Dinamani - சிறப்புக் கட்டுரைகள் - https://www.dinamani.com/editorial-articles/special-stories/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3215634 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன? வழக்கறிஞர் சி.பி. சரவணன் Saturday, August 17, 2019 06:41 PM +0530  

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்பவரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் 'சிறியகட் பெறினே' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.
 

ஒளவையாரின் கண்ணீர்...

அதியமான் அரசவைக்குத் தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டு வந்து,  அதன் பெருமையைக் கூறாமல் ஒளவை உண்ணுமாறு தந்தவன் அதியமான். ஒளவையார் அதியமானையும் பாடி அவன் மகன் பொகுட்டெழினியின் வீரத்தையும் பாடினார். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். இவ்வாறு நட்புக் கொண்டிருந்த நிலையில் அதியன் இறந்துபட்டான். ஒளவையின் கண்ணீர்ப் பெருக்கு வற்றவில்லை. அவன் மார்பில் தைத்த வேல் அந்த அளவோடு நின்றதா! இல்லை,

அருங்கலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் 
புரப்போர் புன்கண் பாவை சோர 
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் 
சென்றுவீழ்ந் தன்று...

- என்று சொல்லி அழுகின்றார் ஒளவையார்.

அதியமான் கோட்டை...

இது ஒரு சங்ககால ஊர் ஆகும். அதியமான் கோட்டை சங்ககால மன்னரான அதியமானின் தலைநகராகக் கருதப்படுகின்றது. அதியமானைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. ஜம்பை என்ற ஊரில் “ஸதியபுதோ” அதியமானைக் குறிப்பிடும் தமிழ் பிராமிக் கல்வெட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை உள்ளது. இதன் பழைய பெயர் தகடூராகும்.

தொல்லியல் சான்றுகள்...

இவ்வூரில் இரும்புக்கால, வரலாற்றுத் துவக்கக்கால வாழ்விடம் உள்ளது. இங்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. இந்த அகழாய்வின்போது 5 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் மூன்று பண்பாட்டுக் காலங்களின் சான்றுகள் கிடைத்துள்ளன. முதல் பண்பாட்டுக்காலம் பெருங்கற்காலம் / சங்ககாலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு கருப்பு-சிவப்பு மற்றும், சிவப்பு நிறப்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இரண்டாம் பண்பாட்டுக் காலத்தில், சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலச் சான்றுகள் கிடைத்துள்ளன. மூன்றாம் பண்பாடு, பொ.ஆ.11-16 (பொது ஆண்டு) ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகும்.இங்கு சோழர் காலக் கட்டடப் பகுதிகளும் காணப்படுகின்றன. பொ.ஆ 12 ம் நூற்றண்டைச் சேர்ந்த கோட்டையும் இங்கு இருந்துள்ளது. இன்று இந்த இடம் அழிந்து மண் மேடாகக் காட்சி அளிக்கின்றது.

படைக்கலக் கொட்டில்...
    

சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் அவர்கள் ஒற்றுமையுடன்  உறவாடிய வாய்ப்பு மிகக் குறைவே. அவர்களுள் நாட்டை  விரிவுபடுத்தும் எண்ணத்தில் போர்க்களம் புகுவதும், போரிட்டு வெற்றியோ தோல்வியோ அடைவதும் வரலாற்று ஏடுகளில்  சொல்லப்பட்டு உள்ளன. போரிட, போர்க்குரிய வாள், வேல், வில், அம்பு முதலிய படைக்கருவிகளைத் தயாராக வைத்திருப்பர். இரும்பு செய் கொல்லர்க்குப் படைக்கருவிகள் செய்து தருவது  அவர்களின் கடமையாக இருந்தது ;
 

வேல் வடித்துக் கொடுத்தல் 
 கொல்லற்குக் கடனே

- எனப் புறநானூறு கூறுகிறது. படைக்கருவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கட்டடமே ‘படைக்கலக் கொட்டில்’ ஆகும்.

வள்ளல் அதியமான் சிறந்த போர்த்திறம் மிக்க மன்னன். ஒரு  காலத்தில் அமைதியை நாடிப் புலவர் ஒளவையாரைத் தொண்டைமானிடம்     தூது     விட்டான் ; தொண்டைமான், ஒளவையாரிடம் தன் பெரிய படைக்கலக் கொட்டிலைக் காட்டிச் செருக்குடன் நின்றான். அவனது செருக்கையடக்கும் நோக்கத்தில் ஒளவையார்,

 இங்கே படைக்கருவிகள் மயில் தோகை 
அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட காம்பும் 
அழகுபட அமைத்து நெய் பூசப் பெற்றுக் காவலுடன் 
உள்ளன ;     ஆனால், அதியமான படைக்கலங்களோ 
பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ் செய்யக் கொல்லன் 
உலைக்கூடத்தே கிடக்கின்றன. இதன் வழி அவன் வேல் 
கூர்மையானது எனக் குறிப்பிடுகிறார். (புறநானூறு : 95)
    

 

இங்குக் கூறப்பட்ட படைக்கலக் கொட்டிலும், கொல்லன் உலைக் கூடமும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தகும்.

ஹிட்டிகளும்  அதியமானும் (Hittites and Adiyaman)

பூர்வீகம் ஆதாரமில்லாத இரண்டு நடுகல்கள் (steles) 1970 களில் அதியமான் பொது நூலகத்தில் இருந்தன, அவை அதியமான் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டன.

சுண்ணாம்பு நடுகல் துண்டு ஒரு காளை கடவுள் ஒரு காளை மீது நிற்பதைக் காட்டுகிறது. நடுகல் துண்டின் இடது கால் மட்டுமே தப்பிப்பிழைத்தது. தற்போதைய துண்டு சுமார் 1 மீட்டர் உயரம் (டெனான் உட்பட), சுமார் 30 செ.மீ அகலம் மற்றும் 20 செ.மீ தடிமன் கொண்டது. புயல் கடவுளுக்கு அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சேதத்திற்கும் எதிரான பாதுகாப்பு சாபங்கள் பற்றி துண்டின் பக்கமும் பின்புறமும் 4 வரிகள் ஹைரோகிளிஃபிக் லூவியன் கல்வெட்டைப் பாதுகாத்துள்ளன. அதன் கண்டுபிடிப்பு இடம் பற்றி எந்த தகவலும் இல்லை. பாய்பேபனாராவுடனான மொழியியல் (Boybeypınarı) ஒற்றுமைகள் காரணமாக, கிமு 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கிமு 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தேதி பரிந்துரைக்கப்படுகிறது.

மற்ற நடுகல், சுண்ணாம்புக் கற்களால் ஆனது, உயரம் மற்றும் அகலம் 72 செ.மீ மற்றும் 50 செ.மீ. இது புயல்- கடவுளை ஒரு வழக்கமான போஸில் காட்டி கோடரியுடன் இருக்கிறது. குறுகிய டூனிக், பாயிண்டி காலணிகள் மற்றும் கொம்புகள் கொண்ட பாயிண்டி தொப்பி ஆகியவற்றைக் கொண்டு அவர் பழைய பாணியைக் காண்பிப்பார் மற்றும் 10-ஆம் நூற்றாண்டில் ஒரு தேதி பரிந்துரைக்கப்படுகிறது. துண்டின் வலது பக்கத்தில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட 4-வரி லூவியன் கல்வெட்டு(Luwian inscription) உள்ளது, இது புயல்-கடவுளுக்கு அர்ப்பணிப்பு மற்றும் எழுத்தாளரின் கையொப்பம்.

கிமு 1600 இல் வட-மத்திய அனடோலியாவில், தற்போதைய துருக்கியில்  ஹிட்டிக்களை மையமாகக் கொண்ட ஒரு பேரரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தனர் அனடோலிய மக்கள். ஹிட்டிக்கள் இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டறிந்தது  தாமதமான வெண்கலயுகத்தின் போது. அதைக் கண்டறிந்து  அனடோலியாவின் ஹிட்டியர்களால் வெளி உலகிற்கு கூறினார்கள்.

இரும்புத் தொழில், பெயர் இவற்றைப் பொருத்து அதியமானுக்கும், துருக்கி மற்றும் ஹிட்டியர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் படியே துருக்கி மாகாணத்திற்கு தமிழ் மன்னன் அதியமான் பெயர் சென்றிருக்கலாம். தமிழக அறிஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் இதைப் பற்றி மேலதிக ஆய்வு செய்து கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

]]>
துருக்கி, மாநிலம், அதியமான் நெடுமான் அஞ்சி, துருக்கி மாநிலம், தமிழ் மன்னன், tamil king, adhiyaman neduman anchi, turkey state https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/17/w600X390/adhiyaman.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/17/turkey-state-in-the-name-of-tamil-king-adhiyaman-neduman-anchi-3215634.html
3215625 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் "ஒரே தேசம், ஒரே கட்சி" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது? சுவாமிநாதன் Saturday, August 17, 2019 05:16 PM +0530
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, "ஒரே தேசம், ஒரே இடத்தில் அதிகாரம்" என்கிற சித்தாந்தத்தை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து துரிதமாக நிறைவேறி வருகிறது. 

இது ஒருபுறம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் இதற்கு இணையாக "ஒரே தேசம், ஒரே கட்சி" என்பதை நோக்கியும் இந்தியா நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது இந்திய அரசியலில் "கட்சித் தாவல் இங்கே தர்மமடா" என்று சினிமா பாடல் வரியில் இடம்பிடிக்கும் அளவுக்கு மிகச் சாதாரண விஷயம்தான். அது தற்போது சற்று நவீனமடைந்து எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் கூட்டாக கட்சித் தாவுவதாக மோசமடைந்துள்ளது. 

தொகுதிப் பிரதிநிதியாக மக்களின் ஆதரவால் தேர்வான பிறகு, ஆதரவளித்த மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியிலே போய் இணைவதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

இதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று விமரிசித்தாலும், 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இரண்டு மாநிலங்களில் எம்எல்ஏ-க்கள் கூட்டாக கட்சித் தாவியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த இரண்டு கட்சிகள் அம்மாநிலங்களின் பேரவையில் தற்போது ஒற்றை இலக்கு உறுப்பினர்களுடன் உள்ளது.  

ஒரு மாநிலத்தில் இரண்டு பிராந்தியக் கட்சிகள் மட்டுமே மக்களால் பேரவைக்கு தேர்வான நிலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டாக தேசியக் கட்சியில் இணைந்து அந்தக் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர். ஜனநாயகமே கேள்விக்குறியான பிறகு, அது அளிக்கும் மாநில சுயாட்சி மட்டும் எப்படி கேள்விக்குள்ளாகாமல் இருக்கும். அதற்கான ஒரு சான்றுதான் இது.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மட்டுமே, சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள், 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பாஜகவுக்கு கட்சித் தாவியுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, எந்தெந்த மாநிலங்களில் எந்தச் சூழலில் எத்தனை எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பதை ஆராய்ந்தபோது கிடைத்ததுதான் பின்வரும் மாநில வாரியான நீண்ட நெடிய பத்திகள்.   

சம்பவம் 1 - கோவா:

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில், 16 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. எனினும், 14 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜக, கோவா முன்னேற்றக் கட்சி மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலா 3 எம்எல்ஏ-க்கள், மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவு என மொத்தம் 23 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இதன்பிறகு, நிறைய அரசியல் நாடகங்கள் அரங்கேறியது என்பது ஒரு கதை. அவை இந்தக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த நாடகத்தை மட்டும் இந்த பத்தியில் கவனிப்போம்.

கடந்த ஜூலை மாதம், 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆளும் பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்களுக்கு மேல் கட்சி மாறியதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த 10 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் மூன்று எம்எல்ஏ-க்களுக்கு பாஜக அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சௌஸா மற்றும் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் உயிரிழந்தபோது தங்களிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி அம்மாநில ஆளுநரிடம் இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 2 - கர்நாடகா:

2018-இல் நடைபெற்ற 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸுக்கு 78, மஜதவுக்கு 37, பகுஜன் சமாஜ், பிரக்ஞாவந்த ஜனதா கட்சி, சுயேச்சைக்கு தலா ஓர் இடங்கள் கிடைத்தன. இதனால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆனால், வெறும் 6 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் ராஜிநாமா செய்தார். 

இதன்மூலம், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்தது. இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி, 14 மாதங்களாக ஆட்சி செய்து வந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 3 பேர் ராஜிநாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. எனினும், அம்மாநில பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தொடக்கத்தில் அவர்களது ராஜிநாமாவை ஏற்கவில்லை.  

இதன்பிறகு, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பேரவைத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது என அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வந்தது. இதன்பிறகு, ஒரு வழியாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இதன்பிறகு, ராஜிநாமா செய்த 16 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உட்பட 17 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்களும் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது.

இந்த ஆட்சி மாற்றம் மூலம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. அதேசமயம், பாஜக 16 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 3 - சிக்கிம்:

சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் பேரைவத் தேர்தல் நடைபெற்று, மே மாதம் அதன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், பிராந்தியக் கட்சிகளான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக 32 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.

17 இடங்களில் வெற்றி பெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம், கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. 

இதில், பவன்குமார் சாம்லிங் உட்பட இருவர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சிக்கிம் ஜனநாயக கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. 

இந்த நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 எம்எல்ஏ-க்களில் 10 எம்எல்ஏ-க்கள் கடந்த 13-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்மூலம், பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் ஒரு இடத்தில் கூட தேர்வு செய்யப்படாத பாஜக தற்போது அம்மாநிலப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

10 எம்எல்ஏ-க்கள் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்எல்ஏ-க்கள் அதற்கு அடுத்த தினமே தொகுதி நலனைக் கருத்தில் கொண்டு ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதன்மூலம், மக்களால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது முன்னாள் முதல்வர் பவன் குமார் மட்டுமே அம்மாநில பேரவையில் ஒற்றை எம்எல்ஏ-வாக இருக்கிறார்.

சம்பவம் 4 - மகாராஷ்டிரா:

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் அவரது மகன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், அவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜிநாமா செய்தது மகாராஷ்டிர மாநிலத்தில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரும் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த அவரது மகன், அகமதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம், 3 தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தங்களது ராஜிநாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்தனர். இதன்பிறகு, இந்த 4 பேரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சச்சின் அஹிரும் சிவ சேனா கட்சியில் இணைந்தார். ஒரு கட்சியின் முக்கிய நகரத்தினுடைய தலைவர் மற்றொரு கட்சிக்கு மாறுகிறார் என்பது இதன் வீரியத்தை உணர்த்துகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலிலும் பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளில் இருந்து பாஜக மற்றும் சிவ சேனாவில் இணைந்த அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியத் தலைவர்களான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் சச்சின் அஹிர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

சம்பவம் 5 - குஜராத்:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான எம்எல்ஏ-வாக பார்க்கப்பட்டவர் அல்பேஷ் தாகூர். 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் களப் பணியில் தீவிரமாக செயல்பட்டார். அந்த தேர்தலில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வும் ஆனார்.

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்தார். கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஏற்பட்ட விரிசல்தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. எனினும் அப்போது அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை. இந்த தருணத்திலேயே அவர் பாஜகவில் இணையலாம் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அல்பேஷ் அதை அப்போது செய்யவில்லை. 

இதையடுத்து, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்தார். இதன்பிறகே, ஜூலை 5-ஆம் தேதி அல்பேஷ் தாகூர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இவருடன், இவருக்கு நெருக்கமான தவல்சின் ஸாலாவும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்த பிறகு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இந்த இரண்டு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் கடந்த ஜூலை 18-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.

சம்பவம் 6 - மேற்கு வங்கம்:

மேற்கு வங்க மாநிலத்தில், 2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக, கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

இந்த முடிவுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் 4 பேர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். இது தவிர ஒரு காங்கிரஸ் மற்றும் ஒரு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த வரிசையில் கடைசியாக கொல்கத்தா முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான சோவன் சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் பைசாகி பானர்ஜி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இதில், சோவன் சாட்டர்ஜி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ-க்கள் மட்டுமில்லாமல், இதுவரை மொத்தம் 65 திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன் மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியின் சர்வாதிகார நடவடிக்கைகள் காரணமாக அதிருப்தியில் உள்ள திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியைச் சேர்ந்த பல பிராந்தியத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.


சம்பவம் 7 - ஆந்திரப் பிரதேசம்:

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு 6 எம்பி-க்கள் தேர்வானார்கள். இந்த 6 எம்பி-க்களில் 4 எம்பி-க்கள் மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தனர். 6-இல் 4 பேர் கட்சி மாறியுள்ளதால், இந்த இடத்திலும் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. 

இந்த கட்சித் தாவல் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 75 ஆக அதிகரித்தது.

மக்களவையில் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 8 - தெலங்கானா:

தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த 18 எம்எல்ஏ-க்களில் 12 எம்எல்ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் வேறு கட்சியில் இணைந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால், அந்த 12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். 

இது காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநிலத்தில் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த சரிவில் இருந்து மீண்டு எழுவதற்குள் காங்கிரஸ் கட்சியில் மீதமிருந்த 6 எம்எல்ஏ-க்களில் மேலும் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக ஜூன் 20-ஆம் தேதி வெளிப்படையாகவே அறிவித்தார். இது தெலங்கானா காங்கிரஸில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு தொடர் கதை என்பதைப் போல் இந்த கட்சித் தாவல் சம்பவங்கள் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்றுதான் வருகிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்கள் 116. அங்கு பாஜகவின் பலம் 109 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழல்களைப் பார்க்கும்போது மாநிலக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலை, ஜனநாயகம், மக்களுக்கான அதிகாரம் என அனைத்தும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நிகழும் கட்சித் தாவல், ஜனநாயகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் விடுக்கப்படும் நேரடி சவால். அதுவே, ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, கட்சி மாறி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதே தொகுதியில் அதே மக்களால் மீண்டும் எம்எல்ஏ ஆகிறார் என்றால் அது யாருக்கான சவால்?

பன்முகத்தன்மையுடைய இந்திய ஒன்றியத்தை ஒற்றை மயத்தை நோக்கி நகர்த்துவதைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது இந்த "ஒரே தேசம், ஒரே கட்சி" எனும் நகர்வு. இந்த விளைவுகள் சர்வாதிகாரத்தில்தான் முடியும்.

கோவா: 

சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே என்கிற இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தனர். இதனால், அந்த இரண்டு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சௌஸா மற்றும் முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் மறைந்ததையடுத்து, அந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சட்டப்பேரவையின் பலம் 36 ஆக குறைந்தது.  

பிறகு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏ-க்களில் இரண்டு எம்எல்ஏ-க்கள் தீடீரென ஒரு இரவில் பாஜகவில் இணைந்தனர். இதனால், அம்மாநில சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் மீண்டும் 14 ஆக அதிகரித்தது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் பலம் 3-இல் இருந்து 1 ஆக குறைந்தது. 

இதையடுத்து, 17-வது மக்களவைத் தேர்தலுடன் காலியாக இருந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 4 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏ-க்களில் இருவர், 2017 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய அதே சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே ஆவர்.

இதன்மூலம், பாஜக 17 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. மேலும் 3 கோவா முன்னேற்றக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் பலம் 15 ஆக குறைந்தது.

]]>
மோடி, BJP, modi, பாஜக, sikkim, அமித் ஷா, சிக்கிம், Amit Shah, Modi Shah, Saffron India, Party Defection, Anti Defection Law, MLAs joined BJP , MPs joined BJP , Councillors joined BJP, மோடி ஷா கூட்டணி, கட்சித் தாவல், கட்சித் தாவல் தடைச் சட்டம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/17/w600X390/Modi_Shah1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/17/more-than-30-mlas-and-50-councillors-defected-to-bjp-after-lok-sabha-results-3215625.html
3214278 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இது தான் சுதந்திரமா? கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: 200 மடங்காக உயர்ந்த கடன்! C.P.சரவணன், வழக்குரைஞர் Thursday, August 15, 2019 04:47 PM +0530
தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் கடன் சுமை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்.
தமிழக அரசின் கடன் வரலாறு.


1984 - 85ம் நிதியாண்டில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபொழுது 2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ.28,685 கோடியாக இருந்தது. 2001 – ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.28,685, சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் வாங்கிய கடன் ரூ.28,685 கோடி, கடந்த பத்து ஆண்டுகளில் அரசு வாங்கிய கடன் தொகை மட்டும் ரூ.60,000 கோடி ஆகும்.

கருணாநிதி - ஜெயலலிதா 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.

அதிகரித்த கடன்சுமை 
2011ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. கடன் அளவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. 2011ஆம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.1,52,810 கோடியாகவும் உயர்ந்தது.


2014ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார்

பட்ஜெட் மீதான விவாதத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பல மாநிலங்கள், நம்மை விட அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக தெரிவிப்பது சரியான விளக்கமல்ல.

தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 3.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில்  “ தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18ம் நிதி ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 46 ஆயிரத்து 279 கோடியாக இருந்தது. அதில் வருவாய் ரூபாய் 93 ஆயிரத்து 737 கோடி ஆகும். வருவாய் செலவினம் ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரத்து 873 கோடி. 2016-17 ஆண்டு முடிவில் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன் 2017-18ம் ஆண்டு முடிவில் ரூபாய் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.22 சதவீதம் அதிகமாகும். வருவாய் செலவீனங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 2016-17 நிதியாண்டில் ரூபாய் 11 ஆயிரத்து 216 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூபாய் 8 ஆயிரத்து 911 கோடியாக குறைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் 14வது நிதிக்குழு ஆணைய பரிந்துரைகளின் படி மத்திய அரசிடம் இருந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியங்கள் பெற முடியாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துள்ளது. 2012-17 வரையிலான அமைப்புகளுக்கு தொடர்புடைய மிகை செலவினமான ரூ.1099 கோடியே 58 லட்சம் சட்டசபையில் முறைப்படுத்தப்படவில்லை.  அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரு.1627 கோடி நிதி உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது “ எனவும் 

நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்படாததன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் ரூபாய் 1022 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவிரிபாசன பகுதியில் தட்பவெட்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலை மட்டுப்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர் பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மை குழு குடி மராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அணைகளை புனரமைத்தல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த நிதி பயன்படுத்தப்படாததால் ரூபாய் 1,729 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய மூலதன நிதியின் கீழ் கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதிகள் பயன்படுத்தப்படாததால் ரூபாய்1493 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியின்படி அரசில் ரூபாய் 1276 கோடியே 27 லட்சம் முதலீடு செய்யப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான 134  திட்டமிட்ட நிறைவு தேதிக்கு பிறகும் முடியாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 2015-16ம் நிதி ஆண்டில் ரூபாய்6 ஆயிரத்து 156 கோடியாக இருந்த திருமண உதவி திட்டம், இலவச மடிக்கணினி மற்றும் சீருடை வழங்குதல் போன்ற இலவச திட்டங்களின் மதிப்பு கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 433 கோடியாக குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2011-2012 ஆம் ஆண்டில் அரசின் வரவு

 • சேமநல நிதி முதலிய பொறுப்புகளை உள்ளடக்கிய மாநில அரசின் மொத்தக் கடன் 31.3.2011 அன்று ரூபாய் 1,01,349.45 கோடியாக இருந்தது. 
 • மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 59,787 கோடி எனவும் 
 • வணிக வரிகளின் வரவு ரூபாய் 37,196 கோடி எனவும் 
 • ஆயத்தீர்வை வரவுகள் ரூபாய் 10,191 எனவும்
 • முத்திரைத்தாள் தீர்வை ரூபாய் 6,493 எனவும்
 • மத்திய அரசு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழக அரசின் பங்கு, சேவை வரியைப் பொறுத்த வரையில்  ரூபாய் 13,111 கோடி எனவும் 
 • வரி அல்லாத வருவாய், ரூபாய் 4,483.72 கோடி எனவும் யாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு

 • தமிழ்நாட்டில், டாஸ்மாக் மூலம் வருவாய் வரவினம் 6,724.38 கோடி ரூபாயாகவும்,
 • முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாயாக 13,122.81 கோடி ரூபாய்
 • வாகனங்கள் மீதான வரி வருவாய் 6,510.70 கோடி ரூபாயாக
 • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,24,813.06 கோடி ரூபாயாக இருக்கும் 
 • மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 • மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில், தமிழ்நாட்டிற்கான பங்கு 33,978.47 கோடி ரூபாயாகவும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

2019-2020  நிதிநிலைக் குறியீடுகள்

141. 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்,
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும்,
வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02 
எனவே, 2020 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 அன்று, நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும்.

2018-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,10,178.43 கோடி ரூபாய், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் உறுதிசெய்யப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அல்லாத வரிகளான பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான விற்பனை வரியின் வளர்ச்சியினை கருத்திற்கொண்டு வணிகவரிகள் மூலம் பெறப்படும் வரவுகள் 96,177.14 கோடி ரூபாயாக மாநில ஆயத்தீர்வைகளில் 2018-2019 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டைவிட 2019-2020 ஆம் ஆண்டில் 8 சதவீத வளர்ச்சிஎதிர்பார்க்கப்படுவதால், 2019-2020 ஆம் ஆண்டில் இது 7,262.33 கோடி 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 5,918.82 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்ட மோட்டார் வாகன வரிவருவாய், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 6,510.70 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 33,978.47 கோடி ரூபாயாகவும், சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 55,399.74 கோடி ரூபாயாகவும், உதவித்தொகைகள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான ஒதுக்கீடு 82,673.32 கோடி ரூபாயாகவும், ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 11,083.42 கோடி ரூபாயாக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வட்டி செலுத்துவதற்கான செலவினம் 33,226.27 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது

மூலதன உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 26,191.98 கோடி ரூபாய், 2019-2020 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 51,800 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 43,000 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது

விரைவான பொருளாதார வளர்ச்சியை அடையவும், சீரான நிதி மேலாண்மையை உறுதி செய்யவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என அரசு சொல்கிறது.

துணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கீடு 
2108-19-ம் ஆண்டுக்கான துணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம் தனது நிலுவை தொகையை செலுத்த ரூ.1,000 கோடிக்கு நிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ். தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கான இறுதி பலன்களை வழங்க ரூ.1,093 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். 

கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.253.39 கோடி ஒதுக்க அரசு அனுமதி அளித்துள்ளதாம். மக்காச்சோளம் பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்க ரூ.186.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிசக்தி துறைக்கு கூடுதலாக ரூ.1,640 கோடி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 2006 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருந்த விவசாய கடனை தள்ளுபடி செய்ய கூட்டுறவு வங்கிக்கு ரூ.253.3 கோடி நிதி ஒதுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பேரவையில் ஓ.பி.எஸ். அறிவித்தார். மேலும் மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

மும்பையில் புதிதாக தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும். வேலைவாய்ப்பு, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமான அனுமதி இணையம் மூலமாகவே இனி வழங்கப்படும். சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.121 கோடி மதிப்பில் 1,152 குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலக பணிகளை கணினிமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நகர ஊரமைப்பு இயக்ககம் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனுமதி இனி இணையம் மூலமாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டம். குடிசையில்லா நகரங்களை உருவாக்க ரூ.4,860 கோடி மதிப்பில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அடுக்குமாடி குடிப்பியிருப்புகள் கட்டப்படும் என துணை முதல்வர் அறிவித்தார். 

சென்னை திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.150 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். சென்னை, வேளச்சேரி, ரயில்நிலையம் அருகே ரூ.80 கோடி செலவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்படும். கோயம்பேடு மலர் அங்காடி அருகே உள்ள 3 ஏக்கர் இடத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நவீன மலர் அங்காடி அமைக்கப்படும். கோயம்பேடு அங்காடியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய இருப்பிடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் செலவுகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், படிகள், ஏனைய வசதிகள் மற்றும் இயற்கை எய்திய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பெறும் நிதியுதவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஏனைய வசதிகள் குறித்த விவரங்கள் 15-5-2015  அன்றுள்ளவாறு இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினப்படி
சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும், சட்டமன்றப் பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்போது இரண்டு நாட்கள் முன்னருக்கும், ஒரு நாள் பின்னருக்கும் மற்றும் சட்டமன்றப்பேரவை குழு கூட்டம் நடைபெறும் போது ஒரு நாள் முன்னரும், பின்னரும் நாளொன்றுக்கு ரூ.500/- தினப்படி வழங்கப்படும்.

பயணப்படி
இரயில் வழியாக இரயிலில் குளிர் பதன வசதி செய்யப்பட்ட இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட  பெட்டியில் சென்று வருவதற்கான இரயில் கட்டணத்துடன் கிலோ மீட்டர் ஒன்றுக்குப் பின்னக் கட்டணம் 10 காசுகள்.

சாலை வழியாக பேருந்து வழித்தடம் உள்ள வழிகள் மூலமாக பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 25 காசுகளும், பேருந்து வழித்தடமில்லாத ஏனைய வழியில் பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளும் வழங்கப்படும்.

பயணச் சலுகைகள்


பேருந்து பயணச் சலுகை:
ஒவ்வொரு உறுப்பினருக்கும், உறுப்பினர் அடையாள அட்டை பேரவைச் செயலகத்தால் வழங்கப்பெறுகிறது. உறுப்பினர்கள், இந்த அடையாள அட்டையுடன் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன்/மனைவியுடனோ அல்லது ஏதேனுமொரு பிற துணையுடன் பயணம் செய்யலாம்.

இந்தியாவின் எந்தவொரு இரயிலிலும், எந்தவொரு வகுப்பிலும், தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது வேறு ஒரு உறவினருடனோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்கள் செய்வதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும், இரண்டு சம தவணைகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கத்தக்க வகையில் இரயிலில் பயணம் செய்வதற்கான படியாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது.

சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவன்/மனைவியுடன் அவர் வசிக்குமிடத்திலிருந்து சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு வந்து மீண்டும் அவர் இருப்பிடம் திரும்பிச் செல்வதற்கு குளிர் சாதன அமைப்புடைய இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட இரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஒருமுறை பெறத் தகுதியுடையவராவார்.

தங்குமிட வசதிகள்
ஒவ்வொரு உறுப்பினரும் மாதமொன்றுக்கு ரூ.250/- வாடகை செலுத்துவதன் பேரில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு பெற தகுதியுடையவராவார்.

தொலைபேசி வசதிகள்
(i) அடுக்குமாடிக் குடியிருப்பு :
உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரடி தொலைபேசி வசதி அமைக்கப்படுகிறது.

மேற்சொன்ன தொலைபேசியை நிறுவுவதற்கான கட்டணம் (Installation Charges) மற்றும் இரு மாதத்திற்கான வாடகையை அரசே செலுத்துகிறது. ஏனைய கட்டணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உறுப்பினரே செலுத்த வேண்டும்.

(ii) இருப்பிடத் தொலைபேசி:
ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய இருப்பிடத்திற்கு தொலைபேசி இணைப்பு பெறத்தகுதியுடையவர். இதனை நிறுவுவதற்கான செலவை இச்செயலகமே ஏற்றுக் கொள்ளும். தொலைபேசியை நிறுவுவதற்கான வைப்புத் தொகையை செலுத்துவது தொடர்பாக உறுப்பினர், வட்டியில்லாமல் வசூலிக்கத்தக்க முன்பணத்தை இச்செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ வசதிகள்
ஒவ்வொரு உறுப்பினரும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மாநில அரசு பராமரிக்கும் மருத்துவமனைகளில் கட்டணமின்றி தங்கும் இடவசதியைப் பெறவும், மருத்துவச் சிகிச்சைப் பெறவும் தகுதியுடையவராவர். அவர்களுடைய மருத்துவச் சிகிச்சை தொடர்பாக வெளி அங்காடியில் வாங்கும் மருந்துகளுக்காகும் செலவுத் தொகை திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி
மத்திய அரசு ஏதேனும், மாநில அரசு அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் ஏதேனும் நிருவாகத்தினர் பராமரித்து வருகின்ற ஏதேனும் மருத்துவமனையில் அல்லது இந்திய அரசின் ஆட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஏதேனும் தனியார் மருத்துவமனையில், மாநில அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிப்பதன் பேரில் இருதயம், சிறுநீரகம் அல்லது உடம்பின் வேறு ஏதேனும் பாகம் தொடர்பாக, முக்கியமானதொரு அறுவைச் சிகிச்சை என மாநில அரசு கருதுகின்ற அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கிற சட்டமன்றப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும், வரையறுக்கப்படுகின்ற அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவராவர்.

ஏனைய வசதிகள்
(i) நூலகம்: சட்டமன்ற நூலகம், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் சேவைகள் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன.
(ii) எழுது பொருட்கள் வழங்கல்: ஒவ்வோராண்டும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ‘உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை’ என்ற வாசகத்தோடு மாநில அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட பின்வரும் எழுது பொருட்கள் வழங்கப்படுகின்றன:-

 • (அ) சிறிய கடிதத் தாள்கள் 3,700
 • (ஆ) பெரிய கடிதத் தாள்கள் 1,500
 • (இ) உறைகள் (நீள் சதுர அளவில்) 750
 • (ஈ) உறைகள் (சிறிய அளவில்) 1,500
 • (உ) ஹிரோ பேனா ஒன்று
 • (ஊ) சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நாட்குறிப்பேடு ஒன்று மற்றும் சுவரில் மாட்டக்கூடிய நாட்காட்டி இரண்டு.

உறுப்பினர்கள் தாங்களாகவே பெயர் விவரத்தாள் கற்றைகளை அச்சிடுவதற்காக உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் சின்னம் கொண்ட அச்சுக்கட்டையினை இச்செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். உபயோகித்த பின்னர் 15 நாட்களுக்குள் இச்செயலகத்திற்குத் திரும்பச் சேர்ப்பித்திட வேண்டும்.

(iii) செயலக உதவி: உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தட்டச்சுத் தேவையை நிறைவு செய்வதற்காக, சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது மட்டும் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.

(iv) இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி : தென்னக இரயில்வேயுடன் இணைந்து உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(v) பேருந்து போக்குவரத்து வசதிகள்: சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தில் உறுப்பினர்களின் பயனுக்காக சென்னை சென்ட்ரல் / எழும்பூரிலிருந்து அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகம், சென்னை-2-ற்கும், அங்கிருந்து சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9-க்கு இடையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

(vi) உணவக வசதிகள் : உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகம், உபவசதிக் கட்டிடத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்க உணவகக் கிளை (சைவம்) ஒன்று இயங்கி வருகின்றது. மேலும், உபவசதிக் கட்டிடத்தின் பின்புறம் சில்லறை விற்பனைக் கடை தேநீர் மற்றும் குளிர்பானக் கடை, பேப்பர் கடை ஆகியன இயங்கி வருகின்றன.

(vii) வங்கி வசதி : உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(viii) மருத்துவமனை வசதி: உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, அரசு பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட 24 மணிநேர மருந்தகம் ஒன்று குடியிருப்பு வளாகத்தில் அனைத்து நாட்களிலும் செயல்படுகின்றது.

(ix) உடற்பயிற்சிக் கூட வசதிகள்: ஆண்/பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் இரண்டு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய வசதிகள்/சலுகைகள் தவிர கீழ்க்காணும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

1. யோகா பயிற்சி: சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில், குடியிருப்பில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் காலை நேரத்தில் யோகா பயிற்சி அளிக்கப்படுகின்றது.
2. சிறுவர் பூங்கா : சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
3. இறகுப்பந்து விளையாட்டுத் திடல்: உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கென இறகுப்பந்து விளையாட்டுத் திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

(x) வாகன அனுமதி சீட்டுகள் : அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு வாகனங்களுக்கு ஹோலோகிராம் பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

(xi) இலவச நாளிதழ்கள் : சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில் சென்னையிலுள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் குடியிருப்புகளில், உறுப்பினர்கள் விரும்பும் இரண்டு நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அரசின் செலவுகள்
இதுமட்டுமின்றி, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு விழாக்கள் போன்றவற்றாலேற்படும் செலவுகள் கணக்கில் அடங்காது.

மக்களின் நிலை, மாநிலத்தின் நிலை
நீர் நிலைகள் சரிசெய்யப்படவில்லை. மக்கள் வீதிகளில் தண்ணீருக்கு அல்லாடுகிறார்கள். தனியார்கள் வால்வோ, ஸ்கேனியா, பென்ஸ் பஸ்களை இயக்க, அரசுப் பேருந்துகள் கூரை கிழிந்து, லங்கடாவாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இன்றி நூலகமாக மாற்றும் நிலை, அரசு மருத்துவமனையை நம்பி அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ செல்ல முடியாத நிலை.

இலவச கலர் டிவியில் ஆரம்பித்து டிவி, ஃபேன், கிரைண்டர், மானிய விலையில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் என பலவழிகளில் இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுக்களை அறுவடை செய்கின்றனர். ஆள்பவர்கள் மாறினாலும் கடன்சுமை தமிழர்களின் தலையில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளதால் அடுத்த தேர்தலுக்குள் மொத்த கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு எதற்கு இலவசம் தருகின்றது என இப்போது உணர்ந்திருப்பீர்கள். உலக வங்கியில் கடன் வாங்கி நல திட்டங்கள், இலவசங்கள் என மக்களுக்கு இனிப்பான செய்திகளை தந்தாலும், அதன் உண்மை நிலவரம் இதுதான். (நலதிட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைவதில்லை, பெரும்பாலான பணம் ஊழல் மூலலும் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் சென்று அடைகின்றது. நாம் கஷ்ட்டப்பட்டு உழைத்து அரசுக்கு செலுத்தும் வரி பணம், அமெரிக்க , ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு வட்டி பணமாக போகின்றது.

என்ன தான் செய்யலாம்?
2017 இல் 'இந்தியாஸ்பெண்ட்' மேற்கொண்ட ஆய்வின்படி, தமிழகத்தில் ஒரு நபருக்குச் சராசரியாக 28,778 ரூபாய் கடன் இருக்கிறது.  இது மக்களால் வாங்கப்பட்ட கடனா? அல்லது மக்களால் முழுதும் சென்று சேர்ந்த நிதியா?

அனுபவிப்பவர்கள் இதை பொதுக் கடன் என்று நினைப்பதால் தான், துணிச்சலாக கடன் வாங்குகிறார்கள். இனி மக்களிடம் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றால்தான் அரசு கடன் வாங்க முடியும் என்பதைக் கொண்டு வர  உரிய வழி முறை வேண்டும். அரசு கடன் வாங்குவதை விட்டுவிட்டு, அசலை அடைக்க ஆவண செய்ய வேண்டும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/15/w600X390/opseps.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/15/இது-தான்-சுதந்திரமா-கடனில்-தத்தளிக்கும்-தமிழக-அரசு-200-மடங்காக-உயர்ந்த-கடன்-3214278.html
3214293 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்! -வனராஜன் Thursday, August 15, 2019 03:14 PM +0530
இந்தியா முதன்முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் 1947, ஆகஸ்டு 15 - ஆம் தேதி. அன்றைய வரலாற்றை எவ்வளவு முறை கேட்டாலும், படித்தாலும் நமக்கு சலிக்காது. அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொள்ள சுய மரியாதையோடு போராடி, உயிர் நீத்த தியாகிகளின் ரத்தத்தை வெற்றித் திலகமாக வைத்துக் கொண்டு  1947, ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் கோடானு கோடி இந்திய மக்கள் காத்திருந்தனர்.

சுதந்திரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டிஷ் அரசு இருந்தது. 1940 க்குப் பிறகு இந்திய திருநாட்டை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் வலுப்பெற்றன. அச்சமயம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதன் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா காலியாகத் தொடங்கியது. தன் சொந்த நாடான இங்கிலாந்தைப் பராமரிக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியது. அத்தகைய சூழலில் 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கு சர்ச்சிலின் தலைமையிலான பழமைவாதக் கட்சியைத் தோற்கடித்து கிளமெண்ட் அட்லீயின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. காலணி நாடுகளுக்கு விடுதலை அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டது.

எனவே, காந்தியடிகள் தலைமையிலான அகிம்சா வழி போராட்டத்தின் தீவிரம் ஒரு பக்கம், தேர்தல் வாக்குறுதி ஒரு பக்கம் என பல்முனைத் தாக்குதல்களால் ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.1948 ஜூன் மாதத்துக்குள் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே,1947 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பொறுப்பு வகித்தவர் மவுண்ட் பேட்டன். மகாத்மா காந்தி மற்றும் ஜின்னா ஆகியோருடன் சுதந்திரம் அளிப்பது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தனி நாடு கோரிக்கையில் ஜின்னா அவர்கள் உறுதியாக இருந்ததால் இப்பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது.இது தொடர்பாக 1947-ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் அளிப்பது தொடர்பாகவும், தனி நாடு கோரிக்கையைப் பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் எந்த நாளில் சுதந்திரம் கொடுப்பது பெற்றுக் கொள்வது என்பதில் முரண்பாடு ஏற்பட்டது. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945,ஆகஸ்டு 15 ஆம் தேதியன்றுதான் நேச நாடுகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்த ஜப்பானிய வீரர்கள், ஆங்கிலேயர்களின் கிழக்காசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்தார்கள். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் நினைவாக ஆகஸ்டு 15-ஆம் தேதியை சுதந்திர நாளாக தேர்ந்தெடுத்தார் மவுண்ட் பேட்டன். ஆனால் சாஸ்திரங்கள் அறிந்த ஜோதிடர்கள் அனைவரும் அன்றைய நாள் வேண்டாம் என இந்திய தலைவர்களிடம் ஒருசேர கூறினர்.

இறுதியில், ஆங்கிலேயர்களுக்கு நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த நாள், இந்தியர்களுக்கோ அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் பிறப்பதாக கணக்கு என்பதால் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது. சுயாட்சி அடைந்த பெருமையோடு பாரதத்திற்கு முதல் பிரதமராக ஜவகர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். இப்படி நீண்ட வரலாற்றைக் கொண்டது நம் சுதந்திரப் போராட்டம். ஆனால், இன்னும் ஏராளமான விடுதலைப் போராளிகளின் தியாகமும், அறியப்படாத தலைவர்களின் தீரமும் வரலாற்றுப் புத்தகங்களில் இன்றும் புரட்டப்படாமல்தான் இருக்கின்றன. இவை இனி எதற்கு, தேவையில்லை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. ஒருமைப்பட்ட, அசுர வளர்ச்சி காணப் போகும் இந்தியாவை உருவாக்கிட இதுவே பல ஆலோசனைகளை வழங்கப்போகும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே சமயத்தில் வாங்கிய சுதந்திரம் பாழாய்ப் போகிறதே என சுதந்திரக் களத்தில் போராடிய தியாகிகள் வருத்தப்படும் அளவுக்கு பிரச்னைகள் தற்போது தலை தூக்கியிருக்கின்றன.

ஒருமுறை ஆங்கிலேயே பெண் போர்க்ஒயிட், காந்தியிடம், 'நீங்கள் 120 வயது வரை வாழ்வேன் என்கிறீர்களே. அது எப்படி' என்று கேட்டதற்கு, 'ஆமாம் அது உண்மைதான். ஆனால் அதை தற்போது மாற்றிக் கொண்டேன். நடக்கிற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது மரணிப்பதே மேல் என்றே கருதுகிறேன்' என்று அப்போதே அவரின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுதான் அவருடைய கடைசி பேட்டி. தற்போதுகாந்தியடிகளின் 150 வது ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

தமிழகத்திலிருந்து  வ.உ.சிதம்பரம் பிள்ளையும், குஜராத்திலிருந்து சர்தார் வல்லப்பாய் படேலும்,மகாராஷ்டிராவில் பிறந்த பாலகங்காதர திலக்கும் இந்திய சுதந்திரத்துக்காக இணைந்து போராடினார்கள். இன பற்று இருந்தாலும் நாடு என்ற ஒற்றை சொல்லில் ஒற்றுமை நிலவியது. 

கருத்துரிமை, பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம்,கலாசாரத்தோடு ,திறந்த சிந்தனைகளோடு பயணித்தால் நாடு வளர்ச்சியடையும். எனவே, சமூக பொறுப்புணர்வோடு, இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். 

- கலைச்செல்வி சரவணன், ஊடகவியலாளர், சென்னை

]]>
Independence Day, Indian, India https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/15/w600X390/IndependenceDay.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/15/independence-day-2019-new-indian-express-3214293.html
3213587 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்! C.P.சரவணன், வழக்குரைஞர் DIN Wednesday, August 14, 2019 11:41 AM +0530  

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா தெரிவித்துள்ளார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/w600X390/Palani-Panchamirtham.gif https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/14/பழனி-பஞ்சாமிர்தத்திற்கு-புவிசார்-குறியீடு-தமிழகத்தில்-சர்வதேச-அங்கீகாரம்-பெற்ற-முதல்-பிரசாதம்-3213587.html
3213573 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமை: ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும்? ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் Wednesday, August 14, 2019 10:53 AM +0530
ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைதானவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதால் தொடங்கிய மக்கள் போராட்டம்,  அச்சட்டத்திருத்தம் கைவிடப்பட்டதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி அறிவித்தப் பின்னும் தொடர்கிறது. நான் 1993 ஆம் ஆண்டிலிருந்து ஹாங்காங்கில் வசிக்கிறேன். பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக்கப்பட்டது. ஹாங்காங் தனி நாடு அல்ல. எனினும் உலக நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும் தனித்து மேற்கொள்ளும்.  உலக விளையாட்டுப் போட்டிகளில் ஹாங்காங் விளையாட்டு வீரர்கள் அணி தனித்து பங்கேற்கும். ஹாங்காங்கிற்கு என தனிக் கொடி உண்டு. இக்கொடி ஹாங்காங் தலைமைச் செயலகத்தில் சீனக்கொடியுடன் இணைந்து பறக்கும்.  

இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்.  முதலில் சீன அரசு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  சீனா பலரும் நினைப்பது போல ஒரு முழுமையான கம்யூனிச நாடு அல்ல. அந்நாட்டில் படிப்படியாக சீர்திருத்தம் ஏற்பட்டு அதனால் தொழில் வளர்ச்சியில் உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது.  சீன அதிபராக இருந்த டெங்சியோ பிங் அவர்களின் 'பூனை கருப்பாய் இருந்தால் என்ன? சிவப்பாய் இருந்தால் என்ன? அது எலியைப் பிடித்தால் சரி' என்ற மேற்கோளை நாம் மறக்க முடியாது. மனித உரிமைகளில் மட்டும் சீனா இன்னும் பிடிவாதமாக இருக்கிறது.  கூகில் தேடுபொறியை சீனா தடை செய்த போதும், சீன மக்களில் கணிசமானவர்கள் உலக நிகழ்வுகளை வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றனர்.  சீனா மத சுதந்திரத்துக்கும் எதிராக உள்ளது.  உய்குர் முஸ்லிம்கள் உள்நாட்டில் கைதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர்.  சீனா முழுவதும் பள்ளிவாசல்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களின் வெளித்தோற்றம் சீனப் பண்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் அரபுப் பண்பாட்டை காட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் சீன அரசு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  கிறித்துவர்களும் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.  

சீன அரசு எப்படி பொருளாதாரச் சீர்திருத்தங்களை செயல்படுத்தி உலக நாடுகளுடன் போட்டியிடுகிறதோ, அப்படி தன் குடிமக்களுக்கு மனித உரிமைகளை வழங்க முன்வர வேண்டும். சீனா ஒரு கட்சி சர்வாதிகாரத்திலிருந்து தனி நபர் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது.  கம்யூனிஸ்டுகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற தத்துவத்தை ஆய்வு செய்த நவீன கால கம்யூனிஸ்டுகள் அதனை கைவிட்டுள்ளனர். சீன கம்யூனிஸ்டு கட்சியும் பல கட்சி அரசியலையும், முழுமையான ஜனநாயகத்தையும், சீனாவில் படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் ஹாங்காங் மக்களும், தைவான் மக்களும் சீனாவுடன் முழுமையாக இணைவர். இவையெல்லாம் உடனடியாக நிகழக் கூடியதல்ல என்றாலும் பத்தாண்டுகளில் நிகழக் கூடும். சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சீர்திருத்தம் அந்நாட்டை பல நாடுகளாக்கி விட்டது. சீனாவில் ஜனநாயகம் மலர்ந்தால் ஒன்றுபட்ட சீனா உருவாகலாம்.  

இனி ஹாங்காங் போராட்டக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  ஹாங்காங் போராட்டக்காரர்கள் தனி நாடு கோரிக்கையை எழுப்புகிறார்கள். அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.  ஆனால் ஹாங்காங் சீனாவிடம் கையளிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட அடிப்படைச் சட்டத்தின் படி ஹாங்காங்கின் தனித்தன்மையைக் காக்க அவர்கள் போராடுவது நியாயமானதே.  அவர்கள் கோரிக்கைகளில் தனி நாடு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்தையும் சீனா ஏற்றுக் கொள்ளலாம். ஹாங்காங் போராட்டக்காரர்கள் ஹாங்காங்கில் நிலவும் ஏற்றத் தாழ்வான பொருளாதாரமே முதன்மையான சிக்கல் என்பதை அறியாமல் சீனத் தலையீடே முதன்மையான சிக்கல் என்று நினைப்பது நமக்கு வியப்பாக உள்ளது. ஹாங்காங்கின் வருவாயை சீன மைய அரசு எடுத்துக் கொள்வதில்லை.  ஹாங்காங்கில் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களால் பெரும்பான்மையான மக்களுக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் கனவாகவே உள்ளது. வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை வாடகைக்கே தரவேண்டியுள்ளது.  அதுவும் ஒரு குடும்பத்தில் இருவருக்கு குறையாமல் வருவாய் ஈட்டினால் மட்டுமே இயலும். இதனால் பலர் திருமணமே புரிவதில்லை. திருமணம் புரிந்தவர்களும் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சிங்கப்பூர் அரசு இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளது.  ஹாங்காங் அரசு வீட்டு வாரியம் வாயிலாக சலுகை விலையில் அடுக்கு மாடி குடியிருப்பு விற்பனை செய்கிறது. வாடகை குடியிருப்பும் அளிக்கிறது. எனினும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.  

ஹாங்காங் அரசு தனியார் வீட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.  பொது மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும். 4 புதிய மருத்துவமனைகளை கட்ட வேண்டும்.  ஆயிரக்கணக்கான மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும். மருத்துவத் தகுதித் தேர்வை நீக்க வேண்டும்.  இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். முதியோர் நலனுக்கான திட்டங்களை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித் தொகைகளை அதிகரிக்க வேண்டும்.  வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்.   மக்கள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் சோஷலிசத்தை செயல்படுத்த வேண்டும். அப்பொழுது ஹாங்காங் போராட்டக்காரர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிடுவர். ஹாங்காங்கில் அமைதி திரும்பும்.

N Abdul Rahman
Email: nabdulrahman@yahoo.com
Gem Stone Busines / நகைக்கற்கள் வணிகம்
படிப்பு இளங்கலை பொருளியல் 
சென்னை புதுக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/w600X390/protest_hong.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/14/ஹாங்காங்கின்-தன்னாட்சி-உரிமை-ஹாங்காங்-மக்களும்-சீன-அரசும்-என்ன-செய்ய-வேண்டும்-3213573.html
3212890 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் விஐபி கலாசாரம் முடிவுக்கு வருமா?  C.P.சரவணன், வழக்குரைஞர் Tuesday, August 13, 2019 12:57 PM +0530
16.07.2019  அன்று வரிச்சியூர் செல்வம் தனது நண்பர்களுடன் விஐபிக்கள் அத்திவரதரை தரிசிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டார். வரிச்சூர் செல்வம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை, திருந்தி வாழ்வதாக கூறினாலும், ரவுடி ஒருவர் முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ததும், குடியரசுத் தலைவர் வந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பாக மரியாதை வழங்கப்பட்ட அதே இடத்தில் வரிச்சூர் செல்வம் அமர்ந்து தரிசனம் செய்ததும் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய வி.ஐ.பிகளைப் பற்றி நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பார்ப்போம்.

இந்தியாவின் விஐபிக்கள் எண்ணிக்கை 5,79,092 ஆகும். இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட, சீனாவில் விஐபிக்கள் வெறும் 435 மட்டுமே. மற்ற வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 252, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகியவை விஐபிக்கள் 200 க்கும் குறைவாக நியமித்துள்ளன.

இந்தியாவில் அரசியல்வாதிகள், உயரடுக்கு வணிகர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள் என பலரும் விஐபி அந்தஸ்தைப் பெறுகிறார்கள். நம் நாட்டில் நிலவும் வி.ஐ.பி கலாச்சாரம் ஒரு முரட்டுத்தனமாக மாறிவிட்டது, எதை யூகிக்கிறது, இது முன்பைப் போலவே உயர்கிறது. உண்மையில், இந்தியாவில் உலகிலேயே அதிக வி.ஐ.பிக்கள் உள்ளனர், அவர்கள் சாதாரண இந்தியர்களை விட எல்லாவற்றையும் முன்னுரிமை பெறுகிறார்கள், அதுவும் நாம் செலுத்தும் வரிப்பணத்தில்.

விஐபிக்கள் எதற்காக?
மக்கள் பணி அல்லது பொதுப்பணியில் இருக்கும் நபர்கள் மக்கள் பணியை தடையின்றி விரைவாகச் செய்வதற்கு ஏதுவாக சில வசதிகளையும், சௌகரியங்களையும் அரசு செய்துகொடுக்கும். அந்த வகையில் இருக்கும் பிரமுகர்கள் விஐபி எனலாம்.

இந்தியாவில் யார் யார் விஐபிக்கள் 
ஜனாதிபதி, துணைத் ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்திய ஆயுதப் படைகளின் சேவைத் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள், கவர்னர்கள், பல தொழிலதிபர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட வி.ஐ.பி. பட்டியலில் உள்ளனராம்.

இந்திய நாடாளுமன்றத்தில் 543 மக்களவை  உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என 251 பேர் இருக்கிறார், இது தனி. நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவையில் கிட்டத்தட்ட4,120 எம்.எல்.ஏக்கள் என பட்டியல் நீளுகிறது .

விஐபி கலாசாரமும் சிறப்பு அம்சங்கள் மற்றும் சலுகைகளும்

•    சைரன்கள் மற்றும் போக்குவரத்து நிறுத்தம்
•    அளவுக்கதிகப்படியான பாதுகாப்பு
•    விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள்
•    விஐபி அலங்காரம்(Plaques)
•    மோட்டார் வாகனத்தொடர்கள்
•    விஐபி இடஒதுக்கீடுகள்
•    வீட்டில் காவலர்கள்
•    பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ கார்கள்
•    பிரீஃப்கேஸ்களை எடுத்துச் செல்ல ஆட்கள்

அதுமட்டுமின்றி விமான பில்கள், வெளிநாட்டு பயணம் மற்றும் விடுமுறை, தபால் அனுப்புதல், இலவச மின்சாரம், இலவச நீர், மானியங்களில் உயர் தரமான உணவு மற்றும் கேன்டீன்களில் மற்றும் பிற சலுகைகள்.  இலவசங்கள் போன்றவற்றுக்கு  தகுதியுடையவர்கள். ஒவ்வொரு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.விற்கும் சராசரியாக 3 போலீசார் பாதுகாப்பு வழங்குகிறார்கள். இந்தியாவில் மிக முக்கியமான நபராக இருப்பது மிகவும் சொகுசான ஒன்று. நீங்கள் இந்தியாவில் ஒரு வி.ஐ.பி என்றால், சாதாரண மக்கள் பொறாமைப்படும் அளவுக்கு சொகுசுகள் அனுபவிக்கலாம்.


மேற்சொன்ன செலவுகள் விஐபிக்களின் சேமிப்பாகும். மேலும், அவர்களின் சம்பளத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஒரு எம்.பி. தனது சொந்த பாக்கெட்டிலிருந்து ஒரு ஊசியைக் கூட வாங்குவதில்லை, நாம் செலுத்தும் வரியிலிருந்து அவர்களது எல்லா செலவுகளையும் கவனித்துக்கொள்வது அரசாங்கமே.

எம்.பி.க்களுக்கு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம், தொகுதி நிதியாக ரூ .45,000, அலுவலக செலவாக ரூ.15,000, செயலக உதவிக்கு ரூ.30,000 பெற உரிமை உண்டு. நாடாளமன்றம் அமர்வில் இருக்கும்போது, அவர்களுக்கு தினசரி ரூ.2,000 அலவன்ஸ் கிடைக்கும். எம்.பி.க்கள் ஒரு ஆண்டுக்கு 34 விமான பயணங்களும், வரம்பற்ற ரயில் மற்றும் சாலை பயணங்களும் மேற்கொள்ளலாம்.

விஐபி பாதுகாப்பு பிரிவுகள்
•    SPG  வகை - பாதுகாப்பு விவரங்களின் வலிமை வகைப்படுத்தப்பட்டுள்ளது (தற்போதைய இந்திய மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.)
•    Z + பிரிவில் 55 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [10+ NSG கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்] Z + நிலை பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு காவலர் கமாண்டோக்களால் வழங்கப்படுகிறது. 
•    Z- பிரிவில் 22 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [4 அல்லது 5 என்.எஸ்.ஜி கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்]
•    Y- பிரிவில் 11 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [1 அல்லது 2 கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்]
•    X- பிரிவில் 2 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [கமாண்டோ கிடையாது, ஆயுதமேந்திய போலீஸ் பணியாளர்கள் மட்டுமே]

விஐபி கலாச்சாரத்தினால் ஏற்படும் பிற சிக்கல்கள்
வி.ஐ.பிக்கள் போக்குவரத்து விதிகளை தண்டனையின்றி மீறுகிறார்கள் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை புறக்கணிக்கிறார்கள், ஏனென்றால் அவை சாதாரண மனிதர்களுக்கானவை என்று எண்ணுகிறார்கள். இந்த விஐபிக்களின் பாதுகாப்பிற்கு திருப்பிவிடப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையால் பொதுவான குடிமக்களின் பாதுகாப்பும்  பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், விஐபிக்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை.  வி.ஐ.பிக்கள் என்று அழைக்கப்படுவதற்காகவே போக்குவரத்து தடைசெய்யப்படுவது, விமானங்கள் தாமதமாக்கப்படுவது பெரும்பாலும் நிகழ்கிறது. இதனால், இந்திய மக்கள் விஐபிக்களை வெறுப்பதில்  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை -  நம்முடையதைப் போலவே நாடாளுமன்ற முறை இருக்கும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வசதிகளைப் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொறுப்புடன் வேலை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நமது விஐபி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எந்த பணியும் செய்யாமல் ராஜவாழ்க்கை வாழ்கின்றனர் 

விஜபி கலாச்சாரத்திற்கெதிராக வழக்கு 
கடந்த 2013, பிப்ரவரி 14, உச்சநீதிமன்றம் ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டது, இது பல ஆண்டுகளாக பொதுமக்களின் மனதில் குழப்பும் விஐபி கலாச்சாரம். தற்போதுள்ள வி.ஐ.பி கலாச்சாரத்தை நீதிமன்றம் எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தாக்கல் செய்த மனுவில், வி.ஐ.பி.களுக்கு முன்னுரிமை அளித்து போக்குவரத்தை வெகு நேரம் நிறுத்தி, அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவது, தங்கள் கார்களில் ஒளிரும் "சிவப்பு விளக்குகள் " மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக சைரன்கள் அடித்துச் செல்வது பற்றிய  விவரங்களை அளித்தார். "அச்சுறுத்தல் கருத்து அதிகாரத்தின் அடையாளமாக மாறும்" என்று குறிப்பிட்ட பெஞ்ச், அத்தகைய ஏற்பாடுகள் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அதேசமயம், "5 ஆண்டுகளில் நகரத்தில் (மும்பை) வி.ஐ.பி க்களுக்கான காவல்துறை அட்டையில் 1,200% உயர்வு", "703 வி.வி.ஐ.பிகளுக்கு (பஞ்சாப்) பாதுகாப்பு கிடைக்கிறது". விஐபி போன்ற பதாகை தலைப்புகளின் மூலம் ஏராளமான காவல் பலத்தை வி.ஐ.பி பாதுகாப்புக்கு திசைதிருப்பப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டினார்.
சிகப்பு பெக்கான் விளக்குகள்

உலகெங்கிலும் வண்ண பீக்கான்கள் அவசர கடமைகளில் பயணிக்கும் அவசர வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அவசர காலங்களில் தவிர, சைரன்களை ஊதுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையை நியாயப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் தங்கள் விதிகளை கடைபிடிப்பதாகச் சொல்லலாம்.
2002 மத்திய விதிகளின்படி, 19 வகை உயர் பிரமுகர்களுக்கு ஃப்ளாஷருடன் சிவப்பு பீக்கான்கள்,  ஃப்ளாஷர் இல்லாமல் சிவப்பு விளக்குகள்,  உள்ளூர் அதிகாரப்பூர்வ பிரிவுகள் அம்பர் பெக்கான் மற்றும் அவசரகால வாகனங்கள் நீல பீக்கான்களுடன் அனுமதிக்கப்படுகின்றன. அமைச்சரவை செயலாளர் அல்லது மாநில தலைமை செயலாளரைத் தவிர வேறு எந்த அதிகாரி, தலைவர்கள் அல்லது செயல் தலைவர்கள் தவிர வேறு  அதிகாரியும் சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த முடியாது. எவ்வாறாயினும், கிட்டத்தட்ட அனைத்து மூத்த செயலக அதிகாரிகளும், பிரிகேடியர் நிலை பாதுகாப்பு அதிகாரிகளும் கூட சிவப்பு விளக்குகளைக் பயன்படுத்துகின்றனர். இந்த "அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை" கூட உச்சநீதிமன்றம் கடுமையாக கட்டுப்படுத்த மேற்படி வழக்கில் சால்வே கோரினார்.

கடந்த ஏப்ரல், 19, 2017 அன்று பிரதமர் மோடி “ஒவ்வொரு இந்தியனும் சிறப்பானவரே. ஒவ்வொரு இந்தியரும் ஒரு வி.ஐ.பி’ என்று விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்படியாக பீக்கான் பயன்பாட்டை நிறுத்தி உத்தரவை அறிவித்தார். அதன்பின், மத்திய அமைச்சரவை அறிவித்த உடனேயே, பல மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் கார்களில் இருந்து பீக்கான்களை அகற்றுவதாக அறிவித்தனர்.

சிகப்பு பீக்கானை அகற்றினால் போதுமா, கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விஐபிக்கள் அலப்பறை தாங்கமுடியவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை முறிக்கும் செயல்பாடாக இக்கலாச்சாரம் உள்ளது. லட்சக்கணக்கில் உள்ள விஐபி அங்கீகாரத்தை நூற்றுக்குள் அடக்கி, மக்கள் பணி அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும்.

]]>
supreme court, chief minister, VIP culture, Harish Salve, Motor Vehicle Acts, End Card to Vip Culture https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/17/w600X390/vari-selvam1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/13/vip-culture-in-india-no-end-to-vip-culture-3212890.html
3212321 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும்! இவர்கள் கனவு நிறைவேறியதா? முழுவதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்! Monday, August 12, 2019 03:23 PM +0530 அழுக்கு படிந்த தலை இருள் படிந்த முகத்துடன் ஒரு ஊன்று கோலின் உதவியுடன் நிற்கும் மல்லிகாவைப் பார்க்கும் எவருக்கும் அவர் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவரது கணவர் குமார் கிழிந்த துணிகளுடன் தயக்கத்துடன் மல்லிகாவின் பின்னால் நிற்கிறார். ஆனால் மல்லிகா தற்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொத்தடிமையாக இருந்ததை விட தற்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

தங்களது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால் 3 கிராம் தங்கத்தைக் கால்நடைப் பண்ணை வைத்திருக்கும் ஒரு முதலாளியிடம் இருந்து கடனாகப் பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் 3 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 8000 ரூபாய் மட்டுமே. ஆனால் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் குழந்தையின் கல்விக்குப் பணம் செலுத்த வேண்டிய போது தங்கத்தைக் கொடுத்து உதவிய நல்ல உள்ளத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று மட்டுமே. படிப்பறிவில்லாத ஏழை மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொத்தடிமைகளாக மாற்றுவது ஒரு வகையான யுக்தி. மல்லிகாவும் குமாரும் கடனை திருப்பி செலுத்த சுமார் மூன்று ஆண்டுக் காலம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.

தங்களது குடும்பத்தின் அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் மல்லிகாவும் குமாரும் தங்களது மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று கனவு கண்டனர். அதனை நிறைவேற்றக் கால்நடை பண்ணையின் முதலாளி ஒருவர் கொடுத்த 3 கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டு இதற்குப் பின் நடக்கப் போவதை அறியாமல் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தனர். அவர் கொடுத்த தங்கத்தை அடகு வைத்த அவர்கள் விடுதி வசதி உள்ள ஒரு பள்ளியில் முதல் தவணையைச் செலுத்தி தங்களது மகளைச் சேர்த்தனர்.

கொத்தடிமை வாழ்க்கை:-

முதலாளியின் கால்நடைப் பண்ணையில் மல்லிகாவும் குமாரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் மாலை வரை உணவு இல்லாமலும் இடைவேளை இல்லாமலும் அவர்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இரவில் மட்டுமே சமைத்து இரு வேளைகள் மட்டுமே உண்டு நாள் முழுக்க வேலை செய்துள்ளனர். சற்று நேரம் மரத்தடியில் ஓய்வு எடுத்தாலும் முதலாளி மோசமான வார்த்தைகளால் அவர்களைத் திட்டியுள்ளார்.

'சிறிது நேரம் மரத்தின் அருகே நின்றாலோ தண்ணீர் குடிக்கச் சென்றாலோ முதலாளி நாங்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் வரை தகாத வார்த்தைகளால் திட்டுவார்' என்கிறார் மல்லிகா.

பணியிடத்தில் நிலவிய பணிச்சுமை காரணமாக மல்லிகாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. மருத்துவமனைக்குச் சென்று வர அனுமதி கேட்டாலும் முதலாளி மறுத்து வந்துள்ளார். மல்லிகாவின் கை மற்றும் கால்கள் உணர்ச்சியற்று போனாலும் அவரை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் கால்நடை பண்ணையிலேயே தங்கி வேலை பார்க்கக் கூறியுள்ளார். இந்நிலையில் மல்லிகாவும் குமாரும் பணியிடத்திலிருந்து தப்பி விடுவார்கள் என்ற சந்தேகத்தில், சில நாட்கள் கழித்து முதலாளி ஒரு மருத்துவரை அங்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த மருத்துவர் முறையான மருத்துவம் பார்க்காமல் சில ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே கொடுத்ததால் மல்லிகாவின் உடல் நிலை மேலும் மோசமானது.

மல்லிகா கூறும்போது, 'தினமும் ஆடு மாடுகளின் சாணியை வெறும் கைகளால் அள்ளிப் போட வேண்டும். ஒரு நாள் என் கைகள் இரண்டும் மரத்துப் போய் உணர்ச்சியே இல்லாமல் ஆகிவிட்டது. நாங்கள் வீட்டிற்குச் சென்று மருத்துவம் பார்க்க முதலாளியிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் தரவில்லை. பத்து நாட்கள் கழித்து ஒரு மருத்துவரை நாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தார். ஆனாலும் எனது கை கால் சீராகவே இல்லை'என்கிறார்.

'உடல்நிலை சரியில்லாமல் நான் அவதிப்பட்டு வந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து எனக்குக் கூலி தருவதை முதலாளி நிறுத்திவிட்டார். ஆனாலும் என்னைத் தினமும் வேலை வாங்கினார். செயலிழந்த என் கை கால்களை வைத்துக் கொண்டு என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.

நான் வேலை செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி என்னைத் தாக்க முயன்றார்' என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் மல்லிகா.

'அப்படிப்பட்ட துன்பத்தை என்னால் இன்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இறுதியாக எங்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதித்தார். எங்களுடன் ஒரு நபரை அனுப்பி நாங்கள் தப்பித்துச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு வேலையையும் செய்தார்'

உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்காததால் மல்லிகா இன்று நடப்பதற்கே சிரமப்படுகிறார். வேறு எங்கும் சென்று வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

முதலாளி அவர்களது வெளியாட்கள் தொடர்பையும் நடமாட்டத்தையும் முடக்கி வைத்து இருந்துள்ளார். மல்லிகாவின் சகோதரர் மற்றும் சகோதரி இறந்த போதும் முதலாளி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. கொத்தடிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அந்த இறப்புச் செய்தி தெரியவந்துள்ளது.

மீதமுள்ள கடன் தொகை பற்றியோ கூலி உயர்வைப் பற்றியோ அல்லது சொந்த கிராமத்திற்குச் செல்வது பற்றியோ முதலாளியிடம் கேட்டால் அவர் மல்லிகாவின் மகளையும் கால்நடைப் பண்ணை கொண்டு வந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

'நீங்கள் எங்குச் சென்று என்ன செய்வீர்கள் என்று பார்ப்போம். எந்த அதிகாரி இந்த காட்டிற்கு வந்து உங்களை காப்பாற்ற போகிறார்' என்று கூறியுள்ளார் அம்முதலாளி.

முதலாளியின் அச்சுறுத்தலுக்கு நேரெதிராக 2018 ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கால்நடை பண்ணையிலிருந்து மல்லிகாவும் குமாரும் ஒரு அரசு சாரா நிறுவனத்தால் மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

'நிரந்தரமாக வேலை ஏதும் இல்லை என்றாலும் நிம்மதியாக இருக்கிறோம். தற்போது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்கின்றனர் குமாரும் மல்லிகாவும்.

கொத்தடிமை தனத்தால் அவமானத்துடன் வாழ்ந்த அவர்கள் நம்பிக்கையையும் உடல்நலத்தையும் இழந்துள்ளனர். ஆனால் அவர்களின் மகளைப் பற்றிக் கேட்கும்போது எல்லாம் அவர்களின் முகம் பிரகாசமாய் மின்னுகிறது. “அவள் நன்றாகப் படிக்கிறாள். அவள் பள்ளிக்குச் செல்வதே எங்களுக்கு மகிழ்ச்சி தான்.”

இன்று அவர்களது வாழ்க்கையை விழுங்கிய கடனிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளனர். கடந்த  மார்ச், 2019 அன்று மல்லிகாவிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி மல்லிகாவிற்கு முதற்கட்ட மறுவாழ்வு நிதியாக ரூபாய் 20 ஆயிரத்தை அரசிடமிருந்து பெற்று தர வேண்டிய நடவடிக்கைகளை இக்குற்ற வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் மேற்கொண்டிருக்கிறார்.

மல்லிகாவிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமானதா இல்லையா எனக் கண்டறியப்படும். மேலும் கை கால் செயலிழப்பு நிரந்தரம் எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மட்டுமல்லாமல் ஒரு மூன்று சக்கர மிதிவண்டியும் வழங்கப்படும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்படும் '100 வீடுகள்" என்ற திட்டத்தின் மூலம் அவர் பயன் பெறுவார்.

ஒரு முதலாளியால் அடிமைப்படுத்தப்பட்டு சுயமரியாதையையும் உடல் நலத்தையும் இழந்த குமாரும் மல்லிகாவும் தற்போது நிம்மதியான எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர்.

- டிவைன் ஆலிவா

]]>
freedom, bonded labor, child labor, kothadimai https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/8/w600X390/cowdung_cake1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/12/bonded-labour-and-slavery-child-labor-3212321.html
3212302 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சுற்றியுள்ள மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு: வறட்சியின் பிடியில் வரலாற்று புகழ் வைகை! காரணம்? C.P.சரவணன், வழக்குரைஞர் Monday, August 12, 2019 12:40 PM +0530  

வரலாற்றுப் புகழ் பெற்ற வைகை நதி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கக் காரணம்? வேறென்ன.. தண்ணீர் திருட்டு, மரக்கடத்தல், மழை குறைவுதான்.

தேனி மாவட்டம், மேகமலையில் வருசநாடு அருகே மூல வைகை பகுதியில் வைகை நதி உற்பத்தியாகிறது. சுமார் 2.75 லட்சம் ஏக்கர் வனநிலங்களில் பெய்யும் மழை நீர் வைகை அணைக்கே வந்து சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி ஆறு, பெரியாறு, சுருளியாறு இவை எல்லாம் வைகையாற்றில் கலந்து அணைக்குள் சேரும் விதத்தில் உள்ளன. 

வைகையின் விஸ்வரூபம்: தேனி மாவட்டத்தில் வைகை நதி பிறக்கும் மேகமலை வனப்பகுதி, தேக்கடி புலிகள் சரணாலயத்தை விட பல மடங்கு சிறந்த வனப்பகுதியாகும். 1998ம் ஆண்டு வைகையின் விஸ்வரூபத்தை கண்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் அதிர்ந்து போயினர். அந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையால், வைகை நதியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. தேனி பங்களாமேடு வரை சுமார் 2 கிமீ தூரம் நகருக்குள் தண்ணீர் ஊடுருவியது. குன்னூர் பாலம் மூழ்கி, பாலத்திற்கு மேல் 6 அடி உயரம் தண்ணீர் சென்றது.

மதுரையில் வெள்ளம்: அப்போதைய தேனி கலெக்டர், மாவட்ட எஸ்பி இருவரும் இணைந்து வைகை அணையை காப்பாற்ற வேறு வழியின்றி, அத்தனை மதகுகளையும் திறந்து அணைக்கு வந்த மொத்த நீரான விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீரையும் அப்படியே வெளியேற்றினர். வைகை நதியின் அகலம் தாங்காமல் கரையோரம் இருந்த பல கிராமங்கள் மட்டுமின்றி மதுரை செல்லூர் பகுதி முழுக்க நீரில் மூழ்கி பல உயிர்கள் பலியாகின. இப்படி சீறி எழுந்த வைகை, அதன் பின்னர் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. ஆண்டுக்கு 9 மாதங்கள் ஓடி மக்களை மகிழ வைத்த வைகையில், 2017ல் 17 நாட்கள், 2018ல் 7 நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. நடப்பாண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

வளங்கள் அழிப்பு: வைகை அழிவின் விளிம்பிற்கு செல்ல காரணம் என்ன என்பது மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வைகையின் முக்கிய நீர்ப்பிடிப்பான மேகமலையை பொறுத்தவரை பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களை வெட்டுதல், வனத்தை ஆக்கிரமித்தல், வனத்திற்குள் பாதை அமைத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், சட்ட விரோதமாக சுற்றுலா செல்லுதல், ஆடு, மாடுகளை மேய்த்தல், வனவிலங்குகளின் இருப்பிடத்தை மக்கள் வசிப்பிடமாக மாற்றுவது என பல சிக்கலான பிரச்னைகள் உள்ளன.

தற்போதைய நிலையில் மேகமலை வனப்பகுதியில் மட்டும் 3 ரேஞ்சர்கள், 38 வனக்காவலர்கள் (வாட்ச்சர்ஸ்), 40க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள் (கார்டுகள்) பற்றாக்குறை உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வனநிலங்களை ஆக்கிமித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நகர் பகுதியில் வசிப்பவர்கள். இவர்கள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள தோட்டங்களில் பணியாளர்களை குடி வைத்து விவசாயம் செய்கின்றனர். இதற்கு தேவையான தண்ணீரை வைகை நதியில் உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் வைகையின் வளம் குன்றி வருகிறது. மரங்களை வெட்டி கடத்துவதால் மழைவளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் இருந்தும்... தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வனப்பரப்பை விட பல மடங்கு அதிகமாக விளைநிலங்கள் உள்ளன. இங்கு முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வரட்டாறு, வராகநதி என பல ஆறுகள் ஓடுகின்றன. நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் உள்ளன. 480 கண்மாய்கள் உள்ளன. பல லட்சம் போர்வெல்கள் உள்ளன. 33,860 கிணறுகள் உள்ளன. சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, வைகை அணை, மேகமலையில் 5 அணைகள் உள்ளன. இதில் தேங்கும் நீர் நமக்கு ஒரு போக சாகுபடிக்கு கூட போதாது. விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளை பொறுத்தவரை நாம் சேமித்த நீரை விட செலவழித்த நீர் பல மடங்கு அதிகம். இதனால் இன்று தேனி மாவட்டம் நிலத்தடி நீர் இல்லாத மாவட்டமாக மாறிவிட்டது.

மண் படிவு: வைகை அணையில் 20 அடி உயரம் மண் படிவுகள் உள்ளன. இந்த நிலையிலும் 300க்கும் மேற்பட்ட நீர்மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு, சிலர் தங்களது நிலங்களுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட ஏராளமான இடங்களில் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக அரசு அதிரடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இருக்கும் நீர்மட்டத்தையாவது காப்பாற்ற முடியும். என்னதான் தீர்வு?: ‘‘மேகமலை வனப்பகுதியில் வனம் அழித்தல் குற்றங்களை தடுப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தப்பகுதியில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்துடன் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேகமலையை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் நடவடிக்கை எடுப்பதுடன் போதிய நிதியை ஒதுக்க வேண்டும்’’ என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல கோடி பாசனம் பாதிப்பு

‘‘முல்லை பெரியாற்றில் நமது உரிமைகளை இழந்ததாலும், கேரள அரசியல்வாதிகளை சரியான முறையில் கையாள முடியாததாலும், முல்லை பெரியாற்றில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. வைகை அழிந்தால் ஐந்து மாவட்டத்தின் அழிவு என்பதை உணர வேண்டும். தற்போது வைகையில் நீர் இல்லாததால் ஐந்து மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் ஏற்பட்ட பொருளாதார இழப்பினை கணக்கிட்டால் பல கோடியை தாண்டி விடும். வைகை நீர்மட்டம் சரிவதால் தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. ஒரு சிலரின் சுயநலத்திற்காக பல லட்சம் மக்களின் நீராதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறோம். நம் சந்ததிகளை பாதுகாக்க நிச்சயம் நாம் கை கோர்க்க வேண்டும்’

]]>
tamilnadu, forest, latest news, Vaigai River, Hot topics, Tamilnadu live news, live news https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/12/w600X390/vaigai_3.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/12/சுற்றியுள்ள-மாநிலங்களில்-வெள்ளப்-பெருக்கு-வறட்சியின்-பிடியில்-வரலாற்று-புகழ்-வைகை-காரணம்-3212302.html
3210953 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சாம்பியா நாட்டில் ஸ்டெர்லைட் வெளியேற்றம்! தமிழகத்தில் எப்போது? C.P.சரவணன், வழக்குரைஞர் Saturday, August 10, 2019 04:06 PM +0530 ஸ்டெர்லைட் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை சாம்பியா அரசாங்கம், கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டது. 

தூத்துக்குடியில் தொடங்கி, லண்டன் பங்குச் சந்தை, இங்கிலாந்து உச்ச நீதி மன்றம் வரையிலும் ஸ்டெர்லைட் அகர்வால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறார். தற்பொழுது சாம்பிய குடியரசுத் தலைவர் எட்கார் லுங்கு அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சசை, KCM என்றழைக்கப்படும் கொங்கோலா தாமிரச் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு தாமிரக் கனிமங்களை வேதாந்தா ரிசோர்சஸ், ஆஃப்ரிக்க நாடான சாம்பியா, ஆஸ்திரேலியாவில் டாஸ்மானியா மற்றும் இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் காலஹந்தி, ராயகடா ஆகிய இடங்களில் உள்ள தாமிரச் சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்தது. இதில் மிகப் பெரும்பான்மையான, இன்னும் சொல்லப் போனால், தூத்துக்குடி ஆலைக்குத் தேவையான தாமிரக் கனிமத்தில் ஏறத்தாழ 90 விழுக்காடு கனிமம் சாம்பியாவில் இருந்துதான் வந்தது. வேதாந்தா 4 லட்சம் டன் தாமிரக் கனிமத்தை சாம்பியாவின் கொங்க்கோலா சுரங்கத்தில் இருந்து கொண்டு வரத் திட்டமிட்டது. இந்த நிலையில்தான் தூத்துக்குடிப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

ஆஸ்திரேலியத் தாமிரச் சுரங்கம் மூடல்
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானிய மாநிலத்தில் உள்ள மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தையும் வேதாந்தா வாங்கியது. ஆனால், அங்கும் பாதுகாப்பான முறையில் சுரங்கத்தை நடத்தாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2017-ல் ஆறு வார இடைவெளிக்குள் அலிஸ்டர் லூகாஸ், க்ரெய்க் க்ளீசன், வெல்ஷ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் வேதாந்தாவின் மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தில் கொல்லப்பட்டார்கள். இதனால், டாஸ்மானிய மாநில அரசாங்கம் வேதாந்தாவின் மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தை, பாதுகாப்பான முறையில் வேதாந்தா நடத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, மூடி விட்டது. இப்பொழுது சாம்பியாவில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் இருந்தும் வேதாந்தா சாம்பிய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டு விட்டது.

அகர்வால் எனும் சர்வதேச வில்லன்

அனில் அகர்வால் மிகச்சிறந்த தந்திரசாலியான வியாபாரி. இனிக்க இனிக்கப் பேசுவதில் இமயமலையை விட உயர்ந்தவர். ஆனால், அவருடைய தந்திராபோதயங்களோ ஒரு கோடி நரிகளுக்குச் சமமானது. 2004-ல் இன்றைய மதிப்பின்படி சுமார் 2800 கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட ஒரு நிறுவனத்தை வெறும் 175 கோடிக்கு வாங்கியவர் என்றால் அவருடைய சாமர்த்தியத்தை எப்படிப் புகழ்வது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த நிறுவனத்தை 175 கோடி ரூபாய்க்கு வாங்கிய பொழுது அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் 420 கோடி ரூபாய். இப்படி 420 கோடி ரூபாயை வங்கியில் வைத்துள்ள ஒரு நிறுவனத்தை 175 கோடி ரூபாய்க்கு வாங்கியவரின் மாபெரும் திறமையைப் புகழ்வதா அல்லது இவ்வளவு ஏமாளித்தனமாக அந்த நிறுவனத்தை விற்றவர்களின் நிலையை எண்ணி வருந்துவதா? 

முதல் நாள் கொடுத்தது 175 கோடி - மறுநாள் பெற்றது 420 கோடி
வெறும் 175 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய மறுநாள் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் அகர்வாலின் கைக்கு வந்துவிட்டது. உடனடியாக, தான் கொடுத்த 175 கோடியை அந்த நிறுவனத்தின் வங்கிக் கையிருப்பில் இருந்த 420 கோடி ரூபாயிலிருந்து எடுத்துக்கொண்டால் மீதமுள்ள 245 கோடி ரூபாய் இலவசமாகக் கிடைக்கிறது. அத்தோடு சேர்த்து பல்லாயிரம் கோடிகளைக் கொட்டித் தரக்கூடிய சுரங்கமும் அதில் இருந்த தாமிரக் கனிமங்களும் வேதாந்தாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அதே போல் ஃஈங நிறுவனத்தை வாங்கிய பொழுது அந்த நிறுவனத்தின் மற்ற பங்கு தாரர்களுக்கு வேதாந்தா ரிசோர்சஸ் தர வேண்டிய 280 கோடி ரூபாயை பிறகு தருவதாக வாக்குறுதி அளித்து அந்தப் பணத்தைத் தராமலேயே ஏமாற்றியதாக சாம்பியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2.5 மெட்ரிக் டன் தாமிரத்தைக் கொண்ட கனிமம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. சங்கா என்னும் சுரங்கத்தில் வெட்டுவதற்குத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த கனிமங்களும் ஏராளமாக இருந்தன. அது மட்டுமல்லாது ஒரு மாதத்தில் உற்பத்தியாகும் தாமிரம் வாடிக்கையாளருக்கு அனுப்பப் பட்டிருந்தது. அதற்கான பணமும் அகர்வாலுக்கே கிடைத்தது. இப்படி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டித்தரும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பெரும்பான்மைப் பங்குகளை அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெறும் 175 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பங்குதாரர்கள்

ஆஃப்ரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிரச் சுரங்கமான கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பங்குதாரர்கள் மூன்று நிறுவனங்கள்.

1. வேதாந்தா ரிசோர்சஸ் - 79.4%
2. சாம்பியா கன்சாலிடேடட் காப்பர் மைன்ஸ் லிமிடெட் (ZCCM-IH) - 20.6%
3. சாம்பிய அரசு - கோல்டன் ஷேர் (ZCCM-IH) நிறுவனத்தின் 20.6% பங்குகளில் 77.7% பங்குகள் சாம்பிய அரசாங்கத்திடமும் எஞ்சிய 22.3% பங்குகள் தனியாரிடமும் உள்ளன.

கோல்டன் ஷேர்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு விடுதலை அளித்து விட்டு வெளியேறியது. ஆனாலும், அந்தந்த நாடுகளில் இங்கிலாந்து அரசாங்கம் நடத்தி வந்த நிறுவனங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க ‘ கோல்டன் ஷேர்’ என்ற முறையைக் கொண்டு வந்தது. எந்த தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்திலும் முடிவுகள் எடுக்கப்படும் பொழுது பங்கு தாரர்கள் வாக்களிப்பார்கள். அதற்கு பங்குதாரர்களின் வாக்குரிமை என்று பெயர். பெரும்பான்மையான வாக்குகளைப் பெறும் முடிவுகளே அந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும். அந்த முடிவுகளின் அடிப்படையில்தான் நிறுவனம் இயங்கும். எனவே ஒரு நிறுவனத்தில் யார் ‘கோல்டன் ஷேரை’ வைத்திருக்கின்றார்களோ அவர்களுக்கு 51% வாக்குரிமை உண்டு. கோல்டன் ஷேர் வைத்திருப்பவர்களுக்கு பெரும்பான்மை பங்குகள் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இத்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றத் தொடங்கியதன் பின்னர் எல்லா அரசாங்கங்களும் அதே முறையைப் பின்பற்றத் தொடங்கின. சாம்பியா அரசாங்கமும் KCM எனப்படும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தில் தன் னுடைய கோல்டன் ஷேரின் மூலம் 51% வாக்குரிமையை வைத்திருந்தது. அந்த வாக்குரிமையோடு ZCCM-IH நிறுவனத்தின் 20.6% வாக்குரிமையையும் பயன்படுத்தி அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை சாம்பிய அரசாங்கம் வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல் KCM நிறுவனத்தையும் கலைத்துவிட்டது (Liquidation).

வேதாந்தாவை வெளியேற்றியது ஏன்?

2004-ஆம் ஆண்டு கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தை வாங்கியதில் இருந்தே வேதாந்தா அந்தச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. இவ்வளவு பெரிய சுரங்கத்தை நடத்த வேண்டுமென்றால் அதற்குத் திறமையான சுரங்க மேலாளர்கள் வேண்டும். ஆனால், அகர்வால் தன்னுடைய உறவினர்களையே அங்கு நிர்வாகிகளாக நியமித்தார். சுரங்க அறிவு இல்லாத அவர்கள் சாம்பிய மக்களின் சொத்தான கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தை சூறையாடினார்கள். 2007-ல் KCM பெரும் நட்டத்தைக் கண்டது. ஏனென்றால், கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தில் தான் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த இருபத்தோராயிரம் கோடி ரூபாயை (3 பில்லியன் அமெரிக்க டாலர்) வேதாந்தா முதலீடு செய்யவே இல்லை. ஆனாலும் இன்றுவரை தாங்கள் 21,000 கோடி ரூபாயை அந்தச் சுரங்கத்தில் முதலீடு செய்திருப்பதாகவே வேதாந்தா கூறி வருகிறது. ஆனால் அந்த முதலீடு செய்யப்படவே இல்லை என்று சாம்பியாவிலிருந்து வெளி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2009லேயே வேதாந்தா சுரங்க விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தித் தரவில்லை என்றும், தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கவில்லை என்றும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. ஆனால், அகர்வால் அதை பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.

சாம்பிய மக்கள் போராட்டம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரையிலும் இதே கொடுமையை வேதாந்தா செய்து வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொழிலாளர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் வேதாந்தா ஊதியம் சரிவரக் கொடுக்கவில்லை. அதனால் மக்கள் வெகுண்டெழுந்தனர். கடந்த மே மாதம் மக்கள் போராட்டத்தை வேதாந்தா ஒடுக்க முனைந்தது. இதற்கு தமிழக அரசு தூத்துக்குடி போராட்டத்தில் வேதாந்தாவிற்கு ஆதரவாக இருந்து 13 பொது மக்களைச் சுட்டுக் கொன்றதைப் போலவே, சாம்பிய அரசாங்கமும் வேதாந்தாவிற்கு ஆதரவாக தன்னுடைய கலவரப் போலீசை அனுப்பியது. ஆனால், நல்ல வேளையாக யாரையும் சுட்டுக் கொல்லவில்லை. இந்தப் போராட்டத்திற்கு சங்கா பாராளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். எல்லா தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. அரசு விழித்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் அங்கே நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டது.

வேதாந்தாவின் சுரங்க விதிமுறை மீறல்

கடந்த ஆண்டே வேதாந்தாவின் சுரங்க உரிமை விதிமுறை மீறல்கள் குறித்து சாம்பிய அரசாங்கம் வேதாந்தாவிற்கு தாக்கீது அனுப்பியிருந்தது. ஆனால், அதைப் பற்றி வேதாந்தா கவலை கொள்ளவில்லை. இந்த நிலையில் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் மற்றொரு பங்குதாரரான சாம்பியா கன்சாலிடேடட் காப்பர் மைன்ஸ் லிமிடெட் (ZCCM-IH) நிறுவனம், வேதாந்தா தொடர்ந்து KCMல் ஊழல் செய்து பணத்தைக் கொள்ளையடிப்பதாகவும், சுரங்க விரிவாக்கத்திற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யவே இல்லை என்றும் குற்றம்சாட்டியது. ஆகையால், சாம்பிய அரசாங்கம் வேறு வழியின்றியும், மக்கள் போராட்டத்தின் வலிமையினாலும் தன்னுடைய ‘லையன் ஷேர்’ உரிமையைப் பயன்படுத்தி வேதாந்தாவை வெளியேற்றி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்க நிறுவனத்தையே கலைத்துவிட்டது. இதனை சாம்பிய நீதிமன்றம் உறுதி செய்து மேற்பார்வைக் குழுவையும் அமைத்தது. இந்த முடிவை கொங்க்கோலா தாமிரச் சுரங்க ஊழியர்களும், பொது மக்களும், தொழிற்சங்கங்களும் கொண்டாடி ஆதரித்தனர்.

சாம்பிய அரசின் முடிவை உறுதி செய்த சாம்பிய நீதி மன்றம், தன் தீர்ப்பில் வேதாந்தா எப்படியெல்லாம் நட்டக் கணக்கு காட்டியுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பில் அமெரிக்க டாலரில் தரப்பட்டிருக்கும் தொகையை, இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு சராசரியாக 70 ரூபாய் என்ற கணக்கில் கணக்கிட்டு அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

KCM என்னும் சிங்கோலா தாமிரச் சுரங்கத்தில் வேதாந்தா காட்டிய நட்டக் கணக்கு சாம்பிய நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ளவாறு:

2004-ல் அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ், KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கையகப்படுத்திய பொழுது 11.8 கோடி ரூபாயாக இருந்த நட்டம் 2019-ல் 2332 கோடியாக உயர்ந்துள்ளது. 2004லிருந்து ஒரு ஆண்டு கூட, ஒரு ரூபாயைக் கூட லாபமாக வேதாந்தா காண்பிக்கவே இல்லை. 2004-லிருந்து 2019-வரை வேதாந்தா காண்பித்துள்ள நட்டம் 16417.5 கோடி ரூபாய். இந்த லட்சணத்தில் ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கவில்லை. சிங்கோலா பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும், தண்ணீரையும் விஷமாக்கியுள்ளது.

நுணலும் தன் வாயால் கெடும்

சாம்பியாவில் நட்டக் கணக்கைக் காட்டிவிட்டு, வேதாந்தா தலைவர் அகர்வால் தன் வாயாலேயே, தான் சாம்பியாவின் சிங் கோலா தாமிரச் சுரங்கத்தின் மூலம் ஆண்டொன்றிற்கு 3500 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார். இதனை அவர் யாரிடமும் இரகசியமாகக் கூறவில்லை. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், பெங்களூரில் நடைபெற்ற ஜெயின் சர்வதேச வர்த்தகக் கழகத்தின் (Jain International Trade Organisation) கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சுரங்கத்தை தான் வெறும் 175 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் தம்பட்டம் அடித்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சாம்பிய அரசின் முடிவில் மாற்றமில்லை

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமான காரணங்களைக் கூறி சாம்பிய அரசு கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி வேதாந்தாவை வெளியேற்றி உள்ளது. இது குறித்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சாம்பிய குடியரசுத் தலைவர் எட்கர் லுங்குவை சந்திக்க வேதாந்தா பலமுறை முயன்றும், அவர் மறுத்து விட்டார். சாம்பிய சுரங்கத்துறை அமைச்சர் ரிச்சர்ட் முசூவா, கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தை கனடா, ஆஸ்திரேலியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுரங்க நிறுவனங் களும், மூன்று சீன நிறுவனங்களும் வாங்கு வதற்கு ஆர்வமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையை எழுதி முடிக்கும் நேரத்தில் வேதாந்தா சாம்பிய அரசை எதிர்த்து தென்னாப்பிரிக்க நாட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது (23/07/2019). அத்தீர்ப்பில், சாம்பிய அரசு KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கைப்பற்றி அந்நிறுவனத்தைக் கலைத்ததற்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் தடை சாம்பியாவைக் கட்டுப்படுத்தாது என்று சாம்பிய அரசு தெரிவித்துள்ளது. கையகப்படுத்தும் பணிகள் தொடரும் என்றும், சிங்கோலா மக்கள் வேதாந்தா சிங்கோலா சுரங்கத்திலிருந்து எந்தப் பொருளையும் வெளியே கொண்டு செல்லாதபடி பாதுகாக்க வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/23/w600X390/vedanta_300.jpg கோப்புப்படம் https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/10/சாம்பியா-நாட்டில்-ஸ்டெர்லைட்-வெளியேற்றம்-தமிழகத்தில்-எப்போது-3210953.html
3210927 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பாரத ரத்னா விருது வரலாறும் கொறிக்க கொஞ்சம் சர்ச்சைகளும்! கார்த்திகா வாசுதேவன் Saturday, August 10, 2019 12:13 PM +0530  

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா இந்த ஆண்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக், இயக்குனர் பூபேன் ஹஸாரிகா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

பாரத ரத்னா விருதுகளைப் பொருத்தவரை இந்தியாவில் கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் இதுவரை பலதுறை சார்ந்த 45 சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

அவர்கள் யார் யார்?

எந்த அடிப்படையில் அவர்களுக்கு பாரதரத்னா வழங்கப்பட்டிருக்கிறது என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

 • 1954 ஆம் வருடம் முதல்முறையாக மூன்று பிரபலங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த மூவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் சர் சி வி ராமன்.
 • ராஜாஜிக்கு இந்திய விடுதலைப்போராட்ட வீரர் என்ற வகையிலும் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற வகையிலும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • சர் சி வி ராமனுக்கு இயற்பியல் துறையில் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. ராமன் பாரத ரத்னா பெறுவதற்கு முன்பே 1930 ஆம் ஆண்டிலேயே இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • தத்துவஞானியும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அவரது அரசியல், சமூக சேவை மற்றும் ஆசிரியப்பணி சேவைகளைப் பாராட்டி பாரத ரத்னா வழங்கப்பட்டது.
 • 1955 ஆம் ஆண்டில் மீண்டும் மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த மூவர் இறை மெய்யியலாளரும், அரசியல்வாதியுமான  பகவான் தாஸ், இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு, பொறியாளரும் மைசூர் திவானாக இருந்தவருமான டாக்டர் விஸ்வேஸ்வரய்யா.
 • 1957 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சருமான கோவிந்த் வல்லப் பந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 • 1958 ஆம் ஆண்டு, டோண்டு கேசவ் கார்வே எனும் சமூக சீர்த்திருத்தவாதிக்கு பாரத ரத்னா விருதளித்து சிறப்பித்தது மத்திய அரசு.
 • அடுத்தபடியாக 1961 ஆம் ஆண்டில் மருத்துவரும், விடுதலை இயக்கப் போராளியும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமாக இருந்தவரான பிதான் சந்திர ராய் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் எனும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உள்ளிட்ட இருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான ராஜேந்திரப் பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1963 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் 3 வது குடியரசுத் தலைவருமான ஜாகிர் ஹுஸைனுக்கும் சமஸ்கிருதப் பண்டிதரும் இந்திய தத்துவவியலாளருமான பாண்டுரங்க வாமன் காணேவுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
 • 1966 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியாக இருந்தவருமான லால் பகதூர் சாஸ்திரிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
 • 1971 ல் முன்னால் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்கள்.
 • 1975 ஆம் ஆண்டில் தொழிற்சங்கவாதியும், இந்தியாவில் முதல் தற்காலிக குடியரசுத் தலைவராக இருந்தவரும், நான்காவது குடியரசுத் தலைவருமான வி வி கிரிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1976 ஆம் ஆண்டில் கர்ம வீரர் காமராஜருக்கும்
 • 1980 ஆம் ஆண்டில் அன்னை தெரஸாவுக்கும் (பாரத ரத்னா பெறுவதற்கு முதல் ஆண்டில் தான் அன்னை தெரஸாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) பாரத ரத்னா வழங்கப்பட்டது.
 • அடுத்தபடியாக 1983 ஆம் ஆண்டில் இந்திய அறப்போராளியும், மனித உரிமைகள் ஆர்வலரும், 1958 ஆம் ஆண்டிலேயே ராமன் மக்சேசே விருது பெற்றவருமான பூதான இயக்கத் தந்தை வினோபா பாவேக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்தது நடுவண் அரசு.
 • 1987 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  கான் அப்துல் கபார் கானுக்கும்...
 • 1988 ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்பட நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுத் தலைவராகவும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவரும், மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதியுமான டாக்டர் அம்பேத்கருக்கு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • அதே ஆண்டில் தென்னாப்பிரிக்க அதிபரான நெல்சன் மண்டேலாவுக்கும் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடி 25 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் என்பதோடு தென்னாப்ரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு 1993 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
 • மீண்டும் 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் 9 ஆவது பிரதம மந்தியான ராஜீவ் காந்தி, இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராய் இருந்தவரான சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் 6 வது பிரதமரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 • 1992 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அபுல்கலாம் ஆசாத், இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் ஒருவரும், இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியுமான ஜே ஆர் டி டாட்டா, திரைப்பட மேதையும் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான திரைப்பட இயக்குனர் சத்யத் ஜித் ரே உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1997 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொருளாதார மேதை, இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவருமான குல்சாரிலால் நந்தாவுக்கும், இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலருமான அருணா ஆசாப் அலிக்கும், இந்திய விஞ்ஞானியும், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவருமான ஏ பி ஜே அப்துல் கலாம் உள்ளிட மூவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1998 ஆம் ஆண்டு கர்நாடக இசைப்பாடகியும், 1974 ஆம் ஆண்டில் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான எம் எஸ் சுப்புலட்சுமிக்கும், இந்தியாவின் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்து இந்தியாவின் உணவுத் தன்னிறைவுக்கு வழிவகுத்தவருமான சி சுப்ரமணியத்துக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 1999 ஆம் ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக 4 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அந்த நால்வர் முறையே இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்த்திருத்தவாதியுமான ஜெயப்ரகாஷ் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞரும், சிதார் மேதையுமான  பண்டிட் ரவி ஷங்கர், பொருளாதார மேதையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அஸ்ஸாம் மாநில முதல் அமைச்சருமான கோபிநாத் பர்தோலாய் உள்ளிட்ட நால்வருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 2001 ஆம் ஆண்டு பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கருக்கும், இந்துஸ்தானி ஷெனாய் இசைக்கலைஞருமான பிஸ்மில்லாகானுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • 2009 ஆம் ஆண்டு இந்துஸ்தானி குரலிசைப் பாடகரான பீம்சென் ஜோஷிக்கும், 
 • 2014 ஆம் ஆண்டு வேதியியலாளர் சி. என் ஆர் ராவுக்கும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது மத்திய அரசு.
 • 2015 ஆம் ஆண்டு கல்வியாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக நான்கு முறை பொறுப்பேற்றிருந்தவருமான மதன் மோகன் மாளவியாவுக்கும், கவிஞரும் 11 வது இந்தியப் பிரதமராக இருந்தவருமான அடல் பிகாரி வாய்பேயிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • அதையடுத்து தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கும், திரைப்படம், இலக்கியம் மற்றும் இசைப் பங்களிப்புகளுக்காக பூபேன் அசாரிகா எனும் இயக்குனருக்கும், இந்துத்வா தலைவர் நானாஜி தேஷ்முக்குக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.

இவர்களில் லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், வினோபா பாவே, எம் ஜி ராமச்சந்திரன், அம்பேத்கர், ராஜிவ் காந்தி, வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆஸாத், அருணா ஆஸாப் அலி, ஜெயப்ரகாஷ் நாராயண், கோபிநாத் பர்தோலாய், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட 12 பேருக்கு அவர்கள் மறைந்த பின்னரே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது. இவர்களில் இந்தியக் குடிமகன்கள் அல்லாத நெல்சன் மண்டேலாவுக்கும், கான் அப்துல் கபார் கானுக்கும் அவர்களது சுதந்திர போராட்ட வாழ்க்கைச் சாதனைகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது இந்திய அரசு.

இதில் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்பட்ட விஷயம். இந்திய அரசின் இச்செயலுக்கு பலத்த கண்டனங்கள் அப்போது எழுந்தன. எனினும் சுபாஸ் சந்திர போஸுக்கு மீண்டும் விருது அளிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு வராமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.

1954 ஆம் ஆண்டில் இந்த விருது முதன்முறையாக உருவாக்கப்பட்ட போது அமரர்களுக்கு அதாவது மறைந்து விட்ட சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது என்ற விதி இருந்தது. ஆயினும் அந்த விதி அடுத்த ஆண்டே மாற்றப்பட்டு உயிருடன் இல்லாதவர்களுக்கும் கூட பாரத ரத்னா வழங்கும் வழக்கம் வந்தது. அதே போல இந்த விருதை வடிவமைக்கும் போது விருது பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்தப் பதக்கம் வட்ட வடிவில் வழங்கப்படுமென முதலில் கூறப்பட்ட போதும் பிறகு பதக்கத்தின் வடிவம் அரச இலை வடிவில் மாற்றப்பட்டது. அரச இலைப் பதக்கத்தின் நடுவில் சூரிய உருவம் பதிப்பட்டு அதன் கீழ் பாரத ரத்னா எனும் சொல் தேவநாகிரி எழுத்துருவில் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தப் பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பது இவ்விருது பெறுபவர்களுக்கான விதிகளில் ஒன்று.

பாரத ரத்னா விருதுக்கான பயன்பாட்டு விதிகள் ஏதாவது உண்டா என இப்போது தெரிந்து கொள்வோமா?

இந்திய அரசியல் சாசன விதி 18 (1) ன் படி; 

விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது, அவசியம் கருதினால் ‘பாரத ரத்னா விருதைப் பெற்றவர்; எனும் சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. 

பாரத ரத்னா விருது சர்ச்சைகள்...

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைச் சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. முதலாவது சர்ச்சை என்றால் அது 1992 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு விருது வழங்குவதாக அறிவித்து விட்டுப் பிறகு அந்த விருதின் மீதான சட்டச் சிக்கல்களைத் தீர்க்க இயலாமல் நேதாஜிக்கு அளிப்பதாக இருந்த பாரத ரத்னா விருதை 1997 ஆம் ஆண்டில் ரத்து செய்து திரும்பப் பெற்றது இந்திய அரசு.

1998 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருந்த ராஜிவ் காந்தி இங்கே தம் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே அப்போது தான் கூட்டணி வைத்திருந்த கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ராமச்சந்திரனுக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் என்றொரு விமர்சனம் கடுமையாக அப்போது முன் வைக்கப்பட்டது. ஏனெனில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற தலைவர்களான அம்பேத்கர்,சர்தார் வல்லபாய் படேலுக்கு முன்பு எம் ஜி ஆருக்கு அவ்விருது ராஜிவ் காந்தியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து பலர் போர்க்குரல் உயர்த்திய போதும் கூட எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

அதே போல பண்டிட் ரவிஷங்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது அவர் லாபி செய்து விருது வாங்க முயற்சிக்கிறார் என்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மறைந்த காங்கிரஸ் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்தார். அப்போது, தமிழ்நாட்டு ஓட்டு வங்கியைக் குறிவைத்தே சரியான சந்தர்பத்தில் இப்படி ஒரு பரிந்துரையை இந்திரா காந்தி முன் வைத்திருக்கிறார் என்று விமர்சிக்கப் பட்டது.

இதே விதமான குற்றச்சாட்டு முன்னாள் இந்தியப் பிரதமர் விபி சிங், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனக் கமிட்டி தலைவருமான அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்த போதும், தலித்துகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்தே அவர் அவ்விதமாகப் பரிந்துரைத்தார் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதையடுத்து 2013 ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கும், சி என் ஆர் ராவுக்கும் பாரத ரத்னா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து சிலர் கண்டனம் தெரிவித்தனர். சி என் ராவ் விஷயத்தில் அவரைக் காட்டிலும் அவரது துறையில் அதிகம் சாதித்தவர்களான ஹோமி ஜஹாங்கிர் பாபா, விக்ரம் சாராபாய் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் பாரத ரத்னா விருது வழங்காமல் சி என் ஆருக்கு வழங்குவது அரசியல் லாபங்களுக்காகத் தான் என்றும் சச்சி டெண்டுல்கருக்கு வழங்கப்படும் விருதும் கூட அவரை ராஜ்ய சபா எம் பி ஆக்கி மாநிலங்களவையில் அமர வைத்து அழகு பார்த்து ஓட்டு வேட்டை நடத்த நினைக்கும் காங்கிரஸின் ராஜதந்திரம் என்றும் பரவலாக விமரிசனங்கள் எழுந்தன.

பாரத ரத்னா விருது வழங்கும் நடைமுறையானது 1954 ஆம் ஆண்டில் தான் தொடங்கியது. ஆனால், இந்திய விடுதலைக்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் கூட பாரத ரத்னா பரிந்துரைக்கப்படுவதைக் காணும் போது இந்த விருதானது உயரிய நோக்குடன் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அந்த விருப்பத்தை ஓட்டு வங்கியாக மாற்ற விரும்பும் ஆளும் தரப்பு குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த பாரதப் பிரதமர்கள் தங்களுக்கு அனுகூலமான நபர்களுக்கு பாரத ரத்னா விருதைப் பரிந்துரைத்து தங்கள் எண்ணங்களை ஈடேற்றிக் கொண்டார்கள். நிஜமாகவே இந்தியாவிற்கு ரத்னம் போல விளங்குபவர்களுக்குத் தான் இந்த விருதுகளை பரிந்துரைப்பதென்றால்... மெளரியப் பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர், மராட்டிய மன்னர் வீர சிவாஜி, நோபல் பரிசு பெற்ற தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர், இந்துக்கள் பெரிதும் விரும்பும் ஆன்மீகத் துறவி விவேகானந்தர் உள்ளிட்டோருக்கு எல்லாம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்க வேண்டுமே? என வரலாற்று ஆசிரியர்கள் இந்த விருது குறித்து இது தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே சர்ச்சையைக் கிளப்பினர். ஆயினும் அரசு அதையெல்லாம் புறம் தள்ளி தொடர்ந்து பாரத ரத்னா விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து பதக்கங்களை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

பாரத ரத்னாவால் விளையும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இந்திய புரோட்டாகால் விதிகளின் படி குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர், துணைப்பிரதமர் என நீளும் முன்னுரிமை வரிசையில் இவர்களுக்கு 7 ஆம் இடம் வழங்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் அரசு விழாக்களில் அமர வைக்கப்படத் தகுதி வாய்ந்த மதிக்கத்தக்க நபர்கள் பட்டியலில் இவர்கள் 7 ஆம் இடம் பெறுகிறார்கள். கடைசியாக ஒரு விஷயம்... பாரத ரத்னா விருதில் பணப்பரிசு எதுவும் கிடையாது. பதக்கவும், சான்றிதழும் மட்டுமே வழங்கப்படும். 

]]>
Bharat ratna awardees, India's highest civilian award, controversies around Bharat Ratna, பாரத ரத்னா விருது, இந்தியாவின் மிக உயரிய விருது, பாரத ரத்னா சர்ச்சைகள், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/10/w600X390/barat_ratna_awardees.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/10/indias-highest-civilian-award-bharat-rathna-and-some-controversies--revolving-around-it-3210927.html
3210254 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மனமும் பஞ்ச பூதங்களும் Friday, August 9, 2019 12:10 PM +0530
மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் மனதை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். எந்த நீதி நூல்களைப் படித்தாலும் இந்த கருத்தே வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஏன் மனதிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களைக் கொண்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை நமது புராணங்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறது. பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருக்கக் கூடிய ஆகாயம் என்ற வெற்றிடத்திலிருந்து காற்று தோன்றியது. 

காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது. 

நெருப்பிலிருந்து நீர் தோன்றியது. 

நீரிலிருந்து மண் தோன்றியது. 

இந்த பிரபஞ்சம் என்பது அழிவை சந்திக்கும் போது, நான்கு யுகங்களும் முடிந்து உலகம் அழிந்து புதிய உலகு உருவாகும் போது அழிவு என்பது எப்படி தோன்றியதோ அப்படியே மறையும்.

கடல் பொங்கி இந்த நிலம் முழுவதையும் நீர் சூழும். 

ஒரு பெரு நெருப்பு எழுந்து நீரையும் மண்னையும் ஆவியாக்கும்.

மிகப்பெரும் சூராவளிக்காற்று எழுந்து நெருப்பை உள் வாங்கும். இவற்றை அப்படியே ஆகாயம் தன்னுள் இழுத்து அடக்கிக் கொள்ளும்.

இது சாத்தியமாவது அதன் வலிமையை சார்ந்ததாக இருக்கிறது. மண்னை அப்படியே கிடக்கும். மண்ணை விட தண்ணீர் சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் பரவும். தண்ணீரை விட நெருப்பு சூட்சும சக்தி வாய்ந்தது. பக்கவாட்டில் மட்டுமல்லாது சிறிது மேலேயும் எழும்பும். நெருப்பை விட காற்று சூட்சும சக்தி வாய்ந்தது. எல்லா இடங்களிலும் பரவும். காற்றை விட ஆகாயம் சூட்சும சக்தி வாய்ந்தது. ஆகாயம் என்ற வெற்றிடம் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. சரி! மனதிற்கும் இந்த உலகம் உருவானதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. 

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. 

மனித உடலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே. 

ஆகாயத்திலிருந்து செவியும், காற்றிலிருந்து மெய்யும், நெருப்பிலிருந்து கண்ணும், நீரிலிருந்து சுவைக்கும் நாக்கும் நிலத்திலிருந்து மூக்கும் உருவாக்கப்பட்டன.

நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீரில் இருந்து மண் சத்தும் நீர் சத்தும் கிடைக்கிறது. வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல் புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது. சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது. நமது உடலில் மொத்தம் ஒன்பது விதமான வாயுக்கள் உள்ளனவாம். 

இதில் ஐந்து வாயுக்கள் பிராண வாயு, அபாண வாயு, சமான வாயு, உதான வாயு மற்றும் வயான வாயு என்ற ஐந்தும் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் தோன்றியவை. நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத் தருவது உறக்கம். 

ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.  ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக் கூடிய செயல்கள்.

மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது. எப்போது மனதில் எண்ண ஒட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலின் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது. ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும் போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.

மனதில் அளவிற்கும் அதிகமான துக்கம் போன்றவற்றால் ஆகாய சக்தி அதிக அளவில் உடலில் குறைவதையே நவீன மருத்துவத்தில் depression என்று அழைக்கிறார்கள். இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது. எனவே மனதை அமைதியாக வைத்துக் கொண்டால்தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. 

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… 'இதுவே சனாதன தர்மம்'

ஆன்மிக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...! 

தொகுப்பு - கோவை ச. பாலகிருஷ்ணன்

]]>
mind, mindfulness, heart, soul, calmness, serenity, peace https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/4/w600X390/0000_hot_summer.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/09/mind-and-five-elements-from-nature-called-panchabootham-3210254.html
3209627 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்ன? C.P.சரவணன், வழக்குரைஞர் Thursday, August 8, 2019 04:17 PM +0530  

காஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா? அரங்கேற்றப்பட்டுள்ளதா என விவாதம் நடைபெற்று வரும் வேளையில்காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டது வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான ஒப்பந்தம் (Instrument of Accession)
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இஸ்லாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது. 

1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

கச்சத்தீவு வரலாறு 

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரினியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். 

கட்சத்தீவு தாரை வார்பு

1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லக்கூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது. 

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது. இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல்(Historic Waters) எல்லையும் சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26,28 ஜூன் 1974  கையெழுத்தானது.

காஷ்மீர்-கச்சத்தீவு ஒற்றுமைகள்

இரண்டு பகுதிகளுமே ஒப்பந்தத்தால் ஆனவை. இரண்டையுமே காங்கிரஸ் அரசே செய்துள்ளது. காஷ்மீரை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைத்தது. அதேபோல் கச்சத்தீவை ஒப்பந்தத்தின் மூலம் தாரை வார்த்தது.
ஆனால் காஷ்மீர் நாடாளுமன்ற ஒப்புதலுடன், அரசமைப்புச் சட்ட வடிவம் பெற்று இணைந்தது. கச்சத்தீவோ எந்த நாடாளுமன்ற ஒப்புதலுமின்றி தாரை வார்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர் வரலாற்றுப் பிழை என்றால், முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவு தாரைவார்ப்பும் வரலாற்று மற்றும் சட்டப் பிழை.

கச்சத் தீவையும் அதே மனநிலையுடன் மீட்குமா பாஜக அரசு?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/27/23/w600X390/katchatheevu.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/08/காஷ்மீரைப்-போல்-கட்சத்-தீவும்-மீட்கப்படுமா-இரண்டுக்கும்-உள்ள-ஒற்றுமை-என்னென்னெ-3209627.html
3208959 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தங்கம் - கவர்ச்சி விலை, செய்கூலி, சேதாரம் இன்னபிற விஷயங்கள்! வழக்கறிஞர் சி.பி. சரவணன் DIN Wednesday, August 7, 2019 06:20 PM +0530  

இந்தியக் குடும்பங்களில் சுமார் 25,000 டன் தங்கம் வைத்திருப்பதாக உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) புள்ளிவிவரம் சொல்கிறது. நம் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும் சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை. இந்த அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும் முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருப்பார்களோ என்ற உணர்வு. உண்மை என்னவென்றால் சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லது ஏமாந்துள்ளார்கள்,  தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில்... 

கடந்த நூறு வருடங்களில் இருந்த தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

100 ஆண்டுகளில் 1,300 மடங்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாய் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை. நூறு ஆண்டுகளில் சுமார் ஆயிரத்து முன்னூறு மடங்கு உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. 1920 -ல் இருந்து 1960 வரையிலான 40 ஆண்டு காலகட்டத்தில் தங்கத்தின் விலை வெறும் 80 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. அதன்பிறகு தான் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. அடுத்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 20 மடங்கு உயர்ந்து 1987 ஆம் ஆண்டு ஒரு சவரன் 2,016 ரூபாய்க்கு விற்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 2008 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாயை தாண்டியது.

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது இந்த பதினோரு ஆண்டுகளில்தான். 2008-ல் 10,040 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது சுமார் 17 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 27 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. தனிநபர்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கூட தங்கத்தின் மீதான முதலீட்டில் ஆர்வம் காட்டுகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனிமனித வருமானம் அதிகரித்து வருவதால் தங்கத்தின் மீதான சில்லறை முதலீடு அதிகரித்துள்ளது.

பல அரசாங்கங்கள் கூட தங்கள் நாட்டு மத்திய வங்கி மூலம் தங்கத்தை பெருமளவு சேமித்து வைக்கின்றன. World Gold Council தகவலின் படி 2018 வரை பல்வேறு நாட்டு அரசுகள் சுமார் 450 டன் வரை தங்கத்தை சேமித்து வைத்துள்ளன. இப்படி தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. உலக அளவில் தற்போதைய தங்கத்தின் தேவையை விட ஆயிரம் டன் தங்கம் குறைவாக உள்ளது என்கிறது ஒரு புள்ளி விபரம். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்து கொண்டே வந்தாலும், மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

916 என்பது என்ன?

தூய தங்கத்தில் நகைகள் செய்ய முடியாததால், தங்கத்துடன் பிற உலோகங்கள் மிகச்சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. 22 கேரட் நகைகளில் தங்கத்தின் அளவு 91.6 சதவீதமாகும்;​ அதிகமாக நகைக்கடைகளில் விற்கப்படுவதும் இவைதான். 916 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில்  91.6%   சுத்தமான  24  கேரட்  தங்கம்.  மீதி  8.4  சதவீதம்  செம்பு, மற்றும்  வெள்ளி  ஆகும். 91.6   தங்கம்தான்  22 கேரட்  தங்கம். இதை ஞாபகப்படுத்தும் விதத்தில்தான், '916 ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கத்தை வாங்குங்கள்' என பி.ஐ.எஸ் எனப்படும் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் அறிவுறுத்திவருகிறது. 875, 750, 585 ஹால்மார்க் நகைகள், முறையே 916 க்கு அடுத்த நிலையில் உள்ள தங்கத்தின் அளவைக் குறிக்கின்றன.

KDM   என்றால் என்ன ?

முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை  பயன்படுத்துவார்கள். (தங்கம் + வெள்ளி + செம்பு )  இந்த மூன்றும் சேர்ந்தது தான் பொடி.  இந்தப்  பொடியை பயன்படுத்தி  நகை பற்றவைக்கும் போது  பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன்  சேர்ந்து விடும். அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும். ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை  இல்லை. ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால்  போதும். பற்றவைக்க இதனை பயன்படுத்தலாம். 

பற்றவைக்கும் போது  ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும்  தீய்ந்து  போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும்  நகையில் இருக்கும்.

KDM என்றால் தங்கம், இதில் காட்மியம் 92 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்ற விகிதத்தில் கலக்கப்படலாம், இது 92 சதவீத தூய்மையை உறுதி செய்கிறது. காட்மியம் - சாலிடர் நகைகள் கே.டி.எம் நகைகள் என்று பரவலாக அறியப்பட்டன. கே.டி.எம் தங்கம் பிரபலமாக இருந்தபோதிலும், இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டதால் அது புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. செயலாக்கத்திற்குப் பிறகு தங்கத்தின் தூய்மையை மேம்படுத்த உதவுவதற்காக, தாமிரத்தை மாற்ற காட்மியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இது அணிபவர்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது, எனவே தொழில்நுட்பம் தடைசெய்யப்பட்டு பிற மேம்பட்ட உலோகக் கலவைகளால் மாற்றப்பட்டது.

'செய்கூலி ​​மற்றும் சேதாரம்' 
 
 

நகை வாங்குவோரைப் பெரிதும் குழப்புவது 'செய்கூலி ​​மற்றும் சேதாரம்'. செய்கூலி என்பது நகை செய்வதற்கான கூலி, இது கடைக்குக் கடை மாறுபடுகிறது. சேதாரம் என்பது நகை செய்யும்போது ஏற்படும் உலோகத்தின் இழப்பு. இந்த இழப்பை ஈடுகட்ட, நகை வியாபாரிகள் நேரடியாக வாடிக்கையாளர்களிடமே சேதாரத்தொகையை வாங்குகின்றனர். நகையைப் பொறுத்து 5% முதல் கிட்டத்தட்ட 30% வரைக்கூட சேதாரத் தொகை வசூலிக்கப்படுகிறது. செய்கூலி, சேதாரம் மற்றும் வரிப்பணம் போன்றவற்றில்தான் உபரியாக பணத்தை இழக்கிறோம்.

ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. 

உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள்?  

”எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.
 
கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும் 30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.
 
இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.

தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.

சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான் நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!” தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான்.வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.  

செய்கூலி சேதாரம் என்பது தங்க நகை விற்பவர்களின் ஏக போக உரிமையாகப் போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப் பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு....ஆனால் தங்கம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. நகை வியாபாரிகள் கோடிகளில் கொள்ளை அடிக்கும் வியாபார உத்திகளில் சேதாரம் ஒன்று....நினைவில் கொள்ளுங்கள்.

இந்தியா தவிர ஏனைய உலக நாடுகளிலும் தங்கம் விற்கிறார்கள். அங்கெல்லாம் சேதாரம்எனும் சொல்லே இல்லை....ஒன்றே ஒன்றுதான்...கூலி. அதில் எந்த விதமான சேதாரத்தையும் சேர்க்க மாட்டார்கள். உதாரணமாக, துபாயில் உள்ள நகைக்கடைகளில் எந்த ஒரு அணி வாங்குகிறீர்களோ அதற்கென்று நியாயமான ஒரு கூலி நிர்ணயித்திருப்பார்கள். ..உதாரணத்திற்கு,  வளையல் என்றால் அதிக பட்சம் ரூபாய் நூறு ஒரு கிராமிற்கு கூலி. இதுவும் கைவேலைப்பாட்டிக்காக மட்டும் இந்த கூலி..இதையே கருவி மூலம் செய்யும் வேலைக்கு இந்தக் கூலி பாதி தான்.செயின் ஒன்றுக்கு கூலி ரூ 40௦-80 /கிராம் , மோதிரம் ரூ 40 -60 . அவ்வளவேதான்.

அப்போ துபாயில் பொன் வேலை செய்பவர்களுக்கு சேதாரம் இல்லையா என்ன? 

இருக்கிறது அங்கு மட்டும் இல்லை இங்கும்தான். ஆனால் துபாயில் வேலை செய்து மீந்த தங்கத் துகள்களை மீண்டும் எடுத்து உருக்கி திரும்ப உபயோகிக்கிறார்கள். உதாரணமாய் ஒரு வளையல் செய்ய 100 கிராம் மூலப் பொருள் வேண்டும் என்றால் அது செய்து முடித்த பின் 88 கிராமாக இருக்கும் . ஆக 12 கிராம் சேதாரத் தங்கம். இதைத்தான் இங்கு சேதாரம் என்று சொல்லி அதன் விலையை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் இங்குள்ள எத்தர்கள்.

சரி அதற்குப் பின் என்ன நடக்கிறது துபாயில்? பொடித் தங்கத்துகளை சேர்த்து எடுத்து மீண்டும் உருக்கி கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கே திரும்ப எடுக்கிறார்கள். அப்போ தங்கமே வீணாவதில்லையா என்றால், ஆகிறது சுமார் 200 மில்லி கிராம் அளவு மட்டுமே. அதாவது 88 கிராம் தங்க வளைக்கு சேதாரம் 0௦.022 % இதன் இழப்பை கூலியில் சேர்த்து விடுவார்கள்.

அது மட்டுமல்லாது எல்லா நகைகளிலும் அரசாங்கத்தின் 22 ct முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு மூக்குத்தியின் திருகாணி கூட பாக்கியின்றி. துபாய் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அரசாங்க முத்திரை அவசியம். அரசாங்கம் இதற்கென்றே ஒரு தனி இலாக்கா அமைத்து மக்களை ஏமாற்றும் கடைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. முத்திரை இல்லாத நகை விற்பவரின் கடை சீல் வைக்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும்.கூடவே அதிக பட்ச தண்டனையாக முப்பது வருட சிறை வாசம்.

இங்கு என்ன நடக்கிறது? ஒரு கழிவிற்காக அந்த சூபர்வைசரிடம் சிரித்துப் பேசி கவர வேண்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நகை வாங்கும் பொது சேதாரமான கழிவு தங்கத்தை உங்களுக்கே திருப்பித்தரச் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சேதாரத்திற்கான பணம் கொடுத்து இருக்கிறீர்கள். செய்கூலியும் கொடுத்திருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு சட்ட பூர்வமான உரிமை உண்டு திரும்பிப் பெற. உருக்கித்தர ஆயிரம் கொல்லர்கள் இருக்கிறார்கள்.

துபாயில் நகை வாங்கினால்?

துபாயில் நகை வாங்க நீங்கள் போக வேண்டியதில்லை...உங்கள் நண்பரை வாங்கச் சொல்லுங்கள் அங்கிருந்தால் அல்லது சுமார் ஒரு லட்சம் வரை நகை வாங்க உங்கள் திட்டம் என்றால், இங்கிருந்து ஷார்ஜா செல்ல விமானக் கூலி ரூ 6000 + 6000, விசா ரூ 4000. விமான நிறுவனமே விசாவிற்கு ஏற்பாடு செய்கிறது. ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை இங்கு இன்றைய விலைக்கு செய்கூலி சேதாரம் வரி போக ரூ 70000௦௦௦௦ திற்கு கிடைக்கும். அரசாங்க முத்திரையோடு உத்திரவாத தங்கம், விமானத்தில் வெளிநாடு பயணம். உங்களை ஏமாற்றுவோரின் முகத்தில் நாமம். இத்தனை வசதிகள் உள்ளது. உங்களை ஏமாற்றுவோரின் எக்களிப்புக்குக் காரணம் இங்கு சரியான தங்க விற்பனை சட்டம் இல்லாததே... அப்படி ஒன்று இருந்தால் இந்த செய்கூலி சேதாரத்திற்கு ஒரு ISI தர நிர்ணயம் இருக்கும். அதுபோல ஒரு சட்டம் அரபுநாடுகளில் நடப்பில் உள்ளதால் அரபு நாடுகளில் தங்க விற்பனையில் எந்த ஏமாற்றும் இருப்பதில்லை. நினைத்துப் பாருங்கள், ஹெல்மெட் போடுவதில் காட்டும் கண்டிப்பை அரசு இதுபோன்ற விசயங்களில் காட்டுவதில்லை. இந்தியா போன்ற வலுவில்லாத சட்ட அமைப்பு உள்ள நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம். தங்க சட்டத்தைக் கூட...

தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து இந்த வருட பட்ஜெட்டில் வந்தபோது, லாபம் சுருங்குகிறது என்று இந்த தங்க வணிகர்கள் தங்கள் கடைகளை ஒரு வாரம் பூட்டி கதவடைப்பு செய்து வரி உயர்வை திரும்பப் பெற வைத்தார்கள்... தங்கள் லாபம் சுருங்கியதற்க்கே இப்படிச் செய்தவர்கள், தங்க நகைக்கு தனி சட்டம் வந்தால் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார்கள்?  மக்கள்....எல்லா மூலைகளில் இருந்தும் எல்லா முனைகளில் இருந்தும் எல்லாக் கயவாணிகளிடமும் ஏமாறுகிறார்கள்.... படித்திருந்தும்... கேள்வி கேட்கத் தெரியாமல்...!

சில டிப்ஸ்...

1. சேதாரம் வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இதுவும் கடைக்கு கடை மாறுபடும். சில கடைகளில், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும், மற்றவர்களிடம் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும். செல்லும் முன் சற்றே விசாரிப்பது நல்லது. 

2. தர முத்திரை தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். BIS முத்திரை என்பது கீழ்க்காணும் 5 அம்சங்களை உள்ளடக்கியது.  பிஐஎஸ் முத்திரை.  தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.  பிஐஎஸ் முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை. குறிப்பிட்ட நகைக்கு பிஐஎஸ் முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். கடந்த ஆண்டுக்கு, (2016) 'Q' என்ற எழுத்து இருக்கும்). நகை விற்பனையாளரின் முத்திரை.
3. ஆன்டிக் நகைகள் ஆன்டிக் (பழங்கால) நகைகளுக்கு சேதாரம் 25% - 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலை எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
4.  19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். 
5. எடையில் கவனம் என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். 
6. பழைய நகைகள் பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம் தங்கத்தைக் கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்குவதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்றவது நல்லது.
7. 'கேடிஎம்' தவிர்க்கவும் 'கேடிஎம்' (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை கடையை பொறுத்தே அமையும் என்பதால், 'கேடிஎம்' என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, 'பிஐஎஸ்' முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கலாம்.
 8. ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்சனை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவேண்டும்.

தேவையான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

சாலையோரக் கடைகளில் 10 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கும் போது, நாம் காட்டும் கண்டிப்பு சேதார விசயத்தில் சேதாரமான நகை எங்கே என்று கேட்டதில்லை.

நகை செய்யும் பொது ஏற்படும் வேஸ்ட் துகள்கள் மீண்டும் நகை செய்ய பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதுவும் தற்கால CNC (Computer numerical control) களில் செய்யப்படும் நகைகளில் ஏராளமான சேதாரக் குறைப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நகைகளை மாற்றும் போது, குறைந்த விலையில் எடுத்துக் கொள்வது என நகை வியாபாரிகளின் மோசடிக்கு அளவே இல்லை.

தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்! தேவையற்ற விசயங்களில் கட்டுப்பாடுகள், சட்டங்கள் கொண்டுவரும் அரசு, நகை வியாபாரத்தை ஒழுங்குபடுத்தினால், அரசு மற்றும் நுகர்வோர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.

Image Courtesy: Financial Express

 

]]>
Gold, Ups & Downs, Gold price hikes, தங்கம், தங்கம் விலை உயர்வு/வீழ்ச்சி, செய்கூலி, சேதாரம், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/7/w600X390/gold.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/07/gold-pice-hike-ups-and-downs-3208959.html
3208953 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்புகழ் ‘பழம்பெரும் ராஜதந்திரி’ என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி தினமணியில் வெளிவந்த இரங்கல் செய்திப் பகிர்வு! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, August 7, 2019 04:34 PM +0530  

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கிய தஞ்சை என் கோபால்சாமி ஐய்யங்கார் குறித்து நேற்றைய தினம் ஊடகங்கள் நினைவு கூர்ந்தன. பாரதப் பிரதமராக பண்டித நேரு இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் திறமையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் என் ஜி ஐய்யங்கார். அவருக்கும் நேருவுக்குமான நட்பு என்பது மிக மிக ஆத்மார்த்தமானது. அதனால் தான் என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி நேரு வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘அவரது மறைவு எனக்கு நேர்ந்த சொந்த இழப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துணை புகழ் வாய்ந்த திறமையாளர்களை இந்திய அரசியல் அரங்கில் மீண்டும் அடையாளம் காண்பதென்பது சற்றுக் கடினமான காரியம் தான்.

நேரு, ராஜாஜி உள்ளிட்டோரின் இரங்கல் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்...

என் ஜி அய்யங்காரின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கும் போது அவரெடுத்த முடிவுகள் அனைத்துமே மிக்க ராஜதந்திரம் நிறைந்தவையாக இருந்ததோடு நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

]]>
N G AIYYANGAR, TRIBUTE PAGE TO N G AIYYANGAR, DINAMANI DATED 1954, என் ஜி ஐய்யங்கார், பழம்பெரும் ராஜதந்திரி, நினைவுப் பகிர்வு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/7/w600X390/000_n_g_aiyyangarr.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/07/dinamanis-tribute-to-antique-diplomate-n-g-aiyyangar-in-the-year-of-1954-3208953.html
3208950 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி) கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, August 7, 2019 04:12 PM +0530  

ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் சீன அரசை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் சீன சர்வாதிகாரிகளின் ஆள் தூக்கி சட்டத்தை ரத்து செய்யக்கோரும் இந்த போராட்டத்தை செவி மடுக்க மறுக்கிறது சீன அரசு. சீனாவால் நியமிக்கப்பட்ட ஹாங்காங் தலைவர் கேரி லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சீன அரசு அதிர்ச்சியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாது தொடர்ந்து ஹாங்காங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துடிப்பது போல உலகின் முன் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

 

இந்நிலையில், ஹாங்காங் புரட்சி குறித்து இந்தியப் பேரரசு என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலக அரங்கில் பரவலாக எழுந்து வருகிறது.

 

நன்றி: தினமணி சிறப்புக் கட்டுரைப் பிரிவு

]]>
HONGKONG PROTEST, CHINA, ஹாங்காங் புரட்சி, சீனா, வல்லரசு, நல்லரசு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/7/w600X390/0111.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/07/hongkong-protest-video-3208950.html
3208945 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்! RKV Wednesday, August 7, 2019 03:48 PM +0530  

காஷ்மீர் உத்தரவு

இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமிடையே அரசியல் உறவுகள் பற்றி காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை உடனடியாக அமல் நடத்துவதற்கு ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்து விட்டார். சட்டபூர்வமான வார்த்தைகளை நீக்கி விட்டுப் பார்த்தால், சில விஷயங்களைத் தவிர காஷ்மீர், இந்தியாவில் உள்ள இதர ராஜ்ஜியங்களைப் போல், இந்தியாவின் ஒரு அங்கமாகிறது என்று தான் அர்த்தம். காஷ்மீரின் விஷேச நிலைமையை முன்னிட்டுச் சில விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் அடியோடு இந்தியாவோடு சேர்ந்து விட்டால், நிரந்தரமான காஷ்மீர் வாசிகளின் நலன்கள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு பயம் இருந்தது. இந்த பயத்திற்கு நியாயமில்லாமல் இருக்க முடியாது. ஆயினும், கொஞ்சமும் அத்தகைய பயங்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவே இந்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஸ்தாவர  சொத்துக்களை வாங்கும் உரிமை, காஷ்மீரில் குடியேறுவது, ராஜ்ய சர்க்கார் உத்யோகங்கள் ஆகிய விஷயங்களில் காஷ்மீரிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு காஷ்மீர் சட்டசபை சட்டமியற்றலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைந்த மற்ற சமஸ்தானங்களுக்கு இல்லாத சலுகைகள் காஷ்மீருக்கு மட்டும் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலர் கோணல் கட்சி பேசலாம். காஷ்மீரின் இணைப்பு பற்றிய சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் இந்த கேள்விகளுக்கு இடமிராது. இந்த விவகாரம் ஐ நா ஸ்தாபனம் வரையில் போய் இன்னம் முடிவடையாமல் இருக்கின்றது. இந்த நிலைமையில்  இந்தியா பலவந்தமாக காஷ்மீர் மீது ஒரு அரசியல் ஏற்பாட்டைத் திணிக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே இந்திய சர்க்காரின் விருப்பம். அதனால் தான் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை மட்டும் அமல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தினமணி தலையங்கப் பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்...

ஜீவாதார உரிமைகள் விஷயத்தில் யுக்தமான கட்டுப்பாடுகளை விதித்து சட்டமியற்றிக் கொள்ளவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ராஜ்ஜியங்களுக்குமே இந்த அதிகாரம் இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவை தேசத்தின் பந்தோபஸ்திற்கு உட்பட்டவை தான். அதைப் பாதுகாப்பதற்கு வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு  ராஜ்யங்களுக்கு உரிமை  இருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ‘நியாயமான கட்டுப்பாடுகள்’ விதிப்பது ஜீவாதார உரிமைகளுக்கு முரணானதல்ல என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக் கொண்டிருக்கிறது.

இதர ராஜ்ஜியங்களில் இருப்பது போல், காஷ்மீருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மற்ற பிரதேசங்களில் அமலிலிருக்கும் எல்லா ஏற்பாடுகளுக்கும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்.

1952 - ல் செய்யப்பட்ட டில்லி ஒப்பந்தத்தை ஷேக் அப்துல் அமுல் படுத்த ஒப்புக் கொண்டிருந்தால் இந்த ஏற்பாடுகள் முன்பே வந்திருக்கும். ஆனால், வேறு நோக்கத்துடன் அவர் அந்த ஒப்பந்தத்தை அமுலுக்குக் கொண்டு வராமல் காலம் கடத்திக் கொண்டிருந்தாரென்பது பின்னர் நடந்த சம்பவங்களில் இருந்து புலனாயிற்று. காலம் தாழ்த்தாமல் காஷ்மீர் - இந்தியா உறவுகள் சட்டபூர்வமான  முறையில் ஸ்திரமாக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தங்கள் அபிலாஷைகள் நிறைவேற்றுவதற்கு உதவி செய்த பக்‌ஷிகுலாம் முகம்மதுக்கு காஷ்மீர் மக்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ராஷ்டிரபதியின் இந்த உத்தரவை காஷ்மீர் தலைவர்கள் மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறார்கள். பற்பல ராஜ்யங்கள் கொண்ட இந்தியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள காஷ்மீரை வாழ்த்துகிறோம்.
 

]]>
A N SIVARAMAN, தினமணி தலையங்கம், காஷ்மீர் உத்தரவு, ஏ என் சிவராமன் தலையங்கம், DINAMANI EDITORIAL PAGE, KASHMIR SPECIAL STATUS https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/7/w600X390/kashmir_decison.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/07/dinamani-editorial-page-on-the-day-of-kashmir-special-status--in-the-year-of-1954-may-3208945.html
3208202 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் எது தாம்பத்யம்? ஜேசு ஞானராஜ் Wednesday, August 7, 2019 11:07 AM +0530 மனித வாழ்க்கையில் ஒவ்வொரு உறவும் தன்னளவில் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், சில உறவுகள் ஆழமானவை...சில உறவுகள் ஆத்மார்த்தமானவை, இன்னும் சில உறவுகள் இறுதி மூச்சு வரை தொடரும் அனுபந்தமானவை. அத்தகைய ஒரு உறவுதான் கணவன் மனைவி. அந்த உறவை மேன்மைப்படுத்தும் விதமான சம்பவம் ஒன்றினை அண்மையில் காண நேர்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது நண்பகல் மணி 12- ஐ தாண்டிவிட்டது. அங்கிருந்து லோக்கல் பஸ் பிடித்து வடசேரி பஸ் நிலையம் வந்து சேரும்போது மதியம் ஒரு மணியாகிவிட்டது. இனி பஸ்ஸில் ஊர் சென்று இறங்கும் போது பிற்பகல் 2:30 மணிக்கு மேலாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக ஹோட்டலை நோக்கி நடந்தேன்.

அன்றைய தினத்தில் கொளுத்தும் வெயில்!. நடக்கும் போதே வியர்த்துக் கொட்டியது. பசி வேறு அதிகரிக்கவே, ஹோட்டலுக்குள் வேகமாக நுழைந்தேன். கை கழுவிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

'என்ன வேணும்!' , என்றார் சர்வர். சொன்னேன். சொன்ன பதார்த்தங்கள் அனைத்தும் வந்தது. சாப்பிட ஆரம்பித்தேன்.

அச்சமயத்தில் 60 வயதை தாண்டிய தம்பதியினர் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கணவரின் கையில் A4 size அளவுள்ள 'துணிப் பை'. துணிக்கடையில் துணி வாங்கியதற்காக கிடைத்திருக்கலாம். நாகர்கோயிலில் உள்ள ஒரு துணிக்கடையின் விளம்பரம் அதில் இருந்தது. பழசாகி கசங்கிய நிலையில் இருந்த அந்த கவரில் ஒரு தண்ணீர் பாட்டில் எட்டிப் பார்த்தது. இன்னும் சில பொருட்கள் பையில் இருப்பதற்கு அடையாளமாக பையானது சற்று வீங்கிப் போயிருநதது.

மெதுவாக நடந்து வந்து நான் சாப்பிடுக் கொண்டிருந்த மேஜையின் எதிர் பக்கத்தில் அமர்ந்தனர். மெலிந்த தேகம், குழிவிழுந்த கன்னம், நாலைந்து நாட்களாக ஷேவ் செய்யாத முகம், தலையில் வழுக்கையின் ஆரம்பம் இதுதான் அந்த கணவர். சட்டையையும் வேஷ்டியையும் துவைத்துப் போட்டிருந்தாலும் அவரின் ஏழ்மை அந்த துணியில் அப்பட்டமாகத் தெரிந்தது. வேலை செய்து முறுக்கேறிய கைகளில் வயோதிகத்தின் அடையாளமாக நரம்புகள் மட்டும் புடைத்துக் கொண்டிருநதது.

அந்தப் பெண்மணியின் கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டுமே! காதிலும் மூக்கிலும் கவரிங் நகைகள் பொலிவிழந்து நானும் இருக்கின்றேன் என்றது.

'என்ன வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டே சர்வர் அவர்கள் அருகில் வந்தார்.
'பிரியாணி எவ்வளவு?’ என்றார் அந்த பெரியவர்.

' ஃஆப் பிரியாணி 110 ரூபாய்’ -சர்வர்

அந்த கணவர், சட்டைப்பையில் விரலை விட்டு ரூபாயைப் பார்த்தார். பின் சர்வரிடம், 'குவாட்டர் பிரியாணி’ என்றார்.

'இரண்டா?’ இது சர்வர்.

'இல்லை, ஒன்று போதும்’ என்றார் கணவர். பேச்சிலேயே பசி மயக்கம் பெரியவரிடத்தில் நன்றாகத் தெரிநதது. மேஜையிலிருந்த ஒரு டம்ளர் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்தார். பிரியாணியை பெரியவர் முன் கொண்டு வந்து வைத்தார் சர்வர்.

தன் மனைவியிடம் அந்த பிளேட்டை நகர்த்தி வைத்து 'சாப்பிடு’ என்றார். மனைவியும் சாப்பிட ஆரம்பித்தார்.

பெரியவர் எச்சில் முழுங்குவது அவரின் தொண்டை காட்டிக் கொடுத்தது.

'அந்த இறைச்சித் துண்டுகளை சாப்பிடு’ என்று கரிசனத்தோடு தன் மனைவியிடம் கூறினார். மனைவி, கொஞ்சம் சாப்பிட்டு முடித்த பின், தன் கணவரிடம் பிளேட்டை நகர்த்தி சாப்பிடச் சொன்னார்.

தான் சாப்பிட்டு தன எச்சில்பட்ட மீதியை சாப்பிடச் சொல்லும் கணவன்மார்கள் மத்தியில், தன் மனைவியின் பசியை முதலில் போக்கி, பின் தன் பசிக்காக சாப்பிட்ட அந்த கணவர் உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவராகத் தெரிந்தார்.

படபடவென்று சாப்பிட்டு முடித்தார்.

பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போன்ற மகிழ்ச்சி அந்த பெண்மணியின் முகத்தில். தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்து விட்ட திருப்தி அந்த கணவனிடம்.

மனைவி கணவரைப் பார்த்தார். ‘வயிறு நிரம்பிவிட்டதா?’ என்று கேட்பதாய் இருந்தது அது. பதிலுக்கு கணவரும் ஆம் என்று தன் தலையை ஆட்டினார்.

என்ன ஒரு புரிந்து கொள்ளல்!

கண்டிப்பாக இருவருக்குமே வயிறு நிறைந்திருக்காது. ஆனால் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு இருக்கிறதே! அது அளப்பரியது.

முதலிரவில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டு காமனை வென்றவர்கள், இன்று தங்கள் பார்வையாலேயே ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டார்களே! இந்த அன்புதானே உண்மையான தாம்பத்யம்! இந்த சுகத்திற்கு ஈடு இணை உண்டா? 'அந்த உறவில்’ கிடைக்காத இன்பம் இந்த ஒரு பார்வையிலேயே கிடைத்து விட்டதே!

ஒரு நாள் மட்டுமாவது அந்த தம்பதியரை பெரிய international ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பியதை சாப்பிட வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தேன்.

இருவரும் கை கழுவி விட்டு வந்தனர். நானும் அவர்களின் பின்னால்!

பெரியவரின் முதுகைத் தட்டினேன். திரும்பினார்.

'ரூபாயை பத்திரமாக வச்சிக்குங்க! நீங்க கை கழுவ கீழே குனியும் போது, உங்கள் பாக்கெட்டிலிருந்து இது கீழே விழுந்து விட்டது’ என்று  ரூபாயை நீட்டினேன்.

'தம்பி! அது என் பணமில்லை!’ என்றவர், பில்லுக்கான பணத்தை கட்டிவிட்டு, தன் மனைவியுடன் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அவரின் தன்மானத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டே நானும் வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். மதிய வெயிலைக் காட்டிலும் அவரின் தன்மானம் என்னை அதிகமாக சுட்டெரிக்க ஆரம்பித்தது.

]]>
காதல், love, தாம்பத்யம், true love, love story, காதல் கதை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/11/w600X390/images_1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/what-is-true-love-3208202.html
3208243 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘வெள்ளை நகரம்’ புதுச்சேரி ஆரவிந்தர் ஆசிரமம்! ஜெபாலின் ஜான் Tuesday, August 6, 2019 06:23 PM +0530  

புதுச்சேரியில் இருக்கும் அரவிந்தர் ஆசிரமம் சர்வதேச புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, இங்கு தங்கியிருந்து தியானம் செய்து மனதை அமைதிப்படுத்திச் செல்கின்றனர். அரவிந்தர் ஆசிரமம் உருவான வரலாறு இது தான்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிருஷ்ண தனகோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியினருக்கு மகனாக 15.8.1872-இல் பிறந்தவர்  ஸ்ரீ அரவிந்தர். 

தனது  ஐந்து வயதில் மூத்த சகோதரர்கள் விநய பூஷன்,  மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார்.  1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார்.  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார்.  தாமரையும், குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார்.

1893- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு அரவிந்தர் திரும்பியபோது அவர் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளானது. அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தனகோஷ் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.

பின்னர் பரோடாவில் இருந்து திரும்பிய அவர், கொல்கத்தாவில்  வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பரோடவில் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டு உணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907, 1908 ஆகிய இரு  ஆண்டுகளில் இருமுறை ஆங்கிலேய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.

1904- ல் பிரணாயாமம் பயிலத் தொடங்கிய போது சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மிகக் கண்ணோட்டத்திலும் அரவிந்தர் பார்க்கத் தொடங்கினார். 

1909- ல் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910- ல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதில் இருந்து தப்பிக்க அரவிந்தர், அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையின் ஒரு பகுதியான சந்திர நாகூருக்கு (மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது) தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் புதுச்சேரிக்கு வந்தார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.

அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மிக இதழில் (1914 - 1921) எழுதினார். 

அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன் வைத்தார்.

1910- ல் அரசியலில் இருந்து விலகிய பின்னர்,  புதுச்சேரியில் குடியேறிய அரவிந்தரும், அவரைச் சார்ந்த குழுவாலும் அரவிந்தர் ஆசிரமம் உருவாக்கப்பட்டது.  24.11.1926- ல் அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மிக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மிக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை" க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார். ஆகையால் இந்த நாள் பொதுவாக ஆசிரமத்தை நிறுவும் தினமாக அறியப்படுகிறது. 

அரவிந்தர் ஆசிரமம் புதுச்சேரியில் மட்டுமே உள்ளது.  இதற்கு எந்த கிளைகளும் இல்லை. (ஸ்ரீ அரவிந்த் ஆசிரமம் - தில்லி கிளை ஒரு தனி அமைப்பு ஆகும். அது வேறு ஒரு நிர்வாகத்தால் இயக்கப்படுகிறது.) 

ஸ்ரீ அரவிந்தரால் நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பு ‘ஆரோவில்’ என்பதாகும். இது அன்னை நிறுவிய ஒரு சர்வதேச நகரமாகும். இது மனித ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

ஸ்ரீ அரவிந்தர் தனது பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் தியானத்தில் கழித்தார். 1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்திருந்த மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் அவருடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விரும்பியபடி செய்ய அவர்கள் சுதந்திரமாக இருந்தனர். அன்னை மற்றும் பிரஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்ட் 1914-இல் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து ஒரு மாதாந்திர ஆய்வுகளை வெளியிட்டனர். 

ஆனால், முதல் உலகப் போர் வெடித்த பிறகு, அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்தரே இந்த ஆய்வு முழுவதிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வசிக்கும் இளைஞர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றார்.  1920- ஆம் ஆண்டு ஏப்ரலில் அன்னை புதுச்சேரிக்கு திரும்பினார். அன்னை தன் வாழ்நாள் முழுமையையும் ஆசிரமத்திற்காகவும், ஸ்ரீஅரவிந்தருக்காகவும் ஒப்படைத்தார்.

1926-இல்  ஆசிரமத்துக்கு முறையான வடிவம் கொடுக்கப்பட்ட பின்னர், அது விரைவான வளர்ச்சியைக் கண்டது. 1934- ல் கூட தேவையான வசதிகள் இன்றியே ஆசிரமம் இருந்தது.  இந்த ஆண்டுகளில் அன்னைக்கு ஒரு வழக்கமான பழக்கம் இருந்தது. அவர் தினமும் காலை 6 மணியளவில், பால்கனியில் நின்று தனது ஆசீர்வாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தினமும் தனது நாளை தொடங்குவார்.

ஆசிரமத்திலுள்ள பக்தர்கள் காலையில் அன்னையின் ஆசி பெற்று, பின் தியானம் உள்பட பல யோகாசனங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.  பல துறைகளுடன்  ஆசிரமம் பெருவளர்ச்சி பெற்றது. பல துறைகள் அவற்றில் செயல்படுகின்றன. சாப்பாட்டு அறையிலிருந்து தொடங்கி ‘ரொட்டி சுடும் இடம், லாண்டரி, அச்சகம், விளையாடுமிடம், கலை நிலையம் (Art gallery), நெற்பயிர் விளையும் பூமி, பால் பண்ணை, கோழிப்பண்ணை, தச்சுப் பட்டறை, நர்ஸிங் ஹோம், விடுதிகள், எம்ராய்டரி, பைண்டிங், சிமெண்ட் கான்க்கிரீட் தொழிலகம், பூந்தோட்டம், சாவி செய்யும் இடம், பர்னிசர் செய்யும் இடம், மோட்டார் ஒர்க் ஷாப், பட்டறை, காகித நிறுவனம், பல் வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, கராத்தே பயிற்சி நிலையம், நூல் நிலையம், போட்டோகிராப், புத்தக விற்பனை நிலையம், சிற்றுண்டிச் சாலை உள்பட 52 துறைகளை கொண்டது ஆசிரமம்.

துறையின் தலைவர்கள் காலை அன்னையை சந்தித்து அவருடைய ஆசீர்வாதங்களையும் உத்தரவுகளையும் பெற்றுக்கொண்டு பணியைச் செய்வது வழக்கம். காலை 10 மணியளவில் அன்னை மீண்டும் அனைவரையும் சந்திப்பார். மாலை 5.30 மணியளவில் அவர் தியானம் மேற்கொள்வார். மேலும், ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் ஆண்டுதோறும் நான்கு முறை பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவர். ஆசிபெற வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை புரிந்தனர்..
  
ஸ்ரீ அரவிந்தருடைய அமைதி நிலவும் ஆத்மீக சூட்சும உடலின் சக்தி புதுச்சேரியை சுற்றி ஏழுமைல் வரை பரவியுள்ளது என்று புதுச்சேரிக்கு வருகை புரிந்து அப்போதைய பிரதமர்  ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆசிரமத்தில் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது சட்டம்.  ஒருவரது பிறந்த நாளை அன்னை விசேஷமாகக் கருதுகிறார். ‘‘ஒவ்வொரு பயிரும் குறிப்பிட்ட காலத்தில் பலன் தருவதைப் போல் தங்கள் பிறந்த நாளன்று மனிதனுடைய ஆத்மா ஜீவனின் ஆழத்திலிருந்து லேசாக மேலே வந்து மலர்ந்து பிரிந்து தெய்விக உணர்வைப் பெரிதும் பெற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இருக்கிறது’’ என்று அன்னை கருதுகிறார். பிறந்த நாள் கொண்டாடுபவரை தனியே சந்தித்து சிறப்பாக வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வது அன்னையின் வழக்கம்.

ஆசிரமம் என்று இப்போது நாம் சொல்வது ஒரே கட்டடமாகத் தெரிகிறது. 4 கட்டங்களை ஒருங்கிணைத்து, அதை ஒரே இடமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்கு ஸ்ரீ அரவிந்தர் வந்தவுடன் தற்சமயம் ஜனவரி முதல் தேதி காலண்டர் கொடுக்கும் அறையில் ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்தார். கொஞ்ச நாள் கழித்து கிழக்குப் பகுதியில் ‘ஸ்ரீஅரவிந்தர் அறை’ என பக்தர்கள் இப்போது தரிசிக்கும் இடத்துக்குச் சென்றார்.  இது இப்போது பிரதான கட்டடம் என அழைக்கப்படுகிறது. 

இதன் கிழக்குப் பகுதியில் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்த அறைகளும், தியான மண்டபமும் உள்ளன. மேற்குப் பகுதியில் வாசக சாலை, செய்திப் பத்திரிகை அறை, பழ அறை, பொருள் வைப்பு அறை, நூல் வெளியீட்டுத் துறை, வரவேற்பு அறை, பிரதான வாயில் ஆகியவையுள்ளன. வடக்குப் பகுதியில் அன்னையின் கார் நிற்குமிடமும், பல ஆண்டுகளாக அன்னை தினமும் காலையில் தரிசனம் கொடுத்த பால்கனியும் உள்ளன. 

ஆசிரமக் கட்டடத்தின் நடுவில் ஸ்ரீ அரவிந்தர் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இருக்கிறது. அதே சமாதியில் அன்னையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சமாதியின் பக்கத்தில் கொன்றை மரம் ஒன்று 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டு நிழல் தருகிறது. அன்னை அதை ‘Service Tree’ என்று அழைப்பார். சமாதி கட்டடத்தின் நடுவேயிருப்பதால் அன்னை தன் அறையில் தன் நாற்காலியை மேற்கு முகமாகப் போட்டு உட்கார்ந்திருந்தார். சமாதியை நோக்கியிருக்க வேண்டுமென்பதற்காக அப்படிச் செய்தார் அவர்.

வரவேற்புப் பகுதிக்கு அடுத்தாற்போல் ஒரு பெரிய அறையும், அதில் ஸ்ரீ அரவிந்தருடைய 3 படங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஸ்ரீ அரவிந்தருடைய படம், அன்னை முக்கியமாகக் கருதுவது. ‘‘அதற்கு சக்தி அதிகம்’’ என்று சொல்வார் அன்னை. இருபுறங்களிலுமுள்ள படங்கள் ஸ்ரீ அரவிந்தர் சமாதியானபின் எடுக்கப்பட்டவை. ஒரு சாதகர் ஆசிரமத்தின் உள் செல்வதற்கு முன் இப்படத்தை வணங்கி எழுந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் அந்தப் படத்திலிருந்து உயிரோடு வெளியே வந்ததைக் கண்டு அன்னையிடம் சொன்னார். ‘‘அந்தப் படம் சக்தி வாய்ந்தது’’ என அன்னை விளக்கினார்.

ஆசிரமத்திலுள்ள அமைதி சிறப்பானது. ஆசிரமத்துக்கு வெளியே சாலையில் செல்லும்போது கூட அந்த அமைதி தெரியும். ஆசிரமத்தை நன்கு அறிந்தவர் ஒருவருடைய கண்ணைக் கட்டிப் போட்டுப் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று ஆசிரமத்திற்குத் திரும்பி அழைத்துக் கொண்டு வந்தால், நேரில் காண்பது போல் அங்குள்ள அமைதி அது ஆசிரமம் என்பதைக் காட்டிவிடும்.

புதுச்சேரிக்குள் நுழையும்போது ஒவ்வொரு கட்டடங்களும் ஆசிரமத்தின் வளர்ச்சி, பெருமைகள் குறித்து எடுத்துக்கூறும். இப்போது ஆசிரமத்திற்கு சொந்தமான 400-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். ஆனால் மக்கள் அதிகம் தேடி வருவது ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மையமே ஆகும். அவர்கள் வாழ்ந்த இல்லமே - "ஆசிரம பிரதான கட்டடம்" அல்லது பொதுவாக "ஆசிரமம்" என்று அழைக்கப்படுகிறது.

அவ்வில்லத்தின் உள்ளே ஒரு மரத்தாலான நிழல் முற்றத்தில், மலர் மூடப்பட்ட "சமாதி" உள்ளது. இந்த வெள்ளை பளிங்கு சன்னதியின் இரண்டு தனி அறைகளில், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்போது, ஆன்மிக தேடல்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் புதுச்சேரி முக்கிய இடமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். பார்வையாளர்கள் பார்வையிடும் நேரம் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையும்,  மீண்டும் பிற்பகல் 2  முதல் மாலை 6 மணி வரையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதி ‘வெள்ளை நகரம்’ என அழைக்கப்படுகிறது.

 

]]>
அரவிந்தர் ஆசிரமம், அன்னை, பாண்டிச்சேரி, arabindho ashram, annai, pondichery, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/ARAVINDAR_ASARAM-1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/arabindho-ashram---white-city-of-pondichery-3208243.html
3208223 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தஞ்சை கோபால்சாமி அய்யங்கார் காஷ்மீர் பிரதமராக இருந்த வரலாற்றையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமே! RKV Tuesday, August 6, 2019 04:33 PM +0530  

தஞ்சாவூரில் 1882 ஆம் ஆண்டு பிறந்தவரான கோபால்சாமி அய்யங்காருக்கு இந்திய அரசியல் களத்தில் மாபெரும் பங்கு உண்டு.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் தமது பள்ளிப்படிப்பை வெஸ்லி பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை பிரஸிடென்சி கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரியிலும் முடித்தார். படிப்பை முடித்து விட்டு 1904 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் சென்னை பச்சையப்பா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஆனால், அது நீடிக்கவில்லை.

அய்யங்கார் 1905 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் சிவில் சர்வீஸ் பணியில் இணைந்து விட்டார். அன்று முதல் 1919 ஆம் ஆண்டு வரை துணை ஆட்சியராகப் பணியாற்றிய பின் 1920 ஆம் ஆண்டு பதவிஉயர்வு பெற்று மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆனார்.

அது மட்டுமல்ல, 1921 ஆம் ஆண்டு முதல் பதிவாளர் ஜெனரலாகவும் , பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவமும் கூட இவருக்கு உண்டு.

இது கோபால்சாமி அய்யங்காரின் வாழ்வில் முதல் பாகம். அவருக்கு இரண்டாம் பாகமும் உண்டு.

அதில் அவர் தேர்ந்த அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டார். அப்போது தான் காஷ்மீர் பிரதமர் பதவி கோபால்சாமி அய்யங்காரைத் தேடி வந்தது. 1937 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் பிரதமரானார் கோபால்சாமி அய்யங்கார். தொடர்ந்து இந்திய விடுதலைக்குப்பின் நேரு தலைமையில் அமைந்த சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் அமைச்சராகவும் செயலாற்றினார். அன்றைய இந்தியப் பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி ரயில்வே அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தார்.

இந்திய ஆட்சிப்பணிகள் அடிப்படையிலும் சரி, அரசியல் பணிகள் அடிப்படையிலும் சரி இத்தனை பழுத்த அனுபவம் கொண்டவரான கோபால்சாமி அய்யங்காரின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த நேரு அவரை, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் 13 பேர்கள் கொண்ட ஒரு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆக்கினார். இப்படித்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவிஅ உருவாக்கிய குழுவின் தலைவர் ஆனார் கோபால்சாமி.

1948 ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேச ஐநாவுக்குச் சென்ற குழுவில் இந்தியா சார்பில் தலைமை தாங்கியவர் இவரே.

அதுமட்டுமல்ல, 1952 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேச இவரையே அன்றைய பிரதமர் நேரு நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரையிலும் காஷ்மீர் உட்பட இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து இந்திய மாகாணங்கள் விவகாரத்தையும் கவனித்து வந்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கத் தயாரான பிரதமர் நேருவுடன், படேலுக்கு கருத்து வேறுபாடு தோன்றத் தொடங்கியதும் இந்தப்புள்ளியில் தான். படேலுக்கு அதில் விருப்பம் இருந்திருக்கவில்லை. எனவே தான் காஷ்மீர் விவகாரங்களைக் கையாள கோபால்சாமி அய்யங்காரை நியமித்தார் நேரு என்கிறார்கள் பழைய வரலாறு அறிந்தவர்கள்.

இப்படி இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்திய அரசியல் நடவடிக்கைகளில் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தவரான திவான் பகதூர் சர் நரசிம்ம அய்யங்கார் கோபால்சாமி அய்யங்கார் தமது வாழ்வின் கடைப்பகுதியில் சென்னையில் வாழ்ந்தார்.

இவருக்கு ஜி. பார்த்தசாரதி என்றொரு மகனும், மகள் ஒருவரும் உண்டு. மகன் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த கோபால்சாமி அய்யங்கார் 1953 ஆம் ஆண்டு தமது 71 ஆவது வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.

]]>
article 370, Thanjai N. Gopalaswami Ayyangar, the Indian Constitution, தஞ்சை என் கோபால்சாமி அய்யங்கார், இந்திய அரசியல் சாசனம், 370 அரசியல் சாசன சட்டப்பிரிவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/gopalsamy_ayyangarr.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/thanjai--n-gopalaswami-ayyangar-who-drafted-the-article-370-of-the-indian-constitution-3208223.html
3208232 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு ஆன்மிகவாதி சொன்ன அறிவுரை! Tuesday, August 6, 2019 04:21 PM +0530 'மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்' என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும்,  'மக்களால்... மக்களுக்காக... மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என்று  ஆப்ரகாம் லிங்கனும் மக்களாட்சியை வரையறுத்தனர். ஆனால் இன்றைய மக்களாட்சியில் பொதுமக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கோ, தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கோ அனுமதி இல்லை!   

ஏ.சுப்பராயலுவைத் தொடர்ந்து, சி.இராஜகோபாலாச்சாரி,  த.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பூ.ச.குமாரசாமி ராஜா, கே.காமராஜர், எம். பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை என நம் தமிழகத்தை ஆண்டவர்களின் நல்லாட்சிப் பட்டியல் நீளும்.  அவர்கள் இன்றைக்கும் புகழ்ந்து பேசப்படுவதற்குக் காரணம், அவர்கள் அரசியலை தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி நல்லாட்சி செய்ததால்தான். 

அரசியல்வாதியாக வேண்டும் என்பவர்கள் கவனத்திற்காக தத்துவ ஞானி ஓஷோ ஓர் அற்புதமான பதிவை முன்வைத்துள்ளார். 298 சூத்திரங்கள் உள்ள 'அஷ்டாவக்ர-ஸம்ஹிதா'வில் 133 முதல் 163 சூத்திரங்கள் சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் இந்தப் பதிவு உள்ளது. 'நான் குடும்பஸ்தனாக, சுகங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கனவு கண்டேன். பிறகு எழுத்தாளர், அரசியல்வாதி என்றெல்லாம் வளர்ச்சி பெற விரும்பினேன். 

எந்தத் துறையிலும் எனக்கு வெற்றி குறைவாகவும் தோல்வியே அதிகமாகவும் கிடைத்தது. கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன். நான் சேரவேண்டிய இடம் எது'  என்று  ஒருவர் தத்துவ ஞானியைப் பார்த்துக் கீழ்வருமாறு  கேட்கிறார் (அஷ்டாவக்ர மகாகீதை, பக். 70,73,74).   

அதற்குத் தத்துவஞானி சொல்கிறார்: 'உன் கனவுகள் பலிக்கவில்லை என்பது கடவுளின் அருள்தான்! அவை பலித்திருந்தால் நீ கடவுளை என்றுமே நினைத்திருக்க மாட்டாய்.  தோல்வியின் வேதனை தூண்டுகோலாக அமைந்து மனிதனை சத்தியப் பாதையில் இட்டுச்செல்லும்.  கனவுகள் பலித்தால் மனிதன் உலக வாழ்க்கையில் அழுந்திப் போகிறான். பிறகு அவன் சத்தியத்தை ஏன் தேடிப்போவான்?  

அகங்காரம் அதிகரித்தால் கடவுளை நோக்கிப் பயணிப்பது கடினமாகிவிடும். பாவி கடவுளை அடைய முடியும். ஆனால், திமிர் பிடித்தவனால் அடைய முடியாது. நீ தோற்றது நல்லதே. உன் தோல்வியில் கடவுளின் வெற்றி அடங்கியுள்ளது. நீ (நான்)அழிவதால், அவர் (கடவுள்) தோன்ற வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர்  அரசியல்வாதியாக முடியவில்லை என்பதற்குக் காரணம், கடவுளுக்கு அவன் மீது மிகுந்த கருணை இருப்பதுதான். எந்த அரசியல்வாதியும் சுவர்க்கத்திற்குப் போக முடிந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. அரசியல் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையுமன்று. அரசியலில் நடக்கும் அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், சதிகள், கபடங்கள் முதலியவை நரகத்துக்கே பொருத்தமானவை.

ஒருவர் அரசியலில் சேர்ந்து பாவச் செயல்கள் காரணமாக நரகம் செல்ல நேர்ந்தால் ஒரு பிரச்னை. அங்கு அவருக்கு முன்னால் சென்ற ஏராளமான அரசியல்வாதிகளால் ஒரே அடைசலாக இருக்கும். அங்கும் அவர்கள் பலவிதமான மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். நரகத்தின் ஆட்சியைக் கைப்பற்றவும் முயல்வார்கள். அவர்களின் பதவி ஆசை நரகத்துக்கும் அவர்களுடன் வருகிறது' என்கிற ஓஷோ, மேலும்  ஒரு குட்டி நிகழ்ச்சியைக் கூறி விளக்குகிறார்:

"ஒருமுறை சித்திரகுப்தனின் தப்புக் கணக்கால் ஓர் அரசியல்வாதி சுவர்க்க வாசலுக்கு வந்துவிட்டார்.  அதே சமயம் இரண்டு சாதுக்களும் இறந்து சுவர்க்கத்தை வந்தடைந்தனர். சுவர்க்கக் காவலர்கள் அவர்களை ஓரமாக ஒதுங்கிக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அரசியல்வாதியை வரவேற்கச் சென்றனர். சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. சாரங்கி,  தபேலா முதலிய இசைக்கருவிகள் முழங்கின. தேவகன்னியர் நடனமாடினர். மலர்மாரி பொழியப்பட்டது.

சாதுக்கள் வருத்தப்பட்டனர். 'பாவியான இவன் மண்ணுலகில் ஆரவாரமாக வாழ்ந்தது போலவே இங்கும் கோலாகலமாக இப்படி வரவேற்கப்படுகிறானே' என்று வேதனையடைந்தனர். நம்மை சுவர்க்க அலுவலர்கள் காத்திருக்கும்படி சொல்கிறார்களே என்று திகைத்தனர். 

அரசியல்வாதியை வரவேற்ற தேவர்களின் கூட்டம் அப்படியே முன்னேறிவிட்டது. அவர்கள் சாதுக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சாதுக்கள் வாயில் காப்பவரை அணுகி, 'இது என்ன தலைகீழாக இருக்கிறதே. ஏதாவது தப்புக் கணக்கா? எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்புக் கொண்டாட்டம் கவனக்குறைவால் அந்த ஆளுக்கு அளிக்கப்பட்டுவிட்டதா? அந்த ரகசியத்தை எங்களுக்குத் தெரிவி' என்று கேட்டனர்.

வாயில் காப்பவர் ஆறுதல் கூறுகிறார்: 'சாதுக்களே, பதற்றப்படாதீர்கள். உங்களைப் போன்றவர்கள் எப்போதும் சுவர்க்கத்திற்கு வந்தபடிதான் உள்ளனர். ஓர் அரசியல்வாதி இங்கு வருவதோ இதுதான் முதல் தடவை. எனவேதான் இத்தனை  கொண்டாட்டம். எங்கோ, ஏதோ தவறு நடந்துவிட்டது. இதை இனி மாற்ற முடியாது. 

சாதுக்கள் இங்கு வருவது வாடிக்கை. இதில் விசேஷமில்லாததால் வரவேற்பில்லை' என்று  கூறும் தத்துவஞானி, தன்னிடம் கேள்வி கேட்டவரைப் பார்த்து, "உலக முயற்சிகளில் தோல்வியை ஒரு வரமெனலாம். தோற்றவனுக்கு தெய்வம் துணை. வென்றவன் திமிர் பிடித்து யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டான். அதிர்ஷ்டவசமாக நீ தோற்றாய். அதனால்தான் என்னைத் தேடி வந்தாய். 

இப்போது இங்கே நீ வந்துவிட்டதால், 'நான்' என்னும் உணர்வை உதறிவிடு. 'நான்' என்பதைக் கைவிட்டதும் நீ போய்ச் சேரவேண்டிய இடம் தெளிவாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் நாட்டம், அரசியல் ஆர்வம், எழுத்து மூலம் புகழ், ஆசை ஆகியவை மிகச் சிறு அளவிலாவது உன் மனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். 'நான்' என்னும் உணர்வு நீங்கினால் அந்தக் கறைகளும் மறைந்துவிடும்' என்கிறார் ஓஷோ. அதனால்தானோ என்னவோ பலரும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்!

- இடைமருதூர் கி. மஞ்சுளா

]]>
osho, politics, politicians https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/28/w600X390/Osho-guru-Rajneesh.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/osho-tells-about-politicians-3208232.html
3208222 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் உங்கள் பற்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? கோவை பாலகிருஷ்ணன்  DIN Tuesday, August 6, 2019 03:14 PM +0530
தேரையர் அருளிய பற்பொடி...சித்த மருத்துவம்

பற்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் முதுமொழி 'ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி' என்பதுதான். நமது முன்னோர்கள் பல் துலக்க இந்த இரண்டு மரத்தின் குச்சிகளைத்தான் பயன்படுத்தி வந்தனர் என்பதாகவே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் இரு குச்சிகளைத் தாண்டிய பற்பொடிகளையும் நம் முன்னோர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர். அவற்றை பற்பொடி என்பதை விடவும் ஒரு மருந்துப் பொருளாக கருதி பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

சித்தர் பெருமக்கள் இத்தகைய பல்வேறு அரிய பற்பொடிகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகவே அருளியிருக்கின்றனர். இத்தகைய பற்பொடிகளை தொடர்ந்து பயன் படுத்தினால் நமது பற்கள் வலிவும், பொலிவும் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தேரையர் அருளிய பற்பொடி ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் 'தேரையர் வைத்திய காவியம்' என்னும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

"போகுந் தந்த வியாதிக் கொருமுறை
ஆகுஞ் சீன மரக்குடன் துத்தமும்
தாகுந் தான்றி தனிக் கடுக்காயுடன்
வாகு மாசிக்காய் வாகாய் விராகனெடெ.
எடுத்து கும்ப மெழிலா யரைத்துமே
கடுத்து மண்டலங் கருதியே தேய்த்திட
அடுத்த தந்த மசையும் பல் லுக்குத்து
முடுத் தப்பாமல் முடுகியே யோடுமே."

சீன அரக்கு, மயில் துத்தம், கடுக்காய், மாசிக்காய் ஆகியவற்றை தலா ஒரு விராகன் எடை அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள பற்பொடி தயார். இந்த கலவையைக் கொண்டு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பல் அசைவு, பல் வலி, முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். 

இந்த சரக்குகள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

நன்றி - சித்தர்கள் ராச்சியம்

'ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்'
 

]]>
tooth care, teeth, mouth wash, mouth hygiene https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/White-meat-such-as-chicken-as-bad-for-cholesterol-levels.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/tooth-care-tips-3208222.html
3208192 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் காஷ்மீர்: 370 சட்டப்பிரிவு ஏன் உருவாக்கப்பட்டது? ரத்தாவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? C.P.சரவணன், வழக்குரைஞர் Tuesday, August 6, 2019 11:21 AM +0530

 

காஷ்மீர் தொடர்பான மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமித் ஷா, அதில்.

1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து

2) சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்படும்

3) லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்

காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் மாற்றப்படும். காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370 அமலுக்கு வந்தது எப்படி?

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார். அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது. 1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 - சொல்வதென்ன?

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370 ன் விளைவுகள் என்ன?

 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.
 • இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் 'நிரந்தர குடியாளர்கள்' யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அரசமைப்பில் இருந்து சட்டப்பிரிவு 370- நீக்குவது சாத்தியமா?

சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்றினை 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பில் இருந்து அதனை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறியது.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து கூறுகையில், "இது நீதிமன்றத்தின் வேலையா? சட்டப்பிரிவு 370-ஐ வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்திடம் கேட்க முடியுமா? இது நீதிமன்றத்தில் வேலை இல்லை" என்று கூறினார்.

அதே 2015ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியது. "இடைக்கால ஏற்பாடு" என்று அரசமைப்பின் சட்டப்பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நிரந்தரமானது என்று தெரிவித்திருந்தது.

சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது பிரிவு 35A- வை பாதுகாக்கிறது. மற்ற மாநிலங்களை மாதிரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ஓரளவுக்கு அதன் இறையாண்மையை பராமரித்து வந்ததாக கூறியது.

விளைவுகள்

 • இனி மத்திய அரசு இயற்றும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும்.
 • சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதி மக்களும் சொத்துகள் வாங்க முடியும்
 • சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை திருமணம் செய்தாலும் சொத்துரிமை கோர முடியும்

 

]]>
Article 370 , காஷ்மீர் 370, சிறப்பு அந்தஸ்து, Jammu-Kashmir https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/kashmir_4.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/kashmir-news-live-what-is-article-370-3208192.html
3208160 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் வாழ்வை மாற்றிய விடுதலை புகழ் செல்வம் Tuesday, August 6, 2019 10:38 AM +0530  

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து கஸ்தூரி, வெங்கடேசன்  தம்பதி மற்றும் அவர்களின் பதிமூன்று வயது இளைய மகன் சக்திவேலையும் மீட்டனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்டு ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அக்குடும்பம், இறுதியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அன்று  கொத்தடிமையிலிருந்து வெளியேறியது. தொழிலாளர்கள் சிலர் செங்கல்சூளையில் கொத்தடிமைகளாகச் சிக்கி இருக்கும் தகவல் தெரிய வரவே வேலூர் வருவாய் கோட்டாட்சியர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு நாங்கள் செல்லும்போது அங்கு பெரும் அமைதி நிலவியது. மூன்று ஆண்டுகள் கழித்து முதன்முறையாகத் தனது குடிசையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடக் கஸ்தூரி அப்போது ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். தன் குடும்பம் கடந்து வந்த பாதை மற்றும் மீட்கப்பட்ட பின்னர் கழித்த ஆறு மாத அனுபவம் ஆகியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் தன் குடும்பத்தை யாரும் அச்சுறுத்தவில்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'இந்நேரம் நாங்கள் மட்டும் செங்கல் சூளையிலேயே இருந்திருந்தால், இந்த மாதிரிப் பண்டிகையையெல்லாம் குடும்பத்துடன் கொண்டாட முடிந்திருக்காது. எங்கேயாவது இந்நேரம் செங்கல் அறுத்துக் கொண்டிருப்போம்.' என்கிறார் கஸ்தூரி.

கஸ்தூரியும் தன் கணவர் வெங்கடேசனும் தங்களது மூத்த மகள் திருமணத்திற்காக ஒரு செங்கல் சூளை முதலாளியிடம் முன் பணம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குக் கொத்தடிமைகளாக இருக்க நேரிட்டது.

செங்கல் சூளையில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இம்மாதிரி கொடுமைகள் நடக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலாளியின் கோபமான குணம் அவரிடம் மீதமுள்ள கடன் தொகை எவ்வளவு என்று கேட்க முடியாத அளவிற்கு அவர்களிடம் பயத்தை உண்டாக்கியது. கஸ்தூரி, வெங்கடேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்தாலும் மூவருக்கும் சேர்த்து வார இறுதியில் ரூபாய் 500 மட்டுமே முதலாளி வழங்கியுள்ளார். அப்பணம் குடும்ப செலவிற்குக் கூட போதாமல் சில நாள் அவர்கள் பட்டினியிலும் கிடந்துள்ளனர்.

'சுத்தமாகப் பணம் இல்லாத நிலையில், என் மகனை வயிறு முழுக்க தண்ணீரைக் குடித்துவிட்டுத் தூங்கு என்று சொன்ன நாட்களும் இருக்கிறது.' என்று வருத்தமுடன் நினைவு கூறுகிறார் கஸ்தூரி.

'ஆனால் இன்று நல்ல சத்தான உணவை வயிறு நிறையச் சாப்பிடும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. கறி, மீன் என்று உடம்புக்குச் சத்தான பொருட்களை வாங்க உண்ண முடிகிறது. செங்கல் சூளையில் அரிசிக் கஞ்சி குடித்ததை விட இப்போது எவ்வளவோ மேல்' என்கிறார் அவர்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் வேலை இரவு 7 மணி வரை நீடிக்கும். இதனால் அவர்கள் உடல் நலம் கடுமையாக பாதித்த போதிலும் மருத்துவமனைக்குச் செல்ல அவர்களுக்கு முதலாளி அனுமதி வழங்கவில்லை. மழையோ வெயிலோ அவர்களிடம் உழைப்பைச் சுரண்டுவதே முதலாளியின் நோக்கமாக இருந்தது. கஸ்தூரி தூக்கி வளர்த்த தன் சகோதரியின் மகள் இறந்தபோதும் கூட தன் கிராமத்திற்குச் சென்று இறுதிச் சடங்கு செய்து விட்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அவர் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.

போதுமான உணவு, தண்ணீர், ஓய்வு இல்லாமலும் குடும்ப சுக தூக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று வர முடியாமலும் இச்சிறிய குடும்பம் செங்கல் சூலையிலேயே தங்கிக் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் உயிர் மட்டுமே எஞ்சி இருந்தது.

அருகில் வசிப்பவர்களுடன் பேசக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது. அந்த முதலாளி தொழிலாளர்களை லாவகமாகக் கையாண்டு அவர்களின் உழைப்பைச் சுரண்டுவார். அவர்கள் கொத்தடிமைகளாகச் சிக்கி ஓராண்டாக இருக்கும் வேளையில் அருகில் இருக்கும் செங்கல்சூளையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி அங்கிருந்த கொத்தடிமைகளை மீட்டுள்ளனர். ஆனால் கஸ்தூரியின் முதலாளி அவர்களைப் பாதுகாப்பது போன்று பாசாங்கு செய்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் செல்லும்வரை அருகில் இருக்கும் ஒரு தனி அறையில் அடைத்து வைத்துள்ளார். அவர்கள் வெளி வந்த பின்னரே அங்கு நடந்ததையும் அவர்களும் அதிகாரிகளின் கண்ணில் பட்டிருந்தால் மீட்கப்பட்டு இருப்பர் என்று அருகில் இருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த முதலாளி சக்திவேலையும் பள்ளியிலிருந்து நின்று விடும் படி கூறிய நிலையில் பள்ளி செல்வதை விரும்பிய அவர் அதற்கு மறுத்துவிட்டார். இருப்பினும் சக்திவேல் பள்ளி செல்வது மட்டுமல்லாமல் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்ய வேண்டி இருப்பதால் பள்ளியிலிருந்து நின்று விடலாம் என்று அவராகவே முடிவு செய்தார். ஒரு சிறுவனாக இருக்கும்போதே குடும்ப சூழ்நிலையை உணர்ந்த அவர் செங்கல் சூளையில் வேலை செய்வதைவிட இறந்துவிடலாம் என்றும் எண்ணியுள்ளார்.

இன்று மீண்டும் பள்ளிக்குச் செல்லும் சக்திவேல் நன்றாகப் படித்து காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். தன் தந்தையைப் போலவே அதிர்ந்து பேசாத அவர் தன் குடும்பத்திற்குச் சிறந்த எதிர்காலம் அமைத்துத்தரத் துடிப்புடன் உள்ளார். கொத்தடிமையில் சிக்கியிருந்த கசப்பான அனுபவம் அவரை நன்றாகப் படித்து முடித்து சட்டத்தை நிலை நிறுத்தி இது போன்ற குற்றங்களை தடுக்கும் ஒரு காவல் அதிகாரியாக வர வேண்டும் என்று சிந்திக்க வைத்திருக்கிறது.

'அன்றே நான் தைரியத்துடன் பேசியதால்தான், இன்று சுதந்திரமாக இருக்கிறோம்' என்று கூறுகிறார் கஸ்தூரி. அவர்கள் துன்புற்றது போலவே துன்புறும் மற்றவர்களைக் காப்பாற்றக் குரல் கொடுப்பேன் என்கிறார் அவர்.

தற்போது கஸ்தூரியும் வெங்கடேசனும் கல் உடைப்பது, மரம் வெட்டுவது, சுமைகளை ஏற்றி இறக்குவது போன்ற கூலி வேலைகளுக்கு சென்று தங்கள் குடும்பத்திற்குத் தேவையான அளவு சம்பாதிக்கின்றனர். அவர்கள் முகத்தில் இன்று பயமோ சோகத்தின் அடையாளமோ இல்லாமல் அவர்கள் வாழ்வில் வந்த வசந்தத்தை எண்ணி மகிழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

]]>
slavery, bonded labour, labour, labor, bonded labor, freedom https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/bird.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/06/life-changing-freedom-3208160.html
3206257 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் 2019 அணை பாதுகாப்புச் சட்டம், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு தகராறுகளுக்கான ஒற்றை தீர்ப்பாயம்... மத்திய அரசு செய்ய நினைப்பது தான் என்ன? வழக்கறிஞர் சி.பி.சரவணன் Saturday, August 3, 2019 05:46 PM +0530  

2019 அணை பாதுகாப்புச் சட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் என்கிறது மத்திய அரசு. இந்தியாவில் தற்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 வருடத்திற்கு மேல் பழமையானவை.. உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அணைகளின் எண்ணிக்கை அதிகம். 5254 பெரிய அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில் மேலும் 447 அணைகள் கட்டப்பட்டுவருகின்றன.  இந்தியாவில் இதுவரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 11- ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், அணைபாதுகாப்பு மசோதா, மக்களவையில் 2010-ம் ஆண்டு அன்றைய யு.பி.ஏ அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதா தொடர்பாக அன்றைய பிரதமருக்கு 29.7.2011, 17.3.2012 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பினார். அந்த மசோதா தொடர்பாக மேல் நடவடிக்கை இல்லை. அதனால் அந்த மசோதா காலாவதியானது. இப்போது மத்திய அரசாங்கம் புதிய மசோதா ஒன்றை இந்தப் பிரச்னை தொடர்பாக அறிமுகம் செய்துள்ளது. 

13.6.2018 அன்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ``இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல். எனவே, இந்த மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும்'' என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 15.6.2018 அன்று எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்....

 

இந்த மசோதாவை மக்களவையில் ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் மக்களவையில் 29, ஜூலை,2019 அன்று மீண்டும் அறிமுகம் செய்தார்.

மசோதாவின் அம்சங்கள்...

நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணைகளுக்கும் இந்த மசோதா பொருந்தும். இவை அணைகள்:

(i) 15 மீட்டருக்கும் அதிகமான உயரம், அல்லது

(ii) 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை உயரம் மற்றும் சில கூடுதல் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு நிலைமைகளுக்கு உட்பட்டவை.

அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு  (NATIONAL COMMITTEE ON DAM SAFETY)

(i) அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழுவின் அரசியலமைப்பை இந்த மசோதா வழங்குகிறது. இந்த குழுவுக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமை தாங்குவார்.  மற்ற அனைத்து உறுப்பினர்களும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுவார்கள், மேலும்  

(ii) மத்திய அரசின் 10 பிரதிநிதிகள் வரை,
 

(iii) மாநில அரசுகளின் ஏழு பிரதிநிதிகள் வரை (சுழற்சி முறையில்), மற்றும்
 

(iv) மூன்று அணை வரை பாதுகாப்பு நிபுணர்கள்.
 

குழுவின் செயல்பாடுகள் பின்வருமாறு: 

(i) அணை பாதுகாப்பு தரங்கள் மற்றும் அணை உடைப்பு நிகழ்வுகளைத் தடுப்பது தொடர்பான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குதல்,
 

(ii) பெரிய அணை தோல்விகளின் காரணங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் அணை பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றங்களை பரிந்துரைத்தல்.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் (NATIONAL DAM SAFETY AUTHORITY)
 

இந்த மசோதா ஒரு தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கு வழங்குகிறது. ஆணையத்திற்கு மத்திய அரசு நியமிக்கும் கூடுதல் செயலாளர் பதவிக்கு கீழே இல்லாத ஒரு அதிகாரி தலைமை தாங்குவார். ஆணையத்தின் செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
 

(i) அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழுவால் வகுக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்துதல்,
 

(ii) மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு (எஸ்.டி.எஸ்.ஓ) அல்லது எஸ்.டி.எஸ்.ஓ மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள எந்த அணை உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பது,

(iii) அணைகளை ஆய்வு செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் விதிமுறைகளை குறிப்பிடுதல், மற்றும் 

(iv) அணைகளின் கட்டுமானம், வடிவமைப்பு மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றில் பணிபுரியும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்.

(v) தேசிய அணைகள் பாதுகாப்பு கமிட்டி (National Committee for Dam Safety - NCDS) ஒன்றை  அமைத்து  அதன்  மூலம்  தேவையான கொள்கைகள்,  விதிமுறைகள்,  வழிகாட்டுதல்கள், தரநிலை  அளவுறுகள்,  கருவிகள்  கையிருப்பு  ஆகியவை அவ்வப்போது  அமைக்க  வழி  செய்யப்படும்.

இந்த ஆணையம் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புகளை பராமரிக்கும். அணைகள் மீது உரிமை உடையவர்களுடன் தொடர்புகொண்டு அணைப் பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் நடைமுறையை தரப்படுத்தும்.

மாநிலங்கள் மற்றும் மாநில அணை  பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உதவிகளை வழங்கும்.

தேசிய நிலையில் அனைத்து அணைகள் சார்ந்த தகவல் கட்டமைப்பை பராமரிக்கும். பெரிய அணைகளில் ஏற்படும் குறைபாடுகளையும் ஆவணப்படுத்தி வைக்கும்.

அணைகளின் பெரிய குறைபாடுகளுக்கான காரணங்களை ஆராயும்.

வழக்கமான ஆய்வுக்கான தரமான நெறிமுறைகள், சரிபார்ப்பு பட்டியல்கள் ஆகியவற்றை வெளியிட்டு அவ்வப்போது மேம்படுத்தும். அணைகளின் விரிவான ஆய்வுகள் பற்றியும், இந்த ஆணையம் தகவல் சேகரித்து வெளியிடும்.

புதிய அணைகளின் ஆய்வு, வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும், தரங்களையும் இந்த ஆணையம் வழங்கும்.
இரு மாநிலங்களின் அணைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம் ஆராயும். அணைள் மீது உரிமை உடையவர்கள் தொடர்பான நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேலும், ஒரு மாநிலத்தின் அணைகள் மற்றொரு மாநிலத்தின் பகுதியில் அமைந்திருப்பது போன்ற  சில வழக்குகளில் தேசிய ஆணையம் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கடமை பொறுப்புகளையும் மேற்கொண்டு, மாநிலங்களுக்கு இடையிலான பிணக்குகளைத் தவிர்க்க உதவும்.  

மாநில அணை பாதுகாப்புக் குழு(STATE COMMITTEE ON DAM SAFETY)

மாநில அரசுகளால் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளை (STATE DAM SAFETY ORGANISATION)  நிறுவ மசோதா வழங்குகிறது. ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளும் அந்த மாநிலத்தின் SDSO இன் அதிகார வரம்பிற்குள் வரும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் SDSO ஆக செயல்படும்.

எஸ்.டி.எஸ்.ஓக்களின் செயல்பாடுகள் பின்வருமாறு:
 

(i) நிரந்தர கண்காணிப்பு வைத்திருத்தல், அணைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை ஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல்,
 (ii) அனைத்து அணைகளின் தரவுத்தளத்தை வைத்திருத்தல் மற்றும்
 (iii) அணைகளின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்.
அணை பாதுகாப்பு தொடர்பான மாநிலக் குழு: 
அணை பாதுகாப்பு குறித்த மாநிலக் குழுக்களின் அரசியலமைப்பை மாநில அரசுகள் மசோதா வழங்குகிறது.

குழுவின் செயல்பாடுகள் பின்வருமாறு: 

(i) எஸ்.டி.எஸ்.ஓ.வின் பணிகளை மறுஆய்வு செய்தல், 
(ii) அணை பாதுகாப்பு விசாரணைகளுக்கு உத்தரவிடுதல்,
 (iii) அணை பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் 
(iv) மேல்நிலை மற்றும் கீழ்நிலை மாநிலங்கள். இந்த மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளையும் மாநிலக் குழுவில் கொண்டிருக்கும்.
(v) மாநிலத்தில்  உள்ள  அனைத்து  அணைகளின்  பாதுகாப்பையும்  அணைவடிவமைப்பு,  இயந்திரவியல்,  நீரியல்,  பூகோள  தொழில்நுட்பவியல்,  அணை மறுசீரமைப்பு  மற்றும்  மறுவாழ்வு  ஆகிய  துறைகளில்  வல்லுநர்களைக் கொண்டு  மாநில  அணைப்  பாதுகாப்புக்குக்  குழு (State Committee on Dam Safety - SCDS)  அமைத்து  கண்காணிப்பு,  ஆய்வுப் பணிகள்,  செயல்பாடு  மற்றும் பராமரிப்பு  பணிகளை மேற்கொள்ளும்.
 செயல்பாடுகளில் மாற்றம்: இதன் செயல்பாடுகள்: 
(i) அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு,
 (ii) தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்,
 (iii) அணை பாதுகாப்பு தொடர்பான மாநில குழுக்கள் மசோதாவின் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், மத்திய அரசு ஒரு அறிவிப்பு மூலம் இந்த அட்டவணைகளை திருத்த முடியும் என்று மசோதா குறிப்பிடுகிறது.
 அணை உரிமையாளர்களின் கடமைகள்: 
குறிப்பிட்ட அணைகளின் உரிமையாளர்கள் ஒவ்வொரு அணையிலும் அணை பாதுகாப்பு பிரிவை வழங்க வேண்டும். இந்த பிரிவு அணைகளை ஆய்வு செய்யும்:
 (i) மழைக்காலத்திற்கு முன்னும் பின்னும், 
(ii) ஒவ்வொரு பூகம்பம், வெள்ளம் அல்லது வேறு ஏதேனும் பேரழிவு அல்லது துயரத்தின் அறிகுறி. அணை உரிமையாளர்கள் அவசர நடவடிக்கைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு அணைக்கான குறிப்பிட்ட மதிப்பீட்டு இடைவெளியில் இடர் மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அணை உரிமையாளர்கள் ஒவ்வொரு அணையின் விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டை, சரியான இடைவெளியில், நிபுணர் குழு மூலம் தயாரிக்க வேண்டும். அசல் கட்டமைப்பின் பெரிய மாற்றம் அல்லது ஒரு தீவிர நீர்நிலை அல்லது நில அதிர்வு நிகழ்வு போன்ற சில சந்தர்ப்பங்களில் மதிப்பீடு கட்டாயமாக இருக்கும்.
 
 குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான  அணைகள்  உள்ள  மாநிலங்கள்  அனைத்தும் இந்தத்  துறையில்  அனுபவம்  உள்ள  அதிகாரிகளைக்  கொண்ட  மாநில  அணைப் பாதுகாப்பு  அமைப்பு (State Dam Safety Organization - SDSO)  ஏற்படுத்தி  அணைப்பாதுகாப்பு  விஷயங்களில்  செயல்பட வேண்டும்.  ஒரு  அணையின் சொந்தக்காரர்  ஒரு மாநிலமாகவும்,  ஆனால்  அணை  வேறொரு  மாநிலத்திலும் இருக்கும்  பட்சத்தில்  மத்திய  அணை பாதுகாப்பு  அதிகார மையமே  இரு மாநிலங்களுக்கும்  பொதுவாக  அந்த  குறிப்பிட்ட  அணை  விஷயத்தில் செயல்படும்.

இந்த அமைப்புகள், மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.  அணைகள் குறித்த தேசிய அளவிலான தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். அணைகளில் ஏற்படும் விபத்துகள் பதிவுசெய்யப்படும்.
இரு மாநிலங்களினுடைய அணை பாதுகாப்பு அமைப்புகளிடம் ஏற்படும் முரண்பாட்டை இந்த அமைப்புகள் சரிசெய்யும். அணையின் உரிமையாளருக்கும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும்.

ஒவ்வொரு அணையின் உரிமையாளரும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படக்கூடும் என்ற தகவல்களை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு அணைக்கும்அபாய கணிப்பு அறிக்கை, நெருக்கடிகால நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படும் முன்பே உருவாக்க வேண்டும்.
தன்னிச்சையான நிபுணர் குழுவால் அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். முதல் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

குற்றங்கள் மற்றும் அபராதங்கள்...


மசோதா இரண்டு வகையான குற்றங்களுக்கு அபராதம் வழங்குகிறது. அவையாவன...

(i) ஒரு நபரின் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தடையாக இருப்பது,
(ii) மசோதாவின் கீழ் வெளியிடப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க மறுப்பது. குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குற்றம் உயிர் இழப்புக்கு வழிவகுத்தால், சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். அரசாங்கத்தால் புகார் அளிக்கப்படும்போது அல்லது மசோதாவின் கீழ் அமைக்கப்பட்ட எந்தவொரு அதிகாரமும் குற்றங்களை அறியக்கூடியதாக இருக்கும்.

அணை பாதுகாப்புக் குழுவைப் பணிசெய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அணை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தவறு ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதற்குப் பொறுப்பாவார்.

அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மத்திய நீர் ஆணையம் அணை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் அணை பாதுகாப்பு மசோதா, மத்திய அளவிலும் மாநில அளவிலும் அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அணை பாதுகாப்பை தரப்படுத்த முடியுமென மத்திய அரசு நினைக்கிறது. அணையின் உரிமையாளரையே அணை பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொறுப்பாக்குகிறது.

2018ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.

நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இந்த மசோதா உதவும். அணைகளிலிருந்து பயன்களை பெறும்வகையில், அவற்றின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த மசோதா மனித உயிர்கள், கால்நடைகள், சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும் உதவும் என்கிறது. இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு, இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு தகராறுகளுக்கான ஒற்றை தீர்ப்பாயம் (Single Tribunal for Inter-State River Water sharing disputes )

தற்போதுள்ள மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறுகள் சட்டம், 1956 இல் திருத்தம் செய்வதன் மூலம் 14.03.2017 அன்று நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கா புத்துணர்ச்சி அமைச்சர் (MoWR, RD & GR) மக்களவையில் மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறுகள் (திருத்தம்) மசோதா 2017 ஐ அறிமுகப்படுத்தியது.

ரவி & பியாஸ் நீர் தீர்ப்பாயம், கிருஷ்ணா நீர் தகராறு தீர்ப்பாயம் –II,வன்சாதரா நீர் தகராறு தீர்ப்பாயம், மகாதாய் நீர் தகராறு தீர்ப்பாயம், மகாநதி நீர் தகராறு தீர்ப்பாயம் என ஐந்து தீர்ப்பாயங்களை ஒன்றாக ஆக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும், நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என  ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகங்களும், பாதிப்புகளும்...

நாட்டில் 92 சதவீத ஆறுகள் இரண்டு மாநிலங்களில் ஓடுகிறது. ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தால், அந்த அணையை பாதுகாத்து, பராமரிக்கும் உரிமையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமே தனது வசம் ஏற்கும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு தமிழகத்தின் பொறுப்பு' என்று உச்ச நீதிமன்றம், 7.5.2014-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கும் பொறுப்பை வேறு மாநிலம் ஒன்றின் அணை பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைப்பது, ஆய்வு செய்ய அனுமதிப்பது, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன நீதிபதிகள் குழு வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும். மாநிலங்களின்  அரசியல் அதிகார வரம்பை மீறும் வகையில் வரைவு மசோதா பல விதிகளை வகுக்கிறது. 

தமிழகத்துக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன. “மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணைகள், வனப்பகுதியில் இருந்தால் அந்த அணைகளை மாநில அதிகாரிகளே நிர்வகிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்துப் பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா, தமிழகத்துக்குச் சொந்தமான 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். 

இந்த ஆணையம் கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், அணைகளின் தரம் ஆகியவற்றில் பங்கு வகிக்கும். இதுதவிர, மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்து செயல்படவும் மசோதா வகைசெய்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த மசோதா மாநில தண்ணீர் உரிமைகளை முடக்குகிறது எனலாம்.

]]>
நதி நீர்ப்பங்கீடு மசோதா, ஒரே தீர்ப்பாயம், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப்பங்கீடு, அணை பாதுகாப்பு மசோதா, அணை பாதுகாப்புச் சட்டம், மத்திய அரசு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/3/w600X390/river_masodha.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/03/single-tribunal-for-inter-state-river-water-sharing-disputes--national-commitee-on-dam-safety-central-governent-what-is-going-to-do-in-this-2-issues-3206257.html
3205627 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும்? கோவை பாலகிருஷ்ணன் Friday, August 2, 2019 02:58 PM +0530 தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்கார வைத்து பரிமாறுவதுதான் நாகரீகம், சௌகரியம் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள். இது சரியா தவறா?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவேதான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

இனியாவது தினமும் ஒருமுறை குடும்பத்துடன் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உண்டு மகிழ்வோம். 

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

]]>
food, eating, eating way, sit in floor https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/28/w600X390/food.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/02/how-to-sit-and-eat-3205627.html
3205612 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கார்ப்பரேட் நண்பனா/எதிரியா?! மிதுன் முரளி Friday, August 2, 2019 01:36 PM +0530
இணையதளம் இளைஞர்களுக்கு மன ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவது உண்மை தான். குழப்பங்களின் வரிசையில் கார்ப்பரேட் குறித்த குழப்பமும் உள்ளது. குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைதலங்களின் தாக்கத்தாலோ ஏனோ இன்றைக்கு பல இளைஞர்களின் மனதில் கார்ப்பரேட் என்ற விஷயம் எதிரியாகவே சித்தரிக்கப் பட்டு விட்டது. அது என்னவென்றே தெரியாமல் சினிமா அல்லது அரசியல்வாதிகளின் உணர்ச்சி தூண்டுதலால் எதிர்க்கிறோம், கார்ப்பரேட் முதலாளிகள் நம்மை ஏமாற்றி சுகம் காண்பதாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நம்மால் இயங்கும் கூகுளில் இருந்து நாம் உபயோகிக்கும் கார், பைக் வரை அத்தனையும் கார்ப்பரேட்தான் என்பதை நாம் உணரவில்லை.  கொஞ்சம் முதலீட்டு அறிவும், தொழில்நுணுக்கமும் தெரிந்தால் கார்ப்பரேட்டைப் புரிந்துகொள்ளலாம். ஏன் நாமேகூட நாளை ஒரு கார்ப்பரேட் முதலாளி ஆகலாம். 

முதலாளித்துவம், அடக்குமுறை என்ற வசனத்திற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நாம் எப்படி அதுபோல் ஆவது? நாமும் அதுபோல் முதலாளி ஆக வழி என்ன? என்று பாதையை மாற்றிப் பாருங்கள். கார்ப்பரேட் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எந்த கார்ப்பரேட் முதலாளியும் ஒரே நாள் இரவில் முதலாளி ஆகவில்லை. தொழில் சார்ந்த நுணுக்கங்களும், தேர்ந்தெடுத்த தொழிலுக்கான பாதையை வகுக்கத்தெரிந்த பட்டறிவும் இருந்தாலே போதுமானது. நாமும் நல்ல முதலாளிதான். 

நாம் ஒரு நல்ல திறமை வாய்ந்த தொழில்முனைவோர் ஆவதால் குறைந்தது 2 பேரில் தொடங்கி 2,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். நம்மால் 20 லட்சம் பேரை வாழ வைக்கமுடியும். வேலை தேடுவதை விட்டுவிட்டு வேலை கொடுப்பதைப் பற்றியும், கொடுப்பதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். எந்த தொழிலானாலும் சரி, நம் தொழில் சார்ந்த வளர்ச்சியை நிரூபித்தால், நம்மை நம்பி முதலீடு செய்ய வரிசை கட்டி நிற்க ஆட்கள் உண்டு. தொழில் தொடங்கும் எண்ணம்தான் இன்றைய பட்டதாரிகளிடம் ஏனோ இல்லாமல் போயிற்று. 

கார்ப்பரேட்டை எதிர்க்கும் நாம்தான்.. நாம் படித்த பட்டத்தை கொண்டு இன்னொரு கார்ப்பரேட்டின் வாசலில் வேலைக்காக நிற்கிறோம். சொந்த முதலீடுகளால் எந்த நிறுவனமும் வளரவில்லை, எல்லா கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பின்னால் பெரிய அளவிலான எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள் உள்ளனர். கார்ப்பரேட் என்றால் அரசிடம் கடன் வாங்கியோ அல்லது அவனது சொந்த பணத்தை முதலீடு செய்து லாபத்தை அனுபவிக்கிறான் என்றுதான் பலரின் எண்ணமும். கார்ப்பரேட்டை கண்மூடித்தனமாக புரிந்துகொண்டதன் விளைவு தான் இது. 

அம்பானி, ஜியோ நெட்வொர்க்கில் செய்த முதலீடு ஒரு லட்சம் கோடி. அது அவர் சொந்தப் பணமோ, வங்கிக் கடனோ இல்லை. இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசும் கடன் தராது. முழுதும் மக்கள் (முதலீட்டாளர்கள்) அவரை நம்பி, அதாவது அவரது தொழில் வளர்ச்சியில் உள்ள நம்பிக்கையில் இட்ட முதலீடு. அதில் வரும் லாபமும் முதலீட்டின் அடிப்படையில் பிரிக்கப்படும். மேலும் அந்த முதலீட்டின் மீதான பங்குகள் மூலம் நிறுவனத்தின் மதிப்பும் கூடும். ஆக தொழில் வளர்ச்சி பெறும், தொழில் வளர்ச்சியால் நிறுவனத்தின் மதிப்பு உயர உயர முதலீட்டின் மதிப்பும் உயரும். அந்த நிறுவனம் மற்றும் முதலாளியின் வளர்ச்சியால் முதலீட்டாளர்களும் வளர்கிறார்கள், தவிர அந்த நிறுவனத்தை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட பல குடும்பங்கள் வாழ்க்கை காணும்.

எடுத்துக்காட்டாக டி.வி.எஸ். (TVS)  கம்பெனியின் வருமானம் (2019 Apr) ரூ.20,160 கோடி. லாபம் மட்டும் ரூ.725 கோடி. அந்த கம்பெனியின் பங்குகள் மொத்தம் 475,087,114. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரிய கம்பெனி, பெரிய அளவில் முதலீடு என்பதல்ல விஷயம்.. அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்தால் விஷயம் புரிந்துவிடும். 

Anti Business Mind தான் கார்ப்பரேட்டை புரிந்துகொள்ள எத்தனிக்காத காரணம். கார்ப்பரேட் முதலாளிகளை எதிரியாக நினைப்பது, தோற்றவர்களை நல்லவர் என்றும், துறையில் சிறந்து விளங்கி ஜெயித்தவர்களை தவறானவர் என்ற புரிதலில்தான் உள்ளது நம் எண்ணங்கள். நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் தொழில் மீதான நம்பிக்கை, வெற்றிகரமாகத் தொழில் தொடங்கும் புத்திசாலித்தனம், நிர்வாக திறமை இவற்றை நம்பியே முதலீடுகள் பயணம் செய்கின்றன. 

இதனால் ஏற்படும் நன்மைகள்..

முதலீட்டாளர்களின் லாபம் மட்டுமன்றி நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளையும் மாற்றவல்லவை.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டிற்கு வரியும் கிடைக்கும்.

ஆக, பொருளாதாரம் சார்ந்த அறிவும் தேர்ந்தெடுக்கும் தொழிலில் துறை சார்ந்த நுணுக்கங்களையும் அறிந்தாலே போதும். எவரொருவரும் சிறந்த முதலீட்டாளனாகவோ அல்லது தொழில்முனைவோனாகவோ ஆகலாம்.

தொழில்முனைவோன் ஆவதும் தொழில் அதிபர் ஆவதும் சுலபமான விஷயம் இல்லைதான். என்றாலும், எல்லாவிதமான வாய்ப்புகளையும் பெற்ற நாம் ஏன் இன்னொரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் வேலைக்கு நிற்க வேண்டும்?

நாமே கார்ப்பரேட் ஆகலாமே!

நான் சொல்வது சரியா? இல்லையா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துத்தான் பாருங்களேன். 

Image Courtesy: entrepreneurshipforathletes.com

]]>
கார்ப்பரேட், முதலாளி/தொழிலாளி, கார்ப்பரேட் குறித்த புரிதல், Corporate, Employer/Employee, understanding about corporate, entrepreneurship https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/2/w600X390/Entrepreneur.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/02/is-corporate-our-friend-enemy-3205612.html
3204846 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் வேண்டாம் என்று சொன்னவர்களை திரும்பிப் பார்க்க வைத்த தங்க மகள்! நெகிழ்ச்சியான வெற்றிக் கதை! Thursday, August 1, 2019 12:58 PM +0530 'வேண்டாம்' என்று பெயர் சூட்டப்பட்ட மகள் பொறியியல் படிப்பு மூலம் ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய கல்லூரிவளாக நேர்காணலில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டத்தின் தூதுவராகவும் அப்பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் என்றால் வளர்ந்ததும் திருமணம் செய்து வைக்க நகை, சீர்வரிசை, வரதட்சணை என நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளதே என்ற கவலை பெற்றோர்களுக்கு உள்ளது. இதனால் பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் செயல்களும் நடைபெற்றது. 

எனினும், பெண் குழந்தைகள்தான் வருங்காலத்தில் பெற்றோருக்கு பாதுகாப்பாக உள்ளனர். பலர் அதை உணராமலேயே இருந்து வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் அடுத்தடுத்தது பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டும் வழக்கமும் மக்களிடையே இருந்து வருகிறது. 

உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாராயணபுரத்தைக் குறிப்பிடலாம். இது 150 குடியிருப்புகளைக் கொண்ட கிராமமாகும். இந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் "வேண்டாம்' என பெயர் சூட்டும் வினோத பழக்கம் இருந்து வருகிறது. 

அவ்வாறு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் ஜப்பான் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியுள்ளார். ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்குத் தேர்வாகி பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள்தான் என்பதை நிரூபித்துள்ளார். தனக்கு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டிய ஏழைப் பெற்றோருக்கு வாழ்வு தேடி வரச் செய்துள்ளார். 

நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன்-கெளரி தம்பதியர். விவசாயக் கூலி வேலை செய்வதோடு கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த தம்பதியருக்கு ஏற்கெனவே ஷன்மதி, யுவராணி என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. அதன் பின் 3-ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குதான் 'வேண்டாம்' என பெயர் சூட்டினர். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தனர். இதேபோல் அந்த கிராமத்தில் மட்டும் 8 பெண் குழந்தைகளுக்கு 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்டு அதே பெயரில் திருமணம் செய்து கொண்டு புகுந்து வீடு சென்றுள்ளனர். 

அதேபோல், அசோகன் தம்பதியின் மகளான 'வேண்டாம்', தொடக்கம் முதல் மேல்நிலை வரையில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். மேல்நிலைப் படிப்பில் 1095 மதிப்பெண்கள் பெற்றார். அதிக மதிப்பெண்கள் எடுத்த காரணத்தால் சிஐடி-யில் (சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி) கல்வி உதவித்தொகை பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். அவரது பிறப்புச் சான்று முதல் பள்ளிச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை வரை 'வேண்டாம்' என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. தற்போது, பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இதில் திறமையானவர்களைக் கண்டறிந்து புரொஜக்ட் தயாரிப்பதற்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். 

அவ்வாறு தேர்வு செய்யப்படட 11 பேரில் 9 பேர் ஆண்கள். இரண்டு பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் "வேண்டாம்' ஒருவர். தற்போது இறுதியாண்டு படித்து வரும் அவர், ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 'வேண்டாம்' என பெயர் சூட்டிய பெற்றோருக்கு அவர் பெருமையும், புது வாழ்வும் தேடித் தந்துள்ளார்.

இதுகுறித்து வேண்டாமின் தந்தை அசோகன் கூறியதாவது:

'எனக்கு ஷன்மதி, யுவராணி என ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 3ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. எங்கள் கிராமத்தில் பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்தால் அடுத்த குழந்தை ஆணாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, எங்களுக்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு எனது பெற்றோர் வேண்டாம் என பெயர் வைக்கச் சொன்னார்கள். அதேபோல், வேண்டாம் என பெயர் சூட்டினோம். 

எனினும், கிராம மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, எனக்கு நான்காவதாகவும் பெண் குழந்தைதான் பிறந்தது. எனது குழந்தைகள் 4 பேரையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளேன். இதில் வேண்டாம்தான் சென்னை சிஐடி (C.I.T) கல்லூரியின் கல்வி உதவித் தொகை பெற்று படித்தார். தற்போது அவர், இறுதியாண்டு படித்து வரும் நிலையில், ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் பணிக்கு தேர்வாகியுள்ளார். அதுவும் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்றார். 

வேண்டாம்(22) கூறியது:

எனது பெற்றோருக்கு 4 பெண் குழந்தைகள். அதில் நான் மூன்றாவது மகளாகப் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி முதல் உயர் நிலைக் கல்வி வரையில் வேண்டாம் என்ற பெயராக இருப்பதால் பலர் என்னைக் கிண்டல் செய்வார்கள். அப்போது எல்லாம் கஷ்டமாக இருக்கும். எனினும், நாம் கஷ்டப்படுவது எல்லாம் திறமையை வெளிப்படுத்தவே என்று மனதைத் தேற்றிக் கொள்வேன். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு மேல்நிலைக் கல்விக்கு முன்னேறினேன். தற்போது சி.ஐ.டியில் இறுதியாண்டு படித்து வருகிறேன். 

அத்துடன், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மையமாக வைத்து ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தானியங்கி கதவு குறித்த புராஜெக்ட் தயார் செய்தோம். அப்போது, ஜப்பானைச் சேர்ந்த 'ஹியூமன் ரெய்சோ' என்ற மென்பொருள் நிறுவனத்தினர் எங்கள் கல்லூரியில் வளாக நேர்காணல் நடத்தினர். அப்போது நான் தயாரித்து வைத்திருந்த தானியங்கிக் கதவுகளால் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த செயல் விளக்கம் குறித்து கேட்டார்கள். அது தொடர்பாக விளக்கமாக பதில் அளித்தேன்.

அதைத் தொடர்ந்தே அந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியத்தில் பணியாற்ற நான் தேர்வு செய்யப்பட்டேன். பெற்றோரால் வேண்டாம் என பெயர் சூட்டிய நிலையில் வேண்டும் என்ற அளவுக்கு வாய்ப்புகளை வழங்கியதற்கு சிஐடி-யின் துணைத் தலைவர் ஜானராம் மற்றும் நிர்வாகம்தான் காரணம். இறுதியாண்டு படிப்பை நிறைவு செய்து விட்டு அடுத்த ஆண்டில் ஜப்பான் செல்ல உள்ளேன். 

இதற்கிடையே ஓராண்டுக்கு 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் திருவள்ளூர் மாவட்டத் தூதராக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் என்னை நியமித்துள்ளார். அதனால், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும் அவர்களுக்குக் கற்பிப்பிப்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகளுக்கும், கிராமங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்' என்று அவர் தெரிவித்தார்.
- எஸ்.பாண்டியன்

]]>
success, story, women, vendam, japan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/31/w600X390/tlr.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/01/success-story-of-a-woman-3204846.html
3204110 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மாணவர்களின் 'பட்டாக்கத்தி' கலாசாரம், சென்சார் போர்டும் காரணமா? வழக்கறிஞர் சி.பி. சரவணன் Wednesday, July 31, 2019 02:17 PM +0530  

கடந்த 2017, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி இதேபோல நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் ரயில்தினம் கொண்டாடுவதாக பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை புறநகர் மெட்ரோ ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்தனர். மேலும் ஆவடி ரயில் நிலையத்தை அடுத்து உள்ள நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு செல்லும்போது மாணவர்கள் சிலர் ஆயுதங்களை தரையில் தேய்த்துச் சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவந்தது.

பின் 2018, ஜனவரி, 30 அன்று சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று பிற்பகலில் சென்றுகொண்டிருந்தது. ரயிலில் பொதுமக்கள், மாணவர்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது கையில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் மூன்று மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் மீதும் மாணவர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர்.

பின், 2019, ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர். அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி ஒரு கும்பல் வெட்டியது.

இவ்வேளையில், பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் 'ரூட்டு தல' என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

நாள்: 2019, ஜூலை 22

சென்னை, புழல் அருகே உள்ள இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்துவரும் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உமாசங்கர் (32 வயது), ரோஷன் (34 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019, ஜூலை 22 அன்று உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், உமாசங்கர் மற்றும் ரோஷன் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் கோபமடைந்த ரோஷன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துவந்து உமாசங்கர் தலை, கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

நாள்: 2019, ஜூலை 23 

திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு மாணவிகளை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதை அதே பிரிவில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தட்டிக்கேட்டு, மாணவிகளை கிண்டல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கல்லூரியில்  அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ - மாணவிகள் அஞ்சலி செலுத்திய பின் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் அதே வளாகத்தில் மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்களை 4-ம் ஆண்டு மாணவர்கள் எச்சரித்தனர். பின்னர் அவர்கள் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்குச் சென்றுவிட்டனர்.

 அங்கு சென்ற 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர், 4-ம் ஆண்டு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் கல்லூரி வளாகத்தில் தொடங்கி சாலையின் வெளியே வரை நடந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 28 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 

நாள்: 2019, ஜூலை 30 

சென்னையைப் போலவே, மதுரையிலும் அரசுப்பேருந்தில் கத்தியுடன் வலம் வந்த மாணவர்கள், டிக்கெட் கேட்டதற்காக நடத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சீருடை அணிந்த இரண்டு மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராஜக்கூர் வரை செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது நடத்துனர் பயணச்சீட்டு எடுக்கச் சொன்னபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேருந்தானது கருப்பாயூரணி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் 2 பேரும் பையில் மறைத்து வைத்திருந்த 2 பட்டாக்கத்தியை எடுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நடத்துனர் கணேசன், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

நாள்: 2019, ஜூலை 28...

மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! இயக்குநர் லெனின் பாரதி காட்டம்...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் 2019, ஜூலை,28 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, ‘மாணவர்கள் கத்தியோடு அலைவதற்கு சினிமாதான் காரணம். இளைஞர்களுக்கு வன்முறையை, கத்தி எடுக்கும் கலாச்சாரத்தை சினிமாதான் தூண்டிவிடுகிறது. இளைஞர்கள், கதாநாயகர்களை மானசீகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் (நடிகர்கள்) கத்தியை எடுக்கும்போது அதையே மாணவர்களும் உள்வாங்குகின்றனர்’ என்று கூறியுள்ளார்.
இவர் பேச்சை எளிதாக கடந்து செல்லமுடியாது.

சமீப தமிழ்த் திரைப்படங்களில் வன்முறை...

மெட்ராஸ், வடசென்னை, சாமி-2 உட்பட இன்னும் பல திரைப்படங்களில் கொடூர ஆயுதங்களால் செய்யப்படும் கொலைக் காட்சிகள் அப்படியே சித்தரிக்கப்படுகின்றன, தன்னை காதலித்து மறந்த அல்லது காதலிக்க மறுத்த பெண்ணை கொடுரமாக நடு ரோட்டில் கொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதை நாம் அறிவோம். கருத்து சுதந்திரம் என்பது கொலைக் காட்சிகளில் இருக்கிறதா, இல்லை இவை வீரத்தை சித்தரிக்கின்றனவா? ரவுடித் தனத்தை வீரம் என்றும், காதலியை கொலை செய்வதை நியாயம் என்றும் கற்பிக்கும் காட்சிகள் இடம் பெறுவது சகஜமாகிவிட்டது. ஒரு காலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் வில்லன்களாகத் தான் இருப்பார்கள். கதாநாயகர்களையே கேங் லீடர்களாகவும், பெரும் ரவுடிகளாகவும் கட்டும் அளவுக்கு திரை இயக்குனர்களின் சிந்தனை தாழ்ந்து விட்டது என்பதே உண்மை. அது சரி, திரைப்படங்களை கண்காணிக்கும் சென்சார் போர்டு இதற்கெல்லாம் சான்றிதழ் கொடுக்கிறதே எப்படி.?

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification / censor Board) சட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறதா ?

திரைப்படச் சட்டம், 1952 இன் பிரிவு 5 பி இன் உட்பிரிவு (2) ன் படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திரைப்படத்திற்குச் சான்றிதழ் கொடுக்கும் முன் கீழ்க்கண்ட குறிக்கோள்களைப் பின்பற்றுவதில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

1. வன்முறை போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் மிகைப்படுத்தப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ கூடாது.

2. குற்றவாளிகள், பிற காட்சிகள் அல்லது எந்தவொரு குற்றத்தினை தூண்டக்கூடிய சொற்களை, செயல்முறை சித்தரிக்கப்படக்கூடாது

3. காட்சிகள்...

a. குழந்தைகள் வன்முறையில் ஈடுபட்டு பாதிப்படைவதை காண்பிப்பது அல்லது குழந்தைகளைக் குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவோ காண்பித்தல், அல்லது எந்தவொரு குழந்தையையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் காண்பித்தல்.
b. உடல் மற்றும் மன ஊனமுற்ற நபர்களை துஷ்பிரயோகம் அல்லது கேலி செய்வது; 
c. தேவையில்லாமல் விலங்குகள் கொடுமைக்குள்ளாக்குவதைப் போலக் காட்டுவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது.

4. பொழுதுபோக்குகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அர்த்தமற்ற அல்லது தவிர்க்கக்கூடிய வன்முறை, கொடுமை மற்றும் திகில் காட்சிகள், மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்துதல் அல்லது மனிதநேயமற்ற விளைவைக் காட்டக்கூடிய காட்சிகள் கூடாது.

5. குடிப்பதை நியாயப்படுத்தும் அல்லது மகிமைப்படுத்தும் காட்சிகள் ;

6. போதைப்பொருளை ஊக்குவிக்க, நியாயப்படுத்த அல்லது கவர்ச்சியாகக் காட்டும் காட்சிகள் கூடாது.

a..புகையிலை அல்லது புகைப்பழக்கத்தை ஊக்குவிக்க, நியாயப்படுத்த அல்லது கவர்ச்சியாகக் காட்டும் காட்சிகள் கூடாது.

7. மனித உணர்வுகள் மோசமான, ஆபாசமான அல்லது மோசமான தன்மையால் புண்படுத்தப்படும் காட்சிகள் கூடாது.

8. அடிப்படை உள்ளுணர்வுகளை பூர்த்தி செய்யும் இரட்டை அர்த்த சொற்கள் கூடாது.

9. எந்த வகையிலும் பெண்களை தாழ்த்தும் அல்லது இழிவுபடுத்தும் காட்சிகள்;

10. பாலியல் வன்கொடுமை என்ற பெயரில் பாலியல் பலாத்கார முயற்சி, பாலியல் பலாத்காரம் அல்லது எந்தவொரு அல்லது ஒத்த இயல்புடைய காட்சிகள் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மேலும் இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் கருப்பொருளுக்கு அடிப்படையாக இருந்தால், அவை குறைந்தபட்சமாகக் குறைக்கப்பட வேண்டும் மற்றும் விவரங்கள் எதுவும் காட்டக் கூடாது.

11. பாலியல் வக்கிரங்களைக் காட்டும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற விஷயங்கள் கருப்பொருளுக்கு அடிப்படையாக இருந்தால் அவை குறைந்தபட்சமாகக் குறைக்கப்பட வேண்டும் மற்றும் விவரங்கள் எதுவும் காட்டப்படக்கூடாது.

12. காட்சிகள் அல்லது வார்த்தைகள் இன, மத அல்லது பிற குழுக்களை அவமதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

13. வகுப்புவாத, தெளிவற்ற, விஞ்ஞானத்திற்கு எதிரான மற்றும் தேச விரோத அணுகுமுறையை ஊக்குவிக்கும் காட்சிகளை அல்லது சொற்களை அனுமதிக்கக்கூடாது.

14. இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் கேள்விக்குறியாக்கும் விவரங்களை அனுமதிக்கக்கூடாது;

15. மாநிலத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அல்லது ஆபத்து விளைவிக்கும் காட்சிகள் கூடாது

16. அயல்நாடுகளுடனான நட்பு உறவுகளை வலுவிழக்கச் செய்யும் காட்சிகள் கூடாது;

17.பொது ஒழுங்கு ஆபத்து விளைவிக்கும் காட்சிகள் கூடாது.

18. ஒரு தனிநபரை அல்லது தனிநபர்களின் உடலை அவதூறு செய்வது அல்லது நீதிமன்ற அவமதிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் அல்லது வார்த்தைகள் கூடாது.

விளக்கம்: அவதூறு, அவமதிப்பு அல்லது விதிகளை புறக்கணித்தல் அல்லது நீதிமன்றத்தின் கௌரவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் காட்சிகள் '' நீதிமன்ற அவமதிப்பு '' என்ற வார்த்தையின் கீழ் வரும்: 

19. சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும்) சட்டம், 1950 (1950 ல் 12) ன் விதிகளின்படி தவிர வேறுவகையில் தேசிய சின்னங்கள் மற்றும் சின்னங்களைக் காட்டக்கூடாது..

இத்தனை விதிமுறைகள் இருந்த போதும் சென்சார் போர்டு இவற்றில் கடுமைகாட்டி கண்காணித்து தான் சான்றிதழ் வழங்குகிறதா? மேற்கண்ட வழிமுறைகளை எல்லாம் தவறாமல் கடைபிடிக்கிறதா என்பதை நாம் நன்கு அறிவோம்.

7 விதமான திரைச் சான்றிதழ்கள்...

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய 7 வெவ்வேறு வகையான திரைப்பட சான்றிதழ்கள் அவை U, UA, A, S, V/U, V/UA மற்றும் V/A.

 • U- சான்றிதழ், யுனிவர்சல், 4 வயதிலிருந்து எந்தவொரு வயதினருக்குமான படங்கள். இப்படங்களின் சமூக கருப்பொருள் லேசான வன்முறை மற்றும் மொழியையும் கொண்டிருக்கலாம்.
 • UA– சான்றிதழ் வகைத் திரைப்படத்தில் பாலியல் கருப்பொருள்கள் மற்றும் மட்டமான மொழியுடன் முதிர்ந்த உள்ளடக்கம் இருக்கும். பெற்றோர் உடன் இருக்க, எந்தவொரு வயதினரும் பார்க்கலாம், ஆனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.  
 • A- சான்றிதழ் வகை திரைப்படங்கள் வயது வந்தோர், 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டுமே பார்க்கத் தகுதியானவை என சான்றிதழ் வழங்கப்படும்.
 • S- சான்றிதழ், வகை திரைப்படங்கள் ஸ்பெஷலிஸ்ட், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற ஒரு துறையில் உள்ள நிபுணர்களுக்கு மட்டுமே.
 • V/U, V/UA மற்றும் V/A- ஆகியவை குறிப்பிட்ட சான்றிதழுடன் திரைப்படத்திலிருந்து வீடியோவாக வெளியிடப்பட்ட பகுதிகளுக்கு.

இவ்வாறு வன்முறைக் காட்சிகள் கொண்ட தற்காலத் திரைப்படங்களுக்கு எப்படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் “U,” சான்றிதழ் கொடுக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சென்சார் போர்டும், திரைஇயக்குனர்களும் உடனடியாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

]]>
Route thala culture, censor board of tamilnadu, tamilnadu college students, தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள், ரூட் தலை கலாசாரம், சென்சார் போர்டு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/31/w600X390/route_thala.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/31/route-thalai-culture--the-increasing-rivalry-behaviours-of-tamilnadu--college-students-is-censor-boa-3204110.html
3199228 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மீண்டும் மேடை ஏறும் அரசியல் நாடகம்: இதுதான் கர்நாடக வரலாறு Tuesday, July 30, 2019 10:31 PM +0530
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு 14 மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று கவிழ்ந்தது. இதனால், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக, கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவுள்ளது. இப்படி ஆட்சிக்கு நடுவே அதிகார மாற்றம் ஒன்றும் கர்நாடக அரசியலுக்கு புதிதல்ல. இதுவரை 25 முதல்வர்களைக் கண்டுள்ள கர்நாடக மாநிலத்தில், வெறும் 3 முதல்வர்கள் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர் என்பது தான் அம்மாநிலத்தின் வரலாறு. 2004-க்குப் பிறகு கர்நாடகாவில் நிகழும் அரசியல் நாடகங்கள் குறித்து பார்ப்போம்.  

2004 சட்டப்பேரவைத் தேர்தல்: 

2004-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், மஜத 58 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதனால், இது மிகப் பெரிய தொங்கு சட்டப்பேரவையாக அமைந்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சி அமைக்க சம்மதித்தது. அதன்படி முதல்வராக காங்கிரஸ் சார்பில் தரம் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக மஜதவின் அப்போதைய மாநிலத் தலைவர் சித்தராமையா பதவியேற்றார். இந்த கூட்டணியால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரால் கூட கேபினட் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை.

2006-இல் ஆட்சி மாற்றம்: 

முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டிருந்த குமாரசாமி 2006-இல், 40 மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி பாஜகவுடன் கைகோர்த்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் சேர்ந்து குமாரசாமி அப்போதைய ஆளுநர் சதுர்வேதியைச் சந்தித்து பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்தார். பின்னர், சட்டப்பேரவையில் நிகழ்ந்த கடும் அமளியால் காங்கிரஸ் முதல்வர் தரம் சிங்கால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 

இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள குமாரசாமியை உடனடியாக முதல்வராக பதவியேற்குமாறு ஆளுநர் உரிமை வழங்கினார். அதன்படி குமாரசாமி பிப்ரவரி 3, 2006-இல் முதல்வராக பதவியேற்றார். 

மஜத - பாஜக கூட்டணி:

பாஜக உடனான இந்த கூட்டணியும் சுலபமாக அமையவில்லை. இரண்டு கட்சிகளும் நிறைய ஒப்பந்தங்களுக்குப் பிறகே கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி குமாரசாமியும்,  எடியூரப்பாவும் தலா 20 மாதங்கள் முதல்வராக பதவி வகிக்க வேண்டும். முதல் 20 மாதங்களுக்கு குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். எடியூரப்பா துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

அதன்பிறகு குமாரசாமியின் 20 மாத கால முதல்வர் பதவி ஒப்பந்தத்தின்படி முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி விரும்பவில்லை. 

அதன்பிறகு ஆளுநர் அதிரடி முடிவாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதனால், கர்நாடகா குடியரசுத் தலைவர் ஆட்சியில் செயல்பட்டது.

அதன்பிறகே, ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஒரே ஆட்சிக்காலத்தில் 3-வது முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார்.  

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மஜத ஆதரவு தெரிவிக்காததால், எடியூரப்பாவின் ஆட்சி வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கர்நாடகா 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தது.  

2008 சட்டப்பேரவை தேர்தல்: 

2008-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், பாஜக பெரும்பான்மைக்கு 3 இடங்கள் மட்டுமே குறைவாக இருந்தது. 

அதன்பின் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரின் ஆதரவைப் பெற்று எடியூரப்பா அப்போது முதல்வர் ஆனார். இந்த முறை கர்நாடகத்தில் 5 ஆண்டுகள்  ஒரே முதல்வர் ஒரே ஆட்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த 6 சுயேச்சைகளில் 5 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி வழங்கினார். 

ஆனால், 38 மாதம் முதல்வர் பதவி வகித்த எடியூரப்பாவால் முழுமையாக ஆட்சியில் அமரமுடியவில்லை. சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் அவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்தது. 

இதையடுத்து, எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன்மூலம், ஆட்சிக்காலத்தின் நடுவில் 2-வது முதல்வராக சதானந்த கௌடா பதவியேற்றார். மீதமுள்ள 22 மாத ஆட்சிக் காலத்தில் இவர் முதல்வர் பதவி வகிப்பார் என்று பார்த்தால் உட்கட்சி பூசல் காரணமாக இவரது ஆட்சிக் காலமும் 11 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. 

முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பில் சதானந்த கௌடாவிடம் தோல்வியடைந்த ஜெகதீஷ் ஷேட்டாரையே முதல்வராக்குமாறு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரச்னை உண்டாக்கினர். இந்த அழுத்தத்தின் காரணமாக பாஜக மேலிடம் இவரையும் ராஜிநாமா செய்யச் சொல்லி கடைசி 10 மாதங்களுக்கு ஜெகதீஷ் ஷேட்டாரையே கர்நாடக முதல்வராக அமர்த்தியது. 

இதன்மூலம், அடுத்தடுத்த 2 ஆட்சிக்காலத்தில் கார்நாடக மாநிலம் தலா 3 முதல்வர்களின் கீழ் செயல்பட்டது. 

இதன்பிறகு, சித்தராமையா 2013-இல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2018 வரை நிலையான ஆட்சியைத் தந்தார். எனினும், இந்த அரசியல் நாடகம் மீண்டும் 2018-இல் மேடை ஏறத் தொடங்கியது.

கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அம்மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவையே அமைந்தது. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்க காங்கிரஸ் மற்றும் மஜத முடிவு செய்தனர். இதனிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைக் காரணம் காட்டி எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியை 6 நாட்களில் ராஜிநாமா செய்தார்.

இதன்பிறகு, மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்ததையடுத்து, குமாரசாமி முதல்வரானார். குமாரசாமியும் 14 மாதங்கள் முதல்வராக செயல்பட்டார். ஆனால், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 15 பேர் ராஜிநாமா செய்ய இந்தக் கூட்டணியும் பெரும்பான்மையை இழந்தது. இதனால், இந்த ஆட்சியும் தற்போது முழுமையாக ஆட்சிக் கட்டிலில் அமராமல் நேற்று கவிழ்ந்தது.

கர்நாடக மாநிலம் 1956-இல் உருவானதில் இருந்து இதுவரை 25 முதல்வர்களை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், இதுவரை மூன்று முதல்வர்கள் மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சியில் அமர்ந்துள்ளனர் என்பது தான் வரலாறு.

இந்த கட்டுரை கடந்த ஆண்டு எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது பதிவேற்றப்பட்டது. எனினும், இது தற்போதையச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மீண்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/24/w600X390/Kumaraswamy_Siddaramaiah_Yeddyurappa.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/மீண்டும்-மேடை-ஏறும்-அரசியல்-நாடகம்-இதுதான்-கர்நாடகம்-3199228.html
3203394 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘வாழ்வில் குழந்தைப் பருவம் முதலே நான் ஒருபோதும் ஆரோக்யமாக இருந்ததே இல்லை’: சொன்னவரே தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்! DIN Tuesday, July 30, 2019 11:51 AM +0530  

குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்க்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை” என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட அந்தப் பெண்தான்... மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நோய்மையின் அத்தனை குரூரங்களையும் அருகிருந்து மட்டுமல்ல தனக்கத்தானேயும் முற்றிலும் உணர்ந்தவரான அப்பெண்மணி தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராகும் தகுதி பெற்றது கடவுளின் அனுக்கிரஹத்தால் மட்டுமல்ல தனது விடாமுயற்சி மற்றும் சமூகசேவைக் கண்ணோட்டத்தினாலும் தான்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே தெரியும் என்ன செய்தால் அல்லது எப்படி முயன்றால் அந்த பாதிப்பிலிருந்து வெளிவரமுடியுமென்று?!

அப்படித்தான் தனது நோய்மையிலிருந்து விடுபட தானே ஒரு மருத்துவராகித் தீர்வது என முடிவெடுத்தார் முத்துலட்சுமி.

1886 ஆம் ஆண்டு ஜூலை 30 நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கப் பேச்சு கோலோச்சிய அந்தக் காலத்தில் சமூகத்தின் முரட்டுப் பிடிவாத எதிர்ப்புகளுக்கு பலியாகாது நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமி ரெட்டிக்கு அவரது தந்தையார் மிகுந்த ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்கள் தங்கிப் படிக்குமாறு அந்தக்காலத்தில் விடுதி வசதிகள் இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 1904 ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 4 ஆம் நாளில் விண்ணப்பித்தார் முத்துலட்சுமி. அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழமைவாதிகள் இதைக் கடுமையாக விமர்சித்ததோடு பிடிவாதமாக எதிர்க்கவும் தொடங்கினர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், ஈடுபாடும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைச் தூக்கி எறிந்து விட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது தான் நோய் மற்றும் அதன் கொடுமையை நேரடியாகக் கண்டவரான முத்துலட்சுமிக்கு தானும் ஒரு மருத்துவராக வேண்டும் எனும் வைராக்கியம் வலுப்பெற்றது.

தொடர்ந்து, 1907 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப்பதக்கங்களும் பெற்று 1912 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகனான மருத்துவர் சுந்தரரெட்டியை 1914 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, மருத்துவத் தம்பதியர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினர்.

தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திலும், மகளிர் உரிமைக்கான இயக்கங்களிலும் முத்துலட்சுமி ரெட்டி ஈடுபாடு கொண்டார். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இவருக்கு உறுதுணையாக நின்றார்.

1929 ஆம் ஆண்டில் இந்திய மாதர் சங்கம் பெண்களுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனப் போராடியதன் விளைவாக, முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினராகிப் பின் துணைத் தலைவராகவும் ஆனார். இதன் மூலமாக சட்டப்பேரவையில் நுழைந்த முதல் பெண்மணியும், உலகிலேயே சட்டப்பேரவையின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே எனும் பெருமைக்குரியவர் ஆனார்.

அது மட்டுமல்ல, சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயில்களில் தேவதாசிகள் என்ற பெயரில் இழிவுபடுத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றினார். பால்ய விவாகத் தடைச் சட்டம், பாலியல் தொழில் தடைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வர பெரும் முயற்சிகள் எடுத்தார். 

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் 1930 ஆம் ஆண்டில் ஒளவை இல்லத்தை நிறுவினார். புற்றுநோய்க் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1936 ஆம் ஆண்டில் மாபெரும் இயக்கத்தை நடத்தி, இதற்கென தனி மருத்துவமனையை அமைக்க முயன்று , சென்னை அடையாறில் 1954 ஆம் ஆண்டில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.

இன்று ஆசியாவிலேயே புகழ்மிக்க புற்றுநோய் மருத்துவமனையாக அது திகழ்கிறது. ஒளவை இல்லம், அடயாறு புற்றுநோய் மருத்துவமனை இவை இரண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மனித இனத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்துக்கள் என்றால் அது மிகையல்ல!

இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133 ஆவது பிறந்தநாள். அந்த நன்நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் புகழ் மங்காது ஓங்கட்டும். வாழிய அவரது சேவை!
 

]]>
Doctor muthulatchumi reddy, tamilnadu's first woman doctor, avvai illam, adaiyar cancer institute, 133 rd birthday, google doodle, கூகுள் டூடுல், அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அவ்வை இல்லம், 133 ஆவது பிறந்தநாள், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/muthulatchumi.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/30/drmuthulatchumi-reddys-133-birth-day-google-wishes-through-doodle-3203394.html
3202718 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தொலைந்து போன ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்! உண்மைச் சம்பவம்! புகழ் செல்வம் Monday, July 29, 2019 05:35 PM +0530 காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தோட்டனவூர் என்கிற சிற்றூர்தான் வள்ளியப்பனின் சொந்த ஊர் ஆகும். அவர் தன் மனைவி லட்சுமி, தன்னுடைய தாய் வெங்கம்மா மற்றும் தன்னுடைய வளர்ப்புத் தந்தை முத்து ஆகியோருடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்தனர்.

ஆரம்பத்தில் அவரது பெற்றோருடன் அவருடைய அண்ணன் அர்ஜுனனும் இதே செங்கல் சூளையில் வேலை செய்துள்ளனர். ஒருமுறை அவர்களை வள்ளியப்பன் பார்க்கச் சென்றிருந்த போது,  அண்ணன் அர்ஜுனனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததைக் கண்டு தன்னுடைய அம்மாவிடம் ஏன் அவனைக் கவனிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மா ஏற்கனவே வாங்கிய முன்பணத் தொகை அதிகமாக இருப்பதால் மருத்துவ செலவிற்கு முதலாளி பணம் தர மறுப்பதாக அழுது கொண்டே கூறியுள்ளார். இந்த துயரமான நிலையை பார்த்த வள்ளியப்பன் தன்னுடைய அண்ணனுக்கு மருத்துவம் பார்க்க தானும் வேலைக்கு வருவதாகக் கூறி முதலாளியிடம் மேலும்  பணம் வாங்க முடிவு செய்துள்ளார்.

அவரது அம்மா வெங்கம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க முதலாளி வள்ளியப்பனுக்கு ரூபாய் 5000 முன்பணமாக வழங்கியுள்ளார். வள்ளியப்பனும் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து அச்செங்கல் சூளையில் வேலை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இது அவர்களது சுதந்திரத்தை மொத்தமாக விழுங்கி விடும்  என்று  அவர்களுக்குத்  தெரியவில்லை. செங்கல் சூளைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பு வள்ளியப்பனும் அவரது மனைவியும் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று வந்தனர். இரண்டு டன் மரம் வெட்டினால் ரூபாய் 1500 அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ அப்பணம் போதுமானதாக இருந்தது.

செங்கல் சூளையில் தூக்கமில்லாத இரவுகள், பட்டினி, உடல் வலி, ஓய்வில்லாத உழைப்பு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் குழந்தைகளின் இருண்ட எதிர்காலம் என அவர்களது வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமைந்தது. மேலும், முதலாளி அவர்களை வரையறை இல்லாமல் தொந்தரவு செய்வது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது அடிப்பது மற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றது போன்றவற்றால் வள்ளியப்பன் இதிலிருந்து விடுதலையே கிடையாதா என்று ஏங்கியுள்ளார். இத்தொல்லைகள் எல்லாம் ஓய்ந்து விடுதலையாகும் நாளுக்காக வள்ளியப்பன் காத்திருந்தார்.

இறுதியாக 2016-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த வள்ளியப்பனுடன் இரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரைக் கண்டுபிடித்து விடுதலை செய்தது.

விடுதலையான பின்னர் வள்ளியப்பன் தன்னுள் இருந்து தொலைந்து போன ஒரு புதிய மனிதனைக் கண்டுபிடித்தார். கொத்தடிமையாக இருந்த போது வழியில் எந்தவொரு போலீஸ்காரரைப் பார்த்தாலும் எந்த தவறும் செய்யாத பட்சத்திலும் பயப்படுவார். அதிகாரம் உடைய யாரைப் பார்த்தாலும் அவர் அதிர்ச்சியில் உறைந்து விடுவார். ஆனால் தற்போது எந்த அதிகாரியைப் பார்க்க வேண்டுமென்றாலும் அவரிடம் துளியும் பயமும் இல்லை. அவர் அரசு அளித்த மறுவாழ்வு பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற்றார். இப்பயிற்சி அவருக்குத் தன்னம்பிக்கை அளித்து ஒரு தலைவராக மட்டுமல்லாமல் தன்னுடைய மக்களின் உரிமைகளுக்காக அதிகாரிகளிடம் உரத்துப் பேசுபவராகவும் மாற்றியது. மீட்கப்பட்ட நாளன்று வருவாய்க் கோட்டாட்சியர் வள்ளியப்பனிடம் ஏதாவது அடையாள அட்டை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர்

‘இல்லை’ என்று மட்டும் சொன்னார். இல்லை என்று சொன்ன போது அடையாள அட்டை என்றால் என்னவென்றே தெரியாத தொனியில் அவர் பார்த்தார். அப்போது அவரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் வழங்கிய விடுதலைக்கான சான்றிதழ் மட்டுமே கையிலிருந்தது.

இன்று வள்ளியப்பன் தன் சமூகத்தில் ஒரு தலைவராக விளங்குகிறார். தன் சமூகத்தை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ உற்சாகமூட்டுகிறார். துணிச்சலுடன் அரசு அலுவலர்களைச் சந்தித்து தன் சமூக மக்களுக்கான வீடு, நிலம், மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி பெற்றுத்தர தொடர்ந்து பாடுபடுகிறார்.

அச்சமூகத்தில் உள்ள பலருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் என்றால் என்னவென்றே தெரியாத சூழலில், வள்ளியப்பன் தான் சமூக மக்களுக்காக வருவாய்க் கோட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அவர்களுக்கு மனுக்களை எழுதி தன் சமூக மக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பெற்று தருகிறார்.

இன்று வள்ளியப்பன் தன் சமூக மக்களின் தேவைகளுக்காகவும், அவர்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்காகவும் உறுதியுடன் குரல் கொடுக்கும் ஒரு வழிகாட்டி இளைஞன்.

]]>
bonded labour, labour, hours of toil https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/29/w600X390/bonded_labour.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/29/bonded-labour-3202718.html
3202692 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கட்டாய வாக்களிப்பு மசோதா-2019 ஓர் அலசல்: மக்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்! வழக்கறிஞர் சி.பி. சரவணன் Monday, July 29, 2019 02:32 PM +0530  

தேர்தலில், வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிஜேபி எம்பி ஜகதாம்பிகா பால் தாக்கல் செய்த தனிநபர் மசோதாவுக்கு, (Compulsory Voting Bill ) மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

கடந்த, 2015ம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தம் பரிந்துரையில், கட்டாய ஓட்டுப்பதிவு என்பதை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், வாக்காளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று கட்டாய ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் பா.ஜ.க. தரப்பில் இருந்தே, அதிக எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் பிரதாப் ரூடி பேசுகையில், ''தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. அனைவரும் ஓட்டளித்தால் தான், நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது. 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு இந்தியா, இப்போது தயாராக இல்லை. 100 சதவீத ஓட்டு என நிர்பந்திப்பதே ஆபத்தானது,'' என்றார். இவருக்கு ஆதரவாக ராஜேந்திர அகர்வால் (பா.ஜ.க.) மஹ்தப் (பிஜு ஜனதா தளம்) ஆகியோர் கருத்து தெரிவித்தனர். பா.ஜ.க.வை சேர்ந்த இன்னொரு எம்.பி., நிஹால் சந்த், ''100 சதவீத ஓட்டுப்பதிவு அவசியம். தேர்தல் என்பது செலவினம் மிக்க செயலாக மாறிவிட்டது,'' என்றார். இவருக்கு ஜகதாம்பிகா பால் உள்ளிட்ட எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். 

பிஜேபி எம்பி திரு.ஜகதாம்பிகா

பிறநாடுகளில் கட்டாய வாக்குரிமை
இந்தியாவைப் போல் தேர்தலில் வாக்களிக்காமல் ஆஸ்திரேலியாவில் ஒதுங்க முடியாது. கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதும், தவறினால் தண்டனை என்பதும் விதி. கடந்த தேர்தல் அந்நாட்டில் 91 சதவீத வாக்குகள் பதிவானது. கட்டாய வாக்குமுறை உலகில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிக்கோ  என 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இங்கேயும் கட்டாய வாக்குமுறையை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. வாக்களிக்காதவர் தக்க காரணம் காட்டவில்லையென்றால் அபராதமோ, சிறைத் தண்டணையோ விதிக்கப்படுகிறது.

20 நாடுகளில் அதிபர் தேர்தலும், 7 நாடுகளில் நாடாளுமன்ற தேர்தலும், 29 நாடுகளில் பொது தேர்தலும்  நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 90 கோடி பேர் வாக்களார்கள். தேர்தல் நடக்க இருக்கும் மற்ற 55 நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 120 கோடி தான்.  ஆட்சிமுறை என்பது முழுமையான ஜனநாயகம், குற்றமுள்ள ஜனநாயகம், கலப்பு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் கொண்ட ஜனநாயக நாடுகள் பட்டியலில் ஜப்பான், போர்ச்சுகல், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, பிரேசில், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியா, இந்தப் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது. 

ஜனநாயகத்தை நார்வே, அயர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, டென்மார்க், கனடா, பின்லாந்து, சுவிட்ச்ர்லாந்து ஆகிய நாடுகள் முழுமையாக கடைபிடித்து வருகின்றன. இந்த பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் என்பதில், தமிழகம் ஆதிகால முன்னோடி என்பதற்கு சாட்சி குடவோலை முறை. அதை இன்றும் பறைசாற்றுவது உத்திரமேரூர் கல்வெட்டு. பல பிரதமர்களை உருவாக்கிய தமிழர்கள்(King Makers)  யாரும் அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லை என்பது வருத்தபட வேண்டிய உண்மை.

இந்தியாவைப் பொருத்தவரை கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனை உலக அளவில் பல நாடுகளில் முன் வைக்கப்பட்டு வருகிறது. என்றாலும் அதனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்ற கருத்தை தேர்தல் ஆணையமே பலமுறை முன்வைத்துள்ளது.

எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை மட்டுமல்ல, வாக்களிக்கும் வாக்காளர்களையும் பொறுத்தது. நம் நாட்டில் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும் அளவிற்கு வாக்காளர்களின் பங்கு விமர்சிக்கவோ, விவாதிக்கவோ படுவதில்லை.

வாக்களிப்பது என்பது ஏதோ நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்றோ, நாம் அரசியல் கட்சிகளுக்குச் செய்ய வேண்டிய உதவி அல்லது கடப்பாடு (obligation) என்றோ எண்ணுகிற வாக்காளர்கள் நம் நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். வேட்பாளர்கள் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக அவர்களில் பலர் வாக்குச்சாவடிப் பக்கமே வருவதேயில்லை. அதைவிட மோசம், அவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வதில்கூட ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தக் கடமைகளைச் செய்யாமல் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து, அரசியல் என்பது சாக்கடை என்றெல்லாம் திண்ணைப் பேச்சு பேசிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை. அந்தப் பேச்சுக்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வேடிக்கை பார்ப்பவர்கள் எதையும் மாற்றியதாக வரலாறு இல்லை.

இது போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டிய நமது தேர்தல் ஆணையர்கள் கட்டாய வாக்கு என்பது நடைமுறை சாத்தியமற்றது என்று அறிவித்து தட்டிக் கழித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகமும், கட்டாயமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்று அவர்கள் வாதிட்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

70 கோடி வாக்காளர்களைக் கொண்ட நமது நாட்டில் 30 கோடி பேர் வாக்குச்சாவடி பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை என்று ஒரு புறம் குறைபட்டுக் கொள்கிற தேர்தல் ஆணையர்கள் இந்த குறையை போக்க கட்டாய வாக்குமுறை ஓரளவு உதவும் என்பதை மறந்து விட்டு பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

குஜராத்தில் கட்டாய வாக்களிப்பு சட்டம் - 2009?

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று என்று அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா கூறினார். புதுடெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சாவ்லாவிடம், குஜராத் மாநில அரசு உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளதை பற்றி கேட்டனர்.

ஓட்டளிப்பதை கட்டாயமாக்கி குஜராத் மாநில சட்டமன்றத்தில் சட்டம் 2009 ஆம் ஆண்டு (The Gujarat Local Authorities Laws (Amendment) Act, 2009) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா முன்பு இரண்டு முறை சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டு முன்பு இருந்த கவர்னர் கமலா பெனிவாலால் நிராகரிக்கப்பட்டது. அதன்பின், மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ பி கோலி இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால் அந்த சட்டத்தை செயலாக்கத்திற்கு 2015ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த படேல் மற்றும் NV அஞ்சாரியா அமர்வு தடைவித்தது.

கட்டாய வாக்குப்பதிவு அவசியமா?

கட்டாய வோட்டு - மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம் என்போரும் உண்டு. கட்டாய வாக்களிப்பு என்பது சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிரிவினருக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புண்டு. அதனால் மத, இன, மொழிச் சிறுபான்மையோரின் குரல்கள் சட்டமியற்றும் மன்றங்களில் ஒலிக்க வகை செய்யும் விதத்தில், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்திவிட்டுப் பின் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கலாம். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சிகள் வாங்கும் வாக்குகளின் சதவிகிதத்திற்கேற்ப சட்டமன்ற, நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமையும் என்பதால் சிறிய கட்சிகளும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு நிற்பவர்களும் இடம் பெற இயலும்வாக்கை பதிவு செய்வது என்பது வெறு ஒரு அரசியலமைப்பு உரிமை மட்டுமல்ல, அது நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை ஆகும். வாக்களிப்பது இந்தியாவின் அனைத்து வயதுவந்த குடிமக்களும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். நாம் இந்த சட்டத்தை பெருமையுடன் செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டும். 

கட்டாய வாக்குப்பதிவை நடைமுறைபடுத்துவது எப்படி?

கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த முடிந்த அரசால் கட்டாய வாக்களிப்பை செய்யமுடியாது என்பது ஏற்கக்கூடியதல்ல. அரசியலமைப்புச் சட்டம், அடிப்படைக்கடமைகள், பகுதி-4A-இல் கூறுகிறது. இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது. அதில் கட்டாய வாக்களிப்பையும் சேர்த்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்தால் இதை முழு சட்டவடிவமாக்கலாம்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/8/w600X390/vote.jpeg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/29/கட்டாய-வாக்களிப்பு-மசோதா-2019-ஓர்-அலசல்-மக்களவையில்-ஆதரவும்-எதிர்ப்பும்-3202692.html
3200738 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பல்லாங்குழி, பரமபதம், நொண்டி, மூணு கால் ஓட்டம்! பழமையை நினைவுபடுத்திய விழா இது! ஜேசு ஞானராஜ் Friday, July 26, 2019 05:33 PM +0530 பல்லாங்குழி, பரமபதம் முதல் நொண்டி, மூணு கால் ஓட்டம் வரை........பழமையை ஞாபகப்படுத்திய ஜெர்மனியின் முன்சன் தமிழ் சங்க விளையாட்டு விழா

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்றிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஜெர்மனியின் முன்சன் தமிழ் சங்கம், தமிழர்களின் பல பாரம்பரிய விளையாட்டுகளை வளரும் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் கடந்த 20-ம் தேதி நடத்திக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பார்க்கும் வெளியெங்கும் வண்ண மலர்கள், பச்சை பசேலென்ற செடிகொடிகள், காலநிலை 30 டிகிரிகளில், அவ்வப்போது சின்ன சின்ன தூறல்! இது தான் ஜெர்மனியின் கோடை காலம். ஜூன் மற்றும் ஜூலை கோடை விடுமுறையாதலால் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இந்த காலம் கொண்டாட்டம்தான்!  அதன் காரணமாக, முன்சன் தமிழ் சங்கம் சார்பாக 2-வது முறையாக städtische sportanlage மைதானத்தில்தான் நம் பாரம்பரிய விளையாட்டுகள் அரங்கேறின.

விக்னேஷ், சூர்யா, மீனாட்சி, ரத்னமங்கை, தமிழ்செல்வி, பவித்ரா  என்று ஒரு குழுவே இதற்கென நேரம் செலவழித்து, திட்டம் வகுத்து அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. 3 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை பலரும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள,  களம் அமைத்துக் கொடுத்த தமிழ் சங்கத்தை எத்தனைப்  பாராட்டினாலும் தகும். 

தமிழ் சங்க நிர்வாகி தேவநாதன் அவர்களிடம் பேசினோம். 'நம் குழந்தைகளுக்கு நாம் மேடை அமைத்துக்கொடுக்காமல் வேறு யார் கை தூக்கி விடுவார்?' என்றவர், 'இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் தமிழர்களின் பல பாரம்பரிய பல விளையாட்டுகளை வளரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி' என்றார்.

சிறு குழந்தைகளுக்கான ஒரு போட்டி - ஸ்பான்ச்சை தண்ணீரில் முக்கி, தூரத்தில் உள்ள பாட்டிலில் அந்த நீரை நிரப்ப வேண்டும்.இதற்கு நடுவராக இருந்த தீபா பார்த்தசாரதி கூறும் போது, 'குழந்தைகள் அனைவரும் பரிசு வாங்க வேண்டும் என்பதற்காகவே பல விளையாட்டுகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எம் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடும் போட்டியில் பரிசு கிடைக்காத தியானேஸ்வரனின் சோகத்தைப்  பார்த்து அனைவருமே அவனை சுற்றி நின்று ஆறுதல் கூறியது, அவனுக்கு  கிடைத்த மிகப்பெரிய பூஸ்ட்.  அதனால்தானோ என்னவோ, அடுத்து நடந்த சாக்கு ஓட்டப் போட்டியில் பரிசைத்  தட்டிச்  சென்றான்.

மூன்று வயது குழந்தைகளுக்கு பலூனை பெரியவர்கள் ஊதிக்  கொடுக்க, அதை  அவர்கள்  காலால் மிதித்து உடைக்க வேண்டும். அந்த பிஞ்சு பாதங்களின் ஜதிகளுக்கு பரதநாட்டியம் ஆட அந்த பலூன்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாரதியாரின் ஓடி விளையாடும் பாப்பா ஞாபகத்தில் வந்து போனாள்.

கபடி, வடம் இழுத்தல், கயிராட்டம், கண்ணாமூச்சி, தாயம், ஆடு புலி ஆட்டம், கோலிக்  குண்டு, சுட்டிக்கல் என பல விளையாட்டுகள் நம்மை பழைய காலத்திற்கு கொண்டு சென்றதை மறுக்க முடியாது.

பரிசுகளை, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் அகாடெமி ஆசிரியர்கள் வழங்கி அனைவரையும் ஊக்கப்படுத்தினார். மொத்தத்தில் இந்த விளையாட்டுப் போட்டிகள்  அனைவருக்குமே குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

]]>
German, Germany, German Tamil Sangam, Tamil, städtische sportanlage https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/26/w600X390/IMG-20190726-WA0024.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/26/germamys-munsun-tamil-sanga-game-3200738.html
3200725 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மருத்துவர்களே நீங்கள் நலமா? C.P. சரவணன் Friday, July 26, 2019 03:29 PM +0530  

மன அழுத்தம் மற்றும் பணிச் சுமையால் மருத்துவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 13 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சுமார் ஆறு லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகச் சமீபத்தில் வெளியான ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 250 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவரும், டெல்லியில் 300 நோயாளிகளுக்கு ஒருவரும், கேரளாவில் 550 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர். அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில் 8,000 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 13 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்குப் போதுமான மருத்துவர்கள் இல்லை. எனவே பணிச் சுமை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`` தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. மிகவும் குறைந்த வயதில் மருத்துவராகும் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறுகிறது. பணியிடத்தில் உள்ள வேலைச் சுமை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உணவு முறைகள் இவை அனைத்துமே மருத்துவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக உள்ளன.

அவற்றில் மன அழுத்தம்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. படிக்கும் காலத்திலேயே இந்த மன அழுத்தம் தொடங்கி விடுகிறது. தொடர்ந்து வேலைக்கு வந்ததும் அது நீடிக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் அரசு வேலை மட்டுமல்லாது, தனியாக கிளினிக் வைத்தும் வேலை செய்கின்றனர். இதனால் குடும்பத்துக்கு நேரம் செலவிடமுடியாமல் போகிறது. விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது. கல்லூரி பேராசிரியர்களைவிட மருத்துவர்கள் சம்பளம் குறைவு. இதற்கான காரணம் கேட்டால் நீங்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளீர்கள் எனக் கூறுகிறார்கள். வேண்டுமென்றால் தனியார் கிளினிக்களை தடை செய்யலாம். அதை விடுத்து சம்பளத்தைக் குறைவாகத் தருகிறார்கள். சம்பளம் குறைவாக உள்ள காரணத்தினால்தான் மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துகிறார்கள். அரசு வேலை இல்லாதவர்கள் தனியார் கிளினிக் நடத்திவந்தார்கள். தற்போது அதுவும் பெரும் சிரமமாகியுள்ளது.

முதலில் கிளினிக்கை பதிவு செய்ய வேண்டும். அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல், தீயணைப்புத்துறை வரை பல துறைகளில் அனுமதி பெற வேண்டும். அதனால் தற்போது யாரும் சிறிய கிளினிக் வைத்து நடத்த விரும்புவது இல்லை. பெரும்பாலான சிறிய கிளினிக்குகள் மூடும் நிலைக்கு வந்துவிட்டன. நோயாளிகள் அதிகமாகப் பெரிய மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் செல்கிறார்கள். அதேபோல் மருத்துவக் காப்பீடுகளும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் வாழ்வு மிகவும் மோசமாகிவிட்டது.

நோயாளியின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. படித்து முடித்துவிட்டுப் பல மருத்துவர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான அரசு வேலை வழங்கப்படுவதில்லை. சிக்கன நடவடிக்கையால் மருத்துவர்களின் வேலைகளும் பறிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் மன அழுத்தத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாக உள்ளது”

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/2/w600X390/Doctors_End_Strike.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/26/மருத்துவர்களே-நீங்கள்-நலமா-3200725.html
3200720 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தம்’ என்ன சொல்கிறது? வழக்கறிஞர் சி.பி.சரவணன் Friday, July 26, 2019 03:05 PM +0530  

என்.ஐ.ஏ(தேசியப் புலனாய்வு முகமை)

2008 -ம் ஆண்டில் நடைபெற்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லை என்று அரசு கருதியதை அடுத்து, 2009-ம் ஆண்டு, தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) சட்டத்தை நிறைவேற்றியது. நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது. இதன் முதல் தலைமை இயக்குநரான ஆர்.வி. ராஜூ பணி ஓய்வுபெற்றதை அடுத்து எஸ்.சி.சின்ஹா தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போதைய தலைமை இயக்குநராகவுள்ள ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.

தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும் மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக, என்.ஐ.ஏ-வுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது, மத்தியில் ஆளும் மோடி அரசு.

இச்சட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அமலில் இருப்பதோடு, இச்சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட புலனாய்வு அமைப்பு புலனாய்வு செய்து பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது அமலிலுள்ள இந்தச் சட்டத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக, என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்னை தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.


என்.ஐ.ஏ சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைது செய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும், அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை.

ரயில்வேதுறையில் வடவர்களுக்கே அனைத்து வேலைகளையும் கொடுத்து பெரும்போராட்டத்தை சந்தித்தனர். பின்னர் ரயில்வேயில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில தான் தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்று சுற்றறிக்கை, அதனை பெரும் கண்டணத்துக்குப் பின்னர் திரும்பப் பெற்றனர். 

மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியது; தகித்தது தமிழகம். இந்தி கட்டாயம் எனச் சொல்லவில்லை; விருப்பமான மொழி என்று வேறு வார்த்தையை பிரயோகித்தார்கள். தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்; கொதித்தது தமிழகம். தேர்வை ரத்து செய்துவிட்டார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை எறிவதன் காரணமென்ன என்று ஆராய்ந்தால் பதுங்கியிருந்து பாய்கிறது என்.ஐ.ஏ சட்டத்திருத்தம்.

குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பதைப்போல சின்னச் சின்ன தாக்குதல்களை முதலில் கொடுத்து அதற்கான எதிர்ப்புகளைச் சோதித்துப் பார்த்த மத்திய அரசு, யாருமே எதிர்பாராதவகையில் அதிரடியாக இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டத்தால் மாநில அரசுகளின் அதிகாரம் மறைமுகமாகப் பறிக்கப்படுமோ என்ற பொதுவான கேள்வியைத் தவிர்த்து, இந்தச் சட்டம் தமிழகத்தை ஒடுக்குவதற்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டதோ என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்பு தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது, மத்திய அரசு. என்.ஐ.ஏ என்னும் தேசியப் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கியபோது, 'நாட்டின் பாதுகாப்பிற்கான முகமை இது' என்று அப்போது விளக்கம் சொன்னது. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தில் இருப்பதென்ன?


1. இச்சட்டத்தின் பிரிவுகள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவின் நலனுக்கும் இந்தியர்களுக்கும் எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும்.
2. இச்சட்டத்தின்கீழ் இயங்கும் காவல் அலுவலர்களுக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சென்று குற்றம்சம்பந்தமாக விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்புரிமைகள் ஆகியவற்றைத் தருகிறது, இந்தச் சட்டத்திருத்தம்.
3. இச்சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்குப்பதிவு செய்யமுடியும்.
4. இக்குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்த என்.ஐ.ஏ, தற்போது இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலமாக வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்கவுள்ளது. உதாரணமாக, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நேரடியாக என்.ஐ.ஏ. அமைப்பால் களமிறங்க முடியும். இது, அந்தக் குறிப்பிட்ட நாட்டுடன் இந்தியாவிற்கு உள்ள ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதிபெற்றுச் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு விசாரணை நடக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

மூன்றாவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத்தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதிதாகப் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆள்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது.

இதுதொடர்பான குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 1908-ம் ஆண்டு வெடிபொருள்கள் தடைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தும் அதிகாரமும் என்.ஐ.ஏ அமைப்புக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை போன்று, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்ட புலனாய்வு அமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) மற்றும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI). UK-வில் Joint Intelligence Organisation (JIO) / National Crime Agency (NCA). சீனாவில் National Security Bureau, ரஷ்யாவில் Federal Security Service (FSB). பாகிஸ்தானில் Inter-Services Intelligence (ISI). கனடாவில் Canadian Security Intelligence Service (CSIS). பிரேசிலில் Brazilian Intelligence Agency (ABIN) மற்றும் அர்ஜென்டினாவில் Federal Intelligence Agency (AFI) எனப் பலவகையான அதிகாரமிக்க புலனாய்வு அமைப்புகள் உள்ளன.

தற்போது கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த அமைப்பு என்னவெல்லாம் செய்ய முடியும்?

புதிய குற்றப் பிரிவுகளைச் சேர்த்ததன் மூலமாகப் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை, தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு முகமைக்கு சி.பி.ஐ-யைவிட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தேசியப் புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரம் உண்டு. இதற்குக் குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இணையக் குற்றப்பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இந்தப் பிரிவு பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. “ with intent to threaten the unity, integrity, security or sovereignty of India or to strike terror in the people or any section of the people by”. அதாவது, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் நோக்கிலோ, மக்கள் அல்லது மக்களில் ஒருபிரிவினர் மீது பயங்கரவாதமான தாக்குதலை நிகழ்த்தும் நோக்கத்துடன் ஒருவர் செயல்படுவார் எனில், அவரை NIA கைது செய்து விசாரிக்கலாம். அரசுக்கு எதிராக யார் போராடினாலும், அரசை எதிர்த்து நின்றாலும் அவர்களை இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கைதுசெய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ள வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைதுசெய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும் அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் இந்தியாவிற்கு எதிரான முழக்கம்கொண்ட ஒரு சிறிய காகிதத்தை வைத்திருந்தால்கூட அவரைக் கைதுசெய்ய இயலும்.

NIA பட்டியலில் உள்ள குற்றத்தைச் செய்பவர், இந்தியாவிற்கு அப்பால் இருந்து குற்றத்தைச் செய்திருந்தாலும். அந்தக் குற்றத்தின்பால் இந்தியாவையோ அல்லது இந்தியர்களையோ பாதிக்கும்பட்சத்தில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். குற்றவாளி இன்னொரு நாட்டிலிருந்தாலும் அதை விசாரிக்கும் சட்டம் நம்மிடம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்கு அந்த நாடுகள் தகுந்த அனுமதியை அளிக்குமா? நம்முடன் நட்புறவில் இல்லாத நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்? இப்படியெல்லாம் அச்சங்களும் கேள்விகளும் எழுகின்றன. அதற்கு அரசு தரும் விளக்கம் அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை...

என்.ஐ.ஏ. எவ்வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படாது. என்.ஐ.ஏ. இதுவரை 272 வழக்குகளைக் கையில் எடுத்துள்ளது. இவற்றில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபணம் 90 சதவிகிதம் ஆகும். ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுத தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும். "இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவோம். ‘பொடா’ சட்டம், பயனுடையது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் நாங்கள் பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார், எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம்" என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஆனால், இந்த அரசு அப்படியே நடந்துகொள்ளுமா என்பதுதான் அச்சத்தை உச்சமாக்குகிறது. இந்தியா முழுவதும் ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் என்கிற வரிசையில் இப்போது தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத் திருத்தத்தின் மூலமாக ஒரே சித்தாந்தம் என்பதை புகுத்தப் பார்ப்பதாகப் பல தரப்பிலும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதாகச் சொல்கிறார்கள் பலதரப்பினரும்.

சட்டதிருத்தத்தின் பாதிப்புகள்
ஒரு சாதாரண மனிதர் அரசாங்கத்தை எதிர்த்தால், அவரை இந்த சட்டத் திருத்தம் மூலம் `தேசத் துரோகி, தீவிரவாதி’ என முத்திரை குத்தமுடியும். ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும்போது நாம் ஏன் (எதிர்க்கட்சி) தேச விரோதி என்று அழைக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம்? அரசாங்கத்துடன் உடன்படாத எதிர்க்கட்சிகளை, எதிர்க்கட்சியினரை, ஆளும் கட்சியின் ட்ரோல் (troll ) படையினர் `தேச விரோதி’ என அழைக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் மோசமான பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”
ஒருபுறத்தில் அச்சமும், மறுபுறத்தில் ஆறுதலும் விதைக்கப்பட்டாலும் இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போதுதான் எது உண்மை என்பது தெரியவரும். ஆனால் மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டமும் நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை. தேசம் என்பது வெறும் கடலும் நிலமும் கொண்ட பரப்பளவு மட்டுமல்ல. அது அங்குள்ள மக்களின் ஆன்மாவையும் உணர்வுகளையும் உள்ளடக்கியது. தேசத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தேசத்திற்குள் உள்ள மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படையான போராட்ட உரிமைகளையும் பறிக்க நினைத்தால் தடா, பொடா போலவே இந்தச் சட்டமும் மக்களால் முறியடிக்கப்படும் என்பதே காலம் உணர்த்தியுள்ள பாடம். அதுவே இந்திய  சட்ட வரலாறு.
 

]]>
NIA AMENDMENT BILL 2019, Amit Shah, BJP, என் ஐ ஏ சட்டத்திருத்தம், அமித்ஷா, பாஜக, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/26/w600X390/NIA_BILL.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/26/what-does-the-nia-amendment-bill-say-3200720.html
3199941 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ரிடையர்மெண்ட் குறித்த மனப்பீதி வேண்டாமே!  ரவிச்சந்திரன் DIN Thursday, July 25, 2019 06:19 PM +0530  

பணி - ஓய்வு...
            
PEOPLE SAYS THAT A RETIREMENT IS ACTUALLY A PRE- INTIMATED DEATH.

அதாவது, பணி ஓய்வு என்பது  முன் அறிவிப்புடன் வரும் ஒரு மரணம் போன்றது என்பார்கள்.

உதாரணமாக,

1 வருட காலத்தில் ஓய்வு பெறுபவருக்கு 1 கிலோ கவலை இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம்.
அதுவே 6 மாத காலத்தில் =  4 கிலோ கவலை.
1 மாத காலத்தில் = 25 கிலோ கவலை.
1 வார காலத்தில் = 100 கிலோ கவலை என்று நாட்கள் குறையக் குறைய கவலை பன்மடங்காகப் பெருகுமாம். 

அதுவே, ஓய்வு பெறும் நாள் என்றால் அவருக்கு உச்சகட்ட கவலையே வந்து விடுகிறது. எனவேதான் பணி ஓய்வு என்பது "a pre- intimated death" என்பார்கள். ஏனிந்த நிலைமை? இதற்கு முக்கியமாக 3 காரணங்களைக் கூறலாம்.

 1. வழக்கமான உடல் இயக்கம் குறைவதால் கடிகாரம் தனது வேகத்தை குறைத்து கொள்ளும். அதாவது நேரம் போகாது. சோம்பேறித்தனம் அதிகமாகும். பசி எடுக்காது. நேரத்துக்கு உண்ணத் தவறுவோம். வியாதிகள் வரும். கூடவே அழையா விருந்தாளியாக இயலாமை வரும். முதுமை வரும்.
 2. சம்பளம் தடைபடுவதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு வழங்கப்படும் எவ்விதமான கம்பெனி சலுகைகளும் "இனி, நமக்குக் கிடைக்காதே"  என்கிற ஏக்கம்.
 3. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கெளரவம் குறைந்து போகும்.

மேற்கண்ட 3 காரணங்களால் ஏற்படும் மனக் கவலை எப்போதும் நம்மைக் கொன்று கொண்டே இருக்கும்.

இவையாவும் பெரும்பாலான ஓய்வு பெறுவோர்க்கு ஏற்படும் இயற்கையான பிரச்சினைகள்.

ஆனால் புத்திசாலிகள், இந்த 4 பிரச்சனைகளில் இருந்து எப்படி பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்?

1. உடலியக்கம் குறைதல்:

உண்மையில் பணி ஓய்வு என்பது பணிக்குத்தான் ஓய்வே தவிர, உடலுக்கும் , மனதுக்கும் ஓய்வு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அதாவது, சில வருடங்களுக்காவது வேறு நிம்மதி தரும் வேலைக்கு செல்வது அல்லது சேவை செய்வது என்று நம் உடலையும், மனதையும்  இயக்கத்திலேயே வைக்க வேண்டும். இதனால் நேரம் போவதே தெரியாது. சோம்பேறித்தனம் வராது. நேரத்துக்குச் சாப்பிடுவோம். வியாதிகளைத் தவிர்ப்போம். சந்தோஷமாக வாழலாம்.

2. அடுத்தது பணக் கஷ்டம்:

பணியில் இருக்கும் காலத்தில்  சேமிப்பவனும் பணிஓய்வு காலத்தில் சேமித்த பணத்தை திட்டமிட்டு செலவிடுபவனுமே புத்திசாலி.

3. அடுத்தது கெளரவக் குறைச்சல்:

"என் வாழ்க்கையை என் இஷ்டப்படி நான் வாழ்வதற்காகத்தான் நான் படைக்கப் பட்டிருக்கின்றேன்" என்று எண்ணுகிறவனுக்கு மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் "எனக்கு கவலையில்லை" என்றே நினைப்பான். உண்மையில் கவுரவக் குறைச்சல் என்பது என்ன? அது ஒரு போலியான சுய உணர்வுதான். அது மனதில் வேதனையை அதிகரிக்கும். குறிப்பாக, "கவலைப்படுதல்" என்கிற செயலானது "தன்னைத்தானே தண்டித்துக் கொள்வதே" ஆகும்.

எனவே , மனிதனின் மாபெரும் எதிரி, அவன் மனதில் தோன்றும் வேதனையே ஆகும்.

"நீ பணிஓய்வு பெற்றுவிட்டாயே!" என்று யாராவது நம்மை கேலி செய்யப் போகிறார்களா?" "இல்லையே.!!!" "அய்யோ...நான் பணிஓய்வு பெற்றுவிட்டேனே.!" என்று நமக்கு நாமே நினைத்து கொண்டிருக்கிறோமே அந்தப் போலியான உணர்வைத் தவிர்த்து விட்டால் இனி சந்தோஷம்தான்.

மேற்கண்ட 3 எதிரிகளும் மறைந்து விட்டால், நமது மனக்கவலையும் மறைந்து விடும்.
     
நீங்கள் சொல்லுவது எனக்கு சற்றே மனஆறுதலைத் தந்தாலும் என் கவலை முழுவதுமாகப் போகவில்லை என்கிறீர்களா?

’பண்டிதர்கள் இறந்தார்க்கோ, இருப்பார்க்கோ கவலை கொள்வதில்லை."

- என்று கீதை கூறுகிறது.

இதன் விளக்கம் என்னவென்றால், "பண்டிதர்கள் யாருக்காகவும் கவலை கொள்வதில்லை"

அதாவது, பண்டிதர்கள் கவலை கொள்வதில்லை.

அதாவது,  ஞானிகள் கவலை கொள்வதில்லை.

அதாவது, அஞ்ஞானிகள் கவலை கொள்வார்கள்.

அதாவது, கவலைகளுக்கு காரணம் ஞானமின்மை.

ஆக, எல்லா கவலைகளுக்கும் காரணம் ஞானமின்மையே.

ஆம். எல்லா விதமான கவலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒவ்வொரு விதமான ஞானமின்மையே என்கிறது பகவத் கீதை.    

உதாரணமாக, கயிற்றை பாம்பாக காண்பவனுக்கு பயம் உண்டாகிறது. அந்த பயமே கவலையாக மாறுகிறது. 

ஒரு பெரியவர் அதைக் கையில் எடுத்து, "தம்பி, அது பாம்பு அல்ல. கயிறுதான்" என்று கூறுகிறார். உடனே, அதாவது, கயிறு என்ற ஞானம் வந்த உடனே  அழுகை அவனுக்குச் சிரிப்பாக மாறிவிடுகிறது.

முதுமை, இயலாமை, உடல்வலி, தீராத-நோய், இயலாமை, மரணம் போன்ற தவிர்க்க முடியாத கவலைகளுக்கு என்ன செய்வது என்கிறீர்களா?

எந்த ஒரு பிரச்சினையை உன் முயற்சியால் தவிர்க்கவே முடியாதோ! 
எந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வே இல்லையோ...
எந்த ஒரு பிரச்சினை நடந்தே தீருமோ... 
அதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது!

- என்கிறது கீதை.

ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

பொதுவாக, ஒரு பெரிய வியாதியானது உடல்வலி + மனவலி அகிய 2 வலிகளை சேர்த்தே ஏற்படுத்தும். உடல் வலியைவிட மனவலியே மிகவும் கொடுமையானது. ஒரு மாணவன் 40 நிமிடம் கூடைப்பந்து விளையாடுகிறான். மறுநாள், அதே மாணவன் தன் தவறுக்காக சக மாணவர்களின் மத்தியில்  10 தோப்புகரணம் போடுகிறான். இரண்டுமே வலியைத் தந்தது. முதலாவது வலி, ஏற்றுகொண்ட வலி். இதில் மனவலியும் இல்லை. உடல்வலியும் மிகக் குறைவே. இரண்டாவது வலி, ஏற்றுகொள்ளாத வலி். மனவலியும் அதிகம். அதனால் உடல் வலியும் அதிகம். ஆக, ஏற்றுக் கொண்ட பெரிய வலியைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளாத சிறியவலி மிகவும் கொடுமையானது.

எனவே, தவிர்க்க முடியாத பிரச்சனைகளால் ஏற்படும் கவலையை முற்றிலுமாகக் குறைக்க  "ஏற்றுக் கொள்ளுதல்" என்பதே சிறந்த மார்கம் என்பது தெளிவாகிறது.

அதைப்போலவே, பணிஓய்வு என்பதும்... தவிர்க்க முடியாதது, மாற்ற முடியாதது, நடந்தே தீரவேண்டியது என்பதை நாம் அறிவோம். எனவே அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை, வாலிபம், வயோதிகம், மரணம் என்பது நமது 4 பருவங்கள்.

குழந்தை, வாலிபம், ஆகிய இரண்டு பருவங்களை பிரிப்பது திருமணம் என்பார்கள். அதைப்போலவே வாலிபம், வயோதிகம் ஆகிய இரண்டு பருவங்களைப் பிரிப்பது பணிஓய்வு என்பார்கள்.

அதாவது திருமனத்தை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதைப் போலவே பணி ஓய்வையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம்.

பணிஓய்வு என்பது வயோதிகத்தின் ஆரம்பம் என கவலைப் படக்கூடாது. 

]]>
பணி ஓய்வு, Retirements, retirement worries, பணி ஓய்வு கவலைகள், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/25/w600X390/00000_retirement.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/25/dont-get--afraid-about-retirements-3199941.html
3199936 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் பரதக் கலையை வளர்க்கும் பெங்களூருவாழ் தமிழ் பெண் மணிகண்டன் தியாகராஜன் Thursday, July 25, 2019 06:18 PM +0530  


பரதநாட்டியம் நடனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தின் பூர்விகச் சொத்து. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரதநாட்டியம் பிரபலமானது. இன்று யோகாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது பாரம்பரிய நடனக் கலைகளுக்கும் கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக பரதநாட்டியம் என்பது உடலையும், மனதையும் நேர்படுத்தும் கலை. பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை குறிப்பதே பரதம்.

பரதநாட்டியம் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. பிரம்மன் பரத முனிக்கு பரதத்தை பயிற்றுவித்ததாகவும் கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்திலும் பரதக் கலை குறித்து குறிப்புகள் உள்ளன. கர்நாடகத்தில் உள்ள படாமி குகைகளில் நடராஜரின் பரத நாட்டிய வடிவம் உள்ளது.

படாமி குகைகள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். நம் தமிழகத்தில் பரத நாட்டியக் கலையை பிரதிபலிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பொறியியல் படித்து நல்ல சம்பளத்தில் கிடைத்த வேலையையும் பரதநாட்டியத்தின் மீது இருந்த ஈடுபட்டால் விட்டுவிட்டு தற்போது பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் உமா மகேஸ்வரி. அவரிடம் உரையாடியதிலிருந்து: 'பிறந்து வளர்ந்தது பெங்களூரில்தான். அப்பா, அம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 6 வயதாக இருக்கும்போதே பரத நாட்டிய கலையை பயிலத் தொடங்கிவிட்டேன். எனது முதல் குரு, பத்மினி ரவி. இவர் கர்நாடகத்தில் புகழ்பெற்ற முன்னணி பரதநாட்டியக் கலைஞர். இவரிடம் பரதம் கற்றுக்கொண்ட தம்பதியர், ரசிகா ஃபவுண்டேஷன் என்ற நடன பயிற்சி பள்ளியைத் தொடங்கினர்.

அங்கு என்னை எனது குரு பத்மினி ரவி அனுப்பி வைத்தார். அங்குதான் இளம் வயதிலிருந்து நடனம் கற்றுக் கொண்டேன். ஆண்டுதோறும் நடக்கும் பரத நாட்டிய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறேன். வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன். பரதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டது அங்குதான். பின்னர் பஜனைப் பாடல்களும் கற்றுக் கொண்டேன். இசையும், நடனமும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமானது.

பள்ளி, கல்லூரியில் படித்த காலத்தில் பல போட்டிகளில் பங்கேற்று பரதநாட்டியத்தில் பரிசுகளைப் பெற்றுள்ளேன்.  பணிபுரிந்த நிறுவனத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பரதம் ஆடியிருக்கிறேன். பின்னர், திருமணம் நடைபெற்றது. கணவர் ஸ்ரீநாத், இங்கிலாந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

திருமணத்துக்கு பிறகு, எனது வேலையை விட்டுவிட்டு, அவருடன் இங்கிலாந்து சென்றேன். அங்கு  திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது.  அங்கு பாரத் ஹிந்து சமாஜ் என்ற அமைப்பில் என்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டேன்.

பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். அந்த அமைப்பில் குஜராத், பஞ்சாப் என பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினராக இருந்ததால், அவர்களிடம் இருந்து அந்த மாநிலங்களின் பாரம்பரிய நடனத்தையும் கற்றுக் கொண்டேன். தர்பா, பாங்கரா ஆகிய நடனங்களையும் கற்றுக் கொண்டேன்.

இங்கிலாந்தில் இருக்கும்போது, சில நிகழ்ச்சிகளுக்கும் நடன இயக்குநராக இருந்தேன். அங்கிருந்துதான் பரதம் பயிற்றுவிப்பாளராக ஆனேன். இங்கிலாந்தில் தீபாவளி, பொங்கல் ஆகியவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் எனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  அதன்பிறகு, பெங்களூரு திரும்பினோம்.

தற்போது பரதம் பயிற்றுவிப்பதை முழு நேர பணியாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு குழந்தை பிறந்தபோது சகோதரி கீர்த்தனா பெரும் உதவியாக இருந்தார். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளிலும், பள்ளிகளிலும், நடனப் பயிற்சி பள்ளிகளிலும் நடனம் பயிற்றுவிக்கிறேன்.  என்னிடம் நடனம் கற்றுக் கொண்ட குழந்தைகள் பல போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி.

3 வயது முதல் 45 வயது வரையிலானவர்கள் என்னிடம் பரதம் கற்றுக் கொள்கிறார்கள். ஜாதி, மதம், மொழி, பாலினம் எதுவும் பரதக் கலையை கற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று கருதுகிறேன். பரத நாட்டியம் மிகச் சிறந்த உடற்பயிற்சியும் ஆகும்.உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் நடனப் பயிற்சி செய்வது சிறந்தது என்பது எனது கருத்து.

எனது பெற்றோரால்தான் பரதம் மட்டுமல்ல நீச்சல், பாடல் உள்ளிட்டவற்றையும் கற்றுக் கொள்ள முடிந்தது. இளம் வயதிலேயே என்னை மிகவும் அவர்கள் ஊக்கப்படுத்தினர். திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெற்றோர்களும் உற்சாகம் அளித்தனர். கலையில் ஆர்வமுள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அதே நேரம் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்தவும் கூடாது என்று கூறிய உமா மகேஸ்வரியிடம் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளும் பரதம் கற்று வருகிறார்கள்.

உங்கள் கலைப் பணி தொடர வாழ்த்துகள்!

]]>
Dance, bharatha natyam, dancer uma maheswari, uma https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/25/w600X390/1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/25/bengaluru-woman-teaches-bharatha-natiyam-3199936.html
3199912 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்! ஜேசு ஞானராஜ் Thursday, July 25, 2019 12:58 PM +0530  

கடந்த மாதம்  12-ம் தேதி மாலை...

ஜெர்மனியின் Frankfurt நகரமே  உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் விளங்கியது. Whitehall Media என்ற அமைப்பு 5வது முறையாக Steigenberger Frankfurt, Data Analytics Conference நடத்தியது. Deutsche Telekom, E. ON போன்ற ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் CEO, COO-க்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருக்க, மேடையில் அழகான பெண் ஒருவர் தோன்றி, அடுத்து, Data Analytics பற்றி பேச திரு. விஜய் பிரவிண் மகராஜன் அவர்களை அழைக்கிறேன் என்றதுமே, பலத்த கரவொலிகளுக்கு நடுவே டேட்டா அனலிடிக்ஸில் நிபுணராய் விளங்கும் அந்த 28 வயது இளைஞர் மேடையேறினார். எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்ற போதிலும் இவரின் பேச்சு எந்த ஒரு பிசிறும் இல்லாமல் செம்மையாக இருந்தது. கேள்வி நேரத்தில் இவரின் தெளிவான பதிலைக் கேட்டு பல CEO-க்கள் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

Conference முடிந்தவுடன் அவரை அணுகி 'வாழ்த்துக்கள்' சொன்னோம். உங்கள் பேட்டி வேண்டுமே! என்றவுடன், ஞாயிறுக்கிழமை மாலை 7 மணிக்கு வாங்க என்றார். இதோ அவருடைய பிரத்தியேகப் பேட்டி:

உங்கள் பூர்வீகம்?

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள தெற்கு அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்து, அப்பாவின் பணி காரணமாக தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். அப்பா மகராஜன், தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆய்வகக்கூடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், அம்மா சந்திரா, வைப்பாரில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். தங்கை நவீனா, அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் முடித்து தற்பொழுது பெங்களூரில் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். 'வாத்தியார் பிள்ளை மக்கு' னு சொல்லுவாங்களே, அதற்கு எதிர்மறையா 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 56 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து வாங்கிய 'சிறந்த மாணவர் விருது'ம் தான் என்னை எனக்கே புரிய வைத்தது. சிங்கப்பூரில் உள்ள "National University of Singapore" பல்கலைக்கழகத்தில் 'தானியங்கி இயந்திரங்கள்' பற்றி பேசி அவார்டும் வாங்கியிருக்கிறேன். ஐஐடி கான்பூரின் 'தூதுவர்' என்ற பதவியும் கல்லூரி காலத்திலேயே எனக்குக் கிடைத்தது. இவை எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் சாதிக்கவேண்டும் என்ற ஆசையை மனதில் வேரூன்ற வைத்தது.

ஜெர்மனிக்கு வந்தது எப்படி?

மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜெர்மனி வந்தேன். படிப்பு முடிந்தவுடன் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவில் வேலைகிடைத்தது. இந்த துறை எனக்கு பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின், Siemens நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். சேர்ந்த 9 வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால் அதிக பட்சம் 3 சதவீதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில் எனக்கு 8.4% கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.

அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?

டேட்டா என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவை தான். ஆனால் டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானைத் துல்லியமாக அளவிடுவது போல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப் பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும் போது "உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவு தான்.

டேட்டா அனலிடிக்ஸ் கான்பரென்ஸில் பேச அழைப்பு வந்தது எப்படி?

ஒயிட்ஹால் மீடியா எங்கள் சீமென்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, டேட்டா அனலிடிக்ஸில் என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விஷயங்களை கேட்டறிந்தனர். பின், ஒரு பக்க அளவில் டேட்டா அனலிடிக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பச்சொல்லியிருந்தனர். சில வாரங்கள் கழித்து, மூன்றாவதாக வீடியோ கான்பெரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விஷயங்களை விளக்கச்சொல்லி கேட்டனர். அதன் பின்னர் நடந்தது தான் உங்களுக்குத்தெரியுமே!

உங்க குடும்பம் பற்றி?

கடந்த நவம்பரில் திருமணம். மனைவி இரத்தினமங்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பயின்றவர். இப்போது, ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டிருக்கிறார்.

எதிர்காலத் திட்டம்?

படித்துக்கொண்டிருக்கும், வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி, அவர்களும் என் போல சாதனைகள் பல செய்ய வழிமுறைகள் வகுத்துக்கொண்டிருக்கிறேன். கூடியவிரைவில் அது பற்றிய அறிவிப்பு உங்களை வந்து சேரும்.

அவர் முயற்சிகள் கைகூடி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

 

]]>
டேட்டா அனலிடிக்ஸ் நிபுணர், பிரவிண் மகராஜன், ஜெர்மனி, தமிழக விஞ்ஞானிக்கு கிடைத்த கெளரவம், pravin maharajan, germany, tamil scientist, data analytics expert https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/25/w600X390/000000pravin_maharajan.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/25/grand-appriciation-received-by-a-tamil-scientist-in-germany-for-data-analytics--3199912.html
3199225 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! வழக்கறிஞர் சி.பி.சரவணன் Wednesday, July 24, 2019 06:05 PM +0530  

 

மெக்காலே  கல்விக் கொள்கை (Lord Macaulay education policy)

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் (Charter Act of 1813) எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளில் புத்தகங்களை வெளியிடுவதற்கான ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்காலே வாதிட்டார்

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு – பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்கு பிப்ரவரி, 2, 1835 சமர்ப்பித்தார். அதன்படி, ஆங்கில கல்வி சட்டம் 1835 (English Education Act 1835 ) இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆங்கிலக் கல்வியை முழுதும் ‘வேலையாள்’ தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான – கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கம்பெனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

பரோன் ஆக்லாண்ட் தீர்மானம் (Baron Auckland Minutes)

வில்லியம் பெண்டிங்குக்குப் பிறகு 1839 ஆம் ஆண்டு ஆக்லாண்ட் பிரபு பிறகு கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார், மெக்காலே இங்கிலாந்து திரும்பினார். பாரம்பரிய ஓரியண்டல் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்தாமல் பென்டிங்கின் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரிகளை ஆதரிக்கப் போதுமான நிதி கண்டுபிடிக்க ஆக்லாண்ட் திட்டமிட்டார். அவர் (நவம்பர் 24, 1839) ல் ஒரு தீர்மானம்  இயற்றினார்; அதன்படி ஓரியண்டல் மற்றும் ஆங்கிலக் கல்லூரிகளுக்குப் போதுமான நிதி வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிழக்கிந்திய கம்பெனி சமஸ்கிருதம் மற்றும் அரபி படைப்புகளை வெளியிடுவதற்கு மீண்டும் மானியம் வழங்கத் தொடங்கியது, 1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை

1986-ல் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது ராஜீவ் அரசு. பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்குப் பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. தொழில் கல்வியே அதன் பிரதானம். முன்பு பிரிட்டிஷ்காரர்களுக்குக் கணக்காளர்களை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்தப் புதிய கொள்கை செயல்பட்டது. மதிப்பெண்களைத் துரத்தும் மனப்பாடக் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்கிலமே வேலைவாய்ப்பைத் தர முடியும் என்பதால், பட்டிதொட்டிகளில் எல்லாம் நர்சரிப் பள்ளிகள் முளைத்தன. பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

யஷ்பால் கல்விக் குழு

உலகம் முழுதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வதைபடுவதைக் கடுமையாக விமர்சித்த யுனிசெஃப், யுனெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள், கற்றலைச் சுமையற்றதாக்கவும் இனிமையாக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாடுகளை அழைத்தன. சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் இன்றி, ஒரே மாதிரியான கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009-ல் அமைக்கப்பட்டதுதான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக் குழு. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (சி.சி.இ.) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது. இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

இந்தச் சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்காலே – ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை, அடுத்த 20 ஆண்டுகளில் கல்வி என்னவாகும் எனும் பெருங்கவலையையும் ஏற்படுத்துகிறது. வேதகாலக் கல்வியே புனிதமானது என்றெல்லாம் சொல்வதைவிடவும், இதற்கு முன்பு யஷ்பால் குழு என்று ஒன்று இருந்ததையோ அது சுமையற்ற கற்றல் முதல், குழந்தைகள் உரிமைகளை, ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதையோ கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி. எந்த ஒரு கல்விக் கொள்கையும் தனக்கு முன் நடந்தவற்றை, பட்டியலாகவாவது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பதே மரபு.

இதன் முக்கிய அம்சங்கள்

1.பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறை, நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
 
2.திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது. மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

3. இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி அமைப்புகள், பள்ளிகளுக்கான தரப்பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

4.ஆசிரியர்களின் தரம் – தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக்கொள்ளாது. இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்புகளுக்கு சேர ஆள் இல்லை என்பது வேறு விஷயம்.

5.மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தர்ம அமைப்புகளிடம் (தனியார்) ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.

6. ‘இந்திய கலாச்சாரக் கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது. இதைச் சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார்’ என்று இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

7. கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

8. ”இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு உரிய மொழி” என்று சமஸ்கிருதத்தை இந்தக் கல்விக் கொள்கை கட்டாயமாக்குகிறது (4.5.14)

9. மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி ஒன்றை கட்டாயமாகக் கற்பதுவும் திருத்தப்பட்ட வரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.

10. இந்தியாவின் இருபெரும் இசைகள் என்ற பெயரில் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையயும் மட்டுமே வகைப்படுத்தும் இக்கலிவிக் கொள்கை (4.6.2.1) , தமிழ் பண்ணிசை, சிறு பழங்குடிகளின் இனக்குழு இசைகளை ’பிற’ (Others) என புறந்தள்ளுகிறது.

11. முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் “தேசிய கல்வி ஆணையம்” (National Education Commission)- இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்ற அதிகார கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது. (2.3.1)

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசிய  கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக மட்டுமே செயல்படும். (8.1.3.)

12. மழலையர் கல்வியிலிருந்து உயராய்வு கல்வி வரை கல்வித்  துறையின் அனைத்து நிலையிலும் கொள்கைகள் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை வகுப்பது இந்த “தேசிய கல்வி ஆணையத்தின்” அதிகாரத்திற்குட்பட்டது. மாநில அரசு இதன் கொள்கை செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர வேறு பணி எதுவும் அதற்குக் கிடையாது. (அத்தியாயம் 23)

13.மனித வள மேம்பாட்டுத்துறையை கல்வித்துறை (Ministry of Education) என்பதாக பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கின்றது. இது பெயர் மாற்றமல்ல, இந்திய அரசு கல்வித்துறை அதிகாரத்தை கையிலெடுத்துக் கொள்ளும் அறிவிப்பெனலாம். 

14. மாநில அளவில் பள்ளிக் கல்வியை ஒழுங்கு செய்ய ஒரு “மாநிலக் கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (State School Regulatory Authority) அமைய வேண்மென்றும், அது தேசிய கல்வி ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பு என்றும் இந்த கல்விக் கொள்கை சொல்கிறது( 8.1.3)

15.கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசு ஒன்று குவிக்க , தேசிய கல்வி ஆணையத்தின் கீழ் “தேசிய தேர்வு முகமை” (National Testing Agency) “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம், பொதுக் கல்விக் குழு”,( General Education Council) “உயர்கல்வி நல்கைக் குழு, (Higher Education Grants Commission)  தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation) ஆகிய  அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் வெளிமாநிலத்தவர் நுழைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

16.பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும். (பத்தி 4.9.6) இனி பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், மருத்துவம், சட்டம், பொறியியல் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும்.

17.இந்திய அரசின் அதிகாரத்தை கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (National Higher Educational Regulatory Authority-NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2)

18.இதுவரை உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம், இந்திய பார்கவுன்சில், தேசிய தொழிநுட்பக் கல்வி ஆணையம் ஆகியவை தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக மாறும். மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)

19.கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம். இந்தக் குழு கல்லூரி மட்டுமின்றி, பள்ளியின் பாடத் திட்டத்தையும் முடிவு செய்யும்(18.3.2). 

20. மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக “தேசிய ஆய்வு நிறுவனம்” அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.

21.மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், உயராய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அதிகாரம் வழங்கும் அதிகாரம், தேசிய ஆய்வு நிறுவனத்திற்கே உண்டு. மாநில அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. (10.9)

22. தனியார் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பலகலைக்கழகங்களோடு கூட்டு வைத்து “கல்வித் தொழில்” செய்யலாம். (12.4.3)

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குள் கடை விரிக்கலாம்.(12.4.11)

23.B.A.,B.Sc உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு; கல்விக்கட்டணம், ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் ஆரம்பிப்பது ஆகியவற்றிக்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை, கல்லூரி நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்; திறமை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம்; டாடா, அதானி, அம்பானி, பில்கேட்ஸ், மார்க் சுகர்பர்க் போன்ற ‘தனியார் கொடை வள்ளல்கள்’ கல்வித் தொழில் தொடங்க முன்னுரிமை; தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது.
மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே. கடந்த பல பத்தாண்டுகளில் கடும் போராட்டங்கள், சோதனைகளுக்கிடையில் உருவான ஏகலைவர்களின் கட்டை விரல்களைத் துண்டாடிய குருதியில் தான் இக்கல்விக் கொள்கை எழுதப் பட்டுள்ளது.

1994-ம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. அந்த வரிசையில் கல்வியை சர்வதேசச் சந்தைக்குத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் இந்தப் புதியக் கல்விக் கொள்கை. பள்ளி மற்றும் உயர் கல்வியை பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் சந்தைக்காக திறந்துவிடுவதற்கான ஏற்பாடுதான் இது.

]]>
இந்திய கல்விக் கொள்கை வரலாறு, மெக்காலே முதல் மோடி வரை, indian education policy, mecaulay to modi, History of indian education policy, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/24/w600X390/National-Education-Policy-2019-Draft-1.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-indian-education-policy--from-lord-macaulay-to-modi-3199225.html
3197843 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் 2019-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பெறுகிறார் பாடகி செளம்யா! Monday, July 22, 2019 12:59 PM +0530 சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி மற்றும் இதர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவு செய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கர்நாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கர்நாடக இசையுலகில் மிக உயரிய விருதான இசைக் கலைஞர் டாக்டர் எஸ்.செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி எஸ். ராமநாதனிடமும் சங்கீத கலா ஆச்சார்யா டி. முக்தாவிடமும் இசை பயின்றார் செளம்யா. சென்னை பல்கலைக்கழத்தில் 'இந்திய இசையில்' முனைவர் பட்டம் பெற்றுள்ளார் செளம்யா. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 'மியூசிக் அகாதெமியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிக்காலஜிஸ்ட், நிருத்ய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கு, விருது பெறுபவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சௌம்யாவுக்கு வழங்கப்படுகிறது. எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது.

நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதிக்கு டிடிகே விருது வழங்கப்படுகிறது. மியூசிக்காலஜிஸ்ட் விருதுக்கு ஆர்த்தி என்.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடனமாமணி பிரியதர்ஷினி கோவிந்த் நிருத்ய கலாநிதி விருது பெறுகிறார்.

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள இவ்விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படும். நிருத்ய கலாநிதி நாட்டிய விருது பெறும் பிரியதர்ஷினி கோவிந்துக்கு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செளம்யா இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை நடை பெறவிருக்கும் அகாதெமியின் 93-வது ஆண்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெற்ற கலைஞர்கள் :

2018- அருணா சாயிராம் (வாய்ப்பாட்டு)
2017 - என். ரவிகிரண் (சித்திர வீணை)
2016 - ஏ. கன்யாகுமாரி (வயலின்)
2015 - சஞ்சய் சுப்ரமண்யன் (வாய்ப்பாட்டு)
2014 - டி. வி. கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்)
2013 - சுதா ரகுநாதன் (வாய்ப்பாட்டு)
2012 - திருச்சூர் வி. இராமச்சந்திரன் (வாய்ப்பாட்டு)
2011- திருச்சி சங்கரன் (மிருதங்கம்)
2010 - பம்பாய் சகோதரிகள் C.சரோஜா - C.லலிதா (வாய்ப்பாட்டு)
2009 - வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் (தவில்)

]]>
sangita kalanidhi, Sowmiya, singer, Music academy, sangita kalanidhi 2019, சங்கீத கலாநிதி விருது 2019, பாடகி செளம்யா, செளம்யா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/22/w600X390/maxresdefault.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/22/the-music-academy-announces-sangita-kalanidhi-and-other-awards-3197843.html
3196538 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் வேலை இல்லாததால் அன்றாட குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சிக்கினார்! மீண்ட கதை சொல்கிறார் கஸ்தூரி! புகழ் செல்வம் Saturday, July 20, 2019 11:15 AM +0530 கஸ்தூரியும் செல்வராஜும் அரிசி ஆலை ஒன்றில் கொத்தடிமைத் தொழிலாளர்களாகச் சிக்கிக் கொண்டவர்கள். அவர்கள் தங்களின் விடுதலைக்காக ஏங்கி இருந்தனர். தப்பிச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்கிற பதற்றத்தில் சுதந்திரமான வாழ்க்கையைப்பற்றி அவர்கள் ஒரு போதும் நினைத்ததில்லை. ஓரிரு ஆண்டுகள் மட்டுமல்ல…

'நாங்கள் வாங்கிய கடனை வேலை செய்து அடைத்து விட்ட பின்னர் முதலாளி எங்களை வீட்டிற்கு அனுப்பும் நாளுக்காக காத்திருந்தோம்.' - கஸ்தூரி

அந்த நாள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14, 2017 ஆம் ஆண்டு வந்தது. கஸ்தூரி, அவரது கணவர் செல்வராஜ் மற்றும் நான்கு குடும்பங்கள் பொன்னேரி மண்டல வருவாய் அலுவலரால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையிலிருந்து மீட்கப்பட்டனர். மொத்தம் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் (5 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை மற்றும் பத்து மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று) உள்ளிட்டோரை அவர்கள் வேலை செய்து வந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

பத்து ஆண்டுகளாகச் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் பறித்த கொத்தடிமை முறையைப் பற்றி கஸ்தூரி தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நியாயமான கூலியை வழங்கி தங்களைக் கண்ணியமாக நடத்திய ஒரு அரிசி ஆலை முதலாளியிடம் கஸ்தூரியும் செல்வராஜும் வேலை செய்து வந்தனர். ஆனால் அரிசி ஆலையை அவர் குத்தகைக்கு விட்டுவிட்டுச் சென்றுவிடவே இவர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டியதாயிருந்தது.

வேலை இல்லாததால் அன்றாட குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சீனிவாசன் என்கிற முதலாளியிடம் தங்கள் வேலை செய்து கழித்து விடுவதாகக் கூறி ரூபாய் 7000 கடனாக வாங்கினர். ஆனால் அந்த அரிசி ஆலையில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குத் தொடங்கும் வேலை மாலை வரை நீண்டு சுமார் 10 மணி நேரம் நீடித்தது. தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி இறக்கும் வேலையை செய்தனர். ஒவ்வொரு முறையும் 40 மூட்டை அளவு நெல் அரிசி ஆவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இந்த வேலையைச் செய்து வந்த கஸ்தூரிக்கும் செல்வராஜுக்கும் வாரத்திற்கு ரூபாய் 300லிருந்து 400 வரை மட்டுமே கூலியாக வழங்கியுள்ளார் அந்த முதலாளி. இது அரசு நிர்ணயம் செய்திருக்கும் ஒருவரின் சராசரியான குறைந்த பட்ச கூலியை விட மிகக் குறைவானது.

உறவினர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் முதலாளி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிப் போகச் சொல்வார். ஆனால் எல்லா வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் திரும்ப வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பார். அவசரம் மற்றும் திருவிழா காலங்களில் வீட்டுக்குச் சென்றாலும் முதலாளி திடீரென அவர்களது வீட்டிற்கே சென்று அரிசி ஆலைக்கு வேலைக்குத் திரும்பும்படி அழைத்து வந்துவிடுவார். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை அடிக்கடி மிரட்டி எப்படியாவது வேலைக்குத் திரும்பச் செய்துவிடுவார். கஸ்தூரியும் செல்வராஜும் ஒருமுறை வீட்டிற்குச் சென்றபோது இதேபோல் நடந்தது. செல்வராஜ் உடல்நிலை சரியில்லாமல் தன் கிராமத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முதலாளி அவரை விடாமல் வேலைக்குத் திரும்பும்படி நிர்ப்பந்தித்து அழைத்து வந்து ஓய்வில்லாமல் வேலை வாங்கினார்.

தொழிலாளர்கள் வேறு எங்கும் வேலைக்குச் செல்லக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறுவார். அப்படிச் செல்வதானால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி விட்டுச் செல்லுமாறு சொல்லுவார். அரிசி ஆலையில் வேலை இல்லாத காலத்தில் முதலாளி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 ரூபாய் வழங்கிவிட்டு அதனை ஏற்கனவே வாங்கிய கடனில் சேர்த்துக் கொள்வார். இப்படியாகத் தொழிலாளர்கள் அவருக்கு அதிகமான கடன் தொகையைத் திருப்பி செலுத்த வேண்டியிருப்பதால் அரிசி ஆலையை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என மிரட்டுவார். இவ்வாறு அந்த முதலாளி அற்ப பணத்துக்காக எங்களை ஏமாற்றி எங்களின் கடின உழைப்பைச் சுரண்டியுள்ளார்.

'எங்களைப் போன்ற மக்களை அதிகாரிகள் காப்பாற்றி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களுக்கும் அந்த நாள் வரும் என்று காத்திருந்தோம்…' - கஸ்தூரி.

கஸ்தூரியும் செல்வராஜும் மீட்கப்பட்டு தற்போது ஓராண்டாகிறது. அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தாலும் தற்போது சுதந்திரமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

'இனி யாரிடமிருந்தும் முன் பணம் வாங்க மாட்டோம்' என்று கஸ்தூரி உறுதியாகக் கூறுகிறார்.

கொத்தடிமையாக இருந்த பத்து வருடங்கள் தாங்க முடியாத வலி, கண்ணீர், அவமானம் மற்றும் கையறுநிலை தற்போது காணாமல் போய்விட்டன. தங்களது மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

நன்றாகப் படித்துச் சம்பாதிப்பவர்களுக்கு 7000 ரூபாய் என்பது தங்களது ஒரு மாத வருமானத்தில் பாதி கூட இருக்காது. ஆனால் அந்த பணத்தை திருப்பிச் செலுத்த பத்து வருடங்கள் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/20/w600X390/Rice_1--621x414.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/20/bonded-slavery-3196538.html
3195825 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சாலை விபத்துக்களைத் தடுக்கும் ‘நைட்ரஜன் கேஸ்’ நிறை / குறைகளைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க! (விடியோ) கார்த்திகா வாசுதேவன் Friday, July 19, 2019 01:12 PM +0530  

சாலை விபத்துக்களை தடுக்க வாகனங்களின் டயர்களில் நைட்ரஜன் கேஸ் நிரப்புவதை மத்திய அரசு கட்டாயமாக்கப் போகுதாம். அதைப் பற்றிய ஒரு விடியோவைத்தான் இப்போ நாம பார்க்கப் போறோம். நைட்ரஜன் கேஸ் ஃபில் பண்றதால கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன தீமைகள் என்ன? அதைப்பற்றிய அரசின் நிலைப்பாடு என்னங்கறதையெல்லாம் இந்த விடியோ மூலமா நீங்க தெரிஞ்சிக்க முடியும். இதை கவனத்தில வச்சுகிட்டு தான் மத்திய அரசு விபத்து எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் வாகனங்களின் டயர்கள்ள நைட்ரஜன் கேஸ் நிரப்பச் சொல்லி இனிவரும் நாட்களில் ஆணையிடப் போகுதாம். இந்த ஆணை கூடிய சீக்கிரம் கட்டாயமாக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

 

 

இந்த விடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, மறக்காம பெல் ஐகான் பிரஸ் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்போ தான் இதே மாதிரி பயனுள்ள விடியோக்கள் தொடர்ந்து உங்களை வந்து சேரும்.

காணொலியில் இருப்பதை முழுமையாக வாசித்து அறிந்துகொள்ள விரும்புவோருக்காக கட்டுரையாகவும் அளிக்கப்படுகிறது. வாசித்துப் பயன் பெறுங்கள்.

சாலை விபத்துக்களை தடுக்க  வாகனங்களின் டயர்களில் நைட்ரஜன் கேஸ் நிரப்புவதை மத்திய அரசு கட்டாயமாக்கப் போகுதாம். அதைப் பற்றிய ஒரு விடியோவைத் தான் இப்போ நாம பார்க்கப் போறோம்.

நைட்ரஜன் கேஸைப் பொருத்தவரை அது காத்தை விட மிக லேசானதுங்கறதால அதை நம்முடைய வாகனங்களின் டயர்களில் காத்துக்குப் பதிலாக நிரப்பி வண்டியைச் செலுத்தும் போது ரொம்ப ஸ்மூத்தா நம்மாள ஃபீல் பண்ண முடியும். அதாவது காத்துல பறக்கறாப்போலன்னு வச்சிக்கலாம்.

ரெண்டாவதா நாம வண்டியிலேயே ரொம்ப தூரம் தொடர்ந்து பயணிக்கிறோம்னு வைங்க. அப்போ டயர் சூடாகறதோட உள்ள இருக்கற காத்தும் சேர்ந்து சூடாகத் தொடங்கிடும். இதனால சில நேரங்களில் டயர் வெடிக்கற நிலைமையும் வந்துடக் கூடும். இந்த மாதிரி நேரத்துல நம்ம டயர்ல நாம காத்துக்கு பதிலா நைட்ரஜன் ஃபில் பண்ணியிருந்தோம்னு வைங்க, நைட்ரஜன் ரொம்ப கூலான ஒரு கேஸ். அதனால அது என்ன பண்ணும்னா டயர் சூடாகும் போது அதை கூல் பண்ண ஆரம்பிக்கும். இதனால டயரோட வெப்பநிலை அதிகரிக்காம பேலன்ஸ்டா மெயிண்டெயின் பண்ண முடியும். ஸோ... நைட்ரஜன் இருந்தா டயர் வெடிக்கற பிரச்னை இல்லை.

டயரோட வெப்பநிலை மட்டுமில்ல டயர் பிரஸ்ஸர் அதாவது அழுத்தம் மாறாம கான்ஸ்டண்ட்டா இருக்கனும்னாலும் நீங்க நைட்ரஜன் கேஸையே ஃபில் பண்ணிக்கலாம். டயர் பிரஸ்ஸர் கான்ஸ்டண்ட்டா இருக்க வேண்டியது ஏன் அவசியம்னா அப்படி இருந்தா தான் டயரோட தேய்மானம் குறைவா இருக்கும். ஒருவேளை டயர் பிரஸ்ஸர் லோவா இருந்தா தேய்மானம் அதிகமா இருக்கும். அப்படி இல்லாம கான்ஸ்டண்டா இருக்கனும்னா நீங்க நைட்ரஜன் கேஸ் ஃபில் பண்ணிக்கறது நல்லது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, டயர்ல நாம காத்து ஃபில் பண்ணும்போது அதுல இருக்கற ஆக்ஸிஜன் இருக்கே அது கொஞ்சம் பொல்லாதது. ஆக்ஸிஜன் ஆக்ஸிடேஷன் மூலமா டியூப்லெஸ் டயர்களுடைய ரிம்களை துருப்பிடிக்கச் செய்து சீக்கிரமே டயர் குவாலிட்டியை சிதைச்சுடக்கூடும். ஒருவேளை நீங்க டியூப் டயர் யூஸ் பண்ணாலும் கூட இந்த ஆக்ஸிடேஷன் புராசஸ் மூலமா டியூபுடைய டியூரபிலிட்டி குறைஞ்சி சீக்கிரமே டியூப் துவண்டு போயிடும். ஸோ இந்தக் குறைகள் எல்லாம் நேராம இருக்கனும்னா நாம நைட்ரஜனுக்கு மாறிடறது தான் பெட்டர்.

அதுமட்டுமில்லாம மைலேஜ் இன்க்ரீஸ் ஆகனும்னா அதுக்கு டயர் பிரஸ்ஸர்  சரியா மெயிண்டெயின் ஆகனும். அதாவது டயர் பிரஸ்ஸர் பெர்ஃபெக்டா இருந்தா தான் சாலைக்கும் டயருக்குமான உராய்வு குறையும். அப்படிக் குறையும் போது ஆட்டோமேடிக்கா மைலேஜ் இன்க்ரீஸ் ஆயிடும்.

அதோட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா? சாதாரணமா நீங்க ஏர் ஃபில் பண்ணும்போது ரென்டு நாளைக்கு, மூணு நாளைக்கு ஒரு தடவை ஏர் செக் பண்ண வேண்டியதா இருக்கும். ஆனா அதே நைட்ரஞன் கேஸ் ஃபில் பண்ணீங்கன்னா 3 வாரத்துக்கு ஒரு தடவை செக் பண்ணா போதும்.

இந்த இடத்துல சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம். இப்போ நாம நைட்ரஜன் கேஸ் ஃபில் பண்ணி வண்டி ஓட்டிட்டு இருக்கோம். திடீர்னு நம்ம வண்டியில ஏர் பிரஸ்ஸர் குறையற மாதிரி தெரியுது. அந்த நேரம் பார்த்து நாம போற பெட்ரோல் பங்க்ல நைட்ரஜன் கேஸ் இல்லை. அங்கே நார்மல் ஏர் தான் இருக்குன்னா அப்போ என்ன செய்யறது? இந்த மாதிரி டவுட் நிறைய பேருக்கு வரும். அதெல்லாம் பிரச்னையே இல்லை. நாம நைட்ரஜன் கேஸை தனியா பிரிச்செடுத்து யூஸ் பண்ணத் தொடங்கறோமே தவிர அதொன்னும் ஆபத்தான கேஸ் இல்லை. சாதரணமா நாம டயர்ல ஃபில் பண்ற கேஸ்லயே 78% நைட்ரஜன் கேஸ் தான் இருக்கும். மிச்ச சதவிகிதம் தான் ஆக்ஸிஜன், ஹட்ரஜன் உட்பட்ட மத்த கேஸ்களுக்கு அப்படிங்கறதால நைட்ரஜன் கிடைக்காதப்ப நாம ஆர்டினரி கேஸையே ஃபில் பண்ணிக்கிறதுல ஒரு பிரச்னையும் இல்லைன்னு தான் சொல்லனும்.

இதுல டிஸட்வாண்டேஜ்னு எதையும் பெருசா நாம சொல்ல வேண்டியதில்லை. ஒரே ஒரு கஷ்டம் தான். இப்போதைக்கு நைட்ரஜன் கேஸ் அவெய்லபிலிட்டி டீலர்ஸ்கிட்ட மட்டும் தான் அதிகமா இருக்கு. பெட்ரோல் பங்ல இன்னும் புழக்கம் அதிகமாகலை. அதனால நைட்ரஜன் தான் வேணும்னு நினைக்கறவங்களுக்கு அதைத் தேடிக் கண்டுபிடிச்சு ஃபில் பண்றது கஷ்டமா இருக்கும். 

அதோட நீங்க நைட்ரஜன் ஃபில்ல் பண்ணிட்டு மறுபடியும் ஆர்டினரி ஏர் ஃபில் பண்ணும்போது நைட்ரஜனால வாகனங்களுக்கு கிடைக்கக் கூடிய பெனிஃபிட்ஸ் குறைஞ்சிடும்.

இதெல்லாம் பெரிய டிஸ் அட்வாண்டேஜ் இல்லைன்னு நினைக்கறவங்க கூட இப்ப நான் சொல்லப்போற விஷயத்தைக் கேட்டா கொஞ்சம் ஜெர்க் ஆகலாம். ஏன்னா, நைட்ரஜன் கேஸ் ஃபில் பண்ண ஆகக்கூடிய செலவு. சில இடங்களில் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைக்கும் கூட கேட்கறாங்களாம். எதுக்கு இவ்ளோ சார்ஜ் பண்றாங்கன்னா, சாதாரண கேஸ்ல இருந்து நட்ரஜனை பிரித்தெடுக்கற புரோசஸ்க்கு மெஷினரி காஸ்ட், கரண்ட்னு நிறைய செலவாகுதுன்னு சொல்றாங்க. ஸோ ஏர் ஃபில் பண்றதுக்கு நாம சாதாரணமா கொடுக்கற 5 , 10 ரூபாயோட கம்பேர் பண்ணும் போது இது அதிகம்னு சிலர் ஃபீல் பண்ணலாம்.

நைட்ரஜனைப் பொருத்தவரை குறைபாடுகள்னா அது இது மட்டும் தாங்க.

மத்தபடி உங்க வாகனத்துல நீங்க நைட்ரஜன் ஃபில் பண்ணீங்கன்னா டயரோட ஆயுள் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாம மேல முதல்ல சொல்லியிருக்கற எல்லா பிளஸ்பாயிண்ட்ஸும் உங்களுக்கு கிடைக்கும். ஸொ முடிஞ்ச அளவுக்கு உங்களோட வாகனங்கள்ள நைட்ரஜன் கேஸை ஃபில் பண்ணி யூஸ் பண்ண முயற்சி செய்ங்க.

இதை ஏன் இப்ப நாங்க சொல்றோம்னா”

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளில் விபத்துகள் ஏற்படறது தொடர்ந்து அதிகமாகிட்டே வருது. வாகனங்களைச் செலுத்தும் வேகம், ஓட்டுநரோட கட்டுப்பாடு இழப்பு, அலட்சியம், மது போதை, வாகனங்களில் கண்டிகொள்ளாமல் விடப்படும் கோளாறுகள்னு இதுக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டாலும், விபத்துக்கள் குறையக் காணோம். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிச்சிட்டே தான் இருக்கு.

இதுக்கு சிம்பிளா ஒரு உதாரணம் சொல்லனும்னா, யமுனா எக்ஸ்பிரஸ்வே தொடங்கப்பட்ட 2012 ஆம் ஆண்டுல இருந்து இந்த ஜனவரி மாசம் வரைக்கும் இங்க 4,880 விபத்துகள் ஏற்பட்டு அதனால 730 பேர் உயிரிழந்திருக்காங்கன்னு ஒரு அதிர்ச்சித் தகவலை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்ணு வெளியிட்டிருக்கு.
குறிப்பா இந்த வருஷம் மட்டும் இதுவரைக்கும் 247 விபத்துக்கள் ஏற்பட்டு அதனால 127 பொஏர் உயிரிழந்திருக்காங்க., இதுவே 2018 ஆம் ஆண்டுல ஏற்பட்ட 659 விபத்துக்கள்ள மட்டும் 110 பேரோட உயிர் பறிபோயிருக்கு.

இதையெல்லாம் கவனத்தில வச்சுகிட்டு தான் மத்திய அரசு விபத்து எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் வாகனங்களின் டயர்கள்ள நைட்ரஜன் கேஸ் நிரப்பச் சொல்லி இனிவரும் நாட்களில் ஆணையிடப் போகுதாம். இந்த ஆணை கூடிய சீக்கிரம் கட்டாயமாக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

நைட்ரஜன் கேஸ் ஃபில் பண்றதால கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன தீமைகள் என்ன? அதைப்பற்றிய அரசின் நிலைப்பாடு என்னங்கறதையெல்லாம் இந்த விடியோ மூலமா நீங்க தெரிஞ்சிகிட்டீங்க இல்லையா? இந்த விடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, மறக்காம பெல் ஐகான் பிரஸ் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்போ தான் இதே மாதிரி பயனுள்ள விடியோக்கள் தொடர்ந்து உங்களை வந்து சேரும்.

மீண்டும் சுவாரஸ்யமான மற்றொரு விடியோவில் சந்திக்கலாம்

]]>
சாலை விபத்து , accidents, Vehicles, நைட்ரஜன் கேஸ், நிறை / குறைகள், ஆர்டினரி கேஸ், nitrogen gas filling, ordinary gas filling, vehicle tyres, advantages VS disadvantages https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/19/w600X390/Nitrogen_Thumbnail.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/19/nitrogen-gas-filling-in-tyres-advantages-vs-disadvantages-3195825.html
3195123 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் தேச விரோதச் சட்டமும் குற்றவாளிகள் லிஸ்டும்! (விடியோ) கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, July 18, 2019 01:50 PM +0530  

இன்று தமிழக மக்களிடையே பரபரப்பாகப் பேசுபொருளாகி இருக்கும் தேச விரோதச் சட்டத்தை இயற்றியது இந்தியா அல்ல. அது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளை அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம். அதை நீக்க வேண்டும் என்பது தான் நேருவின் விருப்பமாக இருந்தது. ஆனாலும் இன்று வரை அதை நீக்க முடியாததோடு, யாரெல்லாம் அரசுக்கும் அதன் திட்டங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புகிறார்களோ அவர்களை எல்லாம் கைது செய்து ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாகவும் பயன்பட்டு வருவது வேதனை. தேச விரோதச் சட்டத்தின் கீழ் சுதந்திரத்திற்கு முன்பும் சரி நாடு சுதந்திரமடைந்த பின்பும் சரி யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எதற்காக அவர்கள் மீது அச்சட்டம் பாய்ந்தது என்பது பற்றியெல்லாம் இந்தக் காணொலி வாயிலாக நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

 

 

இந்த சட்டத்தின் கீழ் சுதந்திரத்துக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவர்களில் வைகோ குறிப்பிடத்தக்கவர். அவருக்கு இச்சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதற்கான தீர்ப்பு இன்று வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்.

]]>
தேச விரோதச் சட்டம், குற்றவாளிகள் லிஸ்ட், வைகோ, sedition law, arrested people list, vaiko, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/18/w600X390/bytes.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/18/indians-who-arrested-by-sedition-law-3195123.html
3195117 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் ‘சரவணபவன் அண்ணாச்சி’ துயரத்தில் முடிந்ததோர் பெருந்திணை காதல்! கார்த்திகா வாசுதேவன் Thursday, July 18, 2019 12:48 PM +0530  

சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்... இந்தப் பெயரை நாம் இதுவரையிலும் ஜீவஜோதி மீதான பொருந்தாக் காதலுக்கு மட்டுமே உதாரணமாகப் பல ஆண்டுகளாக நினைவு கூர்ந்து வந்திருக்கிறோம். இந்தப் பெயருக்குப் பின்னால் சரவண பவன் எனும் சங்கிலித்தொடர் உணவகத்தின் வெற்றிக்கதையும் அடங்கியிருக்கிறது. அது ஏன் நம் கருத்தை விட்டு மறைந்ததென்றால் காரணம் அண்ணாச்சியின் பெருந்திணைக் காதல். தன்னை விட வயதில் மிக இளையவரான ஜீவ ஜோதியை அண்ணாச்சி மணக்க விரும்பியது ஏன்? மூடநம்பிக்கை என்கிறது இவ்வழக்கின் பழைய வரலாறு. 

ராஜகோபாலுக்கு முன்னரே இரண்டு மனைவிகள் இருந்த போதும் அவர் ஜீவ ஜோதியை மணக்க விரும்பியது ஜோதிடத்தின் மீது கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையின் பால் மட்டுமே. ஜீவஜோதியை மணந்தால் ராஜகோபால் மேலும் பணம் படைத்தவராகவும், மேலும் புகழ் மிக்கவராகவும் மாறுவார் என ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் கூற அதை அப்படியே நம்பிய ராஜகோபால் தனது உணவகத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவரின் மகளான ஜீவஜோதியின் மேல் காதல்வயப்பட்டார். இதைக் காதல் என்பதா? பேராசை என்பதா? பெருந்திணைக் காமம் என்பதா? என்று புரியத்தான் இல்லை. ராஜகோபாலின் நினைப்பு இப்படித் தறிகெட்டு ஓட, மறுபுறம் பள்ளி மாணவியான ஜீவஜோதியோ, தான் டியூஷன் சென்ற இடத்தில் சந்தித்த ப்ரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட்டார். அவர்களது காதல் திருமணத்திலும் முடிந்தது. விஷயம் இப்படி என்று தெரிந்ததும் ஜீவஜோதியின் திருமணத்தை முறிக்க ராஜகோபால் பெரிதும் முயன்றிருக்கிறார்... முயற்சிகள் எதுவும் கதைக்காகாத பட்சத்தில் ஜீவஜோதியின் கணவரான ப்ரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தார் ராஜகோபால்.

முடிவெடுத்ததோடு 26.10.2001 அன்று ப்ரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்தவும் செய்தார். கணவரைக் காணோம் என்று தவித்த ஜீவஜோதி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சரவணபவன் உணவக உரிமையாளரான ராஜகோபால், தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு திருமணமான பிறகும் கூட அந்த வற்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், கணவர் காணாமல் போன விஷயத்தில் தனக்கு ராஜகோபால் மீது தான் அழுத்தமான சந்தேகம் இருப்பதாகவும் ஜீவஜோதி தனது புகாரில் குறிப்பிடுகிறார். ஜீவஜோதி புகார் அளித்த 5 நாட்களுக்குப் பின் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் மலைச்சாலையில் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடல் சடலமாக மீட்கப்படுகிறது. இதையடுத்து தான் காதல் கணவரின் கொலைக்கு நீதி கேட்டு ராஜகோபாலுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை வலுவாகக் கையிலெடுத்தார் ஜீவஜோதி.

ஜீவஜோதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ராஜகோபால் தரப்பு, இது தொழில் போட்டி காரணமாக யாரோ தூண்டி விடுகிற சதி, ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ என்றது. ஆயினும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ராஜகோபால், அவரது உணவக மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது ராஜகோபாலின் உணவக மேலாளர் டேனியல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ராஜகோபாலுக்கான தண்டனை உறுதியானது. விசாரணையின் முடிவில் 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுகு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்பும் ஓயவில்லை ராஜகோபால் தரப்பு. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு நாகை மாவட்டம், வேதாரண்யம், தேத்தாகுடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கிய ஜீவஜோதியை அங்கிருந்தும் ராஜகோபால் தரப்பு கடத்த முயற்சி செய்தது. காரணம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு தங்கள் தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்லி ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று. ஆனால், ஜீவஜோதி இதற்கு உடன்பட மறுக்கவே கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த முயற்சி அப்போது கிராம மக்களால் தடுக்கப்பட்டுவிட்டாலும் இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கத் தவறவில்லை ஜீவஜோதி. அவரளித்த புகாரின் கீழ் கடத்தல், கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ் ராஜகோபால் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ராஜகோபாலினால் தன் வாழ்வில் நிகழ்ந்து விட்ட துயரப்பக்கங்களில் இருந்து விடுபட நினைத்த ஜீவஜோதி தனது நீண்டநாள் நண்பரான தண்டாயுதபாணி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். வேதாரண்யம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான, கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கின் விசாரணைக்காக அச்சமயம் 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஜீவஜோதி நீதிமன்றப்படி ஏறி சாட்சி சொன்னார். முதலில் காதல் கணவரின் கொலைக்காக நீதி கேட்கும் மனநிலையில் இருந்த ஜீவஜோதி இப்போது நிறையவே மாறிப் போயிருந்தார். இரண்டாம் திருமணமும், வயிற்றில் இருந்த சிசுவும் ஜீவஜோதியின் மனதை மாற்றி விட்டனவோ என்னவோ? ‘ அண்ணாச்சி தன்னைக் கடத்தியதாகவோ, மிரட்டியதாகவோ நாகபட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் எந்த ஒரு காவல்நிலையத்திலும் தான் புகார் அளிக்கவே இல்லை’ என ஜீவஜோதி அந்தர் பல்டி அடித்தார். அதைத் தொடர்ந்து ஜீவஜோதியை அண்ணாச்சி தரப்பு சமரசம் செய்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஜீவஜோதி மறுத்தார். ‘வாழ்க்கையில் நேர்ந்த துயரங்கள் அனைத்துமே தலைவிதிப்படி நடந்து விட்டதாகவும், தன்னைத் துரத்தும் பிரச்னைகளில் இருந்து ஒரேயடியாக ஒதுங்கி விடத் தான் முடிவெடுத்து விட்டதாகவும் ஜீவஜோதி அப்போது 
பேட்டியளித்தார். 

இப்படி ஒருவழியாக ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இருந்து விடுபட முடிந்த ராஜகோபால் தரப்பால் ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுபட முடியாமல் போனதன் காரணம் விதி வலியது என்பதால். 

ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி கே மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ‘தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் அவர் கோரினார். ஆனால், இவ்வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததோடு ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆணையை ஏற்று சரணடைந்த ராஜகோபால் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரவணபவன் ராஜகோபாலின் கதை இப்படி முடிந்தது. ராஜகோபாலின் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் பேசுவதென்றால் இந்த ஒரு கதையைத்தான் நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அவருக்கு உழைப்பால் உயர்ந்தவர் என்றொரு மாற்று முகமும் உண்டு. அதைப்பற்றியும் அவர் இறந்து விட்ட இந்த நாளில் நாம் நிச்சயம் நினைவுகூரத்தான் வேண்டும். 

ஒரு மனிதன் எத்தனை வல்லவனாக இருந்த போதும், திறமைசாலியாக, கடும் உழைப்பாளியாக இருந்தபோதும் அவனுக்கு கண்மூடித்தனமான மூட நம்பிக்கை, குறிப்பாக ஜோதிடத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை எங்கே கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது என்று பாருங்கள்?!

இந்த மனிதருக்கு மூடநம்பிக்கை மட்டும் இல்லாமலிருந்திருந்தால் இன்றைக்கு விளம்பரங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்களே தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் சிலர் அவர்களைப் போல தனது சங்கிலித் தொடர் உணவகத்துக்கு தானே மாடலாக நின்று கொண்டாடப்படக்கூடிய அளவுக்கு திறமை படைத்தவராக இருந்திருப்பார்.

ஏனெனில், தான் தொடங்கிய உணவகம், அதன் ஊழியர்கள் என்று வரும் போது அவருக்கென்று சில தயாள குணங்களும், அவற்றைப் பின்பற்றுவதில் உறுதித்தன்மையும் இருந்திருக்கின்றன. அந்தவகையில் பார்க்கும் போது ராஜகோபாலை திசை மாறிப்போன ஆட்டுக்குட்டியாகத் தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது.

மேய்ப்பர் இல்லா ஆட்டுக்குட்டி தவறுக்கு மேல் தவறிழைத்து இன்று உயிரிழந்திருப்பது காலத்தின் கோலம்.

அண்ணாச்சியின் சில தயாளகுணங்களைப் பற்றியும் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி கிராமத்தில் மிக மிக ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தார் ராஜகோபால். வறுமை காரணமாக 7 ஆம் வகுப்பிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இரவில் கட்டாந்தரையில் படுத்துறங்கியவர் தான். அங்கிருக்கும் போது தான் தேநீர் போடக் கற்றுக் கொண்டதாக ராஜகோபால் கூறியதுண்டு.

தொடர்ந்து ஒரு மளிகைக் கடையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கே கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தன் அப்பா மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாகத் தனியாக ஒரு மளிகைக்கடையைத் துவக்கினார்.

முதல்முயற்சி என்பதால் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கிறது. அத்தனையையும் தனது தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொண்டா ராஜகோபால். 

மளிகைக்கடையில் 1979 ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது விற்பனையாளர்கள் ஒருவருடன் நடந்த உரையாடலின் விளைவாக ராஜகோபால் கண்டடைந்ததுதான் ... இன்று உலகம் முழுக்க 33 கிளைகளுடன், வெளிநாடுகளில் 45 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கும் சரவணபவன் எனும் ருசிகரமான ஆலவிருட்சம். 

இந்த விருட்சத்துக்கான விதை முளைவிட்டுக் கிளைத்தெழுந்தது ராஜகோபாலின் தன்னம்பிக்கை உரத்தின் மேல் தான்.

இதை மிக உறுதியாக வளர்த்தெடுக்க ராஜகோபால் தனக்கென விதித்துக் கொண்ட சில உறுதிப்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.

வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த அந்த காலகட்டத்தில் எந்தக் காலத்திலும் உணவின் தரத்திலும், வாடிக்கையாளர்களின் நல்ல அனுபவத்திலும் எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்பதில் முழுக்கவனம் செலுத்தியவர் ராஜகோபால்.

மலிவு விலைப்பொருட்களை வாங்கலாம், ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் அளிக்கலாம். லாபத்தை அதிகரிக்கலாம் என்று ஆலோசனை சொன்ன அதிகாரியை சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பியவர் ராஜகோபால்.

தரமானதும், சுவையானதுமான உணவை வழங்குவதென்பது ஆரம்பகாலத்தில் நஷ்டத்தையே அளித்து வந்த போதும் உணவகம் மீதான மதிப்பு கூடக்கூட அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறத் தொடங்கின. 

நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமன்றி ஊழியர்களின் பணிச்சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதும் சரவணபவனின் வெற்றிக்கு முதல் காரணமாகக் கருதப்படுகிறது.

சாப்பாட்டுத்தட்டின் மேல் வாழை இலையை வைத்துப் பரிமாறும் முறையை அறிமுகப்படுத்தியது ராஜகோபால் அண்ணாச்சி தான். காரணம் தட்டைக் கழுவும் ஊழியரின் பணிச்சுமையைக் குறைப்பதே!

சரவணபவன் ஊழியர்களின் இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லையாம். காரணம் அடுத்த நாள் காலையில் வேலையில் சோர்வு ஏற்படும் என்பதால் இரவுக்காட்சி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

ஊழியர்களுக்கு வேலையில் உறுதித் தன்மையோடு இருப்பிடத்தையும் வழங்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார் ராஜகோபால். சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் கூட உண்டு. ஆண்டுதோறும் சொந்த ஊர் சென்று திரும்ப சிறப்பு விடுமுறைத்திட்டம். யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் கவனித்துக் கொள்ள இரண்டு பேர். குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வது என்று தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான அனுகூலங்களைச் செய்து தந்தவர் ராஜகோபால்.

ஒரு சிறந்த நிர்வாகியாக இயங்கிய அவரால் அந்த திறமையை சொந்த வாழ்வில் மேற்கொள்ள முடியாமல் போனது தான் அவரது தோல்விக்கு முதல் காரணமாகி விட்டது.

சரவணபவன் ராஜகோபாலை மக்கள் கடுமையான உழைப்பால் உயர்ந்த உணவக முதலாளியாக மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ராஜகோபாலை பின்பற்ற விரும்புபவர்களுக்கு அது தான் உகந்தது. மற்றபடி ராஜகோபாலின் இருட்டுப் பக்கங்கள் அவரையே காவு கொண்டு இன்று அவரது வாழ்வையே முடித்து வைத்து விட்டதில் மீண்டும் உறுதியாக நம்பத் தோன்றுகிறது ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ முன்பெல்லாம் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருமெனக் கருதப்பட்ட ஊழ்வினையானது இப்போது அதே பிறவியில் வட்டியும் முதலுமாகத் திருப்பி அளித்து விடுவது தான் அந்தோ பரிதாபம்!

பெருந்திணை: தமிழ் இலக்கியத்தில் பொருந்தாக் காதல் அல்லது காமத்தை பெருந்திணை என்று குறிப்பிடுவார்கள். தொல்காப்பிய இலக்கணப்படி இது அகத்திணை வகையில் வருகிறது.


 

]]>
சரவண பவன் ராஜகோபால், சரவணபவன் உணவகம், ஜீவஜோதி, மரணம், ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு, SARAVANABHAVAN P RAJAGOPAL, SARAVANA BHAVAN HOTELS, PRINCE SANTHAKUMAR MURDER CASE, JEEVA JOTHI, SARAVANABHAVAN RAJAGOPAL DIED, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/18/w600X390/saravanabavan_rajagopal.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/18/tragic-love-history-of-saravanabavan-annachi-3195117.html
3192346 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் முன் மாதவிடாய் காலம் என்றால் என்ன? DIN DIN Sunday, July 14, 2019 03:24 PM +0530 முன் மாதவிடாய் காலம் என்பது, சினைமுட்டை வெளியேறிய 14- வது நாளுக்குப் பின்னரும், அடுத்த மாதவிடாய்க்கு முன் வாரத்திலும் இருக்கும் நாட்களாகும். அந்நேரங்களில் பல்வேறு அசாதாரண மாற்றங்கள் பெண்களுடைய உடலில் ஏற்படுகிறது. இதையே, முன் மாதவிடாய் சிக்கல் என்று கூறுகிறோம். இதற்கு காரணம், சினைமுட்டை வெளியேறிய பின்னர், இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாகும். 

இந்த நாட்களில், பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. அனைத்து பருவப் பெண்களும் இந்த முன்மாதவிடாய் சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பக்குவம் தெரிந்தவர்களும், அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற புரிதல் இருப்பவர்களும், இயற்கையிலேயே நோய் எதிர்ப்புத்திறன் வலிமையாகப் பெற்ற பெண்களும் இதனைக் கடந்து மாதவிடாய் பகுதிக்குள் நுழைந்துவிடுவார்கள். மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் சார்ந்த இதழில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுத்தகவலில், நான்கு பெண்களில் மூவருக்கு இந்த முன்மாதவிடாய் சிக்கல் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களாக மூட்டுவலி, தசைப்பிடிப்பு அல்லது வலி, சோர்வு அல்லது மயக்கமான அல்லது மந்தமான நிலை, உடல் எடை அதிகரித்தல், வயிறு உப்புசம், முகப்பருக்கள் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படும். மன நலனைப் பொருத்தவரையில், எதிலும் ஈடுபாடு இல்லாத ஒரு வெறுமை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், திடீரென்ற மனமாற்றங்கள், பசியின்மை, ஏதாவது குறிப்பிட்ட ஒரு உணவுப்பொருளின் மீது விருப்பம், சமூக ரீதியான நிகழ்வுகள் மற்றும் விழாக்களிலிருந்து ஒதுங்குதல், செயல்களிலும் படிப்பிலும் கவனக்குறைவு போன்றவை காணப்படும். 

மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இரண்டு ஹார்மோன்களே காரணங்களாகின்றன. உதாரணத்திற்கு, புரோஜெஸ்டிரான் ஹார்மோனானது, மோனோஅமினிக் ஆக்ஸிடேஸ் (Mono aminic oxidace) என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பொருள் 5-ஹைட்டிரோக்ஸிட்ரிப்பிடமைன் (5- hydro oxytry pitamine) என்பதன் அளவினைக் குறைப்பதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. இது போலவே, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனானது தனது பங்கிற்கு, மோனோஅமினிக் ஆக்ஸிடேஸின் சிதைவை அதிகப்படுத்தி, அதிகப்படியான மோனோஅமினிக் ஆக்ஸிடேஸ் மூலக்கூறுகள் மூளைசெல்களில் வலம்வரத் துணைபுரிகிறது. இவை செரட்டோனின் (Seretonin) உற்பத்தியை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது. 

எனவே, பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோன்களின் சமநிலையை சரிவர பாதுகாப்பதற்காக, அவற்றிற்கு தேவையான பேரூட்டச் சத்துக்களையும் நுண்ணூட்டச் சத்துகளையும் தேவையான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, சினைமுட்டை வெளியேறும் பதினான்காம் நாளிலிருந்தே, உணவு முறைகளை சற்றே மாற்றிக் கொள்வதன் மூலம், முன் மாதவிடாய் சிக்கலையும், மாதவிடாய் வலிகளையும் எதிர்கொள்வதற்கான முழுவலிமையையும் உடலுக்குக் கொடுப்பது மட்டுமல்லாமல், அறிகுறிகளைக் குறைத்துக்கொள்ளவும்முடியும். 

ப. வண்டார்குழலி இராஜசேகர், 
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
- அடுத்த இதழில்

]]>
periods, menopause, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/flatten-belly-IBS.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/14/what-is-pre-menopause-period-3192346.html
3192337 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் மயான வேலையை மன தைரியத்துடன் மேற்கொள்ளும் பெண் இவர்! DIN DIN Sunday, July 14, 2019 12:00 PM +0530 ஆண்களே இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தகனத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சடங்குகளை செய்து, அடக்கம் செய்யும் பணியில் பெண் ஒருவர் ஈடுபடுவதை சிலர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அவர் பெயர் புனிதா.

புதுச்சேரி சண்முகாபுரம் மயானத்தில்தான் இவரது பணி. கணவன் கைவிட்ட பிறகு, ஒரு குழந்தையுடன், பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் பாரமாக இருந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தப் பணியை மனமுவந்து மேற்கொண்டு வருகிறார் புனிதா. இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது: 'எனது பெற்றோருக்கு 5-ஆவது மகளாகப் பிறந்த நான், குடும்ப சூழல் காரணமாக சிறுவயது முதலே பல்வேறு வேலைகளைச் செய்து வந்தேன். எனது பெற்றோர் எனக்கு கடந்த 2003-ஆம் ஆண்டில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக, எனது மகன் பிறந்த பிறகு, எனது கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மீண்டும் நான், எனது மகனை வைத்துக் கொண்டு கடும் சிரமத்துக்கு உள்ளானேன்.

அடுத்து, என்ன செய்வது என்று யோசித்த சமயத்தில் எனது தந்தை ஏற்கெனவே மயானத்தில் பார்த்த வேலை எனக்கு கிடைத்தது. முதலில் எனது தந்தைக்கு உதவியாக இருந்த நான், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அடக்கத்துக்கான குழி தோண்டுதல், தகனத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தல், சடங்குகளை மேற்கொள்தல், அடக்கம் செய்தல், நள்ளிரவு வரை இருந்து தகனம் செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

நான் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்களின் தகன வேலைகளை செய்துள்ளேன். இறந்தவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள், எனவே, அவர்களுக்கு கண்ணும் கருத்துமாக நல்ல முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்து அனுப்ப வேண்டும். அதனால், நான் மனமுவந்து இந்தப் பணியை மேற்கொள்கிறேன்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து எனது மகன், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜீவனம் நடத்தி வருகிறோம். புதுச்சேரி நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறேன். எனக்குத் துணையாக எனது தந்தையும், தாயும் அவ்வப்போது பணிகளைச் செய்வர். இதில் சீரான வருமானம் கிடைக்காது. சில சமயம் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கும். எனவே, இந்த வேலை நேரம் போக, மற்ற நேரத்தில் ஏதேனும் தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்கிறார் புனிதா. மயான வேலையை மன தைரியத்துடன் மேற்கொள்ளும் புனிதாவின் பணியைப் பாராட்டலாம்.
 - க. கோபாலகிருஷ்ணன்

]]>
graveyard, dead body, death https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/punitha.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/14/a-women-working-in-graveyard-3192337.html
3192331 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இப்போதுதான் மன நிறைவாக இருக்கிறது. நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் உண்மை கதை Sunday, July 14, 2019 10:56 AM +0530  

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் கீதா மற்றும் ரமேஷ் தம்பதியினர். ஒருநாள் செங்கல் சூளை முதலாளி ஒருவர் வீட்டிற்கு வந்து அவர்களிடம் ரூபாய் 5 ஆயிரத்தைக் கையில் திணித்து விட்டு தன்னுடைய சூளைக்கு வேலைக்கு வருமாறு கூறி சென்று விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரமேஷும் கீதாவும் பணத்தை ஏற்றுக் கொண்டு வேலைக்குச் செல்வது என முடிவு செய்தனர். ஆனால் இத்தகைய முடிவு அவர்களின் சுதந்திரமான வாழ்க்கையைப் பாதிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதற்காக ரமேஷும் கீதாவும் கொடுத்த விலை அவர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு - வேலை, உணவு, தூக்கம் என அந்த முதலாளியின் கட்டளைக்கு அடி பணிந்து வாழ்ந்தனர். குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் கோயில் திருவிழாக்களுக்கு என வெளியில் எங்கும் செல்ல முடியாமல் அந்தச் செங்கல் சூளையிலேயே அடைபட்டுக் கிடந்தனர்.

முடிவில்லாத உழைப்பு சுரண்டல். இடைவேளை கூட இல்லாமல் ரமேஷையும் கீதாவையும் மணிக்கணக்கில் வேலை வாங்கியுள்ளார் செங்கல் சூளை முதலாளி. 'காயம்பட்ட எங்கள் கைகளைப் பாருங்கள். இனி மேல் எங்களால் செங்கற்களைச் செய்ய முடியாது' என்று முதலாளியிடம் கூறினோம். ஆனால் அவரோ, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு போதுமான செங்கற்கள் வேண்டும்' என்று மனசாட்சி இல்லாமல் கூறுவார். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் வாரத்திற்கு ரூபாய் 150 மட்டுமே அவர் கொடுப்பார். அது நம் மாநிலத்தில் ஒரு தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக் குறைவானது.

அப்போது கீதா மற்றும் ரமேஷ் தம்பதியருக்கு 6 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் பாட்டி வீட்டிலிருந்து கொண்டு பால்வாடி சென்று வந்தனர். குழந்தைகளைப் பார்க்கச் சென்று வர முதலாளியிடம் அனுமதி கேட்டாலும் அவர் மறுத்துள்ளார். 'கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போங்கள்' என்று சொல்லுவார். வாங்கும் கூலி அன்றாட தேவைகளுக்குக் கூட போதுமானதாக இல்லாததால் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

ஒரு நாள் ரமேஷ் மற்றும் கீதாவுக்குத் தெரியாமல் முதலாளி அவர்களின் கிராமத்திற்குச் சென்று இரு குழந்தைகளையும் செங்கல் சூளைக்கு அழைத்து வந்து விட்டார். 'பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகளை இங்கே ஏன் அழைத்து வந்தீர்கள் என்று’ நாங்கள் கேட்டோம். அதற்கு அவர் ‘இங்கிருந்து அவர்களும் செங்கல் செய்யட்டும்’ என்று திமிராகக் கூறினார். அதிலிருந்து அவர்கள் படிப்பும் வாழ்க்கையும் வீணாகப் போய்விட்டது' என்று கூறுகிறார் ரமேஷ். பணம் வாங்கியது எங்களின் தவறு; அதனால்தான் இக்கொடுமையை அனுபவிக்கிறோம்" என்று சோகத்துடன் கூறுகிறார் கீதா. அன்றிலிருந்து குழந்தைகளும் அவர்களுடன் வேலை செய்தனர். குழந்தைகள் வேலை செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருந்தால் முதலாளி அவர்களின் தலையிலேயே கொட்டு வைப்பார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விடுதலை

2013-ஆம் ஆண்டு திருத்தணி மண்டல வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் அரசு அதிகாரிகள் குழுவினர் செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி அக்குடும்பத்தை மீட்டனர். அவர்கள் அங்குச் சென்ற போது சுடும் வெயிலில் குழந்தைகளும் பெரியவர்களும் செங்கற்களைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளின் விசாரணையில் அக்குடும்பம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மண்டல வருவாய் அலுவலர் அவர்கள் மீட்கப்பட்ட அன்றே ரமேஷ், கீதா மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு விடுதலை சான்றிதழ்களை வழங்கினார். அச்சான்றிதழில் அவர்கள் வாங்கிய கடன் தொகை ரத்து செய்யப்படுவது மட்டுமில்லாமல் அவர்கள் விடுதலையானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுக்கால சுதந்திரமான வாழ்க்கை

கடந்த 5 ஆண்டுகளாக ரமேஷ் சங்கீதாவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். விருப்பப்பட்டதை உண்டும் தேவைப்படும் போது உறங்கியும் வாழும் வாழ்க்கையைப் பெரிதும் மதிக்கின்றனர். 'இப்போதுதான் மன நிறைவாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்கிறார் ரமேஷ். 'யாராவது இனி பணம் கொடுத்தாலும் நான் வாங்கப் போவதில்லை. என் குடும்பத்திற்காகக் கடுமையாக வேலை செய்து அவர்களைக் காப்பாற்றுவேன்' என்று உறுதியுடன் கூறுகிறார் அவர்.

ரமேஷுக்கும் கீதாவிற்கும் தமிழக அரசு நிலப் பட்டா வழங்கியபோது அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. 'இதுதான் எங்கள் பெயரில் இருக்கும் முதல் நிலம். அதில் நாங்கள் சொந்தமாக வீடு கட்டி வாழ்வோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி யாராவது இங்கு வந்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் தைரியமுடன் சொல்வோம் இது எங்கள் வீடு, நாங்கள் இங்கு வாசிக்கிறோம் என்று. எங்களைப் போன்ற கொத்தடிமையிலிருந்தவர்களுக்கு நாங்கள் உதவுவோம்' என்று பெருமையுடன் கூறுகிறார் ரமேஷ்.

தற்போது ரமேஷும் கீதாவும் தினக்கூலிகளாக வேலைக்குச் சென்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றனர். மேலும் ரமேஷ் கூறுகையில் 'இப்போது நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். யாரும் எங்களை இனி இந்த வேலை தான் செய்ய வேண்டும், பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூற முடியாது. நாங்கள் எங்குச் செல்ல நினைக்கிறோமோ அங்குச் செல்ல முடியும். எந்த நிகழ்ச்சியானாலும் கலந்து கொள்வோம். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்'.

]]>
slavery bonded https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/14/w600X390/Sengal_sulai.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/14/slavery-bond-released-3192331.html
3189632 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கொடுமை! மனம் பதற வைக்கும் உண்மைக் கதை! புகழ் செல்வம் Wednesday, July 10, 2019 01:24 PM +0530  

உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு மருத்துவம் பார்க்க முன்பணமாக வாங்கிய தொகையால் ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்தின் விடுதலையும் அமைதியும் பறி போனது. சதீஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இரு குழந்தைகளுக்குப் பெற்றோர் பவானி மற்றும் குமார் தம்பதியினர். அவர்களது இளைய மகன் விஷ்ணுவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவம் பார்க்கப் பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே பவானியும் குமாரும் செங்கல் சூளையில் வாரம் ஆறு நூறு ரூபாய்க்கு வேலை செய்து வந்தனர். இது அதிகமான கூலி இல்லை என்றாலும் குறைந்தபட்சம் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது.

இளைய மகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களிடம் பணம் இல்லாததால் ரூபாய் 15 ஆயிரத்தை வேறொரு செங்கல் சூளை முதலாளியிடம் கடனாகப் பெற்றனர். அவரும் அதை எப்படித் திருப்பிச் செலுத்துவது என வழிகளைக் கூறினார். இந்த ஏழ்மையான தம்பதி கடன் வழங்கிய செங்கல் சூளை முதலாளியிடம் வேலை செய்து கடனை அடைத்து விடலாம் என்று கருதினர். ஆனால் நடந்தது வேறு. அந்த வருடம் முழுக்கவும் அவர்களுக்குப் பசியும் பட்டினியும், மோசமான வார்த்தைகளால் நேர்ந்த அவமானம், வேலைக்கேற்ற கூலி இல்லாமை என அவர்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். மேலும் இரவு பகலாக வேலை செய்தாலும் கடன் தொகை அப்படியே இருந்தது. இவ்வளவு துயரமும் பவானி ஒருநாள் துணிந்து செங்கல் சூளையை விட்டு செல்லும் நாள் வரைத் தொடர்ந்தது.

கொத்தடிமையிலிருந்து விடுதலை

நாளொன்றுக்கு ஆயிரம் செங்கற்களைச் செய்தால் பவானிக்கும் குமாருக்கும் சேர்த்து ரூபாய் 600 வழங்குவதாக முதலாளி கூறி அழைத்துச் சென்றார். ஆனால் வேலையிடத்தில் கடன் தொகைக்கு உண்டான வட்டி போக மீதம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 மட்டுமே வழங்கினார். அந்த நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு வாரச் செலவிற்கு 100 ரூபாய் போதாமல், சிறு சிறு தொகைகளை ஒவ்வொரு வாரத்திற்கும் அவர்கள் கடனாக வாங்கினர். ஏற்கனவே வாங்கிய ரூபாய் 15 ஆயிரத்துடன் சிறு கடன்களையும் சேர்க்கவே எவ்வளவு வேலை செய்தும் கடன் குறையாமல் அப்படியே இருந்தது.

முதலாளி சரியான சம்பளம் தராமல் இரவு பகலாக வேலை வாங்குவதிலேயே முனைப்பாக இருந்தார். அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் அவர்களது வேலை மாலை 3 மணி வரை நீடித்தது. களத்தை சுத்தப்படுத்தி சேற்றைக் கல் இல்லாமல் மிதித்து அதனைச் செங்கற்களாகத் தயாரித்து சூளையில் ஏற்றிச் சுடுவது வரை அவர்கள் ஓயாமல் வேலை செய்தனர். இது மட்டுமில்லாமல் செங்கற்களை வண்டியில் ஏற்ற இரவிலும் அவர்கள் வேலை செய்தனர். உண்ண உணவு, உழைப்புக்கேற்ற கூலி இல்லாமல் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே சென்றதால் அங்குள்ள தொழிலாளர்கள் பெரும் மன உளைச்சலில் இருந்தனர்.

மீட்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வேலை செய்யும் போது குமார் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் தன் சொந்த கிராமத்திற்குச் சென்று விட்டார். பல நாட்களாகியும் குமார் செங்கல் சூளைக்குத் திரும்பவில்லை. அச்சமயத்தில் செங்கல் சூளை முதலாளி இரு குழந்தைகளை பட்டினி போட்டும் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பவானியை விரட்டி விரட்டி வேலையையும் வாங்கியுள்ளார்.

"என் கணவர் அடிக்கடி எங்கேயாவது சென்று விடுவார். ஒரு முறை ஒரு மாதம் வரை  அவர் திரும்ப வரவில்லை. குழந்தைகளுக்கு உணவு இல்லாமல் பட்டினியாகவே இருந்தனர்; நானும் கர்ப்பமாக இருந்தேன். எனக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை."

ஆத்திரமடைந்த பவானி தன் கணவர் எங்கிருக்கிறார் எனக் கண்டுபிடிக்க தன் மாமியார் வீடு இருக்கும் இடத்தை சிலரிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உதவி செய்யாமல் பவானியை வேலைக்குச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

'முதலாளி எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டி பயமுறுத்துவார். நாம் இப்படியே இங்குத் தங்கினால் அவர் நம்மை கொல்லக் கூட தயங்க மாட்டார் என்று தெரிந்தது." குழந்தைகள் துன்பப்படுவதை தாங்கமுடியாமல் தப்பித்துச் செல்ல முடிவெடுத்த பவானி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அடுப்புக்கு விறகு ஒடித்து வரச் செல்வதாக முதலாளியிடம் கூறவே அவர் சந்தேகமடைந்து அவர்களைக் கண்காணிக்க ஒரு நபரைக் கூடவே அனுப்பியுள்ளார்.

நாங்கள் இரு புறமும் மலைக்கு நடுவே உள்ள ஒரு சிறு ஓடைக்கு வந்தோம். சந்தர்ப்பம் பார்த்துத் தப்பித்தோம். மெயின் ரோட்டுக்கு வந்ததும் எதிர்வரும் வாகனங்களை வழிமறித்து ஏறிக் கொள்ளலாம் என்று கை காட்டினேன். ஆனால் யாரும் நிறுத்தவில்லை. முதலாளியின் ஆட்கள் வந்து 'கடன் வாங்கிட்டு இங்கிருந்து தப்பித்து போகலாமென்று பார்க்கிறீர்களா?' என்று எங்களைப் பிடித்துக் கொண்டனர்.

முதலாளியின் ஆட்கள் குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு மொத்த கடன் தொகையையும் திருப்பி செலுத்தி விட்டுச் செல் அல்லது மீண்டும் செங்கல் சூளைக்கு வந்து வேலை செய் என்று அச்சுறுத்தினர்.

'அவர்கள் என் குழந்தைகளை இழுத்துச் சென்றனர். அம்மா அம்மா என்று அவர்கள் துடிப்பதைப் பார்த்து அவர்களை விட்டு விடக் கெஞ்சி அழுதேன். எந்தப் பலனும் இல்லை'

கர்ப்பமாக இருந்த பவானி தன் குழந்தைகளை அடியாட்களிடம் இருந்து மீட்க வாயில் அன்னம் தண்ணீர் கூடப் படாமல் கஷ்டப்பட்டார். அவர்கள் குழந்தைகளைச் செங்கல் சூளைக்கு  மீண்டும் அழைத்துச் சென்றாலும் பவானி தைரியமானதொரு முடிவை எடுத்தார். அதாவது சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் தன் அம்மாவின் கிராமத்திற்கு வந்து கொஞ்சம் பணத்தைத் திரட்டி சோமு முதலாளியிடம் கொடுத்துவிட்டு தன் குழந்தைகளை மீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.

ஆனால் பவானி தன் கிராமத்தை அடைவதற்கு முன்பே பவானியின் உறவினர் ஒருவரை தொலைப்பேசியில் அழைத்த சோமு முதலாளி, பவானியின் குழந்தைகளில் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார். அப்படியே துடித்து நிலை குலைந்து போனார் பவானி. இதைக் கேட்ட பவானியின் தாயாரும் பதற்றம் அடைந்தார்.

'என் வீட்டிற்கு சென்று அம்மாவைப் பார்த்ததும் நான் உடைந்து அழுதேன். என்னால் அழுவதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.'

பவானி இந்த நிலையில் இருப்பதையும் அவளது மகன் இறந்து விட்டான் என்ற துயர செய்தியைக் கேட்டதும் பவானியின் தாயார் நிலைமையை மெல்ல மெல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதற்கிடையில் சோமு முதலாளியின் ஆளான கன்னியப்பன் எந்தத் தகவலும் அறியாத பவானியின் மாமியாரை அழைத்து பவானியின் இரு குழந்தைகளும் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் பெரும் குழப்பம் அடைந்த கிராமத்தினர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக வேலூர் மண்டல வருவாய் அலுவலர் திரு.செல்வரசு அவர்களை அழைத்து தகவல் தெரிவித்தது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை பவானி வேலை செய்த செங்கல்சூளை அமைந்துள்ள கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி குழந்தைகளை மீட்டனர்.

உளவியல்ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட பவானியையும் அவரது குழந்தைகளையும் ஐஜேஎம் அரசு  உதவியுடன் டிசம்பர் 2017-ல் மீட்டது.

பவானியின் மூன்றாவது மகன் அன்பு சுதந்திரமாகப் பிறந்தான்.

தற்போது:

பவானி தற்போது தன் மூன்று குழந்தைகளுடன் அவரது சகோதரியின் வீடு அமைந்திருக்கும் வேலூர் மாவட்டம் பரதராமி என்னும் கிராமத்தில் வசிக்கிறார். ஏழு மாத கைக்குழந்தையான அன்பு தனது அண்ணன் விஷ்ணுவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறான். மூத்த குழந்தைகள் இருவருக்கும் முன்பிருந்ததை விட முற்றிலும் மாறான வாழ்க்கை இது. சுற்றிலும் செங்கல், எப்போதும் பட்டினியில் வதங்கிக் கிடந்தும், தங்களது பெற்றோரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதை கேட்டும் இருந்த சிறுவர்கள் தற்போது குழந்தைப் பருவத்திற்கே உரிய மகிழ்ச்சியுடன் சேற்றில் நாய்க் குட்டிகளுடன் விளையாடுவதைக் காண முடிகிறது.

பவானியின் மூத்த மகன் சதீஷ் இப்போது பள்ளி செல்கிறான். சதீஷ் திறமையான மாணவனாக வருவான் என ஆசிரியர் கூறியதைப் பவானி பெருமையுடன் கூறுகிறார். தங்கள் குடும்பத்திற்கு அன்றாட தேவைக்கான பணத்தை பவானியும் குமாரும் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். ஆனாலும் குமாரின் குடிப்பழக்கத்தால் மொத்தமாக வீடு சேராமல் அது வீணாகிறது.

'ஒரு டன் மரம் வெட்டினால் வாரம் எங்களுக்கு Rs.1300-Rs.1500 வரை கிடைக்கிறது. ஆனால் வீட்டுச் செலவுக்காக குமாரிடமிருந்து Rs.200-Rs.300 தான் எனக்குக் கிடைக்கிறது. மீதத்தைக் குடித்தே அழிக்கிறார்'

பவானி தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், தன் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். எந்த உறுதியுடன் தன் குடும்பத்தின் விடுதலைக்காகப் போராடினாரோ அதே உறுதியுடன் தங்களது எதிர்காலத்தை எண்ணி மனதில் தைரியத்துடன் இருக்கிறார். அவரது முகத்தில் தற்போது புன்னகை தெரிகிறது.

பவானி தன் விடுதலையை நெஞ்சார நேசிக்கிறார்.

(கட்டுரையில் குறிப்பிட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/brick.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/10/a-true-story-of-a-brave-woman-3189632.html
3185357 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் இந்திய அளவில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த புரிதலில் இந்த மாநில ஆண்கள் தான் முதலிடம் பெறுகிறார்கள்! RKV DIN Thursday, July 4, 2019 06:03 PM +0530  

கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது மற்றும் ஆணுறை பயன்பாட்டில் இன்றளவும் இந்திய ஆண்களிடையே மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதன் காரணமாகவே தம்பதியினரில் பெரும்பாலும் பெண்களே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை நெடுங்காலமாக இங்கு நீடித்து வருகிறது. விதிவிலக்காக சில குடும்பங்களில் கருத்தடை அறுவை சிகிச்சைகளை ஆண்களும் செய்து கொள்ளலாம் எனும் தெளிவு இருந்தாலும் கூட அப்படியான சிகிச்சைகளுக்கு உட்படும் ஆண்களின் எண்ணிக்கை என்பது பெண்களோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்து வருகிறது.

புதன்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி செளபே இது குறித்துப் பேசுகையில், குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை மற்றும் ஆணுறை பயன்பாட்டு விஷயத்தில் யூனியன் பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதிலுமாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் சண்டிகர் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு ஆண்களில் 28.6% பேர் கருத்தடை அறுவை சிகிச்சைகளை தங்களது மனைவிகளுக்குப் பதிலாக தாங்களே மேற்கொண்டு கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருப்பதை தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - 4 ந் அடிப்படையில் சுட்டிக்காட்டினார். 

இந்தப் பட்டியலில் சண்டிகரைத் தொடர்ந்து டெல்லி (20.2), பஞ்சாப்(19.5), உத்தரகாண்ட்(16.8) மாநிலங்கள் அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் கடைசி இடம் பெற்றுள்ள மாநிலங்கள் எவையெவை என்று தெரிந்து கொள்வோமா?
ஆந்திரப் பிரதேசம்(0.8%), தமிழ்நாடு(0.9%), பிகார்(1.1%) மூன்று மாநிலங்களும் கடைசி இடத்தில் இருக்கின்றன.
இந்த பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுவதிலுமாக ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும், கருத்தடை அறுவை சிகிச்சைமுறைகள் மற்றும் ஆணுறைகளையும் பயன்படுத்துவதற்கான தேசிய சராசரி சதவிகிதம் 5.9% இருந்தது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார். 

]]>
use of male contraceptives, family planning, National Family Health Survey-4, குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை சாதனப் பயன்பாடு, தமிழகம் கடைசி இடம், ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/00000CONDOMN.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/04/number-of-men-having-undergone-sterilisation-and-using-condoms-were-lowest-in-andhra-pradesh--tamil-nadu-3185357.html
3185336 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் திமுக சங்கரமடம் இல்லை; ஆனால் பட்டத்து இளவரசர் ரெடி! RKV Thursday, July 4, 2019 04:15 PM +0530  

ஒரு காலத்தில் திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்றவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அரசியல் கட்சிகளில் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சித்து கருணாநிதி பதிவு செய்த கருத்து அது. ஆனால் பாருங்கள் சங்கர மடத்துச் சாமியார்கள் சந்நியாசிகள். அவர்களுக்கு திருமணம் ஏது? ஆகையால் அங்கே கூட வாரிசுகள் என்போர் குருதித் தொடர்பு இன்றி வெளியில் இருந்து தான் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இங்கே நம் அரசியல் தலைமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நேருவுக்குப் பின் இந்திரா, இந்திராவுக்குப் பின் ராஜிவ், ராஜிவுக்குப் பின் சோனியா, சோனியாவுக்குப் பின் ராகுல்... இப்படிச் சென்று கொண்டிருக்கிறது திமுக இன்று கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் வாரிசுப் பட்டியல்.

கட்சியின் தலைமைப் பதவிகளுக்கு வாரிசுகளைக் கொண்டு வரத் திட்டமிடுவதில் நேரு பரம்பரைக்கு சற்றும் சளைத்ததல்ல கருணாநிதி பரம்பரை...

திமுக வை அண்ணா தொடங்கினாலும், அண்ணாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தாலோ அல்லது அப்படி ஒரு நடைமுறையில் அவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ அடுத்தபடியாக திமுக வை கருணாநிதி தனதாக்கிக் கொண்டார். ஆக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கருணாநிதியின் தலைமையை ஏற்க மறுத்தவர்களும் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தனர் என்பதற்கு திமுகவின் அரசியல் வரலாறே சாட்சி! இப்படிக் கையகப்படுத்திக் கொண்ட கட்சியில் தனது வாரிசுகளை நிலைநிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்தவர் கருணாநிதி. இவர்களது குடும்பத்தில் அந்தப் பிரயத்தனத்தின் நீட்சியாக இதோ இன்று திமுக வின் இளைஞரணிச் செயலாளராக உதயமாகவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். காலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தனியார் செய்தி ஊடகமொன்று உதயநிதியின் புதிய அவதாரத்தை கூவிக் கூவி தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண தமிழ்நாட்டுப் பிரஜைகளாக நாம் எல்லோருமே இங்கே ஒரு கேள்வி கேட்டாக வேண்டுமே!

திமுக என்பது தமிழகத்தின் பிரதானக் கட்சிகளில் ஒன்று. சுமார் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட அந்தக் கட்சியில்... கட்சியின் ஆரம்பகாலம் தொட்டு அதன் வளர்ச்சிக்கும், மக்களிடையே அதன் நம்பகத் தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும் கருத்தியல் ரீதியாகவும், உடலுழைப்பாகவும் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்த தொண்டர்கள் பலர் உண்டு. அவர்களை எல்லாம் தலைமைப் பதவிக்கு அல்ல சுமாரான அதிகாரம் கொண்ட பதவியில் அமர வைத்துக் கூட அழகு பார்க்க விரும்பாத இந்தக் கட்சித் தலைமைகள்  தங்கள் வாரிசுகள் என்று வந்து விட்டால் மாத்திரம் அவர்களை அசகாய சூரர்களாக நினைத்து போட்டியேதுமின்றி கட்சியின் அதிகாரமிக்க பதவிகளில் உடனடியாக அமர வைத்து அழகு பார்க்க நினைப்பது ஏன்?

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஸ்டாலினுக்கு மகனாகப் பிறந்தார், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு பேரனாகப் பிறந்தார் என்ற தகுதி மட்டுமே போதுமா கட்சியின் இளைஞரணிச் செயலாளராக ஆக்கப்படுவதற்கு. திமுக, சங்கர மடம் அல்ல என்று சொன்ன தலைமை இது குறித்து சிந்திக்க வேண்டுமில்லையா?

உதயநிதி ஸ்டாலின் திமுக அடிப்படைத் தொண்டராக இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறார். கட்சியின் பிரதான உரிமையாளராகத் தன்னை நினைத்துக் கொள்வதால் மட்டுமே ஒருவர் அக்கட்சியை வழிநடத்தத் தகுதி உடையவராக ஆகி விடுவாரா? 

ஸ்டாலின் தனது 14 வயதில் கோபாலபுரம் பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து அப்பகுதியில் இருக்கும் முடிதிருத்தும் கடையொன்றை மையமாகக் கொண்டு உருவாக்கியது தான் இன்றைய திமுக இளைஞரணி என்பதாக அதன் தோற்றத்துக்கு ஒரு  அர்த்தமுள்ள பிறர் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு துவக்கம் உண்டு. அந்த வயதில் ஸ்டாலின் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’. அந்த அமைப்பின் மூலமாக அந்தப் பகுதியில் சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக இளைஞரணி வரலாறு கூறுகிறது. வெறுமே மாணவர் சங்கம் போன்ற ஒரு அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கோபாலபுரம் இளைஞர் திமுக, கட்சி ரீதியாக பலப்பட்டது ஸ்டாலினை உலகறியச் செய்த மிசா சம்பவத்தின் பின்பு தான். அப்போது ஸ்டாலினுக்கு வயது 23.

மிசாவில் கைதாகி படாதபாடு பட்டு மறுஜென்மம் எடுத்தாற்போல் விடுதலை ஆகி வெளியில் வந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியில் வந்த போது நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி அல்ல. அன்று மட்டும் அல்ல அதைத்தொடர்ந்து 13 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. அத்தகைய காலகட்டத்தில் தொடர்ந்து கட்சிப்பணியாற்றி, தொடர்ந்து சூறாவளிப் பயணமாக கழகத் தொண்டர்களைச் சந்தித்து திமுக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க பாடுபட்டவர் ஸ்டாலின்.

அப்படித்தான் 1980 ஜூலை 20 ஆம் தேதி மதுரை,ஜான்சிராணி பூங்காவில் 'திமுக இளைஞரணி' தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் இளைஞரணி திமுக  தான்.1982 மே மாதம் திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கழக இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்,1984 ல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதில் தனயனுக்கு அனுகூலமாக கலைஞர் பெரும்பங்காற்றியிருக்கக் கூடும்.  அந்த அனுகூலத்தின் மீதாகக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டவர்களுமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் கணிசமானோர் உண்டு.

இந்த இடத்தில் அவசியமாகவோ அவசியமன்றியோ வைகோ வின் நினைவு இடறுவதைத் தவிர்க்க முடியாது.  

ஆயினும் ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் உதயமான மாணவர் அமைப்பு கட்சியின் பிரதான அமைப்புகளில் ஒன்றாக உருமாற எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை கட்சியின் ஆரோக்யத்துக்கு உகந்தது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அன்றிலிருந்து செயல் தலைவராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை கட்சி அடிப்படையில் ஸ்டாலின் வகித்து வந்த பதவி இளைஞரணிச் செயலாளர் என்பதே!

இப்படி ஸ்டாலின் சிரமப்பட்டு அடைந்த ஒரு பதவியை உதயநிதி ஸ்டாலின் எனும் ஒரு தயாரிப்பாளர் கம் நடிகருக்கு உடனடியாகத் தாரை வார்க்கும் நிர்பந்தம் என்ன வந்தது திமுகவுக்கு.

அவருக்கு கட்சி ரீதியாகச் சாதிக்க கொஞ்சம் அவகாசம் வழங்குவதில் தவறேதும் இல்லையே!

உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள் என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

ஊடகங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான முரசொலியின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு என்று, முரசொலியில் தனது அந்திமக் காலம் வரை தொடர்ந்து உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த தாத்தா  கலைஞர் வழியில் உடன்பிறப்புகளுக்கு உற்சாகமூட்ட உதயநிதி அவ்வப்போது நாட்டு நடப்புகளைப் பற்றி எதையாவது எழுதித் தீர்த்திருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருக்கலாம். அப்படி ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

ஆகவே மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள், சமூகப் பணிகள்  என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டதையா? அதை திமுகவின் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து கட்சியின் மீது அபிமானம் கொண்ட ஒவ்வொருவரும் தானே செய்திருப்பார்கள். இதில் உதயநிதி மட்டும் என்ன ஸ்பெஷல்?

உடனடியாக உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக ஆக்கிப் பார்க்கும் ஆசை ஸ்டாலினுக்கு வந்தால் அது அரசர் மனோபாவம் இல்லாமல் வேறென்ன?

அரசர்கள் தான் தான் மன்னராகப் பட்டமேற்ற உடன் தனக்குப் பிறகு பட்டமேற்கக் கூடிய தகுதி தன் பிள்ளைகளில் எவருக்கு உண்டு என உறுதி செய்ய பட்டத்து இளைவர்களை அறிவிப்பார்கள்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது பட்டத்து இளவரசர் பதவிக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமில்லை.

ஏனெனில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டதே அதற்காகத் தான் என்பதை திமுக நன்கறியும்.

இப்போது பிரச்னை உதயநிதி ஸ்டாலின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டதில் இல்லை. இத்தனை அவசரக்கோலத்தில் ஏன் என்பதில் தான்.

யாருடைய வளர்ச்சியை கட்டுப்படுத்த? என்பதை கலைஞரின் ஆன்மா மட்டுமே அறியக்கூடும்.

]]>
stalin, ஸ்டாலின், திமுக, DMK YOUTH WING SECRETORY, UDHAYANITHI STALIN, உதயநிதி ஸ்டாலின், சங்கரமடம், திமுக இளைஞர் அணிச் செயலாளர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/stalin_youth_leader.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/04/dmk-is-not-sankara-matam-but-the-crown-price-is-ready-3185336.html
3183848 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கைதியை துரத்திய மரணம், போலீஸ் கஸ்டடி ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறை! RKV Thursday, July 4, 2019 11:03 AM +0530  

போலீஸ் கஸ்டடி விசாரணையில் ‘ஃபலாங்கா டார்ச்சர்’ என்றொரு விசாரணை முறை உண்டு. அது மரணம் வரை இட்டுச் செல்லும் என்பது அதிர வைக்கும் நிஜம். 

கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த வாரம் சிறைக்கைதி ஒருவர் போலீஸ் கஸ்டடி விசாரணையின் போது பலத்த காயங்களுக்குட்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மறுநாளே மரணமடைந்தார். காரணம் போலீஸ் கஸ்டடியில் அவருக்கு நிகழ்ந்த ஃபலாங்கா டார்ச்சர் விசாரணை முறையே என்று அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கேரள மாநிலம் வாகமன், கோலஹலமேடு பகுதியைச் சேர்ந்த 49 வயது ராஜ்குமார் எனும் நபர்  கடந்த ஜூன் 12 ஆம் தேதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுங்கண்டம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப்பட்டது 12 ஆம் தேதி ஆனால் அவரைக் கைது செய்தது ஜூன் 16 ஆம் தேதி என போலீஸ் ரெக்கார்டுகளில் பதிவாகியுள்ளது. அதாவது அவர் அழைத்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் கழித்து தான் கைதாகியுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இடைப்பட்ட நாட்களில் ராஜ்குமாருக்கு நேர்ந்தது என்ன? போலீஸ் கஸ்டடியில் இருந்த நான்கு நாட்களில் ராஜ்குமார் எவ்விதமாக விசாரிக்கப்பட்டார் எனப் பல ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆயினும் ராஜ்குமார் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவர் போலீஸ் விசாரணை வளையத்தில் இருக்கையில் அவரது உறவினர்கள் அறிந்து கொள்ள முயன்ற போதெல்லாம் அவர்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஜூன் 16 ஆம் தேதியின் பின் ராஜ்குமாரைக் காணச் சென்ற உறவினர் ஒருவர், அப்போது ராஜ்குமார் இருந்த நிலையை விவரிக்கையில், கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ராஜ்குமார் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு தவித்திருக்கிறார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவரது கெஞ்சலை அலட்சியப்படுத்தி இப்போது உனக்குத் தண்ணீர் அவசியமில்லை எனத் தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்தார்கள் என்கிறார் அந்த உறவினர். இதற்கு ராஜ்குமாருடன் அப்போது சிறையில் இருந்த மற்றொரு கைதியும் சாட்சி. அந்தக் கைதி இது குறித்து ஊடகங்களிடம் கூட பதிவு செய்திருக்கிறார் என்கிறார் ராஜ்குமாரின் உறவினர்களில் ஒருவரான ஆண்டனி.

அதுமட்டுமல்ல, ராஜ்குமாரை அவரது வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன்பும் தொடர்ந்து பலமணி நேரம் அடித்துச் சித்ரவதை செய்து போலீஸ்  அராஜகம் செய்ததையும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் ராஜ்குமாரின் உறவினர்கள். நடுவில் ஜூன் 15 ஆம் தேதி நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக நெடுங்கண்டம் மருத்துவமனைக்கு ராஜ்குமார் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர், ராஜ்குமாரின் உடலில் இருந்த பலத்த காயங்களைக் கண்டு அதிர்ந்து, அவரை உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்குமாறு போலீஸாருக்குப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் டாக்டரின் பரிந்துரையைப் புறக்கணித்த போலீஸார் அவரை அவசரகதியில் மாஜிஸ்த்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டி பீர்மேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இப்படியாக ஒரு விசாரணைக் கைதியை மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டு இன்று அவரது துர்மரணத்திற்கும் காரணமாகி இருக்கிறது கேரள மாநில போலீஸ்.

இந்த விவகாரத்தில் மரணத்திற்கு காரணமாக கைதியின் உடற்கூறு பரிசோதனை தெளிவாகச் சுட்டுவது ‘ஃபலாங்கா டார்ச்சர்’ விசாரணை முறையைத் தான்.

அதிகம் அறியப்படாத இந்த வகை விசாரணை முறை மிகவும் கொடூரமானது என்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் ‘ஃபலாங்கா டார்ச்சர் விசாரணையால் கைதி ராஜ்குமாரின் உடலில் மொத்தம் 22 காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மார்பு எலும்பு தவிர நான்கு விலா எலும்புகளும் முறிந்த நிலையில் இருந்தன. ராஜ்குமாரின் கால் பாதங்களில் தொடர்ந்து இடைவெளியின்றி பலமணி நேரங்களுக்கு போலீஸார் அடித்துச் சித்ரவதை செய்திருப்பதும் உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. கைதியின் கால் பாதங்களில் இருக்கும் நரம்புகள் சிதையும் வண்ணம் தொடர்ந்து அடித்து கால்களை முறிக்கும் சிகிச்சை முறைக்கு ஃபலாங்கா சித்ரவதை எனப் பெயரிட்டுள்ளனர். இந்த வகை விசாரணை முறை பல சமயங்களில் லாக் அப் டெத்களுக்கு காரணமாகலாம் என்பதற்கு ராஜ்குமாரின் கஸ்டடி மரணம் ஒரு உதாரணம்.

ராஜ்குமாரின் கஸ்டடி மரணத்தை ஒட்டி இதுவரை 8 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். கஸ்டடி மரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

]]>
Custodial Death, victim rajkumar , kerala police, கஸ்டடி மரணம், கைதி ராஜ்குமார், கேரள போலீஸ், ஃபலாங்கா டார்ச்சர் விசாரணை முறை, falanga torture https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/custody_death.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/02/கைதியை-துரத்திய-மரணம்-போலீஸ்-கஸ்டடி-ஃபலாங்கா-டார்ச்சர்-விசாரணை-முறை-3183848.html
3184618 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் டெல்லி குருகிராமை அதிரச் செய்த ‘பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலை வழக்கு’ விவகாரம், குற்றம் நடந்தது என்ன? கார்த்திகா வாசுதேவன் Wednesday, July 3, 2019 05:00 PM +0530  

டெல்லி குருகிராமைச் சேர்ந்தவர் 50 வயது பிரகாஷ் சிங், கடந்த ஞாயிறு அன்று இரவு இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் சாமான்ய மனிதர் அல்ல, சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் R&D (Research & Development) துறைத் தலைவராகப் பணியில் இருந்தவர். 

மூன்று கொலைகள் மற்றும் ஒரு தற்கொலை நிகழும் சுவடுகள் ஏதுமின்றி குருகிராமில் பிரகாஷ் சிங் வசிக்கும் பகுதி திங்களன்று காலையில் படு அமைதியில் ஆழ்ந்திருந்தது... அப்பகுதியின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் தீடீரென வீட்டைச் சூழ்ந்து கொண்டன காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன சைரன் ஒலிகள். காலையில் வழக்கம் போல சிங் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணி, வீட்டு காலிங் பெல்லை அழுத்த வெகு நேரமாகியும் யாரும் வந்து கதவைத் திறக்கக் காணோம். அந்தப் பெண்மணி சொல்லித்தான் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தகவல் சென்றிருக்கிறது. இவ்வளவு நேரம் கதவைத் திறக்காமலிருக்க வாய்ப்பில்லையே என்று கருதிய பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் அளித்த வேலைக்காரப் பெண்ணை ஜன்னல் வழியே குதித்து இறங்கி வீட்டுக்குள் பார்க்கச் சொல்லி அறிவுறுத்தவே, அந்தப் பெண் அவர்கள் சொன்னபடி செய்து வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது தான் தெரிய வந்திருக்கிறது உள்ளே நிகழ்ந்த அசம்பாவிதங்கள்.

வீட்டின் டைனிங் அறையில் நைலான் கயிறிட்டு சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் கூரையில் தொங்கிய வண்ணம் இருந்தது. வீட்டின் மூன்று படுக்கையறைகளில் ஒன்றில் பிரகாஷ் சிங்கின் மனைவி சோனு (48), மகள் அதிதி, மகன் ஆதித்யா மூவரும் கொலையுண்டு கிடந்தனர். அதிதியின் உடல் படுக்கையிலும், மற்ற இருவரின் உடல் தரைப்பகுதியிலும் கிடந்தது.

சிங் வீட்டின் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் இரு குடும்பங்கள் வசித்த போதும், முதல் நாள் இரவில் அவர்களுக்கு இப்படி ஒரு கொடூரக் கொலை நிகழ்ந்ததின் அறிகுறிகளோ, அவல ஓசைகளோ எதுவும் சென்றடைந்திருக்கவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அளித்த சிவில் மருத்துவமனை ஃபாரன்சிக் துறை தலைவரான டாக்டர் தீபக் மாத்தூர் தனது பரிசோதனை முடிவில் தெரிவித்திருப்பது என்னவென்றால், பிரகாஷ் சிங்கின் பரிசோதனை முடிவைப் பொருத்தவரை அவருடையது முற்றிலும் தற்கொலை தான். ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் படி பார்த்தால் அவர்கள் இறப்பதற்கு முன்பு கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறுகிறார். அவர்களது உடலில் உள்ள ஆழமான காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் தாக்கப்பட்ட சில நிமிடங்களில் மரணித்திருப்பது தெரிய வருகிறது. அத்துடன் கொலைச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 2 மணிக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
 
கொலையுண்டவர்களில் மகள் அதிதியின் உடலில் 12 ஆழமான காயங்களும், மகன் ஆதித்யாவின் உடலில் 8 ஆழமான காயங்களும், மனைவி சோனுவின் உடலில் 19 இடங்களில் ஆழமான காயங்களும் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இந்தக் காயங்களில் பெரும்பான்மையானவை அவர்களது தலைப்பகுதியில் இடம்பெற்றிருப்பது இந்தக் கொலையின் நூதனக் குறியீடாகக் கருதப்படுகிறது. பிரகாஷ் சிங் தனது மனைவி மற்றும் வாரிசுகளை தலையில் பல இடங்களில் பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பிரகாஷ் சிங் குடும்பத்தில் ஞாயிறு இரவு நடந்த கொடூர சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் என்றால் அது அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட 4 வளர்ப்பு நாய்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அக்கம்பக்கத்தார் பேச்சைக் கேட்டு வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஜன்னலின் நுழைந்து கஷ்டப்பட்டு தவழ்ந்து வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்த போது இந்த 4 வளர்ப்பு நாய்களும் தங்களது எஜமானர்களின் உடலைச் சூழ்ந்து அமர்ந்து விடாமல் குலைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பிரகாஷ் சிங்கின் வீட்டு மேல்தளத்தில் மேலும் இரண்டு வீடுகள் இருந்த போதிலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்த அறிகுறிகளோ அல்லது துர் சமிஞ்சைகளோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. சிலர் நாய் குலைத்த சத்தத்தை கேட்டதாகப் காவல்துறை விசாரணையில் பதிவு செய்திருந்த போதும், அது சந்தேகத்திற்குரிய வகையில் எல்லாம் இல்லை என்றே கூறியிருக்கின்றனர்.

திங்களன்று காலை 7 மணி அளவில் வீட்டு வேலைக்காரப் பெண்மணி வந்து தகவல் சொன்ன பிறகே அக்கம் பக்கத்து வீட்டாருக்கு நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. வீட்டு வேலைக்காரப் பெண்மணி இறந்தவர்களின் சடலங்களைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு தகவல் தெரிவித்த பின்பே காவல்துறை ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளது.

இறந்து சடலமாகத் தொங்கிய பிரகாஷ் சிங்கின் பேண்ட் பாக்கெட்டில் மரணக்குறிப்பு ஒன்றைக் கைப்பற்றினார் டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ் சுலோசனா கஜ்ராஜ். அதில் பென்சிலில் எழுதப்பட்டிருந்த தற்கொலைக் குறிப்பில் ‘ என் குடும்பத்தினரை என்னுடன் அழைத்துச் செல்லும் பொறுப்பில் நான் முற்றிலுமாகத் தோல்வியுற்றேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல, நான் மட்டுமே முழுப் பொறுப்பு’ என்று பிரகாஷ் பதிவு செய்திருந்தார்.

இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் பிரகாஷ் சிங் விட்டுச் சென்றிருக்கும் தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால் பிரகாஷ் சிங் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதில் மகள் அதிதி தூக்கத்தில் இருக்கையில் அவரது தலையில் சுத்தியலால் தாக்கி கொலை நிகழ்த்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற இருவரும் கொலையை எதிர்த்து போராடியதற்கான காயங்கள் அவர்களது உடலில் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனையும் நிகழ்ந்தது ஞாயிறு அன்று நள்ளிரவிற்கு மேல் தான். அதற்கு முந்தைய வாரத்தில் பிரகாஷ் சிங் குடும்பத்தாரைக் காண அந்த வீட்டில் இப்படி ஒரு கோர சம்பவம் நிகழப்போவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை என்கிறார் கொலை நிகழ்ந்ததற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் அக்கா சோனு வீட்டுக்குச் சென்று திரும்பிய அரோரா. இவர் பிரகாஷ் சிங் மனைவி சோனுவின் தங்கை. கொலை நடந்த அன்றும் கூட ஞாயிறு இரவு 11.30 மணி வரையில் அதிதி தன் அத்தை சீமா அரோராவுடன் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.  அது மட்டுமல்ல ஜமியா மிலியா இஸ்லாமியாவைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவியொருவர் தான் புதிதாகத் தொடங்கியுள்ள ஹேண்ட் மேட் சோப் சாம்பிள்களை சோதனைக்காக பிரகாஷ் சிங்கிற்கு கூரியரில் அனுப்பி வைத்திருக்கிறார். அது பிரகாஷ் சிங்கை அடைந்தும் பிரிக்கப்படாத நிலையில் அவரது வீட்டில் கிடைத்திருக்கிறது. இப்படி பிரகாஷ் சிங் வீட்டில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் முன்னதாகத் தென்பட்டதாகத் தெரியவில்லை. வீடு அசாதாரண சூழலை அடைந்தது வேலைக்காரப் பெண்மணிக்கு விஷயம் தெரிந்த பிறகு மட்டுமே. அதுவரையில் அங்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கப் போவதாக ஒரு சின்ன அறிகுறி கூட தென்படவே இல்லை என்கிறார்கள் பிரகாஷ் சிங்கின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார்.
தற்போது இந்த கொலை விவகாரத்தில் சோனுவின் தங்கை அரோரா சார்பில், ஐ பி சி செக்‌ஷன் 302 (கொலை)  கீழ் எஃப் ஐ ஆர் போடப்பட்டு குருகிராம் 50 வது செக்டார் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

கொலைக்கான விசாரணையில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிகள் அளித்த தகவலின்படி இந்த நிமிடம் வரை சிங் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள கொலைகளுக்கான உரிய காரணங்களை கண்டறிய முடியவில்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை பிரகாஷ் சிங்குக்கு அலுவல் ரீதியான மன அழுத்தத்தின் காரணமாக இந்த கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகித்தாலும் கூட அதற்கான தகுந்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைத்திராத பட்சத்தில் அப்படியும் முடிவுக்கு வர இயலாது ஏனெனில் பிரகாஷ் சிங் மன அழுத்தத்திற்கென்று சிகிச்சை எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இப்படி மூன்று கொடூரக் கொலைகளும் ஒரு தற்கொலையும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது புதிராகவே நீடிக்கிறது என்கிறார் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான ACP அமன் யாதவ்.

பிரகாஷ் சிங் வீட்டில் இருந்த 4 வளர்ப்பு நாய்களும் தற்போது RWA வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் அவற்றுக்கொரு பாதுகாப்பான உறைவிடம் ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலைகள் விவகாரத்தில் இப்போது கிடைத்துள்ள ஒரே துருப்புச் சீட்டு அவர் தன் கைப்பட எழுதி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மரணக்குறிப்பு மட்டுமே. அதில் தான் வாழ்வில் தோல்வி அடைந்து விட்டதாக பிரகாஷ் சிங் குறிப்பிடுவது எதனால் என்பதற்கான விடை கிடைத்தால் கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்படலாம்.

மனித மனம் மிகவும் விசித்திரமானது.

சமூகத்தில் சற்று உயர்ந்த நிலையில், அலுவல் ரீதியாகவும் மதிக்கத்தக்க பணியில் இருந்தவரான பிரகாஷ் சிங்... மரணக் குறிப்பு எழுதி வைத்து விட்டு தன் பாசத்திற்குரிய மனைவியையும் அன்புக்குரிய மகன், மகளையும் ஏன் கொலை செய்தார்? எது அவரை இப்படி ஒரு விபரீதச் செயலில் ஈடுபடத் தூண்டியது? 

ஒரே புதிராகத்தான் இருக்கிறது.

பிரகாஷ் சிங், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட சன் பார்மசூட்டிகல் நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். ஆனால், கடந்த ஒரு மாதகாலமாக அவர் அந்த வேலையில் நீடித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவராக வேலையை ராஜினாமா செய்தாரா? அல்லது நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கியதா என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. பிரகாஷ் சிங்கின் மனைவி சோனு நாட்டின் 4 வெவ்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான நர்ஸரி பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறார். மகள் அதிதி கல்லூரிப் பருவத்திலும் மகன் ஆதித்யா பள்ளிப்பருவத்திலும் இருந்தனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிக அளவான நிம்மதியான குடும்பமாகக் காட்சியளித்தனர். பொதுவாக சிங் குடும்பத்தார் வெளியாரிடம் அதிகம் உறவு கொண்டாடுபவர்கள் இல்லை என்பது அக்கம் பக்கத்தார் மூலமாகத் தெரிய வந்த தகவல்.
 

]]>
டெல்லி குருகிராம் கொலைகள், பிரகாஷ் சிங் தற்கொலை வழக்கு, prakash singh suicide case, triple murder and 1 suicide in gurugram, Four members of family found dead in Gurugram, டெல்லி குருகிராம் 4 பேர் கொலை வழக்கு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/0000000_prakash_singh_family.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/03/gurugram-murder-and-suicide-sister-gave-complaint-3184618.html
3181858 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அஸ்ஸாமியர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ சர்ச்சை! RKV Saturday, June 29, 2019 02:50 PM +0530  

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாது, வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அங்கு வாழும் மக்களுக்கு இந்த NRC லிஸ்டில் பெயர் இடம்பெற வேண்டுமென்பது வாழ்வின் அச்சுறுத்தக்கூடிய அச்சங்களில் ஒன்றாகி இருக்கிறது. இதில் பெயர் இல்லையென்றால் அவர் இந்தியக் குடிமக்களுள் ஒருவராகக் கருதப்பட வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு இந்தியாவில் வசிக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. லிஸ்டில் பெயர் இல்லை என்று அறிவிக்கப்படுபவர்கள் தீர்ப்பாயத்தின் முடிவுக்குப் பின் சிறையில் அறைக்கப்படுவது வாடிக்கை. 

பொதுவாக இந்த விதமான நடைமுறை மேற்கொள்ளப்படுவதின் அடிப்படை காரணம் இந்தியாவின் எல்லைப்புற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புலம்பெயரும் அண்டை நாட்டுக்காரர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்த போதும், இதன் செயல்பாடுகள் சொந்த நாட்டுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ச்சியை மேற்கொள்ளும் மக்களுக்கே  ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகத் தான் இருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அஸ்ஸாமில் உள்ள இந்திய குடிமக்களின் பட்டியல். இது முதன்முதலில் 1951-ல் தயாரிக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னர் இந்த
பதிவேட்டை  அஸ்ஸாம் அரசு உருவாக்கியது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வாழ்பவர்களில், இந்த பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டுமே இந்திய குடிமக்களாக கருதப்படுவார்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

1951-ல் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளவர்களும், 1971 தேர்தலின் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களும் 2018-க்கான  தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற தகுதியானவர்கள்.

இந்த இரு பட்டியலிலும் இல்லாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஏன் இந்தப் பதிவேடு இப்போது மீண்டும் தயாரிக்கப்பட்டது?

2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த ஆணையைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு 2018 தயாரிக்கப்பட்டது. குடிமக்கள் சட்டம் 1955-ன் படியும், அஸ்ஸாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியும், வங்கதேசம் மற்றும் அருகில் உள்ள நாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெயர்ந்து அஸ்ஸாமில் வாழ்பவர்களைக் கண்டறியவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தேசிய குடிமக்கள் பதிவேடு 2018 தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு எப்படி தயாரிக்கப்பட்டது?

2018-க்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி 2015 மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிந்தது. இதற்கு 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்கள் அனைவரையும்
ஒவ்வொரு வீடாகச் சென்று அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பெயர்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப வம்சாவழியை ஆய்வு செய்து  இந்த பதிவேட்டை தயார் செய்திருக்கின்றனர்.

யாருடைய பெயரெல்லாம் விடுபட்டிருக்கிறது?

விடுபட்டுள்ள 40.07 லட்சம் பேர்களில் 2.48 லட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் அஸ்ஸாம் அரசு போலி வாக்காளர்கள் (டி-வோட்டர்ஸ்) என்று சந்தேகிக்கும் நபர்களும் அடங்குவார்கள். அது மட்டுமல்லாமல் இந்த டி-வோட்டர்ஸின் வம்சாவழியினரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து மற்றவர்களின் பெயர்கள் காத்திருப்போர்
பட்டியலில் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அஸ்ஸாம் அரசு எந்த காரணங்களும் தெரிவிக்கவில்லை.

அடுத்து என்ன?

ஆகஸ்ட் 30-ம் தேதியிலிருந்து பெயர் விடுபட்டவர்கள் மறுவிண்ணப்பம் செய்யலாம். பெயர் விடுபட்டவர்கள் ‘வெளிநாட்டவர்கள்’ என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதில் குறிப்பிடப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் 2015-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறுவிண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு சிறுமி தற்கொலைச் சம்பவம் போன்றே இன்னொரு அதிர்ச்சிக்குரிய சம்பவமும் அஸ்ஸாமில் அரங்கேறியிருக்கிறது.

அமிலா ஷா என்ற நடுத்தர வயதுப் பெண்மணியை அவர் வெளிநாட்டுக்காரர் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது அஸ்ஸாம் காவல்துறை. காரணம் அவரது பெயரும் NRC லிஸ்டில் இல்லை. ஆனால், அவரது பிள்ளைகள் மற்றும் உறவினரின் பெயர்கள் லிஸ்டில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பிறந்த அமலா ஷா தற்போது தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாமில் வசித்து வருகிறார். அவர் தன் வாழ்க்கையில் மேற்கொண்ட இடப்பெயர்ச்சி என்பது பிகார் முதல் அஸ்ஸாம் வரை மட்டுமே, அப்படி இருக்கையில் அவரை அயல்நாட்டுக்காரர் என்று குற்றம் சுமத்தில் சிறையில் அடைத்தது எவ்வகையில் நியாயம் எனப் போராடி வருகின்றனர் அவரது குடும்பத்தினர். 

NRC குளறுபடியால் நேர்ந்த உயிர்ப்பலி!

14 வயதுச் சிறுமி தற்கொலை, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் பெயர், மாநில அரசு தற்போது வெளியிட்டு வரும் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டில்(NRC LIST) இல்லை எனும் காரணத்துக்காக தன் சுடிதார் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி.

அவளது தற்கொலைக்கு சமீபத்தில் வெளியான  National Register of Citizens (NRC) தான் காரணம் என்கிறார்கள் அவளது உற்றாரும், உறவினரும். உண்மையில் நடந்தது என்ன? ஆஃப்டர் ஆல் NRC... அதில் ஒருமுறை பெயர் இடம்பெறவில்லையென்றால் என்ன நஷ்டமாகி விடப்போகிறது... தகவல் சேகரிப்பு மற்றும் பதிவுப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின்  கவனக்குறைவால் சிலரது பெயர் இப்படி விடுபடுவது வாடிக்கை தான், சம்மந்தப்பட்டவர்கள் தங்களது பிறப்பு மற்றும் இருப்பை உறுதி செய்யும் சான்றிதழ்களை அளித்தால் மீண்டும் அதில் பெயர் இணைத்துக் கொள்ளப் போகிறார்கள். இதற்குப் போய் தற்கொலை செய்து கொள்வதெல்லாம் மிகப்பெரிய முட்டாள் தனம் என்று தான் பலருக்கும் தோன்றக்கூடும்.

ஆனால் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வட இந்தியாவின் சில பின்தங்கிய மாநில அரசுகளின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு வாழும் ஏழை எளிய மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு இத்தகைய பதிவேடுகளில் பெயர் இடம் பெறுவதின் அடிப்படையில் தான் அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்பதோடு இதன் அடிப்படையில் தான் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளோ அல்லது அரசின் இட ஒதுக்கீடுகளோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது எனும் போது, அந்தச் சிறுமி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டதின் அனர்த்தம் நமக்கு ஓரளவுக்கேனும் நமக்கு புரிய வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலம் தாரங் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி நூர் நஹர் பேகமின் பெயர் அஸ்ஸாம் அரசு கடந்தாண்டு வெளியிட்டிருந்த NRC வரைவுப் பதிவேட்டில் இடம்பெற்றிருந்தது. அதனால் இறுதியாக வெளியிடப்படும் லிஸ்டிலும் தன் பெயர் இருக்குமென்று அந்தச் சிறுமி உறுதியாக நம்பிக் கொண்டிருந்த வேளையில் சமீபத்தில் அஸ்ஸாம் அரசு வெளியிட்ட கூடுதல் வரைவுப் பட்டியலில் சிறுமியின் பெயர் இல்லை. அரசு வெளியிட்ட லிஸ்டில் தன் குடும்பத்தினரின் பெயர் இருக்கிறதா என்பதைச் சோதிக்கச் சென்றிருந்த நூரின் அப்பா, அதில் அவளது பெயரைக் காணாததால் மகளை அலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட மாத்திரத்தில் தான் அச்சிறுமி இப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான முடிவெடுத்திருக்கிறாள்.

சொல்லப்போனால் இது அரசு வெளியிட்ட இறுதிப்பட்டியல் அல்ல. ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இந்தப் பட்டியலில் பெயர் இல்லா விட்டால் இறுதிப் பட்டியலில் நிச்சயம் பெயரைச் சேர்த்தாக வேண்டும் என்பது தான் நியதி. ஆனால், அதெல்லாம் அந்தச் சிறுமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் மாநில அரசு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன் அது குறித்தான் போதிய விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடையே அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருக்க வேண்டும். NRC லிஸ்டைப் பொருத்தவரை அதைச் செய்யத் தவறி விட்டது மாநில அரசு. அதனால் நிகழ்ந்த தற்கொலை தான் இது. சிறுமியின் கொலைக்கு மாநில அரசின் மெத்தனத்தைத் தான் குற்றம் கூறியாக வேண்டும். என்கிறார் சிறுமியின் தற்கொலைச் செய்தி அறிந்து அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் சங்கத்தின் (AAMSU) தலைவர் அப்துல் ஹாய்.

நிலைமை இவ்வாறிருக்க, சிறுமியின் தற்கொலை NRC யுடன் தொடர்புடையது என்ற கூற்றை மறுத்த தாரங் காவல்துறை கண்காணிப்பாளர் அமிர்த் புயான், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய காவல்துறை விசாரணை நடந்து வருவதாகக் கூறியதோடு;

"NRC காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக இதுவரை எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. இருப்பினும், எங்கள் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு NRC லிஸ்டில் 102,462 நபர்களின் பெயர்களைக் கொண்ட கூடுதல் வரைவு விலக்கு பட்டியலை அஸ்ஸாம் அரசு புதன்கிழமை வெளியிட்டது, ஆனால் பின்னர் வேறுபட்ட காரணங்களால் அந்த லிஸ்ட் தகுதியற்றதெனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

]]>
India, Assam, தேசிய குடிமக்கள் பதிவேடு, GIRL COMMITS SUICIDE, NRC LIST, FORIEGNER, அஸ்ஸாம் சிறுமி தற்கொலை, NRC லிஸ்ட், இந்திய குடியுரிமை கொள்கை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/29/w600X390/assam_girl.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jun/29/girl-commits-suicide-family-blames-it-on-citzens-list-nrc-3181858.html
3181775 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சுதந்திரமும் பாதுகாப்பும் தவிர வேறு எதுவும் அவசியமில்லை Saturday, June 29, 2019 10:23 AM +0530
ஜீவன் மற்றும் சுகுணாவின் பேச்சைக் கேட்கும் போது அவர்கள் கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பேசும் போது ஏற்படும் உணர்வு ஏற்படவில்லை. வழக்கமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்குப் பயமும் அறியாமையும் இருக்கும். ஆனால் ஜீவனும் சுகுணாவும் அப்படி அல்ல. இந்த இளம் தம்பதி தங்களது உரிமையை உரக்கப் பேசினாலும் அவர்கள் ஒன்பது மாதம் கொத்தடிமைகளாக இருந்ததன் வலி அதில் தெரிகிறது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு செங்கல் சூளையிலிருந்து தங்களது இரு மகன்களுடன் இத்தம்பதியினர் மீட்கப்பட்டனர்.

வழக்கமாகப் படிப்பறிவு இல்லாத தொழிலாளர்களைத்தான் ஏமாற்றி அவர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவார்கள். ஆனால் ஜீவனின் கதை வித்தியாசமானது. அவர் படித்தவர் மேலும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஆனால்  குடும்பச் சூழலால் ஒரு செங்கல் சூளை முதலாளியிடம் உதவி கேட்டுத் தன் குடும்பத்துடன் ஒன்பது மாத காலம் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டார்.

ஜீவனும் சுகுணாவும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இரு சமூகங்கள் மற்றும் குடும்பங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அவர்கள் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். கிராமப்புறங்களில் சாதி மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலையில், இவர்களின் திருமணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மட்டுமல்ல அவர்களை ஆணவ படுகொலை செய்யும் அளவிற்கு இழுத்துச் செல்லக் கூடியதும் ஒன்று. ஆதலால் அவர்களது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி வேறு கிராமங்களுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களை விட்டு வைக்கவில்லை. நன்றாக பழகியவர்களும் இவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனாலும் ஜீவனும் சுகுணாவும் மனம் தளரவில்லை. இச்சமூகத்தில் எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்தனர் ஜீவன்

ஒரு சிறிய ரக சுமையை ஏற்றிச் செல்லும் டாட்டா ஏஸ் என்ற வாகனத்தை வாங்க முடிவு செய்தார். அவரிடம் சிறிது சேமிப்பு இருந்தாலும், அது ஒரு பழைய வாகனத்தை வாங்கக் கூட போதவில்லை. இச்சமயத்தில்தான் ஜீவன் தன் சகோதரி வேலை பார்த்த செங்கல் சூலையின் முதலாளியைச் சந்தித்து ரூபாய் 50 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். சரக்கு ஏற்றிச் செல்லும் பழைய வாகனத்தை வாங்க மொத்தம் ரூபாய். 1,50,000 வரை ஆகும். எனவே தான் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயையும் முதலாளி கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் சேர்த்து ரூபாய் 70 ஆயிரத்தை முன்பணமாகத் தந்து மீதத்தைத் தவணை முறையில் செலுத்தத் திட்டமிட்டு வாகனத்தை வாங்கினார்.

ஆரம்பத்தில் இத்தம்பதி அதிகமான கஷ்டங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்த போது அதிகமான வேலை நேரம், போதிய உணவு, சுத்தமான குடிநீர் இல்லாமல் குறைந்த கூலிக்கு வேலை எனப் பல இன்னல்களை அனுபவித்தனர். முன் பணம் வாங்காத தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ரூபாய். 210-ம், ஜீவன் மற்றும் சுகுணா போன்ற முன்பணம் வாங்கிய தொழிலாளர்களுக்கு வாரம் ரூபாய் 150 எனக் கூலி நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வெறும் 100 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

'நான் செய்த ஒரே தவறு முன்பணத்தை வாங்கியதுதான். ஆனால் இம்மாதிரி குடும்பத்துடன் கஷ்டப்படுவோம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றித் தெரியும் ஆனால் அது எல்லாருக்கும் நடக்காது, முக்கியமாக எனக்கு நடக்காது என்று.'  - ஜீவன்.

செங்கல் சூளையில் தினமும் காலை மூன்று மணிக்கே எழுந்து வேலையைத் தொடங்கினால் இரவு எட்டு மணி வரை வேலை செய்ய வேண்டும்.  மண்ணைக் குழைத்து, செங்கல் அறுத்துக் காய வைத்து அதனை சூளையில் அடுக்குவது வரை ஓயாமல் வேலை இருந்து கொண்டே இருந்தது. காலை ஒரு முப்பது நிமிட இடைவேளையில் பெண்கள் சமையலை முடித்து தங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்.

செங்கல் சூளையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. பெண் தொழிலாளர்களுக்குக் குளிக்க மற்றும் கழிப்பிடம் செல்ல என எவ்வித மறைவிடமும் இல்லை. அனைவரும் குறித்த நேரத்திற்கு வேலைக்குப் புறப்படுவதால் ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்தில் குளித்து முடிக்க வேண்டிய நிலை இருந்தது என ஜீவனும் சுகுணாவும் நினைவு கூறுகின்றனர்.

ஜீவன் தனது மூத்த மகனைப் பள்ளிக்கு அனுப்ப முயன்றும் முதலாளி அதற்குச் சம்மதிக்கவில்லை. சுகுணாவின் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்கு ஜீவன் தனது வாகனத்தைப் பயன்படுத்தி அழைத்துச் செல்ல முடியாமல் அவர் நடந்தே மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறார்.

'முதலாளி எங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தார். நாங்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு எங்களைத் தடுத்தது மட்டுமல்லாமல் எனது வாகனத்தையும் என்னிடம் இருந்து பிடுங்க முயன்றார். என் மனைவி கர்ப்பமாக இருந்தபோது எனது சரக்கு வாகனத்தில் அவளை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. நான் உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்றதால் இந்த வாகனம் உங்களுக்குச் சொந்தம் இல்லை என்று அவரிடம் கடுமையாக பேசினேன்' - ஜீவன்.

ஜீவனும் சுகுணாவும் கல்வியறிவு பெற்று தைரியத்துடன் இருக்கவே அவர்கள் மீது ஒரு நாளும் முதலாளி கை நீட்டியது இல்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களை சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், ஓய்வு தேவைப்படும் நேரத்தில் கேட்டாலும் முதலாளி திட்டியும் தாக்கியும் உள்ளார். முதலாளியின் அடக்குமுறைக்கு எதிராக ஜீவன் தொடர்ந்து செயல்பட அவருக்கு மேலும் மேலும் பிரச்னைகள் வந்தன. ஜீவன் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் முன்பணத்தைக் காட்டிலும் போலியான கணக்கு எழுதி அதிகமான தொகையை முதலாளி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவன் செங்கல் சூளையை விட்டுத் தப்பிச் செல்ல இதுதான் சரியான நேரம் என உணர்ந்துள்ளார்.

அவர்களை மீட்கும் நாளுக்கு முந்தைய நாள், ஆறு மாத கால கர்ப்பிணியாக இருந்த சுகுணா செங்கல் சூளையிலிருந்து தப்பித்து திருவள்ளூர் மாவட்ட மண்டல வருவாய் அலுவலரை (RDO) சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவை ஒப்படைத்த பின்னர் சுகுணா மீண்டும் செங்கல் சூளைக்கே திரும்பிவிட்டார். அதுவரை முதலாளிக்கு அவர்களின் மீது எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வருவதை அறிந்த முதலாளி அருகில் இருக்கும் மற்ற செங்கல் சூளைகளின் முதலாளிகளிடம் தெரிவித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார். அதிகாரிகள் அங்கு விரைவதற்கு முன்பே மற்ற முதலாளிகள் சேர்ந்து ஜீவனையும் சுகுணாவையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஜீவனுக்குக் அவரது பணமும் வாகனமும் திருப்பி தருவதாக கூறி சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜீவன் பிடிவாதமாக இருந்துள்ளார். ஜீவன் மற்றும் அவரது சகோதரியின் குடும்பங்களைத் தமிழக அரசு மீட்டது. இருப்பினும் அதே நாளில் கடன் தவணையைச் செலுத்தாததால் ஜீவனின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற கொத்தடிமைத் தொழிலாளர்கள் போலல்லாமல் ஜீவனும் சுகுணாவும் படித்தவர்கள். ஜீவன் ஐடிஐயில் பிட்டர் என்ற இயந்திரங்களைப் பழுது பார்த்துப் பராமரிக்கும் தொழிற்பயிற்சி பயின்றுள்ளார். ஜீவனுக்குத் தகுதி இருந்தும் தற்போது வேலை ஏதும் இல்லை. அவ்வப்போது கூலிக்காக டிரைவர் வேலைக்குச் சென்று குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார். தற்போது ஆட்டோ ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். ஆனாலும் அவர் மாற்றுச் சமுதாயத்தினர் மத்தியில் வாழ்வதால் அவருக்குச் சவாரிகள் கிடைப்பதில்லை. ஆகையால் அதே கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி தனது வருமானத்தை அவருடன் பகிர்ந்து கொள்கிறார். சொந்தமாக ஆட்டோ வாங்கியும் அவரால் அதன் முழு வருமானத்தைப் பெற முடியவில்லை.

'எனக்கு நிரந்தரமான வேலை இல்லை என்றாலும், ஒரு சுதந்திரமான அமைதியான வாழ்க்கையை வாழ முடிகிறது. இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்' என்கிறார் ஜீவன்.

அரசு வழங்கிய மறுவாழ்வு தொகையைச் சரியாகப் பயன்படுத்தித் தங்குவதற்கு ஒரு வீட்டைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அவர்களின் இரு குழந்தைகளும் கொத்தடிமையிலிருந்து இருந்து தப்பித்து மற்ற குழந்தைகள் போல மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த குடும்பத்திற்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் தவிர வேறு எதுவும் அவசியமில்லை.

]]>
slavery, bonded labour, child labour https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/29/w600X390/gg.jpg https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jun/29/bonded-labour-3181775.html
3181174 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கோத்ரேஜ் குடும்ப நிலம் தொடர்பான சர்ச்சை! கார்த்திகா வாசுதேவன் Friday, June 28, 2019 12:48 PM +0530  

கோத்ரேஜ் குடும்பத்தின் ‘குழுமத் தொழில் வணிக வாரியக் குழுவிற்கு’ தலைவராக இரு