Dinamani - தமிழ் மொழித் திருவிழா - https://www.dinamani.com/language-fest/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3316255 தமிழ் மொழித் திருவிழா இலக்கியத்தில் காவேரி திருக்குறள் சு. முருகானந்தம் எம்.ஏ.பிட். DIN Saturday, January 4, 2020 10:18 PM +0530  

மனித குலத்தின் நாகரிகத்தின் தொட்டில் நதிகளேயாகும். நதிகள் உயிர்கள் வாழ ஊற்றாய் அமைந்துள்ளன. அதேபோல் நாகரிகம், பண்பாடு வளரவும், முழுமுதல் காரணங்களாக உள்ளன. நீர் வானின்று வருவது. இந்த நீரே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் இன்றியமையாதது என்பதை,

நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்றி அமையா ஒழுக்கு.

என்று திருவள்ளுவர் கூறுவார். கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மழையாக பொழிகின்றது என்ற அறிவியல் நுட்பத்தை சங்ககால தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

வான்முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப்பொழிந்த நீர்கடல் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்து அறியாப் பலபண்டம்.

என்ற பட்டினப்பாலை என்ற (126- 131 வரிகள்) உணரலாம். நீரியியல் சுழற்சியை இப்பாடலில் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் அறிவியல் நுட்பத்தோடு கூறியுள்ளார். நீரியியல் சுழற்சியால் உலகில் உள்ள நீரின் அளவு குறையாமலும், மிகாமலும் நிலையாகவே உள்ளது என்பதை,

 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி''

என்ற குறிப்பறிதல் அதிகாரத்தில் திருவள்ளுவர் ‘‘மாறாநீர்'' என்பது உலகில் நிலையாக உள்ள நீரின் அளவையே குறிப்பிடுகிறார். தமிழர்கள் நீரியியல் மேலாண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேன்பட்டு இருந்தனர் என்பதற்கு மேற்கண்ட பாடல்களே சான்றாகும்.

நீரின் நுட்பத்தை அறிந்த தமிழர்களே தான் அந்நீரை சுமந்து செல்லும் நதிகளின் தேவைகளையும் நன்கறிந்திருந்தனர். அதிலும் தமிழகத்திற்கு தாயாக பாலூற்றி வளர்க்கும் காவிரியின் அழகையும், அவசியத்தையும் உணர்ந்த காரணத்தினால் தமிழ் புலவர்கள் அனைவரும் காவிரியைப் பாடாமல் தங்கள் பாடல்களையும், காவியங்களையும் நிறைவு செய்வதில்லை. தமிழ் இலக்கியங்கள் கூறும் காவிரியின் கவின்நயத்தைக் காணலாம்.

பட்டினப் பாலை (1-6)

வசையில் புகழ்வயங்கு வெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய களியுணவின், புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்யினும் தான் பொய்யா, மலைத்தலை இய கடற்காவிரி.

பொருள்: வெள்ளி எனப்படும் நட்சத்திரமானது தான் செல்லுவதற்குரிய திசையாகிய வடக்கு செல்லாது தெற்கு நோக்கிச் சென்றாலும், வானம்பாடி என்னும் பறவை மழை துளியாகிய உணவைப் பெறாமல் வருந்தும்படி மேகம் பொய்த்த பஞ்சகாலம் உண்டானாலும் தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்து வருகின்றதும், குடகுமலையினிடத்தே தோன்றி கடலில் சென்று விழுவதுமான காவேரியாறு என்றும் நீர் வருவதின் தவறாத் தன்மையும் அந்த ஆறு தோன்றி விழும் இடமும் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

புறநானூறு
புனிறு திர்குழவிக்கிலிருந்து பசும் பயிறுவளர்த்துபொன்கதிருக ஆக்குபொன் கொழிக்கும் காவேரியே.

பத்துப்பாட்டு
பொருநராற்றுப்படையில் 238-248 வரிகளில் காவேரியின் மகிமையால் சோழநாடு நெற்களஞ்சியம் என்று விளக்கப்படுகிறது.

நரையும் நரந்தமும் அகிலுமாரமும்
 துரைதரைதோறும் பொறையுயிர் தொழுகி
துரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம்புகு தொரும்
  புனலாடு மகளிற்கதுமெனக் குடையக்
சூடு கோடாக பிறக்கி நாடொறுங்
 குன்றெனக்குவை இயக்குன்றாக் குப்பை
 சாலிநெல்லின் சிறை கொள்வேலி
 காவேரிபுரக்கு நாடுகிழவோனே.


சிலப்பதிகாரம்

நாடுகாண் காதையில்: கடல்வனனெதிர்க் ‘‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் கயவாய் நெரிக்கும்'', எனக் கூறி புனலொடு எப்பொழுதுமிருந்து நின்நாட்டைப் புனல் நாடென பெயர் எடுக்கசெய். நின்னாட்டில் ‘‘தாம்பியும், கிழாரும் வீங்கிசையேத்தமும்'' ஒலிக்கவேண்டாம் என்று காவேரியை பற்றிக் கூறப்படுகிறது.

‘‘சிலப்பதிகார ஆசிரியர், காவேரியாறு வாழிகாலம் வரை சோழநாட்டிற்கு தன் வற்றாத வளஞ்சுரக்கும் ஈகையினை அழகுற மொழிந்துள்ளார்.''
‘‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும்
தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழிகாவேரி''

மற்றும் இளங்கோவடிகள் காவேரி தரும் வளத்தை சித்தரித்து காட்டுகிறார். - (சிலப்பதிகாரம்)

‘‘உழவர் ஒதை மதுகு ஒதை; உடைநீர் ஒதை; தண்பதங்கொள்
நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப.''
‘‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி.''
பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி.

பொருள்: பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்கள் கூட்டங் கூட்டமாக ஆடவும், குயில் அதற்கேற்ப இசைபாடவும் உள்ள பக்கங்களையுடைய காவேரி என்றும் மகளிர் காவேரி யம்மனை புதுநீர்ப் பெருக்கின்போது தூபதீபங்காட்டி வழிபட்டு வழியனுப்பும்போது இடும் பூமாலைகளை தாங்கிச் செல்லும் காவேரி யென்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச்சாத்தனார் கூறுவதாவது :

(1) கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை.''

தமிழ்நாட்டின் வளத்துக்கு காவேரி காரணமாயிருப்பதால் தண்தமிழ்ப்பாவை யெனக் கூறப்பட்டுள்ளது.

மணிமேகலை
(2) துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோ
அறக் கொல்வேந்தன் அருளிலன் கொல்லோ
சுரந்துகாவேரி புரந்து நீர்பரக்கவும்
நலத்தகையின்றி நல்லுயிர் கெல்லாம்
அலத்தற் காலையாகியது ஆயிழை.

ஆசிரியர் ‘‘பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை'' என்ற பகுதியில், காவேரி எப்படிப்பட்ட காலத்தும் நீர்வளம் குன்றுதலில்லை யென்று அதன் சிறப்பை விளக்குகிறார்.

அதே நூலில், காவேரிப்பட்டினத்தின் தேவதையான சம்பாதேவி காவேரியை வரவேற்கும்போது,

காவேரி நெற்களஞ்சியம் பொற்களஞ்சியம் மட்டும் அல்லாமல் வருங்காலத்தில் மின்னொளி எடுத்து நாடெங்கும் மக்கள் விளக்கிட்டு ஒளியைப் பரப்ப போகின்றது என்பதையும் அறிவிக்கின்றது போலும்!

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் தனது
காகம் கவிழ்த்த காவிரிப்பாவை
ஆணுவிசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்தவிளக்கு. (மணிமேகலை)
காவேரியைப் பற்றி புகழுங்கால்,
‘‘வருநற் கங்கை வடதிசைப் பெருமையும்,
தென்திசைச் சிறுமையும் போக்கி.''
என்று திவாகர நிகண்டு கூறுகிறது.


பாரதம்
‘காவேரி யென்னத் தப்பா கருணை' என புகழப்படுகிறது.

கம்பராமாயணம்
(1) ‘காவேரி நாடன்ன கழனிநாடு' என ஆசிரியர் கூறுகிறார். கோசல நாட்டின் சிறப்பைக்கூற வந்த கம்பர் நதியின் பெருமையால் விளக்குகிறார். காவேரி நதி பாய்கின்ற சோழ நாட்டைப் போன்ற ‘கோசலநாடு' என்று நதியின் மூலமாய் நாட்டின் பெருமை விளக்கப்படுகிறது. நாட்டின் பெருமையை விளக்குவதற்கு எடுத்துக்காட்டாக நிற்பது காவேரியே. நதி என்றாலே காவேரி நதியை தான் குறிக்கும். அது அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

அகத்தியப்படலம்
(2) ‘‘கன்னியில வாழைகனி யீவகதிர்வாலின்
செந்நெலுள தேனொழுகு போதுமுளதெய்வம்
பொன்னியென லாயபுனலாறு முளபோதா
அன்னமுள பொன்னிவளொடன் பின்விளையாட.''
என்று கூறுமிடத்து தாய்நாட்டுப் பற்றுடை கம்பர் புண்ணியத்தன்மை பொருந்திய காவேரி நதியை ‘தெய்வப் பொன்னி' என குறித்துள்ளமையால் காவேரியின் ஏற்றம் புலனாகும்.

(3) கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம்
சுக்ரீவன் சீதையைத் தேடும்படி வானரர்களைத் தென்பால் சென்று பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிடுகையில் காவேரி நாட்டை குறிப்பிடுகிறார்.

......................அதற் பிள்ளையவை நளிநீர் பொன்னிச்
சேடுறு தண்புனற் றெய்வத் திருநதியின்
யிருகரையுஞ் சேர் திருமாதோ.

(4) கம்பர் அகத்திய படலத்தில் அகத்திய முனிவனது சிறப்புகளைப் பற்றி கூறுமிடத்து, (ஆரணிய காண்டம் - அகத்தியப் படலம் - 46-ம் செய்யுள்)

‘‘எண்டிசையும் ஏழுலுலகம் எவ்வுயிர்க்கும் வுய்யக்
குண்டிகையினில் பொருஇல் காவேரி கொணர்ந்தான்.''
என்று புகழ்கின்றார். இதன்மூலம் காவேரியானது எட்டு திக்குகளும், ஏழுலுலகங்களும், அவற்றிலுள்ள எல்லா உயிர்களும் நற்கதி அடையும்படி ஒப்புயர்வற்றுத் தவழ்ந்து செல்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சேக்கிழார்
பெரிய புராணத்தில் காவேரி நதியைப் பூமகளின் மார்பில் திகழும் முத்துமாலையாக வர்ணிக்கிறார்.

1. ‘‘ஆதி மாதவமுனி யகத்தியன்தரு
பூதநீர்க்கமண்டலம் பொழிந்த காவேரி
மாதர் மண்மடந்தை பொன்
மார்பிற் றாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத்தாம மொக்குமால்.''

2. திங்கள் சூடியமுடிச் சிகரத்துச்சியிற்
பொங்கு வெண்டலை நுரைபொருது போதலால்
எங்கணாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாங் கன்னிநீத்தமே.

3. மாவிரைத் தெழுந்தார்ப்ப வரைதரு
பூவிருத்த புதுமதுப் பொங்கிட
வாவியிற் பொலிநாடு வளந்தரக்
காவேரிப்புனல் கால்புரந் தோங்குமால்.

ஔவையார்
சோழன் மன்னன் ஔவைப் பிராட்டியை நோக்கி நீங்கள் எங்கிருந்து வந்தாய் என்று கேட்க,
...........................
..........................கூனல்
கருந்தேனுக்குக் கண்ணாந்த காவேரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கேயிடம்.

மற்றொரு சமயம் சிலம்பி என்னும் தாசிக்கு கம்பன் பொன் வாங்கிக்கொண்டு எழுதிக்கொடுத்த அரைப்பாடலை ஔவை பிராட்டியார் கூழுக்காகப் பூர்த்தி பண்ணிப் பாடினாள். முதல் இரு அடிகள் பின்வருமாறு:

‘‘தண்ணீருங் காவேரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே.''

மற்றொரு இடத்தில் ‘சோழவள நாடு சோறுடைத்து' என்றும் கூறுகிறார்.

ஒட்டக்கூத்தர்
வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்துளியோ டிறங்குஞ் சோணாடா.

பொருள்: காவேரி நீர் பிரவாகத்தில் கோபங்கொண்ட வாளை மீன்கள் வேலிகளாக அமைந்துள்ள கமுக சோலைகளின் மீதேறி துள்ளி மேகபடலத்தை பிளந்து மழை துளியோடு இறங்கும் சோழநாடு.

புகழேந்திப் புலவர்
‘‘பங்கப் பழனத்து முழவர் பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட்டெறிய குரங்கிள நீர்தமைக்கொண் டெலியுந்தமிழ்நாடா.''

நீர்வளமும் சோறும் பொருந்திய காவேரி கழனிகளில் உழவர்கள் சுவை நிறைந்த பலாபழங்களை குரங்குகள் பிடுங்கினவென்று கழனிகளில் விளைந்த சங்குகளைக் கொண்டு வீசவும், குரங்குகள் இளநீர்தமைகொண்டு எறிகின்ற இடத்தையுடைய சோழநாடு என்று கூறுகிறார். மற்றொரு இடத்தில் புகழேந்திப் புலவர் காவேரி கரையிலமர்ந்துள்ள திருநெய்தானத்துப் பெருமானை புகழ்ந்து பாடுகையில் காவேரியின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். நீர் வற்றுதலில்லாத ஓடைகள். பாரை என்னும் மச்சங்கள், மேகத்தை தொட்டுள்ள கமுக மரங்களில், மீன்கள் மேலே தாவிப் பாக்கு குலைகளை உதிரும்படி செய்கின்றன. பின்னர் திரும்பி நெல் வயல்களில் தாளடியில் வீழ்கின்றன. மீண்டும் கரும்பாலைகளின் பாகு வெள்ளத்திற் பாய்ந்து விளையாடுகின்றன.

சொக்கநாதப் புலவர்
இவர் தொண்டை நாட்டில் பிறந்தவராயினும் அவருடைய தனிப்பாடல்களில் ஒன்றில் திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் துதிக்கும் வகையில் காவேரியின் சிறப்பையும், உருப்படுத்தியிருக்கிறார்.

அவர் சொல்லுவதாவது குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த காவேரி நதி பாய்கின்ற சோழநாட்டில் ஓர் அதிசயம் உண்டு. கண்ணெதிராக நாரையின்மீது வெண்காடைக்கு இடப்புறத்தே பசுமையாகிய அன்னப்பறவை சேர்ந்திருப்பதையும் பார்த்தோம் என்கிறார். சிவபெருமானின் வெள்ளை எருது திருவெண்காட்டு சிவபெருமான்- பச்சை அன்னம் பார்வதிதேவி என்றும் பொருள்படும்.

காளமேகப் புலவர்
ஒருசமயம் புலவர் காவேரியாற்றுக்கும் ஆட்டக்  குதிரைக்கும்சிலேடையிடநேர்ந்தது.

‘‘ஓடுஞ்சுழி சுத்த முண்டாகுந் துன்னவரைச்
சாடும் பரிவாய் தலைசாய்க்கும் - நாடறிய
தேடுபுகழான் திருமலைராயன் வரையில்
ஆடுபரி காவேரி யாமே.''

நீர் விரைவாயோடும், நீர் சுழியுமுடையதாகும், சுத்தம் உண்டாகும், ஸ்நானம் செய்பவருக்கு உள்ளும், புறமும் தூய தன்மையை அளிக்கும், மலர்களை மோதி ஒதுக்கும், உயர்ச்சியுள்ள அலைகளை பக்கங்களில் வீசும். இது ஆற்றைப் பற்றிய வரையில் உள்ள பொருளாகும்.

பிறநூல்களிலிருந்து வரலாறு
காவிரி தோன்றிய வரலாறு, நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார் இயற்றியுள்ள ‘பிரபு லிங்க லீலை' என்னும் நூலின் விநாயகர் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடலாவது:

‘‘சுர குலாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
கரக நீரைக் கவிழ்த்த மதகரி
சரணம் நாளும் தலைக்கு அணி ஆக்குவாம்''

என்பது பாடல். அகத்தியனின் கமண்டலம் தந்த காவிரி, மண் மடந்தையின் மார்பில் ஒரு முத்து மாலை அமைந்திருப்பது போல் தோன்றுவதாகக் கூறுகிறார். சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. பாடல்:

‘‘ஆதி மா தவ முனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்'' (திருநாட்டுச்சிறப்பு –21)

செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் உள்ள ஒரு குறிப்பு கவனிக்கத் தக்கது. சோழன் ஒருவன் காவிரியைக் கொண்டு வந்ததாக ஒரு செய்தி இந்நூலில் சுட்டப்பட்டுள்ளது.

‘‘காலனுக்கு இது வழக்கென உரைத்த அவனும்
காவிரிப் புனல் கொணர்ந்த அவனும் ...''

என்பது பாடல் பகுதி.

காவிரி ‘ஹொகெனகல்' நீர்வீழ்ச்சியாய்க் கீழே விழுந்ததும் ஒரு பெரிய பள்ளத்தாக்கில் மறைந்து விட்டதாம். பிறகு வெளிப்படவில்லையாம். நீதிவழுவா மன்னன் ஒருவன் தன் உயிரைக் கொடுத்தால் மீண்டும் காவிரி வெளிப்படும் என்று அறிவிக்கப்பட்டதாம். அதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன் தன் உயிரைத் தந்து காவிரியை வெளிக் கொணர்ந்து தொடர்ந்து ஓடச் செய்தானாம். இதுதான் சோழன் காவிரி கொண்டு வந்து ஒரு புது வரலாறு.

காவிரி கால்ளால் (கால்வாய்களால்) வளப்படுத்துவதைக் கலிங்கத்துப் பரணி (278) பின்வருமாறு கூறுகிறது.

‘‘காலால் தண்டலை உழக்கும்
காவிரியின் கரை மருங்கு''

பல கிளைக் கால்வாய்கள் பிரியப் பிரியக் காவிரி குறுக்களவில் மிகவும் சிறுத்து விட்டது.

தமிழ்நாட்டில் ஓமலூர், திருச் செங்கோடு மாவட்டங்களில் வடக்குத் தெற்காக ஓடும் ஆறு, பின்னர்ச் சோழ நாட்டில் தென் கிழக்காக ஓடுகிறது என்பதை அக நானூற்றில், (76).

‘‘சிறைபறைந் துரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அந்தண் காவிரி போல''

என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது. நாம் இப்போது இதை நேரிலும் காண்கிறோம். முன்னோரிடத்தில் காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுவதால்தான் இங்கே செங்குணக்காக ஓடுகிறது என்று சொல்லவேண்டியது நேரிட்டது. செங்குணக்கு நேர் கிழக்கு. பதிற்றுப்பத்து (50) என்னும் நூலிலும்,

‘‘செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிரைக்
காவிரி யன்றியும்...''
என இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதிதாசன் கா விரிதல் என்னும் அடிப்படையில் ஒரு பாடல் அளித்துள்ளார்:

‘‘பூ விரிந்து வானெங்கும் தேன் விரிந்து
பொன்விளைந் தாற்போலும் நறும்பொடி விரிந்த
கா விரிதல் போலெங்கும் விரிதலாலே
காவிரியாறு என்றார்கள்''

என்பது பாடல், விரிதல் என்பதை அடிப்படையாக வைத்து இப்பாடலில் பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளமை காணலாம்.

காவிரிக்குப் ‘பொன்னி' என்னும் பெயர் ஒன்றுள்ளது. காவிரி தன் நீர் வளத்தால் நாட்டில் பொன் கொழிக்கச் செய்கிறது – அதாவது –செல்வம் பெருக்குகிறது– என்ற பொருளில் பட்டினப்பாலையில் ஒரு பெயர்க்காரணம் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவறா வியன் கழனி''

என்பது பட்டினப் பாலைப் பாடல் (7, 8) பகுதி. மற்றும், காவிரி மழைக் காலத்தில் வண்டலுடன் குழம்பாகச் செல்லும். அந்நீரில் பொன் துகள் போன்ற பொடி மின்னும்.

சேந்தன் திவாகரம் – இடப்பெயர்த் தொகுதியில் ‘‘பொன்னி காவிரி'' (50) எனக் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் உண்மை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘‘திருவரங்கத்துப் பெருநகரில் தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையால் அடிவருடிப் பள்ளி கொள்ளும் கருமணி''-  குலசேகர ஆழ்வார் – திவ்வியப் பிரபந்தம்
 
‘‘பொன்னி சூழ்திருவரங்கா'' – தொண்டரடிப்பொடி யாழ்வார் – திவ்வியப் பிரபந்தம் (901)

‘‘வளவர் பொன்னி வளந்தரு நாடு '' – சம்பந்தர் தேவாரம்

‘‘செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள்
வந்தவைக்கும் திருவையாறே'' – சம்பந்தர் தேவாரம்

‘‘வரைவந்த சந்தோ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால் '' – சம்பந்தர் தேவாரம்

‘‘தீர்த்த நீர் வந்திழி தரு பொன்னியின் பன் மலர்'' – சம்பந்தர் தேவாரம்

‘‘மத்த யானையின் கோடும் வண்பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகரமேவு சாய்காடே'' – சம்பந்தர் தேவாரம்

(சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து) –

‘‘போலும் நான்முகனையும் பொன்னிமா நதி''
‘‘எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால்'' (57)
‘‘பாலைந் துறைப் பொன்னி நீர்''
‘‘செம்பியர் பொன்னி நாடு'' & (502)
‘‘சோழர் பொன்னித் திரு நாடு (1022)''
‘‘பூந்தன் பொன்னி ... அளிக்கும் புனல் நாடு (1211)
‘‘பொங்கு புனலார் பொன்னியின் இரண்டு கரையும்(1571)
‘‘வாய்ந்தநீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாடு

ஒட்டக் கூத்தரின் நூல்களிலிருந்து:

‘‘கொள்ளும் குடகக்குவடு அறுத்திழியத்
தள்ளும் திரைப் பொன்னி தந்தோன்'' - விக்கிரம சோழன் உலா  23, 24

‘‘சென்னிப் புவியேறிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதி'' - வி.சோ. உ. 25, 26.

‘‘பொய்யாத பொன்னிப் புதுமஞ்சனம் ஆடி''  வி.சோ.உ. 87

‘‘மன்னர் குலப் பொன்னி ஆடுதிரால்
அன்னங்காள் நீரென் றழிவுற்றும் – வி. சோ. உ. 509.

‘‘பிழையாத பொன்னித் துறைவன் பொலந்தார் '' – வி. சோ. உ. 520

‘‘மண் கொண்ட பொன்னிக் கரை கட்ட வராதார்'' - குலோத்துங்க சோழன் உலா.

‘‘முடுகிக் கரை எறிந்த பொன்னி'' &இராச ராச சோழன் உலா- 29

‘‘பொன்னிக்கும் கோதா விரிக்கும் பொருளைக்கும்
கன்னிக்கும் கங்கைக்கும் காவலனை –சென்னியை ''-  இ.ரா.சோழன் உலா& 493-94

‘‘வற்றாத பொன்னி நதி'' &குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்- 15

‘‘பொன்னி யாற்றுப் புனற்போலத் தொடர்வதூண்டாம் ''- பாரதிதாசன்

இன்னும் கந்தபுராணம் கந்தபுராண வெண்பா முதலிய பலப்பல நூல்களில் பொன்னி என்னும் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆழ்வார்களால், பூம்புனல் பொன்னி வருபுனல் பொன்னி, வருநீர்ப் பொன்னி, செல்வப் புனல்பொன்னி, செழும் பொன்னி
என்றெல்லாம் ‘‘பொன்னி'' எனக் காவிரி செல்லமாக அழைக்கப்பெற்றுள்ளது.

 சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடு நாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல்:

‘‘அலங்கு கதிர் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர் பூட்டத்
தோடு கொள் வேலின் தோற்றம் போல
BkPs கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே''

கதிர் பரப்பும் ஞாயிறு கிழக்கே மட்டுமன்றி நான்கு திசைகளிலும் தோன்றினாலும், வடக்கே இருக்க வேண்டிய வெள்ளி தெற்கே செல்லினும் – அதாவது கோள் நிலையில் எந்த மாறுபாடு தோன்றினும் – சோழ நாட்டுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் காவிரியாறு நாடு முழுதும் நீர் ஊட்டுவதனாலே, வேலின் தோற்றம்போல் கரும்பு தோன்றும் சோழ நாடே நாடு எனப்படும் –என்பது பாடலின் கருத்து.

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (386) வருக:-

‘‘குணதிசை நின்று குடமுதல் செலினும்
குடதிசை நின்று குணமுதல் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளி யாம்
வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே'' (22-27)

வெள்ளி என்னும் கோள் (சுக்கிரன்) கிழக்கேயிருந்து மேற்கே செல்லினும், மேற்கே யிருந்து கிழக்கே சென்றாலும், வடக்கேயிருந்து தெற்கே சென்றாலும், இருக்கக் கூடாத தென் திசையை விட்டு அப்பால் செல்லாமல் அங்கேயே நீண்ட நாள் இருப்பினும்,(கோள் மாறுபட்டதால் மழை வளம் குன்றினும்) எமக்கு வேண்டிய வளத்தை உணர்ந்து வழங்கும் சோழன் தாள் வாழ்க – என்பது பாடல் கருத்து.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நல்விறையனார் பாடிய பாடல் பகுதி வருமாறு(393):

‘‘கோடை யாயினும் கோடா ஒழுகத்துக்
காவிரி புரக்கும் நல்நாட்டுப் பொருந''
‘‘வற்றாத பொன்னி நதி'' &ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
‘‘பொய்யாத பொன்னிப் புது மஞ்சனம் ஆடி''&
‘‘பிழையாத பொன்னித் துறைவன் பொலன்தார்''  ஒட்டக் கூத்தரின் விக்கிரம சோழன் உலா

அடுத்து, வில்லி பாரதம்&ஆரணிய பருவம்&அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் உள்ள 24 ஆம் பாடல்:

‘‘நீவிரே யல்லீர் முன்னாள் நிலமுழு தாண்ட நேமி
நாவிரி கீர்த்தி யாளன் நளனெனும் நாம வேந்தன்
காவரி என்னத் தப்பாக் கருணையான் சூதில் தோற்றுத்
தீவிரி கானம் சென்ற காதை நும் செவிப்படாதோ?''

இந்தப்பாடலில், சூதில் தோற்று விட்ட மன்னன் நளன், காவிரி ஆறுபோல் தப்பாமல் பலர்க்கும் வழங்கும் அருள் உடையவன் - எனப் பாராட்டப்பட்டுள்ளான்.

அடுத்துப் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில்,

‘‘புகுந்து மொழிப் பேச் செல்லாம் பொன்னியாற்றுப்
புனல் போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்''

பொன்னியாம் காவிரி யாற்று நீர் தொடர்ந்து பாயும் என்னும் குறிப்பு இப்பாடல் பகுதியில் அமைந்துள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இரண்டு பாடல் பகுதிகளைப் பார்க்கலாம்;

‘‘கங்கை யமுனை காவிரி முதலிய
வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்''
‘‘வற்றலில் கங்கை காவேரி
 வளஞ் செய் பரத நாட்டினிலே'' - மலரும் மாலையும்

கங்கையைப் போலவே காவிரியும் வற்றாதது என்னும் கருத்து இப்பாடல் பகுதிகளால் அறிய வருகிறது.
இறுதியாக,

‘‘காவிரி தென்பெண்ணை, பாலாறு- தமிழ்
கண்டதோர் வைகை பொருனை நதி- என
மேவிய ஆறு பலவோடத் - திரு
மேனி செழித்து தமிழ்நாடு''

என்ற பாரதியின் பாடல் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பது ஆறுகள்தான். இருப்பினும், அவற்றுள் காவிரியே முதன்மையானது என்ற பாரதியின் பாடல்வழி அறிந்து இன்புறுவோமாக.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/5/w600X390/cauvery_water.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/29/இலக்கியத்தில்-காவேரி-3316255.html
3320035 தமிழ் மொழித் திருவிழா பழந்தமிழகத்தில் வரலாற்று, பண்பாட்டு வளர்ச்சியும் நகரமயமாக்கமும்  வீ.செல்வகுமார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் DIN Thursday, January 2, 2020 01:38 PM +0530
தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் தொல்பழங்கால மக்கள், அதாவது   நவீன மனிதர்களின் மூதாதையர்கள் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர். இக் கருத்தைச் சென்னைக்கருகில் உள்ள கொற்றலையாற்றுப் படுகையில் கிடைக்கும் கற்கருவிகள், மண்ணடுக்குகள் ஆகியவற்றை இராபர் புரூஸ் பூட், வில்லியம் கிங், பானர்ஜி செய்த ஆய்வுகளும் அவர்களைத் தொடர்ந்த சாந்தி பப்பு அவர்களின் அண்மைக்கால ஆய்வுகளும் உணர்த்துகின்றன. கைக்கோடரி என்னும் பெரிய கருவிகளைப் பயன்படுத்திய இத் தொல்மனித இனம் வேட்டையாடி உணவு சேகரித்தது. எனவே, ஒரு மனித மூதாதையர் இனம் தமிழகத்தில் அக்காலத்திலிருந்து வாழ்ந்திருந்தனர் என்பது தெளிவு. ஆனால், காலப்போக்கில் இவர்கள் என்ன ஆயினர் என்பதும், இவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சி என்ன என்பதும்   நமக்குத் தெரியவில்லை. இவர்களுடைய திறனை நாம் குறைத்து மதிப்பிட முடியாது, மிக அழகாக, கருவிகளை இயற்கையான இலைகளின் வடிவில்  நேர்த்தியாக, சமச்சீராக (symmetry) உருவாக்குவதில் இவர்கள் வல்லவர்களாக இருந்தனர். தமிழகப் பண்பாட்டு வரலாறு எனும் ஆலமரத்தில் இவர்களின் விழுது முதல் விழுதாகலாம். தமிழகப் பண்பாட்டு மரபில் இவர்களது விழுதின் தொடர்ச்சி உண்டா என்பது  நமக்குத் தெரியவில்லை.

ஹோமோ சேப்பியன் எனப்படும் நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவிலும், தமிழகத்திலும் படிப்படியாகக் குடியேறி இருந்திருக்கலாம் என அண்மைக்கால மரபணு ஆய்வுகள் சுட்டுகின்றன. இக்காலத்திலிருந்து மனிதர்கள் குழுக்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழத்தொடங்கினர். இதைத் தொல்பழங்காலத்தின் இறுதி நிலை எனலாம். 
தமிழக வரலாற்றில் நுண்கற்காலம் முதல் தொடர்ச்சியான பண்பாட்டு வளர்ச்சி இருந்து வருகின்றது என்பதைத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இக்காலத்தில் வேட்டையாடி உணவு சேகரித்த குடிகள் வாழ்ந்துவந்தனர். மிகச் சிறிய முக்கோண, பிறை வடிவக்கருவிகள், கூர்முனைகள், சுரண்டிகள் ஆகியவற்றைக் கற்களில் செய்து இக்கால மக்கள் பயன்படுத்தினர். குவார்ட்ஸ் எனப்படும் சிக்கிமுக்கி கற்கள், பளிங்குக் கற்கள், செர்ட் எனப்படும் பல நிறத்தாலான கற்களை இவர்கள் பயன்படுத்தினர். இவர்கள் நாடோடிகளாக இடத்திற்கு இடம் புலம்பெயர்ந்தும், குகைகளிலும், தற்காலிக சிறு குடிசைகள் அமைந்த்தும் வாழ்ந்திருக்கலாம். இக்காலம் சுமார் 10,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் தொடங்கியதாகும். இவர்களைத் தமிழகத்தின் தொன்மையான அல்லது பழங்குடிகளில் ஒரு குழுவினர் எனக் கருதலாம். இவர்கள் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், திரிந்த பாலைத் திணைகளில் வாழ்ந்தனர். இவர்களுடைய சான்றுகள் சென்னைப் பகுதி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர்-மருதமலை, தஞ்சாவூர்- நாகப்பட்டிணம்-திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை-குண்டாற்றுப் பகுதி, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி-தேரி மணற்குன்றுகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மிகப்பரவலாகக் கிடைத்துள்ளன. எனவே, தமிழகம் முழுதும் வாழ்ந்த இப்பழங்குடிகள் வேட்டையாதல், மூலிகை அறிவு, சுற்றுச்சூழல் அறிவைப் பெற்று தமிழகப் பண்பாட்டின் அடித்தளத்தின் ஒரு தூணை உருவாக்கினர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் நெய்தல், பாலை, குறிஞ்சித் திணைகளின் பண்பாட்டுக் கருவை, வாழ்க்கை முறைகளை உருவாக்கினர் எனலாம்.  இவர்கள் என்ன மொழி பேசினர் என்பது ஒரு புரியாத புதிர் எனலாம்.  இவர்கள் திராவிட மொழிகளின் மூத்த மொழியைப்பேசினரா? அல்லது வேறு மொழிக் குடும்பத்து மொழியைப் பேசினரா என்பது  தெரியவில்லை. ஆனால் இக்கால மனிதர்களின் மரபணு இன்று தமிழகத்தில் வாழும் மக்களிடையே உள்ளது என்பது தெளிவாகும்.  தமிழகப்பண்பாடு எனப்படும் ஆல மரத்தில் இவர்களது விழுதுகளும் ஒன்றாகும்.


 படம் நுண்கற்காலக் கருவிகள்

இக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்திருந்தன. இலங்கையில் வெட்டர் எனப்படும் வேடர் குழுக்கள் இருந்தன. இலங்கையில் நுண்கற்கால மக்களின் சான்றுகள் கிடைத்துள்ளன.  மேலும் மனித இனங்களின் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. சுமார் 25000 ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன இலங்கையில். இக்கால வரலாற்றை இலங்கை இந்தியா எனப் பிரிக்க முடியாது. தமிழகத்தில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் குழுக்களுடன் தொடர்புடைய ஒரு குழு இலங்கையிலும் வாழ்ந்தது என்பது உறுதியாகும். 

தமிழகத்தின் தொல்பழங்கால வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் இந்தியா முழுமையும் உருவான பண்பாடுகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் திராவிட மொழிக்குடும்ப மொழிகளும், ஆஸ்திரோஆசிய மொழிக்குடும்ப மொழிகளும் தொல்பழங்காலத்தில் பரவியிருந்தன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியா பகுதியிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்ற கருத்து அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமையான பண்பாட்டுப்பரவல் அக்காலத்தில் நடந்திருந்தது. ஆனால், இவர்களின் மொழிகள், பண்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வது எளிதல்ல.  ஆனால், வட இந்திய, மத்திய இந்தியப் பகுதிகளிலும் திராவிட மொழி பேசியவர்கள் இருந்தனர்.
சிந்து வெளிப்பண்பாட்டு மக்கள் தழைத்தோங்கிய காலத்தில் அதாவது பொ.ஆ.மு. 2600 (சுமார் 4600 ஆண்டுகளுக்கு முன்னர்) லிருந்து 1900 வரை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல மக்கள் குழுக்கள் வாழ்ந்தன. புதியகற்காலம் எனப்படும் ஆடுமாடு வளர்த்த, வேளாண்மை செய்த பண்பாட்டு மக்கள் குழுக்கள், தென்னிந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருந்தனர். இவர்கள் வாழ்ந்த இடங்களில் சாம்பல் மேடுகள், மாட்டுத் தொழுவத்தின் சான்றுகள், பானையோடுகள், கற்கருவிகள், மெருகேற்றப்பட்ட பானை வகைகள் ஆகியவை கிடைக்கின்றன.  இவர்களின் ஒரு பகுதியினர் தமிழகத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர். குறிப்பாக ஆடுமாடு வளர்த்து வேளாண்மை செய்த இப் பண்பாட்டு மக்கள் குழுக்கள், தமிழகத்தின் வடமேற்கு – தருமபுரி, கொங்குப் பகுதிகளில் சுமார் 4000-3000 ஆண்டுகளுக்கு முன்னர் பரவினர். இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து சிறுதானிய வேளாண்மையைச் செய்தவர்கள். தமிழகத்தில் ஓரளவு நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கியவர்கள் இவர்கள் பானைகளைச் செய்தனர். தங்களக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே செய்திருக்கவேண்டும். குயவர் என்ற சமூகப்பிரிவு உருவாகவில்லை.   இவர்கள் படிப்படியாகத் தமிழகத்தில் வளர்ந்தனர். சில வேட்டையாடும் குழுக்களும் ஆடுமாடுகள் வளர்ப்பையும், சிறுதானிய வளர்ப்பை பரிமாற்றம், இவர்களிடமிருந்து பெற்று மாறியிருக்கலாம். இவ்வாறாக, முல்லை நிலவாழ்க்கை இம்மக்களால் உருவக்கப்பட்டது. இத்தகைய முல்லை நிலப் பண்பாட்டு உருவாக்கம் இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. புதிய கற்காலப் பண்பாடு ஒரளவு சிறிய அளவில் உருவெடுத்தது. தமிழகப் பண்பாட்டின் ஒரு விழுது இக்கால மக்கள் எனலாம். 
புதிய கற்காலத்தில் மெருகேற்றப்பட்ட கோடரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இவை இரும்புக்காலத்திலும், வரலாற்றுக் காலத்திலும் பின்னர் இன்று வரையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவை மட்டுமே இரு தொல்லியல் இடத்தை புதியகற்கால இடம் என நிரூபிக்க போதுமானவை அல்ல. பானையோடுகளும் பிறசான்றுகளும் அவசியமாகும். தமிழகத்தில் பல இடங்களில் இவை கோயில்களில் வழிபடப்படுகின்றன. 
 
சிந்துவெளிப்பண்பாடுகள் வீழ்ந்த பின்னர் மக்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்தனரா? என்பதும், இரும்புக் காலத்தில் தமிழகத்தில் குடிபெயர்ந்த மக்கள் யார் என்பதைப் பற்றியும் நமக்கு ஒரு தெளிவான புரிதல் இல்லை. தமிழகத்திற்கு கடல் வழியும் மக்கள் குடிபெயர்ந்து இருக்கலாம். இரும்புக்காலத்திற்கு முன்னர் மக்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். குறிப்பாக பொது ஆண்டு முறைக்கு முந்தைய 1900 முதல் 600 பொ.ஆ.மு வரை இந்தியாவில் எந்தவகையான பண்பாட்டுப்பரவல் இருந்தது என்பதை முழுமையாக ஆராயாமல் நாம் இதற்கு விடை காண இயலாது.  இரும்புக் காலத்தில் மக்கள் புலம்பெயரல் தென்னகத்தில் இருந்தது. இவர்களும் தமிழகப்பண்பாடில் ஒரு விழுது எனலாம்.  
சிந்துவெளியின் தொடர்ச்சியாக அறிஞர்கள் கூறுவது மூன்று வகையான கருத்துக்கள் நிலவுகின்றன: 1) சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் அல்லது திராவிட முந்துமொழியில் எழுதப்பட்டுள்ளன; 2) இரும்புக்காலப் பானையோட்டுக் குறியீடுகள் சிந்துவெளி எழுத்தை ஒத்துள்ளன; 3) சிந்துவெளி ஊர்ப் பெயர்கள் திராவிட ஊர்ப் பெயர்களாக உள்ளன; 4) மரபணு ஆய்வின் வழி வெளிப்படும் ஆய்வுமுடிவுகள்; என்பனவாகும். ஆனால், மரபணு ஆய்வு முடிவுகள் பலவிதமாக விளக்கப்பெறுகின்றன.

சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் முழுமையாகப் படித்தறியப்படவில்லை. இது நமது புரிதலுக்கு ஒரு தடையாக உள்ளது. இரா. பாலகிருஷ்ணன் சிந்துவெளி ஊர்ப்பெயர்கள், திராவிட ஊர்ப்பெயர்கள் குறித்த ஒற்றுமையை வலியுறுத்துகிறார். இதை ஒரு கருதுகோளாக எடுத்துக் கொள்ளலாம். இதில் மேலாய்வுகள் செய்து ஊர்ப் பெயர்களின் தொடர்பை காலங்காலமாக ஆராயலாம். இந்த ஆய்வின் ஒரு முக்கியமான வெளிப்பாடு தமிழகத்தின்  வரலாற்றை தமிழகத்தில் கிடைக்கும் சான்றுகளை மட்டும் வைத்தே ஆராய இயலாது. ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாறும், அதற்கப்பாலுள்ள பகுதிகளின் வரலாறும் ஒருமித்து ஆராயப்பெற வேண்டும் என்பதாகும். 
சங்க இலக்கியத்தில் வரும் கருத்துக்கள், சூழலியல் கருத்துக்கள், தொன்மங்களும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். சங்க காலப் புலவர்கள் இமயம் மற்றும் பல வட இந்திய பண்பாட்டு நிலவியல் குறித்த தகவல்களை அறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

எனவே சிந்துவெளிப்பண்பாடுகளுடன் தொடர்புடைய மக்கள் குழுக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்திருக்கலாம். இதைக்குறித்து கூடுதல் ஆய்வு வேண்டும். அவ்வாறெனில் இவர்களும் தமிழகப்பண்பாட்டு மரபின் ஒரு விழுது எனலாம்.  

இரும்புக்காலம் சுமார் 3000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னர் தமிழகத்தில் தொடங்கியது. கறுப்பு-சிவப்புப் பானை வகைகள்  புதிய கற்காலத்தின் இறுதிப் பகுதியில் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்தன. புதிய வகை கறுப்புசிவப்பு பானைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் சில இராஜஸ்தானத்தில் உள்ள செப்புக்காலப் பண்பாட்டின் பானை வகைகளை ஒத்தவையாகும்.  
இக்காலத்தில்தான் மருத நிலத்தில் மக்கள் வாழ்த்தொடங்கினர். வேளாண்மை பரவத்தொடங்கியது. மக்கள் குடிப்பெயரலும் தமிழகத்தில் தொடர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் சில மக்கள் குழுக்கள் தமிழகத்திற்கு வந்திருந்தால் அது இரும்புக்காலத்தின் தொடக்கம் அல்லது புதியகற்காலத்தின் இறுதியில்  நடந்திருக்க வேண்டும்.  சிந்திவெளியுடன் தொடர்புடைய சில மக்கள் குழுக்கள் தென்னிந்தியா, தமிழகத்திற்கு வந்தார்களா என்பது ஆராயப்பட வேண்டும். ஆனால், சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய கார்னீலியன் மணிகள், சங் வளையல்கள் போன்ற பல பொருள்கள் இரும்புக்காலத்திலும் பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிந்துவெளி எழுத்துக்கள் படித்தறியப்படாத வரையும், தொல்லியல் சான்றுகள் முழுமையாக வெளிப்படாதவரையும் இதை ஒரு முற்றுப்பெறாத விவாதம் என வைத்துக்கொள்ளலாம். 

இரும்புக்காலத்தில் பண்பாடு விரிவடைந்து தமிழகத்தின் சங்க கால, வரலாற்றுத் தொடக்க காலத்தின் அடித்தளம் இடப்பெற்றது. தமிழகத்தில் அரசுருவாக்கத்தின் அடித்தளம் இடப்பெற்றது. வேளிர், கிழவன், கோ போன்ற தலைவர்கள் தோன்றியிருக்கவேண்டும். வேளாண் ஊர்கள் தோன்றின. இரும்புக்கருவிகள் உருவாக்கப்பட்டன. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உருவாக்கப்பட்டன. குயவர்கள், கொல்லர் என தொழிற்குடிகள் உருவாகியிருக்கவேண்டும். மேலும் குடிகள் பல வகை குடிகள் உருவாகின. இவை சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன. தமிழகத்தின் இசைப்பாடல் மரபு இக்காலத்திலோ அதற்கு முன்னரோ தோன்றியிருக்க வேண்டும். 
தமிழகத்தில் குறிஞ்சியிலிருந்து கடற்கரைப் பகுதிக்கு பண்பாடு வளர்ந்தது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அனைத்து திணைகளிலும் வேட்டைப் பண்பாடு நிலவியிருந்தது எனத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. படிப்படியாக உருவாகி பல நிலங்களில் விளையும் பல்வகைப் பயிர்கள் போல  ஐந்திணைகளில் இவ்வாறு பண்பாடுகள் வளர்ந்தன.

இரும்புக்காலத்தில் பலவகை ஈமச்சின்னங்கள் எழுப்பப்பெற்றன. இந்த ஈமச்சின்னங்களை அலெக்சாண்டர் ரீ, எ.சுப்பராயலு, கா.இராசன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவற்றில் பலவித கார்னீலியன் மணிகள், இரும்புப் பொருள்கள், வெண்கலப்பொருள்கள் கிடைக்கின்றன. 

இரும்புக்கால ஈமச்சின்னங்களில் கற்பதுக்கை, கல்வட்டம், நெடுங்கள், தாழிகள், ஈமத்தொட்டி எனவும், கேரளாவில் குடைக்கல் தொப்பிக்கல் என்னும் வகைகளும் அடங்கும். ஈமச்சின்னங்களில் காணப்படும் இரும்புப் பொருள் போர், பூசல் தொடர்பானவையாக உள்ளன. இறந்தவர்களை வழிபட்டு, வீரர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எடுக்கும் வழக்கம் இக்காலத்தில்தான் தொடங்கியது. இச்சின்னங்கள், சங்க இலக்கியத்தில் வரும் குறிப்புகளையும் பல வித போர் மரபுகளையும் உணர்த்துகின்றன.  தமிழகத்தின் குகைகளில் காணப்பெறும் சில ஓவியங்கள் இக்காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.

மல்லபாடி குதிரைவீரர்கள் சண்டையிடும் காட்சி, படம் காந்திராஜன்
இரும்புக் காலத்தின் இறுதியில்தான் எழுத்தின் அறிமுகம் தொடங்கியது. நகரமயமாக்கம் தொடங்கியது. கொடுமணல், பொருந்தல், கீழடி அகழாய்வுகளின் அடிப்படையில் இதன் காலம் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இதை ஒரு கருதுகோளாக முன்வைத்து விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பெறவேண்டும். 

இவ்வாறாகப் பல காலங்களில் குடிபெயர்ந்து உருவான மக்கள் குழுக்களின், பண்பாட்டு மரபுகள் எனும் விழுதுகளின் தொகுப்புதான் இந்தியாவும், தமிழகமும். இவ்விழுதுகளின் தற்கால  அடையாளத்தை,  மக்களை எளிதில் இனம் காண்பது கடினமாகும். துல்லியமான ஆய்வுகள் சில கூறுகளை நமக்கு அடையாளப்படுத்தலாம்.

சங்க இலக்கியத்தைக் குறித்து ஆராய்ந்த நாம் அதற்கு முந்தைய புதிய கற்காலம், இரும்புக்காலத்தைக் குறித்து முறையாக ஆராயவில்லை. இலக்கியம் மொழியுடன் இணைந்து தமிழகத் தொல்லியலும் ஆராயப்படவேண்டும். தமிழகத் தொல்லியல் துறை தற்போது நல்ல முயற்சிகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தின் தொன்மை வரலாற்றை நன்கு அறியவேண்டும் என்றால் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவமும், நல்கையும் அளிக்கவேண்டும். ’தொல்லியல் வரலாறு இல்லை’ என்று பழம்பஞ்சாங்கம் போல் வாதிட்டால் தமிழகத்தின் முறையான வரலாற்றை அறிவியல்பூர்வமாக நாம் எழுத இயலாது. தமிழகத்தின் தொல்பழங்கால வரலாற்றை இதுவரை கண்டோம், எழுத்து உருவாகிய தமிழகத்தின்  நகரமயாக்கம்குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.

படம்: காந்திராஜன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/mh.gif புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மெருகேற்றப்பட்ட கோடரிகள் https://www.dinamani.com/language-fest/2020/jan/02/பழந்தமிழகத்தில்-வரலாற்று-பண்பாட்டு-வளர்ச்சியும்-நகரமயமாக்கமும்-3320035.html
3320042 தமிழ் மொழித் திருவிழா தனிநாயக அடிகளின் தமிழாய்வுப் பணிகள் அமுதன் அடிகள், தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம் DIN Thursday, January 2, 2020 01:38 PM +0530
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகத்தில் கல்வி வளர்ச்சி காணத் தொடங்கிய காலம் எனலாம். பல கல்வி நிலையங்கள் தோன்றிய காலம் அது. அதன் விளைவாகத் தமிழ் ஆராய்ச்சி தளிர்விடத் தொடங்கிய காலமும் அதுவே. உ. வே. சாமிநாத ஐயர் சி. வை. தாமோதரம் பிள்ளை எஸ். வையாபுரிப் பிள்ளை மறைமலை அடிகள் போன்றோர் தமிழ் நூல்களை ஆராய்ச்சி நோக்குடன் பதிப்பித்த காலம் அது. ஆகவே கல்வி வளர்ச்சியோடு ஆராய்ச்சியும் முளைவிடத் தொடங்கியது.

    ஆயினும் தமிழ் ஆராய்ச்சி ஒரு வரையறைக்குள் அடங்கியிருந்த காலமே அது எனலாம். இலக்கியமும் இலக்கணமுமே தமிழ் ஆராய்ச்சிககுத் தகுந்த துறைகள் என அக்காலத்து அறிஞர்கள் எண்ணியிருந்தது போலத் தோன்றுகிறது. இந்நிலையை மாற்றி தமிழ் இலக்கிய இலக்கணங்களோடு தமிழரின் கலைகள் வாணிகத் தொடர்புகள் வாழ்க்கை நிலை உளவியல் அயல்நாட்டுத் தொடர்புகள் போன்றவையும் ஆராயப்பட வேண்டும் எனத் தமிழ் ஆராய்ச்சியில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை சேவியர் தனிநாயக அடிகளாருக்கு உரியது. தமிழ் ஆராய்ச்சி தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் பிறமொழிகளிலும் - குறிப்பாக ஆங்கிலத்திலும் பதிவாக வேண்டும் என உறுதியாக நம்பிய அவர் Tamil Culture என்னும் ஆங்கில முத்திங்கள் ஆய்விதழை 1952- ஆம் ஆண்டில் தொடங்கினார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சென்றடைந்த அவ்விதழ் உலகளாவிய தமிழாராய்ச்சிக்கு வழிவகுப்பதாயிற்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற நாட்டு அறிஞர்களும் தமிழ் ஆய்வில் ஈடுட்டு தங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை Tamil Culture இதழில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதினர்.
    
இத்தகைய ஆய்வுகளை ஒருங்குபடுத்திட உலகத் தமிழறிஞர்களைக் கொண்ட அமைப்பு ஒன்றினை நிறுவவும் அடிகளார் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டார். அவரது அரிய முயற்சியின் விளைவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 1964- ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அடிகளார் நிறுவிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பெரும் முயற்சியால் பத்து உலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நடந்திருக்கின்றன.  உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இன்று கற்பிக்கப்படுகிறது. தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத எத்தனையோ பிற நாட்டு அறிஞர்கள் இன்று தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் 1961 –ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த அடிகளார் தமிழக  அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 26.07.1963 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப்பேராசிரியர்களை ஒன்று கூட்டி ஆண்டு தோறும் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை அடிகளார் முன் வைத்தார். தமிழ் வளர்ச்சிக் கழகமும் தமிழக அரசும் அக்கருத்தை ஏற்றுக் கொண்டன. 1964 –ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாட்டிற்குப் பின்பு அதனை நடத்தலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டது. ஆயினும் அக்கருத்தரங்கம் நடைபெறவில்லை.
    
1964 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள் முதல் 10 –ஆம் நாள் வரை டெல்லியில் உலகக் கீழ்த்திசை அறிஞர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினை நிறுவ அடிகளார் திட்டமிட்டார். அவ்வாறே பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழ் அறிஞர்களும் இந்தியவியல் அறிஞர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை அடிகளாரும் முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களும் ஏற்பாடு செய்தனர். அக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்துப் பணிபுரிய வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அடிகளாரும் கமில் சுவலபிலும் வலியுறுத்திப் பேசிய பின் மன்றம் அமைக்கப்பட்டது. பேராசியர் ஃபீலியோசா உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் பேராசிரியர்கள் தாமஸ் பர்ரோ எம்.பி எமனோ எஃப்.பி.ஜே. கிய10ப்பர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் பேராசிரியர்கள் கமில் சுவலபில் சேவியர் தனிநாயக அடிகள் ஆகிய இருவரும் பொதுச்செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மன்றமே கோலாலம்பூரில் நடந்த முதல் உலகக் தமிழ் மாநாடு தொடங்கி எல்லா மாநாடுகளையும் நடத்தி வருகிறது.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரே ஆயினும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உரோமையிலும் கல்வி பயின்றபோதெல்லாம் தமிழைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமே இல்லாதிருந்தார் தனிநாயகம். ஐரோப்பிய மொழிகளைக் கற்றுத் தேர்வதில் அதிலும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெறுவதில் தான் அவ்வமயம் தனிக் கவனம் செலுத்தினார். எனினும் 1945-ஆம் ஆண்டு தம் 32 –ஆம் வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில அவர் முன் வந்தது விந்தையிலும் விந்தை என்றே கூறவேண்டும். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன்குளத்தில் 1941 முதல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் அவர் தமிழரிடையே தமது பணியைச் செவ்வனே ஆற்றுவதற்காகத் தமிழ் கற்க முற்பட்டார். அவ்வமயம் சங்க இலக்கியத்தின் சிறப்பு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஆகவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயில் முடிவு செய்தார். பல்கலைக்கழகத்தில்  அன்று தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரும் சிதம்பரநாதன் செட்டியாரும் தமிழ் ஆய்வில் ஈடுபட அடிகளாரை ஊக்குவித்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் நான்கு ஆண்டுக்காலம் பயின்று தமிழ் முதுகலை இலக்கிய முதுகலை ஆகிய இரு பட்டங்களையும் பெற்றார். இலக்கிய முதுகலைப் பட்டத்துக்காகப் ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் தலைப்பில் அவர் ஆய்வு செய்து எழுதிய நூல் ‘பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் பலவகையிலும் விஞ்சி நிற்கின்றது’ என்று ஐரோப்பியத் திராவிடவியல் பேரறிஞராகிய முனைவர் கமில் சுவலபில் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது தமிழை நிறைவாகப் பயின்று தமிழின் சிறப்பை ஆய்ந்தறிந்த அடிகளார் அதை உலத அரங்கில் எடுத்தோதுவதைத் தமது தலையாய கடமை என்று உணர்ந்தார். ஆகவே 1949-50- ஆம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு  தமிழ்த் தூது நிகழ்த்தினார். அவ்வமயம் ஜப்பான் அமெரிக்க ஐக்கிய நாடு பிரேசில் எக்குவதோர் பெரு மெக்சிக்கோ இத்தாலி முதலிய பல நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்திய அடிகளார் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் தமிழின் சிறப்பைப் பற்றி ஒரே ஆண்டில் 200 விரிவுரைகள் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தம் அற்புதமான ஆய்வுரைகள் ஏற்கெனவே இந்தியவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த – ஆனால் தமிழ் பற்றி மிகுதியும் அறிந்திராத பல மேனாட்டு அறிஞர்களின் கண்களைத் திறந்தன. அவர்களுள் பலரைத் தமிழாய்வில் ஈடுபட ஊக்குவித்த அடிகளார் பல்வேறு மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை அமைந்திடவும் வழிவகுத்தார். 
    
 இவ்வாறு இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையை மாற்றி உலக அரங்கில் பல நாடுகளில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கு உரியது. இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிய வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் தெளிவாக உணர்த்தினார்.

    தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால் தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின் போது அடிகளார் உணர்ந்தார். இத்தேவையை நிறைவு செய்ய 1952 – ஆம் ஆண்டில்  Tamil Culture என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை அடிகளார் வெளியிடத் தொடங்கினார். இது தனியொருவர் மேற்கொண்ட தனிப்பெரும் முயற்சி என்பது மட்டுமல்ல 12 ஆண்டுகளுக்குப் பின்பு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற வழிவகுத்ததும் ஆகும். மேனாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களாகிய கமில் சுவலபில் ஜான் ஃபீலியோசா எ. ஆந்திரனோவ் எம். பி. எமனோ அர்னோ லேமன் எஃப். பி.ஜே. கியூப்பர் ஜெ. ஆர். மார் எட்கர் நோல்ட்டன். சி. ஆர். பாக்ஸர் தாமஸ் பர்ரோ போன்ற மேனாட்டு அறிஞர்களும் இந்திய இலங்கைத் தமிழறிஞர்களும் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கி வந்த இவ்விதழ் பல மேனாட்டு பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இடம் பெற்ற சிறப்புக்குரியதாகும்.

    பல்வேறு காரணங்களால் Tamil Culture இதழினைத் தொடர்ந்து நடத்த அடிகளால் இயலாமல் போயிற்று. ஆகவே 1966- ஆம் ஆண்டில் அவ்விதழ் நிறுத்தப்பட்டது. எனினும் அத்தகைய ஓர் ஆய்விதழின் இன்றியமையாத் தேவை தமிழறிஞர்களால் உணரப்பட்டதால் புதிய ஆய்விதழ் ஒன்றினை வெளிக்கொணரும் முயற்சியில் அடிகளாரே ஈடுபட வேண்டியதாயிற்று. எனவே அடிகளாரையே தலைமை இதழாசிரியராகக் கொண்டு Journal of Tamil Studies வெளியிடப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இவ்விதழ் அந்நிறுவனத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.

    தமிழ் சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம் என்பதைத் தம் இதழ் மூலம் அடிகளார் வலியுறுத்தி வந்தார். தென்னிந்திய இந்திய மொழி இலக்கியங்களோடு மட்டுமல்லாமல் பிற நாட்டு இலக்கியங்களோடும் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரது எம். லிட். முனைவர் பட்ட ஆய்வேடுகளும் திருவள்ளுவர் பற்றி அவர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் இத்துறையில் அடிகளாரின் ஈடுபாட்டைத் தெளிவாக விளக்குகின்றன.

    தமிழில் முதன் முதலாக வெளியிடப் பெற்ற கார்தில்யா தம்பிரான் வணக்கம் கிரிசித்தியானி வணக்கம் அடியார் வரலாறு போன்ற பல நூல்களை ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு செய்து அவர் கண்டு பிடித்துத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தினார். அவ்வாறே 1679- ஆம் ஆண்டு அச்சிடப் பெற்ற தமிழ் - போர்த்துக்கேய அகராதியைக் கண்டுபிடித்து அதனை மறு பதிப்பாக 1966- ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த  உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிட்டார். அடிகளாரின் முயற்சி இல்லையெனில் முதலில் அச்சேறிய இவ்வரிய தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். இதனால் 16- ஆம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்கக் குருக்களால் தமிழ் அச்சகம் நிறுவப்பட்டது என்னும் உண்மையும் இந்திய மொழிகளுள் தமிழிலேயே முதன் முதலாக நூல்கள் அச்சிடப்பெற்றன என்னும் உண்மையும் அடிகளாரால் நிறுவப்பட்டது.

    உரோமை கிரேக்கப் பேரரசுகளுடன் பழந்தமிழகம் கொண்டிருந்த வாணிக உறவுகளை நாம் அறிவோம். ஆனால் கிழக்காசிய நாடுகளுடன் அன்றைய தமிழகம் கொண்டிருந்த அரசியல் உறவு காரணமாகப் பண்பாட்டு உறவும் ஏற்பட்டது என்பதை அடிகளார் தாம் முதன் முதலில் ஆராய்ந்து வெளிப்படுத்தினார். தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது திருவாசகம் ஓதப்படுவதையும் கம்போடியக் கோவில்களில் திராவிடக் கலைத் தாக்கம் காணப்படுவதையும் அடிகளார் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே கம்போடியா தாய்லாந்து நாடுகளின் மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார். இத்துறையில் முதன்முதலாக ஆய்வு செய்தது அடிகளாரே என்பது பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற பேரறிஞர்கள் ஏற்றுப் போற்றும் உண்மையாகும்.

     தமிழ் ஆங்கிலம் இலத்தீன் இத்தாலியம் பிரெஞ்ச் ஜெர்மன் போர்த்துக்கேயம் ஸ்பானிஷ் ஆகிய பல மொழிகளைக் கற்றிருந்தார் அடிகளார். ஆகவே அம்மொழிகளிலெல்லாம் தமிழ் மொழிபற்றி ஆய்வுரை நிகழ்த்தவும் ஆய்வுக் கட்டுரை வடிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார். இதனாலேயே மேலை நாடுகளில் தமிழின் சிறப்பை எளிதாகப் பரப்பிட அடிகளாரால் இயன்றது எனலாம். தங்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ்பற்றிய ஆய்வுரை நிகழ்த்துமாறு பல ஐரோப்பிய அறிஞர்கள் அடிகளாரை அழைத்துப் பயன்பெற்றனர். மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக எட்டு ஆண்டுக்காலம் பணிபுரிந்த அடிகளார் பல புதிய பொருள்பற்றியும் துறைகள் பற்றியும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிகோலினார். அந்த்தாம் தெ ப்ரோயென்சா அடிகள் இயற்றிய தமிழ; போர்த்துக்கேய அகராதியின் மறுபதிப்புக்குத் தனிநாயக அடிகளார் எழுதியுள்ள அரிய ஆய்வுரை அறிஞருலகத்தின் பாராட்டினைப் பெற்றதாகும்.

    பேராசிரியப் பணி ஆய்வுப் பணி உலக அரங்கில் தமிழ்த் தூதுப்பணி கள ஆய்வுப் பணி ஆய்விதழ் ஆசிரியப் பணி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற வழிகோலிய பணி மறைந்த தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பணி கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப்  பண்பாடு பரவியிருத்தலைக் கண்டு உணர்த்திய பணி போன்ற பல பணிகள் மூலம் தனிநாயக அடிகளார் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/1/w600X390/frt.jpg https://www.dinamani.com/language-fest/2020/jan/02/தனிநாயக-அடிகளின்-தமிழாய்வுப்-பணிகள்-3320042.html
3320050 தமிழ் மொழித் திருவிழா கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே! ஆர்.தங்கராஜு DIN Thursday, January 2, 2020 01:38 PM +0530
ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதரப்பினரும் அனைவரும் அறியும் வகையில் ஆய்வுகளை மேற் கொள்ளவும் அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு முறை எழுதப்பட்டவுடன் வரலாறு எழுதும் பணி முற்றிலுமாக முழுமை பெற்று விடுவதில்லை. ஒவ்வொரு புதியசான்று கிடைக்கும்போதும் ஆய்வு முடிவுகள் மாற்றம் பெறுகின்றன. இதனால் அவ்வப்போது வரலாற்றுக்குப் புதியப்புதிய விளக்கங்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைகொண்ட இலக்கியச் செல்வங்களும், ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெருமளவில் வரலாற்றுக்கு அடிப்படையாகக் கிடைத்திருக்கின்றன.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பிறகுதான் இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கே புலப்படத் தொடங்கியது.

மத்திய அரசின் தொல்லியல் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு, 1887-ம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி இதுவரை இந்தியா முழுவதுமிருந்து சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது.
இதில் தமிழ் கல்வெட்டுகள் மட்டும் சுமார் 60,000. அசோகரின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்தியா அறிவுச் சமூகமாகப் போற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுதான் கல்லணையை அடையாளம் காட்டியது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரம்பரியம் வலிமைமிக்கதாக மட்டுமல்ல, அறிவியலில், மருத்துவத்தில், மொழியியலில், சமத்துவத்தில் உயர்ந்து இருந்திருக்கிறது என்பதையெல்லாம் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற கலைச்செல்வங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் நமது வரலாற்றுத் தடயங்கள். அவை இல்லாவிட்டால் நாம் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசும் மக்களாக மட்டுமே இருப்போம்.

கல்வெட்டுகள் இல்லையெனில் வரலாற்று ஆய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதை கண்டுபிடித்திருக்க முடியாது. தஞ்சை பெரியகோயிலை எழுப்பியவன் மாமன்னன் ராஜராஜசோழன் என்று அறிந்திருக்க முடியாது. திருவாரூர் தியாகராஜர் கோயில் வரலாறு நமக்குத் கிடைத்திருக்காது. மாமல்லபுரம் நமக்கு இன்றும் ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்து கொண்டிருக்கும்.

திருச்சி மலைக்கோட்டை கல்வெட்டிலிருந்து 10-ம் நூற்றாண்டில் நாராயணகவி பாடிய 100 பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அப்பாடல்கள் படியெடுத்து சிராமலை அந்தாதி என்ற நூலாக பதிப்பிக்கப்பட்டது.

இதேபோல் கல்வெட்டிலிருந்து கண்டறியப்பட்ட 10 தேவாரப் பாடல்கள் ஏற்கெனவே உள்ள தேவாரப் பாடல்களில் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம் எவ்வளவு பழைமையானது பெருமை வாய்ந்தது என்பதை இவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழ் மக்கள் பண்பாட்டை, நாகரிகத்தை, கலாசாரத்தை பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் கல்வெட்டு, சிற்பம், ஓவியம் உள்ளிட்ட கலைச் செல்வங்கள் முக்கியத்தும் தெரியாமல் அழிக்கப்படுகிறது.

பழங்கால கோயில்களும் கல்வெட்டுகளும், சிற்பங்களும், செப்பேடுகளும், ஓவியங்களும் தமிழர்களின் கலையுணர்வுக்கு ஆதாரமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கலைச்செல்வங்கள் இன்றைக்கு அழிக்கப்படுகிறது.

ஏற்கெனவே பல கல்வெட்டுகளைக் கல்வெட்டுகளின் பெருமை அறியாத பலர் அழித்து விட்டார்கள். கோயில்களில் எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் துளையிட்டு தீயணைப்பு கருவிகள் பொருத்தியும், நவீன வண்ணக் கலவை என்ற பெயரில் பிளாஸ்டர் பெயிண்ட் பூசியும் அழிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கல்வெட்டு உள்ளிட்ட கலைச்செல்வங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. கோயில்கள் புனரமைப்பு என்ற பெயரில் கல்வெட்டு, ஓவியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் அழித்தது போல் கல்வெட்டுகளையும் அழிந்துவிடக்கூடாது.

19-ம் நூற்றாண்டில் ஓலைச் சுவடிகள் கொளுத்தப்பட்டன. 20-ம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட்களாக ஆக்கப்பட்டன. 21-ம் நூற்றாண்டில் வண்ணம் பூசி அழிக்கப்படுகிறது.

கல்வெட்டைத் தவிர மற்ற கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கல்வெட்டு மட்டுமே திறந்தவெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் அழியாத கல்வெட்டு தற்போது மனித சமூகத்தால் அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

எனவே வருங்கால தலைமுறையினருக்கு, ஆய்வாளர்களுக்கு கல்வெட்டுகளை பாதுகாத்து கொடுப்பது அவசியம். இது தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
நம் மண்ணின் பெருமையையும், வரலாற்றையும் பண்பாட்டை பறைசாற்றிக்கொண்டிருக்கும் கல்வெட்டு உள்ளிட்ட கலைச் செல்வங்களைப் பாதுகாப்போம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/kalvettu.jpg https://www.dinamani.com/language-fest/2020/jan/02/கல்வெட்டுகளும்-செப்பேடுகளும்-இல்லாவிட்டால்-இந்தியா-வெறும்-பழங்கதை-பேசும்-நாடே-3320050.html
3320029 தமிழ் மொழித் திருவிழா இலக்கியங்களில் பாசனத் தொழில்நுட்பம்  முனைவர் ஆர்.நிர்மலாதேவி, ஈரோடு. DIN Thursday, January 2, 2020 10:10 AM +0530  

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. தமிழ்ப் பெருங்குடியின் தொன்மைச் சிறப்பினையும் பண்பாட்டு விழுமியங்களையும் படம் பிடித்துக் காட்டும் காலகண்ணாடியாக விளங்குபவை தமிழரின் படைப்புகளே! பழந்தமிழர்களின் நாகரிகமும், பண்பாடுகளும் இன்னபிறவும் எந்நாட்டவர்களுக்கும், எச்சமூகத்தவர்களுக்கும் மெய்மையை அதாவது அறத்தினை மொழிந்து, கரையும் ஆழமும் காணமுடியாத வகையில் கடல் போன்றே பரந்து விரிந்து காணப்படுவதாகும்.

தொல்பழங்காலம் தொட்டே பண்டைத்தமிழர் கடைப்பிடித்து ஒழுகும் வாழ்வியல் பண்பாட்டு நலக்கோலங்களின் திரட்சியை, ஒரு தலைமுறையினர் அதன் அடுத்த தலைமுறையினர்க்கு வழங்குவது இன்றியமையாத கடமையாகும். உழவன் ஒரு நிலத்தைப் பயிரிட பயன்படக் கூடிய விளைநிலமாக மாற்ற எவ்வாறு மீண்டும் மீண்டும் உழுது பண்படுத்துகிறானோ, அதுபோல ஒரு கொள்கையினைப் பழக்க வழக்கத்தை நாகரிகத்தை நடைமுறைபடுத்தி வெளிக்கொணர்தல்  வேண்டும்.

சங்ககால இலக்கியம் உலக இலக்கியங்களின் இமயம் என்று போற்றப்படுகிறது. மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு இலக்கியத்தின் ஆணி வேராக அமைந்தது.

வீட்டு வாழ்க்கையை அகமாகவும், நாட்டு வாழ்க்கையைப் புறமாகவும் கொண்டு எழுதப்பட்ட இவை ஆற்றலுடையவை மட்டுமல்ல, மனிதர்களை நல்வழிப்படுத்துபவையும் கூட. சங்ககாலத்தைப் பற்றிய அரசியல், சமூகம், பண்பாடு, சமயம், பொருளாதாரம் பற்றி அறிய நமக்கு இன்று உள்ள ஒரே ஆதாரம் சங்க இலக்கியங்கள் மட்டுமே.

பண்டைத் தமிழர் நிலத்தின் இயற்கை அமைப்பு,  இயற்கைச் சூழல், பருவகாலம் ஆகியவற்றிற்கேற்ப பாகுபடுத்தியுள்ளனர். நாடோடி வாழ்க்கை முடிவுற்று, ஒரிடத்தில் கூடி வாழத்தலைப்பட்ட சங்ககால மக்கள் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை மேற்கொண்டனர்.

உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக நிலமே விளங்கியது. ‘ஓவ்வொரு குழுவும் நிலத்தைக் கையகப்படுத்தி பின்னர் அது தனி உடைமையாக மாறிய நிலையில் வேளாண்வர்க்கம் உருப் பெருகின்றது.”( பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் பக். 4)

தமிழகத்தில் சிறந்த தொழிலாக வேளாண்மை விளங்கியது. ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம், உழந்தும் உழவே தலை” என வள்ளுவர் கருதினார். வேளாண்மை சிறப்புறக் காரணமாக விளங்கியவை நீர்;நிலைகளும், நீராதரங்களுமே.

அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே( புறம் 53: 3-11)

எனக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் புலவர் வெள்ளைக்குடி நாகனார் பாடியுள்ளார். ‘காவிரியாறு வாய்க்கால்கள் வழியாகச் சென்று வளம் பெருக்க, ஆதனால் வேலின் தோற்றம் போன்று கணுக்களையுடைய கரும்பின் வெண்மையான பூக்கள் மாறாது விளங்கும். இத்தன்மையில் வளநாடு என்று சிறப்பித்துக் கூறப்படுவது நின்னுடைய நாடு” என்பதே பாடலின்; பொருள்.

பருவம் தவறாமல் பெய்யும் மழை நீரைத் தேக்கிக் கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், ஏரி, கிடங்கு, மடு ,மதகு, மடை ,போன்ற நீர்நிலைகளை உண்டாக்கி, அவற்றிலிருந்து தேவைக்கேற்ப நீரைப் பயன்படுத்தினர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். ஓலைச்சுவடி வடிவில் காணும் கூவநூல் நிலத்தின் தன்மை பற்றியும் மரம் செடி கொடிகள் பற்றியும் அவற்றின் அடையாளம் கண்டு நீர் இருக்கும் பகுதிகளைப் பற்றி அறியும் முறைகளை அறிந்துக் கொள்ளும் களஞ்சியமாக விளங்குகிறது. ஓடைகளின் குறுக்கே கல்லாலான அணையைக் கட்டித் தண்ணீரைத் தேக்கிக் கால்வாய் வழியாக அனுப்பிய  முறையினை, எதிர்த்து வரும் வீரர்களைக் கற்சிறை போல ஒருவனாக நின்று தடுத்து நிறுத்தும் தலைவனுக்கு உவமையாகக் கூறுகிறார் தொல்காப்பியர்.

வருசிறைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும் (தொல். பொருள்.657)

நீர் நிலைகளை உருவாக்கி இந்நிலவுலகில் தம் புகழைப் பதித்திட வேண்டுமெனப் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்துக் குடபுலவியனார் கூறும் அறிவுரையினைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெறி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவன்தட்  டோரே
தள்ளா தோர்இவன் தள்ளாதோரே. (புறம்.18:27-30)

சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமைக்குக் காரணமாக விளங்கியவர் கரிகால்சோழன். 1800 ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே பெரிய கருங்கற்களும், களிமண் கலவையும் கொண்டு சுமார் 1080 அடிநீளமும், 40  முதல் 80 அடி அகலமும், 15 முதல் 18 அடி ஆழமும் என்ற விகிதத்தில் ஆற்றின் குறுக்கே நாக வடிவில் வளைவாக  கல்லணையைக்கட்டி, நீர்ப்போக்கை ஒழுங்கு செய்து தமிழரின் பொறியியல் திறனை உலகுக்கு உணர்த்;திய சிறப்புக்குரியவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக்ககண்ணியார் பாடல்  உணர்த்துகிறது.

ஏரியும் ஏற்றத்தி னாலும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளன்எல்லாம் தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு   (பொரு., தனிப்பாடல்)
 
இது போன்ற அணைக்கட்டுகள்  கற்சிறைகள்என்றழைக்கப்பட்டன. இவைநீரின்வேகத்தையும்அழுத்தத்தையும்கட்டுப்படுத்தும் வகையில் வளைவாக இருந்ததை,

வருந்திக் கொண்ட வல்வாய் கொடுஞ்சிறை
மீதில் கொடுநீர் போக்கி(அகம்346:9-10)
அகநானூற்றுப்  பாடல்மூலம்அறியமுடிகிறது.

நீர்த்தேக்கங்களைவளைவாகஅமைத்தால்நீர்ன்வேகம்கட்டுப்படும்என்பதைப்பழங்காலமக்கள்அறிந்திருந்தனர்என்பதை,

எண்ணாட் திங்கள் அனைய கொடுங்கரை
தெண்ணீர்ச் சிறுகுளம் (புறம்:118)

ஒரு பூங்கா அருவி, பொய்கை, கேணி முதலியவற்றோடு திகழ வேண்டும்  என்பதனைமணிமேகையில்

எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்
வந்துவீ ழருவியும் மலர்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும்
ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கனும் திரிந்து தாழ்ந்து விளையாடி
- (மணிமேகலை, சிறைகோட்டம்  அறக்கோட்டமாக்கியகாதை102-106)

உலகம் புகழ, இன்புற ஐந்து வழிகளை சிறுபஞ்சமுலம் குறிப்பிடுகிறது.1. குளம் வெட்டுதல் 2.அதனைச் சுற்றி மரக்கிளைகளை வெட்டி நடுதல் 3.மக்கள் நடக்கும் வழியைச் செதுக்கிச் சீர்திருத்தல் 4.தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயல் ஆக்குதல் 5. அவற்றுடன் வளமாக நீர் வரும்படி தோண்டிச் சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணற்றை உண்டாக்குதல்.

குளந்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட(டு) உழுவயல் ஆக்கி – வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ(டு) என்றிவ் வைம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது. (சிறுபஞ்சமூலம் :66)

வேண்டியபோது மலையில் மழை வந்து சூழ வேண்டும் என்று மிகுதியான பலியைத் தூவி வழிபட்டதால் மழை மிகுதியாகப் பெய்ததையும் ‘மழை நின்று மேகங்கள் மேலே போவதாக எனக் கடவுளை வேண்டியவுடன் மழை நின்று விட்டதைக் கண்டு குறவர் மகிழ்ந்ததையும்” (நற்றிணை:165:2-5) நற்றிணை விளக்குகிறது.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியாற்றின் தன்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன. பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகள் வேளாண்மைக்கும் செல்வச் செழிப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்;கும் பெரும் பங்காற்றின. நிலவளம் சிறந்து விளங்கியதாலும் உழவன் மெய்வருத்தம் பாராமல் உழைத்ததாலும் மருத நிலமே வேளாண் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக இருந்தது. மருத நில மக்கள் செல்வச் செழிப்பில் திளைத்தனர். எல்லா இடங்களிலும் வேளாண்மை செய்யப் பட்டாலும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களிலேயே அதிகமாக நடைபெற்றது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த சமூகம் நான்கு வகையான இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. மலையும் மலை சார்ந்த நிலமாகிய குறிஞ்சியில் புன்செய் வேளாண்மை செய்யப்பட்டது. மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், வெண்சிறு கடுகும், ஐவன நெல்லும், இஞ்சியும், மஞ்சளும், மிளகும் இந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் அடிப்படை உணவாகும். ‘பறம்பு மலை நால்வகை உணவுப் பொருளை நல்கும்” ; (புறம் 53: 3-11)  எனப் புறநானூறு விளக்குகிறது. கால்நடைப் பராமரிப்பை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட முல்லை நில மக்கள் பால், தயிர், மோர், திணை, வரகு, கொள், அவரை போன்றவற்றை உணவாக உண்டனர். (புறம் -109:3 )

‘வேளாண்மைக்குரிய நிலம், நீர்வள அடிப்படையில் இரு வகைப்படுத்தப்பட்டன. நீர் வசதி அற்ற நிலங்கள் புன்செய் நிலம் எனப்பட்டது.

அதனெதிர் நீர் வசதி பெற்ற நிலம் மென்புலமாகக்  கருதப்பட்டது.”நெல், கரும்பு, வாழை முதலானவை வளர அதிக நீரும், நல்ல நீரும் தேவை. இதை தொல்காப்பியம் ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்” (தொல்.பொருள்.அகத்-நூற்பா-5) என்றும், நம்பியகப்பொருள் என்ற இலக்கணநூல் பழனம் (ப.11) என்றும் குறிப்பிடப்படுகிறது.

நன்செய் விளைநிலத்தைச் சங்க இலக்கியங்களில் வயல், கழனி, செறு, பழனம் எனக் குறிப்பிடுவதை பின்வரும் பாடல் வரிகளால் அறியலாம்.
வயல்வெள் ஆம்பல்(குறுந்.293:5)

கழனிமாத்து விளைந்துகு தீம்பழம்(குறுந் 8.1-2)

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின்
ஊர் நெய்தல் அனையேம் பெரும.(குறுந். 309:5-6)

உழவுத் தொழிலில் உயர்ந்து விளங்கும் நாடே பஞ்சத்தில் வீழ்ந்து பரிதவிக்காது. அந்நாடே செல்வத்திலே சிறந்து விளங்கும் என்னும் உண்மைண்யை நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள்.

‘கருவி வானம் தண்டனி சொரிந்தெனப்
பல்விதை உழவிற் சில் ஏராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே”15
என்ற பாடல் மூலம் இதனை அறியலாம்.

உழவர் மருதநிலக் கடவுளாகிய இந்திரனை வழிபட்டனர். உலக வாழ்க்கைக்கு நெல்லும், நீரும் அடிப்படை என்று நம்பினர். குடபுலவியனார் பருவ மழையை முற்றிலும் நம்பி வாழும் நிலையினின்றும் உழவரை நல்ல நீர்ப்பாசனத் திட்டம் காக்கும் என்கிறார். திருவள்ளுவர் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றும், உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றும் உழவரைப் புகழ்கின்றார். நிலத்தை உழவேண்டும், எருவிட வேண்டும், நாற்று நடவேண்டும், நீர்பாசன ஏற்பாடு செய்தல் வேண்டும், பட்டிமாடுகள் மேய்ந்துவிடா வண்ணம் காத்தல் வேண்டும் என்று உழவர்க்கு அறிவுறுத்துகிறார்.

காவிரி, பெண்ணை, வையை, பொருநை, முன்னி, ஆன்பொருநை போன்ற பல ஆறுகளின் பெயர்கள் அகநானூற்றுப் பாடல்களிலே காணப்படுகின்றன. வறண்ட காலத்திலும், காவிரி நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. நறைக்கொடி, நரந்தப்புல், அகில், சந்தனம் இவற்றைத் துறைகள் தோறும் தள்ளிக் கொண்டு செல்கின்றது. நுரையைச் சுமந்து போகின்றது. ஆரவாரத்துடன் குளத்திலும், தோட்டத்திலும், புகுகின்றது. பெண்கள் அவ்விடங்களில் குடைந்து நீர் விளையாடுகின்றனர். காவிரி தனது நீரைப் பாய்ச்சுதலால் ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலமாகச் சோழ நாட்டிலே நெல் விளைகின்றது. ( பொரு : 232-248) எனக் காவிரியின் சிறப்பைப் பொருநராற்றுப்படை இயம்புகிறது.

பரிபாடலில் ஒன்பது பாடல்கள் வைகையாற்றின் பெருமை பாடுகின்றன. ஓவ்வொரு பாடலும் மலையிலே பிறந்து வரும் வையை எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இன்று வைகை நதி கடலோடு கலக்கவில்லை. இடையிலே நின்று விடுகிறது. பண்டைக்காலத்தில் அதாவது  கடைச்சங்க காலத்தில் வையை நதி மலையிலே பிறந்து கடலில் கலந்தது. ‘வைகை நதியிலே மக்கள் புகுந்து நீராடுந்துறையை திருமருத முன் துறை” ( பரிபாடல் :7-3) எனவும்  திருமருதநீட்ப்பூந்துறை ( பரிபாடல்: 11: 30) எனவும் அழைத்தனர்.

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் வைகை நதி பற்றிப் பாடும் போது ‘ஆறுகள் கொள்ள அமையாமல் பெருகி வருகின்ற வெள்ளத்தால் குளங்கள் நிறைந்தன. குளங்கள் வழியாகப் பாயந்;த நீரால், வயல்களில் யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி கதிர்கள் விளைந்தன. தாமரை, நெய்தல்;, நீலம், ஆம்பல் முதலிய பூக்கள் செறிந்து பின்னிக் கிடக்கும் பொய்கைகளில் கம்புட் கோழிகள் தத்தம் துணையோடு படுத்துறங்கின. வலைஞர் இக்கோழிகளின் தூக்கம் கலையும்படி, பொய்கைகளில் இறங்கி வலை வீசி மீன் பிடிப்பர் என ஆறு, குளம், பொய்கை போன்ற நீர்நிலைகள் பற்றிக் கூறுகிறது.( மதுரைக்காஞ்சி:  240-255)  மேலும்
  “முழங்குகால் பொருத மரம்பயில் காவின்
 இயங்குபுனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல்
  கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்
  தாது சூழ் கோங்கின் பூமலர் தாஅய்
  பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
 கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத்துறை துறை தோறும்;”  
(மதுரைக்காஞ்சி:240-255)
என விவரிக்கின்றார்.

‘மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்” என்ற மதுரைக்காஞ்சி வரிகள் மூலம் ‘அகழி” பற்றிய செய்தியை அறிகிறோம். ‘அகழ் இழிந்தன்ன கான் யாற்று நடவை” என மலைபடுகடாம் கூறுகிறது.

‘வேட் கோவன் வனைகின்ற கலத்துடன் சுழற்றி விட்ட திரிகை சுழலுவது போல குமிழிகள் சுழல விரைந்து வாய்க்காலிடந்தோறும் ஒழிவின்றி ஓடுகின்ற கண்ணுக்கினிய சேயாற்றைக் காண்பரீகள். காண்போர் விரும்பும் அழகுமிக்கது அந்த ஆறு” என சேயாறு பற்றிய செய்தியை அறிகிறோம்.
வைகைப் பெருக்கைக் காண மதுரை மக்கள் வைகைக் கரையிலே வந்து கூடியது, பற்றிப்; பரிபாடல் அழகுற விளக்குகிறது.

நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினால் தான் நிலம் வளப்படும். உழவர்களும், ஊக்கமுடன் உழைத்து உற்பத்தியைப் பெருக்குவர். நீர்பாசன வசதியற்ற நாட்டிலே உற்பத்தி பெருக இயலாது. ஆதலால் அரசின் முதற்கடமை நாட்டிலே நல்ல  நீர்பாசன வசதிகளை ஏற்படச் செய்வதுதான் என்ற உண்மையை சங்ககால மக்கள் உணர்ந்திருந்தனர்.

‘நீரும் நிலனும் புணரியோட்,; ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே”( புறம் -18)

என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன. அதே சமயம் பருவ மழை தவறிய போது பஞ்சம் ஏற்பட்டதைச் சங்கப்புலவர்கள் சிலர் மழை வேண்டிப் பாடியமையால் அறியலாம். இறையனார் அகப்பொருள் உரையில்; பன்னீராண்டு வற்கடம் பேசப்படுகிறது. இதனால் தான் தமிழ்ச் சங்கமே தற்காலிகமாக முடிவுக்கு வந்தது என அறிகிறோம்.

இலக்கியச் சான்றுகளுக்கு அடுத்தப்படியாக அரசர்கள் நீர் ஆதாரங்களை உண்டாக்கி தங்கள் பெயரினை பொன்னெழுத்தில் பொதித்து வைத்ததைச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் விளங்குகின்றன. செப்பேடுகளில் புகழ் பெற்ற கூரம் செப்பேட்டில் ‘முதலாம் பரமேசுவரவர்மனனின் ஆட்சிக்காலத்தில் இருபது சதுர்வேதி பிராமணர்க்குப் பரமேசுவரமங்கலம் என்னும் பெயரில் பிரமதேயமாக நிலங்கொடுத்தான். அத்தோடு அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்னும் ஏரியை ஏற்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டு வர பெரும்பிடுகு கால் என்னும் கால்வாயையும் வெட்ட, அக்கால்வாயிலிருந்து தலைவாய், தலைப்பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதி அளித்தான் பரமேசுவரன்’ என்று எடுத்துரைக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்தியினைக் கூறுகிறது.

உத்தரமேரூரின் ஜிவநாடியாக அமைந்தது வயிரமேகத் தடாகம். பல்லவ மன்னன் நந்திவர்மனுக்கு வயிரமேகன் என்ற சிறப்புப்பெயர் உண்டு. இப்பெயரால் அமைந்தது தான் வயிரமேகத் தடாகம் என்னும் ஏரி என்று உத்தரமேரூர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறுகின்றன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராசேந்திர சோழன், சோழ கங்கன் என்ற தன் பட்டப் பெயரால் சோழ கங்கன் என்ற ஏரியை உருவாக்கினான் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. அந்த ஏரியின் வடிகாலாக தனது சிறப்புப் பெயரான வீரநாராயணன் என்ற பெயரில் வீரநாராயண ஏரி என்ற பெயரில் உருவாக்கினான் இன்று வீராணம் ஏரி என்று வழங்கப்படுகிறது.

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான் சோர்வினிதே, காய்ந்து வறண்டு கிடக்கும் பயிரினங்கள் மழையைக் கண்ட அளவிலேயே செழித்து வளரும். மேலும் சோலையை வளர்ப்பதை விடவும் பிற உயிர்களுக்கு உதவுவதெற்கென குளத்தைத் தோண்டுதல் மிகவும் இனிதாகும். பறவைகளும் விலங்குகளும் அனைத்து உயிரினங்களும் மகிழ்வுடன் வாழ உதவும் சோலைகளைவிட அச்சோலைகள் உருவாவதற்கும் மேலும் மேலும் வளர உறுதுணையாய் விளங்கும் நீரைச் சேமிக்கும் குளங்களைப் பாதுகாத்தல் ஒவ்வொரு இளைஞனின் பெருங்கடமையாகும். கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்ற ஆன்றோர் வாக்கின்படி நீராதரங்களைச் சீர்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்பயனாளிப்போம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/kcm.gif https://www.dinamani.com/language-fest/2020/jan/02/இலக்கியங்களில்-பாசனத்-தொழில்நுட்பம்-3320029.html
3320021 தமிழ் மொழித் திருவிழா தமிழ் வாழ்வில் கோவை புலவர் செந்தலை ந.கவுதமன் DIN Thursday, January 2, 2020 10:00 AM +0530  

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என இன்று நான்கு மாவட்டங்களாக இருப்பவை முனபு ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக இருந்தவை. தொழில் நகரம் கோவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. தமிழ் வளர்த்த எழில் நகரம் கோவை என்பது இன்னும் உணரப்படாத உண்மை. கோவை அமைந்துள்ள கொங்கு நாடு பெருமன்னர்களின் தனிக்குடையின் கீழ் எப்போதும் இருந்ததில்லை. அதனால் கோவையும் கொங்குநாடும் இங்கு நிகழ்ந்த தமிழ் வளர்ச்சிப் பணிகளும் தனிக்கவனம் பெறாமல் போயின. இன்றுள்ள கோவை நகரம் சங்க காலத்தில் மக்களின் வாழ்விடமாக மலர்ச்சி பெறவில்லை. சங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ள ஊர்கள் கோவை நகரைச் சுற்றியுள்ள ஊர்களே.

சங்க இலக்கியப் புலவர்கள்
உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் வாழ்ந்தவர் குடிமங்கலத்து பொதுனி நற்சேந்தனார். அகநானூற்றில் உள்ள 179, 232 இரு பாடல்களும் இவர் எழுதியவை.பல்லடம் வட்டம் கொடுவாயின் பழைய பெயர் குடவாயில். மேற்கு வாசல் என்பது இதன் பொருள் (தஞ்சை மாவட்டத்திலும் ஒரு குடவாசல் உள்ளது). கொடுவாயில் வாழ்ந்தவர் குடவாயில் கீரத்தனார் என்கிறது கொங்கு மண்டலச் சரகம். குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது இவரது பாடல். பவானி அருகேயுள்ள பெருந்தலையூரில் வாழ்ந்தவர் பெருந்தலைச் சாத்தனார். அவர் எழுதிய பாடல்களை புறநானூறு, அகநானூறு, நற்றிணை முதலியவற்றில் காணலாம்.

தமிழ்ச் சங்கங்கள்
புலமையாளர்கள் ஒன்று கூடிச் சிந்திக்கவும், படைப்புகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவும் உருவானவை தமிழ்ச் சங்கங்கள்.
விசயமங்கலம் தமிழ்ச் சங்கம்
காடையூர்த் தமிழ்ச் சங்கம்
கவசைத் தமிழ்ச் சங்கம்
கொங்குத் தமிழ்ச் சங்கம்
கோவைத் தமிழ்ச் சங்கம் முதலிய பல தமிழ்ச் சங்கங்கள் கோவையில் செயல்பட்டு வந்துள்ளன.

விசயமங்கலம் தமிழ்ச் சங்கம் புகழ்மிக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரை செயல்பட்டுள்ளது. பெருங்கதை எழுதிய கொங்குவேளிர் விசயமங்கலத்தைச் சேர்ந்தவர். விசயமங்கலத்தை அடுத்த சீனாபுரத்தின் பழைய பெயர் சனகை. அவ்வூரில் பிறந்த பவணந்தி எழுதியதே நன்னூல். பெருங்கதையும் நன்னூலும் விசயமங்கலம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டவை.பொள்ளாச்சியை அடுத்துள்ள களந்தையில் வாழ்ந்தவர் குணவீரபண்டிதர். அவர் வச்சணந்திமாலை, நேமிநாதம் என்னும் இலக்கண நூல்களை இயற்றியவர்.

பொப்பண காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு எனும் அகராதி வகை நூலும் விசயமங்கலம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பெற்றதே. சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவரும் விசயமங்கலத்தைச் சேர்ந்தோரே.

காப்பியங்கள்
தாராபுரத்தின் பழைய பெயர் வஞ்சிபுரம். இங்கு வாழ்ந்த திருத்தக்கத் தேவர் படைத்த சமணக் காப்பியம் சீவகசிந்தாமணி. விருத்தப்பாவில் அமைந்த முதல் காப்பியம் எனப் போற்றப்படும் இந்த காப்பியத்தை வழங்கிய பெருமை கோவைக்குரியது. விருத்தப்பாவில் சீவகசிந்தாமணியின் அடியொற்றி எழுந்ததே கம்பராமாயணம். இராமாயண கருத்துக்கு எதிராக எழுந்த இன எழுச்சிப் பெருங்காப்பியம் இராவண காவியம். தமிழில் தடை செய்யப்பட்ட முதல் காப்பியம் இதுதான். அரசின் ஒடுக்குமுறைக்கு 1948 இல் ஆளான இந்நூல், 1973}இல் தடை நீக்கப்பட்டு அனைவர் கைகளுக்கும் கிடைக்கத் தொடங்கியது. இராவண காவியம் படைத்தவர் பவானியில் வாழ்ந்த புலவர் குழந்தை.

கோவை பூ.சா.கோ. சர்வசன பள்ளித் தமிழாசிரியர் அ.கி.நாயுடு 4,030 வெண்பாக்களால் திருவள்ளுவர் வரலாற்றை எழுதி 1958 இல் வெளியிட்ட நூல் திருவள்ளுவர் காவியம். இராமாயணக் கதையை உடுக்கை போன்ற இசைக் கருவியை ஒலித்தபடி பாடுவதற்காக எழுந்தது தக்கை இராமாயணம். 3,250 பாடல்களைக் கொண்ட இந்த காப்பியத்தை வழங்கியவர் சங்ககிரியைச் சேர்ந்த பித்தர்பாடி என்னும் புலவர்.கொங்கு நாட்டில் எழுந்த பழமையான காப்பியமான தகடூர் யாத்திரை, இதுவரை முழு நூலாகக் கிடைக்காதது தமிழுக்கு இழப்பு.

சிற்றிலக்கியங்கள்
கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ் முதலிய சிற்றிலக்கிய வகை நூல்களையும் கோவை தந்துள்ளது. பேரூர், மருதமலை தொடர்பாக எழுந்துள்ள இந்நூல்களின் எண்ணிக்கை மிகுதி.சூலூர் இராயர் கோயில் புகழ்பாடும் நூல் சூரனூர் நொண்டி நாடகம். சிரவை ஆதீனம் கந்தசுவாமி அடிகள், தண்டபாணி பிள்ளைத் தமிழ், இராமானந்தசுவாமி பிள்ளைத் தமிழ் முதலிய ஆறு பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடியுள்ளார்.

சிவன் மலைக் குறவஞ்சி, பூந்துறைக் குறவஞ்சி, அலகுமலைக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி நூல்களும் கொடுமுடிப் பள்ளு, வையாபுரி பள்ளு, திருச்செங்கோட்டுப் பள்ளு முதலிய பள்ளு நூல்களும் பேரூர் உலா, அவிநாசி உலா போன்ற உலா நூல்களும் கொங்குநாட்டில் தோன்றியவை.

சிந்துவெளி எழுத்து
தமிழினத் தொன்மையைக் காட்டும் சிந்துவெளி எழுத்துச் சான்றுகளைத் தமிழ் நாட்டில் கண்டறிந்துள்ள மூன்று இடங்களில் ஒன்று கோவை சூலூர். உலகின் முதன்மையான எழுத்தாகக் கருதப்படும் சிந்துவெளி எழுத்துகளின் 417 குறியீடுகளை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். கோவையில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி எழுத்துகளை ஆய்ந்து corpus of indus seals and inscriptions எனும் நூல் தொகுதிகளாக வழங்கியுள்ள பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அசுகோ பர்போலா அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சிந்துவெளி எழுத்துச் சான்றோடு கோவையில் கிடைத்த சூலூர்த் தட்டு இலண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் செய்தியை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

இதழ்கள்
கோவைத் தமிழ்ச் சங்கம் 1934 இல் வெளியிடத் தொடங்கி நான்காண்டு காலம் நடத்திய கொங்கு மலர் இதழின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் கோவைகிழார் கோ.ம.இராமச்சந்திரன் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு இவரின் புகழ்மிகு படைப்பு. கோவையில் வெளியிடப்பட்ட முதல் இதழ் கோயமுத்தூர் அபிமானி. 1879 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாண்டுகள் வெளிவந்த இந்த இதழை நடத்தியவர் சே.ப.நரசிம்மலு நாயுடு. கோவை நகரின் முதல் அச்சகமான கலாநிதி அச்சுயந்திரச் சாலையை 2.10.1881 இல் நிறுவியவரும் இவர்தான். சொந்த அச்சகம் உருவான பின் கோயமுத்தூர் கலாநிதி எனும் இதழை 15.10.1881 முதல் வெளியிட்டு வந்தார் சே.ப.நரசிம்மலு நாயுடு அவர்கள்.

கோவை சிறையில் இருந்தபோது இதழ் நடத்த முடிவெடுத்த தந்தை பெரியார், 1925 இல் குடி அரசு இதழையும், 1937 இல் விடுதலை இதழையும் ஈரோட்டில் இருந்து வெளியிட்டு வந்தார். விடுதலை இதழின் துணையாசிரியராக 1938 முதல் அறிஞர் அண்ணாவும், குடி அரசு இதழின் துணையாசிரியராக 1945 முதல் கலைஞர் மு.கருணாநிதியும் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தங்கிப் பணியாற்றி வந்தார்கள். பிற்காலத்தில் இருவரும் தமிழக முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார்கள்.

கோவையில் இருந்து 1971 அக்டோபர் முதல் வெளிவரத் தொடங்கிய வானம்பாடி இதழ், தமிழ் இலக்கிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுப்பாய்ச்சலை உருவாக்கியது. இலக்கிய இதழாகக் கோவையிலிருந்து முதன் முதலில் வெளிவரத் தொடங்கியது வசந்தம். ஆர்.சண்முகசுந்தரத்தை ஆசிரியராக அமர்த்தி வெளியிட்டு வந்தவர், இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பதவி வகித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

அறிவியல் தமிழுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் வளம் சேர்த்து வரும் கலைக்கதிர் இதழ் பூ.சா.கோ. கல்வி நிறுவனத்தின் வழியாக வெளிவரக் காரணமானவர் முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர்.தாமோதரன். கலைக்கதிர் இதழை அடியொற்றி அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழாக கோவை தி.சு.அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி வெளியிட்டு வந்த இதழ் விஞ்ஞானச் சுடர்.

தமிழ், ஆங்கிலம் இருமொழி இதழை முதன் முதலில் கோவையில் நடத்தியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். மகாஜன நேசன் என்ற பெயரில் வார இதழாக வெளிவந்த அவ்விதழின் தமிழ்ப் பகுதியைப் பார்த்துக் கொண்டவர் கோவை அய்யாமுத்து. மகாஜன நேசன் போல இருமொழி இதழாக 1980 இல் கோவையிலிருந்து கு.வெ.கி. ஆசான் வெளியிட்டு வந்த இதழ்கள் இங்கும் அங்கும், ஊரும் உலகும். தமிழ்நாட்டின் முதல் திரைப்பட இதழாக பி.எஸ்.செட்டியார் வெளியிட்ட சினிமா உலகம், கோவையிலிருந்தே வெளிவந்தது. அதன் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தவர் வல்லிக் கண்ணன். திரைப்பட இதழாக நெடுங்காலம் வெளிவந்து கொண்டிருந்த பேசும்படம் இதழும் கோவையில் தொடங்கப்பட்டு பின்னர் சென்னைக்கு இடம் மாறியது.

முதன்மைச் சிறப்பு
தமிழில் வெளிவந்த முதல் பயண நூல் தட்சிண இந்திய சரித்திரம், எழுதியவர் கோவை சே.ப.நரசிம்மலு நாயுடு. தமிழில் வெளியான முதல் இதழியல் வரலாற்று நூல், கோவை வி.நா.மருதாசலக் கவுண்டர் எழுதி கோவைத் தமிழ்ச் சங்கம் 1935 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்திய பத்திரிகைத் தொழிலியல் என்னும் நூல். தமிழில் வெளியான முதல் தன் வரலாற்று (சுயசரிதை) நூல் குருபரத் தத்துவம், கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயத்தை நிறுவிய இராமானந்த அடிகளாரின் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய இந்நூல், 1882இல் வெளிவந்தது.

தமிழ்க் காப்பு முயற்சிகள்
இந்தி திணிப்பை எதிர்த்து 1938 இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 3.6.1938 ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறை சென்றவர் பல்லடம் பொன்னுசாமி.  கோவை நகரம் 1950 ஆம் ஆண்டு இருபெரும் தமிழ் மாநாடுகளைக் கண்டது. சென்னை மாநில அரசு சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1950 மே 20, 21 இருநாள்கள் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது தமிழ் வளர்ச்சி மாநாடு. அதே ஆண்டு திராவிடர் இயக்கம் சார்பில் கோவை இரத்தின சபாபதிபுரம் சாஸ்திரி மைதானத்தில் 1950 மே 27, 28 இரு நாள்கள் நடத்தப்பட்டது முத்தமிழ் வளர்ச்சி மாநாடு. இம்மாநாட்டில் முத்தமிழ்ப் பெருமன்றம் நிறுவப்பட்டுத் தலைவராக நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் செயலராக பாவேந்தர் பாரதிதாசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்விரு மாநாடுகளின் விளைவாகத் தமிழின் ஆழ, அகலத்தை விரிவாகக் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரியின் தேவை உணரப்பட்டு பேரூர் திருமடம் 1953இல் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கியது. தமிழுக்கு வலிமையும் வளமும் சேர்க்கும் படைப்பாளிகளும் பதிப்பகங்களும் அமைப்புகளும் நிறுவனங்களும் நிரம்பி நிற்கும் இலக்கியப் பாடி வீடாக இன்று வரைத் தனித் தன்மையுடன் திகழ்ந்து வருகிறது கோவை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/covai.gif https://www.dinamani.com/language-fest/2020/jan/02/தமிழ்-வாழ்வில்-கோவை-3320021.html
3320014 தமிழ் மொழித் திருவிழா வாய்மொழியில் உள்ளது தாய்மொழி வளர்ச்சி பேராசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி DIN Wednesday, January 1, 2020 10:00 AM +0530  

அகரம் கற்றுத் தந்தபோதே அறத்தைக் கற்றுத் தந்த மொழி நம்மருமைத் தமிழ்மொழி. தமிழ் என்றால் இனிமை! தமிழ் என்றால் அழகு! பேசவும் கேட்கவும் இனிமையான மொழி நம்மருமைத் தமிழ்மொழி! தமிழ் என்றால் தனித்தன்மை வாய்ந்த செம்மொழி எனும் பொருள் உண்டு. 

தமிழ் மொழியில் வரும் ‘ழ’ கரம் அழகான உச்சரிப்பு தரும் தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாகும்.  தமிழ்மொழி என்று சொன்னவுடன் நம் மனமெங்கும் மகிழ்வலைகள்.  

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி நம் தமிழ்க்குடி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய இலக்கண நூல்களை உடைய மிகப்பழைய குடியும் நம் தமிழ்க்குடிதான். வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பரந்துவிரிந்த நிலப்பரப்பு தமிழர்களுடையது.  

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும், கீழடி அகழ்வாராய்ச்சியும் தமிழர்களின் ஆதி நாகரிகத்தை, பண்பட்ட மூத்த நாகரிகத்தை இன்றும் உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.  ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கு உதவி செய்யும் மொழி, பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. 

மொழி பழைமையான ஓர் இனத்தின் வாழும் அடையாளமாகவும் திகழ்கிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக்காட்டும் பேச்சு மொழியால் நிகழ்கிறது. ஓர் இனத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினம் பேசும் மொழியை அழித்தால் போதும். மொழியிழத்தலும் விழியிழத்தலும் ஒன்றுதான். ஓர் இனத்தை வளர்க்க வேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியைக் காக்கவேண்டும். 

உலகில் ஏழாயிரம் மொழிகள் இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள மொழிகள் ஏழுமொழிகள்தான், அதில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி எனும் சிறப்பிடம் பெறுகிறது. மலையாளம், தெலுங்கு, துளு, கன்னடம் போன்ற மொழிகளின் தாயாக அமையும் தமிழ், என்று பிறந்த மொழி என்று சொல்லமுடியா அளவு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது. 

தமிழால் தமிழர்களை ஒன்றிணைக்கவேண்டும் என்று விரும்பிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சொல்லி , நாம் தமிழர் எனும் இயக்கத்தைத் தொடங்கித் தமிழுணர்வை ஊட்டினார்.

திருக்குறள் மூலம் தமிழர்களுக்கு அறநெறியும் மொழியுணர்வும் உருவாக்கலாம் என்று எண்ணி, தமிழக சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றபின் தினமும் திருக்குறளை வாசித்து அவை அலுவல்களைத் தொடங்கினார். குறளின் குரல் இன்று உலகம் முழுக்க ஓங்கி ஒலிக்க அன்றே வழி செய்தார். இன்று உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் திருக்குறள், சீன மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழியின் விழியில் நம் வாழ்வின் எதிர்காலம் உள்ளது.  

சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ்ச்சங்கங்களை உருவாக்கித் தமிழ் வளர்த்தனர். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இலங்கையிலும் கனடாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகளைத் தொடங்கித் தங்கள் தாய்மொழியான தமிழ்மொழியைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகின்றனர்.  தங்கள் தாய்மொழியின் தொடர்பு, தங்கள் பிள்ளைகளுக்கு அறுந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் தமிழ்ச் சங்கங்களையும் தமிழமைப்புகளையும் தொடங்கி தனிப் பாடத்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகின்றனர். தமிழ் மொழி காக்கத் தங்கள் இன்னுயிர் தந்த மொழிப்போர்த் தியாகிகளால் நம் தாய்மொழி இன்னும் உயிர்ப்போடிருக்கிறது. 

அரிசியில், பருப்பில் கலப்படத்தை விரும்பாத நாம், நம் தமிழ்மொழியில் பிறமொழிகளின் கலப்படத்தை எப்படியோ ஏற்றுக்கொள்கிறோம். தமிழுக்குத் தரவேண்டிய இடத்தை நாம் ஏன் வேறு மொழிகளுக்குத் தரவேண்டும்? தாய்ப்பாலாகத் நம் தமிழ்மொழி இருக்க, புட்டிப்பாலை நோக்கித் தமிழ்க் குழந்தைகள் ஏன் நகரவேண்டும்? தமிழ்மொழியை நாங்கள் கற்க விரும்புகிறோம் என்று சீன மாணவர்கள், தொல்காப்பியத்தையும் நன்னூலையும் படித்துக்கொண்டிருக்க, நாமோ ‘இந்த வளாகத்தில் தமிழில் பேச அனுமதி இல்லை’ என்கிற அறிவிப்புப் பலகையைத் தமிழ்நாட்டில் அனுமதித்திருக்கிறோம். நம் வாய்மொழியில்தான் உள்ளது தாய்மொழியின் வளர்ச்சி. அதனால்தான் ‘செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம்’ என்றார்கள் நம் முன்னோர்கள். என் மொழி செம்மொழி! , என் மொழி நன்மொழி! அதை எந்தநாளும் காத்திடுவேன் என்கிற உணர்வு வந்துவிட்டால் தாய்மொழி காக்கும் வல்லமையை நாம் பெறுவோம். 

தமிழே எங்கள் அடையாளம், அடையாளத்தை அழித்தல் நம்மையே அழிப்பதைப் போன்றதுதான். மொழியின் வழியில் நாளும் நடக்கும் பணியை நம்மிடமிருந்தே தொடங்குவோம்! நம் குழந்தைகளுக்குத் தமிழின் சிறப்பை ஆழமாக உணர்த்துவோம், நல்ல தமிழ்ச் சொற்பொழிவுகளைக் கேட்க வைப்போம். நல்ல தமிழில் பேசச்சொல்லிப் பிழைகளைத் திருத்துவோம். நாம் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கவேண்டும். எல்லோரிடமும் தமிழிலேயே பேசுவோம். நல்ல தமிழ் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தை வீடுகளில் தொடங்கி, நாமும் படித்து நம் குழந்தைகளுக்கும் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவோம். தினமும் ஒருபக்கமாவது தமிழில் எழுதுவோம். அதனால்தான் ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே’ என்று பாவேந்தர் பாடினார். அவர் கண்ட கனவு, “ எளியநடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று அமைந்தது. 

உலகில் புதிதுபுதிதாய்  உருவாகும் துறைகள் குறித்த தமிழ்நூல்கள் உடனுக்குடன் எழுதப்படவேண்டும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே பேருதவி புரிகிறது. தமிழ்வழிக் கல்வி தமிழகம் முழுக்கப் பரவவேண்டும்.  தாய்மொழியைப் போற்றிய நாடு வீழ்ந்ததில்லை, தமிழ்மொழியைக் கற்றதாலே வீழ்ச்சியில்லை.  

தேன்தமிழென்றும், இன்பத்தமிழென்றும், அன்னைத் தமிழென்றும், அருந்தமிழென்றும், ஞானத் தமிழென்றும், தீந்தமிழென்றும் என்றும் நற்றமிழென்றும் போற்றப்படும் நம் அன்புத் தமிழைக் கற்றால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சில் தூய்மை  உண்டாகிவிடும்! வீரம் வரும்” என்று பாவேந்தர் கூறியது நடந்தே தீரும். அன்னைத் தமிழை நேசிப்போம், அருந்தமிழ் மொழியைச் சுவாசிப்போம். தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் பரப்புவோம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/mozhi.gif https://www.dinamani.com/language-fest/2020/jan/01/வாய்மொழியில்-உள்ளது-தாய்மொழி-வளர்ச்சி-3320014.html
3320001 தமிழ் மொழித் திருவிழா செவ்வியல் இலக்கியங்கள்: குழந்தை இலக்கிய விழுமியங்கள் முனைவர் சி.அங்கயற்கண்ணி, இணைப்பேராசிரியர், ஈரோடு. DIN Wednesday, January 1, 2020 09:00 AM +0530  

மனித இன வரலாற்றில் அன்னை தன் குழந்தையைத் தாலாட்டி மகிழ்ந்த
தொடக்கக்காலத்தைக் குழந்தை இலக்கியத்தின் கரு தோற்றம் பெற்ற காலம் எனலாம். குழந்தைகள் படிப்பதற்காகவும் பாடுவதற்காகவும் குழந்தை மொழியிலேயே இலக்கியம் உருவாகியது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். குழந்தை இலக்கியத்தின் முதல் வடிவம் நாடோடி இலக்கியம். நாடோடிப் பாடல்களும் கதைகளும் இந்த உண்மையை உணர்த்துகின்றன என்று குழந்தை இலக்கியத்தின் நீண்ட கால வரலாற்றை அறிஞர்கள் எடுத்துக்காட்டுவர்.சங்க இலக்கியம் போலத் தமிழில் குழந்தை இலக்கியமும் தொன்மையானது.

 குழந்தை இலக்கியத்தில் பழமையானது நாடோடி இலக்கியமே. பண்டைக்
காலத்துத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கிய நூல்களான சங்க இலக்கியத்தில் குழந்தைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.பல்வேறு பாடல்களில் குழந்தை மொழி பெற்றோர்க்கு இனிமைபயப்பதும் பாலூட்டுவதும் நிலவொளியில் குழந்தைகள் பந்தும் கழங்கும் ஆடுவதுமாகிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன.

 குழந்தையை ஒரு செல்வமாகக் கருதுவது தமிழகத்தின் பண்பு. தம் மக்களே தமது பொருள் என்ற உயரிய எண்ணம் இந்த மண்ணில் ஆழப்பதிந்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு அறிவையும் துணிவையும் அழகியப் பண்புகளையும் இளமையில் எளிதாகக் கற்றுத் தருவது குழந்தைப் பாடலாகும். குழந்தைச் செல்வம் வாழ்க்கையின் பேறாகக் கருதப்படுகிறது.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு நன்கலம் நன்மக்கட் பேறு” --என்பது வள்ளுவரின் வாய்மொழி.

 மனித குல வளர்ச்சிக்கும் சமூக பெருக்கத்திற்கும் குழந்தையே அடிப்படையானது. வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தைப் பேறு இல்லையென்றால் வாழ்ந்து பயனிலை. ஆகவே வாழ்க்கையின் பயன்களில் மக்கட்பேறும் ஒன்று என்பது புலனாகிறது.  சங்க காலத்து மக்கள் இம்மை வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மறுமை வாழ்வின் உயர்வுக்கும் குழந்தைச் செல்வமே இன்றியமையாதது என நம்பினார்கள் என்பதை,

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மருவின்றி எய்துப
செருநரும் விழையும் செய்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி என்ற அகநானூற்றுப் பாடல் வழியாக அறியலாம்.

 குழந்தைப் பேறு கிடைக்கவில்லை என்றால் தவம் இருந்து குழந்தைச்
செல்வத்தைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சங்ககால மக்கள் வாழ்ந்தனர் என்பதைக்,

“குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்.’’

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் அடிகள் உணர்த்துகின்றன. குழந்தைப் பேசத்
தொடங்குகிறது. பொருள் புரியாத அம்மொழி தந்தைக்குத் தேன் போல் இனிமை பயப்பதாக உள்ளது.

“அத்தத்தா என்னும் நின்
தேன் மொழிகேட்டல் இனிது.”

குழந்தையின் “அத்தத்தா” என்னும் மழலை மொழி கேட்டு அக்குழந்தையின்
தந்தை மகிழும் நிலையை கலித்தொகைப் பாடலில் காணலாம். மேலும் குழந்தையின் மழலை மொழியினைத் “தேமொழி” எனப் பகர்வது இன்பத்திற்குரியது.

குழந்தைகள் உணவைக் கையால் தொட்டும், தம்மேல் பூசிக்கொண்டும், க Pழே
இரைத்தும், மற்றவர்கள் மேல்பூசியும் விளையாடும் செயல்களால் பிறரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியும், தம்மையும் மகிழ்விப்பர். இதனை,

“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தம்
மயக்குறு மக்கள்...”
“அமிழ்தினும் ஆற்றஇனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் விய கூழ்”

போன்ற வரிகளால் அறிய முடிகிறது. சிறுகுழந்தைகட்கும் கழுத்தில்
புலிப்பல்லைக் கோத்த சங்கிலியை அணிவித்தனர். அச்சமின்மை மற்றும் குழந்தைப் பருவத்திலேயே மறக்குணம் வளரவேண்டும் என்பதற்காக அணிவிக்கப்பட்ட இச்செய்தியை  அகப்புறப் பாடல்கள் மூலம் அறியலாம். சங்க இலக்கியம் குழந்தையின் தளர் நடையினை அழகாக வெளிப்படுத்துகின்றன. “தளர் நடைப்புதல்வனை” என்று ஐங்குறுநூறுச் சுட்டுகிறது.

  தம்முடைய குழந்தையை வளர்த்த முறையைப் பற்றி பல வருடங்கள் கழித்து
பிறரிடமோ அல்லது குழந்தையிடமோ கூறும் தன்மையை

“இன்னகை முருவல் ஏழையைப் பலநாள்
கூந்தல் வாரி நுசுப்பிவர்ந்து ஓம்பி
நலம் புனை உதவியும் உடையன் மன்னே”

என்று நற்றாய் தலைவன் கேட்கும்படி கூறியதாக அகநானூறு வரிகளில் அறிய முடிகிறது.

 குழந்தை அழும்போது அதனை அமைதிப்படுத்த விளையாட்டு காட்டுவர். குழந்தை அழுகிறது அக்குழந்தையின் வீட்டில் வளர்க்கப்படும் குரங்கு ஒன்று ஒளிவிடும் முத்துக்களை கிளிஞ்சலுக்குள் செலுத்தி கிலுகிலுப்பையாக மாற்றி குழந்தையின் அழுகையை நிறுத்திய காட்சியை,

 “மகா அர் அன்ன மந்திமடவோர்
அர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருத்தின் வயிற்றகத் தடக்கி
உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலியாடும்.”

என்ற சிறுபாணாற்றுப்படை பாடல் மூலம் அறியலாம்.

குழந்தையின் தாயார் குழந்தையின் செயல்களைப் பாராட்டிப் பேசியது
மட்டுமல்லாது, திங்களாகிய குழவியைத் தன் மகனுடன் விளையாட வரவேண்டுமென்று அழைத்து தன் மகனுக்கு அம்புலியைக் காட்டி மகிழும் தலைவியின் மகிழ்வை,

“திங்கள் குழவி வருகென யான் நின்ன
அம்புலி காட்டல் இனிது”
எனக் கலித்தொகைப் பாடலும் காட்டுகின்றது.

 குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள்
சிறு தேர்களை உருட்டியும், சிறுபறை கொட்டியும், விளையாடுகிறார்கள் இதனை,
“பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத் தெழுதிய குரீஇப் போல”
என்று நற்றிணையும் தெளிவாக்குகிறது.

 குழந்தைகள் சிறுதேர்களை உருட்டி விளையாடும் போதே,தாமே அவற்றின் மீது ஏறிச்செல்வது போன்ற நிலையை உணர்கின்றனர். இதனை,

“தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின் ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின் ஊர்ந்து இன்புறா அர் ஆயனும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்”
இது குறுந்தொகை வெளிப்படுத்தும் பாங்கு.

  குழந்தைப் பருவத்திலேயே வீரம் செறிந்தவர்களாக விளங்கும் வீரர்களைப் பற்றிய செய்திகளைப் புறநானூற்றில் காண முடிகிறது,
“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ஆங்கோர்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

 ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாயின் கடமை என்றும், கல்வி,
அதற்குரிய அறிவு முதலியவற்றால் நிறைந்தவனாக ஆக்குதல் தந்தையின்
கடமையென்றும், படைக்கலம் செய்து கொடுப்பது கொல்லனுடைய கடனென்றும், வேலைக் கையில் ஈந்து அவனைப் படைவீரனாக மாற்றுவது வேந்தனின் கடனென்றும், போர்க்களத்தில் மதயானைகளை வெட்டி வீழ்த்தி வெற்றியுடன் திரும்ப வேண்டியது வீரனின் கடனென்றும் இப்பாடல் கூறுகின்றது.

 சங்க காலத்தில் அரசர்கள் மறவர்களின் வீரத்தாலேயே அரசாட்சி நடத்தி
வந்தனர். மேலும் போர்க்கல்வி (அல்லது) போர்ப்பயிற்சி அக்காலத்தில் முதன்மை பெற்று விளங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. புறப் பொருள் பற்றிப் பாடப்பட்டுள்ள புறநானூற்றில் போருக்குச் சென்று வீரம் விளைவித்த சிறார்களின் மனவுறுதியானது சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.

 “இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று,மயங்கி
வேல் கைக் கொடுத்து,வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச்செல்க - என விடுமே”

 முதல் நாள் போரில் தமையனையும்,மறுநாட் போரில் தலைவனையிழந்தும், மனந்தளராத்தாய் தனதுஒரே மகனுக்குப் போர்க்கோலம் செய்வித்து செருக்களத்திற்கு அனுப்பும் காட்சியையும் புறப்பாடல் விளக்குகிறது.
 “சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்கே”

 புறமுதுகு காட்டா மேன்மையுடைய வீரனின் தாய் தன் மகனின் சிறப்பைக் கண்டபோது அவளுடைய வாடிய மார்பகங்கள் பாலூறிச் சுரந்தன.

திருவள்ளுவர் பார்வையில் குழந்தை:
 உலகெலாம் வாழ ஒரு நூல் செய்த திருவள்ளுவர் இந்தச் சமுதாய அடிப்படை
நெருக்க உறவின் மீது தான் தம்முடைய அறிவுக் கருவூலத்தைச் செம்மையுடன்
தெளிவாக நிறுவியுள்ளார். வள்ளுவரின் ஒவ்வொரு சிந்தனையும் பளிங்கு போலத் தமிழ் பண்பாட்டு, மரபு, குறிக்கோள்களை எடுத்துக்காட்டும் தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்ல மருந்தாகவும் பயன்பட்டு தமிழர்களின் வாழ்வைச் செழிப்பாக்கவும் இது உதவுகிறது என்றால் மிகையாகாது. திருவள்ளுவர் புதல்வரைப் பெறுதல் என்னும்ஓர் அதிகாரத்தைத் தனியே வகுத்து மக்கட்பேற்றின் சிறப்பை உணர்த்துகிறார். அறிவறிந்த மக்கட்பேறு, பண்புடைய மக்கட்பேறு எனக் குழந்தையின் இன்றியமையாமை குறித்து விளக்கிச் செல்கிறார்.

“பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
 மக்கட்பேறு அல்ல பிற”

அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவது ஒருவர் பெறக்கூடிய பதினாறு பேறுகளுள் சிறந்ததாகும். மற்றப் பேறுகள் என்பவை அவ்வளவு சிறந்தவைகளல்ல என்ற வள்ளுவரின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.

 அறிவென்பது ஆற்றல் மிகுந்த ஆயுதம், பண்பாடு அதைப் பாதுகாக்கும் உறை.
பண்பாடு சேராத அறிவானது வாழ்வையும், சமுதாயத்தையும் அழிக்கும். எனவே குழந்தைகள் பண்பாடு நிறைந்தவர்களாக வளர்க்கப் படவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது அறிவுரை மற்றும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

பேற்றோர் பண்பாட்டுடன் வாழ்ந்தால்தான், குழந்தைகள் அவர்களின் அறிவுரைகளை மதிப்பர். எனவே பழிசெய்வதில் இன்பம் காணாத நல்ல பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெறுபவனுக்கு ஒரு பிறவியிலும் தீமை வராது.

“எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்”

பிறர் பழி கூறாத பண்புடைய பிள்ளைகளை பெறும் பெற்றோர்க்கு எப்பிறவியிலும் தீமை வந்து சேரா என்ற குறளின் கருத்து பெற்றோர்க்கு அறிவுரையாய் அமைந்துள்ளது.

பெற்றோரின் மறுபதிப்பே அவர்தம் குழந்தையின் அறிவும் பண்பும் செயல் புரியும் தன்மையும் பெற்றோர்களிடமிருந்து பெறுவது. சமுதாயத்திற்கு அவர்கள் கொடை அதுபோல் தீ பண்போ, நல்ல பண்போ குடும்பத்தில் தலைமுறை தோறும் விடாமல் தொடரும் என்ற முன்னெச்சரிக்கையோடு குழந்தைகளை கண்டிப்புடன் நற்பண்பும் நற்செயலும் உடையவர்களாக வளர்ப்பது அவசியம். குழந்தைகளுக்குப் பணத்தைச் சேகரித்து வைப்பதைவிடப் பண்பைச் சேகரிக்கப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

 “தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம் வினையால் வரும்”

குடும்ப பண்புகள் பெற்றோர் மூலமாகக் குழந்தைகளுக்குச் சேர்வதால் குழந்தைகளே அவர்களின் நிலையான செல்வம். பெற்றோhகள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய குழந்தைகள் செல்வங்கள் ஆவர். அந்தக் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக இருப்பதும் இல்லாதிருப்பதும் பெற்றோர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும்.

எனவே, குழந்தைகளுக்குப் பணம்,பொருள்,சேகரிப்பதைவிட பண்பைச் சேகரிக்கப் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமானதாக வள்ளுவர் கருதுகிறார்.பெற்றோர்களின் கவலைகளைப் போக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் திறன் குழந்தைகளின் மழலைக்கு உண்டு.

 “குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
 மழலைச் சொல் கேளாதவர்”

 குழலும், யாழும் இனிமையைச் சுரக்கும் கருவிகளாகும். ஆனால் தனது குழந்தையின் மழலை மொழியைக்கேட்ட பிறகு குழல், யாழ், இசையின் இனிமை ஒரு பொருட்டாகவே இருக்காது என்கிறார் வள்ளுவர். பெற்றோர்களின் கவலைகளைப் போக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் திறன் குழந்தைகளின் மழலை மொழிக்கு உண்டு.

 உலகில் பொருளென்று கூறப்படும் யாவையும் தம்பொருள் என்றும் உரைத்திட
முடியாது. ஆனால் தனது உயிர், தனது உணர்வு, தனது உரு ஆகிய அனைத்து
இயல்பும் குழந்தையிடமே காணப்படுவதால் குழந்தைகளைத் தம்பொருள் என்று அழைக்கலாம்.

 தவமிருந்து பெற்ற குழந்தை என்பார்கள். உண்மையில் அதற்கும் ஒரு தவம்
செய்திருக்க வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதென்பது ஒரு கலை. ஆதைப்பற்றியெல்லாம் வள்ளுவர் பேசவில்லை. வாழ்வின் முற்பகுதியில் மழலை, ஆடல், பாடல் முதலியவற்றால் மகிழ்வித்தும், மடியில் தவழ்ந்தும், தோளில் கிடந்தும், தரையில் நீந்தியும் நமது நெஞ்சையள்ளும் காட்சிகளை நினைவுபடுத்துகிறார். பின்னர் வாழ்வின் பிற்பகுதியில் அறிவுடைய மகனாய் வளர்ந்து பெருமையளிக்கும் சிறப்பையும் உணர்த்துகிறார்.

 தம் மக்கள் அறிவுடையோராய் விளங்குதல் தந்தைக்கு மாத்திறம் இனிமை
என்றில்லை. மாநிலத்தில் மண்ணுயிர்க் கெல்லாம் இன்பமூட்டும் செய்தி அது. அறிஞன் ஒருவனை உலகிற்களித்த பெருமை தந்தைக்கு உண்டு. உணர்வின்பம் என்பது பெற்ற தாய்க்கும் உண்டு. ஈன்ற பொழுதில் தோன்றிய மகிழ்ச்சி இயற்கையானது என்றாலும் மகனைச் சான்றோர் என்று பிறர் வாயால் கேட்டபோது தான் பூரணமாக உணர்கிறான்.  பெற்ற இன்பம் அன்றுதான் ஏற்பட்டதாக மகிழ்ச்சி அடைகின்றார்.

“மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
 என் நோற்றான் கொல்”
 எனும் சொல் தன்னை ஆளாக்கி விட்ட பெற்றோர்க்கு மகன் செய்யும் கைம்மாறு வேறென்ன இருக்க முடியும்? இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ? என்று உலகம் புகழ்ந்து உரைக்கும் இனிய மொழிகளைக் கேட்டு அகம் மகிழ்வர்.

 “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.”

பெற்ற குழந்தைகளிடம் பெற்றோர்க்குச் சில கடமைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது அவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதாகும். குழந்தைகளுக்கு அமுதூட்டிப் பராமரித்து வளர்த்தல் தாயின் கடமை என்றால் அவர்களைக் கல்வியில் சிறந்தோனாக்கி, கற்றோர் அவையில் சிறப்புடன் வீற்றிருக்கச் செய்தல் தந்தையின் கடமையாகும்.  பிள்ளைகளைப் பெறுகின்ற தந்தை அவர்களுக்குத் தேவையான கல்வியை அளித்து சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருவது அவசியம்.

 இன்றைய சிறுவரை நாளைய சிறந்த குடிமக்களாக மாற்றும் அற்புத ஆற்றல் பெற்றது சிறுவர் இலக்கியம் என்பார் பூவண்ணன். குழந்தைகளை நன் மக்களாய் உருவாக்கும் இலட்சிய நோக்குக் குழந்தை இலக்கியத்திற்கு இருக்கிறது. குழந்தை இலக்கியம் குழந்தைகளின் முகமலர்ச்சியையும், மனமகிழ்ச்சியையும் வெளிகாட்டுவதாக அமைய வேண்டும் என்பர்.

 மேலும் தாய்மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. குழந்தைகளுக்கு விலங்குகள், பறவைகள், நாட்டுத் தலைவர்கள், குறித்து எழுதுவதை விடுத்து குழந்தைகளின் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்பட எழுத வேண்டுவது அவசியம். குழந்தைகள் விரும்பி கேட்கக் கூடிய அதிகம் பேசக்கூடிய இலக்கியங்களை உருவாக்க முன் வரவேண்டும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/ilakkiyam.gif https://www.dinamani.com/language-fest/2020/jan/01/செவ்வியல்-இலக்கியங்கள்-குழந்தை-இலக்கிய-விழுமியங்கள்-3320001.html
3320019 தமிழ் மொழித் திருவிழா தன்னை இனங்கண்ட தமிழ் முனைவர் பா. மதிவாணன், திருச்சிராப்பள்ளி DIN Tuesday, December 31, 2019 04:17 PM +0530

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  மங்காத தமிழென்று சங்கே முழங்கு
.... ..................
  திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
 விண்ணோடும் உடுக்களோடும்
 மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
 பிறந்தோம் நாங்கள்

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். இது தமிழ்ப்பற்று மீதூர்ந்த கவியுணர்ச்சியின் மிகை என்றுதான் தோன்றும். தவறில்லை. இதனை உணர வரலாற்றில் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தின்  வளமோங்கிய சமற்கிருத மொழியையும் வழக்கில் பரவியிருந்த பிராகிருத மொழிகளையும் வடமொழிகள் எனக் கொண்டு தன்னைத் தென்மொழியாக இனங்கொண்ட தமிழின் வரலாற்றையும் பார்க்க வேண்டும்.

தமிழின் தலையூற்றாக எஞ்சி நிற்கும் முழு முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் உணர்ச்சி கலவாமல் புறநிலைநின்று தமிழை இயற்கையான மொழியாகக் கண்டு இலக்கணம் கூறியிருக்கிறது.

தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் மொழியும், இலக்கண மரபும் உருவாகிவிட்டன.

தொல்காப்பியப்பாயிரம் (முன்னுரை) 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்' என்று தொல்காப்பியரைத் தொகுத்தவராகச் சுட்டுகிறது.

'எழுத்தெனப்படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப' என்று தொடங்குகிறது தொல்காப்பியம். 'என்ப' என்பதற்கு 'என்பார்கள்' என்று பொருள். தமிழ்எழுத்துகள் முப்பது என்பது தொல்காப்பியருக்கு முன்பே வரையறுக்கப்பட்டுவிட்டது.

மாங்குளம் குகைக்கல்வெட்டுக் கண்டுபிடிப்பு (1882-1903) முதல் கீழடிப் பானையோட்டுக் கீறல் கண்டுபிடிப்பு(2013-19) வரை தமிழகத்தின் பரவலான பழந்தமிழ் எழுத்து வடிவங்களைக்காட்டுகின்றன.

அந்த எழுத்து வடிவத்தை அசோகன்பிராமி என்று குறிப்பிட்டது போய்த் தமிழ்ப் பிராமி என்று சுட்ட நேரிட்டது; ஆய்வாளர் சிலர் தமிழி என்று சொல்ல வேண்டும் என்கின்றனர். இது புதிதன்று .பொதுக்காலத்திற்கு முந்தைய (கி.மு.) முதல் நூற்றாண்டிலேயே பந்நவணா சுத்த என்னும் சமணநூல் 'தாமிளி' என்னும் எழுத்து வடிவம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.

கரகங்கள்-என்றும் சொல்லின் உச்சரிப்பை karahangal என்று உரோமானிய எழுத்தில் காட்டலாம். இதில் 'க' மூன்று இடங்களில் வருகிறது. முதலில் உள்ளதை ka என்றும், இடையில் உள்ளதை ha என்றும் மூன்றாவதை ga என்றும் ஒலிக்கிறோம்.

ஆனால், 'க' என்ற ஓர் எழுத்தாலேயே எழுதுகிறோம். மூன்று தனித்தனி எழுத்துகள் இல்லையே ஏன்? தேவையில்லை. தமிழ் ஒலியமைப்புக்கு ஓர் எழுத்துப் போதும். இதுகுறையா? இல்லை, நிறை.

இந்தக் கால மொழியியலின் உட்பிரிவாகிய ஒலியன் இயல், ஒலியன், மற்றொலிகள் என இந்த இயல்பைவிளக்குகிறது. க் k என்னும் ஒலியனுக்கு (phoneme) k, g, h என்று மூன்றுமற்றொலிகள் (allophones) உள்ளன. k சொல்லின் முதலிலும் இடையில் இரட்டிக்கும்போதும் -kk-(எ.கா.- பக்கம்) வரும். மெல்லெழுத்தை அடுத்து வரும்போது g வரும். இடையெழுத்துகளை அடுத்தும் (எ.கா- வாழ்க) உயிர் ஒலிகளுக்கு இடையிலும் h வரும்.

இவ்வாறுஇடங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் ஓர் எழுத்தே போதுமானது என இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணரபட்டிருக்கிறது. ச, ட, த, ப போன்ற எழுத்துகளும் இடத்துக்கேற்ப ஒலியில் வேறுபடும்.

தமிழ்முதலில் பெருமளவு எதிர்கொண்ட மொழி பிராகிருதம். பிராகிருதத்தில் k(a), h(a), g(a)  ஆகியவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள் உண்டு. பிராகிருத மொழி அமைப்பிற்கு அவை தேவை.

தன்னை இனங்கண்ட தமிழ், ஒலிவேறுபாடு மட்டும் கருதிப் பிராகிருத எழுத்துகளைக் கடன் வாங்காமல், தன்உள்ளார்ந்த அமைப்பை உணர்ந்து வரையறுத்துக் கொண்டது. பிற பிராமி எழுத்துகள் தமிழிலிருந்து தோன்றியவை என்னும் கருத்தும் உண்டு. ஆனால் இதுபோதிய அளவு நிறுவப்படவில்லை.

பழந்தமிழிக்கல்வெட்டுகளில் மிகச்சில பிராகிருத எழுத்துகள் இல்லாமலில்லை. ஆனால், பெரும்பாலான பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலி மரப்பிற்கேற்ப மாற்றிக்கொள்ளப்பட்டன.

இதனைத் தொல்காப்பியம், 

 'வடசொற் கிளவி வடஎழுத்து ஓரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே'

என்று இலக்கணமாக விதித்தது (ஒரீஇ=நீக்கி)

இலக்கியத்தமிழில் இவ்விதி பல நூற்றாண்டுகள் இயல்பாகத் தொடர்ந்தது. பிற்காலவட்டடெழுத்துக் கல்வெட்டுகளிலும், மிகப்பிற்கால இலக்கியங்களிலும் வடஎழுத்துகள் கலந்தாலும் அவை தமிழ் அகர வரிசையில் அயல் எழுத்துகள் என்னும் தெளிவுடன்தான் பயிற்றுவிக்கப்பட்டன.

தென்னகத்தில்பொதுக்காலத்துக்கு முன்பே (கி.மு.) கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கியதற்கான சான்றுகள் இருந்தாலும் அவை தம்மைத் தனிமொழிகளாக இனங்கண்டு வரையறுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்திலோ அரசியல்வணிக முக்கியத்துவமற்ற பகுதிகளிலும் கூட, பரவலாகத் தமிழ் எழுத்தறிவுநிலவியதற்குப் பானையோட்டு எழுத்து வடிவங்களே சான்று. பானைகள் சுட்ட பின் தனித்தனியே எழுத்துகள் கீறப்பட்டுள்ளன. இதிலிருந்து பலரும் எழுத்தறிவு பெற்றிருந்தது புலனாகிறது என்கிறார் அறிஞர்  ஐராவதம் மகாதேவன்.

தமிழ்தன்னை இனங்கண்டு வரையறுத்துக் கொண்டதற்குத் தெய்வீகக் காரணம் ஏதுமில்லை; வரலாற்றுச் சூழல் வாய்ப்பாக அமைந்திருந்தது. தமிழகத்திற்கு வடக்கிலிருந்ததென்னகப் பகுதிகள் நந்தர்- மௌரியர் ஆளுகை எல்லைக்குள் இருந்தன. அசோகரின் பதின்மூன்றாம் பாறைக் கல்வெட்டு சூத்திரம் அசோகர் ஆட்சிக்குட்பட்டிருந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, அப்பகுதிகளில் பிராகிருதமே ஆட்சிமொழியாக இருந்தது.

ஊர் ஊராகச்சென்று பாடிப் பரிசில் பெற்ற வளமான பாணர் மரபு, இன்னார்தாம் பயில வேண்டும், இன்னார் பயிலக் கூடாது என விதிக்கும் குருமார் ஆதிக்கம் இன்மை, வலிமையானஉள்ளூர்த் தன்னாட்சி, சமண பவுத்தப் பரவல், அயலக வணிகத் தொடர்பு ஆகியவற்றோடுஎளிதாகப் பயிலத்தக்க வகையிலான எழுத்தெண்ணிக்கைக் குறைவும் சனநாயகப் பூர்வமான எழுத்தறிவுப் பரவலுக்குக் காரணம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

தமிழ் வெறும் புற அடையாளமாகத் தனித்தன்மைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அதன் ஒலி, எழுத்து, சொல், தொடர்மரபுகளின் உள்ளார்ந்த கட்டமைப்பிலேயே தனித்தன்மை பேணியது.

அதனால்தான் அயல் தொடர்புகள் அளவு கடந்த நிலையிலும் கூட அவற்றில் அமிழாமலும் அவற்றைப் பகையாகக் கருதாமலும் உள்வாங்கித் தன்மயமாக்கிக் கொண்டது.

முனைவர் பா. மதிவாணன்

'ஐந்தெழுத்தால்ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே... வடமொழி தமிழ் மொழி எனும் இருமொழியினும் இலக்கணம் ஒன்றே' என்றார் பதினேழாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புலவர் சாமிநாத தேசிகர். அவர் அப்படி நம்பினார்.

சமற்கிருதத்தில்இல்லாத தமிழ் எழுத்துகள் எ,ஒ,ழ,ற,ன என்னும் ஐந்து மட்டுமே. இந்தஐந்தெழுத்தால் ஒரு மொழி (பாடை-பாஷை) தனித்தது என்று கூற இயலாது என்றுகருதினார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. காலத்தின் கோலம் அது.

மாறாகஅடுத்த நூற்றாண்டில் பிறந்த சிவஞான முனிவர், 'தமிழ் மொழிப்புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும்...' வடமொழியிற்பெறப்படாதவை; தமிழுக்கே உரியவை என்றார்.முனிவர் சமற்கிருதம் பயின்றவர் மட்டுமல்லர்; அதனிடம் பெருமதிப்புகொண்டிருந்தவராவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தொடக்கத்தில் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ்துவக்கிக் காட்ட, அந்நூற்றாண்டின் இறுதியில் தமிழ் முதலிய திராவிடமொழிகளின் தனித்தன்மையை ஒப்பிலக்கணம் என்னும் நவீன அணுகுமுறையில் ராபர்ட்கால்டுவெல் நிறுவினார். கடந்த ஒன்றரை நூற்றாண்டில் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் வளர்ந்து மேம்பட்டுத் திராவிட மொழிக் குடும்பத்தனித்தன்மை ஐயமின்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. என்றாலும் சச்சரவு ஓயாததற்குக் காரணம் அரசியலே அன்றி மொழியியல் அன்று.

வடமொழிகளைநன்கறிந்த தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின்தனித்தன்மையை உணர்ந்து  இலக்கணம் தொகுத்திருக்கிறார். எழுத்ததிகாரத்தின்முதல் நூற்பா (சூத்திரம்) 'எழுத்தெனப் படுப' (எழுத்து என்று சொல்லப்படுவன)என்று தொடங்குகிறது. அப்படியானால் சொல்லதிகாரம், 'சொல் எனப் படுப' என்றுதானே தொடங்க வேண்டும்? இல்லை. 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணைஎன்மார் அவரல பிறவே' என்று தொடங்குகிறது.

கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் நான்கு இயல்கள்கடந்து ஐந்தாவதாகிய பெயரியலின் நான்காவது நூற்பா 'சொல் எனப் படுப' என்றுதொடங்குகிறது.

ஏன்?

தமிழின் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடும் அவற்றுள் அடங்கிய ஆண்பால், பெண் பால்முதலிய பால் பாகுபாடும் தமிழ்க் கிளவியாக்க (தொடர், வாக்கிய) கட்டமைப்பில் இன்றியமையாதவை; மரபு வழிப்பட்ட தனித்தன்மையுடையவை; வடமொழிகளில் காணப்படாதவை. எனவேதான், இவற்றை முதலில் முன்வைக்கிறது தொல்காப்பியம்.

எல்லிஸும்அவரது குழுவில் இயங்கிய தென்னிந்திய மொழிகளின் பண்டிதர்களும் தம் மொழிக்குழுவின் தனித்தன்மையைத் தேட அகத்தூண்டுதலாக அமைந்தது அவற்றின் இலக்கணமரபில் காணப்பட்ட, இலக்கியச் சொற்பாகுபாடுதான்.

கன்னட, தெலுங்கு மொழி இலக்கணங்கள் தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம் எனவகைப்படுத்தின. முதலில் உள்ள தற்சமம், தற்பவம் இரண்டும் வட சொற்களின் வகைப்பாடு. பின்னரே வடசொல் அல்லாத, அவ்வம் மொழிக்கே உரிய சொல் வகைகள் இடம்பெற்றன.

இதிலும் தொல்காப்பியம் தொட்டுத் தொடரும் தமிழ் இலக்கண மரபு தனித்தன்மை பேணியது; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றது; வடசொல்லுக்குஇறுதியில்தான் இடமளித்தது.

உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகள். குற்றியலுகரம் முதலிய சார்ந்துவரும் எழுத்துகள். இவை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் மரபுகள். எழுத்துகளின் ஒலிகள் எழுப்பப்படும் முறை, ஒலியன் மற்றொலித்தெளிவோடு கூடிய எழுத்து வடிவங்கள், ஒரு தொடரின் அடுத்தடுத்த சொற்கள்ஒலியும் பொருளும் சார்ந்து புணரும் முறை, சொற்கள் தொடராக அமைந்து பொருள் குறிக்கும் போக்கு, சொற்களின் இலக்கண இலக்கிய வகைப்பாடு முதலிய ஒவ்வொன்றிலும் தமிழின் தனித்தன்மையைக் காண முடியும். இவற்றை இலக்கண மொழியியல் நோக்கில் விளக்கலாம்; விரிப்பின்பெருகும்.

பிராகிருதம், சமற்கிருதம் தொடங்கிக்காலந்தோறும் பல்வேறு மொழிகளின் தொடர்பை ,செல்வாக்கை, ஊடுருவலை, ஆதிக்கத்தைத் தமிழ் எதிர் கொண்ட போதிலும் ஆட்சிமொழி நிலையிலிருந்து வழுவியபோதிலும் மொழி, இலக்கண மரபுகள் சிலவற்றை நெகிழவிட்டுச் சில பலவற்றைப் புதிதாகக் ஏற்றுக் கொண்ட பிறகும் உள்ளார்ந்த இழையொன்று இடையறாமல்தொடர்கிறது. 'என்றுமுள தென்றமிழ்' என்றார் கம்பர்.

தொல்காப்பியத்துக்குப்பாயிரம் (முன்னுரை) தந்த பனம்பாரனார் 'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுகம்' என்கிறார். மொழியால் தன்னை இனங்கண்டு கொண்ட இந்தமக்கட்குழு பின்னர் நாட்டு எல்லை முதலிய பலவற்றையும் தன்மொழி சார்ந்தேஉணர்ந்து கொண்டது.

'நல் தமிழ் முழுதறிதல்' என மோசி கீரனார் (புறநானூறு 50) மொழியைச் சுட்டினார்.

'தண்டமிழ்க் கிழவர்... மூவர்...' என வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு 35) தமிழ்நாட்டைச் சுட்டினார்.

'தமிழ்கெழு கூடல்' எனக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரி கண்ணனார் (புறநானூறு 58) தமிழ்ச் சங்கப் புலவர்களைச் சுட்டினார்.

'தன்னாப் பொருள் இயல்பின் தண்டமிழ்' எனக் குன்றம் பூதனார் (பரிபாடல் 9) அகப்பொருள் இலக்கண மரபைச் சுட்டினார்.

'தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' எனக் குடபுலவியனார் (புறநானூறு 19) தமிழ் மன்னர் படைகளைச் சுட்டினார்.

'அருந்தமிழ் ஆற்றல்' எனத் தமிழ் வேந்தர்தம் பேராற்றலைச் சுட்டினார் இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம், கால்கோட் காதை)

' தமிழ் தழிய சாயல் 'எனத் திருத்தக்க தேவர் (சீவகசிந்தாமணி 2026) இனிமையைச் சுட்டினார்.

சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தத்தம் பக்தி நெறியைத் தமிழ் என்றே சுட்டியதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. பக்தி இயக்கத்தின் பிறப்பிடம்தமிழகம் என்பது நிறுவப்பட்ட உண்மை.

வைணவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தமிழ் வேதம் என்றனர் எனில் சைவர் தமிழே சிவபெருமான் அருளியது என்றனர்.

'ஆயுங்குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பியதண்தமிழ்' என்று தமிழைத் தந்தவர் அவலோகிதராகிய புத்தரே என்கிறார் வீரசோழியஇலக்கண ஆசிரியர் புத்தமித்திரர்.

பக்தி இயக்க எழுச்சிக்காலம் போல் தமிழை எண்ணற்ற அடைமொழிகளால் ஏற்றிப் போற்றிய காலம் பிறிதொன்று இல்லை என்றே சொல்லலாம்.

'பயிலுவதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற்கிடைத்த தென்மொழி' என இராமலிங்க அடிகள் தமிழை ஆன்மிக மொழியாகக் காண்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் சமயச் சார்பற்ற தமிழ் எழுச்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான அடைமொழிகளில் தமிழ் சீராட்டப்பட்டது, தமிழே தெய்வ நிலைக்கு  உயர்த்திக்காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று பேதையர் சிலர் பேசக் கேட்டுப் பதைத்தார் பாரதி. தமிழ் என்னும் கருவியை உலகியல் நலன் நோக்கித் தமிழரே கைநெகிழவிடுவது கருதிய பதற்றம் அது. இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்தப் பதற்றம் தொடர்கிறது. தமிழ் மொழிப் பயன்பாடு திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறது என்றே சொல்லலாம்.

தமிழ் ஒரு மொழிதான்; கருவிதான். ஆனால்தமிழ்ச் சமூகம் தன் முதல் தனி அடையாளமாக அதனைக் கண்டுணர்ந்து பின்னர் நாடு, அரசு, ஆற்றல், அகப்பொருள், பக்தி, இனிமை முதலிய பலவற்றினதும் அடையாளமாக விரித்துக் கொண்டது. பன்னூற்றாண்டுகளில் படியும் ஆற்றுப்படுகை மணற்பரப்புப்போல நுண்மையான பண்பாட்டுணர்வாகவும் 'தமிழ்' படிந்து கிடக்கிறது.

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்'.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/tamil3.gif https://www.dinamani.com/language-fest/2020/jan/02/தன்னை-இனங்கண்ட-தமிழ்-3320019.html
3319996 தமிழ் மொழித் திருவிழா எங்கள் கொங்குத் தமிழ் புலவர் செ.ராசு DIN Tuesday, December 31, 2019 12:06 PM +0530
தமிழ்நாடு முன்பு சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் கொங்கு, தொண்டை நாடுகளையும் சேர்த்து ஐந்து பகுதியாக விளங்கியது. இதனை வியன் தமிழ்நாடு ஐந்து, தமிழ் மண்டலம் ஐந்து என இலக்கியமும் கூறுகிறது.

 தமிழ் கூறும் நல்லுலகம் என்று கூறினாலும், அவை கூறும் தமிழில் எத்தனை, எத்தனை வேறுபாடுகள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தன்மையுடைய சில சொற்கள் உண்டு. அவற்றில் பல சொற்கள் வேறு வட்டார மக்களுக்குப் புரியாது. இதற்குஓர் எடுத்துக்காட்டு கூறலாம்.

ஒரு பேருந்தில் நடத்துநர் ஒரு பயணியிடம் பயணச்சீட்டுக் கொடுத்துவிட்டு,"மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்" என்றார். பயணி அதனால் என்ன பையக் கொடுங்களேன் என்றார், நடத்துநர் ஏனையா 50 பைசா காசுக்குப் பையைக் கேட்கிறீரே என்று கோபித்து சத்தம் போட்டாராம். பைய என்றால் மெதுவாக என்று ஒரு வட்டாரச் சொல் என்பது நடத்துநருக்குப் புரியவில்லை.

 கொங்குச் சமுதாயம் ஒரு கிராமக் குடியாட்சிச் சமுதாயம் என்று கூறலாம். சமுதாய வாழ்விற்குப் பட்டக்காரர், ஊர் நிகழ்ச்சிகளுக்குக் கொத்துக்காரர், சமயம்சார் சடங்குகளுக்கு அருமைக்காரர், கோயில் நடைமுறைக்கு தருமகர்த்தா தலைமையேற்று நடத்துவர். ஊர் மக்கள் யாவரும் அவர்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர். ஊர்க்கட்டுப்பாடு, ஒற்றுமை இருந்தது. இன்று பல்வேறு அரசியல் கட்சிகள், திரையுலக ஆதிக்கத்தால் இது கலைந்து வருகிறது.

 கொங்குநாடு, உழவுசார் நாடு, உழவர்கள் விவசாயம், சமய, சமூக வாழ்விற்கு 18 வகையான மக்களை ஆதரித்துப் போற்றினர். நற்குடி என்று தங்களை அழைத்துக் கொங்கு சமுதாயம் உதவியாக உள்ள18 குடிமக்களைப் பசுங்குடி என்று அழைப்பர். இந்த 18 வகை மக்கள் "கட்டுக்கண்ணிகள்" என்றும் அழைக்கப் பெறுவர்.

 இந்த 18 குடிகளும் பொழங்கிற மக்கள், பொழங்காத மக்கள் என இருவகையாக அழைக்கப்பெறுவர். பொழங்குற மக்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப் பெறுபவர் ஆவர். திருமண வீடுகளில் மணவறை முன்பு இவர்கள் எல்லோருக்கும் பரிவட்டம் கொடுத்து மரியாதை செய்யப்படும். திருமணத்தில் மங்கல வாழ்த்துப்பாடும் நாவிதர் மங்கலன் சக்கரைக் கந்தி என்று அழைக்கப்படுவார்; குடிமகன் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

 இவர்கள் தவிர கொங்கு சமுதாய வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் காணிப்புலவர், குலகுரு இருவர் ஆவர். இல்லம் வந்து வாழ்த்துப்பாடும் புலவருக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை கொடுத்துத் தாங்கள் உண்ணும் வட்டிலில் உணவிட்டு மகிழ்வர். திருமண வீட்டில் புலவர், பால், பழம் சாப்பிடும் சடங்கு உண்டு.

குலகுருவிற்குப் பாதகாணிக்கை அளிப்பர், குலகுரு வீட்டை மடாலயம் என்றே கூறுவர். வீட்டில் உள்ள மாங்கல்யத்திற்கு (திருமணம் ஆனவர்) ஏற்ப வரிகொடுப்பர். குருக்கள் ஊர்தோறும் சஞ்சாரம் சென்று தன் குடிமக்களை ஆசிர்வதிப்பார். அப்போது பாத காணிக்கையாக சஞ்சார வரி செலுத்துவர். வாரிசு இல்லாத சொத்து, குலகுருவைச் சேரும். இவ்வகையான காணிப்புலவர் குருகுல முறை தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை.

 கிராமத்தில் உள்ள வீடுகளை வளுவு என்று கூறும் வழக்கம் உண்டு. தெக்கு வளுவு ராமசாமி வந்தார் என்பது ஒரு தொடர். இது தெற்கு வீட்டு ராமசாமியைக் குறிக்கும்.

 தந்தையை அப்பா என்று அழைப்பது பெரும்பான்மை வழக்கம். ஆனால் கொங்கு நாட்டில் பல பகுதிகளில் தந்தையை அண்ணன் என்றும், ஐயன் என்றும் கூறும் வழக்கம் உண்டு.  

 சொல்லுக்குச் சொல்ங்க என்னும் அடைமொழியைச் சேர்த்து மிகவும் மரியாதையாக பேசும் வழக்கம் கொங்குநாட்டில் உண்டு. மணியார ஐயன் வீட்டுக்குங்க, எப்படீங்க போறதுங்க என்று ஒருவர் கேட்டால், 'அதுங்களா இந்த இட்டாலியைப் பிடிச்சு 4 காடு போனீங்கன்னா ஒரு பாங்கெணம் வருமுங்க, பக்கத்தால ஒரு தொக்கடவு இருக்குமுங்க, அதைத்தாண்டுனீங்கன்னா, சங்கம் பொதர் வருமுங்க. அங்க பூச்சி இருக்குமுன்னு சொன்னாங்க, பார்த்துப்போங்க. பக்கத்துப் பாங்காடு வருமுங்க, எதுக்காப்புலேதாங்க மணியக்காரய்யன் ஊடு தெரியுமுங்க. ஏங்க கொஞ்சம் புளு தண்ணி தரேன் குடிச்சிட்டுப் போங்க' என்று பதில் வரும்.

 இதில் இட்டாலி என்பது இரண்டுவேலிகளுக்கு உள்பட்ட சிறு வழி. பாங்கெணம் என்பது தண்ணீர் இல்லாது வறண்ட கிணறு, தொக்கடவு வேலி என்பது ஒய் வடிவிலான வழி, பொதர் என்பது புதர், பூச்சி என்பது பாம்பு, பாத்து என்பது சாக்கிரதையாக,  பாங்காடு என்பது வறண்ட நிலம், ஊடு என்பது வீடு, புளுதண்ணி என்பது நீராகாரம்.

 தொளவு என்ற சொல், பகை விரோதம் என்ற பொருளைக் குறிக்கும். அண்ணன் தம்பிக்குள்ளே தொளவு ஏற்பட்டுப் போக்குவரத்தே இல்லிங்க என்பார் ஒருவர்.

கால்நடை மேய்ப்பவர் மாடுகளை குரால் என்றும், ஆடுகளை ஊத்தை என்றும் அழைப்பார். குரால் கம்முன்னு மேயுது, இந்த ஊத்தை அடுத்தவன் காட்டுக்குப் போயிருங்க என்பார்.  மக்கள் இறப்பைப் பெரிய காரியம் என்பர். பெரிய காரியம் போனேனுங்க, வீட்டுக்குள் வரக்கூடாதுங்க என்பார் ஒருவர்.

அண்ணன் மனைவி அண்ணியை நங்கை என்று அழைப்பது கொங்கு நாட்டு வழக்கம். கணவரின் அக்காவும் நங்கைதான்.  சண்டையிடும்போது ஏற்படும் பேரொலியை ரவுசு என்பர். பங்காளிக்குள் ஒரே ரவுசா கெடக்குதுங்க என்பது ஒரு தொடர்.

 அதிகாலையைக் கோழி கூப்பிடும் நேரம் என்பர், முன் இரவை நாய்ச் சோத்து நேரம் என்பர். மரியாதையை மருவாதி என்றும், வைகாசியை வய்யாசி என்றும், வியாழக்கிழமையை வெசாளக்கிழமை என்றும் பேச்சு வழக்கில் கூறுவர்.

பணங்கொடுக்கலன்னா மருவாதி கெட்டுப்போயிரும்,  வய்யாசி பொறந்தாபன்னண்டு வருஷம், வெசாளக்கிழமை ஈரோட்டுச் சந்தைக்குப் போகோனும் என்பன வழக்கமான தொடர்கள்.

 திருப்பூரைப் பேச்சு வழக்கில் திலுப்பூர் என்பது, கணவர் வீட்டில் கோபம் கொண்டு பெண் தாய் வீட்டில் தங்குவதைச் சீராட்டு என்பர். சுப்பாத்தா சீராட்டு வந்தாவொ இன்னும் புருஷ வீட்டுக்குப் போகலையே.  

 இடதுபுறத்தை ஒரட்டாங்கைப் பக்கம் என்றும், வலதுபுறத்தைச் சோத்தாங்கைப் பக்கம் என்றும் கூறுவர்.

திருமணப்பதிவு அலுவலகம் அன்று இல்லை. மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் இணைப்பாக இருந்து திருமணம் முடிய உதவுபவர் தானாவதி எனப்படுவார். ஒரு வீட்டில் திருமணம் என்றால் தானாவதி யார் என்று கேட்பார்கள். 

 வளைகாப்பு நிகழ்வைக் கட்டுச்சோறு கட்டுதல் என்பர், கால்நடைகளுக்குரிய இடத்தைத் தொண்டுப்பட்டி என்பர், காலுக்குச் செருப்பு அணிவதைச் செருப்புத்தொடுதல் என்பர். சங்க இலக்கியம் செருப்பைத் தொடு தோல் என்று கூறும். இடைக்கால கல்வெட்டு செருப்பை பாதரட்சை என்று கூறுகிறது.

ஊருக்கொரு தமிழ், கொங்குக்குத் தனித் தமிழ்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/kongu.gif https://www.dinamani.com/language-fest/2019/dec/31/எங்கள்-கொங்குத்-தமிழ்-3319996.html
3315422 தமிழ் மொழித் திருவிழா தமிழ் மொழி : புவிசார் ஆளுகையும் ஏற்பும் ஆனந்தகுமார் DIN Tuesday, December 31, 2019 10:00 AM +0530 உலகம் முழுமையும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படையிலான பரவலையும் ஆளுமையையும் செலுத்திய மொழிகளும் இனங்களும் சிலவே. ஐரோப்பாவில் கிரேக்கம், உரோமானியம் ஆசியாவில் சீனம், தமிழ் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு இப்பெருமை உண்டு.

‘தமிழ்’என்னும் சொல் மொழி, நிலம், இனம், இலக்கியம் ஆகிய அனைத்தையும் குறிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் அது காதலையும் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் உள்ள குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டுப் பாடப்பட்டது என்ற குறிப்பில் வரும் ‘தமிழ்’என்பது ‘தமிழ்க் காதலை’க் குறிக்கும். தமிழில் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் பாயிரத்தில் இடம்பெறும் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்’எனும் வரிகள் தமிழ்நாட்டை மொழிவழக்கு அடிப்படையில் தனித்து விளங்கிய ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்துகின்றது. தமிழில் ‘உலகம்’என்ற சொல் நில எல்லையை வரையறுக்கும் பொதுச் சொல்லாகக் கையாளப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் நிலத்தைக் ‘காடுறை உலகம்’,‘மைவரை உலகம்’ என்ற இயற்கையின் அடிப்படையில் பாகுபாடு செய்கின்றார். தொல்காப்பியப் பனுபலுக்குள்ளும் ‘தமிழ்’என்ற சொல் பலவிடத்துக் (தமிழென் கிளவி) கையாளப்பட்டுள்ளது. வடக்கில் வேங்கடம், தெற்கில் குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல் என்ற தமிழ்நாட்டின் அரசியல் எல்லை வரையறுப்பு சங்க காலத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.

            ‘‘தென்குமரி வடபெருங்கடல்
             குண குட கடலாவெல்லை
             குன்று மலை காடு நாடு
             ஒன்றுபட்டு வழிமொழியக்
             கொடிது கடிந்து கோல் திருத்தி’’
                            (குறுங்கோழியூர் கிழார், புறம் - 17)

    தமிழ் நிலப்பகுதியை ஆண்ட அரசர்களின் அரசியல் ஆர்வம் இமயத்தில் அரச அடையாளங்களைப் பொறிப்பதாகவும், வடபுல ஆரியர்களை வணங்கச் செய்வதாகவும், யவனர்களைப் பிணிப்பதாகவும் இருந்திருக்கின்றது. (இமயவரம்பன், பதிற்றுப்பத்து). சங்க இலக்கியத்தில் ‘தமிழகம்’ என்ற சொல் தனி நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லாக (புறம். 168) ஆளப்பட்டிருக்கிறது.

பழந்தமிழ் இலக்கியத்தில் ‘நாடு’என்ற சொல் ‘தமிழ்கூறு நல்லுலகின்’ உட்பிரிவாக அடையாளப்படுத்துகிறது. தமிழ் உலகம் ஒட்டுமொத்த புவிப்பரப்பின் ஒரு பகுதி என்ற உணர்வும் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. எனவே வையகம் என்ற பெயரில் இந்நிலவுலகம் அடையாளப்-படுத்தப்பட்டிருக்கிறது.

    சங்க காலத்திலேயே கிரேக்கம், இலத்தீன், சீனம் ஆகிய நாடுகளுடன் கடல் வணிகத் தொடர்பு தமிழர்களுக்கு இருந்திருப்பதால் ஒட்டுமொத்த புவியியல் நனவுநிலை இருந்திருக்கிறது. உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் ஒன்றாக இனங்காணும் மனப்பாங்கும் உருவாகியிருக்கிறது. 

இதன்காரணமாகவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று கணியன் பூங்குன்றனார் பாடியிருக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் சமமாகக் கருதி பெரியோரைக் கண்டு வியக்காத, அதே சமயத்தில் சிறியோரை இகழாத மனப்பாங்கும் உருவாகியிருக்கிறது. (பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே) சங்க கால வணிகத் தொடர்பினால் மதுரையும் புகாரும்‘புலம்பெயர் மாக்கள்’ உரையும் பெருநகரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன.

மதுரை நகரத்திலும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுக வீதியிலும் கிரேக்க உரோமானியர்கள் வணிகர்களாகவும் காவலர்களாகவும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். யவணர்கள் செய்த பாவை விளக்கு தமிழகத்து வீடுகளுக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அரிசியும் மிளகும் மயில்தோகையும் சந்தனமும் அகிலும் கிரேக்க உரோமானிய இல்லங்களை சென்று சேர்ந்துவிட்டன.

கிரேக்க மொழியில் அரிசி (ஒருசா), இஞ்சி (சிஞ்சிர்) முதலிய சொற்கள் கிரேக்க நாடுகளில் கிரேக்கர்களின் நாவால் உச்சரிக்கப்பட்டன. கிரேக்கர்களும் உரோமானியர்களும் சீனர்களும் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். கிரேக்க வணிகன் தமிழ் வணிகனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறான். இது இன்று காகிதச்சுருள் ஆவணமாகக் கிரேக்கத்தில் கிடைத்திருக்கிறது.

கிரேக்க உரோமானிய நாணயங்கள் அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. கரூர் வணிகப் பெருவழியாகவும் பன்னாட்டு வணிகர்கள் கூடும் இடமாகவும் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரபிக் குதிரை துள்ளிப் பாய்ந்து திரிந்திருக்கிறது. குதிரையை விற்க வந்த அரபு வணிகர்கள் ‘சோணகர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தமிழ் மொழியும் தமிழர்களும் இந்திய நிலப்பரப்பு மட்டுமல்லாது உலகின் தொழில் நாகரீகம் மிக்க ஏனைய புவிப்பரப்புகளோடும் பரவலும் ஆளுகையும் பெற்றிருந்தனர். இதன் காரணமாகத்தான் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்,
            ‘‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
             ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்
             தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.’’
                            (நன். சொல். 273)
(12 நூ. ஆ.) வட்டார வழக்கான திசைச் சொற்களை வரையறுக்கும்போது தென்பாண்டி, குட்ட, குட, கற்கா, வேண், பூழி முதலான 16 நாடுகளில் தமிழ் வழங்கியதாகக் குறிக்கப்படுகின்றது. இப்புவியில் தமிழ்நாடு உள்ளிட்ட 18 நாடுகளில் (சீனம், சிங்களம், சோனகம் (அரபு), சாவகம், துளு, கன்னடம் முதலானவை இருப்பும் அதே நூற்பாவில் சுட்டப்படுகின்றது.

    தமிழ் மொழி 2600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுத்து மரபு உடையது. இது அதனுடைய மற்றொரு தனிச்சிறப்பாகும். ‘தமவயங்க சூத்திரம்’ என்னும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண நூலில் குறிப்பிடப்படும் தொன்மையான எழுத்து வடிவங்களுள் ‘தமிழி’என்பதும் ஒன்றாகும். இதனைத் ‘தமிழ்ப் பிராமி’ என்று சொல்வோரும் உள்ளனர்.

அசோகர் காலத்தில் இந்தியா முழுவதும் எழுதுவதற்குப் பயன்படுத்திய (பாலி, பிராகிருத மொழிகள்) எழுத்து வடிவம் பிராமி ஆகும். இப்பிராமியில் இல்லாத புதிய எழுத்துக் குறியீடுகள் (ஏ, ஓ, ர, ழ, ன) தமிழில் உள்ளன. பழந்தமிழ் எழுத்தின் தொன்மைக்கு ஆதாரமாக கீழடி அகழாய்வு சான்றாகிறது. இங்கு கிடைத்துள்ள மட்பாண்டங்களில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இம்மட்பாண்டங்களின் காலம் கி.மு.600 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

புலிமான்கோம்பை, பொருந்தல், கீழடி ஆகிய அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள் தமிழ் எழுத்துக்களின் காலத்தை அசோகர் காலத்திற்கு முன்பே 400 ஆண்டுகள் பழமையானதாக உறுதிப்படுத்தியிருக்கின்றன. எழுத்து வடிவங்கள் வடக்கிலிருந்து தெற்கில் சமண பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டன என்ற பழைய கருதுகோள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.

மேலும் தமிழகத்தில் வாழ்ந்த சாதாரணமானப் பொதுமக்களும் எழுத்தறிவு உடையவர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களின் எழுத்துப்பொறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகியவற்றிற்கு இலக்கணம் அமைத்திருந்தாலும் சொல் இலக்கணத்தைத் தொடர் அமைப்பு நிலையிலிருந்துதான் தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். தொடரில் சொற்கள் எங்ஙனம் வரிசைமுறையில் இடம்பெற வேண்டும் என்பதையே கிளவியாக்கம் விளக்குகிறது. இச்சிறப்பினால் புலூம் ஃபீல்டு போன்ற மேனாட்டு அறிஞர்கள் தொல்காப்பியத்தைப் போன்ற காலப்பழமை உடைய சமஸ்கிருத இலக்கண நூலான பாணியில் இல்லாத தொடர் அமைப்பைத் தொல்காப்பியர் பேசியிருக்கிறார் எனக் குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியம் தொடர் இலக்கணத்தைப் பேசுவதால் அவர் காலத்திற்கு முன்பே குறைந்தது 400 அல்லது 500 ஆண்டுகள் தமிழ் எழுதப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும். எழுத்து வழக்கு உடைய மொழி என்பதுதான் சமஸ்கிருதத்திற்கு இல்லாத தமிழின் தனிச் சிறப்பாகும். வடமொழியில் உள்ள வேதங்கள் மிக நீண்ட காலமாக வாய்மொழியாகவே ஓதப்பட்டு வந்திருக்கின்றன. இதனால் சங்கப் புலவன் ஒருவன் வேதம் ஓதும் வடமொழியாளர்களை ‘வாய்மொழிப் பலவீர்’ என்று அழைத்திருக்கிறார். 

            ‘‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
             வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
             காதற் காமம்.’’
                            (பரிபாடல், 9 செவ்வேள்)

எழுத்து மரபு நிலைபெற்றதன் காரணமாகவே 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தொகை நூல்கள் உருவாகியுள்ளன. மேற்குறிப்பிட்ட பரிபாடலில் காதற் காமம் சிறந்ததாக எடுத்துக்காட்டப்பட்டிருப்பதைப்போல சங்கக் கவிதைகளில் காதல் முன்மைப் பாடுபொருளாக அமைந்துள்ளது. 2681 பாடல்களில் 1863 பாடல்கள் காதலைப் பேசும் அகப்பாடல்கள். காதல் பொது மானுட உணர்வாகப் பெயர் சுட்டப்படாமல் இயற்கை நில வெளிகளைப் பிணைத்துப் பாடப்பட்டுள்ளன. இயற்கைச் சூழல்மீது நேயம் கொண்டு சூழலியல் கவிதையாகத் திகழ்கிறது.

    சங்க அகக்கவிதை மரபு பின்னாளில் வடமொழியில் உள்ள காளிதாசர் போன்ற பெருங்கவிஞர்களுக்குக் காதலைப் பாடுவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கின்றன. பழந்தமிழ்க் கவிதையில் நிலமும் காலமும் நிலத் தலைவர்களும் நிலக் கடவுளர்களும் சிறப்பிடம் பெறுகின்றனர். சமயச் சார்பற்ற பொதுநெறியின் பன்முகச் சமூகப் பண்பாட்டுச் சமய மரபுகளை அரவணைத்துச் செல்வதும் தமிழ் மரபின் தனித்தன்மையாக இருந்திருக்கின்றது. எல்லாப் பண்பாடுகளையும் எல்லா நாட்டினரையும் உட்படுத்துகின்ற பெருநகரவியல் பண்புகொண்ட நட்பு அரசியலே தமிழ் அரசியலாக இருந்திருக்கின்றது. ஆயினும் தமிழ் அரசு அசோகப் பேரரசு தொடங்கி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிறரது ஆளுகைக்கு உட்படாத ஒற்றைமயப்படுத்தப்பட்ட பொதுத் தன்மைகளோடு கலக்காது தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது.

    இன்று பவணந்தியார் குறிப்பிடும் 16 தேசங்களைக் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட தேசங்களில் தமிழ் வழக்கில் இருக்கிறது. தொன்மையும் அண்மைக்கால இளமையும் ஒருங்கிணைந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது. காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

கணிப்பொறி, மின்னணு ஊடகங்களின் வளர்ச்சியில் தன்னைத் தகவமைத்துக்கொண்ட மொழியாகத் தமிழ் விளங்குகிறது. இத்தகைய புதிய தொழில்நுட்பங்களுக்குள் தன்னைத் தகவமைத்துக்கொண்ட மொழிகள் உலகில் மிகக் குறைவே.

நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாகத் தமிழில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய சொற்கள் உருவாகியுள்ளன. இதற்கு ஒட்டுக்களை முன்னும் பின்னும் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஒட்டு நிலைமொழியாகத் தமிழ் விளங்குவதே காரணமாகும். இதனால் அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழ் தன் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழ்த்தேசியம் என்பது ‘வடவேங்கடம் தென்குமரி’என்கிற பழைய நில எல்லையைக் கடந்த நாடு கடந்த தேசியமாக - ‘புவிசார் தேசியமாக’விளங்குகிறது. தமிழ்த்தேசிய இலக்கியம் என்பது புவிசார் இலக்கியமாக விளங்குகிறது. தமிழ், தமிழர் அரசியல் என்பதும் புவிசார் அரசியலாக உருமாற்றம் பெற்றுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/maha.gif https://www.dinamani.com/language-fest/2019/dec/31/தமிழ்-மொழி--புவிசார்-ஆளுகையும்-ஏற்பும்-3315422.html
3315430 தமிழ் மொழித் திருவிழா நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும் DIN DIN Tuesday, December 31, 2019 07:47 AM +0530 தமிழ்மொழியில் லட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. இச்சொற்களில் பல, காலந்தோறும் மருவியுள்ளன அல்லது சொற்கள் தத்தமக்குரிய பொருள்களிலிருந்து மாற்றம் பெற்றுள்ளன. இச்சொற்பொருள் மாற்றம் என்பது எல்லா மொழிகளிலும் உண்டு என்பதால், தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொருள் மாற்றம்: 
""சொற்கள் இடம், காலம் என்ற இரு நிலைகளில் பொருள் மாற்றம் பெறுகின்றன. சொற்கள் இடந்தோறும் வேறுபடல் மிக்குறைந்த வழக்கு என்றும், காலந்தோறும் வேறுபடல் பெருவழக்காகும்'' என்றும் கூறுவார் அறிஞர் ரா.சீனிவாசன். (மொழி ஒப்பியலும் வரலாறும், 1999: பக்.194) இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஏனெனில், சொற்கள் என்பன பல்வேறு மக்களின் எண்ணத்துக்கும் பேச்சாற்றலுக்கும் உள்பட்டனவாகும்.÷சொற்கள், தம்மையும் பொருளையும் உணர்த்தவல்லன என்பதைத் தொல்காப்பியர், பெயரியலில் (நூ.2) குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதேவேளை சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற நியதியில்லை என்பதை உயிரியலில் (நூ.98) குறிப்பிட்டுள்ளார். ஒரு சொல்லுக்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பு இருப்பின் அதனைக் "காரணப்பெயர்' என்றும், அத்தகைய தொடர்பைக் கருதாத நிலையில் "இடுகுறிப்பெயர்' என்றும் அழைப்பர்.

சொற்பொருள் மாற்றம் - காலமும், இடமும்
ஒரு சொல்லுக்கு ஓரிடத்தில் ஒரு பொருளும் வேறொரு இடத்தில் வேறொரு பொருளும் வழங்கப்படுவதுண்டு. அல்லது ஓரிடத்தில் ஒரு பொருளும் வேறொரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் வழங்கப்படுவதுண்டு.

சான்றாக, "கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. "கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் "சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் "கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் "சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர்.

சொற்பொருள் இடத்துக்கு இடம் மாறுபடுவது போன்றே, காலத்துக்குக் காலம் மாறுபடுவதுண்டு. காலத்துக்குக் காலம் மாற்றம் என்பது சொல்லாராய்ச்சியைப் பொருள் உள்ளதாக ஆக்குகிறது. சொற்களின் பொருள் மாறுபாட்டின் தன்மை சிறப்புப் பொருட்பேறு, பொதுப்பொருட்பேறு, இழிபொருட்பேறு, உணர்பொருட்பேறு, நுண்பொருட்பேறு, பருப்பொருட்பேறு என்று பல நிலைபெறும்.

சிறப்புப் பொருட்பேறு
பல பொருள்களைக் குறிக்கப் பொதுவாக வழங்கப்படும் ஒரு சொல் காலப்போக்கில் ஒரு பொருளையே சிறப்பாகக் குறித்தலும் உண்டு. இதனைச் சிறப்புப் பொருட்பேறு என்பர். சான்றாக, "புல்' என்ற சொல், மூங்கில் உள்ளிட்ட புல்லினங்களுக்குப் பொதுவாக வழங்கியது. அகக்காழ் (அதாவது "வயிரம்') உடையன மரம் என்றும், புறக்காழ் உடையன "புல்' என்றும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்பட்டது. பின்னர், அருகம்புல், கோரைப்புல் என்று சிலவற்றுக்குச் சிறப்புப் பெயராக மாறியது. பிற்காலத்தில் அது "மரம்' என்று வழங்கப்பட்டது.

பொதுப் பொருட்பேறு
முதலில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிறப்பாக உணர்த்திப் பின் காலப்போக்கில் பல பொருள்களை உணர்த்திப் பொதுச் சொல்லாதலைப் பொதுப் பொருட்பேறு என்பர்.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் திரவப் பொருளை எண்ணெய் என்று தொடக்கக் காலத்தில் வழங்கி, பின் அவ் "எண்ணெய்' என்பதே பொதுப் பெயரால் நின்று தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் எனத் திரவப் பொருளுக்குப் பொதுவாய் நின்று, அடைபெற்று வெவ்வேறு வகை குறித்து நின்றது. பூமியிலிருந்து பிற்காலத்தே தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருளாகிய திரவம் "மண்ணெண்ணெய்' எனப் பெயர் பெற்றதையும் சிந்திக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களுள் ஒன்றான "பெட்ரோல்' என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தினர் கல்நெய், கன்னெய் எனக் குறிக்கத் தொடங்கினர்.

உயர் பொருட்பேறு
அஃறிணையைக் குறிக்கும் சொல் பின்பு உயர்திணைக்கு வழங்கப்படுமானால், அது உயர்பொருட்பேறு எனப்படும். கீரிப்பிள்ளை, அணிப்பிள்ளை என்பன அஃறிணை இனங்கட்குச் சிறப்பாகப் பேசப்பட்டுப் பின், "பிள்ளை' என்ற சொல் உயர்திணையான "குழந்தை'யையும் உணர்த்த நின்றது. இதே பெயர் மக்களின் ஜாதிப் பெயரையும் குறித்தமை சிந்திக்கத்தக்கது.

அதுபோல, தென்தமிழ் நாட்டுப் பகுதிகளில் தாயேலி, தாயேழி, தாயேளி என்று கோபத்தில் ஒருவரை நோக்கி வசைபாடுவதுண்டு. தாயினை இழந்த குழந்தையைத் "தாயிலி' என்பர். இதுவே பிற்காலத்து "தாயேலி' என்று வழங்கலாயிற்று.

இழிபொருட்பேறு
உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் காலப்போக்கில் இழிந்த பொருளுக்கு வழங்கப்படுதல் இழிபொருட்பேறு ஆகும். "நாற்றம்' என்ற சொல் முற்காலத்தில் "நன்மணம்' என்ற பொருளில் வழங்கியது. ஆனால், பிற்காலத்திலோ அது துர்நாற்றத்தைக் குறித்தது.

பயன்பெறாது, உழைக்காது திரியும் ஆண்மகனை "உண்டக்கட்டி' என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு (சாப்பாட்டு ராமர்) ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு "உண்டு காட்டிகள்' என்று பெயர். இத்தகைய "உண்டு காட்டி' என்ற பெயரே பிற்காலத்தில் "தண்டச்சோறு' என்றும் வழங்கலாயிற்று. கோயில்களில் வழங்கப்படும் கோயில் பணியாளர்களுக்கான உணவுத் தொகுதியும் "உண்டக்கட்டி' எனப்பட்டது.

நுண்பொருட்பேறு
ஒரு காலத்தில் பருப்பொருளை உணர்த்திய சொற்கள் பிற்காலத்தில் நுண் பொருளை உணர்த்துமானால் அந்நிலை நுண்பொருட்பேறு ஆகும். "தலை' என்று ஓர் உறுப்பைத் தெரிவித்த அச்சொல், பிற்காலத்தில் "தலைமை' என்ற பொருளையும் - அதாவது நுண்பொருளையும் உணர்த்தியமை குறிக்கத்தக்கது. அதேபோன்று, "இடுப்பு' என்பதை உணர்த்திய "அரை' என்ற சொல், "பாதி' என்னும் நுண்பொருளையும் உணர்த்த உயர்ந்தமை இதற்குச் சான்றாகும். மாவுப் பொருளைக் குறிக்கும் "தூள்' என்ற சொல் சிறப்பு எனப் பொருள்தரும் "தூள்' என்றானது நவீன காலத்தில்தான்.

பருப்பொருட்பேறு
நுண்பொருளை உணர்த்திய சொற்கள், பின்னாளில் பருப்பொருளை உணர்த்துமானால் அது பருப்பொருட்பேறு ஆகும். "மனம்' என்ற நுண்பொருள் "உள்ளே' அல்லது "அகம்' என்ற பருப்பொருளையும், "புறம்பானது' என்பதைக் குறித்த "புறம்' என்ற சொல், "வெளியே' என்ற பொருளையும் பருப்பொருட்பேறு பெற்றமை குறிக்கத்தக்கது. எனவே, சொற்பொருள் மாற்றம் என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிறது.

தமிழில் உள்ள சொற்களின் பொருளை உணர்ந்து படித்தால், தமிழ்மொழியின்மீது எல்லோருக்கும் பற்றுவரும். தமிழ் "என்றுமுள தென்றமிழாய்' இனிக்கும். எனவே, மொழித்தூய்மை பேணுவோம். தமிழ்த்தாயைக் காப்போம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/tamil2.gif https://www.dinamani.com/language-fest/2019/dec/31/நல்ல-தமிழ்ச்-சொற்கள்-அன்றும்-இன்றும்-3315430.html
3315420 தமிழ் மொழித் திருவிழா கல்வெட்டு - செப்பேடு - ஓலைச்சுவடிகள் கோ. ஜெயலெட்சுமி, பட்டதாரி ஆசிரியை, சக்கராப்பள்ளி. DIN Monday, December 30, 2019 04:29 PM +0530  

இன்றைய அச்செழுத்துக்களை வடிவமைக்கப் பெரிதும் துணையாக அமைந்தவை ஓலைச்சுவடிகளில் முன்னோர் எழுதிப் பயின்ற வடிவங்களேயாகும். ஓலைச்சுவடிகள் அழியும் தன்மையுடையனவாதலின் காலந்தோறும் அவை படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவ்வாறு பெயர்த்து எழுதுந்தோறும் அவ்வக்கால் சூழலுக்கேற்ப அவை சிறுசிறு மாற்றம் பெற்று செம்மை பெறுதல் இயல்பே. இன்று கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளைக் காண்பது அரிது. எனவே, பழந்தமிழ் வரிவடிவங்களைக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் உள்ள வடிவங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும், ஓலைச்சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவ்வேறுபாடு எழுதும் கருவியாலும், எழுதும் முறையாலும் ஆனதேயாகும். கல்லிலும், செம்பிலும் எழுத்துக்களை தனித்தனியாக வரைந்து செதுக்கி அமைப்பது முறையாகும். ஓலையில் கூரிய முள் அல்லது ஆணியைக் கொண்டு எழுதுவர். ஆதனால் ஒன்றோடொன்று சங்கிலித் தொடர்போல் அமையுமேயன்றி தனித்தனியாக அமைதல் அரிதாகும். ஓரெழுத்தே கல்லில் வெட்டும்போது ஒரு வடிவாகவும், கையால் எழுதும்போது ஒரு வடிவாகவும் அமைதல் இயல்பேயாகும்.

தமிழ் மக்கள் இடமிருந்து வலமாக விரைந்து எழுதும் பழக்கம் உடையவர்கள். ஆதனால் எழுத்துக்கள் வளைந்து, உருண்டு செல்லும் அமைப்புடையனவாக இருந்தன. கல்லிலும், செம்பிலும் வெட்டும்போது சதுரம், கோணம், வட்டம் ஆகிய நிலைகள் செம்மையாக அமையும். ஓலைச்சுவடியில் எழுதும் முறையும், கல்வெட்டில் எழுதும் முறையும் வேறு வேறு அல்லனவாயினும் ஆய்வாளர்கள், கையெழுத்து முறையில் அமைந்தவற்றை கோலெழுத்து, வட்டெழுத்து என்றும் கல்லிலும், செம்பிலும் செதுக்கி அமைந்தவற்றை தமிழி எழுத்து என்றும் கூறுவர்.

தமிழ்மொழியில் கல்வெட்டுச் சாசனங்கள் பல்லவர்களின் ஆட்சிக்காலம் முதல் கிடைக்கின்றன. பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் காணப்படும் எழுத்துக்கள் பழைய வட்டெழுத்துக்களைச் சார்ந்துள்ளன என்பர்.

இராஜராஜசோழன் கொண்டுவந்த ஒரே முறை
பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்திய முதலாம் இராஜராஜசோழன் அதற்கு முன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துக்களை நீக்கி விட்டு தொண்டை மண்டலத்திலும், சோழ மண்டலத்திலும் வழங்கிய தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துமாறு செய்தான். இச்செய்தியினை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்தில் காணப்படும் இரு கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.

ஓலைகள்
ஓலைகள் பட்டோலை, பொன்னோலை, மந்திர ஓலை, வெள்ளோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ் ஓலை, தூது ஓலை, ஓலை பிடிபாடு என்று கல்வெட்டுக்களிலும் பல வகையாகச் சொல்லப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. அவற்றில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் அறச்சலூர் கல்வெட்டில்தான் முதல் முதலாக எழுத்து என்ற சொல் காணப்படுகிறது. கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில்தான் முதன் முதலாக ஓலை என்ற சொல் காணப்படுகிறது. ஆனால், இவற்றிற்கு முன் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் ஓலை, எழுத்து பற்றிய செய்திகள் அறியக்கிடைக்கின்றன.
பூவார் அடிச்சுவடி என்தலைமேல் பொறித்தலுமே (241) என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. மேலும் இலக்கிய இலக்கணங்களில் சுவடி என்னும் சொல் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை எனக் குறிக்கப்பட்டு இருக்கின்றது.

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் (தொல்.பொருள், மரபியல், 87)

என்பது தொல்காப்பியர் நூற்பா. பனை, தென்னை, பாக்கு முதலிய மரங்களின் இலையாகிய உறுப்பினைக் குறிக்கும் மரபுச் சொற்களாகத் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பனவற்றைத் தொல்காப்பியம் கூறுகின்றது.

தோடு
அணித்தொட்டு திருமுகத்து ஆயிழை எழுதிய
மணித்தொட்டு திருமுகம் மறுத்தற் கிரங்கி   (8: 111-112)

எனச் சிலப்பதிகாரம் தோடு பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமுகம் என்னும் சொல்லும் ஓலையில் எழுதிய கடிதத்தைக் குறிக்கிறது என்பதும் தெரியவருகிறது.

மடல்
கண்மணி அனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்  (13:76-77)
என்று சிலப்பதிகாரம் மடல் பற்றிக் கூறுகின்றது.
ஓலை
மூட்சியில் கிழித்த ஓலை படியோலை மூலவோலை
மாட்சியில் காட்ட வைத்தேன்

எனத்தடுத்தாட்கொண்ட புராணம் கூறுகிறது.

ஏடு
பள்ளித் தடுக்கும் கையேடும் படிக்கவும் சுவடியும்
(பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை)
செய்ய சிவஞானத் திரளேட்டில் ஓர் ஏடு
(தமிழ்விடு தூது-3)

என்ற இவ்வடிகளில்; ஏட என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூல்
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள்: 783)

நூல் என்னும் சொல் பழங்காலத்தில் இலக்கணத்தை மட்டுமே குறித்து வந்தது. தந்திரம், தூக்கு, பனுவல், புத்தகம் என்னும் சொற்களாலும் இலக்கண நூலைக் கூறியிருக்கின்றனர். இலக்கணம் அல்லாத பிற நூல்களைச் செய்யுள் என்றும், பாட்டு என்றும் குறித்து வந்திருக்கின்றனர்.
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
(தொல். பாயிரம்)
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே ( நன். நூ.54)
இவற்றுள் பனுவல் என்னும் சொல் நூலைக் குறிக்கின்றது.
நூலே, கரகம், முக்கோல், மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய
(தொல். பொரு.மர.71)
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி பிசியே
(தொல். பொருள். சேய்.76)

துணி
தூது அனுப்பப்படும் செய்திகளைத் துணிகளில் எழுதி அனுப்பியுள்ளதாக இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றது.
கையிற் புனையும் கழிநுண் ணானர்
ஏட்டிலும் கிடையினும் மூட்டலை கிழியினும்
(பெருங்கதை)

என்ற அடிகள் இலையும் துணியும் எழுதப் பயன்பட்டமையைத் தெரிவிக்கின்றன.
முதிர்பூந் தாழை முடங்கல் வெண்தோட்டு
விரைமலர் வாளியின்.... ....
திருமுகம் போக்கும் செவ்விய ளாகி (8:47-49)
எனும் சிலப்பதிகாரக் கூற்று. தாழைமடல் எழுதப்படு பொருளாகப் பயன்பட்டதைச் சுட்டுகிறது.

ஓலை, கடைகளில் விற்கப்பட்டதை சங்கப் புலவர்களான ஓலைக்கடையத்தார் மகன் வெண்ணாகன், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆகியோரின் பெயர்கொண்டு அறியமுடிகிறது.

தமிழகத்தில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், இலக்கியம், மருத்துவம், மாந்திரியம், சோதிடம், சமயம், வணிகம், ஆவணங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிச்சுவடி, எண்சுவடி என்ற வகைகளில் அடங்கிவிடக் கூடியவை. பொதுவாக எல்லாச் சுவடிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு வகை ஓலைச்சுவடியிலும் ஒவ்வொரு வகையில் எழுதும் முறை தனித்துவம் பெற்றிருக்கும். இலக்கியச்சுவடிகளில் பாடல்களின் முடிவில் எண்களைக் காணலாம். இடதுபுற ஓரங்களில் அத்தியாயத் தலைப்புப் பெயர்களைக் காணலாம். மாந்திரீகச் சுவடிகளில் பலவகைச் சக்கரங்களின் (இயந்திரம்) படங்களைக் காணலாம். சோதிடச் சுவடிகளில் ராசிச் சக்கரங்களைக் காணலாம். குறியீடுகளையும் காணலாம். பள்ளிச் சுவடிகளில் பக்கவாட்டில் மூன்று நான்கு பத்திகள் பிரித்து எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

ஓலைகளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக ஒரு கட்டில் உள்ள சுவடிகள் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் முதலிரு ஏடுகளைச் சிரமப்பட்டு படித்தால் அவர் எழுதுகின்ற முறை நமக்குப் புரிந்துபோகும். அதனை மனதில் கொண்டால் அடுத்த ஏடுகள் அவரது கையெழுத்து பழக்கப்பட்டதால் படிக்க எளிதாகிவிடும்.

ஓலைகளில் நார்த்தன்மை குறுக்கு வாட்டாக இருப்பதனால் ஆணியால் கிழித்து எழுதும்போதும், புள்ளியிடும்போதும், ஆணியை அடிக்கடி எடுத்து வைத்து எழுதும்போதும் இடர்பாடுகள் அதிகம் இருக்கும். எனவே ஓலை எழுத்துக்கள் புள்ளிகள் இல்லாமலும் மயங்கி மாறுபட்டும், கூட்டெழுத்துக்களாகவும் அமைந்தன. கணிதம், ஆவணம் மற்றும் வணிகச் சுவடிகளில் ஆண்டு, மாதம், தேதி, நிலம், பணம், ரூபாய், சாதிப்பெயர்கள் போன்றவை திரும்பத் திரும்ப வரும்போது அவை சுருக்கி எழுதப்பட்டு, பழக்கமான குறியீடுகளாக மாறின. அதுமட்டும் அல்லாமல் தமிழுக்கென்றே தனி எண்கள் இருந்தமையும் அவை இன்று வழக்கில் இல்லாமல் போனதையும் சுவடிகளில் அவற்றைத் தெரிந்து பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

அழியும் நிலையில் உள்ள ஏடுகள் புதிதாகப் படியெடுக்கப்பட்டன. ஒருவரிடம் உள்ள நூல் மற்றவருக்கு தேவைப்படும் போதும் படியெடுக்கப்பட்டது. அப்படி படியெடுப்பது ஏடு திருப்புதல், பிரிநகல், சபாது என்று அழைக்கப்பட்டது.

ஏடு எழுதும்போது ஏற்படும் தவறுகள் ஏட்டுக்குத்தம், எழுத்துக்குற்றம், சொற்குற்றம், வாசகப்பிழை, வரி மாறாட்டம் எனப்பட்டன. எலிகடி, வெட்டுச்செதுக்கு, செல் அரிப்பு முதலியவையும் குற்றங்களே.

சுவடி வகை
ஓலைச்சுவடிகள் மூன்று வகைப்படும். அவை 1. ஆவணங்கள் 2. பதிவேடுகள் 3. நூல்கள் என்பனவாகும்.

ஆவணங்கள்
நிலங்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களின் உரிமைப்பட்டயங்கள், கிரயம், தானம், கடன் ஒத்தி போன்ற சாசனங்கள், ஒப்பந்தப் பத்திரங்கள், சான்றுகள், தேர்தல் வாக்குச்சீட்டுகள், அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் போன்றவை எழுதப்பெற்ற ஓலைகள் ஆவணங்கள் எனப்படும்.

பதிவேடுகள்
பதிவேடுகள் வரவு-செலவு கணக்குகள், அன்றாட நிகழ்ச்சிக் குறிப்புகள், நிலங்கள் உரிமைப்பதிவுகள், வரி நிர்ணயம், வரி வசூல் விவரம், ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஊதியம் ஆகிய விவரங்கள், நன்கொடைகள் வழங்கும் விவரங்கள் போன்றவை எழுதப்பெற்ற ஓலைகள் பதிவேடுகள் எனப்படும்.

நூல்கள்
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், விஞ்ஞானம், மந்திர சாத்திரம், ஜோதிடம் போன்றவை ஓலைகளில் எழுதப்பெற்றன. இவையே நூல்கள் எனப்படும்.

இவற்றுள் மூன்றாம் வகையான நூல்களே அதிக அளவில் காணப்படுகின்றன. ஆவணங்களும் பதிவேடுகளும் அதிகமாக காண இயலவில்லை.

ஓலைச்சுவடிகள் எழுத சாதாரண பனையோலைகள் தாளிப்பனை எனப்படும் பனை மரத்தின் ஓலைகள் ஆகிய இருவகையான பனை ஓலைகள் பயன்படுத்தப்பெற்றன. சாதாரண பனை ஓலையைவிட தாளிப்பனையின் ஓலைகள் அகலமாகவும், நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/31/w600X390/olaichuvadi.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/27/கல்வெட்டு-செப்பேடு-ஓலைச்சுவடிகள்-3315420.html
3313664 தமிழ் மொழித் திருவிழா தமிழ் இலக்கியங்கள் பரவ வேண்டும் குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர் DIN Monday, December 30, 2019 04:28 PM +0530  

உலகில் மொழி என ஒன்று தோன்றியது மனிதர்களுக்கு மட்டும் இல்லை என்பதும் அது உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்பதும் நிதர்சனமான உண்மை.

எறும்பு முதல் அனைத்து வகை உயிரினங்களுக்கும் புல் பூண்டு முதல் அனைத்து வகை செடிகொடி மரங்களுக்கும் மொழிகள் உண்டு என்பதை அவைகளின் ஊடாகப் பழகும்போதும் அவைகளின் அருகாமையில் இருக்கும்போதும் யாவராலும் நன்றாக உணரமுடியும். அதே வேளையில் இப்பூவுலகம் முழுவதிலுமுள்ள அவை அனைத்திற்கும் இனத்திற்கு இனம் பொதுமொழி ஒன்றே.

ஆனால், ஆறறிவு படைத்த மனித வர்க்கத்திற்கோ பல மொழிகள். ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் தனி மொழி. அதனாலேயே மொழியை வைத்து மனித வர்க்கம் பிரிகிறது.

இதே மொழியை வைத்து உலகத்தின் மற்ற உயிரினங்கள் எவையும் அவைகளின் மொழியால் பிரிவதில்லை. தமிழ்நாட்டிலுள்ள சுவர்க் கோழிகள் முதல் யானைகள் வரை இந்தியாவின் பிற இடங்களிலும் உலகின் மற்ற நாடுகளிலும் தங்களுக்கென்றே உரிய ஏகோபித்த தனித்த குரல்களால்தான் எவ்வித மாற்றமும் இல்லாமல் பிரிவினையும் இல்லாமல் தங்கள் அன்பை, காதலை, எச்சரிக்கையை, ஆபத்தை, வருத்தத்தை,துக்கத்தைப் பரிமாறிக் கொள்கின்றன.

இதேபோல் மரங்களுக்கும் மொழிகள் உண்டு. இவைகளும் இவ்வுலகில் எந்தப் பிரதேசத்தில் வளர்ந்தாலும், அம்மர வகைகளின் இலைகள் போடும் சப்தமும் கிளைகள் உளையும் ஓசையும் எங்கும் ஒரே மாதிரியான ஒலியை -மொழியைத்தான் வெளிப்படுத்துகின்றன. இவற்றை நாம் நுணுகி ஆய்ந்தால் புலப்படும்.

ஆனால் மனிதர்களின் மொழிகள் அப்படியானதல்ல. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். தென்னக முனையில் பேசும் நாஞ்சில் தமிழ்,நெல்லைத் தமிழ், கரிசல் தமிழ், மதுரைத் தமிழ், தூத்துக்குடித் தமிழ்,  தஞ்சைத் தமிழ் -தென்னாற்காட்டுத் தமிழ்,சென்னைத் தமிழ்,சேலம் தர்மபுரி தமிழ்,கோவை நாமக்கல் தமிழ், மலைவாசிகள் தமிழ் என ஏராளமான வட்டாரத் தமிழ்ச்சொற்கள் நாம் பேசும் மொழிகளில் வெவ்வேறாக உருமாறி உள்ளன.

இந்த வேறுபட்ட தமிழ்ச் சொற்களுக்கே பல்வேறு அகராதிகள் தேவைப்படுகின்றன. இப்படிப்பட்ட அகராதிகள்தான் குறைந்தபட்சம் தமிழை, தமிழகத்தின் பொதுமொழியாக உணர்த்தும். இதற்கும்கூட என் வாழ்க்கையில் நேர்ந்த பல நிகழ்வுகள் இருந்தாலும் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு சொல்வது என் கடமை.

அது நடந்தது 1960-களில். நான் முதன்முதலில் அரசு வேலைக்காக மதுரை மாவட்டத்தில் பணியிலமர்ந்தேன். பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பேசும் மதுரைத் தமிழான "பைய பைய' "கண்மாய்', "கொள்ளைத் தூரம்' போன்ற பல தமிழ்ச் சொற்கள் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.போகப் போகப் புரியத் தொடங்கின. அதேபோல் நான் பேசும் தென்னாற்காட்டுத் தமிழிலுள்ள பல வார்த்தைகள் அந்த நண்பர்களுக்குப் புரியவில்லை. காலப்போக்கில் மதுரைத் தமிழை நானும்,தென்னாற்காட்டுத் தமிழை அவர்களும் ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம். ஓராண்டு ஓடியது. ஒருநாள் அலுவலகப் பணியில் இருக்கும்போது ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த பென்சில் முனை உடைந்துவிட்டது. அதனால் இரண்டு டேபிள் தள்ளியிருந்த நண்பர் ஒருவரிடம், "உங்க பென்சிலைக் கொஞ்சம் இங்க கெடாசுங்க' என்றேன்.

அவ்வளவுதான், அதற்கு முன் நான் அந்த அளவுக்கு அவரிடம் கோபத்தைக் கண்டதில்லை. அவ்வளவு கோபப்பட்டார். நாம் என்ன சொல்லிவிட்டோம். இவர் ஏன் இந்த அளவுக்குக் கோபப்படுகிறார் என்று நினைத்து வெலவெலத்துப் போனேன். பின்புதான், நண்பர்களின் மூலம் நான் சொன்ன "கெடாசு' என்ற வார்த்தை மதுரை மாவட்டத்தில் மிக மோசமான ஒரு கெட்ட வார்த்தை என்பது தெரிந்தது.

நான் சொல்ல வரும் இப்படிப்பட்ட அல்பமான நிகழ்வுகள்தான் மொழியின் வேர்களைத் தேட உதவுகின்றன. இவைகளுக்குத் திரைப்படங்களும் நெடுந்தொடர்களும் மிகவும் உதவுகின்றன. மக்களைப் பெற்ற மகராசியிலிருந்து இன்றைய பாரதிராஜா, சசிகுமார் இயக்கி நடித்த படங்களிலும், பாரதிராஜாவின் நெடுந்தொடர்களிலும் வட்டார வழக்கில் கதாபாத்திரங்கள் பேசுவதால் வட்டாரத்துக்கு வட்டாரம், மாவட்டத்துக்கு மாவட்டம் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார மொழிகளும் ஒரே தமிழ் என்னும் வகையில் அறிமுகமாகி பல புதிய சொற்கள் - மக்கள் தமிழாக வளம்பெற்று வளரவும் உதவுகின்றன.

திரைப்படங்களில் ஒரு காலத்தில் அச்சுத் தமிழான பொதுத் தமிழ்தான் பேசப்பட்டது. அதன்பின் சிறுகச் சிறுக, சில கதாபாத்திரங்கள் வாயிலாகவும் பின் முழுமையாகப் படங்கள் முழுவதும் எல்லாக் கதாபாத்திரங்களும் படங்களுக்குத் தகுந்தாற்போல் இயல்பான பேச்சுத் தமிழை வெளிப்படுத்தின.

தற்போதைய காலப்போக்கில் தமிழகத்தின் அனைத்து வட்டாரப் பேச்சு மொழிகளும் திரைப்படங்களிலும் நெடுந்தொடர்களிலும் பரவலாகவே வரத் தொடங்கிவிட்டன.

இவற்றிற்கெல்லாம் மேலாக வீரத் தமிழும் அடுக்கு மொழித் தமிழும்கொஞ்சும் தமிழும்துள்ளல் தமிழும் தூய தமிழும் திரைப்படங்களில் கோலோச்சிய நேரங்களும் அக்காலம் முதல் இக்காலம் வரையில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தமிழை இப்படியும் பேசலாம், இப்படியும் எழுதலாம் என்னும் வழிகாட்டுதலாகக் கொண்ட திரைப்படங்களும் வந்துள்ளன என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்காது.

இதேபோல், இன்றைய பல நெடுந்தொடர்கள் தமிழைப் பல்வேறு வட்டார வழக்குப் பேச்சு மொழிகளின் மூலம் அனைவருக்கும் புரியும்படியான பொதுமொழியாக அறிமுகப்படுத்துகின்றன. வட தமிழகத்தில் கட்டை கட்டி தெருக்கூத்துக் கலைஞர்களும்தென் தமிழகத்தில் மேடை நாடக நடிகர்களும் தங்களின் பங்காக ஊர் தோறும் சென்று தமிழை வளர்த்தார்கள்; வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த அமைப்புகள்தான் மொழியின் வேர்களைத் தேட உதவுகின்றன. பிற மொழி இலக்கியங்களின் வரவும் தமிழைச் செழுமைப்படுத்துவது உண்மை.

பிறமொழி மக்களின் கலை, பண்பாடு, கலாசார முனைப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளும்,தொடர் நாவல்களும் கலைமகள், கல்கி, தினமணி கதிர், சுதேசமித்திரன், மஞ்சரி முதலிய இதழ்களின் மூலம் தமிழாக்கம் பெற்று தமிழோடு ஒப்பீட்டு நோக்கும் வகையில் வெளிவந்தன. இந்த வகையில் ஏராளமான இந்தியாவின் பிறமொழி பேசும் மக்கள், அயல்நாடுகளில் வாழும் அந்நிய மொழி பேசும் மக்கள் ஆகியோர்களின் உணர்வுகளையும், அவர்களின் பழக்க வழக்கமான பண்பாட்டுச் சூழல்களையும், எண்ணங்களையும் அறிவதற்கு இலக்கிய மொழியாக்கங்கள் நமக்கு உதவின.

இவ்வாறு உலக மக்களின் அந்நியத் தன்மையைப் போக்கி நெருக்கமான சமூக ஒருங்கிணைப்புக்கு உதவிய மொழியாக்க முன்னோடிகளான பாரதியார், புதுமைப்பித்தன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து.சு.யோகியார், சரஸ்வதி ராம்நாத், அ.சீனிவாச ராகவன், த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ.போன்றவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவுகூரல் சிறப்பாகும்.

அதேபோன்று மாஸ்கோ ராதுகா பதிப்பகம், தமிழகத்தின் என்.சி.பி.ஹெச். வழியாக கணக்கிலடங்காத ரஷ்ய மொழிப் படைப்புகளை மொழியாக்கம் செய்து புத்தகங்களாகத் தமிழில் தந்தது. அப்படைப்புகள் தமிழின் மொழியாக்கத் துறைக்கும் தமிழுக்கும் வளம் சேர்த்ததுடன் தமிழ் வாசகர்களுக்கு உந்து சக்தியாகவும் மாறியது என்றால் அது மிகையாகாது.

அதே காலகட்டத்தில் சில புதிய பதிப்பகங்கள் மூலம் அந்நியமொழி இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்கள் மூலம்தான் மக்சீம் கார்க்கி, நிக்கலாய் கோகல், தல்ஸ்த்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மாயகோவ்ஸ்கி, புஷ்கின், ரசூல் கம்சதோவ், மிகாயில் சோலகோவ், அன்னா அகமதோவா, நட்ஹாம்சன்,பெர்லாகர் க்விஸ்ட்,பெர்னார்டுஷா, எச்.ஜி.வெல்ஸ்,ஷேக்ஸ்பியர்,ஷெல்லி, கீட்ஸ், எமிலி சோலா, மாப்பஸôன், நத்தானியல் ஹத்தன், ருஸ்தாவ், மார்க் ட்வைன், பால்சாக்,மெர்ஸின், ஓகுஸ்த் ஸ்திரின் பர்க் போன்ற படைப்பாளிகள் தமிழில் கொடையாக வந்துள்ளார்கள்.

இந்திய மொழிகளிலிருந்தும் ஏராளமான படைப்பிலக்கியங்கள் மொழியாக்கம் மூலம் தமிழுக்கு வந்து தமிழின் சமகால இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. வங்க மொழியிலிருந்தும், இந்தியிலிருந்தும், பஞ்சாபியிலிருந்தும்,தெலுங்கிலிருந்தும், கன்னடத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் ஏராளமான சமகால படைப்புகள் தமிழுக்கு வந்து பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதும் உண்மை. இம்மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள் மிகப்பலர்.

அதேபோன்று பதிப்பகங்களும் தாராளமாக மொழியாக்க நூல்களைப் பதிப்பிக்கின்றன. இந்தியாவிலேயே மொழியாக்கத்திற்கென்றே பிராந்திய மொழியில் தொடங்கப்பட்ட முதல் இதழ் "திசை எட்டும்'. ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகமாக, நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களாக மலர்ந்துள்ளன. இக்காலக் கட்டத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளிலிருந்து சமகால இலக்கியங்களைத் தமிழுக்கு இவ்விதழ் கொண்டு வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சர்வதேசச் சிறப்பிதழ், சீனச் சிறப்பிதழ்,நோபல் இலக்கியச் சிறப்பிதழ், புக்கர் இலக்கியச் சிறப்பிதழ் ஆகியவற்றுடன் பல்வேறு மொழிச் சிறப்பிதழ்களைக் கொணர்ந்துள்ளது. பல்வேறு மொழிகளின் வரலாறுகளை அறிமுகப்படுத்தியதுடன் அம்மொழி இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இதேபோல் தற்போது சில சிற்றிதழ்களும் மொழியாக்கப் படைப்புகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மாற்று மொழிப் படைப்புகள் வரும்போதுதான் தமிழுக்குச் சில புதிய சொற்களும் சிந்தனைகளும் வந்து சேர்கின்றன.

மொழிபெயர்ப்புக் கலை பற்றி முனைவர் பஞ்சு, திசை எட்டும் இதழுக்கு சிற்பியை பேட்டி கண்டபோது, ""மொழிபெயர்ப்பு என்பது ஒருவகையில் மூலத்திற்கு உரை எழுதுவது போன்றதுதானா?'' என்ற வினாவை முன்வைத்தார்.

அதற்குக் கவிஞர் சிற்பி, ""இக்கருத்து மொழிபெயர்ப்புக் கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர் கூற்று.மொழிபெயர்ப்பு உரையன்று - அந்த மண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு ஆணிவேரும் சல்லிவேரும் முறியாமல் பெயர்த்து நடப்படுகிறநடவு'' என்று கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு சிற்பி சொன்னபோது எனக்கு இன்னொன்றும் தெளிவாயிற்று. நாற்றுப் பயிர்களை புஞ்சையிலும் விடலாம். நஞ்சையிலும் விடலாம். ஆனால், அவற்றைப் பிடுங்கி நடும்போது எங்கு நடப்போகிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும். புஞ்சை நாற்றுப் பயிரை நஞ்சையில் நடலாம். நஞ்சை நாற்றை புஞ்சையில் நடக்கூடாது. நட்டால் செழிப்படையாது. காரணம், நஞ்சை நாற்றுக்கு வேர்கள் நீளம். அதைப் பறித்து புஞ்சையில் நடும்போது வேர்கள் மடிந்து ஆழமாகப் பதியாது. புஞ்சையில் சேற்று வளம் குறைவு. அதேவேளையில் புஞ்சை நாற்றைப் பறித்து நஞ்சையில் நடும்போது, குட்டையான வேர்களையுடைய புஞ்சை நாற்று நஞ்சையின் சேற்றுவளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் பதிந்து பயிர் செழிப்படையும். அதுபோன்றதுதான் மொழியாக்கமும்.

ஒரு மொழியின் வளம்,தொன்மை, அம்மொழியில் உரையாடும் மக்களின் கலாசாரம் போன்றவைகளை உள்ளார்ந்து உணர்ந்து மொழியாக்கம் செய்யும்போது இலக்குமொழியின் வாசகன் மூலமொழியின் மணத்தையே முகரலாம் என்பது என் அனுபவம். இவற்றை உணராமல் மொழியாக்கம் செய்யும்போது சாறெல்லாம் போன சக்கையாகத்தான் அது தெரியும்.

ஆகவே, ஒரு மொழிபெயர்ப்பாளன் ஒரு நூலை மொழியாக்கம் செய்ய முனையும்போதே அந்த நூலைப் பலமுறை படித்து, மூல நூலின் அனைத்துத் தன்மைகளையும் உள்வாங்கிக் கொண்டு, இனம் கண்டு, புரிந்துகொண்டு மொழியாக்கம் செய்யும்போது அம்மொழியாக்கம் சிறப்பாக அமைவதுடன் மூலநூலின் ஆத்மாவும் இலக்கு மொழியில் பல புதிய வேர்களைப் பதிக்க உதவும்.

அதேபோல் தமிழ் இலக்கியங்களைப் பிறமொழிக்குக் கொண்டு செல்லல் என்பதுவும் தற்போது தீவிர இயக்கமாக நடைபெற வேண்டும். நான் அறிந்தமட்டில் இந்தியாவின் பல்வேறு பிறமொழிகளில் நம் தமிழ் இலக்கியங்கள் இன்னும் சென்று சேரவில்லை என்பது உண்மையாகும்.
இந்த வகையில் தமிழ் இதழ்களும், தமிழ் அமைப்புகளும் தங்களால் முடிந்த மட்டில் பிறமொழிகளுக்குத் தமிழிலக்கியங்களைக் கொண்டு செல்ல முயல வேண்டும்.

நான் ஏற்கெனவே ஒருமுறை திசை எட்டும் தலையங்கப் பகுதியில் எழுதியதுபோல், இந்தியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். அங்கு தமிழ் படித்து வரும் பிறமொழி பேசும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 5 விழுக்காடு இடம் ஒதுக்கி அரசுப் பணிகள் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலம் அம்மாநில மக்களிடையே தமிழிலக்கியங்கள் நிச்சயம் பரவும் என்பது திண்ணம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/kal.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/23/தமிழ்-இலக்கியங்கள்-பரவ-வேண்டும்-3313664.html
3313663 தமிழ் மொழித் திருவிழா பழந்தமிழரின் தொன்மை வேர்கள் இ. சுந்தரமூர்த்தி,  மேனாள் துணைவேந்தர் DIN Monday, December 30, 2019 04:28 PM +0530  

பழந்தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவன சங்க இலக்கியங்கள். தமிழின் தொன்மையையும் வளமையையும் காட்டும் அரிய சான்றுகளாக அவை திகழ்கின்றன. பழந்தமிழரின் வாழ்வியல் கூறுகளை அறிந்துகொள்ள உதவும் வேர்கள் அவைதாம். சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் தமிழருடைய அகத்தையும் புறத்தையும் காட்டுவன.

தொல்லியல், மானுடவியல், அகழ்வாய்வியல் மூலம் பழந்தமிழரின் வேர்களை நாம் காணமுடியும். ஆதித்தநல்லூரில் கிடைத்துள்ள மண்டைக் கூடுகளும் எலும்புக் கூடுகளும் மனிதத் தோற்றத்தின் பழமையைக் காட்டும் சான்றுகள் எனவும்,தென்னிந்தியா ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நிலப் பகுதியாக விளங்கியது என்றும் நிலவியல் ஆய்வாளர்கள் கூறுவர். அறிஞர் ஸ்காட் எலியட் கூறும் நான்காவது கடல்கோளுக்குப் பின் கோண்ட்வாணவின் எஞ்சிய பகுதியே லெமுரியாக் கண்டமாக விளங்கியது என்பர். மனித இனத்தின் தொட்டில் லெமுரியா என்பர் ஹெக்கல். அறிஞர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் முதலினம் தமிழினம் என்றும் முதன் மொழி தமிழ் மொழி என்றும் கூறுவார்.

மடகாசுகர் தீவின் பழைய பெயர் கோமார் என்றும், இங்கு வாழ்ந்தவர் கோமாரி என்றும் அழைக்கப்பட்டனர். பழைய இனத்தின் பெயர் கொம்ரி. குமரிக் கண்டம் என்னும் பெயரினையும் நாம் இணைத்து ஆராய்ந்தால் நம் வரலாற்றின் புதிய வேர்கள் கிடைக்கக் கூடும்.

குமரிக் கண்டச் சிதைவிற்குப் பின் அதன் பெரும்பகுதியாகவும் உட்பகுதியாகவும் இருந்த நாவலந் தீவைச் சார்ந்த தக்காண பீடபூமியிலும் அதன் தென்பாலும் 80,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பர்.

நாவலந் தீவில் வாழ்ந்த தமிழர் தமிழகத்தினின்றும் பாகிஸ்தான் சென்று பின் வடக்கும் கிழக்கும் நோக்கித் திபெத், மங்கோலியா நாடுகளிலும் வடமேற்கு நோக்கிப் பாரசீகம்,மெசபடோமியா, அசரியா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளிலும் மத்தியதரைக் கடல் வழி எகிப்து லெபனான் கிரேக்கம் துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவினர் என்று கருதுகின்றனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் இது நிகழ்ந்திருக்கலாம் என்பர். இதுகுறித்து மேன்மேலும் ஆராய வேண்டும்.

கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்தவர் மெசபடோமியர். இவர்கள் கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். ஊரும் நகரமும் எழுப்பி அரண்மனையில் வாழ்ந்தனர். அரண்மனைகளில் சேரநாட்டுத் தேக்கு மரமும் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பர்.மெசபடோமியாவில் காணப்படும் முத்திரைகள் எகிப்து மற்றும் இந்தியாவோடு வாணிகத் தொடர்பிருந்ததை நேரு தன்னுடைய உலக வரலாற்றில் எழுதுவதும் குறிப்பிடத்தக்கது.

சுமேரியர் தோற்றமும் திராவிடர் தோற்றமும் ஒன்று போல இருப்பதாலும் சுமேரிய எழுத்து முறையும் மொழியும் பல பெயர்களும் தமிழோடு ஒத்திருப்பதாலும் இதுகுறித்து மேலும் ஆராயலாம். சுமேரியரின் கடவுள் "தமுஃசி'; சுமேரிய அரசர் பெயர் தமுஃசி,தமுழி; இவற்றைத் தமிழோடு ஒப்பிட்டு ஆராயலாம்.

 சுமேரிய பாபிலோனிய மக்களின் வழிபடு கடவுளர் பெயரும் தமிழ்ப் பண்பாட்டோடு ஒத்து வருவதைக் காணலாம்.கேப்பிட்ஸ் என்பவர் சுமேரிய - திராவிட மொழிகளின் நெருக்கம் குறித்தும் ஆராயலாம். சுமேரியன் மக்கள் பெயர்களாகச் சங்கன், மக்கன் முதலியன காணப்படுகின்றன. பாபிலோனிய நிப்பூரில் தமிழ்க் காசும் முத்திரைகளும் கிடைத்துள்ளன. இவை தமிழகத்தோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பைக் காட்டும்.

 தமிழர் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்ந்த இராமச்சந்திர தீட்சிதர், "சிந்துவெளி, ஏலாமி, சுமேரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய பண்டைய நாகரிகங்களை உருவாக்கியவர்கள், தமிழர்களே' என்று குறித்துள்ளார். இன்றைய அகழ்வாய்வுகளும் பிற ஆய்வுகளும் இக் கூற்றை உறுதிப்படுத்துகின்றன எனலாம். பாட்டியைக் குறிக்கும் ஒளவை என்னும் சொல் "ஒளவா' என்று எபிரேயம் மொழியில் குறிக்கப் பெறுகின்றது.துகி - அகில் எனவும் குறிக்கப் பெறுகின்றது.

ஆப்பிரிக்க மக்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் இரு நாட்டு மக்களின் மரபுக் கூறுகள் ஒத்து விளங்குவதையும் குறிப்பிட்டுள்ளனர். முருகனைத் தமிழர்கள் வழிபடுவதுபோலவே "முருங்கு' என்னும் கடவுளை ஆப்பிரிக்கர் வணங்குகின்றனர். முருங்கு வாழுமிடம் மலைகள் என்பது அவர்கள் நம்பிக்கை. திருமுருகாற்றுப்படையில் வரும் குன்றுதோறாடல் பகுதிகள் ஒப்பிடற்குரியன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கோயில் அமைப்பு கேரள, தமிழகக் கோயில்கள் அமைப்பை ஒத்திருக்கிறது என்பர்.

மயன் நாகரிகம் தொன்மையைச் சுட்டுவது.பெருவில் வாழும் மக்கள் சூரியனையே கடவுளாகக் கொண்டிருந்தனர். இங்கு கி.மு. 1500க்கு முன்பே தமிழர்கள் குடியேறியதாகக் கூறுவர். அவர்களது நாகரிகத்தை "இன்கா நாகரிகம்' எனக் குறிப்பிடுவர். மிகப் பழங்காலத்திலேயே கடற்பயணத்தில் ஆர்வம் காட்டிய தமிழர்கள் அட்லாண்டிக் கடலைத் தாண்டி வட அமெரிக்காவில் கண்டெடுக்கப் பெற்ற பெனிசீயரின் கல்வெட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய தமிழக வரிவடிவ எழுத்துக்களும் உள்ளதாகக் கூறுவர். புலவர் காசுமானின் "குமரிய நாவலந் தீவின் உரிமை வரலாறு' நூலில் இத்தகு பழமையான செய்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இத்துறையில் ஆராய்ந்தால் பழந்தமிழரின் தொன்மைக்கான வேர்களைக் காணலாம்.

தமிழுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மொழிக்கும் இடையேயுள்ள வியத்தகு ஒற்றுமைகள் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளனர். அறிஞர் பி. இராமநாதன் இதுகுறித்து விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 தமிழரின் தொன்மை பல்லாயிரம் (10,000) ஆண்டுகட்கும் முற்பட்ட செய்தியை ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நெருங்கிய பிணைப்போடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். 1938ஆம் ஆண்டில் அறிஞர் எல்கின் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பர். 1963ஆம் ஆண்டில் லாக்வுட் என்பார் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் என்பார். அண்மைக்கால ஆய்வுகளின்படி 60,000 ஆண்டுகளுக்கு முன் என்றும் குறிப்பர். தமிழில் வரும் நான், யான், ஞான் என்பன ஞா, ஞாய், ஞான்ய என்று ஆஸ்திரேலிய மொழியில் வரும் என்பார். முன்னிலையில் வரும் நீன், நின், நின்ன என்பன ஞின்னே, ஞிண்டு, ஞிண்டே என வரும் என்பார். இவைபற்றியெல்லாம் ஆராயும்போது பழந்தமிழின் தொன்மை வேர்கள் எங்கெங்கெல்லாம் பரவியிருந்தன என்பதனை அறிய முடியும்.

 சங்க கால வரலாற்று ஆய்வுகள் அதன் மேல் எல்லையை கி.மு. 400 என முன்பு கூறின. ஆனால் அண்மைக் கால அகழ்வாய்வுகளும் மொழியாய்வுகளும் இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழமையை வரையறுத்துச் செல்கின்றன.

 கி.மு. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் காலத்தில் வழங்கிய சில சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று மொழியியல் அறிஞர் கூறுவர். கி.மு. 4000 அளவிலேயே திராவிட மக்கள் சிற்றாசியாவிலிருந்து இலங்கை வரை வாழ்ந்திருந்ததை மொழிகளின் ஒப்பீட்டு வாயிலாக உணர முடிகிறது. இதனை உலகப் புகழ் பெற்ற மொழியியல் வரலாற்று ஆய்வாளர் மெக் அல்பின் போன்றோர் நிறுவியுள்ளனர். திராவிட நாகரிகம் ஸ்பெயின், கிரேக்கம் வரை பரவியுள்ளதாக ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுவார். ஹீராஸ்பாதிரியார் தன்னை `I am a Dravidian from Spain’என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

 சங்ககால மன்னர்களான மாக்கோதை,கொள்ளிப்பொறை, குட்டுவன் கோதை போன்ற தமிழ் மன்னர்கள் பொறித்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லேப்ரஸ் என்றழைக்கப்படும் சுவடியில் கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற வணிக ஒப்பந்தம் ஒன்று எகிப்து நாட்டில் கிடைத்துள்ளது. அது ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரமான வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ளது. மத்திய தரைக் கடலில் நைல் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்சாண்டிரியா நகர வணிகனுக்கும் சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வசிக்கும் ஒரு வணிகனுக்குமிடையே ஏற்பட்ட வணிக ஒப்பந்தமாகும் அது. இந்த வணிக ஒப்பந்தத்தில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் அது அலெக்ஸெண்டிரியா சென்றடைய வேண்டிய முறைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

 சங்க காலத்தில் தமிழர்கள் ரோம நாட்டோடு நேரடியாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.செங்கடல் பகுதியில் கிடைத்த பானை ஓடுகளில் கொர்றப்பூ மான், கண்ணன், ஆதன், சாத்தன் முகலாயப் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழர்களின் வணிகத் தொடர்பின் வேர்கள் இங்கு தென்படுகின்றன. பதிற்றுப்பத்தில் காணலாகும் "பொன்னொடுவந்து கறியொடு பெயரும்' என்னும் சங்கப் பாடல் வரியும் இதற்குச் சான்றாகும். யவனர் வந்து மிளகேற்றிச் சென்றதைக் கூறும் சேரரின் வணிக நகரமாகக் கொடுமணல் விளங்கியதைப் பதிற்றுப்பத்தும் அகழ்வாய்வுகளும் புலப்படுத்துகின்றன.கோவை மாவட்டம் வென்னலூர்,கொடுமணல், கரூர் முதலிய ஊர்களில் அகஸ்டஸ் சீசரின் உருவம் பொறித்த நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

திருப்பூருக்கு அருகில் உள்ள படியூரில் கிடைக்கும் பச்சைக் கல் ரோமானியருக்கு மிகவும் பிரியமானது எனத் தாலமி கூறுவதும் குறிப்பிடத்தக்கது. மணிக் கல்லைக் குறிக்கும் `Bayl’என்னும் ஆங்கிலச் சொல் தமிழிலிருந்து எவ்வாறு வந்தது என்பதை ஆய்வாளர் பிஸ்வாய் குறிப்பிடுவார்.

தொழிலும் வாணிகமும்
பண்டைய தமிழர் ஈடுபட்டிருந்த இரு பெரும் உற்பத்தித் தொழில்களாக உழவும் வாணிகமும் விளங்குகின்றன. உழவுத் தொழில் பெற்றிருந்த முதன்மையைச் சங்க நூல்களும் பிறவும் நமக்கு நன்கு காட்டுகின்றன.வேளாண்மையைப் போலவே வணிகத் தொழிலிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

சங்க காலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் வாணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டிருந்ததைக் காட்டும்.
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், உறையூர் இளம் பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், கச்சுப்பேட்டு இளந் தச்சனார், கணக்காயன் தத்தத்தனார், கணியன் பூங்குன்றனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கொல்லன் புல்லன் போன்ற பெயர்கள் இவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்களைக் காட்டும்.

ஏற்றுமதிப் பொருள்களும் இறக்குமதிப் பொருள்களும் துறைமுகத்தில் நிறைந்து இருந்தமையைச் சங்க நூல்கள் காட்டுகின்றன.துறைமுகங்களில் விற்பனைக்கான பொருள்களைச் சுமந்து கொண்டு துறைமுகங்களில் கப்பல்கள் காத்திருந்தன என்று மதுரைக் காஞ்சி கூறும்.

கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன்னிசை முரசம் முழங்க
பொன் மலிந்த விழுப்பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை

எனத் துறைமுகக் காட்சியை மதுரைக் காஞ்சி எடுத்துக் கூறும். அக்காலத்திய மக்கள் பொருளியல் மேம்பாட்டிற்குக் கடல் வாணிகத்தைப் பெரிதும் பயன்படுத்தினர்.

பொருளாதார மேன்மையுடன் சங்கச் சமூகம் விளங்கியதை மாங்குடி மருதனார் நெய்தல் நிலச் சிறப்பாக எடுத்துரைப்பார். கடல் தந்த முத்துக்களும்,நேரிதான வளையல்களும், வணிகர் விற்பனைக்காகக் கொண்டு வந்த பல்வேறு பண்டங்களும், கரிய பெரிய உப்பங்கழியில் கிடைத்த வெண் உப்பும்,பொருத்த புளியும் மீன் துண்டங்களும் பெரிய மரக்கலங்களில் வணிகத்திற்காகச் சென்றன.மேல்நாட்டிலிருந்து கொண்டு வந்த புரவிகளும் அங்கிருந்தன என்று நாள்தோறும் நாள்தோறும் கடல் வாணிகம் சிறந்திருந்ததைப் பின்வருமாறு குறிப்பார்!

முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் 
            இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செருவின் தீம்புளி வெண்உப்பு
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமின்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந் தலைத்தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு 
            அனைத்தம்
வைகல்தோறும் வழிவழிச் சிறப்பு

என நெய்தல் நிலச் சிறப்பினை மதுரைக் காஞ்சியில் எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
பண்டமாற்று முறையில் வாணிகம் நடைபெற்றதைப் பெரும்பாணாற்றுப்படை மூலம் அறிய முடிகின்றது.தேன்,நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீனுக்கும் நருவுக்கும் பண்டமாற்றாகக் கொள்ளப் பெற்றன.நெய்யை விற்று எருமை வாங்கினர் என்பதும் அறியத்தக்கது.

நான் மோர் மாறும் நல்மாமேனி
சிறுகுழை துயில்வரும் காதின் பனைத்தேன்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவின் சினைஉடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொன்னான்
எருமை, நல்ஆன், கருநாகு பெறூஉம்
எனப் பெரும்பாணாற்றுப் படை எடுத்துரைக்கும்.
உப்பினை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்றனர். "உமணர் உப்பு வண்டி' என்று அவற்றை இலக்கியங்கள் கூறும். பண்டங்களை வண்டிகளின் மீதும் கழுதைகளின் மீதும் ஏற்றிச் சென்றனர்."அணர்ச்செவி கழுதைச் சாத்தொடு வழங்கும் உல் குடைப் பெருவழி' என்று செல்லும் வழியைக் குறிக்கும். ஆறலை கள்வருக்குப் பயந்து வணிகச் சாத்துகள் கூட்டம் கூட்டமாக வண்டிகளைச் செலுத்துவராம். வண்டிகளுக்கு வரியும் பெற்றதாகக் கூறப்படுகின்றது. வண்டிகளின் மேல் அளவும் பொறிக்கப்படுவதாகச் சிலப்பதிகாரம் கூறும்.

வணிகர் நடுவுநிலை தவறாது வாணிகம் செய்தனர். பிறர் கூறும் பழிக்கு அஞ்சி நேர்மையுடன் உண்மையான விலையைக் கூறி நேரிய வாழ்க்கையை நடத்தினராம்.

நெடு நுகத்துப் பகல் போல
நடுவுகின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்றிருக்கை

என நடுவுநிலை புரிந்து வாழும் வாணிகரைப் போற்றிய சமுதாயம் சங்க காலச் சமுதாயம் எனலாம்.

சங்ககால மக்கள் கிரீஸ்,ரோம், எகிப்து,சீனம் ஆகிய நாடுகளோடு கடல் வாணிபம் வைத்திருந்தனர் என்பதை டாக்டர் கே.கே.பிள்ளை சான்றுகளோடு புலப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விளைந்த நறுமணப் பொருள்கள் பலவும் பிறநாட்டில் இருந்ததைக் காணலாம். யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ் தாம் நடத்தி வந்த இறை வழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினர் (கி.மு. 1490) என்பர்.தென் அரேபிய நாட்டு அரசி ஷேபா, இஸ்ரேலின் மன்னன் சாலமனைக் காணச் சென்றபோது ஏலம், இலவங்கம் முதலிய நறுமணப் பொருள்களைக் கொண்டு சென்றதாகக் கூறுவர்.

தமிழகம், பாபிலோனியா இடையே அக்காலத்தில் விரிவான வாணிகம் நடைபெற்று வந்துள்ளது. பாபிலோனியாவில் நிப்பூர் என்னுமிடத்தில் முரசு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வாணிகத்தில் சில பற்றுவரவுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கணக்குப் பதியப்பட்ட களிமண்ணோடுகள் கிடைத்துள்ளன. தமிழ் வாணிகர்கள் பாபிலோனியாவில் குடியேறித் தொழில் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வருகின்றது.

தமிழக எகிப்துக்கிடையே இருந்த வாணிகத் தொடர்பு எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் மூலம் தெரிய முடிகின்றது. எகிப்தின் 17 ஆம் அரச பரம்பரையினருக்கு இறக்குமதியான பொருள்களுள் சேர நாட்டுத் துறைமுகங்களிலிருந்து அனுப்பப் பெற்றன என்பது.தேக்கு மரம், மஸ்லீன் துணி முதலியன கேரளத்திலிருந்து கடல் வழியாக நேராகப் பாபிலோனியாவிற்குச் சென்றிருக்கக் கூடும்.

கிரேக்க அறிஞர்களின் நூல்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்பார். அரிஸாஅரிசி), கருவா (இலவங்கம்), கார்ப்பியன், சிஞ்சிபேராஸ் (இஞ்சிவோ) முதலிய பல சொற்கள் குறிப்பிடத்தக்கவை.

நறுமணப் பொருள்களைத் தமிழகத்திலிருந்து விரும்பி வாங்கினராம் ரோமாபுரி மக்கள்.ரோமாபுரி மக்களின் ஆறு இலட்சம் பவுன் தங்கம் தமிழர் கைக்கு மாறுகிறது என்று அந்நாட்டில் குறிப்பிடுவராம். பழந்தமிழ் மக்களின் வணிக மேலாண்மை, இக்குறிப்புகளால் புலனாகும்.
யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் பணிபுரிந்தனராம். மணிமேகலை யவனத் தச்சர் என்று குறிப்பிடுகிறது. அவர்கள் கைவினைக் கம்மியர்களாக விளங்கினர்.

"யவனர் நன் கலந் தந்த தண் கமழ் தேறல் பொன்செய் புனைகலம்' என்று புறநானூறு (26) கூறும்.

சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்ப 
            (அகம் 149)

என்று முசிறித் துறைமுகத்தின் வணிகச் சூழலைக் காட்டுகிறது.
பழந்தமிழர்கள் வாணிகக் கலையில் சிறந்திருந்தனர். கடலோடியும் வாணிகம் புரிந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

ஆடற்கலை
பண்டைத் தமிழ் மக்கள் ஆடற்கலையில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தனர். ஆடற்கலையினைக் கூத்துக்கலை என்றும் குறிப்பிட்டனர். கூத்த நூல் என்றே பழந்தமிழ் நூல் ஒன்று இருந்ததைக் குறிப்பிட்டுள்ளன. சங்ககாலத்தில் ஆடல் முறையினை இருவகையாகப் பிரித்தனர்.வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இருவகையாகப் பகுத்தனர். மன்னருக்காக ஆடப்பெறும் கூத்து வேத்தியல் எனப்பட்டது.பொதுமக்களுக்காக ஆடப்பெற்ற கூத்து, பொதுவியல் எனப்பட்டது.தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் பழந்தமிழரின் ஆடற்கலைப் புலமை புலனாகின்றது.
பழந்தமிழ் நூல்களில் பலவகையான கூத்துகள் காணப் பெறுகின்றன. கடையம், மரக்கால், குடை,துடி, அல்லியம், பல் குடம்,பேடு, பாவை,கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலாய கூத்துகள் ஆடப் பெற்றன. இவற்றை நின்றும் வீழ்ந்தும் ஆடுவர்.

சிலப்பதிகாரம் இவ்வாடற்கலையைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது. ஆடற்கலையான நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் "தலைக் கோலி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர். "தலைக்கோல் அரிவை' என்றும் இவர்களைப் போற்றினர்.
சிலம்பில் அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய ஆடலுக்கு மன்னன் 1008 கழஞ்சு மதிப்புள்ள பொன்மாலையை வழங்கினான் என்று கூறப்பட்டுள்ளது.

பொன்னியல் பூங்கொடி
புரிந்துடன் வகுத்தெனநாட்டிய நன்னூல் 
நன்கு கடைப்பிடித்துக்காட்டினான் ஆதலின்
காவல் வேந்தன் இலைப் பூங்கோதை 
இயல்பினில் வழா அமைத்தலைக்கோல் எய்தித்
தலை அரங்குஏறி விதிமுறைக் கொள்கையின்
ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனன்
அதுவே
என்னும் பாடல் வரிகளால் "நாட்டிய நன்னூல்' பயின்று ஆடற்கலையைப் போற்றினர் என்னும் செய்தி புலனாகின்றது.

மதுரைக் காஞ்சியில் மக்கள் துணங்கைக் கூத்து ஆடிய செய்தி தெரிய வருகின்றது. முல்லை நிலத்தில் "ஆய்ச்சியர் குரவை' ஆடப் பெற்றது. ஆடுமகன், ஆடுமகள், விறலி, கூத்தர் என்போர் ஆடற்கலை வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.

ஓவியம்
பழந்தமிழ் இசை, நாட்டியம் முதலான கலைகளில் தேர்ந்திருந்தது போலவே ஓவியக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். நாடக அரங்கில் வண்ணங்களால் தீட்டப்பெற்ற அழகிய திரைச்சீலைகள் இருந்தன. இவை ஓவிய எழினிகள் எனப்பட்டன. சுவரின் மேல் சுதை ஓவியங்கள் தீட்டப் பெற்றிருந்தன.

கோட்டினால் வரைந்த சித்திரத்தைப் "புனையா ஓவியம்' எனக் கூறினர். மணிமேகலையில்,
"வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்' இருந்ததாகக் குறிப்பு வருகின்றது. எளிமையாகக் காட்சியளித்த மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார். 

"புனையா ஓவியம் புறம் போந்தன்ன' என்று குறிப்பிடுவார். சித்திரம் எழுதும் கோலை "வட்டிகை' எனக் கூறினர்."வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவை' என்னும் தொடர் இதனைப் புலப்படுத்தும்.

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உரையினால் அக்காலத்தில் ஓவிய நூல் இருந்ததாக அறிகின்றோம். மணிமேகலை "ஓவியச் செந்நூல்' என்று குறிப்பிடும்.

நாடக மகளிர்க்கு நன்கணம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடைக்கையும்
கற்றுத் துறை போகிய பொற்றொடி நங்கை
என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.

பாண்டிய மன்னன் மாறன்வழுதி "சித்திர மாடத்துத்துஞ்சிய' எனும் அடைமொழியால் சிறப்பிக்கப் பெறுவதும் எண்ணத்தக்கது.
பாரியின் அரண்மனையைக் கபிலர் 
"ஓவத்தன்ன இடனுடை வரைப்பு'
எனப் போற்றினார். ஓவம் என்பது ஓவியம் என்ற சொல்லுக்கு நிகரானது என்பார்.மேலும் ஓவியக் கலைஞர்களைக் "கண்ணுள் வினைஞர்' எனவும் ஓவிய மாக்கள் எனவும் சங்காலத்தில் போற்றினர். ஓவியங்கள் அடங்கிய மண்டபத்தை "எழுத்துநிலை மண்டபம்' எனவும் குறிப்பிட்டனர். மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியங்கள் வரையப் பெற்றிருப்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் "ஓவிய விதானம்' என்று குறிப்பிடுவார்.

பெண்களின் உடலில் ஓவியம் எழுதியதைத் "தொய்யில் கொடி' என்று குறிப்பிட்டனர். பிற்காலத்தே சித்தன்னவாசல் போன்ற இடங்களில் எழுதப் பெற்ற குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றனவாய் விளங்குகின்றன. பழந்தமிழர் ஓவியக் கலையை நன்கறிந்திருந்தனர் என்பது இவற்றால் நன்கு புலனாகும்.

கட்டடக் கலை
பழந்தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்வது கடலில் மூழ்கிய பூம்புகார்ப் பட்டினம். அண்மைக் காலத்தில் கடந்த அகழ்வாய்வுகள் மூலமும் செயற்கைக் கோள்கள் வழியாகவும் அந்நகரின் பல்வேறு சிறப்புகளையும் நன்கறிய முடிகின்றது. சிலம்பு பூம்புகாரின் நகரமைப்புச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றது.

தொல்காப்பியம் வேந்தர்களின் அரண்மனையைச் சுற்றிலும் வலிமையான அரண்கள் இருந்ததாகக் கூறும். இதனை "முழுமுதல்அரணம்'(தொல்பொருள்) என்று தொல்காப்பியம் கூறும்."ஆரெயில் மதிற்குடுமி' என்னும் தொடரும் குறிப்பிடத்தக்கது.

அரசனது இல்லம் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில் கோயில் என்னும் சொல் எடுத்தாளப் பெற்றுள்ளது.சோழன் கோயில்(புறம் 378) என்னும் புறநானூற்றுத் தொடர் கருதத் தக்கது.

பொருநராற்றுப்படை கூறும் "திருக்கினர் கோயில்' என்பதும் (90) அரசனுடைய இல்லத்தைக் குறிக்கும் என்பர்.சிலம்பின் சிலம்புங் கோயில் (நெடு 100),"வெண் கோயில் மாசூட்டும்'(பட்டினம் 50) என்பனவும் கருதத்தக்கன.

செங்கற்கள் கொண்டு நெடுநிலைக் கோட்டங்கள் கட்டப் பெற்றிருந்தன."சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்' என்று சிலப்பதிகாரம் கூறும்.செங்கல்லை இட்டினர்(அகம் 167) என்னும் சொல்லால் குறிப்பிட்டனர்."இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தன'(அகம் 167) என்பது அகநானூறு.
செல்வ வளத்திற்கேற்ப உயர்ந்த மாடங்கள் அமையப் பெற்ற இல்லங்களும் இருந்தன. முற்றம், திண்ணை, பல கட்டுகள்,பெரிய பெரிய வாசல்கள், இடைகழி, மாடங்கள் கொண்டு பழந்தமிழர் இல்லங்கள் விளங்கின.

ஏழகத் தகரொடு உகரு முன்றில்
குறுந் தொடை நெடும்படிக்கால்
கொடுந் திண்ணை பஃறகைப்பின்
புழைவாயிற் போகிடைகழி
மழை நோயும் உயர் மாடம்

எனப் பட்டினப்பாலை (141-145) குறிப்பிடும்.
காற்று வருவதற்கு ஏற்பச் "சாலேகம்'(நெடுநல் 125) அமைந்த வீடுகள் இருந்தன. இதனை "வாய்க் கட்டளை' (நெடு 62) எனவும் குறிப்பிடுவர்.
வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை (60-62)
என நெடுநல்வாடை கூறும்."கோலச் சாளரம்'(சிலம்பு 2:23) "மான்கட் காலதர்'(சிலம்பு 5, 8) எனச் சிலம்பு கூறும்.

சில்லென்ற காற்று உள்ளே புகுமாறு இல்லங்கள் வடிவமைக்கப் பெற்றிருந்தன."சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்'(மதுரை 308) என மதுரைக் காஞ்சி குறிப்பிடுவது எண்ணத்தக்கது.

கலைச் சொற்கள்
பழைய இலக்கண இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் வரும் கலைச் சொற்கள் பழந்தமிழரின் தொழில்நுட்பத் திறனை அடையாளப்படுத்தும் வேர்களாகும். இன்றும் பழங்கால மரபுகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கோயிற் கட்டடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் ஓவியக் கலைஞர்கள், தச்சர், கம்மியர்,கொல்லர், தட்டார் ஆகியோரிடையே பன்னூறு கலைச் சொற்கள் வழக்கில் உள்ளன. இவற்றை வகைதொகை செய்து ஆராயும்போது பழங்காலத்தில் வழக்காற்றிலிருந்த பல கலைச் சொற்கள் கிடைக்கும்.

கலைச் சொல்லாக்கம் பற்றிய ஆய்வுகளில் அண்மைக் காலத்தில் நாம் கவனம் செலுத்தினாலும் சென்ற நூற்றாண்டிலேயே இதற்கான முயற்சிகள் தொடங்கப் பெற்றுவிட்டன.ரேனியசு பாதிரியாரின் பூமிசாஸ்திரம், டாக்டர் சாமுவேல் பிஷ்கீறீனின் மனுஷ அங்காதி பாதம்,கெமிஸ்தம், இரண வைத்தியம் முதலிய நூல்கள் தமிழ்க் கலைச்சொற்களும் வித்திட்ட நூல்களாகும்.சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு தம்முடைய கிருஷி சாஸ்திர சார சங்கிரக நூலில் விவசாயம் பற்றிய பல கலைச் சொற்களைத் தொகுத்தளித்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இவற்றிற்கான வேர்கள் இருப்பதை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். பழந்தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அவற்றிற்கு உயிரூட்ட வேண்டும்.

பழந்தமிழ் நூல்களில் காணலாகும் தொழில்நுட்ப வேர்ச்சொற்கள் பல.தொழில்களுக்கு வேண்டிய துணைக் கருவிகளைச் செய்யும் தொழிலாளர்களை கம்மியர்,தொழுவர் என்று அழைத்தனர் (மதுரைக் காஞ்சி 521) "இரும்பை வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர்'(பெரும்பாணார் 222) கருந்தொழில் வினைஞர்(சிறுபாண் 527) என்று இத்தொழில் செய்வோரைக் குறிப்பிட்டனர். உலை (நெருப்பைத் தூண்டும் கருவி)கொடிறு (சூடான பொருளைப் பற்றி எடுப்பதற்குரிய கருவி)கொல் துறைக் குற்றில் (சிறிய உலைக்களம்)"இரும்பு செய் கொல்லன்' என இலக்கியங்களில் இவ்வேர்களைக் காணலாம்.

மரவேலை செய்பவர்களை "மரங் கொல் தச்சன்'(புறம் 200) என அழைத்தனர். மழு, உளி, முடுக்கு, எறிகுறடு முதலியவை இவர்கள் பயன்படுத்திய சொற்களாகும். கலப்பை செய்ததோடு அல்லாமல் இல்லங்களுக்குரிய நிலை, வண்டி,தேர், யாழ் முதலியவற்றைப் படைத்தனர். தபதியர், மர வினையர் எனத் திவாகரம் இவர்களைச் சுட்டும்.

பொன்னை நெருப்பில் உருக்கி ஆவணங்கள் செய்வோரைச் "சூடுறு நன் பொன் அடரிழை புனைவார்'(மதுரை 512) எனக் குறித்தனர்.பொன்னின் தரத்தை அறிந்து கொள்ளக் "கட்டளை' என்னும் உரைகல்லைப் பயன்படுத்தினர். ஆபரணம் செய்யும் தட்டாரைப் "பொன்னுரை காண் தட்டார்' என அழைத்தனர்.செம்பை நிறுத்து வாங்கிப் பானை முதலிய கலங்களைச் செய்வதற்கு மண்ணால் உருச் செய்தனர். இவர்கள் "செம்பு செய் கம்மியர்' என அழைக்கப்பட்டனர். சங்கு வளையல் செய்வோரைக் "கோடு போழ் கடையினர்' என அழைத்தனர்.

மண்ணைக் கொண்டு வலக்கை கலங்களைச் செய்து சூளையில் இட்டு மண்பாண்டங்களைச் செய்வோரை "கலம் செய்கோ' "வேட்கோ' என அழைத்தனர். திகிரி, தண்டு முதலியவை இவர்கள் பயன்படுத்திய கருவிகளாகும். கும்பகாரர், குலாலர்,வேட்கோவர், மட்பகைஞர் என்பன திவாகரம் சுட்டும் பெயர்களாகும்.

ஆடைநெய்வோரைக் "கம்மியர்' என்றனர் (மதுரை 521) காடுகளில் இல்லங்களை அடுத்து வேலிபோல் பருத்தியைப் பயிரிட்டனர். "பருத்தி வேலிச் சீறூர்' (புறம் 299) எனப் புறநானூறு கூறும். நூலாடைகளைக் கலிங்கம், சிதார், மடி என வழங்கினர். ஆடைவெளுத்துத் தருவோரைக் "காழியர்' எனத் திவாகரம் கூறும்.வெளுக்கப்பட்ட ஆடையினைக் "கழுவுறு கலிங்கம்' (குறு 167) எனக் குறித்தனர். கஞ்சி போட்டுத் தோய்த்த துணியினைச் "சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்' என்பர்.

உணவு சமைக்கும் இடத்தை "அட்டில்' என்றனர். அடுகலம், அடுமகள் இதனோடு தொடர்புடைய பிற சொற்கள். இறைச்சி கலந்த சோற்றினைப் பதிற்றுப்பத்து "ஊன்துவை அடிசில்' என்று கூறும். இன்புளிஞ்சோறு எனப் புளிச் சோற்றைக் குறித்தனர்.சோற்றிற்குரிய பிற பெயர்களாகத் திவாகரம் முப்பதிற்கு மேற்பட்ட சொற்களைத் தரும். இட்டிலியின் பழைய வடிவம் இட்டவி. பூரியைப் பூரிகம் என்றும் தோசையைத் தோய்வை எனவும் கூறும். பழம் பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு சொற்களும் வளமான சொற்களஞ்சிய வேர்களாகும். இவற்றைக் கண்டறிந்து பயன்படுத்துவது நம்முடைய கடமை.

தொகுப்புரை
பழமையான சங்கநூல்களின் வழி தொன்மையான பண்பாட்டு வரலாற்று வேர்களைக் காணப் புகுந்தால் தமிழின் வளமையும் பெருமையும் நம்மை வியக்க வைக்கும். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களின் ஆழ அகலங்களைத் துய்த்து நமக்கு வழங்கியவர்கள் உரையாசிரியர்கள்.வேர்களைத் தேடி அம்மரபுச் செல்வத்தை உரையாசிரியர்கள் நமக்கு வழங்கிய பின் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றவர்கள் பதிப்பாசிரியர்கள். பழைய நூல்களை உரைகள் வழி மீட்டுருவாக்கம் செய்த உரையாசிரியர்களின் புலமைச் செறிவையும் உரைநுட்பத்தையும் மொழிவளத்தையும் இளையதலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும். சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்ற பெருமக்கள் இப் பணியைச் செய்தனர். உ.வே.சா. பழஞ் சுவடிகளைப் பாதுகாத்து நூல்களாக உருவாக்கியவர்.

வாழையடி வாழையாக வந்த இப் பெருமக்களின் தமிழ்ப் பணியைப் போற்றும் "தினமணி', தமிழ் வேர்களைத் தேடும் அரிய தொண்டில் ஈடுபட்டு உழைப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. "பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என வரந்தருவார் தமிழைப் போற்றுவார். நாளும் தமிழைப் போற்றும் "தினமணி'யை நாமும் இப்படிப் பாராட்டலாம்.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து 
சங்கத்து இருப்பிலே இருந்து "தினமணி' ஏட்டிலே தவழும் தமிழ்!
நாளைய தலைமுறைக்கும் சேரட்டும்.வேர்களைத் தேடிச் செழுமை பெறட்டும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/tamilh.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/23/பழந்தமிழரின்-தொன்மை-வேர்கள்-3313663.html
3313665 தமிழ் மொழித் திருவிழா மொழியும் சமயமும் அடையாளங்கள் அரங்க. ராமலிங்கம் DIN Monday, December 30, 2019 04:27 PM +0530  

பக்தி இயக்கம்
 தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைத் தமிழ் பக்தி இயக்கத்தின் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். இக்காலக் கட்டத்தில்தான் பக்தி இயக்கம் தமிழகத்தில் தோன்றி மெல்ல மெல்ல வடபுலம் நோக்கிப் பெயர்ந்து உலகளாவிய இயக்கமாகப் பரவியது.

 பக்தி இயக்கத்திற்கு வித்திட்ட பெருமை தமிழகத்திற்கு உரியது. அதற்கு உயிரூட்டியவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆவர். நாயன்மார்களில் முன்னின்றவர்கள் இருவர். ஒருவர் திருநாவுக்கரசர்  மற்றவர் திருஞான சம்பந்தர். இவ்விருவரின் அடியொட்டியே ஏனைய நாயன்மார்கள் பக்தி இயக்கத்திற்கு உரம் ஊட்டினார்கள். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வச் சேக்கிழார் பக்தி இயக்கத்தின் விழுதுகளாக விளங்கிய திருத்தொண்டர்களின் வாழ்க்கையைக் காப்பியமாகப் புனைந்து வரலாற்றில் நிலைக்கச் செய்தார்.

திருக்கோயில்களே சமுதாயக் கூடங்கள்
 மக்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைகின்ற இடமாகத் திருக்கோயில்கள் மடை மாற்றம் செய்யப்பெற்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால் திருக்கோயில்கள் சமுதாயக்கூடங்களாக மாறின. மக்கள் தொடர்புச் சாதனமாக அதாவது வெகுஜன ஊடகமாகத் திருக்கோயில்கள் உருப்பெறலாயின. திருக்கோயில்களை மையப்படுத்தி இசை, நாட்டியம், கூத்து, நாடகம் என அனைத்துக் கலைகளும், சிறப்பு விழாக்களும் பூசனைகளும் நடைபெற்றன. அரசன் முதல் ஆண்டிவரை ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற சமுதாயப் புரட்சியைத் திருக்கோயில்கள் நிகழ்த்தின.

மக்கள் இயக்கம்
 வெற்று ஆரவாரச் சடங்குகள், அன்பு நெறிக்கு ஒவ்வாத வழிபாட்டு முறைகள் மற்றும் மது, மாமிசம் அருந்துதல், புலித்தோல் ஆடை புனைதல், மண்டை ஓடு அணிதல் இன்னபிற நடைமுறைகளோடு இருந்து வந்த -சைவத்தை அன்பு நெறிச் சைவமாக மாற்றிய பெருமை, திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் உரியது. இப்பெருமக்கள் தமிழகத்தின் ஊர்கள்தோறும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்துச் சைவத்தை மக்கள் சைவமாக  மாற்றினர்.

 மக்கள் இயக்கமாகச் சைவ சமய இயக்கம் உருவாயிற்று. மக்கள் சக்தியைத் திரட்டி அவர்களை ஓர் இயக்கமாக்கி அவர்கள் மூலம் பழைய திருக்கோயில்களைப் புதுப்பித்தும் - பல புதிய திருக்கோயில்களை உருவாக்கியும் இசைத்தமிழால் இறைவனைப் போற்றித் துதித்தனர். இசையும் நாடகமும் மீண்டும் தமிழகத்தில் புத்தெழுச்சி பெற்றன. தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் இவர்தம் பாடல்களில் வெளிப்பட்டன. "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க' இறைவனை வழிபடும் தூய பக்திநெறி உரம் பெற்றது; வளம்பெற்றது; வளர்ந்தது. பண்டைத் தமிழரின் அகத்திணை மரபு ஆன்மிக அடித்தளத்தில் மீண்டும் தளிர்த்துத் தழைத்தது.

சங்க காலமும் சமயமும்
 சங்ககாலச் செவ்விலக்கியங்களில் சமயம் தொடர்பான செய்திகள் விரவிக்கிடக்கின்றன. இறைத்தன்மை குறித்த தெளிவான பார்வையோடு பழந்தமிழர் வாழ்ந்தனர் என்பது அச்செய்திகளால் வலுப்பெறுகிறது.

தீயினுள் தெறல் நீ  பூவினுள் நாற்றம் நீ 
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ 
அறத்தினுள் அன்பு நீ  மறத்தினுள் மைந்து நீ 
வேதத்து மறை நீ  பூதத்து முதலும் நீ 
வெஞ் சுடர் ஒளியும் நீ  திங்களுள் அளியும் நீ 
அனைத்தும் நீ  அனைத்தின் உட்பொருளும் நீ 
ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே  உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை 
முதல்முறை, இடைமுறை, கடைமுறை,தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை  பிறப்பித்தோர் இலையே
(கடுவன் இளவெயினார், திருமால் 
பரிபாடல்  3: 63-72)

உரை:- தீயில் அமைந்த வெப்பம் நீ; மலருள் மணம் நீ  மணிகளுள் அம்மணியின் தன்மை நீ.சொற்களுள் வாய்மைத் தன்மை நீ. அறச்செயல்களுள் அன்புடைமையாக இருக்கின்றாய். மறச் செயல்களுள் நீ வன்மைப் பண்பு.வேதத்துள் அரும்பொருளாக விளங்குபவன் நீ. பூதங்களுள் அவற்றின் முதற்பொருளாக விளங்குபவன் நீ. ஞாயிற்றின் ஒளியாவாய் நீ. திங்களில் குளிர்ச்சிப் பண்பும் நீ. இங்குக் கூறப்படாத எல்லாப்பொருளும் நீ. எல்லாப் பொருளிடத்தும் அவற்றின் உட்பொருளாய் இருப்பவனும் நீ. ஆதலால் நீ உறைதலும் இல்லை. உறைதலுக்கு வேறாக உறையும் இடமும் இல்லை. மறதியுடையார் நின்னைச் சிறப்பிக்கும் காரணமாய்ச் சொல்லப்பட்ட அவை நினக்கு உள்ள தன்மையும் பொய். இத்தகைய தன்மை உடையாய் ஆதலால், உலகில் முதலிலும் இடையிலும் இறுதியிலும் படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களைச் செய்யும் பொருட்டு நீ பிறவாத பிறப்பும் இல்லை. அவ்வாறு பிறந்தாயாயினும் நின்னைப் பிறக்கும்படி செய்தவரும் இல்லை.

இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல  நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே
(கடுவன் இளவெயினார் -முருகன் - 
பரிபாடல் 5: 79-82)

உரை:- தேர்ச்சக்கரத்தைப் போன்ற மலர்கள் உடைய கொத்துக்கள் பொருந்திய கடம்ப மாலையை அணிந்தவனே!  நின் திருவடி நிழலை அடைய விரும்பும் யாம் நின்னிடம் இரப்பவை, நுகரப்படும் பொருளும் அவற்றைத் தரும் பொன்னும், அவற்றால் அனுபவிக்கும் இன்பமும் அல்ல. எமக்கு வீடுபேறு அளிக்கும் நின் திருவருளும் அந்த அருளை உண்டாக்க வல்ல நின்னிடத்தே யாம் செலுத்தக் கடவுவது அருளும் அன்பும், அவ்விரண்டானும் வரும் அறமும் ஆகிய மூன்றுமே ஆகும். இவற்றை நீ எமக்கு அளித்தருள வேண்டும்.

எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே  அது கண்டு,
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெüவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே
(ஊன்பொதி பசுங்குடையார் -
 புறநானூறு - 378: 10-24)

உரை:- அரசர்க்கே உரிய பல நல்ல அணிகலன்களை என் சுற்றத்தார்க்குக் கொடுத்தேன். அவர்கள் அதைக் கண்டு திகைத்தனர். அவர்கள், விரலில் அணிய வேண்டியதைச் செவிகளிலும்,செவியில் அணிய வேண்டியதை விரலிலும், இடையில் அணிய வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியதை இடையிலும், அணிந்தனர். இக்காட்சி இராவணனால் சீதை கவர்ந்து செல்லப்படும்போது, காடுகளில் சிதறிக் கிடந்த நகைகளை வானரங்கள் அணிந்துபார்த்து ஆனந்தம் அடைந்ததைப் போன்றது என்னும் குறிப்பைத் தருவதாக  உள்ளது.

விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்கல் ஊரே
(மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்-அகநானூறு - 70.)

உரை:- இராமன் இலங்கைமேற் செல்லுதற் பொருட்டுத் திருவணைக்கரையின் அருகிலிருந்த பெரிய ஆலமரத்தின் கீழே, தமக்குத் துணைவராயினாரொடு, மறைகளைச் சூழுங்கால், ஆங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் அணையால் அடக்கினன் என்றதொரு வரலாற்றினைப் புலவர் கூறுகிறார்.

அலர் தூற்றிய ஊராரின் பேச்சொலி தலைவனின் வரைவு வருகையால் அடங்கிற்று எனத் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. புறநானூறும் அகநானூறும் கூறும் இச்செய்திகள் வால்மீகி இராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லை. மறைந்துபோன தமிழ் இராமாயணநூல்களில் இக்கதைகள் இடம் பெற்றிருக்கலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள பாடல்கள் மட்டுமல்லாது கலித்தொகையில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் மற்றும்  புராணச் செய்திகள் மிகுதியாக உவமைகளாகக் கூறப்பெற்றுள்ளன. இவை மட்டுமல்லாது சமயம் தொடர்பான குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. இவையனைத்தும்  சமயச் சிந்தனையில் மேலோங்கியிருந்த நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் பல வினைக்கோட்பாட்டினை வலியுறுத்திக் கூறுகின்றன.

சங்கம் மருவிய காலமும் காப்பியங்களும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் "தெய்வம்' (குறள். 43,55,1023), "தாமரைக்கண்ணான் உலகு' (குறள். 1103), திரு (இலக்குமி)(குறள். 920) ஆகிய சமயம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாசிரியரின், "திருக்குறளில் இறைநெறி' என்ற நூலினைப் படித்து உண்மை உணர்க.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் ஆகிய பத்துக் காப்பியங்களில்  எட்டுக் காப்பியங்கள் சமண சமயக் காப்பியங்கள், இரண்டு பெளத்த சமயக் காப்பியங்கள் ஆகும். தமிழிலக்கியத்திற்கு சமண சமயமும் பெüத்த சமயமும் அளித்த கொடைகள் மிகுதி.

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை 
            கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே 
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 1)

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே 
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 2)

படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே
(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை - 3)

எனச் சமணக் காப்பியமான சிலப்பதிகாரம், சமயப் பொதுமையை வலியுறுத்துகிறது.

கம்பராமாயணத்தில்,
மும்மைசால் உலகுக்கு எல்லாம் 
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் 
    தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் 
    மருந்தினை, இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் 
    கண்களின் தெரியக்கண்டான்
(கம்பராமாயணம் - 4117)

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து,
        உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக்கையும் 
        தலையின்மேல் தாங்கி
பூ நிறக் கண்கள் புனல்உக,
        மயிர் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன் 
         அந்தணன் நடுங்கி.
(கம்பராமாயணம் - 6338)

ஆகிய பாடல்களில் இராம நாமத்தின் சிறப்பையும், நாராயண நாமத்தின் பெருமையையும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தொண்டர்களின் பெருமையைச் சிறப்பாக எடுத்துரைத்த முதல் தமிழ்க் காப்பியம் பெரியபுராணம். சமயம் தொடர்பான செய்திகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் இலக்கியங்களில் உள்ளன என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

சைவம் -வைணவம் -தமிழ் வளர்ச்சி
 நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் அளித்துள்ள கொடைகள் ஏராளம். பல புதிய யாப்பு வடிவங்களையும், சிற்றிலக்கிய வகைகளையும் தந்த பெருமை இவர்களுக்கு உண்டு.
திருமொழிமாற்று, திருமாலைமாற்று, வழிமொழித் திருஇயமகம், திருஏகபாதம், திருவிருக்குக் குறள், திருவெழுகூற்றிருக்கை, திருஈரடி, திருஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிராகம், திருச்சக்கரமாற்று, வினாவுரை முதலிய புதிய யாப்பு மற்றும் அமைப்பு முறைகளைப் பதிகங்களில் பயன்படுத்திப் புலமைத்துவத்தை நிலைநாட்டியவர் திருஞான சம்பந்தர்.மேலும் புதுப்புதுப் பண்களில் பாடல்கள் பலபாடித் தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தவர். ஒரு கட்டத்தில் பெரும்பாணராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரே இசையமைக்க முடியாமல் திணறிய யாழ்முரிப் பண்ணைப்பாடி இசைத்துறை வளர்த்தார்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் பாவை, சாழல்,பொற்சுண்ணம்,வேசறவு, அம்மானை, திருத்தோள்ணோக்கம் எனப் பத்திற்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகளில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தாண்டகம் என்ற யாப்பை மிகச் சிறப்பாகக் கையாண்ட திருநாவுக்கரசர் யாப்பின் பெயரால் "தாண்டகவேந்தர்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

வைணவ இலக்கியங்களிலும் பள்ளியெழுச்சி, மாலை, பாவை, திருமொழி, மடல் ஆகிய சிற்றிலக்கியக்கூறுகள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பெறுகின்றன. இவை யாவும் தமிழ் மொழியைச் சைவ,வைணவச் சமயங்கள் வளர்த்துள்ளமைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

உரையாசிரியர்கள் மற்றும் இலக்கண ஆசிரியர்களில் பலர் சமண,பெüத்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதை அவர்களின் உரைகளாலும் இலக்கண நூல்களில் உள்ள குறிப்புகளாலும் அறிய முடிகிறது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு சிற்றிலக்கியமும் ஒவ்வொரு சமயம் சார்ந்து எழுந்தன. குற்றாலக் குறவஞ்சி சைவ சமயக் கருத்துகளைக் கொண்டுள்ளது. சான்றாக,

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ்
 சதுர்வேதம் கிளைகள் ஈன்ற
களையெலாம் சிவலிங்கம் கனியெலாம்
 சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளையெல்லாம் சிவலிங்கம் வித்தெலாம்
 சிவலிங்க சொரூபம் ஆக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த
 சிவக்கொழுந்தை வேண்டு வோமே.

உரை:- கிளைகள் தந்த வளாரெல்லாம் சிவலிங்கம்;  அந்த மரத்தின் பழமெல்லாம் சிவலிங்கம்;  அப் பழங்களிலுள்ள சுளையெல்லாம் சிவலிங்கம்; அச் சுளைகளிலுள்ள கொட்டைகள் எல்லாம் சிவலிங்கவடிவமாக விளைந்துள்ள. இக் குறும் பலாவிடத்தே தோன்றி எழுந்த சிவபெருமானை நலந்தர வேண்டிக்கொள்வோம்.

முக்கூடற்பள்ளு சைவ,வைணவ சமயங்களைப் பற்றிய குறிப்புகளை ஒருங்கே பெற்றுத் திகழ்கின்றது. சமயப்பொதுமையை வெளிப்படுத்திய சிறப்பு இவ்விலக்கியத்திற்கு உண்டு.

14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம், இஸ்லாம் சார்ந்து பல சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. கண்ணி என்ற யாப்பு வகை மிகுந்த செல்வாக்குப் பெற்றது. தங்கள் சமயக் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு பல அருளாளர்கள் இந்த அமைப்பினைப் பயன்படுத்தினர்.தேம்பாவணி, சீறாபுராணம், இரட்சணிய யாத்திரிகம் போன்ற காப்பியங்கள் தோன்றி தமிழுக்கு உரம் ஊட்டின.

அறிவு, அன்பு  -தெய்வம்
 பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு சித்தர்கள் இறைத்தன்மை குறித்த உண்மைக் கருத்துகளைப் பதிவு செய்தனர். சித்தர் இலக்கியம் அனைத்துச் சமய அமைப்புகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தது. சமயம் நிறுவனமயமானால் அது இறைத்தன்மையை உணர்வதற்குத் தடையாக அமையும் என்பதை ஆணித்தரமாக உரைத்தனர்.

 சைவம்,வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்துச் சமயங்களும் அறியாமையைப் போக்கி அறிவைப் புலப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பெற்றன. அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் எந்தச் சமயத்தில் பின்பற்றப்பெற்றாலும் அவற்றிற்கும் உண்மைச் சமயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 அறிவொன்றே தெய்வம் என்று ஆயிரம் சுருதிகள் சொல்வதைக் கேளீரோ என்று பாரதியார் கூறிய கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
அறிவு நிரம்பியோரின் தன்மை அன்புள்ளத்தோடு இருப்பதுதான். அறிவின் முதிர்ந்த நிலைதான் அன்பு. உயிரிரக்கம்தான் சமயங்களின் முடிந்த முடிபு. மனித நேயமே அனைத்துச் சமயங்களின் அடிநாதம். வள்ளற் பெருமான் போல்,

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் 
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் 
உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட 
என் சிந்தைமிக விழைந்த தாலோ

 என்று கருதும்  உயர்ந்த நிலை. இந்நிலையை அடையத்தான் சமயங்களை மனித இனம் பயன்படுத்தவேண்டும். சமயங்களின் பெயரால் கடவுள்தன்மை சிறுமைப் படுத்தப்பெறுவதை எதிர்த்து வள்ளலார் இராமலிங்க அடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சன்மார்க்கத்தைப் பரப்பினார். அவர்,
அன்பான தெய்வம் அறிவான தெய்வம் - என்
அறிவுக்குள் அறிவான தெய்வம்
என்று பாடி, தெய்வத்தின் தன்மையை உலகிற்கு உணர்த்தினார்.
உயிர்களிடத்து அன்பு வேண்டும் -தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேண்டும்
என்னும் மகாகவியின் உயர் தத்துவமே அனைத்துச் சமயங்களும் கூறும் ஒரே கருத்து.

சமயப் பொதுமை
சமயப் பொதுமையை வலியுறுத்துவோரை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் வரவேற்றன. அனைத்துச் சமயக்கருத்துகளில் இருந்தும் சிறந்தவற்றைத் தொகுத்து அதனடிப்படையில் கடவுட்கொள்கைகள் உருவாக்கப்பெற்றன. 
தாயுமானவர், வள்ளலார், ஷீரடி சாய்பாபா, பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், பாரதியார்,போன்றோர் சமயப்பொதுமையை வலியுறுத்தியோர்களுள்  குறிப்பிடத்தக்கவர்கள்.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவாய் அமர்ந்திருந் தேனே.
(திருமந்திரம் - அறிவுதயம் - 2357)
என்ற திருமந்திரப் பாடல் மனிதன் அறிவு வடிவாய் இருப்பதன் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. உயிர்களின் அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் அறியாமை. அறியாமை அகல அறிவில் தெளிவு ஏற்படவேண்டும். மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி ஞானநெருப்புப் பற்ற வேண்டும். ஞான நெருப்பினால் பிறவிக்குக் காரணமான அனைத்து அறியாமைக் காடுகளும் எரிந்து சாம்பலாகும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிடைப் 
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் 
மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
அறிவின் முதிர்ந்த நிலை அன்பு. அன்பே கடவுள் என முதலில் முழக்கமிட்டவர்கள் தமிழர்கள். சான்றாக,

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே 
(திருமந்திரம் - அன்புடைமை - 270)

ஆகிய திருமந்திர வரிகள் அறிவு, அன்பு ஆகியவற்றையே கடவுள்,தெய்வம் என்று கூறுகின்றன. உலக மொழிகளில் நம் தெய்வத்தமிழ்தான் உண்மை அறிவையும் அன்பையும் அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றது. எண்பது விழுக்காடு தமிழ் இலக்கியங்கள் சமயம் சார்ந்தவை.
எனவே, அவற்றையெல்லாம் கற்றுப் பண்பட்டவர்களாக, மிக உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்கிய பெருமை மிக்கவர்களாக நாம் திகழவேண்டும். அதற்கு நம் மொழியும் சமயமும் உற்ற துணையாக அமையும். இவ்வுண்மையை உணர்ந்து நம் மண்ணின் பெருமையை, கிழக்கின் மேன்மையை மேற்கிற்கு அறிவிப்பதற்கு நாம் அனைவரும் முயலவேண்டும்.

அனைத்து உயிர்களிடமும் உயிர் இரக்கம் காட்டுதல், மனித நேயத்தை வளர்த்தல்,வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கூடி வாழ்தல் ஆகியவையே அனைத்து சமயங்களின் திரண்ட கருத்து எனலாம்.

சமயமில்லாமல் நம் மொழியில்லை. நம் மொழியில்லாமல் சமயம் இல்லை. இரண்டறக் கலந்துள்ள இவற்றினுள் நாமும் இரண்டறக் கலக்க வேண்டும். நம் மொழியும், நம் சமயமும்தான் நம்முடைய அடையாளங்கள். அதைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/kv.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/23/மொழியும்-சமயமும்-அடையாளங்கள்-3313665.html
3313661 தமிழ் மொழித் திருவிழா அறத்தை முன்னெடுப்பதே இலக்கியம் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் DIN Monday, December 30, 2019 04:27 PM +0530  

வேறு எந்த இலக்கியத்தையும்விட, தமிழ் இலக்கியத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அது எல்லாக் காலத்திலும் மானுட அறத்தை முதன்மைப்படுத்தியே வந்திருக்கிறது. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தருகிறது.வெறுமனாக இவை பொழுதுபோக்கிற்காகப் படைக்கப்பட்ட இலக்கியங்களே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கையை நேசிக்கவும், மனிதர்களை நேசிக்கவும், நிலம் சார்ந்து இந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இந்த இனத்தினுடைய வரலாற்றையும் அல்லவா நம்முடைய இலக்கியம் பதிவாக்கி இருக்கிறது!

நாம் நம்முடைய மொழியின் சிறப்புகளை இழந்துவிட்டோம். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகவில்லை. நம்முடைய வரலாற்றை மறந்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றை மறந்து,மொழியை மறந்து, யாரோ எங்கோ உருவாக்கி வரக்கூடிய சந்தைக்கு நம்முடைய இலக்கியத்தைப் பலிகொடுப்பது என்றால் அதற்கு நான் ஒப்பமாட்டேன். அது இலக்கியம் இல்லை.

வரலாற்றை நாம் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒரு வரலாற்றுப் பார்வை வேண்டும். அவர் ஒரு கவிதை எழுதினாலும், கதை எழுதினாலும், கட்டுரை எழுதினாலும் அவருக்கு வரலாற்று நோக்கு என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். யாருக்காக, எதை எங்கிருந்து எழுதுகிறார் என்பது முக்கியமானது.

முன்னொரு காலத்தில் எல்லாம் எழுத்தாளர்கள் இருந்தார்கள். மன்னர்களோடு இருந்தார்கள்;துதி பாடினார்கள்; புகழ்பாடினார்கள். 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அப்படியல்ல. ஒரு ஜனநாயகம் உருவானது. எழுதுகிறவன் சாமானியன்; எழுதப்படுகிற விஷயம் சாமானியனுடைய வாழ்க்கை.கேட்பவனும் சாமானியனுக்கு உரியவனாக இருந்தால் அவன் அந்த வாழ்க்கையைக் கேட்கலாம் என்று. சாதாரண ஏழை, எளிய மக்களினுடைய குரல் 19-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியத்தில் ஒலிக்கத் தொடங்குகிறது.

தமிழனுக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை பாரதி. அவர்தான் முதன் முதலாக உலகு தழுவிய இலக்கியத்தோடு தமிழ் இலக்கியம் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்பியவர். அவர் ஷெல்லியைத் தன்னுடைய ஆசானாகக் கருதுகிறார். தமிழில் அப்படி ஒரு முன்னோடியை நான் கண்டது இல்லை. நம்முடைய ஆசான்கள் நம்மிடம்தான் இருந்தார்கள். ஆனால், உலகு தழுவிய ஒருவரைத் தன்னுடைய ஆசானாகக் கருதி, உலக இலக்கியத்தோடு தமிழ் இலக்கியமும் ஒன்றிணைய வேண்டும் என்ற கனவு பாரதிக்குத்தான் இருந்தது.

ஜனநாயகப்படுத்துதலும் உலகு தழுவிய இலக்கியத்தோடு ஒன்றிணைந்து கொள்ளுவதும்தானே நவீன இலக்கியத்தினுடைய வருகை. அப்படித்தான் நவீன இலக்கியம் நம்மிடம் வளர்ந்தது; உருவானது. அதைக் கல்வி நிலையங்களுக்கும், இலக்கிய இயக்கங்களுக்கும் தூக்கிச் சுமந்து, புத்தகங்களை விற்று, பலர் தம் வாழ்க்கையை அழித்துக்கொண்ட தியாகமும் கொண்டதுதான் தமிழ் இலக்கியம். இது என்றோ தோன்றி அச்சிடப்பட்ட புத்தகங்களால், இயந்திரங்களால் உருவான மாற்றம் அல்ல. ஆனால் நம் காலத்தில் அதை வெறும் விற்பனைப் பொருளாகப் பார்க்கும்போது நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம்; இதற்குப் பின்பு இதற்காக அர்ப்பணித்துக்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்; வாழ்க்கை இருக்கிறது.

தமிழ் கற்று, தமிழ் மொழியைத் தன் வாழ்க்கையெல்லாம் சொல்லித் தருவதையும், இலக்கியத்தைத் தம்முடைய வாழ்க்கையை அறமாகக்கொண்ட எத்தனை அறிஞர்கள் இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்? அவர்களுடைய படைப்புகள் வாசிக்கப்படவே இல்லை. மறுவாசிப்புக்கு உள்ளாகவே இல்லை. படிக்காத ஒரு மனிதன் முன்பு ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பி வந்தால் எழுத்தாளன் ஆகிவிடலாம். ஒரு கி.ராஜநாராயணன், ஒரு சுயம்புலிங்கம் என்று எத்தனையோ முன்னோடிகள் அப்படியிருக்கிறார்கள். இன்றைக்கு அது நடக்காது. 

இன்றைக்குப் படித்தவர்களினுடைய உலகம் - குறிப்பாக, இணையம் போன்ற ஊடகத்தில் அத்தனை பேரும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் படித்தவர்கள் செய்கிற சூதும், வஞ்சனையும் வன்முறையும்தான் சகிக்க முடியால் இருக்கிறது.யோசித்துப் பாருங்கள், அன்பிற்கு இடமேயில்லை. ஜப்பானில் ஒரு புகழ் பெற்ற சம காலத்து எழுத்தாளர் இருக்கிறார். ஹாரூக்கி முரோகாமி என்று சொல்லுகிறார்கள் அவரை. அவருடைய நேர்காணல் ஒன்றைப் படித்தேன். அவர் குறிப்பிடுகிறார் - அது அவர்களுக்கு அல்ல, நமக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான் - அவர் ஒரு கதையை உதாரணமாகச் சொல்லுகிறார்.

""எது இலக்கியம்?'' என்று கேட்டபோது, ஒரு பெரிய சுவர் ஒன்றை ஓர் அரசன் எழுப்பி விடுகிறான். இரண்டு ஊர்களுக்கு நடுவே உள்ள பாதையை அடைத்து ஒரு சுவரை எழுப்பிவிடுகிறான். அந்தச் சுவரைக் கடந்து அந்தப் பக்கம் இருப்பவர்கள் போக முடியவில்லை. இந்தப் பக்கம் இருப்பவர்கள் வர முடியவில்லை. ஆனால், அரசனுடைய ஆணை என்பதால் மீறவும் முடியவில்லை. கட்டுப்பட்டு இங்கிருப்பவர்கள் எல்லாம் நாற்பது ஐம்பது மைல் சுற்றிப் போகிறார்கள்.

அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒரு பறவையினுடைய ஒரு முட்டை யோசித்ததாம். நாம் போய் அந்தச் சுவரின் மீது மோதினால் என்ன? சுவர் உடைந்துவிடாதா? அது இறங்கிப் போய் அந்த சுவரின் மீது மோதியதாம்.மோதினால், முட்டை உடைந்து சிதறத்தானே செய்யும். அது கற் சுவர். ஒரு முட்டை மோதி உடைந்து சிதறியதும், அடுத்த முட்டை இறங்கி வந்து "அந்த முட்டைக்கு இருக்கிற தைரியம் எனக்குக் கிடையாதா? நானும் மோதுகிறேன்' என்று வந்தது.

ஒவ்வொரு முட்டையாகக் கற்சுவரின் மீது மோதி மோதி தோற்றுப்போய், முட்டைகள் விழும்போது மக்கள் பரிகாசம் செய்தார்கள். ""முட்டைகள் மோதி ஒருபோதும் சுவர் இடிந்துவிடாது''. அந்த முட்டைகள் அசரவேயில்லை. ஒவ்வொரு பறவையிடுகிற முட்டையும் அந்தச் சுவரின் மீது மோதி மோதி, காலம் கடந்து ஒருநாள் ஒரு முட்டை மோதியது. சுவர் இரண்டாக உடைந்து விழுந்தது.

அந்த எழுத்தாளர் சொன்னார்: ""தன்னை அழித்துக் கொள்வதின் வழியாக எந்த ஒரு பெரிய அதிகாரத்தையும் எடுத்து அழித்துவிட முடியும் என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. அது எதற்காக என்றால் மொழிக்காக, இனத்துக்காக, அடையாளத்திற்காக, மரபிற்காக, நம்முடைய பெருமைகளுக்காக நம்மை அழித்துக் கொள்வது தவறில்லை''. இலக்கியம் அப்படித்தான் எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கதையை அவர் சொல்லிவிட்டுச் சொல்லுகிறார். ""எங்கள் காலத்தில் நாங்கள் எல்லாம் முட்டைகள்தான், பலவீனமானவர்கள்தான். கற்சுவரில் மோதும்போது நீங்கள் எல்லாம் பரிகசிக்கத்தான் செய்வீர்கள். ஆனால் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து இயங்கினால் அது உடையத்தான் செய்யும். எந்தக் கற்சுவரும் அப்படியெல்லாம் உடையாத சுவர் கிடையாது. அதற்குப் பலியாவதற்குக் கொஞ்சம் பேர் வேண்டும்.'' 

சென்ற தலைமுறையில் பல தமிழறிஞர்கள் அப்படியிருந்தார்கள். இந்தத் தலைமுறையில் எங்களைப் போன்றவர்கள் வருவோம். அடுத்த தலைமுறையிலும் அப்படி ஆள்கள் வருவார்கள். ஆனால் தமிழ் வளரும் நண்பர்களே. தமிழ் மேம்படும். தமிழ் மொழியும் இலக்கியமும் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய இடத்தை அடையும்.

இன்று எழுதுகிற ஒருவனுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், நம்பிக்கை உன் நெஞ்சில் வேண்டும். நீங்கள் எழுதுவது தமிழ்தான் என்றாலும் தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டில் எழுதப்படுகிற இலக்கியம் அல்ல. உலகு தழுவிய இலக்கியம். நம் சகோதரர்கள் உலகமெங்கும் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கனடாவில் எழுதுகிறார்கள், மலேசியாவில் எழுதுகிறார்கள்; சிங்கப்பூரில் எழுதுகிறார்கள். எல்லாத் தேசங்களிலும் தமிழ் எழுதுகிறோம்.சொல்லப்போனால் இத்தனை தேசங்களில் தமிழ் எழுதப்பட்டும் உலக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இன்றைய தேவை என்று நான் கருதுவது நாம் கொண்டு வந்து சேர்த்ததுபோல், நாம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய செல்வங்கள் நிறைய இருக்கின்றன. உலக அரங்கிற்கு நம்முடைய பங்களிப்பைக் கொண்டு போய்ச் செலுத்துவோமே. எத்தனை அரிய படைப்புகள் தமிழில் இருக்கின்றன. எந்த மொழியிலாவது சிறந்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் ஒருவரைச் சொல்லலாம்; இருவரைச் சொல்லலாம். தமிழில் அப்படிப் பட்டியல் போடவே முடியாது. யார் பட்டியல் போட்டாலும் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். சிறந்த கவிஞர்கள், சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த கட்டுரையாளர்கள் என்று. ஆனால் இவர்களை உலக மொழிக்குத் தெரியவே இல்லை.

ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்கு,சைனத்தில் வாசிப்பவர்களுக்கு, பிரெஞ்சில் வாசிப்பவர்களுக்கு இவர்களைத் தெரியாது. இன்றையத் தேவையில் இது முக்கியமென்று கருதுகிறேன். இன்னொன்று இணையம் வளர்ந்தபோது இணையத்தின் வழியாக அதை வாசிக்கிற ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு ஏற்றாற்போல நாம் பழைய இலக்கியங்களை மறுவாசிப்பு செய்யவும், எளிமைப்படுத்தவும் தேவைப்படுகிறது.

ஷேக்ஸ்பியரை இன்று வாசிப்பவர்களுக்காக நோ ஃபியர் ஷேக்ஸ்பியர் என்று ஒரு எடிஷன் வெளியிடுகிறார்கள்."ஷேக்ஸ்பியரைக் கண்டு பயப்பட வேண்டாம். எளிமையாகப் படிக்கலாமே' என்று. அதைப் படிப்பவர்கள் எல்லாம் கல்லூரி மாணவர்கள். ஆனால்,தொல்காப்பியம் படிப்பதற்கு அப்படி ஒரு புத்தகம் எழுதப்படவில்லை. நம்மிடமும் இன்று நாம் நிறைய புதிய புத்தாக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அதே நேரத்தில் இன்றைய இலக்கியம் ஒரு பொறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறது. யார் பொறுப்புணர்ச்சியோடு அறத்தோடு அதை முன்னெடுத்துச் செல்கிறார்களோ அவர்கள் செய்வதுதான் இலக்கியம். அதுதான் இலக்கியப் பணி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/sr.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/23/அறத்தை-முன்னெடுப்பதே-இலக்கியம்-3313661.html
3315426 தமிழ் மொழித் திருவிழா பழந்தமிழ் எழுத்துகள் -  மீளாய்வு முனைவர் பா. ஜெயக்குமார்  DIN Monday, December 30, 2019 04:03 PM +0530  

இந்திய நாட்டின் தொன்மை எழுத்துகள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் மீதான ஆய்வுகளும் ஐரோப்பியர்களால் முன்னெடுக்கப்பட்டு, தொடர்ந்து 150 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.            

மதுரை மாவட்டத்தைச்  சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை கிடைக்கப்பெற்ற பழந்தமிழ்க் கல்வெட்டுகளும்,  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புள்ளிமான்கோம்பை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனித்துவம் பெற்ற தமிழ்க்  கல்வெட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பொருந்தல் அகழாய்வுக் கண்டுபிடிப்புகளும்,  சிவகங்கை  மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அகழாய்வுகளின் வாயிலாக அண்மையில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் கண்டுபிடிப்புகளும் தமிழர்களின் பண்பாட்டுடன் அவர்கள் பழக்கப்படுத்திக்கொண்ட  எழுத்துகளின் தொன்மையினைப் பறைசாற்றுவதாக அமைகின்றன.  தமிழ் 2500 ஆண்டுகள் பழமையானது என்பதால்  செம்மொழியானது.  எனினும்,  பழந்தமிழ் எழுத்து அல்லது தமிழ்-பிராமி எழுத்தின் பிறப்பு அல்லது தோற்றம் குறித்து ஆய்வாளர்களால் இருவேறு கருத்துக்கள் இன்றளவும் நிலவுவது தொடர்கிறது.  ஒருசாரார் இவ்வெழுத்துகள் வட இந்தியாவிற்கு உரியது எனவும், மற்றொரு சாரார் இவை தென்னிந்தியாவைச் சார்ந்தது எனவும், தமிழகத்திற்கே உரியது என்றொரு சாராரும் விவாதம் கொண்டுள்ளதை யாவரும் அறிந்ததே. ஒருவழியாக தமிழகத்தில் காணப்படும் பிராமி எழுத்துக்கள், தமிழ்-பிராமி, தமிழி, தமிழ் எழுத்து என ஒருமித்த கருத்தினை எட்டிய நிலையில் இவ்வெழுத்து தமிழகத்துக்கு உரித்தானது என்றாலும் கூட இதனைத் தமிழர்களுக்குப் பழக்கப்படுத்தியவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த  பிராகிருத மொழிப் புலமைப் பெற்றிருந்த வட இந்திய வணிகர்களே என்னும் கருத்து ஒன்றும் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதற்கு மாற்றுக் கருத்துகளும் ஆய்வாளர்களிடையே இருந்து வருவதை அறிகிறோம்.  தமிழ்நாட்டின் தொன்மை எழுத்துகளின்  ஆய்வில் ஐராவதம் மகாதேவன், எ. சுப்பராயலு, நடன. காசிநாதன், எம்.டி. சம்பத், இரா. மதிவாணன், கா. ராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள் ஆவர்.  மேலும் கொடுமணல் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்களின் கட்டுரைகளும் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. 

பழந்தமிழ் ஆய்வுக்குத் தமிழ், இலக்கணம், வரலாறு சார்ந்த ஆய்வாளர்கள் பொதுவாக சான்று காட்டுவது ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கி.மு.3 - கி.பி.2ஆம்  காலத்திய  பழந்தமிழ் எழுத்துப்பொறித்த மண்கலச்சில்லுகள் ஆகும்.  தென்னிந்தியாவிலும்  பிராகிருத மொழி சிறப்பாக பேசப்பட்ட வடஇந்தியாவிலும்  இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெறாத அளவில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணலில் கிடைத்திருப்பது தனிச்சிறப்பு (கட்டுரையாளர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கொடுமணல் அகழாய்வுகளில் முழுவதுமாகப்  பங்கு பெற்றவர்).  இவ்வெழுத்துப் பொறிப்புகளைக் கொண்டு தமிழகத்தில் அக்காலத்தில் எழுத்தறிவு, கல்வியறிவு சிறப்பாக இருந்தது எனக் கருதப்படுகிறது.  எனினும்,  இவ்வெழுத்துகள் தமிழர்களுக்குரியதா? என்பதில் ஒருமித்த கருத்து இன்று வரை நிலவவில்லை.  இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது ஆய்வாளர்களின் கடமையாகும். 

மண்கல எழுத்துகளில் பிராகிருத மொழிக் கலப்பு இருப்பதானல் மட்டுமே இதனைப் பிராகிருத மொழி பேசுபவர்கள் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர் என்பது ஏற்கக்கூடிய வாதமாகாது.  அவ்வாறாயின் சங்க இலக்கியங்களைப் பிராகிருத மொழிப் புலமை பெற்றவர்களே படைத்திருக்க வேண்டும்.   இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.  மேலும், தமிழர்கள் பிற்காலங்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் களைந்துவிட்டனர் என்பதும் ஏற்கத்தக்கதல்ல.  ஒரு மொழியுடன் முழுமனதுடன் ஒட்டி உறவாடிவிட்டு உடனடியாக அதை மனப் பயன்பாட்டிலிருந்து அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. 

தமிழர்கள் செய்த மண்பானைகள் சுடப்பட்ட பின்பு அவற்றில் பிராகிருத மொழிக்குரிய வட இந்திய வணிகர்கள் பிராமி எழுத்துக்களில் உரியவர்களின் பெயர்களை எழுதி வைத்தனர் என்ற வாதமும் ஏற்கக்கூடியதல்ல.  காரணம், மட்பாண்டத் தொழில்நுட்பத்தை வட இந்திய வணிகர்கள் தெரிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.  ஆனால், வணிகர்களான அவர்கள் மட்பாண்டத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களல்ல.  அவ்வாறு  பயிற்சி பெற்றிருந்தால் அவர்களது தாய் பூமியில் மண்கல எழுத்துப் பொறிப்புகள் தமிழகத்தைக் காட்டிலும் ஏராளமாகக் கிடைத்திருக்க வேண்டும்.   ஆகவே,  வட இந்திய வணிகர்கள் கொடுமணலுக்கு அரிய கல்வகைகளைக் கொண்டு வந்து தருபவர்களாகவும் கல்மணிகள் தயாரிக்கும் தொழில்  சார்ந்த கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்பவர்களாகவும் மட்டுமே செயல்பட்டுள்ளனர் எனக் கொள்வதே சிறப்பு.  அவ்வாறு கொடுமணல் வந்துசென்ற (ஒரு சிலர் இங்கேயே தொடர்ந்தும் தங்கியிருந்திருக்கலாம்)  வணிகர்கள் உள்ளூர் மட்பாண்டத் தொழிலார்களுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தமையால் இவர்களது பிராகிருதப் பெயர்களும் சொற்களும் கலந்திருக்கிறது என்பதும்,  தமிழகத்தில் சாதாரண மக்களும் அக்காலத்தில் எழுத்தாற்றல் கொண்டு விளங்கினர் என்பதும் ஏற்கவேண்டிய நிலையாகும்.  எனவே, உறவின் வாயிலாகவே பிராகிருதம் தமிழ் எழுத்துகளோடு கலந்துள்ளன என்பதில் ஐயமில்லை.

கொடுமணலில் கிடைத்துள்ள மண்கலங்களில் நீண்ட வாசகங்களைக் கொண்ட பொறிப்புகளும் காணப்படுகின்றன.   இவற்றில் வட இந்தியப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்றவை (Mahalingam, 1967) கொடுமணல் மண்கலப் பொறிப்புகளில் காணப்படுவதால் இத்தகைய சிறப்பு எழுத்துகளை எவ்வாறு வட இந்திய வணிகர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருக்க முடியும்.  எனவே,  பழந்தமிழ்  எழுத்துகள் தமிழர்க்கே உரியவை என்பது தெளிவு.

மண்கலப் பொறிப்புகளில் காணப்படும் பல பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன என்பதும், எகிப்து, செங்கடல் பகுதியிலுள்ள பெரநிகே என்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற மண்கலப் பொறிப்புகளான “கொற்பூமான்” (Steven  Sidebotham, 1996) மற்றும் காசிர் அல் கதிம்   என்ற இடத்தில்  கிடைக்கப்பெற்ற மண்கல எழுத்துக்கலான “பனைஓறி”,  தாய்லாந்தில் ஃபுகாவ் தங் என்ற இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்கலப் பொறிப்புகளான “துறஓ(ன்)”  போன்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாகக் கிடைத்திருப்பதும் இவை கொடுமணல் எழுத்துகளின் காலத்தைச் சேர்ந்தவை என்பதும் இங்கு சுட்டத்தக்கதாகும்.

தேனி மாவட்டம், புள்ளிமான்கோம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்தமைதியைக் கொண்டு கி.மு. 4ஆம் நூற்றாண்டினைச் (கொடுமணல் மண்கல எழுத்துகளைக் காட்டிலும் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முந்தையது) சேர்ந்த கல்வெட்டுகளில் எவ்வித மொழிக்கலப்பும் இல்லாத சொற்கள் காணப்படுவதிலிருந்து, இந்தியாவில் அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழன் தனக்கென சுயமாக எழுத்துக்களைப் பெற்றிருந்தான் என்பதும் அதுவே பழந்தமிழ் எழுத்து என்பதும் மிகத்தெளிவு. பிற்காலங்களில் தமிழகப் பகுதிக்கு வந்துசென்ற பிற மொழியாளர்களால் தமிழ் மொழிக் கலப்பு கண்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.

மண்கல எழுத்துப் பொறிப்புகளிலும் பாறை எழுத்துப் பொறிப்புகளிலும் ஒரே மாதிரியான சில பிராகிருதப் பெயர்கள் காணப்படுகின்றன என்பதையும் கல்வெட்டுகளில் மட்டும் அப்பிராகிருதப் பெயர்கள் தமிழ் மயமாக்கப்பட்டுள்ளன என்பதையும் ஏற்க முடியாது.  கல்வெட்டுகள் பொதுவாக அரசு/அரசனின் கட்டுப்பாட்டில் வெளியிடப்படுபவை.  அதனால் வணிகர்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்குவதில்லை.  அதேவேளையில் மண்கலப் பொறிப்புகள் சாதாரண மக்களுடன் தொடர்புடையதால் பிரகிருத ஆதிக்கம் மேலோங்கி  இருக்கிறது. 

பானைகளில் எழுதும் பழக்கத்தை வட இந்திய வணிகர்கள் கற்றுத் தந்தார்கள் எனில்,  அகழாய்வு மண்ணடுக்குகளில் காணப்படும் எழுத்துகளுக்கு முந்தைய நிலையான குறியீடுகளைப் பானைகளில் பொறித்துள்ளதைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்?  மேலும், மண்கலப் பொறிப்புகளாகக் காணப்படும் குறியீடுகளை இரா.  மதிவாணன் (2010) சிந்துவெளிக் குறியீட்டு எழுத்துகளாகப் பார்ப்பதும் இங்குச் சிறப்பாகச் சுட்டத்தக்கதாகும்.  சில மண்கலச் சில்லுகளில் குறியீடுகளுடன் தமிழ் எழுத்துக்கள் சேர்ந்து வருவதும் நோக்கத்தக்கதாகும்.  காட்டாக,  கொடுமணல் மண்கலச் சில்லு ஒன்றில் “கோன்” என்பதுடன் குறியீடு வருவதைப்  பார்க்கலாம்.  மேலும் பழனிக்கு அருகிலுள்ள பொருந்தல் அகழாய்வில் (ராஜன், 2009) கிடைக்கப்பெற்ற கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்ணினாலான பிரிமனையில் (ring stand - பானை சாயமால் இருக்கப் பயன்படுத்தப்படுவது)  ‘வய்ர’  என்றும் அருகில் மணி (பாசி) கீறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  இது குறியீடாக இருக்கலாம் என்பது ஒருசிலர் கருத்து.  எனினும் பிரிமனையை நோக்கும்போது இது ஒரு விவரக்குறிப்பாக (label) இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  அதாவது, இப்பிரிமனையின் மேல் வைக்கப்பட்டுள்ள பானையில் உள்ளது வைரமணிகள் (வைரக் கற்களால் செய்யப்பட்ட பாசிகள்) என்பதை வாங்குபவர்களுக்கு உணர்த்துவதற்காகவே மணி குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது மேலும் ‘வய்ர’ என்பதின் முதல் எழுத்தான ‘வ’  குறியீடு போல கலைநயத்துடன் கீரப்பட்டுள்ளமை வைரம் என்பதை உணர்த்துவதற்காகவே.  குறிப்பாக பிராகிருத மொழி பேசும் அல்லது தமிழ் தெரியாத வணிகர்கள் படித்தறிந்து புரிதலில் சிக்கல் இருந்ததால்தான் எழுத்துகளுடன் கீறல் உருவங்களும் காணப்படுகின்றன.  வைரமணிகள் கிடைக்கப்பெறாது வைரம் போன்ற கண்ணாடி மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்தமை  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மண்கலங்களில் அல்லது பாறைகளில் எழுத்துகளைப் பொறிக்கத் தமிழர்களுக்கு வேறு  யாரும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதும் தமிழ் தனக்கெனத் தனியாக எழுத்து முறைகளைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகும்.

துணை  நூற்கள்:
Kasinathan, Natana. (2010), “The Origin of Prakrit Language and its usage in early Tamil Epigraphs”, Paper presented in the National Seminar on  The Origin and Development of writing systems in India: Recent Archaeological Discoveries and New Perspectives,  Jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur and CICT, Chennai, Feb. 22-24,2010.

Mahadevan, I. (2003), Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D.,Cre – A, Chennai.

Mahalingam, T.V. (1967), Early South Indian Palaeography, University of Madras, Madras.

Mathivanan, R. (2010), “Tamil Script of Pre-Sangam Period – Recent Findings”, Paper presented in the National Seminar of  The Origin and Development of writing systems in India:  Recent Archaeological Discoveries and New Perspectives, Jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology,  Tamil University, Thanjavur and CICT, Chennai, Feb.  22-24,2010.

Sampth, M.D. (2010), “Brahmi and Megalithic Culture”, Paper presented in the National Seminar on The Origin and Development of writing systems in India :  Recent Archaeological Disccveries and New Perspectives, jointly organized by the Dept.  of Epigraphy and Archaeology, Tamil University, Thanjavur, Thanjavur and CICT, Chennai, Feb.22 – 24, 2010.

Steven Sidebotham and Willemina Wendrich (1996), Berenike 95: Preliminary Report on the Excavation of Berenike, Leiden.

சுப்பராயலு, எ.  (2008), “ மண்கல தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள்”,  ஆவணம் – 19, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.

ராஜன், கா. (2009), “பொருந்தல் அகழாய்வு – செய்திக்குறிப்பு”, ஆவணம் – 20, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/4cmp2_0411chn_111.jpg பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் https://www.dinamani.com/language-fest/2019/dec/27/பழந்தமிழ்-எழுத்துக்கள்---மீளாய்வு-3315426.html
3316237 தமிழ் மொழித் திருவிழா தமிழர்களின் எழுத்தறிவு சு.இராசவேலு, மதிப்புறு பேராசிரியர் DIN Monday, December 30, 2019 03:38 PM +0530
    இந்தியாவின் முதன்மையான எழுத்துக்களாக வட இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் மௌரியப் பேரரசன் அசோகனுடைய காலத்தில் வழக்கிலிருந்த பிராமி என்னும் எழுத்து வகை தான் அறிஞர்களால் இதுவரை பேசப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த எழுத்து வகை அசோகனுடைய பிராமியிலிருந்து மாறுபட்ட எழுத்தாகவும் தமிழ் மொழிக்கே உரிய எழுத்தாகவும் விளங்கியமையால் அதனை ”தமிழி” அல்லது ”தமிழ் பிராமி” என அறிஞர்கள் அழைத்தனர். தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையாக உள்ள குகைகளின் விளிம்புகளில் அதிகமாகவும் பிற மாவட்டங்களில் பரவலாகவும் இதுவரை 35 ஊர்களில் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழி எழுத்து வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை முறையாக ஆய்வு செய்து மிக அரிய ஆய்வு நூல் ஒன்றை ஐராவதம் மகாதேவன் 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் திருத்திய பதிப்பை 2014 ஆம் ஆண்டு வெளியிட்டார். 

    இக்குகைக் கல்வெட்டுகள் தவிர தமிழகத்தில் இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட 175 இடங்களில் சங்க காலத்தைச் சார்ந்த 36 அகழாய்வு இடங்களில் மக்கள் பயன்படுத்திய மட்கல ஓடுகளிலும் தமிழி எனப்படும் எழுத்து வகை காணப்படுகிறது. இவற்றைத்தவிர  தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி  என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 நடுகற்களிலும் புதுக்கோட்டை நகருக்கு அருகில் உள்ள பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லிலும் தமிழி எனப்படும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் கல்வெட்டுகளாகும். இவற்றைத் தவிர   தமிழகத்தில் சங்க கால நாணயங்களிலும் முத்திரைகளிலும் நூற்றுவர் கண்ணனார் எனச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சாதவாகனர் நாணயங்களிலும்  தமிழி எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.

     தமிழகத்தை தவிர வட இந்திய மாநிலங்களிலும் தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுகளை செய்துள்ளன. வரலாற்றுப் புகழ்பெற்ற நாலாந்தா, பிரயாகை, (அலகாபாத்) ஹஸ்தினாபுரம், பாடலிபுத்திரம் (பாட்னா)  குருஷேத்திரம் இந்திரப்பிரஸ்தம் அஹிச்சத்திரா,. அமராவதி, பட்டிபொருளு, நாகர்சுனகொண்டா, சன்னதி போன்ற பல வட இந்திய நகரங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்நகரங்களில் அகழாய்வுகளில்  கண்டுபிடிக்கப்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்துக்களை எழுதுகின்ற வழக்கம் இருந்துள்ளமையையும் தமிழர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்கியிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

     அண்மைக்காலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக மதுரைக்கு அருகில் கீழடியின் நடைபெற்ற அகழாய்வில் 160க்கும் மேற்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் காலக்கணக்குப்படி தமிழக அரசு தொல்லியல் துறை அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ததில் தீதன் என்ற பெயர் பொறித்த பானை ஓட்டின் காலம் அதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்தின் கால அடிப்படையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளது. இக்காலக் கணிப்பு ஏற்கனவே பொருந்தல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பானை எழுத்துப் பொறிப்பின் காலத்தை விட ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்பின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே இந்தியாவில் மிகத் தொன்மைக் காலத்திலேயே எழுத்தறிவு பெற்ற மக்களாகத் தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.  

    தமிழக அகழாய்வுகளில்  இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் என்ற இடத்தில் 1400க்கும்  அதிகமான மட்கலன்களில் ஆள் பெயர்கள் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் 160 க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் எழுத்துப் பொறிப்புகள் கீழடி அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு இராமநாதபுரத்தில் அழகன் குளம் ஆகிய இடங்களில் செய்த அகழாய்வுகளிலும் அதிக அளவில்  தமிழி எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதன், அந்துவன், குவிரன்,  கண்ணன், கீரன், கொற்றி, நெடுங்கிள்ளி, சாத்தன்  போன்ற பெயர்கள் இவற்றுள் அடங்கும் மேலும் சோழர்களின் தலைநகரமான உறையூர் அவர்களின் துறைமுகப்பட்டினமான காவேரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமான கொற்கை,  சேரர்களின் தலைநகரமான கரூவூர் அவர்களின் துறைமுகப்பட்டினமாக மேலைக்கடற்கரையில் இருந்த முசிறி ஆகிய இடங்களிலும் இவ்வகை பானை எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.  

    இவை மட்டுமன்றி தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்த மேலை நாடுகளான செங்கடல் பகுதிகளில் இருந்த எகிப்து நாட்டின் துறைமுகங்களாக விளங்கிய குசிர் அல் குதாம் என்ற நகரத்திலும் பெரினிகே என்ற இடத்திலும் ஓமன் பகுதியில் கோர் ஒரி என்ற இடத்திலும் அவர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் தமிழ் மொழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் அந்நாடுகளின் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே தமிழர்கள் கடல்கடந்து மத்தியத் தரைக்கடல் பகுதி வரை கப்பல்கள் செலுத்தி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இவை தெரிவிப்பதுடன் தமிழி எழுத்தின் பரவல் அந்நாடுகள் வரை சென்றுள்ளதை அறிய முடிகிறது. இதே போன்று தமிழகத்திலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்ற வணிகர்களும் தொழிலாளர்களும் தமிழி எழுத்துக்களில் எழுதியுள்ளனர். தாய்லாந்து பகுதியில் கோலங்க்தோம் என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகப் பொற்கொல்லர் ஒருவர் பொன்னை ஆய்வு செய்து உரசிப் பார்க்கும் கல்லில் பெரும்பதன் கல் எனத் தனது பெயரை எழுதியுள்ளார். பத்தர் எனப்படுபவர் பொற்கொல்லர் ஆவார். இவர் பொன்னை ஆய்வு செய்து பார்க்கும்  தன் உடைமையான அக்கல்லில் அவரது பெயரை தமிழி எழுத்துப் பொறிப்பில் குறித்துள்ளார்.

      சங்க இலக்கியங்களில் ஆநிரை மீட்டல் நிரை கொள்ளல், ஊரைப் பகைவரிடமிருந்து காத்தல்  போன்ற வீரச் செயல்கள் குறித்து செய்திகள் அதிமாக உள்ளன. அவ்வாறு மீட்டு இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுப்பது தமிழர் மரபு. அவ்வகையில் புலிமான் கோம்பை தாதப்பட்டி பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த நடுகற்களே இந்தியாவில் கிடைத்த தொன்மையான நடுகற்களாகும். இவற்றின் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டாகும். இவற்றின் மூலம், தமிழகத்தில் குக்கிராமமாக விளங்கிய ஊர்களிலும் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. மேலே குறிப்பிட்டது போல் வட இந்தியாவில் பல பெருநகரங்கள் இருந்தும் அங்கு மக்கள் வழக்கில் எழுத்தறிவு மிகக் குறைவாகவே இருந்தது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசன் தனது பௌத்த மதக் கொள்கைகளைச் சொல்வதற்கு கல்வெட்டுகளை வெளியிட்டு அவற்றைப் படித்துச் சொல்வதற்காக அதிகாரிகளை நியமித்ததாக அக்கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த மெகஸ்தனிஸ் வட இந்திய மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவே பெரும்பாலும் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இவற்றை நோக்கும் பொழுது தமிழகத்தில் பாமர மக்கள் பயன்பாட்டில் நாள்தோறும் புழங்கிய மட்கலன்களில் தங்களது பெயர்களைக் குறித்து வைத்துள்ளனர் என்பதும் அசோகன் காலத்திற்கும் முற்பட்ட 3 நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே தமிழகத்தில் எழுத்தறிவு உன்னத நிலையில் இருந்துள்ளதையும் நாம் உய்த்துணர முடிகிறது. ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல், ஊர்மீது படையெடுத்தவர்களை எதிர்கொண்டு மீட்டு இறந்த மறவர்கள்ளுக்கு எழுத்துடை நடுகற்கள் எடுத்து மக்கள் அதனை படித்து அறிய  வகை செய்துள்ள வரலாற்றைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தொன்மையான எழுத்துவகை தமிழி எனப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களே என்பதும் தமிழர்கள் எழுத்தறிவில் 2600 ஆண்டுகளுக்கும் முன்பாகவே சிறந்து விளங்கினர் என்பதும் புலப்படுகிறது. எனவே தான் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலட்சம்  கல்வெட்டுகளில் அறுபதாயிரம் கல்வெட்டுகள் தமிழ் எழுத்தில் தமிழ் மொழியில் உள்ளன என்பதும் தெளிவாகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/28/w600X390/Brami-letters.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/28/தமிழர்களின்-எழுத்தறிவு-3316237.html
3316235 தமிழ் மொழித் திருவிழா இலக்கியம் காட்டும் திருப்பூர் புலவர் வே. சுந்தர கணேசன்  DIN Monday, December 30, 2019 03:32 PM +0530
கொங்கு நாடு 
                       தமிழ்நாடானது சேர , சோழ , பாண்டிய என மூவேந்தர்களால் ஆளப்பட்டு இருந்தாலும் , கொங்கு நாடு தனி நாடாகவே இருந்து வந்துள்ளதை காண முடிகிறது.


சங்க இலக்கியங்களில் ,
               கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே – புறநானூறு 373
               கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை - புறநானூறு 160
              ஆகெழு கொங்கர்  -பதிற்றுப்பத்து 22  
என்றும் ,

   சமய இலக்கியமான பெரியபுராணத்தில் .,
                 சோலையணி திருப்பாண்டிக் சொடுமுடி 
                 யணைத்தனர் கொங்கில் –ஏயர்கோன் 85
என்று கொங்குநாடு தனிநாடாகவே சுட்டப்பட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது.

கொங்கு நாட்டுப் பிரிவுகள் ;
                  கொங்கு நாட்டின் எல்லையாகக் கொங்கு மண்டலச் சதகம்
        வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு , 
                  குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று 
                  கிடக்கும் களித்தண்டலை மேவு காவிரிசூழ்                           
                  நாட்டுக்குளித் தண்டலையளவு  கொங்கு 
என்று கூறுகிறது. இத்தகைய கொங்கு மண்டலம் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது .அவ்வாறான 24 நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் பொங்கலுார் நாட்டில் இருந்த ஒரு ஊர் தான் திருப்பூர் .

அலகுமலைக் குறவஞ்சி;
                தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன , அவற்றில் 96 வகையான சிற்றிலக்கிய வகைகளே 12 ம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவ்வாறான சிற்றிலக்கியத்தில் ஒன்றே குறவஞ்சி எனப்படுவது. அத்தகைய குறவஞ்சியில் ஒன்றுதான் அலகுமலைக்குறவஞ்சி .இதனை பொங்கலுார் நாட்டின் தலைநகரான, கொடுவாய்  எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகனான சின்னதம்பி நாவலர் இயற்றியுள்ளார். அவர் இந் நுாலை இயற்றிய காலத்தைக் குறிப்பிடும்போது கலியுக சகாப்தம் 4854-ல்    ( கி.பி 1753 )  அரங்கேற்றியதாக குறிப்பிடுவதால் இன்றைய ஆண்டிற்கு ( கி.பி 2019 ) 267 ஆண்டுகளுக்கு முன்னர் என்று தெரிய வருகிறது .

அலகுமலைக் குறவஞ்சி ;
   பொங்கலுார் நாட்டில் ஓர் ஊராக உள்ள அழகுமலையில் இருந்து அருள்பாலித்து வருகின்ற தமிழ்க் கடவுளான முருகனுக்கு அலகுமலையாண்டவர் என்று பெயர். அதுபோன்றே அழகுமலைக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்   பொங்கலுார் நாட்டையாண்ட வேளாளரில் கொடுவாயில் வாழ்ந்த ஓதாளர் குலத்தைச் சேர்ந்த  பெரிய பெருமாள் .இந்த நூல் ஓதாளரைச் சிறப்பித்துக் கூறுவதால் ஓதாளர் குறவஞ்சி என்றும் கூறப்படுகிறது. இதனை ஓலைச்சுவடியில் இருந்து 1963 ஆம் ஆண்டு அச்சு நுாலாக்கியவர் பழனிச்சாமி புலவர் ஆவார்.

அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் ;
    அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் என்று தற்போது குறிப்பிடப்படும் நகரம் அக்காலத்தில் திருப்பையூர் என்று சுட்டப்பட்டிருக்கிறது. அதனை கீழ்க்காணும் வரிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1   பொங்கலுார் நாட்டில் உள்ள ஊர்களாக குறிப்பிடப்படுபவற்றில்
     பொங்கலுர் கொடுவாய் புத்தரசை உபாயனூர்
     பொன்குன்றை செம்மாபுரம்
     புகழ்பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற்
     புவிபெரும் பிள்ளை நகரும்
     …  என்றும் 

2   பொங்கலூர் நாட்டின் கண் உள்ள சிவாலயங்களைக் குறிக்கும் போது          
தென்பெருந்தையில் பாண்டிலிங்கேசர் 
திருப்பையூர் விஸ்வநாதமயேசர் 
என்றும்

3   அலகுமலையாண்டவர் கீழ்க்காணும் ஊர்களுக்கு எல்லாம் பவனி செல்கின்றார். அவ்வாறு செல்லும் ஊர்களாக ,
               பொங்கலுர் கொடுவாய் புத்தரசை யுபாயனூர்
                      தங்குன் றாபுரம் தழைத்தசெம் மாபுரம்
               பெருந்தை திருப்பையூர் பெரும்பிள்ளை நகரம்
…  என்றும் 

4   குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில்
              கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி
               பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும்
                பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா.
    என்று கணையாழி பெற்றதையும் ,
                 செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து
                 திருப்பையூர் வாழ் கொங்கவணிகன் விஸ்வமால்
                 குருசாமி தந்த வரிசைதான் சிங்கா.
என்று பொன்னாலான மார்பு கச்சையைப் பெற்றதைப் பற்றியும் குறத்தி கூறுவதாகக் கூறுகிறார்.

5   பொங்கலூர் நாட்டு ஊர்த்தலைவர்களைக் குறிப்பிடும் பொழுது , அவர்களில் பெரும்பாலோனோர் வேளாளர்களாகவே உள்ளனர். ஆனால் திருப்பூரான திருப்பையூரில் மட்டும். வாணிகம் செய்யும் செட்டிமாரே ஊர்த்தலைவராக இருந்துள்ளனர் என்பதை ,
                   திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச் 
                    செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்
என்று குறிப்பிடுகிறார்.

இதன் வாயிலாக திருப்பூர் என்று தற்காலத்தில் சுட்டப்பெறும் ஊரானது   270 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பையூர் என்று சுட்டப்பட்டு  , வணிகர்கள் அதிகம் வசித்த ஊராக விளங்கி அவ்வணிகனையே ஊர் தலைவனாகவும் கொண்ட ஒரு ஊராக விளங்கி வந்துள்ளதை இந்த அலகுமலைக் குறவஞ்சி மூலம் அறியமுடிகிறது.

     இது குறித்து தொல்லியல் அறிஞர் திரு..ர பூங்குன்றன் அவர்களிடம் கேட்ட பொழுது சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்படுகிறது .அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எனவே திருப்பூரான திருப்பையூர் ஒரு சங்ககால ஊராக இருக்குமோ ? என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகிறது . 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/28/w600X390/Kongu-Nadu.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/28/இலக்கியம்-காட்டும்-திருப்பூர்-3316235.html
3316265 தமிழ் மொழித் திருவிழா சீனிவாசநல்லூர்க் குரக்குத்துறைக் கோயில் சிற்பங்கள் முனைவர் அர. அகிலா, டாக்டர் இரா. கலைக்கோவன் DIN Monday, December 30, 2019 03:00 PM +0530
சிராப்பள்ளித் தொட்டியம் சாலையில் முசிறியிலிருந்து 10 கி. மீ. தொலைவில் காவிரியின் வடகரையிலுள்ள சீனிவாசநல்லூரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது கல்வெட்டுகளில் குரக்குத்துறைப் பெருமானடிகள் என்றழைக்கப்படும் குரங்கநாதரின் கோயில். இந்தியத் தொல்லியல் துறையின் காப்பில் கோபுரம், மதில், சுற்றாலைத் திருமுன்களற்ற பரந்த வெளியில் முற்சோழர் கைவண்ணமான முத்தள நாகர விமானம், இடைநடை, முகமண்டபம் மட்டுமே கொண்டு ஒளிரும் இக்கோயில் சோழர் கட்டமைப்பு, சிற்பத் திறனின் உச்சமாய்த் திகழ்கிறது. 

சிற்பங்கள்
குரங்கநாதர் கோயில் சிற்பங்களைக் கோட்டச் சிற்பங்கள், சிற்றுருவச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம்.

கோட்டச் சிற்பங்கள்
முப்புறச் சாலைப்பத்திகளிலும் அவற்றை ஒட்டிய சுவர்த்துண்டுகளிலும் உள்ள கோட்டங்களில், தெற்கில் மூன்று கோட்டங்களிலும் மேற்கிலும் வடக்கிலும் சுவர்த்துண்டுக் கோட்டங்களிலும் விமானக் காலச் சிற்பங்கள் உள்ளன. வடசாலைக் கோட்டத்திலுள்ள நான்முகன் விமானக் காலத்தவராகலாம். 

தெற்குக் கோட்டங்கள்
இங்குள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்துமே சிறப்புக்குரியவை என்றாலும், சிதைந்திருந்தபோதும் சிறப்பின் உச்சப் படைப்பாகத் திகழ்கிறார் தென்கோட்ட ஆலமர்அண்ணல். வீராசனத்திலுள்ள இறைவனின் வலப்பாதம் கீழே குப்புறக் கவிழ்ந்து படுத்துள்ள முயலகன் முதுகின் மீதமைய, இடக்கால் சிதைக்கப்பட்டுள்ளது. நுனிகளில் சிரஸ்திரகமாய்ச் சுருட்டப்பட்ட சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பெருமுத்துக்கள் பதித்த ஆரம், தோள், கை வளைகள், மோதிரங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் தலையை மண்டையோடும் நெருஞ்சிப்பூக்களும் நெற்றிப்பட்டமும் அலங்கரிக்கின்றன. 

பின்கைகளில் அக்கமாலை, சுவடி பெற்றுள்ள பெருமானின் நெற்றியில் மூன்றாவது கண். அகலமான உதரபந்தமும் முப்புரி நூலென  மடித்த துண்டும் அணிந்துள்ள அவரது முன்கைகளும் சிதைந்துள்ளன. இறைவனின் பின்னுள்ள மரத்தின் பொந்தில் ஆந்தை. அதன் கிளைகளில் தாவியேறும் அணில். மரத்தின் வலக் கீழ்க் கிளையில் இறைவனின் பொக்கணப்பையும் அக்கமாலையும் இருக்க, இடக்கீழ்க்கிளையில் மடித்த நிலையில் இறைவனின் துண்டு. ஆகமம் உரைக்கும் அண்ணலின் முகப்பரப்பில் கருணையும் கனிவும்.  

இறைவனின் இருபுறச் சிற்பத்தொகுதிகளும் மேலிருந்து கீழாக மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இடமேல் பிரிவிலுள்ள கின்னரர்களுள் ஒருவர் வீணை இசைக்க, மற்றொருவர் கையில் தாளம். இடைப்பிரிவில் அமர்ந்துள்ள இரண்டு புலிகளுள் முன்னது தூங்க, பின்னது தலைநிமிர்த்தி உறுமுகிறது. கீழ்த் தொகுதியின் சடைமகுட முனிவர் சுவடியேந்தியுள்ளார். வலமேல் பிரிவில் ஆண், பெண் இணையாக இரு பூதங்கள். தலையிலிருந்து கால்வரை போர்த்திய ஆடையை இருகைகளிலும் பிடித்தபடி இலலிதாசனத்திலுள்ள அவற்றுள், முதல் பூதம் சன்னவீரம், உதரபந்தம் அணிந்துள்ளது. இடைப்பிரிவில் ஆணும் பெண்ணுமாய் இரு சிங்கங்கள். ஆண்சிங்கம் துணையைப் பார்த்து உறும, மூன்றாம் பிரிவின் இளமுனிவர் சுவடியேந்தியுள்ளார். 

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் கிழக்கில் சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பூப்பதக்க ஆரம், பாம்புத் தோள்வளை, முப்புரிநூலென மடித்த துண்டு, இடைப்பட்டையாய்ப் பாம்பு கொண்டு ஆடையற்று நிற்கும் பிச்சையேற்கும் பெருமானின் திருவடிகளில் உயரமான காலணிகள். வல முன் கையில் அவர் கொண்டுள்ள புல்லை உண்ணுமாறு போலத் தாவும் மான். வலப்புறத்தே இடத்தோளில் சாய்க்கப்பட்டுள்ள கவரியின் தண்டை இடப் பின் கை பிடித்துள்ளது. அதைத் தாங்குமாறு போல இடுப்பிலுள்ள பாம்பின் தலை விரிந்துள்ளது. மார்பருகே உள்ள இட முன் கை சிதைந்திருக்க, வலப் பின் கையில் உடுக்கை. அவருக்கு முன்னே இடப்புறத்தே சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், பதக்கம் பெற்ற ஆரம், இடைக்கட்டுடனான சிற்றாடை, கைவளைகள் கொண்டு நடை பயிலும் பூதத்தின் கைகளில் சிரட்டைக் கின்னரி. இறைவனின் நடையிலும் உடலிலும் வெளிப்படும் நளினம் அப்பர் பெருமான் பாடியுள்ள வட்டணை நடையையே கண்முன் காட்டுகிறது. 

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் மேற்கில் கோட்டத்தினும் சற்றுப் பெரிய வடிவமாகக் காட்சிதரும் வானவர், கீர்த்திமுகம் பொறித்த கரண்டமகுடமும் கோரைப்பற்களும் கொண்டுள்ளார். பனையோலைக் குண்டலங்கள், சிம்மமுகத் தோள்வளைகள், சரப்பளி, அலங்கார முப்புரிநூல், வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை, அதை இருத்தும் சிம்மமுக அரைக்கச்சு  அணிந்து, இரு கைகளையும் மார்புக்காய்க் குறுக்கீடு செய்து பணிவின் விளக்கமாய் நிற்கும் அவரது சடைக்கற்றைகள் இருபுறத்தும் நெகிழ்ந்துள்ளன. தமிழ்நாட்டுக் கோயில்களின் விமானக் கோட்டங்களில் இத்தகு பத்திமை நிறை வானவர் சிற்பங்களைக் காண்பதரிது.

மேற்குக் கோட்டங்கள்
மேற்குக் கோட்டங்களில் சாலைக்கோட்டம் நோக்கி ஒருக்கணித்த நிலையில் இளமையும் அழகுமாய் இரு கவரிப்பெண்கள். சிதைக்கப்பட்ட நிலையிலும் முற்சோழர் கலைத்திறம் காட்டும் இவ்விரு நங்கையரும் சோழர் கால ஒப்பனையாற்றலின் உச்சங்களாகத் திகழ்கின்றனர். தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் கவரிப்பெண்களை மகரதோரணம், தூண்பாதம், தூண்சதுரம், கொடிக்கருக்கு வளையங்கள், சிறு கோட்டங்கள் எனக் கட்டுமானம் சேர்ந்த பல உறுப்புகளில் காணமுடிந்தாலும் இங்குள்ளாற் போல் சுவர்த்துண்டுக் கோட்டங்களில் சாலைக் கோட்டச் சிற்பத்திற்கு இணையான அளவில் பேருருப் படைப்புகளாய் யாங்கனும் காணமுடிவதில்லை. கவரிப்பெண்களுக்குக் குரக்குத்துறைச் சிற்பிகள் அளித்துள்ள இணையற்ற இந்தப் பெருமை தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
இருவரின் பாதங்களும் ஒருக்கணிப்பிற்கேற்ப சமத்திலும் திரயச்ரத்திலும் உள்ளன. வெளிக் கைகளைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ள அவர்தம் உள்கைகள் கவரியேந்தியுள்ளன. நன்கு சீவிமுடித்த கூந்தலுடன் அழகிய நெற்றிப்பட்டமும் பூட்டுக் குண்டலங்களும் பெரிய அளவிலான கற்கள் பதித்த ஆரமும் தோள், கை வளைகளும் முத்துக்கள் பதித்த முப்புரிநூலும் பூப் பதக்க அரைக்கச்சும் இடைக்கட்டுடனான ஆடையும் அணிந் துள்ள அவ்விருவருள், தென்மேற்கர் வலக்கையில் ஏந்தியுள்ள கவரி இடத்தோளுக்குப் பின் நெகிழ்ந்துள்ளது. அவர் இடையில் சிற்றாடை. வடமேற்கரின் கவரி அவர் தோளின் பின்புறத்தே இடப்புறம் நெகிழ்ந்துள்ளது. 

வடக்குக் கோட்டங்கள்

                                                     வடக்குச் சுவர் கோட்டங்கள்


வடக்குச் சாலைக் கோட்ட நான்முகனின் கால்கள் சிதைந் துள்ளன. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரி நூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை, தோள், கை வளைகள் பெற்றுள்ள அவர் பின்கைகளில் அக்கமாலை, குண் டிகை. வல முன் கை காக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில்.

வடக்குச் சுவர்க்கோட்டங்களில் சாலைப்பத்திக்காய் ஒருக் கணித்த இரண்டு ஆடவ அடியவர்கள். சடைமகுடமும் பட்டாடை யும் பெற்றுள்ள அவர்களுள், கிழக்கர் வலக்கையில் மலரேந்தி வலக்காலைச் சற்றே முழங்காலளவில் மடித்துப் பாதத்தைத் திரயச் ரத்தில் இருத்தியுள்ளார். இடக்கால் சமத்தில். சரப்பளி, தோள், கை வளைகள், மகரகுண்டலங்கள் அணிந்துள்ள அவரது இடை யாடையை அரைக்கச்சு இடுப்பிலிருத்தியுள்ளது. மலர்கள் ஏந்திய கைகளைக் குவித்துத் தாமரையில் நிற்கும் மேற்கர் பாதங்களை சமத்திலும் திரயச்ரத்திலும் இருத்தித் தோள், கை வளைகள், சரப் பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து பத்திமையின் சிகரமாக விளங்குகிறார்.

முகமண்டப வடகோட்டத்தில் சடைப்பாரம், முப்புரிநூல் என மடித்த துண்டு, சரப்பளி, சவடி, தோள், கை வளைகளுடன் வீராசனத்திலுள்ள பின்னாளைய பேரளவிலான ஆலமர்அண்ண லின் நான்கு கைகளும் இடக்காலும் சிதைந்துள்ளன. 

சிற்றுருவச் சிற்பங்கள்
குரங்கநாதர் கோயில் சிற்றுருவச் சிற்பங்களைத் தூண் சிற்பங்கள், மகரதோரணச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான முற்சோழர் கோயில்களில் இத்தகு சிற்றுருவச் சிற்பங்கள் சிறப்பான வடிப்புகளாகப் பார்வைக்குக் கிடைக்கின்றன. சோழர் கால ஆடல், இசைக்கலை, ஒப்பனையாற்றல், சமூகச் செயற்பாடுகள், வாழ்வியல் நிகழ்வுகள் எனப் பல் துறை சார்ந்த பதிவுகளை இத்தகு சிற்பங்களில் பரவலாகக் காணமுடிகிறது. 

தூண் சிற்பங்கள்
குரங்கநாதர் சுவர்த்தூண்கள் சிலவற்றின் மாலைத்தொங்கல், கட்டுப்பகுதிகள் சிற்றுருவச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வானவர் கோட்டத்தை வலப்புறம் அணைத்துள்ள உருளை அரைத்தூணின் மாலைத்தொங்கல் செங்குத்து நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு நிகழ்வு சார்ந்த மூன்று காட்சிகளைப் பதிவு செய்துள்ளது. 

மகப்பேற்றுக் கொண்டாட்டம்

இடமிருந்து வலமாக முதல் பிரிவில் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடையணிந்த மூன்று பெண்கள். சடைப்பாரத்துடன் நடுவிலிருப்பவர் கருவுற்ற நிலையில் தளர் நடையுடன் தன் இருபுறத்தும் கொண்டையுடன் நிற்கும் தோழியர் தோள்களில் கைகளை வைத்தவாறு காட்சிதர, அவரை அணைத்துக் கைத்தாங்கலாக அழைத்துவரும் தோழியரில் வலப்புறத்தார் வலக்கையை மடக்கி மார்பருகே கொள்ள, உடலைச் சற்றே குறுக்கித் தாங்கும் இடப்பெண் இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். 

நடுப்பிரிவில் அழகிய குத்துவிளக்கு. அதன் இருபுறத்தும் தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், முத்துமாலை, பட்டாடை அணிந்த இரு இளநங்கையர் குத்துவிளக்கிற்காய் ஒருக்கணித்துக் கால்களை சுவஸ்திகமாக்கி ஒல்கி நிற்கின்றனர். வலப்பெண் கைகளில் செண்டுதாளம். இளநகையுடன் உள்ள இடப்பெண் கைகளில் எண்ணெய்ச் செப்பு. மூன்றாம் பிரிவில் முக்காலி ஒன்றின்மீது அமர்ந்துள்ள மங்கை தொடையில் தாங்கலாக நிறுத்தியுள்ள நரம்புக்கருவியை இசைக்கிறார். அவரது இடுப்பிலிருந்து தலைவரை நீளும் அந்த இசைக்கருவியின் மேல் நுனியில் இடக்கை இருக்க, கருவியின் கீழ்ப்பகுதியில் வலக்கை. 

அதே தூணின் கட்டுப்பகுதியில் இரண்டு காட்சிகள். முதற் காட்சியில் மகவுக்குப் பாலூட்டும் பெண். இரண்டாம் காட்சியில் மகப்பேற்றைக் கொண்டாடும் பெண்களின் கூத்து. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், பட்டாடை அணிந்தவராய் வலக்கையைத் தலைக்கு அணையாக்கி, இடக்கையால் அருகே படுத்திருக்கும் மகவை அணைத்தபடி பாலூட்டும் இளந்தாய் அழகிய கட்டிலில் படுத்துள்ளார். பின்புறம் முடித்த கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தொடையளவாய்ச் சுருக்கிய ஆடை என அவரது தலைப்புறம் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ள செவிலி, அத்தாயின் தலையை அன்போடு வருடுகிறார். 

தாயின் கால்புறம் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துள்ள மூன்று பெண்களில், கட்டிலின் பின்னிருந்தவாறு அன்னையின் கால்களைப் பிடித்துவிடும் முதலாமவர், பாலூட்டும் பெண் ணின் தாயாகலாம். அக்காட்சி கண்டு பூரிக்கும் பிற இருவரும் நெருங்கிய உறவுகள் போலும். அவர்களுள் முதலாமவர் பட் டாடையுடன் வலக்கையைத் தொடையிலிருத்தி இடக்கையை மார்பருகே பதாகமாய்க் கொண்டுள்ளார். பனையோலைக் குண்டலங்களுடன் குத்துக்கால் அமர்விலுள்ள இரண்டாமவர் கைகளை மடித்து மார்பருகே கொண்டுள்ளார். 
தமிழ்நாட்டுச் சோழர் காலக் கூத்துக்கலையைப் படம் பிடிக்கும் ஆடற்காட்சியில், மூன்று அரிவையர் பனையோலைக் குண்ட லங்களும் சிற்றாடையும் விளங்க, வெவ்வேறு நிலைகளில் ஆடு வதைக் காணமுடிகிறது. உடலை வில் போல் வளைத்துக் குனித்தல் நடனம் நிகழ்த்தும் முதற்காரிகை வலக்கையைத் தலை மீதிருக்கு மாறு உயர்த்தி, இடக்கையைப் பின்புறம் நெகிழ்த்தியுள்ளார். மண்டலநிலை நடுப்பெண் இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் வலப் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி, வலக்கையைப் பதாகத்தில் கொண்டுள்ளார். இடக்கை அர்த்தரேசிதத்தில். மூன்றாம் நங்கையின் சிற்பம் தெளிவாக இல்லை. 

தொங்கலிலும் கட்டிலுமாய் இணைந்து விளைந்துள்ள இக் காட்சித்தொடர் ஊர்ப்புறத்துக் குடும்ப நிகழ்வையும் அதன் காரண மான களியாட்டங்களையும் கண்முன் நிறுத்துகிறது. கருவுறுதல், மகப்பேறு சார்ந்த சடங்குகளை இத்தனை விரிவான அளவில் படக்காட்சி போலத் தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயில்களிலும் கண்டதில்லை. மேல்பாடிக்கு அருகிலுள்ள திருவலம் சிவன்கோயிலின் அரைவட்ட வடிவிலான கல்தொட்டியின் புறப்பகுதியில் விஜயநகரக் காலப் படப்பிடிப்பாக மகப் பேற்றுடன் தொடர்புடைய சடங்குகள் காட்டப்பட்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

கரணக் காரிகை
தெற்கிலுள்ள நான்முக அரைத்தூணின் கட்டும் தொங்கலும் இசை, ஆடற்காட்சியைக் கொண்டுள்ளன. இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ள தொங்கலில் வலப்புறம் வக்ஷசுவஸ்திகத்தில் கரணக் காரிகையும் இடப்புறம் அவ்வாடலுக்கு இசைநயம் கூட்டும் இடக்கைக் கலைஞரும் பொலிகின்றனர். மண்டலத்தில் கால்களைக் குறுக்கீடு செய்து பாதங்களைத் திரயச்ரமாக்கியுள்ள ஆடலழகியின் வலக்கை நெகிழ, இடக்கை மார்பருகே பதாகம் காட்டுகிறது. வலச்சாய்வாயுள்ள முகம் இடந்திரும்ப, தமிழம்கொண்டை, பட்டாடையுடன் உள்ள அவரது செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சரப்பளி, தோள், கை வளைகள், கடகவளை, இடைத்தொங்கலுடன் அவரது கழுத்தில் மெல்லிய ஆரம். பெருங்கொண்டையும் சிற்றாடையும் இடப்புறம் பறக்கும் தோள்துண்டும் பெற்று, நீள் வெறுஞ் செவிகளுடன் மண்டலப் பார்சுவத்தில் பாதங்கள் அமைய, தோளின் இடப்புறத்திருந்து தொங்கும் இடக்கையை இயக்கும் ஆடவரின் வலக்கை கருவியை முழக்க, இடதுகை இசைக்கருவியின் கயிற்றுப் புரிகளுக்குள் நர்த்தனமிட்டு இசையை ஆடலுக்குத் தக்கவாறு வெளிப்படுத்துகிறது. இது மேடைநிகழ்ச்சி என்பதை உணர்த்துமாறு இருவர் சார்ந்தும் பின்னணியில் மலர்த் தோரணங்கள். 

பூதக்கலைஞர்கள்
செவ்வகத் துண்டாய்ச் செம்மைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பகுதியில் வலமும் இடமுமாய்க் குந்திய பூதக்கலைஞர்கள். இடை யில் வலக்காலைத் தளத்திலிருக்குமாறு மடித்து அமர்நிலையில் விருச்சிகக் கரணம் காட்டும் ஆடலர். சடைமகுடம், பனையோ லைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், கழுத்தணி, இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள மூவருமே நேர்நோக்கிய  அமர்வினர். இடஒருக்கணிப்பிலுள்ள முதற்பூதம் செண்டுதாளம் இசைக்க, முப்புரிநூலுடன் வலஒருக்கணிப்பிலுள்ள மூன்றாம் பூதம் இடத்தோளிலிருந்து தொங்கும் மத்தளம் ஒத்த தோலிசைக் கருவியை இரு கைகளாலும் முழக்குகிறது. இடக்காலைத் தேள் கொடுக்கென வளைத்து விருச்சிகம் காட்டும் இடைப்பூதம் உதரபந்தம், முப்புரிநூல், கடகவளை பெற்றுள்ளது. அதன் வலக்கை மார்பருகே அமைய, இடக்கை அர்த்தரேசிதமாக, முகம் இடச்சாய்வாக உள்ளது. 

ஆடலும் இசையும்
தென்மேற்குக் கர்ணபத்தியைத் தழுவியுள்ள நான்முக அரைத் தூணின் கிழக்குமுகத் தொங்கலிலும் ஆடல், இசைக்கலைஞர் களின் காட்சிதான். இருவருமே பெண்கள். மண்டலத்தில் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இடப்பாதத்தைப் பார்சுவத் திலும் இருத்தி, இடஒருக்கணிப்பில் வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையை ரேசிதத்தில் வீசியுள்ள ஆடலரசியின் இடைக்கட்டுடனான சிற்றாடை இடைத்தொங்கலும் பெற்றுள்ளது. முகம் வலச்சாய்வாய் இடத்திருப்பத்தில். தமிழம்கொண்டை, பனை யோலைக் குண்டலங்கள் அணிந்துள்ள அவரது உடல்வளைவுகள் ஆடலுக்கேற்ப அழகு காட்டுகின்றன. தொங்கலின் இடப்புறத்தே குழலிசைக்கும் நங்கை, பட்டாடையும் நீள்குழலுமாய் நிற்கிறார். பின்புறம் காட்டி முகத்தை வலப்புறமாய்த் திருப்பிக் குழல் பிடித்திருக்கும் அந்நங்கையின் கொண்டை ஊரகப் பெண்களின் தலையலங்காரத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பின்புறம் காட்டும் சிற்றுருவச் சிற்பங்களில் இணையற்ற பேரழகுடன் திகழும் சிற்பமாக இதைக் குறிக்கலாம். இப்பெண்ணின் வலப்புறம் நிற்கும் குள்ளச் சிறுபூதம் செண்டுதாளம் வாசிக்கிறது. பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள அதன் முகம் குழலிக்காய்த் திரும்பியுள்ளது.  

பூதக்குறும்பு
இத்தூணின் இடைக்கட்டில் சடைமகுடம், உதரபந்தம், சிற்றாடை பெற்ற மூன்று பூதங்கள் அமர்ந்துள்ளன. வலஒருக் கணிப்பில் சற்றே வலச்சாய்வாய் உள்ள முதல் பூதம் நடுப்பூதத்தைக் கடைக்கண் பார்வையால் நோக்குகிறது. தோள் வளைகளோடுள்ள அதன் கைகள் வலப்புறத்துள்ள ஒருமுக முழவை வாசிக்க, இடஒருக்கணிப்பில் அச்சம்நிறை பார்வையுடன் இடச்சாய்வாய் உள்ள மூன்றாம் பூதத்தின் முகம் வலத்திருப்பமாக உள்ளது. பனையோலைக் குண்டலங்களுடனுள்ள அதன் இருகைகளும் பிடித்திருப்பது வீணையாகலாம். இரண்டிற்கும் இடையிலுள்ள சுருள்முடிப் பூதம் கடக, கைவளைகள் உள்ள தன் இரு கைகளையும் இதழ்க்கடையில் வைத்து வாயைக் கிழிக்குமாறு போலப் பழிப்பு காட்டுகிறது. மூன்று பூதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளபோதும் அவற்றுக்குரிய ஆறு கால்களுக்குப் பதிலாக நான்கு கால்களே காட்டப்பட்டுள்ளன. முதல் பூதத்தின் இடக்கால் நடுப்பூதத்தின் வலக்காலாக அமைய, மூன்றாம் பூதத்தின் வலக்கால் அதன் இடக்காலாகியுள்ளது. இது போன்ற கண் மயக்குக் காட்சிகள் சிற்ப அற்புதங்களாய்ப் பாச்சில் அவனீசுவரம் உள்ளிட்ட பல முற்சோழர் கோயில்களில் காணக்கிடைக்கின்றன. 

மேற்கு நான்முகத்தூணின் இடைக்கட்டில் பூதக்குறும்புகளாய் இரண்டு காட்சிகளும் தொங்கலில் ஆடல் நிகழ்வுகளாய் இரண்டு காட்சிகளும் பதிவாகியுள்ளன. தூண்கட்டின் முதற் படப்பிடிப்பு கண் மயக்குக் காட்சியாக உள்ளது. இரண்டு பூதங்கள் மேலும் கீழுமாகவும் இரண்டு பூதங்கள் பக்கவாட்டிலும் படுத்திருக்குமாறு படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் நான்கு உடல்களுக்கு இரண்டு தலைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக நேர்த்தியாக இரண்டு தலைகளுக்கேற்ப நான்கு உடல்களைப் பொருத்தமான கிடத்தல் கோலங்களில் காட்டியுள்ள முற்சோழர் சிற்பிகளின் கற்பனையாற்றலும் கைச்செறிவும் வியத்தகு சிறப்பின. வழக்கமாகச் சோழப் பூதவரிகளில் இடம்பெறும் பூதத்தின் பிறப்புறுப்பை வாத்து கவ்வும் காட்சி அடுத்துள்ளது. 
சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், உதரபந்தம், கை வளைகள், சிற்றாடையுடன் வலக்காலால் வாத்தை உதைத்தவாறு கண்ணீருடன் கதறும் அப்பூதத்தின் வலக்கை தலை மீதுள்ளது. இடக்கை வாத்தை விலக்கும் முயற்சியில். பூதத்தின் துன்பத்தையோ விலக்க முயற்சிக்கும் அதன் உழைப்பையோ சற்றும் பொருட்படுத்தாத வாத்து, கால்களால் பூதத்தை உதைத்தவாறே தன் செயலில் முனைப்பாக உள்ளது. பொதுவாகப் பிற கோயில்களில் காணப்படும் இத்தகு சிற்பங்களில் வாத்து பூதத்தை உதைக்கும் செயற்பாடு இருப்பதில்லை. அவ்வகையில் இச்சிற்பம் தனித் தன்மையதாக ஒளிர்கிறது. வலபி வரியிலேயே இடம்பெறும் இச்சிற்பம் இங்குத் தூண்கட்டில் காணப்படுவதும் இக்கோயிலின் சிறப்பெனலாம். 

சுவஸ்திகக் கரணங்கள்

அதே தூணின் தொங்கல், பூச்சரங்களால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சுவஸ்திகக் கரணக்கோலங்களைப் பதிவுசெய்துள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே மேற்பகுதியில் மூவரும் கீழ்ப்பிரிவில் இரு பூதஇசைக்கலைஞர்களும் உள்ளனர். முதற் பிரிவின் மேற்பகுதியில் வலப்புற ஆடலரசியின் வடிவம் சிதைந்துள்ளது. தமிழம் கொண்டையும் குண்டலங்களும் கைவளைகளும் பட்டாடையும் பெற்று நடுவிலுள்ளவர் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகக் கரணத்தில் மார்பருகே உள்ள வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாய் வீசியுள்ளார். அவரின் இடப்புறத்தே இடஒருக்கணிப்பிலுள்ள பெண்கலைஞர் கைகளில் செண்டுதாளம். கீழ்ப்பகுதி பெரிதும் சிதைந்துள்ளதால், அங்குள்ள பூதக்கலைஞர்களின் கைக்கருவிகளை இனங்காண முடியவில்லை.

தொங்கலின் இடப்பிரிவில் உள்ள மூவரில் முதலிரு பெண்களும் வக்ஷசுவஸ்திகக் கரணத்தில் அவிநயிக்கும் அழகிகளாய் வலக்கையை மார்பருகே பதாகமாக்கி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளனர். தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை பெற்றுள்ள இருவரில் கூடுதலாகச் சரப்பளியும் அணிந்துள்ள முதலாமவர் இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி வலப்பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ளார். முகம் இடச்சாய்வாக இருந்தபோதும் வலத் திருப்பமாக எழில் காட்டுகிறது. முதன்மைக் கலைஞராய்ப் பொலியும் நடுக்கலைஞர் வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி இடப்பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ளார். முகம் இடச்சாய்வில் இடத்திருப்பமாக உள்ளது. மூன்றாவதாக உள்ள ஆடவ இசைக்கலைஞர் இடஒருக்கணிப்பில் ஆடலரசியர் போலவே கால்களைக் குறுக்கீடு செய்து ஆடியவாறே செண்டு தாளம் இசைக்கிறார். அவரது இடப்பாதம் பார்சுவமாக, வலப்பாதம் அதன் பின் குறுக்கீடு செய்த நிலையில் அக்ரதலசஞ்சாரத் தில். இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள தொங்கலின் கீழ்ப் பகுதிப் பூதங்களில் வலமுள்ளது அமர்நிலையில் இரு கால்களுக்கிடையில் உள்ள குடமுழவை இயக்க, இடமுள்ளது நின்றவாறே இலைத் தாளம் இசைக்கிறது. பொதுவாக இறையாடல் காட்சிகளிலேயே காட்டப்படும் குடமுழவு இங்கு மானுட ஆடலின் தாளக் கருவியாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.  

அர்த்தரேசிதக் கரணம்
விமானத்தின் வடபுற நான்முக அரைத்தூணின் தொங்கல் இரு பிரிவுகளாகி இரண்டு ஆடற்காட்சிகளைப் பெற்றுள்ளது. முதல் காட்சியில் பனையோலைக் குண்டலங்களும் இடைத் தொங்கலுடனான பட்டாடையும் அணிந்து அர்த்தரேசிதக் கரணம் காட்டும் பெண்ணின் வலக்கை பதாகத்திலும் இடக்கை அர்த்தரேசிதத்திலும் உள்ளது. வலப்பாதம் பார்சுவமாக, அதன் பின் குறுக்கீடு செய்யப்பட்டுள்ள இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் அமைய, உடலை இடஒருக்கணிப்பிலும் முகத்தை வலச்சாய்விலும் காட்டி ஆடும் தமிழம்கொண்டை அழகியின் உடல்மொழி கண்களை நிறைக்கும். ஆடலுக்கு இடக்கைக் கருவியின் இசையால் தாளம் தரும் இடப்புற ஆடவக்கலைஞர் மண்டலப் பார்சுவத்தில் சரப்பளியும் சிற்றாடையுமாய்க் காட்சிதருகிறார். அவரது தோளிலிருந்து தொங்கும் இசைக்கருவியின் கயிற்றுப்புரிகளைக் கலைஞரின் இடக்கை இயக்க, வலக்கை முழவு முகத்தில் கொட்டித் தாளம் தருகிறது. 

குழலோடு ஆடல்
இரண்டாம் பிரிவில் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய் உள்ள ஆடவ இசைக்கலைஞர் சுவஸ்திகத்தில்  கால்களமைத்து ஆடியவாறே தம் இரு கைகளிலும் உள்ள இலைத்தாளங்களை இசைக்க, நடுவிலுள்ள குழல்கலைஞரும் இடப்பாதம் பார்சுவத்தில் அமைய, வலப்பாதம் அதன் பின் குறுக்கீடாக அக்ரதலசஞ்சாரத்திலிருக்கக் குழலிசைத்தவாறே வலச்சாய்வாய் முகத்தை இடந்திருப்பி சுவஸ்திகத்தில் ஆடுகிறார். பட்டாடை அணிந்துள்ள அவரது இருகைகளிலும் நீளமான குழல். குழலி சைத்தவாறு ஆடும் காட்சிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் அரிதானவை. உச்சிக்கொண்டையும் மீசை தாடியுமாய் இடப்புறத்துள்ளவர் ஆடல் ஆசிரியராகலாம். அவரது இடக்கை மார்பருகே. 

சிவபெருமானின் ஊர்த்வஜாநு
முகமண்டப வடபுற அரைத்தூண்களில் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தூணின் கட்டுப்பகுதியில் சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணமும் மற்றொரு தூணின் மாலையில் சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பமும் இடம்பெற்றுள்ளன. வலக்காலை முழங்காலளவில் மடக்கி இடைவரை உயர்த்தியுள்ள சிவபெருமானின் இடத்திருவடி பார்சுவமாக உள்ளது. அவரது வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை அர்த்தரேசிதத்தில். பின்கைகளில் உடுக்கை, முத்தலைஈட்டி. சடைமகுடம் மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் உடல் இடஒருக்கணிப்பில் இருக்க, முகம் இடச்சாய்வில்.  

இறையாடலைக் காணுமாறு போல நந்தி இடப்புறம் நிற்க, கீழே இறைவனின் இருபுறத்தும் இசைக்கலைஞர்கள். சடைமகுடத்துடன் இலலிதாசனத்திலுள்ள தாளப்பூதம் இறைவனைப் பார்த்தவாறே செண்டுதாளம் இயக்கச் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை பெற்றுள்ள முழவுப்பூதம் இரு கால்களுக்கிடையில் இருத்தியுள்ள குடமுழவை முழக்கியவாறே இறைவனை நோக்கியுள்ளது. இச்சிற்பத்தொகுதியில் மேல்புறத்துள்ள தோரணவளைவும் பூத்தொங்கலும் இவ்வாடலை மேடைக் காட்சியாக்கிக் கண்களை ஈர்க்கின்றன. 

சண்டேசுவர அருள்மூர்த்தி
இங்குள்ள சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பத்தொகுதி சிறப்பானது. தலைதாழ்த்திப் பத்திமையுடன் கைகளைக் குறுக்கீடு செய்து பணிவுடன் மண்டியிட்டுள்ள சண்டேசுவரரின் இடையில் சிற்றாடை. தலைமுடி சடைப்பாரமாய் விரிந்துள்ளது. அவர்முன் சடைமகுடமும் சிற்றாடையுமாய் இருக்கையில் அமர்ந்துள்ள சிவபெருமானின் முன்னிரு கைகளில் கொன்றைமாலை. தொகுதியின் மேற்புறத்தே தவப்பேறு செய்த சண்டேசுவரரை வாழ்த்துமாறு வானவர்கள். இந்நிகழ்வு முல்லை நிலத்தில் நிகழ்ந்ததைச் சுட்டுமாறு இறைவன் இருக்கை முன் இரண்டு மான்கள்.   

யானையை அழித்த மூர்த்தி
மேற்குத் தூண் மாலைத் தொங்கலில் யானையை அழித்த மூர்த்தி. யானைத்தோல் மீது வலப்பாதம் இருத்தி, இடக்காலை ஊர்த்வஜாநுவாக்கி, முழங்காலால் யானைத்தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு வலஒருக்கணிப்பிலுள்ள இறைவனின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சடைப்பாரம், சிற்றாடை, முப்புரிநூல் பெற்றுள்ள அவரது வல முன் கை  மார்பருகே. இட முன் கை சூசியில் அமைய, பின்கைகள் உரிக்கப்பெற்ற யானைத்தோலைப் பிடித்தவாறுள்ளன. இறைவனின் இடப்புறம் இடஒருக்கணிப்பி லுள்ள உமையின் வலக்கை நெகிழ்ந்துள்ளது. கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடை அணிந்துள்ள அம்மையின் இடக்கையில் மலர். நிகழ்விடத்தை நீங்குமாறு போலத் திரும்பியுள்ள உமையைத் தொடர்வது போலச் சிறுபிள்ளையாய் முருகன். யானையின் துளைக்கை கொடிக்கருக்கு வளைவுச்சுற்றில் சுழன்றுள்ளது. இவ்வரிய காட்சியைக் கண்களால் பருகுமாறு போலத் தொகுதியின் இடப்புறம் நிற்கும் முனிவரின் வலக்கை நிகழ்வு போற்ற, இடக்கை மார்பருகே.        

மகரதோரணங்கள்

விமானத்தின் மூன்று சாலைக் கோட்டங்களின் மேலும் மகரதோரணங்கள் தலைப்பிட்டுள்ளன. அவற்றுள் மேற்குத் தோரணம் சிறக்க அமைந்துள்ளது. 

அரக்கனை அழிக்கும் காளி - 1
தெற்குச் சாலைக் கோட்ட மகரதோரணத்தில் கீழே இரண்டு பெருமகரங்களும் மேலே இரு சிறுமகரங்களும் உமிழும் யாளி வீரர்கள் உயிர்த்துடிப்புடன் இருபுற மேல்வளைவிலும் வீரம் காட்ட, இரண்டாம் வளைவாய் நான்கு தோரணத் தொங்கல்கள். ஒவ்வொரு தொங்கலுக்குள்ளும் ஒரு பூதம். கீழ்வளைவில் அரக்கனை அழிக்கும் காளி. அழகிய பதக்க வளையத்தால் இணைக்கப்பட்டுள்ள சிறு மகரங்களின் கழுத்துப் பகுதிக்கு மேல், தோரணத்தின் நெற்றிப்பொட்டென எழிலார்ந்த கீர்த்திமுகம். வலப் பெருமகரவாயிலிருந்து வெளிப்படும் யாளி வீரர் மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் மூன்று வீரர்கள் அவரை எதிர்கொள்கின்றனர். அனைவர் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். அதற்கு நேர்மாறாக இடப்பெரு மகரவாயிலிருந்து மூன்று யாளி வீரர்கள் வெளிப்பட்டு மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் ஒற்றை வீரர் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்தம் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். இருபக்க வீரர்களுமே சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை அணிந்துள்ளனர். அனைத்து யாளிகளும் அகலத்திறந்த வாயுடன் ஆர்ப்பரிக்க, தோரணத்தின் மேல் வளையம் முழுவதும் போர் முழக்கம்தான்.

நடுவளையத் தொங்கல்கள் நான்கிலும் குந்திய நிலையில் அழகுப் பூதங்கள். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் அணிந்த அவற்றுள், வலக்கையை முழங்கால் மீதிருத்தி, இடக்கையால் தொங்கலைப் பிடித்துள்ளது இரண்டாவதாக உள்ள பெண் பூதம். அதன் வலமுள்ள பூதத்தின் கைகளும் முழங்கால்கள் மீதே. வலக்கை மட்டும் முஷ்டிமுத்திரையில். இடப்பூதங்களில் கீழ்ப்பூதம் இருகைகளையும் முழங்கால்கள் மீதிருத்தி நக்கல் செய்ய, மேல்பூதம் வலக்கையால் அதற்கான பதில் குறிப்பு காட்டி, இடக்கையை முழங்கால் மீதிருத்தியுள்ளது. 

கீழ்வளைய வெளிவிளிம்புகளில் வலப்புறத்தே ஓங்கிய கத்தியும் கேடயமுமாய் ஒரு வீராங்கனை விரைய, இடப்புறத்தே கால் மடக்கிச் சண்டையிடுபவராய்க் கத்தி, கேடயத்துடன் வீரர் ஒருவர். வளைவிற்குள் வலக்காலைத் தரையில் ஊன்றி இடக்காலை உயர்த்தியுள்ள காளியின் எட்டுக்கைகளிலும் கருவிகள். அவரது இட முன் கை மார்பருகே அமைய, ஓங்கிய வலக்கையில் மழு. அம்மையின் எதிரே ஒடுங்கிச் சுருங்கிய பாவனையில் தோற்று வீழ்ந்தவனாய் அரக்கன். 

நிலமகள் ஏந்திய பன்றியாழ்வார்

நான்கு வளைவுகளாக விளங்கும் மேற்குச் சாலைக் கோட்டத் தோரணத்தின் மேல் வளைவில் கொடிக்கருக்கு. இரண்டாம் வளைவு மேலும் கீழும் மகரங்களில் முடிகிறது. பெருமகரங்களாய் விளங்கும் கீழ்மகரங்களின் தோகை கோட்டத்தை அணைத்துள்ள உருளை அரைத்தூண்களின் மீது படிய, அகலத்திறந்த அவற்றின் வாய்களிலிருந்து வெளிப்படும் யாளிவீரர்கள் கைகளில் வாளும் கேடயமும் கொண்டுள்ளனர். மேல்மகரங்களின் வாய் களிலிருந்தும் இது போல் யாளிவீரர் வெளிப்பாடு. பெருமகரங் களின் கழுத்தில் பக்கத்திற்கொரு பூதம் இருகைகளையும் உயர்த் தியவாறு மகிழ்வுப் புன்னகையுடன் இவர்ந்திருக்க, மேல்மகரங்கள் இணையுமிடத்திருந்து இறங்கும் பூத்தொங்கல் மூன்றாம் வளை வைப் பக்கத்திற்கிரண்டாகப் பிரித்துள்ளது. 

பூச்சரங்களால் சூழப்பட்டுள்ள இந்நான்கு பிரிவுகளிலும் சடைப்பாரம், குண்டலங்கள், கழுத்தாரம், சிற்றாடை பெற்ற அழகிய பூதங்கள். வலப்புறத்தே இலலிதாசனத்திலுள்ள முதற் பூதத்தின் இடக்கை பதாகம் காட்ட, வலக்கை மேலுயர்ந்துள்ளது. முப்புரிநூல், உதரபந்தம் கொண்டுள்ள இரண்டாம் பூதத்தின் வலக்கை கடகம் காட்ட, இடக்கை குடை போல் தொங்கும் கொடிக்கருக்கில். வயிற்றிலும் ஒரு முகம் பெற்றுள்ள மூன்றாம் பூதம் குந்தியவாறு விரல்களால் இதழ்களை விரித்துப் பழிப்பு காட்டுகிறது. இலலிதாசனத்திலுள்ள நந்திமுக நான்காம் பூதம் சிரட்டைக்கின்னரி வாசிக்கிறது. 

நான்காம் வளைவாக வரையறுக்கப்பட்டிருக்கும் கீழ்வளை வில் நிலமகள் ஏந்திய பன்றியாழ்வாரின் எழிலார்ந்த படைப்பு. வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ள அவரது இடமுழங்கால் உயர்த்தப்பட்டுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலம், பட்டாடை பெற்றுள்ள நிலமகள் இரு கைகளாலும் இறைவனைத் தொழுதவாறு அவரது உயர்த்திய தொடையில் அமர்ந்துள்ளார். பின்கைகளில் சக்கரம் சங்கு ஏந்தியுள்ள இறைவனின் வல முன் கை தொடைமீதிருக்க, இட முன் கை இறைவியை அணைத் துள்ளது. கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், கழுத்தாரம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பில் உள்ள அவரது தலை உயர்ந்துள்ளது. கீழே இடப்புறம் பாம்பரசனும் அவன் தேவியும் ஒருவர் மேல் ஒருவராகக் கிடக்க, பாம்பரசனின் கைகளில் வாள், கேடயம். 

அரக்கனை அழிக்கும் காளி - 2 
கீழ்ப்பகுதி சற்றே சிதைந்திருந்தாலும் கண்களை நிறைக்குமாறுள்ளது கருவறைக்குள்ளிருக்கும் மகரதோரணம். கீழே பக்கத்திற்கொன்றாக உள்ள இரு பெருமகரங்களை நோக்கியவாறு  மேலே நடுப்பகுதியில் பக்கத்திற்கொன்றாக இரு சிறுமகரங்கள். பெருமகரங்களின் கழுத்தில் இருகைகளையும் உயர்த்திய நிலையில் பக்கத்திற்கொரு வீரர். அங்காத்திருக்கும் அவற்றின் வாயிலிருந்து வலப்புறத்தும் இடப்புறத்துமாய்ப் பக்கத்திற்கு நான்கென எட்டுப் போர்வீரர்களின் அணிவகுப்பு. அனைவருமே ஓங்கிய வாளும் உயர்த்திய கேடயமுமாய் வெளிப்பட்டுள்ளனர். மகரவாயிலிருந்து வெளிப்படும் நிலையிலுள்ள வீரர்களை அதற்கேற்ற வகையில் சற்றே மடங்கிய கால்களுடன் காட்டியுள்ளமை சிறப்பாகும். சிறுமகரங்களும் வாய்திறந்து பக்கத்திற்கொரு வீரரை வெளிப்படுத்தியுள்ளன. இச்சிறுமகரங்கள் இணையுமிடத்தை மணிப்பதக்கமிட்டுச் சிறப்பித்துள்ளனர். இவ்வீரர் அணிவகுப்புக்கு மேலிருக்குமாறு உள்ள வளைவில் முகமண்டப வாயிலில் காட்டியுள்ளாற் போன்ற பாம்புத்தலைக் கொடிக்கருக்குத் தொடர். இத்தொடரின் இடையில் தோரணத்தின் நெற்றிப்பொட்டாக சிறுமகரங்களுக்கு மேலிருக்குமாறு கொடிக்கருக்கு, மணிவளை யப் பதக்கமென நடுவே கீர்த்திமுகம். 

வீரர் அணிவகுப்பிற்குக் கீழுள்ள வளையம் நடுவில் மலர்ப் பதக்கங்கள் பெற்று இருபுறத்தும் முத்துத்தொங்கல்களால் பக்கத்திற்கு மூன்றென ஆறு பிரிவுகள் பெற்றுள்ளது. வலமும் இடமுமாக உள்ள முதல் பிரிவில் அமர்நிலைப் பூதங்கள். இடைப்பிரிவில் யாளிவீரர்கள். பதக்கத்தை நெருங்கும் பிரிவில் சங்கூதும் பூதங்கள். மகரதோரணத்தின் கீழ்வளைவு முத்தாய்ப்பாகப் போர்க்கோலக் காளியைக் கொண்டுள்ளது. ஒரு கையில் வாளும் ஒரு கையில் கேடயமுமாகப் போரில் தோற்றுக் கீழே வீழ்ந்துள்ள அரக்கனின் வயிற்றில் அம்மையின் இடமுழங்கால் அழுந்த, அவன் மார்பை அம்மையின் இடக்கைகளுள் ஒன்று அழுத்துகிறது. பிற கைகளில் குறுந்தடி, வாள், கேடயம் உள்ளிட்ட கருவிகள். இடக் கால் மடிப்பிற்கு ஏற்ப வலக்கால் நீண்டுள்ளது. அம்மையின் தோற்றமே அவரின் வீரப்பெருமிதத்துக்கும் வலிமை நிறை போர் முறைக்கும் கட்டியம் கூறுகிறது. வீரத்தின் உச்சம் காட்டும் இவ் வளைவுக் காட்சியின் இருபுறத்தும் காளியின் பேய்த் தோழர்கள் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய். வலப்புறத்துள்ள பெண் பேய் இருகைகளையும் வாயருகே கொண்ட நிலையில் இடக்காலை மடக்கி, வலக்காலைப் பின்னோக்கி நீட்டியுள்ளது. இடப்புற ஆண் பேய் வலக்காலை மடக்கி, இடக்காலைப் பின்னோக்கி நீட்டிய நிலையில் இடக்கையை மார்பருகே கொண்டு, வலக்கையை உயர்த்தி வளையத்தைத் தொட்டவாறு காளியைப் போற்றுகிறது. 

குரங்கநாதர் வளாகக் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதலாம் ஆதித்தருடையதென்பதால் இக்கோயிலின் காலத்தைப் பொ. கா. 9ஆம் நூற்றாண்டின் இறுதியாகக் கொள்ளலாம். கோயில் கட்டமைப்பும் சிற்பயிருப்பும் அக்காலத்தை உறுதி செய்கின்றன. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/Kuranganathar_temple_Vimanam.jpg குரங்கநாதர் கோயில் https://www.dinamani.com/language-fest/2019/dec/30/சீனிவாசநல்லூர்க்-குரக்குத்துறைக்-கோயில்-சிற்பங்கள்-3316265.html
3318440 தமிழ் மொழித் திருவிழா மலையின் மேல் அறவிளக்கு பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர். DIN Monday, December 30, 2019 10:00 AM +0530  

மலையின் மீது விளக்கேற்றி வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அதுதான் திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருவிழாவன்று ஏற்றுகின்றார்களே. ஐம்பது கல் தொலைவுக்கு எல்லோரும் கண்டு வழிபடுகின்றனர். அவ்விளக்கு லட்சக்கணக்கான மக்களால் ஏற்றப்படும் நெய் விளக்கு. இறைவனை நெருப்பு வடிவில் கண்டு வணங்கும் சோதி விளக்கு. இங்கு நாம் காணப்போவது மலையின் மீது ஏற்றப்பட்ட ஓர் அறவிளக்கு. என்ன இது புதிராக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள்.

1969 ஆம் ஆண்டு நான் வேலூர் ஊரிசு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி செய்து கொண்டிருந்த காலம். அதுவும் கார்த்திகை மாதம்தான். ஒரு விடுமுறை நாள் மதிய வேளையில் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எங்காவது சுற்றுலாப் போக எண்ணினோம்.

வேலூர் நகரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள ஓட்டேரியைக் கடந்து சென்றால் பாலமதி என்றொரு மலை இருப்பதாகவும், அருவிகள் தவழும் இனிய காட்சியும், பல்வகைப் பறவைகள் தம் குரல் எழுப்பி இன்னிசை புரியும் அழகிய சூழலும், இயற்கையின் பல கோல எழில் விளங்கும் சுற்றுப்புறமும் நம்மை நாமே மறக்கச் செய்யும் என்றார் நண்பர்.

எல்லோரும் மிதிவண்டியில் புறப்பட்டோம். சம தளத்தில் மிதிவண்டி ஓட்டலாம். ஏறுமுகமான ஒரு பகுதியில் நாங்கள் களைத்துப் போனோம்.

மிதிவண்டிகளைத் தள்ளிக் கொண்டே நடந்தோம். நாங்கள் என்ன தள்ளாதவர்களா? எங்களுடன் வந்த அந்தப் பகுதியைச் சார்ந்த நண்பர் இன்னும் கொஞ்சத் தொலைவுதான் என்றார். இந்தக் கிராமத்தவர்களுக்கே தொலைவு தெரியாது. கூப்பிடு தூரம்தான், கண்ணுக்கெட்டிய தூரம்தான். கால் நடக்கும் தொலைவுதான் என்பார்கள். ஆனால், போகப் போகக் கண்ணன் திரெüபதிக்கு விட்ட சேலைபோலப் போய்க் கொண்டே இருக்கும்.

நல்ல வேளை. விறகுச் சுமையோடு எதிரே வந்த ஒரு முதிய பெண்மணி எதிர்ப்பட்டார்.

அம்மா! பாலமதிக்கு எப்படியே போகனும். விறகுக் கட்டு சுமக்கும் களைப்பை ஒற்றைக் கை கொண்டு முந்தானையால் துடைத்துக் கொண்டு எங்களுக்கு விடை கூறினார்.

"தா மேட்டு மேலே ஏறுங்க, அப்புறம் அங்கிருந்து இழிங்க" என்றார் எங்கள் புருவங்கள் உயர்ந்தன. "அதாமையா இறங்குங்க..." அவர் சற்றே நிறுத்தினார்.

ஓ! இழிங்க என்றால் இறங்குங்கள் என்று பொருளா? தலையின் இழிந்த மயிரனையர் என்றாரே அந்த இழிதல்தானோ? நாங்கள் ஒருவருக்கொருவர் வியப்பைப் பார்வையில் பகிர்ந்து கொண்டோம்.

இழிஞ்சதுக்கு அப்புற மேலுக்கு பாருங்க. கெழக்கால நெட்டுக்குத்தா ஒண்ணு, கம்பங் குதிர்க் கணக்கா ஒண்ணு. பெருங்கல் மேல பெருங்கல்லா அடுக்குப் பானை மாதிரிக்க ஒண்ணு நெறய கண்ணுக்குத் தெரியும். கறவை மடி சுரக்குறாப்பல அருவி ஒழுக்கமா இருக்கும். சில்லுன்னு மூஞ்சில சாரலடிக்கும். அதுதான் பாலமதி. போங்க" சொல்லிவிட்டு விறகுக் கட்டு அம்மையார் போய்விட்டார்.

ஔவையாரோ என எங்கள் உள்ளத்தில் ஓர் ஐயம். நாங்கள் மேட்டிலே ஏறினோம். பின்பு இறங்கினோம். இல்லை இழிந்தோம்.

பச்சைப் பட்டு விரித்தது போல் பசும் புல் பரப்பு. சில்லென்று தென்றல் முகத்தில் பன்னீர் தெளித்தது. ஒரு பாறையின் மீது மயில் தோகையை விரித்துக் கழுத்தை நிமிர்த்தி அருவியின் ஜதிக்கேற்ப நொச்சி இலை போன்ற காலை முன்னுக்குப் பெயர்த்து வைத்தது. இதுபோல ஒரு காட்சியைப் புரட்சிக் கவிஞர் பார்த்திருப்பார் என்பது தெரிந்தது. இல்லாவிட்டால்,

குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடைய நற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்...

 என்ற பாட்டுப் பிறந்திருக்குமா?

நாங்கள் நிமிர்ந்து பார்த்தோம். வெவ்வேறான உயர விகிதங்களில் மலைகள். அவற்றையெல்லாம் மலைகள் என்ற ஒரு பெயரால் சொல்லலாமா என்று எங்களுக்குள் விவாதம் எழுந்தது.

மிகப் பெரியது, மலைக்க வைப்பது மலை; மலையை நோக்க உயரம் குறைந்து நிற்பது குன்று. அந்த அம்மையார் சொன்னது போல ஓங்கி உயர்ந்து நெட்டுக் குத்தா நிற்பது ஓங்கல்; பானை மேல் பானைப் போலப் பாறை மேல் பாறையாய் அடுக்கிய தோற்றம் உடையது அடுக்கம். ஒற்றை வெளியில் தனியே நிற்பது வெற்பு. எல்லையை வரையறுப்பது வரை; செல்லும் வழியில் குறுக்காகக் கிடப்பது விலங்கல். பிளவும் பிரிப்புமின்றி மாப்பிள்ளைக் கல் போல இருப்பது பெருங்கல். வளைந்து செல்வது கோடு. செறிந்தும் திணிந்தும் இருப்பது இறும்பு. (இறுப்பூர், எறும்பூர், திருவெறும்பூர்) இப்படிப் பல பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நாங்கள் இறங்கியிருந்தபோது ஒரு நண்பர் வியப்பு மேலிட்டு 'அதோ பாருங்கள் அதோ பாருங்கள்' என்றார்.

அங்கே ஒரு குன்று. அதன் அகன்ற நெற்றியில் சுண்ணாம்பு நீற்றால் பெரிய பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. ஒரு திருக்குறள்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

சறுக்கலான குன்றில் ஏறி வாளியில் கரைத்த சுண்ணாம்பு கொண்டு தூரிகையால் பெரிய, பெரிய எழுத்துகளில் இஃது ஒரு குன்று இதனைப்போல் உயர்ந்த நிலையடைந்தவர்களின் சினத்தை ஒரு கணப்போதும் தாங்க இயலாது (பரி) என்ற பொருளுடைய குறளை எழுதியிருக்கிறார்; எழுதத் தக்க இடம் தெரிந்து எழுதியிருக்கிறார். அவர் யாரோ? என்ன பேரோ? ஏன் அவர் பெயரை எழுதாமற் போனார்? அவர் குணமென்னும் குன்றேறி நின்றவராதலால்.

நண்பர் மற்றொருவர் 'அதோ பாருங்கள்' என்று மேற்கில் இருந்த ஒரு குன்றைக் காட்டினார். அதில்,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பக்கத்தே மற்றொரு குன்று அதிலும் தெய்வப் பாவலர் திருக்குறள்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னகத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

ஆம்! உண்மைதான். வினைக்குரிய ஒரு பொருளைக் கையிலே வைத்துக் கொண்டு அவ்வினையைச் செய்பவன் குன்றின் மேலே இருந்து கொண்டு யானைப் போரைப் பார்ப்பது போல அச்சமும் இல்லை; பாதுகாப்பும் ஆகும். குன்றத்தைக் குறித்த மற்றொரு குறளும் ஒரு குன்றில் மாக்கோலம் போட்டாற் போலத் தீட்டப் பெற்றிருந்தது. (898)

கிழக்கே சுவர் வைத்தது போல ஒரு மலை. அதிலிருந்து கறந்துவிட்ட பால் போல அருவி ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் மேலே

இருபுனலும் வாய்ந்த மலையிலும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

என்ற அறவிளக்கு வெள்ளைச் சுடர் விட்டது. மற்றொரு பெரிய மலையிலும் ஒரு திருக்குறள் தகதகத்தது. (742)

இவற்றையெல்லாம் இந்தக் குன்றுகளிலும் மலைகளிலும் உயிர்க்கு நேரக்கூடிய எந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தாது திருக்கோட்டியூர்க் கோபுரத்தில் ஏறி நின்று வாரும் சகத்தீரே! நாராயண மந்திரத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று உலக உபகாரமாகப் பெரியவர் இராமானுஜர் சொன்னதைப் போல் இந்தப் பாலமதி மலையிலும், குன்றிலும், 'உலகமே! இந்த அற விளக்கைக் காணுங்கள்' என்று சொல்லுவது போலத் திருக்குறளைப் பொறித்த அந்த மாமனிதர் யாரோ?

கண்ணெதிரே எல்லா மலைகளையும் விட ஓங்கி அகன்று நிற்கும் மலையை நாங்கள் கண்டோம். ஓ! எவ்வளவு பெரிய மலை? இந்த மலையை விட உலகில் வேறு எது உயர்ந்தோங்கி நிற்க முடியும்? என்று எங்கள் உள்ளத்தில் எழுந்த வினாவுக்கு அந்த மலையில் அந்தப் பெயர் தெரியாத சான்றோர் எழுதி வைத்த குறள் விடை கூறிற்று.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரியது.

எந்தச் சூழ்நிலையிலும் அசையாமல் நிலை கலங்காது, பிறர்க்கு உதவி செய்வதே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்பவருக்கு முன் இந்த மலை எம்மாத்திரம்? இந்த மலைக்கும் சோதனைகள் வரலாம். எரிமலை இதனுள் வெடிக்கலாம். பூமி பிளந்து மலையே ஆழ்ந்து கடலுக்குள் மறையலாம். ஆனால், சான்றோர், பண்பாடுமிக்க பெரியவர் புகழ் என்ற மாமலை கால வெள்ளத்தில் கரையுமா? புத்தரின் சாந்தம், இயேசுவின் அருள் கனிந்த நோக்கும், முகம்மது நபியின் அஞ்சாமையும், வள்ளலாரின் அடக்கமும், காந்தியடிகளின் சான்றாண்மையை வெளிப்படுத்தும் இந்த மலையால் காட்ட முடியாதே என்றது அந்த அறவிளக்கு.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/tvm1.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/30/மலையின்-மேல்-அறவிளக்கு-3318440.html
3313659 தமிழ் மொழித் திருவிழா சிங்களாந்தகபுரம் அமரேசுவரம் கோயில் கல்வெட்டுகள் முனைவர் மு. நளினி DIN Sunday, December 29, 2019 05:22 AM +0530  

 சிராப்பள்ளித் துறையூர்ச் சாலையில் ஏறத்தாழ 40 கி. மீ. தொலைவில் காளிப்பட்டியிலிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 1 கி. மீ. தள்ளியமைந்துள்ளது கல்வெட்டுகளில் சிங்களாந்தகபுரம் என்றழைக்கப்படும் சிங்களாந்தபுரம். சோழர் காலத்தில் வணிகநகரமாக விளங்கிய இவ்வூரின் நடுப்பகுதியில் உள்ளது கல்வெட்டுகளில் அமரேந்திர ஈசுவரமுடையார் என்றழைக்கப்படும் அமரசுந்தரேசுவரர் கோயில்.

 இக்கோயிலிலிருந்து இந்தியத் தொல்லியல்துறையின் கல்வெட்டுப் பிரிவு 1943இல் 10 கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களைப் பதிப்பித்துள்ளது. அந்தக் கல்வெட்டுகளின் பாடங்களைப் படித்தறிய மேற்கொண்ட களஆய்வின்போது அவற்றுள் ஒன்றிரண்டு தவிர ஏனைய அனைத்தும் திருப்பணிகளால் சிதைக்கப்பட்டுச் சிதறுண்டு கிடப்பதைக் காணமுடிந்தது. துணுக்குகளாய்க் கட்டுமானத்தின் பல்வேறு இடங்களில் நுழைக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகளைத் தொடர்புபடுத்திப் பாடங்களைக் கண்டறிய மேற்கொண்ட முயற்சியின் போது 17 புதிய கல்வெட்டுகளும் பல துண்டுக் கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. இவ்வூர்ப் பெருமாள் கோயிலில் நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் ஒரு கல்வெட்டும்  ஊர்த்தெருவில் உள்ள சந்திக்கல்லில் ஒரு கல்வெட்டும்  உள்ளன. 
மன்னர் பெயரற்ற அவற்றின் சுருக்கங்களும் கல்வெட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சந்திக்கல் கல்வெட்டின் பாடம் ஆவணம் 17ஆம் தொகுதியில் பதிவாகியுள்ளது.

 இக்கோயிலிலிருந்து தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முதல் இராஜேந்திரசோழரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே காலத்தால் முற்பட்டது. இதே ஆட்சியாண்டில் இம்மன்னரின் புதிய கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் காலத்தனவாக 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் ஆட்சியாண்டற்ற கல்வெட்டுகள் இரண்டும் இங்குள்ளன. முதல் குலோத்துங்க சோழரின் 28, 32ஆம் ஆட்சியாண்டுகளில் 2 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதே மன்னரின் 45ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் ஆட்சியாண்டற்ற இரண்டு கல்வெட்டுகளும் களஆய்வில் கண்டறியப்பட்டன. மூன்றாம் இராஜராஜரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும்
சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 22ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் 11 மன்னர் பெயரற்றனவாய் 2 கல்வெட்டுகளும் கல்வெட்டறிக்கையில் பதிவாகியுள்ளன.

 புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்று சடையவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தது. ஒன்று, முதல் இராஜாதிராஜர் மெய்க்கீர்த்தியுடன் கிடைத்துள்ளது. எஞ்சிய புதிய கண்டுபிடிப்புகளும் துண்டுக் கல்வெட்டுகளும் சோழர் கால எழுத்தமைதியில் இருந்தபோதும் அவை பொறிக்கப்பட்ட காலத்திற்குரிய மன்னரைக் கண்டறியக்கூடவில்லை. சில துண்டுக் கல்வெட்டுகள் மெய்க்கீர்த்திகளின் எச்சங்களாக உள்ளன. அவற்றுள் ஒன்று வீரராஜேந்திரரையும் மற்றொன்று ஸ்ரீவல்லபப் பாண்டியர் (1120-1146) அல்லது விக்கிரமபாண்டியரையும் (1283-1296) சுட்டுகின்றன.

சிங்களாந்தகபுரம் 
  கல்வெட்டுகளில் இக்கோயில் உள்ள ஊர் சிங்களாந்தகபுரம் என்றே தொடக்கம் முதல் அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையை வென்றமை குறித்து முதல் இராஜராஜருக்குச் சிங்களாந்தகன் என்ற பெயர் வழங்கியது. அப்பெயரால் உருவாக்கப்பட்ட ஊராகச் சிங்களாந்தகபுரத்தைக் கருதலாம். ஊர்ப்பெயரின் பின்னொட்டாக உள்ள ‘புரம்’, இவ்வூரை நகரத்தார் குடியிருப்பாகக் காட்டுகிறது. அதற்கேற்பக் கல்வெட்டுகளும் இவ்வூரின் ஆட்சியாளர்களாக நகரத்தாரையே சுட்டுகின்றன. சோழர் காலத்தில் இவ்வூர்க் கரிகாலக்கன்ன வளநாட்டின் கீழிருந்த வள்ளுவப்பாடி நாட்டிற்கு உட்பட்டதாக அமைந்திருந்தது. இவ்வள்ளுவப்பாடிநாடு பிற்சோழர் காலத்தே இருபிரிவுகளாகிக் கீழ், மேல் வள்ளுவப்பாடி நாடுகளாக அறியப்பட்டது. 

நாடு, ஊர்
  இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பிற நாடுகளாக உச்சங்கப் பாண்டிநாடு, வடவழிநாடு, பாச்சில் குறுவட்டம், உறையூர்க் கூற்றம், கொல்லிமலை நாடு ஆகியன அறியப்படுகின்றன.  கொல்லிமலை நாடு கொங்க வீரசோழ மண்டலத்துக்கு உட்பட்டிருந்தது. கொடையாளர்கள், சான்றாளர்களின் வாழிடங்களாகவும் கொடையளிக்கப்பட்ட, விற்கப்பட்ட நிலங்களின் இருப்பிடங்களாகவும் 32 ஊர்களின் பெயர்களை இங்குள்ள கல்வெட்டுகள் வழங்குகின்றன. அவற்றுள் கொழுவாடிப் பனையூர், காட்டூர், கிரமந்தூர், துறையூர், கிரியூர், சிறுகண்ணனூர், ஊற்றத்தூர், கரும்பனூர், பிலாண்டூர், ஆதனூர், அடியூர், வெங்களூர் ஆகிய 12 ஊர்களின் பெயர்கள் ஊர் என்ற பின்னொட்டுடன் முடிய, அவனிமங்கலம், இஞ்சிமங்கலம், கீழ்மாறமங்கலம் ஆகிய மூன்றும் மங்கலம் எனும் பின்னொட்டுடன் பிராமணர் குடியிருப்புகளாக இருந்தன. 

  சிற்றம்பரான உத்தமசோழபுரம், கிடாரங் கொண்ட சோழபுரம், திரிசிரபுரம் ஆகியவை புரம் எனும் பின்னொட்டுடன் வணிகக் குடியிருப்புகளாகத் திகழ்ந்தன. பல்வேறு பின்னொட்டுக்களைக் கொண்ட ஊர்களாக வேப்பந்திட்டை, சிறுகல், குன்றணி, புல்லாணி, குறுச்சி, மேல்பாலை, வாழ்பாறை, செட்டிக்குளம், வெண்மணி, உலகப்பள்ளி ஆகிய 10 ஊர்கள் அறியப்படுகின்றன. நல்லூர் என்ற பின்னொட்டுடன் அணிகோவைநல்லூரும் குடி என்ற பின்னொட்டுடன் நெட்டணங்குடி, பூலாங்குடி, சிறு கள்ளிக்குடி ஆகிய மூன்று ஊர்களும் இருந்தன.

 துறையூர் மேல்வள்ளுவப்பாடி நாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. சிங்களாந்தகபுரம், கிடாரங் கொண்ட சோழபுரம், சிற்றம்பரான உத்தமசோழபுரம் ஆகிய ஊர்கள் நகரத்தார் ஆட்சியிலும்  பிலாண்டூர் ஊரார் ஆளுகையிலும் வடவழி, வள்ளுவப்பாடி, பாச்சில் குறுவட்டம், கொல்லிமலை ஆகிய நாடுகள் நாட்டார் மேலாண்மையிலும் இருந்தமை கல்வெட்டுகளால் தெரியவருகிறது. நிலவிற்பனை, வரிநீக்கம், வரிப் பொறுப்பேற்றல் முதலியன இந்த ஆட்சியமைப்புகளின் செயற்பாடுகளாக இருந்தன. கீழ்வள்ளுவப்பாடி நாட்டார் துறையூர் சிவன்கோயிலான பெருமாட்டீசுவரத்தின் திருமண்டபத்தில் கூடிச் செயற்பட்டமை கல்வெட்டொன்றால் அறியக்கிடக்கிறது. நாட்டார் அமைப்பின் வரவு செலவுகளைப் பதிவுசெய்யும் பொறுப்பிலிருந்த கணக்காளர் நாட்டுக்கணக்கு எனப்பட்டார்.

வேளாண்மை
  விளைநிலங்கள் நன்செய், புன்செய், நீர்நிலம் எனப் பல வகையாக இருந்தன. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானமாகவும் பெருமாள் கோயில் நிலங்கள் திருவிடையாட்டமாகவும் அய்யனார் நிலத்துண்டுகள் அய்யன்பாத்தி என்றும் பிடாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலப்பகுதிகள் பிடாரிப்பட்டி என்றும் துர்க்கைக்குத் தரப்பட்டிருந்த நிலம் துக்கை இறையிலி என்றும் அழைக்கப்பட்டன. நிலத்துண்டுகள் குவளைச் செய், உவன்றிச் செய் எனப் பல்வேறு பெயர்கள் ஏற்றிருந்தன. சில நிலத் துண்டுகள் உரிமையாளர் பெயரையேற்று பட்டர்கள் இறையிலி, உத்தமசோழக்கோன் செய், கிடாரங் கொண்ட சோழக்கோன் நிலம் என்றும் அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கேற்ப விளக்குச் செய் என்றும் பெயர் கொண்டிருந்தன. மச்சிறுப்பாள் செய், தும்பி நாவல் என்பன போன்ற பெயர்களும் சில நிலத்துண்டுகளுக்கு வழங்கின. பயிரிடமுடியாத நிலப்பகுதிகள் களர், கரம்பை எனக் குறிக்கப்பட்டன. 

நீர்ப்பாசனம்
  சிங்களாந்தகபுரத்து நிலங்கள் ஆறு, குளம், கிணற்றுப் பாச னத்தில் செழித்தன. ஐய்யாறும் படகதன் ஆறும் கொல்லிமலைப் பகுதியை வளப்படுத்திய சிற்றாறுகளாகலாம். துண்டுக் கல்வெட்டொன்றில் இடம்பெறும் குண்டாறு இப்பகுதியிலிருந்த சில ஊர்களின் கழனிகளுக்கு வளமளித்தது போலும். சிங்களாந்தக புரம், துறையூர், ஆதனூர், வெங்களூர் ஆகிய ஊர்கள் பெரிய குளங்களைக் கொண்டிருந்தன. நகரத்தாரிடம் பொன்னளித்துச் சிங்களாந்தகபுரப் பெரிய குளத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டது. ஆதனூர்ப் பெரிய குளத்திலிருந்து குமிழி வழி வாய்க்கால்களில் பாய்ந்த நீர் கண்ணாறுகளை அடைந்து நிலங்களுக்கு வளமூட்டி யது. சில கண்ணாறுகள் பெயரேற்றிருந்தன. வெங்களூர் நிலங்கள் அவ்வூர்ப் பெரிய குளத்தைச் சூழ இருந்து வளம் பெற்றன. பிலாண்டூர் எல்லைகளுள் ஒன்றாக நம்பியேரி குறிக்கப்படுவதால் அவ்வூர் நிலங்களின் பாசனத்துக்கு ஏரிநீரும் பயன்பட்டதெனலாம்.

  மணிக்கிராம வாய்க்கால் என்ற நீர்வழியின் பெயர் முக்கியத் துவம் வாய்ந்தது. இப்பெயர் மணிக்கிராமம் என்றழைக்கப்படும் வணிகக் குழுவினர் அவ்வாய்க்காலை அமைத்தமை பற்றியோ அல்லது இப்பகுதியில் வாழ்ந்த மணிக்கிராமத்தார் நிலங்களுக்கு அவ்வாய்க்கால் நீரளித்தமை பற்றியோ ஏற்பட்டதாகலாம். சிங்களாந்தகபுரம், நகரத்தார் வாழிடமாக இருந்தமை அதன் பெயராலும் கல்வெட்டுகளாலும் உறுதிப்படுவதால் மணிக்கிராமத்தார் இங்கு வாழ்ந்த நகரத்தார் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். துறையூரின் வடக்குப் பகுதியில் இருந்த குளத்தின் நீர் அவ்வூரிலிருந்த அமரசுந்தரேசுவரர் கோயில் நிலங்களை வளப்படுத்தியது. நிலங்களின் மிகைநீர் வதிகளின்வழி வடிந்து பாசனத்திற்குப் பயன்பட்டதைத் திருவரங்க வதி சுட்டுகிறது. 

வரிகள்
  இக்கோயில் கல்வெட்டொன்று சுட்டும் இறை, நிலஉரிமையாளர்களிடம் பெறப்பட்ட முதன்மையான நிலவரியாகும். இதுவே கடமை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வரி வேற்றூர்க் கல்வெட்டுகள் சிலவற்றில் காணிக்கடன், மேல்வாரம், ஒபாதி என்ற பெயர்களாலும் சுட்டப்பட்டுள்ளது. குடிமை, உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வரியாகும். இதை உழுகுடிகள் செலுத்திய வரி என்றும் குறிப்பிடுவர்.  உடலுழைப்புச் சார்ந்த வரியாக இது கருதப்படுகிறது. வெட்டி, அமஞ்சி, முட்டையாள், வேதினை என்பன இதனுள் அடங்கும். நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அவற்றின் கரைகளைப் பலப்படுத்தவும் இத்தகு உடலுழைப்பு வரியாகக் கொள்ளப்பட்டது. அமரசுந்தரேசுவரர் கல்வெட்டுகளில் குடிமை, வெட்டி எனும் இரண்டு வரியினச் சொற்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.   

  அலுவல் காரணமாக ஊருக்கு வரும் அரசுஅலுவலர்களுக்கு உணவிடப் பெறப்பட்ட வரி எச்சோறு எனப்பட்டது.16 அமரசுந்தரேசுவரர் கல்வெட்டொன்றில் நிலஞ்சார்ந்து தண்டப்பெற்ற வரியினங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. இராசகரம் அரசுக்குப் பெறப்பட்ட வரியாகும்.

கோயில் 
  முதல் இராஜேந்திரர், முதல் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளில் அமரேந்திர ஈசுவரத்து மகாதேவராகக் குறிக்கப்படும் இக்கோயில் இறைவன், மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டில் அமரசுந்தர நாயனாராகப் பெயர் மாற்றம் பெறுகிறார். முதல் இராஜேந்திரர் திருஅவதாரஞ் செய்தருளின சித்திரைத் திருவாதிரையை ஒட்டி, இக்கோயில் இறைவனுக்கு ஏழு நாள்கள் விழா எடுக்க முடிவு செய்த சிங்களாந்தகபுர நகரத்தார், அதற்கெனத் தருவார் தரும் பொன்னும் காசும் வஸ்துக்களும் கொண்டதோடு, விளக்குகள் வைக்கவும் வழியமைத்தனர். இந்நிவந்தத்திற்குச் சிங்களாந்தகபுர வளஞ்சியர்கள் அவரவர் விற்பனைப் பொருளில் ஒரு பங்கினை வழங்கவும் இசைந்தனர். கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருப்பதால் விற்பனைப் பொருள்களையோ, அவற்றிலிருந்து அளிக்கப்பட்ட பங்கினையோ அறியக்கூடவில்லை.

  தொடர்பற்றுக் கிடைக்கும் முதல் இராஜேந்திரரின் 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,  ஆரிதன் கோவிந்தன் காளன், சிங்களாந்தகபுர நகரத்தாரிடம் கிரமந்தூரில் 40 காசுக்கு நீர்நிலம் விலைக்குப் பெற்றமையைத் தெரிவிக்கிறது. இந்நிலம் எதற்காகப் பெறப்பட்டது என்பதை அறியக்கூடவில்லை. 

முதல் இராஜேந்திரரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு, கொங்க வீரசோழ மண்டலத்துக் கொல்லிமலை நாட்டுப் பிலாண்டூர் ஊரவையார் தங்கள் ஊரை, உரிய பொன் பெற்றுக் கோயிலுக்குத் தேவதானமாக விற்றதாகக் கூறுகிறது. குறும்பரும் வன்னியரும் இப்பிலாண்டூர் ஊராரைத் துன்புறுத்தி அவர்களுள் சிலரைச் சிறைபிடித்துச் சென்றமையால், அவர்தம் தொல்லைகளிலிருந்து விடுபடப் பிலாண்டூர் ஊரார் தம் பாதுகாப்பிற்காக இவ்விற்ப னையை மேற்கொண்டனர். இப்பிலாண்டூரின் எல்லைகளாக ஐய்யாற்றில் விழுந்த நீர்வாரை, கீழ்மாறமங்கலம், கொழுவாடிப் பனையூர், படகதனாறு, புறப்பாதை, முக்கறைச்சிமலை ஆகியன குறிக்கப்படுகின்றன.  இறைவனின் தேயமாக அறிவிக்கப்பட்ட பிலாண்டூரில் அவ்வூர் மக்கள் குடியிருக்கவும் கடமை, குடிமை முதலிய வரிகளை அவர்களே செலுத்தவும் இவ்விற்பனை ஆவணம் இடமளித்துள்ளது. 

  முதல் குலோத்துங்கரின் 28ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் இறைவனின் வழிபாட்டிற்கும் திருப்பணிக்கும் உடலாக நிலம் முற்றூட்டாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கொடையாளி உள்ளிட்ட பிற தகவல்களை அறியமுடியவில்லை.  அதே மன்னரின் 32ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, சிங்களாந்தகபுரத்தைச் சேர்ந்த வணிகர் நெட்டணங்குடையான் சுந்தரன் இக்கோயில் இறைவனுக்கு மூன்று சந்தியிலும் திருவமுது அளிக்கத் தந்த கொடையைச் சிங்களாந்தகபுர நகரத்தார் ஏற்றமை குறிக்கிறது.

   மூன்றாம் இராஜராஜரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் மேலைத் திருமடைவிளாகத்திருந்த சோமிதேவி சிறுப்பிள்ளைகளில் உச்சங்கப் பாண்டிநாட்டு உலகப்பள்ளி கேசுவன் தேவன் மகன் தன்னரசன், தம் கைப்பொன்னைச் செலவழித்துச் சிங்களாந்தகபுரத்தில் மடம், நந்தவனம், கிணறு அமைத்த தகவலைத் தருகிறது. அவரே நந்தவனப் பணியாளருக்கு வாழ்வூதியமாக 300 குழி நிலம் உள்ளூர் வணிகர்களிடம் இறையிலியாக விலைக்குப் பெற்றுத் தந்தார். கரிகாலக்கன்ன வளநாடு, வள்ளுவப்பாடி, வடவழிநாடு, பாச்சில் குறுவட்டம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாட்டாரும் நகரத்தாரும் இம்மடத்தில் தேசாந்திரிகளாய் உள்ள மாகேசுவரர் உணவருந்தவும் மடத்துக்கான நிருவாக, திருப்பணிச் செலவுகளுக்காகவும் மடத்தில் விளக்குகள் ஏற்றவும் துறையூரில் நன்செய்க் குழி 200ம் கிரியூரில் புன்செய்நிலம் 2 வேலியும் இறையிலியாக அளித்தனர்.

  இதே மன்னரின் காலத்ததாகக் கொள்ளத்தக்க மற்றொரு பலகைக் கல்வெட்டு, கேசுவதேவர் மகன் காசுவன் சோழகோன் தாம் அமைத்த நந்தவனத்திற்கும் அதன் குடிகளுக்குமாய்ச் சிங்களாந்தகபுரத்துத் தானத்தாரிடம் பொன் அளித்து இறையிலியாகப் பெற்ற நிலத்தைத் தன்னரசனும் போகனாச்சனும் உழுது மேல்வாரம் கொள்ள இசைந்தமை கூறுகிறது.

  பெருமண்டபத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, வள்ளுவப்பாடி நாட்டான் நூற்றுக்கால் மண்டபத்திருந்த அத்தூணைச் செய்தவர்களாகக் கரிகாலக்கன்ன வளநாட்டுச் சிறுகண்ணனூரைச் சேர்ந்த இடையர் ஊரன் சொக்கன் தண்டேசுவரநம்பி, வேம்பன் பெருமாள் சக்கரவர்த்தி, சிரன், தெற்றி ஆகியோர் பெயர்களைத் தருகிறது.  மற்றொன்று, அக்கல்வெட்டுள்ள திருக்காவணக் காலைச் செய்தவராக அணிகோவைநல்லூரைச் சேர்ந்த அரைசில் அஞ்சாத கோபாலனைச் சுட்டுகிறது.

  சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 22ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வடகரை ஊற்றத்தூர் மேல்வழிக் கீழ்வள்ளுவப்பாடி நாட்டு  நாட்டார், மேலை வள்ளுவப்பாடி நாட்டுத் துறையூர்ப் பெருமாட்டீசுவரமுடைய நாயனார் கோயில் திருமண்டபத்தில் கூடி, மன்னரின் நலத்துக்காக அமரசுந்தர நாயனாருக்கு அமுதுபடி சாத்துபடி, திருநாள், திருப்பணித் தேவைகளுக்கான முதலுக்காக நாயன்மார் தேவதானம், திருவிடையாட்டம், ஐயன்பாத்தி, பிடாரிப்பட்டி, துக்கையார் இறையிலி, பட்டர்கள் இறையிலி தவிர்த்த நன்செய், புன்செய், மாவடை, குளவடை உள்ளிட்ட கரும்பனூரை ஊரமை இறையிலியாக அளித்ததாகக் கூறுகிறது. அவ்வூருக்கான இராசகரம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நாட்டாரே செலுத்துவதாக ஆவணம் அமைந்தது. இக்கல்வெட்டுச் சுட்டும் நாயன்மார் தேவதானம் திருத்தொண்டர்களாக அறியப்படும் 63 நாயன்மார்களின் வழிபாட்டிற்கு அளிக்கப்பட்ட நிலமாகலாம்.

  கரும்பனூர் நத்தத்திலும் ஊரின் நான்கு எல்லைகளிலும் அது கோயிலுக்குரிய ஊர் என்பதைச் சுட்டுமாறு முத்தலைஈட்டி (அஸ்திரதேவரை) பொறித்த கற்களை நட்டுக்கொள்ளவும் ஆவணம் வழியமைத்தது. இந்த ஆவணத்தில் பாண்டியராயன், செம்பியதரை யன், வளவகோன், அதிகைராயன் ஆகிய நாட்டார் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நம்புசெய்வார், செல்வன் செல்வ நம்பி ஆகிய நாட்டார் உறுப்பினர்கள் இருவரும் எழுத்தறிவற்றவர் களாய் (தற்குறிகளாய்) இருந்தமையால், ஆவணத்தில் அவர்களுக்கு மாற்றாகச் சமைய சேனாபதியும் வில்லவதரையனும் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாவணம் எழுதப்பட்ட காலத்து நாட்டுக் கணக்காகப் பணியாற்றியவர் வேப்பந்திட்டை வில்லவ தரையர்.

எறிவீரதளக் கல்வெட்டு
  சிங்களாந்தகபுர மடத்துத் தெருவில் நடப்பட்டிருக்கும் சந்திக் கல் ஐயபொழில் ஐநூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டையும் அவர்தம் சின்னங்களையும் கொண்டுள்ளது. சந்திக்கல்லின் ஒருபுறம் தொடங்கும் கல்வெட்டு, கல்லின் பக்கப்பகுதிகளில் வளர்ந்து, மறுபக்கத்தில் வணிகக் குழுவின் சின்னங்கள் செதுக்கப்பட்டிருக்கும் பகுதிக்குக் கீழ் முடிகிறது.  முத்தலைஈட்டி, கத்தி, குத்துவிளக்கு, கொற்றக்குடை, கவரி, வில், வேல், அங்குசம், பசும்பை, வளைதடி ஆகியன ஐநூற்றுவர்ச் சின்னங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

  அரசர் பெயரோ, காலக்குறிப்போ அற்ற இக்கல்வெட்டில் 103 வரிகள் உள்ளன. முதல் 20 வரிகள் ஐநூற்றுவரின் பெருமை களை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பதிவு செய்துள்ளன. எறியும் எறிவீர தளமுமான சிங்களாந்தகபுரத்தில் வாழும் வணி கர்களான இவ்ஐநூற்றுவர் ஐநூறு வீரசாசனங்களைப் பெற்றவர்; வாசுதேவன், கண்டழி, மூலபத்திரர் ஆகிய கடவுள்களின் வழியில் வந்தவர்; ஐயபொழில்நகர்ப் பரமேசுவரியின் மக்கள்; அறம் வள ரும் செயலாற்றி அனைத்துத் திசைகளிலும் புகழ் பொலிய வாழ்பவர்; செங்கோலைத் தெய்வமாகக் கொண்டவர்; சமைய (குழுவின்) ஒழுக்கத்தை ஒழுங்குற ஒழுகுபவர். 

  கல்வெட்டில் அடுத்துள்ள பகுதி வலங்கை உய்யக்கொண் டார் குழுவின் மூன்று வீரச் செயல்களைப் பதினெண்பூமி வீரக்கொடியார் நினைவுகூர்வது போல அமைந்துள்ளது. 

  1. குறுநிலத் தலைவரான இருங்கோளராலும் அவரது வீரர்களாலும் வைகுந்தநாடாள்வார் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், உய்யக்கொண்டார்  படை அவரைக் காப்பாற்றியது. அப்போரில் உய்யக்கொண்டார் வீரர் இருவர் உயிரிழந்தனர். 

  2. மகதை நாடாள்வாரின் வீரர்களுள் ஒருவர் வணிகக்குழு வீரரான தேசியாபரணப் பிள்ளைமீது அம்பு எய்ய, சேதன் திடை கால் எனும் உய்யக்கொண்டார் வீரர் மகதை நாடாள்வாரைக் கொன்றார்.

   3. வீரக்கொடியாருள் ஒருவரான எதிரான் சிங்கன் தம் குழுவோடு சென்றபோது வழிமறித்த வேட்டுவர்கள் வீரகள்மதலை என்பாரைப் பிடித்துச் சென்றனர். உய்யக்கொண்டார் படை போராடி அவ்வீரரை மீட்டது.

இவ்வீரச் செயல்களுக்கு நன்றிக்கடனாகச் சிங்களாந்தகபுரப் பதினெண்பூமி வீரக்கொடியார் தாங்கள் அந்நகரத்தில் பெற்று வந்த வருவாயை வலங்கை உய்யக்கொண்டாருக்கு வழங்கினர். இவ்வீரக்கொடியார் ஐநூற்றுவர் வணிகக் குழுவின் காவல் வீரர்களாவர். 

புதிய கல்வெட்டுகள் 
   இங்குக் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுள் முதல் இராஜேந்திரரின் 5ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, இக்கோயில் சித்திரைத் திருவாதிரைத் திருவிழாவின்போது எழுந்தருளும் இறைவனுக்குச் சிறுகாலைச் சந்தியில் திரு அமுது அளிக்க ஆதனூர் ஊரார் அவ்வூர்ப் பெரிய குளத்தின் கீழ் இருந்த குவளைச்செய் கால்வேலியை இறையிலியாகக் கொடையளித்ததாகக் கூறுகிறது. அவர் காலத்ததான மற்றொரு துண்டுக் கல்வெட்டு, வெங்களூர்ப் பெரிய குளத்தின் கீழிருந்த நிலப்பகுதி இக்கோயில் அர்ச்சனாபோகத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்கிறது. முதல் இராஜாதிராஜரின் மெய்க்கீர்த்தியோடு உள்ள கல்வெட்டு, கிடாரங் கொண்ட சோழபுரத்து வணிகர் விருத்திரி கோயிலாரிடம் ஒப்புவித்த கொடையொன்றைச் சுட்டுகிறது. 

   முதல் குலோத்துங்கரின் 45ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் இறைவனுக்கு நாகன் சுந்தரன் என்னும் வணிகர் அளித்த கொடையைச் சுட்ட, அதே மன்னரின் துண்டுக் கல்வெட்டுகளுள் ஒன்று, இறைவன் முழுக்காட்டிற்குப் பிறகு மந்திரபோனக அமுது கொள்ள அளிக்கப்பட்ட கொடையைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டால், கரணநாழி என்ற முகத்தலளவை இப்பகுதியில் வழக்கிலிருந்தமை தெரியவருகிறது. மற்றொரு துண்டுக் கல்வெட்டு, இறைவன் கோயில் பள்ளியறை நம்பிராட்டியாருக்கான வழிபாடு, படையலுக்காக அன்றாடு நற்காசு 30 தரப்பட்டமை சொல்கிறது. 

  இறைவன், அம்மன் கோயில் பெருமண்டபத் தூண்களில் கண்டறியப்பட்ட பிற்சோழர் காலப் புதிய கல்வெட்டுகள் மூன்றும் அத்தூண்களைச் செய்தவர்களாகக் காட்டூர் சோழக்கோன், சிறுகள்ளிக்குடியில் காவலுடைய சேமன் வல்லானான கோன், நாயன், குன்றணி உடையதரையன், நம்பி, பெரியகோன் ஆகியோரைச் சுட்டுகின்றன. 

  மன்னர் பெயரற்ற நிலையில் மதில்சுவரில் காணப்படும் முழுமையான பிற்சோழர் காலக் கல்வெட்டு அரசரின் சாமந்த முதலிகளில் ஒருவரான இருங்கோளரையும் அவரது குதிரையையும் குறிக்கிறது.  சிங்களாந்தகபுரத்து நன்செய்க் கங்காணியில் உறைகாழீசுவரம் தவிர வேறோர் வரி கொள்ளக்கூடாது என்று கூறும் இக்கல்வெட்டு, அப்படிக் கொள்வார், இருங்கோளன் குதிரைக்குப் புல்லிடுவானுக்குத் தம் மனைவியை அளித்தவராகக் கருதப்படுவர் என்றும் எச்சரிக்கிறது.

சடையவர்மரின் சிதைந்த கல்வெட்டு, மேல் வள்ளுவப்பாடி நாட்டார் இக்கோயில் இறைவனின் வழிபாடு, படையல், திருவிழா, கோயில் திருப்பணி ஆகியவற்றின் தேவைக்கெனத் தேவதான இறையிலியாக ஊரொன்றைக் கொடையளித்ததுடன் அவ்வூருக்கான இராசகரத்துக்கு ஒரு பொன் செலவாக்கவும் இசைந்த தகவலைத் தருகிறது. 

துண்டுக் கல்வெட்டுகள்

   மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லாத நிலையில் இக்கோயிலின் பல பகுதிகளிலும் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகள் இங்கு நிகழ்ந்த பல பயனுள்ள செயற்பாடுகளை முன்வைக்கின்றன. முழுமையான தகவல்களாக இல்லை எனினும், இக்கோயில் சார்ந்த கொடைகளையும் அறக்கட்டளைகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. உத்தமசோழபுரத்து வணிகர் வைகினான் குன்றுடையான் இக்கோயிலில் மத்தியான சந்தியில் ஒரு சட்டிச் சோறு அளிக்கக் கொடையளித்துள்ளார். அது போலவே ஒரு கொடையாளி பொற்காசு தந்து சட்டிச்சோறு வழங்க உதவியிருக்கிறார். பரதேவர்தானம், மணிக்கிராம வாய்க்கால், வணிகர் நக்கன் அலங்காரன் திருச்சென்னடைக்கு அளித்த நிலத்துண்டு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட கரம்பை நிலம் இக்கோயிலுக் குக் கொடையளிக்கப்பட்டுள்ளது. 120 கழஞ்சு நிறையுள்ள வெள்ளித்தளிகை, 21 கழஞ்சு நிறையுள்ள வெள்ளி வட்டில் ஆகியன இக்கோயிலுக்குத் தரப்பட்டன. விலைக்குப் பெறப்பட்ட புன்செய்ப் புறணி நிலம் கோயில் நிவந்தக்காரர்களான மெய்மட்டி, உடுக்கைக்காரர் ஆகியோருக்குத் தலைக்கு ஒரு வேலி என்றும் பாணருக்கு ஒன்றரை வேலியாகவும் பிரித்து அளிக்கப்பட்ட தகவலைத் தரும் கல்வெட்டால் இக்கோயிலில் கருவிக்கலைஞர்களும் பாடுநர்களும் வாழ்ந்தமை அறியலாம். வணிகர் நக்கன் அலங்காரன் நிலத்துக்கு வடக்கிலிருந்த நிலத்துண்டொன்று இக்கோயிலுக்கு 68 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கோயிலில் விளக்கேற்றக் கொடையளிக்கப்பட்டுள்ளது. 

   இக்கோயிலில் உள்ள சாமுண்டி அம்மனுக்கான கரகங்கள் சில, எழுத்துப் பொறிப்புக்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று அதைச் செய்தளித்தவர்களாகச் செட்டிக்குளம் அருணாசலரெட்டி, நல்லப்பரெட்டி, அண்ணாமலை ரெட்டி ஆகியோரைக் குறிக்க, மற்றொன்று பெயர்கள் ஏதுமின்றிச் சாமாண்டி அம்மனுக்கு உபையம் என்ற பொறிப்பை மட்டும் பெற்றுள்ளது. மூன்றாவது கரகம் திருசிரபுரம் கோட்டையிலிருக்கும் பாகவதம் இராமய்யர் சிங்களாந்தபுரம் சாமுண்டி அம்மாளுக்கு உபையமாக அளித்தது. இங்குள்ள சின்னாரய்யப்பனுக்குச் செய்விக்கப்பட்ட பித்தளைக் குதிரையில் அதை அளித்தவராக ஆதனூர் உத்தண்ட பூசாரி மகன் மூத்த காவல்காரன் குறிக்கப்படுகிறார். 

காலம்  
   இங்குள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதல் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டிற்குரியது. ஊரின் பெயர் கொண்டும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையிலும் சிங்களாந்தகபுரம் அமரேசுவரர் கோயிலை முதல் இராஜராஜர் காலத்ததாகக் கொள்ளலாம். பல்வேறு காலக்கட்டத் திருப்பணிகளின் விளைவாகக் கட்டுமானம் உருமாறியிருந்தபோதும் கல்வெட்டுகள் கண்காட்டுவதன் வழிக் கோயிலின் காலத்தை உறுதிசெய்ய முடிகிறது.

குறிப்புகள்
1.      ARE 1943-44: 226 - 235.
2.     The Hindu 12. 9. 2017.
3.     ARE  1943-44 : 236. 
4.     ARE  1943-44 : 237. 
5.     எ. சுப்பராயலு, இல. தியாகராசன், சிங்களாந்தபுரம் எறிவீர தளக் கல்வெட்டு, ஆவணம்-17, பக். 14 - 18.
6.     ARE 1943-44: 233.
7.     ARE 1943-44: 230. கல்வெட்டறிக்கையில் ஆட்சியாண்டு 6 எனக் குறிக்கப்பட்டுள்ளது. 
8.     ARE 1943-44: 229. ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டது.
9.    ARE 1943-44: 228, 232.
10.    ARE 1943-44: 234, 235.
11.    ARE 1943-44: 231. 
12.    ARE 1943-44: 226, 227.
13.     பூ. சுப்பிரமணியம், மெய்க்கீர்த்திகள், பக். 219, 270.
14.    Y.Subbarayalu, South India under the Cholas, PP.93 - 94.  
15.    மேற்படி, ப. 94.  
16.     மு. நளினி, இரா. கலைக்கோவன், பாச்சில் கோயில்கள், பக். 127.
17.     தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, தொகுதி 1, ப. 68.
18.     ARE 1943-44: 233. இக்கல்வெட்டைப் பாண்டியருடையதாகக் குறிக்கும் கல்வெட்டறிக்கை, விழா கோயில் இறைவிக்கு எடுக்கப்பட்டதாகவும் சுட்டுகிறது. 
19.    ARE 1943-44: 239. 
20.    ARE 1943-44: 229. முக்கறைச்சிமலை என்ற சொல் வழக்கு பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக் குறிப்பிடும் பச்செறிச்சின்மலை என்ற பெயருடன் ஒப்புநோக்கத் தக்கது. ஆவணம் 1, ப. 68.
21.     ARE 1943-44: 228.
22.    ARE 1943-44: 232.
23.    ARE 1943-44: 234.
24.    ARE 1943-44: 233.
25.     ARE 1943-44: 226.
26.    ARE 1943-44: 227.
27.    ARE 1943-44: 231. 
28.    இது போன்ற இரண்டு கல்வெட்டுகள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் காருகுடியிலும் மலம்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளன. பாடங்களுக்குக் காண்க: வரலாறு 24, பக். 17-18, ஆவணம் 20, பக். 6-8.

29.     இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயில் பெருமண்டப வடக்குச் சுவரிலுள்ள ஐநூற்றுவர் கல்வெட்டு பசும்பையைக் கோட்டுருவச் செதுக்கலாகக் கொண்டுள்ளது.

30.    ‘உய்யக்கொண்டான்’ முதல் இராஜராஜரின் விருதுப்பெயர்களுள் ஒன்றாகும். இப்பெயரில் சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பாசன வாய்க்கால் உள்ளது. பேட்டைவாய்த்தலையில் தொடங்கி வாழவந்தான்கோட்டை ஏரியில் முடியும் இது பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் சோழமாதேவி கயிலாசநாதர் கோயிலிலும் உய்யக்கொண்டான் திருமலை விழுமிய நாயனார் கோயிலிலும் உள்ளன. இரா. கலைக்கோவன், உய்யக்கொண்டான் ஆறு, பதிப்பிக்கப்படாத கட்டுரை, 2018. 

31.    இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளாற் போல் எறிவீரதளக் கல்வெட்டிலும் இருங்கோளன் எனும் குறுநிலைத் தலைவர் குறிக்கப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. கல்வெட்டில் அவரது குதிரைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதன்மை கருதியோ என்னவோ இன்றைக்கும் அமரசுந்தரர் கோயிலில் குதிரை வீரர் திருமேனிகள் வழிபாட்டுச் சிறப்பு பெறுகின்றன. 

32.    உறைகாழீசுவரம் எனும் வரியினம் பற்றிய குறிப்பேதும் கல்வெட்டுச் சொல்லகராதியில் இல்லை. இந்நூலாசிரியர்கள் அறிந்தவரையில் சிராப்பள்ளி மாவட்டக் கல்வெட்டுகளில் இவ்வரியினம் பற்றிய சுட்டல் இல்லை. இது குறித்த ஆய்வு தொடர்கிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/Amarasundaresvarar_koyil_Vimanamum_mandapankalum.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/23/சிங்களாந்தகபுரம்-அமரேசுவரம்-கோயில்-கல்வெட்டுகள்-3313659.html
3316243 தமிழ் மொழித் திருவிழா தமிழிலிருந்து தமிழ்களை நோக்கி எச்.ஹாமீம் முஸ்தபா,எழுத்தாளர் DIN Sunday, December 29, 2019 04:18 AM +0530  

திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்மிக்கப் பாடல் "பழம் நீ அப்பா ஞானப்பழம் நீ அப்பா /தமிழ்ஞானப் பழம் நீ அப்பா". கே.பி.சுந்தரம்பாளின் கணீர் குரல் பாடலை கண்காணா உயரத்துக்குப் பாடலைக் கொண்டு செல்லும். அந்தப் பாடலில் இடம்பெறும் வரியொன்று இவ்வாறு அமையும்

            "உன்
        தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
      தமிழுக்கு உரிமையுண்டு
     ஆறுவது சினம் கூறுவது தமிழ்...."

         தமிழா / சமஸ்கிருதமா என்னும் மொழி அரசியல் விளையாட்டில் அதிகாரம் தன்னை இறக்கிக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால் வரலாறும் அடுத்தடுத்து கிடைக்கின்ற தொல்லியல் தரவுகளும் தமிழ் மொழியின் மூப்பினை மறுபடியும் உறுதிப்படுத்துகின்றன. தொல்லியல் ஆய்வாளர் கே.ராஜன் அவர்கள் பொந்தல் என்னுமிடத்தில் சமீப காலத்தில் கண்டடைந்த தரவு தமிழ் பிராமி எழுத்துருவின் காலத்தை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்கொண்டு செல்கிறது .மக்களின் பேச்சு மொழியாக.ஆண்டவனின் மொழியாக, அதிகாரத்தின் மொழியாக,அதிகார எதிர்ப்பின் மொழியாக, பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது தமிழ்.

         தொல்காப்பியம் வரையறை செய்யும் தரப்படுத்தல்களுக்கு வெளியே பரந்துபட்டு கிடக்கின்றன  ஒரு பெருங்கூட்டம் தமிழிகள். தமிழ் மொழி என்று சொல்கிறோம் ஆனால் தமிழ் என்பது ஒன்றல்ல,ஒருகூட்டம் தமிழ்கள் தமிழ் நிலப்பரப்பில் இருகின்றன சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், நாஞ்சில் நாட்டுத் தமிழ், என நிலப்பரப்புகள் சார்ந்தும் சாதி, தொழில் உளிட்ட பண்பாட்டு,பொருளியல் அடையாளங்கள் சார்ந்தும் பன்மீயப் பண்புகொண்டதாக தமிழ் இருக்கிறது.

          சேரர்,சோழர், பாண்டியர் என்னும் வேந்தர் சார்ந்த அரசு உருவாக் கங்களில் சேர நாடு என்று அறியப்பட்ட நாட்டின் நிலப்பரப்பில் பெருமளவு கேரளாவின் நிலப்பரப்பாக மாறிப்போய்விட்டது. அந்த வட்டாரத்தின் தமிழும் அப்படியே ஆகிப்போனது.மலையாள மொழியில் தாய்மாமனை அழைக்க "அம்மாமன்''என்னும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். இது எந்த மொழிசார்ந்த சொல் ? தமிழுக்குரியதா? மலையாளத்தில் உருவானதா? என்னும் மயக்கம் வருகிறது.

        கவிஞர்.கண்ணதாசன் தன்னுடைய திரைப்பட பாடல்ஒன்றில் இதே பொருளினைத் தருகிற  ஏறத்தாழ இதுபோன்றதொரு சொல்லை எடுத்தாள்கிறார் "அத்தை மகனே போய்வரவா /அம்மான் மகனே போய்வரவா" என்பது அப்பாடலின் வரி.இதில் இடம்பெற்றுள்ள "அம்மான்'' என்னும் சொல்லும் மலையாள மொழியில் இருக்கின்ற "அம்மாமன்'' என்னும் சொல்லும் எழுத்துருவிலும், பொருளுருவிலும்,உச்சரிப்பிலும் அருகருகே இருப்பதைப் பார்க்கிறோம். அதுபோன்று "ஒடுக்கம்'' என்னும் சொல். "பின்னர்'' , "பிறகு'' என்னும் பொருளினைத் தருகிற இச்சொல் தமிழிலிருந்து மலையாளத்துக்கு சென்று சேர்ந்துள்ளது

        தந்தையைக் குறிப்பிட அல்லது தலைவனைக் குறிப்பிட  தமிழில் "அத்தன்'' என்னும் சொல்லும் இருக்கிறது .''அத்தன்''"அத்தா''என்றெல்லாம் இச்சொல் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகிறது.சங்க இலக்கியம் "அத்தன்'' எனும் சொல்லை எடுத்தாள பக்தி இலக்கியமோ "அத்தா'' எனும் சொல்லினை எடுத்தாள்கிறது.  

"பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய்,பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!"

என்கிறது சுந்தரர் தேவாரம் .

        மதுரையில் இருந்து தொடங்கி சென்னைவரை வாழ்கிற தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் தந்தையைக் குறிப்பிட அத்தா என்னும் சொல்லையே இன்றும் பயன்படுத்துகிறார்கள்.  "அத்தா''  என்னும் சொல் எங்கிருந்து எங்கு வந்தது? அல்லது இங்கிருந்து எங்கு சென்றது? என்பது இங்கு கேள்வியாகிறது. "அத்தா'' எனும் சொல் துருக்கி மொழியிலும் இதே பொருளில் கையாளப்படுகிறது. நவீன துருக்கியை உருவாக்கியவரான முஸ்தபா கமால் பாஷாவை அந்த நாட்டு மக்கள் "அத்தாதுருக்கி''என்றே அழைகின்றனர். "துருக்கியின் தந்தை'' என்பது இதன் பொருள்.

         தமிழ் மொழியின் புழங்குதளம் பரந்துபட்டது. வணிகத்தின் பொருட்டும், சமயப் பரப்புரையின் பொருட்டும் தமிழ் மண்ணுக்கு அறிமுகமான எல்லா மொழிகளோடும் தமிழ் கணிசமான கொள்வினை கொடுப்பினைகளை நடத்தியிருக்கிறது. பரிவர்த்தனை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்ந்த இத்தகைய மொழிசார் பரிமாற்றம் என்பதுடன் தேவைக்கு ஏற்ப தனக்கான எழுத்துருவையும் தமிழ் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், இன்றைய தமிழ் எழுத்துரு என்று தமிழ் மொழி எழுத்துருக்களின் வளர்வரலாறு நெடியது.

          தமிழை ஒத்த தொன்மையுடைய மொழிகளின் இருப்பு காலத்தில் கரைந்துபோக தமிழ் மொழியும் அம்மொழியில் உருவான இலக்கியமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடையிறாத தொடர்ச்சியினையும் செழுமையான வரலாற்றையும் கொண்டிருகின்றன. இத்தகைய சிறப்புக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது தன்னுடைய அடையாளம் எதையும் விட்டுக்கொடுக்கமால் மாறியும் வளர்ந்தும் வருகின்ற தமிழ் மொழியின்,அதன் எழுத்துருக்களின் நெகிழ்வுத்தன்மைதான்.

          மொழித்தளத்தில் எதிரிட வேண்டிவந்த அகப்புற நிலைப்பட்ட அனைத்து சவால்களையும் வேற்று மொழிகளின் உச்சரிப்பு ஏற்படுத்திய சவால்களையும் சந்திக்க இந்த நெகிழ்வுத்தன்மைதமிழுக்குப்பேருதவியாக இருந்தது.  வட மொழி என்று வரும்போது சமஸ்கிருதம் என்னும் சித்திரமே நம்மனதுள் உருவாகிறது

         எதார்த்தம் என்னெவென்றால் சமஸ்கிருத மொழிக்கான எழுத்துருக்கள் கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் உருவாகின்றன.இன்று வரை சமஸ்கிருத மொழிக்கு முழுமையான எழுத்துருக்கள் உருவாகவில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மொழி  எதிரிட வேண்டிவந்த வடமொழி பிராகிருதம் ஆகும்.வடமொழியான பிராகிருதமும் தமிழ் மொழியைப் போன்று  மக்களின் பேச்சு மொழியாகவே வடநாட்டில் பேசப்பட்டு வந்தது . பௌத்த,ஜைன சமயங்களின் செல்வாக்கில் பிராகிருதம் வளர்ந்து வந்தது. ''தம்மம்'' என்னும் சொல் பௌத்த மரபில் அதிகம் எடுத்தாளப்படுகிறது.''புத்ததம்மம்''என்றெல்லாம் கூறுகிறோம் .''தம்மம் எனும் சொல் பிராகிருத சொல்லாகும்,சமஸ்கிருதம் இதனை "தர்மம்''என்று குறிப்பிடும் ஐந்தாம் நூறாண்டுக்குப் பிறகு பல்லவர் ஆட்சி காலத்தில்தான் சமஸ்கிருதம் தமிழகத்தில் அரச செல்வாக்குடன் அதிகார மொழியானது .

   பிராகிருதமாக இருந்தாலும் சரி, சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி அம்மொழிகள் சார்ந்து உருவான உச்சரிப்பு சவால்களை, எழுத்துருக்களின் போதாமையை தமிழ் மொழி திறமையாகக் கையாண்டது. ஜ,ஷ.ஸ்ரீ,ஸ என்று வடமொழிக்கான எழுத்துருக்களை உள்வாங்கிக்கொண்ட தமிழ்  மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பிற மொழிகளைப் போல் வர்க்க எழுத்துக்களை தன்னுள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனத்திற்குரியது. சான்றாக தமிழ் மொழியில் ஒரேயொரு "க'' தான் இருக்கிறது. ஆனால் பிற மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட "க''-கள் இருக்கின்றன

         இன்றுள்ள தமிழ் உயிர் எழுத்து வகைமையுள் காணப்படுகிற "ஐ''என்னும் உயிர் எழுத்துக் குறியீடு தமிழின் தொடக்க நிலைப்பட்ட  எழுத்துரு வடிவமான பிராமியில்   இல்லை என்று தெரிகிறது. அதவாது ஐ என்கிற சொல் இருந்திருக்கிறது அனால்  அதற்கான எழுத்துரு இல்லை. ஒருவேளை "அய்'' என்னும் எழுத்துருவில் அச்சொல் எழுதப்பட்டிருகலாம். உயிர் மெய் எழுத்துக்களில் இந்த எழுத்து இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கிடைக்கின்ற பிராமி எழுத்துகளாலான கல்வெட்டுகள் எதிலும் "ஐ" என்னும் எழுத்துரு இடம் பெறவில்லை. பிராமியைத் தொடர்ந்து வந்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகான கல்வெட்டு ஒன்றில் "ஐ'' என்னும் எழுத்து இடம்பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதுபோல் ஒள என்ற எழுத்து பிராமியிலும், வட்டெழுத்திலும் இடம்பெறவில்லை. இந்தப் புரிதலுடன்தான் தந்தை பெரியார் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் பற்றி கருத்துரைத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சமீபகாலம் வரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொன்மையான கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்துருக்களை "அசோகபிராமி''எழுத்துருக்கள் என்றே ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால் சமீப காலங்களில் தொல்லியல் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழ் எழுத்துருக்களின் தொன்மையை அசோகரின் வடமொழி பிராமிக்கும் முற்பட்டது என்று காலக் கணிப்பு செய்கிறது .எனவே இப்போது தமிழின் தொன்மையான எழுத்துருவை "தமிழ் பிராமி'' என்றும் "தமிழி'' என்றும் அழைக்கும் வழக்கம் உருவாகி இருக்கிறது.

இணையத்தின் பெரும்பரப்பில் தமிழ் இப்போது புது பரிமாணம் எடுத்திருக்கிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/letters.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/29/தமிழிலிருந்து-தமிழ்களை-நோக்கி-3316243.html
3315429 தமிழ் மொழித் திருவிழா மதுரை வட்டார வழக்கு... முனைவா் ரேவதி சுப்புலெட்சுமி DIN Thursday, December 26, 2019 02:19 PM +0530
காலத்தால் மூத்த பெருமையும்,  பழைமையும் வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி. செந்தமிழ், முத்தமிழ், நற்றமிழ், தனித்தமிழ் என்று பலவாறு தமிழை அழைத்து மகிழ்கின்றோம்.

மதுரைத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். தென் தமிழகத்தில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி மாவட்டங்களில் உள்ள மக்களால் பேசப்படும் தமிழுக்குப் பொதுவாக மதுரைத் தமிழ் என்று பெயா்.
 
வட்டார வழக்கு என்பது ஒரு வட்டாரத்து மக்களின் பண்பாட்டு அடையாளமாக அறியப்படுகிறது. வட்டார வழக்கு இலக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.   படைப்பில் மண்ணின் மணம் வருவதற்கு ஒருபிடி வட்டார வழக்கைத் தூவினால்போதும் என்பது நாவல் உலகின் கோட்பாடு என்று எழுத்தாளா் ஜெயமோகன் குறிப்பிடுகிறாா்.
 
மதுரை வட்டார வழக்கு இசைப் பின்னணி வாய்ந்தது. சொற்கள் மற்ற மாவட்டங்களில் பேசுவதைவிட சற்று நீண்டு ஒலிக்கும். யகர இகரத்தின் தாக்கம் ஒவ்வொரு சொல்லிலும் காணப்படும்.  வந்தாய்ங்கே (வந்தாா்கள்), போனாய்ங்கே (போனாா்கள்) என்று வரும். அல்லவா... என்பது ல என்று ஒரு எழுத்தாக வரும். நாங்கள் வருவோம் அல்லவா? என்பது வருவம்ல... என்றும் நாங்கள் போவோம் என்பது போவம்ல... என்றும் எவ்வளவு என்பது எம்புட்டு என்றும் பேசப்படுகிறது. சில நேரங்களில் ரகரச் சிதைவும் காணப்படும். அவா்கள் வந்தாா்கள் என்பதை அவுக வந்தாகே என்று கூறுவதுண்டு.

மதுரைப் பகுதியில் நடைபெறும் கதைகளைக் கொண்ட திரைப்படங்களால் மதுரை வட்டார வழக்கு தற்போது உலகளவில் பிரபலம் அடைந்து வருகிறது. (எ-கா) இப்பவே கண்ணைக் கட்டுதே...

கருத்தாழமிக்க சொற்கள் மதுரை மக்களின் பேச்சில் போகிற போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். 

அக்கப்போா் - அகப்போா்,  உள்நாட்டுப் போா்

குண்டக்க மண்டக்க - குன்றுக்கும் மண்ணுக்குமான வேறுபாடு

வெஞ்சனம் - துணை உணவு (சைடு டிஷ்)

நூனாயம் பேசுறான் - நூல்நயம் பேசுகிறான்

எகன மொகனயாய் பேசுறான் - எதுகை மோனை பேசுகிறான்

கோளாறான ஆளு - நுட்பம் அறிந்தவன்

லந்து - கிண்டல்

நொடியான சாலை - மேடு பள்ளமான பாதை

பட்டறைய போடுறாய்ங்க - கூட்டமாகப் பேசுறாங்க

கொண்டே போடுவேன் - கொன்று போடுவேன்

உசுப்பு - எழுப்பு

வசவு - திட்டு

ரவைக்கு வாரேன் - இரவு வருகிறேன்

மதுரை என்றாலே எப்போதும் தகறாறு தான். கொலை, வெட்டு, குத்து என்பதைப் போலவே திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படுவதால் மதுரை மக்கள் என்றாலே அச்சப்படுகிற ஒரு சூழல் உண்டு. ஆனால், அது தவறான பதிவு. மற்ற எல்லா ஊா் மக்களைவிடவும் சிரிப்பும், களிப்புமாகப் பேசி மகிழ்பவா்கள் மதுரைக்காரா்கள். மதுரையில் வெட்டு குத்து என்றால் அது கிடா வெட்டும், காது குத்தும் தான். எந்த அளவுக்கு அலா்ட்டாக இருப்பாா்களோ அந்த அளவுக்கு விளையாட்டாகவும் இருப்பவா்கள்
மதுரை மக்கள்.

பிளக்ஸ் போா்டு கலாசாரத்திலும் தங்களது வட்டாரத் தமிழைக் காட்ட மறந்ததில்லை. புறநானூற்றுப் புலியே...சிலப்பதிகாரத்துச் சிங்கமே...திருக்குறள் திமிங்கலமே என்று இலக்கியத்தையும், இயற்கையையும் கலந்து சுவரொட்டிகள் அடிப்பது மதுரையின் சிறப்பு.

மக்களின் சாதாரண பேச்சிலும் கூட நகைச்சுவை இழையோடும். கைப்புள்ள, வீரபாகு, தீப்பொறி திருமுகம், டெலக்ஸ் பாண்டியன், வக்கீல் வண்டு முருகன், கபாரி கான், ஏட்டு ஏகாம்பரம என்று நகைச்சுவை நடிகா் வைகைப்புயல் வடிவேல் நடித்த அத்தனை கதாபாத்திரங்களையும் மதுரையில் மொத்தமாக இப்போதும் பாா்க்கலாம்.
 
சில வட்டார வழக்குச் சொற்கள் முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காண முடிகிறது.

பைய கொடுங்க...என்றால் மெதுவா கொடுங்க...என்று பொருள்.

இறப்பு வீட்டுக்குச் சென்று வருவதை கேதத்துக்கு போய்ட்டு வரேன் என்று சொல்வதையும் பாா்க்கலாம்.
இறப்பு வீட்டில் 16-ஆம் நாள் செய்யப்படும் காரியத்தை உருமா கட்டு என்ற சொல்லால் குறிப்பிடுவா்.

கொஞ்ச நேரம் என்பதை செத்த நேரம் என்று சொல்லும் வழக்கும் உண்டு. வயிறு வலிக்குது என்பதை வவுறு வலிக்குது என்பாா்கள்.
 
ரொம்ப சூதானமா போய்ட்டு வா - ரொம்ப ஜாக்கிரதையாக போய்ட்டு வா.

கோக்குமாக்கான ஆளு - விவகாரமான ஆளு.

வட்டார வழக்கில் இருகூறுகள் உண்டு. பொது மொழியில்  உள்ள சொற்கள் குறிப்பிட்ட நிலப் பகுதியின் வெயில், மழை, காற்றில் வேற்றுரு கொள்வது. (எ.கா) இங்கே என்ற சொல் இங்கிட்டு என்று வருவது.

ஒரு பகுதிக்கே உரிய தனிச் சொற்கள் என்பது மற்றொரு கூறு. (எ-கா) வெஞ்சாமரத்தாலே வீசிபுடுவேன் - விளக்குமாற்றால் அடித்துவிடுவேன். லந்து - கிண்டல். இந்த கூறுகளும் சிறப்பாக அமைந்தது மதுரை வட்டார வழக்கில் தான்.

வட்டாரம் என்பது வட்டாரங்களின் தொகுப்பு. சாதி சாா்ந்து, மதம் சாா்ந்து, ஊா் சாா்ந்து வட்டார வழக்கு மாறுபடுகிறது. வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம் ஆகும். எல்லா காலத்திலும் தமிழா்கள் வட்டார வழக்கில் பேசியதை அறிஞா்கள் அதைத் தமிழாக ஆக்கிக் கொண்டே இருந்தாா்கள். வட்டார வழக்கு இருப்பதால் தான் செம்மொழி சிறப்புடன் இருக்கிறது என்று கூறலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/rss2.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/26/மதுரை-வட்டார-வழக்கு-3315429.html
3315405 தமிழ் மொழித் திருவிழா குடக்கூத்து  டாக்டர் இரா. கலைக்கோவன் DIN Thursday, December 26, 2019 02:16 PM +0530
பழந்தமிழர் கலைவடிவங்களை நன்கு இனங்காட்டும்  இலக்கியம் சிலப்பதிகாரம். அரங்கேற்றுகாதை, கானல்வரி, ஊர் காண்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைச் செய்திகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 

சிலம்பில் குடக்கூத்து
‘பதினோராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ அரங்கேற்றம் நிகழ்த்திய மாதவி வழியே பதிவாகும் பதினொரு வகை ஆடல்களைக் கடலாடுகாதையே விளங்க உரைக்கிறது. நின்றாடல், வீழ்ந்தாடல் என்று இரண்டு நிலைகளில் ஆடப்பட்ட இவ்வாடல் வடிவங்களுள் குடக்கூத்து நின்றாடல் வகையைச் சேர்ந்தது. ‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலமளந்தோன் ஆடிய குடமும்’ எனும் சிலம்பின் அடிகள், குடக்கூத்து நிகழ்ந்த இடத்தையும் நிகழ்த்தியவர் பெயரையும் தருகின்றன.

கூத்தின் பின்னணி
வாணன் என்னும் அசுரன் தன் மகள் உழை காரணமாகக் காமன் மகன் அநிருத்தனைப் பிடித்து, ‘சோ’ என்னும் தன் தலைநகரில் சிறை வைக்கிறார்.1 நெடிய இந்நானிலத்தைத் தம் திருவடிகளால் அளந்த திருமால், சிறைப்பட்ட அநிருத்தனை மீட்பதற்காகச் சோநகர வீதிகளில் குடங்களைக் கொண்டு நிகழ்த்திய திருக்கூத்தே குடக்கூத்து. இக்கூத்தை, ‘குடத்தை எடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே’ என்று கொண்டாடுகிறார் ஆண்டாள்.2 ‘குடமாடு கூத்தா’ என்றழைக்கும் பெரியாழ்வாரும் ‘குடங்கள் எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே’ என்று பல குடங்களுடன் கண்ணன் கூத்தாடியதைப் பதிவு செய்துள்ளார்.3  விநோதக்கூத்து வகையைச் சேர்ந்த இதன் உறுப்புகள் ஐந்தென்பர்.4

குடக்கூத்தும் கோயிற் சிற்பங்களும் சிலப்பதிகாரம் அடையாளம் காட்டும் பதினோராடல்களில் இக்குடக்கூத்தே தமிழ்ச் சமூகத்தால் போற்றிக் கொண்டாடப்பட்ட கலைவடிவமாகத் திகழ்ந்தது என்பதைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்களைக் கொண்டு அறியமுடிகிறது. பிற்பல்லவர் காலந் தொட்டுப் பிற்சோழர் காலம்வரை குடக்கூத்துச் சிற்பங்களைக் கோயில்களில் காணமுடிகிறது என்றாலும், அவை மிகுதியாக வெளிப்பட்டிருப்பது முற்சோழர் கட்டுமானங்களில்தான்.   

கண்ணன் ஆடிய கூத்து

கண்ணன் ஆடிய கூத்தாக அபிதான சிந்தாமணி முன்னிருத்தும்5 இக்குடக்கூத்தைக் கண்ணன் நிகழ்த்துமாறு போலவும் மானுடர் ஆடுமாறு போலவும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணக்கிடைக்கும் முப்பத்தாறு சிற்பங்களை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் களஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.6 இச்சிற்பங்களின் ஒப்பீட்டாய்வு சிற்பிகளின் கலையுணர்வு, வரலாற்றுநோக்கு, கற்பனையாற்றல் காட்டுவதுடன், பிற்பல்லவர், முற்சோழர் காலத்தில் பரவலாக நிகழ்த்தப்பட்ட கலைவடிவங்களுள் ஒன்றாய்க் குடக்கூத்து திகழ்ந்ததையும் வெளிப்படுத்துகிறது. 

தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், சிவகங்கை, அரியலூர், தருமபுரி ஆகிய ஏழு மாவட்டங்களில்7 பல்லவர், பாண்டியர், முற்சோழர், பழுவேட்டரையர், நுளம்பர் காலப் பதிவுகளாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்களுள், அதன் இலக்கணப்படி நின்றாடல்நிலையில் முப்பதும் அமர்ந்தாடல் நிலையில் ஆறும் உள்ளன. அமர்ந்தாடும் ஆறு சிற்பங்களில், கண்ணன் பல குடங்களுடன் ஆடுமாறு போலக் காட்சிதரும் கருடாசனப் பதிவு விழுப்புரம் மாவட்டம் கிராமம் சிவலோகநாதர் கோயில் கண்டபாதத்தில் செதுக்கப்பட்டுள்ளது. பல குடங்களுடன் கூத்து நிகழ்த்தும் கண்ணனைத் தமிழ்நாட்டளவில் இங்கு மட்டுமே காணமுடிகிறது. இதே கருடா சனத்தில் ஒரு குடம் ஏந்திக் கூத்திடும் பூதம் தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயில் முகமண்டபத் தெற்கு வலபியில் காட்சி தர, சிவலோகநாதர், வடவாயில் ஸ்ரீகோயில், திருத்தொண்டீசுவரம், திருமூலநாதர் வலபிப் பூதங்கள் குத்துக்கால் வைத்துக் குடக்கூத்து நிகழ்த்துகின்றன.

திருவையாறு வடகைலாயம்

குடம்
ஆடலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் குடம் பெரும்பாலான சிற்பங்களில் வாய், கழுத்து, உடல் என மூன்று பிரிவுகளாய் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடத்தின் உடற்பகுதி பெரும்பாலும் உருண்டையாகவும் ஒன்றிரண்டில் நீள்உருளையாகவும் காட்சிதர, வாய்ப்பகுதி பெரும்பாலும் இயல்பான அளவிலும் சிலவற்றில் அகலமாகவும் உள்ளது. மிகுதியான வேறு பாட்டைக் கழுத்துப்பகுதியிலேயே காணமுடிகிறது. சிறியதாய், நீண்டதாய், அகன்றதாய், ஒன்றிரண்டில் அறவே இல்லாதது போலவும் காட்டப்பட்டிருக்கும் கழுத்துப்பகுதியே குடத்தின் அமைப்பை வடிவமைப்பதாகக் கூறலாம்.

கூத்தில் குடத்தின் நிலை
குடத்தை ஏந்தியிருக்கும் கை வலம், இடம் எதுவாக இருந்தபோதும் மூன்று நிலைகளிலேயே காட்டப்பட்டுள்ளது. தோளுக்கு இணையான நீட்டலாகவும் தோள் அளவிலிருந்து சற்றே இறக்கமாகவும் அல்லது உயர்த்தலாகவும் காட்டப்பட்டிருக்கும் கையில், குடம் நிற்கும் இடமும் சிற்பத்திற்குச் சிற்பம் மாறுபட்டுள்ளது. தோளில், கையின் மேற்பகுதியில் அல்லது முழங்கை மீது அமரும் குடம், கையின் மேற்பகுதியில்கூட மேலே, இடையில், முழங்கை அருகே என மூன்று நிலைகளில் காட்சிதருகிறது. திருமால்பூரில் மட்டும் மணிக்கட்டருகே குடத்தைக் காணமுடிகிறது. குடமேந்திய கையின் நிலையும் குடத்தின் இருப்பும் ஆடுபவரின் காலமைப்பு, குடமேந்தாத கையின் அசைவு, தலைச்சாய்வு, முகத்திருப்பம் உடல்நிலை எனும் ஐந்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதைச் சிற்பக்காட்சிகள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. 

கூத்து நிகழ்த்து முறை

இக்குடக்கூத்து உலோகத்தாலும் மண்ணாலும் ஆன குடங்களைக் கொண்டு ஆடப்பட்டதாகச் சிலம்பின் உரை தெரிவிக்கிறதே தவிர, குடங்கள் உடலின் எப்பகுதியில் கொள்ளப்பட்டன, குடங்களைக் கையிலோ, உடலின் பிற பகுதிகளிலோ, மேலும் கீழுமாக உருட்டி இக்கூத்து நிகழ்த்தப்பட்டதா, ஆடும் காலம் முழுவதும் குடங்கள் உடலோடு ஒட்டியிருந்தனவா அல்லது தூக்கி எறியப்பட்டு மீண்டும் கொள்ளப்பட்டனவா என்பதற்கான விளக்கங்களை உரைச் செய்திகளில் பார்க்கமுடியவில்லை. இக்கூத்து எவ்வாறு நிகழ்ந்திருக்கமுடியும் என்பதைத் திருக்கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின் ஒப்பீட்டாய்வே கண்முன் காட்சியாய்ப் படம்பிடிக்கிறது. 

ஐயாறு சுற்றுமாளிகைத் தூண் ஒன்றில் இடம்பெற்றிருக்கும் குடக்கூத்துச் சிற்பத்தில், குடம், ஆடுநரின் கைமீது இல்லாமல், உயர்த்தி எறியப்பட்டுக் கைக்கு மீளும் நிலையில் காட்டப்பட்டுள்ளமை கருத்தைக் கவர்கிறது. கிராமம் சிற்பம் இதற்கு ஒத்திசைவாய் ஆடுநரை கருடாசனத்தில் காட்டுவதோடு, குடங்களை இரண்டு கால்களிலும் கைகளிலும் தாங்கியுள்ளாற் போல் பதிவுசெய்திருப்பதும் கருதத்தக்கது. ஓர் ஆட்டநிகழ்வின் பல்வேறு நிலைகளைப் படம்பிடித்திருக்கும் காட்சியாக இதைக் கொள்ளமுடியும். இவற்றின் வழிக் குடங்கள் மேலும் கீழுமாக உருட்டியும் எறிந்து கொள்ளப்பட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்பட்டதாகக் கருதலாம். திருமால்பூர் கோனார்கோயில் கூத்தர் இருகைகளிலும் குடமேந்தியிருப்பது இக்கருத்துக்கு வலிமை சேர்க்கும்.

சிற்பங்களின் இடஅமைவு
ஆய்வுக்குக் கொள்ளப்பட்டிருக்கும் 36 சிற்பங்களும் கோயில் கட்டுமானத்தின் பல்வேறு உறுப்புகளில் செதுக்கப்பட்டுள்ளன. கண்டபாதத்தில் எட்டும் தூண்சதுரம், மகரதோரணம் ஆகியவற்றில் இடத்திற்கு ஐந்தும் கபோதக்கூடு, வேதிபாதம், தூண்தொங்கல் இவற்றில் இடத்திற்கு மூன்றும் வலபியில் ஆறும் பஞ்சரகிரீவம், தூண் வளையம் இவற்றில் இடத்திற்கு ஒன்றும் என 35 சிற்பங்கள் அமைய, கண்டராதித்தக் குடக்கூத்து, பலகைச் சிற்பமாகப் பொருந்தாத இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கோட்டங்களைச் சமயஞ் சார்ந்த இறைவடிவங்களுக்கு ஒதுக்கிய சிற்பிகள் கட்டுமானத்தின் பிறபகுதிகளைச் சமூகப் படப்பிடிப்புகளுக்குக் களமாக்கிக் கொண்டமை குடக்கூத்துச் சிற்பங்களின் இடஅமைவு நோக்கியும் உணரப்படும்.

ஆடியவர் 
குடக்கூத்து பெரும்பாலும் ஆடவர்களால் நிகழ்த்தப்பட்டமையை 36இல் 27 ஆடவர் சிற்பங்களாக அமைந்துள்ளமை கொண்டு தெளியலாம். நான்கு சிற்பங்கள் இக்கூத்தைக் கூத்திகளும் நிகழ்த்தியமை காட்ட, இது சிவபெருமானின் பூதப்படையாலும் கொள்ளப்பட்ட கூத்து என்பதை நிறுவுமாறு 5 கோயில்களின் வலபிச்சிற்பங்கள் அமைந்துள்ளன. குடக்கூத்து பெரும்பாலும் இசையற்ற கூத்தாகவே நிகழ்த்தப்பட்டமை சுட்டுமாறு போல 27 சிற்பங்கள் கூத்தர் அல்லது கூத்தியை மட்டுமே படம்பிடிக்க, 9 சிற்பங்களில் மட்டுமே இசைக்கலைஞர்களை உடன்கூட்டமாகக் காணமுடிகிறது. இத்தகு உடன் கூட்டச் சிற்பங்களுள் இசைக்கலைஞரும் ஆடல்நிலையில் உள்ளமையைச் சில இடங்களில் காணமுடிந்தாலும் எறும்பியூர் இணையின் ஒருங்கிணைவும் ஆடற்கோலமும் இணையற்ற பதிவுகளாய்ப் பொலிகின்றன.

சமன்நிலை
குடக்கூத்து, பிற கூத்துகள் போல் அல்லாமல் உடலின் சமன்நிலையை அடிப்படையாகக் கொண்டு, தாங்கியிருக்கும் குடம் கீழே விழுந்து விடாமல், அதே போழ்து அசைவுகளுக்குக் குறைவில்லாமலும் உரிய அவிநயங்களோடும் நிகழ்த்தப்பட்டதால் கை, கால், உடல் மூன்றும் திறம்பட ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் அமைந்தமையைச் சிற்பங்கள் நன்கு விளக்குகின்றன. 36 கூத்தர்களில் 20 பேர் குடத்தை வலக்கையில் தாங்கி ஆட, 13 கூத்தர்கள் அதை இடக்கைக்கு மாற்றியுள்ளனர். திருமால்பூர் கூத்தர் இருகைகளிலும் குடமேந்த, கிராமம் கோயில் கூத்தர் வலக்கை, இடக்கை, கால்கள் என அனைத் திடங்களிலும் குடங்கொண்டாடிப் புதிய காட்சி படைத்துள்ளார். சத்திமுற்றத்துப் பெண்மணி இந்நாளைய கரகம் போல் குடங்களைத் தலையில் அடுக்கி ஆடும் கோலம் குடக்கூத்து கரகமாக மாறிய காலப் பின்னணியில் அமைந்ததாகலாம். 

குடமேந்திய கையமைவு
பெரும்பாலான கூத்தர்களின் குடமேந்திய கை, முழங்கை அருகே மடிந்து விரல்கள் விரிந்த அல்லது சற்றே குவிந்தநிலையில் கீழிறக்கப்பட்டுள்ளது. சில சிற்பங்களில் இந்தக் கையின் விரல்கள் வயிற்றருகே காணப்படும் அளவிற்கு முழங்கை மடக்கம் அமைந்திருப்பினும் பெரும்பாலான சிற்பங்களில் விரல்கள் மார்பருகே மடங்கி அல்லது நீண்டிருப்பதையே காணமுடிகிறது. மிகச் சிலவற்றில் இந்த விரல்கள் இடுப்பருகே காட்டப்பட்டுள்ளமையும் ஒன்றிரண்டில் அவை தொடையளவு தொய்ந்தும் முழங்காலின் மேல் உள்ளமையையும் பார்க்கமுடிவதால் ஆட்டத்திற்கேற்ப, குடமேந்திய கை மேலும் கீழுமாக ஏற்ற, இறக்கமான நிலைகளிலும் அமைந்தமையை அறியமுடிகிறது. உலகபுரக் கூத்தர் குடக்கையை மடித்துக் குடமொட்டி நிறுத்தி உள்ளமையும் ஆட்டத்தின் ஒரு நிலையாகலாம்.

குடமேந்தாக் கையின் அமைவு

குடக்கூத்தர்களின் குடமேந்தாத கையின் அமைப்பும் ஆட்டத்தின் சமன்நிலையைத் தீர்மானிக்கிறது. அதை உறுதிப்படுத்துமாறு போல 22 சிற்பங்களில் குடமேந்தாத கை நெகிழ்கையாகவும் 8இல் அர்த்தரேசிதமாகவும் 2இல் லதாவாகவும் அமைய, 3 சிற்பங்கள் மட்டுமே மார்பருகே மடிந்த பதாக முத்திரை காட்டுகின்றன. நெகிழ் கை, அர்த்தரேசிதம், லதா எனும் இம்மூன்று கையமைப்புகளுமே பரதரால் நிருத்தக்கைகளாகச் சுட்டப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. இவை, உடலின் ஒருபுற அசைவுகளுக்கேற்ப, அதன் மறுபுறத்தைச் சமன்நிலையில் கட்டுப்படுத்த ஆடுநருக்கு உதவும் கையமைவுகளாகும். திருமால்பூரார் இருகைகளிலும் குடமேந்தியுள்ளார்.

கால்நிலை
கால்நிலைகளுள் பெரும்பாலன மண் சார்ந்தே அமைய, சிலவே விண் சார்ந்துள்ளன. 36 கூத்தர்களில் வலக்கால் பதினெழுவருக்குப் பார்சுவமாகவும் எண்மருக்கு அக்ரதலசஞ்சாரமாகவும் அமைய, இருவர் வலமுழங்காலை உயர்த்தி ஊர்த்வஜாநுவாக்கியுள்ளனர். இடக்கால் 18 பேருக்குப் பார்சுவமாகவும் நால்வருக்கு அக்ரதலசஞ்சாரமாகவும் ஒருவருக்குத் திரயச்ரமாகவும் அமைய, மூவர் அதை ஊர்த்வஜாநுவாக்கியுள்ளனர். ஒரு சிற்பத்தில் இடக்கால் சிதைந்துள்ளது. குத்தாலம், வெள்ளறை, சென்னம்பூண்டிக் கூத்தர்கள் கால்களை ஸ்வஸ்திகமாக்கிட, இருவர் கருடாசனத்திலும் நால்வர் குத்துக்காலிட்டும் குடக்கூத்து நிகழ்த்துகின்றனர்.

தலைச்சாய்வு 
எந்த ஓர் ஆடலிலும் தலையின் நிலை இன்றியமையாதது. அது பெரும்பாலும் ஆடலின் நிகழ்நிலைக்கேற்ப உடல் சமன்பாட்டைக் கருதியே அமைகிறது. கரணச்சிற்பங்களில் பரவலாகக் காணக்கூடிய தலைச்சாய்வுகளைக் குடக்கூத்துச் சிற்பங்களும் கொண்டுள்ளன. 17 கூத்தர்களின் தலை வலச்சாய்வில் அமைய, 12 பேர் அதை இடச்சாய்வில் கொண்டுள்ளனர்.  எழுவர் நேர்ப்பார்வையில் காட்சிதருகின்றனர். எச்சாய்வில் தலையிருந்தபோதும், பார்வையின் வீச்சு, சாய்விற்கான எதிர்நிலையில் மட்டும் அமையாமல் பல்நோக்குப் பார்வையாய் மேல், கீழ், இடை என மூன்று கோணங்களிலும் சுழன்றுள்ளமை ஆடலியக்கத்தின் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. 

ஆடை
ஒப்பனையில்லாமல் கூத்தில்லை. குடக்கூத்தர்களின் ஆடை, அணிகலன்கள் எளிமையானவையாக இருந்தபோதும் வேறுபாடுகளைக் காணமுடிகிறது. கொற்றமங்கலம், சத்திமுற்றக் கூத்திகள் தவிர்த்த பிறஅனைத்துக் கூத்தர்களும் முழங்காலுக்கு மேல் வரையிலான இடுப்புச் சிற்றாடையே அணிந்துள்ளனர். எழுவர் சிற்றாடை மட்டும் கொள்ள, பதினைவர் அதனோடு இடைத்தொங்கல் ஒன்றும் கட்டியுள்ளனர். இது சிலருக்கு முக்கோண மடிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நால்வர் சிற்றாடையோடு இடைக்கட்டு அணிந்துள்ளமை அவர்தம் பெருமிதம் காட்டுவதாகக் கொள்ளலாம். பட்டாடை கட்டியுள்ள மூன்று கூத்திகளும் இடைக்கட்டோ, தொங்கலோ பெற்றுள்ளனர். தருமபுரியார் மரவுரிஆடை கொள்ள, நான்கு கூத்தர்களின் ஆடையமைப்பை அறியக்கூடவில்லை. இரண்டு சிற்பங்களில் சிற்றாடையின் கீழ்ப்பகுதி விசிறிமடிப்புக்களுடன் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. 

தலையலங்காரம்
காண்பார் கண்முன் கூத்தரின் தோற்றத்தை நிலைநிறுத்துவதில் தலையலங்காரத்திற்குப் பெரும் பங்குண்டு. 36 கூத்தர்களில் கண்டராதித்தக் கூத்தர் மட்டுமே தலையின் சடைகளை மகுடமாகக் கட்டியுள்ளார். ஏனையர் முடிகளைச் சுருட்டித்  தலையின் பின்புறத்தோ, பக்கவாட்டிலோ பெருங்கொண்டையாக முடிந்துள்ளனர். சிலருக்கு இக்கொண்டை வலப்புறத்தும் சிலருக்கு இடப்புறத்துமாக அமைந்துள்ளது. சில கொண்டைகள் குந்தள அமைப்பிலும் சில தமிழம் போலவும் முடியப்பட்டுள்ளன. எறும்பியூர்ப் பஞ்சரக் கூத்தரின் தலைப்பட்டியிலிருந்து வலப்புறத்தே பறக்கும் துணிக்கீற்றுகள் அவரது ஆட்டத்தின் தன்மையைப் புலப்படுத்துவதோடு திருமுகப் பொலிவையும் பன்மடங்கு கூட்டுகின்றன. திருநாவலூர்க் கூத்தர் பல இறகுகள் பொருத்திய தலையலங்காரமும் திருமால்பூரார் தலைப்பாகை போன்ற முடியலங்காரமும் கொண்டுள்ளனர். 

அணிகள்
பெரும்பாலான கூத்தர்கள் கைவளைகளும் சிலர் கை வளைகளுடன் கடகவளைகளும் அணிந்துள்ளனர். கால்களில் சதங்கை, சிலம்பு, தாள்செறி ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ பெற்றவர்களே மிகுதி. ஒரு சிலர் வெறுங் காலினராய் ஆடுவதையும் காணமுடிகிறது. சத்திமுற்றப் பெண் முத்துமாலையும் தருமபுரி, பழுவூர், பெருமுடிக் கூத்தர்கள் சவடியும் கண்டராதித்தம், திருமால்பூர், வெள்ளறைக் கூத்தர்கள் சரப்பளியும் அணிந்துள்ளனர். தருமபுரி, தவத்துறைக் கூத்தர்கள் அருமையான நெற்றிப்பட்டம் கொள்ள, கண்டராதித்தம், தஞ்சாவூர் உள்ளிட்ட கூத்தர் சிலர் உதரபந்தம் பெற்றுள்ளனர். சன்னவீரம் ஐவர் மார்பில் அமைய, ஸ்வர்ணவைகாக்ஷம் அணிந்தவர்களும் உள்ளனர். தஞ்சாவூர் வலபியார் முப்புரிநூலினர். செவிகளில் குதம்பை அணிந்தவர்கள் ஒன்பதின்மராய்க் காட்சிதர, பதின்மர் பனையோலைக் குண்டலங்கள் பெற, தருமபுரியில் பூட்டுக்குண்டலமும் பிறஇடங்களில் இனங்காண முடியாத செவியணியும் காணப்படுகிறது. ஒரு சிலர் அணிகலன் ஏதுமின்றியே குடக்கூத்து நிகழ்த்துகின்றனர்.

இசைக்குழு
36 கூத்தர்களில் இசைக்கலைஞர்கள் கொண்டுள்ளவர் ஒன்பதின்மரே. இடக்கை, மத்தளம், உடுக்கை, ஒருமுக முழவு முதலிய தோல்கருவிகளும் செண்டுதாளமும் குடக்கூத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை காணமுடிகிறது. பொதுவாக ஆடல் சிற்பங்களில் மிகுதியும் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவியாகப் பதிவாகியிருக்கும் புல்லாங்குழல், ஒரு குடக்கூத்துச் சிற்பத்திலும் இடம்பெறாமையும் நரம்புக்கருவிகளின் பயன்பாட்டைக் குடக்கூத்துக் கொள்ளாமையும் அக்கூத்து வலிய வீச்சுக்களுடன் அமைந்தமையினால் ஆகலாம். எறும்பியூர்க் கூத்தருக்குச் செண்டுதாள இசை தரும் கலைஞரும் ஆடலில் ஈடுபட்டுள்ளமை சிறப்பாகும். 

சென்னம்பூண்டிக் குடக்கூத்துச் சிற்பத்தில் கூத்தரின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக நிற்கும் ஆடவர்கள் தோளில் சாய்த்துப் பிடித்திருக்கும் பொருளை இன்னதென அடையாளப்படுத்தக்கூடவில்லை. இடப்புறத்துள்ளவரின் இடக்கை அந்தப் பொருளைப் பிடித்திருக்க, வலக்கை கூத்தைப் போற்றி மகிழுமாறு அமைந்துள்ளது. வலப்புறத்தார் வலக்கைப் பொருளைத் தோளில் சாய்த்து, இடக்கையை இடையருகே கொண்டுள்ளார். 

முடிவுரை 
தமிழ்நாட்டுக் கோயில்களில் கண்டறியப்பட்ட 36 குடக்கூத்துச் சிற்பங்களின் ஆய்வு வழிச் சிலம்பு அறிமுகப்படுத்தும் பதினோராடல்களில் ஒன்று தமிழ்நாட்டுச் சமூகத்தில் முற்சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கை அறியமுடிவதுடன், அக்கூத்தின் நிகழ்முறை, அதை நிகழ்த்திக் காட்டிய கலைஞர்களின் புனைவு, கண்ணன் தொடர்பான தொன்மங்கள் மக்களிடையே பரவியிருந்த வகைமை, தமிழ்நாட்டுச் சிற்பிகள் கலைவடிவங்களுக்கு அளித்த சிறப்பிடம், குடக்கூத்திற்குப் பயன்பட்ட இசைக்கருவிகள் ஆகியவற்றையும் தெரிந்துணர இயல்கிறது. கண்ணனோடு தொடர்புடைய இக்கூத்துத் தமிழ்நாட்டின் சைவக் கோயில்களிலேயே பெருமளவிற்காய்ப் படம்பிடிக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்க சிறப்புக் கூறாகும்.

குறிப்புகள்
1.    இத்தொன்மம் பற்றிய விரிவான தரவுகளுக்குக் காண்க: ஸ்ரீகூர்ம புராணம், வாசு பிரசுரம், சென்னை, 1969, பக். 244-247, ஸ்ரீவிஷ்ணு புராணம், பிரேமா பிரசுரம், சென்னை, 1969, பக். 413-418.

2.    நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு, 1981, ப. 141.

3.    மேலது, பக். 50, 44. கண்ணன் வாணனை அழித்தமை குறித்துப் பாடும் பெரியாழ்வார் ‘மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதிபாய சுழற்றிய ஆழிவல்லான்’ என்கிறார். மேலது, ப. 3.

4.    சிலப்பதிகாரம், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு, 1985,          ப. 191.

5.    அபிதான சிந்தாமணி மூன்று இடங்களில் இத்தொன்மம் பற்றிய தரவுகளைத் தருகிறது. அநிருத்தனைக் கண்ணனின் பெயரனாகவும் பிரத்யும்நனின் மகனாகவும் சுட்டி பாணாசுரன் மகளை உஷை என்று ஓரிடத்தில் (ப. 55) குறிப்பிடும் இந்நூல், மற்றோர் இடத்தில் (ப. 448) கண்ணன் அநிருத்தன் பொருட்டு பாணாசுரனை கர்வபங்கம் செய்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. முற்பிறப்பில் மன்மதனாக இருந்தவனே மறுபிறப்பில் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் பிரத்யும்நனாகப் பிறந்ததாகப் பிறிதோரிடத்தில் (ப. 1122) பதிவுசெய்யும் இந்நூல் பாணாசுரனை வாணாசுரன் என்றும் குறிப்பிடுகிறது. சிலம்பின் உரை சோ என்ற பெயரில் சுட்டும் பாணாசுரன் தலைநகரை இந்நூல் சோணிதபுரம் என்றழைக்கிறது. 

6.     இரா. கலைக்கோவன், குடக்கூத்தும் குழு நடனமும், தினமணி கதிர், 19. 3. 1989, பக். 4-6; சிலம்பின் வரிகளுக்குச் சிற்பச் சான்றுகள், தினமணிகதிர், 19. 8. 1990, பக். 28-29. மு. வீராசாமி, சோழமண்டலக் குடக்கூத்து, தினமணி கதிர், 30. 9. 1990. திருமால்பூர், பேரங்கியூர், திருநாவலூர், கீழுர்க் கோயில்களின் குடக்கூத்துச் சிற்பங்களை அறியச்செய்த ஆய்வாளர்கள் திரு. சு. சீதாராமன், செல்வி க. இலட்சுமி இருவரும் நன்றிக்குரியவர்கள்.  

7.    தஞ்சாவூர்: ஐயாறப்பர் கோயில் - ஐயாறு, ஆபத்சகாயேசுவரர் கோயில் - ஆடுதுறை, சடையாரிக்கோயில் - திருச்சென்னம்பூண்டி, சிவன்கோயில் - கூகூர், உமாமகேசுவரர் கோயில் - கோனேரிராஜபுரம், சொன்னவாறு அறிவார் கோயில் - குத்தாலம், சக்திவனேசுவரர் கோயில் - திருச்சத்திமுற்றம், இராஜராஜீசுவரம் - தஞ்சாவூர், கோடீசுவரர் - திருக்கோடிக்கா, கல்யாணசுந்தரேசுவரர் - நல்லூர்.

    திருச்சிராப்பள்ளி: விஷமங்களேசுவரர் கோயில் - துடையூர், சப்தரிஷீசுவரர் கோயில் - தவத்துறை, விஷ்ணு கோயில் - கொற்றமங்கலம், பெருமுடிஈசுவரர் கோயில் - பெருமுடி, அமலீசுவரர் கோயில் - கோபுரப்பட்டி, தாமரைக்கண்ணர் கோயில் - திருவெள்ளறை, எறும்பீசுவரம் - எறும்பியூர். எறும்பியூர்க் கோயிலில் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாக் காட்சியாக நான்கு குடக்கூத்துச் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாகின்றன.

    பிறமாவட்டங்கள்: விழுப்புரம்: சிவன்கோயில் - உலகபுரம், சிவலோகநாதர் கோயில் - கிராமம், திருமூலநாதர் கோயில் - பேரங்கியூர், திருத்தொண்டீசுவரம் - திருநாமநல்லூர், வீரட்டானேசுவரம் - கீழையூர். வேலூர்: வில்வநாதேசுவரர் கோயில் - திருவல்லம், கோனார்கோயில் - திருமால்பூர். சிவகங்கை: திருத்தளிநாதர் கோயில் - திருப்புத்தூர். அரியலூர்: அவனிகந்தர்ப்ப ஈசுவரகிருகம் - கீழையூர், ஆலந்துறையார் கோயில் - சிறுபழுவூர், சிவன்கோயில் - கண்டராதித்தம். தருமபுரி: மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில் - தருமபுரி. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/Rajarajisvaram_Thanjavur1.jpg தஞ்சாவூர் ராஜராஜீஸ்வரம் https://www.dinamani.com/language-fest/2019/dec/25/குடக்கூத்து-3315405.html
3316203 தமிழ் மொழித் திருவிழா பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம் முனைவர். பு.இந்திராகாந்தி DIN Thursday, December 26, 2019 12:16 PM +0530
பண்டைய தமிழ் இலக்கியங்கள் தமிழரின் பல்வேறு பண்பாட்டு அழகியல் வாழ்வினை விளக்கி நிற்கின்றனர். பூமியில் நிலைகொண்டு வாழும் மனிதகுலத்தின் வாழ்வியல் தேவைகள் பல அவற்றில் அடிப்படையானத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பதாகும். இவற்றுள் உடையெனப்படும் ஆடை மனித உடலின்மேல் அணிந்து உடலை மூடிக்கொள்வதற்குப் பயன்படும் ஒன்றாகும்.

ஆடையானது தொடக்கக்காலத்தில் காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பின் மானத்துடன் தொடர்புடையதாகவும் வளமையின் அடையாளமாகவும், வாழ்வில்மையம் கொண்டது.

இன்று ஆடையானது அழகியலோடும், தன்னம்பிக்கையோடு தொடர்புதாக ஏற்றும் கண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பவளர்ச்சிக் கண்ட இன்றைய நாளில் ஆடைகள் பலவிதவண்ணங்களும் வேலைப்பாடுகளும் கொண்டு பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. இவற்றிற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். 

ஆனால் தமிழ்ச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு வண்ண ஆடைகள் இருந்துவந்தன. ஆடைகளின் தன்மைக்கு ஏற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்ற பெயரால் ஆடைகள் புழகத்தில் இருந்தன. மேலும் ஆடையைக லிங்கம், காழகம், அறுவை, மடி, கூறை என்ற பெயர்களாலும் சுட்டினார். பட்டு, பருத்தி, எலிமயிர், நார் முதலியவற்றால் ஆடைகள் நெய்து அணியும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர்.

‘பட்டினும், மயிரினும்பருத்திநூலினும் ’(சிலம்பு 5:16-17)

‘நூலினும்உலண்டினும்நாரினும்இயன்ற’ (பெருங்கதை 1.420:21)
என்றஅடிகள்இதனைஉறுதிசெய்கின்றன.

நுட்பமான வேலைப்பாட்டுடனும், வேறுபட்டத் தட்பவெட்பநிலைக்கு தகுந்தவாரும், சூழலுக்கு தகுந்தவாரும், பொருளியல் நிலைக்கு தகுந்தவாரும் ஆடைகளை அணிந்துள்ளனர்.  அவைகள் பட்டாடை பூவாடை, பொன்னாடை, வட்டுடை, கச்சை தாளிதம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. பருத்தியினால் நூல் நூற்றனர்.

“பருத்திப்பெண்டின்பனுவல்அன்ன’    (புறம் 125 -1)

என்ற அடிகள் விளக்குகின்றன. பட்டு, கம்பளி, பருத்தி நூல் இவற்றினால் மிகத் துல்லியமானத் தொழில்நுட்பத்துடன் ஆடை நெய்தனர். 

‘பட்டினும்மயிரினும்பருத்திநூலினும்
கட்டும்நுண்வினைக்காருகர்’ (சிலம்பு 5. 16,17)

நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். ஆடைதொழிலுக்குப் பயன்பட்ட பருத்தியை இவர்கள் பயிரிட்டே பயன்படுத்தினர்.

‘பருத்திவேலிச்சீறூர்மன்னன்’  (அகம் 299 -17)
என்றஅடிகள்உறுதிசெய்கின்றன.

‘இணைபடநிவந்தநீலமென்சேக்கை’  (கலி  7 :1 )

அன்னத்தூவி போன்ற மென்பொருள்கள் திணித்து நீலப்பட்டினால் அமைந்த படுக்கை என்ற பொருளமைய இடம் பெறும் இவ்வடிகள் மிக மெல்லியதாக நெய்யும் தொழில் நுட்பம் அன்று இருந்ததை விளக்குவதாக அமைக்கின்றது.
அறிவியல் வளர்ச்சி கண்ட இன்றைய நாளில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் நுட்பம் அறிந்து அதனை செயல்படுத்துகின்றனர். அன்றே நூல்நூற்றதுடன் நூலுக்கு சாயம் ஏற்றும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர் தமிழர்கள் ;.

‘சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
    நிறங்கவர்புபுனைந்தநீலக்கச்சினர்’ (மதுரைகாஞ்சி 638, 639)

கருமணலின் நிற மொத்த நீலநிறம் தோயக்கப்பட்ட கச்சு என்ற பொருள் தரும் இவ்வடிகள் மிக நுட்பமாக சாய மேற்றிய தொழில்நுட்பத்தினைக் காட்டுகின்றன.

    பல்வேறு வண்ணங்களை மரப்பட்டைகளின் துணையோடு, சில வேதிகளை சேர்த்து வண்ணங்களை கண்டுபிடித்து அதனை ஆடைகளுக்கு ஏற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

அரிக்காமேட்டு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சாயக்தொட்டிகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பெற்ற நூல் நூற்கும் தக்களியும், சாய மேற்றும் தொழில்நுட்பம் தமிழர்களிடம் இருந்ததை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.

இன்றைய நாகரீக உலகில் நீச்சல் உடைஅணிந்து நீச்சல் அடிக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அந்த ஆடைகள் அதற்கு தகுந்த வடிவமைப்புடன் கிடைக்கின்றது.  தமிழன் இடத்துக்கு தகுந்தர்போல் ஆடை அணியும் அறிவும், அதனை வடிவமைக்கும் திறனையும் பழங்காலத்திலேயே பெற்றிருந்தான். 

‘எறிவனஎக்குவஈரணிக்கேற்ற
நறவணிபூந்துகில்’ (பரிபாடல் 22 : 18, 19) 

புனல்விளையாட்டிற்கெனஈரணியும், பூந்துகிலும்அணிந்தனர்துணிகளைவெளுத்துகஞ்சிஏற்றிப்பயன்படுத்தினர்.

‘ துறைபோகுஅறுவைத்தூமடிஅன்ன
நிறங்கிளர்தூவிச்சிறுவெள்ளாங்குருகு’ (நற்றிணை 70: 2,3) 

துணிகளை குருகின் நிறம்போலவெண்மையாகவெளுத்துஉடுத்தினர் புலைத்திகஞ்சியில்துணியைத்தோய்த்துஎடுத்துக்கல்லில்அடித்துத்துவைத்த, முறுக்கியநீர்பிரியாதஆடைபகன்றைபூவைஒத்திருந்ததுபொருள்பட.

‘நலத்தகைபுலைத்திபசைதோய்த்துஎடுத்துத்
தலைப்புடைப்போக்கித்தண்கயத்துஇட்ட
நீரின்பிரியாப்பரூஉத்திரிகடுக்கும்
பேர்இலைப்பகன்றைபொதிஅவிழ்வான்பூ’ (குறுந்தொகை 330:1,4)
        
‘வறன்இல்புலைத்திஎல்லித்தோய்த்த
புகாப்புகர்கொண்டபுன்பூங்கலிங்கம் ’ (நற்றிணை 90: 1,4)

வெளுத்து கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையை அணிந்து மகிழ்ந்தனர் நுட்பமும் மெல்லிய தன்மையும், பூ வேலைப்பாட்டுடனும் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.    

பல்வேறு அழகிய உடைகள் தமிழகத்தில் இருந்தன. உடையின் விளிம்பிலோ, முன்தானையிலோ, உடலிலோ ஆடைகள் மிக அழகாக விளங்கிட தாமரை, அல்லி, மல்லிகை, பிட்சிப்பூ, மாம் பிஞ்சு போன்ற உருவங்கள் அழகு பெற்று விளங்குமாறு உருவங்கள் ஏற்றப்பட்டு ஆடைகள் நெய்யப் பெற்றன.

பாம்பின் சட்டைபோலவும் மூங்கில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால்காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால்நுரை போலவும் அருவிநீர் வீழ்ச்சி தோற்றம் போலவும் மெல்லிய நுண்ணிய ஆடைகளை அணிந்தனர். அதற்கு பல்வேறு வண்ணம் ஏற்றினர் பல்வேறு வடிவம் தந்தனர். காலநிலைக்கு தகுந்தாற்போலவும் இடத்திற்கு தகுந்தாற்போலவும் உடையை தேர்வு செய்தனர். ஆடைகளை வெளுத்து உடுத்தினர். பருத்தியை பயிர்இட்டு பயன்படுத்தினர். பூவேலைப்பாட்டுடன் ஆடைகள் வடிவமைத்தனர்.

இன்றைய நவீன நாகரிக வளர்ச்சியின் கூறுகளாக ஆடை தொழில்நுட்பத்தில் பின்பற்றப்படும். பல அர்ல்ய தொழில்நுட்பங்களை ஆடை தயாரிப்பில் அன்றே பயன்படுத்தி ஆடையை உற்பத்தி செய்வதிலும் உடுத்துவதிலும் உச்சம்பெற்றே திகழ்ந்தனர்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/nesavu2a.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/26/பழந்தமிழரின்-ஆடைத்-தொழில்நுட்பம்-3316203.html
3315388 தமிழ் மொழித் திருவிழா காலந்தோறும் தமிழ் மொழி - அன்றும்... இன்றும்... தஞ்சை வெ.கோபாலன் DIN Wednesday, December 25, 2019 02:54 PM +0530
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க்குடி பற்றி பெருமை படப் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட தொன்மையான மொழி உலகின் மூத்த பல மொழிகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. பல்வேறு மொழி ஆராய்ச்சி ஆசிரியர் பெருமக்களும் எவரும் மறுக்க இயலா அளவிற்குத் தமிழ் மூத்த மொழி என்பதை உறுதிபடக் கூறுகிறார்கள். 

தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைக்கும் பண்டைய இலக்கியங்களை ஆய்வு செய்தால் இம்மொழி காலத்தால் மிகவும் முற்பட்டது என்பதை அறியமுடிகிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வரலாறுகளும், இன்று நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களை வைத்தும் பார்க்கும்போது தமிழ் மொழியின் தொன்மையையும், அது காலந்தோறும் எப்படியெல்லாம் வளர்ந்தது, சந்தர்ப்ப சூழ்நிலை, ஆள்வோரின் மொழிகளால் ஏற்பட்ட தாக்கம், தயக்கம், தடை இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மொழி என்றும் மாறா இளமையுடன் வீறுநடை போடுவதை நம்மால் உணர முடிகிறது. இன்று நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியின் பல சிறப்பான இலக்கியங்கள் சங்க காலத்தில் தோன்றியிருப்பது தெரிகிறது. 

தமிழின் மூத்த இலக்கண நூல் தொல்காப்பியம், அதன் காலம் கி.மு.500 என்றும், அந்நூலில் காணும் குறிப்புகளிலிருந்து அதற்கு முன்பும் பல நூற்றாண்டு காலங்கள் பின்னோக்கிய காலத்தே தமிழ் மொழி கோலோச்சிக் கொண்டிருந்தது என்பதும் தெரிகிறது. அப்போதிருந்த மன்னர்களிடம் சென்று அவர்கள் புகழைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர்களின் தனிப்பாடல்கள் எல்லாம் சங்கப் பாடல்கள் என்ற பெயரில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் உழைப்பால் தேடிக் கண்டுபிடித்து இன்று நமக்குக் கிடைக்கின்றன. 

அதன் பின் ஆங்கில வழி ஆண்டு முறைப்படி சுமார் ஐநூறு ஆண்டுகள் சங்கம் மருவிய காலம் என்கின்றனர். இந்த காலகட்டத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பல காப்பியங்கள் பல உருவாகின. இவை உருவான காலத்தில் இளங்கோ பெளத்த துறவி என்பதால் பெளத்த மதமும், நாலடியார் உருவாக்கிய புலவர்கள் சமணர்கள் என்பதால் சமணமும் தழைத்து வளர்ந்திருந்தது என்பதும் தெரிகிறது. தமிழின் சுவையும், தமிழிலக்கியங்களின் பெருமையும் இந்தக் காலத்து நூல்களில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது. 

தொடர்ந்து வந்த காலத்தில் சமய இலக்கியங்கள் பற்பல தோன்றியிருக்கின்றன. மூவர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் போன்ற சமய நூல்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இவர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். 

மேலும் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கி இருந்ததும் தெரிய வருகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கவியரசர் கம்பரின்  ‘ராம காதை’ தமிழுக்கு ஒரு மகுடாபிஷேகம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிறப்பான காவியமாக மலர்ந்தது. சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டதோடு, தமிழ் மொழியின் ஆக்கத்துக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். 

காவிரி பாய்ந்தோடும் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் கடைச்சோழ மன்னர்கள் எனப்படும் விஜயாலய சோழனின் வாரிசுகள் தமிழத்தின் பொற்காலமாக ஆக்கி வைத்திருந்தார்கள். மாமன்னன் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் தமிழை கடல் கடந்தும் கொண்டு சென்ற பெருமைதான், இன்றும் காம்போஜத்தில் மாபெரும் சிவாலயமும், தூரக்கிழக்கு நாடுகளில் நமது திருப்பாவை, திருவெம்பாவையையும் மொழி புரியாமலாவது பாடிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு அவர்களே காரணம். 

விஜயாலயன் பரம்பரையின் கடைசி மன்னன் 1279இல் போரில் மாண்ட பின் அந்த சோழ வம்சம் முடிவுக்கு வந்தது. இவர்கள் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் உருவாகின. இவர்கள் ஆட்சிக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகள் பற்பலரும் இந்தப் பிரதேசத்தை ஆளவும், அவரவர் மொழிகளை இங்கே பரப்பவும் செய்ததால் தமிழின் வளர்ச்சி மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த விஜயநகரப் பேரரசு காலத்தில் கிருஷ்ணதேவ ராயரும், அவருடைய இளவல் அச்சுததேவ ராயரும் தென்னாடு முழுவதும் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியிருந்ததோடு, வடக்கிலிருந்து படையெடுத்து வந்த முகலாயர்கள், தட்சிண சுல்தான்கள் ஆகியோரிடமிருந்து தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அழியவிடாமல் பாதுகாத்தார்கள். எனினும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தெலுங்கு மொழி இங்கு கோலோச்சத் தொடங்கியது. 

தமிழ் பண்டிதர்கள் கையில் மட்டும் தமிழ் மொழி செழித்து வளர்ந்ததே தவிர பொதுமக்கள் மத்தியில் தமிழ் பெரிதும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. ஆள்வோர் மொழிக்கும் தங்கள் பேச்சு மொழிக்குமாக மக்கள் ஊசலாடிக் கொண்டிருந்தனர். நூற்று முப்பது ஆண்டுகள் நாயக்க மன்னர்கள் தமிழகத்தை ஆண்ட பின்னர், மராத்தியர்கள் தஞ்சை, செஞ்சி, மதுரை ஆகிய பகுதிகளில் 190 ஆண்டுகள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிய சமயம், தெலுங்கு தவிர மராத்திய மொழியும் இங்கே வளர்ச்சியடைந்தது. தமிழ் மெல்ல ஒளியிழக்கக் காரணமாயிருந்தது இப்படிப்பட்ட வேற்று மொழி ஆட்சியும், அப்போது மெல்ல ஆங்கில கம்பெனியார் உட்புகுந்து இங்கு வழக்கிலிருந்த கல்வி முறையை மாற்றி மெல்ல ஆங்கிலத்தின் ஆளுமையை அதிகப் படுத்தியதும் காரணமாகும். 

தமிழகம் பெரும்பாலும் விவசாயிகளையும், கைத்தொழில் புரிவோரையும் கொண்ட நாடு என்பதால் கல்வி, படிப்பு இவைகளெல்லாம் ஒருசாராருக்கு மட்டுமே கிடைத்தும், இதர மக்கள் கல்வி அறிவு பெற வசதியில்லாமல் போயிற்று. ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் குறிப்பாக நாயக்கர்கள், மராத்தியர்கள் ஆண்ட பிரதேசங்களில் வழங்கிய மொழி கொச்சையான இலக்கணப் பிழை, எழுத்துப் பிழைகள் கொண்ட மொழியாகவே இருந்திருக்கிறது. பண்டிதர்கள்,  பாமரனுக்குப் புரியாத கடுந்தமிழில் பேசவும் எழுதவுமாக இருந்த காரணத்தால் நல்ல தமிழ் பேசும் வாய்ப்பு உழைப்பவனுக்கோ, அல்லது பாமரனுக்கோ அமையாமல் போய்விட்டது. ஆங்கிலக் கல்வியை லார்ட் மெக்காலே கொண்டு வந்தபோது தமிழ் அழிவின் விளிம்பிற்குச் சென்றிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் வீரமும், நிர்வாகத் திறனும் மிக்காவராகத் திகழ்ந்தவர் பிரதாபசிம்ம ராஜா. அவருடைய மகன் துளஜேந்திர ராஜாவும் அவருடைய தத்துப் பிள்ளையான சரபோஜி ராஜாவும் ஆண்ட காலத்தில் தமிழ் மொழிக்குப் பெரிதும் ஏற்றம் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. சரபோஜி காலத்தில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்ற ஒரு தமிழ்ப் புலவர் குழு இருந்த போதிலும் அவர்கள் சிற்றிலக்கியங்களில் ஈடுபட்டு வந்தனரே தவிர பொது மக்கள் மத்தியில் தமிழை நன்கு பேசவும், எழுதவும் வழிவகுத்ததாகத் தெரியவில்லை. 

மன்னர் பிரதாபசிம்மன் காலத்தில் கர்னல் மெக்கன்சி என்பார் அந்தக் கால அரசியல் விவகாரங்களை நான்கு மொழிகளில் அந்தந்த மொழிக்கு ஒரு சுருக்கெழுத்தாளரைக் கொண்டு எழுதி வைத்தார். அவை ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இருந்தன. அவர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழியைச் சிறிது படித்தால் தான் தமிழின் அன்றைய நிலைமை நமக்குப் புரியும்.

கர்னல் மெக்கன்சி சுவடிகள் எனப்படும் இவை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்தது. அதைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒரு நூலாக “தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இங்கு தருகிறேன். அந்தத் தமிழ் நடையைப் பார்த்தாலே தெரியும் தமிழ் அன்று பட்ட பாட்டை. 

அது இதோ:- “காட்டு ராஜா வென்கிறவன் வெள்ளாட்டி மகன் சுபானி யென்று பேர். அப்படிக் கொத்தவனுக்கு தஞ்சாவூர் றாட்சியம் போசலே வமிச பரம்பரையாய் பண்ணிக் கொண்டு வந்த றாட்சியத்தை இந்த வெள்ளாட்டி மகனுக்கு ஆனது சேதி உறைமுறையார் முதலான சகல செனங்களுக்கும் வியக்தமாய் தெரிந்த பிற்பாடு, இந்த கிறுத்திறமத்திலே சேர்ந்து இருந்த சயிது யென்கிறவன் பரம்பரையாய் ராஜாவுடைய சேவுகம் பண்ணிக் கொண்டு வருகிறோமென்றும், வெகு செனங்களுக்குள்ளே லட்சை (லட்சை = வெட்கம்) யாகுதென்றும், இதுலே முக்கியமாய் யெகோஜி ராசா சேர்மானம் பண்ணியிருக்கப்பட்ட ஸ்ரீகளுக்குப் பிறந்த சந்திரபானுஜி போசலே அவர் பிள்ளை னாயக்கஜி போசலே யென்கிறவன் பாக்கியத்திலேயும் சவுரியத்திலேயும் பிறக்கியாதியாக யிருந்தான். அவன் பயத்தினாலே இப்போ  றாட்சிய வம்சத்திலே பிறதாப சிம்ம ராஜா றூபத்திலேயும் கிறிகை (கிரிகை = செயல்பாடு) குணம், புத்தி இந்த குணங்களிலே யோக்கியமா யிருக்கிறா ரென்று பட்டம் கட்டின பிற்பாடு அந்த சயிது யென்கிறவன் கிறுத்திறமத்திலே யிருந்தான்.” பயப்படத் தேவையில்லை.  இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தமிழ் மொழி பட்ட பாடு. 

பதினெட்டாம் நூற்றாண்டில் சோழ தேசத்தில் தமிழ் பட்ட பாடு இது. இதில் குறிப்பிடப்படும் பிரதாபசிம்ம ராஜாவின் மகன் துளஜேந்திர ராஜா. அவருக்கு ஆண் வாரிசு இல்லாமையால் மராத்திய பிரதேசத்துக்குச் சென்று அங்கு சரபோஜி எனும் பத்து வயது சிறுவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டு வந்து அரசானாக்கியதும், இடைக் காலத்தில் அமர்சிங் என்பார் அரசாண்டதும் மராத்திய வரலாற்றில் வரும் செய்திகளாகும். இந்த சரபோஜி மன்னன் வாழ்ந்த காலத்தில் இவர் அவையில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எனும் புலவர் தலைமையில் ஒரு புலவர் குழு இயங்கி வந்தது. சில சிற்றிலக்கியங்கள் தவிர இவர்கள் வேறெந்த புகழ்வாய்ந்த இலக்கியங்களைப் படைத்ததாகத் தெரியவில்லை. இவர்கள் காலத்திலேயே நமது தமிழகத்துப் பாரம்பரிய கல்வி முறையைத் தகர்த்தெறிந்துவிட்டு ஆங்கிலக் கல்வியை நிலைநாட்ட லார்டு மெக்காலே ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சிதான் நாம் இன்றும் படித்து வரும் கல்வி முறை. ஜி.யு.போப், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார், வள்ளலார் இராமலிங்கனார், தாயுமானவர், காளமேகம் போன்ற சிலர் அரிய பல தமிழ் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். 

ஆனாலும் இவை அத்தனையும் படித்த வர்க்கத்தினர் மத்தியிலேதான் பரவி வந்தனவே தவிர பாமரன் கற்கவோ, புரிந்து கொள்ளவோ தமிழ் மொழி அன்று உயர்ந்து விளங்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் படித்த புலவர்கள், சாதாரண பாமர மக்களுக்கான வகையில் மொழியைப் பயன்படுத்த வில்லை. அவர்களுக்கேன்றே மிக உயர்ந்த தமிழ் நடையில் எழுதினார்களேனும், அவை பல்வகைத்தானும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பாடுபடும் பாமரத் தமிழன் புரிந்து கொள்ளுமளவுக்கு அமையவில்லை. 

ஆகவே பண்டிதத் தமிழ் என்றும், பாமரன் பேசும் பாமரத் தமிழென்றும் பிரித்துப் பார்க்கும் படிதான் தமிழின் நிலை அன்று இருந்தது. பாரம்பரியமாக காலம் காலமாக இருந்து வந்த குருகுல கல்வி முறை ஆணும் பெண்ணும் கல்வி கற்று கவிபாடும் திறமை கொண்ட புலவர் பல்லோர் இருந்த தமிழ் நாட்டில் தமிழின் நிலை பரிதாபமானதாக ஆகியிருந்தது.  இதைத்தான் பாரதி “தமிழச் சாதி” எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் சொல்கிறார்“எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்   நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்  பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?  விதியே! விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய், எனக்குரையாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ?  
      
   “சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்  திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் ‘எல்லையொன்றின்மை’எனும் பொருள் அதனைக் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று உறுதி கொண்டிருந்தேன்.  ஒரு பதினாயிரம் சனிவாய்ப் பாட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடைவின்றி உழைத்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாதிருந்தேன்.  

 விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின்றாயடா?”இப்படி பாரதி காலத்தில் தமிழின் நிலை கண்டு மனம் வெதும்பி பாடிய பாடல் வரிகள் இவை. சரி! இந்த நிலை சீரடைய வேண்டுமானால், தமிழ் மொழி, தன்னுடைய முந்தைய பெருமையை, உயர்வை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்கிறான். “மெல்லத் தமிழினி சாகும், அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்” என்றந்தப் பேதை உரைத்தான். ஆ! இந்த வசை யெனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்றும் அறைகூவல் விடுக்கிறான். 

பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி, புலவர்கள் கையில் அடைக்கலமாகி இருந்தது. பாமரனுக்குப் புரியாத கடுந்தமிழ் வாசகங்கள், அவை தங்களுக்கு இல்லை என்பது போல் அந்தப் பாமர மக்களும் கல்வியில் அக்கறை இல்லாமலே இருந்து விட்டனர். அந்த நிலை மாறத்தான் பாரதி பண்டிதர்களின் கரங்களில் இருந்த கடுந்தமிழை எளிய தமிழில், “சொல் புதிது, பொருள் புதிது,” என்று நவகவிதை யாத்துத் தந்து பாமரன் கைகளில் கொடுத்துத்  தமிழுக்குப் புத்துயிர் அளித்தான். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் புத்துயிர் பெற்றது. 

தமிழுணர்வு உருவாகி பரந்து விரிந்த பகுதிகளில் அனைவரும் பிழையின்றி தமிழைப் பேசவும், எழுதவும், படிக்கவும் தொடங்கி இன்று தமிழ் முன்னைப் பெருமைக்கும் மேலும் மெருகூட்டி மெத்த வளருது இங்கே. அந்த வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்து கல்வியில் மட்டுமல்ல, பேச்சில் எழுத்தில் கவிதைகளில், காப்பியங்களில் இவற்றோடு அறிவியலிலும் ஓங்கி வளர வேண்டும். அந்த வளர்ச்சி நம் கையில் தான் இருக்கிறது. செய்வோம், செய்து முடிப்போம் என்று சூளுரைப்போம். வாழ்க தமிழ்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/tamil.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/25/காலந்தோறும்-தமிழ்-மொழி-அன்றும்-இன்றும்-3315388.html
3314436 தமிழ் மொழித் திருவிழா தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை முனைவர் மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர் DIN Tuesday, December 24, 2019 06:13 PM +0530  

உலகம் செழிக்க அடிப்படையாய் விளங்குவது நீராகும். மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது எளிதான செயல் அல்ல. உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் மிகமிக அவசியம் நல்ல தண்ணீர் தேவையாகும். 15,20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆறு, ஏரி, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் கைகளாலேயே நீரினை அள்ளிக்குடிக்கக் கூடிய நிலை அப்பகுதி மக்களிடையே இருந்து வந்தது. இன்று நிலை அப்படியல்ல. பாட்டில்களில் அடைக்கப்பெற்ற தூய்மைப் படுத்தப்பட்ட நீரினை பாலின் விலையைவிடக் கூடுதலாக விலைகொடுத்து வாங்கி அருந்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

நம் முன்னோர்களால் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பெற்று பயன்படுத்தப்பட்டு வந்த நீரை நாம் மதிக்கத்தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய நிலை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தாலைகாண்ப தரிது. (16)

என்கிறார் திருவள்ளுவர். வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகின்றது. அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரினை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் தம் படைப்பான சிலம்பில் மிக அழகாகக் குறிப்பிடுகின்றார்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்…
(காடுகாண் காதை. 27-29)

இப்பாடலடியில் மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள் முறையாகப் பெய்யும் மழை நீரினை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றை தக்கமுறையில் பயன்படுத்தி நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் பேய்வாரி என்கிற காட்டுவாரியும், வடவாறும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. இந்த இடத்தில் அக்காலத்தில் இரு ஆறுகளின் நீரோட்டத்துக்குத் தடையில்லாத வகையில் கீழே பேய்வாரி என்கிற காட்டுவாரி செல்லும் நிலையில் மேலே பாலம் போன்ற கட்டுமானத்தில் செல்லும் வடவாறு.

இதே போல மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாயக் கடமை என்று புறநானூற்றுப் பாடலில் புலவர் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடுகின்றார்.

நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (18:28-30)

இதன் பொருள் நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றுமு; அழியாத புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும். மேலும் இனியவை நாற்பது, திரிகடுகம், பெரியபுராணம் போன்ற தமிழ் இலக்கியங்களில் குளம் வெட்டுவித்தல் என்பது மிகப்பெரும் அறச்செயல் என்று போற்றப்பெறுகின்றது. காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே என்ற வரி இனியவை நாற்பது சுட்டுவதாகும்.

மழைப்பொழிவினைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த ஏரிகள், குளங்கள் வெட்டுவிக்க வேண்டும் என்று கூறும் தமிழ் நூல்கள் அவற்றோடு நில்லாமல் அவைகள் எந்த வடிவில் அமைந்தால் நல்லது என்ற அறிவியல் உண்மையையும் எடுத்துச் சொல்லுகின்றன.

புறநானூற்றுப் பாடலில் கபிலர்,
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ (118:1-3)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று பாடுகின்றார். ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்ட இன்றும் இத்தகு வடிவமைப்புடன் திகழும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாட்டுப் பேரேரியின் விண்கோள் படத்தினைக் கண்டு ஆய்வு மேற்கொண்டோம். அவ்வேரியின் அமைப்பு எட்டாம் திங்கள் போன்றே இருப்பது குறிப்படத்தக்கதாகும்.

இதேபோல் சிறுபஞ்சமூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றிக் காரியாசான் கூறுகின்றார். அதில் பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்திற்குப் போவார் என்று குறிப்பிடுகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுதத்தில் நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியினை,

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார். (84)

என்று தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டிற்குச் சிறப்பு தரும் என்பதை யாறுள் அடங்குங் குளமுள வீறுசால் என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது. இப்பாடலில் குறிப்பிடப்பெறும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர் நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரினை உரிய முறையில் சேமித்து நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகின்றது. ஆற்றின் மிகுதி நீரை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பேரேரிகள் உரிய ஆழ அகலத்துடன் இருக்குமாயின் வெள்ளக்காலங்களில் வரும் அதிகப்படியான நீர் வீணாகக் கடலில் கலக்காமல் முழுவதையும் சேமித்துப் பயன்கொள்ள முடியும்.

காவிரியின் மிகுநீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடப் பேராறு நீர்பெருக்கு எடுக்கும்போழுது அதனை சேமித்துப் பயன்படுத்தவே வீர நாராயணன் என்ற பட்டம் சூடிய பராந்தக சோழன், வீராணம் எனப்படும் வீர நாராயணப் பேரேரியை வெட்டுவித்து ஆறு உள் அடங்குமு; பெருங்குளமாக அமைத்தான். அப்பேரேரி ஏறத்தாழ 18 கி.மீ நீளமுடையது. இது காலப்போக்கில் பராமரிப்பு இன்றி தூர்ந்துவிட்டதால் மிகுநீரை சேமிக்க முடியாமல் போயிற்று. வீராணம் ஏரி, கவிநாட்டுப் பேரேரி போன்ற பெரும் ஏரிகளை ஆழப்படுத்தி அவைகளுக்கிடையே இணைப்புக் கால்வாய்கள் வெட்டி பெருகும் வெள்ளநீரை சேமித்தால நம் நாட்டிற்குப் பெரும்பயன் ஏற்படும்.

இத்தகு கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது முறையாகப் பராமரித்த செய்தியினை, நக்கண்ணையார் பாடிய அகநானூற்றுப் பாடல்,

பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனவே.  (252:13-14)

என்கின்றது. அதாவது பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன் போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருளாகும். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணினை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீரிநிலைகளிலிருந்து மிகுநீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பெற்றுள்ளன. ஏரியின் முழுக்கொள்ளளவு நீர்மட்டத்தைக் கணக்கிட்டு, இயற்கையாகவே பள்ளமாக உள்ள கரையின் ஒரு பகுதியில் அந்த உயர அளவில் சிறு வடிகால் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மிகும் நீரை வெளியேற்றி வந்தனர். இந்நீர் வெளியேற ஒரு கால்வாய் ஏற்படுத்தி அடுத்த ஏரியிலோ அல்லது ஆற்றிலோ கலந்துவிடும்படி செய்திருந்தனர். இதனால் நீர் வீணாவது தடுக்கப்படுவதோடு, எவ்வளவு வெள்ளம் வந்தாலும் ஏரியின் கொள்ளளவைத் தாண்டிய நீர் இக்கலிங்கு வழியே வெளியேற்றப்படுவதால் ஏரியின் கரை உடைப்பெடுப்பதும் தடுக்கப்பெற்றது. இத்தகு தொழில்நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மேலும் ஏரிக்கரையின் உயரம், அகலம் ஆகியவை எவ்வளவு இருக்கவேண்டும். கரைக்கு வெளியே குறிப்பிட்ட தூரம் வரை உள்ள நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. கரையில் மரங்களை நட்டுப் பராமரித்தல், அம்மரங்களை யாரும் வெட்டுதல் கூடாது போன்ற பல மேலாண்மைத் தொடர்பான செயல்களையும், ஏரிகளைப் பராமரிக்க ஒரு தனி நிருவாக அமைப்பாக ஏரி வாரியம் அமைக்கப்பட்டிருந்த செய்திகளையும் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான எண்ணற்றப் பேரேரிகள் இருந்தன. அவற்றைப் பராமரிக்க குளப்பட்டி என்ற பெயரால் நிலமளித்து அதன் வருவாயிலிருந்து ஏரிகளைக் காக்க வகைசெய்தனர்.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில் புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம். (79-82)

என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துக்கள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருளாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்த குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும். நீர வெளியேறுவதற்கான துளையையும், பக்கவாட்டில் வண்டல் படிந்த சேறு வெளியேறுவதற்கான சேறோடித்துளை என்ற மூன்று சிறிய துளைகளையும் அமைப்பர். கல்பெட்டியின் இருமருங்கும் ஏரியில் தேக்கப்படும் அதிகப்படியான நீரின் கொள்ளளவு உயரத்தைவிட சற்று உயரமான அளவில் கருங்கள் தூண்களை நிறுத்துவர். இரு குறுக்கு விட்ட கற்களை அத்தூண்களுடன் இணைப்பர். கல்பெட்டியின் நீரோடு துளைக்கு நேராக இரு குறிக்குவிட்ட கற்களிலும் துளையிடுவர். நீண்ட கம்பி அல்லது மரக்கழியினை அத்துளை வழியே செலுத்தி அதன் அடிமுனையில் கல்பெட்டியின் மதகு வாயில் (துளையில்) சரியாகப் பொருந்தும் அளவுக்குரிய அடைப்புக்கல் ஒன்றினை இணைப்பர். கம்பி அல்லது மரக்கழியினை மேலிருந்து இயக்குவதன் மூலம் நீர் செல்லும் தூம்புத் துளையினை மூடுவதும், திறப்பதம் இயலும், கல்பெட்டி மற்றும் தூண் அமைப்புகளை குமிழி என்றும், இவைகளுக்குக் கீழாகச் செல்லும் நீர் வெளியேறும் சுருங்கை வழியினை தூம்பு என்றும் குறிப்பிடுவர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே  கல்லணைக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கச்சமங்கலம் அணை.

இந்த மதகு அமைப்பில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக விளங்குவது சேறோடித்துளைகளே ஆகும். பெருவெள்ளப் பெருக்குகளால் ஏரியை வந்தடையும் நீரில் வண்டல் இருப்பதால் ஆண்டுதோறும் ஏரியின் தரைமட்டப் பகுதியில் வண்டல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அவற்றை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் சில ஆண்டுகளில் ஏரி தூர் படிந்து மேடிட்டுவிடும். ஆண்டுதோறும் நீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டுத் தூர்வாருதல் என்பது இயலாத ஒன்று. மேலும் தூர்வாருவதற்கு செலவும் அதிகமாகும். இவ்வாறு இல்லாமல் அவ்வப்போது ஏரியின் தரை மட்டத்தில் சேகரமாகும் வண்டலை நீரோடு கலக்கி வெளியேற்றிவிட்டால் வண்டல் படிந்து மேடாகாது. இதற்கென தனிக்கருவிகள் ஏதும் தேவை இல்லை. இதனைச் செய்வதுதான் குமிழித்தூம்பின் வேலையாகும்.

நீர்பாசனத்துக்காக குமிழியின் அடைப்புக்கல் திறக்கப்படும்போது நீர் மிக வேகமாக சுழித்துக்கொண்டு கல்பெட்டி வழியே நீர்த்தூம்புக்குள் செல்லும். அதே நேரத்தில் நீர்ச்சுழல் மூலம் கலக்கப்படும் நீரில் வண்டல் கரைந்து சேறாகி வெளியேற்றப்படும். நீரின் வேகத்தால் சேறோடித்துளை மூலம் தரை மட்டத்தில கெட்டிப்பட்டு படிந்திருக்கும் சகதி உள்ளே இழுக்கப்பெற்று பாசன நீரோடு கலந்து சென்றுவிடும். இதனால் 90 விழுக்காடு நல்ல நீரோடு 10 விழுக்காடு சேறும் கலந்து வெளியேறுவதால் ஏரியின் தரைமட்டத்தில் வண்டலும் படியாது. அதே நேரத்தில் பாசன நீரில் வண்டல் கலப்பதால் வயல்களுக்கு நல்ல உரமாகி பயிர்களுக்கு படியாது. அதே நேரத்தில் பாசன நீரில் வண்டல் கலப்பதால் வயல்களுக்கு நல்ல உரமாகி பயிர்களுக்குப் பயன்படும். இத்தகைய தொழில் நுட்ப உத்தி மேலை நாட்டவர் அமைத்த திருகு மதகுகளில் இல்லை. அதனால்தான், பெரும்பாலான ஏரிகள் காலப்போக்கில் மேடிட்டு அழிந்தன. மேலும் அத்தகைய மதகுகளின் உதவியால் ஏரியின் முழுக்கொள்ளளவு நீரையும் சேமிக்க இயலாது.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள் அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகின்றத. இநு;து அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது இன்றளவும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பழைய எச்சங்களுடன் சில அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றை காணமுடிவது வியப்பிற்குரிய ஒன்றாகும்.

யாரோ ஒரு கவிஞர் பாடியுள்ளார்,

என்தாத்தா ஆறுகுளங்களில்
தண்ணீரைப் பார்த்தார்….
என்தந்தை கிணறுகளில்
தண்ணீரைப் பார்த்தார்….
நான் பிளாஸடிக் பாட்டில்களில்
தண்ணீரைப் பார்க்கிறேன்….
என் குழந்தைகள்….?

என்று கேள்விக்குறியுடன் கவிதையினை முடித்துள்ளார். இத்தகு நிலை நம் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படாத வகையில் பழைய தொழில்நுட்பங்களுடன், புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமிப்போம், எதிர்காலத்தைக் காப்போம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/water_management41a.jpg தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் பேய்வாரி என்கிற காட்டுவாரியும், வடவாறும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. https://www.dinamani.com/language-fest/2019/dec/24/தமிழ்-இலக்கியங்களில்-நீர்-மேலாண்மை-3314436.html
3314573 தமிழ் மொழித் திருவிழா தமிழால் இணைவோம் கி. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி DIN Tuesday, December 24, 2019 06:09 PM +0530  

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பிராமி போன்ற வடமொழிகள் இருந்ததால்தான் தொல்காப்பியர் வடசொல் இலக்கணமே வகுத்திருக்கிறார்.

2000 ஆண்டுகளாக வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் வந்துவிட்டது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை; மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள் தோன்றின. சிலம்பும்,மேகலையும், சீவக சிந்தாமணியும், கம்பகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும், தாயுமானவரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். ஆனால், தமிழ் தன் அடையாளத்தையே அல்லவா இழந்துவிட்டது! வடமொழிக் கலப்பில்லாத, உருதுக் கலப்பில்லாத,தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது.

இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்து விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கிலவழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கிலவழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் நமது மேதகு அப்துல்கலாம் அவர்கள் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய்மொழிக் கல்விதான், அவரது அறிவியல் மேற்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதுதானே உண்மை!

ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைக்கிறார்கள் என்றால் அவர்கள் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்தில் பயில்கிறார்கள்; சாதனை படைக்கிறார்கள்.ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள்.
சின்ன நாடான சிங்கப்பூரில் பாடமொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்கள் குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது என்றும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் என்று கருதுகிறோமே, அந்த மனநிலை மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வி பயில்வதில் தவறில்லை. அவர்கள் வீட்டில் பெற்றோருடனும், உற்றார் உறவினருடனும் தமிழில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களை வழிநடத்தும் கடமை நமக்கு இல்லையா?

முல்லைப் பதிப்பகத்தார், சின்ன அண்ணாமலை தொகுத்த "ராஜாஜி உவமைகள்' என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் "தமிழ் எங்ஙனம் வளரும்?' என்கிற தலைப்பில் மூதறிஞரின் கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

""பல்வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழர், தாங்கள் சாதாரணமாகப் பேசும்போது முழுதும் தமிழிலேயே பேசினால்தான் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படும். விஷயங்களைப் பேசும்போது, தமிழ்மொழி தெரியாத இடத்திலும், மறந்துபோன இடத்திலும் புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும்போதும், அறிவையும் நினைவையும் செலவழித்துத் தமிழ் வார்த்தைகளைத் தேடி உபயோகிப்பதற்குப் பதில், எளிதில் கிடைக்கக் கூடிய ஆங்கில வார்த்தைகளை, அதாவது பிற தேசத்தார் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உருவாக்கி இருக்கும் வார்த்தைகளை, எந்தவிதக் கூச்சமுமின்றி இடையிடையே கலந்து பேசித் தமிழுக்குச் சோறு போடாமல் அதைக் கொல்கிறோம்.

நுட்பமான பொருள் பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த வார்த்தைகளும், நடையும் ஒரு பாஷையில் எவ்வாறு தோன்றும்?தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும்? கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால் நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும்? தடை தோன்றிய இடங்களிலெல்லாம், அதற்கான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்துப் பேசாமல், ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை கூட்டிக்கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும்? அறிஞர்களெல்லாம் ஒன்றுகூடித் தமிழைக் கொல்வதற்குச் சதியாலோசனை செய்தால்கூட இதைவிடச் சிறந்த உத்தியைக் கண்டுபிடிக்க முடியாது!''

மூதறிஞர் ராஜாஜி இப்படியொரு நிலைமை தமிழுக்கு ஏற்படப் போகிறது என்பதை 1938-இல் அவர் முதல்வராக இருந்தபோதே சிந்தித்திருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. எண்பதாண்டுகளாகியும் நாம் புரிந்து கொள்ளாமல், கலப்படச் சுகத்தில் மிதக்கிறோமே என்பது வேதனையாகவும் இருக்கிறது.

தமிழின் மீது நெஞ்சார்ந்த பற்றுக் கொண்ட நாமெல்லோரும் ஓரிடத்தில் கூடுவதன் மூலம், தமிழை, தமிழர்தம் இதய சிம்மாசனத்தில் ஏற்றி, தமிழில் பேசுவது, தமிழில் சிந்திப்பது, தமிழ் படிப்பது என்பதைப் பெருமைக்குரியவையாகத் தமிழ்ச் சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/edittorkv.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/24/தமிழால்-இணைவோம்-3314573.html
3314418 தமிழ் மொழித் திருவிழா மொழியாக்கம் ஒரு கலை முனைவர் பா.ஜம்புலிங்கம் DIN Tuesday, December 24, 2019 03:30 PM +0530  

தினமணி நாளிதழுடன் கடந்த 10 ஆண்டுகளாக கார்டியன் (இலண்டன்), நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா), டான் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பல வெளிநாட்டு நாளிதழ்களைப் படித்து வரும்போது அவற்றில் வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

ஆங்கில இதழ்களைப் படித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிதான வாசிப்பு ஒரு கலை”, “தமிழில் இந்த ஆண்டில் சொல் எது? ”, “அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஒரு ராஜதந்திரம்”, “புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு”, “என்றென்றும் நாயகன் சே குவாரா”, “2017இன் சிறந்த சொல்” என்ற தலைப்பிலான கட்டுரைகள் ஒரு நாளிதழில் வெளியாயின.

“நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையைப் பற்றிய மதிப்புரை” (எனக்குப் பிடித்த புத்தகம், தினமணிகதிர், 14 டிசம்பர் 2014) ஒரு மொழியாக்கமாகும். தொடர்ந்து “கடிதம் செய்த மாற்றம்” (தினமணி, 7 அக்டோபர் 2018), இலக்கை நோக்கும் உயரமான பெண் (தினமணி, 29 நவம்பர் 2018),   “உலக அரசியல் களத்தில் மகளிர்” (தினமணி, 17 ஏப்ரல் 2019), “மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க்” (தினமணி, 4 செப்டம்பர் 2019) போன்ற கட்டுரைகள் வெளிநாட்டு இதழ்களில் வெளியான ஆங்கிலக் கட்டுரைகளிலிருந்து திரட்டப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.

இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது வெளியான “ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி கொண்டாட்டம், 26 செப்டம்பர் 2010) என்ற தலைப்பிலான கட்டுரை ஆகும். அக்கட்டுரை ஜவஹர்லால் நேரு எழுதிய உலக வரலாறு என்னும் ஆங்கில நூலில் காணப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் பெருமைகளைப் பற்றிய மொழியாக்கம் செய்யப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.

இவ்வாறாக பல ஆண்டுகளாக மொழியாக்கம் செய்துவரும் நிலையில் பல அனுபவங்களைக் காணமுடிந்தது. இந்த அனுபவங்கள் மொழியாக்கம் ஒரு கலை என்பதை உணர்த்தின.

அக்டோபர் 1984இல், இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் சுடப்பட்டு இறந்தபோது ஓர் ஆங்கில நாளிதழில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும் மற்றோர் ஆங்கில இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் செய்திகள் வெளியாகின. இரண்டு சொற்றொடர்களுமே இந்திரா காந்தியின் மரண நிகழ்வினைக் குறிப்பிட்டபோதும் அசாசினேட்டட் என்ற சொல்லானது சற்று கூடுதலான பொருளைத் தரும் வகையில் அமைந்திருந்தது. அசாசினேட் என்பதற்கு படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக்கொல்லு (ஆங்கிலம் தமிழ் சொற்களஞ்சியம், சென்னைப்பல்கலைக்கழகம், 2010) என்றும், முக்கிய நபரை குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தல் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, 2010) என்றும் அகராதிகள் கூறுகின்றன. ஷாட் டெட் என்பதற்கு சுட்டுக்கொல்லு என்பது பொருளாகும். இவ்வாறாக சில சொற்கள் மூல மொழியில் அமையும்போதே முழுப்பொருளையும் தரும் வகையில் அமைந்துவிடுகின்றன.

மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து மொழியாக்கம் என்பது சற்று வேறு நிலையில் அமைகிறது. மொழியாக்கம் செய்யப்படும் செய்தியானது அனைத்துநிலை வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது. மொழிபெயர்ப்பு என்ற தளத்தில் நின்று மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தால் சொல்லுக்குச் சொல் என்பதே சாத்தியமாகும். மொழியாக்கத்தின்போது எல்லை சற்றே விரிய ஆரம்பிக்கிறது. மூல மொழியில் உள்ள மொழியாக்கம் செய்யப்படுகின்ற பொருண்மையினை முழுமையாக வாசித்து பின்னர் அதனைக் கிரகித்துக் கொண்டு, இலக்கு மொழிக்கு (மொழியாக்கம் செய்யப்படுகின்ற மொழி) அதனைக் கொண்டு செல்வது மொழிபெயர்ப்பாளரின் முக்கியமான கடமையாகிறது. அவ்வாறு செய்யும்போது அதனை எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மொழியாக்கத்தின்போது பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்தவேண்டும். குழப்பம் தருகின்ற, மயக்கம் தருகின்ற, மாற்றுப்பொருள் தருகின்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது மொழிபெயர்ப்பின் தரத்தினை மேம்படுத்தும்.

வல்லுநர்களிடம் உரையாடல், அகராதிகளைப் பார்த்து உறுதிசெய்தல்: மொழியாக்கம் செய்யப்படும்போது பலவிதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு எழும்போது உரிய துறைசார் வல்லுநர்களோடு தொடர்பு கொள்ளலாம். அகராதிகள் மற்றும் தொடர்பான நூல்களைப் பார்த்து பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம். அவ்வாறு மொழியாக்கத்தின்போது தெளிவான பொருளைத் தருகின்ற வகையில் சொற்றொடர் அமைவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம்: சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் செய்யும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலோ அமையும். சில சமயங்களில் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில சொற்களை விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் சொல்லுக்குச் சொல் உள்ளது உள்ளபடியே மொழியாக்கம் செய்தும் உத்தியைத் தவிர்ப்பது நலம் பயக்கும். முழுமையாக வாசித்து, பொருளைப்புரிந்து பின்னர் சொல்வாரியாகவோ, சொற்றொடர்வாரியாகவோ, பத்திவாரியாகவோ இடத்திற்குத் தக்கவாறு மொழியாக்கம் செய்யலாம்.

இருமொழித் திறன்: மூல மொழியிலும் இலக்கு மொழியிலும் சமமான அளவு திறன் இல்லாவிட்டாலும்கூட, கிட்டத்தட்ட பொருளை விளக்குகின்ற அளவிற்கான மொழியறிவு இருப்பது அவசியமாகும். அவ்வாறு இல்லாத நிலையில் மொழியாக்கத்தில் ஒரு தெளினைக் காண்பது சிரமமாகும்.
 
சிறப்புக்கூறுகள்: 
மொழிக்கே உரிய சிறப்புக்கூறுகள், பதங்கள், சொல்லாடல்கள் அமையும்போது  அதனை மொழியாக்கம் செய்வது  எளிதன்று. உதாரணமாக மூல மொழி தமிழ் என்றும் இலக்கு ஆங்கிலம் என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது தமிழ் மொழிக்கே உள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையோ, சிறப்பான கூறுகளையோ, சொல்லாடல்களையோ, பழமொழிகளையோ அப்படியே பொருளைத் தரும்வண்ணம் மொழியாக்கம் செய்வது எளிதல்ல. தமிழ் மொழியின் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் அடிப்படையாக சிலவற்றை அறிந்திருந்தால் மட்டுமே மொழியாக்கம் செய்வது சாத்தியமாகும்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போதும் இதனை மனதில் கொள்ளவேண்டும்.

சொற்றொடர் அமைப்பு: சில சமயங்களில் மூல மொழியில் குறைவான சொற்களைக்கொண்ட சொற்றொடர் அதிகமான சொற்களைக் கொண்டும், அதிகமான சொற்களைக் கொண்ட சொற்றொடர் குறைவான சொற்களைக்கொண்டும்  இலக்கு மொழியில் மொழியாக்கம் செய்யப்படும். அந்நிலையில் விடுபாடோ என்றோ, கூடுதல் என்றோ கருதாமல் பொருள் விளங்கும் வகையில் மொழியாக்கம் அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும். நீண்ட சொற்றொடர்களாக அமைப்பதைவிட எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாக பிரித்து அமைக்கும்போது வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

சமூகம் மற்றும் பிற சூழல்: சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலிலும், கடினமான பொருள் தரும் சொல் பிற மொழிச்சொல் என்ற நிலையிலும் தெளிவற்ற நிலையில் ஒரு சொல் அமையவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்புள்ளது. அப்போது மூல மொழியில் சொல்லப்பட்ட பொருண்மையின் பின்புலத்தை முழுமையாக அறிந்துகொண்டு மொழியாக்கத்தில் ஈடுபட்டு, பொருத்தமான சொல்லாக மொழியாக்கம் செய்யவேண்டும்.  அப்போது மூல மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நோக்கத்தையும், பின்னணியையும் மனதில் கொள்ளவேண்டும்.

குறியீடுகள் பயன்பாடு: தடித்த எழுத்து பயன்பாட்டினை உள்ளடக்கிய செய்திகளை மொழியாக்கம் செய்யும்போது இடத்தின் தன்மையினை அறிந்து உணர்வினை கவனமாக வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட செய்தியை வலியுறுத்திச்சொல்லும்போது தடித்த எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.  தமிழில் குறிக்கும்போது அவ்வாறான சொற்களுக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் அழுத்திப்படிக்கவும் என்று இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் எம்பசிஸ் ஆடட் என்றவாறு கூறப்பட்டிருக்கும்.

நவம்பர் 2019இல்  தமிழ் விக்கிப்பீடியா ஆசிய மாதக் கட்டுரைப் போட்டியினை அறிவித்திருந்தது. அதில் ஆசிய நாடுகள் தொடர்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழில் இல்லாத கட்டுரைகளை மொழியாக்கம் செய்யும் வகையில் ஒரு விதி இருந்தது.   அந்தப் போட்டியில் கலந்துகொண்டு இந்தோனேசியா தொடர்பாக 150க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு மொழியாக்கம் செய்தபோது பெற்ற அனுபவங்களில் ஒன்று கோயில் தொடர்பானதாகும். தமிழகத்தில் அந்தந்த கோயிலைப் பற்றி எழுதும்போது அடைமொழியாக கோயில் என்று இடுகின்றோம். அவர்கள் புரா, கண்டி, கோயில்  என்று வேறுபடுத்துகின்றனர்.

ஒரு புரா என்பது ஒரு பாலினிய இந்துக் கோயிலாகும். இது இந்தோனேசியாவில் பாலினிய இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கான வழிபாட்டுத் தலமாகும். பாலினிய கட்டிடக்கலையில் காணப்படும் விதிகள், நடை, வழிகாட்டுதல் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப புராக்கள் கட்டப்பட்டுள்ளன. பாலி தீவில் பெரும்பாலான புராக்கள் காணப்படுகின்றன. பாலி, "ஆயிரம் புராக்களின் தீவு" என்று பெயரிடப்பட்டது.

கண்டி  என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு இந்து அல்லது பௌத்தக் கோயிலாகும். இது பெரும்பாலும் இந்து-பௌத்தக் காலமான கி.பி.4 மற்றும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. வழிபாட்டிற்காக அல்லது தகனம் செய்யப்பட்ட இந்து அல்லது பௌத்த மன்னர்கள் மற்றும் பிக்குகளின் அஸ்தியை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால கல் கட்டிடம் என்று வரையறுக்கிறது. பண்டைய மதச்சார்பற்ற கட்டமைப்புகளான வாயில்கள், நகர்ப்புற இடிபாடுகள், குளங்கள் மற்றும் குளியல் இடங்கள் பெரும்பாலும் கண்டி என்று அழைக்கப்படுகின்றன.

கோயில் அல்லது கோவில் என்பது திராவிட கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ் சொல்லாகும்.

மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். தாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்கு கடத்துவது மொழியாக்கம் இல்லை.  வாசகர்கள் புரிந்துகொள்ளும் அளவில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை  தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலமும், துறை சார்ந்த அறிஞர்களுடன் உரையாடுவதன்மூலமாக மொழியாக்கம் தொடர்பான சிக்கல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.

ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படுகின்ற பதிவுகளையும், கட்டுரைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலமாக தமிழ் மொழிக்கு சிறப்பான பங்களிப்பினைச் செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவ்வாறே தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ மொழியாக்கம் செய்யும்போது தமிழின் பெருமைகளை பிற மொழியினரும் அறிந்துகொள்ளலாம்.  மொழியாக்கத்தை ஒரு கலையாக எண்ணி மேற்கொள்ள ஆரம்பித்தால் பல புதியனவற்றை தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும் கொண்டுசெல்வதற்கு மொழியாக்கம் ஒரு பாலமாக அமையும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/tl2.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/24/மொழியாக்கம்-ஒரு-கலை-3314418.html
3314420 தமிழ் மொழித் திருவிழா தமிழ்மொழியின் தொன்மையும் இன்றைய நிலையும் பொன்னீலன் DIN Tuesday, December 24, 2019 03:24 PM +0530
 
நாமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் மூத்தத் தொல்காப்பியம் என்று கொண்டாடுகிறோம். தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையானது என்று சொல்லப்படுகிறது.  இந்த நூல் வெறும் இலக்கண நூல் அல்ல.  வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த நூலும் இது.   

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே  இலக்கியத்துக்கு மட்டும்மல்லாமல் மனித வாழ்விற்கே இலக்கணம் வகுக்திருக்கும் அந்த நூல் எவ்வளவு பழமையானதாக பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.  அதவாது தொல்காப்பியம் எழுதுவதற்கும் முன்னலேயே தமிழ் மக்கள் சிறந்த ஒரு பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அவர்கள் காலத்து இலக்கியம் மிகவும் செழுமையானதாகவே இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவு. 

சங்க இலக்கியங்களுக்கு முன்னாலேயே மிகச் சிறந்த இலக்கிய மரபு தமிழுக்கு அமைந்திருக்க வேண்டும்.  அந்த மரபு இன்றளவும் புதுமைகளும் அழகுகளும் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. 
 
சங்கத்தமிழ் இலக்கியங்கள் திட்டவட்டமான செக்குலார் இலக்கியங்கள். அதவது அந்த இலக்கியங்களில் சாதிச் சாய்வுகளோ மதச் சாய்வுகளோ வர்ணச் சாய்வுகளோ இருந்ததில்லை.   இப்படிப்பட்ட மதச்சார்பற்ற இலக்கியம் உலகில் வேறெங்கும் இருந்தாகத் தெரியவில்லை.  இது தமிழுக்கு கிடைத்த தனி சிறப்பு பெருமை.  

சங்க இலக்கிய காலத்துக்கு பிறகு தான் தமிழில்; பக்தி இலக்கியம் தோன்றி வளர்ந்தது.  பக்தி இலக்கியம் வளரும்போதே பிரபல பிறமொழி கலப்புகளும் பிற பண்பாட்டுக் கலப்புகளும் சேர்ந்தன.  சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்காத பால் பேத ஏற்றத்தாழ்வுகள் பத்திஇலக்கிய காலத்தில் தான் ஏற்ப்பட்டன.  

தொடர்ந்து தமிழ் காவிய காலம் என்னும் ஒரு பிரம்மாண்டமான காலமாக விரிந்தது.  வில்லிப்புத்தூரா மகாபாரதத்தைத் தழுவி ஒரு பாரதம் எழுதினார்.  ; கவிசக்கரவர்த்தி கம்பர் எல்லை இல்லா அழகுடன் கம்பராமயணத்தை இயற்றினார்.  அதன் சொல்லழகு கருத்தழகு கவியழகு காவிய அழகு எல்லாமே ஒப்பற்றவை.  

விருத்தத்தில் கம்பனைப்போல் விளையாடிய வேறு ஒரு கவிஞரை பார்க்க முடியாது.  கம்பனின் காலம் பிரபுத்துவ இலக்கியம் தன் உச்சத்தை தொட்டக்காலம் என்பார் ஜீவா.  அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  

பேரிலக்கியக்காலங்கள் பேரரசர்கள் காலத்தில் தான்  செழித்தன. சேர மன்னர்களின் காலத்தில் தோன்றியது தான் சிலப்பதிகாரம்.  இளங்கோவடிகளால் அது திருவஞ்சிக்களத்தில் வைத்து எழுதப்பட்டது. சோழப் பேரரசின் காலத்தில் வில்லிப்புத்தூரார் பாரதமும் கம்பராமணயம் தோன்றித் தமிழை மேம்படுத்தின.  

தொடர்ந்து வட வர்களின் ஆதிக்கத்தால் சேர சோழ பாண்டிய அரசுகள் சிதைந்து சின்னாபின்னம் ஆயின.  பேராரசுகள் வடவர்களுக்குக் கைப்பாவைகளாக செயல்ப்பட்ட சிற்றரசுகளாகச் சிறுத்தன.  இந்த சிற்றரசுகள் சுய ஆதிக்கமற்றவை சுய அதிகாரம்மற்றவை இந்த காலத்தில் அரசியல் எழுச்சி மிக்க நூல்கள் வர  வாய்ப்பேஇல்லை.

காமச்சுவை மிகுந்த சிற்றிலக்கியங்களே இக்காலத்தில் அதிகம் தோன்றின. இவை உலா கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்களின் வடிவங்களில் வளர்ந்தன.  உலா என்பது மன்னன் உலா வரும்போது பல பருவத்துப் பெண்களும் அவனைப் பார்த்துக்  காமுறுவது போல் பாடப்படுவதாகும்.  
இம்மாதிரியான உலாக்களும் கலம்பகங்களும் தொடக்கலாத்தில் கவர்ச்சிகரம்மாக இருந்தலும் காலப்போக்கில் கவர்ச்சி இழந்தன காமம் மிகுந்தன.   இக்காலத்தில் ஆங்கில ஆட்சி இந்தியாவில் நிலைக்கொண்டது.  

ஆங்கில ஆட்சியானது ஆங்கிலக் கல்வியையும் ஆங்கில இலக்கியத்தையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது.  ஆங்கிலம் கற்ற புதிய தலைமுறைப் படிப்பாளிகள் உலா கலம்பமம் முதலியவற்றை வெறுத்தார்கள்.  அவர்கள் ஆங்கில நாவல்கள் போல தமிழிலும் நாவல்கள் எழுத விரும்பினார்.  உரைநடை பிறந்து வளர்த் தொடங்கியது  அப்படி உரைநடையிர் தோன்றிய முதல் நாவல்தான் பிரதப முதலியார் சரித்திரம்.  

பிரதப முதலியார் சரித்திரம் இது ரொமாண்டிக் வகையைச் சார்ந்தது. ரொமண்டிக் வகை என்பது புனைவியல் வகை.  அது வரலாற்றின் மீது கட்டப்படுவது அல்ல.  படைப்பாளி தன் விருப்பத்துக்குப் புனைவது. கற்பனையான நாடு கற்பனையான மக்கள் கற்பனையான அரசு கற்பனையான சமூகம் ரொமண்டிக் படைப்பில் எல்லாமே கற்பனை. இந்தக் கற்பனைத் தன்மையோடு படைக்கப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். 

அடுத்த  உரைநடை நாவல் யதார்த் நாவல்.   மாதவ அய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் அது.  மூன்றாவது வகை நாவல்   நவீனத்துவ நாவல்.  வீழ்ச்சி அடைந்த உயர் சமூகங்களின் சோகங்களைப் பேசுவது அது.  ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம்; இவ்வகையைத் தோற்றுவித்தது. 

தொடர்ந்து தமிழ் நாவல் இலக்கியம் பலவகையாகக்; கிளைவீசிப் படர்ந்தது. உழைப்பாளிகளின் வாழ்க்கையைச் சொல்லும் பஞ்சும் பசியும் நாவலை ரகுநாதன் எழுதினார்.  இந்த வகையை யதார்த்தவகை நாவல்கள் என்று சொல்லுவார்கள்.  

யதார்த்தவகை நாவல் யதார்த்த மொழியை கொண்டது.  அதாவது மக்கள் பேசும் மொழியை கொண்டது.  யதார்த்த வாழ்வை சித்தரிப்;பது அது. யதார்த்த மொழியை சித்தரிப்பதில் வலுவான பாதை அமைத்தவர் கி. ராஜ நாராயணன். அவர் காலத்துக்கு பின் வரலாற்று நாவல்கள் மட்டுமே  பொது தமிழை எழுதப்படுகின்றன.  மற்றவை எல்லாம் யதார்த்த மொழியில் எழுதப்படுகின்றன.  மொழி யதார்த்தமாகும்போது அது சொல்லும் வாழ்வும் யதார்த்தமாகி விடுகிறது.  இன்றய சம கால நாவல்கள் எல்லாமே யதார்த்த மொழியில் எழுதப்படுபவையே.

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூகத்தில் நரகங்களில் குவியும் அழுக்குகள் பழைய கால அழுக்குகளைப் போல் உரமாகச் செரிமானமாவது இல்லை.  இந்த அழுக்குகளால் காற்றும் மண்ணும் நீரும் நாசம் அடைகின்றன.  திருப்பூர் நகரச் சயப் பட்டறைகளில் சேகரம் ஆகும் அழுக்குகள்  நிலத்தடி நீரைக் கெடுக்கிறது.  நீர் பாயும் நேய்யல் ஆற்றை அதன் குளங்களை கிணறுகளை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.  இந்தத் துயரத்தை ஆபத்தை சுப்பிர பாரதி மணியனின் நாவல்கள் சித்திரிக்கின்றன.  

ஒவ்வெரு வட்டாரத்துப் படைப்பாளியும் தன் வட்டாரத்து மொழியைத் தமிழுக்கு தருகிறார்.  அதனால் தமிழ்மொழி விசாலம் அடைகிறது.  புதிய புதிய சொற்கள் மொழியில் சேகரம்மாகின்றன.  புதிய புதிய வார்த்தைகள் சேகரம்மாகின்றன. புதுப் புது வட்டாரப் பேச்சுக்கள் சேகரம்மாகின்றன.  இவை படிப்படியாகத் தமிழை வளப்படுத்துகின்றன.  இது காலப்போக்கில் தமிழ்மொழியை விசாலப்படுத்துகிறது.  இது ஒரு வளர்ச்சிப்போக்கு. 

ஆக தமிழ் மொழியின் வடிவம் உரைநடைக்கு மாறியிருக்கிறது.  மொழி எதார்த்த மொழியாக மாறியிருக்கிறது.  வட்டாரத் தன்மை தமிழை விசாலப்படுத்தி வருகிறது.  இது தொடர்ந்து நீண்ட காலம் நடக்க  இருக்கிற முயற்சி.  இதனால் தமிழ் மொழி தமிழ் நாட்டின் வட்டாரத் தன்மையிலிருந்து படிப்படியாகத் தேசியத் தன்மைக்கு விசாலமடைகிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/tl.jpg https://www.dinamani.com/language-fest/2019/dec/24/தமிழ்மொழியின்-தொன்மையும்-இன்றைய-நிலையும்-3314420.html