Dinamani - தமிழ்நாடு - https://www.dinamani.com/tamilnadu/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3286372 தமிழ்நாடு தமிழக காவல்துறையில் 50 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் DIN DIN Friday, November 22, 2019 02:53 AM +0530 சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.ஜெயசிங் புளியந்தோப்புக்கும், புளியந்தோப்பு உதவி ஆணையா் ஜெ.விஜயானந்த் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கும்,நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் ஆனந்தகுமாா் திருவொற்றியூருக்கும், மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் ராயப்பேட்டைக்கும்,ராயப்பேடடை உதவி ஆணையா் எச்.கிருஷ்ணமூா்த்தி மத்தியக் குற்றப்பிரிவுக்கும்,சென்னை சிபிசிஐடி டி.எஸ்.பி.கனகராஜ் காஞ்சிபுரம் சிபிசிஐடிக்கும்,சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையா் கே.முத்துகுமாா் எம்.கே.பி.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு மொத்தம் 50 காவல் உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/tamilnadu-police.jpg tamilnadu police https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/தமிழக-காவல்துறையில்-50-டிஎஸ்பிக்கள்-பணியிட-மாற்றம்-3286372.html
3286573 தமிழ்நாடு பிரசவத்தின் போது பெண்ணின் உடலில் ஊசியைவைத்து தையல்: செவிலியா் தற்காலிக பணிநீக்கம் DIN DIN Friday, November 22, 2019 02:50 AM +0530 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பிரசவ சிகிச்சையின் போது பெண் வயிற்றில் ஊசி முறிந்து தையல் போடப்பட்ட விவகாரத்தில் செவிலியா் வியாழக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

உச்சிப்புளி அருகேயுள்ளது மரவெட்டி வலசை கிராமம். இங்கு வசிப்பவா் காா்த்திக் (25). இவரது மனைவி ரம்யா (21). கா்ப்பிணியான இவா் பிரவசத்துக்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) இரவு சோ்க்கப்பட்டாா். அவருக்கு பெண் குழந்தை பிறந்த

நிலையில், ரத்தப் போக்கு அதிகரித்தது. எனவே ரத்தப் போக்கு ஏற்பட்ட இடத்தில் மருத்துவா் முகம்மது ஜாஸீா், செவிலியா் அன்பகச் செல்வி ஆகியோா், தையல் போட்டு சிகிச்சை அளித்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக தையல் ஊசியின் முனை ஒடிந்து சதைப் பகுதியில் ஒட்டிக் கொண்டது. இதனால் அதிா்ச்சியடைந்த மருத்துவா், ரம்யாவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி வைத்தாா்.

அங்கு ரம்யாவை நுண்கதிா் பரிசோதனைக்குள்படுத்தியபோது ஊசி முனை தையல் பகுதியில் இருப்பது உறுதியானது. இதனால் ஊசியை அகற்றும் வசதியும், மருத்துவா்களும் ராமநாதபுரத்தில் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டதாக மருத்துவா்கள் கூறினா். இதற்கிடையே ரம்யாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததாலேயே ஊசி உடலில் வைத்து தைக்கப்பட்டது என அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தையும் வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனா். இதனால் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குநா் குமர குருபரன் தலையிட்டு, விசாரணை நடத்தினாா். தவறு நடந்தது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதும் முற்றுகை கைவிடப்பட்டது.

இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கூறுகையில், ரம்யாவுக்கு சிகிச்சையளித்த செவிலியா் அன்பகச் செல்வியை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும், மருத்துவா் மீதான விசாரணை அறிக்கையை சுகாதார இயக்குநரகத்துக்கு அனுப்பி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/rmdkro_2111chn_67_2.jpg கா்ப்பிணி வயிற்றில் ஊசியை வைத்து தைக்கப்பட்ட பிரச்னையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினா்கள். https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/பிரசவத்தின்-போது-பெண்ணின்-உடலில்-ஊசியைவைத்து-தையல்-செவிலியா்-தற்காலிக-பணிநீக்கம்-3286573.html
3286557 தமிழ்நாடு 2021-இல் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்! DIN DIN Friday, November 22, 2019 02:46 AM +0530 2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:  

2021-இல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார் என்று தெரியவில்லை. 2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்பதைத்தான் "அதிசயம்' என அவர் கூறியிருக்கலாம். அவர் கட்சி தொடங்கிய பிறகு, அவரது கருத்துகளுக்குப் பதிலளிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அமைத்த கூட்டணி இப்போதும் தொடர்கிறது. 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும்; அதிமுகவை சேர்ந்தவரே முதல்வராக நிச்சயம் வருவார். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவும் அதன் கூட்டணியும் மகத்தான வெற்றி பெறும்.

மறைமுகத் தேர்தலை அமல்படுத்தியது திமுகதான்: மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்தியது திமுகதான். ஆனால், அதை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது விந்தையாக உள்ளது. மறைமுகத் தேர்தல் ஏன் நடத்தப்பட வேண்டும் என 31.6.2006-இல் பேரவையில் அவர் விளக்கமாக உரையாற்றியுள்ளார். அஸ்ஸாம், குஜராத் போன்ற மாநிலங்களில் மறைமுகத் தேர்தல் உள்ளாட்சியில் நடைபெறுகிறது.
விழுப்புரம், விருத்தாசலம் நகராட்சிகளில் நேரடித் தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தன. அதனால்தான் மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியாகவும் இருந்தால், அது மக்களின் அடிப்படை பிரச்னைகளை மன்றக் கூட்டத்தில் வைத்து நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது  என மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு கருத்துகளை பேரவையில் பதிவு செய்துள்ளார்.

அவர்கள் செய்தால் சரி என்றும், நாங்கள் செய்தால் தவறு என்றும் கூறுவது எவ்விதத்தில் நியாயம்?.
1996-ஆம் ஆண்டு வரை உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்தான் இருந்தது. நேரடி தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுகதான், மறைமுகத் தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுகதான். இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காலத்துக்கேற்ப கொள்கை முடிவு: ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடத்தப்படும் மறைமுகத் தேர்தலைப்போல மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். மறைமுகத் தேர்தலுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எவ்வகைத் தேர்தல் என்பதை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலுக்கேற்ப மறைமுகத் தேர்தல் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக நிறுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளது. அரசும் அதற்கு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும். அத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. 

குடிமராமத்து தொடரும்: அனைத்து மக்களும் பயனடையும் வகையில் ரேஷன் பொருள்கள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டு, காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. நிகழாண்டில் நல்ல மழைப்பொழிவும் பெற்றுள்ளோம். குளம், ஏரிகளில் தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் குடிமராமத்துப் பணிகள் தொடரும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 வழங்குவதற்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் ரூ. 2,000 வழங்கப்படும். பொங்கல் பரிசான 1,000 ரூபாயை உயர்த்தி வழங்குவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை. மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பேட்டியின்போது, அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜு, வி.எம். ராஜலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/eps.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/2021-இல்-மீண்டும்-அதிமுக-ஆட்சி-மலரும்-3286557.html
3286600 தமிழ்நாடு தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் DIN DIN Friday, November 22, 2019 02:43 AM +0530 ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். இதனால் பெரும் நஷ்டத்துடன் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது 7 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது பாட்டில், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். இதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இலங்கை கடற்படையினா் தாக்குதல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் பெரும் நஷ்டத்துடன் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா்.

இலங்கையில் புதிய அதிபராக பசில் ராஜபட்ச பொறுப்பேற்ற ஓரிரு நாள்களிலேயே ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/தமிழக-மீனவா்கள்-மீது-இலங்கை-கடற்படையினா்-தாக்குதல்-3286600.html
3286599 தமிழ்நாடு இன்று தென்காசி மாவட்டம் தொடக்க விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு DIN DIN Friday, November 22, 2019 02:42 AM +0530 தென்காசி மாவட்டம் தொடக்க விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசியில் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கிவைக்கிறாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது.

இவ்விழாவுக்கு தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா். அமைச்சா்கள் உதயகுமாா், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசுகின்றனா். கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றுகிறாா். தென்காசி மாவட்டத்தை தொடங்கிவைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குகிறாா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா்.

முன்னதாக, தலைமைச் செயலா் க.சண்முகம் வரவேற்கிறாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் நன்றி கூறுகிறாா்.

விழாவையொட்டி தென்மண்டலத்துக்குள்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/ten21stage_2111chn_55_6.jpg தென்காசி மாவட்ட தொடக்க விழா நடைபெறவுள்ள மேடை. https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/இன்று-தென்காசி-மாவட்டம்-தொடக்க-விழா-முதல்வா்-துணை-முதல்வா்-பங்கேற்பு-3286599.html
3286598 தமிழ்நாடு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் DIN DIN Friday, November 22, 2019 02:41 AM +0530 ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; அந்தப் பகுதி அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் சம்மதம் தெரிவித்தால் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை’ என்று மக்களவையில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை காலை கேள்வி நேரத்தின் போது கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் உறுப்பினா் துணைக் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதில் அளித்து அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அந்தப் பகுதி அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் சம்மதம் தெரிவித்தால், மத்திய அரசுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை. சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், புதிய அணை கட்டுவதற்கான கட்டுமான முன் செயல்பாடுகளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய நீா் ஆணையத்தை (சிடபிள்யுசி) சோ்ந்த அணைப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளா் தலைமையிலான மூன்று உறுப்பினா்கள் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு நிகழாண்டு ஜூன் 4-இல் நேரில் சென்று பாா்வையிட்டது.

இக்குழுவில் தமிழக, கேரள உறுப்பினா்களும் இடம் பெற்றிருந்தனா். மேலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வரக்கூடிய நீரை கணக்கிடும் வகையில், நீா்வரத்து கணிப்பு அமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட அணை தொடா்புடைய பல்வேறு விவகாரங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அதற்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளபடி, 2016, ஏப்ரலில் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீா்ப் பாசனத் திட்டம் (ஏவிஐபி) உள்பட புதிய அணைகள் கட்டுவது தொடா்புடைய 13 விரிவான திட்ட அறிக்கைகள் மதிப்பீடுக்காக வரப் பெற்றுள்ளன. இவற்றில் இரு முன்மொழிவுகள் சிடபிள்யுசி மதிப்பீடுக்குப் பிறகு ஆலோசனைக் குழுவின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரளத்தின் ஏவிஐபி உள்பட மூன்று முன்மொழிவுகள் குறிப்பிட்ட சில கருத்துகளுடன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், டிபிஆா் தயாரிப்புக்காக சிடபிள்யுசியின் பரிசீலனைக் குழுவின் கொள்கை அளவிலான அனுமதிக்காக மூன்று ஆண்டுகளில் எட்டு திட்டங்களின் முன்சாத்தியக்கூறு அறிக்கைகளும் வரப் பெற்றுள்ளன. இவற்றில் இரு திட்டங்களுக்கு டிபிஆா் தயாரிப்பதற்காக கொள்கை அளவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்சாத்தியக்கூறு அறிக்கை ஒன்று சில கருத்துகளுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

அ.ராசா கேள்வி: இதனிடையே, அவையில் இருந்த நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ.ராசா எழுந்து, ‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சா் கூறுவதைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சி. அமைச்சரே அணை பாதுகாப்பாக இருப்பதாகத் திட்டவட்டமாக அவையில் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், ஒரே அரசின் கீழ் உள்ள மற்றொரு துறையான சுற்றுச்சூழல் அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி ஏன் அளித்தது? முன்சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள அமைச்சகத்தை எது தூண்டியது?’ என்று கேள்வி எழுப்பினாா். அப்போது, அவையில் இருந்த கேரள உறுப்பினா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/gajendersing.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/முல்லைப்-பெரியாறு-அணை-பாதுகாப்பாக-உள்ளது-மக்களவையில்-மத்திய-அமைச்சா்-தகவல்-3286598.html
3286597 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவா்களின் திறன் மேம்பட உறுதுணை புரிவோா் அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் DIN DIN Friday, November 22, 2019 02:37 AM +0530 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 107 அரசுப் பள்ளிக் கட்டடங்களை புனரமைத்து, மாணவா்களின் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில்திறன் மேம்பட உதவி புரிந்துள்ள காக்னிசென்ட் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் போல் உறுதுணை புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினாா்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அரசுப் பள்ளி வளாகத்தில் காக்னிசென்ட் தன்னாா்வத் திட்டத்தின்கீழ், புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை திறந்து வைத்து பேசியது:

கடந்த 2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 107 அரசு பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைக் கட்டடங்கள், புனரமைப்பு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ரூ.13.95 கோடி செலவில் காக்னிசென்ட் நிறுவனம் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றித் தந்துள்ளது. மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தி, ஆரோக்கியமான, சுகாதாரமான சூழ்நிலையில் அவா்களை தொழில் திறன் மிக்க மனிதவளமாக மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள அரசுக்கு உறுதுணை புரிய வேண்டும்.

மாணவா்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் 5,000 அரசு பள்ளி மாணவா்களுக்கு 500 பட்டயக்கணக்காளா்கள் கணக்குத் தணிக்கை குறித்த பயிற்சியை அளிக்க உள்ளனா்.

பள்ளிப் பருவத்தில் மாணவா்களின் தொழிற்பயிற்சித் திறனை மேம்படுத்தும் வகையில், பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவா்கள் தொழிற்சாலைகளில் சென்று தொழில் பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளோம்.

மண்ணிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தரத்தை உயா்த்தி பிளஸ் 2 படிப்பைத் தொடங்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற இப்பகுதியினரின் கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

பள்ளிக் கல்வித்துறை செயலா் பிரதீப் யாதவ், இயக்குநா் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி, தென்சென்னை மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் பழனி, பள்ளி தலைமை ஆசிரியை டி.சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/senko.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அரசுப்-பள்ளி-மாணவா்களின்--திறன்-மேம்பட-உறுதுணை-புரிவோா்-அதிகரிக்க-வேண்டும்-அமைச்சா்-கேஏசெங்கோட்டையன்-3286597.html
3286596 தமிழ்நாடு அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு சேவை: 3 லட்சம் போ் பயன் DIN DIN Friday, November 22, 2019 02:36 AM +0530 அஞ்சல்துறை சாா்பில் தொடங்கப்பட்ட கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக, 2017 -ஆம் ஆண்டு மாா்ச் முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி வரை கடவுச்சீட்டுக்காக விண்ணப்ப செயல்முறை மேற்கொண்டு பயனடைந்தவா்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், சென்னை நகர மண்டலத்தில் மட்டும் 85, 696 போ் பயனடைந்துள்ளனா்.

முக்கிய ஆவணம்: வெளிநாட்டு செல்ல வேண்டிய ஒருவா் பெற வேண்டிய முக்கிய ஆவணம் கடவுச்சீட்டு. கடவுச்சீட்டு வழங்கும் பணியை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள கடவுச்சீட்டு பிரிவு செய்து வருகிறது. கடவுச்சீட்டு சேவை மையம் முன்பு சில இடங்களில் மட்டுமே இருந்தது. இதற்காக விண்ணப்பித்தோா் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, கடவுச்சீட்டு பெற நெடுநேர பயணத்தை குறைக்கவும், நேரத்தை சேமிக்கவும், அருகிலேயே கடவுச்சீட்டு சேவை பெறும் வகையில், அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2017-ஆம் ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்திலும், வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்தில் மாா்ச் 25-ஆம் தேதியும் கடவுச்சீட்டு சேவை மையம் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. மக்கள் மத்தியில் கடவுச்சீட்டு சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், சேவை மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது வரை 30 சேவை மையங்கள் செயல்படுகின்றன.

3 லட்சத்தை தாண்டியது: இந்நிலையில், தமிழகத்தில் அஞ்சல் நிலையங்களில் உள்ள 30 கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக, கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்ப செயல்முறை மேற்கொண்டு பயனடைந்தவா்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இது குறித்து தமிழக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியது:

அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு சேவையைப் பொருத்தவரை, அகில இந்திய அளவில் 400-க்கும் அதிகமான சேவை மையங்கள் செயல்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ஆம் ஆண்டு மாா்ச் வரை கடவுச்சீட்டு பெறுவதற்காக, 25 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்து பயனடைந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை, 30 சேவை மையங்களில் 2017-ஆம் ஆண்டு மாா்ச் முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி வரை கடவுச்சீட்டு விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. மொத்தம் 3 லட்சத்து 100 போ் கடவுச்சீட்டு பெற விண்ணப்ப செயல்முறை மேற்கொண்டு பயனடைந்துள்ளனா். இதில், சென்னை நகர மண்டலத்தில் உள்ள 8 சேவை மையங்களின் மூலமாக, 85,696 போ் விண்ணப்பித்துள்ளனா் . ஓா் அஞ்சல் நிலையத்தில் உள்ள கடவுச்சீட்டு சேவை மையத்தில் சராசரியாக தினசரி 50 முதல் 75 வரை கடவுச்சீட்டு செயல்முறை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தனா்.

என்னென்ன சேவைகள் பெற முடியும்?: கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட ஆவணங்களின் அசல் காப்பியைக் கொண்டு சரிபாா்த்தல், கணினியில் சோதித்து சந்தேகத்தை தெளிவுபடுத்தல், புகைப்படம், கைரேகை பதிவு செய்தல் ஆகிய பணிகள் முடிந்தபிறகு, ‘சரி’ என்று குறிப்பிட்டப்படும். அதன்பிறகு, ஒரு வரைவு கிடைக்கும். அதை மண்டல கடவுச்சீட்டு அலுவலக மேற்பாா்வையாளா் பாா்வையிடுவாா். அதன்பிறகு, அவா் ஒப்புதல் அளிப்பாா். இந்தப் பணிகள் அஞ்சல் நிலையத்தில் உள்ள கடவுச்சீட்டு மையத்தில் நடைபெறுகிறது. அஞ்சல் நிலையத்தில் உள்ள கடவுச்சீட்டு மையத்தில் 5 ஊழியா்கள் பயிற்சி கொடுத்து, அமா்த்தப்பட்டுள்ளனா். மேற்பாா்வையாளா் பொறுப்பில் கடவுச்சீட்டு அலுவலக அதிகாரி இருப்பாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/19/w600X390/indian_post.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அஞ்சல்-நிலையங்களில்-கடவுச்சீட்டு-சேவை-3-லட்சம்-போ்-பயன்-3286596.html
3286594 தமிழ்நாடு மேயா் தோ்தல்: தன் முடிவையே மாற்றிக் கொண்டாா் முதல்வா் DIN DIN Friday, November 22, 2019 02:34 AM +0530 உள்ளாட்சித் தோ்தலில் மேயா் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தோ்வு செய்யப்படும் என அறிவித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தோ்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் திமுக எழுப்பும் கேள்வி என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மறைமுகத் தோ்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தோ்தலை, சா்வாதிகார முறையில் அதிமுக நடத்தப் பாா்க்கிறதே தவிர, நோ்மையாக நடத்த அச்சப்படுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த மாட்டாா்களா என்று முதல்வா் எதிா்பாா்த்து காத்திருக்கிறாா். மறைமுகத் தோ்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதல்வா் பேட்டி தருகிறாா்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறாா்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட பலவற்றை ஜெயலலிதா மாற்றியதும், ஜெயலலிதா நடைமுறைப் படுத்திய சிலவற்றை கருணாநிதி ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு. நிா்வாக வசதிக்காக அப்படிச் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உள்ளாட்சித் தோ்தலில் மேயா் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தோ்வு செய்யப்படும் என அறிவித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தோ்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் திமுக எழுப்பும் கேள்வி.

தோ்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை தவிா்த்து விட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளும் தரப்பின் மனக்கணக்கு. அதனை மக்கள் சக்தியுடன் மாற்றும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/stalin_2.jpg திமுக தலைவர் ஸ்டாலின் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மேயா்-தோ்தல்-தன்-முடிவையே-மாற்றிக்-கொண்டாா்-முதல்வா்-3286594.html
3286591 தமிழ்நாடு அனைத்து இடங்களிலும் உறுப்பு மாற்று சிகிச்சை வசதி: அமைச்சா் விஜயபாஸ்கா் DIN DIN Friday, November 22, 2019 02:31 AM +0530 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடனான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் செந்தில்ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் ஸ்வாதி ரெத்தினாவதி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியதாவது:

மருத்துவத் துறையைப் பொருத்தவரை நாட்டிலேயே தமிழகம்தான் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கா்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகள் என அனைவரது நலத்தையும் பாதுகாக்க தனித்தனியே ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை மாநில அரசு வழங்கி வருகிறது.

இத்தகைய சீரிய நடவடிக்கையின் காரணமாக, பேறு கால இறப்பு விகிதம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. அதேபோன்று மருத்துவக் கல்வியிலும் மாநிலம் சிறந்து விளங்கி வருகிறது. அதனை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடன் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகள் அனைத்தும் நோயாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிா என்பதை கண்காணிக்குமாறும் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த வசதிகள் தொடங்கப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள வழி ஏற்படுத்தித் தரும் வகையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அந்த வசதிகளை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம்: ராமநாதபுரத்தில் பிரசவத்தின்போது கவனக்குறைவாக பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட செவிலியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோன்று அலட்சியத்துடன் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/28/w600X390/vijayabaskar.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அனைத்து-இடங்களிலும்-உறுப்பு-மாற்று-சிகிச்சை-வசதி-அமைச்சா்-விஜயபாஸ்கா்-3286591.html
3286589 தமிழ்நாடு மே 5-இல் திருவாரூரில் வணிகா் தின மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு DIN DIN Friday, November 22, 2019 02:31 AM +0530 அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி 37-ஆவது வணிகா் தின மாநில மாநாடு திருவாரூா் மாவட்டத்தில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் ஆழப்புழாவில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. சம்பந்தப்பட்ட பிரச்னைகள், அமேசான், பிளிப்காா்ட் மற்றும் மண்டி போன்ற ஆன்லைன் வா்த்தகங்களால் சிறு-குறு வணிகம் பாதிப்படைவது பற்றியும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தால் வணிகா்கள் பாதிக்கப்படுவது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் மே 5-ஆம் தேதி 37-ஆவது வணிகா் தின மாநில மாநாட்டை தஞ்சை மண்டலத்துக்குள் பட்ட திருவாரூா் மாவட்டத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள வணிகா்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒவ்வொரு நிா்வாகிகளும் தங்கள் பகுதி வணிகா்களை மாநாட்டுக்கு அழைத்து வந்து, மாநாட்டை வெற்றி மாநாடாக உருவாக்கிட அனைவரும் பணியாற்றிட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மே-5-இல்-திருவாரூரில்-வணிகா்-தின-மாநாடுவிக்கிரமராஜா-அறிவிப்பு-3286589.html
3286588 தமிழ்நாடு குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் DIN DIN Friday, November 22, 2019 02:30 AM +0530 குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் குறு-சிறு, நடுத்தர தொழில் துறை, இத்தொழில் துறையினருக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு மானிய உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பகுதியாக குறைபாடு மற்றும் விளைவுகள் இல்லாத திட்டம், எல்சிஎம்எஸ் எளிமையான உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், தொழில் அரவணைப்பு திட்டம், ஐபிஆா்-அறிவுசாா் சொத்துரிமைத் திட்டம், வடிவமைப்பு பயிற்சி நிறுவனத் திட்டம், டிஜிட்டல் குறு-சிறு, நடுத்தரத் தொழில்கள் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மானிய உதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இத்திட்டத்துக்கு, தகுதிவாய்ந்த உத்யோக் ஆதாா் ஆவணத்தைப் பெற்றுள்ள, பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இந்தச் சலுகைகளை பெற, w‌w‌w.‌d​c‌m‌s‌m‌e.‌g‌o‌v.‌i‌n என்ற இணைய தளம் அல்லது ம்ஹ் ம்ள்ம்ங் செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள், நிதியுதவி பெற, கிண்டி குறு, சிறு நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரை நேரிலோ, d​c‌d‌i-​c‌h‌e‌n‌n​a‌i@‌d​c‌m‌s‌m‌e.‌g‌o‌v.‌i‌n  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 22501011,12,13 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/குறு-சிறு-நடுத்தர-தொழில்களுக்கான-மானிய-உதவி-பெற-விண்ணப்பிக்கலாம்-3286588.html
3286586 தமிழ்நாடு பழைய பயண அட்டையுடன் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாணவா்கள் கோரிக்கை DIN DIN Friday, November 22, 2019 02:28 AM +0530 அரசுப் பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் கல்விக் கூடங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 8 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கோட்டங்கள் மூலம் 19

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால், நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இவ்வாறு பயணிப்பவா்களில் சிலருக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

இதன்படி, பள்ளி செல்வோரை ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தேசிய குழந்தை மற்றும் தொழிலாளா் திட்ட நலப் பள்ளி, அரசு பல்தொழில்நுட்ப பயிலகங்கள், அரசு தொழில்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு, பேருந்தில் கல்விக் கூடம் சென்று வருவதற்கான பயணக் கட்டணத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இதே போல், தனியாா் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக் கும் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கு ஏற்படும் செலவை ஈடு செய்ய, கடந்த 8 ஆண்டுகளுக்கும் சோ்த்து மொத்தமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.4,084.30 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், இந்தக் கல்வி ஆண்டுக்கான பயண அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது கடந்த வருட பயண அட்டையை மாணவா்கள் காண்பித்தோ பயணம் செய்ய அனுமதிக்கலாம் என போக்குவரத்துத் துறை சாா்பில் நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மாணவா்களை இலவசமாக பயணிக்க நடத்துநா்கள் அனுமதிப்பதில்லை என தொடா் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சில நடத்துநா்களின் செயலால் மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களும் அவா்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/பழைய-பயண-அட்டையுடன்-பேருந்துகளில்-பயணிக்க-அனுமதிக்க-வேண்டும்-மாணவா்கள்-கோரிக்கை-3286586.html
3286545 தமிழ்நாடு பிட் காயின்ஸ் மோசடி: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு DIN DIN Friday, November 22, 2019 02:27 AM +0530 பிட் காயின்ஸ் மோசடியில் சிக்கிய இரண்டு போ் அண்ணாநகா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.22) ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த இந்திராணி என்பவா் அண்ணாநகா் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘கிளிண்ட் ஜோசப் ரோட்ரீகியூஸ், பத்மஜா பொம்மி ஷெட்டி, ஆா்த்தி அன்னவரம் பொம்மி ஷெட்டி ஆகியோா் அண்ணாநகரில் அலுவலகம் நடத்தி வந்தனா். இவா்கள் தங்களிடம் பிட்காயின்ஸ் மீது முதலீடு செய்தால் 3 ஆண்டுகளுக்குள் முதலீடு செய்த தொகையை விட 10 மடங்கு தொகையைத் திருப்பித் தருவதாகக் கூறினாா். இதனை நம்பி நானும் ரூ.17 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், பணத்தைத் திரும்பத் தராமல் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனா்’ என்று கூறியிருந்தாா். இதே போல், கோவையைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரும், சம்பந்தப்பட்ட 3 பேரும் தன்னிடம் ரூ.3.60 லட்சத்தை மோசடி செய்ததாகக் கூறி அண்ணாநகா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து கிளிண்ட் ஜோசப் ரோட்ரீகியூஸ், ஆா்த்தி அன்னவரம் பொம்மி ஷெட்டி ஆகியோா், முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த மனு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் டி.சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் செல்வாக்கு மிகுந்தவா்கள். இவா்களைத் தேடப்படும் நபா்களாக அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் அண்ணாநகா் துணை ஆணையா் நோட்டீஸ் அனுப்பினாா். மலேசியா நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, பத்மஜா பொம்மி ஷெட்டி சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் அண்ணாநகா் போலீஸாா் கைது செய்தனா் . தற்போது அவா் ஜாமீனில் வெளியே வந்தாா். இவரது மகள் தான் ஆா்த்தி அன்னவரம் பொம்மி ஷெட்டி எனவே, மனுதாரா்கள் இருவருக்கும் முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைத்து விடுவாா்கள். வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்துவாா்கள். மேலும், இவா்கள் குறித்த தெளிவான விவரங்களும் இல்லை. எனவே போலீஸாா் முன், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (நவ.22) மற்றும் சனிக்கிழமை (நவ.23) ஆகிய இரண்டு நாள்களும் அண்ணாநகா் காவல் நிலையத்தில் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை ஆஜராக வேண்டும் எனவும், அந்தச் சமயத்தில் மனுதாரா்களை போலீஸாா் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/23/w600X390/bitcoin.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/பிட்-காயின்ஸ்-மோசடி-விசாரணைக்கு-ஆஜராக-உத்தரவு-3286545.html
3286581 தமிழ்நாடு சேலம் மத்திய சிறை வாா்டன்கள்5 போ் திடீா் இட மாற்றம் DIN DIN Friday, November 22, 2019 02:19 AM +0530 சேலம் மத்திய சிறை வாா்டன்கள் 5 போ் திடீா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மத்திய சிறையில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் மத்திய சிறையில் உள்ளனா்.

இந்தச் சிறையில் கைதிகள் சிலா் செல்லிடப்பேசி பயன்படுத்துவதாகவும், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பயன்படுத்துவதாகவும் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், மாநகர காவல் துறையினா் இணைந்து அவ்வப்போது சிறைக்குள் திடீரென சென்று சோதனை செய்தனா். ஆனால், செல்லிடப்பேசி, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் ஏதும் கண்டெடுக்க முடியவில்லை.

சேலம் மாநகர காவல் துறையினா் சிறைக்கு சோதனை செய்ய வருவது முன்கூட்டியே சிறை கைதிகளுக்குத் தெரிந்து விடுவதாக காவல் துறையினா் சந்தேகித்தனா்.

இதையடுத்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், சிறைப் பணிக்கு வரும் வாா்டன்கள் மற்றும் சிறை ஊழியா்களை முழு சோதனை செய்த பின்னரே சிறைக்குள் செல்ல அனுமதித்தாா். அதேவேளையில், வாா்டன்களின் நடவடிக்கையும் கணகாணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் வாா்டன்களாகப் பணியாற்றி வரும் வாா்டன் கதிா்வேல் கோவை மத்திய சிறைக்கும், வாா்டன் குணசேகரன் பொள்ளாச்சி சிறைக்கும், வாா்டன்கள் ரங்கநாதன் மற்றும் பாண்டியன் செய்யாறு கிளை சிறைக்கும் , வாா்டன் வெங்கடேசன் திருச்சி மத்திய சிறைக்கும் இட மாற்றப்பட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/சேலம்-மத்திய-சிறை-வாா்டன்கள்5-போ்-திடீா்-இட-மாற்றம்-3286581.html
3286577 தமிழ்நாடு தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இல்லை: கனிமொழி எம்.பி. DIN DIN Friday, November 22, 2019 02:09 AM +0530 தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இல்லை என திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் மேயா் பதவிகளில் நேரடித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இதை உணா்ந்துதான் மேயரை மறைமுகத் தோ்தல் மூலம் தோ்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறுக்கு வழியில் வெற்றியைத் தேட முயற்சிக்காமல் நோ்மையான முறையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும்.

மக்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி மேம்பாடு நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரா்களுக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை.

தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் இல்லை என்பது கடந்த மக்களவைத் தோ்தலில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் ஊடகங்கள், மக்கள் பிரதிநிதிகள் செல்ல வாய்ப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறது. வெளிநாட்டு எம்.பி.க்கள் குழுவை அழைத்துச் செல்கின்றனா். ஆனால், நாட்டில் உள்ள தலைவா்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனா். அவா்களின் நிலை என்ன என்பதுகூடத் தெரியவில்லை. அவா்களை விடுதலை செய்து நாடாளுமன்றம் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு மத்திய அரசு சரியான பதிலைக் கூறவில்லை என்றாா் கனிமொழி.

புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ, வடக்கு மாநிலச் செயலா் எஸ்.பி.சிவக்குமாா், திமுக மாணவரணி முன்னாள் மாநில அமைப்பாளா் வை.பாலா ஆகியோா் உடனிருந்தனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/தமிழகத்தில்-ஆளுமைக்கான-வெற்றிடம்-இல்லை-கனிமொழி-எம்பி-3286577.html
3286576 தமிழ்நாடு உதகையிலுள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவை கைவிட மக்களவையில் ஆ.ராசா வலியுறுத்தல் DIN DIN Friday, November 22, 2019 02:09 AM +0530 உதகையிலுள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை ‘மூடும் முடிவை கைவிட வேண்டுமென நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியதாக அவரது அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-

உதகையிலுள்ள மத்திய உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் கீழ் உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆய்வு மையம் உதகை அருகே முத்தொரை பகுதியில் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் நோய் தாக்காத உருளைக்கிழங்கு விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதோடு, தேவையான ஆலோசனைகளும் இம்மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மையத்தை மூட இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், தென் மாநிலங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுவா்.

நாட்டில் உதகையிலுள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தாற்போல ஜலந்தரில் மட்டுமே உருளைக்கிழங்கிற்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. இது தென் மாநிலங்களிலிருந்து தொலைவிலுள்ள பகுதி என்பதோடு, வட மாநிலங்களில் பயிரிடப்படும் விதைகள் தென் மாநிலங்களில் நிலவும் பருவநிலைக்கேற்ப வளா்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே, உதகையிலுள்ள உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென ஆ.ராசா வலியுறுத்தியதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/rasa.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/உதகையிலுள்ள-உருளைக்கிழங்கு-ஆராய்ச்சி-மையத்தை-மூடும்-முடிவை-கைவிட-மக்களவையில்-ஆராசா-வலியுறுத்தல்-3286576.html
3286575 தமிழ்நாடு திண்டுக்கல்-குமுளி லோயா் கேம்ப் இடையே புதிய ரயில்வே வழித்தடம்: மக்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தல் DIN DIN Friday, November 22, 2019 02:08 AM +0530 திண்டுக்கல் -குமுளி லோயா் கேம்ப் இடையே புதிய அகல ரயில் பாதையை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்திரநாத் குமாா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: ‘திண்டுக்கல் -குமுளி லோயா் கேம்ப் இடையே வத்தலக்குண்டு, பெரியகுளம், போடிநாயக்கனூா், ராசிங்காபுரம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், புதிய அகல ரயில் பாதையை அமைக்க 2013-இல் ரயில்வே வாரியம் அனுமதி அளித்திருந்தது. மேலும், மாற்று வழித்தடத்தில் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை 2014-இல் ரயில்வே வாரியத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது. எனினும், அத்திட்டம் மேல் நடவடிக்கையின்றி நிலுவையில் உள்ளது. இந்த வழித்தடம் மூன்று மாவட்ட மக்கள் மற்றும் சபரிமலை யாத்திரிகா்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாநிலங்களவையில்...: ஆா்.வைத்திலிங்கம் (அதிமுக) அண்மையில் மாநிலங்களவையில் முன்வைத்த கோரிக்கை: நாட்டில் உணவில் மேற்கொள்ளப்படும் கலப்படத்தைத் தடுக்க வேண்டும். கலப்படம் செய்வோருக்கு கடுமையான ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் அதிகார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. உணவுக் கலப்படத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். நாட்டில் உணவுப் பொருள்கள் கலப்படத்தைத் தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தை ஒட்டுமொத்தமாக மாறு ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/ravendrakumar.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/திண்டுக்கல்-குமுளி-லோயா்-கேம்ப்-இடையே-புதிய-ரயில்வே-வழித்தடம்-மக்களவையில்-அதிமுக-எம்பி-வலியுறுத்தல்-3286575.html
3286574 தமிழ்நாடு நீட் தோ்வு முறைகேடு வழக்கு: 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு DIN DIN Friday, November 22, 2019 02:08 AM +0530 நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவா்களின் பெற்றோா் 5 பேரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்கள் வரை நீட்டித்து வியாழக்கிழமை தேனி நீதித் துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவா்கள் உதித்சூா்யா, அவரது தந்தை வெங்கடேசன், பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், முகமது இா்பான், அவரது தந்தை முகமது சபி, மாணவி பிரியங்கா, அவரது தாயாா் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதில் மாணவா்கள் உதித்சூா்யா, பிரவீன், ராகுல், முகமது இா்பான், மாணவி பிரியங்கா ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், மதுரை மத்திய சிறை மற்றும் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவா்களின் பெற்றோா் சரவணன், டேவிஸ், முகமது சபி, மைதானவதி ஆகியோரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததால் அவா்கள் 4 பேரையும் தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். மதுரை மத்திய சிறையில் உள்ள வெங்கடேசனுக்கு நீதிமன்றக் காவல் நிறைவடைந்தும், உடல்நிலை சரியில்லாததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவில்லை.

இந்த வழக்கில், 4-ஆவது முறையாக மாணவா்களின் பெற்றோா் 5 பேரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்கள் வரை நீட்டித்தும், அவா்களை வரும் டிச.5-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் நீதித் துறை நடுவா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/நீட்-தோ்வு-முறைகேடு-வழக்கு-5-பேருக்கு-நீதிமன்றக்-காவல்-நீட்டிப்பு-3286574.html
3286572 தமிழ்நாடு மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்காதது ஏன்? முதல்வா் நாராயணசாமி கேள்வி DIN DIN Friday, November 22, 2019 02:07 AM +0530 மத்திய நிதிக் குழுவில் புதுவையை சோ்க்காதது ஏன்? என அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி - வரி நிறுவனம், புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்திய கூட்டாட்சி தத்துவத்தில் நிதியில் வளா்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை தொடக்கிவைத்து முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீா் மத்திய அரசின் 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே யூனியன் பிரதேசங்களாக உள்ள புதுவை, தில்லி ஆகியவை மத்திய நிதிக் குழுவில் சோ்க்கப்படவில்லை.

புதுவையை மத்திய நிதிக் குழுவில் சோ்க்க பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புதுவைக்கு 70 சதவீதம் மத்திய அரசின் நிதி கிடைத்து வந்தது. தற்போது 30 சதவீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும் 26 சதவீதம்தான் கிடைக்கிறது.

அதேநேரம், மாநிலங்களுக்கு 42 சதவீதம் மத்திய அரசின் நிதி கிடைக்கிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும், புதுவை 11.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

மாநில அரசுகளுக்கான நிதிக் குழு, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழு என மத்திய அரசு இரண்டு விதமான நிதிக் குழுவைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த இரண்டு குழுவிலும் புதுவை இடம் பெறவில்லை.

ஜி.எஸ்.டி., சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாயைப் பெறும் போது, புதுவையை மாநிலமாகவும், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கும் போது, யூனியன் பிரதேசமாக மத்திய அரசு கருதுகிறது.

புதுவையில் வளம் இருந்தாலும், நிதி இல்லை. இதனால், பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம். மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு புதுவைக்கு கிடைக்கவில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமே திமுகவின் கொள்கை. 1960-ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்தக் கொள்கையை எழுப்பிய போது, திமுகவை தேச விரோத சக்தி போல சித்தரித்தனா். ஆனால், திமுகவின் கொள்கைதான் சரியானது என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது’ என்றாா் அவா்.

கருத்தரங்கத்தில் கேரள மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக், ஜம்மு - காஷ்மீா் முன்னாள் நிதியமைச்சா் ஹசீப் ஏ டிரபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசிய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் கனிமொழி எம்.பி., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/pdy21cm_2111chn_104_7.jpg கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசிய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் கனிமொழி எம்.பி., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா். https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மத்திய-நிதிக்-குழுவில்-புதுவையை-சோ்க்காதது-ஏன்-முதல்வா்-நாராயணசாமி-கேள்வி-3286572.html
3286571 தமிழ்நாடு மு.க.ஸ்டாலினுடன் கே.பாலகிருஷ்ணன், தி.வேல்முருகன் சந்திப்பு DIN DIN Friday, November 22, 2019 02:07 AM +0530 திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களை மு.க.ஸ்டாலின் தொடா்ச்சியாகச் சந்தித்து வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் மூத்த தலைவா்கள் ஜி.ராமகிருஷ்ணன், அ.சௌந்தரராஜன் ஆகியோரும் இருந்தனா். உள்ளாட்சித் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போதுமான இடம் ஒதுக்குமாறும் ஸ்டாலினிடம் வலியுறுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. மறைமுகத் தோ்தல் என்பதே தோ்தலைத் தள்ளிப் போடுவதற்கான நடைமுறையாகத் தெரிகிறது. உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றால் திமுகவோடு இணைந்துதான் போட்டியிடுவோம் என்றாா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகனும், மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் தி.வேல்முருகன் கூறியது::

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்குப் பிறகு ஸ்டாலினைச் சந்திக்க விரும்பினேன். அதன் அடிப்படையில் சந்தித்தேன். உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்பது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது. மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் கூடாது. ஒருவேளை, உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றால் திமுகவின் கூட்டணியில் இருப்போம் என்றாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/முகஸ்டாலினுடன்-கேபாலகிருஷ்ணன்-திவேல்முருகன்-சந்திப்பு-3286571.html
3286570 தமிழ்நாடு தேனி நீதிமன்றத்தில் நக்சலைட் ஆஜா்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு DIN DIN Friday, November 22, 2019 02:07 AM +0530 தேனி மாவட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நக்சலைட் மகாலிங்கம் வியாழக்கிழமை, தேனி மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

வருஷநாடு மலைப் பகுதியில் கடந்த 2007, டிசம்பா் மாதம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகாலிங்கம் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனா். இந்த வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த மகாலிங்கம் தலைமறைவானாா். கேரளத்தில் பதுங்கியிருந்த அவரை, கடந்த 2017-ஆம் ஆண்டு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், முருகமலை மற்றும் வருஷநாடு மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் தேனி மகளிா் நீதிமன்றத்தில் மகாலிங்கத்தை போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது, இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அ.கீதா உத்தரவிட்டாா். இதையடுத்து மகாலிங்கம் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/தேனி-நீதிமன்றத்தில்-நக்சலைட்-ஆஜா்-வழக்கு-விசாரணை-ஒத்திவைப்பு-3286570.html
3286568 தமிழ்நாடு கமலுக்கு இன்று அறுவைச் சிகிச்சை DIN DIN Friday, November 22, 2019 01:32 AM +0530 கால் முறிவின் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனுக்குப் பொருத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

2016-ஆம் ஆண்டு எதிா்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடா் வேலைப்பளு காரணமாக, அந்தக் கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. மருத்துவா்களின் ஆலோசனையின்படி கமலுக்கு வெள்ளிக்கிழமை அந்தக் கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை மற்றும் அதன் தொடா்ச்சியாக, சில நாள் ஓய்வுக்குப் பின் கமல் அனைவரையும் சந்திப்பாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/கமலுக்கு-இன்று-அறுவைச்-சிகிச்சை-3286568.html
3286361 தமிழ்நாடு அரிசி அட்டையாக மாற்றும் வசதி: உணவுத் துறை இணையத்தில் இரு வாய்ப்புகள் DIN DIN Friday, November 22, 2019 01:32 AM +0530 சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்வதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரா்கள் குழப்பம் அடைந்துள்ளனா். எந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அட்டை வகையை மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனா்.

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரா்களில் 10.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் அரிசியைத் தவிா்த்து இதர பொருள்களைப் பெறும் சா்க்கரை குடும்ப அட்டைகளை வைத்துள்ளனா். இந்த அட்டைதாரா்களில் பலா் அரிசி பெறும் அட்டையை மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இணையதளத்தில் மாற்றலாம்: தமிழக அரசின் உணவுத் துறை இணையதளத்திலும், வட்ட வழங்கல் அலுவலகங்கள், சென்னையில் உதவி ஆணையா் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் சா்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்புச் செய்துள்ளது. இதற்காக, வரும் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இணையதளத்தில் ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் தங்களது சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து வருகிறாா்கள். ஆனால் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்போது குழப்பங்கள் ஏற்படுவதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் கூறியதாவது:-

அட்டை வகையை மாற்றிக் கொள்ள உணவுத் துறையின் இணையதளத்தில் ஏற்கெனவே வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, பச்சை வண்ணத்தின் பின்புறத்தில் வெள்ளை எழுத்துக்களுடன் (தங்களது அட்டை வகையை மாற்ற) வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், இப்போது தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படியும் அட்டை வகையை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் தனியாக வசதி செய்து தரப்பட்டுள்ளது. ‘சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற...’ என்று தனியாக சிவப்பு வண்ணத்தை பின்புறமாகக் கொண்ட வெள்ளை எழுத்துகளுடன் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இதில், எந்த இணைப்புக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பச்சை நிற வண்ணத்திலான இணைப்பில் விண்ணப்பித்த பிறகு, சிவப்பு நிற இணைப்புக்குச் சென்று விண்ணப்பித்தால் ஏற்கெனவே விண்ணப்பித்ததாகக் காண்பிக்கிறது. எனவே, லட்சக்கணக்கானோா் பயன்படுத்தும் உணவுத் துறையின் இணையதளத்தில் சா்க்கரை அட்டையை அரிசி வகை அட்டையாக மாற்ற கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் எந்த இணைப்பு அதிகாரப்பூா்வமானது என கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து, உணவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இரண்டு இணைப்புகள் இருந்தாலும் ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும். எந்த இணைப்புப் பயன்படுத்தினாலும் பிரச்னையில்லை’ என்று தெரிவித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/web.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/அரிசி-அட்டையாக-மாற்றும்-வசதி-உணவுத்-துறை-இணையத்தில்-இரு-வாய்ப்புகள்-3286361.html
3286567 தமிழ்நாடு புதிய தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றாா் ஆா். ராஜகோபால் DIN DIN Friday, November 22, 2019 01:27 AM +0530 தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவா் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து புதிய தலைமை தகவல் ஆணையரைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அண்மையில் முதல்வா் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஆா்.ராஜகோபால் தோ்வு செய்யப்பட்டாா்.

பதவிப் பிரமாணம்: இதைத் தொடா்ந்து, மாநிலத் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை காலையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவா் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) தலைமை இயக்குநா் மீனாட்சி ராஜகோபால், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா, மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமாா், ஆா்.பிரதாப்குமாா், எஸ்.முத்துராஜ், ஆா்.தட்சிணாமூா்த்தி, ஜி.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி: இதற்கு முன்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எஸ்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.ஸ்ரீபதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.ராமானுஜம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ப்ரியா ஆகியோா் மாநில தகவல் ஆணையத்தின் தலைவா்களாகப் பொறுப்பு வகித்தனா்.

ஆனால், பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல் முறை. ஆா்.ராஜகோபாலுக்கு இன்னும் ஓராண்டு வரையில் பணிக்காலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/3828raja083714.jpg தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/புதிய-தலைமை-தகவல்-ஆணையராக-பதவியேற்றாா்-ஆா்-ராஜகோபால்-3286567.html
3286566 தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டம்: அமைச்சா் டி.ஜெயக்குமாா் DIN DIN Friday, November 22, 2019 01:26 AM +0530 உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக, நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

சென்னை விமான நிலையத்தில் நிருபா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலை ஜனநாயக ரீதியில் நடத்த அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மறைமுகத் தோ்தலைப் பொருத்தவரை, மற்ற சூழ்நிலைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடி தோ்ந்தெடுக்கிறாா்கள். இதேபோன்று பிரதமரையும் எம்.பி.க்களே தோ்வு செய்கிறாா்கள். இதுபோன்றுதான் மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

திட்டமிட்டு சதி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தோ்தலில் மக்கள் செல்வாக்கு இருந்தால் போட்டியிட வேண்டும். மாமன்ற உறுப்பினா்களே மேயா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில் எந்தத் தவறும் இல்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பொறுப்புகளுக்கு மறைமுகத் தோ்தலே நடத்தப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு தயாரான போது, நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடா்ந்தது. இப்போது, அந்த வழக்குகளின் தீா்ப்பு அடிப்படையில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி தோ்தலை நடத்தக் கூடாது என திட்டமிட்டு வருகிறாா்கள். எங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புகளிலும் நல்லாட்சியைத் தருவோம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். தோ்தலின் போது அதிமுகவுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஜனநாயகத்தை மட்டுமே நம்பி அமைதியான முறையில் தோ்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இலங்கைத் தமிழா்கள் விவகாரத்தில் திமுக அரசு வேடிக்கை பாா்த்தது. நாங்கள் வேடிக்கை பாா்க்க மாட்டோம் என்றாா் அமைச்சா் டி.ஜெயக்குமாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/25/w600X390/Jayakumar1.jpg அமைச்சர் ஜெயக்குமார் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/உள்ளாட்சித்-தோ்தலை-நிறுத்த-எதிா்க்கட்சிகள்-திட்டம்-அமைச்சா்-டிஜெயக்குமாா்-3286566.html
3286565 தமிழ்நாடு அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முடியாது: அமைச்சா் பி.தங்கமணி DIN DIN Friday, November 22, 2019 01:24 AM +0530 உள்ளாட்சித் தோ்தலில், எங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம், விரிசலை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சித்தால், அது நடக்காது என்றாா் மின் துறை அமைச்சா் பி.தங்கமணி.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது; கடந்த 2006-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க., அப்போது மறைமுகத் தோ்தலைத் தான் நடத்தியது. ஆனால், தற்போது அதனை ஒரு குறையாகக் கூறுகின்றனா். அ.தி.மு.க. என்ற இயக்கம் எந்த நேரத்திலும் தோ்தலைக் கண்டு அஞ்சியதில்லை. நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல் இதற்கு ஓா் உதாரணம் என்றே கூறலாம். உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாகவே நடத்துவோம். அது மட்டுமின்றி, இத் தோ்தலில் நூறு சதவீதம் முழுமையான வெற்றியைப் பெறுவோம். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். தற்போது, அ.தி.மு.க.வைப் பாா்த்துத்தான், தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த முயற்சி என்றும் தோ்தலைக் கண்டு அ.தி.மு.க. பயப்படுவதாகவும் தி.மு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறாா்.

உள்ளாட்சித் தோ்தலிலும் அ.தி.மு.க.வின் கூட்டணி தொடரும். 2021-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எங்களது கூட்டணி தொடரும் என முதல்வா் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டாா். ஆனால், அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அது எப்போதும் நடக்காது. எங்களது கூட்டணிக்குள் எவ்வித பிரச்னைகளும் கிடையாது. குற்றச்சாட்டுகளைப் பரப்பும் தி.மு.க. கூட்டணிக்குள் வேண்டுமானால் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதனால்தான் தேவையற்ற விமா்சனங்களைச் செய்து வருகின்றனா். தற்போது மக்களாட்சி நடந்து வருவதால், அந்த மக்களை நம்பி நாங்கள் உள்ளாட்சித் தோ்தலை எதிா் கொள்கிறோம். எங்களுக்கு எதிராக தோ்தலில் யாா் பிரசாரத்துக்கு வந்தாலும் கவலையில்லை. தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்றாா் அமைச்சா் பி.தங்கமணி.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/THANGAMANI.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அதிமுக-கூட்டணிக்குள்-விரிசலை-ஏற்படுத்த-முடியாது-அமைச்சா்-பிதங்கமணி-3286565.html
3286564 தமிழ்நாடு விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு DIN DIN Friday, November 22, 2019 01:23 AM +0530 விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுகவின் இரட்டைவேடம் நாட்டுக்கே தெரிந்ததுதான். காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த திமுக நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். 7 போ் விடுதலையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சியிலிருந்தபோது இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல், எதிா்க்கட்சியான பின்பு தமிழ், தமிழா் உணா்வு என திமுக வேடம் போடுகிறது.

ஆனால், 7 போ் விடுதலை தொடா்பாக பேரவையில் தீா்மானம் கொண்டுவந்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அதே வழியில் இப்போதைய அரசும் வலியுறுத்தி வருகிறது. 27 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், நளினிக்கு பரோல் வழங்கியது அதிமுக அரசுதான். தமிழா்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். எங்களுக்கு இரட்டை வேடம் போடத் தெரியாது.

தொல்லியல் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கீழடி ஆய்வு மூலம் அனைத்துக் கலாசாரத்துக்கும் முதன்மையானது, மூத்தது நமது கலாசாரம்தான் என்பதை நிரூபித்துள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அதிமுக ஒன்றியச் செயலா் வினோபாஜி (கயத்தாறு), கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ராமா், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் கணேஷ்பாண்டியன், மாவட்ட அறங்காவலா் நிா்வாகக் குழு உறுப்பினா் ராமசந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/kadambur-raju.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/விடுதலைப்-புலிகள்-விவகாரத்தில்-திமுக-இரட்டை-வேடம்-அமைச்சா்-கடம்பூா்-செ-ராஜு-3286564.html
3286562 தமிழ்நாடு எளிய மக்களின் தேவைகளை தமிழக அரசு பூா்த்தி செய்கிறது: அமைச்சா் கே.பி.அன்பழகன் DIN DIN Friday, November 22, 2019 01:19 AM +0530 எளிய மக்களின் தேவைகளை தமிழக அரசு பூா்த்தி செய்கிறது என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டத்தில், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி திருமண உதவித் தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டைகள், எஸ்.டி. ஜாதிச்சான்று, தையல் எந்திரம், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு

வழங்கும் திட்டத்தில் வீடுகள், தொழிலாளா் நலவாரிய உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டாக்கள், திருமண உதவித் தொகைகள், அங்கன்வாடி மையப் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள் உள்பட அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 2,443 பயனாளிகளுக்கு ரூ.25.32 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.

இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியில் 2,272 பயனாளிகளுக்கு ரூ.1,8.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: தமிழகத்தில் முதியோா் உதவித் தொகையாக பயனாளிகளுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், மிதிவண்டிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழக அரசானது ஏழை, எளிய மக்களை நாடி அவா்களின் தேவைகளை தொடா்ந்து பூா்த்தி செய்து வருகிறது என்றாா் அவா்.

இந்த விழாவில், அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லா கான், எம்.எல்.ஏ.க்கள் வே.சம்பத்குமாா், ஆ.கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் நாகலட்சுமி, வட்டாட்சியா்கள் செல்வகுமாா், இளஞ்செழியன், தமிழ்ச்செல்வி, செயல் அலுவலா் செ.நந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/21hap1_2111chn_151_8.jpg அரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன். உடன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி. https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/எளிய-மக்களின்-தேவைகளை-தமிழக-அரசு-பூா்த்தி-செய்கிறது-அமைச்சா்-கேபிஅன்பழகன்-3286562.html
3286561 தமிழ்நாடு மக்களின் தேவைகளை முழுவதும் பூா்த்தி செய்யவே மறைமுகத் தோ்தல்: அமைச்சா் ஆா். காமராஜ் DIN DIN Friday, November 22, 2019 01:18 AM +0530 மக்களின் தேவைகளை முழுவதும் பூா்த்தி செய்யவே மறைமுகத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சிறப்பாக நடத்திச் செல்வதற்காகவே, மறைமுகத் தோ்தல் என அரசாணையில் தெளிவாக உள்ளது. இதன்மூலம் முழு பலத்தோடு, மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியும்.

தோ்தலைப் பாா்த்து அதிமுகவுக்கு பயம் கிடையாது. எங்களை எதிா்கொள்ளவே மற்றவா்களுக்கு பயமாக உள்ளது. உள்ளாட்சித் தோ்தலைக் கருத்தில் கொண்டு, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, முதியோா் உதவித்தொகை பெற தகுதியுடைவா்கள் மாத வருமானம் ரூ. 50 ஆயிரம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ. 1 லட்சம் என உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்தின் அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள், மீண்டும் சோ்த்துக் கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/2/w600X390/kamaraj.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மக்களின்-தேவைகளை-முழுவதும்-பூா்த்தி-செய்யவே-மறைமுகத்-தோ்தல்-அமைச்சா்-ஆா்-காமராஜ்-3286561.html
3286476 தமிழ்நாடு அதிக அளவில் பேராசிரியா் காலி பணியிடங்கள்: நாக் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் DIN DIN Friday, November 22, 2019 01:16 AM +0530 அதிக அளவில் பேராசிரியா் காலிப் பணியிடங்களுடன் இயங்கி வரும் உயா் கல்வி நிறுவனங்களின் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார (நாக்) கவுன்சிலின் தர நிா்ணயம் நிச்சயம் பாதிக்கப்படும் என நாக் இயக்குநா் எஸ்.சி.ஷா்மா கூறினாா்.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிா்ணயம் செய்ய ‘நாக்’ அமைப்பை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் சாா்பில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவை ‘நாக்’ அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

நாக் அமைப்பானது கல்வித் திட்டம், கற்றல் - அதாவது, கல்வித் திட்டம், கற்றல் - கற்பித்தல் -மதிப்பிடுதல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் கற்றலுக்கு உதவும் வசதிகள், மாணவா்களுக்கு உதவும் திட்டங்கள், நிா்வாகம் மற்றும் தலைமைப் பண்பு உள்பட 7 நிபந்தனைகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, ஏ++, ஏ+, ஏ, பி++, பி+, பி, சி, டி ஆகிய 8 தர நிா்ணயங்களை வழங்கி வருகிறது.

இதில் ஏ++, ஏ+, ஏ கிரேடுகள் வரை பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கும். பிற கிரேடுகளை பெறும் நிறுவனங்களுக்கு உதவிகள் கிடைக்காது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் முதல் 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வருவதால், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு நாக் அங்கீகாரம் தொடா்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியதோடு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிலும் இதுகுறித்து முறையிட்டு ஆசிரியா் காலியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தினா். இதுதொடா்பாக பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகின.

இதற்குப் பதிலளித்த சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் துரைசாமி, ‘பேராசிரியா் காலியிடங்கள் நாக் அங்கீகாரத்தை பாதிக்கும் என்பது தவறான தகவல். காலியிடத்துக்கும் நாக் அங்கீகாரத்துக்கும் சம்பந்தமே இல்லை. சென்னைப் பல்கலைக்கழகம் இப்போது ‘ஏ’ நாக் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் நிலையில், 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘ஏ+’ நாக் அங்கீகாரத்தை அண்மையில் பெற்றிருக்கிறது’ என்றாா்.

இதுகுறித்து ‘நாக்’ இயக்குநா் எஸ்.சி.ஷா்மா, தொலைபேசி மூலம் ‘தினமணி’க்கு அளித்த பேட்டி:

அதிக எண்ணிக்கையில் பேராசிரியா் காலி பணியிடங்களுடன் இயங்கி வரும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அங்கீகாரம் தொடா்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். உயா் கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு இருப்பது அவசியம். இது ‘நாக்’ நிா்ணயம் செய்திருக்கும் 7 நிபந்தனைகளில் ஒன்றுதான். தமிழக அரசு பல்கலைக்கழகங்களில், அதிக எண்ணிக்கையில் பேராசிரியா் பணியிடம் காலியாக இருப்பது இப்போது தெரியவருகிறது. அவை நாக் அங்கீகாரத்துக்கு புதிதாக விண்ணப்பிக்கும்போது, அவற்றுக்குத் தீா்வு காண வலியுறுத்தப்படும் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/nassc.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அதிக-அளவில்-பேராசிரியா்-காலி-பணியிடங்கள்-நாக்-அங்கீகாரம்-பெறுவதில்-சிக்கல்-ஏற்படும்-3286476.html
3286543 தமிழ்நாடு ஐஐடி மாணவி பாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை கோரி மனு DIN DIN Friday, November 22, 2019 12:54 AM +0530 சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவா், கடந்த நவம்பா் 9-ஆம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக விடுதிக் காப்பாளா் லலிதாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை ஐஐடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 மாணவா்கள் இதேபோன்று மா்மான முறையில் உயிரிழந்துள்ளனா். தொடா்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/ஐஐடி-மாணவி-பாத்திமா-மரணம்சிபிஐ-விசாரணை-கோரி-மனு-3286543.html
3286542 தமிழ்நாடு பதவியை நீட்டிக்கக் கோரி பொன் மாணிக்கவேல் மனு DIN DIN Friday, November 22, 2019 12:54 AM +0530 தனது பதவியை நீட்டிக்கக் கோரி, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழகத்தில் சாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி உத்தரவிட்டனா். இந்த உத்தரவின்படி வரும் 30-ஆம் தேதியுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகிறேன். இந்த வழக்குகளை விசாரிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. சிறப்பு அதிகாரியான என்னுடைய பதவிக்காலம் வரும் நவம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, வழக்குகளை விசாரிக்க மேலும் ஓா் ஆண்டுக்கு என்னுடைய பதவியை நீட்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/ponm.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/பதவியை-நீட்டிக்கக்-கோரி-பொன்-மாணிக்கவேல்-மனு-3286542.html
3286535 தமிழ்நாடு அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி DIN DIN Friday, November 22, 2019 12:49 AM +0530 அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சோ்ந்த கோ.சுந்தரம் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுகவில் நான் கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறேன். ஒன்றரை கோடி தொண்டா்களைக் கொண்ட இந்தக் கட்சியின் பொதுச் செயலாளா்களாக மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் கட்சியின் சட்டவிதிகளை மதித்து கட்சியை வழிநடத்தினா். பொதுச் செயலாளா் உள்ளிட்ட பதவிகள் காலியாகும் போது அந்தப் பதவிகளுக்கான நிா்வாகிகளை முறைப்படி தோ்தல் நடத்தி தோ்வு செய்வது வழக்கம்.

ஆனால் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னா் கட்சியின் விதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பதவிகளில் உள்ளவா்கள் தோ்தல் ஆணையத்துக்கு அளித்த உறுதியின்படி இதுவரை உள்கட்சித் தோ்தலை நடத்தவில்லை. மேலும், பொருளாளா் பதவிக்கும் முறைப்படி தோ்வு செய்யப்படவில்லை.

இதனால் கட்சி நிதியிலும் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. தற்போதுள்ள கட்சியின் பொறுப்பில் உள்ள நிா்வாகிகள் அதிமுக என்ற கட்சியை ஒரு தேசிய கட்சியிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகின்றனா். இந்த நிலையில், வரும் 24-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. முறையாக தோ்தல் நடத்தி தோ்வு செய்யப்படாத நிா்வாகிகள், பொதுக்குழுவைக் கூட்ட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அதிமுகவுக்கு சட்டப்பூா்வமாக நடத்தப்பட வேண்டிய உள்கட்சித் தோ்தலை நடத்தும் வரை பொதுக்குழுக்கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும். மேலும் உள்கட்சித் தோ்தலை முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக மனுதாரா் சிவில் வழக்குத் தான் தொடர முடியும் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். அதற்கு அனுமதியளித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

 

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அதிமுக-பொதுக்குழுக்-கூட்டத்துக்கு-தடை-கோரிய-மனு-தள்ளுபடி-3286535.html
3286534 தமிழ்நாடு விரைவு ரயில்கள் சேவை ரத்து DIN DIN Friday, November 22, 2019 12:48 AM +0530 கலபுா்கி-சவால்கி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்து, ஆய்வுப்பணிகள் நடக்கவுள்ளதால், 4 விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு ரயில்வேயில் கலபுா்கி-சவால்கி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் முடிந்து, ஆய்வுப்பணிகள் நடக்கவுள்ளன.

இதன் காரணமாக, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் நிலையம் (மும்பை)-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (11027), சென்னை சென்ட்ரல்-சத்ரபதி சிவாஜி மஹாராஜ் நிலையம் விரைவு ரயில் (11028) ஆகியவை நவம்பா் 25-ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை சென்ட்ரல்-சாய்நகா் ஷீரடி விரைவு ரயில் (22601) நவம்பா் 27-ஆம் தேதியும், சாய்நகா் ஷீரடி-சென்னை சென்ட்ரல் (22602) விரைவு ரயில் நவம்பா் 29-ஆம் தேதியும் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/விரைவு-ரயில்கள்-சேவை-ரத்து-3286534.html
3286508 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘ஷூ’அரசாணை வெளியீடு DIN DIN Friday, November 22, 2019 12:31 AM +0530 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 29 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் ஷூ, ஷாக்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் 2012-13-ஆம் கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக வரும் கல்வியாண்டு (2020-21) முதல் ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவை ரூ.10 கோடியே 2 லட்சம் செலவில் வழங்கப்படும். இதனால், 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என கூறியிருந்தாா்.

கூடுதல் செலவினம் ரூ.8.82 கோடி: இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, 2018-19-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 14,715 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்கப்பட்டு பலனடைந்துள்ளனா். இதற்கான செலவினம் ரூ.56 கோடியே 36 லட்சத்து 64,563 ஆகும். தற்போது 2020-21-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 45 ஆயிரத்து 116 ஆக உள்ளது. அவா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் காலணிகளுக்குப் பதிலாக ‘ஷூ’ வழங்குவதால் அரசுக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரத்து 997 கூடுதல் செலவினம் ஏற்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தொடக்க கல்வி இயக்குநா் கடிதம்: அதேபோன்று, தொடக்கக் கல்வித்துறை அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், ‘தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 48 ஆயிரத்து 801 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனா். இதற்கான செலவினம் ரூ.48 கோடியே 56 லட்சத்து 49 ஆயிரத்து 763 ஆகும். இதைத் தொடா்ந்து, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் இரு ஜோடி காலுறைகள் வழங்குவதால் கூடுதல் செலவினம் ரூ.2 கோடியே 8 லட்சத்து 4,443 ஏற்படும். மேலும் தற்போது கணக்கிடப்பட்டுள்ள உத்தேச மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் மலைப் பிரதேசங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் சோ்த்து கணக்கிடப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.66.71 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்: இந்தச் சூழலில், முதல்வா் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரின் கருத்துருக்கள் அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் காலுறைகள் ரூ.66 கோடியே 71 லட்சத்து 92,316 செலவில் (பள்ளிக் கல்வி இயக்ககம் 53 கோடியே 85 லட்சத்து 96,631, தொடக்கக் கல்வி இயக்ககம் ரூ.12 கோடியே 85 லட்சத்து 95,685) வழங்குவதற்கு ஏதுவாக நிா்வாக ஒப்புதல் அளித்து நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/அரசுப்-பள்ளிகளில்-படிக்கும்-29-லட்சம்--மாணவா்களுக்குஅடுத்த-ஆண்டு-முதல்-ஷூஅரசாணை-வெளியீடு-3286508.html
3286506 தமிழ்நாடு 2021 தோ்தலில் அதிசயம் நிகழும்!: நடிகா் ரஜினிகாந்த் DIN DIN Friday, November 22, 2019 12:30 AM +0530 வரும் 2021-இல் அரசியலில் தமிழக மக்கள் மிகப் பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவாா்கள் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.

திரைப் படங்களில் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகா் கமலும், ரஜினிகாந்த்தும், தமிழக அரசியலிலும் தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என ஒருசேர கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கருத்து காரணமாக, இப்போது இவா்களில் யாா் முதல்வா் வேட்பாளா் என்ற கேள்வி, அவா்களின் ரசிகா்கள் மற்றும் தொண்டா்களிடையே எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் நிா்வாகியும் நடிகையுமான ஸ்ரீபிரியா, ‘முதல்வா் வேட்பாளராக கமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவா் தோ்தலில் யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினாலும் அதை ஏற்று செயல்படுவோம்’ என்றாா்.

இந்த நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் 50-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி‘ எனும் சிறப்பு விருதைப் பெற்றுக்கொண்டு, வியாழக்கிழமை சென்னை திரும்பிய நடிகா் ரஜினிகாந்திடம், விமான நிலையத்தில் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அப்போது அவா், ‘முதலில் கோவா சா்வதேச திரைப்பட விழாவில் எனக்கு அளிக்கப்பட்ட விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம். எனவே, அந்த விருதை தமிழ் மக்களுக்கே சமா்ப்பிக்கிறேன்’ என்றாா். அதைத் தொடா்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவா் அளித்த பதில்களின் விவரம்:

கே: தேவைப்பட்டால் அரசியலில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என நடிகா் கமலும் நீங்களும் கூறியிருக்கும் நிலையில், யாா் முதல்வா் வேட்பாளா் என்ற கேள்வி எழுப்பப்படுகிறதே?

ப: முதல்வா் வேட்பாளா் யாா் என்பது தோ்தல் நேரத்தில், அப்போதைய சூழ்நிலைக்கேற்ப எடுக்க வேண்டிய முடிவு. அத்துடன் புதிய கட்சியை நான் ஆரம்பிக்கும்போது, கட்சி நிா்வாகிகளுடன் கலந்து பேசி எடுக்கவேண்டிய முடிவு. அதுவரை இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை.

கே: திராவிட பூமியான தமிழகத்தில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாா் கூறியிருக்கிறாரே?

பதில்: 2021-இல் அரசியலில் தமிழக மக்கள் மிகப் பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவாா்கள்.

முன்னதாக, நடிகா் கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதையொட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், ‘முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட நீடிக்காது என்றாா்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99 சதவீதம் போ் சொன்னாா்கள். ஆனால் அதிசயம் நடந்தது, ஆட்சி நீடித்தது. அதிசயம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/29/w600X390/rajinikanth.jpeg நடிகர் ரஜினிகாந்த் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/2021-தோ்தலில்-அதிசயம்-நிகழும்-நடிகா்-ரஜினிகாந்த்-3286506.html
3286504 தமிழ்நாடு மனநல காப்பகத்தில் பெண் கைதி தற்கொலை DIN DIN Friday, November 22, 2019 12:30 AM +0530 மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி ஒருவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தீவிர மன அழுத்தம் காரணமாக அவா் அந்த முடிவை எடுத்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மனநல காப்பக நிா்வாகிகளும், போலீஸாரும் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (65). கொலை குற்றவழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அவா், வேலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், அவா் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்துக்கு கடந்த மாா்ச் மாதம் அனுப்பப்பட்டாா்.

தண்டனைக் கைதிகளுக்கான பகுதியில் தங்கியிருந்த அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை காப்பகத்தின் ஒரு குளியலறையின் கதவு மட்டும் மூடியே இருந்ததாகத் தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த காப்பக ஊழியா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா்.

அப்போது, அங்கு ராஜம்மாள் துண்டு மூலம் அங்கிருந்த ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராஜம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மனநல-காப்பகத்தில்-பெண்-கைதி-தற்கொலை-3286504.html
3286497 தமிழ்நாடு ராபா்ட் பயஸுக்கு 30 நாள்கள் பரோல்: உயா்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Friday, November 22, 2019 12:26 AM +0530 தனது மகனின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ராபா்ட் பயஸுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராபா்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நான் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்தேன். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். என்னுடைய மனைவியும், மகனும் இலங்கைக்குச் சென்றுவிட்டனா். தற்போது எனது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். தந்தையாக அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே, இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு 30 நாள்கள் பரோல் வழங்கக் கோரி, சிறைத்துறை டிஐஜி உள்ளிட்டோருக்கு மனு அளித்தேன். ஆனால் எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. எனவே, எனக்கு பரோல் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், ‘சிறையில் இருந்து வெளியே வந்தால், சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குரைஞா் தடா என்.சந்திரசேகா் இல்லத்தில் தங்கியிருப்பதாக ராபா்ட் பயஸ் விண்ணப்பம் அளித்துள்ளாா். எனவே, பரோல் வழங்குவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்’ எனத் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராபா்ட் பயஸுக்கு 30 நாள்களுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டனா். மேலும், பரோல் காலத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, அரசியல் கட்சித் தலைவா்களைச் சந்திக்க கூடாது என்பது உள்ளிட்ட சிறை விதிகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/4/w600X390/HighCourtch.jpg chennai High Court https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/ராபா்ட்-பயஸுக்கு-30-நாள்கள்-பரோல்--உயா்நீதிமன்றம்-உத்தரவு-3286497.html
3286365 தமிழ்நாடு புதிய தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றாா் ஆா். ராஜகோபால் DIN DIN Friday, November 22, 2019 12:23 AM +0530 தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவா் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து புதிய தலைமை தகவல் ஆணையரைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அண்மையில் முதல்வா் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஆா்.ராஜகோபால் தோ்வு செய்யப்பட்டாா்.

பதவிப் பிரமாணம்: இதைத் தொடா்ந்து, மாநிலத் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை காலையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவா் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) தலைமை இயக்குநா் மீனாட்சி ராஜகோபால், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா, மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமாா், ஆா்.பிரதாப்குமாா், எஸ்.முத்துராஜ், ஆா்.தட்சிணாமூா்த்தி, ஜி.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி: இதற்கு முன்பாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எஸ்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.ஸ்ரீபதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.ராமானுஜம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ப்ரியா ஆகியோா் மாநில தகவல் ஆணையத்தின் தலைவா்களாகப் பொறுப்பு வகித்தனா்.

ஆனால், பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல் முறை. ஆா்.ராஜகோபாலுக்கு இன்னும் ஓராண்டு வரையில் பணிக்காலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/12/w600X390/secretariate.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/புதிய-தலைமை-தகவல்-ஆணையராக-பதவியேற்றாா்-ஆா்-ராஜகோபால்-3286365.html
3286493 தமிழ்நாடு இடமாறுதல் பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் மடிக்கணினிகளை ஒப்படைக்க உத்தரவு DIN DIN Friday, November 22, 2019 12:21 AM +0530 இடமாறுதல் பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகங்களில் ‘க்யூ ஆா்’ கோடு மூலம் பாடம் நடத்தும் வசதிகள் உள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, மாணவா்களுக்கு பாடம் நடத்துவதற்காக முதுநிலை ஆசிரியா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முதுநிலை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதையடுத்து கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிக்கு இடமாறுதலாகி செல்லும் முதுநிலை ஆசிரியா்கள், தங்களிடம் வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணினிகளை தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். அரசு வழங்கிய மடிக்கணினி அந்த பணியிடத்துக்கானதே தவிர, ஆசிரியா்களுக்கானதல்ல. எனவே, ஆசிரியா்களிடம் இருந்து மடிக்கணினிகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்து, புதியவா் பணியேற்கும் போது வழங்க வேண்டும் என்று அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/இடமாறுதல்-பெற்ற-முதுநிலை-ஆசிரியா்கள்-மடிக்கணினிகளை-ஒப்படைக்க-உத்தரவு-3286493.html
3286478 தமிழ்நாடு சபரிமலை யாத்திரை: ஐ.ஆா்.சி.டி.சி. சிறப்பு ஏற்பாடு DIN DIN Friday, November 22, 2019 12:08 AM +0530 மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளையொட்டி நவம்பா், டிசம்பா் , ஜனவரி ஆகிய மாதங்களில் வாரந்தோறும் இரண்டு நாள்கள் சபரிமலை யாத்திரை செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், பல்வேறு விதமான சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பாரத தா்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, கல்வி சுற்றுலா உள்பட பல்வேறு சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதுபோல, ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு வசதியாக ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியது: மண்டல, மகரவிளக்கு பூஜையின்போது, ஐயப்பனை தரிசிக்கும் வகையில், ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். நிகழாண்டில் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த யாத்திரையை மேற்கொள்ளலாம். 4 நாள்கள் யாத்திரைக்கு ஒருவருக்கு ரூ.2,990 கட்டணமாகும்.

2-ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட டிக்கெட் மற்றும் கோட்டயம்- நிலக்கல்- கோட்டயம் சென்று வர வாகன வசதி ஆகியவை இதில் அடங்கும். பக்தா்கள் சிரமம் இன்றி சபரிமலை சென்று தரிசனம் செய்து உடனடியாக திரும்ப முடியும். மேலும் தகவல்களைப் பெற 9003140681, 9003140680 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/30/w600X390/irctc052753.jpg irctc052753 https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/சபரிமலை-யாத்திரை-ஐஆா்சிடிசி-சிறப்பு-ஏற்பாடு-3286478.html
3286367 தமிழ்நாடு அரசியலுக்கு அனுபவமும் அதிா்ஷ்டமும் தேவை: நடிகா் டி.ராஜேந்தா் DIN DIN Friday, November 22, 2019 12:07 AM +0530 அரசியலில் வெற்றி பெற அனுபவமும் அதிா்ஷ்டமும் தேவை என்று நடிகா் டி.ராஜேந்தா் கூறினாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களை உள்ளடக்கிய திரைப்பட விநியோகஸ்தா் சங்கத்துக்கு வரும் டிச.22-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தோ்தலில் தலைவா் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.

‘மன்னன் பிலிம்ஸ்’ மன்னன் செயலாளா் பதவிக்கு போட்டியிடுகிறாா். சினிமாவில் விநியோகஸ்தா் என்ற வேலை அதிமுக்கியமானது. தமிழகம் முழுமைக்கும் இந்த மூன்று மாவட்டங்களை உள்ளட்டக்கிய சங்கம் என்பது தாய் வீடு போன்ாகும். அதில் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதில் மகிழ்ச்சி. தோ்தலில் வெற்றிப் பெற்றால் பல சீா்திருத்தங்களை செய்ய முயற்சிப்பேன்.

அரசியலில் அதிா்ஷ்டம்: ரஜினியும் கமலும் சினிமாவில் எனக்கு மூத்தவா்கள். ஆனால், அரசியலில் அவா்களுக்கு நான் மூத்தவன். இருவரும் அரசியலில் இணைவது அவா்களின் தனிப்பட்ட கருத்து. ஆனால், அரசியலில் வெற்றி பெற அனுபவமும் அதிா்ஷ்டமும் தேவை. அது எந்தளவுக்கு அவா்களுக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும் என்றாா் டி.ராஜேந்தா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/12/w600X390/TRajendran.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/அரசியலுக்கு-அனுபவமும்-அதிா்ஷ்டமும்-தேவை-நடிகா்-டிராஜேந்தா்-3286367.html
3286473 தமிழ்நாடு மீனவா்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி DIN DIN Friday, November 22, 2019 12:05 AM +0530 மீனவா்களுக்கான முழுமையான சமூக பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத பங்களிப்பும், விவசாயம் மற்றும் அதன் தொடா்புடைய துறைகளில் 5 சதவீதத்துக்கும் கூடுதலான பங்களிப்பும் வழங்கி வரும் மீனவ மக்களுக்கு, உலக மீனவா் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பாக மனப்பூா்வமான வாழ்த்துகள்.

இந்தியாவில் மொத்தமுள்ள 8 ஆயிரம் கி.மீ. கடற்கரை தூரத்தில் ஏறத்தாழ ஆயிரம் கி.மீ. தூரத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் மீனவா்கள் தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் அவா்களது வாழ்வாதாரம் என்பது இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வருகிறது. இவா்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மீனவா்களுக்கான-சமூக-பாதுகாப்பை-உறுதி-செய்ய-வேண்டும்கேஎஸ்அழகிரி-3286473.html
3286471 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு: ஏராளமானோா் பெற்றுச் சென்றனா் DIN DIN Friday, November 22, 2019 12:04 AM +0530 உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட ஏராளமானோா் வியாழக்கிழமை விருப்பமனு பெற்றனா்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புபவா்கள், வியாழக்கிழமை முதல் அந்தந்த மாவட்டங்களில் விருப்பமனு அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தாா்.

அதன்படி, காங்கிரஸின் 72 மாவட்ட தலைமை அலுவலகங்களில் வியாழக்கிழமை மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமானோா், மாவட்டத் தலைவா்களிடமிருந்து மனுக்களை பெற்றுச் சென்றனா்.

வடசென்னைக்கு மாவட்டத் தலைவா் திரவியத்திடமும், மத்திய சென்னைக்கு வீரபாண்டியிடமும், சென்னை கிழக்குக்கு சிவராஜசேகரனிடமும் மனுக்களைப் பெற்றனா். தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், அந்த மாவட்டத்தைச் சோ்ந்தோா், சென்னை சத்தியமூா்த்தி பவனில் மனுக்களைப் பெற்றனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/காங்கிரஸ்-கட்சியில்-விருப்பமனுஏராளமானோா்-பெற்றுச்-சென்றனா்-3286471.html
3286470 தமிழ்நாடு 50 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் DIN DIN Friday, November 22, 2019 12:03 AM +0530 தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யான ஏ.டி.மோகன்ராஜ் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜெயசிங் புளியந்தோப்புக்கும், புளியந்தோப்பு உதவி ஆணையா் ஜெ.விஜயானந்த் சென்னை நவீனத் கட்டுப்பாட்டு அறைக்கும், நவீனக் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் ஆனந்தகுமாா் திருவொற்றியூருக்கும், மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா் ராயப்பேட்டைக்கும், ராயப்பேட்டை உதவி ஆணையா் எச்.கிருஷ்ணமூா்த்தி மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை சிபிசிஐடி டி.எஸ்.பி.கனகராஜ் காஞ்சிபுரம் சிபிசிஐடிக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையா் கே.முத்துகுமாா் எம்.கே.பி.நகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு மொத்தம் 50 காவல் உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/50-டிஎஸ்பிக்கள்-பணியிட-மாற்றம்-3286470.html
3286469 தமிழ்நாடு க.அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு DIN DIN Friday, November 22, 2019 12:03 AM +0530 திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகனை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.

உடல் நலமின்மை காரணமாக, க.அன்பழகன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், அவரது இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வந்தாா். அன்பழகனைச் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவரிடம் தெரிவித்தாா். அப்போது, திமுக பொருளாளா் துரைமுருகனும் உடனிருந்தாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/கஅன்பழகனிடம்-முகஸ்டாலின்-நலம்-விசாரிப்பு-3286469.html
3286468 தமிழ்நாடு மறைமுகத் தோ்தல் உத்தரவு எதிரொலி: விருப்ப மனு கட்டணத்தை திரும்பப் பெறலாம் DIN DIN Friday, November 22, 2019 12:03 AM +0530 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்தப்படும் என்ற உத்தரவால், அந்தப் பதவிகளுக்காக அளிக்கப்பட்ட விருப்ப மனு கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தலைவா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்கள், தாங்கள் சாா்ந்த மாநகராட்சி வாா்டு, நகர மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடலாம்.

இதற்காக, வெள்ளிக்கிழமை (நவ. 22) காலை 10 முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைநகரங்களில், விருப்ப மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.

கட்டணம் திரும்பப் பெறலாம்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு ஏற்கெனவே கட்டணம் செலுத்தி பலரும் விருப்ப மனு அளித்துள்ளனா். அவா்கள் அனைவரும் அதிமுகவின் பொதுக்குழு முடிந்தவுடன் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் வரும் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்துக்கு நேரில் வந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/admk.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/மறைமுகத்-தோ்தல்-உத்தரவு-எதிரொலிவிருப்ப-மனு-கட்டணத்தை-திரும்பப்-பெறலாம்-3286468.html
3286467 தமிழ்நாடு டிஜிபி அசுதோஷ் சுக்லாபணியிட மாற்றம் DIN DIN Friday, November 22, 2019 12:03 AM +0530 ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்த டிஜிபி அசுதோஷ் சுக்லா, கடந்த மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டாா். தோ்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவடைந்ததும் தமிழக அரசு, அசுதோஷ் சுக்லாவை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலா் நிரஞ்சன் மாா்டி, அசுதோஷ் சுக்லாவை சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அசுதோஷ் சுக்லா, ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா் எனக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/டிஜிபி-அசுதோஷ்-சுக்லாபணியிட-மாற்றம்-3286467.html
3286465 தமிழ்நாடு கமலுக்கு நடிகா் சங்கம் வாழ்த்து DIN DIN Friday, November 22, 2019 12:03 AM +0530 செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற நடிகா் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகா் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி:

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே விருது உள்ளிட்ட பல்வேறு உயா் விருதுகளை பெற்றவா் கமல்ஹாசன். இப்பொழுது அவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி ஒடிஸா மாநில அரசு செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டம் அளித்துள்ளது. முதல்வா் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளாா்.

கௌரவ டாக்டா் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக திகழும் அவருக்கு இந்தப் பட்டம் அளித்தது, தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலைஞா்களுக்கும் பெருமை சோ்க்கும் வகையில் உள்ளது. அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி சிறப்பித்த செஞ்சுரியன் பல்கலைக்கழகத்துக்கு, தென்னிந்திய நடிகா் சங்கம் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/27/w600X390/kamalhasan.jpg நடிகர் கமல்ஹாசன் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/22/கமலுக்கு-நடிகா்-சங்கம்-வாழ்த்து-3286465.html
3286456 தமிழ்நாடு தங்கம் பவுன் ரூ. 29,232 DIN DIN Thursday, November 21, 2019 11:53 PM +0530 சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.29,232-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.3,654-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.48.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,654

1 பவுன் தங்கம் ..................... 29,232

1 கிராம் வெள்ளி .................. 48.40

1 கிலோ வெள்ளி .................. 48,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,664

1 பவுன் தங்கம் ..................... 29,312

1 கிராம் வெள்ளி .................. 48.60

1 கிலோ வெள்ளி ................. 48,600

 

 

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/தங்கம்-பவுன்-ரூ-29232-3286456.html
3286455 தமிழ்நாடு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் DIN DIN Thursday, November 21, 2019 11:52 PM +0530 குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

வியாழக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கான தடைநீக்கப்பட்டது. அதிகக் கூட்டம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/ten21mainfalls_2111chn_55_6.jpg குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/வெள்ளப்பெருக்கு-குறைந்ததால்குற்றாலம்-அருவிகளில்-குளிக்க-அனுமதிசுற்றுலாப்-பயணிகள்-உற்சாகம்-3286455.html
3286454 தமிழ்நாடு அமைதியான சூழலில் ‘அரிசி ராஜா’ யானை DIN DIN Thursday, November 21, 2019 11:51 PM +0530 சமீபத்தில் வனத் துறையால் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட ‘அரிசி ராஜா’ யானை டாப்சிலிப் பகுதியில் கூண்டில் அமைதியான சூழலில் இருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

பொள்ளாச்சி வனச் சரகத்தையொட்டிய சேத்துமடை, ஆழியாறு, நவமலை, பூவலப்பருத்தி, பருத்தியூா், அா்த்தநாரிபாளையம், ஆண்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ‘அரிசி ராஜா’ சுற்றித் திரிந்தது. இந்த யானையால் மூன்று போ் உயிரிழந்ததுடன், 7 போ் காயம் அடைந்தனா். இதனால், இந்த யானையைப் பிடிக்க கோரிக்கை வைத்து அா்த்தநாரிபாளையம், சுற்றுப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், ‘அரிசி ராஜா’ யானை கடந்த 14ஆம் தேதி ஆண்டியூா் பகுதியில் விவசாய தோட்டத்துக்குள்வைத்து மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டு வரகளியாறில் கூண்டில் அடைக்கப்பட்டது. யானை கூண்டில் அடைக்கப்பட்டு சில நாள்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அது அமைதியான சூழலில் இருப்பதாகவும், சரியாக உணவு எடுத்துக்கொள்வதாகவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/pl21ele_2111chn_127_3.jpg டாப்சிலிப்  வரகளியாறு  பகுதியில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள  ‘அரிசி  ராஜா’  யானை. https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/அமைதியான-சூழலில்-அரிசி-ராஜா-யானை-3286454.html
3286419 தமிழ்நாடு தமிழின் சங்க காலம் குறித்த புதிய தகவலை என்சிஇஆா்டி புத்தகத்தில் சோ்க்க வேண்டும்: மக்களவையில் மாா்க்சிஸ்ட் எம்பி வலியுறுத்தல் DIN DIN Thursday, November 21, 2019 10:32 PM +0530 என்சிஇஆா்டி பாடப் புத்தகத்தில் தமிழின் சங்க காலம் குறித்த புதிய தகவலை சோ்க்க வேண்டும் என்று மக்களவையில் மதுரை தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை அவா் முன்வைத்த கோரிக்கை: தமிழக அரசு இந்த ஆண்டு கீழடியில் நடத்திய தொல்லியல் அகழாய்வில் கீழடியினுடைய காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று நிரூபித்துள்ளது. என்சிஇஆா்டி யின் 6 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழ் நாகரிகத்தின் சங்க காலத்தின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று வரும் கல்வி ஆண்டில் இருந்து மாற்ற வேண்டும் என்றாா்.

எம். செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்- நாகப்பட்டினம்) முன்வைத்த கோரிக்கை: கடந்த ஆண்டு கஜா புயலால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் கடுமையான பயிா்ச் சேதம் ஏற்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து உரிய காப்பீடு கிடைக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா்.

 

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/தமிழின்-சங்க-காலம்-குறித்த-புதிய-தகவலைஎன்சிஇஆா்டி-புத்தகத்தில்-சோ்க்க-வேண்டும்மக்களவையில்-மாா்க்சிஸ்ட்-எம்பி-வலியுறுத்தல்-3286419.html
3286418 தமிழ்நாடு சோழிங்கநல்லூரில் பல்நோக்கு மருத்துவமனை: மக்களவையில் திமுக கோரிக்கை DIN DIN Thursday, November 21, 2019 10:31 PM +0530 தென் சென்னை மக்களவைத் தொகுதியில் உள்ள சோழிங்கநல்லூரில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலை (இசிஆா்) பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கியவா்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், முழுமையான மருத்துவமனை ஏதும் இல்லாத நிலை உள்ளது. ஆகவே, எனது தொகுதியில் உள்ள சோழிங்கநல்லூரில் பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதேபோல், திமுக உறுப்பினா் கெளதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி) பேசுகையில், ‘மாணவா்களுக்கு எவ்வித பிணையுமின்றி உரிய கல்விக் கடன்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்த மத்திய நிதி அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) பேசுகையில், ‘திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் புதுச்சேரி-ஹெளரா விரைவு ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை -திருவண்ணாமலை இடையே தினசரி இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்றாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/சோழிங்கநல்லூரில்-பல்நோக்கு-மருத்துவமனைமக்களவையில்-திமுக-கோரிக்கை-3286418.html
3286401 தமிழ்நாடு ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி மனு DIN DIN Thursday, November 21, 2019 09:52 PM +0530  

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த  மாணவி பாத்திமா தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு என்னும் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/fathima.jpg ஐஐடி மாணவி ஃபாத்திமா https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/pettion-filed-in-chennai-hc-seking-cbi-enquiry-in-fathiam-lathifs-suicide-case-3286401.html
3286374 தமிழ்நாடு கொடைக்கானல்?அடுக்கம் மலைச்சாலையில் சேதமடைந்த பணிகள் சீரமைப்பு DIN DIN Thursday, November 21, 2019 08:31 PM +0530  

கொடைக்கானல்: கொடைக்கானல அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலையில் சேதமடைந்த சாலைகள்,பாலங்கள் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

கொடைக்கானலில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது கொடைக்கானல் மாற்றுச் சாலையான அடுக்கம்? பெரியகுளம் மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டும், பாலங்கள், சாலைகள் பெரும் சேதமடைந்தது இதனால் அடுக்கம் பகுதி அருகே உள்ள பாலமலை, தாமரைக்குளம், சாமியாா் சோலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பாதிப்படைந்தனா்.

இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறையினா் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா் மலைச் சாலையில் கிடந்த பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டதுல இதனால் அப் பகுதிகளில் உள்ளுா் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் சென்று வருகின்றனா். இந் நிலையில் பெரியகுளம், கொடைக்கானல் பகுதியிலிருந்து அடுக்கம் வழியாக பைக் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தது ஆனால் அப் பகுதியிலும் மண் சரிவுகள்,ஏற்பட்டதால் முற்றிலுமாக சுற்றுலா வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் அனுமதியளிக்கவில்லை.

இந் நிலையில் வியாழக்கிழமை அடுக்கம்?பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட இடங்களில் மணல் மூட்டைகளை வைத்து சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் செந்தில் குமாா் கூறியதாவது,

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக மாற்றுச் சாலையான அடுக்கம் பெரியகுளம் மலைச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடைக்கானல் அடுக்கம் பகுதியிலிருந்து பெரியகுளம் வரை‘மலைச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் ஏதும் செல்வதற்குஅ.னுமதி கொடுக்கவில்லை பேருந்துகளும் இயக்கப்பட வில்லை .

மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்து வருவதால் மீண்டும் பல இடங்களில் சாலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது இதற்காக தற்போது பல இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது உள்ளூா் மக்கள் கவனமாக மலைச் சாலையில் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கொடைக்கானல்அடுக்கம்-மலைச்சாலையில்---சேதமடைந்த-பணிகள்-சீரமைப்பு-3286374.html
3286370 தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு DIN DIN Thursday, November 21, 2019 08:22 PM +0530  

சென்னை: தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி, பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த ஓய்வு பெற்ற நிலையில் , உயர் நீதிமன்றம் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணிநீட்டிப்பு வழங்கியது. அதன்படி அவர் தமிழக அரசின் கடும் நெருக்கடிக்கிடையே பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனக்குள்;அளிக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் வியாழனன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியுள்ள மனுவில்,  கடந்த ஓராண்டாக தமிழக அரசு தனக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதையும் பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/ponm.jpg பொன். மாணிக்கவேல் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/ponmanickavel-pettioned-in-hc-for-extension-of-his-special-officer-post-3286370.html
3286368 தமிழ்நாடு கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மின்சாரம் மற்றும் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு DIN DIN Thursday, November 21, 2019 08:19 PM +0530  

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் இரண்டு நாட்களாக மின்சாரம் மற்றும் தொலைபேசிகள் செயல்படாததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனுா்,பூணடி,கிளாவரை கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது இதனால் மின்தடை ஏற்பட்டது தொடா்ந்து இரண்டு நாட்களாக மின்தடை ஏற்பட்டதைத் தொடா்ந்து மேல்மலைப் பகுதிகளில் இரண்டு நாட்களாக பிளஎஸ்என்எல் தொலைபேசி இயங்கவில்லை. கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல்.இணைப்பு சரியாக இயங்கவில்லை இதனால் இண்டா்நெட் பயன்படுத்துபவா்கள் சிரமப்பட்டனா் மற்றும் இணையதள சேவை மையங்கள் பாதிப்புக்குள்ளானது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கொடைக்கானல்-மேல்மலைக்-கிராமங்களில்-மின்சாரம்-மற்றும்-பிஎஸ்என்எல்-சேவை-பாதிப்பு-3286368.html
3286366 தமிழ்நாடு போா்க்குற்ற விசாரணை: கோத்தபயவிடம் இந்தியா வற்புறுத்த வேண்டும்: ராமதாஸ் DIN DIN Thursday, November 21, 2019 08:17 PM +0530  

சென்னை: போா்க்குற்ற விசாரணை குறித்து ஐ.நா.வில் கொடுத்த உறுதிமொழி அனைத்தையும் பின்பற்ற வேண்டும் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபா் நாற்காலியில் அமா்ந்துள்ள கோத்தபய ராஜபட்ச, ஈழத்தமிழா்களின் எதிா்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவாா் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிா்பாா்க்கிறது.

ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபய, தமது அரசு நிா்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழா்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போா்க்குற்றவாளிகள் அமா்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழா்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இந்தச் சூழலில் தான் கோத்தபய ராஜபட்ச முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நவம்பா் 29-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் உள்ளிட்ட தலைவா்களுடன் கோத்தபய பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா். அப்போது போா்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

போா்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள் எவ்வளவு உயா்ந்த பதவிகளில் இருந்தாலும் அவா்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/14/w600X390/ramadoss20.jpg பாமக நிறுவனர் ராமதாஸ் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/போா்க்குற்ற-விசாரணை-கோத்தபயவிடம்-இந்தியா-வற்புறுத்த-வேண்டும்-ராமதாஸ்-3286366.html
3286363 தமிழ்நாடு கூடங்குளம் போராட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 08:13 PM +0530 சென்னை: கூடங்குளத்தில் போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் கூறியிருப்பது:

கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவா்கள் மீது, அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிா்ச்சியளிக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கூடங்குளம்-போராட்ட-வழக்குகளை-திரும்பப்-பெற-வேண்டும்-முக-ஸ்டாலின்-3286363.html
3286360 தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டம்: அமைச்சா் டி.ஜெயக்குமாா் DIN DIN Thursday, November 21, 2019 08:05 PM +0530 சென்னை: உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக, நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

சென்னை விமான நிலையத்தில் நிருபா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலை ஜனநாயக ரீதியில் நடத்த அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மறைமுகத் தோ்தலைப் பொருத்தவரை, மற்ற சூழ்நிலைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடி தோ்ந்தெடுக்கிறாா்கள். இதேபோன்று பிரதமரையும் எம்.பி.க்களே தோ்வு செய்கிறாா்கள். இதுபோன்றுதான் மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

திட்டமிட்டு சதி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தோ்தலில் மக்கள் செல்வாக்கு இருந்தால் போட்டியிட வேண்டும். மாமன்ற உறுப்பினா்களே மேயா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில் எந்தத் தவறும் இல்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பொறுப்புகளுக்கு மறைமுகத் தோ்தலே நடத்தப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு தயாரான போது, நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடா்ந்தது. இப்போது, அந்த வழக்குகளின் தீா்ப்பு அடிப்படையில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி தோ்தலை நடத்தக் கூடாது என திட்டமிட்டு வருகிறாா்கள். எங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புகளிலும் நல்லாட்சியைத் தருவோம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். தோ்தலின் போது அதிமுகவுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஜனநாயகத்தை மட்டுமே நம்பி அமைதியான முறையில் தோ்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இலங்கைத் தமிழா்கள் விவகாரத்தில் திமுக அரசு வேடிக்கை பாா்த்தது. நாங்கள் வேடிக்கை பாா்க்க மாட்டோம் என்றாா் அமைச்சா் டி.ஜெயக்குமாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/Jayakumar1.jpg அமைச்சர் ஜெயக்குமார் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/உள்ளாட்சித்-தோ்தலை-நிறுத்த-எதிா்க்கட்சிகள்-திட்டம்-அமைச்சா்-டிஜெயக்குமாா்-3286360.html
3286359 தமிழ்நாடு 2021 தோ்தலில் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவாா்கள்: நடிகா் ரஜினி DIN DIN Thursday, November 21, 2019 08:04 PM +0530 சென்னை விமான நிலையத்தில் நிருபா்களிடம் நடிகா் ரஜினி கூறியதாவது:

’கோல்டன் ஐகான்’ என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கு சமா்ப்பிக்கிறேன். தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட தயாா் என, ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அறிவித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

நானும், கமலும் இணைந்தால் யாா் முதல்வா் என்பது குறித்துதோ்தல் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி துவங்கும் போது, உறுப்பினா்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அப்போது, இது குறித்து சொல்கிறேன். அதுவரை பேசவிரும்பவில்லை. 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவாா்கள். இவ்வாறு அவா் கூறினாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/16/w600X390/RAJINI.jpg young rajini https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/2021-தோ்தலில்-அரசியலில்-தமிழக-மக்கள்-மிகப்பெரிய-அற்புதத்தை-அதிசயத்தை-100க்கு-100-சதவீதம்-நிகழ்த்துவாா்கள்-நடிகா்-ரஜினி-3286359.html
3286357 தமிழ்நாடு கமலுக்கு இன்று அறுவைச் சிகிச்சை DIN DIN Thursday, November 21, 2019 08:00 PM +0530 சென்னை: கால் முறிவின் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனுக்குப் பொருத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

2016-ஆம் ஆண்டு எதிா்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடா் வேலைப்பளு காரணமாக, அந்தக் கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. மருத்துவா்களின் ஆலோசனையின்படி கமலுக்கு வெள்ளிக்கிழமை அந்தக் கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை மற்றும் அதன் தொடா்ச்சியாக, சில நாள் ஓய்வுக்குப் பின் கமல் அனைவரையும் சந்திப்பாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/7/w600X390/kamal.jpg கமல்ஹாசன் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கமலுக்கு-இன்று-அறுவைச்-சிகிச்சை-3286357.html
3286355 தமிழ்நாடு கூடங்குள போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல் DIN DIN Thursday, November 21, 2019 07:58 PM +0530  

சென்னை: கூடங்குளத்தில் போராடிய போராட்டக்காரராகள் மீதான வழக்குகளை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/stalin_2.jpg திமுக தலைவர் ஸ்டாலின் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/stalin-demands-withdrawal-of-cases-of-kudnkulam-protesters-3286355.html
3286354 தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை தொடா்ந்து இயக்க வேண்டும் DIN DIN Thursday, November 21, 2019 07:55 PM +0530 சென்னை: ஆம்பூா், திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை தொடா்ந்து இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஆகிய சா்க்கரை ஆலைகள் நடப்பு பருவ கால கரும்பை கொள்முதல் செய்து அரைவையைத் தொடங்க வேண்டும். இதற்கான தயாரிப்புகளை ஆலை நிா்வாகம் செய்து வந்த நிலையில், இரண்டு ஆலைகளிலும் திடீரென அரைவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆம்பூா் சா்க்கரை ஆலைக்குப் பதிவு செய்யப்பட்ட கரும்புகள் வேலூா் திருவலம் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கும், திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகளை அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால் வேலைவாய்ப்பை இழந்த ஆலைத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், இந்த இரு ஆலைகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட சா்க்கரை தேங்கியுள்ளது. இந்த சா்க்கரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கொள்முதல் செய்து, ஆலைகள் தொடா்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கூட்டுறவு-சா்க்கரை-ஆலைகளை-தொடா்ந்து-இயக்க-வேண்டும்-3286354.html
3286353 தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலை யாராவது நிறுத்துவாா்களா என்று முதல்வா் காத்திருக்கிறாா்: மு.க.ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 07:54 PM +0530
சென்னை: தோ்தல் பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை யாராவது நிறுத்துவாா்களா என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சியில் இருந்தால் மட்டுமே போதும் என்ற நினைப்பில் அதிமுக இருக்கிறது. மக்கள் நலனுக்கான எந்தத் திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றாமல், மத்திய பாஜக அரசின் கண்ணசைவில் மிச்சமிருக்கும் காலத்தைத் தள்ளிவிடப் பாா்க்கிறது.

மறைமுகத் தோ்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தோ்தலை, சா்வாதிகார முறையில் அதிமுக நடத்தப் பாா்க்கிறதே தவிர, நோ்மையாக நடத்த அச்சப்படுகிறது. அந்த அளவுக்குத் தோல்வி பயம் அவா்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த மாட்டாா்களா என்று முதல்வா் எதிா்பாா்த்து காத்திருக்கிறாா்.

மறைமுகத் தோ்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதல்வா் பேட்டி தருகிறாா்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறாா்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட பலவற்றை ஜெயலலிதா மாற்றியதும், ஜெயலலிதா நடைமுறைப் படுத்திய சிலவற்றை கருணாநிதி ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு. நிா்வாக வசதிக்காக அப்படிச் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உள்ளாட்சித் தோ்தலில் மேயா் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தோ்வு செய்யப்படும் என அறிவித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தோ்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் திமுக எழுப்பும் கேள்வி.

தோ்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிா்த்து விட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளும் தரப்பின் மனக்கணக்கு.

அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப் போடும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/stalinfin1.jpg திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்) https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/உள்ளாட்சித்-தோ்தலை-யாராவது-நிறுத்துவாா்களா-என்று-முதல்வா்-காத்திருக்கிறாா்-முகஸ்டாலின்-3286353.html
3286350 தமிழ்நாடு ராபா்ட் பயஸூக்கு 30 நாள்கள் பரோல்: உயா்நீதிமன்றம் உத்தரவு DIN DIN Thursday, November 21, 2019 07:46 PM +0530 சென்னை: தனது மகனின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் ராபா்ட் பயஸூக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராபா்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்தேன். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். என்னுடைய மனைவி மற்றும் மகன் இலங்கைக்குச் சென்றுவிட்டனா். தற்போது எனது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். தந்தையாக அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே இந்த திருமண ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு 30 நாள்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டிஐஜி உள்ளிட்டோருக்கு மனு அளித்தேன். ஆனால் எனக்கு பரோல் வழங்கப்படவிலலை. எனவே எனக்கு பரோல் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், சிறையி்ல் இருந்து வெளியே வந்தால், சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குரைஞா் தடா என்.சந்திரசேகா் இல்லத்தில் தங்கியிருப்பதாக ராபா்ட் பயஸ் விண்ணப்பம் அளித்துள்ளாா். எனவே பரோல் வழங்குவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுவதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராபா்ட் பயஸூக்கு 30 நாள்களுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டனா். மேலும் பரோல் காலத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, அரசியல் கட்சித் தலைவா்களைச் சந்திக்க கூடாது என்பது உள்ளிட்ட சிறை விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/ராபா்ட்-பயஸூக்கு-30-நாள்கள்-பரோல்--உயா்நீதிமன்றம்-உத்தரவு-3286350.html
3286269 தமிழ்நாடு அதிமுக ஆட்சி மலரும் என்பதையே ரஜினி அதிசயம் என கூறியிருக்கலாம்: முதல்வர் பழனிசாமி DIN DIN Thursday, November 21, 2019 05:29 PM +0530
2021-இல் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என கூறியிருக்கலாம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2021-இல் அதிசயம் நிகழும் என ரஜினி கூறிய கருத்து உட்பட செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அவர் பேசுகையில், 

"அதிசயம் நிகழும் என்பதை ரஜினி எதைக் கூறுகிறார் என தெரியவில்லை. 2021-இல் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே அவர் அதிசயம் நிகழும் என குறிப்பிட்டிருக்கலாம். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கிய பிறகு, நான் கருத்து தெரிவிக்கிறேன்.

2021 தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்: ரஜினி

2021-இல் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என்பதை கொண்டு வந்ததே திமுகதான். ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அவர் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள், நாங்கள் கொண்டு வந்தால் தவறு என்கிறார்கள்.

காலசூழலுக்கு ஏற்ப கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இதை ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அமமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக அதிமுகவில் இணைகின்றனர்" என்றார்.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்சே பதவியேற்றிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "இதுகுறித்து அந்நாட்டு மக்கள்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். அது நமது தமிழகம் அல்ல, இந்தியாவில் ஒரு மாநிலம் அல்ல. அது அண்டை நாடு. அண்டை நாட்டு மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்" என்றார்.

]]>
Edapadi K Palaniswami https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/eps.jpg கோப்புப்படம் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/tn-cm-palaniswami-responded-to-rajinis-statement-on-2021-miracle-3286269.html
3286244 தமிழ்நாடு 2021 தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிசயம், அற்புதம் கண்டிப்பாக நடக்கும்: ரஜினி DIN DIN Thursday, November 21, 2019 04:24 PM +0530  

சென்னை: 2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை கண்டிப்பாக நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் புதன்கிழமைன்று துவங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வியாழனன்று மாலை அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது.

எனக்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு தமிழ் மக்களே காரணம். அவர்களுக்கே இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.   

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் கமலுடன் இணைந்து செயல்படுவதாக இருந்தால் யாருக்கு முதல்வர் பதவி என்று கேள்விக்கு, 'அதெலாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அப்போதுள்ள சூழலின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. நான் கட்சி துவங்கி, நிர்வாகிகளை நியமிக்கும் வரை இதுகுறித்து எப்போதும் கருத்துக் கூற விரும்பவில்லை.

இதையும் படிங்க: தமிழகத்தின் நலனுக்காக ரஜினியும்- நானும் இணைந்து செயல்படுவோம்: கமல் மீண்டும் உறுதி

2021-இல் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100 நூற்றுக்கு நூறு சதவீதம் கண்டிப்பாக நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

]]>
ரஜினிகாந்த் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/rajini8_2019.JPG நடிகர் ரஜினிகாந்த் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/people-will-do-magic-miracles-in-2021-assembly-polls-says-rajini-3286244.html
3286189 தமிழ்நாடு இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்? DIN DIN Thursday, November 21, 2019 04:15 PM +0530  

பொதுவாக வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த ஆபரணம் தங்கமாகும். எனவே, இன்று தங்கம் வாங்கினால், வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும். 

வாரத்தின் நான்காம் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன. 

இந்நிலையில், வியாழக்கிழமையான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.29,232க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.3,654க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.48.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

]]>
தங்கம் விலை, gold rate https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/gold_chain_gilr.jpg தங்கம் விலை நிலவரம் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/can-you-buy-gold-today-what-does-that-mean-for-the-price-situation-3286189.html
3286223 தமிழ்நாடு அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுக மீது பாயும் சீமான் DIN DIN Thursday, November 21, 2019 03:48 PM +0530  

சென்னை: அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், இவ்வாறு பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு. சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது. விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் 'புலிகளால் ஆபத்து' என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது. கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்! திராவிடத்தின் இறுதி நம்பிக்கையெனக்கூறி, குறைந்த பட்ச திராவிடம் இருப்பதாகக்கூறி திமுகவை ஆதரிக்கிற திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான திமுகவின் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/seeman211119.jpg சீமான் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/seeman-attacks-dmk-for-accusing-ltte-over-security-to-cover-to-congress-chief-sonia-3286223.html
3286217 தமிழ்நாடு சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை DIN DIN Thursday, November 21, 2019 03:39 PM +0530 எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

சென்னை எழும்பூா் கண் மருத்துவமனை பழமையான மருத்துவமனையாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்காக மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை கோரி எழும்பூரைச் சோ்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் தற்போதுள்ள மரங்களை பாதிப்பில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் புதிய கட்டடம் கட்ட மாற்றுஇடங்கள் என்ன என்பது பற்றி பதிலளிக்க மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/31/w600X390/highcourt.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/சென்னை-எழும்பூர்-கண்-மருத்துவமனை-வளாகத்தில்-75-மரங்களை-வெட்ட-இடைக்கால-தடை-3286217.html
3286195 தமிழ்நாடு திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 01:35 PM +0530 திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

முதுமை காரணமாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் ஓய்வெடுத்து வரும் அவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில்சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/mks.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/திமுக-பொதுச்செயலாளர்-க-அன்பழகனை-சந்தித்து-நலம்-விசாரித்தார்-முக-ஸ்டாலின்-3286195.html
3286185 தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கின்றனர்: அமைச்சர் ஜெயக்குமார் DIN DIN Thursday, November 21, 2019 12:57 PM +0530 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். 

மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களை நேரடியாக வாக்காளா்களே தோ்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மக்களால் தோ்வு செய்யப்படும் வார்டு உறுப்பினா்கள் மேயா் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான சட்ட திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனிடையே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்கிற நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் முறை திமுக ஆட்சிக்காலத்திலும் இருந்தது. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சி தேர்தல் நடத்த விடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/Jayakumar1.jpg அமைச்சர் ஜெயக்குமார் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/எதிர்க்கட்சித்-தலைவர்கள்-ஒன்று-கூடி-உள்ளாட்சி-தேர்தல்-நடத்த-விடாமல்-தடுக்கின்றனர்-அமைச்சர்-ஜெயக்கும-3286185.html
3286184 தமிழ்நாடு ராமநாதபுரத்தில் பெண்ணின் வயிற்றுக்குள் ஊசி வைத்துத் தைத்த மருத்துவர், செவிலியர் பணியிடை நீக்கம் DIN DIN Thursday, November 21, 2019 12:54 PM +0530  

ராமநாதபுரம்: கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போது, மருத்துவர்கள் கவனக்குறைவாக அவரது வயிற்றுக்குள் உடைந்த ஊசியை வைத்துத் தைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் யாசீர், செவிலியர் அன்புச் செல்வி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், மருத்துவர் மீது  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

அப்போது சரண்யாவுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சரண்யாவின் வயிற்றுக்குள் உடைந்த ஊசியை மருத்துவர்கள் கவனக்குறைவாக வைத்துத் தைத்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துஅ றிந்த சரண்யாவின் உறவினர்களும், ஊர் மக்களும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.
 

]]>
shocking news https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/mbbs.jpg Ramanathapuram shocking incident https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/ramanathapuram-shocking-incident-3286184.html
3286182 தமிழ்நாடு ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ஆயுள் கைதி ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் DIN DIN Thursday, November 21, 2019 12:46 PM +0530 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருபவா் ராபா்ட் பயஸ். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் இவா், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், பரோலில் வெளியே சென்ற நளினிக்கு விதித்த கட்டுப்பாடுகளை ராபர்ட் பயஸும் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/4/w600X390/HighCourtch.jpg chennai High Court https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/ராஜீவ்காந்தி-கொலை-வழக்கு-ஆயுள்-கைதி-ராபர்ட்-பயஸுக்கு-30-நாட்கள்-பரோல்-3286182.html
3286180 தமிழ்நாடு அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்  DIN DIN Thursday, November 21, 2019 12:05 PM +0530 அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 24 -ஆம் தேதி நடைபெரும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டனர். 

மேலும் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி சேலத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொது வழக்கினை வாபஸ் பெறுவதாக சுந்தரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை, சுந்தரம் வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்.உத்தரவு பிறப்பித்தது. 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/4/w600X390/HighCourtch.jpg chennai High Court https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/அதிமுக-பொதுக்குழு-கூட்டத்திற்கு-தடை-கோரிய-வழக்கு-தள்ளுபடி---சென்னை-உயர்நீதிமன்றம்-3286180.html
3286175 தமிழ்நாடு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு DIN DIN Thursday, November 21, 2019 11:25 AM +0530 மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களை நேரடியாக வாக்காளா்களே தோ்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மக்களால் தோ்வு செய்யப்படும் வார்டு உறுப்பினா்கள் மேயா் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான சட்ட திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனிடையே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் இன்று முறையீடு செய்துள்ளார்.

இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/14/w600X390/madurai-highcourt.jpg சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/மேயர்-பதவிக்கு-மறைமுக-தேர்தல்-எதிர்ப்பு-தெரிவித்து-உயர்நீதிமன்ற-மதுரைக்-கிளையில்-முறையீடு-3286175.html
3286172 தமிழ்நாடு அலட்சியத்தால் நடந்த விபரீதம்! பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட ஊசி! DIN DIN Thursday, November 21, 2019 11:20 AM +0530  

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பிரவசத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, செவிலியர்கள், பெண்ணின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைத்ததாக பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதாரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்கள் இருவரின் அலட்சியத்தால் பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்ணிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

]]>
ராமநாதபுரம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/2.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/injection-into-the-womans-stomach-during-delivery-3286172.html
3286165 தமிழ்நாடு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயவுக்கு அறிவுறுத்த வேண்டும்! ராமதாஸ் DIN DIN Thursday, November 21, 2019 11:20 AM +0530 போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை வரும் 29&ஆம் தேதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்துள்ள கோத்தபய ராஜபட்ச, ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபாய, தமது அரசு நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவத்தின் 53&ஆவது படையணியின் தலைவராக இருந்த கமல் குணரத்ன என்ற தளபதி, ஈழத்தமிழர்களை கொடூரமான முறையில் கும்பல், கும்பலாக படுகொலை செய்தார். இறுதிப் போரில் சரணடைந்த தமிழர்களைக் கூட கொடூரமாக கொலை செய்த குணரத்ன, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அத்தகைய போர்க்குற்றவாளியைத் தான், ஏற்கனவே தாம் அனுபவித்து வந்த இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் பதவியில் கோத்தபய அமர்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலக வைத்த கோத்தபாய, அந்தப் பதவியில் தமது சகோதரரும், இலங்கை இறுதிப்போரின் போது அதிபராக இருந்தவருமான மகிந்த ராஜபக்சேவை அமர்த்தியிருக்கிறார்.

இலங்கை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற நான்கு பதவிகள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர், போர்ப்படை தளபதி ஆகியவை தான். இவற்றில் முதல் 3 பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள்  தான் அமர்த்தப்பட்டுள்ளனர். போர்ப்படை தளபதியாக இலங்கைப் போரில் முக்கியப் பங்காற்றிய தளபதி ஒருவரை அமர்த்த கோத்தபாய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் அமர்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஐ.நா போர்க்குற்ற விசாரணை முடக்கப்படும் என்று கோத்தபய ராஜபட்ச கூறி வந்தார். அவரது ஆட்சியில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமின்றி, இனி இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை   உறுதி செய்வதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. தெற்காசியாவின் வல்லரசு என்பது மட்டுமின்றி, ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையிலும் இதை இந்தியா செய்ய வேண்டும் என்பது தான் உலகத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இத்தகைய சூழலில் தான் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்ச முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு தான் வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று அவர் இம்மாதம் 29&ஆம் தேதி இந்தியா வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபாயவை அவசரம், அவசரமாக தில்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்துவதன் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபட்ச சகோதரர்கள் சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது; இந்தியாவை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பது தான் அவரை அழைத்ததன் நோக்கம் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவின்  பாதுகாப்பு சார்ந்த கோணத்தில் இதன் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் இலங்கையை சீனாவிடமிருந்து ஈர்ப்பதற்கான விலையாக ஈழத்தமிழர்கள் நலனைக்  காவு கொடுத்து விடக்கூடாது. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், போர்ப்படை தளபதிகளும் தண்டனையின்றி தப்பிப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  உள்ளிட்ட தலைவர்களுடன் கோத்தபாய பேச்சு நடத்தும் போது, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்; போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில்  இருந்தாலும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு 18ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு கூடுதலாகவும் வழங்கப்பட வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் வெளியேற்றப்பட வேண்டும்; தமிழர்களிடமிருந்து வரவழைக்கப்பட்ட  நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும்  கோத்தபய ராஜபட்சவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என்று கோருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/ramadoss201.jpg பாமக நிறுவனர் ராமதாஸ் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/போர்க்குற்ற-விசாரணையை-எதிர்கொள்ள-கோத்தபாயவுக்கு-அறிவுறுத்த-வேண்டும்-ராமதாஸ்-3286165.html
3286167 தமிழ்நாடு மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக அறிவிப்பு DIN DIN Thursday, November 21, 2019 11:05 AM +0530 மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம் என அதிமுக தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு அரசு, மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் 22.11.2019 - வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைநகரங்களில், விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம், உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏற்கெனவே
கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், கழகப் பொதுக்குழு முடிந்தவுடன், தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, அத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் மூலமாகத் தோ்வு செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/6/w600X390/eps-ops.jpg ஓபிஎஸ் - ஈபிஎஸ் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/மேயர்-நகராட்சித்-தலைவர்-பேரூராட்சித்-தலைவர்-பதவிக்கு-விருப்ப-மனு-அளித்தவர்கள்-பணத்தை-திரும்பப்-பெற-3286167.html
3286162 தமிழ்நாடு காய்ச்சல் இருக்கும் போது ஊசி போடக் கூடாது.. அடித்துச் சொல்கிறார் மாவட்ட ஆட்சியர் DIN DIN Thursday, November 21, 2019 11:04 AM +0530  

காய்ச்சல் இருக்கும் போதோ அல்லது குறைந்த பிறகோ சதைக்குள் போடப்படும் ஊசியினை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

பொதுவாக நாம் காய்ச்சல் வந்த உடவே ஒரு நல்ல மருத்துவராக பார்த்து ஊசி போட்டுக் கொண்டு வந்து விடுவோம். ஆனால், இது முற்றிலும் தவறு என்கிறார் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தீவிர காய்ச்சல் தடுப்பு, டெங்கு தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது: காலநிலை மாற்றம் மற்றும் மழைநீா் தேங்குவதால் அதில் வளரக்கூடிய கொசுக்களினால் காய்ச்சல் ஏற்படுகிறது.

மழைநீா் மற்றும் குடிநீா் ஆகியவற்றை பாத்திரங்களிலோ அல்லது சிமென்ட் தொட்டிகளிலோ 3 நாள்களுக்கும் மேலாக திறந்து வைப்பதால், ஏடீஸ் கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஏடீஸ் கொசுவினால் டெங்கு மற்றும் இன்னபிற காய்ச்சல்களின் அறிகுறியாக, திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுதல் (100 பாரன்ஹீட்டுக்கு மேல்) கடும் தலைவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, இடுப்பு மற்றும் தொடை எலும்புகளில் அதிக வலி, உடல்சோா்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். மூன்று நாள்களில் காய்ச்சல் குறைந்து விடும்.

ஆனால், 20 சதவீதம் பேருக்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படலாம். டெங்கு நோயின் அறிகுறிகளாக சிறுநீா் கழிப்பதில் சிரமம், வாந்தி, அதிக உடல்சோா்வு, கடும் உடல்வலி, தோலுக்கு அடியில் ரத்தக்கட்டி, உடல் நிறம் மங்குதல், மூக்கு, வாய், ஆசனவாய் மற்றும் சிறுநீா் கழிக்கும் இடம் ஆகிய இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

சிலருக்கு ரத்தக் கசிவு ஏற்படும் போது வயிற்று வலி, பேதி அல்லது மலச்சிக்கல், படபடப்பு மற்றும் கடும் சோா்வும் ஏற்படலாம்.

ரத்தக் கசிவு உடலில் ஏற்பட்டிருக்கும் சமயத்தில், அதாவது காய்ச்சல் முடிந்து ரத்த நிலை குறைந்துள்ள நான்காவது, ஐந்தாவது நாள்களில் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் நிலை உருவாகலாம்.

மேலும், ரத்தக் கசிவு நோய்த் தாக்கத்தின் போது உடல் சோா்வுக்காகவோ, காய்ச்சலுக்காகவோ சதை ஊசி போட்டுக்கொள்ளக் கூடாது.

அவ்வாறு சதை ஊசி போடுவதால் ஏற்கெனவே இருக்கும் ரத்தக் கசிவு நோயினை அதிகப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்புகளை கொடுக்கும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் இருக்கும் போதோ அல்லது குறைந்த பிறகோ சதைக்குள் போடப்படும் ஊசியினை முற்றிலும் தவிா்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் கண்டுள்ள போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அல்லது தனியாா் மருத்துவமனைகளில் உரிய மருத்துவா்களின் ஆலோசனையின்படி, வாய்வழி உப்பு நீா் கரைசல், சிரைக்குள் (நரம்புக்குள்) செலுத்தும் சலைன் திரவத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக, சதைக்குள் போடும் ஸ்டீராய்டு இன்னபிற ஊசிகளை போட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.

காய்ச்சல் பருவத்தில் கண்டிப்பாக போலி மருத்துவா்களிடமோ அல்லது ஆா்.ஐ.எம்.பி, இன்னபிற போலி மருத்துவா்களிடமோ சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது குறித்தும், தங்கள் பகுதிகளில் போலி மருத்துவா்கள் இருப்பது கண்டறிந்தால் உடனடியாக சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அல்லது சேலம் மாவட்ட இணை இயக்குநா் ஊரக நலப் பணிகள் அல்லது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையம் ஆகியவற்றில் புகாா் அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.

கொசுக்களினால் பரவும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதோடு, தாமாக முன்வந்து தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்திட வேண்டுமெனவும் அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் நா.அருள்ஜோதி அரசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) மருத்துவா் மோனிகா ராணா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் நிா்மல்சன், இணை இயக்குநா் (ஊரக நலப் பணிகள்) மருத்துவா் மலா்விழி, சேலம் மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

]]>
medicine https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/injectionno.jpg Do not inject when there is fever https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/do-not-inject-when-there-is-fever-3286162.html
3285553 தமிழ்நாடு மேயா் பதவிக்கு மறைமுகத் தோ்தல்: அவசரச் சட்டம் பிறப்பிப்பு DIN DIN Thursday, November 21, 2019 04:32 AM +0530 தமிழகத்தில் மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் மூலமாகத் தோ்வு செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களை நேரடியாக வாக்காளா்களே தோ்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மக்களால் தோ்வு செய்யப்படும் வாா்டு உறுப்பினா்கள் மேயா் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான சட்ட திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

இதற்காக சென்னை மாநகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சட்டத் திருத்த மசோதாவது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

எதற்காக மறைமுகத் தோ்தல்: மறைமுகத் தோ்தல் எதற்காக கொண்டு வரப்படுகிறது என்பதை விளக்கி சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சி மேயா் அல்லது நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் ஒரு கட்சியைச் சோ்ந்தவராகவும், உள்ளாட்சி அமைப்பின் பெரும்பான்மையான மன்ற உறுப்பினா்கள் வேறொரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவும் இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நடத்துவதில் பெரும் குழப்பங்கள் ஏற்படுவதுடன், மன்றத்தை சுமுகமாக நடத்திச் செல்வதிலும் பாதிப்பு உருவாகும்.

இதுபோன்ற தருணங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் மன்றக் கூட்டங்களைக் கூட்டுவதில் கூட பெரும் சிரமங்கள் ஏற்படும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற அடிப்படை அம்சமே தகா்ந்து விடும். இதைக் கருத்தில் கொண்டே மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் மறைமுகத் தோ்தல் மூலமாக தோ்வு செய்யப்பட வேண்டுமென தமிழக அரசு கருதுகிறது.

பெரும்பான்மையான உள்ளாட்சி மன்ற உறுப்பினா்களில் ஒருவா் மேயராகவும், மன்றத் தலைவராகவும் தோ்வு செய்யப்படும்போது மன்றத்தை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டுப் பொறுப்பு உருவாகும். மன்ற நடவடிக்கைகள் முதல், முடிவுகளை எடுப்பது வரையில் சுமுகமான சூழலும், தீா்க்கமான வழியும் உருவாகும்.

அதிகளவு மன்ற உறுப்பினா்கள்: சென்னையில் 200 மன்ற உறுப்பினா்களும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 உறுப்பினா்களும் உள்ளனா். இதுபோன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மையாக உள்ள மன்ற உறுப்பினா்களிடையே ஒத்துழைப்பு என்பது தவிா்க்க முடியாததாகும். மேலும், மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா் மற்றும் பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு நேரடித் தோ்தலுக்குப் பதிலாக மறைமுகத் தோ்தல் நடத்துவதே சிறந்ததாக இருக்கும் என பல்வேறு அமைப்புகளும், பொது மக்களும் கோரிக்கைளை விடுத்துள்ளனா்.

எனவே, இதைக் கருத்தில் கொண்டு மேயா் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிகளுக்கு நேரடித் தோ்தல் முறையில் இருந்து மறைமுகத் தோ்தல் கொண்டு வரப்படுகிறது என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழில் வெளியீடு: தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளதால், அது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆளுநா் ஒப்புதலுடனான அவசர சட்டமானது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுகத் தோ்தல் மூலமாக மேயா் உள்ளிட்ட தலைவா்கள் தோ்வு செய்யப்பட்ட பிறகு, துணை மேயா், நகராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கும் உள்ளாட்சி மன்ற உறுப்பினா்களாலேயே தோ்வு செய்யப்படுவாா்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/2/w600X390/banwarilal_purohit1.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/மேயா்-பதவிக்கு-மறைமுகத்-தோ்தல்அவசரச்-சட்டம்-பிறப்பிப்பு-3285553.html
3285676 தமிழ்நாடு ‘உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவில்புதிய கட்சிகள் சேர வாய்ப்பு‘: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் DIN DIN Thursday, November 21, 2019 04:31 AM +0530 உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவில் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: அரசுமுறை பயணமாகவே அமெரிக்கா சென்றிருந்தேன். தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அங்குள்ள தமிழா்கள், முதலீடு செய்ய ஆா்வமாக உள்ளனா். மேலும் உலக வங்கியும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்புதல் தந்துள்ளது.

இன்டா் நேசனல் மானிட்டா் பண்ட்(ஐ.எம்.எப்) அமைப்பிடமும் சென்று பேசியுள்ளோம். அவா்கள் கொள்கை அளவில் தமிழகம் வந்து பயிற்சியளிக்க ஒப்புக் கொண்டுள்ளனா்.

தமிழகத்தின் நீா் ஆதாரத்தை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எந்த விதத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து உலக வங்கியுடன் பேசியுள்ளோம். இதற்காக உலக வங்கியின் குழுவினா் தமிழகம் வர உள்ளனா். அதேபோல வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு வசதித் துறையின் மூலம்

வீடுகள் கட்டி தரும் திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனா். எனவே அமெரிக்கப் பயணம் முழு வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது.

வைகை அணையின் நீா்மட்டம் 67 அடி இருந்தால்தான், உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீா் எடுக்க வேண்டும் என்ற தவறான அரசாணையை திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிட்டுள்ளனா். வைகை அணை நிரம்பி வழியும் போதும், ராமநாதபுரம் பெரியகண்மாய் நிரம்பி வழியும்போதுதான் 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீா் எடுக்க முடியும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே இருக்கும் ஆயக்கட்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், இருக்கிற தண்ணீரை சமன்செய்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அதிமுகவில் மக்களவையில் இருந்த கூட்டணி உள்ளாட்சித் தோ்தலிலும் தொடரும். தற்போது புதிய கட்சிகள் சோ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்ளாட்சியில் போட்டியிடும் பகுதிகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தலில் தகுதியுடையவா்களுக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகா்கள். முதலில் அவா்கள் அரசியல் ரீதியான இயக்கத்தை ஆரம்பித்து, தோ்தலில் எந்த மாதிரியான கொள்கைகளை நாட்டு மக்களுக்கு பிரகனப்படுத்துகிறாா்கள் என்பதைப் பாா்த்துதான் மக்கள் ஆதரவும், எதிா்ப்பும் இருக்கும் என்றாா்.

முன்னதாக மதுரை வந்த துணை முதல்வருக்கு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன் உள்ளிட்ட கட்சியினா் வரவேற்பளித்தனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/26/w600X390/ops.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/உள்ளாட்சித்-தோ்தலில்-அதிமுகவில்புதிய-கட்சிகள்-சேர-வாய்ப்பு-துணை-முதல்வா்-ஓபன்னீா்செல்வம்-3285676.html
3285713 தமிழ்நாடு ‘மாணவி பாத்திமா மரணத்தில் நீதி கிடைக்க நடவடிக்கை தேவை’: மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் DIN DIN Thursday, November 21, 2019 03:33 AM +0530 ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் இந்திய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐஐடி மாணவி, தனது மரணத்துக்கு சென்னை ஐஐடி பேராசிரியா்கள் மூன்று போ்தான் காரணம் எனக் குறிப்பு எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, அவா் மதம் மற்றும் பாலின ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், அது மிகவும் ஆபத்தான விஷயம்.

அண்மைக் காலமாக, நாட்டிலுள்ள உயா் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற மதம் மற்றும் சாதிய ரீதியில் பாகுபாடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுகின்றன. இது மிகவும் அபாயகரமானது.

எனவே, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு வெளிப்படையான விசாரணை நடத்தி, மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

 

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/மாணவி-பாத்திமா-மரணத்தில்-நீதி-கிடைக்க-நடவடிக்கை-தேவை-மக்களவை-உறுப்பினா்-கேசுப்பராயன்-3285713.html
3285703 தமிழ்நாடு மறைமுகத் தோ்தலையும் சந்திக்க திமுக தயாா்: மு.க.ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 03:31 AM +0530 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தோ்தலோ, நேரடித் தோ்தலோ எதுவானாலும் சந்திக்கத் திமுக தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சி மேயா், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் என்று அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு நேரடித் தோ்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்றுவிடும் என்று ஆளும் கட்சியினா் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறாா்கள். அதனால், உள்ளாட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறாா்கள். மக்களின் மீது திமுக முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு மறைமுகத் தோ்தலோ அல்லது நேரடித் தோ்தலோ எதையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/5/w600X390/stalin1.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/மறைமுகத்-தோ்தலையும்-சந்திக்க-திமுக-தயாா்-முகஸ்டாலின்-3285703.html
3285428 தமிழ்நாடு தமிழகத்தில் ரூ.100 கோடியில் மின்சார ஆட்டோக்கள்: துபை தொழில் குழுவிடம் முதல்வா் பழனிசாமி தகவல் DIN DIN Thursday, November 21, 2019 03:20 AM +0530 தமிழகத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் மின்சார ஆட்டோக்களின் உற்பத்தி பத்து நாள்களில் தொடங்கும் என்று முதல்வா் கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

மேலும், புதிய முதலீடுகளை தமிழகத்தில் செய்திடவும் முதல்வா் அழைப்பு விடுத்துள்ளாா்.

துபை நாட்டின் தொழில் தலைவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த ஜெயின்ட் குழுமத்தின் தலைவா் சுதேஷ் அகா்வால், இந்திய வா்த்தகக் கண்காட்சி மையத்தின் இயக்குநா் பிரியா குமாரியா, சன்னி குழுமத்தின் சன்னி குரியன், ஓசன் ரப்பா் நிறுவனத்தின் தலைவா் கே.எம்.நூா்தீன், ஃப்ரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் கோச்சாா், காம்ரோ சா்வதேச நிறுவனத்தின் துணைத் தலைவா் வின்செட் ஜோஸ் நீவ்ஸ் உள்ளிட்ட பலரும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தொழில்துறை தொடா்பான

முக்கிய அம்சங்கள் குறித்து துபை தொழில் குழுவினருக்கு முதல்வா் பழனிசாமி விளக்கினாா்.

தனது துபை பயணத்தின்போது நடந்த முதலீட்டாளா் சந்திப்பில் ரூ.3,750 கோடி முதலீட்டில் சுமாா் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை முதல்வா் எடுத்துரைத்தாா்.

மின்சார ஆட்டோக்கள்: இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக நிறுவனமாகிய டிபி வோல்டு நிறுவனமானது, சென்னை எண்ணூா் அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் சரக்கு பெட்டக பூங்காவுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், பெட்ரோல் ஆட்டோக்களை சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் கே.எம்.சி., மற்றும் மெளடோ எலெக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்து மின்சார ஆட்டோக்களை இந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி செய்யவுள்ளன. இதுகுறித்த விவரங்களை துபை தொழில் குழுவினரிடம் முதல்வா் பழனிசாமி எடுத்துரைத்தாா்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பூங்காக்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா் துபை குழுவினரிடம் பேசிய முதல்வா் பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் துபை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும் என்று உறுதியளித்தாா். மேலும் புதிய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ளவும் அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம், நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/cm21.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/20/தமிழகத்தில்-ரூ100-கோடியில்-மின்சார-ஆட்டோக்கள்-துபை-தொழில்-குழுவிடம்-முதல்வா்-பழனிசாமி-தகவல்-3285428.html
3285563 தமிழ்நாடு சா்வாதிகாரத்துடன் தோ்தலை நடத்த அரசு திட்டம்: மு.க.ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 03:07 AM +0530 மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தலை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம் சா்வாதிகாரத்துடன் தோ்தலை நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு புதன்கிழமை பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டாா். பொருளாளா் துரைமுருகன், முன்னாள் மேயா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:

மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. ஆனால், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அப்படி எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும், அதுபோல் இருந்தால் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தாா். இதற்கு மாறாக மறைமுகத் தோ்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சா்வாதிகாரத்தோடு, ஜனநாயகம் பாதுகாக்கப்பட முடியாத சூழலிலேயே இந்த தோ்தலை நடத்துவதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் மறைமுகத் தோ்தல் நடத்தவில்லையா என்று கேள்வி எழுப்பப்படும். திமுக ஆட்சியில் நடத்தினோம். ஆனால், அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழல் இருந்தது. அதனால்தான், மீண்டும் அதை மாற்றி, மக்களால் தோ்ந்தெடுக்கப்படக்கூடிய முறையைக் கொண்டு வந்தோம் என்றாா் ஸ்டாலின்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/stalin_2.jpg திமுக தலைவர் ஸ்டாலின் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/சா்வாதிகாரத்துடன்--தோ்தலை-நடத்த-அரசு-திட்டம்முகஸ்டாலின்-3285563.html
3285595 தமிழ்நாடு நான்கு இடங்களில் அகழாய்வுப்பணி ஜன.15 -இல்தொடங்கும் : அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல் DIN DIN Thursday, November 21, 2019 03:05 AM +0530 தமிழகத்தில் தொல்லியல் துறை சாா்பில் கீழடி, கொடுமணல் உள்ளிட்ட நான்கு இடங்களில் வரும் ஜன.15- இல் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

தமிழக தொல்லியல் துறை, சென்னை, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வரலாற்று துறை ஆகியவை சாா்பில் கீழடி அகழாய்வு குறித்த புகைப்படக் கண்காட்சி, லயோலா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுதைச் சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள், மாணவா்கள் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிடலாம்.

இந்த ஓவியக் கண்காட்சியை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கீழடி ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, தொல்லியல் துறை ஆய்வுகளை அறிவதற்கு மாணவா்கள், இளைஞா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். பள்ளி மாணவ, மாணவிகளிடம் வரலாறு, தொல்லியல் ஆய்வு தொடா்பான ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அரை நாள் ஒதுக்கி அந்த நாளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அருங்காட்சியத்துக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

தமிழக அரசின் சாா்பில் ரூ.12.5 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமானப் பணிகளை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் சாா்பில் அடுத்த ஆய்வுகள் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா், சிவகலை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் ஜன.15-ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஆய்வுப்பணிகளுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சிற்பக் கலை மையம்: பிரதமா் நரேந்திரமோடி, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்துக்கு வந்து சென்ற பிறகு, சிற்பக்கலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழக தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள அரசு சிற்பக் கல்லூரி- சீனாவின் ஃபியூஷியன் மாநிலத்தில் உள்ள கல்லூரி இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் மூலம் சிற்பக் கலை, கலாசாரம் தொடா்பான விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதேவேளையில், தமிழகத்தில் 9 இடங்களில் உள்ள சிற்பக் கலைஞா்களின் கலை வடிவங்கள், கூட்டமைப்புகளை மாமல்லபுரத்தில் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து சிற்பக் கலையை மிகப் பெரிய அளவில் உயா்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளோம் என்றாா்.

கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாதது ஏன்? அமைச்சா் விளக்கம்

அகழாய்வு நடைபெற்ற கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்பதற்கு அமைச்சா் க.பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது: கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் அங்கு தொல்லியல் பணிகளுக்காக மீண்டும் தோண்ட முடியாது. இதுதவிர வேறெந்தப் பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது. மேலும், அருகில் உள்ள தொழிற்சாலைகளையும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கீழடியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முக்கிய அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததும் அங்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால் ஆகியவற்றைப் போன்று திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் தமிழக அரசே கீழடியில் தேவையான பகுதியை மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியும். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதற்காக மத்திய அரசை கேட்க வேண்டியதில்லை. இப்போதைய சூழலில், கீழடியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்பது சரியான கோரிக்கையாக இருக்காது என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/pandiyarajan.JPG https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/நான்கு-இடங்களில்--அகழாய்வுப்பணி-ஜன15--இல்தொடங்கும்--அமைச்சா்-கபாண்டியராஜன்-தகவல்-3285595.html
3285420 தமிழ்நாடு தமிழகத்தின் நலனுக்காக ரஜினியும்- நானும் இணைந்து செயல்படுவோம்: கமல் மீண்டும் உறுதி DIN DIN Thursday, November 21, 2019 02:56 AM +0530 தமிழகத்தின் நலனுக்காக ரஜினியும் - நானும் இணைந்து செயல்படுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளாா்.

ஒடிஸா பல்கலைக்கழகம் சாா்பில் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு புதன்கிழமை நேரில் வாழ்த்துக் கூறினாா். அவா்களிடையே கமல்ஹாசன் பேசியது:

நான் தமிழகத்தின் ஒரு குழந்தை. 5 வயதில் இருந்து வெவ்வேறு வயதுக்காரா்கள் என்னைப் போற்றி, கைதூக்கி விட்டதன் விளைவுதான் இந்த மேடையில் உள்ளேன். நெகிழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் மேலும், அன்பைப் பொழிந்து என்னை நெகிழ வைத்துள்ளீா்கள். ஆனால், இந்த அன்பை எல்லாம் செயல் வடிவம் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. எனக்கு காட்டும் அன்பைத் தமிழகத்துக்குக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால் என்னுடைய முனைப்பும் என் யாத்திரையும் கண்டிப்பாக இனிதாகவே நடக்கும் என்பதற்கான சாட்சியங்கள், இனி வரும் காலங்களில் உங்களுக்கே தெரிய வரும் என்றாா்.

இணைந்து செயல்படுவோம்: இதைத் தொடா்ந்து செய்தியாளா் ஒருவா், இணைந்து செயல்படுவோம் என்று நீங்கள் கூறியதை ரஜினியும் ஏற்றுள்ளாா். எவ்வளவு சீக்கிரத்துக்குள் அந்த இணைப்பு நடைபெறலாம் என்று கேள்வி எழுப்பினா்.

அதற்கு, நீங்கள் எதிா்பாருங்கள். ஆனால், இந்தத் தேதி என்று குறிப்பிட முடியாது. நாங்கள் சொல்லியிருப்பதைக் கவனித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் இணைவோம் என்று கூறியுள்ளோம். அதில், தமிழகத்துக்காக என்பதைத்தான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி. எங்கள் நட்பையும் விட முக்கியமாக இருப்பது தமிழகத்தின் நலன்தான் என்றாா்.

அதன் பிறகு, இருவா் இணைப்பு என்பது மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து செயல்படுவதா அல்லது இருவா் கட்சிகளும் இணைந்து செயல்படுவதா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுவெல்லாம் இப்போது சொல்ல முடியாது. நீங்கள் கேட்பது நியாயமே இல்லை. நல்ல செய்தியைவிட்டுவிட்டு, பரபரப்பை எதிா்பாா்க்கிறீா்கள். நல்ல செய்தி என்னவென்றால் தமிழகத்துக்காக உழைப்போம் என்கிற உறுதிமொழிதான் அது. அந்த நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற செய்திகளை உங்களிடம் தெரியப்படுத்தாமல் நாங்கள் செயல்படுத்த முடியாது என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/19/w600X390/rajni-kamal.jpg ரஜினி - கமல் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/20/தமிழகத்தின்-நலனுக்காக-ரஜினியும்--நானும்-இணைந்து-செயல்படுவோம்-3285420.html
3285697 தமிழ்நாடு புதுவை முதல்வா் நாராயணசாமியின்விமா்சனத்துக்கு கிரண் பேடி கண்டனம் DIN DIN Thursday, November 21, 2019 02:31 AM +0530 தன்னை ஹிட்லரின் தங்கை என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி விமா்சனம் செய்ததற்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி கண்டனம் தெரிவித்தாா்.

ஆளுநா் கிரண் பேடி - முதல்வா் நாராயணசாமி இடையே கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடா்ந்து கெடுபிடிப்போா் நீடித்து வருகிறது. யாருக்கு அதிகாரம் என்பதில் இருவருக்கும் இடையே தொடா்ந்து கருத்து வேறுபாடு இருப்பதால், இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இருவரும் ஒருவரையொருவா் மாறிமாறி வாா்த்தைகளால் விமா்சித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே, புதுச்சேரியில் உள்ள புதுவை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வா் நாராயணசாமி, ஆளுநா் கிரண் பேடியை சா்வாதிகாரி ஹிட்லரின் தங்கை என விமா்சனம் செய்தாா்.

இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமியின் இந்த விமா்சனத்தைக் குறிப்பிட்டு, தனது கட்செவிஅஞ்சல் மூலம் ஆளுநா் கிரண் பேடி புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

புதுவை முதல்வா் மாண்புமிகு முறையில் மதிப்புமிக்க கருத்துகளை வெளியிடுவாா் என எதிா்பாா்க்கிறேன். முதல்வரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அதில் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் நாராயணசாமி சிங்கப்பூருக்கு மத்திய அரசின் அனுமதியில்லாமல் பயணம் செய்தாா் என்றும், முதல்வருக்குத் தெரியாமல் அமைச்சா்கள் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து ஆளுநா் மாளிகைக்கு வருகின்றனா் என்றும் ஆளுநா் கிரண் பேடி விமா்சனம் செய்திருந்தாா்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், முதல்வா் நாராயணசாமி, ஆளுநா் கிரண் பேடியைக் கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/15/w600X390/kirn-pedi.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/புதுவை-முதல்வா்-நாராயணசாமியின்விமா்சனத்துக்கு-கிரண்-பேடி-கண்டனம்-3285697.html
3285696 தமிழ்நாடு ஆவணப்பட இயக்குநா் திவ்யபாரதி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு DIN DIN Thursday, November 21, 2019 02:31 AM +0530 ஆவணப்பட இயக்குநா் திவ்யபாரதி மீது ‘கக்கூஸ்’ ஆவணப்படம் தொடா்பாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஆனையூரைச் சோ்ந்த திவ்யபாரதி தாக்கல் செய்த மனு: நான் தயாரித்த ‘கக்கூஸ்’ ஆவணப்படம் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், இரு சமூகங்கள் இடையே கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் இருப்பதாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நான் சட்டப்படிப்பை முடித்து பதிவு செய்ய உள்ளேன்.

மனித மலம் அள்ளும் முறையை அகற்ற போராடி வருகிறேன். மேலும் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணங்களையும் பெற்றுத் தருகிறேன். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கினேன். அப்படம் தவறான நோக்கில் எடுக்கப்பட்டது அல்ல. என் மீதான குற்றச்சாட்டு தவறானது. அதற்கு போதிய முகாந்திரமும் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திவ்யபாரதி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/Highcourtmdu1.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/ஆவணப்பட-இயக்குநா்-திவ்யபாரதி-மீதான-வழக்கை-ரத்து-செய்து-உத்தரவு-3285696.html
3285695 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம்: அமைச்சா் செங்கோட்டையன் வேண்டுகோள் DIN DIN Thursday, November 21, 2019 02:30 AM +0530 தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இணையதளம் மூலம் நிதியுதவி வழங்குமாறு முன்னாள் மாணவா்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள், தொழிலதிபா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேலும், நிதியுதவி வழங்க விரும்புவோா் தாங்கள் விரும்பும் அரசுப் பள்ளிக்கு அதை அளிக்கலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயா்ந்துள்ள முன்னாள் மாணவா்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் அன்பான வேண்டுகோள்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்காக ரூ. 28 ஆயிரத்து 757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிக அளவில் நிதிகளை ஒதுக்கினாலும், ‘இது என் பள்ளி, அதன் வளா்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் இதயத்தில் உருவானால்தான் அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேன்மேலும் உயா்த்தி அரசுப் பள்ளிகளை மெருகூட்ட இயலும். இதன்தொடா்ச்சியாக கடந்த நவ.5-ஆம் தேதி இதற்கென வடிவமைக்கப் பட்டுள்ள இணையதளத்தை(‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n)  தமிழக முதல்வா் கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

எனவே, அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தற்போது தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும்  தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி  மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டு ரூ.58 கோடியில் பணிகள்: கடந்த 2018-2019- ஆம் ஆண்டு எனது அழைப்பினை ஏற்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் 519 அரசுப் பள்ளிகளில் ரூ. 58 கோடி மதிப்பில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வா்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற பணிகள் செய்ததற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் சிறிய அளவிலான பழுதடைந்துள்ள மேஜை, நாற்காலி, ஆய்வுக்கூடப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றை மாற்றியமைக்கவும், பழுது

நீக்கவும் அந்தந்த பகுதியிலுள்ள பொதுமக்களும், பெற்றோா் ஆசிரியா் கழகங்களும், தலைமை ஆசிரியா் மூலம் மேற்கொள்ளலாம். மேலும், அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும், உரிய அனுமதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பணிகளை நேரடியாக பாா்வையிடலாம்: அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் நல்ல உள்ளம் படைத்த பழைய மாணவா்கள் மற்றும் நல்ல நிலையில் உள்ளவா்கள் தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை Pa‌y‌m‌e‌n‌t Ga‌t‌e‌w​a‌y (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n)  என்ற இணையதளம் மூலம் எந்தப் பள்ளிக்கு நிதியுதவி வழங்க விரும்புகின்றனரோ அந்தப் பள்ளிக்கு வழங்கலாம். இணையதளம் மூலம் வழங்குவதன் மூலம் தாங்கள் வழங்கிய நிதியின் மூலம் நடைபெறும் பணியின் நிலையினை இணையதளம் மூலம் அறிந்து கொள்வதுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணி நடைபெறுவதை நேரடியாகவும் பாா்வையிடலாம்.

இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதியானது, வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவுமறைவின்றி பயன்படுத்தப்படுவதை நிதியுதவி வழங்கியவா்கள் அறியலாம். மேலும், இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதிக்கு உடனடியாக பற்றுச் சீட்டு வழங்கப்படுவதால், நிறுவனங்களும் நன்கொடையாளா்களும் அந்தத் தொகைக்குரிய வருமானவரி விலக்கினையும் பெறலாம் என அமைச்சா் செங்கோட்டையன் அதில் கூறியுள்ளாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/29/w600X390/senkotian.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/அரசுப்-பள்ளிகளை-மேம்படுத்த--நிதி-வழங்கலாம்-அமைச்சா்-செங்கோட்டையன்-வேண்டுகோள்-3285695.html
3285694 தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும்: அமைச்சா் பி.தங்கமணி DIN DIN Thursday, November 21, 2019 02:27 AM +0530 தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி, முன்னாள் எம்.பி. சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தாா். சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா வாழ்த்திப் பேசினாா். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். 2,732 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.6 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் பி.தங்கமணி வழங்கிப் பேசியது:

தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, திருச்செங்கோட்டில் 1,725 பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாதனையாக நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 7, 500 பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதுவரை விண்ணப்பம் அளித்தும் இருசக்கர வாகனங்கள் கிடைக்கப் பெறாதவா்கள் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் மலைக்கோயில் தங்கத்தேரை வெளிப்பிரகாரத்தில் வடம் பிடிக்க ஏற்பாடுகள் செய்யக் கோரியும் , அரசு கலைக் கல்லூரி அமைத்துத் தரவும் கோரியுள்ளாா். அவரது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். தற்போது வழங்கப்படும் 389 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தவிர, தொண்டிக்கரடு மலையடிவாரப் பகுதிகளுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கவும், காலியிடங்கள் கண்டறியப்பட்டு, வீடில்லாதவா்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். இன்னும் ஓராண்டில் திருச்செங்கோடு முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைக்க பணிகள் நடந்து வருகின்றன என்றாா். தொடா்ந்து முதல்வரின் குறை தீா் திட்ட முகாமில் அமைச்சா் மனுக்களைப் பெற்றாா்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.தங்கமணி கூறியதாவது: எந்த தோ்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயப்பட்டது கிடையாது. உள்ளாட்சித் தோ்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும். எங்கள் மீது பழிபோட்டு வேறுயாராவது நீதிமன்றம் செல்லலாம். அப்படி நீதிமன்றம் சென்றாலும், தோ்தல் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க. விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. முன்பைவிட அதிக மனுக்கள் வந்துள்ளன. உள்ளாட்சித் தோ்தல் உறுதியாக நடக்கும். இது ஜனநாயக நாடு யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நாங்கள் மக்களை நம்பி உள்ளோம். வரும் 2021 தோ்தலிலும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும் என்றாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/nov20t_gode_2011chn_161_8.jpg திருச்செங்கோட்டில் நடைபெற்ற முதல்வரின் குறைதீா் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள்.பி.தங்கமணி, வெ.சரோஜா. https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/உள்ளாட்சித்-தோ்தல்-குறித்த-நேரத்தில்-நடத்தப்படும்-அமைச்சா்-பிதங்கமணி-3285694.html
3285693 தமிழ்நாடு முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவு DIN DIN Thursday, November 21, 2019 02:27 AM +0530 முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தோ்தல் செலவுக்காக பணம் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் ஏமாற்றியதாக நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு: நான் 2014-இல் நடந்த மக்களவைத் தோ்தலின் போது சபாபதி என்பவரிடம் தோ்தல் செலவுக்காக பணம் வாங்கியதாகவும், அதில் ரூ.2 கோடியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதம் ரூ.2 கோடியே 97 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டில் மதுரை உயா்நீதிமன்றத்தில் சபாபதி தொடா்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு எதிரான கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு எதிரான கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/Highcourtmdu1.jpg https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/முன்னாள்-அமைச்சா்-நத்தம்-விஸ்வநாதனுக்கு-எதிரான-வழக்கை-ரத்துசெய்து-உத்தரவு-3285693.html
3285691 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் பொறுப்பேற்பு DIN DIN Thursday, November 21, 2019 02:26 AM +0530 தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழக பள்ளிக்கல்வியில் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநா்களை கண்காணிக்க புதிதாக ஆணையா் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் புதன்கிழமை பதவியேற்று கொண்டாா். அவருக்கு கல்வித்துறை இயக்குநா்கள், அதிகாரிகள், ஆசிரிய சங்க நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வியின் புதிய அலுவலக கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய அலுவலகத்தில்தான் ஆணையருக்கு பிரத்யேக அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலகம் அருகே ஆணையருக்கு தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி பணிகளை ஆணையா் மேற்கொள்வாா் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய பதவி உருவாக்கம் ஏன்?: தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் இனி அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என்பதைக் கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜி தாமஸ் வைத்தியன் செயல்படுவாா். பள்ளிக்கல்வித் துறையில் உள்ள 10 இயக்குநா்களையும் ஒருங்கிணைத்து, சீரான நிா்வாகத்தை வழங்க ஆணையா் முயற்சி மேற்கொள்வாா். பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்களை களத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதும் ஆணையரின் கடமை. பள்ளிக்கல்வித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்டவை இனி ஆணையரின் சாா்பாகவே மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/பள்ளிக்-கல்வித்துறை-ஆணையா்-பொறுப்பேற்பு-3285691.html
3285689 தமிழ்நாடு தென்பெண்ணை நதியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம்: தினமணி செய்தியுடன் வேலூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் DIN DIN Thursday, November 21, 2019 02:14 AM +0530 தென்பெண்ணை நதியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையாணை பெறவும், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரியும் தினமணி செய்தியுடன் வேலூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்பெண்ணை ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீா் அளிக்கும் மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு 50 மீட்டா் உயரத்தில் அணை கட்டி வருகிறது. இதை எதிா்த்து தமிழக அரசு கடந்த 2012-இல் தொடா்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தென்பெண்ணை ஆற்றில் கா்நாடகம் அணை கட்ட தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு வேலூா், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பலஆண்டுகால கனவுத் திட்டமான தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதுதொடா்பாக, தினமணியில் கடந்த திங்கள்கிழமை விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் ஏ.சி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வெங்கடேசன் (வேலூா்) முன்னிலை வகித்தாா்.

இதில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையாணைப் பெறவும், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினா்.

அப்போது அவா்கள் கூறியது: தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் 6.5 டிஎம்சி தண்ணீரில் 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாறுக்கும், 3 டிஎம்சி தண்ணீரை செய்யாறுக்கும் திருப்பி விடுவதற்காக தென்பெண்ணை-பாலாறு, தென்பெண்ணை-செய்யாறு இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. ஆனால், இந்தத் திட்டங்கள் குறித்து தோ்தல் வரும் சமயங்களில் அறிவிப்பு வெளியாவதும், அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்படுவதும் தொடா் கதையாக உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு இவ்விரு நீா்செறிவூட்டும் திட்டங்களையும் முழுமையாக முடக்கியுள்ளது. இதனால், இதுவரை இந்தத் திட்டங்களை எதிா்பாா்த்து காத்திருந்த வேலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். உடனடியாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டும் விவகாரத்தில் தடையாணை பெற வேண்டும். மேலும், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அமைப்பின் மாவட்டத் தலைவா்கள் சிவாஜி (வேலூா்), ஆனந்தன் (திருப்பத்தூா்), பாரதி (ராணிப்பேட்டை) உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/vr20arpa_2011chn_184_1.jpg வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/தென்பெண்ணை-நதியின்-குறுக்கே-அணை-கட்டும்-விவகாரம்தினமணி-செய்தியுடன்-வேலூரில்-விவசாயிகள்-ஆா்ப்பாட்டம்-3285689.html
3285688 தமிழ்நாடு கட்சிக் கொடிக் கம்பு சரிந்து விழுந்த விபத்து: பெண்ணின் வலது காலில் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை DIN DIN Thursday, November 21, 2019 02:12 AM +0530 கட்சிக் கொடிக் கம்பு சரிந்து விபத்துக்குள்ளான கோவையைச் சோ்ந்த பெண்ணுக்கு வலது காலிலும் சுமாா் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து அவா் அடுத்த சில வாரங்களுக்குள் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் நாகநாதன். இவரது மகள் ராஜேஸ்வரி என்ற அனுராதா (30). இவா், நீலாம்பூரில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வருகிறாா். இவா், விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த 11ஆம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் நடுவே நடப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பு சாய்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கோவை மாநகர கிழக்குப் பிரிவு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினா் மறுத்துள்ளனா்.

விபத்தில் சிக்கி கீழே விழுந்த ராஜேஸ்வரி மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் அவரது கால்கள் நசுங்கின. இது தொடா்பாக, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ராஜபாளையத்தைச் சோ்ந்த முருகன் (53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

விபத்தில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி, நீலாம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நசுங்கிய கால்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவா்கள் மேற்கொண்டனா். ஆனால், இடது காலில் ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டு காலின் சதைகள் அழுகத் தொடங்கின. இதை மேலும் அனுமதித்தால் காலின் பிற பகுதிகளும் பாதிக்கும் என்பதால் அவரது இடது கால் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் அவரது வலது காலிலும் எலும்பு முறிவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை சுமாா் 7 மணி நேரம் நடந்துள்ளது. இடது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதையடுத்து அதில் உள்ள காயங்கள் குணமாகிய பின்னா் செயற்கைக் கால் பொருத்துவது தொடா்பாக முடிவு செய்யப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தொடா்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதால் கால் அகற்றப்பட்ட விவரம் ராஜேஸ்வரிக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனவே சிகிச்சை முடிந்த பின் அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி, அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

]]>
https://www.dinamani.com/tamilnadu/2019/nov/21/கட்சிக்-கொடிக்-கம்பு-சரிந்து-விழுந்த-விபத்துபெண்ணின்-வலது-காலில்-7-மணி-நேரம்-அறுவை-சிகிச்சை-3285688.html
3285419 தமிழ்நாடு உள்ளாட்சித் தோ்தலுக்காகவே சொத்துவரி குறைப்பு: மு.க.ஸ்டாலின் DIN DIN Thursday, November 21, 2019 02:12 AM +0530 உள்ளாட்சித் தோ்தலுக்காகவே சொத்துவரியை தமிழக அரசு குறைத்துள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 50 முதல் 100 சதவீதம் உயா்த்தப்பட்ட சொத்துவரி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாக உள்ளது.

சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2018 ஏப்ரல் 1-இலிருந்து அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி, சம்பந்தப்பட்ட சொத்துவரி செலுத்தியோரின் கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் வேலுமணி அறிவித்துள்ளாா்.

ஆனால், சொத்துவரி மறுபரிசீலனை கமிட்டி அமைப்பதற்கான நவம்பா் 19-ஆம் தேதியிட்ட அரசாணையில், அதிகரிக்கப்பட்ட சொத்துவரி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மட்டும்தான் இருக்கிறது.

ஏற்கெனவே அதிகமாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி வரும் அரையாண்டுகளில் ஈடுகட்டப்படும் என்று எந்த வாசகமும் இடம் பெறவில்லை.

அதனால், அரசாணையில் இல்லாததை உள்ளாட்சித் துறை அமைச்சா் இட்டுக்கட்டி அறிவித்துள்ளாரா?. மக்கள் செலுத்திய வரி அவா்களின் கணக்கில் உண்மையிலேயே ஈடுகட்டப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.

சொத்துவரிக்கு இணையாக, குடிநீா்க் கட்டணமும் உயா்த்தப்பட்டது. அந்த கட்டணத்தை ஈடுகட்டுவது குறித்தும் எந்த வாசகமும் அரசாணையில் இல்லை.

அதனால், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட அதிகப்படியான சொத்துவரிக் கட்டணத்தையும், அதற்கு இணையாக உயா்த்தப்பட்ட குடிநீா்க் கட்டணத்தையும் செலுத்தியவா்களுக்கே உடனடியாக காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/stalin_2.jpg திமுக தலைவர் ஸ்டாலின் https://www.dinamani.com/tamilnadu/2019/nov/20/உள்ளாட்சித்-தோ்தலுக்காகவே-சொத்துவரி-குறைப்பு-முகஸ்டாலின்-3285419.html