்விடலாம். 

14. காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றி யோசிப்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

15. காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகிவிடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. 

16. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. 

17. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டுஇருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்.

18. ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்கத்தில் மாறுபட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.

வெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்

1. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.

2.  9-ஆம் வீட்டில் அசுப கிரகம்.

3. ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும். மேலே கூறப்பட்டவை வெகு சிலதே. இன்னும் பல விதிகளும், இணைவுகளும் உள்ளது. 

அனுபவம் பெற்ற ஜோதிடரின் உதவியை நாடுதல் அவசியம். காதல் திருமணம் கைகூடாது என அறிந்த பின்னர் தாம் காதலிக்கும் பெண்ணை / ஆசைப்படும் பெண்ணை (ஒரு தலை காதல் ) நட்பு ரீதியாக அல்லது சகோதரி பாசத்தோடு விலகுவது ஒரு சிறந்த ஆணின் செயலாகும். வற்புறுத்தி தொல்லைகள் அளிக்காமல் இருப்பதே தாம் காதலித்த அந்த பெண்ணுக்கு அளிக்கும் ஒரு சிறந்த அன்பு பரிசாகும். இதனை, ஆண்  பெண் இருபாலரும் ஜோதிட ரீதியாக அறிந்து செயல்படுவது மனித குலத்துக்கு நாம் செய்யும் ஒரு பெரிய மானுட செயல் ஆகும். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு - 98407 17857 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/08/ஜோதிட-ரீதியாக-காதல்-திருமணம்-வெற்றி-பெறுமா-பெறாதா-3091943.html
3091927 ஆன்மிகம் செய்திகள் ராகுபகவான் எந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்றால் என்ன பலன்? DIN DIN Friday, February 8, 2019 02:43 PM +0530  

பொதுவான விதி என்னவென்றால் ராகு- கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் வீட்டுக்கதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது ஒரு பலமான அமைப்பு என்று கூறவேண்டும்.

மேஷ ராசியில் ராகுபகவான் அமர்ந்து தசையை நடத்தினால் யோகம் ஓரளவுக்கு குறைந்தாலும் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.

ரிஷப ராசியில் ராகுபகவான் நின்று தசையை நடத்தினால் ஏகப்பட்ட செலவினங்களை முன்னிட்டு செய்யப்படுபவை அவை: மாடு, கன்றுகள், வாகனங்கள் இவையெல்லாம் சேரும்.

கடக ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் சமூகத்தில் ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி வாகை சூடி, கெட்டிக்காரரென பெயரெடுப்பார்கள். ஜாதகருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தொல்லை கொடுக்கலாம் என்பதால் இந்த தசை முடியும் வரை ஜாதகர் உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

கன்னி ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் பெரியவர்கள் யாருக்காவது கண்டம் கொடுக்கத் தவறுவது இல்லை. ஆனால் கல்வி வளமும் அயல்நாட்டுப் பயணங்களும் அடிக்கடி நிகழும்.

மகர ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் நல்லவர்கள் வல்லவர்கள் என்று பெயரெடுக்கலாமே தவிர, பொருள் சேர்வது கடினம். அப்படி பொருள் சேர்ந்தாலும் பலருக்கு கொடுத்து விடுவார்கள். ஜாதகருடைய கணிப்பு கண்ணோட்டம் தவறிவிடும். தவறான நெறியற்ற வழிகளில் அறவே செல்லக்கூடாது.  இப்படிச் செய்தால் பெருத்த அவமானத்தைச் சந்திக்க நேரிடும்.

பொதுவாக, பலமற்ற ராகுபகவான் தன் தசை காலத்தில் குடும்பத்தில் வயது முதிர்ந்தவர் யார் இருந்தாலும் கண்டம் ஏற்படும். நாற்கால் ஜீவன்கள் தொலைந்து போகும். குடும்பத்தில் பிரிவினை உண்டாகும். சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க முடியது. இடம் விட்டு இடம் மாற வேண்டிய அவசியம் நிச்சயம் வரும். சிலருக்கு உட்கொள்ளும் மருந்தும் உணவும் கூட மயக்கத்தை உண்டு பண்ணிவிடும்.

பலமுள்ள ராகுபகவானின் தசையில் நல்ல வருவாய், சந்தோஷம், செல்வம், செல்வாக்கு ஆகியவைகள் அபரிமிதமாக உண்டாகும். தினங்களில் ராகுகாலம், எமகண்டம் ஆகியவை ராகு- கேது பகவான்களுக்குரியதாகும். தினமும் ராகு காலம் ஒன்றரை மணி நேரமும், எமகண்டம் ஒன்றரை மணி நேரமும் கொண்டு மூன்று மணி நேரத்தை ஒரு நாளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு வாரத்தில் இவர்களுக்கு 21 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேதுபகவான் ஞான மோட்சத்திற்குரிய காரகத்துவத்தைப் பெற்றுள்ளார். இதனால் லக்னத்திற்கு கடைசி ஸ்தானமாகியப் பனிரெண்டாமிடத்தில் கேதுபகவான் இருந்தால் அந்த ஜாதகருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஜோதிட விதி.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுமஹா தசை ஏழாவது தசையாக வரும். அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஐந்தாவது தசையாக வரும். 
 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/08/ராகுபகவான்-எந்த-ராசியில்-ஆட்சி-உச்சம்-பெற்றால்-என்ன-பலன்-3091927.html
3091916 ஆன்மிகம் செய்திகள் சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் DIN DIN Friday, February 8, 2019 01:03 PM +0530
கோயில் என்றாலே சைவர்களுக்குச் சிதம்பரமும், வைணவர்களுக்கு ஸ்ரீரங்கமுமே நினைவிற்கு வரும். அகிலம் முழுவதையும் படைத்து அந்த ஆனந்தத்தில் திளைத்து பொன்னம்பலம் என்று போற்றப்படும் அந்த சிதம்பரத்தில் ஆனந்த நடமாடுகிறார் நடராஜ பெருமான். இந்த சிதம்பரமே பூமியின் நடுபாகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தசமகாவித்யை பற்றிச் சொல்லும் “ஸ்ரீவித்யா உபாசனா”, இந்தக் கோயிலை பூதேவியின் இருப்பிடமாகக் குறிப்பிடுகிறது. 

நடராஜபெருமானின் சக்திக்கு மூலகாரணமாய் விளங்குபவள் ஸ்ரீ சிவகாமசுந்தரி. இத்திருத்தலத்தில் சிவகங்கைத் தீர்த்தக்கரையின் மேற்கு பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்திற்கும்,  தமிழ் தெய்வமாகப் போற்றப்படும் கந்த கடவுளின் திருக்கோயிலுக்கும் நடுவே கம்பீரமாக கலை அம்சங்களுடன் காமக்கோட்டம் என்றழைக்கப்படும் தனிக் கோயிலில் கொலுவிருக்கிறாள் அன்னை சிவகாமசுந்தரி. ஹயக்ரீவர், அகத்தியர், லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி, உபமன்யு போன்ற முனிவர்களும் யோகிகளும் ஆனந்த கூத்தனையும், அன்னை சிவகாமியையும் வழிபட்டுப் பேரானந்தப் பெரும் பேற்றை அடைந்திருக்கின்றனர். சக்தி பீடங்களில் ஒட்யாண பீடமாக இத்திருத்தலம் விளங்குகிறது.

சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான பாஷ்யத்தை எழுதினார். அதுமட்டுமல்லாமல், ஆதிசங்கரருக்கு, கேனோபநிஷத்தில் வரும் ‘உமாம் ஹைம வதீம்’ என்ற பதத்திற்கான பொருளில் ஐய்யமேற்பட்ட நிலையில் அம்பிகை அவர்முன் தோன்றி “நானே” என்று கூறி, அவரது ஐயத்தைத் தீர்த்ததாகக் கூறுவர்.
இப்படி பலருக்கும் அருள் சுரந்து, தன் பக்தர்களைக் காத்தருளும் அம்பிகை தன் கோட்டத்தில் மின்னும் கிரீடமும், அழகான மூக்குத்திப் புல்லாக்கும் தங்கவளையல்களும் தண்டையும் கொலுசும் மெட்டியும் பட்டாடையும் அணிந்து மஞ்சள் குங்கும திலகத்துடன், வலக்கையில் அக்ஷ மாலையும் இடக்கையில் கிளியும் தாங்கி மங்கள வடிவினளாக, அழகே உருவாக, புன்னகை சிந்தும் முகத்துடன், அருள்பாலிக்கிறாள். அவளுடைய அழகைக் காண கண் கோடி வேண்டும்.

இத்திருத்தலத்தில் அம்பிகை முன் நந்திதேவர் காட்சி தருகிறார். உட்பிரகாரத்தில்  சப்தமாதர்களையும், அத்யயன கணபதி, ஆறுமுகப் பெருமான், மற்றும், சண்டிகேஸ்வரியையும் தரிசிக்கலாம். சித்திரகுப்தரும் நடுக்கந் தீர்த்த விநாயகரும் காட்சி தருகின்றனர்.

இத்திருத்தலத்து அம்பிகையைப் போற்றி இயற்றப்பட்ட, சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமவல்லி விருத்தம், சிவகாமியம்மை கலிவெண்பா, சிவகாமியம்மை அந்தாதி, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, சிவகாமியம்மை அகவல், சிவகாமியம்மை ஊசல், சிவகாமியம்மன் துதி போன்ற பல நூல்கள் அம்பிகையின் பெருமையைக் கூறுகின்றன. 

இத்தகு பெருமை பெற்ற ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகையின் ஆலயத்திற்கு வரும் 11.02.2019 அன்று (ஸ்ரீ விளம்பி வருஷம், தை மாதம் 28ம் தேதி), திங்கட் கிழமை, காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், மீன லக்னத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும், ஸஹஸ்ர போஜனத்துடனும் நடைபெறுகிறது.

அம்பிகையின் பக்தர்களான நாம் யாவரும் இந்த மஹா வைபவத்தில் கலந்து கொண்டு, பதினாறு பேறுகளும் பெற்று, அம்பிகையின் அருளுடன் நோய் நொடிகளற்ற ஆனந்தமான நல்வாழ்வு பெறுவோமாக!

N. Balasubramanian, Flat No.5, Raj villa, Door No.6, Rama Rao Road, Mylapore, Chennai 600004. Mobile: 9444016789.

- எஸ். வெங்கட்ராமன்

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/08/சிதம்பரம்-ஸ்ரீ-சிவகாம-சுந்தரி-ஆலய-அஷ்டபந்தன-மஹா-கும்பாபிஷேகம்-3091916.html
3091904 ஆன்மிகம் செய்திகள் இந்த வாரம் திடீர் தனவரவு எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா? Friday, February 8, 2019 12:53 PM +0530 12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.8 - பிப்.14) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீ ராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை  உயரும். சகோதரி உறவில் சற்று விரிசல்கள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச் சுமை குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். 

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் காண்பார்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுக்கவும். மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தவும்.

பரிகாரம்: ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பணவரவு தாராளமாக இருக்கும். செயல்களை குறைவில்லாமல் முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களின் உதவியை  எதிர்பார்க்க முடியாது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். ஊதிய உயர்வுக்கு வழி உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். வயல்களை விரிவு படுத்தும் எண்ணம் மேலோங்கும்.

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரம். யாரையும் நம்பி விட வேண்டாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கை
நழுவிப் போகும். சக கலைஞர்களிடம் நட்பு பாராட்டவும். 

பெண்மணிகள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும்.

பரிகாரம்: திங்களன்று பார்வதி தேவியை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் கவனமாக நடந்துகொள்ளவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களை பயிரிட்டு  லாபம் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும். பணவரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுபடுவதைத் தவிர்க்கவும். 

மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.

பரிகாரம்: மேற்கு பார்த்த விநாயகரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணவரவு சரளமாக இருக்கும். கொடுத்தவாக்கை எப்படியும் நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சீர்படும். எவருக்கும் முன்ஜாமீன் போடுவது கூடாது. குடும்பத்தில் சிரமங்கள் குறைந்து  மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களும் மனக்கசப்பு நீங்கி நட்பாக நடந்துகொள்வர். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களாலும் கால்நடைகளாலும் வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மையுண்டாகும். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப் பேச வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் உங்கள் ரகசியங்களை மனம் திறந்து வெளியாரிடம் பேச வேண்டாம். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி காண்பர். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: "நமசிவாய' பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்:10, 11.  

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும்.  வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை சிறிது குறையும். மனோபலத்தைப் பெருக்கிக் கொண்டு செயல்படவும். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிது ஈடுபாடு குறையும். வேலைகளை நன்றாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவிற்கு குறைவு வராது. வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி  வருமானம் பெருகும். சிலருக்கு பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.  

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்சமயம் உள்ள நிலையை பயன்படுத்தி நற்பெயர் எடுக்க முயலவும். கலைத்துறையினருக்கு பல நாட்களாகத் தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடிவடையும். 

பெண்மணிகள் சேமிப்பை எடுத்துச் செலவு செய்ய நேரிடும். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவதரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: 8, 9, 10. 

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். நீங்கள் துணிச்சலுடன் செய்யும் செயல்கள் வீண்போகாது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் திருப்திகரமாக முடியும். விளைபொருள்களின் விற்பனையால் லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு மனச்சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். தொண்டர்களின் ஆதரவு குறைந்திருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

பெண்மணிகள் எல்லோருடமும் அனுசரித்துச் செல்லவும். கணவரிடம் ஒற்றுமையோடு பழகவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் "கந்தசஷ்டி கவசம்' படித்து கந்தனை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 9, 13. 

சந்திராஷ்டமம்: 11, 12. 

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை ஏற்ற இறக்கமாக காணப்படும். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை சீராக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்யவும். மேலதிகாரிகள் சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும்.  விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் மீது வீண் பழி விழும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று, உங்கள் செயல்களைச் செய்யவும். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

பெண்மணிகளுக்கு பேச்சில் கவனம் தேவை. கணவருடன் சுமுக உறவு நீடிக்கும். மாணவமணிகள் பெற்றோர்களின் சொல்கேட்டு நடந்தால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். 

பரிகாரம்: ராமபக்த அனுமனை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 11. 

சந்திராஷ்டமம்: 13, 14.  

{pagination-pagination}
விருச்சிகம்(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெற்றிகள் சூழும். கடமைகளைச் சரிவரச் செய்து விடுவீர்கள். வீண் அலைச்சல்கள் ஏற்படும். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் ஏற்படாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். பொருள்களின் விற்பனை நன்கு நடைபெறும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவார்கள்.  

அரசியல்வாதிகள்எத்தகைய சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனே செயல்படுத்த வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து பணவரவைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் மேலோங்கும். மாணவமணிகள் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரிடம் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான வாரமிது. உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். பொருளாதார நிலைமை அபிவிருத்தி ஏற்படும். வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் வெற்றிவாகை சூடுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். எதிரிகளின் மூலம் இருந்து வந்த சங்கடங்கள் குறையும். செயல்களை வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடையமுடியும். முயற்சிகள் எதிர்காலத்தில் நற்பலனைத் தரும்.

பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பர். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எல்லாவிதமான பிரச்னைகளும் அகலும். உறவினர்களால் நன்மையடைவீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். பேச்சில் உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது. உங்கள் அறிவும் ஆற்றலும் பிரகாசிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் குத்தகை நிலுவைகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டி வரும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். முக்கிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகள் இருக்கும். புகழைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். மாணவமணிகள் விளையாட்டில் நேர்த்தியுடன் ஈடுபடுவார்கள். நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செயல்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய காலகட்டமாகும். குடும்பத்தில் எதிர்பார்த்து காத்திருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கெதிரான வழக்குகள் சாதகமாக முடியும். 

உத்தியோகஸ்தர்களுக்கு குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரும். சக ஊழியர்களும் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். நண்பர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் தொடரும்.

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.  உட்கட்சிப்பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வார்கள். 

கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். குழந்தைகளும் உங்களுக்கு ஏற்றவாறு அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்திப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். பிரதோஷ காலத்தில் சுவாமியை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 13.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் செயல்களில் இருந்துவந்த முட்டுக்கட்டைகள் விலகி, நன்மைகள் அதிகரிக்கும். வருமானம் கூடும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவார்கள். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் சமாளிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். 

அரசியல்வாதிகள், தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். மேலிடத்தின் பார்வையிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். வருமானம் குறைந்து காணப்படும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீர்படும். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் விளையாட்டின்போது கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 13, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/08/இந்த-வாரம்-திடீர்-தனவரவு-எந்த-ராசிக்காரர்களுக்கு-தெரியுமா-3091904.html
3091907 ஆன்மிகம் செய்திகள் கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) Friday, February 8, 2019 11:39 AM +0530 2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் வழக்கத்திற்கு மாறாக சற்று கூடுதலாகவே அமையும். பேச்சில் கம்பீரமும் முகத்தில் வசீகரமும் உண்டாகும். சமூகத்தில் பிரபலஸ்தர்கள் ஆவீர்கள். சிலருக்கு அரசாங்க பாராட்டு மற்றும் விருதுகளும் கிடைக்கும். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழும் பாக்கியம் உண்டாகும். அனைத்திலும் முழுமையான வெற்றி கிடைக்கும். எதிரிகளும் எதிர்ப்புச் சக்திகளும் இருக்காது. 

சோர்வு, இயலாமை யாவும் அடியோடு நீங்கி சகஜ நிலை உருவாகும். போட்டி பொறாமைகளும் நீங்கி சமரசமாகக் கூடிய சூழ்நிலை உருவாகும். பகைவர்களும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்டகால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். நெடுநாளாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் உடனடியாக நடக்கும். சிலருக்கு நீண்ட தூரப்பயணங்கள் செய்ய நேரிடும். 

சிறிதளவு முதலீடு செய்து பெரிதளவு லாபத்தைப் பார்க்கும் தொழிலை தொடங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். சிலர் சொகுசான வண்டி வாகனங்களை வாங்குவார்கள். நுணுக்கமான அறிவாற்றலால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளை நன்கு பரிசீலித்த பிறகே செயல்படுத்துவீர்கள். செயல்களில் படிப்படியாக வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்கள், கூட்டாளிகளுடன் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  வருமானம் நன்றாக இருக்கும். எதிர்காலத்தை வளமாக்கும் திட்டங்களை அடையாளம் கண்டு அவைகளில் முதலீடு செய்வீர்கள். 

வழக்குகளிலும் எதிர்பார்த்த சாதகமான திருப்பங்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் அசையும் அசையாச் சொத்துகள் சேரும் பாக்கியமும் உண்டு. பெயர், புகழ் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளில் நன்மையும் ஏற்றங்களும் உண்டாகும். உதவி ஆதரவு கேட்பவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சில தியாகங்களைச் செய்வீர்கள். 

எதிர்ப்போர்களை எதிர்த்துப்போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகளும் தேடிவரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உபரி நேரங்களில் யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். உழைப்பு இருமடங்கு லாபம் தரும். 

வியாபாரத்தைப் பெருக்க பல இடங்களுக்கும் பிரயாணம் செய்வீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். சிலருக்கு பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபங்களும் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய குத்தகைகளைப் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் தேடிவரும். அரசாங்க அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு முகத்தில் பொலிவும் மலர்ச்சியும் காணப்படும். சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தோர் வளம் காண்பார்கள். திடீர் பயணங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தரும். பணியில் உள்ள பெண்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு ரத்தசோகை நோய் உண்டாகலாம்.  மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் கிடைக்கும். சிறிய முயற்சிகளில் பெரிய வெற்றிகளை அடைவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராக இருந்தாலும் சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். கற்பனை சக்தி கூடும். புதிய முதலீடுகளில் அறிவைத் துணைகொண்டு செய்து வெற்றி பெறுவீர்கள். சில எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடிவருவார்கள். உடல்வளம் மனவளத்தை மேம்படுத்த யோகா செய்வீர்கள். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். 

மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். குழந்தைகள் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதை அழுத்திக்கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். வழக்குகளிலும் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத காரியங்களைப் பற்றி புரிந்துக்கொண்டு அதை விட்டுவிடுவீர்கள். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். கூட்டாளிகளும் நண்பர்களும் நல்வழி காட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிகளும் நல்ல முறையில் கைகொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குடும்பத்தாருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கு உயர்ந்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். பிடிவாதங்களைத் தளர்த்திக்கொண்டு சுமுகமான உறவை அனைவரிடமும் வைத்துக் கொள்வீர்கள். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். 

பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். செயல்களைச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிச் செய்து வெற்றி பெறுவீர்கள். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டு செயலாற்றி வெற்றி இலக்குகளை எட்டுவீர்கள். தவறாகப் புரிந்துக்கொண்டிருந்த நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். சட்டப்பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் அவற்றை திட்டமிட்டும் மகிழ்ச்சியுடனும் செயல்படுத்தி எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவார்கள். சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகி குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியில் இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவாகும். சிலர் பணிகளை சரிவர செய்யாமல் சிறிது சரிவுக்கு ஆளாவர். கவனமாக உழைத்து மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் திருப்திகரமாக இருக்கும். 

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கிவிடும். விட்டதைப் பிடிக்க முயற்சி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் ஆலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம். செய்தொழிலில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டிவிடுவீர்கள். விவசாயிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நீர்வரத்து அதிகமாக காணப்படுமாகையால் தகுந்த நேரத்தில் விதைத்து வளமையை கூட்டிக்கொள்ளவும். விளைபொருள்களின் விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெற முடியாமல் போகலாம். 

அரசியல்வாதிகள் மீது சில எதிர்கட்சியினர் அவதூறுகளை சுமத்த நினைப்பார்கள். இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையுடன் நிலைமைக்குத் தக்கவாறு நடந்துகொள்வது நல்லது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடைகளுக்குப்பிறகு நிறைவேறும். ரசிகர்களின் ஆதரவு இருக்கும். 

பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாக இருக்க பழகிக் கொள்ளவும். மனதில் பட்டதை உடனுக்குடன் பேசுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நடக்க வேண்டிய சுப நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அதனால் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் விளையாடலாம். 

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

துலாம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானத்தில் எந்த ஒரு குறையும் ஏற்படாது. புதிய வருமானத்திற்குரிய யுக்திகளைத் தேடுவீர்கள். மூடிவிடலாம் என்று நினைத்திருந்த தொழிலை மீண்டும் புதுப்பித்து நடத்தத் தொடங்குவீர்கள். அரசாங்கச் சலுகைகளைச் சிரமமின்றி பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே நிறைவேறும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளின் கல்வி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் பெயர், புகழ் உயரும். 

அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். நேர்முக மறைமுக எதிர்ப்பு என்று எதுவும் வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்தும் வருமானம் வரத்தொடங்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் பிஸியாகக் காணப்படுவீர்கள். வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்துமுடிக்கும் காலகட்டமாக அமைகிறது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நிரம்பக் கிடைக்கும். இதனால் அனைத்து காரியங்களும் பிரச்னை இன்றி முடிவடையும். அனைத்து விஷயங்களும் அனுகூலமாக நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் குதூகலமும் காணப்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை முழுமையாக அடைத்து விடுவீர்கள். எதையும் சிந்தித்து நிதானமாகப் பேசுவீர்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் ஒருமித்து அன்யோன்யமாகப் பழகுவீர்கள். 

சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளின் நலன் கருதி புதிய திட்டங்களை கையில் எடுப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும். அரசாங்கத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் சலுகையும் கிடைக்கும். நீண்டகால நோய்கள் குணமாகும். குழந்தை இல்லாத வீட்டில் மழலைச் செல்வங்கள் கொஞ்சி விளையாடும். சிலர் புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வார்கள். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். உங்கள் தைரியத்தை அனைவரும் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலை சம்பந்தப்பட்ட பயணங்களால்  நன்மை உண்டாகும்.  உங்கள் தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்காமலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய விற்பனை யுக்திகளைப் புகுத்தி விற்பனையை பெருக்குவார்கள். 

வெளியில் கொடுத்திருந்த பணம் கைவந்து சேரும். புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு கூடினாலும் தைரியத்திற்குக் குறைவு வராது. இதுதான் பராக்கிரம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மகிமை. செயல்கள் படிப்படியாக நல்ல பலன்களைக் கொடுக்கும். கால்நடைகளையும் நல்ல முறையில் பராமரிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே முன்போலவே இருக்கும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முதல் தரமான வெற்றியை காண்பார்கள். படிப்பில் முன்னேற்றகரமாக ஈடுபட்டு தேர்வில் வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பல்வேறு பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு செல்லாக்காசு போல் இருந்தவர்கள் மதிப்பு கூடி பொலிவுக்கு மாறுவீர்கள். 

செல்வம் செல்வாக்கு இரண்டும் உயர்வைப் பெறும். செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பைப் பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி, திருமணம், வேலை ஆகியவை குறைவின்றி சுபமாக நடந்தேறும். ஏட்டளவில் இருந்த செயல்கள் இந்த காலகட்டத்தில் செயலளவில் நடைபெற ஆரம்பிக்கும். 

ஆன்மிகத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். சேமிப்பும் சிறுக சிறுக உயரத்தொடங்கும். செய்தொழிலை விரிவு செய்ய சிறு பயணங்களை அடிக்கடி செய்ய நேரிடும். போட்டியாளர்கள் அடங்கி நடப்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சகஜ நிலை உருவாகும். 

கைநழுவிப்போன பொறுப்புகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வீடு கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் அதை கட்டி முடித்து கிரகபிரவேசமும் செய்வார்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ச்சியைக் கூட்டுவார்கள். சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் கேட்காமலேயே உதவிகளைச் செய்வீர்கள். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கவலைகள் யாவும் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிறையத் தொடங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதனால் வருமானமும் வரத் தொடங்கும். தள்ளி வைத்திருந்த பயணங்களையும் மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வகையில் இருந்த விரோதங்கள் மறைந்து உறவு மேம்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய கடன்களை வாங்கி அசையாச் சொத்துகள் வாங்குவீர்கள். உங்களை கண்டும்காணாமல் இருந்தவர்கள் வரவேற்று உபசரிப்பார்கள். 

செல்வாக்கும் உயரக் காண்பீர்கள். பேச்சு வார்த்தைகளில் எந்தக் குறைவும் இருக்காது. உங்களை விட உங்கள் குடும்பத்தினர் முன்னேற்றம் பெறுவர். செய்தொழில் சீராக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் அதற்கு புதிய மெருகு கொடுத்து நல்லவிதத்தில் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். வாயு வாதம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இக்காலகட்டத்தில் உண்வு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பதும் தக்க மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதும் அவசியமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக சுமை இருப்பதால் வேலையை மாற்றலாமா என்கிற எண்ணம் அவ்வப்போது  தோன்றும். உத்தியோகத்தை விட்டு விடக்கூடிய நிலைமை ஏற்படாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்கும். பொறுமையுடன் உழைப்பீர்கள். வருமானத்திற்கு எந்த குறைவும் இருக்காது. 

வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கடன்கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள்.  

அரசியல்வாதிகள் எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டுச் செயல்படுத்தவும். அவசரச் செயல்கள் அவப்பெயரை உண்டாக்கி விடலாம். வயதில் முதிர்ந்தவர்களையும் அனுபவஸ்தர்களையும் அனுசரித்து ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது  கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருப்பதால் புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவுகளை உயர்ந்தோரைச் சந்தித்து எடுக்கவும். சக கலைஞர்களை பகைத்துக்கொள்ளாமல் இருக்கவும். 

பெண்மணிகள் தங்கள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தக்கவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். வருங்கால கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்) 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/08/ராகு---கேது-பெயர்ச்சி-பலன்கள்--2019-சிம்மம்-கன்னி-துலாம்-விருச்சிகம்-3091907.html
3091234 ஆன்மிகம் செய்திகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சிலையில் விரிசல்: வதந்தியால் பரபரப்பு DIN DIN Thursday, February 7, 2019 03:03 PM +0530
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுரத் தூணில் உள்ள பெண் மங்கை சிலையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக பக்தர்கள் கூறிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் முக்கியப் பிரமுகர்கள் செல்லும் கோபுரமாக கருதப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் பெண் மங்கைகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பெண் மங்கை சிலையின் மார்பகத்துக்கு மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பக்தர்கள் புதன்கிழமை கண்டறிந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் தலைமையிலான அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பெண் மங்கை சிலையில் மார்பகங்களின் மேல் பகுதியில் லேசான விரிசல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறியதாவது:

இந்த விரிசல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால், கோயில் கோபுரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இதை ஒருசிலர் கோவிலுக்கு எதிராக வதந்தி பரப்பியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/திருவண்ணாமலை-அருணாசலேஸ்வரர்-கோயில்-சிலையில்-விரிசல்-வத-3091234.html
3091232 ஆன்மிகம் செய்திகள் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றம்  Thursday, February 7, 2019 02:53 PM +0530
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இதையொட்டி நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரன் முன் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். தனுசு லக்னத்தில் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 

தொடர்ந்து கேடய உற்சவம், கற்பகவிருட்சம் காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பிப்.,11-ல் திருக்கல்யாண உற்சவமும்,12-ல் தேரோட்டத் திருவிழாவும் நடைபெறுகிறது. 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/செய்யாறு-வேதபுரீஸ்வரர்-கோயிலில்-ரதசப்தமி-பிரமோற்சவ-விழா-கொடியேற்றம்-3091232.html
3091218 ஆன்மிகம் செய்திகள் பழனி மாரியம்மன் கோயிலில் பிப்.19-ம் தேதி திருக்கல்யாண வைபவம் DIN DIN Thursday, February 7, 2019 12:24 PM +0530  

பழனி மாரியம்மன் கோயிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. 

பழனி முருகன் கோயிலின் உபகோயிலாக மாரியம்மன் கோயில் திகழ்கிறது. பழமை வாய்ந்த இந்தக்கோயிலில் அம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 1-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. 

பிப்.12-ம் தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 19-ம் தேதி திருக்கல்யாணமும், 20-ம் தேதி தேரோட்டமும், 21-ம் தேதி விழா நிறைவடைகின்றது. 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/பழனி-மாரியம்மன்-கோயிலில்-பி19-ம்-தேதி-திருக்கல்யாண-வைபவம்-3091218.html
3091212 ஆன்மிகம் செய்திகள் திருநள்ளாறில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம் DIN DIN Thursday, February 7, 2019 11:17 AM +0530  

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. 

திருநள்ளாறு என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது பரிகார தலமான சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வரும் தர்பாரண்யேஸ்வரர்திருக்கோயில் தான். பிரசித்தி பெற்ற அந்தத் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 11-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 

கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவரும், கோயில் நிர்வாக அதிகாரியும் செய்து வருகின்றனர். 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/திருநள்ளாறில்-கும்பாபிஷேகத்தையொட்டி-யாகசாலை-பூஜைகள்-இன்று-தொடக்கம்-3091212.html
3091206 ஆன்மிகம் செய்திகள் சென்னை, மாம்பலத்தில் தியாகராஜருக்கு ஆராதனை உற்சவம்  DIN DIN Thursday, February 7, 2019 11:07 AM +0530  

மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன் கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க, தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் - பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து 1952-ம் ஆண்டு ஸ்ரீசத்குரு கான நிலையம் என்று தொடங்கினார் மிருதங்க வித்வான் நாகை சௌந்தர்ராஜன். 

கடந்த ஆண்டு வரை ஆண்டுதோறும் தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவமும் நடத்தி வந்தார். தியாகராஜரின் மீதும் இசையின் மீதும் அளவில்லா பற்று கொண்ட அவர் சில மாதங்களுக்கு முன் பரமபதம் அடைந்தார். 

65 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் ஆராதனை உற்சவம் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்பார். இந்த உற்சவத்தில் பிரதான ஆராதனை இவரது தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான். இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது. 

இந்த ஆண்டு பிப்ரவரி 09 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய இரண்டு நாட்கள் ஆராதனை நடைபெறுகிறது. மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் அமைந்திருக்கும் பாண்டியன் ஹாலில் விமரிசையாக நடக்க இருக்கிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்தியவர். இவரது பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன், பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம், திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு வந்து மகிழ்ச்சியாக தியாகராஜரை ஆராதிக்கின்றனர். 

துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார், மியூசிக் அகாதமி, கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள். 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/சென்னை-மாம்பலத்தில்-தியாகராஜருக்கு-ஆராதனை-உற்சவம்-3091206.html
3090694 ஆன்மிகம் செய்திகள் வைத்திய வீரராகவர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு DIN DIN Thursday, February 7, 2019 02:48 AM +0530 தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த ஜன. 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார். 
 விழாவின் 7-ஆவது நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் வீரராகவ பெருமாள் பல வண்ணங்களால் ஆன சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் எழுந்தருளினார். காலை 8 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்து திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் பனகல் தெரு, குளக்கரை வீதி, பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, மோதிலால் தெரு வழியாகச் சென்று, மீண்டும் நிலையை தேர் வந்தடைந்தது. 
 விழாவில், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/வைத்திய-வீரராகவர்-கோயில்-தேரோட்டம்-திரளான-பக்தர்கள்-பங்கேற்பு-3090694.html
3090693 ஆன்மிகம் செய்திகள் நாளை ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் ஆண்டு விழா தொடக்கம் DIN DIN Thursday, February 7, 2019 02:48 AM +0530
ராணிப்பேட்டை, சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலின் 8-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.
இதில் சபரிமலை தந்திரி குமாரர் பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி, வீரமணி ராஜு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் கூறியது: கோயிலின் 8-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் சபரிமலை தந்திரி குமாரர் பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி கலந்துகொண்டு மகா ம்ருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம், 18-ஆம் படி பூஜை உள்ளிட்ட ஐயப்பனுக்கு உகந்த சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகளை செய்யவுள்ளார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.


 

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/நாளை-ஸ்ரீநவசபரி-ஐயப்பன்-கோயில்-ஆண்டு-விழா-தொடக்கம்-3090693.html
3090692 ஆன்மிகம் செய்திகள் உண்டியல் காணிக்கை ரூ. 2.43 கோடி DIN DIN Thursday, February 7, 2019 02:47 AM +0530
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.43 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 19 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 12 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 4 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ. 1லட்சம் என மொத்தம் ரூ. 19 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

58,203 பக்தர்கள் தரிசனம்
  ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 58,203 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 14,926 பேர் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு காத்திருப்பு அறையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 2 மணி நேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர். 
 செவ்வாய்க்கிழமை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,546 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 4,910 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 15,990 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 726 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

சோதனைச் சாவடி வசூல் ரூ. 1.79 லட்சம்
 அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு 12 முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 70,216 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 9,004 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. 
அதன் மூலம் ரூ. 1.79 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 22,220 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/உண்டியல்-காணிக்கை-ரூ-243-கோடி-3090692.html
3090691 ஆன்மிகம் செய்திகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் இணை அதிகாரி Thursday, February 7, 2019 02:47 AM +0530
 திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி செயல் இணை அதிகாரியாக லட்சுமிகாந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. அதன்படி, தேவஸ்தான செயல் இணை அதிகாரியாக இருந்து வந்த போலா பாஸ்கர் சமூக நலத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு பதிலாக ஆந்திர அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த லட்சுமி காந்தம் தேவஸ்தான செயல் இணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஆந்திர அரசு 
புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/திருப்பதி-தேவஸ்தானத்துக்கு-புதிய-செயல்-இணை-அதிகாரி-3090691.html
3090660 ஆன்மிகம் செய்திகள் 13-இல் நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி Thursday, February 7, 2019 01:19 AM +0530
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள கேது பகவான் பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறுகிறது. 
நாகை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செளந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் நவகிரங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேது பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவர், ஞானகாரன் என்றும் ஞானமோட்சத்துக்கு அதிபதியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். ராகு பகவானுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவதுபோல், கேது பகவானை ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டால் பக்தர்கள் எல்லா வளமும் பெறலாம் என்பதும், கேது பகவானை வழிபட்டால் செல்வச் செழிப்பு, திருமணத்தடை, கடன் நிவர்த்தி உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்பதும் ஜதீகம். 
பல்வேறு சிறப்புகளை கொண்ட கேதுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம். நிகழாண்டு, கேது பெயர்ச்சி பிப்ரவரி 13-ஆம் தேதி பகல் 2.04 மணிக்கு மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கேது பெயர்ச்சியின்போது மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். கேது பெயர்ச்சியையொட்டி, யாக பூஜைகளும், சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் ஜீவானந்தம், செயல் அலுவலர் அன்பரசன், தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/07/13-இல்-நாகநாத-சுவாமி-கோயிலில்-கேது-பெயர்ச்சி-3090660.html
3090608 ஆன்மிகம் செய்திகள் நாகூர் ஆண்டவர் தர்கா 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் Thursday, February 7, 2019 12:27 AM +0530
நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா புனித கொடியேற்றம் புதன்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தர்காக்களுள் ஒன்றாக விளங்குகிறது நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 462-ஆவது ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கொடி ஊர்வலம்:  முன்னதாக, நாகையிலிருந்து நாகூர் வரை கொடி  ஊர்வலம் நடைபெற்றது. நாகை  பேய்க்குளம் (மீராபள்ளி) பகுதியிலிருந்து புதுப்பள்ளித் தெரு, சாலாப்பள்ளித் தெரு, நூல்கடைத் தெரு,   ஹத்தீப் லெப்பைத் தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, மருத்த