Dinamani - உணவே மருந்து - https://www.dinamani.com/health/healthy-food/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3346448 மருத்துவம் உணவே மருந்து உடல் பருமனைக் கட்டுப்படுத்த இது உதவும் Saturday, February 1, 2020 03:11 PM +0530 அதிக எடையைப் பற்றி நீங்கள் பதற்றமடைந்து, உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னால் வெட்கப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கான உணவுப் பட்டியலை நாங்கள் தருகிறோம், இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.

குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உடல் எடையை கட்டுப்படுத்துவதில் தடையாக மாறும் ஜன்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவு மற்றும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடும் விஷ வலையில் பலர் விழுகிறார்கள்.

சுகாதாரமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தின் காரணமாக, உடல் பருமன் போன்ற உடல்நலம் தொடர்பான பல பிரச்னைகள் ஒருவரின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.

எனவே, குப்பை உணவின் வலையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, இந்தக் குளிர்காலத்தில் உங்கள் எடையைக் கட்டுப்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய உங்களுக்கு உதவும் ஒரு பட்டியலை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே நீங்கள் பாராட்டினைப் பெற முடியும்.

எடைக் குறைப்புக்கு பச்சை பட்டாணி சாட் சாப்பிடுங்கள்: பச்சை பட்டாணி குளிர்காலத்தில் ஏராளமாக கிடைக்கிறது மற்றும் குளிர்காலத்தில் சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. இது இந்த சீசனில் மட்டும் கிடைக்கக் கூடிய காய்கறியாகும், அதனால்தான் குளிர்காலத்தில் இதை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது பல ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ளது. இதை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிட, கிரீன் பட்டாணி சாட் செய்யுங்கள்.

இதன் செய்முறையைப் பார்க்கலாம்:

 • ஒரு கிண்ணத்தை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
 • அதில் ஒரு கப் பச்சை பட்டாணி சேர்க்கவும்
 • அதை வேக வைக்கவும்
 • நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 • வேக வைத்த பட்டாணியில் காய்கறிகளையும் மசாலாவையும் கலக்கவும்.
 • பச்சை அல்லது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து மசாலா செய்யவும்.
 • சிறிதளவு கொத்தமல்லி இலைகளைச் சேர்த்தபின் இந்த சுவையான உணவை சாப்பிடுங்கள்.
]]>
green peas https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/13/w600X390/obesity-crisis-teenagers-health-overweight-888936.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/feb/01/body-weight-loss-3346448.html
3331820 மருத்துவம் உணவே மருந்து நாள்பட்ட நீர் எரிச்சல் , நீர் கடுப்பால் அவதிப்படுகிறீர்களா? Tuesday, January 14, 2020 03:28 PM +0530  

நாள்பட்ட நீர் எரிச்சல், நீர்கடுப்பால் அவதிப்படுகின்றவர்கள் பசலைக் கீரை சீரகம் கசாயத்தைச் செய்து சாப்பிட்டு வர விரைவில் அந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். 

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை.            -   2  கட்டு

பார்லி.                           -   3 ஸ்பூன்

சீரகம்.                           -    3  ஸ்பூன்

செய்முறை

முதலில் பசலைக் கீரையை  நன்கு கழுவி ஆய்ந்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த சாற்றில் பார்லி  மற்றும்  சீரகத்தை 12 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறினப் பிறகு அதனை காயவைத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்டவைத்து இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

நீர்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் தொடர்ந்து உள்ளவர்களுக்கு மிகச் சிறத்த தீர்வை தரக்கூடிய கசாயம் பசலைக் கீரை சீரகம் கசாயம்.

இதனை காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  ,  73737 10080

Covaibala15@gmail.com  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/pasalai_keerai.jpg பசலைக்கீரை https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/14/do-you-suffer-from-chronic-water-irritation-and-water-cramps-3331820.html
3331788 மருத்துவம் உணவே மருந்து வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா? Tuesday, January 14, 2020 12:25 PM +0530  

எலுமிச்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சுப காரியங்களில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் அதிகளவு கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.எலுமிச்சம் பழத்தைப் போல எலுமிச்சம் பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.

மருத்துவ குணங்கள் :

 • தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்.
 • எலுமிச்சம் பழத்திற்கு வாந்தி, குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
 • எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.
 • விரலில் நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சம் பழத்தை துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைத்தால் வலி குறையும்.
 • எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும்.
 • மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் ஏற்படுவது குறையும்.
 • எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.
 • உயர்தர பொட்டாசியம், எலுமிச்சைச் சாற்றில் உள்ளதால் இதய நோயாளிகளின் இதயத்தை பலமாக்குகிறது.
 • வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றை கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
 • எலுமிச்சை, ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

காலையில் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும். கபம் அதிகம் இருந்தால் 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும். அதனால்தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்னைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க உதவுகிறது. மேலும் இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.

இது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த விஷயமாகும். அதிலும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் விரைவில் உடல் எடை குறைவதற்கு இந்த முறை சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய ரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த ஜூஸில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. 

எலுமிச்சை சற்று புளிப்பு அதிகமாக என்பதால் அதைத் தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும். அதிலும் குளிர்ச்சியான நீரை விட வெதுவெதுப்பான நீரில் சேர்த்து பருகுவது நலம். அதுமட்டுமின்றி, காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகள் கிடைத்து எப்போதும் உடலானது புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற பிரச்னைகள் உடையவர்கள் அமிலத்தன்மை உடைய பழ வகைகளை தவிர்க்க வேண்டும். 

]]>
lemon https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/11/w600X390/When-To-Drink-Lemon-Water.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/14/can-we-drink-lemon-juice-in-empty-stomach-3331788.html
3330862 மருத்துவம் உணவே மருந்து உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம் கோவை பாலா   Monday, January 13, 2020 10:35 AM +0530
 சிறுகீரை சீரகம் கசாயம்
 

தேவையான பொருட்கள்
 
சிறு கீரை.         -  2 கை அளவு

சீரகம்.               -    2 ஸ்பூன்

பார்லி               -    ஒரு கை அளவு

மஞ்சள்.            -   சிறிதளவு

செய்முறை
 

 • முதலில் சிறுகீரையை நன்கு கழுவி ஆய்ந்து இரண்டு கையளவு எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறுகீரை மற்றும் பார்லி , சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதித்து பின்பு  அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து  ஒரு கொதி வந்தவுடன்  இறக்கி  வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்
 

 • இந்த கசாயம் உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும்.
 • இதனை தினமும் அதிகாலை வேளையில்  குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

 இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
obesity https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/siru_keerai_2.jpg சிறு கீரை https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/13/obesity-problems-and-remedies-3330862.html
3329207 மருத்துவம் உணவே மருந்து தொண்டைப் புண், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவும் கசாயம் கோவை பாலா Saturday, January 11, 2020 11:20 AM +0530  

மணத்தக்காளிக் கீரை மாசிக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, மாசிக்காய் ஒன்று, மஞ்சள் தூள் சிறிதளவு.

செய்முறை
 

 • முதலில் மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை மற்றும் மாசிக்காயை தட்டிப் போட்டு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதித்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்
 
இந்தக் கசாயம் தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

இந்தக் கசாயத்தை தினமும் காலை அல்லது மாலை என இருவேளையும்  குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/manathakkali_keerai.jpg மணத்தக்காளிக் கீரை https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/11/home-remedies-for-throat-problems-3329207.html
3327448 மருத்துவம் உணவே மருந்து நீர்க்கட்டு உடைந்து சிறுநீரைத் தாராளமாக  வெளியேற்ற உதவும் கஷாயம் கோவை பாலா   Thursday, January 9, 2020 11:55 AM +0530
 
முருங்கைக் கீரை பார்லி கஷாயம்
 
தேவையான பொருட்கள்

 
முருங்கைக் கீரை      -  ஒரு கைப்பிடி

பார்லி                          -   20  கிராம்

சீரகம்                           -    கால் ஸ்பூன்

மஞ்சள் தூள்             -   சிறிதளவு

செய்முறை

 • முதலில் முருங்கைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பார்லியைப் போட்டு  வேகவைக்கவும்.
 • பார்லி நன்கு வெந்தவுடன் அதில் முருங்கைக் கீரை, சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து  நன்கு வேக வைக்கவும்.
 • நன்கு வெந்தவுடன் அதனை வடிகட்டி வைத்து பருகவும்.

பயன்கள்

 • இந்த முருங்கைக் கீரை பார்லி கஷாயம்  நீர்க்கட்டுப் பிரச்னையைத் தீர்க்க உதவும் அருமருந்தாகச் செயல்படும்.
 • இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் பிரிந்து தாராளமாகவும்  சீராகவும் வெளியேற்ற உதவும்.

வெற்றிலை (2), மிளகு (2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் இரவு படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்துக் காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/09/uuu-3327448.html
3326550 மருத்துவம் உணவே மருந்து உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம் கோவை பாலா   Wednesday, January 8, 2020 10:38 AM +0530 சிறுகீரை சீரகம் கசாயம்

தேவையான பொருட்கள்

சிறு கீரை.         -  2 கை அளவு

சீரகம்.               -    2 ஸ்பூன்

பார்லி               -    ஒரு கை அளவு

மஞ்சள்.            -   சிறிதளவு


செய்முறை 

 • முதலில் சிறுகீரையை நன்கு கழுவி ஆய்ந்து இரண்டு கையளவு எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறுகீரை மற்றும் பார்லி  , சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதித்து பின்பு  அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து  ஒரு கொதி வந்தவுடன்  இறக்கி  வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் 

 • இந்த கசாயம் உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும்.
 • இதனை தினமும் அதிகாலை வேளையில்  குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/08/body-weight-and-health-drink-3326550.html
3324102 மருத்துவம் உணவே மருந்து கண் புகைச்சல், கண் காசம், கண் படலம் ஆகியவற்றை குணமாக்க உதவும் கசாயம் கோவை பாலா Sunday, January 5, 2020 11:01 AM +0530  
சிறு கீரை மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

சிறு கீரை.          -   ஒரு கட்டு

மிளகு.                -   10

வெங்காயம்.     -   5

பூண்டு.               -   5 பல்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு


செய்முறை

 • முதலில் கீரையை  கழுவி ஆய்ந்து  வைத்துக் கொள்ளவும்.
 • பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை , தட்டி வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்ட வைத்து  இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

 • கண் புகைச்சல், கண் காசம் மற்றும் கண் படலம் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு அரு மருந்தாக உதவும் கசாயம்.
 • இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து  வந்தால் நல்ல பலன் கிட்டும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/big.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/05/home-remedies-for-eyes-problem-3324102.html
3323307 மருத்துவம் உணவே மருந்து சூட்டினால் உண்டாகும் கபம் சார்ந்த குறைபாடுகளை தீர்க்க உதவும் கசாயம் கோவை பாலா   Saturday, January 4, 2020 08:39 AM +0530  

சிறுகீரை திப்பிலி கசாயம்

தேவையான பொருட்கள்

சிறுகீரை            -   ஒரு கட்டு

சுக்கு                    -   சிறிதளவு

திப்பிலி              -  5

மிளகு                 -   10

மஞ்சள் தூள்      -  சிறிதளவு

செய்முறை

முதலில் சிறுகீரையை அலசி ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.

சுக்கு, மிளகு  மற்றும் திப்பிலியை தட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும்  மற்றும் தட்டி வைத்துள்ள சுக்கு , மிளகு , திப்பிலி ஆகியவைற்றைச் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து நீரை பாதியளவாக சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயத்தை  சூட்டினால் உண்டாகக் கூடிய கப சார்ந்த குறைபாடுகளை நீக்க உதவும் அருமருந்தாக செயல்படும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/siru_keerai_2.jpg சிறு கீரை https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/04/home-remedies-for-body-heat-3323307.html
3321555 மருத்துவம் உணவே மருந்து பசியின்மை நீக்கி நல்ல பசியை உண்டாக்க உதவும் கசாயம் Thursday, January 2, 2020 10:38 AM +0530 முளைக் கீரை பூண்டு கசாயம்

தேவையான பொருட்கள்


முளைக் கீரை         -  ஒரு கட்டு

பூண்டு.                     -   5 பல்

மிளகு.                      -  10

சீரகம்                       -   ஒரு ஸ்பூன்

சி.வெங்காயம்      -  5

மஞ்சள்.                    -  சிறிதளவு


செய்முறை
 
முதலில் முளைக் கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு மற்றும் மிளகை தட்டி வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் முளைக் கீரை, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்..

நன்கு கொதித்து பாதியாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயத்தை பசியின்மை இல்லாதவர்கள் குடித்து வந்தால் பசியின்மையை நீக்கி நல்ல பசி உணர்வை உண்டாக்கும் அற்புத கசாயம்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/21/w600X390/mulaikeerai.jpg முளைக்கீரை https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/02/how-to-cure-loss-of-appetite-3321555.html
3320736 மருத்துவம் உணவே மருந்து கேன்சரை தவிர்க்க இந்த 5 குப்பை உணவுகளைத் தொடாதீர்கள்! Wednesday, January 1, 2020 11:52 AM +0530 உணவே மருந்து என்று வாழ்ந்த நம் முன்னோர்கள் நமது உணவு முறையை மிகச் சரியாக வகுத்து, காலம்தோறும் அதனைப் பின்பற்றி நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எந்த உணவு நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தவே முடியாத அளவுக்கு நச்சுக்கள் உணவுப் பொருட்களில் இரண்டறக் கலந்துவிட்டன. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சாப்பிட பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால் சில ஆய்வுகளில் தெரிவிக்கும் உணவு குறித்த விழிப்புணர்வைப் படித்து நிச்சயம் நம்மால் தவிர்க்க முடிந்தவற்றைத் தவிர்த்துவிடலாம். சில உணவுகளை கட்டாயம் தவிர்க்கச் சொல்கிறார்கள் சத்துணவு நிபுணர்கள். அவை,

சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருக்கும் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல். அதிகப்படியான எண்ணெய் ஊற்றி டீப் ஃப்ரை செய்வதால், இது அதிகளவில் உப்பு மற்றும் கொழுப்பு சத்துக்களை (saturated fat) கொண்டிருக்கின்றன, அவை  உடலின் செரிமானத்துக்கு உகந்தது இல்லை. அதிகளவு தினமும் இத்தகைய உணவை உட்கொண்டு வந்தால், உடலில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதற்கான காரணமாகிவிடும். உணவு அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போதும் அதிலிருந்து அக்ரிலாமைடு என்ற ரசாயனம் தோன்றும், இது புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும் ரசாயனம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த அக்ரிலாமைடு சிகரெட்டுகளிலும் காணப்படுகிறது, அவை மிகவும் ஆபத்தானவை என்பதில் மாற்று கருத்து இல்லை.


சிவப்பு இறைச்சி

பொதுவாக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். நல்ல கொழுப்புள்ள உணவுகள் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. ஆனால் கெட்ட கொழுப்பு நிச்சயம் தீங்கினை ஏற்படுத்தும். இறைச்சியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமுள்ளது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட எவ்வகை இறைச்சியையும் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. இதைக் கடைபிடிப்பது எளிதானதல்ல, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பார்பெக்யூ உள்ளிட்ட பல சுவையான உணவுப்பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

இந்த உணவுகள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய நைட்ரைட்டுகளைப் பயன்படுத்தி பாதுகாக்கப்படுகின்றன. சமைத்த உணவைப் பாதுகாப்பதற்கான நுட்பமாக வழியாக அது இருந்தாலும், உணவே விஷமாகிவிடும் அளவிற்கு இதில் ஆபத்துள்ளது.  

பாப்கார்ன்

பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் போலவே, மைக்ரோவேவ் பாப்கார்னும் உடலுக்கு பிரச்னை ஏற்படுத்தும். காரணம் அது தயாரிக்கப்படும் முறைதான். பெரும்பாலான சமயங்களில் ஓவன்களில் சமைக்கப்படும் ஒருசில உணவுகளால் கணையம், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோய் ஏற்படுகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

மைதா

முழு தானியங்கள் மிகவும் ஆரோக்கியமானவை, ஆனால் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவு இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. மைதாவுக்கு வெள்ளை நிறம் எப்படி கிடைக்கிறது? காரணம் குளோரின் வாயு அதிகளவில் அதில் செலுத்தப்படுவதால்தான். நிச்சயம் அது உண்ணத்தகுந்தது இல்லை.

ஊட்டச்சத்து அதிகம் இல்லாத இந்த மைதா மாவு மிக அதிகளவில் கிளைசெமிக் அளவைக் கொண்டுள்ளது, அதாவது இது உடலில் சர்க்கரையாக உடைந்து, ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். உடலில் உள்ள இந்த நிலை புற்றுநோய் உயிரணுக்களுக்கு உணவாகும் என்று கருதப்படுகிறது. 

மது

அதிகப்படியான மது வகைகளை உட்கொள்வது உடல்நலத்துக்கு தீங்கானது.  இது விளம்பர வாசகம் போலத் தோன்றினாலும் உண்மை அதுதான். அதிகப்படியான குடிப்பழக்கம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைக் கடினமாக உழைக்க வைக்கிறது, மூளையை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது.

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் வாய், உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவற்றில் புற்றுநோய்க்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பொதுவாக, பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மற்றும் ஆண்களுக்கு இரண்டு கோப்பை பாதுகாப்பான அளவாகக் கருதப்படுகிறது, குடிப்பதால் உண்மையில் ஆரோக்கியத்துக்கு பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. சிவப்பு ஒயின் இதயத்துக்கு நல்லது தினமும் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதில்லை தவறில்லை என்று சிலர் கூறினாலும், அதற்கு மாற்றாக சிவப்பு திராட்சை சாப்பிடலாம். 

ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிக எளிய வழிமுறை, வீட்டில் சமைத்த உணவுகளைக் கூடுமான வரையில் உட்கொள்வதும், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும்தான். அடர் வண்ண காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.

]]>
cancer foods https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/7/w600X390/diet_for_breast_cancer.jpg food to prevent breast cancer https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/01/stay-away-from-these-5-deadly-foods-that-could-cause-cancer-3320736.html
3320707 மருத்துவம் உணவே மருந்து கடும் இருமலைக் குணப்படுத்த உதவும் கசாயம் கோவை பாலா Wednesday, January 1, 2020 09:32 AM +0530  

முளைக் கீரை அதிமதுரம் கசாயம்

தேவையான பொருட்கள்

முளைக் கீரை.           -   ஒரு கைப்பிடி

அதிமதுரம்.                 -    ஒரு துண்டு

மஞ்சள்.                       -   3 சிட்டிகை
 

செய்முறை

 • முதலில் முளைக் கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அதிமதுரம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • நீர் நன்கு கொதித்து பாதியாக சுண்ட வைத்து அதனை வடிகடடி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயம் நாட்பட்ட இருமல் , தொடர் இருமல் , கக்குவான்  இருமல் மற்றும் சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த கசாயத்தை தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வருவதன் மூலம் அனைத்து இருமல்களிலிருந்து விடுபடமுடியும்.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
cough and cold https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/cafe.jpg https://www.dinamani.com/health/healthy-food/2020/jan/01/simple-cure-for-cough-3320707.html
3319892 மருத்துவம் உணவே மருந்து பல் கூச்சம் மற்றும் பல் வலிக்கு அருமருந்து கோவை பாலா   Tuesday, December 31, 2019 08:20 AM +0530  

அரைக்கீரை வேர் நிலவேம்பு கசாயம்

தேவையான பொருட்கள்

அரைக் கீரை வேர் -  15 கிராம்
நிலவேம்புப் பொடி -  ஒரு ஸ்பூன் (5 கிராம்)
மஞ்சள் -  சிறிதளவு

செய்முறை
 
நாட்டு மருந்துக் கடை அல்லது நேரிடையாக கிடைக்கப் பெற்ற அரைக்கீரை வேரை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 300 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரைக்கீரை வேர், நிலவேம்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நீர் நன்கு கொதித்து  100 மி.லி அளவாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

பல் வலி மற்றும் பல் கூச்சம் உள்ள நேரத்தில் இந்தக் கசாயத்தை கொப்பளித்து வந்தால்  பல் வலி மற்றும் பல் கூச்சம் மறையும்.

மேலும் பல் சார்ந்த பிரச்சனைகள தொடர்ந்து இருந்து கொண்டு இருந்தால் இந்தக் கசாயத்தை கொப்பளித்து வந்தால் பல் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் அரு மருந்து கசாயம் அரைக் கீரை நிலவேம்பு கஷாயம்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/nilavembu.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/31/home-remedies-for-tooth-ache-3319892.html
3319176 மருத்துவம் உணவே மருந்து குளிர் ஜன்னி மற்றும் வலிப்பு நோயை குணப்படுத்த உதவும் கஷாயம் கோவை பாலா   Monday, December 30, 2019 11:55 AM +0530  

அரைக் கீரை சுக்கு கசாயம்

தேவையான பொருட்கள்
 
அரைக் கீரை        -  ஒரு கட்டு

சுக்கு.                     -   5 கிராம்

இஞ்சி.                   -   5 கிராம்

மிளகு.                   -   10

மஞ்சள்.                 -  சிறிதளவு


செய்முறை
 

 • முதலில் அரைக் கீரையை அலசி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
 • சுக்கு,  இஞ்சி, மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரைக் கீரை மற்றும் தட்டி வைத்துள்ள சுக்கு, இஞ்சி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதித்து பாதியாக சுண்டச் செய்து  சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து  வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்
 
இந்தக் கசாயம் ஜன்னியினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால் குளிர் நீங்கி ஜன்னி உடனடியாக நீங்கும்.

மேலும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரைக் கீரை சுக்கு கசாயம் அற்புதமான ஆரோக்கியமான மருந்தாக செயல்படும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
keerai https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/30/benefits-of-greens-in-daily-life-3319176.html
3318501 மருத்துவம் உணவே மருந்து சளி, இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த குறைபாட்டை நீக்கும் கசாயம் கோவை பாலா Sunday, December 29, 2019 10:51 AM +0530
அரைக் கீரை மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்

அரைக் கீரைத் தண்டு - ஒரு கைப்பிடி
மிளகு -10
மஞ்சள் - சிறிதளவு

செய்முறை

 • முதலில் அரைக் கீரையை ஆய்ந்து கீரையைத் தவிர்த்து தண்டை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
 • மிளகை தூளக்கிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் அரைக் கீரைத் தண்டை போட்டு அதில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி மிளகுத் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்ட செய்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

சளி, இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் கசாயம்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர் 
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
cold and cough https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/29/home-remedies-for-cold-cough-and-lung-problems-3318501.html
3317654 மருத்துவம் உணவே மருந்து தாம்பத்ய உணர்வுகளை அதிகரிக்க உதவும் சூப் கோவை பாலா   Saturday, December 28, 2019 08:46 AM +0530  

கொடிப் பசலைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

கொடிப் பசலைக் கீரை -  200  கிராம்
தக்காளி -  3
பெரிய வெங்காயம்   -  2
பூண்டு  -  6 பல்
மிளகுத் தூள் -  ஒரு ஸ்பூன்
வெண்ணெய் -   50  கிராம்
கார்ன் ஃபிளவர்   -  3  ஸ்பூன்

செய்முறை

 • முதலில் கொடிப் பசலைக் கீரையைச்  சுத்தம் செய்து கொள்ளவும்.
 • வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
 • பின்பு கொடிப் பசலைக் கீரை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு அதில் பூண்டை சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு  சேர்த்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
 • வாணலியில் மீதியுள்ள வெண்ணெய்யைப் போட்டு உருக்கி அதில் கார்ன் ஃபிளவரை போட்டு வதக்கி அதில் வடிகட்டி வைத்துள்ள சூப்பைக் கொட்டி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.
 • தேவைப்பட்டால் சிறிதளவு உப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்கள் 

 • இந்த சூப் காம உணர்வை அதிகரிக்க உதவும்.
 • உடல் சூட்டை தணித்து மலச்சிக்கலையும் போக்கும். ஆனால் இந்த சூப்பை அதிகமாக குடித்தால் ஒரு சிலருக்கு  கபத்தை அதிகரிக்கும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/30/w600X390/couple.jpg couple https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/28/home-remedies-for-increasing-sperm-count-3317654.html
3316045 மருத்துவம் உணவே மருந்து வாயு சார்ந்த குறைபாடு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் ஆரோக்கிய சூப் கோவை பாலா Thursday, December 26, 2019 08:47 AM +0530  

புதினா சூப்

தேவையான பொருட்கள்

புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
வெங்காயம் -  2
மிளகுத் தூள் -  ஒரு ஸ்பூன்
வெண்ணெய் - 50  கிராம்
பால் - அரை டம்ளர்
சீரகம்  -  சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
சிறுதானிய மாவு - மூன்று ஸ்பூன்

செய்முறை

 • முதலில் புதினா, கொத்தமல்லித் தழை இரண்டையும் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
 • வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில்  நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
 • கொதித்தப் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு அதனை மூடிவைக்கவும்.
 • பத்து நிமிடத்திற்குப் பிறகு அதில் சீரகம், மிளகுத்தூள், சோம்பு, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றையும்  சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்கவிட்டு மூடி வைக்கவும்.
 • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் சிறுதானிய மாவைக் கலந்து  சற்று வதக்கி அதில் ஒரு தம்ளர் தண்ணீர்  கலந்து இறக்கி விடவும்.
 • மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.
 • பின்பு இதனுடன் ஏற்கனவே கொதிக்க வைத்து இறக்கியதை வடிகட்டி சேர்த்து கலக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பலன்கள்

 • இந்த புதினா சூப் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ணம் சார்ந்த குறைபாடுகளை போக்கும் ஆற்றல் உள்ள சூப்.
 • மேலும் வாயுப் பிரச்சனை மற்றும் தீராத மலச்சிக்கல் குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் சூப்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
gastric problems https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/puthina_soup.JPG https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/26/health-tips-for-gastric-problems-3316045.html
3315304 மருத்துவம் உணவே மருந்து நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகள்  நீக்கும் அருமருந்து! கோவை பாலா Wednesday, December 25, 2019 09:42 AM +0530
 
பொன்னாங்கண்ணிக்  கீரைப் பொடி
 
தேவையான பொருட்கள்

 
பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கிலோ (நிழலில் உலர்த்தியது)
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25  கிராம்
மஞ்சள் - 10  கிராம்

செய்முறை

நிழலில் உலர்த்திய பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

இந்த பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களையும், நரம்பு மற்றும் பித்தம் சார்ந்த குறைபாடுகளையும் நீக்கும். உடலுக்கு மினுமினுப்பு கொடுக்கக் கூடிய  மிகச் சிறந்த உணவுப் பொடி இது. உணவாக மட்டுமல்ல, நல்ல மருந்தாகவும் செயல்படும் தன்மை உடையது.

இரவு படுக்கப் போகும் முன்

 • வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/sivappu_ponnanganni_keerai.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/25/home-remedies-for-nervous-problems-3315304.html
3314412 மருத்துவம் உணவே மருந்து குளிர்காலத்துக்கு இதமான சூப் கோவை பாலா   Tuesday, December 24, 2019 11:14 AM +0530 அகத்திக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை -  ஒரு கட்டு
தக்காளி - 3
வெங்காயம் -  2
கொத்தமல்லித் தழை  -  ஒரு கைப்பிடி
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - 3 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்

செய்முறை

 • முதலில் கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்.
 • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
 • பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் கீரையைப் போட்டு நன்கு வேக வைத்து  இறக்கி  சாறை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்.
 • வாணலியில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி மிளகுத் தூள் கலந்து,  வடித்து வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொள்ளவும்.
 • அடுத்து வாய் அகலமான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் விட்டு உருக்கி அதில் மைதா மாவைத் தூவி கிளறி, நன்கு சிவந்ததும் ஏற்கனவே தயாரித்துள்ள கீரைசாறையும் சேர்த்து, உப்புப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பலன்கள் 

 • இந்த சூப் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் அருமருந்து .
 • இதனை அனைவரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது தொடர்ந்து குடித்து வந்தால், பலவிதமான நோய்களை விரட்டி உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு நன்றாக மென்று உண்ணவும்.

குறிப்பு

 • அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.
 • பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
keerai soup https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/24/healthy-and-tasty-soup-3314412.html
3313593 மருத்துவம் உணவே மருந்து சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளைச் சீராக்கும் கீரைச் சாறு கோவை பாலா Monday, December 23, 2019 08:47 AM +0530
 
கீரை : பருப்புக் கீரை சூப்
 
தேவையான பொருட்கள்

பருப்புக் கீரை - 2 கட்டு
மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு  - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மல்லி , புதினா இலை -  ஒரு கைப்பிடி அளவு
உப்பு , மஞ்சள் , எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை

 • கீரையை சுத்தம் செய்யவும்.
 • மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள கீரைச் சாற்றையும் சேர்த்து தேவைக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின்பு கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் தினமும்  காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த பருப்புக் கீரை சூப்பை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உண்டாகும் சிக்கல்கள் அனைத்தும் சீராகும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
kidney problems, health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/23/home-remedies-for-kidney-problems-3313593.html
3312854 மருத்துவம் உணவே மருந்து காசநோயை குணப்படுத்த உதவும் ஆரோக்கியமான சூப் கோவை பாலா Sunday, December 22, 2019 10:03 AM +0530
 
பொன்னாங்கண்ணிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை  - 2 கட்டு
தக்காளி -  2
வெங்காயம் -   2
பூண்டு  -   5  பல்
சீரகம், மிளகு -  தேவையான அளவு
கறிவேப்பிலை  -  சிறிதளவு
கொத்தமல்லி இலை  - சிறிதளவு
வெண்ணெய் -  50 கிராம்
மைதா மாவு  -   2  ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு   -  ஒரு ஸ்பூன்

செய்முறை

 • முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
 • வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பின்பு அதில் நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கீரை, கொத்தமல்லி இலை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 • பின்பு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அதில் எலுமிச்சம்பழச் சாறு விட்டு இறக்கி வடிகட்டவும்.
 • இறுதியில் ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருகியதும் மைதா மாவைத் தூவவும். சற்று சிவந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் - இந்த சூப்பை  நாட்பட்ட இருமல் , உடல் உஷ்ணம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் மற்றும் காசநோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உன்னதமான சூப்.
 
கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/25/w600X390/keerai_kootu.JPG https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/22/home-remedies-for-soup-3312854.html
3312055 மருத்துவம் உணவே மருந்து குடற்புண்களை  குணப்படுத்தும் மருந்து கோவை பாலா Saturday, December 21, 2019 01:08 PM +0530  

மணத்தக்காளிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை  -  ஒரு கட்டு
மிளகு - 10
சீரகம் -  ஒரு ஸ்பூன்
பூண்டு  - 10  பல்
இஞ்சி - ஒரு துண்டு
தனியா -  ஒரு ஸ்பூன்
வெங்காயம் -  50  கிராம்
வெந்தயம் - அரை ஸ்பூன்
மஞ்சள், உப்பு -  தேவையான அளவு
பெருங்காயம் -   தேவையான அளவு

செய்முறை

 • முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
 • வெந்தயத்தை  வறுத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.
 • பின்பு அதில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தனியா, வெந்தயம் ஆகியவற்றைத் தட்டி கீரையுடன் சேர்க்கவும்.
 • நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து குடிக்கவும். 

பலன்கள்

இந்த சூப்பை குடற்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடற்புண்களை ஆற்றுவதில் இதற்கு மிஞ்சிய மருந்தே இல்லை. உணவும் இல்லை.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/24/w600X390/keerai_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/21/home-remedies-for-intestine-problems-3312055.html
3307512 மருத்துவம் உணவே மருந்து அடிக்கடி வயிற்று பிரச்னையில் அவதிப்படுகிறீர்களா? கோவை பாலா Monday, December 16, 2019 11:33 AM +0530 அகத்திக் கீரைச் சாம்பார்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை -  ஒரு கட்டு
புளி -  50 கிராம்
தனியா -  ஒரு ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் -  25 கிராம்
தக்காளி  - 3
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் -  2 ஸ்பூன்
துவரம் பருப்பு -  ஒரு கப்
மிளகு  -  ஒரு ஸ்பூன்
பெருங்காயம் , மஞ்சள்த் தூள் , உப்பு - தேவையான அளவு

செய்முறை

 • முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
 • அடுத்து தனியாவை வறுத்து, தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
 • துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
 • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் தக்காளியை நறுக்கி போட்டு வதக்கி, அதனுடன் மிளகைத் தூளாக்கி சேர்த்து ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
 • பொடி வாசனை அடங்கியதும் தாளித்து கொட்டி  இறக்கவும்.

பயன்கள்
 
இந்த அகத்திக் கீரைச் சாம்பாரை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் கண் பார்வை குறைபாடுகளையும் சீர் செய்யும்.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
stomach ache https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/26/w600X390/woman-holding-stomach-on-sofa-experiencing-abdominal-pain-when-breathing.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/16/home-remedies-for-stomach-ache-3307512.html
3306744 மருத்துவம் உணவே மருந்து பருத்த உடலை இளைக்க உதவும் உன்னதமானக் கஞ்சி கோவை பாலா Sunday, December 15, 2019 04:06 PM +0530
வாழைப் பூ  கொத்தவரங்காய் கஞ்சி

தேவையான பொருட்கள்


வாழைப்பூ - 50 கிராம்
கொத்தவரங்காய் - 10
காட்டுக் கோதுமை  - 100 கிராம்
தண்ணீர் -   ஒரு லிட்டர்
தேன் - 2  தேக்கரண்டி

செய்முறை 

 • முதலில் வாழைப்பூவை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
 • கொத்தவரங்காய் மற்றும் வாழைப் பூவை பொடியாக நறுக்கி நீராவியில் வேகவைத்துக் கொள்ளவும்.
 • காட்டு கோதுமையை உடைத்து நொய்யாக்கிக்   கொள்ளவும்.
 • உடைத்த கோதுமை நொய்யரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர்  ஊற்றி நன்றாக  வேகவைக்கவும்.
 • நன்கு வெந்த கோதுமை நொய்யரிசியுடன் வேகவைத்து அரைத்து வைத்துள்ள கொத்தவரங்காய் மற்றும் வாழைப்பூவைச் சேர்த்து  நன்கு வேக வைத்து கஞ்சியாக்கி  இறக்கி வைக்கவும்.
 • இறக்கி வைத்துள்ள கஞ்சியுடன் இரண்டு தேக்கரண்டி தேனைச் சேர்த்து கலக்கி பருகவும்.

பயன்கள்
 
இந்தக் கஞ்சியை  பருத்த உடலை இளைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் பருத்த உடலையும் இளைக்க உதவும் அற்புதமானக் கஞ்சி.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.


குறிப்பு
 
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர் 
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
weight loss https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/obese_woman.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/15/health-recipes-for-weight-loss-3306744.html
3303302 மருத்துவம் உணவே மருந்து தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும் வழி கோவை பாலா DIN Wednesday, December 11, 2019 04:17 PM +0530  

முளைக் கீரை கருத்தக்கார் நொய்யரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

முளைக் கீரை -  ஒரு கட்டு
கருத்தக்கார் அரிசி  -  100  கிராம்
எள்ளு -  15 கிராம்
கொள்ளு  -  50  கிராம்

செய்முறை

 • முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • எள்ளு மற்றும் கொள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
 • கருத்தக்கார் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து நொய்யாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
 • ஒரளவுக்கு அரிசி வெந்ததும் நறுக்கி வைத்துள்ள முளைக்கீரை மற்றும் வறுத்து வைத்துள்ள எள்ளு , கொள்ளு ஆகியவற்றைச்  சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கவும்.

பயன்கள் 

 • இந்தக் கஞ்சி தீராத மலக்கட்டை உடைத்து மலம் எளிதாக வெளியேற்றி  மலச்சிக்கலை போக்க உதவும் ஆரோக்கியமானக் கஞ்சி.
 • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கஞ்சி.

படுக்கப் போகும் முன்
 
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
 
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609, 73737 10080
        Covaibala15@gmail.com

]]>
health https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/000karkidaka_kanji2.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/11/health-tips-for-piles-3303302.html
3303301 மருத்துவம் உணவே மருந்து சூப் கெட்டியாகவும் நல்ல ருசியாகவும் இருக்க சூப்பர் டிப்ஸ் Wednesday, December 11, 2019 04:12 PM +0530 மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட் கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம், முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.

 • பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச் சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
 • புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில் நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
 • தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
 • வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால் சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

 • எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
 • மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென மணத்துடன் இருக்கும்.
 • சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும். குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும். 
 • பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
 • சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
 • வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். 
 • உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும். 

- சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
 

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/29/w600X390/kollu_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/11/health-tips-for-soup-3303301.html
3301415 மருத்துவம் உணவே மருந்து வயிற்றுப் போக்கு நிற்க எளிமையான வழி!  Monday, December 9, 2019 10:07 AM +0530  

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. முக்கியமாக வயிறு உப்பிசம், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வெந்தயம் அருமருந்தாகும். வயிற்றில் வலி இருந்தால் சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட்டால் போதும், உடனடியாக வலி சரியாகும். 

வெந்தயத்திலுள்ள குழகுழப்பும் நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவும். விதை, வெந்தயக் கீரையைப் போலல்லாமல், மலத்தை இளக்கக உதவக் கூடியது. வலியுடன் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும் போது விதையை வறுத்துக் கஷாயமாக்கி தேனுடன் சாப்பிட மிகவும் நல்லது. தினமும் இரவில் தயிரில் வெந்தய விதையை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட, வயிற்றுப்போக்கு குணமாகிவிடும்.

வாரம் ஒருமுறை வெந்தய சாதம் தயாரித்து சாப்பிட்டால் பலவிதமான உபாதைகளிலிருந்து விடுபடலாம்.

வெந்தயத்தை இரவு ஊற வைக்கவும். ஊறிய வெந்தயத்தில் கசப்பு இருக்காது. காரத்துக்கு சிறிதளவு தனியா மற்றும் காஞ்ச மிளகாவை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அது காய்ந்ததும் லேசாக எண்ணெய் விடவும். சூடானதும் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை, நீள வாக்கில் நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளியை அதில் சேர்க்கவும். ஊற வைத்துள்ள வெந்தயத்தை இப்போது சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போடவும்.

பொடி பண்ணி வைத்துள்ள (கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு, தனியா, காஞ்ச மிளகா வறுத்து பொடி செய்தது) சேர்க்கவும். அதன்பின் சாதம் சேர்க்கவும். கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

இந்த வெந்தய சாதம் சத்து மட்டுமல்ல சுவையாகவும் இருக்கும்.
 

]]>
fenugreek https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/24/w600X390/fenugreek-seeds.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/09/home-remedies-for-stomach-ache-வயிற்றுப்-போக்கு-நிற்க-எளிமையான-வழி-3301415.html
3297434 மருத்துவம் உணவே மருந்து முக வறட்சி நீங்கி தோலுக்கு பளபளப்பை கொடுக்கும் உணவு! கோவை பாலா Wednesday, December 4, 2019 12:25 PM +0530  

கோவக்காய் காலா நமக் அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கோவக்காய் - 10
கேரட் - 5
காலா நமக் அரிசி.  -  100  கிராம்
தேங்காய் துருவல்.   -  100 கிராம்

செய்முறை
 

 • முதலில் காலா நமக் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
 • கோவக்காய் மற்றும் கேரட்டை நறுக்கி நீராவியில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
 • வேக வைத்த காயை மிக்ஸியில் போட்டு அரைத்து  விழுதாக்கி வைத்துக் கொள்ளவும்.
 • பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள காலா நமக் அரிசியை போட்டு 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
 • நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • பின்பு அதில் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து கலந்து குடிக்கவும்.

பயன்கள்

 • இந்தக் கஞ்சியில் அதிகமான தாது உப்புகள் நிறைந்துள்ளது.
 • இதனை முகவறட்சி மற்றும் உடல் வறட்சி உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் வறட்சி அனைத்தும் நீங்கி மேனிக்கு பளபளப்பை கொடுக்கும்

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/kidney-health-diet-detox-toxins-naturally-with-food.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/04/skin-care-tips-3297434.html
3295585 மருத்துவம் உணவே மருந்து கடும் தலைவலியா? Monday, December 2, 2019 01:31 PM +0530 உணவின் துணைப் பொருட்களைக் கொண்டே பல உடல் உபாதைகளைக் குணப்படுத்திக் கொள்ள முடியும். 

 • புளியை நீரில் கரைத்து அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம் மூன்றையும் சிறிது தூளாக்கிக் கலந்து சர்க்கரை பச்சைக் கற்பூரம் சேர்த்துச் சாப்பிட சூட்டினால் ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும்.
 • சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு ஊற வைத்து உலர்த்திப் பொடித்துச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட நல்ல பசி உண்டாகும்.
 • கர்ப்பம் தரித்தவர்களுக்கு 4 - 5 மாதங்களுக்குப் பின் வறுத்த பெருஞ்சீரகத்தை (சோம்பு விதை) வெந்நீரிலிட்டு ஊற வைத்து வடித்துச் சாப்பிட சிறுநீர் தாராளமாகப் பெருகும். உடம்பு லேசாக இருக்கும். அசதி தோன்றாது. வெகுட்டல், உமட்டல் இராது. கரு நன்கு வளரும்.
 • கொத்துமல்லி விதையையும் சோம்பையும் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு தினம் 1 - 2 வேளை வாயிலிட்டு மென்று சாப்பிட வாய் நாற்றம், ருசியின்மை, ஏப்பம் நீங்கும். மல்லியை ஓமம் சேர்த்தும் தனித்தும் தண்ணீர் விட்டு அரைத்துத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க, வயிறு உப்பி ஜீரணமாகாமல் வாந்தியாவதும், பேதியாவதும் குழந்தை இளைத்துச் சிடுசிடுப்பதும் தணியும். 
 • வாந்தியை ஏற்படுத்த சிறு கடுகை உபயோகிப்பதுண்டு. இரைப்பை சோம்பியிருந்தாலும், மார்பில் கபம் கட்டியிருந்தாலும், இரைப்பையில் பித்த சேர்க்கை அதிகமாக இருந்தாலும், ஏதேனும் விஷப்பொருளைச் சாப்பிட்டிருந்தாலும் வாந்தி எடுப்பது நல்லது. அதற்கு 5 - 6 கிராம் அளவு கடுகையும் 10 கிராம் இந்துப்பையும் தூளாக்கி அரைலிட்டர் சூடான வெந்நீரில் கலக்கிச் சிறிது சிறிதாகச் சாப்பிட சிறிது நேரத்தில் வாந்தி ஏற்படும். மறுபடியும் சிறிது சாப்பிட மறுபடியும் வாந்தியாகும். இப்படித் தேவையான அளவிற்கு வாந்தியானதும் நிறுத்திக் கொள்ளலாம். இதனால் உடலில் களைப்போ, ஆயாசமோ, உமட்டலோ தொடராது. இதனால் உட்சென்ற நஞ்சுப்பதார்த்தம் வெளியாகும். உணவே செரியாமல் தங்கி விஷம் போன்று ஸ்தம்பித்து மூச்சுத்திணறல் முதலியவை ஏற்படும் போது இதைக் கொண்டு வாந்தியை ஏற்படுத்தி சுகமடையலாம்.
 • 100 கிராம் ஓமம், 20 கிராம் மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்துத் தூளாக்கி வெல்லம் 120 கிராம் சேர்த்து நன்கு கலக்கும்படி இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, பொருமல், அஜீரணபேதி குறையும். 
 • கிராம்பு வயிற்று வாயுவைப் போக்கக் கூடியது. பேதி, வாந்தி, ரத்தக் கடுப்பு, கிராணி முதலியவற்றில் மலத்தைக் கட்டி வாயுவைச் சீராக வெளியேற்றி குடல் அழற்சியைப் போக்கக் கூடியது. சுண்டிச் சுண்டி ஏற்படும் வலியை அகற்றும். லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைக்க, தொண்டைப் புண் ஆறும். பற்களில் ஈறு கெட்டிப்படும். ஈறுகளில் அழற்சி குறைந்து பல்வலி நிற்கும். கடும் தலைவலியின்போது, கிராம்பைப் பாலிலோ தண்ணீரிலோ அரைத்துப் பற்றுப் போட்டால் நல்லது. 
 • சிறு குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் வயிற்றில் மப்பு வாயு சேர்ந்து வயிற்று வலி, உப்புசம், நீர், மலம் தங்கிக் குத்துவலி ஏற்படும் போது, பெருங்காயத்தைத் தண்ணீர்விட்டரைத்து லேசாகச் சுட வைத்து வயிற்றில் சந்தனம் போல் மெல்லிய பூச்சாகத் தடவி விட, நல்ல குணம் கிடைக்கும். மார்பில் சளி உறைந்த நிலையிலும், விலாப்பிடிப்பு, மென்னிப்பிடிப்புகளிலும், பெருங்காயத்தைப் பற்று இடலாம்.
 • காணாக்கடி போன்று உடலில் தடிப்புடன் வரும் பல அலர்ஜி தடிப்புகளில் வேளைக்கு 5 - 7 - 9 - 11 - 13 என்று கிரமமாக எண்ணிக்கையை அதிகமாக்கி மிளகைக் சாப்பிட்டுவர பித்தம் சீரடைந்து தடிப்பு குறைந்து விடும். வயிற்றில் ஜீரணமில்லாமல் போக்கு அதிகமாக இருக்கும் போது மிளகை நல்லெண்ணெய்யில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
 • வெந்தயம் - இதிலுள்ள குழகுழப்பும் நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவும். விதை, வெந்தயக்கீரையைப் போலல்லாமல், மலத்தை இறுக்க உதவக் கூடியது. வலியுடன் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும்போது விதையை வறுத்துக் கஷாயமாக்கி தேனுடன் சாப்பிட மிகவும் நல்லது. குடலோட்டத்தில் தினமும் இரவில் தயிரில் விதையை ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட, வயிற்றுப்போக்கு குணமாகிவிடும்.

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

]]>
head ache https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/6/w600X390/lady-with-headache.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/02/home-remedies-for-severe-head-ache-3295585.html
3295563 மருத்துவம் உணவே மருந்து கசப்பான விஷயங்கள்தான் இனிப்பானவை! வரமளிக்கும் வெந்தயத்தின் 5 பலன்கள்! சினேகா Monday, December 2, 2019 10:13 AM +0530  

வெந்தயம் என்றாலே கசப்பாக இருக்கும் என்று பலர் உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நம் அஞ்சரை பெட்டியில் இருக்கும் எளிமையான மருந்து அது. முக்கியமாக வெந்தயம் பெண்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. காரணம், அதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பிரசவத்துக்கு பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு வெந்தயம் மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி,  வயிறு உப்பிசம், வயிற்று வலி போன்றவைக்கு சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட வலி குறையும். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் நம் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டனர். இட்லிக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்ப்பதும் இந்த ஆரோக்கிய அடிப்படையில்தான்.

பலன்கள் :

 1. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது.  இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.
 2. உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும். 
 3. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
 4. வெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி.  தொடர்ந்து வெந்தயத்தை உனவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும்.  மூல வியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.
 5. வெந்தயம் சிறந்த உள் மருந்து மட்டுமல்ல சருமத்துக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தர வல்லது.  தலைமுடி வேர்களுக்கு பலம் அளிக்கும். சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து அதன்பின் தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். உடல் சூடு நன்றாக தணிந்து, கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்யலாம்.

வெந்தயத்தை எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

மாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வைத்து, அதை பருத்தி துணியில் மூடி வைத்து பின் மீண்டும் சில மணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளை கட்டிவிடும். முளை கட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல் வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

வெந்தயத்தைப் பொடி செய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.

வெந்தயத்தையும், கோதுமையையும் லேசாக வறுத்து பொடி செய்து காபி அல்லது தேநீராகத் தயாரித்து அருந்தலாம். உடலுக்கு உறுதியும் நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஏற்படும்.

வெந்தயத்தில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் ?

வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பல வகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/2/w600X390/vendhayam.jpg வெந்தயம் https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/02/health-benefits-of-fenugreek-3295563.html
3295560 மருத்துவம் உணவே மருந்து இதய நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கிய கஞ்சி கோவை பாலா Monday, December 2, 2019 08:34 AM +0530 தங்கச் சம்பா வெந்தயக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தங்கச் சம்பா அரிசி  - 100  கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மிளகு  - 5 கிராம்
திப்பிலி -  3
பெருங்காயம்  - 5 சிட்டிகை

செய்முறை

 • முதலில் தங்கச் சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
 • வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவை அனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
 • ஊற வைத்துள்ள தங்கச்சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலக்கி கொதிக்க வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைத்து குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இருதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வாரம் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்ளவும்.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  : 96557 58609,  73737 10080
Covaibala15@gmail.com

]]>
heart attack https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/2/w600X390/fenugreek_kanchi.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/02/fenugreek-good-for-heart-problems-3295560.html
3294768 மருத்துவம் உணவே மருந்து தொப்பையைக் குறைந்து அழகான உடலமைப்பை பெற இது உதவும் கோவை பாலா Sunday, December 1, 2019 11:29 AM +0530 அகத்திக் கீரை பூண்டு புழுங்கலரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை - 2 கைப்பிடி
புழுங்கலரிசி -  150 கிராம்
பூண்டுப் பல் -  10
மிளகு  - 5
சீரகம்  - அரை தேக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
மஞ்சள் தூள்   -  தேவையான அளவு

செய்முறை

 • ஒரு பாத்திரத்தில் அகத்திக் கீரை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
 • அதில் மிளகு, பூண்டு ஆகியவற்றைத் தட்டி போட்டு அதனுடன் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து  நன்கு வேக வைக்கவும்.
 • அகத்திக் கீரை நன்கு வெந்தவுடன் அந்த தண்ணீரை மற்றும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
 • வடிகட்டி வைத்துள்ள தண்ணீரில் புழுங்கலரிசியைச் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக்கிக் கொள்ளவும்.
 • கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.

பயன்கள்

 • இந்தக் கஞ்சியை உடல் பருமனை குறைக்க விரும்புவர்களும், தொப்பையை குறைக்க விரும்புவர்களும் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் பருமன் மற்றும் தொப்பை குறைந்து அழகான உடலமைப்பை பெறுவார்கள்.
 • படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

 • அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். 
 • பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்
Cell : 96557 58609,  73737 10080
Covaibala15@gmail.com

]]>
agathi keerai https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/1/w600X390/agathi_keerai.jpg அகத்தி கீரை https://www.dinamani.com/health/healthy-food/2019/dec/01/home-remedies-for-weight-loss-3294768.html
3293951 மருத்துவம் உணவே மருந்து உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், தாம்பத்தியத்தில் விருப்பம் உண்டாக்கவும் உதவும்  காமவிருத்தி கஞ்சி கோவை பாலா  Saturday, November 30, 2019 12:30 PM +0530 வெண்பூசணிக்காய் கருங்குருவைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கருங்குருவை அரிசி -  100 கிராம்
வெண்பூசணிக்காய்  -  50 கிராம்
பாதாம் பருப்பு  -   10
மிளகு  -  5 கிராம்

செய்முறை

 • முதலில் கருங்குருவை அரிசியை நொய்யாக்கி 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • வெண் பூசணிக்காயை  நன்கு கழுவி அதனை தோலோடு, சதை மற்றும் விதை அனைத்தையும் எடுத்து  மிக்ஸியில் போட்டு அதில் பாதாம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள கருங்குருவை நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.
 • அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள வெண் பூசணி ஜூஸை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து அருந்தவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி உயிரணு குறைபாடு உள்ளவர்களுக்கு  அற்புதமான உணவு.

தாம்பத்தியத்தில் ஆர்வம்  இல்லாதவர்களுக்கு  ஆர்வத்தை தூண்டி  தாம்பத்திய உணர்வை அதிகரிக்க உதவும் கஞ்சி.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

 • அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.
 • பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/30/w600X390/couple.jpg couple https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/30/healthy-recipe-to-increase-sperm-count-3293951.html
3287122 மருத்துவம் உணவே மருந்து தீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து கோவை பாலா Friday, November 22, 2019 11:11 AM +0530 பூசணிக்காய் விதை குடைவாழை அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
வெண் பூசணி விதை - 100  கிராம்
அரசாணிக்காய் விதை - 100 கிராம்
குடைவாழை அரிசி - 100  கிராம்
பாசிப்பருப்பு - 50  கிராம்
வெந்தயம் - 100 கிராம்
தயிர் - சிறிதளவு

செய்முறை

 • முதலில் வெண் பூசணி விதை, அரசாணிக்காய் விதை மற்றும் வெந்தயம் மூன்றையும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
 • குடைவாழை அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
 • பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  கொதிக்கவைத்து அதில் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
 • அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் பத்து கிராம் அளவு எடுத்து கஞ்சியுடன் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து அதில் தயிர் சேர்த்து பருகவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி வயிற்றுப் புண், செரிமானக் கோளாறு மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உன்னதமான உணவுக் கஞ்சி.

இதனை தினமும் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ஜீரணசக்தியை அதிகரித்து குடல் சார்ந்த நோய்களை நீக்கும் அதிஅற்புதமான உணவுக் கஞ்சி.

படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609,  73737 10080
Covaibala15@gmail.com  

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/22/w600X390/stomach_ache.jpg stomach ache https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/22/home-remedy-for-stomach-ache-3287122.html
3285314 மருத்துவம் உணவே மருந்து பழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா? Wednesday, November 20, 2019 04:56 PM +0530 பழங்களின் "ஏஞ்சல்' என்று அழைக்கப்படும் பப்பாளி மிக மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும், அதிக அளவு சத்துகள் கொண்டதுமான பழம். இப்பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்:

 • பப்பாளிப் பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
 • இதன் காயை கூட்டு போன்று செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
 • தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
 • தேனில் தோய்த்து பழத்தை உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 • நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

 • இதன் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
 • பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
 • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
 • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மீது போட்டு வர கட்டி உடையும்.
 • இலைகளை அரைத்து சாறு எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
 • விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச விஷம் இறங்கும்.
 • பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

- ஜோ. ஜெயக்குமார்

]]>
papaya https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/20/w600X390/fresh_fruits.jpg fruits https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/20/health-benefits-of-papaya-3285314.html
3282432 மருத்துவம் உணவே மருந்து இதை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க! Sunday, November 17, 2019 11:07 AM +0530
 

சோடா

சோடாவில் கார்போனேட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்களுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்கிவிடும். இதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 

மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளக்கூடாது. வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.

காபி

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் நாளடைவில் தீவிரமான பிரச்னைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாயுவைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

]]>
food habits https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/Can-I-Eat-Bananas-If-I-Have-Diabetes.jpg banana https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/17/dont-eat-these-foods-in-empty-stomach-3282432.html
3282431 மருத்துவம் உணவே மருந்து சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை பிரச்னைகள் தீர வழி DIN DIN Sunday, November 17, 2019 10:52 AM +0530 முசுமுசுக்கை நிலம் படிந்த அல்லது ஏறி வளரும் சிறுகொடி. தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள் சிவப்பு நிறமானவை. 

முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். ரத்தமும் சுத்தமாகும்.

முசுமுசுக்கை தோசை: 3 பிடி இலைகளை கால் கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும்.

 • பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. மொசுமொசுக்கை, மாமூலி, ஆயிலேயம் என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் மிக்கவை.
 • முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது. வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள நான்கு மூலிகைகளுள் முசுமுசுக்கையும் ஒன்றாகும்.
 • முசுமுசுக்கை வேர், பசியை அதிகரிக்கும்; நஞ்சை நீக்கும்; சளியை அகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். 
 • இலை கோழையை அகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றை குணமாக்கும்.
 • இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். 100 நாள்கள் வரை இவ்வாறு செய்யலாம்.
 • கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.
 • வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
]]>
musumusukkai leaf https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/musumuskkai.jpg musumusakkai leaf https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/17/home-remedies-using-musumusukkai-leaf-3282431.html
3282430 மருத்துவம் உணவே மருந்து டெங்குக் காய்ச்சலின் போது உணவின் முக்கியத்துவம் என்ன? முனைவர். ப. வண்டார்குழலி இராஜசேகர் DIN Sunday, November 17, 2019 10:41 AM +0530 டெங்குக் காய்ச்சலைப் பொருத்தவரையில் 4 முதல் 7 நாட்களுக்குப் பிறகே அறிகுறிகள் தென்பட துவங்குவதால், என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிப்பதில் தாமதம் ஆவது சற்று வருத்தப்படக்கூடிய செய்திதான். ஆனாலும், 3 நாட்களுக்கு மேல் தொடரும் எவ்வித காய்ச்சலாக இருப்பினும் நோயாளியுடன் இருக்கும் பாதுகாவலர்கள் விரைந்து செயல்படவேண்டும். அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக இருப்பின், மருத்துவர்களுடைய நேரடி கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால், வெளி சிகிச்சைப் பிரிவிற்கு செல்பவர்களாகவும், வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது மருத்துவர்களை சென்று பார்ப்பவர்களாகவும் இருக்கும் வேளையில், நோயாளியின் ரத்தம், சிறுநீர், மலம், சளி போன்றவைகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரின் உடனடி கண்காணிப்பிற்குச் செல்வது மிகமிக அவசியம். இதுகுறித்து வண்டார்குழலி அளித்துள்ள கேள்வி - பதில் விவரம் இதோ:

டெங்கு காய்ச்சலில் எவ்வாறான நிலைகள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டிய நிலைகளாகக் கருதப்படுகின்றன?

உலக சுகாதார இயக்கத்தின் அறிக்கையின்படி, உடலின் வெப்பநிலை 37.5-38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே இறங்குவதுடன், மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரையில் காய்ச்சல் இருத்தல், நீர்ச்சத்து குறைவதால், மொத்த ரத்த அளவில் இருக்க வேண்டிய ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் (hematocrit) மற்றும் ரத்தத்தின் பிளாஸ்மா மெதுவாகக் கசியத் துவங்குதல், ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டருக்கு 20,000 அல்லது 10,000க்கும் கீழிறங்குதல் போன்றவை நெருக்கடியான அல்லது தீவிர சிகிச்சையளிக்கும் நிலையாகக் கருதப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் போது ரத்தத் தட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் யாவை?

ரத்தத்தில் உள்ள நுண் பொருட்களில் ரத்தத் தட்டுக்கள் எனப்படும் Platelets மிக முக்கியமானவை. சீராய்ப்பு, காயங்கள் அல்லது அடிபட்ட இடத்தில், ரத்தம் வெளியேறும்போது, ரத்தத்தில் உள்ள நிறமற்ற செல்களான இந்த தட்டுக்கள் ஒன்றோடொன்று பசைபோன்று இறுகி ஒட்டிக்கொண்டு, அந்த இடத்தில் ஒரு அடைப்பை ஏற்படுத்தி ரத்தம் வெளியேறு தலை நிறுத்தும் மிக முக்கிய வேலையைச் செய்கின்றன. பொதுவாக ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், 150,000 முதல் 450,000 ரத்தத் தட்டுக்கள் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரித்தால் இதை Thrombocytosis எனவும் குறைந்தால் Thrombocytopenia எனவும் கூறுகிறோம். டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு ரத்தத் தட்டுகளின்எண்ணிக்கை குறைந்து விடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை, எலும்பு மஜ்ஜையில் தட்டுக்களின் உற்பத்தி குறைவதும், உடல் முழுவதும் உள்ள ரத்த ஓட்டத்தில் உள்ள ரத்தத் தட்டுக்கள் அதிக அளவில் அழிக்கப்படுவதும் ஆகும்.

மற்ற பிற காய்ச்சலைவிட டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு நீர்ச்சத்தின் அவசியத்தை உணர்த்தி, உடல் நீரின் சமநிலையை பராமரிக்கக் கூறுவதன் நோக்கம் என்ன?

காய்ச்சலின்போது ஏற்படும் அதிகப்படியான வியர்வை, பிளாஸ்மா கசிவு, தண்ணீர் அல்லது திரவ உணவு எடுத்துக்கொள்ளும் விருப்பம் அல்லது நிலை இல்லாமை போன்றவை உடலிலுள்ள நீர்ச்சத்தின் அளவைக் குறைத்துவிடு
கிறது. இதனால், தசைப்பிடிப்பு, மூட்டு மற்றும் கால்களில் இறுக்கமான வலி, தலைவலி போன்றவை அறிகுறிகளாகத் தென்படுவதுடன், உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும் நிலை ஏற்படும். எனவேதான், நீர் மற்றும் திரவ உணவுகளின் வாயிலாகவோ அல்லது நரம்பு மூலம் செலுத்தப்படும் மருந்துத்திரவங்கள் (IV Fluids) வாயிலாகவோ உடலின் நீர்ச்சத்து சமன்செய்யப்படுகிறது.

டெங்குக் காய்ச்சலின் போது உணவின் முக்கியத்துவம் என்ன?

பப்பாளி இலைச் சாறும், நில வேம்பு குடிநீரும் கொடுத்து விட்டால் மட்டுமே போதும், ரத்தத்தட்டுகளின் அளவு அதிகரித்துவிடும் என்ற நிலையிலேயே இருந்துவிடாமல், அதனுடன் சேர்த்து அந்நிலையில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கும் உணவுகளையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களைக் கொடுப்பதால் எவ்வித சிக்கலும் இருக்காது. ஆனால், கல்லீரல் அழற்சி நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், கணையம் அல்லது பித்தப்பை சார்ந்த நோய்கள், சுவாசக்கோளாறு, தீவிர வயிற்றுப்புண் போன்ற வேறே தேனும் சிக்கல் இருக்கும் வேளையில் நோயாளி குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், கர்ப்பிணியாக இருந்தாலும் குடும்ப உறுப்பினரோ அல்லது நோயாளியோ தாங்களாகவே பப்பாளி மற்றும் நிலவேம்பு சாற்றினை அல்லது கஷாயத்தை சரியான அளவு தெரியாமல் குடிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மருத்துவரின் கண்காணிப்பும், உணவியல் நிபுணர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றுவது அவசியம்.

ஒருவரின் சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உருவாகும் Thrombopoitin என்னும் ஹார்மோனே, எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்தத் தட்டுக்கள் உருவாவதற்கு உதவி செய்கின்றன. எனவே, டெங்கு காய்ச்சலின்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை சரியான முறையில் பராமரிப்பதற்கும், குறைந்துவிடும் ரத்தத்தட்டுக்கள் விரைவில் அதனுடைய சமநிலையை அடைவதற்கும் என்னென்ன சத்துகள் முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். இதன்வாயிலாக அந்த சத்துகள் எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன, அவற்றை நோயாளிக்கேற்ப எவ்வாறு உணவாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால், டெங்கு காய்ச்சலிலிருந்து முழுவதுமாக ஒருவரைக் காப்பாற்றிவிட முடியும். அவ்வாறு பார்க்கும்போது, இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி போன்றவை மிக முக்கியச் சத்துகளாகக் கருதப்படுகின்றன. அதனுடன் சேர்ந்து, தண்ணீரும், சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற உப்புகளின் சமநிலையும் உடலில் பாதுகாக்கப்பட வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு உணவளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

* கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே அடிக்கடி கொடுப்பதுடன், பிற திரவ உணவுகளையும் சேர்க்க வேண்டும். இரண்டு வெவ்வேறு விதமான உணவுகளுக்கு இடையில் 1 குவளை நீரைப் பருகக் கொடுக்கலாம். சளி, இருமல் இருக்கும் வேளையில், தண்ணீருடன் துளசி, இஞ்சி, கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றின் சாறினை சிறிதளவு சேர்த்துக் கொடுக்கலாம்.

* சிறு குழந்தைகளுக்கு வாந்தியோ அல்லது பசியின்மையோ இருக்கும் நிலையில், மூன்று வேளை திட உணவுகள் என்பதைத் தவிர்த்து, பழச்சாறு, சூப், ரசம், தானிய கஞ்சிகள், பருப்பு கடைந்த தண்ணீர், சாதம் வடித்த நீர் ஆகியவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு சிறு அளவாகக் கொடுப்பதால் நீர்ச்சத்துடன் சேர்ந்து, வைட்டமின் மற்றும் தாதுக்களும் எளிதில் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். உடல் நிலை தேறும் நிலையில், குழைத்த ரசம் சோறு, பருப்பு சோறு, மசித்த காய்கள் சேர்த்த சோறு, தானியக் கூழ் உணவுகள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

* காய்ச்சலினாலும், மிகுந்த சோர்வினாலும், மருந்துகள் உண்பதாலும், நாவின் சுவை சற்றே குறைவானதுபோல் இருப்பதும், பசியின்மையும், உணவை ஒதுக்குவதும் நோயாளியிடம் காணப்படும் ஒரு பொதுவான நிலை. இதைத் தவிர்ப்பதற்கு, புதினா, ஏலக்காய், எலுமிச்சை போன்றவற்றை திரவ உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி கஞ்சி செய்வதைவிட, அரிசியை மிதமான சூட்டில் சற்றே வறுத்து பின் கஞ்சி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* ரத்தத் தட்டுக்கள் உற்பத்தியாவதற்கு போலிக் அமிலம் மிக முக்கியமானது என்பதால், அந்த சத்து மிகுதியாக உள்ள கடலை, துவரை, அரைக்கீரை, கொத்தவரை, வெண்டைக்காய், புதினா, பசலைக்கீரை, எள், வெந்தயம் போன்றவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். பருப்புகளை வேகவைத்து குழைத்த சாதமாகவும், ரசமாகவும், கீரை மற்றும் காய்களை சாறாகவோ அல்லது சூப்பாகவோ செய்து கொடுக்க வேண்டும்.

* ரத்தத் தட்டுகள் சற்றே அதிகரிக்கத் துவங்குவதை பரிசோதனை மூலம் தெரிந்துகொண்ட பிறகு, முட்டை, சிறு மீன்கள், ஆட்டிறைச்சி போன்றவற்றை சிறிது சிறிதாக கொடுக்கத் துவங்கலாம். இவற்றில், வைட்டமின் பி12 சத்து மிகுந்துள்ளது. ஆட்டின் எலும்புடன், பருப்பு மற்றும் காய்களையும் சேர்த்து வேகவைத்து சூப் தயாரித்துக் கொடுப்பதால், இரும்புச் சத்தும், போலிக் அமிலமும் பிற வைட்டமின்களுடன் சேர்ந்தே கிடைக்கப்பெறுகிறது.

* வைட்டமின் "சி' சத்தானது, ரத்தத்தில் இரும்புச்சத்து உட்கிரகிக்கும் தன்மையை ஊக்கப்படுத்துவதால், அந்தச் சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப்பழம், சாத்துக்குடி, தக்காளி, பெர்ரி பழங்கள், அடர் பச்சை நிற காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றை மாற்றி மாற்றி சாறாகக் கொடுக்க வேண்டும். இவற்றுடன் மாதுளை, ஆப்பிள், திராட்சை, சப்போட்டா போன்ற பழங்களையும் சாறெடுத்துக் கொடுப்பதால், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டின் அளவும் அதிகரித்து, விரைவான குணமும் கிடைக்கப்பெறும்.

* சுண்டைக்காய், கருவேப்பிலை, கொத்துமல்லி போன்றவற்றை கொதிக்க வைத்தோ, சாறெடுத்தோ கொடுப்பதால், கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் ஒரு சேர கிடைப்பதுடன், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவி புரிகின்றன. மேலும், உடலின் எதிர்ப்புச் சக்தியை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் வைட்டமின் ஏ பெரும்பங்கு வகிப்பதால், அச்சத்து நிறைந்த உணவுகளான முருங்கைக் கீரை, கேரட், மிளகு, சாதிக்காய், அருநெல்லி போன்றவற்றை சாறாக தயாரித்துக் கொடுக்கலாம்.

* தினமும் தவறாமல் ஒரு வேளை பப்பாளி இலைச்சாறும், நிலவேம்பு நீரும் குடிப்பதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பப்பாளியில் உள்ள பெப்பெய்ன், டு டோகோபெரால், பிளேவனாய்ட்ஸ், சிஸ்டாடின், கைமோபெப்பெய்ன் போன்ற நுண் பொருட்கள் ரத்தத் தட்டுகளை அதிகரிக்கச் செய்கின்றன. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு ஒன்பது மருத்துவப் பொருட்கள் உள்ளடக்கிய, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படும் நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தலாம் என்று 2011-இல் தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், அதை இன்றளவும் பயன்
படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

* பப்பாளி இலை மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதில்லை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை, அம்மான் பச்சரிசி இலை, பார்லி புல், ஓக் இலை, வெந்தயக் கீரை போன்றவையும் ரத்தத் தட்டுக்களை உற்பத்தி செய்வதற்கும், காய்ச்சலின் தீவிரத்தை குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு, கூடுமானவரையில் வெளிப்புறக் கடைகளிலோ, உணவகங்களிலோ வாங்கிய உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றால், ஒவ்வாமை ஏற்படுவதற்கும், தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், நோயாளியின் நிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். பதப்படுத்தப்பட்ட, வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவு களையும், துரித உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும்.

- கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், மனையியல் துறை, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

]]>
dengu https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/17/w600X390/mint.jpg mint https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/17/dengu-fever-and-diet-for-it-3282430.html
3280551 மருத்துவம் உணவே மருந்து உங்கள் முகம் வீங்கி உள்ளதா? கோவை பாலா Friday, November 15, 2019 01:07 PM +0530  

வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் உணவு இது

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
திணை அரிசி - 100 கிராம்
பூண்டு. - 10 பல்
மிளகு - 10
மல்லித் தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

 • முதலில் திணை அரிசியை லேசாக வறுத்து உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
 • முடக்கத்தான் கீரையை அலசி ஆய்ந்து அரைத்து சாற்றை வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.
 • பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் திணை குருணையைச் சேர்த்து வேக வைக்கவும்.
 • நன்கு வெந்து கஞ்சி பக்குவம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் முடக்கத்தான் சாற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.

பயன்கள்

 • இந்தக் கஞ்சியை வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்க ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
 • மேலும் சிறுநீரக குறைபாட்டினால் உண்டாகும் கால் வீககம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கஞ்சியை மருந்தாக ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/15/w600X390/thinai_arisi_kanchi.jpg முடக்கத்தான் திணைப் பூண்டுக் கஞ்சி https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/15/home-remedies-and-cure-for-face-swelling-3280551.html
3278794 மருத்துவம் உணவே மருந்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் கஞ்சி கோவை பாலா Wednesday, November 13, 2019 01:47 PM +0530  

கறிவேப்பிலை சாமைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாமை அரிசி-  100 கிராம்

கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடி

சுக்கு     -  ஒரு துண்டு

திப்பிலி -   2

கருப்பு எள் -  ஒரு ஸ்பூன்

உளுந்து -  ஒரு ஸ்பூன்

பெருங்காயம் -  சிறிதளவு

செய்முறை

 • முதலில் சாமை அரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
 • கறிவேப்பிலையை, சுக்கு, மிளகு, திப்பிலி, உளுந்து, கருப்பு எள் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • வறுத்து வைத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து  விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சாமை குருணையை போட்டு வேக வைக்கவும்.
 • நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

பயன்கள்

 • இந்தக் கஞ்சியில் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும். 
 • ஆகையால்  இந்தக் கஞ்சியை ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு உண்டாகும்  வயிறு உப்புசம் மற்றும் ஜீரணக் கோளாறு , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கக் கூடிய அற்புதமானக் கஞ்சி

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
asthma https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/13/w600X390/parkinsons-asthma_625x350_41504261132.jpg asthma https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/13/healthy-food-for-asthma-patients-3278794.html
3276826 மருத்துவம் உணவே மருந்து உடலுக்கு வலுவைக் கொடுக்கும் அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி கோவை பாலா Monday, November 11, 2019 08:57 AM +0530  

தேவையான பொருட்கள்

சாமை அரிசி -  100  கிராம்
அரசாணிக்காய்.    -  100 கிராம்
தேங்காய்ப் பால்.   -  300 மி.லி
உளுந்து.                 -   50  கிராம்
பாசிப் பருப்பு.        -  20 கிராம்
பனைவெல்லம்.   -  100 கிராம்
சுக்கு, ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல -  ஒரு கைப்பிடி                                    
                                
செய்முறை
 

 • முதலில் சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பு மூன்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
 • அரசாணிக்காயை தோலோடு துருவி மிக்ஸியில்  போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
 • பனை வெல்லத்தை கரைத்து கரைசலாக்கிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடித்துள்ள சாமை அரிசியைப் போட்டு அதில் 200 மி.லி தேங்காய்ப் பாலை ஊற்றி மேலும் அதில் 150 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு குழையும் படி வேக வைக்கவும்.
 • சாமை அரிசி நன்கு வெந்தவுடன் அதனை நன்கு மசித்து  அதில்  அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸ் , மீதியுள்ள தேங்காய்ப் பால் மற்றும் பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • இந்தக் கஞ்சியை சூடாக இருக்கும்பொழுது மிக அருமையாக இருக்கும்.

பயன்கள்

இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுக்கும் ஆரோக்கியக் கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/11/w600X390/ash_gourd_soup.jpg அரசாணிக்காய் தேங்காய்ப் பால் சாமைக் கஞ்சி https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/11/home-made-food-for-body-strength-3276826.html
3276255 மருத்துவம் உணவே மருந்து தினமும் 4 முந்திரி சாப்பிடுங்கள்! இந்த 4 பலன்களைப் பெறுங்கள்! சினேகா Sunday, November 10, 2019 03:39 PM +0530 சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். 

தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா 3,6 கொழுப்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. 

1. உடல் எடை குறைக்க

தினமும் 2 முந்திரி சாப்பிடுவதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொலெஸ்ட்ரால் குறையும். உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் குறைத்து ஸ்லிம்மாக ஆக உதவும் 

2. தலைமுடி பிரச்னை 

தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினமும் 3 முந்திரிகள் சாப்பிடுவதால் இவற்றில் உள்ள காப்பர் முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ளும்.  

3. நான்கு முந்திரிகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் 4 முந்திரியை சாப்பிடுவதால் இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும். ரத்த நாளங்கள், எலும்புகள், நரம்புகள், மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து, இவற்றின் செயல்திறனை அதிகரிக்கும். முந்திரியில் உள்ள ப்ரோன்தோசயாடின் என்கிற மூல பொருள் புற்றுநோயை செல்களை உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது.

4. இளமை அழகுக்கு முந்திரிப்பழம்

முந்திரியில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் (lutein, zeaxanthin) கண் பார்வை கூர்மை பெருமாம். இதிலுள்ள வைட்டமின் பி சத்து செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடும், சருமம் புத்துணர்வுடன் பொலிவாக இருக்கும். 

 

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/10/w600X390/benefits_of_cashew_nut.jpg cashew nut https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/10/eat-4-cashew-nuts-daily-for-good-health-3276255.html
3276250 மருத்துவம் உணவே மருந்து சளி இருமல் தொண்டை வலியா?  கோவை பாலா Sunday, November 10, 2019 11:12 AM +0530
முருங்கைப் பட்டை திப்பிலி பால் கஞ்சி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி  நொய் - 100 கிராம்
முருங்கைப் பட்டை - 10 கிராம்
திப்பிலி - 10
பால் - 500 மி.லி
பூண்டு - 5 பல்
மிளகு - 10

செய்முறை

 • முதலில் புழுங்கலரிசி நொய்யை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
 • முருங்கைப் பட்டை, பூண்டு, மிளகு மற்றும் திப்பிலி நான்கையும் சேர்த்து ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
 • பின்னர் ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.
 • நொய்யரிசியை நன்கு குழையும்படி வேக வைத்தப் பின்பு அதில் காய்ச்சிய பால் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை கப சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்கள் ஒரு வேளை உணவாகவோ அல்லது மருந்தாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் கபத்தன்மையிலிருந்து விடுபட முடியும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/10/w600X390/milk_porridge.jpg drumstick milk porridge https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/10/home-remedy-for-cold-cough-and-throat-pain-3276250.html
3274418 மருத்துவம் உணவே மருந்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஆரோக்கியமானக் கஞ்சி கோவை பாலா Friday, November 8, 2019 01:13 PM +0530
 
அரசாணிக்காய் சிறுதானியக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அரசாணிக்காய் - 100  கிராம்
குதிரை வாலி - 50 கிராம்
வரகு - 50 கிராம்
சாமை - 50  கிராம்
பாசிப் பருப்பு -   50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
சின்ன வெங்காயம் -  10
பூண்டு பல் -   4
சீரகம் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் -  ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

 • முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
 • சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
 • பிறகு தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து அதனோடு பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். கொஞ்சம் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸை சேர்த்து  கஞ்சி பதம் வரும் வரை வேகவிடவும்.
 • பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
 • பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.

பயன்கள் 

 • சத்துக்கள் நிறைந்த இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக  உட்கொள்ளலாம்.
 • பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும்  விரும்பி  உண்ணக்கூடிய அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி
 • தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/MULTIWA-STRONG-BONES-FOR-KIDS.JPG https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/08/healthy-kanchi-recipes-for-children-3274418.html
3273486 மருத்துவம் உணவே மருந்து இரவு படுக்கப் போகும் முன் இதை செய்யுங்கள் கோவை பாலா Thursday, November 7, 2019 11:00 AM +0530  

அரசாணிக்காய் சிறுதானியக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அரசாணிக்காய் - 100  கிராம்
குதிரை வாலி - 50 கிராம்
வரகு - 50 கிராம்
சாமை - 50  கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4
சீரகம் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் -  ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

 • முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
 • சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
 • பிறகு தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து அதனோடு பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். கொஞ்சம் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸை சேர்த்து  கஞ்சி பதம்வரும் வரை வேகவிடவும்.
 • பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
 • பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.

பயன்கள்

 • சத்துக்கள் நிறைந்த இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம்.
 • பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி  உண்ணக்கூடிய அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/7/w600X390/150513194606-01-better-sleep-exlarge-169.jpg time https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/07/do-this-health-practice-everyday-before-sleeping-3273486.html
3272591 மருத்துவம் உணவே மருந்து தாய்ப்பால் நன்றாகச் சுரக்க உதவும் உணவு கோவை பாலா Wednesday, November 6, 2019 05:35 PM +0530
 தண்ணீர் விட்டான் கிழங்கு பச்சரிசி நொய்க் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தண்ணீர் விட்டான் கிழங்கு - கால் கிலோ
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 100  கிராம்
மிளகு - 10  கிராம்
பச்சைப் பயிறு - 200 கிராம்
சீரகம் - 10  கிராம்

செய்முறை

 • தண்ணீர் விட்டான் கிழங்கை உலரவைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
 • உளுந்து, மிளகு, பச்சைப் பயிறு மற்றும் சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
 • பின்பு பச்சரிசியுடன்  வறுத்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ளவும்.
 • அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவு மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி சூடு படுத்தி அதில் அரைத்து வைத்துள்ள மாவில் 20 கிராம் அளவு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி கொதிக்க வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைக்கவும்.

பயன்கள்

இந்த அமிர்தமான கஞ்சியை தாய்பால் சுரப்பு இல்லாமலும், போதுமான அளவிற்கு சுரக்காமலும் உள்ள தாய்மார்கள்  இநதக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு தேவையான அளவு சுரக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
breast feeding https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/6/w600X390/rice_kanchi.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/06/best-food-foreenhancing-breast-feeding-in-mothers-3272591.html
3271627 மருத்துவம் உணவே மருந்து எது நல்ல கொலஸ்ட்ரால் எது கெட்ட கொலஸ்ட்ரால்? புதிய ஆய்வில் சர்ச்சை! Tuesday, November 5, 2019 12:44 PM +0530  

கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உறுதித்தன்மையை அளிப்பது இந்த கொலஸ்டிரால்தான். 

நம் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தை பெரும்பாலான செல்கள் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன. தேவை ஏற்படும் போதெல்லாம் கல்லீரல் கொலஸ்ட்ராலை சற்று அதிகப்படியாக உற்பத்தி செய்து மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உடல் இயக்கத்துக்குத் தேவையான பித்தநீர் சுரப்பு, நரம்புகளின் செயல்திறன், ஹார்மோன் உற்பத்தி என பலவற்றை இது காரணியாகிறது.

இந்நிலையில் கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதல் என்கிறது புதிய ஆய்வு. 

உணவின் மூலமாக கொழுப்பு 10-லிருந்து 15 சதவிகிதம் மட்டும்தான் உடலுக்குக் கிடைக்கிறது. மீதி கொழுப்புச் சத்தை உடல் தானே உற்பத்தி செய்து கொள்கிறது என்பதுதான் உண்மை.உணவின் மூலமாக கொலஸ்டிராலை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டனர் நிபுணர்கள். இந்த ஆய்வில் இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்தனர் ஆய்வாளர்கள். அந்த ஆய்வினை ஏற்ற அமெரிக்க அரசு, இதயப் பிரச்னைகளுக்கும் கொலஸ்டிராலுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

உணவு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உணவைப் பிரித்து பிரித்து எத்தனை பேரால் சாப்பிட முடியும். குப்பை உணவு மற்றும் வாழ்வியல் முறைகளின் பின்விளைவுகளால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆனால் இதயப் பிரச்னைகளுக்கு காரணம் கொலஸ்டிரால் ஒரு கொழுப்பு, எனவே கொழுப்புள்ள உணவை கட்டுப்படுத்தினால் இதய பிரச்னை சரி செய்யலாம் என்பது தவறானது.

உடல் செறிக்கக் கூடிய அளவுக்கு, அளவான உணவை உட்கொள்ளுதல் தான் அடிப்படையானது. தவிர கொலஸ்டிரால் பற்றி கூகுள் செய்து உண்மையான தகவல்களைத் தேடிப் பிடித்து படித்தால் தெளிவு ஏற்படும். எது நல்ல கொலஸ்டிரால், எது கெட்டது என்பது போன்ற சர்ச்சை தேவையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

]]>
cholesterol https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/5/w600X390/heart.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/05/good-cholesterol-and-bad-cholesterol-difference-3271627.html
3271393 மருத்துவம் உணவே மருந்து நோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி கோவை பாலா Tuesday, November 5, 2019 08:27 AM +0530
 
வெண்பூசணி வரகுக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
வரகு - 100 கிராம்
வெண் பூசணிக்காய் - 100 கிராம்
பூண்டு - 10  பல்
சுக்கு - ஒரு துண்டு
சீரகம் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
பசும் பால் - 100 மி.லி

செய்முறை

 • வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வரகு அரிசியை சுத்தம் செய்து  ஒரு பாத்திரத்தில் போட்டு 200 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
 • வரகு அரிசி பாதி வெந்த நிலையில் இருக்கும் போது  அதில் பூண்டு, ஒரு துண்டு சுக்கு, சீரகம், வெந்தயம், பசும் பால் மற்றும் அரைத்து ஜூஸாக்கி வைத்துள்ள வெண்பூசணிக் காயைச் சேர்த்து  வேக விடவும்.
 • நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
 • இதனோடு கறிவேப்பிலை புளித் துவையல் செய்து சாப்பிட்டால்  சுவை கூடும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  வரும் நோய்களை விரட்டி உடலை ஆரோக்கியமாக  வைக்க உதவும் அற்புதக் கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/5/w600X390/ash_gourd_soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/05/healthy-recipe-for-good-health-and-energy-3271393.html
3270612 மருத்துவம் உணவே மருந்து உடல் எடை குறைக்க உதவும் உதவும் கஞ்சி கோவை பாலா Monday, November 4, 2019 08:28 AM +0530 கொத்தவரைக்காய் குதிரைவாலி அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

குதிரை வாலி அரிசி - 100  கிராம்
கொத்தவரங்காய் - 50  கிராம்
கொள்ளு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

 • முதலில் கொத்தவரங்காயை நன்கு கழுவி நறுக்கி நீராவியில் வேகவைத்து அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
 • கொள்ளுவை வெறுமையாக வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரை போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 • குதிரை வாலி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஊற வைத்த கொள்ளுவையும் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி  நன்கு வேகவைக்கவும். அவை நன்கு குழைந்து  வெந்ததும்  அதனை நன்கு கடைந்து  அதில் அரைத்து வைத்துள்ள கொத்தவரங்காய் ஜூஸை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து  இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை அதிக கொழுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிகுந்த அற்புதமானக் கஞ்சி.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் கொத்தவரங்காய் குதிரைவாலிக் கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
weight loss https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/4/w600X390/fat-man-630x474.jpg obesity https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/04/home-remedy-for-weight-loss-3270612.html
3267935 மருத்துவம் உணவே மருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கஞ்சி கோவை பாலா Friday, November 1, 2019 12:09 PM +0530 பனிவரகு வெண்டைக்காய் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
பனிவரகு - 100 கிராம்
கேரட் - 15 கிராம்
இளம் பிஞ்சு வெண்டைக்காய் -  5
மிளகுத் தூள் - 5 கிராம்
தேங்காய்ப் பால் - 100 மி.லி
எண்ணெய் - தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டுப் பல் - 3 பல்

செய்முறை
 

 • கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வெண்டைக்காயை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
 • வெண்டைக்காய் மற்றும் கேரட்டை நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்
 • பனிவரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்  கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டுப் பல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 • நன்கு கொதிக்கும் பொழுது அதில் பனிவரகு அரிசி சேர்த்து கஞ்சி பதத்தில் வந்தவுடன் நீராவியில் வேக வைத்துள்ள கேரட் மற்றும் வெண்டைக்காயை சேர்த்து கலக்கி இறக்கி கொள்ளவும்.
 • அதில் தேங்காய்ப் பால் மற்றும் மிளகுத் தூளைச் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

பயன்கள்
 
இந்த கஞ்சியை  சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சுவையான கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/1/w600X390/varagu_kanchi.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/nov/01/diet-for-diabetes-patients-3267935.html
3267108 மருத்துவம் உணவே மருந்து மனதிலும் உடலிலும் உற்சாகம் வேண்டுமா? இது உதவும் Thursday, October 31, 2019 10:23 AM +0530 சீதாப்பழத்திற்கு ஆங்கிலப் பெயர் கஸ்டடர்ட் ஆப்பிள். (CUSTARD APPLE) இதன் தாவர பெயர் அனோனாஸ்குவோசா. இந்தியாவில் எண்ணூறு ஆண்டுகளாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சத்துகள்:

இப்பழத்தில் மாவுப் பொருட்கள், புரதம், கொழுப்பு, நார்ப் பொருள்கள் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் பி,சி, தாமிரம் குளோரின் முதலிய சத்துப் பொருட்கள் உள்ளன.

மருத்துவ குணங்கள்:

 • இப்பழத்தின் சதைப்பகுதி வெண்ணெய்ப் போன்று மிருதுவாக இருக்கும். இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். 
 • பழத்தின் சதைப்பகுதியை எடுத்து சாப்பிட்டு வர ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். 
 • தசைப்பிடித்தம் உள்ளவர்கள் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகள் சீராக இயங்கும்.
 • சீதாப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்கள் எலும்புகள் வலுப்படவும் உதவுகிறது.
 • ஆரம்ப நிலை வாத நோய் உள்ளவர்கள் இப்பழத்துடன் மிளகுத்தூள், சுக்குத்தூள் கலந்து சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும். 
 • ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தி ஏற்பட்டு ரத்த நாளங்களிலுள்ள கொழுப்பு பொருட்களை அடைத்துக் கொள்ளுவதைத் தடுக்கும். மாரடைப்பு வராது பாதுகாக்கும். 
 • முதியோர்கள் சீதாப்பழத்துடன் ஒரு மஞ்சள் வாழைப் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் முதுமையில் ஞாபக சக்தி குறைவதை தடுக்கும்.
 • கோடைக்காலத்தில் கடும் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் தன்மை கொண்டது சீதாப்பழம்.
 • சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். 
 • மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் இரண்டு சீதாப்பழம் தின்றால் மலச்சிக்கல் நீங்கும்.
 • சீதாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், மன இறுக்கம், உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்புகள் சீராக இயங்கும். 
 • கொஞ்சம் வெண்ணெய்யுடன் சீதாப்பழம் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல் புண் குணமாகும்.

("பழங்களின் மருத்துவ குணங்கள்' எனும் நூலிலிருந்து) - உ.ராமநாதன்

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/Custard_Apple.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/31/benifts-of-custard-apple-3267108.html
3266349 மருத்துவம் உணவே மருந்து சிறுநீரகம் சீராக செயல்பட நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Snehalatha Wednesday, October 30, 2019 05:52 PM +0530  

நமது உடலில் கிட்னி (சிறுநீரகம்) மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் சேர்ந்துவிட்டால் பலவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். சிறுநீரகத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தினமும் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையை ஏற்படுத்தும். உங்களுக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது நீர் அருந்த வேண்டும்.

உங்கள் அன்றாட உணவில் குதிரைவாலியைச் சேர்த்து வந்தால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாமல் தற்காப்பாகச் செயல்படும். 

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரகக் கல் ஏற்படாது.

கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.  

கிட்னியை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை. ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

காபி, சாக்லேட் மற்றும் பிற கால்ஷியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்

]]>
health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/2/w600X390/fruits.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/30/food-for-kidney-function-3266349.html
3266260 மருத்துவம் உணவே மருந்து உளுந்து வடை சுவையாக இருக்க என்ன செய்யலாம்? DIN DIN Wednesday, October 30, 2019 03:05 PM +0530
 • முள்ளங்கியை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து வேக வைத்தால் நல்ல வாசனையுடனும், சுவையாகவும் இருக்கும்.
  • ஃபில்டரில் காப்பி பொடியைப் போடும் முன்பு 1துளி உப்பு போட்டு பிறகு காப்பி பொடியைப் போட்டால் காப்பி டிகாஷன் ஸ்ட்ராங்காகவும் சுவையாகவும் இருக்கும்.
  • இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
  • கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்.
  • தேன்குழல் செய்ய மாவு அரைக்கும் போது வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து அரைத்தால் தேன்குழல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை தட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • டீயில் இரண்டு துளிகள் பன்னீரை விட்டு சாப்பிட்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
  • துவையல் அரைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சம் இலைகளைச் சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

  • இரண்டு தம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
  • ரவா, மைதா போன்ற தோசைகளுக்கு கரைக்கும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டால், தோசை மெத்தென்று சுவையாக இருக்கும்.
  • தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து அதில் சோள மாவு, வெறும் வாணலியில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து தோசை மாவில் சேர்த்துவிட்டால் மாவு கெட்டியாகும், சுவையும் மாறாமல் இருக்கும்.
  • காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டால் இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து கட்லெட் செய்யலாம்.
  • அவசரமாக சாம்பார் செய்ய, பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், தக்காளி துண்டுகள் சேர்த்து தாளித்தால் அற்புதமான சாம்பார் தயார். 
  • ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி தயார்.

  - ஆர். பூஜா, ஏ.எஸ். கோவிந்தராஜன்

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/30/w600X390/crispy-vadai.jpg crispy vadai https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/30/tips-for-making-crispy-and-tasty-vada-3266260.html
  3266250 மருத்துவம் உணவே மருந்து இதைப் படித்தபின் ஏய் சுண்டைக்காய் என்று இனி யாரையும் சொல்லமாட்டீர்கள்! Wednesday, October 30, 2019 02:46 PM +0530  

  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல பார்க்க சிறிய அளவில் இருந்தாலும், சுண்டைக்காயின் பயன்கள் அனேகம். முக்கியமாக சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம் உள்ளது. பலவிதமான நோய்களுக்கு மருந்தாக சுண்டைக்காயை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.

  1. இன்சுலின் பயன்படுத்தாத சர்க்கரை நோயாளிகள் சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்க கூடியது. பார்வைத் திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
  3. சுண்டைக்காய் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துவிடும்.
  4. காய்ச்சல் ஏற்பட்டால் இதை உணவில் சேர்த்தால் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும்.
  5. சுணைக்காயில் ரிபோஃபோளோவின், தயமின் இருப்பதால் அது வாய் புண்களையும் சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கக் கூடியது.
  6. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
  7. சுண்டைக்காயின் மருத்துவ குணம் என்னவெனில் இது உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை விரைவாக ஆற வைக்கும்.
  8. இளம் தாய்மார்களுக்கு சுண்டைக்காய் வரப்பிரசாதம். இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். 
  9. சுண்டைக்காயில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகையை தவிர்க்கும். உடலின் நச்சுகளை வெளியேற்றிவிடும்.
  10. காய்ந்த சுண்டைக்காய்ப் பொடியில், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.. அடிக்கடி உணவில் கலந்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி அடையும்
  ]]>
  sundaikai, health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/30/w600X390/sundaikkai1.jpg சுண்டைக்காய் https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/30/health-benefits-of-sundaikai-solanum-torvum-3266250.html
  3266217 மருத்துவம் உணவே மருந்து இன்று ஒரு தகவல்: சில எளிய மருத்துவக் குறிப்புக்கள் Wednesday, October 30, 2019 12:26 PM +0530
 • அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்
  •  
  • பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்.

  • தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.

  • நிலவேம்பு கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

  • சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.
  ]]>
  health https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/30/w600X390/gauva1.jpg கொய்யாப் பழம் https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/30/practical-health-tips-3266217.html
  3266196 மருத்துவம் உணவே மருந்து சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கான உணவு! கோவை பாலா Wednesday, October 30, 2019 11:07 AM +0530 கோவக்காய் கோதுமை நொய்க் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  கோதுமை நொய் - 100  கிராம்
  கோவக்காய் -  10
  தேங்காய்ப் பால் - 50 மி.லி
  கேரட் - 2
  பட்டாணி - சிறிதளவு
  கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  உப்பு - தேவையான அளவு
  தண்ணீர் - தேவையான அளவு

  செய்முறை 

  • முதலில் கோவக்காய் மற்றும் கேரட்டை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கி வைத்துள்ள கோவக்காய் மற்றும் கேரட் மற்றும் பட்டாணியை நீராவியில் வேகவைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  சூடு படுத்தவும்.
  • தண்ணீர் கொதிநிலை வந்தவுடன் அதில் கோதுமை நொய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கஞ்சி பதம் வந்தவுடன் அதில் நீராவியில் வேக வைத்த காய்களை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி பின்பு கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

  பயன்கள்

  • இந்தக் கஞ்சியில் காய்கள் நிறைந்திருப்பதால் தாதுக்கள், விட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.
  • சத்துக்கள் நிறைந்த கஞ்சியை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முடியும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  diabetes mellitus food https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/30/w600X390/food_for_diabetic_patients.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/30/diet-for-diabetic-patients-3266196.html
  3265364 மருத்துவம் உணவே மருந்து கிரீன் டீயில் இப்படியொரு சிக்கலா?  Uma Shakthi Tuesday, October 29, 2019 12:54 PM +0530  

  கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. உடல் எடை இழப்புக்கு பெரும்பாலான மக்கள் கிரீன் டீயை குடிக்கிறார்கள். அவ்வகையில் அண்மைக் காலங்களில் கிரீன் டீக்கு மவுசு அதிகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது, இது உங்கள் உடலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல் பலவீனத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். 

  கிரீன் டீயின் உள்ள சில கூறுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் சிலவகைப் புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள் இப்படி அனேகம் உள்ளன. இது இதய நோய்கள் வருவதற்குரிய அபாயங்களைத் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடை இழப்பு என்பது கிரீன் டீ குடிப்பது மிகவும் பிரபலமானது.  கிரீன் டீ வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி, உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க, பெரும்பாலான மக்கள் தேவையானதை விட கிரீன் டீயை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் அதிக கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானதா?

  கிரீன் டீயின் பக்க விளைவுகள்

  கிரீன் டீ ஆரோக்கியத்துக்கு நல்லதுதான், ஆனால் அதிக அளவில் அதை உட்கொண்டால், சில உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு க்ரீன் டீயை அதிகமாக உட்கொண்டால் சில பக்க விளைவுகள் உள்ளன. அவை

  1. ஆசிட் ரிஃப்ளக்ஸ்

  அதிக கிரீன் டீ குடிப்பது அதிலும் வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் வயிற்றை எதிர்மறையாக பாதிக்கும். இது நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரீன் டீயை அதிகமாக உட்கொள்வது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும்

  2. இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கிறது

  கிரீன் டீயின் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால், இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை குறைத்துவிடும். இரும்பு உடலுக்கு மிகவும் அத்யாவசியம். கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் எனும் வேதிப்பொருள் உணவில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கின்றன. எனவே, அதிகப்படியான கிரீன் டீயை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

  3. அதிகப்படியான காஃபின்

  அதிகப்படியான காஃபின் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். கிரீன் டீ குடிப்பதால் உங்கள் காஃபின் அளவு அதிகரிக்கும். இது உங்கள் தூக்க முறையைத் தொந்தரவு செய்யலாம் கவலை அல்லது வயிற்று வலியைக் கூட ஏற்படுத்தும். நாள் முழுவதும் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த நீங்கள் பழக வேண்டும். 

  4. தலைவலி ஏற்படலாம்

  அதிக கிரீன் டீ குடிப்பதும் தலைவலியும் ஒன்றுக்கு ஒன்றுடன் தொடர்புடையது. அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

  ஒரு நாளில் எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?

  க்ரீன் டீயை அதிக அளவு குடிப்பதால் இப்படி பல பக்க விளைவுகள் உள்ளதால், நீங்கள் கிரீன் டீயை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அருந்த வேண்டும். நீங்கள் ஒரு நாளில் 2- 3 கப் வரை கிரீன் டீ குடிக்கலாம். நிச்சயம் ஒரு நாளில் 3 கப் தாண்டக் கூடாது.
   

  ]]>
  green tea good or bad https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/tea_cafe.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/29/drinking-many-cups-of-green-tea-is-bad-for-health-3265364.html
  3265308 மருத்துவம் உணவே மருந்து காலை உணவைத் தவிர்க்காதீர்கள்! எச்சரிக்கை Tuesday, October 29, 2019 08:51 AM +0530  

  காலை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். நாள் முழுவதற்கும் தேவையான சக்தியை தரவல்லது காலை உணவுதான். எனவே தினமும் தவறாமல் காலை உணவை சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. அப்படி தவிர்த்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நாள் முழுவதும் அதிகரித்துவிடும் என எச்சரிக்கிறது ஆய்வு ஒன்று.

  காலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  டைப் 2 சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்த்தால் அது நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கும, தவிர மூன்று மாத ரத்தப் பரிசோதனை முடிவுகளில் HbA1C சராசரி ரத்த குளூகோஸ் அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் என்கிறார் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியலா ஜுகுபோவிஸ்.

  அறுபது வயதை நெருங்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் 22 நபர்களை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.  இரண்டு நாட்களில் அவர்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் ஒரே விதமான கலோரிகள் கிடைக்கும்படியான உணவு தரப்பட்டது.

  இதில் ஒரே ஒரு வித்யாசம் மட்டுமே. முதல் நாள் அவர்கள் காலை உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் மதியம் வரை சாப்பிடாமல் இருந்தார்கள். காலை உணவு சாப்பிடாமல் இருந்தவர்களின் குளூக்கோஸ் அளவு மதிய உணவு சாப்பிட்ட பின்னும் 268  mg/dl அதன்பிறகு இரவு உணவிற்குப் பிறகு 298 mg/dl எனும் அளவு கணக்கிடப்பட்டது. மற்ற தினத்தில் அதாவது காலை உணவு சாப்பிட்ட அன்று 192 mg/dl மற்றும் 215 mg/dl  எனவும் முடிவுகள் கண்டறியப்பட்டது.

  மதிய உணவிலும் இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்து அளவு குறைந்திருந்தால் பிரச்னை இருக்காது ஆனால் காலை உணவைத் தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.

  இந்த ஆய்வாளர்களின் தொடர்ச்சியாக பட்டினி கிடக்கும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரப்பை பாதிக்கும் என்று விளக்கினார்கள்.

  ]]>
  healthy food, breakfast, breakfast ideas https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/29/w600X390/food.jpg breakfast https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/29/dont-skip-breakfast-3265308.html
  3265219 மருத்துவம் உணவே மருந்து தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்க உதவும் ஆரோக்கியமான கஞ்சி கோவை பாலா Tuesday, October 29, 2019 08:51 AM +0530 பூங்கார் அரிசி பூண்டுக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  பூங்கார் அரிசி - 150  கிராம்
  பூண்டு - 50 கிராம்
  பாசிப் பருப்பு - 50  கிராம்
  கேரட் - 25  கிராம்
  மோர் - தேவையான அளவு
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் கேரட் மற்றும் பூண்டை நறுக்கி நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதிநிலை வந்தவுடன் பூங்கார் அரிசியைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் நீராவியில் வேக வைத்த பூண்டு, கேரட் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
  • பின்பு தேவைப்பட்டால் அதனுடன் மோர் சேர்த்து  குடிக்கவும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை தாய்ப் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும் ஆற்றல் நிறைந்தக் கஞ்சி.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com
   

  ]]>
  breast feeding https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/3/w600X390/baby.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/29/breast-milk-for-baby-3265219.html
  3264557 மருத்துவம் உணவே மருந்து உடல் எடை கூடவும், உடல் எடை குறையவும் உதவும் உன்னதமானக் கஞ்சி கோவை பாலா Monday, October 28, 2019 10:36 AM +0530 பார்லி கொள்ளுக் கஞ்சி
   
  தேவையான பொருட்கள்

  பார்லி - 100 கிராம்
  கொள்ளு -  100 கிராம்
  சுக்குத் தூள்  - சிறிதளவு
  மிளகுத் தூள் - சிறிதளவு
  மோர்  -      100 மி.லி
  எலுமிச்சம் பழச் சாறு தோலோடு - 10. மி.லி

  செய்முறை

  • முதலில் பார்லி மற்றும் கொள்ளை சுதத்தப்படுத்தி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு எடுத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள பொடியை போட்டு அதில் தேவையான  அளவு மெதுவாக கெட்டிப் படாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும்.
  • மாவு நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மோர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கி வைக்கவும்.
  • அதில் சுக்கு, மிளகுத் தூள், மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகவும்.
  • இந்த கஞ்சி உடல் எடை குறைய உதவும்.
  • அதே மாவில் தண்ணீருக்குப் பதிலாக பாலை கலந்து வேக வைத்து கஞ்சியாக்கி அதில் தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை  சேர்த்து பருகினால் உடல் எடை கூடும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சி உடல் எடையை குறைக்கவும். உடல் பயிற்சியினால் எடை குறைந்தவர்கள் உடல் எடை கூடவும் உதவும்  கஞ்சி.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com
   

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/10-1428646758-7-kambu-koozh.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/28/home-remedy-for-body-weight-and-body-loss-3264557.html
  3262942 மருத்துவம் உணவே மருந்து குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறலை சரி செய்ய உதவும் உணவு! கோவை பாலா Friday, October 25, 2019 09:23 AM +0530 நமது உடலின் தட்பவெப்ப நிலையை சமன் செய்வது நரம்பு மண்டலம். இந்த நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முரண்படும் போது நுரையீரல் மற்றும் இரைப்பையில் மாற்றம் நிகழும் அதாவது குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி இவற்றிலிருந்து விடுபட கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

  கொத்தவரங்காயில் இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது.

  கொத்தவரங்காய் (5), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புடலங்காய் (50 கிராம் - தோல், விதையுடன்), மூன்றையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி, வடிகட்டி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

  வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com 

  ]]>
  seasonal food, health tips, health and lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/25/w600X390/kothavarangai.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/25/healthy-recipe-for-winter-season-3262942.html
  3260985 மருத்துவம் உணவே மருந்து மண்ணீரல் வலுப்பட உதவும் உணவு கோவை பாலா Wednesday, October 23, 2019 09:53 AM +0530 வெண் பூசணி பார்லிக் கஞ்சி

  தேவையான பொருட்கள்
   
  வெண் பூசணிக்காய் தோல், விதையுடன் நறுக்கித் துண்டாக்கியது -   100 கிராம்
  பார்லி - 3 தேக்கரண்டி
  தண்ணீர் - அரை லிட்டர்
  உப்பு -  தேவையான அளவு

  செய்முறை 

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பின்னர் நீரில் பார்லியைப் போட்டு வேக வைக்கவும்.
  • பார்லி நன்கு வெந்தவுடன் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணித் துண்டுகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன்  இறக்கி வைத்து மிதமான சூட்டில் குடித்து வரவும்.

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/23/w600X390/spleen.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/23/a-food-to-make-your-spleen-strong-3260985.html
  3259359 மருத்துவம் உணவே மருந்து தொப்பை கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள்! Uma Shakthi Tuesday, October 22, 2019 01:42 PM +0530  

  ஆளி விதை (Flax Seeds) உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆளிவிதையா அதென்ன வெளிநாட்டு உணவு வகையா என்று நினைக்க வேண்டாம். நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். 100 கிராம் ஆளிவிதையில் 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் உள்ளது. இதை தொடர்ந்து பயன்படுத்துகையில் உடல் எடை குறைவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு ஏற்படக் கூடிய புரோஸ்டேட் கான்சர்,  இதய நோய்கள், உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்த்து செயல்படும் திறன் இந்த ஆளிவிதைக்கு உண்டு.

  மேலும் தைராய்ட் பிரச்னை, ஹார்மோன் இம்பாலன்ஸ் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். இது இதயம் மற்றும் மூளை செயல்திறன்களுக்கு நல்லது. இது முடி உதிர்வை நிறுத்தும். ஆளி விதையை சாப்பிட்டால் தோல் சுருக்கம் இருக்காது. உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். கண்களுக்கும் இது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளிவிதை பாதுகாக்கிறது. நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலை நீக்குகிறது. முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி, உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க உதவுகிறது. தொப்பை இருந்தால் தொடர்ந்து ஆளிவிதை சாப்பிட தொப்பை குறையும்.

  ஆளிவிதையில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் மற்றும் காவி நிறம் கொண்டவை. காவி. ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. மேலும் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ் உள்ளிட்ட நுண் சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. இவை உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்கள் ஆகும்.

  ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிடலாம். அல்லது இதனை பொடியாகத் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஆளிவிதைப் பொடியை தயாரிப்பது எப்படி?

  • ஒரு கடாயில் 3 டீஸ்பூன் ஆளி விதையைப் போடவும். மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
  • பின்பு அதனை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
  • தூளாக்கிய ஆளி விதையுடன் 2 டீஸ்பூன் ஓமம் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும் (பச்சையாகவே பயன்படுத்தலாம், வறுக்கத் தேவையில்லை) 
  • பின்பு இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஏற்கனவே அளிவிதையை ஒரு முறை மிக்ஸியில் அரைத்ததால் இரண்டாம் தடவை அரைபடும்போது நன்றாக தூளாகிவிடும்.
  • இந்தப் பொடியை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஆளிவிதை தூளைக் கலந்து குடிக்கலாம்.

  உங்கள் உடம்பில் எந்த பிரச்னை இருந்தாலும், ஒரே வாரத்தில் நல்ல பலன்கள் தெரியத் தொடங்கும்.

  ஆளிவிதை தினமும் எடுத்துக் கொண்டால் நிச்சயம் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஆளிவிதை ரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து அதிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு என்பதால்  உடல்நலத்தை மேம்படுத்தும். ஆளிவிதை எங்கே கிடைக்கும் என்று திகைக்க வேண்டாம். எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். இது விலை உயர்ந்தது எல்லாம் இல்லை. மலிவாகக் கிடைக்கக் கூடிய எளிய உணவுதான்.

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/21/w600X390/HEALTHY_flax_seeds.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/21/how-to-reduce-tummy-a-very-simple-way-using-flux-seeds-3259359.html
  3259399 மருத்துவம் உணவே மருந்து உடலுக்கு சக்தியையும் வலிமையையும் கொடுக்க உதவும் ஆரோக்கியக் கஞ்சி கோவை பாலா Monday, October 21, 2019 02:50 PM +0530 பச்சரிசி  முட்டைக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  பச்சரிசி நொய் -   150 கிராம்
  முட்டை -  2 எண்ணிக்கை
  தண்ணீர் -  ஒரு லிட்டர்
  உப்பு அல்லது  சர்க்கரை - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் பச்சரிசி நொய்யை களைந்து கொள்ளவும்.
  • முட்டையை தனியாக  வேகவைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பச்சரி நொய்யை போட்டு நன்கு கொதிக்க வைத்து கஞ்சி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் வேகவைத்த முட்டையைத் தூளாக்கிப் போட்டுக் கலந்து இறக்கி வைத்துக் குடிக்கலாம்.
  • குழந்தைகளுக்கு கஞ்சியுடன் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வரலாம்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலுக்கு சக்தியையும் வலிமையையும்  கொடுத்து நோய் எதிர்ப்பு  சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/18/w600X390/rice-milk.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/21/best-recipe-for-increasing-body-health-3259399.html
  3258747 மருத்துவம் உணவே மருந்து அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் நல்லதா? கெட்டதா? Sunday, October 20, 2019 03:54 PM +0530 அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் என்று சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

  அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தேநீா் அருந்தும் வழக்கத்தால் மூளை கட்டமைப்பு மேம்படுவதுடன், மூளையில் செல் நரம்புகளின் ஒருங்கமைப்பு அதிக செயல்திறன் கொண்டதாக ஆவது தெரிய வந்துள்ளது.

  அடிக்கடி தேநீா் அருந்துபவா்களின் மூளை அமைப்பு ரீதியில் மட்டுமன்றி, செயல் ரீதியிலும் மேம்பட்டதாக உள்ளது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  ]]>
  Tea https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/20/w600X390/lose-weight-tea-gq101031.jpg lose-weight-tea-gq101031 https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/20/tea-drinking-habit-good-or-bad-for-health-recent-study-3258747.html
  3258687 மருத்துவம் உணவே மருந்து பெண்கள் வைன் குடிப்பது நல்லதா? கெட்டதா? ஷக்தி Sunday, October 20, 2019 11:44 AM +0530  

  வைன் (wine) மட்டுமல்லாமல் ஹாட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் பெண்களிடையே பரவி வருகிறது. கல்லூரி பெண்கள், பப், பார்டிகளுக்குச் செல்லும் மேல் தட்டுக் கல்லூரி பெண்கள் என வைன் என்பது குளிர்பானம் போன்றதாகிவிட்டது.

  பெண்கள் வைன் சாப்பிடலாம், ஒரு 120 எம் எல். தினமும் குடிப்பதால் சருமத்துக்கு நல்லது, இதயத்துக்கு நல்லது என்றெல்லாம் யார் சொன்னார்கள்? சில பத்திரிகைகளும் அதை செய்தியாக வெளியிட்டு உள்ளது. வைனில் பாலிஃபினால் இருக்கிறது அது உடல் நலத்துக்கு மிகவும் தேவை என்கிறார்கள். ஆனால் உண்மையில் வைனில் 20 சதவிகிதம் ஆல்கஹாலும் உள்ளது என்பதை எப்படி இவர்கள் மறக்கலாம். தவறே இல்லை, கொஞ்சமாக குடிக்கலாம் என்று சொன்னவர் யார்? இது கலாச்சார சீர்கேடினை முன்வைப்பது மட்டுமல்லாமல் பெண்கள் குடிப்பதை நியாயப்படுத்தும் செயல்.

  ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் மதுப்பழக்கம் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. அதுவும் கொஞ்சமாக குடிக்கத் தொடங்கி அதற்கு அடிமையாகிவிடும் நிலைதான் இங்கு பலரிடம் நாம் காண்கிறோம். மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பதால் அந்த வியாபாரிகளுக்கு நல்லது அவ்வளவுதான். மற்றபடி அது உடல்நலத்துக்கு நல்லது என்று வணிகப்படுத்துவது சரியல்ல. வைனில் இருக்கும் அதே பாலிஃபெனால் க்ரீன் டீயிலும் உள்ளது. அதை குடிக்கலாம் அல்லவா?

  நம் ஊறில் கிடைக்கக்கூடிய சிவப்பு பப்பாளி, முருங்கைகீரையில் இல்லாத சத்துக்களே இல்லை. ஒரு மிகப் பெரிய வியாபார தந்திரம் வேக வேகமாக நம் உணவுகள் மறுத்து வருகிறது.

  வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு நாட்டு வெல்லம் (கெமிக்கல் சேர்க்காமல் உள்ள வெள்ளம் பழுப்பு நிறத்தில் உதிரியாக இருக்கும்), பனங்கற்கண்டு சாப்பிடலாம். அது பெண்களின் உடல்நலத்துக்கு நல்லது. இரும்புச் சத்து மட்டுமல்லாமல் பலவிதமான சத்துக்கள் அதில் உள்ளன. கடைகளில் கிடைக்கும் சர்க்கரை எல்லாமே க்ரிஸ்டலைட் சுகர், அதாவது வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை. அதை சாப்பிடுகையில் நேரகாக ரத்தத்தில் சேரும். அது உடல்நலத்துக்கு கெடுதல்.

  மாறாக பனை வெல்லம் சாப்பிடும்போது அது மெதுவாக ரத்தத்தில் சேரும். நாட்டு வெல்லம் சத்தாக மாறி ரத்தத்தில் சேர 40 நிமிஷமாகும். மெதுவாக உடலில் சர்க்கரை சேரும் போது அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த வெள்ளைச் சர்க்கரை உடனடியாக் க்ளூகோஸாக மாறி அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

  உப்பை எடுத்துக் கொண்டால், நேஷனல் ஐயோடின் பாலிஸி என்கிறார்கள். இப்போது நாம் சாப்பிடுவது சரியான உப்பா? நிச்சயம் இல்லை. அது சோடியம் க்ளோரைட் என்ற அமிலம். அதைத்தான் உணவில் சேர்த்து தினமும் சாப்பிடுகிறோம். நாம் எளிதாகக் கிடைக்கக் கூடிய கல் உப்பைத்தான் சாப்பிட வேண்டும். அதில்தான் கடல்சார் நுண்ணிய கனிமங்கள் பல உள்ளன. சந்தையில் கிடைக்கும் இந்த ஐயோடைஸ்ட் சால்ட் ரத்தக் கொதிப்புக்கு காரணம் என்கிறார்கள்.

  சந்தையை முன்னிறுத்தி வணிகப்படுத்துவதால் உப்பு, சர்க்கரை என அடிப்படையான விஷயங்களில் கூட நோயை உருவாக்க்கும் கூறுகள் அதிகமுள்ளன. எனவே இவற்றைத் தவிர்த்து நம் மண்ணில் இயற்கையாக கிடைக்கும் இனிப்பு மற்றும் உப்பை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.

  கிவி, க்ரீன் ஆப்பிள், ட்ராகன் ஃபுட், ஸ்டாராபெரி உள்ளிட்ட வெளிநாட்டு பழங்கள் என்றைக்கோ பறிக்கப்பட்டு, நைட்ரஜன் ப்ளஷிங் செய்யப்பட்டு, சில பல வேதியல் விஷயங்கள் சேர்க்கப்பட்டு, குளிர்பதன வண்டியில் அடைக்கப்பட்டு நெடுந்தூரம் பயணித்து, நம்மூருக்கு வந்து சேர கிட்டத்தட்ட 40 லிருந்து 60 நாட்கள் ஆகிவிடும். அதன் பிறகு அது கடைகளில் டீப் ப்ரீஸரில் வைக்கப்பட்டு நமக்கு விற்கப்படுகிறது. அதில் என்ன சத்துக்கள் இருக்க முடியும். மாறாக நம் கிராமப்புறங்களில் விளைந்த பழங்கள் ஒரே நாளில் கடைகளில் கிடைக்கிறது. அதில்தான் இயற்கையாக நிறைய சத்துக்கள் இருக்கும். மேலும் நம் மண்ணில் விளைந்தவைதான் நம் உடலுக்கு உகந்தது.

  தேசிய உணவுக் கழகத்தின் பரிந்துரையின்படி எந்தக் கனி சிறந்த கனி என்றால் அது நம் ஊரில் கிடைக்கும் சிவப்பு கொய்யாதான். அதாவது நாட்டு கொய்யா. அதில்தான் எல்லா சத்துக்களும் நிறைந்ததுள்ளது. அந்தப் பழத்துக்கு இருக்கும் சத்துக்கள் வேறு எதற்கு இல்லை என்பதுதான் உண்மை.புற்றுநோயை தடுக்கக் கூடிய லைகோபின் அதில் உள்ளது. 

  உணவில் அரிசியைத் தவிர்த்து, சிறுதானியங்கள் பயன்படுத்துவதும் உடல்நலத்துக்கு நல்லது. தினை, ராகி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களில் செலினியம், மாங்கனீஸ், மற்றும் பல்வேறு நார்ச்சத்து, உடலுக்கு நன்மை செய்யும் பாலிஃபனால் ஆகியவை உள்ளது. உணவு குறித்த விழிப்புணர்வுடன் அனைவரும் நம் இயல்புக்கும் இயற்கைக்கும் மாறினால் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழலாம்.

  நன்றி - மருத்துவர் கு.சிவராமன்

  ]]>
  wine https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/9/w600X390/WineGlassFace.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/20/women-drinking-wine-is-not-good-for-health-3258687.html
  3258672 மருத்துவம் உணவே மருந்து உடல் இளைக்க உதவும் உன்னதமானக் கஞ்சி கோவை பாலா DIN Sunday, October 20, 2019 08:51 AM +0530  

  கோதுமை நொய்க் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  கோதுமை நொய் - 200  கிராம்
  தண்ணீர் - தேவையான அளவு
  தேன் - இரண்டு தேக்கரண்டி

  செய்முறை

  • முதலில்  கோதுமை நொய்யை வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • கொதித்த தண்ணீரில் வறுத்த கோதுமை நொய்யை சேர்த்து வேகவைத்து கஞ்சியாக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதனை இறக்கி அதனுடன் தேன் சேர்த்து பருகி வரவும்.

  பயன்கள்

  இந்த கஞ்சியை உடல் இளைக்க வேண்டுமென்பவர்கள்   தொடர்ந்து குடித்து வந்தால் உடல்  இளைத்து அழகிய தோற்றத்தை கொடுக்கும் உன்னதமானக் கஞ்சி.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/20/w600X390/Strength-train.jpg weight loss https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/20/home-remedy-for-weight-loss-3258672.html
  3256942 மருத்துவம் உணவே மருந்து ஹார்மோன் கோளாறுகளை சீர் செய்யும் அருமருந்து! கோவை பாலா Friday, October 18, 2019 11:31 AM +0530 சம்பா அரிசி வெந்தயக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  சம்பா அரிசி  -  200 கிராம்
  வெந்தயம் - 50 கிராம்

  செய்முறை

  • முதலில் சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை  இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள  சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து  நன்கு கொதித்து கஞ்சியாக்கி இறக்கி வைக்கவும்.

  பயன்கள்
   

  • இந்தக்  கஞ்சி அனைத்து பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். இதனை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் கருப்பைச் சார்ந்த குறைபாடுகள் அனைத்தும் தீரும்.
  • கர்ப்பபை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • கர்ப்பபையில் கட்டி வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.
  • ஹார்மோன் கோளாறுகளை சீர் செய்யும் அருமருந்து.
  • கர்ப்பபையில் உள்ள சளி சவ்வுகளை சரியான  தடிமனாக பராமரிப்பதன் மூலம் கர்ப்பபை ஆரோக்கியமாகத் திகழும் உன்னதமானக் கஞ்சி.
  • தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  hormone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/woman_sad-apha-100112.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/18/hormonal-imbalances-and-home-remedies-3256942.html
  3252041 மருத்துவம் உணவே மருந்து உடல் பருமன் மற்றும் ஊளைச் சதைகளையும் குறைக்கும் உணவு இது Wednesday, October 16, 2019 01:38 PM +0530 பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. 

  • பிரண்டை, நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
  • நெய் விட்டு பிரண்டைத் தண்டை வதக்கி துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறுகுடல், பெருங்குடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.

  மேலும் படிக்க: ​வடஇந்திய உணவுகளை அள்ளித் தரும் வேலூர்!

  • பிரண்டையை வதக்கி அத்துடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும். 
  • இளம் பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை, மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

  • பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். 
  • பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
  • பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும்.
  • உடலில் கொழுப்புச் சத்துகள் நிறைந்துள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

  • பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
  • எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம் பெறும்.

  - கே.ஆர். உதயகுமார்
   

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/29/w600X390/pirandai.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/11/how-to-reduce-body-weight-easily-3252041.html
  3254554 மருத்துவம் உணவே மருந்து இளைத்த உடலைத் தேற்ற இதைச் செய்யுங்கள் கோவை பாலா Tuesday, October 15, 2019 09:54 AM +0530 பாதாம் பருப்பு பச்சரிசிக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  பச்சரிசி நொய் - 250 கிராம்
  பாதாம் பருப்பு - 30  கிராம்
  சுரைக்காய் விதை - 20 கிராம்
  வெள்ளரி விதை - 20 கிராம்
  கசகசா - 10 கிராம்
  தேங்காய் துருவல் - 50 கிராம்
  சீரகம் - ஒரு தேக்கரண்டி
  பூண்டு - 6 பல்
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • அதில் பச்சரிசி நொய்யை சேர்த்து நன்கு  கொதிக்க வைக்கவும்.
  • தேங்காய் துருவல், கசகசா, பூண்டு இவை மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சரிசி நொய் நன்கு வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து  மற்றும் இதனுடன் பாதாம் பருப்பு, சுரைக்காய், வெள்ளரி விதை மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி  கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து இளம் சூட்டில் பருக வேண்டும்.

  பயன்கள்

  • இந்த கஞ்சியை உடல் இளைத்தவர்கள் குடித்து வந்தால் உடல் பருக்கும்.
  • உடல் சூடு தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும்.
  • நெஞ்சில் உள்ள கபத்தைக் கரைக்கும் மற்றும் இருமலுக்கு அருமருந்தாகும்.
  • படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/10-1428646758-7-kambu-koozh.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/15/home-remedy-for-weight-gain-3254554.html
  3253961 மருத்துவம் உணவே மருந்து சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சலை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி கோவை பாலா Monday, October 14, 2019 10:34 AM +0530   
  வெண் பூசணி பார்லிக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  வெண் பூசணிக்காய் தோல், விதையுடன் நறுக்கித் துண்டாக்கியது - 100 கிராம்
  பார்லி - 3 தேக்கரண்டி
  தண்ணீர் - அரை லிட்டர்
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பின்னர் நீரில் பார்லியைப் போட்டு  வேக வைக்கவும்.
  • பார்லி நன்கு வெந்தவுடன் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணித் துண்டுகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன்  இறக்கி வைத்து மிதமான சூட்டில் குடித்து வரவும்.

  பயன்கள்

  • இந்தக் கஞ்சியை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் மண்ணீரல் பலப்படும்.
  • மேலும் வெயில் காலங்களில் உண்டாகும் அதிகமான உஷ்ணத்தை தடுக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.
  • நீர்ச்சுருக்கு மற்றும் சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சல் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/koluthum-veyilukku-ugantha-poosani.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/14/home-remedy-for-uti-3253961.html
  3253277 மருத்துவம் உணவே மருந்து அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா? உடல் பலம் அதிகரிக்க இதை சாப்பிடுங்க! சினேகா Sunday, October 13, 2019 02:03 PM +0530  

  சத்து மாவு கஞ்சி

  ஒரு தம்ளர் நவதானிய சத்துமாவு கஞ்சியில் குறைந்தது 300 கலோரிகளாவது இருக்கும். இது நீங்கள் சேர்க்கும் தானியத்துக்கு ஏற்றாற்போல் மாறுபடும். நவதானிய சத்துமாவைத் தயாரிக்க தேவைப்படும் தானியங்கள் கேழ்வரகு, சாமை, வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, கோதுமை, சோளம் மற்றும் ஓட்ஸ். சுவைக்காகவும் மேலும் சத்துக்கள் தேவை எனில் முந்திரி, பாதாம், ஜவ்வரிசி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

  எருமைப் பால்

  ஒரு தம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் காலை ஒரு தம்ளர் இரவில் ஒரு தம்ளர் எருமைப் பால் பருகி வந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.

  பாதாம் பால்

  சிலருக்கு எருமைப் பால் பிடிக்காது. அவர்கள் ஹாட் சாக்லேட் அல்லது பாதாம் பால் பருகலாம். ஒரு தம்ளர் பாதாம் பாலில் 158 கலோரிகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்கச் செய்ய தினமும் இரண்டு தம்ளர் பாதாம் பால் குடித்தால் கணிசமான அளவில் உடல் எடை அதிகரிக்கும்.

  லஸ்ஸி

  லஸ்ஸியில் 159 கலோரிகள் உள்ளது. லஸ்ஸி மிகவும் சுவையும் சத்தும் நிறைந்த பானம். இது ப்ரோபயாடிக் சத்துக்கள் நிறைந்தது. கெட்டியான தயிரில் சர்க்கரை சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும். 

  ஸ்மூத்தி

  ஒரு தம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் உள்ளன. இதில் ப்ரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. தவிர கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய இதை தினமும் குடிக்கலாம்.

  தேங்காய் பால்

  சிலருக்கு பால் பொருட்கள் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் தேங்காய் பால் அருந்தலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவின்றி இதில் உள்ளது. கோடை காலங்களில் ஒரு தம்ளர் தேங்காய் பாலை குடித்தால் உடல் வெப்பத்தின் அதீத தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும். உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றாமல் இருக்கும். 

  பழரசம்

  ஒரு தம்ளர் பழரசத்தில் 200-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். அந்தந்த பழங்களுக்கு ஏற்றபடி கலோரி மாறுபடும். பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால்தான் அதன் முழுப்பலனைப் பெற முடியும். பழரசமாகத் தயாரித்துப் பருகுகையில், அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.  எந்தவகை ஜூஸானாலும் அதை அதிகாலையில் குடித்தால் உடல் எடை நன்கு அதிகரிக்கும். 

  மாம்பழ மில்க் ஷேக்

  மாம்பழத்தில் 130 கலோரிகள் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், மாம்பழத்தையும் பாலையும் ஒன்றாகப் பருகுங்கள். ஒரு தம்ளர் மாம்பழ மில்க் ஷேக்கில் அந்தளவுக்கு கலோரிகள் அதிகம். மாம்பழம் தவிர்த்து ஆப்பிள், சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கும் உடல் எடை அதிகரிக்க உதவும்.

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/13/w600X390/coconut-milk.gif https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/13/few-health-drinks-to-boost-energy-3253277.html
  3253267 மருத்துவம் உணவே மருந்து உடல்வலிமையை அதிகரிக்கும் பருத்தி விதை சம்பா அரிசிக் கஞ்சி கோவை பாலா DIN Sunday, October 13, 2019 11:09 AM +0530  
  தேவையான பொருட்கள்

  பருத்தி விதை - 50  கிராம்
  சம்பா அரிசி - 50 கிராம்
  பச்சரிசி - 50 கிராம்
  தேங்காய்ப் பால் - 100 மி.லி
  பசும்பால் - 100 மி.லி
  பாதாம் பருப்பு - 5 எண்ணிக்கை
  அக்கிராகாரம் - ஒரு துண்டு
  சிற்றரத்தை - ஒரு துண்டு
  கசகசா - ஒரு தேக்கரண்டி
  பனங்கற்கண்டு - சிறிதளவு 

  செய்முறை

  • முதலில் பருத்தி விதை, சம்பா அரிசி, பச்சரிசி இவை மூன்றையும் முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்துக் கொள்ளவும்.
  • பசும்பால், தேங்காய்ப் பால்  இரண்டையும் ஒன்றாகக் கலந்து பால்பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பை முதல் இரவு ஊறப்போட்டு மறுநாள் தோல் நீக்கி பாதாம் பருப்பை  அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்து கலந்து அடுப்பிலேற்றிப் பதத்தில் கீழே இறக்கி வைத்து அதில் அக்கிராகாரம், சிற்றரத்தை, கசகசா, பனங்கற்கண்டு இவற்றைத் தூள் செய்து சேர்த்துக் கலக்கி காலையில் குடித்து வரவும்.
  • பால் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் கலந்து குடிக்கலாம்.
  • சிறு குழந்தைகளுக்கு அளவை குறைத்து  தரலாம்.

  பயன்கள்

  இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் கொடுக்கும் ஆற்றல் நிறைந்துள்ளதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம்.
  நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/24/w600X390/gut_good_foods.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/13/healthy-recipes-for-daily-life-3253267.html
  3252026 மருத்துவம் உணவே மருந்து சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமா? Friday, October 11, 2019 05:52 PM +0530
 • தோசைக்கு அரிசி ஊற வைக்கும் போது கைப்பிடி அளவு துவரம் பருப்பு சேர்த்துக் கொண்டால், தோசை வாசனையாகவும் முறுகலாகவும் இருக்கும்.
  • அவ்வப்போது ஃபிரஷ்ஷாக வீட்டிலேயே கொஞ்சமாக ரவா லட்டு செய்ய, நான்கு தேக்கரண்டி ரவையை வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். சற்று ஆறியதும் மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதே போன்று நான்கு தேக்கரண்டி சர்க்கரையை, இரண்டு ஏலக்காய் சேர்த்து பொடித்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உருக்கிய நெய் விட்டு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து பத்தே நிமிடங்களில் ரவா லட்டு செய்து விடலாம்.
  • குழம்பு, சூப் செய்யும் போது நீர்த்து விட்டால், திக்காக வருவதற்கு சோள மாவு கரைத்து ஊற்றுவோம். அதற்குப் பதிலாக ஓட்ஸை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பொடி செய்தோ அல்லது தண்ணீர் ஊற்றி அரைத்தோ குழம்பு, சூப் கொதிக்கும் போது சேர்த்துக் கொதிக்க வைத்தால் ருசியும் மாறாது. ஆரோக்கியத்திற்கும் நல்லது.

  • திடீர் விருந்தினர்களுக்கான எமர்ஜென்சி பாயாசம் தயாரிக்க, மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, சத்து மாவு இவற்றில் ஏதாவது ஒரு மாவை இரண்டு தேக்கரண்டி எடுத்து நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (சுமார் 2-3 நிமிடங்கள்) அதிலேயே இரண்டு டம்ளர் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நான்கு தேக்கரண்டி சர்க்கரையும் அதில் சேர்க்கவும். பால் நுரைத்து வரும் போது அடுப்பை நிறுத்தி விடவும். சிவக்க வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்தால் இன்ஸ்டன்ட் பாயாசம் தயார்.
  • வடைக்கு உளுந்து அரைக்கும் போதே, வேறொரு கிண்ணத்தில் அரிசியையும் ஊற வையுங்கள். (ஆழாக்கு உளுந்திற்கு ஒரு பிடி அரிசி என்ற அளவில்) உளுந்தை பாதி அரைத்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு மேலும் நைசாக அரைக்கவும். வடை மொறு மொறுவென ருசியாக இருக்கும். ஆனால் தயிர் வடைக்கு அரிசி சேர்த்து அரைக்க வேண்டாம்.
  • சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெய்யில் வறுத்து விட்டு கிழங்கை போட்டால் ரோஸ்ட் மொறு மொறு வென்று சுவையாக இருக்கும்.

  • இட்லிக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் அல்லது பொடித்த மிளகு, கொத்துமல்லித் தழை இவற்றைச் சேர்த்துப் பிசைந்து (தேவையானால் சிறிது உப்பு சேர்த்து) போண்டா தயாரித்தால் மாலை நேர டிபன் கவலை தீர்ந்தது.
  • புளித்த மோர் இருந்தால் அதில் புழுங்கல் அரிசியும், உளுத்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமில்லை. தோசை ருசியாக இருக்கும்.
  • அரிசி உப்புமாவை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இதனால் உப்புமா மிகுந்து விடும். இப்படி மிகுந்து விடும் உப்புமாவில் ஒரு வெங்காயத்தை நறுக்கி போடுங்கள். தேவையான அளவு முட்டை கோஸ் மற்றும் கேரட்டை துருவிப் போடுங்கள். எல்லாவற்றையும் கலந்து நன்றாக பிசைந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி முறுகலாகப் பொரித்து எடுங்கள். மிகவும் ருசியான இந்த வெஜிடபிள் வடை நிமிடங்களில் காலியாகிவிடும்.

  (எளிய சமையல் குறிப்புகள்) நூலிலிருந்து - சி.பன்னீர்செல்வம்
   

  ]]>
  cooking https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/2/w600X390/cooking_tips.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/11/arby-fry-tips-3252026.html
  3251932 மருத்துவம் உணவே மருந்து அதிகப்படியான சளிக் கட்டைக் நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு கோவை பாலா Friday, October 11, 2019 12:15 PM +0530  

  நரிப்பயிறு கஞ்சி

  தேவையான பொருட்கள்

  நரிப் பயிறு - 150 கிராம்
  பால் - 150 மி.லி
  கற்கண்டு - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  காய்ச்சவும்.
  • நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி இரண்டையும் நன்கு கலக்கி  ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் 

  • இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம் உடையவர்கள்  தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.
  • படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால்  பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/11/w600X390/MILK_SHAKE.JPG https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/11/home-remedy-for-cold-and-cough-3251932.html
  3250532 மருத்துவம் உணவே மருந்து நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி கோவை பாலா Wednesday, October 9, 2019 10:05 AM +0530 தேவையான பொருட்கள்

  கோதுமை - 50  கிராம்
  புழுங்கலரிசி - 50  கிராம்
  பசும் பால்  - 100 மி.லி
  அக்ரூட் - 20  கிராம்
  சாரைப் பருப்பு - 20  கிராம்
  நெய் - 2 தேக்கரண்டி
  பனங்கற்கண்டு -  தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
  • காலையில் ஊற வைத்த கோதுமை மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும்.
  • அக்ரூட் மற்றும் சாரைப் பருப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி  நெய்யை விட்டு வறுக்கவும்.
  • வறுத்து வைத்துள்ள பருப்புகளை பிழிந்து வைத்துள்ள பாலில் சிறிதளவு விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை  எஞ்சியுள்ள முக்கால் பங்கு பாலில்  கலந்து கொள்ளவும்.
  • அனைத்தையும் பசும்பாலுடன் சேர்த்து அதனுடன்  தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால்  பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/9/w600X390/knol-kohl-avarampoo-soup-recipe-diabetes-control-soup.jpg கோதுமை புழுங்கலரிசிக் கஞ்சி https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/09/food-for-diabetes-3250532.html
  3249917 மருத்துவம் உணவே மருந்து எலும்புருக்கி எனப்படும் T.B நோய் மற்றும் நாட்பட்ட சுரத்தையும் விரட்டும் அற்புதமான கஞ்சி கோவை பாலா Tuesday, October 8, 2019 01:22 PM +0530 தண்ணீர்விட்டான் கிழங்குக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  தண்ணீர்விட்டான் கிழங்கு -  50 கிராம்
  பால் -  அரை லிட்டர்
  நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கைத் தூளாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் தூளாக்கி வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்குத் தூளை போடவும்.
  • அதனை நன்கு கலக்கி  அடுப்பிலேற்றி நன்கு காய்ச்ச வேண்டும்.
  • பால் நன்கு காய்ந்த பிறகு தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை எலும்புருக்கி எனப்படும் T.B நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அற்புதமான பலனைப் பெறலாம்.

  மேலும் இந்தக் கஞ்சியை நாட்பட்ட சுரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்  குடித்து வந்தால் எந்த நிலையில் இருந்தாலும் குணமாக்கக் கூடிய அற்புதமான ஆற்றல் நிறைந்த உன்னதமானக் கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/6/w600X390/pineapplepayasam.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/08/எலும்புருக்கி-எனப்படும்-tb-நோய்-மற்றும்-நாட்பட்ட-சுரத்தையும்-விரட்டும்-அற்புதமான-கஞ்சி-3249917.html
  3249834 மருத்துவம் உணவே மருந்து கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உன்னதமான கஞ்சி கோவை பாலா Monday, October 7, 2019 01:24 PM +0530 முருங்கையிலை கண்டந்திப்பிலிக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  பச்சரிசி நொய் - 150 கிராம்
  முருங்கையிலை - ஒரு கைப்பிடி
  வாய்விடங்கம் - 10 கிராம்
  கண்டந்திப்பிலி - 10 கிராம்
  மிளகு - 10
  இந்துப்பு - தேவையான அளவு
  மோர் - 200  மி.லி

  செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில்  ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  • அதில் வாய்விடங்கம், கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் முருங்கையிலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • நீரை கொதிக்க வைத்து  400 மி.லி அளவாக சுண்ட வைக்கவும்.
  • பின்பு சுண்ட வைத்த நீரில் பச்சரிசி நொய்யை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • கொதித்த கஞ்சியில் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கஞ்சியாக்கி  கொள்ளவும்.
  • இறுதியில் கஞ்சியுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கி வைக்கவும்.

  பயன்கள்

  இந்தக் கஞ்சியை நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு ஆற்றைலை அதிகரிக்க செய்யும் அற்புதமான கஞ்சி.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  health tips, healthy life, food, foodie https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/7/w600X390/000karkidaka_kanji2.jpg முருங்கையிலை கண்டந்திப்பிலிக் கஞ்சி https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/07/home-remedies-to-increase-stamina-3249834.html
  3249221 மருத்துவம் உணவே மருந்து உங்களுக்கு பனை நுங்கு பாயாசம் பிடிக்குமா? சத்து நிறைந்த ரெஸிபி இதோ கோவை பாலா Sunday, October 6, 2019 10:13 AM +0530 தேவையான பொருட்கள்

  தோல்நீக்கிய பனை நுங்கு  - கால் கிலோ (சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
  வறுத்த சேமியா  - 50 கிராம்
  முந்திரிப் பருப்பு  - 50 கிராம்
  திராட்சை - 50 கிராம்
  ஏலக்காய் - 10 கிராம்
  நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்
  தேங்காய் பால் - தேவையான அளவு

  செய்முறை

  முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்து பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  பின்னர் வறுத்த சேமியா மற்றும் சிறு துண்டுகளாக்கப்பட்ட பனை நுங்கு ஆகியவற்றை கொதித்த நீரில் சேர்த்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி பாயாசம் செய்வதை போல் தயார் செய்து இறக்கிய பின்பு தேங்காய் பாலையும் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும் .

  பயன்கள்

  இந்த பாயாசத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் தைராய்டு குறைபாடு சீராகும் . ரத்த சோகை குணமாகும். உடல் வலிமை பெறும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/6/w600X390/pineapplepayasam.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/06/panai-nungu-recipe-3249221.html
  3247148 மருத்துவம் உணவே மருந்து தினமும் எத்தனை முட்டைகளைச் சாப்பிடலாம்? சினேகா Thursday, October 3, 2019 10:32 AM +0530 ஒரு சிலர் உடல்எடையை குறைக்க முட்டை டயட் எடுத்துக் கொள்கிறார்கள். அதென்ன முட்டை டயட்? அவர்களின் இந்த டயட் ப்ளான் வித்யாசமானதாக இருக்கும். காரணம் பத்து முட்டைகளை தினமும் அவர்கள் சாப்பிடுவார்கள்.

  முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவாகும். முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது. கொழுப்பு சத்து இருப்பதால் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கக் கூடும். உடல் எடை அதிகரிக்கும் என்றால் டயட் உணவில் எப்படி அதை சேர்க்க முடியும்?அந்த டயட்டை எடுத்துக் கொள்பவர்கள் முட்டையை இணை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. முழு முட்டைதான் முக்கிய உணவே.

  முட்டையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது என்பது சந்தேகமேயில்லை. ஆனால் உடலிலுள்ள HDL என்கின்ற நல்ல கொழுப்புதான் அதிகமாகிறது. இது இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பான LDL-யை, இதயத்திலிருந்து வெளியேற்றி, கல்லீரலுக்கு அனுப்புகிறது. அங்கே கெட்ட கொழுப்பு முழுவதும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது. இதனால் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் அது உடலில் HDL அளவை அதிகப்படுத்திகிறது. கொழுப்பு குறைந்து உடலை இளைக்க வைக்க உதவுகிறது. 

  இந்த டயட் எல்லாம் நமக்கு எதற்கு என்று நினைப்பவர்கள் ஒரு நாளில் சராசரியாக இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். சிலர் முட்டையை உடைத்து பச்சையாக அப்படியே சாப்பிடுவார்கள். சிக்ஸ் பேக், எய்ட் பேக் என உடலை ஜிம் பாடியாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானாலும் அது சரியாக வரும், பொதுவாக அனைவரும் வேக வைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது. காரணம் அதில் பச்சை முட்டையை விட இரண்டு மடங்கு அதிகமாக சத்து இருக்கிறது.

  ஒரு முழு முட்டையில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

  லியூடின் மற்றும் ஜீ ஜான்தின் என்கின்ற இரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் முட்டையில் உள்ளது. முட்டையில் ஃபோலேட் என்கின்ற மினரல் உள்ளது. மேலும் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு - 5 கிராம், புரோட்டின் - 6 கிராம் உள்ளது. கொலைன் என்கின்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவை. அது மட்டுமில்லாமல் உடலின் பல இயக்கங்களுக்கும் கொலைன் தேவைப்படுகிறது. இந்த கொலை முட்டையில் அதிகமாக உள்ளது.

  நம்முடைய உடல் செயல்கள் அனைத்துக்கும் மொத்தம் 21 அமினோ அமிலங்கள் தேவை. அவற்றில் 12 அமினோ அமிலங்கள் நம் உடலிலேயே உருவாகக் கூடியவை. மீதம் உள்ள 9 அமினோ அமிலங்கள் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். முட்டையில் இந்த எஸென்ஷியல் அமினோ அமிலங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

  முட்டையில் உள்ள புரதச்சத்து குழந்தைகளுக்கு நல்லது. தினமும் காலையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. உடல் நலத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் குறைவின்றி முட்டையில் உள்ளது. எனவே சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களுக்கும் சரி தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் போதும். அதைவிட சிறந்த சத்துணவு வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் அரசுப் பள்ளிச் சத்துணவு திட்டத்தில் முட்டையை கட்டாயமாக சேர்த்தார்கள்.

  ]]>
  eat eggs, how many eggs, daily eat eggs, egg for health, an egg a day, two eggs a day, egg dosage, முட்டை உணவு, சத்துணவு முட்டை, தினம் ஒரு முட்டை, முட்டை சாப்பிடுங்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/3/w600X390/Z_EGG_EATING.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/03/how-many-eggs-one-can-eat-per-day-3247148.html
  3247078 மருத்துவம் உணவே மருந்து ரத்த சோகையை நீக்கும் அற்புதமான உணவு கோவை பாலா Thursday, October 3, 2019 09:20 AM +0530 நீலம்சம்பா பூண்டுக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  நீலச்சம்பா அரிசி - ஒரு கப்
  பூண்டுப் பல் - 12 பல்
  வெந்தயம் - கால் ஸ்பூன்
  சீரகம் - கால் ஸ்பூன்
  சுக்கு - ஒரு துண்டு
  சித்தரத்தை - ஒரு துண்டு
  திப்பிலி - 5
  தேங்காய்ப் பால் - ஒரு கப்
  இந்துப்பு - தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் நீலச் சம்பா அரிசியைக் குருணையாக்கி நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  • ஒரு கப் நீலச் சம்பா குருணை அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • இதனுடன் உரித்த பூண்டு , சீரகம் , வெந்தயம் மற்றும் உப்பு ஆகியவற்றைப் போட்டு குருணையை வேக வைக்கவும்.
  • ஒரு துணியில் சுக்கு மற்றும் சித்தரத்தை கட்டி கஞ்சி சிறிது சூடாக இருக்கும்பொழுது பாத்திரத்தில் இந்த  இந்த துணி முடிச்சை போடவும்.
  • குருணை  நன்கு வெந்து கஞ்சியாக வந்தவுடன் துணியை வெளியே எடுத்து விடவும்.
  • வெந்தக் கஞ்சியில் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு மசித்துவிட்டு இறக்கி வைக்கவும்.

  பயன்கள்

  • மிகவும் சத்து நிறைந்த இந்தக் கஞ்சியை  ரத்தச் சோகை உள்ளவர்கள் குடித்து வந்தால் ரத்தச் சோகை நீங்கும்.
  • தாய்மார்களுக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுக்கும்.
  • தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடிய உன்னதமான கஞ்சி நீலம்சம்பா பூண்டுக் கஞ்சி.
  • தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com
   

  ]]>
  healthy food, diet food, hemoglobin count, blood count, நீலம்சம்பா அரிசி, ஹெல்த், உடநலம் பெற, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/3/w600X390/24-Wonderful-Benefits-Of-Asafoetida-On-Your-Health-And-Skin1.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/03/home-remedies-for-increasing-your-hemoglobin-count-3247078.html
  3246600 மருத்துவம் உணவே மருந்து உங்கள் வீட்டு கொலுவில் சுவையும் சத்தும் நிறைந்த சுண்டல் தயாரிக்க சில டிப்ஸ் Wednesday, October 2, 2019 01:10 PM +0530
 • பட்டாணி சுண்டலை வேக வைத்து இறக்கும்போது கடுகு, கறிவேப்பிலையுடன் சிறிது மிளகுப் பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
  • சுண்டலுக்கு பட்டாணி வேக வைக்கும் போது அதிகம் வெந்துவிட்டால், பட்டாணி மேல் ஐஸ்வாட்டரை ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் சுண்டல் பக்குவமாக மாறியிருக்கும். பின்பு சுண்டல் தயார் செய்து பரிமாறலாம்.

  • எந்தவகை சுண்டலாக இருந்தாலும் தாளிதம் செய்து இறக்கிய பின் இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடித்துத் தூவினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
  • உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவைகளை பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால், எந்த சுண்டல் செய்தாலும், அதில் 1 தேக்கரண்டி தூவி இறக்கினால் சுண்டல் சுவை பிரமாதமாக இருக்கும்.
  • பயறு சுண்டல் செய்ய எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைத்துவிட்டு மறுநாள் திறந்து பார்த்தால் முளைக் கட்டிய பயறு தயார் ஆகிவிடும். பின்னர் சுண்டல் செய்தால் சத்தான சுண்டலாக இருக்கும். 

  • சாட் மசாலா பொடி வாங்கி வைத்துக் கொண்டு, எந்த வகை சுண்டல் செய்தாலும் இறுதியில் 1 தேக்கரண்டி சாட் மசாலா தூவி இறக்கினால் சுவை அபாரமாக இருக்கும். 
  • கொலுவில் மலைகளுக்கு விளக்குகள் அமைக்கும் போது மலைப்பாதையில் சிறிய கலர் மெழுகுவர்த்திகளை சுற்றி நிறுத்தினால் மலையைப் பார்க்க அழகாக இருக்கும்.
  • பூ ஜாடியில் எப்போதும் பூக்களை வைத்தே அலங்கரிப்பதை விட மாறுதலுக்காக நெற்கதிர், சோளக்கதிர் போன்றவற்றை கதிரோடு வாங்கி வந்து வைக்கலாம். வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.
  • பேப்பர் பிளேட்டின் நடுவே சிறிய ஓட்டைப் போட்டு அதில் பேனாவை சொருகி பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைத்தால் நிழற்குடை அமைத்தது போன்று அழகாக இருக்கும். 

  -ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

  ]]>
  golu, navratri golu, sundal recipes, navratri recipes, நவராத்திரி டிப்ஸ், கொலு டிப்ஸ், சுண்டல் ரெசிபி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/10/20/11/w600X390/Sundal.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/02/tips-for-sundal-preparations-for-navratri-golu-3246600.html
  3246442 மருத்துவம் உணவே மருந்து காய்ச்சலால் உடல் நலிவடையும் பொழுது உடலுக்கு ஆற்றலை அள்ளித் தரும் அற்புதக் கஞ்சி  கோவை பாலா Wednesday, October 2, 2019 07:23 AM +0530 அவரைப் பருப்புக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  அவரைப் பருப்பு - 100 கிராம்
  பச்சரிசி நொய்யரிசி  - 100 கிராம்
  தண்ணீர் - ஒரு லிட்டர்
  உப்பு -  தேவையான அளவு

  செய்முறை

  • முதலில் அவரை விதையை உலர வைத்து தோல் நீக்கி பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு உலர்ந்த பருப்பை  அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  நன்கு சூடு படுத்த வேண்டும்.
  • அதில் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் பச்சரிசி நொய்யை போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
  • நன்கு கஞ்சியாக கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு கலந்து இறக்கி வைத்து, ஆறியதும் அதனுடன் மோர் கலந்து  கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

  பயன்கள்
   
  இந்தக் கஞ்சியை காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மேலும் சுவையின்மையையும் நீக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி இது.

  இந்தக் கஞ்சியை  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருந்தலாம்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  உணவே மருந்து, உடல்நலம், health tips, food tips, food recipes, healthy recipes, fever and weakness, sickness and food, அவரை பருப்பு கஞ்சி, நலம் பெறுக https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/2/w600X390/woman-holding-stomach-on-sofa-experiencing-abdominal-pain-when-breathing.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/02/an-healthy-recipe-for-creating-appetite-when-down-with-fever-3246442.html
  3245986 மருத்துவம் உணவே மருந்து சளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும் கோவை பாலா Tuesday, October 1, 2019 08:02 AM +0530 கீரை : மணத்தக்காளிக் கீரை 

  தேவையான பொருட்கள்

  மணத்தக்காளிக் கீரைச் சாறு - அரை லிட்டர்
  சுக்கு - 10 கிராம்
  மிளகு - 10 கிராம்
  திப்பிலி - 10 கிராம்
  சித்தரத்தை - 10 கிராம்
  அதிமதுரம் - 10 கிராம்
  ஆடாதொடை - 10 கிராம்
  பசும் பால் - அரை லிட்டர்
  நல்லெண்ணெய் - 1 லிட்டர்

  செய்முறை

  • சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஆடாதொடை இவை அனைத்தையும் தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தூள் செய்த பொருட்களை பசுமபாலுடன் சேர்த்து கஷாயமாக்கி (பாதியளவு) வடிகட்டிக் கொள்ளவும்.
  • கஷாயமாக்கிய பாலுடன் மணத்தக்காளிக் கீரை சாற்றை கலந்து கொதிக்க வைத்து பாதியளவு சுண்டச் செய்து அதனுடன் நல்லெண்ணெய்யை சேர்த்து காய்ச்சி தைல  பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  சாப்பிடும் முறை : இந்தத் தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரவும் (வெறும் வயிற்றில்)

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  ஆரோக்கியம், டிப்ஸ், Manathakkali Keerai, நலம், health tips, greens for health, cold and cough, sukku and milagu, spice treatment, மருத்துவ டிப்ஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/1/w600X390/common-cold.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/oct/01/home-remedies-for-cold-and-cough-3245986.html
  3226919 மருத்துவம் உணவே மருந்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் அமிர்தமான உணவு இது! கோவை பாலா Tuesday, September 3, 2019 10:54 AM +0530 முருங்கைக்காய் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  முருங்கைக்காய் - 4 
  பயிற்றம் பருப்பு - ஒரு கைப்பிடி
  பூண்டுப் பல் - 2
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  முதலில் முருங்கைக்காயை விரலளவு நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காயை நீராவியில் வேக வைத்து அதனை பிளந்து உள்ளே உள்ள சதையை வழித்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பயிற்றம் பருப்பு மற்றும் பூண்டுப் பல் சேர்த்து வேக வைக்கவும்.

  நன்கு வெந்தப் பின்பு அவற்றில் வழித்தெடுத்து வைத்துள்ள முருங்கைச் சதையை சேர்த்துக் காய்ச்சி இறக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்கவும்.

  பயன்கள்

  இந்த அற்புதமான முருங்கைக்காய் கஞ்சியை  தினமும் காலை அல்லது மாலை வேளையில் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலத்தை கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala
   

  ]]>
  drumstick porridge, poondu, Garlic https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/2/w600X390/cucumber-soup.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/sep/03/food-that-strengthens-your-body-3226919.html
  3226317 மருத்துவம் உணவே மருந்து தீராத வெள்ளைப்படுதல் குறைபாடுகளை நீக்க உதவும் உன்னதமான கஞ்சி கோவை பாலா Monday, September 2, 2019 11:42 AM +0530  
  தண்ணீர்விட்டான் கிழங்குக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  தண்ணீர்விட்டான் கிழங்கு - 30 கிராம்
  புழுங்கலரிசி நொய் - 50  கிராம்
  பால் - கால் லிட்டர்
  தண்ணீர் - கால் லிட்டர்
  நாட்டுச் சர்க்கரை -  50  கிராம்

  செய்முறை : முதலில் தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கிழங்குத் துண்டுகளை போட்டு வேக வைக்கவும். கிழங்கு துண்டுகள் வெந்தவுடன் அதில் புழுங்கலரிசி நொய்யை போட்டு நன்கு வேக வைக்கவும். இரண்டும் நன்கு வெந்த நிலையில் அதனுடன் நாட்டுச் சர்க்கரையை தூளாக்கி கலந்து நன்கு கரைந்தவுடன் பால் சேர்த்து அனைத்தையும்  நன்கு கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.

  பயன்கள் : இந்தக் தண்ணீர்விட்டான் கிழங்கு கஞ்சியை சிறுநீரகத்தில் நீரடைப்பு, கல்லடைப்பு, ஆசனவாயில் கடுகடுப்பு மற்றும் பலவருடங்களாக உள்ள தீராத வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குறைபாடுகள் அனைத்தையும் தீர்க்கும்.

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  ]]>
  stomach pain, stomach ache https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/stomach_ache.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/sep/02/woman-health-issues-3226317.html
  3110453 மருத்துவம் உணவே மருந்து பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது! Saturday, March 9, 2019 12:29 PM +0530 வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து நமக்கு பாதாம், பிஸ்தாவை அதிக விலைக்கு தள்ளிவிட்டனர். வேர்க்கடலை எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததில்லை. வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம்.

  இதை தினமும் 30 கிராம் அளவு சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் கூட சரியாகிவிடும். ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை தீரவும், தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்கிறது. ஒமேகா 3 இதில் உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி என எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள வேர்க்கடலையை நாம் தினமும் உணவில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

  வேர்க்கடலையை வைத்து பலதரப்பட்ட தின்பண்டங்களை செய்யலாம். வேர்க்கடலை பர்பி, வேர்க்கடலை உருண்டை, லட்டு, வேர்க்கடலை எண்ணெய் போன்றவற்றை தயாரித்து சாப்பிப்டலாம். சுவையும் சத்தும் நிறைந்த வேர்க்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியம் பெறலாம். சிலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பின் அதை அவர்கள் தவிர்ப்பது நலம்.

   - ஸ்ரீ

  ]]>
  peanuts, nuts, nutrition, food, வேர்க்கடலை, பாதாம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/9/w600X390/nuts.jpg https://www.dinamani.com/health/healthy-food/2019/mar/09/பாதாம்-பிஸ்தாவை-விட-அதிக-சத்துள்ளது-இது-3110453.html
  2871810 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: நாவல் மரம் Wednesday, February 28, 2018 11:24 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  நாவல் மரம்:

  • உள் , வெளி , இரத்த மூலம் அனைத்தும் குணமாக நாவல் கொட்டை , தேற்றான் கொட்டை  இவை இரண்டையும்  சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , கீழ் மூலம் , ரத்த மூலம் போன்றவை குணமாகும்.
  • இரத்த அழுத்தம் குணமாக நாவல் பருப்பு , சீரகம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால்  ரத்த அழுத்தம் குணமாகும்.
  • சர்க்கரை நோய்க்குத் தீர்வு நாவல் கொட்டை , சிறுகுறிஞ்சான் , வெந்தயம் , மாம்பருப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும்  மூன்று கிராம் அளவுக்கு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் குணமாகும்.
  • நாவல் பழக் கொட்டைகளை (10) இடித்து 150 மில்லி தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி , அந்தத் தண்ணீரை தினமும் இரு வேளையும் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
  • அதிக இரத்தப்போக்கு கட்டுப்பட நாவல் இலைத் துளிரை (ஒரு கைப்பிடி) அளவு  எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.
  • மாதவிலக்கை தள்ளிப் போட நாவல் பழத்தை மாதவிலக்கு  வருவதற்கு ஒரு வாரம் முன் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு தள்ளிபோகும்.
  • வாய்ப் புண் , வாய் வேக்காடு குணமாக நாவல் மர இலையை(5) ,  தண்ணீரில் (அரை லிட்டர்) போட்டுக் கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் வாய்ப் புண் , வாய் வேக்காடு போன்றவை குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/28/w600X390/NavalFruit.jpg https://www.dinamani.com/health/healthy-food/2018/feb/28/இன்றைய-மருத்துவ-சிந்தனை-நாவல்-மரம்-2871810.html
  2870568 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அமுக்கரா கிழங்கு Monday, February 26, 2018 11:27 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  அமுக்கரா கிழங்கு

  • நன்றாக தூக்கம் வர சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
  • வயிற்று வலி , வயிற்றுப் புண் குணமாக அதிமதுரம் பொடி (100கிராம்) , சீமை அமுக்கரா பொடி (100 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை தலா 2 கிராம் வீதம் உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால்  வயிற்றுவலி, வயிற்றுபுண் குணமாகும்.
  • ஆண்மைக்குறைவு நீங்க பூனைகாலி விதை (100கிராம்) ,சீமை அமுக்குரா வேர் (100கிராம்) இவை இரண்டையும் இடித்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து காலை , மாலை என இருவேளையும் (1ஸ்பூன்) வீதம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால்  ஆண்மை பெருக்கம் உண்டாகும்.
  • மூட்டு அழற்சி , பசியின்மை நீங்க அமுக்கரா கிழங்குப் பொடியை (2கிராம்) அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால்  உடல் பலவீனம்,  பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
  • கை , கால் , இடுப்பு , மூட்டு , தொடை வலி குணமாக அமுக்கரா , சுக்கு , ஏலக்காய் , சித்தரத்தை இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து  அரைத்து வைத்துக்கொண்டு காலை , மாலை என இருவேளையும்  தலா 2 கிராம்  அளவுக்கு உணவிற்குப் பின் சாப்பிட்டு வத்தால் கை, கால் , மூட்டு , இடுப்பு ,தொடை வலி அனைத்தும் குணமாகும்.
    
  • உடல் வலி , அலுப்பு , களைப்பு நீங்க அமுக்கரா பொடியை தினமும் 2ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும்.
    
  • உடல் பருமனாக அமுக்கரா பொடி (2கிராம்) அளவு எடுத்து  நெய்யில் கலந்து இருவேளையும்  தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்  உடல் பருமனாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/26/w600X390/ht444994.jpg https://www.dinamani.com/health/healthy-food/2018/feb/26/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அமுக்கரா-கிழங்கு-2870568.html
  2858514 மருத்துவம் உணவே மருந்து கருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு! DIN DIN Tuesday, February 6, 2018 11:38 AM +0530  

  இன்றைய சூழலில் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை எப்போதும் டென்ஷனாகவே இருப்பதால் மனச் சோர்வு அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது.

  அமெரிக்காவில் உள்ள மருத்துவ பத்திரிகை ஒன்றில்  வெளியான இந்த ஆய்வு முடிவில் திராட்சையில் இயற்கையாகவே உள்ள கலவைகள் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் என்னும் அமிலம் ஆகிய இரண்டும் மனச் சோர்வு சிகிச்சைக்கான ஒரு சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுகிறது. 

  இப்போதிருக்கும் வழக்கமான மனச் சோர்வுக்கான சிகிச்சை முறையில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்காலிக தீர்வுகூட கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதை விட மேலான நிரந்தர தீர்வைத் தரக்கூடிய பக்க விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு மாற்று மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இந்த மனச் சோர்வு பிற்காலத்தில் நமது உடலில் பல நோய்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது. 

  எப்படியென்றால் இந்த மனச் சோர்வு நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி அதில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்க நியூரான் ஒரு மின் அல்லது வேதியில் சார்ந்த சமிக்ஞை ஒன்றைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது இருக்கும் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் சிகிச்சிகள் பெரும்பாலும் செரடோனின், டோபமைன் மற்றும் பிற நரம்பியக்க கடத்திகளை ஒழுங்கு படுத்துவதோடு தொடர்புடையது. ஆனால் இந்தச் சிகிச்சைகள் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  இந்த ஆய்வில் திராட்சையில் அதிகம் இருக்கும் பாலிஃபினால் மனத் தளர்ச்சியை நிச்சயம் கட்டுப்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தச் சிகிச்சை முறைக்கான வழி முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து வருகின்றது. 

  தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கார்ட் திராட்சையின் சாறு, திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு மற்றும் டிரான்ஸ்-ரெஸ்வெராட்ரால் உட்படத் திராட்சையில் இருந்து பெறப்பட்ட இந்த மூன்று விதமான பாலிஃபினோல் பொருட்களின் கலவையை எலிகளுக்குக் கொடுத்து மன அழுத்தத்தை உண்டாக்கும் மனச் சோர்வை எதிர்க்கும் திறனை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். 

  எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் டி.எச்.சி.ஏ/மால்-குளூக் ஆகிய மந்தமான சுழற்சியை மாற்றியமைப்பதன் மூலம் இவை ஊக்குவிக்கப்பட்டு சிஸ்ட்டுகள் சிதைக்கப்படுவது தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த எலிகளின் உயிரணுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எலும்பு மஜ்ஜையில் உள்ள பியோனிஃபியல்கள் தூண்டப்பட்டு மனச் சோர்வு-போன்ற பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணம் ஆகியுள்ளது.

  இந்த ஆய்வில் முதல் முறையாக மன அழுத்தச் சிகிச்சைக்காக டி.என்.ஏ எபிகேனடிக் மாற்றியமைக்கப்பட்டுத் தீர்வை காண முயற்சி செய்துள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபடப் பல மாத்திரைகளை விழுங்குவதற்குப் பதிலாக நாம் உண்ணும் உணவையே மருந்தாக்கித் தீர்வு காண்பது என்றுமே புத்திசாலித்தனம் தான்.

  ]]>
  கருப்பு திராட்சை, மனச் சோர்வு, மன அழுத்தம், ஆய்வு, grapes, depression, stress, research https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/grapes--621x414.jpg https://www.dinamani.com/health/healthy-food/2018/feb/06/black-grapes-to-treat-depression-new-research-2858514.html
  2854007 மருத்துவம் உணவே மருந்து இந்த 6 காய்களும் இந்த 6 நோய்கள் வராமல் தவிர்க்க உதவும்! சினேகா Tuesday, January 30, 2018 03:02 PM +0530  

  நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களுக்கு சொந்தக்காரர்களாகிவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.

  குப்பை உணவுகளிலுள்ள நச்சுப் பொருட்கள், கொழுப்புகள் போன்றவை நமது ரத்தத்தில் அதிகமாக கலக்கிறது.இதனால் ரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். ரத்த ஓட்டம் குறைவதனாலேயே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியமான உணவுகள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும் செய்யும். 

  முருங்கைக்காய்

  முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

  எலுமிச்சை

  எலுமிச்சை, நோய்த் தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஜப்பானிய விஞ்ஞானிகள் கருத்து.

  வெண்டைக்காய்

  வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும். காரணம் வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் ஃபோலிக் அமிலமும் உள்ளது. மேலும் அதில் புரதம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

  புடலங்காய்

  சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். நார்ச்சத்தும் ஃபோலிக் அமிலமும் கொண்ட குறைந்த கலோரி அளவுள்ள காய்களுள் ஒன்று புடலங்காய். சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

  கோவைக்காய்

  உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும். அனேக ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கோவைக்காய் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். 

  பீர்க்கங்காய்

  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

  இந்த 6 காய்கறிகளும் குறைந்த கலோரிகள் கொண்டவை. மேலும் இவற்றில் வைட்மின்களும் மினரல்களும் புரதச்சத்தும் தேவையான அளவு நிறைந்திருக்கின்றன. 

  ]]>
  green veg, fresh vegetables, பச்சை காய்கறிகள், நோய் நீக்கும் காய் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/30/w600X390/1.jpg https://www.dinamani.com/health/healthy-food/2018/jan/30/eat-these-6-vegetables-to-avoid-6-diseases-2854007.html
  2848600 மருத்துவம் உணவே மருந்து நீங்கள் செல்வச் செழிப்போடு உடல் நலமுடன் வாழ்வதற்கு இதோ ஒரு எளிய வழி! சினேகா Sunday, January 21, 2018 11:10 AM +0530  

  உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவில் காரம் குறைந்தால் கூட சாப்பிட்டுவிடுவோம் ஆனால் உப்பு குறைந்தால்? ஒருவரை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்றால் சாப்பாட்டில் உப்பு போட்டுத்தான் சாப்பிடறயா என்று சூடு சொரணைக்கு உப்பை சம்மந்தப்படுத்தி திட்டுவோம். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிறது ஒரு முதுமொழி. இவ்வாறு தாயின் வயிற்றில் குழந்தை உருவானது முதல் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை உப்பும் நீரும் மனிதருக்கு இன்றியமையாத ஒன்று. அத்தகைய உப்பை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

  நமது உணவில் சேர்க்கும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைட். உப்பு என்பதில் சோடியம் என்பதே முக்கியமானதாகும். காரணம் சோடியம் ஒவ்வொரு மனித செல்லின் ஆரோக்கியத்திற்குத் தேவையானது. இது ஒவ்வொரு செல்லுக்கிடையே உள்ள நீர்மத்தை உட்புகவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக செல்லின் வெளிப்புறப் பகுதி செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். 

  செல்லின் உட்புற செயல்பாட்டிற்கு பொட்டஷியம் காரணமாக இருக்கிறது. சோடியமும் பொட்டாஷியமும் தேவையான அளவில் ஒவ்வொரு செல்லிலும் மாறாமல் இருந்தால் மட்டுமே ஒவ்வொரு செல்லும் தன் வேலையைச் சரியாக செய்து, சத்துக்களை உருவாக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் முடிகிறது. 

  சோடியமும் பொட்டாஷிமும் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ செல்கள் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.

  உடலில் உள்ள ரத்தத்திற்கும், ரத்தத்திற்கு தேவையான வெள்ளை அணுக்களை எடுத்துவரும் திரவத்திற்கும், இரைப்பையில் அமிலம் சுரப்பதற்கும், புரத உணவு செரிப்பதற்கும், தசைகள் சரியாக சுருங்கவும், நரம்புகள் செயல்படவும் உடலில் உள்ள திரவ நிலை, அமிலத்தன்மை போன்றவைகளை நிலையாக வைத்திருக்கவும் சோடியம் மிக முக்கியத் தேவையாகும்.

  உடல் எளிதாக எடுத்துக் கொள்கிற நல்ல சோடியமே அதர்குத் தேவை. அது இயற்கையில் கிடைக்கும் உப்பில் உள்ளதால் உப்பை நமது முன்னோர்கள் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள். விருந்து பரிமாறும்போது அந்த இலையில் உப்பை ஒரு ஓரமாக வைக்கும் பழக்கம் இதனால்தான் ஏற்பட்டது.

  உப்பைப் பற்றி விழிப்புணர்வை உண்டாக்க உலக அளவில் பல அமைப்புகள் செயல்படுகின்றன. குறிப்பாக  உப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நடவடிக்கை (World Action on salt and health) எனும் அமைப்பு 2005-லிருந்து பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உப்பை நாம் எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். நமது வீடுகளில் மட்டுமல்ல, வெளியில் உள்ள உணவகங்கள் மற்றும் முன்பே தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களில் எவ்வளவுச் சோடியம் இருக்க வேண்டும், போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த அமைப்பு தலையிடுகிறது. 

  உணவுப் பொருட்களில் மட்டுமல்லாது உப்பை வீட்டுப் பராமரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள்.

  கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.


   
  ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இது வீட்டில்  இருந்து வறுமையை விலக செய்யுமாம். எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்கவும்.
   
  உள்ளங்கை அளவு உப்பை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை குளியலறையின் ஒரு மூலையில் வைத்து விடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளைக் குறைந்து, பணப் பிரச்னைகளை சீராக்கும்.

  சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்க விடவும். இது  வீட்டுக்குள் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும்.
   

  உணவு மேஜையில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வ செழிப்பினை அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாது. 

  கால் வலி ஏற்பட்டால் சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து காலை பத்து நிமிடம் ஊற வைத்தால் கால் வலி குணமாகும். தினமும் குளிக்கும் போது வாளியில் ஒரு கைப்பிடி உப்பும் சிறிதளவு எலுமிச்சை சாறும் சேர்த்தால் புத்துணர்வாக இருக்கும். 

  ]]>
  Salt, Salty, salt in food, Sodium, உப்பு, அயோடின், சோடியம், உணவும் உப்பும், நீரும் உப்பும் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/food.jpg https://www.dinamani.com/health/healthy-food/2018/jan/21/health-benefits-of-salt-2848600.html
  2792855 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சந்தனம் Friday, October 20, 2017 09:16 AM +0530  

  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சந்தனம்:

  • சிறுநீர் எரிச்சல் தீர சந்தனம் தூள் (1 டீஸ்பூன்) எடுத்து அரை லிட்டர்  தண்ணீரில்  காய்ச்சி  வடிகட்டி குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
  • முகப்பரு , படர் தாமரை குணமாக சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக உரைத்து பசையாக செய்து  படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு உள்ள இடங்களில் பூசி வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.
  • இரத்த மூலம் குணமாக சந்தனம் தூள் (2 டீஸ்பூன்), அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிநீராக செய்து குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
  • சர்க்கரை குணமாக நெல்லிக்காய்ச்சாறு (15 மில்லி)  சந்தனம் சுண்டைக்காய் அளவு எடுத்து விழுதாக அரைத்து நெல்லிக்காய் சாறுடன்   கலந்து 48 நாளகள் குடித்து வந்தால் நீரிழிவு நோய்  குணமாகும்.
  • உடல் சூடு , அழற்சி குணமாக பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு,  உடல் சூடு , சிறுநீர் பாதையில் உண்டாகும் வலி , அழற்சி போன்றவை குணமாகும்.
  • கண்கட்டி குணமாக சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து வந்து காலையில் கழுவிவிட வேண்டும். 
  • 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி முற்றிலும் குணமாகும்.
  • காய்ச்சல் , நீர்க்கோவை நீங்க சந்தனத்தூள் (20 கிராம்) எடுத்து அதை (300 மி.லி) தண்ணீரில் போட்டு காய்ச்சி (150 மி.லி) வடிகட்டி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் (50 மில்லி ) வீதம் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு ,மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.
    

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/657432592.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/oct/20/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சந்தனம்-2792855.html
  2764891 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சாமந்திப் பூ Thursday, August 31, 2017 09:02 AM +0530  

  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சாமந்திப் பூ:

  • சாமந்தி இலை மற்றும்  தண்டு (ஒரு கைப்பிடி)எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும்  குடித்து வந்தால் இடைவிடாத இருமல் சரியாகும். மார்பக சளியை கரைத்து வெளியே தள்ளும். காய்ச்சலை தணிக்கும். உடல் வலி சரியாகும். மூட்டு வலி குணமாகும்.
  • ஒரு சாமந்தி பூவின் இதழ்களை எடுத்துக் கொள்ளவும், அதனுடன் சிறிது மிளகுப் பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். ஒற்றை தலைவலி குணமாகும். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. கல்லீரல் பலப்படும்.
  • சாமந்தி இலைகளை பசையாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், பூக்களின் இதழ்களை மசித்து சேர்க்கவும். இவை இரண்டையும் தேங்காய் எண்ணெயயுடன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்துகொள்ளவும். இதை மேல் பூச்சாக பயன்படுத்தி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். தடிப்பு , சிகப்பு தன்மை , அரிப்பு ,சேற்று புண், அக்கி புண்கள் சரியாகும். வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. பூஞ்சை காளான்களை போக்கும். நுண் கிருமிகளை அழிக்கும்.
  • சாமந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
  • சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
  • சாமந்திப் பூக்கள் (20) எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவந்தால் தீராத மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும்.


  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/4058912868_83562ff4b3_b.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/aug/31/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சாமந்திப்-பூ-2764891.html
  2761589 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: தும்பை Friday, August 25, 2017 09:01 AM +0530  

  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

   
  தும்பை:

  • தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுவந்தால்  தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
  • தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் சம அளவு எடுத்து அரைத்துப் புங்கை நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக்  கொண்டு காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வந்தால் காதில் உள்ள புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் போன்றவை தீரும்.
  • தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு  வந்தால் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
  • அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குத் கொடுத்து வந்தால் நாட்பட்ட விக்கல் நீங்கும்.
  • தும்பைச் சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு உடலின் வெளிப் புறத்தில்  தேய்த்து வந்தால் வெட்டுக் காயம், ஆறாத  புண்கள் ஆறும்.
  • தும்பைச் சாறு 30 மி.லி, துத்தி இலைச் சாறு 30 மி.லி இவை இரண்டையும் பசும் பாலில் கலந்து கொடுத்து வந்தால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் போன்றவை குணமாகும்.


  வகைகள்: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை.


  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/25/w600X390/10460723_946030952114051_6035787693504655446_n.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/aug/25/இன்றைய-மருத்துவ-சிந்தனை-தும்பை-2761589.html
  2757610 மருத்துவம் உணவே மருந்து அப்பழுக்கற்ற சருமம் மற்றும் நீண்ட கூந்தல் பெற; ஒரு கைப்பிடி அரிசி போதும்! பவித்ரா முகுந்தன் Friday, August 18, 2017 03:46 PM +0530  

  அடுத்த முறை நீங்கள் சாதம் செய்தால் அரிசி ஊறவைத்த தண்ணீரையோ அல்லது சாதம் வடித்த நீரையோ வீணாகக் கீழே ஊற்றிவிடாதீர்கள். இந்த பதிவை படித்தப் பிறகு உங்களுக்கே அது ஏனென்று புரியும். நாம் யாரும் நினைத்துக்கூட பார்க்காத பல பலன்களைத் தரக்கூடியது இந்த நீர்.

  சீனா, ஜப்பான் மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் பெண்களின் அப்பழுக்கற்ற சருமத்திற்கும், மிருதுவான நீண்ட கூந்தல் அழகிற்கும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று பாரம்பரியமாக அவர்கள் உபயோகிக்கும் இந்த அரிசி நீர்தான். அரிசி ஊறவைத்த நீரில் நிறைந்துள்ள வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள், தலை முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

  தயாரிக்கும் முறை:

  1. அரிசி ஊற வைத்த நீர்:

  பயன் - சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற, இழந்த நிறத்தை திரும்பப் பெற, முகம் பளிச்சிட, மென்மையான சருமம் பெற.   

  அரிசி - 1 கப்
  குளிர்ந்த நீர் - 2 கப்

  அரிசியைக் குளிர்ந்த நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு ஒரு மூன்று நிமிடங்களுக்கு அதை விரல்களால் அலசுங்கள். பின்னர் அந்த நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

  2. சாதம் வடித்த நீர்:

  பயன் - மிருதுவான நீண்ட கூந்தல், உடல் ஆற்றலை அதிகரிக்க, உடல் எடையைக் குறைக்க.

  ஏற்கனவே ஊற வைத்த அரிசியில் ஒரு பாதியை கொதிக்கும் நீரில் போட்டு, அரிசி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்பு அந்தக் கஞ்சியை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

  3. அரிசி மாவு:

  பயன் - இறந்த செல்களை அகற்ற, இழந்த நிறத்தை திரும்பப் பெற, கருங்கறைகளை அகற்ற.

  ஊற வைத்த அரிசியின் மீதமுள்ள பாதியில் சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் போன்ற பக்குவத்தில் வழித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

  பயன்படுத்தும் முறை:

  அரிசி ஊற வைத்த நீர்:

  1. அதிகம் வெளியில் சுற்றுபவராக இருந்தால் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து எப்போது வெளியே சென்றாலும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். தாகம் எடுக்கும் போதெல்லாம் அதைத் தணிக்க தண்ணீர் குடிப்பதை போன்று உங்கள் சருமம் மிகவும் வறண்டது போல் நீங்கள் உணரும் போதெல்லாம் இந்த நீரைச் சிறிது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். 

  இதனால் கண்ணில் வைத்த மை போன்ற ஒப்பனைகள் கலையாமல், முகம் கழுவியது போன்ற ஒரு புத்துணர்வை நீங்கள் பெற முடியும்.

  2. வீடு திரும்பிய பிறகு இந்த நீரில் வெள்ளை நிறத் துணியையோ அல்லது பஞ்சையோ நனைத்து முகம் முழுவதையும் துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அழுக்கு முழுவதும் அந்தத் துணியில் வந்ததை நீங்களே பார்க்க முடியும். இதனால் மேனியில் தேங்கிய  அழுக்கின் காரணமாக முகப்பரு வருவதைத் தடுக்கலாம்.

  3. ஏதேனும் விழாவிற்குச் செல்லப் போகிறீர்களா? ஆனால், உங்களது முகம் கலையிழந்து வாடியது போல் இருந்தால் கவலை வேண்டாம். துணியையோ அல்லது காகிதத்தையோ இந்த நீரில் நனைத்து முகத்தின் மீது பேக் போல ஒரு 20 நிமிடங்களுக்குப் போடுங்கள். அந்த நீரை முழுமையாக நமது சருமம் உரிஞ்சி எடுத்துவிடும். பின்னர் முகத்தைக் கழுவி பாருங்கள், குழந்தையின் மேனியைப் போன்ற மென்மையான மற்றும் பளிச்சிடும் உங்கள் முகத்தை.  

  சாதம் வடித்த நீர் (கஞ்சி): 

  இந்தக் கஞ்சை நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக முடியின் வேர்க் கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்யுங்கள், பின்பு கூந்தலின் முனை வரை தேய்த்து ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தலைக்குக் குளியுங்கள். நமது முன்னோர்களைப் போன்ற நீளமான கூந்தலை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

  இந்த நீரில் சிறிது உப்பு சேர்த்து தினமும் சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் நன்கு பசி எடுப்பது, ஜீரண சக்தியை அதிகரிப்பது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுவது போன்ற பலன்களைப் பெறலாம்.   

  அரிசி மாவு:

  மசிய அரைக்காமல் சிறிது கரகரப்புடன் இருக்கக் கூடிய இந்த மாவை வாரம் ஒரு முறை மென்மையாக முகம், கை, கால்களில் வட்ட வடிவில் தேய்ப்பதால் இறந்த செல்களை அகற்றி, இழந்த நிறத்தை நாம் திரும்பப் பெற இது வழி செய்யும். 

  சருமம் மற்றும் கூந்தல் நலனுக்காக அழகு நிலையங்களிலும், மருத்துவரிடமும் அதிகம் பணம் செலவழிக்கும் நாம், எளிதாக கிடைக்கக்கூடிய இந்த அரிசி நீரைப் பயன்படுத்தி அந்தச் செலவுகளை தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, இதுவே நமது முன்னோர்களும் பின்பற்றிய பாரம்பரியமான அழகுக் குறிப்பாகும்.

  ]]>
  beauty, water, முகம் , அரிசி, வடித்த நீர், கஞ்சி, கூந்தல், முடி, rice, face, hair https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/18/w600X390/rice-milk.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/aug/18/rice-water-for-beautiful-skin-and-hair-2757610.html
  2731620 மருத்துவம் உணவே மருந்து ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு எது? Tuesday, July 4, 2017 04:04 PM +0530 கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் அமிலம் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது. கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் என்னும் அமிலம் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் என்னும் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக  இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

  இப்படி பல வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது. ஒமேகா-3 கொழுப்பு அமிலமும், ஃபோலேட் என்ற சத்தும் மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் கிவி பழத்தில்  உள்ளது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த பழமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

  வைட்டமின் ‘சி’சத்தை அதிக அளவில்  கொண்டுள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும். மனித உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்ஸ்’(Free radicals) தான் பல்வகையான நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது. இத்தகைய ரேடிக்கிள்ஸ்களின் வீரியத்தை குறைத்து அல்லது அழித்து நோயின்றி உடலை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது. சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது கிவி பழம். மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது. 

  சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அப்போது அவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

  உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

  உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12, மாம்பழத்துக்கு 12, ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11 வழங்கியுள்ளனர்.

  மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தக் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், அடிக்கடி சாப்பிட ஆஸ்துமாவை அடியோடு விரட்டும்.

  ]]>
  asthma, ஆஸ்துமா, Kiwi, கிவி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/4/w600X390/kiwi.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/jul/04/ஆஸ்துமா-நோயாளிக்கு-மிகவும்-சிறந்த-உணவு-எது-2731620.html
  2725470 மருத்துவம் உணவே மருந்து தப்பு தப்பா உப்பு போட்டா என்ன ஆகும்? Thursday, June 22, 2017 12:58 PM +0530 சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவோம். அதை எப்படி சரி செய்வது? இதோ சில டிப்ஸ்

  • இட்லி, தோசைமாவில் உப்பு அதிகமானால் ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து ஐந்துநிமிடம் பாலில் ஊறவிட்டு பின் மாவுடன் சேர்க்க உப்பு குறைந்து சரியாகவிடும்.
  • குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றில் நெய்யோ, எண்ணெய்யோ சேர்த்தால் காரம் குறைந்து சுவையும் மணமும் கூடி விடும்.
  • பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயைத் துருவி சேர்த்தால் போதும்.  உப்பு குறைந்துவிடும்.
  • மட்டர் பன்னீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ஃபிரெஷ் க்ரீம் அல்லது சூடான பாலில் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்துவிட காரம் குறைந்து சுவை அதிகமாகிவிடும்.
  • ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு ரசத்தைக் கொதிக்க விடவும். பிறகு மிளகு, சீரகத்தூள் போட்டு, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விட, சுவை சரியாக இருக்கும்.
  • வற்றல் குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றில் தக்காளியை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்து சுவை கூடிவிடும்.
  • குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாகிவிட்டால் வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
  • கலவை சாதத்தில் காரம் அதிகமாகிவிட்டால் எண்ணெய் ஒரு தேக்கரண்டி காய்ச்சி ஊற்றிக் கலந்துவிட்டு, பின் வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்துத் தூளாக்கி தூவி பரிமாற காரம் குறைந்துவிடும்.
  • பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சேர்க்க உப்பு குறைந்துவிடும்.
  • வறுவல், பொரியல் போன்றவற்றில் ரஸ்க்கைத் தூள் செய்து தூவிவிட்டால் காரம் குறைந்துவிடும்.
  • மசாலாவில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது தயிரைக் கடைந்து சேர்க்கலாம் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்தால் போதும். காரம் குறைந்துவிடும்.
  • புலாவ், பிரியாணி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் பிரட் தூள் ஒரு கரண்டி எடுத்து வெறும் வாணலியில் ஒரு நிமிடம் சூடாக்கி பின் சேர்த்துவிட்டால் காரம் குறைந்துவிடும்.
  • இரண்டு தேக்கரண்டி அரிசி, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு இரண்டையும் அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்துவிட உப்பு சரியாகிவிடும்.

  உப்பு, காரத்தை அளவு தெரியாமல் போட்டு விட்டால் கூட மேற்கூறியபடி சரி செய்துவிடலாம். ஆனால் அதையும் விட சில தவறுகளை நமக்கே தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் செய்து விடுகிறோம். அதனால் உடல் ஆரோக்கியமும் கெடும். அவை என்ன?

  • எந்த உணவு பொருளையும் அலசாமல் பயன்படுத்தக் கூடாது. சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். அதற்கு முன்னால் அதை ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். போலவே, முட்டைகளை நன்றாகக் கழுவிய பின்னர் தான் வேக வைக்க வேண்டும். கீரையில் மண் மற்றும் தூசி தும்பு நிறைய இருக்கும். எனவே கீரையை இரண்டு தடைவையாவது நிச்சயம் கழுவ வேண்டும்.
  • காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சிலர் வெங்காயத்தை முந்தின நாள் இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் தன்மை உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். இதை ப்ரிட்ஜில் வைத்தாலும் சரி நன்றாக மூடி வைத்தாலும் சரி நறுக்கி சில மணி நேரங்களான வெங்காயத்தைப் பயன்படுத்துவது நல்லது இல்லை.
  • இஞ்சியை ஒருபோதும் தோலுடன் சேர்த்து சமைக்கவே கூடாது. கீரையோடு புளியைச் சேர்க்கக் கூடாது. 
  • எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவுப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொகிறது ஒரு புதிய ஆராய்ச்சி.
  • நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது.

  - எச். சீதாலட்சுமி

  ]]>
  Salt, cooking mistakes, உப்பு அதிகமானால், சமையல் குறிப்புக்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/22/w600X390/salt.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/jun/22/salt-mistakes-in-cooking-2725470.html
  2711903 மருத்துவம் உணவே மருந்து கருஞ்சீரகப் பொடியின் மகத்துவம் Thursday, June 1, 2017 02:10 PM +0530 கருஞ்சீரகப் பொடியை 4 கிராம் எடுத்து நீராகாரத்துடன் 3-லிருந்து 7- நாள் வரை காலையில் மற்றும் மாலையிலும் சாப்பிட்டு வர, விஷப்பூச்சிகடியாக இருந்தாலும், வேறு ஏதேனும் நச்சு கடியாக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும். 

  கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சாக பூசி வந்தால் சரியாகும்.

  இந்தப் பொடியைக் காடி (நீராகாரம்) விட்டு அரைத்து படை இருக்கும் இடத்தில்  பூசலாம். கரப்பான், சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் நல்லெண்ணெயில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்து குழைத்து பூச குணமாகும்.

  பசுவின் கோமியம் விட்டு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பூசினால் வீக்கம் குறையும். இந்தப் பொடிய தேன் விட்டு அரைத்துப் பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் வலி குணமாகும்.

  கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து தேனுடன் சேர்த்து அல்லது நீர் கலந்து குடுத்தால் மூச்சு முட்டல் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து மோருடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தாச் விடாமல் வரும் விக்கல் பிரச்னை குணமாகும்.

  1 கிராம் பொடிய எடுத்து நீராகாரத்துடன் குடித்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும். 

  ]]>
  karunjeeragam, கருஞ்சீரகப் பொடி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/1/w600X390/karunjeeragam-tharum-alavilla-nanmaigal_1.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/jun/01/கருஞ்சீரகப்-பொடியின்-மகத்துவ-2711903.html
  2711880 மருத்துவம் உணவே மருந்து முள்ளங்கியின் 5 முக்கிய பலன்கள் DIN DIN Wednesday, May 31, 2017 02:40 PM +0530 முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கி மருத்துவ குணங்கள் அதிகமுள்ள ஒரு அருமருந்து. இதில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. விலை குறைவாகக் கிடைக்கும் இந்த முள்ளங்கியின் பலன்களைப் பார்க்கலாம்.

  1. முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.
  2. முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக  வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.  
  3. தொண்டை வலி, நாவறட்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வல்லது முள்ளங்கி. 
  4. முள்ளங்கியிலுள்ள கந்தக சத்து பித்தநீரை நன்றாகச் சுரக்கச் செய்யும். கல்லீரல் பிரச்னைகள் இருந்தால் அதுவும் குணமாகும்.  
  5. முள்ளங்கி சாறு எடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர நல்ல குரல் வளம் கிடைக்கும். பேச்சு தெளிவாக வரும்.                  ​

  இன்னும் நிறைய பலன்கள் முள்ளங்கியில் உள்ளது. அடிக்கடி உணவில் முள்ளங்கியைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மருத்துவமனை இருக்கும் திசைக்கு கும்பிடு போடலாம்.

  ]]>
  முள்ளங்கி, முள்ளங்கி மருத்துவ குணங்கள், radish https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/31/w600X390/radish.jpg https://www.dinamani.com/health/healthy-food/2017/may/31/medicinal-benefits-of-raddish-2711880.html