Dinamani - நலம் நலமறிய ஆவல் - https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2652358 சாளரம் நலம் நலமறிய ஆவல் 42. எஹ்ரட் டயட் நாகூர் ரூமி Monday, February 20, 2017 12:00 AM +0530  

விஞ்ஞானப்பூர்வமான மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் என்பவையெல்லாம் மனிதகுலத்தை கசாப்பு செய்யும் இடங்களாகும் – எஹ்ரட்

 

பேலியோ டயட் பற்றி சமீபகாலமாக கேள்விப்படுகிறோம். இது என்ன எஹ்ரட் டயட் என்று கேட்கிறீர்களா? பேலியோவுக்கு நேர் எதிர் டயட் என்று இதைச் சொல்லலாம்! ஆமாம். இது ஒரு சைவ உணவுத்திட்டம். வீர சைவம் என்றுகூட இதை வர்ணிக்கலாம்! என்னை மாதிரி தீவிர அசைவர்களுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்! (சிங்கம்கூட அசைவம்தானே)!

மனித உடல் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், நோய்களை உண்டாக்கும் உண்மையான ஒரே காரணி எது என்பது பற்றியும், எந்த நோயாக இருந்தாலும் அச்சமின்றி எப்படி அதைக் குணப்படுத்தலாம் என்பது பற்றியும் பல உண்மைகளை எஹ்ரட்டின் டயட் சிஸ்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த டயட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி, அதை ரொம்ப கடுமையாகப் பின்பற்றி வெற்றிகண்டு, தீர்க்கமுடியாத வியாதி உள்ளதாக சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்திய டயட் சிஸ்டம் இது. ‘ம்யூகஸ்லெஸ் டயட் ஹீலிங் சிஸ்டம்’ (Mucusless Diet Healing System) என்று இதற்கு எஹ்ரட் பெயர் வைத்தார். ஆடிக்கொருதரம், அமாவாசைக் கொருதரம் நாம்கூட இதைப் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? இருக்கலாம். ஆனாலும் உண்மைதான். எத்தனை பெயர்களில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே? வாட்டர், ஜலம், பானி, ஆப் எல்லாமே தண்ணீர்தானே?!

குறிப்பிட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது மட்டுமின்றி, எதையுமே சாப்பிடாமல் இருப்பதும் இந்த உணவுத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்! ரொம்ப புதிர் போடுகிறேனோ? சரி, இருக்கட்டும். இந்த உணவுத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் அதை அறிமுகப்படுத்திய பேராசிரியர் அர்னால்டு எஹ்ரட்டை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டி உள்ளது. பார்ப்போமா?

ஆர்னால்டு எஹ்ரட் (Arnold Ehret (1866 – 1922))

ஆர்னால்டு எஹ்ரட், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர். “ஆரோக்கியம் பற்றிய கடைசிச் செய்தியையும் சொல்லிவிட்டவர்” என்று எஹ்ரட்டை வர்ணித்தார் பேரா. சைல்ட் (B.W. CHILD). ஆரோக்கியம், உணவுத்திட்டம், நச்சு நீக்கம், பழ உணவுகள், விரதம் இருத்தல், உணவு வகைகளைக் கலத்தல், ஆயுள் நீட்சி, இயற்கை வைத்தியம், உடல் பயிற்சிகள், உடலின் உயிர்ச்சக்தி – இப்படி பல முக்கிய விஷயங்கள் பற்றி பல நூல்களை எழுதியவர் எஹ்ரட்.

தெற்கு ஜெர்மனியில் இருந்த பேடன் என்ற ஊரில் அல்லது மாகாணத்தில் எஹ்ரட் பிறந்தார். அவரது பெற்றோர் கால்நடை மருத்துவர்கள். அவரது தாத்தா பாட்டிகள் மருத்துவர்கள். சகோதரரும் தந்தையும் டிபி வந்து இறந்தார்கள். அவரது தாயார் சிறுநீரக அழற்சியால் அவதிப்பட்டார். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? ஆரோக்கியம் பற்றி எஹ்ரட் ஆராய்ச்சி செய்வதற்கான நியாயம் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளத்தான்.

எஹ்ரட்டுக்காவது நோய் எதுவும் இல்லாமல் இருந்ததா என்றால் அதுதான் இல்லை. அவருக்கும் ஒரு நோய் இருந்தது. அவரது சிறுநீரகம் கடுமையாகப் பழுதுபட்டிருந்தது. ப்ரைட்ஸ் டிசீஸ் (Bright’s Disease) என்று அது சொல்லப்பட்டது. முதன் முதலில் ப்ரைட் என்பவருக்கு அந்த நோய் வந்ததால் அதற்கு அவர் பெயரையே வைத்துவிட்டார்கள்! பெயர் வைத்தே கொல்வதில் மேற்கத்தியர்கள் விற்பன்னர்களாயிற்றே! எஹ்ரட்டைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் ‘குணப்படுத்த முடியாதது’ என்று கூறினார்கள்.

இருபத்தோரு வயதில் பேடனில் இருந்த ஒரு கல்லூரியில் படித்து ஓவியப் பேராசிரியரானார் எஹ்ரட் (Professor of Design). அதனால்தான் அவர் பேரா. எஹ்ரட் என்று அறியப்படுகிறார். ஜெர்மன் மட்டுமின்றி, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மொழிகளிலும் பேசக்கூடிய, படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய திறன் பெற்றிருந்தார். ஆரோக்கியம் பற்றி அம்மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய நூல்களைப் படிக்க பன்மொழியறிவு அவருக்கு உதவியது.

ராணுவத்தில் சேர்ந்த ஒன்பது மாதங்களில் அவருக்கு இருந்த ‘தீர்க்க முடியாத’ நோய் பற்றித் தெரியவந்து ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு ஒரு டெக்னிகல் கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அவருக்கு தீர்க்க முடியாத வியாதி இருந்தது என்று டாக்டர் கஸ்டவ் என்பவர்தான் முதலில் கூறினார். ஆனால், அதன்பிறகு ஐரோப்பாவின் மிகுந்த மரியாதைக்குரிய 24 மருத்துவர்கள் சேர்ந்து அதே பாட்டைப் பாடினர்.

‘‘ஐந்து ஆண்டுகள் நான் மருத்துவர்களால் மிகவும் கஷ்டப்பட்டேன். அதுமட்டுமா? அந்த வேதனையின் ஒரு பகுதி, 6000 டாலர்கள் பணத்தை அவர்களுக்குக் கொடுக்கவேண்டி இருந்ததாகும். ஆனால் அதன் பலன் என்னவெனில், எனக்கு வந்த வியாதி “தீர்க்க முடியாதது” என்பதுதான்! முக்கியமான நோயறிகுறிகள் சளி, சீழ், சிறுநீரில் அல்புமின் எனப்படும் கருப்புரதம் மற்றும் சிறுநீரகங்களில் வலி” என்று அவரே கூறினார்.

ஆனால் எஹ்ரட் சோர்ந்துவிடவில்லை. ரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்று அவருக்கு ஆசை. யாருக்குத்தான் அது இல்லை? ‘‘எல்லோரும் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறார்கள். ஆனால் யாருமே சாக விரும்புவதில்லை” என்று ஜோக் அடிப்பார் என் பேராசிரிய அண்ணன் ஒருவர்! எஹ்ரட்டின் அந்த நிலையே அவரை ஆராய்ச்சியின் பக்கம் தள்ளியது. அவரையும் சக மனிதர்களையும் அவரது ஆராய்ச்சி காப்பாற்றியது.

‘‘சிறுநீர் தெளிவாக இருந்தால் அது ஆரோக்கியத்தின் அடையாளமாகும் என்று என் மருத்துவர்கள் கருதினர். எனவே, என் சிறுநீர்வழி வெளியேறிய கழிவுகளையெல்லாம் நிறுத்த மருந்துகளைக் கொடுத்தனர். என்னில் இருந்து வெளியான அல்புமின் சத்தை ஈடுசெய்ய இறைச்சி, முட்டை, பால் என்று சாப்பிடச் செய்தனர். ஆனால், அவையெல்லாம் பிரச்னையைச் சரி செய்வதற்குப் பதிலாக அதிகப்படுத்தின. எனவே, சரியான உணவென்பது ம்யூக்ஸ் மற்றும் அல்புமின் இல்லாத உணவேயாகும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். குளியல்கள், உடற்பயிற்சிகள் என இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்றியதால், என் உடலுக்குள் இருந்த ம்யூகஸ் கொஞ்சம் வெளியானது. ஆனால், தவறான உணவு முறைகளால் மீண்டும் அது உள்ளுக்குள் உருவானது” என்று அவர் கூறினார்.

இந்த ‘ம்யூகஸ்’ என்ற சொல்தான் எஹ்ரட் வாழ்க்கையின் கதாநாயகன் என்றுகூடச் சொல்லலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பிலும் அந்தச் சொல் இருந்தது. ம்யூகஸ் என்ற ஆங்கிலச் சொல்லை சளி என்று தமிழாக்கலாம். ஆனால் அது வெறும் சளி மட்டுமல்ல. சளி மற்றும் பல நச்சுப்பொருள்கள் கலந்த ஒரு கலவை அது. மனித உடலை விட்டு அவசியம் வெளியேற வேண்டிய அல்லது வெளியேற்ற வேண்டிய கழிவு என்று இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.

சைவ உணவுகளைப் பற்றி முதலில் அவர் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். பல சைவ உணவகங்களுக்குச் சென்று பார்த்தார். ஈடென் என்ற இடத்திலிருந்து பழக்காலனிக்கும் சென்று பார்த்தார். மருந்துகள், உடலியல், வேதியியல் பற்றியெல்லாம் ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். தனது நோயை எப்படியாவது குணமாக்கிவிட வேண்டும் என்ற பேராவல் அவரை எங்கெங்கோ செல்லவும், என்னென்னவோ செய்யவும் வைத்தது. இயற்கை வைத்தியம், காந்த சிகிச்சை, உளவியல் சிகிச்சை, கிறிஸ்தவ விஞ்ஞானம் என்று என்னென்னவோ படித்தார். இறுதியாக, ஃப்ரான்ஸ் நாட்டுக்குச் சென்று அங்கு பாலும் பழமும் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்து பார்த்தார்.

கடைசியாக, உணவு எதையுமே எடுத்துக்கொள்ளாமல் கடுமையான விரதம் இருந்து பார்த்தார். அப்படி விரதம் இருந்தபோது, உடலின் சக்தி குறைவதற்குப் பதிலாக கூடியதைக் கண்டார்! அல்ஜியர் மாநகரிலிருந்து ட்யூனிஸ் மாநகர் வரை கிட்டத்தட்ட 800 மைல்கள் சைக்கிளிலேயே சென்றார்!

இத்தாலி நாட்டில் 56 மணி நேரம் விடாமல் நடந்து சாதனை செய்தார்! அதுவும், தொடர்ந்து ஏழு நாட்கள் விரதத்தில் இருந்த பிறகு! அதன்பிறகு ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும்தான் எடுத்துக்கொண்டார். அதுவும் என்ன, கொஞ்சம் செர்ரிப் பழங்கள், அவ்வளவுதான்! 56 மணி நேர நடையின்போது இடையில் அவர் உண்ணவோ, ஓய்வெடுக்கவோ இல்லை.

அசாதாரண மன உறுதிகொண்ட மனிதராக இருந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மணி நேரம் நடந்துவிட்டாலே நாள் பூராவும் புலம்பித்தள்ளும் மனம் கொண்டவர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அதிகம். ஆனால், இரண்டு நாட்கள் மற்றும் எட்டு மணி நேரம் இடையில் எங்கும் ஓய்வெடுக்காமல் ஒருவர் நடந்துள்ளார், அதுவும் தண்ணீர் அல்லது ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டு!

விரதம் இருப்பதன் மூலமாக ஒருவரது சக்தி பலவீனப்பட்டுப்போவதில்லை. மாறாக, ‘வைட்டாலிட்டி’ எனப்படும் இயக்க ஆற்றல் அதிகப்படுகிறது என்ற தனது கொள்கையை அவர் அந்தச் சாதனை மூலம் நிரூபித்தார்.

பாலஸ்தீனம், துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெர்ஷியா போன்ற நாடுகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்தார். இந்தியாவுக்கும் வந்துள்ளார். உலகின் மிக அரியவகைப் பழங்களை கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் சேர்த்துவைத்திருந்தது. அதையெல்லாம் பார்க்க கலிஃபோர்னியாவுக்கு எஹ்ரட் சென்றபோது, முதல் உலகப் போர் துவங்கியது. அதனால் அவரால் ஜெர்மனிக்குத் திரும்ப முடியவில்லை. அங்கிருந்துகொண்டே ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். அங்கே பழத்தோட்டங்களை உருவாக்கினார்.

அங்கே இருந்த பல சானிடோரியங்களைப் பார்த்த எஹ்ரட், ஒரு ஆரோக்கிய சாலையைத் தொடங்கினார். அவருக்கு ஏற்பட்டிருந்த தெளிவுகளை அடிப்படையாக வைத்து, ஆரோக்கியம் பற்றிப் பேருரைகள் நிகழ்த்த ஆரம்பித்தார். ஊர் ஊராகப் போய் பேசும் அளவுக்குப் பிரபலமானார். அப்படி அவர் செய்த 25 பேருரைகளின் தொகுப்புதான் அவரது மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் The Mucusless Diet Healing System என்ற நூலாகும்.

அந்த நூலை எழுதி இரண்டு வாரங்கள்தான் ஆகியிருக்கும். விரதம் மேற்கொள்வதன் மூலமாக எப்படி ஆரோக்கியத்தை மீட்கலாம் என்ற தலைப்பில் அவர் நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்க கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு கூட்டத்திலும், குறைந்தது நூறு பேருக்காவது உட்கார இடமில்லாமல் போனது. அப்படி ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு எண்ணெய் படிந்த சாலையொன்றில் அவர் வந்துகொண்டிருந்தபோது, கால் வழுக்கி பின்பக்கமாக விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 56 தான்! ஆனாலும், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய - அமெரிக்க இயற்கை மருத்துவ இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளராக ஆனார் எஹ்ரட்.

வாய்வழியாகவும், எழுத்து மூலமாகவும் இந்த உலகுக்குக் கிடைத்திருக்கும் அவரது கருத்துகள் பல உண்மைகளை நமக்கு விளக்கும். இதுகாறும் நம்பப்பட்டு வந்த பல விஷயங்கள் விஞ்ஞானப்பூர்வமான பொய்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும். பல தவறான கருத்துகளை நாம் தவிர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கேட்கலாமா?

எஹ்ரட் பேசுகிறார்…

‘‘கடந்தகால அனுபத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். தவறான உணவுப் பழக்கமே என் நோய்க்கான காரணம். அப்படியானால், சரியான உணவுப்பழக்கம் என் நோயைத் தீர்க்கலாம் என்று பட்டது. இறைச்சி சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதையும் நான் கவனித்தேன். சைவர்கள் பெரும்பாலும் வெளுத்தும் நோயுற்றவர்களாகவும் தோன்றினார்கள்”. (என்னைப் போன்ற தீவிர அசைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது)!

‘‘மாவுச்சத்து கொண்ட உணவாலும் பால் எடுத்துக்கொண்டதாலும் என் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உடல்கூறியல், வேதியியல் தொடர்பாகப் படித்தேன். எனக்கு அல்புமின் தேவைப்பட்டது என்று எண்ணினேன். அதனால் ஃப்ரான்ஸில் இருந்த நைஸ் என்ற ஊருக்குச் சென்று ஒவ்வொரு நாளும் பழங்களும் கொஞ்சம் பாலும் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு பரிசோதித்துப் பார்த்தேன். ஆனால் பெரிதாக பலன் எதுவும் ஏற்படவில்லை. சில நாட்கள் நன்றாக இருந்தது. வேறு சில நாட்களில் நிலைமை ரொம்ப மோசமாக ஆனது. பின்னர் ஊர் திரும்பி, என் மீது அன்புகொண்ட நண்பர்களும் உறவினர்களும், மருத்துவர்களும் சொன்னபடி பழையபடி ‘நல்ல உணவு’களை மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்”.

‘‘விரதம் இருப்பது பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று என் எல்லா நண்பர்களும், உறவினர்களும் எச்சரித்தனர். என்னப்போல ப்ரைட்ஸ் நோய் உள்ளவர்கள் விரதமிருந்தால் செத்துப்போய்விடுவார்கள் என்று என் சகோதரியிடம் ஒரு இயற்கை வைத்தியர் சொன்னார்.”

‘‘பழங்களும், சளி பிடிக்காத உணவு வகைகளும் உடலில் செரித்த பிறகு க்ரேப் சுகர் (Grape Sugar) என்ற நன்மை செய்யும் ஒருவித சர்க்கரையை உண்டாக்குகிறது என்றும் தெரிந்துகொண்டேன். அந்த க்ரேப் சுகர்தான், மனித உணவிலிருந்து கிடைக்கும் மனிதனுக்குத் தேவையான அடிப்படையான பொருள் என்றும் தெரிந்துகொண்டேன். அதுதான் கழிவுகளையெல்லாம் வெளியேற்றுகிறது. மனிதனை குணப்படுத்துவதும் அதுதான் என்றும் தெரிந்துகொண்டேன்”. (உணவு செரித்த பின்னர் நிறைய சமாசாராங்களை, சத்துப்பொருள்களை உடல் உற்பத்தி செய்கிறது. இறுதியாக உடலில் உண்டாவது க்ளூகோஸ் எனும் சர்க்கரைதான். இதில் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பதைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே பார்த்தோம். க்ரேப் சுகர் என்று எஹ்ரட் சொல்வது அதைத்தான்).

“பல உணவுப் பொருள்களைக் கலந்து செய்யும் நவீன கால சமையல் முறைதான் எல்லா நோய்களும் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம்.”

ஆஹா, அடி மடியிலேயே கை வைக்கிறாரே என்று தோன்றுகிறதா? ஆமாம். எஹ்ரட் சிபாரிசு செய்யும் உணவுகள் அல்லது சிகிச்சை என்பது பழங்கள், வேகவைத்த பழங்கள், கொட்டைகள் இவற்றோடு குறுகிய கால மற்றும் நீண்டகால நோன்பு - இவைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஹீலர் என்று அவரைச் சொல்லலாம். அவரது முறையும் மருந்தில்லா மருத்துவ முறைதான்.

அவரது கருத்துகள் எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஏற்றுக்கொள்ளத் தேவையில்லாத பல கருத்துகள் உள்ளன. ஆனாலும் உடல் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், நோய்களை நீக்க அவர் சொல்லும் வழிமுறைகள் பற்றியும் அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மாற்று மருத்துவத்தையும், மருந்தில்லா சிகிச்சையை நோக்கியும் நகர்ந்துகொண்டிருக்கும் நமக்கு அது அவசியமாகும். எதை ஏற்றுக்கொள்வது, எதை விடுவது என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம்). 

‘ஆரோக்கியத்துக்கான திருத்தூதர்’ என்று வர்ணிக்கப்பட்ட ஆர்னால்டு எஹ்ரட்டையும், அவரது நோய் நீக்க வழிமுறைகளையும் பற்றி இன்னும் பார்க்கலாம்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2017/feb/20/42-எஹ்ரட்-டயட்-2652358.html
2613301 சாளரம் நலம் நலமறிய ஆவல் 34. என் கண்ணே! - 2 நாகூர் ரூமி Monday, December 12, 2016 12:00 AM +0530  

கண்ணுக்குத் தெரியாததை இதயம் பார்க்கிறது – சூஃபி ஜுனைத் அல் பக்தாதி

 

உண்மையில் நாம் கண்களால் பார்ப்பதில்லை, மூளையால்தான் பார்க்கிறோம் என்று புரிந்துகொண்டோம். உண்மையில் மூளையும் பார்ப்பதில்லை! நம் ஆன்மாதான் பார்க்கிறது. அல்லது உண்மையான நாம்தான் பார்க்கிறோம். அந்தப் பார்வைக்கு கண்கள் தேவையில்லை. இது என்ன ஆன்மிகம் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? உண்மைதான். உண்மைக்குப் பெயர் ஆன்மிகம் என்றால், நான் ஆன்மிகம்தான் பேசுகிறேன். இந்த உண்மையை நம் பாரம்பரியமும் நம் ஞானிகளும் சொல்லித்தான் சென்றுள்ளார்கள். நாம்தான் புரிந்துகொள்ளவில்லை. இந்த உலகம் ஒரு மாயை என்று நம் இந்தியப் பாரம்பரியம் சொல்லியிருப்பதன் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது புரியத் தொடங்கியிருக்கலாம். நீங்கள் உலகத்தில் இல்லை, இந்த உலகம்தான் உங்களுக்குள் இருக்கிறது என்று ரமணர் போன்ற மகான்கள் சொல்லியிருப்பதன் அர்த்தமும் புரியத் தொடங்கியிருக்கலாம். இருக்கட்டும். மீண்டும் கண்களுக்கு வருவோம். 

நம்முடைய கண் தொடர்பான பிரச்னைகள் பெரும்பாலும் நமது தவறான புரிந்துகொள்ளலால் வருவதாகும் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் நம்முடைய குழப்பம்தான். அல்லது குழப்பத்தின் மீதான நமது நம்பிக்கைதான். என்ன புரியவில்லையா? 

கண்ணில் ஒரு பிரச்னை வந்தால் அது உறுப்பு ரீதியான பிரச்னையா அல்லது செயல்பாடு ரீதியான பிரச்னையா (organic or functional disease) என்று நாம் யோசிப்பதில்லை என்கிறார் ஓர் உளவியலாளர். சத்தியமான வார்த்தைகள். ஏனெனில், ஒரு உறுப்பின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னைகளை அந்த உறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக நாம் புரிந்துகொள்வதுதான் நம் பிரச்னையே! 

உதாரணமாக, அருகில் உள்ளவை கண்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றால், அது பார்வை தொடர்பான பிரச்னையா அல்லது கண் என்ற உறுப்பிலேயே ஏற்பட்ட பிரச்னையா என்று யாரும் யோசிப்பதில்லை. செயல்பாடு ரீதியான பிரச்னையை உறுப்பில் ஏற்பட்ட பிரச்னையாகப் பார்ப்பது அடிப்படைத் தவறாகும். அதைத்தான் அந்த உளவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபற்றி பின்னர் கொஞ்ச விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது. ஏனெனில், நோயாளியின் மனம் என்ற ஒன்றை மருத்துவர்கள் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. 

நம்முடைய மனம் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான எண்ணங்கள் வந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நமக்குத் தெரிந்தும், தெரியாமலும். நம்முடைய பார்வையின் இயக்க முறையும் மனதின் செயல்பாடுகளில் ஒன்றுதான் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. விழிப்பந்தின் வடிவத்தை மாற்றுகின்ற தசைகள், கண்ணில் பட்ட ஒளிக்கதிர்களின் சக்தியை கடத்திக்கொண்டுச் செல்லும் நரம்புகள், மூளையில் பார்வைக்கான மையத்தில் ஏற்படுத்தப்படும் பதிவுகள் – இதெல்லாம் சேர்ந்ததைத்தான் பார்வை என்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. 

இப்படி மூளையில் பதிவான காட்சிகளுக்கான விளக்கத்தை, அர்த்தத்தை மனம்தான் கொடுக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். மனம் என்று சொல்லும்போது நம்முடைய நினைவாற்றல், அனுபவம், இது கருப்பு, இது வெள்ளை என்ற மதிப்பீடு மற்றும் கற்பனை எல்லாம் சேர்ந்த ஒன்று. இவற்றையெல்லாம் சார்ந்துதான் நம் பார்வையின் ஆற்றல் உள்ளது. 

முதல் மனிதர் ஆதமைப் படைத்து தன் ஆன்மாவை அவருக்குள் ஊதியிருப்பதாக இறைவன் கூறுவதாக திருக்குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது (15:29). The Spirit of God என்றும் பொதுவாக அது அறியப்படுகிறது. உளவியலாளர்கள் மனம், ஆழ்மனம் என்று சொல்வதும் அதையே குறிப்பதாகப் புரிந்துகொள்வது கூடுதல் பயனளிக்கும்.

ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். இருட்டில் எரிகின்ற ஒரு ஊதுபத்தியை வட்டமாகச் சுழற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவருக்கு ஒரு தீ வட்டம் தெரியும். ஆனால் அப்படி ஒரு தீவட்டம் உண்மையில் இல்லை. பார்ப்பதற்குத்தான் அப்படித் தெரியும். அவ்வளவுதான். ஏன் அப்படித் தெரிகிறது? ஏற்கெனவே நாம் உள்ளே போட்டு வைத்திருந்த சமாசாரங்களில் இலிருந்து இந்தப் புதிய அனுபவத்தை மனம் விளக்க அல்லது விளங்கிக்கொள்ள முற்படுகிறது. அப்போது நம் நினைவுப்பெட்டகத்தில் இருக்கும் தீ, வட்ட வடிவம் போன்ற விஷயங்கள் அதன் உதவிக்கு வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்து அது தீயால் ஆன வட்டம் என்ற முடிவுக்கு மனம் வருகிறது. எனவே, நம் கண்களும் ஒரு தீவட்டத்தைப் பார்க்கின்றன! என்ன, கொஞ்சமாவது பற்றிக்கொண்டதா இல்லையா?!

கண்கள் செய்த அற்புதம்

உண்மையில், பார்ப்பது கண் அல்ல என்பதை ஒரு உளவியலாளர் ஒரு பரிசோதனையின் மூலம் நிரூபித்தார். Use Your Own Eyes என்ற நூலில் இந்நிகழ்ச்சி பதிவாகியுள்ளது.

கண் பார்வையின் அற்புதத்தை நிரூபிக்க அந்த உளவியல் பேராசிரியர் ஒரு வேலை செய்தார். ஒரு ஸ்பெஷல் மூ.க. தயாரித்தார். அதன் வழியாகப் பார்க்கும்போது பிம்பத்தை தலைகீழாக விழித்திரை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்பே, அந்தக் மூக்குக் கண்ணாடியே ஒளிவிலகலை ஏற்படுத்தி பிம்பத்தை தலைகீழாகக் காட்டியது. 

நேராக உள்ள ஒரு பொருளின் ஒளி பிம்பங்களை தலைகீழாக விழித்திரை வாங்கி பின் அதை நேராகப் புரிந்துகொள்வதுதான் கண்ணின் இயற்கை என்று பார்த்தோம். ஆனால், இந்த ‘லொள்ளு’ பேராசிரியர் செய்த காரியத்தினால், பொருள் தலைகீழாக இருப்பதுபோலத் தெரிந்ததால், விழித்திரையில் பிம்பம் நேராக விழ ஆரம்பித்தது! பகல் பூரா இந்த மூ.க.வை ஒருவரைப் போடவைத்து, இரவில் பார்க்க முடியாதபடி அவர் கண்களையும் கட்டிவைத்து ஒரு பரிசோதனையை அந்த பேராசிரியர் நிகழ்த்தினார். அதனால் என்னானது?

கண் கொஞ்சம் குழம்பிப்போனது. அதாவது, விழித்திரையில் விழும் பிம்பங்களைப் புரிந்துகொள்ளும் மனமும் மூளையும் குழம்பிப்போயின. அதனால் என்னானது? வலது பக்கம் தூண் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த மனிதன் இடது பக்கம் போனான். ஆனால், தூண் இடது பக்கம்தான் இருந்தது! தூணில் போய் அவன் மோதிக்கொண்டான்! இப்படியாகக் கொஞ்சநாள்தான் நடந்தது. அதன்பிறகு அந்த அற்புதம் நடந்தது. அது என்ன?

இது ஒரு சிறப்புக் குழறுபடி, இது சரியானதல்ல என்பதை மூளை புரிந்துகொண்டுவிட்டது! எப்படிக் காட்டினாலும் சரியாகப் பார்க்க ஆரம்பித்தது! என் கண்ணே என்று குழந்தைகளை நாம் கொஞ்சுவோம். இந்த ஆராய்ச்சி பற்றி முதன்முதலில் நான் படித்துத் தெரிந்துகொண்டபோது, என் கண்ணையே அப்படிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது! 

ஒருவருக்குக் கிட்டப்பார்வை இருக்கும்போது, பார்க்கப்படும் ஒரு பொருளில் இருந்து எல்லா ஒளிக்கதிர்களும் விழித்திரையில் விழுவதில்லை. ஏனெனில், விழிப்பந்து மிக நீளமாக ஆவதால், தூரப்பொருள்களில் இருந்து விழும் ஒளிக்கதிர்கள் விரைவில் சந்திக்கின்றன. தூரப்பார்வை உள்ள ஒருவருக்கு இதற்கு நேர்மாறானது நடக்கிறது. விழிப்பந்து ரொம்ப சின்னதாக ஆவதால், ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் விழுகின்றன. சிதறல் பார்வை கொண்டவர்களுக்கு, விழிப்பந்தின் வடிவம் சரியான கோளவடிவில் இல்லாமல் போவதால், அசாதாரண முறையில் ஒளிக்கதிர்களை ஒளிவிலகல் செய்து சிதறல் பார்வையை ஏற்படுத்துகிறது – இப்படியாகத்தான் கண்ணில் தோன்றும் பிரச்னைகளைப் பற்றிய பாட நூல்கள் கூறுகின்றன. 

ஆனால் மேலே சொன்ன உளவியல் பேராசிரியர் நடத்திய பரிசோதனையில் நடந்தது என்ன? கன்னாபின்னாவென ஒரு பொருளைக் காட்டியபோதும், முதலில் குழம்பிய கண் பின்னர் தன்னைத்தானே சரிசெய்துகொண்டு, பொருளை எப்படிக் காட்டினாலும் சரியான வடிவத்தில், சரியான திசையில் அதைப் புரிந்துகொண்டு பார்த்தது. அப்படியானால் கிட்டபார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை என்று சொல்லப்படும் பிரச்னைகளையெல்லாம்கூட அது சரி செய்துகொள்ளும் சாத்தியம் உண்டல்லவா?

அப்படியானால் விழித்திரையல்லாத, பார்வை தொடர்பான வேறு ஏதோ ஒன்று சரியாகப் புரிந்துகொண்டு, விழித்திரையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பார்வைக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது என்றுதானே அர்த்தம்? உண்மையில் பார்ப்பது கண் அல்ல, இறைவன் கொடுத்த உயிர் எனும் ஆற்றல்தான் என்பதை இப்பரிசோதனை அற்புதமாக நிரூபித்தது. அதை ஆழ்மனம் என்றுகூடச் சொல்லலாம். தவறில்லை. வார்த்தை முக்கியமில்லை. புரிந்துகொள்ளல்தான் முக்கியம். 

மூ.க. அணிய வேண்டியது நமக்கு ஒரு தேவையாக, அவசியமாகக்கூட இருக்கலாம். ஆனால், பார்வையில் ஏற்படும் ஒரு தவறை, ஒரு கோளாறை மூ.க. சரி செய்கிறது என்ற நினைப்பு சுத்தமான கற்பனை மட்டுமே. அது எதையும் சரிசெய்வதில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. கண்ணில் உள்ள லென்ஸுக்கு பதிலாக மூக்குக் கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாகப் பார்க்க அது உதவுகிறது. அவ்வளவே. 

ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தால், ஒளிக்கதிர்களை முறையாக விழித்திரையில் பாயவிடாமல் நரம்புகளின் இயக்கம் சரியாக இல்லாமல் போய்விட்டதென்று அர்த்தம். நரம்புத் தூண்டுதல்களில் உள்ள குளறுபடிகளே பலவிதமான பார்வைக் கோளாறுகளுக்குக் காரணங்களாக அமைகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

ஒவ்வொரு சரியான பார்வைக்கும் அல்லது பார்வைக் கோளாறுக்கும் visual centre என்று சொல்லப்படும் பார்வை மையத்திலிருந்து வரும் உத்தரவுகள்தான் காரணம் என்றும், அந்த உத்தரவுகள் நரம்புகள் வழியாக விழியின் தசைகளை வந்தடைகின்றன என்றும், அந்த உத்தரவுகளுக்குத் தக்கவாறு சரியாகவோ, குளறுபடியாகவோ நாம் பார்க்க நேரிடுகிறது என்பதும் அவர்கள் வாதம். மேலே பார்த்த உதாரணம் மூலம் நாம் இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். 

அக்காமடேஷன் (Accommodation)

கண் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நடக்கும் மாற்றங்களை கண்ணியல் நிபுணர்கள், மருத்துவர்கள் ‘அக்காமடேஷன்’ என்ற சொல்லால் குறிக்கிறார்கள். அதாவது, தான் பார்க்கும் பொருளுக்கும் தனக்கும் இடையில் உள்ள தூரத்துக்குத் தக்கவாறு கண் அல்லது லென்ஸ் தன்னை தகவமைத்துக்கொள்கிறது என்று அர்த்தம். இந்த ‘அக்காமடேஷன்’ எப்படி நடக்கிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. 

1614-ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. கண்ணின் லென்ஸின் வடிவத்தில் மாற்றம் செய்வதன் மூலம் குவிமையத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. பிறகு, 1894-ல் வாழ்ந்த ஜெர்மன் டாக்டர் ஹெம்ஹோல்ட்ஸ் என்பவராலும் இக்கருத்து உறுதி செய்யப்பட்டது. அதாவது, விழி லென்ஸின் வெளிப்பக்கமாகக் குவிந்த அமைப்பு நீளும்போது, அதில் விழும் படிமங்கள் சின்னதாகத் தெரியும் என்பதுதான் கருத்து. இதற்கு ‘அக்காமடேஷன்’தான் காரணம் என்று புரிந்துகொள்ளப்பட்டது. இது தவறு என்பதை பின்னாளில் டாக்டர் வில்லியம் பேட்ஸ் நிரூபித்தார்.

டாக்டர் ஹெம்ஹோல்ட்ஸ்

கண்ணின் லென்ஸ் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள், ஒளிவிலகலைச் சந்திக்கின்றன. எந்தப் பொருளின் உருவமும் விழித்திரையில் விழும் முன், ஒளிவிலகல் நிகழ்ந்தே ஆக வேண்டும். ஒருவேளை லென்ஸே இல்லாவிட்டால் என்னாகும்? அப்போதும் நம் கண் ‘அக்காமடேட்’ செய்துகொள்ளும்! அப்படியானால், லென்ஸின் குவியளவு நீளுவதற்கும், ஒரு படிமம் சின்னதாகத் தெரிவதற்கும் தொடர்பில்லை என்றுதானே அர்த்தம்? ‘கேட்டராக்ட்’ எனப்படும் கண்ணில் பூவிழும் நோய்க்கான நிவாரண அறுவை சிகிச்சையின்போது என்ன நடக்கிறது? இயற்கை நமக்குக் கொடுத்த கண்ணின் லென்ஸ் நீக்கப்படுகிறது! ஆமாம். ‘கேட்டராக்ட் ஆபரேஷன்’ என்பது அதுதான். அதன்பிறகு என்னாகிறது? லென்ஸ் இல்லாமலே பார்க்கக் கற்றுக்கொள்கிறது நம் கண்!

1892-ம் ஆண்டு பேராசிரியர் ஃபார்ஸ்டர் என்பவர் ‘கேட்டராக்ட்’ அறுவை சிகிச்சையில் லென்ஸ் நீக்கப்பட்ட 22 பேர்கள் எப்படி எந்தப் பிரச்னையும் இன்றிப் பார்த்தார்கள் என்று அறிவித்தார். அவருடைய 22 பேர்களில், 11 வயதிலிருந்து 74 வயதுடையவர்கள் வரை இருந்தனர்! அமெரிக்க ஆப்தால்மாலஜி சொசைட்டியை சேர்ந்த டாக்டர் டேவிஸ் என்பவருடைய நோயாளி ஒருவருக்கும் கண் புரைக்காக லென்ஸ் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், அவராலும் லென்ஸ் இல்லாமல் நன்றாகப் பார்க்க முடிந்ததை டேவிஸ் தன் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தினார். பின்னர் அதுபற்றி Accommodation in the Lensless Eye என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும் வெளியிட்டார்.

லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்கள் விழித்திரையை அடைந்து அதன் பின் அவை மின்னதிர்வுகளாக மாற்றப்பட்டு, அவ்வதிர்வுகள் மூளையை அடைந்து, அதில் உள்ள பார்வை மையத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு நாம் ‘பார்க்கிறோம்’ என்பதுவரை புரிந்துகொண்டோம். ஆனால், லென்ஸ் இல்லாமலே நம் கண்கள் ‘அக்காமடேட்’ செய்துகொள்கின்றன என்பது முன்னர் சொன்ன உயிர்தான் பார்க்கிறது என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. உயிர் பற்றி ரொம்ப யோசிக்க முடியாது என்பதால், இப்போதைக்கு அதை ஆழ்மனம் என்றோ மூளையின் ஒரு முக்கியப் பகுதி என்றோ வைத்துக்கொள்ளலாம். 

‘அக்காமடேஷன்’ பற்றிப் பேசிவிட்டதனால், டாக்டர் வில்லியம் பேட்ஸைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒருவகையில், கண் பற்றிய இக்கட்டுரைகளின் முக்கியக் கதாநாயகனே இவர்தான். கண் மருத்துவ உலகில் இவர் ஒரு புரட்சியாளர். கண் பற்றிய பல ‘விஞ்ஞானரீதியான புனைவுகளை’ உடைத்தெறிந்தவர் இவர். நிறைய எதிர்ப்புகளை இவர் சந்தித்தார். 

டாக்டர் வில்லியம் பேட்ஸ்

விக்கிபீடியாவில் இவர் பெயரைப் போட்டுப் பார்த்தால், அதில் இவருடைய வழிமுறைகள் questionable என்றும், mainstream ophthalmology-க்கு எதிரானது என்றும் போட்டிருக்கும். விக்கிபீடியாவில் ஒரு விஷயம் விஞ்ஞானப்பூர்வமானதில்லை என்று போட்டிருந்தாலே, அது மிகச்சரியான வழிமுறை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்! ஏனெனில், மனித குலத்துக்கு பெரும் நன்மைகள் செய்த யாருடைய கருத்தையும் உலகம் இப்படித்தான் பார்க்கிறது. ஏனெனில், விக்கிகளை உருவாக்கிய வணிக முதலாளிகளுக்கு எதிராக எது இருந்தாலும் அது விஞ்ஞானத்துக்கு எதிரானது என்றுதான் சொல்லப்படும். கிருமிகளைப் பற்றி தப்பு தப்பாகச் சொன்ன லூயி பாஸ்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்கும் விக்கி, அவர் தவறு என்று நிரூபித்த பிசாம்ப்-புக்கு ஒரு பக்கம்தான் ஒதுக்கியுள்ளது!

பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. 19 வயதுப் பெண்ணுக்கு வானவர் தலைவர் மைக்கேல், தூய காதரீன், தூய மார்கரெட் ஆகியோர் காட்சி கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஃப்ரான்ஸை மீட்டு, ஏழாம் சார்லஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உத்தரவு கொடுத்தனர். கிராமத்துப் பெண்ணான அவள், அவ்வுத்தரவுகளை ஏற்று ஆங்கிலேயருக்கு எதிராக ஃப்ரெஞ்சுப் போர்வீரர்களுக்குத் தலைமையேற்று போர்செய்து, ஆர்லியன்ஸ் என்ற இடத்தில் பெரு வெற்றியையும் பெற்றாள்! போர் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கிராமத்துப் பெண்! எல்லாம் தெய்வீக ஆற்றல். அவள் பெயர் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைப் பற்றித் திரைப்படம்கூட வந்துள்ளது.

ஆனால் அவள் பொய் சொல்கிறாள், எங்களுக்குக் காட்சி கொடுக்காத தூயவர்களும் வானவரும் 19 வயதே இருந்த ஒரு சாதாரணப் பெண்ணுக்கு எப்படிக் காட்சி கொடுக்க முடியும் என்று சொல்லி அவளைக் கைது செய்த ஆங்கிலேயத் திருச்சபையினர், அவளைக் கட்டிவைத்து உயிருடன் கொளுத்தினர். ஆனால், அவள் இன்று ஒரு புனிதராக தூய ஜோன் என்று அறியப்படுகிறார். 

உண்மையைச் சொன்னவர்களுக்கு இந்த கதிதான் வரலாறு முழுவதும் கிடைத்திருப்பதைக் காண முடிகிறது.

டாக்டர் வில்லியம் பேட்ஸுக்கும் அதுதான் நடந்தது. ஆனால் அவரது பரிசோதனைகள், முயற்சிகள், கவனிப்பு மூலம் ஆயிரக்கணக்கானோர் கண் பார்வை பெற்றனர். அவருடைய வழிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு பயன் கொடுத்து வருகின்றன. 

மூ.க. இல்லாமல் சரியாகப் பார்க்க வேண்டுமென்றால், இன்று இருக்கும் ஒரே சிறந்த வழி பேட்ஸின் வழிமுறைகள்தான். அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் அவர் என்னென்ன செய்தார், என்னவெல்லாம் சொன்னார் என்றும் பார்க்கவேண்டி உள்ளது. பார்க்கலாமா?

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/dec/12/34-என்-கண்ணே---2-2613301.html
2609812 சாளரம் நலம் நலமறிய ஆவல் 33. என் கண்ணே! நாகூர் ரூமி Monday, December 5, 2016 12:00 AM +0530  

அது ஃப்ளாரன்ஸ் நகரத்தில் இருந்த ஒரு தேவாலயத்தோடு இணைந்த இடுகாடு. அதில் ஒருவரின் சமாதியில் கீழ்க்கண்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன:

‘மூக்குக் கண்ணாடியை உருவாக்கிய சால்வினோ டெக்லி அர்மாட்டி இங்கே உறங்குகிறார். அவருடைய பாவங்களை இறைவன் மன்னிக்கட்டும்’!

அவர் என்ன பாவம் செய்தார் என்ற கேள்வியில் உங்களுக்கு மூக்குக்கு மேல் வியர்க்கிறதா? ஆம், அதேதான். அவர் செய்த பாவம் மூக்குக் கண்ணாடிதான்! அது ஏன் பாவம்? அது மனிதகுலத்துக்கு செய்யப்பட்ட மிகப்பெரும் நன்மையல்லவா என்று கேட்கத் தோன்றுகிறதா?

பதில்: ஆம் நன்மைதான். ஆனால் இல்லை. என்ன, வரும் ஆனால் வராதுபோல குழப்பமாக உள்ளதா? மூ.க. (மூக்குக் கண்ணாடி) போட்டால் பார்ப்பதெல்லாம் சரியாகத் தெரியும்தான். ஆனால் கண்ணின் பார்வைத் திறன் குறைந்துகொண்டே போகும். மூ.க. ஒரு தாற்காலிக ஏற்பாடுதான். ஆனால் அதுவே இன்று நிரந்தரமாகிவிட்டது. மூ.க. இல்லாமல் எல்கேஜி படிக்கும் குழந்தைகூட இல்லை என்னுமளவுக்கு மூ.க. பெருகிவிட்டது.

கண்பார்வை சரியாக இருக்கும்வரை நாம் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் பார்வையில் ஏதாவது ஒரு சின்ன பிரச்னை வந்துவிட்டால் போதும், உடனே மூ.க.வின் உதவியை நாடுகிறோம். அதை மிகச்சரியானதாக, மிக உயர்ந்த தரமுள்ளதாகக் கொடுக்கும் மருத்துவமனை எது என்று சிந்தித்து அங்கே செல்கிறோம். இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு மூ.க. கிடைக்கிறதென்றால் நமக்கு அதன் மீது நம்பிக்கை வருவதில்லை! புகழ்பெற்ற மருத்துவமனையின் கண் மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அவர் எழுதிக்கொடுத்த ‘ப்ராண்ட்’ கண்ணாடியை ‘ப்ராக்ரஸிவ் லென்ஸ்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு பதினைந்தாயிரம் கொடுத்து கண்ணில் மாட்டிக்கொண்ட பிறகுதான் நிம்மதியும் பெருமையும்! இப்படித்தானே போகிறது நம் காலம்?! சின்ன அரிப்பு ஏற்பட்டால்கூட பெரிய அப்பல்லோவுக்குத்தான் நான் போவேன் என்று சொல்வதில்தானே நமக்குப் பெருமையாக உள்ளது! காலத்தின் கோலம் என்பது இதுதான்! நோய்நொடி இல்லாமல் நான் இருக்கிறேன் என்று பெருமைப்பட வேண்டிய மனிதன் மருத்துவமனை, மருத்துவர்களின் பெயர்களில் பெருமை கொள்ளும்படி காலம் நம்மை மாற்றிவிட்டது!

ஆனால் நீங்கள் தங்க ஃப்ரேம் போட்டு மூ.க. போட்டுக்கொண்டாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல, மூ.க.வின் ‘பாய்ன்ட்’கள் கூடிக்கொண்டே போகும். அப்படீன்னா, கண்களின் திறன் குறைந்துகொண்டே போகிறது என்று அர்த்தம்! கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் குருடர்களாக்கும் முயற்சிதான் மூ.க. அணிவதும், அணியச் சொல்வதும் என்று நான் சொன்னால், அது உங்களுக்கு அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியலாம். ஆனாலும் உண்மை அதுதான்! போகட்டும், இந்த விஷயத்துக்கு கொஞ்ச நேரம் கழித்து வரலாம். கொஞ்சம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு உங்களைத் தயார் செய்யவேண்டி உள்ளது!

மூ.க. போடாத மனிதர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு கண்ணாடி அல்லது கண்ணுக்கு உள்ளே பொருத்திக்கொள்ளும் லென்ஸ்களின் சாம்ராஜ்ஜியம் இன்று கோலோச்சுகிறது. சின்னப் பிள்ளைகளும் இளைஞர்களும், இளைஞிகளும் தடித்த சோடாபுட்டிகளுடன்தான் பள்ளிக்கூடம், கல்லூரி என்று போய்க்கொண்டுள்ளார்கள். கண்ணாடியைக் கொஞ்ச நேரம் கழட்டிவிட்டால் அவ்வளவுதான். உலகமே ‘ப்ளர்’ ஆகிவிடுகிறது அவர்களுக்கு. இதுதான் நடப்பு நிஜமாகும். ‘கண்களுக்கான முடவனின் ஊன்றுகோல்’ (optical crutches) என்று மூ.க.வை வர்ணிக்கிறார் உலகப்புகழ் பெற்ற ஒரு கண் மருத்துவர்! அவர் பெயரை அப்புறம் சொல்கிறேன், ஏனெனில் அவர்தான் இக்கட்டுரைகளின் கதாநாயகரே!

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், ஆண்ட்ராய்டுகள், ஆப்பிள்கள் எல்லாம் வருவதற்கு முன், மனிதன் வேட்டைக்காரனாக, விவசாயியாக, மேய்ப்பனாக, போர்வீரனாக – இப்படியெல்லாம்தான் இருந்தான். அந்த வேலைகளுக்கெல்லாம் அவனுக்கு தூரப்பார்வையே போதுமானதாக இருந்தது. தூரத்தில் உள்ளதைப் பார்க்க கண்கள் சிரமப்பட வேண்டியதில்லை. ஓய்வாக கண்களைப் போட்டுவைத்தாலே போதும். வானத்தையும் மேகத்தையும், நிலவையும் பார்க்க நம் கண்கள் சிரமப்படுமா என்ன? ஆனால், இந்தக் காலத்தில்தான் ‘எல்லாவற்றையும்’ ரொம்ப கிட்டப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கான அவசியமும் வந்துவிட்டது! இது ‘க்ளோஸப்’புகளின் காலம். எழுத்து வந்த பிறகு கண்களுக்கு புதியதொரு வேலை வந்துவிட்டது.

சரி, நான் இப்போது கேட்கிறேன். மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள். மூ.க. போடாமலே உங்களுக்குப் பார்வை பிரமாதமாகத் தெரியும் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? மூ.க. அணியாமலே, அல்லது அணிந்ததை கழற்றி வைத்துவிட்டு வெறும் கண்களுடனேயே சில பயிற்சிகளை மேற்கொண்டால் இழந்த பிரகாசமான பார்வையை மீண்டும் பெறமுடியும் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான். ஆனால் அந்த உண்மையை உணர்ந்துகொள்வதற்கு உங்கள் கண்களைப் பற்றி இதுவரை தெரியாமல் இருந்த சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பார்க்கலாமா? வாருங்கள்.

கண்ணின் சரீர சாஸ்திரம்

கண்ணின் அமைப்பு பற்றியும் அதன் முக்கிய வெளி மற்றும் உள்ளுறுப்புகள் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம்தான். ஏனெனில், எல்லா உறுப்புகளின் பெயர்களையும் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்தால், போங்கப்பா, நான் மூ.க.வே போட்டுக்கொள்கிறேன் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாம்! எனவே மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைப்பதை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நம் கண்கள் கோள வடிவமானவை. அப்படியா என்று கேட்கக்கூடாது. சதுரமாகவோ, செவ்வகமாகவோ இல்லை. பரிபூரண வட்ட வடிவம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏறத்தாழ அப்படி என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டு பகுதிகள் சேர்ந்ததாக கண் உள்ளது. முன்னால் ஒரு பகுதியும் பின்னால் ஒரு பகுதியும். முன்னால் உள்ள பகுதியில் கார்னியா (cornea), ஐரிஸ் (iris), லென்ஸ் ஆகிய உறுப்புகள் உள்ளன. தமிழில் இந்தப் பாகங்களுக்கு குழப்பமான பெயர்கள் கொடுத்திருப்பதால், நான் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறேன்.

கண் கோளத்தின் முன்பகுதி கார்னியா. உள்ளே இருக்கும் ஐரிஸ், கண்ணின் பாவை ஆகியவற்றை பாதுகாக்க இது உதவுகிறது. கார்னியா ஒளி ஊடுருவக்கூடியதாகவும் வளைவாகவும் இருக்கிறது. கார்னியா என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், அதற்குள் ஐந்து அடுக்குகள் உள்ளன! மனித உடலின் பெரும்பாலான பகுதிகள் அடுக்குகளால்தான் ஆக்கப்பட்டுள்ளன. எதுவுமே ‘சிம்பிளா’ன விஷயமில்லை. மிகமிகச் சிக்கலான சமாசாரம்தான் நம் உடல். செய்தது யார் இறைவனல்லவா! அப்படித்தான் இருக்கும்!

ஸ்க்ளீரா என்பது கார்னியாவின் பின்பகுதி முழுவதும் என்று சொல்லலாம். அது வெள்ளை நிறத்தில் உள்ள புறத்தோலாகும். அதோடு கார்னியா இணைந்திருக்கும். ஒரு வட்டம் வரைந்த பிறகு வலது பக்கமாக அவ்வட்டத்தில் கொஞ்சம் கூடுதலாக ஒரு பிதுக்கம் மாதிரி வரைந்தால், அந்தப் பிதுக்கம்தான் கார்னியா, மீதிப்பகுதி ஸ்க்ளீரா. கண்ணின் உள் பகுதியில் விழித்திரை எனப்படும் ரெட்டினா இருக்கும். மிக முக்கியமான பகுதிகளைப் பற்றி மட்டும்தான் நான் பேசுகிறேன் (ஏனெனில் எனக்கு அவ்வளவுதான் தெரியும்)!

கண்ணைத் திறந்து நிலைக்கண்ணாடியில் நம் கண்களையே பார்த்தால் இந்தப் பாகங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். வெள்ளையாகத் தெரியும் பகுதிதான் ஸ்க்ளீரா. ஸ்க்ளீராவின் முன்பகுதியாக இருப்பதுதான் கார்னியா. பாவைக்குப் பின்னால் லென்ஸ் இருப்பதால் அது தெரிவதில்லை.

கார்னியாவும் ஸ்க்ளீராவும் சேர்ந்து ஆறு பகுதிகள் என்று வைத்துக்கொண்டால் கார்னியா மட்டுமே ஒரு பகுதியாக இருக்கும். மீதி ஆறில் ஐந்து பகுதிகள் கண்ணின் பின்பக்கத்துக்குப் போய்விடுகின்றன, புரிகிறதா? இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட 24 மி.மீ. குறுக்களவு கொண்டது என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் தேவையில்லை. நமக்கு வாத்து முட்டைக் கண்ணாக இருந்தால் என்ன, சீனக்கண்ணாக இருந்தாலென்ன, ஊனக்கண்ணாக இல்லாமலிருந்தால் போதாதா?!

கார்னியாவை ஊடுருவி, கண்ணின் பாவை வழியாகச் சென்று பின் லென்ஸை கடந்து ஒளிக்கதிர்கள் செல்லும். பார்க்கப்படும் பொருள் எவ்வளவு அருகில் அல்லது தூரத்தில் இருக்கிறது என்பதற்குத் தகுந்தவாறு லென்ஸ் தன் அளவை ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளும். இதை கண்ணின் ‘அக்காமடேஷன்’ என்று சொல்கின்றனர். இதுபற்றி கொஞ்சம் விரிவாக பின்னர் பார்க்க இருக்கிறோம்.

கார்னியா, பாவை, லென்ஸ் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள் கடைசியில் போய் ரெட்டினா மீது விழும். அங்கே அவை மின்சாரக் குறிப்புகளாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும். அங்கே உள்ள பார்வை மையம் அதை உள்வாங்கிக்கொண்டு, ஹலோ நீ இப்போது ஒரு யானைக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கிறாய் என்று நமக்குச் சொல்லும். நாமும் யானையைப் பார்ப்போம்!

கண்ணின் முன்பக்கத்தில் தெரியும் வட்டம்தான் ஐரிஸ் எனப்படும். அகராதியில் இதற்கு ‘கருவிழி’ என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான தமிழாக்கமல்ல. ஏனெனில், ஐரிஸின் நடுவில் இருக்கும் வட்ட வடிவ திறப்பை வேண்டுமானால் கருவிழி என்று சொல்லலாம். ஆனால் அது பாவை எனப்படுகிறது. எனவே, நான் ஐரிஸ் என்றே சொல்லிவிடுகிறேன்.

சாதாரணமாக நம் கண்ணைப் பார்த்தாலே ஐரிஸ் தெரியும். ஐரிஸை சுற்றி இருக்கும் வட்ட வடிவமான திறப்பு அல்லது ஐரிஸின் நடுவில் இருக்கும் சிறு வட்டம்தான் பாவை (pupil). ஐரிஸின் நிறம் பொதுவாக நீலமாகவோ பழுப்பாகவோ இருக்கும். உங்கள் கண்களின் நிறம் என்னவென்பதை ஐரிஸை வைத்துதான் முடிவு செய்வார்கள்.

பாவையின் குறுக்களவை ஐரிஸ்தான் நீட்டவோ சுருக்கவோ செய்யும். அப்படிச் செய்யும்போதுதான் ரெட்டினா எனப்படும் விழித்திரையின் மீது, தேவைக்கேற்றவாறு அதிகமாகவோ குறைவாகவோ ஒளி பாயும். அதாவது, ரெட்டினா மீது எவ்வளவு ஒளி பட வேண்டும் என்பதை ஐரிஸ் கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். வெளிச்சம் அதிகமாக இருந்தால் பாவை சுருங்கிக்கொள்ளும். குறைவாக இருந்தால் விரிந்துகொள்ளும்.

கண்ணின் வெளிப்பக்கத்தில் ஆறு தசைகள் இணைந்துள்ளன. மேலே, கீழே, பக்கவாட்டில் என நான்கு தசைகள். அவற்றுக்கு ரெக்டி (recti) என்று பெயர். கண்களை எந்தத் திசையில் வேண்டுமானாலும் திருப்ப இத்தசைகளே உதவுகின்றன. மேலும் இரண்டு சாய்வு தசைகள் (oblique muscles), கண்களுக்கு உள்ளே உள்ள குழியில் பெல்ட் போட்ட மாதிரி கண்களைப் பாதுகாக்கின்றன.

இத்தசைகள் யாவும் சமமாகச் சுருங்கினால், கண்ணின் தோற்றமே தட்டையாக மாறிப்போகும். அப்போது முன்பக்கம் பின்பக்கத்துக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைந்திருக்கும். அந்நிலையைத்தான் தூரப்பார்வை என்கின்றனர். தூரப்பார்வை உள்ளவர் தூரத்தில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியாது. இதற்கு நேர் மாறானது கிட்டப்பார்வை.

மேலே குறிப்பிட்ட இரண்டு சாய்வு தசைகளும் கண்ணின் மையப்பகுதியைச் சுருக்கித் தட்டையாக்கும்போது, நீளவாக்கில் அப்பகுதி நீண்டுவிடுகிறது. அப்போது கண்ணின் முன்பக்கச் சுவர்களுக்கும் பின்பக்கச் சுவர்களுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாகிறது. அருகில் உள்ளவற்றைப் பார்க்க இந்நிலை தேவைப்படுகிறது.

கண்ணின் உட்புறம் இரண்டு அறைகளாக உள்ளது. விழியின் முன்பக்கச் சுவர் போன்ற அமைப்பின் பின்புறமாக ஒரு சின்ன அறை போன்ற அமைப்பு உள்ளது. அதில் ஒரு மெல்லிய திரவம் நிரப்பப்பட்டுள்ளது. விழியின் முன்பக்கத்தையும் லென்ஸையும் அதுதான் பிரித்துவைத்துள்ளது. விழியின் உள்சுவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது விழியின் லென்ஸ். அந்த லென்ஸுக்கு பின்பக்கமும் ஜெல்லி போன்ற ஒரு திரவம் உள்ளது. முன் பின் இருக்கும் இந்தத் திரவங்கள் கொடுக்கும் அழுத்தத்தால்தான், கண்ணின் கோள வடிவம் குலையாமல் காப்பாற்றப்படுகிறது என்றும் சொல்லலாம். கண்ணின் லென்ஸுக்குள்ளும் திரவ சமாசாரங்களே உள்ளன.

விழியின் சுவர்கள் ஒளி ஊடுருவ முடியாதவை (opaque). லென்ஸ் வழியாகத்தான் ஒளி உள்ளே செல்ல முடியும்.

ரெட்டினாவில் பத்து அடுக்குகள் உள்ளன என்றால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை. ரெட்டினாவின் முடிவில் தண்டுகளும் கூம்புகளுமாய் (rods and cones) இருக்கும். நாம் பார்க்கும் பொருளின் நிறம் என்ன, வடிவம் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள அவை உதவுகின்றன. உள்ளே போகும் ஒளி எனப்படும் மின்காந்த அலைகளை மின்வேதிப்பொருள் அலைகளாக மாற்ற அவை உதவுகின்றன. ‘ரேடியன்ட் எனர்ஜி’ எனப்படும் ஆற்றலை வேறுவகையான ஆற்றலாக மாற்றுகின்றன. எல்லாம் முடிந்து, மூளையில் இருக்கும் பார்வை மையம் (visual center) என்ற பகுதிக்குச் செல்கின்றன. கடைசியாக, மூளையின் அந்த மையம்தான் நாம் பார்ப்பது பெண்ணா அல்லது பொம்மையா என்பதைப் புரியவைக்கிறது!

ஒரு பெண்ணைப் பார்த்து நாம் ஜொள் விடுவதற்கு முன் ஆயிரக்கணக்கான மின்காந்த வேதியியல் மாற்றங்களை நம் விழி நிகழ்த்திவிடுகிறது! கண்மூடிக் கண் திறக்கும் நேரத்துக்குள் அவையெல்லாம் நிகழ்ந்துவிடுவதால் நமக்கு அவளுடைய அழகு, நிறம், உயரம் இன்ன பிறவெல்லாம் சட்டென்று மூளைக்குள் பதிவாக, நாம் ‘மெர்சலாகி’விடுகிறோம்! ஆனால் இதற்கெல்லாம் நாம் மேலே பார்த்த ரெட்டினா, பாவை, ஐரிஸ் போன்ற எல்லா உள் உறுப்புகளும் தத்தம் வேலையை சரியாகச் செய்யவேண்டி உள்ளது!

எல்லாமே தலைகீழ்

ரெட்டினாவில் விழும் பிம்பம் எப்போதுமே செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் தலைகீழாகத்தான் விழும். பார்க்கப்படும் ஒரு பொருளின் மேல் பகுதியில் இருந்து விழும் ஒளி விழித்திரையின் கீழ்ப்பகுதியில் விழும். அதேபோல பார்க்கப்படும் ஒரு பொருளின் கீழ்ப்பகுதியில் இருந்து வரும் ஒளி விழித்திரையின் மேல் பகுதியில் விழும். ஏனெனில், அப்பகுதிகள்தான் அந்த பிம்பத்தை வாங்கிக்கொள்ளும் மெல்லுறை அல்லது திரையாகும். அதேபோல, வலது பக்கத்தில் உள்ளது இடது பக்கத்திலும், இடது பக்கத்திலுள்ளது வலது பக்கத்திலும் விழும். நாம் நம்மைக் நிலைக்கண்ணாடியில் பார்த்தால் தெரிவதுபோல. இதுதான் பார்வையில் பிம்பங்கள் விழும் அடிப்படை. இதைப் புரிந்துகொள்வது அவசியம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இறைவன் கொடுத்த பார்வை என்பது எவ்வளவு பெரிய அற்புதம் என்பது விளங்கும். வலது பக்கம் உள்ள பொருள் விழித்திரையின் இடது பக்கமும், இடது பக்கம் உள்ளது வலது பக்கமும், மேலே உள்ளது கீழேயும், கீழே உள்ளது மேலேயும், அப்படி உள்ளது இப்படியும், இப்படி உள்ளது அப்படியும் – இப்படி கண்ணா பின்னாவென்று குழப்பிய காட்சியை ஒவ்வொரு முறையும் நேராக்கி நாம் புரிந்துகொள்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இந்தக் குழப்பங்களும் நேராக்குதலும் நிகழ்ந்துகொண்டே உள்ளன. ஒவ்வொரு கணமும் அது மிகச்சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு பார்க்கப்படுகிறது! இந்த இமாலய வேலை எப்படி எந்நேரமும் சாத்தியப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவோ விளக்கவோ இன்னும் மனிதனால் முடியவில்லை!

ஆனால், கண்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் உள்ளது. ஒரு பொருளை அல்லது மனிதனைப் பார்ப்பதற்குக் கண்ணும் அதைச் சார்ந்த உறுப்புகளும் என்னவெல்லாம் செய்யும் என்று சுருக்கமாகப் பார்த்தோம். ஆனால், கடைசியில் மூளையில் உள்ள பார்வை மையத்துக்குச் (Visual Centre) சென்ற பிறகுதான் நாம் பார்த்தது திரிஷாவையா அல்லது அமித்ஷாவையா என்ற முடிவு கிடைக்கிறது! அது ஒளிப்படம் அல்ல, திரிஷாவேதான் என்று மூளை புரிந்துகொள்கிறது. அது புரிந்துகொண்ட பிறகுதான் நம்மால் திரிஷாவைப் பார்க்க முடியும்! அதாவது, நாம் கண்களால் பார்க்கவில்லை, மூளையால்தான் பார்க்கிறோம்! எப்போதுமே!

நம் மூளையில் உள்ள பார்வை மையத்தை ‘ஆஃப்’ செய்துவைக்க முடிந்தால், நமக்குக் கண்கள் இருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது! பிறகு தடவிப் பார்த்து, தொட்டுப் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும்!

இன்னும் பார்க்கலாம்…

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/dec/05/33-என்-கண்ணே-2609812.html
2593166 சாளரம் நலம் நலமறிய ஆவல் 32. தடுக்காத ஊசி மருந்துகள்! - 3 நாகூர் ரூமி Saturday, November 5, 2016 05:55 PM +0530  

மனிதகுலம் செய்யும் ஆகப்பெரிய பாவம் வேக்ஸினேஷன் கொடுப்பதுதான். இதை இனிமேல் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஒழித்தே ஆக வேண்டும்.

- டாக்டர் ஆண்ட்ரூ மூல்டன்

 

தடுப்பூசிகள் போடுவதாலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதாலும் ஏற்படும் விளைவுகளைக் கொஞ்சம் பார்த்தோம். இந்தியாவில் நடந்தது என்ன என்பதைப் பற்றியும் வேக்ஸின்களால் ஏற்படும் உச்சபட்ச விளைவு என்ன என்பது பற்றியும் இப்போது பார்க்க இருக்கிறோம். பார்க்கலாமா?

இந்தியாவில் நடந்தது என்ன?

சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்தன. 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன.

2002-ல் உ.பி.யில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தவுடன் 26 குழந்தைகளுக்குப் போலியோ ஏற்பட்டது. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிகழ்த்திய பரிசோதனையில், போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு வழக்கம்போல் அந்த விஷயம் மறக்கப்பட்டது என்கிறார் உமர்!

இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர். ஜேக்கப் புலியேல், ஒரு ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் 2006-ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததனால், இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் கூறினார்.

டாக்டர். ஜேக்கப் புலியேல்

2008 மே மாதம், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஏழு மாவட்டங்களில் பத்து குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பியது. அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடைசியில், ‘மருந்துகளில் பிரச்னையில்லை, அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை. வேறு நோய்கள் ஏற்கெனவே இருந்திருக்கலாம்’ என்று சொல்லப்பட்டது.

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா, தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் இப்படியான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரிகளோடு அவை மறக்கப்படுகின்றன (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 23).

தடுப்பூசி மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவை புதிய பாதிப்புகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதுதான் கொடுமை. தடுப்பூசி மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கருத்துகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகள் போடுவதற்குச் சமம்! அப்படியானால், விளைவுகளை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் வேக்ஸின் தயாரிக்கும் கம்பெனிகள் ஏதாவது எச்சரிக்கை கொடுக்கின்றனவா? ஆம். கொடுக்கின்றன!

ஒவ்வொரு தடுப்பூசி மருந்தோடும் அந்த மருந்து பற்றிய எச்சரிக்கை குறிப்பு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக டிஃப்தீரியா (தொண்ட அழற்சி நோய்), கக்குவான் இருமல் மற்றும் டெடனஸ் எனப்படும் இசிவு ஆகிய மூன்றையும் தடுப்பதற்காகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் DPT அல்லது DPT என்று அறியப்படும் தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படும். ஆனால், இதை நாம் யாரும் பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு கவனமாக நாம் எப்போதுமே இருப்பதில்லை. டாக்டரும் நமக்கு அதைக் காட்டமாட்டார். சரி, அப்படி அதில் என்ன இருக்கும்? கீழே படித்துப் பாருங்களேன்:

1. அதிகப்படியான காய்ச்சல் (1050 அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்

3. நீடித்த அசதி

4. விட்டு விட்டு ஏற்படும் அலறல்

5. மூளை வளர்ச்சிக் குறைபாடு

6. அதிகப்படியான துறுதுறுப்பு

7. எப்பொழுதாவது வலிப்பு

8. மூளை பாதிப்பு

9. மயக்கம்

10. கண் நரம்புக் கோளாறுகள்

11. நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு

இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன.

கீழ்க்கண்ட கொடூரமான ரசாயன விஷங்கள் ஒவ்வொரு தடுப்பூசியிலும் உள்ளன. உலகில் தயாரிக்கப்படும் 74 வகையான தடுப்பூசி மருந்துகளிலும் இந்த ரசாயன நஞ்சுகள் அடங்கியுள்ளன. இந்த விஷங்களை நாம் நேரடியாக ரத்தத்தில் ஏற்றுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நம் குழந்தைகள் ஆறு வயதைத் தொடும்போது இவை அனைத்தும் பரிசாகக் கிடைக்கிறது. இந்த அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்.

ரசாயன நஞ்சுகள்

பாதிப்படையும் பகுதிகள்

அம்மோனியம் சல்ஃபேட்
வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்
லாடெக்ஸ் ரப்பர்
திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு
எம்.எஸ்.ஜி.
பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை
அலுமினியம்
அலிமியர்ஸ் நோய், டிமென்ஷியா, வலிப்பு, கோமா
ஃபார்மால்டிஹைட்
மூளை மற்றும் குடல் புற்றுநோய்
பாலிசோர்பேட் 60
நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க் காரணி
டிரைபுடைல் பாஸ்பேட்
சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்
குளுதரால்டிஹைட்
பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்
ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி
ஒவ்வாமை
பாதரசம்
 
வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்.
நியோமைசின் சல்பேட்
சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்
கார்பாலிக் அமிலம்
செல்களை பாதிக்கும் விஷம்
எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் போரக்ஸ்
எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்

இதெல்லாம் போதாதென்று, இவற்றோடு பாதிக்கப்பட்ட மனித, மிருக செல்களும் தேவைக்கேற்ப(!) சேர்க்கப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்ட சிசுவின் திசுக்கள், பன்றி, ஆடு, குதிரைகளின் ரத்தம், முயலின் மூளைத் திசு, நாயின் சிறுநீரகப் பகுதிகள், பசுவின் இதயத் திசுக்கள் போன்றவையும் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன!

வேக்ஸின் இறப்புகள் - சில தகவல்கள்

சரி, இதெல்லாம் இருக்கட்டும். தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாகக் குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDSதான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome! அதாவது, குழந்தை திடீரென இறந்துபோய்விடும் என்பதைத்தான் டெக்னிகலாகச் சொல்கிறார்கள். நவீன கொலைகாரர்கள்!

இந்தத் தொடர்பில், சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர் டாக்டர் புகழேந்தி, தடுப்பூசி பற்றிக் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது:

‘ஒவ்வாமை காரணமாக எந்தத் தடுப்பு மருந்தும் இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. தடுப்பூசி மருந்தில் கலப்படம் ஏற்பட்டாலோ அல்லது மருந்தின் திறனைக் காப்பதற்காகச் சேர்க்கப்படும் (preservatives) வேதிப்பொருட்கள் வினை புரிந்தாலோ இறப்பு நிகழும் அபாயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை மருத்துவர்களும், பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை. மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அதைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்’.

வேக்ஸின்கள் போட்டதால் ஏற்பட்ட சில மரணங்கள்

• 1870 – 71-களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை குத்திக் கொண்டவர்கள்!

• அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு மூன்று பேர் தடுப்பூசியினால் இறக்கிறார்கள் என்று பெடரல் கவர்மென்ட் அறிக்கை கூறுகிறது.

• சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்குப் பத்துப் பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்குப் பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.

• 2008. சென்னை திருவள்ளூர் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போட்டதில் நான்கு குழந்தைகள் இறந்தன. பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய்கள் இழப்பீடு கொடுக்கப்பட்டது.

• 2016. சென்னை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமாராவ் என்பவரின் மூன்று மாத பெண் குழந்தை தனுஜாஸ்ரீக்கு, ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்தில் மஞ்சள்காமாலை, ரனஜன்னி உள்ளிட்ட ஐந்து விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லப்படும் பென்ட்டாவாலன்ட் என்ற தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது.

• தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகரன் - பரணி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுக் குழந்தை இறந்தது.

• சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டதால் இரண்டு குழந்தைகள் இறந்தன. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

• 2008. திருவள்ளூர் அருகேயுள்ள பென்னலூர்பேட்டை அங்கன்வாடி மையத்தில், கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நடந்த தட்டம்மை தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்தன.

• 2008. சென்னை, அயனாவரம் மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை சூர்யா இறந்துபோனான். குழந்தையின் தந்தை ராஜ்குமார், ஒரு தொலைக்காட்சித் தொடர் நடிகர்.

• அமெரிக்காவில் பத்தாண்டுகளில் (2004-15) தட்டம்மை வந்து ஒரு குழந்தையும் சாகவில்லை. ஆனால், தட்டம்மை தடுப்பூசி போட்டு 108 குழந்தைகள் இறந்துள்ளன என்கிறது ஒரு அறிக்கை.

முடிவாக -

வேக்ஸின்கள் எனப்படும் தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ நோய்களிலிலிருந்து குழந்தைகளைப் பாதுக்காப்பதில்லை. இதுவரை பாதுகாத்ததும் இல்லை. அவற்றால் பலன் ஏதும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், உயிருக்கே அபாயம் இருக்கிறது. உயிர் போகாமல் பிழைத்துக்கொள்ளுமானால், வெகுநுட்பமான முறையில் குழந்தையின் ஆரோக்கியத்தை வேக்ஸின்கள் பாதிக்கின்றன. பல சிக்கல்களை வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்திவிடுகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊனமாகிப்போனதை வரலாறு காட்டுகிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையை வாழ்நாள் நோயாளி ஆக்குவதே இந்த வேக்ஸின்கள்தான்.

வேக்ஸினேஷன் என்பது 1700-களில் தொடங்கிய இயல்புக்கு மாறான, இயற்கைக்கு விரோதமான ஒரு மருத்துவ நடைமுறை. விஷத்தன்மை கொண்ட ரசாயனக் கூட்டத்தை உடலுக்குள் அவை அனுப்புகின்றன. பெரியம்மை, கேன்ஸர், மூளைவளர்ச்சி பாதிப்பு, போலியோ என எல்லா நோய்களையும் அது உண்டாக்குகிறது. நமது தோல் போன்ற தடுப்புச் சுவர்களைத் தாண்டி நேரடியாக வேக்ஸின்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் ரத்தத்தில் கலக்கின்றன. அவற்றின் நோக்கமே நம் மூளையையும் உள்ளுறுப்புகளையும் அபாயத்துக்குத் தள்ளுவதுதான்.

எத்தனை குழந்தைகள் வேக்ஸின் போட்டதால் இறந்துபோயின என்ற உண்மையான கணக்கு நமக்கு இதுவரை தெரியாது. ஏனெனில், ஒரு வேக்ஸின் கொடுக்கப்பட்டதால் மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்துபோனால், இறப்புச் சான்றிதழில் ‘தடுப்பூசி சாவு’ என்று எந்த மருத்துவரும் எழுதுவதில்லை! அதற்குப் பதிலாக, புரியாத பாஷையில், அவர்களைக் காப்பாற்ற உதவும் சொற்களில் crib death அல்லது SIDS என்று எழுதுவார்கள். தூக்கிக்கொண்டு போய், தடுப்பூசி போட்டு, அதனால் குழந்தை உடனேயோ மறுநாளோ இறந்துபோனால், பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினால்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வரும். இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையாகும்.

வேக்ஸினேஷன் என்பது ஒரு வளைவுக் கோடு மாதிரி. அதன் ஒரு முனையில் இருக்கும் சிறுபான்மையினர், வேக்ஸினேஷனால் இறந்தவர்கள் அல்லது மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள். பெரும்பான்மையினர், வளைவுக்கோட்டின் மையத்தில் இருக்கிறார்கள். அவர்களும் மெள்ள மெள்ள வளைவின் முனையை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். தலைவலி, எரிச்சல், கண்பார்வைக் கோளாறு, அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சிறு தொந்தரவுகளுடன். அத்தொந்தரவுகள் யாவும் வேக்ஸினேஷன் செய்துகொள்வதற்கு முன் இருந்திருக்காது. இதனை The Bell Curve என்று வர்ணிக்கிறார் டாக்டர் டெட் கோரன். Childhood Vaccination என்றொரு அருமையான நூலை இவர் எழுதியிருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஒரு குழந்தை பிறக்கு முன்பே placenta எனப்படும் பனிக்குடத்தின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதற்குத் தாய் கொடுக்கிறாள். அது குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது வரக்கூடிய பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல் போன்ற வியாதிகளை எளிதில் எதிர்கொண்டு வெற்றிகண்டு ஆரோக்கியத்தை நிலை நாட்டும். ஆனால், இந்த வேக்ஸின்கள் எதிர்ப்பு சக்தியைக் காலி செய்கின்றன. குழந்தைப் பருவத்தில் சாதாரணமாக வரக்கூடிய நோய்களெல்லாம் பிறந்த குழந்தைக்கும், கைக்குழந்தைக்கும், வளர்ந்தவர்களுக்கும் வருமாறு செய்கின்றன. ஒரு தாய் கொடுக்கும் transplacental immunity வேலை செய்யவிடாமல் வேக்ஸின்கள் தலையிடுகின்றன.

ஒரு பெண் குழந்தைக்கு வேக்ஸின் செய்துவிட்டால், அது வளர்ந்து அதற்கொரு குழந்தை உண்டாகும்போது, தன்னுள்ளே இருக்கும் அக்குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அவளால் தன் பனிக்குடத்தின் மூலம் ஆற்றல்மிக்கதாக மாற்றமுடியாமல் போய்விடும். அதனால்தான், குழந்தைகள் தட்டம்மையோடும் கக்குவான் இருமலோடும் பிறக்கின்றன. தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் தாய் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அந்தநிலையில், அப்படியான நோய்கள் வருவது அக்குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

விஞ்ஞானம் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என்பதையே வேக்ஸின்களின் வரலாறும் பயன்பாடும் காட்டுகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் – கோழிக்குஞ்சுகளுக்குத் துணையாக ஓநாய்களா? யோசியுங்கள்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/nov/07/32-தடுக்காத-ஊசி-மருந்துகள்---3-2593166.html
2590160 சாளரம் நலம் நலமறிய ஆவல் 31. தடுக்காத ஊசி மருந்துகள்! - 2 நாகூர் ரூமி Wednesday, November 2, 2016 11:14 AM +0530  

வேக்ஸின்கள் பாதுகாப்பானவை, பயனுள்ளவை என்று சொல்வதுதான் உலகின் ஆகப்பெரிய பொய்யாகும்.
- டாக்டர் லெனார்டு ஜி ஹோரோவிட்ஸ்

 

 

வேக்ஸின் விளைவுகள்

தடுப்பு மருந்துகளுக்குள் பல அசிங்கமான சமாசாரங்களும் ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன என்பதுவரை பார்த்தோம். அதைப்பற்றி விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மனசாட்சியுள்ள மருத்துவர்களும் மெள்ள மெள்ள கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். வேக்ஸின்கள் பற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். 

வேக்ஸின்கள் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா? எந்த நோய்க்காக குறிப்பிட்ட வேன்ஸின் போடப்படுகிறதோ அந்த நோய் குழந்தைக்கு வராமல் அது தடுக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில்கள் சமீபகால வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. கொஞ்சம் பார்க்கலாமா?

வேக்ஸின்கள்தான் மருந்துக் கம்பனிகளின் முதுகெலும்பு. குழந்தைகள் எல்லோரும் அக்கம்பனிகளுக்கு வாழ்நாள் கஸ்டமர்கள் ஆகிவிட்டனர் என்கிறார் டாக்டர் ஷெர்ரி டென்பென்னி. இவர் அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் பணிபுரிபவர். வேக்ஸின்களால் குழந்தைகளுக்கு ’ஆட்டிஸம்’ (autism) எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைவு நோய் ஏற்படுகிறது என்றும் இவர் கூறுகிறார். Saying No to Vaccines என்று ஒரு புத்தகமும் இவர் எழுதியிருக்கிறார். 

1853-ல் வேக்ஸின்கள் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகுதான், மூன்று முறை கொள்ளைநோய்க்கு நாம் ஆளாகியிருக்கிறோம். 1857-ல் இருந்து 59-வரை பெரியம்மை வந்து 14,000 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 1853-ல் இருந்து 65-வரையிலும் கொள்ளைநோய் இறப்புகள் 20,000-மாக உயர்ந்தது. 1871-72-ம் ஆண்டுகளில் 44,800 பேர் இறந்துள்ளனர் என்கிறார் டாக்டர் வால்டர் ஆர். ஹாட்வென் MD MRCS MRCP. கிருமிகள் மூலமாக நோய்கள் பரவுகின்றன என்ற கருத்தை இவர் தீவிரமாக எதிர்ப்பவர். இங்கிலாந்தின் க்ளஸ்டர் மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர் இவர்.

வேக்ஸின்கள் டைம் பாம் போன்றவை. அடுத்தது எப்போது நம் குழந்தைகளை ஊனமாக்கும் அல்லது கொல்லும் என்று தெரியாது என்கிறார் லாரி குக். அமெரிக்கரான இவர் www.stopmandatoryvaccines.com என்ற வலைத்தளத்தை உருவாக்கி, வேக்ஸின்களால் குழந்தைகள் எவ்விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். 

ஏற்கெனவே பெரியம்மை வந்து செத்த ஒருவரின் சீழை ஊசி மூலம் ஒரு குழந்தைக்குச் செலுத்துவதால் அது குணமடையும் என்று நம்புவது முட்டாள்தனமானது என்று கொதிக்கிறார் டாக்டர் வில்லியம் ஹோவர்டு ஹே. இவர் நியூயார்க் நகர மருத்துவர்.

பெரியம்மைக்கு வேக்ஸினேஷன் கொடுப்பதால் ரத்தப் புற்றுநோய் வருகிறது. இதை நாம் அனுபவத்தில் கண்டுகொண்டோம் என்று அடித்துக்கூறுகிறார் போலந்து நாட்டு மருத்துவப் பேராசிரியரான ஜூலியன் அலெக்சாண்டரோவிக்ஸ். 

மெக்ஸிகோ, ஹைத்தி, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில், உலக சுகாதார நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் அங்கிருந்த குழந்தைகளுக்குப் புட்டாளம்மைக்கான வேக்ஸின்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதிக அளவில் குழந்தைகள் இறந்துபோனதால் அதை இப்போது நிறுத்திவிட்டார்கள் என்கிறார் டாக்டர் ஆலன் கான்ட்வெல் MD. இவர் நியூயார்க்கில் உள்ள தோலியல் மருத்துவர்.

ஆட்டிஸம், அலர்ஜி, ஆஸ்துமா, கேன்ஸர் இப்படி எல்லாமே தடுப்பு மருந்துகள், ஊசிகள் போடப்பட்ட குழந்தைகளுக்கு வருகிறது என்று அடித்துக்கூறுகிறார் தடுப்பூசி ஆராய்ச்சியாளரான டாக்டர் டெட் கோரன். யூட்யூபில் அவரது நேர்காணலும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு வேன்ஸின்கள் கொடுப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன என்று அவர் அதில் விளக்குகிறார்.

“தடுப்பூசிகளின் காரணத்தால் உலகில் ஒருநாள் ரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, முறையான ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21-ம் நூற்றாண்டு வரை கொண்டுசென்றுவிட்டோம் என்று புலம்புவார்கள்” என்று அங்கலாய்க்கிறார் டாக்டர் டெட் கோரன்.

வேக்ஸின்களின் விளைவாக குழந்தைகளுக்கு ஆட்டிஸம் எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது என்று சொன்ன இன்னொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரி ப்ராட்ஸ்ட்ரீட். அவர் 2015-ம் ஆண்டு இறந்துகிடந்தார். அது தற்கொலை என்று சொல்லப்பட்டது. ஆனால், வேக்ஸின் விற்கும் மருந்துக் கம்பனிக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவர் குடும்பத்தினர் கூறினர். அவருடைய மகனே ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் 15 மாதக் குழந்தையாக இருந்தபோது கொடுக்கப்பட்ட வேக்ஸின்தான் அவரது மூளை வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம் என்று சொன்ன டாக்டர் ப்ராட்ஸ்ட்ரீட், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை சிபாரிசு செய்தார். 

ஒவ்வொரு வேக்ஸினும் தீமையே விளைவிக்கிறது (Every Vaccine Produces Harm) என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதினார் டாக்டர் ஆண்ட்ரூ மூல்டென் என்பவர்! 

“மனித வாழ்வின் விலைமதிப்பற்ற செல்வம் குழந்தைகள்தான். நாம் மிக அதிகக் கவனம் செலுத்தவேண்டியவர்களும் அவர்களே. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுமுன் நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள்” என்று கனடாவின் VRAN (Vaccination Risk Awareness Network) அமைப்பு உலக மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறது. தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. இப்போது அது Vaccine Choice Canada என்ற பெயரில் இயங்கி வருகிறது. கனடாவில் வேக்ஸின் போடுவது கட்டாயமில்லை என்ற வாசகமும் அதன் வலைத்தளத்தில் உள்ளது. வேக்ஸின் போட்டதால் குழந்தைகள் என்னவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாயினர் என்ற கதைகளுக்குத் தனியாக இணைப்பு கொடுத்துள்ளது.

அதில் ஒரு கதை

டாக்டர் ரெபெக்கா என்ற ஒரு பெண் விஞ்ஞானி தன் 18 மாதப் பெண் குழந்தைக்கு ‘வாரிலெக்ஸ்’ என்ற சின்னம்மை தடுப்பு மருந்தைக் கொடுத்திருக்கிறார். உடனே குழந்தைக்கு anaphylaxis எனப்படும் கடுமையான ஒவ்வாமை வந்தது. எந்த உணவையும் குழந்தையின் உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எது கொடுத்தாலும் வயிற்றால் போனது, வாயில் சிவப்பு சிவப்பாக தடிமன்கள், புண்கள் ஏற்பட்டன. குழந்தையால் முன்புபோல இயல்பாக இருக்க முடியவில்லை. அதன் எதிர்வினைகள் குழந்தையை பின்னோக்கித் தள்ள ஆரம்பித்தன. ஓரிருமாதக் குழந்தைபோல ஆனது அது. பதினெட்டு மாதக் குழந்தைக்கான வளர்ச்சியும் முதிர்ச்சியும் எங்கே போனதென்று தெரியவில்லை. 

ரெபெக்கா அதிர்ச்சியில் உறைந்துபோனார். வேக்ஸின் கொடுத்தன் விளைவுதான் அது என்று அவருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ‘என்னுடைய கல்வியே என்னைக் கற்பழித்துவிட்டது’ என்று அவர் கூறினார் (”Now I feel raped by my education”). குழந்தையை பழைய ஆரோக்கிய நிலைக்குக் கொண்டுவருவதே தன் வாழ்வின் லட்சியம் என்று அதற்காக உழைக்க ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள்! ஐந்து ஆண்டுகளுக்கு வெளியில், கடையில் வாங்கிய எந்த உணவையும் கொடுக்கவில்லை. வீட்டிலேயே சமைத்த உணவுதான். அதுவும் இயற்கை உணவுகள்! ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது! 

வேக்ஸின்களின் வரலாறு

வேக்ஸின்களின் பின் விளைவுகள், பக்க விளைவுகள் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்தோம். அவற்றின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

தடுப்பு மருந்துகளின் வரலாறு, அம்மை குத்துதலில் தொடங்குகிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுபோல, எந்த நோயையும் அந்த நோயாலேயே குணமாக்க வேண்டும் என்ற கோட்பாடு அதற்கு அடிப்படையாக அமைந்தது. 1760-களில் இதைத் தொடங்கிவைத்தவர் எட்வர்ட் ஜென்னர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர். ‘நோய்த்தடுப்பியலின் தந்தை’ என்று இவர் அறியப்படுகிறார்.

பசுவம்மை (cowpox) என்ற நோயால் தாக்கப்பட்ட பால்காரப் பெண்களுக்கு பெரியம்மை வருவதில்லை என்பதை அவர் தெரிந்துகொண்டார். அப்பெண்களின் கைகளில் இருந்த கொப்புளங்களின் வழியாக வந்த சீழானது பெரியம்மை வராமல் அவர்களைக் காப்பாற்றியது என்று அவர் நினைத்தார். வீரியம் குறைவான பசுவம்மை வந்தவர்களை பெரியம்மை தாக்குவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

பசுவம்மை வந்த பால்காரப் பெண்ணின் கைக்கொப்பளத்தைக் கீறி, அதிலிருந்து கொஞ்சம் சீழை எடுத்து ஆரோக்கியமாக இருந்த தன் தோட்டக்காரனின் எட்டு வயது மகனின் உடலில் தேய்த்தார். ஆறு வாரங்கள் கழித்து அவனுக்கு பெரியம்மைக்கான வேக்ஸின் கொடுத்தார். அதாவது, பெரியம்மை நோய்க்கிருமியைக் கொஞ்சம் அவனுடைய உடலுக்குள் அனுப்பினார். அவனுக்கு பெரியம்மை வரவில்லை. ஏற்கெனவே கொஞ்சமாக உள்ளே அனுப்பிய பசுவம்மை சீழ் வேலை செய்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். 

வேக்ஸினேஷன் என்ற பெயரைக் கொடுத்தவரே ஜென்னர்தான். Vacceinus என்ற பசுவைக் குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதுதான் ‘வேக்ஸினேஷன்’. பசுவம்மை, பெரியம்மையைத் தடுத்தது அவரை அப்படி ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம். கோமாதா நமக்கு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருந்துள்ளது!

ஜென்னர் உலகப் புகழ் பெற்றார். அரசர்களின் நண்பரானார். அரசாங்கத்திடமிருந்து நிறைய பணமும் வந்தது. தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த ஜென்னர், தன் பத்து மாத மகன் எட்வர்டின் கையைக் கீறி பசுவம்மை சீழை அதில் தடவினார். எட்டுநாள் கழித்து மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆனாலும் அவன் மீண்டும் நலமாகிவிட்டான். 

இரண்டு ஆண்டுகள் கழித்து அவனுக்கு பெரியம்மை தடுப்பூசியைப் போட்டார். இந்த முறை மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டான். ஆனால், அடுத்த ஆண்டு மீண்டும் ஒருமுறை அவர் தன் மகனுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டார். இதனால் அவன் மூளை பாதிப்புக்கு உள்ளாகி 21 வயதில் இறந்துபோனான். கசப்பான அந்த அனுபவங்களினால் தன் இரண்டாவது மகனுக்கு அம்மைத்தடுப்பூசியை அவர் போடவில்லை. பாவம், புகழுக்காக பரிசோதனை எலிகளைப்போல பெற்ற பிள்ளைகளைக் காவு கொடுத்துள்ளனர்!

அந்தக்கால ஐரோப்பாவில் அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, அம்மை நோய்க்கான மருந்தாக இது அதிக அளவில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்பட்டது. “அக்காலத்து டாக்டர்கள் அனைவரும் இம்மருந்தைப் பையில் போட்டுக்கொண்டு பணம் சம்பாதிக்கத் துவங்கினார்கள்” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ஹென்றி லிண்ட்லார்.

இம்மருந்துக்கு எதிராக மருத்துவர்களில் பலரும், விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினரும் உலகம் முழுவதும் இணைந்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து 1880-ம் ஆண்டில் உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. இதன் மாநாடு, 1880 டிசம்பரில் பாரீஸில் நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் பத்து தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஜெர்மனியில் ஏற்பட்ட தடுப்பூசி மருந்துகளின் பாதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய அமைச்சர் பிஸ்மார்க், 1888-ம் ஆண்டில் மாநில அரசுகளுக்குத் தடுப்பூசி பற்றிய சுற்றறிக்கையை அனுப்பினார். ‘‘சொரி, சிரங்கு, தோல் பாதிப்புகள் போன்ற புதிய நோய்கள் வருவதற்கு இந்த அம்மை மருந்து காரணமாகிவிட்டது. பசுவின் சீழிலிருந்து தயாரிக்கப்படும் இந்த அம்மை மருந்து நல்லதென்று பயன்படுத்தினோம். ஆனால் அம்மை நோயைவிட அந்த மருந்து கூடுதலான தீங்குகளைச் செய்துவிட்டது” என்று அந்த அறிக்கை சொன்னது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மன் மாநில அரசுகள் கட்டாயத் தடுப்பூசி சட்டத்தைக் கைவிட்டன.

அமெரிக்காவில், அம்மைத் தடுப்பூசி போடப்பட்ட 98 சதவீத குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது. இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 30,000 ஆயிரம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அம்மைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் சொன்னது. 

1889-ம் ஆண்டில் இங்கிலாந்தில் அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய Royal Commission on Vaccination ஏற்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ராயல் கமிஷன் தன் அறிக்கையை வெளியிட்டது. 1896-ல் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

அம்மை மருந்துகளின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை. ஸ்காட்லாண்டில் ஆடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டபோது இத்தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிகள் போடப்பட்ட ஆடுகளுக்குப் பால் வற்றிப்போனது. இப்பாதிப்பைக் கொண்டு அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய்ந்த டாக்டர். லிண்ட்லார் இவ்வாறு கூறுகிறார் - 

“அம்மை மருந்தால் உடலில் கொப்புளங்களும், சிரங்குகளும் முதலில் தோன்றுகின்றன. பின்பு ரசாயனப் பொருள் உடல் முழுவதும் பரவி பக்கவாதம், நரம்பு மண்டல பாதிப்பு, மூளைக்கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. இன்று அம்மை குத்தும் மருந்துகளை உற்பத்தி செய்வது வருமானம் தரக்கூடிய பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. இதன்மூலம் பல கம்பெனிகள் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டுகின்றன. அம்மை மருந்தின் விளைவுகள் ஆடுகளிடமே இவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தினால், மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல? பத்தாயிரம் சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே இரண்டு மூன்று முறை அம்மை மருந்து ஏற்றிக்கொண்டதால், பால் சுரப்பிகளின் வளர்ச்சி பாதிப்படைந்து, பிற்காலத்தில் குழந்தைப் பேற்றுக்குப் பின் அவர்களுக்குப் பாலே சுரக்கவில்லை”.

“1961-க்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் - போலியோ சொட்டு மருந்துதான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக்கொண்டார், போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்! முதலில் ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கு அந்த மருந்தைக் கொடுத்து அவர் சோதித்தார். கடைசியில் தனக்கும், தன் மனைவிக்கும், மகனுக்கும் கொடுத்தார். குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன் என்ற கோட்பாட்டை ஒப்புக்கொண்டார் போலும்! அவர் கொடுத்த மருந்தால், பதினோரு பேர் இறந்துபோனார்கள்!

“போலியோவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய ஆல்பர்ட் சாபின்! 

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள்காமாலை ஊசி போடுவது கட்டாயம் என்ற சட்டம், 1990-களில் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. அங்கே தடுப்பூசி சட்டங்கள் மிகவும் கடுமையானவை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும். போடாதவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதிலும், பள்ளியில் சேர்ப்பதிலும்கூட பிரச்னைகள் தொடரும். 

வாய்மொழி உத்தரவுகள் மூலம் நம் நாடும் அமெரிக்காவையே பின்பற்றுகிறது என்பது துரதிருஷ்டமே. அரசின் எச்சரிக்கைகளை மீறி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பவும், பெற்றோர்களைச் சிறைக்குள் தள்ளவும்கூட அமெரிக்க அரசு தயங்குவதில்லை. ஆஹா, government of the people, by the people and for the people என்று ஆப்ரஹாம் லிங்கன் அழகாக எடுத்துரைத்த ஜனநாயகமா இது! ஆனால், போனால் போகிறதென்று தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தொடுத்த வழக்குகளை விசாரிக்க அமெரிக்காவில் தனியாக தடுப்பூசி வழக்குகளுக்கான நீதிமன்றம் (U.S. Vaccine Court) செயல்படுகிறது அமெரிக்காவில், இது எப்படி இருக்கு!

அம்மைத் தடுப்பூசி போலவே மஞ்சள்காமாலைத் தடுப்பூசியும் பதிமூன்று விதமான புதிய நோய்களை ஏற்படுத்துவதாக 1997-ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் கண்டறிந்தனர். வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட மஞ்சள்காமாலைத் தடுப்பூசிகள் காரணமாக இருப்பதையும் கண்டறிந்த பிறகு, 1997-ல் அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை நீக்கியது.

கட்டாயச் சட்டத்தை நம்பி ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து குவித்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள், என்னடா செய்வது என்று கவலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆபத்பாந்தவனாக வந்தார் நம் பில்கேட்ஸ். ஆமாம். அமெரிக்க அரசு வேண்டாம் என்று ஒதுக்கிய மஞ்சள்காமாலை தடுப்பூசிகளை தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நம் நாட்டில் ஆந்திர மாநிலத்தின் நாலரை லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடவைத்தவர் அவர்தான்! ஆஹா, இதுவல்லவா கர்மம், ஸாரி, தர்மம்! 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்கூட தடுப்பூசி மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் அவை பெரிதுபடுத்தப்படுவதில்லை. காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. அப்படியானால், இந்தியாவில் என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்க வேண்டாமா? தடுப்பூசிகளின் உச்சபட்ச விளைவு என்னவென்றும் பார்க்க வேண்டாமா? 

வாருங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/oct/31/31-தடுக்காத-ஊசி-மருந்துகள்---2-2590160.html
2586195 சாளரம் நலம் நலமறிய ஆவல் 30. தடுக்காத ஊசி மருந்துகள்! நாகூர் ரூமி Monday, October 24, 2016 12:00 AM +0530  

வேக்ஸின் கொடுப்பது காட்டுமிராண்டித்தனமான பழக்கம். வேக்ஸினானது ஓர் அசிங்கம். ஓர் அசிங்கம் இன்னொரு அசிங்கத்தை நீக்கும் என்று நம்புவது முட்டாள்தனமானது.

 - மகாத்மா காந்தி (A Guide to Health என்ற தனது நூலில்)

 

வேக்ஸினா டாக்ஸினா

உங்கள் குழந்தைக்கு ஏதாவது காய்ச்சல், சளி வந்து காட்டுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி: தடுப்பூசியெல்லாம் போட்டாச்சா என்பதுதான். அதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் அவர் ‘ட்ரீட்மென்ட்’டை ஆரம்பிப்பார். ஏன்? அவை அவ்வளவு முக்கியம் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்.

‘வேக்ஸின்’ என்று சொல்லப்படும் தடுப்பு மருந்துகளும் ஊசிகளும் நவீன வாழ்வின் தவிர்க்கமுடியாத, அத்தியாவசியமான அம்சங்களாகிவிட்டன. பத்து குழந்தைகளில் ஒன்பது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. சொட்டு மருந்துகள் வாய்க்குள் விடப்படுகின்றன. பெற்றோரின் விருப்பத்துடன். பெற்றோரின் அனுமதியுடன். பெற்றோரின் உதவியுடன். பெற்றோர் ஏன் விரும்புகிறார்கள்? இது என்ன கேள்வி? குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமல்லவா? போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? பிசிஜி போட்டால் டிபி வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? பிசிவி போட்டால் நிமோனியா வராமல் தடுத்துவிடலாம் அல்லவா? எம்.எம்.ஆர். போட்டால் பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை போன்றவை வராமல் தடுத்துவிடலாமல்லவா? 

ஆம். குழந்தை பிறந்தது முதல் ஆறு வாரத்தில், ஒன்பது மாதத்தில், ஒரு ஆண்டு கழித்து - இப்படி காலக்கிரமப்படி போட வேண்டிய மருந்துகள், ஊசிகளின் பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ‘வேக்ஸின்’ கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து குழந்தையை டாக்டரிடம் காட்டப்போனால் போதும், மற்ற முடிவுகளை அவரே எடுத்துக்கொள்வார். என்ன ஊசி போட்டார், என்ன மருந்து கொடுத்தார் என்று உங்களிடம் சொல்லலாம். ஆனால், காட்டமாட்டார். சொல்வது வேறு, காட்டுவது வேறு அல்லவா? (அது ஒரு பத்து பக்கங்களுக்கும் மேல் இருக்கும் ஒரு சமாசாரம். அதில் contraindications  என்ற பெயரில் விளைவுகளைப் பட்டியலிட்டிருப்பார்கள். சொறி, காய்ச்சல், மயக்கம், அரிப்பு, சிவந்துபோதல், டிபி வருதல் என எல்லாம் அதில் போட்டிருக்கும்).

சில பெரிய மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன் டாக்டர்களோ அல்லது அவர்களின் உத்தரவின் பேரில் செவிலியர்களோ தடுப்பூசி போட்டுவிடுகிறார்கள். அதற்கான அனுமதியைக்கூட பெற்றோரிடம் கேட்பதில்லை. ஒருவேளை பிரசவத்துக்காக சேர்க்கும்போதே அந்தப் படிவத்தில் அந்த விஷயமும் இருக்குமோ என்னவோ. அதற்கும் சேர்த்துக் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்களோ என்னவோ. மேஜை மீது வைக்கப்பட்ட குழந்தை வீர் வீர் என வலியில் விறைக்க விறைக்க தடுப்பூசி குத்துவதைப் பார்ப்பதைப்போல ஒரு கொடுமை கிடையாது!

உண்மையிலேயே தடுப்பு மருந்துகள் கொடுப்பது, தடுப்பூசிகள் போடுவதெல்லாம் சரியா என்று யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிக்க வேண்டும். ஏனெனில் இது நம் உயிரைவிட மேலான குழந்தைகளின், நனவான நம் வண்ணக் கனவுகளின், உயிருள்ள கவிதைகளின் உயிர் சம்பந்தப்பட்டது.

நான் பள்ளிக்கூடப் பையனாக இருந்த காலகட்டத்தின் ஒரு பகுதி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது மறக்கமுடியாத ஒரு ‘ஹாரர் ஷோ’! என்னை வலிக்க வலிக்க, துடிக்கத் துடிக்க வைத்த கணங்கள் அவை. அப்போது எனக்கு என்ன வயது என்றுகூட நினைவில் இல்லை. ஆனால் என் தாய்மாமா ஒருவர் நான் அசைந்துவிடாதவாறு என்னைத் தூக்கி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். நான் கைகால்களை உதறி, கதறிக்கொண்டிருந்தேன். ஏன்? என் கையில் அம்மை குத்திக்கொண்டிருந்தார்கள். அதாவது, அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான ஏற்பாடாம். ஆனால் அது ஊசியல்ல. ஊசியெல்லாம் நவீன காலத்தின் ஆயுதங்களாகும். அப்போதெல்லாம் கற்கால ஆயுதங்கள்தான்.

அடுப்பூதும் குழல் மாதிரி எதையோ நீளமாக எடுத்து என் தோள்பட்டைக்குக் கீழே கையின் சதைப்பகுதியில் வைத்து, சுவரில் ’ட்ரில்லிங்’ பண்ணுவது மாதிரி, நான் கதறக்கதற திருகிக்கொண்டே இருந்தார்கள். நெருப்பை வைத்து தீய்ப்பதுபோல் இருந்தது. இரண்டு கைகளிலும் தீத்திருகல்கள். இன்னும் அந்தத் தழும்புகள் என் கைகளின் மேல்புறம் உள்ளன. அவை நிரந்தரமான தன்மை கொண்டவை. என் உடல் இருக்கும்வரை அதைப் பார்க்கலாம். கொழுந்துவிட்டு எரியும் என் கடந்த காலம் அது!

அதனால் எனக்கு என்ன நன்மை ஏற்பட்டது? ஒன்றுமில்லை. தீமைதான் ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் வந்து அவதிப்பட்டேன். என் தாய்மாமாவை என்னால் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே முடியவில்லை. அன்று அம்மை குத்தியவர்கள் மீது ஏற்பட்ட அச்சம் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலம் வரை இருந்தது. உயர்நிலைப் பள்ளிக்கு தடுப்பூசி போடுபவர்கள் வந்தால் நான் உடனே சுவரேறிக் குதித்து ஓடிவிடுவேன்! க்ளாஸ் லீடர், கோஎஜுகேஷன் வகுப்பு என்றெல்லாம் பார்க்காமல், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் ஓடிப்போவேன்! வெட்கப்பட்டால் உயிர் தப்ப முடியுமா என்ன?!

தெய்வாதீனமாக அந்த அம்மை தடுப்புக் குத்தலால் நான் சாகாமல் பிழைத்துக்கொண்டேன். அதனால்தானோ என்னவோ இப்போது உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சரி, அப்படியானால் நான் என்ன சொல்லவருகிறேன்? வேக்சினேஷன் என்று அறியப்படும் நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளெல்லாம் போடக்கூடாதென்று சொல்லவருகிறேனா?

ஆமாம். ஏன்? ஏன் என்பதற்கான என் பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் தடுப்பு மருந்துகள் என்ன செய்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகளுக்குள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்வோமா? வாருங்கள்.

வேக்ஸின்களுக்கு உள்ளே இருப்பது என்ன?

கிருமிகளால் நமக்கு நோய் வராமல் தடுப்பதற்கு வேக்ஸின்கள் கொடுக்கப்படுகின்றன என்கிறது மருத்துவ உலகம். கிருமிகளைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டோம். கிருமிகள் தீமை செய்வதில்லை என்பதால் வேக்ஸினேஷன் வேண்டாம் என்று சொல்ல வருகிறேனா? அப்படியில்லை. வேக்ஸின்களில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதிர்ச்சியும் அடையலாம். 

சமீபத்தில் எனக்கு ஒரு பேரனும் ஒரு பேத்தியும் பிறந்தார்கள். அவர்களுக்குத் தடுப்பூசியோ மருந்தோ கொடுக்கவேண்டாம் என்றும், அதற்கான காரணங்களையும் விவரமாக என் மருமகனுக்கும் மகளுக்கும் எடுத்துச் சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள். என் பேரக் குழந்தைகளுக்கு வேக்ஸின்கள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் புரிந்துகொண்டதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களுக்கு எதை விரும்புகிறீர்களோ, அதைப் போன்றதையே அடுத்தவருக்கும் விரும்புங்கள் என்று நபிகள் நாயகத்தின் பிரபலமான நபிமொழி ஒன்றுண்டு. என் பேரக் குழந்தைகளுக்கு நான் என்ன செய்தேனோ அதையே இவ்வுலகக் குழந்தைகள் அனைவருக்கும் செய்ய விரும்புகிறேன்.

அப்படியானால் வேக்ஸின்களில் என்னதான் உள்ளது?

எந்த நோயைத் தடுப்பதற்காக அது கொடுக்கப்படுகிறதோ அந்த நோயை உண்டாக்கும் என்று நம்பப்படுகிற கிருமியைத்தான் அந்த மருந்து அல்லது ஊசி மூலம் குழந்தைக்கு உள்ளே அனுப்புகிறார்கள்! நன்றி கலந்த வணக்கம் என்று சொல்வது மாதிரி அதிர்ச்சி கலந்த உண்மை இதுதான்!

இன்னும் கொஞ்சம் விவரமாகவே சொல்கிறேனே. உதாரணமாக, போலியோ நோயை உண்டாக்கும் கிருமிகளைத்தான் போலியோ சொட்டு மருந்துக்குள் வைத்து வாய்க்குள் அனுப்புகிறார்கள். நல்லவேளை, கிருமி ராட்சசனை அனுப்பாமல், மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட கிருமிக் குழந்தையை மட்டுமே அனுப்புகிறார்கள். புரியவில்லையா? கிருமியின் வீரியத்தையெல்லாம் குறைத்து, அது குற்றுயிரும் கொலையுயிருமாக (இது சரியா?) இருக்கும்போது அதை உள்ளுக்கு அனுப்புகிறார்கள். ஏன்?

இந்தக் கேள்விக்கான பதிலை டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் மிக அழகாக ஒரு உரையாடல் மூலம் ‘நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்’ என்ற தன் நூலில் சொல்கிறார். அதை அப்படியே இங்கே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.

“உங்களிடம் கிருமிகள் இருக்கின்றன என்று ஆங்கில மருத்துவர்கள் பயமுறுத்துகிறார்கள். நீங்கள் ஆங்கில மருத்துவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி நிறுத்துங்கள். இப்பொழுது கேளுங்கள். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளும், அவர்களின் பதில்களும் இவ்வாறு தான் அமையும்.”

கேள்வி: எங்கள் உடலில் நோய்க்கிருமிகள் இருக்கின்றன என்று கூறுகிறீர்களா? 

பதில்: ஆம்

கேள்வி: அதனால் தவறு என்ன? 

பதில்: அது நோய்களை உருவாக்கும்

கேள்வி: எது நோய்களை உருவாக்கும்? 

பதில்: ஒவ்வொரு நோய்க்கிருமியும் ஒரு குறிப்பிட்ட நோயை உருவாக்கும். உதாரணமாக டி.பி. கிருமிகள் டி.பி. நோயை உருவாக்கும். மஞ்சள்காமாலை கிருமிகள் மஞ்சள் காமாலையை உருவாக்கும்.

கேள்வி: டி.பி. நோயிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது? 

பதில்: டி.பி. நோயை உருவாக்கக்கூடிய அதே நோய்க்கிருமிகளைக் கொடுக்க வேண்டும்

கேள்வி: மஞ்சள்காமாலை நோயிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது?

பதில்: மஞ்சள்காமாலையை உருவாக்கக்கூடிய அதே நோய்க்கிருமிகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். 

கேள்வி: நோய்க்கிருமிகளை உடலுக்குள் செலுத்துவதனால் என்ன பலன்? 

பதில்: உங்கள் உடலில் குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கேள்வி: நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகுமா? அல்லது நோய்க்கிருமிகளுக்கு எதிராகவா?

பதில்: மன்னிக்கவும். நோய்க்கிருமிகளுக்கு எதிராகத்தான்.

கேள்வி: நோய்க்கிருமிகளை எவ்வாறு கொடுப்பீர்கள்? நோய்க்கிருமிகள் நோயை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்களே? நோய்களுக்குக் காரணம் நோய்க்கிருமிகள்தான் என்று கூறுபவர்களும் நீங்கள் தானே? 

பதில்: ஆம். நோய்களுக்குக் காரணம் நோய்க்கிருமிகள்தான்.

கேள்வி: பிறகு, ஏன் நோய்க்கிருமிகளைத் தடுப்பூசி என்ற பெயரில் உடலுக்குள் செலுத்துகிறீர்கள்? அது நோய்களை உருவாக்காதா?

பதில்: உங்கள் கேள்வி சரிதான். நாங்கள் நோய்க்கிருமிகளை அதே வீரியத்தில் கொடுப்பதில்லை. அதனுடைய வீரியத்தை குறைத்துத்தான் நாங்கள் கொடுக்கிறோம். ஆகவே, அது நோயை ஏற்படுத்தக்கூடிய திறன் பெறாததாகத்தான் இருக்கும்.

கேள்வி: நோயை உருவாக்கக்கூடிய திறன் பெறாத ஒரு நோய்க்கிருமி நமக்கு நோயைத் தோற்றுவிக்காது இல்லையா?

பதில்: ஆம். நோயைத் தோற்றுவிக்காது.

கேள்வி: நோயைத் தோற்றுவிக்காத, பலவீனமான, ஏறக்குறைய இறந்துவிட்ட ஒரு கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தி எவ்வாறு உருவாக முடியும்? அதுதான் நோயையே தோற்றுவிக்க முடியாதே? பிறகு எப்படி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்? நோய் என்பது கிருமிகள் வீரியத்துடன் இருந்தால்தான் உருவாகும். அந்த வீரியமிக்க கிருமிகளுக்கு எதிராகத்தான், வீரியமிக்க நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாக முடியும். அதைப் போன்றே வீரியம் குறைந்த மிக பலவீனமான நோய்க்கிருமிக்கு எதிராக, அதே அளவுக்கு பலவீனமான, எந்தத் திறனும் இல்லாத, மிகவும் வீரியம் குறைந்த எதிர்ப்பு சக்தியே உருவாகும். இதற்கு உங்கள் பதில் என்ன? அதாவது, நீங்கள் கொடுக்கும் எந்த ஒரு தடுப்பு ஊசிக்கும், மருந்துகளுக்கும் எந்த சக்தியும் கிடையாது. அப்படித்தானே? 

பதில்: என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதைத்தான் நாங்கள் கூற முடியும். எங்கள் மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். உங்கள் கேள்வியில் உண்மை இருக்கிறது. இதற்கான பதில் இப்போது எங்களிடம் இல்லை என்பதையும் உணர முடிகிறது.

கேள்வி: சுய உணர்வும், சுய சிந்தனையும் இல்லாமல் எப்படி ஒரு மருத்துவம் மனிதர்களுக்கு நன்மையை பயக்க முடியும்?

பதில்: மருத்துவப் புத்தகங்களில் என்ன எழுதியிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் கூறுகிறோம்.

கேள்வி: அதைத்தான் நீங்கள் செய்யவும் செய்வீர்களா? 

பதில்: நாங்கள் ஏவப்பட்ட பிரகாரம் செய்கிறோம்.

கேள்வி: உங்களுடைய ஆங்கில மருத்துவத்தில் இவ்வளவு தவறுகளும், நம்பிக்கைக்குக் தகுதியில்லாத விஷயங்களும் இருந்தால் கூடவா நீங்கள் அதை மக்களிடம் பிரயோகிப்பீர்கள்? நியாயமாக நீங்கள் கூறுங்கள். அதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? 

பதில்: செய்யக்கூடாதுதான்.

கேள்வி: இப்போது மஞ்சள்காமாலை நோய்க்குத் தடுப்புக் கிருமிகள் ஊசிகள் மூலமாகச் செலுத்துகிறோம் என்று செய்துகொண்டிருக்கும் செயலைச் செய்யலாமா?

பதில்: கூடாதுதான்.

கேள்வி: டி.பி. நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக டிபி நோய்க் கிருமிகளை வைத்திருக்கிறோம் என்று கூறுகிறீர்களே, அது டி.பி.யைத் தடுக்கும் என்று இனியும் நீங்கள் கூறுவீர்களா? 

பதில்: கூற முடியாதுதான்.

கேள்வி: போலியோவை இவ்விதமே உங்களால் தடுக்க முடியுமா? 

பதில்: உங்களுடைய கேள்விகளுக்கு அடிப்படையில் எங்களிடம் இப்போதைக்கு பதில் இல்லை.

இவ்விதமாகச் செல்கிறது அந்த கற்பனை உரையாடல். அதன் மூலமாக ஒரு உண்மையை மிகத் தெளிவாக நமக்கு டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் விளக்குகிறார். ஒவ்வொரு வேக்ஸினுக்குள்ளும் அந்த நோயை உண்டாக்கும் கிருமிகள்தான் வீரியமற்ற தன்மையில் நம் உடலுக்குள் அனுப்பப்படுகின்றன.

இதுமட்டுமல்ல. தடுப்பு மருந்து மற்றும் ஊசிகளுக்குள் கிருமி மட்டுமில்லை. அவை எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற விவரத்தைக் கொஞ்சம் விளக்கினால் உங்களுக்கு வாந்தி வரலாம். அப்படி என்ன அசிங்கம் உள்ளது? ஆமாம். அசிங்கம்தான் உள்ளது. மகாத்மா காந்தி மிகச் சரியாகத்தான் வேக்ஸின்களை அசிங்கம் என்று கூறியிருக்கிறார். உதாரணமாக அம்மை வராமல் தடுக்கும் அம்மை நோய்த் தடுப்பு மருந்து எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்துப் பாதுகாப்பார்கள். இந்தச் சீழை பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்தப் புண்களுக்குள் செலுத்துவார்கள். இப்புண்களின் வழியே அதிகமான சீழ் பிடித்து அது வெளியேறத் தொடங்கும். பசுக்களின் சீழை எடுத்து அதோடு சில ரசாயனங்களைக் கலந்து அம்மை மருந்து தயாரிக்கப்படுகிறது.

அடுத்தது போலியோ சொட்டு மருந்து தயாரிப்பு. போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகள் குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. சிறுநீரகச் சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாகத் தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குரங்குகள் உரிய சோதனைகளுக்குப் பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இவ்வாறு 1950-களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV 40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரியவந்தது. சொட்டு மருந்தின் மூலம் பரவும் இந்த வகை தாக்கத்தால், பல வருடங்கள் கழித்து மூளை, கல்லீரல், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்று நோய் உருவாகவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 26).

சீழ், பசு, குரங்கு வழியாக மனிதர்களுக்கு! அதுவும் நம் அன்புப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு! இதனால்தானோ என்னவோ ஒரு மருத்துவரிடம் வேக்ஸின்கள் பற்றிப் பேசுவதும் ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் சைவ உணவு பற்றிப் பேசுவதும் ஒன்று என்று சொன்னார் பெர்னார்ட் ஷா!

சரி, இப்படி கொடுக்கப்படும் வேக்ஸின்கள் உண்மையிலேயே நோயைத் தடுக்குமா? அல்லது நோயை உண்டாக்குமா? அல்லது வேறு பிரச்னைகளை ஏற்படுத்துமா?

பார்க்கத்தானே போகிறோம்…

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/oct/24/30-தடுக்காத-ஊசி-மருந்துகள்-2586195.html
2581597 சாளரம் நலம் நலமறிய ஆவல் 29. கிருமிகள் வாழ்க! - 6 நாகூர் ரூமி Saturday, October 15, 2016 12:19 PM +0530  

அம்மை நோய் மாரியம்மனால் ஏற்படுகிறது என்று நம்பும் கிராமத்து மக்களின் நம்பிக்கையும், அம்மை நோய் கிருமிகளால் ஏற்படுகிறது என்று நம்பும் படித்தவர்களின் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை – தமிழ்வாணன்.

 

நம் தவறான வாழ்முறைகளால், இயற்கைக்கு எதிரான நம் செயல்களால் நம் உடலில் கழிவுகள் உருவாகின்றன, அவை நான்கு வகைப்படும் என்று இதுவரை பார்த்தோம். அவை:

1. சாதாரணக் கழிவுகள்

2. தேக்கமுற்ற கழிவுகள்

3. ரசாயனக் கழிவுகள்

4. அழுகிய ரசாயனக் கழிவுகள்

சாதாரணக் கழிவுகள் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அது இயல்பானதும், இயற்கையானதுமாகும். தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை நமது உடல் வெளியேற்றிவிடுகிறது.

ஆனால், கழிவுகள் உடலில் தேங்கிவிடுமானால், தொந்தரவுகள் மூலம் அவற்றை அகற்ற உடல் முயற்சி செய்யும். அவை வெளியேற முடியாமல் நமது ‘அறிவார்ந்த’ நடவடிக்கைகள் இருக்குமானால், அக்கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக மாறும். அதை நீக்கவும் போக்கவும் லைசோசோம்கள் சண்டையிடும் என்பதுவரை பார்த்தோம்.

லைசோசோம்களையும் மீறி செல்லுக்குள் ஒரு கிருமி சென்றுவிடுமானால், உடனே, ஆமாம் கண்ணிமைக்குள் நேரத்துக்குள் இன்னொரு அமைப்பு அந்தக் கிருமியைச் சுற்றி ஒரு பலூனை உருவாக்கி அதற்குள் அந்த கிருமியை ‘அரெஸ்ட்’ செய்துவிடும். அதன் பெயர் ஃபேகோசோம் (phagosome). அந்த பலூன் சுவர்களுக்குள் லைசோசோம்கள் புகுந்து கிருமிகளைக் கொன்றுவிட்டு தானும் அழிந்துபோகும்! இதற்கு ஃபேகோசைட்டோசிஸ் என்று பெயர்(phagocytosis).

ஃபேகோசோம்

ஆனால் தொந்தரவுகளை பிரச்னை என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் விஷத்தன்மையுள்ள ரசாயன அலோபதி மாத்திரை மருந்துகளை நாம் எடுத்துக்கொண்டே இருந்தோமானால், பாவம் நம் உயிரணு என்னதான் செய்யும்? ரசாயனக் கழிவுகள் அழுகிப் போக ஆரம்பிக்கும்!

அந்த நிலையில்தான் கிருமிகள் தோன்றும்.

எனவே, இங்கே நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், கிருமிகள் உடலுக்கு வெளியிலிருந்து உருவாகி, உடலைத் தாக்கி, உடலுக்குள் புகுந்து பிரச்னை செய்வதில்லை. அவை உடலுக்குள்ளேயே இருக்கும் அழுகிய ரசாயனக் கழிவுகளில் இருந்து உருவாகின்றன. கழிவுகளின் நிலை மாற்றமே கிருமிகளின் ஜனன ஸ்தானம். ஜனன நேரமும் அதுதான். சாலையில் செத்து நாறிக்கிடக்கும் நாயின் அழுகிய உடலின் பாகங்களில் இருந்து புழுக்கள் உருவாவதைப்போல நம் உடலுக்குள்ளிருந்தே அவை உருவாகின்றன.

கழிவுகள் தேங்கிய நிலையில் இருக்கும்போது சின்னச் சின்ன தொந்தரவுகள் மூலம் அக்கழிவுகளை அகற்ற உடல் முயல்கிறது. அக்கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக மாறும்போது, லைசோசோம் போன்ற தற்காப்புத் தற்கொலைப் படையை உருவாக்கி கிருமிகளை அழிக்க முயல்கிறது. அதையும் மீறி ரசாயனக் கிருமிகள் அழுகிப் போகுமானால், அப்போது நமது எதிர்ப்பு சக்தியானது அவற்றைக் காலி செய்ய கிருமிகளை உருவாக்குகிறது.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நம் உடலில் கழிவுகள் எங்குமே தேங்கி இருக்கக்கூடாது. எனவே, நம் உயிர் உள்ளவரை கழிவு நீக்கம் எந்த வழியிலாவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஆஹா, எவ்வளவு அற்புதமான படைப்பு நம் உடல்! அறிவு அல்லது பேரறிவு என்ற பெயர் இறைவனுக்கு மட்டுமே பொருத்தமான பெயர்!

கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? அவை என்ன செய்கின்றன? மீண்டும் அவை எங்கே போகின்றன? போன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த உலகத்தில் ஆணித்தரமான பதில்கள் கிடையாது. எல்லாம் அனுமானமான பதில்கள்தான். ஆனால் இப்போது நமக்குத் தெரியும். அழுகிய ரசாயனக் கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகின்றன. அவை எங்கே போகின்றன? கழிவுகள் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, அதாவது இல்லாமலாக்கிவிட்டு, அந்தக் கிருமிகளும் இல்லாமல் போகின்றன. கழிவுகள் தீர்ந்த பிறகு, கிருமிச் சாப்பாடு காலியான பிறகு, சாப்பாடு இல்லாமல் அக்கிருமிகள் தாங்களாகவே அழிந்து போகின்றன!

ஒரு உதாரணம் பார்க்கலாம்.

ஒருவருக்கு காய்ச்சல் வருகிறது. முதல் நாள் பரிசோதனையில் ஒன்றுமிருக்காது. வெறும் காய்ச்சல்தான். உடனே அவருக்கு ஊசி போடப்படும். அல்லது ஜுரம் தணிப்பதற்கான மெடாசின், க்ரோசின், மாலிடென்ஸ் போன்ற ‘பாராசிடமால்’ குடும்ப மாத்திரைகள் ஏதாவது கொடுக்கப்படும். சிலருக்கு இரண்டு ஊசிகள் போட்டால்தான் நிம்மதி ஏற்படும். நான் வேலை பார்த்த ஊரில் ஒரு அம்மா அப்படித்தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு ஜுரம் வந்துவிடும். குறிப்பிட்ட ஒரு டாக்டரைத்தான் அவர் பார்ப்பார். அந்த டாக்டரோ இரண்டு ஊசிகள்தான் எப்போதும் போடுவார். நான் பார்த்த நோயாளிக்கும் இரண்டு ஊசிகள் போட்டால்தான் நிம்மதியாக இருக்கும். அவரே என்னிடம் சொன்னது இது! நான் அந்தப் பகுதியில் இருந்த ஐந்தாண்டுகளும் வாரம் தவறாமல் அவருக்கு காய்ச்சல் வரும். வாராவாரம் இரண்டு ஊசிகள். ஒன்று மேலே, ஒன்று கீழே!

காய்ச்சல் வந்து, பரிசோதனையில் அது சாதாரண காய்ச்சல் என்று சொல்லப்பட்டு, ஒரு வாரத்துக்கு மருந்துகள் மாத்திரைகள், ஊசிகள் என்று எடுத்துக்கொண்டிருந்தால், அவற்றில் உள்ள விஷம் யாவும் உடலுக்குள் ஊடுருவி கழிவுகளைத் தேங்கவைக்கின்றன. ரசாயனக் கழிவுகளாக மாற்றுகின்றன. அழுக வைக்கின்றன.

ஒரு மருத்துவரையும் பார்க்காமல், நாமாக எந்த மருந்தும் சாப்பிடாமல், ஓய்வு மட்டும் எடுத்துக்கொண்டு இருந்திருந்தால் காய்ச்சல் ஒரு சில நாட்களில் போயிருக்கும். ஆனால், அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டதால் நோய் தீவிரமடைகிறது. ஏனெனில், அலோபதி மருந்துகளில் அனைத்திலும் ரசாயன விஷம் உள்ளது மட்டுமல்ல, நம் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வேலை செய்யவிடாமல் ஸ்தம்பிக்கவைக்கும் சக்தியும் உள்ளது. எனவே, எந்த வழியிலும் நாம் குணமடைந்துவிடக்கூடாது என்பதில் அலோபதி மருந்துகள் மிகத்தெளிவாக உள்ளன!

கழிவுகளின் தன்மையைப் பொருத்து காய்ச்சலின் தன்மை மாறுகிறது. உதாரணமாக, கழிவுகளை வெளியேற்ற ஆர்போ என்ற வைரஸ் உருவாகியுள்ளது என்று கொள்வோம். அந்த வைரஸைக் காப்பாற்றி, அது சரியாக வேலை செய்வதற்காக நமது உடல் ‘இன்டர்ஃபெரான்’ என்ற புரதத்தைச் சுரக்கிறது. இந்த நிலையில் உங்கள் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்தால் உங்களுக்கு ’டெங்கு’ வந்திருப்பதாகச் சொல்வார்கள்!

இன்டர்ஃபெரான்

டெங்கு வைரஸான ஆர்போவின் வாழ்நாள் இரண்டு வாரம்தான். இரண்டு வாரங்கள் நம் உடலில் தங்கி டெங்குவை உண்டு, டெங்குவை காலி செய்துவிட்டு அதுவும் செத்துப்போகும். ஆனால் டெங்கு என்பது ஒரு பயங்கரமான வியாதி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, உங்களைத் தனிமைப்படுத்தி, ஒரு மாதத்துக்குக்கூட மருத்துவமனைகளில் வைத்திருப்பார்கள்! ஏனெனில் அப்போதுதான் அவர்களது வருமானம் கூடும்! டெங்குவுக்கான ஒரு எழவு மருந்தும் அவர்களிடம் கிடையாது. சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகளைத்தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் சிறப்பு மருந்துகள், சிறப்பு கவனிப்புகளுக்கான சிறப்பு ‘ஃபீஸ்’ மறக்காமல் வாங்கிக்கொள்வார்கள்!

ஆர்போ வைரஸ்

இன்னொரு உதாரணம். சாதாரண சளி உருவாகிறது என்றால் அது வெளியேறாமல் நாம் வழக்கம்போல் மருந்து மாத்திரைகள் மூலம் அதை அடக்கி வைத்தோமானால், அது தேக்கமடைந்து, ரசாயனமாக மாறி, அதுவும் அழுகிய பின்னர்தான் டி.பி. கிருமிகள் உருவாகும். நோய் எது, ஆரோக்கியம் எது என்று இப்போது புரிகிறதா?

சமீபத்தில் வாட்ஸப்பில் ஒரு மருத்துவ ஜோக் வந்தது. அதில் டாக்டரிடம், “டாக்டர், எனக்கு சொத்து நிறைய இருக்கிறது. ஆனால் என்ன செய்ய, கிட்னியில் கல் வந்துவிட்டது” என்று நோயாளி கூறுகிறார். அதற்கு டாக்டர், “கவலைப்படாதீர்கள், இரண்டையுமே கரைத்துவிடலாம்” என்று கூறுகிறார்! இப்படித்தான் நடந்துகொண்டுள்ளது. உஷாராக இருக்கவேண்டியது நாம்தான்!

கிருமிகளைப் பற்றி ஓரளவு சொல்லிவிட்டேன். கிருமிகள் நன்மை செய்பவையே என்பதும், அவற்றை நன்மை செய்யவிடாமல் தடுப்பது நாம்தான் என்பதும் புரிந்திருக்கும். இதனால்தான் அம்மை நோய் பற்றிய கிராமத்து மக்களின் நம்பிக்கையும், நகரத்து மக்களின் நம்பிக்கையும் மூட நம்பிக்கைகளே என்று மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார் தமிழ்வாணன். ஆனால் கிராமத்து மக்களின் வழிமுறைகளும் நகரத்து படித்தவர்களின் வழிமுறைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இதில் பின்பற்றத் தகுந்தவர்கள் படிப்பறிவில்லாத கிராமத்து மக்களே!

தமிழ்வாணன்

ஆம். நகரத்து மக்கள் அம்மை வந்தால் தடுப்பு மருந்துகள் (ரசாயனம்) எடுத்துக்கொண்டார்கள். தடுப்பூசிகள் (ரசாயனம்) போட்டுக்கொண்டார்கள். ஆனால், அம்மைக்காக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தும் ஊசியும் தடை செய்யப்பட்டு, புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன என்கிறார் ஹீலர் உமர் (பக்கம் 67).

வழிமுறைகளைப் பொருத்தமட்டில் நம் மண்ணின் மைந்தர்கள்தான் சரி. முக்கியமாக

  • வேப்பிலைப் படுக்கையில் படுக்க வைப்பது
  • வீட்டு வாசலில் அம்மை வந்திருப்பதற்கு அடையாளமாக வேப்பிலை கட்டி வைப்பது
  • சுத்தபத்தமாக இருப்பது
  • நோயாளியை ஓய்வாக வைத்திருப்பது
  • ரொம்ப பசித்தால் மட்டும் சமைக்காத உணவு, பழங்கள் என கொடுப்பது

என அவர்களது வழிமுறைகள் ரொம்பச்சரி. ஏன்? ஏனெனில், முதலில் ஒரு நோயாளி ஓய்வாக இருந்தால் அவருடைய இயக்க வாழ்வுக்குத் தேவையான சக்தியெல்லாம் சேமிக்கப்படும். திரவ உணவு, அல்லது சமைக்காத உணவு, பழங்கள் என பசிக்கும்போது மட்டும் கொடுப்பதால், ரொம்பக் கஷ்டபட்டு எதையும் ஜீரணிக்கத் தேவையில்லாமல், அந்தச் சக்தியும் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இணைந்து விரைவில் நோய் குணமடைய வழிவகுக்கும்.

அம்மை வந்துவிட்டால் உடல் அதிக உஷ்ணமடைந்துவிடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. வேப்பிலையானது குளிர்ச்சியைத் தரும். குளிக்க முடியாவிட்டாலும், குளியல் தருவதைவிட உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அது கொடுத்துவிடும்.

இதில் வேப்பிலையின் பயன்பாடு எக்ஸ்டா ஃபிட்டிங்தான் என்கிறார் ஹீலர் உமர்! வேப்பிலையைப் பயன்படுத்தாமல் மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் அம்மை நோய் சரியாகிவிடும் என்கிறார் அவர்.

பெரும்பாலானவர்களை பயமுறுத்தும் மஞ்சள் காமாலை நோயும் இப்படிப்பட்டதுதான். அதுவும் கிருமிகளால் வருவதே என்று கூறுகிறது மருத்துவ விஞ்ஞானம். ஆனால் அதுவும் ஒரு நோயே அல்ல. அதுவும் கழிவு நீக்கம்தான். இதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அப்போதுதான் கிருமிகளின் தன்னலமற்ற சேவையைப் புரிந்துகொள்ள முடியும்.

நம் ரத்தத்தில் கழிவுகள் இருக்கும். அவை சாதாரணமான கழிவுகளாக இருந்தால் அவை சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும். நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளாக இருந்தால் அவை கல்லீரலால் வெளியேற்றப்படும். கல்லீரல் அக்கழிவுகளை பித்தப்பையில் போட்டு வைக்கும். கல்லீரலின் துணையோடு பித்தப்பை அந்த நச்சுக்கழிவுகளை அழித்துவிடும்.

ஆனால், பித்தப்பையில் உள்ள கழிவுகள் அளவு மீறும்போது அவை ரத்தத்தில் கலந்துவிடும். அப்படி நடந்தால் அக்கழிவுகளை மீண்டும் சிறுநீரகம் பிரித்து, சிறுநீரின் வழியாக வெளியேற்றும். அப்படி மஞ்சளாக கழிவு வெளியேறுவதைப் பார்த்துத்தான் நாம் ஐயையோ மஞ்சள் காமாலை வந்துவிட்டது என்று அலறுகிறோம். சிறுநீர் மஞ்சளாகப் போனால் மஞ்சள் காமாலை வந்துவிட்டது என்று அர்த்தமா அல்லது வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தமா என்று ஒரு அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்கிறார் ஹீலர் உமர்! சரியான கேள்விதான். சிறுநீரில் கெட்ட சர்க்கரை வெளியாகிக்கொண்டிருப்பதை அளந்து பார்த்துவிட்டு ‘உங்களுக்கு சுகர் வியாதி வந்துவிட்டது’ என்று சொல்லும் பரிசோதனையும் இதுவும் ஒன்றுதான். சிந்தியுங்கள்.

முடிவாக சில தகவல்கள்

கிருமிகளைப் பற்றி இறுதியாகச் சில விஷயங்கள் சொல்லவேண்டி உள்ளது. தீமை செய்யும் கிருமிகள் கொஞ்சூண்டு உண்டு என்று சொன்னோமல்லவா? அந்த கொஞ்சூண்டு எப்படி வேலை செய்கிறது? அதற்கும் நாம்தான் காரணம்! எப்படி?

எதிர்ப்பு சக்தி நமக்குக் குறைவாக இருக்குமானால், நம் உடலில் கழிவுகளின் தேக்கம் இருந்து, அவற்றை வெளியேற்றுவதற்கான சக்தி நம்மிடம் இல்லாவிட்டால், நாம் அனுமதித்தால், வெளியிலிருந்து நம் உடலுக்குள் கிருமிகள் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கேயும் நாம் தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.

ஒருவரின் உடலுக்குள் தேங்கியுள்ள அழுகிய ரசாயனக் கழிவுகள் டைஃபாய்டாக இருந்தால் அதை உண்ணும் கிருமிகள்தான் அவருக்குத் தேவை. அவருடைய உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து, அவர் மிகவும் பலவீனமான ஆளாக இருந்தால், அவருடைய உடலால் புதிய உயிர்களை (கிருமிகளை) உண்டாக்கிக்கொள்வதற்கான ஆற்றல் இல்லாத சூழ்நிலையில், புறச்சூழலை அவர் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

புறச்சூழல் என்றவுடன் வெளியில் உள்ள சாக்கடை போன்ற எல்லா அசிங்கமான, அசுத்தமான இடங்களிலும் கிருமிகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. உடலில் கிருமிகள் உண்டாக எந்தச் சூழ்நிலை காரணமாக இருந்ததோ, அதேபோன்ற சூழல் வெளியுலகில் இருந்தால் அங்கேயும் கிருமிகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. இப்படி புறச்சூழலில் இருந்து தன்னை நோக்கி வரும் கிருமிகளை நோயுற்ற, பலவீனமான உடல் அனுமதிக்கிறது. இதைத்தான் நாம் நோய் பரவுகிறது என்பதாகப் புரிந்துகொள்கிறோம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஏழு பேரில் நாலு பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஒருவரால் இன்னொருவர் பாதிக்கப்பட்டார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்த நாலு பேருக்கும் உடலுக்குள் கழிவுகள் ஒரே மாதிரியாகத் தேக்கம் கண்டுள்ளன என்று அர்த்தம். எனவே, ஒரே மாதிரியான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று பேருக்கு அது ஏன் வரவில்லை என்று யோசிக்க வேண்டும். அவர்களின் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளது, அவர்களிடம் கழிவுத்தேக்கம் எதுவும் இல்லை என்று அர்த்தம்.

உலகம் பூராவுக்கும் இந்தப் புரிந்துகொள்ளலை விரிவுபடுத்தலாம். படுத்த வேண்டும். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் எய்ட்ஸ் வந்துவிட்டால், அங்கிருந்து ஒருவர் இந்தியாவுக்கு வந்துவிட்டால், அவர் மூலமாக மற்றவருக்கும் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது என்பது இதுவரை உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.

ஒரே மாதிரியான கழிவுத் தேக்கம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரியான தொந்தரவுகளுக்கு உள்ளாவர். நாடுவிட்டு நாடு ஒரு நோய் பரவிவிட்டது என்று இதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம்.

எனவே, கைகுலுக்கினால் நோய் பரவும், கட்டிப்பிடித்தால் நோய் பரவும் என்றெல்லாம் நினைப்பது அபத்தமாகும்.

மேலே சொன்ன மாதிரியாக நிகழ்வது அபூர்வம். சாதாரணமாக ஒருவர் உடலிலிருந்து இன்னொருவர் உடலுக்குக் கிருமிகள் செல்லாது. அது ஒரு அசாதாரண நிலை. கிருமிகள் நம் உடலுக்குள் புகுவதற்கு இன்னொரு வாய்ப்பு நமக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரம். நம் உடலைக் காக்கும் கவசமான தோல் கிழிக்கப்படும்போது, திறந்திருக்கும் அந்த வாசல் வழியாக கிருமிகள் எளிதாக எதிர்ப்பு சக்தி குறைந்த உடலுக்குள் புகுந்துவிடும். எதிர்ப்பு சக்தி வேலை செய்யவிடாத மருந்துகளையும் நமக்கு ஏற்கெனவே கொடுத்திருப்பார்கள்! இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

கிருமிகளால்தான் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையெனில் மனித சமுதாயம் முழுவதும் உயிர்பிச்சை கேட்டு கிருமிகளிடம் கையேந்தி நிற்கவேண்டியதுதான் என்றார் அமெரிக்க டாக்டர் ஹென்றி லிண்ட்லார். ஆனால் அது உண்மையல்ல என்று ஓரளவு தெரிந்துகொண்டோம். இதுவரை தெரிந்துகொண்டதிலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்?

கிருமிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

கிருமிகள் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தைபோல எண்ணிக்கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேல் கிருமிகள் என்று சொல்லவேண்டாம். நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் என்று சொல்லலாம்.

ஆங்கிலத்தில் elf என்றொரு சொல் உள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் அவர்கள் பாத்திரங்களாக வருவார்கள். காதலர்களுக்கு உதவுவார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத குட்டி தேவைதைகள். கிருமிகள் எனப்படும் நுண்ணுயிர்கள் அப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத குட்டி தேவதைகள்தான். அவர்களால் நமக்கு நன்மையே விளைகின்றன. கண்ணுக்குத் தெரியாதவற்றில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு இந்த வேத நூல் வழிகாட்டும் என்கிறது திருக்குர்’ஆன் (சூரா பகரா).

நாமும் நம்பிக்கை வைப்போம்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/oct/17/29-கிருமிகள்-வாழ்க---6-2581597.html
2579088 சாளரம் நலம் நலமறிய ஆவல் 28. கிருமிகள் வாழ்க! - 5 நாகூர் ரூமி Monday, October 10, 2016 11:41 AM +0530  

கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன என்ற அச்சத்தால் லாபமடைவது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்தான்ஹீலர் உமர்

 

கிருமிகள் பிறக்கும் இடமும் காலமும்

கிருமிகளால் நோய் வருவதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு நோய் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகுதான் உடலில் கிருமிகள் இருப்பதை பரிசோதனைகள் சொல்கின்றன என்பதுவரை பார்த்தோம். அப்படியானால், கிருமிகள் நோயை உண்டாக்கி இருக்க முடியாதென்ற தர்க்கமும் நமக்குப் புரியத்தான் செய்கிறது. ஒரு காய்ச்சல் வந்த ஐந்தாறு நாள் கழித்து கிருமி வருவதன் காரணம் என்ன? அதுவரை அது எங்கிருந்தது? இப்போது ஏன் வந்தது? இதையெல்லாம் புரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது ‘லைஃப் பாய்’ என்று விளம்பரம் சொன்னாலும், ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது கிருமிகள்தான்! அதைத்தான் எப்படி என்று இப்போது சொல்லப்போகிறேன். அதற்காகத்தான் கிருமிகளின் பிறப்பிடத்தைப் பற்றிப் பேசவேண்டி உள்ளது.

கிருமிகளின் பிறப்பிடம் நம் உடல்தான். அது எந்தப் பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், உடலில் ஏற்படும் கழிவுகள். ஆமாம். கழிவுகள்தான் கிருமிகளின் பிறப்பிடம். நம் உடலில் ஏற்படும் கழிவுகளில் பல வகை உண்டு. அவற்றை உருவாக்குவது நாம்தான்! நமக்கே தெரியாமல்!

முதலில் கழிவு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? சிறுநீர், மலம், வியர்வை, சளி, பொடுகு, அழுக்கு போன்றவை மட்டும் கழிவுகளல்ல. நம் கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்கு உள்ளேயே உருவாகும் கழிவுகள் பல வகை. அவை உடலுக்குள் உருவாவதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். நம்முடைய தவறான வாழ்முறை, தவறான உணவுகள் போன்றவைதான் காரணங்களாகின்றன.

கழிவுகள் ஏன் தோன்றுகின்றன?

நம்மால்தான் கழிவுகள் தோன்றுகின்றன. எப்படி? பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்றவற்றை முறையாகப் பேணாமல் இருந்தால் கழிவுகள் உருவாகும். இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேனே.

நாம் பல நேரங்களில் பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்கிறோம். சீரியலில் முக்கியமான வில்லன் கதாநாயகி கையால் அறை வாங்குவதைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்துவிடலாம். அல்லது டிவி பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், எதையோ எடுத்து எப்படியோ வாய்க்குள் போட்டு விழுங்கலாம். அல்லது ஐயய்யோ ஆபீஸுக்கு நேரமாகிவிட்டது என்று பசிக்காதபோது அவசர அவசரமாக சிலபல இட்லிகளை விக்க விக்க விழுங்கிவிட்டுச் செல்லலாம். அல்லது நாக்குக்கு அடிமையாகி ருசிக்காக மட்டும் சாப்பிடலாம். ஆஹா, ஆம்பூர் பிரியாணின்னா பிரியாணிதான் என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடலாம். பழக்கத்தின் காரணமாக கண்ட நேரத்திலும் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கலாம்.

நான் வேலை பார்த்த ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போகும்போது ரயில்வேகேட் போட்டிருந்தால் கொஞ்ச நேரம் பஸ் அங்கே நிற்கும். அப்போது ‘டைம் பாஸ், டைம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டே நிலக்கடலையை ‘பாக்கெட்’ போட்டு விற்பார்கள். மக்களும் அதை வாங்கி பஸ் மீண்டும் நகரும் வரை கொரித்துக்கொண்டிருப்பார்கள். பசிக்கு உணவு உண்ட காலம் போய், நேரத்தைக் கடத்தக்கூட சாப்பிடுகின்ற மனநிலைக்கு மனிதர்கள் வந்துவிட்டது எனக்கு ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. கலிகாலம் என்பது அதுதானோ!

தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க மாட்டோம். அல்லது தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று தவறானதொரு நீர் ஆரோக்கியக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு, காலையில் வெறும் வயிற்றில் பாட்டில் பாட்டிலாக தண்ணீரை வயிற்றுக்குள் ஊற்றுபவர்கள் உண்டு. காய்ச்சல் வந்தால் சாப்பிடாமல் ஓய்வெடுத்தால் சீக்கிரம் குணமாகும். ஆனால், நம்ம வீட்டுப் பெரிசுகள் என்ன செய்யும்? ஐயய்யோ, வயிறு ஒட்டிப்போச்சே, வெறும் வயித்துல படுக்கக் கூடாதுப்பா, ஓட்ஸ் கஞ்சியாவது குடிப்பா, ரசம் சோறுதாம்ப்பா, கொஞ்சூண்டு சாப்பிடுப்பா, ரெண்டு தோசை சாப்ட்டு படு கண்ணு - இப்படியான பாச வசனங்களின் மூலம் உடல் நிலை சரியில்லாதபோதும் வயிற்றுக்குள் எதையாவது போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி பசி, தாகம், தூக்கம் போன்ற அத்தியாவசியமானவற்றை அவசியம் கருதி கொடுக்காமல், விருப்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொண்டிருப்பதால் உடலில் கழிவுகள் தோன்றும்.

கழிவுகள் தோன்றும்போது உடனே ரசாயனம் கலந்த மாத்திரைகளைக் கொடுத்து அவற்றை அடக்க முயல்கிறோம். உதாரணமாக இருமல், சளி, மூக்கொழுகல் போன்றவை நிகழும்போது உடனே மாத்திரைகள் விழுங்கி அவற்றை நிறுத்த முயற்சிக்கிறோம். இவ்வகையான தவறான காரியங்களால் அக்கழிவுகள் உள்ளேயே தங்கி, தேங்கி, தேக்கமுற்ற கழிவுகளாக தன்மை மாற்றம் அடைகின்றன.

இப்படி உடலுக்குள் அடக்கி வைக்கப்படும் கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாத நிலையில், அவற்றை நீக்க அக்கழிவுகளில் இருந்து கிருமிகள் பிறக்கின்றன. அவை அக்கழிவுகளை உணவாக உண்டு அவற்றை நீக்குகின்றன. பின்னர் உணவு இல்லாமல் அவை இறந்துபோகின்றன. அதாவது, இல்லாமல் போகின்றன.

உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஆனால் இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.

கழிவுகள்தான் தொந்தரவுகளாக வெளிப்படுகின்றன. காய்ச்சல் என்பது உஷ்ணமாக உடலை விட்டு வெளியேறும் கழிவு. ஆனால் நாம் அதை ஒரு தொந்தரவாக, நோயாகப் பார்க்கிறோம். மாத்திரை மருந்துகள் உட்கொள்கிறோம். அதனால் அக்கழிவு வேறு தன்மை அடைகிறது. சாதாரண காய்ச்சல் டைஃபாய்டு காய்ச்சலாக மாறுகிறது.

அந்த நேரத்தில் அங்கே டைஃபாய்டு கிருமிகள் தோன்றி அதை குணப்படுத்துகிறது. ஆனால், நாம் அதை ஊசி அல்லது ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் கொடுத்துக் கொன்றுவிடுகிறோம். அதனால் காய்ச்சல் இன்னும் தீவிரமடைகிறது. அல்லது வேறு நோயாகப் பரிணமிக்கிறது.

உருவங்கள் மாறலாம்

கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகும் என்றால், அவை ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் டைஃபாய்டு கிருமி ஒரு மாதிரியாகவும், டெங்கு கிருமி வேறு மாதிரியாகவும், மஞ்சள்காமாலைக் கிருமி ஒரு மாதிரியாகவும் உள்ளது?

இதற்கு நம் வீட்டில் தயாரிக்கும் மசாலாப் பொடி, மிளகாய்ப் பொடியை உதாரணம் காட்டுகிறார் ஹீலர் உமர். வீட்டில் தயாரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட நீண்ட நாள் பயன்படுத்தப்படாத மிளகாய்ப் பொடியோ மசாலாப் பொடியோ கெட்டுப்போகும்போது அதில் வண்டுகள் அல்லது பூச்சிகள் உருவாகும். ஏன்? கெட்டுப்போன பொடிகளின் கழிவுகளை உண்டு அதை சுத்தப்படுத்த அவை உருவாகின்றன. அவற்றை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். மசாலாப்பொடி வண்டு ஒரு மாதிரியாகவும், மிளகாய்ப்பொடி வண்டு வேறு மாதிரியாகவும் இருக்கும். ஒன்று அம்பியாக இருந்தால் இன்னொன்று அந்நியனாக இருக்கலாம்.

கிருமிகளும் அதைப்போலத்தான். உடலில் உருவாகும் கழிவுகள் அல்லது நோய்களின் தன்மைக்கு ஏற்ப, அவை தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும். உருவங்களை மாற்றிக்கொள்வதில் எல்லா வைரஸ்களும் அந்நியனைவிடத் திறமையானவை. அதனால்தான் அவற்றை அழிக்க மருந்து கண்டுபிடிப்பதும் மருத்துவ உலகுக்கு சவாலாக உள்ளது!

சூழலுக்கு ஏற்றவாறு மனிதனும் மிருகங்களும் தன்னை மாற்றிக்கொள்கின்றன. ஐஸ்லாந்து நாட்டில் மேயிலிருந்து ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு சூரியன் அஸ்தமிப்பதே இல்லை! மூன்று மாதங்களும் இரவே கிடையாது! அதேபோல ஸ்வீடனில் நள்ளிரவில்தான் சூரியன் அஸ்தமிக்குதாம்! மீண்டும் காலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுமாம்! ஃபின்லாந்தில் கிட்டத்தட்ட 73 மணி நேரங்களுக்கு வெயிலடித்துக்கொண்டே இருக்கும்! அங்கெல்லாம் மனிதர்கள் வாழவில்லையா?

எப்போதுமே வெயிலடிக்கும் வேலூரில் உள்ள நாயைக் கொண்டுபோய் மூணாறில் விட்டுவிட்டால் சீக்கிரமே அங்குள்ள குளிரைத் தாங்குவதற்காக அதன் உடம்பில் முடி வளர ஆரம்பித்துவிடும். கிருமிகள் சமாசாரமும் இப்படிப்பட்டதுதான். சூழலுக்கும் கழிவுக்கும் ஏற்றவாறு அவற்றின் உருவமும் மாறிக்கொண்டே இருக்கும்.

கழிவுகள் பலவிதம்

நாம் உண்ட உணவு செரித்தபின் நமக்குத் தேவையான சத்துகளையெல்லாம் அதிலிருந்து உடல் உருவாக்கிக்கொள்கிறது; உள்வாங்கிக்கொள்கிறது. தேவையில்லாத மீதி சமாசாரங்களையெல்லாம் அது தனியாகப் பிரித்து வைத்துவிடுகிறது. அவைதான் கழிவுகள்.

இது அன்றாடம் இருபத்தி நாலு மணி நேரமும் நடப்பதுதான். (நாம்தான் இருபத்தி நாலு மணி நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக்கொண்டே இருக்கிறோமே)! நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சாப்பிடுகிறது, கொட்டாவி விடுகிறது, உச்சா போகிறது, கக்கா போகிறது - எல்லாம் செய்கிறது. அவற்றின் காரணமாகப் பிரித்தெடுக்கப்படும் தேவையற்ற சமாசாரங்களான கழிவுகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

இவை சாதாரண கழிவுகள். முதல் நிலைக் கழிவுகள். இவை தினமும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இவை பற்றி நாம் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இவற்றை சிறுநீர், மலம், வியர்வை - இப்படி உடலே வெளியேற்றிவிடும். இது முதல் நிலை.

ஆனால், வெளியேற வேண்டிய ஒன்று வெளியேறாமல் தங்கிவிட்டால்? உதாரணமாக, ரெண்டு நாளாக ரெண்டுக்கே போகவில்லை என்றால்! மலச்சிக்கல் என்று சொல்வோம். அவை வெளியேறாத கழிவுகள். வெளியேறுவதில் ஏதோ பிரச்னையைச் சந்தித்த கழிவுகள். வெளியேறாமல் உடலிலேயே தேங்கிவிடும் கழிவுகள்.

இப்படிக் கழிவுகள் உடலில் தேங்கிவிடும்போது அவை சில தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கின்றன. ஆனால், தொந்தரவு என்ற சொல்கூட சரியில்லை. ‘நம் உடலைச் சீர்படுத்துவதற்காகவும், தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும் ஏற்படும் மாற்றங்கள்தான்’ அவை என்கிறார் ஹீலர் உமர். அந்த மாற்றங்களைத்தான் நாம் தொந்தரவுகள் அல்லது நோய்கள் என்று கருதுகிறோம்!

நம்முடைய தவறான வாழ்முறையினால் கழிவுகள் நம் உயிரணுக்களிலேயே தேங்கியிருந்தாலும் அவற்றை எப்படியாவது வெளியேற்றவே அவை முயற்சி செய்கின்றன. அப்போதுதான் நாம் தொந்தரவுகளை உணர்கிறோம்.

கண்ணிலிருந்து கழிவுகள் வெளியேறினால் கண்ணீர் வடியும். மூக்கிலிருந்து வெளியேறும்போது மூக்கிலிருந்து திரவமாக சளி வெளியேறும். நுரையீரலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது தும்மல், இருமல் எல்லாம் வரும். தோலில் இருந்து கழிவுகள் வெளியேறினால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்படி எல்லாவிதமான உடல் ரீதியான தொந்தரவுகள் அனைத்துவே கழிவுகளின் வெளியேற்றம்தான்.

ரசாயனக் கழிவுகள்

இப்படி சாதாரண, முதல் நிலைக் கழிவுகள் வெளியேறி மறைந்துபோகும் தன்மை கொண்டவை. அவை வெளியேற நாம் துணை செய்தோமென்றால், அவை சீக்கிரமாகவும் எளிமையாகவும் வெளியேறும். ஆனால், அவற்றை நோய் என்று நினைத்து அவை வெளியேறுவதைத் தடை செய்யும் விதத்தில் நாம் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’களில் ஈடுபட்டோமென்றால் - அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம் - சாதாரண கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகளாக மாறும். தொந்தரவுகள் அதிகமாகும்! அவற்றையும் நாம் மேலும் ‘அடக்க’ முயற்சிக்கும்போது, தேக்கமுற்ற இரண்டாம் நிலைக் கழிவுகள் மூன்றாம் நிலையில் ரசாயனக் கழிவுகளாக மாறிவிடும். ‘‘எல்லாப் பொருள்களையும் சேமிக்க விரும்புவதைப்போலவே கழிவுகளையும் சேமிக்கிறோம்’’ என்று குத்தலாகக் கூறுகிறார் உமர்! (பக்கம் 55).

ஆனால், மூன்றாம் நிலைக் கழிவுகளான ரசாயனக் கழிவுகளையும் நமது செல்கள் வெளியேற்ற முயற்சி செய்யாமல் இருக்காது. அந்த முயற்சி ‘‘ஆங்கிலப் படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையானது’’ என்கிறார் அவர் (பக்கம் 57)! நம் உடலின் அற்புதத் தன்மைகளில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள அது உதவும். அது என்ன அப்படி அற்புதமான செயல்?

ரசாயனக் கழிவுகளை வெளியேற்றுவதில் நம் செல்களுக்கு ஒரு ‘டெக்னிகல்’ பிரச்னை உள்ளது. அவற்றை செல்லுக்கு உள்ளேயே வைத்திருந்தால், அது செல்லையே பாதித்துவிடும். செல்லுக்கு வெளியே தூக்கிப்போட்டால், அது மற்ற செல்களை பாதிக்கும்! அப்ப என்னதான்யா செய்வது? இங்கேதான் ஒரு அற்புதத்தை நம் செல்கள் நிகழ்த்துகின்றன. அது என்ன?

The 36th Chamber of Shaolin என்று ஒரு படம். அதில் தற்காப்புக் கலை சொல்லித்தரும் ஒரு கல்லூரியில் ஒரு மாணவன் – கதாநாயகன் - சேருவான். அங்கே 35 அறைகள் அல்லது துறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான தற்காப்புக் கலை சொல்லித்தரப்படும். ஆனால், கதாநாயகன் புதிதாக தனக்கென ஒரு சிறப்புக் கலையை, மூன்று பிரிவாக மடியும் ஒரு கழியை அவனே வடிவமைத்து, அதில் அவனை யாரும் ஜெயிக்க முடியாதாபடி 36-வது அறையை உருவாக்குவான். அதேபோல, உள்ளேயும் ரசாயனக் கழிவை வைத்துக்கொள்ள முடியாமல், வெளியேயும் அனுப்ப முடியாமல் தவிக்கும் நம் செல்கள் ஒரு புதிய உத்தியைக் கையாள்கின்றன.

லைசோசோம்கள்

36-வது சேம்பர் ஆஃப் ஷாவோலின் படத்தில் 36-வது அறையை உருவாக்க உதவும் மூன்று மடிப்புகள் கொண்ட கழியைக் கதாநாகயன் உருவாக்குவதுபோல, ரசாயனக் கழிவுகளை அழிக்க நமது ‘செல்’ ஒரு புதிய தற்கொலைப்படையை உருவாக்குகிறது! ஆம். அந்த புதிய உயிரின் பெயர் லைசோசோம். ‘செல்’ சுவரின் அருகில் தூசி மாதிரி அவை ஒட்டிக்கொண்டிருக்கும். ரசாயனக் கழிவுகள் ‘செல்’ திரவத்தில் கலந்துவிடாதபடி ‘செல்’லில் கழிவுகள் இருக்குமிடத்தைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற ஒரு அமைப்பை அவை ஏற்படுத்துகின்றன. கழிவு ரசாயனம் செல் திரவத்தில் கலந்துவிடாமல் அந்த சவ்வு காப்பாற்றும். ஆனால், இது தாற்காலிக ஏற்பாடுதான்.

கழிவுகளின் தன்மையையும் அளவையும் பொறுத்து இந்த லைசோசோம்கள் வளர்கின்றன. கழிவு ஒரு கோலியாத்தாக இருந்தால் லைசோசோம் டேவிட்டைப் போல் கவண் எறியாது. கோலியாத்தைவிட பெரிய கோலியாத்தாக வளர்ந்து கொல்லும்! ஆம், ‘செல்’லில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்போது கழிவுகளைத் தாக்கிக் கொன்று தானும் அழிந்து போகும்!

செல்லில் ஆரோக்கியமான சூழ்நிலையா? அப்படீன்னா என்ற கேள்வி எழுவது நியாயமே. நாம் விரதம் / நோன்பு பிடித்திருந்தால் அது ஆரோக்கியமான சூழ்நிலை. நாம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தால் அதுவும் ஆரோக்கியமான சூழ்நிலைதான். இப்படிக் கழிவுகளைத் தாக்கி, தானும் அழிந்து போய்விடும் தியாகிகள் லைசோசோம்கள். ஒரு நுண்ணிய கழிவுத்துகள்கூட மிஞ்சாமல் அழித்துவிடுவார்கள். ஆமாம். லைசோசோம்களும் தனி உயிர்கள்தான். நாம் என்பது கோடிக்கணக்கான உயிர்களின் தொகுப்பு என்று ஹெக்டே கூறுகிறார். ‘எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் மனித உடல்’ என்கிறார் ஹீலர் உமர். சத்தியமான வார்த்தைகள்.

இதுவரை மூன்று வகையான கழிவுகளைப் பார்த்திருக்கிறோம். சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள், ரசாயனக் கழிவுகள். இன்னும் முடிந்துவிடவில்லை. நான்காவது நிலைக் கழிவுகள்தான் கிருமிகள் உருவாவதற்குக் காரணமாக உள்ளது.

அதையும் பார்க்கத்தானே போகிறோம்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/oct/10/28-கிருமிகள்-வாழ்க---5-2579088.html
2574192 சாளரம் நலம் நலமறிய ஆவல் 27. கிருமிகள் வாழ்க! - 4 நாகூர் ரூமி Sunday, October 2, 2016 10:21 AM +0530  

நாம்தான் கிருமிகள்; கிருமிகள்தான் நாம்ஜொனாதன் எய்சன்

லூயி பாஸ்டரும் கிருமிகளும்

மனிதர்களுக்கு வரலாறு இருப்பதைப்போல கிருமிகளுக்கும் வரலாறு உண்டு! அதைக் கொடுத்தவர்களும் மனிதர்களே! மனிதர்களைப் பற்றிய வரலாற்றில் உண்மைகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் சொல்லப்பட்டிருப்பதைப்போல, கிருமிகளின் வரலாற்றிலும் இந்த அரசியல் உண்டு! அதற்கும் காரணம் மனிதர்களே! மனிதர்கள் இருந்தாலே அரசியல் வரத்தானே செய்யும்!

கிருமிகளின் வரலாற்றில் கதாநாயகன் ஒரு ஃப்ரெஞ்சு வேதியியல் நிபுணர். அவர் பெயர் லூயி பாஸ்டர். இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணியிரியல் பாடத்தின் கதாநாயகன் அவர்தான். ஏன்?

லூயி பாஸ்டர்

1860-64-ம் ஆண்டுகளில் லூயி பாஸ்டர் சிலபல பரிசோதனைகளைச் செய்தார். அதன் விளைவாக, கிருமிகள் காற்றின் மூலமாகப் பரவுகின்றன, அவற்றால் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது, அவை நோய்களை உண்டாக்குகின்றன என்ற கற்பனையை முதன்முதலாக உலகெங்கிலும் பரப்பிய பிதாமகர் அவர்தான்!

அவர் காலத்தில் வாழ்ந்த ஃப்ரெஞ்சு விஞ்ஞானியான அந்துவான் பீச்சாம்ப் என்பவரின் கருத்துகளைத் திருடி தனதென்று வெளியிட்டார் என்றும் லூயி பாஸ்டர் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், எல்லாவற்றையும் மீறி தனது பெயரை வரலாற்றில் தக்கவைத்துக்கொண்டார் லூயி பாஸ்டர். பீச்சாம்ப்பை ஓரங்கட்டிவிட்டு முதலிடத்திலேயே லூயி பாஸ்டர் இருக்க முடிந்தததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, அந்தக் கால ஆங்கில மருத்துவம் செத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், இன்று அது கொழுத்துப் பிழைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணங்களாக உள்ள அறுவை சிகிச்சை, ஆண்ட்டிபயாடிக்ஸ் போன்ற சமாசாரங்களெல்லாம் அப்போது உருவாகி இருக்கவில்லை. அல்லது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. எனவே, லூயி பாஸ்டரை அலோபதி பயன்படுத்திக்கொண்டது என்று சொல்லலாம். அலோபதியை லூயி பாஸ்டர் பயன்படுத்திக்கொண்டார் என்றும் சொல்லலாம்.

இரண்டாவது காரணம், அவர் அன்றைய ஃப்ரான்ஸ் நாட்டு மன்னர் மூன்றாம் லூயி நெப்போலியனின் நண்பராக இருந்தார்! ஆஹா, இது ஒன்று போதாதா? மோசமான, அநீதியான ஆட்சியாளர்களின் ஆதரவில் இருந்தவர்களால் மனிதகுலம் பட்ட பாடு வரலாறு நெடுகிலும் கொட்டிக்கிடக்கிறதே!

மூன்றாம் லூயி நெப்போலியன்

‘நுண்ணுயிரியலின் தந்தை’ என்றும் லூயி பாஸ்டர் கருதப்படுகிறார்! உணவுப் பொருள்கள் புளித்துப்போதல், நொதித்தல் போன்றவற்றுக்கு நுண்ணுயிரிகள்தான் காரணம் என்ற கோட்பாடும் இவரது பரிசோதனைகள் மூலம் உறுதியானது. (ஆனால் fermentation என்ற ஆங்கிலச் சொல்லால் குறிக்கப்படும் அது, மனிதர்களுக்கு நன்மை செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை).

போகட்டும், 1860-களில் அவர் அப்படி என்னதான் பரிசோதனை செய்தார்? ஒன்றுமில்லை, திறந்திருந்த ஒரு குடுவையில் இறைச்சித்துண்டுகளை வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அது அழுகிப்போனது. அந்த இறைச்சி கெட்டுப்போவதற்குக் காரணம், காற்றின் வழியாக வந்த கிருமிகள்தான் என்று அவர் ‘கண்டுபிடித்துக்’ கூறினார்! அதை உலகுக்கு ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. உடனே இன்னின்ன கிருமிகளால் இன்னின்ன நோய்கள் உண்டாகின்றன என்ற பட்டியல், அட்டவணைகள் உருவாக, அவரது அறிவிப்பு உதவியது. பென்சிலின் போன்ற கிருமிக்கொல்லி மருந்துகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்) உருவாக்கப்பட்டன. அவை பரவலான புழக்கத்துக்கும் வந்தன.

உதாரணமாக, மலேரியா நோய்க்கு ப்ரோட்டோஸோவா என்ற வகைக் கிருமிகள் காரணம் என்றும், கொசு மற்றும் கொறித்துத் தின்னும் எலி போன்ற விலங்குகள் மூலமாக அது பரவுகிறது என்றும் கூறப்பட்டது.

அலோபதியில் அடிப்படையே தவறாக உள்ளது என்று புரிந்துகொண்ட சாமுவேல் ஹானிமன், ஹோமியோபதியை உருவாக்கி சின்ங்கோனா என்ற மரத்தின் பட்டை மூலமாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1795-லேயே வெற்றிக்கொடி நாட்டினார். ஆனால், லூயி பாஸ்டர் போன்றவர்களால் கிருமிக்கொள்கை உருவாக்கப்பட்டது 1880-களில்!

கிருமிகளால்தான் நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை அல்லது கொள்கையை லூயி பாஸ்டர் 1881-ம் ஆண்டு வெளியிட்டார். அதை எதிர்த்து ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’ (Lancet), லூயி பாஸ்டரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தது. அவரது கருத்துகள் முன்னுக்குப்பின் முரணாகவும், பொருத்தமற்றதாகவும் இருப்பதாக அது வெளிப்படையாகவே சொன்னது.

சாமுவேல் ஹானிமன்

இவ்வளவு ட்ராமாவும் எதற்கு? ஏற்கெனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய்க்கு இதுதான் காரணம் என்று 70 ஆண்டுகள் கழித்து ஒருவர் சொன்னதற்கு என்ன காரணம்? எல்லாம் புகழ் மீதான போதையும், அரசியலும்தான் வேறென்ன?

அந்துவான் பீச்சாம்ப்

இருக்கட்டும், ஆனால் லூயி பாஸ்டர் சொன்னது உண்மையா? அதை நாம் அந்துவான் பீச்சாம்பிடம்தான் கேட்க வேண்டும். பீச்சாம்ப், லூயி பாஸ்டர் காலத்தில் வாழ்ந்த ஒரு ஃப்ரெஞ்சு விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மருத்துவர். ஃப்ரான்ஸில் இருந்த லில் நார்டு (Lille Nord) மருத்துவப் பல்கலைக் கழக ‘டீன்’ ஆக இருந்தவர். லூயி பாஸ்டர் சொல்வதெல்லாம் கற்பனை என்பதை நிரூபித்தவர். சபாஷ், சரியான போட்டி என்ற வசனத்துக்குப் பொருத்தமானவர். அவர் என்ன சொன்னார்?

அந்துவான் பீச்சாம்ப்

காற்றில் நுண்ணுயிர்கள் வளர்கின்றன. அவற்றை வளர்க்க காற்று பயன்படுகிறது. ஆனால், அவ்வுயிர்களை வேறு உயிர்களுக்குக் காற்று கடத்துவதில்லை என்று பீச்சாம்ப் கூறினார். கிருமிகளுக்கு அவர் வைத்த பெயர் மைக்ரோஸைமாஸ் (microzymas). இதில் ‘ஸைமாஸ்’ என்ற பகுதி ‘என்ஸைம்’ என்ற சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ‘குட்டி என்ஸைம்கள்’ என்று இதை அர்த்தப்படுத்தலாம். ‘என்ஸைம்’ எனப்படும் ப்ரோட்டீன்கள் நமக்கு நல்லது செய்பவை என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்ட உண்மையாகும். இதை மனத்தில் கொண்டு இந்தப் பெயரைப் பார்த்தால், ‘கண்ணுக்குத் தெரியாத நன்மை செய்யும் குட்டி உயிர்கள்’ என்று கிருமிகளின் தன்மையை பீச்சாம்ப் விளக்கியிருப்பது புரியும்.

இதுமட்டுமல்ல. லூயி பாஸ்டர் செய்த பரிசோதனையை தவறு என்று அவர் நிரூபித்தார். எப்படி? அதே பரிசோதனையைக் கொஞ்சம் மாற்றி அவர் செய்தார். அது என்ன? திறந்த குடுவைக்குப் பதிலாக காற்றுப் புகாத ஒரு குடுவைக்குள் மாமிசத்தை வைத்து பரிசோதித்தார். சில மணி நேரம் கழித்து அதுவும் கெட்டுப்போனது! அப்படியானால் என்ன அர்த்தம்? மாமிசம் கெட்டுப்போனதற்குக் காரணம் காற்றில் இருந்த கிருமிகள் என்று லூயி பாஸ்டர் சொன்னது தவறு என்பதுதானே! கிருமிகள்தான் மாமிசம் அழுகிப்போவதற்குக் காரணம் என்றால், காற்று புகாத இடத்தில் எப்படி கிருமிகள் வந்தன என்று அவர் கேட்டார். நியாயமான கேள்வி!

தேங்குகின்ற கழிவுகளில் இருந்துதான் கிருமிகள் உண்டாகின்றன. அவற்றால் உருவாவதாகச் சொல்லப்படும் நோய்களின் ஆரம்ப கட்டத்தில் கிருமிகளே இருப்பதில்லை என்ற முக்கியமான உண்மையையும் அவர்தான் சொன்னார்.

ஆனால், பீச்சாம்ப்பின் கண்டுபிடிப்புகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. உண்மையான ஹீரோ ஓரங்கட்டப்பட்டார். வில்லன் ஹீரோவாக்கப்பட்ட மாதிரி, லூயி பாஸ்டர் உருவானார். Bechamp or Pasteur: A Lost Chapter in the History of Biology என்று இருவரைப் பற்றியும் ஒரு புத்தகமே எழுதப்பட்டது. ஆனால் அதுவும் உலகுக்குத் தெரியாமல் அமுக்கப்பட்டது. பீச்சாம்ப் எழுதிய The Blood and Its Third Anatomical Element என்ற முக்கியமான நூலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. ‘நோய்களின் தொடக்கமல்ல கிருமிகள்; நோய்களின் முடிவே அல்லது விளைவே கிருமிகள்’ என்ற அவரது மிகமுக்கியமான கண்டுபிடிப்பு, வரலாற்றில் கிடப்பில் போடப்பட்டது.

‘காற்றில் உள்ள கிருமிகளால் பாதிக்கப்படாவிட்டால், உயிருள்ள பொருள் எதுவுமே தானாக கெட்டுப்போகாது, அழுகாது என்ற பாஸ்டரின் தவறான கருத்து விஞ்ஞானத்தை மிகவும் கீழான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது’ என்று பீச்சாம்ப் மிகச்சரியாகச் சொன்னார்.

டாக்டர் பெட்டின்காஃபர்

பீச்சாம்ப் சொன்னது உண்மைதான் என்பதை பெட்டின்காஃபர் (Pettenkofer) என்ற இன்னொரு டாக்டர் ஒரு அதிரடி பரிசோதனை மூலம் நிரூபித்தார். அவர் ஒரு டாக்டர் மட்டுமல்ல, பவேரியா நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானியும்கூட. அப்படி என்ன அதிரடி பரிசோதனையை அவர் செய்தார்?

டாக்டர் பெட்டின்காஃபர்

ஒன்றுமில்லை. தன் உயிரை பணயம் வைத்து ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்! ஆமாம். அவர் ஏன் அப்படிச் செய்தார்? அவருக்குத் தெரியும், அப்படிச் செய்வதன் மூலம் அவர் உயிர் போகாது என்று! பொதுமக்கள் முன்னிலையில் அவர் பரிசோதனை நிகழ்த்திய நாள் 1892, அக்டோபர் 07. ராபர்ட் கோச் என்ற நுண்ணியிரியல் நிபுணரிடமிருந்து காலராவை உண்டாக்கும் கிருமிகள் என்று சொல்லப்பட்ட கிருமிகள் அடங்கிய ஒரு டெஸ்ட் ட்யுப் அல்லது பாட்டிலைப் பெற்றுக்கொண்டார்! பொதுமக்கள் மற்றும் உலக விஞ்ஞானிகள் முன்னிலையில் அதை நீரில் கலந்து ஏதோ ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மாதிரி காலரா கிருமி ஜூஸ் குடித்தார்!

படம் 11

அந்த நேரம், காலரா தாக்கி மியூனிச் நகரிலும் இன்னும் பல ஊர்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெட்டின்காஃபர் அப்படியொரு பரிசோதனையைச் செய்தார். மனுஷனுக்கு ரொம்பத்தான் துணிச்சல். அவர் நிச்சயம் செத்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஏனெனில், காலரா கிருமிகள் உடலுக்குள் புகுந்தவுடன் தாமதமின்றி தங்கள் வேலையைத் துவக்கிவிடும் என்று அந்தக்கால விஞ்ஞானிகள் நம்பினர்! நவீன மருத்துவமும் அப்படித்தான் கூறுகிறது!

ஆனால், அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான் காத்திருந்தது. பெட்டின்காஃபருக்கு பல நாட்கள் ஆகியும் ஒன்றும் ஆகவில்லை! மனிதர் இன்னும் கொஞ்சம் தெம்பேறி இருந்தார்! கொஞ்ச நாள் கழித்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேறு ‘லொகேஷனில்’ அதே பரிசோதனையை நிகழ்த்தக் கிளம்பிவிட்டார் அவர்! கிருமிகள் உயிரைக் குடிக்கும் என்பது உண்மையானால், பெட்டின்காஃபரை ஏன் விட்டுவைத்தது? அவர் மீது மட்டும் ஏன் கிருமிகளுக்கு கருணை பிறந்தது?!

உலகில் இருந்த ஊர் பேர் தெரியாத பல விஞ்ஞானிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம்ம ஊர் விஞ்ஞானி தமிழ்வாணன், இதுபற்றி ரொம்ப காலத்துக்கு முன்பே மிகச்சரியாக கிருமிகளின் தன்மை பற்றி ‘இயற்கை வைத்தியம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். நம்மில் எத்தனை பேருக்கு அது தெரியும்? அந்த நூல் இன்னும் கிடைக்கிறது. அவர் அதில் ஒரு அழகிய உதாரணம் தருகிறார். அது என்ன?

நாய் கடித்துத் தெருவில் செத்துக்கிடக்கும் பெருச்சாளியின் அழுகிய உடலில் புழுக்கள் நெளிந்துகொண்டிருக்குமல்லவா? அந்தப் புழுக்கள்தான் பெருச்சாளியைக் கொன்றன என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தம்? அதைப்போன்றதுதான் நோய்க்கிருமிகளால் நோயாளி இறந்துவிட்டார் என்று ஒரு மருத்துவர் சொல்வதும் என்று அவர் கூறுகிறார்! சாதாரண மக்களுக்கும் புரியும்படி இந்த நூலை அவர் எழுதியது 1960-களில்! பெருச்சாளி என்பது மனித உடலையும், புழுக்கள் கிருமிகளையும் குறிக்கின்றன என்பதையும் நான் சொல்ல வேண்டுமா என்ன?

இதுவரை கிருமிகளின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்தோம். அவை மனிதனுக்கு நோயை ஏற்படுத்துகின்றன என்று சொன்னவர்களைப் பற்றியும், அப்படியில்லை என்று சொன்னவர்களைப் பற்றியும் பார்த்தோம். கிருமிகளால் மனிதனுக்குத் தீமை ஏற்படுவதில்லை, நன்மைதான் ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன், ஒரு முக்கியமான கேள்வியோடு இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்ளலாம்.

ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். காய்ச்சல் வந்த முதல் நாள் ரத்தப் பரிசோதனை செய்தால் ரிசல்டில் ஒன்றும் தெரியாது. சாதாரண காய்ச்சல்தான், ரெண்டு மூணு நாள் மருந்து எடுத்தால் சரியாயிடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகளை மருத்துவர் கொடுப்பார். முதலில் காய்ச்சல் சரியாகிவிட்ட மாதிரி இருக்கும். இரண்டு மூன்று நாட்களில் திரும்ப வரும். அல்லது மாலை நேரங்களில் மறுபடியும் வந்துவிடும். காய்ச்சலுக்கு மாலை நேரம்தான் பிடிக்குமோ என்னவோ!

மறுபடியும் டாக்டரிடம் ஓடுவோம். ஐந்து நாள் ஆகியிருக்கும். இப்போது மறுபடியும் ரத்தப் பரிசோதனை. ஆனால் இந்த முறை ரிசல்ட் சாதாரணமாக இருக்காது. அதைப் பார்த்துவிட்டு டாக்டர், ‘உங்களுக்கு டெங்கு வந்திருக்கிறது. உடனே அட்மிட் ஆகிவிடுங்கள். தினமும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்வார். டெங்கு என்பது DENV எனப்படும் வைரஸால் கொசு மூலம் பரவுகிறது / ஊடுருவுகிறது என்று நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது.

நான் சொன்ன முக்கியமான கேள்வியை இப்போதுதான் கேட்க வேண்டும். ஒரு வைரஸ் மூலமாக ஒரு நோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னால், அவரிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். அது என்ன கேள்வி?

வைரஸால் ஒரு நோய் வந்துவிட்டது என்றால், எது முதலில் வர வேண்டும்? வைரஸா அல்லது நோயா? இதுதான் கேள்வி. இதன் அறிவுப்பூர்வமான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இட்லி மாவு மூலம் இட்லி வந்தது என்றால் மாவு முதலில் இருக்க வேண்டுமா அல்லது இட்லியா? ஆரம்பம் எது என்று தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். காரணம், விளைவு என்பதில் காரணிதான் முதலில் இருக்க வேண்டும். அது இல்லாமல் எப்படி அதை ஏற்படுத்தும் விளைவு வரும்? இப்படி யோசிக்க நாம் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்று சொன்ன வள்ளுவர்போல பெரிய மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படித்தவரும் படிக்காதவரும், யாரும் இதைப் புரிந்துகொள்ளலாம். புரிந்துதான் வைத்திருக்கிறோம். ஆனாலும் ஏமாற்றப்படுகிறோம். முக்கியமான நேரத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். அங்கேதான் பிரச்னை ஆரம்பமாகிறது.

குறிப்பிட்ட ஒரு நோயை குறிப்பிட்ட ஒரு வைரஸ் உருவாக்குகிறது என்றால், முதலில் நம் உடலுக்குள் அந்த வைரஸ்தானே வர வேண்டும்? தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் அதுதானே சரி? முதல் நாள் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் என்று ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால், ஐந்தாறு நாள் கழித்து அது டைஃபாய்டு என்றோ டெங்கு என்றோ சொல்கிறது. சாதாரண சளி என்ற சொன்ன டாக்டர் கொடுத்த இருமல் மருந்துகளையும் சளி மாத்திரைகளையும் சாப்பிட்ட பல நாட்களுக்குப் பிறகும் இருமலும் சளியும் குறையாமல் மீண்டும் பரிசோதிக்கும்போது அது சாதாரண சளியல்ல, காசநோய் என்று டாக்டர் ஏன் சொல்கிறார்? ஏன் அவருக்கு அது முதல் நாளே தெரியவில்லை? முதல் நாள் சளியில் ஏன் காச நோய்க் கிருமிகள் இல்லை? இப்படியான கேள்விகளை கேன்ஸர் வரை எல்லா நோய்களுக்கும் கேட்கலாம்.

முதலில் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு, தொந்தரவுகள் நீடிக்கும்போது கிருமிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏன் நோயை ஏற்படுத்தும் கிருமிகள் முதலில் உடலில் காணப்படுவதில்லை? ஒரு வாரத்துக்கு அவை ஒளிந்துபிடித்து உடலுக்குள் விளையாடிக்கொண்டிருக்குமா?

கிருமி ஏன் முதலிலேயே வரவில்லை என்ற கேள்விக்கான பதிலில்தான் கிருமிகளின் தன்மை, சேவை பற்றிய எல்லா உண்மைகளும் மறைந்து கிடக்கின்றன. மனிதனைக் காப்பாற்ற அவை என்னென்ன செய்கின்றன என்று அறிந்துகொண்டால் ரொம்ப வியப்பாக இருக்கும். பார்க்கத்தானே போகிறோம்…

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/oct/03/27-கிருமிகள்-வாழ்க---4-2574192.html
2567279 சாளரம் நலம் நலமறிய ஆவல் 26. கிருமிகள் வாழ்க! - 3 நாகூர் ரூமி Tuesday, September 20, 2016 10:45 AM +0530  

உங்கள் கைகளை கழுவிக்கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இயேசுவும் கிருமிகளும் இல்லாத இடமே இல்லை – யாரோ.

 

எங்கெங்கும்…

இணையத்தில் கிடைத்த இந்த மேற்கோளில் இயேசுவையும் கிருமியையும் ஒன்றாக இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. இது மத நம்பிக்கையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தினால், கிருமிகளை அவர்கள் குட்டிச்சாத்தான்களாகப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை எந்தக் கேள்வியும் இன்றி இந்த மேற்கோளை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளுமானால், கிருமிகளைப் பற்றிய சரியான கருத்தையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்! கடவுளும் கிருமியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். இது ஒப்புமை அல்ல. கடவுளைப்போல, காற்றைப்போல, கிருமிகளும் எங்குமிருக்கின்றன என்ற புரிந்துகொள்ளல். அவ்வளவுதான்.

நீரில், நிலத்தில், ஆகாயத்தில் என்று கிருமிகள் எங்கும் வாழ்கின்றன என்று பார்த்தோம். கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன என்றும், அவற்றில் 85 லட்சம் வகை உள்ளன என்றும், அவற்றில் மனிதர்களுக்குத் தீமை செய்பவை ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவையே என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் அவசியமான இயற்கை நிகழ்வுக்கு (biotransformation / microbial metabolism) உதவுகின்றன என்றும் பார்த்தோம்.

எங்கும் நிறைந்திருக்கும் கிருமிகள் நம் உடம்புக்குள்ளும் இருக்குமல்லவா? ஆம். இருக்கின்றன. அதுவும் கோடிக்கணக்கில்! தொன்னூறு ட்ரில்லியன் கிருமிகள் ஒரு மனித உடலுக்குள் இருப்பதாக ஒரு குத்துமதிப்பான கணக்கு சொல்கிறது! ஒரு உயிரணு இருந்தால் அதற்குப் பகரமாக பத்து கிருமிகள் இருக்குமாம்!

லட்சம், கோடி என்றால் நமக்குத் தெரியும். மில்லியன், பில்லியன், டிரில்லியன் எல்லாம் மேற்கத்திய உலகின் எண்ணிக்கை அளவுகள். ஒரு மில்லியன் எனில் பத்து லட்சம். ஒரு பில்லியன் எனில் நூறு கோடி! ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி! அப்போ, 90 ட்ரில்லியன் என்றால்! தலை சுற்றுகிறது! எண்ணிலடங்காத கோடிக்கணக்கான கிருமிகள் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் இருக்கின்றன! நமது உடலே கிருமிகளால் ஆக்கப்பட்டதுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். கிருமிகளின்றி அமையாது உலகு என்றார் ஹீலர் உமர். நான் சொல்கிறேன், கிருமிகளின்றி அமையாது உடல்!

கிருமித் தொழில்

இவ்வளவு கிருமிகளும் நம் உடம்புக்குள் எதற்காகக் குடியிருக்கின்றன? கிருமிகளெல்லாம் தீமைதான் செய்யுமென்றால், இந்நேரம் மனித குலமே அழிந்துபோயிருக்க வேண்டுமே! ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லையே! அப்படியானால் கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன?

இந்தப் பிரபஞ்சத்தில் செய்யும் அதே வேலையைத்தான் நம் உடலுக்குள்ளும் செய்துகொண்டுள்ளன! அதுதான் ஏற்கெனவே சொன்னேனே, ஒன்றை இன்னொன்றாக மாற்றுகின்ற வேலை. இன்னொரு வகையில் சொன்னால், கெட்டதையெல்லாம் நல்லதாக மாற்றும் வேலை! ஆமாம். அதைத்தான் அனுதினமும், கணந்தோறும் அவை செய்துகொண்டே இருக்கின்றன. நம்மால் அவற்றுக்கு நன்றி என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லமுடியாது. ஏன்? ஒவ்வொரு கிருமிக்கும் ‘நன்றி’ என்று சொல்லவேண்டுமானால், நாம் பல கோடி ஆண்டுகள் வாழ்பவராக இருக்க வேண்டும். அப்போதுகூட அது சாத்தியமா என்பது சந்தேகமே!

அப்படி என்ன நன்மைகளை அவை நமக்குச் செய்கின்றன?

ஒரு முக்கிய உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு கிருமிக் கோடு மட்டும்தான் இங்கே போடமுடியும். கிருமி ரோட்டை நீங்கள்தான் போட்டுக்கொள்ள வேண்டும்!

கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளதல்லவா? அதில் கார்பனும் ஆக்ஸிஜனும் உள்ளன. ஆனால், நாம் உயிர்வாழத் தேவை ஆக்ஸிஜன் மட்டும்தான். கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து அந்த ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துக் கொடுப்பது கிருமிகள்தான்! அப்படியானால், நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமே கிருமிகள்தான்!

மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், முக்கியமான இரண்டு கிருமி வகைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

கிருமிகளின் வகைகள்

உலகில் 85 லட்சம் வகைக் கிருமிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மிகமுக்கியமானவையாக இருப்பவை பாக்டீரியாவும் வைரஸும்தான். பல நோய்களுக்கும் காரணம் வைரஸ்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிச்சொல்லி நாம் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளோம். எனவே, அவை பற்றிய உண்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாக்டீரியா, வைரஸ் என்று உலகில் உள்ள எந்தக் கிருமியையும் நம் கண்களால் பார்க்கமுடியாது. ஆனால், வைரஸைவிட பாக்டீரியா அளவில் பெரியது. அதனால், அதைமட்டும் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாகப் பார்க்கமுடியும். ஆனால், வைரஸை எந்த மைக்ராஸ்கோப்பாலும் பார்க்கமுடியாது. அவ்வளவு சின்னது அது. இதுபற்றி ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம்.

பிசுபிசுப்பான களிமண்ணில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் கொஞ்சம் பாக்டீரியாவை விட்டு வளர்க்கமுடியும். இது ‘பாக்டீரியல் கல்ச்சர்’ என்று அறியப்படுகிறது. ‘மைக்ரோபயாலஜி லாப்’களில் மாணவ மாணவிகள் இக்காரியம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஒருமுறை நான்கூட தெரியாமல் ஒரு பாக்டீரியல் கல்ச்சர் தட்டில் கை வைத்துவிட்டேன். ‘சார், சார், கையை டெட்டால் போட்டுக் கழுவிக்கொள்ளுங்கள்’ என்று அறிவுரை சொன்னார்கள். நான் எதுவும் செய்யவில்லை என்பது வேறு விஷயம். இப்போது மீண்டும் பாக்டீரியாவுக்கு வரலாம்.

அந்தக் களிமண்ணையும் நீரையும் தனித்தனியாக வடிகட்டிப் பார்த்தால், அந்தக் களிமண்ணில் பாக்டீரியாக்கள் தங்கியிருப்பதைப் பார்க்கமுடியும். ஆனால், வடிகட்டப்பட்ட நீரில் அது இருக்காது. ஆனால், இதே மாதிரியான பரிசோதனையை வைரஸை வைத்துச் செய்தால், களிமண்ணில் வைரஸ் தங்காது. நீரின் வழியாகக் கீழே இறங்கிவிடும்.

அப்படிக் கீழே இறங்கிய வைரஸ் உள்ள நீரைக் காயவைத்தால், அதில் வைரஸ் உறைந்திருக்கும். எகிப்திய ‘மம்மி’ மாதிரி வைரஸ் ‘மம்மி’ கிடைக்கும். அந்த வைரஸ் படிமத்தை எப்போது நீரில் கலந்தாலும் மம்மிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்! ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்பதுபோல!

கிருமி போஜனம்

இப்படிச் சொன்னவுடன், ‘அந்நியன்’ படம் நினைவுக்கு வருகிறதா?! ஆனால், உணவு என்ற அர்த்தத்தில் மட்டுமே நான் இங்கே பேசுகிறேன். ரொம்பக் கஷ்டப்பட்டு உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் கிருமிகளின் உணவுதான் என்ன? நமக்கு இட்லி, தோசை, பிரியாணி, இனிப்பு, ஐஸ்க்ரீம், பர்கர், பிட்ஸா என விருப்ப உணவு வகைகள் அதிகம். நாளுக்கு நாள் அவற்றின் வகையும் அளவும் கூடிக்கொண்டே போகும் வாய்ப்பு உண்டு! ஆனால், நம்மை வாழவைக்கும் கிருமிகளின் உணவு ஒரே வகைதான். அதன் பெயர் கழிவு!

ஆமாம். நாம் வேண்டாமென்று தூக்கிப்போடும் மிச்சம் மீதியைக் கழிவுகள் என்கிறோம். அதேபோல, உயிர்ச்சத்துகளையெல்லாம் உறிஞ்சிக்கொண்டு, நம் உடல் வேண்டாம் என்று வெளித்தள்ளும் அனைத்தும் கழிவுகளே. ஹார்பிக் விளம்பரத்தில் டாய்லட்டில் ஹார்பிக் ஊற்றியவுடன் ஆ, ஊ என்று அலறிக்கொண்டு கிருமிகள் ஓடி மறையும் காட்சி நினைவுக்கு வருகிறதா? விளம்பரத்தில் கிருமிகள் கண்ணுக்குத் தெரிவதுபோலக் காட்டியது பொய். ஆனால், கழிவுகளை உண்டு அவை உயிர் வாழும் என்ற குறிப்பு சரி.

இக்கழிவுகள், சாதாரணக் கழிவுகள், வேதியியல் கழிவுகள், அழுகிய கழிவுகள் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மூன்றாம் வகைக் கழிவுகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். ஏனெனில், அவை நம் உடலில் இருப்பதால்தான் நமக்குப் பலவிதமான நோய்கள் வருகின்றன. அக்கழிவுகளை உணவாக உண்டு கிருமிகள் நம்மை அந்நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன!

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கிருமிகள் என்றாலே அவை தீமை மட்டுமே செய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி நம்புவதுதான் அறிவியல் என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான், குழந்தைகளுக்குக் கூட ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ (antibiotics) எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளைக் கொடுத்து விழுங்கவைக்கிறோம்.

இந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் என்ன செய்யும்? ‘ஆண்ட்டி’ என்றால் ‘எதிரான’ என்றும், ‘பயோ’ என்றால் ‘உயிர்தொடர்பான’ என்றும் அர்த்தம். ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ என்றால் உயிருக்கு எதிரான ஒரு மாத்திரை என்று பொருள். அதாவது, உயிரைக் கொல்லக்கூடியது. யாருடைய உயிரை? கிருமியின் உயிரை?

சரி, உள்ளேபோகும் நுண்ணியிர்க்கொல்லி மாத்திரைகளுக்கு நல்ல கிருமி எது, கெட்ட கிருமி எது என்று பிரித்தறியத் தெரியுமா? நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவு மனிதர்களுக்கே குறைந்துகொண்டு வரும்போது, மாத்திரைக்கு அறிவிருக்குமா என்ன?! தீவிரவாதியைப்போல முகமூடி அணிந்துகொண்டு ஒரு குழந்தை வந்தாலும். அதைத் தீவிரவாதியாக நினைத்து சுட்டுக்கொல்லும் ஒரு முட்டாளைப் போலத்தான் அது செயல்படும். ஆமாம். விழுங்கப்பட்ட ஆண்ட்டிபயாடிக்குகள் உடலுக்குள் சென்று அதன் கண்ணில் படும் கிருமிகளையெல்லாம் கொன்றுவிடும்!

தாஜ்மஹாலை அல்லது துருக்கியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹேகியா சோஃபியா தேவாலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலர் கல்லைத் திருடி விற்றார்கள் என்பதற்காக, எல்லோரையும் வாளால் வெட்டிக்கொன்றுவிட்டால் என்னாகும்? நமக்குத் தாஜ்மஹாலும் கிடைத்திருக்காது, ஹேகியா சோஃபியாவும் கிடைத்திருக்காது. அப்படி ஒரு முட்டாள்தனத்தைத்தான் ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ உட்கொள்ளும்போது நாம் செய்கிறோம்.

ஹேகியா சோஃபியா

நம் உடம்பிலிருக்கும் கோடிக்கணக்கான கிருமிகளில் ஒரு சில மட்டுமே நமக்குத் தீமை செய்ய வல்லவை. அதுவும், நம் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால், இந்த மாத்திரைகள் என்ன செய்கின்றன? போகும் வழியில் தென்படும் எல்லாக் கிருமிகளையும் சகட்டுமேனிக்குச் சாகடித்துவிடுகின்றன.

லட்சக்கணக்கான நல்ல கிருமிகள் செத்துப்போவதால், அவை செய்துகொண்டிருந்த வேலைகளெல்லாம் அப்படியே நிற்கும்! அதனால் ஏற்படும் பின்விளைவுகளைத்தான் நாம் ‘‘மருந்துகளின் பின்விளைவுகள் என்று அழைக்கிறோம்” என்கிறார் ஹீலர் உமர்! அதோடு, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிறப்பு மருத்துவ மாநாட்டில், குழந்தைகளுக்கு ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ கொடுக்கக்கூடாது என்று ஆங்கில மருத்துவர்களே முடிவெடுத்தனர் என்ற முக்கியத் தகவலையும் அவர் தருகிறார் (பக்கம் 21).

கிருமிகள் செய்யும் தீமையைத் தடுப்பது எப்படி

மிகக்குறைந்த அளவிலான கிருமிகள், மனிதர்களுக்குத் தீமை செய்கின்றன என்பது உண்மைதான். அப்படி கிருமியால் ஒரு பாதிப்பு நமக்கு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? மூன்று வழிகள் உள்ளன.

  1. தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றுக்கு விஷம் வைத்துக் கொல்லலாம். அதாவது, ஆங்கில மருந்துகளை உட்கொள்ளலாம்!
  2. உலகில் உள்ள தீமை செய்யும் கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடலாம். அப்போது யாருக்கும் கிருமிகளால் தீமையே ஏற்படாதல்லவா? ஆனால் பாவம், நமக்கு இது சாத்தியமே இல்லை!
  3. தீமை செய்யும் கிருமிகள் நுழையமுடியாத அளவுக்கு நம் எதிர்ப்பு சக்தியை பலமாக வைத்துக்கொள்ளலாம்.

கிருமிகளைப் பற்றி நமக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால் எதிர்ப்பு சக்தி பற்றித் தெரிந்துகொண்டு அதை பலப்படுத்தினால் போதும். ஹீலர் உமர் தன் நூலில் ஒரு அழகான கதையைச் சொல்கிறார்.

ஒரு வேதியியல் பேராசிரியர், அமிலங்களைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு குடுவையில் இருந்த அமிலத்தைக் காட்டி, இது அரிக்கும் தன்மையுடையதா இல்லையா என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘இதை நான் இப்போது இந்த அமிலம் உள்ள குடுவையில் போடப்போகிறேன். இந்தக் காசை இந்த அமிலம் அரித்துக் கரைத்துவிடுமா, கரைக்காதா?’ என்று கேட்டார். ஒரு மாணவர் மட்டும் கையை உயர்த்தினார். சொல் என்று பேராசிரியர் அனுமதி கொடுத்ததும், ‘அந்தக் காசு அந்த அமிலத்தில் கரையாது’ என்று மாணவர் சொன்னார்.

சந்தோஷப்பட்ட பேராசிரியர், ‘எப்படிக் கண்டுபிடித்தாய்? இந்த அமிலம் பற்றி உனக்கு மேற்கொண்டு என்னென்ன தெரியும் சொல்லு’ என்றார்.

‘சார், இந்த அமிலம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காசு உண்மையிலேயே அந்த அமிலத்தில் கரையுமானால், அதை உள்ளே போட நீங்கள் நிச்சயம் முன்வந்திருக்கமாட்டீர்கள்’ என்றான்!

ஆஹா, ஒன்று அமிலத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது ஆசிரியரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்! ஒன்று கிருமிகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது நம் உடலின் எதிர்ப்பு சக்தியைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்! ஆமாம். நம் உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக, பலமாக இருக்குமானால், தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் புக முடியாது. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும், பலவீனமானவர்களையும்தான் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் பாதிக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், செயல்பாடுகளும் நமக்கு இருக்குமானால் அதுவே போதும். கிருமிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதுதான் எளிமையான, நமக்குச் சாத்தியமான வழியுமாகும். கோடிக்கணக்கான கிருமிகளில் எவையெவை தீமை செய்பவை என்று கண்டுபிடித்து, அவை ஒவ்வொன்றுக்கும் விஷம் கொடுத்து கொன்றுகொண்டிருக்கத் தேவையில்லை. அப்படிச் செய்வது சாத்தியமும் இல்லை.

மருந்துக் கம்பெனிகளுக்கு நம் மீது எந்த அக்கறையும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி நினைப்பதுகூட அபத்தமானதே. ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து உருவாக்குவதற்கு சுமாராக 1600 கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம்! அவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைத் தயாரிக்கும் ஒரு கம்பெனி அதை லாபத்துடன் விற்பனை செய்வதைப் பற்றி யோசிக்குமா அல்லது நம் வீட்டு இட்லி தோசையின் மூலமாகவே நம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும் என்று யோசனை சொல்லுமா! நாம்தான் யோசிக்க வேண்டும்.

இரண்டு காரியங்கள் தம் முன்னே இருந்தால், அதில் எது இலகுவானதோ, எது எளிமையானதோ அதையே நபிகள் நாயகம் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களாம். தீமை செய்யும் கிருமிகள், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது என்ற இரண்டு காரியங்களில் மனிதர்களால் செய்ய முடிகிற இலகுவான, எளிமையான காரியம் பின்னதுதான். இந்த விஷயத்தில் நாம் நபிகள் நாயகத்தின் ஞானத்தைப் பின்பற்றலாமே!

கிருமிகள் நம் உடலுக்குள் நிகழ்த்தும் அற்புதத்தை அறிந்துகொண்டால், அவற்றின் மீது நமக்கு ஒரு மரியாதையே வந்துவிடும். அதற்கு முன், கிருமிகளைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான வரலாற்றுப் பொய்களைக் கொஞ்சம் பார்க்கவேண்டி உள்ளது. பார்த்துவிடலாமா?

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/sep/19/26-கிருமிகள்-வாழ்க---3-2567279.html
2562417 சாளரம் நலம் நலமறிய ஆவல் 25. கிருமிகள் வாழ்க! - 2 நாகூர் ரூமி Saturday, September 10, 2016 03:50 PM +0530  

சொர்க்கலோகம், நரகலோகம், தேவலோகம் என்பதுபோல கிருமிலோகம் என்று எதுவும் உண்டோ?

– ஹீலர் உமர் ஃபாரூக்

கிருமிலோகம் எது?

ஹீலர் உமரின் கேள்வி நியாயமானதே. கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நமக்கு கொசு ஞாபகம் வரலாம். ஏனெனில், கிருமியும் கொசுவும் இணைபிரியா ஜோடிகளாகவே ஜோடிக்கப்பட்டுவிட்டன! கொசுக்கள்தான் கிருமிகளை உருவாக்குகின்றனவோ என்ற சந்தேகம் வருவதும் இயற்கைதான். நீங்கள் எந்திரன் ரஜினி மாதிரி ‘மஸ்கிட்டோமோடு’க்குப் போய் கொசுக்களிடம் இதுபற்றி விசாரிக்க முடிந்தாலும், உங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்காது! ஏன்? கிருமிகள் பற்றி கொசுக்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவை பாவம்!

ஒருவேளை எலி, பன்றி இவற்றில் இருந்து கிருமிகள் உருவாகின்றனவா? இந்தச் சந்தேகமும் அபத்தமானதே. கொசு, எலி, பன்றி, காற்று, தண்ணீர் இவை மூலமாகக் கிருமிகள் பரவுகின்றன என்றுதான் அறிவியல் சொல்கிறது. அவற்றிலிருந்து உருவாகின்றன என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னாலும் அது சரியல்ல என்பதுதான் சரி!

கிருமிகள் இருக்கட்டும். இந்தக் கொசுக்கள் எங்கிருந்து வந்தன? பின்பு அவை எங்கு சென்றன? யாருக்கும் தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா என்று ஒரு காய்ச்சல் வந்தது. உடனே எல்லா சந்து பொந்துகளிலும் போர்க்கால நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. இப்போது அந்தச் சிக்குன்குன்யா பற்றி சிக்கன் சாப்பிடும்போதுகூட யாரும் யோசிப்பதில்லை! சிக்குன்குன்யா எங்கே போனது? அதை உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட கொசுக்கள் எங்கே போயின? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்து, நம்மையெல்லாம் கடித்து, சிக்குன்குன்யா வைரஸை நம் உடலுக்குள் செலுத்திவிட்டு, கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்ட, கடமையைச் செய்துவிட்ட திருப்தியில் கொசு ராஜாவின் உத்தரவுப்படி மீண்டும் திரும்பி அந்த படைவீரர்-கொசுக்களெல்லாம் தங்கள் உலகத்துக்கே போய்விட்டனவா? 

 

இப்பொழுது கொசுவே இல்லையா? கொசுக்களை ஒழித்துவிட்டோமா? இந்தக் கேள்விக்கான நியாயமான பதில் இல்லை என்பதுதான். அப்படியானால் என்ன அர்த்தம்? கொசு மருந்துகளால் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை, ஒழிக்கவும் முடியாது என்றுதானே அர்த்தம்? அப்படியானால், ஒரு காலகட்டத்தில் நம்மைத் தாக்கிய சிக்குன்குன்யா இப்போது ஏன் இல்லை? அதுவே இப்போது டெங்குவாக மாறிவிட்டதா? ஒரே காய்ச்சலுக்குத்தான் டைஃபாய்டு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று மாற்றி மாற்றி வெவ்வேறு பெயர்களைச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுள்ளோமா?

மேலே சொன்ன காய்ச்சல்களைப்போல, காலராகூடத்தான் வந்தது. அசுத்தமான நீரின் மூலம் கிருமிகள் நம் உடலுக்குள் சென்று சிறுகுடலை பாதித்து, கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வாட்டியதாகச் சொல்லப்பட்டது. அந்தக் காலரா கிருமிகள் எங்கே சென்றன? ஏன் இப்போது அக்கிருமிகள் இல்லை? கிருமிகள், அவற்றை நமக்குக் கொடையளிக்கும் கொசுக்கள் இவற்றுக்கெல்லாம் சொற்ப காலத்தில் விதி முடிந்துபோய்விடுமோ? அல்லது அவற்றுக்கெல்லாம் விடுமுறைக்காலமோ?

கொசுக்களையும், அவற்றின் வாய் வழியாக நம் ரத்தத்தில் கலக்கும் வைரஸ்களையும் ஒழிக்க ரொம்ப நேர்மையாகத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படையில் தவறு உள்ளது! அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

என்ன தவறு?

விளம்பரத்தில் ஒரு நடிகர் வெள்ளைக் கோட்டைப் போட்டுக்கொண்டு, கழுத்தில் ஒரு ‘ஸ்டெத்’தை மாட்டிக்கொண்டால் அவர் டாக்டர் என்று நாம் நினைக்க வேண்டும். ஆனால், அவர் உண்மையில் டாக்டர் இல்லை என்று நமக்குத் தெரியும். அதேபோலத்தான், அறிவியல் என்ற பெயரில் பல கவர்ச்சிகரமான பொய்கள் அன்றாடம் நமக்குள் திணிக்கப்படுகின்றன. நடிகரை டாக்டர் என்று நாம் நம்புவதில்லை. ஆனால், கிருமிகளையும் கொசுக்களையும் பற்றிய உண்மைகளை மட்டும் புரிந்துகொள்ளாமல், அவைதான் நோய்களைப் பரப்புகின்றன என்ற கருத்தை மட்டும் கேள்விகள், சந்தேகம் ஏதுமின்றி நாம் நம்பிவிடுகிறோம். 

கிருமிகளின் வரலாறு!

அப்படியானால், எல்லாக் கிருமிகளும் நல்லவையா? அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. அவற்றில் மிகமிகச் சிறிய மைனாரிட்டிதான் நமக்கு தீங்கு செய்ய வல்லவை!

இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி உயிரினம் கிருமிதான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இந்தக் கிருமிகள்தான்! ஏழாம் அறிவை நோக்கி மனிதன் சென்றுகொண்டிருக்கிறான். விலங்குகளுக்கு ஐந்தறிவு. புழுக்களுக்கு இரண்டே அறிவுதான். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே கிருமிகள் வந்துவிட்டன. 

இயற்கை சுழற்சியின் ரகசியமே கிருமிகள்தான். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே மாற்றமடைந்துகொண்டிருக்கிறது, நாம் உள்பட. இன்றைக்கு இருப்பது போலவே இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இருப்பீர்களா? இருக்கமாட்டீர்கள். அப்படியானால் மாற்றம் எப்போது நடக்கிறது? பத்து ஆண்டுகள் கழித்து திடீரென்று ஒரு மாற்றம் நடக்கிறதா? இல்லை. இப்பொழுது, இக்கணத்தில், ஒவ்வொரு கணமும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான். 

ஒன்று இன்னொன்றாக மாறும் அன்றாட transformation process-ல், கிருமிகளின் பங்கு மிக முக்கியமானது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று இறைவனைச் சொல்வார்கள். கிருமிகளுக்கும் அதைச் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘கிருமிகளின்றி அமையாது உலகு’ என்று தன் நூலின் ஒரு அத்தியாத்துக்கு தலைப்பே கொடுத்திருக்கிறார் ஹீலர் உமர்! ஆமாம். எங்கும் கிருமி உண்டு, எதிலும் கிருமி உண்டு. நீரிலும், நிலத்திலும், காற்றிலும் கிருமிகளின் ராஜ்ஜியம்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு understatement-ஆக வேண்டுமானால் இது இருக்கலாம். 

 

“மிகப்பெரியதாக பரந்து விரிந்திருக்கும் கடலின் அடியிலுள்ள வெந்நீர் ஊற்றுகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களில் ஆழமாகத் தோண்டப்பட்ட கரிக்குழிகளிலும், பாறைகளிலும்கூட கிருமிகள் வாழ்ந்தபடியே இருக்கின்றன. மனிதர்கள் பயந்தோடும் எரிமலையின் லாவா குழம்புகளிலும்கூட கிருமிகள் வாழ்கின்றன” என்கிறார் ஹீலர் உமர் (பக்கம் 14).

கிருமியின் சேவைகள்

கிருமிகள் செய்யும் வேலைகள் எண்ணில் அடங்காதவை. அநேகம். முக்கியமாக, மேலே சொன்ன மாதிரி, இயற்கை மாற்றங்களுக்கு கிருமிகள் உதவுகின்றன. இந்த உலகில் எல்லாமே ஒன்று இன்னொன்றாக மாறிக்கொண்டே உள்ளது. நிரந்தரமானது மாற்றம் ஒன்றுதான். அதில் மாற்றமே இல்லை என்று சொல்வார்கள். விந்து உயிராகிறது, உயிர் உடலாகிறது, பின் உடலிலிருந்து மீண்டும் விந்து பிறக்கிறது. நீர் ஆவியாகிறது, ஆவி மீண்டும் நீராகிறது. நெருப்பு கரியாகிறது, கரி மீண்டும் நெருப்பாகும். பஞ்சபூதங்களால் ஆன நம் உடல் இறந்த பிறகு மீண்டும் மண்ணாகவோ, சாம்பலாகவோ மாறிவிடுகிறது. காலையில் எட்டு மணிக்கு நான் சாப்பிட்ட மூன்று இட்லிகள் மூன்று மணி நேரம் கழித்து நாகூர் ரூமியாகிவிடுகிறது! இப்படியாக வேதியியல், உயிரியல் சுழற்சிகள் நடந்துகொண்டே உள்ளன. அந்தச் சுழற்சி ஒழுங்காக நடப்பதற்குப் பிரதான காரணம் கிருமிகள்தான்!

கிருமிகளின் இந்தச் சேவையை மரங்களோடு ஒப்பிடுகிறார் ஹீலர் உமர். அது உண்மைதான். மரங்கள் எப்படி நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து, நமக்குத் தேவையில்லாத கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொள்கின்றனவோ அதேபோல, கிருமிகளும் இவ்வுலகில் நம் முட்டாள்தனமான அல்லது அறிவார்ந்த செயல்பாடுகளால் உருவாகும் கழிவுப் பொருள்களையெல்லாம் உண்டு, மறுசுழற்சி செய்து, அவற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி ‘டிடாக்ஸிஃபிகேஷன்’ செய்கின்றன! 

 

கந்தக சல்ஃபைடு என்ற வேதியியல் விஷப்பொருளை கந்தக ஆக்ஸைடாக மாற்றும் வேலையைக் கிருமிகள்தான் செய்கின்றன. அக்கிருமிகள் கந்தகத்தை உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. உலோகங்களை உண்ணும் கிருமிகளும் உண்டு. தங்கம், வெள்ளி போன்றவற்றை தரம் குறைந்த உலோகக் கலப்பிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் கிருமிகள் பயன்படுகின்றன! குறிப்பாக, ‘ஆல்கே’ (Algae) என்றவகைக் கிருமிகள், இவ்வகை உலோகப் பிரிப்புக்குப் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

நிலத்தடியில், பாறைப் பிளவுகளில் கசியும் நீரில் செம்பு, யுரேனியம் போன்ற உலோகக் கலப்பு இருக்கும். அவற்றின் தாதுக்களைப் பிரித்தெடுக்க கிருமிகள் பயன்படுத்தப்படுகின்றன. மெக்ஸிகோ நாட்டின் ஆறுகளில் கலந்துள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்க, உலோகம் தின்னும் கிருமி வகையான க்ளோரல்லா வல்காரிஸ் என்ற கிருமி பயன்படுத்தப்படுகிறது (பக்கம் 14). 

அதுமட்டுமல்ல. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரண்டு பிரச்னைகளை மேற்கத்திய உலகம் சந்தித்தது. ஒன்று, பெருகிய மக்கள் தொகை; இரண்டு, வறுமை. அந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்க்க உதவிய உணவுப்பொருள் க்ளோரல்லா வல்காரிஸ் என்றும் சி வல்காரிஸ் என்றும் சொல்லப்படும் அந்தக் கிருமிதான்! அந்தச் சூழ்நிலையில் அது ஒன்றுதான் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய, ப்ரோட்டீன், விட்டமின்களெல்லாம் அடங்கிய மனித உணவாகப் பயன்பட்டுள்ளது! 

 

சோறு கிடைக்காதவர்களெல்லாம் சி வல்காரிஸ் கிருமியை உண்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள்! கிருமியையா? உணவாகவா? என்றெல்லாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. கிருமி என்றாலே அது நோயை உண்டாக்கும் சமாசாரமாகும் என்ற தவறான கருத்து நம் மூளையில் பதிந்துபோனதால் வரும் ஆச்சரியங்கள் அவை. அமெரிக்காவில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூஷன், ராக்ஃபெல்லர் ஃபௌண்டேஷன் போன்றவை க்ளோரல்லா வல்காரிஸ் கிருமியின் பயன்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்துள்ளன! அதுமட்டுமா? அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரோக்கியத்துக்கான துணை உணவாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சி வல்காரிஸ் மாத்திரைகள் கிடைத்தன! 

 

விளைநிலங்களில் தொடர்ந்து பயிர் செய்யப்படும்போது மண் சோர்வடைந்துவிடும். அது சமயம், விவசாயிகள் பயறு வகைச் செடிகளை ஒருமுறை விளைவிப்பார்கள். அதனால் மண் வளம் புதுப்பிக்கப்படும். இக்காலகட்டத்தில், தாவர வேர்களில் உள்ள நைட்ரஜனை உரமாக மாற்றி மண்வளத்தைப் பெருக்க உதவுவது கிருமிகளே!

‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போதெல்லாம் சைவ ஓட்டல்களிலும் மஷ்ரூம் 65, வெஜ் ஃப்ரைடு ரைஸ் என்றெல்லாம் வைக்கிறார்கள். ஏன்? சிக்கன் 65, சிக்கன்/மட்டன் ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கு மாற்றாகத்தான்! சைவ நாக்குகளுக்கு ஒரு அசைவை உணவைச் சாப்பிட்ட மாதிரி ஒரு ‘ஃபீல்’ கொடுக்க! அப்படிப்பட்ட ‘சோயா மீல் மேக்கர்’கள் உற்பத்திக்கும் பயன்படுவது கிருமிகள்தான்!

நாம் தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் குப்பைகளையெல்லாம் மண்ணால் மறுசுழற்சி செய்ய முடியாதென்று கூறுகிறோம். அதனால்தான் ப்ளாஸ்டிக் வேண்டாம் என்ற பிரசாரமும் நடக்கிறது. ஆனால், அவற்றையும் ‘ரீசைக்கிள்’ செய்யும் திறன் கிருமிகளுக்கு உண்டு. 

இவ்வளவு ஏன்? இட்லி மாவு புளிக்க வேண்டுமா? பால் தயிராக மாற வேண்டுமா? அப்படி நடப்பதை ஆங்கிலத்தில் ‘ஃபெர்மென்டேஷன்’ (fermentation) என்று சொல்வார்கள். அந்தப் புளித்தல் நடக்காமல் குஷ்பு இட்லிகள் கிடைக்காது! இதெல்லாம் நடப்பதும் கிருமிகளால்தான்!

இப்படி உலகெங்கிலும், கண்ணுக்குத் தெரியாத இடங்களிலும், மனிதர்களுக்காகக் கிருமிகள் உழைத்துக்கொண்டுள்ளன! மனிதர்களை உயிர்வாழ வைத்துக்கொண்டுள்ளன! ஆபத்பாந்தவா, அநாதரட்சகா என்று கிருமிகளைத்தான் அழைக்க வேண்டும். ஆனால், மனிதர்களைக் கிருமிகள் கொல்வதாக அல்லவா நாம் நினைத்துக்கொண்டுள்ளோம்! நினைப்புக்கும் நடப்புக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி!

இப்பூவுலகில் கிட்டத்தட்ட 85 லட்சம் வகைக் கிருமிகள் (85 லட்சம் கிருமிகள் அல்ல) இருப்பதாகவும், அவற்றில் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பவை என்று பார்த்தால் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவு என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளை நம்பலாம்!

அப்படியானால், இக்கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன? பார்க்கத்தானே போகிறோம்…

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/sep/12/25-கிருமிகள்-வாழ்க-2562417.html
2559628 சாளரம் நலம் நலமறிய ஆவல் 24. கிருமிகள் வாழ்க! நாகூர் ரூமி Monday, September 5, 2016 03:04 PM +0530

கடவுளுக்குப் பயப்படாத, கடவுளை நம்பாத மனிதர்கள்கூட உண்டு. ஆனால் கிருமிகளுக்குப் பயப்படாத மனிதர்கள் உலகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.

- ஹீலர் உமர் ஃபாரூக்

எங்கெங்கு காணினும்

எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாடல் நமக்குத் தெரியும். ஆனால், பாடல் மட்டும்தான் தெரியும். அது சொல்லும் உண்மையை நம்மில் பலர் இதுவரை உணராதிருக்கலாம். ஆனால், எங்கெங்கு காணினும் கிருமியடா என்பது மட்டும் எல்லோருக்கும் அனுபவத்தில் தெரிந்த ஒன்றாக உள்ளது. 

கிருமிகளைப் பற்றிய பயம் அன்றாடம் நமக்குள் விதைக்கப்படுகிறது. விளம்பரங்கள், மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், அரசாங்கங்கள் என இந்தப் பயத்தை உலகளாவத் தூவுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. இதில் விளம்பரங்களை விட்டுவிடலாம். அவர்கள் தங்கள் பொருள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆனால், மருத்துவர் முதல் அரசாங்கம் வரை இந்தக் காரியத்தை ஒரு கடமையாக, ஒரு தர்மமாகச் செய்துகொண்டிருக்கிறார்களே! இதில் மருத்துவர்களையும் மருந்துக் கம்பெனிகளையும்கூட விட்டுவிடலாம். அவர்களின் சிபாரிசின் பின்னாலும் பணம் இருப்பது சாத்தியமே. ஆனால் அரசாங்கங்கள்?! கிருமி பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதால், அவர்களுக்கு என்ன வருமானமா கிடைக்கப்போகிறது? சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் ஜிகா (zika) வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக தொலைக்காட்சி செய்திகள் சமீபத்தில் அழுதன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மனிதர்களுக்கு ஒருவகை காய்ச்சல் வருவதாகவும் சொல்லப்பட்டது. ஜிகா வைரஸை இலவசமாகக் கொடுப்பதாக நம்பப்படும் கொசுக்களை ஒழிக்க ‘மெஷின் கன்’ மாதிரி எதையோ தூக்கிக்கொண்டு போவதையும் காட்டினார்கள். 

எல்லா வகையான காய்ச்சல்களும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எனும் கிருமியால் பரவுகிறது என்று நம்பப்படுகிறது. காய்ச்சல் மட்டுமல்ல, டெங்கு, டைஃபாய்டு, மலேரியா, பொன்னுக்கு வீங்கி, போலியோ முதல் எய்ட்ஸ் வரை மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கெல்லாம் காரணம் கிருமிகள்தான் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் என்று கருதப்படுபவர்களும் அப்படியே சொல்வதால், அரசாங்கங்களும் அதை நம்பி, மக்களைக் காப்பாற்ற ‘உரிய’ நடவடிக்கைகளை எடுக்கின்றன.

நடந்துகொண்டிருப்பது இதுதான். ஆனால், கிருமிகளைப் பற்றிய உண்மை என்ன? அவற்றால் உண்மையிலேயே நோய்கள் உண்டாகின்றனவா? பரவுகின்றனவா? இக்கேள்விகளுக்கான பதிலை நாம் அனைவரும் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது என் கடமை. அதற்காகத்தான் இந்த பீடிகை. சரி, கிருமிகளைப் பார்க்கலாமா?!

கிருமிகள் ஓர் அறிமுகம்

கிருமி என்று நாம் சொன்னாலும் பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ், ஆல்கே, ஜெ(ர்)ம் என நம் புறக்கண்களுக்குப் புலப்பலாத அந்தக் குட்டி உயிர்களுக்குப் பல செல்லப் பெயர்கள் உண்டு. நான் அன்றாடம் வாங்கும் பேஸ்ட், ஃபெனாயில், மௌத் வாஷ், சோப்பு, வியர்வை துர்நாற்றம் போக்க உதவும் டியோடரன்ட், டாய்லெட்டில் கறை போக்க உதவும் ஹார்பிக் போன்ற எல்லாமே கிருமி எனப்படும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றத்தான் என்று விளம்பரங்கள் கூறுகின்றன.

நம் டாய்லட்டில் உள்ளதைவிட 400 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேஜை மீது உள்ளதாம்! மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு இன்னொரு முக்கியமான செய்தி உள்ளது. கழிவறையில் உள்ளதைவிட 18 மடங்கு அதிகமாக நமது கைப்பேசியில் கிருமிகள் உள்ளனவாம்! ஆனாலும் மொபலை நாம் ஹார்பிக் ஊற்றிக் கழுவ முடியாது! இதுமட்டுமா? சுத்தமான ஒரு மனித வாயில் ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை ஒவ்வொரு பல்லுக்குள்ளும் கிருமிகள் உள்ளனவாம்! ஒவ்வொரு டாலர் நோட்டிலும் 3000 வகையான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! அப்போ நம் நாட்டு காந்தித் தாத்தா மேலே எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை!

எல்லாவற்றுக்கும் உச்சமாக ஒன்று சொல்லப்படுகிறது. கமலஹாஸன்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி தருவதாக இருக்கலாம்! இரண்டு பேர் ஆசையாக முத்தமிட்டுக் கொண்டால், ஒருவர் வாய் வழியாக இன்னொருவர் வாய்க்கு பத்து மில்லியனிலிருந்து ஒரு பில்லியன் பாக்டீரியா ஊடுறுவுமாம்! அடக்கடவுளே! இனிமேல் முத்தமே கொடுக்க முடியாதா? ச்சே, ச்சே, அப்படியெல்லாம் இருக்காது. வாய் துர்நாற்றம் கொண்ட பொறாமைப் புடிச்ச யாரோ ஒருவன்தான் இப்படிச் சொல்லியிருக்கான் என்று நான் நம்புகிறேன்! கிருமிகளின் முத்தப் பரிமாற்றத்தில்தான் கருமிக்குக்கூட இன்பம் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! முத்த வாசல் திறந்தால்தானே காதல் அரண்மனைக்குள் நுழைய முடியும்! 

பயப்பட வேண்டாம். இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமான பொய்கள்! லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கிருமிகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றால் நமக்கு எந்த ஆபத்துமில்லை என்பது மட்டுமல்ல, அவைதான் நம்மை ஆரோக்கியமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகின் மெகா ஆச்சரியமும் மெகா உண்மையும் இதுதான். அது எப்படி என்று பார்க்கும் முன், கிருமிகள் என்று சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்த்துவிடலாம்.

 

கிருமிகள் பற்றிய பொய்கள் 

கிருமி எதுவும் நமது புறக்கண்களுக்குத் தெரியாது என்று நமக்குத் தெரியும். ஆனாலும் விளம்பரங்கள் என்ன சொல்கின்றன? எப்படிக் காட்டுகின்றன? உதாரணமாக லிஸ்டரீன் மௌத்வாஷ் விளம்பரம் உங்கள் பற்களுக்கு இடையில் இருக்கும் கிருமிகளைக் கொல்வதாகக் காட்டுகிறது. பற்களின் இடுக்குகளில் இருக்கும் ஏகப்பட்ட கிருமிகளையும் கருப்பு கருப்பாகக் காட்டுகிறது! ஹார்பிக் விளம்பரம் டாய்லெட்டில் கிருமிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும், ஹார்பிக்கை ஊற்றியதும் அலறிக்கொண்டு அவை சாவதைப் போலவும் காட்டுகிறது. ‘‘கிருமிகளை பளீரென படம் பிடித்துக் காட்டும் ஒரு டார்ச் லைட் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? ஆனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்”என்கிறார் ஹீலர் உமர் ஃபாரூக்!

கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ் என்று இரண்டு முக்கிய வகை உண்டு. அதில் பாக்டீரியாவை நாம் பார்க்க முடியும். ஆனால், அதற்கு நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கையான புறக்கண்கள் உதவாது. ஏனெனில், கிருமியின் ‘சைஸ்’அப்படி! பாக்டீரியாவைவிட வைரஸ்தான் ரொம்பச் சின்னது. பாக்டீரியாக்களை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் பார்க்கலாம். ஆனால், வைரஸை அப்படியும் பார்க்க முடியாது! ஒரு ஊசியின் தலை மீது ஐந்து லட்சம் வைரஸ்கள் பத்மாசனம் போட்டு உட்கார முடியும்! இந்த உலகத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்கும்? குத்து மதிப்பாக, 5X1000000000000000000000000000000 என்று சொல்கிறது விஞ்ஞானம்! (இது எவ்வளவு என்று நம்ம ஊர் ராமானுஜன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்). இந்த உலகில், இந்தப் பிரபஞ்சத்தில், மனிதர்களைவிட அதிகமாக கிருமிகளே உள்ளன! நம் உடம்பில் மட்டும் 90 டிரில்லியன் கிருமிகள் இருக்கிறதாம்!

அப்படியானால், விளம்பரங்களில் காட்டப்படுவது என்ன? சுத்தமான ஏமாற்று வேலை! ஒரு சோப்பு வாங்கவில்லை எனில் ‘பத்து ஸ்கின் ப்ராப்ளம்’ வந்துவிடும் என்று பயமுறுத்துவதுதான் அவர்களது தந்திரம். உண்மையில் வேதிப்பொருள் கலந்த ஒரு சோப்பை – அதாவது எல்லா சோப்புகளையும் – போடுவதால்தான் எல்லாவிதமான ஸ்கின் ப்ராம்பளமும் வரும்!

சென்ற ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ஃப்ளூவுக்கு எதிரான பிரசாரம், நடவடிக்கைகள் வெகு தீவிரமாக நடந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என எல்லாரும் ஒரு துணிப்பையை மூக்கில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றார்கள். பன்றிக் காய்ச்சலை உருவாக்குவதாக சொல்லப்பட்ட H1N1 வைரஸ், அந்த ‘மாஸ்க்’குக்கு உள்ளே புகமுடியாமல் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிடும் என்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார்கள்! 

 

ஒரு வைரஸின் அளவு என்ன என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளைக் கேட்டால்கூடச் சொல்லிவிடுவார்கள். ஏனெனில் அவர்களது பாடத்திலேயே அது உள்ளது! ஒரு ஊசி முனையின் மேலே லட்சக்கணகான வைரஸ்கள் சொகுசாகப் படுத்து உறங்கமுடியும் என்றால், மூக்கை மூடிய ஒரு துணியில் உள்ள ராட்சச ஓட்டைகள் வழியாக அந்த வைரஸ் உள்ளே நுழைய முடியாதா? யாரை ஏமாற்ற அந்தப் பிரசாரம்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத்தான்! ஏமாற்றுவதிலும் ஏமாறுவதிலும் நம்மைவிடச் சிறந்தவர்கள் இந்த உலகில் உண்டா என்ன?! 

இரண்டு சதவீத மனிதர்களே சிந்திக்கிறார்கள். மூன்று சதவீதம் சிந்திப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். 95 சதவீதம் பேர் சிந்திப்பதைவிட செத்துப்போவதே மேல் என்றிருக்கிறார்கள் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

 

கிருமிகளால் மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என்று நாளைக்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்னாகும்? அவ்வளவுதான், சோப்புக் கம்பெனிகள், பேஸ்ட்டு கம்பனிகள், மௌத் வாஷ்கள், ஹாண்ட்வாஷ்கள், டாய்லட் க்ளீனர்கள், சுத்திகரிக்கப்பட்ட பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று எதையுமே நாம் வாங்கமாட்டோம்! கிருமி தாக்கிவிடுமோ என்ற பயத்தினால்தானே இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி வாங்கிக்கொண்டிருக்கிறோம்! வெளிநாட்டுக் கம்பெனிகளின் மொத்த வியாபாரமும் அடிபட்டுப் போகும். ஐந்தே ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு!

ஆஹா, அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா என்று வரிந்து கட்டிக்கொண்டு கம்பெனிகளும், விஞ்ஞானிகளும் வந்துவிடமாட்டார்களா? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அறிவு வந்துகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் எந்தச் சத்துமே இல்லை, அது உயிரற்றது என்ற உண்மை சொல்லப்பட்டது! இப்படியே போனால், கிருமிகள் பற்றிய உண்மையும் பரவலாக வெளிவருதல் சாத்தியம்தான். 

கிருமிகளின் மூலமாக நோய் வருமா? காற்றில், தண்ணீரில் என்று கிருமிப் பரவல் மூலமாக நோய் தொற்றுமா? இது உண்மையானால், உலக யுத்தங்கள் நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மெனக்கெட்டு ஹிரோஷிமா, நாகசாகி, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் என்றெல்லாம் பறந்து சென்று குண்டுகளைப் போட்டு அழித்ததற்குப் பதிலாக, அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் நதிகளில் கோடிக்கணக்கான கிருமிகளை இறக்கிவிட்டிருந்தால் போதுமே! இந்நேரம் எதிரிகள் அனைவரும் கிருமிகளால் தாக்கப்பட்டு நோய்க்கு ஆளாகி செத்திருப்பார்களே! 

சிந்து நதியின் வழியாகக் கிருமிகளை அவர்கள் அனுப்பியிருந்தால் நாமும், நாம் அனுப்பியிருந்தால் அவர்களும் செத்திருக்கலாமே? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையைத் தடுத்திருக்கலாமே! ரசாயன ஆயுதம் (கெமிகல் வெப்பன்) வைத்திருந்ததாகச் சொல்லி ஈராக்குக்கு ராணுவத்தை அமெரிக்கா அனுப்பியிருக்க வேண்டியதில்லையே! கிருமிப் படையை அனுப்பி சதாம் ஹுசைனை சாகடித்திருக்கலாமே!

இப்படி உலக வரலாற்றில் எங்காவது கிருமிகள் அனுப்பப்பட்டு யுத்தம் நடத்தப்பட்டிருக்கிறதா? எங்குமே இல்லை. ஏன்? ஏனெனில், அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கே தெரியும்! ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களுக்காக வேண்டுமென்றால், சைனாவிலிருந்து ஒருவர் வந்து ஒரு நாயின் உடம்பில் கிருமியைப் புகுத்தி அது மக்களை பாதிக்குமாறு காட்டலாம். அதற்கும், மக்களுக்கு ஏற்கெனவே வந்துவிட்டிருந்த நோய்க்கு போதிதர்மர் மருந்து கொடுத்ததற்கும் தொடர்பில்லை. அது வேறு விஷயம். 

உடல் நோயுற்ற ஒரு ஒட்டகத்தின் மூலம் மற்ற ஒட்டகங்களுக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது என்று ஒருமுறை நபிகள் நாயகத்திடம் சொல்லப்பட்டபோது, அப்படியானால் முதல் ஒட்டகத்துக்கு எப்படி அந்த நோய் வந்தது என்று அவர்கள் கேட்டதாகவும், தொற்று நோய் என்று எதுவும் இல்லை என்று அவர்கள் சொன்னதாகவும் ஒரு நபிமொழி உள்ளது. இந்த நபிமொழிக்கு பலவிதமான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த நபிமொழியை நான் நினைவுகூர்ந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. நபிகள் நாயகத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு. கிருமிகள் உள்ளன, அவற்றால் நோய் தொற்றுகிறது என்று முதன்முதலாக லூயி பாஸ்டரால் சொல்லப்பட்டது 19-ம் நூற்றாண்டு! நாம் ஞானியாக இருக்கும்பட்சம், விஞ்ஞானிகள் உண்மை பற்றி உளறுவதற்கு முன்பே நமக்கு உண்மை தெரிந்திருக்கும் என்பதையே வரலாறு காட்டுகிறது. 

விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல, சினிமாவில் காட்டப்படுவதுபோல, பிரசாரங்களில் காட்டப்படுவது அல்லது சொல்லப்படுவதுபோல கிருமிகளால் நோய்கள் பரவுவதே இல்லை என்பதுதான் சத்தியம். அப்படியானால் கிருமிகளால் நோய்கள் உருவாவதோ, பரவுவதோ இல்லையா, கெட்ட கிருமிகளே கிடையாதா என்ற கேள்விக்கான பதிலைக் கொஞ்ச நேரம் கழித்துப் பார்க்கலாம். ஏனெனில், கிருமிகளைப் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

வாருங்கள், கிருமி லோகத்துக்குச் செல்லலாம்.

]]>
https://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/sep/05/24-கிருமிகள்-வாழ்க-2559628.html