Dinamani - கல்வி - https://www.dinamani.com/education/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3199938 கல்வி மஹிந்திரா இகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரி திறப்பு: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் வரவேற்பு DIN DIN Thursday, July 25, 2019 07:31 PM +0530
மஹிந்திர இகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரியின் இயக்குநர், டீன் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.  

மஹிந்திரா கல்வி நிறுவனமும் பிரான்ஸில் செயல்படும் இகோல் சென்ட்ரல் கல்வி நிறுவனமும் இணைந்து ஹைதராபாத்தில் மஹிந்திரா இகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் புதிய மாணவர்களை கல்லூரி இயக்குநர், டீன் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி, பாடங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

புதிய மாணவர்கள் வருகையையொட்டி, அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு கல்வி மற்றும் கேளிக்கை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/25/w600X390/MECS0030.JPG https://www.dinamani.com/education/2019/jul/25/mahindra-ecole-centrale-welcomes-its-6th-batch-of-engineering-students-3199938.html
3153669 கல்வி மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியீடு: துணைவேந்தர் பேட்டி DIN DIN Saturday, May 18, 2019 06:38 AM +0530
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு, கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :  2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளால் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் 3 கல்லூரிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 10 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. 
இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை தொழிற்கல்வி உள்ளிட்ட பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. 
புதிய பட்டப்படிப்புகள்... தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் பி.டெக் பட்டப்படிப்பு நிகழாண்டில் தூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது. 4 ஆண்டு கால இந்தப் பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதே போல, நாகையில் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பும், சென்னையில் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) பட்டப்படிப்பும் நிகழாண்டில் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. 4 ஆண்டு கால பி.டெக் பட்டப்படிப்புகளாக இக்கல்வி பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 
இப்பல்கலைக்கழகத்தில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை, ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு இப்பல்கலைக்கழகத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம் இலவசம்.
கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியல் ஜூன் 2-ஆவது வாரம் வெளியிடப்படும். ஜூலை 2-ஆம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் சுக. பெலிக்ஸ். தேர்வு நெறியாளர் சண்முகம், மீன்வளப் பொறியியல் கல்லூரி டீன் (பொறுப்பு) கு. ரத்னகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

]]>
https://www.dinamani.com/education/2019/may/18/மீன்வளப்-பல்கலைக்கழக-தரவரிசை-பட்டியல்-ஜூன்-2-ஆவது-வாரத்தில்-வெளியீடு-துணைவேந்தர்-பேட்டி-3153669.html
3153522 கல்வி கால்நடை மருத்துவ இளநிலை படிப்பு: இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் DIN DIN Saturday, May 18, 2019 02:40 AM +0530
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான இடங்களுக்கு இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல்,  திருநெல்வேலி,  ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன. 

இந்தநிலையில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 10-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்த அவகாசம் ஜூலை 1-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கியது முதல் தற்போது வரை பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 7,488 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 1,268 மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில்  ( (www.tanuvas.ac.in)  ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 9 -ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 9- ஆம் தேதி பிவிஎஸ்ஸி - ஏஹெச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பிடெக் (சிறப்பு பிரிவு) ஆகிய படிப்புகளுக்கும், ஜூலை 10 ஆம் தேதி பிவிஎஸ்ஸி- ஏஹெச் (கலையியல் பிரிவு) படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜூலை 11 ஆம் தேதியும்  கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2019/may/18/கால்நடை-மருத்துவ-இளநிலை-படிப்பு-இதுவரை-8500-க்கும்-மேற்பட்ட-விண்ணப்பங்கள்-3153522.html
3148232 கல்வி பி.இ. கலந்தாய்வு குறித்து வெளியாகும் தகவல்கள் தவறு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விளக்கம் DIN DIN Thursday, May 9, 2019 12:17 PM +0530 பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு குறித்து வெளியிடப்பட்டு வரும் தவறான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்  அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கான இணையதளப் பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 62,800 மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகளைச் செய்துள்ளனர்.  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தேசிய தகவல் மையம் ஆகிய அரசு நிறுவன
அதிகாரிகளின் வழிகாட்டுதலுடனும், அரசு பொறியியல் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவின் அறிவுரைப்படியும் ஆன்-லைன் கலந்தாய்வுப் பணிகள்
சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பக் கல்வித் துறை ஏற்கெனவே பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, பகுதி நேர பி.இ. சேர்க்கை,

எம்.பி.ஏ., எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வை அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஆனால்,  இந்த ஆண்டின் பி.இ. சேர்க்கையில் இணையதள உரிமம் புதுப்பிக்கப்படவில்லை, கலந்தாய்வு சேர்க்கைப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது போன்ற தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இந்தச் செய்திகளை மாணவர்கள் நம்பவேண்டாம். மாணவர்கள் தொடர்ந்து ஆன்-லைன்  மூலம் விண்ணப்பப் பதிவை உரிய காலத்தில் செய்து கொள்ளலாம்  என அதில் குறிப்பிட்டுள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/6/w600X390/annauniversity.jpg https://www.dinamani.com/education/2019/may/09/பிஇ-கலந்தாய்வு-குறித்து-வெளியாகும்-தகவல்கள்-தவறு-தொழில்நுட்பக்-கல்வி-இயக்குநர்-விளக்கம்-3148232.html
3148236 கல்வி நீட் தேர்வு விடைக்குறிப்பு ஒரு வாரத்தில் வெளியீடு: ஜூன் 5-இல் தேர்வு முடிவு DIN DIN Thursday, May 9, 2019 09:41 AM +0530 நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கும் இது தவிர கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி -
ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தேசிய தகுதிகாண்  நுழைவுத் தேர்வு (NEET  - நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
2019-20-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. 
தேசிய தேர்வுகள்முகமை(என்டிஏ) சார்பில் 154 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.  தமிழகத்தில் சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 நகரங்களில் 188 மையங்களில் தேர்வு நடந்தது. 
இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தவறான
பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்பதால், நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர். தேர்வு எளிதாக
இருந்ததாக அவர்கள் கூறினர்.
நீட் தேர்வு விடைகள் பட்டியல் (ஆன்சர் - கீ) ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. விடைகள் குறித்து ஆட்சேபம் இருந்தால் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ரூ.1,000 கட்டணம்.  இது திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி  
www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன.
 

]]>
https://www.dinamani.com/education/2019/may/09/நீட்-தேர்வு-விடைக்குறிப்பு-ஒரு-வாரத்தில்-வெளியீடு-ஜூன்-5-இல்-தேர்வு-முடிவு-3148236.html
3148235 கல்வி தொழில்நுட்பக் கோளாறு: ஆன்லைன் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில்  தாமதம் DIN DIN Thursday, May 9, 2019 09:40 AM +0530 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலம் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமாகும்  நிலை ஏற்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள், உயர் கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு கையால் எழுதி பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டிசி)
வழங்கப்பட்டு வந்தது.  இதையடுத்து மே மாதம் முதல் ஆன்லைன் டிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெற பள்ளிகளுக்கான 11 இலக்க யூடிஎஸ்
எண்களைப் பதிவு செய்தால் பள்ளியின் இணையதளம் திறக்கும். அதில் மாணவரின் எமிஸ் எண்ணைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் முழுவிவரம் பெறலாம். 
இதில் ஒரு நகல் மாணவருக்கும், மற்றொன்று பள்ளியிலும் பாதுகாக்கப்படும். ஒருமுறை ஆன்லைனில் அதனை பதவிறக்கம் செய்தால் அந்த மாணவரின்
விவரங்கள் மீண்டும் துறையின் பொது சர்வருக்கு சென்று விடும். அதன்பின் மாணவர் விவரத்தை மீண்டும் பெறுவதிலும் அல்லது அரசின் சலுகை பெற்றதை
பதிவு செய்யவும் இயலாது. அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாது. 
   இணையதள வேகம் குறைவாக இருப்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  ஒரே நாளில் பலருக்கு
மாற்றுச் சான்றிதழ் வழங்க இயலாத நிலை உள்ளதாக பள்ளிகள் புகார் தெரிவித்தன. இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை சரிசெய்து  புது மென்பொருளை உருவாக்கி மே 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் மாற்றுச் சான்றிதழ் துரிதமாக வழங்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

]]>
https://www.dinamani.com/education/2019/may/09/தொழில்நுட்பக்-கோளாறு-ஆன்லைன்-மாற்றுச்-சான்றிதழ்-வழங்குவதில்--தாமதம்-3148235.html
3148234 கல்வி பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு  தத்கலில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு DIN DIN Thursday, May 9, 2019 09:40 AM +0530 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில்  விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவிகள் தற்போது, சிறப்பு துணைத்தேர்வு எழுத தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பை  அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 
பிளஸ் 1,  பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக, ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதிவரை விண்ணப்பிக்க தவறியவர்கள்  தத்கல் என்னும் சிறப்பு அனுமதித்  திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15  மற்றும் 16 ஆகிய
தேதிகளில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவில்லை. அதனால் அவர்கள் மீண்டும் ஒரு
வாய்ப்பு கேட்டதன் பேரில், தற்போது  தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தந்த மாவட்டத்தில்
உள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு வியாழக்கிழமை,  வெள்ளிக்கிழமை ( மே 9 , 10 ) நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும். 
பிளஸ் 1 வகுப்பில்...: அதேபோல, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1  தேர்வில் அரியர்ஸ் வைத்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த
மாணவர்கள் மே 3  முதல் 8-ஆம் தேதி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் மூலம்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தேதிகளில்
விண்ணப்பிக்க தவறியவர்களும் தத்கல் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் 13  மற்றும் 14 ஆகிய தேதிகளில்
தங்கள் விண்ணப்பத்தைப் பதிவு  செய்து கொள்ளலாம்.
 

]]>
https://www.dinamani.com/education/2019/may/09/பிளஸ்-1-பிளஸ்-2-சிறப்பு-துணைத்-தேர்வுக்கு--தத்கலில்-விண்ணப்பிக்க-மீண்டும்-வாய்ப்பு-3148234.html
3148233 கல்வி ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி DIN DIN Thursday, May 9, 2019 09:39 AM +0530 ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.- அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (மே 9) முடிவடைகிறது. இந்தத் தேர்வை ரூர்கி ஐஐடி நடத்துகிறது.
மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. (மெயின்) முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக
நடத்தப்படும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில்
சேர்க்கை பெற ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெற வேண்டும்.
இதில் 2019 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜனவரியிலும், ஏப்ரல் மாதத்திலும் இரண்டு
முறை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதன்மைத் தேர்வு: இதைத் தொடர்ந்து, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது, ரூர்கி ஐஐடி சார்பாக வரும் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. கணினி வழியில்
நடத்தப்படும் இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் தாள் காலை 9 முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் 5
மணி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மே 9 கடைசி நாளாகும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்களில் முதல் 2.45 லட்சம் பேர் மட்டுமே, இந்த முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் விவரங்களுக்கு www.jeeadv.ac.in  என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/education/2019/may/09/ஜேஇஇ-முதன்மைத்-தேர்வு-விண்ணப்பிக்க-இன்று-கடைசி-3148233.html
3130636 கல்வி நீட் தேர்வு: ஏப்.15 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்! DIN DIN Wednesday, April 10, 2019 11:23 AM +0530 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வரும் 15-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

அதன்படி, நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 15-ஆம் தேதி முதல் www.nta.ac.in, www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/NEET_exam.jpg https://www.dinamani.com/education/2019/apr/10/நீட்-தேர்வு-ஏப்15-முதல்-ஹால்-டிக்கெட்-பதிவிறக்கம்-செய்துகொள்ளலாம்-3130636.html
3122109 கல்வி போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை: மதிப்பெண் முறைகேடுகளை தடுக்க திட்டம் DIN DIN Thursday, March 28, 2019 04:15 AM +0530
 மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிதாக போட்டித் தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
இதையடுத்து விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்படவுள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:   பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்த  எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள். 
எனவே சூழலைப் பொருத்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,டெட் தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ஓஎம்ஆர் ஷீட் முறையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என்றனர்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/exam.jpg https://www.dinamani.com/education/2019/mar/28/போட்டித்-தேர்வுகளை-ஆன்லைனில்-நடத்த-ஆசிரியர்-தேர்வு-வாரியம்-நடவடிக்கை-மதிப்பெண்-முறைகேடுகளை-தடுக்க-த-3122109.html
3119076 கல்வி பிளஸ் 1 பொதுத் தேர்வு நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவு DIN DIN Saturday, March 23, 2019 02:29 AM +0530
 தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 தமிழகம்,  புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 6-ஆம் தேதி தொடங்கியது.  இந்தத் தேர்வை  7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,618 மாணவ - மாணவியர் மற்றும்  தனித் தேர்வர்கள் 5, 032 பேர் என மொத்தமாக 8,21, 650 பேர் எழுதினர். 
பொதுத் தேர்வின் இறுதித் தேர்வாக கணினி அறிவியல்,  கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்தத் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
 இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத் திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெற்றது.  இதனால் மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  அத்துடன், இந்த ஆண்டு தேர்வில்,  கணிதம்,  விலங்கியல்,  வணிகவியல் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் சற்று கடினமாகவே இருந்தன.  
வேதியியல்,  உயிரியல் போன்ற பாடங்களில் நீட்,  ஜே.இ.இ. தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்று வினாக்கள் அமைந்திருந்தன.  இதனால் மேற்கண்ட பாடங்களில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை  மிக குறைவாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாள்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.  இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 8-இல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
https://www.dinamani.com/education/2019/mar/23/பிளஸ்-1-பொதுத்-தேர்வு-நிறைவு-மே-8-இல்-தேர்வு-முடிவு-3119076.html
3118221 கல்வி முதுநிலை மருத்துவப் படிப்புகள்: 11,650 விண்ணப்பங்கள் DIN DIN Friday, March 22, 2019 01:27 AM +0530
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் 11,650 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 11-ஆம் தேதி தொடங்கி  20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஆவணங்களுடன் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, 11,650 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. இந்த நிலையில், மாநிலத்துக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரியம், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள்  1,758-ஆக அதிகரித்துள்ளது.
 

]]>
https://www.dinamani.com/education/2019/mar/22/முதுநிலை-மருத்துவப்-படிப்புகள்-11650-விண்ணப்பங்கள்-3118221.html
3117035 கல்வி முதுநிலை மருத்துவப் படிப்புகள் ஏப்.1 முதல் கலந்தாய்வு DIN DIN Wednesday, March 20, 2019 01:58 AM +0530
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முன்னதாக, அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
இதுதொடர்பான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும். அதன்படி ஏப்.1-ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஏப்.5-ஆம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள்  1,758-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

]]>
https://www.dinamani.com/education/2019/mar/20/முதுநிலை-மருத்துவப்-படிப்புகள்-ஏப்1-முதல்-கலந்தாய்வு-3117035.html
3116511 கல்வி அரசு பள்ளிகளில் வாங்கப்பட்ட நாளிதழ்கள்: விற்பனை செய்ய  கல்வித்துறை அறிவுறுத்தல் DIN DIN Tuesday, March 19, 2019 02:51 AM +0530
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை, எடைக்கு விற்பனை செய்து, அத்தொகையை வரைவோலையாக ஒப்படைக்க வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் 2018-2019 -ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது அறிவு, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசு செலவில் தினமும்  நாளிதழ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட நாளிதழ்களை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பகுதியில் உள்ள கடைகளில்,  எடைக்கு விற்பனை செய்து, அத்தொகையை  வரைவோலையாக(டி.டி) மாற்றி, வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  ஒப்படைக்க வேண்டும். பள்ளிகள் அளிக்கும் வரைவோலைகளைப் பெறும் வட்டாரக்கல்வி அலுவலர்கள், அதை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த வரைவோலைகளை,  சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

]]>
https://www.dinamani.com/education/2019/mar/19/அரசு-பள்ளிகளில்-வாங்கப்பட்ட-நாளிதழ்கள்-விற்பனை-செய்ய--கல்வித்துறை-அறிவுறுத்தல்-3116511.html
3116510 கல்வி பல்கலை. தொலைதூரக் கல்வி:  தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு DIN DIN Tuesday, March 19, 2019 02:51 AM +0530
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன், முடிவுகள்  www.ideunom.ac.in   என்ற இணையதள முகவரியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன. மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.1,000 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு தலா ரூ.300 செலுத்த வேண்டும்.அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2019/mar/19/பல்கலை-தொலைதூரக்-கல்வி--தேர்வு-முடிவுகள்-இன்று-வெளியீடு-3116510.html
3112601 கல்வி முதுநிலை மருத்துவப் படிப்புகள்: இதுவரை 3,450 விண்ணப்பங்கள் DIN DIN Wednesday, March 13, 2019 04:37 AM +0530
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதுவரை இணையம் மூலம் 3,450 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தொடங்கியது. வரும் 20-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆவணங்களுடன் வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் (டிஎம்இ) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இதுவரை 3,450 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/education/2019/mar/13/முதுநிலை-மருத்துவப்-படிப்புகள்-இதுவரை-3450-விண்ணப்பங்கள்-3112601.html
3112505 கல்வி பிளஸ் 1 கணித வினாத்தாள் மிகவும் கடினம்: தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு DIN DIN Wednesday, March 13, 2019 01:17 AM +0530
பிளஸ் 1 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கணிதப் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.     
பிளஸ் 1 மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தின்கீழ், தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதப் பாடத்துக்கான தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது.
இதில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக பொதுத் தேர்வின் வினாத்தாள் இருந்ததாலும், வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டதாலும் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாள் வடிவமைப்பைக் கண்டு குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே காலாண்டு, அரையாண்டு வினாத்தாளின் மாதிரியில் பொதுத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்படுகின்றன.  ஆனால், கணிதத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி கூறியதாவது: காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுத் துறை வடிவமைக்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் வடிவமைத்தனர் என்றார்.
தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு: இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியை எம்.விஜயபானு கூறியதாவது: இந்தக் வினாத்தாளில் ஒன்று, இரண்டு, மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணிதப் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.  காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வராத கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை.  இதனால்,  100 மதிப்பெண்கள் பெறுவதும், தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/exam.jpg https://www.dinamani.com/education/2019/mar/13/பிளஸ்-1-கணித-வினாத்தாள்-மிகவும்-கடினம்-தேர்ச்சி-சதவீதம்-குறைய-வாய்ப்பு-3112505.html
3105443 கல்வி முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது: 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி வருகின்றனர்!  DIN DIN Friday, March 1, 2019 02:38 PM +0530 தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாணவர்கள் தேர்வை ஆர்முடன் எழுதி வருகின்றனர்.

கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள்,  தேர்வு முறை மாற்றத்தின்படி முதல்முறையாக மொத்தம் 600 மதிப்பெண்களுக்கான (ஒரு பாடத்துக்கு தலா 100 மதிப்பெண்)  தேர்வை எழுதி வருகின்றனர்.  அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, மார்ச்19-ஆம் தேதி முடிகிறது. 

இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,068 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவு வரும் ஏப்ரல் 19-இல் வெளியிடப்படவுள்ளது.

தேர்வின்போது துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்களைக் கொண்ட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக்.  பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் தேர்வாக மொழிப் பாடங்களுக்கானத் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் தேர்வு மையம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 600 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டதால் பாடச்சுமை கூடியிருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டு பக்கங்கள் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

துணை முதல்வர் ஆடியோவில் வாழ்த்து: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆடியோவில் வாழ்த்து தெரிவித்தார். அதில், சிறப்புடன் தேர்வினை எழுதுவதற்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து: பிளஸ் 2  பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எந்தவித பதற்றம் இன்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் மனஉளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத மைய அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்ற தகவல் பள்ளிக்கல்வித்துறையை அறிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை,  8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவர்கள் எழுதினர். ஆனால் நிகழாண்டில் 8 லட்சத்து16 ஆயிரத்து 618 மாணவர்கள் மட்டுமே எழுத உள்ளனர். இதனால், கடந்த ஆண்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 030 ஆக சரிந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434 மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு, 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர். வெறும் 673 மாணவர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர்

 2017 ஆம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 பேர் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்  நிகழாண்டில் 32 ஆயிரத்து155 பேர் குறைவாக எழுதுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவது பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அதிக பக்கங்களுடன்  புதிய பாடத்திட்டம் அமல்படுத்தி இருப்பது, மாணவர்களுக்கு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தி இருப்பதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். 

சந்தேகங்களுக்கு தீர்வு: தேர்வு காலங்களில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வை சந்திப்பதற்கும், அந்த நேரங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் 1ஆம் தேதி ‘14417’ என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இலவச தொலைபேசி எண் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டும் பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுகாண  ‘14417’ என்ற இலவச தொலைபேசி எண் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். 

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/18/w600X390/exam.jpg https://www.dinamani.com/education/2019/mar/01/முதல்முறையாக-100-மதிப்பெண்களுக்கானபிளஸ்-2-தேர்வுகள்-தொடங்கியது-8-லட்சத்துக்கும்-மேற்பட்டோர்-தேர்வை-3105443.html
3100321 கல்வி பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு DIN DIN Friday, February 22, 2019 01:29 AM +0530
 தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வெழுத சேவை மையங்களின் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்   வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல்  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  மார்ச் 2019 பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/education/2019/feb/22/பிளஸ்-1-தனித்தேர்வர்களுக்கு-இன்று-தேர்வுக்கூட-அனுமதிச்சீட்டு-3100321.html
3099832 கல்வி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு 2 மணி நேர பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்...! DIN DIN Thursday, February 21, 2019 02:54 AM +0530
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டு 2 மணி நேர பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டு பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.  இந்த வகுப்புகளுக்கு மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும்  தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. 
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும். 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 60 மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு  100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை. 
தேர்வு மையங்கள்:  இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்:  அனைத்து மாவட்டங்களிலும் 5,  8  ஆகிய வகுப்பு பொதுத் தேர்வுக்கு 20 மாணவர்களுக்கு  ஒரு தேர்வு மையம் அமைக்கப்படவேண்டும். அதற்கு குறைவாக உள்ள 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மிக அருகில்  உள்ள தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அதேபோல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் அருகில்  உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும்.அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டார அளவில் பெற்று , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து  தேர்வு மையங்களினை தேர்வு செய்யப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு... மாணவர்களுக்கு  தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், தேர்வு நேரம் 2 மணி என்ற அளவிலும் நடைபெறும். வினாக்கள் 3ஆம் பருவத்திற்கான பாடத் திட்டத்திலிருந்தும், முதல் மற்றும் 2ஆம் பருவத்திற்கான பாடத்திட்டத்திலிருந்து பொதுவான வினாக்களும் கேட்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் ரூ. 50,  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் என  கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/11/11/2/w600X390/exam.jpg https://www.dinamani.com/education/2019/feb/21/5-8-ஆம்-வகுப்புகளுக்கு-2-மணி-நேர-பொதுத்தேர்வு-பள்ளிக்-கல்வித்துறை-திட்டம்-3099832.html
3095968 கல்வி அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு DIN DIN Friday, February 15, 2019 04:17 AM +0530
அண்ணா பல்கலைக்கழக முதல் பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான இந்த முதல் பருவத் தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/education/2019/feb/15/அண்ணா-பல்கலை-முதல்-பருவத்-தேர்வு-முடிவுகள்-வெளியீடு-3095968.html
3088105 கல்வி மிஷன் TISSNET: TISSNET தேர்வுக்கு தயாராகும் முறைகள் DIN DIN Monday, February 4, 2019 02:46 PM +0530  

டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் (TISS) அதன் முதுகலைப் படிப்புகள் மற்றும் பிற MBA திட்டத்திற்கு சமமானதாக இருக்கும் நிலையில், பெரும் புகழைப் பெற்றுள்ளது. TISS கல்லூரியில் நுழைவதற்காக நடத்தப்படும் TISSNET 2019 தேர்வானது இவ்வாண்டு ஜனவரி 13, 2019 அன்று நடைபெற்றது. பரீட்சை முறை மற்றும் கேள்வியின் இயல்புகளில் சில மாற்றங்கள் காணப்பட்டன.

பொது அறிவு மிகவும் கடினமானதாகக் கூறப்பட்டது, தர்கரீதியாக லொஜிக்கல் ரீசனிங்(LR) மற்றும் ஆங்கிலப் பண்பாட்டுப் பிரிவானது கடந்த ஆண்டுகளை போலவே இருந்தன, கேள்விகள் சிறு மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தன. தேசிய நுழைவுத் தேர்வு TISSNET தொடர்ச்சியாக தனிப்பட்ட நேர்காணல் (PI) / குழு கலந்துரையாடல் (GD) சுற்றுகள் நடைபெறும்.

TISSNET தேர்வு முறை 100 நிமிடங்கள் மற்றும் 100 கேள்விகளைக் கொண்டுள்ளது.இந்த பரீட்சையில் எதிர்மறை குறிப்புகள் இல்லை, தற்போதைய நிகழ்வுகளின் ஆதிக்கம் கொண்டுள்ளது. இந்த மதிப்புமிக்க கல்லூரியில் இடத்தைப் பெற விரும்பினால் தினசரி நிகழ்வுகள் பற்றிய ஆழ்ந்த புரிதல் மிக அவசியம். 

TISSNET தேர்வானது மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது: ஆங்கிலம், பொது அறிவு மற்றும் லொஜிக்கல் ரீசனிங். இது கருத்துகள், உலக விவகாரங்கள் மற்றும் தர்க்கரீதியான திறமை ஆகியவற்றின் கலவையாகும் என்பதால் இயற்கையில் இது தனித்துவமானது.

கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை கருத்தாய்வு சார்ந்தவைமற்றும் ஒரு சிக்கல் தீர்க்கும் குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.லொஜிக்கல் ரீசனிங் மற்றும் ஆங்கிலம் தீவிர பயிற்சி தேவைப்படும் பாடங்கள். பொது அறிவு நிலையான மற்றும் தற்போதைய விவகாரங்கள் பற்றிய தீவிர புரிதல் பெற்றிருப்பது மிகவும் அவசியம். 

ஜி.கே., எல்.ஆர், ஆங்கிலம் தயாரிப்பு முறைகள்

தற்போதைய விவகாரங்கள், வரலாறு, புவியியல், சமூகவியல், பொருளாதார கொள்கைகள் மற்றும் கணிசமான அரசியல் நிகழ்வுகள் பற்றிய புரிதல் தேர்வாளருக்கு ஜி.கே பிரிவை கையாள போதுமானவை. தேர்வாளர் பத்திரிகைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், மிகவும் எளிதாக இந்த பிரிவில் சிறந்த மதிப்பெண் பெற முடியும். 6-10 வகுப்புக்கான NCERT புத்தகங்களை படிப்பதன் மூலம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலும்

கணிதம் பிரிவில் நல்ல மதிப்பெண்கள் பெற, தேர்வாளர்கள் அரித்மெடிக் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா, மற்றும் மாடர்ன் மேத் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.நேரம், வேகம் மற்றும் தூரம், விகிதம் மற்றும் விகிதாச்சாரம், எண் கோட்பாடு மற்றும் சமன்பாடுகள் இத்தேர்வில் காணப்படும் கேள்விகள் ஆகும்.

ஆங்கிலப் பிரிவில் ஆர்.சி (Reading Comprehension) என்பது இப்பிரிவின் சிறப்பம்சமாகும். வார்த்தை ஒப்புமை, ஒத்திகைகள், எதிர்ச்சொற்கள், சொல்லகராதி ஆகியவை இப்பிரிவில் உள்ள மற்றவை ஆகும்.

ஆன்லைன் பயிற்சி மூலம் TISSNET தேர்வில் தேர்ச்சிபெறலாம்

மேற்கண்ட குறிப்புகளை தவிர கூடுதல் வழிகாட்டல் தேவைப்பட்டால் நீங்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம், TISSNET Online Coaching நிறுவனங்கள் மலிவு, நல்ல விரிவுரைகள், போதிய ஆய்வுப் பொருட்கள், மற்றும் உங்கள் நேரத்தையும் சக்தியையும் சிறப்பாக கையாள உதவும். உயர் தரமான விரிவுரைகள், துணை ஆசிரியர்கள், சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள், பயிற்சி தேர்வுகள் ஆகியவற்றை வழங்கும் ஒரு நல்ல ஆன்லைன் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய கற்றல் தளமான CareerAnna, TISSNET க்கான ஆன்லைன் பயிற்சி வழங்குகிறது. TISSNET 2020 Coaching இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TISS இல் நீங்கள் தேர்ச்சி பெரும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு உதவ தனிப்பட்ட வழிகாட்டல், சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள், மோக் மற்றும் பயிற்சி தேர்வுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் அடைவதற்கு Career Anna கல்வி கற்கும் முறையை புரட்சிகரமாக்கி உள்ளது. இதன் மூலம் Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் உள்ள மாணவர்கள் கற்று, வளரவும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இயலும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/19/w600X390/examsuccess.jpg https://www.dinamani.com/education/2019/feb/02/மிஷன்-tissnet-tissnet-தேர்வுக்கு-தயாராகும்-முறைகள்-3088105.html
3083572 கல்வி CAT 2019 தேர்வுக்கு ஆன்லைனில் தயாராவது எப்படி? DIN DIN Wednesday, January 30, 2019 05:57 PM +0530  

CAT பரீட்சை தற்போது அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கிடையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வளர்ந்து வரும் மேலாண்மை தொழில் பற்றி கனவுகாணும் மாணவர்கள் இடையில் இத்தேர்வு கடும் போட்டி மற்றும் சிறந்த பயிற்சி தேவையை காண்கிறது. CAT 2018 இல் 2.40 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். மாணவிகளின் விகிதம் கணிசமான அளவு அதிகரித்திருந்தது.

CAT ஒரு கணினி சார்ந்த தேர்வாகும். CAT தேர்வானது ஐ.ஐ.எம்களில் எம்.பி.ஏ. விற்கான நுழைவு தேர்வாக நடத்தப்படுகிறது.  CAT பரீட்சைக்கான தகுதி அளவுகோல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்கவேண்டும். CAT 2019 பதிவுகள் ஆகஸ்ட் 2019 முதல் வாரத்தில் தொடங்கும். மேலும் CAT 2019 பதிவுகள் 45 நாட்கள் வரை திறந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுழற்சியின் அடிப்படையில் பல்வேறு ஐ.ஐ.எம்.கள் இத்தேர்வை நடத்தும்.

CAT 2019 தேர்விற்கு தயார் செய்வதற்கு, CAT தேர்வு முறை, பாடத்திட்டம், குறிக்கோள் திட்டம் மற்றும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வளங்கள் / கருவிகள் பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

இருப்பினும், CAT 2019 Online Coaching பாரம்பரிய வழிமுறையில் தயாரிப்பதை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. எவ்வாறாயினும், இந்த எங்கும் நிறைந்த டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் மிகப்பெரிய குவியலைக் கழிக்க விரும்புவதோடு ஆன்லைனில் ஆய்வுப் பொருட்களைப் பார்க்கவும் பயன்படுத்தவும் விரும்புகிறார்கள். நீங்கள் ஒரே கிளிக்கில் அனைத்து ஆன்லைன் வளங்களை இலவசமாக வைத்திருக்கும் போது ஏன் புத்தகங்களைக் தேடி சந்தைகளுக்குச் செல்கிறீர்கள்!

பல ஆன்லைன் பயிற்சி மையங்கள் சிறந்த வளங்கள் மற்றும் தயாரிப்புக்கான ஆசிரியர்களை வழங்குகிறது. CAT தேர்விற்கான சில சிறந்த பயிற்சி மையங்கள் T.I.M.E, Career Launcher, Career Anna, Byju’s ஆகியவை.

CareerAnna ஆன்லைன் CAT பயிற்சி, மோக் டெஸ்ட் தொடர் (Mock Test), விரிவான ஆய்வு திட்டம், போன்ற பல பயிற்சிகள் வழங்குகிறது. இது எழுத்து மற்றும் வீடியோ வடிவங்களில், ஆய்வு வளங்கள்/பொருட்களை வழங்குகிறது. CAT 2018ல் நீங்கள் சரியாகச் செயல்பட முடியாவிட்டால், நீங்கள் CAT 2019 இல் உங்கள் கனவை உணர உதவுவதற்கு, Career Anna உங்களுக்கு முழு வழிகாட்டலை அளிக்கும்.

CAT 2019 தயாரிக்க நீங்கள் ஏன் ஆன்லைன் பயிற்சி பெற வேண்டும்?

கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், ஆன்லைன் கல்விக்கான ஏற்றம் சமீபத்தில் மிகப் பெரியதாக வளர்ந்துள்ளது. CAT தயாரிப்பு முறையிலான ஆய்வில் 26% மாணவர்கள் ஆன்லைனில் பயிற்சி மேற்கொள்வதை விரும்புகின்றனர், ஆனால் ஒரு முக்கிய பங்கு இன்னமும் பாரம்பரியக் கற்றல் முறையை விரும்புகிறது.

நீங்கள் CAT 2019 ஆன்லைனில் ஏன் தயாரிக்க வேண்டும்?

1.    வகுப்புகளில் நெகிழ்வுத்தன்மையின் நன்மையைப் பெறுவீர்கள் மற்றும் உங்கள் வசதிக்கு ஏற்ப வகுப்பை திட்டமிடலாம், பாரம்பரிய வகுப்புகளைப் போலன்றி, உங்கள் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் வகுப்பை திட்டமிட்டு மேற்கொள்ளலாம்.
2.    இது ஆஃப்லைன் பயிற்சிக்கு ஒப்பிடும்போது, செலவு குறைந்தது. பிந்தையவர்கள் பயண செலவுகள், தங்கும் வசதி உள்ளிட்ட அதிக செலவுகளை மேற்கொள்ள நேரிடும்.
3.    மேம்படுத்தப்பட்ட ஆய்வு பொருள் ஆன்லைனில் பெற முடியும், ஓய்வு நேரத்தில் அதை படிக்க பதிவிறக்கமும் செய்ய முடியும். ஆஃப்லைன் வளங்களை மேம்படுத்த நிறைய நேரம் தேவைப்படுகிறது, அதே சமயம் ஆன்லைன் வளங்கள் உடனடியாக புதுப்பிக்கப்படும். 
4.    ஆஃப்லைன் வகுப்புகளை, ஆன்லைன் வகுப்புகளைப் போலன்றி, மீண்டும் மேற்கொள்ளமுடியாது, ஆன்லைனில் உங்கள் பதிவு வகுப்புகளை நீங்கள் விரும்பும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றும் மீளாய்வு செய்யலாம். இது ஆன்லைன் வகுப்பின் ஒரு சிறப்பம்சமாகும். 
CAT 2019 ஐ தயாரிப்பதற்கான ஆன்லைன் பயிற்சியை எவ்வாறு தேர்வு செய்வது?

1.    பயிற்சி மையத்தை புரிந்து கொள்ள முதலில் ஒரு டெமோ வர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள், பயிற்சி மையம் நல்ல விரிவுரைகளை வழங்குவதன் மூலம், உங்களின் அனைத்து கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலமும், உயர்ந்த படிப்புத் தகவலை போதுமான விகிதாச்சாரத்தில் அளிக்குமாறு அமையவேண்டும். 
2.    பயிற்சி மையங்கள் முழுநேர மோக் டெஸ்டுகளை சரியான நேரத்தில் வழங்குகிறதா என்று சரிபார்க்கவும். மேலும் சோதனைகள் CAT 2019 பரீட்சை முறைப்படி உள்ளதா என்றும் சரிபார்க்கவும்.
3.    மேற்கூறப்பட்ட காரணிகளோடு, தொகுப்பு அளவு, சந்தேகம் தெளிவு செய்யும் வகுப்புகள், பாடத்திட்டங்கள், ஆதரவளிக்கும் ஆசிரியர்களின் கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களையும் நீங்கள் சேகரிக்க வேண்டும். 
CAT 2019 மிகவும் மதிப்பு வாய்ந்த நுழைவு தேர்வுகளில் ஒன்றாகும். உங்கள் கனவு பள்ளியை நோக்கி செல்ல வழி வகுக்கிறது. இருப்பினும், CAT பரீட்சைக்கு 'எந்த வேதனையோ, ஆதாயமோ இல்லை' என்று சொல்வது போல, ஒருவர் தங்கள் நேரத்தை மற்றும் பயனுள்ள வளங்களை சரியாக பயன்படுத்துவதோடு, அவர்களது குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். நேரத்தையும் பணத்தையும் சரியான ஆன்லைன் பயிற்சியில் முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/computer.jpg https://www.dinamani.com/education/2019/jan/26/cat-2019-தேர்வுக்கு-ஆன்லைனில்-தயாராவது-எப்படி-3083572.html
3050375 கல்வி இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்த IIFT 2018 எம்பிஏ நுழைவுத் தேர்வு DIN DIN Sunday, December 2, 2018 12:08 PM +0530  

தேர்வுப் பருவம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் CAT 2018 மற்றும் IIFT ஆகியவற்றால் நிகழப்போவது! இந்த தேர்வு பற்றிக் கூறும் மாணவர்கள், இப்போது IIFT 2018 இன் பகுப்பாய்வைக் கவனிப்பதால், அதன் மீதான பரபரப்பு அதிகரிக்கும் என்றனர். எனவே இதன்மூலம் அவர்கள் தங்கள் சொந்த செயல்திறனை மதிப்பீடு மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை மதிப்பீடு செய்யலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் டிரேட் (IIFT) IIFT எம்பிஏ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 2, 2018) இந்தியா முழுவதும் 20 மையங்களில் நடந்தது. அவை தில்லி, அகமதாபாத், பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றன. தில்லி, கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய மையங்களில் இணைவதற்கான எம்பிஏ (ஐபி) 2019-21 பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இது, நாட்டின் முன்னணி எம்பிஏ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

பிற ஆன்லைன் எம்.பி.ஏ. தேர்வுகள் போலன்றி, எழுத்து அடிப்படையிலான (ஆஃப்லைன்) முறையில் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் IIFT தேர்வுக்கு 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பெருமைக்குரிய கல்வி மையத்தில் சேர்ந்து வருகின்றனர். கடுமையான செயல்முறை தேர்வு மற்றும் சிறந்த தேர்ச்சி பெற்ற பின்னர் தான் மாணவர்கள் இங்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

2018 தேர்வின் கடின நிலை, எதிர்பார்த்த பிரிவு-வாரியான மற்றும் ஒட்டுமொத்த கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சதவிகிதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு உதவக்கூடிய IIFT 2018 பகுப்பாய்வை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Click here to Read In-Depth Analysis of IIFT 2018 Exam

IIFT 2018  தேர்வு முறை

OMR தாள்களில் பென்சிலைப் பயன்படுத்தி பதில்களைத் குறிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். IIFT எந்தவொரு கால அளவிலும் அனைத்து பிரிவுகளிலும் வித்தியாசமான தேர்வுத் திட்டத்தை பின்பற்றுகிறது. IIFT 2018 இன் தனிப்பட்ட பிரிவுகளை நிறைவு செய்வதற்கான மொத்த நேரம் சுமார் 30-45 நிமிடங்களாக இருக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் சுமார் 8-10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IIFT 2018: கட்-ஆஃப் தேவை

IIFT 2018 க்கான கட்-ஆஃப் மதிப்பெண்களானது, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கட்-ஆஃப் மதிப்பெண்கள், தேர்வின் கடின நிலை, சோதனைத் தேர்வுகளின் எண்ணிக்கையும், ஒழுங்குபடுத்தும் அமைப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது.

IIFT தேர்வு முறைக்கு ஒரு மாற்றத்தைச் சந்தித்ததில் இருந்து கேள்விகள் மற்றும் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது, மேலும் கேள்விகளின் வகை தவிர, IIFT 2018 வித்தியாசமான மற்றும் கடினமாக கேள்விகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முறை நான்கு பிரிவுகளுக்கு பதிலாக ஆறு பிரிவுகள் இருந்தன. VARC தனியாக சோதிக்கப்பட்டு மற்றும் மிகவும் கடினமானதாக மதிப்பிடப்பட்டது. ஆங்கில இலக்கணம், சொற்களஞ்சியம், சொற்றொடர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. தர்க்கரீதியான மற்றும் தரவு ரீதியான பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு  DI கேள்விகள் மற்றும் LR கேள்விகளுக்கு ஈடுசெய்ய இயலாத விதம் அமைக்கப்பட்டிருந்தது. பொது அறிவுப் பகுதியும் கடினமாக அமைக்கப்பட்டிருந்து.

IIFT 2018 தேர்வு: ஒட்டுமொத்த பகுப்பாய்வு

1. கேள்விகளின் மொத்த எண்ணிக்கை 114 ஆக குறைக்கப்பட்டது.
2. IIFT 2018 தேர்வு ஆறு பிரிவுகள் பிரிக்கப்பட்டது. உதாரணம்: பொது விழிப்புணர்வு, வினைச்சொல் திறன், வாசிப்பின் புரிதல், அளவு திறன் மற்றும் தர்க்கரீதியான நியாயப்படுத்தல் மற்றும் தரவு விளக்கம்.
3. 120 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது, அதில், பேச்சுத்திறன் பிரிவு கடினமாக அமைந்தது. பெரும்பாலான தேர்வாளர்கள் 30 முதல் 40 சதவீதம் கேள்விகளைத் தாண்டி பதிலளிக்கவில்லை.
4. பொது அறிவுக் கேள்விகளை எளிதாக எதிர்கொள்வதில் பெரும்பாலான தேர்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
5. கடந்த 2017-ஆம் ஆண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இம்முறை அதிக சதவீதத்தை எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/2/w600X390/iift_2018.jpg https://www.dinamani.com/education/2018/dec/02/இந்தியா-முழுவதும்-20-மையங்களில்-நடந்த-iift-2018-எம்பிஏ-நுழைவுத்-தேர்வு-3050375.html
3047778 கல்வி பிளஸ் 2 துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு DIN DIN Thursday, November 29, 2018 03:29 AM +0530
தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. 
இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (நவ. 29) பிற்பகல் முதல் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/education/2018/nov/29/பிளஸ்-2-துணைத்-தேர்வு-மறுகூட்டல்-முடிவுகள்-இன்று-வெளியீடு-3047778.html
3047777 கல்வி குரூப்-1 தேர்வு: டிச.1-இல் கருத்தரங்கம் DIN DIN Thursday, November 29, 2018 03:28 AM +0530
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் குரூப்-1 தேர்வு குறித்த இலவச கருத்தரங்கம் சனிக்கிழமை (டிச.1) நடைபெற உள்ளது. 
இதுகுறித்து பெரியார் ஐஏஎஸ் அகாதெமி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. மேலும், குரூப் 1, குரூப் 2 தேர்வு குறித்த இலவசக் கருத்தரங்கம் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் சனிக்கிழமை (டிச.1) நடைபெற உள்ளது.
இதில், துறைசார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு தேர்வு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்க உள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 044-2661 8056, 90928 81663 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

]]>
https://www.dinamani.com/education/2018/nov/29/குரூப்-1-தேர்வு-டிச1-இல்-கருத்தரங்கம்-3047777.html
3046952 கல்வி துபையில் தினமணி நடத்தும் இந்தியன் எஜுகேஷன் ஃபேர் - 2018 DIN DIN Wednesday, November 28, 2018 11:05 AM +0530  

பெற்றோர்களின் கவனத்திற்கு : டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காரணம் துபையில் உள்ள  Grand Excelsior Hotel-லில்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் பங்குபெற அனுமதி இலவசம். வாகனங்களை நிறுத்தி வைக்கவும் போதிய வசதிகள் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின் விபரங்கள் :

நிகழ்ச்சி : இந்தியன் எஜுகேஷன் ஃபேர் - 2018

தேதி : 7 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 8 (சனிக்கிழமை) டிசம்பர் 2018

இடம் : க்ராண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல், டியரா, துபய்

நேரம் : காலை 10 மணியிலிருந்து 6 மணி வரை

நிகழ்ச்சி நிரல் :

  • இந்தியாவின் தலைசிறந்த பள்ளிகள் / கல்லூரிகள் பங்கு கொள்கின்றன
  • தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, புவனேஷ்வரைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன
  • 100-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பற்றிய தகவல்கள்
  • ப்ரீ ப்ரைமரியிலிருந்து ஹையர் செகண்டரி வரை சர்வதேச பள்ளிகள் (ரெஸிடென்ஷியல் மற்றும் போர்டிங் பள்ளிகள்) பங்கேற்பு
  • BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான முழு தகவல்கள்   
  • ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் வாய்ப்புக்களைப் பற்றிய முழுத் தகவல்களைப் பெறலாம்
  • நினைவுத் திறனாய்வு : அதிக மதிப்பெண்கள் பெறவும், ஞாபகத் திறன் அதிகரிக்கச் செய்வதற்கும் ஜான் லூயி வழங்கும் Master Your Mind எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  ஜான் லூயி இத்துறையில் சர்வதேசப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சைக்கோமெட்ரிக் அஸெஸ்மெண்ட் டெஸ்ட் மற்றும் லட்சியப் பாதையை வகுத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய கலந்தாய்வு
  • பெற்றோர்கள் நிபுணர்களை சந்திக்கும் வாய்ப்பு 
]]>
Dubai, education fare, இந்தியன் எஜுகேஷன் ஃபேர், துபய் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/27/w600X390/aaa.jpg https://www.dinamani.com/education/2018/nov/27/indian-education-fair-2018-3046952.html
3032702 கல்வி நீட் தேர்வு நேரம் மாற்றம்: புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு DIN DIN Saturday, November 3, 2018 04:58 PM +0530
நீட் தேர்வுக்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. வரும் 30 கடைசி நாளாகும்.

இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை டிசம்பர் 1 இரவு 11:30 மணி வரை செலுத்தலாம். 

இந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்: ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். 'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம். ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.  

தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். 

பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் டூ முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதி இல்லை. 

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும். பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/14/w600X390/neet.jpg https://www.dinamani.com/education/2018/nov/03/நீட்-தேர்வு-நேரம்-மாற்றம்-புதிய-கட்டுப்பாடுகளும்-அறிவிப்பு-3032702.html
3032697 கல்வி நாளை தேசிய திறனாய்வு தேர்வு: 1.59 லட்சம் பேர் பங்கேற்பு DIN DIN Saturday, November 3, 2018 04:11 PM +0530
சென்னை: பத்தாம் வகுப்பு படித்து முடித்து மேனிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. தமிழகத்தில் இத்தேர்வினை 1 லட்சத்து 59,030 தேர்வர்கள் 505 மையங்களில் எழுதவுள்ளனர். 

அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ஒவ்வோராண்டும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை தங்கு தடையின்றிக் கல்வியைத் தொடர வசதியாக மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடக்கிறது. 

இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு முதல் கட்ட தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 9 முதல், 11 மணி வரை அறிவு திறன் தேர்வு (ஙஅப) நடக்கும். 11 முதல் 11.30 வரை இடைவேளை. அதன்பின், 11:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை கல்வி திறன் தேர்வு (நஅப) நடக்கும். மாணவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மையங்களில் இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக (காலை 8 மணிக்கு) தேர்வு மையங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/exam.jpg https://www.dinamani.com/education/2018/nov/03/நாளை-தேசிய-திறனாய்வு-தேர்வு-159-லட்சம்-பேர்-பங்கேற்பு-3032697.html
3031650 கல்வி நீட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.30 கடைசி DIN DIN Friday, November 2, 2018 02:06 AM +0530
இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.
https://ntaneet.nic.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கட்டணம்: இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது.
1.07 லட்சம் பேர்: கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/14/w600X390/neet.jpg https://www.dinamani.com/education/2018/nov/02/நீட்-தேர்வு-விண்ணப்பிக்க-நவ30-கடைசி-3031650.html
3026460 கல்வி பத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  DIN DIN Thursday, October 25, 2018 02:41 AM +0530
பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.25) வெளியிடப்படும் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 செப்டம்பர்- அக்டோபரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைப்பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மறுகூட்டல்: தேர்வுத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்டோபர் 26, 27 தேதிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இரண்டு தாள்கள் கொண்ட மொழிப் பாடத்துக்கு தலா ரூ. 305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுத்தாள் மறுகூட்டல் முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2018/oct/25/பத்தாம்-வகுப்பு-இன்று-முதல்-தற்காலிக-மதிப்பெண்-சான்றிதழ்-3026460.html
3023106 கல்வி அக்.25-இல் மாநிலக் கல்லூரியில் பேச்சுப் போட்டி DIN DIN Saturday, October 20, 2018 02:40 AM +0530
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுக்கான தகுதிச் சுற்று பேச்சுப் போட்டி வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கு மத்திய சென்னை அரிமா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- 
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டியை மத்திய சென்னை அரிமா சங்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் (அறை எண் எம்28) வரும் அக்டோபர் 25-ஆம் தேதி பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியில் இருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்று வர வேண்டும்; அவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம். போட்டி குறித்த தலைப்புகள், விதிமுறைகளை www.lionsclubofcentralmadras.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
போட்டியின் தகுதிச் சுற்று முடிவடைந்த பின்னர் இறுதி போட்டிக்கான நாள், நேரம் இடம் ஆகியவை அறிவிக்கப்படும். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என ரொக்கப் பரிசு வழங்கப்படும். கல்லூரிகளுக்கு பதக்கங்களும் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2018/oct/20/அக்25-இல்-மாநிலக்-கல்லூரியில்-பேச்சுப்-போட்டி-3023106.html
2999062 கல்வி நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் அல்ல: தேசியத் தேர்வு முகமை DIN DIN Thursday, September 13, 2018 01:26 AM +0530
நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் அல்ல என தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு முதல் நெட், ஜே.இ.இ. நீட் போன்ற தேசிய அளவிலான ஜ்தேர்வுகளை நடத்த தனி அதிகாரம் கொண்ட என்.டி.ஏ. என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான நெட், ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகளுக்கான அறிவிப்பை அண்மையில் என்.டி.ஏ. வெளியிட்டது.
இதில், தேர்வுக்கான விண்ணப்பித்தில் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு ஒன்றை என்.டி.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: நெட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான அறிவிப்பில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது செல்லத்தக்க ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை எண் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு எண் போன்ற ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/education/2018/sep/13/நெட்-ஜேஇஇ-தேர்வுகளுக்கு-விண்ணப்பிக்க-ஆதார்-கட்டாயம்-அல்ல-தேசியத்-தேர்வு-முகமை-2999062.html
2998487 கல்வி கால்நடை மருத்துவப் படிப்பு: செப். 22-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு DIN DIN Wednesday, September 12, 2018 01:34 AM +0530 கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்.) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22 -ஆம் தேதி இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதேபோன்று பி.டெக். (இளநிலை கால்நடை தொழில்நுட்ப படிப்பு) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 23 -ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
அக். 3-இல் வகுப்புகள் தொடக்கம்: முதலாமாண்டு இளநிலை படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச்., பி.டெக்) வகுப்புகள் அக்டோபர் 3 -ஆம் தேதி தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2018/sep/12/கால்நடை-மருத்துவப்-படிப்பு-செப்-22-இல்-இரண்டாம்-கட்ட-கலந்தாய்வு-2998487.html
2820951 கல்வி அரையாண்டுத் தேர்வுகள் நாளை தொடக்கம் DIN DIN Wednesday, December 6, 2017 01:12 AM +0530 தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும், தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம்பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச. 7) அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 23 -ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. அதற்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்படும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/10th_exam.jpg https://www.dinamani.com/education/2017/dec/06/அரையாண்டுத்-தேர்வுகள்-நாளை-தொடக்கம்-2820951.html
2820173 கல்வி 300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க தடை: ஏ.ஐ.சி.டி.இ DIN DIN Monday, December 4, 2017 11:22 AM +0530 நாடு முழுவதும் உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 

கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேர்கை இல்லாமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்க்கையை உடனிடியாக நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை கண்காணித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விரும்பினால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகவோ, தொழில்பயிற்சி கல்லூரிகளாகவோ மாறிக்கொள்ளலாம் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளின் வங்கிக்கடன், முதலீட்டுத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஏ.ஐ.சி.டி.இ. விளக்கமளித்துள்ளது.

]]>
New Delhi, HRD ministry, 300 private engineering colleges, stop operations, 2018-19 academic sessions, All India Council for Technical Education (AICTE) https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/aicte.jpg https://www.dinamani.com/education/2017/dec/04/300-private-engineering-colleges-likely-to-be-asked-to-shut-operations-heres-why-2820173.html
2818723 கல்வி கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு DIN DIN Saturday, December 2, 2017 02:22 AM +0530 மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகளை கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெற்று வரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து, உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களை ஆன் -லைனில் பதிவு செய்ய வரும் 15 -ஆம் தேதி (டிச.15) கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெறலாம்.
 

]]>
https://www.dinamani.com/education/2017/dec/02/கல்வி-உதவித்தொகை-புதுப்பித்தல்-விண்ணப்பங்கள்-வரவேற்பு-2818723.html
2638920 கல்வி தமிழ்ப் பல்கலை. - மலேசிய பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் DIN DIN Friday, January 27, 2017 02:30 AM +0530 ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம் தொடர்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலேசியாவில் உள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், மலேசிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்தது:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம், இணையக் கல்வியைப் பரிமாறிக் கொள்ளுதல், இந்தியப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கி, அதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய
கண்காணிப்பாளர் சு. செந்தமிழ்ச்செல்வி, உதவியாளர்கள் நா. ராமகிருஷ்ணன், த. ராஜராஜன், அச்சுப்பொறி பேணுநர் மு. ஜான் பால்ராஜ் ஆகியோருக்கு துணைவேந்தர் ரூ. 2,000 ரொக்கமும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார். மேலும் 10 நூல்களும் வெளியிடப்பட்டன.
சுவாமி ஓங்காரனந்தா, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவிச்சந்திரன், இங்கிலாந்து லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் ஜெயராஜ், பிரான்ஸ் தமிழறிஞர் சாம் விஜய், தஞ்சாவூர் நேஷனல் பார்மா மருத்துவமனை நிறுவனர் எல். கமால்பாட்சா, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் எஸ். பிரதீபா, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் ஆகியோருக்கு குடியரசு நாள் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் கராத்தே பயன்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய அளவில் சிறந்த பேராசிரியருக்கான விருது பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச. சிவசுப்பிரமணியம் கெளரவிக்கப்பட்டார்.
விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
https://www.dinamani.com/education/2017/jan/27/தமிழ்ப்-பல்கலை---மலேசிய-பல்கலை-புரிந்துணர்வு-ஒப்பந்தம்-2638920.html
2638919 கல்வி பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேடு கூடாது: கல்வித் துறை அறிவுறுத்தல் DIN DIN Friday, January 27, 2017 02:30 AM +0530 பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் முறைகேட்டுக்கு இடமின்றி வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி, 31ஆம் தேதி நிறைவடைகிறது. இதில், தியரி என்ற கருத்தியல் தேர்வுடன், அறிவியல் சார்ந்த செய்முறைத் தேர்வும் நடத்தப்படும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், மனை அறிவியல், இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளி ஆய்வகங்களில் தொடங்குகிறது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி பிறப்பித்த உத்தரவு:
செய்முறைத் தேர்வின்போது, வேறு பள்ளி கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். செய்முறை உபகரணங்களை மாணவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான ரெக்கார்ட் புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று மதிப்பெண் வழங்க வேண்டும். முறைகேட்டுக்கு இடமின்றி வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும்.
தேர்வில் எந்த மாணவருக்கும் முறைகேடாக கூடுதலாகவோ, குறைத்தோ மதிப்பெண் வழங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

]]>
https://www.dinamani.com/education/2017/jan/27/பிளஸ்-2-செய்முறைத்-தேர்வில்-முறைகேடு-கூடாது-கல்வித்-துறை-அறிவுறுத்தல்-2638919.html
2638127 கல்வி பட்டப்படிப்பு படித்துவிட்டு... அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா நீங்கள்? - இரா. மகாதேவன் DIN Wednesday, January 25, 2017 10:23 AM +0530 பட்டப்படிப்பு படித்துவிட்டீர்கள். அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா? நிறைய வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புதான் chartered
wealth manager- R Programme (CWM-R).

இந்தப் படிப்பு படித்தவர்கள் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்களாக பணிபுரியலாம். சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்கள் எங்கே தேவைப்படுகிறார்கள்?
நம் நாட்டில் கடந்த ஆண்டு வரை தோராயமாக 2.36 லட்சம் கோடீஸ்வரர்களும் (High Networth Individuals-HNI), 1.46 லட்சம் பெருங்கோடீஸ்வரர்களும் (Ultra HNI) உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் 2025-இல் சுமார் 6 லட்சத்தைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களைப் போன்ற பலருக்கும் பணம், நிலம், தொழிற்சாலைகள், எஸ்டேட்ஸ், வங்கிக் கணக்கு, வணிகம் போன்ற செல்வங்களை நிர்வகிப்பதற்கான ஆலோசனை வழங்க சார்டர்டர்ட் வெல்த் மேனேஜர்(CWM-R) தேவைப்படுகின்றனர். ஆனால், இன்றைய நிலையில், நிதி திட்டமிடுதலில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் தேவை என்ற நிலையில், இப்போது சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. மேலும், நிதி ஆலோசகர், நிதி திட்டமிடுநர்களைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்டவர்களாகக் கருதப்படும் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்களுக்கு கோடீஸ்வர நிறுவனங்கள், வங்கி அமைப்புகளில் முன்னுரிமை அளித்து வேலை வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பை எப்படிப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் "தி அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட்' என்ற அமைப்பு நிதி சார்ந்த பயிற்சிகளை அளித்து தேர்வு நடத்தி வெற்றி பெறுவோருக்கு சர்வதேச தரச் சான்றிதழை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமாகக் கருதப்படுவது CWM-R    திட்டமாகும்.

அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட் (இந்தியா) அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி மையங்கள் மூலம் இந்தியாவின் பல நகரங்களில் இந்தத் திட்டத்தை அளிக்கிறது. அந்த மையங்கள் மூலம் அமெரிக்கன் அகாதெமியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பதிவுசெய்து கொண்டு பகுதிநேரமாக தொலைநிலைக் கல்வி, வகுப்பறைக் கல்வி, இணையவழிக் கல்வி மூலம் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறலாம்.

CWM திட்டத்தில் 2 நிலைத் தேர்வுகள் உள்ளன. முதல்நிலை என்பது ஃபவுன்டேசன் கோர்ஸ் என்றும், 2-ஆவது நிலை அட்வான்ஸ்டு வெல்த் மேனேஜ்மென்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 2 நிலைகளிலும் தேர்ச்சிபெற குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படலாம்.

இதற்கான அமெரிக்கன் அகாதெமியின் பதிவுக் கட்டணம் - சேவை வரியையும் சேர்த்து ரூ. 11,500. கோர்ஸ் கட்டணமாக ரூ. 6,900, தேர்வுக் கட்டணமாக 2 நிலைக்கும் சேர்த்து ரூ. 6,900, சான்றிதழ் கட்டணமாக சுமார் ரூ. 7000 செலுத்த வேண்டும். இவற்றை அகாதெமியின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி மையங்கள் மூலம் செலுத்தலாம். இதோடு, அந்த கல்வி மையத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பயிற்சி முறைக்கு ஏற்ப தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து தோராயமாக ரூ. 45-50 ஆயிரம் வரை தேவைப்படலாம்.

அகாதெமியில் பதிவு செய்த ஓராண்டுக்குள் தேர்வு எழுதாவிட்டால், மீண்டும் ரூ. 5750 செலுத்தி பதிவைப் புதுப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வை இந்தியாவில்  75 நகரங்களில் எழுதலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அவர்கள் பட்டப் படிப்பை முடித்த பிறகே இந்தத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தத் தேர்வை B.Com, BMS, BBI,BAF, BFM, M.Com  முடித்தவர்கள் சற்று எளிதாக எதிர்கொள்ளலாம். அதேநேரத்தில் நிதி தொடர்பான வேலைவாய்ப்பை விரும்பும் மற்ற பட்டதாரிகள், MBA, CA, CA Inter முடித்தவர்கள், வங்கி துறை, நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இந்தத் தேர்வை எழுதி சான்றிதழ் பெறலாம்.

CWM சான்றிதழ் என்பது உலக தரத்துக்கான சர்வதேச அளவில் மிக உயர்ந்த, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விருது ஆகும். இது உலகின் 150 நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது.

நம்மைப் பொருத்த அளவில், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் கீழ் (செபி) இயங்கும், தேசிய பங்குச் சந்தை கழகத்தின் முதலீட்டு ஆலோசகர் ஒழுங்கமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பில் சர்வதேச அளவில் உறுப்பினர்களாக உள்ள பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் CWM சான்றிதழ் பெற்றவர்களுக்கு தங்கள் நிறுவன வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. முன்னதாக, இந்தத் திட்டத்தில் சர்வதேச நிதி அமைப்புகள், அந்த நாடுகளின் வரிச் சட்டங்கள் குறித்து ஆழமான பயிற்சி பெறுவதால், நாம் சர்வதேச அளவில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜராகப் பணியாற்ற முடியும்.

இந்தச் சான்றிதழ் பெற்ற தொடக்கத்தில் என்ட்ரி லெவலில் உள்ளவர்கள் Executive Asst. Wealth Mgr. பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 3- 6 லட்சம், Intermediate level- இல் உள்ளவர்கள் Sr. Executive Wealth Mgr, Team Leader,  Unit Head, Branch Head பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 4- 8 லட்சம், ஙண்க்க்ப்ங் ப்ங்ஸ்ங்ப்- இல் உள்ளவர்கள் Cluster Zonal, Regional Head, AVPVP Private Banker பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 8-25 லட்சம், Senior level-இல் உள்ளவர்கள் Business Head, Channal Head, Product Head பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 25-50 லட்சம், Top level-இல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பிளஸ் 2 முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள், நிதி சார்ந்த பட்டம் பெற்றவர்கள், நிதித் துறையில் ஆர்வமுள்ள பிற பட்டதாரிகள் என அனைத்து இளைஞர்களும், இந்திய அரசு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தச் சான்றிதழைப் பெறுவதன் மூலம் பெரு நிறுவனங்கள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/25/w600X390/aafmi.jpg https://www.dinamani.com/education/2017/jan/25/பட்டப்படிப்பு-படித்துவிட்டு-அதற்கும்-மேலே-என்ன-படிப்பது-என்று-யோசிக்கிறீர்களா-நீங்கள்-2638127.html
2638124 கல்வி ஊக்குவித்தல்... வழிகாட்டுதல்... உதவிகள்! - எம்.அருண்குமார் DIN Wednesday, January 25, 2017 10:12 AM +0530 தனியார் தொழில் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சார்பாக துவக்கப்பட்ட குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA)ன அமைப்பு தனியார் தொழிற்துறையை ஊக்குவித்தும், அதற்கான உதவிகளையும் செய்து வருகிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry  (CII) இணைந்து குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA) என்ற  அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தனியார் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும் உதவிகளைச் செய்து வருகின்றது.

இந்த அமைப்பு பல்வேறு நாடுகளுடன் இணைந்து மானிய உதவிகளையும் வழங்குகிறது. கனடா, இங்கிலாந்து, தைவான், ஸ்பெயின், கொரியா, பின்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.  மேலும் பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களையும் நடத்துகின்றது.  

உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற, இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு: http:gita.org.in, http:tdb.gov.ingita இணைய தளங்களைப் பாருங்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/25/w600X390/edu.jpg https://www.dinamani.com/education/2017/jan/25/ஊக்குவித்தல்-வழிகாட்டுதல்-உதவிகள்-2638124.html
2638122 கல்வி உணவு பதப்படுத்துதலில் பட்ட மேற்படிப்பு! - எஸ்.பாலசுந்தரராஜ் DIN Wednesday, January 25, 2017 10:09 AM +0530 மனிதனின் முக்கிய தேவை உணவு.தற்போது பேக்கிங் செய்யப்பட்ட உணவு தயாரிப்புப் பொருள்கள், உணவுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தப் பொருள்களை எந்த மாதிரியாகப் பதப்படுத்தி பேக்கிங் செய்ய வேண்டும்? கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லித் தரும் படிப்புதான் முதுகலை உணவு பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற படிப்பு. விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் இந்த இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு உள்ளது.

இந்தப் பட்டப் படிப்பு குறித்து, அதைப் படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து அக்கல்லூரியின் முதல்வர் எஸ்.எம்.மீனாராணி, துறைத்தலைவர் சி.திலகம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"மத்திய உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின்  பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவியுடன் 2006 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியில் முதுகலை உணவு பதம் செய்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.

பி.எஸ்ஸி. மனையியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் பத்தியவியல் துறை என்ற மூன்று ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பில் 55 சதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதுகலை உணவு பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற இரண்டு ஆண்டு முதுலை பட்ட மேற்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உணவியல், வேதியல், நுண்ணுயிரியியல், தானியம் பதம் செய்முறை, உணவுகளை மதிப்புக்கூட்டுதல், உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்து பாடங்கள் நடத்தப்படும்.

உணவு ஆய்வு, ஆராய்ச்சி. உபகரணங்களின் பயன்பாடு, உணவு நுண்ணுரியல் தொடர்பானவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.உணவு பதப்படுத்தும் ஆலைக்கு ஒரு முறை நேரில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆலையின் செயல்பாடுகள்குறித்து விளக்கப்படும்.

பின்னர் காய்கறி போன்றவற்றைப் பதப்படுத்துதல், பாதுகாத்தல், மாமிசங்களை பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், உணவு செய்முறை,தானியங்கள் தர ஆய்வு உள்ளிட்டவை  குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.   மேலும் பழக்கூழ், ஜாம், ஜெல்லி, ஜாஸ்,வற்றல், வடாகம், மிட்டாய்கள்  உள்ளிட்டவற்றின் தயாரிப்பு குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். கடல்மீன்கள் மற்றும் கடல்சார் உணவுகள் பதப்படுத்தும் ஆலைக்கு நேரில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டு களஆய்வு நடத்தப்படும்.

இரண்டாம் ஆண்டு, உணவு உயிர்நுட்பவியல், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு, உணவு பொருள் சட்டங்கள் ஆகியவை குறித்து பாடங்கள் நடத்தப்படும். உணவு பதப்படுத்துதல், பால் பதப்படுத்துதல், பேக்கரி பொருள்கள் செய்முறைப் பயிற்சி, சாக்லேட் உள்ளிட்டவற்றைச்  செய்ய பயிற்சி அளிக்கப்படும். தரக்கட்டுப்பாடு குறித்த பயிற்சி, சுவை ஆய்வு, உணவு கலப்படம் குறித்து ஆய்வு கூடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

இறுதியாக புதிய உணவு ஒன்றைத் தயாரித்து, அதைச் சந்தைப்படுத்தத் தேவையான பாதுகாப்பான பேக்கிங், அந்த உணவின் தரம், அதில் கலக்கப்பட்டுள்ள பொருள்களின் அளவுகள், சுவை விபரம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

இந்த முதுகலை பட்ட மேற்படிப்பு படித்தால், தொழில் முனைவோராக வாழ்வில் உயரலாம். அன்றாட வாழ்விற்குத் தேவைப்படும் மசாலாப் பொடிகள், பழரசங்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.

மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து சுய தொழில் செய்யலாம். எங்களிடம் படித்த மாணவிகள் பலர் மத்திய அரசின் ஃபுட்கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலை செய்கிறார்கள்.

பழரசம், ஜாம் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் பணி இந்த பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.

வெளிநாடுகளில் இந்த பட்டமேற்படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  இந்த பட்ட மேற்படிப்பு படித்தால் பெண்கள் தொழில் முனைவோராக மாறி தாங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்'' என்றார்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/25/w600X390/mmct.jpg https://www.dinamani.com/education/2017/jan/25/உணவு-பதப்படுத்துதலில்-பட்ட-மேற்படிப்பு-2638122.html
2637672 கல்வி 10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி இலக்கு DIN DIN Wednesday, January 25, 2017 01:46 AM +0530 பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத இலக்கு வைத்து தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறினார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் லில்லிபுஷ்பராணி தலைமை வகித்தார். இதில், திருத்தணி மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை எம்.எம்.ராமலட்சுமி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது:
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம் மற்றும் நடப்பாண்டில் நடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
அப்போது, தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், அதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தார். வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக திருவள்ளூர் விளங்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தனியாக அமர வைத்து, அவர்கள் தேர்ச்சி பெறும் அளவுக்கு தயார்படுத்த வேண்டும். மேலும், சமூக ஆர்வலர்களிடம் மாணவர்களுக்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.
வர்தா புயலால் பொன்னேரி வட்டம் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லாததால், அனைத்துப் பள்ளிகளும் அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
இறுதியாக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற, முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகத்தை பள்ளித் தலைமை ஆசிரியரிடம், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/25/w600X390/student.jpg பத்தாம் வகுப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய புத்தகத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன். (உடன்) மாவட்டக் கல்வி அலுவலர் லில்லிபுஷ்பராணி. https://www.dinamani.com/education/2017/jan/25/10-2-பொதுத்தேர்வில்-100-தேர்ச்சி-இலக்கு-2637672.html
2559946 கல்வி விறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு dn DIN Monday, September 5, 2016 10:19 AM +0530 சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்துள்ளது.
  நாடு முழுவதும் "நீட்' (மருத்துவ பொது நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு, மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, செப். 30-க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பதால், தனியார் மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களும் மாணவர்களைச் சேர்க்கும் கலந்தாய்வுக் கட்டத்தை அடைந்துள்ளன.
கட்டணம் குறித்து உத்தரவில்லை: தனியார் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழங்களும் "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அரசு இடங்களைப் பொருத்தவரை அந்தந்த மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைப் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
"நன்கொடை' மறைந்து விட்டதா? கடந்த ஆண்டுகளில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் இடங்களும் வெளிப்படைத்தன்மையான கட்டணம் ஏதுமின்றி "நன்கொடை' என்ற பெயரில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெறப்பட்டு தன்னிச்சையாக நிரப்பப்பட்டன.
ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை...: இந்த ஆண்டு "நீட்' மதிப்பெண், ரேங்க் பட்டியல் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை காரணமாக "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பம், விண்ணப்ப தகவல் குறிப்பேடு, கல்விக் கட்டண விவரத்தை தனியார் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டுள்ளன.
 இதன்படி. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்கு கல்விக் கட்டணமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையும், உபகரணங்கள் உள்ளிட்ட இதர கட்டணங்களையும் இணையதளத்தில் அவை வெளியிட்டுள்ளன.
குறைபாடு என்ன? "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும்கூட, சேர விரும்பும் தனியார் கல்லூரி அல்லது தனியார்  பல்கலைக்கழகத்துக்கு தனியாக விண்ணப்பித்திருந்தால் மட்டுமே மாணவர் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது;
விண்ணப்பித்திருந்த சிலவற்றில் ஒரே சமயத்தில் கலந்தாய்வு அழைப்பு வரும் நிலையிலும் மாணவர்களுக்கு கஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 இனிவரும் காலங்களில் அரசு கலந்தாய்வைப் போன்று மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் ஒருங்கிணைந்த முறையில் கலந்தாய்வை நடத்தும் முறைக்கு மத்திய சுகாதாரத் துறையும் இந்திய மருத்துவ கவுன்சிலும் ஆவன செய்ய வேண்டும் என்பது பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையாகும்.
சிறந்த மாணவர்களுக்கு உதவ...:அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டுக்கு ரூ.13,600, பி.டி.எஸ். படிக்க ரூ.11,600 ஆகிறது. ஆனால், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதே என்பதற்கு, கல்வியாளர்கள்-அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இதை நிர்வகிக்க அரசுக்கு மாதம் ரூ.50 கோடி செலவாகிறது. எனவே அரசு  கல்லூரி கட்டணத்தில் (ரூ.13,600) தனியார் கல்லூரி அல்லது தனியார்  பல்கலைக்கழகத்தை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை.
எனினும், அவை தங்களது மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் குறிப்பிட்ட சதவீத இடங்களை "நீட்' மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மாணவர்களுக்கு ஒதுக்கி குறைந்த கட்டணத்தை நிர்ணயத்தை செய்வதன் மூலம் உதவ முடியும் என்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/mbbs.jpg https://www.dinamani.com/education/2016/sep/05/விறுவிறுப்படையும்-தனியார்-எம்பிபிஎஸ்-கலந்தாய்வு-2559946.html
2558868 கல்வி வென்றவர்கள் சொன்னது: "விமர்சனங்களை அலட்சியம் செய்தால் லட்சியத்தை அடையலாம்' dn DIN Tuesday, August 30, 2016 10:58 AM +0530 லட்சியத்தை அடைந்து சாதனைபடைக்க, நம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை அலட்சியம் செய்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற லில்லிகிரேஸ். துறையூர் பகுதியைச் சேர்ந்த இவர், குரூப் 1 தேர்வில் வென்று தமிழக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.

துறையூர் கிளை நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று மாணவர்களிடையே லில்லி கிரேஸ் பேசியது: நாளிதழ் வாசிக்கும் பழக்கமுடைய தேர்வர்கள், போட்டித் தேர்வில் வெற்றிக்குத் தேவையான கணிசமான மதிப்பெண்களைப் பெறமுடியும். இதுதவிர, பாடத்திட்டத்தில் பரந்துபட்ட மற்றும் நுண்ணறிவு இருக்குமானால் வெற்றி எளிது. திரும்பத் திரும்பப் படிப்பது, சக தேர்வர்களிடம் விவாதிப்பது போன்றவை தவறுகளை திருத்தி, படித்தவற்றை மனதில் நிலைத்து நிற்கச்செய்யும்.

போட்டித் தேர்வுகளில் தோல்வியடையும் போதும் அண்டை வீட்டார்கள், நண்பர்கள் கேலிசெய்யலாம். அதை காதோடு நிறுத்திவிடுங்கள். மனதுக்கு கொண்டு செல்லாதீர்கள். வாழ்வில் வெற்றிபெற ஒரு வெற்றியுடன் திருப்தி அடையாதீர்கள். தொடர்ந்து முயன்று பல வெற்றிகளை பெறுங்கள் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/28/w600X390/all-the-best.jpg https://www.dinamani.com/education/2016/aug/30/வென்றவர்கள்-சொன்னது-விமர்சனங்களை-அலட்சியம்-செய்தால்-லட்சியத்தை-அடையலாம்-2558868.html
3232 கல்வி இலவச - கட்டாயக் கல்வி: 94,811 மாணவர்கள் சேர்ப்பு மதி DIN Thursday, August 11, 2016 11:09 AM +0530 சென்னை: இலவச-கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 94,811 மாணவர்கள் சுயநிதிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொள்கை விளக்கக் குறிப்பில், துறையின் அமைச்சர் பி.பென்ஜமின் வெளியிட்ட தகவல்:

இலவச-கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இடங்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால், சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட-நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 49,864 ஆகவும், 2014-15 இல் 86,729 ஆகவும், 2015-16-இல் 94,811 ஆகவும் அதிகரித்துள்ளது என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/education/2016/aug/10/இலவச---கட்டாயக்-கல்வி-94811-மாணவர்கள்-சேர்ப்பு-3232.html
3233 கல்வி மதிய உணவுக்கு முன் பள்ளிகளில் யோகா கட்டாயம்: அமைச்சர் பி.பென்ஜமின் test DIN Wednesday, August 10, 2016 07:34 AM +0530 சென்னை: பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வியின் கொள்கை விளக்கக் குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது:-

யோகா என்பது மனம், உடல், ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும்.

பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவும் யோகப் பயிற்சி உள்ளது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு: பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான கட்டடம், சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, பாதுகாப்பான மின் இணைப்புகள், இருக்கை, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு சுயநிதி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் உள்ளடக்கிய 5 உறுப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வாரம் ஒருமுறை பள்ளி வேலை நாளொன்றில் பள்ளியைப் பார்வையிட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வர்.

அவர்கள் ஆய்வு செய்த விவரங்களைப் பள்ளி பதிவேட்டில் பதிவு செய்வர். குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை பள்ளி நிர்வாகம் நிறைவு செய்துள்ளதா என்பதை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் ஆய்வின்போது உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/education/2016/aug/10/மதிய-உணவுக்கு-முன்-பள்ளிகளில்-யோகா-கட்டாயம்-அமைச்சர்-பிபென்ஜமின்-3233.html
3231 கல்வி "நீட்' தேர்வு தொடர்ந்து தடுக்கப்படும்: அமைச்சர் உறுதி test DIN Wednesday, August 10, 2016 07:30 AM +0530
சென்னை:  "நீட்' பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அமலாக்குவதை தொடர்ந்து தடுப்பது என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

எனவே, ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதை பாதிக்கக்கூடிய இந்த பொது நுழைவுத் தேர்வைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: நீட் பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 9-6-2005-இல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையை நடத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்ததே முதல்வர் ஜெயலலிதாதான்.

எந்தக் காலத்திலும் நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்படாது. ஒருபுறம் சட்டப் பேராட்டம், மறுபுறம் மத்திய அரசை அணுகி நீட் தேர்வு தமிழகத்தில் அமலாக்குவதைத் தடுப்பது என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார்.

]]>
https://www.dinamani.com/education/2016/aug/10/நீட்-தேர்வு-தொடர்ந்து-தடுக்கப்படும்-அமைச்சர்-உறுதி-3231.html
3230 கல்வி புதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி test DIN Wednesday, August 10, 2016 07:27 AM +0530 சென்னை: புதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது:

புதிய கல்விக் கொள்கை குறித்த வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுவரை கல்வியாளர்கள் தயாரித்த நிலை மாறியுள்ளது. இந்த முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஒரு கல்வியாளர் கொண்ட குழுவும் தயாரித்த அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்றார்.

"சம்ஸ்கிருதம், ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்' அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குறுக்கிட்டுப் பேசியது:-

புதிய கல்விக் கொள்கையின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மாநில அரசின் கருத்தும் கேட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழக அரசு பதில் அனுப்பும்.

மாநிலத்தின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். மொழி, கலாசாரத் தன்மைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

தமிழகத்தில் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழியைத் திணிக்க எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மையினர் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றார்.

இதேபோல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பா.பென்ஜமினும், "சம்ஸ்கிருதம், ஹிந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்றார்.

மு.க.ஸ்டாலின்: புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகளைப் பறிக்க விடமாட்டோம். சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர்கள் உறுதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்ற வேண்டும்.

தங்கம் தென்னரசு: புதிய கல்விக் கொள்கை மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இது நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதிக்கும். எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதனை புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாகத் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது குலக்கல்வியை அறிமுகப்படுத்துவதாகும். எனவே, புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்கக் கூடாது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/tngov.jpg https://www.dinamani.com/education/2016/aug/10/புதிய-கல்விக்-கொள்கை-மாநில-உரிமைகளைப்-பறிக்க-அனுமதிக்க-மாட்டோம்--தமிழக-அரசு-உறுதி-3230.html
3102 கல்வி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: நடப்பு நிகழ்வுகள், சுற்றுசூழலில் அதிக கேள்விகள் test DIN Monday, August 8, 2016 11:24 AM +0530 சென்னை: மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதிலும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன.
இதில் 2016-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
சென்னை மையத்தில் தேர்வெழுதிய சங்கர் என்ற தேர்வர் கூறியது:
தேர்வு எளிதாக இருந்தது என்றபோதும், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகள் கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக இப்போது கேட்கப்பட்டிருந்தன என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/bankexam.jpg https://www.dinamani.com/education/2016/aug/08/யுபிஎஸ்சி-முதல்நிலைத்-தேர்வு-நடப்பு-நிகழ்வுகள்-சுற்றுசூழலில்-அதிக-கேள்விகள்-3102.html
3075 கல்வி அண்ணாமலை பல்கலையில் எம்.பில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு dn DIN Friday, August 5, 2016 04:20 PM +0530 சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2016-ம் கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்புகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

எம்.பில்/பி.எச்டி படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எம்.பில் படிப்புக்கு ரூ.1000-ம், பி.எச்டி., படிப்புக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம். ஆகஸ்ட் 19 ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலதிக தகவலுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/5/w600X390/annamalai_univ.jpg https://www.dinamani.com/education/2016/aug/05/அண்ணாமலை-பல்கலையில்-எம்பில்-பிஎச்டி-படிப்புக்கு-விண்ணப்பங்கள்-வரவேற்பு-3075.html
3074 கல்வி ஜம்முவில் ஐஐடி வளாகத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரகாஷ் ஜவடேகர் dn DIN Friday, August 5, 2016 04:18 PM +0530 புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐஐடி வாளகத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாளைத் தொடங்கி வைக்கிறார்.

2016-ம் ஆண்டில் ஜம்முவில் தொடங்கப்படும் ஐஐடி.,யில் முதல் அமர்வில் மொத்தம் 90 மாணவர்கள் சேர உள்ளனர். கம்ப்யூடர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என ஒவ்வொரு பிரிவிலும் 30 பேர் இணைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 2, 2016-ல் நாடு முழுவதும் அதாவது ஜம்மு, திருப்பதி, பாலக்காடு(கேரளா), கோவா, தார்வார்ட் (கர்நாடகா) மற்றும் பிலாய் (சத்திஸ்கர்) ஆகிய 6 மாநிலங்களில் ஐஐடி நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டு, மாநிலங்களவை இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

அதன்படி, உயர் கல்வித்துறையுடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது.

இதற்காக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெசில் நக்ரோட்டாவில் உள்ள ஜெக்தி கிராமத்தில் 159 ஹெக்டர் பரப்பளவில் ஐஐடி வளாகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் 25 ஏக்கர் பரப்பளவில் ஐஐடி நிறுவனம் தொடங்குவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இந்த ஐஐடி வளாகத்தை நாளை பிரகாஷ் ஜவடேகர் அடிக்கல் நாட்டித் திறந்து வைக்கின்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/5/w600X390/PrakashJavadekar.jpg https://www.dinamani.com/education/2016/aug/05/ஜம்முவில்-ஐஐடி-வளாகத்தை-நாளை-தொடங்கி-வைக்கிறார்-பிரகாஷ்-ஜவடேகர்-3074.html
2995 கல்வி பி.இ. காலியிடங்கள் அதிகரிப்பது ஏன்? எம்.மார்க் நெல்சன் DIN Tuesday, August 2, 2016 12:14 PM +0530 சென்னை: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு, தரமான ஆசிரியர்கள் இல்லாததே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்த நிலை நீடித்தால், மாணவர் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
 தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
 2013-14-ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 541 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு என இரண்டும் சேர்த்து 2,72,872 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,70,013 இடங்கள் நிரம்பின. 1,02,859 இடங்கள் காலியாக இருந்தன.
 2014-15-ஆம் கல்வியாண்டில் 546 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,78,862 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,54,265 இடங்கள் நிரம்பின. 1,24,597 இடங்கள் காலியாக இருந்தன.
 2015-16-ஆம் கல்வியாண்டில் 553 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 2,75,561 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,56,868 இடங்கள் நிரம்பின. 1,18,693 இடங்கள் காலியாக இருந்தன.
 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான இந்த முழுமையான விவரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் மட்டும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் ஒரு லட்சம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. எனவே, நிகழாண்டும் இதே நிலைதான் நீடிக்கும் என்கின்றனர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்.
 இந்த மோசமான நிலைக்குத் தரமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியது:  பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. அதனால்தான், பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தேவையில் 45 சதவீதம் தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில்தான் உற்பத்தியாகிறது.

அந்த அளவுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இதேபோல, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளன.
எனவே, தேவை உள்ளது. ஆனால், தரமான பொறியியல் பட்டதாரிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஓராண்டு கட்டாயப் பயிற்சி: கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருந்தால்தான், தரமான பொறியாளர்களை உருவாக்க முடியும்.

பொறியியல் பேராசிரியருக்கான குறைந்தபட்சத் தகுதியாக எம்.இ. நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும்.
 பள்ளி ஆசிரியர் பணிக்கு பி.எட். தகுதி கட்டாயம் என்பது போல, பொறியியல் பேராசிரியர் பணிக்கு எம்.இ. முடித்த பின்னர் ஓராண்டு ஆசிரியர் பயிற்சி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தென் மண்டலத் தலைவர் ஆர். ருத்ரமூர்த்தி:  பொறியியலில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பி.இ. முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பிற பொறியியல் நிறுவனங்களுக்கு பணிக்குச் சென்று விடுகின்றனர். முதுநிலை பொறியியல் (எம்.இ.) படிப்பின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் எம்.இ. சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
ஊதிய உயர்வு அவசியம்: இதற்கு, பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் மிகக் குறைந்த ஊதியமே முக்கியக் காரணம். சில சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஏஐசிடிஇ நிர்ணயித்துள்ள வழிகாட்டுதலின்படி ஊதியம் வழங்குகின்றன. பெரும்பாலனவை வழங்குவதில்லை.
 எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்வதற்கு, முதலில் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

அப்போதுதான், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணி மீது ஆர்வம் ஏற்படும். அதன்மூலம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் தரமான கல்வி வழங்க முடியும்.
 இதேபோல, எம்.இ. படிப்பில் அதிக மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் கல்வி உதவித் தொகைத் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/2/w600X390/becouncelling.jpg https://www.dinamani.com/education/2016/aug/02/பிஇ-காலியிடங்கள்-அதிகரிப்பது-ஏன்-2995.html
2634 கல்வி பிஎச்.டி. முடிக்க பெண்களுக்கு இரண்டு ஆண்டுகள் கூடுதலாக அவகாசம்: புதிய வழிகாட்டுதல் வெளியீடு Venkatesan.R DIN Friday, July 15, 2016 01:54 PM +0530 சென்னை: ஆராய்ச்சி படிப்பை (பிஎச்.டி.) முடிப்பதற்கான அதிகபட்ச கால அவகாசத்தில் பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அளித்து புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இதில், ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான மகப்பேரு, குழந்தை பராமரிப்பு விடுமுறை கால அளவும் 6 மாதங்களிலிருந்து 8 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த இரண்டு படிப்புகளையும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஃபில். படிப்பு மற்றும் பிஎச்.டி. (ஆராய்ச்சி) பட்டங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைகள் அடங்கிய -யுஜிசி வழிகாட்டுதல் - 201 6 - ஐ பல்கலைக்கழக மானியக் குழு வியாழக்கிழமை வெளியிட்டது. இந்திய அரசிதழில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
இதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வழிகாட்டுதள்கள்:
- எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளில் சேர முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இதில் 5 சதவீத சலுகை அளிக்கப்படும்
- எம்.ஃபில். படிப்புக் காலம் குறைந்தபட்சம் ஓராண்டு. அதிகபட்சம் 2 ஆண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்
- பிஎச்.டி. படிப்புக் காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள். அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அளிக்கலாம்
- எம்.ஃபில். படிப்பை முடிக்க வேண்டிய அதிகபட்ச கால அவகாசத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது
- அதுபோல, பிஎச்.டி. படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச கால அவகாசத்தில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
- எம்.ஃபில், பிஎச்.டி. படிப்புகளை நேரடியாக மேற்கொள்ளும் பெண்களுக்கான மகப்பேரு, குழந்தை பராமரிப்பு விடுப்பு காலம் 240 நாள்களாக அதாவது 8 மாதங்களாக உயர்த்தப்படுகிறது
- இந்த இரண்டு படிப்புகளிலும் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும்
- எம்.ஃபில்., பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்புகளை எந்தவொரு பல்கலைக்கழகமும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது
- பகுதி நேர பிஎச்.டி. படிப்பை வழங்க கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளையும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகளை யுஜிசி கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதலுக்கு பேராசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரிசில்லா கூறியது:
ஆராய்ச்சி படிப்புகளில் அதிக அளவில் பெண்கள் ஈடுபடவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே யுஜிசி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சி படிப்புகளை முடிப்பதற்கான கால அவகாசம் அதிகரித்திருப்பது, அதிக மாணவிகள் பிஎச்.டி. படிப்புகளில் சேருவதை ஊக்குவிக்கும் என்றார் அவர்.

]]>
https://www.dinamani.com/education/2016/jul/15/பிஎச்டி-முடிக்க-பெண்களுக்கு-இரண்டு-ஆண்டுகள்-கூடுதலாக-அவகாசம்-புதிய-வழிகாட்டுதல்-வெளியீடு-2634.html
2314 கல்வி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை dn DIN Friday, June 17, 2016 11:55 PM +0530 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தனித் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அழைப்புக் கடிதம் இல்லாமலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் அரசு எம்.பி. பி.எஸ். இடங்கள் 2,383, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 என மொத்தம் 2,853 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில
அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் 970 என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
20-ஆம் தேதி முதல்: வரும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 20-ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்குத் தொடங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க 92 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஒரு பி.டி.எஸ். இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 60 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான 3 இடங்களுக்கு தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்.
பொதுப் பிரிவு: ஜூன் 21-ஆம் தேதியிலிருந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். கட்-ஆஃப் மதிப்பெண் 200-லிருந்து 198 வரை பெற்றவர்கள் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அழைப்புக் கடிதம் கிடையாது: கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம் இல்லாவிட்டாலும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் அட்டவணையைக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 3,266 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர 4,679 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 544 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துள்ளதையடுத்து, விண்ணப்பித்துள்ள 3,266 மாணவர்களில் 500-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களுக்கு படிப்பில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்: மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைக் காட்டிலும், மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, 9,017 மாணவர்களும், 16,361 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். 50 வயதுக்கு மேற்பட்ட இவர், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி உள்ளது என்றாலும், மிகக் குறைந்த கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதால், மருத்துவ இடம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த கல்வியாண்டிலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/17/w600X390/mbbs.jpg எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் (இடமிருந்து), மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா, தமிழக சுகாதா https://www.dinamani.com/education/2016/jun/17/எம்பிபிஎஸ்-கலந்தாய்வு-அட்டவணை-வெளியீடுஅழைப்புக்-கடிதம்-அவசியம்-இல்லை-2314.html
2312 கல்வி குறைகிறது எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் dn DIN Friday, June 17, 2016 11:51 PM +0530 தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான அனைத்துப் பிரிவு (ஓ.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் அனைத்துப் பிரிவினருக்கு உரிய, முதல் 739 இடங்களில் இடம்பெற்றுள்ள 502 பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 196.75-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைவுக்குக் காரணம் என்ன? கடந்த கல்வி ஆண்டுடன் (2015-16) ஒப்பிடும்போது, நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198-லிருந்து நிகழாண்டில் 197.75-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-லிருந்து 196.75-ஆகவும் குறைந்துள்ளது.
நிகழ் கல்வி ஆண்டில் கோயம்புத்தூரில் புதிதாக அரசு (இ.எஸ்.ஐ.) மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி கிடைத்து, அதன் மூலம் கலந்தாய்வுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்ததும், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடமான இயற்பியலில் 200-க்கு 200-ஐ 5 மாணவர்கள் மட்டுமே எடுத்ததுமே கட்-ஆஃப் மதிப்பெண் குறைவுக்கு முக்கியக் காரணம் என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் (2,253 எம்.பி.பி.எஸ். இடங்கள்), சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ, கோவை அரசு (இ.எஸ்.ஐ) மருத்துவக் கல்லூரிகள் (தலா 65 இடங்கள் வீதம் 130 எம்.பி.பி.எஸ். இடங்கள்) என மொத்தம் 2,383 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனைத்து வகுப்பினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் மதிப்பிடப்பட்டுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது):
வகுப்பு அரசு எம்.பி.பி.எஸ்.
ஓ.சி. 197.75 (198.00)
பி.சி. 196.75 (197.25)
பி.சி.(எம்) 195.50 (195.75)
எம்.பி.சி. 195.50 (196.00)
எஸ்.சி. 191.00 (191.75)
எஸ்.சி.(ஏ) 193.50 (189.25)
எஸ்.டி. 181.50 (185.75)

]]>
https://www.dinamani.com/education/2016/jun/17/குறைகிறது-எம்பிபிஎஸ்-கட்-ஆஃப்-மதிப்பெண்-2312.html