Dinamani - செய்திகள் - https://www.dinamani.com/cinema/cinema-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3081779 சினிமா செய்திகள் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை சினிமாவில் அறிமுகமாகிறார்! DIN DIN Wednesday, January 23, 2019 04:23 PM +0530 கேத்ரினா கைஃப்பின் தங்கை இசபெல், பாலிவுட் படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய தங்கை இசபெல், நடிக்க வந்திருப்பது குறித்து கேத்ரினா என்ன சொல்கிறார்?

’நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இப்போது மாறியுள்ளது. 'லீ ஸ்ட்ராஸ் பெர்க்' நடிப்பு பள்ளியில் நடிப்பிலும், மேற்கத்திய நடனத்திலும் தேர்ச்சிப் பெற்றுள்ள இசபெல்லை போல் நான் எந்தவித பயிற்சியும் எடுத்ததில்லை. அவளுடைய திறமைக்கு தகுந்த இடம் கிடைக்குமென்ற நம்பிக்கையும், ஆதரவும் அவளுக்கு இருக்கிறது' என்கிறார்.
 - அருண்

]]>
Bollywood, Actress, kathrina kaif, isabel, கேத்ரினா கைஃப் https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/23/katrina-kaif-sister-isabels-debut-film-3081779.html
3081783 சினிமா செய்திகள் இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய சினிமாவை தமிழ் சினிமாதான் ஆளும்! இயக்குநர் ராம் பேட்டி! (விடியோ) உமா ஷக்தி ENS Wednesday, January 23, 2019 04:15 PM +0530 கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார். வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 1 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா எக்ஸ்பிரஸ் ரிலீங் இன் பகுதிக்காக இயக்குநர் ராம் அளித்த பேட்டியின் காணொளி இது. இதில் பேரன்பு படத்தைப் பற்றியும், மம்முட்டி, அஞ்சலி மற்றும் சாதனாவின் நடிப்பைப்ப் பற்றியும், வில்லன் இல்லாமல் ஒரு திரைக்கதையை உருவாக்கிய சிரமம் குறித்தும், இலக்கியம் மீது தனக்குள்ள ஈடுபாடு பற்றியும் விரிவாகப் பேசுகிறார் இயக்குநர் ராம்.

]]>
peranby, ram, mamooty, anjali, ராம், மம்முட்டி, பேரன்பு https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/23/in-5-years-tamil-films-will-rule-the-entire-indian-film-industry-3081783.html
3081769 சினிமா செய்திகள் முழுசா நம்பி நாராயணனா மாறி இருக்குற நம்ப மாதவனைப் பாருங்க! ராம்கிஷோர் ENS Wednesday, January 23, 2019 03:32 PM +0530  

மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

'இயக்குநர் - மாதவன்' என்ற க்ளாப் போர்டை தனது இன்ஸ்டராகிராமில் பதிவிட்டுள்ளார் மாதவன். இதன் சுவாரஸ்யமான பின்னணி என்ன?

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் படமாக்கம் செய்து வருகிறார்கள்.

இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்க நம்பி நாராயணன் வேடத்தில் தாம் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் விடியோவாகவே பகிர்ந்திருந்தார் மாதவன். இப்படத்தில் இணை இயக்குநராகவும் அவர் பணியாற்றவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது.

இஸ்ரோவில் க்ரையோஜெனிக்ஸ் பிரிவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்தவரும், திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்தவருமான விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிப்பதில் பெருமை கொள்வதாக இன்ஸ்டா பதிவில் கூறிய மாதவன், ‘நீங்கள் இருக்கும் இடத்தை நான் அடைவது கடினம், ஆனால் உங்களைப் போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்க முயல்கிறேன் நிச்சயம் அதைச் சிறப்பாக செய்வேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். நம்பி நாராயணன் தோற்றத்துக்காக மாதவன் 14 மணி நேரம் மேக் அப் போடுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இப்படத்திலிருந்து சில காரணங்களால் விலகவே, இணை இயக்குநராக பணியாற்றிய மாதவன் இயக்குநராகிவிட்டார். தற்போது 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' படத்தை அவரே தொடர்ந்து இயக்குகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் மாதவனுடன் நடிக்கிறார் சிம்ரன். இதன் படப்படிப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் எடுக்க உள்ளனர். 

]]>
மாதவன், Madhavan, Maddy, nambi narayanan, நம்பி நாரயணன் https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/23/actor-madhavan-to-be-sole-director-of-rocketry-the-nambi-effect-3081769.html
3081745 சினிமா செய்திகள் மறுமணத் தேதியை அறிவித்தார் ரஜினி மகள்? சினேகா DIN Wednesday, January 23, 2019 12:52 PM +0530  

நடிகர் மற்றும் தொழில் அதிபரான விஷாகன் வணங்காமுடியை செளந்தர்யா ரஜினிகாந்த் பிப்ரவரி 11-ம் தேதி மறுமணம் செய்யவிருக்கிறார் .

2010-ல் தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. 

கோவையைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விஷாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்து அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஷாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஷாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து தற்போது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற உள்ளது.

சங்கீத், மெஹந்தி உள்ளிட்ட மண விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரஜினிகாந்த் வீட்டில் தடபுடலாக நடந்து வருகிறது.  திருமணத்துக்கு முன்னர் போயஸ் கார்டனிலுள்ள அவர்கள் வீட்டில் ஒரு பூஜை விமர்சையாக நடைபெற உள்ளதாம். அதனைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த் மற்றும் மணப்பெண்ணின் அக்கா ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களும் தனித்தனியாக விருந்தளிக்கவிருக்கிறார்கள். 

இது குறித்து செளந்தர்யா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
ரஜினி, செளந்தர்யா, rajini, Superstar, soundarya rajnikanth, Petta https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/23/soundarya-rajinikanth-to-tie-knot-with-vishagan-vanangamudi-on-february-11-3081745.html
3081109 சினிமா செய்திகள் வரும் 26-ஆம் தேதி முதல் தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு துவக்கம்  DIN DIN Tuesday, January 22, 2019 05:43 PM +0530  

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார். உடனடியாக அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  

ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 

]]>
dhanush, vetri maran, asuran, kalaipuli thanu, GV prakash, shooting, twitter https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/22/வரும்-26-ஆம்-தேதி-முதல்-தனுஷின்-அசுரன்-படப்பிடிப்பு-துவக்கம்-3081109.html
3081102 சினிமா செய்திகள் அம்மாவுக்கு புடவை வாங்கிக்கொடுங்க-அன்று! அண்டாவில் பால் ஊற்றுங்கள்-இன்று! சிம்பு உளறல் சினேகா DIN Tuesday, January 22, 2019 05:39 PM +0530  

பொங்கல் ரிலீஸாக 'பேட்ட' மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. ரசிகர்களின் பேராதரவுடன் இப்படங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க, அண்மையில் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து, அஜித் ரசிகர்கள் காயம் அடைந்தனர். இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தா ராஜாவா தான் வருவேன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 1-ம் தேதி ரிலிஸாகவிருக்கிறது. இதையொட்டி திரையில் தல ரசிகராக வலம் வரும் சிம்பு, ஒரு பகீர் விடியோவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, 'என்னுடைய ஃபேன்ஸ்குக்கு ஒரு ரிக்வெஸ்ட் - பொதுவா ஒரு ஸ்டாரோட படம் ரிலீஸ் ஆகும் போது, சில இடங்களில் டிக்கெட் ரேட் அதிகமாக இருக்கும்...எக்ஸ்ட்ராவா காசு கொடுத்து பார்க்காதீங்க - கெளண்டர்ல டிக்கெட் ரேட் என்னவோ அதைக் கொடுத்து வாங்குங்க...என் படம் ரிலீஸ் ஆகும் போது ஒரு ப்ளெக்ஸ் வைக்கறது, ஒரு பால் அபிசேஷம் பண்றது...இது எல்லாம் ஏதோ ஒரு விதத்துல செலவு பண்ணி என் மேல இருக்கற அன்பை காட்டத்தான் போறீங்க...இந்த ஒரு வாட்டி அதெல்லாம் பண்ணாதீங்க...உங்க அப்பா அம்மாதான் உங்களுக்கு எல்லாமே, இந்த வாட்டி பால் அபிசேஷம் பேனருக்கு பதிலா, உங்க அம்மாவுக்கு ஒரு புடவை, உங்க அப்பாவுக்கு ஒரு சட்டை, உங்க தம்பி தங்கைக்கு சாக்லெட் வாங்கி குடுங்க..ஏதோ ஒண்ணு உங்களால முடிஞ்சது, உங்க தாய்க்கு குடுக்கற ஒரு ஃபோட்டோ அல்லது விடியோவா அதை போட்டீங்கன்னா அதைவிட சந்தோஷம் எனக்கு வேற எதுவும் கிடையாது. இந்த பேனர் கட் அவுட் வைச்சுதான் மாஸ் கெத் காட்றது முக்கியம்னு கிடையாது. படத்துல நல்லா நடிச்சு உங்க பேரை நான் காப்பாத்தணும். அதை நான் செய்யறேன். எனக்காக நீங்க இதை செய்யுங்க. இது என் ரிக்வெஸ்ட். லவ்யூ ஆல். நீங்க இல்லாமா நான் இல்லை’ என்று தன் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் இந்த விடியோவை பதிவிட்டிருந்தார் சிம்பு.

இணையத்தில் இந்த விடியோவை கிண்டலடித்துப் பல பதிவுகள் வெளிவரவே கடுப்பான சிம்பு, முதல் வெளியிட்ட விடியோவுக்கு நேர் எதிராக இன்னொரு விடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது, ‘ஒரு விடியோ ஒன்று விட்டு இருந்தேன்...சில விஷயங்கள் பண்ணாதீங்க இதைப் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தேன். பட் என்னென்ன எனக்குப் போய் அந்தளவு ஃபேன்ஸ் இருக்காங்கா, எனக்கு இருக்கறதே 2 - 3 ரசிகர்கள் தான்னு சொல்றாங்க. இப்ப நான் உன்கிட்ட சொல்றேன். நாம ஒரு தப்பு செஞ்சா, அதை திருத்திக்கணும், அந்த ரெண்டு மூணு ரசிகர்கள்தானே இருக்காங்கறப்ப ஏன் இதெல்லாம் பேசணும். அந்த 2 - 3 பேர் கிட்ட மட்டும் சொல்றேன், இது என்னோட அன்பு கட்டளை. இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு ப்ளக்ஸ் வைக்கறீங்க, கட் அவுட் வைக்கறீங்க, பால் எல்லாம் பாக்கெட்ல ஊத்தாதீங்க. அண்டாவில ஊத்துங்க. வேற லெவல்ல செய்யறீங்க. இதை தான் நான் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன், எனக்கு தான் 2-3 ரசிகர்கள் தானே இருக்காங்க. அதனால இதைச் செய்றது தப்பு கிடையாது. அந்தளவு நான் பெரிய ஆளும் கிடையாது, யாரும் கேள்வியும் கேட்க போறது கிடையாது. வந்தா ராஜாவா தான் வருவேன் ரிலீஸுக்கு வேற லெவல்ல செய்யுங்க இதை நான் உங்களுக்கு சொல்றேன்’ என்று புதிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதென்ன கலாட்டா என்று புது மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள். முதல் விடியோவே மொக்கை அதற்கு மாற்றாக வெளியிடப்பட்ட இரண்டாவது மரண மொக்கை என்று கலாய்த்து வருகிறார்கள். மூன்றாவது விடியோவை எப்போது ரிலீஸ் செய்வார் (படம் இல்லீங்க!) என்றும் சிலர் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர்!? 

இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் உண்மையில் அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யவிருக்கிறார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். (பிப்ரவரியில் வந்தால் ராஜாவாதான் வருவாரா?)

]]>
simbu, சிம்பு, விடியோ, video of simbu, memes simbu, வந்தா ராஜாவா தான் வருவேன் https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/22/actor-simbu-viral-video-3081102.html
3081105 சினிமா செய்திகள் தனுஷின் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட நடிகை  DIN DIN Tuesday, January 22, 2019 04:34 PM +0530  

பெங்களூரு: மாரி -2 படத்தில் இடம்பெற்ற தனுஷின் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டிய தனுஷின் முன்னாள்  நாயகியான திவ்யா ஸ்பந்தனாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் 

தனுஷ், சாய் பல்லவி கூட்டணியில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் மாரி - 2. படம் வசூல் ரீதியாக சரியாகப் போகாவிட்டாலும்,யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடல் வைரல் ஹிட்டானது. இதுவரை இப்பாடலை உலகம் முழுவதும் 10 கோடி பேர் பார்த்துள்ளனர். 

இதனை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு பல கோலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பாராட்டு தெரிவித்து அதனை 'ரி ட்வீட்' செய்திருந்தனர். 

இந்நிலையில் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டிய தனுஷின் முன்னாள் நாயகியான திவ்யா ஸ்பந்தனாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் 

தனுஷுடன் 'பொல்லாதவன்' படத்தில் இணைந்து நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா (எ) ரம்யா. இவர் தற்போதுகாங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாகி செயல்பட்டு வருகிறார். 

'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டும் விதமாக நடிகை ரம்யா, தனுசையும் யுவன் ஷங்கர் ராஜாவையும் குறிப்பிட்டு இரண்டு ரவுடிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார்.

இதற்கு கன்னட ரசிகர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கன்னடத்தில் எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அதையெல்லாம் பாராட்டாமல் தனுசை பாராட்டிய உங்கள் தமிழ் பாசத்துக்கு நன்றி. 

யஷ் நடித்துள்ள கே.ஜி.எப் கன்னட படம் பாகிஸ்தானில் கூட வெளியாகி உள்ளது. இந்த படம் ரூ.250 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது உள்ளது. இதை ஏன் நீங்கள் பாராட்டவில்லை?. 

அடுத்த முறை தமிழ் நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.

இவ்வாறெல்லாம் அவரை சமூக வலைத்தளத்தில் கன்னட ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.  

]]>
dhanush, maari-2, rowdy baby, divya spandana, twitter, wish, controversy https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/22/தனுஷின்-ரவுடி-பேபி-பாடலைப்-பாராட்டி-வாங்கிக்-கட்டிக்-கொண்ட-நடிகை-3081105.html
3080430 சினிமா செய்திகள் அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு: அஜித் அதிரடி அறிக்கை  DIN DIN Monday, January 21, 2019 07:28 PM +0530  

சென்னை: அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு; அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை என்று நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னால் அஜித் ரசிகர்கள் 5000 பேர் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில்  பாஜகவில் இணைந்ததாகவும், அவர்கள் அஜித் ரசிகர்கள் என்ற தரப்பில் இருந்து பாஜகவுக்கு ஆதரவு தருவதாகவும் செய்திகள் வெளியாகின. 

அத்துடன் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் நல்ல கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.      

இந்நிலையில் அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு; அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை என்று நடிகர் அஜித்குமார் திங்கள் மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அஜித்தின் மக்களை தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பெயரில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகியுள்ள அறிக்கையின் முக்கிய விஷயங்களாவன பின்வருமாறு:

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது எனது திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து வீடாக கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன். 

என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே.

எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. 

நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ வாக்களியுங்கள் என்றோ எப்போதும் நிர்ப்பந்தித்தது இல்லை; நிர்பந்திக்கவும் மாட்டேன். 

நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. 

இவ்வாறு அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்ககளை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

]]>
tamilnadu, kollywood, ajithkumar, BJP, tamilisai, politics, suresh chandra, twitter, statement, https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/21/அரசியலில்-எனக்கு-தனிப்பட்ட-விருப்பு-வெறுப்பு-உண்டு-அஜித்-அதிரடி-அறிக்கை-3080430.html
3080429 சினிமா செய்திகள் குறைவான படங்களில் நடிக்கும் நடிகை இவர்! DIN DIN Monday, January 21, 2019 06:14 PM +0530 குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் வெகுவான கவனத்தை ஈர்த்திருப்பவர் பிரியா பவானி சங்கர். அடிப்படையில் சாஃப்ட்வேர் என்ஜினீயரான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், மெகா சீரியல் ஹீரோயின் என்று பலமான அனுபவத்தோடுதான் 'மேயாத மான்' படம் மூலமாக சினிமாவுக்கு வந்தார். 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் ஆச்சரியப்படுத்தினார்.  '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷின் அடுத்தப் படமான அதர்வா நடிக்கும் 'குருதி ஆட்டம்', 'ஒருநாள் கூத்து' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'மான்ஸ்டர்', 'மாப்ள சிங்கம்' இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கும் படம் என அடுத்தக் கட்டப் பரபரப்பில் இருக்கிறார். 'டி.வி.யில் எவ்வளவு பரபரப்பாக இருந்தேனோ, அதை விட  இப்போது பரபரப்பாக இருக்கிறேன். "மான்ஸ்டர்' படப்பிடிப்பு முடிந்து விட்டது.  நகர்புறத்தில் வாழுகிற பெண்ணாக நடிக்கிறேன்'' என்றார்.   

ரஜினியுடன் "கோச்சடையான்' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். சமீபத்தில் இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து தீபிகா படுகோன் ரசிகர் ஒருவர் சுட்டுரைப் பக்கத்தில் ருசிகரமான தகவல் பகிர்ந்திருந்தார். ஒரு தோசையும் அதன் அருகில் மெனு கார்டும் இருந்தது. பின்னர்தான் அதன் விவரம் தெரியவந்தது.  அமெரிக்காவில் ஆஸ்டின், டெக்ஸாஸ் நகரில் உள்ள ஹோட்டல்களில் தோசை ஒன்றிற்கு "தீபிகா படுகோன் தோசை' என பெயரிடப்பட்டிருக்கிறது. தோசையின் மேல்புறத்தில் மிளகாய் மற்றும் உருளை கிழங்கு மசாலாவுடன் இந்த தோசை சுவை மிகுந்ததாக இருக்கிறதாம். ரசிகரின் சுட்டுரையைப் பார்த்த  தீபிகா மகிழ்ச்சியில் பொங்கினார். பிறகு அவருக்கு அளித்த பதிலில், "புத்தாண்டு என்னவொரு பிரமாதமாக தொடங்கியிருக்கிறது' என தெரிவித்துள்ளார். 
  
"என்னை நோக்கி பாயும் தோட்டா',  "அசுரன்' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், முதல்முறையாக நடித்துள்ள ஹாலிவுட் படம்,  "தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்'.  கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஐக் வார்ட்ரோபின் "ஷதி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலைத் தழுவி உருவாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ், பெர்னைஸ் பெஜோ நடித்துள்ளனர். மே 30-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் படம் வெளியாகிறது.  சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. இதற்காக பிரான்ஸ் சென்றிருந்த தனுஷ், இந்தப் படம் தமிழில் டப் செய்யப்படுவதாக தெரிவித்தார். அத்துடன்  இந்தப் படத்துக்கு, "வாழ்க்கையை தேடி நானும் போனேன்'  என்று பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளையே அவர் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் படம் மே மாத இறுதியில் தமிழில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான தமிழ் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.   

தீபிகா படுகோனேவை காதலித்தார் ரன்பீர் கபூர். கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.  பின்னர் கேத்ரினா கைபுடன் ரன்பீர் நெருங்கி பழகினார். திடீரென அவரையும் பிரிந்தார். இப்போது நடிகை அலியா பட்டை காதலித்து வருகிறார். ரன்பீரை பிரிந்தது பற்றி கேத்ரினா  எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இப்போதுதான் அது பற்றி அவர் பேசியுள்ளார், ""அவரை பிரிந்த பிறகு இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பாசம் காட்டினால் நானும் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் கண்டுகொள்ள மாட்டேன்'' என்று கேத்ரினா பேசியுள்ளார். 

]]>
kollywood, cinema, சினிமா, பிரியா பவானி சங்கர் https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/21/priya-bhavani-shankar-actress-3080429.html
3080423 சினிமா செய்திகள் அஜித் ரசிகராக அதர்வா ஆடும் ‘குருதி ஆட்டம்’  DIN DIN Monday, January 21, 2019 04:39 PM +0530  

சென்னை: இயக்குனர் ஸ்ரீகணேஷின் இரண்டாவது படமான குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அவர் தற்போது ‘குருதி ஆட்டம்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.  

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், மதுரையில் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் கபடி வீரராக அதர்வா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. 

அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க, ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் குருதி ஆட்டத்தில் அஜித் ரசிகராக நடிகர் அதர்வா நடிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

நிஜத்திலும் அஜித் ரசிகரான அதர்வா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமானது,  படத்தில் செட் பிராப்பர்ட்டியாக அதர்வா வீட்டில்இடம்பெற்றுள்ளது.  இதைப் பார்த்து அதர்வா மிகவும் ஆச்சரியப்பட்டார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

]]>
kollywood, atharva, sriganesh, kuruthi aattam, ajith, fan, kabaadi player https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/21/அஜித்-ரசிகராக-அதர்வா-ஆடும்-குருதி-ஆட்டம்-3080423.html
3079875 சினிமா செய்திகள் அட்லீ இயக்கத்தில் 'விஜய் - 63' பூஜையுடன் துவக்கம்  DIN DIN Sunday, January 20, 2019 07:33 PM +0530  

சென்னை: அட்லீயுடன் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணையவுள்ள 'விஜய - 63' படம்  ஞாயிறன்று பூஜையுடன் துவங்கியது.  

'சர்கார்' பட  வெற்றியைத் தொடந்து அடுத்து விஜய் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின அந்த படத்தின் பூஜை, சென்னையில் ஞாயிறு காலை நடைபெற்றது 

இந்த படமானது விளையாட்டு சம்பந்தமான கதையம்சப் பின்னணி கொண்டது என கூறப்படுகிறது. 

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ,இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
kollywood, vijay, atlee, vijay-63, sports drama https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/20/அட்லீ-இயக்கத்தில்-விஜய்---63-பூஜையுடன்-துவக்கம்-3079875.html
3079307 சினிமா செய்திகள் ரெட் கார்டு விவகாரத்தில் பாடல் மூலமாக சிம்பு பதிலடி! எழில் DIN Saturday, January 19, 2019 11:05 AM +0530  

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படப் பிரச்னை தொடர்பாக சிம்புவுக்கு ரெட் கார்டு விதிக்க முயன்றதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் இதுகுறித்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சிம்பு.

ஹிப்ஹாப் தமிழா இசையில் அறிவு எழுதிய ரெட் கார்டு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

]]>
Red Cardu Lyrical, Vantha Rajavathaan Varuven https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/19/red-cardu-lyrical-3079307.html
3079294 சினிமா செய்திகள் விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்! எழில் DIN Saturday, January 19, 2019 10:24 AM +0530  

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் தமிழரசன் படத்தில் பிரபல இயக்குநர் மோகன் ராஜாவின் 10 வயது மகன் பிரனவ் மோகன் நடிகராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளிவந்த டிக்டிக்டிக் படத்தில் ஜெயம் ரவின் மகன் ஆரவ் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜாவின் மகனும் திரையுலகில் நுழைந்துள்ளார்.

]]>
Director Mohan Raja, Thamilarasan https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/19/after-aarav-one-more-actor-from-jayam-ravis-family-3079294.html
3078727 சினிமா செய்திகள் ரஜினியா? அஜித்தா?: வசூலில் முந்துபவர் யார்? எழில் DIN Friday, January 18, 2019 03:16 PM +0530  

பொங்கல் சமயத்தில் வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களில் எது வசூலில் முன்னணியில் உள்ளது?

இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை தெரியாததால்தான் இன்றுவரை இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் சமூகவலைத்தளங்களில் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மோதலில் தற்போது இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்துள்ளன. 

சில நாள்களுக்கு முன்பு, எங்களுக்கே பட வசூல் தெளிவாகத் தெரியாத நிலையில் பட வசூல்களைத் தவறாக வெளியிடவேண்டாம் என்று ட்வீட் வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் பேட்ட படத்தின் வசூல் விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில், இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடியை எட்டும். தமிழ்ப் படங்களில் இது ஓர் சாதனை என்று கூறியுள்ள விடியோவையும் சர்வதேச விநியோகஸ்தர் மாலிக் ஸ்ட்ரீம்ஸ், பேட்ட படம் இதுவரை இந்தியா தவிர உலகின் பிறகு பகுதிகளில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறியுள்ள விடியோவையும் பகிர்ந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதன்மூலம் இதுவரை உலகளவில் ரூ. 150 கோடியை பேட்ட படம் வசூலித்துள்ளதாக அறியப்படுகிறது. 

இதையடுத்து விஸ்வாசம் படத்தை வெளியிட்டுள்ள கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், விஸ்வாசம் படம் இதுவரை ரூ. 125 கோடியை வசூலித்துள்ளது எனத் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மறைமுகமாக பேட்ட படத்தை விடவும் விஸ்வாசம் அதிகம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதனால் எந்தத் தகவல் உண்மையானது என்கிற பரபரப்பு சமூகவலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டு அளவில் விஸ்வாசம் படம் அதிகத் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலை அள்ளினாலும் உலகளவில் பேட்ட படமே அதிக வசூலை அடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

]]>
box office, Petta vs Viswasam https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/18/petta-vs-viswasam---who-made-it-big-box-office-3078727.html
3078723 சினிமா செய்திகள் தளபதி 63 படத்தில் இணைகிறார் 'பரியேறும் பெருமாள்’படப்புகழ் கதிர்! சினேகா DIN Friday, January 18, 2019 12:54 PM +0530  

விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இன்னும் பெயரிடப்படாத விஜய் 63 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க `பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகன் கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.

தற்போது நடிகர் கதிர் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இக்கதையைச் சொன்னதுமே, கதிர் நடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். 'விஜய் அண்ணாவுடன் நடிப்பது என் நெடுநாள் ஆசை. அது நிறைவேறப் போகிறது. இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்? என்று தனது டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.