Dinamani - உள்ளாட்சித் தேர்தல் 2019 - https://www.dinamani.com/local-body-election-2019/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3321579 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வெற்றி நிலவரம் உடனுக்குடன்! DIN DIN Friday, January 3, 2020 10:41 PM +0530  

சென்னை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

வெற்றி நிலவரம் உடனுக்குடன்..

திருவாரூர் மாவட்டம்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 18

தேர்தல் நடைபெற்றது 17 இடங்கள்

அதிமுக-3

திமுக-10

சிபிஎம்-1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-3

நாகை மாவட்ட வாக்கு எண்ணிக்கை முடிவு

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மொத்தம் 21 இடங்கள்

திமுக - 14 வெற்றி 

அதிமுக - 5 வெற்றி

சிபிஐ - 1

பாஜக - 1

வெற்றி பெற்றவர்களின் விவரம் (வார்டு எண் -  உறுப்பினர் பெயர்- கட்சி) : 

வார்டு எண் 1 - ப. விஜயபாரதி (திமுக), வார்டு எண் 2 - ஆர். சுமதி (அதிமுக), வார்டு எண் 3  க. ஆனந்தன் (திமுக), வார்டு எண் 4 - டி. விஜேஸ்வரன் (திமுக), வார்டு எண் 5 - ந. இளையபெருமாள் (திமுக), வார்டு எண் 6 - க. சுரேஷ் (திமுக), வார்டு எண் 7 - சி. குமாரசாமி (திமுக).

வார்டு எண் 8 - தெ. வெண்ணிலா (திமுக),  வார்டு எண் 9 - ர. துளசிரேகா (திமுக), வார்டு எண் 10 - அ. ராபியா நர்கீஸ்பானு (திமுக), வார்டு எண் 11- உமாமகேஸ்வரி (திமுக), வார்டு எண் 12 - விஜயா ராஜேந்திரன் (திமுக), வார்டு எண் 13 - ரா. அஜீதா (திமுக), வார்டு எண் 14 - வீ. சரபோஜி (இந்திய கம்யூ). 

வார்டு எண் 15 - எஸ். கணேசன் (அதிமுக), வார்டு எண் 16- பி. செல்வி (திமுக), வார்டு எண் 17 - இ. கௌசல்யா (திமுக), வார்டு எண் 18 - த. இளவரசி (அதிமுக), வார்டு எண் 19 - வி. சோழன் (பாஜக), வார்டு எண் 20 - டி.வி. சுப்பையன் (அதிமுக), வார்டு எண் 21 - திலீபன் (அதிமுக).

 

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மொத்தம் 214 இடங்கள்

அதிமுக  70 வெற்றி 

திமுக 108 வெற்றி 

சிபிஐ 2 வெற்றி

சிபிஎம்  1 வெற்றி

தேமுதிக 1 வெற்றி

காங்கிரஸ் 1 வெற்றி

பிஜேபி 8 வெற்றி

பாமக 3 வெற்றி

அமமுக 2 வெற்றி

சுயேட்சை 18 வெற்றி

 

திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது
திருப்பூரில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 13 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலமாக மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
 

மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, தே. கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,  திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்களை திமுகவும் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், மேலூர், உசிலம்பட்டி, மதுரை மேற்கு ஆகிய ஒன்றியங்களில் அதிமுக , திமுக இடையே இழுபறி நிலை  உருவாகியுள்ளது.

இந்த நான்கு ஒன்றியங்களிலும் அமமுக,  சுயேச்சை உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி அமைந்திருக்கிறது.

மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் உள்ள 23 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளதால் எளிதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக பெறுவது உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியிடங்கள் மொத்தம் 18 உள்ளன. இதில் இதுவரை 12-இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக-3
திமுக-5
பாமக-3
தேமுதிக-1

ஊராட்சி ஒன்றியங்கள்-10
மொத்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள்-188
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை-166

வெற்றி விவரம்:
அதிமுக-59
திமுக-44
தேமுதிக-7
மற்றவை-53 (பாமக உள்பட)

ஒன்றியம் வாரியாக
அரூர்

அதிமுக-11
திமுக-5
தேமுதிக-2
மற்றவை-5

கடத்தூர்
அதிமுக-3
திமுக-3
தேமுதிக-1
மற்றவை-6

காரிமங்கலம்

அதிமுக-12
திமுக-6
தேமுதிக-1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1
மற்றவை-1

தருமபுரி

அதிமுக-9
திமுக-4
தேமுதிக-1
மற்றவை-10

நல்லம் பள்ளி

அதிமுக-6
திமுக-5
மற்றவை-17
தேமுதிக-1

பாப்பிரெட்டிப்பட்டி

அதிமுக-1
திமுக-7
மற்றவை-6

பாலக்கோடு

அதிமுக-10
திமுக-9
தேமுதிக-1
மற்றவை-3

பென்னாகரம்

அதிமுக-7
திமுக-5
மார்க்சிஸ்ட்-2
மற்றவை-5

ஏரியூர் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளவற்றில், அரூர், கடத்தூர், காரிமங்கலம், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள்: 

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மொத்தம் 161:
இறுதி நிலவரம்

அதிமுக−59,
திமுக−62,
காங்கிரஸ்−13,
தேமுதிக−3,
பாஜக−2,
சிபிஐ-1,
மற்றவை−21(அமமுக உள்பட)

 

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி: அதிமுக கூட்டணி 8; திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட சுயேட்சை வேட்பாளர் என 75 பேர் போட்டியிட்டனர்.

இதையடுத்து,பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்திலிருந்து அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தன. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 1 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ம.பாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று, 2 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் அ.மதிவாணன், 3-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ரெ.ரவி, 4-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் லெ.மஞ்சரி, 5 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.ராதா, 6-ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரெ.சுந்தரராஜன், 7 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.செந்தில்குமார், 8 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சரஸ்வதி, 9 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் செ.ஸ்டெல்லா, 10 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கோமதி, 12 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் பாக்கியலெட்சுமி, 13 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் மு.கருப்பையா, 14 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சொ.மாரிமுத்து, 15 ஆவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரோக்கிய சாந்தாராணி, 16 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் செ.மகேஸ்வரி வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து,மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்று சமநிலையை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் மத்தூர், தளி ஆகியவற்றில் திமுகவும் கெலமங்கலத்தில் சிபிஐஎம், ஓசூர், சூளகிரி ஆகியவற்றில் அதிமுகவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு திமுக, அதிமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாகை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. 3 ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை முடிவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வெற்றி முடிவும் பகல் 1.15 மணி வரை வெளியாகவில்லை. தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி 3வது வார்டுக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தை கைப்பற்றியது திமுக

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும், 3 ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுகவும் அதிமுகவும் சம பலமாக உள்ளதால் இழுபறி நீடிக்கும் என கூறப்படுகிறது.  

திருச்சியை அள்ளியது திமுக!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் இழுபறி.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 24 இடங்களில் திமுக 18, அதிமுக 5, காங்கிரஸ் 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 12 ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் அதன் துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுக-வுக்கே பெரும்பான்மை உள்ளது.

நாமக்கல் மாவட்டம்: கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சேளூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது இளம்பெண் ரோகினி 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நேர்ல கிரி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம்: 13 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்

மொத்தம் உள்ள 214 வார்டுகளில் திமுக 92, அதிமுக 87, காங்கிரஸ் 5, பாஜக 2, தேமுதிக 3, அமமுக 7, தமாகா1, சுயேச்சை 17 இடங்களில் வெற்றி.

மதுரை மாவட்ட ஊராட்சி வார்டு: 23 வார்டுகளில் 12 இல் திமுக, 9 இல் அதிமுக, தேமுதிக 1, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது

திண்டுக்கல்: நத்தம், வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது. வத்தலகுண்டு, கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூர், திண்டுக்கல், பழனி ஆகிய 8 ஒன்றியங்களில் திமுக வெற்றி. சாணார்பட்டியில் இழுபறி நீடிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் 17 இடங்களில் திமுக வெற்றி. 6 இடங்களில் அதிமுக வெற்றி.

வேதாரண்யம்: நாகை மாவட்டம் ஊராட்சி உறுப்பினர்:
19 -வது வார்டு சோழன் பாஜக 
20 - வது வார்டு சுப்பையன் அதிமுக
21 வது வார்டு திலிபன் அதிமுக

சாத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக 5 இடம், திமுக 8 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

***
சூலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 

அதிமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 1 இடத்தில்முன்னிலை பெற்றுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர்(14): அதிமுக 3 , திமுக 1,  சுயச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

***

சுல்தான்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அதிமுக - 1
ஒன்றிய கவுன்சிலர்(13): அதிமுக 2, திமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

***
விருதுநகர் மாவட்டம்உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: சாத்தூர் 
ஒன்றிய கவுன்சிலர்: 16 இடங்களில், அதிமுக 5, திமுக 8, மதிமுக 2, பாஜக 1இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

***
விருதுநகர் மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: வெம்பக்கோட்டை
ஒன்றிய கவுன்சிலர் - 20 வார்டுகளில் அதிமுக வெற்றி

***

உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு முடிவுகள்: 
மொத்தம் - 10
அதிமுக - 7
திமுக -2
அமமுக - 1
யூனியன் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

வாக்குப்பெட்டிகளைக் காணவில்லை!

நீலகிரி மாவட்டத்தில் பாலகொலா ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் சித்ரா, 3 வாக்குப்பெட்டிகளைக் காணவில்லை என தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

---

குமரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 

---

குலுக்கல் முறையில் தேர்வு!

தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இருவர் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

---

மதுரை ஊராட்சி ஒன்றிய வார்டு: மாலை 6 மணி நிலவரம்

54 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிப்பு:

திமுக - 25
அதிமுக - 22
சுயேச்சை - 4
பாஜக - 1
தேமுதிக - 1
காங்கிரஸ் - 1

---

4 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வென்ற சுயேச்சை:

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வேடியப்பன், பாமக வேட்பாளர் முனுசாமியை விட 4 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி:

3-வது வார்டில் அதிமுக வெற்றி. அதிமுகவைச் சேர்ந்த சசிகலா, திமுக வேட்பாளர் பாலமணியை விட 2619 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார்.

வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டவை:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். 

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. இதில் குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பிரமுகரான சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேட்சை வேட்பாளர் மாணிக்க செல்வகுமாரை விட 423 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். 

இந்நிலையில் குலசேகரபுரம், வடக்குத் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுடலையாண்டியின் மனைவியான சண்முகவடிவு அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 

ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பட்டியல்!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 241 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள 22 இடங்களில் 13 இடங்களில் திமுக-வும், 5 இடங்களில் அதிமுக-வும், காங்கிரஸ் ஓரிடத்திலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 24 மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் ஒரு இடங்களுக்கு கூட மாலை 6 மணி வரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள  183 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகளில் இதுவரை 43 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக 28, திமுக 14, சுயேட்சை 1 வார்டில் வெற்றிபெற்றுள்ளனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்;
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் திமுக சார்பில் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் : போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் 1-வது வார்டு தேர்தலில்  5 - வது சுற்று முடிவில் அதிமுக பிரிதா - 7420 திமுக உமா தேவி 6558. அதிமுக முன்னிலை.

புதுக்கோட்டையில்  இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 11 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ( மொத்தம் 225) பதவி இடங்களுக்கான முடிவுகளில் ஓர் இடத்தை அதிமுகவும், 7 இடங்களை திமுகவும் 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. 

மாவட்ட ஊராட்சிக் குழுவில் 22 வார்டு உறுப்பினர் பதவி இடங்களில் இதுவரை எதற்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறவில்லை.

வாக்குச்சீட்டுகளை வண்ணப்படி பிரிக்கும் பணியே தொடக்கத்தில் சுமார் ஒன்னரை மணி நேரத்தைக் கடத்திவிட்டது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் இரு வாக்குப் பிரிப்பு அறைகளும் சுமார் 8 வாக்கு எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

***

கொடைக்கான‌ல் ஒன்றிய‌த்தில் உள்ள‌ 12 வார்டுக‌ளில், திமுக‌ 5 வார்டுக‌ளையும், அதிமுக‌ 1 வார்டையும், சுயேச்சை 1 வார்டையும் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌ர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  22வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட  அதிமுகவைச் சேர்ந்த ராஜா வெற்றி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 276 ஒன்றிய குழு வார்டுகளில் இதுவரை திமுகவை 13 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் தமாகா, அமமுக, சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

குலுக்கல் முறையில் தேர்வு

அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்னஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட் அங்கப்பன் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.  இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சாத்தூர் - விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 1 2 3 4 5 6 வார்டுகளில் அதிமுக வெற்றி.

ஒன்றிய கவுன்சிலர் வார்டு: 10 - திமுக வெற்றி

மதுரை மாவட்டம்: அரிட்டாபட்டி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ள 79 வயது பாட்டி அ.வீரம்மாள்.  ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஊராட்சித் தலைவராக 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்: சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவராக ஜெ.சந்தியா ராணி (21) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிபிஏ இறுதி ஆண்டு மாணவி.

திருச்சி மாவட்டம்: ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் அதிகாரப் பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட 11 இடங்களில் 7இல் திமுக வெற்றி. 3இல் அதிமுக வெற்றி, ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் 3,4 வாராடு ஒன்றிய கவுன்சிலர் முடிவு

3வது வார்டு

கஸ்தூரி - அதிமுக - 890

விஜயலெட்சுமி - மதிமுக -633

அதிமுக வெற்றி


4வது வார்டு

நிர்மலா - தேமுதிக (அதிமுக கூட்டணி) 1240

மாரியம்மாள் - மதிமுக - 1169

தேமுதிக வெற்றி

***

தேனி மாவட்டம்: போடி ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் 1-வது வார்டு தேர்தலில்  மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக பிரிதா - 3906, திமுக உமா தேவி 3850. அதிமுக முன்னிலை.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு 3 வது வார்டு உறுப்பினராக செல்வி (திமுக) வெற்றி.

***

உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு முடிவுகள்: .
மொத்தம் - 10
அ.தி.மு.க = 7
தி.மு.க-2
அ.ம.மு.க = 1
யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியது.

***

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா 103 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

***

தூத்துக்குடி மாவட்டம் : கயத்தார் ஒன்றியம் 4,5 வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவு

4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

ஜெயச்சந்திரன் - மதிமுக -1459

தியாகராஜன் - அதிமுக- 968

மதிமுக வேட்பாளர் வெற்றி

5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

மனோராஜா - சுயே(அமமுக) - 2046

அழகிரி சாமி - அதிமுக - 1139

சுயேச்சை (அமமுக) வேட்பாளர் வெற்றி

***

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவராக லிங்கேஸ்வரி, ஆவல்நத்தம் பஞ்சாயத்து தலைவராக காளியம்மா, இனாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவராக ஜெயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்: திருவையாறு ஒன்றியத்தில் 3-வது வார்டில் தேமுதிகவும் 4 மற்றும் 5-வது வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றன.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்

ஒன்றிய வார்டு உறுப்பினர்

2 வது வார்டு - அதிமுக வெற்றி
புஷ்பராணி -திமுக -1801
மணிமலா -அதிமுக -1862
மீனா -அமமுக-147
வெள்ளைஅம்மாள்-நாம் தமிழர்-178

 

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்

 
ஒன்றிய வார்டு உறுப்பினர்

1வது வார்டு-திமுக வெற்றி.

அழகு பொன்னு-திமுக-2508
மீனா-அதிமுக-1729
தனம்-அமமுக 456

சுல்தான் பேட்டை :

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சாபாளையம்  பஞ்சாயத்து தலைவர் திமுகவை சேர்ந்த சாரதாமணி காளிமுத்து வெற்றி அறிவிப்பு. அவர் பெற்ற ஓட்டுகள் 1202.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செலக்கரிச்சல் பஞ்சாயத்து தலைவராக மரகத வடிவு கருப்புசாமி(அதிமுக) அவர்கள் தேர்வு. அவர் பெற்ற ஓட்டுகள் 2286.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சுயேச்சை வேட்பாளர் கணேசன் வெற்றி. அவர் பெற்ற ஓட்டுகள் 893.

தருமபுரி மாவட்டம்

10-ஆவது வார்டு
ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான தபால் ஓட்டுகள் 135. இதில் 85தபால் ஒட்டுகள் செல்லாதவை.
பென்னாகரத்தில் 415 தபால் ஓட்டுகளில் 265 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில் 150 ஓட்டுகள் செல்லாதவை.
பிக்கிலி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராதிகா 2567 வாக்குகள் பெற்று வெற்றி .

தருமபுரி: தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுகவை சேர்ந்த இருசன் வெற்றி பெற்றார்.

தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் வார்டு 1. புஷ்பா சிவக்குமார் வெற்றி (பாமக)

தருமபுரி ஒன்றியம் 3வார்டு தம்பி ஜெய்சங்கர் வெற்றி (தேமுதிக)

தருமபுரி ஊராட்சி கவுன்சிலர். கந்தமாள்வடிவேல்  வெற்றி (பாமக)

தஞ்சாவூர் மாவட்டம் : அம்மாபேட்டை ஒன்றியத்தில் முதலாவது வார்டில் திமுக வேட்பாளர் செல்வம், இரண்டாவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபாரதி வெற்றி பெற்றனர்.

திருவாரூர் : பள்ளிவாரமங்கலம் ஊராட்சித் தலைவராக கலைச்செல்வி தேர்வு. 

ஒன்றியக்குழு கவுன்சிலர் தேர்தலில்  வார்டு 1- முருகேசன், வார்டு 4- பத்மப்பிரியா, வார்டு 6- வாசுகி ஆகியோர் வெற்றி பெற்றதாகத் தகவல். அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

தேனி மாவட்டம்: தேனி ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு(ஊஞ்சாம்பட்டி) உறுப்பினர் பதவி- பிரகாஷ்(அதிமுக) வெற்றி.

ஆண்டிபட்டி ஒன்றியக்குழு  3- வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் ஏ.லோகிராஜன் வெற்றி. 4-வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் வரதராஜன் வெற்றி.

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் சி.ஜெயந்தி வெற்றி.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு 7 - வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் ராஜாராமன் வெற்றி.

விருதுநகர் ஒன்றியம் : விருதுநகர் ஒன்றிய 1 வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி. அதேபோல் இரண்டாவது வார்டு ஏழாவது வார்டில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

குமரி மாவட்டம்: ராஜாக்காமஞ்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட  புத்தேரி ஊராட்சி தலைவராக கண்ணன் தேர்வு கண்ணன் வாங்கிய வாக்குகள் 1418. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யப்பன் 1018. வாக்குகள் பெற்றார்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினராக கணேசன் இரண்டாவது வார்டில் ராஜதுரை ஆகியோர் வெற்றி. இருவரும் சுயச்சை என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா வெற்றி.

மொத்த வாக்குகள்-1,727, பதிவானவை-1,365, எஸ்.சி.சகுந்தலா - 676, பூமணி-653.

பட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெற்றி, மொத்த வாக்குகள்-908, சரவணன்-376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டம்: பெரியகுளம் ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி மன்றத் தலைவராக செ.செல்வராணி வெற்றி பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம்: கம்பம் ஒன்றியம், ஆங்கூர்பாளையம் ஊராட்சித் தலைவராக பி.சாந்தி தேர்வு.

கன்னியாகுமரி: மேல்புறம் ஒன்றியம் வார்டு உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசவுந்தரி, 181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

திண்டுக்கல் மாவட்டம்: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 ஒன்றியத்தில் உறுப்பினர்களில் 3 இடங்களில் திமுக வெற்றி. ஒரு சுயேச்சை வெற்றி.

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தின் முதல் ஊராட்சியான எகுமதுரை ஊராட்சி தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் வெற்றி.

 கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் முடிவாக எகுமதுரை ஊராட்சி தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் 400வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் முதல் ஊராட்சி என்ற பெருமைக்குரிய எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஸ்ரீபிரியா மகேந்திரன் மற்றும் சுபா போட்டியிட்ட நிலையில் ஸ்ரீபிரியா மகேந்திரனுக்கு முதல் சுற்றில் 141 ஓட்டும், சுபாவிற்கு 22 ஓட்டும், இரண்டாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 328 ஓட்டும், சுபா 87 ஓட்டும், மூன்றாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 149ஓட்டும், சுபா 161 ஓட்டும் ,4வது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 109 ஓட்டும், சுபா 51 ஓட்டும் பெற்றனர்.

இதன் மூலம் ஸ்ரீபிரியா மகேந்திரன் மொத்தம் 725 ஓட்டுகளும்,சுபா 321 ஓட்டுகளும் பெற்ற நிலையில், ஸ்ரீபிரியா மகேந்திரன்  404ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீபிரியா மகேந்திரன் தமிழகத்தின் முதல் ஊராட்சியான எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு பெற்றார். 

அதே போல 2வது வார்டிற்கு சசிகலா சுரேஷ்குமார், 3வது வார்டில் விஷ்ணுகுமார் வெற்றி பெற்றனர்.

தேனி மாவட்டம்:

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு, 1- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அமமுக வேட்பாளர் மருதையம்மாள் வெற்றி.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முடிவு: 

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பரமேஸ்வரி வெற்றி பெற்றார்.


அம்பலத்தாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வீர மணிகண்டன், தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வி. டி.பாலு, சிறுவாலை  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டியம்மாள்,  தோடனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெய்சங்கர், வைரவநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கீதா மருதுபாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார். 

இதேபோன்று மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆக அதிமுக முருகேசன் தேர்வு பெற்றுள்ளார். 

***

தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு, 1- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட  அமமுக வேட்பாளர் மருதையம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.  க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு,1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சந்திரா வெற்றி பெற்றுள்ளார். 
இதேபோன்று பெரியகுளம் ஒன்றியம், E.புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னப்பாண்டி வெற்றி பெற்றுள்ளார். 

***

நாகை:  நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் திருமேனி,  ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட இந்திரா அருள்மணி,  அதிமுக வேட்பாளர் ஜெயந்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

***
திண்டுக்கல் மாவட்டம்:  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் தற்போது வரை வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விபரம்.
சிரங்காட்டுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட செல்விவீரன், குடகிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு உருளை சின்னத்தில் போட்டியிட்ட ராஜேஸ்வரி அழகர்சாமி,  கோசுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜிதாபேகம்,  பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேன்மொழி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

***

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பரமேஸ்வரி 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக 2620 வாக்குகளும், அதிமுக 1804  வாக்குகளும் பெற்றுள்ளது. 

 

***

தேனி மாவட்டம்: க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு,1-வது வார்டு உறுப்பினர் தேர்தல்- அதிமுக வேட்பாளர் சந்திரா வெற்றி.

***

சிவகங்கை:
சாக்கோட்டை ஒன்றியத்தில்  சொக்கலிங்கபுதூர் ஊராட்சி மன்றத் தலைவராக பெருமாள் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆக அதிமுக முருகேசன் வெற்றி.
 

***

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போடுவாா்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி  80 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சித் தலைவராக ஜென்ஸிராணி வெற்றி
 

***

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில்  மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக முன்னிலை.

எல்லாபுரம் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் எல்லாபுரம் 1வது வார்டு அதிமுக வெற்றி.

***

தேனி மாவட்டம்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், பொட்டிபுரம் ஊராட்சி தலைவர் செல்வராஜ் வெற்றி

சேலம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்:  ஓமலூரில் 8 வது வார்டு மற்றும் கொளத்தூர் 1 ஆவது வார்டில் அதிமுக முன்னிலை
 

***

சேலம்: ஏற்காடு ஊராட்சி  ஒன்றியத்தில் நாகலூர் ஊராட்சி மன்றத் தலைவராக கண்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். குப்புசாமி, பாலகிருஷ்ணன், பேபி, வெண்ணிலா, சீனிவாசன், சிவகாமி, பாப்பாத்தி, ஜோதி, அல்லிமுத்து ஆகிய 9 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

***

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றிய 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனியம்மாள் வெற்றி.

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் முடிவுகளை அறிவிப்பது தாமதம் ஆகி வருகிறது. தோட நேரி, வைரவநத்தம், சமயநல்லூர் ஆகிய ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டும் வெற்றி பெற்றது யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஆகிவருகிறது.

***

தேனி மாவட்டம்:

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சி வார்டு எண்: 1 தங்கப்பாண்டி. 2 லதா பாண்டி, 3  மகாதேவி, 4 ஜெயராணி, 5 ஹரியம்மாள், 6 துரைபாண்டி, 7 செல்வராணி, 8 ராஜேஸ்வரி, 9 மகாலட்சுமி ஆகியோர் வெற்றி.

தலைவர் பதவிக்கு தங்கப்பாண்டி ஏற்கனவே போட்டியின்றி தேர்வு.
 

***

கொடைக்கானல் கூக்கால்  ஊராட்சி ஒன்றியம் வார்டு1: ஒன்றிய கவுன்சிலர்:


அதிமுக -1210
திமுக -1483
மொத்த வாக்குகள் - 3109
273 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி.
 

***

காரமடை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஓடந்துறை ஊராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்: தங்கவேல் - 1409 (வெற்றி)

வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்கள்: 
1: ஜானகி---120
2: தேவி---110
3: ரேவதி---114
4:வடிவேல்---111
5:உமர்பாரூக்
6: நீலாவதி---207
7: வெள்ளிங்கிரி---112
8: விஜயலட்சுமி---128
9:முருகையன்
 

***

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவார்பட்டி ஊராட்சியில் பாண்டி என்பவர் வெற்றி பெற்றார்.

மதுரை கிழக்கு ஒன்றியம் சின்னமாங்குளம் ஊராட்சித் தலைவராக வி.வெள்ளைச்சாமி வெற்றி.

பொய்கைகரைப்பட்டி ஊராட்சித் தலைவராக லெட்சுமி வெற்றி.

திருசெண்ணம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வடிவழகன் வெற்றி.

***

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டில் திமுக வேட்பாளர் சோபனா ராஜி வெற்றி.
 

***

கொடைக்கானல் கூக்கால் ஊராட்சி தலைவர் தேர்தலில் வளர்மதி மாயன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

மிதிலைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரம் வெற்றி பெற்றார்.
 

***

தேனி மாவட்டம்:

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு, 1வது வார்டு உறுப்பினர் (பொட்டிபுரம்) மொத்த வாக்கு 3,461. 

தி.மு.க. - 1,725 (வெற்றி)

அ.இ.அ.தி.மு.க - 1,572

அ.ம.மு.க. - 59

செல்லாதவை - 105

 

***

காரமடை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஓடந்துறை ஊராட்சி தேர்தல் வெற்றி விபரம்:


தலைவர் பதவிக்கு:

திமுக: தங்கவேல்---1409 (வெற்றி)

அதிமுக: சண்முகம்---1356
 

சுயேச்சைகள்: 
ராதாகிருஷ்ணன் --45
பாலு----159

வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்கள்: 
 

1: ஜானகி---120 (அதிமுக_
2: தேவி---110 (திமுக)
3: ரேவதி---114 (அதிமுக)
4:வடிவேல்---111(அதிமுக)
5:உமர்பாரூக் (திமுக)
6: நீலாவதி---207 (அதிமுக)
7: வெள்ளிங்கிரி---112 (அதிமுக)
8: விஜயலட்சுமி---128 (அதிமுக)
9:முருகையன்--- (திமுக)
 

***

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு முதலாவது வார்டில் திமுக வெற்றி.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த விஜயன் 1048 வாக்கு பெற்று 22 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

***

சுல்தான்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2 ஆவது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் மனோகரன் வெற்றி.

ஒன்றாவது வார்டு உறுப்பினராக தி. மு.க. வேட்பாளர் விஜயகுமார் வெற்றி.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் சீத்தப்பன் வெற்றி.

***

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர்  ஊராட்சி ஒன்றியம்

கொட்டகுடி - கிராம ஊராட்சி
தலைவர் - ராஜேந்திரன்
வார்டு உறுப்பினர்கள்
தாஸ் 1, சிவனாண்டி 2, மாரியம்மாள் 3, குமார் லட்சுமி 5. தனலட்சுமி 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

***

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி.

சிவகங்கை ஒன்றியத்தில் அழகமாநகரி ஊராட்சி மன்ற தலைவராக ராதாகிருஷ்ணன் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய 1வது வார்டில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி.
 

***

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவு.
அகமலை- கிராம ஊராட்சி தலைவர்  பதவிக்கு லதா தேர்வு. 

வார்டு உறுப்பினர்களாக ஒச்சகாளை - 1 , விஜயா 2, முருகன் 3 , மருதம்மாள் 4, சாரதா 5, ரமேஷ்பாபு 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் சவிதா ரமேஷ் வெற்றி பெற்றார்.

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ,700 கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்டம்: அதேபோன்று, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,924 கிராம ஊராட்சித் தலைவா்கள் என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/1/w600X390/election.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/local-body-election-2019/2020/jan/02/live-updates-rural-localbody-election-results-3321579.html
3321551 உள்ளாட்சித் தேர்தல் 2019 செல்லாத வாக்குகளை வாரி வழங்கிய அரசு ஊழியர்கள் DIN DIN Thursday, January 2, 2020 01:11 PM +0530
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் நிலவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் பெரும்பாலும் செல்லாத வாக்குகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, தருமபுரி ஏரியூர் ஒன்றியம் பகுதியில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூர் ஒன்றியத்தில் அனைத்து தபால் வாக்குகளும் நிராகரிப்பு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு அளித்தபோது உறுதிமொழி படிவத்தில் வாக்குச்சீட்டு தொடர் எண் குறிப்பிடப்படாததால் ஒசூர் ஒன்றியத்தில் அனைத்து (99) தபால் வாக்குகளும் செல்லாதவை என ஒசூர் ஒன்றிய தேர்தல் ஆப்தாப் பேகம் அறிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான 60 வாக்குகளில் 58 தபால் வாக்குகள் செல்லாதவை என்றும் தெரிய வந்துள்ளது.

செல்லாத ஓட்டுகள் பதிவானதில் ஒட்டன்சத்திரம் புதிய சாதனையையே படைத்துள்ளது. 

ஒட்டன்சத்திரத்தில் பதிவான 74 தபால் வாக்குகளில் 73 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு வாக்குகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளும் பிரிக்கப்பட்டு வருகின்றன

இதனிடையே,  கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/election.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2020/jan/02/செல்லாத-வாக்குகளை-வாரிய-வழங்கிய-அரசு-ஊழியர்கள்-3321551.html
3319188 உள்ளாட்சித் தேர்தல் 2019 வாக்குச் சாவடியில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்! DIN DIN Monday, December 30, 2019 01:13 PM +0530  

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது புலிவலம் ஊராட்சி. இங்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதற்காக புலிவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கமான இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பெற்றோர்களுடன் அவர்களது குழந்தைகள் பலரும் வாக்குச் சாவடிக்ககு வந்திருந்தனர். 

தங்களது பெற்றோர் ஜனநாயக கடமையாற்ற வரிசையில் காத்திருந்த வேளையில், பள்ளி வளாகத்தில் இருந்த சறுக்கு விளையாட்டில் சிறுவர்கள் அனைவரும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். 

வாக்குப்பதிவு பரபரப்பு, போலீஸார் கண்காணிப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழ்ந்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/20191230_123341.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/வாக்குச்-சாவடியில்-விளையாடி-மகிழ்ந்த-சிறுவர்கள்-3319188.html
3319182 உள்ளாட்சித் தேர்தல் 2019 உடுமலை அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஏராளமான போலீஸ் குவிப்பு DIN DIN Monday, December 30, 2019 01:02 PM +0530  

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுமார் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைக்கு உட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொள்ளுபாளையம் ஊராட்சியில் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. 

வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டின் பின்புறம் மை ஒட்டுவதாகக் கூறி ஒரு தரப்பு வேட்பாளர் புகார் கூறியதால் தகராறு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/udumalaivoting.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/உடுமலை-அருகே-3-மணி-நேரம்-வாக்குப்பதிவு-நிறுத்தம்-ஏராளமான-போலீஸ்-குவிப்பு-3319182.html
3319185 உள்ளாட்சித் தேர்தல் 2019 தள்ளாத வயதிலும் தளராது வாக்களித்த முதியோர்! DIN DIN Monday, December 30, 2019 12:47 PM +0530  

தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது 100 வயதுகொண்ட முதியோர் தங்களின் தள்ளாத வயதிலும் மனம் தளராமல் வந்து வாக்களித்துச் சென்றனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர் ஊராட்சி ஆசாரித்தெருவைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி சீனியம்மாள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தனது பாட்டியை நீலகிரி மாவட்டம் தும்மனட்டி வாக்குச்சாவடி மையத்துக்கு தனது பேரன் அழைத்து வந்தார். இவை அங்கு காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/senior_citizens_voting.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/தள்ளாத-வயதிலும்-தளராது-வாக்களித்த-முதியோர்-3319185.html
3319179 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஈரோடு கவுந்தப்பாடி ஊராட்சியில் தேர்தலை புறக்கணித்த மக்கள்! DIN DIN Monday, December 30, 2019 12:14 PM +0530  

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள 362 வாக்காளர்கள் 1வது மற்றும் 4வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 362 வாக்காளர்களை 1வது வார்டுக்கு மறுவரையரை செய்து தராததை கண்டித்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

]]>
உள்ளாட்சித் தேர்தல், Erode https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/erode.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/people-boycotting-elections-in-erode-3319179.html
3319177 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு DIN DIN Monday, December 30, 2019 12:05 PM +0530  

திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு இரண்டாம் கட்ட தேர்தலின் போது திங்கள்கிழமை நடைபெறுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/vote_id.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/திருவள்ளூர்-அருகே-8-ஆயிரம்-வாக்குச்சாவடிகளில்-மறுவாக்குப்பதிவு-3319177.html
3319174 உள்ளாட்சித் தேர்தல் 2019 பணியின்போது மாரடைப்பு: உதவி காவல் கண்காணிப்பாளர் மரணம் DIN DIN Monday, December 30, 2019 11:49 AM +0530  

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வம், பணியின் போது திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/policedeath.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/பணியின்போது-மாரடைப்பு-உதவி-காவல்-கண்காணிப்பாளர்-மரணம்-3319174.html
3319172 உள்ளாட்சித் தேர்தல் 2019 மின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் DIN DIN Monday, December 30, 2019 11:41 AM +0530  

கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம்  போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், 13 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 53 பேரும், 14 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 49 பேரும், 15 ஊராட்சி மன்றங்களில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு 327 பேரும் போட்டியிடுகின்றனர்.  காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் மின்சாதனம் பழுதடைந்ததால் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

மேலும் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தங்க.தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/votelist.JPG https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/மின்சாதனம்-பழுது-வாக்குப்-பதிவு-தொடங்குவதில்-தாமதம்-3319172.html
3319171 உள்ளாட்சித் தேர்தல் 2019 புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மரணம் DIN DIN Monday, December 30, 2019 11:34 AM +0530  

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு வேட்பாளர் மோ.மல்லிகா திடீரென மரணமடைந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/WhatsApp_Image_2019-12-30_at_11.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/புதுக்கோட்டை-அருகே-வாக்குப்பதிவு-நாளன்று-வேட்பாளர்-மரணம்-3319171.html
3319169 உள்ளாட்சித் தேர்தல் 2019 கொடைக்கானல் அருகே தேர்தல் புறக்கணிப்பு DIN DIN Monday, December 30, 2019 11:25 AM +0530  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி, கொடைக்கானல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 1,371 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் 306 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன. 

மீதமுள்ள 1,065 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 7 ஒன்றியங்களில் 162 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 3 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன. 107 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கும், 10 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னவனூர் ஊராட்சி கவுஞ்சி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/26/w600X390/vote.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/கொடைக்கானல்-அருகே-தேர்தல்-புறக்கணிப்பு-3319169.html
3319165 உள்ளாட்சித் தேர்தல் 2019 தேனியில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு DIN DIN Monday, December 30, 2019 11:04 AM +0530  

தேனி மாவட்டம்  போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், 13 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 53 பேரும், 14 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 49 பேரும், 15 ஊராட்சி மன்றங்களில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு 327 பேரும் போட்டியிடுகின்றனர். 

இதில் ஏற்கனவே ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 17 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

போடி ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஆயிரத்து 695 ஆண் வாக்காளர்கள், 30 ஆயிரத்து 423 பெண் வாக்காளர்கள், .3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 60 ஆயிரத்து 121 வாக்காளர்கள் உள்ளனர்.

திங்கள்கிழமை காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/thenivote.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/தேனியில்-காலை-முதல்-விறுவிறுப்பான-வாக்குப்பதிவு-3319165.html
3319163 உள்ளாட்சித் தேர்தல் 2019 கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம் லெனின் பாலு DIN Monday, December 30, 2019 10:54 AM +0530  

மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள் வைத்த சீல் ஒரு பக்கத்திலிருந்து தெரிந்தால், கள்ள ஓட்டு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே அங்கு வாக்குப்பதிவு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்குச் சீட்டுகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/vote_id.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/கள்ள-ஓட்டு-சர்ச்சை-மதுரை-அருகே-வாக்குப்பதிவு-தற்காலிக-நிறுத்தம்-3319163.html
3319162 உள்ளாட்சித் தேர்தல் 2019 மதுரையில் வேட்பாளரின் மனைவி பெயர் வாக்குப்பதிவு பட்டியலில் இருந்து நீக்கம் லெனின் பாலு DIN Monday, December 30, 2019 10:47 AM +0530  

திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெறுகிறது.

1,093 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 220  பதற்றமானவயாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் 2,123 பதவிகளுக்கு மொத்தமம் 5,71,072 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் ஏற்கனவே 538 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே 1,585 பதவிகளுக்கு 4,652 பேர் போட்டியிடுகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8.12 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5-ஆவது வார்டில் பலர் தங்களுக்கு வாக்கு இல்லையென மாவட்ட ஆட்சியர் வினயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விளாச்சேரியில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாண்டி என்பவரின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலரின் பெயர் இரவோடு இரவாக நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/IMG_20191230_090032.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/மதுரையில்-வேட்பாளரின்-மனைவி-பெயர்-வாக்குப்பதிவு-பட்டியலில்-இருந்து-நீக்கம்-3319162.html
3319158 உள்ளாட்சித் தேர்தல் 2019 தூத்துக்குடியில் 1,275 பதவிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்பராஜ் DIN Monday, December 30, 2019 10:44 AM +0530  

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 1,275 பதவிகளுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 1995 பதவிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.

இதில் ஏற்கெனவே 720 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 1,275 பதவிகளுக்கு 3,560 பேர் போட்டியிடுகின்றனர்.

5 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 994 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது .இதில் 176 வாக்குசாவடி கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, கருங்குளம் ஆகிய 7 ஊராட்சி ஓன்றியங்களில் உள்ள 1542 பதவிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 69.98சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் உள்ள வேலவன் புதுக்குளம் வாக்குசாவடியில் நடைபெற்ற வாக்குபதிவின்போது சந்தேகப்படும்படியான  நபர்கள் சிலர் வாக்குபோடும் அட்டை அருகே நடமாடியதாக புகார் எழுந்ததையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆனையம் உத்தரவின்படி  இன்று அங்கு மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/vote_id.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/தூத்துக்குடியில்-1275-பதவிகளுக்கு-இரண்டாம்-கட்ட-வாக்குபதிவு-3319158.html
3319161 உள்ளாட்சித் தேர்தல் 2019 மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதி DIN DIN Monday, December 30, 2019 10:43 AM +0530  

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டனர். பின்னர் செல்லிடப்பேசி ஒளியை பயன்படுத்தி பணிகள் துவங்கப்பட்டது.  

தொடர்ந்து, மற்றொரு வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பெட்டியை தயார் செய்தபோது அதனை சரியாக மூட முடியாததால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

 

]]>
உள்ளாட்சித் தேர்தல், local body election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/121.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/second-phase-local-body-election-in-tn-3319161.html
3319159 உள்ளாட்சித் தேர்தல் 2019 மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் வாக்களிக்க சிரமம் DIN DIN Monday, December 30, 2019 10:29 AM +0530  

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கீரனுர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதாகி இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

]]>
ராமநாதபுரம் , Ramanathapuram https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/gokul.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/second-phase-local-body-election-in-tn-3319159.html
3319157 உள்ளாட்சித் தேர்தல் 2019 குமரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு DIN DIN Monday, December 30, 2019 10:11 AM +0530  

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் குருந்தங்கோடு மேல்புறம், திருவட்டாரு, தக்கலை, இராஜாக்காமங்கலம், ஆகிய 5 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கடந்த 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது.

இப்பகுதிகளில் 65.93 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், முன்சிறை, தோவாலை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த 2 ஆம் கட்டத் தேர்தலில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 298 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அகஸ்வரம், கிள்ளியூர், முன்சிறை, தேவாளை ஆகிய 4 ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/WhatsApp_Image_2019-12-30_at_8.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/குமரி-மாவட்டத்தில்-4--ஊராட்சி-ஒன்றியங்களில்-2ஆம்-கட்ட-வாக்குப்பதிவு-3319157.html
3319156 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சியில் 2,093 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு DIN DIN Monday, December 30, 2019 09:58 AM +0530  

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 

கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியம் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2,093 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். 1,337 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மண்ணச்சநல்லூர் ஒன்றியம் உத்தமர்சீலி வாக்குச் சாவடியில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் அதிகாலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/30/w600X390/trichyelections.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/திருச்சியில்-2093-பதவிகளுக்கு-இன்று-வாக்குப்பதிவு-3319156.html
3317045 உள்ளாட்சித் தேர்தல் 2019 நாகர்கோ வில் அருகே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக புகார் DIN DIN Friday, December 27, 2019 04:19 PM +0530  

நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக புகார் கூறிய பொதுமக்கள் வாக்குப்பதிவின் போது எதிர்ப்பு தெரிவித்தாதல் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட புத்தேரி ஊராட்சியில் காலை முதல் தேர்தல் அமைதியாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 3-வது வார்டு பகுதியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பவர்களைக் கண்டரிந்து அவர்களிடம் வாக்குப் பதிவுச் சீட்டை மாற்றி கொடுத்து வாக்குகளை செல்லாத வாக்குகளாக மற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்ததாக பொது மக்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/11/w600X390/votelist.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/நாகர்வோவில்-அருகே-ஆளுங்கட்சிக்கு-ஆதரவாக-அதிகாரிகள்-செயல்படுவதாக-புகார்-3317045.html
3317039 உள்ளாட்சித் தேர்தல் 2019 வீடுகளுக்குள் போர்வைகள் வீச்சு: போலீஸார் விசாரணை DIN DIN Friday, December 27, 2019 03:08 PM +0530  

பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோப்பணம்பாளையத்தில் வீடுகளில் வீசி சென்ற போர்வைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோப்பனம்பாளையம் ஊராட்சியில் வீட்டினுள் வீசிச்சென்ற போர்வைகளை பொதுமக்கள் அங்கிருந்த கோயிலில் போட்டு சென்றதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற பறக்கும் படையினர் போர்வைகளை வீசிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்பணம்பாளையத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக போர்வைகளை கொண்டு வந்து அங்குள்ள வீடுகளுக்குள் வீசிச்சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் காரல் மார்க்ஸ் தலைமையிலான பறக்கும் படையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

இதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் போர்வைகளை வீசிச் சென்றது தெரியவந்தது. வீடுகளுக்குள் வீசிச்சென்ற போர்வைகளை வாக்காளர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் வளாகத்தில் வீசிச் சென்றனர். 

இதையடுத்து பறக்கும்படையினர் போர்வைகளை கைப்பற்றி பாண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போர்வைகளை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/bedsheet_case.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/வீடுகளுக்குள்-போர்வைகள்-வீச்சு-போலீஸார்-விசாரணை-3317039.html
3317044 உள்ளாட்சித் தேர்தல் 2019 புதிய வாக்குப்பெட்டிக்காக தடுத்து நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 02:28 PM +0530  

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் சோலைசேரி ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினராக முத்துமாரி என்பவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் அங்கு உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து காலை 11:30 மணிக்கு தகவலறிந்த வேட்பாளர் தரப்பினர் வாக்குப்பதிவை தடுத்து நிறுத்தினர். 

இதனால் ஒரு மணி நேரம் கால தாமதத்திற்குப் பின், புதிய வாக்குப்பெட்டி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/15/w600X390/vote.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/புதிய-வாக்குப்பெட்டிக்காக-தடுத்து-நிறுத்தப்பட்ட-வாக்குப்பதிவு-3317044.html
3317043 உள்ளாட்சித் தேர்தல் 2019 மதுரையில் பாஜக வேட்பாளர் மீது திமுக செயலர் தாக்குதல்? DIN DIN Friday, December 27, 2019 02:25 PM +0530  

மதுரை ஒத்தக்கடை வாக்குச்சாவடி அருகே பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மதுரையில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 2,500 போலீஸார், 2 ஏடிஎஸ்பி மற்றும் 12 டிஎஸ்பிக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுசிறு பிரச்னைகள் தவிர்த்து மதுரை மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

திரு மோகூர் பாஜக வேட்பாளரை திமுக ஒன்றியச் செயலர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/3/w600X390/vote.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/மதுரையில்-பாஜக-வேட்பாளர்-மீது-திமுக-செயலர்-தாக்குதல்-3317043.html
3317041 உள்ளாட்சித் தேர்தல் 2019 வேட்பாளர் ஆதரவாளர்கள் இடையே மோதல்: போலீஸ் தடியடி DIN DIN Friday, December 27, 2019 02:17 PM +0530  

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சியில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்த நிலையில், வெம்பக்கோட்டை ஊராட்சியில் உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குசாவடிக்குள் அத்துமீறிச் சென்று வருவதாக சுயேச்சை வேட்பாளாரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையில் வந்த போலீஸார் இரண்டு தரப்பிலும் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் வழக்கம்போல் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/PoliceOdishaDrugs.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/வேட்பாளர்-ஆதரவாளர்கள்-இடையே-மோதல்-போலீஸ்-தடியடி-3317041.html
3317037 உள்ளாட்சித் தேர்தல் 2019 தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்த மக்கள் DIN DIN Friday, December 27, 2019 01:59 PM +0530  

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வேங்கூர் ஊராட்சி. இங்குள்ள வாக்குச் சாவடியில் பணியிலிருந்த காவல்துறையினர், அப்பகுதி வீடுகளுக்குள் இருந்தவர்களை தேவையற்ற காரணங்களை கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அங்கு வந்த தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்து காவல்துறையினர் மீது புகார் தெரிவித்தனர்.

வாகனத்திலிருந்து இறங்கிய பார்வையாளர் கணேஷ்,  விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/electionofficervehicleblockbypeople.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/தேர்தல்-பார்வையாளரின்-வாகனத்தை-வழிமறித்த-மக்கள்-3317037.html
3317035 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்செந்தூர் அருகே தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி DIN DIN Friday, December 27, 2019 01:49 PM +0530  

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பிச்சிவிளை ஊராட்சியில் தேர்தல் புறக்கணிப்பால் பணியாளர்கள் மட்டும் இருந்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

6 வார்டுகளை கொண்ட பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர். இச்சூழலில் சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவர்க்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் பதவிக்கு 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடும் சூழலில், வார்டு உறுப்பினருக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது தேர்தலையும் அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/votingunit.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/திருச்செந்தூர்-அருகே-தேர்தல்-புறக்கணிப்பால்-வெறிச்சோடிய-வாக்குச்சாவடி-3317035.html
3317032 உள்ளாட்சித் தேர்தல் 2019 திண்டுக்கல் அருகே வேட்பாளரின் சின்னம் இடம்பெறாமல் வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 01:38 PM +0530  

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் ஒருவருக்கான சின்னம் இடம் பெறாமலே வாக்குப்பதிவு தொடங்கியது.

17 வாக்குகள் பதிவான நிலையில் வேட்பாளர் நிஜாம் என்பதற்கான சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்குபதிவு நிறுத்தப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சின்னவன் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/11/w600X390/votelist.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/திண்டுக்கல்-அருகே-வேட்பாளரின்-சின்னம்-இடம்பெறாமல்-வாக்குப்பதிவு-3317032.html
3317028 உள்ளாட்சித் தேர்தல் 2019 மணப்பாறையில் தீவிரமாக கண்காணிக்கப்படும் பதற்றமான 28 வாக்குச்சாவடிகள் DIN DIN Friday, December 27, 2019 12:45 PM +0530  

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 52 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 88 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 729 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், 2566 வேட்பாளர்களையும், 2,61,305 வாக்காளர்களையும் கொண்ட தேர்தல் வாக்களிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றியங்களில் 494 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

இதில் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

காலை 9 மணி வரை, மணப்பாறையில் 11%, மருங்காபுரியில் 10% மற்றும் வையம்பட்டியில் 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/manapparaivoting.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/மணப்பாறையில்-தீவிரமாக-கண்காணிக்கப்படும்-பதற்றமான-28-வாக்குச்சாவடிகள்-3317028.html
3317026 உள்ளாட்சித் தேர்தல் 2019 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த எம்ஜிஆர், நம்பியார்! DIN DIN Friday, December 27, 2019 12:34 PM +0530  

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது திருநெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்டது தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதில் திரைத்துரையல் கோலோச்சிய நடிகர்கள் எம்ஜிஆர், நம்பியார் பெயர் கொண்ட இருவர் இணைந்து வந்து வாக்களித்தனர். இவர்கள் இருவரும் மாமன், மைத்துனர் என்பது கூடுதல் சிறப்பு.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/mgrnambiyarnamedvoters.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/உள்ளாட்சித்-தேர்தலில்-வாக்களித்த-எம்ஜிஆர்-நம்பியார்-3317026.html
3317025 உள்ளாட்சித் தேர்தல் 2019 வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு DIN DIN Friday, December 27, 2019 12:31 PM +0530  

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதை கண்டித்து வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதில் போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியை சேர்ந்த அதிமுக வின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் என்பவர் திடீரென வாக்கு மையத்தை பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பிரசாரம் செய்து வருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால், ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்கு மையத்துக்கு பூட்டு போடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார்.

பிறகு உள்ளே வந்த போலீஸார், வாக்குச் சாவடிக்குள் இருந்த அனைத்து கட்சியின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர். 

அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,

விதிகளை மீறி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கு சேகரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகபட்சமாக வாக்குச் சாவடிக்குள் விதிகளை மீறி வாக்கு சேகரிப்பது புகார்கள் எழுந்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_12.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/வாக்கு-மையத்தை-பூட்டிய-நபரால்-பரபரப்பு-3317025.html
3317023 உள்ளாட்சித் தேர்தல் 2019 தஞ்சையில் 1,378 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 12:20 PM +0530  

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதற்காக மொத்தம் 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரை 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_10.jpeg திருவையாறு அருகே கண்டியூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/தஞ்சையில்-1378-வாக்குச்-சாவடிகளில்-வாக்குப்பதிவு-3317023.html
3317018 உள்ளாட்சித் தேர்தல் 2019 திண்டுக்கல் மாவட்டத்தில் 1,516 பதவிகளுக்கு இன்று தேர்தல் DIN DIN Friday, December 27, 2019 11:54 AM +0530  

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,516 பதவிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 5,239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

திண்டுக்கல் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஆகிய 7 ஒன்றியங்களில், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 1,683 பதவிகள் உள்ளன. 

இதில், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர், 6 ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 160 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 1,516 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில் 1,241 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4,126 பேரும், 124 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 567 பேரும், 138 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 493 பேரும், 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 63 பேரும் போட்டியிடுகின்றனர்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/vote_id.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/திண்டுக்கல்-மாவட்டத்தில்-1516-பதவிகளுக்கு-இன்று-தேர்தல்-3317018.html
3317016 உள்ளாட்சித் தேர்தல் 2019 மனைவிக்கு ஆதரவாக சாவி மாலை அணிந்து வாக்கு சேகரித்த கணவன்! DIN DIN Friday, December 27, 2019 11:38 AM +0530  

தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.  

இந்நிலையில், தேனூர் ஊராட்சி 9-ஆவது வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் தனது மனைவி செல்விக்கு ஆதரவாக அவரது சின்னமான சாவியை மாலையாக அணிந்து அவரது கணவன் ஊர்காவலன் வாக்கு சேகரித்தார்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_1.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/மனைவிக்கு-ஆதரவாக-சாவி-மாலை-அணிந்து-வாக்கு-சேகரித்த-கணவன்-3317016.html
3317014 உள்ளாட்சித் தேர்தல் 2019 ராமநாதபுரத்தில் அதிகாரிகள் குளறுபடியால் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 27, 2019 11:30 AM +0530  

ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட புது மாயாகுளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அதிகாரிகளின் குளறுபடியான நடவடிக்கையால் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் 5 ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த நிலையில், திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் 103 வார்டு பகுதி மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடியில் ஊராட்சி தலைவருக்கான பெயர் சின்னங்கள் மட்டும் இருப்பதாகவும், வார்டு உறுப்பினர்களின் பெயர் சின்னம் இல்லை என்றும், மாயாகுளம் ஊராட்சியின் பெயர் வாக்குச்சாவடிகளில் இல்லை என்று கூறிய வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாயாகுளம் 103-ஆவது வாக்குச்சாவடியில் 6 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தகவலறிந்த கீழக்கரை டிஎஸ்பி முருகேசன், வளர்ச்சி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_91.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/ராமநாதபுரத்தில்-அதிகாரிகள்-குளறுபடியால்-வாக்களிக்க-மறுத்து-ஆர்ப்பாட்டம்-3317014.html
3317011 உள்ளாட்சித் தேர்தல் 2019 பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 11:17 AM +0530  

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஓட்டுப் பெட்டிகள் மற்றும் பேனா, பென்சில், மை, அட்டைப்பெட்டி உள்ளிட்ட 72 பொருட்கள் அடங்கிய சாக்குப்பைகளும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வியாழக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது. ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளும், 105 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 502 போட்டியிடுகின்றனர். 

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 603 பேர் போட்டியிடுகின்றனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கு 858 பேர் போட்டியிடுகின்றனர்.

கிணத்துக்கடவில் 34 ஊராட்சிகளில் 151 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கு சேர்த்து 694 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கத் துவங்கினர். சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த ஊரான ரமணமுதலிபுதூரில் வரிசையில் நின்று வாக்களித்தார். முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தனது சொந்த ஊரான நல்லிக்கவுண்டன்பாளையத்தில் வாக்களித்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Ima3.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/பலத்த-போலீஸ்-பாதுகாப்புடன்-பொள்ளாச்சி-ஆனைமலை-கிணத்துக்கடவில்-வாக்குப்பதிவு-3317011.html
3317008 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஈரோட்டில் தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 11:04 AM +0530  

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைப் பெட்டி (ஸ்டாம்ப் பேடு) வேலை செய்யாததால் சிறிது நேரம் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து வேட்பாளரே ஸ்டாம்ப் பேடு வாங்கி கொடுத்ததால் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவாடி, டி.என் பாளையம் மற்றும் நம்பியூர் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 874 பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 2,760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 657 வாக்குசாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பணிகளில் 4,645 அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஈரோடு ஊராட்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சிமன்றத்திற்குட்பட்ட 21,22,23 மற்றும் 24 ஆகிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க பயன்படும் மைப் பெட்டி (ஸ்டாம்ப் பேடு) சரியாக வேலை செய்யவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதனைப் புதிதாக வாங்கி கொடுத்ததை தொடர்ந்து அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/ஈரோட்டில்-தாமதமாகத்-தொடங்கிய-வாக்குப்பதிவு-3317008.html
3317005 உள்ளாட்சித் தேர்தல் 2019 தீக்குளிப்பு மிரட்டல் காரணமாக ஊத்தங்கரை அருகே வாக்குப்பதிவு நிறுத்தம் DIN DIN Friday, December 27, 2019 10:55 AM +0530  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் லலிதா மகாராஜன் என்பவரது சின்னம் கைப்பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் ஆக மாறியுள்ளது.

இந்நிலையில், வேட்பாளரது கணவரின் சகோதரர்கள் இருவர், மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் தீக்குளிப்பதாக தெரிவித்த இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதன்காரணமாக, அந்த வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/11/w600X390/votelist.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/தீக்குளிப்பு-மிரட்டல்-காரணமாக-ஊத்தங்கரை-அருகே-வாக்குப்பதிவு-நிறுத்தம்-3317005.html
3317003 உள்ளாட்சித் தேர்தல் 2019 கடலூர் விலங்கல்பட்டு ஊராட்சி வார்டில் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம் DIN DIN Friday, December 27, 2019 10:44 AM +0530  

தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.  

இந்நிலையில், கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சி வார்டு எண் 4-இல் போட்டியிடும் வேட்பாளர் மோகனா என்பவரது சின்னம் கார் வாக்குச் சீட்டில் இல்லாததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/26/w600X390/vote.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/கடலூர்-விலங்கல்பட்டு-ஊராட்சி-வார்டில்-வாக்குப்பதிவு-தற்காலிக-நிறுத்தம்-3317003.html
3317000 உள்ளாட்சித் தேர்தல் 2019 தனி வாக்குச்சாவடி இல்லையே? பார்வையற்ற வாக்காளர்கள் பரிதவிப்பு DIN DIN Friday, December 27, 2019 10:31 AM +0530  

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பார்வையற்றோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் பார்வையற்றோர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சரவணன் கூறியது: 

மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் காந்தி நகர், எம்ஜிஆர் நகர் வாக்குச் சாவடிகளில் பார்வையற்றோர் அதிகம் உள்ளனர். இதில் எம்ஜிஆர் நகர் வாக்குச் சாவடியில் 240 பார்வையற்ற வாக்காளர்கள் உள்ளனர். 

ஆனால், நாங்கள் வாக்களிக்கும் விதமாக சிறப்பு பூத் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் விழியிழந்தோர் சிரம்ப்பட நேரிட்டது. பிரெய்லி வாக்குச் சீட்டு இல்லை. உதவியாளர் துணையுடன் வாக்களிக்க காத்திருக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_9a.jpeg பார்வையற்றோர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சரவணன் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/தனி-வாக்குச்சாவடி-இல்லையே-பார்வையற்ற-வாக்காளர்கள்-பரிதவிப்பு-3317000.html
3316998 உள்ளாட்சித் தேர்தல் 2019 மதுரையில் 1,356 பதவிகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 09:47 AM +0530  

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் வாடிப்பட்டி உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர். 102 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 101 வார்டுகளுக்கு 407 பேர் போட்டியிடுகின்றனர். 188 ஊராட்சிகளில் 8 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 180 ஊராட்சித் தலைவர்களுக்கு 675 பேர் போட்டியிடுகின்றனர். 1,506 கிராம ஊராட்சி வார்டுகளில் 442 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 1,064 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,356 பதவிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 939 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன். மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பி , 20 டிஎஸ்பி, 60 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் 5,11,403 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2,52,637 ஆண் வாக்காளர்களும், 2,58,753 பெண் வாக்காளர்களும், 13  இதர வாக்காளர்களும் அடங்குவர்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/madurailocalbodyelections.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/மதுரையில்-1356-பதவிகளுக்கு-இன்று-முதல்கட்ட-வாக்குப்பதிவு-3316998.html
3316989 உள்ளாட்சித் தேர்தல் 2019 தூத்துக்குடி மாவட்டத்தில் 824 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 09:27 AM +0530  

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

8 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 48 பேரும், 88 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 430 பேரும், 156 ஊராட்சி தலைவர் பதவிக்கு 687 பேரும், 874 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,396 பேரும் என மொத்தம் 1,126 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் முதல்கட்டமாக 824 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஏறத்தாழ 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 4 ஆயிரத்து 256 பெண் வாக்காளர்கள், 25 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_9.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/தூத்துக்குடி-மாவட்டத்தில்-824-வாக்குச்-சாவடிகளில்-அமைதியான-முறையில்-வாக்குப்பதிவு-3316989.html
3316972 உள்ளாட்சித் தேர்தல் 2019 மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்: 74 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 09:19 AM +0530  

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. 

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரிசிபாளையம், சீரபாளையம், போடிபாளையம், மலுமிச்சம்பட்டி, பாலத்துறை, நாச்சிபாளையம், பிச்சனூர், உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 74 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  காலை முதலே வாக்காளர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலுமிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்குமண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/WhatsApp_Image_2019-12-27_at_8.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/மதுக்கரை-ஊராட்சி-ஒன்றியம்-74-வாக்குச்சாவடி-மையங்களில்-வாக்குப்பதிவு-3316972.html
3316961 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 09:14 AM +0530  

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 999 பதவிகளுக்கு 3,088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396, ஊத்துக்குளியில் 445, காங்கயத்தில் 218, பல்லடம் 590, வெள்ளகோவில் 161, மூலனூர் 189 மற்றும் தாராபுரம் 294 என மொத்தம் 2,293 பேர் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 247 பேர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64, ஊத்துக்குளியில் 136, காங்கயத்தில் 44, பல்லடம் 79, வெள்ளகோவில் 18, மூலனூர் 50 மற்றும் தாராபுரம் 54 என மொத்தம் 445 வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 பேர். 

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38, ஊத்துக்குளியில் 65, காங்கயம் 48, பல்லடம் 49, வெள்ளகோவில் 24, மூலனூர் 51 மற்றும் தாராபுரம் 41 என 312 பேர் போட்டியிடுகின்றனர்.  

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் அரசு பள்ளியில் நீண்ட கியூ வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தேர்தல் பிரிவினர் வழங்கி உள்ள பூத் சிலிப் தொடங்கி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உட்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் சென்று வாக்களிக்கலாம். கிராமப்புற மக்கள் இன்றைக்கு 4 வாக்குகள், அதாவது ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை , ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நீலம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் என நான்கு வண்ண வாக்குச்சீட்டுகளில் வாக்கு செலுத்துகிறார்கள். 

திருப்பூர் குன்னாங்கள்பாலையத்தில் உள்ள வாக்கு சாவடியில் பல்லடம் எம்எல்ஏ கரைப்புத்தூர் நடராஜன் தனது வாக்கினை முதல் ஆளாகச் சென்று பதிவு செய்தார். மேலும் ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/tiruppur_voting.jpeg கரைப்புதூர் ஊராட்சி பள்ளியில் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த பெண்கள் https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/திருப்பூர்-மாவட்டத்தில்-7-ஊராட்சி-ஒன்றியங்களில்-இன்று-முதல்கட்ட-வாக்குப்பதிவு-3316961.html
3316958 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சி மாவட்டத்தில் 1,358 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு DIN DIN Friday, December 27, 2019 09:08 AM +0530  

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 97 பேரும், ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 155 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,302 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதில் 7 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 199 கிராம வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 1,358 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  938 வாக்குச் சாவடிகளில் 5 லட்சத்து 18ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

]]>
local body elections https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/trichy_voting_1.jpeg திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/27/திருச்சி-மாவட்டத்தில்-1358-இடங்களுக்கு-இன்று-வாக்குப்பதிவு-3316958.html
3316288 உள்ளாட்சித் தேர்தல் 2019 கோவையில் வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஓட்டுப் பெட்டிகள்  DIN DIN Thursday, December 26, 2019 05:14 PM +0530  

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்காக ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஓட்டுப் பெட்டிகள் மற்றும் பேனா, பென்சில், மை, அட்டைப்பெட்டி உள்ளிட்ட 72 பொருட்கள் அடங்கிய சாக்குப்பைகளும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வியாழக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது. 

ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளில் 105 வாக்குச்சாவடி மையங்களும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடி மையங்களும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடி மையங்களும், கிணத்துக்கடவில் 34 ஊராட்சிகளில் 151 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/vote_box.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/polling-centers-in-coimbatore-3316288.html
3316270 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஒரத்தநாடு: கஜா புயலின் போது சேவை செய்தவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு வெ. பழனிவேல் DIN Thursday, December 26, 2019 04:33 PM +0530
ஒரத்தநாடு: கஜா புயல் தாக்கத்தின் போது சேவை உள்ளத்ததோடு  பணியாற்றியவர் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு. மேலும்  உள்ளாட்சி நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வு செய்த கிராமத்தினர்.

தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு அருகே ஊர் வளர்ச்சியடைய வேண்டும், அதே நேரம் தேர்தலால் ஏற்படும் பகையும் வேண்டாம் என முடிவெடுத்து, உள்ளாட்சி நிர்வாகிகளை போட்டியின்றி கிராம மக்கள் ஒன்றிணைத்து தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஊரில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு வேண்டுமானால் போட்டியின்றி சிலர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். அதையும் தாண்டி, ஏலம், மிரட்டல் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதுபோல் எதுவும் இல்லாமலும்,  பல்வேறு கட்சிகள், ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும்,  தங்களது ஊரின் வளர்ச்சிக்காகவும், தேர்தலால் ஏற்படும் பகைகள் வேண்டாம் எனக் கருதியும், மக்கள் ஒன்று கூடி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கீழவன்னிப்பட்டு பஞ்சாயத்து தலைவராக தினகரன்  என்பவரையும், வார்டு உறுப்பினர்களாக வேதவள்ளி, கலாவதி, பாரதி, சுமித்ரா, மகாலிங்கம், கருப்பையன் ஆகியோரை போட்டியின்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது குறித்து அவ்வூரைச் சேர்ந்த சந்திரகுமார் கூறியதாவது; எங்கள் பஞ்சாயத்தில் முதல் முறையாக தேர்தலில் நடேசன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு நடந்த தேர்தலில் போட்டி ஏற்பட்டு, தேர்தல் பகை ஊரின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பெரிய அளவிற்கு பாதித்தது. இது அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது முயற்சி பலனளித்துள்ளது.

கஜா புயலில் பெரும் பாதிப்புக்குள்ளான போது குடிக்க தண்ணீர் இன்றி தவித்த மக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் அளித்த சேவை, மூடுகின்ற நிலையிலிருந்த அரசு தொடக்கப்பள்ளியை தத்து எடுத்து பல்வேறு வசதிகளை உருவாக்கி முன்மாதிரி பள்ளியாக செயல்படச் செய்த தினகரன் மற்றும் அவருடைய சகோதரர் ராமச்சந்திரனால், கிராமமே பயனடைந்து வருகிறது. இப்படி சேவை உள்ளம் கொண்டவரை தேர்ந்தெடுக்கலாம் என ஒத்த கருத்துடன் முடிவெடுத்து தேர்வு செய்துள்ளோம் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/5/w600X390/vote-list.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/oratthanad-who-served-during-the-gaza-storm-was-elected-as-the-chairman-of-the-panchayat-3316270.html
3316260 உள்ளாட்சித் தேர்தல் 2019 மாட்டு வண்டியில் சென்று வாக்குச் சேகரித்த ஊராட்சித் தலைவர் வேட்பாளர் DIN DIN Thursday, December 26, 2019 03:50 PM +0530
ஈரோடு: தூக்கநாயக்கன்பாளைம் (டி.என்.பாளையம்) ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர் வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பெருமுகை ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் 25 ஆம் தேதி மாலை ஓய்ந்தது. தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கிறது.  

 தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதுகலைப் பட்டதாரியான பிரகாஷ், தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 25 ஆம் தேதி அன்று ஆதரவாளர்களுடன் மாட்டு வண்டியில் சென்று வாக்குச்சேகரித்தார்.  அப்போது தன்னுடைய சின்னமான மூக்குக் கண்ணாடியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் சென்று வாக்குச் சேகரிக்கும் நிலையில் பிரகாஷ் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தது, பொதுமக்களை கவர்ந்துள்ளது. பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மாட்டுவண்டியில் பிரசாரம் மேற்கொண்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/cart_erode.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/the-candidate-of-the-panchayat-leader-who-went-to-the-cart-and-collected-the-votes-3316260.html
3316252 உள்ளாட்சித் தேர்தல் 2019 சாமக்கோடாங்கி வேடமிட்டு வாக்குச்சேகரித்த திமுக பிரமுகர் DIN DIN Thursday, December 26, 2019 03:39 PM +0530  

ஈரோடு: தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் சாமக்கோடாங்கி வேடமிட்டு, குடுகுடுப்பை அடித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சேகரிப்பு என்பது சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் வாக்குச்சேகரிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கும். வீடு, வீடாக சென்று வாக்குச்சேகரிப்பது, பிற ஜாதியினரையும் உறவு முறையால் அழைப்பது, பெரியவர்களின் பாதம் பணிந்து வாக்குக்கேட்பது போன்ற வித்தியாசமான வாக்குச்சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபடுவர்.

அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் சாமக்கோடங்கி வேடமணிந்து நூதன முறையில் வாக்குச்சேகரித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணநாகர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இவர் சாமக்கோடங்கி வேடமிட்டு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாமக்கோடாங்கி வேடமிட்டு,  குடுகுடுப்பை அடித்தபடி வாக்குச் சேகரித்து வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையான சாமக்கோடாங்கி வந்துள்ளார் என நினைத்து வீட்டிற்கு வெளியில் வரும் பெண்களுக்கு ஏமாற்றம் என்றாலும், அவர் வாக்குக்கேட்கும் முறை ஆர்வத்தை தூண்டுகிறது. இதனால் அவர் அங்கிருந்து புறப்படும் வரை அவர் பேசுவதை கேட்கின்றனர்.  

மூதாட்டிகள் சிலர் உண்மையாகவே சாமக்கோடங்கி வந்துள்ளார் என நினைத்து குறி கேட்கின்றனர். அப்போது திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்,  உங்கள் குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் எனக்கூறிவிட்டு விரைவாகச் சென்று விடுகிறார் சேலம் கோவிந்தன். 

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/samakodangi.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/dmk-person-dressed-like-samakodangi-3316252.html
3316247 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருப்பூரில் ஒரே பதவிக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் போட்டி DIN DIN Thursday, December 26, 2019 03:33 PM +0530  

திருப்பூர்: திருப்பூர் அருகே சடையபாளையம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிடுகின்றனர்.

குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையபாளையம் கிராம ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சடையபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட 10 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் கடந்த முறை ஊராட்சி தலைவராக இருந்த செம்பேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, அவரின் மனைவி லட்சுமி, மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன், அவரின் மனைவி செல்வராணி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் அடங்குவர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் பெரியசாமியின் மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் மனைவி செல்வராணி உள்ளிட்ட4பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் லட்சுமியும் ஏற்கனவே ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/votelist.JPG https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/tirupur-3-members-of-the-same-family-compete-for-the-same-post-3316247.html
3316238 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஈரோட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்துப் பிரசாரம்: பஜ்ஜி சுட்டு கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு DIN DIN Thursday, December 26, 2019 03:23 PM +0530
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இறுதி கட்ட பிரசாரம் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களுக்கு  வெற்றிலைப் பாக்கு வைத்து நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 5-ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை ஆதரித்து ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்களுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அங்கு இருந்தவர்களை கலகலப்பூட்டும் விதத்தில் போண்டா, பஜ்ஜி கடையில் போண்டா சுட்டும் பொதுமக்கள் மத்தியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

வேட்பாளர் செந்தில் குமார் உடன் ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளான கஸ்தூரி பாளையம், கணக்கம்பாளையம், காரதெரு, சாம்ராஜ் பாளையம், செல்வபுரம், பல்லகவுண்டன்பாளையம், மேண்டர்கரை, முகாசி பல்லகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, தேனீஸ்வரர் ஈஸ்வரன்பாளையம், புதுப்பாளையம், அருகம்பாளையம், முல்லை நாயக்கனூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் காங்கிரஸ் சின்னமான கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் இருந்தனர்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/erode_cook.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/erode-congress-campaign-3316238.html
3316231 உள்ளாட்சித் தேர்தல் 2019 ஈரோடு ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக 874 பதவிகளுக்கு தேர்தல் DIN DIN Thursday, December 26, 2019 03:10 PM +0530  

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 874 பதவிகளுக்கு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (டிச.27) நடக்க உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 19 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 225 ஊராட்சித் தலைவர், 2,097 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 2,524 பதவிக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் ஈரோடு, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, டி.என்.பாளையம் என ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 79 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 95 ஊராட்சித் தலைவர், 894 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 1,076 பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஊராட்சித் தலைவர் பதவியை பொறுத்தமட்டில் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் வள்ளிபுரம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை என 4 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை பொறுத்தவரை கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சி ஆறாவது வார்டில் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.

தவிர ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 22, மொடக்குறிச்சி 90, கொடுமுடி 34, கோபி 4, நம்பியூர் 20, தாளவாடி19, டி.என்.பாளையம் 8 என மொத்தம் 201 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கணக்கின் அடிப்படையில் 202 பதவிகள் தவிர, 874 பதவிகளுக்கான தேர்தல் மட்டும் நடக்க உள்ளது.

தேர்தல் நடைபெறும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிக்கு புதன்கிழமை காலை முதல் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, 72 பயன்பாட்டு பொருட்கள், படிவங்கள், வாக்காளர் பட்டியல் போன்றவை, வாகனங்களில் ஏற்றி, போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் அனுப்பும் பணி துவங்கியது.

இந்த வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உள்பட 7 பேரின் விவரங்களும், மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணியை விரைவுபடுத்தி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/Voters_EPS.jpeg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/elections-for-874-posts-in-the-first-phase-of-erode-panchayat-unions-3316231.html
3316226 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சியில் போட்டியின்றித் தேர்வான 12 ஊராட்சித் தலைவர்கள் -ஆர். முருகன் DIN Thursday, December 26, 2019 02:43 PM +0530  

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவர் - ப. செல்வராணி, மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர்- பெ. ராமலிங்கம், கோமாகுடி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. ரவி ஆகிய 3  பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக கி. நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மணியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்- சி. அம்மாக்கண்ணு, கொடும்பப்பட்டி ஊராட்சித் தலைவர்- பி.எஸ். வேட்டை, உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. பொம்மநாயக்கர், அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர்- பா. துரைசாமி ஆகிய 4 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி மன்றத் தலைவராக என். கிருஷ்ணம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பி.என். சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக எஸ். பால்ராஜ்,சேதுராப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக டி. வசந்தா ஆகிய இருவர் தேர்வாகியுள்ளனர். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நம்புகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக ம. செல்வராஜ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/8/w600X390/voting34-03-1501733808.jpg election https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/12-panchayat-leaders-elected-without-election-in-trichy-3316226.html
3316230 உள்ளாட்சித் தேர்தல் 2019 புதுக்கோட்டை: 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் 5.78 லட்சம் பேர்  -சா. ஜெயப்பிரகாஷ் DIN Thursday, December 26, 2019 02:39 PM +0530
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் டிச. 30ஆம்தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் மொத்தம் 5,78,044 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 2,87,181 பேர் ஆண்கள், 2,90,851 பேர் பெண்கள், 12 பேர் திருநங்கைகள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் டிச. 30ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு 58 பேர் போட்டியிடுகின்றனர்.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 26, அரிமளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 13, ஆவுடையார்கோயில்- 15, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 16, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 15, திருமயம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 15, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 25 என மொத்தம் 125 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும், சுமார் 2 ஆயிரம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 262 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்காக மொத்தம் 1,245 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.

வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச. 30) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/9/w600X390/voting.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/pudukkottai-578-lakh-people-voting-in-the-second-phase-3316230.html
3316228 உள்ளாட்சித் தேர்தல் 2019 புதுக்கோட்டை: முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் 4.79 லட்சம் பேர் -சா. ஜெயப்பிரகாஷ் DIN Thursday, December 26, 2019 02:34 PM +0530  

புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 4,79,791 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 2,40,795 பேர் ஆண்கள், 2,38,977 பேர் பெண்கள், 19 பேர் திருநங்கைகள்.

முதல் கட்டத் தேர்தலில் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களில் அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோயில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை ஆகிய 6 ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இவற்றில் மொத்தமுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களான 22இல், 10 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தப் பத்து இடங்களுக்கு 54 பேர் போட்டியிடுகின்றனர்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 20, விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 21, குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 14, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 14, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 16, புதுக்கோட்டை  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள்- 15 என மொத்தம் 100 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இவை தவிர, ஏறத்தாழ 1,700 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 219 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக 1,056 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 9 ஆயிரம் வாக்குச்சாவடிப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/29/w600X390/JK_Election.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/pudukkottai-over-479-lakh-people-will-cast-their-votes-in-the-first-phase-3316228.html
3316222 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சியில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை! - எம். முருகன் DIN Thursday, December 26, 2019 01:46 PM +0530  

திருச்சி மாவட்டத்தில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதி தேர்தலுக்காக 14 ஒன்றியங்களில் 2,275 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகளை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இதுமட்டுமல்லாது விடியோ ஒளிப்பதிவாளர் மூலம் வாக்குப் பதிவு பணிகள் அனைத்தும் முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றுக்கும் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/pdy23vote_2310chn_104_7.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/195-polling-booths-in-trichy-tense-3316222.html
3316218 உள்ளாட்சித் தேர்தல் 2019 உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நாமக்கல் - எம். மாரியப்பன் DIN Thursday, December 26, 2019 01:23 PM +0530  

நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 171 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 305 ஊராட்சித் தலைவர்கள், 1,913 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,406 பதவியிடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலானது, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, மல்லசமுத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில், 893 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. இந்த தேர்தலில், 2,26,306 ஆண் வாக்காளர்கள், 2,33,048 பெண் வாக்காளர்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பதற்றமான 150 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, விடியோ கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை காலை 9 மணி முதல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அதன்பின், எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு என்பது கணினி குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய வாகனங்களில், தேர்தலுக்கான பொருள்களுடன் அலுவலர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் வரையில், வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1,020 போலீஸார்: எஸ்.பி. அர.அருளரசு தகவல் 
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தது: முதல் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வியாழக்கிழமை காலை 8 மணியளவில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்கான வாகனங்கள் புறப்படுகின்றன. தேர்தல் பணியில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 160 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் கோவையில் இருந்து நாமக்கல் வருகின்றனர்.

இவர்கள் தவிர மாவட்ட போலீஸார் என மொத்தம் 1,020 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸார் 430 பேரும் அடங்குவர். இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளாக முதல் கட்டத்தில் 150, இரண்டாம் கட்டத்தில் 122 கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர மேலும் 28 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பதற்றமான 300 வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/vote_id.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/namakkal-is-preparing-for-the-localbody-election-3316218.html
3316212 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சி மாவட்டத்தில் 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டி! -ஆர். முருகன் DIN Thursday, December 26, 2019 12:55 PM +0530  

12 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 614 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்

 

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் 3,451 பதவிகளுக்கு 11 ஆயிரத்து 870 பேர் போட்டியிடுகின்றனர்.

12 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 614 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 626 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒன்றியங்களில் 24 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 241 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 4,077 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான கடந்த 19ஆம் தேதிக்குப் பிறகு இறுதியாக உள்ள வேட்பு மனுக்கள் கணக்கிடப்பட்டு, ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு போட்டியின்றித் தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 14 ஒன்றியங்களிலும் மொத்தம் 614 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

இவைத்தவிர, 404 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 12 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அந்தநல்லூர், புள்ளம்பாடி, துறையூர் ஒன்றியத்தில் தலா ஒருவர், மணிகண்டத்தில் 2 பேர், மருங்காபுரியில் 4 பேர், லால்குடியில் 3 பேர் தேர்வாகியுள்ளனர்.

மீதமுள்ள 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர். இதன்படி, அந்தநல்லூர் ஒன்றியத்தில் 821 பேர், மணிண்டத்தில் 691 பேர், திருவெறும்பூரில் 775 பேர், மணப்பாறையில் 745, மருங்காபுரியில் 1,137, வையம்பட்டியில் 690, லால்குடியில் 1,224, புள்ளம்பாடியில் 742, மண்ணச்சநல்லூரில் 1,236, முசிறியில் 847, தொட்டியத்தில் 831, தா.பேட்டையில் 686, துறையூரில் 834, உப்பிலியபுரத்தில் 611 தேர்தல் களம் காணுகின்றனர்.

6 ஒன்றியங்களுக்கு வெள்ளிக்கிழமை டிசம்பர் 27ம் தேதியும், 8 ஒன்றியங்களுக்கு டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5 பறக்கும் படை
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பொருள், இதர பொருள்கள் வழங்குவதை தடை செய்யவும், தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 மணிநேரத்துக்கு ஒரு குழுவாக 24 மணிநேரமும் ரோந்து சுற்றி வருவர். இந்த குழுவில், வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், 2 காவலர்கள், விடியோ ஒளிப்பதிவாளர் என 6 பேர் இடம்பெற்றுள்ளனர். 

24 மணிநேர கட்டுப்பாட்டு அறை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்கவும், பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினரது புகார்களை கேட்டு பதிவு செய்யவும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 மணிநேரத்துக்கு தலா 2 பேர் வீதம் பணியில் இருக்கும் வகையில் 6 பேர்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

0431-2410085 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/vote.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/11870-candidates-contested-for-3451-posts-in-trichy-district-3316212.html
3316201 உள்ளாட்சித் தேர்தல் 2019 வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுகிறேன்.. நாமக்கல்லில் பார்வையற்ற பெண் துணிச்சல் பிரசாரம் - எம். மாரியப்பன் DIN Thursday, December 26, 2019 12:31 PM +0530 நாமக்கல்: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான், கைகளோ, கால்களோ, கண்களோ இல்லாத பலரும் மற்றவர்கள் பாராட்டும் வகையில் உலக அளவில்  திறமைமிக்கவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இரு கண்களில் பார்வையில்லாதபோதும், தன்னாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற முனைப்புடன், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளார், நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பார்வையற்ற பெண் பி.சரண்யா (24).

தனக்கு ஓர் வாய்ப்பு கொடுங்கள், இல்லாதவர்கள் மற்றும் இயலாதவர்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்டுகிறேன் என தனியாகவே வீடு, வீடாகச் சென்று மக்களிடையே  வாக்குகளை சேகரித்து வருகிறார்.

மேலும் படிக்க.. திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி!

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளைச் சேர்ந்த 1,855 வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கேட்க வேண்டும் என ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்த பி.சரண்யாவை சந்தித்தபோது அவர் தெரிவித்தது; "கடந்த 16-ஆம் தேதி மனு தாக்கல் நிறைவடையும் நேரத்தில், போட்டியிடுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், கணவர் துணையுடன் சென்று ராசாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தேன். பரிசீலனையில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் மனு ஏற்கப்பட்டது. இந்த ஊராட்சியில் என்னுடன் சேர்த்து 5 பேர் போட்டியிடுகின்றனர்.

சொந்த ஊர் எல்லம்பாளையம். கணவர் பாலசுப்பிரமணி லாரி ஓட்டுநராகவும், உரிமையாளராகவும் உள்ளார். 3 வயதுடைய ஆண் குழந்தையும், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையும் உள்ளனர். சிறு வயதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில், கோவையில் உள்ள பார்வையற்ற பள்ளியில் பிரெய்லி முறையில் படித்தேன்.

அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை, திருச்சியில் உள்ள பார்வையற்ற பள்ளியில் படிப்பை தொடர்ந்தேன். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கல்லுரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து முடித்துள்ளேன், அதிகளவில் வெளியில் சென்றது இல்லை.
ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. இந்த வேளையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தது. கணவரும் போட்டியிட ஒப்புதல் அளித்தார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

அவ்வாறு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதேபோல், உடல்நலம் பாதிப்படைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில், ஊராட்சிக்கென தனியாக ஓர் வாகனம் வாங்கி, அதற்கென ஓட்டுநரை நியமித்து மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிடும் வகையிலான திட்டமும் எனது எண்ணத்தில் உள்ளது. நான் ஒருபுறம் வாக்கு சேகரிக்கிறேன், கணவர் மற்றும் பெற்றோர் ஒரு புறம் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஊனம் என்பது உடலில் எங்காவது ஒரு இடத்தில் இருந்தால் அது ஓர் குறைபாடாக தான் தெரியும், ஆனால் மனதில் ஏற்பட்டால் மொத்த உடலின் இயக்கமும் செயல்படாமல் நின்று விடும். எனது ஊனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்பட்ட நம்பிக்கை தான் தேர்தல் களத்தில் என்னை இறக்கி விட்டுள்ளது என்கிறார் சரண்யா. 
 

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/IMG-20191221-WA0062_1.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/give-me-the-opportunity--namakkal-story-3316201.html
3316205 உள்ளாட்சித் தேர்தல் 2019 புதுக்கோட்டையில் 13 வாக்கு எண்ணும் மையங்கள்! -சா. ஜெயப்பிரகாஷ் DIN Thursday, December 26, 2019 12:30 PM +0530  

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 13 இடங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு மழையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு இலுப்பூர் ஆர்சி மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு விவி மேல்நிலைப் பள்ளியிலும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு பரமந்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க.. வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுகிறேன்.. நாமக்கல்லில் பார்வையற்ற பெண் துணிச்சல் பிரசாரம்

அந்தந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/w600X390/counting.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/13-polling-counting-centers-in-pudukkottai-3316205.html
3316204 உள்ளாட்சித் தேர்தல் 2019 திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி! -ஆர். முருகன் DIN Thursday, December 26, 2019 12:29 PM +0530  

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மகளிர் ஆட்சி அமைந்துள்ளது.

ஊராட்சித் தலைவர், 6 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள கொப்பாவளி ஊராட்சி.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,408 வார்டு உறுப்பினர்களுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ஆம் தேதி என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அனைத்து இடங்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடந்த 19ஆம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொப்பாவளி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

மேலும் படிக்க.. புதுக்கோட்டையில் 13 வாக்கு எண்ணும் மையங்கள்!

இதையடுத்து அந்த 7 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக, மதிமுக பிரமுகரான ப. செல்வராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகள் பெண்களுக்கும் 3 வார்டுகள் பொது என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பொது வார்டிலும் பெண்களே போட்டியிடச் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  6 வார்டுகளிலும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி என பெண்களே, போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

முதல் முறையாக கிராம ஊராட்சித் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் முழுக்க முழுக்க பெண்களே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

போட்டியின்றி தேர்வாகியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிமுக மகளிரணிச் செயலர் மருத்துவர் ரொக்கையா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு குரல் வலுத்து வரும் நிலையில் ஊராட்சியில் முழுவதும் பெண்களே ஆட்சி என்பதை அனைவரது விழிகளையும் வியப்படையச் செய்துள்ளது.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/kopavalli_village.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/womens-rule-in-koppavali-panchayat-in-trichy-3316204.html
3316197 உள்ளாட்சித் தேர்தல் 2019 உள்ளாட்சித் தோ்தல்: நாளை வாக்குப் பதிவு! DIN DIN Thursday, December 26, 2019 11:37 AM +0530 முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தோ்தல் அறிவிக்கை, கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் வேட்புமனுக்கள் பெறும் நடவடிக்கைகள் தொடங்கின. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதல்கட்ட வாக்குப் பதிவு: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு நேரடித் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில், முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவா் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த நான்கு பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறும்.

நான்கு வகை வாக்குச் சீட்டுகள்: நான்கு பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெறுவதால் வாக்குப் பதிவின் போது நான்கு வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

முதல் கட்ட வாக்குப் பதிவில் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளா்கள் முதல் கட்டத் தோ்தலில் தங்களது வாக்குரிமையைச் செலுத்தவுள்ளனா்.

நாளை வாக்குப் பதிவு: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை

நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நான்கு வகையான வாக்குச் சீட்டுகளை தனித்தனியாகப் பிரிப்பது, வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான மறைக்கப்பட்ட தனி அறையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இப்போது நடந்து வருகின்றன. தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலா்களுக்கு பணி உத்தரவுகள் வியாழக்கிழமை பிற்பகல் வழங்கப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு ஊழியா்கள் செல்லவுள்ளனா்.

கடும் கட்டுப்பாடுகள்: முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து தோ்தல் நடைபெறும் ஒவ்வொரு ஊரக உள்ளாட்சிகளிலும் வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் உடனடியாக வெளியேற மாவட்ட நிா்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

மேலும், முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை அனைத்து மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

முதல் கட்டத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த வாக்குகள் அனைத்தும் வரும் 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படும்.

இருகட்டங்களிலும் பதவியிடங்கள்.... வேட்பாளா்கள்

கிராம ஊராட்சி வாா்டு----58,609.

வேட்பாளா்கள்------1,70,898.

கிராம ஊராட்சி மன்றத் தலைவா்----9,214

வேட்பாளா்கள்-----35,611.

ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்----5,067.

வேட்பாளா்கள்-----22,776.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்----515.

வேட்பாளா்கள்----2,605.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்​

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நான்கு பதவியிடங்களும் தனித்தனியாக மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் இதனைச் செயல்படுத்த உள்ளது.

]]>
localbody election https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/machins.jpg https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/26/உள்ளாட்சித்-தோ்தல்-நாளை-வாக்குப்-பதிவு-3316197.html