Dinamani - உலகம் - https://www.dinamani.com/world/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3178991 உலகம் அமைதிக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டது: ஈரான் அதிபர் சீற்றம் DIN DIN Wednesday, June 26, 2019 12:49 AM +0530
தங்கள் மீது கூடுதலாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான பாதையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடைத்து விட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஈரானுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக அமெரிக்கா கூறுகிறது. மேலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்க அந்த நாடு விடுத்த அழைப்பை நாங்கள் அலட்சியம் செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறது.
அதே நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் அமெரிக்கா வருவதற்கும், அவரது சொத்துகளை முடக்கவும் அந்த நாடு தடை விதிக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தடையையும் விதித்துவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுப்பதாக அமெரிக்கா கூறுவதன் மூலம், அந்த நாடு பொய் சொல்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இது ஒருபுறம் என்றால், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு சொத்துகள் ஏதும் வைத்திராத, அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணமே இல்லாத மதத் தலைவர் மீது தடை விதிப்பதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
உண்மையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், அந்த நாடுதான் அதற்குத் தயாராக இல்லை. அமெரிக்கா விரும்பினால், நாங்கள் நிச்சயம் அந்த நாட்டுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார் ரெளஹானி.
வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு  வாபஸ் பெற்றார்.
எனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடை விதிப்பதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மீதும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அதிபர் ஹஸன் ரெளஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/26/அமைதிக்கான-பாதையை-அமெரிக்கா-அடைத்துவிட்டது-ஈரான்-அதிபர்-சீற்றம்-3178991.html
3178990 உலகம் ரஷியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: துருக்கி திட்டவட்டம் DIN DIN Wednesday, June 26, 2019 12:48 AM +0530
அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்காக ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் அவர் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது: அமெரிக்காவின் நெருக்கடியை ஏற்று, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அந்த ஏவுகணைகளை வாங்கிப் பயன்படுத்துவது என்பது துருக்கியின் இறையாண்மை தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, அந்த இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அந்தத் திட்டம் கைவிடப்படாது.
திட்டமிட்டபடி ரஷியாவிலிருந்து எஸ்-400 ஏவுகணைகள் அடுத்த மாதம் வரத் தொடங்கும். துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் நமக்குத் தேவையில்லை என்றார் எர்டோகன்.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தரையிலிருந்து பாய்ந்து இடைமறித்து அழிக்கும் அதிநவீன எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷியாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிட துருக்கி அதிபர் எர்டோகன் மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கு தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், அதிபர் எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/26/ரஷியாவுடனான-ஒப்பந்தத்திலிருந்து-பின்வாங்க-மாட்டோம்-துருக்கி-திட்டவட்டம்-3178990.html
3178989 உலகம் பிரிட்டன்: ஜூலை 23-இல் புதிய பிரதமர் பெயர் அறிவிப்பு DIN DIN Wednesday, June 26, 2019 12:48 AM +0530
பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜிநாமா செய்துள்ள தெரசா மே-வுக்கு பதிலாக, பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பதை வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரிட்டனின் அடுத்தப் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்ஸன், மற்றும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் ஆகிய இருவரில் யார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது அடுத்த மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இதற்கு அந்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்த தேதியில் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்ற விவரம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரசா மே 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார்.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்குமான வர்த்தக உறவு குறித்து அவர் அந்த அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3 முறை நிராகரிக்கப்பட்டது.
இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதன் எதிரொலியாக, தனது பதவியை பிரதமர் தெரசா மே ராஜிநாமா செய்தார். அந்தப் பதவிக்கு இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் பிரதமராகத் தொடர்கிறார்.
இந்த நிலையில், அந்தப் பதவிக்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் போட்டியிட்டனர்.
இறுதியாக, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸனும், ஜெரிமி ஹன்ட்டும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, இரு போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1.66 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே ஜூலை மாதம் 6-லிருந்து 8-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை தபால் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, வெற்றியாளரின் பெயர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/26/பிரிட்டன்-ஜூலை-23-இல்-புதிய-பிரதமர்-பெயர்-அறிவிப்பு-3178989.html
3178988 உலகம் கஷோகி படுகொலை: சர்வதேச விசாரணை தேவை DIN DIN Wednesday, June 26, 2019 12:47 AM +0530
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரைத் திருமணம் செய்யவிருந்த ஹாடிஸ் செங்கிஸ்  வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: துருக்கியிலுள்ள தங்களது தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சவூதி அரேபியா கூறி வருகிறது. எனினும், அந்த விசாரணை நம்பகத்தன்மை அற்றது ஆகும். எனவே, இந்த விவகாரம் குறித்து நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசர தேவையாகும் என்றார் அவர்.
முன்னதாக, கஷோகி படுகொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஆக்னஸ் கலாமர்ட் தெரிவித்துள்ள நிலையில் ஹாடிஸ் செங்கிஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். 
இந்தச் சூழலில், துருக்கியைச் சேர்ந்த ஹாடிஸ் செங்கிஸை திருமணம் செய்துகொள்வதற்குத் தேவையான சில ஆவணங்களைப் பெறுவதற்காக அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கஷோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேதி சென்றார்.
எனினும், அங்கு அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/26/கஷோகி-படுகொலை-சர்வதேச-விசாரணை-தேவை-3178988.html
3178987 உலகம் கம்போடிய கட்டட விபத்து: 5 சீனர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு DIN DIN Wednesday, June 26, 2019 12:47 AM +0530
கம்போடியாவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 28 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 சீனர்கள் உள்பட 7 பேர் மீது அந்த நாட்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கம்போடியாவின் சிஹானோக்வில் நகரில் சனிக்கிழமை நேரிட்ட அடுக்குமாடி கட்டட விபத்து தொடர்பாக, சீனாவைச் சேர்ந்த அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் செங் குன் மீது அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக சீனாவைச் சேர்ந்த கட்ட ஒப்பந்ததாரர், கட்டுமான மேலாளர், பொறியாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்து தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள சீன நாட்டவர் ஒருவரும், வியத்நாம் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்போடியாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிஹானோக்வில் நகரில் சீனா பெருமளவில் முதலீடு செய்து தொழில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. எனினும், சனிக்கிழமை நேரிட்ட இந்த கட்டட விபத்தைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் பாதுகாப்பை அலட்சியம் செய்வதாக பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், 5 சீனர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/26/கம்போடிய-கட்டட-விபத்து-5-சீனர்கள்-உள்பட-7-பேர்-மீது-வழக்கு-3178987.html
3178972 உலகம் ரத்தாகிறது குடியுரிமை; நாடு கடத்தப்படுகிறாரா மெஹுல் சோக்சி?  DIN DIN Tuesday, June 25, 2019 08:46 PM +0530  

புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெஹுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி பற்றிய தகவல்கள் வெளிவரும் முன்னரே இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை தற்போது மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கிறது

இதனிடையே மெஹுல் சோக்சி, மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் குடியுரிமைபெற்று பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரது ஆண்டிகுவா குடியுரிமையை ரத்து செய்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது.

இந்நிலையில் மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.  அதில்,  ”நிதி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட எந்த கிரிமினல்களுக்கும் ஆண்டிகுவாவில் அடைக்கலம் கொடுக்க விரும்பவில்லை. சட்ட ரீதியில் வழக்கு தொடர சோக்ஷிக்கு அனுமதி கொடுக்கப்படும்.  சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர், அவர் நிச்சயம் நாடு கடத்தப்படுவார்” என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
india, PNB scam, nirav modi, rahul sokshi, west indies, antiqua, extradition, citizenship, cancellation, https://www.dinamani.com/world/2019/jun/25/mehul-sokshi-touted-to-be-extradited-from-antiqua-post-its-pm-coston-browns-decision-3178972.html
3178286 உலகம் அமெரிக்க பொருளாதார தடைகளால் பாதிப்பில்லை: ஈரான் DIN DIN Tuesday, June 25, 2019 02:38 AM +0530
அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. 
அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதையடுத்து, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். இந்தச் சூழலில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி, டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் தொடர்பாக எங்களுக்கு உண்மையாகவே எதுவும் தெரியாது. அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதால், அவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.
ஈரான் அதிபரின் ஆலோசகர் ஹெசாமுதீன் ஆஷ்னா, சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், தொடர் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில், நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. இதனை எப்படி ஏற்க முடியும்? போரையும், பொருளாதார தடைகளையும் நாணயத்தின் இருபக்கங்களாகவே நாங்கள் கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/அமெரிக்க-பொருளாதார-தடைகளால்-பாதிப்பில்லை-ஈரான்-3178286.html
3178285 உலகம் ஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை DIN DIN Tuesday, June 25, 2019 02:38 AM +0530
ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை சீன ராணுவம் வெற்றிகரமாக திங்கள்கிழமை சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து சீன அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆளில்லா  கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகமும், சீன வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த விமானம், கான்சு மாகாணத்திலுள்ள ஜாங்க்யி பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
அந்த விமானத்தில் ராணுவ உபகரணங்கள் ஏற்றி அனுப்பப்பட்டன. அந்த விமானமும் ஏற்கெனவெ நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அந்த உபகரணங்களை வெற்றிகரமாக தரையிறக்கியது.
ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானம் மூலம், 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தில் 500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள பொருள்களை தரையிறக்கியது இதுதான் முதல்முறையாகும். அதுமட்டுமன்றி, இந்த ரக விமானத்தை சோதனை நடத்தியதன்மூலம், அதிக எடை கொண்ட பொருள்களை எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கும் வசதியுடைய ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/ஆளில்லா-கனரக-சரக்கு-விமானம்-சீனா-வெற்றிகரமாக-சோதனை-3178285.html
3178222 உலகம் வங்கதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் பலி; 67  பேர் காயம் DIN DIN Tuesday, June 25, 2019 01:00 AM +0530
 வங்கதேசத்தில் விரைவு ரயில் ஒன்று திங்கள்கிழமை தடம்புரண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 67 பேர் காயமடைந்தனர்.
மௌல்விபாசர் மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சயில்கட்டில் இருந்து இயக்கப்பட்ட உபாபன் விரைவு ரயில், மௌல்விபாசர் மாவட்டம் பாரம்சலில் வந்தபோது, அதிலிருந்த 2 பெட்டிகள் தடம்புரண்டன. 2 பெட்டிகளில் ஒன்று, தண்டவாளம் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்னொரு பெட்டி, தண்டவாளம் பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் ரயிலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 67 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 20 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, சயில்கட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்த தகவலின்பேரில், ரயில்வே குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு வங்கதேச ரயில்வே அமைச்சகம் 2 குழுக்களை அமைத்துள்ளது. அக்குழுவிடம் அடுத்த 3 நாள்களில் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/வங்கதேசத்தில்-விரைவு-ரயில்-தடம்-புரண்டு-விபத்து-5-பேர்-பலி-67--பேர்-காயம்-3178222.html
3178221 உலகம் சவூதி மன்னரைச் சந்தித்தார் பாம்பேயோ DIN DIN Tuesday, June 25, 2019 01:00 AM +0530
சவூதியில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், சவூதி அரேபியாவில் மைக் பாம்பேயோ திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சவூதி மன்னர் சல்மானிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் உடனும் பாம்பேயோ பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈரானுடன் பகைமைப் போக்கு நிலவி வரும் சூழலில், பாம்பேயோவின் சவூதி அரேபிய சுற்றுப்பயணம் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பாம்பேயோ கூறுகையில், ஈரான் விடுக்கும் சவால்களைச் சமாளிக்க சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளும் அமெரிக்காவுக்குத் துணையாக இருக்கின்றன. ஈரானுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து அந்நாடுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். மேலும், ஈரான் பிரச்னை தொடர்பாக உலகளாவிய கூட்டணி அமைப்பது குறித்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றார்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/சவூதி-மன்னரைச்-சந்தித்தார்-பாம்பேயோ-3178221.html
3178220 உலகம் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு DIN DIN Tuesday, June 25, 2019 12:59 AM +0530
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார் காலமானார். அவருக்கு வயது 88.
பாகிஸ்தான் அதிபரான முஷாரப் பதவி வகித்த காலத்தில், இந்தியாவின் ஆக்ரா நகரில் இருநாடுகளிடையேயான உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது முஷாரப்புடன் அப்துல் சதாரும் ஆக்ரா வந்திருந்தார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருமுறை அவர் பதவி வகித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரியா, முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகவும் அவர் இருந்துள்ளார். 1986ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார். எழுத்தாளராகவும் விளங்கிய சதார், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக  புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அப்துல் சதாரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/பாகிஸ்தான்-முன்னாள்-வெளியுறவு-அமைச்சர்-மறைவு-3178220.html
3178219 உலகம் தென்கொரியாவுக்கு டிரம்ப் விரைவில் பயணம் DIN DIN Tuesday, June 25, 2019 12:59 AM +0530
தென்கொரியா நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வாரம் அரசு முறை பயணமாக செல்லவுள்ளார்.
ஜப்பான்  நாட்டில் ஜி 20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டுவிட்டு, தென்கொரியாவுக்கு டிரம்ப் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-யின் உடன் வடகொரியா நாட்டுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேபோல், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளை பிரிக்கும் பகுதிக்கும் டிரம்ப் செல்லவுள்ளார்.
முன்னதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் அண்மையில் அணுஆயுத விவகார பேச்சுவார்த்தை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தென்கொரியாவுக்கு டிரம்ப் சுற்றுப்பயணம் செல்கிறார். இதனால் அவரது சுற்றுப்பயணம் கொரிய தீபகற்ப மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/தென்கொரியாவுக்கு-டிரம்ப்-விரைவில்-பயணம்-3178219.html
3178218 உலகம் துருக்கி: இஸ்தான்புல் மேயர் தேர்தலில் எர்டோகன் கட்சி தோல்வி DIN DIN Tuesday, June 25, 2019 12:58 AM +0530
துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற மறுதேர்தலில், அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகனின் கட்சி தோல்வியடைந்தது.
இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஏக்ரெம் இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட பினாலி இல்டிரிமை மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் மோசடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக ஆளுங்கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, மறுதேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தேர்தல் முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. அதில், இமாமோக்லு 54 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், இல்டிரிம் 45 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. 
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், அதிபர் எர்டோகனின் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். தேர்தல் வெற்றி குறித்து இமாமோக்லு கூறுகையில், இது தனியொரு கட்சியின் வெற்றியல்ல; ஒட்டுமொத்த இஸ்தான்புலும், துருக்கியும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக அதிபருடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன் என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற இமாமோக்லுவுக்கு அதிபர் எர்டோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/துருக்கி-இஸ்தான்புல்-மேயர்-தேர்தலில்-எர்டோகன்-கட்சி-தோல்வி-3178218.html
3178217 உலகம் ஹாங்காங்: அரசு அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகை DIN DIN Tuesday, June 25, 2019 12:58 AM +0530
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள், அரசு அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை திங்கள்கிழமை சுமார் 2 மணி நேரம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஹாங்காங்கின் வான் சாய் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் ரெவென்யூ டவர் என்ற அந்த கட்டடத்தின் நுழைவு வாயில் மற்றும் வரவேற்புப் பகுதியை சுமார் 100 போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
மேலும், ஜப்பானின் ஒசாகா நகரில் இந்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக பிரதான போராட்டக்காரர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது. 
ஹாங்காங்கின் சட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று நம்புகிறோம் என்று ஹாங்காங்கின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 
அனுமதிக்க மாட்டோம்: இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் ஹாங்காங் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜாங் ஜுன் கூறியுள்ளார். 
நியாயம், சமூக நீதியை பாதுகாக்கவும், சட்ட அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை போக்கவும் ஹாங்காங் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
அந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தேவையான ஒன்று. அதற்கு சீன மத்திய அரசு ஆதரவளிக்கிறது. ஜி-20 மாநாட்டில் ஹாங்காங் விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது; அதை அனுமதிக்க மாட்டோம் என்றார். 
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/ஹாங்காங்-அரசு-அலுவலகத்தை-ஆர்ப்பாட்டக்காரர்கள்-முற்றுகை-3178217.html
3178216 உலகம் சவூதி விமான நிலையத்தில் யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் DIN DIN Tuesday, June 25, 2019 12:58 AM +0530
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் யேமன் கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இந்தியர் உள்பட 21 பேர் காயமடைந்ததாகவும் சவூதி கூட்டுப் படையினர் தெரிவித்தனர். 
தனது ஆளில்லா விமானத்தை ஈரான் சூட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதன் நட்பு நாடான சவூதி மீது ஈரான் ஆதரவு பெற்ற யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இதுதொடர்பாக சவூதி கூட்டுப் படையினர் கூறியதாவது: 
சவூதியின் தெற்குப் பகுதியில் உள்ள அபா விமான நிலையத்தில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சிப் படை நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி கொல்லப்பட்டார். சவூதி அரேபியா, எகிப்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவர். 
இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 18 வாகனங்கள் சேதமடைந்ததுடன், வர்த்தகக் கட்டடம் ஒன்றின் கண்ணாடிகள் நொறுங்கின என்று கூட்டுப் படையினர் கூறினர். 
விமான நிலையத்தில் எந்த மாதிரியிலான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்த தகவலை கூட்டுப் படையினர் வெளியிடவில்லை. எனினும், ஹூதி கிளர்ச்சிப் படையினர் இதே விமான நிலையத்தை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் முன்பு தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், விமானப் போக்குவரத்து சீரடைந்ததாக அபா விமான நிலைய அதிகாரிகள் சுட்டுரையில் பதிவிட்டிருந்தனர். எவ்வளவு நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை. 
இதனிடையே, அபா மற்றும் ஜிஸான் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் அல் மசிரா தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. எனினும், ஜிஸான் விமான நிலையம் தாக்கப்பட்டதாக கூறப்படுவதை சவூதி கூட்டுப் படையினர் உறுதி செய்யவில்லை.  
இதே அபா விமான நிலையத்தில் கடந்த 12-ஆம் தேதி யேமன் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியப் பெண் உள்பட 26 பேர் காயமடைந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/சவூதி-விமான-நிலையத்தில்-யேமன்-கிளர்ச்சியாளர்கள்-தாக்குதல்-3178216.html
3178215 உலகம் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை DIN DIN Tuesday, June 25, 2019 12:57 AM +0530
இந்தோனேசியாவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் பாந்தா கடற்பகுதியில் இருக்கும் அம்போன் தீவில் பூமிக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளியாக இந்நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
முன்னதாக, பாபுவா மாகாணத்திலுளள அபிபுரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் நேரிட்ட சில மணி நேரங்கள் இடைவெளியில் அம்போன் தீவில் இந்நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தின் காரணமாக, அம்போன் தீவில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
கடந்த வாரமும் இதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது.
பூமிக்கடியில்  டெக்டானிக் பிளேட்டுகள் அமைந்துள்ள பசிபிக் ரிங் ஆப் ஃபயர் பகுதியில் இந்தோனேசியா நாடு உள்ளது. இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. 
கடந்த 2018ஆம் ஆண்டில் சுலேவேசி தீவில் உள்ள பலு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இந்த இயற்கை சீற்றத்தில் சுமார் 2,200 பேர் உயிரிழந்தனர். 
கடந்த 2004ஆம் ஆண்டில் ஆசக் மாகாணத்தில் 9.1 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. இதையடுத்து கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, இந்தோனேசியாவை தாக்கின. இதில் சுமார் 1,70,000 பேர் மரணித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/25/இந்தோனேசியாவில்-சக்திவாய்ந்த-நிலநடுக்கம்-சுனாமி-எச்சரிக்கை-இல்லை-3178215.html
3177991 உலகம் வெட்டுக்கிளிக்காக ஒன்றிணைந்த இந்தியா, பாகிஸ்தான் DIN DIN Monday, June 24, 2019 10:01 AM +0530  

வெட்டுக்கிளி வகைப் பூச்சிகளின் வரவுக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த 1993-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இவை பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் இங்கு இடம்பெயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முனபோ கிராமத்தில் ஜூன் 19-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்தினர். அப்போது வெட்டுக்கிளி தொல்லையை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பூச்சிகள் கட்டுப்பாட்டுத்துறையைச் சேர்ந்த மகேஷ் சந்திரா கூறுகையில், 

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் அனைத்து கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. அதற்கான பயிற்சிகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது.

ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

எனவே அதை தடுப்பதற்கான பிரத்தியேக மருத்துகளும் போதிய அளவு உள்ளன. தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார். 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/வெட்டுக்கிளிக்காக-ஒன்றிணைந்த-இந்தியா-பாகிஸ்தான்-3177991.html
3177665 உலகம் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை: டிரம்ப் அறிவிப்பு DIN DIN Monday, June 24, 2019 05:34 AM +0530  

ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளிடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பொருளாதாரப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். 

எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். இந்த சூழலில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்ற அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.

கடுமையான பொருளாதாரத் தடைகள்:  இது தொடர்பாக சுட்டுரையில் டிரம்ப்  வெளியிட்ட பதிவில், "ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. 

இவை, திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் அமலுக்கு வரும்' என்று கூறியுள்ளார். முன்னதாக, செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், "நாம் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை (ஈரான் மீது) விதிக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நாம் (அமெரிக்கா) விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஈரான் மீது அமெரிக்காவுக்கு எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்கள் வளமான நாடாக இருக்க விரும்பினால் அதற்கு தடையில்லை. அதே நேரத்தில் அணுஆயுத பலத்தைக் காட்டுவோம் என்று ஈரான் ஆணவப்போக்கில் செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம்' என்றார்.

இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா ராணுவரீதியாக இப்போதைக்கு நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் பல்வேறு உலக நாடுகளில் வெவ்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

முக்கியமாக ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே உள்ள தடைகளால் ஈரானால் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. 

இதனால் அங்கு இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது டிரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தடையின் பின்னணி: முன்னதாக, 2006-ஆம் ஆண்டு அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாடு மீது அமெரிக்கா படிப்படியாக கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.  இதன் பிறகு நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுஆயுதத் தயாரிப்பு தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனது அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதாக அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. 

அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் ஒப்பந்தம் சாத்தியமானது.

எனினும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு ஈரான்-அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது. 

முதலில் ஈரான் குடிமக்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில், ஈரானுடனான அணுஆயுத தயாரிப்பு தடை  ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இதனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. 

அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் அமெரிக்காவின் தடை பாயும். எனவே, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, தென்கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி, தைவான், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகள் வேறு வழியின்றி அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தின. இப்போது டிரம்ப் கூடுதலாக தடைகளை விதித்துள்ளது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

"சைபர்' தாக்குதல்    

ஈரான் அணுஆயுதத் திட்டங்களை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது சைபர் (இணைய வழி) தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தத் தாக்குதல் மூலம் ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்குவார்கள். இதனால், அந்நாடு தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மட்டுமல்லாது, அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் முடக்கப்படும்' என்றனர்.

ஈரானில் பிரிட்டன் அமைச்சர்    

பிரிட்டன் வெளியுறவுத் துறை இணையமைச்சர் (மத்திய கிழக்கு நாடுகள்) ஆன்ட்ரூ மோரிசன் ஈரானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கமால் கர்சாயை சந்தித்துப் பேசினார். 

அப்போது, ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் குறித்து இருதரப்பினரும் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையிலேயே ஆன்ட்ரூ இந்த பயணத்தை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/ஈரான்-மீது-கடுமையான-பொருளாதாரத்-தடை-டிரம்ப்-அறிவிப்பு-3177665.html
3177588 உலகம் இலங்கையில் கடத்தல்: 6 இந்தியர்கள் கைது DIN DIN Monday, June 24, 2019 02:07 AM +0530 இலங்கையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்த முயன்றதாக 6 இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பு விமான நிலையத்தில் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதிலிருந்து 53 வயதுக்குள் இருப்பார்கள். சென்னைக்கு தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/இலங்கையில்-கடத்தல்-6-இந்தியர்கள்-கைது-3177588.html
3177557 உலகம் துருக்கி: இஸ்தான்புல் மேயர் தேர்தல் DIN DIN Monday, June 24, 2019 01:21 AM +0530  

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை  மறுதேர்தல் நடைபெற்றது. அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சிக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/துருக்கி-இஸ்தான்புல்-மேயர்-தேர்தல்-3177557.html
3177556 உலகம் இலங்கை: அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டப் பிரிவை நீக்க சிறீசேனா வலியுறுத்தல் DIN DIN Monday, June 24, 2019 01:20 AM +0530 இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தலைநகர் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:

புதிய அரசை அமைத்து 4 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த தேர்தலைச் சந்திப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், நமது கடந்த கால செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 19-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொண்டதுதான் இந்த ஆட்சியில் நான் செய்த மிகப் பெரிய தவறாகும்.

அந்த திருத்தம் காரணமாகத்தான் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. தற்போது நானும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் எதிரெதிர் திசையில் ஆட்சி செலுத்துவதாகக் கூறப்படுகிறது. அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம். எனவே, அந்த சட்டத் திருத்தம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது என்றார் அவர்.

இலங்கை அதிபர் தேர்தலில் ஒருவர் இரண்டு முறைதான் போட்டியிட முடியும் என்ற கட்டுப்பாட்டை நீக்கும் அரசியல் சாசனத் திருத்தத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.

அதன் மூலம், அவர் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட வழி ஏற்படுத்தப்பட்டது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மைத்ரிபால சிறீசேனா, 2015-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்பொது எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அந்தத் தேர்தல் பிரசரத்தின்பபோது, அதிபரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைப்பது, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை அதிபரிடமிருந்து பறிப்பது ஆகியவற்றுக்கு வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ளப் போவதாக வாக்குறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற அவர், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், அவர் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/இலங்கை-அதிபரின்-அதிகாரத்தைக்-குறைக்கும்-சட்டப்-பிரிவை-நீக்க-சிறீசேனா-வலியுறுத்தல்-3177556.html
3177555 உலகம் சீனா: நிலநடுக்கம்: 31 பேர் காயம் DIN DIN Monday, June 24, 2019 01:19 AM +0530 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 31 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அந்த மாகாணத்தின் காங்ஸியான் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானது. இந்த மாகாணத்தில் இந்த மாதம் 17-ஆம் தேதி ஏற்பட்ட 6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்ததது நினைவுகூரத்தக்கது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/சீனா-நிலநடுக்கம்-31-பேர்-காயம்-3177555.html
3177554 உலகம் எத்தியோப்பியா: ராணுவ தளபதி, மாகாண முதல்வர் சுட்டுக் கொலை DIN DIN Monday, June 24, 2019 01:18 AM +0530 வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ராணுவ தலைமைத் தளபதியும், அந்த நாட்டின் அம்ஹாரா மாகாண முதல்வரும் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அபிய் அகமதுவின் அலுவலக செய்தித் தொடர்பாளர் பிலென் சேயூம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அம்ஹார மாகாண காவல்துறை தலைவர் அசாமிநியூ சிகே தலைமையில், அந்த மாகாண அரசைக் கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, மாகாண முதல்வர் அம்பாச்யூ மெகோனென் மற்றும் அவரது ஆலோசகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர்கள், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் மாகாண அட்டர்னி ஜெனரலும் படுகாயமடைந்தார். 7 மணி நேரம் கழித்து, ராணுவ தலைமைத் தளபதி சியாரே மெகோனென் தனது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகர் அடிஸ் அபாபாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அங்கு விருந்தினராக வந்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக தோன்றுகிறது. பாதுகாப்புப் படையினர் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றார் அவர்.

இதற்கிடையே, ராணுவ தலைமை தளபதி சியாரே மெகோனெனைச் சுட்டுக் கொன்ற அவரது பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்ஹாரா மாகாணத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட அசாமிநியூ சிகே தலைமறைவாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு என்ன காரணம்?

அம்ஹாரா மாகாண முதல்வரும், ராணுவ தலைமைத் தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான நோக்கம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து "இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப்' அமைப்பைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் வில்லியம் டேவிட்ஸன் கூறியதாவது:

இந்தத் தாக்குதல்கள் மூலம் அபிய் அகமதுவின் தலைமையிலான மத்திய அரசைக் கவிழ்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை.

மாகாண அரசைக் கைப்பற்றும் முயற்சியாக இருந்திருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அதற்கான அமைப்பு ரீதியிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட்டவில்லை. எனவே, தேசிய அளவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்திருப்பதாகக் கூற முடியாது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/எத்தியோப்பியா-ராணுவ-தளபதி-மாகாண-முதல்வர்-சுட்டுக்-கொலை-3177554.html
3177553 உலகம் வட கொரிய அதிபருக்கு டிரம்ப் மீண்டும் கடிதம் DIN DIN Monday, June 24, 2019 01:16 AM +0530 வட கொரியாவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் மிகச் சிறந்த வாசகங்களைக் கொண்டிருந்ததாக அதிபர் கிம் திருப்தியுடன் தெரிவித்தார். அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதன் மூலம் அதிபர் டிரம்ப் வெளிக்காட்டியுள்ள அரசியல் நிபுணத்துவத்தையும், அசாதாரண துணிச்சலையும் அதிபர் கிம் வெகுவாகப் பாராட்டினார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சுவையான கருத்துகள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கப்போவதாகவும் அவர் கூறினார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அதிபர்கள் டொனால்ட் டிரம்ப்புக்கும், கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர்வது, அணுசக்திப் பேச்சுவார்த்தையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்த வட கொரியா, தனது அணு ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, டிரம்ப், கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், மியாமன்மரிலும் இரு முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த டிரம்ப் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்தச் சூழலில், கிம் ஜோங்-உன்னுக்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/24/வட-கொரிய-அதிபருக்கு-டிரம்ப்-மீண்டும்-கடிதம்-3177553.html
3177532 உலகம் அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு DIN DIN Sunday, June 23, 2019 01:17 PM +0530 அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. 

இதில் விமானம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் 'ஸ்கை டைவிங்' சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/அமெரிக்காவில்-விமான-விபத்து-9-பேர்-உயிரிழப்பு-3177532.html
3177216 உலகம் இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் நீட்டிப்பு DIN DIN Sunday, June 23, 2019 10:34 AM +0530
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் திடீர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 258 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மீது அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தத் தாக்குதலை அடுத்து, இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பௌத்த மதத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மதக்கலவரம் நேரிடும் அபாயம் உருவானது.

இதை கருத்தில் கொண்டு, இலங்கையில் நெருக்கடி நிலையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமல்படுத்தினார். இந்த நெருக்கடி நிலை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இருப்பினும், நெருக்கடி நிலையை அதிபர் சிறீசேனா நீட்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்காக நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை அமலில் இருக்கும் வரையிலும், பொது பாதுகாப்பு சட்ட விதிகள் அமலில் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு சட்ட விதிகளின்கீழ், இலங்கை போலீஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின்கீழ், சந்தேகப்படும் நபர்களை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைத்து செல்லவோ முடியும்.
முன்னதாக, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின்போது இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆதலால் ஜூன் 22ஆம் தேதிக்குப் பிறகு நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட மாட்டாது என சிறீசேனா தெரிவித்திருந்தார். ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வேறு யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியிருந்தார். இதற்கு மாறாக, இலங்கையில் நெருக்கடி நிலையை சிறீசேனா நீட்டிப்பு செய்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின் கருத்தை செய்தியாளர்கள் அறிய முயன்றனர். ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

நெருக்கடி நிலையை அமல்படுத்தும்போது ஒரு மாதத்துக்கு மட்டுமே செயல்படுத்த முடியும். அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை 10 நாள்களில் அளிக்க வேண்டும். இலங்கை அதிபர் சிறீசேனா வசமே பாதுகாப்பு அமைச்சக இலாகா உள்ளது. இதனால், ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்திருந்த போதிலும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாக சிறீசேனா மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே 37 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் இலங்கையில் அமைதி திரும்பியிருந்த நிலையில், ஈஸ்டர் தின தாக்குதல் மீண்டும் அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/இலங்கையில்-நெருக்கடி-நிலை-மேலும்-நீட்டிப்பு-3177216.html
3176957 உலகம் அமெரிக்கா: பாதுகாப்பு அமைச்சர் பதவிக்குப் பரிந்துரை DIN DIN Sunday, June 23, 2019 12:30 AM +0530 காலியாக உள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிக்கு, ராணுவச் செயலராக பொறுப்பு வகித்து வரும் மார்க் எஸ்பெரின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். தற்போது பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சராக உள்ள பேட்ரிக் ஷனஹன், நிரந்தர பதவியைக் கோரும் விண்ணப்பத்தை விலக்கிக் கொண்டதையடுத்து, அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/அமெரிக்கா-பாதுகாப்பு-அமைச்சர்-பதவிக்குப்-பரிந்துரை-3176957.html
3176954 உலகம் பிரிட்டன்: போரிஸ் ஜான்ஸன் இல்லத்தில் போலீஸார்! DIN DIN Sunday, June 23, 2019 12:29 AM +0530 பிரிட்டனின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்ஸனின் இல்லத்தில் அளவுக்கு அதிகமான கூச்சல்  கேட்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது துணைவியாருடன் போரிஸ் ஜான்ஸன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரிய வந்தது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/பிரிட்டன்-போரிஸ்-ஜான்ஸன்-இல்லத்தில்-போலீஸார்-3176954.html
3176942 உலகம் ஹாங்காங்: முடிவுக்கு வந்தது காவல்துறை தலைமையக முற்றுகை DIN DIN Sunday, June 23, 2019 12:26 AM +0530 சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்ட மசோதா தொடர்பாக ஹாங்காங் காவல் துறை தலைமையகத்தை வெள்ளிக்கிழமை முதல் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள், அந்த முற்றுகையை சனிக்கிழமை அமைதியான முறையில் முடித்துக் கொண்டனர்.
எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை ஹாங்காங் அரசு நிறைவேற்றாதது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, காவல்துறை தலைமையகம் முன்னர் வெள்ளிக்கிழமை கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நகரின் முக்கியச் சாலைகளில் அவர்கள் தற்காலிக தடைகளை ஏற்படுத்தினர்.
ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் எனவும், நாடுகடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், இரவு முழுவதும் நீடித்த காவல் துறை தலைமையக முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை முடித்துக் கொள்ளப்பட்டு, போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டு, போக்குவரத்து சீரானது.
எனினும், மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களது முக்கிய கோரிக்கைகளுக்கு ஹாங்காங் அரசு செவிமடுக்காதது குறித்து போராட்டக்காரர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/ஹாங்காங்-முடிவுக்கு-வந்தது-காவல்துறை-தலைமையக-முற்றுகை-3176942.html
3176941 உலகம் ஈரான் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை DIN DIN Sunday, June 23, 2019 12:25 AM +0530 அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் மூண்டால் ஈரான் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து "என்பிசி' தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருந்தாலும், அதற்கான இறுதி ஒப்புதலை நான் அளிக்கவில்லை. எனவேதான், கடைசி நேரத்தில் அந்தத் தாக்குதல் திட்டத்தை கைவிட முடிந்தது. ஈரானில் தாக்குதல் நடத்துவதற்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது தவறு. ஆனால், தேவைப்படும் நேரத்தில் அங்கு அமெரிக்க விமானங்கள் செல்வதைத் தடுக்க முடியாது.

ஈரானுடன் போரில் ஈடுபட நான் விரும்பவில்லை. எனினும், அப்படி ஒரு போர் மூண்டால் ஈரான் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும். அத்தகைய அழிவை யாரும் இதுவரை பார்த்திருக்க முடியாது என்றார் அதிபர் டிரம்ப்.

10 நிமிடத்தில் முடிவு மாற்றம்: முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் முடிவை 10 நிமிடத்தில் மாற்றிக் கொண்டதாக சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

ஈரானின் 3 நிலைகள் மீது வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருந்தேன். எனினும், அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டால் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்று ராணுவ அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு, சுமார் 150 பேர் உயிரிழக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து, தாக்குதலுக்கு  10 நிமிடங்களுக்கு முன்னதாக எனது முடிவை மாற்றிக் கொண்டு அந்த உத்தரவை திரும்பப் பெற்றேன் என்று டிரம்ப் தனது சுட்டுரைப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை  வாபஸ் பெற்றதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், தொலைக்காட்சி பேட்டியில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"ஒரு குண்டு பாய்ந்தாலும்....'

டெஹ்ரான், ஜூன் 22: தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவின் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தால் கூட, அது வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு உலைவைத்துவிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் முப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ஃபாஸில் ஷேக்கர்சி மேலும் கூறுகையில், தற்போதைய சூழலில்  வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு சாதகமான சூழல் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/ஈரான்-இருந்த-இடம்-தெரியாமல்-அழிக்கப்படும்-டிரம்ப்-எச்சரிக்கை-3176941.html
3176940 உலகம் இந்தோனேஷிய தீவிபத்து: இருவர் கைது DIN DIN Sunday, June 23, 2019 12:12 AM +0530 இந்தோனேஷிய சிறுவர்கள் காப்பகத்தில் 30 பேரது உயிர்களை பலி கொண்ட தீவிபத்து தொடர்பாக 2 பேரை அந்த நாட்டுப் போலீஸாôர் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: வடக்கு சுமத்ரா மாகாணம், பின்ஜாய் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவித்து தொடர்பாக, 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கணவன் - மனைவியான அந்த இருவரும் "லைட்டர்' தயாரிப்பு தொழிற்சாலையாக இயங்கி வந்த சிறுவர்கள் காப்பகத்தின் உரிமையாளர்கள் ஆவர். விபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக் குறைவுடன் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அந்த சிறுவர் காப்பகம் தீப்பெட்டி தொழிற்சாலையாக இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அங்கு "லைட்டர்'கள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/இந்தோனேஷிய-தீவிபத்து-இருவர்-கைது-3176940.html
3176939 உலகம் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து கம்போடியாவில் 7 பேர் பலி DIN DIN Sunday, June 23, 2019 12:11 AM +0530 கம்போடியாவில் 7 அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிஹானோக்வில் நகரில் சீன நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. 
இந்த நிலையில், அந்த 7 மாடிக் கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக, கட்டடப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/அடுக்கு-மாடிக்-கட்டடம்-இடிந்து-கம்போடியாவில்-7-பேர்-பலி-3176939.html
3176938 உலகம் ஆப்கன் அமைதி மாநாடு பாகிஸ்தானில் தொடக்கம் DIN DIN Sunday, June 23, 2019 12:09 AM +0530 ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான மாநாடு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே சனிக்கிழமை தொடங்கியது.
இன்னும் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் தலிபான்களின் பிரதிநிதிகள் பங்கேற்காவிட்டாலும், அமெரிக்காவுடன் அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் காரணமாக பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஹெக்மத்யார் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார். எனினும், ஹெக்மத்யாருடனான அமெரிக்க ஒப்பந்தம் ராணுவ முக்கியத்துவம் இல்லாதது என்று தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்பதால், அந்த அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/23/ஆப்கன்-அமைதி-மாநாடு-பாகிஸ்தானில்-தொடக்கம்-3176938.html
3176880 உலகம் கடிகாரத்தை நிறுத்திவிடலாமே! சூரியன் மறையாத நார்வே தீவில் இருந்து ஒலிக்கும் மக்களின் குரல் DIN DIN Saturday, June 22, 2019 11:15 AM +0530
டென்மார்க்: சூரியன் மறையாததால், வசதிக்கேற்ப பணிகளை மாற்றிக் கொள்ள, கடிகாரத்தை நிறுத்தி வைக்கலாமே என்று நார்வே தீவில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐரோப்பிய கண்டத்தில் நார்வேயின் தீவுகளில் ஒன்றான சொம்மரோயே தீவில் சுமார் 69 நாட்கள் சூரியன் மறையவே மறையாது. அதாவது மே 18ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை இங்கு எப்போதும் பகல்தான். எனவே, வழக்கமான பள்ளி, அலுவலக நேரங்களை பின்பற்றாமல், வசதிக்கேற்ப வகையில் மாற்றியமைத்துக் கொள்ள மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து நார்வே அதிகாரிகளை சந்தித்து, தீவில் வசிக்கும் மக்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, கடிகாரத்தை நிறுத்தி வைத்து, நேரமில்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது, அதே சமயம், சற்று யோசிக்க வேண்டியதாகவும் உள்ளது என்கிறார் மக்கள் பிரதிநிதி.

அதாவது, கால நேரத்துக்கு எதிராக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இம்மக்கள், சூரியன் இருக்கும் இரவு நேரத்தையும், சூரியன் உதிக்காத காலை நேரத்தையும் அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/கடிகாரத்தை-நிறுத்திவிடலாமே-சூரியன்-மறையாத-நார்வே-தீவில்-இருந்து-ஒலிக்கும்-மக்களின்-குரல்-3176880.html
3176316 உலகம் ஈரான் மீது தாக்குதல்! உத்தரவு பிறப்பித்து திரும்பப் பெற்றார் டிரம்ப் DIN DIN Saturday, June 22, 2019 12:58 AM +0530
தங்களது ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதைக் கடுமையாக எதிர்த்துள்ள அதிபர் டிரம்ப், அந்த நாடு மீது வான்வழித் தாக்குதல் நடத்துமாறு தங்களது படைகளுக்கு உத்தரவிட்டார்.
ஈரானின் ரேடார் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் போன்ற பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பிறகு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்தத் தகவல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், அது இனி வரும் நாள்களில் முன்னெடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவர் மீண்டும் விதித்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பல சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை ஈரான் வியாழக்கிழமை சுட்டுவீழ்த்தியது.
அதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/ஈரான்-மீது-தாக்குதல்-உத்தரவு-பிறப்பித்து-திரும்பப்-பெற்றார்-டிரம்ப்-3176316.html
3176315 உலகம் நாடுகடத்தல் சட்ட மசோதா விவகாரம்:ஹாங்காங்கில் மீண்டும் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, June 22, 2019 12:57 AM +0530
நாடுகடத்தல் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறவும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற, அந்த நகரின் அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதைத் தொடர்ந்து, அரசு தலைமையகத்தின் முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடினர்.
பிறகு அவர்கள் நகரின் முக்கியச் சாலைகளில் தற்காலிகமாக தடைகளை ஏற்படுத்தினர்.
மேலும், காவல்துறை தலைமையகத்தின் முன்பும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது வலியுறுத்தலை ஏற்று ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் எனவும், நாடுகடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டத்தை மிஞ்சும் அளவுக்கு, நாடுகடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டார். மேலும், சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை சட்டப் பேரவையில் முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை என்பதால், அது தானாகவே காலாவதியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் கேரி லாம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது எனவும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பவை போன்ற தங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் கூறி வருகின்றனர்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/நாடுகடத்தல்-சட்ட-மசோதா-விவகாரம்ஹாங்காங்கில்-மீண்டும்-ஆர்ப்பாட்டம்-3176315.html
3176314 உலகம் பிரிட்டனின் புதிய பிரதமர்: இன்று அறிவிப்பு DIN DIN Saturday, June 22, 2019 12:57 AM +0530
பிரிட்டனில் பிரதமர் தெரசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமரின் பெயர் சனிக்கிழமை (ஜூன் 22) அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, தனது பதவியை பிரதமர் தெரசா மே ராஜிநாமா செய்துள்ளார். அந்தப் பதவிக்கு இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் பிரதமராகத் தொடர்கிறார்.
இந்த நிலையில், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக, கடந்த 13-ஆம் தேதி தொடங்கி ஐந்து கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் உள்ளிட்ட பலர் தோல்வியடைந்தனர். இறுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 313 கன்சர்வேடிவ் எம்.பி.க்களில் 160 பேர் போரிஸ் ஜான்ஸனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட்டுக்கு 77 வாக்குகள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, இரு போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, கட்சி உறுப்பினர்களிடையே தபால் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றியாளரின் பெயர் சனிக்கிழமை (ஜூன் 22) அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/பிரிட்டனின்-புதிய-பிரதமர்-இன்று-அறிவிப்பு-3176314.html
3176313 உலகம் இந்தோனேஷிய தீப்பெட்டி ஆலையில் விபத்து: சிறுவர்கள் உள்பட 30 பேர் பலி DIN DIN Saturday, June 22, 2019 12:56 AM +0530
இந்தோனேஷியாவிலுள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான சிறுவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு சுமத்ரா மாகாணத்தில், தலைநகர் மேதானுக்கு 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பின்ஜாய் நகரில் சிறுவர்களுக்கான தனியார் காப்பகம் அமைந்துள்ளது.
அந்தக் காப்பகம் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாகவும் இயங்கி வந்தது.
இந்த நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான சிறுவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
தீவிபத்து நேரிட்ட இடத்திலிருந்து யாரும் தப்பியோட வழியில்லாததால் அங்கிருந்த அனைவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் காப்பகத்தில் தங்கியிருந்த 3 சிறுவர்கள், தங்களைக் காண வந்த பெற்றோரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து வெளியே சென்றிருந்ததால் அவர்கள் மூவர் மட்டும் தீவிபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. எனினும், எரிவாயு உருளை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படுவதாலும், சட்டவிரோத தொழிலகங்கள் அதிக அளவில் செயல்படுவதாலும் இந்தோனேஷியாவில் இதுபோன்ற தீவிபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே செயல்பட்டு வந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நேரிட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/இந்தோனேஷிய-தீப்பெட்டி-ஆலையில்-விபத்து-சிறுவர்கள்-உள்பட-30-பேர்-பலி-3176313.html
3176312 உலகம் ஆளில்லா ஹெலிகாப்டர்: சீனா வெற்றிகர சோதனை DIN DIN Saturday, June 22, 2019 12:55 AM +0530
சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகாப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஏவி500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இரவில் இயக்கிப் பார்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சீன ராணுவம் இதனை தங்களது படையில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/ஆளில்லா-ஹெலிகாப்டர்-சீனா-வெற்றிகர-சோதனை-3176312.html
3176311 உலகம் பெண்ணிடம் முரட்டுத்தனம்: அமைச்சர் இடைநீக்கம் DIN DIN Saturday, June 22, 2019 12:55 AM +0530
பிரிட்டனில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலரை முரட்டுத்தனமாக பிடித்துத் தள்ளிய பிரிட்டன் அமைச்சர் மார்க் ஃபீல்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சரான அவர், லண்டனில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் ஆர்ப்பாட்டம் நடத்திய அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரைப் பிடித்துத் தள்ளிய விடியோ காட்சி 
, சமூக வலைதளங்களில் பரவி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/பெண்ணிடம்-முரட்டுத்தனம்-அமைச்சர்-இடைநீக்கம்-3176311.html
3176310 உலகம் கெளதமாலா: வாக்குகள் மறு எண்ணிக்கை DIN DIN Saturday, June 22, 2019 12:54 AM +0530
மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து, வாக்கு எண்ணிக்கையை மறுபடியும் நடத்துவதற்கு அந்த நாட்டு தலைமை தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஆகஸ்ட் மாதம் மறு தேர்தல் நடைபெறும் என்று முன்னர் 
அறிவிக்கப்பட்டிருந்தது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/22/கெளதமாலா-வாக்குகள்-மறு-எண்ணிக்கை-3176310.html
3176299 உலகம் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் விரைகிறார் பிரதமர் மோடி  DIN DIN Friday, June 21, 2019 08:04 PM +0530  

புது தில்லி: ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20  நாடுகளின் பிரதமர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் மோடி ஜூன் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகத்த தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

]]>
G20, summit, india, modi, japan, osaka, xi jinping, trump, meeting, external affairs, https://www.dinamani.com/world/2019/jun/21/modi-will-attend-g20-countries-pm-summit-in-japans-osaka-3176299.html
3176282 உலகம் இந்தோனேஷிய கேஸ் லைட்டர் ஆலையில் தீ விபத்து: 22 பேர் பலி   IANS IANS Friday, June 21, 2019 05:18 PM +0530  

ஜகார்தா: இந்தோனேஷியாவில் உள்ள கேஸ் லைட்டர் ஆலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ளது பிஞ்ஜாய் நகரம். இதற்கு அருகில் உள்ள சம்பிரேஜு எனும் இடத்தில சிறிய கேஸ் லைட்டர் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையின் கிட்டங்கி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மீதமுள்ளவர்களில் மூவரை அக்கம் பக்கத்தினர் வந்து உயிருடன் மீட்டனர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன் அங்கு வந்த  தீயணைப்பு படையினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராடி இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தனர். 

தீ விபத்திற்கு முன்பாக பெரும் வெடிச்ச்சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். காயம்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்து பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

]]>
indonesia, north sumatra province, gas lighter factory, fire accident, death, rescue, treatment, enquiry, https://www.dinamani.com/world/2019/jun/21/22-killed-in-fire-at-indonesias-gas-lighter-factory-3176282.html
3175548 உலகம் அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் DIN DIN Friday, June 21, 2019 12:55 AM +0530
ஈரான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஊடகத் தகவல் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் தயாரிப்பான குளோபல் ஹாக் கண்காணிப்பு விமானம் விதிமுறைகளை மீறி ஈரானின் வான்வெளிப்பரப்பில் நுழைந்தது. ஹர்மோஸ்கன் மாகாணத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானத்தை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஊடகத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், ராணுவத்தால் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படும் ஆளில்லா விமானத்தின் புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிடவில்லை.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியதிலிருந்து அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் ராணுவம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/அமெரிக்க-ஆளில்லா-விமானத்தை-சுட்டு-வீழ்த்தியது-ஈரான்-3175548.html
3175547 உலகம் வட கொரியாவில் ஷி ஜின்பிங் வரலாற்று சுற்றுப் பயணம் DIN DIN Friday, June 21, 2019 12:54 AM +0530
சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரியாவில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைகளுக்குப் பிறகு இரு நாட்டு உறவில் தொய்வு ஏற்பட்டதற்குப் பிறகு, கடந்த 14 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வட கொரியாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவை, தலைநகர் பியாங்கியோங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அதிபர் கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை நேரில் சென்று வரவேற்றார்.
இந்த சுற்றுப் பயணத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
21 குண்டுகள் முழங்க ஷின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிம் ஜோங்-உன்னின் தந்தை கிம் ஜோங் இல் மற்றும் தாத்தா கிம் இல்-சங் ஆகியோரின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள நினைவகத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்ட ஷி ஜின்பிங்கை, சாலையில் இருபுறங்களிலும் பொதுமக்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.
அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜின்பிங்கும், கிம் ஜோங்-உன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்குத் தயாராகினர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து செய்தி சேகரிக்க சர்வதேச செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜின்பிங்கும், கிம் ஜோங்-உன்னும் கூட்டுப் பிரகடனம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாததால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடனான கடந்த மே மாத சந்திப்பைப் போலவே, ஷி ஜின்பிங்குடானான கிம் ஜோங்-கின் இந்தச் சந்திப்பும் பெயரளவில் மட்டுமே நடபெறுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா, வட கொரியா ஆகிய இரு நாடுகளுமே வெவ்வேறு விவகாரங்களில் அமெரிக்காவின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் பெறுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சீன அதிபரை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதன்மூலம் தங்களுக்கு அந்த நாட்டின் ஆதரவு இருப்பதை அமெரிக்காவுக்கு உணர்த்த வட கொரியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அதே போல், வட கொரியாவிடம் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை அமெரிக்காவுக்கு நிரூபிக்க சீனாவும் இந்த சுற்றுப் பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கருதப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/வட-கொரியாவில்-ஷி-ஜின்பிங்-வரலாற்று-சுற்றுப்-பயணம்-3175547.html
3175546 உலகம் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் DIN DIN Friday, June 21, 2019 12:52 AM +0530
இந்தோனேஷியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பப்புவா மாகாணம், அபேபுரா நகருக்கு மேற்கே 250 கி.மீ. தொலைவில், 12 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 12.46 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம்  6.3 அலகுகளாகப் பதிவானதாக அந்த மையம் தெரிவித்தது.
அபேபுரா நகரில் இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 2,200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/இந்தோனேஷியாவில்-சக்தி-வாய்ந்த-நிலநடுக்கம்-3175546.html
3175545 உலகம் சிரியாவில் அரசு படைகள் -பயங்கரவாதிகள் மோதல்: 130 பேர் பலி DIN DIN Friday, June 21, 2019 12:52 AM +0530
சிரியாவில் அரசு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் கடந்த இரு நாள்களில் மட்டும் 130 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளதாவது:
சிரியாவில் ஹமா மாகாணத்தில் உள்ள தல் மீலெக் நகரத்தை மையமாகக் கொண்டு   அரசு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 
கடந்த 48 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சண்டையில் அரசு எதிர்ப்பு படைகளைச் சேர்ந்த 89 பேரும், அரசு தரப்பில் போரிட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அரசு படைக்கு ஆதரவாக ரஷியா போர் விமானங்கள்,  கிளர்ச்சியாளர்கள் பதுங்கியுள்ள பல பகுதிகளை குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போதும் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
கடந்த புதன்கிழமை ரஷிய விமானங்கள் வீசிய குண்டுகள் தவறுதலாக குடியுருப்பு பகுதியில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர் என்றார் அவர். 
இத்லிப் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்டகியா, ஹமா, அலெப்போ மாகாணங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தாக்கி அழிக்க சிரிய அரசு மற்றும் ரஷிய விமானங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து குண்டு வீச்சு தாக்குதல்களை அதிகரித்துள்ளன. இதில், 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/சிரியாவில்-அரசு-படைகள்--பயங்கரவாதிகள்-மோதல்-130-பேர்-பலி-3175545.html
3175544 உலகம் நியூஸிலாந்து: பொதுமக்களிடமிருந்து துப்பாக்கிகள் வாபஸ் DIN DIN Friday, June 21, 2019 12:51 AM +0530
நியூஸிலாந்தில் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கியுள்ள பொதுமக்களிடமிருந்து, அந்தத் துப்பாக்கிகளை விலை கொடுத்துத் திரும்பப் பெறும் திட்டத்தை அந்த நாடு அரசு வியாழக்கிழமை தொடங்கியது. அந்த வகை துப்பாக்கிகள் மூலம் 2 மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் என்பவர் கடந்த மார்ச் மாதம் 51 பேரை படுகொலை செய்ததையடுத்து இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/நியூஸிலாந்து-பொதுமக்களிடமிருந்து-துப்பாக்கிகள்-வாபஸ்-3175544.html
3175542 உலகம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: துருக்கியில் 24 பேருக்கு ஆயுள் DIN DIN Friday, June 21, 2019 12:51 AM +0530
துருக்கியில் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கலைப்பதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற முயற்சியில் தொடர்புடைய 17 பேருக்கு, அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது. அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் மூலம் 139 பேரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததால் அவர்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/ஆட்சிக்-கவிழ்ப்பு-முயற்சி-துருக்கியில்-24-பேருக்கு-ஆயுள்-3175542.html
3175543 உலகம் இமய மலையில் பனி உருகுவது இரண்டு மடங்கானது DIN DIN Friday, June 21, 2019 12:50 AM +0530
இமய மலையிலிருந்து பனி உருகுவது கடந்த 2000-ஆம் ஆண்டைப் போல் இரண்டு மடங்காகியுள்ளதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. புவியின் வெப்பம் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/21/இமய-மலையில்-பனி-உருகுவது-இரண்டு-மடங்கானது-3175543.html
3175522 உலகம் அமெரிக்க ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: தீவிரமாகும் பதற்றம்!  DIN DIN Thursday, June 20, 2019 07:50 PM +0530  

டெஹ்ரான்: ட்ரோன் என்று அழைக்கப்படும்  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா  முறித்துக் கொண்டது. அதன்பிறகு  அமெரிக்கா மற்றும் ஈரானுன் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேசமயம் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்காவும்  விதித்துள்ளது.

சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் தனது எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது .

இந்நிலையில் ட்ரோன் என்று அழைக்கப்படும்  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்திய வான் எல்லைக்குள்  அத்து மீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் (ட்ரோன்) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தகவ ல் குறித்து உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் மறுத்து விட்டது.

]]>
USA, iran, nuclear deal, tension, oman gulf, oil tankers, drone, spy, gun down, persian gulf, https://www.dinamani.com/world/2019/jun/20/iran-shoots-down-us-drone-ratcheting-up-tensions-in-persian-gulf-3175522.html
3175487 உலகம் ரபீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை தவறாக டிவீட் செய்து நெட்டிசன்களிடம் சிக்கிய இம்ரான் கான் DIN DIN Thursday, June 20, 2019 12:56 PM +0530
ரபீந்திரநாத் தாகூர் எழுதிய வரிகளை, தவறுதலாக கலீல் கிப்ரான் எழுதியதாக டிவீட் செய்து, நெட்டிசன்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அதாவது, யாரேனும் அறிவு என்பது என்ன என்று அறிந்து கொண்டு மன அமைதியோடு வாழ விரும்பினால் அவர்களுக்கு கிப்ரானின் வார்த்தைகள் உதவும் என்று ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார்.

ஆனால், அந்த புகைப்படத்தில் இருக்கும் வார்த்தைகள், இம்ரான் கூறியது போல கலீல்  கிப்ரான் எழுதியது அல்ல. ரபீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் அவை.

அது பற்றி நெட்டிசன்கள் இம்ரான் கானை தங்களது கமெண்டுகளால் கடுமையாக விமரிசித்து வருகிறார்கள்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/prime-minister-of-pakistan-imran-khan-tweet-3175487.html
3175484 உலகம் இப்படியும் மனிதர்கள்: தாயைக் கொடுமைப்படுத்திக் கொன்ற இந்திய தம்பதி துபையில் கைது DIN DIN Thursday, June 20, 2019 12:38 PM +0530
துபை: தாயை சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாக்கி அடித்து, சூடு வைத்துக் கொன்ற வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த 29 வயது நபரையும், அவரது மனைவியையும், துபை நீதிமன்றம் கைது செய்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாயின் கண்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்து இருந்தது. எலும்புகள் உடைந்து, உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உடல் முழுக்க சூடுபட்ட ரணங்கள் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழக்கும் போது வெறும் 29 கிலோ எடையில் மட்டுமே இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவர்களது வீட்டுக்கு அருகே வசித்த தம்பதியினர் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நடந்த சம்பவம் பற்றி விவரிக்கையில், ஒரு நாள் பக்கத்து வீட்டில் ஒரு வயதான பெண்மணி அரைகுறை ஆடையுடன் உடல் நலம் இல்லாமல் கிடப்பதைப் பார்த்தோம். அவரது உடல் முழுக்க சூடுபட்ட ரணங்கள். உடனடியாக பாதுகாவலர்கள் உதவியோடு ஆம்புலன்ஸில் அப்பெண்மணியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம்.

அவரை தூக்கி வரும் போது அவர் ரணம் தந்த வலியால் கதறி அழுதார். ஆனால் அவருடன் இந்திய தம்பதி மருத்துவமனைக்குக் கூடச் செல்லவில்லை. அவரது உடலில் 10 சதவீதம் தீக்காயங்கள் இருந்தன. பல்வேறு கருவிகளால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, எலும்புகள் உடைந்து நொறுங்கியிருந்தன. உடலுக்குள் பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்தது. பட்டினியால் அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இந்திய தம்பதி மீது, தாயைத் துன்புறுத்திக் கொலை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/dubai-indian-couple-arrest-mother-dead-3175484.html
3174903 உலகம் சிரியா -துருக்கியுடன் மோதுகிறாரா அல்-அஸாத்? - நாகா DIN Thursday, June 20, 2019 02:35 AM +0530  
எங்களது ராணுவமும், துருக்கி ராணுவமும் ஒருபோதும் சண்டையிடாது என்று நம்புகிறோம். இரு தரப்பினருக்கும் இடையே போர் கூடாது என்பதே எங்களது கொள்கை.
சீனா சென்றிருந்த சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்-மெளலேம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறிய வார்த்தைகள் இவை.
உண்மையில், ஏற்கெனவே பயங்கரவாதிகள், அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் என பல முனைத் தாக்குதலை எதிர்கொண்டுள்ள சிரியா அதிபர் அல்-அஸாத், பிராந்திய வல்லரசான துருக்கியுடன் மோதுவது எந்த விதத்திலும் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது.
மேலும், தற்போதைய நிலையில் துருக்கியுடன் மோதி சிரியா எதையும் பெரிதாக சாதித்துவிட முடியாது.
இருந்தாலும், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த விளக்கத்தை சீனா சென்று அளிக்க வேண்டியதற்கான அவசியமும் இல்லாமல் இல்லை.
அண்மைக் காலமாக சிரியா ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம்.
சிரியாவில் கிளர்ச்சிப் படையினரின் ஆதிக்கம் நிறைந்த ஒரே மாகாணமான இத்லிபில் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக, அந்த மாகாணத்தில் அமைந்துள்ள துருக்கி கண்காணிப்பு மையங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான் இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சொல்லப்போனால், இத்லிப் மாகாணத்திலுள்ள துருக்கி நிலைகள் மீது சிரியா படைகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே போன்ற தாக்குதல்களை துருக்கி நிலைகள் மீது சிரியா நடத்தியுள்ளது.
இத்தனைக்கும், துருக்கி, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட பகுதி அது.
எனவே, ஒப்பந்தத்தை மீறி சிரியா நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள் துருக்கியுடனான பதற்றத்தை அதிகரித்திருப்பதில் வியப்பு ஏதுமில்லை.
கடந்த 2011-ஆம் ஆண்டில் சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்தே, தங்கள் நாட்டு எல்லையொட்டிய பகுதியில் செயல்படும் துருக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி நாடு செயல்பட்டு வருகிறது.
அல்-அஸாத் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு வகைகளிலும் அந்த நாடு உதவி வருகிறது.
எனினும், துருக்கியின் நேட்டோ படை கூட்டாளியான அமெரிக்காவும், பிற ஐரோப்பி நாடுகளும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை ஒழித்த பிறகு, தாங்கள் ஆதரவளித்து வந்த கிளர்ச்சியாளர்களைக் கைவிட்டுவிட்டு சிரியாவிலிருந்து விலகிக் கொண்டன.
அந்தக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ரஷிய உதவியுடன் சிரியா ராணுவமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றியது.
இந்த நிலையில், தங்களது எதிரிகளான கிளர்ச்சியாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ஒரே நாடாக துருக்கியை சிரியா பார்க்கிறது.
எனினும், துருக்கி, சிரியா ஆகிய இரு நாடுகளுடனுமே மிக நெருங்கிய நட்புறவை பேணி வரும் ரஷியாவின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரிக்காமல் இருந்து  வந்தது.
இந்தச் சூழலில், இத்லிப் மாகாணத்திலுள்ள துருக்கி நிலைகள் மீது சிரியா நடத்தியுள்ள தாக்குதல் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
சிரியாவை முழுமையாக மீட்கும் நோக்கில், வலிமை வாய்ந்த துருக்கியுடன் மோத உண்மையிலேயே அல்-அஸாத் முடிவு செய்துவிட்டாரா?
இந்தக் கேள்விக்கு, துருக்கி ஆதரவு ஊடகங்கள் ஆம் என்று பதிலளிக்கின்றன.
இத்லிப் மாகாணத்திலிருந்து துருக்கி படையினரை வெளியேறச் செய்வதன் மூலம் அந்தப் பகுதியின் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது; அதன் பிறகு அந்தப் பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி அதனைக் கைப்பற்றுவதே சிரியா அரசின் திட்டம் என்கின்றன அந்த ஊடகங்கள்.
எனினும், தங்களது நிலைகளிலிருந்து துருக்கி ராணுவம் வெளியேறினால், அவர்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் அல்-அஸாத் படைகளை தாக்குப் பிடிக்க முடியாது என்பது துருக்கிக்கு நன்றாகவே தெரியும்; எனவே, அந்தப் பகுதியை விட்டு துருக்கி நீங்காது என்று மற்றொரு தரப்பினர் உறுதியுடன் கூறுகின்றனர்.
இப்படி ஒரு சூழலில், பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான தாக்குதல்களை சிரியா ராணுவம் நடத்துவதற்கு காரணம் என்னவாகத்தான் இருக்கும்?
இதற்கு, சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்-மெளலேமே விளக்கமளிக்கிறார்.
துருக்கியுடன் போரிடுவது எங்கள் நோக்கமல்ல; நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் எல்லாம், எங்களது நாடான சிரியாவின் ஓர் அங்கமாகத் திகழும் இத்லிப் மாகாணத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்றன என்கிறார் அவர்.
இத்லிப் மாகாணத்தின் உண்மை நிலவரத்தைப் பார்த்தால்தான், வாலித் சொல்வது சரியா, தவறா என்பது விளங்கும். அந்த மாகாணத்தின் பெரும்பகுதி, அல்-கொய்தாவின் முன்னாள் கூட்டாளியான ஹாயத் தெஹ்ரீர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எஞ்சிய பகுதி துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பிற குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து தெஹ்ரீர் அல்-ஷாம் வெளியேற்றப்பட வேண்டும், அதற்கு துருக்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிரியாவும், ரஷியாவும் வலியுறுத்தி வருகின்றன.
எனவே, இந்த விவகாரத்தில் துருக்கிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகினர். எண்ணற்றவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.
இந்த கொடூரமான போரின் ஓர் அங்கமான இத்லிப் மாகாணப் பிரச்னைக்கு, அதிக ரத்தக் களறி இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் ஏக்கமான எதிர்பார்ப்பாக உள்ளது.

சிரியாவில் துருக்கி வீரர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/சிரியா--துருக்கியுடன்-மோதுகிறாரா-அல்-அஸாத்-3174903.html
3174825 உலகம் கஷோகி படுகொலையில் சவூதி இளவரசருக்குத் தொடர்பு: ஐ.நா. நிபுணர் DIN DIN Thursday, June 20, 2019 01:08 AM +0530
செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஆக்னஸ் கலாமர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நெதர்லாந்தின் ஜெனீவா நகரில் புதன்கிழமை கூறியதாவது:
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான எனது விசாரணையில், அந்தச் சம்பவத்துடன் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
அதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களும் எனக்குக் கிடைத்துள்ளன.
எனவே, இளவரசர் சல்மான் உள்ளிட்ட சவூதி அரேபியாவின் உயர் நிலை அதிகாரிகள் மீது இந்த விவகாரம் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகள் சிலர் மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தது எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
அந்தப் படுகொலையில் சவூதி இளவரசருக்கு நேரடித் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் உள்ள நிலையில், அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதும், வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துகளை முடக்கவதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
கஷோகி படுகொலையை திட்டமிட்டு நிறைவேற்றியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும்வரை அந்தத் தடைகள் தொடரப்பட வேண்டும் என்றார் ஆக்னஸ் கலாமர்ட்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேதி சென்ற கஷோகி, அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை குறித்து, சட்டத்துக்குப் புறம்பான, விசாரணையில்லாத மரணதண்டனை நிறைவேற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை கண்காணித்துப் பதிவு செய்வதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள ஆக்னஸ் கலாமர்ட் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தாவிட்டாலும், அந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/கஷோகி-படுகொலையில்-சவூதி-இளவரசருக்குத்-தொடர்பு-ஐநா-நிபுணர்-3174825.html
3174824 உலகம் எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம்: 4 பேருக்கு எதிராக கைது ஆணை DIN DIN Thursday, June 20, 2019 01:08 AM +0530
கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசியாவைச் சேர்ந்த எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் சர்வதேச விசாரணைக் குழு, இதுதொடர்பாக 3 ரஷியர்கள், 1 உக்ரைன் நாட்டவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, நெதர்லாந்து தலைமையில் செயல்படும் அந்த விசாரணைக் குழு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டில் எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில், ரஷியாவைச் சேர்ந்த இகோர் கிர்கின், செர்கெய் துபின்ஸ்கி, ஆலெக் புல்டோவ் ஆகிய மூவர் மீதும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லியோனிட் கர்சென்கோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, அந்த நால்வரையும் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்திலிருந்த 298 பேரும் உயிரிழந்தனர்.
அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் கூட்டு விசாரணைக் குழு, விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை என்று கூறி வந்தது.
இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த ரஷியா, உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகக் கூறி வந்தது.
இந்தச் சூழலில், இதுதொடர்பாக 3 ரஷியர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/எம்ஹெச்17-விமானம்-சுட்டுவீழ்த்தப்பட்ட-விவகாரம்-4-பேருக்கு-எதிராக-கைது-ஆணை-3174824.html
3174823 உலகம் ராவணா- 1: வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இலங்கையின் முதல் செயற்கைக்கோள் DIN DIN Thursday, June 20, 2019 01:07 AM +0530 இலங்கையின் முதல் செயற்கைக்கோளான ராவணா-1 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இலங்கையிலிருந்து வெளியாகும் கொலம்போ பேஜ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட ராவணா-1 செயற்கைக்கோள், அமெரிக்காவின் சிக்னஸ்-1 விண்வெளி ஓடம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த செயற்கைக்கோளுடன், ஜப்பான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த செயற்கைக்கோள்களும் அந்த மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், 400 கி.மீ. உயரம் மற்றும் 51.6 டிகிரி கோணம் கொண்ட சுற்றுவட்டப்பாதையில் ராவணா-1 செயற்கைக்கோள் கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
அதனுடன், ஜப்பானைச் சேர்ந்த 2 செயற்கைக்கோள்களும், நேபாளத்தின் ஒரு செயற்கைக்கோளும் அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டன.
இலங்கையைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ராவணா-1 செயற்கைக்கோள், ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டு, இலங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை படமெடுத்து பூமிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கொலம்போ பேஜ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/ராவணா--1-வெற்றிகரமாக-செலுத்தப்பட்டது-இலங்கையின்-முதல்-செயற்கைக்கோள்-3174823.html
3174822 உலகம் ஜப்பானில் மிதமான சுனாமி: 21 பேர் காயம் DIN DIN Thursday, June 20, 2019 01:06 AM +0530
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மிதமான சுனாமி ஏற்பட்டதாகவும், 21 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட அந்த 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தொடக்கத்தில் எச்சரித்திருந்தாலும், 10 செ.மீ. உயரத்திலேயே சுனாமி அலைகள் எழுந்ததாக பின்னர் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/ஜப்பானில்-மிதமான-சுனாமி-21-பேர்-காயம்-3174822.html
3174821 உலகம் பூமியைப் போன்ற மேலும் இரு கோள்கள் DIN DIN Thursday, June 20, 2019 01:05 AM +0530
எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமில் அமைந்துள்ள குறு விண்மீனை சுற்றிவரும் இரு கோள்கள், பூமியை ஒத்த சூழலில் அமைந்துள்ளதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 12.5 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோள்களின் இயக்கத்தை 3 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தில் சூரியனை அருகில் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்களைப் போலவே, அவை இரண்டும் இயங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/20/பூமியைப்-போன்ற-மேலும்-இரு-கோள்கள்-3174821.html
3174061 உலகம் மேற்கு ஆசியாவில் மேலும் 1,000 படையினர் குவிப்பு:அமெரிக்கா ஒப்புதல் DIN DIN Wednesday, June 19, 2019 01:01 AM +0530
மேற்கு ஆசியாவுக்கு மேலும் 1,000 அமெரிக்கப் படையினரை அனுப்ப அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் பேட்ரிக் ஷனஹன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதலாக சுமார் 1,000 வீரர்களை அனுப்புவதற்கு நான் ஒப்புதல் வழங்கியுள்ளேன்.
அந்தப் பிராந்தியத்தில் செயல்படும் அமெரிக்கப் படையினர் கடல், வான் மற்றும் நிலப்பகுதிகளில் சந்திக்கக் கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த கூடுதல் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர்.
ஈரான் படைகள் மற்றும் அவர்களது ஆதரவு அமைப்புகளால் மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அந்தப் பகுதியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய அண்மைக்காலத் தாக்குதல்கள், அந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கின்றன.
உளவுத் தகவல்கள் மூலம் தெரிய வரும் அச்சுறுத்தல் நிலவரத்தின் அடிப்படையில், மேற்கு ஆசியப் பகுதிக்கான அமெரிக்க படைபலத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் ஷனஹன் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடாமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறி, அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு விலகினார்.
அதனைத் தொடர்ந்து, அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்தம் விதித்த கட்டுப்பாடுகளை மீறப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு ஆசியப் பகுதிக்கு தங்களது விமானம் தாங்கிக் கப்பல்கள், தாக்குதல் போர்க் கப்பல்களை அமெரிக்கா கடந்த மாதம் அனுப்பியது. அந்தப் பகுதியில் ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அவை அனுப்பப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த மாதமும், இந்த மாதமும் நடைபெற்ற சம்பவங்களில் சவூதி அரேபியா, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்குதலுக்குள்ளாகின.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் அளவையும் மீறி அதிக விகிதத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈடுபடப்போவதாக ஈரான் திங்கள்கிழமை அறிவித்தது.
இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் ஷனஹன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/மேற்கு-ஆசியாவில்-மேலும்-1000-படையினர்-குவிப்புஅமெரிக்கா-ஒப்புதல்-3174061.html
3174060 உலகம் பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: சிரியாவில் 45 பேர் பலி DIN DIN Wednesday, June 19, 2019 01:00 AM +0530
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டையில் 45 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் வடமேற்கே உள்ள ஹமா மாகாணத்தில், அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள ராணுவ நிலைகள் மீது தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர்.
அப்போது நடைபெற்ற சண்டையில் அரசுப் படையைச் சேர்ந்த 14 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ராணுவ நிலைகளைக் கைப்பற்றும் தெஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தத் தகவலை, சிரியா அரசுச் செய்தி நிறுவனமான சனாவும் உறுதி செய்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/பயங்கரவாதிகள்---ராணுவம்-மோதல்-சிரியாவில்-45-பேர்-பலி-3174060.html
3174059 உலகம் வங்கதேசம்: அவதூறு வழக்குகளில் கலீதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன் DIN DIN Wednesday, June 19, 2019 01:00 AM +0530
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு,  அவதூறு வழக்குகளில், 6 மாதங்கள் ஜாமீன் வழங்கி டாக்கா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பல்வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலீதா ஜியா, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக கடந்த 2014-ஆம் ஆண்டிலும், தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானை அவமதித்ததாக 2016-ஆம் ஆண்டிலும் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்குகளை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கியது. எனினும், மற்ற இரு வழக்குகளில்  மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/வங்கதேசம்-அவதூறு-வழக்குகளில்-கலீதா-ஜியாவுக்கு-6-மாத-ஜாமீன்-3174059.html
3174058 உலகம் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி DIN DIN Wednesday, June 19, 2019 12:59 AM +0530
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்; 125 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணம், யிபின் நகரில் திங்கள்கிழமை இரவு 10.55 மணிக்கு (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6 அலகுகளாகப் பதிவானது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.3 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.
பூமிக்கு 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர்; 125 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/சீனாவில்-சக்தி-வாய்ந்த-நிலநடுக்கம்-12-பேர்-பலி-3174058.html
3174057 உலகம் நாடுகடத்தல் சட்ட விவகாரம்: மன்னிப்பு கோரியது ஹாங்காங் அரசு DIN DIN Wednesday, June 19, 2019 12:59 AM +0530
சர்ச்சைக் குரிய நாடுகடத்தல் சட்ட வரைவைக் கொண்டு வந்ததன் மூலம் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டார்.
எனினும், போராட்டக் குழுவினர் கோரியபடி தனது பதவியை ராஜிநாமா செய்ய அவர் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரீ லாம் கூறியதாவது:  புதிய நாடுகடத்தும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்ததற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
அந்த சட்டம் சர்ச்சையையும், விவாதங்களையும் உருவாக்கியது. மேலும், மக்களிடையே ஒருவித அச்சத்தையும் அந்த சட்ட வரைவு ஏற்படுத்தியது. 
இந்த நிலையை ஏற்படுத்தியதற்காக ஹாங்காங் மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஹாங்காங் அரசின் தலைவராக நான் தொடர்ந்து பொறுப்பு வகித்து, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.
மசோதா காலாவதியாகிவிடும்: சர்ச்சைக்குரிய நாடுகடத்தும் மசோதா குறித்த அச்சம் மக்களிடையே நீங்காதவரை, அதனை நான் சட்டப் பேரவையில் முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்படாவிட்டால் அது காலாவதியாகிவிடும். அதனை ஹாங்காங் அரசு தடுக்காது என்றார் கேரீ லாம்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டத்தை மிஞ்சும் அளவுக்கு, நாடுகடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்தச் சூழலில், ஹாங்காங் அரசின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போதாது!
நாடுகடத்தல் சட்ட மசோதா விவகாரத்தில் ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கேரீ லாம் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்து பேசாதது, 
அவரது முரட்டுத் தனத்தை வெளிப்படுத்தவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/நாடுகடத்தல்-சட்ட-விவகாரம்-மன்னிப்பு-கோரியது-ஹாங்காங்-அரசு-3174057.html
3174056 உலகம் 90 லட்சம் பதிவுகள் யூடியூபில் களையெடுப்பு DIN DIN Wednesday, June 19, 2019 12:58 AM +0530
யூடியூப் வலைதளத்தில் பிற சமூகத்தினர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 90 லட்சம் விடியோக்களை நீக்கியதாக,  கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி
சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். எனினும், அவ்வளவு பெரிய வலைதளத்திலிருந்து அத்தகைய பதிவுகளை முற்றிலுமாக களையெடுப்பது மிகவும் கடினம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/90-லட்சம்-பதிவுகள்-யூடியூபில்-களையெடுப்பு-3174056.html
3174055 உலகம் புதிய கிரிப்டோ கரன்சி: முகநூல் நிறுவனம் அறிமுகம் DIN DIN Wednesday, June 19, 2019 12:58 AM +0530
பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயத்தை பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் (ஃபேஸ்புக்) லிப்ரா என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. பே-பால், ஊபர், ஸ்பாட்டிஃபை, விசா, மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் இந்த மெய்நிகர் நாணயம், இன்னும் 12 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/புதிய-கிரிப்டோ-கரன்சி-முகநூல்-நிறுவனம்-அறிமுகம்-3174055.html
3174054 உலகம் நியூஸிலாந்து மசூதி தாக்குதல் விடியோவை பகிர்ந்தவருக்கு 21 மாத சிறை DIN DIN Wednesday, June 19, 2019 12:54 AM +0530
நியூஸிலாந்திலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரை படுகொலை செய்த விடியோவை  சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிலிப்ஸ் ஆர்ப்ஸ் (44) என்பவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. நியூஸிலாந்து சட்டப்படி தடை செய்யப்பட்ட விடியோவை பகிர்ந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/19/நியூஸிலாந்து-மசூதி-தாக்குதல்-விடியோவை-பகிர்ந்தவருக்கு-21-மாத-சிறை-3174054.html
3174040 உலகம் ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோல் 6.8 ஆக பதிவு DIN DIN Tuesday, June 18, 2019 09:09 PM +0530
ஜப்பான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதையடுத்து, சுமார் ஒரு அடி வரை கடல் அலை எழும்பும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்த பகுதிகளில் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஜூன் மாதம் ஒசாகா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 350 பேர் வரை காயமடைந்தனர். 2011, மார்ச் 11-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 9.0 ஆக பதிவானது. இதன் விளைவாக சுனாமி ஏற்பட்டு, அது மிகப் பெரிய சேதத்தை உண்டாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/japan-issues-tsunami-advisory-following-quake-3174040.html
3173995 உலகம் குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்  PTI PTI Tuesday, June 18, 2019 02:13 PM +0530  

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் இன்று துப்பு துலங்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் சுங்காரா (44) தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), பிள்ளைகள் பிரபாஸ் (14) சுஹாஸ் (11) ஆகியோரை அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நால்வரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையிலேயே, இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

ஆனால், கொலை மற்றும் தற்கொலை செய்யும் முடிவை சந்திரசேகர் எடுக்க என்ன காரணம் என்பது பற்றி குடும்ப உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் சங்கரா. இவர் தனது குடும்பத்தாருடன் அயோவா மாகாணத்தில் வசித்து வந்தார்.

அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சனிக்கிழமை காலை அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, சந்திரசேகர், அவரது மனைவி லாவண்யா சங்கரா, இரண்டு மகன்கள் உள்பட நான்கு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

அவர்களது உடல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/indian-american-it-professional-committed-suicide-3-family-members-shot-dead-3173995.html
3173968 உலகம் அன்புள்ள அமித் ஷா.. தாக்குதலையும் கிரிக்கெட்டையும் ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் அறிவுரை PTI PTI Tuesday, June 18, 2019 11:23 AM +0530
இஸ்லாமாபாத்: விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடி தாக்குதல் என்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் பேசுகையில், அன்புள்ள அமித் ஷா அவர்களுக்கு, ஆமாம், போட்டியில் உங்கள் அணி வென்றுள்ளது. நன்றாகவே விளையாடினார்கள்.

ஆனால், விமானத் தாக்குதலும், கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை. இவ்விரண்டு விஷயங்களையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது. 

ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், எங்களது நௌஷ்ரா பதில் தாக்கதலில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூருங்கள். ஆச்சரியத்துக்காக காத்திருங்கள் என்று தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடித் தாக்குதல்: எதைச் சொல்கிறார் தெரியுமா அமித் ஷா?

]]>
Pakistan's military spokesperson, Home Minister Amit Shah , World Cup game https://www.dinamani.com/world/2019/jun/18/dont-compare-air-strikes-and-cricket-match-pakistan-on-shahs-congratulatory-message-to-india-3173968.html
3173406 உலகம் எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம் DIN DIN Tuesday, June 18, 2019 01:40 AM +0530
எகிப்து முன்னாள் அதிபரும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவருமான முகமது மோர்சி (67) நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
எகிப்தில் நீண்டகாலம் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, முகம்மது மோர்சி அதிபரானார். இதனிடையே, எகிப்தில் மோர்சியின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதை பயன்படுத்தி, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்தல் பதா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு நீக்கியதுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்தது. அந்த அமைப்பினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்லும்படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு உத்தரவிட்டதாக மோர்சிக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மோர்சிக்கு மரண தண்டனை முதலில் விதிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தண்டனை, 20 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் மோர்சி திங்கள்கிழமை ஆஜரானார்.  கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பேசிய அவர், தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மூத்த உறுப்பினர் முகம்மது சூடான் கூறுகையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை. கடந்த ஒரு ஆண்டாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கவில்லை. இதுகுறித்து மோர்சியும் புகார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணையிலும் கண்ணாடி கூண்டில்தான் நிறுத்தப்படுவார். அவர் பேசுவது அப்போது கேட்காது. அவரை படிப்படியாக கொலை செய்து விட்டனர் என்றார்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/எகிப்து-முன்னாள்-அதிபர்-மோர்சி-நீதிமன்றத்தில்-மயங்கி-விழுந்து-மரணம்-3173406.html
3173405 உலகம் போகோ ஹராம் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி DIN DIN Tuesday, June 18, 2019 01:40 AM +0530
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 3 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இதுதொடர்பாக அந்நாட்டு அவசரநிலை மேலாண்மைக் குழு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் கோண்டுகா பகுதியின் வணிக வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கால்பந்து போட்டியை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 3 பேர் வளாகத்தின் உள்ளே நுழைய முயன்றதால், அவர்களை வளாகத்தின் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
வாக்குவாதத்தின் இடையே, அந்த 3 பேரில் இருவர் வளாகத்தில் இருந்த மக்களோடு கலந்து விட்டனர். இந்நிலையில், கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அதைத்தொடர்ந்து மக்களோடு கலந்திருந்த 2 பேரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். 
இந்த தற்கொலைத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். தொலைதூர பகுதி என்பதால், மருத்துவர்கள் குழுவும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த தாக்குதலை நடத்திய அந்த மூவரிடமும், போகோ ஹராம் பயங்கரவாதிகளின் அடையாளம் இருந்தது. அதனால் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகளால், இதுவரை 27,000 பேர் உயிரிழந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, அண்டை நாடுகளான சாட், நைஜர், கேமரூன் ஆகிய நாடுகளிலும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால், சாட், கேமரூன், நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர்  இணைந்து போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/போகோ-ஹராம்-தற்கொலை-தாக்குதல்-நைஜீரியாவில்-30-பேர்-பலி-3173405.html
3173365 உலகம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் 10 நாள்களில் தொடங்கும்:ஈரான் அறிவிப்பு DIN DIN Tuesday, June 18, 2019 12:50 AM +0530
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, யுரேனியத்தை மேலும் செறிவூட்டும் பணிகள் 10 நாள்களில் தொடங்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஈரான் அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷியா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. பதிலுக்கு, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவந்தது. 
அந்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக, சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிமுறையை 10 நாள்களில் மீறப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பெரூஸ் கமல்வாண்டி கூறியதாவது: யுரேனியம் உற்பத்தியை ஈரான் நான்குமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது யுரேனியத்தை 3.67 சதவீத அளவுக்கு மேல் செறிவூட்டப்படவேண்டியது அவசியமாக உள்ளது. 5 சதவீத அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியமானது, அணுமின் நிலையப் பயன்பாட்டுக்குத் தேவைப்படுகிறது. டெஹ்ரானிலுள்ள சோதனை அணுஉலையின் பயன்பாட்டுக்கு 20 சதவீத அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. அதற்கான பணிகள் இன்னும் 10 நாள்களில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
90 சதவீதம் செறிவூட்டப்பட்ட  யுரேனியமானது, அணுசக்தி ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. யுரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்டுவது தான் கடினமான பணியாகும். 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திலிருந்து, 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தயாரிப்பது எளிதாகும். 
வளைகுடாப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள் மீது ஏற்கெனவே மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்ட நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


 புஷெஹர் அணு நிலையத்துக்கு வருகை தந்த ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி (கோப்புப் படங்கள்).

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/யுரேனியம்-செறிவூட்டும்-பணிகள்-10-நாள்களில்-தொடங்கும்ஈரான்-அறிவிப்பு-3173365.html
3173364 உலகம் தெற்காசியாவுக்கு புதிய வகை பயங்கரவாத அச்சுறுத்தல்:நேபாள துணை பிரதமர் DIN DIN Tuesday, June 18, 2019 12:47 AM +0530
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், தெற்காசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் புதியவகை பயங்கரவாத அச்சுறுத்தலின் அறிகுறி என்று நேபாளத்தின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஈஷ்வர் போக்ரேல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர்.  500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது. இதைக் குறிப்பிட்டு போக்ரேல் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கை அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த கருத்தரங்கில் போக்ரேல் பேசியதாவது:
உலகின் பல இடங்களிலும், நமது அண்டை நாடுகளிலும் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை கண்டு வருகிறோம். இந்தத் தாக்குதல்களை நினைத்து நாம் மிகுந்த வேதனையடைகிறோம்.  இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல், தெற்காசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் புதியவகை பயங்கரவாத அச்சுறுத்தல் என்று தெளிவாக தெரிகிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, உலகம் முழுவதும் உள்ள நம் நட்பு நாடுகள் கையாளும் நடவடிக்கைகளையும், அவர்களது அனுபவத்தையும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம். 
பயங்கரவாதத்தின் விளைவு அப்பாவி மக்களைப் பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நூற்றாண்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. அவற்றை நாம் பழங்கால போர்முறையால் கையாள முடியாது. உலக பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. 
இதற்கு எதிராக போராட உள்நாடு, பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றார் போக்ரேல்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/தெற்காசியாவுக்கு-புதிய-வகை-பயங்கரவாத-அச்சுறுத்தல்நேபாள-துணை-பிரதமர்-3173364.html
3173363 உலகம் நைஜீரியா: தற்கொலை தாக்குதல்: 30 பேர் பலி DIN DIN Tuesday, June 18, 2019 12:46 AM +0530
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 3 பேர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இதுதொடர்பாக அந்நாட்டு அவசரநிலை மேலாண்மைக் குழு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் கோண்டுகா பகுதியின் வணிக வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கால்பந்து போட்டியை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 3 பேர் வளாகத்தின் உள்ளே நுழைய முயன்றதால், அவர்களை வளாகத்தின் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
வாக்குவாதத்தின் இடையே, அந்த 3 பேரில் இருவர் வளாகத்தில் இருந்த மக்களோடு கலந்து விட்டனர். இந்நிலையில், கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அதைத்தொடர்ந்து மக்களோடு கலந்திருந்த 2 பேரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். 
இந்த தற்கொலைத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். தொலைதூர பகுதி என்பதால், மருத்துவர்கள் குழுவும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த தாக்குதலை நடத்திய அந்த மூவரிடமும், போகோ ஹராம் பயங்கரவாதிகளின் அடையாளம் இருந்தது. அதனால் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகளால், இதுவரை 27,000 பேர் உயிரிழந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, அண்டை நாடுகளான சாட், நைஜர், கேமரூன் ஆகிய நாடுகளிலும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால், சாட், கேமரூன், நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர்  இணைந்து போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/நைஜீரியா-தற்கொலை-தாக்குதல்-30-பேர்-பலி-3173363.html
3173362 உலகம் இந்தோனேஷியா:  பேருந்து விபத்தில் 12 பேர் பலி DIN DIN Tuesday, June 18, 2019 12:46 AM +0530
இந்தோனேஷியாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த வாகனங்களின் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மேற்கு ஜாவாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த  விபத்து ஏற்பட்டது. ஓடும் பேருந்தில் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பயணி ஒருவர் பேருந்தை இயக்க முற்பட்ட போது அது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இதில்,  ஒரு லாரி   தலைகீழாக கவிழ்ந்ததுடன், இரண்டு கார்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 43 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உடனடியாகத் தகவல் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய வாகனம், முறையான பராமரிப்பின்மை,  சாலை விதிகளை மீறுதல் ஆகியவற்றின் காரணமாக இந்தோனேஷியாவில் வாகன விபத்து ஏற்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது.   மேற்கு ஜாவாவின் சுகபுமி பிராந்தியத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் பேருந்து ஒன்று குறுகிய பள்ளத்துக்குள் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/இந்தோனேஷியா--பேருந்து-விபத்தில்-12-பேர்-பலி-3173362.html
3173361 உலகம் பாராகுவே: சிறைக் கலவரத்தில் 10 பேர் பலி DIN DIN Tuesday, June 18, 2019 12:46 AM +0530
பாராகுவே நாட்டில் உள்ள சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஜூவான் விலாமேயர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தலைநகருக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சான் பெட்ரோ டி குவமண்டியு  நகர் சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த கலவரம் ஏற்பட்டது. கைதிகளுக்கு இடையில் உள்ள குழுக்களுக்கிடையே நடைபெற்ற இந்த மோதல் மூன்று மணி நேரம் வரை நீடித்தது. இந்த சம்பவத்தின்போது அங்கு குறைந்த அளவிலேயே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் காரணமாகவே மோதலை கட்டுப்படுத்த நீண்ட நேரமானது.
கைதிகளுக்கிடையில் நடைபெற்ற சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். 
 உயிரிழந்த கைதிகள் அனைவரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதை மருந்து கடத்தலில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குழுக்களாக பிரிந்து கலவரத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த மாதம் பிரேசில் நாட்டு சிறையில் இதே போன்று ஏற்பட்ட ஒரு கலவரத்தில் 40 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/பாராகுவே-சிறைக்-கலவரத்தில்-10-பேர்-பலி-3173361.html
3173360 உலகம் ஹாங்காங்: எதிர்ப்புக் குறிப்புகளும் பூக்களும்! DIN DIN Tuesday, June 18, 2019 12:45 AM +0530
ஹாங்காங்கில் நாடுகடத்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
பிரதான வீதிகளில் திங்கள்கிழமை காலையில் மக்கள் திரளத் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்களைத் தடுக்கும் விதமாக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பதற்றம் நிலவியது. பிறகு மோதலைத் தவிர்க்கும் விதமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறி, அருகிலிருந்து பூங்காக்கள், வெட்ட வெளிப்பகுதி போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
நாடு கடத்தல் மசோதாவுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வாசகங்கள் எழுதிய குறிப்புகளை நடைபாதைகளில் அவர்கள் வைத்தனர். பலர் அரசுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக பூக்களையும் பூச்செண்டுகளையும் வைத்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/ஹாங்காங்-எதிர்ப்புக்-குறிப்புகளும்-பூக்களும்-3173360.html
3173359 உலகம் அமெரிக்கா:இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 4 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை DIN DIN Tuesday, June 18, 2019 12:44 AM +0530
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் சங்கரா. இவர் தனது குடும்பத்தாருடன் அயோவா மாகாணத்தில் வசித்து வந்தார்.
அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சனிக்கிழமை காலை அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, சந்திரசேகர், அவரது மனைவி லாவண்யா சங்கரா, இரண்டு மகன்கள் உள்பட நான்கு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. 
அவர்களது உடல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/18/அமெரிக்காஇந்திய-வம்சாவளி-குடும்பத்தினர்-4-பேர்-துப்பாக்கியால்-சுட்டு-தற்கொலை-3173359.html
3173341 உலகம் பாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் வெட்டிக் கொலை  DIN DIN Monday, June 17, 2019 07:04 PM +0530  

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது பிலால் கான்(22) . இவர் தனது வலைப்பூவிலும், சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ -ஐ தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்திருக்கிறார் 

முமகது பிலால் கானுக்கு ட்விட்டரில் 16,000 பாலோயர்களும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பாலோயர்களும் உள்ளனர்.

இந்நிலையில் திங்களன்று அடையாளம் தெரியாத நபரால் பிலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது நண்பருடன் வெளியே சென்றிருந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். அவருடைய நண்பருக்கும் தாக்குதலில் காயம் நேரிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான்   போலீஸ் தெரிவித்துள்ளது.

]]>
pakistan, blogger, journalist, military, ISI, criticism, mohammed bilal, death, https://www.dinamani.com/world/2019/jun/17/pakistani-blogger-known-for-criticising-army-hacked-to-death-3173341.html
3173339 உலகம் நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி  DIN DIN Monday, June 17, 2019 06:19 PM +0530  

அபுஜா: நைஜீரியாவில் ஞாயிறன்று நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில், 30 பேர் பலியாகினர். 

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் ஞாயிறன்று கால்பந்து போட்டி ஒன்றை ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்குள் திடீரென்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நால்வர், தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நைஜீரியாவின் போக்கோ ஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகள் நால்வரில் ஒருவர் பெண் ஆவார். அவர் கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என்பதால், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

]]>
nigeria, suicide blast, football fans, death, injuries, enquiry, boko haram, https://www.dinamani.com/world/2019/jun/17/nigeria-suicide-blast-kills-30-football-fans-3173339.html
3172723 உலகம் எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியாவும் குற்றச்சாட்டு DIN DIN Monday, June 17, 2019 01:04 AM +0530 ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, அந்தச் சம்பவங்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில், தற்போது சவூதி அரேபியாவும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முக்கியத்துவம் வாய்ந்த வளைகுடா கடல்வழித் தடத்தில், இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களது நாட்டில் ஜப்பான் பிரதமர் ஷென்úஸா அபே மேற்கொண்ட நல்லெண்ணப் பயணத்தை துளியும் மதிக்காமல், ஈரான் அரசு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவருடைய சமாதான முயற்சிக்குப் பரிசாக ஈரான் நடத்திய அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு கப்பல்களில் ஒன்று ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.
போரை விரும்பவில்லை: ஈரானுடன் போரிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், எங்களது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை ஆகியவற்றுக்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் முகமது பின் சல்மான். ஓமன் வளைகுடா பகுதியில் 4 எண்ணெய்க் கப்பல்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி மர்மமான முறையில் தாக்குதலுக்குள்ளாகின. அவற்றில் 2 கப்பல்கள் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமானதாகும்.
இந்த நிலையில், அதே கடல் பகுதியில் ஜப்பானுக்குச் சொந்தமான ஓர் எண்ணெய்க் கப்பலும், நார்வேக்குச் சொந்தமான மற்றோர் எண்ணெய்க் கப்பலும் கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை ஈரான்தான் நடத்தியது என அமெரிக்கா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.


அமெரிக்காவே தாக்கியிருக்கலாம்

டெஹ்ரான், ஜூன் 16: ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் அலி லரிஜானி கூறியதாவது: எங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்த நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காத சூழலில், இந்த மர்மத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2-ஆம் உலகப் போரின்போது ஜப்பானில் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக, அந்த நாடு அருகே அமெரிக்கா தங்கள் கப்பல்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/எண்ணெய்க்-கப்பல்கள்-மீதான-தாக்குதல்-ஈரான்-மீது-சவூதி-அரேபியாவும்-குற்றச்சாட்டு-3172723.html
3172722 உலகம் நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் DIN DIN Monday, June 17, 2019 01:03 AM +0530 நியூஸிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் கெர்மாடெக் தீவுகளுக்கு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.
தாரங்கா நகருக்கு 928 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. கடல்மட்டத்துக்கும் மேல் உயர்ந்த எரிமலைகளால் ஆன கெர்மாடெக் தீவுகளில் பொதுமக்கள் வசிப்பதில்லை எனவும், அந்த எரிமலைகளால் 7 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் அந்தப் பகுதியில் அவ்வப்போது ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/நியூஸிலாந்தில்-சக்தி-வாய்ந்த-நிலநடுக்கம்-3172722.html
3172721 உலகம் ஜூலையில் ரஷியாவின் எஸ்-400 ஏவுகணைகள்: துருக்கி நம்பிக்கை DIN DIN Monday, June 17, 2019 01:02 AM +0530 வரும் ஜூலை மாதத்திலிருந்து ரஷியாவின் அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகள் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படத் தொடங்கும் என்று துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஜூலை மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் ரஷியா தனது எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை அனுப்பத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தரையிலிருந்து பாய்ந்து இடைமறித்து அழிக்கும் அதிநவீன எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷியாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துவிட்டார். அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கான தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிபர் எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/ஜூலையில்-ரஷியாவின்-எஸ்-400-ஏவுகணைகள்-துருக்கி-நம்பிக்கை-3172721.html
3172720 உலகம் நிதி முறைகேடு: இஸ்ரேல் பிரதமர் மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபணம் DIN DIN Monday, June 17, 2019 01:02 AM +0530 அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
பிரதமரின் இல்லத்தில் சமையல்காரர் ஒருவர் பணியாற்றி வந்த நிலையில், அரசு செலவில் வெளியிலிருந்து உணவு வரவழைத்ததன் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் சாரா நெதன்யாகு மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஜெருசலேம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஏவிட்டல் சென், சாரா மீதான குற்றச்சாட்டை ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார்.
அந்தக் குற்றத்துக்கு தண்டனையாக 10,000 ஷெகல் (சுமார் ரூ.1.9 லட்சம்) அபராதம் விதித்துடன், முறைகேடாகப் பயன்படுத்திய 45,000 ஷெகலை (சுமார் ரூ.8.7 லட்சம்) அரசுக்கே திருப்பியளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
சாரா நெதன்யாகுவின் வேண்டுகோளை ஏற்று, 45,000 ஷெகலை அவர் 9 தவணைகளாக செலுத்தவும் நீதிபதி சம்மதித்தார்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/நிதி-முறைகேடு-இஸ்ரேல்-பிரதமர்-மனைவி-மீதான-குற்றச்சாட்டு-நிரூபணம்-3172720.html
3172719 உலகம் நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி DIN DIN Monday, June 17, 2019 01:01 AM +0530 ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுத்திவைக்கப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ள நிலையிலும், இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரம்மாண்டமான பேரணியில், புதிய நாடுகடத்தல் சட்ட மசோதாவை வாபஸ் பெறவும், ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் பதவி விலகவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/நாடுகடத்தல்-சட்டத்துக்கு-எதிர்ப்பு-ஹாங்காங்கில்-மீண்டும்-பிரம்மாண்ட-பேரணி-3172719.html
3172718 உலகம் கெளதமாலாவில் பொதுத் தேர்தல் DIN DIN Monday, June 17, 2019 01:01 AM +0530 மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வன்முறை, வறுமை, கெளதமாலா வழியாக அமெரிக்கா செல்வதற்காக வரும் ஏராளமான அகதிகள் ஆகிய  பிரச்னைகள் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகித்தன.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் தெல்மா அல்டானா (படம்) இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/17/கெளதமாலாவில்-பொதுத்-தேர்தல்-3172718.html
3172621 உலகம் நியூஸிலாந்தில் கடும் நிலநடுக்கும்: சுனாமி எச்சரிக்கை வாபஸ் DIN DIN Sunday, June 16, 2019 08:32 AM +0530  

நியூஸிலாந்தில் பரவலாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கையில், நியூஸிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4-ஆக நிலநடுக்கம் பதிவானது. இது கிறைஸ்ட்சர்ச்சின் தெற்கு தீவுகளில் 90 கி.மீ. அளவில் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நியூஸிலாந்தின் பல பகுதிகளில் பரவலாக உணரப்பட்டது. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக நியூஸிலாந்து அரசு அறிவித்தது. இருப்பினும் கடல்பகுதிகளில் பேரலைகள் ஏற்பட்டது. நிலநடுக்க பாதிப்பு காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நியூஸிலாந்து அரசு தெரிவித்தது.

முன்னதாக 2011, பிப்ரவரியில் ரிக்டர் அளவில் 6.3-ஆக ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக இதே கிறைஸ்ட்சர்ச் பகுதியில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பசிஃபிக் பெருங்கடலின் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் அமைந்திருக்கும் நியூஸிலாந்தில் சராசரியாக ஒரு வருடத்தில் 15 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/நியூஸிலாந்தில்-கடும்-நிலநடுக்கும்-சுனாமி-எச்சரிக்கை-வாபஸ்-3172621.html
3172137 உலகம் அமெரிக்கா: மெக்ஸிகோ எல்லையில் இந்திய அகதி சிறுமி பலி DIN DIN Sunday, June 16, 2019 12:44 AM +0530 அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 6 வயது இந்திய அகதி சிறுமி அதிக வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அரிúஸானா மாகாணம், லியூக்வில் நகருக்கு 27 கி.மீ. தொலைவில் குருப்ரீத் கெளர் என்ற 6 வயது சிறுமியின் சடலத்தை எல்லை ரோந்து போலீஸார் மீட்டனர்.
சுமார் 108 டிகிரி வெப்பம் நிலவிய அந்தப் பாலை நிலத்தில், வெப்பம் தாங்காமல் அந்தச் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக அகதிகளைக் கடத்தும் கும்பலின் உதவியுடன் குருப்ரீத் கெளர் உள்பட இரண்டு குழந்தைகளுடன் இரண்டு இந்தியப் பெண்கள் வந்ததாகவும், ஆனால் வழியில் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குருப்ரீதை தனியாக விட்டுவிட்டு குடிநீர் தேடிச் சென்ற அவரது தாய், பல மணி நேரத்துக்கு திரும்பாத நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/அமெரிக்கா-மெக்ஸிகோ-எல்லையில்-இந்திய-அகதி-சிறுமி-பலி-3172137.html
3172135 உலகம் உதவித் தொகை அறிவிப்பு எதிரொலி: சீன மொழியைக் கட்டாயமாக்கும் நேபாள பள்ளிகள்! DIN DIN Sunday, June 16, 2019 12:43 AM +0530 சீனாவில் பேசப்படும் மேண்டரின் மொழியை போதிக்கும் நேபாள பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவை ஏற்பதாக சீன அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் ஏராளமான தனியார் பள்ளிகள் சீன மொழியைக் கட்டாயமாக்கியுள்ளன.
இதுகுறித்து "ஹிமாலயன் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: நேபாளத்தில், மேண்டரின் மொழியை கட்டாயமாகக் கற்றுத் தரும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவையும் ஏற்பதாக சீன அரசு அண்மையில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, நேபாளம் முழுவதும் ஏராளமான தனியார் பள்ளிகள் அந்த மொழியைக் கட்டாயமாக்கியுள்ளன.
நேபாளத்தில் கல்வி விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் பாடத்திட்ட மேம்பாட்டு மையம் (சிடிசி) வகுத்துள்ள விதிமுறைகளின்படி, வெளிநாட்டு மொழிகளை மாணவர்களுக்குக் கற்றுத் தர பள்ளிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், எந்த நாட்டு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதற்கு அரசின் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.
இதுகுறித்து நன்கு தெரிந்தும், விதிகளை அலட்சியம் செய்து நேபாளப் பள்ளிகள் மேண்டரின் மொழியை கட்டாயமாக்கியுள்ளன. மேலும், அந்நிய மொழிகளை பள்ளி நேரத்தில் கற்பிக்கக் கூடாது என்றும், கூடுதல் நேரத்தில் மட்டுமே அத்தகைய மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அரசின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சீன அரசின் சலுகையைப் பெறுவதற்காக நேபாள தனியார் பள்ளிகள் இந்த விதியையும் மீறுகின்றன என்று "ஹிமாலயன் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவைக் கவலையடையச் செய்யும் அளவுக்கு நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/உதவித்-தொகை-அறிவிப்பு-எதிரொலி-சீன-மொழியைக்-கட்டாயமாக்கும்-நேபாள-பள்ளிகள்-3172135.html
3172133 உலகம் ஹாங்காங்: நாடுகடத்தல் சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைப்பு DIN DIN Sunday, June 16, 2019 12:42 AM +0530 ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
அந்தச் மசோதாவை வாபஸ் பெறுமாறு ஹாங்காங் முழுவதும் பல லட்சம் பேர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளைக் கேட்டறியும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான கெடு தேதி எதையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புக்கான சட்டப் பேரவை கவுன்சில் உறுப்பினர்களிடம் அதுகுறித்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து தனது ஆலோசகர்களுடனும், சீன அதிகாரிகளுடனும் கேரி லாம் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தியதாக "தி செளத் சைனா மார்னிங் போஸ்ட்' தெரிவித்தது.
ஹாங்காங்குடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளாத பகுதிகளுக்குக் கூட கைதிகளை நாடுகடத்த வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை ஹாங்காங் அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. 
இந்தப் புதியச் சட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த முடியும் என்பதால், அந்த நகரைச் சேர்ந்த ஜனநாயக ஆதரவாளர்களும், மனித உரிமை அமைப்பினரும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தையும் விஞ்சும் அளவுக்கு நாடுகடத்தல் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கானோர் கடந்த வாரம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
எனினும், அந்த மசோதாவை சட்டப் பேரவையில் கடந்த புதன்கிழமை முன்னெடுத்துச் செல்லப்போவதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதனை எதிர்த்து புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் சட்டப் பேரவையில் நுழைய முயன்றதுடன், முக்கிய சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
அவர்களை போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்ததுடன், முதல் முறையாக போராட்டக்காரர்களை நோக்கி ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
ஹாங்காங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்தச் சூழலில், புதிய நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால் பரபரப்பு அதிகரித்த நிலையில், ஹாங்காங் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீன அரசு வரவேற்பு

புதிய நாடுகடத்தல் சட்ட மசோதா நடவடிக்கைகளை ஹாங்காங் அரசு நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளதை சீன அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சனிக்கிழமை கூறியதாவது:
ஹாங்காங் மக்களின் கருத்துகளை விரிவாகக் கேட்டறியவும், அங்கு அமைதியை ஏற்படுத்தவும் நாடுகடத்தல் சட்ட மசோதாவை நிறுத்திவைக்க அந்த நகர அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் அவர்.
முன்னதாக, நாடுகடத்தல் சட்ட வரைவுக்கு எதிரான போராட்டங்களால் ஹாங்காங்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது சீன கம்யூனிஸ்ட் தலைவர்களை கவலையடையச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சீன அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/ஹாங்காங்-நாடுகடத்தல்-சட்ட-மசோதா-நிறைவேற்றம்-நிறுத்திவைப்பு-3172133.html
3172132 உலகம் சிரியா: மோதலில் 35 பேர் பலி DIN DIN Sunday, June 16, 2019 12:40 AM +0530 சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 26 அரசுப் படையினர் உள்பட 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் ஹமா மாகாணத்திலுள்ள இரு கிராமங்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக அரசுப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். 
இதில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை நோக்கி முன்னேறிய அரசுப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற சண்டையில், 26 ராணுவத்தினர் உயிரிழந்தனர் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/சிரியா-மோதலில்-35-பேர்-பலி-3172132.html
3172131 உலகம் ஈரானிடமிருந்து மின்சாரம் கொள்முதல்: இராக்குக்கான சலுகையை நீட்டித்தது அமெரிக்கா DIN DIN Sunday, June 16, 2019 12:39 AM +0530 ஈரானிடமிருந்து மின்சார இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து இராக்குக்கு மேலும் 90 நாள்கள் விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகின் வெப்பம் மிகுந்த நாடுகளில் ஒன்றான இராக், தனது மின்சாரத் தேவைக்காக அண்டை நாடான ஈரானையே பெரிதும் நம்பியுள்ளது.
மின்சாரப் பற்றாக்குறை காரணமாக இராக்கில் 20 மணி நேரம் கூட மின்தடை ஏற்பட்டுவது வழக்கமான ஒன்றாகும்.
கடந்த ஆண்டின் கோடைக் காலத்தின்போது மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.
இந்தச் சூழலிலில், இந்த கோடைக் காலத்திலும் சராசரியைவிட இராக்குக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
அதனை ஈடுகட்ட, மின் உற்பத்திக்காக தினமும் 2.8 கோடி கனமீட்டர் எரிபொருளையும், 1,300 மெகாவாட் மின்சாரத்தை நேரடியாகவும் ஈரானிடமிருந்து இராக் இறக்குமதி செய்துவருகிறது.
ஈரானை பிராந்திய எதிரியாகக் கருதி வரும் அமெரிக்காவுக்கு, இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரானுடன் வல்லரசு நாடுகள் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, பிற நாடுகளுக்கு எண்ணெய், மின்சாரம் போன்றவற்றை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
எனினும், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, அந்தத் தடையிலிருந்து டிரம்ப் தற்காலிக விலக்கு அளித்திருந்தார். எனினும், அந்தச் சலுகை பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதே போல், ஈரானிடமிருந்து எரிபொருள் மற்றும் மின்சாரத்தை இராக் தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு அதிபர் டிரம்ப் தொடக்கத்தில் 45 நாள்கள் அனுமதி அளித்திருந்தார்.
எனினும், இராக்கில் கோடைகால மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அந்தச் சலுகையை மேலும் 90 நாள்களுக்கு அவர் நீட்டித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/16/ஈரானிடமிருந்து-மின்சாரம்-கொள்முதல்-இராக்குக்கான-சலுகையை-நீட்டித்தது-அமெரிக்கா-3172131.html
3171890 உலகம் பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல் DIN DIN Saturday, June 15, 2019 05:02 AM +0530 பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டேன். அப்போது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தேவாலயத்தை நேரில் கண்டேன். அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கிய பயங்கரவாதத்தின் கொடூரம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைப்பு: நமது பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டுமானால், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவச் செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்காக நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டியதே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை முறையாக நடைபெறுவதற்காக, வருங்காலத் திட்டத்தை எஸ்சிஓ வகுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சிறப்பான பங்களிப்பு: எஸ்சிஓ அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா சிறப்பான முறையில் பங்களித்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வோருக்கான இணையவழி நுழைவுஇசைவு (விசா), அமைப்பின் பெரும்பாலான நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர, இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கான இணையதளத்தில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் ரஷிய மொழியிலான உதவி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு: இணையவழி மருத்துவம், மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான அனுபவங்களை மற்ற நாடுகளுக்கும் பயிற்சியளிக்க இந்தியா தயாராக உள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, மக்களின் வருங்காலத்தை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து நாடுகளுக்கும் சாதகமான பொருளாதாரச் சூழலை ஏற்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது. 

தற்போதைய நிலையில், எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது; வளர்ச்சிக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. எனவே, பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உலக வர்த்தக அமைப்பில் உருவாக்க வேண்டும். அந்த விதிமுறைகள் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும். முக்கியமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு அதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

எரிசக்தித் துறையில் சாதனைகள்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா உறுதி ஏற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் 6-ஆவது இடத்திலும், சூரியஒளி ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் 5-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில், "சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை' மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டமைப்பில் இணைய எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

பேரிடர் காலங்களில் உரிய ஒத்துழைப்பை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். மற்ற நாடுகள் பேரிடரை எதிர்கொள்ளும் சமயங்களில், முதல் நாடாக இந்தியா உதவி வருகிறது. பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் தலைசிறந்த 10 இலக்கியப் படைப்புகள் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிர்கிஸ்தானில் இருந்து மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாடு

பயங்கரவாதம் இல்லா சமுதாயத்தை உருவாக்க இந்தியா உறுதிகொண்டுள்ளது. குறுகிய பார்வையைக் கைவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுதிரள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை நடத்த எஸ்சிஓ நாடுகள் முன்வர வேண்டும் என்றார் மோடி.

மோடி - இம்ரான் திடீர் சந்திப்பு

உச்சிமாநாட்டில் அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒரே இடத்தில் கூடியபோது பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் சந்தித்தனர். அப்போது, மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்தார். இதனை மோடி ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

இந்த உச்சி மாநாட்டின்போது மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தரப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துவிட்டது.

நல்லுறவில் மேம்பாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளுக்கும், இந்தியாவின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கும் ஆயிரம் ஆண்டுகால நெருங்கிய தொடர்பு உள்ளது. தற்போதைய நவீன காலத்தில், நமது ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேலும் மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்.

சுகாதாரம், பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இலக்கியம் மற்றும் கலாசாரம், பயங்கரவாதம் இல்லா சமூகம், மனிதாபிமான உதவி ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒருமைப்பாடு, சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவை நமது நல்லுறவுக்கு அடிப்படையாக உள்ளன என்றார் பிரதமர்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/பயங்கரவாத-ஆதரவு-நாடுகள்-மீது-கடும்-நடவடிக்கை-பிரதமர்-மோடி-வலியுறுத்தல்-3171890.html
3171634 உலகம் தேர்தல் நன்கொடை பத்திரம்: தகவல் தர எஸ்பிஐ மறுப்பு DIN DIN Saturday, June 15, 2019 02:03 AM +0530 தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) கொடுக்க மறுத்து விட்டது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காக, தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து நன்கொடை பத்திரத்தை வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக அதனை அளிக்கலாம். அந்த பத்திரத்தில், நன்கொடையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் இடம்பெறாது. இந்தியாவைச் சேர்ந்த தனி நபர் மற்றும் நிறுவனங்கள் இந்த நன்கொடையை அளிக்கலாம்.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியிடம் புணேவைச் சேர்ந்த விகார் துர்வே என்ற சமூக ஆர்வலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும், அரசுத் துறைகளிடம் இருந்தும் பெறப்பட்ட தகவல்களை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்க மறுத்து விட்டது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது தகவல் அதிகாரி கூறியதாவது:
மனுதாரரின் கோரிக்கை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்க முடியாத விவரங்களாகும். அதாவது, அந்த சட்டத்தின் 8(1)(உ) பிரிவின் படி, ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தின் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர், தனக்கு கிடைத்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரம் வாய்ந்த அமைப்பின் அனுமதியின்றி வெளியிடக் கூடாது. இதேபோல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 8(1)(ஒ) பிரிவின்படி, பொதுமக்கள் நலனுக்கும், பொது செயல்பாட்டும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத தனி நபரின் தகவல்களை வெளியிடக் கூடாது.
மேலும், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட முடியாது என்றார் அவர்.
தேர்தல் நன்கொடை பத்திரங்களை, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே நன்கொடையாகப் பெற முடியும். இதேபோல், கடைசியாக நடந்து முடிந்த சட்டப் பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் அந்த கட்சிகள் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தேர்தல் நன்கொடை பத்திர விற்பனைக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/தேர்தல்-நன்கொடை-பத்திரம்-தகவல்-தர-எஸ்பிஐ-மறுப்பு-3171634.html
3171633 உலகம் கிர்கிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு DIN DIN Saturday, June 15, 2019 02:02 AM +0530 கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிக்கோவுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். மாநாட்டினிடையே அந்நாட்டு அதிபர் ஜீன்பிக்கோவை அவர் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவருமான சூரோன்பே ஜீன்பிக்கோ வரவேற்றார். மாநாட்டின் இடையே, அதிபர் ஜீன்பிக்கோவை பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவுடன் நடத்திய முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/கிர்கிஸ்தான்-அதிபருடன்-பிரதமர்-மோடி-சந்திப்பு-3171633.html
3171371 உலகம் ஐக்கிய அரபு அமீரகம்: ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய 5 கைதிகள் இலங்கைக்கு அனுப்பிவைப்பு DIN DIN Saturday, June 15, 2019 12:19 AM +0530 இலங்கை ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய  5 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா (படம்) வெள்ளிக்கிழமை வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், அங்கிருந்து இலங்கை அழைத்துவரப்பட்டனர்.

இதற்காக காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு துபை சென்று, அந்த 4 பேரையும் இலங்கை அழைத்து வந்தது.

அந்த நால்வரில், ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினரான முகமது மில்ஹானும் ஒருவர் ஆவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/ஐக்கிய-அரபு-அமீரகம்-ஈஸ்டர்-தின-தாக்குதலில்-தொடர்புடைய-5-கைதிகள்-இலங்கைக்கு-அனுப்பிவைப்பு-3171371.html
3171370 உலகம் நியூஸிலாந்து மசூதி தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளுக்கு பிரென்டன் டாரன்ட் மறுப்பு DIN DIN Saturday, June 15, 2019 12:18 AM +0530 நியூஸிலாந்து மசூதி தாக்குதல் தொடர்பான வழக்கில் பிரென்டன் டாரன்ட் (28) (படம்) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் தரப்பு
வாதிடவுள்ளது.
மசூதிக்குள் நுழைந்து அங்குள்ளவர்களை பலமுறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகளை முகநூல் வலைதளத்தில் பிரென்டன் டாரன்ட் நேரடியாக ஒளிபரப்பிய நிலையில் அவரது தரப்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவு நியூஸிலாந்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு அந்த நகர உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கில், வெள்ளை இனவாதியான பிரென்டன் டாரன்ட் மீது பயங்கரவாதம் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் பிரென்டன் டாரன்ட் காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
அப்போது அவரது சார்பில் ஆஜரான அவரது வழக்குரைஞர், வழக்கில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரென்டன் மறுப்பதாகத் தெரிவித்தார்.
வழக்குரைஞர் அவ்வாறு கூறியபோது, அதனை காணெளியில் பார்த்துக் கொண்டிருந்த பிரென்டன் புன்னகைத்தார்.
இது, மசூதித் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொந்தளிப்பை 
ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/நியூஸிலாந்து-மசூதி-தாக்குதல்-வழக்கு-குற்றச்சாட்டுகளுக்கு-பிரென்டன்-டாரன்ட்-மறுப்பு-3171370.html
3171369 உலகம் பணியிடத்தில் சமத்துவம் கோரி ஸ்விட்சர்லாந்து பெண்கள் போராட்டம் DIN DIN Saturday, June 15, 2019 12:17 AM +0530 ஊதிய உயர்வு, பணியிடத்தில் சமத்துவம், பாலியல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்விட்சர்லாந்து முழுவதும் பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஸ்விட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் வழங்கப்படாமல் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அதுமட்டுமன்றி, பெரும்பாலும் பெண்கள் பணியாற்றும் வீட்டு வேலை, கல்வி, 
குழந்தைகள்-நோயாளிகளை கவனித்துக் கொள்ளுதல் போன்ற துறைகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரியும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற மிகப் பெரிய பெண்கள் போராட்டம் இது என்று கூறப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/பணியிடத்தில்-சமத்துவம்-கோரி-ஸ்விட்சர்லாந்து-பெண்கள்-போராட்டம்-3171369.html
3171368 உலகம் அமெரிக்கா: சாரா சாண்டர்ஸ் ராஜிநாமா DIN DIN Saturday, June 15, 2019 12:16 AM +0530 அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
"டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்பது கடவுளின் முடிவு' என்று கூறியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சாண்டர்ஸ், கெளரவம் மிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் 3-ஆவது பெண் ஆவார்.
டிரம்ப் ஆட்சியின்போது அதிபர் மாளிகையில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த பலர் தொடர்ந்து பதவி விலகி வந்த நிலையில், டிரம்ப்பின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அறியப்படும் சாரா சாண்டர்ஸின் இந்த திடீர் ராஜிநாமா அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

]]>
https://www.dinamani.com/world/2019/jun/15/அமெரிக்கா-சாரா-சாண்டர்ஸ்-ராஜிநாமா-3171368.html