Dinamani - நடுப்பக்கக் கட்டுரைகள் - https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3118991 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சிறைச்சாலையை நூலகமாக்கிய... த. ஸ்டாலின் குணசேகரன் DIN Saturday, March 23, 2019 01:35 AM +0530
பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் உலகத் தலைவர்கள் பலரின் சிறைக் குறிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் திகழ்கிறது. அதில் நாட்குறிப்பு போல அவரது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோ, அவரது சிந்தனைகளோ, அனுபவங்களோ பதிவு செய்யப்படவில்லை. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக அவருக்குக் கிடைத்த சில மாதங்களில் அவர் வாசித்த நூல்கள் தொடர்பாகவும், அந்த நூலில் அவருக்குப் பிடித்த வரிகள், வாக்கியங்கள் குறித்த பதிவாகவுமே அவரது குறிப்புகள் உள்ளன.
எழுத்தாளர் பூபேந்திர ஹூஜா 1994-ஆம் ஆண்டு முதன்முதலில் பகத் சிங் சிறைக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இந்தியாவில் பேசப்படுவதற்கு முன்பே 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட லெனினும் இந்தியாவும் என்ற நூலில், பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் குறித்து சோவியத் அறிஞர் எல்.வி.மித்ரோகின் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த நூலுக்கு முன்னோட்டமாக 1971-ஆம் ஆண்டு எல்.வி. மித்ரோகின் எழுதிய பகத்சிங் படித்த நூல்கள் என்ற கட்டுரையும் அதே ஆண்டில் மற்றுமொரு சோவியத் அறிஞரான ஏ.வி. ராய்கோவ் எழுதிய பகத்சிங்கும் அவரது தத்துவார்த்த மரபும் என்ற கட்டுரையும் விளங்குகின்றன. இவையனைத்தும் பகத் சிங்கின் சிறைக் குறிப்புகள் பற்றியான தொடக்க கால ஆய்வுகளாகும்.
இந்தச் சிறைக் குறிப்புகளை வரி தவறாமல்  வாசித்தால் பகத் சிங் தனது இளம் வயதிலேயே எத்தகைய அறிவுத் தாகத்துடன் விளங்கியுள்ளார் என்பதையும், எந்தெந்த நூல்களையெல்லாம் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வாசித்தார் என்பதையும் , அவ்வாறு வாசித்த நூல்களில் எந்தெந்த வரிகள் இவரின் கவனத்தை ஈர்த்துள்ளன என்பதையும் அறியலாம். மேலும் தனி  மனிதன், குடும்பம், நாடு, சமூகம், இலக்கியம், தத்துவம், அறிவியல் முதலிய துறைகள் சார்ந்து பகத்சிங்  விரிவாகவும் ஆழமாகவும் அவர் வாசித்துள்ளார் என்பதையும்  அறிந்துகொள்ள முடிகிறது. விடுதலைக்காகப் போராடு என்ற தலைப்பிலான ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேட்ஸ்வொர்த் கவிதையையும் படைவரிசை என்ற டென்னிஸன் எழுதிய நீண்ட கவிதையையும் இன்னும் இதுபோன்ற உலக அளவிலான கவிஞர்களின் தனிச் சிறப்புமிக்க கவிதை வரிகள் பலவற்றையும் இந்தக் குறிப்பேட்டில் கவிதை வடிவிலேயே பதிவு செய்துள்ளார் பகத் சிங்.
பல்வேறு நூல்களிலிருந்தும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்தும் பல புள்ளிவிவரங்களைச் சேகரித்து அவற்றையும் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள 31 கோடியே 50 லட்சம் மக்களில், 22 கோடியே 60 லட்சம் பேர் மண்ணை நம்பி வாழ்கின்றனர். அவர்களில் 20 கோடியே 80 லட்சம் பேர் நேரிடையாக வேளாண்மையைச் சார்ந்துள்ளனர்  என்ற மாண்ட் ஃபோர்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் இந்தியா பற்றி மட்டுமல்லாமல் பல நாடுகள் பற்றிய பல புள்ளிவிவரங்களும் இக்குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ளன.
உலக அளவிலான பல துறைகள் சார்ந்த ஆளுமைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்களின் தனித்துவம் பற்றியும் சமூக மேம்பாட்டிற்கான அவர்களது பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக எழுதி வைத்துள்ளார்.  தாமஸ் பெய்னி (1737 - 1809):- அமெரிக்க எழுத்தாளர்- அமெரிக்க விடுதலைப் போரிலும் பிரெஞ்சுப் புரட்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டவர்;  பேட்ரிக் ஹென்றி (1736 - 1790):-அமெரிக்க  அரசியல்வாதி - பேச்சாளர் - சட்டப்பேரவை உறுப்பினர்; அப்டன் சிங்க்ளேர் (1878 - 1968):- புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்-நாடக ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி;  ரிச்சர்டு ஜேஃப்பரிஸ் (1848 -1887):- ஆங்கிலேய இயற்கையியலாளர் மற்றும் நாவலாசிரியர்; வி.என்.ஃபிக்னர் (1852-1942):- ரஷியப் புரட்சியாளர் மற்றும் உயிர்த்தியாகி-ஜாரிசத்திற்கு எதிராக முதலில் போர் தொடுத்த பெண்களுள் ஒருவர்-இவரது நினைவுக் குறிப்புகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  இப்படி பல எழுத்தாளர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிக் குறிப்புகளை அவர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார் பகத் சிங்.
கனவான்களும் கயவர்களும் இருக்கும் வரையிலும், பொருள்கள் பொதுவாக இல்லாத வரையிலும், இங்கிலாந்தில் மக்களும் பொருள்களும் நல்லபடியாக இருக்க இயலாது. பிரபுக்கள் என நாம் அழைப்பவர்கள் எந்த உரிமையால் நம்மைவிட உயர்ந்தவர்களானார்கள்? எந்த அடிப்படையில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்? நம்மை ஏன் அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? நாமெல்லாம் ஆதாம் மற்றும் ஏவாள் என்னும் ஒரே தாய்-தந்தையர் வழியில் வந்தவர்கள் என்றால், நம்மைவிட உயர்ந்தவர்கள் அல்லது மேலானவர்கள் என எவ்வாறு அவர்களைக் கூற முடியும்?  நம் உழைப்பால் வரும் பலனை அவர்கள் கர்வத்துடன் செலவிடுகின்றனர். நாம் கந்தை உடுத்தியிருக்க, அவர்களோ வெல்வெட்டும் கம்பளியும் அணிந்து வெதுவெதுப்பாயிருக்கின்றனர் என்ற வாட் டெய்லர் எழுதிய நூலிலுள்ள வரிகளை அப்படியே தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் பகத் சிங்.
 சர் ஹென்றி மெய்ன்  கூறியிருப்பது என்று தலைப்பிட்டு இங்கிலாந்தின் பெரும் பகுதி நிலம் வழக்குரைஞர்களின் தவறினால் தற்போதைய உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. சாதாரண குற்றவாளிகளிடம் இந்தத் தவறு காணப்பட்டால் தூக்கிலிடப்படுவார்கள். 
மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டு விடுகிறது என்ற வரிகளைப் பதிவு செய்துள்ளார்.
கார்லைல் எழுதிய பெரியவனாகவும், புத்திசாலியாகவும், நல்லவனாகவும், காலம் வேண்டுவதைக் கண்டுகொள்ளக்கூடிய அறிவும் சரியான பாதையில் அதனை நடத்திச் செல்லும் தீரமும் கொண்டவனாகவும் கண்டுபிடித்துவிட்டால் போதும். எந்தக் காலகட்டத்தையும் மீட்கக் கூடியவை இவையே என்ற வரிகளைப் பதிவு செய்து, அதற்கு தலைவர் என்ற தலைப்பையும் சூட்டியுள்ளார் பகத் சிங்.
வறுமையின் கைதிகளே எழுக! வாடி உலர்ந்தவர்களே...நீதி கொட்டி முழங்குகிறது...புத்துலகம் பிறக்கிறது என்று தொடங்குகிறது 1871- இல் பிரான்ஸில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டு பின்னர் உலக அளவில் பரவலாகப் பாடப்பட்டு வரும் சர்வதேச புரட்சி கீதம்.
மண்ணின் மைந்தர்களே விழித்தெழுங்கள் என்ற முதல் வரியைக் கொண்டது பிரான்ஸ் நாட்டு தேசிய கீதம். இந்தப் பாடல்களையெல்லாம் அப்படியே குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் பகத் சிங்.
பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் சிந்தனைகளையும் படித்துத் தன் இதயத்தில் பதியவைத்துக் கொண்டதோடு குறிப்பேட்டிலும் பதிவு செய்யும் அளவுக்கு அறிவுத் தேடலில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பகத்சிங் எத்தனை நூல்களை, எத்தகைய நூல்களை அந்த இளம் வயதில் வாசித்திருப்பார் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பு  மேலிடுகிறது.
இப்போது கிடைப்பதுபோல் அப்போது அத்தகைய அரிய நூல்கள் எளிதில் கிடைக்காத காலம். அவ்வாறு கிடைத்தாலும் அந்த நூல்களை சிறைக்குள்ளிருந்தவாறு, அதுவும் எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பழைமைச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைத் தருவித்துப் படிப்பதென்றால் கட்டுக்கடங்காத ஆர்வமும் சமூகப் பொறுப்புணர்வும் அதற்குரிய வலுவான அடிப்படையும் பக்குவமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு லாகூர் சிறையிலிருந்து தனது நீண்டகால நண்பர் ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். துவாரகாநாத் நூலகத்தில் எனது பெயரைச் சொல்லிக் கீழ்க்கண்ட புத்தகங்களை சனிக்கிழமையன்று குல்பீர் கையில் கொடுத்தனுப்பவும். கார்ல் லிப்க்னேகத் எழுதிய ராணுவ உணர்வு, பி.ரúஸல் எழுதிய ஐவர் சண்டை, பணியில் சோவியத், இரண்டாம் அகில அழிவு, இடதுசாரிப் பொதுவுடைமை, இளவரசர் குரோபாட்கின் எழுதிய பரஸ்பர விளம்பரம், கார்ல் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு யுத்தம்,  நிலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகள், ஆசியாவில் நிலப்புரட்சி, அப்டன் சிங்க்ளேர் எழுதிய ஒற்றன் என்று 10 புத்தகங்களைப் பட்டியலிட்டதோடு பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து புக்காரின் எழுதிய வரலாற்று உலகாயுதம் என்ற நூலையும் வாங்கியனுப்ப முயற்சி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போர்ஸ்டல் சிறைக்குச் சில புத்தகங்களை அனுப்பினாரா, இல்லையா என நூலகரிடம் விசாரிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அங்குள்ளவர்கள் புத்தகப் பஞ்சத்தால் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு சுகதேவின் சகோதரர் ஜெயதேவ் மூலமாகப் புத்தகங்களின் பட்டியல் அனுப்பியிருந்தும் இதுவரை அவர்களுக்கு எந்தப் புத்தகமும் சென்று சேரவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் வாசிப்பதோடல்லாமல் தன்னுடைய சக தோழர்கள் அனைவரும் வாசிப்பதற்கு வழிவகுத்தவர் பகத் சிங்.
ஆழமாக வாசிப்பவர்கள் பெரும்பாலும் துடிப்பாகச் செயல்பட முடிவதில்லை. ஓயாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பவர்களில் பலர், வாசிப்பிற்கு நேரம் ஒதுக்குவதில்லை. வாசிப்புப் பழக்கம் உள்ள பலருக்கு சுய சிந்தனை ஊற்றெடுப்பதில்லை. வாசிப்பு, எழுத்து, செயல், சுயசிந்தனை, சமூக உணர்வு, தியாக மனப்பான்மை  ஆகிய அனைத்து அம்சங்களும் 23 வயது பகத் சிங்குக்கு ஒருங்கே அமையப் பெற்றது அரிதினும் அரிதானதாகும்.

கட்டுரையாளர் : 
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.
இன்று பகத் சிங் 88-ஆவது நினைவு நாள்
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/23/சிறைச்சாலையை-நூலகமாக்கிய-3118991.html
3118988 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் முதல் முறையாக... சந்திர. பிரவீண்குமார் DIN Saturday, March 23, 2019 01:35 AM +0530 விரைவில் மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு முதன்முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும், 18 முதல் 19 வயது வரையுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இது மொத்த வாக்காளர்களில் 1.66 சதவீதம். இந்த முதன்முறை வாக்காளர்கள்தான், அடுத்த மக்களவையைத் தீர்மானிக்கப் போகிறார்கள். 
நாட்டின் மக்கள்தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இனிவரும் தேர்தல்களிலும் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, முறையாகத் தேர்தல் நடத்தப்படும் ஜனநாயக நாடு என பெயர் பெற்றிருக்கும் இந்தியா, இனிமேல் அதிக அளவிலான இளம் வாக்காளர்கள் நிறைந்த நாடு என்கிற பெருமையையும் பெறப் போகிறது.
அதே நேரத்தில், தங்களது வேட்பாளர்களைச் சீர்தூக்கி வாக்களிக்கும் பக்குவமும், அதற்கான சுதந்திரமும் பெரும்பாலான புதிய வாக்காளர்களுக்கு இருப்பதில்லை என்பதே உண்மை. பெற்றோரைச் சார்ந்திருக்கும் சூழல், சுற்றுப்புறம் போன்ற பல்வேறு காரணிகள் அவர்களது வாக்களிக்கும் சுதந்திரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. பெரும்பாலான பதின் பருவ வாக்காளர்கள் வீட்டில் பெற்றோர் சொல்லும் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள். 
இல்லையெனில், அரசியல் என்பதே தங்களுக்கு சம்பந்தமில்லாததுபோல் வாக்களிப்பதைத் தவிர்த்து விடும் அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவில்லாத காரணத்தினால் 49-ஓவிற்கு வாக்களித்து விடும் இளைஞர்களும் இருக்கிறார்கள். 
இந்த இடத்தில் மற்றொன்றையும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏதேனும் அரசியல் சார்பில்லாத, சாமானிய குடும்பங்களில் இன்றைய அரசியல் சூழலை எந்த அளவுக்கு விவாதிக்கிறோம்? நாம் சந்திக்கும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து எத்தனை பேர் பேசுகிறோம்? அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் ஏற்படும் சாதக பாதகங்களையும், நேர்மறை மற்றும் எதிர்மறை கண்ணோட்டங்கள் குறித்தும் அலசுகிறோமா? 
அதையும் மீறி, வாக்களிக்கத் தீர்மானிக்கும் பட்சத்தில், பல்வேறு காரணிகள் நமது வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. தேர்தல் நடைபெறும் காலங்களில் நிலவும் பொதுவான கண்ணோட்டம் பெரும்பாலான மக்கள் மத்தியில் எதிரொலிப்பது இயற்கையே. இதில், புதிய வாக்காளர்களும் விதிவிலக்கல்ல. கடந்த மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலையை ஒட்டி வாக்குகள் விழுந்ததும், தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு சார்பாக அதிக வாக்குகள் விழுந்ததும் அத்தகைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இளைஞர்களைக் கவர்ந்திழுப்பதைப் போன்று, அரசியல் தலைவர்களின் ஆளுமைகளும் சில இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்தக் கவர்ச்சி மட்டுமே வாக்குகளாக மாறிவிடுவதில்லை. அந்த ஆளுமைகளின் அரசியல் கணக்கீடுகளும் சேர்ந்துதான் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கின்றன.
அதேபோல, அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவர்களிடம்கூட மதம், ஜாதி சார்ந்த உணர்வுகள் தேர்தலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இளம் வயதிலிருந்தே சொல்லப்பட்டு வரும் அத்தகைய உணர்வுகளைப் பாதிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்போது, அது தேர்தல் அரசியலைப் பாதிக்கவே செய்கிறது.  
புதிய வாக்காளர்கள் என்றில்லை. பல தேர்தல்களில் வாக்களித்த பிறகும் பெரும்பாலானோருக்கு நம் ஜனநாயகத்தின் பெருமை குறித்தோ, அதன் வரலாறு குறித்தோ ஆழமான புரிதல் இருப்பதில்லை. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றியும், தியாகங்கள் பற்றியும் இன்று பேசுவதே இல்லை. அத்தகைய விஷயங்களைக் கற்பிக்க  எந்த ஏற்பாடும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் இளம் தலைமுறையினரிடம் தேர்தலில் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவார்கள் என்பது கானல் நீர்தான்.
வாக்குச்சாவடியை நோக்கி இளைஞர்கள் நகர்வதற்கு, அவர்களுக்கேற்ற விதத்தில் உத்திகளை மாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் தயாராக வேண்டும். அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமா என்பதை இளைஞர்கள் கவனிக்கின்றனர். அதற்கேற்ற நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் அரசியல் கட்சிகள் வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சமூக வலைதளங்களின் மூலமாக இளைஞர்களிடம் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களைக் கவர்வதில் தவறில்லை. ஆனால், அத்தகைய வலைதளங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பருவநிலை மாறுபாடு, கல்வி முன்னேற்றம், வளர்ச்சிப் பணிகள், பாலின சமத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக விவாதித்து, வருங்கால இந்தியா இளைஞர்களுக்கானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கல்வியறிவு கணிசமாக உயர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில், இளைஞர்களுக்கு ஜனநாயகம் பற்றிய புரிதலையும், வாக்களிப்பு என்ற மகத்தான நிகழ்வின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அதற்கான திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் பெருமளவில் நடத்த அரசு அமைப்புகளும், பொது நல அமைப்புகளும் முன்வர வேண்டும்.
முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், வாக்கு எண்ணிக்கையின் சதவீதமும் அதிகரிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் வருங்காலத்தில் சிறிதளவேனும் உருவாகும்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/23/முதல்-முறையாக-3118988.html
3118228 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தேர்தல் அறிக்கையும் ஜனநாயகமும்! கே.எஸ். இராதாகிருஷ்ணன் DIN Friday, March 22, 2019 01:33 AM +0530
இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வாக்குப் பதிவுக்கு முன்பே வெளியிடவேண்டுமென்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயமா, சடங்கா அல்லது ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அதில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளுடன் நடைமுறைக்கு வருமா என்பவை எல்லாம் விவாதத்தில் உள்ளன. 
தேர்தல் அறிக்கை என்பது,  தேர்தல்களத்தில் மக்களின் வாக்குகளைப் பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு அரசியல் கட்சி தேர்தலுக்கு முன்னர் தருகின்ற உறுதிமொழி சாசனம். மக்கள் நல அரசுக்கு ஒரு முக்கிய அடிப்படையாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல்காலத்தில் வெளியிடுகிறது. 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உறுதிமொழிகளை சில அரசியல் கட்சிகள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றன. தேர்தல் அறிக்கையும், தேர்தல் சீர்திருத்தங்களும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாகத் திகழ்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையின் வரலாறு என்ன என்று பார்த்தால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் கட்சிகள் வெளியிட்டதுபோலத் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரிப்பன் பிரபுவின் 1882-இன் தீர்மானம், இந்திய கவுன்சில் சட்டம் 1892, மின்டோ-மார்லி சீர்திருத்தம் (1909) இதையொட்டி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அமைப்பு முறை சட்டம், லக்னௌ ஒப்பந்தம் (1916), மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டம் (1919), அதன்பின் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் 1919, முடிமான் விசாரணைக் குழு அறிக்கை (1924) என தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலின் உறுப்பினராக உரிமைகளை இந்தியர்களுக்கும் வழங்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷார் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் 1920, 1923, 1926, 1930 என மாகாண கவுன்சிலின் தேர்தல்களும் நடந்தேறின.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த அரசியலமைப்புகள் தேர்தல் களத்தில் இறங்கின. பிரிட்டிஷ் நாடாளுமன்ற அமைப்பு முறைப்படி நடந்த தேர்தலில், இந்திய அரசியலமைப்புகள் தங்களுடைய உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கைகளாக முதன்முறையாக வெளியிடத் தொடங்கின. காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 1920-இல் முதன்முறையாக பாலகங்காதர திலகர் தேர்தல் அறிக்கையினை இந்திய மண்ணில் வெளியிட்டார். 
இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். அதேபோல, சுதேசிப் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழிற்கல்வி, பொது சுகாதாரம், இலவசக் கல்வி போன்ற திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்துவோம் என்ற உறுதியை அந்த அறிக்கையில் திலகர் குறிப்பிட்டிருந்தார்.
ராஜாராம் மோகன்ராய், தாதாபாய் நெளரோஜி, மகாதேவ் கோவிந்த ரானடேவின் பொருளாதாரக் கொள்கைகள், ரமேஷ் சந்திர தத்தின் பொருளாதார அணுகுமுறைகள், கோபாலகிருஷ்ண கோகலேவின் அதிகாரம் பரவலாக்குதல், உத்தமர் காந்தியின் கோட்பாடுகள் என அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படை விஷயங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்பின் 1923, 1926-இல் சுயராஜ்ய கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான், தமிழகத்திலிருந்து நீதிக் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1923, 1926, 1930 தேர்தல்களில் வெளியிட்டது. அன்று சென்னை மாகாணம், ஆந்திரம், கேரளாவின் வடபகுதி, கர்நாடகத்தின் தென் பகுதிகளெல்லாம் இணைந்த சென்னை ராஜதானியாகத் தென்னகம்  விளங்கியது. இந்தத் தேர்தல் அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத மக்களின் நலனைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உறுதிமொழிகள் சொல்லப்பட்டன. மற்றொரு கட்சியான தேசிய ஐக்கிய கட்சி 1923, 1926 தேர்தல்களில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
பண்டித நேரு 1937 தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தார். இதேபோல, பிராந்தியக் கட்சிகளான கிரசக் பிரஜா கட்சி, தேசிய விவசாயிகள் கட்சி போன்ற கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை பிரிட்டிஷார் காலத்திலேயே  வெளியிட்டதெல்லாம் வரலாற்று உண்மைகள். கடந்த 1919-லிருந்து நாடு விடுதலை பெறும் வரை இந்த மாதிரி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தொடர்ந்து வெளியிட்டன. அவை யாவும் மூன்று அல்லது நான்கு பக்கங்களிலேயே அடங்கிவிடும் ஆவணமாக இருந்தன. அதேபோன்று கம்யூனிஸ சிந்தனை உள்ளவர்களும் தங்களுடைய தேர்தல் அணுகுமுறை மற்றும் உறுதிமொழி ஆவணங்களையும் வெளியிட்டனர்.
நாடு விடுதலை பெற்றபின், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விரிவாக அன்றைய காலச் சூழ்நிலை மற்றும் அரசியல் சூழலுக்கேற்றவாறு, மக்களின் விருப்பங்களைக் கொண்டு தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கத் தொடங்கின. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு முதன்முறையாக திட்டக் குழுவை அமைத்தது. அதை ரஷிய மாதிரியைப் போன்று  தன்னுடைய நேரடிப் பார்வையில் ஜவாஹர்லால் நேரு  அமைத்தார். இன்றைக்கு மோடி அரசு அதை நீதி ஆயோக் என்று மாற்றிவிட்டது.
இந்தியாவின் 1951, 1952 தேர்தலில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, முக்கியத்தேவைகள் மற்றும் அணுகுமுறைகளை மனதில் கொண்டே தேர்தல் அறிக்கை வெளிவந்தது. அதேபோல, 1951-இல் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுவுடைமை சித்தாந்தத்தோடு தேர்தல் அறிக்கையை அந்தக் காலத்தில் வெளியிட்டது. இந்தச் சூழலில் துணை அறிக்கைகளாக காங்கிரஸ் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து 1948 ஜனவரியிலும், கம்யூனிஸ்ட் கட்சி பொருளதார அமைப்பு முறை குறித்து 1951-லும், சோஷலிஸ்ட் கட்சி தன்னுடைய திட்டங்களை 1947 அக்டோபர் மாதத்திலும், அன்றைய ஜனசங்கம் (இன்றைய பாஜக) தன்னுடைய தேர்தல் அறிக்கையை 1951 அக்டோபரிலும், சுதந்திரா கட்சி தன்னுடைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து 1959 ஆகஸ்ட்டிலும் வெளியிட்டன. 
இந்த ஆவணங்கள்தான் அந்தக் காலத் தேர்தல் அறிக்கையின் மையக் கருத்துகளாகும். தமிழகத்தைப் பொருத்தவரையில் பொதுத் தேர்தலில்  1957-இல் திமுக போட்டியிட்டபோது,  தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை அண்ணா வெளியிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்திய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று திமுக கூறியது. அந்தத் தேர்தலில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சிக் கட்டிலில் திமுக அமர்ந்தது. 
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மாநில முதல்வராக பதவிக்கு வந்தவர் பிகார் மாநிலத்தின் மகாமய பிரசாத் சின்ஹா. இவரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டார். ராஜேந்திர பிரசாத்தின் சீடராக இருந்து காங்கிரஸில் இருந்து விலகி இறுதிவரை ஜனதா கட்சியிலும் இருந்தார்.
அதேபோல, நாட்டின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வராகக் கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்டபோது,  கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான பொதுவுடைமைக் கொள்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கம்யூனிஸ்ட்டுகள் வெளியிட்டனர்.
காலப்போக்கில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆங்காங்குள்ள உள்ளூர்ப் பிரச்னைகளை மையப்படுத்தித் தொகுதி வாரியாக, தனித் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். இது வடக்கே சோஷலிஸ்ட்  கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் அணுகுமுறையாகும். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவை தொடர்ந்து எதிர்த்துப் போட்டியிட்டவர் அவர். 
இதேபோன்று நான் 1989 தேர்தலில் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில்  போட்டியிட்டபோது, தமிழகத்தில் முதன்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே எனது தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன். இந்த மாதிரி தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளைக் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று மக்களுக்காக வாதாட வேண்டுமென நினைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நாளுக்கு நாள் அரிதாகிவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் வாக்குகளைப் பணத்திற்கு விற்ற பின்னும்கூட, தேர்தல் அறிக்கையின் ஆளுமையும், அதன் வீச்சும் சில நேரங்களில் அரசியல்  கட்சிகளுக்கு கைகொடுப்பதை மறுக்க முடியாது. தேர்தல் அறிக்கைகள் ஆவணங்கள் மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலம் என உள்ளார்ந்த உளவியல் காரண காரியங்களை உள்ளடக்கியது.
தேர்தல் அறிக்கைகள் என்பவை  நாளும் வாக்குறுதிகளை வாரி வழங்கும் பட்டியலாக இருக்கக் கூடாது. ஆக்கப்பூர்வ திட்டங்களும், கொள்கைப் பதிவுகளுமாக இருக்க வேண்டும். வருங்காலங்களில் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கக்கூட திறமைசாலிகள் அரசியல் கட்சிகளில் இருப்பார்களா  என்பது சந்தேகம்தான். ஜனநாயகம்  வலுவிழந்து வருவதன் வெளிப்பாடுதான் இது.
கட்டுரையாளர்:
செய்தித் தொடர்பாளர், திமுக
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/22/தேர்தல்-அறிக்கையும்-ஜனநாயகமும்-3118228.html
3118227 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தண்ணீர் இனி தங்கம்! என்.எஸ். சுகுமார் DIN Friday, March 22, 2019 01:33 AM +0530 உலக உயிரினங்களை வாழ வைக்கும் அமுதமாக தண்ணீர் விளங்குகிறது. இதனாலேயே நீரின்றி அமையாது உலகு என திருவள்ளுவர் கூறியுள்ளார். வறட்சி,  நீர் மாசு போன்ற காரணங்களால் உலகம் பாலைவனமாகிவிடும் நிலை உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதை மனதில் கொண்டே, சந்திர கிரகணத்திலும், செவ்வாய் கிரகணத்திலும் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
2018-ஆம் ஆண்டில் போதிய அளவில் மழை இல்லாததால் தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்து அரசாணையை அண்மையில் வெளியிட்டுள்ளது.  மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்று பல காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் உலக தண்ணீர் விழிப்புணர்வு தினம் இன்று (மார்ச் 22) கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. தமிழகத்துக்கு, கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுடனும், ஆந்திர- கர்நாடக மாநிலங்களுக்கிடையேயும், பஞ்சாப்- ஹரியாணா மாநிலங்களுக்கிடையேயும் தண்ணீரால் பிரச்னை இருந்து வருகிறது. அதுபோல் நதி நீர்ப் பங்கீட்டில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது. இதேபோல் பல நாடுகளுக்கிடையே தண்ணீர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
 உலகின் 79 சதவீதப் பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் உள்ளன. எனினும் உலகிலுள்ள மொத்த நீரின் அளவில் 97.5 சதவீதம் கடல் நீர். வெறும் 2.5 சதவீத தண்ணீரே நல்ல நீர் உள்ளது. அதிலும் மூன்றில் ஒரு பகுதியானது, துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாகவும், பனிப்பாறைகளாகவும் உள்ளது. அதுபோக உள்ள சொற்ப நீரே உலக உயிரினங்களின் தேவைக்குப் பயன்பட்டு வருகிறது.
தண்ணீரின் தேவையானது அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமானது என்றபோதிலும், அவை கிடைப்பதென்பது அனைத்துப் பகுதியினருக்கும் சமநிலையானதாக இல்லை. ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் கடலில் சென்று கலப்பது ஒருபுறம்; அதேசமயம் தண்ணீரே பார்க்காமல் வறண்டு போயுள்ள ஆறுகள் மறுபுறம்.
உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 2025-ஆம் ஆண்டில்  தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தேவையைவிட கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும். அதுவும் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறுகிறது.
நதிகளில் பாயும் தண்ணீரும், ஏரிகள், குளங்களில் தேக்கப்படும் நீரும் விவசாயம் மற்றும் மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 1970-ஆம் ஆண்டுகளில் பசுமைப்புரட்சி வந்த பின்பு, குளங்களைப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், கிணறு வெட்டியும், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தும் நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் குறைந்த அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது பல நூறு அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது.
இந்தியாவின் வடமாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு அடி என்ற அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாசா செயற்கைக் கோள் மூலம் தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களில் நிலத்தடி நீர் எந்தளவில் உள்ளது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதை உடனே நிவர்த்தி செய்யாவிட்டால், இப்பகுதிகளில் விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களுடன் நதி நீர்ப் பங்கீட்டில் பிரச்னை உள்ள நிலையில்,  நிலத்தடி நீரையே நம்பித்தான் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் நிலத்தடி நீரைப்  பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்துக்குக் கீழே செல்லாத வகையில் நிலத்தடி நீர் இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால்,  நீர்மட்டம் குறையும்போது நிலத்தடி நீருடன் கடல் நீரும் கலந்து விடுகிறது. இதனால், குடிநீருக்கு உதவாத உவர்தன்மையை நீர் அடைகிறது. 
தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் உள்ள நிலையில், முறையான நீர் மேலாண்மை கையாளப்படாததும், தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக அமைகிறது. மழைக்காலங்களில் நிலத்தடி நீர் சேமிப்பை முறையாகக் கையாள்வதிலும் விழிப்புணர்வு இல்லாததால் நீரின்றி ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவை பயன்படுத்தப்படாமல் தூர்ந்துபோய்விட்டன. இதன் காரணமாக அவற்றின் ஆழம் குறைந்து தண்ணீர் சேமிப்பின் கொள்ளளவு குறைந்துவிட்டது. 
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர் மாசுபடுவதைத் தடுப்போம், தண்ணீர் வீணாவதைத் தடுப்போம் என்பதே உலக தண்ணீர் விழிப்புணர்வு தினத்தின் நோக்கமாகும். ஆனால், அன்றைய தினம் மட்டும், தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் சம்பிரதாய தினமாகவே இந்த நாள்  உள்ளது.
இதனை ஆண்டு முழுவதும் கடைப்பிடிப்பதற்கான தொடர் நடவடிக்கையில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் சிக்கனத்தையும், தண்ணீர் பாதுகாப்பையும் பொதுமக்கள் அனைவரும் சமூக அக்கறையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/22/தண்ணீர்-இனி-தங்கம்-3118227.html
3117614 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தாய்மையின் சுமைகள்! என். முருகன் DIN Thursday, March 21, 2019 01:30 AM +0530
நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.  இதில் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில் பெண்கள், முழுமையான அளவில் ஆண்களுக்குச் சரிசமமான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்வதால் இந்தத் துன்புறுத்தல்கள் சற்று குறைவு. அவ்வளவுதான்.
சென்ற ஆண்டு, புருஷோத்தமன் என்ற நபர் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் செய்த குற்றச் செயல்கள் கவனிக்கத் தகுந்தவை. இவர், கனரக வாகனங்களை வைத்துப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வியாபாரத்தை நடத்தி வந்தார்.  அந்த வியாபாரம் நஷ்டமடைந்ததால், வேறு ஏதேனும் லாபகரமான தொழிலை ஆரம்பித்து நடத்தி, லாபம் ஈட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவாகியுள்ளது. பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் தொழில் லாபகரமானதாக இருக்கும் என்ற குயுக்தியான எண்ண ஓட்டத்தில், 8 ஆண்டுகளில் 8 பெண்களை ஏமாற்றி மணமுடித்து, அந்த 8 ஆண்டுகளில் ரூ.4 கோடியே 50 லட்சத்தைச் சுருட்டியுள்ளார் இவர்.
45 வயது நிரம்பிய கல்லூரி ஆசிரியையான இந்திரா எனும் பெண்மணி 57 வயது நிரம்பிய புருஷோத்தமனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் புருஷோத்தமனின் நடிப்பான அன்பிலும் அழகிலும் மிகுந்த திருப்தியுடன் இருந்ததால், அவரது யோசனைப்படி, சென்னையிலிருந்த அவரது தனி வீட்டை ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்றுவிட்டு, கணவனுடன் அவர் சொன்ன மற்றொரு நகருக்குக் குடிபெயர்ந்தார்.  முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்ட புருஷோத்தமனின் திருட்டுத்தனத்தை பின்னர் புரிந்து கொண்ட இந்திரா போலீஸில் புகார் செய்தார்.
இந்தப் புகாரை போலீஸார் விசாரித்தபோது, புருஷோத்தமன் இந்திராவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால், மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்திருந்ததையும், இந்திராவை மணமுடித்தபின் நான்கு பெண்களை ஏமாற்றி மணமுடித்துக் கொண்டதையும் கண்டுபிடித்தனர். இதில், மூன்று மனைவியர் பல லட்ச ரூபாய்களை இழந்ததைத் தெரிவித்தனர். 
இவ்வளவு திறமையுடன், பல பெண்களை ஏமாற்றித் திருமணம் முடித்து மோசடி செய்ய, புருஷோத்தமனுக்கு உதவியது ஒரு திருமண புரோக்கரேஜ் மையம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அவர்களையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர்.  கணவரிடம் சட்ட ரீதியான விவாகரத்து பெற்ற நடுத்தர வயது பணக்கார மற்றும் வசதி படைத்த விதவைப் பெண்கள் இந்த மையத்தில் பதிவு செய்து, மறுமணத்திற்காக முயற்சிக்கும்போது, அவர்கள் பற்றிய முழு விவரங்களையும், புருஷோத்தமனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளனர் இந்த மையத்தின் இரண்டு ஊழியர்கள்.
மேலே நாம் கண்டது  கிரிமினலான இந்திய ஆணிடம், பெண்கள் ஏமாந்தது பற்றி. ஆனால், பெண்கள் சிறப்பாக வாழும் மேலை நாடுகளில்கூட ஆண்களுக்குச் சரிசமமான வாழ்க்கையும் அமைதியும் கிடைக்காமல்தான் பெண்கள் வாழ்கிறார்கள் என்னும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பெட்டி ஃப்ரீடன் எனும் எழுத்தாளர்.  பெண்களில் மகிழ்ச்சியான அன்னையாகவும், குடும்பத் தலைவியாகவும் வாழ்க்கை நடத்துவோர்கூட எவ்வளவு பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்தது.  அமெரிக்காவின் இரண்டு ஆய்வாளர்கள் இது பற்றி ஓர் ஆராய்ச்சியை நடத்தித் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் குடும்பத்தில் பெண்கள் தொழிலாளர்கள் எனவும், அது மிகவும் கடினமான தொழில் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில், பண வசதி படைத்த உயர் குடும்பங்களில் திருமணமாகி, நல்ல வாழ்க்கையை நடத்தும் 393 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாம். அவர்களில் பெருவாரியான தாய்மார்கள், தங்கள் வாழ்க்கையை ஒரு கப்பலின் தலைவனாகப் பணி செய்து 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளனர்.  தங்கள் குடும்பத்தின் எல்லாப் பணிகளுக்கும் தலைமையேற்று, குழந்தைகளின் உணவு, உடைகள் அணிதல், கல்வி ஆகிய எல்லா தேவைகளுக்கும் பணி செய்து, தங்கள் வீட்டின் எல்லா நடவடிக்கைகளும் சரியாக நடக்க பொறுப்பேற்பதன் கடினத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு ஸ்லோ கில்லர்-மெதுவாகக் கொல்லும் நிலைமை என்பது பலரின் வாதம்.  தன்னை முழுமையாக ஈடுபடுத்தி குடும்பப் பணிகளைச் செய்வதால், தனக்குப் பிடித்த எந்த நடவடிக்கையையும் செய்து கொள்ளாத நிலைமையில் வாழ்வதாக நினைத்துக் கொள்கின்றனர்  இந்தத் தரமான தாய்மார்கள். அவர்களது கணவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும், தங்கள் மனைவியர் பொறுப்பானவர்கள் எனவும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள் எனத் திடமாக எண்ணுவதும் இந்த மனைவியருக்கும் குடும்பத்தின் எல்லோருக்கும் புரிந்த ஒரு விஷயம்.  ஆனால், இந்த மனைவியர் எவ்வளவு கடினமான வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பது இவர்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. 
குழந்தைகளின் படிப்பை கவனித்து, தேவைப்படும் போது அவர்களின் படிப்பிற்கு உதவி செய்தல், அதாவது வீட்டுப்பாடங்களை அவர்கள் கற்கிறார்களா என மேற்பார்வை செய்தல் வேண்டும். இந்தத் தாய்மார்கள் ஒரு வேலையில் இருந்தால், அந்த வேலைக்குச் செல்லும்போது பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைத் தங்கள் காரில் கொண்டு போய் இறக்கிவிடவும், பள்ளி முடிந்தபின் பிள்ளைகளைப் பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு ஏற்றி வருவதும் முக்கியம். குடும்பத்தில் யாருக்கு எந்த உணவு நல்லது என்பதும், உடல்நலமில்லாத பிள்ளைகளுக்கும் கணவருக்கும் தேவையான வேளையில் மருந்துகளை அளிப்பதும் அவசியமான பணி.
ஆக, தாய்மார்களே எல்லாம் என்பது திண்ணம்.  இது வளர்ந்துவிட்ட மேலை நாடு ஒன்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் உணர்த்தப்பட்டது எனினும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஒரு நாட்டில் நடந்தேறும் நடைமுறையும்கூட. நம் நாட்டில், நிலைமை மேலும் கடினம் எனலாம்.
கொல்கத்தா நகரின் ஓர் இளம் தாய் கூறுவது கவனிக்கத்தக்கது. நான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன்.  அந்தப் பணியுடன் சேர்த்து எனது குடும்பத்தின் எல்லா வேலைகளையும் செய்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.  குழந்தைகளை மட்டுமின்றி, என் மாமியார், மாமனார் ஆகியோரையும் கவனிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  தூக்கமில்லாமல் தினமும் தவிப்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.
என் கணவர் தூங்கியபின்தான் நான் உறங்க முடியும்.  ஆனால், அவர் நீண்ட நேரம் முகநூலில் மூழ்கி, பின் தாமதமாகத்தான் உறங்கச் செல்வார்.  அதிகாலையில் நான் எழுந்துவிட வேண்டும்.  காரணம், குழந்தையைக் கவனித்து உணவுகளைத் தயாரித்து எல்லோருக்கும் பரிமாற வேண்டும் என்கிறார்.  இவற்றை எல்லாம் முடித்தபின் தனது அலுவலகப் பணிக்குச் செல்ல வேண்டும் என்கிறார்.
இது நமது இந்திய கலாசாரத்துடன் ஒட்டிப் பிறந்த ஒரு வாழ்க்கை நடைமுறை. இந்த இளம் தாய் தன் மாமியாரை கவனிக்கும் பணியைச் செய்ததுபோல்தான், இவருடைய மாமியார் அவருக்குக் கல்யாணமான புதிதில் அவருடைய மாமியாரை முழு அக்கறையுடன் கவனித்திருப்பார் என்பது நமது ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம்.
ஆனால், நிறைய வளர்ச்சியடைந்த பின்னரும், நம் நாட்டில் பெண்கள் துயரப்படும் வகையில் பல இடங்களில் நடத்தப்படுவதும், அதைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் சரியான முறையில் அதைச் செய்யாததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆட்டோவில் செல்வது முதல் தனியார் மற்றும் பொதுத்துறை பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது சிறு வயது பெண்கள் முதல்  முதிய பெண்கள் வரை ஆண்களால் கொச்சைப்படுத்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது.  நின்று கொண்டு பயணம் செய்யும் பெண்களைத் தொட்டுக் கொண்டும், உரசிக் கொண்டும் பயணிப்பது முதல், கெட்ட விஷயங்களைப் பல இளைஞர்கள் ஓசைபட பெண்களுக்கு நடுவில் உரையாடுவதும் நடைமுறை வக்கிரங்கள்.
கல்லூரிகளில், பெண்களுக்குத் தனியாக விடுதிகள் அமைக்கப்படாமல், நிறைய இடங்களில் பெண்கள் தனியார் விடுதிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டியது கட்டாயம்.  அந்தப் பெண்கள் விடுதிகளில் பணம் அதிகம் செலுத்தினாலும், தேவையான வசதிகள் செய்யப்படாமல் தனியார் அமைப்புகள் லாபம் ஈட்டுவது சாதாரண நடைமுறை.  தில்லியில் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில்,  இரவு 8 மணிக்குள் மாணவிகள் வந்துவிட வேண்டும் என்ற விதி.  ஆனால், ஆண்கள் விடுதியில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. இரவில் எல்லா இடங்களிலும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு, சர்வ சாதாரணமாகப் பெண்கள் நடமாடும் இடமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா முதலிய நகரங்கள் உருவான பின்னரும் இதுபோன்ற ஓரின விதிகள் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலைமையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சரிசமமாக இருக்க முடியாது என்பதற்கு நமது மனநிலையே காரணம். இதனால், பாதிக்கப்படுவது பெண்களே. முன்னேறிய பலரும் நினைவில் கொள்ளவேண்டிய அடிப்படை உண்மை, நமது முன்னேற்றத்துக்குக் காரணம் தாய்மார்கள் என்பதே.  பெண்களை நம்மில் சிலர் துன்புறுத்துவதுபோல், பெண்களால் ஆண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியைக் கேட்டு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நம்முடைய தாய்மார்களும், சகோதரிகளும் தான் தரமான குடும்பங்கள் உருவாகக் காரணம் என்பதை நினைவில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்தால், நாடு இன்னமும் வேகமாக வளர்ந்து முன்னேறும் என்பது நிச்சயம்.

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/21/தாய்மையின்-சுமைகள்-3117614.html
3117613 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வனங்களைத்  தேடி... ரா. துரைபாபு DIN Thursday, March 21, 2019 01:30 AM +0530
வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும் மனிதன் மட்டுமல்லாது அவற்றைச் சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு அளித்து அவற்றின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. வனங்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதியன்று உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வனங்களும் அவை தொடர்பான கல்வியும் என்னும் கருத்தியலில் உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓர் ஆரோக்கியமான நாட்டுக்கு அதன் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனங்களைக் கொண்ட பசுமைப் பரப்பாக  இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான வனங்களின் பரப்பு  பற்றிய வன ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, இந்தியாவில் வனங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு 24.39 சதவீதம் உள்ளது. இதில் 21.54  சதவீதம் விலங்குகள், பறவைகள் வாழும் வனப்பரப்பாக உள்ளதென்றும், மீதமுள்ள 2.85 சதவீத பரப்பளவு வனங்களுக்கு வெளியே உள்ள மரத்தோட்டங்களாகவும் மற்றும் ஏனைய தாவரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிக்கையில், இந்தியாவில் 2015, 2017-ஆம் ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட  காலகட்டத்தில் வனம் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் ஏறக்குறைய  1சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாம் பிறக்கும்போது ஆட்டுவிக்கும் தொட்டிலில் இருந்து பிறந்த பின் சுவாசிக்கும் காற்று, இறக்கும்போது எரிக்கப் பயன்படும் விறகு, புதைக்கப் பயன்படும் சவப்பெட்டி வரை அனைத்தையும் வாரி வழங்கும் வள்ளல்கள் வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும்தான். பத்து புத்திரர்களைப் பெற்று அவர்கள் செய்யும் தாய், தந்தை கடன்களைவிட ஐந்து மரங்களை நட்டு அவை வழங்கும் பயன்கள் மேலானவை என்கிறது மர சாஸ்திர நூலான விருக்ஷ ஆயுர்வேதம். பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச்  சமம்;  பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச்  சமம்; பத்து ஏரிகள்  ஒரு புத்திரனுக்குச் சமம்; பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம் என்று ஆய்ந்து அறிந்து மரத்தின் பெருமையை நம் முன்னோர் கூறியுள்ளனர்.
வனங்கள் ஒரே நாளில் உருவானதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு உயிரினங்களின் கடுமையான உழைப்பினால் உருவான ஒரு சிறப்பு நிறைந்த அமைப்பு. ஒரு வனம் அழியும்போது வெறும் மரங்கள் மட்டும் அழியாமல் அங்கிருக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் என அனைத்துமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுகின்றன. வனங்கள் அழிவதால் சுற்றுச்சூழல் அழிந்து பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
முன்னொரு காலத்தில் ஒவ்வொருவரும் அவர்களுடைய வீடுகளைச்  சுற்றி பசுமைத் தாவரங்களை நட்டு வளர்த்து வந்தனர். ஆனால், இன்றோ பலரும் அழகுக்காகவும் கவர்ச்சிக்காகவும் தம்முடைய வீட்டைச் சுற்றி பல்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கிறார்களே அன்றி பசுமைத் தாவரங்களையும் மரங்களையும் வளர்க்காமல் வீட்டைச் சுற்றி பெருஞ்சுவர்களையும் மின்வேலிகளையும் அமைத்து வருகிறார்கள். வனங்களாய் மரங்கள் நிறைந்து இருந்த பல்வேறு நிலப்பரப்புகள் இன்று கூறுபோடப்பட்டு, மாற்றப்பட்டு எழுப்பப்பட்டிருக்கும் விண்ணை  முட்டும்  கட்டடங்கள்  ஒவ்வொன்றிலும் பல மரங்களின் அழுகுரல்களும், பல்வேறு பறவைகள், விலங்குகளின் இறுதி ஊர்வலங்களும் அமைதியாகக் குழி தோண்டி  புதைக்கப்பட்டு விட்டன.
முக்கனிகள்  தரும் மரங்களையும், மூன்று தலைமுறை நம்முடன் சேர்ந்து பயணம் செய்து வரும் வனங்களையும் இழந்து, வணிக நோக்கத்தில் மட்டுமே இன்று மரங்களை வளர்க்கிறோம். ஒரு தலைமுறையில் வளர்க்கப்பட்டு பல தலைமுறைகளைக் கடந்தும் பலன் தந்து கொண்டிருக்கும் இந்த வனங்களை அழித்து, மரங்களைக் கொய்து நம்மை நாமே எதிரிகள் ஆக்கிக்கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறோம்; நம் நாட்டை பாலைவனமாக்கி வருகிறோம்.
இந்த நிலை மாறவும், வீடும் நாடும் வளம் பெறவும் அனைவரின் உடலும், உள்ளமும் தூய்மை பெற வேண்டும். அருமையான வழி இதோ:  வனம் வளர வாழ்வு உயரும்;  காடு  வளர நாடும் வளரும்; மரம் வளர்க்க வளர்க்க மானுடமும் வளரும்; எனவே, நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு மரங்களைத் தேர்வு செய்து காடு, வீடு, வீதி, ஊர், சேரி, தரிசு நிலம், புறம்போக்கு நிலம், நெடுஞ்சாலை ஓரம், குளக்கரை, ஏரிக்கரை, வயல் வரப்புகள், வாய்க்கால் என காணக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு மரம்;  ஒவ்வொரு புத்தாண்டின்  தொடக்கத்திலும்  ஒரு மரம்; ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ஒரு மரம்; வீட்டின் பெரியோர் மறைந்த நாளன்று அவர் நினைவாக ஒரு மரம் நடுங்கள்.  ஊர்த் திருவிழாக்கள், அரசுப்பொது நிகழ்ச்சிகளிகளில் பங்கேற்கும் அனைவரும் ஒரு மரம் என நம்முடைய வாழ்வின்  ஒவ்வொரு நிகழ்விலும் மரம் நட்டு பூமியை மலர வைத்தால் வனங்கள் வாழ இந்த வையகமும் வாழும்.
ஆப்பிரிக்கக் கண்டம் பாலைவனமாகாமல் பசுமை பாதுகாப்பு இயக்கம் அமைத்துப் பாதுகாத்த வங்காரி மாத்தாய்,  வனங்களைப் பாதுகாக்க சிப்கோ இயக்கம் நடத்தி வெற்றி கண்ட சுந்தர்லால் பகுகுணா, தனி மனிதனாய் அஸ்ஸாமில் முலாய் என்னும் வனப் பகுதியை உருவாக்கிய ஜாதவ் பேயங், நாட்டு  மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலைப் பேணிக் காத்து நாட்டைத் திரும்பிப்  பார்க்க வைத்த அஸ்ஸாம் மாநிலத்தில் வனப் பாதுகாவலராகப் பணிபுரியும்  சிவகுமார்...இன்னும் பலர் நம்மில் அயராது  உழைத்துக்  கொண்டிருக்கிறார்கள். 
ஆகவே, இன்றிலிருந்து இவர்களை எல்லாம் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு  நம்முடைய வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நட்டு, பராமரித்து இந்தியாவை மீண்டும் பசுமையின் தாயகமாக மாற்ற உழைப்போம். 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/21/வனங்களைத்--தேடி-3117613.html
3117023 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் எச்சரிக்கை உணர்வு அடிமைத்தனம் அல்ல! கோதை ஜோதிலட்சுமி DIN Wednesday, March 20, 2019 01:24 AM +0530 பெண்கள் தெய்வங்களாக, தேவதைகளாகப் போற்றப்படும் இதே மண்ணில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. புராண காலம் தொட்டு காலம் காலமாக நாம் இதனைக் கண்டு வருகிறோம். அதே நேரத்தில் பெண்கள் தங்களை எப்படிக் காத்துக் கொண்டனர் என்பதையும் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. பெண்ணின் பெருமைகளை எல்லாம் பல இடங்களில் எடுத்துரைக்கும் வள்ளுவப் பேராசான்,
தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
 சொற்காத்துச் சோர்விலாள் பெண்
 என்று பெண்ணைக் குறிப்பிடுகிறார். இதில் பெண் என்பவளது பல பொறுப்புகளை அல்லது அவளின் பல பரிமாணங்களைக் கூற முற்படுகையில் முதலில், தற்காத்து என்று தன்னைக் காத்துக் கொள்ளும் திறம் படைத்தவள் என்று கூறுகிறார்.
தன்னைக் காத்துக் கொள்வதும் தன்னைச் சார்ந்தவர்களைப் பேணுவதும் சொல் காப்பதும் பெண்ணின் இயல்பு. இத்தகைய இயல்போடு அவள் சோர்விலாதவளாகக் காலம் தோறும் வாழ்ந்து வருகிறாள் என்பதை அவள் ஆற்றலின் வடிவம் என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் காலம்தோறும் இந்தப் பண்புகளிலிருந்து மாறுபடாமல் இயங்கிக்கொண்டே இருப்பவள் என்றும் கருதலாம். தமிழ் மறை என்று   நாம் போற்றும் வள்ளுவம் இப்படிப் பெண்ணை உயர்த்திப் பிடிக்கிறது. இதன் அடிப்படையில் நாம் இன்றைய பெண்களின் நிலை பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
அண்மையில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை சம்பவம் மொத்தத் தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் புதிதல்ல. இந்தத் தேசம்  இதுபோல எத்தனையோ கண்டிருக்கிறது. இது ஒற்றை மாணவிக்கு நிகழ்ந்த துன்பம் அல்ல. வெளிவந்திருக்கும் உண்மைகளும் காட்சி ஆதாரங்களும் இன்னும் பெண்கள் பலருக்கும் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இருந்தபோதிலும் ஒரே ஒரு மாணவி மட்டுமே துணிந்து புகார் செய்துள்ளார். இதனால் இது ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் எனும் அளவில் சுருங்கி இருக்கிறது. 
 இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் மீதும் பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காட்சி ஊடகங்களில் பெரும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. ஒருபுறம் பெண்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் ஆணின் இயல்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் குறித்தும், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஆவேசமும் சமூக வலைதளங்களில் மக்களின் கருத்தாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன.
இதனை நாம் ஓர் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த தீங்காக எண்ணி இருந்துவிட முடியாது. நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோன்று நடந்துகொண்டே இருக்கின்றன; சில வெளிக் கிளம்புகின்றன; பல மூடி மறைக்கப்படுகின்றன என்பதே உண்மை. இத்தகைய குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதனைக் களையாத வரை இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் வெளிப்படும்போது சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட தன்மையைக் காண்கிறோம். அதே நேரத்தில் உண்மையை உணர்ந்து அதனைக் களைவதற்குச் செய்ய வேண்டியனவற்றை செய்யத் தவறுவதும் சமூகத்தின் இயல்பாக இருந்து வருகிறது.
செல்லிடப்பேசியும் அதன் வழியே சமூக வலைதளங்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் கைவசம் ஆகியிருக்கின்றன. இதன் பிரம்மாண்டத்தை இதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அவர்கள் முழுமையாக உணர்ந்து இருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. தொடர்ந்து நாம் காணும் இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகரிக்கின்றன.
சமூக வலைதளங்கள் வழியாக உலகையே காண முடியும் என்ற பெரும் உற்சாக மனநிலை இன்றைய தலைமுறையினரிடம் இருக்கிறது. அதே நேரத்தில் நம்மையும் உலகம் முழுவதும் உற்று நோக்குகிறது அதற்கான வாய்ப்பும் திறந்திருக்கிறது என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள்.
அனைத்து விதமான வக்கிரங்களும் கொட்டிக்கிடக்கும் வலைதளங்கள், வயதிற்கு மீறிய படிப்பினைகள், தேவைக்கு அதிகமான தகவல்கள், எதையும் தனதாக்கிக் கொள்ளும் பேராசையை மனித மனங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் வக்கிரங்களை அவலங்களைத் தூண்டி வெளிக்கொணரும் காட்சிகளும் கருத்துகளும் என்று எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அத்தனையும் கொட்டிக் கிடக்கின்றன.  
இதுபோன்ற குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, யாரால் நிகழ்த்தப்படுகின்றன, எப்படி நிகழ்கின்றன-இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழியும் புலப்பட்டுவிடும். தனது கருத்தினைப் பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்ற நேர்மறை விளைவு இருந்தபோதிலும், முகநூல் போன்றவற்றில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் நண்பர்களாக இணையும்போது அவர்களை எந்த அளவுக்கு நம்புவது, எதுவரை நம்புவது, எப்படி நம்புவது, எங்கே அவர்களை நிறுத்துவது என்பதான தெளிவு இன்னமும் இளைய தலைமுறையினருக்கு வாய்க்கவில்லை என்பது இதுபோன்ற சம்பவங்களால் தெளிவாகிறது.
நவீன தொழில்நுட்பமும் சமூக வலைதளங்களும் இளைஞர்களைப் பெரிதும் அலைக்கழித்து புயலில் சிக்கிய மென்கொடிகளாகச் சிதைத்து வருகின்றன என்னும் உண்மையை உணர்ந்து அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட பொள்ளாச்சி சம்பவத்தைப் பொருத்தவரை இதனை வலிந்து கடத்திச் சென்றது அல்லது திடுமென ஏற்பட்ட ஓர் அதிர்ச்சி சம்பவம் என்று கொள்ள முடியாது. தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படிப் பல நிலைகளில் யாரென்றே அறியாதவர்களோடு ஏற்பட்ட நட்பும் பழக்கமும் இத்தகைய அபாயத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
பெற்றோரும் உடன் பிறந்தோரும் தராத பாதுகாப்பை வேறெவரும் தந்துவிட முடியாது. சகோதரர் என்ற எண்ணத்தோடு பழகுவோர் பெற்றோர் முன் வந்து தங்களை அறிமுகம் செய்து கொள்வதில் எவ்விதத் தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாத நிலையில், இந்தப் பெண்களைப் பார்க்கிறோம். வெளியாகி இருக்கும் சில காட்சிகளும் அதிலே தோன்றும் பெண்களின் கதறல்களும் மனதை உறையச் செய்கின்றன என்றாலும், இந்த நிலை வரை அறிமுகம் இல்லாத மனிதரை எப்படி இவர்கள் நம்பினார்கள் என்ற ஆதங்கமும் தோன்றவே செய்கிறது. குடும்பத்தோடு நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டியதும் பொதுவெளியில் மிகுந்த கவனமுடன் நம்முடைய சொற்களைப் பிரயோகிக்க வேண்டியதும் அடிப்படை அறிவுதானே.
அறிவியல் கல்வியைக் கற்பதில் காட்டும் கவனமும் ஆர்வமும் நமது பண்பாட்டை, கலாசாரத்தை முன்னிறுத்தும் கல்வியைக் கற்பதில் நாம் காட்டுவதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறார் புலவர் கணியன் பூங்குன்றனார். அதாவது, எந்தவிதமான நன்மைகள் ஆனாலும் அவை நமது சொல்லை, செயலை அடிப்படையாகக் கொண்டவை. அதேபோல, எத்தகைய தீங்கு நேரிடுமாயினும் அதற்குப் பெருமளவில் பொறுப்பு நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் உண்டு. இதனை உணர்ந்து ஆண்களும் பெண்களும் பொதுவெளியில் பழகும்போது சொற்களை கவனமுடன் கையாள வேண்டும். செயலில் கண்ணியத்தைப் பின்பற்ற வேண்டும்.
பெண்ணியம் போன்ற நவீன கால மேற்கத்திய சித்தாந்தங்கள், இன்னும் பல கொள்கை ரீதியான பதிவுகள் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இவையெல்லாம் நமது கலாசாரத்திற்கு எந்த அளவுக்குத் தேவையானவை என்பதான புரிதல் குறைவாகவே இருக்கிறது.
பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கு சமூக வலைதளங்கள் போன்ற பொதுவெளி மட்டும் போதுமானது என்ற கருத்து அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. 
 யாராயினும் எச்சரிக்கை உணர்வை அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து ஜாக்கிரதையாக நகர்வது புத்திசாலித்தனமே ஆகும். ஒரு பெண்ணின் சொல் அல்லது சின்னஞ்சிறு செயல்கூட எதிரில் இருக்கும் ஆணை அவளை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது. அறிமுகமில்லாத ஒரு மனிதர் தன்னை நெருங்குவதற்கான வாசல்களைப் பெண்ணின் சொற்கள் திறந்து விடக்கூடும் எனும் உண்மையைப் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். 
அதே நேரத்தில் கண்ணியத்தோடு ஆண் பிள்ளைகள் பெண்களை அணுக வேண்டியது கட்டாயம். இந்த இரண்டையும் அவர்கள் தெளிவாக உணரும் வகையில் நமக்கான கல்வியும் வளர்ப்பு முறையும் இருந்தாக வேண்டும்.
குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கடுமையாக, உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இது ஒரு தனி மனிதப் பிரச்னை அல்ல; ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்னை. ஒரு தலைமுறையை முழுமையாகப் பீடித்திருக்கும் நோய் என்பதை உணர்ந்து, ஒட்டுமொத்த அடுத்த தலைமுறையை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை அரசும் சமூகமும் தனி மனிதர்களும் செயல்படுத்தியாக வேண்டும். ஆண்-பெண் உறவின் வெளிப்பாடுகள், உறவுச் சிக்கல்கள், அதிலே தோன்றும் உணர்வெழுச்சி போன்றவை குறித்துத் தெளிவான புரிதலை இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/20/எச்சரிக்கை-உணர்வு-அடிமைத்தனம்-அல்ல-3117023.html
3116428 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஏன் வாக்களிக்க வேண்டும்? வைகைச்செல்வன் DIN Tuesday, March 19, 2019 01:27 AM +0530
வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட. இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமையாகும். ஓர் அந்நியனுக்கு அடிமையாக இருப்பதைவிட, நாம் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகப் பெற்றதே சுதந்திரம்.
அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உரிமையை நாம் பயன்படுத்தாமல் போனால் தவறாகாதா? இந்திய ஜனநாயகம் தனது அங்கீகாரத்தைப் பெற்று, செழுமைமிக்க தனது பயணத்தைத் தொடங்கி 72 ஆண்டுகளைக் கடந்த போதிலும், அதன் நிறைவான பாதையில் பயணிப்பதற்கு தனது வாக்கு சதவீதத்தை இன்னும் முழுமையாக்கவில்லை. நம்மை ஐந்து ஆண்டுகள் யார் ஆளப் போகிறார்கள் என்பதைத் தீர்மானித்து  வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதுடன், இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை உள்ள 
எஜமானர்கள், வாக்காளர்கள்தான்.
ஜனநாயகத்துக்கான சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதிலும், வாக்குகளின் சதவீதத்தை அதிகப்படுத்தி வலிமை பெறுவதிலும்தான், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு செறிவூட்டப்படுகிறது. திரையரங்குகளில், தொலைக்காட்சி தொடர்களில், இன்னும் பல்வேறு கேளிக்கைகளின் மூலம், நம் பொன்னான நேரத்தைச் செலவழிக்கிறோம். ஆனால், நம்மை யார் ஆளப் போகிறார்கள் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரத்தை விரல் நுனியில் எழுதப் போகும், இந்தத் தேசத்தின் தீர்ப்பை நாம் ஏன் எழுத மறுக்கிறோம். இந்த உரிமையை பணம், அதிகாரம், சாதியச் செல்வாக்கு, பயமுறுத்துதல் போன்ற பல்வேறு சூழல் காரணிகளால், தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. ஆனால், இவையே ஒரு தீர்வாக முழு வடிவத்தை எட்டிப் பிடிப்பதில்லை.  
நான் சுயமாக உழைக்கிறேன், சுயமாகச் சம்பாதிக்கிறேன், சுயமாக என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டேன், அப்படி இருக்கையில், அரசின் உதவி எனக்கு எப்போதும் தேவையில்லை. அவ்வாறிருக்க நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சிலரது மனமும், இன்னொரு சாராரோ குறிப்பாக இளம் தலைமுறையினர் மாற்றம் வேண்டும் என்று முறையிடும் அதே வேளையில்,  தங்களது மீம்ஸ்களின் மூலம் மட்டுமே திருப்தி அடைந்து கொள்வதும், ஒரு புதிய ஜனநாயகப் பாதையை அமைப்பதற்கும், அதைச் செப்பனிடுவதற்கும் தவறி விடுகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. 
ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் சட்டையில் இருந்து, சாப்ட்வேர் பொருள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு ஓர் இன்றியமையாததாக இருக்கிறது. ஆகவே, அவற்றைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்பதே, வாக்களிப்பதற்கான அவசியமாகிறது. வாக்களிக்கும்போது வாக்காளர் என்பது பெருமைக்குரிய ஒரு தருணமல்லவா? இந்த நாட்டின் ஒரு  பெருமைக்குரிய ஒரு குடிமகனல்லவா என்று பெருமிதம் பேசுவதில் நமக்கு ஏன் இழுக்கு?
 சங்ககாலம் முடியாட்சி; நிகழ்காலம் குடியாட்சி. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் குறிப்பிடுவது சங்ககாலத்தில் அது சாத்தியமாகுமா? நிகழ்காலத்தில் அது சாத்தியமாகிறது. ஆகவேதான், நமது உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒரு தருணமாகவே இதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் தாங்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, ஒரு புத்துருவாக்கத்திற்கு வித்திடுகிற களம்தான் தேர்தல் களம். ஏனென்றால், ஓட்டுரிமை என்பது நமது எதிர்காலத்தின் குரலாக நமக்கு நாமே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரு திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைவதற்கு நாமும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தோம் என்பது சமகாலத்தில், நீண்ட ஜனநாயகத்தேரை இழுத்துச் செல்வதில், நமக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதை உணரச் செய்யும் வெளிப்பாடுதான் வாக்களிப்பது என்பதாகும். 
எனக்கு எதற்கு அரசியல்? இதில் எனக்கு விருப்பமில்லை. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்படியே ஒரு விருப்பம் இருந்தாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பல சந்தர்ப்பங்களில் குழப்பமடைந்து விடுகிறோம் என்ற கருத்தை செவி வழியாக நாம் கேட்பதுண்டு. 100 சதவீத வாக்குப் பதிவைப் பெறுகிறபோதுதான் முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது என்று நாம் எப்போது உணரப் போகிறோம்? 
சில பேர் நாங்கள் தெளிவான முடிவை எடுக்கிறோம் என்று சொல்லி நோட்டாவை பயன்படுத்துகிறார்கள். அப்படியானால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக்  கொள்கிறீர்கள்  என்று பொருள். 
திறமையான ஒரு வேட்பாளரை, நீங்களே தேர்ந்தெடுங்களேன். அந்தத் திறமையை ஊக்குவிப்பதும் மக்கள் பணி செய்கிற சேவகரை அடையாளப்படுத்துவது, நமது பங்கு என்பதையும், நமது உரிமை என்பதையும்  ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், பல பேர் பல விதமாகக் கூறுவது உண்டு. வாக்கு வாங்கிட்டுப் போய் வெற்றி பெற்ற பிறகு,  நம்முடைய வீதிக்கே வருவதில்லையே என்று சில குரல்கள் கேட்பதுண்டு. அப்படி இருக்கையில், நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதும், இல்லை அது தவறு, நமது கடமையை செய்துதானே ஆகவேண்டும் என்று சிலரும் கூறுவதுண்டு.
வாக்களிக்காமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், சாக்கடை சரியில்லை, சாலை சரியில்லை என்று புலம்பினால் சரியாகி விடுமா என்று கேட்பவர்களும் உண்டு. சரி, வாக்களித்தால் மட்டும் இவை எல்லாம் சரியாகி விடுமா? ஆமாம், நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள்தான், அரசின் திட்டங்களை தான் தேர்ந்தெடுத்த பகுதிகளுக்குக் கொண்டு வருவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். 
வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்பது இன்று தோன்றியது அல்ல. தமிழ்நாட்டின் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கி விட்டது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்ற நீண்ட வரலாறு நமக்கு உண்டு. அதே நேரத்தில் சில பேர் வாக்குரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதனை கட்டாயமாக்க முடியாது. ஏனெனில், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, அதே போன்று வாக்களிக்காமல் இருப்பதும் அவரின் உரிமையே என்று சிலர்
முழக்கமிடுவதும் உண்டு. பெரும்பாலும் படித்தவர்கள் பக்கம் இருந்தே இந்தக் கருத்து மேலெழுகிறது. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு, படித்தவர்களிடம் இல்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களைக் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்?
 ஏகாதிபத்திய சக்திகள் தத்தமது நாடுகளில் ஆரம்பகால கட்டங்களில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட கருப்பினத்தவருக்கும் வாக்குரிமையை மறுத்த நிலையிலும், பின்னர் வழங்கிய நிலையிலும் இருக்கும் இரு வேறு பாகுபாடுகளை நாம் பார்க்கும்போது, நமது நாட்டுத் தலைவர்களின் ஜனநாயக மாண்பை சம உரிமை தந்திருக்கிற நிலைப்பாட்டை நாம் போற்றித்தான் ஆக வேண்டும். கருத்து வேறுபாடு என்பது இயற்கை. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. உன்னுடைய கருத்துகளை நான் ஏற்கவில்லை, அதே சமயம் நீ சொன்ன கருத்துக்காக, அதன் சுதந்திரத்துக்காக என் உயிரையும் தருவேன் என்று சொன்னார் வால்டேர்.
ஆமாம். இதுதான் கருத்தாக்கத்தின் உச்சம். இதனடிப்படையில்தான், ஜனநாயக மரபுகளின் மீது நமது தலைவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளின் மீது ஒரு போதும் பிழை காண முடியாது. அதைப் போலத்தான் மாற்றுக் கருத்தைச் சொல்வதற்கும், அந்தக் கருத்தை அரசியல் ரீதியாக எடுத்து இயம்புவதற்கும், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்கிற அடிப்படைப் புரிதல்தான் 72 ஆண்டுக்கால சுதந்திர ஜனநாயக நாட்டில் நிலவி வரும் உண்மைக் கூற்றுகளாகும். 
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என ஒட்டுமொத்த அரசியலையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. ஒன்றை நிராகரிக்கவும், ஒன்றை உருவாக்கவும் கூடிய பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அதுவும் முதல் முறை வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களிடம் அவை அதிகமாகவே இருக்கின்றன.
எண்ணிலடங்கா மொழிகளும், பண்பாடுகளும் கொண்ட நாட்டில், அடிப்படையான சித்தாந்தங்களையும், லட்சியங்களையும் சுமந்து திரியும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் நாட்டின் ஒருமுகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. எனவே சலிப்பையும், அவநம்பிக்கையையும் ஒதுக்கிவிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தையும் ஜனநாயக உரிமையையும் காக்க வேண்டும்.
அதாவது, எதிர்காலத்தைத் தீர்மானிப்பது நமது நிகழ்கால அரசியல். நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி கனவு காண்கிறோமோ, அக்கனவை நிகழ்காலத்து அரசியலோடு கூர்ந்து பொருத்திப் பார்ப்பது உங்கள் விரல் நுனியில் இருக்கும் மையில்தான் அடங்கியிருக்கிறது. 

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/19/ஏன்-வாக்களிக்க-வேண்டும்-3116428.html
3116426 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தொல்காப்பியரைத் தொழுவோம்! ஒளவை அருள் DIN Tuesday, March 19, 2019 01:27 AM +0530 தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும், தொன்மையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ் மொழிக்கு வாய்த்திருப்பது நமக்குப் பெரும் பேறாகும்.
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்ற ஒரு வழக்குத் தொடரை நாம் காணும்போது, இலக்கியங்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல் அமையும் என்பது வெளிப்படை. தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கண-இலக்கிய நூல்கள் பலவாக இருந்தன. முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்  தொகுத்தார் என்று பாயிரம் சொல்கிறது. தொல்காப்பியர், எழுத்து, சொல், பொருள் என ஆகியமூன்று அதிகாரங்கள் அமைத்துக் கொண்டு ஓரதிகாரத்திற்கு ஒன்பது இயல் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைப் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891-இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும். இந்நூலுக்குப் பனம்பாரணார் அருளிய சிறப்புப் பாயிரம் உண்டு.  
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி என்ற குறிப்பால் தொல்காப்பியன் என்பதே இவருக்கு இயற்பெயர் என்றும் தொல்காப்பியன் வழங்கியதால் அம் ஈறு சேர்ந்து தொல்காப்பியம் என்று அழைக்கப்பட்டது.  சங்க இலக்கியம், சமய இலக்கியம் சாத்திர தோத்திர நூல்கள், மறுமலர்ச்சி நூல்கள் என அனைத்து இலக்கியங்களும் தொல்காப்பியத்தைத் தொட்டே வரைந்திருக்கிறார்கள்.
எழுத்தும் சொல்லும் இணைந்து இலங்கிய பொருளாகிய இலக்கியப் பொருண்மையின் வரையறைகள் அமையுமாறு தொல்காப்பியம் அமைந்தது. இலக்கியம் வாழ்வின் பாடமாக அமைவதால், தமிழர் வாழ்வுக்கு தொல்காப்பியர் இலக்கணம் வரைந்தார் எனக்  கூறுவதோடு, இந்தத் தனிச் சிறப்புத்தான் தமிழ் மொழிக்கு செம்மொழிப் பெருமிதத்தை சேர்த்தது.
அந்நிலை மருங்கின் அற முதலாகிய மும்முதற் பொருட்டும் உரிய என்ப என்ற நூற்பா (363) குறிப்பிட்டபடியே திருவள்ளுவரும் அறம் , பொருள், இன்பம் என்ற மூன்று பாலாக வகுத்தார். மும்முதற் பொருள் முப்பால் என்று பலர் குறித்தனர்.தொல்காப்பியத்தின் பயன் திருக்குறளாகும்.
திருக்குறளுக்கு முதல் அதிகாரத்தில் மலர்மிசை ஏகினான்  என்ற தொடரில்  ஏகினான் என்பதற்கு பொருள் உரைத்த பரிமேலழகர்,
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் 
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி 
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் 
விரைந்த பொருள என்மனார் புலவர்
என்ற தொல்காப்பிய நூற்பாவைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.
இன்றும்கூட நண்பர்கள் நம்மை எங்கேனும் அழைக்கும் போது விரைந்து செல்வதற்காக இதோ வந்து விட்டேன் என்று இறந்த காலத்தில் சொல்லும் வழக்கம் நம் மனத்தில் தொல்காப்பியம்  பதிந்திருப்பதைக் காட்டுகிறது.
   தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன்  என்று குறிப்பிட்டால் மிகையாகாது. 1963-இல் பேரறிஞர் அண்ணா, தொல்காப்பிய ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி அவர் குறித்த வரிகள் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் புகழ் வரிகளாகும். 
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதியன்று தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் தன்னுடைய உரையில் தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார். மெரீனா கடற்கரையில் தமிழளந்த பெருமான் தொல்காப்பியருக்கு திருவுருவச்சிலை நிறுவ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையினை பல ஆண்டுகளுக்கு முன்பு மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் கேட்டுக் கொண்டதை அந்தக் கூட்டத்தில் நினைவுறுத்தியதைத் தொடர்ந்து, உயிரோவியமாகத் தீட்டப் பெற்ற தொல்காப்பியர் திருவுருவச் சிலை கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று  திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றி தொல்காப்பிய நூற்பாக்களைப் பொறித்துள்ளது தமிழறிஞர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது. 
தமிழ்த் தாத்தா உ.வே.சா.  சிலை மாநிலக் கல்லூரியிலும், தொல்காப்பியமே கடலாக வடிவெடுத்த தொல்காப்பியர் சிலையும்  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையகமான மெரினா வளாகத்தில் தமிழ்த் துறையின் முகப்பிலும் அமைந்துள்ளன. அலைகடல் நோக்கிய அழகுத் திருமேனியாகத் தொல்காப்பியர் சிலை அமைந்துள்ளது.
அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஆயிரக்கணக்கானஅளவில் பட்டங்களையும் பதக்கங்களையும் பரிசில்களையும் தமிழ் வளர்ச்சித் துறை வாரி வழங்கி வருவதை நாடறியும். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 
ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7  அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது. தொல்காப்பியர் படிமத்தைத் தொழுவதில் தமிழக அரசு ஆர்வத்தோடு முன்னின்று வழிகாட்டுகிறது. 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/19/தொல்காப்பியரைத்-தொழுவோம்-3116426.html
3115841 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இல்ல இடர்களைத் தவிர்க்கலாமே! வாதூலன் DIN Monday, March 18, 2019 03:17 AM +0530 ஆங்கில நாளேடு ஒன்றில் அண்மையில் வெளியான செய்தியைப் படித்தவுடன், அதிர்ச்சியும், கோபமும் ஒருங்கே எழுந்தன. புறநகரில் ஒரு பள்ளியில் பணிபுரியும் பார்வையற்ற நடுத்தர வயது மனிதர், பூச்சி மருந்தைத் தவறுதலாக இருமல் மருந்து என நினைத்துச் சாப்பிட்டு விட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். வீட்டைச் சுத்தம் செய்யும் பணிப் பெண், தன் வேலையெல்லாம் ஆனவுடன் பூச்சி மருந்தை உரிய இடத்தில் வைக்காமல் போனதன் விளைவுதான் இந்த விபரீதம்.
 தாம்பரத்தில் நெடுங்காலமாக வசித்து வரும் என்னுடைய உறவுப் பெண்ணின் வீட்டில் வேறொரு சம்பவம் நடந்தது. கணவர், மனைவி, வயதான தாயார் (80 வயதுக்கு மேல்) என மூவர் மட்டுமே இருந்தனர். என்றாலும், பல ஆண்டுகள் பழக்கம் காரணமாக அவர்களுக்கு உதவி புரிய பணியாள்கள் அக்கம்பக்கம் இருந்தார்கள். ஏதோ ஒரு விசேஷத்துக்கு, என்னுடைய உறவுப் பெண்ணுக்கு பரண் மீது ஓரமாக இருந்த பாத்திரம் தேவைப்பட்டது. உதவிக்குப் பணியாளைக் கூப்பிடப் போனாள்; அவருக்குப் பதிலாக, அவர் தந்தை என்னவென்று கேட்டு முன் வந்திருக்கிறார். உத்தரம், வென்டிலேட்டர், மண் தரை இவை கொண்ட மிகப் பழைய வீடு. அந்த முதியவரைக் கண்ட என்னுடைய உறவுப் பெண் "அவசரமில்லை, உங்கள் மகன் வரட்டும்' என்று கூறியும் கேட்காமல் அவர் ஏணியில் ஏறினார். பாத்திரத்துடன் கீழே இறங்கும்போது, வழுக்கி விழுந்து தலைக் காயம் ஏற்பட்டு இறந்து போனார். வீட்டு உரிமையாளரின் மூத்த மகன் விஷயமறிந்து, ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது பணியாளின் குடும்பத்துக்குக் கணிசமான தொகையை அளித்தார்.
 நாங்களிருந்த தனி வீட்டிலும் (40 ஆண்டுகள் பழைமையானது.) இது போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. சலவைக் கருவி, குளிர் சாதனப் பெட்டி, மின் விசிறிகள் அனைத்திலும் சின்னச் சின்னப் பழுதுகள். அவற்றைச் சரிப்படுத்த மின் பொருள்கள் சரிபார்க்கும் பணியாளரை வரவழைத்தோம். காலையிலிருந்து மாலை வரை நன்கு பார்த்துச் சீர்படுத்தினார்.
 தொகையைப் பெற்றுக் கொண்ட அவரிடம், "இந்த ஏஸியையும் பாரேன். கூலிங் வரவே இல்லை' என்று வேண்டினார் என்னுடைய மனைவி.
 கும்பிடு போட்டு விட்டு, "இந்த ஏஸி, நீங்கள் வைத்திருக்கிற இன்வெர்ட்டர் இதெல்லாம் தனி வகை. எனக்கு பழுதை சரி செய்யத் தெரியாது என்று கூறவில்லை; ஆனால், நான் தொட்டால் ஒன்று கிடக்க ஒன்றாகிவிடும்' என்று பணிவாக மறுத்துவிட்டார் அந்தப் பணியாளர்.
 பின்னர் தனி வீட்டிலிருந்து, தளங்களுள்ள வீட்டுக்குக் குடியேறும்படியான சூழல் வந்தது. அங்கு நாங்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் தனித்துவம் வாய்ந்தது. முதலாவது, மின் தூக்கி பழைய காலத்து மாடல் என்பதால், போகும் போதும் வெளியேறும் போதும் கனமான கதவை இழுத்து மூட வேண்டியிருக்கிறது. ஏதேனும் ஒரு சின்னக் கோளாறு நேர்ந்தால்கூட மின்தூக்கி "வேலைநிறுத்தம்' செய்துவிடும்.
 இருபதுக்கும் மேற்பட்ட தளங்கள் அமைந்த இடத்தில், ஒரு சிலவற்றுக்கு மட்டுமே "பால்கனி' உண்டு. துணி உலர்த்த வசதிதான். ஆனால், புறா, மைனா போன்ற பறவைகளால் எச்சம் நிறைந்து, ஒரே குப்பைக்கூளமாகி விடுகிறது. புறாவின் கழிவுகளும், சிறகுகளும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணி விடுகிறது.
 வயதானவர்களோ, சின்னஞ்சிறு குழந்தைகளோ இல்லத்தில் இருந்தால் இடர்ப்பாடுகள் அதிகம். குறிப்பாக, பொட்டுக்கடலை போன்ற சிறிய மாத்திரைகள் மற்றும் சில முதியோர்கள் செவி பழுதுக்கு பொருத்திக் கொள்ளும் கருவியில் பயன்படுத்தும் மிகச் சிறிதான பேட்டரிகள் போன்றவற்றை முன்னெச்சரிக்கையுடன் தனிப் பெட்டியில் வைக்க வேண்டும். இதனால் தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
 அதோடு "டிமென்ஷியா' போன்ற ஞாபகமறதி நோயுள்ள மூத்த குடிமகன்களிலிருந்தால் மாத்திரை சாப்பிடுவதில் உஷார் தன்மை அவசியம். இது பற்றி ஒரு நிபுணரிடம் விசாரித்ததில் பயனான அறிவுரை கிடைத்து: "மாத்திரையை ஒரு வேளை போட்டுக் கொள்ளாவிட்டால்கூடப் பரவாயில்லை. இரண்டு தரம் எடுத்துக் கொண்டால் ஆபத்து' என்றார்.
 இந்தக் காலத்தில், கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவதால், சமையலறையில் கணவர் ஓரளவாவது உதவ வேண்டியிருக்கிறது. கிரைண்டரில் மாவு போட; மிக்ஸியில் துவையல் அரைக்க; குளிர்சாதனக் கருவியைச் சுத்தம் செய்ய போன்ற உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதில் கொஞ்சம் கவனக் குறைவு ஏற்பட்டாலும் விபரீதம்தான். எங்கள் அடுத்த தளத்தில் - மின் விசையில் பழுதோ, "ஹை வோல்டேஜோ'-என்ன காரணமோ தெரியவில்லை; ஒரு நாள் கிரைண்டர் வெடித்துச் சிதறி, சுவர் எல்லாம் பாழ். நல்ல காலமாக குடும்ப உறுப்பினர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
 இல்லம் நாகரிகத் தன்மை கொண்டதாக விளங்க வேண்டும் என்று பல பெண்கள் விரும்புகிறார்கள். "மாடுலர் கிச்சன்' அவற்றில் ஒன்று. இதன் மூலம் அனைத்து சமையல் சாதனங்களையும் வைத்துக் கொள்ள இடம் கிடைப்பது வசதிதான். ஆனால், இதற்காகச் சுவரை இடித்துத் துளையிட்டு, இழுப்பறைகளைப் பதிக்கும் போது, பல்வேறு பூச்சிகள் பறந்து வந்து விடுகின்றன. இதனாலேயே எல்லாப் பாத்திரங்களையும், தட்டுகளையும் மறக்காது மூடி வைக்க வேண்டும். இல்லையேல், உணவுப் பதார்த்தங்கள் பாழாகிவிடும்.
 ஆட்டுக்கல், அம்மி, "கெரசின் ஸ்டவ்' போன்ற அந்த நாளைய சாதனங்கள் இல்லத்தரசிகளின் நேரத்தை வீணாக்கின. இன்றைய நவீன, அதிநுட்பக் கருவிகள் அன்றாட வேலைச் சுமையை எளிதாக்கி விடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் செல்லிடப்பேசி, தொலைக்காட்சி மூலம் கவனச் சிதறல் ஏற்படாமல், மும்மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
 திருக்குறளில் பொருட்பால் அதிகாரம் 52 "தெரிந்து வினையாடலை'ப் பற்றிச் சொல்லுகிறது. அது, இந்தக் கால குடும்பப் பெண்களுக்கும், வீட்டுப் பணியாள்களுக்கும் மிகப் பொருத்தமாகவே அமைகிறது.
 
 
 
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/18/இல்ல-இடர்களைத்-தவிர்க்கலாமே-3115841.html
3115840 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வேலை தேடும் இளைஞர்களே... எஸ். ராமன் DIN Monday, March 18, 2019 03:17 AM +0530 நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3.41 சதவீதத்திலிருந்து, 2018 வரையிலான கடந்த நான்கு ஆண்டுகளில் 6.1 சதவீத அளவில் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் அண்மையில் கசிந்ததும், அதிகார வர்க்கத்தால் அதன் நம்பகத்தன்மை மறுக்கப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்களில் பல முக்கியத் தகவல்கள் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போயிருப்பது, மறுப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
 ஒரு புள்ளிவிவரத்தைப் பற்றிய ஆவேசமான மறுப்பு அறிக்கை என்பது, அந்தப் புள்ளிவிவரத்தில் பொதிந்திருக்கும் தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகக் கருதலாம்.
 மறுப்பு அறிக்கை ஒருபுறம் இருக்க, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேற்கண்ட புள்ளிவிவரத்தைக் காட்டிலும், அதிக அளவில் மோசமடைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். திறனும், ஆர்வமும் உள்ளவர்கள், அடிப்படை வசதிகளுக்குத் தேவையான பொருள் ஈட்டும்படியான பணி கிடைக்காமல் தவிப்பதுதான் "வேலைவாய்ப்பின்மை' என்று அழைக்கப்படுகிறது.
 அரசு புள்ளிவிவர தயாரிப்பின்படி ஒருவர் பணியில் 30 நாள் தொடர்ந்து இருந்தாலே அவர் வேலையில்லாதவர் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதால், வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னையின் முழுத் தாக்கம், இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் வெளிப்படுவதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
 இந்திய தொழில் கூட்டமைப்பினர் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை 7.1. சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட 8 கோடி வேலைவாய்ப்புகளுக்குப் பதிலாக, வெறும் 3 லட்சம் அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டும்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு, தொழில் துறை முதலீடுகளும் அதைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதே வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முக்கியக் காரணம். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும்படியாக, கணிசமான அளவில் முதலீடுகள் நிகழவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.
 முதலீடுகள் அதிக அளவில் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நஷ்டமின்றி தொழிலை நடத்துவதற்கான திறன் பயன்பாடுகளை தொழில் நிறுவனங்கள் எட்ட முடியாததாகும்.
 தொழில் துறையில் குறைந்தபட்சம் 80 சதவீதத் திறன் பயன்பாட்டை எட்ட முடிந்தால்தான், அந்தத் தொழிலை விரிவாக்கம் செய்து நிலைத்து நிற்க முடியும்; இல்லையென்றால் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல், பல பொருளாதாரச் சிக்கல்களுக்கு அந்தத் தொழில் நிறுவனம் பலியாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த மாதிரி சூழ்நிலைகள்தான், வங்கி வாராக் கடன்களின் பிறப்பிடமாகும்.
 மூலப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, உற்பத்திப் பொருள்களை பயனாளிகளுக்கு விரைவில் கொண்டு சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், தொழிற்சங்க பிரச்னைகள், சர்வதேச பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அந்நியச் செலாவணி மதிப்பில் எதிர்பாராத ஏற்ற இறக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் ஏற்படும் போட்டி, அடிக்கடி மாற்றப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த அதிகார வழிமுறைகள் ஆகிய நிகழ்வுகள், திட்டமிட்டபடி கைவசம் இருக்கும் முழுத் திறனையும் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்த முடியாததற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
 மேலே குறிப்பிடப்பட்ட இடர்ப்பாடுகளில் சில இடர்ப்பாடுகளைக் களைவது அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவை ஆகும். உதாரணமாக, போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அந்நியப் பொருள்களின் இறக்குமதியை வரிகள் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகியவை அரசாங்கச் செயல்பாட்டுக்குள் அடங்கும். தொழில் துறையினர் சந்திக்கும் இந்த மாதிரி இடர்ப்பாடுகளை அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் களைய முற்பட்டால், அதுவே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான உந்துதலாக அமையும்.
 2016-இல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எண்ணற்ற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெருமளவில் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின. 40 சதவீத அளவில் வேலைவாய்ப்புகளை அளித்து வந்த இந்த நிறுவனங்கள் நலிவுற்றது, அண்மைக்காலத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
 நிலைமையைச் சீராக்க, சில நிவாரண நடவடிக்கைகளை தற்போது அரசு மேற்கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த ரூ.25 கோடி வரையிலான இடர்ப்பாட்டு கடன்களை மறுசீரமைக்கும் பணியை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
 மேலும், இத்தகைய நிறுவனங்கள் மீண்டும் துளிர்த்து வளர, ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. தகுதியான நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு வங்கிகள் தயங்காமல் கடன் வழங்க முற்பட்டால் குறுகிய காலத்தில் நிலைமை சீரடைந்து, அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 கடந்த சில ஆண்டுகளாக பொலிவிழந்து நிற்கும் கட்டுமானத் துறை, கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய துறையாகும்.
 கட்டுமானப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, வரித் துறையினரின் கூடுதல் கண்காணிப்பு போன்ற காரணங்களைத் தவிர, அந்தத் துறை வளர்ச்சியின் சரிவுக்கு முக்கியக் காரணம், நிர்வாகத்தினரின் பேராசையாகும். செயற்கையான விலை ஏற்றங்கள், ஊக வியாபாரங்கள் ஆகியவை இந்தத் துறையில் பெரும் மூலதனங்களின் முடக்கத்திற்கு வித்திட்டன. இந்தத் துறை சார்ந்த கடன்கள், பல வங்கிகளில் வாராக் கடன்களாக உருவெடுத்தன. அதனால், அந்தத் துறையினருக்கு கடன் வழங்குவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.
 கட்டுமானத் துறையில் நிலவிய பல குறைகளைக் களைந்து, அந்தத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க கட்டுமானத் துறை வரன்முறைச் சட்டம் இயற்றப்பட்டு, அந்தச் சட்டம் மே 1, 2017 முதல் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. மேற்கண்ட சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளைத் தவிர, கடந்த காலத் தவறுகள் மூலம் இந்தத் துறையினர் பாடம் கற்றுக் கொண்டால், அதுவே அந்தத் துறையின் வேகமான வளர்ச்சிக்கு உதவும். அந்த வளர்ச்சி மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றாலும், குடிமக்களின் அணுகுமுறைக்கும் இந்தப் பிரச்னையில் பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
 வேலைக்காக காத்திருக்கும் வயது 25-லிருந்து தற்போது 30-ஆக உயர்ந்திருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். இவர்களில் அரசுப் பணிக்காக நீண்ட காலம் தவம் இருப்பவர்கள் ஏராளம். ஆனால், காத்திருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை அரசுத் துறைகளால் அளிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். வேலைக்காகக் காத்திருக்கும் படித்த இளைஞர்கள் இந்த நிலைமையை முழுவதும் உணர்ந்து செயல்படவேண்டும்.
 படித்து முடித்து, குறிப்பிட்ட கால அளவில் வேலை கிடைக்கவில்லையென்றால், மேலும் தாமதிக்காமல் சுய வேலைவாய்ப்புகள் குறித்துச் சிந்தித்து அதைச் செயல்படுத்த இளைஞர்கள் முற்பட வேண்டும். ஒருவருக்கு எந்தத் தொழிலில் நாட்டம் இருக்கிறது என்பதை அவரால் மட்டும்தான் உணரமுடியும்.
 எந்தவிதமான உபயோகப் பொருள்களுக்கு கூடுதல் மற்றும் புதிய தேவைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே கணிக்கும் கற்பனைச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு விருப்பமான தொழில் சார்ந்த ஆயத்தப் பயிற்சிகளை சில காலம் மேற்கொண்டு கால் பதித்தால் வெற்றி நிச்சயம்.
 பெற்றோரைப் பொருத்தவரை மகன் அல்லது மகளின் சுய தொழில் சிந்தனைகளை எதிர்த்து நசுக்காமல், அதற்கான ஊக்கத்தை அளித்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றால், அதுவே அவர்களுக்கு சிறந்த மூலதனமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சுய தொழில் சார்ந்த பாடங்களும், பயிற்சிகளும் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டால், மாணவப் பருவத்திலேயே சுய தொழில் சார்ந்த சிந்தனைக் கிளைகளும் அதற்கான தன்னம்பிக்கை வேர்களும் அவர்களிடையே வளரும்.
 திறமையும், தகுதியும் படைத்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பயன்படுத்தப்படாமல் வீணாகும் அந்தத் திறன்களை சமூக விரோதக் குற்றங்களுக்கு சில அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தால், அதுவே நாட்டு நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் கொள்ள வேண்டும்.
 வேலையின்மையும், விரக்தியும் இரட்டை சகோதரர்கள். நாட்டில், பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம்தான், இந்த இரட்டையர்களைப் பிரித்தாள முடியும். பிரச்னையின் வீரியத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயமாகும்.
 
 கட்டுரையாளர்:
 வங்கி அதிகாரி (ஓய்வு).
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/18/வேலை-தேடும்-இளைஞர்களே-3115840.html
3114484 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பிரித்தலும் பேணிக் கொளலும்! இனியன் ஜான் DIN Saturday, March 16, 2019 01:19 AM +0530 உலகம் முழுவதும் பல கட்சிகள் பிரிந்துள்ளன. தலைவர்களும் பிரிந்துள்ளனர். கட்சிகளின் பிரிவுகளுக்கும், தலைவர்களின் பிரிவுக்கும் காரணங்கள் இரண்டு. ஒன்று கொள்கை ரீதியான, சித்தாந்த ரீதியான, லட்சிய நோக்கத்துக்கான பிரிவு. மற்றொன்று தன் முனைப்பினால் ஏற்படும் பிரிவு. 
தலைமைப் பொறுப்பில் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர், அடுத்தகட்டத் தலைவருக்கு வழிவிடாவிட்டாலோ அல்லது இன்னாரால் தம் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் எனும் அச்சம் தலைமைப் பொறுப்பில் உள்ளவருக்கு ஏற்படுவதினாலோ பிளவும் பிரிவும் ஏற்படுகிறது.
காந்திஜியின் மீது கொண்ட மாறாப் பற்றினால், காங்கிரஸில் தம் பொது வாழ்வுப் பயணத்தைத் தொடங்கினார் ஜீவா. காரைக்குடி அருகில் உள்ள சிராவயல் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் காந்திஜியின் பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார் ஜீவா. தம் தொண்டன் ஜீவாவைக் காண சிராவயல் குக்கிராமத்திற்கே வந்தார் அண்ணல் காந்தியடிகள்.
ஜீவாவின் இளமைத் தோற்றத்தையும், ஆசிரமத்தின் பணிகளையும் கண்டு வியந்த அண்ணல் காந்தி, உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று கேட்டார்.  எனக்கென்று சொத்து ஏதும் இல்லை. இந்தியா தான் என் சொத்து என்றார் ஜீவா. 
இல்லை, இல்லை... நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என்று அகமகிழ்ந்து ஜீவாவைப் பாராட்டினார் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியிடம் இப்படிப் பாராட்டு பெற்ற ஜீவா, அவரை விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்தபோது பிரிந்தார். 
காந்திஜியின் காலத்திலேயே காங்கிரஸிலிருந்து, காங்கிரஸ் சோஷலிச கட்சியை உருவாக்கினார் ஜெயபிரகாஷ் நாராயண். தேச விடுதலைக்குப் பின்னர், பிரஜா சோஷலிச கட்சியை உருவாக்கினார். அதிலிருந்து விலகி சர்வோதய இயக்கத்தில் இணைந்தார். 1970-களில் ஊழலுக்கு எதிரான மாணவர் புரட்சியை முழுமையாக  நிகழ்த்திக் காட்டினார் ஜெயபிரகாஷ் நாராயண்.
இந்திரா காந்தி மீது பெரும் பாசம் பொழிந்தவர். இந்திராவைத் தம் மகளாகவே கருதியவர்.  ஆனால், நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்தபோது இந்திராவைக் கடுமையாகக் கண்டித்துப் போராடியவர் ஜெயபிரகாஷ் நாராயண். 
இந்திராவின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க, பிரஜா  சோஷலிச கட்சி, லோக்தளம், பழைய காங்கிரஸ், சுதந்திரா, பாரதிய ஜன சங்கம் ஆகியவற்றை இணைத்து ஜனதா கட்சியை உருவாக்கி இந்திராவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்தினார் ஜெ.பி.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரானார் மொரார்ஜி தேசாய். இந்திராவைப் பிரதமராக உருவாக்கிய காமராஜர், இந்திராவின் செயல்பாடுகளைக் கண்டு மனம் வெதும்பி காங்கிரஸிலிருந்து பிரிந்து ஸ்தாபன காங்கிரஸை உருவாக்கினார். இந்திராவின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்றார். கடைசி வரை இன்றைய இந்திய தேசிய காங்கிரஸில் காமராஜர் இணையவில்லை.
ராஜீவ் காந்தியின் அரசில் நடந்த ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜனமோர்ச்சா எனும் அமைப்பை வி.பி.சிங் உருவாக்கினார். பின்னர், சந்திரசேகர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஜனதா உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஜனதா தளத்தை உருவாக்கி, தேசிய முன்னணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். 
இந்திராவின் எதேச்சதிகார சிந்தனையை ஜனதா கட்சி தகர்த்தது என்றால், ராஜீவ் காந்தியின் அசுரபலப் பெரும்பான்மையை ஜனதா தளம் உடைத்தெறிந்தது. 
பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணாவிற்கு உற்ற துணையாகத் திகழ்ந்த பெரியாரின் பெயரன் ஈ.வெ.கி.சம்பத், தி.மு.க.விலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியைத் தோற்றுவித்தார். ஈ.வெ.கி.சம்பத்துடன் தமிழ்த் தேசியக் கட்சியில் பணியாற்றி, காங்கிரசில் இணைந்து, இந்திராவால் தம் மகன் என்றும், காமராஜரால் மாவீரன் என்றும் போற்றப்பட்ட பழ.
நெடுமாறன், பின்னாளில் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழர் தேசிய இயக்கத்தைத் தோற்றுவித்து, தமிழர்களின் நலனுக்காகப் பணியாற்றி வருகிறார். 
அறிவில் சிறந்த இரா.செழியன் தி.மு.க.விலிருந்து விலகி ஜனதாவிலும் ஜனதா தளத்திலும் இணைந்து தம் மதிநுட்பத்தை நாட்டுக்கு உணர்த்தினார். இவையெல்லாம் காலத்தின் தேவையான பிரிவுகள்.  இந்தப் பிரிவுகள் சுயநலமற்றவை. இந்தப் பிரிவுகள் கொள்கை முரண்களால் ஏற்பட்டவை. இந்தப் பிரிவுகள் தத்துவ ரீதியானவை. லட்சிய நோக்குடையது. புதிய மாற்றத்துக்கானவை.
கொள்கை முரண்பாடுகளினால் ஜனதா தளத்திலிருந்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஸ்வானின் லோக் தளம் ஆகியவை உதித்தன. காங்கிரசிஸிலிருந்து  தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை உருவாக என்ன கொள்கை முரண் ஏற்பட்டது? தி.மு.கவிலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் உதயமாவதற்கும், அ.தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க. உருவாவதற்கும் என்ன நோக்கம்? 
தலைமைப் பதவியில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து முரண்களால் உருவான கட்சிகள்தான் மேற்கண்டவைகளே தவிர... தத்துவ மோதல்களினாலோ, கொள்கை முரண்களினாலோ உதயமானவை அல்ல.
தமிழகத்தில், கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும்  கொள்கை மோதல் ஏற்பட்டது. தமது மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக்கூடும் எனும் அச்சத்தின் காரணமாக, வைகோ மீது பழி சுமத்தி அவரை வெளியேற்றினார் கருணாநிதி. ஒன்பது மாவட்டச் செயலாளர்கள், பெரும்பாலான நிர்வாகிகளுடன் வெளியேறிய வைகோ ம.தி.மு.க.வை உருவாக்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நீடிக்கச் செய்திருந்தால், தர்மயுத்தத்திற்கு வாய்ப்பேது? சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனைத் தவிர்த்து ஓ.பன்னீர் செல்வத்தோடு இணையாமல் இருந்திருந்தால் அ.ம.மு.க. என்ற கட்சி ஏது?
கொள்கை முரண்களால் பிரிவு ஏற்பட்டு, முன்னிருந்த கொள்கைக்கு இன்னும் அழுத்தம் தரக்கூடிய பிளவுகளாலும் பிரிவுகளாலும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மைகள் ஏற்படாவிடினும் தீமைக்கு வாய்ப்புக் குறைவு. தலைமைப் பதவிக்காகவும், தன்னலத்திற்காகவும் ஏற்படும் பிரிவுகளால், பிளவுகளால் நன்மைக்கு வாய்ப்பேது?
அதே போல், கொள்கை சார்ந்த பிளவுகளும் பிரிவுகளும் ஜனநாயக அரசியலுக்குத் தேவை. அப்போதுதான் ஒரு கருத்தோடு மற்றொரு கருத்து மோதி, புதிய கருத்துகளும், புதிய சிந்தனைளும், புதிய பாதைகளும் பிறக்கும். தன்னலத்திற்காகவும், பதவி வேட்கைக்காகவும் பிரிவது ஆபத்தானது. அப்படிப் பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது அதனினும் ஆபத்தானது.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/16/பிரித்தலும்-பேணிக்-கொளலும்-3114484.html
3114483 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இந்திய வாக்காளர்களே... இரா. கதிரவன் DIN Saturday, March 16, 2019 01:18 AM +0530
உலக நாடுகளிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா; பல கோடிக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும், பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தவறாது நடத்துவது என்பது பெரும்  சாதனையாகும்.
பல போராட்டங்களில் ஏராளமான உயிர்களைப்  பலிகொடுத்து, பல லட்சம் பேர்  சிறைவாசம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பெரும்பலனாக  விளங்குவது நாம் பெற்றிருக்கும் வாக்குரிமை ஆகும்.
இவ்வாறு பெற்ற  வாக்குரிமையினை எவ்வாறு நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்ற  சில விவரங்களைப்  பார்ப்போம்; சுதந்திரத்துக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில்,  குறிப்பிட்ட அளவு சொத்துரிமை உள்ளவர்களும்,  படித்தவர்களும் என  மக்கள்தொகையில் வெறும் 12  சதவீதத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர்.
ஆனால், சுதந்திரம் அடைந்தவுடன், குறிப்பிட்ட வயது வந்த எல்லோரும், கல்வியறிவு-சொத்துரிமை என்ற தளைகள் எதுவுமற்ற, வாக்காளர்களாக உரிமை பெற்றனர். 1951-இல்  நடைபெற்ற   முதல் பொதுத்தேர்தலில், 46 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், 60  ஆண்டுகள் கழித்து , 2014 தேர்தலில் 66 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். 
இந்தப் புள்ளிவிவரத்தின் ஊடே தொக்கி நிற்கும் மிக முக்கியமான கேள்வி, நமக்கு  வாக்குரிமை  இருந்தும்,  வாக்களிக்கும்  கடமையை முறையாகச் செய்கிறோமா?  என்பதுதான்.
வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாக்களிக்காதபோது, தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களை  பரிபூரணமாகப்  பிரதிநிதித்துவப் படுத்துகிறதா  என்ற  கேள்வி எழுவதையும் மறுப்பதற்கில்லை.
1951 தேர்தலின்போது, நம் மக்களின் கல்வியறிவு விகிதம் 18 சதவீதம் மட்டுமே இருந்தது; அப்போது 46 சதவீதம் வாக்களிப்பு நிகழ்ந்தது என்றாலும்  2014-இல் கல்வியறிவு  75  சதவீதமாக உயர்ந்த பின்னரும், வாக்களிப்போர் விகிதம் 66 சதவீதம் மட்டுமே என்பது  ஒரு விசித்திர முரண் ஆகும்.
கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட, குடியரசுத் தலைவர் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின்றன. வாக்கு அளிப்பவர்கள் சதவீதத்துக்கும், கல்வியறிவு பெற்றோர் சதவீதத்துக்கும் பெரும் தொடர்பு உள்ளதாகவும், கல்வியறிவு குறைவாக  உள்ள நாடுகளில் மட்டுமே வாக்களிப்போர் சதவீதம் குறையும் எனப் பொதுவெளியில் நிலவும் கருத்தினையும்  இது தகர்க்கிறது .
உலகில் தற்போது 22 நாடுகள் தேர்தலில் வாக்களிப்பதைக்  கட்டாயமாக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில், நியாயமான காரணங்களின்றி  வாக்களிக்கத் தவறுவோர்அபராதம் செலுத்த நேரிடும்.  
கல்வி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விடப்  பின்தங்கியிருக்கும் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிலும், இத்தகைய கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் இருக்கிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மக்கள்தொகையும், மக்கள் தொகை அடர்த்தியும்   மிகக் குறைவாக உள்ள ஆஸ்திரேலியா, காங்கோ போன்ற நாடுகளில் இந்தக்  கட்டாய வாக்களிப்பு  முறை  சாத்தியமாகிறது .
வாக்களிப்போர்  எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகளை அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அங்கு பணப் பரிவர்த்தனை, பொருள்கள் வாங்குதல் ஆகியவை செல்லிடப்பேசி  மூலம் நிகழ்கிறது; அதற்குரிய பாதுகாப்பும், ரகசியத் தன்மையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது .
எனவே, அதன் நீட்சியாக, தேர்தலிலும் செல்லிடப்பேசி மூலம் மக்கள் வாக்களிப்பதை பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்துகிறது.  அதன்  முதல் படியாக, சில மாகாணங்களில்  உள்ளாட்சித் தேர்தலில் செல்லிடப்பேசி மூலம் வாக்களிக்க வழிவகைச்  செய்யப்படுகிறது; பின்னாள்களில் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
நம்  நாட்டில், இவை நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், ஆராயப்பட வேண்டிய முக்கிய   விஷயம் , நமது தேர்தல்களில் வாக்களிப்பு குறைவதற்கான காரணங்கள் எவை என்பதுதான். வாக்களிக்காமல் இருப்பதற்கு வாக்காளர்களின் சில பிரச்னைகள் ஏற்கத்தக்கவை. 
உதாரணமாக, தேர்தலன்று ஊரில் இல்லாதிருப்பது, முதுமை, நோய்  போன்றவை காரணமாக வாக்களிக்கத் தவறுவது  ஓரளவு  ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது. ஆனால், தேர்தல் குறித்த அலட்சியம், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வின்மை மற்றும் தேர்தல்  மீது  அவநம்பிக்கை போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும். 
 வாக்களித்தல் குறித்த  அறிவூட்டலில் ஈடுபடுவது மக்களிடம் ஓரளவேனும் விழிப்புணர்வினையும், அதைத் தொடர்ந்து மக்கள் வாக்களிப்பதையும் அதிகரிக்கும். இதில், ஊடகங்களின் - குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களின் பங்களிப்பு  முக்கியமானதாகும். 
கணிசமான வாக்காளர்கள், தங்களது வாக்கு அரசியல் கட்சிகளின் போக்கினை மாற்றாது  என்றும்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அவநம்பிக்கையையும் கொண்டுள்ளனர்  என்பது இன்னொரு முக்கியக்  காரணம் ஆகும்.
இந்த அவநம்பிக்கைக்கு ஒரு மாற்று மருந்து, வாக்காளர்களுக்கு இருக்க வேண்டிய  சரியான புரிதலும் தளராத நம்பிக்கையும் ஆகும்.
அரசியல்  கட்சிகளை  நெறிப்படுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது என்பதையும், அதற்குரிய வலிமை தங்களது வாக்குக்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு வாக்காளரும் நினைவில் கொள்ளவேண்டும். அனைவரும் வாக்களிப்பது என்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை அரசியல் கட்சிகள் மீது ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்கள் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதும் பாராட்டுக்குரியது. 
வலிமை வாய்ந்த வாக்கு என்பது, வாக்காளர்கள் பெற்றிருக்கும் உரிமை மட்டுமல்ல; முறையாக செய்ய  வேண்டிய  சமுதாயக்  கடமையும் ஆகும்.  அத்தகைய  புரிதல்  ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திடும் என்பதை சர்வ வல்லமை படைத்த வாக்காளர்கள் உணர வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/16/இந்திய-வாக்காளர்களே-3114483.html
3113849 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சமரசம் வெற்றி பெற வேண்டும்! பிரபா ஸ்ரீதேவன் DIN Friday, March 15, 2019 01:37 AM +0530 மீடியேஷன் என்ற ஆங்கில வார்த்தையை  சமரசம் அல்லது பேச்சுவார்த்தை என்று தமிழில் கொள்ளலாம்; அது அவ்வளவு சரி என்று எனக்குப் படவில்லை. என் எதிரிக்கும் எனக்கும் அறிவும் விவேகமும் இருந்தால் நாங்களே சமரசம் செய்துகொண்டு விடலாம். ஆனால் மீடியேஷனுக்கு  நடுநிலையாளர்கள் இருந்தாக வேண்டும்.  நான் சமரசம் என்று குறிப்பிடும்போது  இதை மனதில் இருத்திக் கொள்ளவும். 
நம் நாட்டின் இதயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்திய அயோத்திப் பிரச்னைக்குத்  தீர்வு காண உச்ச நீதிமன்றம் ஒரு சமரசக் குழுவை நியமித்துள்ளது. இதைவிடச் சிறப்பான குழு அமைக்கப்பட்டிருக்கலாமோ?, இந்தக் குழுவின் அங்கத்தினர் மீது நம்பிக்கை இல்லை; இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம்தான் தீர்வு காணமுடியும்; இது காலம் தாழ்த்தவென்று செய்த முடிவு - இது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
சமரசம் என்றால் என்ன என்று புரியவைக்க முடியுமா என்று பார்க்கிறேன். பிரச்னை தீர்வுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்கு மாற்றாக, உரிமையியல் சட்டம்  நான்கு வழிகளைச் சொல்கிறது.  ஆர்பிட்ரேஷன்,  மீடியேஷன், கன்ஸிலியேஷன், செட்டில்மென்ட் லோக் அதாலத் ஆகியவை அந்த நான்கு வழிகள்.
நீதிமன்றத்துக்குப் போனால் நாம்தான் ஜெயிப்போம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது; அது மட்டுமல்ல, பொருள் செலவு, கால விரயம்; மேலும், உறவுகள் உடைந்து போகும்; அது குடும்ப உறவாக இருக்கலாம்; தொழில் தொடர்பான உறவாக இருக்கலாம். சமரசத்தின் சிறப்பு என்னவென்றால் விரைவாகத் தீர்வு கிடைக்கும்; பொருள் செலவு குறைவு; றவுகளுக்கு சேதம் குறைவு; வழக்கு தாக்கல் செய்த இருவருக்கும் வெற்றி போன்ற ஒரு முடிவு.
சமரசம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆரஞ்சு உவமை ஒன்று சொல்கிறார்கள். வாதியும் பிரதிவாதியும் ஓர் ஆரஞ்சுப் பழத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நீதிமன்றம் சென்றால் இரு தரப்பு வாதங்களை நீதிபதி  கேட்டு ஒருவருக்கு ஆரஞ்சுப் பழம் மொத்தமும் சொந்தம் என்று தீர்ப்பளிப்பார். மற்றவர் ஏமாற்றம் அடைவார். இவர்களே ஆர்பிட்ரேஷன் முறையைத் தேர்ந்தெடுத்தால் இரு தரப்பு வாதங்களை  நடுவர் கேட்டு பழத்தைச் சரி பாதியாக வெட்டி ஆளுக்கு ஆறு சுளை தருவார்.
இதுவும் முழு திருப்தி அளிக்காவிட்டால், சமரசம் செய்பவர் இருவரையும்  அமரச் செய்து மனம்விட்டுப் பேசச் செய்வார். உங்களுக்குப்  பழம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று இதமாகக் கேட்பார். ஒருவர், ஆரஞ்சு பழச்  சாறு எடுப்பேன் என்பார். மற்றவர், அதன் தோலை வைத்து ஜாம் செய்வேன் என்பார். முடிவு? ஒருவர் தோலை உரித்து எடுத்துக் கொண்டு மற்றவருக்கு  சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள கொடுத்து விடுவார். இருவருக்கும் திருப்தி. இதை ஆங்கிலத்தில் வின் வின் முடிவு என்கிறார்கள்; அதாவது, இருவருக்கும் வெற்றி. அடிப்படையில் இதுதான் சமரசம்.
சமரசம் செய்யும் நபர் தீர்ப்பை அளிப்பதில்லை . இதை அடிக்கோடிட்டுக் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் பிரச்னையின்  முடிவை வழக்கு தாக்கல் செய்தவர்களே தீர்மானிக்க வழி வகுக்கிறார். சிங்கமும் புலியுமாக உறுமுபவர்களிடம் இதோ பாருங்கள். பிரச்னையின் பரிமாணம் இது; குறுகிய காலத்தில் இந்த இந்தப் பலன் வரலாம்; ஆனால் நெடுநோக்குடன் பார்த்தால் உங்கள் இருவருக்கும் பலன் தரும் ஒரு தீர்வைக் காண முடியும். வழக்கைக் கட்டிக் கொண்டு பல்லாண்டு காலம் அழவேண்டாம் என்பார். 
இரண்டில் இருந்து நாலு அமர்வுகள் பொதுவாக விசாரணை நடைபெறும். இரண்டாவது அமர்விலேயே அறையில் வெப்பம் குறைந்து ஒரு சகஜ நிலை வரும். இரு கட்சிகள் சமரச நடுவரிடம் தனித்தனியாகவும் சேர்ந்து கலந்தும் பேசுவார்கள்.அவர்கள் பேசிய விஷயங்களை  நடுவர் வெளியில் சொல்ல மாட்டார். ஒருக்கால்  சமரச முயற்சி தோற்றுப்போய் மறுபடியும் வாதி பிரதிவாதிகள் நீதிமன்றத்துக்கு வந்தால், சமரச அமர்வில் பேசியது எதையும் சாட்சியமாகக் கொண்டு வர முடியாது.
 நீதிமன்றம் என்று போனால் பிராதில் சொன்னதைத் தாண்டி நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், சமரசக் குழுவிற்கு வானமே எல்லை. ஓர் உதாரணம்: சென்னையில் ஒரு புகழ் பெற்ற கார் கம்பெனி. பெரு நஷ்டம் அடைந்து திவாலாகும் சூழல். இந்தப் பிரச்னை சமரசக் குழுவிடம் வந்தது. கடன் கொடுத்தவர்கள், வங்கிகள் மட்டுமல்ல, தொழிலாளிகள் எல்லோரும் தங்களுக்குச் சேர வேண்டியதில் சிறிது விட்டுக் கொடுத்தார்கள்.  நிறுவனத்தின்  சொத்துகளை விற்று எல்லோருக்கும் ஒரு பங்காவது கிடைக்க வழி வகுக்க முடிந்தது. வர வேண்டிய  பணம் கொஞ்சமாவது வந்ததே என்று எல்லோருக்கும் மகிழ்ச்சி. 2,196 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைந்தார்கள்  என்று சொல்கிறார்கள். 
இதுவே நீதிமன்றம் என்றால் வங்கிகள் தனி வழக்கு, மற்ற நிறுவனங்கள் தனி வழக்கு, தொழிலாளர் ஆளுக்கு ஆள் வழக்கு என நீதிமன்றத்தில் தவம் இருந்திருப்பார்கள். வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறுவர் பெரியவர் ஆகி, இளைஞர் முதியவர் ஆகி, தொட்டில் கல்லறை ஆகி என்று நீண்டு போய் இருக்கும். இங்கு  சமரச முயற்சியில் அனைவரும் பயனடைந்தார்கள். வழக்கு என்ற சிவப்பு விளக்கில் நின்றுவிடாமல், சமரசம் பச்சை விளக்கு காட்டியது; அவரவர் தங்கள் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து சென்றார்கள்.
இன்னும் ஒரு முக்கிய சிறப்பு. சமரச அமர்வுகளில் உருவாகும் யோசனைகளையோ பரிந்துரைகளையோ ஏற்க வேண்டும்  என்ற கட்டாயம் கிடையாது. சரி வராது என்று சமரச நடுவரிடம் சொல்லிவிடலாம். தயக்கமே வேண்டாம். மறுபடியும் நீதிமன்றம் சென்று நீதிபதியிடம் சமரசம் வெற்றி பெறவில்லை என்று  சொல்லலாம். அவரும் விட்ட இடத்திலிருந்து தொடர்வார்.
சமரச நடுவராவதற்கு பயிற்சி தருகிறார்கள். அவருக்கு அசாத்திய பொறுமை வேண்டும். பிரச்னையைப்  புரிந்து கொள்ளவேண்டும். உளவியல் நிபுணரின் புரிதல் வேண்டும். அவருடைய எண்ணங்களைத் திணிக்கவே கூடாது. வழக்கு தாக்கல் செய்தவர்கள் இடையே நிலவும் வன்மத்தை மெதுவாகக் குறைக்க வேண்டும்; அவரே பேசிக்கொண்டு இல்லாமல், அவர்கள் பேசுவதை  காது கொடுத்துக் கேட்க வேண்டும். இருவருக்குமிடையே இருக்கும் உண்மையான பிரச்னை என்ன என்பதைத் தெளிவு செய்ய வேண்டும்.
நாம் சண்டை போடும்போது  அவன் முறைத்தான், இவன் முகத்தை திருப்பிக் கொண்டான் என்று பிரச்னைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருட்டடிப்பு செய்யும். அதுவெல்லாம் வெறும் ஈகோ சமாசாரமே அன்றி வழக்கின் ஆத்மா அதுவல்ல; பேசப் பேச வழக்கு தாக்கல் செய்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. பரமபத சோபனம் போல் 92-வது கட்டத்தில் இருந்து 
இறங்குவார்கள். 
அப்படியும் சமரசம் செய்ய மனதில்லையா? ஏற்கெனவே சொன்னது போன்று ஒன்றும் நஷ்டம் இல்லை; திரும்ப நீதிமன்றத்துக்குப் போய் விடலாம். சாதாரண ஒப்பந்தங்கள், கட்டட ஒப்பந்தங்கள்,  நுகர்வோர் வழக்குகள், வங்கி மற்றும் காப்பீடு வழக்குகள், குடும்ப நலம், மணமுறிவு வழக்குகள் மற்றும் பலவித வழக்குகளை சமரசம்  மூலமாகத் தீர்த்து விடலாம். 
அத்துடன் முற்றுப்புள்ளி. மேல் முறையீடு என நீதிமன்ற வளாகங்களில் அலைய வேண்டாம். அண்ணல் காந்தியே இதன் சிறப்பைப் பற்றி சிலாகித்துள்ளார்.
மறுபடியும் பல்லவி தொடங்கிய இடத்துக்கு வருகிறேன். நம்மை அதிர வைத்த, நெஞ்சை வலிக்க வைத்த ஒரு வழக்கை சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது. பெரிய பிரச்னை தான், இரு பக்கமும் நிரம்பக் குமுறல்; இதற்கு முன்னரே சமரச முயற்சி செய்தும் பலிக்கவில்லை. எல்லோருக்குமே தெரியும்.
இருந்தாலும் ஒரு சிறிய வாய்ப்பு சமரசம் வெற்றி பெற இருந்தால், வெற்றி பெற்றால் நம் நாடு சரித்திரம் படைக்கும். இங்கு அமைதி நிலவும். ரணங்கள் ஆறலாம் . அப்படி அந்தக் கனவு நனவானால் தமிழன் பெயர் அமைதி, நல்லிணக்கம் விரும்புவோர் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெறும். அது இனிக்கும்தானே!  அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வுகாண உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் சமரசக் குழுவில் இடம்பெற்றிருக்கும் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவருமே தமிழர்கள். சமரச முயற்சி வெற்றி பெற்றால், இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைக்குத் தீர்வு கண்ட பெருமை நம்மைச் சாரும். அதனால், சமரசம் வெற்றி பெற வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டும்!

கட்டுரையாளர்:
நீதிபதி (ஓய்வு).
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/15/சமரசம்-வெற்றி-பெற-வேண்டும்-3113849.html
3113848 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தேவை குறைந்தபட்ச வருமானம்! சுரேந்தர் ரவி DIN Friday, March 15, 2019 01:37 AM +0530
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மக்களுக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்தி வருகின்றன. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கான ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதரவு திட்டத்தை (பிஎம்-கிசான் சம்மான்) மத்திய அரசு தொடங்கிவைத்துள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவைத்துள்ளது. இதேபோன்று, விவசாயிகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கும் ரைது பந்து திட்டத்தை தெலங்கானா அரசும், காலியா திட்டத்தை ஒடிஸா அரசும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பயனடையும் வகையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் அதே வேளையில், அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச வருமானம் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி குறைந்தபட்சத் தொகையை அளிக்கும் திட்டமாகும்.
நாட்டிலுள்ள சுமார் 135 கோடி மக்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை எப்படி அளிப்பது? அந்தத் தொகையைத் தவறான வழிகளில் மக்கள் செலவிட மாட்டார்களா? அரசே அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிவிட்டால், யாரும் வேலைக்குச் செல்ல விரும்பமாட்டார்கள் என்று இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளும், கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டாலும், நாட்டில் வேலைவாய்ப்புகள் பெரிதும் குறைந்துள்ள நிலையிலும், மக்களிடையே காணப்படும் பொருளாதார சமத்துவமின்மையைக் களையும் நோக்கிலும், இந்தத் திட்டம் குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது எழுந்துள்ளது.
பணிக்குச் செல்லும் 15 முதல் 59 வயதுடைய மக்களை அதிகம் கொண்டுள்ளது நம் நாடுதான். ஆனால், தற்போது இயந்திரமயமாதல் உள்ளிட்டவை காரணமாக வேலைவாய்ப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாகாத நிலையே நாட்டில் காணப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பெரும்பாலோர் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்குச் செல்வதும், பலர் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதும் அதிகரித்து வருகிறது. அதிலும் நடுத்தரக் குடும்பங்களின் நிலை பரிதாபமான நிலையில் உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு கணக்குப்படி, நாட்டில் சுமார் 22 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறைந்தபட்ச வருமானத்தை மக்களுக்கு வழங்க முயற்சி செய்ய வேண்டும். இந்தத் தொகையானது மிக அதிகபட்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாலே போதுமானது. 
அப்படி வழங்கினால், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் பணி தேடுவோர் ஆகியோரின் அன்றாடத் தேவைகள் பூர்த்தி அடைந்து,  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் வளரும் சூழல் உருவாகும். குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் குறையும். அவர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை அவர்களே திறம்படக் கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பணி தேடுவோர் மிகுந்த நம்பிக்கையுடன் பணி தேட முயற்சி செய்வர்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கு அளித்து வரும் மானியங்கள் நாளடைவில் குறைந்துவிடும். ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கான போஷான் அபியான் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறையும். 
மக்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச வருமானத்தை அவர்கள் செலவிடும்போது காய்கறிகள், மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோரின் வருவாய் அதிகரிக்கும். அந்தப் பொருள்களுக்கான தேவையும் அதிகரித்து, அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள், நிறுவனங்கள் உள்ளிட்டோரின் வருமானமும் அதிகரிக்கும்.இந்த வருமானத்தை அவர்கள் மேலும் முதலீடு செய்யும்போது, தொழில் வளர்ச்சி அடையும். இதனால், புதிய வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாகும். மொத்தத்தில் பொருளாதாரம் உயர்ந்து நாடும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். 
இந்தத் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் சிலவும் இருக்கத்தான் செய்கின்றன. 
அவற்றைத் திறம்படக் களைய வேண்டியது அரசுகளின் கடமையாகும். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை வழங்குவது அரசுகளுக்கு இயலாத காரியம். எனவே, அரசுப் பணியில் இருப்போர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோரைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசுகள் முயற்சி செய்யலாம். 
ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் தகுந்தாற்போன்று, மிகக் கவனமான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். இந்தப் பணத்தைச் சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றைத் தவிர்ப்பதற்காகக் குடும்பத்திலுள்ள பெண்களின் வங்கிக் கணக்குக்கு இந்தத் தொகையைச் செலுத்தலாம்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முன் அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் உள்ளிட்டவற்றின் தரத்தை அதிகரிக்க வேண்டியது அரசுகளின் தலையாய பணியாகும். இல்லையேல், அரசு வழங்கும் குறைந்தபட்ச வருமானம், மருத்துவ சிகிச்சைக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் செலவிடப்பட்டு திட்டத்தின் நோக்கம் முழுப் பயனளிக்காமல் போய்விடும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம். அரசுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும், செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளையும் அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே இத்திட்டத்தை முன்மொழிந்துள்ள நிலையில், மக்களுக்கும் நாட்டுக்கும் அவசியத் தேவையான அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய தருணமிது.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/15/தேவை-குறைந்தபட்ச-வருமானம்-3113848.html
3113177 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆரோக்கியம் காக்க...சிறுநீரகங்கள் காக்க... நெல்லை சு. முத்து DIN Thursday, March 14, 2019 01:37 AM +0530
உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் 2000-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதலில் 66 நாடுகள் இதில் ஆர்வம் காட்டின. இரண்டே ஆண்டுகளில் அது 88-ஆக அதிகரித்து விட்டது. பன்னாட்டு நரம்பியல் அமைப்பு, பன்னாட்டுச் சிறுநீரக அறக்கட்டளைகள் பேரவை ஆகியவற்றின் முனைப்பில்தான் இந்த உலகச் சிறுநீரக விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சூரியன் தனது உத்தராயணப் பயணத்தின்போது, பிரபஞ்ச நடுக்கோட்டினைக் கடக்கும் நாள் மார்ச் 21. அன்றைய தினம் நிலநடுக்கோட்டு நாடுகளில் இரவும் பகலும் சம அளவாக இருக்கும். அன்றைக்கு சூரியன் உதிக்கும் திசை உண்மையான கிழக்கு. (மற்றொரு நாள் செப்டம்பர் 23 ஆகும்). 
கோடை வெயிலுக்கும் மனித சிறுநீரகத்துக்கும் பிரிக்க முடியாத உயிர்த்தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் இருந்து அளவுக்கு அதிகமான சோடியம், யூரியா போன்ற உப்புச் சத்துகளை அரித்துப் பிரித்து வெளியே அனுப்ப உதவும் வடிகட்டி இயந்திரம் சிறுநீரகங்கள். உடலின் இரு விலாப்புறமும் உள்ள இரு சிறுநீரகங்களை உள்ளங்கையில் அடக்கிவிடலாம்.  உடலின் நீர்மச் சத்துச் செறிவு, பாய்மங்களின் சவ்வூடு பரவல், அமில-காரச் சமநிலை, பலவித மின்பகுளி வேதிம அளவுகள், நச்சு நீக்கம் போன்ற உடல்நலச் செயல்பாடுகளின் ஆதாரம் இந்த சிறுநீரகங்கள். 
ஒவ்வொரு மனித சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் சிறுநீரக வடிகட்டி அணுக்கள் (நெஃப்ரான்கள்) உள்ளன; இவை சுண்டெலிக்கு வெறும் 12,500தான். வடிகட்டி அணு முனையில் உள்ள நுண்ணிய தந்துகிக் குழாய்களின் முண்டு, இணையத்தின் பிரதான வலைப்பின்னல் போன்றது. ஒவ்வொரு தந்துகியும் செயல்பாட்டில் நுண்ணிய சிறுகுடல் போன்றது. சிறுநீரகத் தமனிகள் சுமந்துவரும் ரத்தத்திலிருந்து சத்துகள் இங்குதான் வடிகட்டப்படுகின்றன. 
சிறுநீரகத் தமனிகள் கொண்டுவரும் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான சோடியம், தசைச்சிதைவில் வெளிப்படும் கிரியாட்டினின், நச்சு வேதிமங்கள் போன்றவற்றை வடிகட்டிகள் பிரித்து சிறுநீரோடு சேர்த்து வழி அனுப்பி வைக்கின்றன. வடிகட்டின நீர்மம், நுண்குழாய்களின் வழியே பாய்கிறபோது, அதிலிருந்து தேவையான அளவு சிறுமூலக் கூறுகளும் தண்ணீரும் மீண்டும் ரத்தத்தினால் உறிஞ்சப்படுகின்றன. ரத்தத்தில் யூரியா தேங்கினால் உடல் வீங்கியதுபோல் ஆகிவிடும். சோடியம் அல்லது பொட்டாஷியம் ஆகிய கார தனிமங்கள் சமநிலை சீர்குலைந்தாலும் பிரச்னைதான். 
நீங்கள் புகை பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் நண்பர்களுக்கு புகைப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு சிறுநீரகப் புற்றுநோய் வர 50 சதவீத வாய்ப்பு உண்டு என்பது தனி எச்சரிக்கை.  பலருக்கும் பகலில் அமர்ந்த இடத்தில் நெடுநேரம் செயல் இன்றி இருந்தாலோ, இரவில் உறக்கத்தில் கால், கை தசைகளில் சிரமம் ஏற்பட்டாலோ, அதற்குக் காரணம் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை என்று அறியலாம்.
அதனால், சிறுநீரகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் வெயிலில் நடக்க வேண்டும். சூரிய புறஊதாக் கதிர்களால் மனித உடலில் உருவாகும் இந்த டி3 -வைட்டமின் (கோலிகால்சிஃபெரோல்) ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம்.  இங்குதான் சூரிய வெளிச்சத்தில் இருந்து பெறப்படும் மூலச்சத்தில் இருந்து வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது. 
வெயில் படாமல் வாழ விரும்புகிறோம். குளுகுளு காரில் அலுவலகம் சென்று, குளிர்பதன அறைக்குள் இடுப்பு அசையாமல் வேலை பார்த்து,  குளிர் அறையில் இரவு உறங்கினால் அது சுக வாழ்வு இல்லை . உடல் நலம் பெறாது.  பணி இடங்களுக்கு மூச்சிரைக்க நடக்காமல், விடியற்காலையில் வீட்டு தோட்டப் புல்தரையிலோ கடற்கரையிலோ நடைப்பயிற்சி செய்யும் மனித இயந்திரங்கள் ஆகிவிட்டோம். உட்கார்ந்த இடத்தில் அமர்ந்தபடியே வாய் உபதேசம் சொல்லிவிட்டு, உண்டு, உறங்கி வாழ்வோரைப் பின்பற்ற ஆசைப்படுகிறோம். வெயிலில் கால் கடுக்க நின்று களை எடுத்தால் அது ராஜயோகம்தான். 
உடல் நலம் என்பது போதிய உடற்பயிற்சி, வேளாவேளைக்குத் தேவையான உணவு, அழுத்தம் இல்லாத மனநிலை ஆகிய தங்க முக்கோணத்தினால் அமைகிறது.  உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் துள்ளல் நடை, நடனம் போன்றவை உடல் நலத்தின் அடிக்கூறுகள். தொப்பையைக் குறைக்க மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு நிற்க வைத்த சைக்கிளை நின்றபடி ஓட்டச் சொல்கிறார்கள். அதற்கு இயல்பாக சைக்கிள் ஓட்டினால் பத்து நிமிஷத்தில் அலுவலகத்துக்கே சென்றுவிடலாம். 
அமைதியான உயிர்க்கொல்லி நோய், வயது முதிர்ந்த பின்னர் நோயாளிகள் உடலுக்கு வெளியே தனி செயற்கை சிறுநீரகப் பையுடன் இயங்க வேண்டி வரும். ஒருவகையில் இது அவர்தம் வாழ்வியலில் மனரீதியிலான பாதிப்புகளை உண்டாக்கும். 
பன் நீர்க்கட்டி (பாலிசிஸ்டிக்) சிறுநீரக நோய் என்பது சில அரசியல் கட்சிகள் மாதிரி, ஓரளவு வாரிசு நோய்; உள்ளுக்கு உள்ளேயே சிறுநீரகத்தை உப்பிப் பெரிதாக்கிவிடும்.
இத்தகைய சிறுநீரகக் கோளாறினால் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2 சதவீதம் பேர் இறந்து வருகிறார்கள். ஒருவர் பரம்பரையில் முன்னோர் சிறுநீரக நோயாளியா, இல்லையா என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். உணவுப் பழக்கமும் முக்கியம். தேவையான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். தினமும் 20 தம்ளர் அதாவது, 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறிப்பாக, தெருவோர வாணலியில் வறுத்த குப்பைப் பண்டங்களுக்கு குட் பை சொன்னாலே பாதி உயிர் பிழைத்தோம்.  
நிழல் உலகில் உப்பா, சர்க்கரையா என்று காதல் பாட்டு பாடலாம். ஆனால், நிஜ உலகில் இரண்டுமே ஆபத்தானவை. உப்பினால் உயர் ரத்த அழுத்த நோயும், அதிக சர்க்கரைச் சத்து காரணமாக சர்க்கரை நோயும் வரும் என்பது உத்தரவாதம். இந்த இருபெரும் நோய்களால் இரண்டு சிறுநீரகங்களும் கோளாறு ஆகிவிடும் என்பதும் லட்சத்தில் ஒரு வார்த்தை . 
தினமும் உணவில் ஒரு தேக்கரண்டி (5-6 கிராம்) உப்பு போதும். நம்மில் பலரும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவுக்கும் இரட்டிப்பு (தினம் 9-12 கிராம்) உப்பு சேர்த்துக் கொள்கிறோம்.  
புகைப் பிரியர்களோடு கெட்ட சகவாசம் வேண்டாம். பக்கத்தில் நின்றாலே உங்களுக்குத்தான் கெட்ட சுவாசம். ஊளைச் சதை. மது, புகை பிடித்தல், 50 வயது முதிர்வு போன்றவை சிறுநீரக நோய்க் காரணிகள் என்றால் பரவாயில்லை; ஆப்பிரிக்க நீக்ரோ, ஆஸ்திரேலிய அபாரிஜின், ஹிஸ்பானிக், ஆசிய இனங்கள் போன்ற மரபணுப் பின்னணி உடையவர்களுக்கும் சிறுநீரகப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 
இத்தகைய பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கணுக்கால் வீக்கம், சோர்வு, களைப்பு, எதிலும் கவனக்குறைவு, பசியின்மை போன்றவை நோயின் சில அறிகுறிகள். ஒருவேளை சிறுநீருடன் ரத்தக் கசிவு தென்படலாம். அன்றி, முட்டை வெள்ளைக் கருவில் உள்ள ஆல்புமின் ஒத்த புரதச் சத்துகள் சிறுநீரில் வெளியேறி நுரையாக வெளிப்படலாம். இவை சிறுநீரக முழு உபாதைகளின் முன்னோட்டம்.  சிலருக்கு சிறுநீர் அளவு மாற்றம், சிறுநீர் வெளியேறுவதில் நேர மாற்றம், நிற மாற்றம், உறக்கத்தில் சிறுநீர் கழிதல், அடிவயிற்றில் அல்லது முதுகுத் தண்டின் அருகில் வலி, உறக்கம் இன்மை , தலைவலி போன்றவையும் சிறுநீரகக் கோளாறின் சிவப்பு சமிக்ஞைகள். 
ஆரம்பக் கட்டத்திலேயே நோயின் தன்மையைக் கண்டறிந்து, அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தசைகளின் செயல்பாட்டில் சிதைபொருள் ஆன கிரியாட்டினின், ஆல்புமின் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பும் சிறுநீரக நோயைக் காட்டிக் கொடுத்துவிடும். 
சிறுநீர் உற்பத்தியின் முதல் கட்டம் இது. அதிகப்படியான நீர்மத்துடன் கழிவுகளையும் வெளியேற்றும் நிலை. வடிகட்டி முடிச்சு (குளோமெருலி) அரித்து எடுக்கும் வேகம் நிமிஷத்துக்கு 100 மில்லி லிட்டர் (அரை தம்ளர்) அளவு இருக்கலாம். ஆனால், அதன் அளவு 60 மில்லி அளவாகக் குறைந்தால் பிரச்னைதான். கூடுதல் புரதச்சத்து சிறுநீரில் தென்பட்டாலும் சிக்கல்தான். ரத்தத்தில் ஆல்புமின் அதிகரித்தால் மாரடைப்புகூட வரலாம். 
உலகம் முழுவதும் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளிகள். ஆண்டுதோறும் 24 லட்சம் பேர் இறப்பு. மரண காரணிகளில் ஆறாம் இடம் வகிக்கும் உயிர்க்கொல்லி நோய். உலக அளவில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு உள்ளாகப் போகிறவர்களின்எண்ணிக்கை 16 கோடிப் பேர் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். எனினும்,  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிறுநீரக நோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. 
சிறுநீரக நலம் - யாவருக்கும் எங்கும் என்ற முத்திரை மொழியுடன் உலக சிறுநீரக விழிப்புணர்வு தினத்தை இன்று (மார்ச் 14) கடைப்பிடிப்போம்.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/14/ஆரோக்கியம்-காக்கசிறுநீரகங்கள்-காக்க-3113177.html
3113176 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆயுளைக் குறைக்கும் காற்று மாசு! இ. முருகராஜ் DIN Thursday, March 14, 2019 01:36 AM +0530
காற்று மாசடைந்து வருவது மனித சமூகத்துக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், மனிதனின் சராசரி ஆயுள் காலத்தையும் குறைத்து வருகிறது.
நாம் வாழும் பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் 79% நைட்ரஜனும், 20% பிராண வாயுவும் (ஆக்ஸிஜன்), 3% கரியமில வாயுக்களும் உள்ளன. உலகம் முழுவதும் தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலம் பாதிப்படைகிறது. இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று அசுத்தமடைகிறது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன், கந்தக ஆக்ஸைடு, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும், வாகனகளிலிருந்தும் வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் மோனாக்ஸைடு, தொழிற்சாலைகளிலிருந்தும், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்தும் வெளிவரும் உலோகத் துகள்கள், பிளாஸ்டிக் கழிவுகள், வேளாண் பொருள்களை தீயிட்டு எரிப்பதால் உருவாகும் புகை, கட்டுமானப் பகுதிகளில் இருந்து உருவாகும் தூசு, மரங்கள் அழிப்பு உள்ளிட்டவை காற்றை மாசுபடுத்துகின்றன.
தில்லியில் கடந்த நவம்பர் மாதத்தில் வாகனப் புகை மாசும், கட்டுமானத் தூசியும், அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டதால் உருவான புகையும் சேர்ந்து பனிப்பொழிவு போன்ற காற்று மாசு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே கார்கள், இரு சக்கர வாகனங்களை மக்கள் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தில்லி மாநில அரசு மேற்கொண்டது.
காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, குளோரோ புளோரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களின் அளவு அதிகரித்து வருவதால், ஓசோன் படலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக பூமியில் விழுவதால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. மேலும், காற்று மாசு பருவ நிலை மாற்றத்துக்கும் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
பூமியின் வெப்பநிலை கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, காடுகள் தீ பிடித்து எரிதல், உணவுத் தட்டுப்பாடு, வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
21-ஆம் நூற்றாண்டில் உலக அளவில் சராசரி வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது இந்தியாவின் வடக்குப் பகுதி, மத்தியப் பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பூமியின் வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்களைக் குறைக்கும் வகையிலும் 196 நாடுகள் ஒன்றிணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் அமெரிக்கா மட்டும் வெளியேறியது.
காற்று மாசால் உருவாகும் 2.5 மைக்ரான் அளவுக்கும் குறைவான சிறிய துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்வதால் சுவாசப் பிரச்னைகள், மாரடைப்பு, பக்கவாதம்,  புற்றுநோய் உள்ளிட்டவை உருவாகும் ஆபத்து உள்ளது. இதேபோன்று விலங்குகள், தாவரங்களுக்கும் காற்று மாசு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், மனிதர்களின் சராசரி ஆயுள் காலத்தை சுமார் 2 ஆண்டுகள் வரை குறைக்கிறது.
எனவே, காற்றின் தரத்தை மேம்படுத்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனப் புகைகளின் அளவைக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 சதவீத வாகனங்களை மின்சார பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், முதல் கட்டமாக மின்சார பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களைத் திறக்க வேண்டும். மேலும், மின்சார பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றை வாங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று, தமிழக அரசும் மின்சார பேட்டரிகளில் இயங்கும் பேருந்துகளை அதிகமாக வாங்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர்களை பேட்டரிகளில் இயங்கும் ஸ்கூட்டர்களாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதைத் தடுக்க, அவை மறு சுழற்சி செய்யப்பட வேண்டும்.
மேலும், தமிழகத்தை முன் மாதிரியாகப் பின்பற்றி, இந்தியா முழுவதும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தெரிவிப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.
பிளாஸ்டிக் தவிர்த்த குப்பைகள் தீ வைத்துக் கொளுத்தப்படுவதைத் தடுக்க அவற்றை உரமாக மாற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும். வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், வேளாண் கழிவுகளை கத்தரித்து சிறு துண்டுகளாக்கி உரமாக பயன்படுத்தும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
மரக்கன்றுகளை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதேபோன்று, மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பொதுமக்களுக்கும் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பசுமையாவது உறுதி.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/14/ஆயுளைக்-குறைக்கும்-காற்று-மாசு-3113176.html
3112547 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மின் நூலகம் தமிழுக்கு மகுடம்! பழ.நெடுமாறன் DIN Wednesday, March 13, 2019 01:45 AM +0530
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் மின் நூலகம் அமைப்பது குறித்து கீழ்க்கண்டுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டார்.
நமது தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பழம்பெருமை பேசுவது அல்ல. 21-ஆம் நூற்றாண்டில் ஒரு மொழியின் தேவை என்பதைக் கண்டறிந்து அதனை 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும். ஆங்கிலத்தில் தேடுதல் சாதனம் வழியாக  உலகின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் நாம் தெரிந்துகொள்கிறோம்.
இந்த வாய்ப்பு தமிழ் மொழிக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். அதற்கு நவீன முன்மாதிரியான தமிழ் மின்நூலகத்தை உருவாக்க வேண்டும். அப்போது உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு உலக அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அவரவர்கள் வீடு தேடிச் சென்றடையும். தமிழ் மொழிக்கு உலக மொழி என்ற பெருமை கிடைக்கும். இதுவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்யத்தக்க மிகப் பெரிய தொண்டாகும்.
கணினியிலிருந்து இணைய இணைப்பு மூலமாக எந்தவிதமான தகவல்களையும், விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப  அறிவுத்தாள்களையும், எண்ணக் களஞ்சியங்களையும் தேடுதல் சாதனம் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது.
ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்கள் ஆங்கிலம்  தவிர சில மேற்கத்திய மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீஸ், ரஷ்யன் ஆகியவற்றில் மட்டுமே இயந்திர மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது.  
நாம் எந்த மொழியில் தரவுத் தளம் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலைப் பெற முடியும். இதே போல், ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் தகவல் களஞ்சியங்கள் கிடைப்பதைப் போல் தமிழர்களுக்குத் தமிழிலேயே கிடைக்கவேண்டும். அதற்கு, தமிழ் சார்ந்த இணைய மென்பொருள்களை தமிழ் மொழியில் ஒருங்குறி மூலமாக வடிவமைக்க வேண்டும்.
சிறந்த நூலகர் என இந்திய அரசின் தேசிய விருது பெற்றவரும், உலகின் 10 சிறந்த  நூலகர்களில் ஒருவர் என பாராட்டப் பெற்று அனைத்து நாட்டு விருதும் பெற்றவருமான பாலம் கல்யாணசுந்தரம் உண்மையான மக்கள் தொண்டர் என்பது அனைவரும் அறிந்ததே. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நாவுக்கரசரின் அடியொற்றி வாழ்பவர். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், அதற்கான ஒரு திட்ட வரைவையும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் அளித்து இந்தத் திட்டத்தின் பயன்பாடு பற்றியும் விளக்கிக் கூறினார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆசியாவிலேயே சிறந்த மின் நூலகம் அமைப்பது  தொடர்பான சிறப்புமிக்க தீர்மானத்தைத் தமிழக சட்டப்பேரவையில் 27-09-2005-இல் முன்மொழிந்து  நிறைவேற்றினார். 
ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்ட தகவல் தளத்தை தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்கு பிற மொழிகளில் உள்ள தகவல்களை மொழிபெயர்க்க, தளப்படுத்தத் தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இந்தப் பணி தொய்வின்றிச் செயல்படுத்தப்பட நிதி ஒதுக்கீடும், நிறுவனப்படுத்துதலும் அவசியமாகும். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பிறகு, மறுமுறையும் முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றபோது, இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றது. 2014-ஆம் ஆண்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் இந்த மின்  நூலகத்தை சென்னையில் அமைப்பது என முடிவு செய்தார். அதற்கு  முதல் கட்டமாக கல்விப் பூங்கா ஒன்றை உருவாக்கவும், அதில் நடுநாயகமாக மின்  நூலகம் அமைக்கவும் அவர் முடிவு செய்தார். பல்வேறு காரணங்களினால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது தாமதமாயிற்று.
இந்தத் திட்டத்தை அரசோ, பெரிய நிறுவனமோ, செல்வந்தர்களோதான் நிறைவேற்ற முடியும். இந்தத் திட்டத்தை அரசு தொடங்கினால், அதற்குத் தேவையான உதவிகளை இலவசமாக அளிக்க, எச்.சி.எல்., மைக்ரோ சாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று பாலம் கல்யாணசுந்தரம் கூறுகிறார். இந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முன்வரவேண்டும். 
ஏற்கெனவே, தமிழ் இணையக் கல்விக் கழகம் ஒரு மின்நூலகத்தை ஏற்படுத்தி, சங்க காலம் முதல் தற்காலம் வரையுள்ள நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், கலைச் சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் போன்ற பகுதிகளுடன் செய ல்பட்டு வருகிறது.
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் ரூ.12.26 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட ஒரு புதிய இணையதளத்தை 12-10-17 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கல்வித் திட்டங்கள், நூலகம், கணினித் தமிழ் ஆய்வு  உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். மேலும், தமிழ் இணைய கல்விக் கழகத்தால் ரூ.59 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையம் மென்பொருள்-2 என்பதையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதுதவிர தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தப்பட்டவற்றை தொகுத்து முதல் கட்டமாக ரூ. 20 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் ஆற்றுப்படை என்னும் இணையதளம், தமிழ் மின்உலகம் என்ற இணைய தளம் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.  
தற்போது தமிழ், தமிழர், தமிழ்மொழி, இலக்கியங்கள், கலைகள், தமிழ்நாட்டின் நிலவியல், வரலாற்றுச் சிறப்புமிக்க  ஊர்கள், ஆறுகள், மலைகள், தமிழகத் திருவிழாக்கள், பண்டையப் பெயர்கள், தமிழக மரம், செடி, கொடி, விலங்கினங்கள், கோயில்கள், சிற்பங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தகவல் தளங்களாக உருவாக்க தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக் கழகமும் கூட்டாக முயன்று வருகின்றன. இதற்கென அரசு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைத் திட்டம்  என்னும் தளம் அரிய பல தமிழ்நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் என தமிழில் மரபுச் செல்வங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்துள்ளது.
அனைத்தும் முறையாக பட்டியலிடப்பட்டு தரவுகளாகப் பதிவு செய்யப்படவேண்டியது இன்றியமையாததாகும். மூலப் படைப்புகள் எவ்வளவு முதன்மை வாய்ந்ததோ, அதைப் போலவே மூலத் தரவுகளும் மிக முதன்மை வாய்ந்தவையாகும். தரவுகளும், அறிவார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தத் தரவுகளைக் கொண்டே மேம்பட்ட உரைப் பதிப்பாய்வு, இயற்கை மொழியாக்கம், மொழி  வகைப்பாடு, வேர்ச்சொல், ஒப்பீட்டுப் பகுப்பாய்வு, மேம்பட்ட தேடல் போன்ற நவீன தொழில்நுட்ப ஆய்வு கருவிகளை உருவாக்க உதவிட வேண்டும். மொழி வளர்ச்சிக்கு இவை போன்ற தரவுகளும், அதற்கேற்ற கருவிகளும் மிக அவசியமாகும். மின்மயமாக்கப்பட்ட படைப்புகள், தரவுகள் ஆகியவற்றை உலகளாவிய அளவில் எவரும் தேடவும், மேற்கோள் காட்டவும், பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநர் 30-05-2012-இல் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மின்நூலகப் பணிகளில் அனுபவமுள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம்.  ஆனால், இதற்கு தமிழ் இணைய கல்விக் கழகம் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படவேண்டும்.  அப்போதுதான், மின்நூலகப் பணிகளுக்கென ஒரு தனித் துறையை உருவாக்கி அரசு  மற்றும்  தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைத்து தமிழ் மின்நூலகத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்ள முடியும். 
அல்லது தமிழக அரசின் உயர் கல்வித் துறை,  தகவல் தொழில்நுட்பவியல் துறை  ஆகியவற்றின் கீழ் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அவற்றின் மூலம் செயல்படுத்தலாம். அல்லது இந்தப் பணியை நிறைவேற்ற  தகுதிவாய்ந்த நிறுவனங்களையோ, தனியார் அமைப்பினரையோ கண்டறிந்து அவர்கள் மூலமும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு அரசு தேவையான நிதி ஆதரவை நல்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.
எனவே, தமிழ் மின்நூலகம் அமைக்கும் இந்தத் திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ள தனியார் அளிக்கும் நிதி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பயன்படுத்திக் கொள்
வதோடு, இந்த நூலகத்தை உருவாக்க கணினிப் பொறியாளர்கள், பல்துறை அறிஞர்கள், நூலக அறிவியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்தத் திட்டத்தோடு தொடர்புடைய அரசுத் துறைகளின் செயலாளர்கள் ஆகியோரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகத் தமிழ் மின்  நூலகத்தை அமைப்பதன் மூலம்  நமது தமிழ் மொழியை உலக மொழியாக உயர்த்த முன்வருமாறு வேண்டுகிறேன்.
முன்னாள் முதல்வரின்  இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஆசியாவிலேயே நவீன முன்மாதிரியான நூலகமாக இது அமையும்;  உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இதைப் பயன்படுத்த முடியும். தமிழகத்தில் சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்; உலக அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தையும் உடனுக்குடன் வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்; படிக்காதவர்கள்கூட இந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியும்.  இந்த நூலகத்தின் மூலம் தொலைக்காட்சி, பத்திரிகைகள், செல்லிடப்பேசி, நூலகம், கணினி ஆகிய ஐந்தின் பயன்களையும் ஒருங்கே பெறலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு மிக விரைவாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதன் உச்சகட்ட சாதனையாகவும், 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முதலாவது மின் நூலகமாகவும், தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு மைல்கல்லாகவும் இந்த நூலகம் திகழும். இந்த மின் நூலகத்தால் தமிழ் மொழிக்கு பன்னாட்டு மொழி என்ற பெருமை கிடைக்கும்; 
அதனால் உலகெங்கிலும் தமிழ் ஒலிக்கும்; தமிழன் தலைநிமிர்வான்.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
என பாரதி கண்ட கனவை நனவாக்குவது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/13/மின்-நூலகம்-தமிழுக்கு-மகுடம்-3112547.html
3112084 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் குடிமைச் சமூகமும் தன்னாட்சியும்  க. பழனித்துரை DIN Tuesday, March 12, 2019 03:10 AM +0530 இந்தியாவில் தற்போது குடிமைச் சமூகங்கள் தன்னெழுச்சியாக அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி ஊழலுக்கு எதிராகவும், இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிராகவும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் நடத்தும் போராட்டங்களை மேற்கத்திய சமூகவியல் அறிஞர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதனை முறையாகப் புரிந்து ஊடகங்களும், மத்தியதர வர்க்கமும், அறிவு ஜீவிகளும் குடிமைச் சமூகங்களுக்கு ஆதரவு அளித்தால் மகாத்மா காந்தி முயன்று உருவாக்கிய குடிமைச் சமூகம் விழிப்புணர்வு அடைந்து, பக்குவப்பட்டு, மக்களாட்சியை தூய்மைப்படுத்தி, புதிய திசைக்குச் செல்ல முயற்சிக்கும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். குடிமைச் சமூகங்கள் சுயாட்சியை நோக்கி தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன.
 இந்திய சமூகச் சூழலில் குடியாட்சிக்கான குடிமைச் சமூகத்தை உருவாக்க பெருமுயற்சி செய்தவர் மகாத்மா காந்தி. சுதந்திரப் போராட்டத்தில் குடிமைச் சமூகம் உருவாக்கும் பணியில் அவர் ஈடு
 பட்டார். அதற்காகத்தான் பெருமளவில் ஏழைகளையும் பெண்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். தன் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் ஏழை மக்களை உயர்நிலைச் சிந்தனைக்கு அழைத்துக் சென்றார். அதன் தொடர்ச்சிதான், ஏழை மக்கள் பங்கேற்கும் பங்கேற்பு ஆட்சிமுறையை கீழிருந்து கட்டமைக்க விரும்பி, ஒரு புது மக்களாட்சி முறையை முன்வைத்தார். அந்த முறை இன்றுள்ள மக்களாட்சி முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. அதற்கு அடிப்படையில் ஆட்சியாளர் தவறு செய்யும் நிலையில், தார்மிகமாக எதிர்க்கத் தேவையான துணிவை ஏழை மக்களிடம் உருவாக்கினார்.
 மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அந்தச் செயல்பாடுகள் வேறு ஒரு தளத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. குடிமைச் சமூகத்திற்குப் பதில், கட்சிக்காரராக ஆளுவோரை கேள்வி கேட்கத் தயார்படுத்தப்பட்டனர். இதன் விளைவு, கட்சிக்கும் ஆட்சிக்கும் கட்டுப்பட்டவர்களாக குடிமைச் சமூகம் மாற்றப்பட்டு விட்டது. எனவே, சமூகப் பார்வையின்றி, குடிமைப் பொறுப்பு என்ற நிலையிலிருந்து கட்சிக்காரர் என்ற உணர்வுடன் பொதுப் பிரச்னைகளை அணுக வைத்து குடிமைச் சமூகத்தை புறந்தள்ளிவிட்டனர்.
 இன்று அரசியல் கட்சிகளின் கோரப்பிடியில் மக்கள் சிக்குண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து வெளியேறத் துடிப்பதன் அறிகுறிதான் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள். கடந்த கால அரசியல் கட்சிகளின் அரசியல் செயல்பாடுகள், மக்கள் பிரச்னைகளை கையிலெடுக்கும்போது பிரச்னைகளின் உண்மைத் தன்மையில் செயல்படுவதற்குப் பதிலாக, கட்சி நலன் சார்ந்து கட்சிக்காரர்களை வைத்துச் செயல்பட்டதன் விளைவு, அரசியல் கட்சிகளின் மீது ஒரு பொது வெறுப்பு உருவாகியுள்ளதை அனைவரும் அறிவர்.
 இதன் விளைவுதான், அரசியலுக்கு அப்பாற்பட்ட விவசாயிகளின் போராட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கான கிராம மக்களின் போராட்டங்கள், ஆதிவாசிகளின் வனப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் அரசுக்கு எதிராக எழுகின்றன. அனைத்துப் போராட்டங்களும் வன்முறையின்றி நடந்து வருகின்றன. அந்தப் போராட்டங்களைக் கலைக்க, அரசுதான் அதன் ஆயுதமாக காவல் துறையை ஏவுகிறதேயொழிய மக்கள் வன்முறைக்குச் செல்வதில்லை.
 இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு குறிக்கோளை முன்னிறுத்தியதாக இருந்தாலும், அது பிரதிபலிக்கும் மகத்தான செய்தி ஒன்று இருக்கிறது; அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதுதான், குடிமைச் சமூகம் சுயாட்சியை நோக்கி நகர நினைக்கிறது. அத்துடன் வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு என்ற பெயரில் அரசுத் துறைகள் மூலம் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் சங்கிலியை உடைத்தெறிய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
 அடுத்த நிலையில் ஆட்சியாளர்களை மக்கள் கேள்வி கேட்டு, மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். எனவே, ஆட்சியாளர்களை மக்களுக்குக் கடமைப்படுத்த வேண்டும் என்றும் முனைகின்றனர். இந்த இலக்குகளை நோக்கி குடிமைச் சமூகம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுச் செல்ல நினைத்துச் செயல்படும்போது தேவையான ஆதரவுக் கரங்கள் பலரிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது.
 அது இன்று, குடிமைச் சமூகத்தின் மீது பற்றுக் கொண்ட படித்த இளைஞர்களால் ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே போன்று ஊடகங்களாலும் கிடைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் இது ஒரு தொடர் செயல்பாடாக மாற வேண்டும். அப்போதுதான் இந்தக் குடிமைச் சமூகச் செயல்பாடு வலுப்படும். அது மட்டுமல்ல, இந்தச் செயல்பாடுகளில் மக்களாட்சியில் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை குடிமக்கள் பயன்படுத்த குடிமக்களைத் தயார் செய்வது மிக முக்கியமான பணி.
 அந்தப் பணிதான் சரிவர இன்றுவரை நம் நாட்டில் பெருமளவில் நடைபெறவில்லை. இது ஒரு சிக்கலான பணியும் கிடையாது.
 தங்களுக்கு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தி நாம் முன்னேறி மரியாதையுடைய வாழ்க்கையை வாழ முடியும் என்பதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிதான் மிக முக்கியமான பணி. தங்களுக்காக பணி செய்வதற்கு மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசு அலுவலகங்களை எப்படி மக்களுக்குப் பணி செய்ய கடமைப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் அந்த மக்கள் தயாரிப்புப் பணி.
 இந்தப் பணிக்கு தன்முனைப்போடு களப் பணியாற்ற வரும் இளைஞர்களுக்கு ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.
 அந்தப் பயிற்சிதான், இந்த இளைஞர்களை திறம் மிக்கவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், மக்களுக்கு வழிகாட்டக்கூடியவர்களாகவும், ஒழுக்கத்தின் மேன்மை உணர்ந்தவர்களாகவும் உருவாக்கும்.
 இன்று இந்தப் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்தேறி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்று தமிழகம் முழுவதும் ஒரு சடங்குபோல் நடத்தப்படும் கிராமசபையைப் பார்த்தவர்களுக்கு, கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கம்பூர் பஞ்சாயத்தில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஒரு கிராமப் பஞ்சாயத்தில் நடந்த கிராம
 சபைக் கூட்டம் ஓர் உதாரணம். அந்தக் கிராமத்திலுள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி இரண்டு ஆண்டுகள் முயற்சி செய்து அந்த கிராமசபைக்கு ஆயிரம் பேரைத் திரட்டி, அறிவுபூர்வமாக கிராமசபை அதிகாரங்களை முறையாகத் தெரிந்து, பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரபூர்வ தகவல்களைப் பெற்று, ஆட்சியாளர்களை முறையாகக் கேள்விகள்
 கேட்டு பதில் சொல்ல வைத்துள்ளனர்.
 கிராமசபைக்கு இந்த இளைஞர்களே விளம்பரம் செய்து மக்களைத் திரட்டியுள்ளனர். காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த கிராமசபைக் கூட்டம் மாலை 4 மணி வரை முறையாக நடந்துள்ளது என்பதை அறியும்போது, இந்த இளைஞர்களின் கடின உழைப்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளரா மனங்கொண்டு செயல்பட்ட விதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் 70 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்துக்கள் மூலம் எதிர்பார்த்தார்.
 இந்தச் செயல்பாடுகளைச் செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் தன்னலமற்ற ஐவர் வேண்டுமென்றார் மகாத்மா காந்தி அன்று. அவர் அன்று எதிர்பார்த்த தன்னலமற்ற ஊழியர்கள் இவர்கள்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் செய்தது அனைத்தும் அதிகார வரம்புக்கு உட்பட்டுச் செயல்பட்டது. அடுத்து முதலில் தங்களை அறிவுபூர்வமாக தயார் செய்து கொண்டது. அடுத்து, அரசு தந்த சட்டங்களைப் பயன்படுத்தி, அரசு கொடுத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு கேள்விகள் கேட்டு அரசாங்கத்தை மக்களுக்குச் சேவை செய்யப் பணித்தது. இதில் எந்த இடத்திலும் விதி மீறல் கிடையாது. ஆனால், அத்தனைப் பணிகளும் அவர்கள் எளிதில் சாதித்துவிடவில்லை. இவை அனைத்துக்கும் பின்னணியில், இரண்டு ஆண்டுகள் தன்னலமற்ற உழைப்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாட அனைத்து நிறுவனங்களும் அரசுகளும் திட்டம் போட்டுச் செயல்பட முனையும்போது, காந்தியின் கனவான கிராம சுயராஜ்யத்தை அடைய ஊருக்கு ஐந்து பேர் முயற்சி செய்தால், இந்த ஊர் இளைஞர்கள் பின்பற்றிய முறையைக் கையாண்டு மக்களை அதிகாரப்படுத்தி அரசாங்கத்தை மக்களுக்குப் பணி செய்ய வைத்துவிடலாம். ஊருக்கு ஐவர் என தமிழக கிராமப் பஞ்சாயத்தில் தன்னார்வமாக இருந்தால், கிராமங்கள் மீண்டும் மீண்டெழும்.
 அப்படி தன்னார்வமாக எழுந்த இளைஞர்களையெல்லாம் ஒன்றிணைத்துவிட்டால், அதுதான் ஜே.சி.குமரப்பா எதிர்பார்த்த கிராமத்துக்கான மக்கள் இயக்கம். இந்த இயக்கம்தான் கிராம சுயராஜ்யத்துக்கான அடித்தளம். இன்றைக்குத் தேவை இப்படிப்பட்ட இளைஞர்களின் கூட்டணிதான், அரசியல் கூட்டணி அல்ல. இந்தக் கூட்டணிதான் குடிமைச் சமூகத்தை உருவாக்கும். அது மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கே புதிய திசையைக் காட்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/12/குடிமைச்-சமூகமும்-தன்னாட்சியும்-3112084.html
3112085 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சாலையோரச் சவால்கள்! பாறப்புறத் இராதாகிருஷ்ணன் DIN Tuesday, March 12, 2019 03:10 AM +0530 இப்போதெல்லாம் சாலையில் நடப்பது என்பது பாதுகாப்பானதாக இல்லை. அந்த அளவுக்கு சாலையின் இரு புறங்களிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள். பாதசாரிகள் பயன்படுத்த வேண்டிய நடைபாதைகளை இரு சக்கர வாகனங்கள், சிறு கடை வியாபாரிகள், ஆட்டோக்கள், மின் இணைப்புப் பெட்டிகள், குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்துக் கொண்டு பல்வேறு விதமான சாலை விபத்துகளுக்கும், உயிர்ப் பலிகளுக்கும் காரணமாகி வருகின்றன.
 சாலை நடைபாதைகள் இன்று வாகனங்கள் நிறுத்துமிடங்களாகி விட்டன. தெருக்களின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் நெடுஞ்சாலைகள் ஒற்றையடிப் பாதைகளாகச் சுருங்கி விட்டன. சாலைகளில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
 அரசியல் கட்சிகளின் கூட்டமாகட்டும், விழாவாகட்டும், மண்டபங்களில் நடத்தப்படும் திருமண விழா, பிறந்த நாள் விழா, காது குத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்களாகட்டும், திருக்கோயில்களில் இறைவனுக்கு நடத்தப்படும் பூஜைகளின் போதும் சாலைகளின் இரு மருங்கிலும் ஃப்ளக்ஸ் பேனர்களையும், கண்ணைக் கவரும் விளம்பரப் பதாகைகளையும் வைத்துச் சாலைகளை ஆக்கிரமித்து, ஏற்கெனவே வந்து போக சிரமமாகவுள்ள சாலைகளில் மேலும் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிரமம் கொடுத்து வருகின்றனர். இதனால், பெருநகரின் சாலைகள் வாகனங்களின் நெரிசல்களால் சிக்கித் தவிக்கின்றன.
 பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம் என்றாலும், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வதும் முக்கியக் காரணம்; பல விபத்துகளுக்கு சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும், விளம்பரப் பதாகைகளும், நடைபாதைக் கடைகளும்தான் காரணம். சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை நெறிபடுத்துவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்கின்றனர் போக்குவரத்துக் காவலர்கள்.
 கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை கடைக்கு முன்பாக நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக சாலை ஓரங்களை இந்த வாகனங்கள் ஆக்கிரமிப்புச் செய்து விடுகின்றன. சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைக்குச் செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடையூறு இல்லாமல் வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும்.
 சாலையோரப் பகுதிகளில் ஏற்கெனவே வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதால், பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்க முடியாத நிலைக்கு பேருந்து ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். பேருந்து நிற்பதால், அதற்கு பின் வரும் மற்ற வாகனங்கள் வேறு வழியில்லாமல் அதன் பின் நிறுத்தப்படுகின்றன. இப்படி தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. மேலும், பேருந்துகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து தள்ளி நிறுத்தப்படுவதால் அப்பேருந்தில் ஏற வேண்டிய பொது மக்கள் ஓடிச் சென்று ஏற முயற்சிப்பதாலும், இறங்க வேண்டிய பயணிகளும் அவசர அவசரமாக இறங்குவதாலும் பெரும் விபத்துகளைச் சந்திக்கின்றனர். குறுகலான சாலைப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்துக் காவலர்கள் அனுமதிக்கக் கூடாது.
 முக்கியப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடங்களை முறைப்படுத்த மாநகராட்சிகள் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டின் சில மாநகராட்சிகளில் வாகனங்களை சாலையின் இரண்டு புறங்களிலும் நிறுத்த தடை உள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் யாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை சாலையில், தெருவில் நிறுத்தினால் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் ஓரத்தில் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,682 இரு சக்கர வாகனங்கள், 90 ஆட்டோக்கள், 103 கார்கள் என மொத்தம் 7,875 வாகனங்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இந்தத் தொகையில் காவல் துறை சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு ரூ.1.60 கோடியை மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும், 1,510 இரு சக்கர வாகனங்கள், 51 ஆட்டோக்கள், 13 கார்கள் என மொத்தம் 1,574 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விரைவில் ஏலம் விடத் தயாராக இருக்கின்றன.
 இது தவிர, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை இன்னும் 15 நாள்களுக்குள் உரிமை கோரவில்லை என்றால் அவை ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்நடவடிக்கையை பொதுமக்கள் பெருமளவில் பாராட்டுகின்றனர். இவ்வாறு சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தினால் நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண முடியும்.
 சாலை விபத்துகளைத் தடுக்க காவல் துறை, நெடுஞ்சாலை துறை மாநகராட்சிகள் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களும் பொறுப்பினை உணர்ந்து, சாலை விதிகளை மதித்து, மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் வாகனங்களை நிறுத்தி விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
 
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/12/சாலையோரச்-சவால்கள்-3112085.html
3111445 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சட்டவிரோதச் சுரங்கங்கள்: தீர்வு எப்போது?  எஸ். ஸ்ரீதுரை DIN Monday, March 11, 2019 02:59 AM +0530 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் ஜைந்தியா மாவட்டத்தில் இருக்கும் சட்டவிரோதச் சுரங்கம் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் புகுந்தது. அப்போது அந்தச் சுரங்கத்தினுள் பணியாற்றிக்கொண்டிருந்த 15 ஊழியர்கள் வெளியே வர இயலாமல் சிக்கிக் கொண்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாகத் தொடங்கிய போதிலும், அவர்களில் ஒருவரைக்கூட உயிருடன் மீட்க முடியாமல் போனது. சடலமாக மீட்பதுகூட உடனடியாகச் சாத்தியப்படவில்லை.
 முதல் சடலத்தைக் கண்டெடுத்து வெளியே கொண்டுவருவதற்கே ஒரு மாதம் ஆகிவிட்டது. பின்னர் தொடர்ந்து, சிதைந்த நிலையில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட ஊழியர்களில் எவர் ஒருவரும் இனியும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்களின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்காகவாவது மீதியுள்ள சடலங்களை கொண்டு வந்து அவரவர் உறவினர்களிடம் ஒப்படைத்தால் பரவாயில்லை என்பதே யதார்த்த நிலை.
 இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் சிறிய சுரங்கங்கள் பலவற்றில் அவ்வப்போது ஏதாவது விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 1975-ஆம் ஆண்டு ஏற்பட்ட சாஸ்னாலா சுரங்க விபத்து சுமார் 375 பேரைப் பேரை பலி கொண்டது.1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தன்பாத் சுரங்க விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். கடந்த 2015 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகளில் 377 சுரங்க ஊழியர்கள் உயிரிழந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
 சுரங்கத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வு என்பது பல சவால்களைக் கொண்டது. சுரங்கங்களைத் தோண்டும் போது எதிர்பாராமல் நேரிடும் விஷவாயுக் கசிவு, மண் சரிவு, பாறைகள் சரிதல், திடீர் வெள்ளம், தீ விபத்து என அனைத்து ஆபத்துகளையும் எதிர்கொண்டுதான் சுரங்கத் தொழிலே நடக்கிறது. எனினும், அரசே நடத்தும் அல்லது அரசுத் துறைகளின் முன் அனுமதி பெற்று நடத்தப்படுகின்ற சுரங்கங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைவாக இருக்கும். விபத்து ஏற்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடபெறும்.
 ஆனால், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகத் தோண்டப்படும் சுரங்கங்களில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. விபத்து என்று ஏதாவது ஏற்பட்டுவிட்டால், அந்தச் சுரங்கத்தின் உரிமையாளர் தனது ஊழியர்களைக் காப்பாற்றுவதில் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 தங்களது சுரங்கத்தின் மீது ஊடக வெளிச்சமோ, ஆய்வு செய்யும் அதிகாரிகளின் கவனமோ படாமல் பார்த்துக் கொள்வதில்தான் இத்தகைய சட்டவிரோத சுரங்க உரிமையாளர்களுக்கு அக்கறை இருக்கும்.
 குறைந்த செலவில் அதிக லாபத்தை அள்ளும் நோக்கத்துடன், மேகாலயா மாநிலம் ஜைந்தியா விபத்து சுரங்கத்தினுள்ளே எலிவளை எனப்படும் சிறிய சிறிய சுரங்கப்பாதைகளைத் தனது தொழிலாளர்களைக் கொண்டு தோண்டச் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சுரங்கத்தின் உள்ளே இறங்கும் தொழிலாளர்கள் ஓர் ஆபத்து நேர்ந்தால் சட்டென்று மீண்டு வெளியேறுவது கடினம். இங்கும் அப்படித்தான் நேர்ந்துள்ளது.
 சுரங்கத்தின் பக்கத்திலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த வெள்ள நீர் இந்தச் சுரங்கத்தினுள் நுழைந்ததும், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் வெளியேற முடியவில்லை. வெளியிலிருந்து மீட்புக்குழுவினர் உள்ளே சென்று மீட்பதற்கும் இந்த எலிவளைச் சுரங்க அமைப்பு தடையாகிவிட்டது. அந்தச் சுரங்கத்தின் உரிமையாளர் மீது தற்போது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 உரிமை பெறாமல் சுரங்கம் தோண்டுவது, உரிமை பெற்ற அளவைக் காட்டிலும் அதிக அளவில் தாதுக்கள் முதலியவற்றை வெட்டி எடுப்பது என்றெல்லாம், சட்டவிரோத சுரங்கத்தொழில் நமது நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டவிரோதச் சுரங்க முதலாளிகளால் ஆரவல்லி மலைத்தொடர் கொஞ்சம் கொஞ்சமாகக் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.
 ஒடிஸாவில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் தாதுப் பொருள்கள் பல சட்டவிரோதச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கோவாவிலும் இப்படிப் பல சுரங்கங்கள் இருக்கின்றன. மேகாலயா மாநிலத்திலும் இத்தகைய சட்டவிரோதச் சுரங்கத்தொழில் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறப்படுகிறது.
 மேலும், ஆபத்தான சூழ்நிலையில் இத்தகைய சுரங்கங்களில் பணிபுரிவதற்கு உள்ளூர்த் தொழிலாளர்கள் முன்வராததால், வெளிமாநிலத் தொழிலாளர்களே இந்தச் சுரங்கங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். ஜைந்தியா சுரங்க விபத்தில் சிக்கி இறந்த தொழிலாளர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இத்தகைய எளிய, ஏழைத் தொழிலாளிகளுக்கு வாதாடுவதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களின் குடும்பத்தினருக்குச் சிறிய அளவில் ஏதாவது இழப்பீடு கொடுக்கப்படலாம். ஆனால், குடும்பத் தலைவர்களை இழந்த அந்த அப்பாவிக் குடும்பங்களின் எதிர்கால நலனுக்குப் பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
 இந்த நிலையில், இந்த விஷயத்தை மிக முக்கியப் பிரச்னையாக மத்திய அரசு கருதி தலையிட்டால்தான் ஏதாவது செய்ய முடியும். சட்டவிரோதச் சுரங்கங்களால், நமது நாட்டின் வற்றாத கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதுடன், மத்திய-மாநில அரசுகளுக்கான வருமானமும் குறைகிறது. இது மட்டுமின்றி, இந்தச் சுரங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வும் கேள்விக்குறியதாகிறது.
 ஒருசில பேராசைக்காரகளின் சுயநலத்துக்காக நமது நாட்டின் கனிமவளங்கள் சுரண்டப்படுவதையும், அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பறிபோவதையும் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/11/சட்டவிரோதச்-சுரங்கங்கள்-தீர்வு-எப்போது-3111445.html
3111444 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தேவை குடிநீர் மேலாண்மை!  எஸ். கோகுலாச்சாரி DIN Monday, March 11, 2019 02:58 AM +0530 கோடை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் "கிண்' என்று ஏற ஆரம்பித்துவிட்டது. கோடையும் நிலத்தடி நீரும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. காரணம், கோடை காலத்தில்தான் நீரின் தேவை அதிகரிக்கும்; மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். தண்ணீரும் அதிகம் செலவழியும்.
 தண்ணீர் அதிகம் கிடைக்கக் கூடிய மழை காலத்தில் அதன் பயன்பாட்டைவிட, தண்ணீர் அதிகம் கிடைக்காத கோடை காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம். இதனால், நிலத்தடி நீரின் தேவையும் மிக அதிகம். மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தண்ணீரின் தேவையால் சென்னை நகரம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சென்னை குடிநீர் ஆதாரங்களான புழல் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்டவற்றில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
 லாரி மூலம் தண்ணீர் விநியோகம் அதிகரிக்கிறது. லாரி தண்ணீருக்குப் பதிவு செய்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் வருவது போன்று ஏழு அல்லது எட்டு நாள்கள் கழித்துத்தான் தண்ணீரைக் கொண்டுவந்து தருகிறார்கள். ஜனவரி மாதத்தில் 5,000 நடையாக இருந்த இந்த லாரி குடிநீர் விநியோகம், இப்போது 6,450 நடையாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரின் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படுகிறோமா எனத் தெரியவில்லை.
 நதிநீர் இணைப்பு குறித்து அரசியல் கட்சிகள் கூறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, எதிர்கால நீராதாரம் குறித்த எந்தத் தெளிவான முடிவையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளின் வாக்குறுதியைப் போன்று, பருவநிலை மாற்றங்களால் மழை பொய்த்துப் போனது.
 தமிழகத்தில் 600 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, சராசரியாக 340 மி.மீட்டர்தான் பெய்திருக்கிறது; அதாவது, பாதி அளவுதான் மழை பெய்திருக்கிறது. இதே நிலை நீடித்தால், மிகப் பெரிய வறட்சியை தமிழகம் இன்னும் சில ஆண்டுகளில் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். அதற்குள் நிலத்தடி நீரை செறிவுபடுத்தாவிட்டால் விவசாயம் முழுமையாகப் பொய்த்து விடும் நிலை ஏற்படக்கூடும்.
 தமிழகத்தில் 12 லட்சம் கிணறுகள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91,000 கிணறுகள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.
 தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில், நிலத்தடி நீரின் அளவு 26.2 கோடி கனஅடியாக இருந்தது; 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாகக் குறைந் துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தால், நீரின் தேவை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது.
 நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக வரும் 2050-ஆம் ஆண்டில் தண்ணீரின் தேவை 2,032 டிஎம்சியாக இருக்கும் என்று மாநில நீர்வள மேலாண்மை முகமை தமிழக பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அளித்துள்ளது. தற்போது நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாதுகாப்பான பகுதிகள் பட்டியலில் இருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 32 மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் அபாயகரமானதாக மாறி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தில்லியில் நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் வெளியிட்டார். இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள 21 நகரங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி விடும் என்ற அதிர்ச்சித் தகவலை அது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்பட்டு சுமார் 10 கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள் என அது எச்சரித்துள்ளது.
 மேலும், வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையிலேயே நாடு இருந்தால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்றும் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொல்லொணா துயரத்துக்கு மக்கள் உட்படப் போகிறார்கள் என நீதி ஆயோக் எச்சரித்துள்ளது. தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தோராயமான தரவுதான் என்றாலும் அது தரும் அபாயகரமான செய்தியை அலட்சியப்படுத்தி விட முடியாது.
 செழிப்பான மாவட்டங்கள்கூட இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் சிக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. காரணம், ஆற்றோர மாவட்டங்களில்கூட நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது; அணைகள், ஆறுகள் மானாவாரி கால்வாய்கள் எல்லாம் வெடிப்பு ஏற்பட்டுக் கிடக்கின்றன.
 நிலத்தடி நீர் பயன்பாடு என்பது ஆபத்து காலத்தில் உதவுவதுதான். விதை நெல்லை விற்பது போன்று, நிலத்தின் நீரை ராட்சச மோட்டார்களைப் போட்டு, தேவைக்கு மேல் அல்லது வேறு தேவைகளுக்காக அல்லது வேறு நோக்கங்களுக்காக உறிஞ்சி எடுத்தாகி விட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சும்போது கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனால், தண்ணீரின் விலை அதிகரிக்கும். இதனால், வசதி படைத்தவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் தங்களுடைய நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
 உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி, தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை. ஆனால், 75 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 260 முதல் 300 லிட்டர் நீரைப் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பேருக்கு 40 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதே இல்லை. எனவே, நிலத்தடி நீர் தொடர்பான இந்தக் கட்டண விதிப்பின் மூலம் ஊழல்தான் அதிகரிக்குமே தவிர தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை. மண் அள்ளுவதை தடுக்க எத்தனை விதிமுறைகள் இருந்தும் மண்ணை அள்ளிக் கொண்டே இருப்பதைப் போன்று, தண்ணீரையும் ஏதேனும் ஒரு கட்டணத்தைக் கட்டிவிட்டு எடுத்துக் கொள்வார்கள்.
 நீர் மேலாண்மையின் அடிப்படை விஷயம் எளிமையானது. அது சிக்கலான வரைபடங்களாலோ கணிதங்களாலோ ஆனதல்ல. மிக அடிப்படையான விஷயம் எவ்வளவு அளவுக்கு நீர் எடுக்கிறோமோ அந்த அளவுக்கு மழையின்போது நீர் மறுபடி சேர வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு விதமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவசரத்துக்கு முதல் உதவி செய்வதைப் போன்ற சில குடிநீர்த் திட்டங்கள் அரைகுறையாக நிறைவேற்றப்படுகின்றன. முதல் உதவியே முழு உதவி ஆகிவிடாது .
 மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், மழைநீர்க் கசிவு குட்டைகள், தமிழ்நாடு விவசாயத்துறையில் ஓடை பராமரிப்புத் திட்டங்கள்,
 தடுப்பணை திட்டங்கள் எனப் பல எளிமையான, பெரும் பலனை அளிக்கக் கூடிய திட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது அந்தத் திட்டங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் செயல்படுவதாகத் தெரிய வில்லை.
 நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த தீவிர கவனமும் சிந்தனையும் இல்லை. மக்களிடமும் இதற்கான விழிப்புணர்வு இல்லை. பொது மக்களின் அலட்சியத்தை திருமண விருந்துகள் உள்ளிட்டவற்றில் பார்க்கலாம். பாட்டில் தண்ணீரில் பாதி குடித்து விட்டு அப்படியே வைத்து விடுவதும், மீதமுள்ள தண்ணீரை அப்படியே தூக்கி எறியும் பழக்கம் உள்ளது. தெருக் குழாய்களில் பல சரியாக மூடப்படாமல் தண்ணீர் வழிந்து ஓடும் அவலத்தை பல ஊர்களில் காணலாம்.
 ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது பழைய திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. அறிவியலாளர்கள் கொடுத்த காலக்கெடு கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் மேலாண்மையில் மாநிலங்களின் செயல்பாட்டை மையமாகக் கொண்டு நீதி ஆயோக் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 24 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களை மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை பிடித்துள்ளன.
 குஜராத் முதலிடத்தைப் பிடித்ததற்கான காரணம் எளிமையானது. 1.நீர் சேகரிப்பு, தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது. 2. "ஒரு துளி நீரில் அதிகமான பயிர்' என்ற பெயரில் சொட்டு நீர்ப் பாசனத்தை ஊக்குவிக்கிறது. 3. அனைத்து நீர்க் கசிவுகளையும் சரி செய்ததால் நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளது.
 காகத்தின் கதையைப் படித்திருக்கிறோம். கீழே இருக்கக்கூடிய நீரை மேலே எடுப்பதற்காக தன் பக்கத்தில் இருக்கக்கூடிய கல், மண் ஆகியவற்றை பானைக்குள் காகம் தூக்கிப் போடும். அது உள்ளே போகப் போக நீர் மேலே வரும். கல்லையும் மண்ணையும் உள்ளே போட்டால் உள்ளே இருக்கக்கூடிய நீர் மேலே வரும். ஆனால், நாம் மண்ணையும் கல்லையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த காகத்துக்கு உள்ள அறிவும் விழிப்புணர்வும்கூட மனித குலத்துக்கு இல்லையே என்றுதான் தோன்றுகிறது .
 இந்தக் கோடையில் குடிநீருக்கு என்ன செய்யப் போகிறோம்?
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/11/தேவை-குடிநீர்-மேலாண்மை-3111444.html
3109942 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தகுதி தடையாகக் கூடாது! டாக்டர் கே.பி. இராமலிங்கம் DIN Saturday, March 9, 2019 01:25 AM +0530 இந்திய நாடாளுமன்றத்துக்கு 16 முறை தேர்தல் நடைபெற்று ஜனநாயகம் வேழமென வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மத்திய ஆட்சிக் கட்டிலில் நரேந்திர மோடி அமர்ந்து இந்தியாவின் 130 கோடி மக்களை ஆட்சி பரிபாலனம் செய்திருக்கிறார். 
2010 முதல் 2016 வரை மாநிலங்களவையில் நான் பணியாற்றியபோது 31 மசோதாக்களில் என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். 1996-இல் மக்களவையில் என்ன கொள்கையின் அடிப்படையில் என் வாதம் இருந்ததோ, அதே அடிப்படையில்தான் 14 ஆண்டுகள் கழித்து மாநிலங்களவையிலும் தொடர்ந்தது என்பதால், இந்தக் கட்டுரையை என்னால் பதிவு செய்யமுடிகிறது. 
கடந்து போன மக்களவையில் 180 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில் அவசரச் சட்டங்கள் 45. கடந்த ஐந்தாண்டுக் காலத்தில், 1,615 மணி நேரம் செயல்பட்ட மக்களவை, 15-ஆவது மக்களவையைவிட 20% அதிக நேரம் செயல்பட்டிருக்கிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, திடீர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் ஆளுங்கட்சியினர் நடத்திய அச்சுறுத்தல், காவிரிப் பிரச்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்திய ஓரவஞ்சனை, ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாற்றம், நீதிமன்றங்களில் தலையீடு... இப்படி நாட்டையே குலுக்கிய பிரச்னைகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் அதிகம்.
16% அவை நேரம் அமளிக்கும் துமளிக்கும் ஆளானது. 15-ஆவது மக்களவையில் இந்த அமளி பாதிப்பு 37%-ஆக இருந்தது. மாநிலங்களவையில் 329 அமர்வுகள் நடைபெற்றன. இதில் 154 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 13% நேரம் மக்களவையில் கேள்வி நேரமாகப் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையிலான நாள்களில் மக்களவையில் 10 அமர்வுகள் நடைபெற்றன. 32 சதவீத மசோதாக்கள் மீது 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது; இது முந்தைய மக்களவைத் தொடரைவிட அதிகம். இந்த மக்களவையின்போது 25% மசோதாக்கள் நிலைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றைத் தவிர 543 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட அவையில் எத்தனை எத்தனை உறுப்பினர்கள், எந்தெந்தப் பிரச்னையில் மக்களுக்காக வாதாடி இருக்கிறார்கள், போராடி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையான உண்மைகள். 
5 ஆண்டு காலத்திற்கு நம்முடைய குறைகளை, தேவைகளை நாடாளுமன்ற மக்களவையில் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும், மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி.க்களில் மேஜையைத் தட்டிவிட்டும், குறட்டை விட்டும், கூடிக் குலாவிக் கும்மாளமடித்து விட்டும் கலைந்தவர்கள்தான் அதிகம். 
16-ஆவது மக்களவைத் தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த 16வது மக்களவையில் உறுப்பினராக இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் கூடிய நிலையான ஆட்சி கொடுக்கப்பட்டது. அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட அவையாகவும் இது திகழ்ந்தது. நாட்டின் முக்கியத் துறைகளான வெளியுறவு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பெண்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்குதான் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி.எஸ்.டி., ஊழல் தடுப்பு, கருப்புப் பணத்துக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றெல்லாம் பெருமைப்பட்டார்.
உள்நாட்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அயல் நாடுகள் மத்தியில் இந்தியத் தலைவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் மிகுந்த மதிப்பு, மரியாதை கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா. சபை இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது; இடர்ப்பாடு, துன்பங்களில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். டிஜிட்டல் உலகில் தனக்கென ஒரு இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலக வெப்பமயமாகுதல் பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா சர்வதேச சூரிய சக்தி திட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளது என்றெல்லாம் மக்களவையில் பெருமைப்பட்ட பிரதமர் மோடி மனநிறைவுடன் விடைபெறுவதாகக் கூறியிருக்கிறார்.
16-ஆவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசத்தையே அதிர வைத்தன. தணிக்கை (சி.ஏ.ஜி.) அறிக்கையை நிதித் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், காங்கிரஸ் அரசு செய்த ரஃபேல் ஒப்பந்தத்தைவிட தற்போது  2.86 சதவீதம் குறைவான விலைக்குத்தான் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் புது தில்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக மோடி செய்துள்ள ஒப்பந்தம்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக செய்த ஒப்பந்தத்தைவிட சிறந்ததல்ல என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறைந்தவிலை விமானங்கள், விரைவான விநியோகம் ஆகிய காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 16-ஆவது மக்களவை ரஃபேல் ஒப்பந்தப் பிரச்னைக்காக நினைவுகூரப்படும். போபர்ஸ் பீரங்கிகள் போலவே, ஒருவேளை ரஃபேல் போர் விமானங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கி இந்திய விமானப்படைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
2009 முதல் 2019-ஆம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளில் மிக முக்கியத் தூண்களான நாடாளுமன்றம் -நீதித் துறை -நிர்வாகத் துறை - பத்திரிக்கை துறை ஆகிய ஜனநாயகத்தின் முக்கியமான நான்கு தூண்களும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பது வேதனையான போக்கு. இந்த நான்கு அமைப்பின் மீதும் தங்கள் அரசியல் வியாபாரத்திற்காக எதிர்மறை கருத்துகளை உருவாக்கியவர்கள் நேரடியாகப் பயன்பெறும் அரசியல் பதவி போட்டியாளர்கள்தான். 
அவர்கள் நம் மக்கள்தொகையில் வெறும் 8%தான். அதனால், மீதியுள்ள 92% மக்கள் இந்திய ஜனநாயக அமைப்பின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் நாடாளுமன்ற-நீதிமன்ற-நிர்வாக-பத்திரிக்கைத் துறைகளின் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிடவில்லை.
நேற்றைய குற்றவாளியை இன்றைய நேர்மையாளனாகவும் மேதாவிகளாகவும் ஊடகங்கள் காட்டுவதும், இன்றைக்கு பொறுப்பில் உள்ளவர்களை அடுத்து பதவிக்கு வரத் திட்டமிடுகிறவர்கள் பூதாகரமான முறையில் குற்றவாளியாகச் சித்தரிப்பதும் இந்திய ஜனநாயகத்தில் வேடிக்கையான வாடிக்கை ஆகிவிட்டது.  இதற்கு ஊடகத் துறை வசதிக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது என்ற வருத்தம் மக்களுக்கு உண்டு. ஆனாலும், பத்திரிகையாளர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை முழுவதுமாக இந்திய மக்கள் இழந்து விடவில்லை. 
அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 17-ஆவது மக்களவையிலாவது, கூச்சல் குழப்பத்தில் அவையின் நேரம் வீணடிக்கப்படாமல், மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் அலுவல்கள் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படாமல் செயல்படும் நிலைமை உருவாக வேண்டும். நிறைவேற்றப்படாமல்  காலாவதியாகிப் போகும் மசோதாக்களும், அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெற முடியாமல் கைவிடப்பட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற செயல்பாட்டுக்குப் பெருமை சேர்க்காது.
தமிழகத்தில் இருந்து 16-ஆவது மக்களவைக்கு 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்றார். இன்னொருவர் மக்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனைய 37 உறுப்பினர்களில் ஒருவர்கூட, தமிழகத்தின் பிரச்னையை முன்வைத்துத் தனிநபர் மசோதா ஒன்றுகூடக் கொண்டுவரவில்லை என்கிற கசப்பான உண்மை வேதனை அளிக்கிறது. 
ஏழரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதிகளாக இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைமைகள் உணர்ந்தால் மட்டுமே, 
17-ஆவது மக்களவையில் தமிழகத்தின் உரிமைகளும், தேவைகளும் பாதுகாக்கப்படும். 

கட்டுரையாளர்:
தலைவர், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/09/தகுதி-தடையாகக்-கூடாது-3109942.html
3109941 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்  சைபர் அரசியல்வாதிகள்! எஸ். நாராயணன் DIN Saturday, March 9, 2019 01:24 AM +0530 எங்கெங்கு என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை கைவிரல் அசைவிலே, நொடிப் பொழுதில் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதுவே பல்வேறு நிலைகளில் எதிர்மறையான முடிவுகளை எடுக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதற்கு முன்பிருந்த காலத்தில் எங்கோ வெளியூரில் இருக்கும் உறவினர் குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்பட்டால் அச்சம்பவம் குறித்து கடிதம் மூலம் அறிந்து, சம்பந்தப்பட்டவர் முடிவெடுப்பதற்கு முன்பே, அங்கு பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட்டு விடும். ஆனால், தற்போது நொடிக்கு நொடி மேற்படி சம்பவங்களை, சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்வதால் தானாகவே பிணக்குகள் தீர்ந்துவிடும் முன்பே, தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது.  இதனால் வாழ்நாள் பகை ஏற்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன.
கணநேரத்தில் தகவல்களைப் பெறத்தக்க வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வரமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் சாபமாகவே உள்ளன. சண்டை போடுபவர்களை ஊக்குவிப்பதற்காகவே ஒரு மைதானம் திறக்கப்படுவதாக காமெடி காட்சி ஒரு திரைப்படத்தில் வரும். ஆனால், அதெல்லாம் பழைய காட்சி. தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால், சண்டை போடுபவர்களுக்கான களமாக  முகநூல், சமூக ஊடகம் அமைந்துவிட்டது.
முன்பு முகநூல் சமூக ஊடகத்தில் பலர் தங்களைப் பற்றிய பிம்பத்தை மேம்படுத்திக் காட்டியும், தங்களின் செயல்பாடுகளைப் பதிவேற்றம் செய்து, தானும், தன்னுடன் முகநூலில் இணைந்த நண்பர்களையும், உறவினர்களையும் மகிழ்வித்தும் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். பலர் சமூக பொறுப்புள்ளவர்களாக காட்டிக் கொள்ளவும் முகநூலில் கணக்குகளைத் தொடங்கினர். ஆனால், தற்போதைய நிலையே வேறுமாதிரி ஆகிவிட்டது. ஆம், மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட இவ்வேளையில் அரசியல் கட்சிகள் தங்களுக்கென்றே பிரத்யேகமாகத் தொடங்கிய முகநூல் கணக்குகளில், தங்கள் கட்சிகளின் கோரிக்கைகள், களப்பணிகளை பதிவேற்றம் செய்கின்றனர். அதைவிட அதிகமாக, தங்களுக்கு எதிரான கட்சிகளின் குறைபாடுகளைப்  பதிவேற்றி வருகின்றனர். இதற்கும் மேலாக ஒருபடி மேலே போய், தங்களுக்கு எதிரான கட்சிகளின் பிம்பத்தைத் தகர்க்க முற்படுவதாக நினைத்துக் கொண்டு, எதிரான கட்சிகளின் பெயரில் போலியான கணக்குகளைத் தொடங்கி உள்ளிருந்தே அவதூறு பரப்பும் செயல்களும் நடந்தேறி வருவதைக் காணமுடிகிறது.
இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களை,  நண்பர்களும் அவர்களுக்கேற்ப சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், முகநூலில் நண்பர்களாக இணைந்த அனைவருமே அரசியல் சார்ந்து ஒத்த கருத்துடையவர்களாக இருந்து விடுவார்கள் எனக் கூறிவிட முடியாது. இதன் விளைவால் விருப்பு, வெறுப்பானஅனைத்துத் தகவல்களையும், ஒவ்வொரு நண்பரிடமிருந்தும் பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் எதிர்மறையான பதில்களைக் கொட்டித் தீர்த்துவிடுகின்றனர்.
கேள்விக்கான பதில்களும், பதில்களுக்கான கேள்வியும் உடனுக்குடனேயே தெரிந்துகொள்வதால்தான் முகநூல் சமூக ஊடகம் சண்டைக்கான களமாக அமைந்துவிட்டது. இந்த முகநூல் மூலம்  அவரவர்களின் உண்மை முகங்களை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி கட்செவி அஞ்சல் செயலியிலும் ஒருவருக்கொருவர் கேள்விக் கணைகளால் துளைத்து எடுப்பதையும், வக்கிரமான பதிலை பதிவிடுவதையும் காணமுடிகிறது. இதன் விளைவாக முகநூல், கட்செவி  அஞ்சல் நண்பர்களிடத்திலிருந்து பலர் தானா விலகிய கூட்டம் என நிற்கின்றனர். பலர் நீக்கப்படுகின்றனர்.
இதிலிருந்து அரசியல் என்பது ஜாதி, மதம், உறவு, நட்பு வட்டாரங்களைத் தாண்டியது என்பதை பல்வேறு முகநூல், கட்செவி நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்தபோது அறிய முடிகிறது. சுமார் 5.82 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில், சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகள் முகநூலை தங்களின் பிரசார தளமாகப் பாவிக்கின்றன.
ஆனால், ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. முகநூலில் அரசியல் பதிவுகளை பகிரும் நண்பர்களில் பெரும்பாலானோர் முழுநேர அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல என்பது. அவரவரும் தொழில், குடும்பம் என ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையில் பயணிப்பவர்கள். கடந்த மாதம் வரையிலும் குடும்ப விழாக்களையும், அன்றாட சுவராசியங்களையும் முகநூலில் பதிவேற்றியவர்கள். அதுதவிர குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டவும், மாதாந்திர கடன் தொகையைச் செலுத்தவும், குடும்பச் செலவுகளுக்காக மாதக் கடைசியில் கடன் வாங்குபவர்களாகவும், ஊதியத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களும்தான்.
மக்களவைத் தேர்தல் எதிர்பார்ப்பு, புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த சம்பவங்களையடுத்து, வாழ்க்கையின் யதார்த்த நடைமுறைகளை மறந்தபடி அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகளுக்காகப் பதிவேற்றங்களைத் தொடர்கின்றனர். பொதுமக்களில் பலர் அவரவர் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கின்றனர் அல்லது நண்பர்கள் உறவினர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் வாக்களிக்கின்றனர். அதற்காக வாக்களிக்கும் பொதுமக்களைஅரசியல்வாதி எனக் கூறிவிட முடியாது. அதுபோல சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களில் பலர், அவர் சார்ந்த கட்சியில் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் களம் கண்ட அரசியல்வாதியை விஞ்சும் வகையில் முகநூல் நண்பர்கள் தங்களின் வன்மமான அரசியல் பகடிகளை  விஞ்ஞான ரீதியில் பதிவேற்றுவதை காணும்போது  இவர்களை சைபர் அரசியல்வாதிகள் என அழைக்காமல் வேறென்ன சொல்ல?

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/09/சைபர்-அரசியல்வாதிகள்-3109941.html
3109368 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பாரதியும் பெண்ணியமும் கோதை ஜோதிலட்சுமி DIN Friday, March 8, 2019 03:05 AM +0530
இராஜரிஷி ஜனகரின் சபையில் வேதாந்த விவாதங்கள் நடைபெற்றபோது அங்கே பெண் ரிஷியான கார்க்கியும் இடம்பெற்றிருந்தார். பல்வேறு மகான்களும் ரிஷிகளும் இந்த வெகு நுட்பமான விவாதத்தில் பங்கேற்று ஆத்ம விசாரத் தத்துவங்களை விளக்குகின்றனர்.
இறுதியில் ரிஷி கார்க்கி யாக்ஞவல்கியரின் கருத்தை ஏற்று அவரை அங்கீகரிக்கிறார். ரிஷி கார்க்கியின் அங்கீகாரத்தை மிகப் பெரும் பேறாகவே யாக்கியவல்கியர் ஏற்கிறார். ஒரு பெண் தன்னோடு விவாதிப்பதா, அவரின் அங்கீகாரம் என்பது பெரிதா என்ற ஆணாதிக்க மனப்பான்மை அப்போது அங்கே ஏற்படவில்லை. 
அத்வைதம் எனும் தத்துவத்தை ஏற்படுத்தித் தந்த ஆதிசங்கரர், மண்டனமிஸ்ரர் உடனான தன்னுடைய வாதத்திற்குத் தீர்ப்புச் சொல்லும் நடுவராக மகாகவி பாரதியை ஏற்றுக் கொண்டதில் அறிவில் சிறந்த பெண்ணின் பெருமை நிறைந்திருக்கிறது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் கொண்டது நம் வரலாறு.
சில தலைமுறைகளுக்கு முன் வரை பெண்களின் மதிப்பும் உயர்வும் எவ்விதத்திலும் ஆண்களைக் காட்டிலும் தாழ்வாக இல்லை. பெண்களின்  புகழை பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் காண்கிறோம். இப்படிப் பெருமையோடு வாழ்ந்த சமூகத்தில் பெண்களுக்குத் தாழ்வு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலை தோன்றியதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. ஆணாதிக்கச் சூழலுக்கு எதிராக குரல் கொடுத்த ஆண்களை வரலாறு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களுள் தமிழகத்தில் முதன்மையானவராகப் பெண்ணின் பெருமைகளை, உரிமைகளை உரக்கக் கூறிய பெருமை மகாகவி பாரதிக்கு உண்டு. 
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே என்ற மகாகவி பாரதியின் பாடல் 
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள் 
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
அறிந்ததும் இந்நாடே - அவர் 
கன்னிய ராகி நிலவினி லாடிக் 
களித்ததும் இந்நாடே - அவர் 
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு 
வளர்த்ததும் இந்நாடே - அவர் 
தங்க மதலைகள் ஈ ன்று அமுதூட்டித்
 தழுவியதும் இந்நாடே
நாட்டு வணக்கம் என்று பாடப்பட்ட இப்பாடல் மையப்படுத்துவது இந்தத் தேசத்தின் பெண்களை. மகாகவி பாரதியின் பெண்ணுரிமைப் பாடல்கள் எத்தனையோ இருந்தபோதிலும் இந்தப் பாடல் நுட்பமானது. பெண்களை மையமாகக் கொண்டது நம் தேசம் எனும் நுட்பம் இந்தப் பாடலின் சிறப்பு. இது பாரதி பெண்மையைப் போற்றியதற்கும் கொண்டாடியதற்கும் பெண்ணை முதன்மைப்படுத்தியதற்கும் சான்று.
காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வோம் என பெண்ணின், புதுமையை ஏற்பதற்கான துணிவு, பழைமையான அறங்களைக் காப்பதற்கான வலிமை, எதனையும் முன்னெடுத்துச் செல்வதில் அவளுக்குள்ள ஆற்றல் இவற்றைப் பிரதிபலிக்கிறார். 
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர்மறை மாந்தர் வாழ்ந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம் என்று நம் தேசத்தில் வாழ்ந்த புராதனப் பெண்களின் வரலாற்றை, பெருமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்.
பெண்கள் அறிவை வளர்த்தால் வையகம் பேதமை யற்றிடுங் காணீர் என்கிறார். பெண்களுக்கு எதிரான எத்தனையோ சமூக சீர்கேடுகள் அந்நாளில் நிலவியது என்றாலும் மகாகவி பாரதியின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பெண்கள் கல்வி பெற முடியாமல் இருந்த சூழல். அதனால்தான் அவருடைய கவிதைகள், கட்டுரைகள் பெண்ணின் அறிவாற்றலை, அறம் சார்ந்த அவளது வலிமையை மீண்டும் மீண்டும் பேசுகின்றன. பெண்ணின் அறிவும் அறமுமே முன்னேற்றத்துக்கும் அதன் வழியே புராதனமான இந்தத் தேசத்தின் மேன்மைக்கும் அவசியம் என்று கருதினார் மகாகவி பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ஞானச் செருக்கும் பெண்ணின் தேவை என்பதையும் இவற்றைக் கொண்ட பெண்களைச் செம்மை மாதர் என்று அவர் போற்றுவதும் இதன் அடிப்படையில்தான்.
அறம் சார்ந்த செயல்பாடுகளையும் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்வது பெண்ணின் சுதந்திரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையானது என்பதுதான் மகாகவி பாரதி கற்றுத் தந்த பெண் விடுதலை; பெண் உரிமை. அதேநேரத்தில் தற்போது அதிகமாகப் பேசப்படும் பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். 
பெண்ணின் பார்வையில் இந்த உலகம் என்பதாக முதலில் பெண்ணியம் கருதப்பட்டது. பின்னர் பெண்களுக்கான உரிமைகள் பற்றிப் பேசத் தொடங்கியது. சமத்துவமின்மைக்கான காரணங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், சமத்துவமின்மையை எதிர்க்கும் செயல்பாடுகள் என்று பெண்ணியம் எனும் சொல்லுக்கு வெவ்வேறு விதமாக வரையறைகளை நாளுக்கு நாள் தேவை கருதி மாற்றிக் கொண்டே போகிறார்கள். ஒரு கோட்பாடு என்பதை வரையறுக்கக்கூட இயலாத ஒரு கருத்தாக்கம் எந்த விதத்தில் நமக்குப் பயன் தரப் போகிறது?
மேலை நாடுகள் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும் ஆண், பெண் என்ற உறவில் பெரும் தடுமாற்றத்தோடுதான் எப்போதும் இருந்து வருகின்றன. பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதில் தொடங்கி வாக்குரிமை வரை அனைத்துக்கும் அவர்கள் போராடும் சூழலில் நம் தேசத்தில் பெண்களுக்கு இவை தேவையா என்பது போன்ற சிந்தனையோ கேள்வியோகூட எழுந்ததில்லை.
பெண்ணியம் பற்றிய புரிதலும் உலகம் முழுவதும் வேறுபட்டதாகவே அமைந்திருக்கிறது.  தமிழகத்தை அல்லது இந்தியாவைப் பொருத்தவரை பெண்ணியம் எனும் கருத்தாக்கம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. பெருமளவில் சமூகம் இத்தகைய கருத்தாக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியா குடும்ப அமைப்பை நம்பும் நாடு. இந்தக் குடும்ப அமைப்பின் தலைவியாக இருப்பவள் பெண். ஆண் இல்லாத ஒரு குடும்பத்தைப் பெண்ணால் தெளிவாக வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால், பெண் இல்லாமல் போனால் அது குடும்பம் என்னும் அமைப்பிலிருந்து மாறுபட்டு விடும் சூழல்தான் இன்றுவரை நிலவுகிறது. அதனால், இத்தகைய உரிமை பற்றிப் பேசும் கருத்தாக்கங்கள் நம் நாட்டில் வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நம்முடைய சமூக அமைப்பு அறம் எனும் அடிப்படையை இன்றும் பேணுகிறது. குடும்பத்தினருக்கான கடமைகள், பொறுப்புகள் ஆகியவை முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன.
தனி மனித சுதந்திரம் விருப்பம் பற்றி மேலை நாடுகள் பேசும் நிலையில் குடும்பம் பேணுவது என்னும் கொள்கையில் இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிறது. குடும்பம் சார்ந்த சிந்தனை பெண்ணியம் என்ற கருத்தாக்கம் தரும் சிந்தனையை ஏற்க மறுக்கிறது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை. தனி மனித விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றைப் பெண்ணியக் கோட்பாடு அடிப்படையாகக் கொண்டிருக்க பொறுப்புணர்வு, கூட்டுவாழ்க்கை முதலானவற்றை நம் தேசம் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இங்கே இந்தக் கருத்தாக்கங்கள் வெற்றி பெறவில்லை. 
அதே நேரத்தில் பெண்களுக்கான மரியாதை, அங்கீகாரம் ஆகியவை கிடைக்கப்பெற வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. 
பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல; சமூகத்தை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகும்  என்று சார்லட் எடுத்துரைக்கிறார். இதற்கு நாம் மீண்டும் மகாகவி பாரதியிடம் செல்லலாம். 
அறம் பற்றிப் பேசும் மகாகவி பாரதி, ஒரு பெண் இந்தத் தேசத்தை உருவாக்குகிறாள். அவளது குழந்தைகள்தான் இந்தத் தேசத்தின் எதிர்காலம். எதிர்காலம் சிறப்புற வேண்டுமெனில் தாயாக இருக்கும் பெண். தன் மக்களை அதற்கேற்ப சிந்தனைத் திறத்தோடு வளர்க்க வேண்டும். ஒரு தலைமுறைப் பெண்கள் நினைத்தால் ஒரு மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிட முடியும். தொன்று தொட்டு நம் பெண்கள் இதனை உணர்ந்து மிகச் சிறந்த தலைமுறைகளை உருவாக்கினார்கள். இன்றைய சமூகத்தின் சீர்கேடுகளைக் களைய வேண்டுமானால், பெண்களை மரியாதையோடு பார்க்கும் ஆண் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும். ஆண்-பெண் ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டியது சமூகத்தின் தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை வலியுறுத்தி, அது நமது தேசத்தின் மதிப்புமிக்க தாய்மார்கள் கையில் இருக்கிறது என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்.
கலிய ழிப்பது பெண்க ளறமடா என்று எல்லாக் கொடுமைகளையும் மூடத்தனங்களையும் அழித்தொழித்து அறத்தை நிலைநாட்டும் ஆற்றல் இந்தியப் பெண்களுக்கே உரித்தான இயல்பு என்று பெருமிதத்தோடு மகாகவி பாரதி பாடுகிறார்.
உயிரைக் காக்கும் சேர்த்திடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா என்று போற்றியவர் வழியில் ஆரோக்கியமான சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் செயலில் பாரதப் பெண்கள் ஈடுபடுவார்கள் என நம்புவோம்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

இன்று உலக மகளிர் தினம்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/08/பாரதியும்-பெண்ணியமும்-3109368.html
3109367 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் உலகம் போற்றும் பெண்மை! அ. அரவிந்தன் DIN Friday, March 8, 2019 03:05 AM +0530
ஒரு காலத்தில் ஆண் குழந்தைகள் மீதான மோகத்தால், பெண் குழந்தைகள் பிறந்ததும் அதற்குக் கள்ளிப்பால் ஊற்றி அதை பிஞ்சிலேயே இரக்கமின்றி, வேரறுக்கும் படுபாதகச் செயல்கள் நாடு முழுவதும் அரங்கேறின. பெண் குழந்தைகளால் குடும்பத்துக்குக் கூடுதல் சுமை ஏற்படும் என்ற அவநம்பிக்கை காரணமாக இதுபோன்ற செயல்கள் கோலோச்சத் தொடங்கின. 
இடைக்கால இந்திய வரலாற்றில் பல சமூக சீர்திருத்தவாதிகளின் தளராத முயற்சியால் பெண் சிசுக் கொலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. குறிப்பாக, பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, தொட்டில் குழந்தை திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டில் பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக  தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2001-ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி என பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் பிறந்ததும் அவர்களைச் சுமையாகக் கருதும் பெற்றோர், ஆங்காங்கே அரசு மருத்துவமனைகள், ஆதரவற்ற இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்களில் அந்தக் குழந்தைகளை போட்டு விட்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின விகிதம், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 946-ஆக உயர்ந்தது தெரியவந்தது. 
இது ஒருபுறமிருக்க, தற்போது ஒருசில தனியார் மருத்துவமனைகளில், பாலினம் கண்டறியும் சோதனை மூலம் பெண் சிசுக் கொலை நவீன வடிவம் எடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை. இதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டத்தை நிறைவேற்றினாலும், ஆங்காங்கே அத்திப்பூத்தாற்போல் நடைபெறும் ஒரு சில நிகழ்வுகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம்தான் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை வருவாய் ஈட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இன்றைய நவநாகரிக உலகில் துரித உணவுப் பழக்கம், உயிரணு உற்பத்தியைப் பாதிக்கும் தவறான பழக்கவழக்கங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட காரணங்களால் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், மகப்பேறு என்னும் மகத்தான நிலையை எட்ட இயலாத தம்பதிகள், ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களை நாடி, குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறை பெருகி வருகிறது. அதிலும், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் முனைப்புக் காட்டி வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 2015-2018-ஆம் ஆண்டுகள் வரையிலான கணக்கெடுப்பின்படி, ஆதரவற்ற இல்லங்களில் வசித்து வந்த 11,649 குழந்தைகள், இதுபோன்ற தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதே ஆகும். அதிலும், நகர்ப்புறங்களில் வசிக்கும் தம்பதியினர், இல்லாள் இல்லாத இல்லம் பாழ் என்ற பொன்மொழிக்கேற்ப பெண் குழந்தைகளின் மகத்துவத்தை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டமையால், அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். 
இந்த 3 ஆண்டு காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட 11,649 குழந்தைகளில் 6,962 பேர் பெண் குழந்தைகள்; ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 4,687-ஆக உள்ளது. குறிப்பாக, 2015-16-இல் தத்தெடுக்கப்பட்ட 3,011 குழந்தைகளில் 1,855 பேர் பெண் குழந்தைகள். இதேபோன்று, 2016-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட 3,210 குழந்தைகளில் 1,915 பேர் பெண் குழந்தைகள். இவைதவிர, 2017-18, 2018-19 காலகட்டங்களில் தத்தெடுக்கப்பட்ட 3,276 மற்றும் 2,152 குழந்தைகளில் முறையே 1,943 மற்றும் 1,249 பேர் பெண் குழந்தைகளே ஆவர்.
ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் தத்தெடுப்பு விகிதாசாரத்தில், ஏறத்தாழ 60 சதவீத இடத்தை பெண் குழந்தைகள் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும், குறிப்பாக கடல்கடந்து வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.), நமது நாட்டின் கலாசார, பாரம்பரிய விழுமியங்களின் மீது நாட்டம் கொண்ட அயல்நாட்டுத் தம்பதியினர் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் விகிதம், உள்நாட்டைக் காட்டிலும் அதிகமாக 69 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட 2,310 குழந்தைகளில், 1,594 பேர் பெண் குழந்தைகள் என மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் பார்வையில் எதிர்பார்ப்பையும் கடந்து மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது.
சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்கள் நிகழ்த்திவரும் சாதனைகளே இதுபோன்ற மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. இதன் மூலம், பெற்றோரால் கைவிடப்பட்ட கள்ளம் கபடமில்லாத பச்சிளங்குழந்தைகள், குடும்பம் என்னும் நல்லறத்தில் காலடி எடுத்துவைத்து, எதிர்கால வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள இந்த வாய்ப்புகள் உதவி புரிகின்றன. 
மேலும், தாயின் அரவணைப்புக்காக ஏங்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு இதன் மூலம் நல்ல விடிவுகாலம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம், சமூகத்தில் நிலவும் சட்டவிரோத செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலச் சூழல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஒட்டுமொத்தத்தில் உலகம் எனும் ஓவியம், பெண்மையினால் மேன்மேலும் எழில் பெறட்டும்!
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/08/உலகம்-போற்றும்-பெண்மை-3109367.html
3108732 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழும் இணையமும் முனைவர் கரு.செந்தில்குமார் DIN Thursday, March 7, 2019 02:59 AM +0530 உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்து விட்டது என்றும் கூறலாம். இதற்கு முக்கியக் காரணி இணையம் மற்றும் செல்லிடப்பேசி. பல இடங்களில் உள்ள கணினிகளைச் செயற்கைக்கோள் மூலம் இணைப்பதே இணையம் என்ற இண்டர்நெட். ஒரு சிலந்தியின் வலைபோல் உலகின் பல பாகங்களை இணைப்பதால் இதனை வலைதளம் அல்லது வலைப்பின்னல் என்று அழைக்கிறார்கள்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969-இல் 500-க்கும் மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. செயற்கைக்கோளிலிருந்து தகவல்கள் முதலில் தலைமைக் கணினிக்குச் செல்லும். பின்னர் தலைமைக் கணினியானது, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற கணினிகளுக்கு அந்தத் தகல்களை அனுப்பும். இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கர் ஆவார்.
தமிழ் வளர்ச்சிக்கு கணினி, இணையத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் பெரிதும் பயன்படுகின்றன. ஆசிய அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள் உள்ளன. தமிழில் சுமார் 2,000 இணைய அமைப்புகளும் ஒரு கோடி பக்கங்களும் உள்ளன. இதனைத் தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு ஆகிய மென்பொருள்கள் இணையம் மூலமாகக் கிடைக்கின்றன. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள், கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இன்று இணையம் உலகை ஒரு சிற்றூராக்கி விட்டது.
எழுத்துருச் சிக்கல் மற்றும் தட்டச்சுச் சிக்கல் தொடக்க காலத்தில் இருந்தன. இதனால், பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.  
தொலைநோக்கு திட்டத்தில் சங்க கால இலக்கியங்கள் முதல் தற்கால புதுமை படைப்புகள் வரை பல அரிய நூல்கள், வார இதழ்கள், சஞ்சிகைகள் என அனைத்தையும் இணையத்தில் சேகரிக்க முடியும். இவ்வளவு நூல்களை எந்த ஒரு கரையான் அரிப்பும் தூசியும் அடுக்கி வைக்கும் சிரமும் இல்லாமல்,  தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக இணையத்தில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியும். மின் நூலக இணையதளத்தை அமைப்பதற்கு இலவசமாகக் கிடைக்கும் இணையதளத்தில்கூட பல அரிய புத்தகங்கள் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழ்ப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும் பங்காற்றுகின்றன. செய்திகளையும் வலைப்பூக்கள் தருகின்றன. மேலும் படங்கள், ஓவியங்கள், காணொலிகள், ஒலிப் பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்ப் படைப்புகளின் வாசகர் தளமும் விரிவடைந்தது. ஆனால், தற்போது  முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்-அப்'), சுட்டுரை ("ட்விட்டர்') என அடங்க மறுக்கின்ற வளர்ச்சியாக தமிழ் இன்று எல்லோர் கைகளில் தவழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மின்னூல்களை நமது செல்லிடப்பேசியில் படிக்க பல நவீன கையடக்கக் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. மேலும், "கிண்டில்',  "கோபோ', "இபப்', "இ இங்க்', "மோபி ரீடர்' உள்ளிட்டவை "பிடிஎஃப்' வடிவத்தில் நாம் நினைக்கும் இடத்தில் அடிக்கோடிட்டுப் படிக்க உதவுகின்றன.
தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் தரும் வகையில் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள், வாசகர் வட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன. மதுரைத்திட்டம் என்னும் தளம் அரிய பல தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழில் மரபுச் செல்வங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்துள்ளது. 
தமிழ் மரபுச் செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வகையில் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் தேசிய மின் நூலக தளத்தின் சுமார் 2 கோடி புத்தகங்களில் தமிழ் புத்தகங்களுக்கென தனிச் சுட்டிகள் உள்ளன. தமிழ் மின்னனு புத்தகங்களுக்கென பல சிறப்பு இணையதளங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று எத்தனையோ வெளிநாட்டினர் தங்களது கருத்துகளை தமிழில் உச்சரித்து அதைப் பதிந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.  அதுமட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் பொங்கல் விழா, கட்டுரைப் போட்டி, முத்தமிழ் விழா, சங்கத்தமிழ் விழா என அனைத்தையும் தமிழ் இணையத்தில்தான் பார்க்கிறோம்.   
மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, கவிதை, பாடல், கடிதம், சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையத்தின் வாயிலாக அறியலாம்.
இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய வேகம் பெற்றுள்ளது. தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இன்றைய அனைத்து நிகழ்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/07/தமிழும்-இணையமும்-3108732.html
3108730 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஏன் இந்தப் பாரபட்சம்? டி.எஸ். தியாகராசன் DIN Thursday, March 7, 2019 02:58 AM +0530 "இந்தியா முழுவதும் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர் என்ற கருத்தை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தவறு என நிரூபிக்கிறது.  இந்தியாவில் எட்டு மாநிலங்களில் இந்துக்கள் மிகச் சிறுபான்மையினர். லட்சத்தீவு 2.5%, மிúஸாரம் 2.75%, நாகாலாந்து 8.75%, மேகாலயா 11.53%, ஜம்மு-காஷ்மீர் 28.44%, பஞ்சாப் 38.40%, அருணாசலப்பிரதேசம் 29%, மணிப்பூர் 31.39%. எனவே, இந்த மாநிலங்களில் மிகச் சிறுபான்மையினராகிவிட்ட இந்துக்களுக்கு சிறுபான்மையினர் தகுதி அடிப்படையில் சலுகைகள், இன்ன பிற உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும்; தேசிய அளவிலான சிறுபான்மை அளவுகோலை வைத்துக் கொண்டு இந்த எட்டு மாநிலங்களில் வாழும் சிறுபான்மையினரை புறம் தள்ளுவதை நீதியாகக் கருத இயலாது' என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முன்வைத்தார் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் அவர் மனு தாக்கல் செய்தார். அவர் மனு மீது  தேசிய சிறுபான்மையினர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார். "மாநில அளவிலான மக்கள்தொகை கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினரை அடையாளம் காண வேண்டும். சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையிலும் திருத்தம் மேற்கொள்ளப் படவேண்டும் என்றும், தேசிய சிறுபான்மையினர் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன்' என்றார். 
இந்த வழக்கை கடந்த மாதம் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது மனு மீது மூன்று மாதங்களுக்குள் தேசிய சிறுபான்மை ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளது.  
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் சில விதிவிலக்குகளையும் சிறப்புத் தகுதிகளையும் தருவதற்காக சட்டப்பிரிவு 370 ஒன்றை உருவாக்க  அரசியல் சாசனச்சட்ட வரைவு குழுத் தலைவர் அம்பேத்கரை ஜவாஹர்லால் நேரு வேண்டினார். ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள், விதி விலக்குகள் கொடுப்பதை ஏற்க மறுத்து, 370-ஆவது சட்டப் பிரிவை எழுதித் தர அம்பேத்கர் மறுத்து விட்டார்.
பின்னர் ஜவாஹர்லால்  நேரு கோபாலசுவாமி ஐயங்காரைக் கொண்டு ஷேக் 
அப்துல்லாவின் விருப்பப்படி எழுதச் செய்து தற்காலிக, மாற்றத்தக்க சிறப்பு வசதிகள் கொண்ட 370-ஆவது சட்டப் பிரிவை 1949-இல் இணைத்தனர். அப்போது அங்கிருந்த அம்பேத்கர் ஆட்சேபம் தெரிவித்து வெளியேறினார்.  தற்போது 70 ஆண்டுகள் ஆகியும் தற்காலிகமாக என்று அறிவித்த சட்டமும் 35-ஏ சட்டப் பிரிவும் நீக்கப்படவில்லை. மத்திய அரசு சட்டப் பிரிவை நீக்கி விடுமோ என்ற அச்சத்தில், நீக்கினால் காஷ்மீர் பற்றி எரியும் என்று அங்குள்ள அரசியல் தலைவர்கள் தற்போது மிரட்டுகிறார்கள். மேலும், காஷ்மீர் குறித்து  மத்திய அரசு ஏதேனும் சட்டம் இயற்ற விரும்பினால் மாநிலத்தின் இசைவு வேண்டும்.
மக்களை மத வழியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்து சட்டங்களை இயற்றி சலுகைகளை, உரிமைகளை வழங்கும் விநோதம் நம் நாட்டில் மட்டுமே உள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் அந்த மாநில மக்களைத் தவிர்த்து வேறு மாநில மக்கள் சொத்துகளை வாங்க முடியாது. "ஆர்டிஐ', "ஆர்டிஇ' மற்றும் "சிஏஜி' போன்ற எந்தச் சட்டமும் ஜம்மு-காஷ்மீரில் செல்லாது. காஷ்மீர் பெண்களைத் திருமணம் மட்டும் செய்துகொண்டு பாகிஸ்தானியர்கள் இந்தியக் குடிமகனாக மாற முடியும். ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது.
இது போன்று பல சலுகைகள் இஸ்லாமியருக்கு உண்டு. மற்ற மாநில சிறுபான்மையினருக்கான சலுகைகள், உரிமைகள் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு இல்லை.  மற்ற மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் காஷ்மீர் போன்ற எட்டு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு உண்டு. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டி, மறுபுறம் மத வாரியாக எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து சலுகைகள் வழங்கி வருகின்றன அரசுகள்.
இந்திய அரசியல் சாசனத்தில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மை என்ற சொல் இடம்பெறவில்லை; அரசியல் சாசனத்தின் முன்னுரையிலும் கூறப்படவில்லை.  பின்னர் வந்த இந்திரா காந்திதான் மதச்சார்பின்மை என்ற சொல்லை இணைத்தார். ஆனால், அரசுகளின் திட்டங்கள், சட்டங்கள் எல்லாம் மத வழியில்தான் செய்யப்படுகின்றன.  நம் நாடு இரண்டாகத் துண்டாடப்பட்டதே மத வழியில்தான் என்பதை யாரும் மறக்க இயலாது.  
நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமாக வேட்பாளர் தேர்வு செய்யப்படும்போதும், கூட்டணிகள் தத்தம் கட்சியின் பலத்தைக் காட்டி அதிக இடங்கள் கோரும்போதும் சாதி, மதம் முக்கியப் பங்காற்றுகிறது.  இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இந்து மக்களின் எண்ணிக்கை குறையுமானால் நாட்டின் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
எல்லா அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு சாதி, மதத்தைப் பற்றியும் ஒரு கணிப்பு வைத்திருக்கின்றனர்.  சிறுபான்மைச் சமூகத்தினர் தங்களின் வாக்குகளை தத்தம் மதத் தலைவர்கள், சாதித் தலைவர்கள் சொல்லும் கட்சிக்கே சிந்தாமல், சிதறாமல் வாக்களிப்பர்.  இதனால், சிறுபான்மையோர் அம்சத்தில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே பேசுவர்; எழுதுவர். பெரும்பான்மை சமூகத்தினருக்கு அப்படி யாரும் ஒருமித்த தலைவர்கள் இல்லை.
மதச்சார்பற்றவர்கள் எல்லோரும் பெரும்பான்மை சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் எல்லோரும் இந்த சமூக மக்களை மதிப்பதில்லை. இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை.  இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய சித்தாந்தமான அறவழிப் போராட்டத்தைத் தோற்றுவித்த அண்ணல் காந்தியடிகளின் விருப்பத்துக்கு மாறாகவே இந்தியா துண்டாடப்பட்டது. குறிப்பிட்ட மதத்தின் எண்ணிக்கையின் அளவுகோலே நாட்டைப் பிரிக்க முழு முதல் காரணமாக இருந்தது.  எந்தெந்தப் பகுதிகளில் எந்தச் சமூகம் எவ்வளவு எண்ணிக்கையில் வசிக்கிறது என்பதை கணக்கில் வைத்தே நாடு அளவிடப்பட்டது. 
இவற்றுக்கெல்லாம் காரணம் அரசியல் தலைவர்களின் சுயநலமே!  அவர்கள் அனைவரும் தம்மை, தங்களது கட்சியை அரசுக் கட்டிலில் அமர வைப்பதற்கும், காலம் காலமாய் நிலைபெறுவதற்கும் சாதி, மதத்தின் பெயரால் செய்யப்படும் சித்து விளையாட்டுகள். பொதுவாக, நம் நாடு மட்டுமல்லாது, மக்களாட்சி நடைபெறும் குடியரசு நாடுகளில் எல்லாம் அரசு, அதிகாரம் ஆட்சி என்பது எல்லாம் அவர்கள் தேர்தலில் பெறும் வாக்கு அடிப்படையில்தான்.
 ஆனாலும், தங்களின் சுய நலத்துக்கு ஏற்ப தேர்தலுக்கு முன்பு ஒரு கொள்கை, ஒரு முடிவு என்று கூறியவர்கள், தேர்தலுக்குப் பிறகு சொந்த லாபங்களுக்காக எதிர்மறையான முடிவுகளை எடுப்பது கண்கூடு.  இதற்கு இவர்களின் பொருள் விளங்கா கூட்டணிக்கு "கூட்டணி தர்மம்' என்று பெயர் சூட்டுவதும் விந்தைதான்.  வேண்டும் எனில் தேர்தலுக்காக பாகற்காயும் இவர்களுக்கு இனிக்கும்!  வேண்டாம் எனில் பனங்கற்கண்டும் கசக்கும்!
இந்த நாட்டில் மத வழியில் சிறுபான்மையோர் ஒற்றுமையாக இருப்பதைப் போன்று பெரும்பான்மையோர் ஒற்றுமையாய் ஒரே குரலில் ஒலிக்கத் தொடங்குவார்கள் எனில் எல்லோருக்கும் நன்மையே விளையும்.  சிறுபான்மையோரின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தாம் என்ற பிம்பம் மறைந்து எல்லோரும் எல்லா மக்களுக்கும் பொதுவாகச் சிந்திக்கத் தொடங்குவார்கள்.  மகாகவி பாரதி  சொன்ன "எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை' என்ற காலம் வர வேண்டும். யார் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த நாட்டின் தேசிய இனம் இந்து சமயம் மட்டுமே!  ஏன் எனில், இந்து சமயத்தில்தான் சமயப் பொறையுண்டு.  சமயவாதிகளும் உண்டு.  நாத்திகவாதிகளும் உண்டு.  பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பக்தரும் மேலை நாட்டு அறிஞருமான பால் பிரண்டன் கூறியது  போன்று, இந்த நாட்டில் இருக்கும் நதிகள், மலைகள், வனங்கள் எல்லாமே இறைவனின் அம்சம் பொருந்தியவைதான்.  "யோக úக்ஷமம்  வஹாம்யஹம்'  (யோக úக்ஷமத்தை நான் அடையச் செய்கிறேன்) என்ற வேத வாக்கும் "யாதும் 
ஊரே யாவரும் கேளிர்' என்ற புனித வாக்கியமும் பொருள் பொதிந்தவை.
பிரபஞ்சத்தையே ஒரு குடும்பமாகக் கருதி 'வசுதைவ குடும்பகம்' என்றனர் நம் முன்னோர்.  எனவே, மத வழியில் சிறுபான்மையோர், பெரும்பான்மையோர் என்றும் பிரித்தல் வேண்டாம். 
வேண்டுமெனில், அது நியாயமாக இருக்க வேண்டும்.  வாக்கு வங்கிக்காக இந்த நாட்டின் ஆதிகுடி மக்களை, தொல் சமய மக்களை அழிக்க வேண்டாம். இந்துக்களின் வளர்ச்சி விகிதம் எண்ணிக்கையில் குறைவுபடுமாயின், அவர்களின் நலம் பழுதுபடுமாயின் தேசிய அளவில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும்.

கட்டுரையாளர்: தலைவர், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/07/ஏன்-இந்தப்-பாரபட்சம்-3108730.html
3108019 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் காசேதான் கடவுளோ? முனைவர் அருணன் கபிலன் DIN Wednesday, March 6, 2019 04:39 AM +0530
உலகத்திலேயே மிகவும் அழுக்கான பொருள் எது என்று கேட்டால் உடனே நினைவுக்கு வருவது பணம்தான். பல கைகளிலும் பல பைகளிலும் புழங்குவதால் புற அழுக்குப் படிவதுடன், பல தீய செயல்களுக்கும் துணை புரிவதால் அக அழுக்கும் சேர்ந்து பணம் அழுக்கின் குறியீடாகவே மாறிப் போகிறது.

திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் படிக்காசு தந்த இறைவன் அதில் திருஞானசம்பந்தருக்கு மட்டும் குற்றமுடைய காசினைத் தந்து விட்டாராம். அதனாலேயே அந்தத் திருப்பதிகம் "வாசிதீரவே காசு நல்குவீர்' என்றே தொடங்குகிறது. இறைவன் தந்த காசிலேயே அழுக்கு இருந்திருக்கிறது என்றால் என்ன சொல்வது? அரிமர்த்தன பாண்டியன் குடிமக்களிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு படை பலத்தைப் பெருக்குவதற்காக அயல் தேசத்துக் குதிரைகளை வாங்குவதற்காகத்தான் திருவாதவூரராகிய மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தான். ஆனால், இறைவனோ திருவிளையாடல் புரிந்து அந்தப் பணத்தை மக்களுக்கே சென்று சேரும் வகையில் சமுதாய மையமாகிய கோயிலைக் கட்டும்படி செய்து விட்டார். 

கள்ளப் பணமாக வேண்டியதை நல்ல பணமாக்கிய முதல் முயற்சி அது.

பண்ட மாற்றுக் காலத்தில் இல்லாத இடர்ப்பாடு, இப்போது பணப் பரிவர்த்தனை வந்த பின்னால் உழைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. எதையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என்றால், எல்லோரிடமும் பணம் இருக்குமென்றால், பொருளை யார் உற்பத்தி செய்வது? இதில் பெரிதும் பாதிக்கப்படுவது உழவர்கள்தான். உழவின் பெருமையை மறைத்திருக்கிறது பணம். பணத்தை நிலத்தில் கொட்டினால் பயிர்கள் விளைந்து விடாது. பசிக்கும் வயிற்றுக்கு இலையில் பணத்தைக் கொட்டினால் வயிறு நிறைந்து விடாது.

ஆனாலும், பொருளாதாரம் என்றால் பணத்தை மட்டுமே நம்புகிற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூலாதாரமான இயற்கை அழிந்து கொண்டிருக்க, அதையெல்லாம் அழித்தும் ஒழித்தும் பெட்டி பெட்டியாகப் பணத்தை (அச்சடிக்கப்பட்ட காகிதத்தை) குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையே நாமும் பின்பற்றுவதற்கு விரும்புகிறோம்.

எல்லாமே வணிகமயமாகிப் போன சூழலில் மனிதாபிமானம் மட்டும் விலை கேட்காதா என்ன? பசிக்கு உணவிடும் பரிவும், தாகத்துக்கு நீர் தரும் தயையும் பணத்தினாலல்லவோ வியாபாரம் பேசுகிறது. "ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின்' என்றார் திருமூலர். விருந்தோம்பலில் செழித்தோங்கியிருந்தது தமிழ் மரபு. இன்று உணவு விடுதிகளால் நிறைந்து போயிருக்கிறது. "குடிக்க நீர் கேட்டால் குவளையிலே பால் தருவோம், தலைக்கு அணை கேட்டால் பஞ்சணையை முன்விரிப்போம்' என்று பரிவு காட்டிய தமிழகம்தான் தண்ணீரை நெகிழிக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. 

காரணம் பணம்தானே!

பணம் கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் யாரும் நீர்நிலையை மதிக்கவில்லை. பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காது என்ற நிலைவந்தால் பணத்தை மதிப்பார்களா? நீர்நிலைகளைக் காப்பார்களா? பொருளை முதன்மைப்படுத்தும் சமூகத்தில் அறத்துக்குத் தனித்த மதிப்பு கிட்டப் போவதில்லை. "எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை' என்றார் பாரதியார். ஆனால், எல்லாரும் ஓர்நிறை நின்று எதையும் ஒருவிலைக்கு விற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் நம்மையும் சேர்த்தே.

இந்தியச் சமூகத்தின் பழம்பெரும் மரபான வேளாண் தொழில் சிதைந்ததோடு மட்டுமில்லாமல் வேளாண் குடும்பங்களும் சிதைந்து போயின. காரணம் பணத்தாலே."உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாத' அளவுக்குத் தன்னையே தந்துவிடும் அர்ப்பணிப்பு வாழ்வின் அடையாளமாக இருந்த உழவனுடைய வாழ்க்கையை நாசமாக்கியது பணம்தானே.

உண்மைக்கும் ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் தந்து தன் வாழ்க்கையையே வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காகத் தியாகம் செய்து கொண்ட ஆசிரியர்களை- "சம்பள உயர்வு கேட்டுப் போராட்டத்தில் குதித்தார்கள்'  என்று சமூகத்தைக் குற்றஞ்சாட்ட வைத்ததும் பணம்தானே.

எங்கு நோக்கினும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் காரணம் என்ன? எல்லாத் துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் எல்லா முறைகேடுகளுக்கும் எதுகாரணம்?  பணம்தானே? ஏழையென்றும் செல்வரென்றும் மனிதரைப் பிரித்து உழைப்பவரைத் தாழ்த்தி, தன்னை வைத்திருப்பவரை உயர்த்திப் பேதங்களை உண்டாக்குவது எது? பணம்தானே?
இந்தச் சின்னத்தனங்களையெல்லாம் உருவாக்குவது பணம் என்பதனால்தான் "பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று' கவிதா தேவியிடம் பாரதியார் சரணடைகிறார்.

"பணம் பத்தும் செய்யும்', "பணம் பாதாளம் வரை பாயும்', "பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கிராம வழக்கில் சொல்லப்படுகிற பழமொழிகள் பணத்தின் இழிவையே உணர்த்துகின்றன. "கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரையில் சில்லறை தேவை' என்று அனுபவமொழிகள் தோன்றியதோடு மட்டுமின்றி இறைவன் உறையும் கருவறைக்குள்ளும் காசு கொடுத்தால் மாலை மரியாதைகளோடு "முதல் தரிசனம்' என்றும், காசு இல்லாதவர்களுக்குக் கால் கடுக்க நின்று "தர்ம தரிசனம்' என்றும் கடவுளையே பேரம் பேச வைத்ததும் இந்தக் காசுதானே? 

ஆனால், இந்தப் பணமில்லாமலும் வாழ்க்கை இல்லை. "பணமில்லாதவன் பிணம்' என்கிற பழமொழியைத் திருவள்ளுவர் அன்றைய நிலையில் வேறு வகையாக, "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்கிறார். உலகத்துத் துன்பங்களிலெல்லாம் கொடிய துன்பம் வறுமையும்  ஏழ்மையுமே என்பதால் "இன்மையில் இன்னாததில் என்றும் இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்று எடுத்த தாய் வேண்டாள்- செல்லாதவன் வாயிற் சொல்' என்றும் குறிப்பிடுவதைப் பொருத்திக் காண்க.

கொடுமைகளுக்கெல்லாம் அடிவேரான வறுமைதான் பணத்தைத் தேடச் செய்கிறது என்றால், அளவுக்கு மேல் சேர்த்த பணமோ மீண்டும் கொடுமை
களையும் முறைகேடுகளையும் உருவாக்கி விடுகிறதே. இருக்கிறவன் உயிருக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான்.

ஆனால், இல்லாதவன் எந்த விலைக்கும் தன்னுயிரையே விற்றுவிடத் தயாராக இருக்கிறான். இருவருக்கும் இடையில் நின்று கொண்டு ஏளனம் செய்வது பணம்தானே? உலகத்தில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் உண்டு. நிறத்தாலும், பலத்தாலும், குணத்தாலும் என அவை நீண்ட

போதும் பணத்தால் வருகிற ஏற்றத்தாழ்வுகள்தான் சமுதாயத்தின் எல்லாத் தீமைகளுக்கும் முதல் காரணமாக விளங்குகின்றன.

மரீஇத்தாம் கொண்டாரைக்
கொண்டக்கால் போலாது,
பிரியும்கால் பிறர்எள்ளப்
பீடுஇன்றி புறம்மாறும்
திருவினும் நிலைஇல்லாப்
பொருளையும் நச்சுபவோ?
என்று பாலைக்கலியில் பெருங்கடுங்கோ பணத்தின் இழிவைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
பாடுபட்டுத்தேடிப் பணத்தைப்
புதைத்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
- கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே
அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்

என்று பாவிகள் சேர்த்த பணத்தின் நிலையினை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டிப் பொருமுகிறார் ஒளவையார்.

இதையே சுவாமி விவேகானந்தரும் "பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல' என்று வழிமொழிகிறார். (இதற்குக் காரணம் உண்டு. எதையும் முற்றிலும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் இயல்புடையவர்  சுவாமி விவேகானந்தர்.)

தன் குருவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதே பணத்தை அளவீடாகக் கொண்டுதான். பணத்தையும் பெண்ணையும் துறந்தவர்களால்தான் கடவுளை அடைய முடியும் என்று சொல்கிறார் இராமகிருஷ்ணர்; அவர் எப்படிப் பணத்தை மதிக்கிறார் என்பதைச் சோதிக்க விரும்பிய விவேகானந்தர் அவர் இல்லாத வேளையில், 
அவருடைய படுக்கையில் தலையணைக்கடியில் பணத்தை மறைத்து வைத்து விட்டுக் காத்திருந்தார். சற்று நேரத்தில் அறைக்குத் திரும்பிய இராமகிருஷ்ணர் தலையணையில் சற்றுச் சாய்ந்தார். உடனே ஏதோ தீண்டியதைப் போலத் துள்ளிக் குதித்து எழுந்து தலையணையை எடுத்து  "எனக்கு ஒவ்வாத பொருள் ஏதோ அடியில் உள்ளது'  என்று உதறினார். அந்தப் பணம் துள்ளி விழுந்தது. விவேகானந்தருக்கு குரு தரிசனம் கிடைப்பதற்குப் பணமே காரணமாக அமைந்து விட்டது.

திருவள்ளுவர் அறத்தை முதலில் வைத்து விட்டு, நடுவில் வைத்த பொருளைச் செயல்வகையாகக் குறிப்பிடும்போது, "பொருளல்லவரையும் பொருளாகச் செய்து விடும்' என்று ஏளனத்தோடு குறிப்பிடுகிறார். "அருளாலும் அன்பாலும் முறையாகப் பெறப்படாத பொருளை தீயவர்கள் கரத்திலேயே புரள விடுக' என்று சினக்கிறார். இன்றைக்குப் புரள்கிற புரட்டுகள் யாவரும் அறிந்ததுதானே?

ஆனால், அவர் குறிப்பிடுகிற பொருளின் இன்னொரு வகையும் உண்டு. அது பொருளென்னும் பொய்யா விளக்கம். அது தூய்மையானது. உழைப்பின் வியர்வையில் பூத்த பொன் போன்றது. அறத்தால் வரும் நல்ல இன்பத்தைத் தரும் அந்தப் பொருள் திறனறிந்து தேடிப் பெற்ற நற்பொருள். "அந்தப் பொருளைச் செய்க' என்று நமக்கு ஆணையிடுகிறார்.

கொள்ளையடிக்கவோ, சம்பாதிக்கவோ கூட அல்ல "செய்க' என்று அழுத்தமாகவே குறிப்பிடுகிறார். செய்தல் என்பது விற்பனையோ, வணிகமோ அல்ல. உற்பத்தி, விளைவிப்பு. புறப் பொருள்கள் விளைந்து கிடக்கிற சந்தையாகக் கிடக்கிற நம் நாட்டில் அகப் பொருள்களாகிய அறமும் ஒழுக்கமும் விளையுமானால் இந்த ஈனப் பணத்தினால் என்ன செய்ய முடியும் என்பதாகத் திருவள்ளுவர் அந்தப் பொருளைச் "செய்க' என்கிறார்.நமது எதிரிகளின் செருக்கினை அறுப்பதற்கு அதனை விடவும் கூர்மையான ஆயுதம் வேறு இல்லை என்று நற்பொருளையே குறிப்பிடுகிறார்.

நீரைப் போல தான் சேர்ந்த இடத்தைப் பொருத்து புனிதத்தையும் அழுக்கையும் பணம் எய்துகிறது. பணம் தேவைதான். பணம் மட்டும்தான் தேவை என்றால் யாவும் பொய்யாகும்? வேண்டாமை அன்ன விழுச்செல்வம் வேறு உண்டா? காசுதான் கடவுளா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/06/காசேதான்-கடவுளோ-3108019.html
3107390 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு... என். முருகன் DIN Tuesday, March 5, 2019 02:47 AM +0530 உலகின் பல நாடுகளில், நகர்ப்புறங்களின் வளர்ச்சியை பொருளாதார முன்னேற்றத்துக்காக உபயோகித்தும், சமூக வளர்ச்சியை ஊக்கப்படுத்தியும் செழிப்படைந்ததைக் கண்டு இந்தியாவிலும் இதுபோல் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் உருவாகின. இது பற்றிய முழுமையான ஓர் ஆராய்ச்சியை 21 மாதங்களாக ஓர் அனுபவமிக்க நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் பல திடமான கருத்துகள் உருவாகின.

அவற்றின் அடிப்படையில், நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம் உருவாகிய நிலையிலும், அதை மேலும் அதிகப்படுத்த நமது நகரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாகி, அவர்கள் பணி செய்ய முடியாமலும், தங்கள் பிள்ளைகளையோ, மற்ற அமைப்புகளையோ சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆனால், நம் நாட்டின் நிலைமையே வேறு.  நிறைய இளைஞர்களையும், வளர்ந்துவரும் ஜனத்தொகையையும் கொண்ட நம் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.  அதற்கு நமது நகரங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகிறது.

நகர்ப்புற வளர்ச்சியை ஆராய்ந்ததில், நம் நாட்டின் நகரங்கள் 70 சதவீத புதிய வேலைவாய்ப்புகளை, 2030-ஆவது ஆண்டுக்குள் உருவாக்க முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்தியப் பொருளாதாரத்தின் தேசிய வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பி. 70% உயரும் எனவும், சராசரி தனி மனிதனின் வருமானம் நான்கு மடங்கு உயரும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2001-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 29 கோடிகள்; அது 2008-இல் 34 கோடிகளாக அதிகரித்துள்ளது. 2030-ஆவது ஆண்டில் நகர்ப்புற மக்கள்தொகை 59 கோடிகளாக அதிகரித்துவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இது, இதுவரையிலும் நம் நாட்டில் நடந்திடாத நகர்ப்புற வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.  1971 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலும், இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 23 கோடிகள் அதிகரித்தது.

இந்த 40 ஆண்டுகளின் மக்கள்தொகை வளர்ச்சியை 1998 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 25 கோடியாக அதிகரித்ததுடன் ஒப்பிட்டால், இரண்டு மடங்கு மக்கள்தொகை பெருக்கம் நமக்கு புரியும்.

ஒரு நாட்டின் நகர்ப்புறங்கள் மிக அதிகமாக வளர்ந்தால், அதைச் சரியான முறையில் நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற நடவடிக்கைகளும், திட்டங்களும் உருவாக்கப்படவில்லை.  இன்றைய நிலைமையிலும், 

அதிகமான நகர்ப்புறங்கள் உருவாவது நாட்டின் நலனுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்ற விவாதம் நம்மிடையே நடைபெற்று வருகிறது.
நகரங்கள் அதிகமாகி கிராமப்புறங்கள் குறைவது நாம் கிராம மக்களிடமிருந்து வளர்ச்சியை எடுத்து, ஏழை மக்களின் வாழ்க்கையை கவனிக்காமல் விட்டு விடுகிறோமா எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இது ஒரு தவறான எண்ண ஓட்டம் என்பது முன்னேறிய நாடுகள் பல நமக்கு அளிக்கும் பாடம்.  கிராமங்களும், நகரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றுக்குப் பரவும் தன்மை உண்டு.  நகர்ப்புறங்களின் வளர்ச்சி, 85%  வரிகளை நம் அரசுக்கு உருவாக்கி அதன் பலனால் நாடு முழுவதும் வளர்ச்சி எட்டப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் 70 பெரிய நகரங்களை ஒட்டி வசிக்கும் 20 கோடி கிராமங்களின் மக்கள் இந்த நகரங்களின் வளர்ச்சியால் நேரடிப் பலன்களை பெறுவார்கள். மேலும், நகரங்களில் பெரிய செல்வந்தர்களும் வசதி படைத்தவர்களும்தான் வாழ்கிறார்கள் என்ற தவறான எண்ணம்  பலரிடம் உருவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 75% மக்கள், அடித்தட்டில் வசிப்பவர்கள் என்பதும் அவர்களின் 
சராசரி வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.80 என்பதையும் நாம் உணர வேண்டும்.  எனவே நமது நகர்ப்புறங்களின் வளர்ச்சி என்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வெளிநாட்டவர் நமது நாட்டின் நகர்ப்புறத்தில் தொழில் முதலீடுகளை செய்யத் தயங்குவார்கள் என்பது அனுபவம் நமக்கு தந்த பாடம். இதனால், நமது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் தற்போதுள்ள 7.4%-லிருந்து குறைந்து போகும் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.  இதன் முழு 
விவரங்களையும் நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனத்தின் 21 மாத ஆய்வு சீராகப் பட்டியலிட்டு விவரித்துள்ளது.  இந்த ஆய்வில் 15 இந்திய நகரங்களும், உலகின் மற்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நகரங்களும், 100 தலைசிறந்த இந்திய மற்றும் பன்னாட்டு நிபுணர்களும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில மத்திய அரசின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பல யோசனைகள் வழங்கப்பட்டு, அவை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டுள்ளது.  இவை நிறைவேற்றப்பட்டால் 7.4% தேசிய வளர்ச்சிக் குறியீடாகிய ஜி.டி.பி., 8%  அல்லது 9%-மாக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெருவாரியான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  உலக அரங்கிலும், இது எல்லோரும் உற்றுநோக்கும் வளர்ச்சி. நம் நாட்டின், 68 நகரங்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடனும், 13 நகரங்கள் 40 லட்சம் மக்களைக்  கொண்டவையாகவும், 6 பெருநகரங்கள் ஒரு கோடி மக்கள் உள்ள நகரங்களாகவும் உள்ளன.  மும்பை மற்றும் தில்லி ஆகிய இரு நகரங்களும் 2030-ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பெரிய நகரங்களில் இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளன.  
மும்பை நகரின் வரி வருமானம் 2030-ஆம் ஆண்டில் 2,65,000 கோடி டாலர்
களாகி (ரூ.18.81 லட்சம் கோடி), கொலம்பியா, போர்ச்சுகல், மலேசியா ஆகிய நாடுகளின் ஜி.டி.பி. எனப்படும் தேசிய வருமானத்துக்கு மேல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  அந்த ஆண்டில், ஆண்டுக்கு ரூ.99,000 வருமானம் உள்ள குடும்பங்கள் 20%-க்கும் கீழ் குறைந்து போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடுத்தரக் குடும்பங்களின் வருமானம், ஆண்டுக்கு 
ரூ.2 லட்சம்  முதல் ரூ.10 லட்சம் எனக் கணக்கிடப்பட்டு, நம் நாட்டில் 3.2 கோடி குடும்பங்கள் இப்போது உள்ளன.  
அது,  2030-ஆம் ஆண்டில் 14 கோடியே 70 லட்சமாகப் பெருகிவிடும்.
இதனால், நமது மக்களின் தேவை அதிகமாகி, பொருளாதார வளர்ச்சி பெருகும். ஆனால், இதன் உடனடித் தேவையாக நகரங்களின் கட்டமைப்புகள், 
போக்குவரத்து, சுகாதாரம் தொடர்புடையவை, கல்வி மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் உருவாக வேண்டிய அவசரநிலை உருவாகியுள்ளது.  உதாரணமாக, 70 கோடி குடியிருப்புக் கட்டடங்களும், 90 கோடி வியாபார அமைப்பிடங்களும்  மக்களுக்குத் தேவைப்படும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.  இவை கட்டப்படும்போது வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நகரங்களின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திவிடும் என்பது அனுபவம் நமக்குத் தந்த பாடம்.  வியாபாரப் போட்டிகளால் பொருள்களின் விலை குறையும்.  பெரிய அளவில் நீர் நிலைகளும், கழிவு நீர் அகற்றும் நிலையங்களும் உருவாக்கப்பட்டு, அந்தப் பணிகள் எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்.  
மக்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் அடிப்படைத் தேவைகள், 20 முதல் 50% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது போன்ற பொதுப்பணிகளுக்கான செலவு குறையும்பட்சத்தில்,  அந்தச் சேமிப்பு ஏழை மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படலாம்.
மேலே விவரிக்கப்பட்ட நகரங்களின் எல்லா வளர்ச்சிகளும், இந்திய மக்களைச் சென்றடைய நல்ல திட்டமிட்ட செலவுகளைச் செய்ய அரசு உடனடியாக முன்வர வேண்டும்.  இந்தியாவின் வருஷாந்திர தனிமனித கட்டமைப்புச் செலவு, 
"பர் கேபிட்டா செலவு' எனப்படும் வகையில் 17 டாலர்களே (ரூ.1,207)!  இது சீனாவில் 116 டாலர்கள் (ரூ.8,236); பிரிட்டனில் 391 டாலர்கள் (ரூ.27,761) என்பது 
கவனிக்கத்தக்கது. அடுத்த 20 ஆண்டுகளில், 
நகரங்களின் கட்டமைப்பில் ரூ.53.1 லட்சம் கோடிகளை நாம் செலவிட்டால் பெரும் வளர்ச்சியைக் காணமுடியும்.
இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கொள்கைகளை வகுக்கும் ஆட்சியாளர்களும் அரசு உயர் 
அதிகாரிகளும் தமிழகம் உள்பட இந்திய நகரங்களின் கட்டமைப்பில் அக்கறைசெலுத்த வேண்டும் என்பதே நாடு, பொது மக்களின் நலனில் அக்கறை உள்ள சமூக 
ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.  தரமான ஆராய்ச்சி சமுதாயத்துக்குப் பலன் அளித்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்:ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/05/ஆட்சியாளர்களின்-கவனத்துக்கு-3107390.html
3107389 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் சுத்தம் சோறு போடும்! முனைவர் மீனாசுந்தர் DIN Tuesday, March 5, 2019 02:46 AM +0530 "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்' என்றார் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதில் உடல் சுத்தமல்லாது சுற்றுச்சூழலின் சுத்தத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.  சுற்றுச்சூழலின் சுத்தத்தைப் பேணிக் காப்பதில் மழைக்குப் பெரும் பங்குண்டு என்பதாலேயே புறந்தூய்மை நீரால் அமையும் என்று பரந்த நோக்கில் படைத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

இந்தியாவில் சுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்துவோர் 28 சதவீத மக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம்.  மேலும் 65 சதவீத மக்கள் இன்றும் முழுமையான கழிப்பறை வசதிகளைப் பெறவில்லையெனவும், 50 சதவீத மக்கள் இன்றும் திறந்த வெளியில்தான் மலம்  கழித்து வருவதாகவும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.  மேலும், கழிவறை வசதியிருந்தும் கூட அதை முறையாக 40 சதவீதம் பேர் பயன்படுத்துவதில்லை.

மக்கள் புழங்கக்கூடிய பொது இடங்களில் மிக முக்கியமானது பேருந்து நிலையங்கள். அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் கூடக்கூடிய சுகாதாரமற்ற இடமாக உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளின் மூலம் மிகப் பெரிய கொடிய நோய்கள் மக்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.  வயிற்றுப்போக்கு,  சுவாச நோய்கள், நிமோனியா, டெங்கு,  சிக்குன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்துபவையாக பொது இடங்களின் கழிப்பறைகள் உள்ளன என்றால் மிகையில்லை.
ஒரு நகரத்தின் தூய்மையை அதன் தூய்மையை வைத்துக் கணித்துவிட முடியும். மேலும், அதை நிர்வகிக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு விடமுடியும்.   நகரங்களின் தூய்மைப் பணி மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களின் தியாகத்திற்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் அவர்கள் பணி செய் யவேண்டியுள்ளது.
ஊழியர்களை அதிகாரிகள் திட்டுவது, பணிச்சூழலை மாற்றி அவர்களை இம்சிப்பது போன்றவை அல்லாமல் அவர்களை அரவணைத்துப் பணி செய்வதில் அக்கறை செலுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும். ஊழியர்கள் அனைவரையும் வாரம் ஒரு முறை ஒருங்கிணைத்து தகுந்த மேற்பார்வையோடு பேருந்து நிலையங்களைச் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் ஏன் மேற்கொள்வதில்லை?
கட்டணக் கழிப்பறைகள் என்ற பெயர்ப்பலகையோடு நகரங்களில் கழிப்பறை வைத்திருப்பதே மிகப் பெரிய முரண்பாடாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீரையும், கழிப்பறை வசதியையும் செய்து கொடுக்க வேண்டியது ஓர் அரசின் பிரதானப் பணியாகும். கட்டணக் கழிப்பிடங்களில் கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லும் இடமாவது தூய்மையாக உள்ளதா என்றால் அதுவுமில்லை.
இதற்குக் காரணமென்ன? கட்டணக் கழிப்பறை ஒப்பந்தங்கள் யாருக்குத் தரப்
படுகின்றன? என்ற பல வினாக்கள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அதிகார மட்டங்களில் வேண்டப்பட்டவருக்குத் தரப்படும் இந்த ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் வேண்டுமென்றே இலவசக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யாமல் தடுக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலவசக் கழிப்பிடங்கள் என்ற பெயரில் ஓர் அருவருக்கத்தக்க இடத்தை வைத்திருந்தால்தான் மக்கள் தானாகவே  சற்று சுகாதாரமான இடம் நோக்கி கட்டணக் கழிப்பிடத்திற்கு வருகை தருவார்கள் என்பதை சரியாகப் புரிந்து அவர்கள் செயல்படுகின்றனர். கட்டணக் கழிப்பிடங்களை முழுவதுமாக ஒழித்துவிட்டு இயற்கை உபாதைகளுக்கு இலவச சுகாதாரமான கழிப்பிடங்களை அதிக அளவில் ஏற்படுத்துவதே சிறந்தது.
நோய்கள் அச்சமூட்டும் நேரத்தில் மட்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பிரசார நடவடிக்கைகள் உச்சம் பெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது மட்டும் சில ஊழியர்கள் வீடுகளில் நீர் தேங்கியுள்ளதா? தென்னை மட்டை, டயர்  போன்றவற்றில் நீர் தேங்கியுள்ளதா எனக் கேட்டு வருகின்றனர். அந்தநேரத்தில் தூய்மை பேணாதவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரத்தின் தலையாய இடத்தில் இவ்வளவு தூய்மைச் சீர்கேட்டை வைத்துக்கொண்டு சாமானிய மக்களுக்கு அபராதம் விதிப்பது எவ்வளவு முரண்?
நீர்ச் சுத்தம், நிலச் சுத்தம் ஆகியவை இன்றைய உலகின் அடிப்படைத் தேவைகளாகியுள்ளன. இயற்கைப் பேரிடர்களைத் தவிர்த்து சுகாதாரமின்மை காரணமாக ஏற்படும் நோயின் பொருட்டு மக்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது. விருந்தினர் அறை எப்படிச் சுத்தமாக இருக்கிறதோ அதே போன்று கழிப்பிடமும் சுத்தமாக இருக்க வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிலிருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டாராம் மகாத்மா காந்தி.
"பதருபி காந்தி' என்ற நூலில் அனுபந்தோபத்யாயா குறிப்பிடும் இந்தக் கருத்து அனைவரும் பின்பற்றத் தகுந்தது. சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் பேருந்து நிலையங்களை நிர்வகிப்பதில் மக்களின் விழிப்புணர்வும், அக்கறையும் மிகவும் அவசியமானதாகும். மதுப் பிரியர்கள், கெடு செயல்களில் ஈடுபடுவோர், மனம்போன போக்கில் நடந்து கொள்வோர் அவசியம் திருந்த வேண்டும்.  இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர்களைத் திருத்த வேண்டும். ஏனெனில், பேருந்து நிலையக் கழிப்பிடங்களில்தான் குப்பைத் தொட்டிகளை விடவும் கூடுதலாக மதுப் புட்டிகளும், சிகரெட் துண்டுகளும் சிதறிக் கிடக்கின்றன.
பேருந்து நிலையத்தைத் தூய்மை நிறைந்த இடமாக மாற்ற வேண்டும். பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியிலோ அல்லது மையத்திலோ அழகிய பூங்காவை அமைத்துப் பராமரிக்க வேண்டும். அதற்குள் ஒரு சிறிய நூலகத்தை அமைக்கலாம். சுவர்களில் 
அழகிய ஓவியங்கள், சங்க இலக்கியக் காட்சிகள், தமிழின் மேன்மைகள், அறக் கருத்துகள் இடம் பெறச் செய்யலாம். எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புதல் போன்ற செயல்களுக்குக் கடுமையான எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்து, பொது மக்கள் அவற்றைத் தவிர்க்கும்படி செய்ய வேண்டும்.
 பேருந்து நிலையங்களை மண்ணுலகச் சொர்க்கமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்ற தமிழ் மரபின் பிள்ளைகள் நாம். 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/05/சுத்தம்-சோறு-போடும்-3107389.html
3106811 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் அரசியல்வாதிகளுக்கு ஓஷோவின் அறிவுரை! இடைமருதூர் கி. மஞ்சுளா DIN Monday, March 4, 2019 02:27 AM +0530 மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்' என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும்,  "மக்களால்... மக்களுக்காக... மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என்று  ஆப்ரகாம் லிங்கனும் மக்களாட்சியை வரையறுத்தனர். ஆனால் இன்றைய மக்களாட்சியில் பொதுமக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கோ, தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கோ அனுமதி இல்லை!   

ஏ.சுப்பராயலுவைத் தொடர்ந்து, சி.இராஜகோபாலாச்சாரி,  த.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பூ.ச.குமாரசாமி ராஜா, கே.காமராஜர், எம். பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை என நம் தமிழகத்தை ஆண்டவர்களின் நல்லாட்சிப் பட்டியல் நீளும்.  அவர்கள் இன்றைக்கும் புகழ்ந்து பேசப்படுவதற்குக் காரணம், அவர்கள் அரசியலை தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி நல்லாட்சி செய்ததால்தான். 

அரசியல்வாதியாக வேண்டும் என்பவர்கள் கவனத்திற்காக தத்துவ ஞானி ஓஷோ ஓர் அற்புதமான பதிவை முன்வைத்துள்ளார். 298 சூத்திரங்கள் உள்ள "அஷ்டாவக்ர-ஸம்ஹிதா'வில் 133 முதல் 163 சூத்திரங்கள் சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் இந்தப் பதிவு உள்ளது. "நான் குடும்பஸ்தனாக, சுகங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கனவு கண்டேன். பிறகு எழுத்தாளர், அரசியல்வாதி என்றெல்லாம் வளர்ச்சி பெற விரும்பினேன். 

எந்தத் துறையிலும் எனக்கு வெற்றி குறைவாகவும் தோல்வியே அதிகமாகவும் கிடைத்தது. கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன். நான் சேரவேண்டிய இடம் எது'  என்று  ஒருவர் தத்துவ ஞானியைப் பார்த்துக் கீழ்வருமாறு  கேட்கிறார் (அஷ்டாவக்ர மகாகீதை, பக். 70,73,74).   

அதற்குத் தத்துவஞானி சொல்கிறார்: "உன் கனவுகள் பலிக்கவில்லை என்பது கடவுளின் அருள்தான்! அவை பலித்திருந்தால் நீ கடவுளை என்றுமே நினைத்திருக்க மாட்டாய்.  தோல்வியின் வேதனை தூண்டுகோலாக அமைந்து மனிதனை சத்தியப் பாதையில் இட்டுச்செல்லும்.  கனவுகள் பலித்தால் மனிதன் உலக வாழ்க்கையில் அழுந்திப் போகிறான். பிறகு அவன் சத்தியத்தை ஏன் தேடிப்போவான்?  

அகங்காரம் அதிகரித்தால் கடவுளை நோக்கிப் பயணிப்பது கடினமாகிவிடும். பாவி கடவுளை அடைய முடியும். ஆனால், திமிர் பிடித்தவனால் அடைய முடியாது. நீ தோற்றது நல்லதே. உன் தோல்வியில் கடவுளின் வெற்றி அடங்கியுள்ளது. நீ (நான்)அழிவதால், அவர் (கடவுள்) தோன்ற வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர்  அரசியல்வாதியாக முடியவில்லை என்பதற்குக் காரணம், கடவுளுக்கு அவன் மீது மிகுந்த கருணை இருப்பதுதான். எந்த அரசியல்வாதியும் சுவர்க்கத்திற்குப் போக முடிந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. அரசியல் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையுமன்று. அரசியலில் நடக்கும் அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், சதிகள், கபடங்கள் முதலியவை நரகத்துக்கே பொருத்தமானவை.

ஒருவர் அரசியலில் சேர்ந்து பாவச் செயல்கள் காரணமாக நரகம் செல்ல நேர்ந்தால் ஒரு பிரச்னை. அங்கு அவருக்கு முன்னால் சென்ற ஏராளமான அரசியல்வாதிகளால் ஒரே அடைசலாக இருக்கும். அங்கும் அவர்கள் பலவிதமான மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். நரகத்தின் ஆட்சியைக் கைப்பற்றவும் முயல்வார்கள். அவர்களின் பதவி ஆசை நரகத்துக்கும் அவர்களுடன் வருகிறது' என்கிற ஓஷோ, மேலும்  ஒரு குட்டி நிகழ்ச்சியைக் கூறி விளக்குகிறார்:

"ஒருமுறை சித்திரகுப்தனின் தப்புக் கணக்கால் ஓர் அரசியல்வாதி சுவர்க்க வாசலுக்கு வந்துவிட்டார்.  அதே சமயம் இரண்டு சாதுக்களும் இறந்து சுவர்க்கத்தை வந்தடைந்தனர். சுவர்க்கக் காவலர்கள் அவர்களை ஓரமாக ஒதுங்கிக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அரசியல்வாதியை வரவேற்கச் சென்றனர். சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. சாரங்கி,  தபேலா முதலிய இசைக்கருவிகள் முழங்கின. தேவகன்னியர் நடனமாடினர். மலர்மாரி பொழியப்பட்டது.

சாதுக்கள் வருத்தப்பட்டனர். "பாவியான இவன் மண்ணுலகில் ஆரவாரமாக வாழ்ந்ததுபோலவே இங்கும் கோலாகலமாக இப்படி வரவேற்கப்படுகிறானே' என்று வேதனையடைந்தனர். நம்மை சுவர்க்க அலுவலர்கள் காத்திருக்கும்படி சொல்கிறார்களே என்று திகைத்தனர். 

அரசியல்வாதியை வரவேற்ற தேவர்களின் கூட்டம் அப்படியே முன்னேறிவிட்டது. அவர்கள் சாதுக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சாதுக்கள் வாயில்காப்பவரை அணுகி, "இது என்ன தலைகீழாக இருக்கிறதே. ஏதாவது தப்புக் கணக்கா? எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்புக் கொண்டாட்டம் கவனக்குறைவால் அந்த ஆளுக்கு அளிக்கப்பட்டுவிட்டதா? அந்த ரகசியத்தை எங்களுக்குத் தெரிவி' என்று கேட்டனர்.

வாயில் காப்பவர் ஆறுதல் கூறுகிறார்: "சாதுக்களே, பதற்றப்படாதீர்கள். உங்களைப் போன்றவர்கள் எப்போதும் சுவர்க்கத்திற்கு வந்தபடிதான் உள்ளனர். ஓர் அரசியல்வாதி இங்கு வருவதோ இதுதான் முதல் தடவை. எனவேதான் இத்தனை  கொண்டாட்டம். எங்கோ, ஏதோ தவறு நடந்துவிட்டது. இதை இனி மாற்ற முடியாது. 

சாதுக்கள் இங்கு வருவது வாடிக்கை. இதில் விசேஷமில்லாததால் வரவேற்பில்லை' என்று  கூறும் தத்துவஞானி, தன்னிடம் கேள்வி கேட்டவரைப் பார்த்து, "உலக முயற்சிகளில் தோல்வியை ஒரு வரமெனலாம். தோற்றவனுக்கு தெய்வம் துணை. வென்றவன் திமிர் பிடித்து யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டான். அதிர்ஷ்டவசமாக நீ தோற்றாய். அதனால்தான் என்னைத் தேடி வந்தாய். 

இப்போது இங்கே நீ வந்துவிட்டதால், "நான்' என்னும் உணர்வை உதறிவிடு. "நான்' என்பதைக் கைவிட்டதும் நீ போய்ச் சேரவேண்டிய இடம் தெளிவாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் நாட்டம், அரசியல் ஆர்வம், எழுத்து மூலம் புகழ், ஆசை ஆகியவை மிகச் சிறு அளவிலாவது உன் மனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். "நான்' என்னும் உணர்வு நீங்கினால் அந்தக் கறைகளும் மறைந்துவிடும்' என்கிறார் ஓஷோ. அதனால்தானோ என்னவோ பலரும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்!

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/04/அரசியல்வாதிகளுக்கு-ஓஷோவின்-அறிவுரை-3106811.html
3106810 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் "கடன்பட்டார் நெஞ்சம்போல்...' எஸ். ராமன் DIN Monday, March 4, 2019 02:25 AM +0530 சமீபத்தில் மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் பற்றிய விமர்சனங்களில் முக்கியப் பங்கு வகித்தது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி 3.4% அளவில் நிர்வகிக்கப்படும் என்ற விவரமாகும். ஆனால், வரவுக் கணக்கில் வெளிச் சந்தையில் அரசால் வாங்கப்படும் கடன்கள் சேர்க்கப்பட்டால்தான் அந்த இலக்கை எட்டமுடியும்; கடனுக்கான வட்டித் தொகை கூடுதல் செலவினங்களுக்கு வித்திட்டு, அது மக்கள் மீதான வரி சுமையாக மாற வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக சந்தை கடன் மூலம் பொருளாதார இலக்குகளை எட்ட முயற்சிப்பது விவேகமல்ல என்பதுதான் விமர்சகர்களின் வாதமாக அமைந்தது எனலாம். 

அதே போன்று, தமிழக அரசின் சமீபத்திய பட்ஜெட் பற்றிய விவாதங்களில் முக்கியப் பங்கு வகித்தது ரூ.4 லட்சம் கோடி அளவிலான அதன் கடன் சுமையும், அதற்கான ஆண்டு வட்டி ரூ.33 கோடியும் ஆகும். அரசின் இந்தக் கடன் சுமை, விவாதங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

நாட்டு நிர்வாகத்தில் அளவுக்கு அதிகமான கடன் சுமை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுவதுபோல்தான், வீட்டு நிர்வாகத்திலும் "கடன்' என்ற நிதி ஆதாரம், கூடியவரை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த மாதிரி நிதி ஆதாரங்களால் உடனடி பொருளாதார மற்றும் நிகழ்காலத்திற்கான சுகமான வாழ்க்கை போன்றவற்றுக்கு பாதுகாப்பு கிடைக்கப் பெற்றாலும், எதிர்காலத்தில் அதே பொருளாதாரத்துக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் அந்தக் கடன் பல மடங்கு பாதகம் விளைவிக்கக் கூடியது ன்பதை ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் தனி நபர் சார்ந்த கடன்களின் மொத்த அளவு அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. 2015-ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த மொத்த தனி நபர் கடன் தொகை, தற்போது ரூ.6 லட்சம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இந்திய குடும்பங்களின் 30% வரையிலான சேமிப்பின் அளவு, அண்மைக்காலமாக வெகுவாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நவீன வாழ்க்கையின் சுகங்களை உடனடியாக அனுபவிக்கத் துடிக்கும் மோகம்தான்.  சேமித்து எதிர்காலத்தில் அதன் பலன்களை அனுபவிப்பதைவிட, கடன் வாங்கியாவது அன்றாட வாழ்க்கை சுகங்களை உடனடியாக அனுபவிக்கும் மனோபாவம் நம்மிடையே பெருகி விட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  

ஒரு சாதனம் நமக்கு தேவைதானா என்பதில் கவனம் செலுத்துவதைவிட, அக்கம்பக்கத்தினர் அனுபவிப்பதை நாம் உடனடியாக அனுபவித்தாக வேண்டும் என்ற போட்டி மனப்போக்கு பலரை அவர்கள் அறியாமலேயே கடனாளியாக மாற்றி விடுகிறது.  

சேமிப்பு என்ற நல்ல பழக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்த நாம், தற்போது "கடன்' என்ற கரடு முரடான மாற்றுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம். நாம் வாங்கிய கடன் ஒரு போதும் தனியாகப் பயணிப்பதில்லை. அது, வட்டி என்ற குட்டியைப் பிரசவித்து, வேகமாக இனப்பெருக்கம் செய்யும் வல்லமை படைத்தது. ஆகவே, கடன் வாங்கியவர் அசலைத் தவிர, அதன் வட்டி என்ற குட்டிகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்.  

அந்த மாதிரி பராமரிப்பைச் செய்ய இயலாதவர்கள், அதற்கான பொருளாதார விளைவுகளைச் சந்தித்து, தங்கள் மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடுகிறது. சில சமயங்களில் கடன் தொல்லைகள், தற்கொலை முயற்சி வரை கடனாளியை இழுத்துச் சென்று விடுகிறது.

கடன் என்பது நாவால் உச்சரிக்கத் தகுதியில்லாத வார்த்தை இல்லை; கடனாக வாங்கிய தொகையை  எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியம். தொழில் சார்ந்த கடன்களில், பெறப்பட்ட கடனுக்கான அசலுடன், வட்டியையும் திருப்பிச் செலுத்தும் வகையில் பொருள் ஈட்டக்கூடிய இயந்திரங்கள் மற்றும் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு கடன் உறுதுணையாக நிற்கிறது. அந்தச் சொத்துகளைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்வதால் ஈட்டப்படும் வருமானம், வட்டியுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த உதவுகிறது.

தங்களுக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத துறையில் தொழில் துவங்குவது, அதில் கால் ஊன்றுவதற்கு முன்பே அந்தத் தொழிலை விரிவுபடுத்தும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி, கடன் தொகையை  பொருள் ஈட்டமுடியாத மற்ற சொந்தச் செலவினங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு கடனாளியைத் தள்ளி விடும். 

சில தொழில் அதிபர்களின் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள்தான் வங்கிகளில் வாராக் கடன் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. கடன் வழங்கிய வங்கிகளின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கான தொகை அரசாங்கத்தால் வழங்கப்பட்டால், அதுவே வரிச் சுமையாக மக்களின் மீது விழுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில ஏமாற்றுக்காரர்கள் திருப்பிச் செலுத்தாத பெரும் கடன் தொகையை பொது மக்கள், வரிகள் மூலம் திருப்பிச் செலுத்துகின்றனர். ஒருவர் அனுபவித்த கடன் தொகையை அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றவர்கள் திருப்பிச் செலுத்தும் அசாதாரண நிகழ்வு இது. 

தனி நபர்களைப் பொருத்தவரை, எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்படுகிறது என்பது அதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உதாரணமாக, சொந்த வீடு என்பது அனைவரது கனவாகும். அதற்கான முழுத் தொகையையும் குறுகிய கால சேமிப்பு மூலம் பெற்று விட முடியாது. எனவே, கடன் மூலம் வீடு வாங்குவது என்பது கட்டாயமாகிறது. ஆனால், அவரவர் வருமானத்துக்குத் தகுந்தபடி திட்டமிட்டு கடன் வாங்குவது அவசியமாகும். மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் குடியிருக்கும் வீட்டு வாடகைக்கு எவ்வளை தொகை ஒதுக்கப்படுகிறதோ, அந்த அளவு மாதத் தவணை கணக்கீட்டில் வீட்டுக் கடன் தொகை அமைந்தால், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமம் இருக்காது. 

வீட்டுக் கடன் என்பது 10 முதல் 30 ஆண்டுகளில் திருப்பி செலுத்தக் கூடிய நீண்ட கால கடன் திட்டமாகும். அசல் மற்றும் வட்டியைக் கணக்கில் கொண்டு, மாதாந்திர தவணைத் தொகை கணக்கிடப்படுகிறது. பொருளாதாரச் சக்திக்கு உள்பட்ட மாதாந்திர தவணைத் தொகையையும், காலவரம்பையும், முன்கூட்டியே திட்டமிட்டு தீர்மானித்துக் கொண்டால், தவணைத் தொகையை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் அதற்கான கூடுதல் செலவுகளிலிருந்து தப்பிக்கலாம். 

முந்தைய காலங்களைவிட தற்போது எளிதாகக் கிடைப்பது, கடன் வாங்க நினைக்காதவரையும் கடன் வாங்கத் தூண்டும் வர்த்தக ரீதியிலானதொலைபேசி அழைப்புகள் ஆகிய கிரியா ஊக்கிகள் எண்ணற்றவர்களை கடனாளியாக மாற்றும் காரணிகளாக அமைகின்றன. இந்த மாதிரி எளிதாகக் கிடைக்கும் கடன் திட்டங்களில் பெரும் வட்டி விகிதத்தைத் தவிர, மேலும் பல மறைமுகக் கட்டணங்கள் நிச்சயம் ஒளிந்திருக்கும். அந்த மாதிரி மறைமுக கட்டணங்களில் ஒன்று, செயலாக்கக் கட்டணம் ஆகும். 

வட்டித் தொகையோடு மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், வட்டி விகிதம் 36 சதவீதத்தை எட்டி விடும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், இந்த மாதிரி தூண்டப்பட்ட கடன் அழைப்புகளைத் தவிர்ப்பதுதான் விவேகமான செயலாகும்.

கடன் வாங்குவதை பெருமளவில் ஊக்குவிக்கும் மற்றொரு சாதனம் வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளாகும். 2015-ஆம் ஆண்டில் "கிரெடிட் கார்டு'கள் மூலம் வழங்கப்பட்ட சுமார் ரூ.25,000 கோடி கடன் தொகை, தற்போது சுமார் ரூ.85,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளின் ஒரு முனை மலர்; மற்றொரு முனை முள் ஆகும். இந்த சாதனத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம். தவறாகப் பயன்படுத்தினால், வட்டி என்ற ஆயுதத்தால் பலத்த காயங்கள் ஏற்பட்டு விடும். 

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்டால், அனுபவித்த கடனுக்கு வட்டியில்லாமல் தப்பித்து விடலாம். இல்லையென்றால், 36% வரையிலான வட்டிக்கு இரையாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கடன் வாங்கும் தருணத்தில் இருக்கும் உற்சாகம், பலருக்கு அதைத் திருப்பிச் செலுத்துவதில் இருப்பதில்லை. அதனால், கடன் கொடுத்தவருக்கும், கடன் பெற்றவர்களுக்கும் இடையேயான உறவில் அன்பு குலையும்; அல்லது  நட்பில் பெரும் விரிசல் ஏற்பட்டு, அது விரோதமாக மாறிவிடும். விரோத நடவடிக்கைகளில் பண்பு குறைபாடுகள் முளைத்துவிடும். 

பொருளாதார தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடன்கள் அன்பையும், பண்பையும் குலைத்துவிடும் என்பதால், அவற்றை அணுகுவதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டியது மிக அவசியம். கடன் பெற்ற நெஞ்சத்துடன் நிம்மதி இழந்து தவிக்கும் வாழ்க்கையைவிட, தேவையற்ற கடன்களைத் தவிர்த்து வாழும் வாழ்க்கையே சாலச் சிறந்தது ஆகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/04/கடன்பட்டார்-நெஞ்சம்போல்-3106810.html
3105541 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தெருக் குழந்தைகளின் நரக வாழ்க்கை!  ரமாமணி சுந்தர் DIN Saturday, March 2, 2019 01:19 AM +0530 உலகில் சுமார் 12 கோடி குழந்தைகள் வீடுகள் இன்றி தெருக்களில் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தெருக் குழந்தைகள் வாழும் நாடு என்ற அவப்பெயரை இந்தியா பெற்றுள்ளது. 

மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, கான்பூர், ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் தெருக் குழந்தைகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தெருக் குழந்தைகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் நடைபாதைகள்  மட்டுமல்லாமல், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், அங்காடிகள், மேம்பாலங்களின் கீழ், கோயில்கள், குருத்வாராக்கள் என்று பல பொது இடங்களை தங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளனர்.  கிராமங்களிலிருந்தும், சிறு ஊர்களிலிருந்தும்  ரயில் மூலம் பல குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி வந்து பெரு நகரங்களை வந்தடைகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 70,000 முதல் 1,20,000 குழந்தைகள் இந்தியாவின் 50 முக்கிய ரயில் நிலையங்களில் வந்திறங்குகின்றனர்.    
தெருக் குழந்தைகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.  முதலாவது வகை, தங்கள் குடும்பத்துடன் நடைபாதைகள் போன்ற பொது இடங்களில் வசிக்கும் குழந்தைகள்; இவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன்  நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நகரத்துக்குப் பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்தவர்களாக இருப்பார்கள்;
இரண்டாவது வகை,  தனியாகவோ அல்லது குழுக்களாகவோ தெருக்களில் வசிப்பவர்கள்; ஓரளவு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பவர்கள்;
மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தைகள், குடும்பத்தினருடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அல்லது யாருமற்ற அநாதைகள். இந்த மூன்று வகையினரில், உணர்வுப்பூர்வமாகவும், உள ரீதியாகவும் குடும்பத்தினரின் ஆதரவு ஒன்றும் இல்லாமல் தன்னந்தனியாக இந்த உலகில் நீச்சல் போடும் மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தை
களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது.  
குழந்தைகள் தெருக்களையே தங்கள் வாழ்விடமாகக் கொள்வதற்கு வறுமையே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டாலும், குடும்ப உறவுகளின் சிதைவு, குடும்ப வன்முறைகள் போன்ற பிரச்னைகளும் அவர்கள் நடைபாதைகளை நாடுவதற்குக் காரணமாகின்றன. கல்வியில் நாட்டமின்மை, பெற்றோரின் மரணம், மாற்றாந்தாயின் கொடுமை, தந்தையின் குடிப்பழக்கம், பெற்றோரின் கண்டிப்பான கண்காணிப்பு , பெற்றோரிடம் அடி உதைக்கு ஆளாகுவது, குடும்ப உறவினர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள் போன்றவை குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முக்கியக் காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
நகர்ப்புற வாழ்க்கையின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, நகரங்களில் தங்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக எண்ணி ஏமாந்து போகும் சிறார்கள் எண்ணிலடங்கா.இப்படி நகரங்களுக்கு வந்து சேரும் குழந்தைகள் எந்த வழியிலாவது பணம் சம்பாதித்து தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்கள்.
பிச்சை எடுப்பது, போக்குவரத்து சிக்னல்களில் பொருள்கள் விற்பது, குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு சாமான்களைப் பொறுக்குவது, தெருவோரக் கடைகள், உணவகங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகளில் எடுபிடி வேலை என இந்தக் குழந்தைகள் செய்யாத பணிகளே இல்லை. திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, போதைப் பொருள்கள் கடத்துவது என்று சட்ட விரோதமான செயல்களுக்கும் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். தெருக் குழந்தைகள் பலர் போதைப் பொருள்களைக் கடத்துவதுடன், தாங்களும் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
 இந்தக் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள்; கல்வி பெறும் வாய்ப்பை இழக்கிறார்கள்.  திறந்த வெளியில் வாழும் இவர்கள் மழை, வெயில், கடும் குளிர் போன்ற பருவங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். கழிப்பிடம், குளிப்பதற்கு மற்றும் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் போன்ற வசதிகள் இன்றி அசுத்தமான சூழ்நிலையில் வாழும் இந்தக் குழந்தைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தக்க மருத்துவ உதவி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. எந்த ஓர் அடையாளமும் இல்லாமல் வாழும் இந்தக் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. நடைபாதைகளில் படுத்துறங்கும் இந்தக் குழந்தைகள் சாலை விபத்துகளுக்குள்ளாவதும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதும் சகஜம். 
இத்தகைய குழந்தைகளை பணிக்கு அமர்த்திக் கொள்ளும் முதலாளிகள், காவல் துறையினர் போன்றோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்குவதில்லை.  அடித்து உதைத்துச் சம்பாதிக்கும் சொற்பப் பணத்தைப் பறித்துக் கொள்வது, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவது, சட்ட விரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது என்று பலராலும் இவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
பல குழந்தைகள் பாதுகாப்பிற்காக தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து வாழ்வதும் உண்டு. ஆனால், அந்த மூத்த தோழர்களே இவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் கொடுமையும் உண்டு.
இப்படிப் பெரு நகரங்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மத்திய அரசு தெருக்குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தி வருகிறது. 2009-2010-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. 
இந்தத் திட்டத்தின் கீழ் அந்தந்த நகரங்களில் வாழும் தெருக் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வசதிகள் போன்றவற்றைப் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்வது,  24 மணி நேரமும் திறந்திருக்கும் உறைவிடங்கள் அமைத்துக் கொடுப்பது, இரவு நேர தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்வது, முறைசாரா கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல்,  நோய்கள் வராமல் தடுப்பதற்கு வழிவகுத்தல், ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய- மாநில அரசுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கிறது.  சலாம் பாலக் டிரஸ்ட், சேவ் தி சில்ரன், ரயில்வே சில்ரன், சேத்னா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் தெருக் குழந்தைகளுக்காகப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. 
இக்கட்டான நிலைமையில் உள்ள குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு 24 மணி நேரம் இயங்கும் சைல்டு லைன் வசதியை மத்திய அரசின் கீழ் இயங்கும்  சைல்டு லைன் ஃபவுன்டேஷன் என்னும் அமைப்பு வழங்குகிறது.வீட்டை விட்டு ஓடி வந்து  பெருநகரங்களில் ரயிலில் வந்திறங்கும் குழந்தைகளை  மீட்டு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கும் பணியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தன்னார்வநிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்கின்றனர். முக்கியமான ரயில் நிலையங்களில் பணிபுரியும் இந்தப் படை, நிராதரவாக வந்திறங்கும் குழந்தைகளின் முகவரியைக் கேட்டறிந்து அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிக்கின்றனர். அப்படி குடும்பத்தினரிடம் சேர்க்க முடியாத குழந்தைகளை, தன்னார்வ நிறுவனங்களில் ஒப்படைக்கின்றனர்.  
எனினும்,  ரயில் நிலையங்களில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படும் குழந்தைகள் பலரும் திரும்பி நகரத்திற்கே வந்து சேர்ந்து விடுகின்றனர். இதற்கு அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும், இந்தக் குழந்தைகள், தங்கள் இச்சைப்படி பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது கண்டிப்பு இல்லாமல் ஓரளவு  பொருளாதாரச் சுதந்திரத்துடன் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பதே முக்கியக் காரணம்.  24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் ரயில் நிலையங்கள் இந்தக் குழந்தைகளுக்கு, பயணிகள் விட்டுப் போகும் பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் புட்டிகள் சேகரிப்பது, சிறு சிறு பொருள்களை விற்பது போன்ற வாய்ப்புகளை வழங்குவதோடல்லாமல், உண்ண, உறங்க, நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இடமளிக்கிறது.  
இந்தக் குழந்தைகளை மீட்டு அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பது என்பது எல்லா குழந்தைகளின் விஷயத்திலும் சரியான தீர்வாக இருக்க முடியாது என்று ரயில்வே துறையின் தொடர்பில் உள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட அகில இந்திய ஆய்வுக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தெருக் குழந்தைகளைப் பொருத்தவரை, அவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகுக்கும் அணுகுமுறையே சிறந்தது என்று தற்போது கருதப்படுகிறது.
வீதிகளிலேயே தங்களது வாழ்க்கையைக் கழிக்கும் தெருக் குழந்தைகளின் அவல நிலையைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் நாள் சர்வதேச தெருக் குழந்தைகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சமூகத்தின் விளிம்பில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கி, அவர்களை    நல்வழிப்படுத்தி அவர்கள் குற்றவாளிகளாக தலையெடுப்பதைத்  தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/02/தெருக்-குழந்தைகளின்-நரக-வாழ்க்கை-3105541.html
3105540 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இதுவல்ல கருத்துச் சுதந்திரம்! சந்திர. பிரவீண்குமார் DIN Saturday, March 2, 2019 01:18 AM +0530
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். 
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதால், அந்நாட்டின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தன. பதில் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனைச் சிறை பிடித்ததும், அவரை மீண்டும் ஒப்படைத்ததும் நடந்தேறின.
ஆனால், இந்தச் செய்திகள் வெளிவந்ததுமே, அறிவுஜீவித்தனமாகக் கேட்பதாக எண்ணி நமது வீரர்களைச் சிலர் கொச்சைப்படுத்த ஆரம்பித்தனர். ராணுவத்தின் நடவடிக்கைகளில் அரசியல் கலந்து அவர்களின் தியாகத்தை விமர்சித்தனர்.
இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், நமது ராணுவ வீரர்களை நம்ப முடியாது. பாகிஸ்தான் அரசு அறிவித்ததுதான் உண்மையாக இருக்கும் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். நமது ராணுவம் நடத்திய பதில் தாக்குதலை புல்வாமாவில் கொல்லப்பட்ட துணை ராணுவத்தினரின் குடும்பத்தினர் வரவேற்றனர். ஆனால், இதுபோன்ற பதில் நடவடிக்கைகளால்தான் ராணுவத்தினர் கொல்லப்படுவதாக அறிவுஜீவிகள் நீலிக் கண்ணீர் வடித்தனர்.
பாகிஸ்தான் பிரதமரின் பேச்சை அந்நாட்டு ராணுவத்தின் சார்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை அடைந்தனர். பயங்கரவாதத்தையும் நிகழ்த்திவிட்டு கொஞ்சமும் கூச்சமில்லாமல் சமாதானக் கொடியும் காட்டினார் இம்ரான் கான். அவரது வலையில் நமது அறிவுஜீவிகள் விழுந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நம் ராணுவத்தினரின் உயிர்த் தியாகங்கள்தான் நாட்டை வலிமையாக வைத்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
உள்நாட்டு பயங்கரவாதத்தாலும், ராணுவத்தின் தலையீடுகளாலும் பாகிஸ்தான் சின்னாபின்னமாகிக் கிடப்பதையும், இந்தியாவில் ஜனநாயகம் தழைத்திருப்பதால்தான் தங்களால் இப்படி சுதந்திரமாகத் திரிய முடிகிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
அதேபோல, இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாகத் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தி, அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருவது சில அரசியல் பிரமுகர்களின் வாடிக்கையாகி விட்டது. 
ஜம்மு-காஷ்மீர் எந்த நிபந்தனையுமின்றி 1947 அக்டோபர் 26-ஆம் தேதி இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட வரலாறு அவர்களுக்குத் தெரியாதா?
பொது வாக்கெடுப்பு தேவையென்றே வைத்துக் கொள்வோம். 1989-இல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் சொத்துகளை இழந்து குடும்பத்தோடு விரட்டப்பட்டார்களே, அதற்கு முன்னால் பொது வாக்கெடுப்பு பற்றி யாருமே ஏன் பேசவில்லை? ஒரு குறிப்பிட்ட சாராரைப் புறக்கணித்துவிட்டு, அங்கிருந்து விரட்டி அடித்த பிறகு வாக்கெடுப்பு குறித்து இனியும் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? 
காஷ்மீரில் வறுமை இருப்பதுதான் பயங்கரவாதத்துக்குக் காரணம் என்பது ஒருசாராரின் கண்டுபிடிப்பு. கடந்த 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் சராசரி விகிதம் 21.92 சதவீதம். ஏழ்மையான முதல் பத்து மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் இடம்பெறவில்லை. அந்த மாநிலத்தின் சராசரி 10.35 சதவீதம் மட்டுமே. அதோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் ஏழைகளின் எண்ணிக்கை (11.28 சதவீதம்) அதிகம். 
தவிர, காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் பயங்கரவாதத்தின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. 
இந்தியாவில் தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களிலும் அந்தந்தப் பகுதிகளின் உற்பத்திதான் வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலோ நாட்டின் பிற மாநிலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் காஷ்மீர் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்லப்படுவது, உண்மையை மறைப்பதல்லாமல் வேறென்ன?
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருக்கும் வரையில்தான் இத்தகைய வசதிகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதும், பாகிஸ்தானோடு சேர்ந்தால் ஏழ்மை குடிகொண்டு விடும் என்ற யதார்த்தம் அங்குள்ள மக்களுக்கும் புரிந்திருக்கிறது. காஷ்மீருக்கு வெளியே இருக்கும் அறிவுஜீவிகளுக்குத்தான் புரியவில்லை.
ஒருபுறம் நமது விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்த அதேநேரத்தில், மறுபுறம் சமாதானம் பேசும் தந்திரத்தையும் கையாண்டது. 
இம்ரான் கான் கூறியபடி போர் தேவையில்லை என்பது உண்மைதான்.
ஆனால், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடாமல் சமாதானம் எப்படி சாத்தியமாகும்? அதேபோல, அபிநந்தனை விடுதலை செய்ததைக் கொண்டாடுவது சரியே. ஆனால், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரையும் இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து குரல் எழுப்புவது அவசியமல்லவா?
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படுவது பெருமிதம் அளிக்கக்கூடியது. ஆனால், அதன் பெயரால் வேண்டுமென்றே உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதையும், தேச பாதுகாப்புக்கே சவால் விடுப்பதையும் சுதந்திரமாகக் கருத முடியவில்லை. கருத்து பயங்கரவாதமாக வேண்டுமானால் கருதலாம்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/02/இதுவல்ல-கருத்துச்-சுதந்திரம்-3105540.html
3104875 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பொழுதெனும் பெருஞ்செல்வம் கிருங்கை சேதுபதி DIN Friday, March 1, 2019 01:19 AM +0530 புலரும் ஒவ்வொரு காலைப்பொழுதிலும், ஏதேனும் ஓர் இலக்கியத் தொடர், அல்லது கவிதைத் தெறிப்பு வந்து என்னுள் மின்னல் வெட்டும். பின்னர் சிந்தனை அதிர்வுகள் மெல்லப் பரவும். அன்றைய நாள் முழுக்க, அனுபவச் செழுமையோடு சுயசிந்தனைக்கும் விரைந்த செயல்பாட்டுக்கும் அது துணைநிற்கும். சில சமயங்களில் ஓரிரு நாள்களுக்கும் மேலாக, அது விரிவதும் உண்டு.
சுவாசம்போலப் பரவி உயிரணுக்களில் நிறையும் அந்த அனுபவம், இலக்கிய அனுபவ எல்லை கடந்து வாழ்வனுபவமாக முகிழ்ப்பதைத் துய்ப்பதில் ஒரு தனிச்சுகம். இப்படி ஒரு கணத்தில்தான், கானா
முதம் படைத்த காட்சிமிக விந்தையடா என்றும் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா என்றும் பாரதி மகிழ்ந்து கூத்தாடியிருக்கவேண்டும்.
அதிசயம்போல் எழுகிற சில பாடல் வரிகள் சமயங்களில் துயரங்களையும் தந்துவிடுவதுண்டு. பின்னர், அதுவே அதற்கு மருந்தாகிப் புதிய விருந்து சமைப்பதும் உண்டு.
துன்பம், இன்பம், இளமை, செல்வம், தோல்வி, முதுமை எல்லாமும் ஒரு கணத்தோற்றம் என்று உயிர்பெற்ற தமிழர் பாட்டில் உரத்துமொழிந்து உரமேற்றினார் மகாகவி பாரதி, இந்த வாழ்க்கை என்பது என்ன? தோற்றம், மறைவு என்ற இரு சொற்களுக்கு இடையில் தரப்பெறும் கோடிட்ட இடத்தை நிரப்புவது. அவ்வளவுதானே!
அதனை இன்பமாக, துன்பமாக, வெறுமையாக ஆக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இது பொதுப்பார்வை. இன்று நம்மைச்சுற்றி நாலாபக்கமும் பார்க்க, ஏன் பல சமயங்களில் நம்மையே பார்க்க, ஒன்று தெரிகிறது. நம் அனைவரது கைகளிலும் செல்லிடப்பேசிதான் இருக்கிறது. உண்மையில், நாம்செல்லிடப்பேசிகளின் கைகளில் சிக்கி இருக்கிறோம்.
சுவாசம்போல் இடையறாது எழவேண்டிய சிந்தனையைத் தன்பால் ஈர்த்து, தடையறாது தன்னையே பார்த்துக் கொள்ளச் செய்வதில் செல்லிடப்பேசி நம்மை வென்றுவிடுகிறது. நம் உயிரனைய பொழுதுகளை ஒன்றுக்கும் பயனின்றிச் சக்கையாக்கிக் கொன்று விடுகிறது. நாம் கணந்தோறும் அந்தக் கருவிமுன் செயலற்று ஒடுங்கி ஒன்றி நிற்கிறோமோ என்று தோன்றுகிறது.
பெரும்பாலும் இளையோர்க்கான இலக்கியப் பயிலரங்குகளில் நான் கேட்டுத் தொடங்கும் வினா இதுதான். காலம் பொன் போன்றது எனும் பொன்மொழி சரியா? சரிதான் என்கிற பதில் சரமாரியாக எழும். ஒரு கண அமைதிக்குப் பின் இன்னொரு வினாவை எழுப்புவேன். பொன்னை இழந்தால், மீளவும் தேடிப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது மாற்றாக, புதியதாய் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், காலத்தை? பெற முடியாது என்பதை அவர்கள் உணரும் கணத்தில் இன்னொரு கேள்வியையும் எழுப்புவேன்.
இழந்தால் பெற முடியாதது, எதுவோ? முடிப்பதற்குள் ஒரு சிலரிடமிருந்து பதில் வெளிப்படும். காலம் உயிர்போன்றது. அது உயிருணரும் காலமாக நிறைந்து விரியும்.
உயிரினும் இனிய பொழுதுகளை எப்படியெல்லாம் தொலைக்கிறோம் என்று நமக்கு முன்னே பட்டியலிட்டுக் காட்டிப் பரிதவித்த ஆன்மாக்கள்தாம் எத்தனை எத்தனை? அரிதாய்க் கிடைத்த மானுடப் பிறப்பை வறிதாய்ப் போக்கி, சென்றது குறித்தே சிந்தை செய்து களித்தோ, கவலைப்பட்டோ அழித்த பொழுதுகள் எத்தனை எத்தனை? 
இறந்த காலம் என்றும் வருங்காலம் என்றும் வகுத்துக் கழித்த நம் வாழ்நாளில் அழித்து ஒழித்தது நிகழ்காலத்தைத்தானே. உண்மையில் காலம் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருப்பது. கணந்தோறும் நிகழ்வது. அஃதறியாமல் பொழுதுபோக்கு எனும் புதுத்தொடரை உண்டாக்கி, அதனை டைம் பாஸ் என்று ஆங்கிலத்திற்கும் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் நாம். அதனால் இழப்பு, பொழுதுக்கு அல்ல, நம் வாழ்வுக்குத்தான் என்று உணர்ந்தவர்கள் பல்வேறு வழிகளில் நமக்குக்காலந்தோறும் உணர்த்தி வந்திருக்கிறார்கள்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் என்றால், இந்தப் பாட்டுத் தொடரின் பொருளை இனியேனும் உணர்தல் கூடாதா என்றுதான் ஏக்கம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தொடர், திருவாசகத்தில் எங்கிருக்கிறது என்பதையும் அந்தச் சின்னத்திரை வழியாகத்தான் பலரும் தேடித் தெரிந்துகொள்கிற நிலை.
இது வளர்ச்சிதான்; மாற்றம் கொண்ட முன்னேற்றம்தான். ஆனால், நூலைத்தேடி, அதன் உள்ளே முறைப்படி வளரும் வரிகள் உள்புகுந்து உரிய இடத்தை அடைகிறபோது, எழும் மெய்ஞ்ஞான அதிர்வுகளை, இந்தத் தொடர் பிறந்த சிந்தனைத் தடங்களை உணர்கிறபோது பெறும் விழுமிய சிந்தனைகளை இந்த அவசரத்தேடல் அழித்துவிடுகிறது என்பதை அனுபவித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
இப்போக்கு நுனிப்புல் மேயும் பசுவின் செயல் ஒத்தது. அடிக்கரும்பைக் கடித்துச் சுவைக்கும் அனுபவம் தொலைத்தது. வேர்ப்பண்புகளை இதனால் விரைந்து தொலைத்துவிடுகிறோம் என்பதையும் மறக்கடித்துவிடுவது.
அவசர யுகம் என்று நாமே இதற்கொரு நாமகரணம் சூட்டி, நம்மைத் தொலைத்துவிடுகிறோம். இது எவ்வளவு பெரிய பொய்?
நம் முன்னோருக்கு இருந்த அதே காலமும் பொழுதும்தான் நமக்கும் வாய்த்திருக்கிறது. அவர்கள் தவமாய்ப் புரிந்து அனுபவித்த அந்தப் பொழுதுகளை, நாம் அவமாய்க் கழித்து அழித்துவிட்டு அல்லலுறுகிறோம்.  இத்தனை பரபரப்பும், பதற்றமும், அவசரமும் இதற்குமுன்னர் எவ்வாறு இல்லாமல் இருந்தன என்பதை எண்ணிப் பார்த்தால் உண்மை புரியும்.
மணி எத்தனை என்று கடிகாரம் பார்த்த காலம்போய், செல்லிடப்பேசி பார்க்கத் தொடங்குவதிலிருந்து முடங்குகிறது நம் பொழுது. கட்செவி நம் கண்ணையும் செவியையும் கருத்தையும் கவர்ந்துவிடுகிறது. முகநூலில் நம் முகம் புதைந்துவிடுகிறது. எத்தனை லைக் என்று எண்ணுவதில் நமது நொடிகள் கழிய, புதிய கருத்துகளை அறிவதில் எழுகிற ஆர்வத்தால் நம் காலமும் கடமையும் அதன்மீதான கருத்தும் கரைந்து விரைந்து இல்லாது ஒழிந்து போகின்றன. மீளவும் நம்மை எழுப்பிக் கூவும் அலுவலக அல்லது அன்றாடப் பணியின் அழைப்பால்தான் யதார்த்த உலகிற்கு மீள்கிறோம். இழந்த பொழுதுகளை ஈடுகட்ட விரையும் வாகனங்களால் சாலைகளில் நிகழும் விபத்துகள் எத்தனை? சமூகத்தில் நிகழும் வருத்தங்கள் எத்தனை?
இரவு-பகல் எதுவும் உணராமல், எதிரில் வருபவர் இருப்பவர் யாரென்றும் அறியாமல், நுகரும் எதனையும் இன்னதென்றறியாமல், செல்லிடப்பேசி திரையே கதியெனக்கிடக்கும் இளைய தலைமுறை பற்றி எதுவும் சொல்லத் தெரியாமல் பெரியவர்கள் கைபிசைந்து நிற்கும் அவலத்திற்கு மாற்று எது என்று சொல்லத் தெரியவில்லை. இது தேவையற்றதென விலக்கவும் முடியவில்லை.
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்தும்? என்ற கேள்விக்கு, இந்தச் சின்னஞ்சிறுதிரையே சிறைப்படுத்தும் என்பதைப் பதிலாக்கித் தந்திருக்கிறது காலம். சிலந்திவலை, யானையைச் சிறைப்படுத்தும் நிலைப்பாடு ஒத்தது இது. தினந்தோறும் இலவசமாய்க் கிடைக்கும் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை, கட்டணமின்றி பேசும் வசதிகளை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற ஆவல் வெறியாகி, அவற்றுக்காகத் தன்பொழுதுகளை வலிந்து தொலைக்கும் போக்கு நாளுக்கு நாள் மிகுந்துவருகிறது.
அதிலும் பச்சிளங்குழந்தைகள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளத்தெரியாமல் அவதிப்படுவதும், அதிலிருந்து மீட்கமுடியாமல் பெரியவர்கள் அல்லலுறுவதும் நம் அன்றாட அவலம். அதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் இந்தக் கருவிகொண்டுதான் எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. கண்டவர்களும் அவசரமாக ஒரு விருப்பத்தைக் குறியிட்டுவிட்டு, அல்லது பிறருக்குப் பகிர்ந்தளித்துவிட்டு வசதியாய் மறந்துவிடுவதையும் பார்க்கிறோம். அதைவிடவும் அதில் வருகிற செய்திகளை உண்மை என்று நம்பிப் பின்பற்றுவதும், பரபரப்புண்டாகப் பரப்பிவிடுவதுமாகிய செயல்களால் ஏற்படும் சமூகத் தீமைகளைத் தவிர்க்கவும் முடியாமல் திண்டாடுகிறோம்.
வேடிக்கை என்னவெனில், இந்தத் திரைதனில் உலாவரும் பகுதிகளைத் தேடி எடுத்து ஒளிபரப்புவதையும், வெளியிடுவதையும் பெரிய ஊடகங்கள் செய்துவருவதுதான். அதில் பல சுவைமிகு தகவல்களும், புலனாய்வுத் தடயங்களும் கிடைப்பது உண்மைதான். ஆனால், புனிதமெனப் போற்றிப் பாதுகாத்த அந்தரங்கத்தின் ஆன்மாவைக் குலைத்ததுதான் அதிகம். யாராலும் யாரையும் நம்ப முடியாத அவலத்தை இப்போக்கு நிலைநிறுத்தி வருகிறது. பின்விளைவுகள் அறியாமல் தன்னையே முன்னிறுத்திப் படம் பிடிப்பதும் செய்திகளை உள்ளிடுவதும் பயனற்ற விளம்பர மோகத்தில் வீழ்ந்து பொழுதழிப்பதும், இக்கருவியை, உயிர்க்கொல்லி வரிசையில் இருத்திப் பார்க்க வைத்துவிடுகிறது.
இப்படியெல்லாம் இது குறித்துச் சிந்திப்பதிலேயே இந்த இளங்காலை கழிந்துவிட்டதே என்று காகம் கரைந்து எழுப்புகிறது. கடிகாரம் தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
உயிரினும் இனிய பொழுதுகள் கொள்ளைபோகச் சம்மதியோம் என்றும், இந்தச் சின்னஞ்சிறு கருவிக்கு அடிமையாய் இனி இருந்திடோம் என்றும் உறுதிகொள்ளச் சொல்கிறது பாரதியின் கவித் தொடர்.
பொழுதெனும் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? என்று இன்றுபுதிதாய்ப் பாடி எழுகிறேன். 
உங்களையும் எழுப்ப விழைகிறேன்.   எழுக மானுடமே!

கட்டுரையாளர்:
பேராசிரியர்
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/01/பொழுதெனும்-பெருஞ்செல்வம்-3104875.html
3104874 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இந்தியத் தேர்தலில் புதின் வாக்களிப்பார்! சு. வெங்கடேஸ்வரன் DIN Friday, March 1, 2019 01:18 AM +0530
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அதிமுக்கியமான நிகழ்வு. தேர்தல் என்பது வெறும் ஆட்சியாளர்களை மட்டும் தேர்வு செய்வது அல்ல. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே தேர்வு செய்வதாகும். அத்தகைய மிகமுக்கியமான தருணத்தில் இப்போது இந்தியா உள்ளது. 
உலகமயமாகிவிட்ட இப்போதைய பொருளாதாரத்தில் ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் என்பது உள்நாட்டு நிகழ்வு என்றநிலை மாறி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் கண்
காணிக்கப்படுகிறது. ஏனெனில், தேர்தலுக்குப் பிறகு ஒரு நாட்டில் ஏற்படும் ஆட்சி மாற்றம் என்பது தங்களுக்கு எந்த அளவுக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் அமையும் என்பது குறித்து ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு கணக்கீடுகள் உள்ளன. அந்த வகையில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், அண்மையில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான தாமஸ் ஃபிரைட்மேன் இந்தியத் தேர்தல் குறித்து ஒரு பரபரப்பான விஷயத்தைப் பேசியுள்ளார். இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்தியத் தேர்தலில் புதின் வாக்களிக்க (புதினின் தலையீடு) அதிக வாய்ப்பு உள்ளது என்பதுதான் அவரது கருத்தின் சாராம்சம். ரஷியா மீது அமெரிக்கா கொண்டுள்ள மறைமுக காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது என்று இதனை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், இந்தக் கருத்தைக் கூறிய ஃபிரைட்மேன் சர்வதேச அரசியலில் சுமார் அரைநூற்றாண்டு அனுபவமிக்கவர். அமெரிக்க அரசின் செயல்பாடுகளையே பல முறை நேரடியாக விமர்சித்து கட்டுரைகளை எழுதியவர்.
அவரது கருத்து எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தங்கள் நாட்டு அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்தது குறித்து விசாரிக்க அமெரிக்க அரசு விசாரணைக் குழுவை அமைத்ததும், அந்தக் குழு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் விசாரணை நடத்தியதும் நாம் அனைவரும் அறிந்ததுதான். 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா மறைமுகமாகச் செயல்பட்டது. முக்கியமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இதற்காக ரஷியா பயன்படுத்தியது என்பது முக்கிய குற்றச்சாட்டு.
இது தவிர ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் பொதுவாக்கெடுப்பிலும் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த புகாரை பிரிட்டன் விசாரித்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, ரஷியா குறித்த ஃபிரைட்மேனின் கருத்து எளிதில் புறம்தள்ளிவிடக் கூடியதல்ல.
உளவுத் துறை, கண்காணிப்பு ஆகியவற்றில் இந்தியாவைவிட பலமடங்கு ஆற்றலுடன் செயல்படும் அமெரிக்க நாட்டின் தேர்தலிலேயே ரஷியாவால் தலையிட முடிகிறது என்னும்போது, இந்தியத் தேர்தலில் தாங்கள் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது ரஷியாவுக்கு அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது.
இது தொடர்பாக மேலும் சில முக்கிய கருத்துகளை தனது இந்தியப் பயணத்தின்போது ஃபிரைட்மேன் கூறியுள்ளார். அதில், ரஷியாவுக்கு நமது நாட்டுத் தேர்தலில் தலையிட என்ன அவசியம் இருக்கிறது என்று நீங்கள் (இந்தியர்கள்) நினைக்கலாம். ஆனால், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் ரஷியா தனது வேலையைக் காட்டுவதற்கு வாய்ப்பளிப்பதாகவே
இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முகநூல் நிறுவனத்தையும் ஃபிரைட்மேன் கடுமையாக விமர்சித்துள்ளார். உலகில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் முகநூல், சமூகப் பொறுப்பு என்பதே இல்லாமல், சுயலாபத்துக்காக பயனாளர்களின் தகவல்களை விற்பது மட்டுமல்லாது, தேர்தலில் தவறான பிரசாரத்துக்கும் துணைபோகிறது. 
முக்கியமாக தேர்தல் நேரத்தில் எவ்வித ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பிரசாரத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வழி வகுக்கிறது. அதற்காக நாம் பெரும் விலையைக் கொடுத்து வருகிறோம். இதனை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் மேலும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது அவரது குற்றச்சாட்டு.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கருத்தைப் பதிவிட முடியும் என்ற நிலை உள்ளதையும், அதனால் பரவும் புரளிகளையும் நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம். குழந்தை கடத்தல்காரர்கள் என்று சமூக வலைதளத்தில் பரவிய புரளியால் அப்பாவிகள் சிலர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சோக நிகழ்வுகளை மறந்துவிட முடியாது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று தனி சமூக வலைதளக் குழுவை அமைத்து மாற்றுக் கட்சிகளை எள்ளி நகையாடுவது முதல் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு உள்ளாக்குவது வரை சமூக வலைதளத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்டது பெரும் சோகம்.
கருத்துகளைத் தெரிவிக்கும் சுதந்திரம் சமூக வலைதளங்களில் உள்ளது என்ற நிலை மாறி கருத்துத் திணிப்புக்கான தளமாக அவை மாறிவிட்ட சூழ்நிலையில், ரஷியா மட்டுமல்ல, வேறுசில அந்நிய நாடுகளும் அவற்றை நமக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/mar/01/இந்தியத்-தேர்தலில்-புதின்-வாக்களிப்பார்-3104874.html
3104209 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ் மண்ணில் அறிவியல் விதைகள்! த. ஸ்டாலின் குணசேகரன் DIN Thursday, February 28, 2019 01:26 AM +0530
அறிவியல் சார்ந்ததாக நமது சமுதாயத்தை முதலில் அமைத்தல் வேண்டும். அதாவது, அறிவியலை நமது அன்றாட வாழ்க்கையோடு இணைத்து இழுத்துச் செல்லத் தயாராக வேண்டும். 
தமிழோடு அறிவியலைப் பிணைத்தாக வேண்டும்.
அறிவியல் வளர்ச்சிகள் , அவற்றைப் பற்றிய உண்மைகள், தெளிவுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டிய கட்டுப்பாடு ஏதுமில்லை.  அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் ஒரு கருவி பற்றிய உண்மைகளை அவர் நாள் முழுதும் பேசும் மொழியில் கிடைக்கச் செய்தால் அது பயனுடையதாக அமையும் என்று அறிவியல் துறையில் ஆழத்தடம் பதித்த கல்வியாளர் பி.கே.பொன்னுசாமி தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியல், ஆன்மிகம், இலக்கியம், இதழியல் தொழிற்சங்கம் ஆகிய துறைகளில் மூழ்கி முத்தெடுத்த திரு.வி.க., நாட்டின் ஜனத்தொகை நாளுக்குநாள் பெருகிச் செல்கிறது. அதற்கேற்றவாறு விளைவு பெருகுகிறதா? இல்லை. இதனால் நாட்டிடைப் பலதிறத் தொல்லைகள் தோன்றியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ஏற்றங்கொண்டு இறைத்தோமோ அதே ஏற்றங்கொண்டு இப்போதும் இறைக்கிறோம். எந்த ஏர் பற்றி உழுதோமோ அதே ஏர் பற்றி இப்போதும் உழுகிறோம். இந்த நிலையில் ஜனத்தொகைக்கேற்ற அளவில் தொழில் முறைகளும் பெருகுதல் வேண்டும். இதற்குத் துணை புரிதற்கென்றே விஞ்ஞானம் ஏற்பட்டது. மழை, அரிசி, பழம் முதலியவற்றை விஞ்ஞானத்தாலுண்டு பண்ணுங் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி மீது கவலை செலுத்தாதிருப்பது தவறு. கிராமம் விஞ்ஞானமயமாதல் வேண்டும் என்று அறிவியலின் அவசியம் பற்றி அழுத்தம் திருத்தமான கருத்தை வெளியிட்டார் திரு.வி.க.இந்தக் கருத்தை அவர் தெரிவித்த காலச் சூழலில் தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சி எந்த அளவு இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் மண்ணில் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே நிலவிய சுதேசிய அறிவியல் சிந்தனையும் அவற்றின் பயனாக இன்றளவும் உலகம் வியக்கும் வண்ணம் நின்று நிலைத்துவிட்ட சாதனைகளும் கருத்தில் கொள்ளத்தக்கவையாகும். தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் அன்றைய ஆன்மிக நாட்டத்தை மட்டும் நிலைநாட்டுவதாக அமையவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணின் மைந்தர்களிடத்தில் பொதிந்து கிடந்த அறிவியல் சிந்தனைகளையும் சேர்த்தே அவை பறைசாற்றுகின்றன. 
கரிகாலன் கட்டிய கல்லணைதான் தனது பொறியியல் சிந்தனைக்குப் புத்துயிரூட்டியதாக தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலேய தலைமைப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தனது வாழ்க்கைக் குறிப்பில் தெரிவித்துள்ளார். கல்லணைச் சூத்திரம்தான், பிற்காலத்தில் தான் நிகழ்த்திய அத்தனை அறிவியல் மற்றும் நீர்ப் பாசனச் சாதனைகளுக்கும் அடிப்படையென்று பல இடங்களில் பதிவு செய்துள்ளார் சர் ஆர்தர் காட்டன்.
நதிநீர் இணைப்பின் முன்னோடியாக விளங்கும் காலிங்கராயன் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே பன்னிரண்டு ஆண்டுகள் முயன்று பவானி, நொய்யல் ஆறுகளை இணைத்தது உலக வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும். கடல் நீர் மட்டத்திற்கு மிக உயரமாகத் திகழும் பவானியாற்றிலிருந்து மிகக் குறைவான உயரமுள்ள நொய்யலாற்றுக்கு இடையில் கால்வாய் வெட்டியபோது நேராக வெட்டினால் தண்ணீர் அதிவேகத்தில் சென்று நிமிஷங்களுக்குள் நொய்யலாற்றில் சங்கமித்து கங்குகரை காணாத கடலில் கலந்து விடும் என்பதை உணர்ந்து பாம்புபோல வளைந்து வளைந்து செல்லுமாறு கால்வாயை வெட்டினான் காலிங்கராயன்.
தண்ணீர் நின்று நிதானித்துச் சென்றதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன பூமியாக மாறி வீரியம் மிக்க விளைச்சலைக் கொடுத்தது. நேராக 36 மைல்கள் வெட்டினால் போதும் என்றிருந்த கால்வாயை வளைத்து வளைத்து 56 மைல்கள் வெட்டினான் காலிங்கராயன். சீறிப்பாயும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, வளைத்து நெளித்துக்கொண்டு செல்ல காலிங்கராயன் பயன்படுத்திய அறிவியல் உத்திகளையும் தொழில்நுட்பங்களையும் அறிந்தவர்கள் வியந்து வியந்து பாராட்டுகின்றனர்.
அத்தகைய அறிவியல் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இடையில் அறுபட்டுப் போகாமல் தொடர்ந்தும் விரிந்தும் வளர்ந்தும் வியாபித்தும் விளங்கியிருந்தால் தமிழ் மண் அறிவியல் விளையும் பூமியாகப் பரிணாமம் பெற்றிருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களிலும் அடங்கிக் கிடக்கும் அறிவியல் விந்தைகளை அணுஅணுவாக அடுத்த தலைமுறைக்குப் புரியவைத்து அவர்களிடம் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டி மிளிரவைக்க பரிபூரண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
கரிகாலன் , காலிங்கராயன் போன்றவர்களின் வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்ட அளவுக்கு அவர்களிடம் சுடர் விட்டுப் பிரகாசித்த சுதேசி அறிவியல் முயற்சிகளை அடுத்த தலைமுறையினர் முழுக்கப் புரிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று அவரவர் காலத்திற்கேற்ற அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு செய்யப்பட்டனவா என்ற கேள்விக்கும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
இத்தகைய இமாலய அறிவியல் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியவர்களோ, அவ்வாறு நிகழ்த்தப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த வல்லுனர்களோ எத்தகைய அறிவியல் கண்ணோட்டத்தோடும் கருவிகளோடும் திட்டங்களோடும் இத்தகைய அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதைத் துல்லியமாக ஆவணப்படுத்தப்படாத குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய சுதேசிய அறிவியல் முயற்சிகள் ஏறத்தாழ முடக்கம் பெற்றுவிட்டன. அத்தகைய அறிவியல் புறக்கணிப்புக் காலத்தில் அன்றைய முக்கிய அரசியல் தலைவர் ம.சிங்காரவேலர் அறிவியல் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டினார். கோபர் நிகஸ், கலிலீயோ, புரூனோ, டார்வின் போன்ற அறிவியலாளர்களைப் பற்றியும் அவர்கள் அறிவியல் துறைக்கு ஆற்றிய அரும்பணி குறித்தும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட தியாக வாழ்கையை விளக்கியும் பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் சிங்காரவேலர்.
விஞ்ஞானச் செய்திகளை அறிவிப்பது மட்டும் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று நினைப்பது தவறு. சிறுவர்-சிறுமிகளின் மனநிலையைத் திருத்தும் , சீரான முடிவுகளை எடுக்கும் திறமையை  விஞ்ஞானம் அளிக்கும். கவனத்தைத் தூண்டிச் சுறுசுறுப்பாக்கும். இயற்கை விதிகளுக்கு அடங்கி நடக்கச் செய்யும். உண்மையில் , சிறுவர்-சிறுமிகளுக்குப் பண்பாடு அளிப்பதற்கு விஞ்ஞானமே சிறந்த வழி என்று அறிவியல் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் ராஜாஜி.
பெரியாரும் அவரின் அடியொற்றிவந்த பலரும் அறிவியல் கருத்துகளை அள்ளித் தெளிப்பதை தமது கடமையாகக் கருதிச் செயல்பட்டனர். பெரியாரைப் பின்பற்றிய பலர் தங்களது தமிழ்க் குழந்தைகளுக்கு எடிசன், ஆம்ஸ்ட்ராங், வாலன்டினா என்று அறிவியலாளர்களின் பெயர்களைச் சூட்டினர்.
அறிவியலறிஞர் ஜி.டி.நாயுடு மேற்கொண்ட அறிவியல் முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் தமிழக அளவில் வலுவான அறிவியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களிடையே அறிவியலறிவை மேம்படுத்த வேண்டுமென கங்கனம் கட்டிக் களத்தில் இறங்கியதோடு, அதற்காகவே தன்வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த பெருந்தகை பெ.நா.அப்புசாமி என்றால் மிகையில்லை.
1917-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை எழுபதாண்டுகளில் பெ.நா.அப்புசாமி எழுதி வெளியான கட்டுரைகளின் எண்ணிக்கை 5,000. இவற்றுள் சுமார் 3,000 கட்டுரைகள்  அறிவியல் கட்டுரைகளாகும். 200-க்கும் மேற்பட்ட தரமான ஆங்கில அறிவியல் நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றோடு 25-க்கும் மேற்பட்ட அறிவியல் மூல நூல்களை அப்புசாமி எழுதியுள்ளார். அடிப்படையில் வழக்குரைஞராகத் திகழ்ந்த இவர், அறிவியல் துறைக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா எழுதிய சார்லஸ் டார்வின், ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், ஜகதீச சந்திரபோஸ், சர் சி.வி.ராமன் ஆகிய அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பரவலான தாக்கத்தை உண்டாக்கின. அவ்வாறே தமிழறிஞராக விளங்கிய மணவை முஸ்தபா அறிவியல் கலைக் களஞ்சியத்தையே உருவாக்கினார்.
இவர்களும் இத்தகையோர் பலரும் அறிவியல் தமிழுக்கு வித்திட்டவர்களாக விளங்குகின்றனர். அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பது போலவே இந்த மண்ணில் அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலர் பல்வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இத்தகைய நீண்ட, நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அறம் சார்ந்த அறிவியல் சிந்தனைகளும் கருத்துகளும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுவது அவசியமாகும்.

இன்று தேசிய அறிவியல் தினம் 

கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனை பேரவை.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/28/தமிழ்-மண்ணில்-அறிவியல்-விதைகள்-3104209.html
3104208 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் அறிவியல் மக்களுக்கானது... ஆர். முருகன் DIN Thursday, February 28, 2019 01:25 AM +0530 திருச்சி, திருவானைக்காவில் பிறந்து திசையெங்கும் அறியப்படும் அறிவியல் அறிஞர் சர் சி.வி. ராமன். இவரது முழுப் பெயர் சந்திரசேகர வெங்கடராமன். தனது ஆராய்ச்சியின் காரணமாக சர் பட்டம் பெற்று, சர் சி.வி.ராமன் என அழைக்கப்பட்டார். 1888-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி சந்திரசேகர் ஐயர்,  பார்வதி அம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.
இவருடைய தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் ஆரம்பக் கல்வியை விசாகப்பட்டினத்தில் பயின்றார். சந்திரசேகர் ஐயர் கணிதத்திலும் புலமை பெற்றவர் என்பதால், இல்லத்திலேயே இயற்பியல், கணிதம், இலக்கியம், சங்கீதம் உள்ளிட்ட சூழலுடன் வளரத் தொடங்கினார் சர் சி.வி. ராமன். தந்தையின் புத்தக அலமாரியில் இருந்த தரணி போற்றும் அறிவியல் அறிஞர்களின் புத்தகங்களை வாசிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் 1904-இல் பி.ஏ. பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தார். முதுநிலை பட்டப் படிப்பையும் இதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907-ஆம் ஆண்டு ஜனவரியில் எம்.ஏ. பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித் துறை தேர்வு எழுதி அதிலும் முதலிடம் பிடித்தார். 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பணி நிமித்தம் இந்த வேலையில் சேர்ந்தாலும்,  தனது உள்ளக் கிடக்கை முழுவதும் இயற்பியலிலேயே இருந்ததால், கொல்கத்தாவில் செயல்பட்டு வந்த இந்திய விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து அறிஞர்கள் பலரின் அறிமுகத்தைப் பெற்றார். அந்த நேரத்தில் ரங்கூனுக்கு பணியிட மாற்றம் வந்ததால் கட்டாயத்தின்பேரில், 1910-ஆம் ஆண்டு ரங்கூன் சென்று பணிபுரியத் தொடங்கினார். பின்னர், அக்கவுண்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று கொல்கத்தாவுக்குத் திரும்பியதால், விட்டுப்போன விஞ்ஞான அபிவிருத்தி சங்கத் தொடர்பையும் மன மகிழ்வுடன்  புதுப்பித்துக் கொண்டார்.
இந்தத் தருணத்தில் கொல்கத்தா சர்வகலா சாலையில் விஞ்ஞானக் கல்லூரி தொடங்கப்பட்டதால்,  தனது அக்கவுண்ட் ஜெனரல் பதவியிலிருந்து விலகி, விஞ்ஞானக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதன் பிறகு, பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, பல நாடுகளுக்கும் சென்று, பல்வேறு அறிஞர்களின் நட்பைப் பெற்றார். 1926-இல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி, அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக் கழகத்தைத் தொடங்கி தலைவராகவும் பணிபுரிந்தார். இதன் மூலம், நடப்பு அறிவியல் எனும் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
1924-இல் லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பட்டம், 1929-இல் பிரிட்டிஷ் அரசின் நைட் ஹூட் பட்டம், 1929-இல் இங்கிலாந்து அரசியால் சர் பட்டம், 1935-இல் மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம், 1954-இல் பாரத ரத்னா விருது, 1957-இல் உலக லெனின் பரிசு என பல்வேறு பட்டங்கள், விருதுகளைப் பெற்றிருந்தாலும் இன்றளவும் சர் சி.வி.ராமன் என்ற பெயரை பார் போற்றச் செய்திருப்பது ராமன் விளைவே.
இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வு செய்து, நோபல் பரிசு பெற்றதாக அறிந்து, அவை கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்குச் சாத்தியம் உண்டா என மாற்றுச் சிந்தனையில் யோசித்தார். அதே சிந்தனையுடன் நம்பிக்கையோடு ஆய்வுகள் மேற்கொண்டதன் பலனாகக் கிட்டியதே ராமன் விளைவு.
திரவப் பொருள்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களுடன் கூடிய புதிய நிறக் கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கேற்ப ஏற்படும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது எனக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு பிப்ரவரி 28-ஆம் தேதி நிகழ்ந்தது. 1930-இல் இதற்கு நோபல் பரிசும் பெற்றார்.
ஆங்கிலேய அரசு, இவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சித்தது. அஞ்சல் வழி கடிதங்களைத் தடுத்தது. எனினும், ஒரு கடிதம் ராமனின் கைக்குக் கிட்டியது. அப்போது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பேசக் கூடாது என்ற கட்டளையுடனே நோபல் பரிசு பெற அனுமதித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பரிசு பெறச் சென்றவர், ஆங்கிலேயரின் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு தனது நோபல் பரிசை சமர்ப்பணம் செய்கிறேன் என சிம்மக் குரலில் கர்ஜித்தார். 
இந்தக் கண்டுபிடிப்பின் விளைவாக சிலிகான் சில்லுகள், டிரான்சிஸ்டர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் அவை இடம்பெறும் மின்னணுக் கருவிகளின் பரிமாணங்களைக் குறைக்கவும் முடியும். மேலும், இந்த விளைவைப் பயன்படுத்தி உயிருள்ள திசுக்களைப் பகுப்பாய்வு செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
புறத்தோல் நோய் அறிதல், தோலின் ஊடாக மருந்து பொருள்களை உள் செலுத்துதல், புற்றுநோய் கண்டறிதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு மற்றும் நோய் அறிதல், மூட்டு வாதம் மற்றும் எலும்புச் சிதைவு ஆய்வு, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலை அளவிடல் ஆகியவற்றுக்கும் ராமன் விளைவே சிறந்த பயன்பாடாக அமைந்துள்ளது என்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாளான பிப்ரவரி 28-ஆம் தேதியைத்தான் நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடி வருகிறோம். 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினத்தை அறிவியல் மக்களுக்கானது, மக்கள் அறிவியலுக்கானவர்கள் என்ற கருப்பொருளுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தக் கருப் பொருளை நாளைய விஞ்ஞானிகளான இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க சபதமேற்போம்.


 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/28/அறிவியல்-மக்களுக்கானது-3104208.html
3103520 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! கே.எஸ். இராதாகிருஷ்ணன் DIN Wednesday, February 27, 2019 01:26 AM +0530 உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு என்ற இயற்கையான வரையறைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டனர்.
மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது. ஒரு நாட்டில் நிலையாக வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்திற்குட்பட்டது. 
உதாரணத்துக்கு, கனடாவில் கியூபிக் பிரச்னையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டு விடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு தேசிய இனத்தை பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இது குறித்தான விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒருதேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள்இருப்பதால், அதை ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்றுகருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.
அரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுகள் என இந்தோனேசியா வரை வாழும் இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாசாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது. 
தேசிய இனத்துக்கு மொழி, மரபு ரீதியான பழக்க வழக்கங்கள், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பதே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (ஸ்டேட்) அழைக்கப்படுகிறது. நாடு (ஸ்டேட்) என்பது அரசு, அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தை குறிப்பிடுவதாகும். 
அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாசாரம் கொண்டதாக இயங்க வேண்டும். ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதில்லை என ஜான்ஹட்சின் சன் மற்றும் ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர்.
ஒரே மொழியும்,  கலாசாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம்  (நேஷனாலிட்டி - நேஷன் - தேசம்) என்று அழைக்கப்படுகிறது. தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்த ஒரு தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ் மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது.
தொல்காப்பியப் பாயிரம் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய் கல்லெடுத்ததும், யுவான் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும், புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்ததெல்லாம் வரலாற்றுச் செய்திகள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் சங்கத்தமிழ்-இமயம்-பொதிகை-குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று, இமயம் முதல் குமரி வரை என்றும், இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
 பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறநானூறு 2),  பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய (புறநானூறு 39),  பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன (புறநானூறு 369),  தென்குமரி வடபெருங்கல் மதுரைக் காஞ்சி  (வரி 70),  பேரிசை இமயம் தென்னங்குமரியோடு ஆயிடை... பதிற்றுப்பத்து (பாடல் 11) என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுடன் சிறுபாணாற்றுப்படை (வரி 48), நற்றிணை (பாடல் 356 வரி 3, பாடல் 369 வரி 7), குறுந்தொகை (பாடல் 158 வரி 5), பரிபாடல் (பாடல் 1 வரி 51, பாடல் 5 வரி 48), பரிபாடல் திரட்டு (பாடல் 1 வரி 77), அகநானூறு (பாடல் 127 வரி 4, பாடல் 265 வரி 3). இவ்வாறான தரவுகளால் இந்தியாவின் வடபுலமும், தென்புலத்துக்கான தொடர்புகள் வந்துள்ளதாக சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான்  இந்தியாவை ஒருங்கிணைந்த  நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒரு தேசிய இனத்தின் கலாசாரம், அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்து விட்டன.
வரலாற்றில் 2008-இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்த நாடுகள் ஆகும்.
போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும், நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிலிருந்தும், ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.
மக்கள் பொது வாக்கெடுப்புகளின் விநோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945-ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு ஆம் என்றும், 25 வாக்கெடுப்புகள் இல்லை என்றும் வாக்களித்துள்ளன. 1990-களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன.  
சோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன; எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு மாறாக வாக்குகள் அதிகமாக இருந்தது. எனவே, நீண்ட காலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிய இயலவில்லை.
இப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியம் சாத்தியப்படுமா என்பதுதான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்துக்குச் சாதகமாக இல்லை. தமிழ் தேசியம் என்பதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. 
இன்றைய அகப்புறச் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டுக்குச் சாத்தியமில்லை. ஈழத்தில் கடுமையாகப் போராடி, நியாயங்கள் இருந்தும் வெற்றி இலக்கு அடையப்பட வில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய உலக நாடுகளின் பார்வையும், அங்கீகாரமும் மிகவும் அவசியம். அது சாத்தியக்கூறா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மற்றொரு பிரச்னை, தமிழ் தேசியம் பேசுபவர்களால் பரவலாக முன்வைக்கப்படும் வந்தேறிகள் என்கிற குற்றச்சாட்டு. தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து, இதை தாயகமாகக் கொண்டு அவர்களின் வழிவழியாக வந்து, தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாகப் போராடும் நல்லுள்ளங்களை வந்தேறிகள்  என்று காயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல.
 உலகம் முழுவதும் 1 கோடிக்குமேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில்கூடஇருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குடியேறிய நாட்டிற்காக உழைக்கிறார்கள். வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் எங்கேயும் இல்லை. 
தொலைத் தொடர்பு, சமூகவலை தளங்கள், தாராளமயமாக்கல் என்று இன்றைய உலகம் மாறிவிட்டிருக்கும் நிலையில்,  தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. இது உணர்ச்சிபூர்வமான பிரச்னை என்பதால் கவனமாகக் கையாள வேண்டும். 
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்,
செய்தித் தொடர்பாளர், திமுக.


 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/27/தமிழ்-தேசியமும்-வந்தேறிகளும்-3103520.html
3102895 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் அமெரிக்காவின் ராஜதந்திர வஞ்சகம்! பொ.லாசரஸ் சாம்ராஜ் DIN Tuesday, February 26, 2019 01:42 AM +0530
பேரரசுகளின் கல்லறை, பேரரசுகளின் போர்க்களம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்ட நீண்ட காலப் போரில் அமெரிக்காவின் நேரடி ராணுவத் தலையீடு முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது.
நியூயார்க் இரட்டை கட்டடத் தாக்குதல்களைத் தொடர்ந்து அக்டோபர் 07, 2001-இல் தலிபான், அல்கொய்தா அமைப்பிற்கெதிராக அமெரிக்காவால் தொடங்கப்பட்டது ஆப்கான் போர். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷால் தொடங்கப்பட்ட இப்போரை, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா, அதைத் தொடர்ந்து நடத்தி, ஒரு கட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை இப்போரில் ஈடுபடுத்தினார்.
கடந்த பதினெட்டு ஆண்டு காலமாக நடக்கும் போரில் அமெரிக்கா அண்மைக்காலம் வரை சுமார் இரண்டரை லட்சம் கோடி டாலர்களை (2.4 ட்ரில்லியன் டாலர்கள்) செலவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தத் தொகை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சீர்குலைந்த மேற்கு ஐரோப்பாவை கட்டியெழுப்புவதற்காக செலவிட்டதை விட அதிகமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம்  நடந்த இரு போர்களும் ஆசிய கண்டத்தில் உள்ள வியட்நாம் (1955-1973) மற்றும் ஆப்கானிஸ்தானில் (2001-2019) நடந்தன என்பது கவனிக்கத்தக்கது. இரு போரிலும் அமெரிக்கா பெரும் பொருள் செலவையும், உயிரிழப்புகளையும், பெரும் தோல்வியையும் சந்தித்தது. ஆப்கான் போரில், அண்மைக்காலம் வரை 2,372 அமெரிக்க போர் வீரர்கள் கொல்லப்பட்டனர், 20,320 பேர் காயமடைந்தனர். சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த அதிபர் தேர்தலின்போது, வெற்றிக்கான போர், பயனில்லாத அந்நிய மண்ணில் இருந்து அமெரிக்கப் படை வீரர்களைத் திரும்பப் பெறுவது, பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் செலவுகளை அந்தந்த நாடுகளே சந்திக்க வலியுறுத்துவது, மெக்சிகோ எல்லைச்சுவரை எழுப்புவது, பயங்கரவாதிகளைக் கொல்வது போன்ற கருத்துகளை டொனால்ட் ட்ரம்ப் முன் வைத்து, அதிபரானவுடன் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தீவிரம் செலுத்தி வருகிறார். 
இந்தத் திட்டத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை 14 ஆயிரமாக படிப்படியாகக் குறைத்தார். இத்துடன் பாகிஸ்தானுக்கு,  தலிபான்களுடனும்  உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, பத்து முறை தலிபான்களுடன் ரகசிய சந்திப்புகள் நடத்தியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
வெளிநாட்டு ஆதரவுடன் நிறுவப்பட்ட எந்த பொம்மை அரசும்  நீண்ட காலத்துக்கு ஆப்கானில் நிலைக்காது என்பது வரலாறு. 2001-இல் 15,000 போராளிகளுடன் செயல்பட்ட தலிபான் அமைப்பில், தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் உள்ளதாகவும், ஆப்கானிஸ்தானின் 70% பகுதியை, தன் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாளுக்கு நாள் அமெரிக்க ஆதரவுடன் நிறுவப்பட்ட ஆப்கான் அரசின் படைகள் பெரும் சேதத்தை சந்தித்து நிலைகுலைந்து வருகின்றன. 
ஆப்கானிஸ்தானில் நடக்கும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு ஊற்றுக்கண் பாகிஸ்தானிலிருந்து உருவாகிறது என்று அதிபர் ட்ரம்ப்,  ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரால் ஹானி ஆகியோர் வெளிப்படையாக அறிவிப்பதிலிருந்து, ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வருவதைத் தடுப்பது சிரமம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
தன் நலனுக்குத் தேவைப்பட்டால் - பிராந்தியத்தையும் தாண்டி - கூட்டணிப் படைகள் என்ற போர்வையில் - பிற நாடுகளில் தலையிட்டு ஜனநாயகம், மனித உரிமை, பயங்கரவாதம், உலக அமைதி, தேச பாதுகாப்பு, சித்தாந்தம், பேரழிவு ஆயுத ஒழிப்பு என்ற பெயரில் பேரழிவை உண்டு பண்ணி - ஆட்சியை மாற்றி, பின்பு தேச கட்டுமானம், அமைதி என்ற பெயரில் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து - ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் தனக்கு எந்த ஆதாயமும் இல்லையென்று கருதினால் - அந்த நாடு எக்கேடு கெட்டும் போகட்டும் என்று மூன்றாம் நாடுகளில் இருந்து வெளியேறுவது பொதுவாக அமெரிக்காவின் வாடிக்கை; வியட்நாம், ஈராக், லிபியா, சிரியா, இப்போது ஆப்கானிஸ்தான் ஆகியவை இதற்குச்  சிறந்த உதாரணங்கள். 
2018 டிசம்பர் இறுதியில் கத்தாரின் தலைநகரான தோஹாவில் பாகிஸ்தான் உதவியோடு முறைப்படி நடத்தப்பட்ட அமெரிக்க தலிபான் பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. தற்போதைய ஆப்கான் பொம்மை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கிடையாது; அனைத்து வெளிநாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலிபான்  தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தலிபான் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளத் தயாராகி வருகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் பிற நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என்ற அமெரிக்க நிபந்தனைக்கு எவ்வளவு நாள்கள் தலிபான்கள் கட்டுப்படுவார்கள் என்பது முக்கியமான கேள்வி. 
அமெரிக்கா போன்று அவசர கோலத்தில்  வெளியேறும் கொள்கை முடிவை எல்லை நாடுகளான இந்தியா, ரஷியா, ஈரான் போன்றவை எடுக்க முடியாது. தலிபான்களின் தோல்விக்குப் பின்பு அமெரிக்க ஆதரவுடன் இந்தியா, பெருந்தொகையை ஆப்கான் புனரமைப்புப் பணிக்கு செலவிட்டுள்ளது. 2001 முதல் சுமார் 116 நலத் திட்டங்களை ஆப்கானின் 31 மாகாணங்களில் இந்தியா நிறைவேற்றி வருகிறது. மனிதவள மேம்பாடு, சிறிய-பெரிய கட்டுமானங்கள், படிப்பகங்கள், சாலை அமைத்தல், சமூக முன்னேற்றம், மருத்துவமனைகள், அணைகள் மற்றும் 969 கோடியில் கட்டப்பட்ட நவீன நாடாளுமன்ற கட்டடம் போன்றவை அவற்றில் சில. 
மாறி வரும் சூழ்நிலையில் உருவாகும் பாகிஸ்தான்-தலிபான் கூட்டணி, இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு ரஷ்யாவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதும் முக்கியமானது.  2018 நவம்பர் 8-இல் இந்தியா உட்பட 11 நாடுகள் கலந்து கொண்ட மாஸ்கோ கலந்துரையாடல் கூட்டம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. 
அமெரிக்காவும், ரஷியாவும் தாங்கள் அங்கீகரித்த ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளை தோஹா, மாஸ்கோ பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், பயங்கரவாத அமைப்புகள் என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்ட தலிபான் பிரதிநிதிகளை  ஐ.நா-வின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வைத்தது ராஜதந்திர வஞ்சகம். 
ஆப்கான், அரபு, பாகிஸ்தான், ஷியா சார்புடையவை என்று பல்வேறு பிரிவுகளாகச் செயல்பட்டாலும் ஆப்கான் - பாகிஸ்தான் தலிபான் குழுக்கள் மிகவும் வலிமையானவை. பாலஸ்தீனம், காஷ்மீர், ரஷியாவில் செசினியா, சீனாவில் யூகுர், ஜின்ஜியாங் பிராந்தியங்களின் விடுதலை இவர்களின் நீண்ட காலக் கனவு. பாகிஸ்தான் - ஆப்கான் தலிபான்களின் ஆட்சி, ஆப்கானில் நிறுவப்பட்டால், பாகிஸ்தான் ராணுவம், உளவு நிறுவனமான ஐஎஸ்ஐஎஸ், மதவாதத் தலைவர்களின் உதவியுடன் ஜிகாத் ஏற்றுமதி என்ற பெயரில் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பேரழிவுகளை இந்த அமைப்புகள் ஏற்படுத்தலாம். 1999-க்குப் பிறகு, இந்த மாதம் 14-ஆம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட பெரிய வெடிகுண்டு படுகொலைகள், பாகிஸ்தான்-தலிபான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புதான் நடத்தின என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
பல கட்சி ஜனநாயகம், பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் அமைதி வழியில் தலிபான்கள் நம்பிக்கை இல்லாதவர்கள். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு பின்பு இந்தியாவின் உதவிகள் மறக்கப்பட்டு விடும். இந்த நிலையில் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா, தன்னிச்சையாகவும், ஒத்த கருத்துள்ள நாடுகளும் சேர்ந்து பல்வேறு உத்திகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். 
மூன்றாவதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பெரும் அனுபவம் உள்ள இஸ்ரேலுடன் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தி இந்தியாவின் எல்லைகள், ராணுவத் தளங்கள், கட்டமைப்புகளை பாதுகாக்கவும், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நான்காவதாக, இந்தியாவின் பன்முகத் தன்மையை மதிப்பதிலும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதிலும், எதிர்க்கட்சிகள் மற்றும் மாற்று கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தாமல் தொலைநோக்குடன் செயல்படும் தலைமையும் இந்தியாவுக்குத் தேவை. 
பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது தன் கூட்டணிக் கட்சியினர்,  எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகிய அனைவரையும் அணைத்துச் சென்றார் என்பதை மேற்கு வங்க முதல்வர்களாக இருந்த  ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது நினைவுகூரத்தக்கது. 
வரலாற்றில், பேரரசுகள் உள்நாட்டுக் குளறுபடியால்தான் வீழ்ந்தன என்பது மறக்க முடியாத உண்மை. 
இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பையும் ஒற்றுமையையயும், ஜனநாயக அமைப்புகளையும் பன்முகத் தன்மையையும் வலுவாக்குவதோடு, எதிர்வரும் எல்லை தாண்டிய சவால்களை ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டியது புதிதாக அமைய இருக்கும் அரசின் பிரதான பொறுப்பு. 
கட்டுரையாளர்:
பேராசிரியர், புதுவை பல்கலைக்கழகம்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/26/அமெரிக்காவின்-ராஜதந்திர-வஞ்சகம்-3102895.html
3102894 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் கிராமங்களைப் புறக்கணிக்க வேண்டாம்! இரா. இரத்தினகிரி DIN Tuesday, February 26, 2019 01:42 AM +0530
இந்தியா கிராமங்களில்தான் உயிர் வாழ்கிறது என்றார் அண்ணல் காந்தி. அரசாங்கம் என்பது மக்கள் நன்மைக்காக, ஊழியர்களால் நடத்தப்படுகிறது.  கிராம மக்கள் முன்னேற்றம் என்பது கிராம ஊழியர்களின் பங்களிப்பினால்தான் நிறைவேற்றப்பட வேண்டும். 
முன்பெல்லாம் ஒரு கிராமத்தில் கிராம முன்சீப், கிராம கர்ணம், கிராம சேவக், கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் எனப் பலரும் பணியாற்றி வந்தார்கள். அவர்கள் கிராமங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
கிராம நிர்வாக அலுவலர் அந்த கிராமத்திலேயே இருந்து  கிராமத்தின் நன்மை தீமைகள், ஒழுங்குமுறைகள், இருப்பிடச்சான்று, வருவாய்ச்சான்று போன்றவை வழங்க வேண்டும். ஒருவர் அடுத்தவர் இடத்தை, நிலத்தை அபகரித்து ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் சான்றுகள் உச்சநீதிமன்றம் வரை செல்லுபடியாகும். கிராம மக்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்காக குடியிருப்பு வசதிகளோடு கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆரம்பித்தார்கள். அதுபோல கிராம மக்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு எந்த நேரமும் வியாதிகள் ஏற்படும் உடனே அவற்றை குணப்படுத்த வேண்டும். சினை மாடுகள் கன்று போட பெரிதும் சிரமப்படும். அதற்குரிய ஊழியர்களும், டாக்டர்களும் அங்கேயே குடியிருக்க வேண்டும். அதுபோல கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களில் குடியிருந்தால், காலை நேரங்களில் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் தெருவில் நடக்கும்போது மாணவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர்களுக்கும் பாடம் தயார் செய்து சொல்லிக் கொடுக்க நேரம் இருக்கும். இப்போது எல்லா கிராமங்களுககும் மின்சார வசதி வந்துவிட்டது.  திடீரென மின்சாரம் பழுதுவிட்டால், சரிசெய்வதற்கான லைன்மேன் கூட அந்தந்த கிராமங்களில் வசிப்பதில்லை. 
தற்காலத்தில் பெரும்பாலும் படித்தவர்கள், பணக்காரர்கள், பதவியிலிருப்பவர்கள் கிராமங்களில் குடியிருக்க விரும்புவதே இல்லை. நகரங்களில் குடியிருப்பது தான் மரியாதை என்று நினைக்கும் மனப்பான்மை வந்து விட்டது. கிராமத்தில் இருப்பவர் ஊராட்சி மன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்று விட்டால் உடனே பக்கத்தில் உள்ள நகரத்தில் குடிபெயர்ந்து விடுகிறார்.
கிராமங்களில் தான் விவசாயம் நடக்கிறது. ஆனால் விவசாய அதிகாரி, விதைச்சான்று அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானம் படித்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நகரத்தில் தான் குடியிருக்கின்றனர். அவர்களின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்துப் பூச்சிகொல்லி மருந்து வாங்கிவந்து அடிப்பதற்குள் பயிர்களெல்லாம் சேதமாகி விடுகின்றன. யாரை நொந்து கொள்வது?
கிராமத்திற்கு வேலை செய்வதற்காக அரசாங்க ஊதியம் பெறும் அரசு ஊழியர், கிராமத்திற்கு வசதிப்பட்டால் வந்து போவதையும், நகரங்களில் முழுநேரமாக வேறு தொழில் செய்து பகுதிநேரமாக அரசு வேலை செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டும். தண்டிக்க வேண்டிய அதிகாரிகளே அவரவர் பணியிடங்களில் குடியிருப்பதில்லை என்பதால் அவர்களைக் கண்டிக்க முடிவதில்லை. 
கிராமங்களுக்கு நியமிக்கப்பட்ட நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் அந்தந்த கிராமங்களிலேயே குடியிருக்க வேண்டும். கிராமங்களுக்காகப் பணியாற்ற வந்த அலுவலர்கள், ஊழியர்களின் பிள்ளைகளை கிராமப் பள்ளிகளிலேயே படிக்க வைக்க வேண்டும். கிராமப் பள்ளிகளில் சில ஊர்களில் நான்கு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு இருந்தால் வழக்கமாக இரண்டு பேர் பணியில் இருப்பார்கள்; மீதி இரண்டு பேருக்கு விடுப்பு விண்ணப்பம் வருகைப் பதிவேட்டிலேயே இருக்கும். இந்த நிலை மாற வேண்டும்.
கிராம சேவக் என்பவர்களுக்கு முன்பு வில்லேஜ் கைடு என்று பெயர். கிராமங்களில் வேளாண்மை நவீன முறைக்கு மாறியது என்றால், அது அவர்களால்தான். கிராமத்தில் குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததுமே ஆடு மேய்க்க அனுப்புகிற முறையை மாற்றி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தது கிராம சேவக் தான். அந்த கிராம சேவக், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடிசை வீட்டிலும் தொடர்பு வைத்திருப்பார். வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள், அவர்கள் பிள்ளைகள் படிக்கிறார்களா?, என்ன படிக்கிறார்கள்? என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். மேலும், கிராமத்தில் வசிக்கும் மாணவர்களை பக்கத்து ஊர்களில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ப்பது, நோயுற்றவர்களை உரிய மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பது,  ஆதரவற்றோர் - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது போன்ற உதவிகளைச் செய்வார். இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய் போய்விட்டன. இந்த கிராம சேவகர்களின் பதவிப் பெயர், தற்போது கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) என்று மாற்றப்பட்டுவிட்டது. அலுவலராகப் பெயர்மாற்றம் வந்த பிறகு கிராமத்தில் இருப்பது மரியாதைக் குறைவாகக் கருதி, நகரங்களில் குடியேறிவிட்டார்கள்.
இனியாவது, கிராமங்களின் நலன் கருதி நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அந்தந்த கிராமங்களிலேயே குடியிருக்க வேண்டும். துறைத்தலைவர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி  அரசு  ஊழியர்கள் பணியாற்றும் ஊரிலேயே தங்கி பணியாற்றிட தமிழக அரசு ஆவன செய்ய      வேண்டும்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/26/கிராமங்களைப்-புறக்கணிக்க-வேண்டாம்-3102894.html
3102278 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் "புன்னகைப் பூக்கள்' மலரட்டும்! இரா. கதிரவன் DIN Monday, February 25, 2019 03:40 AM +0530 புன்னகைப்பதும், ஆனந்தமாக இருப்பதும் மனிதனின் பிறப்போடு கூடிய இயல்பு;  ஆனால், பின்னர் மகிழ்ச்சியைத் தேடி, கவலைகளைச் சுமந்து, புன்னகையைப் பெரும்பாலானோர் மறந்தே விடுகின்றனர். அலுவலகங்களில் சிலர், தங்களது சக அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் புன்னகைக்கவே மாட்டார்கள்.சிறிது புன்னகையோடு பேசினால், தனக்குக் கீழ் பணிபுரிபவர், தனது உத்தரவுகளைச்  சரிவரச்  செயல்படுத்த மாட்டார், எதிர் கருத்துக்களைக் கூறுவார்கள் என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கக் கூடும்.

ஆனால், புன்னைகையோடு உள்ள அதிகாரி, அதிகார தோரணை காட்டும் அதிகாரியைவிட அதிகமாக,  சக அதிகாரி அல்லது ஊழியரிடமிருந்து நல்ல மனமுவந்த ஒத்துழைப்பினைப்  பெறுகிறார்; அதிகமாகச்  சாதிக்கிறார். சில அரசு அலுவலகங்களில்,  அலுவல்  நிமித்தமாக வரும் பொது மக்களிடம் நேர்பார்வையுடன் பேசுவது-புன்னகைப்பது  பெரும் குற்றம் என எண்ணிப் பணிபுரிவோர் ஏராளம் . 

வாழ்வில் எவ்வளவு பேரைப் பார்த்தாலும் பேசினாலும், அவர்களில் பலரை மறந்து விடுகிறோம்; ஆனால் புன்னகையை முக விலாசமாகக் கொண்டவர்கள் நம் நெஞ்சில் நிரந்தரமாய்ப் பதிந்து விடுகிறார்கள். ஏனெனில், அகம் புறம்  என இரு தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது புன்னகை. ஓர் இலகுவான சூழலை ஏற்படுத்தும். மனச்சோர்வினை அகற்றும் தன்மை கொண்டது. மேலும், அவர்  தன்னம்பிக்கை உடையவர் என்ற தோற்றத்தினை ஏற்படுத்தும். சலிப்பு ,கோபம், ஆத்திரம், மன உளைச்சல் உள்ளிட்ட பல எதிர்மறை எண்ணங்களுக்கு மாற்று மருந்து புன்னகை. சில சமயங்களில், நூறு கடும்

சொற்கள் சாதிக்க முடியாததை, ஏற்படுத்த முடியாத தாக்கத்தினை, புன்னகையுடன் கூடிய ஒரு சில சொற்கள் ஏற்படுத்த முடியும்.  

பொதுவாக உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கும்போதெல்லாம் முகத்தில்   புன்னகை  தோன்றும்; இதன் இன்னொரு பிரதிபலிப்பாக , 'முகத்தில் புன்னகைத்தோற்றம் இருக்குமானால், மனதில் மகிழ்ச்சி ஏற்படும்' என்று சொல்வோரும் உண்டு. எனவே, சிலர் "முதலில் பொய்க்காகவாவது புன்னகையுங்கள்; நாளடைவில் அது உங்கள் முகத்தில் நிரந்தரமாகக் குடியேறும்' என்பர். 

தமிழில், ஒரு சொல் பல பொருள்களைத் தருவதைப் போல, புன்னகையும் ஒவ்வொருவருக்கு ஒரு பொருளைத் தர வல்லது; கண்டிப்பான  மேலதிகாரியின் புன்னகை சில ஊழியருக்கு வெகுமதி ;  அக்கம்பக்கத்தாரின்  புன்னகை , தனித்திருக்கும் முதியவருக்கு பெரும் ஆறுதல்;   நல்லாசிரியரின் புன்னகை ஒரு மாணவனுக்கு அங்கீகாரம்; ஒரு தந்தையின் புன்னகை மகனுக்கு பெரும் ஊக்கம்; பெற்றெடுத்த குழந்தையின் புன்னகை தாய்க்குப் பரவசம்  எனப் பல்வேறு பொருள்களைத் தருகிறது.

எவர் எப்படியிருப்பினும்  குழந்தைகள் மட்டுமே, எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி புன்னகைப்பர்.  ஆனால், சில குழந்தைகள் புன்னகைக்கவே முடியாது என்பது வருத்தம் தருவது ஆகும்.   இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில்,ஆயிரத்தில் ஒரு குழந்தை, "பிளவுபட்ட உதடுகள்' என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகள் , பிறர்போல்  சாதாரணமாகப்  புன்னகைக்கவே முடியாது ; அதனினும் கொடுமையாக இவர்கள் தாய்ப்பால் அருந்துவதற்கும், உணவு உண்பதற்கும், பேசுவதற்கும் கூட பெரும் சிரமப்படுவர். 

இந்தக் குறைபாடு நீக்கப்பட முடியாதவர்கள் பலர், வளரும்போது  தங்களது உடற்கூறு   குறைபாட்டுடன் , மனதளவிலும் பாதிக்கப்படுவர். இவர்களில் கணிசமானோர்  இருபது வயதுக்குள் உயிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  மருத்துவ உலகமும், பல அரசு சாரா நிறுவனங்களும் இந்தக் குறையினைச் சீர் செய்ய உதவி செய்கின்றன.

நமது நாட்டில் நடைபெறும் சில சமூக விரோதச் செயல்களில் ,சிறுவர்-சிறுமியர்  கடத்தல் என்பதும் ஒன்றாகும்; பெற்றோர் -குழந்தைகள் என இரு சாராரும் தங்களது நிம்மதியைத் தொலைக்க வைக்கும் செயல் இது; நம் மத்திய அரசு , இந்தப் பெற்றோர்கள்-சிறுவர்கள் முகத்தில் புன்னகையை மீண்டும் அரும்பச் செய்யும் வகையில், "புன்னகையை மீட்டெடுப்போம்' என்ற இலக்குடன், சில  திட்டங்களைச்  செயல்படுத்துகிறது. பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு , நடைபாதை , ரயில் நிலையங்கள் எனப்  பொது இடங்களில் தங்கியிருக்கும்  சிறார்களையும், தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படும் சிறுமியரையும் கண்டுபிடித்து மீட்டு  அவர்களது பெற்றோரிடம் சேர்க்கும் பணியினைத்   தீவிரமாகச் செய்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட மாதத்தினை "புன்னகை மீட்டெடுப்பு மாதமாக' அறிவித்து, காவல் துறையின் மூலம்  நடத்துகிறது; இந்த ஒரு மாதம் முழுவதும், பல மாநிலங்களிலும்  தேர்ந்தெடுக்கப்பட்ட  காவல் துறையினருக்கு, பிற மாநில காவல் துறை, சிறார் சீர்திருத்தப் பள்ளி ஆகியவற்றோடு ஒருங்கிணைப்புத்  தொடர்பான சிறப்புப் பயிற்சி அளிக்கப் படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர்  மீட்கப் பட்டிருக்கின்றனர்; அதன் மூலம் அவர்களது மட்டுமல்ல,  அவர்கள் பெற்றோர் முகத்திலும் புன்னகையை திரும்பச் சேர்த்திருக்கிறது என்பது பாராட்டுக்குரியது.

உண்மையில் புன்னகை ஒன்றே உலகப் பொதுமொழி என்று கூறலாம்; நிற-மத -நாடு -மொழி-கல்வி வேறுபாடுகளைக் கடந்தும் பரிமாறிக்கொள்ளக் கூடிய ஒரே மொழி புன்னகை மட்டுமே. இந்தப் பின்னணியில், புன்னகை என்னும் மொழி தெரிந்த நாம், சிறு புன்னகையின் மதிப்பினை உணர்ந்து, "புன்னகைப்  பூக்களை' ஏராளமாக மலரச் செய்வோம்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/25/புன்னகைப்-பூக்கள்-மலரட்டும்-3102278.html
3102277 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் பெருக வேண்டும் ஏற்றுமதி எஸ். கோபாலகிருஷ்ணன் DIN Monday, February 25, 2019 03:39 AM +0530 நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ஆம் ஆண்டில் 7.2%-ஆக உயரும் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது. முன்னதாக,  6.7%-ஆக மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலக அளவில் பார்க்கும்போது, மேற்கூறிய 7.2 சதவீத வளர்ச்சி  சிறப்பான வளர்ச்சி 
என்றுதான்  சொல்லவேண்டும்.

அதே நேரம், கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 3.74%-ஆக குறைவான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது என்பதே. பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு சுணக்கமாக இருந்ததையடுத்து, ஏற்றுமதியில்  சரிவு  ஏற்பட்டுள்ளது  என்பது  வெளிப்படை.
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  2018-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தே  காணப்பட்டது.

நாட்டின் இறக்குமதியின் அளவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக, ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்; இறக்குமதி குறைய வேண்டும் என்பதுதான் நமது இலக்காக இருக்கவேண்டும். காரணம், ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்நியச் செலாவணி அதிக அளவில் இந்தியாவுக்குக் கிடைக்கும். ஏற்றுமதிப் பொருள்களின் தேவையால் உற்பத்தி பெருகும். தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்க்கைத் தரம்  உயரும்.    

மாறாக, இறக்குமதி குறைந்தால் குறைவான அளவில் அந்நியச் செலாவணி வெளியேறும். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். எனவே, தங்கம் போன்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கை அமைக்கப்படும்.

தற்போது இறக்குமதி குறைந்திருப்பதற்குக் காரணம் பெட்ரோலியப் பொருள்
களின் விலை குறைந்திருப்பதே ஆகும். இது வரவேற்கத்தக்கது. ஆனால், கூர்ந்து கவனிக்கும்போது தொழிற்சாலைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும், வெளிநாட்டு மூலிலப் பொருள்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது எனத் தெரிகிறது. இது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இது ஒருபுறம் இருக்க, தற்போதைய நிலையில் ஏற்றுமதி சரிவுக்கு என்ன காரணம்? அதைச் சீர் செய்வது  எப்படி  என்பதே  முக்கியமான  பிரச்னை ஆகும்.

உலக நாடுகளில் பொருளாதார சுணக்க நிலை நீடிக்கிறது என்பது  உண்மை. இதனால், இந்தியாவின் பாரம்பரியமான ஏற்றுமதிப் பொருள்களான பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணங்கள், ரப்பர், காபி, தேயிலை, ஜவுளி உள்ளிட்ட பல பொருள்களைக் கொள்முதல் செய்வதில் சர்வதேச அளவில்  சுணக்கம்  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை எதிர்கொள்வதற்கும், நமது ஏற்றுமதியை எப்போதும் போல் பெருக்குவதற்கும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்களும் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். உதாரணமாக, இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை ("எலக்ட்ரிக் டேடா இன்டர்சேஞ்ச்') படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் லிமூலம் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டு வந்த கால விரயம் குறைவதற்கு இப்போது வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் துறைமுக வழிமுறைகளை நிறைவு செய்வதற்கு சீன ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் நேரத்தைவிட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில், இந்தியா 146-ஆவது இடத்தில்  உள்ளது  என்கிறது  உலக  வங்கியின்  ஆய்வறிக்கை.  எனவே மேற்
கூறிய மின்னணு தகவல் பரிமாற்ற நடைமுறையை முழுமையாகவும்  துரிதமாகவும் செயல்படுத்துவது அவசியம்.

சில மாதங்களுக்கு முன்பு வரை ஏற்றுமதியை ஜி.எஸ்.டி. நடைமுறைகள்  பாதிப்பதாக புகார்கள் வந்தன. அண்மையில் பல்வேறு பொருள்களுக்கு "சரக்கு மற்றும் சேவை வரி'  (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம். அதே போன்று ஏற்றுமதியாளர்கள் அன்றாடம் சந்திக்கும் நடைமுறை தாமதங்கள் அகற்றப்பட வேண்டும். உதாரணமாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் மூலப் பொருள்களுக்கு அவர்கள் செலுத்திடும் வரித் தொகையில் திரும்பக் கொடுக்க வேண்டிய தொகையை அரசு  விரைந்து பட்டுவாடா  செய்ய  வேண்டும்.

ஏற்றுமதியாளர்களுக்கான விதிமுறையை அடிக்கடி மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து கிட்டத்தட்ட 200 அரசாணைகளைப் பிறப்பித்திருக்கிறது என்று ஏற்றுமதியாளர்கள் சம்மேளனங்கள் தெரிவிக்கின்றன. இனியாவது இதுபோன்ற சூழல் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காலம் காலமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது. அனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஏற்றுமதியின் பங்கு வெறும் 10%-ஆகக் குறைந்துள்ளது. அதே÷ நேரம் தென்கொரியாவை எடுத்துக் கொண்டால், அந்த நாட்டின் ஜி.டி.பி.யில்,  ஏற்றுமதியின் பங்கு 40%-க்கு மேல்  அதிகரித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையும் இந்தியாவின்  ஏற்றுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்பது மிகை அல்ல. ஏனெனில், சீனாவின் ஏற்றுமதியும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்த நாட்டின் ஜி.டி.பி. சில ஆண்டுகளுக்கு முன் 13% என இருந்தபோது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 35%-ஆக இருந்தது.  அந்த நிலை  இப்போது  பழங்கதையாகிவிட்டது.
சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ள இந்தத் தருணத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டும். மாறாக, வங்கதேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன.
இவை அனைத்துக்கும் சிகரமாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்சமயம் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது, வங்கி கடன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள்தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். கடந்த காலங்களில் ஏற்றுமதியைப் பெருக்குவதில் வங்கிக் கடன் வசதி முன்னிலை வகித்தது. ஆனால், அண்மைக் காலங்களில் வங்கிகளில் ஒருபுறம் வாராக் கடன் தொகை அதிகரித்துள்ளது. இன்னொருபுறம் வங்கிகளில் கடன் மோசடிகள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதிய சூழலில் வங்கிகளின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பொதுவாக சிறு தொழில்களையும், குறிப்பாக ஏற்றுமதியாளர்களையும்  நேரடியாகப்  பாதிக்கிறது.
வாராக் கடனை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய கடன்கள் வழங்குவதற்கு அரசுடமை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதனால் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வியாபாரம் நசியத் தொடங்கியது. அண்மையில்தான் 11 வங்கிகளில் மூலின்று வங்கிகளுக்கான தடை உத்தரவு  விலக்கிக்  கொள்ளப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சுமை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் ரெப்போ ரேட்டை 6.30%-லிருந்து 6.25%-ஆகக் குறைத்தது. இந்த நடவடிக்கை பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும் இதுவரை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை இம்மியும் குறைக்கவில்லை. இது நியாயம் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்  வட்டி விகிதம் உடனடியாக  கால்  சதவீதம்  குறைக்கப்பட
வேண்டும்.
மூன்றாவதாக, வங்கிகளின் நிதி ஆதாரத்தைக் கொண்டு, புதிய கடன்கள் வழங்குவதைக் குறைத்துக்கொண்டு அந்தப் பணத்தை அரசு பாண்டுகளில் குறைந்த வட்டியில் வங்கிகள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அது தவிர ரிசர்வ் வங்கியில்  சட்டப்படி வைத்திருக்க வேண்டிய பாண்டுகளில் (எஸ்.எல்.ஆர்.) நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக வங்கிகள் முதலீடு செய்கின்றன. "ரிஸ்கை' தவிர்ப்பது மட்டுமே வங்கிகளின்  நோக்கம். அதாவது, புதிய கடன் வழங்கினால் புதிதாக வாராக் கடன் பெருகி விடும் என்ற அச்சத்தில் கடன் கொடுப்பதையே குறைத்திடும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இது வங்கிகளின் தொழில் தருமம் ஆகாது. கடன் கொடுப்பதில் முன் எச்சரிக்கையும், கூடுதல் கவனமும், நிபுணத்துவமும்தான் தேவையே தவிர கடன் கொடுப்பதைக் குறைப்பதும், குறிப்பாக சிறு தொழில் மற்றும் ஏற்றுமதிக் கடன் கொடுப்பதை தவிர்ப்பதும் சரியல்ல. இந்திய ஏற்றமதியின் 40% சிறுதொழில்களின்  பங்களிப்பு  என்பதை  மறக்கக் கூடாது.
மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் லிமூலதனத்தை வலுப்படுத்தும் வகையில் 2018-ஆம் ஆண்டில் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்தது. அப்படி இருந்தும் இதே காலகட்டத்தில், வங்கிகளின், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் புதிய கடன் தொகை 15  முதல் 20%  சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத நிதி மற்றும் கடன் கொள்கையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இவ்வளவு முக்கியமான விஷயத்தை அறிவித்தால் மட்டும் போதாது. அதற்குரிய சீர்திருத்த நடவடிக்கையைகாலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் உயிர் நாடி ஏற்றுமதி ஆகும். அதனை மேம்படுத்துவதற்கு அரசு மற்றும் ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டும் அதே நேரம், வங்கிகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு உண்டு என்பதை வங்கிகள் உணர  வேண்டும். 

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/25/பெருக-வேண்டும்-ஏற்றுமதி-3102277.html
3101058 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் நெருங்கும் தேர்வுகளும், நடுங்கும் மாணவர்களும்! இரா. கற்பகம் DIN Saturday, February 23, 2019 01:30 AM +0530 பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து தினம் தினம் விதவிதமான தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் என்று தேர்வுக்கு மேல் தேர்வு எழுதியும்  பொதுத் தேர்வு என்றாலே மாணவர்கள் நடுங்குகிறார்கள். இதற்குக் காரணம் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, புத்தகங்கள் மற்றும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள்தான்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தரமானது என்ற தவறான கருத்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நிலவுகிறது. உண்மையில்  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ள அதே பாடங்கள்தான், சமச்சீர்ப் பாடத்திட்டத்தின் எல்லாப் பாடங்களிலும், எல்லா வகுப்புகளிலும் உள்ளன. அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஒரே பாடங்கள் வெவ்வேறு பெயர்களில் உள்ளன. வினாத்தாள் அமைப்பு, மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறைதான் மாறுகின்றனவே தவிர பாடங்கள் எல்லாமே ஒன்றுதான்.
இரு பாடத்திட்டங்களிலும் உள்ள மிகப் பெரிய குறைபாடு அளவுக்கு அதிகமான பாடங்கள் இருப்பதுதான். எந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டாலும், மேல் வகுப்புகளில் இருக்கும் அதே பாடங்கள், கீழ் வகுப்புகளிலும் உள்ளன. கணிதம், அறிவியல் இரண்டிலுமே கீழ் வகுப்புகளுக்கு அடிப்படைத் தகவல்களும், மேல் வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல கூடுதல் தகவல்களைப் பாடங்களில் சேர்ப்பது ஏற்புடையது.
எடுத்துக்காட்டாக, ஏழாம் வகுப்பில் அறிவியலில் தாவரங்களின் அடிப்படை வகைகள், எட்டாம் வகுப்பில் அதே பாடம் சற்று விரிவாக, ஒன்பதாம் வகுப்பில் தாவரங்களின் உணவு, அசைவுகள், இனப்பெருக்கம் என்று கூட்டிக் கொண்டு போவது சரி. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித இனப்பெருக்கம் பற்றி விரிவாக ஒரு பாடம்.
பருவமடைதல், சினைமுட்டை, விந்து - இவற்றை எப்படி இவர்களுக்கு விளக்குவது? அதிலும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் இரு பாலரும் சேர்ந்து படிக்கும்போது இவற்றைப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பத்தாம் வகுப்பில் இதே பாடத்தில் எய்ட்ஸ் பற்றியும், அதைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பான உடலுறவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
பிளஸ் 2 வகுப்பு சமச்சீர் உயிரியல் பாடத்தில் கருத்தடை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும்போது முதலாம் ஆண்டில் உடற்கூறு பற்றி முழுமையாகப் படிக்கப் போகிறார்கள் எனும்போது பிளஸ் 2 வகுப்பில், அதுவும் கருத்தடை பற்றிய பாடம் தேவையே இல்லை.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. சமச்சீர்ப் பாடத்திட்டத்திலும் தற்போதுள்ள பாடங்களைப் பாதியாகக் குறைத்து, விளையாட்டு, கவின்கலைகள், புத்தக வாசிப்பு, நல்லொழுக்கம், சுற்றுச்சூழல், தற்காப்புக்கலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களை எழுதுபவர்கள் பெரும்பாலும் கற்றுத் தேர்ந்த பேராசியர்களாக இருப்பார்கள். இவர்கள் பாடநூல்களை எழுதும்போது தங்கள் புலமை வெளிப்படும் வண்ணம் எழுதுகிறார்கள். மாணவர்களுக்குப் புரியுமா, புரியாதா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாடங்களை வடிவமைக்கும்போது அவர்கள் அளவிற்குக் கீழிறங்கி வந்து அவர்களது கோணத்தில் சிந்தித்து எளிமையாக எழுத வேண்டும். 
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களைப் பார்த்து அதே  போன்று வடிவமைத்திருக்கிறார்கள். கணிதத்தில் மிக முக்கியமான பாடமான, லாகரிதம், ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்தில் விடுபட்டுள்ளது. இரண்டு வருடங்கள் இந்தப் பாடத்தைப் பயின்றால்தான் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் கணக்குகளை எளிதாகப் போட முடியும். ஆங்கிலம், தமிழ் ஆகிய புத்தகங்கள் அசுவாரசியமாக உள்ளன.
முன்பு ஆங்கிலப் புத்தகங்களில், கிளாசிக்ஸ் எனப்படும் பழங்காலக் கதைப் புத்தகங்களிலிருந்து ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்து ஒரு பாடமாக வைப்பார்கள். அதனைப் படிக்கும் போது மூலப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். துணை பாடப் புத்தகங்கள் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பாகவோ, தேசத்தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவோ இருக்கும்.
இப்போதோ குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமை சாதனையாளர்களின் சிரமங்களை விவரிக்கும் வரலாறுகள் பாடமாக உள்ளன. பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி தரும் பாடங்களையே விரும்புவார்கள். இதுபோன்ற மனதைப் பாரமாக்கும் பாடங்களை விரும்புவதில்லை, அதனால் பாடங்களைப் படிப்பதில் ஆர்வமும் காட்டுவதில்லை.
தமிழ்ப் புத்தகத்தில், செம்மைத் தமிழ் மொழி, தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், என்று பழம்பெருமை பேசும் காலத்துக்கு ஒவ்வாத பாடங்கள் உள்ள புத்தகங்கள் மாணவர்களைத் தமிழ் என்றாலே ஓடச் செய்கின்றன. இதனாலேயே பத்தாம் வகுப்பு வரை வேறு வழியின்றித் தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு பிளஸ் 1 வகுப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிக்குத் தாவி விடுகிறார்கள். கல்கியின் நகைச்சுவைக் கட்டுரைகள், விடுதலைப்போரின் வீரச்சம்பவங்கள், ராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், பெரியபுராணம் முதலிய இதிகாசம், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்களைக் கதை வடிவமாக்கி, எளிய தமிழில் புத்தகமாக எழுதினால் மாணவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள்.
நான்கு சுவர்களுக்குள் மாணவர்களை அடைத்து வைத்துப் பாடம் கற்பிக்கும் முறை மாற வேண்டும். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே இலக்கண வகுப்புகள் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதில்லை. ஒருமை, பன்மை, அஃறிணை, உயர்திணை, ஆண்பால்-பெண்பால் இவற்றையெல்லாம் கரும்பலகையில் எழுதிக் கற்பிக்காமல் பள்ளி மைதானத்தில் இயற்கையோடு இணைந்து, கற்களையும், மரங்களையும், செடிகளையும் எடுத்துக்காட்டாக வைத்துக் கற்பிக்கலாம்.
ஆங்கிலத்தில் பாடல்கள் மற்றும் பாடங்களை மாணவர்களை நாடகமாக நடிக்கச் செய்தால் அந்தப் பாடங்களை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
சமச்சீர்ப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணப் பாடங்கள் மிக அழகாக உரையாடல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர்கள் அந்த முறையில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் வாய் விட்டுப் படிக்கச்சொல்லிக் கற்பிப்பது இல்லை. ஒரு பாடத்தை ஒரு வகுப்பில் இரு முறை சொல்லிக் கொடுத்து, அப்போதே மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து ஒரு குழு கேள்வி கேட்க மற்ற குழுக்கள் பதில் சொல்வதுபோல் வகுப்பை நடத்தினால் சுவாரசியம் கூடும்.
நமது தேர்வு முறையில் உள்ள மிகப் பெரும் குறைபாடு, தேர்வு வினாக்கள் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இல்லாமல் அறியாத் திறனைச் சோதிக்கும் வண்ணம் இருப்பதுதான்.
சமச்சீர்த் திட்டத்தில் புத்தகத்தில் உள்ள கேள்விகளை வார்த்தை மாறாமல் அப்படியே கேட்கிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலோ புத்தகத்தில் இருப்பதற்குச் சற்றும் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்கிறார்கள். இரண்டுமே தவறு. பாடங்களை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டு அதில் எப்படி கேள்விகளைக் கேட்டாலும் பதில் எழுதத் தெரியும் அளவுக்கு மாணவர்களைத் தயார் செய்யவேண்டும்.
மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்கப் போதிய அவகாசம் கொடுக்காமல் தேர்வுகள் வைத்துப் பயனில்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இவற்றுக்கிடையே ஒரு பருவத் தேர்வு, முழு ஆண்டுப் பொதுத் தேர்வுக்கு முன்னர் இரண்டு திருப்புதல் தேர்வுகள் - இவை போதும், மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி எழுதுவார்கள்.
ஒவ்வொரு தேர்விலும் வெவ்வெறு வகையான வினாக்கள் கேட்கப்பட வேண்டும். புளூஃபிரிண்ட் எனப்படும் மாதிரி வடிவம் அறவே ஒழிக்கப்படவேண்டும். ஒவ்வொரு பொதுத் தேர்வுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரே கேள்விக்குப் பலவிதமான பதில்களை அளிக்க முடியும். விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களும் இதனைப் புரிந்து கொண்டு குறிப்பேடுகளின் துணையோடு திருத்தாமல் மாணவர்களின் புரிதல் திறனை மதித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
சனி, ஞாயிறுகளிலும், காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறைகளிலும் கூடுதல் வகுப்புகள் வைத்து மாணவர்களைச் சோர்ந்துபோக வைத்துவிடுகிறார்கள். இந்த நாள்களில் விடுமுறையைக் கட்டாயமாக்கி மாணவர்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் ஒட்டுமொத்த மாறுதல் ஏற்பட்டு, பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும், புத்தகங்களும், தேர்வு முறையும் மாறினால் மாணவர்கள் தேர்வுகளைப் பயமின்றி, மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள்.

கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/23/நெருங்கும்-தேர்வுகளும்-நடுங்கும்-மாணவர்களும்-3101058.html
3101057 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் விவசாயம் லாபகரமானதாக மாற... இ. முருகராஜ் DIN Saturday, February 23, 2019 01:30 AM +0530 இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம். தற்போது அந்த முதுகெலும்பு பாழ்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மாறிவரும் பருவநிலை, இயற்கைச் சீற்றங்கள், சந்தைப்படுத்துதல், தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாய மட்டுமின்றி  விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் விவசாயப் பணிகளுக்குக் கூலி ஆள்கள் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளே இவர்களுக்கு விவசாய வேலையைவிட ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை மிகவும் சுலபமாக இருப்பதால், இந்தத் திட்டத்தில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதன் காரணமாக, விவசாய வேலைக்குப் பணி செய்வோர் தட்டுப்பாடும், அதன் காரணமாக கூலி உயர்வும் அதிகரித்துள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களை, தற்போது தனியார் நிலங்களில் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதித்திருந்தாலும், அவர்கள் அந்தப் பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே!
விவசாயத்துக்கு கூலி ஆள்கள் கிடைக்காமல் வேளாண் பொருள்களை விளைவித்து, அவற்றை விற்பனைக்காக சந்தைகளுக்கும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் விவசாயிகள் கொண்டு செல்லும்போது, அங்கு இடைத்தரகர்கள், வியாபாரிகள் அவர்களுக்குள் மறைமுக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மலிவான விலைக்கு விவசாயப் பொருள்களை வாங்குகின்றனர். மேலும், வேளாண் பொருள்களை வியாபாரிகள் பதுக்கி வைத்துக்கொண்டு தற்காலிக விலையேற்றத்தை உருவாக்குகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால், வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலைக்கும், அவற்றை நுகர்வோர் வாங்கும் விலைக்கும் இடையே மாபெரும் வேறுபாடு ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வந்தாலும், அவர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இந்தக் கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புது தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரே நேரத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருள்களில் 85 சதவீதப் பொருள்கள் உள்நாட்டு தேவையை நிறைவு செய்கின்றன. 15 சதவீதப் பொருள்களே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருள்களின் அளவு இந்தியாவைவிட அதிகமாகும்.
இந்தியாவில் விளை நிலங்களிலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் பகுதிகளிலும் வேளாண் பொருள்கள் அதிகளவில் வீணாகி வருகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் உற்பத்திக்குப் பிறகு வீணாகும் உணவுப் பொருள்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்களைப் பரவலாக்குவதன் மூலம் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க முடியும். இதற்காக அரசு தனி அமைப்பை ஏற்படுத்துவதுடன், அதிகாரிகளையும் நியமித்து வேளாண் பொருள்கள் அதிக விளைச்சல் உள்ள பகுதியில் இருந்து தேவை உள்ள இடங்களுக்கு உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.
மேலும், உணவுப் பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் இணையதளம் (ஹல்ங்க்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய்) குறித்து பரவலாக்குவதற்காக செல்லிடப்பேசி செயலியை உருவாக்கி, அது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண் பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களை அதிகளவில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தற்போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் வேளாண் பொருள்கள் பதப்படுத்தப்படும் மையம், சூரிய கூடார உலர்த்தி (சோலார் ட்ரையர்) உள்ளிட்டவற்றை ஏற்கெனவே உள்ள உழவர் சந்தைப் பகுதியில் அமைத்து, உழவர் சந்தையை நவீனப்படுத்தலாம்.
இயற்கை விவசாயம் குறித்தும், நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட வேளாண் பொருள்களின் வகைகள் குறித்தும் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் பள்ளிப் பருவத்திலிருந்தே விவசாயம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். மேலும், இயற்கை விவசாயத்தை விவசாயிகள் அதிகளவில் மேற்கொள்ளும் வகையில் கண்காட்சிகளை நடத்துவதுடன், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றையும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 
விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்களையும், வட்டிகளையும் வங்கிகள் தள்ளுபடி செய்வது அவர்களுக்கு தற்காலிகத் தீர்வாகத்தான் அமையும். எனவே, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அரசு முழுமையாக அமல்படுத்த முன்வர வேண்டும்.  விவசாயம் லாபகரமான தொழிலாக மாறினால், வேலையில்லாத் திண்டாட்டம் முடிவுக்கு வரும். படித்த இளைஞர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட முன் வருவர்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/23/விவசாயம்-லாபகரமானதாக-மாற-3101057.html
3100343 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஊழல் மனநோயாளிகள்! என். முருகன் DIN Friday, February 22, 2019 11:06 AM +0530 முந்தைய காலங்களில், நமது நாட்டின் உயர் பதவியான ஐ.சி.எஸ். உலகெங்கிலும் பாராட்டப்பட்டது.  சுமார் 1,000 ஐ.சி.எஸ். அதிகாரிகள், 30 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டை சீரும் சிறப்புடன் நேர்மையான வகையில் நிர்வாகம் செய்தனர் என இந்தியாவை விடவும் முன்னேற்றம் அடைந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாராட்டினார்கள்.

ஆனால், நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பிரபலங்களில் ஒருவரான ஜவாஹர்லால் நேரு, ஐ.சி.எஸ். அதிகாரிகளின் மீது மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். இந்தியன் சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.சி.எஸ். அதிகாரிகள்,  இந்தியனும் அல்ல, சிவிலும் அல்ல, சர்வீசும் அல்ல எனக் கூறினார்.

அதை ஒத்துக்கொள்ளாத வல்லபபாய் படேல், ஆங்கிலேயர்களின் இந்திய அரசு மிகவும் நேர்மையுடன் செயல்பட்டதற்கான அடிப்படைக் காரணம், ஐ.சி.எஸ். அதிகாரிகளே எனவும், நாம் சுதந்திரம் அடைந்த பின்னரும் அது போன்ற அதிகாரிகள் பணியில் தொடர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். சுதந்திர இந்தியாவில் அதிகாரிகளின் பெயரை வேண்டுமென்றால் , ஐ.சி.எஸ். என்பதிலிருந்து ஐ.ஏ.எஸ். என மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறி அதில் வெற்றி பெற்றார்.
 

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தோல்வி அடைந்து தி.மு.க. வெற்றி பெற்றபோது, அதன் தலைவர் அண்ணாதுரை, ராஜாஜியைச் சந்தித்து வாழ்த்து பெறச் சென்றார்.  அது சமயம் சோர்ந்த நிலையிலிருந்த அவரை என்ன காரணம் என ராஜாஜி வினவினாராம்.  அதற்கு, ஐயா, நாங்கள் எதிர்க்கட்சியாக இயங்கி பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்;  அதுசமயம், பல இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகளையும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகளையும் எதிர்த்துத்தான் எங்கள் போராட்டங்கள் இருந்தன; தற்சமயம் நாங்கள் ஆட்சியில் அமர்ந்து அதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் இணைந்து நிர்வாகத்தை நடத்திச் செல்வது எப்படி என்ற தயக்கம் எனக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.  

அதற்குப் பதிலளித்த ராஜாஜி, நீங்கள் அரசின் உயர் அதிகாரிகளான ஐ.ஏ.எஸ்.கள் குறித்துச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்;  அரசு அதிகாரம் யார் கையில் உள்ளதோ, அவர்கள் கூறுவதையும் அரசின் சட்டவிதிகளையும் பின்பற்றி வேலை செய்பவர்கள்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்; எனவே, நீங்கள் பதவிக்கு வந்தால் உங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுவார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் அவர்களுக்கு முக்கியம்  எனக் கூறியுள்ளார்.
சட்டவிதிமுறைகளை மீறிச் செயல்படும்படி பணித்தால், உயர் அதிகாரிகள் மறுத்து விடுவார்கள் என்ற நடைமுறை நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது.  ஆனால், பிற்காலங்களில் நடைமுறை மாறியது.  

சில உதாரணங்களை எடுத்துக் கூறி, இதைப் புரிய வைக்க முடியும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகளில் வார்டன்கள் பணிக்கான நேர்காணல் நடந்தது. அது சமயம், அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும்படி துறையின் தலைவருக்கு வற்புறுத்தினர்.  முடியாது, யார் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதைக் கணித்து அவர்களைத்தான்  தேர்ந்தெடுப்போம் என அவர் மறுத்து விட்டார்.

அரசியல்வாதிகள் அன்றைய அமைச்சரை அணுகியபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரியான துறைத் தலைவரிடம் தான் ஒன்றும் கூற முடியாது என அவர் கூறிவிட்டார். இது, 1975-ஆம் ஆண்டில் நடந்தது.

ஆனால், இன்றைய நிலைமையே வேறு. அமைச்சருக்கும், தலைமைச் செயலகத்திற்கும் கட்டுப்படாத அரசின் நிர்வாக நடவடிக்கைகளில்கூட, அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வந்தபின்தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எழிலகம் என்று அழைக்கப்படும் வருவாய்த் துறை உயரதிகாரிகளின் அலுவலகத்தில், நிலம் தொடர்பான ஒரு உத்தரவுக்காகச் சென்ற ஒரு விண்ணப்பதாரரிடம் அந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அவரது உதவியாளர் ஒருவர் வாய்மொழியாக உத்தரவிட்டால்தான் கோப்பு நகரும்; தங்களுக்கு உத்தரவு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இந்த நிலைமை, எல்லா மாநிலங்களிலும் உருவாகி மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் நிர்வாகம் முறையாக நடைபெறாமல் போய்விட்டது. 

ஐந்து ஆண்டுகள் அமைச்சர் பணியில் இருப்பவர்கள், பதவிக்கு வரும் முன்பே, தான் எவ்வளவு பணம் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற தகவலுடன்தான் பதவிக்கு வருகிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போதே ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எப்படிப் பணம் சேர்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள்.

அரசுப் பணிகளை திறம்படச் செய்ய நல்ல நிர்வாக அறிவுள்ள உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ்.களின் பங்களிப்பு இவர்களுக்குத் தேவை. எதிர்க்கட்சியில் இருக்கும்போதே, சாதாரணப் பணிகளில் உள்ள பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இவர்களுக்கு தொடர்புள்ள நண்பர்களாகிப் போகிறார்கள். அரசை எதிர்த்துத் தரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கருத்துகளை இந்த அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர் இந்த அரசியல்வாதிகள். பின் பதவிக்கு வந்த பின் இந்த அதிகாரிகளுக்கு தரமான பதவிகளை வழங்கி விடுகிறார்கள்.

புதிய கட்சி ஒன்று பதவி ஏற்கும்போதெல்லாம், பெருவாரியான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்படுவது சகஜமாகிப் போனது. அரசுப் பதவிக்கு வருவதற்கு ஆசைப்படும் இளம் பட்டதாரிகள், துணை ஆட்சியர் மற்றும் ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வுகளை எழுதி வெற்றி அடையப் பாடுபடுவது நடைமுறை. இது போன்று ஆசைப்பட்டு தேர்வு எழுதுபவர்களின் உள்ளத்தின் பின்னணியில் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும், மாநிலத்துக்கும் சேவை செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

ஆனால், அது பலரிடம் காணப்படுவது இல்லை எனக் கூறுகிறார் தேவேந்திரகுமார் எனும் சிந்தனையாளர். அவருக்குத் தெரிந்த ஒரு இளைஞர், மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்புத் துறை அதிகாரியாகப் பதவி பெற்றாராம்.  அந்தப் பதவியில் இருந்த இளைஞரிடம், உங்கள் பதவியில் நீங்கள் எப்படிப் பணி செய்கிறீர்கள் எனக் கேட்டாராம் தேவேந்திரகுமார். அதற்குப் பதிலளித்த அந்த இளம் அதிகாரி,  தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அடுத்த தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும், துணை ஆட்சியர் அல்லது காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு வருவதே தனது லட்சியம் எனக் கூறினாராம்.

இவரைப் போன்றவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டால் அவ்வளவு தரமான அதிகாரிகளாக உருப்பெறுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்  தேவேந்திரகுமார்.

நல்ல அதிகாரிகளாக உருப்பெற்று தனக்கு வழங்கப்பட்ட பணியைக் கண்டிப்புடன் சட்ட விதிமுறைகளை மீறாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியல் தலைவர்கள் விரும்பாமல் போனாலும், அவர்கள் கண்டிப்புடன் செயல்படுவதால் பயன் பெறும் மக்கள் போற்றுவார்கள்.  அத்தகைய அதிகாரிகளின் அலுவலகத்தில், அவரின் கீழ் பணிபுரிபவர்கள் பயம் கலந்த மரியாதையுடன் செயல்படுவார்கள்.  இந்தச் செய்தி பரவலாகி மக்கள் மன்றத்தில் பரவி, இதுபோன்ற அதிகாரிகளுக்கு நற்பெயரும் பாராட்டுதல்களும் உருவாகும்.  இதனால்  கிடைக்கும் ஆத்ம திருப்தியே உண்மையான, தரமான மகிழ்வை நேர்மையான அதிகாரிகளுக்கு அளிக்கும்.

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் பெருகி, அவற்றை இழுத்து மூட முடியாத வகையில் தொழிலாளர்களின் இயக்கங்கள் போராடி நஷ்டத்தை ஈடுகட்ட மக்களின் வரிப் பணம் செலவு செய்யப்படுகிறது.  வாக்கு வங்கி அரசியலுக்காக அவை தொடர்ந்து செயல்படுகின்றன.

நஷ்டத்தில் இயங்குபவற்றை இழுத்து மூடி, அதனால் கிடைக்கும் நன்மையான பண மீட்சியை உபயோகித்து நிறைய பொதுநலத் திட்டங்களை  உருவாக்க முடியும்.  ஆனால், இதை எந்தக் கட்சியும் செய்யத் தயாராக இல்லை; காரணம், இதில் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் வாக்கு எண்ணிக்கையும் மிக அதிகம்!

ஊழல் அரசியல்வாதிகளையும்விட, அதிக அளவில் ஊழல் அதிகாரிகள் பணம் சேர்க்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வை நாம் நினைவு கொள்ளலாம்.  ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணம் சேர்ப்பது, கார்-பங்களா போன்றவற்றை வாங்கி தன் வாரிசுகளுக்கு இட்டுச்செல்ல எனப் பலர் நினைக்கலாம். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலராக இரண்டு முறை தொடர்ந்து பணி செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, மும்பை, புது தில்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் மொத்தம் 74 பங்களாக்களை வாங்கிக் குவித்தது அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.  நம் நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்கூட இத்தனை பங்களாக்களை வாங்கிக் குவித்தது இல்லை.  இந்தப் பங்களாக்களை அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பம் உபயோகிக்கக்கூட முடியாது. எனினும், அவற்றை அவர் வாங்கியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களே பெரிய ஊழல்வாதிகள் என்பது இங்கர்சால் என்னும் தத்துவ மேதையின் கூற்று.  அது உண்மை என நிரூபணம் ஆகிறது. இதுபோல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தரமான வேலையை அரசில் செய்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில், முடியாது என்பதே!

கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ்.அதிகாரி (ஓய்வு)

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/22/ஊழல்-மனநோயாளிகள்-3100343.html
3100342 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் தாம்பூலம் போய், தாம்பாளம்... சி.வ.சு. ஜெகஜோதி DIN Friday, February 22, 2019 01:35 AM +0530 கடந்த மாதம் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். வந்தவர்கள் அனைவருக்கும் சிறு சில்வர் தாம்பாளம் ஒன்றை கொடுத்தார்கள். மணமக்களின் ஊரும், பெயரும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. என் அருகிலிருந்த சித்த மருத்துவர் அதைப் படித்துப் பார்த்து விட்டு லேசாக புன்னகைத்தார். என்ன சார், சிரிக்கிறீங்க என்று கேட்டபோது முன்பெல்லாம் தாம்பூலம் கொடுத்தார்கள், இப்போது தாம்பாளம் தருகிறார்கள் என்றார்.
திருமண விருந்து முடித்து வரும் போது விருந்தினர்களுக்கு ஏன் தாம்பூலம் கொடுத்தார்கள் தெரியுமா என்று அவரே பின் தொடர்ந்தார்.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், சுக்கு, காசுக்கட்டி-இது அத்தனையும் சேர்ந்ததுதான் தாம்பூலம். இவை ஒவ்வொன்றுக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன. வெற்றிலையின் உரைப்பு கபத்தையும், பாக்கின் துவர்ப்பு பித்தத்தையும், சுண்ணாம்பின் காரம் வாதத்தையும் போக்கக் கூடியது. இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்தச் சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறது. இதயத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தருகிறது. தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிப்பத்திரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் பற்களையும் உறுதிப்படுத்தும்.
திருமண விருந்துகளில் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உருவாகி உடல் நலத்தையும் கெடுக்கும். உணவு எளிதில் ஜீரணிக்கவும், உமிழ் நீர் சுரப்பியைத் தூண்டி, ஒருவித உற்சாக உணர்வைத் தரவுமே அந்தக் காலத்தில் நம் முன்னோர் தாம்பூலம் தரும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் உறவினர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பழக்கம் இருந்து வந்துள்ளது.
வெற்றிலையில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, சுண்ணாம்பு தடவி, சிறிதளவு கொட்டை பாக்கு சேர்த்து, அவற்றோடு சம அளவில் ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், கொஞ்சமாக தேங்காய்ப்பூ  ஆகியவற்றைக் கலந்து, நீளவாட்டில் மடித்து,  பின்பு அகலவாட்டில் சுருட்டி, வாயில் போட்டு மெல்லுவதைத்தான் தாம்பூலம் தரித்தல் என்றும் அவர் கூறினார்.  அவர் சொன்னது 100 சதவீதம்  உண்மை எனப் புரிந்துகொள்ள முடிந்தது. வெற்றிலைக்கு பாலுணர்வையும், நரம்புகளையும் வலுவேற்றும் சக்தி இருப்பதால்தான் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது தாம்பூலம் தரித்தலும் ஒரு சடங்காகவே நடந்து வந்தது.
நிச்சயதார்த்தம் என்பதே தாம்பூலத்தட்டு மாற்றி திருமணத்தை உறுதி செய்து கொள்வதாகவே இன்றும் இருந்து வரும் நடைமுறையாகும். எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த சாமிக்கு வழிபாடு செய்தாலும் வெற்றிலை, பாக்கு வைக்க மறப்பதில்லை. வெற்றிலை பாக்குடன்கூடிய தாம்பூலம் ஒரு மங்கலப் பொருள். குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் பலரும் தாம்பூலம் மடித்துக் கொடுப்பதற்காகவே  ஊழியர்களை நியமித்திருந்தார்கள். வசதி படைத்தவர்களில் சிலரது இல்லத் திருமணங்களில்   பீடா கொடுக்கிறார்கள். கொல்கத்தா வெற்றிலை, குல்கந்து, லவங்கம், ஏலக்காய் என ஏகப்படட சேர்மானங்கள் இருக்கும். இனிப்பாகவும் இருக்கும். தாம்பூலத்துக்கும், பீடாவுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
முன்பெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் பழக்கம் இருந்தது. இப்போது திருமணப் பத்திரிகைகள் தாய் மாமன்களுக்கே தபாலில்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. தாமதமாக வருவோரை என்னப்பா, உனக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சாத்தான் வருவியோ? என்று உரிமையுடன் கடிந்து கொள்வதையும் பார்க்க முடிந்தது. வெத்தலை போட்டா,கோழி முட்டும் என்று சிறார்களிடம் பெரியவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.வெற்றிலையில் சுண்ணாம்பைச் சேர்க்கும் போது கூடுதலாகச் சேர்த்து  விட்டால் நாக்கு பொத்துப் போகும். சரியான விகிதத்தில் சிறுவர்களுக்கு சுண்ணாம்பு சேர்க்கத் தெரியாது என்பதற்காகவே அப்படிச் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்.
முன்பெல்லாம் எந்த வீடாக இருந்தாலும் வெற்றிலைப் பெட்டி அல்லது வெற்றிலைத் தாம்பாளம், பாக்கு வெட்டி, சுண்ணாம்பு டப்பி, வெற்றிலை இடிக்கும் சிற்றுரல் இவையனைத்தும் இருந்தன. தாத்தாக்கள், பாட்டிகள் மதியக் கஞ்சி குடிக்காமல் போனாலும் வெற்றிலை போடாமல் இருக்கவே மாட்டார்கள். எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டியும் டிக்கெட் எடுக்காமல் கூடவே வரும். வயதான மூதாட்டிகள் இடுப்பில் சொருகியிருக்கும் சுருக்குப் பையை வெத்தலைப்பை என்பார்கள். உடலில் சுருக்கங்கள் அதிகமான மூதாட்டிகளைத்தான் இன்று பார்க்க முடிகிறதே தவிர, சுருக்குப் பைகளை  பார்க்க முடியவில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு வெற்றிலைப் பெட்டி என்றால் என்னவென்றே தெரியாத நிலையே உள்ளது.
வேலைப்பாடுகள் நிறைந்த பித்தளைப் பாக்குவெட்டிகளும், சுண்ணாம்பு கறண்டவங்களும் இன்று காட்சிப் பொருளாகிப் போய் விட்டன. எந்த ஊருக்குப் போனாலும் வெற்றிலைப் பெட்டிகள் நம்முடன் பயணிப்பதற்குப் பதிலாக, இப்போது மாத்திரைப் பெட்டிகளே உடன் வருகின்றன. மாத்திரை டப்பாக்கள் இல்லாமல் எந்த வெளியூருக்கும் போக முடிவதில்லை. நோய்களுக்காக மட்டுமில்லாமல் விரக்தி, வெறுப்பு, கோபம், நிறைவேறாத ஆசைகள், கசந்த நினைவுகள் என்று கணக்கில்லாத மனக் காயங்களுக்கும் சேர்த்தே சாப்பிட மாத்திரைகள் அவசியமாகி விட்டது.
பிளாஸ்டிக் பைகளை தூக்கி வீசிவிட்டு, துணிப் பைகளை தூக்கிச் செல்வதே கெளரவம் என்ற மாற்றம் மலர்ந்திருப்பதைப் போல மாத்திரைப் பெட்டிகளை தூக்கி வீசி விட்டு  வெற்றிலைப் பெட்டிகளை தூக்கும் காலம்  வரட்டும். டும்,டும்,டும்... தாம்பாளம் போய் விட்டு, தாம்பூலம் வரட்டும் டும்,டும்,டும்... என முரசு கொட்டுவோம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/22/தாம்பூலம்-போய்-தாம்பாளம்-3100342.html
3099755 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இளைய சமுதாயம் எழுக! சா. பன்னீர்செல்வம் DIN Thursday, February 21, 2019 01:47 AM +0530 இன்று 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள ஊரில் ஓர் ஆசிரியரை அமர்த்தும் அளவுக்கும் மாணவர் சேர்வதில்லை என்றாகிவிட்டது. அந்த ஊரிலுள்ள மக்கள் எங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பே வேண்டாமென ஒதுங்கிக் கொண்டு விட்டார்களா? அப்படியல்ல. அதே ஊரில் ஒன்றுக்கிரண்டாகத் தனியார் பள்ளிகள், அதுவும் ஆங்கில வழிப் பள்ளிகள் இயங்குகின்றன. இங்கேதான் சிக்கலின் முடிச்சு அமைந்திருக்கிறது.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இலவசக் கல்வியளிக்க முற்பட்ட ஆங்கிலேயர் அளித்த கல்வி ஆங்கில வழிக் கல்வியாக அமைந்தது. காரணம், படித்தவர்களுடனும், அவர்கள் வழியாக மக்களுடனும் தொடர்பு கொள்ள ஆங்கில வழிக் கல்வியே சரியென ஆட்சியாளரான ஆங்கிலேயர் கருதினர். ஒரு கட்டத்துக்குப் பின்னர் பள்ளிக் கல்வி தாய்மொழி வழியிலும் கல்லூரிக் கல்வி ஆங்கில வழியிலும் என்றாகியது.
அடுத்த கட்டமாக, கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியும் தாய்மொழி வழியாதலே முறையான வளர்ச்சியாகக் கொள்ளத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை என்ன? 1967-இல் ஆட்சிக் கட்டிலேறிய அண்ணா அடுத்த ஐந்தாண்டுகளில் பல்கலைக்கழகம் வரையும் அனைத்து நிலைகளிலும் தமிழ் பயிற்று மொழியாகும் என்பதாகப் பெருமைக்குரிய அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
எதிர்பாராத விதமாகக் கிளம்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக, ஐந்தாண்டுகள் என்னும் காலக்கெடுவை படிப்படியாக என மாற்றி அறிவித்தார். அதன் பின்னர் 50 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் படிப்படியாக என்பது முதற்படிக்கும் கீழாகப் புதைந்து விட்டது. அது மட்டுமா? அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் ஆட்சியில், பெற்றோர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டால் என்னும் நொண்டிச் சாக்குடன், முற்றும் தமிழ்வழியாக நடைபெற்ற அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவொன்று அமைத்துக் கொள்ளலாம் என்றொரு அரசாணை வெளியாயிற்று. அதன் வழியாகப் பள்ளியளவில் ஆங்கில வழியை நாடுகின்ற ஆர்வம் மக்களிடையே பெருகியதால் ஆங்கில வழித் தனியார் பள்ளிகள் பல்கிப் பெருகின.
அதன் விளைவாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஆங்கில வழி என்பது முதல் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கும் அடுத்தகட்டமாக தற்போதைய அதிமுக ஆட்சியில் மழலையர் கல்வியும் ஆங்கில வழியாகிவிட்டது.
ஆங்கிலேயர் அமைத்துக் கொடுத்த கல்வி முறையால் மக்களுக்கு உலகளாவிய அறிவு மட்டும் பயனாக அமையவில்லை. ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆட்சி முறைமையின் விளைவாக அரசு வேலைவாய்ப்பு என்பதன் வழியாக வாழ்வின் வளமைக்கும் பெருந்துணையாயிற்று. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அதன் விளைவாக நாடுகளின் நெருக்கத்தாலும் கல்வியின் பயன் சுய சிந்தனை எனும் அறிவு பெறுதல் என்பது விலகி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்றுப் பெரும்பொருள் குவித்தலே கல்வியின் பயன் என்றாகிவிட்டது.
திரைகடலோடியும் திரவியம் தேடுதல் இன்றைய புதுமையல்ல. திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு என்னவழி என்பதிலேதான் சிக்கல் உண்டாக்கப்படுகிறது. அதாவது, ஆங்கிலம் அறிந்தால் அனைத்துலகும் அதற்கப்பாலும் சென்று வென்று வரலாம் என்னும் பொய்மைப் பிரசாரமே சிக்கலாகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என ஆங்கில மொழி வழங்கும் ஒரு சில நாடுகள் தவிர, பிரான்சு, ஜெர்மனி, ரஷியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் எதிலும் அந்த நாட்டின் மொழியறியாது ஆங்கில மொழியறிவு கொண்டு காலந்தள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் இயலாது என்னும் உண்மையும், சீனரும், ரஷியரும், ஜப்பானியரும் தத்தம் தாய்மொழியில் கணினிப் பொறியியல் உட்பட ஆய கலைகள் அனைத்தும் கற்று, அத்துடன் தேவையான அளவுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி பெற்றுக்கொண்டு அதனடிப்படையிலேயே மேற்கூறிய ஆங்கில மொழி நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுப் பொருள் குவிக்கின்றார்கள் என்னும் உண்மையும், நம்மவரிடம் மூடி மறைக்கப்படுதலே சிக்கலாகிறது.
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க என்றதன் வழி, இல்லது கூறுதல் மட்டுமல்ல, உள்ளது மன்றத்திலும் பொய்மையாகும் என்பதை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். எனவே, நம் இளையோர் ஆய கலைகள் அனைத்தையும் தமிழ் வழியில் கற்றலும், அத்துடன் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சியுடன் ஆங்கில மொழிப் பாடம் கற்றலுமே அமெரிக்கா உள்ளிட்ட ஆங்கில மொழி வழங்கும் நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுதற்குப் போதுமானது என்பதாக உள்ளது. மறைக்கப்படும் பொய்மையே இங்கே அடிப்படைச் சிக்கலாகிறது.
மெத்தப் படித்தவர்களாக உலகம் சுற்றும் பெரிய மனிதர்கள், பல மொழிகள் அறிந்த தமிழறிஞர்கள், அறிவு ஜீவிகள் எனச் சமூகத்தின் பெருமதிப்புக்குரியோர் அனைவரும் இவ்வாறாக உள்ளதை மறைக்கும் பொய்யர்களாகும் நிலையில், ஆங்கில வழிப் பள்ளிகளை நாடும் தமிழ்ப் பெற்றோர்களை நொந்து கொள்வதில் பயனில்லை.
இன்னொன்று, மழலையர் வகுப்பு முதல் ஆங்கில வழி, ஆங்கிலம் என்னும் மொழிப் பாடம், இவற்றுடன் ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சிக்கு எனத் தனிப் பயிற்சி - இதுதான் தற்போது தமிழகத்தின் நிலைமை. 
மற்றொன்று, தற்போது ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் பிள்ளைகள் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக வேண்டுமென்பதே லட்சியக் கனவாதல் மட்டுமல்ல, பிள்ளைகளையும் அதே கனவு வெறியராக்குகிறார்கள். அதே சமயம் மருத்துவமும், பொறியியலும் ஆங்கில வழியாக நீடிக்கும் நிலையில் அதற்கேற்பப் பள்ளி அளவிலும் ஆங்கில வழியை நாடுதலைக் குற்றப்படுத்த வழியில்லை.
தற்போது, தமிழர்களின் பேச்சு தமிங்கிலமாகிக் கொண்டிருக்கிறது. மழலையர் கல்வியும் ஆங்கில வழியானால் அடுத்த தலைமுறையினர் எனக்குத் தமிழ் தெரியும்; ஆனால், பேச வராது எனவும், அவர்க்கு அடுத்த தலைமுறையினர் எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் கூறும் நிலைக்கு ஆளாவர்.
மனித உளவியலையும், நடைமுறைப் பட்டறிவையும் நினைவில் கொண்டால், உயர் கல்வி ஆங்கில வழியாக நீடிக்கும் வரை, நாம் எவ்வளவுதான் தமிழ் தமிழ் என முழக்கமிட்டாலும் தமிழ்ப் பெற்றோர் தமிழ் வழியை நாடமாட்டார்கள். எனவே, மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி அனைத்தையும், தமிழ் வழியாக்கி, அதே சமயம், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்துக்கு ஆங்கிலத்தில் பட்டப் படிப்பும், சரளமான பேச்சுத் திறனும் உடையோராகத் தெரிந்தெடுத்து அமர்த்தி அதன்வழி ஆங்கிலப் பாடத்தைப் பேச்சுப் பயிற்சியுடையதாக ஆக்கினால், அதன் பிறகு யாரும் கேட்டுக் கொள்ளாமலே பெற்றோர் அனைவரும் தமிழ் வழியாகும் அரசு பள்ளிகளை நாடி வருவர் என்பது திண்ணம்.
இன்னொன்று, தமிழ்ப் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதற்குக் காரணம், ஆங்கில வழி மட்டுமல்ல; மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தனியார் பள்ளி மாணவர்களே  கூடுதல் இடம் பிடிப்பதுதான் அடிப்படைக் காரணம். அரசுப் பள்ளிகளிலும் அதற்கான கூடுதல் பயிற்சி அளித்தால் கூட்டம் தானாக வந்து சேரும்.
இந்த இடத்தில் நியாயமான கேள்வியொன்று எழுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநிலத்திலும் மாநிலமொழியே பயிற்று மொழியானால், மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வோரின் பிள்ளைகள் நிலையென்ன? பள்ளி வயதுப் பிள்ளைகளையுடையோர் தமது குடும்பத்தைச் சொந்த மாநிலத்திலே வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, அவ்வாறு மாநிலம் மாறி வருவோரின் பிள்ளைகளுக்கு மட்டுமாக அத்தகையோர் எண்ணிக்கைக்குத் தேவையான அளவில் ஆங்கில வழியாகும் உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்கலாம். கல்லூரியில் சேரும் நிலையிலுள்ள பிள்ளைகள் அவரவர் மாநிலத்திலேயே படிப்பைத் தொடர்தலில் இடர்ப்பாடு ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னர் இருந்தபடி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதன் வழியாக மத்திய அரசுப் பள்ளிகள் - இந்திய அளவில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழக்கமிட்ட திராவிடக் கட்சியினரின் ஆட்சி ஏற்பட்டு  50 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது நிறைவாகவில்லை. தமிழ் பயிற்றுமொழி என்பது நிறைவாகவில்லை. தமிழ் வழக்காடு மொழியாகவில்லை என்னும் நிலையை யாரிடம் சொல்வது? 
1938, 1965 என இரு முறையும் மொழிப்போரில் உயிர்விட்டோர் அனைவரும் தமிழ் வாழ்க எனும் முழக்கத்துடன்தான் உயிர் விட்டார்கள். ஒருவரேனும் ஆங்கிலம் வாழ்க என உயிர்விடவில்லை. அடுத்த 50 ஆண்டுகளில் அழியப் போகும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என உலகளாவிய ஆய்வுக் கணிப்பொன்று கூறுகிறது. தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் மூள வேண்டும். 1965-ஆம் ஆண்டைப் போன்று கலவரமாக அல்ல; முற்றிலும் அற வழியில் மொழிப்போர் மூள வேண்டும். இந்திக்கு எதிராக அல்ல; ஆங்கிலத்திற்கு எதிராக அல்ல; தமிழகத்தில் தமிழை நிலைநாட்ட வேண்டும். இளைய சமுதாயம் விழிமின்- எழுமின். நிதானமாகச் சிந்தித்துச் சரியாகச் செயல்பட வேண்டும்.


 இன்று உலகத் தாய்மொழி நாள்.
கட்டுரையாளர்:
தலைமையாசிரியர் (ஓய்வு).

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/21/இளைய-சமுதாயம்-எழுக-3099755.html
3099753 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் இதில் வேண்டாம் அரசியல்!  எஸ். கோகுலாச்சாரி DIN Thursday, February 21, 2019 01:47 AM +0530 ஜம்மு காஷ்மீரில் மறுபடியும் ஒரு பெரிய ரத்த ஆற்றை ஓட விட்டிருக்கிறார்கள். அந்த மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கார் வெடிகுண்டு தாக்குதலில் அதிவிரைவுப் படை ராணுவ வீரர்கள் 40 பேர் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரும் அடங்குவர்.
கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன். அண்மையில்தான் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. குழந்தைகள் இல்லை. பொங்கலை ஒட்டி விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியம், கடந்த 10-ஆம் தேதி பணிக்குத் திரும்பினார். தன்னுடைய குடும்பத்தினரிடம் முதல்நாள் பேசிய அவர் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.  அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊரை அடுத்த கார்குடி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது சிவச்சந்திரனும் உயிரிழந்திருக்கிறார்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தாக்குதலாக இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது. மனிதன் தன்னையே வீசி மனிதர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்தனத்தை மறுபடியும் மனிதகுலம் பார்க்கும் பரிதாபம் நேர்ந்திருக்கிறது. அதிக பலி கொண்ட மிகப் பெரும் தாக்குதலான இந்தத் தாக்குதல்  தீவிரவாத வெறித்தனத்தின் கோரமான முகத்தைக் காட்டுகிறது. 
தீவிரவாதம் குறித்து சமரசத்துக்கே இடமில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நம் தலைவர்கள் சொன் னாலும்கூட இடையிடையே சில குரல்கள் விபரீதமாக ஒவ்வொரு கட்சியும் அவரவர் ஊகத்தில் தொடர்புபடுத்தி பரப்பப்படும் செய்திகளையும் பார்க்க முடிகிறது.  குறை கூறுவதும் எதிர்க்க வேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் ஜனநாயகக் கடமையாக இருந்தாலும்கூட, இது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களுக்குச் சாதகமான முறையில்  இந்திய இறையாண்மைக்குச் சவாலான விமர்சனங்களைச் செய்வது சரியல்ல. 
மக்களைக் காப்பதற்கென்று எல்லையில் குளிரிலும் மழையிலும் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து, பெற்றோர்களைப் பிரிந்து,  குழந்தைகளைப் பிரிந்து உணவின்றி, தூக்கமின்றி  பாதுகாப்புக்காக நிற்கின்ற வீரர்களுடைய மன உறுதி குலைந்துவிடும். ஒரு நாட்டைச் சீர்குலைக்க வேண்டும் என்றால், அந்த நாட்டின் ராணுவ உறுதியைக் குலைத்து விட்டால் போதும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. உலக பயங்கரவாதத்தின் மொத்த ஏற்றுமதியை பாகிஸ்தான் செய்து வருகிறது என்பது அங்கே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்குத் தெரியாதா என்ன?  பாகிஸ்தானில் மசூத்  அசார்  உல்லாசமாக இருப்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறாக பந்து வீசுகிறார். தவறு செய்துவிட்டு, அடிப்பதற்கு முன் பெரிதாக அழுவது போல இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இருந்து கொண்டு பயங்கரவாதத்தை அவரால் கண்டிக்கவோ, நிறுத்தவோ முடியாது. அப்படி முயன்றால் அந்த நாட்டின் பிரதமராக இருக்க முடியாது. எனவே, அவரது பேச்சை மத்திய அரசு பொருட்படுத்தாமல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது முக்கியம். 
 உலக நாடுகளில் பாகிஸ்தானை விமர்சித்து அமெரிக்காவும் ரஷியாவும் ஆஸ்திரேலியாவும் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இவற்றில் சில சம்பிரதாயமானவை.ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்கா, தலிபான்களுடன் பேச பாகிஸ்தானையே பெரிதும் நம்பியிருக்கிறது. இனி உனக்கு உதவி இல்லை என்று சொல்லிக்கொண்டே அனைத்து உதவிகளையும் செய்கிறது.  என்ன ஆனாலும் பாகிஸ்தானை விட்டுத் தர முடியாது என்று சவூதி வெளிப்படையாகவே கூறுகிறது.
பாகிஸ்தானுக்கு உதவியாக மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஒவ்வொரு முறையும் தனது வீடோ பவரால்  நிறைவேறாமல் சீனா தடுத்து வருகிறது.  தீவிரவாதத்தைக் கண்டிப்பார்களாம். ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற  தீவிரவாதியை பகிரங்கமாக ஆதரிப்பார்களாம். இது சீனாவின் அப்பட்டமான  இந்திய எதிர்ப்பு மன நிலையின் வெளிப்பாடு. தன்னுடைய சர்வதேச அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பாகிஸ்தானை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் சீனா, இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது வியப்பல்ல.  
தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது ராணுவம்.ஜெஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியுமான கம்ரான் கொல்லப்பட்டிருக்கிறார். புல்வாமா தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதுடன், சதித் திட்டத்துக்கு மூளையாக இருந்து அவர் செயல்பட்டது  தெரியவந்துள்ளது. தற்கொலைப்படை தீவிரவாதி ஆதிலை தேர்வு செய்து பயிற்சி அளித்து தாக்குதலை அரங்கேற்றியுள்ளார். இன்னும் சில தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.    
சினார் படையின் (காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ராணுவப் பிரிவு) கமாண்டர் லெஃப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். திலான்  ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். காஷ்மீரில் உள்ளுர் மக்களிடம் குறிப்பாக பெண்களிடமும் தாய்மார்களிடமும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.
காஷ்மீர் மக்களின் குறிப்பாக அங்குள்ள தாய்மார்களின் மனப்போக்கு மாற வேண்டும். ஆழமாக விதைக்கப்பட்ட விஷ விதைகள் அகற்றப்பட வேண்டும். உயிர்த் தியாகம் செய்த 40 பேரில் ஒருவரான பிகார் மாநிலம், பகல்பூரைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ரத்தன் தாகூரின் தந்தை நான் இன்னொரு மகனையும் இந்த நாட்டுக்காக தியாகம் செய்யத் தயார் என்று உருக்கமாக அறிவித்திருக்கிறார். இந்திய இறையாண்மையின் மீதும் இந்திய ராணுவத்தின் மீதும் அவருக்குள்ள நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிக்கான ஆதாயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.  
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/21/இதில்-வேண்டாம்-அரசியல்-3099753.html
3099092 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? கி. சிவசுப்பிரமணியன் DIN Wednesday, February 20, 2019 01:21 AM +0530 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீர் கொள்கையின்படி, வேளாண்மையைவிட மக்களின் குடிநீர்த் தேவைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு
வருக்கும், கிராமங்களில் தினமும் 40 லிட்டரும், நகர்ப்புறங்களில் 90 முதல் 135 லிட்டரும் குடிநீர் அளிக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.    
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி செலவிட்டு மக்களுக்கான இந்த அடிப்படை உரிமையை நிலைநாட்ட போராடி வருகின்றன. அதன் பலனாக, இந்தியாவின் அநேக ஆற்றுப்படுகைகளிலிருந்து லட்சக்கணக்கான கிராமங்களுக்கு ஒவ்வொரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
தமிழகத்தின் காவிரிப் படுகையிலிருந்து 17 மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு தினமும் ஒவ்வொருவருக்கும் 20 முதல் 40 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீராணம் ஏரி மூலம் சென்னையும் பயன் பெறுகிறது. இது தவிர, எங்கெல்லாம் நிலத்தடிநீர் கிடைக்கிறதோ, அங்கிருந்து ஓரளவு குடிநீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுத்து மேற்கண்ட ஆற்று நீருடன் சேர்த்து 40 லிட்டர் சராசரி அளவாக அளிக்கப்பட்டு வருகிறது.  
கிராமங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீர்த் தேவை மிக அதிகமாக உள்ளது. அதிகரித்துவரும் நகர் மயமாதலும், தொடர்ந்து பெருகிவரும் மக்கள் தொகைப்பெருக்கமும் இதன் காரணமாகும். 
2001, 2011 மற்றும் 2019-இல் தமிழகத்தின் மக்கள்தொகை முறையே 6.21 கோடி, 7.21 கோடி மற்றும் 8.08 கோடி; இதே காலகட்டத்தில், சென்னையின் மக்கள்தொகை முறையே 42 லட்சம், 47 லட்சம் மற்றும் 1.07 கோடி. அதாவது, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில், சென்னையின் மக்கள்தொகை இந்த மூன்று காலகட்டங்களில் முறையே 6.79%, 6.49% மற்றும் 13.24%-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில்  சென்னையின் மக்கள்தொகை 2011-ஐ விட சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 10.34 லட்சம் பேர், அதாவது ஆண்டுதோறும் 2.57% அளவு பெருக்க அளவில் சென்னையில் அதிகரித்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது (ஆதாரம்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக நகர்மயமாதல் தகவல் தொகுப்பு அறிக்கை).
ஆனால், மக்களுக்கான குடிநீர் ஆதாரங்கள் எந்த அளவு இந்த 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனப் பார்த்தால், மிகச் சிறிய அளவே அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. 
சென்னையின் ஆண்டு சராசரி மழையளவு 1324 மி.மீ. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிகபட்சமாகக் கிடைக்க வேண்டியது 790 மி.மீ. வடகிழக்குப் பருவமழைதான், சென்னையின் குடிநீர்த் தேவையைப் பிரதானமானதாகப் பூர்த்தி செய்வதாகும். ஆனால், 2018-இல் மழையளவில் 56% குறைந்து 344 மி.மீ. மழை மட்டுமே பதிவானது. இதுவே தற்போதைய குடிநீர்ப் பிரச்னையின் மூல காரணமாகும். 
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நான்கு முக்கிய ஏரிகளான பூண்டி (கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி); சோழவரம் (1,081 மில்லியன் கன அடி); செங்குன்றம் (3,300 மில்லியன் கன அடி);  செம்பரம்பாக்கம் (3,645 மில்லியன் கன அடி) ஆகியவற்றில் 11,257 மில்லியன் கன அடி, அதாவது 11 டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) அளவு மழைக்கால நீரைச் சேமித்து ஆண்டு முழுவதுக்கும் உள்ள தேவையில் ஏறத்தாழ 70% பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு மாதந்தோறும் சராசரியாக 1.40 டி.எம்.சி. குடிநீர் தேவை. தற்போது தினமும் வழங்கப்படுவது 550 மி.லி.; அதாவது, மாதத்துக்கு 0.580 டி.எம்.சி.  இந்தக் குடிநீர்த் தேவையை மேற்கண்ட நான்கு குடிநீர் ஆதாரங்கள் தவிர, ஆந்திர மாநிலத்திலிருந்து கிடைக்கும் தெலுங்கு-கங்கை நீரும் (அதிகபட்சம் 2001-02-ஆம் ஆண்டில் 6.59 டி.எம்.சி. கிடைத்தது), காவிரியின் வீராணம் திட்டம் மூலம் (தினமும் 180 மில்லியன் லிட்டர் வீதம் அதிகபட்சம் 6 மாதங்களுக்கு) கிடைக்கும் நீர், தனியாரின் நிலத்தடி நீர் உள்ளிட்ட பிற நீர் ஆதாரங்கள் பூர்த்தி செய்கின்றன. குறிப்பாக, வீடுகளில் உள்ள கிணற்று நீர் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நீர், மிகப் பற்றாக்குறை காலங்களில் பெரிய கல்குவாரிகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகியவை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பொதுவாகப் பூர்த்தி செய்து வருகின்றன. வீடுகளின் மழைநீர் சேகரிப்பின் மூலம் மொத்தத் தேவையில் ஏறத்தாழ 1% மட்டுமே பூர்த்தியாகிறது. அரசும், மக்களும் சிறப்பாகச் செயல்பட்டால் மழைநீர் மூலம் 25% வரை குடிநீர்த் தேவையை ஆண்டுதோறும் சமாளிக்க முடியும். 
சென்னையில் குடிநீர் கிடைக்கும் நிலையை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, தாராளமாகக் குடிநீர் கிடைக்கும் ஆண்டுகள் (உதாரணம்: 2006-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை; 2014, 2016 மற்றும் 2018 ஆண்டுகள்). மற்றொன்று, பற்றாக்குறையாக நீர் கிடைக்கும் ஆண்டுகள். பற்றாக்குறை ஆண்டு என்பதை மேற்கூறப்பட்ட நான்கு குடிநீர் ஏரிகளின் மொத்த கொள்ளளவு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு 2,000 மி.க. அடி, அதாவது 2 டி.எம்.சி.க்கும் குறைவாக இருக்கும் கொள்ளளவாகும். 
மேற்கூறப்பட்ட வரையறையின்படி, சென்னையில் கடந்த 2003 முதல் 2019 வரையிலான 17 ஆண்டுகளில், 7 ஆண்டுகள் (2003 முதல் 2005 வரை, 2013, 2015, 2017 மற்றும் 2019) குடிநீர் அளிப்பு மிகவும் தட்டுப்பாடாக இருந்ததை சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் 1, 2015 சென்னை பெருவெள்ளத்தில் நிரம்பிய 4 குடிநீர் ஏரிகளின் முழுக் கொள்ளளவு நீரும் அடுத்த ஓர் ஆண்டுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அதாவது சென்னையில் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) சரியான அளவு இல்லையேல் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. சென்னையின் 4 குடிநீர் ஏரிகளிலும் செவ்வாய்க்கிழமை (பிப்.19) மதிப்பீட்டின்படி மொத்தம் ஒரு டி.எம்.சி.-க்கும் குறைவான, அதாவது 972 மில்லியன் கன அடி நீரே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 8.63% ஆகும்.
 சென்னையின் குடிநீர் பஞ்சத்தை முழுமையாகப் போக்குவதற்கான வழிமுறைகளை இனி காணலாம். முதலாவதாக, மழைநீரை அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் கட்டாயமாகச் சேமித்து, அதை நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதற்காக மழைநீர் சேமிப்புக்காக ஆகும் மொத்த செலவில், குறைந்தது 50% மானியத்தை தமிழக அரசு உடனே வழங்கி, இந்தத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், மழைநீர் வீணாவது பெருமளவு தடுக்கப்படுவதோடு, சென்னை குடிநீர் வடிகால் வாரிய நீரின் தேவையும் மழை பெய்யும் போதெல்லாம் பெருமளவு குறையும்.
இரண்டாவதாக, நன்னீர் தேவைப்படாத உபயோகங்களுக்கும் (பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல்), வீடுகளின் மற்ற தேவைகளான சுகாதாரம், வீட்டுத் தோட்டம் போன்றவற்றுக்கும் நன்னீருக்கு அடுத்த நிலையில் உள்ள கிணற்று நீர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஏறத்தாழ 10-20% நன்னீரின் தேவையைக் குறைக்க முடியும். 
மூன்றாவதாக, வீடுகள்தோறும் நீர் விரயமாவதைத் தடுக்கலாம். உதாரணமாக, குழாய்களின் கசிவுகள் மூலம் தொடர்ந்து நீர் விரயமாதல், தேவைக்கும் அதிகமாக நீரில் குளிப்பது, துவைப்பது போன்ற பல காரணங்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். சுருங்கக் கூறினால், பெட்ரோலைப் போன்று  நீரைப் பயன்படுத்த வேண்டும்.
நான்காவதாக, நீர் பயன்பாட்டில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் முழுமையான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். 
ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்ற பழமொழிக்கேற்ப குழந்தைப் பருவத்திலேயே நீர் பயன்பாட்டின் அவசியம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். வீட்டு அளவில்  நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு பெற்றோரும்  கூற வேண்டும்.
ஐந்தாவதாக, அரசின் நீர் சேமிப்புத் திட்டங்களை விரிவுபடுத்தி, புதிய நீர் ஆதாரங்களான தேர்வாய் கண்டிகை (0.50 டி.எம்.சி); திருநீர்மலை ஏரி (1 டி.எம்.சி) போன்றவற்றைச் சீர்படுத்தி நீர் சேமிப்பை அதிகரிக்கலாம்.  மேலும், தற்போதுள்ள 4 குடிநீர் ஏரிகளின் கொள்ளளவை தூர்வாரி நவீனப்படுத்தினால் மழைக் காலங்களில் மேலும் 1 டி.எம்.சி. நீரைத் தேக்கலாம். உதாரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், இதுவரை அதிகபட்சமாக அதாவது 93% கொள்ளளவு மட்டுமே கடந்த 18 ஆண்டுகளில் தேக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் குடியிருப்புக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளதே ஆகும். இதனை முழுமையாக அரசு அகற்ற வேண்டும். 
ஆறாவதாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு செயல்பாட்டில் இருந்தும், முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இயலாமல் உள்ள தெலுங்கு-கங்கை (12 டி.எம்.சி) போன்ற திட்டங்கள் மூலம் குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பாதியளவு தண்ணீரையாவது தங்கு தடையின்றி நீர்ப் பற்றாக்குறைக் காலங்களில் கிடைக்க அரசு முழு முயற்சி மேற்கொண்டு இதில் வெற்றி அடைய வேண்டும். 
மிக முக்கியமாக, ஏழாவதாக, நகரங்கள் மட்டுமன்றி அனைத்துக் கிராமங்களிலும், ஒற்றுமையை மக்களிடையே பலப்படுத்தி, கிராமசபைக் கூட்டங்கள் மூலம் அரசு பிரதிநிதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நீராதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்தால், சிக்கலான நிலையில் உள்ள வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நன்னீரை அரசுகள் முதற்கொண்டு, ஒவ்வொரு தனிமனிதரும் எப்படியெல்லாம் பேணிக் காக்க வேண்டும் என்பதில் விழிப்புணர்வு பெற்றால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தண்ணீர்ப் பஞ்சம் என்ற வார்த்தைக்கு இடமிருக்காது!

கட்டுரையாளர்:
பேராசிரியர்,
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி 
நிறுவனம்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/20/குடிநீர்ப்-பிரச்னைக்குத்-தீர்வு-என்ன-3099092.html
3098430 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் உத்தரமேரூர் ஜனநாயகம்? முனைவர் ம. இராசேந்திரன் DIN Tuesday, February 19, 2019 01:40 AM +0530
தேர்தல் காலங்களில் மேடைகளிலும் ஊடகங்களிலும் வெளிப்படும் சொல்லாடலில் உத்தரமேரூர்க் கல்வெட்டும் அதில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஜனநாயகமும் இடம்பெறும். ஏறத்தாழ 1,100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கல்வெட்டில் உத்தரமேரூரில் நடந்த அக்காலத் தேர்தல் முறையை அறிய முடிகிறது. தேர்தல் அறிக்கை இல்லாமல், வாக்குறுதிகள் இல்லாமல், பரப்புரை இல்லாமல், தேர்தல் சின்னம் இல்லாமல், வேட்பாளர் பெயர் எழுதிய ஓலையுடன் நடந்து கொண்டிருந்த ஒரு தேர்தல் முறையைத் தெரிந்துகொள்ள  உத்தரமேரூர் உதவுகிறது.    
உத்தரமேரூர், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளது. இதற்குப் பேரூர் என்றும் பெயர் இருந்திருக்கிறது. உத்தரமேரூர் என்று அந்த ஊருக்கு எப்படி பெயர் வந்தது?  வடமதுரை, தென்மதுரை, உத்தர கைலாசம், தட்சிண கைலாசம்  என்பதைப் போல உத்தரமேரூர் என்றால் தட்சிண மேரூர் என்று எங்காவது இருக்கிறதா? தெரியவில்லை. ஆனால், தஞ்சைப் பெரிய கோயில் விமானத்திற்குத் தட்சிண மேரு என்று  பெயர்.
ஆனால், உத்தரமேரூரில் அப்படி மேரு எதுவும் இல்லை. உத்தரமேருவுடன் ஊர் சேர்ந்து உத்தரமேரூர் ஆகியிருக்கிறது. ஆனால், கல்வெட்டில் உத்திரமேரு சதுர்வேதிமங்கலம் என்றுதான் உள்ளது. அப்படியெனில் அங்கே சதுர்வேதி மங்கலமும் இருந்திருக்கிறது. ஊரும் இருந்திருக்கிறது. சதுர்வேதி மங்கலத்தில் சபை இருந்திருக்கிறது; ஊருக்கு அவை இருந்திருக்கிறது. அங்கிருந்த குந்தவை ஆழ்வார் மடத்தில் வைணவப் பெரியார்கள் உணவருந்த ஊரவை நிலம் அளித்தது கைலாசநாதர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில், ஊர் என்றால் விவசாயக் குடிமக்கள் வாழும் இடம். சதுர்வேதி மங்கலம் பார்ப்பனர்கள் வாழும் இடம். உத்தரமேரு, பல்லவர் காலத்திலேயே சதுர்வேதி மங்கலமாக வழங்கப்பட்டிருக்கிறது. உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம் என்பது பராந்தக சோழன் கல்வெட்டுத் தொடர். 
அங்கு வைகுந்தப் பெருமாள் கோயில், சுந்தரவரதப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்று பல கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் வைகுந்தப் பெருமாள் கோயிலில் இருந்து 70 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.  
அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் ஜனநாயகம் பற்றி கூறுகின்றன என்று போற்றப்படுகின்றன. அங்கு, அப்போதிருந்த சம்வத்சர வாரியம், தோட்ட  வாரியம், ஏரி வாரியம் ஆகியவற்றின் நிர்வாகம்  எப்படி நடந்தது? நிர்வாகத்தை யார் மேற்கொண்டார்கள்? அவர்களின் தகுதி மற்றும் தகுதியின்மை என்ன? அதற்கு அதிகாரம் தந்தவர்கள் யார்? அதற்கான விதிமுறைகள் எவை? விதிமுறைகளை வகுத்தவர்கள் யார்?  வகுப்பதற்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? விதிமுறை எப்போதிருந்து செயற்பாட்டுக்கு வந்தது? விதிமுறைக்கு உட்படும் இடம் எது? ஆகியவை பற்றிய செய்திகள் இரண்டு கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளன.
இரண்டு கல்வெட்டுகளும் முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தவை. முதல் கல்வெட்டு அவனது 12-ஆம் ஆட்சியாண்டையும் ( கி.பி.919), இரண்டாவது கல்வெட்டு 14-ஆம் ஆட்சியாண்டையும் (கி.பி. 921) சேர்ந்தவை. இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு ஆண்டுகள். இக்காலத்தில் தேவைப்பட்டிருக்கிற மாற்றங்களுக்கான திருத்தங்களோடு இரண்டாவது கல்வெட்டு இருக்கிறது.
ஆணையிட்டவன் முதலாம் பராந்தகன்.  முதல் கல்வெட்டில் (கி.பி. 919), அதிகாரம் பெற்றுத் தத்தனூர் மூவேந்த வேளான் முன்னிலையில் விதிமுறைகளை உருவாக்கியவர்கள் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோர்.  இரண்டாவது கல்வெட்டில் (கி.பி. 921)க்ரமவித்த பட்டனாகிய சோமாசிப் பெருமாள் முன்னிலையில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டு முதலே விதிமுறைகள் செயற்பாட்டுக்கு வந்துள்ளன.
வேட்பாளரின் தகுதிகள்:
•     கால் வேலி நிலம் உடைமையாக இருக்க வேண்டும். இரண்டாவது கல்வெட்டில் கால் வேலிக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதற்குக் குறைந்த அளவாகிய அரைக்கால் வேலி நிலம்தான் இருக்கிறது என்றால் ஒரு வேதமும் நான்கு பாஷ்யத்தில்  (வியாக்கியானத்தில்) ஒரு பாஷ்யம் வக்கணித்து அறிவானாகவும் (நன்றாக எடுத்துச் சொல்லத் தெரிந்தவனாகவும்) இருக்க வேண்டும் என்று விதித் திருத்தம் வந்துள்ளது.)
• சொந்த மனையில் வீடுகட்டி வாழ்பவராக இருக்க வேண்டும்.
• குறைந்த அளவு வயது 30; அதிக அளவு 60. ( இரண்டாவது கல்வெட்டில் இந்த வயது வரம்பு 35-70 என்று திருத்தப்பட்டுள்ளது.)
• மந்திர பிராமணம் வல்லவனாகவும் ஓதுவித்தறிவனாகவும் இருக்க வேண்டும்.
• காரியத்தில் நிபுணனாக இருக்க வேண்டும்.
• ஒழுக்கம் உடையவனா இருக்க வேண்டும்; நல்ல வழியில் சொத்து சேர்த்திருக்க வேண்டும்; தூய்மையான எண்ணம் உடையவனாக இருக்க வேண்டும்.
• கடந்த மூன்று ஆண்டுகளில் வாரியப் பதவிகளில் இருந்திருக்கக் கூடாது. அவர்களின் நெருங்கிய உறவினர்களும் வாரியப் பதவிகளில் இருந்திருக்கக் கூடாது.
இத்தகைய தகுதிகள் வேட்பாளரின் அடிப்படைத் தகுதிகளாகும். மேலும், வேட்பாளருக்குத் தகுதியற்றவர்களாகப் பின்வருவோர் கருதப்பட்டிருக்கிறார்கள்.
• வாரியப் பதவிகளில் இருந்து கணக்குக் காட்டாதவர்கள்.
• கணக்குக் காட்டாதவர்களின் உறவினர்கள்.
உறவினர்கள் பட்டியல் வருமாறு:-
• கணக்குக் காட்டாதவரின் சின்னம்மா, பெரியம்மா ஆகியோரின் மக்கள்; அத்தை, மாமன் மக்கள்;
• தாயோடு  உடன் பிறந்தவர்கள்; தந்தையோடு உடன் பிறந்தவர்கள்;
• தன்னோடு உடன்பிறந்தான் மக்கள்; சகோதரியின் கணவர்; தனது மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரியின் கணவன்;
• மகளின் கணவர், தன் மகன், தன் தந்தை.
• ஆகமங்களுக்கு எதிராகப் பஞ்சமா பாதகத்தில் ஈடுபட்டவர், கையூட்டு (லஞ்சம்) வாங்கியவர், பாவம் செய்தவர் ஆகியோர் அவற்றுக்கான பிராயச்சித்தம் செய்திருந்தாலும் அவர்களும் அவர்களுடைய உறவினர்களும் கூடத் தகுதியற்றவர்களே.
• அடுத்தவர் சொத்தை அபகரித்தவர், கொலைசெய்யத் தூண்டியவர், கொலை செய்தவர், மக்கள் விரோதிகள், பொய்க் கையெழுத்திட்டோர் ஆகியோர் வேட்பாளர்ப் பட்டியலில் சேர்க்கத் தகுதியற்றவர்கள்.
தேர்தல் நடத்திய முறை:
உத்தரமேரு முப்பது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.  
ஒவ்வொரு குடும்பிலிருந்தும் முழுத் தகுதியுடையவர்களின் பெயர்கள் ஓலைகளில் எழுதப்பட்டுத் தனித்தனி குடத்தில் இடப்பட்டுள்ளன.  குடத்தின் வாயைக் கட்டியுள்ளனர்.  பின்னர் மகாசபை உள்மண்டபத்தில் நம்பிமார் அனைவரும் கூடி இருக்க,  அவர்களின் நடுவே மூத்தவர் ஒருவர் எல்லோரும் பார்க்கும் படியாகக் குடத்தை வைத்துக் கொண்டு நிற்க, விவரம் அறியா வயதுடைய சிறுவனைக் கொண்டு ஒவ்வொரு குடும்பின் குடத்திலிருந்து ஒரு ஓலையை எடுக்கச் சொல்லி வாங்கி அதனை நடுவர் (மத்தியஸ்தர்) கையில் கொடுக்க, அந்த ஓலையை மத்தியஸ்தர் வாங்கும்போது, ஐந்து விரல்களையும் அகல விரித்து உள்ளங்கையிலே வாங்கிப் படித்து, சுற்றியுள்ள நம்பிமார்களிடம் கொடுக்க அவர்களும் படிக்க, அந்த ஓலையில் இருந்த பெயருக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இப்படியே முப்பது குடும்புக்கும் தேர்தல் நடந்திருக்கிறது.  அவ்வாறு குடும்புக்கு ஒருவர் வீதம் முப்பது குடும்புக்கும் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
 அந்த முப்பது பேரில் தோட்ட வாரியத்திலும் ஏரி வாரியத்திலும் முன்னர் உறுப்பினராக இருந்த அனுபவம் உடையவர்களையும் கல்வி மிக்கவர்களையும் மூத்தோர்களையும் கொண்டு சம்வத்சர வாரியம் செயற்பட்டிருக்கிறது. இவர்கள் போக எஞ்சியவர்களில் பன்னிரண்டு பேர் தோட்ட வாரியமாகவும் ஆறு பேர் ஏரி வாரியமாகவும் செயற்பட்டிருக்கிறார்கள்.
 ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; ஆனால், அனைத்து மக்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். உத்தரமேரூரில் சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நடந்துள்ள தேர்தல், விசித்திரமான தேர்தலாக உள்ளது.
அந்தத்  தேர்தலில் வேட்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்; ஆனால்  வாக்காளர்கள் கிடையாது. அதனால் வாக்காளர்களுக்கான தகுதிகளும் சொல்லப்படவில்லை. வேட்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் விருப்ப மனுவோ, வேட்புமனுவோ அளிக்க முடியாது. வேட்பாளர்கள் யார் என்பதை அவர்களது தகுதிகளே தீர்மானிக்கும். வேட்பாளர் தகுதிகளே முதற்கட்டத்தில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களாக இருந்திருக்கின்றன. வேட்பாளர்களின் தகுதிகளையும் தகுதி இன்மையையும் சபையே தீர்மானித்து வரையறை செய்துள்ளது.
வேதம் அறியாதவர்களும் சொந்தமாக நிலமும் மனையும் வீடும் இல்லாதவர்களும் வேட்பாளர் ஆக முடியாது என்பதையும் ஏதும் அறியாத ஒரு சிறுவன் குடத்தில் கைவிட்டு ஓலை எடுத்து அதன்வழி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதும்  ஜனநாயகப் பண்புகளாக நம்மால் கருத முடியாது.
எனினும், வாக்காளர்களைச் சரிக்கட்ட வேண்டிய அவசியம் இல்லாத, வாக்காளர்களுக்குச் செலவழிக்க வேண்டிய தேவை இல்லாத ஒரு தேர்தலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்தில் நடத்தி இருக்கிறார்கள் என்பது இப்போதுள்ள நிலையில் வியப்பாக இருக்கிறது. 

கட்டுரையாளர்:
மேனாள் துணைவேந்தர், 
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/19/உத்தரமேரூர்-ஜனநாயகம்-3098430.html
3098429 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் முலாயம் சிங் தந்த அதிர்ச்சி! பெ. மகேந்திரன் DIN Tuesday, February 19, 2019 01:39 AM +0530   
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக எனது வாழ்த்துகள் என்று கூறி அரசியல் அரங்கில் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறார் முலாயம் சிங் யாதவ்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் அமர்வு  அண்மையில் நடைபெற்றது. மக்களவையில் பேசிய முலாயம் சிங், பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகிறார்; திட்டங்களை விரைவாக நிறைவேற்றி வருகிறார். அவர் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவரது கூற்றை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட மக்களவையில் இருந்த அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிர்ச்சியடைந்தனர். 
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் ஒரு கணம் வியப்படைந்து, பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரிடமிருந்து பிரதமர் பாராட்டு பெற்றதுதான் அதற்குக் காரணம். 
அதற்கு முந்தைய தினம்தான், சமாஜவாதி கட்சியின் தலைவரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், அலாகாபாத் நகருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, லக்னெள விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை முலாயம் சிங் பாராட்டியிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
அவர் பாராட்டிய மறுநாளே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள், முக்கிய வீதிகளில் முலாயம் சிங்கை பாராட்டியும், வாழ்த்தியும் விளம்பரப் பதாகைகளை நிரப்பியிருந்தனர். ஆனால், அவரது பேச்சு, சமாஜவாதி கட்சியின் தொண்டர்களை கலக்கமுறச் செய்துள்ளது.
நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம்,  மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. 
உத்தரப் பிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து, காங்கிரஸ் கட்சிக்கு கதவடைத்து விட்டன. எனினும், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்ற ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டன. 
பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியில் இடம்பெற முடியாததால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மேலிடம், அடுத்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தது. அடுத்த சில தினங்களில், காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவை மேலிடம் நியமித்தது. இவர், ஏற்கெனவே தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டிருந்தாலும், கட்சியின் அதிகாரப்பூர்வ பொறுப்பு  எதையும் வகிக்கவில்லை. அது மட்டுமன்றி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, சமாஜவாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. அங்கு பிரியங்கா களமிறக்கப்பட்டிருப்பது, முலாயம் சிங்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தன்னிடம் இருந்த சமாஜவாதி கட்சியின் அதிகாரத்தை அகிலேஷ் யாதவ் பறித்து விட்டதால், அவர் மீது முலாயம் சிங் கோபத்தில் உள்ளார். தனது சகோதரரும், கட்சியின் மூத்த தலைவருமான சிவபால் சிங் யாதவுக்கும், அகிலேஷுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு கட்டத்தில் தனியாகப் பிரிந்த சிவபால் சிங் யாதவ் தனிக் கட்சி தொடங்கி விட்டார்.
இந்நிலையில், தனது அரசியல் எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கை கோத்ததை முலாயம் சிங் விரும்பவில்லை. இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பியிருக்கிறார். 
இந்த நிலையில்தான், தன் மகன் மீது கொண்டிருக்கும் கோபத்தை நாடாளுமன்றத்தில் வேறு விதமாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், முலாயம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ கிடப்பில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த வழக்குகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக மறைமுமாக உணர்த்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக, அந்த வழக்கை தூசி தட்டாமல் இருந்ததற்காக, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மோடியை முலாயம் சிங் பாராட்டியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, முலாயம் சிங்குக்கு வயதாகி விட்டதால் ஞாபக மறதி நோய் வந்து விட்டது. இதனால், மோடியை தவறுதலாக அவர் பாராட்டி விட்டார் என்று சிலர் காரணம் கூறுகிறார்கள். இன்னும் சிலர், மோடி பரிகசித்து முலாயம் பாராட்டினார் என்று கூறுகிறார்கள். பேசி முடித்த பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்த முலாயம், நான் தவறுதலாக எதையும் கூறவில்லை என்றார்.
தன் மகன் மீதான கோபத்தால், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி ஆகிய இரு கட்சிகளையும் குறிவைத்தே முலாயம் சிங், பிரதமரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார் என்று ஆழமாக நம்பப்படுகிறது. இவரது கருத்து, சமாஜவாதி கட்சிக்கோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சிக்கோ பலவீனத்தை ஏற்படுத்தினாலும், இல்லாவிட்டாலும், பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக வலு சேர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்பதுதான் உண்மை.
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/19/முலாயம்-சிங்-தந்த-அதிர்ச்சி-3098429.html
3097743 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் ஞான ரசம் தந்த மலர்த் தோட்டம்!  சுதாங்கன் DIN Monday, February 18, 2019 03:00 AM +0530 ஒரு நாட்டின் பெருமை, செழுமை, உயர்வு என அனைத்துக்கும் அந்த நாட்டில் அவ்வப்போது அவதரிக்கும் மகான்கள், அறிஞர்கள், உத்தம மனிதர்களைப் பொருத்து அமைகிறது. எந்த நாட்டில் மனிதத் தன்மைக்கு இலக்கியமாயுள்ள மகா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, எந்த நாட்டில் "நான், எனது, எனக்கு என்று வாழாமல்', "பிறர், பிறரது, பிறருக்காக' என்று வாழும் உத்தமர்கள் உதிக்கிறார்களோ, எந்த நாட்டில் மனிதர்களுடைய மேலான தன்மைகளைத் தூண்டிவிடக் கூடிய சிருஷ்டிகளைச் செய்கின்ற கர்த்தர்கள் உதயமாகின்றார்களோ, அந்த நாடுதான் பெருமை கொள்ளத் தகுதியுடைய நாடு என்று சொல்ல வேண்டும். அந்த நாடுதான், சரித்திரத்தில் சாசுவதமான இடத்தைப் பிடிக்கும்.
 மகான்கள் தோன்றுவது நின்றுவிட்டால், அந்த நாட்டின் நல்வாழ்வு முற்றுப் பெற்றுவிடுகிறது. அந்த நாட்டின் புராணம், நாகரிகம் எல்லாமே பொருட்காட்சி சாலையைப் புகலிடமாகக் கொண்டு விடுகின்றன. காலதேச வர்த்தமானங்களைக் கடந்தவர்கள் மகான்கள்
 இவர்கள் ஒரு காலத்திலே தோன்றி, அந்த காலத்துக்கேற்ற வகையில் சில காரியங்களைச் செய்கிறார்கள் என்பது உண்மை.
 ஆனால், அவர்கள் செய்து விட்டுப் போன காரியங்கள், எந்தக் காலத்துக்கும் பொருத்தமுடையதாக இருக்கும். உலகத்தில் எத்தனையோ மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தை, நிலையை பின்நோக்கிப் பார்த்தால், அவர்களுடைய வருகை எத்தனை அவசியமாக இருந்தது என்பதை நாம் உணரலாம்.
 இந்தியாவில்தான் மகான்கள் பரம்பரை என்பது உண்டு. இந்த பரம்பரையின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பதை எந்த வரலாற்று ஆசிரியரும் சொல்லவில்லை. அந்தப் பரம்பரையின் தொப்புள் கொடி எத்தனை கருவில் விரிந்து படர்ந்து வளரும் என்பதை எந்தத் தீர்க்கதரிசியாலும் கணிக்க முடியவில்லை.
 இந்தியாவில் உதித்த மகா புருஷர்கள் இவர்களுடைய வாக்கிலிருந்து வந்த மொழிகளைக் கேளுங்கள். இவர்கள் புரிந்த ஒரு செயலை வேண்டுமானாலும் பரிசீலனை செய்யுங்கள். அவற்றில் இந்த உண்மைகள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
 இந்த மகான்களின் வரிசையில் வந்தவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். 19-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் இவர் வருகை இந்தியாவுக்கு மிகவும் அவசியமாக இருந்தது.
 18-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நன்றாக வேரூன்றத் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர்களுடைய நிர்வாகத் திறமை, கல்வி முறை எண்ணப் போக்குகளில் இந்தியர்களுக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது. "தாய் மொழி பேசினால் கேவலம்' என்று ஆங்கிலேய மோகத்தில் இருக்கும் இன்றைய தமிழர்களைப் போன்று, அன்றும் ஆங்கிலேய மோகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது; ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்று கருதப்பட்டது.
 "உழுதுண்டு வாழ்வதே வாழ்வு' என்பது மாறி "உத்தியோகம் புருஷ லட்சணம்' என்ற எண்ணம் கிராமங்களில் வசித்து வந்த மத்திய தரக் குடும்பங்களில் கூட பரவத் தொடங்கியது. இதன் விளைவாக கிராமங்களின் செல்வாக்கு குறைந்து, நகரங்களுக்குப் புது வாழ்வு வந்தது.
 இளைஞர்கள் இந்திய உடலையும், ஆங்கில உள்ளத்தையும் தாங்கியவர்களாக இருந்தார்கள்.
 சுருக்கமாகச் சொன்னால், 18-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து, 19-ஆவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையுள்ள நூறாண்டு காலத்தில் இந்தியாவின் கலைகளும், நாகரிகமும் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. எந்த ஆன்மிக அடிப்படையில் இந்தச் சமுதாயம் அமைக்கப்பட்டிருந்ததோ, அந்த ஆன்மிக அடிப்படை தகர்ந்துவிடும் நிலையிருந்தது. இந்த நிலையில்தான் நம் தேசத்து புராதன கலாசாரத்தில் பொதிந்துள்ள உண்மைகளை உணர்த்தக் கூடிய ஒரு மகா புருஷரின் தேவை இருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றியவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
 "ஸ்ரீசங்கரருடைய அறிவும், சைதன்யருடைய இருதயமும் கொண்ட ஒருவர் தோன்றுவதற்கு காலம் பக்குவமுடையதாயிருந்தது. மற்ற மதத்திடமும் ஒரே சக்தி, ஒரே கடவுள் இருப்பதைக் காணக்கூடிய ஒருவர் தோன்றுவதற்கான காலம் கனிந்திருந்தது. அப்படி ஒரு மனிதர் தோன்ற வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த மனிதர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்' என்றார் சுவாமி விவேகானந்தர்.
 ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர் அமெரிக்கா சென்று உரையாற்றியபோது, அங்கிருந்த வேற்று மதத்தினரை
 "சகோதர சகோதரிகளே' என்றுதான் அழைத்தார்.
 நிலையாகவுள்ளது எது? சத்தியம், தர்மம், அன்பு. அதற்கு கிருஷ்ணர், யேசு, அல்லா யார் எந்தப் பெயரிட்டழைத்தாலென்ன ? பெயரிலே என்ன இருக்கிறது என்பதை உணர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். அதற்கு அவர் வாழ்க்கையே உதாரணம். ஏழைக் குடும்பத்திலே பிறந்து, எல்லா பிள்ளைகளையும் போல வளர்ந்து, எல்லோரையும் போல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஒரு கோயில் பூஜகராக வாழ்க்கையை நடத்தினார் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், உண்மையில் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கடவுள் வாழ்க்கையாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிஷமும் அவர் கடவுள் நினைவாகவே இருந்தார்.
 வங்காளத்தில் ஹூக்ளி ஜில்லாவில் காமார்புகூர் என்பது ஒரு பெரிய கிராமம். இதில் குதிராம் சாட்டர்ஜி என்கிற பிராமணருக்கு 1836-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி பிறந்த நான்காவது குழந்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் பிறப்பதற்கு முன் இவரது தந்தையும் தாயும் கயைக்குப் போயிருந்தார்கள். இந்த யாத்திரைக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால், கயை கோயிலின் கடவுளின் பெயரான "கதாதரன்' என்று வைத்தனர்.
 சிறு வயதிலேயே இயற்கை காட்சிகளோடு மனம் ஒன்றிப் போவார் கதாதரர். தன்னை மறந்து விடுவார். கவிதை, சித்திரம், சங்கீதம் இதிலெல்லாம் அதிக ஈடுபாடு கொண்டவர். கவிஞர்கள், ஓவியர்கள், சங்கீத மேதைகள் இவர்களுடைய மனம் விரைவில் ஒன்றுபடும்.
 இந்தத் திறனெல்லாம் கதாரரிடம் இருந்தது. இனிமையான சாரீரம்.அபார ஞாபக சக்தி. சின்ன வயதிலிருந்தே தன் நடை, உடை பாவனைகளால் மற்றவர்களைக் கவர்ந்தார். பள்ளிப் படிப்பில் அதிக ஈடுபாடில்லை. ஆனால், கேட்ட மாத்திரத்தில் புராண இதிகாசக் கதைகளையும் பாடல்களையும் ஒரு வரி விடாமல் சொல்வார்.
 சிறு வயதில் தந்தையை இழந்தார். சகோதரருடன் கொல்கத்தா வந்தார். அங்கே ராணி ராசமணி என்ற ஜமீந்தாரினி, காளிதேவிக்கு பெரிய கோயில் கட்டியிருந்தார். இதனுடன் சேர்த்து சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் கட்டி வைத்தார். இந்தக் கோயிலின் பூசாரியானார் சுதாதரருடைய மூத்த சகோதரர் ராம்குமார். அவருக்கு உதவியாக இருந்தார் கதாதரர்.
 கதாதரர் ஒரு சிற்பியும்கூட. அவர் வடிக்கும் சிற்பங்கள் அத்தனை அழகாக இருக்கும். இதனால் இவருக்கு அடிமையானார் ராணி ராசமணியின் மருமகன் மதுரநாத விசுவாசர். சகோதரர் வேலை பார்த்த கோயிலில் இருந்த காளியின் தீவிர பக்தரானார் கதாதரர். ஆழ்ந்த பக்தி இவர் மனோநிலையையும், உடல் நிலையையும் பாதித்தது. இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ரூபத்தில் இவர் கடவுளைக் காண வேண்டும். அதற்கு தாந்திரிக தர்மத்தில் இவரை அழைத்துச் சென்றார் பைரவி பிரம்மணி என்கிற அம்மையார். தாந்திரிக சாதனங்கள் மூலமாக ஜகதாம்பிகையை பல ரூபங்களில் கண்டார். அஷ்டமா சித்திகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால், அவற்றைத் துச்சமென தள்ளினார். "உலகை மயக்குவதற்கல்லவோஇது தேவை' என்று அதை உதறினார்.
 அத்வைத மார்க்கத்துக்கு திரும்பினார். வேற்று மதத்தினர் கடவுளைக் காண எந்தெந்த வழிகளில் செல்கிறார்களோ அதையும் தெரிந்துகொள்ள ஆசை கொண்டார். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார்.
 இதற்குப் பிறகு தனது 38-ஆவது வயதில் கிறிஸ்தவ மதத்தில் ஈடுபட்டு அவர்கள் முறைகளிலே கடவுளைக் கண்டார்.அத்வைத மார்க்கத்தில் இருந்த காலத்தில் புத்தமத அனுபவங்களையும் பெற்றார்.
 இவரது மனைவி ஸ்ரீ சாரதாமணி தேவியார்; இவருக்கு தாயாகவும் இருந்து கவனித்தார். சிஷ்யை போன்று பணிவிடைகள் செய்தார். 1866-ம் ஆண்டிலிருந்து இவர் ஒரு மகானாகவே வாழ்ந்தார். சுதாதரருக்கு "ஸ்ரீராமகிருஷ்ணர்' என்ற பெயர் யார் மூலம் வந்தது என்பதில் யாருக்கும் தெளிவில்லை.
 மகானாக இருந்த காலத்தில் ஒரு வெல்ல மலையாகவும், மலர்க் கூட்டமாகவும் இருந்தார். இந்த மலர்க் கூட்டத்திலிருந்து ஞான ரசம் குடித்த வண்டுகள்தான் எத்தனை? இவருடைய பிரதான சீடர்தான் சுவாமி விவேகானந்தர். இவரின் உபதேசங்களின் வழியாக, அறியாமை இருள் அகலத் தொடங்கியது. மேல்நாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், நம் தாய் நாட்டைப் பார்க்கத் தொடங்கினார்கள். "வந்த வேலை முடிந்து விட்டது' என்று 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தனது ஐம்பதாவது வயதில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கண்களை மூடிக் கொண்டார்.
 
 இன்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 183-ஆவது பிறந்த தினம்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/18/ஞான-ரசம்-தந்த-மலர்த்-தோட்டம்-3097743.html
3097744 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் வங்கிகளுக்கு கணினி வரமா? வாதூலன் DIN Monday, February 18, 2019 03:00 AM +0530 ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவரைச் சந்திக்க நேர்ந்தது. அச்சிட்டது போன்ற "டெபாசிட்' ரசீதையும், வங்கிக் கணக்கு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார். என்னை நோக்கி இதுதான் "பாங்கிங்'! நாம் அந்த நாளில் வேலை செய்த வங்கிச் சேவை எல்லாம் ரொம்ப மெருகே இல்லாதது என்று முகம் சுளித்தபடிசொன்னார்.
 ஒரு கோணத்தில் அவர் பார்வைசரிதான். ஏனெனில், அவசர நிலை தீவிரமாக நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், அதிகாரியாகச் சேர்ந்தார். யூனியனின் கேந்திரமாய் விளங்கிய கிளையொன்றில் பணிபுரிந்தபோது ஊழியர்களிடம் வேலை வாங்க சிரமப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் கூடுதல் நேர பணிப்படி கிடையாது. மாதாந்திர கணக்குகளைச் சமனப்படுத்துதல், மூன்று மாதத்துக்கு ஒரு முறை கடனுக்கு வட்டியைக் கணக்கிட்டு கடன் வாங்கியவர் கணக்கில் பற்று வைப்பது போன்ற பணிகள் அப்போது அதிகாரிகளுக்குச் சுமையைத் தந்தன.
 ஆனால் ஒன்று, கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அச்சடிக்கப்பட்ட எழுத்துகளிலும், "ஏடிஎம்' மூலம் பணம் அளிப்பதிலும் மட்டும் வங்கிச் சேவை அடங்கிவிடுமா என்ன? கணினி நுழைவினால் வேறு நல்ல பயன்களும் கிடைத்திருக்கின்றன என்பது உண்மைதான். உள்ளுர், வெளியூர் காசோலைகளை எழுதுவது, பணம் செலுத்தவும் எடுக்கவும் கால் கடுக்க வரிசையில் நிற்பது, "கிளியரிங் செக்'குகளின் வரவுக்காகக் காத்திருப்பது போன்றவை இன்று காணாமல் போய்விட்டன. இவை எல்லாமே தற்கால வங்கிச் சேவையின் பலன்கள்தான்.
 சந்தேகமே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் தொடர் விடுமுறைகள், திடீர் வேலைநிறுத்தங்கள் போன்றவை வாடிக்கையாளர்களைப் பெருமளவு பாதிப்பதில்லை. இருந்த இடத்திலிருந்தே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
 ஆனால், எங்கு சிக்கல் முளைக்கிறது தெரியுமா? ஏதாவது ஒரு தவறான பற்று கணக்கில் பதிவானால் அதை மீட்பது மிகக் கடினம். என் போன்ற ஒரு வங்கி ஊழியர் (ஓய்வு) கணக்கில் காசோலை தபாலில் வரும்போதெல்லாம் கட்டணம் பற்று வைக்கப்படுகிறது. வேறொரு நண்பர் "ஓவர் டிராப்டாக' ஐந்து லட்சம் கடன் தன் டெபாசிட்டில் பெற்றார். அதற்கான காசோலையை நேரிலேயே பெற்றுக் கொண்டார். அதற்கும் ரூ.170 பற்று! இருவருமே வங்கி ஊழியர்கள் என்பதால் சிறிய சலுகைகளைப் பெற உரிமை பெற்றவர்கள். பிறகு ஏன் இந்தக் கட்டணம்? கேட்டால், பல காரணங்கள் கூறப்படுகின்றன. "நாங்கள் கட்டணம் எதையும் விதிப்பதில்லை; கம்ப்யூட்டர் சிஸ்டம் செய்கிறது சார்; இதற்கெல்லாம் தீர்வு காண நபரில்லை' போன்ற விளக்கங்கள் நமக்குப் புரிவதில்லை.
 மேலே கூறியவை சொற்பத் தொகைகள். ஆனால், கடனுக்காகவோ, வேறு எதற்காகவோ வங்கிக்கு அறிவுறுத்தலை ("ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்') வாடிக்கையாளர் அளித்திருந்தால், "கண்கொத்திப் பாம்பு' போன்று கண்காணிக்க வேண்டும்; விடுமுறை நாள்களில் ஆணைத் தேதி வந்தால், சில சமயம் முந்தின நாளே தொகையை எடுத்து விடுகிறார்கள். உதாரணமாக, சென்னை அண்ணா நகரில் தன்னுடைய அரையாண்டு ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கு ஒருவர் "பாலிசி பிரிமீயம்' தொகையை உரிய காலத்தில் செலுத்துமாறு அறிவுறுத்தல் ("ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்') அளித்திருந்தார். அதை வங்கி செயல்படுத்தத் துவறிவிட்டது. அலுவலகப் பணி நிமித்தம் வெளிநாட்டில் சில காலம் இருந்த அவர், அதைக் கவனிக்கவில்லை. விளைவு, "பாலிஸி' காலாவதியாகிவிட்டது. பின்னர், இந்தியா திரும்பியவுடன், வங்கி, காப்பீட்டுநிறுவனம் இரண்டுக்கும் அலைந்து சரி செய்தார்.
 ஒரு வங்கியின் ஏடிஎம் அட்டையை வேறு வங்கிக் கிளையில் பயன்படுத்துகையில், தொகை குறைவாக வரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இதற்காக யாரிடம் செல்ல வேண்டும் என்பது ஒரு புதிர்; அட்டை உள்ள வங்கியிலா? தொகை எடுத்த வங்கியிலா? இது குறித்தும் பல புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
 வங்கி-வாடிக்கையாளர் உறவு கிட்டத்தட்ட மருத்துவர்-நோயாளி தொடர்பு போன்றதுதான். நோயாளியிடம் இதமானஅனுசரணையான வார்த்தைகள் பேசினாலே பாதி நோய் குணமாகி விடும். இது வங்கிகளுக்கும் பொருந்தும். ஒருசில தவறுகள் ஏற்படும்போதுஅதிகாரிகள் அமைதியாக விளக்கம் தந்து, தீர்வும் கூறினாலே போதும். பெரும்பாலும் பல கிளைகளில் இதுபோன்று நிகழ்வதில்லை. காரணம்,
 பணிச் சுமை!
 வங்கிகளில் பணியிட மாற்றம், ஓய்வு பெறுவதால், பதவி உயர்வால் மாற்றம் போன்ற பல இயல்பான நிகழ்வில்கூட, வேறு பதிலி நபர்நியமிப்பது கிடையாது என்பது கண்கூடு. போதாக்குறைக்கு பல மைய அரசு வேலைகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன என்ற காரணியும் உண்டு. மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வருமான வரி வசூலித்தல் போன்ற பல கூடுதல் பணிகளை தற்போது வங்கி ஊழியர்கள் செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய பணிகளை முன்பெல்லாம் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மட்டுமே செய்து வந்தனர்.
 மேலும், அவ்வப்போது வரும்அரசு அறிக்கைகள் வங்கிகளைக் குழப்புகின்றன. உதாரணமாக, வாராக் கடனுக்கான விதிமுறைகள்,சில பிரிவினருக்கு உத்தரவாதமில்லாத கடன்; கடன், டெபாசிட் ஏற்படும் வட்டி விகித மாறுதல் போன்றவற்றை அதிகாரிகளே சரியாகப் புரிந்து கொள்ளாதபோது, வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு விளக்குவது?
 ஆக "எல்லாம் கணினிமயம்'என்ற நவீன மாறுதல்களை முழுமையாக மகிழ்ச்சியோடு ஏற்கமுடியாது என்பதுநிதர்சனம். இன்னும் ஐந்தே மாதங்களில் அரசு வங்கிகளுக்கு 50-ஆவது ஆண்டு (பொன்விழா) நிறைவு வரப் போகிறது. கணினி வழிச் சேவையில் உள்ள
 குறைகளைச் சீர்படுத்தி, வங்கிகள் நற்பெயர் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
 
 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/18/வங்கிகளுக்கு-கணினி-வரமா-3097744.html
3096564 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாமே! உதயை மு. வீரையன் DIN Saturday, February 16, 2019 01:22 AM +0530 பெருமைமிக்கப் பெரியோர்களின் பிறப்பு மட்டுமல்ல, அவர்களின் இறப்பும்கூட கொண்டாடப் படுகின்றன. ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; மனித குலத்தின் உயர்வுக்காகவே வாழ்கின்றனர். மக்களுக்காக வாழ்கின்றவர்களை உலகம் எப்போதும் மறப்பதில்லை.
இந்த நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் குறைவில்லை. அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்; நமக்கெல்லாம் வழிகாட்டிகள்; அவர்களுக்கு மரணமில்லை; மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அதுதான். அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காகவா? இல்லை; இதன் மூலம் நமக்கு நாமே புதுவாழ்வு பெறுகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்; நம்பிக்கையும், அடுத்தவர் நலனில் அக்கறையும் கொள்கிறோம்; மனித சமுதாயத்துக்கு நமது கடமையும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அந்த நாள்களில் ஏழைகளுக்கு உணவு, உடை அளிப்பது; ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது; கவியரங்கம், கருத்தரங்கங்கள் நடத்துவது; போற்றிப் பாடல்கள் பாடுவது; இத்துடன் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தொடக்கத்தினை யொட்டி சிறையில் ஏழு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்; ஆனாலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் அனுபவித்திருந்தும் சிலர் விடுவிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. இது பற்றிய ஆர்ப்பாட்டமும், முறையீடுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கருணை அடிப்படையில் அன்றைய அரசு விடுவித்தது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் கேள்வி எழுந்தபோது, கருணையில் பாரபட்சமெல்லாம் இல்லை என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் தண்டனைக் கைதிகளில் சுமார் 1,800 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில்  அறிவித்தார். தண்டனை காலத்துக்கு முன்பே கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அவரது ஒப்புதலின்படியே அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டு தருமபுரி பேருந்து எரிப்பில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவியர்  3 பேர் எரிந்து சாம்பலாயினர். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்யக் கோரி அரசு சார்பில் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரையை முதலில் ஆளுநர் நிராகரித்துவிட்டார். சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் ஆளுநருக்கு தமிழக அரசு மனுச் செய்தது. அதில், பேருந்து எரிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததல்ல. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது என்பதால் நல்லெண்ண அடிப்படையில் 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், 3 பேரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் 18 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும் அனுப்பியது. ஆனாலும், அவர்களை விடுதலை செய்ய இதுவரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.
இந்தியாவில் மரண தண்டனைக்குள்ளாகி குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துவிட்டுக் காத்திருந்த 50 பேரின் சார்பாக கடந்த 2005 அக்டோபர் 17-ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
மரண தண்டனை சிறைவாசிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து, அவர்கள் வாழ வழி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவர்களைச் சுமையாகக் கருதாமல் மனிதச் சொத்தாக மதித்து நல்வழிப்படுத்த ஆவன செய்ய வேண்டும். இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய காலத்தைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்... என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.
தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருந்தபோதிலும் உள்துறை அமைச்சகம் செய்யும் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுக்க முடியும். இதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றார்.
உலகில் யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வாழும் சூழ்நிலையும், வாய்ப்புகளுமே அவனைக் குற்றவாளியாக்குகின்றன என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. குற்றங்களின் தன்மைக்கேற்ப தண்டனையும் காலம் காலமாக இருந்து வருவதுதான். காலத்திற்கேற்பவும், ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களுக்கேற்பவும் தண்டனை மாறுபடுகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் யானையால் மிதித்தும், கழுவேற்றியும், கொலைவாளால் வெட்டியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போதும் சில அரபு நாடுகளில் மரண தண்டனைக் கைதிகளைப் பொது இடத்தில் நிறுத்தி பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்லும் முறையும், பொது இடத்தில் தூக்கில் போடும் முறையும் இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் 8 குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர, போதைப் பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அவ்வாறு தண்டனை அனுபவித்தவர் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
மரண தண்டனை விதிப்பது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகியவற்றை மீறிய செயலாகாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறியுள்ளது. அத்துடன் இது பன்னாட்டு உடன்படிக்கையை மீறிய செயலாகாது.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளோடு முடியாது. ஆயுளின் இறுதிவரை தண்டனைதான் என்று கூறியுள்ளது. அப்படியானால் தூக்குத் தண்டனை தேவையில்லை என்றாகிறது. தூக்குத் தண்டனையின் நோக்கம் குற்றவாளி உலகில் நடமாடக் கூடாது என்பதுதான்; ஆயுள் முழுவதும் சிறையில் கிடக்கும்போது, குற்றவாளிக்கு அந்தத் தண்டனையே போதும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாகரிக காலத்தில் பழைமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கலாமா? பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பது பழங்காலச் சட்டம். வீட்டைக் கொளுத்தியவனுக்குத் தண்டனை, அவன் வீட்டைக் கொளுத்துவது என்று இப்போது சட்டம் இல்லை. அதே போன்று உயிருக்குப் பதில் உயிர் என்னும் மரண தண்டனை இருக்கலாமா?
இந்த விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மனித உயிர்களுக்கு எதிரான மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டும் என உலக நாடுகளுக்கு பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின் பொன்விழாவில் ஐ.நா. பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பல உலக நாடுகள் மரண தண்டனையை விலக்கிக் கொண்டுள்ளன. தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகள் பிறந்து, வாழ்ந்து, உபதேசித்த நாடு; அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே!
இங்கே தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைவிட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இது பற்றி நீதிபதிகளே பலமுறை தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையை அரசியல் கலக்காமல் மனிதநேயத்துடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஞானிக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்றார் ஆஸ்கார் ஒயில்டு. இதை, சட்டத்தின் ஆட்சி என்பது ஞானிகள், பாவிகள் ஆகிய இருவருக்குமானது என்று தன் தீர்ப்பு ஒன்றில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார். 
தவறு செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்கே அரசும், சட்டங்களும் வழிகாட்ட வேண்டும். சீர்திருத்தச் சாலைகளாக சிறைகள் இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாகச் செயல்படக் கூடாது. திருந்தி வாழ்வதற்கான தீர்ப்புகளாக தண்டனைகள் இருக்க வேண்டும்; ஒழித்துக் கட்டும் ஒருவழிப் பாதையாய் இருக்கக் கூடாது. 

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/16/திருந்தி-வாழ-வாய்ப்பளிக்கலாமே-3096564.html
3096563 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மருந்தென வேண்டாவாம்... ஐவி. நாகராஜன் DIN Saturday, February 16, 2019 01:21 AM +0530 மத்திய  மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இரண்டு ஆண்டுகள் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், இந்தியாவில் பிரபல மருந்து நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் மருந்துகளில் தரக் குறைபாடு உள்ளதைக் கண்டுபிடித்து, அறிக்கை வெளியிட்டு அதை தன் இணையதளத்திலும்  வெளியிட்டுள்ளது.
தரமில்லாத மருந்துகளுக்கு இந்தியர்கள் அதிக விலை கொடுக்கின்றனர்; தரமற்ற மருந்துகள் காரணமாக நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு நீடிக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் நடத்திய சோதனையில், 572 மாவட்டங்களில் மொத்தம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 525 பதிவு செய்யப்பட்ட மருந்து விற்பனைக் கடைகள் உள்ளது தெரியவந்துள்ளது.
டிரக் இன்ஸ்பெக்டர்கள் என்று அழைக்கப்படும் மருந்து ஆய்வாளர்கள் மொத்தம் 47,954 மருந்து மாதிரிகளைச் சேகரித்தனர். இதில் அரசு மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டமாதிரிகளும் அடங்கும்.
இவ்வளவு மாதிரி மருந்துகளும் 1,719 தயாரிப்பு மையங்களில் இருந்து வெளிவந்துள்ளன. இவற்றில் 80 சதவீத மருந்துகள் 197 பெரிய நிறுவனங்கள் தயாரிப்பவையாகும். சோதனைக்கு எடுக்கப்பட்ட மருந்துகள் 183 மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டு தயாரித்து சந்தைக்கு வந்தவை. இதில் வியப்பான இன்னொரு செய்தி, 47,000 மாதிரிகளில் 80 சதவீத மருந்துகளுக்கு 46 மூலக்கூறுகளே அடிப்படையாக இருந்தது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதில் பட்டியலில் முதலில் இடம்பெறும் முறைகேடு காலாவதியான மருந்து. இரண்டாவதாக, மருந்துகளை வேறு சிறு நிறுவனங்களில் தயாரித்து வாங்கி, அதை தங்கள் வணிக இலச்சினையில் பாக்கெட்டில் அடைத்து விற்பது. 
இந்தியாவில் மற்ற துறைகளைவிட பொது மக்களின் உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது மருந்தியல் துறைதான். இந்தத் துறை மற்ற துறைகளைவிட ஆண்டுக்கு 17  சதவீத வளர்ச்சி என்ற பிரமாண்டத்தைக் காட்டுகிறது. கடந்த 2005-இல் ஆண்டுக்கு 600 கோடி டாலர்களாக (ரூ.46,150 கோடி)  இந்திய மருந்துச் சந்தை விற்பனை இருந்தது; இந்த விற்பனை மதிப்பு  2016-ஆம் ஆண்டின் இறுதியில் 3700 கோடி டாலர் (ரூ.2,62,700 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மருந்துகளில் தரம் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய பிரச்னை.
பொதுமக்களின் உயிருடன் மருந்து தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை இந்த ஆய்வறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. பிரச்னை என்னவென்றால், தரம் குறைந்த மருந்துகளை விநியோகம் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அது முடிவடைய 5 ஆண்டுகள் வரை ஆகிறது.
2006-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளைச் சோதனை செய்த போது, தரமற்ற மருந்துகள் இருப்பது உறுதியானது; மேலும், தரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் மருந்துகள் குறைவாக இருப்பதும் தெரியவந்தது. மருந்துத் தரக் கட்டுப்பாட்டு சோதனை என்பது பொது சுகாதாரத் துறையுடன் இருந்த காலகட்டங்களில் தரமான மருந்துகள் சந்தைக்கு வந்தன. எப்போது தனித் துறையாகப் பிரிக்கப்பட்டதோ, அப்போது முதல் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. மேற்படி ஆய்வில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மருந்துக் கடைகள் உள்ளது தெரியவந்துள்ளது; ஆனால், இவ்வளவு லட்சம் கடைகளையும் கண்காணிப்பதற்கு உரிய மருந்து ஆய்வாளர்களின் எண்ணிக்கை 900 மட்டுமே. இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விற்பனையைக் கொண்ட மருந்தியல் துறையை முழுமையாகக் கண்காணிப்பதற்குத் தேவைப்படும் முழுமையான நடவடிக்கையை இதுவரை அரசு எடுக்கவில்லை. 
உலகில் மருந்து தரக் கட்டுப்பாட்டில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத் துறை  அமைப்பு மட்டுமே. இந்த அமைப்பைக் கண்டு அமெரிக்காவில் பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் பிரம்மாண்ட நிறுவனங்கள் நடுங்கும் நிலை உள்ளது. ஏனெனில் அங்கு தவறு நிரூபணமானால் தண்டனை, தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தல்  என நடவடிக்கைகள் துரிதமாக உள்ளன.
மேலும், அமெரிக்காவில் மண்டலத்துக்கு ஒரு மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மையம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை அல்லது மதுரையில் மட்டுமே மருந்து  தரக் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அப்படியானால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் எப்படி உறுதி செய்ய முடியும்? மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் கருவிகளும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால்தான் தரமற்ற மருந்துகளைச் சந்தைப்படுத்துகின்றனர்.
இந்தத் துறையில் புழங்கும் பெரும் பணமும், குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்ககும்படிச் செய்து விடுகிறது. மருந்தில் தரம் குறைவது என்பது, மருத்துவர் மீது நோயாளிக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும்.
எனவே, மாவட்டந்தோறும் மருந்து தரக் கட்டுப்பாட்டு மையங்கள், சரியாக மதிப்பீடு செய்து மருந்துக் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் தரமற்ற மருந்துகளின் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்றார் திருவள்ளுவர். 
அதாவது, முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிய பிறகு, தக்க அளவு உணவு உண்டால் உடலுக்கு மருந்து தேவைப்படாது. தரமற்ற மருந்துகள் உள்பட மருந்துகளைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு திருவள்ளுவர் கூறியதைக் கடைப்பிடிப்பது உதவும்.


 

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/16/மருந்தென-வேண்டாவாம்-3096563.html
3095912 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும்... வெ. இன்சுவை DIN Friday, February 15, 2019 01:23 AM +0530 நம்மை வளர்த்த தாய், தந்தையரே நமக்குப் பாரமா? பணம் இருப்பவன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான், இல்லாதவன் அடித்துத் துவைக்கிறான். ஆக இருவரும் ஒன்றுதான். முன்னதில் மனம் வலிக்கும், பின்னதில் உடல் வலிக்கும். 
குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த தாய்-தந்தையரை முதுமையில் சில பிள்ளைகள் கவனிப்பது இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது பாசம் காட்டாமல் ஒதுக்கிய பெற்றோரைப் பின்னாளில் அந்தப் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம். 
ஓய்வு பெறும் வயது 58 அல்லது 60 என்று அரசு நிர்ணயித்து பணியில் இருந்து விடுவித்து விடுகிறது. அதுவரை வேலை, குடும்பம் என்று ஓடி, ஓடிக் களைத்துப் போனவர்கள், இப்போதுதான் தன்னைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், குழந்தைகள், உறவுகள், குடும்பம் என தங்களைச் சுருக்கிக் கொண்டவர்கள் ஓய்வுக்குப் பின்தான் வெளி உலகைப் பார்க்கிறார்கள்; வேலையே சுவாசம் என்று இருந்தவர்கள், வேலைக்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்கிறார்கள்; மேலதிகாரிக்குப் பயந்து பயந்து வாழ்ந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்; கடினமான பணியில் இருந்தவர்கள் எந்த வம்பு, வழக்கிலும் சிக்காமல் ஓய்வு பெற்றதை எண்ணி மகிழ்கிறார்கள்;
நேர்மையாக இருந்து உண்மையாக உழைத்தவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள்; தன் கீழ் வேலை செய்தவர்களை இரக்கம் இன்றி நடத்தி அதிகாரம் செய்தவர்கள், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாமோ என்று லேசாக வருத்தப்படுகிறார்கள்.
இப்படி கலந்து கட்டிய உணர்வுகளுடன் ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தை அசை போட்டபடியே காலத்தைத் தள்ள பலரும் தயாராக இல்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை இன்னும் கொஞ்சம் தூக்கிப் பிடிக்க சிலர் வேறு ஏதாவது வேலைக்குப் போகிறார்கள். 
இன்னும் சிலருக்கு பேரக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும். குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட, தாத்தாவும், பாட்டியும் அல்லாடுவார்கள். பள்ளி நாள்களில் இவர்கள் விருப்பப்பட்டு எங்கும் போக முடியாது. மறுபடியும் செக்கு மாடு போல ஒரு வாழ்க்கை. பெண்களுக்கு மீண்டும் அடுப்படி வாசம்தான்.
ஒருசிலருக்கு எந்தவித குடும்ப பாரமும், பொறுப்பும் இருக்காது. பிடித்த இசை, நடைப்பயிற்சி, பிடித்த உணவு, நிம்மதியான தூக்கம், பரபரப்பில்லாத அமைதியான வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள், கோயில், விருந்து என வாழ்க்கையை ரசனையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். கையில் காசும், மனதில் நிம்மதியும், உடலில் தெம்பும் இருந்தால் அதுதானே சொர்க்கம்? வறுமை, நோய், பகை  - இந்த மூன்றும் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை ஓய்வுக்குப் பின் தொடங்குவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகமாகும்.
இப்படி இயந்திரமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு சிலரே; மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தால் இவர்களும் சில காலம் அங்கு போய் அவர்களுடன் தங்கி விட்டு மகிழ்வுடன் ஊர் திரும்புகிறார்கள்.
அடுத்து, 70 வயது ஆன முதியவர்களுக்கு உடல் தளர்ந்து போய் விடுகிறது. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை.  பெற்றோர்களை உயர்வாக மதித்து, அன்புடன் நடத்தும் மகள், மருமகள் வாய்க்கப் பெறுவதுதான் சிறந்த கொடுப்பினை. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதும். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அனுசரணையாக இருக்கிறார்கள். வேறு பேச்சுத் துணை தேட வேண்டிய அவசியம் இல்லை. மனைவி தவறிப் போய் கணவன் மட்டும் இருந்தால் தவித்துப் போய் விடுகிறார்கள். சட்டென ஒரு வெறுமை. தன் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று, மனக் காயங்களுக்கு மருந்தாக இருந்த அன்பு மனைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கை கசந்து போகிறது. இன்னொரு கோப்பை தேநீர் வேண்டும் என மருமகளிடம் கேட்கத் தயக்கம்; பசித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய பரிதாபம்; உணவு பிடிக்கவில்லை என்று சொல்ல பயம். தன் மனதைப் படித்து வைத்திருந்த அந்த ஒரு ஜீவனுடன் தன் வாழ்வும் முடிந்து விட்டதை அந்த முதியவர் உணரும் காலம் அது. 
இதுவே பெரியவர் இறந்து போய், பாட்டி மட்டும் உயிருடன் இருந்தால் அவர் எப்படியாவது தன் பொழுதை ஓட்டி விடுவார். வீட்டு வேலை,கோயிலுக்குச் செல்வது, பூஜை என்று நேரத்தைக் கழித்து விடுவார். கொஞ்சம் நம்பகமான ஆள் கிடைத்தால் தன் மனத்தாங்கலையும், குறைகளையும் கொட்டி விடுவார். பெண்களைப் போல ஆண்கள் யாரிடமும் குடும்ப விஷயத்தைப் பேச மாட்டார்கள். சக வயதை ஒத்தவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி அலசி ஆராய்வார்களேயொழிய வேறு எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே, ஆத்மார்த்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மனைவி இல்லாததுதான் பெரிய மனக் குறையாக இருக்கிறது. ஆகவே, அவர்களை அப்படியே ஒதுக்கி விடாமல் வீட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களைத் தனிமை வாட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
70 வயதுக்கு மேல் உள்ள முதியோர் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுடன் சில காலம், பின் தன் வீட்டில் தனியாக சில காலம் என்று காலம் தள்ளுகின்றனர். இப்படி ஆறு மாதங்கள் வெளி நாட்டில் இருந்து திரும்பிய ஒருவர். தன் வீட்டைத் திறந்த போது பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அனைத்து அறைகளிலும் வெள்ள நீர் புகுந்து அனைத்துப் பொருள்களையும் பாழாக்கி இருந்தது. அதைச் சுத்தம் செய்வதற்குள் அவருக்கு விழி பிதுங்கி விட்டது. தான் ஊரில் இல்லாத போது தன் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி அவர் யாரிடமும் சொல்லவில்லை. 
அக்கம் பக்கத்தாருடன் அதிக ஒட்டுதல் கிடையாது.
இன்றைக்குத் தனியாக இருக்கும் முதியவர்களால் ஒருவரையும் நம்ப முடியவில்லை. எனவே, யாரிடமும் பழகாமல் உள்ளனர். சக மனிதர்களுக்கும், கொசுவுக்கும் ஒருசேர பயந்து ஜன்னல் கதவுகளை மூடியே வைத்திருக்கிறார்கள். ஓர் அவசரத் தேவைக்கு உதவ அவர்களுக்கு யாரும் இல்லை. ஏதாவது உதவி தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளா வந்து உதவ முடியும்? தனியாக இருப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தினர்தான் உறவுகள். அவர்களை நம்பாவிட்டால் எப்படி? அதே போல இளைஞர்களும் தங்கள் பகுதியில் தனியாக இருக்கும் முதியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.இப்போது எல்லாம் இ-சேவைகளாகவே உள்ளதால் முதியவர்கள் தவித்துப் போகிறார்கள். படித்த இளைஞர்கள் அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளில் ஒத்தாசையாக இருக்கலாம். சும்மா இருக்கும்போது பெரியவர்களிடம் உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம். தனிமையில் இருப்பவர்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருக்கும். 
தற்போது கூட்டுக் குடும்பங்களில்கூட வயதானவர்களை மதித்து அவர்களிடம் உட்கார்ந்து யாரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார்கள். முதியவர்களின் மன  வருத்தம் என்னவென்றால், வீட்டில் யாரும் தங்களை மதிப்பது இல்லை என்பதே.
எனவே, அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டின் கூட்டுக் குடும்ப கலாசாரத்தையும், பண்பாட்டையும்  நொறுக்கி விட்டதன் அடையாளச் சின்னங்கள் முதியோர் இல்லங்கள்; ஆதரவற்ற முதியவர்களுக்கான இல்லங்களாக மட்டும் அவை இருக்கட்டும்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் அடைக்கலம் அல்ல அவை.
வசதியுள்ள, படித்த முதியோர் தங்களது தனிமையைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பை நேசிக்கும் அவர்கள் தங்கள் நேரத்தை மிக அற்புதமாகவும், பயனுள்ளதாகவும் செலவிடுகிறார்கள். தனிமையை நேசிக்கவும் கூடச் செய்கிறார்கள். ஆகவே, இவர்கள் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. நடுத்தரக் குடும்பத்து முதியவர்கள் மட்டுமே தவித்துப் போகிறார்கள். உடலுக்கு முடியாமல் படுத்துவிடக் கூடாது;
யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது; படுக்கையில் விழுந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் முழு நேரப் பிரார்த்தனையாக இருக்கிறது. ஏழையோ, பணக்காரரோ எல்லோருக்கும் மூப்பு வரும். முதுமை வரமாகவோ, சாபமாகவோ ஆவது, அவரவர் குடும்பப் பிண்ணனி மற்றும் பொருளாதார நிலைமையைச் சார்ந்தது. நோய் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம். அவர்களால் தனித்து வாழ முடியும். 
ஏழை முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. அத்தகைய முதியோருக்கு சாப்பாடுதான் பிரச்னை; பொழுது நன்றாகப் போய்விடும். மேல்தட்டு முதியோர்களுக்குக்கூட கவலை இல்லை. பணம் பத்தும் செய்யும்.ஆனால், கௌரவம் பார்க்கும் நடுத்தர குடும்ப முதியோர்தான், ஒரு சின்ன வட்டத்துக்குள் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். யாரிடமும் வலிந்து போய் உதவி கேட்கத் தயக்கம். மற்றவர்களுக்கு தான் பாரமோ என்ற சந்தேகம்.
ஆக, இவர்களுக்குத்தான் சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம் உதவ வேண்டும். வயதான பாட்டியிடமிருந்து இக்காலப் பெண்கள் சமையல், பூஜை நியதிகள், கை வைத்தியம் போன்ற பலவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுபவமும், அறிவும் இளைஞர்களை நன்கு  செம்மைப்படுத்தும். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்றார் ஒளவையார்; அது நூற்றுக்கு நூறு நிஜம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

]]>
https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/15/மூத்தோர்-சொல்லும்-முது-நெல்லிக்காயும்-3095912.html
3095911 கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள் போர்க்களமாகும் சாலைகள்! முனைவர் அருணன் கபிலன் DIN Friday, February 15, 2019 01:22 AM +0530
இருபுறம் அல்ல. முப்புறமும்கூட அல்ல. நாற்புறமும் அணிவகுத்து நிற்கிறார்கள். எல்லாருடைய கண்களும் சமிக்ஞை ஒளியையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லாரும் தலைக்கவசங்கள் அணிந்திருக்கிறார்கள். சிலர் கைகளுக்கும்கூடக் கவசம் தரித்திருக்கிறார்கள். எந்திரக் குதிரைகளைப் போல இரு சக்கர வாகனங்களும் எந்திரத் தேர்களைப் போல நான்கு சக்கர வாகனங்களும்  எந்திர யானைகளைப் போலப் பேருந்துகளும் கனரக வாகனங்களும் உறுமிக் கொள்கின்றன. இடையில் ஊர்ந்து திரிகிற காலாட்படை வீரர்களைப் போன்ற பாதசாரிகளும் தனக்கான சமிக்ஞை ஒளி கண்டவுடன் பாயத் தயாராக இருக்கிறார்கள். எங்கும் ஒரே இரைச்சலும் கூச்சலும். இது பழங்காலத்துப் போர்க்களமோ என்கிற ஐயம் ஒரு கணம் தோன்றி மறைகிறது. இல்லையில்லை. இது மாநகரத்தின் பெருஞ்சாலை என்று நிதர்சனம் கூறுகிறது. ஆனால் என்ன வேற்றுமையில் ஒற்றுமை. போர்க்களத்தில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்பது விதி. சாலையில் ஒருவரோடொருவர் மோதி விடக் கூடாது என்பதுதான் விதி. 
ஆனால், தலைவிதி இருக்கிறதே போர்க்களத்தில் கூட மோதிப் பிழைத்து விடலாம் போலிருக்கிறது. சாலையில் மோதிக்கொள்ளாமல் பிழைத்துப் போவது கடினம் போலத் தோன்றுகிறது. போர்க்களத்திலாவது எதிரே இருக்கிற ஒருவர் மீதுதான் நம் கவனத்தைச் செலுத்திச் செயல்பட வேண்டும். ஆனால், இன்றைய சாலைகளில் வாகனங்களில் பயணிக்க பிரமனைப் போல் நான்கு தலை கொண்டிருந்து 360 டிகிரி கோணத்தில் அவை சுழன்று கண்காணித்தாலும் மோதிக் கொள்வதைத் தடுக்க முடியாது போலிருக்கிறது. பார்த்தசாரதிகளே பயங்கொள்ளும் பல படுபயங்கரமான சாலைகளில் பாதசாரதிகளின் பாடு சொல்லி முடியாது.
சுமார் 33 இலட்சம் கி.மீ. நீளத்திற்கு நீண்டு கிடந்து உலக அளவில் இரண்டாமிடத்தில் இந்தியச் சாலைகள் விளங்குகின்றன. நாட்டின் 65 சதவீத சரக்குப் போக்குவரத்தும் 80 சதவீத மக்கள் போக்குவரத்தும் சாலை வழியாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதற்கு இணையாகச் சாலை விபத்துகளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நேரிடுகின்றன. 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 14,504 விபத்துகளில் 15,563 பேர் உயிரிழந்து விட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி கடந்த 2002 2012 ஆகிய பத்தாண்டுகளில் இந்திய அளவில் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள மாநிலமாகவும் தமிழகமே விளங்குகிறது.
ஆனால், 2007-இல் 82  லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2012-இல் 1.6 கோடியாக உயர்ந்துள்ளது வியப்பினை ஏற்படுத்தவில்லை. இதுவே ஐந்தாண்டுகளுக்கு முன்பான கணக்குத்தானே. நடப்பாண்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு அச்சத்தையே ஏற்படுத்தலாம்.
ஒரு வீட்டுக்கு இருசக்கர வாகனம் ஒன்றே ஒன்று மட்டும் இருந்த காலங்கள் கடந்து போய், வளரும் நாகரிகச் சூழலில் மகிழுந்துகளே இரண்டு மூன்றாகி, இருசக்கர வாகனங்கள் ஆளுக்கொன்றாகி வீட்டின் முன்னே அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகனப் பெருக்கத்துக்கு இணையாக என்னதான் சாலைகளை மேம்படுத்தினாலும் இடநெருக்கடி என்ற ஒன்று இருக்கிறதே.
நகரங்கள் பெருத்து வழிந்தது போதாதென்று வாகன நாகரிகச் சூழல் கிராமங்களையும் ஆட்கொண்டு விட்ட பிறகு கைகளை வீசிக்கொண்டு காலாற நடந்து போக இடமே இல்லை என்பது போலாகி விட்டது.
சாலைகளை விடவும் அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் முண்டியடித்துக் கொள்வதைத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் குடமுழுக்குகளிலும் பார்த்த காலம்போய் இப்போது தினம்தினம் அலுவலக நேரங்களில் ஒவ்வொரு சாலை முக்கியப் பகுதிகளிலும் காண முடிகிறது.
துர்நாற்றம், புகைக் காற்று, குண்டும் குழியுமான சாலைப் பள்ளங்கள், அலறும் ஒலிப்பான்கள் என எல்லாம் சூழ்ந்து கொள்ள சாலையைப் போர்க்களமாகத்தான் காட்சிப்படுத்துகின்றன. ஆங்காங்கே கண்காணித்துக் கொண்டிருக்கிற சிசிடிவி கேமராக்கள் படம்பிடித்துக் காட்டுகிற விபத்துகளின் கோரங்கள் நம்மைக் குலைபதற வைக்கின்றன.
முன்பெல்லாம் வாகனத்தை ம