Dinamani - இளையோர் நலம் - https://www.dinamani.com/health/youth-health/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3239943 மருத்துவம் இளையோர் நலம் பெரும்பாலும் பிரிவில் முடியும் பதின் வயது நட்புக்கள்! ஆய்வு முடிவு தெரிவிக்கும் அதிர்ச்சி அறிக்கை! Uma Shakthi Sunday, September 22, 2019 04:13 PM +0530  

'நண்பேண்டா' என்று இளசுகள் ஒட்டுமொத்தமும் நட்பைக் கொண்டாடி வரும் காலகட்டம் இது. ரத்த சொந்தங்கள், உறவினர்கள் என எல்லோரையும் இரண்டாம் பட்சமாகவும் துச்சமாகவும் நினைக்கும் இவர்கள் நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் சில சமயம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டால் அந்த நட்பில் விரிசல்கள் ஏற்படுவது சாத்தியம்தான். அதுவும் பதின் பருவத்தில் ஆரம்பத்திலேயே பிரச்னை ஆகிவிட்டால் அந்த நட்பு அப்படியே முறிந்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.

ஒத்த அலைவரிசையில் இருக்கும் வளர் இளம் பருவத்தினருக்குள் ஏற்படும் நட்பு நீண்ட காலம் தொடரும். ஆனால் எதாவது சண்டை அல்லது பிரச்னை ஏற்பட்டுவிட்டால் சின்ன விஷயங்களில் அது முடிந்து விடுகிறது என்கிறார் அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப்ரெட் லார்சன்.

410 டீன் ஏஜ் மாணவர்களை வைத்து சோதனை நடத்த ஆரம்பித்தார். அவர்களின் ஏழாவது கிரேடு முதல் பனிரெண்டாம் கிரேடு வரை ஆராய்ச்சி தொடர்ந்தது. இதில் கால் சதவிகிதத்தினரின் நட்பு ஏழாம் கிரேடிலிருந்தது போலவே அடுத்த வருடத்திலும் தொடர்ந்தது. மற்றவர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பெரிய வகுப்பு வர வர நட்பை முறித்துக் கொண்டார்கள்.

ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே கடைசி வரையில் நட்பைத் தொடர்ந்தார்கள். இதற்குக் காரணம் பாலின வேறுபாடுகள், அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அடி தடி விஷயங்கள் மற்றும் படிப்பு சார்ந்த போட்டி பொறாமைகள் போன்றவை. எல்லாவற்றையும் விட ஆண் பெண் நட்பு பிரச்னைகளுக்குத்தான் முதலிடம். அடுத்து நீ பெரியவனா நான் பலசாலியா போன்ற பிரச்னைகளால் ஏற்படும் வன்முறை. அதற்கடுத்த கட்டத்தில் போட்டி மனப்பான்மை, மற்ற மாணவர்களுக்கு முன் தன்னுடைய நண்பனுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பொருத்துக் கொள்ள முடியாமை போன்ற விஷயங்கள். 

நட்பு என்றாலே எல்லாவற்றையும் கடந்த ஒரு அன்பு. ஆனால் இந்த வயதில் மனத்தின் கொதிப்பு நிலை, எளிதில் முடிவெடுக்க முடியாத தன்மை, பெற்றவர்கள் முதல் சுற்றம் வரை அனைவரும் கொடுக்கும் அழுத்தம் போன்றவை பதின் வயதினரை ஏற்கனவே அழுத்த நிலையில் வைத்திருக்கும். நண்பர்கள்தான் உலகம் என்று இருக்கையில் அங்கேயும் பிரச்னை என்கையில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் உள்ளாக நேரிடும். புரியாமை, அல்லது முன் கோபம் போன்றவை நீடித்த நட்புக்கு தடை. தவறான நட்புகளை களைந்து வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக வரும் நட்பை தக்க வைத்துக் கொள்வதே நல்லது என்கிறார் லாரிசன்.

]]>
friendship https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/4/w600X390/Friendship-1.jpg https://www.dinamani.com/health/youth-health/2019/sep/22/friendship-day-celebrated-among-teen-agers-3239943.html
3239917 மருத்துவம் இளையோர் நலம் எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க ஆசையா?  Uma Shakthi Sunday, September 22, 2019 12:24 PM +0530  

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இப்போதெல்லாம் அழகு நிலையங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அந்த யூனிசெக்ஸ் சலூன்களில் முடி வெட்டிக் கொள்ளவும், நகம் டிசைன் செய்து கொள்ளவும் உங்களுக்கு நிறைய நேரம் இருக்க வேண்டும், தவிர பர்ஸ் பலமாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் இவையெல்லாம் வினையை விலை கொடுத்து வாங்கியது போலாகிவிடுகிறது. வீட்டில் எளிமையாக செய்ய வேண்டிய சில விஷயங்களை, அதிக செலவு செய்து, உள்ளபடி இருக்கும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ளும் செயலில் இறங்குவது  முட்டாள்தனம் அன்றி வேறென்ன? 

இன்னும் சிலர் அழகு சாதனப் பொருட்களை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கி சென்று வீட்டில் அதைப் பயன்படுத்துவார்கள். இதில் அவர்கள் பார்க்கத் தவறுவது ‘காலாவதித் தேதியை’. ஏற்கனவே பலவிதமான ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் இந்தப் பொருட்கள், காலாவதியாக வேறு ஆகிவிட்டால் அதிலுள்ள தீமைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? தொடர்ந்து இத்தகைய ரசாயனம் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம் பாதிப்படைவதுடன் சருமப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புதிய பிரச்னைகளும் தோன்றக்கூடும்.

இப்படியெல்லாம் அவதிப்படுவதற்கு பதில் எளிய முறையில் நம் வீட்டின் சமையல் அறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சருமத்தை அழகாகக் கொள்ள முடியும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் அதன் பலன்களைப் பற்றிய நம்பிக்கை அனேகருக்கு இருக்காது. எந்தவொரு விஷயத்தையும் தொடர்ந்து செய்தால்தான் அதற்கான பலன் தெரியும் என்பதை அவர்கள் உணர மறுப்பார்கள். இதோ நம் வீட்டில் கிடைக்கும் உணவுப் பொருளான வெல்லத்தைப் பயன்படுத்தி சருமத்தை இயற்கையாக ஜொலி ஜொலிக்க வைக்கலாம். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், வெல்லத்தில் இருக்கும் சத்துக்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தைத் தடுத்துவிடும். நீங்கள் எப்போதும் இளமைப் பொலிவுடன் திகழலாம்.

வெல்லத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்களால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். வெல்லத்தை பக்குவமாகத் தயார் செய்து முகத்தில் பூசி வந்தால் சருமத்துக்கு நல்லது. காரணம் அதில் இருக்கும் க்ளைகோலிக் அமிலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்தி, மாசற்ற முகமாக்குகிறது. இதனால் முகத்தில் தோன்றும் கோடுகள் (Fine Lines), சுருக்கம், (Wrinkles) பருக்கள், தழும்புகள், கரும் திட்டுக்கள் என பல பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது.

வெல்லத்தை பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவடைந்து சீராகத் தோற்றமளிக்கும். 

இதை எப்படி தயார் செய்வது?

இரண்டு டீஸ்பூன் வெல்லத்தில் 2 டீஸ்பூன் தேனும், அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறும் சேர்க்கவும். இந்தக் கலவையை மென்மையாக முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் சருமம் அழகாவதுடன் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தள்ளிப் போகும். முகம் இளமைப் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும். 

மேலும் இந்த வெல்லத்தால் அனேக பலன்கள் உண்டு. முகத்தில் பழுப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த ஜாகரி மாஸ்க் (jaggery mask) அதை சிறுகச் சிறுக குறைத்துவிடும். வெல்லத்தில் இன்னும் நிறைய அழகுப் பொருட்களைத் தயார் செய்யலாம். Glycolic acid mask என்னும் மாஸ்க் எப்படி தயாரிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு டீஸ்பூன் வெல்லப் பொடி, ஒரு டீஸ்பூன் தக்காளி ஜூஸ், அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறு, சிறிதளவு மஞ்சள் மற்றும் வெதுவெதுப்பான க்ரீன் டீ இவை அனைத்தையும் சேர்த்து கலவையாக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் உலர விடவும். அதன் பின் தண்ணீரால் நன்றாக கழுவிவிடவும். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும், சருமத்திலுள்ள கறைகளையும் அகற்றி முகத்தை புத்துணர்வாக்கும்.  

வெல்லத்தில் உள்ள க்ளைகோலிக் அமிலம் சருமத்தை புத்துணர்வாக்கும் செல்களைத் துரிதப்படுத்த உதவுகிறது. சருமத்தில் விழும் கோடுகளை  அழிக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் மாஸ்கை முயற்சிக்கவும். இந்த மாஸ்க் முகக் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் உள்ளிட்ட பிற அறிகுறிகளை அழிக்கிறது. முதலில், 1 டீஸ்பூன் திராட்சைச் சாறு, 1 டீஸ்பூன் குளிர்ந்த ப்ளாக் டீ, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் வெல்லத் தூள் மற்றும் போதுமான ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இரண்டாவதாக, அனைத்து பொருட்களையும் கலந்து முகத்தில் பூசி, பின்னர் 15 நிமிடங்களில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை இதைப் பயன்படுத்தவும். ஆறு மாதங்களில் உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

]]>
jaggery mask, Fine Lines, Glycolic acid mask, beauty tips, health and glow, beautiful face https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/9/w600X390/beautyful_lips.jpg https://www.dinamani.com/health/youth-health/2019/sep/22/how-to-be-healthy-and-beautiful-using-home-made-products-3239917.html
3223956 மருத்துவம் இளையோர் நலம் குடி குடியைக் கெடுக்கும்: நைட் அடித்த சரக்கின் மப்பு இறங்காமல், காலையில் திணறும் நபர்களுக்கு.. C.P.சரவணன், வழக்குரைஞர் Thursday, August 29, 2019 04:27 PM +0530  

உடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவுக்கு நீர் அருந்துவது நல்லது.

இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானோர் இந்தப் பிரச்னையால் அவதிப்படக் கூடும். இரவு மதுவிருந்தின் களைப்பு காலை வரை தொற்றிக் கொண்டு கடுமையான தலைவலி பாடாய்படுத்தும். இதை உடனே தவிர்க்க இந்தக் குறிப்புகள் உதவலாம்.

பானங்கள் அருந்தலாம் : இளநீர், மோர், ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ் என இவற்றைக் குடிப்பதால் ஹேங்ஓவர் குறையும்.

இஞ்சி சாறு கொதிக்க வைத்த நீர் - அஜீரணம், தலைவலி, வாந்தி போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். அப்படியே இஞ்சியை மென்று விழுங்குவது கூடுதல் நல்லது

தேன் பானம் : தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் மந்தமான நிலை மாறி புத்துணர்ச்சி கிடைக்கும்.

காலை உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நடப்பது நல்ல உணர்வைத் தரும்.

உடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவு நீர் அருந்துவது நல்லது.

வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை சாப்பிடுவது ஹேங்கோவரை நீக்கும்.

ஆல்கஹால் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைப்பதாலும் ஆளையே தள்ளும். எனவே காலை அவ்வாறு உணர்ந்தால் ஸ்வீட், சர்க்கரை ஏதேனும் எடுத்துக்கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/8/8/10/w600X390/drinks.jpg https://www.dinamani.com/health/youth-health/2019/aug/29/நைட்-அடித்த-சரக்கின்-மப்பு-இறங்காமல்-காலையில்-தினறும்-நபர்களுக்கு-3223956.html
3163004 மருத்துவம் இளையோர் நலம் முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க! Saturday, June 1, 2019 04:07 PM +0530 இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:

ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.

வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.

ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.

துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ்
 

]]>
face cream, pimple, முகப்பரு, பரு, முகம், அழகு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/29/w600X390/mm2.jpg https://www.dinamani.com/health/youth-health/2019/jun/01/best-cure-for-pimple-3163004.html
3334 மருத்துவம் இளையோர் நலம் இரவு பகலாக விழிக்கும் வேலையா-? மதி Thursday, August 11, 2016 04:40 PM +0530 இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாத நோய் அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலையின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரவு-பகல் அடிப்படையிலான 24 மணி நேர சுழற்சியில் உடலுறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் "உயிரியல் கடிகாரம்' நம் உடலில் இயங்குகிறது. 

இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய வேலைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அது மேற்கொண்டு வருகிறது.

எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல்பாடுகளுக்கு இந்த "கடிகாரம்' மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவரின் உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக்கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது. இதையடுத்து, 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடுவதுடன் உடலியக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு தீவிர ரத்த அடைப்புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. 

வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப்பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உணர்விழத்தல், மூட்டுகளின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 

ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாகவே உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி, நரம்பு மண்டலங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆனால், வயதான பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ளடக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் இந்த ஆய்வு முடிவுகள் "எண்டோகிரினாலஜி' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

]]>
shift work, sleep problems https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/Clock-Hand-shift-work-night-black.jpg https://www.dinamani.com/health/youth-health/2016/aug/11/இரவு-பகலாக-விழிக்கும்-வேலையா--3334.html
3193 மருத்துவம் இளையோர் நலம் டீன் ஏஜ் - வலியா? ஜாலியா? test Tuesday, August 9, 2016 12:04 PM +0530 பதின் வயது என்று சொல்லும் போது சில காட்சிகள் நம் மனச் சித்திரத்தில் உதிக்கும். பள்ளிச் சாலை, ஹைகிரவுன்ட், நண்பர்கள், பட்டாம்பூச்சி, புத்தம் புது புத்தகங்கள், மைக் கறை, முதல் நண்பன், முதல் காதல் என்று தொடரும் நினைவலைகள். அந்த வயதில் நம் மனதுக்குள் வயலின் வாசித்தபடி இருக்கும், நமக்கு மட்டும் பெய்யும் ஒரு மழை.இப்படி எல்லாம் நனைந்து திளைத்துவிட்டு, அந்த நாம் எப்படி இருந்தோம் என்று மறந்து பிள்ளைகளின் வளர் இளம் பருவத்தை காமாலைக் கண் கொண்டு பார்க்கிறோம். நம்மை எப்போதும் வளர்ந்தவர்களாகவே நினைத்துக் கொண்டிருப்பதுதான் சிக்கல். பதின் வயதுப் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும், அவர்களுடைய பிரச்னை என்ன,  அவர்களைப் புரிந்து கொள்ள என்ன வழி?

'குழந்தை வளர்ப்புக் கலை என இனிமையாகச் சொல்ல வேண்டிய ஒன்றைப் பிரச்னையாகப் பார்க்கத் தொடங்கியது பெரும் வேதனை. குழந்தையைப் பெறுவது மட்டும் அல்ல... நல்ல பெற்றோர்களாக இருப்பதும் சவாலான விஷயம்தான்!’ எனச் சொல்லும் மனநல மருத்துவர் ஷாலினி பதின் பருவத்தைக் கடக்கும் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொண்டு கையாள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்.

'பதின்பருவம் என்பது சிறார்களின் உடல் அளவிலும் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தும் வயது. அவரவர் பாலினத்துக்குத் தகுந்த மாதிரி ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கும். ஆண் என்றால் அரும்பு மீசை துளிர்விடும். பெண் குழந்தைகள் வயதுக்கு வருவார்கள். பிள்ளைகளுக்கு எனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி, அவர்கள் மீது நாம் அக்கறையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தினால் போதும்’ என்கிற டாக்டர் ஷாலினி மேலும் தொடர்ந்தார்.

'நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இந்தப் பருவத்தில் அவர்களுக்கு அதிகரிக்கும். தாங்களே சுயமாக யோசிக்கவும் முடிவு செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள். பதின்வயதில் மூளையில் ஐந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சிந்தனை: பதின் வயதினருக்கு மூளையின் அளவு வளரும். அவர்களின் புத்தி, கூர்மையடையும்.  'நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும்’ என்ற அதட்டலாகப்  பேசும் தொனி அவர்களுக்குப் பிடிப்பதில்லை. தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து எதிர்க் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக 'என்னைக் கேட்காம ஏன் டூவீலரை எடுத்துட்டுப் போனே?’ என்று அம்மா கேட்டால் 'நீ மட்டும் அப்பாகிட்ட கேட்காம அவரோட காரை எடுத்துட்டுப் போகலாமா?’ என்று மடக்குவார்கள். பதமாகப் பேசிப் புரியவைக்க வேண்டும்.

எதிர்ப் பாலின ஈர்ப்பு:  பதின்பருவப் பெண்களுக்கு ஆண்கள் மீதும் அந்த வயசு ஆண்களுக்குப் பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதில் எந்தத் தவறும் இல்லை. சரியாக இயல்பாக வளர்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில் வீட்டில் ஏற்கெனவே பெற்றோர் இடையே பிரச்னைகள் இருந்தால் அது பதின்வயதினரை பாதிப்புக்கு உள்ளாக்கும். வெளியிடங்களில் அன்பைத் தேட முனைவார்கள். வேறு பல பிரச்னைகளுக்கு இது வழி வகுத்துவிடும். பிள்ளைகளின் முன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

தன்னுணர்வு - 'பிளஸ் டூ முடிச்சிட்டு ஃபேஷன் டிசைனிங் பண்ணப் போறேன்’ என்று ஒன்பதாவது படிக்கும்போதே சொல்வார்கள். இதற்கு முன் அவர்களின் தேர்வுகள் குழப்பமாகவும் அவர்களுக்கே உறுதி இல்லாமலும் இருக்கும். ஆனால், பதின்வயதில் ஆழமாகத் தோன்றும் விருப்பங்கள்தான் கடைசிவரை அவர்களை வழிநடத்தும். பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மனநிலை மாறுதல்கள்: திடீர் என்று ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களால் பதின்பருவத்தினரின் மனநிலைகள் அடிக்கடி மாறும். காரணம் எதுவும் இல்லாமல் கோபப்படுவதும், சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவதும், நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது சத்தமாகச் சிரிப்பதும், சினிமா தியேட்டரில் கைத்தட்டி விசில் அடிப்பதும் என உணர்ச்சிக் கலவையாக இருப்பார்கள். சின்னத் தோல்வியைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெற்றோர்கள் அவர்களுடன் அடிக்கடி மனம்விட்டுப் பேசி அவர்களின் தேவை என்ன பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தோழன் - தோழியைப்போல அவர்களிடம் இதமான நெருக்கத்தையும் அன்பையும் காட்ட வேண்டும்.  

 

நட்பு சூழ் உலகம்: பாய்ஸ் படத்தில் வருவது போலப் பதின்வயதினர் எப்போதும் நான்கைந்து நண்பர்களுடன்தான் இருப்பார்கள். இந்தச் சமயத்தில் பெற்றோர்களை விட்டுக் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். தங்களுடைய நண்பர்களை - அல்லது ரோல் மாடலாக யாரை நினைக்கிறார்களோ அவர்களை அப்படியே பின்பற்ற முயற்சி செய்வார்கள். இத்தனை நாள் தங்களையே சுற்றிச் சுற்றி வந்த பிள்ளைகள் திடீரென்று விலகிப் போவதைப் பார்த்து பெற்றோர்களின் மனம் சங்கடப்படும்.

'காலைலேர்ந்து எங்கடா போய்த் தொலைஞ்சே?’ என்று அப்பா திட்டினால், பிள்ளைக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். 'புராஜெக்ட் வொர்க் பண்ணேன்’ என்று வாயில் வந்ததைச் சொல்வானே தவிர, உண்மையில் எங்கு போனான் என்று சொல்லமாட்டான். 'என்னப்பா ரொம்ப பிஸியா? ஆளையே காணலையே?’ என்று கேட்டுப் பாருங்கள், 'ஃபிரண்ஸோட ஷாப்பிங் மால் வரைக்கும் போனோம்பா!’ என்பான். பெற்றோர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் பழகுகிறார்கள் என்று பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பதின்வயதினரிடம் பேசுவதைவிட அவர்கள் பேசுவதை நிறையக் கேட்க வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். அதன்பின் நம் கருத்துக்களைச் சரியான முறையில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அன்பும் அனுசரணையான பேச்சும் தேவையான அக்கறையும் தோழமையான நெருக்கமும் இருந்தால் போதும் அவர்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டிய சில விதிமுறைகளை அவர்களின் பங்களிப்புடனே வடிவமைத்துத் தரவேண்டும். பதின்வயதினர் ஏதேனும் தவறு செய்தால், அதை மிக நாசுக்காக, தனிமையில் வைத்துக் கண்டிக்கலாம். தேவை இல்லாமல் கடுமையாகக் கண்டிக்கப்படுவதையோ, மூன்றாம் நபரின் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதையோ எந்தப் பிள்ளையும் விரும்புவதில்லை.'' என்கிறார் டாக்டர் ஷாலினி.

'அடிச்சு வளர்க்காத குழந்தையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது’ எனச் சொலவடை சொல்லும் கிராமங்களில்தான், 'வளர்ந்த வாழையை வெட்டக்கூடாது’ என்றும் சொல்வார்கள். அதாவது கைக்கு உயர்ந்த பிள்ளையைக் கைநீட்டக்கூடாது என்பதற்காக! பதின் பருவத்தில் சக தோழனாக நம் பிள்ளைகளைப் பாவிப்பவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாமல் கண்டிப்பு காட்டும் வாத்தியாராக நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாரிசுக்கும் உங்களுக்குமான இடைவெளி இன்னும் இன்னும் கூடிக்கொண்டேதான் போகும்!

]]>
teen age, health https://www.dinamani.com/health/youth-health/2016/aug/09/டீன்-ஏஜ்-வலியா-ஜாலியா-3193.html