Dinamani - நூல் - திரைப்படம்  - https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3417395 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம் DIN DIN Tuesday, May 19, 2020 10:50 PM +0530
ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்

கரானா நேரத்தில் படித்ததில் பிடித்த நூல், இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் மன்றம் வெளியிட்ட 2008 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கோவை – இரண்டாம் பாகம்

பொதுவாக ஆய்வு தொடர்பான புத்தகங்கள் நூலகங்களில் கிடைக்கப்பெறுவது இன்றுவரை அரிதானதாக இருந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரை படித்தவர்களுக்கு மட்டும் இந்நூல் கிடைக்கிறது. ஆராய்ச்சி நூலகங்களிலும் முழுமையாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்நூலைப் பாதுகாத்து வைக்கவேண்டியுள்ளது. 

இந்நூலில் பல கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன. காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி நடக்கும் இந்தியர், கள்ளுக்கடை ஒழிப்பிற்கு ஏன் துணை போக மறுக்கவேண்டும்? கோபல்லபுரத்து மக்கள் நாவலில் காந்தியம் தொடர்பான கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. 

எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு வளையல்கள் கதை குறித்தும் காந்திக்கு வளையல் கொடுத்த குடும்பம் பிழைக்க வழியின்றி தங்க வளையல் விற்று கண்ணாடி வளையல் போடும் சமூகத்தின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பக்கம் 664இல் ஆனந்த விகடன் குறித்த கட்டுரையில் 29.03.1987இல்  அரசியல் அட்டைப்பட கார்ட்டூன் தொடர்பாக  ஆளும்கட்சி பத்திரிகை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை அளித்ததும், அதற்கு சட்டம் பத்திரிகையாளருக்கு விடுதலை அளித்து நஷ்டஈடும் பெற்றுத் தந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் வாய் மௌனமாக உள்ளதன் மர்மம் விளங்கவில்லை.

கந்தர்வன் சிறுகதையில் விதவைப்பெண் குறித்த காளிப்புள்ளே,பெண் சிசுக்கொலை தொடர்பான பாரதிராஜாவின் திரைப்படம், தகப்பன் இறந்த நிலையில் புறநானூறு காட்டும் வாழ்வியல், திருமந்திரம் காட்டும் மாமதயானை தத்துவம் என நீண்டு தமிழின் பெருமையை விளக்குகிறது.

கவிஞர் சிற்பியின் பரமபதத்துச் சோபன படம் எங்கள் தேசம் அதில் கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக் கிடக்கின்றன என்ற  கவிதை வரிகள் இன்றைய உலக நடப்பைக் காட்டுகிறது.

சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அந்த பொற்கொல்லன் – தமிழன்பன்

இராமர் கோவிலா! பாபர் மசூதியா! இந்தியனே! இந்தியனே! முதலில் நீ இருக்க இடம் தேடு! ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை அவன் தேடிக்கொள்வான்! எந்த மதக்கொள்கையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஆனால், அதை இரத்தத்தில் கழுவி அழுக்காக்காதீர்கள்! -  மு.மேத்தா போன்ற கவிஞர்களின் கவிதைகள் உத்திகளைப் பேசுகின்றன.

- டாக்டர் பி.ஆர். லக்ஷ்மி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/19/w600X390/IMA.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/may/19/aaivuk-kovai-3417395.html
3417391 புத்தக வெளி நூல் - திரைப்படம்  மனதில் பூத்த மலர்கள் DIN DIN Tuesday, May 19, 2020 10:39 PM +0530
மனதில் பூத்த மலர்கள்

டாக்டர் நா மகாலிங்கம், ஓம் சக்தி மாத இதழில் எழுதப்பட்டு வந்த தலையங்கங்களில் சிலவற்றைத் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை சமீபத்தில் படித்தேன்.

பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பில் நதிகள் இணைப்புக்கு தேசிய மாநாடு, அரசியல் சட்டத்திருத்தம் அவசியமே, சர்வதேச பயங்கரவாதிகளே! சத்யாகிரகிகள் ஆகுங்கள், தேசிய இலக்கியம் திருக்குறள், தமிழ்மொழியை கட்டயாமாக்க என்ன வழி?, நாடும் மொழியும், வேளாண்மை வேறு இந்தியா வேறு அல்ல, படிக்கும் போதே உழைப்பு, மேதகு அப்துல் கலாமின் 10 உறுதி மொழிகள் போன்ற கட்டுரைகளும் உள்ளடங்கியிருந்தன.

அந்நூலில் அரசியல், பொருளாதாரம், தேசியம், வேளாண்மை, நதிநீர் இணைப்பு, பள்ளிக்கல்வி முறை, தொல்காப்பியம், திருக்குறள், தமிழிசை, தமிழ் மொழி, உலகமயம், தாராளமயம் போன்ற பல தலைப்புகளில் மகாலிங்கம் உயரிய கருத்துக்களை வழங்கியுள்ளார்.

ஒரு கட்டுரையில் புத்தகத்திற்கு ஏன் நூல் என பெயர் வந்ததை, இரம்பத்தால் மரத்தை அறுக்க நூலால் கோடு போடுவார்கள். அப்படிச் செய்தால்தான் கோணலாகாமல் நேராக அறுக்க முடியும். இதே போல மனித மனம் கோணலாகாமல் நேராக இருக்க, புத்தகம் பயன்படுவதால் புத்தகத்திற்கு “நூல்” என்று பெயர் வைத்தனர் நமது பெரியோர்கள் எனக் கூறியிருந்த விளக்கம் என் மனதிற்கு மிகவும் பிடித்தது.

- வைரமணி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/19/w600X390/Manathil_pootha_malargal.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/may/19/manadhil-pootha-pookal-3417391.html
3404005 புத்தக வெளி நூல் - திரைப்படம்  தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்' DIN DIN Tuesday, April 21, 2020 04:03 PM +0530
தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்' 

தமிழ் மக்களும் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலிட்டால், அதில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூல் முதல் மூன்றில் ஒன்றாக இருக்கும். 

சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். சரித்திர வாழ்க்கை வாழ்ந்த ஒரு மேதையின் சரித்திரத்தைப் படிப்பது, அவருடனே பயணிப்பது போன்ற பிரமிப்பைத் தந்தது.

உ.வே.சா. அவர்களின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 19-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர். படித்தால் இவரிடம்தான் தமிழ் படிக்க வேண்டும் என்று தவமிருந்து, அந்த நல்வாய்ப்பும் அமையப்பெற்றதால் ஆசிரியரிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறார். ‘ஆசிரியப்பிரான்‘ என்றே அவரைக் குறிப்பிடுகிறார். இருவருக்கும் இடையே ஒரு நல்ல ‘கெமிஸ்ட்ரி‘ இருந்திருக்கிறது. பிள்ளை அவர்கள் இறக்கும் தருவாயில் இவரது மனநிலையும், கடைசி மூச்சின்போது இவர் வாயால் தேவாரம் பாடக் கேட்டு அவர் கண்ணீர் மல்கியதும் உணர்வுப்பூர்வமானது. இவற்றைப் படிக்கும்போது, நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் அமையவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. உ.வே.சா. போன்ற மாணவராக நாம் இல்லையே என்ற நினைவு வந்ததும் ‘வார்த்தை முட்டுது‘.  
 
எல்லோரும் படிப்பது போலவே செய்யுள்களைப் படிக்காமல், அவற்றின் அமைப்புக்கு ஏற்ற ராகத்துடன் இவர் படித்தமை கேட்போர் உள்ளதைக் கவர்ந்திருக்கிறது. செய்யுள்களின் இலக்கிய நயத்தைப் பாராட்டும் திறனோடு அவற்றின் இலக்கண விதிமுறைகளும் இவருக்கு அத்துப்படி. எனவே செய்யுள் இயற்றுவதும் கைவந்த கலை. நல்ல ரசனையும் சேர்ந்துகொண்டது. எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. 
 
டாக்டர். உ.வே.சா.வின் வாழ்வின் திருப்புமுனை என்றால், அவர் சேலம் ராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்தத்தைச் சொல்லலாம்.

“சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம்?”

இந்தக் கேள்விதான் உ.வே.சா. அவர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அச்சமயத்தில் இந்நூல்களை இவரது ஆசிரியர்கூடப் படித்ததில்லை. இதன்பொருட்டு இவர் எடுத்த முயற்சிகளாலேயே நமக்குச் சங்க நூல்களைப் பற்றியும் தமிழின் இலக்கியத் தொன்மை பற்றியும் இன்றைய புரிதலில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது தனி வரலாறு. இவ்வளவு பெரிய ஆராய்ச்சியைச் செய்து ஒரு துறையின் நிலையையே மேம்படுத்தியிருக்கும் தமிழ்த் தாத்தா ஆங்கிலம் கற்கவில்லை. வடமொழியும் கற்கவில்லை! அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் சமஸ்கிருதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே அளித்து வந்த ‘மகாமகோபாத்யாய‘ என்கிற உயரிய பட்டத்தைத் தமிழ் மட்டுமே கற்றிருந்த இவர் பெற்றமை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
 
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், தனி ஆசிரியரிடமும் பயின்ற இவர் பின்னர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனதே இவரது திறமையும் பெருமையும் சொல்லும். ஆசிரியர் பணியில் கிடைத்த வருமானத்தையும் (மாதம் 50 ரூபாய்) தமிழார்வம் கொண்ட புரவலர்கள் தந்த பணத்தையும் கொண்டே தாம் கண்டெடுத்து ஆராய்ந்த பல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். 
 
பல சாதனைகளைச் செய்தவர். இத்தகையவர் இன்னும் சில ஆண்டுகளாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் அப்போது இருந்திருந்தால் சுவடிகளைத் தேடி இவரது அலைச்சல் வெகுவாகக் குறைந்திருக்கும். அதேபோல், இன்றைய மருத்துவ வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அப்போது இருந்திருந்தால் அவரது ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் இருந்திருக்கக்கூடும். என்ன செய்வது?
 
இவரது மாணவர்களில் ஒருவரும், அப்போதைய மாகாண அரசின் அமைச்சருமான சுப்பராயலு என்பவர் இவரிடம் வந்து “இன்றைய நிலையில் ஹிந்தி படித்தால் மாணவர்களுக்கு நல்லது. இதை நீங்கள் சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம் தாத்தா அவர்கள், “ஹிந்தி படிப்பது நல்லதுதான். அனால் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது“ என்று சொல்லியிருக்கிறார். இவரே உண்மையான திராவிடர். தமிழர்.
இறுதி மூச்சு வரை தமிழ் தமிழ் என்றே வாழ்ந்திருக்கிறார். 

ஓலைச்சுவடியையோ எழுத்தாணியையோ நான் இதுவரை பார்த்ததில்லை. சுவடிகள் எழுதும் முறை பற்றி இந்நூலில் தமிழ்த் தாத்தா சொல்லியிருக்கிறார். 

இணையத்தில் இந்தப் புத்தகத்தை என்ற முகவரியில் படிக்கலாம்.

- R. விஜய் சங்கர்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/20/w600X390/uvesaa.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/21/en-sarithiram-3404005.html
3404009 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஐந்து அமெரிக்கத்  திரைப்படங்கள் DIN DIN Tuesday, April 21, 2020 04:03 PM +0530
ஐந்து அமெரிக்கத்  திரைப்படங்கள்
 

எளிமையான காதல் கதைகளாக மட்டும் இல்லாமல் சிக்கலான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் பற்றிய  ஐந்து திரைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

1.Casablanca (1942)

இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலம். இரவு விடுதி  நடத்தும் நாயகன், தற்செயலாக நீண்ட நாட்களுக்கு முன் பிரிந்த காதலியை சந்திக்கிறான். அவளுக்கு தன் மீது  இன்னும் காதல் இருப்பதை அறிந்து கொள்கிறான். ஆனால், அவர்கள் இணைவதில் உள்ள சிக்கல் என்ன? அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கதை.  இரண்டாம் உலகப்போர் பல கோணங்களில் கதையின் போக்கினை பாதிக்கிறது. மிகவும் முக்கியமான முக்கோண காதல் கதைகளில் ஒன்று.

https://www.amazon.com/Casablanca-Humphrey-Bogart/dp/B001EBWING

2.Notorious (1946)

நாயகனுக்கும், நாயகிக்கும் காதல். வில்லனுக்கு நாயகியின் மீது காதல். உளவுத்துறைக்கும், அதில் பணியாற்றும் நாயகனுக்கும், வில்லனின் மீது கண். அவனது குற்றச் செயல்களை கண்காணிக்க வில்லனுக்கு நாயகியின்  மீதுள்ள மயக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாயகனுக்கும், வில்லனுக்கும் இடையே பந்தாடப்படும் நாயகியின் உணர்வுகளும், கடமைக்கும், காதலுக்கும் இடையே சிக்கிக்கொண்ட நாயகனின் உணர்வுகளும் நம்மை பரபரப்பில் ஆழ்த்தும். ஹிட்ச்காக் இயக்கிய த்ரில்லர் திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=SdqFT7hFZ2U  

3.The Apartment (1960)

கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன், தன்னுடைய அபார்ட்மென்ட் வீட்டினை, உயரதிகாரிகள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான். நாயகியும் அதே நிறுவனத்தில் பணிபுரிகிறாள். பதவி உயர்விற்காக நாயகன் இவ்வாறு செய்வது, நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவருக்கு தெரிய வருகிறது. அதனால் நாயகனின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் தான்  இந்தத் திரைப்படம். திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகி இருந்தாலும், இன்றைய சூழ்நிலைக்கும் நன்றாக பொருந்தும். பணமும், பதவியும் மட்டுமே நிம்மதி தந்துவிடுமா என்ற கேள்வியை கோபமாக கேட்காமல் நகைச்சுவையாக கேட்கும் திரைப்படம்.

https://www.amazon.com/Apartment-Jack-Lemmon/dp/B004AUFVU0  

4.Witness (1985)

காவல் துறை அதிகாரியின் கொலையைப்  பார்த்த சிறுவனின் விதவைத்தாய்க்கும், அந்தக் கொலையை விசாரிக்கும் அதிகாரிக்கும் ஏற்படும் காதல். இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் மிகக் குறைந்த அளவே வாழும் 'ஆமிஷ்' சமூகத்தைப்பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம். மனதளவில் முதிர்ச்சியடைந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான பக்குவமான காதல்இது . குற்றப்பின்னணியும் இருப்பதால், த்ரில்லர் வகைப்படங்களை விரும்புவர்களுக்கும் பிடிக்கும்.   

https://www.amazon.com/Witness-Harrison-Ford/dp/B000ZFWQ02 

5.The Bridges of Madison County (1995)

தன்னுடைய ஆசைகளை, குடும்பத்திற்காக தியாகம் செய்யும் நாயகியின் கதை. நான்கு நாட்கள் மட்டுமே தற்செயலாக பழகும் சூழல் நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்படுகிறது. ஆனால், இந்த உறவு இருவரின் வாழ்க்கையிலும் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்தத் திரைப்படத்தை பார்த்த பின், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மீதான பார்வையே ஒருவருக்கு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.      

https://www.amazon.com/Bridges-Madison-County-Clint-Eastwood/dp/B00JMY0OYM

- வினோத் பாபு

]]>
quarantine cinema https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/20/w600X390/FINAL.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/21/5-american-movies-3404009.html
3404015 புத்தக வெளி நூல் - திரைப்படம்  க்ரீன் புக் DIN DIN Tuesday, April 21, 2020 04:03 PM +0530
க்ரீன் புக்

சமீபத்தில் என்னை மிகவும் ஆட்கொண்ட படம் Green Book. 1960 களில் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த இன வேறுபாட்டை தோலுரித்து காட்டும் படம். மேலும் கதையின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உங்கள் மனதில் நீங்கா இடம் பெறும். மேலும் மக்கள் தங்களின் நடவடிக்கைகளை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் படம். எனது பரிந்துரை இந்த படம். மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் 2018 ன் ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என விருதுகளை அள்ளிக்கொண்டது.

- விஜயீஸ்வரி ஜெயவேல்
 

]]>
quarantine cinema https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/20/w600X390/WhatsApp_Image_2020-04-18_at_12.jpeg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/21/green-book-3404015.html
3404017 புத்தக வெளி நூல் - திரைப்படம்  இலக்கற்ற பயணி DIN DIN Tuesday, April 21, 2020 04:03 PM +0530
இலக்கற்ற பயணி

இலக்கற்ற பயணியின் ஆசிரியர் இராமகிருஷணன் ஆவர். இதன் முதல் பகுதி சாலை கற்றுத் தருகிறது என்ற தலைப்பில் பயணி சுற்றுலா செல்வோரிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான், பயணியின் மனநிலை, பயணம் செய்யும்போது எப்படி இருக்க வேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய சுயக்கட்டுப்பாடுகள், தேடல்கள் எவை, இயற்கை ரசிக்க ரசனை வளர்த்துக் கொள்ளுதல், சுவரசியமான நினைவுகள், அனுபவங்களை எவ்வாறு கடந்த வேண்டுமென்றக் குறிப்புகள் என ஆசிரியர் தன் அனுபவங்களை பகிருகின்றார்.

பிற்பகுதிகளில் மேலும் உலக நாடுகளின் வரலாறு, கலாச்சாரம்,  பாரம்பரியம், வாழ்வியல் பறைச்சற்றும் விதமாக நீள்கின்றன. 21 ஊரடங்கின்போது இந்த நூலை வாசிப்பவர்களுக்கு பொது அறிவு, நாம் பார்க்க வேண்டிய சிறப்புமிக்க நகரங்கள் யாவும் நம் கண்முன்னே கற்பனையாக விரியும்.

- கோ. தினேஷ்நாத்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/20/w600X390/WhatsApp_Image_2020-04-06_at_5.jpeg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/21/ilakatra-payani-3404017.html
3403449 புத்தக வெளி நூல் - திரைப்படம்  கிழவனும் கடலும்   DIN DIN Sunday, April 19, 2020 09:51 PM +0530
கிழவனும் கடலும்  - எர்னெஸ்ட் ஹேமிங்வே    


நோபல் பரிசு பெற்ற  எர்னெஸ்ட் ஹெமிங்வேவின்  “ தி ஓல்ட் மேன் அன்ட் தி சி” என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்தான்  கிழவனும் கடலும் என்ற நூல். எம்.எஸ். இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீன் பிடிக்கும் ஓர் எண்பது வயதுக்கு மேற்பட்ட  கிழவனும், புதிதாக மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ள விரும்பும் ஓர் இளைஞனும்தான் இக்கதையின் முக்கிய கதை மாந்தர்கள். இது ஆங்கிலத்தில் வெளிவந்து அரை நூற்றண்டுக்கு மேல் ஆனாலும் இன்றும் அதைப் படிக்கும்போது திரையங்கில் இருக்கையின் நுனியில் உட்கர்ந்து படம் பார்க்கும், படத்தின் சுவையையும் விறுவிறுப்பையும் பெற்றுள்ளது இந்நூல். 

இந்த நாவலின் கதைப்படி ஓர் அனுபவமிக்க கியூபாவின் மீனவக் கிழவன், தன் வலையில் சிக்கிக்கொண்ட ஒரு பெரிய முரல் மீனுடன் போராடிய கதையே இந்த நாவல். சாண்டியாகோ என்ற வயதான மீனவர், மனொலின் என்ற ஓர் இளம் மீன் பிடிக்க பயிற்சிபெறும் இளைஞனுடன் பல நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்கப் போகிறான். மீன் கிடைக்கவில்லை. இவ்வாறு மீன் பிடிக்க இயலாமல் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ந்து 84 நாட்கள் சென்றும் ஒரு நாளும் மீன் சிக்கவில்லை. எனவே அந்த இளைஞனின் பெற்றோர்கள் வயதான சாண்டியாகோ என்னும் கிழவன் அதிர்ஷ்டம் இல்லாதவன்  என்று எண்ணி, வயதான மனிதருடன் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்து மற்ற மீனவர்களுடன் தன் மகனை மீன்பிடிக்க அனுப்பினார்கள். எந்த கடுமையான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல், நான் வளைகுடா நீருக்குள் நீண்ட தூரம் பயணித்து மீன் பிடித்து அந்த இளைஞனின் பெற்றோர்களின் எண்ணத்தை மாற்றுவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் அந்த பெரியவர். 
 
எண்பத்தி ஐந்தாவது நாளில், சாண்டியாகோ என்னும் முதியவர்  வளைகுடா நீரோடையில் செல்வதற்கு, அவருடைய லேசான சிறு படகை  எடுத்து, தனியாக புறப்பட்டார். முதல் நாள் நண்பகலில் அவர் தூண்டிலை வீசியபோது, ஒரு பெரிய மார்லின் என்ற மீன் அவரது இரையை எடுத்துக்கொண்டது, என்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால் அவரால் அந்த பெரிய மார்லின் என்ற மீனை இழுக்க முடியவில்லை. மாறாக அவரது லேசான சிறு படகையும் மீன் இழுப்பதை சாண்டியாகோ உணருகிறார். இவ்வாறு வயதான மனிதன் தன் உடலால் தூண்டிலின் அழுத்தத்தை தாங்கியவாறு இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவுகள் போராடுகிறார். அவருக்கு, போராட்டத்தின் மூலம் வலியும் காயமும் ஏற்பட்டிருப்பினும் சாண்டியாகோ ஒரு அண்ணனைப்போல் தனக்குத் தானே ஆறுதலையும் பாராட்டுக்களையும் கூறிகொண்டார். மேலும் மீனின் பெரும் கண்ணியத்தை எண்ணி, மார்லினை உண்ணத் தகுதியானவர் எவருமில்லை என்று தீர்மானிக்கிறார். மிகப்பெரும் போராட்டத்தின் மூன்றாவது நாளில் மீன், லேசான சிறு படகை வட்டமிட தொடங்குகிறது. சாண்டியாகோ, பக்கத்தில் மீனை இழுக்க அவரிடம் இருந்த அனைத்து உடல் மற்றும் மன வலிமையையும் பயன்படுத்தி, ஒரு ஈட்டி கொண்டு மார்லினை குத்தி, களைப்படைந்த வயதான மனிதர் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுதான் கதை. 

இது ஹெமிங்வே எழுதி அவரது வாழ்நாளில் வெளியிட்ட முக்கிய நாவலாகும். அவரது தி ஓல்ட் மேன் அண்ட் சீக்காக 1953ல் புனைவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டதோடு 1954ல் இலக்கியத்திற்கான பங்களிப்பை வழங்கிய ஹெமிங்வேவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கதையை மையப்படுத்தி பல மொழிகளில் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. இது ஆங்கிலத்தில் 38 பக்கத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் தற்பொழுது தமிழில் “கிழவனும் கடலும்” என்ற புத்தகமாக கிடைக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் படித்து பயன் பெறக்கூடிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

- கு. முருகேசன்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Kizhavanum_Kadalum.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/kizhavanum-kadalum-3403449.html
3403440 புத்தக வெளி நூல் - திரைப்படம்  விலங்குப் பண்ணை DIN DIN Sunday, April 19, 2020 09:50 PM +0530
புத்தகம்: விலங்குப் பண்ணை

ஜார்ஜ் ஆர்வெல் எழுதி பி. வி. ராமஸ்வாமியால் மிகவும் நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது விலங்குப் பண்ணை என்கிற புனைகதை. 

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கம்யூனிச ரஷ்யாவில் சாதாரண உழைக்கும் மக்கள் நிச்சயம் முன்னேறுவார்கள் என்ற கருத்தை பெரும்பான்மையான மக்கள் நம்பினர். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில், அந்த தத்துவத்தின் அனைத்து சாராம்சங்களையும் உதறிவிட்டு ஸ்டாலின் மக்களுக்கு செய்ததாகக் கூறப்படும் கொடுமைகளை அல்லது சர்வாதிகாரத்தன்மையை மிகத் தெளிவாக காட்டுகிறது இந்தப் புத்தகம். 

எது நமக்கு தேவை என்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது எது நமக்கு தேவை இல்லை என்பது இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது உணர்வீர்கள் எந்த மாதிரியான அரசியல் அமைப்பு முறை மற்றும் ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை என்பதனை. மிகவும் அருமையான புத்தகம், உங்கள் சிந்தனையை மிகவும் கூர்மையாக்கும். 

- கார்த்திக்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Vilangu_pannai.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/animal-farm-3403440.html
3403443 புத்தக வெளி நூல் - திரைப்படம்  புத்தகம் என்பது..  DIN DIN Sunday, April 19, 2020 09:48 PM +0530
புத்தகம் என்பது... - ஈரோடு தமிழன்பன் 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய புத்தகம் என்பது... (2016) என்ற கவிதை நூலில் ஏற்கனவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக்  கூட தன் பக்கம் சுண்டியிழுக்கும் ஆற்றல் பெற்ற 122 குட்டிக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொன்றும் வெறும் கவிதைகள் அல்ல, அவை ஒவ்வொன்றும் ஒரு முத்து. தமிழில் கவிதைப் புத்தகங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் இது புத்தகத்தை பற்றிய கவிதைகளைக் கொண்டிருக்கும் அற்புதமான புத்தகமாகும். இது கவிதையால் நெய்த நூல். கவிதை என்பது எப்போதும் வருவதல்ல, எப்போதாவது வருவது என்று வலம்புரி ஜான் அடிக்கடி குறிப்பிடுவார். எப்போதாவது வந்ததை தேனீக்கள் தேன் கூட்டில் தேன் சேர்ப்பதுபோல  அழகாகப் புத்தகத்தில் சேர்த்துள்ளார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.  ஒரு கவிதையின் வெற்றி என்பது அது வாசகனையும் அதன் பங்காளியாக ஆக்க வேண்டும். இதில் அதுபோன்ற பல கவிதைகள் இடம்பெற்று நூலுக்கு வெற்றி வாகை சூடியுள்ளன. 

இந்த புத்தகத்தின் முதல் கவிதையான
 
“ பத்துப் 
பறவைகளோடு பழகி 
நீங்கள் 
ஒரு பறவையாக முடியாது 
பத்து
நதிகளோடு பழகி 
நீங்கள் 
ஒரு நதியாக முடியாது
பத்துப் 
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள் 
நீங்கள் 
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்.”
   என்ற கவிதையே இந்த நூலுக்கு மகுடம் சூட்டுவது போல நச்சென்று உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா. 

இதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு கவிதையில் 

“புத்தகம் படித்தவர்கள் 
எல்லாம் அறிவாளிகள் இல்லை.
ஆனால்
அறிவாளிகள் எல்லாம் 
புத்தகம் படித்தவர்களே.” 

என்று எளிய மொழிநடையில் எழுதியிருப்பது, கவிதைக்கு மெய்யும் அழகு என்பதை உணர்த்துகிறது. 

“ படித்து 
மறந்துகொண்டே இருப்பதைவிட, 
மறந்து 
படித்துக் கொண்டிருப்பது 
நல்லது. மறந்துவிடாதீர்கள்.” 

இந்த கவிதை இவருடைய புத்தகத்திற்கு மட்டுமல்ல, எல்லா நல்ல புத்தகத்திற்கும் பொருந்தும் உண்மை. நல்ல புத்தகத்தோடு நீங்கள் செலவிடும் நேரமும், பணமும் செலவுகள் அல்ல, அது உங்கள் வாழ்வின் முதலீடுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரு இனிப்பு பலகாரத்தை பற்றி உண்டவர் கூறினால் திருப்தி அடையாமல் தானே உண்டு அதன் சுவையை அறிய வேண்டும் என்று கேட்பவர் முனைவதுபோல, இந்த புத்தகம் படித்த போது நான் அடைந்த ஆனந்தத்தைப் போல நீங்களும் பேரானந்தத்தை அடைய வேண்டும் என்றால் நீங்களும் இந்தப் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். நிச்சயம் அதை நீங்களும் உணர்வீர்கள். 
    
இந்த புத்தகத்தில் உள்ள தமிழ்க் கவிதைகளின் சுவையை தமிழ் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேராசிரியர் ஏ. அய்யாசாமி, இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதுவும் இந்த புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளது, இந்த நூலின் மற்றுமொரு சிறப்பாகும். எந்த ஒரு மொழிபெயர்ப்பாளனும் கவிதையை மொழிபெயர்க்கும்போது  கவிதையின் பொருளை எளிதாக மொழி பெயர்த்துவிடுகிறார்கள், ஆனால் அதன் சுவையை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குப் பெயர்ப்பதில் கோட்டைவிட்டுவிடுவார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளையும் அதன் பொருளும் சுவையும் மாறாமல் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர்  அய்யாசாமி. பேச்சாளர்கள் மேடையில் மேற்கோள்கள் காட்டுவதற்கான பல கவிதைகள் இந்த நூலில் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.

- கு. முருகேசன்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Puthagam_Enbadhu.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/puthagam-enbadhu-3403443.html
3403447 புத்தக வெளி நூல் - திரைப்படம்  செவ்வி: பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள் DIN DIN Sunday, April 19, 2020 09:14 PM +0530
செவ்வி - பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்

தமிழகப் பண்பாட்டு சூழல், நாட்டுப்புற சிறு தெய்வ வழிபாடு, பெருந் தெய்வங்களின் சமூக மரபுகள், திராவிட இயக்கம், பகுத்தறிவு இயக்கம் பொதுவுடைமை இயக்கம் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல்வேறு தளங்களில் பேராசிரியர் தொ.பரமசிவன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இவர் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்த அழகர் கோயில் பற்றிய ஆய்வு பல்கலைக்கழக ஆளவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இன்றும் தொடர்ந்து பல களஆய்வுகளை செய்துவருபவர் பேரா. தொ. பரமசிவன் என்பது தமிழ்த்துறையில் ஆய்வில் இருப்போருக்குத் தெரியும். ஒரு மனிதன் யார் என்று முடிவு செய்வது அவனுடைய வெளித்தோற்றம் அல்ல அவனுடைய எண்ணங்கள் அல்லது சிந்தனைகள்தான். செவ்வி என்ற இந்த புத்தகத்தை பேராசிரியர் பரமசிவனிடம் நடத்திய பல நேர்காணல்களைத் தொகுத்து,  கலப்பை பதிப்பகம் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறது. இந்தப்  புத்தகம் பேராசிரியரின் பரந்துபட்ட சிந்தனை ஓட்டத்தை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. நம்மிடம் காலம் காலமாக தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சுவதாக இவருடைய நேர்காணல் பதில்கள் அமைந்திருக்கின்றன. 

நாட்டார் மரபில் தெய்வங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது எதார்த்தமான ஒன்றாக உள்ளது. நாட்டார் மரபில் இழிவு என்று ஒன்று இல்லை. இறந்துபோன தந்தை மகன் உருவில் வருகிறார். அதாவது,  அப்பா, மகனாக வருகிறார். தந்தை பெயர்ந்து மகனாக வருவதால்தான் பெயரன் (பேரன்) என ஆயிற்று என்று அதற்கான காரணத்தையும் அவர்கள் வாழ்வில் புழங்கும் வார்த்தைகள் மற்றும் உறவு முறைகளில் இருந்தே சொல்லியிருப்பது நம் சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது. 

இவரது ‘தெய்வங்களும் சமூகமரபுகளும்’, ‘அறியப்படாத தமிழகம்’ மற்றும் ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற நூல்கள் மக்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்ற நூல்கள் என்றாலும், செவ்வி என்ற நூல் முழுக்க முழுக்க நூலாசிரியரின் மீது முழு கவனத்தையும்  செலுத்தியுள்ளது. அவரைப் பற்றி அறிமுகம் செய்யச்சொல்லி கேட்டபோதுகூட ,” என்னுடைய சொந்த ஊர் பாளையங்கோட்டை, பெரும்பாலும் கிறிஸ்துவ நகரம் என்று அறியப்பட்டிருந்த இந்நகரில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைஷ்ணவக் கோயில்கள் எல்லாம் இங்குண்டு,  அதன் பெயர் ஸ்ரீ வல்லப மங்கலம் என்று” ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தன்னை அறிமுகப்படுத்திகொண்டது, ஆய்வில் அவருக்கு  இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. மேலும் அது கல்வித்தரமுடைய நகரம் என்றும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கண் தெரியாதவர்கள், காது கேளாதோர் பயிலும் பள்ளியும், கைதிகளும் படிக்கும் வசதியும் நூலகமும் இருந்ததால் அன்றைய  மாணவர்களிடம் இயல்பாகவே வாசிப்புப்பழக்கமும் இருந்தது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில், தற்போதைய சூழலில் பெருகிவரும் தொலைக்கட்சி மற்றும் இன்டர்நெட் போன்ற சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வாசிப்புப் பழக்கம் தற்போதைய மாணவர்கள் மத்தியில்  குறைந்துள்ளதாக வருத்தப் படுவதையும் அவர் பதிலில் இருந்து காணமுடிகிறது. இப்பொழுது பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர்கள் எண்ணிக்கை பெருகி இருக்கின்றன, ஆனால் புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிற புள்ளிவிவரம் சமூக நலனுக்கு ஏற்றதல்ல. தற்பொழுது கல்வி நிலையங்கள் எல்லாம் மதிப்பெண்களை வாரிக் குவிக்கும், சொன்னதையே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகளைத்தான் உருவாக்குகின்றன. சிந்தனையாளனை உருவாக்குவதில்லை. புத்தக வாசிப்புதான் சிந்தனையாளனை உருவாக்கும். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்,  “புத்தகத்திலிருந்து நமக்கு புத்தி வந்தால் நாம் படிப்பாளி, நம் புத்தியிலிருந்து புத்தகம் வந்தால் நாம் படைப்பாளி”. யார், வாழ்கையில் உச்சம் தொடவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஒன்று படிப்பாளியாகவோ அல்லது படைப்பாளியாகவோ இருப்பது அவசியம்.

பேராசிரியர் தொ.ப.விற்கு முன் கோயிலைப் பற்றி ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகள் எல்லாம் கோயிலின் கலைநுட்பத்தைப் பற்றிய ஆய்வாகவே இருந்துள்ளது. இவர்தான் ஆய்வை கோயிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வாக மாற்றியுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு ஒன்று, அழகர் கோயில் பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டுவேலை செய்வதற்கோ, ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் அன்று வேலையை விட்டுச் சொல்லிக்கொள்ளாமலேயே நின்றுகொள்ளலாம். அதற்குமுன் அவ்வாறு நிற்க முடியாது. அதற்கு ‘சித்திரை விடுதி’ என்றே பெயர். சித்திரையில் ஒருவன் தனைத்தானே விடுதலை செய்துகொள்ளலாம். அப்படியொரு எழுதப்படாத சட்டம் மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் சார்ந்ததாகவும் இருக்கிறது என்பதை  நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 
சிறு தெய்வங்கள் உள்ள கோயில்கள் எல்லாம் சொத்துடமையுள்ள நிறுவனங்களாக மாறுவதில்லை. ஆனால் அரசின் ஆதரவு பெற்ற எல்லாக் கோயில்களும்  சொத்துடமை நிறுவனங்களாக மாறிவிடுகின்றன என்ற ஆன்மிக நுட்பத்தையும் நமக்கு உணர்த்துகிறார். 

மேலும் இதுபோன்ற பல மக்கள் வாழ்வோடு இணைந்த மிக நுட்பமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் பேராசிரியர் தொ.ப. பகிர்ந்துள்ளார். அவற்றையெல்லாம் படித்து இந்த ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

- கு. முருகேசன்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Paramasivan_interview.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/paramasivan-interviews-3403447.html
3403452 புத்தக வெளி நூல் - திரைப்படம்  கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் DIN DIN Sunday, April 19, 2020 09:07 PM +0530
கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் -  அருணன்

பேராசிரியர் அருணன் எழுதிய காரல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் என்னும் நூல் காரல் மார்க்சைப் பற்றி முதன்முறையாகப் படிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த புத்தகம். இந்த புத்தகத்தை வாசிக்கும்போது 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர், சிந்தனையாளர் மற்றும் படிப்பாளி என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான காரல் மார்க்சைப் பற்றி படிக்கும்போது கண்ணீர் சிந்தாமல் கடந்துவிட முடியாது. இதுபோன்ற மகத்தான மனிதர்கள் மறைந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறு தன் பக்கங்களில் வைத்து அழகு பார்க்கிறது என்றால் அவர் வாழ்க்கையும் கொள்கையும் மகத்தானவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

வரலாறு என்பது சுகமான கடற்கரை சாலை அல்ல. அது கடினமான மலையேற்றப் பாதை. அங்கே பல விபத்துகளை ஏற்படுத்தும்  மேடு பள்ளங்களும் எதிர்பாராத வளைவுகளும் திடீர் திருப்பங்களும் இருக்கும். அதையெல்லம் தன் கொள்கைகளால், சாதனைகளால் செப்பனிட்டுக்கொண்டே முன்னோக்கிச் சென்றவர் கார்ல் மார்க்ஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். வரலாற்றில் இடம்பெற்ற மார்க்சின் நண்பரான ஏங்கல்சும், அவரது மனைவியான ஜென்னி மார்க்ஸும் இது போன்ற ஒரு நண்பன் கிடைக்கமாட்டானா, ஒரு மனைவி கிடைக்கமாட்டாளா என்று நம்மை ஏங்க வைக்கிறார்கள்.

23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல் மார்க்ஸ், உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர், வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் இருந்ததை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல். சிலர் வாழ்வில் படிப்பார்கள், ஆனால் மார்க்ஸ் வாழ்க்கையை எழுதுவதற்கும், படிப்பதற்கும், வறுமையும் அரசாங்கமும் தன்னை பந்தாடுவதற்குமே வாழ்ந்த கொள்கைப் பிடிப்புள்ள மாமனிதன் என்பதை வாசகனுக்கு சொல்லும் அற்புதமான புத்தகம் இது.

மூலதனம் என்பது சேர்த்து வைக்கப்பட்ட உழைப்பே என்றும் ஓர் உழைப்பாளி தான் உருவாக்கியது தனக்கு கிடைக்காமல் போகிற துரதிஸ்டத்தை அந்நியமாக்கப்பட்ட உழைப்பு என்றும் முதலாளிகளின் தனிச்சொத்தே அந்நியமாக்கப்பட்ட உழைப்பால் வந்தது என்றும் தன் கருத்தை தைரியமாக பதிவுசெய்தார் மார்க்ஸ். ஆளும் வர்க்கம் அவரை பல நாடுகளில் இருந்து துரத்தினாலும் அவர் எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வரலாற்றில் நீங்க இடம்பிடித்தார் என்பதையும் நல்ல மொழிநடையோடு நூலாசிரியர் 396 பக்கத்தில் எழுதியிருக்கிறார். இந்த நூலைப் படித்தால், எந்த வறுமை நிலைக்கும் தளர்ந்து போகாத நம்பிக்கையை நீங்கள் பெறுவீர்கள். ஊரடங்கு தொடரும் இந்த நேரத்தில் இந்த புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் படித்துப் பயன் அடையுங்கள்.

- கு. முருகேசன்

]]>
quarantine books   https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Karl_Marx_Vaazhvum_SIndhanaiyum.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/karl-marx-vaazhvum-sindhanaiyum-3403452.html
3403453 புத்தக வெளி நூல் - திரைப்படம்  அறிவியல் புதையல் DIN DIN Sunday, April 19, 2020 09:03 PM +0530
அறிவியல் புதையல் - டாக்டர் குமார் கணேசன்

அறிவியல் புதையல் என்னும் புத்தகம் டாக்டர் குமார் கணேசன் எழுதியுள்ள ஓர் அற்புதமான அறிவியல் கட்டுரை நூல். இந்த நூலில் 20 அறிவியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரையின் ஒவ்வொரு தலைப்பையுமே ஒரு கவிதையைப்போல சிந்தித்துள்ளார் ஆசிரியர்.  நூலாசிரியரைப் பற்றிய குறிப்பை பார்க்கும்போது வேதியியல் துறையில் முனைவர் பட்டத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடியில்) பயின்று, அமெரிக்காவிலுள்ள ப்ருடே பல்கலைக்கழகத்தில் உயர் முனைவர் பட்டம் பெற்று ஆங்கிலத்திலும் அறிவியலிலும் நல்ல புலமையும் நிபுணத்துவமும் பெற்றிருந்தும் தமிழில் அவர் இந்த கட்டுரைகளை எழுதியிருப்பது தமிழின் மீது அவருக்குள்ள ஈடுபாடும், மொழிநடையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பறவை என்னதான் உயர உயர பறந்தாலும் அதற்கு இரை என்னவோ பூமியில்தான் என்பது போல எந்த தேசத்திற்குப் போனாலும் தன் தாய்மொழியான தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார் டாக்டர் குமார் கணேசன்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் புதுமையாக இருக்கிறது. உதாரணமாக “எட்டுக்கால்களா.... எண்ணற்ற மூளையா" என்னும் கட்டுரையில் சிலந்தி என்னும் எட்டுக்கால் பூச்சி மற்றும் அதன் வலையைப் பற்றிய அறிவியல் செய்திகள் நமக்கு புதுமையாக இருப்பதோடு நல்ல மொழிநடையில் எழுதியிருப்பது வாசகர்களை கவருகிறது. இந்த கட்டுரையில் “சிலந்தியின் வலையானது, சூரியனின் புறஊதா கதிர்களின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, அது பூச்சி இனங்களுக்கு பூ போல தெரியுமாம் ... அதனால்தான் அதில் தேனீ, வண்டுகள் போன்றவை தேனெடுக்கப் போய் மாட்டிக் கொள்கின்றனவாம்”.  அடடா! என்ன கவிதை நடை. மேலும் “பூச்சியைப் பிடிக்கும் அந்த வலையின் பசை, எட்டுக்கால் பூச்சியை ஏன் பிடிப்பதில்லை என்றால், அதன் நெடுக்கு வாட்டில் உள்ள இழையில் பசைத் தன்மை இல்லாமலும், குறுக்கு வாட்டில் உள்ள இழையில், பசைத் தன்மையுடனும் இருப்பதுதான் காரணமாம். அதாவது சிலந்தி தன் உடலில் சுரக்கும் சுரப்பியைக்கொண்டு வலையைப் பின்னுகிறது. ஆனால், இதற்கு இரண்டு சுரப்பிகள் உண்டு. ஒன்றில் சுரப்பது மட்டும் ஓட்டும் தன்மை கொண்ட பசை உள்ளது, மற்றொன்றில் சுரப்பது பசை இல்லாதது. நேர்கோடு போல நெய்த நூலில் பசை கிடையாது, ஆனால், குறுக்காக,  வட்ட வடிவமாகப் பின்னப்படும் நூலில் பசை இருக்குமாம். சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியைப்  பிடிக்க, தான் போட்ட ஒட்டாத நேர் சாலையில் செல்கிறது,. அப்படியே குறுக்கு நூலில் கால் பட்டாலும், அது ப்ரோட்டீனால் ஆனது  என்பதால், அதனை உணவாக சிலந்தி சாப்பிட்டு விடுமாம்”. இப்படி பல புதிய அறிவியல் புதையல்களை இந்த நூல் முழுவதும் வைத்திருக்கிறார். மேலும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்த கட்டுரைகளை நேரலை.காம் என்னும் இணைய தளத்தில் தொடராக எழுதியுள்ளார். அவருடைய எழுத்து நடை அவரே நம்மோடு பேசுவது போல இருக்கிறது.

இதே போல் கூட வீடா அல்லது நாடா? என்னும்  கட்டுரையில் தேனீக்களைப் பற்றியும் அதன் கூட்டையும், வீட்டையும் நாட்டையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ஒப்பீடு மிக அருமை. உலகத்தில் தேனீக்கள் மட்டும் இல்லை என்றால் உலகமே நான்கே ஆண்டுகளில் அழிந்து போகும் என்று கூறிய ஐன்ஸ்டீன் கருத்தையும் இங்கு நினைவுபடுத்தி இருக்கிறார். மின்மினி தூண்டும் மின்விடு தூது, கலங்காமல் கலக்கும் கரப்பான் பூச்சி, அசைவம் உண்ணும் தாவரம், சைவமா? என்று  பல்வேறு (கவிதை) தலைப்புகளில் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையையும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்களே இதுபோன்ற புத்தகங்களை தூங்காமல் படிக்காதீர்கள் ஆனால் படிக்காமல் தூங்காதீர்கள். பொதுவாக,  தூங்காமல் படித்தால் தேர்வில் தூங்கி விடுவீர்கள், படிக்காமல் தூங்கினால் வாழ்வில் ஏங்கி விடுவீர்கள். எனவே இதுபோன்ற புத்தகங்களை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படிக்கலாம்.

- கு. முருகேசன்

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Ariviyal_Pudhayal.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/ariviyal-pudhayal-3403453.html
3403458 புத்தக வெளி நூல் - திரைப்படம்  2022 சுனாமி | தமிழில் DIN DIN Sunday, April 19, 2020 09:01 PM +0530
2022 சுனாமி | தமிழில்

இந்த படம் நான் பார்த்தபோது நாட்டில் நமது நாடுகள் போலவே கட்சிப் பிரிவினை இருப்பதைக் கண்டு அதிசயம் அடைந்தேன். கதாநாயகனாக நாட்டுத் தலைவர் ராஜாவைப் போன்று சுனாமி வந்தபோது செயல்பட்டதைப் பார்க்க நேர்ந்தது. அந்த நாடு ஒரிஜினலாகவே அப்படித்தானா! அல்லது கதைக்காக உருவாக்கப்பட்ட தலைவரா எனத் தெரியவில்லை. மேலும் நமது நாட்டில் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கும் ஓரினச் சேர்க்கை, ஆபாச கேளிக்கைகளைப் படத்தில் காண நேர்ந்தபோது இதைப் பார்த்துத்தான் நமது நாட்டிலும் மக்கள் மாறியுள்ளார்களா என நினைக்கத் தோன்றியது.

- பி.ஆர். லக்ஷ்மி   

]]>
quarantine cinema https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/2022_Tsumani.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/2022-tsunamani-movie-tamil-dubbing-3403458.html
3403459 புத்தக வெளி நூல் - திரைப்படம்  காந்தியின் சத்திய சோதனை DIN DIN Sunday, April 19, 2020 09:00 PM +0530
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை

காந்தி கூறிய ஏழு சமுதாயப் பாவங்கள் எனக் குறிப்பிட்டிருந்ததை பால.குருசாமி அழகாக விளக்கி தமது நூலில் விளக்குவார். அப்போதிலிருந்தே அவ்வப்போது சத்திய சோதனையைப் பலமுறை வாசித்தபோதும் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக்கொள்வேன். இப்போதும் அதை வாசித்தபோது மனதை ஏதோ ஒன்று வருத்தியது. மதங்களின் மத்தியில் மக்கள் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது   வேற்றுமை உருவாகிக் கொண்டிருக்கிறது. தன்னையே வருத்தி அவர் உண்ணாவிரதம் இருந்தது வீணா!

இத்தனை வருடங்களாகியும் இந்த மனிதர்களிடம் சாதி,மதத்துவேஷம் போகாமல் இருக்கிறார்களே என்ற வேதனை மேலோங்கியது. ஒற்றுமையினால் ஆங்கிலேயனைத் துரத்திய இந்தியர்களுக்கு அன்று மோடி சீன அதிபருக்கு வரவேற்பு அளித்தது தவறோ! என  ஏன் இப்போது கேட்கத் தோன்றவில்லை!  இதை ஏன் பத்திரிகைகள் எழுதுவது இல்லை எனப் புரியவில்லை.
 
ஆட்சிக்கு வருபவர்கள் வெளிநாடுகளில் இருப்பவரைப்போன்று மாறி சர்வாதிகாரியாக மாறிவிட்டார்களா என்ன! அப்ப எதற்கு நாம் காந்தி, காமராசர், கக்கன், திருவள்ளுவர் எனப் படிக்கவேண்டும்.. நீதி தவறியதால் கடல் அழித்ததாக மணிமேகலை பேசும் தமிழ் இலக்கியத்தில் படிக்க மட்டும்தானா! எனக் கடவுள் நினைத்தால் மக்களின் கதி என்ன? என்பதை நாட்டின் தலைமைப் பொறுப்பாளர்கள் இனியாவது சிந்திப்பார்களா..

கை தட்டவும், விளக்கேற்றவும் பேச வாய்ப்பளிக்கும் அரசு மக்களுக்கு ஏன் நல்ல மருத்துவம், நல்ல கல்வி இலவசமாக அளிக்காமலே இருக்கிறது..

தமது வீட்டுப் பணத்தை நாட்டிற்காக செலவிட்டவர் வரலாறுகளை மட்டும் படித்தால் போதுமா? ஒரு ஊர்த்தலைவர் பதவிக்கே இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்குபவர்களிடம் இப்போது மக்களுக்காகச் செலவிட பணம் இல்லையா? வெட்கித் தலைகுனியாமல் இன்னமும் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உலகத்தில் எந்த மூலையில் இடம் கிடைக்கும் என இன்னமும் தேடி அலுத்துவிட்டார்களா என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த புத்தகத்தைப் படித்தபோது சிறைச்சாலையில்  காந்தி ஏன் நமக்காக இவ்வளவு கஷ்டப்படவேண்டும், அவருக்காக நாம் இனி என்ன செய்யவேண்டும் என்றே தோன்றியது.

தொல்பொருள் ஆய்வுகளின்படி ராமர்கோவில்தான் அந்த இடத்தில் இருந்தது என்றாலும் இருக்கும் கோவிலை இடிக்கலாமா? அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் தோண்டினாலும் ஒவ்வொருமாதிரி இருக்கும். அப்படி எல்லாம் செய்ய முடியுமா? எல்லா மதத்தினருக்கும் மரியாதை தருவதைத்தான் காந்தி போதித்தார்.

ஆசிபா பெண்ணிற்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை. பொள்ளாச்சி கேசும் அப்படித்தான். பிணத்தை விற்பதாக கேஸ் பத்திரிகையில் முன்னர் வந்திருந்தது. இன்று பிணங்கள் நிறைய விழுகின்றது. எடுப்பார்களா?

மக்களை வாழ வைப்பவன்தான் கடவுளின் மடியில் இடம் பிடிப்பான்.

- பி.ஆர். லக்ஷ்மி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Mahatma.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/gandhiyin-sathiya-sodhanai-3403459.html
3403462 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஏ பக்ஸ் லைஃப் | சினிமா DIN DIN Sunday, April 19, 2020 08:59 PM +0530
1998 ம் ஆண்டு வெளிவந்த "ஏ பக்ஸ் லைஃப்" [A bug's life]

ஒரு எறும்புப் புற்றின் தலைவன் எறும்பு, தன்னையும், தன் கூட்டத்தினரையும், வெட்டுக்கிளி கூட்டத்திடம் இருந்து காத்துக் கொள்ள உதவியை எதிர்பார்க்கிறது. எறும்புகள், கோடை காலம் முழுதும் கடுமையாக உழைத்து சேகரிக்கும் உணவுப் பொருட்களை எல்லாம், வெட்டுக்கிளிகள் அடாவடித்தனமாக பறித்துச் செல்கின்றன.

வெட்டுக்கிளிகளிடம் இருந்து எறும்புக் கூட்டத்தை காக்க, சர்க்கஸ் நடத்தும் ஒரு வண்டுக் கூட்டம் உதவிக்கு வருகிறது. எறும்புகளும், வண்டுகளும் சேர்ந்து, எப்படி வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்கின்றன, அவர்கள் கையாளும் புத்திசாலித் தனமும், சமயோசிதமும் நிறைந்த யோசனை என்ன, வெட்டுக்கிளிகளை விரட்ட என்ன வடிவமைக்கிறார்கள், வெற்றிகரமாக வெட்டுக்கிளிகளை விரட்டியடித்தார்களா என்பதை கண்கவர் வண்ணப் படமாக எடுத்துள்ளார்கள்.

குழந்தைகள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். அதே சமயத்தில், பூச்சிகள் உலகம் குறித்து, பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்வார்கள்.

 யூடியூபில் இத்திரைப்படம் காணலாம்.

திரைப்படத்தின் பெயர் : A bug's life

வெளிவந்த ஆண்டு : 1998

 

- பி.தமிழ் முகில்

]]>
quarantine cinema https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/A_bugs_life_all_star-1440x900.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/a-bugs-life-3403462.html
3403468 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ DIN DIN Sunday, April 19, 2020 08:57 PM +0530  

‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’

‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்’ என்றார் விவேகானந்தர். அதாவது மனதின் வலிமையே உடலின் வலிமை. நம் மனதிற்கு அத்தகைய சக்தி உண்டு. அத்தகைய மனதின் சக்தி குறித்த முழுமையான புரிதலை இப்புத்தகம் தருகிறது.

நம் மனநிலைகள் மூளையில் ஏற்படுத்தும் நான்கு வகை மின்னலைகள், அந்த அலைநிலைகளில் கிடைக்கப்பெறும் சக்தி, அத்தகைய உன்னத சக்தி நிலையை அடைய எளிய தியானப் பயிற்சிகள், அவை குறித்த அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் என 60 அத்தியாயங்களில் ஆசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார்.

குறிப்பாக நோய்களைக் குணப்படுத்தும் ஆழ்மன சக்தி குறித்த கட்டுரை வைரஸ் தொற்று மிகவேகமாகப் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் அதை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெற உதவும். முக்கியமாக கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் வாழும் இன்றைய இளைய தலைமுறை படிக்கவேண்டிய புத்தகம். மனதை நம் வசப்படுத்தி அதன் சக்தியை முழுமையாக அறிந்து, நல் வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

- ஆர். கீதாஞ்சலி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/IMG_20200411_154433.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/aazhmanadhin-arputha-sakthigal-3403468.html
3403472 புத்தக வெளி நூல் - திரைப்படம்  MAN'S SEARCH FOR MEANING DIN DIN Sunday, April 19, 2020 08:55 PM +0530
MAN'S SEARCH FOR MEANING (ஆங்கிலம்); எழுத்தாளர்: Viktor .E. Frankl

இந்த புத்தகம் மிக அருமையான புத்தகம். நூலாசிரியர் ஒரு மனோதத்துவ நிபுணர். இந்த புத்தகத்தில் அவர் வாழ்க்கையை பற்றியும், வாழ்வின் எந்தவொரு துன்பத்திற்கும் ஒரு தீர்வும், நாம் வாழ்வதற்கான ஒரு அர்த்தமும் இருப்பதாக முன்மொழிகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் நடந்த இனப்படுகொலையை வைத்து மேற்சொன்னவற்றை அற்புதமாக விளக்குகின்றார்.

அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம். கரோனா நோய்த் தொற்றுக்குப் பயந்து உலகமே வீட்டில் அடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் படிக்க வேண்டிய சரியான புத்தகமாக நான் உணர்கிறேன். இணையத்தில் நான் மேற்சொன்ன புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

- அன்பரசன் 

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Mans_search_for_meaning.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/mans-search-for-meaning-3403472.html
3403474 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஆழ்மனதின் அற்புத சக்திகள் DIN DIN Sunday, April 19, 2020 08:54 PM +0530
ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்


"ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்" , நூலாசிரியர் - ஜோசப் மர்ஃபி. நம் தமிழில் "நாகலட்சுமி சண்முகம்". இப்புத்தகம் முழுமையும் ஆழ்மனதை பற்றியும், அதன் செயல்பாட்டு முறையை பற்றியும், நம் எண்ணம் அதனால் வரும் விளைவு, மனதை எவ்வாறு சிறப்பாக சீர் அமைப்பது, அதன் மூலம் இந்த உலகின் நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் எப்படி அடைவது, துன்பத்திற்கான காரணம், துன்பத்தை இன்பமாக மாற்றும் சக்தி, நாம் ஆழ்மனதை பயன்படுத்தி எப்படி செல்வம், நிம்மதி, அமைதி, முழுமை, அழகு, ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் அடைவதற்கான வழி போன்ற பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து நமக்கு வழிமுறைகளையும் தீர்வையும்  விவரிக்கின்றது.

அனைவரும் மிகக் கட்டாயம் படிக்க வேண்டிய அற்புதமான நூல். புத்தகம் படித்து முடிக்கும் போது நீங்கள் பார்க்கும் உலகம், நீங்கள் அதை அணுகும் விதம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அதற்கு நான் சவால் விடுகிறேன்.

- அன்பரசன் 

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Aazhmanadhin_Arputha_Sakthigal.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/aazhmanadhin-arputha-sakthigal-3403474.html
3403480 புத்தக வெளி நூல் - திரைப்படம்  நெஞ்சில் ஓர் ஆலயம் - மனதைத் தொட்ட மகோன்னத படம்! DIN DIN Sunday, April 19, 2020 08:53 PM +0530   

நெஞ்சில் ஓர் ஆலயம்

பொழுதைப் போக்கவே தியேட்டர்களை நோக்கிச் சென்றாலும், பொழுது போக்கையும் தாண்டி சில திரைப்படங்கள் மனதில் தங்கி,சில நல்ல மாற்றங்களுக்கும் வழி வகுப்பதுண்டு. அந்த வகையில், பண்பாட்டின் நெறி பிறழாத கதாபாத்திரங்களைக் கொண்ட சில படங்கள் என்றைக்கும் புதுமையுடன் வரலாற்றில் இடம் பிடித்து விடுவது உண்டு. தமிழர்களின் பழக்கவழக்கங்களும், பண்பு மாறா மரபுகளும் உலக வரலாற்றில் உயரிய சிறப்புப் பெற்றவை. அவற்றைத் தாங்கி வந்த திரைப்படங்களுக்கு என்றும் அழிவில்லை. அந்த விதத்தில் அழிவற்ற இடம் பிடித்த அருமையான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். படத்தைப் பார்ப்பவர்கள் நெஞ்சில் ஓர் ஆலயமாக இப்படம் வலம்வர, அவ்வாலய தெய்வங்களாக கல்யாண் குமாரும், முத்து ராமனும், தேவிகாவும் நின்று நிலைத்து விட்டார்கள். ஶ்ரீதரின் சீரிய சிந்தனயில் உதித்த இப்படத்தை, இக்கால இளைஞர்களும், யுவதிகளும் ஏன்? எல்லோருமே பார்த்து மகிழ வேண்டும் என்பதே என் ஆசை. 

காதலியின் கணவனுக்காக, உயிரையே பணயம் வைத்து,உணவுகளையும் மறந்து,உழைத்துழைத்து உரிய முறைகளைக் கண்டறிந்து,இறுதியாகத் தன் உயிரையே தியாகம் செய்யும் மருத்துவரான முரளிக்கு,என்றைக்குமே இறப்பு இல்லை. இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களையும்,உற்றாரையும் பொருட்படுத்தாது, மருத்துவமனையே கதியென்று கிடக்கும் நம் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், பிற சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் அவர்தான் முன்னோடியோ?

என்ன அற்புதமான ஒரு கதை. கல்லூரிக் காதலுக்குப் பிறகு,’விரைவில் வந்து கை பிடிப்பேன்.’என்று சொல்லிச் சென்ற காதலிக்காகக் காத்துக் கிடக்கிறான் அக் கதாநாயகன். தன் மருத்துவப் படிப்பை முடித்து டாக்டராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவனைத் தேடி, காதலியும் வருகிறாள் ஒரு நாள்.-கைப்பிடித்த கணவனுடன்.அதோடு மட்டுமா? கணவனைக் காப்பாற்றும் பொறுப்பும் அவன் தலையில் ‘எங்கே?எல்லா சராசரிக் காதலன் போலத் தன் கணவனைப் பழி வாங்கி விடுவானோ.

தன் பழைய காதலன்.’ என்ற சராசரிப் பெண்ணாக அவள் பயந்து,அவனைத் தனிமையில் சந்திக்கையில்’உங்கள் நிழல் கூட இல்லை. என்மனதில்.எனவே நீங்களும் பழைய ஞாபகங்களை மறந்து விட வேண்டும்.’ என்று ஆணித் தரமாகக் கூறி விட்டு,அதனைக் கடைப்பிடிக்கவும் செய்கிறாள். கணவனைக் காப்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறாள்.

‘சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே காதலி தன்னை விலக்கியிருக்க வேண்டும்’ என்பதனை அறிந்த காதலன்,அவள் மஞ்சள்,குங்குமத்தைக் காப்பாற்றுவதே தன் கடமை என்று எண்ணி, அதற்கான முழு முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.இருந்தாலும் அவள் காதலை அவனால் மறக்க முடியாததால் தன் திருமணத்திற்கு இசைவளிக்காமலே காலத்தைக் கடத்த, வயதான அவள் தாய்,அந்த வருத்தத்திற்கு ஆளாகிறாள்.’எங்கிருந்தாலும் வாழ்க.’என்று அந்தக் காதலன் தனக்குள்ளாகவே குமைந்து போகிறான். அவளின் கணவனுக்கு அவர்கள் காதல் தெரிந்துவிட,தான் பிழைக்க மாட்டோமென்று எண் ணியிருக்கும் அவன்,தனக்குப் பிறகு தன் மனைவி,தன் காதலனோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று கேட்டுக் கொள்ள,’சொன்னது நீதானா?’என்று சோகத்தோடு,கோபமும் கொள்கிறாள் அவன் மனைவி.’நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.’ என்று அவன் வேதாந்த வயப்படுகிறான்.

நாட்கள் எண்ணப்படுகின்றன.அறுவைச் சிகிச்சைக்கான நாள் நெருங்கி வருகையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி இறந்துவிட,அதனை ஒரு எச்சரிக்கையாக எண்ணி அவள் கணவனிடம், ‘வேறு மருத்துவ மனைக்குச் சென்று விடலாம்’என்று வற்புறுத்த, அவனோ, ‘இறந்தாலும் நான் இந்த டாக்டர் கையாலேயே இறக்க விரும்புகிறேன்.’ என்று உறுதிபடக் கூற,அவள் தூண்டிற் புழுவாகத் துடிக்க,டாக்டரோ தன் நலத்தையும் பொருட்படுத்தாது ஊண்,உறக்கமின்றி அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக,அந்த நாளும் வருகிறது.

அறுவைச் சிகிச்சைக்குக் கணவனை அனுப்பி விட்டு அவள் கதவைத் தாழிட்டுக் கொள்ள, அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து,அவள் கணவனின் உயிரை,அபாயக் கட்டத்தையும் தாண்டிப் பிழைக்க வைத்து விட்ட மகிழ்ச்சிச் செய்தியைக் கூற ஓடி வந்து கதவைத் தட்டும் டாக்டரை அவள் தவிர்க்க முயல,”சீதா.சீதா” என்று கத்தி விட்டு,ரத்தம் கக்கி டாக்டர் இறந்து போக...உங்கள் காதுகளில் அந்த ‘சீதா. சீதா.’என்பது இன்றும் எதிரொலித்தால்,நீங்கள் ஏற்கெனவே இப்படத்தைப் பார்த்தவராயிருப்பீர்கள். இல்லையென்றால் இன்றே பார்த்து விடுங்கள்.

ஶ்ரீதரால்கூட பிறகு, இது போன்ற காவியப் படங்களைத் தர முடியவில்லை என்பதே நிதர்சனம்.

கதைக்கும், மனதுக்கும் உகந்த பாடல்கள். நடுநடுவே சிரித்து மகிழ்ந்திட, நாகேஷ்- மனோரமா. எத்தனை முறை பார்த்தாலும், இதயத்தை நிறைக்கும் கதை. இந்தக் கொரோனா காலத்தில் குடும்பத்தோடு ரசிக்கத் தகுதியான படம். எல்லாக் காலத்திற்கும் ஏற்ற காதல்கதை.

ஆனாலும், ஆபாசத்தின் அருகில்கூடச் செல்லாத அருமையான படம். வயதானவர்களையும் வாலிப வயதிற்கு இழுத்துச் செல்லும்.வாலிபர்களின் காதலை வளமாக வழி நடத்தும்.ஒரு தடவை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

- ரெ. ஆத்மநாதன் (விஜய்)

]]>
quarantine cinema https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Nenjil_Ore_Aalayam.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/nenjil-ore-aalayam-3403480.html
3403484 புத்தக வெளி நூல் - திரைப்படம்  சேப்பியன்ஸ் DIN DIN Sunday, April 19, 2020 08:52 PM +0530
சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி

இது மனிதனின் கதை. வாலில்லா குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி. நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

அவற்றில் சில:

 • மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
   
 • வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.
 • தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.

வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் மனித குலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர். அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!

- குமாரசாமி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Sapiens.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/sapiens-3403484.html
3403488 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஹோமோடியஸ் DIN DIN Sunday, April 19, 2020 08:51 PM +0530  

ஹோமோடியஸ் (ஆங்கிலம்)- யுவால் நோவா ஹராரி  

 • ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ டியஸ் என்றால் மனிதக் கடவுள்) மாறிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்?
   
 • பரிணாம வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறை எடுத்துக் கொள்ளும்போது மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு மாறும்?
   
 • நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புகளையும் பற்றி நம்மைவிட அதிகமாக கூகுளும் முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலைமை என்னவாகும்? 
   
 • கணினிகள் மனிதர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு, ‘பயனற்ற வர்க்கம்’ என்ற ஒரு புதிய, மிகப் பெரிய வர்க்கத்தைத் தோற்றுவிக்கும்போது, அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளுக்கு என்ன நேரும்?
   
 • நம்முடைய சொந்த அழிவு சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்? 

நம்மை அதிர வைக்கின்ற இதுபோன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி ஏவி, சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவற்றுக்கு இந்நூலில் விடை காண முயற்சித்துள்ளார் பேராசிரியர் ஹராரி.

21ம் நூற்றாண்டைச் செதுக்கி வடிவமைக்கக்கூடிய இனிய கனவுகளையும் கொடுங்கனவுகளையும் பற்றிய ஒரு வெள்ளோட்டத்தை ஹோமோ டியஸ் எனும் இந்நூல் நமக்குக் கொடுக்கிறது.

- குமாரசாமி

]]>
​quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/Homo_Deus.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/homo-deus-3403488.html
3403490 புத்தக வெளி நூல் - திரைப்படம்  கர்ணன் - சிவாஜி சாவந்த் DIN DIN Sunday, April 19, 2020 08:49 PM +0530
கர்ணன் - சிவாஜி சாவந்த்


“என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள மகாபாரதம் கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருக்கிறது: பாண்டவர்கள் நல்லவர்கள்; துரியோதனன் வில்லன்; கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் கெட்டவர்கள் பக்கம் இருந்ததால் அழிந்து போனான்; கிருஷ்ணர் நல்லவர்கள் பக்கம் இருந்தார்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக இருந்தாள்; தர்மன் தன் மனைவி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான்; இறுதியில் பங்காளிச் சண்டையில் கிட்டத்தட்ட அனைவருமே கொல்லப்பட்டனர். என்ன, சரிதானே?

ஆனால் இதே மகாபாரதக் கதையை மராட்டிய இலக்கிய ஜாம்பவானான சிவாஜி சாவந்த் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் அணுகியுள்ளார். இதில் அவர் கர்ணனின் மனத்தை உணர்ச்சிகரமாகப் படம்பிடிக்க முயன்று அதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதன் விளைவாக, இப்புதினம், ‘நான் யார்?’ என்ற கர்ணனின் கொந்தளிப்பான சுயதேடல் பயணமாக அமைந்துள்ளது.

மேலும், காலங்காலமாக மனிதச் சமூகத்தில் நிலவி வந்துள்ள ஒரு முக்கியமான யதார்த்தத்தைக் கர்ணன் மூலம் சாவந்த் கடுமையாகச் சாடுகிறார். ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பான நடத்தையைக் கொண்டிருந்தாலும், அவன் எவ்வளவு மதிப்பானவனாக விளங்கினாலும், சமுதாயத்திற்கு அவன் ஆற்றியுள்ள பங்களிப்பு எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், ஒரு சமூகம் என்ற முறையில் நாம் அவனுடைய சமூகப் பின்புலத்திற்குத்தான் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற உண்மைதான் அது. இந்த உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதற்குக் கர்ணனின் சமூகப் பின்புலமும், அப்பின்புலத்தின் காரணமாகச் சமுதாயத்தால் அவன் பந்தாடப்பட்டதும் இந்நூலாசிரியருக்கு வெகுவாகக் கை கொடுத்துள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராட்டிய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத்  தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது. எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள இந்நூல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இம்மொழிபெயர்ப்பின் மூலம் இப்போது தமிழில் சீற வந்துள்ளான் கர்ணன்!

- குமாரசாமி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/karnan-kaalaththai-vendravan.jpeg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/karnan-3403490.html
3403497 புத்தக வெளி நூல் - திரைப்படம்  பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்! DIN DIN Sunday, April 19, 2020 08:47 PM +0530
பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

தன்னுடைய இருபதாண்டுகாலச் சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.

நம்முடைய மனத்தை நெகிழச் செய்கின்ற இப்புத்தகத்தில், தன்னுடைய பணியின்போதும் உலகப் பயணங்களின்போதும் தான் சந்தித்த உத்வேகமூட்டும் நபர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட படிப்பினைகளை மெலின்டா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.

இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

- குமாரசாமி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/book-2.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/we-will-uplift-women-and-uplift-society-3403497.html
3403501 புத்தக வெளி நூல் - திரைப்படம்  ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் DIN DIN Sunday, April 19, 2020 08:47 PM +0530 ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

உலகப் புகழ்பெற்ற அறிவியலறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங், பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். பிரபஞ்சத்தின் தொடக்கம், கருந்துளைகள், காலநேரம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனதைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார்.

அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப்போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச்செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதைநோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

- குமாரசாமி

]]>
quarantine books https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/19/w600X390/aazhamaana-kelvigal-arivaarntha-bathilgal-10015264-550x550h.jpg https://www.dinamani.com/book-space/nool-thiraipadam/2020/apr/20/stephen-hawkings-book-3403501.html