Dinamani - இந்தியா - https://www.dinamani.com/india/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3079590 இந்தியா ஜாகீர் நாயக் குடும்பத்தினரின் ரூ.16.40 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை DIN DIN Sunday, January 20, 2019 05:01 AM +0530 சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.16.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் ஜாகீர் நாயக்கின் குடும்பத்தினரின் பெயர்களில் உள்ள சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள ஃபாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ் ஆகிய கட்டடங்கள், மும்பை பாந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம், புணேவில் என்கிரேஸியா என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஆகிய சொத்துகள் முடக்கப்படுகின்றன. 

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16.40 கோடியாகும். இந்தச் சொத்துகள், ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி, ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜாகீர் நாயக்குக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.50.49 கோடியாகும். வழக்கில் குற்றம்சாட்டப்படும் ஒருவர், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளில் இருந்து பலனடைவதைத் தடுப்பதற்காகவே, அவர்களின் சொத்துகள் முடக்கப்படுகின்றன. ஜாகீர் நாயக் மீதான வழக்கில், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனரான ஜாகீர் நாயக், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறினார். அவர் மீது பயங்கரவாதத்தை தூண்டியது, கருப்புப் பண மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. 

அவர் மீதான குற்றச்சாட்டுகளை தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மும்பை நீதிமன்றத்தில் ஜாகீர் நாயக் உள்ளிட்டோருக்கு எதிராக தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: 

ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா, சுஃபி முஸ்லிம்கள் ஆகியோரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன் ஜாகீர் நாயக் பேசினார். அவரது பேச்சுகளை அதிகம் வெளியிட்டதில் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ஐஆர்எஃப்), ஹார்மோனி மீடியா ஆகியவற்றுக்கு பெரும் பங்கு உள்ளது. இதற்காக, இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளார் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகீர் நாயக், வழக்கு விசாரணையைத் தவிர்க்கும் நோக்கில் இந்தியா வர மறுத்து வருகிறார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/ஜாகீர்-நாயக்-குடும்பத்தினரின்-ரூ1640-கோடி-சொத்துகள்-முடக்கம்-அமலாக்கத்-துறை-நடவடிக்கை-3079590.html
3079807 இந்தியா பாஜக அரசை வீழ்த்துவோம்: கொல்கத்தா மாநாட்டில் எதிர்க்கட்சிகள் சூளுரை DIN DIN Sunday, January 20, 2019 04:52 AM +0530 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.  மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் "ஒன்றுபட்ட இந்தியா' என்ற பெயரில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பேசினர்.  அதேபோன்று பாஜக அதிருப்தி தலைவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். தலைவர்களின் பேச்சு விவரம்:

தேவெ கெளடா-முன்னாள் பிரதமர் (மதச்சார்பற்ற ஜனதா தளம்): வலிமை மிகுந்த தேசத்தை கட்டமைக்க நிலையான அரசு தேவையானதாகும். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் 282 இடங்கள் கிடைத்தும்கூட, பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தேசத்தைக் கட்டமைப்பதை விடுத்து, நாட்டின் மதச்சார்பற்ற சூழலை அழிக்க வேண்டும்; அனைத்து அரசு அமைப்புகளையும் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

கூட்டணி அரசு என்பது நிலையற்றதாக இருக்கும்; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது என மோடி கூறி வருகிறார். ஆனால், நிலையான அரசை அமைத்து தேசத்தை பலப்படுத்த முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து, பாஜகவை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்): பாஜக ஆட்சியில், நாட்டின் அரசு அமைப்புகள் மற்றும் பொருளாதார அமைப்புகள் சிறுமைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக, வரும் தேர்தல் அமையும். எதிர்க்கட்சிகளாகிய நாம் ஒன்றிணையாத வரையில்,  மோடி, அமித் ஷா ஆகிய இருவரின்  ஜனநாயக விரோத செயல்களையும்,  மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். 

ஊழல் குறித்து பேசுகையில் "நானும் சாப்பிட மாட்டேன்; பிறரையும் சாப்பிட விட மாட்டேன்' என மோடி அவ்வபோது கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நடப்பது என்ன! மோடி சாப்பிடுவதில்லை; இருப்பினும் அதானி, அம்பானி போன்ற அவரது கார்ப்பரேட் நண்பர்களை அவர் பலனடைய வைக்கிறார். 

சந்திரபாபு நாயுடு-ஆந்திர முதல்வர் (தெலுங்கு தேசம்): இந்நாட்டின் பிரதமர் விளம்பரப் பிரியராக இருக்கிறார். திறன் கொண்ட பிரதமராக அவர் இல்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால்,  விவசாயிகள் தற்போது தற்கொலை செய்து வருகின்றனர். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரி அமலாக்கம் ஒரு மோசடி திட்டம். பொருளாதார வளர்ச்சி பின்தங்கியிருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. 
பாஜக, மக்களை பிளவுபடுத்தி வருவதுடன் மலிவான அரசியலை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் பழிவாங்குவதற்காக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

கேஜரிவால்-தில்லி முதல்வர் (ஆம் ஆத்மி): மக்களவைத் தேர்தலில் மோடி - அமித் ஷா அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்களேயானால், அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள். அதன் பிறகு தேர்தலே நடக்காமல் போய்விடும். ஜெர்மனியில் ஹிட்லர் அமைத்ததைப் போன்ற பாசிச அரசை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை துண்டு, துண்டாக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் கனவு. தேசத்தில் மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலமாகவும், மக்களிடையே பகையுணர்வை தூண்டுவதன் மூலமாகவும் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
ஃபரூக் அப்துல்லா-தேசிய மாநாட்டுக் கட்சி: எந்தவொரு தனிநபரையும் (மோடி) தோற்கடிப்பது அல்ல நமது நோக்கம்.  நாட்டைக் காக்க வேண்டும் என்பதும், சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்கள் கெளரவிக்க வேண்டும் என்பதுமே நமது நோக்கம். 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு திருட்டு இயந்திரம். உண்மை அதுதான். உலகில் எங்குமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.  வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் குடியரசுத்தலைவரை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தால் மட்டுமே வெளிப்படைத்தன்மை இருக்கும்.

அகிலேஷ் யாதவ்-சமாஜவாதி கட்சித் தலைவர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால் நாட்டில் மகிழ்ச்சி அலை பரவியிருக்கிறது.

ஆனால், பாஜக கலக்கமடைந்துள்ளது. அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வியூகம் அமைப்பதற்காக ஒன்றன் பின், ஒன்றாக கூட்டம் நடத்தி பாஜக ஆலோசித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எங்கள் தரப்பில் பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், ஆளுங்கட்சியில் மோடி என்ற பெயர் மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. ஆகவே, பிரதமர் வேட்பாளருக்கான புதிய நபர் யார்? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

சதீஷ் சந்திர மிஸ்ரா-பகுஜன் சமாஜ் கட்சி: தலித் விரோத, சிறுபான்மையின விரோத மத்திய அரசை தூக்கியெறியும் நடவடிக்கையை உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொடங்கிவிட்டன.
அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டுமெனில் பாஜக அரசை வீழ்த்துவது கட்டாயமாகும். அதற்கான அச்சாரமாக இந்த மாநாட்டின் வெற்றி அமைந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்யலாம்: மம்தா

தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதை எதிர்க்கட்சிகள் முடிவு செய்து கொள்ளலாம்.  தற்போதைக்கு பாஜகவைத் தோற்கடிக்க கருத்து வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். அவர் பேசியதாவது:

திருடர்களின் தாயாக இருப்பவர் உரத்த குரலில் பேசுவார் என்பது வங்கப் பழமொழி. வாராக்கடன், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, பயிர்க் காப்பீடு முறைகேடு என அனைத்து ஊழல்களும் பாஜக ஆட்சியில்தான் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கின்றனர்.
மோடியின் ஆட்சியில் வங்கிகள், சிபிஐ, ரிசர்வ் வங்கி, பொருளாதாரம், ஜனநாயகம் ஆகிய அனைத்தும் மீட்டெடுக்க முடியாத சீர்குலைவை எதிர்கொண்டுள்ளன.

பாஜக அரசு காலாவதி தேதியை தாண்டிவிட்டது. அக்கட்சி தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். பிரதமர் யார் என்பது பிரச்னையல்ல என்றார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/பாஜக-அரசை-வீழ்த்துவோம்-கொல்கத்தா-மாநாட்டில்-எதிர்க்கட்சிகள்-சூளுரை-3079807.html
3079806 இந்தியா எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி நாட்டு மக்களுக்கு எதிரானது: பிரதமர் நரேந்திர மோடி DIN DIN Sunday, January 20, 2019 04:49 AM +0530 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடும் கூட்டணி எனக்கெதிரானது மட்டுமல்ல; நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஒருங்கிணைப்பில், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
யூனியன் பிரதேசமான தாத்ரா-நாகர் ஹவேலியின் தலைநகர் சில்வாசாவில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரேயொரு எம்எல்ஏ தான் இருக்கிறார். ஆனால் அவர்கள் (திரிணமூல் காங்கிரஸ்) இன்னும் பாஜகவைக் கண்டு அஞ்சுகின்றனர். நாடு முழுவதுமிருந்து எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். ஏனெனில் நாங்கள் உண்மையின் பாதையில் பயணிக்கிறோம்.  
எதிர்க்கட்சிகளின் உலகம் என்பது, அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகும். அவர்களின் கொள்கையில் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை கிடையாது. ஆனால், எனக்கு நாட்டு மக்களே குடும்பத்தினர். இந்தியாவின் வளர்ச்சியே எனது ஒரே நோக்கம். 
எதிர்க்கட்சிகள் கூட்டணி எனக்கெதிராக மட்டும் ஒன்று திரளவில்லை. அந்தக் கூட்டணி நாட்டு மக்களுக்கும் எதிரானது. எதிர்க்கட்சிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எத்தனை பெரிய கூட்டணிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், அவர்களால் மக்களின் மனங்களை வெல்ல இயலாது. 
பொது மக்களின் பணத்தை சிலர் கொள்ளையடிப்பதை நான் தடுத்து நிறுத்தினேன். ஊழலுக்கு எதிராக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்கள் கோபமடைந்துள்ளனர். அந்த நபர்களே தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குகின்றனர். அந்தக் கூட்டணியில் இணையும் அனைவரும், அச்சத்தின் காரணமாகவே ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் அவர்களால் கர்ம வினையிலிருந்து தப்ப இயலாது. 
தற்போது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஒன்று திரளும் கட்சிகள் யாவும் ஒரு காலத்தில் காங்கிரûஸயே விமர்சித்தன. ஆனால் தற்போது தங்களது வாய்ப்புகளுக்காக அவை அந்தக் கட்சியுடனே சேருகின்றன. ஒரு கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் பெரிதாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திட்டங்களுக்கு அதன் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்தும், எந்தத் திட்டத்துக்கும் எனது பெயர் வைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில், பிற அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தலின்போது அங்கு கட்சித் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர்.
ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயலில் ஈடுபடுபவர்களே, அதைப் பாதுகாப்பது தொடர்பாகப் பேசி வருகின்றனர்' என்றார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/எதிர்க்கட்சிகள்-ஒன்றுகூடும்-கூட்டணி-நாட்டு-மக்களுக்கு-எதிரானது-பிரதமர்-நரேந்திர-மோடி-3079806.html
3079803 இந்தியா திருமலையில் வழிகாட்டிப் பலகைகள் அமைப்பு DIN DIN Sunday, January 20, 2019 04:25 AM +0530 திருமலையில் பல முக்கிய பகுதிகளில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருமலையில் உணவு விடுதிகளும், தங்கும் அறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம், விரைவு தரிசனம் என தனித்தனியாக தரிசன நுழைவு வாயில் உள்ளது. 
இதனால், திருமலைக்கு வரும் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்ல வழிதெரியாமல் குழம்பி வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக திருமலையில் பல இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வெளிவட்டப் பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், பக்தர்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்ல எளிதாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 அதனால், அவர்களின் வசதிக்காக சனிக்கிழமை திருமலை முகப்பிலும், முக்கிய பகுதிகளிலும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 அவற்றைப் பார்த்து, பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விரைவாக குழப்பமின்றி செல்ல முடியும். இந்தப் பலகைகள் அனைவருக்கும் புரியும்படி தெலுங்கு மற்றும் ஆங்கிய மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/திருமலையில்-வழிகாட்டிப்-பலகைகள்-அமைப்பு-3079803.html
3079589 இந்தியா மோடி அரசுக்கு முடிவு நெருங்கி விட்டது: மம்தா பானர்ஜி DIN DIN Sunday, January 20, 2019 02:22 AM +0530 மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு  முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
"ஒன்றுபட்ட இந்தியா' என்ற பெயரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் சனிக்கிழமை மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. 
அந்த மாநாட்டுக்கு மம்தா விடுத்திருந்த அழைப்பை ஏற்று நாடெங்கிலும் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்திருந்தனர்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, தில்லி முதல்வர் கேஜரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற அந்த மாநாட்டில்,

மம்தா பானர்ஜி இறுதியாக உரையாற்றியபோது, மோடி அரசை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசியதாவது:
சொந்தக் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு பாஜக மதிப்பளிப்பதில்லை. ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி போன்ற தலைவர்கள் அக்கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றனர்.
ஒருங்கிணைந்த தலைமை குறித்து பிரதமர் மோடியும், அவரது ஆதரவாளர்களும் இப்போது பேசி வருகின்றனர். ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமானால் அந்த தலைவர்கள் மீண்டும் ஓரங்கட்டப்படுவார்கள். 
நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையைக் காட்டிலும் அது மோசமானதாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு மாற்றப்பட வேண்டும். பாகிஸ்தானால் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்து விட்டது.
ஊழல்-நிர்வாக சீர்குலைவு: வாராக்கடன், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, பயிர்க் காப்பீடு முறைகேடு என அனைத்து ஊழல்களும் பாஜக ஆட்சியில்தான் நிகழ்ந்துள்ளன.
மோடியின் ஆட்சியில் வங்கிகள், சிபிஐ, ரிசர்வ் வங்கி, பொருளாதாரம், ஜனநாயகம் ஆகிய அனைத்தும் மீட்டெடுக்க முடியாத சீர்குலைவை எதிர்கொண்டுள்ளன.
அரசியலில் ஓர் மரபு இருக்கிறது. ஆனால் பாஜக அதைப் பின்பற்றுவதில்லை. பாஜகவுடன் யாரெல்லாம் இணைந்து செயல்பட மறுக்கிறார்களோ அவர்களையெல்லாம் "திருடர்கள்' எனக் கூறிவிடுகின்றனர் என்றார் மம்தா.

ஆய்வுக் குழு அமைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடிகளை அரங்கேற்றுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் மம்தா பானர்ஜி. 
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்த பின் இத்தகவலை அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் ஆகிய நால்வர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதுடன் ஏதேனும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் பிற தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆய்வுக் குழு சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/மோடி-அரசுக்கு-முடிவு-நெருங்கி-விட்டது-மம்தா-பானர்ஜி-3079589.html
3079588 இந்தியா எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மோடிக்கு பயம்: மு.க.ஸ்டாலின் DIN DIN Sunday, January 20, 2019 02:18 AM +0530 எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பிரதமர் மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பாஜகவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியது:
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் வரும் மே மாதம் நடக்கவிருக்கும் ஜனநாயகப் போர்க்களம். 
இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பாஜகவிடமிருந்து நாட்டை மீட்பதைத்தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன்புவரை தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். 
ஆனால், கடந்த சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை விட பயமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது மோடிக்குத் தெரிந்துள்ளது. அதனால்தான் தினமும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மோடியைப் பயம் கொள்ள வைத்துள்ளது.
ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம். வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார்.  ஆனால், போடவில்லை. 
ஊழல் இல்லாத ஆட்சி என்கிறார் மோடி.  6 மாதமாக ரஃபேல் குறித்து பேசி வருகிறோம்.  போர் விமானம் வாங்க அரசு நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனத்துக்கு  ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். 
விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். லலித் மோடியை இந்தியாவிலிருந்து தப்ப விட்டது மத்திய அமைச்சர்தான். இது ஊழல் இல்லையா?  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா? 
நரேந்திர மோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப்போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திர மோடி ஆட்சியில் நடக்கிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும்.  பாஜகவைத் தனிமைப்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார் ஸ்டாலின்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/எதிர்க்கட்சிகளின்-ஒற்றுமையால்-மோடிக்கு-பயம்-முகஸ்டாலின்-3079588.html
3079587 இந்தியா கர்நாடக அரசைக் கவிழ்க்க மாட்டோம் - எடியூரப்பா DIN DIN Sunday, January 20, 2019 02:15 AM +0530 மஜத-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முற்படாது என்று கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  குருகிராமத்தில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூருக்குத் திரும்பச் சொல்லிவிட்டேன். இந்த எம்எல்ஏகள் மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்வார்கள்.  வறட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.  எனவே, மக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க நாங்கள் கவனம் செலுத்தவிருக்கிறோம்.  எந்தக் காரணத்துக்காகவும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.  எனவே, மஜத-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அச்சப்படத் தேவையில்லை.  நாங்கள் எதிர்க்கட்சியாக ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவோம். இதில் காங்கிரஸýக்கும் மஜதவுக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என்றார் அவர்.
குருகிராமத்தில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை பெங்களூருக்கு திரும்ப எடியூரப்பா அறிவுறுத்தியிருப்பதை வரவேற்றுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, "ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் என்று கூறியுள்ளது போல எடியூரப்பா நடந்து கொள்ள வேண்டும்.  பாஜக எம்எல்ஏக்களை பெங்களூருக்கு திரும்பச் சொல்லி  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க அறிவுறுத்தியுள்ள எடியூரப்பாவின் முடிவை வரவேற்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: அடுத்த மாதம் தொடங்கவுள்ள கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. 
  அப்போது காங்கிரஸ், மஜதவில் உள்ள பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக் கவிழ்ந்தால், அதன் பிறகு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டம் வகுத்துள்ளது. இதை மனதில் வைத்தே, அடுத்த ஒருமாதத்தில் எடியூரப்பா முதல்வராவார் என்று பாஜக எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள். இது காங்கிரஸ், மஜதவின் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/கர்நாடக-அரசைக்-கவிழ்க்க-மாட்டோம்---எடியூரப்பா-3079587.html
3079586 இந்தியா ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்தியா பாடுபடும்: சுஷ்மா உறுதி DIN DIN Sunday, January 20, 2019 02:14 AM +0530 ஆப்பிரிக்க நாடுகளின் சமூக, பொருளாதார முன்னேற்றுத்துக்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார். மேலும், ஆப்பிரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா விளங்கும் என்றும் அவர் கூறினார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெறும் "துடிப்புமிகு குஜராத்' சர்வதேச வர்த்தக மாநாட்டின் ஒரு பகுதியாக, "ஆப்பிரிக்க தின' மாநாடு முதல்முதலாக நடைபெற்றது. சுமார் 50 ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்களும், பிரதிநிதிகளும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஆப்பிரிக்காவுக்கு முன்னுரிமை: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய பாதைகளில் பயணிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு  நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா இருக்கும். ஆப்பிரிக்க மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக இந்தியா உறுதியாக பாடுபடும். சர்வதேச வர்த்தக மாநாட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு என்று தனி நாளையே இந்தியா ஒதுக்கியுள்ளது. அதன்மூலம், ஆப்பிரிக்க நாடுகள் உலக பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது அனைவருக்கும் தெரிய வரும். 
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.  கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்பட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 29 முறை பயணம் மேற்கொண்டனர்.
வர்த்தக உறவு: இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது. இந்தியா-ஆப்பிரிக்க நாடுகள் இடையே கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4. 4 லட்சம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவீதம் அதிகமாகும். ஆப்பிரிக்க பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. வரி இல்லாது இறக்குமதி செய்யும் சலுகையை 38 ஆப்பிரிக்க நாடுகள் அனுபவித்து வருகின்றன.
இந்தியா-ஆப்பிரிக்கா இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு மேம்படும். ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது.  மேலும்,  இந்தியா சார்பில் 42 ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் ரூ. 81,000 கோடி செலவில் 189 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரசாயனம், உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயுள்ள உறவை வலுப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதம்: உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம். இந்தியாவைப் போன்று பல  ஆப்பிரிக்க நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.
உறவைப் புதுப்பிக்க வேண்டும்: முன்னதாக, சுஷ்மா பேசுவதற்கு முன்பு உகாண்டா வெளியுறவுத் துறை அமைச்சர் பேசுகையில், " இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே முன்பு வலுவான உறவு இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். எனினும் அந்த உறவில் இடையில் சிறிது தேக்கம் ஏற்பட்டது. 
ஆப்பிரிக்க நாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து சீனா  அதிக அளவில் முதலீடு செய்து வந்தது. இப்போது முன்பு போல இந்தியாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்' என்றார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/ஆப்பிரிக்க-நாடுகளின்-பொருளாதார-முன்னேற்றத்துக்கு-இந்தியா-பாடுபடும்-சுஷ்மா-உறுதி-3079586.html
3079584 இந்தியா சபரிமலை விவகாரத்தில் போலி வழக்குகள்: ரத்து செய்யக் கோரி கேரள ஆளுநரிடம் மனு DIN DIN Sunday, January 20, 2019 01:59 AM +0530 சபரிமலை விவகாரத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், கேரள ஆளுநர் பி.சதாசிவத்தை சனிக்கிழமை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.
கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி பேர் கையெழுத்திட்ட அந்த கோரிக்கை மனுவில், சபரிமலை வளாகத்தில் அமலில் இருக்கும் தடையுத்தரவை விலக்கவும், ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட ஆர்வலர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை தலைமையில், கேரளத்தின்ஒரே பாஜக எம்எல்ஏவான ஓ.ராஜகோபால், பாரத தர்ம ஜன சேனை தலைவர் கோபகுமார், கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி.தாமஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநரை சந்தித்து இந்தக் கடிதத்தை அளித்தது.
ஆளுநரிடம் மனு அளித்த பிறகு ஸ்ரீதரன்பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சபரிமலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது, ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக சுமார் 5,000 போலி வழக்குகள் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டன. அப்போது கைது செய்யப்பட்ட சுமார் 1,000 ஆர்வலர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன், சபரிமலை வளாகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று ஸ்ரீதரன்பிள்ளை கூறினார்.
நிறைவடைகிறது: சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைமைச் செயலகம் முன்பாக பாஜக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதாக ஸ்ரீதரன்பிள்ளை தெரிவித்தார்.
இதுகுறித்து போராட்ட களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்தாலும், முழுமையான பலன் கிடைக்கவில்லை. கட்சியின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடித்துக்கொள்ளப்படுகிறது. சுவாமி ஐயப்பனின் அருளால் அதிக அளவு மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தது' என்றார்.
கட்சியின் பொதுச் செயலர் ஏ.என். ராதாகிருஷ்ணனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சி.கே. பத்மநாபன், ஷோபார சுரேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/சபரிமலை-விவகாரத்தில்-போலி-வழக்குகள்-ரத்து-செய்யக்-கோரி-கேரள-ஆளுநரிடம்-மனு-3079584.html
3079582 இந்தியா ராபர்ட் வதேராவின் உதவியாளரை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு DIN DIN Sunday, January 20, 2019 01:52 AM +0530 கருப்புப் பண மோசடி வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளர் மனோஜ் அரோராவைக் கைது செய்வதற்கான தடையை, வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
லண்டனில் ராபர்ட் வதேரா சொத்து வாங்கியதில் சட்ட விரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத் துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி நிறுவனத்தின் ஊழியரும், வதேராவின் உதவியாளருமான மனோஜ் அரோராவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் டி.பி.சிங் கூறுகையில், ""மனோஜ் அரோரா, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். இதுவரை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்' என்றார்.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிதேஷ் ரானா, வழக்கு தொடர்பான விவாதங்களை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் அரோராவைக் கைது செய்வதற்கான தடையை, வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்தை பண்டாரி, கடந்த 2010-ஆம் ஆண்டில் வாங்கிய விலைக்கே விற்பனை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், பண்டாரிக்கும், மனோஜ் அரோராவுக்கும் இடையே தகவல் பரிமாற்றங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த சொத்தின் உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்றும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மூலம் அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை சந்தேகித்துள்ளது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, மனோஜ் அரோராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/ராபர்ட்-வதேராவின்-உதவியாளரை-கைது-செய்வதற்கான-தடை-நீட்டிப்பு-3079582.html
3079581 இந்தியா துணை ராணுவத்தினரின் மனஅழுத்தத்தைக் குறைக்க நிம்ஹான்ஸ் உதவி பெறப்படும்: ராஜ்நாத் சிங் DIN DIN Sunday, January 20, 2019 01:52 AM +0530 நாடெங்கும் உள்ள துணை ராணுவத்தினரின் மன அழுத்தத்தைக் குறைக்க நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் உதவி பெறப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின் (நிம்ஹான்ஸ்) 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அவர் பேசியது:  
நாடெங்கும் உள்ள துணை ராணுவத்தினர், காவல் படையினர் உள்ளிட்டோரின் பணி நிமித்தமான மன அழுத்தத்தால் அவதிப்படுவதாகத் தெரியவந்துள்ளது.  இதைச் சமாளிக்கத் தெரியாமல் பலர் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.  இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.  எனவே,  ஆயுத காவல் படை,  காவல் படையினரின் மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து,  எப்படிப்பட்ட கடினமான சூழலையும் எதிர்கொள்ளும் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.  இதற்காக தேசிய அளவில் செயல்படுத்தக்கூடிய திட்டத்தை நிம்ஹான்ஸ் செய்ய முன்வர வேண்டும்.  குறிப்பாக, காவல் படையினரிடையே அதிகமாகி வரும் தற்கொலை எண்ணத்தைப் போக்க வேண்டும்.  இந்தப் பணியைச் செய்து முடிக்கும் ஆற்றல் நிம்ஹான்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கு இருப்பதாக நம்புகிறேன். காவல் பணியாளர்களின் உடல் நலனைப் பேணுவதில் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் திட்டத்தை தமிழக காவல் துறையில் நிம்ஹான்ஸ் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது என்றார் அவர்.
   நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியது:  மனநலம் பேணல் தொடர்பாக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னையைத் தீர்ப்பதில் நிம்ஹான்ஸ் முக்கிய பங்குவகிக்குமென்பதில் சந்தேகமில்லை.  இதை சாதிப்பதற்கு, அவசியம் ஏற்பட்டால் மாநில வாரியான அலுவலகங்களை நிம்ஹான்ஸ் அமைக்கலாம். 
2014-15-ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் பட்டதாரி சேர்க்கை இடங்களை முறையே 18 ஆயிரம், 13 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.  இதனால் நாட்டில் இளநிலை, முதுநிலைப் பட்டதாரி சேர்க்கை இடங்கள் முறையே 70 ஆயிரம்,  45 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  
கடந்த 5 ஆண்டுகளில் 118 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இதனால் மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்துள்ளது.  இது உலகளவில் அதிகமாகும்.  நமது நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் வலையத்தை விரிவாக்கிக் கொண்டே இருக்கிறோம் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/துணை-ராணுவத்தினரின்-மனஅழுத்தத்தைக்-குறைக்க-நிம்ஹான்ஸ்-உதவி-பெறப்படும்-ராஜ்நாத்-சிங்-3079581.html
3079580 இந்தியா காஷ்மீர் லே பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு DIN DIN Sunday, January 20, 2019 01:51 AM +0530 ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட மொத்தம் 3.27 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே மாவட்டம்  கடல் மட்டத்திலிருந்து 11,562 அடி உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலமாகும். இதன் இயற்கை எழிலைக் கண்டு ரசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளதால் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் கணிசமான அளவில் வந்து செல்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறையின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரின் லே பகுதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் மொத்தம் 3,27,366 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இவர்களில் 49,477 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். முந்தைய ஆண்டை விட, 2018ஆம் ஆண்டில் 50 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் கூடுதலாக வந்து சென்றுள்ளனர்.  
கடந்த 2011ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் கடந்தது. 2014ஆம் ஆண்டு 59,305 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 1.21 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை புரிந்தனர். 
2015ஆம் ஆண்டில் 1.46 லட்சம் பேராக குறைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மீண்டும் 2016ஆம் ஆண்டில் 2.33 லட்சமாக   அதிகரித்து. இதில் 37,497 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அடங்கும்.  2017ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 2,77,255 ஆக உயர்ந்தது. இதில் 46,593 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அடங்கும்.  
லடாக் பகுதியிலும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கவழிச்சாலையான ஜோஜிலா பகுதியில் அமைக்கப்பட்ட ரயில் பாதை மற்றும் தரைவழிச்சாலையையும் மற்றும் அதையொட்டிய லடாக் பிராந்திய சுற்றுலாப்பகுதிகளையும் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றனர் என்று தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/காஷ்மீர்-லே-பகுதியில்-சுற்றுலாப்பயணிகள்-வருகை-அதிகரிப்பு-3079580.html
3079579 இந்தியா சத்ருகன் சின்ஹா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும்: ராஜீவ் பிரதாப் ரூடி DIN DIN Sunday, January 20, 2019 01:51 AM +0530 கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைப் பார்த்து பாஜக பயப்படவில்லை. இக்கூட்டம் சந்தர்ப்பவாத அரசியலுக்காகச் சேர்ந்த கூட்டமாகும். இக்கூட்டத்தினருக்கு முறையான கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை. தேர்தல் நெருங்கும் வேளைகளில் இவ்வாறான கூட்டங்கள் நடைபெறுவது இயல்பான விஷயமாகும்.
கொல்கத்தாவில் ஜனநாயகத்தைக் கொலை செய்யும் மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தை காப்பாற்றுவது தொடர்பாகப் பேசி வருவது நகைப்புக்குரியது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார்? சத்ருகன் சின்ஹா தன்னை அதி புத்திசாலி என நினைத்துக் கொள்கிறார். பாஜகவில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை அவர் விட்டுத்தரத் தயாராக இல்லை. இதனால்தான் இன்னும் பாஜகவை விட்டு விலகாமல் உள்ளார். அதேநேரம், சுயலாபத்துக்காக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.  
கொல்கத்தாவில் சனிக்கிழமை எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தை நடத்தினார். 
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் சத்ருகன் சின்ஹா பேசுகை, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/சத்ருகன்-சின்ஹா-மீது-பாஜக-தலைமை-நடவடிக்கை-எடுக்கும்-ராஜீவ்-பிரதாப்-ரூடி-3079579.html
3079578 இந்தியா வடகிழக்கு மாநிலங்களில் 11 ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு DIN DIN Sunday, January 20, 2019 01:49 AM +0530 வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் 11 ரயில் நிலையங்களை விமான நிலையம் போன்று மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.சர்மா கூறியதாவது: அஸ்ஸாமில் குவாஹாட்டி, காமாக்யா, லும்டிங், நியூ தின்சுகியா திப்ரூகர் ஆகிய ரயில் நிலையங்களும், பிகார் மாநிலத்தில் கடிஹார், புர்னியா, கிஷான்கஞ்ச், பர்சோய் ஆகிய ரயில் நிலையங்களும் விமான நிலையங்கள் போன்று தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. 204 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை ரயில்வே தயாரித்துள்ளது. இந்த ரயில் நிலையங்களின் பல்வேறு பகுதிகளில் விளக்குகளின் திறன் அதிகரிக்கப்படும். இதனால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.  ரயில் நிலையங்களை தூய்மையாகப் பராமரிக்கவும் முடியும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று சர்மா 
தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/வடகிழக்கு-மாநிலங்களில்-11-ரயில்-நிலையங்களை-மேம்படுத்த-முடிவு-3079578.html
3079577 இந்தியா எல்&டி ஆயுத உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி DIN DIN Sunday, January 20, 2019 01:46 AM +0530 குஜராத் மாநிலத்தில், எல்&டி நிறுவனத்தின் சார்பில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். "கே-9 வஜ்ரா' என்ற வகையிலான பீரங்கிகள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இந்த பீரங்கிகள் தானாகவே நகர்ந்து செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தின்படி இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017-ஆம் ஆண்டில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் எல்&டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்திய ராணுவத்துக்காக ரூ.4,500 கோடி மதிப்பில் 100 "கே-9 வஜ்ரா' பீரங்கிகளை எல்&டி நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.
குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஹஸிரா என்ற இடத்தில் இந்த ஆலை அமைந்துள்ளது. பீரங்கிகள் மட்டுமன்றி, எதிர்தாக்குதலுக்கான பிற தளவாடங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.
ஒப்பந்த விதிகளின்படி, வஜ்ரா பீரங்கிகள் 42 மாதங்களுக்குள்ளாக இந்திய ராணுவத்துக்கு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள மாபெரும் ஒப்பந்தம் இதுவாகும்.
முன்னதாக, பீரங்கிகளுக்கான தொழில்நுட்பத்தை பெறுவது தொடர்பாக தென்கொரியாவின் ஹான்வா நிறுவனத்துடன் எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
தளவாட உற்பத்தி ஆலையின் தொடக்க விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார்.
மோடியின் பயணம்: எல்&டி நிறுவனத்தில் முன்னோட்டமாக தயாரிக்கப்பட்ட "கே-9 வஜ்ரா' பீரங்கியில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். அதுதொடர்பான விடியோ பதிவை பிரதமர் சுட்டுரையில் பகிர்ந்து கொண்டார். ""பீரங்கியை உற்பத்தி செய்யும் எல்&டி நிறுவனத்தின் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைக் காக்கவும், பாதுகாப்புத்துறைக்கும் மிகுந்த பங்களிப்பை வழங்குவ
தாக வஜ்ரா பீரங்கிகள் இருக்கும். 
"இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கையை பாதுகாப்புத்துறையில் ஊக்குவிக்க வேண்டும் என்பது நமது இலக்காகும். அதற்கு இந்த தனியார் நிறுவனம் ஆதரவளிப்பதுடன், மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருகிறது'' என்று சுட்டுரையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பீரங்கி விவரம்: வஜ்ரா பீரங்கி 50 டன் எடை கொண்டதாகும். இது 47 கிலோ எடை கொண்ட குண்டுகள் மூலம் 43 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்கும் வல்லமை உடையதாகும். இந்த பீரங்கி நாலா பக்கமும் திரும்பி தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் உடையது. 
மொத்தம் தயாரிக்க வேண்டிய 100 பீரங்கிகளில் ஏற்கெனவே 10 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/எல்டி-ஆயுத-உற்பத்தி-ஆலையை-தொடங்கி-வைத்தார்-பிரதமர்-மோடி-3079577.html
3079576 இந்தியா மில்லியன் பிரச்னைகளுக்கு இந்தியாவில் பில்லியன் தீர்வுகள்:  பிரதமர் மோடி DIN DIN Sunday, January 20, 2019 01:45 AM +0530 இந்தியாவில் மில்லியன் கணக்கில் பிரச்னைகள் இருந்தாலும்,  பில்லியன் அளவுக்கு தீர்வும் உண்டு என பிரதமர் மோடி தெரிவித்தார். 
மும்பையில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான தேசிய அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இப்போது தேசம் பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வருவதுடன், தனது சொந்தப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வையும் கண்டறிந்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில், மில்லியன் கணக்கில் பிரச்னைகள் இருந்தாலும், அதற்கு பில்லியன் அளவுக்கு தீர்வுகளும் உள்ளன. 
திரைப்படங்கள் என்பது இந்தியாவின் முக்கியமான அதேசமயம் மென்மையான சக்தியாக விளங்கி வருகிறது. திரைப்படத் தயாரிப்புக்கான அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறையை மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. 
டாவோஸில் உலக பொருளாதார அமைப்பு சார்பில் உச்சி மாநாடு நடைபெற்றதை போல உலகளவிலான திரைப்பட உச்சி மாநாடு இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும். 
திரைப்படம் என்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிப்பதுடன், அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. 
சுற்றுலா வளர்ச்சியின் மூலம் ஏழை மக்கள் முதல் தேநீர் தயாரித்து விற்பனை செய்பவர்கள் வரையிலும் வருவாய் ஈட்டுகின்றனர் என்று பேசினார்.
மேலும் தனது உரையின் போது,  திரைப்படத்துறையில் பெரிதும் சவாலாக விளங்கும் விடியோ படத்திருட்டை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/மில்லியன்-பிரச்னைகளுக்கு-இந்தியாவில்-பில்லியன்-தீர்வுகள்--பிரதமர்-மோடி-3079576.html
3079575 இந்தியா பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது பொய்: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு DIN DIN Sunday, January 20, 2019 01:43 AM +0530 நீதி ஆயோக் அளித்த பொய்யான தகவல்களைக் கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை அடைந்ததாகவும், உலக பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்து பாஜகவினர் பொய் கூறுவதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நீதி ஆயோக் அளித்த பொய்யான விவரங்களைக் கொண்டு பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். அதை புள்ளியலியலாளர்களும், பொருளாதார நிபுணர்களுமே மறுத்து வருகின்றனர்.  அத்துடன் முந்தைய ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்களை நீதி ஆயோக் அமைப்பைக் கொண்டு பிரதமர் மோடி அரசு மாற்றியுள்ளது. அதன் மூலம் பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்ததாக காட்ட முயற்சி செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், சுதந்திரத்துக்கு பின்பு 2004-09-ஆம் ஆண்டைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிதான் இதுவரையிலும் சிறந்தது. இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட தகவல்களே உண்மையானவை என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
மத்திய புள்ளியியல் நிறுவனமும், நீதி ஆயோக் அமைப்பும், கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை வெளியிட்டது. அதில், 2004-09 மற்றும் 2009-14 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தை விட தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்ட தகவலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் குற்றம்சாட்டினார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/பாஜக-ஆட்சியில்-பொருளாதார-வளர்ச்சி-என்பது-பொய்-ப-சிதம்பரம்-குற்றச்சாட்டு-3079575.html
3079574 இந்தியா மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்: ஷாநவாஸ் ஹுசைன் DIN DIN Sunday, January 20, 2019 01:43 AM +0530 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்று பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.
கோவா மாநிலம், பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் ஒருவித அச்சத்தை விதைக்கின்றனர். இதுபோன்று செய்தால் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினர் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை உணர்கின்றனர்.
ஜாதி, மதம் என்ற அடிப்படையில் பார்க்காமல் பல நலத் திட்டங்களை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. மக்களும் அதிக பலனடைந்து வருகின்றனர். வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு தைரியமாக இந்நாட்டில் வலம்வந்த தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் தற்போது வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகி உள்ளனர்.
அதற்கு காரணம், மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான கொள்கைகள்தான். அவர்கள் மீண்டும் நாடு கடத்தி கொண்டு வரப்படுவார்கள்.
 நாட்டில் உள்ள நிதி நிறுவனங்கள் சுதந்திரத்துக்கு பிறகு 2008ஆம் ஆண்டு வரை ரூ.18 லட்சம் கோடி கடன் வழங்கியிருந்தனர். ஆனால், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அந்தத் தொகை ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.
பல தொழிலதிபர்களுக்கு கடன் வாரி வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஷாநவாஸ் ஹுசைன்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/மோடி-ஆட்சியில்-சிறுபான்மையினர்-பாதுகாப்பாக-உள்ளனர்-ஷாநவாஸ்-ஹுசைன்-3079574.html
3079573 இந்தியா சொந்த கிராமத்தில் தாயைச் சந்தித்தார் பிரதமர் மோடி DIN DIN Sunday, January 20, 2019 01:42 AM +0530 மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி  தனது தாயாரைச் சனிக்கிழமை சந்தித்து பேசினார். 
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், அவரது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் அவரது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். 3 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை குஜராத் சென்ற பிரதமர், ஆமதாபாத் விமான நிலையம் செல்லும் வழியில் தாயைச் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் அரைமணி நேரம் தாயுடனும், மற்ற உறவினர்களுடனும் மோடி கலந்துரையாடியதாக அவரது சகோதரர் பங்கஜ் மோடி தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/சொந்த-கிராமத்தில்-தாயைச்-சந்தித்தார்-பிரதமர்-மோடி-3079573.html
3079572 இந்தியா ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது: 15 மாணவர்கள் 100% தேர்ச்சி DIN DIN Sunday, January 20, 2019 01:41 AM +0530 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில் 15 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் தற்போது சதவீத அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜேஇஇ மெயின் தேர்வு கடந்த 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 258 நகரங்களில் இத்தேர்வுகள் தினமும் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் நடத்தப்பட்டன. வெளிநாடுகளையும் சேர்த்தால் மொத்தம் 467 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. பி.இ./பி.டெக் படிப்புகளில் சேர்வதற்காக 9,29,198 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வு முடிவுகளை JEEMAIN.NIC.IN என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/ஜேஇஇ-பிரதானத்-தேர்வு-முடிவுகள்-வெளியானது-15-மாணவர்கள்-100-தேர்ச்சி-3079572.html
3079571 இந்தியா கோவா பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: கூட்டணிக் கட்சியை சமாதானப்படுத்த பாஜக முயற்சி DIN DIN Sunday, January 20, 2019 01:41 AM +0530 கோவா மாநிலத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தொடர்பாக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை (எம்ஜிபி) சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களான தயானந்த் சோப்தே (மாண்ட்ரம்), சுபாஷ் ஷிரோத்கர் (ஷிரோடா) ஆகிய இருவரும் பாஜகவில் இணைவதற்காக, தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டனர். இதையடுத்து, காலியாக உள்ள அவ்விரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற எம்ஜிபி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் 2 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவ்விரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று கூறி, எம்ஜிபி கட்சியின் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 
இதுகுறித்து கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் சனிக்கிழமை கூறியதாவது:
கோவா பேரவை இடைத்தேர்தலில் எம்ஜிபி கட்சி போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பற்றி பாஜக மேலிடத் தலைவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். எம்ஜிபி கட்சித் தலைவர்களுடன் மாநில அளவிலான தலைவர்கள் முதலில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டால், மேலிடத் தலைவர்கள் வருவார்கள்.
அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் பாஜகவும், சிவசேனையும் ஒரே அணியில் இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார்களே என்று எம்ஜிபி கட்சியைச் சேர்ந்த சிலர் கூறுகிறார்கள். மகாராஷ்டிரத்தின் நிலைமை வேறு. அங்கு கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சிவசேனை விமர்சித்து வருகிறது. ஆனால், கோவா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கும், எம்ஜிபி கட்சித் தலைவர்களுக்கும் இடையே இணக்கமான உறவு தொடர்கிறது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/கோவா-பேரவைத்-தொகுதி-இடைத்தேர்தல்-கூட்டணிக்-கட்சியை-சமாதானப்படுத்த-பாஜக-முயற்சி-3079571.html
3079570 இந்தியா கோயில்களில் சச்சரவை ஏற்படுத்துகிறது பாஜக: சந்திரபாபு நாயுடு தாக்கு DIN DIN Sunday, January 20, 2019 01:40 AM +0530 நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பாஜக சச்சரவை ஏற்படுத்துகிறது என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
தெலுங்கு தேசம் கட்சியினருடன் தொலைபேசி வாயிலாக அவர் சனிக்கிழமை நிகழ்த்திய உரை:
நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பாஜக சச்சரவுகளை ஏற்படுத்தி வருகிறது. சபரிமலையில் பதற்றமான சூழ்நிலையை அக்கட்சி தூண்டுகிறது. அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தையும் அவ்வப்போது பாஜக எழுப்பி வருகிறது. நாம் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை நீக்க வேண்டும் என்ற நோக்கில், எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேச முயற்சி செய்தது.
தீய அரசியலை முன்னெடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு கூறுவதை ஏளனம் செய்வது போன்று உள்ளது.
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு கோரிக்கை விடுக்க 29 முறை தில்லிக்கு சென்று வந்தேன்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜக பக்கம் சாயத் தொடங்கியுள்ளன. தீய அரசியலை முன்னெடுத்துவரும் பாஜக குறித்து மக்களிடம் வீடுதோறும் சென்று நீங்கள் (தெலுங்கு தேசம் கட்சியினர்) எடுத்துரைக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் வெற்றி பெறும். சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 150இல் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். இதற்காக பாடுபடுவோம்.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிரானவர்கள். சந்திரசேகர் ராவும், ஜெகன் மோகன் ரெட்டியும் மோடிக்கு ஆதரவானவர்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/கோயில்களில்-சச்சரவை-ஏற்படுத்துகிறது-பாஜக-சந்திரபாபு-நாயுடு-தாக்கு-3079570.html
3079569 இந்தியா மஜத-காங்கிரஸ் கூட்டணியில் வெகு விரைவில் பூகம்பம் வெடிக்கலாம்: எடியூரப்பா DIN DIN Sunday, January 20, 2019 01:39 AM +0530 மஜத-காங்கிரஸ் கூட்டணியில் வெகு விரைவில் பூகம்பம் வெடிக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் ஒருசில எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.  இதை கவனித்தால், மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே வெகுவிரைவில் பூகம்பம் வெடிக்க இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  
காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் சித்தராமையா, தனது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனித்தால் அவரிடம் காணப்படும் கோபம்,  அச்சம் தெரியவரும்.  காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள்,  தொனி, உள்ளடக்கம் சித்தராமையாவின் பயத்தை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.  2008-ஆம் ஆண்டு முதல் கர்நாடகத்தில் மாற்றுக் கட்சியினரை சொந்தக் கட்சிக்கு இழுக்கும் போக்கு தொடங்கியதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  கட்சித் தாவும் கலாசாரத்தை ஊக்குவித்ததே காங்கிரஸ் கட்சிதான்.  ஹரியாணா மாநிலத்தில் 36 ஜனதா கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பஜன்லால் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தார்.
அப்போது தொடங்கிய கட்சித் தாவல் கலாசாரத்தை இன்றைக்கும் தொடர்வது காங்கிரஸ் தான்.  அதேபோன்றதொரு கலாசாரத்தில்தான் காங்கிரஸில் இணைந்தார் என்பதை சித்தராமையா மறக்கக்கூடாது.  
   ஆட்சி அதிகாரத்துக்காக நான் ஆசைப்படவில்லை. 104 எம்எல்ஏக்களுடன் விழிப்புணர்வுள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.  80 இடங்கள் கொண்ட காங்கிரசும், 37 இடங்கள் கொண்ட மஜதவும் புனிதமில்லா கூட்டணியை உருவாக்கி, ஆட்சி புரிந்து வருகின்றன. சட்டப்பேரவையில் 100 இடங்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பது இதுவே முதல்முறை என்பதை குமாரசாமியும், சித்தராமையாவும் உணர வேண்டும்.  மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ஆலோசிக்கவே குரு கிராமத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  எங்கள் கட்சியைச் சேர்ந்த 104 எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் கூடி மக்களவைத் தேர்தல் குறித்து விவாதித்தால் மற்றவர்களுக்கு அதில் என்ன பிரச்னை? 
காங்கிரஸ் கட்சியின் ஊழல் நிறைந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கே.சி.வேணுகோபால் துடிக்கிறார் போலும்.  காங்கிரஸýம், மஜதவும் மக்களை முட்டாளாக்கப் பார்க்கின்றன. இரு கட்சிகளும் கர்நாடகத்தில் தோழமையாக இருந்தாலும், கொல்கத்தாவில் எதிரிகளாக உள்ளன.  வழக்கம்போல மஜத இரட்டை வேடம் போட்டு வருகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் வேண்டும்,  மறுபக்கம் காங்கிரஸ் விரும்பாத மகா கூட்டணி வேண்டும் என்று மஜத விரும்புகிறது.  பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான அல்லது மாற்றுத் தலைவர் யாரும் இல்லை என்பதை இக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/மஜத-காங்கிரஸ்-கூட்டணியில்-வெகு-விரைவில்-பூகம்பம்-வெடிக்கலாம்-எடியூரப்பா-3079569.html
3079568 இந்தியா இடமாற்ற விவகாரம்: கேரள முதல்வர் தலையிடக்கோரி கன்னியாஸ்திரீகள் கடிதம் DIN DIN Sunday, January 20, 2019 01:38 AM +0530 கேரளத்தில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்க்கோ முளக்கல்லுக்கு எதிராக போராடிய 5  கன்னியாஸ்திரீகளில் நால்வரை அங்குள்ள கிறிஸ்தவ மடத்திலிருந்து இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 
இவர்களைத்  தவிர  பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீயும் முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னை தனிமைப்படுத்தி  கொடுமைப்படுத்துவதன் மூலம் கிறிஸ்தவ மடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்காக போராடிய 4 கன்னியாஸ்திரீகளையும் இடமாற்றம் செய்துள்ளனர். இதன் மூலம், ஆதரவற்ற நிலையை உருவாக்கி, என் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, இப்பிரச்சினையில் தாங்கள் (முதல்வர்) தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   
ஜலந்தர் மாநில பேராயராக இருந்த ஃபிராங்க்கோ முளக்கல் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரீகள் ஆல்பி, அன்சிட்டா, ஃஜோசபின், அனுபமா ஆகியோர் பிகார், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ மடங்களுக்கு இடமாறுதல் செய்து ஜீசஸ் மிஷனரீஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு கன்னியாஸ்திரீயான நீனா ரோஸ் மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. 
தங்களை இடமாற்றம் செய்வதன் மூலம் பாதிரியார் முளக்கல் மீதான பாலியல் வழக்கை நீர்த்துக் போகச் செய்ய முயற்சி நடக்கிறது; எனவே, இப்பிரச்னையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட வேண்டும் என 4 கன்னியாஸ்திரீகள் கடிதம் எழுதியுள்ளனர். 
இதுகுறித்து அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஃபிராங்க்கோ முளக்கல்லை கைது செய்யக்கோரி கடந்த ஆண்டு 4 கன்னியாஸ்திரீகளும் போராட்டத்தில் ஈடுபட்ட போது, எங்களை இடமாறுதல் செய்து உத்தரவு வழங்கினர். தற்போது, ஃபிராங்க்கோ முளக்கல் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வழக்கை நீர்த்து போகச் செய்யும் வகையில் 4 பேரையும் திட்டமிட்டு இடமாறுதல் செய்துள்ளனர். 
முளக்கல்லுக்கு, கிறிஸ்தவ மடத்தின் நிர்வாகிகள் ஆதரவாக செயல்படுவதுடன் அவர்களுக்கு அடியாள்களின் பலமும் உள்ளது.  அவர்கள், எங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதையும், தவறாக சித்தரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எங்களை மிரட்டும் நோக்கத்திலும், சாட்சிகளை கலைக்கும் நோக்கத்துடனும்தான்  இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எங்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதன் மூலம் வழக்குக்கு தேவையான சாட்சியங்களை கலைக்கவே நினைக்கின்றனர். 
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர் எங்களுடைய ஆதரவினால்தான் இன்னும் உயிர் வாழ்கிறார். நாங்கள், இல்லாவிட்டால் அவர் மனம் உடைந்து போய் விடுவார். அவரை தனிமைப்படுத்துவதற்காகவே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். 
நாங்கள் ஒருவேளை இங்கிருந்து இடமாறுதலாகி சென்று விட்டால், இவ்வழக்குக்கு தேவையான ஆதாரம் கிடைக்காமல் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் (முதல்வர் பினராயி விஜயன்) தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும், பணி மாறுதலை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 
பேராயர் ஃபிராங்க்கோ முளக்கல் மீது கன்னியாஸ்திரீகள் கூறிய பாலியல் புகாரையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் கைது செய்யப்பட்டு அக்டோபரில் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்தான் புகார் கூறிய கன்னியாஸ்திரீகளுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/இடமாற்ற-விவகாரம்-கேரள-முதல்வர்-தலையிடக்கோரி-கன்னியாஸ்திரீகள்-கடிதம்-3079568.html
3079532 இந்தியா லோக்பால் விவகாரம்: ஜன. 30 முதல் ஹசாரே உண்ணாவிரதம் DIN DIN Sunday, January 20, 2019 01:24 AM +0530 லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு தாமதிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, வரும் 30-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, ஹைதராபாத் நகருக்கு சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
2013-ஆம் ஆண்டில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2014-இல் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியமைத்தார். ஐந்து ஆண்டுகளாகியும்,  லோக்பால் அமைப்பின் நிர்வாகிகளை நியமிப்பதில் அரசு தாமதம் செய்து வருகிறது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/லோக்பால்-விவகாரம்-ஜன-30-முதல்-ஹசாரே-உண்ணாவிரதம்-3079532.html
3079527 இந்தியா பிரிவினைவாதத் தலைவர் ஷாகித் விடுவிக்கப்பட வேண்டும்: மெஹபூபா வலியுறுத்தல் DIN DIN Sunday, January 20, 2019 01:23 AM +0530 தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலில் வைக்கப்பட்டுள்ள ஷாகித்-உல்-இஸ்லாமை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மெஹபூபா பேசினார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "ஷாகித்-உல்-இஸ்லாமின் மனைவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்ஐஏ காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சி இளைஞரணித் தலைவர் வஹீத் பர்ரா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியல் கைதிகளிடம் விசாரணையில் தீவிரமாக நடந்துகொள்வது குறித்தும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் மெஹபூபா கவலை தெரிவித்தார்' 
என்றார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/பிரிவினைவாதத்-தலைவர்-ஷாகித்-விடுவிக்கப்பட-வேண்டும்-மெஹபூபா-வலியுறுத்தல்-3079527.html
3079524 இந்தியா சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பகத்தன்மை அற்றது: சிவ்பால் யாதவ் DIN DIN Sunday, January 20, 2019 01:23 AM +0530 உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி நம்பகத்தன்மை அற்றது என்று பிரகதிஷீல் சமாஜவாதி கட்சித் தலைவர் சிவ்பால் சிங் யாதவ் விமர்சித்துள்ளார்.
அந்த மாநிலத்தின், பாலியா மாவட்டத்தில் உள்ள சஹத்வர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவ்பால் சிங் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமாஜவாதி-பகுஜன் சமாஜ் அமைத்துள்ள கூட்டணி பொருத்தமற்ற ஒன்றாகும். அந்த இரு கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, சமாஜவாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு துரோகம் செய்துள்ளனர்.
கடந்த 1993-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் சேர்ந்து ஆட்சியமைத்த பகுஜன் சமாஜ் கட்சி, 17 மாதங்களிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறி முலாயம் சிங்கிற்கு துரோகம் செய்தது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து முலாயம் சிங்கிற்கு மட்டுமல்லாமல், கடந்த சட்டப்பேரவையில் தாம் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும் அகிலேஷ் யாதவ் துரோகம் இழைத்துள்ளார்.
முகத்துக்கு முன்பாக துதி பாடுபவர்களும், முதுகுக்கு பின்னே விமர்சிப்பவர்களும் சமாஜவாதி கட்சியில் அதிகரித்துவிட்டனர். கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் வெளியேறும் நிலையை அவர்கள் கொண்டுவந்துவிட்டனர். 
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் சமாஜவாதி தோல்வியடைய, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவே காரணம் என்று சிவ்பால் சிங் யாதவ் கூறினார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/சமாஜவாதி-பகுஜன்-சமாஜ்-கூட்டணி-நம்பகத்தன்மை-அற்றது-சிவ்பால்-யாதவ்-3079524.html
3079520 இந்தியா காஷ்மீரில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது DIN DIN Sunday, January 20, 2019 01:22 AM +0530 ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று அகில இந்திய மஜ்லீஸ்-ஏ- இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அஸாதுதின் ஒவைசி கூறினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில், சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒவைசி மேலும் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் என்பது, எப்போதுமே இந்தியாவின் அங்கமாகும். எனவே, காஷ்மீரில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காங்கிரúஸா, பாஜகவோ, இதுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு கட்சியிடமும், காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இருக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்துக்கென ஒரு நிலையான கொள்கை இருக்க வேண்டும்.
பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. காஷ்மீர் பிராந்தியத்துக்கென கொள்கையை உருவாக்காமல், உயிர் பறிக்கும் ஆயுதப் பயன்பாடு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 8 ஆண்டுகளில் ரப்பர் தோட்டாக்கள் பயன்பாட்டால் அதிக உயிர்கள் பறிபோயுள்ளன. உயிருக்கு ஆபத்து இல்லாத ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலமாக,  அரசு எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெளிவாகிறது.  காஷ்மீர் விவகாரத்தை ஒரு "ஜேம்ஸ் பாண்ட்'  மனோபாவத்தில் கையாளக் கூடாது. அதை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்று ஒவைசி கூறினார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/காஷ்மீரில்-பாகிஸ்தான்-தலையிடக்-கூடாது-3079520.html
3079517 இந்தியா உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு DIN DIN Sunday, January 20, 2019 01:21 AM +0530 உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாதுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை வரும் 28-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான மனு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாதின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல், லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் இடைக்கால ஜாமீனையும் வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து அவர் உத்தரவிட்டார். மேலும், லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு வழக்கமான ஜாமீன் வழங்குவது குறித்து அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் ஐஆர்சிடிசிக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 
இதையடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் தவிர ரயில்வே வாரிய இணை உறுப்பினர் பி.கே. அகர்வால், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி மேலாண்மை இயக்குநர் பி.கே.கோயல், இயக்குநர் ராஜேஷ் சக்úஸனா உள்ளிட்டோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/உணவக-ஒப்பந்த-முறைகேடு-வழக்கு-லாலுவுக்கு-இடைக்கால-ஜாமீன்-நீட்டிப்பு-3079517.html
3079514 இந்தியா சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் 2-ஆவது முறையாக தடுத்து நிறுத்தம் DIN DIN Sunday, January 20, 2019 01:21 AM +0530 சபரிமலைக்கு செல்ல முயன்ற 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் காவல் துறையினரால் சனிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனர். 
கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிசாந்த் மற்றும் ஷானீலா ஷஜேஷ் ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை அதிகாலை நிலக்கல் அடிவார முகாமுக்கு சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்ற காவல் துறை  அதிகாரிகள், "பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால்,  உங்களுக்கு முறையான பாதுகாப்பு அளிப்பது கடினம்' என்று கூறி  அவர்களைத் திருப்பி அனுப்பினர். அந்த பெண்களுடன் வந்திருந்த மற்றவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் கடந்த 16-ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல முயன்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் அவர்களை எச்சரித்து தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக அந்த பெண்கள் கூறுகையில், "நாங்கள் 41 நாள்கள் முறையாக விரதம் இருந்து தரிசனம் செய்ய வந்தோம். எங்களை கோயிலுக்குள் அனுமதிப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் இப்போது எங்களை ஏமாற்றி விட்டனர்' என்று காவல் துறையினர் மீது குற்றம்சாட்டினார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10-50 வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து இதுவரை 50 வயதுக்குள்பட்ட 51 பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/சபரிமலைக்குச்-செல்ல-முயன்ற-பெண்கள்-2-ஆவது-முறையாக-தடுத்து-நிறுத்தம்-3079514.html
3079511 இந்தியா 2020-இல் கங்கை முழுமையாக தூய்மையடையும்: நிதின் கட்கரி DIN DIN Sunday, January 20, 2019 01:20 AM +0530 அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக கங்கை நதி முழுமையாகத் தூய்மையடைந்துவிடும் என்று மத்திய நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை தூய்மைப்படுத்துதல் துறை அமைச்சர் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தார். 
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அவர் கூறியதாவது: 
ரூ.26,000 கோடி மதிப்பிலான கங்கை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் 10 சதவீத பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்த நதி தூய்மையடையத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக அந்தப் பணிகள் 30-40 சதவீதம் நிறைவடைந்துவிடும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிடும். கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மாவட்ட வாரியாக, மாநில வாரியாக, திட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான பதிவுகளை என்னால் வழங்க இயலும். 
கங்கை மட்டுமல்லாது, அதன் 40 கிளை நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கங்கை நதியின் நீரோட்டம் தொடர்ச்சியானதாக இருக்கும் வகையில், அந்த நதியோடு கூடுதலாக 20 சதவீத உபரிநீர் இணைக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதத்தில் கங்கை நதி, தனது பாதை முழுவதுமாக மாசில்லாத வகையில், தொடர்ந்து பாயும்.
தூய்மையான கங்கை என்ற நமது கனவு நிஜமாகும். இது தவிர்த்து, யமுனையை தூய்மைப்படுத்தும் ரூ.800 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதுவே நல்லதொரு நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாகும் என்று நிதின் கட்கரி கூறினார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/20/2020-இல்-கங்கை-முழுமையாக-தூய்மையடையும்-நிதின்-கட்கரி-3079511.html
3079347 இந்தியா ரூ.20,000 மேல் அசையா சொத்துகள் வாங்க ரொக்கப் பரிவர்த்தனையா? நோட்டீஸ் அனுப்பும் வருமான வரித்துறை   DIN DIN Saturday, January 19, 2019 11:08 PM +0530
தில்லியில் ரூ.20,000 மேல் உள்ள அசையா சொத்துகளை ரொக்கப் பரிவர்த்தனை மூலம் வாங்கினால், வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 

ரியல் எஸ்டேட், அசையா சொத்துகள் வாங்குவது உள்ளிட்ட துறைகளில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்க வருமான வரிச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் விதிகள், ஜூன் 1, 2015-இல் இருந்து கணக்கில் கொள்ளப்படவுள்ளது. அதன்படி, விவசாய நிலங்கள் போன்ற ரியல் எஸ்டேட் விஷயங்களில், பரிவர்த்தனை தொகை ரூ.20,000-க்கு மேல் இருந்தால் காசோலையாகவோ அல்லது மின்னனு வடிவத்திலோ தான் அந்த பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளப்படவேண்டும்.  
இதன்மூலம், விதிகளை மீறி ரூ.20,000-க்கு மேல் இருக்கும் பணப்பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொண்டால், வருமான வரிச் சட்டப்பிரிவு 271டி-இன் படி ரொக்கப் பணத்தை பெறும் விற்பனையாளருக்கு அல்லது முன்பணமாக பெற்று அதனை ரொக்கமாக திருப்பிக் கொடுப்பவருக்கு ரொக்கத் தொகைக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரி அடுத்த மாதம் முதல் நோட்டீஸ் அனுப்பவுள்ளார். விற்பனையாளர், நிலத்தை பெறுபவர் என இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். 

இதுதொடர்பாக, மூத்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

"2015 முதல் 2018 வரை ரூ. 20,000-க்கும் மேலான தொகையை ரொக்கப் பரிவர்த்தனை மூலம் மேற்கொண்டதாக பதிவாகியுள்ள அனைத்து பதிவுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்துள்ளது. ரூ. 20,000-க்கும் மேலான தொகையை ரொக்கப் பணம் கொடுத்து நிலம் வாங்கியவரிடம் அந்த தொகைக்கான மூலதனம் குறித்து விளக்கம் கேட்கப்படும்" என்றார்.

இந்த நடைமுறை நாட்டின் பிற பகுதிகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/i-t-dept-to-issue-notice-where-cash-transaction-is-above-rs-20000-in-property-purchase-3079347.html
3079343 இந்தியா மோடி ஒரு விளம்பர பிரதமர்; இந்தியாவுக்கு செயல்படும் பிரதமரே தேவை: சந்திரபாபு நாயுடு DIN DIN Saturday, January 19, 2019 09:54 PM +0530
இந்தியாவுக்கு செயல்படும் பிரதமரே தேவை, மோடி ஒரு விளம்பர பிரதமர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

மேற்கு வங்க மாநிலத்தில் திரணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 

"இந்த பிரதமர் விளம்பர பிரதமராக உள்ளார். செயல்படும் பிரதமராக இல்லை. அவரும், அவருடைய அரசும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டன. ஏழைகளின் நலனுக்காக உழைக்கும் செயல்படும் பிரதமரே நாட்டுக்கு தேவை. 

இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவை பிரிக்க நினைக்கிறது. நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த ஒரே நோக்கத்துடன் தான் நாங்கள் ஒத்தக் குரலுடன் இங்கு ஒன்றிணைந்திருக்கிறோம். இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். அதே சமயம், இந்தியாவை ஒன்றிணைக்கவும் வேண்டும். இதை தான் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். 

உங்களுக்கு மோடி மற்றும் அமித்ஷாவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?  உங்களுக்கு மாற்றம் வேண்டுமா வேண்டாமா? (கூட்டத்தை நோக்கி கேட்டார்) 

இதே போல் மற்றொரு பொதுக்கூட்டத்தை அமராவதியில் நடத்த வேண்டும். அனைத்து தலைவர்களையும் அங்கு வரவேற்கிறேன். 

மோடி விவசாயிகளுக்கு பெரிய அளவில் துரோகம் இழைத்துவிட்டார். விவசாயத் திட்டங்கள் என்ற பெயரில் மிகப் பெரிய மோசடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நலனில் ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மத்திய அரசை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன.  

கூட்டாட்சி அமைப்பிலும் அரசு தலையிடுகிறது. மாநிலங்களை அச்சுறுத்துகின்றன. காஷ்மீரிலும், கர்நாடகாவிலும் அவர்கள் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். கர்நாடகவிடம் எந்த விதத்திலும் மத்திய அரசு தவறாக நடந்துகொண்டால், மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். 

2019-இல், இந்தியா புதிய பிரதமரை காணவுள்ளது. இது தான் நாட்டின் எண்ணம். நாங்கள் நாட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றிணையவேண்டும்" என்றார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/modi-a-publicity-pm-india-needs-a-performing-pm-says-chandrababu-naidu-3079343.html
3079342 இந்தியா ஜாகிர் நாயக்கின் ரூ.16 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை உத்தரவு DIN DIN Saturday, January 19, 2019 09:25 PM +0530
புதுதில்லி: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள ரூ.16.40 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜாகிர் நாயக்கின் முஸ்லிம் ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட பலரை தூண்டியதாகவும், மதங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக் கூட்டங்களில் பேசியதாகவும் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.

ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் ரூ.16.40 கோடி மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் அசையா சொத்துக்களை முடக்க தற்காலிகமாக அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

]]>
Zakir Naik, assets worth Rs 16.40 cr https://www.dinamani.com/india/2019/jan/19/ஜாகிர்-நாயக்கின்-ரூ16-கோடி-சொத்துக்கள்-முடக்கம்-அமலாக்கத்துறை-உத்தரவு-3079342.html
3079341 இந்தியா எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி எனக்கு எதிரானது அல்ல, மக்களுக்கு எதிரானது: பிரதமர் மோடி DIN DIN Saturday, January 19, 2019 08:31 PM +0530
எதிர்க்கட்சிகளின் கூட்டணி எனக்கு எதிரானது அல்ல, நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். 

தாத்ரா-நாகர் ஹவேலி சில்வாஸவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 

"எதிர்க்கட்சியினர் இன்னும் சரியான முறையில் ஒன்றிணையவே இல்லை, அதற்குள் தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேச ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆதரவு தேடுகின்றனர். ஆனால், எனக்கு நாட்டை முன்னெடுத்துச் செல்ல உங்களது ஆதரவு வேண்டும். 

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நான் தடுத்தவிட்டேன். அதனால், ஊழலுக்கு எதிரான எனது பிரசாரம் நிறைய பேருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையாகவே, வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மகா கூட்டணியை அமைத்துள்ளனர். 

ஜனநாயகத்தை ஒடுக்க நினைத்தவர்கள், தற்போது ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து பேசுகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பது தான் பாஜகவின் ஒரே குறிக்கோள்" என்றார். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/modi-sniggers-at-oppositions-kolkata-rally-terms-it-anti-people-3079341.html
3079334 இந்தியா மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு DIN DIN Saturday, January 19, 2019 06:36 PM +0530
புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

2014-இல் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால்,  ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், மத்திய அரசை கண்டித்து காந்தியின் நினைவு தினமான வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே கூறியுள்ளார். 

]]>
AnnaHazare, சமூக ஆர்வலர் , அண்ணா ஹசாரே , பாஜக ஆட்சி https://www.dinamani.com/india/2019/jan/19/மோடி-தலைமையிலான-மத்திய-அரசு-மக்களுக்கு-எதுவும்-செய்யவில்லை-அண்ணா-ஹசாரே-குற்றச்சாட்டு-3079334.html
3079331 இந்தியா கொல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டம் கொள்கை, கேட்பாடு இல்லாதது: ராஜீவ் பிரதாப் ரூடி DIN DIN Saturday, January 19, 2019 06:09 PM +0530  

புது தில்லி: கொல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகளுக்கு முறையான கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக அதிருப்தி எம்பி சத்ருக்கன் சின்ஹா மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடா்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் சனிக்கிழமை எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி இந்தக் கூட்டத்தை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் பாஜக அதிருப்தி எம்பி சத்ருக்கன் சின்கா கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடியை ‘திருடா்’ என விமா்சித்து பேசினார். 

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் ராஜீவ் பிரதாப் ரூடி பேசுகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைப் பார்த்து பாஜக பயப்படவில்லை. இக்கூட்டம் சந்தா்ப்பவாத அரசியலுக்காகச் சோ்ந்த கூட்டமாகும். இக் கூட்டத்துக்கு முறையான கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை. தோ்தல் நெருங்கும் வேளைகளில் இவ்வாறான கூட்டங்கள் நடைபெறுவது இயல்பான விஷயமாகும். 

கொல்கத்தாவில் ஜனநாயகத்தைக் கொலை செய்யும் மம்தா பனார்ஜி, ஜனநாயகத்தை காப்பாற்றுவது தொடா்பாகப் பேசி வருவது நகைப்பிற்குரியது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார்?

சத்ருக்கன் சின்கா தன்னை அதி புத்திசாலி என நினைத்துக் கொள்கிறார். பாஜகவில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை அவர் விட்டுத்தரத் தயாராக இல்லை. இதனால் தான் இன்னும் பாஜகவை விட்டு விலகாமல் உள்ளார். 

ஆனால், அதேநேரம், சுயலாபத்துக்காக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். இவர் மீது கட்சித் தலைமை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார் ராஜீவ் பிரதாப் ரூடி.
 

]]>
Rajiv Pratap Rudy, ராஜீவ் பிரதாப் ரூடி, தேசியச் செய்தித் தொடா்பாளர், பாஜக https://www.dinamani.com/india/2019/jan/19/கொல்கத்தாவில்-கூடிய-எதிர்க்கட்சிகளின்-கூட்டம்-கொள்கை-கேட்பாடு-இல்லாதது-ராஜீவ்-பிரதாப்-ரூடி-3079331.html
3079327 இந்தியா ஜேஎன்யு தேசத் துரோக வழக்கு: குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு DIN DIN Saturday, January 19, 2019 05:06 PM +0530
ஜேஎன்யு பல்கலைக்கழக தேசத் துரோக வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்று தில்லி போலீஸாரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-இல் நடைபெற்ற நிகழ்வில் தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் கண்ணையா குமார், உமர் காலித் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14-ஆம் தேதி தில்லி போலீஸார் 1200 குற்றப்பத்திரிகையை தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் முன்னிலையில் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம்? உங்களுக்கு என்று சட்டத்துறை இல்லையா? என்று தில்லி போலீஸாரிடம் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, இதற்கு தேவையான ஒப்புதலை 10 நாட்களுக்குள் பெறுவதாக பெருநகர மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத்திடம் போலீஸார் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/jnu-sedition-case-court-questions-delhi-police-for-filing-charge-sheet-without-procuring-requisite-sanctions-3079327.html
3079326 இந்தியா நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்டது மோடி அரசு: மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு DIN DIN Saturday, January 19, 2019 04:35 PM +0530
கொல்கத்தா: நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெற்று வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளன. 5 ஆண்டுகளில் நாட்டையே கொள்ளையடித்து அழித்துவிட்டது. நாட்டில் பொருளாதாரம் சிதைந்து விட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் இல்லாத மோடி ஆட்சியால், ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது பாஜக. ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை அழித்துவிட்டது மேடி அரசு. 

தம்மைத்தவிர மற்றவர்கள் யாருக்கும் நேர்மை இல்லை என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. மோடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றனர். புதிய விடியல் வர உள்ளது. தில்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றார். 

நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். எங்கள் கூட்டணியில் எல்லோருமே தலைவர்கள்தான். பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி என்றார் மம்தா. 

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத்தைச் சேர்ந்த ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/நாட்டையே-கொள்ளையடித்து-அழித்துவிட்டது-மோடி-அரசு-மம்தா-பானர்ஜி-ஆவேச-பேச்சு-3079326.html
3079325 இந்தியா மோடி, அமித்ஷா ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் போல் தான் செயல்படுவார்கள்: கேஜரிவால் DIN DIN Saturday, January 19, 2019 04:21 PM +0530
2019-இல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் ஜெர்மனியில் ஹிட்லர் செயல்பட்டதுபோல் தான் செயல்படுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம், கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தில்லி முதல்வர் கேஜரிவால் பேசுகையில், 

"நரேந்திர மோடியும், அமித் ஷாவும் 2019-இல் ஆட்சி அமைத்தால், அவர்கள் அரசமைப்பை மாற்றி, தேர்தல் அமைப்பை மாற்றி, நாட்டில் இருக்கும் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்தாரோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். 

பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய தவறியதை அமித்ஷாவும், நரேந்திர மோடியும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளனர். இவர்கள், ஹிந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஒவ்வொரு சமூகத்தினருக்கு எதிராகவும், ஒருவருக்கொருவருக்கு எதிராகவுமே கிளப்பியுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல், யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்பதற்கானதல்ல. அது பாஜகவை வெளியேற்றவேண்டும் என்பதற்கானது" என்றார். 

]]>
Amit Shah, Narendra Modi, Adolf Hitler, Arvind Kejriwal, Opposition Rally, TMC Opposition Rally , அமித்ஷா, நரேந்திர மோடி, ஹிட்லர், அரவிந்த் கேஜரிவால், எதிர்க்கட்சிகள் கூட்டம், திரிணமூல் காங்கிரஸ் கூட்டம் https://www.dinamani.com/india/2019/jan/19/anti-bjp-rally-kejriwal-likens-pm-modi-amit-shah-with-adolf-hitler-3079325.html
3079322 இந்தியா பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது: அகிலேஷ் யாதவ் DIN DIN Saturday, January 19, 2019 04:09 PM +0530
கொல்கத்தா: நாட்டு மக்களை ஏமாற்றிவிட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு,  மக்களிடையே விஷத்தை தூவி வருகிறது என்று சமாஜவாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெற்று வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் பங்கேற்று அகிலேஷ் யாதவ் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. நாட்டு மக்கள் துயரத்தில் உள்ளனர். மக்களிடையே விஷத்தை தூவி வருகிறது. நாட்டுக்கு புதிய பிரதமர் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புதிய பிரதமருக்காக நாட்டு மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என அகிலேஷ் யாதவ் கூறினார். 

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர்  தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத்தைச் சேர்ந்த ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/பாஜக-அரசு-நாட்டு-மக்களை-ஏமாற்றிவிட்டது-அகிலேஷ்-யாதவ்-3079322.html
3079316 இந்தியா இரும்பு பெண்மணியின் 2-ஆவது சுதந்திரப் போராட்டத்துக்கு வந்துள்ளேன்: மேற்கு வங்கத்தில் மு.க.ஸ்டாலின் உரை DIN DIN Saturday, January 19, 2019 01:49 PM +0530  

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம், கொல்கத்தாவில் சனிக்கிழமை (ஜன.19) நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வங்க மொழியில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, 

மேற்கு வங்கத்துக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும். இந்தியாவை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

எதிரிகளே இல்லை என்று கூறிய பிரதமர் மோடிதான் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். எந்த கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் குறித்தே பிரதமர் மோடி பேசுகிறார், எதிர்க்கட்சிகளை நினைத்து பிரதமருக்கு அச்சம். 

நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது. வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சி கார்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி, மத்திய அரசை தனியார் நிறுவனம் போல் பிரதமர் மோடி மாற்றிவிட்டார். 

இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்துக்காக இரும்பு பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று நான் இங்கு வந்துள்ளேன். பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் இந்த சுதந்திர போராட்டம். கட்சிகள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரின் எண்ணமும் ஒன்றுதான், அது மோடியை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று தெரிவித்தார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/இரும்பு-பெண்மணியின்-2-ஆவது-சுதந்திரப்-போராட்டத்துக்கு-வந்துள்ளேன்-மேற்கு-வங்கத்தில்-முகஸ்டாலின்-உ-3079316.html
3079314 இந்தியா சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் 2-ஆவது முறையாக தடுத்து நிறுத்தம் DIN DIN Saturday, January 19, 2019 12:56 PM +0530  

சபரிமலை செல்ல முயன்ற 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸாரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரேஷ்மா மற்றும் ஷாலினா ஆகிய இரு பெண்களும் ஒரே மாதத்தில் இருமுறை சபரிமலை செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 2-ஆவது முறையாக மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இம்முறை 6 ஆண்களும் அவர்களுடன் உடனிருந்தனர். ஆனால் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாவும், பாதுகாப்பு தரமுடியாது என கூறி கேரள போலீஸார் எச்சரித்து அவர்களை நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/சபரிமலை-செல்ல-முயன்ற-2-பெண்கள்-2-ஆவது-முறையாக-தடுத்து-நிறுத்தம்-3079314.html
3079312 இந்தியா மஜத-காங்கிரஸ் கூட்டணி எரிமலை வெடிக்கத் தயாராக உள்ளது: எடியூரப்பா DIN DIN Saturday, January 19, 2019 12:27 PM +0530  

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது எதிர்காலத்தில் எரிமலை வெடிக்கத் தயாராக வருவதைக் காட்டுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில்,

காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அதே கட்சியின் எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம் சித்தராமையா தான். ஏனென்றால் அந்த கூட்டத்துக்கு அவரது அழைப்பு அதிகாரம் படைத்ததாக இருந்தது. இதனால் எம்எல்ஏக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

சொந்தக் கட்சி எம்எல்ஏக்களிடம் சுமூகமான போக்கு இருந்திருந்தால், எதற்காக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள பிளவைக் காட்டுகிறது. இதுவே வருங்காலத்தில் எரிமலையாக வெடிக்க வாய்ப்புள்ளது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக-வைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒரு இடத்தில் கூடி ஆலோசிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை வரப்போகிறது. உங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான் உங்கள் கடமை. காங்கிரஸில் இணைந்த வரலாற்றை சித்தராமையா ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். 

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது. இதில் மஜத கட்சி தான் மக்களை ஏமாற்றுகிறது. ஒருபுறம் அவர்களுக்கு கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கக் கூடாது. ஆனால் மறுபுறம் காங்கிரஸ் அல்லாத மகா கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் எனத் தெரிவித்தார்.  

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/மஜத-காங்கிரஸ்-கூட்டணி-எரிமலை-வெடிக்கத்-தயாராக-உள்ளது-எடியூரப்பா-3079312.html
3079311 இந்தியா பாஜக-வினர் பேரம் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது: சித்தராமையா DIN DIN Saturday, January 19, 2019 12:25 PM +0530  

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு வெளிப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஈக்ளடன் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 76 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஒருவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி விலக்கு அளிக்குமாறு சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மீதமிருந்தவர்களில் 3 பேர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு சித்தராமையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா இதுகுறித்து கூறியதாவது:

ஆபரேஷன் கமலா என்ற பெயரில் பாஜக எங்கள் எம்எல்ஏக்களிடம் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரை பேரம் பேசியுள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தில் பாஜக-வால் 3 முதல் 4 இடங்களில் தான் வெற்றிபெற முடியும். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

இவை அனைத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தான் முக்கிய காரணம் என்றார். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/பாஜக-வினர்-பேரம்-பேசியதற்கு-என்னிடம்-ஆதாரம்-உள்ளது-சித்தராமையா-3079311.html
3079236 இந்தியா குரு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்கள் திரும்ப அழைப்பு DIN DIN Saturday, January 19, 2019 10:02 AM +0530  

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குரு கிராமத்தில் கர்நாடகத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் கடந்த திங்கள்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மஜத-காங்கிரஸ் கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டினார். 

கர்நடாக அமைச்சரவையில் இடம் மற்றும் பணம் தருவதாகப் பாஜக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில்,  வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த தான் குரு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குரு கிராமத்தில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கர்நாடகத்துக்கு சனிக்கிழமை திரும்ப அழைத்துள்ளார். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/குரு-கிராமத்தில்-தங்கவைக்கப்பட்டிருந்த-பாஜக-எம்எல்ஏக்கள்-திரும்ப-அழைப்பு-3079236.html
3078881 இந்தியா ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: கோபால் ராய் DIN DIN Saturday, January 19, 2019 04:24 AM +0530
வரும் மக்களவைத் தேர்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அக் கட்சியின் தில்லி அமைப்பாளரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டது. 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.இது தொடர்பாக அக்கட்சியின் தில்லி அமைப்பாளர் கோபால் ராய் அளித்த பேட்டி: 
காங்கிரஸ் கட்சி கர்வத்துடன் நடந்து கொள்கிறது. நாங்கள் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை எதிர்த்து வந்துள்ளோம். ஆனால், ஆளும் பாஜக அரசைத் தோற்கடிக்க, அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அவசியம் என கூறப்பட்டது. நாட்டின் நன்மைக்காக காங்கிரஸ் கூட்டணியை சகித்துக் கொள்ளத் தயாராக இருந்தோம்.
ஆனால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங், தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஷீலா தீட்சித் ஆகியோர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று கூறியுள்ளனர். 
இது போன்ற பேச்சுகள் காங்கிரஸ் கட்சியின் கர்வத்தையே காட்டுகின்றன. எனவே தில்லி, பஞ்சாப், ஹரியாணாவில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/ஆம்-ஆத்மி-தனித்துப்-போட்டி-கோபால்-ராய்-3078881.html
3078880 இந்தியா ராணுவ காவல் துறையில் பெண்கள்: நிர்மலா சீதாராமன் DIN DIN Saturday, January 19, 2019 04:23 AM +0530
ஆயுதப்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில், ராணுவ காவல் துறையில் பெண்களை இணைக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவ காவல் துறையில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து மற்ற கீழ்நிலை பணியிடங்களில் பெண்கள் இதுவரை நியமிக்கப்பட்டதில்லை. ராணுவ காவல்துறையில் முதல்முறையாக கீழ்நிலை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிவில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். ராணுவ காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்களில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவ சட்டதிட்டங்களை வீரர்கள் மீறாது பாதுகாப்பது, போர் காலங்களில் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வது, போர்க்கைதிகளை கையாள்வது, உள்ளூர் காவல் துறையினருக்கு தேவைப்படும்போது உதவி புரிவது உள்ளிட்டவை ராணுவ காவல் துறையினரின் பணிகளாகும்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/ராணுவ-காவல்-துறையில்-பெண்கள்-நிர்மலா-சீதாராமன்-3078880.html
3078879 இந்தியா கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டம்: பாஜகவுக்கு எதிராக மம்தா வியூகம் DIN DIN Saturday, January 19, 2019 04:22 AM +0530
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம், கொல்கத்தாவில் சனிக்கிழமை (ஜன.19) நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி.தேவெகௌடா, அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ரா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கொல்கத்தாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண் சௌரி, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்பட மேலும் பல தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் கடிதம்: மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கருதப்படும் இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்து ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் , மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்துவதிலும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதிலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் காக்கும் வகையில் ஒரு பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/கொல்கத்தாவில்-இன்று-எதிர்க்கட்சிகளின்-பொதுக்-கூட்டம்-பாஜகவுக்கு-எதிராக-மம்தா-வியூகம்-3078879.html
3078878 இந்தியா தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முதல் 50 இடங்களில் வருவதே இலக்கு: மோடி DIN DIN Saturday, January 19, 2019 04:21 AM +0530
சர்வதேச அளவில் தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வருவதே இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் எழுச்சிமிகு குஜராத் என்ற பெயரில் நடைபெறும் சர்வதேச தொழில்-வர்த்தக மாநாட்டில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவர் இது தொடர்பாக பேசியதாவது:
உலக வங்கி வெளியிட்டு வரும் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது 77 ஆவது இடத்தில் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இப்பட்டியலில் இந்தியா 75 இடங்கள் வரை முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவை அடுத்த ஓராண்டுக்குள் முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு. இதற்காக கடுமையாகப் பணியாற்ற வேண்டும் என்று எனது அமைச்சரவை சகாக்களையும், பல்வேறு துறை உயரதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைக்கற்கள் பலவற்றை மத்திய அரசு அகற்றிவிட்டது. நமது நாடு தனது முழுவளத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்கும் விஷயத்தைப் பொருத்தவரையில் அரசின் தலையீடு வெகுவாக குறைக்கப்பட்டு, சிறப்பான நிர்வாகமும், முழுமையான வெளிப்படைத்தன்மையும் பேணப்படுகிறது. சீர்திருத்தம் - சிறப்பான செயல்பாடு - சீரிய முன்னேற்றம் என்பதே அரசின் தாரகமந்திரமாக உள்ளது. இதன் மூலம் நாடு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சராசரி 7.3 சதவீதமாக உள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் சிறப்பாக உள்ளது. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நாட்டில் வரி விதிப்பு முறை சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அந்த மாநிலத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் எழுச்சிமிகு குஜராத் மாநாட்டை முதல்முறையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி சார்பில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவது, அந்நிய முதலீடுகள் தொடர்பான அரசின் முக்கிய கொள்கைகள், திவால் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்களை அமல்படுத்துவது, கட்டுமான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. இதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பிடித்தது.
கடந்த ஆண்டு 100-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 23 இடங்கள் முன்னேறி, 77-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்கும்போது, இந்தப்பட்டியலில் இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. அதன் பிறகு 131-ஆவது இடம், 100-ஆவது இடம் என படிப்படியாக முன்னேறி, இப்போது 77 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
மொத்தம் 190 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நியூஸிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. அமெரிக்கா 8-ஆவது இடத்திலும், சீனா 46 ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 136-ஆவது இடத்தில் உள்ளது.


 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/தொழில்-செய்ய-உகந்த-நாடுகள்-பட்டியலில்-முதல்-50-இடங்களில்-வருவதே-இலக்கு-மோடி-3078878.html
3078877 இந்தியா கர்நாடக காங். சட்டப்பேரவைக் குழு கூட்டம்: 4 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு DIN DIN Saturday, January 19, 2019 04:21 AM +0530
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சைகள் திரும்பப் பெற்றுள்ளனர். இதனிடையே, பாஜக தனது எம்எல்ஏக்களை ஹரியாணா மாநிலம், குருகிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது. 
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பி.நாகேந்திரா, மகேஷ்குமட்டஹள்ளி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்டோர் தனித்துச் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை விதான செளதாவில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தை அதன் தலைவர் சித்தராமையா கூட்டியிருந்தார். சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் பேரவைத் தலைவர் ரமேஷ்
குமார் நீங்கலாக 75 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர, கட்சி மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்: கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிஹோளி (கோகாக் தொகுதி), மகேஷ்குமட்டஹள்ளி (அதானி தொகுதி), பி.நாகேந்திரா
(பெல்லாரி ஊரக தொகுதி), டாக்டர் உமேஷ் ஜாதவ் (சின்சோளி தொகுதி)ஆகிய 4 பேர் கலந்து கொள்ளவில்லை. 
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு பரிந்துரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து அலசப்பட்டது. மேலும், அவர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுவரும் பாஜகவின் முயற்சிக்கு இணங்கக் கூடாது என்று கட்சி எம்எல்ஏக்களை சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
சுறுசுறுப்பான பாஜக: இதனிடையே, பெங்களூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா வீட்டில் வெள்ளிக்கிழமை சுறுசுறுப்பான அரசியல் நடவடிக்கைகள் காணப்பட்டன. எடியூரப்பாவை பாஜகவின் முன்னணித் தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர்.
குழப்பத்துக்கு பாஜக காரணமல்ல: காங்கிரஸ்-மஜத கூட்டணி குழப்பத்துக்கு பாஜக காரணமல்ல என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/கர்நாடக-காங்-சட்டப்பேரவைக்-குழு-கூட்டம்-4-எம்எல்ஏக்கள்-புறக்கணிப்பு-3078877.html
3078843 இந்தியா உ.பி.யில் சுரங்க முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் DIN DIN Saturday, January 19, 2019 02:53 AM +0530
உத்தரப் பிரதேசத்தில் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி, சமாஜவாதி சட்டமேலவை உறுப்பினர் (எம்எல்சி) உள்பட 4 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
உத்தப் பிரதேசத்தின் ஹமிர்பூர் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாக சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் 
பதிவு செய்து அமலாக்கத் துறை ஒருபக்கம் விசாரித்து வருகிறது.
முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வராக பதவி வகித்து வந்த சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சில காலம் சுரங்கத் துறையை தம் வசம் வைத்திருந்தார். அதனடிப்படையில், அவருக்கு இந்த வழக்கில் சிபிஐ ஏற்கெனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை நால்வருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜவாதி எம்எல்சி ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோருக்கு வரும் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லக்னௌ அலுவலகத்தில்
ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதேபோல், மேலும் 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சுரங்க ஒதுக்கீட்டுக்காக லஞ்சம் பெற்று, அதை சட்டப்பூர்வமானதாக மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அசையும், அசையாத சொத்துகள் முடக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/உபியில்-சுரங்க-முறைகேடு-ஐஏஎஸ்-அதிகாரி-உள்பட-4-பேருக்கு-அமலாக்கத்-துறை-சம்மன்-3078843.html
3078842 இந்தியா தமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள்:மத்திய அரசு ஒப்புதல் DIN DIN Saturday, January 19, 2019 02:53 AM +0530
இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் குஜராத்தில், கடற்படையின் 3 புதிய விமானப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், கேரளம் மற்றும் அந்தமானில் ஏற்கெனவே உள்ள டார்னியர் விமான கண்காணிப்பு படைப் பிரிவில் கூடுதல் விமானங்களை சேர்க்கவும், அவற்றுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடற்படைக்கு புதிதாக 12 டார்னியர் ரக விமானங்கள் கொள்முதல் செய்வதற்காக ஏற்கெனவே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விமானங்கள் விரைவில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அந்த கண்காணிப்பு ரக டார்னியர் விமானங்களில் மேம்படுத்தப்பட்ட தொலையுணர் கருவிகள், கண்ணாடியால் மூடிய வகையிலான விமானி இருக்கைப் பகுதி, நவீன கண்காணிப்பு ரேடார் உள்ளிட்ட புதிய வசதிகள் உள்ளன. இதன்மூலம், இந்திய கடற்பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்படுவதுடன், பயங்கரவாதிகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் குறித்த கண்காணிப்புத் தகவல்கள் கிடைக்கப்பெறுவதால், கடற்பகுதி கண்காணிப்பு அதிகரிக்கும்.
கூடுதல் டார்னியர் விமானங்கள் இணைக்கப்படுவதால், 7,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள இந்திய கடலோர பகுதியின் பாதுகாப்பை கடற்படையால் வலுப்படுத்த இயலும் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/தமிழகம்-குஜராத்தில்-புதிதாக-கடற்படை-விமானப்-பிரிவுகள்மத்திய-அரசு-ஒப்புதல்-3078842.html
3078807 இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்?: மோடி பதிலளிக்க ப. சிதம்பரம் வலியுறுத்தல் DIN DIN Saturday, January 19, 2019 01:40 AM +0530
இந்திய விமானப் படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 36 ரஃபேல் போர் விமானங்களை மட்டும் மத்திய அரசு வாங்குவது ஏன்? என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விமானப்படைக்கு தேவைப்பட்ட 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்ததே, போர் விமானங்களின் விலை 41. 42 சதவீதம் உயர்ந்ததற்கு காரணம் என்று அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதையடுத்து ப. சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ரஃபேல் விமான கொள்முதல் குறித்து  நாளிதழில் புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில்,  36 விமானங்களை மட்டும் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது ஏன்? இந்த கேள்விக்கு உடனடியாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். விமானப்படைக்கு மிகவும் தேவைப்பட்ட போர் விமானங்ளை கொள்முதல் செய்யாது, நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, போர் விமானங்களின் விலை ஏற்றம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,  36 விமானங்கள் வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி எடுத்த ஒருதலைப்பட்சமான முடிவினால் போர் விமானங்களின் விலை 41. 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு மோடி எப்போது பதிலளிப்பார்?  என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜேபிசி விசாரணை தேவை: ரஃபேல் போர் விமான விவகாரத்தில் நாட்டுக்கு தீங்கு இழைத்துவிட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துள்ளதாகவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணை தேவை என்று ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு நாட்டுக்கு இரண்டு வழிகளில் தீங்கிழைத்து விட்டது. விமானப்படைக்கு தேவைப்பட்ட போர்விமானங்களைக் கொள்முதல் செய்யாமல் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்தும், ஒரு போர் விமானத்துக்கு ரூ. 186 கோடி அதிகமாகவும் விலை நிர்ணயித்தும் தீங்கிழைத்து விட்டது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினார்.


 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/36-ரஃபேல்-போர்-விமானங்கள்-மட்டும்-வாங்குவது-ஏன்-மோடி-பதிலளிக்க-ப-சிதம்பரம்-வலியுறுத்தல்-3078807.html
3078806 இந்தியா இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன் DIN DIN Saturday, January 19, 2019 01:39 AM +0530
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது: 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், இஸ்ரோ ஆய்வகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். 
மேலும், அவர்களுக்கு சிறிய செயற்கைக் கோளை தயாரிப்பதற்கான நடைமுறை அனுபவத்தை அளிக்கவும் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு அறிவியலில் ஓர் ஈர்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வாய்ப்பு ஏற்படும். இதனால், இளம் விஞ்ஞானிகள் திட்டம் முக்கியமானதாகும். 
இந்தத் திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதுபோன்று மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் இஸ்ரோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இந்தியாவில் இளம் விஞ்ஞானிகள் நல்ல முறையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மாணவர்களிடம் அளப்பரிய ஆர்வமும், ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. அதை நல்லதொரு பணிக்காகப் பயன்படுத்தலாம். மாணவர்கள்தான் நாளைய இந்தியா. அவர்களை சிறந்த வகையில் உருவாக்கும் பொருட்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை என்றார்.
திருச்சியில் மையம்
மாணவர்கள் விண்வெளி ஆய்வு மேற்கொள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில்  ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இஸ்ரோ இல்லாத பிற இடங்களில் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் ஆய்வு தொடர்பான விஷயங்களுக்கு உதவும் வகையில், அவுட்ரீச் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக இந்தத் திட்டத்தின்படி, ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
திரிபுராவில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்திலும், ஜலந்தரிலும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், இந்தூர், ரூர்கேலா ஆகிய இடங்களிலும் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை தயாரிக்கும்பட்சத்தில், அதை இலவசமாக விண்ணில் செலுத்துவதற்குரிய உதவியை இஸ்ரோ செய்துதர உள்ளது. இது மாணவர்களுக்கு நல்லதொரு ஊக்கமாக அமையும் என்றார் கே.சிவன். 

 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/இளம்-விஞ்ஞானிகள்-திட்டம்-இஸ்ரோவில்-108-மாணவர்களுக்கு-ஆய்வுப்-பயிற்சி-கேசிவன்-3078806.html
3078805 இந்தியா தேச விரோதிகளுக்கு ஆதரவளிக்கிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி DIN DIN Saturday, January 19, 2019 01:38 AM +0530
தேச விரோதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறார் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் வகையில், மத்திய அரசு செயலாற்றி வருகிறது. ஆனால், நாட்டை பலவீனப்படுத்தும் வகையில், தேச விரோதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேச விரோதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறார்.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு), நாட்டுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவளித்துள்ளனர். தேசத்துரோகச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியினர் ஒட்டுமொத்தமாக தேச விரோதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்தியா சிதறுண்டு போகும் என்று ஜேஎன்யுவில் குரல் எழுப்பியவர்களால் மக்கள் மத்தியில் குரல் எழுப்ப முடியுமா? அவர்களுக்கு ஆதரவளித்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் மத்தியில் வந்து தேச விரோதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க முடியுமா என நான் சவால் விடுகிறேன். மேலும், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது  என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/தேச-விரோதிகளுக்கு-ஆதரவளிக்கிறார்-ராகுல்-காந்தி-ஸ்மிருதி-இரானி-3078805.html
3078804 இந்தியா யுரேனியம் கொள்முதல்: உஸ்பெகிஸ்தானுடன் ஒப்பந்தம் DIN DIN Saturday, January 19, 2019 01:37 AM +0530
இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடந்த எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் கலந்து கொண்டார். மிர்ஸியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உஸ்பெகிஸ்தானின் அணுசக்தி துறை மற்றும் நோவோய் தாது - உலோக நிறுவனத்துடன் யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உஸ்பெகிஸ்தானில் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கி சார்பில் ரூ.14,224 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதத்தில் உஸ்பெகிஸ்தான் சென்றிருந்தபோது, இந்த கடனுதவி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் மிர்ஸியோயேவிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.
குஜராத் மாநாட்டில் கலந்து கொண்ட பின் மிர்ஸியோயேவ் கூறுகையில், தகவல் தொழில்நுட்பம், மருந்து, சுகாதாரம், வேளாண் தொழில், சுற்றுலா போன்ற துறைகளில் இந்தியாவில் இருந்து முதலீடுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
உலகிலேயே மிக அதிகமான அளவில் யுரேனியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் உஸ்பெகிஸ்தான் 7-ஆம் இடத்தில் உள்ளது என்று சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ளஅணுஉலைகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிபொருள் தேவையை எதிர்கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 1974 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் பொக்ரான் அணுஆயுத சோதனையை இந்தியா மேற்கொண்ட பிறகு, இந்தியாவுக்கான யுரேனிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன.
ஆனால், அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் பிறகு அந்தத் தடைகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டன.
கஜகஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, நமீபியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா யுரேனியத்தை இறக்குமதி செய்து வருகிறது. 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/யுரேனியம்-கொள்முதல்-உஸ்பெகிஸ்தானுடன்-ஒப்பந்தம்-3078804.html
3078803 இந்தியா இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் உறவு முக்கியமானது: அமெரிக்கா DIN DIN Saturday, January 19, 2019 01:36 AM +0530
அமெரிக்காவின் இந்திய - பசிபிக் பிராந்தியக் கொள்கையில் இந்தியா மிக முக்கியமான நாடு என்று அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன்  தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் திறன்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் பெண்டகன் கூறியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 என்ற டிரையம்ப் அதிநவீன ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து, அமெரிக்கா மிக வெளிப்படையாக தனது அதிருப்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில், இந்தியாவை பாராட்டும் வகையில் பெண்டகன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக பெண்டகனின் ஆய்வறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:  தெற்காசியாவில் அதிநவீன மற்றும் தொலைதூர ஏவுகணைகளை சோதனை செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவுடன் திறன்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் மிக முக்கியமான பாதுகாப்பு சார்ந்த நட்பு நாடாக இயற்கையாகவே இந்தியா உருவெடுத்துள்ளது. ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மேற்கொள்கின்ற ஏவுகணைத் திட்டங்கள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதன் எல்லையை ஒட்டிய பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், அந்நாட்டின் தலைமைக்கு ஆதரவளிப்போம் என்று கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க உத்திசார் கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை பெண்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவுக்கு அண்டை நாடுகளிடம் உள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு தாட் என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரப்பட்டது. ஆனால், முந்தைய அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு அதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், அதேபோன்ற டிரையம்ப் வகை ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/இந்திய---பசிபிக்-பிராந்தியத்தில்-இந்தியாவின்-உறவு-முக்கியமானது-அமெரிக்கா-3078803.html
3078802 இந்தியா உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் பதவியேற்பு DIN DIN Saturday, January 19, 2019 01:35 AM +0530
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியம் குழு, கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்தது.
இந்தத் தகவல் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
உச்சநீதிமன்றத்துக்கு மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டதன் மூலம், தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதையடுத்து, மேகாலய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி முதல் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவி வகித்து வந்தார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/உச்சநீதிமன்ற-நீதிபதிகள்-இருவர்-பதவியேற்பு-3078802.html
3078800 இந்தியா பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி ரூ.10,000 கோடியை எட்டும் DIN DIN Saturday, January 19, 2019 01:34 AM +0530
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பானது நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.10,000 கோடியை எட்ட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறை செயலர் அஜய் குமார் தெரிவித்தார். குஜராத்தில் 9-ஆவது வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய தொழில் வர்த்தக மாநாடு நடைபெறுகிறது. அதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு அஜய் குமார் பேசியதாவது:
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியானது கடந்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி மதிப்பானது ரூ.1,500 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்த மதிப்பு ரூ.4,500 கோடியை எட்டியது.
கடந்த நவம்பரில் அதன் மதிப்பு ரூ.7,500 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டு நிறைவடையும் மார்ச் மாதம் நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியின் மதிப்பு ரூ.10,000 கோடியை எட்ட வாய்ப்புள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்கள் எளிதாக தடம் பதிக்க முடிந்தது.
இதனாலேயே பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியின் மதிப்பு அதிகரிப்பது சாத்தியமாகியுள்ளது. பாதுகாப்புத் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கான மிகப்பெரிய சவால், வெளிப்படைத்தன்மை இல்லாததாகும். ஆனால், தற்போது அந்தத் துறையில் வெளிப்படைத்தன்மை, தகவல்களை பகிர்ந்துகொள்ளுதல், ஒருங்கிணைந்து பணியாற்றுதல் ஆகியவை அதிகரித்துள்ளன.  பாதுகாப்பு முதலீட்டு பிரிவு என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஆன்லைன் பிரிவானது, பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு நல்லதொரு வழிகாட்டியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வசதியால், குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பயனடைந்துள்ளன.
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரையில் ரூ.4,000 கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படுவதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று அஜய் குமார் கூறினார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/பாதுகாப்புத்-துறையில்-ஏற்றுமதி-ரூ10000-கோடியை-எட்டும்-3078800.html
3078797 இந்தியா காஷ்மீரில் 2-ஆவது நாளாக கையெறி குண்டு தாக்குதல் DIN DIN Saturday, January 19, 2019 01:30 AM +0530
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை இரு இடங்களில் கையெறி குண்டு தாக்குதல் நிகழ்த்தினர். இதில் அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸார் கூறினர்.
இது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட 2-ஆவது கையெறி குண்டு தாக்குதல் சம்பவமாகும்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீநகரின் லால் செளக்கில் உள்ள கான்டா கார் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை (சிஆர்பிஎஃப்) தாக்கும் நோக்கில் கையெறி குண்டு ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். சாலையோரம் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்போ, எவருக்கும் காயமோ ஏற்படவில்லை.
சம்பவ இடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கார் ஒன்று மட்டும் சேதமடைந்தது. அதேபோல், தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். அதிலும், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, ஸ்ரீநகரின் ஜீரோ பிரிட்ஜ் பகுதியில் வியாழக்கிழமை போலீஸார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்தத் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அத்துமீறல்: இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிராநகர் செக்டாரில் எல்லை அருகே உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து காலை 11 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர் 13-ஆவது முறையாக அத்துமீறிய வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/காஷ்மீரில்-2-ஆவது-நாளாக-கையெறி-குண்டு-தாக்குதல்-3078797.html
3078796 இந்தியா சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: கேரள போலீஸாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு DIN DIN Saturday, January 19, 2019 01:30 AM +0530
சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த 2 பெண்களுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள போலீஸாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த அந்த அமர்வு, சபரிமலைக்குச் சென்று சந்நிதானத்தில் சுவாமி தரிசனம் செய்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகியோருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில கோரிக்கைகள் குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பில்லை.
கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் ஹன்சாரியா, இவர்களுக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 51 பெண்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், இந்த மனுவை சபரிமலை தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அந்தக் கோரிக்கை நீதிபதிகள் நிராகரித்தனர்.
அந்த மனுவில், அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சபரிமலை சந்நிதானத்தில் வழிபாடு செய்த பிறகு கோயில் நடையை  அடைத்துவிட்டு, பரிகாரச் சடங்குகளை மேற்கொள்ளாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பிட்ட வயதுப் பெண்கள் வழிபாடு செய்துவிட்டுச் சென்ற பிறகு, பரிகாரச் சடங்குகளை செய்வதன் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று அந்த மனுவில் இரண்டு பெண்களும் குறிப்பிட்டுள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 
இதையடுத்து, கேரளம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/சபரிமலைக்குச்-சென்ற-பெண்களுக்கு-24-மணி-நேரமும்-பாதுகாப்பு-கேரள-போலீஸாருக்கு-உச்சநீதிமன்றம்-உத்தரவு-3078796.html
3078795 இந்தியா எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மம்தா நடத்தும் பொதுக் கூட்டம்: ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி கடிதம் DIN DIN Saturday, January 19, 2019 01:29 AM +0530
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக் கூட்டத்துக்கு ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தாவில்  சனிக்கிழமை (ஜன. 19) திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. 
இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்து ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்துவதிலும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதிலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் காக்கும் வகையில் ஒரு பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் ராகுல் கூறியுள்ளதாவது:
உண்மையான தேசியவாதம், ஜனநாயகம் ஆகியவற்றைக் காக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இணையும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 
நாட்டின் மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்பட வேண்டும். 
ஆனால், இவற்றை அழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளால் மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். 
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவது எதிர்காலம் நன்மையாக அமையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. நாளைய இந்தியா நாட்டு மக்கள் அனைவருக்கானதாக அமையும். ஜாதி, மத, இன, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரும் அன்புடன் வாழும் இடமாக நமது நாடு உருவாக வேண்டும் என்று தனது பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/எதிர்க்கட்சிகளை-ஒருங்கிணைத்து-மம்தா-நடத்தும்-பொதுக்-கூட்டம்-ஆதரவு-தெரிவித்து-ராகுல்-காந்தி-கடிதம்-3078795.html
3078794 இந்தியா மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு? DIN DIN Saturday, January 19, 2019 01:28 AM +0530
மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
மக்களவைத் தேர்தலை எத்தனை மாதங்களில், எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை, தேர்தல் நடத்துவதற்கான பிற ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை கணக்கில் வைத்து, தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. அதேபோன்று நடப்பு ஆண்டு இறுதியில் பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக புதிதாக தேர்தல் நடத்தியாக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் அல்லது மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் கொண்டு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதற்கான தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 12-ஆம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
அதற்கு முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரையிலான தேதிகளில் 5 கட்டங்களாகவும், 2004-ஆம் ஆண்டில் ஏப்ரல் 20 முதல் மே 10 வரையிலான தேதிகளில் 4 கட்டங்களாகவும் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மக்களவைத் தேர்தலை நடத்த 22.3 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 17.3 லட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். 10.6 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/மார்ச்-முதல்-வாரத்தில்-பொதுத்தேர்தல்-தேதி-அறிவிப்பு-3078794.html
3078793 இந்தியா விரைவில் இடி, மின்னல் குறித்தும் முன்னெச்சரிக்கை வெளியிடப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல் DIN DIN Saturday, January 19, 2019 01:28 AM +0530
இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ், ஒடிஸா அமைச்சர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.ஜே.ரமேஷ் பேசியதாவது:
இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளில், இடி, மின்னல் போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படுவதுதான் நாட்டிலேயே 2-ஆவது இடத்தில் உள்ளது. ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது.
இந்த விஷயத்தில் ஒடிஸா அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் பல புயல் நிவாரண முகாம்களை ஒடிஸா அரசு அமைத்துள்ளது. இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒடிஸா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்ட வேண்டிய ஒன்று. இயற்கை பேரழிவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது என்று கூறினார்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஒடிஸா உயர்கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சர் கூறுகையில், ஒடிஸாவில் கடந்த 4 ஆண்டுகளில் இடி,  மின்னல் போன்றவற்றால் 1560 பேர் உயிரிழந்தனர். அதிக மழைப்பொழிவு, புயல், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் ஒடிஸா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு சூப்பர் புயலுக்கு பிறகு, பேரிடர் கால மீட்பு பணிகளை விரைந்து செய்வதற்காக மாநில தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டது என்றார்.
இதனிடையே, புவி அறிவியல் துறை செயலர் எம்.என். ராஜீவன் பேசுகையில்,  இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறுகிய கால அளவில் ஏற்படுவதால் அதை முன்கூட்டியே கணிப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனினும் அதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மின்னல் குறித்த தகவலை சேகரிக்கும் வகையில், தாமினி என்ற செல்லிடப்பேசி செயலியை  ஐஐடி புணே கல்லூரியுடன் இணைந்து புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. எனினும் இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/விரைவில்-இடி-மின்னல்-குறித்தும்-முன்னெச்சரிக்கை-வெளியிடப்படும்-வானிலை-ஆய்வு-மையம்-தகவல்-3078793.html
3078792 இந்தியா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வரும்: பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் DIN DIN Saturday, January 19, 2019 01:27 AM +0530
மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று பாஜக விவசாயிகள் பிரிவுத் தலைவர் வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தப்படி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. தேசிய அளவிலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய அறிவிப்புகள் மூலம் மக்களைக் கவரும் நோக்கில் பாஜக உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வீரேந்திர சிங் இது தொடர்பாக கூறியதாவது:
கிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு தொடர்ந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மத்திய அரசு விவசாயிகளின் நலனைக் கொண்டு மிக முக்கியமான முடிவை எடுக்கும். அது விவசாயிகளுக்கு நல்லதொரு அறிவிப்பாக இருக்கும். விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்காது.
பாஜக விவசாயிகள் அணி சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அடுத்த மாதம் தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார் என்றார் வீரேந்திர சிங்.
வீரேந்திர சிங்கின் இந்த பேச்சு மூலம், மத்திய அரசின் அறிவிப்பு கடன் தள்ளுபடியாக இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. எனவே, விவசாயிகளின் ஈடுபொருள் செலவுக்கான தொகையை மத்திய அரசு அளிக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், விதை, உரம், பூச்சி மருந்து, நீர்பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்காகவே விவசாயிகள் அதிக அளவு தொகையை கடன் பெறுகின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/விவசாயிகளுக்கு-விரைவில்-நல்ல-அறிவிப்பு-வரும்-பாஜக-விவசாயப்-பிரிவுத்-தலைவர்-3078792.html
3078790 இந்தியா உ.பி.யில் சுரங்க முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் DIN DIN Saturday, January 19, 2019 01:26 AM +0530 உத்தரப் பிரதேசத்தில் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி, சமாஜவாதி சட்டமேலவை உறுப்பினர் (எம்எல்சி) உள்பட 4 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
உத்தப் பிரதேசத்தின் ஹமிர்பூர் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாக சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் 
பதிவு செய்து அமலாக்கத் துறை ஒருபக்கம் விசாரித்து வருகிறது.
முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வராக பதவி வகித்து வந்த சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சில காலம் சுரங்கத் துறையை தம் வசம் வைத்திருந்தார். அதனடிப்படையில், அவருக்கு இந்த வழக்கில் சிபிஐ ஏற்கெனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை நால்வருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜவாதி எம்எல்சி ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோருக்கு வரும் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லக்னௌ அலுவலகத்தில்
ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதேபோல், மேலும் 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சுரங்க ஒதுக்கீட்டுக்காக லஞ்சம் பெற்று, அதை சட்டப்பூர்வமானதாக மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அசையும், அசையாத சொத்துகள் முடக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/உபியில்-சுரங்க-முறைகேடு-ஐஏஎஸ்-அதிகாரி-உள்பட-4-பேருக்கு-அமலாக்கத்-துறை-சம்மன்-3078790.html
3078789 இந்தியா மத்தியில் இருப்பது சர்வாதிகார ஆட்சி: சந்திரபாபு நாயுடு DIN DIN Saturday, January 19, 2019 01:26 AM +0530
மத்தியில் பாஜக தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
 தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமா ராவின் 23-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டெலிகான்பரன்ஸ் முறையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், அடுக்குமுறையை ஒழிக்கவும் எவ்வாறு போராட வேண்டும் என்று நமது கட்சியின் நிறுவனர் என்.டி.ஆர். நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இப்போது, கண்முன் நடக்கும் நிகழ்வாக மத்தியில் பாஜக தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி அதன் தலைவராக இருந்து நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற நாம் தர்மயுத்தம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் இதற்காக நமது கட்சித் தொண்டர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். பாஜக ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றன.
ஆனால், இந்தக் கூட்டத்தில் தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதியும், ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை. இதன் மூலம், இந்த இரு கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்படுவது மீண்டும் வெளிப்பட்டுள்
ளது என்றார் சந்திரபாபு நாயுடு.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/மத்தியில்-இருப்பது-சர்வாதிகார-ஆட்சி-சந்திரபாபு-நாயுடு-3078789.html
3078788 இந்தியா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் ராமர் கோயில் கட்ட முடியும்:  ஹரிஷ் ராவத் DIN DIN Saturday, January 19, 2019 01:25 AM +0530
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
கொள்கைகளும், நெறிமுறைகளும் இல்லாத தலைவர்களின் கூடாரமாக பாஜக உள்ளது. அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், நீதியின் மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தை பாஜக அரசியலுக்காகவே பயன்படுத்துகிறது. ஆனால், அங்கு காங்கிரஸால் மட்டுமே கோயில் கட்ட முடியும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இது உறுதி.
ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த அளவுக்கு மோசமான வேலையிலும் பாஜக ஈடுபடும். இதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் உள்ளன. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த மாநிலங்களில் கூட முறைகேடாக செயல்பட்டு பிற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இப்போதும் கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை விலை பேசி காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயன்றது. இதற்காக பணத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்தினர். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை மிரட்டும் வேலையில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான விலையை மக்களவைத் தேர்தலின்போது பாஜக கொடுக்கும். மக்கள் அக்கட்சியை முழுமையாகப் புறக்கணிப்பார்கள் என்றார் அவர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/காங்கிரஸ்-ஆட்சிக்கு-வந்தால்தான்-ராமர்-கோயில்-கட்ட-முடியும்--ஹரிஷ்-ராவத்-3078788.html
3078787 இந்தியா அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம் DIN DIN Saturday, January 19, 2019 01:25 AM +0530
அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரான பிரேம் பரமேஸ்வரனை(50) நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில்,  ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் குறித்த அதிபர் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக எலைன் எல். சாவோவை நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த குழுவின் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர் பிரேம் பரமேஸ்வரன் உள்பட 12 பேரை நியமிக்க டிரம்ப் ஆர்வமாக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
ஆசிய பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு பகுதியில் உள்ள மக்கள் குறித்த அதிபர் ஆலோசனை குழு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவால் அமைக்கப்பட்டது. அந்த குழுவில், தொழில்துறை, சுகாதாரம், பல்கலைக்கழகம், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.  ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்து துறைகளுடனும்  இணைந்து இந்த உறுப்பினர்கள் பணியாற்றுவர்.
இந்நிலையில், அதிகாரமிக்க இந்த குழுவுக்கு இந்திய அமெரிக்கரும்,  நிதித்துறை நிபுணருமான பிரேம் பரமேஸ்வரனை நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். 
அவர் தற்போது இரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் பதவியையும், தலைமை நிதி அதிகாரி பொறுப்பையும்  வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/அதிபர்-ஆலோசனைக்-குழுவில்-இந்திய-அமெரிக்கரை-நியமிக்க-டிரம்ப்-ஆர்வம்-3078787.html
3078786 இந்தியா மோடியின் நண்பர்களுக்காகவே ரஃபேல் ஒப்பந்தம்: சீதாராம் யெச்சூரி DIN DIN Saturday, January 19, 2019 01:23 AM +0530
பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான சில தொழிலதிபர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுக்கு 126 போர் விமானங்கள் வேண்டும் என்று விமானப்படையிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 36 ரஃபேல் போர் விமானங்களை மட்டுமே பிரான்ஸிடம் இருந்து மத்திய அரசு வாங்குகிறது. அதுவும் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைவிட 41.42 சதவீதம் கூடுதல் விலையில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக சுட்டுரையில் யெச்சூரி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படை கோரிய 126 விமானங்களுக்கு பதிலாக, 36 ரஃபேல் விமானங்கள் மட்டுமே வாங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி பாரீஸ் சென்றபோது திடீரென வெளியிட்டார். இதன் மூலம் ராணுவ விமானக் கொள்முதல் தொடர்பான நடைமுறைகள் அனைத்தையும் பிரதமர் மீறினார். இதுதவிர, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைவிட சுமார் 41 சதவீதம் அதிக விலை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்புக் கொண்டார். இதன் காரணமாகவே ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மோடி மறைத்து வருகிறார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொள்ளாமல், மோடியின் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த விமான கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து தனது நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு இதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற்றால், அவர்களின் முறைகேடுகள் அனைத்தும் வெளிப்பட்டு விடும் என்ற அச்சம்தான் மறுப்புக்குக் காரணம் என்று யெச்சூரி தனது பதிவில் கூறியுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/மோடியின்-நண்பர்களுக்காகவே-ரஃபேல்-ஒப்பந்தம்-சீதாராம்-யெச்சூரி-3078786.html
3078785 இந்தியா பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் DIN DIN Saturday, January 19, 2019 01:22 AM +0530
பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக குஜராத், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தன. இப்போது மூன்றாவதாக உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலுமே பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப் பிரிவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொதுப் பிரிவினரில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் இது முழுமையாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
முன்னதாக, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், மத்திய அரசால் 124ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 
இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. 
அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். 
பின்னர், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் கடந்த திங்கள்கிழமை அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/பொதுப்-பிரிவினருக்கு-10-இடஒதுக்கீடு-உத்தரப்-பிரதேச-அரசு-ஒப்புதல்-3078785.html
3078784 இந்தியா சோனியா, ராகுல் விரைவில் உ.பி. பயணம் DIN DIN Saturday, January 19, 2019 01:22 AM +0530
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரே பரேலியில் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இரு தின சுற்றுப்பயணத்தின் போது, தனது அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அமேதி மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அனில் சிங் தெரிவித்தார். 
அதேப்போல, சோனியா காந்தி அவரது சொந்த தொகுதியான ரே பரேலியில் நடைபெற உள்ள மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்திலும்  பங்கேற்க உள்ளார். 
இதற்காக இருவரும்,  ஃபர்சாத்கஞ்ச் விமான நிலையத்திற்கு வரும் ஜனவரி 23-இல் வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் அவரவர் தொகுதிகளுக்கு இருவரும் செல்வார்கள். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் 24ஆம் தேதி இருவரும் தில்லிக்கு கிளம்பி செல்வார்கள் என கட்சியினர் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/சோனியா-ராகுல்-விரைவில்-உபி-பயணம்-3078784.html
3078756 இந்தியா புதிய பிரதமருக்காக நாடு காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ் DIN DIN Saturday, January 19, 2019 01:03 AM +0530
புதிய பிரதமருக்காகவும், மாற்றத்துக்காகவும் நாடு காத்திருக்கிறது என்று சமாஜவாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெறவுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வந்த அகிலேஷ் யாதவ், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசால் நாட்டு மக்கள் துயரத்தில் உள்ளனர். விவசாயிகள், இளைஞர்கள், வர்த்தகர்கள் வறுமையில் உள்ள மக்கள் என அனைவரும் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். நாட்டுக்கு புதிய பிரதமர் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புதிய பிரதமருக்காக நாட்டு மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். பாஜகவுக்கு எதிரான பொதுக்கூட்டத்துக்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்த பொதுக்கூட்டத்தின் மூலமாக நாட்டு மக்களுக்கு மாற்றத்துக்கான செய்தியை அவர் அளித்துள்ளார் என்று அகிலேஷ் கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/புதிய-பிரதமருக்காக-நாடு-காத்திருக்கிறது-அகிலேஷ்-யாதவ்-3078756.html
3078755 இந்தியா மேற்கு வங்கத்தில் அமித் ஷா பங்கேற்கும் பொதுக் கூட்ட தேதி மாற்றம் DIN DIN Saturday, January 19, 2019 01:02 AM +0530
மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக் கூட்டங்களின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அமித் ஷா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தேதி மாற்றம் செய்யப்பட்டதாக அந்த மாநில பாஜக தெரிவித்தது. இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
உடல்நலக் குறைவால் அமித் ஷா பாதிக்கப்பட்டிருப்பதால், பொதுக் கூட்டம் நடைபெற இருந்த தேதிகள் மாற்றப்பட்டன. மால்டாவில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித் ஷா, இன்னும் 2 தினங்களில் குணமடைந்துவிடுவார்.
பிர்பும் மாவட்டத்தின் சுரி நகரில் 23ஆம் தேதியும், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் 24ஆம் தேதியும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பார்.
பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கு வங்கத்தில் சில பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார். ஆனால், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று திலீப் கோஷ் தெரிவித்தார். 42 மக்களவைத் தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் குறைந்தது 22 இடங்களில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் சனிக்கிழமை மிகப் பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளார். இதில், லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிக்கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/மேற்கு-வங்கத்தில்-அமித்-ஷா-பங்கேற்கும்-பொதுக்-கூட்ட-தேதி-மாற்றம்-3078755.html
3078754 இந்தியா அடர் பனிமூட்டம்: தில்லியில் 450 விமானங்களின் சேவை பாதிப்பு! DIN DIN Saturday, January 19, 2019 01:02 AM +0530
தில்லியில் வெள்ளிக்கிழமை காலை அடர் பனிமூட்டம் சூழ்ந்ததால், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 
விமான ஓடுபாதையில் காண்புதிறன் குறைவாக இருந்த காரணத்தால் விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதும் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பாங்காக், துபை, மஸ்கட், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதன்காரணமாக ஏராளமான பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தில்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை விமான நிலையத்துக்கு வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாததால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து தில்லி வந்த விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
தில்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட குறைந்தபட்ச காண்புதிறன் விமான ஓடுபாதையில் 125 மீட்டராவது இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 4 மணியிலிருந்து காண்புதிறன் தில்லி விமான நிலையத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், காலை 5.30 மணி முதல் 10.20 மணி வரை பல்வேறு விமானங்களின் புறப்பாடு நிறுத்திவைக்கப்பட்டது. அதேபோன்று, காலை 6 மணி முதல் 7.20 மணி வரை விமானங்களின் வருகை விட்டுவிட்டு அனுமதிக்கப்பட்டது.
எனினும், காலை 9.20 மணி மற்றும் 10.20 மணிக்கு இடையே காண்புதிறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானங்கள் காலை 10 மணியிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன. இந்த வகையில் மொத்தம் 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இவற்றில் 97 சதவீதம் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் அடர் பனிமூட்டம் காரணமாக தாமதமானது. மற்ற விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
இது தொடர்பாக விஸ்தாரா விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை காலை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தில்லியில் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. விமானம் புறப்பட்டுச் செல்வது பனிமூட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சுட்டுரைப் பதிவில், தில்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் உருவாகியுள்ள பனிமூட்டம் காரணமாக சில விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/அடர்-பனிமூட்டம்-தில்லியில்-450-விமானங்களின்-சேவை-பாதிப்பு-3078754.html
3078753 இந்தியா ரஃபேல்: முறைகேடு இல்லை என்பது சிஏஜி ஆய்வில் தெரியவரும்: மத்திய அரசு DIN DIN Saturday, January 19, 2019 01:02 AM +0530
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆய்வறிக்கையில் தெரியவரும் என்று கூறியுள்ளது.
பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், இதன் மூலம் விமானத்தின் விலை அதிகரிக்கப்பட்டதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதனை முன்வைத்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ரஃபேல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியான செய்தியில் புதிதாக எந்த விஷயமும் இல்லை. அந்த செய்தியே தவறானதாகும். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் விரிவாக பதிலளித்துவிட்டார். ரஃபேல் ஒப்பந்தத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளில் எந்த முறைகேடும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், சிஏஜி-யின் ஆய்வுக்காக அளிக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்பது சிஏஜி அறிக்கையில் தெரியவரும். அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை சர்ச்சையாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், பாஜகவுக்கு எதிராக பொய்யான பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/ரஃபேல்-முறைகேடு-இல்லை-என்பது-சிஏஜி-ஆய்வில்-தெரியவரும்-மத்திய-அரசு-3078753.html
3078752 இந்தியா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மூவரை தேர்வு செய்தது கொலீஜியம் DIN DIN Saturday, January 19, 2019 01:01 AM +0530
மும்பை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளாக 3 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு தேர்வு செய்துள்ளது.
பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் பதவிக்காக, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. 
இதில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பி.வி. கானேதிவாலாவையும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, கீழமை நீதிமன்ற நீதிபதி மனோஜித் மோந்தல், வழக்குரைஞர் சந்திபன் கங்குலி ஆகியோரையும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மேற்கொண்ட இந்த நியமன முடிவு தொடர்பாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்த வாசிம் சாதிக் நர்கால், நாஸிர் அகமது பெய்க், செüகத் அகமது மக்ரூ ஆகிய 3 வழக்குரைஞர்களின் பெயரை கொலீஜியம் நிராகரித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.பி. அகர்வால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததன் நகல், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக, வழக்குரைஞர் அமித் நெகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்களில், வழக்குரைஞர்கள் கிருஷ்ணேந்து தத்தா, செüரவ் கிருபால் ஆகியோரது நியமனம் தொடர்பாக 2-3 வாரங்களுக்குப் பிறகு முடிவெடுக்கப்படவுள்ளது. வழக்குரைஞர்கள் பிரியா குமார், சஞ்சய் கோஸ் ஆகியோரது நியமனம் தொடர்பான பரிந்துரை நகல், தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணிக்கு, வழக்குரைஞர்கள் சுகந்த் குப்தா, சஞ்சய் வஷிஷ்த், ஜஸ்தீப் சிங் கில், மன்சூர் அலி, சுனில் குமார் சிங் பன்வார், தீபிந்தர் சிங் நல்வா, ஹர்ஷ் பங்கர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நகலும் அந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/உயர்நீதிமன்ற-நீதிபதிகளாக-மூவரை-தேர்வு-செய்தது-கொலீஜியம்-3078752.html
3078751 இந்தியா எந்த கூட்டணியை கண்டும் பாஜக அஞ்சாது: உ.பி. துணை முதல்வர் DIN DIN Saturday, January 19, 2019 01:01 AM +0530
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், எந்த கூட்டணியை கண்டும் பாஜக அஞ்சாது என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் ஏற்பாட்டின் பேரில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
இதில் சமாஜவாதியும் பகுஜன் சமாஜும் பங்கேற்கவுள்ளன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தினேஷ் சர்மா கூறியதாவது:
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். பாஜக மீதான பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. அவர்கள் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். சந்தர்ப்பவாதிகளாக திகழும் அவர்களிடம் எந்த கொள்கையோ நெறிகளோ கிடையாது. அவர்களால் பாஜகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
நாட்டின் மேம்பாட்டுக்காக பாஜக மேற்கொண்டு வரும் பணிகளை மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாதமும் குற்றங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பார்வை நமது மாநிலத்தை நோக்கி திரும்பியுள்ளது என்றார் தினேஷ் சர்மா.
சட்டவிரோத சுரங்க விவகாரத்தில் சிபிஐ அண்மையில் மேற்கொண்ட சோதனைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முந்தைய அரசுகளைப் போல நாங்கள் செயல்பட மாட்டோம். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/எந்த-கூட்டணியை-கண்டும்-பாஜக-அஞ்சாது-உபி-துணை-முதல்வர்-3078751.html
3078750 இந்தியா காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி DIN DIN Saturday, January 19, 2019 01:01 AM +0530
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்துக்குள்பட்ட கர்துங் லா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சரக்கு லாரி சிக்கி அதில் வந்த 5 பேர் உயிரிழந்தனர்.  
இதுகுறித்து எல்லைப்புற சாலைகள் அமைப்பினர் (பிஆர்ஓ) கூறியதாவது: லடாக் பிராந்தியத்தில் கர்துங் லா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், 10 நபர்களுடன் வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. 
நிகழ்விடத்துக்கு மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக உரிய உபகரணப் பொருள்களுடன், பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சரக்கு லாரியில் சென்றவர்கள் லாரியுடன் பனிச்சரிவுக்கு அடியே சிக்கிக் கொண்டுள்ளனர்.  
காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுப் படை பணியாளர்களும் தற்போது சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதுவரையிலும், இறந்து போன 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன மற்றவர்களை தீவிரமாக தேடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/19/காஷ்மீர்-பனிச்சரிவில்-சிக்கி-5-பேர்-பலி-3078750.html
3078749 இந்தியா எப்போது மக்களவைத் தேர்தல்? மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கிறதா தேர்தல் ஆணையம்?  DIN DIN Friday, January 18, 2019 09:48 PM +0530
மக்களவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்த வேண்டும், எந்த மாதத்தில் நடத்த வேண்டும் என்பது குறித்தான முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் அறிவிப்பை எந்த தேதியில் வெளியிடவேண்டும் என்பது குறித்தான முடிவு இதுவரை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.    

இதுதொடர்பாக, வெளியாகியுள்ள தகவல்கள்களின் படி, பாதுகாப்பு படை மற்றும் இதர தேவைகளின் அடிப்படையில் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், மக்களவைத் தேர்தல் குறித்தான அறிவிப்புகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் இணைத்து நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வாய்ப்புள்ளது. 

ஜம்மூ-காஷ்மீரில் ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து அங்கு அடுத்த 6 மாதத்தில் புதிய சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தவேண்டும். நவம்பர் 2018-இல் கலைக்கப்பட்டதால், அங்கு அதிகபட்சமாக மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதனால், காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடைபெற வாய்ப்புள்ளது. 

2004-இல், மக்களவைத் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் பிப்ரவரி 29-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 20-ஆம் தேதியும், கடைசி கட்ட தேர்தல் மே 10-ஆம் தேதியும் நடைபெற்றது. 

2009-இல், மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் மார்ச் 2-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 16-ஆம் தேதியும், கடைசி கட்ட தேர்தல் மே 13-ஆம் தேதியும் நடைபெற்றது. 

2014-இல், மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் மார்ச் 5-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதியும், கடைசி கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதியும் நடைபெற்றது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/election-commmission-may-announce-lok-sabha-polls-schedule-in-march-first-week-sources-3078749.html
3078732 இந்தியா மம்தா பானர்ஜிக்கு ராகுல் அனுப்பியிருக்கும் ஒற்றுமைக்கான கடிதம்  DIN DIN Friday, January 18, 2019 03:24 PM +0530
புது தில்லி: கொல்கத்தாவில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மம்தா பேனர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தாவில் வரும் 19-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. 

இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி தனது ஆதரவுக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், மம்தா பானர்ஜிக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு இதன் மூலம் ஒரு செய்தியை நிச்சயம் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

உண்மையான தேசப்பற்று மற்றும் வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளோம். ஜனநாயகத்தின் தூண்களையும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையையும் எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க முடியும். ஆனால், பாஜக மற்றும் மோடி தலைமையிலான அரசு இவற்றை அழிக்கும் கொள்கைக் கொண்டவை. அந்த எண்ணத்தை நாம் அழிக்க வேண்டும். அதற்கான பணியில் முன்னிலையில் இருக்கும் மேற்கு வங்க மக்களுக்கு எனது வாழ்த்துகள். 

பொய் உறுதி மொழிகள் மற்றும் பொய் மூட்டைகளால் ஆன மோடி அரசின் மீதான கடும் வெறுப்பு மற்றும் அதிருப்தி கொண்ட மக்களைக் கொண்ட பெரும் படை உருவாகி வருகிறது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/மம்தா-பானர்ஜிக்கு-ராகுல்-அனுப்பியிருக்கும்-ஒற்றுமைக்கான-கடிதம்-3078732.html
3078726 இந்தியா அமித் ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விமா்சனம்: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு பாஜக கண்டனம் DIN DIN Friday, January 18, 2019 02:50 PM +0530
புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதனை முன்வைத்து அவரை விமா்சித்த காங்கிரஸ் மூத்த தலைவா் பி.கே.ஹரிபிரசாதுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக கூறி, பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பி.கே.ஹரிபிரசாத் பேசினாா். அப்போது, ‘கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியாமல் போன அதிா்ச்சியில், அமித் ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதுவும் சாதாரண காய்ச்சல் அல்ல; பன்றி காய்ச்சல்’ என்று கூறினாா். 
அவரது கருத்துக்கு, பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அமித் ஷாவின் உடல்நலம் குறித்து ஹரிபிரசாத் தெரிவித்துள்ள கருத்துகள் அநாகரிகமானவை. காய்ச்சலை குணப்படுத்தி விடலாம். ஆனால், காங்கிரஸ் தலைவா்களுக்கு உள்ள மனநோயை குணப்படுத்தவே முடியாது’ என்றாா்.

ஹரிபிரசாதின் கருத்துக்கு மத்திய அமைச்சா்கள் ராஜ்யவா்தன் ரத்தோா், முக்தாா் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா சதுா்வேதி கூறுகையில், ‘உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி, ரவிசங்கா் பிரசாத், அமித் ஷா ஆகியோா் விரைவில் நலம் பெறற காங்கிரஸ் வாழ்த்து கூறியுள்ளது. கொள்கையில் வேறுபட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எந்த கெடுதலும் நேரக் கூடாது என்பதே காங்கிரஸின் நோக்கம்’ என்றாா்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/அமித்-ஷாவுக்கு-காய்ச்சல்-பாதிப்பு-குறித்து-விமா்சனம்-காங்கிரஸ்-மூத்த-தலைவருக்கு-பாஜக-கண்டனம்-3078726.html
3078719 இந்தியா சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்துவுக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு DIN DIN Friday, January 18, 2019 12:29 PM +0530
புது தில்லி: சபரிமலையில் தரிசனம் செய்த கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, கேரளம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இருவரில், ஒரு பெண்ணை, அவரது மாமியார் தாக்கியதில் காயமடைந்தார்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சந்நிதானத்தில் வழிபாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த 2 பெண்கள், தங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 2 பெண்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், ஆஜராகி வாதாடினார்.

இரண்டு பெண்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சபரிமலை சந்நிதானத்தில் வழிபாடு செய்த பிறகு கோயில் நடையை அடைத்துவிட்டு, பரிகாரச் சடங்குகளை மேற்கொள்ளாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

குறிப்பிட்ட வயதுப் பெண்கள் வழிபாடு செய்துவிட்டுச் சென்ற பிறகு, பரிகாரச் சடங்குகளை செய்வதன் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று அந்த மனுவில் இரண்டு பெண்களும் குறிப்பிட்டிருந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/சபரிமலையில்-தரிசனம்-செய்த-கனகதுர்கா-பிந்துவுக்கு-பாதுகாப்பு-உச்ச-நீதிமன்றம்-உத்தரவு-3078719.html
3078716 இந்தியா உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா பதவியேற்பு DIN DIN Friday, January 18, 2019 12:12 PM +0530  

புது தில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, இவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார் என்று மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பல மூத்த நீதிபதிகள் இருக்கின்ற நிலையில் சஞ்சீவ் கன்னாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியம் குழு, கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்தது.

கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இவர்கள் இருவரும் புதிதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம், தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/justices-dinesh-maheshwari-sanjiv-khanna-sworn-in-as-sc-judges-3078716.html
3078707 இந்தியா தேர்தல் தேதி அறிவிப்பா..? தேர்தல் ஆணையம் மறுப்பு DIN DIN Friday, January 18, 2019 10:12 AM +0530
புதுதில்லி: தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானது; இதுபோன்ற வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளதாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. 

இதையடுத்து மக்களவைத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அந்த தகவலில் உண்மையில் என்றும், இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/தேர்தல்-தேதி-அறிவிப்பா-தேர்தல்-ஆணையம்-மறுப்பு-3078707.html
3078631 இந்தியா ஊழல் புகாரில் இந்திய விளையாட்டு சம்மேளனத்தின் இயக்குநர் உட்பட 4 பேரை கைது DIN DIN Friday, January 18, 2019 09:28 AM +0530
புதுதில்லி: ஊழல் புகாரில் இந்திய விளையாட்டு சம்மேளனத்தின் இயக்குநர் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.

இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் சிலர் போக்குவரத்து பிரிவு ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ, நேற்று வியாழக்கிழமை (ஜன.17) மாலை விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விளையாட்டு சம்மேளத்தின் இயக்குநர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ. 

இந்நிலையில், விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சிபிஐ அதிரடி சேதனை குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ரத்தோர் தனது டுவிட்டர் பக்க பதிவில், லஞ்சம் இல்லா இந்தியாவை உருவாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதனால் லஞ்சம் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தந்து சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் லஞ்சம் ஒழிக்கப்படும் வரை எங்களின் நடவடிக்கை தொடரும் என பதிவிட்டுள்ளார். 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/ஊழல்-புகாரில்-இந்திய-விளையாட்டு-சம்மேளனத்தின்-இயக்குநர்-உட்பட-4-பேரை-கைது-3078631.html
3078345 இந்தியா கல்லூரிகளில் 10% கூடுதல் இடங்கள்: 10% இடஒதுக்கீடு எதிரொலி DIN DIN Friday, January 18, 2019 04:20 AM +0530
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆமதாபாதில் 9ஆவது வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கண்காட்சி அரங்கை சுற்றிப் பார்வையிட்ட மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சில பொருள்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பின்னர் ஆமதாபாதில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனது அரசுக்கு அரசியல் ரீதியில் துணிச்சல் இருந்த காரணத்தால்தான், பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருப்போருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முடிந்தது. ஏற்கெனவே சமூக ரீதியில் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலேயே, மத்திய அரசு இந்த இடஒதுக்கீடு அளித்துள்ளது.
இந்த சட்டம், நாடு முழுவதும் உள்ள 40,000 கல்லூரிகள், 900 பல்கலைக்கழகங்களில் நிகழ் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும். இதற்கு ஏதுவாக, கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் பல்வேறு நிறுவனங்களும் இணைக்கப்படும். இப்படி செய்வதன் மூலம், ஏழைகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 100 நாள்களில் 7 லட்சம் ஏழைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆமதாபாதில் தற்போது திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைதான், நாட்டிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் கொண்ட முதல் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை மூலம், குஜராத்தில் மருத்துவத் துறை மேம்படும்.
ஆமதாபாத் நகர மேயராக சர்தார் வல்லபபாய் படேல் பதவி வகித்த காலம் முதல் தற்போது வரையிலும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு ஆமதாபாத் மாநகராட்சி முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றார் மோடி.
இதன்பின்னர் ஷாப்பிங் விழா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், மத்திய அரசு கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உதவி செய்துள்ளது. சுற்றுலா துறையிலோ, உற்பத்தி துறை அல்லது சேவைத் துறையிலோ, கடந்த நான்கரை ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறது. சிறு வியாபாரிகளுக்காக ஜிஇஎம் எனப்படும் வலை
தளத்தை மத்திய அரசு உருவாக்கி தந்துள்ளது. இதன்வாயிலாக, தற்போது வரை ரூ.16,500 கோடி மதிப்புக்கு வணிகம் நடைபெற்றுள்ளது.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அடிப்படையில், வங்கிகள் கடன் கொடுக்கும் நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. மறைமுக வரியை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார் மோடி.
ஆமதாபாதில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய் சிலையை மோடி திறந்து வைத்தார். அப்போது மோடி பேசியபோது, நாட்டு மக்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்ப அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், விக்ரம் சாராபாய்க்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.
வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியில், முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளுக்காக தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குழுவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. கண்காட்சிக்கு 1,500 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வணிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/கல்லூரிகளில்-10-கூடுதல்-இடங்கள்-10-இடஒதுக்கீடு-எதிரொலி-3078345.html
3078333 இந்தியா அந்தமான் நிகோபரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் DIN DIN Friday, January 18, 2019 04:11 AM +0530 அந்தமான் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்ததாவது: காலை 8.43 மணியளவில் இந்த நிலநடுக்கம் நிகோபர் தீவுப்பகுதியை  மையமாக கொண்டு ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் இது 6 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (இன்காய்ஸ்) இயக்குநர் எஸ்பிஎஸ்.ஷெனாய் கூறுகையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் மட்டத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.  இன்காய்ஸ் நிறுவனம் நிலநடுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாகும் சுனாமி குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு  சுனாமி எச்சரிக்கை விடும் அமைப்பாகும். இந்தியா மட்டுமின்றி சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அண்டைய நாடுகளுக்கும் சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய அமைப்பாகவும் திகழ்கிறது.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/அந்தமான்-நிகோபரில்-சக்திவாய்ந்த-நிலநடுக்கம்-3078333.html
3078312 இந்தியா பயிர்க்கடன் தள்ளுபடி தற்காலிக தீர்வுதான்:  துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு DIN DIN Friday, January 18, 2019 02:48 AM +0530
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு, நீண்ட கால தீர்வுகளே அவசியமாக உள்ளன; பயிர்க்கடன் தள்ளுபடி என்பது தற்காலிக தீர்வுதான் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், இத்துறையை வலுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் அளவில் அமைப்புரீதியிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண் துறை தொலைநோக்கு பார்வை-2019 என்ற பெயரில் தில்லியில் இரண்டு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நான் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கைக்கு எதிரானவன் இல்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய திறனும் வளமும் வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்வது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு, நீண்ட கால தீர்வுகளே அவசியம். முறையான சாலை, மின்சார வசதி; பற்றாக்குறையின்றி தண்ணீர் கிடைப்பது, பதப்படுத்துதலுக்கு தேவையான உபகரணங்கள், முறையான சந்தை கட்டமைப்பு, உரிய நேரத்தில் கடன் கிடைப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத் துறையில் நிலைத் தன்மையை உறுதி செய்வது, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்கும் முக்கியமானதாகும். இத்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை திறனுடன் எதிர்கொள்வதற்காக, அறிவியல்- தொழில்நுட்பரீதியிலான புத்தாக்கங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புத்தாக்கங்களின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்: விவசாயத் தொழிலை, மக்கள் சிறிது சிறிதாக கைவிட்டு வருவது கவலையளிக்கிறது. உரிய லாபம் கிடைக்காததால், விவசாயத் தொழிலை கைவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, படித்த இளைஞர்கள் மீண்டும் கிராமங்களுக்கு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான், இத்துறையை லாபம் மிகுந்த துறையாக மாற்ற முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/பயிர்க்கடன்-தள்ளுபடி-தற்காலிக-தீர்வுதான்--துணை-குடியரசுத்-தலைவர்-வெங்கய்ய-நாயுடு-3078312.html
3078311 இந்தியா எல்லையில் போர் இல்லாவிட்டாலும் ராணுவத்தினர் பலியாவது தொடர்கிறது: மோகன் பாகவத் வேதனை DIN DIN Friday, January 18, 2019 02:47 AM +0530
நமது நாட்டின் எல்லையில் போர் எதுவும் நடைபெறவில்லை; எனினும், ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வேதனைதெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்யும் நிலை இருந்தது. சுதந்திரத்துக்கு பின், போர்க் காலங்களில் மட்டும் எல்லைகளில் உயிர்த் தியாகங்கள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது போர் இல்லாவிட்டாலும், எல்லையில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. நாம் நமது பணியை முறையாக செய்யாததே இதற்கு காரணம். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நமது நாட்டை தலைசிறந்த தேசமாக மாற்றவும் நாம் ஒவ்வொருவரும் அயராது பாடுபட வேண்டும். அரசு, காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைக் கடந்து ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/எல்லையில்-போர்-இல்லாவிட்டாலும்-ராணுவத்தினர்-பலியாவது-தொடர்கிறது-மோகன்-பாகவத்-வேதனை-3078311.html
3078310 இந்தியா உச்சநீதிமன்றம்: வழக்கு விசாரணையை தாமதமாக தொடங்கிய நீதிபதிகள் DIN DIN Friday, January 18, 2019 02:47 AM +0530
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உள்பட மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுகள் வழக்கு விசாரணையை வியாழக்கிழமை காலதாமதமாக தொடங்கின.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அமர்வுகள், வழக்குகள் மீதான விசாரணையை காலை 10.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையை வியாழக்கிழமை பிற்பகல் 12.15 மணிக்குத் தொடங்கியது. நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு காலை 11.30 மணிக்கும், மூத்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு காலை 11.00 மணிக்கும் வழக்கு விசாரணையை தொடங்கின.
உச்சநீதிமன்றத்துக்கு பத்திரிகையாளர்களும், மனுதாரர்களும், வழக்குரைஞர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். நீதிபதிகள் ஏன் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை என்பது தெரியாததால் அவர்கள் குழப்பத்துடன் காத்திருந்தனர்.
அப்போது மூத்த நீதிபதி ஏ.கே சிக்ரி, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நாஸர் ஆகியோருடன் வந்தார். அங்கு திரண்டிருந்த வழக்குரைஞர்களை நோக்கி அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து, தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூடியபோது, மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், தனது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முதலில் இருக்கையில் எங்களை அமர அனுமதியுங்கள். அதன்பிறகு உங்களது கோரிக்கையை முன்வையுங்கள் என கடிந்து கொண்டார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/உச்சநீதிமன்றம்-வழக்கு-விசாரணையை-தாமதமாக-தொடங்கிய-நீதிபதிகள்-3078310.html
3078309 இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவது கருத்து சுதந்திரமல்ல:  அருண் ஜேட்லி DIN DIN Friday, January 18, 2019 02:46 AM +0530
பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவது கருத்து சுதந்திரமல்ல எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பவர்கள், வேண்டுமென்றே அனைத்தையும் எதிர்க்கும் மனப்போக்குடன் செயல்படுகின்றனர் எனவும்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி, முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசை வேண்டுமென்றே விமர்சிக்கும் எதிர்ப்பாளர்கள், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதன்மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வலுவிழக்கச் செய்து, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்றனர். கருத்துச் சுதந்திரம், விமர்சிக்கும் உரிமை போன்றவை தான் ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளே தவிர, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது, சட்டரீதியிலான அமைப்புகளை அழிப்பது போன்றவை அல்ல. 
தற்போதைய மத்திய அரசால் எந்த நன்மையும் செய்ய இயலாது என்று நினைப்பவர்களால், நாட்டுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் பங்களிக்க முடியாது. மாறாக, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலமாகத்தான் தேசத்தை கட்டமைக்க முடியும்.
வேண்டுமென்றே விமர்சிக்கும் மனப்பான்மை உடையவர்களால் நன்மை செய்ய இயலாது. அவ்வாறு விமர்சிப்பவர்கள், தாங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறோம் என்பதை உணரும் மனசாட்சி இல்லாதவர்கள்.
தேசத்தின் பொது நலனுக்கு எதிராகச் செயல்படும்போதிலும், அது தேசத்துக்கு சாதகமானதாக தோற்றமளிக்கும் வகையில் அவர்களால் பொய்யாக விவாதிக்க இயலும். அவர்களால் ஊழலைக் கூட நியாயப்படுத்த முடியும். எப்போது தங்களுக்கு என்ன தேவையோ, அதற்கேற்றாற்போல் மாறிக் கொள்ளும் இரட்டை நிலையை அவர்களால் கடைப்பிடிக்க இயலும் என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/பொய்யான-குற்றச்சாட்டுகளைக்-கூறுவது-கருத்து-சுதந்திரமல்ல--அருண்-ஜேட்லி-3078309.html
3078308 இந்தியா இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு DIN DIN Friday, January 18, 2019 02:45 AM +0530
இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் கூறியதாவது:
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடிதம் எழுதினார். அதை இந்தியா ஒரு நாள் ஏற்றது; மற்றொரு நாள் நிராகரித்தது. பாகிஸ்தான் தொடர்பாக இந்தியாவிடம் தெளிவான கொள்கை இல்லை. இருதரப்பு உறவுகள் தொடர்பாக தெளிவில்லாத கொள்கையும், குழப்பமுமே இந்தியாவிடம் உள்ளது. ஆதலால் பேச்சுவார்த்தை குறித்து இந்தியாதான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், அந்நாடுதான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
அதேநேரத்தில், இந்தியா தொடர்பாக பாகிஸ்தானிடம் தெளிவான கொள்கை உள்ளது. அதைத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் தரப்பில் கர்தார்பூர் திட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராவி நதி மீது பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அடிப்படை முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளின்கீழ் அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டார். பிறகு கட்டாயப்படுத்தி அவரிடம் இந்திய அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த திரையுலக நட்சத்திரங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் கலாசார மற்றும் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் இந்திய பிரஜைகளுக்கு எங்கள் நாடு தொடர்ந்து விசா அளித்து வருகிறது.
இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு கடினமாக உள்ளது. ஆதலால் இந்தியாவுடனான பல்வேறு பிரச்னைகளுக்கும் விரைந்து தீர்வு காண முடிவதில்லை. இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து தனது முயற்சிகளை செய்து வருகிறது என்றார் முகம்மது பைசல்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/இந்தியாவிடம்-தெளிவான-கொள்கை-இல்லை-பாகிஸ்தான்-குற்றச்சாட்டு-3078308.html
3078307 இந்தியா அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக்கூடம் இந்தியா: உலக வங்கி ஆலோசகர் தகவல் DIN DIN Friday, January 18, 2019 02:45 AM +0530
அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக்கூடமாக இந்தியா திகழ்வதாக,அமெரிக்க நிபுணரும், உலக வங்கியின் ஆலோசகருமான ஜார்ஜியா பெட்கோஸ்கி கருத்து தெரிவித்தார். 
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் ஹூஸ்டன் இந்திய மாநாடு சார்பில் வணிகக்குழு உறுப்பினர் மாநாடு ஹூஸ்டனில் நடைபெற்றது. 
இதில் இந்திய-அமெரிக்கா நாடுகளிடையே பல்வேறு தொழில் துறைகளில் அளவில்லா முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான வாய்ப்புகள் குறித்தும், டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் இ-வர்த்தகம் போன்றவற்றின் மூலமாக வணிகம் மேற்கொள்வதன் மூலம் இருநாடுகளிடையே வணிகத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற உலக வங்கியின் ஆலோசகரும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான ஜார்ஜியா பெட்கோஸ்கி பேசியதாவது: 
பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்வதுடன், புதுமையான தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் சோதனைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. உலகமயமாக்குதல் மூலம் வளரும் பொருளாதாரத்தையும், வணிகத்தையும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார அடிப்படை மிகவும் வலுவானது. அதன் வளர்ச்சிப்பாதையை மேலும் உயர்த்துவதே சவாலாக உள்ளது என்றார். 
ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறுகையில், இந்திய- அமெரிக்கா இடையிலான வணிகத் தொடர்புகளில் ஹூஸ்டன் நகரம் 4ஆவது இடத்தை பெற்றுள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து ஹூஸ்டன் நகரத்திற்கு நேரடி விமானப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/அமெரிக்க-நிறுவனங்களின்-சோதனைக்கூடம்-இந்தியா-உலக-வங்கி-ஆலோசகர்-தகவல்-3078307.html
3078306 இந்தியா மக்களவைத் தேர்தல் தேதி குறித்து தவறான செய்தி: விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு DIN DIN Friday, January 18, 2019 02:44 AM +0530
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் என்று ஒரு பட்டியலை சமூகவலைதளங்களில் பரவவிட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தில்லி நகர காவல் துறையினர் இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் மே 12-ஆம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. அதன்படி, மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய 7 மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் வெகுவாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மக்களவைத் தேர்தல் அட்டவணை என்று பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிப்பு வெளியிடாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் பெயரில் சமூகவலைதளங்களில் போலியான செய்தி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் இந்த தவறான செய்தியை சமூகவலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து, தில்லி காவல்துறையின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/மக்களவைத்-தேர்தல்-தேதி-குறித்து-தவறான-செய்தி-விசாரணைக்கு-தேர்தல்-ஆணையம்-உத்தரவு-3078306.html
3078305 இந்தியா மக்களவைத் தேர்தல்: பிப்ரவரியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாராகும் DIN DIN Friday, January 18, 2019 02:44 AM +0530
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, பிப்ரவரி மாதம் இறுதிக்குள் தயாராகி விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக நாட்டின் 30 இடங்களில் பல்வேறு தரப்பினருடனும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது. அப்போது மக்களின் கருத்துகள் குறித்து கட்சி கேட்டறிந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் தனது கருத்துகளை தெரிவித்தார். அதுகுறித்தும் காங்கிரஸ் பரிசீலிக்கும்.
கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, நாடு முழுவதும் 60 இடங்களில் 150 ஆலோசனைக் கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கை தொடர்பாக இணையதளம் மூலமும் மக்களின் கருத்துகளை கட்சி கேட்டிருந்தது. அதற்கு 10,000 பேர் பதில் அனுப்பியுள்ளனர். அதில் பல்வேறு ஆலோசனைகளை அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்ட குழுவுக்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தலைமை வகிக்கிறார்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/மக்களவைத்-தேர்தல்-பிப்ரவரியில்-காங்கிரஸ்-தேர்தல்-அறிக்கை-தயாராகும்-3078305.html
3078304 இந்தியா அருணாசல்: என்பிபி எம்எல்ஏக்கள் இருவர் காங்கிரஸில் இணைந்தனர் DIN DIN Friday, January 18, 2019 02:44 AM +0530
அருணாசல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் கட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகி, காங்கிரஸில் இணைந்தனர். 
இதையடுத்து அந்த மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கான பலம் 5-ஆக அதிகரித்துள்ளது; தேசிய மக்கள் கட்சிக்கான பலம் 5-ஆகக் குறைந்துள்ளது. 
இடாநகரில் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது, தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்களான தபாங் தலோ, ராஜேஷ் தசோ ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் தகம் சஞ்சய் ஆகியோர் மீது அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இவர்கள் இணைந்தது கட்சிக்கான பலம் என்று பேரவை காங்கிரஸ் தலைவர் தகம் பாரியோ தெரிவித்தார். மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியானது, பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எனினும், அருணாசல பிரதேச அரசில் அக்கட்சி அங்கம் வகிக்கவில்லை. மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். அத்துடன், இரு சுயேச்சைகளின் ஆதரவும் அக்கட்சிக்கு உள்ளது.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/அருணாசல்-என்பிபி-எம்எல்ஏக்கள்-இருவர்-காங்கிரஸில்-இணைந்தனர்-3078304.html
3078303 இந்தியா ரயில் இயக்கப் பணியாளர்களுக்கான படித் தொகை இருமடங்கு உயர்கிறது DIN DIN Friday, January 18, 2019 02:44 AM +0530
ரயில் இயக்கப் பணியாளர்களான லோகோ பைலட், அசிஸ்டண்ட் லோகோ பைலட், கார்டு ஆகியோருக்கான பயண தூர படியை இரட்டிப்பாக்க ரயில்வே முடிவுசெய்துள்ளது. 
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: 
ஒரு ரயிலின் இயக்கத்துக்கான அடிப்படை பணியாளர்களாக இருப்பவர்கள் ரயில் இயக்கப் பணியாளர்கள் (ரன்னிங் ஸ்டாஃப்) ஆவர். அந்தப் பிரிவின் கீழ் வரும் லோகோ பைலட், அசிஸ்டண்ட் லோகோ பைலட், கார்டு ஆகியோர் தங்களது பணி நேரத்தின்போது பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பணி நேர பயண தூர படித் தொகை வழங்கப்படுகிறது. 
தற்போதைய நிலையில் அவர்களுக்கான அந்த பயண தூர படித் தொகையானது 100 கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.255 என்ற வகையில் வழங்கப்படுகிறது. இனி அந்தப் படித் தொகை 100 கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.520 என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. 
ரயில்வே ஊழியர்களின் இந்த நீண்டகால கோரிக்கையை அமல்படுத்தியதன் மூலம், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,225 கோடி கூடுதலாக செலவாகும். இந்த படித் தொகைக்காக இதுவரை ஆண்டுக்கு ரூ.1,150 கோடி செலவாகிவந்த நிலையில், இனி அந்தத் தொகை ரூ.2,375 கோடியாக அதிகரிக்க உள்ளது. இந்த படித் தொகை திருத்தம் தொடர்பான ஆவணங்கள், உரிய அனுமதிக்காக நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.
ரயில்வேயில் பணிபுரியும் இதர ஊழியர்களுக்கான படித் தொகை கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், ரயில் இயக்கப் பணியாளர்கள் தங்களுக்கான படித் தொகையை உயர்த்துமாறு 4 ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கான புத்தாண்டுப் பரிசாக இந்த படித் தொகை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் படித் தொகையானது 2017 ஜூலை 1 தேதி முதலாக கணக்கிடப்பட்டு வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் ரயில்வேக்கு ரூ.4,500 கோடி செலவாகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/ரயில்-இயக்கப்-பணியாளர்களுக்கான-படித்-தொகை-இருமடங்கு-உயர்கிறது-3078303.html
3078302 இந்தியா பிகார்: மேலும் 6 காப்பகங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு DIN DIN Friday, January 18, 2019 02:43 AM +0530
பிகார் மாநிலத்தில், காப்பகங்களையும், அதில் தங்கியுள்ளவர்களையும் முறையாகப் பராமரிக்கவில்லையென 6 காப்பகங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
முங்கேர் மாவட்டத்தில் காப்பகம் நடத்தி வரும் நாவல்டி பொதுநல சொஸைட்டி, அதே மாவட்டத்திலுள்ள பனா காப்பகம், கைமூரில் காப்பகம் நடத்தி வரும் கிராம ஸ்வராஜ் சேவா சன்ஸ்தான் அமைப்பு, முஸாஃபர்பூரில் காப்பகம் நடத்திவரும் ஓம் சாய் அறக்கட்டளை, இகார்த் அமைப்பால் நடத்தி வரப்படும் காப்பகம், பாட்னாவில் டான் பாஸ்கோ டெக் சொஸைட்டி நடத்தி வரும் கெளஷல் காப்பகம் ஆகியவற்றுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கிராம ஸ்வராஜ் சேவா சன்ஸ்தான் அமைப்பின் நிர்வாகிகள், காப்பக காவலாளிக்கு வரம்பு மீறிய அதிகாரம் அளித்துள்ளனர். அவர், காப்பகத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அவர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளார்.
ஓம் சாய் அறக்கட்டளையின் இயக்குநரும், தனது காப்பகத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார். பாட்னாவில் இகார்த் அமைப்பின் காப்பகத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் சில சிறுமிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. காப்பகத்திலுள்ள பெண்களுக்கு உரிய உடைகள், மருந்துகள், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாததும் தெரியவந்துள்ளது. கெளஷல் காப்பகத்தில் ஆண்கள், பெண்கள் பரஸ்பரம் பார்க்கவோ, பேசிக்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் கூறினர்.
 

]]>
https://www.dinamani.com/india/2019/jan/18/பிகார்-மேலும்-6-காப்பகங்களுக்கு-எதிராக-சிபிஐ-வழக்கு-3078302.html