Dinamani - ஃபிட்னஸ் - https://www.dinamani.com/health/fitness/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3299943 மருத்துவம் ஃபிட்னஸ் இது பெண்களுக்கு மட்டும்! Saturday, December 7, 2019 04:14 PM +0530  

பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு உடலில் நிறைய இடங்களில் சுருக்கம் ஏற்படும். அல்லது உடல் பருமனாக இருந்து டயட் செய்து அதன் பின் உடல் மெலிந்தாலும் வயிறு, இடுப்பு, தொடை, பின்புறம் என பெரும்பாலான பகுதிகளில் சுருக்கம், தழும்பு அல்லது தடிமன் ஏற்படும். இதனைத் தவிர்க்க சில டிப்ஸ்:

உடல் இளைக்க டயட்டிங் மட்டும் செய்தால் போதாது. யோகா அல்லது உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். தினசரி கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடலை நீட்டி மடக்கி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும் மேலும் தோல் தொய்வடையாமல் இருக்கும். 

வைட்டமின் C மற்றும் துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். காரணம் இதில்  கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகின்றன. கொலாஜன் என்பது ஒரு வகை புரதம், இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. 

போதிய அளவு தண்ணீர் குடிப்பது  சருமத்திற்கு மிகவும் நல்லது.  இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து சமன்நிலையில் இருப்பதுடன் சருமம் நீரேற்றம் பெறும், இது பொலிவையும் ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் இளமையுடன் இருக்கும்.

]]>
woman power https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/30/16/w600X390/deep-breathing-exercises-benefits.jpg https://www.dinamani.com/health/fitness/2019/dec/07/fitness-for-women-3299943.html
3283110 மருத்துவம் ஃபிட்னஸ் கழுத்து வலி, தோள்பட்டை வலி நீங்கவும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும் Monday, November 18, 2019 07:58 AM +0530 ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக ‘நம் உடலை’ மறந்து போகிறோம். உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை வளர்கிறது. எனவே, நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

 • நீங்கள் உறங்கும் படுக்கை அதிகக் கடினமாகவோ அல்லது மிகவும் லேசாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த தேர்வு உதவும்.
 • சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

 • தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை. மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும்.
 • பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால், உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதைத் தவிர்க்கலாம்.

 • எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்கு என உடற்பயிற்சி செய்ய நேரம் செலவிடுங்கள்.
 • ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம். இதனால் உடல் தசைகள், மூட்டு லகுவாகும்.

 • தசை இழுப்புப் பயிற்சிகள் செய்வது மிக அவசியம். (flexibility exercises). காலை எழுந்தவுடன் 10 நிமிடங்கள் இவற்றை செய்தல் மிக அவசியம்.

forward bending - 5 முறை
backward beinding - 5 முறை
bending the knees - 5 முறை
ankle movements - 5 முறை
wrist movements - 5 முறை

 • பெண்கள் யோகா, நடைபயிற்சி செய்தல் மிகவும் முக்கியம். இதனால் உங்கள் ஸ்ட்ரெஸ் குறையும். ஸ்ட்ரெஸ் குறைவதால் உங்கள் உடல் சீராக இயங்கும்.
 • பெண்களுக்கு முதுகு வலி அடிக்கடி வரும். முதுகு தசைப்பயிற்சி செய்வதனால், இதைக் கட்டுப்படுத்தலாம்.

 • சரியான காலணிகள் (walking shoes) அணிவதன் மூலம், முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளைத் தவிர்க்கலாம்.
 • வாரம் ஒருமுறை தசை இளகும் சிகிச்சை (massage therapy) செய்து கொள்வது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்திருக்கும்.

 • Strengthening exercises மிக அவசியம். நீங்கள் வீட்டிலிருந்தோ, ஜிம்மில் சேர்ந்தோ இதைச் செய்யலாம். உங்கள் தசை வலுப்பெற்றால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும். இதனால் உடல் வலிமை அதிகரிக்கும்.
 • எந்தளவு Strengthening exercises செய்ய வேண்டும் என அறிய உங்கள் இயன்முறை சிகிச்சை மருத்துவரிடம் (Physiotherapist) அறிவுரை பெறுவது நல்லது.
 • உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சிகளும் மிக அவசியம்.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்க்கவும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால் வலி போன்றவை ஏற்படலாம்.

 • ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறையாவது விளையாடுங்கள். உதாரணமாக நீச்சல், சைக்ளிங், க்ரிக்கெட் கம்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலி பயன்படுத்தவும். இதனால் உங்கள் முதுகு வலி, wrong posture, போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
 • நீங்கள் உண்ணும் உணவில் புரதச் சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றை தவிர்க்கலாம். பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைப்பாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 • முடிந்தவரையில் சுறுசுறுப்பாக இருங்கள். அவ்வாறு இருப்பதால் எண்டார்ஃபின் Endorphin) எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் ஆன்றோர் வாக்கு என்றும் ஆப்த வாக்கியம்.

- டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன், இயன்முறை சிகிச்சை மருத்துவர்

]]>
fitness https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/18/w600X390/how-to-do-mountain-climber-exercises.jpg exercise https://www.dinamani.com/health/fitness/2019/nov/18/daily-exercises-to-strengthen-your-muscle-3283110.html
3282429 மருத்துவம் ஃபிட்னஸ் நீங்க ஃபிட்னெஸ்-க்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்களா? அப்படின்னா இதை தெரிஞ்சுக்கோங்க!  Muthumari Sunday, November 17, 2019 10:33 AM +0530  

இருதயம் தொடர்பான உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு  டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மங்கும் நோயாகும். நினைவாற்றல் மங்குவது மற்றும் மூளை சிந்திக்கும் திறனை இழப்பது உள்ளிட்ட எல்லாவிதமான மூளை அழுகல் நோய்களும் 'டிமென்ஷியா' என்று அழைக்கப்படுகிறது. மூளை பலவீனம் அடைந்து நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை இழக்கும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது.  இன்னும் 30 ஆண்டுகளில் தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   

நார்வேயில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட ஆய்வில், 1984-86 காலகட்டத்தில் 75,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் இருந்து 33,000 பேர் அடுத்த கட்ட ஆய்விற்கு ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது உடல்திறன் பயிற்சி குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. 

அப்போது, ஃபிட்னெஸ்-க்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு இறப்பது குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது. 

1995 மற்றும் 2011 க்கு இடையில், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 920 பேரும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்களது உடல்நலம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். 

தற்போதையை காலகட்டத்தைவிட, 1980 மற்றும் 1990களில் சிறந்த உடற்தகுதி கொண்ட 80 சதவீதத்தினரிடையே டிமென்ஷியா உருவாகும் ஆபத்து 40 சதவீதம் குறைவாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவருமே கடந்த 2016ம் ஆண்டு வரை கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

நல்ல உடற்தகுதியை பேணுவது மூளைக்கு நல்லது என்றும் இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு இரண்டு முறையாவது இதயத்துடிப்பு அதிகரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

]]>
fitness https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/fitness.jpg https://www.dinamani.com/health/fitness/2019/nov/17/increased-fitness-linked-to-lower-dementia-risk-3282429.html
3258738 மருத்துவம் ஃபிட்னஸ் சாப்பிட்ட பிறகு இதை செய்யவே செய்யாதீர்கள்! ஆய்வு முடிவு Snehalatha Sunday, October 20, 2019 03:33 PM +0530  

உடற்பயிற்சி ஆர்வலர்களே, உங்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பாத் அண்ட் பர்மிங்காம் பல்கலைக்கழகங்கள் செய்த ஆய்வின்படி, நீங்கள் சாப்பிடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை மாற்றுவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.

'காலை உணவுக்குப் பின் உடற்பயிற்சி செய்த ஆண்களை விட உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் இரு மடங்கு அதிகமாக கொழுப்பை எரித்ததை நாங்கள் கண்டறிந்தோம்' என்று பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஜேவியர் கோன்சலஸ் கூறினார். 'நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது சாப்பிடும் நேரத்தை மாற்றுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றும் கோன்சலஸ் கூறினார். 

ஆறு வார கால ஆய்வில், 30 ஆண்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் என இரண்டு வகைப்படுத்தப்பட்டனர். இந்தக் குழுக்களின் ஒப்பீட்டு முடிவுகள் காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவை விட இருமடங்கு கொழுப்பை எரித்தனர் என்று கண்டறியப்பட்டனர்.

இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்தபின் விடிந்ததும் உடற்பயிற்சிகள் செய்த போது இன்சுலின் அளவு குறைவாக இருப்பதினால் கொழுப்புப் பயன்பாடு அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்தனர், அதாவது கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பை அதிகமாகவும், தசைகளுக்குள் இருக்கும் கொழுப்பை எரிபொருளாகவும் பயன்படுத்துகிறது. இது ஆறு வாரங்களுக்கு மேலாக எடை இழப்புக்கு எந்த மாற்றத்துக்கு வழிவகுக்கவில்லை என்றாலும், இது அவர்களின் உடல்நிலையில் 'ஆழமான மற்றும் நேர்மறையான 'விளைவுகளை ஏற்படுத்தியது, காரணம் அவர்களின் உடல்கள் இன்சுலின் சுரப்புக்கு வழிவகுக்க முடிந்தது. சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பயிற்சி செய்த தனிநபர்களுக்கான தசைகளில் கொழுப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி குழு கவனம் செலுத்த விரும்பியது. ஆறு வார சோதனையில், ஒரே மாதிரியான பயிற்சிகள் மற்றும் உணவு உட்கொள்ளல் இருந்த போதிலும், காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவோடு ஒப்பிடும்போது, ​​காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்த குழுவின் தசைகள் இன்சுலின் சுரப்பி வித்யாசம் இருந்தது என்பதை ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்களின் தசைகள் உடலுக்குத் தேவையான முக்கியமான புரதங்களில் அதிக அளவினைக் காட்டின. காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழு உண்மையில் முந்தய குழுவை விட சிறந்தது அல்ல என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

]]>
exercise, work out https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/20/w600X390/EATING-FOR-EXERCISE.JPG food and exercise https://www.dinamani.com/health/fitness/2019/oct/20/working-out-before-breakfast-increases-health-benefits-of-exercise-explained-in-recent-study-3258738.html
3271 மருத்துவம் ஃபிட்னஸ் இளமை மாறாத ஷாருக்கான் ! மதி Wednesday, August 10, 2016 04:30 PM +0530 கிங் கான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். பாலிவுட்டிலிருந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் பிடித்து கோலிவுட் தரையிறங்கிய இந்த 50 வயது நடிகருக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் உண்டு.  இவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் மற்றும் எனர்ஜி மட்டுமே அவரை அனைத்து சென்ட்ரலும் ரசிக்க வைத்துள்ளது.  எனக்குத் தெரிந்தது எல்லாம் காலையில எழுந்ததும், ஷூட்டிங் செல்ல தயாராகி, கார்ல எஃப் எம் சானல் எதையாவது கேட்டுக்கிட்டே செட்டுக்கு போறது தான். இனிமே நடிப்பு கிடையாது அப்படிங்கற நிலைமை வந்துச்சுன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கேத் தெரியாது. என் வேலை தான் எனக்கு உயிர் மூச்சு என்று சொல்லும் வொர்க் ஹாலிக் ஷாரூக்கின் ஹெல்த் ஸ்கேன் இங்கே....

வொர்க் அவுட் ரெகுலராக செய்பவர்.  தினமும் 100 புஷ் அப்ஸ் மற்றும் 60 புல் அப்களை செய்துமுடித்துவிடுவார். எந்த படத்துக்கு எப்படிப்பட்ட லுக் தேவையோ அதற்காக சிரத்தை எடுப்பவர். ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தவர். 

உடற்பயிற்சியை தீவிரமாக நம்புபவர். வாரத்தில் நான்கு நாட்கள் ஆப்ஸ்க்கான‌ பயிற்சிகள் செய்தால் போதும், அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து விட்டு கடைசி ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால். உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். தினமும் ஆப்ஸ் பயிற்சி செய்தால் தசைகள் காயமடையலாம் என்று சொல்வார். ஸ்ட்ரென் த் ட்ரெயினிங் வொர்க் அவுட்ஸ், மற்றும் வெயிட் லிப்ட் செய்வது நல்லது, அது தசைகளுக்கு அடிவயிற்றுக்கும் வலுடையவைக்கும் என்று ஃபிட்னெஸ் மந்த்ரா சொல்பவர்.

டயட்டில் கோட்டை விட்டு நிறைய சாப்பிட்டு காலரிகளை அதிகரித்துக் கொண்டால் கவலை வேண்டாம், வியர்க்க விறுவிறுக்க 50 நிமிடங்கள் கார்டியோ செய்தால் அதிகர் சேர்ந்துவிட்ட‌ கொழுப்பை கரைத்துவிடலாம் என்பார்.

தினமும் 30 லிருந்து 60 நிமிடம் வரை ரன்னிங், ஜாகிங், சைக்ளிங் அல்லது ஏராபிக்ஸ் தினமும் செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டுமில்லாமல் ரெகுலராக கடைப்பிடிப்பவர் அவர்.

டயட் பொருத்தவரை அரிசி, ப்ரெட், மசாலா உணவு வகைகள், எண்ணெய் நெய் தின்பண்டங்கள், போன்றவற்றை சுத்தமாக தவிர்த்துவிட்டார். சிக்கன், டர்க்கி, முட்டை வெள்ளைக்கரு, பன்னீர், மீன் உணவுகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வார். தானியங்கள். காய்கறிகள், பழங்கள், கட்டாயம் உணவில் இருக்கும் டயட்டை எடுத்துக் கொள்வார். ஸ்வீட் சாப்பிட ஆசையாக இருந்தால், கட்டுப்படுத்திக் கொண்டு பிடித்த பழத்துண்டை சாப்பிடுவார். தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீரைக் கட்டாயம் குடித்துவிடுவார். வொர்க் அவுட் முடிந்தவுடன் ப்ரோட்டீன் ட்ரிங்க் அருந்துவார். உடலின் மீது அக்கறை செலுத்துபவர்கள் கட்டாயம் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வார். சிகரெட்டை வெகுவாக குறைத்துவிட்டார்.

கால் முட்டியில் சர்ஜரி, முதுகுத் தண்டில் காயம், தோலில் பிரச்னை என்று தொடர்ந்து விபத்துகளில் சிக்கினாலும் மனம் தளராமல் சரி செய்து கொண்டு மீண்டும் அதே உற்சாகத்துடன் களத்தில் இறங்குவார். சென்னை எக்ஸ்ப்ரஸ் ஷூட்டிங் கடைசி ஷெட்யூலின் போது தோள் பட்டை சிகிச்சை எடுத்து முடித்து டாக்டர்கள் பத்து நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னதையும் மீறி தீபிகாவுடன் க்ளைமாக்ஸ் டான்ஸ் ஆடி, டப்பிங் பேசி என தினமும் இரவு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கியவர்.

மனதை லேசாக இசை மற்றும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்கிறார்.  சர்ச்சைகளில் சிக்கினாலும் கலங்காதவர். வாடகைத் தாய் மூலம் தன் மூன்றாவது மகனை பெற்ற போது எழுந்த சர்ச்சைகளுக்கு தெளிவாக பதில் சொல்லியவர்.

செய்யும் தொழிலுக்கு உரிய மரியாதையை தந்துவிடுங்கள், இரவு பகல் பார்க்காமல் எடுத்துக் கொண்ட வேலைக்கு நூறு சதவிகிதம் நேர்மையாக உழைத்தால் யாருமே சூப்பர் ஸ்டார் தான் என்று தன்னடகத்துடன் சொல்கிறார் இந்த நட்சத்திர நடிகர்.

]]>
Bollywood actor, sharuk khan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/Bollywood-Actor-Shah-Rukh-Khan1.jpg https://www.dinamani.com/health/fitness/2016/aug/10/இளமை-மாறாத-ஷாருக்கான்--3271.html