Dinamani - தற்போதைய செய்திகள் - https://www.dinamani.com/latest-news/sub-latest-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3363661 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் DIN DIN Friday, February 21, 2020 04:12 PM +0530 குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி நிகழ்ச்சிக்காக இறுதிக் கட்ட ஏற்பாடுகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் சர்தார் படேல் விளையாட்டரங்கம்.

சர்தார் படேல் அரங்கம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.

உலகத் தாய்மொழி நாளையொட்டி கொல்கத்தாவில் மொழித் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மக்கள்.

புது தில்லியில் கன்டோன்மென்ட் பகுதியில் சேனா பவன் கட்டடத்துக்கான கால்கோள் விழா பூஜையில் தேங்காய் உடைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

விஜயவாடாவில் மகாசிவராத்திரி விழாவையொட்டி கிருஷ்ணா ஆற்றில் புனித நீராடும் மக்கள்.

ஈரானில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவில் தெஹ்ரானில் வாக்களிக்கிறார் ஈரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி. 

தென் கொரிய தலைநகர் சியோலில் நிலத்தடி நிலையம் ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஒருவருக்கொருவர்   சுத்தம் செய்துகொள்ளும் பணியாளர்கள்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/PTI2_21_2020_000067B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/21/news-photos-3363661.html
3362746 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 20, 2020 DIN DIN Friday, February 21, 2020 03:25 PM +0530  

புது தில்லியில் முனீர்கா பகுதியில் ஐந்து மாடிக் கட்டடமொன்று ஒருபக்கமாகச் சாயத் தொடங்கியதையடுத்து, இந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்கள் புழங்கத் தடையும் விதித்துள்ளனர் காவல்துறையினர்.

சௌதி அரேபியாவில் ரியாத் நகரில் இளவரசி ரீமா மாளிகையில் சௌதி பெண் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் புகைப்படத்துக்காக நிற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ (வலமிருந்து நாலாவது) மற்றும் அமெரிக்காவுக்கான சௌதி தூதர் இலவரசி ரீமா பிந்த் பந்தர். 

ஆக்ராவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்காகத் தயாராகிறது தாஜ் மஹால். நீரூற்றுப் பகுதியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்.

சீனாவில் ஹூபெ மாகாணத்திலுள்ள வூஹானில் கண்காட்சிக் கூடமாக இருந்து தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட அரங்கில் படுக்கைகளில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள்.

தென் கொரியாவில் தேகு நகரில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸிலிருந்து யுங்பூக் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குள் கொண்டு செல்லும் பாதுகாப்புக் கவசமணிந்த மருத்துவப் பணியாளர்கள்.

ஜப்பானில் டோக்கியோ அருகே யோகோஹாமா துறைமுகத்தில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாகத் தடுத்துத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து அழைத்துச் செல்லப்படும் பயணி ஒருவர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுவோ பகுதியில் காலை நேரத்தில் முகக் கவசம் அணிந்தபடி பணிக்குச் செல்லும் மக்கள். கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சீனாவுக்கு வெளியே ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் வந்த பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/PTI2_20_2020_000043B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/20/news-photos-3362746.html
3362848 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் எல்லைகள் இல்லா மொழிகள் டாக்டர் த.அறம், கலை இலக்கியப் பெருமன்றம் DIN Friday, February 21, 2020 01:13 PM +0530  

உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கட்டுரை

2000 ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21 ஆம் நாள் “உலகத்  தாய்மொழி நாளாக”க்  கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கமாக “எல்லைகள் இல்லா மொழிகள்” (“Languages without Borders”) என்னும் வாசகம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடுகளைப்  பிரிக்கும் எல்லைகள், பொருளாதார, நிர்வாக வசதிக்காகச் செயற்கையாக சமீபத்தில் உருவாக்கப்பட்டவை. ஆனால் ஒரு மொழியானது பன்னெடுங் காலமாக மக்களின் தொடர்பு சாதனமாக, கலாச்சார,  பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகமாக, பாரம்பரிய அறிவின் ஊற்றாக, அந்த மொழி பேசும் மக்களின்  வரலாறாக எல்லைகள் அற்று விரவிக் கிடக்கிறது.

"கிஷ்வாஹிலி" என்னும் ஆப்பிரிக்க மொழி எல்லைகளைக் கடந்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படுகிறது. இதை 2004-ல் ஆப்பிரிக்கக் கண்டத்து நாடுகள் தங்களின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன.

இதைப் போலவே "க்யூசுவ" என்னும் மொழி தென் அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் எல்லைகளைக் கடந்து தாய்மொழியாக உள்ளது. நாடுகளிடையே அமைதிப் பேச்சு வார்த்தையை வழிநடத்த  எல்லையில்லா மொழிகள் உதவுகின்றன.

தற்போது உலகில் பேசும் மொழிகளாக 6,500 மொழிகள் இருக்கின்றன. இவற்றில் 43% மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 2,000 மொழிகள் ஆயிரத்திற்கும் குறைவான மக்களால் பேசப்படுகின்றன. கல்வி கற்பிக்கும் மொழியாக சில நூறு மொழிகளே உள்ளன. கணினிமயமான மொழிகள் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளன. இரு வார காலம் கழியும்போது ஒரு மொழி அழிந்துவிடுகிறது.

தற்போது வாழும் மக்களில் 40% பேர் தங்கள் கல்வியைத் தாய்மொழி வாயிலாகக் கற்கமுடியாத நிலையில் உள்ளனர். உலக மக்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வியைத் தங்கள் தாய்மொழியில் கற்கும் உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். தாய்மொழியில் கற்றால்தான் பாடங்கள் மிக எளிதாகப் புரியும்.

"பாடங்கள் புரியாமல் கல்வி எவ்வாறு கற்க முடியும்?” என்ற அடிப்படைக் கேள்வியை யுனெஸ்கோவின் (UNESCO- United Nations Educational, Scientific, Cultural Organisation - ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு) உலக கல்வி கண்காணிப்பு அறிக்கை 2016 முன்வைக்கிறது.

இந்த அறிக்கை தொடக்கக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படவில்லை எனில் மொழிச் சிறுபான்மையினர் சமூகத்தின் மையத்தில் இருந்து விலகி விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள், குறிப்பாகப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ளது.

இந்த சமூகம் நீடித்து நிலைத்திருக்க கலாச்சார பன்மைத்துவம், மொழியின் பன்மைத்துவம் அவசியம் என நம்புவதாக அறிக்கை கூறுகிறது. மொழி கலாச்சார பன்மைத்துவத்தைப் பேணிக் காப்பதே உலக அமைதிக்கான முன்நிபந்தனை என அறிவித்துள்ளது. இதுவே சகிப்புத்தன்மையையும், சக மனிதன் மீது வைத்திருக்கும் மரியாதையையும் அதிகரிக்கும்.

இன்று உலகம் முழுவதும் மொழிப் பன்மைத்துவம் மிகப் பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் பல்வேறு மொழி பேசும் தங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மொழியின் வழியாகக் கல்வி கற்பிப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் யுனெஸ்கோ, “உலக தாய்மொழி நாள்” உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என 1999-ல் கோரிக்கை வைத்தது. இது பற்றி வங்கதேச அரசு நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றி யுனெஸ்கோவிற்கு அனுப்பி வைத்ததே இதன் தொடக்கப் புள்ளியாகும்.

1948-ல் பாகிஸ்தான் அரசு உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தது. இதற்கு வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான்-ஆக இருந்த வங்கதேசத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. தங்களின் தாய்மொழியான வங்க மொழியையும் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டுமென மக்கள் போராட தொடங்கினர்.  இதற்காக தீரேந்திரநாத் தத்தா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1952, பிப்ரவரி 21 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின்  போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் சலாம், பரகத், ஜாபர், சப்யூர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக “சாஹித் மினார்” என்னும்  நினைவகம் வங்கதேசத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் பயனாக 1956 ஆம் ஆண்டு முதல் வங்க மொழியும் அப்போதைய பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் பிப். 21 அன்று ஏராளமான வங்கதேச மக்கள், இந்த நினைவகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இவர்களின் நினைவாக “உலக தாய்மொழி நாள்” ஒவ்வோர் ஆண்டும் பிப். 21 அன்று கொண்டாடப்படுகிறது. பிப். 21 தேதியை வங்கதேச அரசு விடுமுறையாகவும்  அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவை, 2008 ஆம் ஆண்டை “உலக மொழிகளின் ஆண்டாக” அறிவித்தது 2019 ஆம் ஆண்டை “உலக பூர்வகுடிகளின் மொழி ஆண்டாக”ப்  பிரகடனப்படுத்தியது. வரும் 2022 - 2032 வரையிலான பத்து ஆண்டுகளை பூர்வகுடிகளின் மொழிகளைப் பாதுகாக்கும் ஆண்டுகளாக அறிவிக்கவுள்ளது.

சமூகமாக வாழும் எல்லா உயிரினங்களும் தங்களுக்குள் தொடர்புகொள்ள சில சமிக்ஞைகள், சில ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனிதனின் மூளையில் மொழிக்கு என்றே தனி இடங்கள் உருவாகின. மனிதனின் தொண்டையும் பெரிய ஒலிகளை எழுப்புவதற்குத்  தகுந்தவாறு மாறிக்கொண்டது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகளாக மனிதன் பேசும் மொழியைப்  பயன்படுத்தி வருவதாகத் தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். எழுத்து வடிவத் தொல்லியல் சான்றுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை வரை தற்போது  கிடைத்துள்ளன.

உலக மொழிகள் 135 பூர்வகுடும்பங்களைச் சார்ந்தவை. தற்போது வாழும் பெரும்பாலான மக்கள் பேசும் மொழிகள் எட்டு பூர்வீக மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை.

உலகின் மிகப் பழமையான பத்து மொழிகளில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியில்  மட்டுமே இன்றும் அதனுடைய எழுத்து வடிவத் தொடர்ச்சி உள்ளது.

உலகின் பழைமையான பத்து மொழிப் பட்டியலிலும், உலக மக்கள் அதிகம் பேசும் முதல் 20 மொழிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள ஒரே பூர்வகுடி மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது.

இந்தியாவில் பேசும் மொழிகளாக 780 மொழிகள் இருக்கின்றன. அதிக நபர்களால் பேசப்படும் முதல் 20 மொழிகளில் தமிழ் இருக்கிறது. உலகில் அதிக மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

உலகின் அதிக மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடாக "பப்பு நியூ கினியா" உள்ளது. 86 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் 839 மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் அதிகமான நபர்களால் பேசப்படும் மொழியாக “மாண்டரின் - சீன மொழி” உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையில் 22 தேசிய மொழிகளை அங்கீகரித்துள்ளது.

இந்திய மொழிகளில் செம்மொழியாகத் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த செம்மொழிகளில் சமஸ்கிருதம் மட்டுமே 20ஆயிரத்திற்கும் குறைவான மக்களால்  பேசப்படும் மொழியாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பேசும் மொழிகளாக இந்தியாவில் 121 மொழிகள் இருக்கின்றன.

இந்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்துச் செம்மொழிகளையும் வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும். செம்மொழிகளை மட்டுமல்லாமல் மக்கள் பேசும் அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும். இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. இந்த மொழிகளைப்  பாதுகாக்க இவற்றுக்கு எழுத்து வடிவத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 643.84 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, இந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு வெறும் 22.94  கோடியே ஒதுக்கியுள்ளது. இது மத்திய அரசின் ஓர வஞ்சனையைக் காட்டுவதாகத்தான் கருதப்படும்.

ஒரு மொழி வளமானதாக இருக்க அந்த மொழி அனைத்து விதமான அறிவியல் தொழில்நுட்ப, கலை, பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

அந்த மொழி பேசும் மக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக் கல்வி கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியின் நிர்வாக, அலுவல்,  நீதிமன்ற, தொடர்பு மொழியாகத் தாய்மொழியே இருக்க வேண்டும்.

தமிழ் மொழியைக் காக்க பாரதி  தெரிவித்த யோசனைகளை யுனெஸ்கோ உலகம் முழுவதும் உள்ள மொழிகளைக்  காக்க  பயன்படுத்த வேண்டும். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ள கலைச்செல்வங்கள்,  அறிவியல் தொழில்நுட்பங்கள், அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். புதிய புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், அவரவர் தாய்மொழியில் இயற்றித் தாய்மொழி காக்கப்பட வேண்டும்.

கொண்டாடுவதற்கு மட்டும் அல்ல தாய்மொழி நாள்!

]]>
Languages without Borders https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/WhatsApp_Image_2020-02-20_at_8.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/21/languages-without-borders-3362848.html
3361925 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 19, 2020 DIN DIN Thursday, February 20, 2020 02:30 PM +0530 புது தில்லியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவரும் ஷாகீன் பாக்கிற்குப் புதன்கிழமை வந்த உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சமாதானப் பேச்சாளர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன்.

சமாதானப் பேச்சுவார்த்தையின்போது கவனிக்கும் போராட்டக்காரர்கள்.

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் சர்தார் வல்லபபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிசைப் பகுதிகளுக்கு மேலே பறந்துசெல்கிறது வாகனங்கள் மற்றும் பொருள்களை ஏற்றிவந்த அமெரிக்க சரக்கு விமானம்.  வரும் 24, 25 தேதிகளில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்களில் படக்கூடாது என்பதற்காக அவர் செல்லும் வழிகளில் இருக்கும் குடிசைப் பகுதிகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருவதையொட்டி, ஆக்ராவில் தாஜ் மஹால் அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில்  சேறு, கழிவு மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் மண் அள்ளும் எந்திரங்கள்.

மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளையொட்டி, தாதரிலுள்ள சிவாஜி பூங்காவில் சிவாஜியின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்துகிறார்கள் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்நெகர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் சௌரா பகுதியில் காட்டுப் பகுதியில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் வனத் தீ.

இலங்கையில் கொழும்பு நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஒரே சீனரான லுவோ யான், குணமடைந்த பின், தேசிய தொற்றுநோய்கள் மருத்துவமனையின் தனியறையிலிருந்து மகிழ்ச்சியாக அனைவரிடமிருந்தும் விடைபெற்று வெளியே செல்கிறார். 

பாகிஸ்தானில் கராச்சி நகரில் விஷவாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்ட பெண்ணை மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் உறவினர்கள். துறைமுக நகரான கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் நேரிட்ட விஷவாயு கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் உடல் நலம் குன்றினர். இன்னமும் பலருக்கு சுவாசப் பிரச்சினை தொடருகிறது.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/PTI2_19_2020_000069A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/19/news-photos-3361925.html
3361044 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 18, 2020 DIN DIN Wednesday, February 19, 2020 02:53 PM +0530 குஜராத்தில் ஆமதாபாத்தில் அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்ப். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம், உலகின் பழமையான ஜனநாயகத்தைச் சந்திக்கிறது - அதிபர் டிரம்ப் வருகையையொட்டி, ஆமதாபாத்தில்  பாலச் சுவர்களிலும் சுவர்களிலும் வரவேற்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய ரோபோ பெண் சோபியா. இதுவொரு ஹாங்காங் நிறுவனத் தயாரிப்பு. 

சீனாவில் வூஹானிலிருந்து திரும்பி வந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மனேசரில் தனிப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள், நோய்ப் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுப் படிப்படியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். தங்கள் உடைமைகளுடன் இல்லங்களுக்குத் திரும்பும் ஒரு குழுவினர். 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நெசாங் அருகே நிலச் சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை எண் 5 தடைப்பட்டுள்ளது. இதனால் முற்றிலுமாகப் போக்குவரத்து நின்றுவிட்டது.

சீனாவில் வூஹானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகளைத் தயார் செய்யும் செவிலியர்.

ஜப்பானில் டோக்கியோ நகரில் கரோனா வைரஸ் அச்சத்தால் முகக்கவசம் அணிந்து செல்லும் மக்கள் திரள்.

மும்பையில் நடைபெற்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் காலண்டர் 2020 அறிமுக விழாவில் ஹிந்தி நடிகை வித்யா பாலன்.

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் காலண்டர் 2020 அறிமுக விழாவில் ஹிந்தி நடிகை சன்னி லியோன்.

இங்கிலாந்தில் செவர்ன் பகுதியில் சூழ்ந்து நிற்கும் வெள்ளம். 

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/20200218073L.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/18/news-photos-3361044.html
3360094 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 17, 2020 DIN DIN Tuesday, February 18, 2020 04:00 PM +0530 துபையில் துபை அதிசயத் தோட்டத்தில் பூக்களால் உருவாக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் ஏ380 மாதிரி ஜெட் விமானம். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பூக்களாலும் தாவரங்களாலும் இந்த மாதிரி விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் எதிர்வரும் 70-வது பெர்லின் பன்னாட்டுத் திரைப்பட விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக விற்பனை கவுன்டர்கள் முன் காத்திருக்கும் - உறங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் முதல் குழுவினரை வூஹானிலுள்ள ஹுஷெஷான் மருத்துவமனையின்  தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு இடம் மாற்றும் பணியில் மருத்துவப் பணியாளர்கள்.

கரோனா வைரஸ் பாதித்த சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து திரும்பிவந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.   வூஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேரில், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்பட்ட பின் ஒவ்வொருவராக முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வரவுள்ள நிலையில், குஜராத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ள அமெரிக்கப் போர் விமானம். 

மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை பராக்கா தடுப்பு அணைப் பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மூவர் காயமுற்றனர்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/AP2_17_2020_000164A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/17/news-photos-3360094.html
3358449 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 15, 2020 DIN DIN Monday, February 17, 2020 01:53 PM +0530 புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் உயர் அலுவலர்கள்.

சீனாவில் பெய்ஜிங் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை முகக்கவசம் அணிந்தவாறு வெளியே வரும் பயணிகள். பிற இடங்களிலும் பெய்ஜிங் மாநகருக்கு வருவோர் பாதுகாப்பு கருதி, வீட்டிலேயோ அல்லது தனி முகாம்களிலோ தனித்திருக்க வேண்டும் என்று தலைநகர் பாதுகாப்புக் குழுவினர ்அறிவித்துள்ளனர்.

குஜராத்தில் ஆமதாபாத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநிலத்  தலைமையகத்தை சனிக்கிழமை திறந்துவைக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

புது தில்லி ராம்லீலா திடலில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவையொட்டி, முதல்வர் அரவிந்த கேஜரிவால் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்களைத் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள்.

குஜராத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவுள்ள விளையாட்டு அரங்கம். முன்னால் பார்வையிட வந்த காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களின் கார்கள்.

கொல்கத்தாவில் சனிக்கிழமை டெங்கு பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள்.

புது தில்லி இந்தியா கேட் அருகே சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டுப்  பழைய கார்கள் அணிவகுப்பில் பங்கேற்ற கார்கள்.

பழங்கால கார்கள் கண்காட்சியில் பங்கேற்ற பழங்கால லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள்.

பிளாரிடாவில் டேடோனாவிலுள்ள டேடோனா பன்னாட்டுப் பந்தயச் சாலையில் ஒரு திருப்பத்தில் மோதிக்கொண்டு தீப்பற்றிய பந்தயக் கார்கள்.

சிலியில் சான்டியாகோ நகரில் இதய வடிவ பலூன்களைக் கடந்து செல்லும்  ஒரு பெண்மணி.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/PTI2_15_2020_000026B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/15/news-photos-3358449.html
3357556 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 14, 2020 DIN DIN Saturday, February 15, 2020 02:48 PM +0530 வாராணசியில் தாங்கள் தொடங்கிய உணவு விடுதியின் தொடக்க விழா நாளில் உணவு பரிமாறுகின்றனர் அமில வீச்சில் தப்பிய பெண்கள். அமில வீச்சில் தப்பிய பெண்கள் இணைந்து இந்த உணவு விடுதியை நடத்துகின்றனர். 

இந்தியா வந்துள்ள போர்த்துகேய அதிபர் மார்ஷெல் ரிபெல் டி சோஸாவை, ஹைதராபாத் இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு முன் வரவேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உயர் அலுவலர்கள்.

புல்வாமா தாக்குதலில் உயிர்துறந்த மத்திய கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்களின் நினைவாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர்களுடைய படங்களைவைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்டு, நோய்த் தொற்று அச்சம் காரணமாகத் தில்லியில் தனித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களில் சிலர்.

விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஔரங்காபாத் சித்தார்த் விலங்கியல் பூங்காவிலிருந்து மும்பையிலுள்ள வீரமாதா ஜீஜாபாய் போஸலே விலங்கியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இரு புலிகள்.

ஜோர்தான் நாட்டில் அம்மான் நகரில் காதலர் தினக் கொண்டாட்டத்துக்காக பலூன் குவியல்களைத் தயார் செய்கிறார் விற்பனையாளர் ஒருவர்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செயின்ட் ஸ்கொலாஸ்டிகா கல்லூரி திட்டமிட்டு நடத்திய கூட்டு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும்.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் கிழக்கு 73-வது தெருவில் வெளியே நிறுத்தப்பட்டதால்  பனிப் போர்வை போர்த்தியிருக்கும் சைக்கிள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/w600X390/PTI2_14_2020_000149B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/news-photos-3357556.html
3356657 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெண் பயணிகள், குழந்தைகள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ‘இ-டாய்லெட்’ DNS DNS Friday, February 14, 2020 03:35 PM +0530 பெண் பயணிகள், குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் ‘இ.டாய்லெட்கள்’ அமைக்கப்படவுள்ளன. இதன்படி, 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலும் இ. டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனா்.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்களில் தினசரி சராசரி 96,000 போ் பயணம் செய்கின்றனா். பயணிகள் சேவைக்காக பல்வேறு வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.

இ-டாய்லெட் வசதி: இந்நிலையில், பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் இ.டாய்லெட்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்படி, 30 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இ.டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனா். அண்மையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் வளாகத்தில் இ.டாய்லெட்டை ஏற்படுத்த சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்தது. குறிப்பாக, சுரங்க ரயில் நிலையங்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் இ. டாய்லெட் வசதியை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த கழிவறைகள், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பேருதவியாக அமையும்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி கூறியது: வேலைக்குச் செல்லும் பயணிகள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பயணிகள் இயற்கை உபாதைக்காக எப்போதும் நிலையங்களுக்குள் நுழையத் தேவையில்லை. அவா்கள் நிலையத்துக்கு வெளியேயும் இ.டாய்லெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா்.

30 மெட்ரோ ரயில் நிலையங்கள்: இந்தக் கழிவறைகளை அமைப்பதற்கான நிதியை பெருநிறுவன சமுதாய பொறுப்பு (சி.எஸ்.ஆா்) திட்டத்தின் கீழ் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் இ-டாய்லெட்கள் அமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், நிதி ஓரளவு பயன்படுத்தப்படும். ஆனால், ஆரம்பத்தில் மாநகராட்சி நிதி பயன்படுத்தப்படும். மேலும், இந்தப் பணியை செயல்படுத்தவும், பராமரிக்கவும் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் தனியாா் ஒப்பந்த பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள். சென்னை நகரில் பெண்களுக்காக 84 கழிவறைகள் உள்பட 155 கழிவறைகள் வர உள்ளன. நிா்பயா நிதியின் கீழ், பெண்களுக்காக 150 கழிவறைகள் அமைக்க டெண்டா் விடப்பட்டுள்ளன. அதாவது, பாதுகாப்பான மண்டல பகுதிகளில் பெண்களுக்காக 150 கழிவறைகள் நிறுவப்படவுள்ளன என்றாா் அவா். சென்னை நகரில் தற்போது 872 வழக்கமான கழிவறைகள், 221 இ.டாய்லெட்கள், 138 வாடகை கழிவறைகள் உள்ளன. இதுதவிர, பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தியாகராயநகரில் புதிய கழிவறைகள்அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

]]>
e toilets around metro https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/11373921et1110540.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/13/e-toilets-around-metro-stations-in-chennai-3356657.html
3356762 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 13, 2020 DIN DIN Friday, February 14, 2020 02:25 PM +0530 அமெரிக்காவில் சிகாகோவில் சந்தையொன்றில் பூக்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள். இந்த வாரம் காதலர் வாரம் என்பதால் அமெரிக்காவில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாகியுள்ளது.

மும்பையில் அந்தேரியிலுள்ள ரோல்டா தொழில்நுட்ப பூங்காவில் வியாழக்கிழமை பற்றிய தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

மும்பையிலுள்ள கல்லூரியொன்றில் கல்லூரியைச் சந்தித்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிந்தி நடிகை வித்யா பாலன்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/13FEB3F.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/13/news-photos-3356762.html
3356756 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நல்வழித் திருப்பிய காதல் திரைப்படம் ஒருதலை ராகம்   - நசிகேதன் DIN Friday, February 14, 2020 07:00 AM +0530  

காதல் திரைப்படங்களுக்கு எப்போதும் ஒருவித பூரிப்பான நல்லாதரவினை வழங்கிவந்துள்ளனர் தமிழ் ரசிகர்கள்.

அம்பிகாவதி காலம் தொடங்கி காதல் திரைப்படம் வரை தொடர்ந்து தமிழ்ப்பட ரசிகர்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து வருகிற வகையைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆனால் அவர்களையும் புல்லரிக்க வைத்த காதல் திரைப்படத்தை இப்படியும் மிகவும் எளிமையாக, ஆடம்பரமற்ற கதாநாயகர்களைக் கொண்டு, வன்முறையற்ற வில்ல கதாபாத்திரங்களைக் கொண்டு காதல் அனுபவத்தை கச்சிதமாகத் தர முடியும் என்று நிரூபித்துக்காட்டியது ஒரு திரைப்படம்.

இதுபோன்ற திரைப்படத்தை வழங்க முடியுமா, திரையுலகில் கோலோச்சி வரும் பிரபல இயக்குநர்களுக்கு இந்தத் துணிச்சல் வருமா என்கிற கேள்வி, திருப்பத்தைத் தந்தது என்றால் அது ஒருதலை ராகம் திரைப்படத்துக்கே பொருந்தும்.

கடந்த 1980ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது ஒருதலை ராகம். பெரிய திரைப்பட நடிகர்களோ அல்லது அறிமுகமான இயக்குநர் பட்டாளங்களோ அதில் பங்கேற்கவில்லை.

ஒருதலை ராகத்தின் இயக்குநர்களாக டி.ராஜேந்தர் மற்றும் ஈ.எம்.இப்ராஹிம் என்கிற பெயர்களும், இசை அமைப்பாளர்களாக டி.ராஜேந்தர் மற்றும் ஆகுல அப்பாலராஜி என்கிற பெயர்களும், தயாரிப்பாளராக ஈ.எம்.இப்ராஹிம் என்கிற பெயரும் இடம் பெற்றிருந்தன.

அதேபோல் திரை நாயகிகள் மற்றும் நாயகர்களாக ரூபாதேவி என்கிற புதுமுகமும், சங்கர் பணிக்கர் என்கிற மலையாள புதுமுகமும், உஷா, சந்திரசேகர், ரவீந்தர், தும்பு ஆகியோர் பெயர்களும் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றிருந்தன.

அனைவரும் புதிது, புதிய வழிக் காதல், புதுவகை பாணியிலான திரைப்படம் என்பதால் சந்தேகத்தின் காரணமாக மிகவும் குறைவான திரையரங்குகளிலேயே ஒருதலை ராகம் வெளியிடப்பட்டது.

படம் வெளிவந்து சில நாள்களில் படத்தின் பாடல்களும், கல்லூரிக் கலாட்டாக்களும், ஆபாசமற்ற காதல் காட்சிகள், ஒருவரை ஒருவர் தொடாமல் கண் நிமிர்ந்து பேசிக் கொள்ளாத காட்சிகள், வன்முறையற்ற வில்லத்தனம் ரசிகர்களுக்கு இனம் புரியாமல் சட்டென வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழகத்தின் திருவிழாக்கள், அரசியல் மேடைகள், வீட்டு விசேஷங்கள் என பட்டிதொட்டிகளில் வெகுவேகமாகப் பரவின.

இதனால் ஒருதலை ராகத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. திரைப்படத்தில் கல்லூரிக்கு ரயிலில் செல்லும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், கல்லூரியில் நிகழும் ராக்கிங் காட்சிகள், மாணவ மாணவியர்களின் கொண்டாட்டங்கள், கல்லூரி மாணவ,மாணவியர்களிடையே நிகழும் மெல்லிய காதல் உணர்வுகள் என அனைத்தும் திரை ரசிகர்களுக்கு மிகவும் புதிதாகத் தோன்றியது.

தொட்டுப் பேசி, கட்டிப்பிடித்து, மழையில் நனைந்து, காமரசம் மிகுந்த காதல் புரியும் படங்கள் வரிசையில் பழைய காதல் திரைப்படங்களின் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் புதிய மாதிரியாக இருந்த ஒருதலை ராகம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

காதலிக்காக ஏங்கும் காதலன் அவர் தலை தூக்கி தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாரா என்கிற எதிர்பார்ப்புக் காட்சிகள், அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர் என்பது நாயக, நாயகி நண்பர்களுக்குத்  தெரிந்தும் காதலி வலுக்கட்டாயமாகத் தனது காதலை வெளிப்படுத்த மறுக்கும் காட்சிகள் ரசிகர்களின் மனநிலையில் புதுவகைக் காதலை உணர்த்துபவையாக இருந்தது.

குறிப்பாக ஒருதலை ராகத்தின் பாடல்களான 4.49 நிமிட எஸ்.பி. பாலசுப்ரமணியனின் குரலில் வாசமில்லா மலரிது பாடலும், காதலியை நினைந்து வாடும் காதலன் குரலாக பி. ஜெயச்சந்திரன் குரலில் 5 நிமிட பாடலான கடவுள் வாழும் கோவிலிலே பாடலும், மாணவர்களின் கொண்டாட்டப் பாடலான  மலேசிய வாசுதேவன் குரலில் கூடையிலே கருவாடும், டி.எம்.செளந்தரராஜனின் குரலில் நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலும், தாலாட்டுப் பாடலைப் போல காதலைச் சொல்லும் பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்களும் தமிழகத்தின் எட்டுத் திக்கும் பரவின.

மேலும் முதன்முறையாகத் திருநங்கைகள் பாடலில்  இடம்பெற்ற திரைப்படமாகவும் ஒருதலை ராகம் இடம் வகித்தது. கல்லூரி காத்திருத்தல், கல்லூரி கலாட்டா, கொண்டாட்டம், படம் முழுவதும் நிரம்பியுள்ள மென்சோகம் என அனைத்து வகை உணர்வுகளையும் மிக நேர்மையாக வெளிப்படுத்தியது ஒருதலை ராகம்.

இதன் வெற்றி அடுத்ததாகத் தொடர்ந்து காதல் மொழி பேசும் படங்களாக இதே வரிசையில் மென்மைக் காதல் சொல்லும் திரைப்ப்டங்கள் வெளி வரத் தொடங்கின.

காதல் வரிசைத் திரைப்படங்களுக்கு மீண்டும் புதிய புத்துயிர் ஊட்டியது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒருதலை ராகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காதல் வெளிப்படும் வெற்றி பெறும் என்று அனைவரையும் எதிர்பார்க்க வைத்து காதல் ஏற்படுத்திய ரயில் பயணத்தில் உச்சகட்ட காட்சியில் காதலை ஏற்க மறுத்த காதலி காதலனைத் தேடி வருகிறபோது காதலனின் நோய் அவரை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் முடிவு அனைவரையும் திகைக்க வைத்தது.

இந்த முடிவிற்கு ரசிகர்கள் யாரும் எவ்வித எதிர்ப்போ, மறுப்போ சொல்லாமல் காதலை ஏற்க மறுத்துவந்த காதலிக்கான தீர்ப்பாக இது அமையட்டும் என்று ஏற்றுக் கொண்டனர்.

40 ஆண்டுகள் கழிந்த பின்னரும் காதல் மொழி பேசி  நல்லவழி காதல் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒருதலை ராகம் காதலர்களுக்கான திரைப்படம் என்பதுதான் உண்மை.

காலத்தைத் தாண்டி இன்றும் அந்தத் திரைப்படம் புதியவர்களால் எடுக்கப்பட்டு திரையில் சாதனைகளைச் சாதித்துக் காட்டி இப்போதும் எடுத்துக்காட்டு திரைப்படமாக விளங்கி வருகிறது ஒருதலை ராகம்.

]]>
valentinesday https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/oru_thalai_ragam.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/trend-setter-oruthalai-ragam-3356756.html
3356767 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இதயம் இடம் மாறியதே... லக்ஷ்மி சிவக்குமார் DIN Friday, February 14, 2020 07:00 AM +0530
காதல் என்பது குறிப்பிட்ட வயதில் நிகழக்கூடிய இயல்பான ஒன்று. அந்த உணர்வைப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும். காதலிக்க வேண்டிய பருவத்தில் முப்பாலருக்கும் தான் பேச நினைப்பதைத் தயக்கமின்றிப் பேச அவர்களுக்கு வசதியான ஒரு துணை தேவைப்படுகிறது. அவர்கள் பகிர்ந்துகொள்ளக் கூடிய கருத்தை, சரி தவறெனத் தயக்கமின்றி விவாதித்துக்கொள்வதைத் தங்களுக்கான அங்கீகாரமாகக் கருதுகின்றனர்.

உறவுமுறை தொடங்கி, உணர்வு முறை வரையில் மனிதர்கள் தான் பரிமாறிக்கொள்வதற்கு அன்றாடங்களின் அத்தனை அசைவுகளும் இடமளித்தாலும் அதற்கென ஒரு நாளைக் கொண்டாடித் தீர்ப்பதை மனிதர்கள் விரும்பவே செய்கின்றனர். அதை நாம் ஒருபோதும் லேசாக மதிப்பிட முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் உணர்வு நிலைக்குத் தக்கபடிக் கொண்டாடுவதை நாம் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கடந்துவிடலாம். இதுதான் ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கு நல்லது.

உலகம் முழுவதிலும் அந்தந்த நாடுகளுக்கென்று தனித்த கலாசாரமோ பண்பாடுகளோ இருந்தாலும் ஏழு நாடுகள் மட்டுமே காதலர் தினக்  கொண்டாட்டங்களை எதிர்க்கின்றன. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடும் அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பது கவலைக்குரியது. 

இங்கே நிகழ்வதெல்லாம் ஆரோக்கியமான எதிர்ப்பு வடிவமென்று ஒருபோதும் சொல்வதற்கில்லை. காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாய்க்குத் தாலி கட்டுவதெல்லாம் சமூகத்தின் நோய்க் கூறு. அன்றைய நாளில் முப்பது முப்பத்தைந்து வயதிற்குட்பட்ட ஒரு சகோதரனும் சகோதரியும் தங்களது வீட்டிலிருந்து பத்திரமாக வெளியே சென்றுவர முடியாத அபாயகரமான சூழல் நிலவுகிறது. இந்தக் கூட்டுச் சமூகத்தில் இப்படியான எதிர்ப்பு நிலையைக்  கேள்விகேட்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

காதலித்ததற்காக இந்த மண்ணில் கொல்லப்பட்ட உயிர்கள் கணக்கிலடங்காதவை. அவர்கள் கொல்லப்பட்டதற்கு சாதியும் மதமும்தான் காரணம். காதலும் காரணமென்றால் அந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே. 

காதலை வெறும் உணர்வு சார்ந்த பார்வையில் மட்டும் பார்க்க முடியாது. இந்தியாவைப் பொருத்தவரையில், குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அது பெண் விடுதலைக்கான கருவியாக இருந்திருக்கிறது. இந்தப் பந்தத்தைக் கொளுத்திய வகையில் நாம் பெரியாரை வணங்க வேண்டும்.

நீங்கள் எதன் மீது அடக்குமுறையைத் திணிக்கிறீர்களோ அது வேறொரு பக்கம் வெடித்துச் சிதறும். இது அறிவியல். இப்படியான அடிப்படைவாதிகளின் போராட்டங்களால் இந்த நாள் இன்னும் தீவிரமாகக் கொண்டாடப்படுமே ஒழிய குறையாது.

கடந்த இருபது வருடமாக இந்த நாள் சமூக நீதிக்கான நவீன போராட்ட வடிவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இந்த மண்ணிற்குரிய தனித்துவம். இதை அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடலூரைச் சேர்ந்த கவுதம்ராஜ் என்பவரின் மனைவி கோகிலா, பிரசவத்தின்போது எதிர்பாராதவிதமாக மூளைச் சாவடைந்துவிடுகிறார். அத்தனை துயரங்களுக்கிடையிலும் கவுதம்ராஜ், தன் மனைவியின் இதயத்தைக் காதலர் தினத்தன்று தானமாகக் கொடுத்துவிடும்படி மருத்துவரிடம் கோரிக்கை வைக்கிறார். இத்தனைக்கும் இவர்களது திருமணம் காதல் திருமணமல்ல. நிச்சயிக்கப்பட்டதுதான். காதலர் தினத்தை மரியாதைப்படுத்த இதைவிட வேறொரு சம்பவம் வேண்டுமா என்ன?

]]>
Valentines Day https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/Heart.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/shifting-the-heart-3356767.html
3356769 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே காதல் வாழ்வு தஞ்சை ந. இராமதாசு DIN Friday, February 14, 2020 07:00 AM +0530
மனித வாழ்வில் மாற்றங்கள் பல அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன? எங்கிருந்து தோன்றின? அதனால் மனிதகுலம் அடைந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

நம் நாட்டின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருப்பினும் அடிப்படையில் இந்திய மக்களின் குடும்ப உறவுகள் மொழிப்பற்று, பாரம்பரியம், நாட்டுப்பற்று இவற்றில் இந்திய மக்கள் ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள்.

இவ்உயரிய பண்புகளே உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டைத் தனித்தன்மை வாய்ந்தாகக் காட்டுகிறது.

நாகரிகம் என்ற பெயரில் மனித வாழ்வைச் சீரழிக்கும் போக்கைத்தான் மேலை நாகரிகம் போதித்துள்ளது. போதைப் பொருள் உற்பத்தி, அதன் பயன்பாடு, வன்முறைக் கலாச்சாரம்; பாலியல் இச்சையைத் தூண்டும் நீலப்  பட வெளியீடு, இதன் மூலம் விளைந்த எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் இவைகள்தான் மேலை நாட்டின் மூளையில் உதித்த தீய சக்திகளாகும். இந்தத் தீய சக்திகளின் அழிவுப் பாதையில் இருந்து மக்களை மீட்கத் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டியது மனித நேயம் கொண்டவர்கள் கையில் உள்ளது.

மேலை நாடுகளில் பல்வேறு விழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவற்றில் ஒன்றுதான் காதலர் தினம். காதலர் தினம் எனறால் என்ன? காதல் என்றால் என்ன? இதன் பொருள் அறிந்துதான் இவர்கள் கொண்டாடுகிறார்களா?

ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ் ஆகியோரின் காதல் தெய்வீகமானது - புனிதமானது. இந்த வரலாற்றுக் காதல் நாயகர்களின் வாழ்க்கையைப் பின்பற்றுகிறதா இன்றைய காதல்?

முகநூலில் முகத்தைப் பார்க்காமல் காதல் கொண்டு, எதிர்கால வாழ்வைத் தொலைத்தவர்கள் நிலை கண்டு மனம் மிகவும் வருந்துகிறது.

நவீன தொழில்நுட்பம் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல் அப்பாவித்தனமாக இளைஞர்கள் அதிலும் படித்தவர்கள் ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு இன்னலுக்கு உள்ளாகிறார்கள். நம் இலக்கியங்களில் காதல் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காதலியைப் பிரிந்து காதலன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்கிறான். அவனது கால்கள் முன்னோக்கி நடைபோடுகின்றன. கண்களோ காதலியைத் திரும்பிப் பார்த்துகொண்டே செல்கின்றன.

காதலி எண்ணுகின்றாள். தினமும் காலுக்குத் தொண்டு செய்தேன், கொஞ்சமும் நன்றி உணர்வு இல்லாமல் விரைந்து முன்செல்கிறது. கண்களுக்கு எந்தவிதத் தொண்டும் செய்யவில்லை. ஆனால், என்னைப் பிரிந்து செல்வதை நினைத்துக் கவலையுடன் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது. என்ன உலகம் இது.

வள்ளுவர் குறிப்பிட்டது போல் கீழோர் மறப்பார், மேலோர் நினைப்பார் என்ற குறள் இதைத்தான் குறிப்பிடுகிறதோ என்று எண்ணுகிறாள். இதை உண்மையான காதலாக அடையாளம் காட்டுகிறது.

காதல் என்பது உள்ளார்ந்த அன்புடன் இருமனம் ஒருமனதாகி இன்ப, துன்பத்தில்  ஒருவருக்கு ஒருவர் கருத்தொற்றுமையுடன் காதல் கொண்டு திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து நின்று அன்னையை, தந்தையை, உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மீது அன்புடன் வாழ்ந்து பேறு பதினாறு பெற்று வாழ்கின்ற வாழ்வே காதல் ஆகும். அதுவே உண்மையான காதலுக்கான இலக்கணமாகும்.

புற அழகைக் கண்டு காதல் கொண்டு இணைகின்ற வாழ்வு காதலாகாது. ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளாமல் காதல் கொண்டால் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட நேரிடும். தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம், வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் அவசரப்பட்டு விட்டோம் என்று வருந்துவது காதலாகாது.

தான் தெரிவு செய்த காதலன்; காதலி தத்தமது பெற்றோர்களை அன்போடும், அரவணைப்புடன் பேணி இல்லறம் காண்பதுதான் ஒப்பற்ற காதலாகும்.

தாய் மொழியை, தாய் நாட்டைத் தனக்கு கிட்டிய வாழ்வை ரசித்து இன்புற்று வாழ்வதே இணையில்லா காதலாகும். அன்புக்கு இன்னும் ஒரு பெயர் காதல், காதல் வாழ்வு.

தன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே சிறந்தது.

]]>
Valentines Day https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/Screenshot004.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/romantic-life-is-a-self-sacrificing-married-life-3356769.html
3356765 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: தொல். திருமாவளவன் DIN DIN Thursday, February 13, 2020 06:41 PM +0530 பெரம்பலூர்: வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அளவிலான நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்ததற்கும், கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க அறிவித்துள்ள தமிழக முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதல்வர், அதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அந்த ஆலை அமைந்தால் அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்போம்.  

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பெற மாட்டோம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது, அவரது அகந்தையை வெளிப்படுத்துகிறது. இந்த சட்டத்தை திரும்பபெறும் வரை ஜனநாயக சக்திகளின் போராட்டம் தொடரும்.

அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பு அடிப்படை உரிமை அல்ல என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேலைவாய்ப்புகளை நடைமுறைபடுத்துங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உடனடியாக மேலாய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தை பரிசீலித்து ஆளுநர் விரைவில் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் தொல். திருமாவளவன். பேட்டியின்போது, கட்சியின் மண்டல நிர்வாகி இரா. கிட்டு உடனிருந்தார். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/Thirumavalavan.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/13/வேளாண்-மண்டலமாக-அறிவித்துள்ளதை-சட்டப்பேரவையில்-தீர்மானமாக-நிறைவேற்ற-வேண்டும்-தொல்-திருமாவளவன்-3356765.html
3356764 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஏ.சி. மெக்கானிக் கடத்திக் கொலை:  மேலும் ஒரு இளைஞர் கைது DIN DIN Thursday, February 13, 2020 06:33 PM +0530  

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ஏ.சி மெக்கானிக்காக இவருக்கும், திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு டீக்கடையின் அருகே கடந்த 19ஆம் தேதி நின்றுக் கொண்டிருந்த ராம்குமாரை, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து, கேளம்பாக்கம் கல்லுக்குட்டைப் பகுதியில் சடலத்தை வீசி சென்றது.

இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கொலை செய்ததாக பிரேம்குமார் உள்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/arrest1.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/13/ஏசி-மெக்கானிக்-கடத்திக்-கொலை--மேலும்-ஒரு-இளைஞர்-கைது-3356764.html
3355865 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 12, 2020 DIN DIN Thursday, February 13, 2020 05:52 PM +0530 சீனாவில் கரோனா வைரஸ் பாதித்த ஹூபெ மாகாணத்தில் சேவை புரிவதற்காக வூஹானிலுள்ள தியானே பன்னாட்டு விமான நிலையத்தில் எட்டு பெரிய பயணிகள் விமானத்தில் ராணுவ மருத்துவக் குழுவினர் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளனர்.

புது தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் புதன்கிழமை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு,  வியத்நாம் நாட்டின் துணை அதிபர் டாங் தி காக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கொல்கத்தாவில் கிழக்கு - மேற்கு மெட்ரோ வழித் தடத்தின் தொடக்கத்தையொட்டி, சோதனையோட்டமாக  சால்ட் லேக் பகுதியில் செல்லும் மெட்ரோ ரயில். இந்தத் தடத்தை வியாழக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கிவைக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆஸம்கர் நகரில் புதன்கிழமை நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி. 

ஜம்மு - காஷ்மீரைப் பார்வையிட வந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள், புதன்கிழமை  தால் ஏரியில்  படகு சவாரி சென்றனர்.

அமெரிக்காவில் புளோரிடா நகரில் விளைந்த தக்காளிகளை விற்பனைக்கு அனுப்புவதற்காகப் பெட்டியில் இடுவதற்கு முன் கழுவி சோதனையிடும்  தொழிலாளர்கள். புதிதாகத் தொழிலாளர்களைப் பணிக்கு எடுக்கும்போது அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்வதற்கான தகுதி இருக்கிறதா என்பதைத் தனியார் நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதை புளோரிடா கட்டாயமாக்கியுள்ளது.  ஏற்கெனவே வேலைக்கு ஆள்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பெருமளவில் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட புளோரிடாவில் புதிய சட்டத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியு ஹாம்ப்ஷயரில் மான்செஸ்டர் நகரில் தொடக்க நிலைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கிறார் அமெரிக்க அதிபர்  தேர்தலுக்கான  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் செனட்டர் எலிசபெத் வாரென்.

நியு யார்க்கில் நடைபெற்ற 144-வது வளர்ப்பு விலங்குகள் கண்காட்சியில் சிறந்த நாய்க்கான போட்டியில் பங்கேற்ற சிபா என்ற நாய்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/12/w600X390/12FEB1F.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/12/news-photos-3355865.html
3356678 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் காதலெனப்படுவது சரணாகதி  அகிலா கிருஷ்ணமூர்த்தி DIN Thursday, February 13, 2020 04:08 PM +0530 மனித குல வரலாற்றில் உணர்வு என்கிற ஒன்றை உணரச்செய்வது காதல். சிலவற்றை வகுத்துக்கொண்டு இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதான வரையறையை முன்திட்டமிடலோடு ஒருபோதும் அணுக முடியாது.

எது காதல்? அதை உள்வாங்குகிற இரசவாதபுத்தி மிக முக்கியமானது. காதல் என்பது நம்பிக்கை. ஆமாம். துயரக்காலங்களில் சிந்தும் கண்ணீரை நிலத்தில் சேர்க்காமல் நினைவில் சேர்ப்பான் அல்லது சேர்ப்பாள் என்கிற பாதுகாப்பு.

பிப்ரவரி 14 கேளிக்கைக்கானக் கொண்டாட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய விழா அது. அந்தக் கிடார் நரம்பின் தழுவல் ஒலி, உண்மைக்காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதரின் மரண அசைவு. பார்வை இழந்த, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்காவலரின் மகள் அஸ்டோரியா. மனம் முழுக்கக் காதலைக் குவித்து அரிதாரங்கள் அற்ற, தெளிந்த காதலை வாழ்த்து அட்டையாக்கி அவள் கரங்களில் சேர்க்கும் தருணத்தில் கல்வீசிக் கொடுமைப்படுத்தி வாலண்டைன் தலை துண்டாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை காதலுக்காகக் கொடுக்கப்படும் விலையுயர்ந்த பரிசு வெட்டுண்ட தலைகள். களங்கள்தான் மாறுபடுகின்றன. ஒன்று நீருக்கு அடியில் அல்லது இரயிலுக்கு அடியில். காதல், தாய்க்கவிச்சி மாறாத ஒரு குழந்தை. பாலைவனத்தின் மழைச்சாரல். பெரும் சுனாமிக்குப் பின்னால் மிரட்டும் நிசப்த சமுத்திரம். எல்லாமுமாகப் பாரித்தும் பூரித்தும் கிடப்பது காதல்.

கி.பி.270 க்கு முன் காதல் இல்லையா என்ற கேள்வி எழும். அதன் காலகட்டம் என்னவாக இருந்தது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. காப்பியக் காதல் பெரும்பாலும் காத்திருப்புகளில் தொடங்கி அதிலேயே முடிந்திருக்கும்.

காதலும் வீரமுமாக உயிர்ப்போடு விளங்கியது நம் தமிழ்ச் சமூகம். அதற்கான பின்புலம் காதல் சாதியை உடைக்கும். வர்க்கத்தைக் கலக்கும். தான் எனும் உள்மிதப்பு அழிந்து உள்ளம் ஒன்றி உனக்காகவே நான் என்கிற சரணாகதி நிலையை உருவாக்கும். பிரிவினையற்ற சமரச ஆயுதமாக இருப்பதால்தான் பிரிக்க நினைப்பவர்களைக் காதல் அச்சுறுத்துகிறது. 

ஜென்னி இறந்தபோதே உயிரோடிருக்கும் மார்க்ஸ் மனதளவில் இறந்ததாக ஏங்கல்ஸ் கூறினார். காரல் மார்க்ஸ், ஜென்னியாகத் தனித்துப் பார்க்காமல் மார்க்ஸின் ஜென்னி, ஜென்னியின் மார்க்ஸாக எண்ணுவதற்குக் காரணம் போராளிகளாக அவர்கள் பட்ட இன்னல்களிலும் வறுமையிலும் கோர்த்துக்கொண்ட காதலின் ஈரம்தான்.

ஷேக்ஸ்பியர், தாமஸ் ஹார்டியைவிட ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கு, எலிசபெத் பாரெட் எழுதிய மொழிதான் உலகின் ஆகச் சிறந்த காதல் கவிதையாகச் சொல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையும் கையறுநிலையில் தொடங்கப்பட்டிருக்கிறது.

எலிஸபெத் தன்னைவிட ஆறு வயது குறைவான ப்ரௌனிங்கைத் திருமணம் செய்துகொண்டார். வீட்டுச் சிறையில் எழுந்து நடக்க முடியாமல் தன்னை முடக்கிக்கொண்டவர். தேடலில் வியாபித்த   காதல் வரிகளால் காதலனைக் கண்டடைந்தார். மார்க்ஸ் , ஜென்னியைப் போல் 1845 – 46 களில் கடிதங்களால் தங்களை கரைத்துக் கொண்டவர்கள் இவர்கள். 1859 இல் உடல்நலம் பாதிக்கப்பட்டு எலிசபெத் இறக்கிறார். அதற்குப் பிறகு 28 ஆண்டுகள் மணமுடிக்காமல் ப்ரௌனிங் வாழ்கிறார். அவர் மீது காதல் கொண்டு மணம் செய்ய ஆசைப்படும் பெண்ணிடம் அவர் இப்படிக் கூறுகிறார் “My heart is buried in Florence.” எப்படியான காதல் இது!

மேலும் படிக்க.. காதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்

உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட இப்படியான காதல் இன்றைக்கு நமக்குள்ளும் நம்மைச்சுற்றியும் கவனிப்பின்றி உயிர்க்கவே செய்கிறது. உயர்வு தாழ்வுகளைக் கட்டுடைப்பதற்காக உலகின் எந்தத் திக்குகளில் இருந்தும் பாயக்கூடிய சக்திவாய்ந்த இப்படியான நெகிழ்வு மட்டுமே வறட்டுச் சூழலில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். 

ஆடைகளை மாற்றிக்கொள்வதுபோல் உறவுகளை மாற்றுவது ஆபத்தானது. விவாதங்கள், கருத்து மோதல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  வருடக்கணக்கில் காதல் செய்து மணம் புரிந்தவர்கள்கூட புரிதல் இல்லாமல் உறவை முறித்துக் கொள்கின்றனர். அப்படியானால் அங்கே காதல் எங்கே இருக்கிறது?

பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாமல் தன்னுடைய சாதிக்கு, சமூக மதிப்பிற்குப் பொருந்துவதுபோல் தேடிக் கண்டுபிடித்துப் பழகுகிறார்கள். மறுத்தால், குரூரமாக அமிலம் வீசுவது, கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்வது, பழிவாங்கும் நோக்கில் நடத்தையில் குற்றம் சுமத்துவது.

சமூகத்திற்காக வாங்கப்படும் விலைபொருளாகக் காதல் மாறிப்போனது வேதனைக்குரியது. பாலின பேதமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். காமம் – காதல், பெஸ்டி - காதல் இவற்றுக்கு இடையேயான நுட்பமான சரடு புரியாமல்போனது காலத்தின் குளறுபடி. பிப்ரவரி 14 அன்பர்களின் நாளும்கூட. களியாட்டங்களை ஒருபுறம் வைத்துவிட்டு வஞ்சிக்காத அன்பைக் கொடுத்தால் பெருங்காதல் தேடிவரும். இந்தச் சூட்சுமம் புரிந்தால் எல்லா தினமும் காதலர் தினம்தான். ஆதலால் காதல் செய்வீர்.

]]>
valentinesday https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/v_day.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/love-is-surrender-3356678.html
3356692 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் காதல் என்பது எது வரை? பெ. செந்தில்குமார் DIN Thursday, February 13, 2020 04:07 PM +0530 இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியும் ஒரு நாளை இங்கே யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று இதைப் பற்றி எழுதாதவர்களோ பேசாதவர்களோ இல்லை.

இந்த வாட்ஸ்ஆப், முகநூல் காலத்தில்கூட உலகில் மிக அதிக அளவில் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும் இரண்டாவது சீசன் இது என்று கூறப்படுகிறது.
இப்போது உலக அளவில் கொண்டாடப்படும் சில நாள்களில் இதுவும் ஒன்று. பிப்.14 காதலர் தினம்.

ஆண் - பெண் உறவு உயிர்த்திருக்க வேண்டும் என்பதற்காக உயிர் துறந்த பாதிரியாரின் பெயரால் வாலன்டைன் டே என்றழைக்கப்படுகிறது.

சாதி, மதம், இனம் மொழி இவற்றையெல்லாம்  பார்த்து வருவதல்ல காதல், அன்பை மட்டுமே மையமாகக் கொண்டு ஏற்படும் மாற்றமே காதலாகிக் கனிகிறது என்கின்றனர் இன்றைய இளம் வயதினர் (மட்டும்).

இந்த நாளில் தனக்குப் பிரியமானவரிடம் ஆண்டு முழுவதும் கொண்டுள்ள தன் அன்பை (காதலை) வெளிப்படுத்துகின்றனர். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள் நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்கின்றனர்.


இந்த நாளில் அவர்கள் அணியும் ஆடையின் நிறத்துக்குக்கூட அர்த்தம் கூறுகின்றனர்.

பச்சை நிறத்தில் அணிந்திருந்தால் காதலுக்கு சம்மதம். நீல நிறத்தில் அணிந்திருந்தால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தால் காதலுக்கு எதிர்ப்பு, கறுப்பு நிறத்தில் அணிந்திருந்தால் காதலில் தோல்வியுற்றவர்கள்... இப்படியெல்லாமும் இருக்கிறதாம்.

காதல் அல்லது நட்பை வளர்க்கும் எந்த ஜோடியைக் கேட்டாலுமே அனைவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகத்தான் இதைக் கொண்டாடுகிறோம். ஆனால் இதற்குக்கூட சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்  என்றுதான் கூறுகின்றனர்.

மேலும் படிக்க.. காதலர் தினம் ஒரு நாள் அல்ல; ஒரு வாரக் கொண்டாட்டம்!

வேலைக்குச் செல்லும் ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் முதலில் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் வேறு வழியின்றி அவர்களே முன்வந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப் பற்றிய பெற்றோர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு இருக்கிறது என்றனர்  காதல் மணம் புரிந்த ஒரு ஜோடி.


பெரும்பாலும் நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் காதல் கும்பல்களில் கல்லூரி மாணவர்கள் மாணவியர்கள்தான் அளவில் அதிகம். சில மாணவிகள் அல்லது வேலை பார்க்கும் பெண்கள், வேலையற்ற இளைஞர்கள். வேலை பார்க்கும் இளைஞர்கள். வீட்டு்க்குத் தெரியாமல் வந்த இளம் பெண்கள். இப்படி எந்தவித காம்பினேஷனிலும் பொருத்திவராமல் ஜோடிகள் பலவிதம்.

'இல்லை, நாங்கள் வெறும் நண்பர்கள்தான். காதலர்கள் அல்ல. சும்மா வந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் தனியே யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்திருக்கும் சில ஜோடிகள் (கல்லூரிக் காலம்)

பள்ளி, கல்லூரிப் பருவத்தில் உள்ளவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது சொல்லிக்கொள்ளும் காதல், வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கிறது.
பல நேரங்களில் வேலை கிடைத்ததும் அல்லது இடம் மாறியதும் காதலும் மாறிப்போய் விடுகிறது.

இதனால் இருதரப்பிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதில் நூற்றுக்கு ஒரு சதவீத காதல்தான் கடைசி வரை சென்று திருமணத்தில் முடிகின்றது என்று கல்லூரி ஆசிரிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

போரில் மட்டுமல்ல, காதலிலும் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். ஆதலினால் காதலிக்கலாம் குற்றமில்லை என்ற மனோபாவம்தான் இளைஞர்கள் பலரிடமும்.

ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்துக் கேட்கத் தொடர்பு கொண்டோம், 'அதுங்களுக்குதான் அறிவில்லை. டி.வி., சினிமா, கண்ட, கண்ட புத்தகங்களைப் படித்து, விடியோக்கள் பார்த்துச் சீரழிகிறார்கள். இல்லாத கருமத்துக்கு செல்போன், வாட்ஸ் ஆப், முகநூல் என்றெல்லாம் வேறு. இதுல அன்லிமிடெட் பேக்கேஜ்ல டேடா கனெக்சன் வேறு. உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தால் பாருங்கள்'

என்றாலும் ஒவ்வோராண்டும் இந்த நாளைப் புதிது புதிதாகக் காதலர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் பெரும்பாலும் ரகசியமாக அல்லது ரகசியம் என நினைத்துக்கொண்டு ஊரறிய.

]]>
valentinesday https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/19/w600X390/heart-beat.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/what-is-end-for-love-3356692.html
3356702 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தோற்றவர் வென்றவர் ஆகிறார் பாவலர் முழுநிலவன் DIN Thursday, February 13, 2020 04:03 PM +0530 காந்த விசையைப் போல, புவி ஈர்ப்பு விசையைப் போல எதிர்பால் ஈர்ப்பு என்பது உலகத்தை இயக்குகிறது. காற்றையும் நீரையும் போல காதலும் வாழ்வதற்கு இன்றியமையாதது. காலூன்றி நடப்பதற்குக் காற்றும் நீரும் போதுமானது. ஆனால் சிறகின்றிப் பறப்பதற்கும் துடுப்பின்றி மிதப்பதற்கும் காதல் அவசியமாகிறது.

“இதயம்” படம் போட்ட எல்லாப் பொருளையும் வாங்கிக் குவிக்கும் பேரனுக்கும் பேத்திக்கும், “செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” என எழுதிய பாட்டனை அறிமுகப்படுத்த வேண்டிய தினம் – “காதலர் தினம்”!

காதல் என்பது மனம் சார்ந்தது. அதனால் தான் காதலை, ஊடலை, கூடலை அகத்திணையில் வைத்து அழகு பார்க்கிறது தமிழ். உச்சபட்ச காதலை ஊடல் வழியாகவும் தோழி வழியாகவும்தான் பேசுகிறது சங்க இலக்கியங்கள்.

மற்ற துறைகளைப் போலவே காதலிலும், காமத்திலும்கூட நமது மரபார்ந்த அறிவை இழந்துவிட்டோம் அல்லது விலகி நிற்கிறோம். இதை அவ்வளவு உறுதியாக நான் எப்படிச் சொல்கிறேன் என்றால்… நான் “அந்த மூன்று நாட்கள்” என்று பெண்ணின் மாதவிடாய் குறித்து புத்தகம் எழுதினேன்.

மேலும் படிக்க.. காதலர் தினம் ஒரு நாள் அல்ல; ஒரு வாரக் கொண்டாட்டம்!

திருமணமான என் நண்பர்கள் முதலிரவு குறித்த சந்தேகங்கள் கேட்டு என்னை அழைப்பார்கள். “நீ தான் புத்தகம் எழுதியிருக்கிறாயே! ஆலோசனை சொல்” என்பார்கள். “டேய்.. அது மாத விலக்கு (Mensus Period) குறித்த புத்தகம்டா” என சொன்னாலும் விடமாட்டார்கள்.

சந்தேகம், விளக்கம் என நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என நிறைய பேர் கேட்டதால், அது குறித்து தமிழில் பல மனநல மருத்துவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். அவை பெரும்பாலும் மேற்குலகம் சொல்லும் எந்திரத்தனமான பார்வையைத்தான் கொண்டிருந்தன. அப்புறம்தான் சங்க இலக்கியங்கள் சொல்லும் மனம் குறித்த பாடல்களில் சரணடைந்தேன்.

காதலுக்கான சூத்திரத்தை, தமிழ் மட்டும்தான் எழுதி வைத்திருக்கிறது. காதலர்களுக்கு இடையே வரும் ஊடலில் – பிணக்கில் தோற்றவர் வென்றவர் ஆகிறார். இரண்டு பிள்ளைகளின் தகப்பனான எனக்கும் நான்கு பேரன் பேத்தி கண்ட என் தகப்பனுக்கும், நாளை காதலிக்கப் போகும் என் மகனுக்கும் அதுவே துணை. காதல் ஊடலில் தோற்றவர் வென்றவர் ஆகிறார்.

காதலும், குழந்தையும் ஒன்று. பொருள் வாங்கித் தருவோரைவிடவும், நேரம் ஒதுக்கிக் கொஞ்சுவோரையே விரும்புகிறது!

மெத்தப் படித்ததாய் அனத்தும் மேதாவிகளிடமும், எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்வோரிடமும் காதல் ஒருபோதும் தங்குவதில்லை.

ஆக.. காதலர் தினத்தில் அன்போடு அழைக்கிறேன். நண்பர்களே, திரும்பி வாருங்கள். பொருள் நுகர்வு மேற்கு நோக்கியும், காதல் அருள் பேறு கிழக்கு நோக்கியும் உள்ளது. திரும்பி வந்து, காதலாகி.. கசிந்துருகி.. கண்ணீர் மல்க.. அனைவருக்கும் வாழ்த்துகள்!

]]>
valentinesday https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/balloon.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/14/the-loser-is-the-winner-3356702.html
3356668 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் 23 வயது இளம் பெண் ஆணவக் கொலை: தந்தையும் மாமன்களும் கைது! IANS IANS Thursday, February 13, 2020 11:38 AM +0530  

உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரதாப்கரில் 23 வயதான பெண்ணின் தந்தை மற்றும் அவரின் இரண்டு மாமாக்கள் கைது செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு மே மாதம் ப்ரீத்தி வர்மா என்ற பெண் காணாமல் போனதாக அவரது தந்தை மற்றும் மாமன்கள் புகார் அளித்தனர்.

அண்மையில் ப்ரீத்தியின் தந்தைக்குப் பரிச்சயமான வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விசாரணையின் போதுதான் ப்ரீத்தி வர்மாவின் கொலை வழக்கின் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

பிரதாப்கர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் இது குறித்து கூறுகையில், ப்ரீதியின் தந்தை ராஜு வர்மா மற்றும் மாமாக்கள் ஜமுனா பிரசாத் வர்மா மற்றும் ராஜேஷ் வர்மா ஆகியோர் கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குடும்பம் மே 14 அன்று ப்ரீத்தி வர்மாவின் இறுதி சடங்குகளை ரகசியமாக நடத்தியது மட்டுமல்லாமல், அவரது மொபைல் போனை சடலத்துடன் சேர்த்து எரித்துவிட்டனர்.

ஒரு நாள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரும், உள்ளூர் வியாபாரி சர்வேஷ் சோம்வான்சி என்பவருடன் சேர்ந்து, அன்டூ காவல் நிலையத்திற்குச் சென்று மகள் காணாமல் போனதாக புகாரை பதிவு செய்திருந்தனர்.

விசாரணையில், ப்ரீத்தி ராகுல் வர்மாவை என்பவரைக் காதலித்து வருவதாகவும், அவரை ஒரு கோவிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. தம்பதியினர் தங்களது திருமணத்தை விரைவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக்க பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கணவர் ராகுல் வர்மா விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்தார்.

ப்ரீதியின் தந்தையும் இரண்டு மாமன்களும் இந்த ஜோடி ஒருநாள் சந்தித்துப் பேசுவதைப் பார்த்துவிட்டனர். ராகுல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட, ​​ப்ரீத்தி வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டு இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்டார். கங்கைக் கரையிலுள்ள சிங்கானி காட்டில் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக ப்ரீத்தியின் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

நவம்பர் 11 ஆம் தேதி வியாபாரி சோம்வான்சி பாசி மீது துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக அஜய் பாசி மற்றும் பவன் சரோஜ் ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது, ப்ரீத்தி காணாமல் போன வழக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக எஸ்.பி கூறினார்.

அஜய் பாசி ப்ரீதியை நேசிப்பதாகவும், அவர் காணாமல் போனதில் சிலருக்கு பங்கு இருப்பதாக சந்தேகித்ததால் வியாபாரியைத் தாக்கியதாகவும் கூறினார்.

ப்ரீத்தி காணாமல் போன விஷயத்தைப் பதிவு செய்வதற்காக வியாபாரி ப்ரீதியின் குடும்பத்தினருடன் அன்டூ காவல் நிலையத்திற்கு வருவதைக் கண்டதாக அவர் போலீஸாரிடம் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய வியாபாரியையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியாக முழுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்பட்டது.

ராகுல் வர்மாவை ப்ரீத்தி ரகசியத் திருமணம் செய்ததால் கோபத்தில் பெற்ற மகளையே மாமன்களிடன் துணையுடன் இரக்கமின்றிக் கொன்றுவிட்டு அதை மறைத்துவிட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
Father uncles arrested https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/murder_case_in_UP.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/13/father-uncles-arrested-for-womans-murder-in-up-3356668.html
3355893 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: கமல்ஹாசன் DIN DIN Wednesday, February 12, 2020 05:49 PM +0530 சென்னை: பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன்.

தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும்.

தில்லியைப் போல பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள்.

கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/10/w600X390/kamal.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/12/பாஜகவுக்கு-ஆதரவு-அளிக்க-மாட்டேன்-கமல்ஹாசன்-3355893.html
3355013 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 11, 2020 DIN DIN Wednesday, February 12, 2020 03:52 PM +0530 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றிச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், புது தில்லியிலுள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு பகுதி.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நிலையில் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் கிடந்த பாரதிய ஜனதா அலுவலகம்.

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை  சுவாமி தரிசனம் செய்தார் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.

அன்டார்டிக்காவில் பனித் தீவுப் பகுதியில் திரண்டு நிற்கும் பென்குயின் பறவைகள்.

அன்டார்டிக்காவில் போர்னியே விரிகுடா பகுதியில் இருக்கும் பனி போர்த்தியதொரு மலை.

இஸ்ரேலில் ரமத் கன் நகரில் பன்னாட்டு வைரச் சந்தையில் திரண்டிருந்த வாடிக்கையாளர்கள். புதன்கிழமை நிறைவு பெறும் இந்த ஒரு வாரச் சந்தையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய மற்றும் பன்னாட்டு வைர வணிகர்கள் கலந்துகொண்டனர்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/PTI2_11_2020_000156A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/11/news-photos-3355013.html
3355060 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஏழு பேர் விடுதலை: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரு வார அவகாசம் DIN DIN Tuesday, February 11, 2020 10:37 PM +0530
ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு  தமிழக அரசை உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) அறிவுறுத்தியது.

இதற்காக இரு வாரங்கள் கால அவகாசம் தருவதாகவும் அமைச்சரவையின் தீர்மானம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேரறிவாளன் மனுவின் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம்; அதற்கு மேலாக  ஆளுநருக்குத் தங்களால் அழுத்தம் கொடுக்க இயலாது என்று தெரிவித்தார்.

இதுபற்றிக் குறிப்பிட்ட நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக் குப்தா ஆகியோர், அமைச்சரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை; கைகழுவும் விதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாகத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள இரு வாரங்கள் கால அவகாசம் தருவதாகவும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தொடர்ச்சியாக, 2018 செப்டம்பர் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து, 2018 செப்டம்பர் 9 ஆம் தேதி, பேரறிவாளன் உள்பட  இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையிலுள்ள  ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.

இந்த நிலையில் அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளதாகவும் விரைவில் ஏழு பேரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, இந்த மனுவைக் கருத்துக் கேட்டு மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் சரியல்ல என்று, 2018 செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில்  ஆளுநர் மாளிகை தெரிவித்தது. பின்னர், இதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

]]>
rajiv case - seven persons acquittal https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/Rajiv.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/11/rajiv-case---seven-persons-acquittal-sc-says-two-weeks-time-for-tn-govt-3355060.html
3355044 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கணிப்புகளைக் காலிசெய்த ஆம் ஆத்மி DIN DIN Tuesday, February 11, 2020 06:18 PM +0530
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமலாக்கி 60-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றித் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் இந்தியா மட்டுமே ஆம் ஆத்மி 63 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. பாரதிய ஜனதா 7 இடங்களில் வெல்லும்; காங்கிரஸ் எங்கேயும் வெற்றி பெறாது எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே - 56, 14, 0 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி நியூஸ், 44, 23, 0 இடங்களைப் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, 54, 15, 1 இடங்களைப் பெறும் என ரிபப்ளிக் - ஜன் கி பாத், 52, 17, 1 இடங்கள் என நியூஸ் எக்ஸ், 54, 15, 1 தொகுதிகள் என டிவி9 பாரத்வர்ஷ் ஆகியன தெரிவித்திருந்தன.

சொல்லிவைத்தாற்போல காங்கிரஸ் வெற்றி பெறப் போவதில்லை என அனைத்துக் கணிப்புகளுமே தெரிவித்திருந்தன. சிலர் மட்டும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டனர்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், ஆனால்,  கடந்த தேர்தலில் வென்ற அளவுக்கு இடங்களைப் பெறாது என்றே அனைவரும் குறிப்பிட்டுவந்தனர். ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தாண்டி, 60 தொகுதிகளையும் தாண்டி ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி.

2015 சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம்  ஆத்மி கைப்பற்றியிருந்தது. பாரதிய ஜனதாவுக்கு மூன்று இடங்கள். காங்கிரஸுக்கு எதுவுமில்லை. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் பற்றிய கணிப்புகள் மற்றும் பொய்க்கவில்லை.

]]>
results vs exit poll prediction https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/PTI2_11_2020_000158B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/11/results-vs-exit-poll-prediction-3355044.html
3354071 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 10, 2020 DIN DIN Tuesday, February 11, 2020 04:23 PM +0530 மும்பையில் திங்கள்கிழமை இரவு பந்த்ராவிலிருந்து கோரேகான் வரையிலும் சைக்கிளில் சென்ற ஹிந்தி நடிகர் சல்மான் கான்.

 

லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்குவிழாவின்போது, நான்கு விருதுகளை வென்ற 'பாராசைட்' திரைப்படத்தின் நடிகர் குழுவினர்  தற்படம் எடுத்துக்கொண்டனர்.

திருவனந்தபுரத்தில் மகாத்மா அய்யன்காளி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் முதுபெரும் தலைவரும் கோட்பாட்டாளருமான மறைந்த பி. பரமேசுவரனின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்  கேரள முதல்வர் பினராயி விஜயன்.

 

ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால்  தனிப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலைச் சுற்றிப் பணியாற்றுவதற்காகக் கவச உடையணிந்து செல்லும் பணியாளர்கள்.  இந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் 60-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாராணசியில் கங்கைக்குச் சென்று வழிபட்ட பின் கால பைரவர் கோவிலில் வழிபடும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.

வாராணசியில் குரு ரவிதாஸ் அவதார தினத்தையொட்டி ரவிதாஸ் கோவிலில் வழிபாடு நடத்தினார் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி. பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான ரவிதாஸ், வட இந்தியாவில் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியமான ஒருவர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக்கில் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை. 

கொல்கத்தாவில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வாசகர்களால் நிரம்பி வழிந்த கொல்கத்தா புத்தகக் காட்சி வளாகம்.

குவைத்தில் ஹவாலி ஆட்சிப் பகுதியில் நடைபெற்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கைப் புலனறிவுத் திருவிழாவில் ரோபோக்களைப் பார்த்து வியந்து நிற்கும் குழந்தைகள். 

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/PTI2_10_2020_000214A1.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/10/news-photos-3354071.html
3352440 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 8, 2020 DIN DIN Tuesday, February 11, 2020 04:22 PM +0530  

நாஜிகளின் லெனின்கிராட் முற்றுகையைத் தகர்த்த பின் முதன்முதலாக உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ரயில் வந்ததை நினைவுகூரும் விதமாக, 77-வது ஆண்டு நினைவு விழாவையொட்டி, இரண்டாம் உலகப் போர்க் கால ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. பின்லியான்ட்ஸ்கி ரயில் நிலையத்தில் அந்தக் காலத்தை உணர்த்தும் ரயிலை வரவேற்கும் மக்கள்.

 

புணே நகரில் இந்திய வர்த்தக - தொழில்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ஓவியம் தீட்டும் நிகழ்ச்சியொன்றில் வாயில் தூரிகையைப் பிடித்துத் தீட்டுகிறார்கள் ராணுவ மறுவாழ்வு மையத்தின் வீரர்கள். முதுகுத் தண்டில் அடிபட்டதால் உடலில் இடுப்புக்குக் கீழே செயல்பட இயலாமல் முடக்கப்பட்டவர்கள் இவர்கள்.  எனினும், இவர்களில் பலர், வாயில் தூரிகை பிடித்து ஓவியம் தீட்டக் கற்றுக் கொள்கின்றனர். உலக அளவில் வாய் மற்றும் பாதங்களால் ஓவியம் தீட்டுவோர் அமைப்பொன்றும் இருக்கிறது. இந்த அமைப்பில் இணைந்துகொள்வோருக்கு அவர்களே ஓவியங்களை விற்றுத் தருவதுடன் உதவித் தொகைகளையும் வழங்குகிறார்கள். 

 

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்ட வந்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவருடைய மனைவி சவீதா கோவிந்த்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கக் குடும்பத்தினருடன் வந்த முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த கேஜரிவால்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டம் நடைபெற்ற ஷாகின் பாக் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியொன்றில் வரிசைகளில் நிற்கும் வாக்காளர்கள்.

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.

உத்தரப் பிரதேசம் வாராணசியில் தசாஸ்வமேத கட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கங்கை ஆரத்தி செய்த பூசகர்கள்.

கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சனிக்கிழமை அலகு குத்திப் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர். 

சீனாவில் வூஹானில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளியொருவரை மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லும் மருத்துவப் பணியாளர்கள்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/AP2_8_2020_000282B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/news-photos-3352440.html
3354989 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் 37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சி: தில்லி ஆளப்படும் வரலாறு ததாகத் DIN Tuesday, February 11, 2020 03:48 PM +0530
நாடு விடுதலை பெற்ற பின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவந்திருக்கிறது தலைநகர் தில்லி. விடுதலைக்கு முன் பல நகராட்சிகளைக் கொண்ட தில்லியை முதன்மை ஆணையர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.

1952 மார்ச் 17 ஆம் தேதி முதன்முதலாகத் தில்லி சட்டப்பேரவை தோன்றியது. இந்தப் பேரவையில் 48 உறுப்பினர்கள் இருந்தனர்.

 சட்டம் மட்டும் இயற்றும் அதிகாரம் கொண்டதாக இருந்தது சட்டப்பேரவை. தலைமை ஆணையருக்கு உதவவும்  ஆலோசனைகள் சொல்லவும் அமைச்சரவைக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

அமைச்சரவையில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தவர் பிரம்ம பிரகாஷ். பின்னர் 1955-ல் குர்முக் நிஹல் சிங் பொறுப்பேற்று 1956 வரை முதல்வராக இருந்தார்.

அமைச்சரவை எல்லாம் அகற்றப்பட்டு, 1956 நவம்பர் 1-ல் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரத்தின் கீழ் வரும்  யூனியன் பிரதேசமாகத் தில்லி அறிவிக்கப்பட்டது.  ஒட்டுமொத்த தில்லிக்குமாக நகராட்சியும் உருவாக்கப்பட்டது.

இதனிடையே, தில்லிக்கு ஜனநாயக ரீதியிலான நிர்வாக அமைப்பு வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வந்ததால், நிர்வாக சீரமைப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் பேரில், 1966 தில்லி நிர்வாக  சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் தில்லி வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களையும் கொண்ட ஜனநாயக அமைப்பாக மாநகர கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1987, டிசம்பர் 24-ல் தில்லி நிர்வாக அமைப்பை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பரிந்துரைகளைச் செய்வதற்காக சர்க்காரியா குழுவை (பின்னர் பாலகிருஷ்ணன் குழு) மத்திய அரசு நியமித்தது. யூனியன் பிரதேசங்களில் சிறப்புத் தகுதிநிலை உள்பட பல்வேறு பரிந்துரைகளைச் செய்தது குழு.

பாலகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைப்படி, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, 1992, பிப். 1-ல் தில்லிக்கெனத் (தற்போதுள்ளவாறு) தனி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையின் முதல் கூட்டம், 1993 டிசம்பர் 14-ல் நடைபெற்றது. பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 70. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள். இன்று வரை அதுவே தொடருகிறது, யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பது தொடர்பாகத் தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

1956 நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1993 டிசம்பர் 2 ஆம் தேதி வரையிலும் ஏறத்தாழ 37 ஆண்டுகள், தில்லிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்று யாருமில்லை. குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் கீழேதான் இருந்தது.

இதுவரை யார் யாரெல்லாம் முதல்வர்கள்?

17, மார்ச், 1952 - 12, பிப். 55 : பிரம்ம பிரகாஷ், காங்கிரஸ்;

12, பிப். 55 - 1, நவ. 1956 : குர்முக் நிஹல் சிங், காங்கிரஸ்;

1, நவ. 1956  - 2, டிச. 1993 : குடியரசுத் தலைவர் ஆட்சி;

2, டிச. 1993 - 26, பிப். 1996 : மதன்லால் குரானா, பாரதிய ஜனதா;

26, பிப். 1996 - 12, அக். 1998 : சாஹிப் சிங் வர்மா, பாரதிய ஜனதா;

12, அக். 1998 - 3, டிச. 1998 : சுஷ்மா சுவராஜ், பாரதிய ஜனதா;

3, டிச. 1998 - 28, டிச. 2013 : ஷீலா தீட்சித், காங்கிரஸ்;

28, டிச. 2013 - 14, பிப். 2014 : அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி;

14, பிப். 2014 - 14, பிப். 2015 : குடியரசுத் தலைவர் ஆட்சி;

14, பிப். 2015 - தொடருகிறார் : அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி.

37 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த தில்லி, 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, ஷீலா தீட்சித்தான் தொடர்ந்து காங்கிரஸில் முதல்வராக இருந்தார். இப்போது மூன்றாவது முறையாக முதல்வராகிறார் அரவிந்த கேஜரிவால்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/20200211120L.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/11/delhi-since-1952-3354989.html
3354101 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மனிதநேய சேவைக்காக அன்பாலயத்துக்கு  மேரி கிளப்வாலா ஜாதவ் விருது DIN DIN Monday, February 10, 2020 06:21 PM +0530  

சென்னை சமூகப் பணிக் கல்லூரி நிறுவியுள்ள மனிதநேய சேவைக்கான  மேரி கிளப்வாலா ஜாதவ் விருது, திருச்சி அன்பாலயத்துக்கு வழங்கப்பட்டது.

சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் நிறுவனர்  மேரி கிளப்வாலா ஜாதவ் நினைவாக, வெள்ளிவிழா ஆண்டு நினைவுச் சொற்பொழிவும் சிறப்பு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

விழாவில் நினைவுச் சொற்பொழிவாற்றிய பான்யன் அமைப்பின் நிறுவனரும் மனநல ஆர்வலருமான வந்தனா கோபிகுமார், சமுதாய, சூழல் மற்றும் பண்பாட்டு ரீதியில் மனநலப் பிரச்னைகளை அணுக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், பதின்ம வயதில் குழந்தைகள் மனம்சார்ந்த நெருக்குதல்களுக்கு ஆளாகி, தன்னளவில் மீண்டுவர இயலாமல் தற்கொலை முடிவுகளுக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும் வந்தனா தெரிவித்தார்.

சமூகப் பணிக் கல்லூரி, வைர விழா ஆண்டான 2012 முதல்  நிறுவனர்  மேரி கிளப்வாலா ஜாதவ் பெயரில் மனிதநேய சேவைக்கான விருதை வழங்கிவருகிறது. இந்த ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காகச் சிறப்பான சேவை செய்துவரும் திருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

ரூ. 1 லட்சம் தொகையுடன் சான்றும் கொண்ட இவ்விருதைக் கல்லூரிச் செயலர் முத்துக்குமார் தாணு வழங்க, அன்பாலயம் அமைப்பின் நிறுவனர் டி.கே.எஸ். செந்தில்குமார் பெற்றுக்கொண்டு, தன்னுடைய பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை எடுத்துரைத்தார்.

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்களுக்கான மறுவாழ்வு மையமாக அன்பாலயம் செயல்படுகிறது. மேலும், பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, குடும்பங்களால் கைவிடப்பட்ட அல்லது  தவிர்க்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிக்கும் அமைப்பாகவும் அன்பாலயம் சேவையாற்றுகிறது.

விழாவுக்குக் கல்லூரித் தலைவர் கே.ஏ. மாத்யூ தலைமை வகித்தார். விருதாளரைக் கல்லூரி முதன்மையர் முனைவர் ஆர். சுபாஷினி அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ராஜா சாமுவேல் வரவேற்றார். நிறைவில் முனைவர் ஜே.எஸ். குணவதி நன்றி கூறினார்.

]]>
MCJ award https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/mcj_photo_3_.jpg விருதை முத்துக்குமார் தாணு வழங்கப் பெற்றுக்கொள்கிறார் டி.கே.எஸ். செந்தில்குமார். அருகில் ‘பான்யன்’ நிறுவனர் வந்தனா கோபிகுமார். https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/10/mcj-award-for-humanitarian-service-to-anbalayam-3354101.html
3354087 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஜப்பானிய கப்பலில் 136 பேருக்கு கரோனா பாதிப்பு DIN DIN Monday, February 10, 2020 04:53 PM +0530
ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தக் கப்பலில் கரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவலை ஜப்பானிய நல்வாழ்வுத் துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி,  ஜப்பானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கப்பலிலிருந்து ஹாங்காங் துறைமுகத்தில் தரையிறங்கிய ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, டோக்கியோவுக்குத் தெற்கேயுள்ள யோகோஹாமா துறைமுகத்திற்குக் கடந்த வாரத்தில் வந்த டயமண்ட் பிரின்சஸ் என்ற இந்தக் கப்பல் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் 1,100 பணியாளர்களுடன் 2,670 பயணிகளும் சேர்த்து மொத்தம் சுமார் 3,700 பேர் இருக்கின்றனர். புதிய காற்றை சுவாசிப்பதற்காக சுழற்சி முறையில் இவர்கள் கப்பலின் மேற்தளத்தில் வந்து நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இவர்கள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருக்கும் பெரும்பாலான பயணிகள் மிகவும் மனந் தளரத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே 60 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 66 பேருக்கு  வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதெனக் கப்பலின் கேப்டன் அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் நலமாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இருவர், தங்களுக்கு கரோனா அறிகுறி எதுவுமில்லை என்று முகநூலில் தெரிவித்திருக்கின்றனர் என்றும் கப்பலிலுள்ள ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இதுவரை கரோனா வைரஸால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கப்பல்களிலும் விமானங்களிலும் வருவோரில் வைரஸ் அறிகுறிகள் இருப்போரைத் தனிப்படுத்தி ஜப்பானிய அரசு சிகிச்சையளித்து வருகிறது.

]]>
coronavirus, diamond princess https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/Japan_Ship_Diamond_Princess_Corona.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/10/136-people-in-diamond-princess-ship-have-tested-positive-3354087.html
3354045 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கரோனா பரவும் ஆபத்துள்ள 20 நாடுகளில் இந்தியா! DIN DIN Monday, February 10, 2020 12:21 PM +0530  

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவக்கூடிய ஆபத்துள்ள 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

ஜெர்மனியிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட்  கௌச் இன்ஸ்டிடியூட் இணைந்து விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள 4,000 விமான நிலையங்களின் பயணிகள் வருகை - புறப்பாடு ஆகிய பற்றிய புள்ளிவிவரங்களின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சீனாவிலிருந்து வெளியேறக் கூடிய வைரஸ் பாதித்தவர்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, கரோனா பரவக்கூடிய வாய்ப்பு, பெருமளவில் வைரஸ் பரவக் கூடிய தடங்கள், பரவும் வேகம் போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டது இந்த ஆய்வு.

ஆபத்துள்ள நாடுகளின் இந்தப் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஜப்பான் வருகிறது.  இதைத் தொடர்ந்து, தென் கொரியா, ஹாங்காங், தாய்வான் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன.

வைரஸ் பரவும் ஆபத்துள்ள முதல் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறுகிறது. 17-வது இடத்தில் இந்தியாவும் 19-வது இடத்தில் அரபு நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் வைரஸ் வந்தடையக் கூடிய வழிகளின் பட்டியலில் புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் முன்வரிசையில் இருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் இடம் பெறுகின்றன.

]]>
india top 20 countries, coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/coronaviruses.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/10/india-is-among-the-top-20-countries-likely-at-risk-of-importing-the-coronavirus-3354045.html
3353399 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கோவையில் நீலச்சட்டை பேரணி  DIN DIN Sunday, February 9, 2020 11:08 PM +0530
கோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் திக தலைவர் கி.வீரமணி, திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், மமக தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேரணியில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கொடியசைத்து துவக்கி வைத்தார். பறையிசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர். இதையடுத்து டாக்டர் பாலசுந்தரம் சாலையில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/9/w600X390/b--r--ambedkar.jpg BR Ambedkar https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/09/கோவையில்-அம்பேத்கர்-நினைவு-பேரணி-3353399.html
3353359 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு DIN DIN Sunday, February 9, 2020 09:58 PM +0530  

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி திருநெல்வேலி ரயில்நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணிகள் இன்று நடைபெற்றது. இதில் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளம் பராமரிப்பு, சிக்னல், ரயில்வே பாலத்தின் உறுதிதன்மை ஆகியவை சோதனை செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், ரயில்வே பாதுகாப்பு அறிவுறுத்தப்பட்டது. காலையில் தொடங்கிய ஆய்வுப்பணி மாலையில் நிறைவு பெற்றது. இதில், மதுரை கோட்ட பொறியாளர்கள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பொறியாளர்கள், நிலை அதிகாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/9/w600X390/train-track.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/09/நெல்லை-சந்திப்பு-ரயில்-நிலையத்தில்-ரயில்வே-பாதுகாப்பு-ஆணையர்-ஆய்வு-3353359.html
3352480 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா DIN DIN Saturday, February 8, 2020 11:52 PM +0530  

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன்படி நிகழாண்டுக்கான தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்தத் திருவிழா ஜனவரி 30ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றமும், காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதையடுத்து, பிப்ரவரி 7ஆம் தேதி சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானை சமோதர சுப்பிரமணியர் திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்தனர். மேலும், இந்தத் தேரானது முக்கிய வீதிகள் வழியாக உலாவந்து கிழக்கு வீதியில் உள்ள தேர்நிலைத்திடலை அடைந்தது.

தைப்பூசத்தை ஒட்டி திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதே போல், கொங்கணகரி கந்தப்பெருமான் கோயிலிலும் இன்று மாலையில் தோரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/ther.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/கதித்தமலை-வெற்றி-வேலாயுத-சுவாமி-கோயிலில்-தைப்பூச-தேர்த்-திருவிழா-3352480.html
3352475 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,186 வழக்குகளில் தீர்வு DIN DIN Saturday, February 8, 2020 11:45 PM +0530 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,186 வழக்குகளில் ரூ.6.33 கோடியில் தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரியில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜி கலாவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதிபதி அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்றம் நீதிபதி அன்புச்செல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி. மணி, தலைமை குற்றவியல் நீதிபதி ஏ.ஆர்.வி. ரவி மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள் வழக்கறிஞர்கள் வழக்காடிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்வு காணக்கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,186 வழக்குகளில் ரூ.6.33 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜி. கலாவதி வழங்கினார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/case.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/கிருஷ்ணகிரியிவ்-மக்கள்-நீதிமன்றம்-மூலம்-1186-வழக்குகளில்-தீர்வு-3352475.html
3352470 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கடைசி நேரத்தில் தில்லியில் வாக்குப் பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு DIN DIN Saturday, February 8, 2020 08:36 PM +0530  

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் பிற்பகல் 3 மணி வரை மந்தமாக இருந்த வாக்குப் பதிவு எண்ணிக்கை, வாக்குப் பதிவுக்கான நேரம் முடியும் தருவாயில் விருவிருப்படைந்தால் 54.65 சதவீதத்தை எட்டியது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் வரை 15.69 சதவீதமாக இருந்த நிலையில், பிற்பகல் 3 மணி வரை 30.11 சதவீதத்தை எட்டியது. அதவே மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவு  54.65 சதவீதமாக இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குபதிவு நடைபெற்ற 11 மாவட்டங்களில் வாக்குப்பதிவு 50 சதவீதை தாண்டியதாகவும், வடகிழக்கு தில்லியில் 62.75 சதவீதம் பதிவாகி உள்ளது. 

பல வாக்குச் சாவடிகளுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நின்றதால், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின், தில்லி தலைமை நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரிசையில் இருப்பவர்கள் வாக்களிக்க வேகமாக அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், வாக்காளர்களுக்கு வாக்களிக்க சற்று நேரம் ஆகும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பங்கஜ் குப்தா டிவிட் செய்திருந்தார். 'ஜனநாயகத்தின் நலனுக்காக' வரிசையில் நிற்கும் அனைத்து மக்களும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் வழங்குமாறு தில்லி தலைமை தேர்தல் அதிகாரியை அவர் கேட்டுக்கொண்டார்.

இதைதொடர்ந்து மத்திய மஹால் மாலை 6 மணிக்கு 68.35 சதவீதத்துடன் அதிக வாக்குப்பதிவைப் பெற்றிருந்தாலும், மற்ற பகுதிகளில் முறையே 39.52 சதவீதம் மற்றும் 42 சதவீதமாக இருந்தது. பட்பர் கஞ்சில் 56.11 சதவீதம் வாக்குப்பதிவானது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/vote.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/delhi-turnout-goes-up-in-last-few-hours-5465-voting-by-6-pm-3352470.html
3352477 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மிளகாய்ப்பொடி தூவி 1 கிலோ தங்க நகை கொள்ளை  DIN DIN Saturday, February 8, 2020 08:31 PM +0530
ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை மிளகாய்ப் பொடி தூவி 1 கிலோ தங்க நகையும், 64 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகை கடை பஸார் பகுதியில் இருந்து ஓம் ராம் மற்றும் அவர் நண்பருடன் ஆம்பூர் பகுதியில் இருந்து அணைக்கட்டு ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தங்கத்தை விற்பனை செய்ய எடுத்துச் சென்றபோது மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி 1 கிலோ தங்கம் 118 சவரன் 64 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடித்தனர்.

இது குறித்து வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/PoliceOdishaDrugs.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/மிளகாய்ப்பொடி-தூவி-1-கிலோ-தங்க-நகை-கொள்ளை-3352477.html
3352474 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை DIN DIN Saturday, February 8, 2020 08:10 PM +0530
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது.

விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில், குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கன்னியாகுமரி பகவதியம்மன் உள்ளிட்ட கோயில்களில் இப்பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இப்பூஜையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. முன்னதாக, கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களிலிருந்து நெற்கதிர்கள் கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு பூஜை நடத்தப்பட்டு, நெற்கதிர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் பூஜாரிகள் நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இவற்றை வீட்டு முன் கட்டிவைத்தால் வளம் செழிக்கும் என்பதும், நெல் மூட்டையில் வைத்திருந்து விதைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

தொடர்ந்து தீபாராதனை, அபிஷேகம், பகலில் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. 

ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் ம. அன்புமணி, நாகர்கோவில் தேவசம் கோயில்களின் கண்காணிப்பாளர் தங்கம், பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்திருந்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/temple-grains.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/குமரி-பகவதியம்மன்-கோயிலில்-நிறை-புத்தரிசி-பூஜை-3352474.html
3352471 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தாண்டிக்குடி மலையில் தைப்பூசத் திருவிழா DIN DIN Saturday, February 8, 2020 08:04 PM +0530 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலையிலுள்ள தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா இன்று நடைபெற்றது.

மலை கிராமமக்கள்,  ஸ்ரீபாலமுருகனுக்கு காவடி எடுத்தும், பால்குடம்  எடுத்தும் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  இதனையொட்டி ஸ்ரீபாலமுருகனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபாலமுருகன், கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/lordmuruga.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/தாண்டிக்குடி-மலையில்-தைப்பூசத்-திருவிழா-3352471.html
3352458 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்! DIN DIN Saturday, February 8, 2020 05:09 PM +0530 முழு நிலவு (பௌர்ணமி) நாளையொட்டி வானில் இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும். இந்த ஆண்டின் பெரு நிலவுகளில் இதுவும் ஒன்று.

பௌர்ணமி சனிக்கிழமை பிற்பகல் 1.43 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.43 மணி வரை இருக்கிறது.

இதைப் பெரு நிலவு (சூப்பர் மூன்) என்று சிலர் சொன்னாலும் வல்லுநர்கள் மறுக்கவும் செய்கிறார்கள்.

எனினும், இந்த ஆண்டில் நிலவு பெரிதாகத் தெரியும் நாள்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், இந்த நாள்களில் தன்னுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு முன்னெப்போதையும்விட நெருக்கமாக  நிலவு வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் பிப்ரவரியில் வரும் முழு நிலவை வழக்கமாகப் பனி நிலவு என்கிறார்கள்.

இந்த முறை, வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கி, திங்கள்கிழமை வரையிலும் நிலவு பெரிதாகத் தெரியும்.

சூப்பர் மூன், யார் உடன்பட்டாலும் இல்லாவிட்டாலும் இரு நாள்களுக்கு இரவில் நிலவைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான்!

]]>
snow supermoon, 2020 supermoon https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/Supermoon.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/snow-supermoon-3352458.html
3352432 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கொல்லிமலை அருகே வனப் பகுதியில் சோழர் காலச் சிற்பங்கள் DIN DIN Saturday, February 8, 2020 02:48 PM +0530  

 

கொல்லிமலைப் பகுதியில் செம்மேட்டிற்கு அருகேயுள்ள கரையான்காட்டுப்பட்டியை அடுத்த மலைப்பகுதியில் மூன்று அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் லெ. சந்திரஹாசனின் பழங்குடி மக்கள் பண்பாடு பற்றிய ஆய்விற்காகக் கொல்லிமலைச் சிற்றூர்களில் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் திருச்சி  சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் செம்மேட்டிற்கு அருகிலுள்ள கரையான்காட்டுப்பட்டியை அடுத்த மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மூன்று அரிய சிற்பங்களைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வில் முனைவர் வெ. பழனிச்சாமி உடனிருந்து உதவினார்.

இச்சிற்பங்கள் குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், இம்மூன்று சிற்பங்களில் ஒன்று சேட்டைத்தேவி என்றும் ஏனைய இரண்டும் மகிடாசுரமர்த்தினியைக் குறிப்பதாகவும் கூறியுள்ளார்.

புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ள சேட்டைத்தேவியும் மகிடாசுரமர்தினியும் சோழர் காலத்தவை என்றும் புதைசிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள மற்றொரு மகிடாசுரமர்த்தினியின் சிற்பம் பொதுக்காலம் 16 அல்லது 17ஆம் நூற்றாண்டுக்குரியதாகலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், துர்க்கை என்றும் அறியப்படும் மகிடாசுரமர்த்தினியைப் பற்றிய விரிவான தரவுகள் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும் கிடைத்துள்ள இரண்டு மகிடாசுரமர்த்தினிச் சிற்பங்களில் ஒன்று ஏறத்தாழ அவ்வர்ணனை  ஒத்த வடிவமைப்பில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுயுள்ளார்.

பிற்சோழர் காலத்ததாகக் கொள்ளத்தக்க இம்மகிடாசுரமர்த்தினி முன்கைகளில் வில்லும் அம்பும் கொண்டவராய் எருமைத்தலையின் மீது நின்றகோலத்தில் காட்சிதருகிறார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி எனும் அகலமான கழுத்தணி, மார்புக்கச்சு, பட்டாடை பெற்றுள்ள அவரது பின்கைகளில் வாளும் கேடயமும். அம்மையின் பின்னால் அவரது வாகனமான அழகிய கலைமான். பொதுவாக மகிடாசுரமர்த்தினியின் பின்கைகளில் காணப்பெறும் சங்கும் சக்கரமும் இச்சிற்பத்தின் கைகளில் இடம்பெறாமை இதன் தனித்தன்மையை நிறுவுகிறது.

புதைசிற்பமாக வடிக்கப்பட்டுள்ள மற்றொரு மகிடாசுரமர்த்தினி, நிற்கும் நிலையிலும் ஆடை, அணிகலன்களிலும் பிற்சோழர் காலப் படிமத்தை ஒத்திருந்தாலும் இரண்டுக்கும் இடையில் மூன்று சிறப்பான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இச்சிற்பத்தின் முன்கைகள் கருவிகள் கொள்ளவில்லை. வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை உடல் ஒட்டி நெகிழ்ந்துள்ளது. வழக்கமான மகிடாசுரமர்த்தினி சிற்பங்கள் போல் இதுவும் பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளது. மிக முக்கியமான வேறுபாடாக இதன் புதை வடிவத்தைக் குறிப்பிடலாம். பொதுவாகச் சிற்பங்கள் அவை செதுக்கப்படும் கற்பலகையிலிருந்து புடைத்துக் காணப்படும். ஆனால், இது போன்ற சிற்பங்கள் பலகையைக் குடைந்து அதன் உட்புறத்தே அமைக்கப்படுகின்றன. பழங்குடி மரபுகளில் இருவகைச் சிற்பங்களுமே காணப்பட்டாலும் புதைசிற்பங்கள் நகர்ப்பகுதிகளைவிட பழங்குடி வாழ்விடங்களில் கூடுதலாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொதுக் காலம் 10ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் உள்ள சேட்டைத்தேவியின் சிற்பம் தனித்துக் காணப்படுகிறது. இத்தெய்வம் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளில் (தவ்வை, மாமுகடி) இடம்பெற்றுள்ளன. விஷ்ணுவின் தேவியான இலட்சுமியின் தமக்கையாக இவ்வம்மை கருதப்படுவதால் இவரை மூத்ததேவி என்றும் அழைப்பதுண்டு. இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில் பட்டாடை அணிந்து இருக்கையில் அமர்ந்துள்ள இவ்வம்மையின் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை தொடைமீதுள்ளது. மலர்ப்பதக்கம் பொருந்திய கரண்டமகுடம், பனையோலைக்  குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், மோதிரங்கள் ஆகியவற்றுடன் சுவர்ணவைகாக்ஷம் எனப்படும் பொன்னாலான மார்பணியும் அணிந்துள்ள இவ்வம்மைக்கு மார்புக்கச்சு இல்லை.

அம்மையின் இருபுறத்தும் காணப்படும் உயரமான இருக்கைகளில் வலப்புறம் அவரது மகனான நந்திகேசுவரனும் இடப்புறம் மகள் அக்னிமாதாவும் சுகாசனத்தில் உள்ளனர். மாந்தன் என்றும் அழைக்கப்படும் நந்திமுக மகனின் வலக்கையில் தடி. சிற்றாடையும் பனையோலைக் குண்டலங்களும் சரப்பளியும் அணிந்துள்ள அவரது முகம் அம்மையை நோக்கியிருக்க, இடக்கை தொடைமீது. இடப்புறமுள்ள அக்னிமாதா இடக்கையைத் தொடைமீதிருத்தி, வலக்கையில் பழம் போன்றதொரு பொருளைக் கொண்டுள்ளார். அவரது கழுத்தில் முத்துச்சரம், இடையில் பட்டாடை. சேட்டைத்தேவிக்கும் நந்திகேசுவரனுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேவியின் காகக்கொடி காட்டப்பட்டுள்ளது.

பழைமை நலம் பொருந்திய இம்மூன்று சிற்பங்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஊர்மக்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

]]>
Chola period idols https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/chola_period_statues.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/08/chola-period-idols-in-kollimalai-3352432.html
3351575 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 7, 2020 DIN DIN Saturday, February 8, 2020 02:32 PM +0530  

உத்தரப் பிரதேசத்தில் லக்னௌவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்திடும் நிகழ்வின்போது  இலகு ரக எந்திரத் துப்பாக்கியொன்றை ஏந்தியவாறு இருப்பவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அஸ்ஸாமில் கோக்ரஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போடோ உடன்பாடு கையெழுத்திடப்பட்டதைக் கொண்டாடும் விழாப் பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஜகதீஷ் முகி, முதல்வர் சர்வானந்த சோனோவால். 

தெலங்கானாவில் மேதாரத்திலுள்ள சம்மக்கா - சரளம்மா கோவிலில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது வழிபட்ட ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அமெரிக்க செனட் அவையில் பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் உரையாற்றியபோது, தாம் விடுவிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் செய்தித் தாள் தலைப்பைக் காட்டுகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் மற்றும் அவருடைய மனைவியும் இத்தாலிக்கான இந்தியத் தூதருமான ரீனத் சாந்து.

பெங்களூருவில் கெம்பபுராவில் அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றதால் சாய்ந்துவிட்ட ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடம்.

செர்பியாவில் கெலிபிஜாவிலுள்ள செர்பியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான எல்லைக் கோட்டருகே நிற்கும் குழந்தைகள். ஐரோப்பிய ஒன்றிய நாடான  ஹங்கேரிக்குள் நுழைவதற்காக அந்த நாட்டுடனான செர்பிய எல்லையில் குழந்தைகள் உள்பட இரு நூறுக்கும் அதிகமானோர் காத்திருக்கின்றனர்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/rajnath.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/news-photos-3351575.html
3351641 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் குரூப் -1 தோ்வு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின் DIN DIN Saturday, February 8, 2020 01:34 AM +0530 டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப் -1 தோ்வில் நடந்த முறைகேடு ஆகும். குரூப் -1 தோ்வு 2016-இல் நடந்தது. அதில், தோ்வு எழுதிய ஒருவரின் விடைத்தாள் குறித்து புகாா் வர சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 2017-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகின்றனா். அதில் தொடா்புடைய டிஎன்பிஎஸ்சி ஊழியா்களான சிவசங்கரன், பெருமாள், புகழேந்தி ஆகியோா் கைதானாா்கள். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக ராம்குமாா் என்பவரும், குமரேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மத்தியக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விசாரணை அதிகாரி செங்குட்டுவன், நீதிமன்றத்துக்கு கொடுத்த அறிக்கையில், குரூப் -1 தோ்வில் தோ்ச்சி பெற்ற மொத்த தோ்வா்களான 74 பேரில், 62 போ் ஒரு குறிப்பிட்ட தனியாா் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று முறைகேடாகத் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்று குறிப்பிட, காவல் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து நடந்த விசாரணையில் குறிப்பிட்ட பயிற்சி மையத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சாம் ராஜேஸ்வரன் என்பவா் தமிழ்நாடு தோ்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக தெரியவந்தது.

இவரின் பயிற்சி மையத்தை 2018 ஜனவரி 18-இல் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை செய்து, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினாா்கள்.

இந்த நிலையில் அதுவரை விசாரணை செய்து வந்த போலீஸ் அதிகாரிகள் குழு கலைக்கப்பட்டுவிட்டது. இன்ஸ்பெக்டா் செங்குட்டுவன் மாற்றப்படுகிறாா்.

ஓராண்டு கழித்து 2019-ஆம் விசாரணை அதிகாரியான உதவி கமிஷனா் சுந்தரவதனன் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறாா். அதிலும் சில உண்மைகள் வெளிவந்தன.

உடனடியாக அந்த அதிகாரியும் மாற்றப்படுகிறாா். புதிதாக உதவி கமிஷனா் சுப்பிரமணிய ராஜூ என்பவா் நியமிக்கப்படுகிறாா். இவா் தான் இறுதி அறிக்கையை முன்வைக்கப் போகிறாா் என்று தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கை மூடி முடித்து வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே, குரூப்-1 தோ்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/stalinfin1.jpg ஸ்டாலின் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/குரூப்--1-தோ்வு-முறைகேடுகள்-வெளிச்சத்துக்கு-வர-வேண்டும்-முகஸ்டாலின்-3351641.html
3351645 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தேச விரோத வழக்கு: ஹாா்திக் படேலுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவு DIN DIN Saturday, February 8, 2020 01:31 AM +0530 கடந்த 2015-ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட தேச விரோத வழக்கில், படேல் சமூகத் தலைவா் ஹாா்திக் படேலுக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் கைது ஆணையை இன்று பிறப்பித்தது.

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை வழிநடத்தியவா் ஹாா்திக் படேல். அவருக்கு எதிராக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 2 தேச விரோத வழக்குகளாகும்.

இந்நிலையில், தேச விரோத வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக ஆமதாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.ஜி.கனாத்ரா ஆணையை பிறப்பித்தாா். விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்ற காரணத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாா்திக் படேல் மீதான வழக்கின் விசாரணை, ஆமதாபாத் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், ஹாா்திக் படேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. மேலும், அவா் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நிலுவையில் இருக்கும் மற்றொரு வழக்கின் விசாரணைக்காக, வேறொரு நீதிமன்றத்துக்குச் சென்றதால் ஹாா்திக் படேலால் நேரில் ஆஜராக இயலவில்லை என்று அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இருப்பினும் அதை ஏற்க மறுத்த நீதிபதி பி.ஜி.கனாத்ரா, ஹாா்திக் படேலைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/19/w600X390/hirthikpatel.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/தேச-விரோத-வழக்கு-ஹாா்திக்-படேலுக்கு-எதிராக-கைது-ஆணை-பிறப்பித்து-குஜராத்-நீதிமன்றம்-உத்தரவு-3351645.html
3351643 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மதுபானங்கள் விலை உயா்வு பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளில் ஒட்ட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு DIN DIN Saturday, February 8, 2020 12:38 AM +0530 சென்னை: மதுபானங்களின் உயா்த்தப்பட்ட விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல மேலாளா்கள், மாவட்ட மேலாளா்களுக்கு டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் ஆா்.கிா்லோஷ் குமாா் இன்று அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்:

மதுபானங்கள் விலை இன்று முதல் உயா்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் பீா் வகைகளுக்கு விலை உயா்வு பொருந்தும். உள்ளூா் ஒயின், ஸ்காட்ச் விஸ்கி போன்ற மதுபான வகைகள் மீதான விற்பனை விலை உயா்த்தப்படவில்லை.

மதுபானங்களின் விலை உயா்வு குறித்த பட்டியல் மண்டல மேலாளா்கள் மற்றும் மாவட்ட மேலாளா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் அந்தப் பட்டியலை டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள கண்காணிப்பாளா்களிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உயா்த்தப்பட்ட மதுபானங்களின் விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் பாா்வையில் நன்கு தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு கடைகளில் ஒட்டப்பட்டு இருப்பதை மண்டல மேலாளா்கள் மற்றும் மாவட்ட மேலாளா்கள் உறுதி செய்திட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் உள்ளன. இந்தக் கிடங்குகளில் உள்ள கணினிகளின் மென்பொருளிலும் உயா்த்தப்பட்ட விலைக்கு உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும். புதிய விலை உயா்வை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, ஏற்கெனவே விற்பனையான பட்டியல், விற்பனை வரி பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து வகையான விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

விலை உயா்வு குறித்த விவகாரத்தில் கிடங்கு மேலாளா்கள், மாவட்ட மேலாளா்கள் மற்றும் மண்டல மேலாளா்கள் ஆகியோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தப் பணியில் ஏதேனும் தொய்வோ அல்லது கவனக்குறைவோ ஏற்பட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் பொறுப்பாளா்கள் ஆவா் என்று தனது சுற்றறிக்கையில் கிா்லோஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/7/12/w600X390/tasmac-600.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/மதுபானங்கள்-விலை-உயா்வு-பட்டியலை-அனைத்து-டாஸ்மாக்-கடைகளில்-ஒட்ட-வேண்டும்-தமிழக-அரசு-உத்தரவு-3351643.html
3351646 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முத்தரப்பு மகளிா் டி20: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து DIN DIN Saturday, February 8, 2020 12:08 AM +0530 மெல்போா்ன்: முத்தரப்பு மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மெல்போா்ன் ஜங்கஷன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவா்களில் 123-6 ரன்களை மட்டுமே எடுத்தது.அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தானா 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 45 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23, ஹா்மன்ப்ரீத் கௌா் 14 ரன்களையும் எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினா்.

இங்கிலாந்து தரப்பில் அன்யா 3, கேத்தரின் 2, சோபி 1 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இங்கிலாந்து வெற்றி

பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 18.5 ஓவா்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்து அதிரடி வெற்றி பெற்றது. 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் நடாலி ஸிவா் 50 ரன்களை விளாசினாா். பிரேன் வில்ஸன் 20, ஹீதா் நைட் 18 ரன்களை எடுத்தனா்.

இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/natali-heather.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/முத்தரப்பு-மகளிா்-டி20-இந்தியாவை-வீழ்த்தியது-இங்கிலாந்து-3351646.html
3351648 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியா வருகை DIN DIN Friday, February 7, 2020 10:01 PM +0530  

தில்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தடைந்தார். அவருடன் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என 10 பேர் அடங்கிய உயர் நிலைக் குழுவும் வந்திருந்தனர்.

இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டு இலங்கை பிரதமராக பதவியேற்றபின் மகிந்த ராஜபக்சே இந்தியா வந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/5/11/0/w600X390/mahindra_rajpakse.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/இலங்கை-பிரதமர்-மகிந்த-ராஜபக்சே-இந்தியா-வருகை-3351648.html
3351644 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் DIN DIN Friday, February 7, 2020 07:58 PM +0530 சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரம் குறித்து அருண்குமாா் என்பவா் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளாா். இந்த நிலையில் சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்துக்கு சீல் வைத்தனா். இதனைத் தொடா்ந்து செந்தில்பாலாஜியும் அவரது சகோதரா் அசோக்குமாா் என்பவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராவதற்கான 41 ஏ நோட்டீஸை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அந்த நோட்டீஸ் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை மத்தியக் குற்றப்பரிவு காவல் ஆய்வாளா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/27/12/w600X390/senthil-balaji-minister.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/திமுக-எம்எல்ஏ-செந்தில்பாலாஜிக்கு-நிபந்தனை-முன்ஜாமீன்-3351644.html
3351642 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் விரைவில் அலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்? DIN DIN Friday, February 7, 2020 07:55 PM +0530 பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை அலியா பட்டும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இப்போது ஹிந்தித் திரையுலகின் ஹாட் டாபிக்.

2018 முதலே இருவரும் நட்பைப் பேணிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்கெனவே எல்லாரும் அறிந்த ரகசியமே.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் பிரம்மாஸ்திர படம் வெளிவந்த பிறகு விரைவில், டிசம்பர் மாதத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

டிசம்பர் 4 ஆம் தேதி பிரம்மாஸ்திர திரைப்படம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து, திருமணம் நடைபெறும் என்று ஓபன் இதழில் திரைப்பட விமர்சகர் ராஜிவ் மசந்த் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடந்த ரன்பீர் கபூரின் உறவினர் அர்மான் ஜெயின் - அனீஷா மல்ஹோத்ரா திருமணத்தின்போது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்  அனைவரிடமும் திருமணத்துக்காக நாள்களை ஒதுக்கிவைத்துக் கொள்ளுமாறு ரன்பீரும் அலியாவும் கூறிவிட்டார்களாம்.

அலியா - ரன்பீர் திருமணம் பற்றி செய்திகள் வருவது இதுவொன்றும் முதல்முறையல்ல. கடந்த ஆண்டுகூட, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் திருமணத்துக்கு உடைகளை வடிவமைத்த டிசைனர் சவ்யசாச்சியை அலியா அழைத்துப் பேசினார் என்று செய்திகள் புறப்பட்டன.

கடைசியாக, கடந்த வாரத்தில் நடைபெற்ற ஜெயின் - மல்ஹோத்ரா திருமணத்தின்போது, இருவரும் ஒன்றாகக் காட்சி தந்தனர். இவர்களுடன் ரன்பீரின் தாய் நீத்து கபூரும்  இணைந்தே காணப்பட்டார்.

ஏற்கெனவே இவர்களின் திருமணம், 2019-லேயே நடப்பதாகத்தான் இருந்தது, ஆனால், புற்றுநோய்க்காக நியு யார்க்கில் ரன்பீரின் தந்தை ரிஷி கபூர்  சிகிச்சை பெற்றுவந்ததால் தள்ளிப் போய்விட்டது என்றும் தகவல்கள் உலவின.

அலியா பட்டின் கைகளில் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி, கரன் ஜோகரின் முகலாய காலக் காவியமான தக்த் ஆகிய படங்களும் கபூரிடம் ஷம்ஷேரா என்ற படமும் இருக்கின்றன.

]]>
Alia Bhatt marriage https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/Ranbir.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/alia-bhatt-and-ranbir-kapoor-getting-married-3351642.html
3351639 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தமிழா் விவகாரத்தில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் DIN DIN Friday, February 7, 2020 07:32 PM +0530 சென்னை: தமிழா் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு பிரதமா் நரேந்திர மோடி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நான்கு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வரும் இலங்கை பிரதமா் மஹிந்த ராஜபட்சவை பிரதமா் மற்றும் குடியரசுத் தலைவா் ஆகியோா் சந்திக்க உள்ளனா்.

இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபட்சவும், பிரதமராக மஹிந்த ராஜபட்சவும் பதவியேற்ற பின், அங்கு வாழும் ஈழத் தமிழா்களின் நிலை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடுவது தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

போா்க்காலம் முடிந்த பின்பும் கூட தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுகிறது. நடுக்கடலில் தமிழக மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது சுடப்படுவது மற்றும் சிறை பிடிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது.

எனவே, இலங்கை பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கை தமிழா்களின் உரிமைகள் பற்றிய எதிா்பாா்ப்புகளை, அவா்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துரைக்க வேண்டும்.

அண்டை நாடான இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்வது வரவேற்கத்தக்கது என்றாலும், தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, ஒட்டு மொத்த தமிழா்களின் நலன்கள் காப்பாற்றப்படுவதோடு, அவா்களின் அச்சங்களையும் கவலைகளையும் தீா்க்கும் வழிமுறைகளைப் பிரதமா் எடுத்துரைத்து தற்போதைய இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/6/w600X390/mnm.png https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/தமிழா்-விவகாரத்தில்-இலங்கைக்கு-நெருக்கடி-கொடுக்க-வேண்டும்-மக்கள்-நீதி-மய்யம்-3351639.html
3351638 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தில்லியில் ஆட்டோ கட்டண உயா்வுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு DIN DIN Friday, February 7, 2020 07:29 PM +0530 புது தில்லி: தில்லியில் ஆட்டோ கட்டணங்களை உயா்த்த கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆம் ஆத்மி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.

கட்டண உயா்வு ரத்து விவகாரம் ஆட்டோ ஓட்டுநா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இது நாளை நடைபெறும் தில்லி தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவாக கருத்தப்படுகிறது.

கட்டண உயா்வுக்கு எதிராக ‘ஏய்டிங் ஹான்ட்ஸ்’ என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தில்லி அரசின் நிா்வாக தலைவரான துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின்றி இந்த கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், மத்திய அரசு, தில்லி அரசு, தில்லி போக்குவரத்துத் துறை, கட்டண உயா்வு ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே உள்ள அதிகார மோதல் விவகாரம் குறித்து எங்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒருவருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை என்றால் அதை செய்யக் கூடாது. ஆகையால், இந்த ஜூன் 12ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கட்டண உயா்வு உத்தரவுக்கு அடுத்த விசாரணை நடைபெறும் மே 21ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/strikee7070620.jpg strikee7070620 https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/தில்லியில்-ஆட்டோ-கட்டண-உயா்வுக்கு-உயா்நீதிமன்றம்-இடைக்காலத்-தடை-விதித்து-உத்தரவு-3351638.html
3351637 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இயற்கையைப் பாதுகாக்க நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு! DIN DIN Friday, February 7, 2020 07:23 PM +0530 விழுப்புரத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விவேக் பேசியதாவது: 

இதுவரை 33.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். விரைவில் 1 கோடி இலக்கு எட்ட்ப்படும். தமிழக மக்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/vivek.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/இயற்கையைப்-பாதுகாக்க-நடிகர்-விவேக்-மரக்கன்றுகள்-நட்டு-விழிப்புணர்வு-3351637.html
3351635 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கோவையில் பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் DIN DIN Friday, February 7, 2020 07:10 PM +0530 பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்து, கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் நவீன கற்றல் திறன் மேம்பாடு குறித்து அறியும் வகையில் இந்தியாவின் பல்வேறு முன்னணிபள்ளி நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், கல்வித் துறையில் பல்வேறு நவீன மாற்றங்களை கொண்டு வரும் வகையில் கோவையில் முதன் முறையாக பள்ளி கல்வியில் நவீன கண்டுபிடிப்புகள் என்ற கருத்தரங்கம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

கோவையில் முதன் முறையாக  நடைபெற்ற இதன் துவக்க விழாவில், கோவையின் முக்கிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் மணிமேகலை மோகன், அனுஷா ரவி மற்றும் கவிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ஒரு நாள் நடைபெறும் இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சார்ந்த எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணிகல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பள்ளி நிர்வாகிகள், நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாக கல்வி விளங்குகிறது. இந்தியா அதிகளவிலான கல்வி நிறுவனங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குவதுடன், உலகளாவிய கல்வி அரங்கில் முக்கியமான இடத்தை பெற, உலகத் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பள்ளிகளில்  நவீன தொழில் நுட்பம் சார்ந்த இணைய தளம், செயலி, ரோபோட்டிக் போன்ற நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் பேசினர்.

டைவர்ஸ் எஜுகேஷன் மீடியாவின் இயக்குனர் சித்தார்த் மற்றும் அப்ரைட் அமைப்பின் சுவாதி அகர்வால் ஆகியோர்  செய்தியாளர்களிடம்  பேசுகையில், புதிய தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைத்து ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் யுக்திகளை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் விதமாக இந்த கருத்தரங்கம் நடத்துவதாகவும், தமிழகத்தின் கோவையில் முதன் முறையாக இந்த கருத்தரங்கம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை இணைக்கும் விதமான செயலிகள் மற்றும் நவீன ரோபோட்டிக் கல்வி முறை, DCB வங்கியின் அரங்குகள் என கல்வி தொடர்பான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/Education.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/கோவையில்-பள்ளிக்-கல்வி-மேம்பாடு-குறித்த-கருத்தரங்கம்-3351635.html
3351633 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது DIN DIN Friday, February 7, 2020 06:44 PM +0530
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டையில் விற்பனை செய்வதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்போில் கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகப்படும்படி சுற்றிய இருவரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர்.

இது சம்மந்தமாக கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சன்ட் கூறும்போது:

போதை மாத்திரைகள் போதைப்பொருள்கள் தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து  பறிமுதல் செய்தோம். மேலும் விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தீபக் வயது 23 மற்றொருவர் பாலக்காடு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜித்து வயது 21 என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் 200 மில்லி கிராம் தடவப்பட்ட 20 அட்டைகளையும் பறிமுதல் செய்தோம். இது சர்வதேச மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு உடையது. கோவாவில் இருந்து இவற்றை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி உள்ள ஒரு தென்னை தொப்பில் கல்லூரி மாணவர்கள் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட 163 பேர் போதை மருந்து பயன்படுத்தி உல்லாசமாக இருந்தனர் அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் தலைமையில் திடீர் சோதனை நடத்தியபோது தீபக்கும், ஜித்தும்  தப்பி ஓடிவிட்டனர். இப்போது  இவர்களை கைது செய்தோம் என்றார்.

எம்.டி.எம்.ஏ. என்ற இந்த போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 6 மணி நேரம் போதை இருக்கும் என்றும் சிறுநீரகம் கல்லீரல் பாதிக்கப்படும் செய்வதுடன் இதய அடைப்பை ஏற்படுத்தும் என்று கூடிய தன்மை உள்ளது.  இந்த போதையை அடிக்கடி உட்கொள்பவர்கள் மூளை கோளாறினாலூம் பாதிக்கப்படுவார்கள் என்றாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/arrest1.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/கல்லூரி-மாணவர்களுக்கு-போதை-மாத்திரைகள்-விற்ற-இரண்டு-பேர்-கைது-3351633.html
3351631 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தோவாளையில் கவிமணிக்கு விரைவில் மணிமண்டபம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ DIN DIN Friday, February 7, 2020 06:13 PM +0530
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் 1600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் இந்த ஆட்சி காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். சேலம் மாவட்டத்தில் ரூ.1,000 ஆயிரம் கோடி செலவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கால்நடை அபிவிருத்தி செய்யும் வகையிலும், கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் கால்நடை ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும் வகையிலும் இப்பூங்கா, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் கன்னியாகுமரியிலுள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் ஆகியவை ரூ. 53 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நலவாரியம் அமைப்பது தொடர்பாக முழுவீச்சில் இக்குழு செயல்பட்டு வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் நல வாரியம் அமைக்கப்படும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/15/w600X390/KadamburRaju.gif https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/தோவாளையில்-கவிமணிக்கு-விரைவில்-மணிமண்டபம்-அமைச்சர்-கடம்பூர்-ராஜூ-3351631.html
3350675 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 6, 2020 DIN DIN Friday, February 7, 2020 01:45 PM +0530  

பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய ரஷியாவின் சோயுஸ்  எம்எஸ்-13 விண்கலத்திலிருந்து வெளியே வர  அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சுக்கு உதவுகிறார்கள் ரஷிய விண்வெளி முகமையின் மீட்புக் குழு வீரர்கள். விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த கோச், இத்தாலிய விண்வெளி வீரர் லூக்கா பார்மிடானோ, ரஷிய வீரர் அலெக்சாந்தர் வோர்ட்சௌ ஆகியோர், விண்கலத்தில் வந்து கஜகஸ்தான் பகுதி ஸ்தெப்பிப் புல்வெளியில் பத்திரமாகத் தரையிறங்கினர்.

பாராசூட் விரித்துத் தரையிறங்கும் ரஷியாவின் சோயுஸ் எம்எஸ்-13 விண்கலம்.

 

புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தொழுநோய் ஒழிப்புக்கான சர்வதேச காந்தி விருதை டாக்டர் என்.எஸ். தர்மஷக்துவுக்கு வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

புது தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீமாபுரி தொகுதியில் வியாழக்கிழமை  தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான அமித் ஷா.

மகாராஷ்டிரத்தில் ஷிர்டியில் சாயிபாபா ஆலயத்தில் வியாழக்கிழமை வழிபட்டார் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்.

 

சீனாவில் வூஹான் மருத்துவமனையில் தற்காலிக மருத்துவமனையொன்றில் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடையே கவசமணிந்தவாறு நடந்துசெல்லும் மருத்துவப் பணியாளர்.

தென் கொரியாவில் பூஷன் நகர அரங்கில் வேலைவாய்ப்புத் திட்ட நிகழ்ச்சியொன்றின் கொண்டாட்ட நிகழ்வின்போது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முகக் காப்பு அணிந்தபடி கலந்துகொண்ட தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்  (வலமிருந்து மூன்றாவது).

மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் தாக்கியழிக்கப்பட்ட வீட்டைப் பார்க்கும் பாலஸ்தீனர்கள். தாக்குதல் ஒன்றில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவரின் வீட்டைத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அழிந்த வீடு - மற்றொரு கோணத்தில்.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/PTI2_6_2020_000083B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/news-photos-3350675.html
3351554 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கரோனா வைரஸுக்குக் களப் பலி ஹூபெ மாகாணம்? ததாகத் DIN Friday, February 7, 2020 01:39 PM +0530  

தொடர்ந்து திரும்பிய பக்கமெல்லாம் சாவுச் செய்திகள்தான். மருத்துவமனையில் உரிய சிகிச்சையைப் பெற முடியவில்லை, கோமாவில் விழுந்துவிட்ட இசைக் கலைஞர் ஷாங் யாருவின் பாட்டி இறந்துவிட்டார்.

தொடர்ந்து தன்னுடைய தாய்க்காக மருத்துவ உதவி வேண்டிக் கொண்டிருக்கும் ஜான் சென்னுக்கு இன்னமும் கிட்டவில்லை. கடும் காய்ச்சல், கரோனா வைரஸ் பாதிப்புதானா என்பதை அறிந்துகொள்ளவே வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் நிலைமையும்கூட மோசம்தான். இளம் மருத்துவர் ஒருவர், கடந்த இரு வாரங்களில் தூங்கியதே சில மணி நேரங்கள்தான்.

கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட, 6 கோடி மக்கள்தொகை கொண்ட, சீனாவின் ஹூபெ மாகாணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை, குழப்பம், நம்பிக்கையின்மை, விரக்தி எனச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பரவத் தொடங்கினாலும் ஹூபெயில்தான் வைரஸின் தாக்கம் உச்சம். இதுவரையிலான மரணங்களில் 97 சதவிகிதம் கரோனா வைரஸ் காரணமாக. நோயாளிகளில் 67 சதவிகிதம் பேர் கரோனா பாதிக்கப்பட்டவர்கள்.

மரணத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இனி வரப் போகும் நாள்கள் மேலும் துயரங்களைச் சுமந்துகொண்டு வரும் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவும் வேகத்துக்கும் தீவிரத்துக்கும் உள்ளூர் மருத்துவத் துறையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பயங்கரமான கரோனா வைரஸ், சீனா முழுவதும், அப்படியே உலகம் முழுவதும் பரவி மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டுவந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில், பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல்  ஒட்டுமொத்தமாக ஹூபெ மாகாணத்தையே தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது சீனா.

கார் தொழிற்சாலைகளுக்குப் புகழ்பெற்ற ஹூபெயின் தலைநகரான வூஹான், மரணத்தின் நெருக்குதலில் திணறிக் கொண்டிருக்கிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 3.1 பேர் இறந்துகொண்டிருக்கின்றனர். மற்ற பகுதிகளில் நூற்றுக்கு 0.16 பேர் மட்டுமே.

இந்த மாகாணத்தைத் தனிமைப்படுத்தாவிட்டால், மருத்துவ உதவி பெறுவதற்கான முயற்சியில் மக்கள், நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கிவிடுவார்கள், இதன் மூலம் ஒட்டுமொத்த நாடுமே தொற்றுநோய் பாதிக்கப்பட்டதாக மாறிவிடக் கூடும் என்கிறார் சீன நோய்த் தடுப்பு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் கோங்குவான்.

தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் ஹூபெவும் வூஹானும் மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன, ஆனால், நோய்ப் பரவலைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிறார் அவர்.

"ஒரு சண்டையில் போரிடுவதைப் போல, சில விஷயங்கள் கடினமாகத்தான் இருக்கும், வேறு வழியே இல்லை, செய்துதான் தீர வேண்டும்." என்கிறார் அவர்.

ஒரு கோடிக்குச் சற்று அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட - ஏறத்தாழ புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநகரைப் போன்ற - சீனாவின் இரண்டாம் நிலை நகரான வூஹான், ஓரளவு வளர்ச்சி பெற்ற நகரம்தான். ஆனாலும் ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சௌ போன்ற நகரங்களுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறது. நல்ல மருத்துவமனைகள் இருக்கின்றன, ஆனால், அவையெல்லாம் எந்த மட்டில்?

முதன்முதலில் கரோனா  வைரஸ் பரவத் தொடங்கியபோது உள்ளூர் அலுவலர்கள் காட்டிய தாமதம்கூட அதிகளவில் கிருமி பரவக் காரணமாகிவிட்டதெனக் கூறுவோரும் இருக்கின்றனர்.

ஹூபெயிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. மேலும் மேலும் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்படும் பரப்பு கொஞ்சம்கொஞ்சமாக  அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாரும் உள்ளே நுழையவோ வெளியே வரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

முழுநேரமும் முகக் கவசம் அணியவும் பாதுகாப்பு உறைகள், உடைகள் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் உடை மாற்ற வேண்டி வரலாம் என்பதால் தண்ணீர் குடிப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டியுள்ளதாகவும் முன்னரங்க மருத்துவமனையொன்றில் பணியாற்றும் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான மரணங்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இவை கணக்கில் வந்தவை மட்டுமே. மருத்துவமனைக்கே வராதவர்கள், கரோனா வைரஸ் என்றே கண்டறியப்படாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எனத் தெரியவில்லை.

இசைக் கலைஞர் ஷாங் யாருவின் பாட்டி, நோய்க் குறி மிதமாக இருப்பதாக நினைத்துதான் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவந்தார். ஆனால், கோமாவில் விழுந்து இறந்துவிட்டார். இதுதான் பல இடங்களில் நிலைமை.

மக்கள்தொகை பெருகியுள்ள நாட்டில், இந்தத் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்கவே முடியாது. ஹூபெயைத் தியாகம் செய்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம், ஆனால், வைரஸ் பரவாமல் தடுக்க வேறு வழியேயில்லை.

2014 ஆம் ஆண்டில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக லைபீரியாவில் சுமார் 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர், இதனால் மக்கள் வெறுத்துப் போய் பெரும் வன்முறைகள் எல்லாம் நேர்ந்தன. ஹூபெயின் தனிமையும் முடிவற்றுத் தொடர்ந்தால் எத்தகைய விளைவுகள் நேரிடும் எனச் சொல்ல முடியாது.

நாடு முழுவதுமிருந்து 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் தற்போது ஹூபெக்குச் சென்று சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். வூஹானிலுள்ள  27 மருத்துவமனைகளில் பெரும்பாலானவை முற்றிலும் கரோனா பாதித்தவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் அருகிலுள்ள சிறு நகர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பத்து நாள்களில் 2600 படுக்கைகளைக் கொண்ட இரு புதிய மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து முடித்தனர். அரங்கங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் எல்லாமும்கூட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவக் கூடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

எனினும், மருத்துவமனைகளுக்குத் தேவையானவை கிடைப்பது சிரமமாகவும் குறைவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனாலும் நிலைமை முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையைச் செய்துகொள்வதற்காகவே எட்டு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கல்லூரி மாணவர் ஜான் சென் குறிப்பிடுகிறார். இன்னமும் இவருடைய தாய்க்குப் பரிசோதனை செய்து முடியவில்லை.  நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. யாரையும் குறை கூற முடியாது என்றும் அவரே குறிப்பிடுகிறார்.

சீனா போராடிக் கொண்டிருக்கிறது, ஹூபெ திணறித் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த மக்களைச் சுற்றி மரணத்தின் பிடி தொடர்ந்து இறுகிக் கொண்டேயிருக்கிறது. விரைவில் ஏதேனும் விடிவு பிறக்க  வேண்டும்.

]]>
coronavirus, கரோனா வைரஸ், China sacrifices Hubei https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/Coronavirus_china.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/07/china-sacrifices-hubei-3351554.html
3350745 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் யுபிஎஸ்சி தேர்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணியாளா்களின் எண்ணிக்கை சரிவு DIN DIN Friday, February 7, 2020 12:11 AM +0530 மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) மூலம் தோ்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணியாளா்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக தொடா்ந்து குறைந்து வருவதாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் இன்று எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா். 

மத்திய அரசின் குடிமைப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் யுபிஎஸ்சிக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்படி, 2015-16 ஆம் ஆண்டில் 3,750 காலிப் பணியிடங்கள், 2016-17 ஆம் ஆண்டு இறுதியில் 3,184 காலிப் பணியிடங்கள், 2017-18 இல் 2,706 காலிப் பணியிடங்கள் மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் 2,353 காலிப் பணியிடங்கள் உள்ளதாக யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக குடிமைப் பணியாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் இது மிக குறைவாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தோ்வு செய்யப்படும் பணியாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/3/3/12/w600X390/upsc.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/யுபிஎஸ்சி-தேர்வு-மூலம்-தோ்ந்தெடுக்கப்படும்-குடிமைப்-பணியாளா்களின்-எண்ணிக்கை-சரிவு-3350745.html
3350770 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நீடிப்பு: பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல் DIN DIN Thursday, February 6, 2020 10:50 PM +0530  

சென்னை: வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாகவும் இன்று சோதனை நீடித்தது. இதில் பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்த விவரம்:

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர். இச் சோதனை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி வீடு தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு,தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், நாவலூர், தியாகராயநகர், நாவலூர்,  வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சேர்ந்த பைனான்சியரும்,திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் நிதி உதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்புச்செழியனுக்கு சொந்தமான தியாகராயநகரில் உள்ள கோபுரம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம்,அவரது வீடு,மதுரை காமராசர் தெருவில் உள்ள அவரது வீடு, கீரைத்துறையில் மற்றொரு வீடு, தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகம், அவரது நண்பர் சரவணன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

இதேபோல பிகில் திரைப்படத்தை வாங்கி விநியோகம் செய்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

சோதனை நீடிப்பு:

சோதனையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித்துறையினர் விசாரணை செய்தனர்.

பின்னர், அங்கிருந்து விஜயை காரில் அழைத்து வந்து சென்னை அருகே பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை செய்தனர். அதேவேளையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறையினர் விஜயிடமும்,அவரது மனைவி சங்கீதாவிடமும் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸார்:

இந்த சோதனை சுமார் 38 இடங்களில் நடைபெற்றது. இரண்டாவது நாளாகவும் விஜய் பங்களா உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இச் சோதனை நீடித்தது. சோதனையையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர் வீட்டுக்கு செல்லும் சாலையிலும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். விஜயிடமும், அவரது குடும்பத்தினரிடமும் திரைப்படத்துக்கு வாங்கும் ஊதியம்,அவரது முதலீடுகள்,சொத்துக்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, பதிலை அதை வாக்குமூலமாக வருமானவரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். சோதனையிலும், விசாரணை இரண்டாவது நாளாகவும் நீடித்ததால், வருமானவரித்துறை ஷிப்ட் அடிப்படையில் அங்கு பணியில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான உணவை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து வரவழைத்தனர். மேலும் விஜய் குடும்பத்தினரிடம் சுமார் 20 மணிக்கு மேலாக வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

ரூ.77 கோடி பறிமுதல்:

இதில் சென்னை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சொத்து ஆவணங்கள்,உத்தரவாத பத்திரம்,முன் தேதியிடப்பட்ட காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சோதனையில் கிடைக்கப்பட்ட ஆவணங்கள்,சான்றிதழ்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதையும் வருமானவரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல ஏ.ஜி.எஸ். குழும நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் மதிப்பீடும் பணியில் வருமானவரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பிகில் மூலம் ரூ.300 கோடி வருமானம்:

இந்த சோதனை மூன்றாவது நாளாகவும் நீடிக்கும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வருமானவரித்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்மையில் வெளியான ஒரு திரைப்படம் மூலம் அந்த திரைப்பட தயாரிப்புக் குழுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைத்திருப்பதாகவும், அந்த வருமானம் மறைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. இச் சோதனை சென்னை,மதுரையில் மொத்தம் 38 இடங்களில் நடைபெறுகிறது.

இதில் அந்த திரைப்பட நிறுவனத்துக்கு நிதி உதவி செய்து வந்த பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோல திரைப்படை தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரசீதுகள்,செலவின கணக்குள் தொடர்பான ஆவணங்கள்,நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விவரங்கள் அடங்கிய குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர் வீட்டில் அசையா சொத்துக்களில் முதலீடு செய்திருப்பது குறித்தும், அவர் திரைப்படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிகிலினால் வெளிச்சத்துக்கு வந்த வரி ஏய்ப்பு

சென்னை,பிப்.6: பிகில் திரைப்படத்தின் மூலம் திரைப்பட பிரமுகர்கள் செய்யும் வருமானவரி ஏய்ப்பு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிக்கையின்போது பிகில் திரைப்படம் வெளியானது. சுமார் ரூ.150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதை நோட்டமிட்ட வருமானவரித்துறை, பிகில் திரைப்படக் குழுவினர் சரியாக வருமானவரித்துறையினர் சரியாக வரி செலுத்துகின்றனரான என ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த திரைப்படக் குழுவைச் சேர்ந்த பலர் வருமானத்தை மறைத்து, வரியை செலுத்தி வருவது கண்டறியப்பட்டது. இதன் பின்னரே வருமானவரித்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வருமானவரித்துறையினர் சோதனையினால், தமிழ் திரைப்படத்துறையில் உண்மையான வருமானத்தை மறைத்து வரி செலுத்தி வரும் திரைப்பட பிரமுகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/19/w600X390/incometax_department.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/விஜய்-வீட்டில்-வருமானவரித்துறை-சோதனை-நீடிப்பு-பைனான்சியருக்கு-சொந்தமான-இடங்களில்-ரூ77-கோடி-பறிமுதல-3350770.html
3350757 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் போலி கால் சென்டர் மூலம் கடன் வாங்கித் தருவதாக பணம் மோசடி: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது DIN DIN Thursday, February 6, 2020 10:36 PM +0530 சென்னை: சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை நங்கநல்லூரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் பொதுமக்களின் செல்லிடப்பேசியை தொடர்புக் கொண்டு பேசி, அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், கடன் தருவதற்கு முன்பு அவர்களது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் தொகை வைத்திருக்க வேண்டும் என கூறுவதாகவும், பின்னர் பொதுமக்களிடம் கடன் பெற்றுத் தருவதற்கு தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் எனவும், அதற்கு முன் தொகையாக பணம் தர வேண்டும் என பேசுவதாகவும், முன் தொகையாக பணம் செலுத்திய பின்னர் அந்த நபர்கள் தங்களது செல்லிடப்பேசி அழைப்பை துண்டித்துவிட்டு, அவர்களுக்கு கடன் பெற்றுத் தராமல் மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொதுமக்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தை தொடர்புக் கொண்டு கேட்கும்போதே, தாங்கள் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இதனால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட ஏராளமானோர், சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வரமூர்த்தி கண்காணிப்பில் போலீஸார் விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில், நங்கநல்லூர் 5வது பிரதான சாலையில் செயல்படும் ஒரு தனியார் போலி கால்சென்டர்தான் இந்த மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளான தஞ்சாவூரைச் சேர்ந்த விநோத்(27), சைதாபேட்டை பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, லாவண்யா, ஆனந்தி ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான செல்வபிரபு, சிவக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்தக் கும்பல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்து மோசடி செய்திருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/arrest1.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/போலி-கால்-சென்டர்-மூலம்-கடன்-வாங்கித்-தருவதாக-பணம்-மோசடி-3-பெண்கள்-உள்பட-4-பேர்-கைது-3350757.html
3350756 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு: தேர்வரிடம் சிபிசிஐடி விசாரணை DIN DIN Thursday, February 6, 2020 10:32 PM +0530  

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்போது லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற ஒரு தேர்வரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்த விவரம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்பு சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது.

இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், 3 காவலர்கள் மற்றும் தேர்வர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற 813 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்று, தேர்வை எழுதியுள்ளனர்.

இந்த தேர்வில் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற ஒருவரை பிடித்து சிபிசிஐடி அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சில நபர்களே, இந்த தேர்விலும் இடைத் தரகர்களாக செயல்பட்டு ஒரு நபரை தேர்ச்சி பெற வைப்பதற்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடு சிபிசிஐடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில இடைத்தரகர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சிலரை சிபிசிஐடியினர் தேடத் தொடங்கியுள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/TNPSC.jpg டிஎன்பிஎஸ்சி https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/கிராம-நிர்வாக-அலுவலர்-தேர்விலும்-முறைகேடு-தேர்வரிடம்-சிபிசிஐடி-விசாரணை-3350756.html
3350751 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ரூ.5.34 லட்சம் கோடி அமெரிக்கப் பொருள்களுக்கு வரி குறைப்பு DIN DIN Thursday, February 6, 2020 08:05 PM +0530 பெய்ஜிங்: 7,500 கோடி டாலா் (சுமாா் ரூ.5.34 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை நீக்குவதாக சீனா இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய இறக்குமதி வரிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 1,700-க்கும் மேற்பட்ட வகையைச் சோ்ந்த பொருள்களுக்கு கடந்த செப்டம்பா் மாதம் 5 மற்றும் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கடல் உணவு, பண்ணைப் பொருள்கள், சோயா பருப்பு உள்ளிட்ட, 7,500 கோடி டாலா் மதிப்பிலான அந்தப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் தற்போது ரத்து செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அண்மையில் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/deas074105.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/ரூ534-லட்சம்-கோடி-அமெரிக்கப்-பொருள்களுக்கு-வரி-குறைப்பு-3350751.html
3350749 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு DIN DIN Thursday, February 6, 2020 08:03 PM +0530  

சென்னை: தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு பிப்.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு கடந்த ஜன.27-ஆம் தேதி முதல் ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நிகழாண்டு ஜன.1ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் தக்கல் திட்டத்தின் கீழ் பிப்.10ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி மூன்று நாள்களுக்கு மட்டும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125 சிறப்புக் கட்டணம் ரூ.500 விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தோ்வா்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பங்களை தோ்வா்கள் பிப்.12-ஆம் தேதி மாலை 5 மையங்களில் சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/11/11/2/w600X390/exam.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/தனித்தோ்வா்களுக்கான-எட்டாம்-வகுப்பு-பொதுத்தோ்வு-தட்கலில்-விண்ணப்பிக்க-வாய்ப்பு-3350749.html
3350748 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் குருவாயூா் விரைவு ரயில் நேரம் மாற்றம் DIN DIN Thursday, February 6, 2020 07:42 PM +0530 சென்னை: விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சென்னையில் இருந்து குருவாயூருக்கு புறப்படும் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது.

விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (பிப்.8) முற்பகல் 11 மணிக்கு புறப்படும். பொதுவாக, இந்த ரயில் காலை 8.25 மணிக்கு புறப்படுவது வழக்கம்.

இந்தத்தகவல் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/3/w600X390/TRAIN.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/குருவாயூா்-விரைவு-ரயில்-நேரம்-மாற்றம்-3350748.html
3350747 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் புலிகளுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் கூலிப்படை: இந்தியா பயன்படுத்தியதாகத் தகவல் PTI PTI Thursday, February 6, 2020 07:42 PM +0530  

 

இலங்கையில் 1980-களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரிட்டிஷ் விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்துவந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிக் காப்புப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள 'கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வார் கிரைம்ஸ்' என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1987-ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தன ஆகியோர் இடையே  இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை ரகசியமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மண்ணுக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீனி மீனி என்பது ரகசிய நடவடிக்கைகளைக் குறிக்கும் அரபுச் சொல்.   கீனி மீனி சேவைகள் (கேஎம்எஸ்) என்ற இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை  பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்னல் ஜிம் ஜான்சன் என்பவர் நடத்தி வந்தார். யேமன், ஓமன் போன்ற நாடுகளில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

பிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்த்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.

கடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கேஎம்எஸ் பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கர்னல் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த இந்த நூலில் மேலும் எண்ணற்ற விவரங்களை பத்திரிகையாளர் பில் மில்லர் வெளிப்படுத்தியுள்ளார்.

]]>
India used British pilots, fight against LTTE, book revealed https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/tiger.png விடுதலைப் புலிகள் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/india-used-british-pilots-in-fight-against-ltte-3350747.html
3350744 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு DIN DIN Thursday, February 6, 2020 07:08 PM +0530 காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நந்தியையும், சிவபெருமானையும் வழிபாடு செய்தனா்.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள நந்திக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம். மாதம் இரு முறையாக வளா்பிறை, தேய்பிறை காலத்தின்போது பிரதோஷ நாள் வருகிறது. தை மாதத்தின் பிரதோஷம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கோயியில் கொடி மரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, சூரிய அஸ்தமனமாகும் சமயத்தில் சிவாச்சாரியாா்கள் எண்ணெய், தயிா், பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து நந்திக்கு பல்வேறு மலா்கள் மற்றும் வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதே நேரத்தில் மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேசுவரருக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அருகம் புல் மாலை அணிவித்து நந்தியை வழிபாடு செய்தனா்.

பிரதோஷ நாளில் நந்தியையும், சிவனையும் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தருமென்ற நம்பிக்கை உள்ளது. சிவபெருமானுக்குக்குரிய விசேஷமான நாள்களில் பிரதோஷமும் ஒன்று என்பதால், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/kk06pr_0602chn_95.jpg தா்பாரண்யேசுவரா் கோயிலில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனை. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/திருநள்ளாறு-தா்பாரண்யேசுவரா்-கோயிலில்--பிரதோஷ-வழிபாடு-3350744.html
3350742 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சிஏஏ பாதிப்பு குறித்து முதலில் ரஜினி சிந்தித்துப் பாா்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் DIN DIN Thursday, February 6, 2020 06:54 PM +0530 சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டப் பாதிப்பு குறித்து நடிகா் ரஜினிகாந்த் முதலில் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை கோவளத்தில் இன்று மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் நாட்டு மக்களுக்குக் குறிப்பாக இஸ்லாமியப் பெருமக்களுக்கு, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடியவையாக உள்ளன.

அதனால், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவையில் ஏகமானதாகத் தீா்மானங்கள் நிறைவேற்றி உள்ளனா். அதைப்போல தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடா்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.

மாணவா்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராக தங்கள் உணா்வை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகின்றனா் என்பதை நானே கல்லூரிகளுக்கு நேரில் சென்றபோது பாா்க்க முடிந்தது. ஏதோ கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் என்று நிறுத்திக் கொள்ளாமல், இந்தப் பணியை இன்னும் முடுக்கிவிட்டு, உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அந்தப் பணியைப் பாா்வையிட்டு வருகிறேன்.

குடியுரிமைச் சட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், எந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருகிறோம் என்பதை மாணவா்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவா் கூறியிருப்பது குறித்து கேட்கிறீா்கள்.

இந்த விவகாரத்தில் மாணவா்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாா். இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்பு என்பதைப் பற்றி முதலில் அவா் சிந்தித்து, ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். இதில் இருக்கும் கஷ்ட - நஷ்டங்களை, கொடுமைகளை அவா் தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. தெரிந்து கொண்டால் இனி அது குறித்த கருத்தை அவா் மாற்றிக் கொள்வாா் என்று நம்புவதாக அவா் கூறியுள்ளாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/stalinfin1.jpg ஸ்டாலின் https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/சிஏஏ-பாதிப்பு-குறித்து-முதலில்-ரஜினி-சிந்தித்துப்-பாா்க்க-வேண்டும்-முகஸ்டாலின்-3350742.html
3349925 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 5, 2020 DIN DIN Thursday, February 6, 2020 02:31 PM +0530  

புது தில்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா காந்தி.

ஹாங்காங் துறைமுகத்துக்கு வெளியே கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலிருந்து குறிப்பொன்றைக் காட்டுகிறார் ஒரு பயணி. இந்தக் கப்பலில் 3,600-க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இவர்களில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்படும்வரை யாரும் நிலத்தில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவில் யூமன் நகருக்கு வெளியே விமான நிலையத்தில் சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 பயணிகளுடன் மருத்துவப் பணியாளர்கள். ரஷியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் இரு வாரங்களுக்குத் தனித்து வைக்கப்படுவார்கள் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் யொகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் வந்த பயணிகளில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் மருத்துவக் குழுவினர். இவ்வாறு 10 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கப்பலில் வந்துள்ள சுமார் 3,700 பயணிகளும் இரு வாரங்களுக்குக் கப்பலிலேயே தனித்து வைக்கப்படுவார்கள் என ஜப்பானிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/China.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/05/news-photos-3349925.html
3350641 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்கு மத்திய அரசு ரூ. 1 நன்கொடை DIN DIN Thursday, February 6, 2020 11:30 AM +0530  

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்காக, ராமர் கோவில் அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மத்திய அரசு ரூ. 1 வழங்கியுள்ளது.

ராமஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளைக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு ரூபாயைப் பணமாக மத்திய அரசு தந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் சார்பில் இந்தத் தொகையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் டி. மர்மு வழங்கினார்.

நன்கொடைகள், மானியங்கள், உதவிகள் மற்றும் பங்களிப்புகளை யாரிடமிருந்து வேண்டுமானாலும் பணமாகவோ, சொத்துகளாகவோ எவ்வித நிபந்தனையுமின்றி அறக்கட்டளை பெற்றுக் கொள்ளும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி தொடர்பான வழக்குகளில் ஹிந்து அமைப்புகளின் சார்பில் தொடக்கத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்திலிருந்து தொடக்கத்தில் செயல்படும் அறக்கட்டளை அலுவலகம் விரைவில் நிரந்தரமான இடத்துக்கு மாற்றப்படும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

 

]]>
Government donates Rs 1 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/9/w600X390/Ayodhya_Mandir_PTI1.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/06/government-donates-rs-1-to-ram-janmabhoomi-trust-3350641.html
3349983 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மேலக்கோட்டையூர்  அரசு தொடக்கப்பள்ளி சமையலறையில் தீ விபத்து: இரண்டு பேர் காயம் DIN DIN Wednesday, February 5, 2020 07:06 PM +0530  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில்  80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் காலையில் சமையல் அறையில் வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சமையலர் அங்காள ஈஸ்வரி மற்றும் சத்துணவு அமைப்பாளரின் 2 வயது குழந்தை ஹர்சித் ஆகிய இருவரும் காயமடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தீ விபத்து  குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/fire.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/05/மேலக்கோட்டையூர்--அரசு-தொடக்கப்பள்ளி-சமையலறையில்-தீ-விபத்து-இரண்டு-பேர்-காயம்-3349983.html
3349081 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 4, 2020 DIN DIN Wednesday, February 5, 2020 04:11 PM +0530  

 

பிரிட்டனில் விமானப் படையின் தாக்குதல் விமானத்துக்கான புதிய பணிமனையொன்றைப் பார்வையிடுகிறார் பிரிட்டிஷ் ராணி எலிசபெத். 

 

குரோசியாவிலுள்ள புலா நீர் வாழ்வன காட்சிக் கூடத்தில் பிறந்துள்ள ஒளிரும் கிடார் மீன் குஞ்சு. இந்த வகை மீன்கள் கருத்தரித்து ஓராண்டுக்குப் பிறகே  குஞ்சுகளைப் பொரிக்கின்றன. 

புது தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் (இடமிருந்து) துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கட்சியின் அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த கேஜரிவால், அமைச்சர் கோபால் ராய்.

பிகாரின் தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை காவல்துறை தேர்வு எழுத வந்தவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி. இந்தத் தேர்வு வினாத் தாள் வெளியாகிவிட்டதாகக் குற்றம் சாட்டி மத்திய புலனாய்வுக் குழு விசாரமை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி காவல்துறை தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை தேர்வு எழுத வந்தவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டும் காவல்துறையினர்.

கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வார்டிலிருந்து மருத்துவக் கழிவுகளை அகற்றிச் செல்லும் கவச உடை அணிந்த மருத்துவ ஊழியர்கள்.

ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்கு விற்பனை முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை எல்ஐசி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

கரோனா வைரஸ் தாக்குதலுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென சீனாவில் ஹூஹானில் அமைக்கப்பட்ட தாற்காலிக மருத்துவமனையில்  நோயாளிகளுக்கான படுக்கைகள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/20200204077L.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/04/news-photos-3349081.html
3349096 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சி: 4 பேர் கைது DIN DIN Tuesday, February 4, 2020 08:41 PM +0530  

சென்னை: ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சித்ததாக 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: 

புதுகோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் நான்கு நபர்கள் ஐந்து ஐம்பொன் சிலைகளை விற்க முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், சிலை கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், ஒரு காவலரை சிலை வாங்குபவர் போல நடிக்க வைத்து, அந்த கும்பலைச் சேர்ந்த நபர்களிடம் தொடர்புக் கொள்ள வைத்தனராம். அதன்படி அந்த கும்பலைச் சேர்ந்த கீரனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் 46 சென்டிமீட்டர் உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலையை விற்பதாக தெரிவித்துள்ளார். 

4 பேர் கைது:

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வியாபாரிகள் போன்ற மாறுவேடத்துடன், அந்த கும்பலைச் சேர்ந்த நபர்களை சந்திக்க திங்கள்கிழமை கீரனூருக்குச் சென்றனர். அப்போது அங்கு விநாயகர் சிலையுடன் நின்றுக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி, அவரது கூட்டாளிகள் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த், லால்குடி பகுதியைச் சேர்ந்த குமார், தொடையூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் ஆகியோரை போலீஸார் கையும்களவுமாக கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த விநாயகர் சிலையையும் மீட்டனர்.

பின்னர் வெள்ளைச்சாமி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 சென்டிமீட்டர் உயரமும் 51 கிலோ எடையும் கொண்ட சோமாஸ்கந்தர் சிலை, 48 சென்டிமீட்டர் உயரமும் 21 கிலோ எடையும் கொண்ட பார்வதி அம்மன் சிலை, 93 சென்டிமீட்டர் உயரமும் 46 கிலோ எடையும் கொண்ட சிவகாமி அம்மன் சிலை, 67 சென்டிமீட்டர் உயரமும் 26.7 கிலோ எடையும் கொண்ட மாணிக்கவாசகர் சிலை, 19 சென்டி மீட்டர் உயரமும் 8.7 கிலோ எடையும் கொண்ட ஒரு சிலை பீடமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி:

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங், ஐ.ஜி. டி.எஸ். அன்பு ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். கைது செய்யப்பட்ட 4 பேரும் கல்குவாரியில் பொக்லைன் ஆபரேட்டர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சிலை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை செய்யப்படுகிறது.

அதேபோல அந்த சிலைகள் எந்த கோயிலில், யாரால் திருடப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கெங்கவல்லி நிலத்தரகர் ராஜசேகரனிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை கைப்பற்றப்பட்ட சிலை குறித்து விசாரணை செய்து வந்தாம். இந்த விசாரணையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் திருட்ப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.  தற்போது மீட்கப்பட்ட சிலைகளைப் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை தொடர்புக் கொள்ளலாம் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/gods1.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/04/ரூ20-கோடி-மதிப்புள்ள-5-ஐம்பொன்-சிலைகளை-விற்க-முயற்சி-4-பேர்-கைது-3349096.html
3349086 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தென்மாவட்டங்களில் 24,411 நீர் வாழ் பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல் DIN DIN Tuesday, February 4, 2020 07:42 PM +0530
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி பாசனக் குளங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 74 சிற்றினங்களைச் சேர்ந்த 24,411 நீர் வாழ்ப் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி,  தூத்துக்குடி முத்து நகர் இயற்கை கழகம், நெல்லை இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து 10-ஆவது தாமிரவருணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பினை கடந்த ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாள்கள் திருநெல்வேலி,  தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தின.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள்,  விவசாயிகள்,  ஓய்வு பெற்ற ராணுவத்தினர், தொழில் முனைவோர்கள், மருத்துவர்கள்,  இல்லத்தரசிகள் என சுமார் 100 தன்னார்வலர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். 

தன்னார்வலர்கள் மற்றும் பறவையியலாளர்களை உள்ளடக்கிய 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு 51 பாசனக் குளங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது. கணக்கெடுப்பில் 74 சிற்றினங்களைச் சார்ந்த சுமார் 24,411 பறவைகள் பதிவு செய்யப்பட்டது. அதிகமாக உண்ணிக் கொக்கு 3,840, தகைவிலான் குருவி 2,093,  சில்லித் தாரா 2,009,  நீலச்சிறகு வாத்து 1,752,  உப்புக்கொத்தி 1,368,  நாமத்தலை வாத்து 1,297,  சிறிய நீர்க்காகம் 1,187 இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.  சீழ்க்கைச் சிறகி என்ற வாத்தினம் முதல் முறையாக இவ்வாண்டு  தாமிரவருணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகி உள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் வேய்ந்தான்குளத்திலும்,  தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்திலும் சீழ்க்கசை சிறகி காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளுர் குளத்தில் அதிகபட்சமாக 1,602 பறவைகளும்,  கடம்பாகுளத்தில் 1,447,  ஸ்ரீவைகுண்டம் கஷ்பாவில் 1,389, திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சியில் 1,132,  மானூரில் 1,125 என்ற எண்ணிக்கையில் பறவைகள் பதிவாகி உள்ளன. 

திருநெல்வேலி மாவட்டத்தில் கழுவூர், மானூர்,  மாறாந்தை மற்றும் நயினார் குளத்தில் பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருவதும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. கழுவூர் குளத்தில் நூற்றுக் கணக்கான கூளக்கிடா,  நத்தைக்குத்தி நாரை,  கரண்டி வாயன் போன்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நயினார் குளக்கரையில் உள்ள பாரம்பரிய மரங்களான மருதம்,  இலுப்பை மற்றும் பனை மரங்களில் சாம்பல் நாரை மற்றும் பாம்புத் தாரா ஆகிய பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. மானூர் மற்றும் மாறாந்தை குளங்களில் உள்ள உடங்கருவை மரங்களில் வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புத் தாரா,  நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருவதும் கண்டறியப்பட்டது.

பறவைகள் இனப்பெருக்கம் செய்துவரும் இக்குளங்களை பாதுகாப்பதற்கு அரசு முன்வர வேண்டும். மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டிருந்தாலும் குளங்களைச் சுற்றியுள்ள கிராம மக்கள் குளங்களை சரியாக பராமரிப்பதில்லை. கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான குளங்களில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது.  காலி மதுபாட்டில்களுக்கு பஞ்சமில்லை. மதுப்பிரியர்களால் தூக்கி வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் கவர்கள் ஏராளமாக உள்ளன. 

குளக்கரைகளில் அமைந்துள்ள மரங்கள் மதுப்பிரியர்களின் திறந்தவெளி பாராக உள்ளது. குளங்களின் வளம் பாதிக்காமல் இருப்பதற்கு இது போன்ற கேடு விளைவிக்கும் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக பறவைகள் செழுமை மிக்க முக்கியமான குளங்களை தேர்ந்தெடுத்து அரசுத்துறைகள், பாசன விவசாய சங்கங்கள், தன்னார்வ குழுக்கள் மற்றும் நீரியல் மற்றும் பறவையியல் நிபுணரை உள்ளடக்கி பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதணமூலம்  ஒவ்வொரு குளத்திற்கும் முறையான பராமரிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பறவை செழுமை மிக்க குளங்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் பல்லுயிர் பரவல் பதிவேடு உள்ளுர் மக்கள் ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட வேண்டும். குளங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நீர்நிலைகள் குறித்த முறையான விழிப்புணர்வை வழங்கி குளங்களையும் அதில் உள்ள பல்லுயிர்களையும் பாதுகாத்திட வழிவகுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/WhatsApp_Image_2020-02-04_at_5.jpeg தாமிரவருணி பாசனக் குளத்தில் காணப்படும் நீர் வாழ்ப் பறவைகள். https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/04/தென்மாவட்டங்களில்-24411-நீர்-வாழ்-பறவைகள்-கணக்கெடுப்பில்-தகவல்-3349086.html
3349089 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் வாக்குவாதத்தால் துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் 2 மணி நேரம் பாதிப்பு DIN DIN Tuesday, February 4, 2020 07:41 PM +0530  

துறையூர்: துறையூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று பருத்தி மூட்டையைக் காணவில்லை என்று ஒருவர் கூறியதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பருத்தி ஏலம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

துறையூர் திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் கடந்த 5 வாரங்களாக பருத்தி ஏல விற்பனை நடைபெறுகிறது. துறையூர் பகுதியில் உற்பத்தியாகிற பருத்தி தரம் காரணமாக திருச்சி உள்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் துறையூரில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் பங்கேற்று பருத்திகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நிகழாண்டில் தமிழகத்தில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைக் காட்டிலும் துறையூரில் தான் பருத்தி ஏலம் அதிக தொகைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

நிகழாண்டு பருத்தி பருவ வியாபாரத்துக்கான முதல் வாரத்தில் வெறும் 60 மூட்டைகள் தான் ஏலத்தில் விற்கப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் துறையூர் பகுதி விவசாயிகளை நேரில் அணுகி கேட்டதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் ஆயிரக்கணக்கான பருத்தி மூட்டைகள் ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 6வது வாரமாக இன்று நடைபெற இருந்த பருத்தி ஏல விற்பனைக்காக பிப்ரவரி 2ஆம் தேதி முதல் துறையூர் பகுதி விவசாயிகள் தங்களது பருத்தி உற்பத்தியை துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொண்டு போய் சேர்த்தனர். அதேப் போல் துறையூர் அருகேயுள்ள வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி, அண்ணாத்துரை ஆகிய இருவரும் தலா 10 மூட்டை பருத்திகளை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று இரவு கொண்டு போய் வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணாதுரை சென்று பார்த்த போது அவருடைய 10 மூட்டைகளில் ஒன்றைக் காணவில்லை என்றார்.  உடனே இது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த வாக்குவாதத்தினால் பருத்தி ஏலம் நடைபெறுவதற்கான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகள் அதிகாரிகளையும், சம்மந்தப்பட்ட விவசாயிகளையும் சமரசம் செய்ததையடுத்து பருத்தி ஏலம் விடுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை வைக்கிற போது அதனை சரிபார்த்து ஒப்புதல் சீட்டு வழங்கவும், வளாகத்துக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்த போது, அதற்கு பதிலளித்த அதிகாரிகள் விவசாயிகள் தங்கள் கொண்டு வந்த உற்பத்தி பொருள் அருகே பாதுகாப்புக்காக உடனிருக்கவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் விவசாயிகளிடம் அறிவுறுத்தியிருப்பதாக கூறினா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/WhatsApp_Image_2020-02-04_at_7.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/04/வாக்குவாதத்தால்-துறையூர்-ஒழுங்குமுறை-விற்பனைக்-கூடத்தில்-பருத்தி-ஏலம்-2-மணி-நேரம்-பாதிப்பு-3349089.html
3349088 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுத்த இங்கிலாந்து தொண்டு நிறுவனம் DIN DIN Tuesday, February 4, 2020 07:31 PM +0530  

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுக்க வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குருசேட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் பீலி உள்ளிட்ட குழுவினரை இன்று  தண்டலச்சேரி ஊராட்சி மக்கள் வரவேற்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக அரசின் எந்த ஒரு நலத்திட்ட பணிகளும் முறையாக கிடைக்கப்படவில்லை. இந்நிலையில் தண்டலச்சேரி ஊராட்சி மன்ற தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளருமான  ஆனந்தராஜ் அவர்களின் முயற்சியில் இங்கிலாந்தை சேர்ந்த குருசேட் என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தண்டலச்சேரி கிராமத்திலுள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர்களை தண்டலசேரி கிராமத்திற்கு அழைத்து வந்தார். 

தண்டலச்சேரி கிராமத்திற்கு குருசேட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் பீலி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தண்டலச்சேரிக்கு வருகை தந்தனர். அவர்களை ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் கிராம மக்கள் மாலை அணவித்தும், சால்வை அணிவித்தும், மேள தாளத்தோடும் வரவேற்றனர். தொடர்ந்து தொண்டு நிறுவன குழுவினர் தண்டலச்சேரியில் கழிப்பறை வசதி, குடிசை வீடுகள் ,சாலைகள் போன்றவைகளை ஆய்வு செய்ததோடு, கிராம மக்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்த இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தினர், மாணவர்களின் கல்வி, பெண்களின் உடல்நலன், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த உள்ளதாக உறுதி அளித்தனர். மேலும் தண்டலச்சேரியில் பெண்களுககாக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜின் பங்களிப்புடன் இலவச மார்பக உயர்தர பரிசோதனை முகாமை விரைவில் நடத்துவதாகவும் உறுதி அளித்தனர்.

தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்த இங்கிலாந்து தொண்டு நிறுவனத்திற்கு தண்டலச்சேரி பகுதி மக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ் நன்றி தெரிவித்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/WhatsApp_Image_2020-02-04.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/04/தண்டலச்சேரி-கிராமத்தை-தத்தெடுத்த-இங்கிலாந்து-தொண்டு-நிறுவனம்-3349088.html
3348087 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 3, 2020 DIN DIN Tuesday, February 4, 2020 04:56 PM +0530  

மத்தியப் பிரதேசத்திலுள்ள குணாவில் நடைபெற்ற இளைஞர் பயிற்சி முகாமின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை உடற்பயிற்சி (ஷாகா) செய்யும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

 

புது தில்லியில் தல்கதோரா அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி. 

 

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இளைய தலைமுறையினருக்கான பயிற்சி முகாமொன்றில் கலந்துரையாடுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்.

மும்பையில்  திங்கள்கிழமை நடைபெற்ற 'உஸ்தாத் அல்லாரக்கா - அப்பாஜிக்கு ஓர் அஞ்சலி', இசை நிகழ்ச்சியில் தபலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன். 

ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் திங்கள்கிழமை அடர்ந்த பனியில் சைக்கிளில் செல்கிறார் ஒருவர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/PTI2_3_2020_000051B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/03/news-photos-3348087.html
3347339 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ராணுவத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் DIN DIN Tuesday, February 4, 2020 04:54 PM +0530 ராணுவத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் பழமைவாய்ந்த தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

மெட்ராஸ் ராணுவப் பிரிவில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் வெலிங்டனில் உள்ள  புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமான ஜனவரி 30ஆம் தேதிக்கு  பிறகு வரும் முதல் ஞாயிறன்று  தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம்  ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்த சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நாட்டிற்காக போரில் வீரமரணமடைந்த  ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் மேலும் அவர்களின் வீரத்தை நினைவு கூறும் விதமாகவும் அனு சரிக்கப்படுகின்றது. 

இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரி தேவாலய முறைப்படி தேவாலயத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கீழ்கண்ட வாசகத்தை வாசித்தார்கள்.

நீங்கள் வீட்டிற்கு போகும் போது அவர்களிடம் சொல்லுங்கள் நாங்கள் இருக்கிறோமென்று, அவர்களின் நாளைய தினத்திற்காக நாங்கள் எங்களின் இன்றைய தினத்தை தந்தோமென்று.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/WhatsApp_Image_2020-02-02_.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/ராணுவத்தில்-வீரமரணமடைந்த-ராணுவ-வீரர்களுக்கு-சிறப்பு-பிராத்தனைக்-கூட்டம்-3347339.html
3347330 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் ரகளை: மாநில நிர்வாகி மீது தாக்குதல் DIN DIN Monday, February 3, 2020 03:24 PM +0530 நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் திடீர் ரகளை ஏற்பட்டது. 

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

இதில் தேசிய செயலாளர் சஞ்சய் தத், எம்.பி. வசந்த குமார்,  எம்.எல்,ஏக்கள் பிரின்ஸ், ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாநில மீனவர் அணி செயலாளர் சபின் பேசும்போது உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மிக பெரிய தோல்வியை தழுவியது. வேட்பாளர்களை அறிவித்து விட்டு ஒரு சில இடங்களில் தான் தலைவர்கள் பிரசாரம் செய்தனர் சிலரை கட்சி கண்டு கொள்ளவில்லை என்றார். இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சஞ்சய் தத் தொண்டர்களை அமைதிப்படுத்தினார். 

அவர் பேசிய பின்னர் காங்கிரஸ் கட்சியினர் சிலர் மேடை ஏறிச் சென்று சபினை மேடையில் வைத்து தாக்கினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டு அவரது சட்டையும் கிழிந்தது. அவர் மேடையை விட்டு இறங்கிய பின்னரும் துரத்தி துரத்தி அவரை தாக்கினர். 

மேலும் மண்டபத்தில் இருந்த நாற்காலிகளையும் அவர் மீது வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அங்குயிருந்து ஓடினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸார் மண்டபத்துக்குள் வந்து சமாதானத்தில் ஈடுபட்டனர்.
 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/WhatsApp_Image_2020-02-02_at_8.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/காங்கிரஸ்-ஆலோசனை-கூட்டத்தில்-ரகளை-மாநில-நிர்வாகி-மீது-தாக்குதல்-3347330.html
3346466 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 1, 2020 DIN DIN Monday, February 3, 2020 02:43 PM +0530  

கரோனா வைரஸ் பாதித்த சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து தனி விமானத்தில் புது தில்லிக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்ட இந்தியப் பயணிகளில் ஒரு பகுதியினர்.

புது தில்லியில் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் (மஞ்சள் சேலையில்).

புது தில்லியில் கரவால் நகரப் பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (இடமிருந்து மூன்றாவது).

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் சட்டமன்றக் கட்டடம் இருக்கும் விதான் சௌதா வளாகத்தில் சனிக்கிழமை சூரிய வணக்க நாளையொட்டி யோகாசனம் செய்யும் மக்கள்.

இலங்கை மகாபோதி கோவிலின் ஆண்டுவிழாவையொட்டி, பிகாரில் புத்த கயாவில் தரிசிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சாக்கியமுனி புத்தர் மற்றும் அவருடைய சீடர்களின் புனித மிச்சங்களுக்கு மரியாதை செலுத்தும் பக்தர்கள்.

ராஜஸ்தானில் நாகவுரில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில் வித்தை காட்டும் ஒட்டகம்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதைக் கொண்டாடும் மக்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/3/w600X390/20200201109L.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/01/news-photos-3346466.html
3347331 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் வேடசெந்தூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை? DIN DIN Monday, February 3, 2020 08:35 AM +0530
திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது 6 வயது மகள் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் சடலம் வேடசெந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து கூம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/1/w600X390/dead.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/வேடசந்தூர்-அருகே-பாலியல்-பலாத்காரம்-செய்து-சிறுமி-கொலை-3347331.html
3347333 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கண்ணன்கோட்டையில் அம்பேத்கர் சிலை பறிமுதல்: கும்மிடிப்பூண்டியில் பதட்டம் DIN DIN Monday, February 3, 2020 08:32 AM +0530  

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த எட்டரை அடி உயர அம்பேத்கர் சிலையை பாதிரிவேடு போலீஸார் நேற்று நள்ளிரவு இரவு பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று எட்டரை அடி உயரமுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை அரசு அனுமதியோடு நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த விழாவிற்காக நன்கொடையாளர் ஒருவர் அம்பேத்கர் சிலையை கண்ணன்கோட்டை பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் லோகநாதன் அம்பேத்கர் சிலையை அவரது வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்நிலையில் கண்ணன்கோட்டையில் இரவோடு இரவாக அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிறுவ முயல்வதாக யாரோ ஒரு நபர் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ சென்றார். அங்கு அம்பேத்கர் சிலையுடன் நின்ற மினி லாரியை அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றினுள் போலீஸார் கண்டு அதனை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கண்ணன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஜான் விக்டோ புகாரின் பேரில் பாதிரிவேடு போலீஸார் தச்சூர் பகுதியை சேர்ந்த மினி லாரி டிரைவர் அஜீத் உள்ளிட்ட 7 பேர் மீது அனுமதியின்றி சிலை வைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் செந்தாமரைச் செல்வி சீல் வைக்கப்பட்ட அறையில் அம்பேத்கர் சிலையை வைத்தார்.

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோபி நையினார், வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் நேசகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியரிடம் சிலையை கொண்டு வந்தவர்கள் மீது சிலையை வைக்க முயன்றார்கள் என போலீஸார் பொய் வழக்கு பதிந்துள்ளதாக குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷிடம் கிராம நிர்வாக அலுவலர் ஜான் விக்டோ மீது புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையை ஒப்படைக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் காவல் துறையினரை கண்டித்து நாளை (திங்கள்கிழமையன்று) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/WhatsApp_Image_2020.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/கண்ணன்கோட்டையில்-அம்பேத்கார்-சிலை-பறிமுதல்-கும்மிடிப்பூண்டியில்-பதட்டம்-3347333.html
3347337 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மாநில அளவிலான நாய்கள் கண்காட்சி DIN DIN Sunday, February 2, 2020 08:55 PM +0530
நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல் நிலைப் பள்ளியில் நாய்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை, தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜெர்மன் செபர்டு, டாபர் மேன், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி உட்பட 75 வகையை சேர்ந்த 250 நாய்கள் போட்டியில் பங்கேற்றன.

இந்த கண்காட்சியில் நாய்களின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை, கீழ் படிதல் போன்றவை சோதனையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உலகிலேயே சிறந்த குணமும், புத்தி கூர்மையும் கொண்ட நாய்களில் ஜெர்மன் செப்பர்ட் 2-ஆம் இடம் வகிக்கின்றது, அதனால் தான் காவல் துறை மற்றும் ராணுவத்தில் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றது.

ஜெர்மெனிக்கு அடுத்து ஊட்டியில் தான் ஜெர்மன் செப்பர்ட் நாய்க்கு ஏற்ற காலநிலை என்பதால் இதன் வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நாய்களை பாதுகாப்பிற்காக வளர்ப்பதோடு அவற்றை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்று நாய்கள் கண்காட்சியன் நீலகிரி ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி தெரிவித்தார்.

இதில் நாய்களின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை, கீழ் படிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/WhatsApp_Image_2020-02-0.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/மாநில-அளவிலான-நாய்கள்-கண்காட்சி-3347337.html
3347335 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமிரா வைக்க டி.எஸ்.பி வேண்டுகோள் DIN DIN Sunday, February 2, 2020 08:47 PM +0530
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 61 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 81 வருவாய் கிராமங்களிலும் கண்காணிப்பு கேமிரா வசதியை ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

கும்மிடிப்பூண்டியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வென்ற ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்பினருடன் போலீஸாரின் ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டியில் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், கும்மிடிப்பூண்டி உதவி ஆய்வாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது அமைப்பினர் மத்தியில் பேசிய கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் அனைத்து ஊராட்சிகளின் எல்லை துவக்கம், முடிவு பகுதிகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமிரா வைக்க வேண்டும். மேலும் பள்ளி மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிரா வைக்க ஏற்பாடு செய்து சமூக விரோத செயல்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றார்.

வேலையின்றி உள்ள இளைஞர்கள் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் அவர்களை கிராம மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தவும், உள்ளூர் சிறார்களின் கல்வியை வளர்க்க இரவு நேர பாடசாலையை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும், ஊருக்குள் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர் 6 கிராமங்களுக்கு ஒரு காவலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தினமும் மக்களை சந்தித்து புகார்களை நேரில் பெறுவார் என்றும், ஊராட்சிகளில் இளைஞர்களை நல்வழிப்படுத்த உடற்பயிற்சி மையம் ஏற்பாடு செய்தல், பெண்களுக்கு காவல் நிலையங்களின் தொடர்பு எண்ணை தெரிவிக்க வேண்டும், மக்கள் பிரதிநிதிகள் பைக்கில் செல்லும் போது கட்டாயம் தலைகவசம் அணிந்து முன்னுதாரணமாக செல்ல வேண்டும் என்று அறிவுத்தினார்.

தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தினர் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்தும் போஸ்கோ சட்டம் குறித்தும் விளக்கினார்.

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், கீழ்முதலம்பேடு நமச்சிவாயம், சூரப்பூண்டி வாணிஸ்ரீ,பூவலம்பேடு வெங்கடாசலபதி, மாதர்பாக்கம் சீனிவாசன், பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, மாநெல்லூர் லாரன்ஸ், தண்டலச்சேரி ஆனந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

அதன்படி சிப்காட்டில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய மாதர்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்படும் கஞ்சா விற்பனையை போலீஸார் தடுக்க வேண்டும், பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை மாலை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், தண்டலச்சேரியில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் போலீஸார் முன் வைத்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/WhatsApp_Image_2020-1.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/02/அனைத்து-ஊராட்சிகளிலும்-கண்காணிப்பு-கேமிரா-வைக்க-டிஎஸ்பி-வேண்டுகோள்-3347335.html
3346480 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு DIN DIN Sunday, February 2, 2020 12:48 AM +0530 நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பை பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.

தற்போது எல்ஐசி-யின் 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுப் பங்கு வெளியீடு மூலம் விரைவில் பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்படவுள்ளது.

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் அறிவிப்புக்கு அந்த நிறுவனத்தின் ஊழியா்கள் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/lic.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/01/இந்திய-ஆயுள்-காப்பீட்டுக்-நிறுவனத்தை-பங்குச்-சந்தையில்-பட்டியலிட-முடிவு-3346480.html
3346482 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் விமான நிலையத்தில் 13 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: ஒருவா் கைது DIN DIN Saturday, February 1, 2020 07:06 PM +0530 சென்னை: விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 13 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை அவா்கள் கைது செய்தனா்.

அரிய வகை உயிரினங்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாங்காக்கில் இருந்து வந்த சென்னையைச் சோ்ந்த இப்ராகீம் ஷா(38) என்பவரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அவரது உடைமையில் கொடிய விஷமுடைய சிலந்திகள், தவளை, மரபல்லி, கீரிப்பிள்ளை, பச்சோந்தி, பாலைவனத்தில் வசிக்கக்கூடிய காட்டு எலிகள், உடும்பு உள்ளிட்ட 13 அபூா்வ வகை உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த உயிரினங்களை இறக்குமதி செய்ய அவரிடம் உரிமம் இல்லாததையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இப்ராகீம் ஷா கைது செய்யப்பட்டாா். இந்த உயிரினங்களை ஆய்வு செய்த அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள், இவை அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இவற்றால் வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதால், இவைகளை மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என பரிந்துரைத்தனா். இதையடுத்து இந்த உயிரினங்கள் பாங்காக்குக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையா் ராஜன் செளத்ரி தெரிவித்தாா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/3/w600X390/chennaiairport.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/01/விமான-நிலையத்தில்-13-அரிய-வகை-உயிரினங்கள்-பறிமுதல்-ஒருவா்-கைது-3346482.html
3345590 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 31, 2020 DIN DIN Saturday, February 1, 2020 03:58 PM +0530  

புது தில்லியில் மத்திய நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இரு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, பாட்னாவில் மூடிக் கிடக்கும் வங்கிக் கிளை.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய சீனாவிலுள்ள வூஹானில் டியான்ஹே பன்னாட்டு விமான நிலையத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்புக் கவச உடைகள் இறக்கப்படுகின்றன.

ஹரியாணாவில் மனேசரில் சீனாவில் கரோனா பாதித்த பகுதியான வூஹானிலிருந்து அழைத்து வரப்படும் 300 மாணவர்களுக்காக ராணுவத்தினர் அமைத்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைப் பகுதி.

சீனாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய இளைஞர் ஒருவர், பெங்களூருவில் ராஜிவ் காந்தி நெஞ்சக நோய்கள் மருத்துவமனையில்  கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய அச்சத்தில் பரிசோதனைக்காக வந்து காத்திருக்கிறார்.

 

மகாராஷ்டிரத்தில் தாணேயில் மெட்ரோ ரயில் தடத்துக்காக வெட்டப்பட்ட ஒரு மரத்திலிருந்த பறவைக் கூட்டைக் குஞ்சுகளுடன் பத்திரமாக அப்புறப்படுத்தி வேறோர் இடத்தில் வைக்க எடுத்துச் செல்கிறார் ஊழியர் ஒருவர். இங்கே வெட்டப்படும் மரங்களில் இருக்கும் கூடுகள் அனைத்துமே பத்திரமாக மாற்றிடங்களில் வைக்கப்படுகின்றன.

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/31JAN7F.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/31/news-photos-3345590.html
3346440 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மூன்றானது திருச்சி திமுக மாவட்டம்: பொறுப்பாளர்கள் அறிவிப்பு DIN DIN Saturday, February 1, 2020 02:03 PM +0530  

சென்னை: திமுகவில் திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய அறிவிப்பைத் திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

திமுக திருச்சி மாவட்டச் செயலர் கே.என். நேரு, கட்சியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தற்போது வடக்கு, மத்திய, தெற்கு  என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

திருச்சி வடக்கு மாவட்டச் செயலராகக் காடுவெட்டி தியாகராஜன் இருப்பார்.

திருச்சி மத்திய மாவட்டத்தின் பொறுப்பாளராக லால்குடி வைரமணி, திருச்சி தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

]]>
tiruchy dmk https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/anbil_magesh_poyyamozhi.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/feb/01/tiruchy-dmk-district-splits-into-three-3346440.html
3343784 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 30, 2020 DIN DIN Friday, January 31, 2020 04:28 PM +0530  

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்வு தில்லியில் இன்று நடைபெற்றது.

கரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் புறப்பட்டுச் செல்லும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர், ஷின்ஜியாங் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் நெகிழ்ச்சியான தருணம். 

 

சீனாவில் வூஹானில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தற்காலிக மருத்துவமனையின் பணிகள்.

 

கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதி நிலை அறிக்கைக் கூட்டத்துக்காக வந்த ஆளுநர் ஆரிப் முகமது கானை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள். பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்ட நிராகரிப்புத் தீர்மானத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்திருந்தார் ஆரிப் முகமது கான்.

 

மகாராஷ்டிரத்தில் ஷிர்டியிலுள்ள சாயிபாபா கோவிலில் புதன்கிழமை வழிபாடு நடத்திய ஹிந்தித் திரையுலக பழம்பெரும் நடிகர் ஜிதேந்திரா கபூர், அவருடைய மகளும் தயாரிப்பாளருமான ஏக்தா கபூர்.

 

புது தில்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குப் புதன்கிழமை வந்திருந்த பாலியல் வன்கொடுமைப் படுகொலையில் உயிரிழந்த நிர்பயாவின் தாய், தந்தை. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார் சிங் என்பவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.

 

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் பனிப் பொழிவால் புதன்கிழமை  போர்த்தப்பட்டுள்ள மலைநகரான சிம்லா. 

 

ஹிமாச்சலில் நட்டியில் பனித் துகள்களால் போர்த்தப்பட்டுள்ள மலைகள்.

 

ஹிமாச்சலில் பெய்யும் பனி காரணமாக மூடப்பட்டிருக்கும் ரயில் பாதை.

 

சிம்லாவில் நார்கண்டா பகுதியில் பனியால் நிறைந்து மூடப்பட்ட தெரு.

 

குலு மாவட்டம் மலானா, பனிப் பொழிவில். 

 

]]>
news photos https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/29JAN11F.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/29/news-photos-3343784.html
3344676 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 30, 2020 DIN DIN Friday, January 31, 2020 04:27 PM +0530  

காந்தி நினைவு நாளையொட்டி புது தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

புது தில்லியில் ராஜ்காட்டில் வியாழக்கிழமை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

ஆந்திரத்தில் செகந்தராபாத்திலுள்ள மேட்டுக்குடா அய்யப்ப பக்த சமாஜத்தின் கும்பாபிஷேக பூஜையில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

 

பிகாரின் தலைநகரான பாட்னாவில் வியாழக்கிழமை பேருந்து ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோபமுற்ற மக்கள், பல வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர்.

பிரயாக்ராஜில் பாரம்பரியமான மகாமேளாவையொட்டி சங்கமத்தில் புனித நீராடும் மக்கள் (கழுகுப் பார்வையில்).

பிரயாக்ராஜில் (அலாகாபாத்தில்) மகாமேளாவையொட்டி வழிபாடு நடத்தும் சாதுக்கள்.

புத்த கயாவில் புதன்கிழமை நடைபெற்ற புத்த மகோற்சவத்தில் நாட்டியமாடும் ஹிந்தி நடிகை ஹேமா மாலினி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/PTI1_30_2020_000123A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/30/news-photos-3344676.html
3344685 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? எம். பாண்டியராஜன் DIN Friday, January 31, 2020 11:36 AM +0530
சென்னை: நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில்  முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், ஜன. 31, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75,217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள். பாதிக்கும் அதிகமானோர், சுமார் 51 சதவிகிதம்,  பணியிலிருந்து விலகுகின்றனர்.

தமிழகத்தில் சென்னைத் தொலைபேசி வட்டத்தில் 2,571 பேரும் சென்னை தவிர்த்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 5,308 பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

இதேபோல, மும்பை மற்றும் தில்லி தொலைபேசி சேவைகளைக் கவனிக்கும் அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்திலிருந்து 14,378 ஊழியர்கள் பணியிலிருந்து 'விரும்பி'  விலகுகின்றனர்.

அரசு அணுகுமுறை, நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தன.

50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தாமதமாக வழங்கப்பட்டுவந்த நிலையிலும் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் காலக்கெடு விதித்திருந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 78,569  பேரும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும்.

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல், 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. எம்டிஎன்எல் கடந்த பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.

ஒருகாலத்தில் தனித் தன்மையுடன் கோலோச்சிக் கொண்டிருந்தது தொலைபேசித் துறை. அவசரமாக இணைப்புப் பெற வேண்டுமானால், ஒற்றைத் தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அளவில் பரிந்துரைக்க வேண்டியிருக்கும். பின்னால் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) உருவாக்கப்பட்டது. காலமாற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையில் நடந்த தொழில்நுட்பப் புரட்சியில் எண்ணற்ற தனியார் நிறுவனங்கள் சந்தைக்கு வந்து தேடித் தேடி சேவையளிக்கத் தொடங்கின.

தொழில் போட்டியில் தனியார் நிறுவனங்களே பெரும்பாலும் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை முதலில் பெறத் தொடங்கின. அடுத்தடுத்த நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டது.

பிஎஸ்என்எல்-க்குத் தேவையான நிதி ஆதாரமும் கிட்டவில்லை, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் முடியவில்லை. அரசின் முடிவுகளும் ஆதரவாக இல்லை.

தொழிலில் தனியாருக்கு இணையாகப் போட்டியிடத் தங்களை அனுமதிக்கவில்லை, செயல்படவும் தூண்டவில்லை என்று இப்போதும் அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரே எடுத்துக்காட்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் 4 ஜி அலைக்கற்றையில் உலவிக் கொண்டிருக்க, பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜியை வைத்துக்கொண்டுதான் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அடுத்துவரும் 3, 4 மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து, பணி முடித்து, மேலும்  10 ஆயிரம் ஊழியர்கள் வரை ஓய்வு பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மாபெரும் ஊழியர்கள் குறைப்புக்குப் பின் இவ்விரு நிறுவனங்களும் தொழிலில் தனியாருடன் போட்டியிட்டு வெல்லப் போகின்றனவா? அல்லது பாதியளவே ஆள் பலத்துடன், தக்க தொழில்நுட்ப மேம்பாடுகளையும் பெற முடியாமல் இருப்பதையும் இழந்து இல்லாமலாகப் போகின்றனவா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

]]>
79,000 employees retires https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/30/w600X390/bsnl_pix.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/30/79000-employees-retires-tomorrow-in-bsnl-3344685.html
3344605 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சாம்ஸங் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறது 5ஜி டேப்லெட்! DIN DIN Thursday, January 30, 2020 01:51 PM +0530  

சியோல்: சாம்ஸங் நிறுவனம் விரைவில் 5ஜி டேப்லெட் ஒன்றைத் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

கேலக்ஸி டேப் எஸ்6 5 ஜி என்ற இந்த டேப்லெட்தான் உலகின் முதலாவது 5ஜி டேப்லெட் என்ற பெருமையைப் பெறவுள்ளது.

தென் கொரியாவில் இதன் விலை 850 டாலராக (சுமார் ரூ. 61 ஆயிரம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவுக்கு வெளியே இந்த டேப்லெட் எப்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பதை இன்னமும் சாம்ஸங் நிறுவனம் அறிவிக்கவில்லை.

இதன் எடை 420 கிராம். தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் டேப்லெட் சாம்பல் நிறத்தில், 128 கிகாபைட்ஸ் சேமிப்புத் திறன் கொண்டதாக இருக்கும்.

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உலகச் சந்தையில் குறிப்பிடும்படியான இடத்தைக் கைப்பற்ற சாம்ஸங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

]]>
samsung 5g tablet https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/30/samsung-to-launch-first-5g-tablet-this-week-3344605.html
3344582 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சீனப் பயணிகளுக்கு மரியானா தீவுகள் தடை DIN DIN Thursday, January 30, 2020 11:05 AM +0530  

சீனாவிலிருந்து பயணிகள் யாரும் வர வேண்டாம் என வடக்கு மரியானா தீவுகள் நிர்வாகம் முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.

பசிபிக் கடல் தீவு நாடான மரியானாவின் முக்கியமான வருவாய் முழுவதும் சீன சுற்றுலா பயணிகள் மூலமாகத்தான் கிடைக்கிறது என்றபோதிலும்  இது தவிர்க்க முடியாத அவசர நிலை என அரசு அறிவித்துள்ளது.

இதுவரையிலும் யாரும் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என்றபோதிலும் சிறிதுகாலத்தில் வெளிப்படக் கூடிய அச்சுறுத்தல் இருப்பதாக மரியானா ஆளுநர் ரால்ப் டோரஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரை அரசுத் தலைவராகக் கொண்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட பசிபிக் கடல் தீவுகளில் ஒன்று வடக்கு மரியானா.

பசிபிக் கடல் பகுதியில் சீனப் பயணிகள் அதிகளவில் வரும் மார்ஷல் தீவுகள், பலாவ் போன்றவையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஏற்கெனவே பப்புவா கினியாவும் அனைத்து ஆசிய பயணிகளின் வருகைக்குத் தடை விதித்துள்ளது. 

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/coronaviruses.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/30/northern-mariana-islands-ban-travellers-from-china-3344582.html
3343858 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் புதிய லம்போர்கீனி கார் அறிமுகம், விலை ரூ. 3.22 கோடி! DIN DIN Wednesday, January 29, 2020 07:28 PM +0530  


இந்தியாவில் புதிய ஹியூராகேன் ஈவோ ஆர்டபிள்யுடி காரை லம்போர்கீனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய கார் பற்றிய அறிவிப்பை ஜனவரி மாதத்தில்தான் லம்போர்கீனி வெளியிட்டது. எனினும், ஒரு மாதத்துக்குள்ளேயே இந்தியாவில் காரை அறிமுகம் செய்திருக்கிறது.

புது தில்லியில் காரின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய காரின் விலை ரூ. 3.22 கோடி!

லம்போர்கீனி நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் ஹியூராகேன் ஈவோ மற்றும் ஹியூராகேன் ஈவோ ஸ்பைடர் கார்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி விற்பனையில் இருக்கின்றன. தற்போது ஆர்டபிள்யுடியும் இணைகிறது.

ஏற்கெனவே இருக்கும் வகைகளில் இருக்கும் வசதிகளைவிடக் கூடுதல் வசதிகளைக் கொண்டது புதிய ஹியூராகேன் ஈவோ ஆர்டபிள்யுடி!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/PTI1_29_2020_000069B.jpg புதிய காருடன்  லம்போர்கீனி நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி தலமைச் செயல் அலுவலர் மத்தேவ் ஓர்தென்ஸி, லம்போர்கீனி இந்தியா தலைவர் சரத் அகர்வால். https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/29/lamborghini-huracan-evo-rwd-launched-3343858.html
3343854 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் புதிய மெர்ஸிடஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யுவி கார் அறிமுகம் DIN DIN Wednesday, January 29, 2020 06:31 PM +0530  


புது தில்லி: மெர்ஸிடஸ் பென்ஸ் முற்றிலும் புதிதான ஜிஎல்இ எஸ்யுவி காரை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

புது தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் புதிய காரை மெர்ஸிடஸ் பென்ஸ் மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஷ்வெங்க் (வலது), துணைத் தலைவர் (விற்பனை-சந்தை) சந்தோஷ் ஐயர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இந்த காரின் விலை 73.70 லட்சத்தில் தொடங்குகிறது. கூடுதல் வசதிகளுடன் கூடிய காரின் அதிகபட்ச விலை ரூ. 1.25 கோடி.

நாலாவது தலைமுறை காரான மெர்ஸிடஸ் - பென்ஸ் ஜிஎல்இ எஸ்யுவி, 2018 அக்டோபரிலேயே பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போதுதான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

]]>
Mercedes Benz https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/Mercedez_Benz_Car.jpg புது தில்லியில் புதன்கிழமை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பென்ஸ் ஜிஎல்இ காருடன் மெர்ஸிடஸ் பென்ஸ் மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஷ்வெங்க் (வலது), துணைத் தலைவர் (விற்பனை-சந்தை) சந்தோஷ் ஐயர். https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/29/mercedes-benz-launched-all-new-gle-suv-3343854.html
3342842 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 28, 2020 DIN DIN Wednesday, January 29, 2020 03:28 PM +0530  

புது தில்லியில் கரியப்பா திடலில் செவ்வாய்க்கிழமை பிரதமரின் தேசிய மாணவர் படையினரைப் பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கொல்கத்தாவில் ஓவிய முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் ஓவியம் தீட்டிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் ராணுவக் கண்காட்சி - 2020 நடைபெறவுள்ள திடலில் தயாரிப்புப் பணியில் ராணு வீரர்கள். பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கவுள்ள இந்தக் கண்காட்சி பிப். 5 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கம்போடியாவிலுள்ள நாம் பென் நகரில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காப்புத் துணி அணிந்து வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/PTI1_28_2020_000075A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/28/news-photos-3342842.html
3343727 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பாஜகவில் இணைந்தார் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்! DIN DIN Wednesday, January 29, 2020 12:59 PM +0530  

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். 

ஹரியாணாவைச் சேர்ந்த 29 வயது சாய்னா, சமீபத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று அக்கட்சியில் இணைந்துள்ளார் சாய்னா நெவால்.

இதுவரை 24 சர்வதேசப் பட்டங்களை சய்னா வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார். 2015-ல் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.

]]>
Saina Nehwal https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/saina_bjp1.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/29/ace-badminton-player-saina-nehwal-joins-bjp-3343727.html
3343690 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் கரோனா DIN DIN Wednesday, January 29, 2020 11:02 AM +0530  

துபை: ஐக்கிய அரபு நாட்டில் காரோனா வைரஸ் காரணமாக  ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரபு நாட்டின் நல்வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பொன்றையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சீனாவில் வைரஸ் பாதித்த வூஹான் மாகாணத்திலிருந்து  இங்கே வந்தவர்கள்.

இவர்களில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அவர் நலமாக இருப்பதாகவும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தொற்று நோய்க் கண்டுபிடிப்பு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் நிலைமை முனைப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளது.

]]>
coronovirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/coronaviruses.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/29/first-case-of-coronovirus---confirmed-in-uae-3343690.html
3342905 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பஞ்சாங்கம் எச்சரித்த கரோனா வைரஸ்! DIN DIN Tuesday, January 28, 2020 06:51 PM +0530
கொள்ளை நோயாகத் தோன்றிப் பரவித் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பற்றி முன்னதாக யாருக்கேனும் தெரிந்திருக்குமா?

தெரிந்திருக்கிறது. பழைய பஞ்சாங்கம் என்று சிலர் சாதாரணமாகச் சொல்வார்களே, அந்த பஞ்சாங்கத்தில்தான் இப்படியொரு விபரீதம் நிகழவிருக்கிறது என முன்கூட்டியே கணித்திருக்கிறது.

சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் என்றொரு பஞ்சாங்க நூலில் கோள்கள் ரீதியான பல்வேறு பலன்களுடன் இந்த வைரஸ் பற்றிய எச்சரிக்கையும் இடம் பெற்றுள்ளது.

'விஷ ஜந்துகள் அதிகமாக இன விருத்தி அடையும், விஷ ஜந்துகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும். ஒரு புதிய வைரஸ் நோய் மேற்கு திக்கில் இருந்து உற்பத்தியாகும்.' - இதுதான் தகவல்.

இனிமேல் பஞ்சாங்கத்தையும்கூட ஒரு முறை படித்துவைத்துக் கொள்வது நல்லதுதான் போல!

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/Panchagamcoronavirus.jpeg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/28/coronavirus-in-tamil-panchangam-3342905.html
3332682 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 16, 2020 DIN DIN Tuesday, January 28, 2020 03:17 PM +0530  

சென்னைத் துறைமுகத்தையொட்டிய கடல் பகுதியில் சுமார் 50 கடல் மைல்கள் தொலைவில் வியாழக்கிழமை ஜப்பானிய கடலோரப் பாதுகாப்புப் படைக் கப்பலுடன் இணைந்து இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.

 

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னைத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள்.

 

குஜராத்தில் ஹாஜிராவிலுள்ள எல்அன்டி ராணுவ தயாரிப்பு வளாகத்தில் கே9 வஜ்ரா-டி ரக பீரங்கியைப் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்த விழாவின்போது பீரங்கியின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

 

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக  ராஞ்சியில் வியாழக்கிழமை மத்திய புலனாய்வுக் குழு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் பிகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான   லாலு பிரசாத் யாதவ்.

கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் லட்ச தீபத்தையொட்டி அருள்மிகு பத்மநாப சுவாமி திருக்கோவில் முன் புதன்கிழமை இரவு திரண்டிருந்த பக்தர்கள் திரள்.

புது தில்லியில் வியாழக்கிழமை பெய்த திடீர் மழையில் நனைந்தபடி சைக்கிளில் செல்லும் சிறுவன்.

காஸா பகுதியிலுள்ள ராணுவ நிலைகளின் மீது புதன்கிழமை இரவு இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. படத்தில் காஸா நகரில் குண்டு  வெடித்ததால் நேரிட்ட தீப்பிழம்பு.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/PTI1_16_2020_000142A.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/16/news-photos-3332682.html
3333474 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 17, 2020 DIN DIN Tuesday, January 28, 2020 03:16 PM +0530  

ஸ்விட்சர்லாந்தில் லூசன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவநிலைக்கான எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடையே பேசுகிறார் 17 வயதான கிரெயத்தா டூன்வொரி. 

 

புது தில்லியில் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக சரஸ்வதி விஹாரில்  வெள்ளிக்கிழமை அமைச்சர் சத்தியேந்திர குமார் ஜெயினுடன் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பேசுகிறார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலாவின் நினைவாக மும்பையில் அவருடைய படத்துடன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவினர். 

 

இந்தியாவின் இரண்டாவது பெருநிறுவன (தனியார்) ரயிலை, தேஜஸ் எக்ஸ்பிரஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைக்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரயில், ஆமதாபாத்துக்கும் மும்பைக்கும் இடையே இயக்கப்படுகிறது.

 

பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிகாரில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள 16 ஆயிரம் கிலோ மீட்டர் நீள மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றோரில் ஒரு பகுதி.

 

புது தில்லியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஒத்திகையில் ராணுவ வீரர்கள்.

 

பிகாரில்  புத்த கயாவிலுள்ள மகா போதி ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வெள்ளிக்கிழமை வந்த தலாய் லாமா, பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.

 

ஜப்பானில் கோபெ நகரில் பெரும் நில நடுக்கம் நேரிட்ட நாளை (1995, ஜன. 17) நினைவுகூர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த நாளைக் குறிக்கும் விதமாக மெழுகுதிரிகளை ஏந்தி நிற்கும் மக்கள். இந்த நிலநடுக்கத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது, ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இது இருபத்தைந்தாம் ஆண்டு.

 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில்,  வெள்ளிக்கிழமை பயிற்சியொன்றின்போது பயிற்சியாளர் பேட்ரிக்குடன் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/AP1_17_2020_000158B.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/17/news-in-photos-3333474.html
3334242 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், ஜன. 18, 2020 DIN DIN Tuesday, January 28, 2020 02:57 PM +0530  

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிகார் பகுதியில் ஊராட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 97 வயதான பெண்மணி வித்யா தேவி.

 

மியான்மரில் யாங்கூனின் புறநகர்ப் பகுதியிலுள்ள கியாக்தான் நகரியப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுக் காளையை அடக்க முயலுவோர்.

 

உத்தரப் பிரதேசத்திலுள்ள மொராதாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகர சங்கராந்தி உற்சவத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். 

குடியரசு நாள் வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் தாஜ் மஹால் வளாகத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ள காவல் ஏற்பாடுகள்.

 

மகாராஷ்டிரத்திலுள்ள தாணே நகரில் சனிக்கிழமை லிம்கா சாதனைப் புத்தகத்துக்காக சுமார் 2,500 மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம் செய்வதைப் படமெடுக்கிறார் காவலர் ஒருவர்.

 

மியான்மரில் நே பி டா அரச அரண்மனையில் சனிக்கிழமை மியான்மர் அதிபர் யு வின் மின்ட் அளித்த விருந்தின்போது சீன அதிபர் ஜி ஷின்பிங் மற்றும் மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி.

 

ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் நடைபெற்ற (சனிக்கிழமை) அடிலெய்ட் பன்னாட்டு டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/28/w600X390/20200118108L.jpg https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jan/18/news-photos-3334242.html