Dinamani - நியூஸ் ரீல் - https://www.dinamani.com/cinema/news-reel/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3202712 சினிமா நியூஸ் ரீல் இயக்குநர் சிகரம் கேட்டும் என்னால் சினிமாவில் அன்று நடிக்க முடியவில்லை! DIN DIN Monday, July 29, 2019 04:36 PM +0530 தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர். 100 படங்களை இயக்கியவர், நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை அறிமுகப்படுத்தி பெரிய நட்சத்திரங்கள் ஆக்கியவர். அவர்தான் இயக்குநர் சிகரம் என்று மக்களால் புகழப்படும் இயக்குநர் கே.பாலசந்தர். இவரது 89-ஆவது பிறந்த நாள் சென்ற வாரம் கொண்டாடப்பட்டது. மூன்று விழாக்கள் மூலம் அவரது புகழை கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் விழா அவரது குடும்பம் நடத்தியது. அதாவது கவிதாலயா சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவரது மகள் புஷ்பா கந்தசாமியும், மாப்பிள்ளையான கந்தசாமி பரதனும் நடத்தினார்கள். 

குறிப்பாக, ராஜேஷ் வைத்தியாவின் "Do you have a minute Series' "ஒரு நிமிடம் ஒரு பாட்டு' என்ற வகையில் சுமார் 30 நிமிடங்கள், நம்மை பாலசந்தரின் சினிமா உலகிற்கே அழைத்து சென்று விட்டார். இந்த விழாவில் கவிதாலையா திரைப்பட நிறுவனம் யூ-டியூப் சேனலைத் துவங்கியது. இந்த விழாவில் கந்தசாமி பரதன் பேசும் போது பாலசந்தர் சொன்னதாக அவர் குறிப்பிட்டது. "நான் பெரிய திரைக்கும், சின்னதிரைக்கும் படமெடுத்து இருக்கிறேன். இனிமேல் அவர்களின் தனிப்பட்ட திரைக்கும் (personal screen) படமெடுக்க போகிறேன்' என்று சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பே சொன்னார். "தனிப்பட்ட திரை என்று சொன்னது ஒவ்வொருவர் கையிலும் உள்ள கைபேசி என்று இப்போது எனக்குப் புரிந்தது. என்ன ஒரு தீர்க்கதரிசி கே.பி'என்றார் கந்தசாமி பரதன். 

'நான் எடுக்கும் படத்தில் உனக்கு சரியான பாத்திரம் இல்லை என்று கூறியவர், 'சிந்துபைரவி' படத்தில் நடிக்க அழைத்த போது வயதானவருக்கு இரண்டாம் தாரமாக நடிக்க வேண்டும் என்று பாலசந்தரின் உதவியாளர் அனந்து, சொன்னபோது கண்டிப்பாக ஏதாவது பண்ணுவார் என்று நான் நம்பினேன். அது நடந்தது' என்றார் சுஹாசினி.

இரண்டாவது பிறந்த நாள் விழா பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்றது. அதன் தலைவர் என்.ரவி தலைமை தாங்கினார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் பெயரில் விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றவர் நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்த விருதை நிறுவியர் பாலசந்தரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கவிதாலயா கிருஷ்ணன். 

"ஒரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, இயக்குநர் பாலசந்தர் "என் பெயரில் விருது நிறுவி நீ வழங்குவாயா'"என்று கேட்டார். "அவர் விருப்பத்தைதான் நான் இன்று நிறைவேற்றி இருக்கிறேன்'' என்றார் கவிதாலயா கிருஷ்ணன். இந்த விருதை தலைவர் ரவி வழங்க, நல்லி குப்புசாமி செட்டி, இசைக்கவி ரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 

தலைமை உரையில் என். ரவி, நடிகர் ஏ.ஆர்.எஸ். நடிப்பைப் புகழ்ந்தார். 'அவர் சிறந்த நடிகர் மட்டும் அல்ல. பல முதலமைச்சர்களுடன் நடித்தவர். சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர், ஜெயலலிதாவுடன் நடித்து பாராட்டுப் பெற்றவர். மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் 'புரஸ்கார்' விருது பெற்றவர். இந்த விருது இதுவரை தமிழகத்தில் நான்கு பேர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பூர்ணம் விஸ்வநாதன். ஜந்தாவதாக நமது நடிகர் ஏ.ஆர்.எஸ். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்' என்றார்.

விழாவின் இறுதியில் பாலசந்தருக்கு பிடித்தமான நாடகம் நடைபெற்றது. அது மும்பை ஷண்முகானந்தா தியேட்டர் குரூப் நடத்திய 'அர்த்தநாரீஸ்வரம்'' என்ற நாடகம். இந்த நாடகத்தை நடித்து, எழுதி, இயக்கியவர் சந்தோஷ்ராஜன் என்ற பெண்மணி. நாடகம் முடிந்தவுடன் அவர் சொன்னதுதான் மனதை தொட்டது. இயக்குநர் சிகரம், மும்பை வந்த பொழுது இவரது நாடகத்தை பார்த்திருக்கிறார். இவரது நடிப்பை பார்த்தவுடன் இவரிடம் வந்து 'சினிமாவில் நடிக்க விருப்பமா?' என்று கேட்டிருக்கிறார். 'இயக்குநர் சிகரம் கேட்டும் என்னால் சினிமாவில் அன்று நடிக்க முடியவில்லை. அதற்கு காரணங்கள் பல. அப்படி நடிக்க வந்திருந்தால், நானும் இன்று ஒரு பெரிய நடிகை ஆகி இருப்பேன். ஆனால் அவரது பிறந்தநாளுக்கு சென்னையில் நாடகம் போடுவது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்று கூறினார்' சந்தோஷ் ராஜன். 

மூன்றாவது விழாவை பாலசந்தரின் உதவியாளர் மோகன் நடத்தினார். சென்னை சாலிகிராமம் கோல்டன் மஹாலில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சலன் 

]]>
kb, k.balachander, suhasini, santhosh rajan, kollywood, kb 89, கே.பாலசந்தர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/KB_main.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/29/இயக்குநர்-சிகரம்-கேட்டும்-என்னால்-சினிமாவில்-அன்று-நடிக்க-முடியவில்லை-3202712.html
3202702 சினிமா நியூஸ் ரீல் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்! இணைந்து நடிக்க ஆசை! DIN DIN Monday, July 29, 2019 03:07 PM +0530  

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். "3', "வை ராஜா வை' படங்களை இயக்கினார். அடுத்தப் படம் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தவர் திடீரென்று தொழில் அதிபர் ஆகும் எண்ணத்திற்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே டென்னிஸ் அணி ஒன்றில் முதலீடு செய்தவர் தற்போது யோகாவில் முதலீடு செய்திருக்கிறார். இப்படியொரு எண்ணம் வந்ததற்கு என்ன காரணம் என்றதற்கு, 'ஆரோக்கியத்துடன தொடர்புடைய பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவுதான் டென்னிஸையடுத்துத் தற்போது யோகாவில் பங்கேற்றிருக்கிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு நினைவூட்ட வேண்டும் என்பது தற்போது நான் பங்கேற்றிருக்கும் யோகாவின் குறிக்கோள். அதனால்தான் இதில் முதலீடு செய்திருக்கிறேன்' என்றார் ஐஸ்வர்யா.

எதிர் வினையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'இருளன்'. ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சூர்யா பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். ஹர்ஷ வர்தனா இசையமைத்து, ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது...'வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வாரு நாளும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. மார்க்வஸ் 'வாழ்க்கையே பெரும் கனவு' என்கிறார். ஷேக்ஸ்பியர் "வாழ்வே ஒரு நாடகம், நாமெல்லாம் நடிகர்கள் என்று சொல்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே இது. நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனைதான், அது மரணம் என்ற வலிமையான கருத்தை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த 'நோட்டா' படத்தில் நடித்தவர், விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர், தற்போது நடித்துள்ள படம் 'டியர் காம்ரேட்'. கடந்த வாரம் வெளியாகியுள்ள இப்படம் குறித்து அவர் பேசும் போது.... 'நோட்டா' படம் வெளியான பிறகு தமிழிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், தமிழில் சரளமாகப் பேச முடியாமல் அவதிப்படுவதால், உடனே தமிழ் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். நோட்டா படத்தில் நடிக்கும்போது, அடுத்த நாள் படப்பிடிப்பில் எந்தெந்த காட்சி படமாக்கப்படுகிறதோ, அதற்கான வசனங்களை வாங்கிச் சென்று படித்து மனப்பாடம் செய்து கொள்வேன். இப்போது முக்கியமான சில தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசை' என்று தெரிவித்துள்ளார்.

]]>
irulan, vijay, vijay sethupathi, vijay devarakonda https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/aishwarya.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/29/vijay-sethupathi-and-vijay-devarekonda-3202702.html
3199934 சினிமா நியூஸ் ரீல் சிங்கப்பெண்ணே பாடலில் என்ன சிறப்பு? நெட்டிசன்கள் கேள்வி சினேகா DIN Thursday, July 25, 2019 04:44 PM +0530  

மூன்றாம் தடவையாக விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா, ஷாக்கி ஷெராஃப், நாசர், விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிகில் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முவிடில் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கும் என்றனர் படக்குழுவினர்.  

பெண்களை சிறப்பிக்கும் வகையில் உருவாகியுள்ள 'சிங்கப் பெண்ணே' எனும் பிகில் படப் பாடல் அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானால் அவரது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிடப்பட்டது. பாடல் ஆசிரியர் விவேக் எழுதிய இப்பாடல் வெளியான சில மணி நேரத்தில் அது வைரலாகியது. இந்தப் பாடல் ரசிக்கும் வகையில் இருந்தாலும், இது அவருடைய முந்தைய படப் பாடல்கள் பலவற்றைப் போலவே உள்ளது என்று நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.

இன்னும் சில தீவிர ரசிகர்கள் இப்பாடலின் ரிஷிமூலத்தை கண்டறிந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படமான பீலே படத்தில் ஜிங்கா என்ற பாடலை பாடியிருந்தார். சிங்கப்பெண்ணே பாடல் ஜிங்காவை நினைவுபடுத்தத் தவறவில்லை என்கிறனர் அந்த நெட் இசை ஆர்வலர்கள். சிலர் இக்கருத்தை ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். எது எப்படியோ இந்தப் பாடல் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்துவிட்டது என்பது மிகையில்லை. 

]]>
சிங்கப்பெண்ணே, விஜய், அட்லி, singapennae, vijay, A.R.Rahman, Atlee, Bigil https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/21/w600X390/bigil_newxx.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/25/vijays-bigil-best-song-singapennae-3199934.html
3199927 சினிமா நியூஸ் ரீல் ரஜினியின் தர்பார் படம் பற்றிய புதிய தகவல் சினேகா DIN Thursday, July 25, 2019 03:58 PM +0530  

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 166-வது படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை  லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. 

போலீஸ் அதிகாரியாக ரஜினி இப்படத்தில் நடிப்பதால் போலீஸ் உடையில் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இப்படம் குறித்த புது அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

 

இந்தப் படத்தில் ஷூட்டிங் நடக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவலை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் நெட்டிசன்கள்.

]]>
super star, rajini, darbar https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/26/w600X390/darbar22.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/25/darbar-film-latest-updates-3199927.html
3197223 சினிமா நியூஸ் ரீல் நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸனின் எதிர்காலத் திட்டம் DIN DIN Sunday, July 21, 2019 12:07 PM +0530 சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் போன்றவர்கள் ஒரே நேரத்தில் திரையுலகிற்கு வந்தாலும் சாய் பல்லவி அளவுக்கு அனுபமாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிணற்றில்போட்ட கல்லாக எந்தவித பரபரப்பும் இல்லாமலிருந்த அனுபமா, திடீரென்று தனக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் தொடர்பு இருப்பதுபோல் ஒரு தகவலை இணையதள பக்கத்தில் கிளப்பிவிட்டார். அது தீயாய்ப் பற்றிக் கொண்டது. இந்த பரபரப்பு அவருக்கு புதிய பட வாய்ப்பு ஒன்றையும் பெற்றுத் தந்திருக்கிறது. உடனே நடிக்க வந்துவிட்டார். பரபரப்புக்கு பயன்பட்ட காதல் விவகாரம் சீரியஸ் ஆகி வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த அனுபமா, 'பும்ராவா? யார் அவர்' என்று கேட்டு அடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, " பும்ராவ் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் அவரைப் பற்றி தெரியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் யாரோ சிலர் பும்ராவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்'' என்றார் அனுபமா. டுவிட்டர் பக்கத்தில் அனுபமாவும், பும்ராவும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்ததால் இருவரும் காதலிப்பதாகத் தகவல் பரவியது. தற்போது அனுபாமாவை அன்ஃபாலோ செய்திருக்கிறார் பும்ரா.

மும்பை வெர்சோவா பகுதியில் தமன்னா, ரூ.16 கோடியில் ஆடம்பர பங்களா வாங்கியிருக்கிறார் என்று தகவல் பரவியது. தமன்னா எங்கு சென்றாலும் 16 கோடியில் வீடு வாங்கியது குறித்து கேட்டு அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்களாம். இதனால் தர்மசங்கடத்திற்குள்ளாகியிருக்கிறார். பங்களா வாங்கியது பற்றி தமன்னா கூறும் போது, 'எனது ஹிந்தி டீச்சர் என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியிருப்பதாக என்னைப் பற்றி தகவல் பரவி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஒரு வீட்டுக்கு நான் எப்படி இரண்டு மடங்கு விலை தருவேன்? என்று அவருக்கு பதில் அளித்தேன். வெளியிடங்களுக்குச் சென்றாலும் இது பற்றியே என்னிடம் கேட்பதால் தர்மசங்கடமாக உள்ளது. நான் வீடு வாங்கியது உண்மைதான். ஆனால் அந்த வீட்டுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். தனது நண்பர் ஆன்ட்ரி கொஸ்சேவ்வைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட, 'நரகாசூரன்' படம் இன்னமும் திரைக்கு வராமல் இருப்பதால் நொந்துபோய் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்ட, 'சண்டக்காரி' படமும் இன்னும் வெளியாகவில்லை. முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்திருந்த ஸ்ரேயா திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதால், விட்ட இடத்தை பிடிப்பதற்காக இணையதளப் பக்கத்தில் தனது கவர்ச்சிப் படங்களைச் சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். திருமணம் ஆகி வருடக்கணக்காகிவிட்டதால் அவர் கர்ப்பமாகியிருப்பார் என்ற சந்தேகமும் பலருக்கு எழுவதால் அதைத் தீர்க்கும்விதமாக ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றத்துடன் கட்டுக்கோப்பாக இருப்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைத்து வருவதாகத் தெரிகிறது.

திருமணத்துக்கு முன்பே தனது நண்பர் ஜார்ஜ் பனயியோடோவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார் எமி ஜாக்சன். தற்போது நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸன் மொராக்கோ நாட்டில் மர்ரகேஷ் நகரில் காதலனுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் எமி ஜாக்ஸனுக்கு குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் காதலனுடன் திருமணம் பற்றி திட்டமிடுவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகருக்குச் செல்கிறார். அதற்கான விமான டிக்கெட் புக் செய்திருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் எமி, 'நாங்கள் இத்தாலியில் கண் விழிக்கப் போகிறோம். காலை டிபனாக பாஸ்தா சாப்பிடுவேன்' என குறிப்பிட்டிருக்கிறார். வெனிஸ் நகரில் அமர்ந்து தனது திருமணத்தை கிரேக்க நாட்டில் எப்படி நடத்துவது என்று வருங்கால கணவர் ஜார்ஜுடன் பேச முடிவு செய்திருக்கிறார் எமி.

அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்' ஆகிய படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிக்கும் புதுப்படம், 'மாஃபியா'. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். படத்தை கார்த்திக் நரேன் எழுதி இயக்குகிறார். படம் குறித்து கார்த்திக் நேரன் பேசும் போது....37 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். அதற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. 'தடம்' பார்த்த பிறகுதான் இதில் அருண் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அந்த படத்தில் அந்த அளவுக்கு அவரின் உழைப்பு இருந்தது. படத்தில் அவர் கேங்ஸ்டர் இல்லை. வடசென்னையிலும் கதை நடக்கவில்லை. இது இரண்டும் இல்லாமலும் ஒரு சென்னை கதை. இதுதான் இதன் சிறப்பு. பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் மிகவும் வித்தியாசமான வேடம். கதாநாயகியாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக பிரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார்' என்றார் இயக்குநர்.
- ஜி.அசோக்

 

]]>
amy jackson, tamannah, bumrah, kolyywood https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/21/w600X390/amy.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/21/amy-jackson-delivery-date-3197223.html
3184562 சினிமா நியூஸ் ரீல் நடிகை ரேவதி இயக்கும் புதிய படம்! DIN DIN Wednesday, July 3, 2019 11:06 AM +0530 எண்பதுகளின் தொடக்கத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் இந்திப் படமான 'அர்த்' மீண்டும் தயாராகிறது. படத்தில் இரண்டு நாயகிகள். ஸ்மிதா பாட்டில், ஷபானா ஆஸ்மி.

இந்தியில் மீண்டும் உருவாகும் இந்தப் படத்தை இயக்குபவர் நடிகையும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரேவதி.  தமிழில் 'மறுபடியும்' என்ற பெயரில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் 'அர்த்' தயாரானது அதில் ஒரிஜினல் படத்தில் ஷபானா ஆஸ்மியின் பாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார். மறுபடியும் புதிதாக தயாராகும் ஹிந்தி "அர்த்' படத்தில் ஷபானாவின் பாத்திரத்தில் நடிப்பவர் ஸ்வர பாஸ்கர். ஸ்மிதா பாத்திரத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கிறார்.
 - ரய்யான்

]]>
revathy, actress, bollywood, kollywood, arth, mahesh bhat, shabana asmi, jaquelin fernandes, swara baskar https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/REVATHI.JPG https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/03/mahesh-bhat-super-hit-film-arth-to-be-remade-3184562.html
3183083 சினிமா நியூஸ் ரீல் என் குடும்பத்தினரும், சந்ததியினரும் உழைத்துச் சாப்பிட வேண்டும்! என்.எஸ்.கே விளக்கம்! DIN DIN Monday, July 1, 2019 11:27 AM +0530
திருவாங்கூர்  சமஸ்தானத்து  ராஜா,  கலைவாணர்  என்.எஸ். கிருஷ்ணனின் தீவிர ரசிகர். ஒரு முறை மகாராஜா வைத்த  விருந்தில் கலைவாணர் கலந்து கொண்டார்.

அப்போது  கலைவாணரை  கௌரவிக்க  முடிவு செய்திருந்த  மகாராஜா, 'கலைவாணர் அவர்களே  எனது எஸ்டேட்  ஒன்றைத் தங்களுக்கு  அன்புப் பரிசாக தர விரும்புகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று  கூறிவிட்டு  அந்த சொத்துக்கான  பத்திரங்கள்  அடங்கிய உறையை  கலைவாணரிடம்  நீட்டினார் மகாராஜா.

அதை வாங்காத  கலைவாணர், 'மகாராஜா  இவ்வளவு பெரிய  சொத்தை தாங்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்தால்,  என் குடும்பம்  தலைமுறை , தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடப் பழகிவிடும். எப்போதுமே என் குடும்பத்தினரும், சந்ததியினரும்  உழைத்துச் சாப்பிட வேண்டும்  என்று நான் விரும்புகிறேன்' என்று  கூறி அந்தச் சொத்தை  வாங்க மறுத்து விட்டார்.

மகாராஜா  ஆச்சரியத்தின் எல்லைக்கே  சென்றுவிட்டார்.

]]>
NSK, old film, N.S.Krishnan, Kalaivanar, கலைவாணர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/30/w600X390/kadhir6.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/jul/01/என்-குடும்பத்தினரும்-சந்ததியினரும்-உழைத்துச்-சாப்பிட-வேண்டும்-என்எஸ்கே-விளக்கம்-3183083.html
3152181 சினிமா நியூஸ் ரீல் ஷ்ருதி ஹாசன் காதல் முறிவு! DIN DIN Thursday, May 16, 2019 12:42 PM +0530 அண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஷ்ருதி ஹாசன். இரண்டாண்டுகளாக பழகி வந்த பிரிட்டிஷ் நாடக நடிகரும் காதலருமான மைக்கேல் கோர்சலேவைப் பிரிந்தார் ஷ்ருதி ஹாசன்.

'வாழ்க்கை நம் இருவரையும் எதிர் எதிர் துருவத்தில் வைத்திருப்பதால் துரதிருஷ்டவசமாக அவரவர் வழியே பயணிக்க வேண்டியுள்ளது' என்று தன்னுடைய ட்விட்டரில், பதிவிட்டுள்ளார். 

'என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்கும் நன்றி. இசை, படங்கள் என காத்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

]]>
Shruti Hassan, ஸ்ருதிஹாசன், British, shruti https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/11/17/w600X390/sruthi.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2019/may/15/shruti-hassan-break-up-story-3152181.html
3152182 சினிமா நியூஸ் ரீல் நான் ஒரு வாடகைத் தாய்! DIN DIN Wednesday, May 15, 2019 05:16 PM +0530 சல்மான் கானுடன் கேத்ரினா கைப் நடித்துள்ள "பாரத்' வெளியாகவுள்ள நிலையில், முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா பற்றிய வரலாற்று படத்தில் கேத்ரினா நடிக்கப் போவதாக இணையதளத்தில் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து கேத்ரினா கூறியதாவது, "இந்த வரலாற்று படத்தில் நான் நடிக்கிறேனோ, இல்லையோ உண்மையில் இப்படி ஒரு படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் நான் நடிக்கப் போவதாகவும் தயாரிப்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே இதுபற்றி கூற முடியும்'' என்கிறார்.

கடைசியாக 'ரேஸ் 3' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், முதன்முறையாக ஃபராகான் தயாரிக்கும் நெட் பிளக்ஸின் 'மிஸஸ் சீரியல் சில்வர்' என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர் கொலைகளில் சம்பந்த படுத்தி சிறையில் அடைப்பட்டுள்ள தன் கணவரை காப்பாற்றும் மனைவியாக நடிக்கும் ஜாக்குலின், இப்படத்திற்காக எடுக்கப்பட்ட தன்னுடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு முதல் தகவலை ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சுகாந்த் சிங் ராஜ்புத்துடன் 'டிரைவ்' மற்றும் சல்மான்கானுடன் 'கிக் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறாராம். 

ராஜ்குமார்ராவுடன் 'சிடி லைட்ஸ்' என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா, 'பத்னாம் கலி' என்ற வெப் சீரியலில் வாடகை தாயாக நடிக்கிறார். 'இது ஒரு வித்தியாசமான பாத்திரம் என்பதுடன் இது பலரது கண்களை திறக்கக் கூடிய கதையம்சம் கொண்டது என்பதால் ஒப்புக் கொண்டேன்' என்று கூறும் பத்ரலேகா, சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட 'போஸ் டெட் அலைவ்' என்ற படத்திலும் முக்கிய காட்சியில் நடித்துள்ளார். அடுத்து முதன்முறையாக ஒரு கன்னட படத்திலும் நடிக்கவுள்ளார்.

- அருண்

]]>
web series, race 3, katrina kaif, bollywood https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/15/w600X390/KATRINA_KAIF.JPG https://www.dinamani.com/cinema/news-reel/2019/may/15/katrina-kaif-latest-films-3152182.html
2689158 சினிமா நியூஸ் ரீல் சைக்கிளில் வந்த அதே இடத்தில்...! நெகிழும் ராஜமௌலி DIN DIN Saturday, April 22, 2017 11:02 AM +0530 இந்திய சினிமா ரசிகர்களின் ஏக எதிர்பார்ப்புக்குள் இருக்கிறது "பாகுபலி 2.' ஹைதராபாத்தைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்காகவும் பிரமாண்ட ஆடியோ விழாவை சென்னையில் அரங்கேற்றியுள்ளது படக்குழு. மின்னும் மேடையில், மிளிரும் நட்சத்திரங்கள் பங்கு கொண்ட விழாவின் தொகுப்பு இது...

முதன் முதலாக பேச வந்த நாசர், "பாகுபலி' படக் கதையை ஒன்றரை மணிநேரம் ராஜமௌலி எனக்குச் சொன்னார். சொன்னதை சொன்ன மாதிரி எடுத்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே படமாக்கி காட்டிவிட்டார்.   ஏனென்றால், தனக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் கதையை யாருக்கும் சொல்லமாட்டார் ராஜமௌலி. அதுமட்டுமில்லாமல் படம் எடுப்பது ஒருவகையில் சுலபம். அதை மார்க்கெட்டிங் செய்வதுதான் ராஜதந்திரம். அதையும் தெளிவாகச் செய்கிறார் ராஜமௌலி. இன்னும் நிறைய "பாகுபலி' வர வேண்டும்'' என தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் நாசர். 

அடுத்து வந்த சத்யராஜ், தனக்கே உரிய பாணியில் பேசினார். ""ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை... அந்த மாதிரிதான், ராஜமௌலி கைய வச்சா அது ராங்கா போனதில்லை... ஏனென்றால், இவர் 11 படம் இயக்கியுள்ளார். எல்லாமே ஹிட். வாள் பயிற்சியில் தொடங்கி எல்லாவற்றையும் இயக்குநரே கற்றுக் கொள்வார். இந்தப் படத்தில் நடிப்பது பிக்னிக் போகிற மாதிரிதான். இந்தப் படத்தை ஆங்கிலப் படத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு. இது நம் மண் சார்ந்த படம்'' என்றார் சத்யராஜ். 

"பல வருட உழைப்பு இந்தப் படத்தின் பின் இருக்கிறது. ராஜமௌலி சார் இயக்கம் பற்றிப் பேசுகிற அளவுக்கு நான் பெரிய இயக்குநர் எல்லாம் கிடையாது. டிரெய்லரிலேயே தெரிகிறது இதன் பிரமாண்டம். இந்தப் படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்று நினைத்தாலே, பைத்தியம் பிடிக்கிறது'' என்று சுருக்கமாக பேசி முடித்தார் தனுஷ். 

பலத்த கைதட்டல்களுக்கு இடையே பேச வந்தார் ரம்யா கிருஷ்ணன். "படையப்பா' படம் என் கேரியரில் ரொம்ப முக்கியம். என்னை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த படம் அது. அதைத் தாண்டி மிகப்பெரிய படம் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. "பாகுபலி'யின் சிவகாமி, நீலாம்பரியை மறக்கடித்து விட்டது. இந்த மாதிரி வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. "மகேந்திர பாகுபலி...' என்று அவர் உரக்கச் சொல்லவும் அரங்கமே அதிர்ந்தது. 

அடுத்து வந்த தமன்னாவுக்கும் அதே அரங்கம் அதிர கைதட்டல். "பாகுபலி'யின் கதையைக் கேட்கும் போது எனக்குள் ஓர் எண்ணம். இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கவில்லை என்றால், வேறு எந்தப் படத்துக்கு நமக்கு கிடைக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததே எனக்கு விருது கிடைத்த மாதிரி தான் இப்போது நினைக்கிறேன். விருதுகளை விடப் பெரியது இந்தப் படம். என்றுமே ராஜமௌலி சாரோட மிகப்பெரிய ரசிகை. என் வாழ்க்கையில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.'' என்று முடித்தார் தமன்னா. 

"நிச்சயமாக எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும். தேவசேனா கதாபாத்திரத்தை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அப்படியொரு வலிமையான பெண் கதாபாத்திரம் கிடைத்ததே ரொம்ப சந்தோஷம். திரைக்கதை மேல் இருக்கிற நம்பிக்கைதான் இதன் பெரிய பலம். உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்'' என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் அனுஷ்கா.

நினைவுகளை கிளறும் விதமாக இருந்தது ராஜமௌலியின் பேச்சு. "1991 - 92-ஆம் கால கட்டத்தில் சென்னையில்தான் இருந்தேன். கே.கே நகரில் இருந்து இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டுக்கு சைக்கிளில் வருவோம். இவ்வளவு வருஷத்துக்கு பின் இப்போது இதே கிரவுண்ட்டில் இவ்வளவு பேர் முன்பு, என் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. தேங்க் யூ ராணா அண்ட் தமன்னா. ரம்யா கிருஷ்ணன் மேம், சத்யராஜ் சார், நாசர் சார், அண்ட் ஸ்வீட்டி எல்லோருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். எல்லோருக்கும் நன்றிகள் பல. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி என் அப்பா அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அந்த சுவாரஸ்யத்தை அப்படியே ரசிகர்களுக்கு கடத்த வேண்டும் என்று நினைத்தேன்'' என நெகிழ்வாகப் பேசி விழாவை முடித்து வைத்தார் ராஜமௌலி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/a18.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2017/apr/22/சைக்கிளில்-வந்த-அதே-இடத்தில்-நெகிழும்-ராஜமௌலி-2689158.html
2689157 சினிமா நியூஸ் ரீல் அரபு தாக்கு! DIN DIN Saturday, April 22, 2017 11:00 AM +0530 துபாய் வாழ் தமிழர்களின் நிலையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அரபு தாக்கு.' நிகேஷ் ராம், பெர்குஸார் கொரல், தம்பி ராமையா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துபாய் நாட்டை கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லுவதே திரைக்கதை. இதுவரை சிங்கப்பூர், மலேசிய தமிழர்களின் பின்புலத்தை கதைக் களமாகக் கொண்டு படங்கள் வருவது வழக்கம். அதிலிருந்து மாறுபடும் வகையில் துபாய் வாழ் தமிழர்களின் நிலை இதில் சொல்லப்படுகிறது. துபாயின் நவீன அடையாளமான புர்ஜ் கலிபா என்ற இடத்தில் முதன் முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸிஸ் எழுதி இயக்குகிறார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/a21.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2017/apr/22/அரபு-தாக்கு-2689157.html
2689156 சினிமா நியூஸ் ரீல் கருப்பு ராஜா வெள்ளை ராஜா! DIN DIN Saturday, April 22, 2017 10:59 AM +0530 நீண்ட இடைவெளிக்குப் பின் பிரபுதேவா தமிழில் இயக்கவுள்ள படத்துக்கு "கருப்பு ராஜா வெள்ளை ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் - கார்த்தி இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் "வனமகன்' படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றொரு கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான வெடி படத்துக்குப் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் இருந்தார் பிரபுதேவா. ஹிந்தியில் "ரவுடி ரத்தோர்', "ரா. ராஜ்குமார்', "சிங் இஸ் ப்ளிங்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். 
தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளார் பிரபுதேவா. விஷால் - கார்த்தி இருவரும் நாயகர்களாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இப்படத்தின் தொடக்க விழா கடந்த 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. 
ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/a19.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2017/apr/22/கருப்பு-ராஜா-வெள்ளை-ராஜா-2689156.html
2689155 சினிமா நியூஸ் ரீல் மனித உணர்வுகளைப் பேசும் தொண்டன்! DIN DIN Saturday, April 22, 2017 10:58 AM +0530 "அப்பா' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடிக்கும் படம் "தொண்டன்.' சுனைனா, சூரி, விக்ராந்த், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். படம் குறித்து சமுத்திரக்கனியிடம் பேசும் போது... ""தொண்டன்' என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, இது அரசியல் படமா? என்று கேட்கிறார்கள். இதில் அரசியல் துளியும் கிடையாது. பிறருக்கு உதவி செய்கிற யாவருமே தொண்டன் என்பதை களமாக கொண்டு, இக்கதையை எழுதியுள்ளேன். எனக்கு நாளிதழ் செய்திகளை ஒரு வரி கூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ, மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறான். அதை ஒருவர் கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும், கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும்'' என்கிறார் சமுத்திரக்கனி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/a17.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2017/apr/22/மனித-உணர்வுகளைப்-பேசும்-தொண்டன்-2689155.html
2687181 சினிமா நியூஸ் ரீல் பிரபுதேவாவின் அடுத்த பரிமாணம் DIN DIN Wednesday, April 19, 2017 10:33 AM +0530  

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட பிரபுதேவாவின் அடுத்த பரிமாணம் பாடலாசிரியர். தற்போது தமிழில் நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் பிரபுதேவா, புதுமுக இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி வரும் "எங் மங் சங்' படத்தில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இப்படத்தில் லெட்சுமிமேனன், தங்கர்பச்சான், சித்ரா லெட்சுமணன், ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் இடம் பெறும் பிரத்யேக பாடல் ஒன்றை பிரபுதேவா எழுதியுள்ளார். கிராமத்துப் பின்னணியில் மண் சார்ந்த பாடலாக இது உருவாகியுள்ளது. "அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு...' எனத் தொடங்கும் இப்பாடலில், கிராமத்து திருவிழாவின் மரபுகள் பாடு பொருளாக இடம் பெற்றுள்ளது. அம்ரீஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சங்கர்மகாதேவன் குரலில் இப்பாடல் பதிவாகியுள்ளது. கும்பகோணம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் 150 நடன கலைஞர்களுடன் பிரபுதேவா, லெட்சுமி மேனன் இருவரும் பங்கேற்று இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.                          
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/19/w600X390/prabhu_deva.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2017/apr/19/பிரபுதேவாவின்-அடுத்த-பரிமாணம்-2687181.html
2599030 சினிமா நியூஸ் ரீல் ஜனவரியில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு DIN DIN Tuesday, November 15, 2016 10:00 AM +0530 "சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்த நிலையில், தனது அலுவலக மாடியிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார் கமல். கால் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். பூரணமாக குணமாகி வந்ததையடுத்து அக்டோபர் மாதம் முதல் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க தீர்மானிக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கும் அளவுக்கு கமல் முழு அளவில் குணம் அடையவில்லை. எலும்பில் அறுவை சிகிச்சை என்பதால், பூரண குணத்துக்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் டிசம்பர் மாத மத்தியில் படப்பிடிப்பு நடத்த ஆலோசிக்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. படத்தில் ஏற்றுள்ள பல்ராம் நாயுடு கதாபாத்திர கெட்-அப்புக்காக, மேக்கப் கலைஞர்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பரில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அவர்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டிய நிலை இருப்பதால், மேக்கப் பிரச்னை எழுந்தது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/15/w600X390/Sabash-Naidu.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2016/nov/15/ஜனவரியில்-சபாஷ்-நாயுடு-படப்பிடிப்பு-2599030.html
2579757 சினிமா நியூஸ் ரீல் ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் DIN DIN Wednesday, October 12, 2016 01:00 PM +0530 வெளிவருவதற்கு முன்பே சர்வதேச மேடைகளை அலங்கரித்து வரும் படம் "லென்ஸ்.' ஏற்கெனவே ஸ்பெயின், பெங்களூரு, தில்லி உள்ளிட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ள "லென்ஸ்' திரைப்படம், மும்பையில் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அதைப் பெற்றுக் கொண்டார். இந்திய அளவில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டு இவ்விழாவில் கலந்து கொண்டன. இந்தியாவின் பிரபலமான படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய "லென்ஸ்', ஹன்ஸ்லால் மேத்தாவின் "அலிகர்', அபர்ணா சென்னின் "அர்ஷிநகர்மே' உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் "லென்ஸ்' படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/12/w600X390/r31.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2016/oct/12/ஜாக்ரன்-திரைப்பட-விழாவில்-லென்ஸ்-2579757.html
2579758 சினிமா நியூஸ் ரீல் டிசம்பரில் வெளியாகிறது சர்வர் சுந்தரம் DIN DIN Wednesday, October 12, 2016 12:47 PM +0530 "தில்லுக்கு துட்டு' படத்தையடுத்து சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் படம் "சர்வர் சுந்தரம்'. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடிக்கிறார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெரும்பான்மையான காட்சிகள் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக துபாயில் தங்கி படக்குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். திரைக்கதையில் பாலைவனப் பகுதிகள் முக்கிய இடம் வகிப்பதால், அக்காட்சிகளை சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைத்து படமாக்குவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரங்குகளும் அமைக்கப்பட்டன. ஆனால், அந்தக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இல்லாததால், உண்மையாகவே பாலைவனப் பகுதிகளில் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டது. அதற்கேற்ப, துபாயில் படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது. டிசம்பரில் படம் வெளியாகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/12/w600X390/r4.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2016/oct/12/டிசம்பரில்-வெளியாகிறது-சர்வர்-சுந்தரம்-2579758.html
2579756 சினிமா நியூஸ் ரீல் பிரபாஸின் மெழுகுச் சிலை  DIN DIN Wednesday, October 12, 2016 12:42 PM +0530 எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான "பாகுபலி' படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் "பாகுபலி'க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக அளவிலும் வெளிச்சம் கிடைத்தது. இதற்கான அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற "மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் இவர் நடித்த "பாகுபலி' கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், பிரபாஸின் பாகுபலி கதாபாத்திரத்துக்கு கிடைத்துள்ளது. 2017-ஆம் ஆண்டு பாங்காங்கில் நடக்கவுள்ள "மேடம் டுசாட்ஸ்' நிகழ்வுக்காக பிரபாஸின் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/12/w600X390/r2.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2016/oct/12/பிரபாஸின்-மெழுகுச்-சிலை-2579756.html
2579755 சினிமா நியூஸ் ரீல் குரு சோமசுந்தரம் நடிக்கும் படம் ஓடு ராஜா ஓடு DIN DIN Wednesday, October 12, 2016 12:40 PM +0530 நான்கு நபர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஓடு ராஜா ஓடு.' நகைச்சுவையுடன் த்ரில்லர் பாணியில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. "ஜோக்கர்' படத்துக்குப் பின் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். ஆனந்த்சாமி, லெட்சுமி பிரியா, சாருஹாசன், நாசர், ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எல்.வி.பிரசாத் அகாதெமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மூலன் குரூப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/12/w600X390/r1.jpg https://www.dinamani.com/cinema/news-reel/2016/oct/12/குரு-சோமசுந்தரம்-நடிக்கும்-படம்-ஓடு-ராஜா-ஓடு-2579755.html