Dinamani - முக்கியச் செய்திகள் - https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3309297 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் செவ்வாழையில் சாயமா? அச்சம் வேண்டாம், அது வெறும் வதந்தியே! R. முருகன், தினமணி நிருபர். DIN Wednesday, December 18, 2019 12:20 PM +0530  

செவ்வாழைப் பழங்களில் ரசாயன மோசடி எனும் செய்திகள் இணையத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மக்கள் இது போன்ற செய்திகளை விழிப்புணர்வுச் செய்திகளாகக் கருதி அதிகமும் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றில் வாழைப் பழங்களை விரைவில் பழுக்கச் செய்ய சிலவிதமான ரசாயனங்களை அதன் மேல் தெளிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்கான விழிப்புணர்வு மக்களுக்குத் தேவைதான். ஆனால், செவ்வாழைப் பழங்களைப் பொருத்தவரை இணையத்தில் வலம் வரும் குறிப்பிட்ட அந்தக் காணொலியானது தவறான புரிதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதை யாரும் நம்பவோ, அது குறித்து அச்சம் கொள்ளத்  தேவையோ இல்லை என்கிறார் திருச்சி வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா.

விழிப்புணர்வுச் செய்தியென தினமணி இணையதளம் உள்படப் பல்வேறு இணைய தளங்களிலும் செவ்வாழைப் பழ விற்பனையில் நடக்கும் மோசடி! என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்தச் செய்தியைப் பற்றி தினமணி டாட் காம் விசாரித்தபோது, இந்தத் தகவலில் உண்மைத் தன்மை இல்லை என்பதும் வெறும் வதந்தி மற்றும் தவறான புரிதல் என்றும் தெரிய வந்திருக்கிறது.

இதற்கான காணொலி

 

 

 

செவ்வாழை நிறம் பற்றிய தவறான புரிதல் குறித்துத் திருச்சியிலுள்ள  வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா கூறுகிறார்:

 வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா

‘இது செவ்வாழைதான். சிவப்புச் சாயம் பூசியிருந்தால் கழுவிய தண்ணீர் சிவப்பாக மாறியிருக்க வேண்டும். செவ்வாழை முதிர்ந்து பழுக்கும்போது ஆந்தோசயனின் (சிவப்பு நிறமி) தோலின் மேலடுக்கில் மட்டும்தான் உற்பத்தியாகிறது. இவ்வாறு சுரண்டி எடுக்கும்போது உட்புறத்திலுள்ள மஞ்சள் திசுக்கள் வெளிப்படுகின்றன. மேலும் சோப்பிலுள்ள சோடியமோ அல்லது பொட்டாசியமோ சிவப்பு நிற ஆந்தோசயனின் நிறமியுடன் வினைபுரிந்து அதை வெளுக்கச் செய்து விடுகிறது. இதனால் பழுக்காதவற்றில் இளம்பச்சை நிறமும் பழுத்திருந்தால் மஞ்சள் நிறமும் வெளிப்படுகிறது. எனவே வாட்ஸப்பில் வரும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவதுடன் விவசாயிகளும் பெரும் பாதிப்படைகிறார்கள்’

- என்று தெரிவித்தார்.

செவ்வாழைப்பழம்

செவ்வாழை விஷயத்தில் இனிமேலும் வாட்ஸப் வதந்திகளை நம்ப வேண்டியதில்லை. செவ்வாழையை விரும்பி உண்டு வந்தவர்களும் வதந்தி பயத்தால்  தவிர்த்துவிட வேண்டியதில்லை. 

வதந்திகள் பரப்பப்பட்டதன் பின்னணி குறித்து இதுவரையிலும் ஆதாரத் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. செவ்வாழைப் பழங்களைப் பொருத்தவரை இவ்வாறு சாயம் பூசி விற்பனை செய்வதென்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடியதும்கூட என்றும் தெரிவிக்கிறார் உமா.

 

]]>
RED BANANA RUMOUR https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/18/w600X390/red_banana_rumours.jpg செவ்வாழை வதந்திகளை நம்பாதீர் https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/18/dont-believe-that-red-banana-rumours-it-is-not-truth-3309297.html
3308410 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தொடரும் டிக் டாக் விபரீதம் DIN DIN Tuesday, December 17, 2019 03:49 PM +0530  

இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டுகிறதா டிக் டாக்?!

டிக் டாக்கில் அதிக அளவில் கவர்ச்சியான விடியோக்களைப் பதிவேற்றி அதன் மூலமாக எதிர்மறையான பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரெளடி பேபி சூர்யா என்ற இளம்பெண். தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான டிக் டாக் தொடர்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது கூட, தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான டிக் டாக் விடியோக்களை வெளியிட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை தான் வெளியிட்டுள்ள டிக் டாக் விடியோக்களை கணக்கற்றோர் பார்த்து வருவதாகவும் அதுவே தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் அவர் இணைய ஊடகமொன்றுக்கு நேர்காணல் கூட அளித்திருந்தார். இன்று பார்த்தால் ,திடீரென அந்தப் பெண் குறித்த அழுகை டிக் டாக் விடியோ ஒன்று ஊடகங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. 

அந்த விடியோவில், சூர்யா தெரிவிக்க விரும்பியது;

நான் என் குடும்ப கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளத்தான் டிக் டாக் விடியோ செய்து கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு யாருடனும் தொடர்பு இருந்தாலும் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னை ஏன் சிலர் பாடாய்ப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் உடுத்தும் ஆடைகளில் இருந்து வீட்டு வாடகை வரை எல்லாவற்றுக்காகவும் நான் என்னை வருத்திக் கொண்டு தான்  உழைத்துச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் போய், நீ பிறருடன் தனிப்பட பேசிய ஆடியோக்களை வெளியிட்டு விடுவேன், விடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. யார் குடியையும் கெடுக்கவில்லை. என் பிழைப்பிற்காக, என் இரண்டு குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக நான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். என்னை ஏன் சிலர் கஷ்டப்படுத்த நினைக்கிறார்கள். இந்த டிக் டாக் விடியோவைப் பார்க்கும் அரசு அதிகாரிகள் எனக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை. நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என் அலைபேசியில் அத்துமீறி நுழைந்து தகவல்களைத் திருடி நான் யாரோடெல்லாம் பழகிக் கொண்டிருக்கிறேன் என்ற உண்மையை வெளியிட்டு விடுவதாகச் சிலர் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன அப்படிச் செய்வது? அப்படிச் செய்ய அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதோ நானே என்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லி விடியோ வெளியிடுகிறேன். அவர்கள் வெளியிட்டால் அதை யாரும் பார்க்க முடியாமல் போனாலும் போகலாம், இதோ நானே வெளியிடுகிறேன். என்னுடைய விடியோக்களைத்தான் அதிகம் பேர் பார்ப்பார்கள்.இது என் வாழ்க்கை. தொடர்ந்து அவர்கள் என்னை இப்படி பிளாக்மெயில் செய்தால் நான் கூடிய விரைவில் தற்கொலை செய்து கொண்டு விடுவேன். தைரியமான பெண் என்று என்னைப் பாராட்டக் கூடியவர்களுக்கும், மோசமான பெண் என்று என்னை கடுமையாக விமரிசிப்பவர்களுக்கும், வசை பாடுபவர்களுக்கும் கூட தெரியாது என் ஏழ்மை நிலை. விடிந்தால் வாடகைப் பணத்தை எப்படித் தரப்போகிறோம்? என்று கவலையில் உழன்று கொண்டிருக்கிறேன் நான். மன உளைச்சல் காரணமாக ஒரு வாரமாக சரியான தூக்கமில்லை. என்னை விட்டு விடுங்கள். 

- என்று கதறி அழுது டிக் டாக் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெளடி பேபி சூர்யா எனும் பெண்.

டிக்டாக் விடியோக்களில் மனம் பறிகொடுத்து அதற்கு அடிமையானவர்களும், பிரபலமடைவதற்காக டிக் டாக்கில் விபரீதமான விடியோக்களை வெளியிடத் துணிபவர்களும்  கண்டிப்பாக யோசிக்க வேண்டிய நேரமிது. 

இந்தச் செயலியைத் தடை செய்தால் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் பலரும் முயன்று கொண்டிருக்கும் வேளையில் அதன் கோரமுகம் அடிக்கடி இப்படி வெளிபடுத்தப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

]]>
tik tok dangers https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/17/w600X390/tik_tok.jpg டிக் டாக் விபரீதங்கள் https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/17/tik-tok-danger-zones-3308410.html
3307545 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அயோத்தியில் நான்கே மாதங்களில் வானுயர ராமர் கோயில்: அமித் ஷா DIN DIN Monday, December 16, 2019 07:18 PM +0530  

பாகூர்: மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான அமித் ஷா திங்கள்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜார்கண்ட், பாகூரில் ஒரு பொதுப் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, நான்கு மாதங்களில் அயோத்தியில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவித்தார்.

கடந்த நவம்பர் 9 ம் தேதி ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

"உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இன்னும், ​​நான்கு மாதங்களுக்குள், அயோத்தியில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும்" என்று அமித் ஷா கூறினார்.

அயோத்தி தகராறு வழக்கில் நவம்பர் 9 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நான்கு நாட்களுக்குப் பின்னர் உள்துறை அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

‘தனியறை விசாரணையில் மறுஆய்வு மனுக்களை பட்டியலிடுவதற்கான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மறுஆய்வு மனுக்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை நாங்கள் கவனமாகப் பரிசீலித்து விட்டோம். அவர்களது குற்றச்சாட்டை அப்படியே கணக்கில் எடுத்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை எனும் அடிப்படையில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.’ என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது.

நவம்பர் 9 அன்று அளித்த தீர்ப்பில் ராமர் கோயில் கட்டுவதற்கு சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒருபகுதியை உச்சநீதிமன்றம் ஒதுக்கியதுடன், அயோத்தியில்  மசூதி ஒன்றைக் கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம் தரப்புக்கு வழங்கவும் முடிவு செய்திருந்தது.

அதையொட்டி நவம்பர் 9 தீர்ப்பை எதிர்த்து மொத்தம் 18 மறுஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. 

]]>
RAM TEMPLE AYODHYA https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/16/w600X390/amit_shah.jpg Amit shah said at pakur https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/16/sky-height-ram-temple-wil-be-bulit-in-ayodhya-with-in-4-months-said-amit-shah-3307545.html
3294002 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழக முதல்வரின் இமேஜ் குறித்த  நடிகர் ரஜினியின் கருத்துக்கு‘ரோஜா’அளித்த பதில்! RKV DIN Friday, December 13, 2019 05:43 PM +0530  

ஆந்திராவின் நகரி தொகுதிக்கு உட்பட்ட ரயில்நிலைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மேலாளர் ஜான் தாமஸை சந்தித்து ரோஜா மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜாவிடம் நிருபர்கள், நடிகர் ரஜினிகாந்தும், கமலும் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என்று பேசியது குறித்து  கருத்து கேட்டனர். அவர்களுக்கு ரோஜா அளித்த பதில்;

சரியான லீடர்ஷிப் இல்லன்னு யார் சொன்னாங்க? என்று ரோஜா கேட்க, நிருபர்களிடமிருந்து ‘ரஜினி சார் சொல்லி இருக்கார்’ என்ற பதில் வந்தது. 

அப்போது ரோஜா;

‘ஆக்‌ஷுவலா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஜெயலலிதா மேடம் இறந்ததுக்கு அப்புறம் நான் கூட கொஞ்சம் தமிழ்நாடு பாலிடிக்ஸ் பார்க்கறதை நிறுத்திட்டேன். ஒரு APIC சேர்மன் ஆனதுக்கப்புறம் இப்போ என்னைப் பார்க்க தமிழ்நாட்டுல இருந்து நிறைய பேர் வருவாங்க. என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட சத்தியவேடு, சித்தூரு, ஸ்ரீகாளகஸ்தி இப்படி பார்டர்ல இருக்கற இடங்கள்ல அவங்க இண்டஸ்ட்ரி வைக்கறதுக்காக வரும் போது அவங்க எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா? இன்னைக்கு இருக்கற சி எம்.. வரும் போது யாருன்னு தெரியாம ஒரு நார்மலான ஆளா வந்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு வந்து தனித்தியங்கக் கூடிய ஒரு லீடரா அவர் வளர்ந்திருக்கார். ஜெயலலிதா மேடம் மறைவுக்கு அப்புறம் காணாம போயிடும்னு நினைச்ச அதிமுக வை இன்னைக்கு ஒண்ணா சேர்த்திட்டு அவர் முன்னுக்குப் போறாரு. கண்டிப்பா இவர் கூட நாளைக்கு  நிச்சயம் ஃபைட்டிங்ல(fighting) இருப்பார். இவராலயும் போட்டி கொடுக்க முடியும்னு சொல்ற அளவுக்கு அவர் வந்து டெவலப் ஆயிருக்காருன்னா போட்டி இல்லன்னு சொல்றது தப்பு. அது வந்து ரஜினி சார் எதுக்கு சொன்னார்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான்  கேட்டவரைக்கும் இப்ப இருக்கறவரு ரொம்ப நல்லாப் பண்றாருன்னு தான் சொல்றாங்க. ஜெயலலிதா மேடம் இருக்கும் போது அவரை நான் பார்த்தது கூட இல்லை. அவர் பேர் கூட தெரியாது. ஆனா, ஓ பி எஸ் சாரை எல்லாருக்கும் தெரியும். ஆனா, இன்னைக்கு இருக்கற சி எம் ஸ்டெப் பை ஸ்டெப் நல்ல விஷயங்கள் பண்ணிட்டு ஜனங்க கிட்ட போயிட்டு அவர் ஒரு லீடர்ஷிப் டெவலப் பண்ணிட்டு வர்றார்னா கண்டிப்பா அவர் கிட்ட வொர்த் இருக்குன்னு தெரியுது’
 
- என பதிலளித்தார்.

]]>
Roja Reply to actor Rajini's comment on the image of th https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/30/w600X390/roja.jpg Roja https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/nov/30/roja-reply-to-actor-rajinis-comment-on-the-image-of-the-chief-minister-of-tamil-nadu-3294002.html
3305021 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களில் ஒன்றாக இனி இதுவும் அமையலாம்! RKV DIN Friday, December 13, 2019 02:01 PM +0530  

பூமியின் மிக ஆழமான பகுதி எது? கூடிய விரைவில் சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் 1 போட்டித் தேர்வுகளில் இப்படி ஒரு கேள்வி இடம்பெறலாம். ஏனெனில், அப்படியொரு இடம் வெகு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மிக ஆழமான இடம் என்பதை நாம் இருவகையில் பொருள் கொள்ளலாம். ஒன்று நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆழமான பகுதியைக் கண்டறிவது. மற்றொன்று பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பூமியின் ஆழமான இடத்தைக் கண்டறியும் முறை. இதில், இரண்டாவதை முன்பே சாத்தியப் படுத்தி விட்டார்கள் நம் விஞ்ஞானிகள். ஆயினும் முதலில் சொல்லப்பட்ட வகையில் நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மிக ஆழமான பகுதியைக் கண்டறியும் முறை இப்போது தான் சாத்தியமாகியுள்ளது. அதன்படி, பூமியின், நிலப்பரப்பில் மிக மிக ஆழமான பகுதியாகக் கருதப்படும் பகுதியானது கிழக்கு அண்டார்டிகாவின் டென்மென் பனிப்பாறைகளுக்கு அடியில் உறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்விடம் பனிப்பாறைகளுக்கு அடியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் உறைந்திருக்கும் பள்ளத்தாக்குப் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து பார்க்கையில் இதன் ஆழம் 11,500 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் நீள, அகலங்கள் முறையே 100 கிலோ மீட்டர் மற்றும் 20 கிலோ மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளன. இதைக் கண்டறிந்த விஞ்ஞானியின் பெயர் மார்லிகம். மிக நீண்ட காலமாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மார்லிகம், இப்பகுதியானது பனிப்பாறைகள் நிறைந்த இருட்டுப் பிரதேசமாகக் காட்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சரி நிலப்பரப்பில் எதுவெனத் தெரிந்து கொண்டோம். அப்படியே பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அளந்தால் பூமியின் மிக மிக ஆழமான இடமாகக் கருதப்படுவது எது தெரியுமா? சாக்கடலின் (Dead Sea) மையத்தில் அப்பகுதி இருப்பதாக முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனராம். கடல் மட்டத்தில் இருந்து அதன் ஆழம் 1355 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

]]>
DEEPEST PLACE ON EARTH, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/13/w600X390/denmen_east_andartica.jpg DEEPEST PLACE ON EARTH https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/13/it-might-be-an-important-question-here-after-in-civil-service-exams-3305021.html
3305014 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாஸ்போர்ட்டில் தாமரை ஏன்? வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்! RKV DIN Friday, December 13, 2019 01:22 PM +0530  

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்படுவதை எதிர்த்து எழுப்பிய கண்டனக்குரலை அடுத்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வியாழன் அன்று அதற்கு பதில் விளக்கம் அளித்தது. அதில், புதிதாக வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னத்தை அச்சிட்டு விநியோகிப்பது என்பது போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண்பதற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியே என்றும் அதில் வேறு எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும் அது தெரிவித்திருந்தது. இம்முறையின் கீழ் மற்ற தேசிய சின்னங்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்பட்ட இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸின் எம்.கே.ராகவன், இந்த விவகாரம் செய்தித்தாள்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது மத்திய அரசாங்கத்தின் "மேலும் காவி" பிரச்சாரத் திட்டத்தின் மற்றொரு முகம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏனெனில், தாமரை பாஜகவின் தேர்தல் சின்னமாகவும் இருப்பதால் அவர் அவ்விதமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ரவீஷ் குமார்,  "இந்த முயற்சியானது, நமது தேசிய மலரை பாஸ்போர்ட்டில் பதிப்பிப்பதன் மூலமாகப் போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியே தவிர, இதில் வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் இல்லை" என்றார்.

இந்த பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச சிவில் விமான அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ) வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, என்றும் அவர் தெரிவித்தார்.

"தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இப்போது அது தாமரை, பின்னர் அடுத்த மாதம் வேறு ஏதாவதொரு தேசியச் சின்னமாக மாறி இருக்கும். இவை தேசிய மலர் அல்லது தேசிய விலங்கு போன்ற இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அடையாளங்களாகவே இருக்கும்"  - என்றும் அவர் கூறினார்.
 

]]>
LOTUS SYMBOL ON PASSPORTS, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/13/w600X390/lotus_on_passport.jpg LOTUS SYMBOL ON NEW PASSPORTS https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/13/why-is-the-lotus-in-the-passport-the-foreign-ministrys-explanation-3305014.html
3304966 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஸ்கூப் நியூஸ்களைப் பெற நிருபர்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுவது சகஜம்: அமெரிக்கப் பத்திரிகையாளரின் சர்ச்சை கருத்து! RKV DIN Friday, December 13, 2019 11:25 AM +0530
ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளரான ஜெஸ்ஸி வாட்டர்ஸ், சக பெண் நிருபர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட செய்தி ஒன்று தற்போது கடும் சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.  அவர் புதன் அன்று கலந்து கொண்ட ஃபாக்ஸ் நியூஸ் டாக் ஷோக்களில் ஒன்றான ‘தி ஃபைவ்’ நிகழ்ச்சியில் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதிலிருந்து, இது ஒன்றும் புதிதல்ல, ஹாலிவுட்டிலும், பத்திரிகையாளர்களின் நிஜ வாழ்க்கையிலும் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று தான் எனக் கூறியிருந்தார். 

‘அலி வாட்கின்ஸ் எனும் பெண், பல ஆண்டுகளாக பிரபல பத்திரிகைகள் பலவற்றில் பணிபுரிந்திருந்து பத்திரிகைத் துறையில் மிகுந்த அனுபவம் மிக்க பத்திரிகையாளராகத் திகழ்ந்து வந்தவர். ஆனால், அவரே, தனக்கான ஸ்கூப் செய்திகளைப் பெற செய்திகளை உடனுக்குடன் பெற்றுத்தரக்கூடிய சோர்ஸ்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதால் தான் அவரால் அத்தனை ஸ்கூப் செய்திகளை உருவாக்க முடிந்தது, இது இங்கே பரவலாக நடக்கக் கூடியது தான்’

- என்று ஜெஸ்ஸி வாட்டர்ஸ் தெரிவித்திருந்தார். 

பெண் நிருபர்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட இத்தகைய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தன்னுடைய துறை சார்ந்த பெண்களை ஜெஸ்ஸி வாட்டர்ஸ் இப்படி இழிவு படுத்தியிருக்க வேண்டியதில்லை. அப்படி இழிவு படுத்தும் எண்ணத்துடன் இருப்பவர்களையும், இயங்குபவர்களை ஜெஸ்ஸி கண்டித்திருக்க வேண்டுமே தவிர இவ்விதமாக அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்திருக்கக் கூடாது. என்ன சி என் என் செய்தியாளரான கப் தனது ட்விட்டர் தளத்தில் ஜெஸ்ஸிக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

ஜெஸ்ஸி வாட்டர்ஸ் திடீரென ஏன் இப்படியொரு கருத்தை வெளியிட்டார்?

கிளிண்ட் ஈஸ்ட்வுட்ஸின் வெளிவரவிருக்கும் திரைப்படமான  ‘ரிச்சர்ட் ஜுவல்’ எனும் திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக கேத்தி ஸ்க்ருக்ஸ் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சில வாரங்களாகக் கடுமையான விவாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அத்திரைப்படத்தில் முன்னாள் அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிட்டியூஷன் நிருபரான கேத்தி, ஸ்கூப் நியூஸ்களைப் பெறுவதற்காக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

அத்தகவல் குறித்து ஜெஸ்ஸி வாட்டர்ஸ் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோவில் கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது தான் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் பத்திரிகையாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ்.
 

]]>
Sex Trade https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/13/w600X390/American_Journalist.jpg American Journalist https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/dec/13/news-host-says-women-reporters-trade-sex-for-stories-all-the-time-3304966.html
3277932 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நாங்கள் வெல்வோம், அலைகளைத் தாண்டிச் செல்லும் படகு.. துணிந்தவர்கள் இழக்க மாட்டார்கள்: ட்விட்டரில் சஞ்சய் ராவத் RKV DIN Tuesday, November 12, 2019 03:51 PM +0530  

அகில இந்திய அளவில் மிகப் பெரிய கட்சியாக இருந்தபோதிலும், பாஜக மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தவறியதை அடுத்து மகாராஷ்டிராவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக உதவியின்றி ஆட்சிமைக்க இயலாத நிலையிலும், ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டுமாயின் நிச்சயமாக மாற்றுக் கட்சியினரின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் சிவசேனை தனக்கான ஆதரவுகளைச் சேகரிக்கத் தவறியபோதும், அதன் தலைவரகளில் ஒருவரான சஞ்சய் ராவத், உடல்நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் (நடிகர்  அமிதாப் பச்சனின் தந்தை) சில வரிகளை மேற்கோள் காட்டி மகாராஷ்டிராவில் கட்சியின் வெற்றியை விட்டுவிடக்கூடாது எனத் தமது கட்சியினரை ஊக்கப்படுத்தி இருக்கிறார். 

திங்களன்று இங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு உள்ளான சஞ்சய் ராவத், பச்சனின் புகழ்பெற்ற கவிதையிலிருந்து இரண்டு வரிகளை ட்வீட் செய்தார்: அந்த வரிகள் இதோ..

“லெஹ்ரான் சே தர் கர் நெளகா பார் நஹி ஹோதி, ஹிம்மத் கர்னே வலோன் கி கபி ஹார் நஹி ஹோதி
ஹம் ஹொங்கே காமியாப், ஜரூர் ஹொங்கே” 

கவிதை வரிகளின் பொருள்.. அலைகளைத் தாண்டிச் செல்லும் படகு, துணிந்தவர்கள் இழக்க மாட்டார்கள், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதே.. இந்த வரிகளைத்தான் சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற வாக்கெடுப்பு முடிவுகளுக்குப் பிறகு பாஜகவுடன் அதிகாரத்தில் சமபங்கைக் கோருவதற்கான சிவசேனையின் குற்றச்சாட்டுக்கு தலைமை தாங்கிய 57 வயதான எழுச்சித் தலைவர் சஞ்சய் ராவத் திங்களன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முடிவை காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளில் சிவசேனா திங்களன்று சற்றுப் பின்னடைவைச் சந்தித்தது.

சிவசேனை தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க இரு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) “கொள்கையளவில்” ஒப்புக் கொண்டுள்ளன என்று சிவசேனை தலைவர் ஆதித்யா தாக்கரே கூறிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கூடுதல் உறுப்பினர்களைத் திரட்ட கூடுதல் நேரமளிக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர், மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். 

54 எம்.எல்.ஏ.க்களுடன், என்.சி.பி 288 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பாஜக (105) மற்றும் சிவசேனா (56) க்குப் பிறகு மூன்றாவது பெரிய கட்சியாகும், அங்கு 145 இல் பாதி குறி உள்ளது. காங்கிரசில் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கூட்டணியில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்பதால் , மகாராஷ்டிராவில் இன்னும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களாக பேசப்படும் சிவ சேனையின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு புகழ்பெற்ற கவிஞரின் வரிகளைக் கோடிட்டுக்காட்டி கட்சியையும், உறுப்பினர்களையும் ஊக்கப்படுத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Image Courtesy: Business Standard

]]>
shiv sena https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/12/w600X390/sanjay_raut.jpg SANJAY RAUT SHIV SENA https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/nov/12/we-will-win-the-boat-that-crosses-the-tidals--the-brave-will-not-lose-sanjay-raut-on-twitter-3277932.html
3277917 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அயோத்தியில் ராமர் கோயில் வேண்டுமென இவர்கள் எல்லாம் போராடவில்லையே ஏன்? RKV DIN Tuesday, November 12, 2019 03:02 PM +0530  

ராமாயணத்தை எழுதியது வால்மீகி. ஆனால், அவர் சமஸ்கிருதத்தில் எழுதியிருந்த ராமாயணம் வெகுஜன மக்களைச் சென்று அடையவில்லை. அக்பர் காலத்தில் வாழ்ந்த துளசிதாஸரின் ராமாயணம் தான் பொதுமக்களைச் சென்றடைந்த ராமாயணமாகக் கருதப்படுகிறது. துளசிதாஸர் மிகச்சிறந்த கவி. ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவரது திறமையை மெச்சிய முகலாய மன்னர் அக்பர், தானே மெனக்கெட்டு அவரை கெளரவிக்க அரண்மனைக்கு அழைத்து விருந்தளித்து உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்! என்கிறார். துளசிதாஸர் வாழ்ந்தது அயோத்தியில்.. அவருக்குத் தெரியாதா ராமர் பிறந்த இடம் எதுவென்று?! அவரால் கேட்டுப் பெற்றிருக்க முடியாதா? அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரு இடத்தை? சரித்திரத்தில் இப்படியும் நடந்திருக்கிறது. இதற்கு ஆவணங்களும் உண்டு.

அதை விடுங்கள். பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு ஒரு உயில் எழுதுகிறார்.. அதில், இந்த நாடு பலதரப்பட்ட மக்களைக் கொண்ட நாடு. அவர்களது நம்பிக்கைகள் பலவிதம். அதில் எதையும் சிதைக்காமல் மன்னனது ஆட்சி இருக்க வேண்டும். செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதாக நீள்கிறது பாபரின் உயில். இதற்கும் ஆவணங்கள் உண்டு. அப்படிப் பட்ட கொள்கைகள் கொண்ட பாபரா இந்துக்கோயிலை இடித்து விட்டு அதன் மீது மசூதி கட்டி இருப்பார்? நாம் யோசிக்க வேண்டிய இடமிது. 

அடுத்து பிரிட்டிஷ் காலத்திலும் கூட பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் என்று இந்து கொள்கைகளை முன் வைக்கக் கூடிய அமைப்புகள் இருந்தன. இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ராமஜென்ம பூமி குறித்த  கோரிக்கைகளை முன் வைக்கவில்லை.

அவர்களுக்குப் பிறகு இன்று பாஜக கொண்டாடுகின்ற விவேகானந்தர் அவர் 1904 ல் இறந்தார். அவர் கூட இந்தக் கோரிக்கையை முன் வைக்கவில்லை. அவருடைய குருவாக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கோரிக்கையை முன் வைக்கவில்லை.

அப்படியானால், இந்தக் கோரிக்கையானது எப்போது எழுகிறது?

1948 - 49 காலகட்டத்தில் இந்துத்வ அமைப்புகளால் தானே முன்னெடுக்கப்படுகின்றன.

எந்த இந்துத்வ அமைப்பு என்பதையும் பார்க்க வேண்டும்.

இங்கே இரண்டு விதமான இந்துத்வ கொள்கைகளை முன்வைக்கக் கூடிய அமைப்புகள் இருக்கின்றன.

ஒன்று காந்தி கனவு கண்ட ராமராஜ்ஜியம் அமைய வேண்டும் என்று நினைக்கும் இந்துத்வ அமைப்பு. இன்னொன்று காந்தியை மறுத்த இந்துத்வ போக்கு ஒன்று. அதாவது சனாதன தர்மத்தை முன் வைக்கின்ற இந்துத்வ போக்கு.

இதில் காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

காந்தி தாம் இறக்கும் தறுவாயில் கூட ‘ஹேராம்’ என்று சொல்லித்தானே உயிர் விட்டார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்டவர்களால் எல்லாம் ராமஜென்ம பூமியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் எழுப்ப வேண்டும் என்ற கேள்வி முன் வைக்கப்படவில்லையே.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் தான் நாம் ராமர் கோயில் பற்றிய கோரிக்கையப் பற்றி பார்க்க வேண்டும். தீர்ப்பைப் பார்ப்பதற்கு முன்பு இந்தப் பின்னணியைப்பற்றிய அறிதல் அவசியம்.

அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது கட்டடங்கள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அது மிகப்பழைய ஊர். எப்போதுமே அகழ்வாராய்ச்சி செய்வதற்காக நிலத்தைத் தோண்டும் போது கட்டடங்கள் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், அந்தக் கட்டடங்கள் இந்து சமயத்துடன் தொடர்புடைய கட்டடங்கள் இல்லை என தொல்லியல் துறை கூறியிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும் போது எந்தக் கோயிலையும் இடிக்காமல் உருவாக்கப்பட்ட ஒரு மசூதியை, அங்கு ராமர் பிறந்தார் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்து இடிப்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை. புராண ஆதாரங்களாவது இருக்க வேண்டுமில்லையா? இந்தப் புள்ளியில் தான், இந்த இடத்தில் தான், இந்த 2.77 ஏக்கரில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு அங்கே புராண அடையாளமாவது இருக்க வேண்டுமில்லையா? அப்படி எதுவும் இல்லை. அயோத்தி என்பது பெரிய ஊர், அங்கே எங்கே வேண்டுமானாலும் ராமர் பிறந்த இடம் இருக்கலாம். அந்த இடத்தில் ஒரு காலத்தில் கங்கையே  கூட ஓடியிருக்கலாம். ஆற்றின் போக்கு மாறி மாறி வரக்கூடிய இடம் தானே அது!

ஆக, இந்த கோரிக்கையைத்தான் நாம் மேலும் மேலும் முக்கியமாகப் பார்க்க வேண்டிதாயிருக்கிறது.

இந்தக் கோரிக்கையை அனைத்து மக்களுமா முன் வைத்தார்கள்?

கோரிக்கையை வைத்தது இந்து அமைப்புகள் தானே?!

அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்துக் கேட்பின் போது திருமுருகன் காந்தி ஊடக நேர்காணல் ஒன்றில் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். 

நியாயமான கேள்விகளே.. இந்து அமைப்புகளிடம் இதற்கான பதில் இருந்தால் சொல்லுங்கள்.

ஏனென்றால், விவேகானந்தரைக் காட்டிலும் இந்து மதத்திற்காகப் பாடுபட்ட ஒரு துறவியைக் காண்பது அரிது. அவரே இப்படிப்பட்ட கோரிக்கையை முன் வைக்காத போது இந்திய விடுதலைக்குப்பின் விஸ்வரூபமெடுத்த இந்த கோரிக்கையின் பின்னணியில் ஸ்ரீராம பிராண் மீதான பக்தியைக் காட்டிலும் அரசியல் ஆதிக்கம் பெறும் முனைப்பு தான் மேலோங்கி இருக்கிறதா? எனும் கேள்விக்கான பதிலைப் பெறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது தானே?!

Image Courtesy: haribhakt.com

Concept Courtesy: nakkeeran tv

]]>
ayodhya verdict, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/12/w600X390/rammandir.jpg rama jenma boomi https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/nov/12/why-didnt-they-all-fight-for-the-ram-temple-in-ayodhya-3277917.html
2992093 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தினமணி இணையதளம் நடத்திய மெகா சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி - 2018’ வெற்றியாளர்கள்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, November 1, 2019 03:34 PM +0530  

 

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி - 2018 என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி இணையதளம் சார்பாக இந்த மெகா சமையல் போட்டியின் டைட்டில் ஸ்பான்ஸர்களாக ஏஞ்சல் ஸ்டார்ச் & ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரும்,  இணை ஸ்பான்ஸர்களாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தாரும், கிஃப்ட் ஸ்பான்ஸர்களாக வைப்ரண்ட் நேச்சர், டப்பர்வேர் நிறுவனத்தாரும் இணைந்து செயல்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் கலந்துகொண்டனர். போட்டியை கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்ற மூன்று பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட 1 மணி நேரத்தில் கச்சிதமாகச் சமைத்துப் பரிமாறி அசத்தினர். அனைவரது ரெஸிப்பிகளுமே சுவையாக இருந்த போதும் சமையல் கலையில் தேர்ந்த அனுபவம் கொண்ட நடுவர்கள் ஒவ்வொரு மெனுவில் இருந்தும் சிறந்த ரெஸிப்பிகளில் மேலும் நனி சிறந்த மூன்று ரெஸிப்பிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போட்டியில், ஸ்டார்ட்டர் பிரிவின் வெற்றியாளர்களை சமையல்கலை வல்லுநர் மீனாட்சி பெட்டுகோலா, மெயின் கோர்ஸ் பிரிவின் வெற்றியாளர்களை சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத், டெஸ்ஸர்ட் பிரிவின் வெற்றியாளர்களை சமையல் கலை வல்லுநர் ரேவதி ஆகியோர் தேர்வு செய்தனர். இப்போட்டியை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது.

நியூஸ் 7 வீடியோ லிங்க் 1 ...

 

நியூஸ் 7 விடியோ லிங்க் 2...

 

வெற்றியாளர்கள்...

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

  • ஸ்டார்ட்டர்: முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்.
  • மெயின் கோர்ஸ்: முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா.
  • டெஸ்ஸர்ட்: எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா.

இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். 

நிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.

சமையல் என்பது ஒரு அருங்கலை, முன்பெல்லாம் வீட்டுச்சாப்பாடு என்பது சகஜமானதாகவும், ஹோட்டல் சாப்பாடு என்பது அரிதானதாகவும் இருந்த நிலை மாறி இந்தத் தலைமுறையினரில் ஹோட்டல் சாப்பாடு என்பது சகஜமானதாகவும், வீட்டுச்சாப்பாடு என்பது அரிதான விஷயமாகவும் மாறிக் கொண்டிருப்பதால் இப்படியான மெகா சமையல் போட்டிகள் அவசியமாகின்றன. ஏனெனில், இப்படியான சமையல் போட்டிகளின் வாயிலாக ஹோட்டலில் மட்டுமே கிடைக்கக் கூடிய விதமான வித்யாசமான தனித்துவமான ரெஸிப்பிகளையும் கூட பெண்கள் வெகு எளிதில் கற்றுக் கொண்டு செய்து அசத்துகின்றனர். அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பங்கு பெற்று கலக்கிய சென்னையின் சமையல் ராணி 2018 நிகழ்ச்சி ருசிக்கத் தக்க பல்வேறு சுவைகளுடன் வெற்றிகரமாக இனிதே நடந்து முடிந்தது.

கலந்து கொண்ட போட்டியாளர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த நன்றி!

மீண்டும் அடுத்த போட்டியொன்றில் இனிதே கைகோர்ப்போம்!

]]>
சென்னையின் சமையல்ராணி 2018, மெகா சமையல் போட்டி, தினமணி இணையதளம் நடத்தும் மெகா சமையல் போட்டி, mega cooking contest https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/1/w600X390/enpl_cookery_event.JPG https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/sep/01/dinamanicoms-mega-cooking-contest-2018-winners-list-2992093.html
3244107 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 4000 இளம்பெண்கள்.. 8 முன்னாள் அமைச்சர்கள்.. முன்னாள் முதல்வர் வரை நீளும் மகா 'ஹனி ட்ராப்' செக்ஸ் ஊழல்!   RKV DIN Tuesday, October 1, 2019 01:00 PM +0530  

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மூலமாக இதுவரையில் 12 அரசு உயரதிகாரிகள் மற்றும் 8 முன்னாள் அமைச்சர்கள் வரை காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். ஹனிட்ராப் ஸ்கேண்டல் என்று சொல்லப்படக்கூடிய செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இவர்களின் மீது காவல்துறையின் கண்காணிப்பு வளையம் தற்போது இறுகியுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இளம்பெண்களை கட்டாயப்படுத்தி சப்ளை செய்த குற்றத்தை செக்ஸ் புரோக்கரான ஸ்வேதா ஜெயின் எனும் பெண் காவல்துறை விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்வேதாவின் தேடுபொறியில் ஏழைப்பெண்கள் முதல் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வரை பலர் இருந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

செக்ஸ் ராக்கெட்டில் ஈடுபடுத்த விரும்பிய இளம்பெண்களை முதலில் ஸ்வேதாவும் அவருடைய உதவியாளரான ஆர்த்தி தயாள் எனும் பெண்ணும் இணைந்து சென்று தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு முன்பு அந்தப் பெண்களின் குடும்பச் சூழல், அவர்கள் தங்களது நிபந்தனைக்கு உட்படுவார்களா? என்பதையெல்லாம் ஸ்வேதாவும், ஆர்த்தியும் கணித்து விடுவார்கள். பிறகு தாங்கள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாக சம்மந்தப்பட்ட பெண்களின் உயர் கல்வி மற்றும் வருமானம் தரும் தொழில்வாய்ப்புகளுக்கு உதவி பெற்றுத்தருவதாக உறுதிமொழி அளித்து அவர்களை மூளைச்சலவை செய்து தங்களது பொறியில் விழச் செய்வார்கள். அந்த இளம்பெண்களும் தங்களது லட்சியங்களை அடைய இவர்கள் உதவுவார்கள் என்றெண்ணி இவர்களது வலையில் தாங்களாக விரும்பி வந்து மாட்டிக் கொள்வார்கள்.

இப்படித்தான் இளம்பெண்கள் ஸ்வேதா மற்றும் ஆர்த்தியிடம் சிக்கி இருக்கிறார்கள். அப்படிச் சிக்கிய இளம்பெண்களை வைத்து ஸ்வேதா மிகப்பெரிய திட்டம் தீட்டியிருக்கிறார். அரசின் முக்கியமான டெண்டர்கள், காண்ட்ராக்டுகள் உள்ளிட்டவற்றை பெரிய நிறுவனங்களுக்குப் பெற்றுத்தர இவர்கள் தரகு வேலை பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சரிக்கட்ட தங்கள் வசமிருக்கும் இளம்பெண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் இவர்கள். 
பெண்களைச் சம்மதிக்க வைக்க தங்களிடமிருந்த ஆடம்பர ஆடி கார், ஐந்து நட்சத்திர விடுதி வாசம், எனப் பணத்தை தாராளமாக வாரி விட்டிருக்கிறார்கள். ஆடம்பரமான இந்தப் புதுவித கலாசாரத்திற்கு முதன்முறை பழகிப்போன இளம்பெண்களை மூளைச்சலவை செய்து தரக்குறைவான தங்களது அடுத்தடுத்த இலக்குகளை அடைய ஸ்வேதாவும், ஆர்த்தியும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காரிய பலிதம் எதுவரை செல்லுபடியாகியிருக்கிறது என்று தெரிந்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கக் கூடும். ஆம், ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு பணி மாறுதல் பெற்றுத் தருவது, போஸ்டிங் பெற்றுத்தருவது எனப் பல வகைகளில் இவர்கள் லாபி செய்து பணம் ஈட்டியிருக்கிறார்கள். அப்படிச் சம்பாதித்த பணம் அத்தனைக்கும் இவர்கள் மூலதனமாகப் பயன்படுத்தியது அப்பாவி நடுத்தர வர்க்கத்து இளம்பெண்களைத்தான். அவர்களை ஆடம்பர வாழ்வுக்குப் பழக்கப்படுத்தி மூளைச்சலவை செய்து அவர்களை விட வயதான கிட்டத்தட்ட அந்தப் பெண்களின் தகப்பன் வயதுள்ள வயதான அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளுடன் தங்க வைத்து இரவுகளைக் கழிக்க வைத்து அவர்களைக் கட்டாயப் பாலியல் உறவில் சிக்க வைத்து இவர்கள் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.

இதற்கு அத்தாட்சி மோனிகா யாதவ் என்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம். மத்தியப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கல்லூரியொன்றில் சேர்ந்து பயில விரும்பிய மோனிகா, அதற்கான சிபாரிசுக்காக ஸ்வேதாவை அணுகியிருக்கிறார். தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டுவிட விரும்பாத ஸ்வேதா, ஆர்த்தியுடன் அப்பெண்ணை மத்தியப் பிரதேச எம் பி ஒருவரைக் காணும்படி அனுப்பியிருக்கிறார். பிரசித்தி பெற்ற கல்லூரியில் இடம் வேண்டுமென்றால் அந்த எம் பியுடன் இரவைக் கழிக்க வேண்டுமென்று மோனிகாவை இவர்கள் வற்புறுத்தியதில் அந்தப் பெண் பயந்து போய் தனக்கு படிப்பே வேண்டாம் என்று வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். ஆனால், அந்தப் பெண்ணின் வறிய சூழலை நன்கறிந்து கொண்ட ஸ்வேதா கும்பல், அவளை விடாது பின் தொடர்ந்து அவளது சொந்த ஊருக்கே சென்று அவளது ஏழைத்தகப்பனிடம், உன்  பெண்ணின் படிப்புச் செலவு மொத்தத்தையும் நாங்கள் நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமே ஏற்றுக் கொள்ளும், நீ, உன் பெண்ணை எங்களுடன் அனுப்பு, நாங்கள் அவளை எங்களது சகோதரி போலப் பார்த்துக் கொள்கிறோம் என்று பலவாறாகச் சமாதானப்படுத்தி மோனிகாவை மீண்டும் தங்களை வலையில் வீழ்த்தி அவளைத் தங்களது செக்ஸ் ராக்கெட்டில் சிக்க வைத்தனர். 

ஒரு அரசு ஒப்பந்த விஷயமாக அரசுப் பொறியாளர் ஹர்பஜன் சிங்கின் தயவு தேவைப்படவே அப்போது மோனிகாவை அவருடன் தங்க வைத்த ஆர்த்தி, இரவில் அவர்களது அந்தரங்கக் காட்சிகளை விடியோ பதிவாக்கி அந்த விடியோவை ஹர்பஜனுக்கு அனுப்பி அவரைத் தங்களது கைப்பாவையாக ஆக்க முயன்றிருக்கின்றனர். இவர்களது வலையில் சிக்கிய பின்னரும் அடிக்கடி முரண்டு பிடித்த மோனிகாவையும் அதே ஆபாச விடியோவைக் காட்டி, ரொம்பவும் முரண்டி பிடித்தாயானால், உன்னுடன் தொடர்புடைய இந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றி ஊர் முழுக்க அரங்கேற்றி விடுவோம், ஜாக்கிரதை என்று மிரட்டியுள்ளனர்.

இப்படி இவர்களின் வற்புறுத்தலால் வாழ்க்கையை இழந்த இளம்பெண்களின் எண்ணிக்கை 4,000 க்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அது நாட்டிலேயே மிகப்பெரிய ஹனிடிரேப் செக்ஸ் ஸ்கேண்டலாக வெடித்தது. இளம்பெண்களை ஆடம்பர வாழ்வுக்கு பழக்கப்படுத்தி அதன் மூலமாக அவர்களை செக்ஸ் ஸ்கேண்டல்களுக்கு தூண்டிலிட்டுப் படிய வைத்த ஸ்வேதா கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு காவல்துறையின் கடுமையான விசாரணை வளையத்தில் சிக்கிய பின் ஸ்வேதா மூலமாக பல அரசு உயரதிகாரிகள் முதல் முன்னாள் மந்திரிகள் வரை செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இதில் வேதனை தரும் விஷயம் இந்த செக்ஸ் ஸ்கேண்டலில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரின் பெயரும் கூட அடிபட்டுக் கொண்டிருப்பது தான்.

இன்றைய அவசர கதியிலான ஆடம்பர வாழ்க்கை மோகமானது அப்பாவி இளம்பெண்களை இப்படியான புதைகுழிகளுக்குள் வீழ்த்த எவ்வித குற்ற உணர்வுமின்றி எந்நிலையிலும் தயாராகக் காத்திருக்கிறது. விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் பெண்களைப் பெற்றவர்களும் அவர்களது உற்றார், உறவினர், நண்பர்களும் தான். உங்கள் வீட்டுப் பெண்ணின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகக் கண்காணித்து அதைச் சரி செய்யப்பாருங்கள். அவர்களைச் சூழ்ந்து கொள்ளவிருக்கும் அபாயங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கப் பாருங்கள்.

மேற்கண்ட செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் பலிகடாக்களாக்கப்பட்ட இளம்பெண்கள் அத்தனை பேரிடமும் ஸ்வேதா, ஆர்த்தி உள்ளிட்ட செக்ஸ் புரோக்கர்கள் அவர்களை வசியம் செய்யப் பயன்படுத்திய மார்க்கம் ஒன்றுண்டு, அது என்ன தெரியுமா?

‘சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால், நான்கு பெரிய மனிதர்களின் பழக்கம் வேண்டும், அதற்கு அவர்களை இப்படி, அப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் ஆக வேண்டும், அப்போது தான் உயரத்தைச் சென்றடைய முடியும் என்பதே’ - இப்படிச் சொல்லி மூளைச்சலவை செய்து தான் அந்த அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றித் தங்களது வேலைகளை ஈடேற்றப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் உதாரணங்கள் அல்ல, உதிரிகள். இவர்களைப் போன்றவர்கள் நிச்சயம் களையப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு பணம் கொடுத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்களே அந்தப் பெரிய மனிதர்களை என்ன சொல்வது? அற்பப் பதர்கள் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் பொருந்தவில்லை.

இதில் ஆறுதலான ஒரே விஷயம், இந்தப் பெண் புரோக்கர்களை காவல்துறை வலையில் வீழ்த்தியவரும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்பது மட்டுமே! இந்த வழக்கில் குற்றவாளிகள் காவல்துறையின் பிடியின் இருந்து தப்பாமல் காத்ததில் ரூபா எனும் அந்த பெண் போலீஸ் அதிகாரியின் சேவை பாராட்டத் தக்கது.

 

]]>
investigation, SIT, மத்திய பிரதேச செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஹனிட்ரேப் செக்ஸ் ஸ்கேண்டல், ஸ்வேதா ஜெயின், ஆர்த்தி தயாள், பலிகடாக்களாகும் அப்பாவி இளம்பெண்கள், மத்தியப் பிரதேச செக்ஸ் ராக்கெட் கை வரிசை, MP SEX ROCKET, COLLEGE GIRLS FORCED TO HAVE SEX WIT https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/28/w600X390/HoneyTRAP_SEX_SCANDAL.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/28/mp-college-going--girls-honeytrapped-by-sex-brokers-for-ministers-and-higher-bureaucrats-3244107.html
3245468 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே ஆண், பெண் சடலம்.. விரிவான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது கேரள காவல்துறை! RKV DIN Monday, September 30, 2019 04:26 PM +0530  

ஆலுவாவின் தொட்டக்கட்டுக்கராவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நான்கு நாள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் திங்கள்கிழமை விசாரணையை விரிவுபடுத்தினர். கடந்த சனிக்கிழமையன்று, பாலக்காட்டில் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் (33), திரிசூரைச் சேர்ந்த மோனிஷா (25) ஆகியோரின் சடலங்கள் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே கிடந்த நிலையில் காணப்பட்டன. "மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த சம்பவத்தை தற்கொலை என்று கூற முடியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ஏனெனில் இது சந்தேகத்திற்கிடமான கொலை வழக்கு எனக் குறிப்பிடும் போதுமான உள்ளீடுகள் உள்ளன," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இந்த வழக்கின் விசாரணையை எர்ணாகுளம் கிராமப்புற எஸ்.பி. கே கார்த்திக் கண்காணித்து வருகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளே இருந்து பூட்டப்படவில்லை, காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்தபோது அவர்கள் திறந்த வெளியில் கிடந்தனர்.  தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடத்திலிருந்து அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளனர்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களிலிருந்து காவல்துறையினர் காட்சிகளைச் சேகரித்ததுடன், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்ட மோனிஷா மற்றும் ரமேஷின் மொபைல் போன்களின் அழைப்பு விவரங்களையும் ஆராய்ந்தனர்.

"இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை நாங்கள் விசாரித்து வருகிறோம். இரண்டு நபர்களும் அடிக்கடி குடியிருப்பை பார்வையிட்டனர்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகைப்படம் மற்றும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை நடத்துவதற்காக மோனிஷாவின் கணவர் சதீஷ் இந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். அலுவாவில் மொபைல் டெக்னீசியன் வேலை செய்து கொண்டிருந்த ரமேஷ், ஸ்டுடியோ வேலைகளுக்காக இங்கு பணிபுரிந்தார். சதீஷ் மோனிஷா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தாலும், சில மாதங்களுக்கு முன்பு சதீஷும் இரண்டு குழந்தைகளும் திரிசூரில் உள்ள சதீஷின் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர், அதே நேரத்தில் மோனிஷா தொடர்ந்து குடியிருப்பில் தனியாகத் தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த அறிக்கையின்படி, புதன்கிழமை பரவூர் சந்திப்பில் உள்ள ஒரு கடையில் இருந்து மோனீஷா கடைசியாக மளிகை பொருட்களை வாங்கியதைக் கண்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

]]>
kerala murder news, Bodies of man, woman found inside apartment, அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆண் பெண் சடலம், தீவிர விசாரணையில் கேரள காவல்துறை, கேரளா கொலை வழக்கு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/30/w600X390/aluva-rotting-bodies-flat.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/30/aluva-murders-bodies-of-man-woman-found-inside-apartment-3245468.html
3245404 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நீதிமன்ற உத்தரவை ஏற்று கொச்சி மராடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியேறத் தொடங்கினர்! RKV DIN Monday, September 30, 2019 11:59 AM +0530  

கேரள மாநிலம், கொச்சி மராடு பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 20 மாடிகள் கொண்ட இவை அனைத்துமே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடிக்கும்படி  கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, 4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியது.  நேற்றுமுன்தினம், இவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து கொடுக்கும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது. கூடுதல் அவகாசம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அங்கு மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது வீடுகளைக் காலி செய்ய ஆகும் செலவினங்களை ஈடுசெய்வதற்காக குடியிருப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். தங்களை மறுகுடியேற்றம் செய்வதற்காக அரசால் அடையாளம் காணப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் விரும்பினர். மக்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டபோதும், ‘அரசாங்கம் ஒரு ரியல் எஸ்டேட் தரகராக செயல்படக்கூடாது, ஆனால் வீடுகளை இழந்த அடுக்குமாடி உரிமையாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு வசதியாளராக இருக்க வேண்டும்’

- என்று அதிரடி கவுன்சிலின் கன்வீனரான சம்சுதீன் கருணாகப்பள்ளி கூறினார்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் மற்றும் சப் கலெக்டர் சினேகில் குமார் சிங் ஆகியோருடன் நடந்த சந்திப்பில் அடுக்குமாடி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகளை எழுப்பினர். மாவட்ட காவல்துறைத் தலைவர் (கொச்சி நகரம்) விஜய் சக்ரே கலந்து கொண்டார்.

இருப்பினும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும், பொருட்களை மாற்றுவதற்கும் குடியிருப்புகள் வாடகைக்கு எடுப்பதற்கும் செலவுகளை குடியிருப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

வெளியேற்றம் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அதிகாரிகள் கடுமையாக்கியதால், குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்தி, காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் வீடுகளை காலி செய்வதாகக் கூறினர். வெளியேற்ற வசதியாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் மீட்டெடுக்கப்பட்டது. குடியிருப்பாளர்களால் பணியமர்த்தப்பட்ட மினி லாரிகள் அன்றைய தினம் வீட்டுப் பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே காத்திருந்தன.

இதற்கிடையில், மராடு நகராட்சியின் கூடுதல் பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் மராடு நகராட்சி செயலாளர் எம். ஆரிஃப் முஹம்மது கானிடம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இடிப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நகராட்சிச் செயலாளராக கோட்டை கொச்சி ஆர்.டி.ஓ ஸ்னேஹில் குமார் சிங்கை அரசாங்கம் நியமித்ததை அடுத்து திரு கான் சனிக்கிழமை பிராவோம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. சிங், மராடு நகரசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து, உள்ளாட்சி அமைப்பின் வழக்கமான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், இது குடிமை பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

]]>
கொச்சி அடுக்குமாடி உரிமையாளர்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஏரிக்கரையோர குடியிருப்புகளை அகற்றுதல், illegal high-rise Maradu apartment https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/30/w600X390/maradu_housing_vacation.jpg kochi marasu housing https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/30/residents-of-the-illegal-maradu-apartments-began-moving-out-of-their-homes-as-per-hc-order-3245404.html
3243414 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் கடும் சரிவைச் சந்தித்தவர்கள் யார்?! RKV DIN Friday, September 27, 2019 03:34 PM +0530  

ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரூ. 3.80 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து 8 -ஆவது ஆண்டாக அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 

இதுதொடர்பாக ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ரூ. 1.86 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எஸ்.பி. ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். ரூ. 1.17 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக, ஆர்செலார்மிட்டல் நிறுவனத்தின் சிஇஓ லட்சுமி மிட்டல், ரூ. 1.07 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4 ஆவது இடத்திலும், ரூ. 94 ஆயிரத்து 500 கோடி சொத்து கோடி மதிப்புடன் கெளதம் அதானி 5 ஆவது இடத்திலும் உள்ளனர். அதையடுத்து, உதய் கோட்டக் (ரூ. 94,100 கோடி), சைரஸ். எஸ். பூனாவாலா(ரூ. 88,800 கோடி), பலோஞ்சி மிஸ்திரி (ரூ. 76,800 கோடி), ஷாபூர் பலோஞ்சி, திலீப் சிங்வி (ரூ. 71,500 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்துமதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ. 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 26 சதவீதம் பேர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிப்பவர்களாக உள்ளனர். மேலும், 82 வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். 152 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். "ஹெச்சிஎல்' இயக்குநர் ரோஷினி நாடார், இந்தியாவின் பணக்காரப் பெண்களில் முதலிடத்தில் உள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனங்கள் கூறுகையில், "இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இதைவிட 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றன.

தவிர;

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா வெளியிட்ட மேற்கண்ட பணக்கார பட்டியல் 2019 இன் படி, குறைந்தது 344 நபர்கள், அல்லது இந்த ஆண்டு பட்டியலில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேறப்ட்டோர், தங்களுடைய கடந் கால வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் டாப் 250 பட்டியலில் இருந்து கீழிறங்கி சரிவைச் சந்தித்த காட்சிகளும் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களில் சுமார் 112 பேர் 1,000 கோடி ரூபாயை வெற்றி இலக்கை எட்டுவதில் தோல்வியுற்றனர் - இது கிட்டத்தட்ட பாதி ஆண்டுப் பட்டியல் தான் எனும் போது இன்னும் முழு ஆண்டுக்கான பட்டியலில் இந்த வரிசைகளில் சிற்சில மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கலாம்.

உதாரணமாக, கோடீஸ்வரர் திலீப் ஷாங்க்வியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தற்போது 20 சதவீதம் சரிந்து சுமார் 71,500 கோடி ரூபாயாக உள்ளது. 2016 ல் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் பார்த்தால், திலீப் ஷாங்க்வி தன்னுடைய பழைய சொத்து மதிப்பில் பாதியை இழந்து 2016 ல் தான் அடைந்திருந்த இரண்டாவது இடத்திலிருந்து 2019 ல் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

ஆர்சலர் மிட்டல் நடத்தி வரும் ஸ்டீல் மேக்னட் லட்சுமி என் மிட்டல், ரூ1.07 லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்ட நான்காவது பணக்காரர், ஆனால் அவரது நிகர மதிப்பானது 6 சதவீதம் குறைந்து சமீப காலங்களில் உலோகத் துறையில் நிலவும் சரிவை ஒத்துக் காணப்படுகிறது.

பணக்கார பட்டியலில் இருந்து வெளியேறியவர்களில் அனில் அம்பானியும் ஒருவர். அம்பானியின் பட்டியலிடப்பட்ட வணிக சாம்ராஜ்யத்தின் பங்கு மதிப்பு ரூ2,000 கோடியாக குறைந்துள்ளது. 

]]>
எல் என் மிட்டல், India's richest list, indias richest turn bit poorer, இந்தியப் பணக்காரர்கள் லிஸ்ட் 2019, இந்தியப் பணக்காரர்களில் சரிவைச் சந்தித்தவர்கள், திலீப் சாங்வி, , அனில் அம்பானி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/27/w600X390/mukesh_ambani.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/27/richest-turned-a-bit-poorer-this-year-in-india-3243414.html
3238705 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்கள்: ரூ.100 விலையில் கிடைக்கும் DIN DIN Saturday, September 21, 2019 09:38 AM +0530  

தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்களை ரூ.100 கட்டணத்தில் பெறலாம். இதுகுறித்து அறிவிப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்: தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் தேவைப்படுவோர் அதனை, அண்ணா மேலாண்மை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.100. தபால் அல்லது கூரியர் செலவுடன் சேர்த்து ரூ.136-க்குக் கிடைக்கும். அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை-28 என்ற முகவரிக்கு வரைவோலை (ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI-28) அனுப்பி நூலைப் பெறலாம்.

]]>
sale, right to information act books, anna instituteof management studies centre, தகவல் பெறும் உரிமைச் சட்ட நூல்கள், அண்ணா மேலாண்மை நிறுவனம், ரூ.100 விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/anna.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/sep/21/தகவல்-பெறும்-உரிமைச்-சட்ட-நூல்கள்-ரூ100-விலையில்-கிடைக்கும்-3238705.html
3222506 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி காஞ்சன் பட்டாச்சார்யா மறைவு! RKV DIN Tuesday, August 27, 2019 11:32 AM +0530  

இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி எனும் சிறப்புக்குரியவரான காஞ்சன் செளதரி பட்டாச்சார்யா மும்பையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். திருமதி பட்டாச்சார்யா 1973 ஆம் ஆண்டு ஐ பி எஸ் பேட்ச்சில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேர்வான அதிகாரிகளில் ஒருவர். 2004 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் டி ஜி பி யாக பதவியேற்றுக் கொண்டபோது இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி எனும் சிறப்புக்குரியவராகி வரலாற்றில் இடம் பெற்றார். காஞ்சன் பட்டாச்சார்யா 2007 ஆண்டு அக்டோபர் 31 அன்று தம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வின் பின் அரசியல் ஆர்வம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அக்கட்சி சார்பாக 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரித்வார் மக்களவைத் தொகுதி  உறுப்பினராகப் போட்டியிட்டு தோற்றார்.

உத்தரகாண்ட் காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது முன்னாள் உயரதிகாரிகளில் ஒருவரான காஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு அவரது நினைவுகளையும், பணிக்காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்ட தன்மையையும் போற்றி இரங்கலைப் பதிவு செய்துள்ளது.

Image Courtesy: The week
 

]]>
INDIA'S FIRST WOMAN DGP, KANCHAN CHAUDHARY BATTAACHARYA, EXPIRED, DIED, இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி , காஞ்சன் செளதரி பட்டாச்சார்யா, மறைவு, காலமானார், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/kanchan_chaudary_IPS.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/27/indias-first-woman-dgp-kanchan-chaudhary-bhattacharya-expired-yesterday-3222506.html
3220410 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘ஆப்ரேஷன் பனானா’ சிரிக்க அல்ல சிந்திக்க வைக்கும் போலீஸ் நடவடிக்கை! RKV DIN Saturday, August 24, 2019 01:09 PM +0530  

ராஜஸ்தான் பிகானிர் போலீஸ்காரர்கள் கடந்த செவ்வாயன்று இரண்டு திருடர்களுக்கு வாழைப்பழங்களை சாப்பிடத் தந்து கொண்டிருந்தார்கள். அன்பு மிகுதியால் அல்ல. திருடப்பட்ட பொருளை கண்டுபிடிக்க. 

ராஜஸ்தான், பிகானிரில் கங்காசாகர் பகுதியில் செவ்வாயன்று ஷாப்பிங்கில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த திருடர்கள் இருவர் பறித்துச் சென்றனர். திருட்டு குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் போலீஸாரிடம் தெரிவித்ததில் சம்பவம் நடந்த ஓரிரு மணி நேரங்களுக்குள் அந்த திருடர்கள் பிடிபட்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் திருடிய தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் இருந்து மறைக்கும் பொருட்டு விழுங்கி விட்டான். இதை அறிந்து கொண்ட போலீஸ்காரர்கள் திருடப்பட்ட பொருளை மீட்க நடத்தியது தான் மேலே சொல்லப்பட்ட ‘பனானா ஆப்ரேஷன்’

திருடர்களைப் பிடித்த ராஜஸ்தான் போலீஸார் உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் சங்கிலியை விழுங்கியவனைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார். எக்ஸ்ரேவில் திருடன் விழுங்கிய தங்கச் சங்கிலி அவனது குடல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. குடலில் இருந்து தங்கச் சங்கிலியை வெளியில் எடுக்க வேண்டுமென்றால் ஒன்று எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது திருடனை மலம் கழிக்கச் செய்ய வேண்டும். இரண்டில்... இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே துன்பமற்ற முறை என்று மருத்துவர் பரிந்துரைக்க அதை உடனே சிரமேற்றுக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது போலீஸ்.

சங்கிலியை விழுங்கிய திருடனுக்காக 2 டஜன் வாழைப்பழங்களும், பப்பாளிப்பழங்களும் வாங்கப்பட்டன. அதை திருடனை வற்புறுத்தி சாப்பிடச் செய்தார்கள். ஒருவழியாக திருடன் கக்கா போனார். மலத்துடன் சேர்ந்து சங்கிலியும் சுலபமாக வெளியேறியது.

‘ஆப்ரேஷன் பனானா’ என்றால் என்ன?

திருடன் விழுங்கிய தங்கச் சங்கிலியை வயிற்றில் இருந்து வெளிக்கொண்டு வர வேண்டுமென்றால் அவனது குடல் சுத்தமாக வேண்டும். இயற்கையான முறையில் அது நிறைவேற வேண்டுமென்றால் அதற்குத் தேவை பொட்டாசியம் சத்துக்கள் நிரம்பிய பழங்கள். அதற்கு மட்டுமே குடலை வாரி, வழித்து சுத்தப்படுத்தும் திறன் உண்டு. தினமும் படுக்கைக்குப் போகுமுன் வாழைப்பழங்களை உண்ணும் வழக்கமுள்ளவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கக் கூடும். அதனால் திருடர்களுக்கு பொட்டாசியம் சத்து நிறைந்த வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள் அளவுக்கு அதிகமாக  உண்ணத் தந்தனர். இதை வாழைப்பழ சிகிச்சை என்றும் சொல்லலாம். இதில் திருப்திகரமான முடிவு என்பது அந்த நிமிடம் வரை நாம் விழுங்கி குடலில் சேகரமான அத்தனை பொருட்களும் முழுவதுமாக குடலை விட்டு வெளியேறுவது தான்.

பிகானிர் சங்கிலிப் பறிப்பு சம்பவத்தில் ராஜஸ்தான் போலீஸாரின் ‘ஆப்ரேஷன் பனானா’ நடவடிக்கை ஒருவழியாக சச்சஸில் முடிந்தது.

இது போன்ற சங்கிலிப் பறிப்பு திருட்டுகளில் போலீஸார் ஆப்ரேஷன் பனானா நடவடிக்கையில் இறங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் இத்தகைய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு போலீஸ் ரெக்கார்டுகள் உள்ளன. முன்பொருமுறை இதே விதமாக திருட்டில் ஈடுபட்ட திருடனுக்கு 4 டஜன் வாழைப்பழங்களை வற்புறுத்தித் தின்னக் கொடுத்து திருடிய பொருளை மீட்ட உதாரணங்களும் போலீஸாருக்கு உண்டு.


 

]]>
ஆப்ரேஷன் பனானா, சங்கிலித் திருடர்கள், ராஜஸ்தான் சம்பவம், operation banana, rajasthan police, chain snatchers, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/24/w600X390/Bananas_EPS.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/24/operation-banana---rajasthan-police-force-feed-two-dozen-bananas-to-thief-who-swallowed-gold-chain-3220410.html
3213601 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்! RKV DIN Wednesday, August 14, 2019 12:38 PM +0530  

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த 75 நாட்களில் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 வது அரசியல் சாசனப் பிரிவை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதன் மூலமாக இனிமேல் ஜம்மு - காஷ்மீரும் இந்தியாவின் இதர மாநிலங்களைப் போன்று அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் பெறும் நிலை ஏற்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடி அரசு எடுத்த இந்த முடிவு இந்தியா முழுவதுமாகப் பலரால் வரவேற்கப்பட்டாலும் இதை எதிர்ப்பவர்களும் கணிசமானோர் இருக்கிறார்கள்.

அசாதாரணமான இந்தச் சூழலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மோடியுடன் நிற்பார்கள் என அவர் எப்படி நம்புகிறார்? எனும் கேள்வியொன்று ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனம் மோடியுடன் நடத்திய கலந்துரையாடலொன்றில் அவரிடம் முன் வைக்கப்பட்டது.

அதற்கு மோடி அளித்த பதில்;

காஷ்மீர் விவகாரத்தில் தயவு செய்து 370 ரத்தை எதிர்க்கும் நபர்களின் பட்டியலைப் பாருங்கள், பரம்பரையாக அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சில நண்பர்கள் மட்டுமே. ஆனால், ஆமோதிப்பவர்களைப் பாருங்கள். பொதுவாக இந்திய மக்கள் அவர்களின் அரசியல் விருப்பம் எதுவாக இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆதரவளித்துள்ளனர் என்பதே உண்மை. முந்தைய ஆட்சிகளில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட கடுமையான அதே சமயம் அத்தியாவசியமானதுமான இந்த முடிவுகள் இன்று சாத்தியமாகியுள்ளன என்று பெரும்பாலான இந்திய மக்கள் எண்ணுகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ பிரிவு ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களை எவ்வாறு முழுமையாகத் தனிமைப்படுத்தின என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. 70 ஆண்டுகாலமாக மக்களின் விருப்பங்களை அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்தியக் குடிமக்கள் வளர்ச்சியின் பலன்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். வருவாயை அதிகரிக்க சரியான பொருளாதார வழிகள் இல்லை. இப்போது வளர்ச்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அது மட்டுமல்ல, மோடி பேசுகையில் “ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகள் எப்போதும் சிறந்த எதிர்காலத்தையே விரும்பினர். ஆனால் 370 வது பிரிவு அதை செயல்படுத்தவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீது அநீதிகள் இழைக்கப்பட்டன. தற்போது பிபிஓக்கள் முதல் உணவு பதப்படுத்துதல், சுற்றுலா என அனைத்துக்குமான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. பல தொழில் முதலீட்டைப் பெறலாம். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கல்வி திறன் மேம்படையும் என்றும் கூறினார்.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமானது மக்களின் விருப்பப் படியும் அவர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களின் அடிப்படையிலும் உருவாகும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சி முதன்மையானது. 370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கலிகள் உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தாங்களே வடிவமைப்பார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் தொடர்பான முடிவுகளை எதிர்ப்பவர்களிடம் பிரதமர் மோடி ஒரு அடிப்படை கேள்விக்கு பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மோடியின் கேள்வி:

370 மற்றும் 35 ஏ பிரிவினைத் தொடர்வது எவ்வாறு பாதுகாப்பளிக்கும்?

பொது மக்களுக்கு உதவும் எந்தவொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் பழகியவர்களுக்கு இந்த கேள்விக்கு உரிய பதில் எப்போதும் இருக்கப்போவதில்லை. இப்படியானவர்கள் அரசின் எல்லா நலத்திட்டங்களையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். எதிர்ப்பவர்களிடம் உரிய பதில் இருந்தால் அவர்களது எதிர்ப்பில் அர்த்தம் இருக்கலாம்.

ஆனால், மக்களை கொடுமைபடுத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்காக மட்டுமே எதிர்ப்பவர்களின் மனது துடிக்கிறது. அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. மாறாக, இவ்விஷயத்தில் அரசின் முடிவுகளைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் நிற்கிறார்கள். அவர்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சி மற்றும் அமைதியின் பொருட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் என்றென்றும் எங்களுடன் இருப்பார்கள் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன் என்று மோடி தெரிவித்தார்.

]]>
மோடி, காஷ்மீர், 370 ரத்து, காஷ்மீர் மக்கள், modi, jammu & kashmir, people of jammu & kashmir, modi's strong belief on people of jammu& kashmir, ladak, article 370 cancelled, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/w600X390/00000narendra_modi.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/14/why-do-you-think-the-people-of-jk-will-stand-with-you-modis-answer--3213601.html
3213585 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு! RKV DIN Wednesday, August 14, 2019 11:34 AM +0530  

ராப் பாடகி ஹார்ட் கெளரின் ட்விட்டர் கணக்கு நேற்று செவ்வாய் அன்று முடக்கப்பட்டது. அவர் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் அதைக் கண்டிக்கும் வகையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல். 

ஹார்ட் கெளர் இப்படி ஆளும் தரப்பைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு  எச்சரிக்கைக்கு உள்ளானவரே! அவர்களை மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் தலைமை நிர்வாகியான மோகன் பகவத் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டவர் தான் இவர்.

இதன் காரணமாகத் தற்போது கெளர் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரலாற்றில் மகாத்மா காந்தி, மகாவீரர் போன்ற தலைவர்கள் பிராமணர்களின் வர்ணாசிரம முறையை எதிர்த்துப் போராடி தேசத் தலைவர்கள் ஆனார்கள், அந்த வகையில் பார்த்தால் நீங்களொன்றும் தேசப்பற்று கொண்டவரெல்லாம் இல்லை’ என்று மோகன் பகவத்தின் புகைப்படத்துடன் நக்கலாகப் பதிவிட்டு ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

அதுமட்டுமல்ல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் அடிப்படையில் ஹார்ட் கெளர் மீது பலவேறு பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹார்ட் கெளர், ஓகே ஜானு, அக்லி ஒளர் பக்லி மற்றும் பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

]]>
ராப் பாடகி ஹார்ட் கெளர், தேச துரோக வழக்கு, மோடி, அமித்ஷா, யோகி, ட்விட்டர், rapper hard kaur, modi, sedition act, twitter banned, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/w600X390/0000_hard_kaur.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/14/kaur-was-booked-for-sedition-for-her-comments-3213585.html
3212892 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஸ்ரீராமனின் வம்சாவளியினர் யார்? இப்போது எங்கு இருக்கிறார்கள்? உச்சநீதிமன்ற கேள்விக்கான  எதிர்வினைகள்! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, August 13, 2019 11:52 AM +0530  

ஸ்ரீராமனின் வாரிசுகள் என்னவானார்கள்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? உச்சநீதிமன்றக் கேள்விக்கான பதில்...

ராம ஜன்ம பூமி விவகாரத்தைப் பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இதற்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் நாம் நமக்குத் தெரிந்த ராமாயணத்தை மீண்டுமொரு நினைவில் ஓட்டிப்பார்க்க வேண்டும்.

எங்கு முடிகிறது ராமாயண ராமனின் கதை?

அன்னை சீதாபிராட்டியை பூமித்தாய்க்கு தாரை வார்த்தபின் வாரிசுகளான லவகுசர்களை அழைத்துக் கொண்டு அயோத்தியை ஆளச் சென்றுவிடுகிறார் ஸ்ரீராமர்.

அங்கு ஏகபத்தினி விரதனாக ஆண்டு முடித்த ராமன், வயோதிகப் பருவம் அடைந்ததும் தனது வாரிசுகளுக்கு ஆட்சியுரிமையை விட்டுக் கொடுக்கவும், ஒரு தகப்பனாக தனது கடமையைச் செவ்வனே செய்யவும் முடிவெடித்து சரயு நதியில் இறங்கி பிறவியை முடித்துக் கொள்கிறார் என முடிகிறது வால்மீகி ராமாயணம்.

ராமாயணம் இத்துடன் முடிந்ததென்றால் லவ குசர்கள் என்ன ஆனார்கள்?

இஷவாகு வம்சம் என்பது லவகுசர்களோடு முடிவடைந்து விட்டதா?

ஸ்ரீராமனின் வம்சாவளியினர் என்னவானார்கள்?

இப்படி ஒரு கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை இந்தியாவில் உச்சபட்ச அதிகாரங்கள் கொண்டதான உச்சநீதிமன்றம், ராமஜன்ம பூமி விவகாரத்தில் மிக வெளிப்படையாக இதே விஷயத்தை வாதிப் பிரதிவாதிகளிடம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இப்போது இரண்டு வி ஐ பிக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றால்? ஒருவர் மேவார் மற்றும் உதய்பூர் ராஜ குடும்பத்தைச் சார்ந்த மஹேந்திர சிங் மற்றும் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சார்ந்த தியாகுமாரி என இருவருமே தாங்கள் ஸ்ரீராம பிரானின் வாரிசுகளான லவகுசர்களின் இன்றைய வாரிசுகள் என உறுதிபட அறிவித்திருக்கிறார்கள். 

என்ன தான் ராஜகுடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என நீதிமன்றத்துக்கு எந்த விதமான நிர்பந்தமும் இல்லை. எனினும் உச்சநீதிமன்றம், இது விஷயமாகக் கேள்வி எழுப்பியதால் மட்டுமே வாரிசுதாரர்கள் எனும் முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இவர்கள் முன்வந்ததாகக் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, தேவைப்பட்டால் தாங்கள் லவகுசர்களின் வாரிசுகள் என்பதற்குத் தேவையான அனைத்து விதமான ஆதாரங்களையும் சமர்பிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.

லவ குசர்களின் வாரிசுகள் இன்னும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம், அதைப்பற்றிக் கண்டறிய வேண்டுமென்றால் தங்களது ராஜ குடும்பத்திற்குச் சொந்தமான நூலகத்தில் தலைமுறை, தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஃபேமிலி ட்ரி’ (குடும்ப வம்சாவளி கிளையினரை அறிந்து கொள்ள உறுப்பினர்களின் பெயர்களோடு குறித்து வைக்கப்படும் பேரேடு) புத்தகம் மற்றும் ஓவியங்களையும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த தாங்கள் தயாராகவே இருப்பதாக மேற்கண்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருக்கும் ஃபேமிலி ட்ரியின் அடிப்படையில் பார்த்தால் மாமன்னர் தசரதரின் பெயர் இஷவாகு குலப் பட்டியலில் 62 வதாகவும், ஸ்ரீராமனின் பெயர் 63 வதாகவும், லவகுசர்களின் பெயர்கள் 64 வதாகவும் இடம்பெற்றுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் முதலில் வாரிசுரிமை கொண்டாடியது ராஜஸ்தான் பாஜக எம்பியும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியாகுமாரியே. அவரைத் தொடர்ந்து தற்போது மேவார் உதய்பூர் ராஜகுடும்ப வாரிசான மஹேந்திர சிங்கும் உச்சநீதிமன்றம் விரும்பினால் தனது வாரிசுரிமையை ஆதாரங்களுடன் சமர்பிக்கத் தயார் என்று முன் வந்திருக்கிறார்.

இவர்களது உரிமை கொண்டாடல் உண்மையாகவும் இருக்கலாம், உண்டாக்கப்பட்டதாகவும் அல்லது கற்பிதமாகவும் இருக்கலாம். அதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் நீதித்துறைக்கு உண்டு. ஏனென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடங்கி இன்று வரையிலும் இந்திய மக்களின் மத உணர்வுகளை பற்றி எரியச் செய்யத்தக்க நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் விவகாரங்களில் ராமஜன்ம பூமி பிரச்னைக்கு பிரதான இடமுண்டு.


 

]]>
ராமாயணம், ராம ஜன்ம பூமி, இஷவாகு வம்சாவளியினர், ஜெய்ப்பூர் ராஜகுடும்பம், மேவார் ராஜகுடும்பம், லவகுசர்கள், உச்சநீதிமன்றம், lord sri ram, lavakush, lord sriram's clans, jaipur royal family, ram janma boomi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/maha_rana.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/13/royal-families-claims-to-be-lord-rams-descendant-3212892.html
3208235 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமத் தலைவர் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவு! RKV DIN Tuesday, August 6, 2019 04:24 PM +0530  

பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.

வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி பார்த்தசாரதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்று மரணமடைந்தார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

சென்னையின் பிரபலமான பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரான ராஜலட்சுமி பார்த்தசாரதி கல்வியாளர் மட்டுமல்ல பத்ரிகையாளராகவும், தியேட்டர் கலைஞராகவும் குறிப்பிடத் தக்க ஆக்கங்களைத் தந்தவர் என்பது இவ்வேளையில் நினைவுகூரத் தக்கது.

பிரபல நடிகர் ஒய் ஜி மஹேந்திரனின் தாயாரான இவருக்கு ஒய் ஜி ராஜேந்திரன்என்ற பெயரில் மற்றொரு மகனும் உண்டு. 

மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளுடன் நிறைவாக வாழ்ந்தவரான ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக தி நகர், திருமலைப்பிள்ளை தெருவில் இருக்கும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் வைக்கப்படவிருக்கிறது.

அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணி அளவில் பெசண்ட் நகர்மின்  மயானத்தில் நடைபெறும் என்று தகவல். 


Image courtesy: Alchetron

]]>
திருமதி ஒய் ஜி பார்த்தசாரதி, ராஜலட்சுமி பார்த்தசாரதி, பத்மா சேஷாத்ரி பால பவன், மறைவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/mrs_y_g_mahendra.jpeg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/06/smt-rajalakshmi-parthasarathy-wife-of-late-sri-yg-parthasarathy-mother-of-yg-mahendran--died-at-93-3208235.html
3194407 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘ஸ்டாலின், வைகோ கெமிஸ்ட்ரி’ கேள்விக்கு வைகோவின் பதில்! RKV DIN Wednesday, July 17, 2019 06:11 PM +0530  

வைகோ ராஜ்ய சபா எம் பி ஆகலாமா? கூடாதா? அவர் மீண்டும் ஸ்டாலினோடு இணைவது அரசியல் சந்தர்ப்ப வாதமா? திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கும் முகாந்திரமா? என்றெல்லாம் ஒருபக்கம் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க வைகோ நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்று அளித்திருந்தார். அதில் மீண்டும் ஸ்டாலினுக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி எப்படி சாத்தியப்பட்டது? என்ற கேள்விக்கு வைகோ அளித்த பதில்; 

‘தளபதி ஸ்டாலின் அவர்களை முதல் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று நடத்தியதே நான் தான். நான் திருநெல்வேலி, தேரடியில் அவருக்காக ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தும் போது அதிமுக வினர் அவரை அட்டாக் செய்து போஸ்டர்கள் எல்லாம் போட்டார்கள். என் தலைவர் மகனை அழைத்துக் கொண்டு வருவேன், கேட்பதற்கு நீ யார்? என்று சொல்லி எட்டுக்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்து அழைத்து வருவேன்னு நான் அப்போ பேசினேன். அவரது சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து அவர் இளைஞரணியில் சைக்கிள் பேரணி அறிவித்த போது 38 நாட்கள் தொடர்ந்து கொதிக்கும் வெயிலில் உடலெல்லாம் கொப்புளமாகும் அளவுக்கு சிரமத்தைப் பொருட்படுத்தாமல் நானே அந்த இளைஞரணி சைக்கிள் பேரணியில் உடன் சென்றேன். அவர் என்னுடைய வீட்டில் வந்து இரண்டு முறை தங்கியிருக்கிறார்.  இப்ப இருக்கக் கூடிய உதயநிதி சின்ன கைக்குழந்தையா இருந்தப்போ ஸ்டாலின் தன் மனைவி மகனோட எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது எங்கம்மா தான் பசும்பால் காய்ச்சிக் கொடுத்தாங்க. அப்படி ரொம்ப நெருக்கமா, பாசமா இருந்தவரு. என் மேல அலாதியான ப்ரியத்தை வச்சிருந்தவரு. அதனால அவர் மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவர் வந்து இப்ப ரொம்ப முதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்னை நடத்துகிற விதம், என்கிட்ட அன்பு காட்டற விதம், அதில் அணு அளவும் எந்தவிதமான போலித்தன்மையும் இல்லை. அதுல ஒரு உயிர்த்தன்மை இருக்கு. பொதுவாழ்க்கையில் 55 வருஷமா இருக்கற என்னால அதை உணர முடியுது. அதனால நான் அவருக்கு பக்கபலமா, அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, திராவிட இயக்கத்துக்கு (நான் திராவிட இயக்கத்தில் வார்பிக்கப்பட்டவன், இதிலே உருவாகி வளர்ந்தவன்.. இன்னைக்கு திராவிட இயக்கத்துக்கு பெரிய சோதனைக்காலம். அகில இந்தியாவையே கபளீகரம் செய்து ஆக்டோபஸ் கரங்களால் திராவிட இயக்கத்தின் தொட்டிலாக இருக்கக் கூடிய தமிழகத்தையும் வளைத்து விட முயற்சி நடக்கிறது என்பது என் மனதைப் பதற வைக்கிறது. இதைப் பற்றியெல்லாம் ஆழமாக யோசித்த போது தான் நமக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. தொண்டர்கள் பலம். அது எண்ணிக்கை அல்ல, ஒருவர் 100 பேருக்குச் சமம்னு கூட இன்னைக்கு ஒரு பத்திரிகை கார்ட்டூன்ல போட்டிருக்காங்க அது உண்மை தான். ஒருவர் 100 இல்ல 1000 பேருக்குச் சமம், அப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்காங்க. ஒரு வன்முறைக்குப் போனதுண்டா? ஒரு பத்திரிகை எங்களைப் பற்றித் தப்பாக எழுதினால் அவங்களைப் போய் கல் வீசப்போயிருக்காங்களா? நான் மற்ற கட்சிகளைப்பற்றி சொல்ல விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு சக்தியை வீணாக்கி விடக்கூடாது. அது திராவிட இயக்கத்துக்குப் பயன்படட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வலு சேர்க்கட்டும்ங்கறதை கட்சில ஒரு சின்ன மனபேதம், கருத்து பேதம் இல்லாமல் முடிவெடுத்து அங்க போய் சொன்னோம். தலைவரைப் பார்க்கப் போனேன். அவரை முதல் தடவை பார்த்த போது என் கையைப் பிடித்தவர் விடவே இல்லை.ஆமாம், ரெண்டாவது தடவை போன போதும் கண்கலங்க நெகிழ்ச்சியோட தான் என்னை அழைச்சிட்டுப் போய் தலைவர் கலைஞர் கிட்ட பேசும் போது, ‘அப்பா, வைகோ வந்திருக்கார்னு’ சொன்னார்.  அப்போ நான் தலைவர் கலைஞர் கிட்ட சொன்னேன், உங்களுக்கு 29 வருடங்கள் தொடர்ந்து நிழலாக இருந்தேன், கவசமாக இருந்தேன். அது போல தம்பிக்கும் நான் இருப்பேன்னு சொன்னப்போ அவர் அவ்வளவு பூரிச்சுப் போனார்ங்கிறதை திருச்சியில் வீரபாண்டியார் நூல்வெளியீட்டு விழாவில் ஸ்டாலினே குறிப்பிட்டுச் சொன்னார். அதனால நான் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க என்ன செய்யனுமோ அதைத்தான் முழுமனதோடு இப்போது செய்திருக்கிறேன். அவர்களோடு இணைந்திருக்கிறேன்.’
 

Concept & Image courtesy: news18 channel

]]>
Stalin vaiko chemistry!, ஸ்டாலின் வைகோ கெமிஸ்ட்ரி, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/17/w600X390/vaiko-3.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jul/17/stalin-vaiko-chemistry-3194407.html
3191714 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவது சரியா? தவறா?! கார்த்திகா வாசுதேவன் DIN Saturday, July 13, 2019 05:57 PM +0530  

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேற்படி தேசத் துரோக வழக்கு பற்றிய விவரங்களை இப்போது காண்போம்.

கட்டுரையை காணொலியாகக் காண விரும்புவோருக்காக...

 

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்து வருபவர். இதையொட்டி பொடா வழக்கிலும் கைதாகி சிறை சென்றவர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேசதுரோக குற்றம் (124 ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் வைகோ மீது ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார் வைகோ. பிறகு 52 நாட்கள் கழித்து மே 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ- கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.

பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கில் ஜூலை 5 காலை தீர்ப்பளித்த நீதிபதி, வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது. தற்போது திமுக அணியில் இணைந்து, இந்த மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி. ஆகும் முடிவில் இருக்கிறார் வைகோ. அவருக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கிக் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு மதிமுக.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பவர்கள், தேர்தலில் நிற்கத் தடை இருக்கிறது. அந்த அடிப்படையில் வைகோ, எம்.பி. ஆவதற்கு இந்த தண்டனை சிக்கலை உருவாக்கும் என தெரிகிறது. அதேசமயம் தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தேர்தலில் நிற்க தடையில்லை என்கிற கருத்துகளும் வருகின்றன.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அவர் அப்பீல் செய்ய வசதியாகத்தானே தவிர, எம்.பி. ஆக அல்ல என்றும் ஒருசாரார் கருத்து கூறுகிறார்கள். இதில் ஒரு தெளிவான பதில் கிடைப்பதைப் பொறுத்தே வைகோ எம்.பி. ஆக முடியும் என ஒரு சாரார் கருதுகிறார்கள்.

இதைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைசார் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

சிலர் இதை கருத்துரிமைக்கும், ஜனநாயகத்துக்குமான உரிமை பறிப்பு என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், இந்திய இறையாண்மையைக் காப்பேன் என்று சொல்லி இந்தியச் சட்டங்களை உருவாக்கக்கூடிய தகுதி கொண்ட ஒரு பொறுப்பை வகிக்கவிருக்கும் நபர், வேட்புமனுத்தாக்கலின் போதே அதை மதிக்காமல் வன்முறையைத் தூண்டிய குற்றத்திற்கு ஆளாகி அதில் தண்டனையும் பெற்றவர் என்பது தார்மீக அடிப்படையில் முற்றிலும் தவறான முன்னுதாரணம் என்று கருத்துக் கூறியுள்ளனர். இதில் வைகோ பேசிய எந்த விஷயம் 

இறுதியாகச் சொல்வதென்றால் வைகோ எம் பி யாவதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இதற்கு முன்பே ஒரு வழக்கில் விடுதலைப்புலிகள் அதாவது தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஒரு ஈழத்தமிழ் இனத்தைக் காப்பதற்காக உருவான ஒரு இயக்கம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்துப் பேசுவது என்பது தேச விரோதம் ஆகாது என உச்சநீதிமன்றம் வைகோவுக்கு தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று இந்த வழக்கில் வைகோ மீது வைக்கப்படும் குற்றச்சாட்டும் விதிக்கப்பட்ட தண்டனையும் கூட அரசியல் சந்தர்பவாதத்தை முன்னிட்டே தவிர அதில் வேறு எவ்வித நியாயமான நோக்கங்களும் இருப்பதாகத் தெரியவில்லை என தார்மீக ரீதியாக இந்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பதில் அளித்துள்ளனர் சிலர்.

இதைப் பற்றி வைகோ என்ன சொல்லியிருக்கிறார் என்றால்?

சுதந்திரத்துக்கு முன்பு மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் ஆகியோருக்கு மட்டுமே இந்த பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. திலகர் பர்மா சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின் இந்த சட்டத்தை நீக்கும்படி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று தெரிவித்தனர். அதன் பிறகும் கூட 194 (ஏ) என்ற இந்த சட்டம் நீக்கப்படவில்லை ஆனால் இந்தியாவில் இன்று வரை இந்த சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை.

பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையெல்லாம் உணர்ந்து எனக்கு தண்டனை கிடைக்காது என நம்பினேன்.

இந்தியாவில் பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் எம்.பி. நான்தான். அதே போல் தேச துரோக வழக்கிலும் தண்டிக்கப்பட்டவன் நான தான். இந்தியாவில் மகாத்மா காந்தி உருவத்தை செய்து அதனை சுடுபவர்களும், நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைப்பவர்களும் தேச பக்தர்கள் போல சித்தரிக்கப்படுகின்றனர். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(1)-ன் படி பெண்களை கேலி செய்தல், மத பிரச்சினையை தூண்டுதல், 8(2)-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே போல் 8(3)-ன்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. என்று வைகோ தெரிவித்திருந்தார்.

ஆக மொத்தத்தில் வைகோ அன்று பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று தான் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் இந்திய இறையாண்மை என்பது எதன் மீது கட்டமைக்கப்படுகிறது? என்பதில் மக்களிடையே பலருக்கும் குழப்பம் இருப்பதால் வைகோ ராஜ்ய சபா எம்பி ஆவதற்கு சட்டபடியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி இப்போதைக்கு தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களில் பல்வேறு தரப்பினரும் கூட ராஜ்ய சபாவில் தமிழகப் பிரச்னைகள் குறித்துப் பேச வைகோ போன்ற பேச்சுத்திறன் வாய்ந்த, செயல்திறன் மிகுந்த தலைவர் அவசியம் என்ற கருத்து கொண்டவர்களாகவே இருந்து வருவது உண்மை.

]]>
vaiko elected Rajyasabha MP, Is it right or wrong?!, வைகோ ராஜ்யசபா எம்பி பதவி ஏற்பது சரியா? தவறா?, வைகோ, ராஜ்யசபா எம்பி, சட்டம், தார்மீகம், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/vaiko.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jul/13/vaiko-elected-rajyasabha-mp-is-it-right-or-wrong-3191714.html
3183092 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘ஸ்பா’ சென்ட்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 35 வெளிநாட்டுப் பெண்கள் கைது! RKV DIN Monday, July 1, 2019 12:36 PM +0530  

உத்தரபிரதேச மாநிலம், நொய்டா 18 வது செக்டர், வணிக மையப் பகுதியில் இயங்கும் சில ஸ்பா சென்ட்டர்களில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாகப் புகார் எழுந்ததை ஒட்டி  கெளதம் புத் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் தலைமையில் நேற்று மாலையில் அங்கிருக்கும் 14 ஸ்பா சென்ட்டர்களில் நொய்டா காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீண்டதாகத் தகவல்.

சுமார் 7 சர்க்கிள் அதிகாரிகள்,  8 காவல்நிலைய அதிகாரிகள், ஆண்களும், பெண்களுமாக 30 துணை ஆய்வாளர்கள், ஆன், பெண் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 14 போலீஸ் டீம்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியதில் அப்பகுதியில் இயங்கி வந்த ஸ்பா சென்ட்டர்களில் கணிசமான அளவில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சோதனையில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள். கைதானவர்களில் கணிசமானவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட அயல்நாட்டுப் பெண்கள். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ 1 லட்சம் பணமும், பீர் பாட்டில்களும், பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத ஆணுறைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆய்வாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

சோதனை நடத்தப்பட்டு குற்றம் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 14 ஸ்பா சென் ட்டர்களுக்கும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 ஸ்பா சென்ட்டர்களில் வெகு நிச்சயமாகப் பாலியல் தொழில் நடத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்.

சம்மந்தப்பட்ட ஸ்பா சென்ட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அவற்றின் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் போதைப் பொருள் பயன்பாட்டிலும் இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட முன்னணியில் இருப்பது முன்னரே அறிந்த செய்தி தான். இந்நிலையில் ஸ்பா சென்ட்டர்கள் என்ற பெயரில் வெளிநாட்டுப் பெண்களை வேலைக்கு எடுத்து அவர்களைத் தங்களது சுயநலத்திற்காக பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருப்பதாக அறியும் போது மக்களுக்கு ஸ்பா சென் ட்டர்கள் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

]]>
Sex Trade, Foreigners Among 35 Arrested, spa centres, செக்ஸ் டிரேட், பாலியல் தொழில், ஸ்பா சென்ட்டர்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/sex_trade_in_spa_centre.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jul/01/35-arrested-in-alleged-sex-trade-at-noida-spa-centres-3183092.html
3181824 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பெங்களூரில் ஓலா, உபேர் வாகனச் சேவை முறைகேடுகளுக்குச் ’செக்’ வைத்த கர்நாடக போக்குவரத்துத் துறை! RKV DIN Saturday, June 29, 2019 11:39 AM +0530  

கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை பெங்களூரில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் வாகனசேவைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளது. அரசின் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து அந்நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இயக்கத் தொடங்கினால் அது சட்ட விரோதமாகக் கருதப்படும் என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

தனியார் வாகனச் சேவை நிறுவனங்களில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென  கர்நாடக அரசு இப்படி உத்தரவிட்டிருப்பது அந்நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நேற்று வெள்ளியன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கையானது ஓட்டுநர்களால் பாராட்டப்படலாம் என்றாலும் மேற்கண்ட சேவைகளைப்பயன்படுத்திப் பழகிய பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தைத் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்திலும் இதே போன்றதொரு பிரச்னையை ஓலா எதிர்கொண்டது. கடந்த மார்ச் 18 ம் தேதி, ஓலாவின் தாய் நிறுவனமான ஏ.என்.ஐ டெக்னாலஜிஸுக்கு பிராந்திய போக்குவரத்துத் துறை கடிதம் ஒன்றை அனுப்பியது, அதில் பெங்களூரு நகரத்தில் அதன் பயன்பாட்டு அடிப்படையிலான வாகனச் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது.

போக்குவரத்துத் துறையின் இரண்டு பக்க கடிதத்தில் மொபைல் செயலி முறையில் இயக்கப்படும் ஓலா மற்றும் உபேர் வாகன சேவைகளில் 'போலி உரிமங்களைப்' பெற்று இயங்கும் பைக்-டாக்ஸி சேவைகள் பல சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவை நிரூபணமாகும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கண்ட நிறுவனங்களின் வாகன உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு அவற்றின் அனைத்து சேவைகளும் தடை செய்யப்படும் என்றும் பிராந்திய போக்குவரத்துத் துறை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் நிறுவனம் தற்போது அளித்து வரும் பயன்பாட்டு அடிப்படையிலான சேவைகள் அனைத்தும் கூட கர்நாடக மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் கூட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

தற்போதைய சட்டத்தின் கீழ் ஓலா மற்றும் உபேர் வழங்கிய கார் பூலிங் விருப்பம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருந்த போதும் கூட மார்ச் மாதத்தில் தான் விதித்திருந்த தடையை அரசு வாபஸ் பெற்றது.

ஆயினும் இப்போது மீண்டும் கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை மேற்கண்ட நிறுவனங்களின் வாகன சேவைகளுக்கு பெங்களூரு நகருக்குள் தடை விதித்திருப்பதை ஒட்டிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஓலா நிர்வாகம் தெரிவித்திருப்பது என்னவென்றால்... இந்த பிரச்னை குறித்து தாங்கள் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும், தங்களது அதிகாரிகளுடன் கலந்து பேசி அரசு போக்குவரத்துத் துறையின் அனைத்து கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் சமரசமான முறையில் பதில் காணப்படும் என்றும் "கர்நாடக மாநிலத்தில் நூறாயிரக்கணக்கான ஓட்டுநர் பங்காளிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு நிறைவேற்ற சேவை செய்வதற்கும் ஒரு இணக்கமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்று ஓலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
Karnataka Transport Department , Ola and Uber to withdraw pool services , ola & uber pool services , ஓலா உபேர் வாகன சேவைகள், ட், தடையற்ற சேவைகள், கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/29/w600X390/ola_uber.png https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jun/29/transport-department-asks-ola-and-uber-to-withdraw-pool-services-in-bengaluru-3181824.html
3180471 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் வெடிகுண்டு மிரட்டல், ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கம்! RKV DIN Thursday, June 27, 2019 05:46 PM +0530  

அமெரிக்க செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஏஐ 191 மும்பை - நெவார்க் விமானம் ‘வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

]]>
bomb threat on air india, hoax, வெடிகுண்டு மிரட்டல், புரளி, ஏர் இந்தியா விமானம், air india, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/27/w600X390/air_india.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jun/27/bomb-threat-on-air-india-flight-a-hoax-3180471.html
3178155 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் டிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடிக்க முயன்று உயிரை விட்ட டான்ஸர் இளைஞன்! RKV DIN Monday, June 24, 2019 11:56 AM +0530  

கர்நாடகாவைச் சேர்ந்த டான்ஸர் இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால் நேற்று மரணத்தைத் தழுவி இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி. 22 வயது குமார் ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் டான்ஸராகவும் இசைக் கலைஞராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். தனது வித்யாசமான விடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பிரபலமான குமார் கடந்த 15 ஆம் தேதி தனது நண்பருடன் இணைந்து மேலுமொரு வித்யாசமான டிக் டாக் விடியோ முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கழுத்து முறிந்து தண்டுவடத்தில் பலத்த அடியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடந்தது என்னவென்றால், தனது நண்பர் ஒருவரது உதவியுடன் பின்னோக்கி பல்ட்டி அடித்து அதை டிக் டாக் விடியோ பதிவாக்கும் முயற்சியில் குமார் ஈடுப்படும் போது பல்ட்டியில் தவறு ஏற்பட்டு தலை தரையில் மோதி கழுத்து முறிவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட போதும்  தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டதில் பக்கவாத நிலையில் நேற்று வரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குமார் மரணமடைந்ததாகத் தகவல்.

 

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கன ஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த குமாரின் பெற்றோர் நரசிம்ம மூர்த்தி மற்றும் ராமக்கா இருவரும் விவசாயக்கூலித் தொழிலாளிகள். தற்போது மகனை இழந்து வாடும் அந்த ஏழைப் பெற்றோருக்கு குமாரின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.

விபத்துக்குப் பின் மருத்துவமனையில் இருந்த நாட்களில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குமார், தனது விபரீத டிக் டாக் முயற்சி குறித்து மிகவும் மன வேதனைப்பட்டிருக்கிறார். சமூக ஊடகச் செயலியான டிக் டாக்கில் மேலும் மேலும் பிரபலமாகும் ஆசையில் தன்னைப் போன்ற இளைஞர்கள் இப்படிப் பட்ட ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்கு தனக்கு நேர்ந்த விபத்து ஒரு பெரும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று அவர் கூறியதாகத் தகவல்.

குமாரின் மரணம், டிக் டாக் ஆசையால் நேர்ந்தது. சமூக ஊடகச் செயலிகளில் லைக்குகளுக்காகவும் ஃபேன் ஃபாலோயிங்கை அதிகரிப்பதற்காகவும் இளைஞர்களும், பெண்களும் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படியான விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து தான் முன்பே இந்தச் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு போடப்பட்டது. ஆயினும் டிக் டாக் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அதற்கான தடை நீங்கி தற்போது மீண்டும் டிக் டாக் தன் வேலையைக் காட்டி வருகிறது.

டிக் டாக்கால் விபத்து மரணங்கள் மட்டுமா நேர்கின்றன. கொலை, குடும்பத் தகராறு, விவாகரத்துகளும் பெருகி வருகின்றன.

ஒரு சாரர், தங்களது தனித்திறமைகளை வளர்த்தெடுக்கவும், அவற்றை பொதுவெளியில் வைத்து பிறர் பாராட்டுகளைப் பெறவும், சின்னத்திரை, பெரியதிரை வாய்ப்புகளைப் பெறவும் டிக் டாக் உதவுகிறது என்று டிக்டாக்கிற்கு ஆதரவாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ, அதிலென்ன அவ்வளவு பெரிய ஆபத்தா இருக்கிறது. அது வெறும் செயலி, அதைப் பொழுது போக்கிற்காகவும், மன அழுத்தத்தைப் போக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறோம். இதிலென்ன தவறு இருக்கிறது? அதைப் போய்த் தடுப்பானேன் என்கிறார்கள். இன்னும் சிலரோ, இது மிகக் கொடுமையான கலாச்சாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். இதனால் சமுதாயத்திற்கு என்ன நலன் விளைந்து விடப் போகிறது. இதை உடனடியாக ஒழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்கிறார்கள்.

இரண்டு தரப்பில் எது வெல்கிறதோ இல்லையோ, டிக் டாக்கால் இன்று ஒரு உயிர் பறி போயிருக்கிறது மட்டும் எவராலும் மறுக்க முடியாத நிஜம்.

 

Video Courtesy: TOI

]]>
dancer died after tik tok stunt!, tik tok death, டான்ஸர் மரணம், டிக் டாக் மரணங்கள், டிக் டாக் விபத்து, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/24/w600X390/tik_tak_death.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jun/24/dancer-died-after-tik-tok-stunt-3178155.html
3175493 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு வந்த சோதனை!  RKV DIN Thursday, June 20, 2019 01:31 PM +0530  

பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு உலகளாவிய ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது கீழ்க்காணும் தகவலின் அடிப்படையில் நிரூபணம் ஆகிறது. 

டெல்லி, நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் இருக்கும் பதஞ்சலி ஸ்டோரில் 450 கிலோ நெய் பர்சேஸ் செய்திருக்கிறார் ஷோக்ஸி அபே எனும் 45 வயது நைஜீரியர். நெய் வாங்கினால் காசு தர வேண்டுமே, விலை என்ன தெரியுமா? 2.25 லட்சம் ரூபாய்கள். காசுக்குப் பதிலாக கர்ப்பரேஷன் பேங்க் டெபிட் கார்டை நீட்டியிருக்கிறார் அபே. அந்தக் கார்டைப் பார்த்ததும் கடை உரிமையாளருக்கு லேசாகச் சந்தேகம் வந்து விட்டது. 1 கிலோ 2 கிலோ என்றால் பரவாயில்லை மொத்தம் 450 கிலோ நெய்யை ஒரு மனிதன் டெபிட் கார்டில் வாங்குகிறான் என்றதும் ஜெர்க் ஆன கடைக்காரர் டெபிட் கார்டை வெர்ஃபிகேஷன் செய்ய ஷோக்ஸி அபேயிடம் தகவல்களைக் கேட்டுப்பெற முயன்றிருக்கிறார். ஆனால் சொந்தக் கார்டாக இருந்தால் தானே உண்மையான தகவல்களைத் தர முடியும். ஷோக்ஸியிடம் இருந்தது தான் ஸ்கேன் செய்து திருடப்பட்ட டெபிட் கார்டு ஆயிற்றே! எனவே ஷோக்ஸி மற்றும் அவருடன் வந்த மற்ற இரு நண்பர்களாலும் கடைக்காரரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. பொருத்தமான வேறு அடையாள அட்டைகள் இருந்தால் அதைத் தரச்சொல்லிக் கேட்ட போதும் அதற்கும் ஷோக்ஸி தரப்பில் மழுப்பி இருக்கிறார்கள். கடைக்காரர் என்ன முட்டாளா? இவர்களை நம்பி 450 கிலோ நெய்யைத் தாரை வார்க்க?!  அவர் நெய்யைத் தர மாட்டேன் என மொத்த பாக்கெட்டுகளையும் எடுத்து மீண்டும் கடைக்குள் அடுக்கி விட்டார். இதற்கிடையில் கடைக்காரரின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் ஷோக்ஸியும் அவரது திருட்டுக் கூட்டாளிகளும் கடைக்காரர் அசந்த நேரமாகப் பார்த்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டமெடுத்து விட்டனர். 

ஆனாலும், விடாக்கண்டனான கடைக்காரர் எதற்கும் இருக்கட்டுமே என்று, டெல்லி, நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல்நிலையத்தில்  ஒரு புகாரைப் பதிந்து வைத்து விட்டார். புகாரின் மீதான விசாரணையில் தான் தெரிய வந்திருக்கிறது.
 
ஷோக்ஸி அபே 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் விசா இல்லாமல் இந்தியாவில் வாழ்ந்து வந்திருக்கிறார் என்று. அது மட்டுமல்ல பதஞ்சலி ஸ்டோர்ஸில் பயன்படுத்தப் பார்த்த டெபிட் கார்டும் கூட USA டிஸ்கவர் பேங்க் கார்ட் என்று தெரியவந்திருக்கிறது. அதைக் க்ளோன் செய்து இங்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஒருவழியாக துப்புக் கிடைத்து கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் அல்ஸ்டோனியா அபார்ட்மெண்டில் வசித்து வந்த ஷோக்ஸி துபேயைக் கைது செய்து விட்டது டெல்லி போலீஸ். அவரது கூட்டாளிகளையும் விரைவில் பிடித்து விடுவதாக உறுதி அளித்துள்ளனர் டெல்லி போலீஸார்.

சரி ஷோக்ஸிக்கு எதற்கு அத்தனை கிலோ நெய் என்று இந்தச் செய்தியை வாசிக்கும் யாருக்கேனும் சந்தேகம் வரவேண்டுமே?

இங்கே பதஞ்சலியில் குறைந்த விலைக்கு நெய் வாங்கி நைஜீரியாவில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பதற்காகத் தான் நெய் வாங்கப்பட்டதாகத் தகவல். 
 

]]>
patanjali ghee, baba ram dev, Nigerian man arrested, பதஞ்சலி நெய், பாபா ராம்தேவ், நைஜீரியன் கைது, 450 கிலோ நெய், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/20/w600X390/pathanjali_ghee.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jun/20/nigerian-man-arrested-while-purchasing-450-kg-of-pathanjali-ghee-in-delhi-3175493.html
3161586 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்... பாகுபலி ஸ்டைலில் பதவியேற்றார் ஆந்திர மக்களின் ப்ரியத்துக்கு உகந்த ‘ஜெகன் அண்ணா’! RKV DIN Thursday, May 30, 2019 01:39 PM +0530  

ஆந்திரமுதலவராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார் ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டி. திறந்தவெளி ஜீப்பில் பவனி வந்த ஜெகன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் விஜயவாடாவில் இருக்கும் இந்திரா காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் இன்று நண்பகல் சரியாக 12.23 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் 151 சட்டமன்றத் தொகுதிகளிலும் 22 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி மிகப்பெரிய வெற்றியைச் சாதித்துள்ளது.

ஒய் எஸ் ஆர் ஜெகன், ஆந்திராவின் மிக இளம்வயது முதல்வராகக் கருதப்படுகிறார். 2009 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் துர்மரணத்திற்குப் பிறகே தீவிர அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெகன். அரசியலில் தமது தந்தையைப் பின்பற்றி ஜெகன் நடத்திய பிரஜா சங்கல்ப யாத்ரா எனும் நீண்ட நடைபயணமே அவருக்கு இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாக ஜெகன் நம்புகிறார். அந்த நடைபயணத்தில் அவர் எளிய மக்களோடு மக்களாக பல இடங்களுக்கும் பிரயாணித்து நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளை அறிந்து அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ஜெகனின் தந்தை ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் அரசியல் வழித்தடம். பொதுமக்களின் பிரச்னைகளை நேரில் கண்டறிய வேண்டுமென்றால் தலைவர்கள் மக்களுடன் இரண்டறக் கலக்க வேண்டும். அதற்கு ஒரே வழி,  ‘பிரஜா சங்கல்ப யாத்ரா’. அந்த வழிமுறை தற்போது ஜெகனுக்கும் கை கொடுத்துள்ளது. தனது அரசியல் ஃபார்முலா மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று 2019 சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றியைச் சாதித்துள்ள ஜெகன் தனது பதவியேற்பு நிகழ்ச்சியையும் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் பாகுபலி ஸ்டைலில் உணர்வுமயமாக நிகழ்த்திக் காட்டி மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றுள்ளார். கட்சி தொடங்கிய 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டியாகிய நான்... என ஜெகன் தனது பதவியேற்பு உரையைத் தொடங்கியதுமே மக்களிடையே உணர்ச்சிகரமான வரவேற்பும், கை தட்டலும் அதிர்ந்தது ஸ்டேடியத்தில். இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு ஜெகனை வாழ்த்தினர். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஜெகனுக்கு பதவியேற்பும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழா நிகழ்வில் ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டியின் தாயாரான ஒய் எஸ் ஆர் விஜயாம்மா, ஜெகனின் மனைவி பாரதி ரெட்டி மற்றும் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெகனின் வெற்றியைத் தொடர்ந்து அவரது கட்சியின் அதிகாரபூர்வ தேர்தல் எழுச்சிப்பாடலாக இருந்த ‘ராவாலி ஜெகன், காவாலி ஜெகன் மன ஜெகன்’ எனும் தேர்தல் பிரச்சார பாடல் இணையத்திலும் செய்தி ஊடகங்களிலும் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தப் பாடலில் ஜெகன் நடைபயணமாக ஆந்திர மக்களைச் சந்திக்கும் காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒய் எஸ் ஆர் ஜெகன் முதல் கையெழுத்திடப் போகும் திட்டமாக  ‘நவரத்னாலு ஸ்கீம்’ குறிப்பிடப்படுகிறது. நவரத்னாலு ஸ்கீம் என்பது ஒன்பது மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய கோப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 

]]>
ஆந்திர முதல்வர், பதவியேற்பு விழா , Y S JAGAN MOHAN REDDY, Y SR CONGRESS, ANDHRA CM, ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/30/w600X390/y_s_jagan_reddy_swearing_in_ceremany.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/may/30/y-s-jagan-mohan-reddy-ane-nenu--ys-jegan-swearing-in-ceremany-3161586.html
3159483 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாஜகவின் விஸ்வரூப வெற்றிக்கு சுப்ரமணிய சுவாமி கூறிய ‘நச்’ காரணம்! RKV DIN Monday, May 27, 2019 11:40 AM +0530  

 

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் வடமாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூப வெற்றி குறித்தும் தமிழகத்தில் அந்த வெற்றி செல்லுபடியாகாமை குறித்தும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தமிழகப் பிரபலமும் ஆன சுப்ரமணிய சுவாமியிடம் கேள்வியொன்று முன் வைக்கப்பட்ட போது அவரளித்த பதில்;

பாஜகவின் தனித்த மாபெரும் வெற்றிக்கு இந்திய அளவில் ஒரே ஒரு காரணம் தான் முன்னணியில் இருக்கிறது. அது இந்துத்வா கொள்கை.

இன்றைய நிலையில் கடந்த தேர்தலைக் காட்டிலும் முதன்முறை ஓட்டளிக்கக் கூடிய இளம் தலைமுறையினர் 10% அதிகரித்திருக்கின்றனர். அவர்களுக்கு தேசபக்தி அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் என்றாலே, அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது, அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது, எல்லைப்புறச் சண்டைகளில் எதிர்த்தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்குள் போன இந்திய வீரர்கள் யாரும் உயிருடன் திரும்பி வர முடியாது என்றெல்லாம் இருந்த மாயையை உடைத்து புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மிகச்சரியாக பழிதீர்த்துக் கொண்டது இந்தியா. காரணம் நம் வீரர்களிடையேயும், இந்திய மக்களிடையேயும் நிலவிய தேசபக்தி. அகில இந்திய அளவில் பாஜகவின் கொள்கையாக இருக்கும் இந்த எழுச்சி உணர்வை தமிழகத்தில் சரியாகத் தூண்டி விட்டாலே போதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக எந்த மாநிலக்கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமலே கூட தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். அது தான் எனது விருப்பமும் கூட. அதை விட்டு விட்டு பாஜகவின் தமிழகத் தலைவர்கள் தலைமையைக் கவர இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளையே மீண்டும் தொடர்ந்து செய்வார்களானால் தமிழகத்தில் பாஜக அதிமுக, திமுக என்று எவருடனாவது கூட்டணி வைத்துக் கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களிலும் 4 அல்லது 5 சீட்டுகள் பெற்று அடுத்தடுத்த தேர்தல்களையும் சந்திக்க வேண்டியது தான். இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைக்காட்டிலும் என்னைக் கேட்டால் நான் டிடிவி தினகரனுடன் இனி வரும் தேர்தல்களில் பாஜக கூட்டணி வைக்கலாம் என்று பரிந்துரைப்பேன். 

- என்றார் சுவாமி.

அத்துடன், பாஜக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது கூட சந்தர்ப்பவாதக் கூட்டணியே. இனி 2 ஆண்டுகளுக்கு மட்டும் இவர்களுடனான கூட்டணி போதுமானது. அதன் பின் இவர்களை அனுசரிக்கத் தேவை இல்லை. தற்போது ஆட்சி மாற்றம் நிகழாமல் தடுக்கவே இந்தக் கூட்டணி தேவைப்படுகிறதே தவிர பிறகும் மாநில அளவில் இவர்களுடன் இணைந்திருக்க அவசியமில்லை. கிடைத்திருக்கும் இந்த 2 ஆண்டுகள் முடிவதற்குள் தமிழக பாஜகவினர், இங்கிருக்கும் மக்கள் மனதில் கோயில்களில் திராவிடர் கழகத்தினர் அடித்து வரும் கொள்ளைகள், தெய்வ நிந்தனைகள், அராஜகங்கள் குறித்து போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி, உங்களுக்கு அவர்களால் எந்த ஒரு ஆபத்து என்றாலும் உடன் இணைந்து நின்று போராட நாங்கள் உடன் இருக்கிறோம் என்கிற தைரியத்தையும் புகுத்த வேண்டும். அப்படிப் புகுத்தினால் மக்கள் வடமாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பாஜகவை நம்பும் நிலை வரும். அப்படித்தான் தமிழகத்தில் வேரோடி இருக்கும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வேர்களையும், இன்னும் மிஞ்சி இருக்கும் விடுதலைப் புலிகள் குழுவைச் சார்ந்தவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். இதையெல்லாம் இந்த 2 ஆண்டுகளுக்குள் செய்து முடித்து விட்டால் போதும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றே பெரும்பான்மை தொகுதிகளில் தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.

- என்றும் சுப்ரமணிய சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

]]>
சுப்ரமணிய சுவாமி, பாஜக வெற்றி, தமிழக பாஜக, இந்துத்வா, Subramai swamy, tamilnadu BJP, Hinduthva, BJP's GRAND VICTORY, REASON BEHIND BJP'S GRAND VICTORY, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/27/w600X390/s.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/may/27/subramania-swamys-reason-for-bjps-grand-victory-3159483.html
3158324 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 2019 மக்களவைத் தேர்தல் 10 முக்கியமான வெற்றியாளர்கள் VS தோல்வியாளர்கள்! RKV DIN Saturday, May 25, 2019 12:14 PM +0530  

2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றியடைவார்கள் என்று கருதப்பட்ட பல விஐபி வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். தோற்றுப் போவார்கள் என்று கருதிய சிலர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கோட்டை என்று கருதப்பட்ட அமேதியில் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிரிதி இரானி இம்முறை வெற்றி வாகை சூடியிருக்கிறார். தனது சொந்தத் தொகுதியில் தோற்றாலும் எதிர்பாராத விதமாக கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான ராகுல் காந்தி.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவில் இம்முறை இலக்கியவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். அவர்கள் முறையே திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வேட்பாளராக வென்றிருக்கும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் போன்றோர்.

பெங்களூரு மத்தியப் பகுதி வேட்பாளரான நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியைத் தழுவி இருக்கிறார். 

ஒருவேளை எந்தக் கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் பிரதமர் பதவியை அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட தலைவர்களான மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சிகள் இம்முறை பெருமளவில் தோல்வியைத் தழுவியுள்ளன. 

கேரளாவில் சபரிமலை விவகாரத்தின் பின்னணிக் காரணங்களால் கம்யூனிஸ்டுகளுக்குத் தோல்வியே கிட்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையாக ஜெயித்திருக்கின்றன. இடைத்தேர்தல்களில் திமுக இம்முறை மிகச்சிறந்த வாக்கு வங்கியை மீட்டெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது துரதிர்ஷ்டமே! அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றி விகிதம் தமிழகத்தில் குறைவு.

ஆக, இந்த தேர்தலைப் பொருத்தவரை பலரது வெற்றி, தோல்விகள் முன்னமே மக்களால் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்த போதும் சில அரசியல் பிரபலங்களது வெற்றி திகைக்கச் செய்வதாக இருந்தது.  சிலரது தோல்வி எதிர்பாராததாக இருந்ததும் உண்மை. அப்படி திகைக்கச் செய்த முக்கியமான 10 வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியாளர்கள் குறித்த பட்டியலை தெரிந்து கொள்வோம்.

 

முக்கியமான 10 வெற்றியாளர்கள்

 

பெயர் கட்சி தொகுதி
அமித்ஷா பாஜக காந்திநகர்
ஸ்ம்ருதி இரானி பாஜக அமேதி
ஃபரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சி ஸ்ரீநகர்
ரவி ஷங்கர் பிரசாத் பாஜக பாட்னா சாஹிப்
மனீஷ் திவாரி காங்கிரஸ் அனந்தபூர் சாஹிப்
சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சி பாரமதி
ராஜ்நாத் சிங் பாஜக லக்னெள
நிதின் கட்கரி பாஜக நாக்பூர்
மேனகா காந்தி பாஜக சுல்தான்பூர்
சாத்வி ப்ரக்யா சிங் தாக்குர் பாஜக போபால்

முக்கியமான 10 தோல்வியாளர்கள்

 

பெயர் கட்சி  தொகுதி
மல்லிகார்ஜுனா கார்கே காங்கிரஸ் குல்பர்கா
கன்னையா குமார் கம்யூனிஸ்ட் கட்சி பெகுசராய்
புபிந்தர் சிங் ஹூடா காங்கிரஸ் சோனிபட்
ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் குனா
மூன் மூன் சென் திரிணாமூல்  அசன்சல்
ஜெயப்ரதா பாஜக ராம்பூர்
மிலிந்த் தியோரா காங்கிரஸ்  தெற்கு மும்பை
பைஜயந்த் பாண்டா பாஜக  கேந்திர பத்ரா
எம் வீரப்ப மொய்லி காங்கிரஸ் சிக்கபலபூர்
சம்பித் பத்ரா பாஜக  பூரி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Image Courtesy:  Zee news

]]>
WINNERS, LOSERS, 2019 LOKSABHA ELECTIONS, PROMINENT WINNERS, PROMINENT LOSERS, 2019 பாராளுமன்றத் தேர்தல், முக்கியமான வெற்றியாளர்கள், முக்கியமான தோல்வியாளர்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/25/w600X390/winners_vs_losers.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/may/25/important-winners-and-losers-in-2019-india-loksabha-election-3158324.html
3139218 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘கேன்சருக்கு பசு மூத்திரம் சிறந்த மருந்து’: சாத்வி பிரக்யா கருத்து! RKV DIN Wednesday, April 24, 2019 11:34 AM +0530  

போபால் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள சாத்வி பிரக்யா இந்திய அரசியலில் பசுவின் புனிதத் தன்மை குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் சமீபத்தில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தான் அளித்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரத்தில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த பிரக்யா தற்போது பெயிலில் வெளிவந்துள்ளதோடு மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த திங்களன்று வேத மந்திரங்கள் முழங்க 11 துறவிகளின் ஆசீர்வாதத்துடன் சாத்வி பிரக்யா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அத்தொகுதியில் பிரக்யாவை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்.

பிரக்யா தனது நேர்காணலில் பசுவின் புனிதம் குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

பஞ்ச கவ்யம், கேன்சருக்கான அருமருந்து!
 
பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம், பால், தயிர் மற்றும் நெய் இந்த மூன்று பொருட்களையும் குறிப்பிட்ட அளவு கலந்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யம் எனும் ஆயூர்வேத திரவம் கேன்சருக்கு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. அதை சோதித்துப் பார்க்க விரும்பினால், சிறந்த உதாரணமாக நானே உங்கள் முன் நிற்கிறேன். கடந்த காலங்களில் நானொரு கேன்சர் பேஷண்ட். மார்பகப் புற்றுநோயால் கடும் அவஸ்தைகளுக்கு உள்ளான எனக்கு பசு மூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யம் கொடுத்துத் தான் மருத்துவர்கள் குணப்படுத்தினார்கள்.

இப்போது என் நோய் குணமாகி விட்டது. ஏனெனில் தொன்று தொட்டு நமது வேதங்களும், புராணங்களும் பசு மூத்திரத்தின் புனிதம் மற்றும் இன்றியமையாமை குறித்து அதிகமாகப் பேசியே வந்திருக்கின்றன.

பசு மூத்திரம் மட்டுமல்ல...

வீட்டில் பசு வளர்ப்பதும் தெய்வீகமானது தான்.

பசுவை அதன் பின்புறத்திலிருந்து மென்மையாக முகம் வரைக்கும் நீவிக் கொண்டே வந்தால் அது பசுவுக்கு சுகமாக இருக்கும். பசு மனம் மகிழும். பசுவின் மனம் மகிழ்வதற்கு ஈடாக நமது வீடுகளில் நிம்மதியும், செல்வமும் கொழிக்கத் தொடங்கும். அதே சமயம். பசுவை முகத்தில் இருந்து நீவிக் கொண்டே பின்புறம் வரை சென்றால் அது அசூயையாக உணரும். காப்பாளர்களை மீறித் திமிறிக்கொண்டு ஓட முயலும். அப்போது அதன் மனம் சஞ்சலத்திலும் பயத்திலும் நிலைகொள்ளும். அதற்கு ஒப்பாக மனிதர்களான நமது வாழ்வும் சதா சஞ்சலத்துடன்  அமைவதாக மாறிப் போகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் மனிதனின் ரத்த அழுத்தத்தை முறையாகப் பேணுவதில் பசு மசாஜ் மிகச்சிறந்த சிகிச்சைமுறையாகக் கருதப்படுகிறது.

பசு குறித்துப் போற்றிப் பேச சுவாரஸ்யமான இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ பசுவை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறோம். தெய்வமாகப் பூஜிக்க வேண்டிய பசுவை நாள்தோறும் கஷ்டப் படுத்தி அதை வதைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கொரு முடிவு கட்டவேண்டும். என்றார் பிரக்யா.

]]>
சாத்வி பிரக்யா, கோமியம், பசு மசாஜ், மார்பகப் புற்றுநோய், ரத்த அழுத்தம், sadhvi pragya, breast cancer, cow urine, panchgavya, blood pressure, rubbing a cow, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/24/w600X390/sadhvi_pragya.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/apr/24/sadhvi-pragya-claims-cow-urine--cured-her-breast-cancer-3139218.html
3138572 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்: மதப்பிரச்சாரத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் உமாசங்கர் ஐஏஎஸ்! RKV DIN Tuesday, April 23, 2019 04:32 PM +0530  

தமிழகத்தைச் சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான உமா சங்கர் ஐஏஎஸ் தனது கிறிஸ்துவ பக்தியின் காரணமாக மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். சமீப காலங்களில் உமாசங்கர் ஐஏஎஸ் அவரது மதப்பிரச்சாரங்கள் மற்றும் ஃபெய்த் ஹீலிங் (நம்பிக்கை சிகிச்சைமுறை) நம்பிக்கைகளால் தீவிரமான சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ‘சிதி’ தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த உமாசங்கர், அங்கேயும் தனது மதபோதனைகளைத் துவக்கி ஃபெயித் ஹீலிங் வேலைகளையும் தொடங்கவே உடனடியாக தேர்தல் ஆணையம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேற்றியதோடு மீண்டும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பியுள்ளது.

தனது தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சிதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் உமாசங்கர் ஐஏஎஸ். தனக்கான சிகிச்சைக்காக அங்கே சென்றவர் பிறகு தன் சிகிச்சையை மறந்து அங்கே இருந்த பிற நோயாளிகளுக்கு மதபோதனையும், ஃபெய்த் ஹீலிங்கும் செய்யத் தொடங்கவே அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர் உமாசங்கரின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் பிறகே இந்தச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆயினும் இவ்விஷயத்தில், தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களென அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் உமாசங்கர் ஐஏஎஸ் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசங்கர் ஐஏஎஸ் தனது கிறிஸ்தவ மதப்பற்றை எப்போதும் மறைத்ததில்லை. உலகறிய, ஊரார் அறியத்தான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. அவரது மதப்பிரச்சாரத்தின் தீவிரத்தனத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் டே ஆஃப் லார்ட் ஜீசஸ் (Day of Lord Jesus) எனும் யூடியூப் சேனலுக்குச் சென்று ஒருமுறை பார்வையிடலாம். அதையொட்டி பொதுமக்களிடம் இருந்து வந்த ஆட்சேபணைப் புகார்களின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தன் மீதான நடவடிக்கை குறித்து உமாசங்கர் இதுவரை எவ்வித எதிர்ப்பையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

1990 ஆம் ஆண்டு பேட்ச் இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளில் வென்று ஐ ஏ எஸ் அதிகாரியாகத் தேர்வானவர் உமாசங்கர் ஐஏஎஸ். அடிப்படையில் இந்து தலித் பிரிவைச் சார்ந்தவராக இருந்தபோதும் 2008 ஆம் ஆண்டில் கிறிஸ்தவராக மதம் மாறினார். ஒருகாலத்தில் சட்ட விரோதிகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான காரியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளில் முதன்மையானவர் எனப் பெயரெடுத்துக் கொண்டிருந்தவர் தற்போது தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக சர்ச்சைக்குரிய வகையில் அடையாளம் காணப்பட்டு வருவது காலத்தின் கோலம். இயற்கைச் சீற்றங்களின் போது கடவுளின் சாபத்தால் தான் மக்கள் இத்தகைய இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாக நேர்ந்தது என்று கருத்துத் தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டதோடு, அவ்வப்போது கிறிஸ்தவ மதத்தைப் போற்றுவதற்காக இந்து மதத்தை தூற்றியும் வந்தார்.

தனது மதபோதகத் தனத்துக்காக உமாசங்கர் ஐஏஎஸ் கண்டிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு, ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு என்று அவரது மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய தடை விதித்திருந்தது. கன்யாகுமரியில் பொது மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றக்கூடிய வகையிலான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார் எனக்கூறி உமாசங்கர் ஐஏஎஸ் அங்கிருந்த சிலரால் தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் நான் பணத்திற்காகவோ, அன்பளிப்புகளுக்காகவோ கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறேன்’ என்றார் உமாசங்கர் ஐஏஎஸ்.

உமா சங்கர் ஐஏஎஸ் தனிமனிதராக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் வரையில் அது அவரது அடிப்படை உரிமை சார்ந்த விஷயம். ஆனால், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு இப்படியான மதப்பிரச்சாரங்களில் ஈடுபடுவது தான் பலதரப்பிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

]]>
உமாசங்கர் ஐஏஎஸ், மதப்பிரச்சாரம், ஃபெய்த் ஹீலிங், மத போதனை, Uma Shankar IAS, COMMUNAL CALAMITIES, DayofLord Jesus YOUTUBE CHANNEL, preaching, FAITH HEALING, UMA SHANKAR REMOVED AS POLL OBSERVER, MP MADYA PRADESH, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/23/w600X390/umashankar_IAS.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/apr/23/தேர்தல்-பார்வையாளர்-பொறுப்பிலிருந்து-நீக்கம்-மதப்பிரச்சாரத்தால்-மீண்டும்-சர்ச்சையில்-சிக்கும்-உமாசங-3138572.html
3134968 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சவுதி - இரு இந்தியர்கள் மரண தண்டனை விவகாரம்! RKV DIN Wednesday, April 17, 2019 01:10 PM +0530  

சவுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் எனும் இரு சீக்கியர்கள் குடித்து விட்டு சண்டையிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்கள். முதலில் அது ஒரு நியூசன்ஸ் வழக்காகப் பதிவாகி விசாரணைக்கு உள்ளானது. ஆனால், விசாரணையின் போது தான் தெரிய வந்தது, அவர்கள் குடித்து விட்டுச் சண்டையிட்டது மட்டுமல்லாமல் அதற்கும் முன்பே திருடிய பணத்தைப் பங்கு பிரிக்கும் தகராறில் தங்களது கூட்டாளியைக் கொலை செய்த விவகாரம். 

இந்தியாவின் லூதியானாவில் இருந்து சவுதி சென்றடைந்த ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் மற்றும் ஆரிஃப் இமாமுதீன் மூவரும் கூட்டாளிகள். நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவது தான் இவர்களின் தொழில். அப்படி கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரிக்கும் போது தகராறு ஏற்பட்டதில் முதலிருவரும் இணைந்து ஆரிஃப் இமாமுதீனைக் கொன்று விடுகிறார்கள். கொலையைச் செய்து விட்டு சில வாரங்கள் அதை மறைத்தும் இருக்கிறார்கள். பிறகெப்படியோ குடியின் காரணமாக நேர்ந்த தெருச்சண்டையில் குட்டு வெளிப்பட உடனே அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையிலடைத்தது சவுதி காவல்துறை. சவுதியைப் பொருத்தவரை நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவதும் கூட மரண தண்டனைக்குரிய குற்றமே! (இதை அவர்கள் சட்டப்படி ஹிராபா என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது நெடுஞ்சாலைகளில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிறது சவுதி சட்டம்) 

அத்துடன் இவர்கள் கொள்ளையடித்ததோடு தங்கள் கூட்டாளியைக் கொலை செய்து அதையும் மறைக்க முயன்றார்கள் எனும் குற்றமும் சேர்ந்து கொள்ள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களது குற்றத்துக்கான வழக்கு விசாரணை 2017, மே 31 ஆம் நாள் நடைபெற்றது. அப்போது இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணையின் போது தூதரக அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தான் இருவருக்கான தண்டனை நெடுஞ்சாலைக் கொள்ளையின் அடிப்படையில் தீர்ப்பாகக் கூடும் என முடிவானது. அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கின் போக்கை அறிந்து வந்தனர். ஆயினும் இம்மாத தொடக்கத்தில் சவுதி சிறையில் இருக்கும் இரு சீக்கியர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் தேடத் துவங்கியதும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மீண்டும் இந்த வழக்கின் போக்கை அறிய சவுதி அரசை தொடர்பு கொண்ட போது தான் தெரிய வந்திருக்கிறது... நெடுஞ்சாலைக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட அந்த இரு சீக்கியர்களுக்கும் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விஷயம். 

இரு நாட்டு அரசு நடைமுறைகளின் படி சவுதி அரசு, அயல்நாட்டில் இருந்து பணிக்காக சவுதி வந்து அங்கு குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனை பெறவிருக்கும் கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்றும் முன் அவர்களுடைய தாய் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆயினும் குறிப்பிட்ட இந்த வழக்கில் அந்த நடைமுறைகள் எதையும் சவுதி அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவர்கள் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளிக்காமலேயே தண்டனையை நிறைவேற்றி இருப்பதுடன், மரண தண்டனையில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உடலையும் தாய்நாட்டுக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் இத்தகைய தண்டனைகளில் சவுதி அரசு பின்பற்றும் கடுமையான சட்டங்களையே அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் முன்வைக்கிறார்கள்.

சவுதிக்கு பணி நிமித்தம் 2013 ஆம் ஆண்டு வாக்கில் லூதியானாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த இரு சீக்கியர்களின் கதை இப்படி முடிந்தது. அவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றம் பற்றித் தெரிய வந்தது கூட சத்விந்தர் சிங்கின் மனைவி சீமா ராணி, சவுதியில் இருக்கும் தன் கணவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று அளித்த பெட்டிஷனின் பின்னேயே இந்தியத் தூதரரக அதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லையேல் இன்னும் கூட அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வந்திருக்க வாய்ப்பில்லை. சீமாராணியின் பெட்டிஷனின் பின்பு தான் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இரு சீக்கியர்களின் உடலை அளிக்கக் கோரி இந்தியத் தூதரகம் சவுதி அரசைக் கேட்டுக் கொண்டது. ஆயினும் அதற்கு சவுதி அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் சவுதியின் கடுமையான சட்டங்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

மேற்கண்ட வழக்கில் அந்த இரு சீக்கியர்களும் செய்தது குற்றம். முதல் குற்றம் வேலை நிமித்தமாகச் சென்ற நாட்டில் குழு சேர்ந்து கொண்டு நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபட்டது. இரண்டாவது குற்றம் கொள்ளையில் பங்குத்தகராறு காரணமாகக் கூட்டாளியைக் கொன்றது. இத்தகைய இரு குற்றங்களையும் செய்து விட்டு இன்று இந்தியாவில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பெயிலில் வெளிவந்தோ அல்லது காசை வாரி இறைத்து சந்தேகத்தின் பேரில் ஒட்டுமொத்த வழக்கில் இருந்தே வெளிவந்தோ ஜாலியாக ஊரைச் சுற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னாரால் தான் கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டும் கூட மேல்முறையீட்டுக்கு மேல் முறையீடாகச் செய்து அரசியல், பண பலம் மற்றும் அதிகார பலத்தால் வழக்கில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக உலவக்கூடிய கொடுங்குற்றவாளிகள் இந்தியாவில் பலர் இருக்கக் கூடும். அவர்களை சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடிந்ததில்லை. 

ஆனால், சவுதி அரசில் அப்படி எந்த அவலமும் நேராமல் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள இரு இந்தியர்களுக்கும் முறைப்படி தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை எண்ணி எல்லாம் சட்டப்படி தான் நடந்திருக்கிறது என்று ஆறுதல் கொள்வதா? அல்லது குறைந்தபட்சம் தண்டனை நிறைவேற்றம் குறித்து சவுதியில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளித்து விட்டு இவர்கள் தண்டனையை நிறைவேற்றி இருக்கலாமே! இதென்ன தாய்நாட்டுக்கே தெரியாமல் இரு இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதென்றால் அது எப்பேர்ப்பட்ட அராஜகம், அநியாயம்? என்று ஒரு இந்தியனாகப் பொங்கி எழுவதா? என்பது தான் விளங்கவில்லை.

]]>
Two indians in saudi arabia executed for murder, hirabha, saudhi, beheaded in saudhi, 2 indians, இரு இந்தியர்கள், மரணதண்டனை, இந்தியத் தூதரகம், சவுதி மரண தண்டனை, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/17/w600X390/saudi_sentenced_to_death.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/apr/17/indian-duo-were-executed-for-murder-in-saudi-3134968.html
3130672 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கேரளாவின் வலிமை வாய்ந்த அரசியல்வாதி கே எம் மணி மறைவு! RKV DIN Wednesday, April 10, 2019 03:45 PM +0530  

கொச்சி: கரிங்கோழக்கல் மணி அலைஸ் KM மணி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. கேரளாவின் மிக உயரமான அதே சமயம் வலிமை நிறைந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்ட மணி, கேரள காங்கிரஸ் தலைவராக நீண்ட நெடிய அரசியல் அனுபவங்கள் கொண்டவர். வயது மூப்பின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதலே கொச்சி தனியார் மருத்துவமனையொன்றில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.57 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணித்த KM மணிக்கு மனைவியும் 6 வாரிசுகளும் உண்டு.

மறைந்த KM மணி 54 வருடங்களாக கேரள மாநிலம் 'பலா' சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக தொடர்ந்து 13 முறை தேர்தலில் வென்று எம் எல் வாகக் கோலோச்சியவர் எனும் பெருமைக்குரியவர். கேரள அமைச்சரவையில் தொடர்ந்து 11 முறை நிதியமைச்சராகவும் செயல்பட்டவர். ஒரு அரசியல்வாதியாக அனைத்துப் பெருமைகளையும் சாதித்தவரான  மணி மாநில அளவில் உச்ச அதிகாரம் படைத்த பதவியாகக் கருதப்படும் ’முதல்வர்’ பதவியை மட்டும் கடைசி வரை வகித்தவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்முறை வென்றபோதே முதல்வர் பதவிக்கு KM மணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் என்ன காரணத்தாலோ தன் வாழ்நாளின் இறுதி வரை முதல்வராகமலே மறைந்த வலிமை மிகுந்த கேரள அரசியல்வாதி எனும் பட்டத்துக்கு உரியவரானார் மணி. 1965 ஆம் ஆண்டிலேயே தேர்தலில் வென்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனபோதிலும் அந்த முறை சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படவே இல்லை. ஆக KM  மணி முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினரானது வெற்றி பெற்ற இரண்டாண்டுகளின் பின்னரே. மணி 1975 ஆம் ஆண்டு அச்சுத மேனன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக அங்கம் வகித்தார். தொடர்ந்து E K நாயனார், PK வாசுதேவன் நாயர், CH முகமது கோயா, K கருணாகரன், AK அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி உள்ளிட்டோரது அமைச்சரவையிலும்  நிதி அமைச்சராக அங்கம் வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். நிதி அமைச்சராக இதுவரை 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சிறப்பும் மணிக்கு உண்டு.

நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் KM மணி சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அது 2014 ஆம் ஆண்டு விஸ்வரூபமெடுத்த கேரள பார் ஊழல் குற்றச்சாட்டு. கேரளாவில் இருக்கும் 400 பார்களுக்கான உரிமங்களைப் புதுப்பித்துத் தரும் வேலையில் சுமார் 1 கோடி ரூபாய் வரை ஊழல் செய்யப்பட்டதாகவும் அதில் KM மணிக்கு நேரடிப் பங்கு உண்டென்றும் கேரள உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. உயர்நீதிமன்றத்தின் நேரடி குற்றச்சாட்டின் பின் 2015 நவம்பரில் KM மணி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 40 ஆண்டுகளாக ஒரே கட்சிக்காகத் தான் பாடுபட்ட போதும் தன் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டபோது கட்சி தன் பக்கம் நிற்காமல் வேடிக்கை பார்த்தது என்ற மன வருத்தத்தில் சில காலம் கேரள காங்கிரஸில் இருந்து மணி விலகி நின்றார். அது குறுகிய காலம் தான். இரண்டு ஆண்டுகளின் பின் மீண்டும் தாய்வீடு திரும்பினார்.

]]>
politician KM Mani passed away, kerala's tallest politician, KM Mani passed away, KM Mani, KM மணி, கேரளாவின் உயர்ந்த அரசியல்வாதி, கே எம் மணி மறைவு, KM மறைவு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/10/w600X390/km_mani_passed_away.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/apr/10/modern-keralas-tallest-political-leader-km-mani-passed-away-3130672.html
3129469 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஃபேஸ்புக் அராஜகம், பயனாளியின் வீட்டுக்கே சென்று அரசியல் கருத்து அவருடையது தானா? எனச் சான்றுகள் கேட்டு சோதித்த கொடுமை! RKV DIN Monday, April 8, 2019 12:15 PM +0530  

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இம்முறை பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களையும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் ஆளும் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கு ஆதரவாக இந்தியப் பயனாளர்களிடையே பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நீடித்து வரும் நிலையில் தற்போது புது தில்லி ஃபேஸ்புக் பயனாளி ஒருவருக்கு நேர்ந்த விநோதமான அனுபவம் அனேக ஃபேஸ்புக் பயனாளர்களிடையே கடும் அதிருப்தியையும், தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புதி தில்லியைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் ஒருவரது வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார் ஃபேஸ்புக் பிரதிநிதி ஒருவர். எப்படி என்றால் பாஸ்போர்ட் என்கொயரிக்கு காவல்துறை அதிகாரியொருவர் வீடு தேடி வருவாரே அந்த மாதிரி! வந்தவர், ஃபேஸ்புக் பயனாளரிடம் அவரது ஆதார் கார்ட் நம்பர் உட்பட வேறு நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கான சான்றுகள் அனைத்தையும் காட்டுமாறு வற்புறுத்தியிருக்கிறார். எதற்காக என்றால் குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்கின் உரிமையாளர் இவர் தானா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அந்தக் கணக்கில் வெளியிடப்பட்ட அரசியல் கருத்து அவரால் எழுதப்பட்டது தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இத்தகவலை செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளி தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாததால் அவரது பெயரை நாங்கள் இங்கு குறிப்பிடவில்லை.

ஆயினும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்த அதிர்ச்சியில் உறைந்த அந்த பயனாளி, ஆஃப்டர் ஆல் ஒரு ஃபேஸ்புக் பதிவைக் காரணம் காட்டி ஃபேஸ்புக் பிரதிநிதியால் வீட்டுக்கே வந்து விசாரணை மேற்கொள்ள முடியுமெனில் நாம் என்ன மாதிரியான பாதுகாப்பற்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நான் இதுவரை இப்படியொரு வினோதமான விசாரணையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இது எதற்காக மேற்கொள்ளப்பட்டது. அரசு சார்பாக ஃபேஸ்புக் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அப்படியே இருந்தாலும் கூட ஒரு சமூக ஊடக வலைத்தள நிர்வாகம் தனது பயனாளியை அவர் எழுதிய ஒரு கருத்துக்காக இப்படி குற்றவாளியை விசாரிப்பதைப் போல வீட்டுக்கு வந்து நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்ப முடியுமா? என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் வெளிவர முடியவில்லை’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அந்த நபர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது நிஜமா என்பதை அறிய IANS செய்தி நிறுவனம் ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு தொடர்ந்து மின்னஞ்சல் செய்தும் பதிலேதும் கிடைக்கவில்லை எனத் தகவல்.

இந்தச் சம்பவம் மட்டும் உண்மையானால் சமூக ஊடகங்களின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளம் ஏற்றப்படலாம். சமூக ஊடகங்கள் எக்காரணம் கொண்டும் தங்களது பயனாளிகளின் அனுமதி இன்றி அவர்களது தகவல்களைப் பிறருக்கு பகிரக் கூடாது என்பது விதி. அதை ஃபேஸ்புக் மீறியிருக்கிறது.

ஒருவேளை குறிப்பிட்ட நபர் எழுதும் கருத்து சர்ச்சைக்குரியதாக இருந்தாலோ அல்லது மக்களை மூளைச்சலவை செய்வதைப் போல இருந்தாலோ அதில் அதிருப்தி இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட சமூக ஊடகங்கள் அவற்றை தங்களது தளத்திலிருந்து நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட அந்தப் பயனாளரின் கணக்கை முடக்கலாம். இப்படியான நடவடிக்கைகளே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், தில்லி சம்பவம் புதுமையாகவும், விநோதமாகவும் இருக்கிறது இது  சமூக ஊடக தளங்களில் ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசியக் காப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது.

நேரடியாக பயனாளரின் வீட்டுக்கே சென்று நேரடி விசாரணையில் இறங்குவது என்பது இன்ஃபர்மேசன் டெக்னாலஜி ஆக்ட், 2000 அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடலாம். பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசிய விடுவதாக குறிப்பிட்ட சமூக ஊடக நிறுவனம் மற்றும் அரசு மீது வழக்குப் போட வகையுண்டு என்கிறார்கள் விவமறிந்த வழக்கறிஞர்கள்.

இந்த விவகாரத்தில் பயனாளரின் குற்றச்சாட்டையொட்டி ஃபேஸ்புக் தனது தலையீட்டை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
Facebook, Delhi Man's House for Aadhaar Verification Over Political Post, verification, aadhar verification, ஃபேஸ்புக், முகநூல், ஆதார் வெரிஃபிகேஷன், ஃபேஸ்புக் பிரதிநிதி, சமூக ஊடகம், மத்திய அரசு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/8/w600X390/facebook.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/apr/08/facebook-sending-its-representatives-to-users-home-to-verify-the-political-content-was-actually-written-by-him-3129469.html
3103359 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் சிறப்பு... RKV DIN Tuesday, February 26, 2019 11:10 AM +0530  

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்புறத்தை ஒட்டி இருப்பிடங்களை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஃபிப்ரவரி 14 ஆம் நாள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் காஷ்மீர், புல்வாமாவில் நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கான பதிலடி என இந்திய அரசு அறிவித்திருக்கிறது. ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காஷ்மீர், புல்வாமாவில் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது வெடிமருந்துகள் நிரம்பிய காரை ஏற்றி மோதி வெடிக்கச் செய்து மாபெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு. இதில் பேருந்தில் பயணித்த 40 வீரர்களும் மரணித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் இருவரும் அடக்கம். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் உரிய வகையில் வெகு விரைவில் இதற்கான பதிலடியை இந்திய ராணுவம் அளிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

அவ்வகையில் பாக் எல்லையை ஒட்டிய பயங்கரவாத முகாம்களின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலை தகுந்த பதிலடியாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிராஜ் 2000 என்பவை ஃபிரான்ஸ் நாட்டில் தயாராகி உலகம் முழுதும் பல்வேறு நாடுகளுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் போர் விமானங்களாகும். இதைத் தயாரிப்பது ஃப்ரான்ஸைச் சார்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஸன் நிறுவனம். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4 ஆம் தலைமுறை போர் விமானமாக அடையாளப் படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இவ்வகை போர்விமானங்கள் 1970 களின் பிற்பகுதியில் மிராஜ் 3 எனும் பெயரில் அறிமுகப்படுத்தப் பட்டு அவற்றுக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பின் பின் அவற்றையே முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000 N, மிராஜ் 2000 D போன்ற தாக்குதல் போர் விமானங்களும், மிராஜ் 2000-5 போன்ற மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி பார்த்தால் இன்று உலகெங்கும் சுமார் 600 க்கும் மேற்பட்ட மிராஜ் 2000 ரக போர்விமானங்கள் உலகெங்கும் 9 நாடுகளில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது.

மிராஜ் 2000 போர் விமானத்தில் அதன் கட்டுப்படுத்தக்கூடிய புதிய நுட்பங்கள், எதிரி விமானங்களை வெகு விரைவில் கண்டுகொள்ளும் உணர்வுக் கருவிகள், கணினி அமைப்புகள், மிகத் துல்லிமான இலக்கை குறிவைக்கும் அமைப்புகள், ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் அதனை மேலும் 20 ஆண்டுகளுக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று இந்திய விமானப் படை நம்புகிறது.

]]>
miraj 2000 fighter jets, மிராஜ 2000 போர் விமானங்கள், இந்தியா பதிலடி, பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, புல்வாமா தாக்குதல், pulwama attack, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/26/w600X390/miraj_2000.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/feb/26/மிராஜ்-2000-ரக-போர்-விமானங்களின்-சிறப்பு-3103359.html
3098326 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் யாருடனும் கூட்டணி இல்லை, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்! RKV DIN Monday, February 18, 2019 04:05 PM +0530  

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி கூட்டணி இன்றி போட்டியிடவிருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் சீமான் போட்டியிடப் போவதில்லை. அவருடைய கட்சி சார்ந்து நிறைந்த கல்வியறிவு பெற்ற பொருத்தமான நபர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்படவிருக்கின்றனர். அதற்கான முன் ஆயத்தங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூட்டணி இன்றி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? தோல்வி கண்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சீமான் அளித்த பதில்;

‘என்னை யாரும் இந்தத்தேர்தலில் நீ வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. நாங்கள் மாற்று அரசியலுக்கான ஒரு விதையைத் தூவும் வேலையை செய்திருக்கிறோம். இதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் மக்களுக்கானதாகத் தான் இருக்குமே தவிர, போட்டியிடுபவர்களுக்கானது அல்ல. எனவே அதைப்பற்றிய கவலையெல்லாம் எனக்கு இல்லை. நான் சொல்ல வேண்டிய கருத்துகளை, கொள்கைகளை நாடாளுமன்றத்தில் பேச எங்கள் கட்சியில் பொருத்தமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை இந்தத் தேர்தலில் களமிறக்க விருக்கிறோம். எனவே வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் எங்களுக்குப் பயமில்லை என சீமான் பதில் அளித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, சீமானை தமிழகத்தில் களமிறக்கியதே பாஜக தான் என்றொரு வதந்தி சமூக ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆரம்பம் முதலே தேசிய கட்சிகளின் மீதான எங்களது நிலைப்பாடு அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதே. அப்படியிருக்க பாஜக என்னை வளர்த்து விடுகிறது என்பதெல்லாம் அவதூறான செய்திகள். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்கவேண்டுமென்பது தான் எங்களுடைய குறிக்கோள். அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி என்னை களமிறக்க முடியும்? ஒருவேளை அவர்கள் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்கள் என்றால் நான் நிச்சயம் அதை வரவேற்கிறேன் என்று சிரிக்கிறார் சீமான்.

நான் மாற்று அரசியலை முன்வைத்தே அரசியலுக்கு வந்தேன். பணமும், புகழும் மட்டும் தான் குறிக்கோள் என்றால் அது எனக்கு நான் இருக்கும் சினிமாத்துறையிலேயே அளவில்லாமல் கிட்ட வாய்ப்புண்டு. அதை விட்டு விட்டுத்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இதை கேலி, கிண்டல் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். அதற்காக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் அமைதியாகி விட மாட்டேன். என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
 

]]>
seeman, parliment election 2019, no allaiance, சீமான், 2019 பாராளுமன்றத் தேர்தல், தனித்துப் போட்டி, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/18/w600X390/seeman.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/feb/18/seemans-stand-in-parlimentary-election-2019-3098326.html
3097087 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இதைப்பற்றி எந்த மீடியாவாவது இதுவரை விவாதமேடை நடத்தியிருக்கிறதா? RKV DIN Saturday, February 16, 2019 01:03 PM +0530  

ஜம்மு... புல்வாமாவில் வியாழனன்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய ஆயுதத் தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா ராணுவத்தைப் பொருத்தவரை இது மிகப்பெரிய பயங்கரம். நிகழ்ந்து விட்ட இந்த கொடூரம் குறித்து உளவுத்துறை முன்பே அறிவுறுத்தி இந்திய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடன் இருந்த போதும் நிகழ்ந்து விட்ட இந்த வன்முறையை இந்தியக் குடிமக்கள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்பது எத்தனை நிஜமோ அதே அளவு நிஜம் அங்கே எல்லையில் காவல் காக்கும் வீரர்களின் மனதில் இருக்கும் ஏக்கமும் கூட. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்... இந்த தேசமக்கள் இன்னும் கூட அல்லது இப்போதும் கூட தேசத்தைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும் ராணுவ வீரர்களான தங்களுக்கு உரிய மரியாதையையும், கெளரவத்தையும் அளிக்கவில்லையோ அல்லது தங்களது இழப்பு ஷண நேரம் பிரேக்கிங் நியூஸ்களில் அடிபட்டு மக்களால் உணர்ச்சிவசப்பட்டு உச்சுக் கொட்டப்பட்டு மலர்வளையம் வைத்து நான்கைந்து தேச பக்தி மிக்க ஸ்டேட்டஸ்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிறகு அப்படியே மறக்கப்பட்டு விடும் அனேக பிரச்னைகள்  போலவே மக்களால் கையாளப்படுகின்றனவோ என்று! இந்த காணொளியில் ராணுவவீரர் ஒருவர் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

 

அவரது ஆதங்கத்தைப் பற்றி இங்கே அமைதியான வாழ்வு வாழும் குறைந்த பட்சம் உயிரைப் பணயம் வைக்காமல் வாழும் ஒவ்வொரு குடிமக்களும் யோசிக்க வேண்டுமா? இல்லையா? காணொளி வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்குள் பலரைச் சென்றடைந்திருக்கவும் கூடும். இதைப் பற்றிய பொதுமக்கள் கருத்தை அறியும் ஆவலுடன் தினமணி இதை வெளியிடுகிறது. 

நிஜமாகவே மீடியாக்கள் விவாத மேடை நடத்த வேண்டியது இந்த விஷயங்களின் மீது தானே தவிர வேறு எந்த உப்புச் சப்பற்ற விஷயத்தின் மீதும் அல்ல.

ஒவ்வொரு முறையும் பயங்கரவாதத் தாக்குதல்களின் போதும், போரின் போதும் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்து எல்லையில் பனிமலைச் சிகரங்களின் ஊடே உறைபனியுடன் உறைபனியாக உறைந்து கண்ணுக்குச் சிக்காது தேடி எடுக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் அனேகம். 

அவர்களது பிரதிநிதிகளாக எவர் குரல் எழுப்பினாலும் அதற்கு உரிய கவனம் கிடைப்பதே நியாயம்.

]]>
TERRORIST ATTACK, pulwama attack, CRPF JAWANS DIED, பயங்கரவாதம், புல்வாமா தாக்குதல், ஜம்மு, சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/16/w600X390/Pulwama.jpeg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/feb/16/army-man-throwing-question-to-the-people-of-inida-and-media-3097087.html
3096458 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘இன்னொரு மகனையும் தாய்நாட்டுக்காக பலி கொடுக்கத் தயார்’ புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவவீரரின் தந்தையின் தீரம்! RKV DIN Friday, February 15, 2019 12:41 PM +0530 எழுச்சி!

ரத்தன் தாக்கூர், ஜம்மு... புல்வாமாவில் நேற்று பாகிஸ்தான் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் ராணுவ வீரர். அவரது இறப்புச் செய்தி கேட்டு கதறிக் கொண்டிருந்த நிலையிலும் ரத்தன் தாக்கூரின் தந்தை கூறிய எழுச்சி மிகுந்த வார்த்தைகள் அங்கிருந்தோரிடையே தேசபக்தியை ஊக்குவிப்பதாக இருந்ததோடு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும் இருந்தது.

இந்தத் தாக்குதலுக்கான தகுந்த பதிலடியை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் நிச்சயமாக அளிக்கும். அவர்கள் நிச்சயமாக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இதனாலெல்லாம் நாம் வீழ்ந்து விட மாட்டோம். ஒரு மகனை இழந்து விட்டேன் என்பதால் நான் ஓய்ந்து விட மாட்டேன். தாய்நாட்டுச் சேவைக்காக எனது இன்னொரு மகனையும் அனுப்பத் தயாராக இருக்கிறேன். என்று அந்தத் தந்தை தன் இழப்பினூடே கதறிய காட்சி காண்போரை நெக்குருக வைப்பதாக இருந்தது.

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர. அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து,பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

]]>
புல்வாமா தாக்குதல், ஜம்மு, ரத்தன் தாக்கூர், pulwama attack, ratan thakur, patriotism, தேசபக்தி, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/15/w600X390/pulwama.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/feb/15/ready-to-sacrifice-other-son-for-india-3096458.html
3086777 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 31-01-19 (விடியோ) DIN DIN Thursday, January 31, 2019 07:57 PM +0530
 

]]>
Big News, Top News, Big Breaking , Breaking, Daily News, https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/jan/31/இன்றைய-முக்கியச்-செய்திகள்-விடியோ-3086777.html
3054158 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘குட் சமரிட்டான் லா’ என்றால் என்ன? பொதுமக்கள் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சட்டம் இது! RKV DIN Saturday, December 8, 2018 01:53 PM +0530  

இந்திய அளவில் கணிசமாகச் சாலை விபத்துகளைச் சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில்  தமிழகம் தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறதாம். இதில் ஆண்டுதோறும் 16,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்கிறது சாலைவிபத்துக்களுக்கான புள்ளி விவரங்கள். இதைத் தடுக்க சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது விழலுக்கு இறைந்த நீராகிறது. சாலை விபத்துக்களின் போது உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் 1 மணி நேரத்தைத் தான் கோல்டன் ஹவர்ஸ் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த 1 மணி நேரத்தில் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி...இப்போது சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர்... நமது கண்ணெதிரே சாலை விபத்துக்கள் நடந்தால் உடனே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடிய மனநிலையில் இருக்கிறோம் என?

அதே போல கண்ணெதிரே நடக்கும் பாலியல் வன்முறைக் குற்றங்கள், கடத்தல் குற்றங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக் கூட நம்மில் எத்தனை பேர் உடனடியாக காவல்துறையில் பதிவு செய்யவோ அல்லது சம்மந்தப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரிவிக்க முயற்சிக்கிறோம் என்று யோசியுங்கள்.

மேற்கண்ட சம்பவங்களில் சிறுகாயம் அல்லது சிறு பிரச்னை என்றால் நிச்சயம் பலர் உதவத்தான் செய்கிறார்கள். அதெல்லாம் அந்த ஸ்பாட்டோடு சரி. காயங்கள் அதிகமிருந்தாலோ அல்லது படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு தப்பிய நிலையில் இருந்தாலோ... உதவக் கூடியவர்களின் எண்ணிக்கை நிச்சயம் வெகு குறைவே! காரணம் உதவியவர்களையே காவல்துறை சந்தேகிக்கக் கூடும், அல்லது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு தொகை கட்ட வேண்டியதாக இருக்கலாம். அல்லது காவல்துறை விசாரணை அது, இது என்று இழுத்தடிக்கக் கூடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இதெல்லாம் எதற்கு தேவையற்ற தலைவலிகள்? என்ற பீதியில் தான் பலரும் கூட விபத்துக் காலங்களில் உதவ மனமிருந்தும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டும் காணாமலும் சென்று விடுகிறார்கள். ஆனால், இந்த மாதிரியான பீதிகளைத் தவிர்த்து விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவக் கூடியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியிருப்பது இன்று வரை எத்தனை பேருக்குத் தெரியும்?

விபத்தில் படுகாயமுற்றவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவக்கூடியவர்களை ஊக்குவிக்கவுமே இப்படி ஒரு சட்டம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த சட்டம் தான் ‘குட் சமரிட்டன் லா’ இது 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம்

இந்த சட்டத்தின்படி, நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு அசம்பாவித சம்பவத்தைக் கண்ணெதிரே காண நேர்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (அசம்பாவிதம்  என்பது இங்கே வாகன விபத்து மட்டுமே அல்ல... அது கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.) உடனடியாக அந்த அசம்பாவிதத்தை நீங்கள் காவல்துறையில் பதிவு செய்ய விரும்பினால் உங்களது பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிறது இந்தச் சட்டம்.

அதேபோல சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்க நினைக்கும் நல்ல உள்ளங்கள் அப்போதும் தங்களது பெயர், முகவரி குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. முதற்கட்ட சிகிச்சைக்கான தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்கிறது இந்தச் சட்டம்.

இது மாதிரியான சம்பவங்களில் உதவக்கூடியவர்களின் பெயரைக் கூட பதிவு செய்யக்கூடாது என்கிறது ‘குட் சமரிட்டன் லா’

அதுமட்டுமல்ல மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளை பாதிக்கப்பட்டவர்களிடமும் கேட்கக் கூடாது என்கிறது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறையினரிலே கூட இன்னும் கணிசமானோருக்கு இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்கிறதாம் ஒரு சர்வே.

எனவே முதற்கட்டமாக காவல்துறையினருக்கும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் இச்சட்டம் குறித்தான முதலுதவிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்கிறார் காவல்துறை உயரதிகாரி ஒருவர்.

‘குட் சமரிட்டன் லா’ சட்டத்தின் படி 911 எனும் எண்ணுக்கு அழைத்து தாம் கண்ணெதிரே காணும் அசம்பாவிதங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிப்பவர்கள் குட் சமரிட்டன் அதாவது உதவக்கூடிய நல்லிதயங்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
 

]]>
Good samaritan law, குட் சமரிட்டன் லா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/8/w600X390/good-samaritan-laws-save-lives.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/08/what-is-good-samaritan-law-3054158.html
3054153 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஜெயலலிதாவை விட்டு சொந்தங்கள் விலகிச் சென்றதற்கான நிஜமான காரணம்! RKV DIN Saturday, December 8, 2018 12:24 PM +0530  

 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கும் அவருடைய நெருங்கிய சொந்தங்களுக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருந்ததில்லை என்பது ஊரறிந்த செய்தி. அந்த சுமுகமின்மைக்கான காரணம் ஜெயலலிதாவைச் சுற்றி ஆக்ரமித்த மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் மட்டுமே என்பதாகவே பலரது நினைப்பும் இன்று வரை நீடிக்கிறது. ஆனால், உண்மை அது மட்டுமே அல்ல.. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி தந்தி தொலைக்காட்சி வெளியிட்டு வரும் ஜெ ஜெயலலிதாவாகிய நான் எனும் விடியோ தொகுப்பில் தோன்றி தனது அத்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது ஜெயலலிதாவின் மாமா மகள் தெரிவித்த விஷயம் என்னவென்றால்,

‘அத்தை முதன்முறையாக அரசியலில் காலூன்றி ஜெயிக்கும் வரைக்கும் வெகு ப்ரியமாகவும், சுமுகமாகவும் அவர் எங்களுடன் பழகினார். ஆனால், அதிமுகவின் செயலாளராக ஜெயித்த பிறகு அவருக்கும், எங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. ஏனென்றால் உறவினர்களில் என் அப்பா உட்பட பலருக்கும் அவர் அரசியலில் ஈடுபடுவது பிடிக்காமல் இருந்த காரணத்தால் அவர் எங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கலாம். அவருடனான உறவில் விரிசல் விழுந்ததற்கான காரணமாக வேறு யாரையும் குறிப்பிடுவதைக் காட்டிலும் அவரே தான் காரணமாக இருந்தால் என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் குடும்பத்தில் அவரது தலைமுறை சார்ந்த உறவினர்களின் இறப்பைக் கூட கண்டுகொள்ளாமல் அவர் இருந்த போது பிறகு எங்களையெல்லாமா அவர் பொருட்படுத்தப் போகிறார். அதனால் விலகி இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டோம். அவர் தயவில் வாழ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லாத காரணத்தால் நாங்களும் அவரைத் தள்ளி நின்று பார்த்தோமே தவிர போய் ஒட்டிக் கொள்ள நினைக்கவில்லை.’ என்பதாக ஜெயலலிதாவின் மாமா மகள் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Concept Courtesy: Thanthi TV

]]>
Jayalalitha, TRIBUTE, JAYALALITHA'S COUSIN, ஜெயலலிதா நினைவுகள், ஜெயலலிதாவின் உறவினர், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/8/w600X390/jayalalitha.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/08/reason-for-why-jayalalithas-relatives-made-distance-from-her-3054153.html
3053566 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 07-12-18 (விடியோ) DIN DIN Friday, December 7, 2018 08:58 PM +0530
 

]]>
https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/07/todays-top-news-3053566.html
3052910 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 06-12-18 (விடியோ) DIN DIN Thursday, December 6, 2018 11:29 PM +0530
 

]]>
https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/06/இன்றைய-முக்கியச்-செய்திகள்-06-12-18-3052910.html
3052301 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 05-12-18 (விடியோ) DIN DIN Wednesday, December 5, 2018 10:08 PM +0530
 

]]>
https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/05/இன்றைய-முக்கியச்-செய்திகள்-05-12-18-3052301.html
3050994 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 03-12-18 (விடியோ) DIN DIN Wednesday, December 5, 2018 06:38 PM +0530
 

 
 
]]>
https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/03/இன்றைய-முக்கியச்-செய்திகள்-3050994.html
3050942 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அயோத்தியில் கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் இருவருக்கும் பொதுவாக பல்கலைக்கழகம் கட்டலாமே! RKV DIN Monday, December 3, 2018 12:45 PM +0530  

பல பத்தாண்டுகளாக அயோத்தி என்றாலே ஒன்று ராம ஜென்ம பூமி அல்லது பாபர் மசூதி என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே மக்கள் மனதில் பதிவாகியுள்ளன. அங்கும் மக்கள் வசிக்கிறார்கள். மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் நகர்களுக்கும் கிடைக்கக் கூடிய அத்யாவசிய வசதிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

பாபர் மசூதியை முன்னிட்டு இந்து, முஸ்லிம் கலவரங்கள் அதிகமாக நிகழ வாய்ப்பிருப்பதாகக் கருதியே அயோத்தியை வந்தடைய வேண்டிய நல்ல நல்ல திட்டங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இந்நிலை மாற வேண்டும். உண்மையான ராமராஜ்யம் என்பது அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய அமைதியான வாழ்க்கைச் சூழலை ஒட்டியே கணக்கிடப்பட வேண்டும். 

எனவே அயோத்தியில் ராமர் கோயிலோ அல்லது பாபர் மசூதியோ கட்டுவதற்காக போராடுவதை விட்டு விட்டு அந்த இடத்தில் இரு மதத்தைத் சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது அயல்நாட்டு மாணவர்களும் வந்து பயின்று பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கலாமே என தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மனிஷ் சிசோடியா ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவர். அக்கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்று...அனைவருக்கும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே முழுமையான கல்வி வசதிகளைச் செய்து தருதல் என்பது. அக்கொள்கைக்கு ஏற்ப மனிஷ் சிசோடியா தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனிஷ் சிசோடியாவிடம் ராமர் கோயில் விவகாரம் பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் தனது தரப்பு கருத்தாக வெளியிட்டது;

அங்கே ராமர் கோயிலும் வேண்டாம், பாபர் மசூதியும் வேண்டாம். இரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவாக பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டி அனைவரும் சென்று புழங்கக் கூடிய விதத்திலான கல்விச்சாலையாக அதை மாற்றலாம். என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து; ராம ராஜ்ஜியம் என்பது ராமர் கோயில் கட்டுவதில் இல்லை மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி அவற்றை மேம்படுத்துவதில் தான் இருக்க முடியும் எனவே அயோத்தியில் ராமர் கோயில், மசூதி கட்டுவதற்கான போராட்டங்களைக் கைவிட்டு இரு மதத்தைச் சார்ந்த கரசேவகர்களும், இஸ்லாமிய அன்பர்களும் அங்கு பல்கலைக்கழகம் அமைக்கப் போராடலாம். என்றார்.

கடந்த சனிக்கிழமை அன்று ஆர் எஸ் எஸ் கர சேவகர்கள் பலர், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை வற்புறுத்தும் வகையில் ‘சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில் ரத யாத்திரை ஒன்றைத் துவக்கியுள்ள இச்சமயத்தில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ள இக்கருத்து முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

]]>
RAM TEMPLE ISSUE, MANISH SISODIA, NEED UNIVERSITY NOT MANDIR, மனிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி, ராமர் கோயில் விவகாரம், பாபர் மசூதி, ஆர் எஸ் எஸ், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/3/w600X390/ram_temple.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/03/need-education-not-ram-mandir-manish-sisodia-talking-about-ram-temple-issue-3050942.html
3050936 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ரயில்! RKV IANS Monday, December 3, 2018 11:25 AM +0530  

இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18 தனது சோதனை முயற்சியில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை கடந்த ஞாயிறன்று நிறைவு செய்தது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் அற்ற அதிவிரைவு ரயிலே நாட்டின் அதிவேக ரயில்களில் முதன்மையானது என ஐசிஎஃப் ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார். ட்ரெயின் 18 தனது அதிவிரைவு சோதனை முயற்சியை நேற்று கோட்டா சாவாய் மாதோபூர் பிரிவில் நிறைவு செய்தது. ரயில் 18 அதிவிரைவு ரயிலுக்கான சோதனை ஓட்ட முயற்சியில் பெரும்பான்மை நிறைவு பெற்று விட்டதாகவும் இன்னும் ஒரு சில சோதனை முயற்சிகளே பாக்கியுள்ள நிலையில் இதுவரை குறிப்பிடத்தக்க வகையிலான பிரச்னைகளோ, தவறுகளோ எதுவும் நேரவில்லை... ட்ரெயின் 18 சேவைகளை மேம்படுத்தும் பணியே தற்போது நடைபெற்று வருகிறது என ட்ரெயின் 18 ஐ தயாரித்த சென்னை ஐ சி எஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ். மணி IANS செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சோதனை ஓட்ட முயற்சியில் வென்ற ரயில்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகும். ஆனால் ட்ரெயின் 18 க்கு அத்தனை நாட்கள் தேவைப்படாது. ஜனவரி 2019 முதல் இந்த அதிவிரைவு ரயிலை மக்கள் புழக்கத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐசிஎஃப் தொழில்நுட்ப வல்லுனர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ட்ரெயின் 18 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள அதிவிரைவு ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸுக்குப் போட்டியாக களமிறங்கி அதன் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ட்ரெயின் 18 ல் ஸ்லீப்பர் கோச்களை இயக்கும் வசதியும் கூடிய விரைவில் நிர்மாணிக்கப்பட உள்ளன. அதற்காகப் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படத் தேவை இல்லை எனவும் எஸ்.மணி தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் மற்றுமொரு ட்ரெயின் 18 அதிவிரைவு ரயிலையும் அடுத்த ஆண்டுக்குள் இதே போன்ற 4 ட்ரெயின் 18 அதிவிரைவு ரயில்களை நிர்மாணிக்கவிருப்பதாகவும் ஐ சி எஃப் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்தபின் இந்தியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்ட இந்த அதிவிரைவு ரயிலை மத்தியதர வருமானம் கொண்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் அவற்றின் தரம் உயர்த்தப்படவிருப்பதாக ஐசிஎஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது உபயோகத்தில் இருக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக பயன்படுத்தத் தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் சதாப்தியில் இருப்பதைப் போன்றே 16 கோச்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 15 - 20 சதவிகிதம் ஆற்றல் திறன் வாய்ந்தது மற்றும் குறைவான கார்பன் தடத்தை விட்டுச் செல்லும் என்றும் ஐசிஎஃப் தரப்பில் கூறப்படுகிறது.

இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 18 மாதங்கள் எனும் மிகக்குறுகிய கால அவகாசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரியான அதிவிரைவு ரயில்களைத் தயாரிக்க நிறுவன விதிகளின் படி குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான விதி. ஆனால், ட்ரெயின் 18 ஐப் பொறுத்தவரை அந்த விதியை முறியடித்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் திறன் வாய்ந்த ரயில்வே பொறியாளர்களின் உதவுயுடன் வெறும் 18 மாதங்கள் எனும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/3/w600X390/train_18.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/03/கூடிய-விரைவில்-இந்தியாவில்-சதாப்தி-எக்ஸ்பிரஸின்-இடத்தைப்-பிடிக்கவிருக்கும்-ட்ரெயின்-18-அதிவிரைவு-ர-3050936.html
3050397 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள் 02-12-18 (விடியோ) DIN DIN Sunday, December 2, 2018 10:17 PM +0530  

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/2/w600X390/Todays_Top_10.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/02/இன்றைய-முக்கியச்-செய்திகள்-02-12-18-விடியோ-3050397.html
3049762 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய முக்கியச் செய்திகள்  DIN DIN Saturday, December 1, 2018 11:07 PM +0530

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/1/w600X390/Todays_10.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/dec/01/todays-top-news-bulletin-3049762.html
3026903 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார், ஃப்ளாட், ஃபிக்ஸ்ட் டெபாசிட் அளித்து அசத்தும் வைர வியாபாரி! RKV DIN Thursday, October 25, 2018 04:26 PM +0530  

ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர வியாபார நிறுவனத்தின் தலைவர் சவ்ஜி தொலாக்கியா 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு வீடு, கார் உள்ளிட்ட பரிசுகளை தீபாவளி போனஸாக வழங்கி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த 1600 பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளார். அவர்களில் 600 பேருக்கு மாருதி ஆல்டோ, செலிரியோ உள்ளிட்ட கார்களும், 600 பேருக்கு ஃபிளாட்களும், அவர்களது வங்கிக் கணக்கில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளார்

இந்த போனஸ் அவர்களை மேலும் உற்சாகத்தோடு உழைக்க வைக்கும் என சவ்ஜி தொலாக்கியா தெரிவித்துள்ளார். போனசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரு மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பிரதமர் மோடி கார்களுக்கான சாவியை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நிறுவனத்தின் இந்த ஆண்டு ஊக்கத்தொகை விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கார்களுக்கான சாவிகளை அப்பெண்களிடம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனத்தில் சுமார் 5,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 4,000 பேர்  இதுவரை விலையுயர்ந்த ஊக்கப்பரிசுகளைப் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்கள். அது மட்டுமல்ல, சமீபத்தில் இந்நிறுவன அதிபர் சவ்ஜி தொலாக்கியா தமது நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் திறமையான ஊஉழியர்களுக்கு விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்களைப் பரிசாக அளித்து அசத்தியிருந்தார். ஏன் தெரியுமா? சூரத்தில் அவர் பரிசாக அளித்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் GLS 350d SUV கார் ஒவ்வொன்றின் ஆன்ரோட் விலையும் கிட்டத்தட்ட முழுதாக 1 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சவ்ஜி, தமது ஊழியர்களில் திறமையாகப் பணிபுரிந்த 1,200 நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் டேட்சன் ரெடி-கோ கார்களை புத்தாண்டுப் பரிசாக அளித்து கெளரவித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு முதல் இவ்விதமாகத் தமது வைர வியாபார நிறுவனத்தின் திறமையான ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விலையுயர்ந்த பரிசுகள் அளித்து ஊழியர்களை மட்டுமல்ல மொத்த இந்தியாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சவ்ஜி தொலாக்கியா. 2016 ஆம் ஆண்டில் சவ்ஜி தமது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அளிப்பதற்காக செலவிட்ட தொகை மட்டுமே 51 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

]]>
diamond merchant, surat diamond merchant, savji dholakia, diwali bonus, car, flats, fixed deposit, சூரத் வைர வியாபாரி, சவ்ஜி தொலாக்கியா, கார், ஃப்ளாட், தீபாவளி போனஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/25/w600X390/savji_dolakia.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/25/ஆண்டு-தோறும்-ஊழியர்களுக்கு-தீபாவளி-போனஸாக-கார்-ஃப்ளாட்-ஃபிக்ஸ்ட்-டெபாசிட்-அளித்து-அசத்தும்-வைர-விய-3026903.html
3021570 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஃபுட்போர்டு கைப்பிடிகளை அகற்றியது பயணிகளின் வசதிகளைக் குறைக்க அல்ல, ரயில் மரணங்களைத் தவிர்க்க: தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை! RKV DIN Tuesday, October 16, 2018 01:17 PM +0530  

தென்னக ரயில்வே, சென்னை புறநகர் லோக்கல் ரயில்களில் முதல் வரிசையில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடிகளில் மூன்றை நிரந்தரமாக அகற்றியுள்ளது. லோக்கல் ரயில்களில் இரண்டு கதவுகளுக்கு இடையில் மொத்தம் மூன்று வரிசை இரும்புத் தாங்கியில் வரிசைக்குப் பத்து வீதம் மொத்தம் 30 கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்த கைப்பிடிகள் ரயில் பயணிகளின் செளகர்யத்துக்காக வடிவமைக்கப் பட்டவை. பொதுவாக வழக்கமான ரயில்களைக் காட்டிலும் இந்த லோக்கல் ரயில் பெட்டிகளில் ஆட்டம் அதிகமிருப்பதால் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு விழாமல் பயணிக்க மேற்படி கைப்பிடிகள் மிகப்பெரிய வசதியாக இருந்தன. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது கண்டறியப்பட்டது. பீக் நேரம் என்று சொல்லப்படக் கூடிய காலை  மற்றும் மாலை நேரங்களில் ஃபுட்போர்டில் பொருத்தப்பட்டுள்ள மூன்று கைப்பிடிகளைக் கைப்பற்றித் தொற்றுக் கொண்டு செல்ல  15 முதல் 20 பயணிகளுக்குள் மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும். இதனால் மாற்றுத்திறனாளிப் பயணிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாமலிருந்தது.

இதன் காரணமாக தாம்பரம் மற்றும் ஆவடி ரயில்வே நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் அனைத்திலும் இரு நுழைவாயில்களை ஒட்டிய மூன்று கைப்பிடிகள் நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பிடிகள் நீக்கத்திற்கான முக்கிய காரணம், ரயில் பயணிகள் ஃபுட்போர்டில் பயணிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீக் அவர்ஸ் என்று சொல்லப்படக் கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் லோக்கல் ரயில்களில் ஃபுட்போர்டில் மட்டுமே சுமார் 15 முதல் 20 பயணிகள் அடைசலாக அப்பிக் கொண்டு பயணிக்கிறார்கள். குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை புறநகர் லோக்கல் விரைவு ரயில்களில் ஃபுட்போர்டில் பயணிகள் தொங்கிச் செல்லும் காட்சி அச்சம் கொள்ளச் செய்வதாக இருப்பதால் தென்னக ரயில்வே நிர்வாகம் முதற்கட்டமாக இப்படியொரு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுழைவாயில் கைப்பிடிகள் அகற்றப்பட்டுள்ளதால் இப்போது பயணிகள் வேறு வழியின்றி எத்தனை கூட்டமென்றாலும் ரயிலின் உட்புறத்திற்கு நகர்ந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். ஃபுட்போர்டு பயண ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவிய போதும் ரெகுலராக ரயில் பயணங்களில் ஈடுபடும் பழக்கம் கொண்ட பயணிகளை இந்த நடவடிக்கை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறுகிறார்கள். வேக வேகமாக ரயிலைப் பிடிக்க ஓடி வருபவர்கள் இனி ஃபுட்போர்டு கைப்பிடிகளை நம்பி ரயிலில் ஏற முடியாது. அதுமட்டுமல்லாமல் 

மும்பை புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் சில மல்ட்டிபிள் யூனிட் மின்சார ரயில்களில் ஃபுட்போர்ட் பகுதியில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டு பயணிக்க வசதியாக அடுத்தடுத்து உட்பக்கமாக மூன்று  இரும்புக் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆனால் சென்னையில் இயக்கப்படும் மல்ட்டிபிள் மின்சார ரயில்களில் ஃபுட்போர்டு பகுதியில் பயணிகளின் வசதிக்காக ஒரே ஒரு இரும்புக்குழாய் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே இரு நுழைவாயில்களிலும் மூன்று கைப்பிடிகள் நீக்கப்பட்டபின் ஃபுட்போர்டில் பயணிக்கும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கையில் இனிமேல் வலுக்கட்டாயமாக உள்நோக்கி நகர வேண்டியவர்களாவார்கள். இதன்மூலம் பீக் அவர்ஸ் பயண நேரத்தின் போது பயணிகள் தங்களது முட்டிகளை உடைத்துக் கொள்ளும் அபாயம் தவிர்க்கப் படும் என்கிறார் ரயில்வே அதிகாரி ஒருவர்.

4 அலகுகள் அதாவது ஒரு அலகுக்கு மூன்று கோச்கள் வீதம் மொத்தம் 12 கோச்களை கொண்டது 12 கார் மல்ட்டி யூனிட் ரயில். இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு மோட்டார் கோச்சும், இரு ட்ரெய்லர் கோச்சுகளும் இணைந்திருக்கும். இவற்றில் மோட்டார் கோச்சுகளில் இரண்டாகப் பகுக்கக் கூடிய நான்கு கதவுகளும் ட்ரெய்லர் கோச்சுகளில் 6 கதவுகளும் இருக்கும். இந்தக் கதவுகள் தோறும் மூன்று இரும்பு ராட்களில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகள் ரயிலின் வேகம் அதிகரிக்கும் போதும் குறைக்கப்படும் போதும் ரயிலுக்குள் ஆட்டம் அதிகரித்தாலும், குறைந்தாலும் அவை பயணிகளைப் பாதிக்காமல் கீழே தள்ளாமல் பாதுகாப்பான பயணத்தை இதுவரை உறுதிப் படுத்தி வந்தன.

ஆனால், தற்போது கைப்பிடிகள் அகற்றப்பட்ட பின் பயணிகள் பரபரப்பான காலை நேரங்களில் ரயிலைப்பிடிக்க ஓடி வந்து பற்றிக் கொண்டு ஏற வசதியான நுழைவாயில் கைப்பிடிகள் இல்லாததைக் கண்டு ஏமாற்றத்துடன் நிற்க வேண்டியதாகிறது. என்கிறார் தென்னக ரயில்வேயின் இந்த திடீர் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட ரயில் பயணி ஒருவர்.

தினமும் மின்சார ரயில்களையே பயணத்திற்கு நம்பி இருக்கும் மறைமலை நகரைச் சேர்ந்த R கிருஷ்ணா எனும் பயணி சொல்வதென்னவென்றால்,  பரபரப்பான நேரங்களில் பீச் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டு புறப்படும் பயணிகள் ரயில்களில் ஊரப்பாக்கம் வரையிலும் அனைத்து பெட்டிகளுமே ஏறத்தாழ நிரம்பி வழியும். அதைத்தாண்டி மறைமலைநகர் செல்ல வேண்டிய எங்களில் பலர் ரயில்களில் கைப்பிடி அகற்றப்பட்ட பிறகு கூட்ட நெரிசலில் ரயிலைப் பிடித்து உள்ளே ஏற முடியாமல் தொடர்ந்து தவித்து வருகிறோம். என்கிறார்.

கடந்த ஜூலை மாதத்தில் சென்னை புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசலில் ஃபுட்போர்டு கைப்பிடிகளைப் பற்றிக் கொண்டு பயணித்த பயணிகளில் ஏழு பேர், செயிண்ட் தாமஸ் மெளண்ட் ஸ்டேஷன் மூன்று மற்றும் 4 ஆம் எண் நடைமேடை அருகிலிருந்த கான்கிரீட் சுவரில் மோதி உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்தே தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தினந்தோறும் போக்குவரத்துக்கு மின்சார ரயில்களை மட்டுமே நம்பி இருக்கும் புறநகர் ரயில் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள போதிலும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.

ஏனெனில் சென்னையில் மட்டுமாக புறநகர் ரயில் சேவையை நம்பி நாளொன்றுக்கு சுமார் 11 லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகிறார்கள்.

]]>
தென்னக ரயில்வே, ஃபுட்போர்டு, ரயில் பயணிகள், சென்னை மின்சார ரயில், கைப்பிடிகள் நீக்கம், southern railway, handholds removed, railway romoved handhoolds in trains, chennai suburban electric trains, train accidents, ரயில் விபத்து, ரயில் மரணம், செய https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/local_train.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/16/ஃபுட்போர்டு-கைப்பிடிகளை-அகற்றியது-பயணிகளின்-வசதிகளைக்-குறைக்க-அல்ல-ரயில்-மரணங்களைத்-தவிர்க்க-தென்ன-3021570.html
3020828 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி! RKV DIN Monday, October 15, 2018 10:53 AM +0530  

மத்திய இணை அமைச்சரும், பிரபல பத்திரிகையாளராக அறியப்பட்டவருமான M J அக்பர் மீது ‘மீடூ’ பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு எதிர்வினையாக அக்பர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொள்ளவிருப்பதாகவும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமது பெயருக்கும், மதிப்புக்கும் களங்கள் கற்பிக்கும் வகையில் இம்மாதிரியான புகார்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டு வருவதாக அக்பர் தெரிவித்துள்ளார்.

தி இந்து பத்திரிகை நிர்வாகி என். ராம், அமைச்சர் அக்பரின் எதிர்வினை குறித்துப் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், ‘அமைச்சர் ராஜினாமா செய்யாதது நல்லது தான். ஏனென்றால், இப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவோ, பாலியல் வழக்கு குறித்து விசாரித்து போதுமான தகவல்களைப் பெறவோ போதுமான வாய்ப்புகள் அதிகமும் கிடைக்கும். ஒருவேளை அவர் ராஜினாமா செய்து விட்டாரென்றால் 15 நாட்களில் மக்கள் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள்.’ என்றார்.

]]>
M J AKBAR, ME TOO MOVEMENT, NO RAJINAMA, HINDU N RAM, எம் ஜெ அக்பர், ஹிந்து என் ராம், மீடூ புகார், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/me_too_mj_akbar.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/15/minister-m-j-akbar-reacts-against-his-me-too-complaint-3020828.html
3018345 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கீழடி 4 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க ஆபரணங்கள் கண்டிபிடிப்பு! RKV DIN Thursday, October 11, 2018 04:58 PM +0530  

மதுரையை அடுத்த கீழடியில் தொல்லியல்துறை சார்பாக தொடர்ந்து நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தமிழக அரசின் வழ்க்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.

கீழடி நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில்  இதுவரை 15 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டப்பட்டதில் இதுவரை 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க ஆபரணங்கள் உட்பட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பலவிதமான பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

]]>
keeladi archaelogy, golden ornaments, 3000 yrs old, கீழடி அகழ்வாராய்ச்சி, தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு, 3000 ஆண்டுக்கு முந்தைய ஆபரணங்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/kizhadi.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/11/கீழடி-4-ஆம்-கட்ட-அகழ்வாராய்ச்சியில்-தங்க-ஆபரணங்கள்-கண்டிபிடிப்பு-3018345.html
3018311 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தித்லி புயல் காரணமாக ஒதிசாவில் கடுமையான நிலச்சரிவு, ஒதிசா, ஆந்திரா இடையே புயல் கரையைக் கடந்தது!  RKV DIN Thursday, October 11, 2018 11:23 AM +0530  

சென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தித்லி புயல்  ஆந்திரா மற்றும் ஒதிஷாவுக்கு இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கரையைக் கடந்தது. இதன் விளைவாக ஒதிசாவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒதிசா, கடலோர மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் நேற்றிரவு முதல் தங்களது வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

கூடுதலாக ஆந்திராவின் கடலோரப் பகுதி மற்றூம் ஒதிசா கடலோரப்பகுதியில் அமையும் மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. 
ஏனெனில் இவ்விரு மாநிலங்களிலும் தித்லி புயலின் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தூருடன் சாலைகளில் சாய்ந்து விழுந்து கிடக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி சாலைப் போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு மணிக்கு 150 கிமீ வேகத்தில் புயல்காற்று வீசி வருகிறது. எனவே பெருவாரியான கடலோரப் பகுதி மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

தித்லி புயலால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ 1000 தேடிய பேரிடர் மீட்புக் குழுவினரை மத்திய அரசு அனுப்பியுள்ளதாகத் தகவல். அது தவிர வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு புகலிடம் அளிக்க 836 பாதுகாப்பு முகாம்களும் திறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
 

IMAGE COURTESY: NDTV

]]>
Cyclone Titli , Odisha Coast, Andhra Pradesh, தித்லி புயல், ஆந்திரா, ஒதிசா, புயல் கரை கடந்தது, நிலச்சரிவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/titli_cyclone.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/11/cyclone-titli-hits-odisha-coast-3018311.html
3013832 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?! RKV DIN Thursday, October 4, 2018 01:53 PM +0530  

கடந்த திங்களன்று பிகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியில் மதச் சடங்குகளுக்காக 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் புனிதக் முழுக்குச் செய்ய இறங்கியிருக்கிறார். அப்போது இரு ஆண்கள் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு அதில் ஒரு நபர் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்த செய்தி அப்பகுதி  மக்களையும், மகளிர் அமைப்புகளையும் கொதித்தெழச் செய்துள்ளது. 

சம்பவம் நடந்த மறுகணமே பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை கிராம மக்களிடம் தெரிவித்து அவர்களின் துணையோடு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் முதலில் பாட்னா காவல்துறையினர் பெண்ணின் புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று நடந்த இக்குற்றச் செயல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு விஷயம் ரூரல் எஸ் பி அனந்த்குமார் வரை சென்று பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே காவல்துறை இச்சம்பவத்தில் அலர்ட் அடைந்து சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

காவல்துறை விசாரணையில் தெரியவந்த செய்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபரின் பெயர் ஷிவ்புஜன் மஹ்தோ என்றும் என்பதும் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அந்த நபர் கங்கையில் முழுகச் சென்ற பெண்ணை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து  வன்முறையைப் பிரயோகித்து இழுத்துச் சென்று கங்கை நதிக்கரையில் வைத்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய விவரம் தெரிய வந்தது.

மதச் சடங்குகளை நிறைவேற்ற கங்கையில் இறங்கிய தன்னை பாலியல் நோக்கில் அணுகிய ஆண்களிடம் அப்பெண், தன்னை விட்டு விடுமாறு கதறி இருக்கிறார். புனித நதியான கங்கையை கருத்தில் கொண்டு அதன் புனிதத்தைக் குலைக்காமல் இருப்பதற்காகவாவது தன்னை விட்டு விடுமாறும், கங்கை என்பவள் வெறும் நதியல்ல அவள் நமது தாயைப் போன்றவள். அவள் முன்னிலையில் இப்படி பாலியல் வன்முறை செய்வது எந்த விதத்தில் நியாயம்’ என்று கேட்டும் அப்பெண் போராடி இருக்கிறார். ஆயினும் பெண் பித்தர்களான அவ்விரு ஆண்களும் கங்கையின் புனிதத்தைப் பற்றியோ, ஒரு பெண்ணின் கதறலைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் தங்களது வக்கிரப் பசியைத் தீர்த்துக் கொண்டதோடு அதை வீடியோவாக்கி சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து தற்போது காவல்துறையில் மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 
இச்சம்பவத்தில் மேலும் கொடுமை என்னவென்றால், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை ஆண்கள் சிலர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்யும் வீரப் பிரதாபத்தைக் காண குற்றவாளிகள் இருவருள் ஒருவனான மஹ்தோ அறியாச் சிறுமி ஒருத்தியையும் உடனழைத்துச் சென்றிருந்த விஷயம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்போது அச்சிறுமியும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டதாக பாட்னா எஸ் பி மனு மகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இனிமேல் இப்படிப்பட்டவர்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனில் அதற்கு ஒரே தீர்வு மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்ற நிலையை இப்படி சீர்கெட்ட சிலரே உருவாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தை என்ன சொல்ல?!
 

]]>
ganges, river ganga, holly river, women gangraped, patna, கங்கை, புனித நதி, பாட்னா, பாலியல் வன்முறை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/4/w600X390/ganga.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/oct/04/woman-gangraped-while-taking-dip-in-holly-ganges-3013832.html
3010486 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இது பழைய சர்வே... இப்போதாவது ‘ராகுல் காந்தி’ குறித்த இளம்பெண்களின் எண்ணம் மாறி இருக்குமா?! DIN DIN Saturday, September 29, 2018 03:26 PM +0530  

யூடியூபில் இப்படி ஒரு காமெடியான ஏன் சற்றே விஷமத்தனமான சர்வே வீடியோ காணக்கிடைத்தது. ஆங்கர் ஒருவர் இளம்பெண்கள் கூடி இருக்கும் இடங்களாகத் தேடிச் சென்று, ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்களிடம் புரப்போஸ் செய்தால், உங்களது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? அவரது புரப்போஸலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டார். இந்த வீடியோவில் ஒரே ஒரு பெண் கூட ராகுல் காந்தியின் புரப்போஸலை ஏற்றுக் கொள்வேன் என்றோ அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. வருங்காலத்தில் அவர் மிகச்சிறந்த தலைவராக வருவார். நேரு குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அவர் என்றோ மருந்துக்கு கூட சொல்லக் காணோம். 
சரி இவர்கள் ராகுலின் புரபோஸலை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதல்ல பிரச்னை. ராகுல் குறித்த இளம்பெண்களின் கற்பனை என்னவாக இருக்கிறது என்பது தான் முதன்மையான பிரச்னை. ராகுல் காந்தி என்ன வேலை வெட்டி இல்லாதவரா? இந்த இளம்பெண்களை எல்லாம் தேடிச் சென்று புரபோஸ் செய்து கொண்டிருக்க. அவருக்கு அதை விடச் செய்வதற்கு உருப்படியான பல வேலைகள் இருக்கலாம். ஆனால், அந்த வேலைகள் அனைத்துமே ‘மக்கள் அபிமானம்’ என்ற அடிப்படையின் மேல் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதிலேயே மனிதர் கோட்டை விட்டு விடுவார் போலிருக்கிறதே.

வீடியோ இந்தியில் இருந்தாலும் அந்தப் பெண்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது. இதில் கொடுமையான விஷயம் பதில் சொன்ன இளம்பெண்களில் ஒருவர், ராகுலுக்கு ’நோ’ சொல்லி விட்டு நரேந்திர மோடி புரபோஸ் செய்தால் ’ஓகே’ சொல்வேன் என்கிறார். பணமதிப்பிழப்பு சோகங்கள் எல்லாம் நடந்தேறுவதற்கு முந்தைய காலம் இது, அதனால் அந்தப் பெண் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் ராகுல் காந்திக்கு இளம்பெண்களிடையே இருக்கும் வரவேற்பும், மரியாதையும் தான். இந்தப் பெண்கள் சொல்லும் பதில்களில் முக்கால்வாசியும்;

  • ராகுல் காந்திக்கு ஐக்யூ இல்லை...
  • சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்
  • அவர் சுவாரஸ்யமான தலைவராக இல்லை அவரைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது.

- என்பதாகவே இருக்கிறது.

சிலரோ... அவரை வெறுக்கிறோம். என்ன காரணம் என்பது தெரியாமலே அவரை வெறுக்கத் தோன்றுகிறது என்கிறார்கள்.

சில பெண்கள் அவருக்கு வயதாகி விட்டது. ஆனால் அதற்கேற்ற சிந்தனைத்திறன் இல்லை என்கிறார்கள். சில பெண்கள் அவருக்கு சுயமாக சிந்திக்க மட்டுமல்ல சுயமாக இயங்கக் கூடத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையாடலின் போது ராகுல் காந்தி பிரதமர் மோடியை நேருக்கு நேராக பல கேள்விகளைக் கேட்டு விளாசித் தள்ளினார். அவரது கேள்விகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஃபேல்ஸ் விமான ஒப்ப்ந்தம், நாட்டின் பொருளாதார நிலை, பெண்கள் பாதுகாப்பு எனப் பலகோணத் தாக்குதல்கள் இருந்தன. கடைசியாக பிரதமரை முகத்துக்கு நேராகவே, ‘நீங்கள் எனது கண்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதை தவிர்க்கிறீர்கள். என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ராகுலின் குற்றச்சாட்டின் போது மோடியின் உடல்மொழியில் பதற்றம் தென்பட்டதாக ஊடகங்கள் கூட எழுதித் தள்ளின. தனது கனமான உரையோடு ராகுல் முடித்துக் கொண்டிருந்தால் பிரச்னையே இல்லை. ராகுலின் உரையின் மீதான பிரமிப்பிலேயே மக்கள் இப்போதும் கூட அவரைப் பாராட்டித் தள்ளிகொண்டே தான் இருப்பார்கள். ஆனால், ராகுல் கடைசியாக செய்த காரியம் அவர் ஏவிய அஸ்திரம் அவரையே திருப்பித் தாக்கும் வண்ணம் பூமராங் ஆக மாறியது தான் விந்தையிலும் விந்தை.

தனது உரையை முடிக்கும் முன் ராகுல் காந்தி, பிரதமரை நோக்கி, ‘நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும் கூட உங்களை நான் துளியளவேனும் வெறுக்க மாட்டேன். உள்ளுக்குள் உள்ள வெறுப்பை அகற்றி விட்டு அன்பை  விதைப்பேன் என்று கூறி பிரதமரைக் கட்டியணைத்தார். இது நிச்சயம் அரசியல் நாகரிகமே தான், ராகுல் பண்பட்ட அரசியல் தலைவராகி விட்டார் என்று ராகும் ஆதரவாளர்கள் உடனடியாக அவரைப் பாராட்டத் தொடங்கி விட்டனர். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபுறமோ, பாஜகவினர்... ராகுல் உரையை முடித்து பிரதமரை கட்டியணைத்து நகர்ந்ததும் தமது இருக்கையில் சென்று அமர்ந்து ராகுல் தமது சகாக்களைப் பார்த்து எப்படி என் திட்டம் என்பதாக கண் சிமிட்டுகிறார் பாருங்கள், இவர் இன்னும் பச்சா தான், குழந்தைத்தனம் கொண்டவர் தான் என்று முதல் நாளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றிய ராகுலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்தனர்.

தம்மைச் சுற்றி நடக்கும் இப்படியான எதிர்க்கட்சிகளின் சதி வலைகள் குறித்த்அ ஞானமெல்லாம் ராகுலுக்கு ஏன் இல்லாமல் போனது. அவர் இன்னும் கொஞ்டம் மெச்சூர்டாக நடந்து கொள்ளலாமே என்பதாக இருக்கிறது ராகுல் அபிமானிகளின் மனநிலை.

அபிமானிகள் விருப்பத்திற்கு தோதாக ராகுல் மேலும் பண்படுவாரா? என்றால்;

அது ராகுலுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
 

Image Courtesy: MensXP.com

]]>
rahul gandhi, young girls, india, position of rahul, minds of young girls, value of rahul gnadhi, ராகுல் காந்தி, பெண்களது மரியாதை, மரியாதைக்குரிய தலைவர், அரசியல் தலைமை, சக்தி வாய்ந்த அரசியல் தலைமை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/29/w600X390/rahul_wink.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/sep/29/rahul-gandhi-is-he-a-matured-leader-or-comic-heir-from--nehru-family-3010486.html
3008330 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது! RKV DIN Wednesday, September 26, 2018 01:16 PM +0530  

மும்பையில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தேசிய இரத்தப் பரிமாற்ற கவுன்சில் புதிதாக ஒரு சர்க்குலர் அனுப்பியிருப்பதாகத் தகவல். வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. திருத்தங்களில் முக்கியமானது, இனிவரும் காலங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், பெண் பாலியல்க் தொழிலாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் உள்ளிட்டோரால் எச்.ஐ.வி மற்றும் ஹெபாட்டிடிஸ் B மற்றும் C    நோய்த்தொற்று ஏற்பட அதிகபட்ச காரணங்கள் இருப்பதால் மேற்கண்டோரிடம் இருந்து ரத்ததானம் பெறவே கூடாது. அவர்கள் தங்களது ரத்தத்தை யாருக்கும் தானமாக வழங்கக் கூடாது. என்று அந்தப் பிரிவினரை ஒட்டுமொத்தமாக விலக்க வலியுறுத்துகிறதாம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்.

இந்தத் தடையானது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு தனி நபரும் நாள்பட்ட நோய்த்தொற்றில் இருந்தாலும், கேன்சர், உடலுறுப்பு செயலிழப்பு, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அத்தகையோரிடம் இருந்தும் ரத்த தானம் பெறத் தடை விதிக்கின்றன புதிய நெறிமுறைகள்.
 
மருத்துவமனைகளில் ரத்த தானம் பெறுவது மற்றும் அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி பேசுகையில் ரத்த வங்கிகளில் பணிபுரிவோர் தெரிவித்தது என்னவெனில், வளர்ந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் இப்படியோர் திருத்தத்தை வடிவமைத்திருப்பதாகவும், முந்தைய நெறிமுறைகளில் மேம்போக்காக மட்டுமே மலேரியா, எச். ஐ வி, எய்ட்ஸ் , மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கக் கூடாது என்று சில நிபந்தனைகள் இருந்ததாகவும் தற்போது மேலும் சில நிபந்தனைகளைச் சேர்த்து காலம் தோறும் மாறி வரும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள் நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், இந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ரத்ததானம் வழங்க வரும் கொடையாளர்களிடம், அவர்களது பாலியல் தேர்வு மற்றும் விருப்பங்களைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டியதாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்தக் கேள்விகளை சம்மந்தப் பட்ட மக்கள் எளிதாக எதிர்கொள்கிறார்கள். இந்தியாவிலும் காலப்போக்கில் அது சாத்தியப்படலாம் என்கிறார் ரத்தப் பரிமாற்ற அலுவலர் ஒருவர்.

ரத்த வங்கி நடத்தும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவர் இதைப்பற்றிப் பேசும் போது தெரிவித்தது என்னவென்றால், ‘இப்படியான நெறிமுறைகள் புகுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் விஷயத்தில் வழங்கிய தீர்ப்பு காரணம் அல்ல. அது சட்ட ரீதியானது. ஆனால், ரத்ததானத்தைப் பொருத்தவரை... இது நடத்தை மாற்றங்களுடன் தொடர்புடையது. ரத்தப் பரிமாற்றத்தின் முக்கிய நோக்கம், தேவை இருக்கும் நோயாளிகளின் வாழ்வை நோயற்று ஆரோக்யமானவராக மாற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மேலும் நோயில் தள்ளுவதாக இருக்கக் கூடாது என்பதே! எனவே மேற்கண்ட புதிய ரத்தப் பரிமாற்ற நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ - என்றார்.

]]>
blood donors, national blood tranfusion counsel, blood tranfusion guidelines, gays bisexuals, transgenders, ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கைகள், இருபால் விருப்பம் கொண்டவர்கள், ரத்த தானம், தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில், வழிகாட்டு நெறிமுறைகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/blood_donors.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/sep/26/gays-bisexuals-transgenders--can-never-donate-blood-after-october-3008330.html
3006933 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் விபத்தில் இறந்தவர் கணவர் என்று அறியாது முதலுதவி அளித்த செவிலியின் துயரம்! RKV DIN Monday, September 24, 2018 02:55 PM +0530  

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் முதலுதவி செய்தனர். ஆனால், காயமடைந்தவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தார். இறந்தவரது முகத்தில் அதிக அளவில் ரத்தம் வழிந்திருந்த காரணத்தால் அவரது முகத்தை அடையாளம் காண முடியாமலிருந்திருக்கிறது. செவிலியர் சிவகாமி இறந்தவரது முகத்தை துடைத்து சுத்தப் படுத்தும் போது இறந்தவர் தன்னுடைய கணவர் என்பது அதிர்ச்சிக்குரிய வகையில் தெரிய வந்திருக்கிறது.

 

தனது கணவருக்குத்தான் தான்... அவர் இறந்தது தெரியாமல் இவ்வளவு நேரம் முதலுதவி செய்திருக்கிறோம் என்பதை அறிந்ததும் அதிர்ந்து துடித்துப்போன செவிலியர், தமது கணவரது உடலைக் கட்டிப் பிடித்த அழுத காட்சி அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்துவதாக இருந்தது.

]]>
salem accident... nurse sivagami's shocking fate!, சேலம் சாலை விபத்து, செவிலியர் சிவகாமி, இறந்த கணவர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/24/w600X390/nurse.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/sep/24/salem-accident--nurse-sivagamis-shocking-fate-3006933.html
2995416 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சோபியாவுக்கு தீவிரவாத ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகவை விமர்சிப்பவர்களுக்கான பகிரங்க அச்சுறுத்தல்! RKV DIN Thursday, September 6, 2018 12:45 PM +0530  

தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுடன் பயணித்த ஆய்வு மாணவி லூயிஸ் சோபியா பாஜகவின் பாசிஸ ஆட்சி ஒழிக என்று கோஷமெழுப்பியதால் தமிழிசை கொந்தளித்துப் போனார். மாணவி சோபியா மீது தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் அன்றே ஜாமினில் வெளி வந்தார்.

சோபியா குறித்த கூடுதல் விவரங்கள்...

தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா, கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் ஆய்வு மாணவி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் தன் சொந்த ஊரில் ஸ்டெர்லைட்டால் நிகழும் பயங்கரங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான சோபியா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். ‘தி பொலிஸ் புராஜெக்ட்’ என்ற இணையதளத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பத்திரிகையாளர் என்ற பெயரில் பேட்டி அளித்துள்ளார் சோபியா. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைதுக்கு எதிரான தமது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்திருந்தார் சோபியா. இதே போன்று சில மாதங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைதான மற்றொரு சமூக ஆர்வலரான மாணவி வளர்மதிக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் சோபியா.

சோபியாவின் தந்தை அப்பாசாமி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். தாய் மனோகரி தலைமை செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

சோபியா கைது குறித்து ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். அதில் ;

கைது நடவடிக்கை...  

  • தவறான முன்னுதாரணம் என 12 % பேரும். 
  • சரியான நடவடிக்கை என 15% பேரும்
  • தேவையற்ற சர்ச்சை என 21 % பேரும்
  • கருத்து உரிமைப் பறிப்பு என 52 % பேரும்

தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,

‘ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக!

- எனத் தமது கருத்தைப் பதிவு  செய்திருந்தார்.

விமானத்தில் நடந்த விஷயங்களைப் பிறகு செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட தமிழிசை ‘ஸ்டாலினின் கண்டனம்’ குறித்துப் பேசுகையில். ‘ சக பெண் அரசியல் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நேரும் வகையிலும், அவர் சார்ந்த கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும்  ஒரு இளம்பெண் மோசமான கருத்துக்களைப் பேசி அதற்காக கைது செய்யப்பட்டால் அதை ஆதரிப்பதை விடுத்து சக பெண் தலைவரை ஏளனம் செய்யும் விதத்தில் இப்படியா கருத்துத் தெரிவிப்பது? கலைஞர் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு பக்குவமற்ற கருத்தை பதிவு செய்திருக்கவே மாட்டார். ஏன் அண்ணன் ஸ்டாலின் என்னைப் போல விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தாலும் கூட அதற்கான முதல் கண்டனக் குரல் எழுப்பக்கூடியவளாக நான் இருந்திருப்பேன்.’ என்று தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார் தமிழிசை.

ஆனால், பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் தெரிய வந்த செய்தி, மாணவி சோபியா விஷயத்தில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை நடந்து கொண்ட விதம் தான் பக்குவமற்றதாக இருந்ததாகப் பதிவாகியிருக்கிறது. ஏனெனில், விமானத்திற்குள் நடைபெற்ற இந்த கருத்து மோதல் குறித்து இருவரும் பயணித்த விமான நிறுவனம் இதுவரை எவ்வித புகாரும் எழுப்பியிருப்பதாகத் தெரியவில்லை. தமிழிசை தான் பாஜக குறித்த சோபியாவின் காட்டமான விமர்சனத்தைத் தாங்க இயலாது விமானத்திற்குள் அமைதியாக இருந்து விட்டு விமானத்தை விட்டு இறங்கிய பின் விமான நிலைய வளாகத்திற்குள் திரண்டிருந்த தமது ஆதரவாளர்களைக் கண்டதும் மாணவியைப் பயமுறுத்தும் நோக்கிலும், தம் மீதும் தமது கட்சியின் மீதும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்காக பழிவாங்கும் நோக்கிலும் மாணவி சோபியா மீது அவர் உபயோகிக்காத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை விமர்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு பெண் தலைவர்... தமது அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் விதமாக இந்த விவகாரத்தை அப்படியே நிராகரித்திருக்கலாம் அல்லது அன்னை மனதோடு அந்தப் பெண்ணை அழைத்து தன் தரப்பு வாதத்தைப் புரிய வைத்திருக்கலாம். இரண்டுக்குமே வாய்ப்பில்லை என்றால் பிற அரசியல் தலைவர்கள் செய்வதைப் போல இளம் மாணவியின் பக்குவமற்ற விமர்சனம் எனக்கருதி சோபியாவின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இந்த விவகாரத்தை சிரித்துக் கொண்டே கடந்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் தன் மீதும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் மீதும் விமர்சனம் என்ற பெயரில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியதற்கு பழி வாங்கும் நோக்கில் மனமறிந்தே அந்த மாணவியின் செயலுக்கு தீவிரவாத முலாம் பூச வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த பிற அரசியல் கட்சித் தலைவர்கள்.

இவ்விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள கருத்தைப் பாருங்கள்...

“அந்தப் பெண்மணி யார் என்பது பற்றி விசாரிக்க வேண்டும். அவர் கனடாவைச் சேர்ந்தவராக இருந்தால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனென்றால், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவை வசை பாட பாசிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். பாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும்.எனவே அவரது கைது நியாயமானதுதான்” என்று கூறியுள்ளார்.

தமிழிசைக்கு எதிரான இயக்குனர் பாரதிராஜாவின் கண்டனம்...

’சோபியா பா.ஜ.கவுக்கு  எதிராக கோஷமிட்டார்  என்றால்  அவரை அழைத்துப் பேசி, அவர் தரப்பு பிரச்சனைகளை  கேட்டு, அவரை  சமாதானம் செய்து அவருக்கு  தேவையான உரிய  விளக்கங்களை பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சொளந்தராஜன் கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது என்பது அநாகீரிகமான செயல்’
- என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்திருந்தார்.

சோபியா விவகாரம் குறித்து இப்போதும் நீறு பூத்த நெருப்பாக கனல் அணையாமலிருக்கையில் பாதுகாப்பு வேண்டி சோபியா தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், பாதுகாப்பு வழங்க தயார் - என தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா அறிவித்திருப்பதாக தந்தி தொலைக்காட்சியின் ட்விட்டர் தளத்தில் செய்தித் துணுக்கொன்றைக் காண நேரிட்டது.

இந்நிலையில் சோபியா விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென ஆராய்ந்தால், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து காணக் கிடைக்கிறது. அஃதாவது, ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம், கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? என்றும், விளம்பரத்திற்காக இது போன்று பலர் இப்போது செய்து வருகின்றனர் என்றும் பதில் சொல்லி முடித்திருக்கிறார்.

சோபியா விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,

‘பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே’

- என கூறியிருக்கிறார். தாமும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே இதைச் சொல்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

சோபியா விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி தள்ளி நின்று நடுநிலையான மனதுடன் அணுகினால், இதை தமிழிசையால் அரசியல் முதிர்ச்சியுடன் அணுகியிருக்க முடியும். தமிழிசை தமது சொந்த மனக்குமுறலில் யோசிக்காமல் எதிர்வினையாற்றி உள்ளூரில் முடிந்திருக்க வேண்டிய விவகாரத்தைப் பெரிதாக்கி இன்று சோபியாவை சர்வதேச பிரபலமாக்கியதோடு பாஜக குறித்த வெறுப்புணர்வு மக்களிடையே மென்மேலும் அதிகரிக்க வித்திட்டு விட்டார் என்பதாகவே பொதுமக்களிடையே கருத்துகள் வலுத்து வருகின்றன.

கடந்த காலங்களில் பாஜகவைச் சேர்ந்த பிரபலங்களான எஸ்.வி.சேகர் மற்றும் H.ராஜாவை கைது செய்யும் நிலை வந்த போது அந்நிலையை தவிர்த்து கடைசி வரை அவர்களைக் காப்பாற்ற முனைந்த மத்திய, மாநில அரசுகள் இப்போது ஆய்வு மாணவி என்றும் கருதாமல் சோபியாவை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டது எங்கனம்? கருத்துச் சுதந்திரத்துக்கான அப்பட்டமான மிரட்டல் இது. இது பாஜகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது’ என்று பாஜக ஆட்சி மீதான விமர்சன நிலைப்பாடு கொண்ட அனைத்துத் தரப்பினரும் கருதி வருகின்றனர்.
 

]]>
tamilisai, TN BJP leader, Lois Sofia case, தமிழிசை சவுந்திரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர், லூயிஸ் சோபியா, பா ஜ கவுக்கு எதிரான கோஷம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/6/w600X390/sofia_louis.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/sep/06/why-bjp-wants-to-stick-terrorist-sticker-on-sofia-2995416.html
2983016 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன!  RKV DIN Saturday, August 18, 2018 05:45 PM +0530  

'கேரளாவில் நிலப்பகுதி குறைவு, மக்கள் பெரும்பாலும் நதிக்கரைகளை ஒட்டியே வாழ்கிறார்கள். கேரளாவின் 44 நதிகளை ஒட்டியும் மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காவிரிக் கரையோரப் பகுதிகளைப் போலவே அங்கும் வீட்டின் புழக்கடையில் நதிகள் பாய்வதை சர்வசாதாரணமாகக் காணலாம். நதிகளைப் பாதுகாக்கிறோம்... நதிக்கரை ஆக்ரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் அந்த மக்களின் வாழ்விடங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல. இது தவிரவும் நதி நீரை மாசு படுத்தும் தொழிற்சாலைகள், அரசியல்வாதிகள் மற்றும் பெரும்பண முதலைகளால் அதிகாரத்தின் பெயரால் ஆக்ரமிக்கப்பட்ட நதிக்கரையோர பகுதிகளை மீட்டெடுப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கு போதுமான அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் இது அத்தனை எளிதில் சாத்தியப்படுவதில்லை. கேரள நதிகளைப் புனரமைத்து அவற்றை பாதுகாப்பதற்கான ஒரு வரைவைக் கொண்டு வரும் பொருட்டு கேரள அரசு இந்தியாவின் 'தண்ணீர் மனிதர்' எனப் பாராட்டப் படும் ராஜேந்தர் சிங்கை அழைத்திருந்தது. அவரும் கேரள அரசின் அழைப்பை ஏற்று 2015 ஆம் ஆண்டு அம்மாநிலத்திற்கு வருகை தந்து கேரள அரசுக்கு நதிகளைப் பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்துக் கொடுத்த நதிப் பாதுகாப்பு வரைவு தெள்ளத் தெளிவாக இருந்த போதும் கேரள அரசால் அதனை அத்தனை எளிதில் செயல்படுத்த முடியவில்லை.'

கேரள வெள்ளச் சேதம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கேரள அமைச்சர் ஒருவர் சொன்ன பதில் இது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு...

‘அவசரத்தில் கல்யாணம் செய்தால் அவகாசத்தில் அழுது தீர்க்க வேண்டும்’

என... அப்படித்தான் இருக்கிறது கேரள அமைச்சரின் பதில்.

அதன் விளைவு தான் இன்று கேரளாவின் 44 நதிகளிலும் பொங்கிப் பிரவகித்து ஓடிக்கடந்து அரபிக் கடலைச் சங்கமிக்கும் அசுர வெள்ளமும் அதனாலான சொல்லிலடங்கா சேதங்களும். இப்போது பெரு வெள்ளத்தையும் அதனால் உண்டான கணக்கற்ற சேதங்களையும் கண்ட பிறகாவது நதிகளை ஆக்ரமித்து வாழிடங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மனமாற்றம் அடைவார்களா எனத் தெரியவில்லை. வெள்ளம் வடிந்ததும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத்தான் வேண்டும். ஆனால், அதற்கு முன்பு தங்களது இயல்பு வாழ்க்கை எதனால் பாதிக்கப்பட்டது? என்பது குறித்த ஞானத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

இயற்கையாகப் பார்த்து அப்படியொரு வாய்ப்பை அரிதாகத்தான் மக்களுக்கு வழங்குகிறது. அப்போதும் மக்கள் திருந்தவில்லை, அரசுகள் திருந்தவில்லை எனில் இயற்கைச் சீற்றங்களின் பலனை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. வரலாற்றில் பன்னெடுங்காலங்களாக எப்போதும் மக்களே பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன! இப்போது கேரள நதிகள் ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்து சுருட்டிச் செல்வது அனைத்தும் மக்களால் உண்டாக்கப்பட்டவையே! அந்த இழப்பிலிருந்து கேரளம் மீள சில காலம் ஆகலாம். 


 

]]>
Root cause of kerala flood|, கேரளப் பெருவெள்ளத்துக்கான காரணம், நதி ஆக்ரமிப்பு, river acquisition https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/kerala_flood11.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/aug/18/root-cause-of-kerala-flood-2983016.html
2976477 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் நினைவிடம், முன்னாள் முதல்வர்களுக்கு கிடையாது: எஸ். குருமூர்த்தி! RKV DIN Monday, August 13, 2018 11:47 AM +0530  

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கக் கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்கக் கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை.

முதல்வராக இருக்கும்போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது.

முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என  துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

]]>
marina, மெரினா பீச், RIP KARUNANIDHI, S.GURUMURTHY, எஸ்.குருமூர்த்தி, கருணாநிதி நினைவிடம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/8/w600X390/000000.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/aug/08/முதல்வர்களுக்கு-மட்டுமே-மெரினாவில்-நினைவிடம்-முன்னாள்-முதல்வர்களுக்கு-கிடையாது-எஸ்-குருமூர்த்தி-2976477.html
2976442 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கோரிய வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு! RKV DIN Wednesday, August 8, 2018 01:48 AM +0530  

திமுக தலைவரும் இந்தியாவின் பழுத்த அரசியல் தலவைர்களில் ஒருவருமான கலைஞர் கருணாநிதி 11 நாட்கள் மருத்துவமனை வாசத்தின் பின் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து கலைஞரின் பூத உடலை மெரினா கடற்கரையில் அண்ணா நினவிடத்தில் நல்லடக்கம் செய்வதற்கான கோரிக்கையை திமுக செயல்டலைவர் ஸ்டாலின், ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் நேரில் சந்தித்து அளித்திருந்தனர். ஆயினும் மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திமுகவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்திருந்தது.

இந்நிலையில் திமுக தரப்பு தங்களது கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில்... திமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் அவசரகால வழக்காகக் கருதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதையொட்டி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொறுப்பு நீதிபதி குலுவாடியா ரமேஷ் தலைமையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ், வைத்யநாதன், ராஜகோபாலன் உள்ளிட்டோரும், திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சரவணன், இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜரானார்கள். நீதிபதியின் இல்லத்திலேயே நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளைக்காலை 8.30 மணியளவில் வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. தமிழக அரசு காலை 8 மணிக்கு பதிலளித்த உடன் 8. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் : உயர்நீதிமன்றம்.

]]>
RIP KALAIGNAR KARUNANIDHI, DMK CASE, MARINA MEMORIAL, கலைஞர் நினைவிடம், மெரினா பீச், அண்ணா நினைவிடம், உயர்நீதிமன்றம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/8/w600X390/000000mk_case.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/aug/08/மெரினாவில்-கருணாநிதிக்கு-இடம்-கோரிய-வழக்கில்-காலை-830-மணிக்கு-தீர்ப்பு-2976442.html
2954458 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ட்விட்டராட்டிகளை உருக வைத்து இணைய வைரலாகிக் கொண்டிருக்கும் ‘தந்தையின் ரிப்போர்ட் கார்டு’ கார்த்திகா வாசுதேவன் DIN Friday, July 6, 2018 01:09 PM +0530  

உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிக்கிறீர்களா? ஆம், என்றால் அந்த நேசத்தை இதுவரை நீங்கள் உங்களது குழந்தையிடம் எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அது ஒரு விலையுயர்ந்த சாக்லெட் பாராக இருக்கலாம், புத்தம் புதிய கவுனாக இருக்கலாம், பிராண்ட் நியூ பொம்மைகளாக இருக்கலாம். வார இறுதி டூராக இருக்கலாம். குறைந்த பட்சம் தெரு முக்கில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லர் அல்லது பீட்ஸா கார்னர் விஸிட்டாகக் கூட இருக்கலாம். எப்படியோ ஏதாவது ஒரு விதத்தில் நாம் நமது குழந்தைகளின் பால் நமக்குள்ள அளப்பரிய நேசத்தை ஒவ்வொரு நிமிடமும் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்றால், அந்தக் கலையில் பெற்றோர்... குழந்தைகள் பால் தமக்குள்ள நேசத்தை வெளிப்படுத்துவதென்பது மற்றுமொரு நுண்கலை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் மிகச்சிறப்பாக கற்றுக் கொண்டு வெளிப்படுத்தும் பெற்றோர் மற்றவர்களை எப்போதும் உருக வைத்து விடுகிறார்கள்.

இதோ இந்த தந்தையைப் பாருங்கள், ஆட்டிசக் குறைபாடால் பாதிக்கப்பட்ட தனது 10 வயதுக் குழந்தைக்கு அவர் அளித்த மதிப்பெண்களைக் கண்டு இன்று இணையம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இந்தத் தந்தையை.

அந்தத் தந்தையின் பெயர் ஷேன் ஜாக்ஸன். அவரது மகள் லிட்டில் ஷோஃபிக்கு 10 வயது. பிறந்தது முதலே சோஃபிக்கு  ‘ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ பாதிப்பு இருப்பதால் பிற குழந்தைகளைப் போல அவளால் எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்ளவோ அல்லது பள்ளி போன்ற பொது வெளியில் பிற மாணவர்களுடன் எளிதில் கலந்து பழகி நட்பு கொள்ளவோ முடியாத நிலை. கல்வியிலும் பழக்க வழக்கங்களிலும் தான் இந்தத் தடையே தவிர இத்தகைய குழந்தைகளுக்கு கலைகளைக் கற்றுக் கொள்வதில் எவ்விதத் தடைகளும் இருப்பதில்லை. சொல்லப்போனால் பிற சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் இந்தகைய பிறவிக் குறைபாடுகளைகளுடன் இருக்கும் குழந்தைகளுக்குத் தான் நுண்கலைகளைக் கற்பதிலும், சிறப்புர வெளிப்படுத்துவதிலும் அதீதத் திறன் உண்டு என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட நிதர்சனம். அந்த வகையில் லிட்டில் சோஃபிக்கு கலைகள் மீதான ஈர்ப்பு அதிகம். அவளொரு மிகச்சிறந்த ‘ஆர்டிஸ்ட்’ என்கிறார் அவளது அப்பா ஜாக்ஸன்.

சமீபத்தில்... சோஃபிக்கு பள்ளியில் தேர்வு நடந்தது. அதற்கான ரிப்போர்ட் கார்டை ஆசிரியை சோஃபியிடம் அளித்து பெற்றோருக்கு காட்டச் சொல்லியிருக்கிறார். சோஃபிக்கோ துயரம் சொல்லி மாளாது. ஏனெனில், அவள் அத்தனை பாடங்களிலும் ‘D' கிரேடு தான் பெற முடிந்தது. அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அழுது கொண்டே, தன் தந்தையிடம் தனது ரிப்போர்ட் கார்டைக் காட்டினாள். மகளின் கண்ணீரைக் கண்டு உருகிப் போன ஜாக்ஸன், அவளை ஆறுதல் படுத்தும் விதமாக, அழாதே மகளே... இரு உனக்கு இப்படியொரு ரிப்போர்ட் கார்டு அளித்தவர்களை எல்லாம் நான் உனக்கு அளிக்கும் புது ரிப்போர்ட் கார்டு மூலமாக வெகு நிச்சயமாகக் கீழிறக்குகிறேன், பார். என்று கூறியதோடு நில்லாமல், மகளுக்காக ஒரு புது ரிப்போர்ட் கார்டையும் தயார் செய்தார்.

அந்த ரிப்போர்ட் கார்டில் ஜாக்ஸன் மதிப்பெண்கள் அளித்து தரம் காண நினைத்தது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு அல்ல;

தன் மகளின் வாழ்வை இதுவரையிலும், இனிமேலும் ஒளிமயமானதாக ஆக்கவிருக்கும் அவளது நற்பண்புகளுக்கு.

இதோ அந்தப் பாசமான தந்தை, தன் மகளுக்கு அளித்த ரிப்போர்ட் கார்டை நீங்களும் கூட பாருங்களேன்...

இப்படியொரு ரிப்போர்ட் கார்டை மகளுக்கு அளித்ததோடு, அதை இணையத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘DAD'S REPORT CARD' என்று தலைப்பிட்டு பகிர்ந்திருக்கிறார் ஷேன் ஜாக்ஸன்.

மகள் மீதான ஜாக்ஸனின் நேசத்துக்கும் அவரது ரிப்போர்ட் கார்டுக்கும் ட்விட்டரில் ஏக வரவேற்பு. ஜாக்ஸனின் இந்த ட்விட் 12,000 முறைகள் பகிரப்பட்டு 65,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. ட்விட்டரில் அவருக்கு கருத்துரையிடும் ட்விட்டரட்டிகளில் பலரும்... ஜாக்ஸனின் ட்விட் மூலமாகத் தாங்களும் தங்களுடைய ஆட்டிஸ பாதிப்புள்ள குழந்தைகளை மேலும் எவ்விதமாகவெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று யோசிக்க இந்த ட்விட் தூண்டலாக அமைந்திருப்பதாக பாராட்டித் தள்ளுகிறார்கள்.

மகளின் ரிப்போர்ட் கார்டுக்கு கிடைத்த வரவேற்பால் அகமகிழ்ந்து போன ஜாக்ஸன் தற்போது, தன் மகள் லிட்டில் சோஃபிக்காக என்றே பிரத்யேகமாக ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி லிட்டில் சோஃபி தனது நுண்கலைத்திறமைகளை வெளிப்படுத்த அந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்துவார் என ஒரு அன்பான தந்தையாக ஜாக்ஸன் மகளின் ட்விட்டர் கணக்கை தனது ஃபாலோயர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

விருப்பமிருப்பவர்கள் அங்கே சென்று லிட்டில் சோஃபியின் திறமையைப் பாராட்டலாம்.

ஒரு காலத்தில் ஆட்டிஸம், டிச்லெக்ஸியா என்றால் என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் கல்வியில் மந்தநிலையில் இருந்தால் அவர்களை அவர்களின் குறைபாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயலாமல் பெற்றோர் அப்படிப்பட்ட குழந்தைகளை வார்த்தைகளாலும், செயலாலும் வதைக்கும் போக்கு உலகெங்கும் பரவலாக இருந்து வந்தது. இன்று அந்த நிலை மாறி பெரும்பாலான பெற்றோர் தத்தமது குழந்தைகளின் கற்றல் திறனிலோ அல்லது பிறருடன் பழகும் திறனிலோ தடைகள் இருப்பதைக் கண்டால் அதற்கான காரணம் ஆட்டிஸம் அல்லது டிஸ்லெக்ஸியாவாகவும் இருக்கலாம் என்று யோசிக்க முன்வருவது குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய முன்னேற்றம். அப்படியே குறைபாடுகள் ஏதாவது இருப்பினும் அதற்கான சிகிச்சைமுறைகளைத் தெரிந்து கொண்டு அந்தக் குழந்தைகளை பிற குழந்தைகளுக்கு இணையாக ஊக்கப்படுத்தி சமூகத்தில் அவர்கள் எந்த நிலையிலும் பிறர் முன்னிலையில் தாழ்வாக உணராதவாறு அவர்களைப் பக்குவமாகக் கையாள்வது மிகப்பெரிய கலை. அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் மட்டுமல்ல குழந்தைகள் பாலான நேசமும் மிக முக்கியம்.

ஜாக்ஸன் அப்படிப்பட்ட தந்தைகளில் ஒருவராக இருப்பது லிட்டில் சோஃபியின் அதிருஷ்டம்.

வாழ்த்துக்கள் தந்தைக்கும்... மகளுக்கும்!

]]>
ட்விட்டர், DAD'S REPORT CARD, SHANE JACKSON, LITTLE SOPHIE, தந்தையின் ரிப்போர்ட் கார்டு, ஷேன் ஜாக்ஸன், லிட்டிலெ சோஃபி, இணைய வைரல், viral in net, Autistic Spectrum Disorder(ASD), ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/6/w600X390/dad-report-card-with-daughter.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jul/06/dad-writes-sweetest-report-card-for-autistic-daughter-leaves-twitterati-emotional-2954458.html
2953785 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? சுப்ரமணியன் சாமி கேள்வி! தமிழிசை பதில் சொல்வாரா? RKV DIN Thursday, July 5, 2018 01:16 PM +0530  

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தலைகீழாய் தவமிருக்க, அக்கட்சியின் உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பி யுமான சுப்ரமணியன் சுவாமி தனியார் செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருப்பது அக்கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தி உணர்வை எழுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக யாருடன் நெருக்கமானால் தேர்தலில் அதற்கு அனுகூலம் கிடைக்கக் கூடும்? என்றொரு கேள்வி சுப்ரமணியன் சாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரளித்த பதில்;

‘தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? இங்கே அது வெறும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் போலத்தானே செயல்பட்டு வருகிறது. யாரையாவது போய் சந்திப்பது, மாலை போடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது... இப்படித்தானே அவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், அதனால் பாஜக குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக பாஜக வின் தலைமையில் மாற்றமில்லை என்றால் தமிழக பாஜகவில் மீண்டும் அதே மாதிரியான நிலமை தான் நீடிக்கப் போகிறது. மாற்றமில்லை என்றால் தேர்தல் வெற்றிக்கான மாற்றங்களை யார் கொண்டு வரப்போகிறார்கள். கட்சிக்கான பலன்களை கொண்டு வராதவர்கள் யாரோ, அவர்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அப்படிப் புதிதாக யாரையாவது கொண்டு வந்தால் தான் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கும். இந்துத்வாவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது. இந்து ஒற்றுமையை நிலைநாட்டக்கூடிய கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இப்போதுள்ளவர்கள் இந்துத்வாவுக்கு சாதகமற்ற  கருத்துக்களையெல்லாம் கூட அறிக்கையாக சமர்பித்து விடுகிறார்கள். அதனால் தமிழக பாஜகவால் தனது இந்துத்வா துறுப்புச் சீட்டை வைத்துக் கொண்டு இங்கே வெற்றி பெற முடியாது.

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது என்பதெல்லாம் நிருபர்கள் தான் அதிகமாக எழுதுகிறீர்கள். நீங்கள் எல்லாம் ரஜினி மன்ற உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக ஒன்றுமில்லாத ரஜினியை பாஜகவின் அடையாளமாக்கப் பார்க்கிறீர்கள். இப்போது அவரது மனைவி விஷயத்தில் என்னவாயிற்று என்று பாருங்கள். அவர்களது மானம் போயிற்று அங்கே... நீதிமன்றமே எச்சரித்து அனுப்பியிருக்கிறதே! இவர் தான் வந்து நாளை ஊழலை ஒழிக்கப்போகிறாரா?! ' என்று சுப்ரமணியன் சாமி பதில் அளித்து பரபரப்புக் கிளப்பியிருக்கிறார்.

இதற்கு தமிழக பாஜக தலைமையின் பதில் என்னவாக இருக்கக் கூடும்?!

 

News concept courtesy: thanthi TV

]]>
TN BJP, THAMIZISAI, Subramanian Swamy, TN BJP ACTS AS A HOSPITALITY CENTRE, சுப்ரமணியன் சாமி, தமிழக பாஜக தலைமை, தமிழிசை, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/5/w600X390/subramniyan.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jul/05/தமிழகத்தில்-பாஜக-இருக்கிறதா-சுப்ரமணியன்-சாமி-கேள்வி-தமிழிசை-பதில்-சொல்வாரா-2953785.html
2953103 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிக்பாஸ் வாய்ப்பு கதவைத் தட்டியது! RKV DIN Wednesday, July 4, 2018 01:46 PM +0530  

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் கடந்த வாரத்தில் அம்மாநிலத்தின் வனப்பகுதி சிற்றூர் ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை உத்தர பஹுகுனா என்பவரை உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டார். காரணம், ஆசிரியை உத்தர பஹுகுனா, முதல்வர் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியான ‘ஜனதா தர்பார்’ நிகழ்வில் திடீரென நுழைந்து அந்த நிகழ்ச்சிக்குச் சற்றும் தொடர்பின்றி தனது பணியிட மாறுதல் தொடர்பாக முதல்வரிடம் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த முதல்வர் பணியிட மாற்றம் குறித்துப் பேச இது இடமல்ல, அதைப் பற்றித் தீர்மானிக்க பள்ளிக்கல்வித் துறை செயலகம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இருக்கிறார். இங்கே வந்து இப்படி சம்மந்தமில்லாமல் குழப்பமுண்டாக்க நினைக்கும் இந்தப் பெண்மணியை உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு அவரைச் சிறையிலும் தள்ளுங்கள் என உத்தரவிட்டார். முதல்வரின் இத்தகைய உத்தரவைக் கேட்ட மாத்திரத்தில் மேலும் கொந்தளித்துப் போனவரான ஆசிரியை உத்தரா... ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள் என முதல்வரை நோக்கி கடுமையாகப் பேசியவாறு அந்த இடத்தை விட்டு நகர, அவரை காவலர்கள் அவ்விடத்தை விட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். தற்போது பெயிலில் வெளியில் வந்த பின்னும் ஆசிரியையின் கோபம் இன்னும் தணியவில்லை.

இந்நிலையில், மாநில முதல்வரையே பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்து விட்டவரான ஆசிரியையின் திறனை எண்ணி வியந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தரப்பிலிருந்து தங்களது போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி ஆசிரியைக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இது குறித்துப் பேசுகையில் ஆசிரியை உத்தரா,  ‘தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்ததாகவும், ஆனால், தனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை எனக்கூறி தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ‘ என் வாழ்க்கையை நான் அமைதியான முறையில் சிரமமின்றி நடத்திச் செல்ல ஆசைப்படுகிறேனே தவிர, பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமாகி பணம் சம்பாதிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லையென்றும், தன்னுடைய ஆசிரியப் பணி மூலம் கிடைக்கும் பணத்தில் தனது குடும்ப காரியங்களை நடத்திச் செல்லவே தான் விரும்புவதால் அதற்கு அரசு தரப்பிலிருந்து தன்னுடைய பணியிட மாறுதலுக்கு உத்தரவிட்டால் அது மட்டுமே தனக்கு திருப்தி கிடைக்கச் செய்யும் மாற்றமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் கோபம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்தின் அன்றைய கோபத்துக்கு சமாதானம் செய்யும் விதமாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தன்னிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார். அவர் ஏன் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும். என்னை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது மாநில முதல்வர். அவரல்லவா தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்? ஜனதா தர்பாரில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. நான் எனது உரிமையைத்தான் கேட்டேன். அதற்கு முதல்வர் பொறுமையாகப் பதிலளிக்காமல், ஆரம்பத்திலேயே கோபத்துடன் பதில் அளிக்கத் தொடங்கியதாலும், நானும் பதிலுக்கு கோபப்பட வேண்டியதாயிற்று. இது நியாயமான உணர்வு தானே? இதற்காக நான் ஏன் அஞ்ச வேண்டும்? அதற்கெல்லாம் அஞ்சக் கூடிய ஆள் நானில்லை. என் வரையில் நான் செய்தது நியாயமே. சுமார் 25 வருடங்களாக எனக்கு வந்த பணியிட மாறுதல்கள் அனைத்துமே வனப்பகுதி சிற்றூர்களாகத்தான் அமைந்தன. நான் என் வாழ்நாள் முழுவதையும் வனங்களில் கழிக்க வேண்டும் என என்னை யாரும் சபிக்கவில்லை. எனவே என் கணவரின் மரணத்தின் பின் என் குழந்தைகளை அனாதைகளாக விட மனமின்றி டேராடூனுக்கு பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருக்கிறேன். இதோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கூடிய விரைவில் எனது விண்ணப்பத்திற்கு ஆவண செய்வதாக வாக்களித்திருக்கிறார். பார்க்கலாம்... என்ன நடக்கப்போகிறது என! என்கிறார் செம தில்லாக.

இந்த தைரியத்துக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும், முன் வைத்த காலை பின் வைக்காத நேர்மைக்காகவும் தான் ஆசிரியை உத்தர பஹுகுனாவை பிக்பாஸ் குழு தங்களது போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியதோ என்னவோ?! நல்ல வேளை கடவுளின் நற்கருணையால் ஆசிரியை அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் என்பதாகத் தகவல். 

]]>
Teacher suspended by Uttarakhand CM, call from Bigg Boss makers, Uttarakhand CM Trivendra Singh Rawat, Uttara Pant Bahuguna., முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை, உத்தர பஹுகுனா, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பிக்பாஸ் வாய்ப்பு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/uttara_bahuguna.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jul/04/teacher-suspended-by-uttarakhand-cm-for-arguing-with-him-gets-call-from-bigg-boss-makers-2953103.html
2953060 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்... சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்... டோண்ட் மிஸ் இட்! RKV DIN Wednesday, July 4, 2018 11:02 AM +0530  

இந்த பாகிஸ்தானி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அட்ராசிட்டிகளைப் பாருங்கள். வரப்போகும் தேர்தலுக்காக மனிதர் பொது மக்களிடையே ஓட்டுக் கேட்கும் முறையைப் பார்த்தால் குபீரென்று இருக்கிறது. உலகில் எந்த அரசியல்வாதியும் இப்படியொரு வினோதமான முறையில் ஓட்டுக் கேட்டிருக்க மாட்டார்கள். அரசியல் ஆர்வம் மிக்கவர்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாத புகைப்படங்கள் இவை. டோண்ட் மிஸ் இட்.

பாகிஸ்தானில் இது தேர்தல் நேரம்... தேர்தல் வெகு நெருக்கத்தில் இருக்கிறது. கராச்சியைச் சேர்ந்த அயாஸ் மெமோம் மோட்டிவாலா எனும் இந்த சுயேட்சை வேட்பாளர் தான் போட்டியிடும் ஆம் ஆத்மி பாகிஸ்தான் எனும் கட்சியின் சார்பாக பொதும் மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். எப்படி தெரியுமா? அதைத்தான் இன்று உலகமே கண்டு வியந்து கொண்டிருக்கிறது. இப்படியெல்லாமா ஒரு சுயேட்சை வேட்பாளர் ஓட்டுக் கேட்கக் கூடும் என்ற அதிர்ச்சியில் கராச்சி மக்கள் மூக்கின் மேல் விரலை வைத்து மூடிக் கொண்டு, தலைச்சுற்றலையும், குமட்டலையும், வாந்தியையும் அடக்கிக் கொண்டு நான்கடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு இருக்கிறது அவரது ஓட்டுக் கேட்கும் பாணி.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் பிறகு நீங்களே ஒப்புக் கொள்ளக்கூடும்.

குப்பை மீது அமர்ந்து கொண்டு ஓட்டுக் கேட்பு...


கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் படுத்துக் கொண்டு ஓட்டு கேட்பு...


குப்பைத் தொட்டிக்குள்ளேயே இறங்கி ராஜா மாதிரி உட்கார்ந்து கொண்டு ஓட்டு கேட்பு...


பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி ஓட்டுக் கேட்பு...

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த வினோதமான தேர்தல் பிரச்சார பாணிக்கான காணொளி...

ஓட்டுச் சேகரிப்பிலும், பிரச்சாரத்திலும் இம்மாதிரியான வினோதமான முறைகளை இவர் ஏன் பின்பற்றுகிறார் என்றால், அதற்கும் அவரிடம் விளக்கம் இருக்கிறது. இவர் சுயேட்சையாகக் களமிறங்குவது ‘ஆம் ஆத்மி பாகிஸ்தான்’ கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்று நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை. எனவே அவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடையே மிகத்தீவிரமாகப் பதிய வைக்கும் நோக்கில் அவர் இப்படியெல்லாம் வித்யாசமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக விளக்கமளித்திருக்கிறார்.

என்ன இருந்தாலும், தெற்காசிய நாடுகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் இது ரொம்பப் புதுசு தான்.
 

]]>
you should not miss the photos of this Pakistani politician, பாகிஸ்தானி சுயேட்சை வேட்பாளர், வினோத தேர்தல் பிரச்சாரம், ஆம் ஆத்மி பாகிஸ்தான், பாகிஸ்தார் தேர்தல், pakisthan election campaigne, Ayaz Memom Motiwala, an independent candidate https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/pak_cadidate.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jul/04/you-should-not-miss-the-photos-of-this-pakistani-politician-2953060.html
2951782 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நிலத்தை உழுதால் இந்திரன் மழையைக் கொண்டு வருவானா? இந்த இளம்பெண்களின் நம்பிக்கை ஈடேறுமா? RKV ANI Monday, July 2, 2018 01:22 PM +0530  

மழை வேண்டி வருணனையும், இந்திரனையும் துதிப்பதும், அவர்களை மகிழ்விக்க யாகங்கள் நடத்துவதும் வேதகால நாகரீகத்தின் போது பின்பற்றப்பட்ட பழக்கங்களில் ஒன்று. இப்போதும் அந்தப் பழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்படி பெரும்பொருட்செலவுடன் யாகங்களை நடத்துபவர்கள் செல்வந்தர்களாகவும், அரசியல்வாதிகளாகவுமே இருப்பார்கள். சாதாரண மக்களில் யாரும் இப்படி யாகங்கள் நடத்துவதில்லை என்றாலும் அவர்களுக்கும் அப்படியான நம்பிக்கைகள் பலமாகவே இருக்கின்றன. மக்களில் சிலர் கழுதைகளுக்குத் திருமணம் செய்வதும், தவளைகளுக்குத் திருமணம் செய்வதும். ஏன் சில இடங்களில் எறும்புகளுக்குக கூட திருமணம் செய்விக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம்... மக்களது நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவையெல்லாம். மக்கள் ஏன் இப்படியான விஷயங்களை எல்லாம் நம்புகிறார்கள் எனில், ‘நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்பதால் தான். மழையின் அத்யாவசியம் அப்படிப்பட்டதாக இருப்பதால்... மழை பொய்த்துப்போனால், வராத மழையை கட்டி இழுத்துக் கொண்டு வர வைக்கவே இத்தகைய உத்திகளை அவர்கள் கையாள்கிறார்கள்.

இவற்றைத் தவிர்த்து மழை வேண்டி தொடர்ந்து நிலத்தை உழும் புது விதமான நம்பிக்கையொன்றை உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு இளம்பெண்கள் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அறிமுகப்படுத்த இதொன்றும் புதிய உத்தியில்லை... முன்பே வேத காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும் பருவ மழை பொய்த்துப் போன காலங்களில் வராத மழையை வரவழைக்க மக்கள் அதீத நம்பிக்கையுடன் நிலத்தை உழுது வைப்பது வழக்கம் தான். ஆனால், அந்தப் பழக்கத்தை இந்த தலைமுறையில் இப்பெண்கள் மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி பலித்தால் நல்லது. 

வேத காலம் மழைக்கடவுளாக இந்திரனைக் குறிக்கிறது. எனவே, உத்தரப் பிரதேச விவசாயி ஒருவரின் மகள்களான இவ்விரு பெண்களும் தமது தந்தையுடன் இணைந்து மழை வேண்டி இந்திரனைத் துதித்து நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்கள். உழுவது என்றால் டிராக்டர் வைத்து அல்ல, நிலத்தில் இறங்கி ஏர்கலப்பை பிடித்து மனம் முழுக்க மழை குறித்த மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஐந்தாண்டுகளாகவே போதிய மழையின்றி வறண்டு கிடக்கும் தங்கள் நிலத்தை ஆழ உழுது கொண்டிருக்கிறார்கள். 

இந்த முறையாவது மழை பொய்க்காது பூமி தழுவினால் மாத்திரமே தங்களால் ஜீவிக்க முடியும் என்பதால் அவர்கள் தங்களது நம்பிக்கையொன்றை மட்டுமே பற்றுக்கோடாக வைத்து நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்கள். இப்படி உழுவதால் இந்திரனின் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. மழைக்கடவுளான இந்திரனை மகிழ்விக்க ஆயர்கள் பெரும் யாகங்களை நடத்தி இந்திர விழா எடுப்பதாக மகாபாரதத்தில் வரும். ஆயர்களின் தலைவனான கிருஷ்ணன் இந்திர வணக்கத்தையும், இந்திர விழாவென்ற பெயரில் கால்நடைகள் யாகத்தில் பலியிடப்படுவதை எதிர்த்தும் ஒரு சமயத்தில் இந்திரனுக்கான விழாவை தடுத்தி நிறுத்து விடுகிறார். அப்போது கோபம் கொண்ட இந்திரன் பெருமழையாகக் கொட்டித் தீர்க்க ஒட்டுமொத்த ஆயர்பாடியும் வெள்ளத்தில் மூழ்காது தடுக்க கோவர்த்தனகிரி மழையை கிருஷ்ணன் குடையாகப் பிடித்தார் என்கின்றன பாகவத புராணக் கதைகள். 

மேற்கண்ட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே உத்தரப் பிரதேசத்தில் அந்த இளம்பெண்கள் இந்திரன் மனம் குளிர்ந்து மழையாகப் பொழிவான் எனும் மிகுந்த நம்பிக்கையோடு தங்களது நிலத்தை ஏர்கலப்பையால் உழுது கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையின் பால் இப்படி செய்வது நல்ல விளைவைத் தரலாம். ஒருவேளை இயற்கை இம்முறையும் பொய்த்தாலும் இந்தப் பெண்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். விவசாயம் பட்டுப் போகும். அதைத் தாண்டி இந்த நம்பிக்கையால் சமூகத்துக்கு எந்தவிதமான கேடும் இல்லை. ஆனால், இதே மாதிரியான நம்பிக்கையோடு தான் நாட்டில் பலர் மழை வேண்டி தவளைகளுக்குக் கல்யாணம் செய்யலாம், நாய்களுக்குக் கல்யாணம் செய்யலாம், கழுதைகளுக்குக் கல்யாணம் செய்யலாம் என்று வினோதமான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள்.

அது சமூகத்திற்கு கேடோ இல்லையோ? நிச்சயம் அந்தந்த விலங்குகளுக்கு உயிர் வதையாகக் கூட இருக்கலாம்.

எனவே மழைக்கடவுள் இந்திரனே! தயவு செய்து மக்கள் மழை வேண்டி மேலும் புது தினுசாக ஏதாவது வினோத சம்பிரதாயங்களைத் தொடங்கும் முன் தயவு செய்து அந்தந்த வருடக்கோட்டா மழையை மட்டும் அவ்வப்போது சரியாக டெலிவரி செய்து விடுங்களேன் பிளீஸ்!

]]>
UP Girls, plough land to please rain god, உத்தரப் பிரதேச இளம்பெண்கள், மழை வேண்டி நிலம் உழுதல், இந்திரன், மழைக் கடவுள், நம்பிக்கைகள் VSமூட நம்பிக்கைகள், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/2/w600X390/up_girls_plough_land.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jul/02/up-farmers-daughters-plough-field-to-please-rain-god-2951782.html
2950566 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் நியாய முகத்திரையைக் கிழித்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்! RKV DIN Saturday, June 30, 2018 04:29 PM +0530  

உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்த்ர ராவத், பொதுமக்களைச் சந்திக்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில், திடீரெனத் தோன்றிய ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது பணியிட மாறுதல் குறித்துக் கேள்வி எழுப்பியதில் வெகுண்ட முதல்வர். அதெல்லாம் பேச இது இடமில்லை. அதற்கென பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இருக்கிறது. அதற்கென ஒரு செயலர் இருக்கிறார். நீங்கள் ஒரு ஆசிரியையாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பிஹேவ் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக ஆசிரியை, நானொன்றும் இந்த வேலைக்காக என் வாழ்நாள் முழுவதையும் வனவாசத்தில் கழிக்கிறேன் என்று சபிக்கப்படவில்லை. என் கணவரும் இறந்து விட்ட நிலையில் டேராடூனில் வசிக்கும் என் பிள்ளைகளை விட்டு விட்டு மீண்டும் அந்த வனப்பகுதி பள்ளிக்கு என்னால் பணிக்குச் செல்ல முடியாது. பல்லாண்டுகளாக நான் பணியிட மாறுதலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. எனக்கூறினார். இதைக் கண்டு வெகுண்ட முதல்வர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை நோக்கி, முக்கியமான நிகழ்வான முதல்வரின் மக்கள் சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்திய குற்றத்துக்காக உடனடியாக  இவரைக் கைது செய்து சிறையிலடையுங்கள், இவரது வேலையை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டார். தனது நியாயமான கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்காததோடு, மேலும் தன்னைக் குற்றவாளியாக்கி சிறையிலடைக்கவும் உத்தரவிட்டதில் ஆத்திரமுற்ற ஆசிரியை உத்தர பஹுகுனா, அங்கிருந்து வெளியேறுகையில், முதல்வரை நோக்கி, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினார்.

ஆசிரியை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலர் இருவரும், பள்ளிகளில் பணியிட மாறுதல் என்பது உடனே அவரவர் விருப்பப்படி நடந்து விடக்கூடியதில்லை. அதற்கு பணிமூப்பு அடிப்படை இருக்கிறது. பொதுமக்கள் சந்திப்பில் விவாதிக்கக் கூடிய விஷயமல்ல அது. ஆசிரியை உத்தர பஹுகுனாவுக்கு முன்னால் 58 ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக காத்திருக்கிறார்கள். இவரது எண் 59. எல்லாம் இங்கே வரிசைப்படி தான் நடக்கும். என்று பதிலளித்திருந்தார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஆசிரியையும் முதல்வர் ராவத்தின் மனைவுயுமான சுனிதா ராவத்தின் பணியிட மாறுதல்கள் குறித்து தகவல்களைப் பெற விண்ணப்பிக்கவே முதல்வர் வீட்டுக் குட்டு உடைந்திருக்கிறது. அப்பாவி ஆசிரியை விஷயத்தில் ரூல்ஸ் பேசிய முதல்வர் ட்ரிவேந்த்ர ராவத், தனது மனைவிக்கு மட்டும் அவர் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றிருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் பாடி கட்வல் எனும் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் தனது ஆசிரியை பணியைத் துவக்கிய சுனிதா, அடுத்து நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் சுனிதா ராவத்துக்கு பதவி உயர்வு கிடைத்த போதும் அதை மறுத்து விட்டு தொடர்ந்து 24 ஆண்டுகளாக அவர் டேராடூனில் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் தகவல் தெரிய வந்திருக்கிறது.

மக்களாட்சியில் தன் மனைவிக்கு மட்டும் ஒரு முதல்வரால் வெகு எளிதாகப் பணியிட மாறுதல் பெற முடிவதோடு சாமானியர்களின் குடும்பச் சூழ்நிலையை உணராமல் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்த ஆசிரியையின் நோக்கத்தை குற்றம் சாட்டி அவரைச் சிறையிலும் தள்ள முடிகிறது. இது தான் மக்களாட்சியா? 

அதிலும் கடந்த பல ஆண்டுகளாகத் தனது கணவரை இழந்த சூழலிலும் நேர்மையாகப் பணிபுரிந்து நியாயமாக நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நியாயம் பேசினால் அதன் பலன் இது தானா?

ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது குடும்பச் சூழல் காரணமாகத் தன்னால் வேலையையும் விட முடியாது, தந்தையற்ற குடும்பத்தில் குழந்தைகளைத் தனியே அனாதைகளாக அல்லாட விடவும் முடியாது. இப்படியான சூழலில் தன்னைப் பணியிட மாறுதல் செய்யுங்கள் என்று கேட்டு விண்ணப்பித்ததை எவ்விதத்தில் குறை கூற முடியும்? ஒருவேளை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் விளக்கத்தை ஒட்டி இங்கு அனைத்துமே ரூல்ஸ்படி பணியிட மாறுதலுக்கு முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை எனும்  அடிப்படையில் தான் நிகழ்கிறது எனில் முதல்வரின் மனைவிக்கு மட்டும் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற முடிந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது? என்றெல்லாம் உத்தரகாண்ட் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

]]>
உத்தரகாண்ட் ஆசிரியை கைது விவகாரம், முதல்வர் த்ரிவேந்த்ர ராவத், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முதல்வர் மனைவி சுனிதா ராவத், பணியிட மாறுதல் கைது விவகாரம், Teacher Arrested Over Transfer, What RTI Reveals On Chief Minister's Wife https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/30/w600X390/uttara_bahugunaa.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/30/teacher-arrested-over-transfer-what-rti-reveals-on-chief-ministers-wife-2950566.html
2950547 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! RKV DIN Saturday, June 30, 2018 03:13 PM +0530  


பிகார் மாநிலத்தில் கடந்த வெள்ளியன்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று மின்னலைக் காரணமாக வைத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண். காரணம் தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டவர் மின்னல் வெட்டும் போதெல்லாம் அதிகமாகப் பயந்து வித்யாச முகபாவங்களுடன் பயத்தை வெளிப்படுத்துவதும் வினோதமாக நடந்து கொள்வதும் தன்னால் சகித்துக் கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல. அதனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுங்கள் என இரு வீட்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் அறிவித்திருக்கிறார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் வெகுண்டெழுந்து பெண் வீட்டாருடன் தகராறில் இறங்க அங்கே நிலவரம் கலவரமாகி இருக்கிறது. இவர்களது திருமணம் இருவீட்டாரால் நிச்சயிக்கப்பட்டு திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் சிலவற்றையும் செய்து முடித்தபின் மணப்பெண் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி திருமணத்தை நிறுத்தியிருப்பதை தங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது என மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்ததில் விஷயம் காவல்துறை கவனத்துக்குச் சென்றதோடு இணையத்திலும் சந்தி சிரிக்கிறது.

இதுவரையிலும் பெண் வீட்டார் சார்பாக மணமகன் வீட்டாரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் எக்ஸ்ட்ரா ரஸகுல்லா கேட்ட காரணத்துக்காக பெண்ணின் நெருங்கிய உறவினருக்கும், மணமகனின் ஒன்று விட்ட சகோதரருக்குமான வார்த்தைப் போரில் வாய்த்தகராறு தடித்து சண்டையாக மாற அந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த வருட ஏப்ரலில் அதே உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகரில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணமொன்றில், ஆகப்பெரிய காரணமாக முன் வைக்கப்பட்டது மணமகன் வீட்டாருக்கு கறிவிருந்து பரிமாறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.

2017 ஜூன் மாதம் நிகழ்ந்திருக்க வேண்டிய திருமணமொன்றும் கூட இதே விதமாகத்தான் உப்புச் சப்பில்லாத காரணமொன்றைக் கூறி தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கான காரணமாக முன் வைக்கப்பட்டது. மணமகன் பார்ட்டியில் ஆடிய நாகின் நடனம் தன்னைப் பயமுறுத்தும் விதத்தில் இருப்பதால் தன்னால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாதெனக் கூறியிருந்தார் மணப்பெண்.

இதே போல 2016 ஆம் ஆண்டிலும் கூட ஒரு திருமணம் ஐஸ்கிரீமுக்காக ரத்து செய்யப்பட்டது. திருமணத்தன்று மண்டபத்தில் ஐஸ்கிரீமுக்காக மணமகன், மணமகள் வீட்டாருக்கிடையே மூண்ட சண்டையில் இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து சலித்துப் பிறகு செங்கல்லால் தாக்கிக் கொள்ள முனைந்த போது காவல்துறைவந்து சேர்ந்து இரு தரப்பையும் பிரித்து விட்டு சிலரைக் கைது செய்ததோடு அந்த திருமணம் நின்று பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் திருமணங்கள் இப்படி பொசுக்கென நிறுத்தப்படுவது கேலிக்குரியது மட்டுமல்லம் அவமானத்துக்குரியதும் கூட.

ஆனாலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
 

]]>
மின்னலால் நின்ற திருமணம், மணமகனின் மின்னல் பயம், திருமணத்தை நிறுத்திய மணமகள், bride call off wedding, lightening cause, bihar wedding call off due to lightening https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/30/w600X390/marriage_call_off_after_lightening.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/30/girl-refuses-to-marry-groom-when-he-behaves-strangely-after-lightning-strike-2950547.html
2950530 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்! (விடியோ இணைப்பு) RKV DIN Saturday, June 30, 2018 01:26 PM +0530  

கோவையில் தனது கடையின் முன்புறம் மாட்டியிருந்த விளக்குகளில் ஒன்றைக் காணாமல் கடையின் உரிமையாளர் தேடியிருக்கிறார். யார் விளக்கைத் திருடியிருப்பார்கள் என்பதை அறிய அவர் தனது கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைச் சோதித்துப் பார்க்க கிடைத்திருக்கும் பதிவுகள் அந்தோ! பரிதாபமாக இருந்தாலும் மின் விளக்கைத் திருடுவதற்காக அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் யுத்தி இன்று நாடு முழுவதும் பலரையும் வெடித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதிகாலை நேரத்தில் பலரும் நடமாடும் ஒரு கடைத்தெருவில் நின்று கொண்டு எதற்காக இந்த மனிதர் அந்த மின்விளக்கைத் திருடுகிறார்? திருட்டு என்றால் இது சாதாரணத் திருட்டில்லை. சார்லி சாப்ளின் கார்ட்டூன்களிலும், மிஸ்டர் பீன் காமெடி ஷோவிலும் வருவதைப் போல இந்த மனிதர் அந்த விளக்கைத் திருடப் படும் பாட்டிற்கு பேசாமல் கடைக்காரரின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து எனக்கு உங்க கடை விளக்கு வேணும், கொஞ்சம் பிச்சை போடறீங்களா? என்று கேட்டு வாங்கியிருந்தாலும் கூட இன்றைக்கு ஊரே கேள், நாடே கேள் என்று இந்த விஷயம் சந்தி சிரித்திருக்காது. 

மின்விளக்கைத் திருட முடிவெடுத்தாயிற்று, ஆனால், தான் திருடும் போது யாரும் பார்த்து விடக்கூடாது என்ற பயமும், வெட்கமும் வேறு! அதனால், அந்த மனிதர், கடைத்தெருவில் மனித நடமாட்டம் இருக்கும் போதும், தன்னை யாராவது நெருங்கி வருகிறார்களோ என்று எண்ணும் போதும் மட்டும் உடற்பயிற்சி செய்வது போல பலே கில்லாடியாக நடிக்கிறார். ஆனால், அவரது நோக்கம் உடற்பயிற்சி செய்வது அல்ல. விளக்கை கழற்றி ஜோபியில் மாட்டிக் கொண்டால் அப்புறம் இடத்தைக் காலி செய்வது தான். இதோ இந்த விடியோ பதிவில் பாருங்கள். ஒருவழியாக மின்விளக்கு அகப்பட்டதும் மனிதர் தனது ஜெகஜ்ஜால உடற்பயிற்சி கண் துடைப்பை அம்போவென விட்டு விட்டு சிட்டாகப் பறந்து விட்டார்.

மக்களே உஷாராக இருங்கள். வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட யாரையுமே இந்தக் காலத்தில் நம்பி விடாதீர்கள்.

 

]]>
Man Pretends To Exercise, Only To Steal A Bulb., மின்விளக்கு திருட்டு, கோவை மனிதரின் நூதனத் திருட்டு, உடற்பயிற்சி செய்வது போல திருடிய மனிதர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/30/w600X390/man_stole_pulb.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/30/man-pretends-to-exercise-only-to-steal-a-bulb-watch-2950530.html
2950499 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பணிமாறுதல் கோரிய ஆசிரியை, சிறையில் அடைக்கச் சொன்ன முதல்வர்! RKV ENS Saturday, June 30, 2018 11:41 AM +0530  

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்த்ர ராவத் பங்கேற்ற ஜனதா தர்பார் நிகழ்வில் 57 வயது ஆசிரியை ஒருவர் தனது பணிமாற்றம் குறித்து ஏற்படுத்திய சர்ச்சையால் முதல்வர் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

உத்தர பஹுகுனா எனும் அந்த ஆசிரியை, தொடர்ந்து பல்லாண்டுகளாக தனது குடும்பத்தினரை விட்டு வெகு தொலைவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருவதாகவும், இனியாவது தனது குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து வசிக்க விரும்புவதால் தனக்கு, தன் வசிப்பிடத்துக்கு அருகில் பணிமாறுதல் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி முதல்வர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் கோரிக்கை வைத்தார்.

டேராடூனில் வசிக்கும் என் குழந்தைகளை அனாதைகளாக விட்டு விட்டு இனியும் என்னால் அத்தனை தொலைவில் சென்று பணிபுரிய இயலாது. 2015 ஆம் ஆண்டில் நன் என் கணவரை இழந்து விட்டேன். அதன்பின் எனது பணிமாறுதலுக்காக, எனது நிலையை விளக்கி பலமுறை முதல்வரிடம் விண்ணப்பித்து விட்டேன். ஆனால் அவர் இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை. அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால், அவர் திடீரெனக் கையை நீட்டி, நீங்கள் ஒரு ஆசிரியை, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளப் பாருங்கள் என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்.

பொதுவெளியில் நிகழ்ந்த இந்த சர்ச்சை காணொளியாக்கப்பட்டு இணையத்தில் வலம் வருகிறது. அந்த காணொளியில் காணக் கிடைப்பவை, ‘ ஆசிரியை பஹுகுனா, முதல்வரிடம், என்னால் எனது வேலையையும் விட முடியாது, என் குழந்தைகளையும் தனிமையில் விட முடியாது. எனவே எனக்கு பணிமாறுதலுக்கு உத்தரவிடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.

அதற்கு முதல்வர் ராவத், நீங்கள் பணியில் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உங்களுக்கு ஏதாவது கியாரண்டி அளிக்கப்பட்டிருந்ததா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆசிரியை பஹுகுனா, ‘ என் வாழ்க்கையை நான் காட்டில் தான் வாழ்ந்தாக வேண்டுமென்று நானொன்றும் சபிக்கப்படவில்லை’ என்று பதிலுரைத்தார்.

ஜனதா தர்பாரில் இவ்விதம் நிகழ்ந்ததால், முதல்வர் கோபமுற்று, உடனடியாக அந்த ஆசிரியையை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதோடு அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டார்.

முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து, பஹுகுனா, முதல்வரைப் பார்த்து, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கோபத்துடன் கத்துவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியை பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதைப் பற்றி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்த்ர ராவத் அளித்த விளக்கம், பணிமாறுதல் கோருபவர்கள் இப்படி பொது மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் வந்து சர்ச்சையைக் கிளப்பும் விதத்தில் கேள்வியெழுப்பக் கூடாது என்றார். உத்தரகாண்ட் பள்ளிக்கல்வித்துறை செயலரான புபிந்தர் கெளர் அலாக் இதுகுறித்துப் பேசுகையில், பணிமாறுதல் என்பது அவரவர் விரும்பிய நேரங்களில், விரும்பிய இடங்களில் கிடைக்கக் கூடியதல்ல, அது சீனியாரிட்டி அடிப்படையில், யார் முதலில் விண்ணப்பித்திருக்கிறார்களொ அவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் நிகழ்வது, இவர் மட்டுமல்ல , இவரைப் போல 58 ஆசிரியர்கள் உத்தரகாண்டில் தூரமான காட்டுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இவரை விடவும் அதிக வருடங்கள் பணியிலிருப்பவர்கள் இருக்கிறார்கள். பணிமாறுதலுக்காக விண்ணப்பித்தவர்கள் லிஸ்டில் ஆசிரியை பஹுகுனா 59 வது இடத்தில் இருக்கிறார். அவருக்கான நேரம் வரும் போது அவர் கேட்ட பணிமாறுதல் கோரிக்கை பரிசீலிக்கப்படும். அதற்குள் அவசரப் பட்டால் எப்படி? இங்கே எல்லாம் முறைப்படி தானே நடத்தப் பட முடியும்.’ என்கிறார்.

]]>
Teacher's riposte on CM'S darbar lands her in jail, பணிமாறுதல் கோரிய ஆசிரியை, சிறையில் அடைக்கச் சொன்ன முதல்வர்! https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/30/w600X390/uttara_bahuguna.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/30/teachers-riposte-on-cms-darbar-lands-her-in-jail-2950499.html
2949830 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்! RKV DIN Friday, June 29, 2018 12:25 PM +0530  

கோயம்பத்தூர்: அண்மையில் வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி, தர வரிசைப் பட்டியலில் தான் முதலிடம் பெற்றிருந்தாலும் தனக்கு இளங்கலை வேதியியல் பாடத்தில் இணைந்து படிக்கவே விருப்பம் எனக் கூறியிருப்பது ஆச்சர்யப் படத்தக்க விஷயம். வியாழனன்று வெளியான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா (18) முதலிடம் பெற்றிருந்தார். முதலிடம் பெற்றது சந்தோஷத்திற்குரிய விஷயமாக இருந்த போதும் மாணவி கீர்த்தனா பொறியியல் கல்லூரியிலோ, பல்கலைக் கழகங்களிலோ சேர்ந்து கற்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் தான் டெல்லி, செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வேதியியல் கற்கவே விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். முதலில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கும் நோக்கம் இருந்ததால் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும் ஆனால், இப்போது வரை தனது ஆர்வம் இளங்கலை வேதியியல் படிப்பையே நாடுவதால் தான் டெல்லி கல்லூரியில் சேர்ந்து படிக்கும் விருப்பத்துக்கே முன்னுரிமை தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மாணவி கீர்த்தனாவின் வீடு கோவையில் இருந்த போதும் அவர் கேரளமாநிலம், பாலக்காடு BSS  குருகுலம் பள்ளியின் மாணவி. கேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது. எனவே அவர் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். இப்போது தரவரிசைப் பட்டியலில் முதலிடமும் பெற்றிருக்கிறார்.

பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும், தனக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பாடத்தில் அதீத விருப்பம் இருக்கும் காரணத்தால் அதையே கல்லூரியில் விரிவாகக் கற்க விரும்புவதாகத் தெரிவித்தார். வேதியியலில் மீதான விருப்பத்துக்குக் காரணம் பள்ளியில் தனக்குக் கிடைத்த அருமையான வேதியியல் ஆசிரியையே எனக்கூறும் மாணவி கீர்த்தனா, ஒருவேளை நான் பொறியியல் படிப்பில் சேர நேர்ந்தாலும் கூட கெமிக்கல் இஞ்சினியரிங் பாடப்பிரிவையே தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் தங்கள் மகள் முதலிடம் பெற்ற போதும், பொறியியலுக்கு முன்னுரிமை அளிக்காமல் இளங்கலை வேதியியல் கற்க விரும்புவது குறித்து கீர்த்தனாவின் பெற்றோர் என்ன கருதுகிறார்கள் எனில், கல்வியைப் பொறுத்தவரை தங்களது மகளின் விருப்பத்துக்கே முன்னுரிமை அளிப்பதென தாங்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மதிப்பெண்கள் அதிகம் பெற்று முதலிடம் பெற்று விட்டதனாலேயே மகளை அவளுக்கு விருப்பமில்லாத ஒரு பாடத்தில் சேர்ந்து கற்கச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என அவர்கள் முடிவெடுத்திருப்பது ஆறுதலான விஷயம். ஏனெனில், பல பெற்றோர்களால் இன்று அப்படி முடிவெடுத்து விட முடிவதில்லை.

மகள் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள். முதலிடம் பெற்ற எல்லோரும் பொறியியல் படிக்கிறார்களா? நம் குழந்தையும் அதைத்தான் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஆட்டு மந்தை சமூகப் பிரதிநிதிகளாக அவர்களும் இல்லாமலிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாணவி கீர்த்தனாவின் தந்தை A S ரவியும் ஒரு பொறியாளரே. தாயார் பாலாம்பிகா ரவி பாலக்காடு BSS கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.

]]>
Keerthana Ravi, TOPPER IN TNEA, LOVETO STUDY B.Sc Chemistry, கீர்த்தனா ரவி, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தரவரிசை, அண்ணா பல்கலைக்கழக டாப்பர், இளங்கலை வேதியியல் கற்க விருப்பம், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/29/w600X390/keerththana_ravi_1.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/29/coimbatore-girl-tops-rank-list-in-tnea-but-wants-to-continue-pursuing-bsc-chemistry-2949830.html
2949148 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 5 நட்சத்திர விடுதியில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சுற்றுலாப் பயணிகள்! RKV ENS Thursday, June 28, 2018 03:42 PM +0530  


பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா அங்கம் வகிக்கிறது என நேற்றுத்தான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ திரும்பிப் பார்ப்பதற்குள் அதை மெய்ப்பிப்பது போலொரு சம்பவம் ராஜஸ்தானில் பிரபல 5 நட்சத்திர விடுதியொன்றில் அரங்கேறியிருக்கிறது. ஐடிசி ஹோட்டல்கள் என்றாலே மக்களிடையே நற்பெயருண்டு. சுற்றுலாப் பயணிகள் விரும்பித் தங்கிச் செல்லும் லக்ஸூரி விடுதிகளில் ஐடிசி விடுதிகளுக்கு என்றும் பிரதான இடமுண்டு. அங்கே தங்கினால் பாதுகாப்பு என்பதோடு அவர்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விதமும் அலாதியானதாக இருக்கும். அதனால் தான் அயல்நாட்டுப் பயணிகளும் கணிசமாக அங்கே தங்கிக் கொண்டு இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த செவ்வாயன்று மெக்ஸிகோவில் இருந்து இந்தியா வந்த இரு பெண்கள் ராஜாஸ்தானில் இருக்கும் ஐடிசி நட்சத்திர விடுதியான ஐசி ராஜபுதனாவில் தங்கிக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க விரும்பினர். அதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது ராஜபுதனாவின் ஜெனரல் மேனேஜரான ரிஷி ராஜ் சிங்.மெக்ஸிகன் பெண்களுக்கு, ரிஷி ராஜ் சிங்கின் தொலைபேசி எண்கள், அந்த விடுதியில் முன்பே தங்கிச் சென்றிருந்த அவர்களது நண்பர்கள் சிலரிடமிருந்து கிடைத்ததால், அவர்கள் ராஜஸ்தான் ஐடிசி ராஜபுதனா விடுதிக்கு வந்ததுமே சந்தித்த முதல் நபர் ரிஷிராஜ் சிங் தான்.

ரிஷிராஜ் சிங்கின் புகைப்படம்...

செவ்வாயன்று அந்தப் பெண்களுடன் ராஜஸ்தானின் முக்கியமான இடங்களுக்கு எல்லாம் ரிஷி ராஜ் சிங்கும் உடன் சென்று ஊர் சுற்றிக் காண்பித்துமிருக்கிறார். பின்னர் ஐடிசி விடுதியில், விடுதி ஊழியர்களில் ஓய்வு பெற்றுச்செல்லப்போகிற சிலரைக் கொண்டாடும் விதமாக ஃபேர்வெல் டே எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். இதுவரை எல்லாமும் நார்மலாகவே சென்று கொண்டிருக்க, 9.30 மணியளவில் மெக்ஸிகோ பெண்கள் விடுதியில் தங்களது அறைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சுமார் 11.30 மணியளவில் கதவு தட்டப்பட்டிருக்கிறது. யாரென எட்டிப் பார்த்தால் ரிஷி ராஜ் சிங். உள்ளே வந்தவர் அந்தப் பெண்களிடம் தவறான விதத்தில் பேசத்தொடங்கியதோடு மெக்ஸிகோ பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடவும் முயன்றிருக்கிறார். உண்மையில் அந்தப் பெண்கள் பயந்துவிட்டார்கள். இரவு விடைபெற்றுச் செல்லும் போது இந்த மனிதர் நன்றாகத்தானே இருந்தார். என்று அவர்கள் திகைத்து நிற்க அறைக்குள் தகராறு நடந்திருக்கிறது. அறைக்குள் 20 நிமிடங்கள் இருந்த ரிஷிராஜ் சிங் தகராறுக்குப் பின் அங்கிருந்து வெளியேற  அதையடுத்து அதிகாலை 3.30 மணியளவில் இவ்விஷயம் தொடர்பாக காவல்துறையில் அப்பெண்கள் புகார் அளித்திருக்கின்றனர்.

புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிசிடிவி ஃபூட்டேஜ் ஆதாரங்கள் அடிப்படையில் ஐடிசி ராஜபுதனா 5 நட்சத்திர விடுதியின் ஜெனரல் மேனேஜரான ரிஷி ராஜ் சிங் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 

ரிஷி ராஜ் சிங் இந்த 5 நட்சத்திர விடுதியில் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. இங்கு பணியில் இணைவதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பிரபல 5 நட்சத்திர விடுதிகளில் பல பொறுப்புகளில் இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனினும், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளான மெக்ஸிகோவைச் சேர்ந்த பெண்களிடம் இவ்விதமாக நடந்து கொண்டது சுற்றுலாத்துறைக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுவதாக அத்துறை சார்ந்த உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் தொழில்களில் சுற்றுலாத்துறைக்கு என்றுமே சிறப்பான இடமுண்டு. ரிஷி ராஜ் சிங் போன்ற சிலர் அதைக் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!

.

]]>
இந்தியா, பாலியல் வன்முறை, பெண்கள் பாதுகாப்பு, ஐடிசி ராஜபுதனா, ஐடிசி 5 நட்சத்திர விடுதி, பொது மேலாளர் ரிஷிராஜ் சிங், மெக்ஸிகன் பெண் சுற்றுலாப் பயணிகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/28/w600X390/000_pre_press_journal.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/28/five-star-hotel-manager-arrested-for-molesting-mexican-tourists-in-jaipur-2949148.html
2938825 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தொழில்முறை மாடலாக இருந்து மதகுருவாக மாறிய பய்யூ மகராஜ் தற்கொலை! RKV DIN Wednesday, June 13, 2018 11:57 AM +0530  

பய்யூ மஹாராஜ் இந்தியாவின் டாப் அரசியல் தலைகள் மற்றும் பிரபலத் தொழிலதிபர்களின் மதகுருவாகத் திகழ்ந்தவர் நேற்று மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் தனது ஆசிரமத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்தூரில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் செவ்வாயன்று தனக்குத்தானே தலையில் சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பய்யூ மஹராஜ் இறந்து விட்டார் என மும்பை மருத்துவமனை உறுதி செய்தது.

1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள்... மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஷுஜல்பூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான பய்யூ மஹராஜ்/ ஆரம்பத்தில் தொழில்முறை மாடலாக தன் வாழ்வைத் துவக்கினார். பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமொன்றின் ஆஸ்தான மாடலாகச் சில காலம் திகழ்ந்தார்.. பய்யூவுக்கு பென்ஸ் கார் மற்றும் ரோலக்ஸ் வாட்ச்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஒரு சாதுவாக இருந்த போதும் தனது ஆர்வம் காரணமாக அவர் சேகரித்து வைத்திருக்கும் விதம் விதமான ஃபேன்ஸி கார்கள் மற்றும் எழுதிக் குவித்த கவிதைத் தொகுப்புகள் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் ஃபேன்ஸி & ஃபேண்டஸி சாதுவாக அனைவராலும் அறியப்பட்டவராக இருந்தார். எப்போதும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் உலா வரக்கூடியவரான பய்யூ மஹராஜுக்கு இந்தூரில் சொந்தமாக மிகப்பெரிய பங்களா ஒன்றுண்டு. 

உதய் சிங் தேஷ்முக் எனும் இயற்பெயரையுடைய பய்யு மகராஜ் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசியல் வட்டாரத்தில் நன்கு பிரபலமானவர். குடும்பப் பிரச்னைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், கலாச்சாரம், அறிவு, தன்னலமற்ற சேவை புரியக் கூடிய பெருந்தன்மையான மனம் கொண்டவரான ஒரு ஆன்மீக குருவை இந்த நாடு இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்து தனது இரங்கலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த வருட துவக்கத்தில் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் சிவராஜ் சிங் நான்கு துறவிகளுக்குத் தனது அமைச்சரவையில் இடமளிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார், அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட அந்த நான்கு துறவிகளில் பய்யூ மஹராஜும் ஒருவர். இந்த அறிவிப்பை ஒட்டி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார் சிவராஜ் சிங் செளஹான். 

ஆனால், பய்யூ மஹராஜ் அரசு தனக்களித்த அந்த கெளரவ பதவியை ஏற்க மறுத்ததோடு, ஒரு சாதுவுக்கு பதவி முக்கியமில்லை என்றும் அறிவித்தார். ஆனாலும் மாநில அரசு தனது அறிவிப்புக்கும், முடிவுக்கும் நியாயம் செய்யும் வகையில், நர்மதா நதி பாதுகாப்புக் குழு பணிகளை திறம்படச் செய்து முடிப்பதற்காகவே 4 சாதுக்களுக்கும் அமைச்சர் பதவி தர ஆளும் தரப்பு முடிவு செய்ததாக கூறி பிரச்னையை அப்போதைக்கு சமாளித்தது.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, பய்யூ மஹராஜ் தனக்குத் தானே உருவான ஒரு சுயம்பு மதகுருவாகத் திகழ்ந்தார். குறுகிய காலத்தில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானதற்குக் காரணம் அரசியல் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடன் அவருக்கிருந்த தொடர்புகளே. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல் பாடகி லதா மங்கேஷ்கர் வரை அவருக்குப் பல்வேறு பிரபலங்களும் சிஷ்யர்களாக இருந்தனர்.

2011 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை அறிவித்த போது, அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி மேலிடம் அணுகியது பய்யூ மஹராஜைத் தான். அன்னா ஹசாரேவுக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்து உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் பய்யூ மஹராஜ் தான்.

மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது,  மத நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி சாத்பாவனா உண்ணா நோன்பை அறிவித்திருந்தார். மூன்று நாட்கள் நீடித்த அந்த நோன்பில் மோடியுடன் அமர வெகு மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் இந்த பய்யூ மஹராஜ்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் மனைவி இறந்த நிலையில் தனது 49 வயதில் பய்யூ,  மருத்துவர் ஆயுஷி ஷர்மாவை மணக்கும் போது அந்த திருமணத்தை எதிர்த்தும் பய்யூ தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் வட இந்திய நடிகை ஒருவர் திருமண மண்டபத்துக்கே வந்து தர்ணா செய்தது பய்யூவின் வாழ்வில் விமர்சனத்துக்குரிய விஷயங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இரு ஆண்டுகளுக்கு முன் தன் மகளைப் பார்த்து வர பய்யூ சென்றிருந்த போது அவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளாக்கும் முயற்சியும் நடத்தப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக 2016 ஆம் ஆண்டில் தான் பொது வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்திருந்தார் பய்யூ மஹராஜ். அதற்குப் பின் அவரது ஆதரவாளர்கள் அவரைக் காண்பது அவரது தற்கொலையின் பின் மருத்துவமனையில் தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு பய்யூ மஹராஜின் முதல் மனைவி இறந்த நிலையில் கடந்தாண்டு ஆயுஷி ஷர்மா எனும் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களையும், இரண்டாவது மனைவியையும் அம்போவென விட்டு விட்டு பய்யூ மஹராஜ் குடும்பப் பிரச்னை காரணமாக அதிக பட்ச மன உளைச்சலில் தன்னைக் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அவரது ஆதரவாளர்களிடையே கடுமையான அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

பய்யூ மஹராஜ் தற்கொலை மரணம் குறித்து நாங்கள் மிகவும் கவலையில் இருக்கிறோம். அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ன நடந்ததெனத் தெரியவில்லை. நடந்ததை அறிய ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட வேண்டும் என கம்ப்யூட்டர் பாபா எனும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு மதகுரு கேள்வியெழுப்பியுள்ளார். இவரும்... ஆளும்கட்சியால், பய்யூ மஹராஜுடன் இணைந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘சாதுக்கள்’ அமைச்சர் குழுவில் ஒருவரே!

மேற்கண்ட காரணங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது பய்யூவின் மரணத்துக்கு குடும்பப் பிரச்னைகளே காரணம். உளவியல் சிக்கல் காரணமாக பய்யூ தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவு ஏற்றக்கூடியதல்ல, கடந்த சில ஆண்டுகளாக ஆளும் பாஜகவினருக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கும் படி பய்யூ தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். அந்த நிர்பந்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என காங்கிரஸ் பிரமுகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒரு மாடலாகத் தனது பொது வாழ்வைத் துவக்கிய பய்யூ... ஒரு காலகட்டத்தில் வட இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள், அதிகாரிகள் என அனைவரது நன்மதிப்பையும், அறிமுகத்தையும் பெற்று மதகுருவாக உலா வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. இதற்கென தனி விசாரணைக் கமிஷன் அமைத்து தற்கொலைக்கான காரணத்தை ஆராயுமா தற்போதைய மத்தியப் பிரதேச ஆளும் தரப்பு?! பொறுத்திருந்து காணலாம்.

Image courtesy: Google

]]>
தற்கொலை, suicide, Bhaiyyu Maharaj, top politicians spritual guru, பைய்யூ மகராஜ், அரசியல் தலைவர்களின் மதகுரு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/bhaiyyu_maharaj.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/13/bhaiyyu-maharaj-spiritual-guru-to-top-politicians-commits-suicide-2938825.html
2937608 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் உயர் அதிகாரியின் பாலியல் தொல்லையை சமூக ஊடகத்தில் பதிவு செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரி! RKV DIN Monday, June 11, 2018 12:57 PM +0530  

ஹரியானா கேடரில் பணிபுரிந்து வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறு அன்று தனது முகநூல் கணக்கில்... இந்தியில் தனது உயர் அதிகாரி, தனக்கு தொடர்ந்து அளித்து வரும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து பதிவு செய்திருந்தார்.

முகநூலில் தான் பதிவு செய்திருந்த தகவலை அப்படியே புகாராக்கி சண்டிகர் காவல்நிலையத்துக்கு மின்னஞ்சலும் செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது புகாருக்கு எந்தவிதமான பலனும் இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் சரி, மாநிலத்தின் உள்துறை செயலருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிய போதும் சரி அதற்கான பலன் இந்த விஷயத்தை தான் முகநூலில் பதிவு செய்து விட்டு அச்சு ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய வரையிலும் கூட கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள உயரதிகாரி, அதிகாரப்பூர்வ கோப்புகளில் ஜூனியர் பெண் அதிகாரியான தான் எதிர்ப்புக் கருத்துக்களை எழுதக் கூடாது எனத் தடுக்கும் பொருட்டு இவ்விதமாகத் தன்னிடம் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சம்மந்த்தப்பட்ட அந்த உயரதிகாரியின் பெயரை பொது வெளியில் வெளிப்படையாக தெரிவிப்பது குறித்து தனக்கேதும் ஆட்சேபணை இல்லை என அவர் குறிப்பிட்டிருந்த போதும் தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இந்தி ஊடகங்கள் இருவரது பெயரையும் வெளியிடவில்லை. 

ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பெண் அதிகாரி;

‘மே 31 ஆம் தேதி தனது அறைக்கு என்னை அழைத்த அந்த உயர் அதிகாரி, அறைக்குள் தான் அழைக்கும் வரை எவரும் வரக்கூடாது என பிற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் என்னிடம், நீ இங்கே எப்படி வேலை செய்ய விரும்புகிறாய்? துறை சார்ந்த அலுவலக வேலையைச் செய்ய விரும்புகிறாயா? அல்லது பொழுது போக்காக வேலை செய்ய விரும்புகிறாயா? என்றும் கேட்டார். அதோடு அதிகாரப் பூர்வ அலுவலக கோப்புகளில் கையெழுத்திடும் போதும், குறிப்புகள் எழுதும் போதும் எதிர்ப்புக் கருத்துகளை அதில் பதிவு செய்யக் கூடாது எனக் கூறினார். அவர் எனக்கு வேலை செய்யக் கற்றுத்தரும் விதத்தைப் பார்த்தால் புதுமணமகளுக்கு புகுந்த வீட்டில் வேலை கற்றுத்தருவது போல இருந்தது. அதனால் தான் அவரது நடத்தை எனக்கு ஒழுக்கக் கேடானது போலத் தோன்றியது.’  - என விவரித்திருந்தார்.

அது மட்டுமல்ல, பிறகு ஜுன் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அந்த உயர் அதிகாரி அவரது அலுவலகத்துக்கு அழைத்தார், நான் சென்று அவரது நாற்காலிக்கு எதிரில் அமர்ந்து 7.39 மணி வரை காத்திருந்தேன். பிறகு என்னை எழுந்து அவரது அருகில் வரச்சொன்னார். கணினியில் எப்படிப் பணிபுரிவது எனக் கற்றுத்தருவதாகச் சொல்லி அவரது அருகில் அமரச் சொன்னார். நான் அவரது அருகில் அமர்ந்த போது, மேலும் அருகில் நெருங்கி வந்து அமருமாறு கூறினார். அப்போது மேலும் நெருங்கி அமர்ந்து என்னைத் தொட முயன்றார். இத்தகைய நடவடிக்கைகள் எனக்கு ஒழுக்கக் கேடானதாகத் தோன்றியதால் நான் புகார் அளித்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பற்றி சம்மந்த்தப் பட்ட உயரதிகாரியிடம் விசாரித்ததில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தார். நான் ஒரு உயரதிகாரி என்ற முறையில், எனக்குக் கீழே பணிபுரியும் ஜூனியர் அதிகாரிகளுக்கு வேலை கற்றுத் தருவது எனது கடமை. அதைத்தான் நான் செய்தேன். அந்த இளம் பெண் அதிகாரி குறிப்பிடுவது போல இங்கே எதுவும் நடக்கவில்லை. அதோடு அலுவலகக் கோப்புகளில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்வதை அந்தப் பெண் அதிகாரி தொடர்ந்து செய்து வந்தார். அப்படிச் செய்யக்கூடாது என நான் அறிவுறுத்தினேன். ஒரு மேலதிகாரியாக இதுவும் எனது கடமை. அலுவலக நேரத்தில் பெண் அதிகாரிகள் பணிபுரியும் சூழலில் தனியாக இருக்கக் கூடிய சந்தர்பங்களை நான் பெரும்பாலும் நிராகரித்து விடுவேன். எப்போதாவது அப்படி நேர்ந்திருந்தால் அது வெகு குறைவான சமயங்களிலாக மட்டுமே இருந்திருக்கலாம். எனத் தெரிவித்திருக்கிறார்.

பெண் அதிகாரியின் புகார் குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,  உண்மையில் யார் மீது தவறு என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்கிறது ஹரியானா காவல்துறை.

]]>
Haryana woman IAS officer, accuses senior of sexually harassing, ஹரியானா பெண் ஐஏ எஸ் அதிகாரி, பாலியல் தொல்லை தரும் உயர் அதிகாரி, ஹரியானா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/11/w600X390/stop_violence_against_woman.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/11/haryana-woman-ias-officer-accuses-senior-of-sexually-harassing-2937608.html
2936439 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்... பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்ட்டனி போர்டைன் தற்கொலை! RKV DIN Saturday, June 9, 2018 01:27 PM +0530  

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்டனி போர்டைன் 8.6.2018 அன்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டு மரணத்தைத் தழுவினார். சிஎன் என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஃபுட் & டிராவல் தொடரான பார்ட்ஸ் அன்னோன் (உலகின் அறியப்படாத பகுதிகள்) மூலமாக உலகப் புகழ் பெற்றவரான போர்டைன் ஃபிரெஞ்சு ஐந்து நட்சத்திர விடுதியறையொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட செய்தி உலகம் முழுவதுமிருக்கும் அவரது ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவைப் பொருத்த வரை இந்த தற்கொலையானது சமீபகாலமாக மக்களை அதிர வைத்திருக்கும் இரண்டாவது பெரிய தற்கொலையாகும். மறைந்த ஆண்டனி போர்டைனுக்கு வயது 61.

ஃபிரான்ஸில் இருக்கும் ஸ்ட்ராஸ்பர்க் நட்சத்திர விடுதியில், தான் பங்கேற்று நடத்தி வரும் ஃபுட் & டிராவல் தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளவெனத் ஆண்டனி போர்டைன் தங்கியிருந்த சூழ்நிலையில் தான் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது என சி என் என் தொலைக்காட்சி பிரதிநிதி தெரிவித்துள்ளார். போர்டைன் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரான கேட் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டார். கேட் ஸ்பேட் தான் வடிவமைத்த சிக்னேச்சர் ஹேண்ட்பேக்குகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பால் அமெரிக்க டிசைனர் உலகையே கட்டியாண்டவர். திடீரென கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தனது அபார்ட்மெண்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியிலிருந்தே அமெரிக்கர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த அகில உலகப் புகழ் செலிபிரிட்டி செஃப் ஆண்டனி போர்டைனின் தற்கொலைச் செய்தி அமெரிக்கர்களை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்ட்டனி போர்டைனின் தொலைக்காட்சி ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1999 முதல் 2016 வரையிலான தற்கொலை கணக்கெடுப்பு விகிதத்தை ஆராய்ந்ததில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 45,000 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கின்றனர். அவர்களது மரணத்துக்கான காரணங்களை US  சென்ட்டர் ஃபார் டிஸீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்சன் துறை ஆராய்ந்ததில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அல்சைமர்ஸ் நோய் பாதிப்பால் உட்கொள்ளும் மருந்துகள் ஓவர் டோஸ் ஆவதால் மனிதர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வலுக்கிறது என்பதே!

போர்டைன் பிரபலமாகத் தொடங்கியது 1999 ஆம் ஆண்டில். நியூ யார்க்கர் பத்திரிகை முதன்முறையாக போர்டைனின் உணவு தொடர்பான கட்டுரை ஒன்றை "Don't Eat Before Reading’ எனும் தலைப்பில் தொடராக வெளியிடத் தொடங்கியது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2000 மாவது ஆண்டில்  "Kitchen Confidential: Adventures in the Culinary Underbelly.
என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமிருக்கும் உணவுப் ப்ரியர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

புத்தக வெளியீட்டால் கிடைத்த பிரபலத்தன்மை மற்றும் புகழின் அடிப்படையில் அடுத்ததாக போர்டைன் உள்ளூர் ஃபுட் நெட்வொர்க் மற்றும் டிராவல் தொடர்பான தொலைக்காட்சி சேனலொன்றில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். 2013 ல் சிஎன்என் தொலைக்காட்சியில் சேரும் முன்பு வரை போர்டைனின் வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது.

சாகஸமாக நிகழ்ச்சியை நடத்திச் செல்வதில் இருக்கும் ஆர்வம், புதுப்புது நண்பர்களைத் தேடிக்கொள்ளும் ஆர்வம், அருமையான சமையல் திறன், சமைப்பது மட்டுமல்ல அவற்றைப் பற்றி மணிக்கணக்கில் கேட்பவர்களுக்கு சலிக்காத வகையில் மிக அருமையாகக் கதைகள் சொல்லத் தெரிந்த நேர்த்தி என போர்டைனின் திறமைகள் அத்தனையும் அவரது ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் மாயக்கயிறுகளாயின. அவரது சி என் என் சேனல் ஃபுட் அண்ட் டிராவல் தொடருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பரவியது இப்படித்தான். எனவே போர்டைனின் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா தவிர உலகம் முழுவதிலும் பரவலாகக் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவு. நம்மூர் துல்கர் சல்மான் கூட ஆண்ட்டனி போர்டைன் ரசிகரே! எனக்கும், என் அப்பாவுக்கும் மிகப்பிடித்த செஃப் இவர். நாங்கள் ஒரு முறை இவரை நேரில் சந்திக்க சென்றிருந்த போது எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அனுப்பி வைத்தார். பழகுவதற்கு மிக இனிமையானவரான செஃப் ஆன் ட்டனி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இதை என்னால் நம்ப முடியவில்லை’ என துல்கர் ட்விட்டரில் துக்க ஸ்டேட்டஸ் தட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்டனியின் மரணத்திற்காக சி என் என் சேனல் தரப்பும் தங்களது துக்கம் கலந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது. செஃப் ஆண்ட்டனி போர்டைனின் சமையல் மற்றும் கதை சொல்லி நிகழ்ச்சி நடத்தும் திறமை ஒருபோதும் எங்களுக்கு சலித்ததில்லை. அவரது மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. செஃபை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வாழ்வின் இத்தகைய கடுமையான சூழலை அவர்கள் கடந்து வர நாங்கள் எங்களால் முடிந்தவரை உதவுவோம். அவரது மகள்கள் மற்றும் மனைவியின் மனம் துக்கத்தில் இருந்து விடுபட்டு வெளிவந்து இயல்பு வாழ்க்கை பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என சேனல் தரப்பு தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

செஃப் தற்கொலை செய்து கொண்டதற்கு தீவிரமான மன உளைச்சலே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் கருத்துச் சொல்லி வருகின்றன.

]]>
celebrity chef suicide, Anthony Bourdain, suicide, பிரபல செஃப் ஆண்ட்டனி போர்டைன் தற்கொலை, சி என் என் ஃபுட் கிரிட்டிக், அமெரிக்க செஃப் தற்கொலை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/9/w600X390/antony_bourdain.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/09/anthony-bourdain-celebrity-chef--cnn-food-critic-commits-suicide-2936439.html
2936426 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 624 / 625 மதிப்பெண் பெற்ற மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து சென்ட்டம் பெற்ற அதிசயம்! RKV DIN Saturday, June 9, 2018 12:21 PM +0530  

கர்நாடக மாநிலம் கெல்காவியில் இருக்கும் செயிண்ட் சேவியர்ஸ் இங்க்லீஷ் மீடியம் ஹை ஸ்கூல் மாணவரான முகமது கைஃப் முல்லா, அம்மாநில ஸ்டேட்போர்டு கல்வித்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளிவந்த போது முகமது கைஃப் 625 மதிப்பெண்களுக்கு 624 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவராக அறிவிக்கப்பட்டார். மொத்த மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைந்ததை முகமது கைஃப் ஆல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அறிவியல் பாடத்தில் மட்டும் 1 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டு இருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல், முகமது கைஃப் மீண்டும் மறு மதிப்பெண் கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இம்முறை அறிவியல் பாடத்தில் 1 மதிப்பெண் கூடுதலாகக் கிடைத்ததில் முகமது கைஃபின் எதிர்பார்ப்பு பலித்தது. மொத்தப் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று தனது கனவை நனவாக்கிக் கொண்டார். இப்போது முகமது கைஃப் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர் அல்ல, முதலிடம் பெற்ற மாணவர்களில் அவரும் ஒருவர் என்பதில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி!

தற்போது மேல்நிலைக் கல்வி பெறுவதற்காக RLS College of KLE Institution for the PU (science) study ல் இணைந்திருக்கும் முகமது கைஃபின் அடுத்த கனவு ஐஏஎஸ் அதிகாரியாவது மட்டுமே. தனது மேற்படிப்பை முடித்து விட்டு குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதிலும், போராடுவதிலும் பெருவிருப்பம் கொண்டிருக்கும் முகமது கைஃப் நமது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுவதும் அதைத்தான்.

மேற்படிப்பை முடித்து விட்டு தகுதி வாய்ந்த அதிகாரியாக அரசின் மக்கள் நலனுக்கான கொள்கை வரைவுத் திட்டக் குழுவில் தானும் பங்கேற்கும் நேரம் வரும் போது தான் முன்னுரிமை தரும் பிரச்னைகளில் முதலிடம் பெறுவது குழந்தை தொழிலாளர் பிரச்னையாகவே இருக்கும். என்னால் முடிந்தவரை வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்க ஆவண செய்வேன். ஏனெனில் கல்வி மட்டுமே அந்தக் குழந்தைகளின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை வழங்கக் கூடியது. மிக மோசமான வாழ்வாதரங்களைப் பெற்றுள்ள அந்தக் குழந்தைகளை அதிலிருந்து மீட்டெடுக்க உதவக் கூடியது கல்வி மட்டுமே. எனவே அவர்களது கல்வி உரிமையில் நான் அதிகம் கவனம் செலுத்த விரும்புவேன் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

முகமது கைஃபின் பெற்றோர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். தந்தை ஹரூன் ரஷித் முல்லா உருது ஆசிரியர். தாயார் பர்வீன் முல்லா அரசுப் பள்ளியொன்றில் கன்னடம் கற்பிக்கும் ஆசிரியை. தங்களது மகனின் கனவு அவனது கடின முயற்சியால் நனவானது கண்டு பெருமிதப்பட்டு நிற்கும் அந்தப் பெற்றோரே முகமது கைஃபின் ரோல்மாடல்கள்.

]]>
Class 10 student scores 624/625, revaluation gives full score, Mohammad Kaif Mulla of St Xavier's English Medium High School , முகமது கைஃப், 624/625 மதிப்பெண் பெற்ற மாணவர், மறுகூட்டலில் சென்ட்டம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/9/w600X390/karnadaka_student.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/09/624--625-மதிப்பெண்-பெற்ற-மாணவர்-மறுகூட்டலுக்கு-விண்ணப்பித்து-சென்ட்டம்-பெற்ற-அதிசயம்-2936426.html
2935717 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்! RKV DIN Friday, June 8, 2018 03:59 PM +0530  

முன்னால் நீதிபதி கர்ணன் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை’ தொடங்குவதாக கடந்த மாதம் கொல்கத்தாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் கொடியை இன்று அவர் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலை விரித்தாடும் ஊழலை ஒழிப்பதற்காகவே தான் கட்சி தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

‘சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மீது புகார் அளித்தேன். விசாரணைக்குச் சென்ற என் மீது... நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். ஆனாலும், மீண்டும் எனது புகாரை விசாரணைக்குக் கொண்டு வரவேண்டும். அதைப் பற்றிய விவாதங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே நான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன். பாராளுமன்றத்தில் எனது புகாரைப் பற்றிய விவாதத்தை எழுப்ப வேண்டுமானால் எம் பி க்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதற்காகவும் தான் நான் இந்த அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளேன். என்னுடைய கட்சி காட்டாற்று வெள்ளம் போல வேகம் கொண்டது. எந்த அரசியல் கட்சி எங்களை எதிர்த்து நின்றாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று பாரளுமன்றத்துக்குள் நுழைவோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் ஆறுதல் தொகை அளிப்பதாக நான் அறிவித்திருந்தேன். அவர்களுக்கு 1, 30,000 ரூபாய் நான் தர வேண்டும். அதை நானே சென்று அவர்களிடம் அளிப்பேன். என முன்னாள் நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.

]]>
Justice Chinnaswamy Swaminathan Karnan, justice karnan, justice karnan's new political party, anti corruption dynamic party, முன்னாள் நீதிபதி கர்ணன் கட்சிக் கொடி, ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/8/w600X390/ex_justice_karnans_party_flag.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/08/முன்னாள்-நீதிபதி-கர்ணனின்-ஊழல்-ஒழிப்பு-செயலாக்க-கட்சி-கொடி-அறிமுகம்-2935717.html
2934274 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி! RKV IANS Wednesday, June 6, 2018 04:22 PM +0530 குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி. 

‘பொதுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்பது மக்களின் பணத்தை வீணடிப்பதற்குச் சமமானது. ஏனெனில் பேருந்துகளில் பெண்கள் பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படியான சமயங்களில் அத்தகைய பேருந்துகளில் எடுக்கப்பட்ட கேமரா ஃபூட்டேஜுகள் எதுவுமே இதுவரை பலனளித்தது இல்லை. பொதுப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும் போது அவர்களது உடலில் படக்கூடாத இடங்களில் கை வைப்பது, இடிப்பது மாதிரியான சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேற்றப்படும். ஆனால் அந்தக் காட்சிகள் எதுவும் கேமராக்களில் பதிவாவதில்லை. ஏனெனில் பேருந்துகளில் பொருத்தப்படும் கேமராக்கள் நிலையானவை. அவை சுழல் கேமராக்கள் இல்லை. பேருந்தில் பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு பேருந்தில் ஏறும் ஆண்களில் எவரும் இந்த கேமராக்களில் அகப்படுவதில்லை. பொதுப்பேருந்துகளில் எப்போதுமே கூட்டம் அதிகமிருக்கும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான். எனவே பொதுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வீணான வேலை தேவையில்லை.அத்தகைய கேமராக்களை எங்கு பொருத்தினால் அதனால் நிஜமான, நிறைவான பலன்கள் கிடைக்கக் கூடுமோ அங்கே அந்த கேமராக்களைப் பொருத்தினால் மட்டுமே அதனால் பலன் உண்டு எனும் போது பேருந்துகளில் பொருத்த முயல்வது வீண் வேலை என்கிறார் மேனகா காந்தி. பெண்கள் நலத்துறை அமைச்சகம் சார்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் சில பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், அவற்றால் இதுவரை ஒரு பயனும் இல்லை. எனவே டெல்லி மாநில அரசின் வேண்டுகோளின் படி, நிர்பயா நிவாரண நிதியிலிருந்து  பணம் எடுத்து  டெல்லி கார்ப்பரேஷன் பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் மறுத்திருக்கிறது.

]]>
menaka gandhi, மேனகா காந்தி, cctv camera, சிசிடி வி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/cctv_cameras.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/06/cctvs-in-buses-waste-of-public-money-maneka-gandhi-2934274.html
2934258 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்! RKV DIN Wednesday, June 6, 2018 01:46 PM +0530  

உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை, பொதுமக்கள் தங்களது காலணிகளால் அடிக்க வேண்டும் என்று அந்த மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்திருப்பது சா்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பைரியா தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளதை கண்டிக்கும் வகையில், சுரேந்திர சிங் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை அத்தகைய அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் விதமாக இவ்வாறு கூறினார். 

அப்போது பலியாவில் அவா் தனது ஆதரவாளா்கள் மத்தியில் அவா் பேசியதாவது...

அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால், அப்போது அவரது குரலை பதிவு செய்யுங்கள். அந்த குரல் பதிவை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். தங்களது கடமையை அரசு அதிகாரிகள் முறையாகச் செய்யவில்லையெனில், முதலில் அவரது முகத்தில் ஒரு அறை விடுங்கள். அப்படியும் அவா் பிடிவாதமாக இருந்தால், அவரது முகத்தில் காலணியால் அடியுங்கள் என்றார் சுரேந்திர சிங்.

அவரது இந்த கருத்து, உத்தரப் பிரதேசத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, தமது கருத்து குறித்து சுரேந்திர சிங் எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது, ‘மக்கள் நலனை மனதில் கொண்டே நான் அவ்வாறு கூறினேன்; மக்கள் நலனுக்காக நான் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்’ என்பதாக இருந்தது.

சுரேந்திர சிங் தெரிவிக்கும் கருத்துகள் அடிக்கடி சா்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். உத்தரப் பிரதேச மாநிலம், கைரானா மக்களவைத் தொகுதி, நூா்புா் சட்டப் பேரவை தொகுதி இடைத் தோ்தல் முடிவு வெளிவந்த பிறகு சுரேந்திர சிங் பேட்டியளித்தபோது, முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசில் இருக்கும் அமைச்சா்களால் தான், இடைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது என குற்றம்சாட்டியிருந்தார். இந்த அமைச்சா்களை பதவி நீக்கம் செய்யவில்லையெனில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அழிவை சந்திக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஊழல் அரசு அதிகாரிகளை செருப்பால் அடிக்கச் சொன்ன தெலங்கானா முதல்வர்...

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இதே விதமான எச்சரிக்கையொன்றை பொதுமக்களிடையே விட்டு பரபரப்பைக் கிளப்பிய மற்றுமொரு அரசியல் தலைவரும் இந்தியாவில் இருக்கிறார். அவர் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ்.

அவரும் கூட ‘ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்’  எனக் கடந்தாண்டு மக்களிடம் ஊழலுக்கெதிரான ஆவேசத்தைக் கிளப்பியிருந்தார்.

கடந்தாண்டு அக்டோபரில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் டிஆர் எஸ் கட்சி சார்பிலான சங்கம் வெற்றி பெற்றது.

அப்போது அந்த வெற்றியையொட்டி நடத்தப்பட்ட வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் டிஆர் எஸ் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான சந்திர சேகர் ராவ் கலந்து கொண்டார்.

உயர் அதிகாரிகள் குறித்து தொழிலாளர்கள் பல்வேறு குறைகளை கூறினார்கள். நிறுவனத்தின் மெடிக்கல் போர்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர். நிறுவனத்தின் குடியிருப்பில் இடம் வேண்டும் என்றால் லஞ்சம் என பரவலாக ஊழல் இருப்பதாக கூறினார்கள்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா போகு கனி கர்மிகா சங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பின், மக்கள் தங்களுக்கான நலன்களை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என்றார். அதோடு இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்த முடியவில்லை என தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்து விட்டு லஞ்சம் கேட்கும் ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் லஞ்சத்தை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவேசமாகப் பேசினார் தெலங்கானா முதல்வர்.

முதல்வர் சந்திர சேகர் ராவின் பேச்சு, அதிகாரிகளிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஆவேசத்தைக் கிளறும் வகையில் இப்படிப் பேசி வருவது சரியானதா? ஊழல் அதிகாரிகளை தண்டிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?! அரசின் பொறுப்பல்லவா? அப்பாவி பொதுமக்கள் அதிகார பலம் படைத்த ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை செருப்பால் அடித்து விட்டால் பிறகு அவர்களுக்கு நேரக்கூடிய ஆபத்துகளுக்கு யார் பொறுப்பு?!

அரசியல்வாதிகளின் அதிரடியான இந்தத் தூண்டுதல் குறித்து சாமானியர்களின் கருத்து என்னவாக இருக்கும்?

தினமணி வாசகர்கள் தங்களது கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட இரு சம்பவங்களிலும் பாஜக எம் எல் ஏ சுரேந்தர் சிங்கும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவும் ஊழல் அரசியல்வாதிகளைத் தான் செருப்பால் அடிக்கும்படி கூறியிருக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் ஊழல் அரசியல்வாதி எனத் தான் கருதிய அமைச்சர் ஒருவரை செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் செருப்பால் தாக்கிய செய்தியையும் நீங்கள் அறிந்திருக்க நேரிட்டிருக்கலாம். அது நடந்தது 2009 ஆம் ஆண்டில். 

ஷூ தாக்குதலுக்கு உட்பட்ட அரசியல்வாதி அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். 

ப.சிதம்பரம்  மீதான ஷூ வீச்சுக்கான காரணம்...

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம். 

அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. 

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன். மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார். ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். 

அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார். உடனடியாக விடுவிப்பு: ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. அதே பாணியில் ப.சிதம்பரம் மீதும் ஷூ வீசப்பட்டது. ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். பிரஸ்மீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், ‘நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அணுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். இதை எந்தப் பத்திரிக்கையாளரும் செய்யக் கூடாது. ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’ என்றார். இவர் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை கவர் செய்யும் ரிப்போர்டராகவும் உள்ளார். 

சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் ரூ. 2 லட்சம் பரிசு...

ப.சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய நிருபருக்கு, அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தது. அத்தகைய சூழலில் அன்று, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜர்னைல் சிங் பேசுகையில், ‘நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். ஆனால், சிபிஐ அறிக்கை குறித்து மத்திய அரசும் சிதம்பரமும் யோசித்துப் பார்க்க வேண்டும்’ என்றார். ‘இந்தப் பிரச்சனை தொடர்பாக வேறு வழியில் போராடியிருக்கலாமே?!’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எந்த வகையில் போராடச் சொல்கிறீர்கள். இந்தப் பிரச்சனையில் 25 வருடமாக இதே தானே நடந்து கொண்டிருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம்...

2008 ஆம் வருடத்தில் ஒரு நாள், ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார். 

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். 

‘ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார். முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குனிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2ன்வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது. இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சில வீரர்கள், நிருபரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை பேச விடாமல் மடக்கிப் பிடித்தபடி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு செருப்படி சம்பவங்களிலுமே அத்தகைய தாக்குதலில் ஈடுபட்டவர்களது இன்றைய நிலை என்ன என்பது குறித்து போதிய தகவல்கள் கிடைத்தபாடில்லை.

வகையாக மாட்டியிருந்தால் நிச்சயம் சங்கு ஊதியிருப்பார்கள். சில அரசியல் தலைவர்கள் தங்களது பெருந்தன்மையைப் பறைசாற்றிக் கொள்வதற்காக அப்படிப்பட்டவர்களை மன்னித்து விட்டார் போல நடிப்பதும் உண்டு. என்ன இருந்தாலும் அதற்குப் பின் உஷாராக இருந்தே ஆக வேண்டிய நிலையை அவர்கள் தேடிக்கொண்டார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


 

]]>
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடித்தவர்கள், செருப்பால் அடிக்கச் சொன்னவர்கள், politicians who asked to thrown shoes to bribe officers, journalists who thrown shoes to leaders and politicians, bush, ex minister chidhambaram, thelangana CM, BJP https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/seruppal_adi.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/06/லஞ்சம்-கேட்கும்-அரசு-அதிகாரிகளை-செருப்பால்-அடியுங்கள்-2934258.html
2931221 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மைனர் சிறுவன் கார் ஓட்ட ஆசைப்பட்டதில் நேர்ந்த விபரீதம்! RKV DIN Friday, June 1, 2018 04:05 PM +0530  

அஸ்ஸாம்: கெளகாத்தி, டின்சுகியா மாவட்டத்தைச் சார்ந்த நகரொன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருவரும் அவரது இரு மகன்களும் கார் விபத்தில் மரணமடைந்தனர். இறந்த பெண்ணின் பெயர் மோனிகா குமார். அவர் தனது மகன்களைப் பள்ளியில் இறக்கி விடச் சென்ற நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. மோனிகா குமார், தனது காரில் இன்று காலையில் தனது மகன்களான சாக்சன் மற்றும் ப்ரியம் இருவரையும் பள்ளியில் இறக்கி விடச் சென்றார். பயணத்தின் போது மூத்த மகன் சாக்சன் தானே காரை ஓட்டி வருவதாகக் கூற மோனிகா அதற்கு அனுமதியளித்திருக்கிறார். 

காரை, சாக்சன் அதிவேகத்தில் ஓட்டிச் செல்ல, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருளத்தொடங்கியிருக்கிறது. மூத்த மகன் சாக்சன் 11 வகுப்பு மாணவர், இளைய மகன் ப்ரியம் 9 ஆம் வகுப்பு மாணவர். அதிவேகப் பயணத்தின் காரணமாக நிகழ்ந்த இந்த விபத்தில் மோனிகா குமாரும், சாக்சனும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, இளைய மகன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
 

]]>
minor adult, driving car, car skidded, car accidant, assam, மைனர் சிறுவன், கார் விபத்து, விபத்து மரணங்கள், அஸ்ஸாம் கார் விபத்து https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/1/w600X390/car_skidded_in_assam.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jun/01/மைனர்-சிறுவன்-கார்-ஓட்ட-ஆசைப்பட்டதில்-நேர்ந்த-விபரீதம்-2931221.html
2930494 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்! RKV DIN Thursday, May 31, 2018 02:01 PM +0530  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நோக்கில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார். தூத்துக்குடியில் ரஜினி கால் வைத்தது முதலே அங்கே காவல்துறை கெடுபிடி அதிகமாக இருந்தது.

ரஜினியின் தீவிர ரசிகனான இளைஞர் ஒருவர் தங்கள் தலைவர் எதற்காக அங்கே வருகை தந்திருக்கிறார்? என்ற உணர்வு சிறிதும் இன்று தலைவர் சென்ற காரைத் துரத்திச் சென்று அவருடன் ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதோடு, இனி என் வாழ்க்கையில் இப்போதே மரணம் வந்தாலும் சந்தோஷமாகச் சாவேன் என்று படு சிரத்தையாக தனது ரசிகத் தனத்தை வேறு பறைசாற்றியிருந்தார். இந்த நிகழ்வைச் செய்தியாக்க ஊடகங்கள் மறக்கவில்லை.

ஒரு இளைஞர் இப்படி இருக்க....

அங்கு மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்திக்க ரஜினி விரைந்த போது அங்கும் ரஜினியைக் காணவும், வேடிக்கை பார்க்கவும் ஏக களேபரம். சில மருத்துவர்கள் கூட ஓடிவந்து கூட்ட நெரிசலில் ரஜினியை வேடிக்கை பார்த்ததாகத் தகவல். ரஜினி தரிசனம் தேவ தரிசனமாகப் பலருக்குத் தெரிய காயமடைந்த நபர்களில் ஒருவரான இளைஞர் மட்டும், தன்னைப் பார்வையிட வந்த ரஜினியிடம், ‘யார் நீங்க?’ என்று கேட்டிருக்கிறார்? அதற்கு ரஜினி, ‘நான் ரஜினிகாந்த்’ எனப் பதிலளிக்க... அதற்கு அந்த இளைஞர்  ‘நீங்கள் ரஜினிகாந்த் என்பது எனக்குத் தெரிகிறது, எங்கே இருந்து வருகிறீர்கள்?’ என்று மீண்டும் ரஜினியைப் பார்த்துக் கேட்கவே, அதற்கு ரஜினி ‘நான் சென்னையில் இருந்து வருகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார். அப்போதும் அசராத அந்த இளைஞர், ‘சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாட்கள் ஆகுமா?’ என்று அந்த இளைஞர் கேட்க அதைக் கண்டு ரஜினி இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தை நகர்ந்தார் என்கின்றன செய்தி ஊடகங்கள். 

ரஜினியைக் கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அவர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. காவல்துறை தாக்குதலால் பலத்த காயங்களுடன் தலையில் பத்து தையல்கள் இடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த இளைஞர். ரஜினி மீதான அவரது கோபத்துக்கு காரணம்; ‘100 நாட்களாக நாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறோம், அப்போதெல்லாம் எங்களைச் சந்திக்கவோ, எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ முன் வராத ரஜினி இப்போது எதற்காக இங்கு வருகிறார்? இந்தப் போராட்டம் நடந்து இன்றோடு 8 நாட்களாகிறது. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலபேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறோம். இந்த 8 நாட்களிலும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்காத ரஜினி இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்காவிட்டால் ஒருவேளை அவர் வந்திருக்க மாட்டார். தற்போது அவர் வந்ததின் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் காலா படம் வெளியாகவிருக்கிறது. இப்போதும் மக்களைப் போய் சந்திக்காவிட்டால் அவருடைய படம் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களை சந்தித்து நிதியுதவி வழங்குகிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே தான் எனக்கு கோபம் வந்து அவரை அப்படிக் கேட்டேன். எப்படி எங்களுக்குப் போராடி வெல்லத் தெரியுமோ, அப்படியே எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியும்’ என்றும் அந்த இளைஞர் இணைய ஊடகங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
 

]]>
ரஜினிகாந்த், rajini, sterlite protest, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ரீல் வேங்கை மகன், ரியல் வேங்கை மகன், santhosh https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/31/w600X390/santhosh_real_vengai_magan.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/may/31/who-are-you-a-youngster-asked-rajinikanth-in-thoothukudi-2930494.html
2929849 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார்? வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா? RKV DIN Wednesday, May 30, 2018 01:36 PM +0530  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டதால் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைக் காண இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அங்கே மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு ஆறுதல் கூறி விட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினிகாந்த் தெரிவித்தது;

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். இப்போது அவரது மறைவின் பின் அந்த சமூக விரோத சக்திகள் தங்களது விஷமத்தனத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இவர்களது ஊடுருவலால் தான் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் இவர்களது ஊடுருவலால் அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மக்கள் சக்தியை சமூக விரோத சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது.. தமிழகத்தில் சமூக விரோத சக்திகள் அதிகமாகி விட்டனர். ஜெயலலிதா வழியில் தற்போதுள்ள தமிழக அரசும் இத்தகைய சமூக விரோத சக்திகளைத் தங்களது இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சில போராட்டங்கள் சமூக விரோதிகளால் தூண்டப்படுகின்றன, அதற்காக பதவி விலக வேண்டும் என ஆளும் தரப்பை நிர்பந்திப்பது தீர்வாகாது. சமூக விரோத சக்திகளை அடையாளம் காணும் விஷயத்தில் மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த்;

காயமடைந்தவர்களை நேரில் சென்று விசாரித்து ஆறுதல் கூறியதோடு காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 10,000, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2,00000 ம் தன் சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். அதோடு, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

சரி தான், ஆனால் தனது செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறும் அந்த சமூக விரோதிகள் யார்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் 100 நாட்களை எட்டியதை ஒட்டி கடந்த வாரம் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்டிருந்த மக்களின் நேரடி அனுபவங்களாக இணையத்தில் பகிரப்பட்ட உண்மை. முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்குக் குண்டுகளால் துளைத்தது காவல்துறை. விளக்கம் கேட்டால் ரப்பர் குண்டுகள் ஸ்டாக் இல்லை என்று விளக்கமளித்திருந்தார்கள். துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொதுமக்களிடையே எண்ணற்ற விமர்சனங்கள் இன்னும் வலுத்து வரும் நிலையில் ஆளும் தரப்பும் சரி, ரசிகர்கள் போற்றிப் புகழும் சூப்பர் ஸ்டாரும் சரி துப்பாக்கிச் சூடு பற்றி கண்டிக்காமல் சமூக விரோதிகளால் தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று பேசிக் கொண்டிருப்பது மிக்க மன வருத்தம் தருவதாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்பினால், அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான மூலகாரணம் என்ன? மக்கள் போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார்? என்ற உண்மையை அவர்கள் பொதுமக்கள் முன் வைக்க வேண்டுமேயொழிய அவரவர் அரசியல் லாபங்களுக்காக ஊடகங்களில் பரபரப்புப் பேட்டிகள் அளிக்கத் தேவையில்லை. இது மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவெ இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது பொதுமக்களே எனும் போது, அவர்களில் சிலரின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. அப்படியானால் சுடப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா? காயமடைந்தவர்கள் அனைவரும் சமூக விரோதிகளா? அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லத்தான் ரஜினி தூத்துக்குடி சென்றாரா? என்றெல்லாம் மக்கள் மத்தியில் கேள்விகள் எழத்தான் செய்யும்.

அரசு இந்த விஷயத்தில் ஒளிவுமறைவின்றி நடந்து கொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப் பட்டதற்கான நியாயமான காரணங்களை பொது மக்களிடையே முன் வைக்குமெனில் அப்போது தான் இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு கிட்டும்.

இதற்கு நடுவே தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அறிவித்திருக்கிறது.

வெறும் பேச்சளவிலான இந்த அறிவிப்பு நிஜமாக சாத்தியம் இருந்தால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் ஆன்மா சாந்தியடையக் கூடும்.

ஆனாலும், அரசியல்வாதிகளின் இந்த ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்ற பேச்சு பொதுமக்களிடையே ஒரு ஊவாமுள்ளாக நீடிக்கத்தான் செய்யும்.

சமூக விரோதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கனம் உருவாக்கப்படுகிறார்கள்? அதையும் அந்த மேதகு அரசியல்வாதிகள் விளக்கியுரைத்தால் ஒருபாடு தெளிவாக இருக்கும்.
 

]]>
social enemies, rajini statement, sterlite , ரஜினிகாந்த், தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஸ்டெர்லைட் போராட்டம், சமூக விரோதிகள் யார் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/rajini_sterlite.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/may/30/who-are-social-enemies-2929849.html
2917741 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்காதென்று யார் சொன்னது? RKV DIN Friday, May 11, 2018 03:22 PM +0530  

ஓரிரு மாதங்களுக்கு முந்தைய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் ஆர்.கே.நகர் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக பிளவுபட்டதின் பின் உருவான... அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அணியின் தலைவருமான டிடிவி தினகரன் அவர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அதில் இதுவரை ஊடகங்களில் தான் பகிர்ந்திராத சில சுவாரஸ்யமான தகவல்களை டிடிவி பகிர்ந்திருந்தார். அதில் சில உங்களுக்காக;

'தலைவர் இறந்த அன்று இரவில் அம்மாவுக்கு முதலில் விஷயம் தெரியாது. என் சித்தப்பா நடராஜன் என்னை ராமாவரம் தோட்டப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்து வரச் சொன்னார். ஆனால் ஆழ்வார்பேட்டையிலிருந்து கலைஞரின் வீடு தான் பக்கம் என்பதால் நான் முதலில் சித்தப்பாவின் மாருதி காரில் நேராக அங்கே சென்றேன்.' 

எம்ஜிஆர் இறந்த விஷயத்தை எதிரி முகாமில் போய் விசாரிப்பானேன்? என்று நேர்காணல் செய்து கொண்டிருந்தவர் கேள்வியெழுப்பினார். //நியாயமான கேள்வி//

'இல்லை அவர்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிரிகளாக இருந்தார்களே தவிர, கலைஞரும், தலைவரும் ஆரம்ப கால நண்பர்கள் என்பதால் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஆழ்ந்த ப்ரியம் உண்டு. எனவே தலைவருக்கு ஏதாவதொன்றால் முதலில் தகவல் கலைஞர் வீட்டுக்கு வந்திருக்கக் கூடும் என்பது என் கணிப்பு. அந்தக் கணிப்பு நிஜமானது. கலைஞரின் வீட்டில் அந்த அகால நேரத்தில் மாடி அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம் விசாரித்ததில் தலைவர் இறந்து விட்டார் அதனால் தான் இந்தப் பரபரப்பு என்று கூறினார். நான் உடனே வீட்டுக்கு வந்து தகவல் தெரிவித்ததும் நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து தான் அம்மாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றோம். நாங்கள் சென்று தலைவர் இறந்த தகவலைத் தெரிவிக்கும் வரை அம்மாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கப் படவில்லை. அம்மா வீட்டில் இருந்த செக்யூரிட்டி அதிகாரி மேலிட உத்தரவால் அம்மாவுக்கு தலைவர் இறந்த தகவலை தெரிவித்திருக்கவில்லை. நாங்கள் தலைவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தபோது அம்மா மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். பிறகு சமாளித்துக் கொண்டு எங்களுடன் அவரது காண்டஸா காரில் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தார். அங்கே எங்களுக்கு தலைவரின் சடலம் வாகனத்தில் ஏற்றப்படுவதைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நாங்கள் எங்கள் பாதுகாப்பு வளையத்தில் அம்மாவைக் கொண்டு வந்து அவருக்கு பாதிப்பு நேராமல் தலைவரின் உடல் இருந்த ராஜாஜி மண்டபத்துக்கு தலைவரின் உடல் சென்ற வாகனத்தின் பின்னே விரைந்தோம். அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தும் வரலாறு அதை எல்லோரும் அறிவர்.’

- என்றார் டிடிவி. அதைத் தொடர்ந்து அவரிடம்;

ஜெயலலிதா, எம்ஜிஆர் அல்லாது எதிரி முகாமில் உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் யார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

‘எனக்கு மூப்பனாரை மிகவும் பிடிக்கும், அவர் அரசியல்வாதி மாதிரியே பழக மாட்டார். ஜெம் ஆஃப் அ பெர்சன். மிகவும் யதார்த்தமான மனிதர். ஏன் கலைஞரையும் எனக்குப் பிடிக்குமே’ என்றார்.

இந்த பதிலைக் கேட்டு நேர்காணலை நடத்திக் கொண்டிருந்தவர், ‘இந்த விஷயம் செல்வி ஜெயலலிதா அவர்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க; அதற்கும் டிடிவி; 

‘தெரியுமே.... ஏன் அம்மாவும் கூட அவரை பாராட்டுவாரே, அரசியல் எதிரி என்பது வேறு ஆனால் சாதாரண நிலையிலிருந்து அரசியலில் இத்தனை உயரத்தை அடைந்த கலைஞரது போராட்ட குணம் அம்மாவுக்கும் பிடிக்கும், அதைக்குறித்து அவரும் பாராட்டுவார்... கலைஞரின் பழிவாங்கும் குணம் தான் அம்மாவுக்குப் பிடிக்காதே தவிர, மற்றபடி பெர்சனலாக கலைஞரின் மீது அம்மாவுக்கு எந்தவிதமான பகையும் கிடையாது’ ஆகவே கலைஞரை எனக்கும் பிடிக்கும்.  என்றார் டிடிவி தினகரன். 

தலைவர் முதல்வராக இருந்த போது தொடர்ந்து 13 ஆண்டுகள் எதிர்கட்சியாக நீடித்த போதும் பொறுமையுடன் தனது வெற்றிக்காக காத்திருந்த கலைஞரின் திறமை எனக்குப் பிடிக்கும். பிறகு அம்மா காலத்தில் மதிமுக கலைஞரை விட்டுப் பிரிந்த போதும் அந்த காலகட்டங்களை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு அரசியல் நடத்திய கலைஞரின் திறமை மீது எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் பெரிய மரியாதை உண்டு. என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதை டிடிவி தினகரன் வாயால் கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

 

Image courtesy: scroll.in

concept courtesy: thanthi tv

]]>
Jayalalitha, Kalaignar Karunanidhi, பகையும் மரியாதையும், ஜெயலலிதா, கருணாநிதி, டிடிவி தினகரன், ttv dinakaran https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/11/w600X390/zjaya_karuna.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/may/11/who-said-jayalalitha-never-like-kalaignar-karunanidhi-in-her-lifetime-2917741.html
2916435 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஜாக்டோஜியோ போராட்ட களத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஆசிரியரென நினைத்து அறைந்த இன்ஸ்பெக்டர்! RKV DIN Wednesday, May 9, 2018 12:53 PM +0530  

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் கழக அமைப்புகளில் ஒன்றான ஜாக்டோ ஜியோ கடந்த சில தினங்களாக தங்களது ஓய்வூதியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று இரவு 10 மணி முதல் அந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்.

தமிழக அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு, காவல்துறை உதவியுடன் மிகுந்த முனைப்போடு போராட்டக் காரர்களை அவர்கள் திரளும் இடங்கள், தங்கியிருக்கக் கூடிய இடங்களென சென்னை வாலஜா சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் முதல் கல்யாண மண்டபங்கள், பள்ளிகள், என அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நிகழ்த்தி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தென் தமிழகத்தில் இருந்து திரண்டிருந்த பல ஆசிரியர் குழுக்களைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த காட்சியை நேற்று முதலே பல்வேறு ஊடகங்களும் ஒளிபரப்பி வந்தன. ஆனால், காவல்துறையின் கடினமான அடக்குமுறையையும் மீறித் தங்களது உரிமைக்காக ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் முன் திரண்டு உரிமைக் குரல் கொடுக்கத் தவறவில்லை என்பதும் நிதர்சனம்.

இதனால் கோபமுற்றை காவல்துறையினரில் மஃப்டியில் இருந்த சிலர் அந்தப் பகுதியில் இருந்த பேருந்து நிலையங்களில் பேருந்துக்குள் இருந்த கூட்டத்தினரிடையே போராட்டக் காரர்கள் இருக்கிறார்களா என விசாரணையில் ஈடுபட்டதோடு அங்கே பேருந்துக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருந்தவர்களைக் கூட அவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வந்திருக்கிறார்களா எனத் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்ததாகத் தகவல்.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைக் கும்பலாகக் கைது செய்ய மஃப்டியில் சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஆசிரியர் எனக்கருதி கன்னத்தில் அறைந்து  இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் வாகனத்தில் ஏற்றிய காட்சி அப்பகுதியில் இருந்த மக்களிடையே மிகுந்த வேடிக்கைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட  சப் இன்ஸ்பெக்டர், தானும் ஒரு காவலர் எனக்கூறியும் அவரது அடையாள அட்டையைப் பரிசீலித்த பிறகே இன்ஸ்பெக்டர் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவித்தார் என ஆங்கில அச்சு ஊடகமொன்றில் இன்று செய்தி வெளியாகி இருக்கிறது. 

இத்தனைக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடுவது ஊதிய உயர்வுக்காக அல்ல, அவர்களிடமிருந்து மாதா, மாதம் சம்பளத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதை மறுத்து பழைய சிபிஎஸ் கமிஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியே அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். நியாயமாகப் பார்த்தால் அரசு அவர்களை அழைத்து மரியாதையுடன் அமர வைத்து அவர்களது கோரிக்கைகளை நிதானமாகப் பரிசீலித்து அவர்களது வேண்டுகோள்களை முடிந்த வரையில் நிறைவேற்றப் பார்ப்பது தானே முறை.

நாட்டின் எதிர்காலமான மாணவ சமுதாயத்தை பண்புடன் உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களையும், அரசு ஊழியர்களையும் தீவிரவாதிகளைப் போல மிரட்டிக் காட்டத்துடன் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இதில் சக காவலரையே அரசு ஊழியரென்றும், ஆசிரியரென்றும் நினைத்து காவல்வாகனத்தில் ஏற்றும் செயல் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ , ‘காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ எனும் பழமொழிகளையே நினைவூட்டுகின்றன.

]]>
ஜாக்டோ ஜியோ போராட்டம், தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறை, jactto geo protest, police actions, tamilnadu government policy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/9/w600X390/jactto_geo.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/may/09/ஜாக்டோஜியோ-போராட்ட-களத்தில்-சப்-இன்ஸ்பெக்டரை-ஆசிரியரென-நினைத்து-அறைந்த-இன்ஸ்பெக்டர்-2916435.html
2907377 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் யூஜிசி வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல் RKV DIN Wednesday, April 25, 2018 04:12 PM +0530 யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் என்று சொல்லப்படக் கூடிய யூஜிசி, இந்த ஆண்டில் போலிப் பல்கலைக்கழகங்கள் என சுமார் 24 பல்கலைக்கழகங்களைப் பட்டியலிட்டு நேற்று வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பாண்டிச்சேரி ஸ்ரீபோதி அகாதெமி ஆஃப் ஹையர் எஜுகேஷனும் ஒன்று. மீதமுள்ள போலிக் கல்வி நிறுவனங்களின் லிஸ்டையும் பார்த்துத் தெளிந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

யூஜிசி (UGC) வெளியிட்டுள்ள போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கல்விநிலையங்கள் மற்றும் நிறுவனங்கள்.

1. மைதிலி யுனிவர்சிட்டி/ விஸ்வ வித்யாலயா, தர்பங்கா, பீகார்.
2. கமர்ஷியல் யுனிவரிசிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச், டெல்லி.
3. யுனைட்டெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, டெல்லி.
4. வொகேஷனல் யுனிவர்சிட்டி, டெல்லி
5. ADR சென் ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, ADR ஹவுஸ், 8J, கோபாலா டவர், 25 ராஜேந்திரா ப்ளேஸ், புது டெல்லி- 110008
6. இந்தியன் இன்ஸ்டிட்யூஸன் ஆஃப் சயின்ஸ் அண்டு எஞ்சினியரிங், புது டெல்லி.
7.விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி ஃபார் செல்ஃப் எம்ப்ளாய்மெண்ட், இந்தியா, ரோஸ்கார் சேவாசதன், 672, சஞ்சய் என்க்ளேவ், புது டெல்லி 110033
8.அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஸ்பிரிட்சுவல் யுனிவர்சிட்டி), 351 - 352, பேஸ்- 1, பிளாக் A, விஜை விஹார், ரிதலா, ரோகிணி, டெல்லி - 110085.
9. பதகன்விசர்கார் வேர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொஸைட்டி, கோகாக், பெல்காம், கர்நாடகா.
10. செயிண்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, கிஷனத்தம், கேரளா.
11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்.
12. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்னேட்டிவ் மெடிஸின், 80, செளரிங்கி ரோட், கொல்கத்தா -20.
13. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்னேட் மெடிஸின் அண்டு ரிசர்ச், 8- A, டயமண்ட் ஹார்பர் ரோட், செகண்ட் ஃப்ளோர், தகுர்புகுர், கொல்கத்தா - 700063.
14.வாரணசேயா சன்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா, வாரணாசி, உத்தரபிரதேசம், ஜகத்பூரி, டெல்லி.
15.மகிளா கிராம் வித்யாபீடம்/ விஷ்வவித்யாலயா, (மகளிர் யுனிவரிசிட்டி) பிரயாக், அலகாபாத், உத்தரபிரதேசம்.
16. காந்தி இந்தி வித்யா பீடம், பிரயாக், அலகாபாத்,, உத்தரபிரதேசம்.
17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர்.
18. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யுனிவரிசிட்டி (ஓபன் யுனிவர்சிட்டி), அலிகார், உத்தரப் பிரதேசம்.
19. உத்தரப் பிரதேசம் விஷ்வவித்யாலயா, கோசிகலன், மதுரா, உத்தரப்பிரதேசம்.
20. மஹா ராணா பிரதாப் சிக்‌ஷா நிகேதன் விஷ்வவித்யாலயா, பிரதாப்கார், உத்தரப் பிரதேசம்.
21. இந்திரப்பிரஸ்தா சிக்‌ஷா பரிஷத், இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, கோடா, மக்கன்பூர், நொய்டா, பேஸ் 2, உத்தரப் பிரதேசம்.
22. நவபாரத் சிக்‌ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் நம்பர். 242, பானி டங்கி ரோட், சக்தி நகர், ரூர்கேலா- 769014.
23. நார்த் ஒரிஸ்ஸா யுனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்ச்சர் & டெக்னாலஜி, யுனிவர்சிட்டி ரோட் பரிபடா மாவட்டம், மயூர்பஞ்ச், ஒதிஷா- 757003.
24. ஸ்ரீ போதி அகாதெமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், நம்பர் 186, திலாஸ்பேட்டை, வழுதாவூர் ரோட், பாண்டிச்சேரி- 605009.

யுஜிஜி கடந்தாண்டு வெளியிட்டிருந்த போலிப் பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் சுமார் 22 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்தாண்டு நவம்பர் 10 ஆம் தேதி யூஜிசி வெளியிட்டிருந்த கடிதம் ஒன்றில் 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களது பெயரில் இருந்து பல்கலைக் கழகம் எனும் பதத்தை நீக்க வேண்டும் என ஆணையிட்டிருந்தது. அந்தக் கடித ஆணை  நவம்பர் 3, 2017 தேதியிட்ட உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. ஆணையிடப்பட்ட 123 பல்கலைக் கழகங்களும் தங்களது பெயரில் இருக்கும் பல்கலைக் கழகம் எனும் பதத்தை நீக்காவிட்டால் அது யூஜிசி சட்டத்தின் 23 வது பிரிவை மீறிய செயலாகும் எனக் கருதப்படும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

]]>
FAKE UNIVERSITY LIST, UGC WARNING, போலி பல்கலைக் கழகங்கள், யூஜிசி எச்சரிக்கை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/25/w600X390/zUniversity-Grants-Commission_1.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/25/dont-take-admission-in-these-24-fake-universities-ugc-warns-students-2907377.html
2904749 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை: திருமணவிழாவில் நிகழ்ந்த பயங்கரம்! RKV ENS Saturday, April 21, 2018 11:33 AM +0530  

காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுப்பப் பட்டு இவ்வேளையில் கடந்த வியாழன் அன்று உத்தரப்பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் அரங்கேறிய மேலுமொரு பாலியல் பலாத்காரக் கொலை கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இட்டா மாவட்டத்திலுள்ள கெல்த்தா கிராமத்தில் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெற்றோருடன் சென்றிருந்த 9 வயதுக் குழந்தை ஒன்று திருமண நாளன்று இரவில் திடீரெனக் காணாமல் போனார். விழா நிகழ்வுகளில் ஆழ்ந்திருந்த குழந்தையின் பெற்றோர் இரவு விருந்தின் போது தங்களது மகளைத் தேடிச் செல்ல அப்போது தான் சிறுமி காணாமல் போன விஷயம் தெரியவந்திருக்கிறது. திருமண வீடு என்பதால் அதில் பங்கேற்க வந்திருந்த பிற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்த தங்கள் மகளைக் காணோம் என்றதும் திகைத்துப் போன பெற்றோர் சிறுமியைத் தேடத்துவங்கினர். இரவு முழுவதும் தேடிய பின்னர் சிறுமியின் சடலம் பலத்த காயங்களுடன் திருமண நடந்த இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அத்துவானப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த பிற குழந்தைகள் அளித்த சாட்சியங்களின் படி, திருமண நாளன்று இரவு விருந்துக்கு முந்தைய பொழுதில் திருமண விருந்து தயார் செய்வதற்காக வந்திருந்த சமையற்காரர்களின் குழுவில் இருந்த பிண்டு குமார் என்பவனுடன் அந்தக் குழந்தையைக் கடைசியாகக் கண்டதாகத் தெரியவந்தது. 25 வயது பிண்டு குமார் சமையல் உதவியாளராக சமையற்காரர்கள் குழுவுடன் வந்தவன். இரவு விருந்துக்கு முந்தைய மது விருந்தில் தனது மதுவில் தண்ணீர் கலக்க சிறுமியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறான். சிறுமி தண்ணீர் கொண்டு வந்து தரவே, அப்போது மது அருந்திய போதையில் சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் அவளை அருகிலிருக்கும் கடைக்கு அழைத்துச் சென்று விரும்பியதை வாங்கித்தருவதாக ஆசை காட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறான். மது போதையில் சிறுமியை புதர் போன்ற அத்துவானப் பகுதிக்கு அழைத்துச் சென்றவன் அங்கே வைத்து 9 வயதுச் சிறுமியென்றும் பாராமல் தனது தகாத ஆசையை நிறைவேற்றிக் கொண்டு சிறுமியை கொலையும் செய்திருக்கிறான். இத்தனைக்கும் காரணம் மது போதை.

சிறுமியை அவனுடன் கடைசியாகக் கண்ட உறவுக்காரக் குழந்தைகள் அளித்த சாட்சியத்தின் படி தற்போது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும், கொலை செய்த குற்றத்துக்காகவும், கொலைக்குப் பின் சாட்சியங்களை மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுமியைக் கொன்ற பிண்டு குமார் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இந்தப் பகுதியில் இதே போன்றதொரு கொடூர சம்பவம் கடந்த செவ்வாயன்றும் அரங்கேறியிருக்கிறது. காஷ்மீர் சிறுமி விவகாரத்தால் அந்தச் செய்தி அப்படியே அமுங்கி விட்டது. கிட்டத்தட்ட கெல்த்தா கிராமத்துச் சிறுமிக்கு நேர்ந்ததைப் போலவே அதே மாவட்டத்தின் சித்தல்பூர் கிராமத்தில் இதே போல திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த 7 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். உத்தரப் பிரதேசத்து இட்டா மாவட்டத்தில் இது இரண்டாவது சம்பவம். பாஜக துறவி, யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ள உத்தரப் பிரதேசத்தில் அறியாச் சிறுமிகள் இப்படி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுவது வாடிக்கையாகி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை படுகொலைகளின் விகிதாச்சாரம் 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2016 ஆம் ஆண்டில் 82% அதிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நாடு முழுவதும் பதிவாகும் இத்தகைய பாலியல் வன்முறைக் குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே 15% பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எப்பகுதியிலாக இருக்கட்டும், எந்த மாநிலத்திலாக இருக்கட்டும், இந்திய சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது சிறுமிகளை பகடைக்காய்களாக வைத்து யாரும் எளிதில் எண்ணிப்பார்க்க அஞ்சக் கூடிய விதத்தில் இப்படியான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான பலாத்காரச் செயல்கள் அரங்கேறி வருவது மிக மிகக் கேவலமான செயல் மட்டுமல்ல, இந்தியர்களான நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலும் தான் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது கண்டனத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், யாருடைய கண்டனத்தையும் பொருட்படுத்தாது இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைவதாக அரசு புள்ளி விவரக் கணக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது நிஜம்.

]]>
9 YEAR OLD REPED KILLED IN UP, 9 வயதுச் சிறுமி பாலியல் படுகொலை, உத்தரப் பிரதேசம், திருமண விழாவில் நேர்ந்த பயங்கரம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/9_yrs_old_victim.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/21/9-year-old-raped-killed-during-wedding-in-etah-up-2904749.html
2899414 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பிரதமர் மோடியைப் பற்றி ஆந்திர எம்பி அடித்த பரபரப்பு கமெண்ட்! RKV DIN Friday, April 13, 2018 11:32 AM +0530  

அனந்தபூர் எம்பி ஜே சி திவாகர் ரெட்டி அவரது வெளிப்படையான கருத்துக்களுக்காக பெயர் போனவர். கடந்த வாரம் ஞாயிறு அன்று தெலுங்கு தேசக் கட்சி எம்பிக்கள் சிலருடன் இணைந்து டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் முன்பு அமைதியான முறையில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரையும் அவரது குழுவினரையும் காவலர்கள் வலுக்கட்டாயமாக அவ்விடத்தை விட்டு அகற்றினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி திவாகர் ரெட்டி, பிரதமர் மோடி குறித்து சில சென்சேஷனல் கமெண்ட்களை உதிர்த்தார். 

'மோடிக்கு மக்களது பிரச்னைகளைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால் அவருக்க மனைவியும், குழந்தைகளும் இருந்திருக்க வேண்டும். அவருக்கு அன்பென்றால் என்னவென்றே தெரியவில்லை. அவருக்கு அன்பென்றால் என்னவென்று தெரிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். முதலில் மக்களை எப்படி நேசிப்பது என்று அவர் கற்றுக்கொள்ளட்டும்... குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துப் பார்த்தால் தான் தெரியும் குடும்ப வாழ்க்கையின் பிரச்னைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்வில் கடந்து செல்லும் பிரச்னைகள் அனைத்தும்.'

மோடி குறித்து திவாகர் ரெட்டி கூறிய இந்தப் பரபரப்பான கருத்தை ஆந்திர மக்களில் பலரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் ஏமாற்றுப் பேச்சையும், வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்து போனவர்களான ஆந்திர மக்கள் இந்தக் கருத்தை வரவேற்று ஆர்ப்பரிப்பதில் ஆச்சர்யமில்லை என்கிறார் திவாகர் ரெட்டி.

மேலும் தனது பரபரப்பான கருத்தை மீண்டும், மீண்டும் பதிவு செய்து வரும் திவாகர் ரெட்டி மோடிக்கு மக்களது பிரச்னைகள் குறித்துப் பூரணமாகத் தெரியவேண்டுமெனில் முதலில் அவர் மனதில் நேசம் இருக்க வேண்டும். அதற்கு அவருக்கு ஒரு குடும்பமும், குழந்தையும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் மக்களது பிரச்னைகள் குறித்தெல்லாம் அவரால் புரிந்து கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகக் கூறி வருகிறார்.

]]>
Modi, மோடி, AP MP, Anantapur MP JC Diwakar Reddy,, sensational comment, அனந்தபூர் எம்பி திவாகர் ரெட்டி, பரபரப்பு கமெண்ட் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/00000Narendra-Modi-1.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/13/andhra-pradesh--mps-sensational-comments-on-modi-2899414.html
2898133 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் காவிரி நீர் விவகாரத்தில் சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் கூட ரஜினி, கமலுக்கு இல்லையே!: கன்னட நடிகர் அனந்த் நாக்! RKV DIN Wednesday, April 11, 2018 01:00 PM +0530  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் தமிழ்த்திரையுலகைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் சென்னையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மெளனப் போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், சூர்யா, செந்தில், பசுபதி, வையாபுரி, பிரசாந்த், மன்சூர் அலிகான், நடிகைகள் ஆர்த்தி, குட்டி பத்மினி, ரேகா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. ஆனால், அன்றே இவ்விவகாரம் குறித்து தனது கருத்துக்களைப் பதிவு செய்ய செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய சிம்பு, அதில்; நடிகர் சங்கம் நடத்தும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அதனால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறியதோடு; காவிரி நீர் விவகாரத்தை அரசியல்வாதிகள் மக்களின் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னையாகக் கருதாமல் தாங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்வதற்கான ஒரு காரணமாக மட்டுமே பார்த்து பிரச்னையை சுமுகமான முறையில் தீர்த்து வைக்க மறுக்கிறார்கள். கர்நாடகத்தில் இருப்பவர்கள் யார்? நம்முடைய சகோதரர்கள்... அவர்களிடம் உங்களது தேவைக்குப் போக எஞ்சிய நீரை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டுப் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை இந்த அரசியல்வாதிகள் தங்களது பிழைப்புவாதமாக்கி தொடர்ந்து மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்களே... ஆனால் ஏன் அதற்கொரு முடிவு கிட்டவில்லை. இன்று காவிரி நீர் தர வேண்டும் என்று போராடுகிறோம், இங்கே 2015 ஆம் ஆண்டில் வெள்ளம் வந்து தெருவெங்கும் ஆறாகத் தண்ணீர் ஓடியதே... அந்தத் தண்ணீரைப் பாதுகாக்க நாம் என்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்? ஏப்ரல் 11 ஆம் நாள் கர்நாடகாவில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தங்களது தமிழ் சகோதரர்களுக்கு 1 டம்ளர் தண்ணீர் கொடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். அந்தப் பதிவுகளில் என் பெயர் வேண்டாம். அது போதும் காவிரி நீர் தமிழகத்துக்கு வர அது உத்தரவாதமளிக்கும். இதற்காக நான் ஏன் எனது கன்னட சகோதரர்களுடன் சண்டையிட வேண்டும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார்.’

நடிகர்களின் மெளனப் போராட்டம் மற்றும் சிம்புவின் பத்திரிகையாளர் சந்திப்பை ஒட்டி இதைக் குறித்து பிரபல கன்னட நடிகரான அனந்த் நாக் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

நடிகர்கள் ரஜினியும், கமலும் காவிரி நீர் விவகாரத்தை தங்களது அரசியல் பலத்தை நிர்ணயிக்கும் காரணியாகப் பார்க்கிறார்கள். கர்நாடகாவில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அதனால் இங்கே பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழகத்துக்கு இப்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பில்லை எனும் போது அவர்கள் இந்தப் பிரச்னையை, போராட்டத்தை கர்நாடகத் தேர்தல் முடிந்தபின் துவக்கி இருக்கலாம். அவர்களது அரசியல் விளையாட்டுக்கு காவிரி விவகாரத்தை பகடைக் காயாக்கி குளிர் காய நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இளம் நடிகரான சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும், மனமுதிர்ச்சியும் கூட மூத்த நடிகர்களான ரஜினி, கமலுக்கு இல்லை என நினைக்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கர்நாடகா தன்னால் முடிந்த அளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடட்டும் என சிம்பு கூறியிருந்தார். ஆனால் காவிரி விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கும் தமிழக அரசியல்வாதிகள் தான் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதை விட்டு விட்டு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர்வதில் விருப்பமில்லை. அவர்களுக்கு அரசியல் செய்ய காவிரி நீர்ப் பிரச்னை வேண்டும். காவிரி உற்பத்தியாவது கர்நாடகாவில் தான், ஆனால் அது வழிந்து கீழிறங்கும் இடத்தில் தமிழகம் இருப்பதால் கர்நாடகாவை விட தமிழகத்துக்கே அதிக நீர் கிடைக்கிறது. இயற்கையான இந்தக் காரணம் புரிந்து கொள்ளத்தக்கது. கன்னடர்கள் மிக நல்லவர்கள், அன்பானவர்கள், அவர்களது தாராளமனப்பான்மையைப் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுப்பதோடு அதை பாழாக்கவும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது பாணியிலேயே உரிய பதிலை அளித்தால் தான் அவர்கள் அமைதியாவார்கள். இல்லையேல் இப்படித்தான் புரியாமல் பிர்ச்னையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள். என்றும் நடிகர் அனந்த் நாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Image courtesy: times of india.

]]>
ரஜினி, simbu, politics, rajini, kamal, கமல், காவிரி நீர் விவகாரம், சிம்பு, அனந்த் நாக், kaviri issue, anant nag https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/11/w600X390/0000rajini_kamal_0000.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/11/காவிரி-நீர்-விவகாரத்தில்-சிம்புவுக்கு-இருக்கும்-பக்குவம்-கூட-ரஜினி-கமலுக்கு-இல்லையே-கன்னட-நடிகர்-2898133.html
2897470 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சமூக ஊடகத்தில் காதலைச் சொல்லி பரபரப்பான ஐஏஎஸ் டாப்பர் டினா டபியின் காதல், கல்யாணத்தில் முடிந்தது! RKV DIN Tuesday, April 10, 2018 01:56 PM +0530  

2015 வருடத்தின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஐ ஏ எஸ் டாப்பர்களான டினா டாபிக்கும் (25), அதார் அமீருல் ஷஃபிக்கும்(26) காஷ்மீரத்தில் அழகிய பாகல்காம் நகரில் கடந்த வார இறுதியில் ஒருவழியாகத் திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய விழாவாக நடந்து முடிந்திருப்பதாக ஷஃபியின் நண்பர் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் தகவல் அளித்திருக்கிறார். 

2015 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் டாப்பரான டினா டாபி, இந்தியாவில் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு முனைந்து தயார் செய்யும் அனைத்து இளம்பெண்களும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர். குறிப்பாக தலித் பின்னணி கொண்ட இளம்பெண்களுக்கு அவர் மிகச்சிறந்த வழிகாட்டி. அதே போல அவருக்கு மாலையிட்டிருக்கும் அமீருல் ஷஃபியும் காஷ்மீரத்தின் இளைஞர்கள் மட்டுமல்ல அவரைப் பற்றி அறிந்த அத்தனை இந்திய இளைஞர்களும் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்க அளவில் சிறந்த படிப்பாளி. இருவருமே ராஜஸ்தான் கேடரில் ஐஏஎஸ் அதிகாரிகளாகத் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்களது திருமணம் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பாகல்காம் விடுதி ஒன்றில் நடந்து முடிந்திருப்பதாகத் தகவல். மணமகன் அமீருல் கானின் வேண்டுகோளுக்கிணங்க அவரது இல்லத்தில் டெல்லியில் இருந்து வரவிருக்கும் விருந்தினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறப்பு விழா ஒன்றும் ஏற்பாடாகி இருக்கிறதாம். இவர்களது திருமண விழாவில் ஜம்மு காஷ்மீரின் பொதுப்பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மணமகள் டினா டாபியைப் பற்றி மேலும் சொல்வதென்றால், மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சக நண்பரும், தற்போதைய கணவரும், சக ஐஏஎஸ் டாப்பர்களில் ஒருவருமான அமீருல் சஃபியின் மீதான தனது காதலை வெளிப்படுத்த டினா சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அப்போதைய தலைப்புச் செய்திகளின் இடம்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் முதலில் சந்தித்துக் கொண்ட இடம், முசெளரியில் இருக்கும் இந்திய நிர்வாகப் பணிகளுக்கென பயிற்சி அளிக்கப்படும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமி என்று கூறப்படுகிறது.

]]>
IAS TOPPERS WEDDING AT KASHMIR, TINA DABI WEDS Athar Aamir-ul-Shafi Khan, ஐஏஎஸ் டாப்பர்களின் திருமணம், காதல் முதல் கல்யாணம் வரை, டினா வெட்ஸ் அமீருல் ஷஃபி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/10/w600X390/0000ias_topper_wedding.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/10/ias-toppers-wedding-at-kashmir-2897470.html
2893571 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் லெஸ்பியன் கொலை... ஆசிரியையுடன் உறவு நீடிக்க அனுமதிக்காததால் தாயைக் கொன்ற மகள்! RKV DIN Wednesday, April 4, 2018 12:00 PM +0530  

டெல்லி கவி நகர் பகுதியில் வசிக்கும் ராஷ்மி ராணா எனும் 21 வயதுப் பெண் கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று தனது ஆசிரியையும், லெஸ்பியன் துணையுமான நிஷா கெளதமாவுடன் இணைந்து தன் அம்மா புஷ்பா தேவியை இரும்புத் தடியால் அடித்துக் கடுமையான காயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இது குறித்து ராஷ்மியின் தந்தை சதிஷ் குமார் சம்பவம் நடந்த அன்றே ‘தன் மனைவியை மகளும் அவளது லெஸ்பியன் துணையும் இணைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கியதாக் கூறி கவி நகர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்திருக்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தேவி மரணமடைந்ததைத் தொடர்ந்து இன்று ஆசிரியை நிஷாவும், தாயின் மரணத்துக்குக் காரணமாகி விட்ட மகள் ராஷ்மியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காவல்துறை விசாரணையின் போது கொலைக்கான தூண்டுதலாக ராஷ்மி சொன்ன காரணம்;

தனக்கும் தனது ஆசிரியைக்கும் இருந்த லெஸ்பியன் உறவைத் தொடர்ந்து தனது தாய் கடுமையாக விமர்சித்து வந்ததாகவும், அது குறித்துப் பேசி தினமும் தன்னை டார்ச்சர் செய்து வந்ததாகவும். தாயின் தொடர் சித்ரவதைகளைத் தாங்க இயலாமல் தனது லெஸ்பியன் இணையும் ஆசிரியையுமான நிஷாவுடன் இணைந்து தாய் புஷ்பா தேவியை இரும்புத் தடியால் கடுமையாகல் தலையில் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ராஷ்மியும், நிஷாவும் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவை லெஸ்பியன் @ ஓரினச்சேர்க்கையாளர்கள் எனும் வரிசையிலான பாலியல் ஆர்வப் பிரிவினரை முறையாக அங்கீகரிக்கும் வழக்கம் இன்றும் கூட இல்லை. 'ஓரினச் சேர்க்கை​யாளர்கள், ஒருவர் பால் ஒருவர் முழு சம்மதத்துடன் அந்தரங்கமாக உறவில் ஈடுபடுவதும், இணைந்து வாழ நினைப்பதும் குற்றம் அல்ல’ என்று கடந்த 2009-ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதற்கு நாட்டின் பல மாநிலங்களில் கடும் சர்ச்சை எழுந்தது. இதை எதிர்த்து பல்வேறு சமூக - மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், 'ஓரினச் சேர்க்கை நமது நாட்டின் கலாசார, மத கோட்பாடுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் வழக்கை விசாரித்து, டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். அதோடு, இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்றும், இதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு ஓரினச்சேர்க்கை ஆர்வலர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை, மத்திய சுகாதாரத் துறை, குடும்ப நல துறை மூன்றும் கலந்தாலோசித்தன.

முடிவில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-377 தடை செய்யப்பட்டது. அதனால், ஓரினச் சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இருப்பினும், இரு ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்து கெண்டனர். இவர்களே இந்தியாவில் முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள். இப்படி பெற்றோர் மற்றும் உறவினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கை தம்பதிகளும் அத்திப்பூத்தாற் போல இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

தோராயமாக 2006-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் மட்டும் 24 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தகவல். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த லெஸ்பியன் கொலை... அதிலும் தனது லெஸ்பியன் உறவை அங்கீகரிக்க மறுத்து தொடர்ந்து தன்னைக் கடுமையாக விமர்சித்த தாயை மகளே கடுமையாகத் தாக்கி அது கொலையில் முடிந்த சம்பவம், இந்திய அளவில் லெஸ்பியன் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் குறித்த விவகாரங்களை மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது.

]]>
Lesbian, murder, mother killed by her daughter, லெஸ்பியன் கொலை, தாயைக் கொண்ற மகள், லெஸ்பியன் /ஓரினச் சேர்க்கையாளர்கள், சமூக அங்கீகாரம், social acceptance, india, இந்தியா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/00000murder.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/04/லெஸ்பியன்-கொலை-ஆசிரியையுடன்-உறவு-நீடிக்க-அனுமதிக்காததால்-தாயைக்-கொன்ற-மகள்-2893571.html
2892901 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் போக்குவரத்துக் காவலரை கடமையைச் செய்ய விடாமல் மிரட்டிய ஐபிஎஸ் அதிகாரி மகள் (வீடியோ இணைப்பு) RKV DIN Tuesday, April 3, 2018 03:27 PM +0530  

கடந்த சனிக்கிழமை சென்னை கடற்கரையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் இளம்பெண் ஒருவரால் மிரட்டப்பட்ட காட்சி தமிழ்நாட்டில் அதிகார மட்டத்தின் ஆணவத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

அந்த வீடியோ;

 

சனிக்கிழமை மாலையில் சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம் போல வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வாகனத்தில் இளம்பெண்கள் மது அருந்தியதை கண்டறிந்தார். தாம் கண்டதை அந்தக் காவலர் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். இதனால் எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அந்த இளம்பெண் காவலரை மிரட்டி வேஅலி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன்... தான் ஒரு ஐபிஎஸ் ஆஃபீஸரின் மகள் என்றும், தான் நினைத்தால் உடனடியாகத் தனது தந்தையிடம் நடந்ததைக்கூறி குறிப்பிட்ட அந்தக் காவலரை பணியிலிருந்து நீக்கம் செய்ய முடியும் என மிரட்டி இருக்கிறார். அதோடு; ‘காவலரின் பெயர், அவர் பணிபுரியும் காவல் சரக எண், உள்ளிட்ட விவரங்களைக் கேட்டதோடு, நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து தான் செய்கிறீர்களா? யாருடைய வாகனத்தைச் சோதனை செய்கிறீர்கள்? எதற்காக இதை வீடியோ பதிவு செய்கிறீர்கள்? நான் நினைத்தால் உடனடியாக உங்கள் மேல் என் தந்தை வாயிலாக நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்றும் கூறி மிரட்டி இருக்கிறார். இளம்பெண் ஒருவர் கடற்கரை மாதிரியான பொதுமக்கள் கூடும் இடத்தில் காரில் வைத்து மது அருந்தியதோடு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு இளம்பெண்ணின் தவறைக் கண்டு பிடித்த காவலரையும் அதிகாரம் தந்த ஆணவத்தின் உச்சத்தில் நின்று மிரட்டி இருப்பது அப்போது அங்கிருந்த மக்களிடையே கடும் மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Image & video courtesy: Times now.com

]]>
IPS officer's daughter threatens police constable, chennai, காவலரை பணி செய்ய விடாமல் மிரட்டிய ஐபிஎஸ் ஆஃபீஸர் மகள், சென்னை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/3/w600X390/IPS-Officer-Daughter-620x400.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/03/caught-on-camera-ips-officers-daughter-threatens-police-constable-in-chennai-2892901.html
2886692 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் டாக்டர் இல்லாத நேரத்தில் டாக்டர் போல வேடமிட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்ட துப்புரவுப் பணியாளர் கைது! RKV DIN Saturday, March 24, 2018 01:14 PM +0530  

விளையாட்டு வினையானது!

செல்ஃபீ எடுத்துக் கொள்வது இப்போதெல்லாம் அரிப்பெடுத்தால் சொரிந்து கொள்வதைப் போல தவிர்க்க முடியாத செயல்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் எப்போதெல்லாம் செல்ஃபீ எடுக்கலாம், எடுக்கக் கூடாது என்ற விவஸ்தையின்றி கையில் ஃபோன் இருந்து விட்டால் போதும் கண்ட நேரத்தில், கண்ட் இடத்தில் செல்ஃபீ எடுத்து அதை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்று பகிர்ந்து கொள்வது அனிச்சையான ஃபேஷனாகி வருகிறது. ஒருவேளை அப்படிப் பகிரும் போது நம் செய்தது தகாத செயல் எனில் அதற்கான பலனையும் சம்பந்தப்பட்டவர்கள் அனுபவித்துத் தானே தீர வேண்டும். அப்படித்தான் ஆகி விட்டது இந்த பாரெல்லி மருத்துவமனை துப்புரவுப் பணியாளரின் கதை!

மும்பை பாரெல்லி அரசு மருத்துவமனையொன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் அரவிந்த். கடந்த வியாழனன்று தனது இரவுப் பணி நேரத்தில் எமர்ஜென்ஸி மெடிக்கல் ஆஃபீஸர் (EMO)  என்று குறிப்பிடப்படக்கூடிய டியூட்டி மருத்துவரின் அறையில் மருத்துவர் இல்லாத நிலையில் அங்கே இரவு நேரத் துப்புரவுப் பணிக்காக நுழைந்த அரவிந்த். டாக்டரின் மேஜையில் அவரைத் தவிர அவரது ஸ்டெதஸ்கோப், டாக்டருக்கான கோட் எல்லாம் இருப்பதைக் கண்டார். அட, டாக்டர் தான் இல்லையே, நாமும் தான் ஒருநாள் இதையெல்லாம் போட்டுப் பார்த்து டாக்டராக ஆனால் என்ன? என்ற நப்பாசையில் உடனே யோசிக்காமல் டாக்டரின் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டதோடு ஸ்டெதஸ் கோப்பையும் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டுள்ளார். அதோடு நிறுத்தியிருந்தால் தேவலாம். ஆனால், அப்படி விட்டுவிட விருப்பமின்றி. டாக்டரின் இருக்கையிலும் அமர்ந்து அதை சக துப்புரவுப் பணியாளரான மற்றொருவர் துணையுடன் புகைப்படமெடுத்து தனது முகநூல், வாட்ஸ் அப் வழியாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவமனையின் சக பணியாளர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அரவிந்த் பகிர்ந்து கொண்ட புகைப்படம் சக மருத்துவரான ஹரிஷ் சந்திரா மூலமாக மருத்துவமனையின் டீன் பார்வைக்கும் சென்றுள்ளது. சமூக ஊடகங்களில் இப்படியொரு புகைப்படம் பலருக்கும் பகிரப்பட்டால் தனது தலைமையின் கீழுள்ள மருத்துவமனை மற்றும், மருத்துவர்களின் நற்பெயருக்குக் களங்க என உணர்ந்து கொண்ட டீன் உடனடியாக மறுநாளே விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணியாளரை பணி நீக்கம் செய்ததோடு, இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

தற்போது போலியாக டாக்டர் உடை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக துப்புரவுப் பணியாளர் அரவிந்த் மீது இந்திய தண்டனைச்சட்டம் 419 ( ஆள்மாறாட்டம்) மற்றும் 417 ( மருத்துவ உபகரணங்களை அணிந்து புகைப்படப் பதிவாக்கிய குற்றத்துக்காகவும்)  வழக்குப் பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். 

]]>
டாக்டர் போல் வேடமிட்ட துப்புரவுப் பணியாளர், செல்ஃபீ மோகம், selfie addiction, hospital sweeper posts pic posing as doctor https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/sweeper_areest.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/24/டாக்டர்-இல்லாத-நேரத்தில்-டாக்டர்-போல-வேடமிட்டு-செல்ஃபீ-எடுத்துக்-கொண்ட-துப்புரவுப்-பணியாளர்-கைது-2886692.html
2886688 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நொய்டா மாணவி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணை கோரும் பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகராஜ்! RKV DIN Saturday, March 24, 2018 12:39 PM +0530  

நொய்டா பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்க, பிரபல கதக் நடனக் கலைஞரும், இந்தியாவின் பெருமைக்குரிய நாட்டிய ஆசிரியர்களில் ஒருவருமான பண்டிட் பிர்ஜு மகராஜ், பள்ளித்தரப்பின் மீது திவிரமான சிபிஐ விசாரணை கோரி ஊடகங்களில் அறிவித்திருக்கிறார். நொய்டாவில் கடந்த வாரம் பள்ளித்தேர்வுத் தோல்விக்காக தற்கொலை செய்து கொண்டு இறந்த 9 ஆம் வகுப்புப் பள்ளி மாணவி ‘கதக்’ நாட்டியமாடுவதில் திறன் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவியின் பெற்றோர், தமது மகளின் மரணத்துக்குக் காரணமாக அப்பள்ளியின் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களின் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அவ்விரு ஆசிரியர்களும் பாலியல் ரீதியாகத் தமது மகளுக்குத் தொடர்ந்து தொந்திரவு அளித்து வந்ததோடு, அவளை வேண்டுமென்றே குறிப்பிட்ட பாடங்களில் தோல்வியுறுமாறு மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டுள்ளனர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருந்தனர்.

இதை மறுத்த பள்ளி நிர்வாகத் தரப்பு, பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ள அந்த இரு ஆசிரியர்களுள் ஒருவர் பெண், என்பதோடு சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்களுமே தங்களது பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிபவர்கள், அவர்கள் மேல் இப்படியொரு குற்றச்சாட்டு இதுவரை வந்ததில்லை. என்பதால் பெற்றோரின் குற்றச்சாட்டு ஆதரமற்றது என்றும் கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளவாறு அந்த மாணவி தேர்வில் தோல்வியுற்றவர் அல்ல என்றும் மாணவிக்கு தோல்வியுற்ற பாடங்களில் மீண்டும் தேர்வெழுதி வெல்ல மார்ச் 23 ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டுருந்தது, அன்று தேர்வெழுதி இருந்தால் மாணவி தோல்வியடைந்தவராகக் கருத வாய்ப்பில்லை. அவர் மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். அப்படியிருக்க ஆசிரியர்களின் சதியால் தேர்வில் தோல்வியுற்று மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.

இரு தரப்பு வாதங்களும் புகார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு  காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறந்த கதக் நடனக் கலைஞரான அம்மாணவியின் இழப்பு கலைக்கு நேர்ந்த இழப்பாகக் கருதப்படும் என்பதற்கிணங்க பண்டிட் பிர்ஜூ மகராஜ் தற்போது இவ்விவகாரத்தில் பெற்றோர் சார்பாக, பள்ளித்தரப்பின் அலட்சியத்தை சுட்டிக் காட்டி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர், பள்ளி நிர்வாகம் முன்பே மாணவிக்கு தேர்வுத் தோல்வி குறித்து கவுன்சிலிங் அளித்து தேற்றியிருக்க வேண்டும். கால தாமதத்தாலும், மாணவர்களின் உணர்வுகள் மீதான அலட்சியத்தாலும் இன்று அருமையான நடனக் கலைஞரான ஒரு சிறுமியை இன்று இழந்து விட்டோம். ஆகவே, பள்ளித்தரப்பு மீதான குற்றத்தை தெளிவாக விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவியின் பெற்றோர் சார்பாக பிர்ஜூ மகராஜ் குரல் கொடுத்திருக்கிறார்.

]]>
noida girl suicide, pandit birju maharaj, நொய்டா பள்ளி மாணவி தற்கொலை, பிர்ஜூ மகராஜ், சிபிஐ விசாரணை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/birjumahara.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/24/நொய்டா-மாணவி-தற்கொலை-விவகாரம்-சிபிஐ-விசாரணை-கோரும்-பிரபல-கதக்-நடனக்-கலைஞர்-பிர்ஜூ-மகராஜ்-2886688.html
2880487 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இசக்கிமுத்து எனும் உடன்பிறப்பின் மனம் திறந்த மடல்... மசிவாரா செயல்தலைவர் ஸ்டாலின்?! RKV DIN Wednesday, March 14, 2018 12:29 PM +0530  

திமுகவில் சகோதரர்களான செயல்தலைவர் ஸ்டாலினுக்கும், அஞ்சா நெஞ்சர் அழகிரிக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தமே! இவர்கள் இருவருக்குமிடையிலான பனிப்போர் அன்றும், இன்றும், எப்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பூடகமாக மட்டம் தட்டிப் பேசிக் கொள்ளத் தவறியதே இல்லை. இந்நிலையில் அழகிரி ஆதரவாளரான இசக்கி முத்து எனும் திமுக தொண்டர் மக்களின் பார்வையில் அவரது எதிரி முகாம் தலைவர் எனக் கருதப்படும் திமுக  செயல்தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு மனம் திறந்த மடல் எழுதி அனுப்பியுள்ளார். அந்த மடலில் அவர் வலுயுறுத்தியுள்ள விஷயம் சகோதரர்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது மட்டுமல்ல. காலத்திற்கேற்றவாறு ஏற்று பின்பற்றியாக வேண்டிய ஒன்றாகவும் தற்போது திமுக உடன்பிறப்புகளால் கருதப்படுகிறது. அந்த மடலில் அப்படியென்ன எழுதியிருக்கிறார் இசக்கி முத்து என்கிறீர்களா?

பொதுவெளியில் ஸ்டாலினும், அழகிரியும் எப்போதும் ஒருவருக்கொருவர் விரோதிகளாகவே தங்களை வெளிக்காட்டி வருகின்றனர். சமீபத்தில் அழகிரி, ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேஷம் பற்றிய கேள்விக்கு சாக்கடைக்கு வந்த குப்பை எனப் பதிலளித்தார். திமுகவின் தோல்விகளுக்கு காரணமே ஸ்டாலினின் அணுகுமுறைகள் தான் என்பது அழகிரியின் வாதம். அழகிரி இப்படி வெளிப்படையாக விரோதத்தைக் காட்டிய போதும், ஸ்டாலின் வெளிப்படையாக அழகிரியை விமர்சித்துப் பேசாவிட்டாலும் அழகிரியை சுத்தமாகக் கட்சியிலிருந்து துடைத்தெறிந்த பெருமை ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களையே சாரும் என்பது அப்பட்டமான உண்மை. பொது மேடைகளில் அழகிரி குறித்து வெளிப்படையாக ஸ்டாலின் தனது காட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனினும் இருவருக்கிடையிலான துவந்த யுத்தம் முடிவின்றி நீண்டு கொண்டே தான் செல்கிறது. சகோதரர்களுக்கிடையிலான இந்த அதிகாரப் போரில் வயோதிக காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதும் கூட கருணாநிதியின் உடல்நலக் கோளாறுக்கு ஒரு காரணமே! பிரிந்து நிற்கும் இருவரையும் இணைத்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் சிலர் முயன்ற போதும், ஒவ்வொரு முறையும் அந்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராயின.

அதனால் தான் சமீபத்தில் அழகிரி ஆதரவாளர் இசக்கி முத்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய மடல் இத்தனை முக்கியத்துவம் பெற்றதாக ஊடகங்களில் கருதப்படுகிறது. அந்த மடலில் இசக்கி முத்து, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திமுக உடன்பிறப்புகள் இரு சகோதரர்களின் தலைமையில் பிரிந்து நிற்பது சரியல்ல. தேர்தல் பணிகளில் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் திமுக இந்த முறை பலத்த வெற்றி பெற வாய்ப்பு உண்டு. எனவே ஸ்டாலின் தனது சகோதரர் மீதான பழைய மனவருத்தங்களை மறந்து அவரோடு கை கோர்த்துச் செயல்பட முன் வரவேண்டுமென்பதே உண்மையான  திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே பகையை மறந்து சகோதரர்கள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அது உடன்பிறப்புகள் அனைவருக்கும் புதிய எழுச்சியைத் தரக்கூடும் என்றும் இசக்கி முத்து தனது மடலில் குறிப்பிட்டிருக்கிறார்.

செயல்தலைவர் ஸ்டாலின், உடன்பிறப்பின் இந்த மனம் திறந்த மடல் கண்டு மசிவாரா? மாட்டாரா? எனத் தேர்தல் நெருங்கி வந்தால் தெரியும்.

 

Image courtesy: Financial express.

]]>
ஸ்டாலின், அழகிரி, இசக்கி முத்துவின் மனம் திறந்த மடல், stalin, azhagiri, isakki muthu's open letter to stalin https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/14/w600X390/Stalin-Alagiri-PTI.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/14/open-letter-to-stalin-from-azhagiri-supporter-isakki-muthu-2880487.html
2880480 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பெற்றோர் அனுமதியின்றி திருமணப் பதிவு இல்லை என்பது சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரான செயல்: கனிமொழி RKV DIN Wednesday, March 14, 2018 11:23 AM +0530  

இந்து திருமண சட்டத்தின்படி, திருமண வயது வந்த ஆணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமுள்ள ஆணையோ, பெண்ணையோ முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு பெற்றோர் அல்லது உறவினர்களின் சம்மதம் தேவையில்லை. மணமக்கள் இருவரும் போதிய ஆவணங்களுடன் சென்று பதிவுத் திருமணம் செய்ய வகையிருந்தது. ஆனால்,

இனி பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்குப் பெற்றோர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் பதிவுத் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் இந்து திருமணங்களைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி இந்து திருமணத்தை பதிவு செய்ய மணமக்கள் தரப்பிலிருந்து; 

1.அவர்களது பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரது ஒரிஜினல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

2. விண்ணப்பத்தில், குறிப்பிட்டுள்ள பெற்றோரின் பெயர், முகவரி ஆகியவற்றை சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்த பிறகே திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

3. பெற்றோர் உயிரிழந்ததாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் புகைப்படத்துடன் அவகளது ஒரிஜினல் இறப்புச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 

இதில் ‘பெற்றோரின் அனுமதி தேவை’ என்பது கட்டாயமில்லை என்றாலும், பெற்றோரின் ஒரிஜினல் அடையாள அட்டை இன்றியோ அல்லது பெற்றோர் இறந்திருந்தால் அவர்களது ஒரிஜினல் இறப்புச் சான்றிதழ் இன்றியோ திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

கனிமொழி கருத்து...

பதிவுத் திருமணமுறையில் இம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறைகளை திருமணப் பதிவுத் துறை பின்பற்றுமானால் அது சாதி, அந்தஸ்து, பேதங்களை வன்மையாகக் கண்டிக்கும் கலப்புத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு எதிரான அணுகுமுறையாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்துப் பேசுகையில்; இந்து பதிவுத் திருமணங்களில் இம்மாதிரியான அணுகுமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுமாயின் நாடு சிறிது, சிறிதாக சாதியவாதிகளின், மதவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தான் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சாதிமறுப்புத்திருமணங்களை அனைத்துப் பெற்றோர்களும் ஏற்றுக் கொள்வார்களா? அப்படி ஏற்றுக் கொள்ளாத பெற்றோரிடம் போய் பதிவுத் திருமணத்துக்கான ஆவணங்களை எப்படிக் கோர முடியும்?! என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

]]>
பெற்றோர் அனுமதியுடன் பதிவுத் திருமணம், காதல் திருமணம், சதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம், கனிமொழி கருத்து https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/14/w600X390/Kanimozhi-Karunanidhi.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/14/register-marriage-with-parents-orijinal-id-cards-is-opposite-to-intercaste-marriage-2880480.html
2879885 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்... கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்! RKV DIN Tuesday, March 13, 2018 05:18 PM +0530  

மகாராஷ்டிராவின் யவத்மல் பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஒரிஜினல் ஆதார் கார்டுகள் மீட்கப்பட்டன. கிணற்றுக்குள் இருந்து கோணிப்பைகளில் கட்டப்பட்டு வீசப்பட்ட ஆதார் கார்டுகளை மீட்ட உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்றதும், இச்சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்களை விசாரிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களில் சிலர், ஊரில் நிலவும் கடுமையாக தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

யத்வல் பகுதியின் சிண்டே நகர், சாய்மந்திரில் இருக்கும் கிணற்றைத் தூர்வார முயன்றபோது கிணற்றுக்குள்ளிருந்த பாறைக்கு அடியில் இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு மூட்டை சிக்கியிருக்கிறது. மூட்டைக்குள்ளிருந்த ஆதார் கார்டுகள், பல நாட்களாக நீரில் ஊறியிருந்த காரணத்தால் சிதிலமடைந்திருந்த போதிலும், அதிலிருக்கும் தகவல்கள் அழியாமல் வாசிக்க முடியும் அளவுக்கு இருந்ததால் அந்த ஆதார் கார்டுகள் அனைத்தும் புறநகர்ப் பகுதியில் இருக்கும் லோஹர கிராமத்தைச் சேர்ந்தவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், மீட்கப்பட்டுள்ள அந்த ஒரிஜினல் ஆதார் கார்டுகள் அனைத்தும் வருவாய்த்துறை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவையா? அல்லது இந்திய தபால் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவையா? என்பது குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளார். யாராக இருந்தாலும் சரி கடமையை மீறிய குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள ஆதார் கார்டுகளுக்கு உரிய நபர்கள் யாரெனக் கண்டறிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யவத்மல் தபால்துறை தலைமை அஞ்சல் அதிகாரியான ஆனந்த சர்க்கார் தெரிவித்துள்ளார்.

]]>
aadhar cards, dumped in a well, ஆதார் கார்டுகள், கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட ஆதார் கார்டுகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/13/w600X390/aadhar_cards.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/13/thousands-of-aadhaar-cards-found-dumped-in-a-well-2879885.html
2879218 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ராகுல் காந்தியும், அமித் ஷாவும் நேருக்கு நேர் பார்த்தப்போ ஒரு ‘ஹாய்’ கூட சொல்லிக்கலை! இதான் அரசியல் நாகரீகம்! RKV DIN Monday, March 12, 2018 02:17 PM +0530  

இந்திய அரசியலைப் பொறுத்தவரை வட இந்திய அரசியல்வாதிகள், தென்னிந்திய அரசியல்வாதிகளை விட அரசியல் நாகரீகம் மிக்கவர்கள் என்று பல சமயங்களில் மீடியாக்களால் புகழப்படுவார்கள். காரணம் பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது சட்டமன்றத்தின் உள்ளேயே அவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஆயிரம் தர்க்கங்களும், காரசாரமான விவாதங்களும் நடக்கும். கட்டிப் புரண்டு மல்லுக்கட்டாத குறையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் நிறைந்த சபை, பொது வெளி, விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்கும் சந்தர்பங்கள் அமையும் போதெல்லாம் குடும்ப நண்பர்களைப் போல நலம் விசாரிக்கத் தயங்க மாட்டார்கள். குறைந்த பட்சம் எப்பேர்ப்பட்ட அரசியல் எதிரிகள் என்றாலும் ஒரு புன்னகையாவது பரிமாறிக் கொள்வார்கள் என்று தான் இதுவரை நற்பெயர் எடுத்திருந்தார்கள்.

ஆனால், இன்று காலை பாராளுமன்றத்தின் 4 ஆம் எண் நுழைவாயில் வழியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியேறிக் கொண்டிருக்கையில் சொல்லி வைத்தாற் போல பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளே எண்ட்ரி ஆனார். இருவரும் வெகு நெருக்கமாக, எதிரும், புதிருமாய் வாசலைக் கடக்க நேர்கையில் இருவரது முகத்திலும் புன்னகை இருந்ததென்னவோ வாஸ்தவமே, ஆனால் அது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது அல்ல. அங்கே குழுமியிருந்த அவரவர் கட்சியினருக்கானது.

இருவருமே மிக நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர தேவையில்லை. ஆனால், இந்தியாவின் பிரதான இரு தேசியக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் இப்படி பொதுமக்கள் உலவும் இடங்களில் குறைந்த பட்ச அரசியல் நாகரீகத்தைக் கூட கிடப்பில் போட்டு ஒரு  ‘ஹாய்’ கூட சொல்லிக் கொள்ளாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது ரசிக்கும்படியாக இல்லை.

இப்படி இருக்கும் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு இனி அதிமுக, திமுக போன்ற தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமிருப்பதாகத் தெரியவில்லை.
 

]]>
Amit Shah, Rahul Gandhi, didn't even say hi, அமித் ஷா, ராகுல் காந்தி, அரசியல் நாகரீகம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/rahul_amidhsha.jpg https://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/mar/12/rahul-gandhi--amit-shah-came--close-but-didnt-even-say-hi-2879218.html