Dinamani - செய்திகள் - https://www.dinamani.com/health/health-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3179705 மருத்துவம் செய்திகள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்ற இதுதான் பெஸ்ட்! Wednesday, June 26, 2019 12:34 PM +0530
 • காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.
  • ஒரு எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மறையும்.
  • ஜாதிக்காயை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணிநேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்
  • சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கினை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

  • இரவில் படுக்கப் போகும் முன் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை சாற்றில் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிகள் மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்.
  • பாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம்
  • அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பராகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.
  • கொத்துமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.
  ]]>
  beauty, care, டிப்ஸ், Tips, முகம் , Facial, black spots, கரும்புள்ளி https://www.dinamani.com/health/health-news/2019/jun/26/tips-to-remove-black-spots-in-face-3179705.html
  3179605 மருத்துவம் செய்திகள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து! கோவை பாலா Wednesday, June 26, 2019 09:45 AM +0530  
  வெந்தயக் கீரை துவையல்

  தேவையான பொருட்கள்

  வெந்தயக் கீரை - 100 கிராம்
  தக்காளி - 2
  மிளகு - 10 கிராம்
  வெங்காயம் - 2
  கடலைப் பருப்பு - 20 கிராம்
  உளுந்தம் பருப்பு - 20 கிராம்
  பெருங்காயம் - தேவையான அளவு
  கடுகு - தேவையான அளவு
  கறிவேப்பிலை - தேவையான அளவு

  செய்முறை

  முதலில் வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் : இந்த துவையலை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உணவில் அவசியம் சேர்த்து கொள்வது மிக அவசியம். மேலும் இது உஷ்ண நோய்களையும், குடற்புண்ணையும் போக்கக் கூடிய அருமருந்து துவையலாக இருக்கும்.

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  ]]>
  health, food, diabetic https://www.dinamani.com/health/health-news/2019/jun/26/food-and-diet-for-diabetic-patients-3179605.html
  3178956 மருத்துவம் செய்திகள் செரிமானப் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம்! புதிய ஆய்வு முடிவு! சினேகா Tuesday, June 25, 2019 04:11 PM +0530 அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில், செலியாக் நோய் (உணவு செரிமானக் கோளாறுகள்) உள்ள நோயாளிகள் வைட்டமின்கள் பி 12 மற்றும் டி உள்ளிட்ட பல நுண்ணூட்டச்சத்துக்களிலும் குறைபாடுள்ளவர்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், இந்த நோயைக் கண்டறிந்த உடனேயே, உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  மேயோ கிளினிக்கில் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வில், 309 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு நடுவில் அவர்கள் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் எனக் கண்டறியப்பட்டது.  

  நோயால் அவதிப்படுவதோடு மட்டுமல்லாமல், பல நோயாளிகளுக்கு நோயறிதலின் போது நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளும் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். துத்தநாகக் குறைபாடு என்பது மிகவும் பொதுவான குறைபாடாகக் கண்டறியப்பட்டது, இது 59.4 சதவிகித நோயாளிகளில் காணப்பட்டது. வைட்டமின்கள் பி 12 மற்றும் டி, ஃபோலேட், இரும்பு மற்றும் தாமிரம் ஆகியவை பிற குறைபாடுகளில் அடங்கும்.

  மேயோ கிளினிக் ஆராய்ச்சியின் முடிவு ஜூலை மாத இதழில் வெளியிடப்பட்டது. செலியாக் நோய் உள்ளவர்களுக்கு சில ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்திருக்கும் என்பதை மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், இந்த குறைபாடுகளைக் கண்டறிந்த உடனேயே அது கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றன.

  எடை இழப்பு மற்றும் குறைந்த உடல் எடை, இவை இரண்டும் பொதுவாக இந்த நோயுடன் தொடர்புடையவை, உண்மையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை விட இது குறைவுதான் என கண்டறியப்பட்டது, இத்தகைய எடை இழப்பு 25.2 சதவிகித நோயாளிகளில் மட்டுமே காணப்படுகிறது

  'புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் இந்த குழுவில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளின் அறிகுறி குறைவாக இருப்பதைக் காணும்போது சற்றே ஆச்சரியமாக இருந்தது, என்றார் இந்த ஆராய்ச்சியின் முதன்மை எழுத்தாளர் ஆடம் பிளெட்சோ, எம்.டி.

  'செலியாக் நோயாளிகளுக்கு ஏற்படும் வழமையான எடை இழப்பு, ரத்த சோகை மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு தற்போது வேறு சில
  அறிகுறிகளால் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது' என்று டாக்டர் பிளெட்சோ கூறினார்.

  'இருப்பினும், பெரியவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் பொதுவானவை,  இவை மேலும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.'

  இந்த குறைபாடுகள் ஆரோக்கியத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும், அவை என்ன என்னவென்று தெரியாத போதும்' என்று வியக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  'இந்த குறைபாடுகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை' என்று டாக்டர் பிளெட்சோ கூறுனார்..

  மேயோ கிளினிக் வலைத்தளத்தின்படி, செலியாக் நோய் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றில் காணப்படும் க்ளூடென் என்ற புரதத்தை சாப்பிடுவதன் நோய் எதிர்ப்பு எதிர்வினை ஆகும். காலப்போக்கில் இந்தப் பசையம் (க்ளூடென்) சாப்பிடுவதால் சிறுகுடலின் வெளிப்புறத்தை சேதப்படுத்திவிடும் மேலும் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கும். அதன் பின் வயிற்றுப்போக்கு, சோர்வு, ரத்த சோகை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு இது வழிவகுக்கிறது. இதற்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை, ஆனால் அதிக க்ளுடென் இல்லாத உணவை உட்கொள்வதனால் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம்.

  ]]>
  gluten, celiac disease, mayo clinic, research, food, diet, gluten free diet https://www.dinamani.com/health/health-news/2019/jun/25/those-suffering-from-celiac-disease-may-also-be-vitamin-deficient-finds-new-study-3178956.html
  3178849 மருத்துவம் செய்திகள் உடல் பருமன்  குறைவதற்கு உதவும் ஜூஸ் கோவை பாலா Tuesday, June 25, 2019 10:09 AM +0530 அகத்திக் கீரை ஜூஸ்

  தேவையான பொருட்கள்

  அகத்திக் கீரை - ஒரு கைப்பிடி
  வெள்ளை மிளகு - ஒரு ஸ்பூன்
  தேன் - இரண்டு தேக்கரண்டி

  செய்முறை : முதலில் அகத்திக் கீரையை ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி கழுவி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்துள்ள அகத்திக் கீரைச் சாற்றை வடிகட்டி அதனுடன் வெள்ளை மிளகுத் தூள் சிறிதளவு மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை வடிகட்டிய சாற்றுடன் கலந்து காலை வேளை பருகவும்

  பயன்கள் : இந்தச் சாற்றை குடித்து வந்தால் உடம்பில் வாயுவினால் உண்டாகும் உடல் பருமன் குறையும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  ]]>
  உடல் பருமன், Obesity, agathi keerai, height, அகத்திக் கீரை https://www.dinamani.com/health/health-news/2019/jun/25/உடல்-பருமன்--குறைவதற்க்கு-உதவும்-ஜூஸ்-3178849.html
  3178177 மருத்துவம் செய்திகள் ஆயுர்வேதம், வர்மம், யோகா மூன்றையுமே பரிந்துரைக்கும் மருத்துவர் இவர்! Monday, June 24, 2019 03:05 PM +0530 ஒரு மருத்துவர் வேறு ஒரு வகையான மருத்துவத்தை தனது நோயாளிக்கு பரிந்துரைக்க மாட்டார். ஆனால் மருத்துவர் மதிவாணன் ஆயுர்வேதம், வர்மம், யோகா இந்த மூன்றையுமே பரிந்துரைக்கிறார். 

  "என்னிடம் வரும் நோயாளிகளுக்காக நான் பல்வேறு மருத்துவத்துறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறும் இவர், இந்த மூன்று மருத்துவ துறைகளையும் ஒன்றாகச் சேர்த்து "ஆயுர் வர்ம யோக மருத்துவம்' என்று பெயரிட்டு அழைக்கிறார். அந்தப் பெயருக்கான காரணத்தையும் அவரே கூறுகிறார்:

  "ஆயுர்+வேதம்=ஆயுளை ஆரோக்கிய வழியில் வளர்க்கும் அறிவியல். கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இது இன்றைய நவீன அறுவைச் சிகிச்சையின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. வர்மம் என்று சித்த வைத்தியத்திலும், மர்மம் என்று ஆயுர்வேதத்திலும் அறியப்படும் இந்த மருத்துவமுறை, உலகிலேயே மிகவும் பழமையான மருத்துவ முறையாகும்.

  குழந்தை பிறந்ததும் முதுகில் ஒரு தட்டுத் தட்டி அதன் சுவாச மண்டலத்தைச் சீராக்குவோமே அதுவே நமக்கு தரும் முதல் வர்ம சிகிச்சையாகும். மேலும் யோகாசன முறைகளும், முத்திரைகளும் சேரும்போது சிகிச்சையின் பலன் மேலும் உயர்ந்து, நாம் அரோக்கியமாக இருக்க உதவும்.  ஆயூர்வேதத்தின் மூலம் நாடி அறிந்து, மருந்து கொடுத்து, வர்மம் மூலம் புதைந்து கிடக்கும் ஆற்றலை இயக்கி, யோகாசன முத்திரைகள் மூலம் தோசங்களைச் சம நிலைக்குக் கொண்டு வருவதே இந்த ஆயுர் வர்ம யோக மருத்துவமாகும்.

  "நான் மருத்துவக் கல்வி முடிந்து, பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு கைகளைத் தூக்க முடியாமல் ஒருவர் வர, நான் வழக்கமாக பரிந்துரைக்கும் மருந்துகள், மற்றும் ஒத்தடம் கொடுத்தும் பெரிதாக எந்தப்பலனும் இல்லை. என் தந்தை சித்த மருத்துவப்பேராசிரியர். மரு. பரமேஸ்வர ஐயாவிடம் நண்பரின் நிலையைச் சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே சில வர்மப் புள்ளிகளையும், அதன் இயக்க முறைகளையும், ஒரு சில முத்திரைகளையும் என்னிடம் சொல்லி, "ஒரு வாரத்திற்குப் பிறகு பார்'' என்று கூறினார்கள். 

  அவர் சொன்ன வழியில் நான் சென்று சிகிச்சையைத் தொடங்கிய மூன்றே நாளில் 80 சதவீதம் குணமடையக் கண்டு என் தேடலை இந்த மருத்துவ முறையிலும் தொடர்ந்தேன். இன்னுமொரு நோயாளியின் பூஞ்சையினால் கிட்டதட்ட அழிந்த நகத்தைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று என் தந்தையிடம் நான் யோசனை கேட்க, அதற்கும் வர்மப் புள்ளிகளைக் கூறி இயக்கும் முறையையும் சொல்ல, அதையே பின்பற்றி அந்த நகத்தையே அந்த நோயாளிக்கு காப்பாற்றிக் கொடுத்தேன். நமது முன்னோர்கள், சித்தர்கள் எல்லாம் வெறும் ஞானிகள் மட்டும் அல்ல, மருத்துவ மாமேதைகள் என்று அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து என் சிகிச்சை முறைகள் முற்றிலும் மாறிவிட்டன.

  நம்மில் பலர் எண்ணம் எல்லாம் Acute problem என்று சொல்லப்படும், உடனடித் தீர்வு காணவேண்டிய பிரச்னைகளுக்கெல்லாம் ஆயுர் வர்ம முறையில் தீர்வு இல்லை என்று நினைப்பதுதான். இந்த எண்ணத்தை மாற்றவே காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், அஜீரணம், மூச்சடைப்பு போன்ற உடனடிப் பிரச்னைகளுக்கெல்லாம், நாங்கள் ஆயுர் வேத முறையில் சிகிச்சை செய்து குணமாக்குகிறோம். மேலும் நாட்பட்ட பிரச்னைகளான, மூட்டு வலி, கழுத்தெலும்பு, தேய்மானம், L4 L5 டிஸ்க் பிரச்சனைகள், ஹார்மோன், சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னை, முடி கொட்டுதல், தாம்பத்திய பிரச்னைகள் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த ஆயுர் வர்ம யோக மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கிறோம். 

  இங்கு இரண்டு விதமான அனுபவங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறட்டையினால் ஒரு தம்பதியினர் ஒன்றாகப் படுக்க முடியவில்லை. நான் வர்மப் புள்ளிகளை இயக்க, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, போயே போய்விட்டது. ஒரு சிறுவனுக்கு 24 மணி நேரமும் காதுகளில் இரைச்சல். அதற்கும் நான் சிகிச்சை அளித்து சில வர்மப் புள்ளிகளை சமநிலைக்கு கொண்டு வர மூன்றாவது முறை வரும் போது இரைச்சல் இல்லை என்று சொல்ல நான் மகிழ்ந்தேன். 

  உலகிலேயே சிறந்த வைத்தியன் வேறு யாரும் இல்லை. நம்மிடம் ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதை முறையான ஆற்றல் மூலம் தூண்டி தோஷங்களை சமநிலைப்படுத்துவதே ஆயுர் வர்ம யோக மருத்துவமாகும்'' என்றார். 
  சலன்

  ]]>
  ayurveda, yoga, varma, treatment, vedic https://www.dinamani.com/health/health-news/2019/jun/24/ayurveda-varmam-and-yoga-3178177.html
  3178150 மருத்துவம் செய்திகள் உணவில் விருப்பமின்மை மற்றும் பசியின்மையை போக்கும் ஆரோக்கிய உணவுப் பொடி. கோவை பாலா DIN Monday, June 24, 2019 11:13 AM +0530 நாரத்தை இலைப் பொடி

  தேவையான பொருட்கள்

  காய்ந்த நாரத்தை இலைகள்  - கால் கிலோ
  ஓமம் - 10 கிராம்
  துவரம் பருப்பு - 10  கிராம்
  உளுந்தம் பருப்பு - 10  கிராம்
  பெருங்காயம் - தேவையான அளவு
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை : முதலில் ஒமம், துவரம் பருப்பு  மற்றும் உளுந்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் நன்கு காய்ந்த நாரத்தை இலைகளை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பொடியுடன் தேவையான அளவு பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் : இந்த பொடியை ருசியின்மை, உணவில் விருப்பமின்மை மற்றும் பசியின்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் குறைபாடு நீங்கம்.

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  ]]>
  hunger, taste buds, appetite, food https://www.dinamani.com/health/health-news/2019/jun/24/how-to-increase-appetite-3178150.html
  3178148 மருத்துவம் செய்திகள் தூக்கமின்மைக்கும் உடல் அசதிக்கும் இதுதான் காரணம்! Monday, June 24, 2019 11:06 AM +0530 கடும் கோடை வெயிலில் எனக்கு இனம் தெரியாத ஒரு பலவீனம், கடும் நாவறட்சி, இரவில் புழுக்கம் தாளாமல் தூக்கமின்மை, அதனால் சோர்வு, மனக் கலக்கம், கடும் வியர்வை, தோலில் எரிச்சல், அரிப்பு என வரிசை வரிசையாக பல உபாதைகளால் அல்லல்படுகிறேன். இவற்றை எப்படிச் சாமாளிப்பது? எப்படி வராமல் தடுப்பது?
   - மனோகரன், சென்னை - 17.

  சென்ற ஆண்டில் அனுபவித்ததை விட, இவ்வாண்டில் கோடையின் கடுமை அதிகமோ என்றொரு வியப்பு. சூரியன் பூமியின் அருகில் நெருங்குகிறான். அதனால் தான் வர வர வெப்பம் அதிகமாகிவிட்டது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் சூரியனின் பாதையில் மாறுதல் அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை. நம்முடைய சகிப்பு தன்மைக்குறைவே அத்தகைய உணர்ச்சிகளுக்கு இடமளிக்கின்றது.

  கோடையின் தாக்குதலைத் தணிக்க சில எளிய வழிகள்:

  உடலின் குளிர்ச்சி மற்றும் சூட்டின் சகிப்புத் தன்மையைப் பாதுகாத்து பெருக்கிக் கொள்வதும், உடலின் இயற்கை வலிமையைக் குறையாமல் பாதுகாத்துக் கொள்வதும் மிகவும் அவசியம். மாலையில் வெயில் தணிந்த பிறகு உடலுக்கு மட்டுமோ அல்லது தலைக்கும் சேர்த்தோ குளிர்ச்சி தரும் சந்தனாதி தைலம், ஹிமசாஹர தைலம் ஆகியவற்றில் ஒன்றை மெலிதாகப் பூசி பிடித்துவிட்டு குளிப்பதால் தோலின் அழற்சியும் களைப்பும் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். தோலின் சகிப்புத்தன்மை திடம் பெறும்.

  எத்தனை நாவறட்சி இருந்தபோதிலும் குளிர்ந்த நீரையோ வேறு குளிர்பானங்களையோ அளவுக்கு மீறிக் குடிக்காமல் குளிர்ந்த நீரால் வாய்க் கொப்பளிப்பது, கை, கால் , முகங்களைக் குளிர்ந்த நீரால் கழுவுவது, குளிர்ந்த நிழலில் இளைப்பாறுவது, நல்ல பழங்களையோ, பழச்சாறுகளையோ சுவைத்து சாப்பிடுவதால் உடல் தாபத்தையும் தண்ணீர் தாகத்தையும் ஓரளவு குறைத்துக் கொண்டு அதன் பிறகு குளிர்ந்த நீரை பருக அசதி ஏற்படாது. பசியும் மந்தமாகாது, தெளிவு ஏற்படும்.

  நாவறட்சி ஏற்படுத்தக் கூடிய மாவுப் பண்டம், காரம், புளி, உப்பு அதிகம் சேர்த்தவை, மசாலா பொருள் கலந்தவை, எண்ணெய்யில் பொரித்தவை ஆகியவற்றைத் தவிர்த்து சத்து மிகுந்த சாத்வீக உணவுகளை உட்கொள்ள உடல் பலம் குறையாதிருக்கும். தேவையான புஷ்டி சீராகக் கிடைக்கும்.

  தற்காலத்திய காங்கிரீட் மேற்கூரை தளஅமைப்பினால் சூரிய ஒளிச்சூடு குறையாமல் வீட்டினுள் வருவதால் நடு இரவு வரையில் வெக்கை குறையாமல் இருப்பது மிகப் பெரிய சிரமமாகும். அதனால் மேற்கூரையின் மீது மூலிகைச் செடிகளை தொட்டியில் வளர்ப்பதும், குளிர்ச்சி தரும் கறிகாய்களை வளர்ப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

  வீட்டினுள் ஜன்னல்களை உள்புறமாக மறைக்கக் கூடிய மெல்லிய வெட்டிவேர் பாய்கள் மறுபடியும் கொண்டு வரப்படுமேயானால் வீட்டினுள் நல்ல குளிர்ச்சியும் நல்ல நறுமணமும் கிடைக்கும். ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறையில் இருந்து குளிரூட்டப்படாத அறைக்கு வரும் பொழுது தோலில் அங்குள்ள சூட்டை தாங்கமுடியாத வேதனையைத் தருவதால் இந்த திடீர் சீதோஷ்ண மாற்றம் ரத்தத்தில் காந்தலை ஏற்படுத்துகிறது. மேலும் பல தோல் உபாதைகளுக்கும் காரணமாகிறது.

  மேலிலிருந்து தொங்கும் சீலிங் மின்விசிறி ஒரே வேகத்தில் சூழலும் நிலையில் அதன் கீழ் அமர்ந்திருப்பவரின் தலையை வறளச் செய்கிறது, கீழ் படுத்து தூங்குபவரின் மூச்சுக் காற்றை மேலே செல்ல விடாமல் தனக்கே திரும்ப சுவாசிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. மற்ற விசிறிகளைப் போல அறையினுள் உள்ள காற்றை வெளிப்படுத்தவோ வெளியிலிருந்து புதிய காற்றை உட்புகுத்தவோ இது உதவுவதுமில்லை. இதுவே தூக்கமின்மைக்கும் உடல் அசதிக்கும் காரணமாகிறது. சகிப்புத் தன்மையைக் குறைக்கக் கூடிய எந்த செயலும் நம்மைப் பாதிக்கக்கூடும்.

  கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை தலை, முகம் மீது ஊற்றிக் கொள்வதும் குடிப்பதும் மிகவும் கெடுதலாகும். உடல் சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகே குளிர்ந்த நீரை குடிப்பதற்குப் பயன் படுத்தலாம்.

  எதிரும் புதிருமான நிலையிலுள்ள சூட்டை, குளிர்ச்சியினாலும் குளிர்ச்சியான நிலையில் உடனே சூட்டினாலும் மாற்றி அமைக்க முற்படும் போது நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் பலவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

  நன்னாரி சர்பத், வெட்டிவேர் போட்டு ஊற வைத்த பானைத் தண்ணீர், தலைக்குத் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு, இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையின் தூக்கலான உணவு முறை, பகலில் சிறிது நேரம் படுத்து உறங்க ஏற்படும் வாய்ப்பு கிட்டினால் அதை நன்கு பயன்படுத்திக் கொள்வது, மனதை மகிழ்ச்சியூட்டும் நண்பர்களின் சேர்க்கை, எந்த நிலையிலும் மனதைச் சாந்தமாக அமைத்துக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் போன்றவை கோடையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சில அரண்களாகும்.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
   ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
   நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
   செல் : 94444 41771

  ]]>
  sleep, sleeplessness, restless, mind, body https://www.dinamani.com/health/health-news/2019/jun/24/reason-for-sleeplessness-3178148.html
  3174750 மருத்துவம் செய்திகள் காய்கறிகளில் சத்துக்கள் வீணாமல் இருக்க இதைச் செய்யுங்கள்! Wednesday, June 19, 2019 11:25 AM +0530 பொட்டுக்கடலை மாவுடன் கருப்பட்டி - முட்டை கலந்து அடையாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் புஷ்டி உண்டாகும்.

  முளை கட்டிய கோதுமையை வெயிலில் காய வைத்து அதனுடன், பாதாம், முந்திரி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு. தினமும் பாலில் 1 தேக்கரண்டி கலந்து கொடுத்து வர குழந்தைகளுக்கு உடல் எடை கூடும்.

   - ரக்ஷனா சக்தி, திருநெல்வேலி.

  குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்யும் போது காய்கறிகளை பெரியத் துண்டாக வெட்டிப் பயன்படுத்தினால் அதன் சத்துக்கள் வீணாகாது.

  குளிர்ச்சியும், இருட்டும் உள்ள இடத்தில் பாலை வைத்திருந்தால் அதிக நேரம் கெடாமலிருக்கும்.

   - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

  200 கிராம் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு கிரைண்டரில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 4 தேக்கரண்டி அரிசி மாவைத் தூவி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கொத்துமல்லித் தழை போட்டுக் கலந்து வடை தட்டினால் வடை சூப்பராக இருக்கும்.

  எந்த வகை கட்லட் செய்தாலும் அதனுடன் ஏதாவது ஒரு கீரையை சிறிது சேர்க்கவும். கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும்.

  ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம்பழம் இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி, கன்டென்ஸ்ட் மில்க், தேன் கலந்து வைத்துக் கொள்ளவும். அதில் அரிசிப் பொரியைக் கலந்து கொடுத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.

  காய்கறி வேக வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது எடுத்து சூப், குருமா, சப்பாத்தி மாவு செய்யும் போது சேர்க்கலாம்.

  சூப் வகை எதுவாக இருந்தாலும் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்தால் சூப் சூப்பராக இருக்கும்.

  வெஜிடபிள் சமுசா தயாரித்தவுடன் அதை ஒரு தட்டில் வரிசையாக அடுக்கி, ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு எடுத்து, சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சூப்பராக இருக்கும். நீண்ட நேரம் மொறு மொறுப்பாக இருக்கும்.

  வெந்தயக் கீரையில் சாம்பார் செய்யும்போது தாளிக்கும் போதே கீரையை வதக்கிவிட்டு, பிறகு பருப்பு சேர்த்தால் சாம்பார் கசக்காமல் இருக்கும்.

   - எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

  வெயில் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீர்ச்சுருக்கு அதிகம் ஏற்படும். அதிலும், பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே காரணம். நீர்சுருக்கு ஏற்படாமலிருக்க, தாராளமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. அதுபோன்று இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
   எளிய வைத்தியம் நூலிலிருந்து

   - சி.பன்னீர் செல்வம், செங்கற்பட்டு.
   
   

  ]]>
  health tips, tips, lifestyle tips https://www.dinamani.com/health/health-news/2019/jun/19/lifestyle-tips-3174750.html
  3171337 மருத்துவம் செய்திகள் உடல் சூடு அதிகரித்துவிட்டதா? இதோ ஒரு நல்ல தீர்வு Friday, June 14, 2019 04:06 PM +0530 என் வயது 40. தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளேன். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை. அமர்ந்து பணி புரிகிறேன். எனக்கு உள்ள பாதிப்பு என்னவென்றால் - எனது உடல் மிகவும்  சூடாக  உள்ளது.  எனது தோல் முகம் தவிர, பிற இடங்களில் சுருக்கமாக உள்ளது. சரியாகச் சீரணம் ஆவது இல்லை. மலச்சிக்கல் உள்ளது. மூலம் ஆரம்ப நிலையில் உள்ளது. அலுவலகத்தில் வேலை குறைவு. எனவே காலை 10 மணிக்கே தூக்கம் வருவது போல் உணர்கிறேன். சுறுசுறுப்பு இல்லை. மாலையில் முதுகின் கீழ்புறம் கனமாகவும், வலி நிறைந்தும் இருக்கிறது. என்ன மாத்திரை நான் சாப்பிட வேண்டும்? என் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்?

  -தீபா, ஆனைமலை.

  மனிதர்களுக்கு  வயிற்றுப் பகுதி உடலின் மத்திய பாகத்தில் இருப்பதால்  உடல் உறுப்புகள் தம் போஷணைக்காக வயிற்றை நம்பித்தான் வாழ்கின்றன. உணவின் சத்தான பகுதி பிரிக்கப்படுவதும், அதன் பட்டுவாடா உடல் பகுதிகளுக்குத் திறம்பட எடுத்துச் செல்லப்பட வேண்டிய பகுதியாகவும் வயிறு இருப்பதால், வயிற்றை நாம் பேணிக்காக்க வேண்டிய நிர்பந்தத்திலிருக்கிறோம். உங்களுக்கு சரியாகச் சீரணமாகவில்லை, மலச்சிக்கலுமிருக்கிறது,  மூலம் ஆரம்ப நிலையில் உள்ளது. இதன் மூலம் நாம்   அறிவது, உங்களுக்கு வயிற்றில் அமிலச் சுரப்பு குறைந்துள்ளது; குடலில் ஏற்படும் தன்னிச்சையான அசைவுகள் மந்தமாகிவிட்டன; ஆசனவாயில் அழுத்தம் ஏற்பட்டு சதை பிதுங்கியுள்ளது. இவை அனைத்தையும் ஒருசேர குணப்படுத்தும் வகையில் உணவும், மருந்தும் அமைந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

  காலையில் 5 மணிக்கு எழுந்து சுமார் 300 மி.லி. தண்ணீர், வெந்நீராகவோ அல்லது ஆறிய வெந்நீராகவோ பருகவும். காலையில் 7 மணிக்கு இரண்டு பூவன் வாழைப்பழம் உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு 300 மி.லி. காய்ச்சியப் பால் இளஞ்சூடாகக் குடிக்கவும். காப்பி சாப்பிட்டுப் பழகியவர் என்றால் பாலில் சிறிது காபி கலந்து கொள்ளலாம். காலையில் இட்லி, தோசை போன்ற மாவுப் பணியாரம் தவிர்த்து சூடான புழுங்கலரிசி சாதத்துடன் நெய் கலந்து பச்சைக்கறி காய்கள் பருப்பு ரசம், விளாவிய மோர் என்ற வகையில் சாப்பிடலாம். தயிர் நல்லதல்ல. மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிடுபவராக இருந்தால் காலையில் 11 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, தக்காளி, அத்திப்பழம், ஆப்பிள் பழம் இவற்றில் கிடைத்தவற்றைச் சாறு பிழிந்தோ அப்படியேவோ சாப்பிடவும். இரவு 8 - 9 மணிக்கு சாப்பிடும் நிலையில், மாலையில் ஐந்து மணிக்கு சுமார் 300 மி.லி. வெது வெதுப்பான பால் சாப்பிடவும். இரவு உணவில் புளி - புளிப்பு சேர்ந்த உணவுப் பொருள் இல்லாதபடி பச்சைக்கறிகாய் சேர்த்து (வேக வைத்து) கூட்டு, சாதம், விளாவிய மோர் சாதம் சாப்பிடவும். சாப்பிடும் பொழுதும் தனியாகவும், நீர் சிறிய அளவில் ஆனால் அடிக்கடி குடிக்கவும். கடைசியில் இரவு படுக்கும் முன்பு வெந்நீர் 300 மி.லி. குடிக்கவும்.

  மேற்குறிப்பிட்ட உணவு முறைகளில் முன்னும் பின்னும் இடையேயும் மருந்துகளை நுழைத்துச் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்னைகளை விரைவாகக் குணப்படுத்த முடியும். அந்த வகையில் - சுத்தமான பால் பெருங்காயம் 1 கிராம், இந்துப்பு 3 கிராம், ஆமணக்கெண்ணெய் 9 மி.லி., உள்ளிப்பூண்டு சாறு 27 மி.லி. என்ற அளவு முறையில் தேவைக்குத் தகுந்தபடி அதிக அளவிலும் ஒன்று சேர்த்துக் குலுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளில் 2-3 வேளை, ஒரு வேளைக்கு 15 மி.லி. வீதம் 15 மி.லி. பால் அல்லது வெந்நீர் கலந்து சாப்பிடவும். உணவிற்கு ணீ மணி நேரம் முன் ஹிங்க்வஷ்டகம் சூரணம் எனும் அஷ்ட சூரணம் தரமாகக் கிடைக்கிறது. ஒரு வேளைக்கு 2 கிராம். உணவு சாப்பிடும் பொழுது முதலில் இரண்டுவாய் சாதத்தில் சூரணமும் நெய்யும் சதும்பச் சேர்த்து சாப்பிட்டு, பிறகு மற்ற உணவுகளைச் சாப்பிடவும் ஒரு நாளில் இருவேளை மட்டும்.

  சுமார் அரைலிட்டர் புளித்த தயிரைக் கடைந்த கெட்டிமோரில் விதை நீக்கிய கடக்காய்கள் 30, இந்துப்பு 20 கிராம் 3-4 நாட்கள் வெய்யிலில் ஊறவைத்து, பிறகு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். உணவிற்குப் பிறகு ஒரு கடுக்காய் வாயில் அடக்கிச் சாப்பிடவும். காலை இரவு 2 வேளை இந்த மூன்று மருந்துகளையும் உபயோகித்துக் கொண்டு பத்தியமாய் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உங்கள் வயிற்றுப் பிரச்னைகள் தீருவதுடன், ஊட்டம் குடல் வழியாக உடலில் மற்ற பகுதிகளுக்கு விரைவாகக் கிடைப்பதால், தோல் சுருக்கம் நீங்கும், அலுவலகத்தில் தூங்கிவழியும் நிலை, இடுப்பில் ஏற்பட்ட கனம், வலி ஆகியவை நன்கு குறைந்துவிடும். உடல் உஷ்ணம் தவிர்க்க சூரத்தாவாரையின் உலர்ந்த காய்கள் 5 - 15. சுத்தமான தண்ணீர் அல்லது உலர் திராட்சைப் பழச்சாறில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரைத் தனியாகவோ, பால் கலந்தோ 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட, நீர்ப் பேதியாகி பித்தம் வெளியேறிவிடும். உடற்சூடு நன்றாகக் குறையும்.

  ]]>
  body heat, heat body, food, உணவே மருந்து, உடல் சூடு https://www.dinamani.com/health/health-news/2019/jun/14/body-heat-remedies-3171337.html
  3169279 மருத்துவம் செய்திகள் முக்குற்றம் என்றால் என்ன? கோவை பாலகிருஷ்ணன்  Tuesday, June 11, 2019 12:15 PM +0530 நமது உடலானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளினால் ஆன கலவை. 

  இவற்றில் வாதம் என்கிற காற்று, பித்தம் என்கிற நெருப்பு, கபம் அல்லது சிலேத்துமன் என்கிற நீரின் விகிதங்கள் ஒவ்வொரு உடலிலும் மாறுபடும். 

  காற்றின் விகிதம் உடலில் அதிகமிருப்பின் அதனை வாத உடம்பு என்றும், நெருப்பின் விகிதம் அதிகமிருந்தால் அதனை பித்த உடலென்றும், நீரின் அளவு மிகுந்திருந்தால் கப உடலென்றும் நமது முன்னோர்கள் பகுத்துக் கூறியிருக்கின்றனர்.

  முக்குற்றம் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் விகிதங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் போதே நமது உடலில் நோய் உருவாகிறது. 

  வாதம் என்கிற காற்றின் தொடர்பாய் எண்பது நோய்களும், பித்தம் என்கிற நெருப்பின் தொடர்பாய் நாற்பது நோய்களும், கபம் என்கிற நீர் தொடர்பாய் தொண்ணூற்றியாறு நோய்களும் இருப்பதாக சித்தர் பெருமக்கள் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

  சித்த மருத்துவமே இந்த அடிப்படையில்தான் இயங்குகிறது. இந்த விவரங்களை பல பதிவுகளின் ஊடே முன்னரே எழுதியிருந்தாலும் கூட, நமது மருத்துவத்தின் அடிப்படையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

  இத்தகைய உடலில் தங்கியிருக்கும் உயிரை காத்து வளர்க்கும் மருந்தே நாம் உட்கொள்ளும் உணவு. எனவேதான் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற விதி இன்றளவும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாய் இருக்கிறது. 

  நோய்க்கு மருந்து தருவதை விடவும் நோய்க்கான காரணம் அறிந்து மருத்துவம் செய்வதும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளில் ஒன்று.

  எல்லாம் சரிதான்!, நோயை எப்படி அறிவது?

  நவீன மருத்துவம் நோயை கண்டறிய இரண்டு அடிப்படை உத்திகளை கொண்டிருக்கிறது. அவை பொதுவான அறிகுறிகள் (signs), மற்றும் உணர்குறிகள் (symptoms) என்பனவாகும். 

  சித்த மருத்துவத்திலும் இவை கையாளப்படுகிறது. ஆனால் இதைத் தாண்டிய மூன்றாவது ஒரு வழியும் சித்த மருத்துவத்தில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது.  

  நோயைக் கண்டறியவும், அதற்கான தீர்வுகளை காண மூன்றாவது வழியாக சோதிடம் பழந்தமிழரின் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

  ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா!!. 

  சித்த மருத்துவத்தில் சோதிடம் என்பது மூலிகைகளை பறிக்க வேண்டிய நேரத்தைக் கணிப்பது முதல் நோய் ஆரம்பித்த நேரத்தை கணக்கில் கொண்டு நோய் குணமாகும் கால அளவை தீர்மானிப்பது வரை நீண்டிருக்கிறது. 

  இதனை சித்தர் பெருமக்கள் "சகுன சாத்திரம்" என்கின்றனர்.

  நன்றி - சித்தர்கள் இராச்சியம்

  *ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

  ]]>
  siddha, alternate medicine https://www.dinamani.com/health/health-news/2019/jun/11/siddha-and-its-best-cure-3169279.html
  3167331 மருத்துவம் செய்திகள் முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கிறதா? - G.லதா, மந்தவெளி Saturday, June 8, 2019 02:57 PM +0530  

  முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், புதினா இலையின் சாற்றினை முகத்தில் பருக்கள் மீது தடவி அரைமணி ஊற விட்டு பின்பு முகத்தினை கழுவ வேண்டும். இவ்வாறு  தொடர்ந்து செய்ய, பருக்கள் முகத்தில் இருக்காது. மாசு மருவின்றி பொலிவுடன் முகம் காணப்படும்.

  உடலில் வலி இருந்தால்.....கண்டந்திப்பிலி ரசம் வைத்து, குழைந்த சாதத்துடன் சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் உடல் உறுப்புக்களில் வலி இருக்காது. நல்லெண்ணையை உடலில் முழுக்க தேய்த்து குளிக்கும் போது வலி மற்றும் உஷ்ணம் குறையும்.

  மேனி பளபளக்க வேண்டுமானால் அன்றாடம் சுத்தமான தேங்காய் எண்ணையை குளிக்கும் முன்பு முகம், கைகள், முழங்கால்கள், கழுத்தில் நன்கு தடவி ஊற வைத்து குளித்தால் மேனி பளபளப்பாகும். சருமத்தின் நிறம் கூடும்.

  இரவில் மஞ்சள் பொடி,மிளகு பொடி சிட்டிகை  பாலில் சேர்த்து கொதித்ததும் பனஙகற்கண்டு போட்டு குடித்தால் தொண்டைகட்டு, கரகரப்பு சரியாகும்.

  ]]>
  pimple, face, beauty tips, tips, பரு, முகப்பரு, அழகு, அழகுக் குறிப்பு https://www.dinamani.com/health/health-news/2019/jun/08/முகத்தில்-பருக்கள்-அதிகமாக-இருக்கிறதா-3167331.html
  3164918 மருத்துவம் செய்திகள் தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறதா? - G.லதா, மந்தவெளி் Tuesday, June 4, 2019 02:22 PM +0530  

  தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி அத்துடன் வேப்பிலையை ஊற வைத்து அரைத்து தலைமுடியில் பூசி அரைமணி கழித்து நல்ல தண்ணீரால் தலைமுடியை அலசினால் பேன் தொல்லை இருக்காது.

  **

  நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டு அவதிபடும் அனைவருக்கும் ஓரு எளிய தீர்வாக, சிறிது கட்டி கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து இரும்பு கரண்டியில் விட்டு அடுப்பிலோ /விளக்கிலோ காட்டி சூடு படுத்தி கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் விரல்களால் நெஞ்சில் தடவ, கபம் இளகும். மூச்சு சுவாசம் சீராகும்.

  **

  விருந்து முடிச்சாச்சு. வயிறு கனமாக இருந்தால்? இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்து அதனுடன் ஓரு டீஸ்பூன் சீரகமும், சோம்பும் போட்டு நன்கு கொதித்ததும்,தண்ணீர் 1 கோப்பை யாக,வற்றியதும் குடிக்கவே, வயிற்றின் பாரம் குறைந்து நன்கு பசி எடுக்கும்.

  **

  தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தால் மோரில் நீர் விட்டு, உப்பு சிட்டிகை கலந்து குடித்தால் தாகம் தணிந்து நாவறட்சி குறையும்.

  ]]>
  water, summer, tips, தண்ணீர், வெயில், கோடை, டிப்ஸ் https://www.dinamani.com/health/health-news/2019/jun/04/remidies-for-lice-3164918.html
  3164314 மருத்துவம் செய்திகள் சித்த மருத்துவத்தில் கலிக்கம் மற்றும் நசியம் என்றால் என்ன? Monday, June 3, 2019 04:18 PM +0530  

  இன்றைய நவீன காலத்தில் ஆன்மிகமும், மருத்துவமும் இன்று பல்வேறு நிலைகளை தொட்டுவிட்டது. இருப்பினும் நாம் தத்தளித்து கொண்டிருக்கின்றோம். என்னதான் நவீன யுகம் வந்தாலும் நம் பாரம்பரியம் மற்றும் பண்பாடே நம்மை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும். இந்தப் பதிவின் மூலம் நாம் சித்த மருத்துவத்தின் இரு வகையான மருத்துவ முறைகளை காண இருக்கின்றோம். அவை முறையே கலிக்கம் மற்றும் நசியம் என்பது ஆகும்.

  கலிக்கம் - தோல் நோய்களுக்கு கண்கள் வழியாக மருந்து அளித்தல்

  வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை. காரணம் ஈரல்,  மண்ணீரல்,  சிறு நீரகம்  ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும், நஞ்சுகளும்!!!

  கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர்  பாரம்பரியமாக  கையாண்டு வந்த சில அரிய மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால் விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது. தோல் நோய் உள்ளவர்கள் முசக்காத்தான் இலை, குப்பைமேனி இலை, வேப்பிலைமூன்றும் சம அளவில் வைத்து 10 மிளகுடன் அரைத்து 2 நாளைக்கு ஒரு தடவை இரவில் பூசிக்கொள்ள வேண்டும்.

  அவசியம் அசைவம். கத்தரிக்காய், புளி தவிர்க வேண்டும். ஒருவர் மூன்றுமுறை மருந்திட்டு நோய் நீக்கம் பெறலாம். திண்டுக்கல் சித்த வைத்தியர் கயிலை முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இந்த சேவையை தம் தந்தையாரின் காலத்திலிருந்து இலவசமாக செய்து வருகிறார்கள் . தற்போது அருட்தந்தை வேதாத்தரி  மகரிஷி  அவர்களின்  அருளாசியோடு மாதம் முழுவதும் இந்த சேவையை அனைத்து மன்றங்களிலும் மனநிறைவோடு ஆற்றி வருகிறார்கள். கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும், நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

  இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவதோடு,இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம்

  1) உடலில் ஏறிய விஷம்,
  2) வர்மம்,
  3) வாதம் 80,
  4) நெடு மயக்கம்(கோமா),
  5) மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்)

  ஆகியன தீரும்.

  நாங்கள் சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் இந்த மருத்துவ முறையை கடந்த 3 முறை செய்து உள்ளோம். இந்த சேவையில் சைதை மன்றத்தின் பணி பற்றிச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. நேர்த்தியான அணுகுமுறையில் மாதம் முதல் ஞாயிறு அன்று இந்த இலவச சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மகன் திரு சதிஷ் ஐயா இந்த சேவையை ஆற்றி வருகின்றார்கள். எனவே அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் உடல் நலம் காக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.  

  நசியம்-  மூக்கிற்கு மருந்து இடுதல் 

  மூக்கில் இடும் முக்கிய நசிய (மூக்கிலிடும் மருந்து) மருந்தை இங்கே காண்போம்.

  நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.

  இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம் (முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.

  இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன. பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. ரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன. மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால் (காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும், வெந்நீரில் குளிப்பதனாலும், இதே விளைவுகள் உண்டாகின்றன.) ரத்தக் குழாய்களின் கன பரிமாணம் (DENSITY) மாறுபட்டு அவைகளின் சுருங்கி விரியும் (ELASTICITY) தன்மை பாதிக்கப்படுகின்றது.

  அலோபதி மருத்துவர் நோயாளர் அவரிடம் சென்றால் என்ன செய்கிறது என்று நோயாளரிடம் கேட்பார். ஆனால் ஒரு தேர்ந்த சித்த மருத்துவர் (எனெனில் நன்கு நாடிப் பரிசோதனையில் தேர்வதற்கே குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும்) உங்களுக்கு இதெல்லாம் செய்கிறதா? இந்த வகை நோய் இருக்கிறதா? உடலின் இந்த இடத்தில் பிரச்னை என்பதை புட்டு புட்டு வைப்பார். நாடிப் பரிசோதனையில் கால் பங்கு வியாதி, சித்த மருத்துவரிடம் வந்துவிடும். மேலும் அரைப் பங்கு மருந்தால் தீரும். மீதமுள்ள கால் பங்கு செய்யும் தர்மத்தால்தான் தீரும் என்று அகத்தியர் கூறுகிறார். 

  சுருங்க கூறின், 45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்ய வேண்டும். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, ஒற்றைத் தலைவலி போன்றவை இந்த சிகிச்சை முறையால் குணப்படுத்தலாம்.

  இந்த நசியம் சிகிக்சை முறையானது சைதாப்பேட்டை மனவளக்கலை மன்றத்தில் மாதத்தில்  மூன்றாம் ஞாயிறு அன்று நடைபெற்று வருகின்றது. வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

  இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் உடல் நலம் மேம்படுத்த வேண்டுகின்றோம். சில விஷயங்கள் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்கப் பெறா. அது போன்றதுதான் நமது சிகிச்சை முறை. இலவசம்தானே என்று நினைக்க வேண்டாம். நமக்கு இலவசமாக கிடைக்கின்றது. ஆனால் பின்புலத்தில் பொருளாதார உதவி தேவை. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவதும் நன்று.

  - ராகேஷ் TUT

  ]]>
  siddha, alternative medicine, allopathy, kalikam, கலிக்கம், சித்த மருத்துவம், மாற்று மருத்துவம் https://www.dinamani.com/health/health-news/2019/jun/03/siddha-cure-3164314.html
  3164291 மருத்துவம் செய்திகள் இது தாய்மை அடைய உதவும் அருமருந்து! கோவை பாலகிருஷ்ணன்  Monday, June 3, 2019 12:40 PM +0530  

  புலிப்பாணிச் சித்தர் அருளிய பெண்களுக்கான தீர்வுகள்

  குழந்தைப் பேறு தள்ளிப் போய் தாய்மைக்காக ஏங்கிடும் பெண்களுக்கு என பல்வேறு தீர்வுகள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. 

  அத்தகைய தீர்வுகள் சிலவற்றை முன்னரே சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தாய்மை எய்திட உதவிடும் எண்ணை ஒன்றினைப் பற்றி இன்று
  பார்ப்போம்.

  இந்த தகவல் புலிப்பாணி சித்தர் அருளிய “புலிப்பாணி வைத்தியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

  "தானே தானின்ன மொன்று சொல்லக் கேளு
  தயவான வீழியலைச் சாறு நாழி
  மானேதான் தைவேளைச் சாறு நாழி
  மைந்தனே பிரமியிலைச் சாறு நாழி
  கோனேதான் கொட்டையிலைச் சாறு நாழி
  கொடிதான நிலவாகைச் சாறு நாழி
  தேனேதா னாவின்பால் படிதா னாழி
  தெளிவாகச் சரக்குவகை சொல்லக் கேளு.
  கேளேநீ மஞ்சளுடன் கடுகுகூடக்
  கெணிதமுட னிந்துப்பு வெண்கரந்தான்
  நாளேநீ கடுக்காயும் வெள்ளைப் பூண்டு
  நலமான ஆண்வசம்பு சுக்குங்கூடப்
  பாளேநீ வகைவகைக்கு விராகன் மூன்று
  பண்பாகப் பொடிசெய்து இதனிற் போட்டுக்
  கேளேநீ விளக்கெண்ணெய் நாழிவிட்டுக்
  கொடிதாக மெழுகுபதந் தன்னில் வாங்கே.
  பாங்குடனே மாதவிடா மூன்றாம் நாள்தான்
  பண்பாகத் தலைமுழுகிக் கரண்டி எண்ணெய்
  தாங்கியே கொடுத்துவிடு நாள்மூன்றப்பா
  தயவாக மறுபத்திய மொருநாள் காரு
  தூங்கியே திரியாதே ஐந்தா நாளில்
  துருசாகச் சிரசுக்கு நீரை வாரே
  வாரேநீ வறுத்தவுப்பு பொரிச் சாறப்பா
  வளமாக மற்றாநாளெல்லாஞ் சேரு..."

  வீழி இலைச் சாறு ஒரு நாழி, தைவேளைச் சாறு ஒரு நாழி, கொட்டைக் கரந்தைச் சாறு ஒரு நாழி, பிரமியிலைச் சாறு ஒரு நாழி, நிலாவாகைச் சாறு ஒரு நாழி, பசும்பால் ஒரு நாழி ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

  மஞ்சள், கடுகு, இந்துப்பு, வெண்காரம், கடுக்காய், வெள்ளைப் பூண்டு, ஆண்வசம்பு, சுக்கு ஆகியவற்றில் வகைக்கு மூன்று விராகன் வீதம் எடுத்து நன்றாகப் பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம்.

  பின்னர் இந்தப் பொடியினையும், முன்னர் சேகரித்த சாறு வகைகளுடன் சேர்த்து அதனுடன் மேலும் ஒரு படி விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் மெழுகு பதம் வரும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ள வேண்டுமாம்.

  கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள், தலை மூழுகிய பின்னர் இந்த எண்ணெயிலிருந்து ஒரு கரண்டி எண்ணெயை அருந்தக் கொடுக்க வேண்டுமாம். 

  பின்னர் இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் ஒவ்வொரு கரண்டிவீதம் அருந்தி, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார்.

  மருந்துண்ணும் மூன்று நாளும் பத்தியமாக இருந்து, நான்காவது நாள் மருந்து சாப்பிடாமல் பத்தியமாக இருக்க வேண்டுமாம். மேலும் நான்காம் நாள் பகலில் தூங்காமலும், வெய்யிலில் அலையாமலும் இருக்க வேண்டுமாம். ஐந்தாவது நாள் முழுகி அனைத்தும் வழக்கமான உணவுகளை உண்ணத் தொடங்கலாமாம்.

  நான்கு நாட்களும் பத்தியமாக உப்பு அதிகமுள்ள, வறுத்த, பொரித்த பண்டங்களை நீக்க வேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

  குறிப்பு :- ஒரு விராகன் என்பது தற்போதைய அளவுகளில் நான்கு கிராம் ஆகும்.

  நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

  ]]>
  pregnant, pregnancy, baby, motherhood, குழந்தையின்மை, தாய்மை, கருத்தரிக்க https://www.dinamani.com/health/health-news/2019/jun/03/natural-medicine-to-attain-pregnancy-3164291.html
  3162958 மருத்துவம் செய்திகள் மாதவிடாய் குறைபாடுகளை சரி செய்து சீரான மாதவிடாய் உண்டாக்கும் ஆரோக்கிய மருந்து! கோவை பாலா Saturday, June 1, 2019 10:58 AM +0530
  மாதுளம் பழ ஜூஸ்
   
  தேவையான பொருட்கள்

  மாதுளம் பழம் - 200 கிராம்
  பால் - 200 மி.லி
  தண்ணீர் - 200 மி.லி
  வெந்தயத் தூள் - அரை தேக்கரண்டி
  தேன் - ஒரு ஸ்பூன்

  செய்முறை : முதலில் மாதுளம் பழத்தை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதனுடன் பால், வெந்தயத் தூள் நன்கு கலக்கி அருந்தவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.

  பலன்கள் : இந்த ஜூஸை தொடர்ந்நு அருந்தி வந்தால் குடல் புண், பெருங்குடல் சார்ந்த வியாதிகள் நீங்கும். மேலும் மாதவிடாய் சார்ந்த குறைபாடுகளை நீக்கி சீரான மாதவிடாயை உண்டாக்கும் ஆரோக்கிய பானம் இது.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  mathulai, pomegranite, periods, menstual problems, மாதுளம் பழம், குடல் புண் https://www.dinamani.com/health/health-news/2019/jun/01/medicine-for-menstrual-problems-3162958.html
  3158899 மருத்துவம் செய்திகள் புற்றுநோயைப் பற்றிய உண்மைகளும் புரளிகளும் Sunday, May 26, 2019 08:43 AM +0530 பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அதைப் போல் புற்றுநோய் என்றாலே மக்கள் மிகுந்த பீதி அடைகின்றனர்.

  அதற்கு காரணம் பல.  புற்றுநோயைக் குணப் படுத்த முடியாது.  சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் திரும்ப வளரும். புற்று நோய் சிகிச்சைக்கு அதிகம் செலவாகும். புற்றுநோயை மந்திரம் மாயங்களால் குணப் படுத்தி விடலாம். புற்றுநோய் ஒரு பூர்வ ஜென்ப பாவம். என்றெல்லாம் மக்கள் நினைக்கின்றனர். ஆனால்,  புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் முறையான சிகிச்சைகளின் மூலம் முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய், ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் புற்றுநோய் முற்றிய பிறகு தகுந்த சிகிச்சை அளித்தால் கூட அதை குணப்படுத்த முடியாது.

  புற்றுநோய் திரும்பி வளர்வதற்கான காரணங்களில் மிக முக்கியமான காரணங்கள் இரண்டு 1. புற்றுநோயின் தன்மை. 2. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை. புற்றுநோயின் தன்மை: புற்றுநோயின் தன்மை என்பது புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களில் குணாதிசியங்களைப் பொருத்தது. அந்த குணாதிசயங்கள் பிறப்பிற்கு முன்போ, பிறப்பிற்கு பின்போ ஏற்பட்டிருக்கக் கூடும்.  பிறப்பிற்கு முன்பு மற்றும் பின்பு ஏற்படும் அதிர்ச்சிகள், மருந்துகள், கதிரியக்கச் சிகிச்சைகள் போன்றவற்றால் அந்த செல்களின் குணாதிசயங்கள் மாறுபடும்.

  அதைப் பொருத்தே ஒரு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகும் அது மிகத் தீவிரமாக வளரக்கூடிய புற்றுநோயா? அல்லது சிகிச்சையால் கட்டுப்படும் புற்றுநோயா? என்பது தெரியவரும்.  புற்றுநோய் சிகிச்சை: புற்றுநோய் சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை. கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, பிரத்யேக சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. சில புற்றுநோய்களுக்கு எல்லா சிகிச்சைகளிலும் தகுந்த நேரத்தில் சரியான விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

  அவற்றில் ஏதேனும் ஒன்றை தவறவிட்டால் கூட புற்றுநோய் திரும்ப வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  ஆரம்ப கண்டுபிடிப்பு, முறையான சிகிச்சை இதுவே புற்றுநோயை குணமாக்குவதற்கான தாரக மந்திரம் என்ற உண்மையை எல்லோரும் புரிந்து கொண்டால் புற்றுநோயே இல்லாத உலகத்தை விரைவில் படைக்கலாம். டாக்டர்  மோகன் பிரசாத் M.S., M.Ch., MNAMS., FAIS., FAGE, FICA., மோகனிஸ் மெடிசிட்டி மருத்துவமனை கே.கே.நகர், மதுரை தொலைபேசி: 0452 2521911, 2522727

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/may/26/புற்றுநோயைப்-பற்றிய-உண்மைகளும்-புரளிகளும்-3158899.html
  3157719 மருத்துவம் செய்திகள் பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்! Friday, May 24, 2019 02:25 PM +0530  

  • ஒரு ஜாரில் பூண்டைப் போட்டு வேகமாக குலுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
  • மைக்ரோவேவ்வில் 20-30 விநாடிகள் வைத்தால் தோல் தனியாக வந்துவிடும்.
  • பூண்டு மீது கத்தியை வைத்து உள்ளங்கையால் நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.

  • மைக்ரோ வேவ் இல்லை என்றால் பூண்டை வாணலியில் இட்டு லேசாக வறுக்கவும். தோல் தனியாக வந்து விடும்.
  • பூண்டை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒவ்வொன்றாக எடுத்து தரையில் வைத்து நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.

   
   - என். எஸ்

  ]]>
  poondu, garlic, பூண்டு https://www.dinamani.com/health/health-news/2019/may/24/how-to-clean-garlic-3157719.html
  3155947 மருத்துவம் செய்திகள் உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!   ராஜ்மோகன் Friday, May 24, 2019 11:44 AM +0530  

  சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம் நெருங்க, சிக்னலில் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த டிராபிக் காவலரும் விரைகிறார். கூடி நின்ற மக்கள் தண்ணீர் தெளிக்கிறது.

  எங்கிருந்தோ ஒரு ஆட்டோகாரர்  வந்து நிற்கிறார் 'வண்டியிலே ஏத்துங்க பக்கத்துல தான் ஆஸ்பத்திரி’ என்று  பதற்றக் குரல் வீச 'நல்ல வேளை ஸ்லோ பண்ணி விழுந்தாப்பலே வந்த வேகத்துல விழுந்திருந்தா சிதறி இருப்பாப்பலே!’

  'வண்டியை ஓரங்கட்டுங்க!’ என்று போலிஸ் அந்த இளைஞனின் இருசக்கர வாகனத்தை ஓரம் கட்ட, ஐ.டி. கார்டு பார்த்து கம்பெனிக்கு போன் செய்ய இன்னொரு உதவிக்கரம் முயல. ஒரு வயதான பெண் அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறது.

  அவுட் பேஷண்ட் பிளாக்கில் சோதித்த டாக்டர் வந்தவர்களிடம் சொல்கிறார் 'பதற்றப்படாதீங்க…..உடல் வறட்சியினாலே மயக்கம்… Dehydration… டிரிப் ஏத்தினா எல்லாம் நார்மலாகிவிடும்’

  வந்தவர்கள் பெருமூச்சு விட …'டெய்லியும்  ஒருத்தனாச்சும் மயக்கம் போடறதா பார்க்கிறேன்…!’ என்று புள்ளி விவரம் பேசினார் ஆட்டோக்காரர்.

  இந்த சம்பவம் ஒரு சோறு பதம்.

  சென்னையில் கொளுத்தும் வெயிலில் இந்த நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது. காலை பதினோரு மணி முதல் மாலை  நான்கு மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இந்த கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வெயிலின் அளவு 107 டிகிரி ஃபாரீன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது.

  இந்த நிலையில் உடல் வறட்சி பற்றிய விழிப்புணர்வும் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகளும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

  உடல் வறட்சி என்றால் என்ன ?

  உடலின் இயக்கத்திற்கு நீர்ச்சத்து அவசியம் என்பதை அறிவோம். ரத்த ஓட்டமும் அதன் அடிப்படையான காற்றோட்டம் சீராக இயங்க செய்யும் நுரையீரல், இதய ஓட்டமும் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்ச்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைவாக ஏற்படும் பாதிப்புதான் உடல் வறட்சி. கேட்பதற்கு ஏதோ ஒரு சாதரணமான பாதிப்பு போன்று தோன்றும் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது இந்த உடல் வறட்சி. பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீரை நாம் அருந்தவில்லையெனில் இந்த நீர்ச் சத்து குறைப்பாடுகள் ஏற்படும். ஆனால் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வியர்வையாக அளவுக்கு அதிகமாக நீர் வெளியாவதின் மூலமாக வெயிலில் திரிவதின் காரணமாக 'சன் ஸ்ட்ரோக்’ என்றழைக்கப்படும் பாதிப்பினால் இந்த உடல்வறட்சி அதிகம் ஏற்படுகிறது.

  உடல் வறட்சியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

  மிக எளிதான அறிகுறிகள் என்றால் தாகம் எடுப்பதுதான். ஆனால் தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பதை தள்ளி போடும் சோம்பேறித்தனம் நம்மிடம் அதிகம் இருக்கிறது. சிலர்  தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்ற நினைப்பிலும் அலட்சியமாக இருக்கின்றனர். இந்த தவறு பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது 

  பொதுவான சில அறிகுறிகளை பார்ப்போம்.

  பெரியவர்களுக்கான அறிகுறிகளாக  அதீத தாகம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது தாமதம். அடர்ந்த மஞ்சல் நிறத்தில் சிறுநீர் போதல், லேசான தலைச்சுற்றல், குழப்பம், மயக்கம், உடல் அசதி போன்றவை இருக்கும்

  பெரியவர்களால் இந்த அறிகுறிகளை உணர்ந்து பேச முடியும். சின்ன குழந்தைகளால் இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாது. அதனால் தாய்மார்கள் தான் குழந்தைகளை கூர்ந்து கவனித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.  குழந்தைகளுக்கான உடல் வறட்சி அறிகுறிகளானது  உதடுகளும் நாக்கும் வறண்டு காணப்படுவது, அழும் போது கண்களில் நீர் வராது, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு டயப்பர் ஈரமாகவில்லையெனில் (சிறுநீர் கழிக்காமல் இருக்கும்) கண்களில் சுருக்கம், தலை உச்சியில் தடவி பார்த்தால் மென்மையாக இருத்தல், குழந்தையின் பாவனையில் எரிச்சலும், விட்டு விட்டு அழுவதும் என அறிகுறிகளை உணர முடியும்.

  குழந்தைகளை போன்ற முதியோர்களுக்கும் தாகம் எடுத்த உணர்வு அதிகம் இருக்காது என்கிறார் மூப்பியல் மருத்துவ நிபுணர் திரு, நடராஜன். உடல் வறட்சியின் வீரியம் புரிகிறது. சரி இதிலிருந்து எப்படி தப்புவது ?

  பாதுகாப்புடன் உடல் வறட்சியை தவிர்க்க பத்து கட்டளைகள் இதோ..

  1. நிறைய தண்ணீர் குடிப்பதுதான் முதல் நடவடிக்கை. தாகம் எடுக்கவில்லை என்று  யோசித்து நிற்காமல் குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். குழந்தைகளோ முதியவர்களோ அவர்கள் கேட்கவில்லையெனினும் போதிய இடைவெளியில் நீர் கொடுத்துக் கொண்டே இருங்கள்.
  2. எளிய காய்கறி சூப் வகைகள் அல்லது பழச்சாறு வகைகளை ஐஸ் இல்லாமலும் சின்ன ஸ்பூன் மூலம் பிள்ளைகளுக்கு தரலாம்.
  3. நிறைய காய்கறிகள் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தர்பூசணி, கிருணி, ஆரஞ்சு போன்ற பழங்கள், முள்ளங்கி, அரைக்கீரை, சிறுகீரை ஆகியவை ஊட்டம் தரும். இஞ்சி, கருப்பட்டி, புதினா கலந்த சாறு உற்சாகமூட்டும்
  4. பொதுவாக சன்ஸ்கீர்ன் லோஷன்களை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் லேசாக பயன்படுத்தலாம். அல்லது தேங்காய் எண்ணெய் சிறப்பு.
  5. உடலுக்கு சத்தும் ஊட்டமும் கிடைக்க மோர், நன்னாரி, பழரசங்கள் உதவும். மோரில் கொஞ்சம் இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தட்டி போட்டு பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  6. வெயில் காலம் முடியும் வரை எளிய செரிமானம் ஆகக் கூடிய மென்மையான உணவையே உண்ணுங்கள். ஏன் எனில் நமது உணவு கடினமாக இருந்தால் அதனை செரிமானம் செய்ய அதிக வெப்பத்தை உடல் உற்பத்தி செய்யும்.
  7. மது அருந்தும் பழக்கம் இருந்தால் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மது உடலில் எளிதில் நீர் வறட்சியை உருவாக்கும். பீர் குடித்தால் குளிர்ச்சி என்பதற்கு எந்த வலுவான ஆதரமும் இல்லை. மதுவைத் தவர்த்தால் உடல் வறட்சியை தவிர்க்கலாம்
  8. தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் வெளியே செல்லுங்கள். தவிர வெயில் அதிகமாக இருக்கும் பொழுது வெளியில் செல்லாமல் இருப்பது பாதுகாப்பு
  9. மென்மையான் காற்றோட்டமான உடைகளை அணியுங்கள். கண்களில் அதீத வெளிச்சத்தின் பாதிப்பை தவிர்க்க தரமான கண்ணாடிகள் உதவும். தலையில் காட்டன் தொப்பி அல்லது மென்மையான துணிகளை சுற்றிக் கொண்டு செல்லுங்கள்
  10. கையில் எப்பொழுதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். கூச்சப்பபடாமல் குடை எடுத்து செல்வதும் புத்திசாலித்தனம். குறிப்பாக மாதவிலக்கு சமயங்களில் அதிக சக்தி வெளியேறுவதால் பெண்கள் நிறைய திரவ ஆகாரமும் வெளியே செல்லும் போது உரிய பாதுகாப்பும் அவசியம்.

  உடல் வறட்சி என்பது வெயில் காலத்தில் சகஜமானது என்று அலட்சியம் வேண்டாம். ஒவ்வொரு முறையும் உடல் வற்றி மீண்டும் திரவத்தை நிரப்பிக் கொள்ளும் போதும் கடுமையான நிலைக்கு சென்று திரும்புகிறது. இந்த உடல் வறட்சியே நாளைடைவில் சிறுநீரக கோளாறுகள், இருதய கோளாறுகள், செரிமான கோளாறுகள் என உள் உறுப்புகள் பிரச்னைகளுக்கு துவக்கமாகிவிடும். நம் உடலே நம் உயிரின் அடிப்படை. உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமுலர். திருமந்திரத்தை தினமந்திரமாக கொண்டு இந்த வெயிலை சமாளிப்போம். உடல் வறட்சியை தவிர்ப்போம் !

  ]]>
  body, dehydration, water loss, sun stroke, drink water, நீர்ச்சத்து, உடல் வறட்சி, சன் ஸ்ட்ரோக் https://www.dinamani.com/health/health-news/2019/may/21/body-dehydration-how-to-balance-fluid-content-3155947.html
  3157694 மருத்துவம் செய்திகள் இளநீரில் இத்தனை நன்மைகளா? DIN DIN Friday, May 24, 2019 09:04 AM +0530 இந்த கோடையினால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க மிகச் சிறந்த பானம் இளநீர். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையானது. மேலும், இளநீரில் எண்ணற்ற மருத்துவ குணகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்:

  • இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
  • பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.
  • பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
  • சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர்தான்.
  • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.
  • இளநீர், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிபடுத்தும்.
  • அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை உடனே பெறலாம்.
  • சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும்.

  • இளநீரை பருகினால் வயிறு நிறைந்து போகும். இதனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.
  • இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதனாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
  • இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
  • இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.
  • உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது.
  • மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல்சூடு தணிக்கப்படுகிறது. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் சக்தி இளநீருக்கு உண்டு.
  • இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இளநீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இரவில் இனிமையான உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது.

   - என். சண்முகம்
   

  ]]>
  tender coconut, ilaneer, இளநீர் https://www.dinamani.com/health/health-news/2019/may/24/medicinal-benefits-of-tender-coconut-3157694.html
  3157690 மருத்துவம் செய்திகள் பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா? Friday, May 24, 2019 08:29 AM +0530 பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ:

  தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். 

  இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும். 

  ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

  பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.

  கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

  1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.
   - ஏ.எஸ். கோவிந்தராஜன்

  ]]>
  teeth, tooth care, smile, laugh https://www.dinamani.com/health/health-news/2019/may/24/daily-tooth-care-3157690.html
  3156600 மருத்துவம் செய்திகள் இந்த 5 தவறுகளை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வழுக்கை தான்! உமா ஷக்தி DIN Wednesday, May 22, 2019 01:40 PM +0530  

  1-ஆம் தவறு

  டிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் உங்கள் தலைமுடி வேர்கள் வலுவிழந்துவிடும். அதன் பிறகு தினமும் கணிசமான அளவு உதிர ஆரம்பிக்கும்.

  தினமும் இப்படி முடி கொட்டினால் என்ன ஆவது? அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தலை வழுக்கையாகிவிடலாம். காரணம் ஷாம்பூவில் பலவிதமான வேதிப் பொருட்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்துவதுடன் குழி தோண்டி புதைத்துவிடும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஷாம்பூ போட்டு குளித்தால் போதுமானது.

  2-வது தவறு

  பலர் இந்தத் தவறை செய்கிறார்கள். ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் அதற்குரிய கண்டிஷனர்களையும் உடனடியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்யத் தவறுவதால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் தலைமுடிக்கு கெடுதல் செய்துவிடும். மாறாக கண்டிஷனர் பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக இருப்பதுடன் மென்மையாகும்.

  3-வது தவறு

  தலைமுடி சார்ந்த வணிக பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் எது புதிதாக வந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி சில விளம்பரங்களைப் பார்த்து ஹேர் ஜெல் போன்ற சிலவற்றை வாங்கி தலைமுடியில் தேய்க்கின்றனர். இது நல்லாயிருக்கே இதை ட்ரை பண்ணு என்று நண்பர்கள், முடி திருத்துபவர்கள் என சிலர் பரிந்துரைக்க, யோசிக்காமல் நாமும் அதையெல்லாம் தலைமுடியில் தேய்த்து வைக்க, அதன் பலனாக பல கெமிக்கல்கள் வேர் வரை ஊடுருவி முடியை சிறுகச் சிறுக கெடுதல் விளைவிக்கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் தலைமுடி முழுக்க கொட்டி, வழுக்கையாகிவிடும் என்பது உண்மை. எனவே ஜெல் பயன்படுத்துவதை தவிர்ப்பதே வரும் முன் காக்க என்பதன் அர்த்தம்.

  4-வது தவறு

  நீங்கள் அடிக்கடி தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா? அதுவும் நீண்ட நேரம் அணிவீர்களா? இது உங்கள் தலைமுடிக்கு கெடுதல் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் உங்கள் தலைமுடிக்கு கிடைப்பதை நீங்களே தடா செய்து, விரைவில் வழுக்கையாகி அதன் பின் தொடர்ந்து தொப்பியை வேறு வழியின்றி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எப்போதாவது ஆசைப்பட்டால் மட்டுமே தொப்பி அணிந்து மகிழுங்கள்.

  5-வது தவறு

  இது பலர் தவறு என்றே செய்யாமல் பழக்க தோஷத்தில் செய்யும் தவறு. தலைமுடியை வாரும் போதுதான் இந்தத் தவறு ஏற்படுகிறது. தலைவாருவது நல்ல பழக்கம்தானே என்று குழப்பமாக உள்ளதா? எப்போது தலை வாருவது என்பது எதனினும் முக்கியம். தலைக்கு குளித்துவிட்டு, அந்த ஈரத்துடன் சீப்பை போட்டு வறட் வறட்டென்று தலைமுடியை வாரினால் முடி உடைவதுடன், வேரோடு வெளியே வந்துவிடும். அடிக்கடி இப்படி செய்தால் வாராத வழுக்கையும் வந்து சேரும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர் தான் சீப்பை பயன்படுத்தி தலைவார வேண்டும்.

  ]]>
  bald, baldness, reasons for bald head, avoid bald, வழுக்கை பிரச்னை, தலைமுடி உதிர்தல், மொட்டை https://www.dinamani.com/health/health-news/2019/may/22/these-5-mistakes-can-make-you-bald-3156600.html
  3156570 மருத்துவம் செய்திகள் மலச்சிக்கலை போக்கும் ஆரோக்கிய பழரசம் கோவை பாலா DIN Wednesday, May 22, 2019 11:03 AM +0530  

  அன்னாசி பழ ஜூஸ்

  தேவையான பொருட்கள்
   
  அன்னாசி பழம் - 100 கிராம்
  பால் - 50 மி.லி
  வெல்லத் தூள் - 20 கிராம்
  மிளகுத் தூள் - 3 சிட்டிகை
  ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை

  செய்முறை : அன்னாசி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.பின்னர் அவற்றை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு அதனுடன் பால், மிளகுத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸாக்கி பருகி வரவும்.

  பயன்கள் : தலைக்கு குளித்தால் உண்டாகும் சளித் தொல்லையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அருமருந்தாகும். தலையில் ஏற்படும் நீர் கோர்வை மற்றும் மலச்சிக்கலை போக்கும் ஆரோக்கிய பழரசம் இந்த அன்னாசி பழ ஜூஸ்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  piles, stomach ache, indigestion, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் https://www.dinamani.com/health/health-news/2019/may/22/juice-to-rectify-piles-3156570.html
  3155928 மருத்துவம் செய்திகள் பெற்றோரில் 27% பேரும், குழந்தைகளில் 50% பேரும் ‘மொபைல் போனு’க்கு அடிமையானவர்கள்! ராக்கி Tuesday, May 21, 2019 12:50 PM +0530 பெற்றோரில் 27% பேரும், குழந்தைகளில் 50% பேரும் ‘மொபைல் போனு’க்கு அடிமையானவர்கள்
   
  லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் ஒருவர், தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதை மருத்துவர்களிடம் பிரச்னையாக முன் வைத்தார். இதேபோல், 40 வயது பெண்ணும் இதே பிரச்னைக்காக மருத்துவர்களை அணுகினார். இருவரையும் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

  வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும் போது படுத்தபடியே இடது பக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்த்துள்ளார். அந்த சமயங்களில் இவரின் இடது கண் தலையணையில் புதைந்திருக்கும். 40 வயதைக் கடந்த மற்றொருவர், தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே, விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்திகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  இந்த பழக்கத்தின் காரணமாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர் மஹ்ரூ கூறும்போது, நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திடீரென அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் குருடானது போல இருக்கும். எந்தளவுக்கு பளீர் வெளிச்சத்தை நேருக்கு நேர் நம் விழித்திரை சந்தித்ததோ, அந்தளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும். ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும்' என்றார். அண்மையில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பெற்றோரில் 27% பேரும், குழந்தைகளில் 50% பேரும் ‘மொபைல் போனு’க்கு அடிமையானவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

  ]]>
  smart phone, mobile phone, cell phone, addiction phone https://www.dinamani.com/health/health-news/2019/may/21/children-as-well-as-parents-are-mobile-phone-addicts-3155928.html
  3155901 மருத்துவம் செய்திகள் ஊளைச் சதை குறைய உதவும் ஆரோக்கியமான பானம் கோவை பாலா Tuesday, May 21, 2019 11:01 AM +0530
  தக்காளி பழ ஜூஸ்

  தேவையான பொருட்கள்

  தக்காளிப்பழம் - 200 கிராம்
  சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
  மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
  தண்ணீர் - 250 மி.லி

  செய்முறை : முதலில் தக்காளியை நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறை வடிகட்டவும். பின்னர் அதனுடன் தண்ணீர், மிளகுத் தூள், சீரகத் தூள் மூன்றையும் சேர்த்து கலக்கி பருகவும். தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

  பயன்கள் : இந்த  ஜூஸை பருகி வந்தில் உடம்பில் உண்டாகியுள்ள ஊழைச்சதை குறையும். உடல் பலவீனம் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களை விரட்டும் அற்புதமான  ஜூஸ். இந்த ஜூஸை  சிறுநீரக கல் மற்றும் பித்தப்பைக் கல் பிரச்னை உள்ளவர்கள் எடுக்க வேண்டாம்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  tomato juice, weight loss, fat, body weight, slim fit, உடல் எடை குறைப்பு https://www.dinamani.com/health/health-news/2019/may/21/weight-loss-juice-3155901.html
  3155271 மருத்துவம் செய்திகள் உஷார்! கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை வாங்காதீங்க! எப்படி கண்டுபிடிப்பது (விடியோ) உமா ஷக்தி Monday, May 20, 2019 04:15 PM +0530 மாங்காய், மாம்பழம் ஆகியவை நம் அனைவருக்கும் பிடித்தமானது. மாங்காய் பத்தை சாப்பிடாத குழந்தை பருவம் இருக்க முடியுமா? இன்றைய காலகட்டத்தில் ஒரு மாம்பழத்தை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. காரணம் நல்ல மாம்பழம், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் எப்படி கண்டுபிடிப்பது? ஒரு வழி உள்ளது. மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு என்பதுதான் உண்மை. 

  அண்மையில் நடந்த ஒரு ஆய்வில், 13000 நபர்களை வைத்து சோதித்துப் பார்த்தனர். பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல மாம்பழம் எது என்று கண்டுபிடிக்கத் தெரியாது என்று ஒப்புக் கொண்டனர். செயற்கை மாம்பழத்துக்கும் இயற்கையான மாம்பழத்துக்குமான வித்யாசத்தை எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாது என்று தெரிவித்தனர்.

  இது குறித்த முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்

  ]]>
  Calcium Carbide, mangoes, mango, sweet mango, மாம்பழம், கல் வைத்த மாம்பழம் https://www.dinamani.com/health/health-news/2019/may/20/how-to-find-calcium-carbide-ripened-mangoes-and-naturally-ripened-mangoes-3155271.html
  3155225 மருத்துவம் செய்திகள் ஃபைப்ரோமையால்ஜியா! வாயிலேயே நுழையாத இப்படியொரு வியாதி யாருக்கெல்லாம் வரும்? Monday, May 20, 2019 11:25 AM +0530  
  என் வயது 57. ஆசிரியராகப் பணிபுரிகின்றேன். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எனது கழுத்து நரம்புகளின் வாயிலாக (C6 - C7) வலி ஏற்பட்டது. பின் முதுகெலும்பு, இடுப்பெலும்பு, கால்களில் வீக்கம், வலி என வலிகளுடனேயே வாழ்ந்து வருகிறேன். வேலை செய்யச் செய்ய எனது கைகளும், கால்களும் வீங்கிக் கொள்ளும். சில நேரங்களில் முதுகு வலி என்னைப் பாடாய்ப்படுத்திவிடும். இரண்டு, மூன்று முறை MRI எடுத்துப் பார்த்தபொது அனைத்தும் தேய்ந்து விட்டதால் வேலையைக் குறைக்கச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மருத்துவர் இதற்கு ஒரு பெயர் சொன்னார் (FIBROMYALGIA) குணமாக்க முடியாது என்றார். ஆயுர்வேதத்தில் தீர்வு ஏதேனும் உள்ளதா?
  -ப. அனுராதா, பீளமேடு, கோவை.

  வேலைப் பளு, நீண்ட தூரம் பயணம், அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், உணவில் வாயுவை அதிகரிக்கக் கூடியவற்றை ஆறிய நிலையில் சாப்பிடுதல், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் நேராக இல்லாமல் வளைந்து தசைகளுக்கு வலி ஏற்படுத்துதல், எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், நாள் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து வேலை செய்தல், இரவில் கண்விழித்தல், தன்சக்திக்கு மீறிய உடற்பயிற்சி, பட்டினியிருத்தல், சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு போன்ற சில காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் FIBROMYALGIA என்ற உபாதை உருவாகலாம்.

  காரிய காரணத்தோடு கூடிய இந்த உபாதைக்குத் தீர்வாக, தண்டுவடம் முழுவதும் மூலிகைப் பொடிகளைக் கொண்டு கட்டப்பட்ட மூட்டையை வெது வெதுப்பாக ஒத்தி எடுத்தல், மூலிகைத் தைலங்களைச் சூடாக்கி, பஞ்சில் முக்கி, தண்டுவடத்தில் குறிப்பிட்ட சில மணி நேர காலம் ஊற வைத்தல், அதன் பிறகு மூலிகை இலைகளை மூட்டை கட்டிச் சூடாக்கி. ஒத்தடம் கொடுத்தல், மூக்கில் மூலிகைத் தைலம் பிழிதல், தலையில் வெதுவெதுப்பாக எண்ணெய்களை ஊற வைத்தல், ஆஸனவாயின் வழியாக தைலங்களையும், மூலிகைக் கஷாயத்தையும் செலுத்தி குடலைச் சுத்தப்படுத்துதல், உடலெங்கும் தைலங்களை சூடாகப் பிழிந்து ஊற்றுதல், நவர அரிசியை சித்தாமுட்டி வேர்கஷாயத்துடன் பாலும் கலந்து சாதமாக்கி, உடலெங்கும் தேய்த்துவிடுதல் போன்ற சில வைத்திய முறைகளைக் குறிப்பிடலாம்.

  தோலில் தேய்த்த எண்ணெய் உள்ளே பரவுமா? என்ற சர்ச்சை பல காலமாகவே இருந்து வருகிறது. இந்த சந்தேகத்தை ஆயுர்வேத மருத்துவராகிய ஸூச்ருதர் மிக அழகாகத் தீர்த்து வைக்கிறார்.

  "மாத்திரா என்பது பழங்காலத்திய அளவு. க ச ட த ப என்பது போன்ற ஒரு குறில் எழுத்தை உச்சரிக்கும் நேர அளவு மாத்திரை ஆகும். ஒரு நொடிக்கு 200, 300 மாத்திரைகள். உடலில் எண்ணெய் தேய்த்தது மாத்திரைகளில் (1½ நொடி)யில் தோலின் மேல்பரப்பில் பரவுகிறது. (தோல் பாலாடை போன்ற மெல்லிய 7 படலங்கள் கொண்டது. முதல் 3 படலங்கள் மேல் தோல் (மேல்பரப்பு) எனவும் உள் 4 படலங்கள் உள் தோல் என்றும் கூறப்படும்.) அதற்கு அடுத்த 400 மாத்திரை (2 நொடி)களில் உள்தோலில் ஊடுருவி விடுகிறது. அதற்கு அடுத்த 500 மாத்திரை (2½ நொடி)களில் ரத்தத்தினுள் பரவிவிடும். தசைகளை அடுத்த 600 மாத்திரை (3 நொடி)களில் அடையும். அதற்கடுத்த 800 மாத்திரை (4 நொடி)களில் எலும்பை அடைகின்றது. பின் தொடரும் 900 மாத்திரை (4 நொடி)களில் எலும்பினுள் உள்ள மஜ்ஜையை அடையும். பின்னர் 1000 மாத்திரை (5 நொடி)களில் சுக்கிலத்தினுள்ளும் பரவும்.

  இந்த 25 நொடிகளில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் தேய்த்ததால் ஏற்பட்ட நெய்ப்பும் நெய்ப்பால் ஏற்படும் நெகிழ்ச்சி முதலிய பல குணச்சிறப்புகளும் பரவிவிடும்' என்கிறார் ஸூச்ருதர். இது ஒரு பொது நேர அளவு. உடல்நிலை அனுகூலமாக இருந்தால் இதைவிட விரைவாகவே பரவலாம். எதிரிடையானால் தாமதமுமாகலாம்.

  எண்ணெய் பரவுகிறதெனில் எண்ணெய்யின் அணு அணுவான பகுதிகள் பரவும் எனக் கொள்வது அவசியமில்லை. மேல் தோலில் பரவிய எண்ணெய் அணுவின் தொடர்பால் ஏற்பட்ட நெய்ப்பும் மென்மையும் வறட்சி நீங்குதலும் தடை நீங்குதலும் நெகிழ்ச்சியும் விறைப்பின்மையும் அந்த அளவில் பரவுகின்றன என்றே பொருள். ஐஸ்மேல் படும்போது பட்ட தோல் பகுதி மட்டுமே ஈரமாகிறது. சில்லிப்பு உடல் முழுவதும் பரவி ஜ்வரம் தணிகிறது. இதுபோல் எண்ணெய் தடவுதலால் ஏற்படும் நெய்ப்பு பரவுகிறது எனக் கொள்ளத் தகும். இதையே ஸூச்ருதர் கணக்கிட்டுத் தருகிறார். 

  தசை நார்கள், எலும்புகள், ரத்தக் குழாய்கள், நுண்ணிய நரம்புகள் வலுப்படும் வகையில், தசமூலம் கஷாயம், விதார்யாதி கஷாயம், இந்துகாந்தம் கஷாயம், பத்ரதார்வாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம் போன்றவையும் தான்வந்திரம், வாயு, வாதகஜாங்குசம், பிரஹத்வாத சிந்தாமணி போன்ற மாத்திரைகளையும், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம், பலாரிஷ்டம் போன்ற அரிஷ்ட மருந்துகளையும், கல்யாணகம், தாடிமாதி, சுகுமாரம் போன்ற நெய் மருந்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தெடுத்துச் சாப்பிடக் கூடிய தரமான ஆயுர்வேத மருந்துகளால் நீங்கள் பயனுறலாம். 

  விடுமுறை கிடைக்கும் பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைச் செய்து கொள்வதும், ரத்த ஓட்டத்தைச் சுறுசுறுப்படையச் செய்யும் யோகாசனப் பயிற்சிகளை நல்ல யோகாசன ஆசானிடமிருந்து கற்றறிதலும், உணவில் இனிப்பு, புளிப்புச் சுவை சற்று தூக்கலாகவும், காரம் கசப்பு குறைவாகச் சேர்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்வதையும் நீங்கள் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. 

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771

  ]]>
  FIBROMYALGIA, leg pain, knee pain, ayurveda, massage, கால் வலி, ஃபைப்ரோமையால்ஜியா, ஆயுர்வேதம் https://www.dinamani.com/health/health-news/2019/may/20/ayurvedic-cure-for-fibromyalgia-3155225.html
  3155216 மருத்துவம் செய்திகள் அதிக உதிரபோக்கை குணப்படுத்தும் அற்புத அருமருந்து கோவை பாலா Monday, May 20, 2019 10:48 AM +0530 நாவல் பழ ஜூஸ்

  தேவையான பொருட்கள்

  நாவல் பழம் -  200 கிராம்
  நெல்லிக்காய்ச் சாறு -  50 மி.லி
  படிகாரத் தூள் -  அரை தேக்கரண்டி
  தண்ணீர்  - தேவையான அளவு

  செய்முறை : முதலில் நாவல் பழங்களை நன்றாக கழுவி அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொட்டைகளை நீக்கவும். பின்னர் வடிகட்டிய சாற்றுடன் நெல்லிக்காய்ச் சாறு மற்றும் படிகாரத் தூள் சேர்த்து கலக்கி அல்லது அரைத்து ஜூஸாக்கி பருகவும்.

  பயன்கள் : இந்த ஜூஸை குடித்து வந்தால் சர்க்கரை குறைபாடு நீங்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், அதிக உதிரப் போக்கை குணப்படுத்தும் அற்புத அருமருந்தாகும் நாவல் பழ ஜூஸ்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  jamun juice, naval pazha juice, blood, வாய் துர்நாற்றம், நாவல் பழ ஜூஸ் https://www.dinamani.com/health/health-news/2019/may/20/to-contgrol-blood-clot-3155216.html
  3154041 மருத்துவம் செய்திகள் முகத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உண்டாவதை நீக்கும் மருந்து இது! கோவை பாலா Saturday, May 18, 2019 11:16 AM +0530 மாம்பழ ஜூஸ்

  தேவையான பொருட்கள்

  நன்கு கனிந்த சுவையான மாங்கனித் துண்டுகள - 100 கிராம்
  கேரட் சாறு -  100 மி.லி
  தேங்காய்ப் பால் - 100 மி.லி
  தேன் - 2 தேக்கரண்டி

  செய்முறை : முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்பு அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.

  பலன்கள் : மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் தோல் மற்றும் குடல் சார்ந்த குறைபாடுகளை நீக்கும். மேலும் முகத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு  பொலிவை கொடுக்கும் அருமையான மாமருந்து ஜூஸ்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  mangoes, carror, coconut https://www.dinamani.com/health/health-news/2019/may/18/oily-face-remedy-3154041.html
  3153435 மருத்துவம் செய்திகள் சூடான உணவு சாப்பிட்டவுடன் மலம் போகத் தோன்றும் குறைபாட்டை நீக்கும் மருந்து கோவை பாலா Friday, May 17, 2019 01:15 PM +0530 திராட்சை ஜூஸ்

  தேவையான பொருட்கள்

  திராட்சை பழம் - 150 கிராம்
  வெந்தயத் தூள் - 5 கிராம்
  எலுமிசம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
  தேன் -  ஒரு தேக்கரண்டி
  தண்ணீர் - 250 மி.லி

  செய்முறை : முதலில் திராட்சை பழத்துடன் வெந்தயத் தூளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்.

  பயன்கள் : இந்தப் பழரசத்தை குடிப்பதன் மூலம் சூடான உணவு சாப்பிட்டால் உடனே மலம்போகத் தோன்றும் குறைபாடு நீங்கும். உடல் உஷ்ணம், பித்த தாகம் மறையும் , வறட்டு இருமல், உஷ்ண இருமல், தொண்டையில் உண்டாகும் கோழைக்கட்டு நீங்கும். ரத்தத்தையும் சுத்தப்படுத்தும் அற்புதமான மருந்து இந்த திராட்சைப் பழ ஜூஸ். 

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  stomach, pain, toilet, health, வயிறு வலி https://www.dinamani.com/health/health-news/2019/may/17/stomach-problems-3153435.html
  3152148 மருத்துவம் செய்திகள் தொண்டை புண், தொண்டை கரகரப்பு குணமாக்கும் மருந்து கோவை பாலகிருஷ்ணன்  Wednesday, May 15, 2019 10:52 AM +0530  

  மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.

  தொண்டை கரகரப்பு குணமாக:

  சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

  தொண்டைக் கட்டு குணமாக:

  மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

  தொண்டை சதை வளர்ச்சி குறைய:

  வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

  குரல் மாற்றத்தை சரி செய்ய:

  கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

  தொண்டைப் புண் ஆற:

  வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப் புண் ஆறும்.

  தொண்டை சதை குணமாக:

  புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.

  ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

  ]]>
  throat pain, throat infection, throat diseases, தொண்டை புண், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு https://www.dinamani.com/health/health-news/2019/may/15/best-medicine-for-throat-pain-3152148.html
  3151570 மருத்துவம் செய்திகள் உதடுகள் ரோசாப்பூவைப் போல ஜொலிக்க வேண்டுமா? இந்த 10 கட்டளைகளை பின்பற்றுங்கள்! ராக்கி Tuesday, May 14, 2019 02:22 PM +0530
 • உதடுகள் வறண்டு போகாமல் இருக்கக் கற்றாழைக் கூழை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்தால் அதிக பலன் கிடைக்கும். கற்றாழை சேர்க்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்துவதும் பலன் தரும்.
 • சிலர் மூக்கினால் சுவாசிக்காமல் வாய் வழியா சுவாசிப்பார்கள். அது அவர்களுக்கே தெரியாமல் பல தொல்லைகளுக்கு வழி வகுக்கும். முக்கியமாக உதட்டின் அழகு கெடும்.
 • உதடுகளில் அடிக்கடி வறட்சி அல்லது வெடிப்பு ஏற்பட்டால் அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம். அல்லது தாது உப்புக் குறைபாடாகவும் இருக்கலாம். 
 • சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் அது உடல் நலத்துக்கு மட்டுமல்ல உதட்டு நலத்துக்கும் கெடுதல்தான். காரணம் சிகரெட்டில் உள்ள நிகோட்டின்
 • உதட்டின் நிறத்தை மாற்றுவதுடன் இல்லாமல் நாள்பட்ட பழக்கத்தால் உதட்டுப் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிவிடும்.
 • வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றூம் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உதட்டழகை மேம்படுத்தும். நெல்லிக்காய், ஆரஞ்சு ஆகியவற்றில் இச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
 • உதடு வெடித்திருந்தால் பாதாம் எண்ணெய் அல்லது தேனை அதில் தடவினால் வெடிப்பு நீங்கும்.
 • லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவராக இருந்தால் அதை உதட்டினில் தடவும் முன், வெண்ணெயை லேசாகத் தடவ வேண்டும். அதன் பிறகு தான் லிப்ஸ்டிக்கை பூச வேண்டும். காரணம் உதட்டுச் சாயத்தில் உள்ள கெமிக்கல் உதடுகளில் படும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
 • சிலருக்கு உதட்டு வறட்சி ஏற்பட்டால் நாவினால் அதைத் தடவி ஈரப்படுத்திக் கொள்வார்கள். அது தவறான பழக்கம். உதடுகளை கடிப்பதும் தவறு.
 • தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் உதடு வறட்சியடைவது தடுக்கப்படும். அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான குளிர் இரண்டுமே உதட்டினை சட்டென்று பாதிக்கும். வாசலின் அல்லது பெட்ரோல் ஜெல் தடவி உதட்டைப் பாதுகாக்கலாம்.
 • ]]>
  lips, lip care, lip lock, lip kiss, lovely lips, beauty tips for lips https://www.dinamani.com/health/health-news/2019/may/14/how-to-take-care-of-your-lips-during-all-seasons-3151570.html
  3148338 மருத்துவம் செய்திகள் ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ் கோவை பாலா Thursday, May 9, 2019 12:26 PM +0530
  வல்லாரைக் கீரைத் துவையல்

  தேவையான பொருட்கள்

  வல்லாரைக் கீரை - 100 கிராம்
  மிளகு - 10 கிராம்
  சின்ன வெங்காயம் - ஒன்று
  பூண்டு - 5 பல்
  பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
  மஞ்சள் - 5 சிட்டிகை
  உப்பு, நல்லெண்ணெய் - (தேவையான அளவு)

  செய்முறை : பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து துவையலாக்கி கொள்ளவும். 

  பலன்கள் : இந்த துவையலை வாரம் மூன்று முறையாவது வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்கும். மேலும் சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active)இருப்பார்கள். இவர்களை தொடர்ந்து ஒர் இடத்தில் பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது , கோபப்படுவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  hyper active, kids, tips, ஹைபர் ஆக்டிவ், சுறுசுறுப்பு https://www.dinamani.com/health/health-news/2019/may/09/hyper-active-kids-3148338.html
  3148151 மருத்துவம் செய்திகள் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்? DIN DIN Wednesday, May 8, 2019 12:05 PM +0530 இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்? அதனை மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணாகும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

  ஆனால் இயற்கை முறையில் செய்யப்படுவது பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர பலனை கொடுக்கும்.


  நெல்லிக்காய்

  நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து அரைத்துப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய், வெந்தயத்துடன் சேர்த்து ஒரு வாணலியில் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். இதனை ஆறவைத்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். இதனை இரவு நேரத்தில் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து காலையில் எழுந்ததும் கூந்தலை அலச வேண்டும்.

  கறிவேப்பிலை

  கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்தவும் கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும், வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை இரவில் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும்படி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள்.

  பீர்க்கங்காய்

  பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே உலர்த்தி 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். பின்னர் எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும். பின்னர், வடிகட்டி ஒருபாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

  இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

   - பொ.பாலாஜிகணேஷ்
   

  ]]>
  curry leaves, kariveppilai, nellikkai, நெல்லி, கறிவேப்பிலை https://www.dinamani.com/health/health-news/2019/may/08/hair-problems-3148151.html
  3148129 மருத்துவம் செய்திகள் உங்கள் முகத்தில் விஷப் பருக்களா? உடனே இதை தடவுங்கள்! கோவை பாலகிருஷ்ணன் Wednesday, May 8, 2019 11:25 AM +0530  

  • சகலவிதமான வாந்திகளுக்கும் திருநீற்றுப் பச்சிலை நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. 
  • இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
  • முகம் போன்ற பகுதிகளில் விஷத்தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். 
  • இந்த வசப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக் கூட ஏற்படுத்திவிடும்.
  • இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை. 
  • திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு எனப்படும் கடைச் சரக்கை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும்.
  • நஞ்சினை முறிக்க மாற்று மருந்தாகப் பயன்படுகிறது.
  • கிராமப்புறங்களில் கை வைத்தியத்திற்கு இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. 
  • ஜுரத்தைக் குறைத்து வியர்க்கச் செய்யும் பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினியாகும். 
  • நோயை ஆற்றும். கபத்தை வெளியேற்றும். புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இதன் இலைசாறைத் தடவலாம். 
  • அஜீரணத்தைப் போக்கும். முத்திரக் கல்லை நீக்கும். படர்தாமரை நோயைக் குணப்படுத்தும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • பச்சிலையை புண், பரு, பேன் இவைகளைப் போக்க தேய்த்துக் குளிக்கலாம். இதன் மணத்திற்காக எண்ணெய் முறைகளில் சேர்ப்பதுண்டு. 
  • பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் குழைத்துப் பூசி தலை முழுகினாலும், பொடியைத் தனியாக தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு, சொறி, கற்றாழை நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.
  • இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது. இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும். 
  • புரையோடி சீழ் வைத்த பருக்களுக்கும், விஷப் பருக்களுக்கும் மூன்று வேளை தடவ பரு காய்ந்து உதிர்ந்து விடும்.
  • கண்களுக்கு இலையின் சாறு தடவ கண்கட்டி போன்ற கண் நோய்கள் குணமாகும். 
  • விதைகள் குளிர் பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

  ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

  ]]>
  beauty, திருநீற்றுப் பச்சிலை, Pimples, முகப்பரு, face, பருக்கள், பச்சிலை https://www.dinamani.com/health/health-news/2019/may/08/best-way-to-eradicate-pimples-3148129.html
  3148145 மருத்துவம் செய்திகள் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எளிய மருந்து! சினேகா DIN Wednesday, May 8, 2019 11:24 AM +0530  

  எலுமிச்சை பழத்தில் இருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். மனநிலையில் மகிழ்ச்சியும், நேர்மறையான எண்ணங்களும் உருவாகி மனம் அமைதியாகும்.

  உடலும் மனமும் அமைதியாக, மன அழுத்தம் குறைய வேண்டும் என நினைத்தால் இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு உறங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதைப் பார்க்கலாம்.

  எலுமிச்சை பழத்திலிருந்து வெளிவரும் நறுமணம் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் இரவு படுக்கும் போது எலுமிச்சைத் துண்டுகளை படுக்கை அருகில் வைத்திருப்பது நல்லது.

  சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையை தடுக்க, எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்க சுவாசிக்கும் திறன் மேம்படும்.

  எலுமிச்சை இயற்கை பூச்சிக்கொல்லி என்பது ஆச்சரியமான உண்மை. சிறிய எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணத்தால் பூச்சிகள் நம்மிடம் நெருங்காது.

  எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் அரிய மருந்தாக செயல்படுகிறது.

  ]]>
  lemon, lime, peace, mind, லெமன், எலுமிச்சை, மன அமைதி, மன அழுத்தம் https://www.dinamani.com/health/health-news/2019/may/08/for-the-happy-and-peaceful-state-of-mind-3148145.html
  3147410 மருத்துவம் செய்திகள் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க இது உதவும் கோவை பாலா Tuesday, May 7, 2019 10:33 AM +0530  

  முட்டைக்கோஸ் துவட்டல்

  தேவையான பொருட்கள்

  முட்டை கோஸ் - கால் கிலோ
  தேங்காய் துருவல் - 100 கிராம் 
  பெரிய வெங்காயம் - 100 கிராம்
  சீரகப் பொடி - 5 கிராம் 
  மிளகுப் பொடி - 5 கிராம் 
  எலுமிச்சம் பழச்சாறு - 30 மி.லி
  மஞ்சள் பொடி - 5 சிட்டிகை

  செய்முறை : முதலில் முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும். பின்னர் சீரகப் பொடி, மிளகு பொடி, மஞ்சள்த் தூள், எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் கோஸுடன் சேர்த்து ஒன்றாகக் கலந்து நன்கு கிளறி தேவைப்பட்டால் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

  பலன்கள் : இதனை ஒரு வேளை உணவாகவோ அல்லது நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகவோ சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் தீரும். தோல் சுருக்கம் நீங்கி  தோற்றப் பொலிவு தரும்  அற்புதமான கலவை இந்த முட்டைக்கோஸ்  துவட்டல்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/may/07/best-remedy-for-intestine-problems-3147410.html
  3146763 மருத்துவம் செய்திகள் வாயுக் கோளாறுகளை சீர் செய்யும் மருந்து! கோவை பாலா DIN Monday, May 6, 2019 11:00 AM +0530
  சுண்டைக்காய் வற்றல் பொடி
   
  தேவையான பொருட்கள்

  சுண்டக்காய் வற்றல் - கால் கிலோ
  வெந்தயம் -  200 கிராம்
  கொள்ளு - 150 கிராம்
  ஓமம் - 100 கிராம்
  மிளகு - 50 கிராம்
  ஏலக்காய் - 25 கிராம்

  செய்முறை : இவை அனைத்தையும் லேசாக வறுத்து ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

  பலன்கள் : இந்தப் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் சிறுகுடல் மற்றும் பெருங்கடல்அழற்சி  மற்றும் வாயுக்கோளறுகளையும் சீராக்கும் .

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  fenugreek, gastroentric, acidity, வாயுக் கோளாறு, சுண்டக்காய் https://www.dinamani.com/health/health-news/2019/may/06/வாயுக்-கோளாறுகளை-சீர்-செய்யும்-மருந்து-3146763.html
  3145597 மருத்துவம் செய்திகள் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்! கோவை பாலா Saturday, May 4, 2019 03:21 PM +0530  

  கலவைக் கீரை சத்துமாவு

  தேவையான பொருட்கள்

  முருங்கைக் கீரை (காய்ந்தது)  - 100 கிராம்
  தூதுவளைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
  பசலைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
  அரைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
  உளுந்து - 100 கிராம்
  சிறுபருப்பு - 100 கிராம்
  கொண்டைக் கடலை - 100 கிராம்
  பச்சரிசி -  1 கிலோ
  ஏலக்காய் - 5 கிராம்
  மிளகு - 10 கிராம்     

  செய்முறை : முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

  பலன்கள் : தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சின்ன வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் சேர்த்து தினமும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும். 

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  marriage, life, couple, தாம்பத்தியம், உறவு, கலவை கீரை https://www.dinamani.com/health/health-news/2019/may/04/simple-way-to-enhance-pleasure-3145597.html
  3144998 மருத்துவம் செய்திகள் உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு கோவை பாலா DIN Friday, May 3, 2019 11:15 AM +0530 பீட்ரூட் பசுங்கலவை (சாலட்)

  தேவையான பொருட்கள்
   
  பீட்ரூட் - 200 கிராம்
  தக்காளி - 200 கிராம்
  எலுமிச்சம் பழம் -  2
  மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை : பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து இதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை தோலோடு சேர்த்து அதனுடன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும்.

  பயன்கள் : இதனை  சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்த குறைபாட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும் மேலும் உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தையும் நீக்கும் ஆரோக்கியமான உணவு இது.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  beet root, leg pain, sweat, கற்றாழை, பீட்ரூட், உடல்நலம் https://www.dinamani.com/health/health-news/2019/may/03/உடம்பில்-உண்டாகும்-கற்றாழை-நாற்றத்தை-நீக்கும்-ஆரோக்கியமான-உணவு-3144998.html
  3144995 மருத்துவம் செய்திகள் வெரிகோஸ் என்றால் என்ன? கோவை பாலகிருஷ்ணன் DIN Friday, May 3, 2019 11:05 AM +0530  

  பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

  முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். 

  கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 

  இது தான் வெரிகோஸ் வெயின் நோயா? 

  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. 

  ஆனாலும், இது அலட்சியப்படுத்தக் கூடிய நோய் அல்ல. நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பதுதான் உண்மை. தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்படைக்கோட்பாடாகும். 

  அது ஒருபுறம் இருக்கட்டும். 

  இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

  கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்றுபெயர். 

  வெரிகோஸ் என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப் போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டு கொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். 

  வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது?

  மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது.

  மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

  ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கான காரணமாகும்.

  ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  பாதங்களில் இருந்து ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிக விசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. 

  அது இயலாமல் போகும் போது, ரத்தம் மீண்டும் கீழ் நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும். 

  ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும் கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

  அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். 

  வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு 3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

  அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

  அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

  வெரிகோஸ் வெயின் நோய்க்கான அறிகுறிகள் என்ன?

  தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

  கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில் உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாக கருதிவிடுவது உண்டு) வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல். 

  வருமுன் தடுக்க?

  இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். 

  • எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதையோ, நின்று கொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். 
  • எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது.
  • தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. 
  • தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். 
  • எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். 
  • எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

  சிகிச்சை வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடியும். 

  அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 

  வெரிகோஸ் வெயின் நோய் வந்த பின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும் முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

  ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன.

  நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இந்த நரம்பு முடிச்சு நோயை குணப்படுத்த பல முறைகள் உள்ளது...

  நல்ல அனுபவம் மிக்க சித்த மருத்துவரை அணுகி இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்.

  ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

  ]]>
  vericose, vein, கால் வலி, வெரிகோஸ் https://www.dinamani.com/health/health-news/2019/may/03/வெரிகோஸ்-என்றால்-என்ன-3144995.html
  3144353 மருத்துவம் செய்திகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு! கோவை பாலா DIN Thursday, May 2, 2019 11:24 AM +0530 முருங்கை இலைத் துவையல் 

  தேவையான பொருட்கள்

  முருங்கை இலை - 2 கைப்பிடி
  மிளகு - 10 எண்ணிக்கை
  பொட்டுக் கடலை - 20 கிராம்
  உலர்ந்த திராட்சை - 20 எண்ணிக்கை

  செய்முறை : மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்ஷியம் குறைபாட்டினால் உண்டாகும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், அதிக ரத்த அழுத்தம்  மற்றும் ஈஸினோபீலியா ஆகிய குறைபாட்டை சீராக்கும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  wheezing, cold, blood pressure, BP, உயர் ரத்த அழுத்தம் https://www.dinamani.com/health/health-news/2019/may/02/உயர்-ரத்த-அழுத்தம்-மற்றும்-ஈஸினோபிலியா-பிரச்னையா-இதோ-தீர்வு-3144353.html
  3144352 மருத்துவம் செய்திகள் கொட்டித் தீர்க்கும் வியர்வையை சமாளிக்க என்ன செய்யலாம்? DIN DIN Thursday, May 2, 2019 11:18 AM +0530 கோடை காலம் ஆரம்பித்து, வெயில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. உடுத்தும் உடைகள் அனைத்தும் வியர்வையால் முழுமையாக ஈரமாகிவிடுகிறது. இதனால் கோடை காலங்களில் வெளியில் செல்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது.

  வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே, கோடையில் வியர்வையை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

  அதோடு இந்தக் கோடையில் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் போன்றவற்றை பருக வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படும்.

  கோடை காலங்களில் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். 

  ஆடை அணியும் முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துடைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் போது ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையும்.

  முடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவற்றினால் ஏற்படும் வியர்வை, சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்த வெப்ப நிலையில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியது.

  கோடை காலங்களில் அதிகம் காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்னை உள்ளவர்கள் உணவில் குடை மிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், காரமான உணவுகள் அதிகம் வியர்ப்பதற்கு காரணமாக அமைகிறது. தயிர் சாதம் சிறிதளவு தினமும் சாப்பிடலாம். மோர் குடிப்பது உடலுக்கு நல்லது.

  குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

  கோடை காலங்களில் விசாலமான பருத்தி ஆடைகளை அணிவது தான் சிறந்தது. பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் வியர்வையிலிருந்து விலகி இருக்க முடியும்.

  பகலில் வெளி இடங்களுக்கு செல்லும் போது வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். இவைகள் வியர்வையினால் வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.
   - மு.சுகாரா, திருவாடானை.
   

  ]]>
  summer, sweatting, sweat, heat, சம்மர், வெயில், கோடை https://www.dinamani.com/health/health-news/2019/may/02/how-to-overcome-sweating-problems-3144352.html
  3143752 மருத்துவம் செய்திகள் உடம்பிற்கு நல்ல வலிமையைத் தரும் சூப் இது! Wednesday, May 1, 2019 04:48 PM +0530 கோடைக் காலங்களில், கிடைக்கும் பழங்களை நறுக்கி, பாலுடன் கலந்து சர்க்கரை சேர்க்காமல், தேன் 2 தேக்கரண்டி கலந்து, ப்ரூட் சாலட் ஆக மாலையில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.

  கேரட்டை துருவி, வெள்ளரிக்காயையும் துருவி அதனுடன் நிலக்கடலை, முளைக்கட்டிய பயத்தம் பயறு, சோள முத்துக்கள் இவற்றை வேகவைத்து, பச்சை மிளகாய் ஒன்று மிகப் பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பும், பன்னீர்துருவல், தேங்காய்த் துருவல், சிறிது கொத்துமல்லி தழை கலந்து சாட் மசாலாவை 1 தேக்கரண்டி தூவி நன்றாக கலந்து வெஜிடபிள் பன்னீர் சாலட் ஆக மாலை நேரத்தில் கொடுக்கலாம். கோடையை குளிர வைக்கவும் மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும்.

  இளம் முருங்கை கீரையை, ஆய்ந்து சுத்தம் செய்து, அரைத்து வடிகட்டி, முருங்கைச் சாறு எடுத்து அதை சிறிது கொதிக்க வைத்து, அத்துடன் உப்பு, பால், வெண்ணெய்ச் சேர்த்து மிளகுப் பொடி தூவி இரவு உணவுக்கு முன் சிறியோர் முதல் பெரியோர் வரை பருக, வாயுவை குறைத்து, உடம்பிற்கு நல்ல வலிமையைத்தரும் சூப் இது.

  இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி இரண்டையும் உப்பு சேர்த்து, நெய்யில் வதக்கி சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வர, கோடை யினால் ஏற்படும், நாவறட்சி, கொப்புளங்கள் வராமல் தடுக்கும்.

  எலுமிச்சம்பழத்தோலை துருவி குழம்பு, ரசம், பொரியல், கூட்டு இவற்றில் சேர்த்தால் அதிகப்படியான தாகம் எடுக்காது. சமையலின் சுவையும் கூடும். நன்கு செரிமானம் ஆகி பசியைத் தூண்டும்.
   - கிரிஜா ராகவன்

  ]]>
  soup, சூப், energy drink, summer special, எனர்ஜி, பானம் https://www.dinamani.com/health/health-news/2019/may/01/உடம்பிற்கு-நல்ல-வலிமையைத்தரும்-சூப்-இது-3143752.html
  3143735 மருத்துவம் செய்திகள் உடலை மட்டுமல்ல மனதையும் தூய்மை செய்யும் மருந்து இது! Wednesday, May 1, 2019 01:20 PM +0530 உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை, கடுக்காய்க்கு உண்டு என்கிறார் திருமூலர். நாம் அன்றாடம் உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், தேவையான துவர்ப்பை பெறலாம். கடுக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதில் தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு தேக்கரண்டி அளவு இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்க்கை பெறலாம்.

  கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், தொண்டைப் புண், இரைப்பை புண், குடற் புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், பவுத்திர கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலகீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறு போன்ற அனைத்திற்கும் அருமருந்தே கடுக்காய்.

  காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நடுப்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து கடுக்காயை இரவினில் சாப்பிட்டு வர பழகிக் கொள்ளுங்கள் பெரும்பாலான நோய்கள் உங்களை அண்டாது.

  திரிபலா: திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்தோன்றி காய் ஆகிய மூன்றின் சம அளவு கலந்ததுதான். இதனை யார் வேண்டுமானாலும், அளவோடு சாப்பிடலாம். இந்த மருந்தை காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைத்து கொள்ளலாம்.
   - கவிதா பாலாஜிகணேஷ்
   

  ]]>
  kadukkai, sukku, ginger, dry ginger, இஞ்சி, சுக்கு, கடுக்காய் https://www.dinamani.com/health/health-news/2019/may/01/benefits-of-kadukkai-3143735.html
  3143107 மருத்துவம் செய்திகள் நம் உடம்பிலேயே எது நல்ல கொலஸ்ட்ரால்? கோவை பாலகிருஷ்ணன் Tuesday, April 30, 2019 01:30 PM +0530  

  கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol.
   
  80% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. 
   
  சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
   
  கொலஸ்ட்ராலின் தன்மைகள்: கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
   
  கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
   
  கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
   
  நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
   
  எது நல்ல கொலஸ்ட்ரால்?
   
  LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.
   
  ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein).
   
  கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
   
  Total Cholesterol  - 200 mgm%
  மொத்த கொலஸ்ட்டிரால்
  LDL Cholesterol - 100 mgm%
  குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  VLDLCholesterol  - 30 mgm% 
  மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  Triglycerides  - 130 mgm%
  முக்கிளிசரைடுகள்
  HDLP Cholesterol  - 50 mgm %
  மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
  மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 
   
  10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
   
  குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
   
  முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. 
   
  மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. 
   
  இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.
   
  கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்..
  பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)
  எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

  ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
   
  இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது.
   
  இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
   
  கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
   
  பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
   
  ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
   
  பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
   
  இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
   
  அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. 
   
  இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். 
   
  ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
   
  ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
   
  இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
   
  ஒமேகா 3 உள்ள உணவுகள்
  மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  ஒமேகா 6 உள்ள உணவுகள்
  சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
   
  எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
   
  நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
   
  கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்: 

  • சீரான உடற்பயிற்சி
  • உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • யோகாசன பயிற்சி செய்வது,
  • தியானப் பயிற்சி செய்வது.

  ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/apr/30/நம்-உடம்பிலேயே-எது-நல்ல-கொலஸ்ட்ரால்-3143107.html
  3141222 மருத்துவம் செய்திகள் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு எப்படி வந்தேன்? Saturday, April 27, 2019 11:51 AM +0530 வலைதளத்திலிருந்து...

  உடற்பயிற்சியுடன் டயட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டைச் சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald’s, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

  இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்காக நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாகக் கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவுப் பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

  பின்னர் aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டெப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா... சரியா ஆடி நாம என்ன பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போகப் போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, weight குறைப்பதே எனது நோக்கம்.

  இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய... பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், "ரொம்ப இளைச்சுட்டே' என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
  http://enpoems.blogspot.com

   

  முக நூலிலிருந்து....
  சில ஓட்டல்களில் வடை சாப்பிடும்போது, 
  அங்கு குழந்தைத் தொழிலாளர்களை
  வேலைக்கு வைத்திருக்கிறார்களோ
  என்கின்ற சந்தேகம் வருகிறது. 
  பெரியவர்களால் வடையை 
  அம்புட்டுச் சின்னதா சுட முடியுமா?
  பெ. கருணாகரன்

  • வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குனா...
  அது எதிரிகளுக்கு
  நாம குடுக்குற நடுக்கம். 
  ம.குமரவேல்

  • தனிமை என்பது வலி 
  என்று யார் சொன்னது?
  தனிமை என்பது வழி...
  நம்மைப் பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை.
  நட்பென்றால் நாம் என்போம்

  • இறங்குகிற 
  விழுதுகள் எல்லாமும்
  ஊஞ்சல்களாய் போய்விடுகிற
  சிக்கல்.
  காற்று மழைக்கெல்லாம்
  இன்னமும்
  தளர்ந்து போன
  வேர்களை நம்பியே
  பிழைப்பை ஓட்டுகிறது...
  வயதான-
  ஆல்.
  கண்மணி குணசேகரன்

  சுட்டுரையிலிருந்து...
  • விவசாய நிலங்கள் எல்லாம்... 
  பாகம் பிரித்து கொண்டன,
  ப்ளாட்டுக்களாக.
  தனிமையின் காதலி 

  • ஏழையா பொறந்துட்டா
  காச மட்டும் இல்ல... 
  ஆசையையும் சிக்கனப்படுத்தணும்.
  மிஸ்டர் ஐடியா மணி

  • முடி இழந்தவுடன்
  சிம்மாசனத்தை விட்டு 
  இறக்கிவிடுகின்றன
  சலூன் கடை நாற்காலிகள்!
  ச ப் பா ணி

  • என்னதான் சிற்பி போல
  செதுக்கி செதுக்கி வடிவமைத்தாலும்...
  அது அதன் போக்கில் தான் செல்கிறது,
  வாழ்க்கை.
  சிவா. கார்த்திகேயன்

   

  ]]>
  weight loss, எடை குறைப்பு https://www.dinamani.com/health/health-news/2019/apr/27/weight-loss-3141222.html
  3139931 மருத்துவம் செய்திகள் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாட்டை சீர் செய்யும் அருமருந்து! கோவை பாலா Thursday, April 25, 2019 02:51 PM +0530  

  அம்மான் பச்சரிக் கீரைத் துவையல்

  தேவையான பொருட்கள்

  அம்மான் பச்சரிசிக் கீரை - 100 கிராம்
  தூதுவளைக் கீரை (முள் நீக்கியது) - 100 கிராம்
  தேங்காய்த் துருவல் - 100 கிராம்
  உளுந்தப் பருப்பு - 25 கிராம்
  பூண்டு - 10 கிராம்
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு புளிச்சாறு சேர்த்து வதக்கி அரைத்து துவையலாக்கி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் : இந்தத் துவையல் தினமும் 48 நாட்கள் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்த்துப் போன உயிரணுக்கள் கெட்டிப்படும். மேலும் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஆண்மை குறைபாட்டை சீர் செய்யும் அற்புத ஆற்றல் உள்ள துவையல்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  sperm, life, infertility, fertility increase, உயிரணு, விந்து உற்பத்தி, ஆண்மை குறைபாடு https://www.dinamani.com/health/health-news/2019/apr/25/healthy-food-to-increase-sperm-count-3139931.html
  3139235 மருத்துவம் செய்திகள் ரத்த சோகையா? இந்த சூப் குடிங்க! கோவை பாலா DIN Wednesday, April 24, 2019 12:47 PM +0530  
  கரிசலாங்கண்ணிக் கீரை சூப்

  தேவையான பொருட்கள்

  கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கட்டு 
  தக்காளி - 2 
  வெங்காயம் - 1
  மிளகு, சீரகம் -  தலா அரை டீஸ்பூன் 
  பூண்டு - 6 பல் 
  தனியா - 10 கிராம் 
  புதினா இலை - ஒரு கைப்பிடி
  உப்பு - தேவையான அளவு 
  மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் 
  பெருங்காயம் -  கால் ஸ்பூன் 
  எலுமிச்சை -  1
  எண்ணெய் -  2 ஸ்பூன் 

  செய்முறை : முதலில் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு, தனியா, புதினா, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து வதக்கி அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து நன்கு பிரட்டவும் .பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

  பலன்கள் : இந்த சூப்பை வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரல் பலமடையும். ரத்த சோகை மறையும். ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்கவும் , உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவும் கீரைக் கூட்டு
   
  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  Karisalanganni Keerai, anemia, greens, கீரை, கரிசலாங்கண்ணி கீரை https://www.dinamani.com/health/health-news/2019/apr/24/benefits-of-karisalankanni-keerai-3139235.html
  3139219 மருத்துவம் செய்திகள் ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்க இது உதவும்! கோவை பாலா Wednesday, April 24, 2019 11:37 AM +0530
   
  வல்லாரைக் கீரை கூட்டு

  தேவையான பொருட்கள்

  வல்லாரைக் கீரை கட்டு - 1 கட்டு
  இஞ்சி (தோல் நீக்கியது) - 50 கிராம்
  மிளகு - 1 ஸபூன்
  சிறுபருப்பு - 100 கிராம்
  வெங்காயம் - 2
  கடுகு -  அரை ஸ்பூன்
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை : வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறுபருப்பை வேக வைத்து நன்றாக கடைந்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை மற்றும் இஞ்சி வெங்காயத்தை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு சேர்த்து தாளித்து கீரையுடன் கிளறி சாப்பிடவும்.

  பயன்கள் : இந்தக் கீரையை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உப்பின் அளவை குறிக்கும். மேலும் உடம்பில் யூரிக் அமிலம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  vallarai keerai, keerai, greens, கீரை, வல்லாரைக் கீரை, உணவே மருந்து https://www.dinamani.com/health/health-news/2019/apr/24/good-food-habits-3139219.html
  3137882 மருத்துவம் செய்திகள் பல் இல்லைன்னா சொல் இல்லை! முதல்ல இதை கவனிங்க! டாக்டர் ஆர்.சிவபிரகாஷ் Tuesday, April 23, 2019 11:06 AM +0530  

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை என்றால் என்ன?

  பற்கள் வரிசையில் நெரிசல் அல்லது இடைவெளி இருந்தால் அவற்றை சீராக வரிசை செய்வதுதான் சீரமைப்பு சிகிச்சை.

  எந்த வயதில் இருந்து சிகிச்சை செய்யலாம்?

  ஆறு வயது முதல் பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யலாம்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை எந்த வயது வரை செய்யலாம்? அதற்கு ஏதேனும் வரம்புகள் உண்டா?

  ஐம்பது வயது வரை சீரமைப்பு சிகிச்சை செய்ய முடியும். தாடை எலும்பு, ஈறுகள் மற்றும் பற்கள் வலிமையான நிலையில் இருந்தால் போதும். இந்த சிகிச்சைக்கு வயது ஒரு வரம்பு இல்லை.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?

  குறைந்தது ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்ய நிபுணர்கள் தேவையா?

  ஆம், பல் வரிசை சீரமைப்பு நிபுணர்கள் உங்கள் பற்களின் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வு, கால அவகாசம் ஆகியவற்றை தெரிவிப்பார்.

  பல் மருத்துவ நிபுணரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அணுக வேண்டும்?

  குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை அணுக வேண்டும்.

  எதற்காக அணுக வேண்டும்?

  சிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை மேற்பார்வையிட அணுக வேண்டும்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையை எவ்வாறு செய்யலாம்?

  நீக்கக் கூடிய மற்றும் நீக்காமல் நிலையான வகையில் செய்யலாம்.

  இவை இரண்டில் எது சரியானது? எது பொருத்தமான வகை என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?

  எந்த வகை உங்களுக்கு சிறந்தது அல்லது பொருத்தமானது என்பதை பல் சீரமைப்பு நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு ஒரு சில பற்களை அகற்ற வேண்டுமா? ஏன்?

  ஆம், மிகுதியாக நெரிசல் உள்ள காரணத்தால் சிலருக்கு பற்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

  அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுமா?

  சரியான வகையில் சிகிச்சை மேற்கொண்டு, நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

  இந்த சிகிச்சையின் போது பற்களை எவ்வாறு பராமரிப்பது?

  நிபுணர் பரிந்துரைக்கும் பிரத்யேகமான தூரிகை (Brush) கொண்டு பற்களை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க வேண்டும். நிபுணர் அறிவுறுத்தும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

  இந்தச் சிகிச்சையை வெளியில் தெரியாதவாறு (Invisible braces) செய்வது சாத்தியமா?

  உங்கள் பற்களில் பிரச்னை என்னவென்று கண்டறிந்து அதற்கு பொருத்தினால் வெளியில் தெரியாதவாறு (invisible braces) செய்யலாம்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு தாடையில் அறுவை சிகிச்சை தேவையா?

  சிலருக்கு பற்கள் மட்டும் அல்லாது தாடையிலும் கோளாறு இருக்கும், அதனை சீரமைக்க அறுவை சிகிச்சை தேவைப்படும்.

  சிகிச்சைக்கு பிறகு பற்களை எவ்வாறு பராமரிப்பது?

  சிகிச்சைக்கு பிறகு நீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) உபயோகிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.

  நீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) எத்தனை நாட்களுக்கு உபயோகிக்க வேண்டும்?

  குறைந்தது ஒரு வருடம் சாப்பிடும் வேளை தவிர முழு நேரமாக உபயோகிக்க வேண்டும். பின்னர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றம் செய்து கொள்ளலாம்.

  பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யாவிட்டால் என்ன பின் விளைவுகள் ஏற்படும்?

  பற்களில் உள்ள நெரிசல் அல்லது இடைவெளியில் உணவு துகள்கள் படிமனமாக சேரலாம், ஈறுகள், பற்களில் சிதைவு ஏற்படலாம். தாடை மூட்டுகளில்  வலி ஏற்படும்.

  - டாக்டர் ஆர்.சிவபிரகாஷ், டெண்டல் சர்ஜன் (9840401520) Dr.Smilez.com

  ]]>
  dental care, teeth, tooth, பல் சிகிச்சை, பற்கள் பராமரிப்பு https://www.dinamani.com/health/health-news/2019/apr/22/tooth-care-and-precautions-3137882.html
  3137888 மருத்துவம் செய்திகள் கை, கால், இடுப்பு வலிகளைத் தீர்க்கும் அருமருந்து! கோவை பாலா DIN Monday, April 22, 2019 11:08 AM +0530  

  முடக்கத்தான் கீரை ரசம்

  தேவையான பொருட்கள்

  முடக்கத்தான் கீரைக் காம்பு - 5 கைப்பிடி
  எலுமிச்சை பழம் -  1
  தக்காளி - 1
  சீரகம் - 3 ஸ்பூன்
  மிளகு -   அரை ஸ்பூன்
  பூண்டு - 6 பல்
  உப்பு - தேவையான அளவு
  நெய் -  1  ஸ்பூன்
  கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
  தண்ணீர் - 4 டம்ளர்

  செய்முறை

  முடக்கத்தான் கீரைக் காம்பை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து நன்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் நெய்விட்டு அதில் சீரகம் , மிளகு ஆகியவற்றை பொடியாக்கிப் போட்டு வறுத்து கொள்ளவும். பின்பு அதனுடன் வெந்த முடக்கத்தான் கீரைக் காம்பு ரசத்தைச் சேர்த்து தக்காளியையும் கரைத்துச் சேர்க்கவும்.பிறகு பூண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை அரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தயார் செய்து வைத்து அதிகாலை வேளையில் ஒரு டம்ளர் அளவு வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த ரசத்தை வயதானவர்களுக்கு மாதம் ஒரு முறை கொடுத்தால் போதுமானது.

  பயன்கள் : இதனை குடிக்கும் பொழுது முதலில் பேதியாகி அதிகப்படியான பித்தம் வெளிப்படும். மேலும் கை, கால், இடுப்பு வலிகள் அனைத்திற்கு தீர்வாக அமையும். வயதானவர்களுக்கு உண்டாகும் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படும் முடக்கத்தான் கீரை ரசம்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  leg pain, hand pain, body pain, health, கை கால் வலி, வலி தீரும் வழி, முடக்கத்தான் கீரை https://www.dinamani.com/health/health-news/2019/apr/22/கை-கால்-இடுப்பு-வலிகளைத்-தீர்க்கும்-அருமருந்து-3137888.html
  3134987 மருத்துவம் செய்திகள் இதை ட்ரை பண்ணுங்க! சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்! DIN DIN Wednesday, April 17, 2019 04:19 PM +0530 தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது. தக்காளியை எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்:

  பழுத்த தக்காளியைப் பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை, கருமை நிறம் மறையும்.

  தக்காளிச் சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட  தழும்புகள் மறையும்.

  ஒரு தேக்கரண்டி  தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப்  பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.

  நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

  3 தேக்கரண்டி  தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, 2 தேக்கரண்டி மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்று செய்து வர வேண்டும்.

  2 தேக்கரண்டி  தக்காளிச் சாறு,  1 தேக்கரண்டி  தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

  1 தேக்கரண்டி  தக்காளிச் சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

  ]]>
  skin care, beauty tips, tomato, தக்காளி, அழகுக் குறிப்பு, டிப்ஸ், முக அழகு https://www.dinamani.com/health/health-news/2019/apr/17/beauty-and-skin-care-tips-3134987.html
  3134985 மருத்துவம் செய்திகள் முக அழகைக் கெடுக்கும் வேனல் கட்டி வராமல் தடுக்க இது உதவும்! Wednesday, April 17, 2019 04:11 PM +0530 வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஓர் உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன. கடும் வெப்பத்தால் அவதியுறுவோருக்கு வேனல் கட்டிகளால் கூடுதல் அவஸ்தைகள் உண்டாகும். எனவே, வேனல் கட்டி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

  வேனல்  கட்டி வராமல் தடுக்க:

  வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மட்டுமாவது இந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

  வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் வேனல் கட்டிகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். 

  வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம்:

  வேனல் கட்டி  ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும்.  அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

  கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை டுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

  மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

  சந்தனத்தை  உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

  சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி மீது தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.

  கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட  இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

  மஞ்சள் தூள்  மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவினைப் போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.

  வெள்ளைப் பூண்டை  நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் பத்து போட்டு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

  சிறிதளவு சுண்ணாம்புடன் சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும்போது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும்.  அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.

  - எல்.மோகனசுந்தரி

  ]]>
  heat boil, venal katti, face beauty, beauty tips, அழகு குறிப்பு, வேனல் கட்டி, வியர்க்குரு https://www.dinamani.com/health/health-news/2019/apr/17/how-to-get-rid-of-heat-boils-3134985.html
  3134347 மருத்துவம் செய்திகள் மூட்டு வலியா? இதோ ஒரு எளிய தீர்வு கோவை பாலா DIN Tuesday, April 16, 2019 12:53 PM +0530
   முடக்கத்தான் கம்பு தோசை
   
  தேவையான பொருட்கள்
   
  முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு
  கம்பு - அரைக் கிலோ
  வெந்தயம் - 25 கிராம்
  கொத்தமல்லி - 1 கைப்பிடி
  கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
  உப்பு -  தேவையான அளவு

  செய்முறை : முதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து  இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம், முடக்கத்தான் கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்து சாப்பிடவும்.

  பயன்கள் : இந்த முடக்கத்தான் கம்பு தோசையை தினமும் ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் மற்றும் வாத வலிகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  leg pain, knee pain, body pain, health, முடக்கத்தான், மூட்டு வலி, கால் வலி, வாதம் https://www.dinamani.com/health/health-news/2019/apr/16/knee-pain-and-cure-3134347.html
  3133857 மருத்துவம் செய்திகள் எப்பவும் இளமையா இருக்கணுமா? இதையெல்லாம் செய்யாதீங்க (விடியோ) உமா ஷக்தி DIN Monday, April 15, 2019 03:44 PM +0530
       
  நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையா இருக்கா? ஒரு நிமிஷம் செலவு செஞ்சி இந்த விடியோவை பாருங்க...

  'உங்களுக்கு 36 வயசா? காலேஜ் ஸ்டூடெண்ட் மாதிரி இருக்கீங்க?’ என்று யாராவது சொன்னால் மனம் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கும். 'ஏன் டல்லா இருக்கீங்க, ஏதாவது பிரச்னையா?’ என்றால், அந்த நாளே நம்மை சோர்வாக்கிவிடும். ஒருவரின் ஆரோக்கியமானத் தோற்றம்தான் செய்யும் வேலையைச் சுறுசுறுப்பாக்கி, வாழ்க்கையிலும் வெற்றிப் படிகளை எட்டச் செய்யும்.

  'எந்த வயதிலும் இளமையோடு இருக்க உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அழகும், இளமையும் ஆர்ப்பரிக்கும்'' என்கிறார்கள் நிபுணர்கள்.

  ]]>
  face scrub, beauty tips, healthtips, anti aging, இளமை, ஹெல்த் டிப்ஸ், அழகு குறிப்பு https://www.dinamani.com/health/health-news/2019/apr/15/how-to-look-young-at-the-age-of-40-3133857.html
  3133837 மருத்துவம் செய்திகள் உங்கள் ஸ்வாசம் சரியாக இருக்கிறதா? Monday, April 15, 2019 12:49 PM +0530 இரவு தூங்கும்பொழுது மூன்று, நான்கு முறை விழித்துக்கொள்கிறேன்  அது சமயம் இடது நாசியில் நன்கு மூச்சுவிடும் பொழுது வலது நாசி அடைத்துக் கொள்கிறது . வலது நாசியில் நன்கு மூச்சுவிடும் பொழுது இடது நாசி அடைத்துக் கொள்கிறது. இது இயற்கையானதா? இயற்கைக்கு மாறானதா? மாறானது என்றால் இதற்கான மருத்துவத்தை  தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

   -கே. வேலுச்சாமி,   தாராபுரம்.

  இது இயற்கைக்கு மாறானது. சாதாரணமாக இரு நாசித்துவாரங்களின் வழியே மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதும் வெளியேவிடுவதும், தலையைச் சார்ந்த பிராண வாயுவின் செயலாகக் கூறப்படுகிறது. தொண்டை, மார்பு ஆகிய பகுதிகளில் எளிதாகச் சென்று வரக்கூடிய இந்த வாயுவின் மற்ற செயல்களாகிய புத்தியின் பகுத்தறியும் தன்மையும், அத்தன்மையின் விளைவாக ஏற்படக் கூடிய நன்மை, தீமைகளைச் செயலாக்கம் பெறச் செய்வதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறது. மூளை, புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றைத் தன் சீரான செயல்களால் பாதுகாத்துக் காப்பாற்றுகிறது. துப்புதல், தும்முதல், ஏப்பம் விடுதல் மற்றும் உண்ணும் உணவை வாயிலிருந்து நெகிழ வைத்து, உணவுக் குழாயிலிருந்து இரைப்பை வரை எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களையும் செய்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த பிராணவாயுவானது, உங்களுக்கு இரவு நேரங்களில் ஒத்துழையாமை நிலைக்கு மாறிவிடுகிறது என்றே குறிப்பிடலாம். நவீன ஆராய்ச்சியாளர்களின் பார்வையிலிருந்து பார்த்தால், மூளையின் சில நரம்பு மண்டலங்கள், பிராண வாயுவின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்பது தெளிவாகிறது. 

  இடது மூக்குதுவாரம் வழியே ஸாம குணம் (குளுமை) அதிகமாக சுவாசம் சஞ்சரிக்கிறது. வலது மூக்கு வழியில் சஞ்சரிக்கும் சுவாசத்தில் தாபம் (உஷ்ணம் - சூடு) அதிகம். இவற்றை இரவில் சீராகப் பெறுவதற்கு நீங்கள் பிராணயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை, யோகப் பயிற்சி செய்பவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

  பிராணயாமம் செய்யும் விதத்தையும், பிராணயாமத்தைத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதால் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் பயன்களையும் தர்மசாஸ்திரங்கள், உபநிஷத்துகள், யோகசாஸ்திரம் எல்லாம் தெளிவாய் விஸ்தாரமாய் போதிக்கின்றன. பயன்களை முதலில் தெரிந்து கொள்ளுவது பிராணயாமத்தைச் செய்ய நன்றாய் தூண்டிவிடும், உற்சாகப்படுத்தும்.

  ஆண், பெண் இருபாலர்களும், பத்து வயதிற்கு மேற்பட்ட எல்லா வயதினரும் பிராணயாமம் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் 4 நாட்களிலும், பிரசவித்தவர்கள் சுமார் 45  நாட்கள் வரையிலும் பிராணயாமம் செய்யக் கூடாது. பகல், இரவு எந்த நேரத்திலும் செய்யலாம். குளித்துவிட்டு பிராணயாமம் செய்தால் அதிக விசேஷமுள்ள பலன் தரும். ஆனால் முழுமையாக குளிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஈரத்துணியினால் உடம்பை பூரா சுத்தமாய் துடைத்துக் கொண்டு அழுக்கில்லாத ஆடையணிந்து கொண்டாலும் போதுமானதே.

  உண்ட உணவு முற்றிலும் நன்றாய் ஜீரணமடைந்து, ஓரளவு நல்ல பசியும் உண்டான நேரம்தான் பிராணயாமத்திற்கு மிகவும் உகந்த நேரமாகும். சிறிது பால் அல்லது ஏதாவது திரவ பதார்த்தம் பருகியிருந்தாலும் அது ஜீரணமாகி பசி ஆரம்பித்த பின்புதான் பிராணயாமம் ஆரம்பிக்க வேண்டும். காற்று அடைப்பு இல்லாத, புழுக்கம் வெப்பம் இல்லாத, பேய்க்காற்றும் இல்லாத காற்று பரவின இடம், கண்ணைக் கூசும் விளக்கு வெளிச்சமில்லாததும், முழுவதுமாக அந்தகாரமாயில்லாத ஓரளவு கொஞ்சமான வெளிச்சம் உள்ள இடம் உபகாரம். வெயில் தாபம், பேய்க்காற்று இல்லாமலிருந்தால் வெட்ட வெளியில் செய்வது நலம். அருகில் மற்ற மனிதர்களின் சஞ்சாரம் இல்லாமலும், இரைச்சல், சத்தம், சாக்கடை, மலம் சிறுநீர்  கழிக்குமிடத்தின் துர்நாற்றம் இல்லாததுமான தனிப்பட்ட அறையில் பிராணயாமம் செய்வது உசிதம் நெருப்புப் புகை, ஊதுவத்திப் புகை, பறக்கும் தூசி ஒன்றும் பக்கத்தில் அண்டவே கூடாது.

  பத்மாசனம் அல்லது ஸ்வஸ்திகாசனத்தில் உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டும். ஸ்வஸ்திகாசனம் இரு பாதங்களையும் மடித்து இரு தொடைகளுக்கு அடியில் அடக்கி உட்கார்வது. பத்மாசனம் இரு பாதங்களை இரு தொடைகளுக்கு மேல்புறத்தில் உள்ளங்கால்கள் மேலே தெரியும்படியாக தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்வது. இதில் எந்தக்கால் எந்தத் தொடையின் மேல் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விசேஷ நியமம் இல்லை. செளகர்யம் போல் கால்களை மாற்றிக் கொள்ளலாம்.

  சாஸ்திரங்களில் ஆசன விதங்களைக் கூறும் எல்லா இடங்களும் பத்மாசனமே போற்றப்படும் என்று முடிக்கின்றன. பத்மாசனம் சிறந்ததாயினும் அதைச் செய்ய முடியாதவர்கள் ஸ்வஸ்திகாசனத்தில் உட்கார்ந்து பிராணயாமம் தாராளமாய் செய்யலாம். பலனில் குறைவே கிடையாது. பத்மாசனத்தில் கால்களை மாற்றவே செய்யாமல் ஒரேயடியாக இடது காலை வலது தொடையின் மேல் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டியதும் அவசியமில்லை. நீண்ட நேரம்  தியானம் செய்யும் சந்தர்ப்பத்தில் 15- 20 நிமிஷங்களுக்கு ஒரு தரம் காலை மாற்றிப் போட்டுக் கொள்வதில் உடலில் சௌமய குணமும் ஆக்னேய குணமும் சமானமான நிலையில் அமையும் என்ற நன்மையுண்டாகும்.

  சிலருக்கு பத்மாசனத்தில் கால்களில் ரத்த ஓட்டம் மந்தப்பட்டு கால்கள் மரத்துப் போகும். மரத்துப் போன நிலையை அப்படியே வைத்துக் கொள்ளக் கூடாது. அங்கு பத்மாசனத்தை மாற்றிக் கொண்டு ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்தால், உடனே கால்களில் ரத்த ஓட்டம் நன்றாய் ஏற்படும், மரத்துப் போவது நீங்கி விடும். பிறகு முன்போல் பத்மாசனத்தில் அமரலாம். மேலும் அஷ்ட சூரணம் எனும் மருந்தை 5 கிராம் அளவில் எடுத்து உருக்கிய இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை 10 மில்லிலிட்டர் அளவில் அதனுடன் சேர்த்து காலை, இரவு உணவிற்கு நடுநடுவே நக்கிச் சாப்பிட்டால் உங்கள் உபாதைக்கான தீர்வு கிடைக்கலாம்.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

  ]]>
  breathing, pranayamam, meditation, தியானம், பிராணயாமம், மூச்சுப் பயிற்சி https://www.dinamani.com/health/health-news/2019/apr/15/உங்கள்-ஸ்வாசம்-சரியாக-இருக்கிறதா-3133837.html
  3078155 மருத்துவம் செய்திகள் பெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ) மாலதி சந்திரசேகரன்.  Tuesday, April 9, 2019 12:56 PM +0530  

  பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம். 

  16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார்.

  இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

  அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin!

  Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார். 

  இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது?  எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

  Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், 

  • சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள்.
  • குறைந்த கருவுறுதல்.
  • மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது.
  • பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது.
  • மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது.
  • நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு.
  • பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது.
  • ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது.
  • முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது.
  • ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய்.
  • கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது.
  • எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது.

  Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.

  மேலும் ஆராய்ந்ததில், Dioxin அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இனப்பெருக்கத்தில் பிரச்னை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது, ஹார்மோன்களில் பிரச்னை உருவாக்கி புற்றுநோய் வரவழைக்கிறது.

  Dioxin புற்றுநோயை உருவாக்கும் என்று Environment Protection Agency 1985-ல் கண்டுபிடித்தது. பின் 1991-ல் Dioxin ரசாயனத்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தது. பின் இந்த தகவல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டது.

  1971-ல் Missouri என்ற இடத்தில் தூசியை (Dust) குறைப்பதற்காக கழிவு எண்ணெய் Spray செய்யப்பட்டது. அதில் Dioxin இருந்துள்ளது. எண்ணி பன்னிரண்டே வருடத்தில் 1971-ல் அந்த நகரமே அழிந்து போனது.

  Dioxin எந்த அளவு நச்சு என்றால் சயனைட்டை விட 130 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. CYANIDE destroyes human cells and amount others lead to heart respiratory systems & Central nervous system failure. 900 மடங்கு ARSENIC ஐ விட நச்சானது. இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

  Killer cell செயல்திறனை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஒடுக்குகிறது.

  தவறான நேரத்தில் ஹார்மோன்களை செயல்படுத்தவும், முடக்கவும் செய்கிறது.

  இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கிறது.

  தவறான நேரத்தில் தவறான ஹார்மோனை தூண்டுகிறது அல்லது சரியான ஹார்மோனை தவறான நேரத்தில் தூண்டிவிடுகிறது.

  எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், Respiratory system, Reproductive system, Immune system, Digestive system என ஒட்டு மொத்த மண்டலத்தையும் பாதிக்கிறது.

  இத்தனை ஹார்மோன் பாதிப்புகளை உருவாக்கும் இந்த Dioxin மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடுகிறார். இதோ.

  Dioxin ற்கு Exposure ஆன மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

  ஆண்களுக்கு

  • விந்தணு உற்பத்தி குறைகிறது என்று பல்வேறு நாடுகளுடைய 61 ஆராய்ச்சிகள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.
  • 1938 ஆம் ஆண்டுகளில் 113 மில்லியன் per ml இருந்த விந்தணு, 1990 களில் 66 மில்லியன் per ml ஆக குறைந்துள்ளது. US ல் 50% விந்தணு குறைபாடு ஏற்பட்டுள்ளது.
  • டென்மார்க்கில் 1945 ல் இருந்து விதைப்பை புற்றுநோய் 1990 ல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே பல்வேறுநாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது.
  • ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை அளவு குறைந்துள்ளது.
  • De masculinization, ஆண்மை அழிப்பு வேலை நடக்கிறது.

  பெண்களுக்கு

  • மார்பகப் புற்றுநோய் 339 நாடுகளில் இது அதிகரித்துள்ளது
  • மார்பகத்தில் Fibroid கட்டிகள். 
  • Polycystic ovary, கரு முட்டைப்பையில் நீர்கட்டிகள்
  • கருப்பை Fibroid கட்டிகள்
  • குறுகிய மாதவிடாய் காலம்
  • கருவுருதலில் தாமதம்
  • முன்கூட்டியே பூப்பெய்தல்
  • Masculinization என்னும் ஆண்தன்மை அதிகரிப்பு

  காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை மனிதர்களுக்கும் ஊடுருவியுள்ளதை கண்டு அதிர்ந்து போனார். 

  இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த DIOXIN எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.

  • ரசாயனம் தயாரிப்பு தொழிற்சாலை. 
  • குப்பைகளை எரிக்கும் போது
  • பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகள்
  • Plastic பொருட்களை சூடு செய்யும் போதும் எரிக்கும் போதும்
  • அசைவ உணவுகள் (Dioxin stick to fatty tissues)
  • சில கழிவு எண்ணெய்களை எரிக்கும் போது
  • மருத்துவக்கழிவுகளில் இருந்து

  நாப்கின்

  என்னடா, நாப்கினை பற்றி சொல்கிறேன் என்று ஏதேதோ கூறிக் கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினை பற்றி பார்ப்போம்.

  நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்து விடுவார்கள்.

  அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

  துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?

  இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.

  சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

  நாப்கின் மூலப்பொருள்

  • கச்சா எண்ணெய் (petroleum product)
  • குப்பை காகிதங்கள்
  • பழைய அட்டைகள்
  • மரக்கூழ்
  • நெகிழி (plastic)
  • பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி
  • நறுமணப்பொருட்கள் (Fragrances)

  பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே சென்சிடிவ் ஆன பகுதியில் வைக்கிறீர்கள். 

  நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது? 

  நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton என்று நினைக்கறீங்களா ? அதுதான் இல்லை.

  பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில ரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள். பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான ரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள்.

  இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும். வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை.

  இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள் CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். 

  இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக் கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் ரசாயனத்தை கலப்பார்கள். இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும்.

  எந்தளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது. இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள்.

  பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள். அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத் தாண்டி வெளி வராது.

  மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற ரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது. 

  வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, இன்னும் பல ரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layerகளும் தயாராகிறது.

  பிறகு இந்த மூன்று layerகளும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.

  அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process-ன் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.

  DIOXIN என்னும் மிகக் கொடிய நஞ்சு. எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு செல்லினுடைய NUCLEUS-ற்குள் நுழைந்து DNA sequence-ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

  இப்பொழுது SANITARY NAPKIN பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பேராபத்துக்களை பார்ப்போம்.

  நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

  • கட்டுரை தொடக்கப்பகுதியில் DIOXIN ஐ பற்றி கூறினேன் அல்லவா. அதே Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.
  • ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும்?
  • Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

  பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.

  இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

  • ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
  • சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
  • இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
  • சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
  • கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
  • கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
  • ௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
  • தைராய்டு (Thyroid)
  • கல்லீரல் வேலையில் மாறுபாடு
  • ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
  • வெள்ளைப்படுதல்
  • தோல் நோய்கள்
  • Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
  • நீரிழிவு (DIABETS)
  • மன அழுத்தம் (Depression)
  • கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
  • குழந்தையின்மை (Fertility problems)
  • மார்பக புற்றுநோய் (breast cancer)
  • கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

  இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது.

  நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்???

  அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKINதான். இப்பொழுது நாப்கினால் Environment ற்கு ஏற்படும் ஆபத்துக்களை பார்ப்போம்.

  நாப்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு

  நாப்கினை தூக்கி எறிந்து விடுகிறார்கள் ஆனால் இது மக்கிப்போக 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.

  Highly toxic emission (தொடர்ந்து நச்சை வெளியேற்றும்)

  1 நாப்கின் 4 Plastic carry bag ற்கு சமம். ஒரு பெண் மாதம் 50 plastic bag ஐ வெளியேற்றுகிறார். நம் நாட்டில் பெண்கள் வருடத்திற்கு 7.020 மில்லியன் நாப்கினை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள SUPER ABSORBANT POLYMER சாக்கடையில் அடைத்துவிடும். இதை சுத்தம் செய்பவர்களுக்கு, ஆஸ்துமா, TB, தோல் நோய்கள், கண் பிரச்சனைகள் வருகிறது. சுத்தம் செய்யும் போது திடீர் மரணமும் ஏற்படுகிறது.

  ஒரு பெண் தனது வாழ்நாளில் 6000 நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.

  நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினால் வருடத்திற்கு 58 பில்லியன் நாப்கின் Pads வெளியேறும்.

  இது பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பி வரும். இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் சீரழித்து விடும்.

  இந்த Dioxin fatty tissue வில் ஒட்டிக்கொண்டு உணவுச்சங்கிலிகளில் உலா வருகிறதாம். முக்கியமாக அனைத்து அசைவ உணவுகளில் இது இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

  அதற்கு முன், நம் நாட்டில் எத்தனை பெண்கள் SANITARY NAPKIN பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 42.6 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு Survey கூறுகிறது. 

  இந்த கட்டுரை மூலம் நம் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkin எந்த அளவிற்கு ஆபத்தானது என்று அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.

  இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு ரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.

  பெண்களே ஒவ்வொரு முறை நாம் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறோம் என்பது நினைவிற்கு வரட்டும்.

  (ஹீலர் இ. ரா. மதிவாணன் பதிவிலிருந்து எடுத்து, தொகுத்தது) 

  ]]>
  கேன்சர், Puberty, சானிடரி நாப்கின், toxin, sanitary napkin, sanitary pad, மாதவிலக்கு https://www.dinamani.com/health/health-news/2019/jan/17/dangers-of-sanitary-napkins-3078155.html
  3127734 மருத்துவம் செய்திகள் சாய்பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம் இதுதான்! (விடியோ) உமா ஷக்தி Friday, April 5, 2019 02:39 PM +0530 சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு  படவுலகில்  பிரபலம் என்றாலும், மலையாளத்தில் 'பிரேமம்' பிரமாண்ட வெற்றி பெற்றது போல எந்தப் படமும் சாதனை படைக்கவில்லை. சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது கன்னத்தில் உள்ள  பருக்கள் மட்டுமல்ல. மேக்கப் போடாமலேயே  கன்னம் இளஞ் சிவப்பாக இருப்பதும்.. அவர் சிரிக்கும்போது கன்னம்  இன்னமும் சிவப்பாவதுதான். 

  இப்படி கன்னம் தானாக  சிவப்பாவதற்குக்  காரணம் ஒரு விநோதமான  தோல் குறைபாடுதானாம்.  அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'.  கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது  அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் தூக்கலாக  தெரியும். அதனால்,  முகத்தசைகளில்  கன்னங்கள். மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரியும்.  

  படப்பிடிப்பின் போது சிரிக்கிற போதும்,  நடிக்கும் போதும் போட்டோ  எடுக்கும் போதும், சாயின் கன்னம்   தானாகவே  சிவந்துவிடும். அப்படி சிவப்பது  ரசிகர்களை  ஈர்ப்பதாக அமைந்து விடுகிறது. 

  ]]>
  kollywood, sai pallavi, நடிகை, கோலிவுட், சாய் பல்லவி, Athiran, அதிரன் https://www.dinamani.com/health/health-news/2019/apr/05/sai-pallavi-3127734.html
  3127737 மருத்துவம் செய்திகள் வெந்தயக் கீரையில் இவ்வளவு நன்மைகளா! DIN DIN Friday, April 5, 2019 01:04 PM +0530 தனியா

  கொத்துமல்லி விதைகளை ( தனியா) ஊற வைத்த நீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை  கட்டுப்படுத்தும்.  சர்க்கரை  நோய்  உள்ளவர்கள்  இந்த தண்ணீரை  தினமும்  குடிக்கலாம்.

  வெள்ளைப் படுதல் பிரச்னையில் அவதிப்படும் பெண்கள், கொத்துமல்லி விதைகளை ஊற வைத்த, நீரை வாரத்தில் இரண்டு  முறை குடித்து  வருவது நல்லது.

  கொத்துமல்லி  விதைகளை நீரில்  போட்டு  கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து  குடித்து வந்தால்  ரத்தசோகை பிரச்னையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

   

  வெந்தயக்கீரை

  உடல் சூடு  உள்ளவர்கள்  வெந்தயக்கீரையை  சாப்பிட வேண்டும்.  இதன் குளிர்ச்சி  உடல்  சூட்டை  குறைத்து   உடலில் குளிர்ச்சியை  உண்டாக்கும்.

  கபம்,  சளி  உள்ளவர்கள்   வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால் குணமடைவர்.

  வெந்தயக்கீரையை தினந்தோறும்  உணவில்  சேர்ப்பதால் உடலில்  ஏற்படும் புரத குறைபாட்டை நீக்கி  உடலுக்கு  வலிமை  சேர்க்கும். மேலும்  கண் பார்வை குறைபாடு நோய்கள்  இருப்பவர்கள்  வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால்  கண் பார்வை  அதிகரிக்கும்.

  வெந்தயக்கீரை  நரம்பு  தளர்ச்சியிலிருந்து  மீண்டு  வர உதவும்.

  -  தி.பிரேமா, திருச்சி

  ஆரஞ்சு

  ஆரஞ்சுப் பழத்தை  சாப்பிட்டதும்  அது உடனடியாக ரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது.  அதனால்  உடனடியாக  உடலுக்குத் தேவையான  சக்தி கிடைத்து விடுகிறது.

  இரவில்  தூக்கமில்லாமல்  அவதிப்படுபவர்கள்  தூங்கப் போகும்முன் ஆரஞ்சு சுளைகளை   சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியத்தால்  நன்கு தூக்கம் வரும்.

  ஒரு ஆரஞ்சுப் பழம்  1 கப் பாலுக்கு இணையானது.  இந்தப் பழத்தை அப்படியே  சாப்பிடும்போது  அதில் உள்ள நார்ச்சத்து  முழுமையாக நமக்கு கிடைக்கும்.

  காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்  ஒரு ஆரஞ்சுப் பழத்தையும், இரவு படுக்குமுன்  ஒரு பழத்தையும்  சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

  சாப்பாட்டிற்கு பிறகு ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டால் விரைவில் ஜீரணமாகும்.

  இதய நோய் உள்ளவர்கள்,  ஆரஞ்சு பழங்களை சாறாகப் பருகும்போது விரைவில்  அதிலுள்ள சத்துகள் உடலுக்குப் போய்ச் சேரும்.

  - சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி

  ]]>
  keerai, green, vendhiya keerai, வெந்தயக் கீரை, கீரை, தினம் ஒரு கீரை https://www.dinamani.com/health/health-news/2019/apr/05/benefits-of-greens-3127737.html
  3127729 மருத்துவம் செய்திகள் சளி மற்றும் ஆஸ்துமா குறைபாடு நீங்க.. கோவை பாலா Friday, April 5, 2019 12:41 PM +0530 தூதுவளைக் கொழுக்கட்டை

  தேவையான பொருட்கள்

  தூதுவளை இலை -  ஒரு கைப்பிடி 
  பச்சரிசி -  அரை கிலோ 
  மிளகு - ஒரு தேக்கரண்டி 
  சீரகம் - 2 தேக்கரண்டி 
  தேங்காய்த் துருவல் - 50 கிராம் 
  வெங்காயம் - 50 கிராம் 
  பனை வெல்லம் - 300 கிராம்

  செய்முறை : முதலில் தூதுவளைக் கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சரிசியை நன்றாக ஊற வைத்து அதனுடன் மிளகு சீரகம் ஆகியவற்றை சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பனை வெல்லத்தை நன்றாக காய்ச்சி வடிகட்டி அதில் அரைத்த மாவை சேர்த்து பிசையவும். தூதுவளை இலை, தேங்காய்த் துருவல் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை மாவுடன் கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிட்டு வரவும்

  பயன்கள் : சளி மற்றும் ஆஸ்துமா குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தது.மேலும் இந்த கொழுக்கட்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமக்கு வரும் நோய்களிலிருந்து  நம்மை   தற்காத்துக் கொள்ளுவதற்கு உதவும் அற்புதமான உணவு. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  asthma, ஆஸ்துமா, cold, cough, wheezing, தூதுவளை https://www.dinamani.com/health/health-news/2019/apr/05/சளி-மற்றும்-ஆஸ்துமா-குறைபாடு-நீங்கவும்-நோயற்ற-வாழ்வுக்கு-ஏற்ற-உணவு-3127729.html
  3122625 மருத்துவம் செய்திகள் தற்கொலை ஒரு தீர்வல்ல! பிரியசகி /ஜோசப் ஜெயராஜ்  Wednesday, April 3, 2019 12:49 PM +0530 குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஒரு உயிர் தற்கொலையால் பிரிகிறது. தற்கொலைக்கான முயற்சிகள்  இதை விட இருபத்தி ஐந்து மடங்கு அதிகமாக நடைபெறுகின்றன. இளம் வயதில் தற்கொலை இந்தியாவில்தான் மிக அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

  தற்போது பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததென்று இரு பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஊடகங்கள் வாயிலாக வெளி வந்தது இரண்டு,  இன்னும் வெளிவராத தற்கொலைகள் எத்தனையோ!

  பெற்றோர்களின் தவறு: 

  தேர்வு எழுதி முடித்ததுமே தற்கொலை செய்து கொள்வது தோல்வி குறித்த பயத்தால்தான். முடிவு வரும் வரை காத்திருக்கக் கூட இப்பிள்ளைகளுக்கு தைரியமில்லை. இதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் எதிர்பார்ப்பு. தேர்ச்சி பெறவே சிரமப்படும் பிள்ளையை பிறரோடு ஒப்பிட்டு 'அவர்களைப் போல மார்க் எடுக்கலைனா அவ்வளவுதான், 400 மார்க் எடுக்கலைனா நீ என் பிள்ளை இல்லை, எம்மூஞ்சியிலேயே முழிக்காதே; பெயிலானா கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன்; பெயிலான வேலைக்கு அனுப்பிடுவேன் என்ற ரீதியில் அச்சுறுத்துவது பிள்ளைகளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும். சரி, கேள்வித்தாள் கடினம் அவ்வளவுதானே; எவ்வளவு மார்க் வருதோ வரட்டும் என்றோ, தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை ஜூலையில் அரியர் எழுதிக்கலாம், கவலைப்படாம அடுத்த தேர்வுக்குப் படி என்றோ பெற்றோர் இப்பிள்ளைகளைத் தேற்றியிருந்தால் நிச்சயம் தற்கொலை முடிவைத் தேடியிருக்க மாட்டார்கள் .

  குழந்தைகள் எந்த விதத்திலும் சிறு துன்பமும் படக் கூடாது என நினைக்கும் பெற்றோர்கள், வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் ஏமாற்றங்களையும், துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு  சமாளிக்கும் பக்குவத்தை  பிள்ளைகளுக்கு தரத் தவறி விடுகின்றனர்.

  பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் தன் நேரத்தை அவர்களுக்கு தரத் தவறுவதால் சமூக வலைத்தளம் எனும் மாய உலகில் சிக்கி சீரழியும் இளையோர் இன்று ஏராளம். இவர்கள் நிழல் உறவுகளை நிஜமென்று நம்பி நம்பிக்கை நாசமாகும் போது அதை ஏற்க இயலாமல் துன்பத்தில் துவண்டு தற்கொலை முடிவுக்கு தள்ளபடுகின்றனர்.

  காரணங்கள்:

  தான் நினைத்தது நடக்காத ஏமாற்றம், உறவுகளை பிரிதல்,கடன்,நோய்,தோல்விபயம்,காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாமை என பல காரணங்கள் தற்கொலைக்கு தூண்டுகின்றன.குடும்பத்தில் தற்கொலை பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாக தற்கொலை எண்ணங்கள் மேலோங்குவது உண்டு.

  இவர்களுமா? 

  சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என நம்பப்பட்ட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், பல இதய நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் குரியன், பல மாணவர்களின் ஐ.ஏ.எஸ்.கனவை தன் அகாடமி மூலம் நிறைவேற்றி வைத்த சங்கர் போன்றவர்களும், பல பிரபல நட்சத்திரங்களும் தற்கொலை செய்து கொண்டு உலகை அதிர்ச்சியில் உறை வைத்தார்கள்.

  உலகில் மனிதராய்ப் பிறந்த பெரும்பாலானோர்க்கும் ஏதாவதொரு சூழலில் தற்கொலை எண்ணம் வந்திருக்கும்.அதிலிருந்து மீண்டு வந்து பின்னர் சாதனை படைத்தவர்களும் ஏராளம்.

  முன்மாதிரிகள்:

  சமீபத்தில் வெளியிடப்பட்ட NOTES OF A DREAM என்ற ஏஆர் ரகுமானின் வாழ்க்கை குறித்த நூலில் அவர் இந்த நாடு ஏ.ஆர். ரகுமான் என்ற இசையமைப்பாளரின் திறமையை அடையாளம் காணும் முன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நான் தோல்வியைச் சந்தித்துள்ளேன்; ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன் இந்தக் கடினமான நாட்கள்தான் எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையை உருவாக்கியது.


  என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன் என் தந்தையின் இழப்பு எனக்குள் வெறுமையை விதைத்து தற்கொலை எண்ணத்தை தூண்டியது. ஆனால் பிறகு அதுவேதான் என்னை  அச்சமற்றவனாய் மாற்றியது என்றார். போரும் அமைதியும் எழுதிய லியோ டால்ஸ்டாய், ஹாரிபாட்டர் எழுதிய ஜே.கே ரௌவ்லிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தளார்களும் மன அழுத்தத்தால் ஒரு காலகட்டத்தில் தற்கொலை எண்ணம் கொண்டிருந்தவர்களே.

  தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் உளவியல் மருத்துவர் கே.ரெட்பில்டு ஜேமிசன்.

  சாக வேண்டும் என்ற ஆசை இல்லாவிட்டாலும் தன் பிரச்னைக்களுக்கு தீர்வாக எண்ணியே தற்கொலையை பலரும் நாடுகின்றனர் என்பது உளவியல் ஆய்வுகளின் முடிவு. அவ்வாறு முயல்பவர்கள் தன்னை அச்சூழலிருந்து காப்பாற்றி அரவணைக்க யாருமில்லை என்ற அழுத்தத்தில்தான் அப்படியொரு முடிவை எடுக்கிறார்கள் என்கிறார் 'உச்சியிலிருந்து தொடங்கு' என்ற தற்கொலைத் தடுப்பு வழிகாட்டு நூலை எழுதியுள்ள வெ. இறையன்பு அவர்கள். தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வது எப்படி ?

  தன் வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிமுறைகளை அறிந்து வைத்தலும் அவசியம்.  வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட முக்கியமான நல்ல விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்ப்படும் சிறுசிறு சவால்களை துன்பங்களாகக் கருதாமல் அனுபவமாகக் கருதி எதிர் கொள்ளப் பழக வேண்டும். 

  தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் பிறர் தனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பது அவசியம்.  தனக்கு நேரடியாக தொடர்பில்லாதவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போது மறுக்காமல் உதவுதல் மனநிறைவைத் தரும். சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் போது விரக்தி மனப்பான்மையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் பெற்றோர்கள் குறைகூறுபவர்களாக மட்டுமில்லாமல், பிள்ளைகளின் திறமைகளை  ஊக்குவிப்பவர்களாகவும், பாராட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணம் கொண்டவர்களை நண்பர்களாகக் கொள்வதும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட்டு விலகி இருப்பதும் நல்லது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது துன்பத்தில் துவண்டு விடாமல் அதிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டுவர உதவும்.

  ஒரு பள்ளத்தினுள் விழுந்த கழுதையை காப்பாற்ற இயலாத கிராமத்து மக்கள் அதன் சத்தத்தினை பொறுக்க முடியாமல் மண்ணை போட்டு பள்ளத்தை மூடி கழுதையைக் கொன்று விட முடிவு செய்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் மேல் விழுந்த மண்ணை உதறி விட்டு அதன் மேல் ஏறி நின்று கொண்டது கழுதை. இப்படியே மண் நிறைந்து மேடாகி பள்ளத்தை விட்டு வெளியே வந்து விட்டது.

  நமக்கு வரும் துன்பங்கள் வெளியிலிருந்து வருபவை; அதைத் துயரங்களாக கருதி கொண்டு அமிழ்ந்து போகப் போகப் போகிறோமா, அல்லது தூசுபோல் கருதி அதன் மேலேறி வெளிவரப் போகிறோமா என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் பொறுத்தது. இந்த மனவலிமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது.  சந்தர்ப்ப சூழலால்  சற்றே தளர்ந்து போய் மனஅழுத்தம் மிகுந்திருக்கும் போது உடனிருப்பவர்கள் அவர்களோடு மனம்விட்டு பேசினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும். தேவைப்படுமாயின் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றால் மீதிப்பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பின்னாளில் அவர்கள் சாதனையாளர்களாக மாறலாம். எண்ணங்கள் மாறினால் வாழ்வின் வண்ணங்களும் மாறிடும்.

  - பிரியசகி / ஜோசப் ஜெயராஜ் 

  ]]>
  death, தற்கொலை, இளைஞர்கள், suicide, Youngsters, பொள்ளாச்சி, pollachi https://www.dinamani.com/health/health-news/2019/mar/29/suicide-is-not-a-solution-3122625.html
  3126421 மருத்துவம் செய்திகள் நீங்க சரியாகத் தான் மூச்சு விடறீங்களா? இதோ ஒரு செக் லிஸ்ட்! கோவை பாலகிருஷ்ணன்  Wednesday, April 3, 2019 12:19 PM +0530  

  நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம். படிக்கலாம் அல்லது ஓய்வில் இருக்கலாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக் கவனித்து இருக்கிறோமா?

  அதென்ன மூச்சைக் கவனித்தல்? 

  மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.? போதும் . 

  மேலோட்டமாகவே பார்ப்போம். 

  நாம் உட்கார்ந்து செய்யக் கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். 

  மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான்.

  மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செத்தா போய்விடுவோம்?  

  உடல் அதற்குத் தேவையான அளவு மூச்சை எடுத்துக் கொள்ளத்தானே செய்யும் என்றால் ஆமாம். ஆனால் அந்த மூச்சு உயிரோடு இருக்கப் பயன்படுமே தவிர நம்மை உயிர்ப்போடு வைத்திருக்காது.

  மூச்சு இழுத்து விடுவதில் உடனடி பலனை ரத்தம் பெறுகிறது. ரத்தம் வளமானாலே நோய் என்பது உங்களை விட்டு தூர விலகிவிடும்.

  மூச்ச இழுன்னு சொன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டர் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப்ப வச்சுக்கிட்டு மூச்ச இழுக்கச் சொன்னதும், வயித்த எக்கி நெஞ்சுக் கூட்ட உயர்த்தி தம் கட்டி மூச்ச்ச இழுக்கறதுதான் தெரியும். இப்படி இழுக்கும்போது நுரையீரல் நிறைய காற்று நிரம்புவது போல் தெரிஞ்சாலும் உண்மையில் சற்றே அதிகம் இழுக்கிறோமே தவிர முழுமையாக காற்றை இழுப்பதில்லை.

  சரி மூச்சை சரியான விதத்தில் இழுப்பது எவ்வாறு? தபால்ல நீச்சல் பழகுவது போல இந்த இடுகையில், எழுத்தில், எப்படி மூச்சு விட்டுப் பழகுவது என்றூ கூறுகிறேன். முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு, நுரையீரலில் காற்றை இழுப்பது என்பதற்கு பதிலாக, மூக்கின் வழியே காற்றை ஊற்றுவதைப் போன்ற உணர்வுடன் காற்றை மிக மெதுவாக இழுத்துப் பாருங்கள்.

  இதைச் சரியாகச் செய்கிறோமா என உறுதி படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானே, எவ்வாறு?...

  காற்று நுரையீரலின் கீழ்பகுதியில் நிறையும் போது அடிவயிற்றின் முன்புறங்கள் முன்னோக்கி வரும். 

  அடுத்து இயல்பாக நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் விரிவடையும். மேலும் காற்று நிறைய நிறைய உடல் இன்னும் நிமிர்ந்து அடிவயிற்றின் கீழ்பாகம் சற்றே உள்நோக்கி நகரும். 

  இந்த நிலையில் காற்று இழுப்பது தானாக நின்றுவிடும். மிகச் சில நொடிகள் இயல்பாக தம் கட்டாமல் காற்றைப் பிடித்து வைத்துவிட்டு இயன்ற அளவு மெதுவாக மூச்சுக்காற்றினை வெளியேற்றவும்.

  வெளியேற்றும் போது அடிவயிற்றினை சற்று இறுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும் காற்று வெளியே போனதும் நெஞ்சினையும் அடிவயிற்றினையும் நன்கு தளர்த்தி விட்டுக் கொண்டு மறுபடியும் துவங்கவும்.

  இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள். 

  உணவு உண்டவுடன் மிதமாகச் செய்யுங்கள். கிடைக்கும் நன்மைகளை எனக்கு நீங்கள் பட்டியல் இடுவீர்கள்.

  *"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"*

   

  ]]>
  தியானம், மூச்சு, breathe, breathing, pranayama, பிராணயாமம் https://www.dinamani.com/health/health-news/2019/apr/03/few-breathing-tips-3126421.html
  3126374 மருத்துவம் செய்திகள் அஜீரணக் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான சாதம் கோவை பாலா Wednesday, April 3, 2019 10:52 AM +0530  சுக்கு, மிளகு, திப்பிலி சாதம் 

  தேவையான பொருட்கள்

  சுக்கு - ஒரு துண்டு
  வெள்ளை மிளகு - 2 தேக்கரண்டி
  திப்பிலி - கால் தேக்கரண்டி
  கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  வெள்ளை வெங்காயம் - 2
  பூண்டு - 5 பல்
  உப்பு -  தேவையான அளவு
  மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி

  செய்முறை

  முதலில் சுக்கு, மிளகு, வெள்ளை மிளகு, கறிவேப்பிலை அனைத்தையும் வறுத்து நன்றாக அரைத்து விழுதாக்கி  வைத்துக் கொள்ளவும்.

  பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதையும், பூண்டையும் ஒன்றாக சேர்த்து வதக்கி அதனுடன் உப்பு, மஞ்சள், மசாலாத் தூள் சேர்த்து மஞ்சள் வாசனை போகும் வரை எண்ணெய்யில் தண்ணீர் விடாமல் வதக்கிக் கொள்ளவும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/apr/03/அஜீரணக்-குறைபாட்டை-சீர்-செய்யும்-அற்புதமான-சாதம்-3126374.html
  3125076 மருத்துவம் செய்திகள் இதய நோயாளிகள் மற்றும் மூலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஊறு விளைவிக்காத ஊறுகாய்! கோவை பாலா Monday, April 1, 2019 01:23 PM +0530
   
  அத்திக்காய் ஊறுகாய்

  தேவையான பொருட்கள்

  அத்திக்காய் - கால் கிலோ 
  மிளகு - 50 கிராம்
  தனியா - 5 கிராம் 
  மஞ்சள் - 5 கிராம் 
  ஓமம் - 5 கிராம் 
  பெருங்காயம் - 5 கிராம் 
  கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு 
  உப்பு -  20 கிராம்

  செய்முறை : அத்திக்காயை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு நீக்கி இரண்டாக அரிந்து ஒரு. மண் சட்டியில்  போட்டு அரைத்து வைத்துள்ள விழுதையும் இத்தோடு சேர்த்து நன்றாக கலக்கி பாத்திரத்தின் வாயில் துணியை கட்டி ஒரு வாரம் வரையில் வெயிலில் வைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு நாளும் வெயிலில் வைக்கும் போது நன்றாக குலுக்கி பின்னர் வெயிலில் வைக்கவும். 

  பயன்கள் : இந்த ஊறுகாயை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால் செரிமானம் சீராகும், பித்தம் தணியும். இதய நோயாளிகள் மற்றும் மூலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஊறு விளைவிக்காத உன்னதமான ஊறுகாய் இந்த அத்திக்காய் ஊறுகாய்

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  heart attack, heart pain, piles, இதய நோய், இதயம், ஹார்ட் அட்டாக் https://www.dinamani.com/health/health-news/2019/apr/01/a-recipe-for-heart-attack-patients-3125076.html
  3122623 மருத்துவம் செய்திகள் தீராத மலச்சிக்கல் குணமாக உதவும் அற்புதமான தேனீர்! கோவை பாலா Thursday, March 28, 2019 05:29 PM +0530 ஆவாரம் பூ தேனீர்

  தேவையான பொருட்கள்

  காய்ந்த ஆவாரம் பூ - கால் கிலோ
  லவங்கப் பட்டை - 10 கிராம்
  சுக்கு - 10 கிராம்
  மிளகு - 10 கிராம்
  திப்பிலி - 10 கிராம்
  ஏலக்காய் - 10 கிராம்

  செய்முறை : மேலே கூறிய பொருட்களை வாங்கி சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து நன்கு அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

  பலன்கள் : இந்த தேனீரை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் உடனே குணமாகும். தீராத மலக்கட்டு மற்றும் மலச்சிக்கல் தீரும். சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக உதவக் கூடியது இந்த அற்புதமான தேனீர்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  piles, health, tea, தேநீர், மலச்சிக்கல், ஹெல்த் https://www.dinamani.com/health/health-news/2019/mar/28/தீராத-மலச்சிக்கல்-குணமாக-உதவும்-அற்புதமான-தேனீர்-3122623.html
  3121938 மருத்துவம் செய்திகள் தாங்கவே முடியாத அளவுக்கு மூட்டு வலியா? இதோ எளிய நிவாரணம்! DIN DIN Wednesday, March 27, 2019 12:51 PM +0530 எனக்கு வயது 56 ஆகிறது. இரண்டு கால் மூட்டுகளிலும் வீக்கம் பெரிதாகவும், எரிச்சலாகவும், தொட்டால் மூட்டைத் தொட முடியாத அளவிற்கு சூடுள்ளதாகவும் இருக்கிறது. அடிக்கடி காய்ச்சலும் ஏற்படுகிறது. மூட்டுகளை அசைப்பதற்கே கடினமாக உள்ளது. தற்சமயம் விரல் கணுக்கள், கழுத்து போன்ற பகுதிகளில் இதே போன்ற உபாதைகள் தொடங்கியுள்ளன. இதை எப்படிக் குணப்படுத்துவது?
   -முரளிதரன், கோவை.

  நீங்கள் குறிப்பிடும் இந்த உபாதைக்கு 'ரத்தவாதம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. இதில் வாதம், ரத்தம் (பித்தம்) இவை அழற்சியுறுவது தான் முதல் காரணம். காரம், புளி, உப்புச் சுவையை அதிகம் பயன்படுத்துவதாலும், மதுபானம், புகை பிடித்தல், அடிக்கடி டீ, காபி பருகுதல், சிறு விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுதல், புலால் உணவுகளாகிய மீன், கருவாடு, சிக்கன், முட்டை அதிகம் சாப்பிடுதல், குடும்பச் சூழ்நிலை பற்றிய அதிக கவலை, எந்நேரமும் சிந்தனைவயப்படுதல் ஆகியவற்றால் பித்தம் சார்ந்த குணங்கள் உடலில் தூண்டப்பட்டு, ரத்தத்துடன் கலப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இவை. சூடும், ஊடுருவும் தன்மையும், நீர்த்த தன்மையும் கொண்ட குணங்கள், பித்தத்திற்கும், ரத்தத்திற்கும் பொதுவானவை. இவை அனைத்தும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் வளர்ச்சியடைந்து, ரத்தத்தில் காந்தலை ஏற்படுத்துகிறது அதன் பிரதிபலிப்பையே மூட்டுகளில் எரிச்சலாகவும் தொட்டால் சூடுள்ளதாகவும் உணர்த்துகிறது.

  ரத்தவாத உபாதையில் எண்ணெய், நெய், வெண்ணெய், பால் போன்ற நெய்ப்புள்ள குணமுள்ளதும் குளுமையுமான மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமிருப்பதால், நீங்கள் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிண்டதைலத்தை வீக்கமுள்ள மூட்டுகளில் தாராளமாக மேலுக்குப் பயன்படுத்தவும். எண்ணெய்யை கையினால் வீக்கத்தின் மீது வைத்துத் தேய்க்க வேண்டாம். அது வலியை அதிகரிக்கக் கூடும். அதற்கு மாற்றாக, தைலத்தை மூட்டுகளின் மீது தாரையாக ஊற்றவும். சுமார் கால் மணி நேரம் ஊற்றினால் சூடும் எரிச்சலும் நன்றாகக் குறையும். வலி பொறுக்கும் அளவிற்குக் குறையும். அதன் பிறகு, பஞ்சை பிண்ட தைலத்தில் சொட்ட சொட்ட நனைத்து வீக்கமுள்ள இடத்தின் மேல் இட்டு வைக்கவும். தோல் வழியாக பஞ்சு சூடாக வாய்ப்பிருப்பதால், அதை சிறிது நேரத்திலேயே எடுத்துவிட்டு, வேறொரு பஞ்சை தைலத்தில் முக்கி எடுத்து வீக்கத்தின் மீது போடவும். சுமார் 2 வாரம் இதைச்செய்யலாம்.

  ஜடாமயாதி எனும் பெயரில் விற்கக் கூடிய சூரண மருந்தை, அரிசிவடித்த கஞ்சித் தண்ணீரில் குழைத்து வீக்கத்தின் மீது பற்றிடப் பயன்படுத்துவதன் மூலம் வீக்கம், வலி, எரிச்சல், சூடு ஆகியவற்றைத் தணிக்கலாம். கடுமையான நாட்பட்ட உபாதையாக இருப்பவர்களுக்கு, அட்டைப் பூச்சியை கடிக்கச் செய்து கெட்டுப் போன ரத்தத்தை சிறிய அளவில் எடுத்துவிடுவதன் மூலமாகவும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

  இந்நோயில் உள்ளுக்குக் கொடுக்கக் கூடிய சிறந்த மருந்தாக சீந்தில்கொடியைக் குறிப்பிடலாம். சீந்தில் கொடியை சிறிது முறுக்கினால் அதன் மேல் படர்ந்துள்ள மெல்லிய தோல் விடுபட்டுவிடும். அதை நீக்கிவிட்டு, கொடியை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர்விட்டு இடித்துப் பிழிந்தெடுத்த சாறு, சீனாக் கற்கண்டுடன் காலை, மாலை சுமார் 50 மி.லி. சாப்பிட்டு வர, காய்ச்சல் குறையும், ரத்தவாதமும் குணமாகும். திராக்ஷôகி கஷாயத்தை உள்ளுக்குச் சாப்பிட, மலச்சிக்கல் வராமல் பாதுகாப்பதுடன் நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கும் நல்லது. குடூசிஸத்வம் என்ற பெயரில் விற்கப்படும் மருந்தை வேளைக்கு ஒன்றிரண்டு சிட்டிகை அளவாகத் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு அதன் மேல் பால் பருகிவருவதும் நல்லதே.

  கடும் பத்திய நிலைகளை அனுசரிக்க வேண்டிய அவசியமுமிருக்கிறது. உணவில் பித்த சீற்றத்திற்கான முன் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்ப்பதுடன் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் சேர்ப்பதுடன், ரத்தத்திலுள்ள காந்தலை நீக்கக் கூடிய குளிர்ச்சியானதும் விஷவஸ்துக்களை அகற்றக் கூடியதுமான நன்னாரி வேர்ப்பட்டையை கடுக்காய்த் தோலுடன் இடித்து மண்பானைத் தண்ணீரில் ஊற வைத்துக் குடிப்பதும் அவசியமாகும். மனதில் கவலையை ஏற்படுத்தும் செயலும், கோபமான சொற்களைப் பிறர் மீது சொல்லாமலிருப்பதும் தேவை. கோகிலாக்ஷம், பிருகத்யாதி போன்ற கஷாய மருந்துகள், தசமூலஹரீதகீ எனும் லேகியம் போன்றவை உள் மருந்தாகச் சாப்பிட உகந்தவை.

   பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
   ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
   நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
   செல் : 94444 41771

  ]]>
  leg pain, knee pain, கால் வலி, மூட்டு வலி https://www.dinamani.com/health/health-news/2019/mar/27/தாங்கவே-முடியாத-அளவுக்கு-மூட்டு-வலியா-இதோ-எளிய-நிவாரணம்-3121938.html
  3121931 மருத்துவம் செய்திகள் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சைனஸ் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும் அற்புதமான ரசம் கோவை பாலா Wednesday, March 27, 2019 12:14 PM +0530 கண்டங்கத்திரி மிளகு ரசம்

  தேவையான பொருட்கள்

  கண்டங்கத்திரி இலை - 100 கிராம்
  தக்காளி - 4
  மிளகு - 20 கிராம்
  இஞ்சி - 10 கிராம்
  பூண்டு - 10 கிராம்
  கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
  கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
  உப்பு , மஞ்சள் - தேவையான அளவு
  நல்லெண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை : முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் கண்டங்கத்திரி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். பின்பு தக்காளியை நன்றாக கழுவி அரிந்து சுண்ட வைத்தது தண்ணீரில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, மல்லித் தழை, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் கண்டங்கத்தரி  கரைசலுடன் வதக்கியவற்றை சேர்த்து  சூடு செய்யவும். நுரை வரும் பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

  பலன்கள் : இந்த ரசத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சைனஸ், சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்து நுரையீரலை வலுப்படுத்தும் அற்புதமான ரசம்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  cinus, cold, cough https://www.dinamani.com/health/health-news/2019/mar/27/ஆஸ்துமா-நுரையீரல்-மற்றும்-சைனஸ்-குறைபாட்டை-முழுமையாக-குணப்படுத்தும்-அற்புதமான-ரசம்-3121931.html
  3121193 மருத்துவம் செய்திகள் அறுபது வயதில் இருபது வயது இளமையை பெற உதவும் அற்புத சத்துமாவு கோவை பாலா Tuesday, March 26, 2019 10:50 AM +0530
  சஞ்சீவினி சத்துமாவு

  தேவையான பொருட்கள்

  பூசணி விதை - 50 கிராம்
  சாலாமிசிரி - 50 கிராம் 
  சாரப்பருப்பு - 50 கிராம் 
  முந்திரி பருப்பு -.50 கிராம் 
  பாதாம் பருப்பு -.50 கிராம் 
  பிஸ்தா பருப்பு -.50 கிராம் 
  அக்ரூட் பருப்பு -.50 கிராம் 
  வெள்ளரி விதை - 50 கிராம்
  கருப்பு உளுந்து - 50 கிராம் 
  எள்ளு - 50 கிராம்
  பார்லி - 50 கிராம்
  ஜவ்வரிசி - 50 கிராம் கொண்டைக்கடலை - 1/4 கிலோ

  செய்முறை

  மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் கலந்து குடித்து வரவும்.

  பலன்கள் : அறுபதில் இருபது வயதில் இளமையைப் பெறலாம். ஆண்மைக் கோளாறுகள்,  நரம்புத் தளர்ச்சி,  துரித ஸ்கலிதம் போன்ற குறைபாடுகள் நீங்கும் .உடல் பலவீனம் ,  மெலிந்த உடல் போன்றவர்களுக்கு இது அமிர்த சஞ்சீவினி ஆக செயல்படும்

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  youth, young, ayurveda, இளமை, சஞ்சீவினி, சத்துமாவு https://www.dinamani.com/health/health-news/2019/mar/26/அறுபது-வயதில்-இருபது-வயது-இளமையை-பெற-உதவும்-அற்புத-சத்துமாவு-3121193.html
  3120577 மருத்துவம் செய்திகள் இதயம் சார்ந்த பிரச்னைகளை முற்றிலும் குணப்படுத்தும் அற்புத தேனீர் கோவை பாலா Monday, March 25, 2019 11:09 AM +0530 தாமரைப் பூ தேனீர்

  தேவையான பொருட்கள்

  தாமரைப் பூ. - அரைக் கிலோ
  சுக்கு - 50 கிராம்
  ஏலக்காய் - 50 கிராம்

  செய்முறை : தாமரைப் பூ இதழ்களை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி அதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து  இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். 

  பலன்கள் : இந்த தேனீரை தினமும் குடித்து வந்தால் தீராத மனம் சார்ந்த பிரச்னைகள், தூக்கமின்மை குறைபாடு, படபடப்பு மற்றும் இதயம் சார்ந்த குறைபாட்டை முற்றிலும் சீர் செய்யும் அற்புத தேனீர்

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/25/இதயம்-சார்ந்த-பிரச்னைகளை-முற்றிலும்--குணப்படுத்தும்--அற்புத-தேனீர்-3120577.html
  3118112 மருத்துவம் செய்திகள் உங்களுக்கு பாப்கார்ன் பிடிக்குமா? அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்! DIN DIN Thursday, March 21, 2019 12:51 PM +0530 தியேட்டர்களில் படம் பார்க்கும் போதுதான் பெரும்பாலும் பாப்கார்னை அதிகமாக வாங்கிச் சாப்பிடுவோம். சிலர் பேருந்தில் பயணம் செய்யும் போது வாங்கிச் சாப்பிடுவார்கள். இவ்வாறு பொழுதுபோக்கிற்காகச் சாப்பிடும் பாப்கார்னில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா ?

  பாப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாங்கனீசு, நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதைப் பற்றி இங்கு காண்போம்:

  • பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
  • ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் ரத்த குழாய்களிலும், தமனியிலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.

  • பாப்கார்ன் நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும்.
  • புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக் கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஆக்ஸிடென்டின் முக்கியப் பணியாகும்.
  • அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. எனவே, அனைவருக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவு அவசியமான ஒன்றாகும்.
  • ஒரு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ûஸ காட்டிலும் 5 மடங்கு குறைவு.
  • இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பி, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.

   - ஏ.எஸ்.கோவிந்தராஜன்

  ]]>
  pop corn, theatre https://www.dinamani.com/health/health-news/2019/mar/21/health-benefits-of-pop-corn-3118112.html
  3118086 மருத்துவம் செய்திகள் இயலாமை நீங்கி ஆண்மையை அற்புதமாகப் பெருக்க உதவும் மூலிகை உணவு! கோவை பாலா Thursday, March 21, 2019 11:01 AM +0530 கானாம் வாழைக் கீரை தோசை 

  தேவையான பொருட்கள்

  கானாம் வாழைக் கீரை - 100 கிராம்
  சீரகம் - ஒரு ஸ்பூன்
  தோசை மாவு - அரைக் கிலோ
  நல்லெண்ணெய் - சிறிதளவு

  செய்முறை : கானாம் வாழைக் கீரை, சீரகம் இரண்டையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி அதனை விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை தோசையாக வார்த்து சாப்பிட்டு வந்தால் மிக ருசியாக இருக்கும்

  பலன்கள் : இயலாமை உள்ளவர்கள் ஆசையாக இந்த தோசையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயலாமை நீங்கி ஆண்மை பெருக்கி இல்லறம் இனிக்கும். மேலும் நரம்புக் கோளாறு, பயம், நடுக்கம் போன்ற குறைபாட்டை சீர் செய்யும் அற்புத மூலிகை உணவு கானாம் வாழைக் கீரை தோசை.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  keerai, jeera, Infertility, ஆண்மை பிரச்னை, மூலிகை உணவு https://www.dinamani.com/health/health-news/2019/mar/21/இயலாமை-நீங்கி-ஆண்மையை-அற்புதமாகப்-பெருக்க-உதவும்-மூலிகை-உணவு-3118086.html
  3116261 மருத்துவம் செய்திகள் 100 நாட்கள் சாப்பிடாமல் இருந்த இந்தியர்! எப்படி சாத்தியமானது? நாஸா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்! மாலதி சந்திரசேகரன்  Tuesday, March 19, 2019 03:52 PM +0530 அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியனைப் பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் சூரியனைப் பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாஸா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது. எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாஸா.

  சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும். இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம். பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. தன்னை 'சூரியக்கதிர்களை உண்பவன்’என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த 'ஹிரா ரத்தன் மானக்' என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாஸா விஞ்ஞானிகளை அணுகினார். 

  ஹிரா ரத்தன் மானக்

  நாஸாவினால் நிதியுதவி பெறக் கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர். 100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர் வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

  முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று 'ஹைபோதாலமஸ் பாதை' என்கிற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது. கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே 'ஹைபோதாலமஸ்' என அழைக்கப்படுகிறது. இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம். மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம். சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம். இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.

  வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம். இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம். வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ்தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம். 

  சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர். அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சூரியக் கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இரு கை விரல்களையும் கோர்த்து, வளைத்து வைத்து, அந்த துவாரத்தின் வழியே சூரியனைப் பார்ப்பதை சில குழந்தைகள் செய்வதைப் பார்த்திருப்போம். ஆதாயம் அறியாமல் வேடிக்கை விளையாட்டாக விளையாடுகிறார்கள். 

  சூரிய நமஸ்காரம் என்பதும் கண்களுக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் அனுசரிக்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக மூட்டு, முதுகு வலி பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம். சூரிய ஒளியின் பயன்கள் அநேகம் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் சாமர்த்தியம்தான். 

  ]]>
  சூரிய நமஸ்காரம், cure, சூரியன், sun, disease, surya namaskaram https://www.dinamani.com/health/health-news/2019/mar/18/benefits-of-surya-namaskaram-3116261.html
  3116918 மருத்துவம் செய்திகள் குழந்தையின்மை குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புத பானம்! கோவை பாலா DIN Tuesday, March 19, 2019 11:13 AM +0530  

  தலைப்பு : கருப்பை கட்டிகளை நீக்கி கருப்பையை பலப்படுத்தவும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பாயாசம்.

  சோற்றுக் கற்றாழை பாயாசம்

  தேவையான பொருட்கள்

  சோற்றுக் கற்றாழைச் சோறு - கால் கிலோ 
  முந்திரி பருப்பு - 10
  பாதாம் பருப்பு - 10 
  உலர் திராட்சை - 10 கிராம் 
  சிறு பருப்பு - 100 கிராம் 
  ஏலக்காய் - 5
  நாட்டுச்சக்கரை -  100 கிராம் 
  நெய் - ஒரு ஸ்பூன் 

  செய்முறை

  முதலில் சோற்றுக் கற்றாழையின்  சோற்றை அரிசி கழுவிய நீரில்  முறைப்படி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறு பருப்பை குழைய நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை ஒன்றிரண்டாக பொடித்து போட்டு அதனுடன் ஏலக்காயையும், உலர் திராட்சையையும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் சோற்றுக் கற்றாழைச் சோறு மற்றும் மசித்து வைத்துள்ள சிறு பருப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வேக வைத்து பாயாச பதத்தில்  இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  பலன்கள் : இந்த பாயாசத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கருப்பையில் உண்டாகும் கட்டிகளை கரைத்து கருப்பையை பலப்படுத்தும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பானம் இது.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  uterus, child birth, pregnancy, கருப்பை, கர்ப்பம், மகப்பேறு மருத்துவம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/19/a-home-remedy-for-uterus-problem-3116918.html
  3116258 மருத்துவம் செய்திகள் கழுத்து வலி முழுமையாக குணமாக உதவும் அற்புத தேனீர் இது! கோவை பாலா Monday, March 18, 2019 12:39 PM +0530  

  இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக  குணமாகவும், நல்ல நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத தேனீர்
   
  தான்றிக்காய் காபி

  தேவையான பொருட்கள்

  தான்றிக்காய் - கால் கிலோ
  நன்னாரி - 50 கிராம்

  செய்முறை : மேற்கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக இடித்து பின்பு வாணலியில் போட்டு நன்கு வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

  தினமும் ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

  பலன்கள் : இந்த தேனீரை தினமும் அருந்தி வந்தால் இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக நீங்கும் மற்றும் நல்ல நினைவாற்றலை உண்டாக்கும் மேலும் மூலசார்ந்த பிரச்னைகள், ரத்த மூலத்திற்கும் மிகச் சிறந்த தேனீர்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  cafe, mooligai cafe, health, neck pain, கழுத்து வலி https://www.dinamani.com/health/health-news/2019/mar/18/remedy-for-nect-pain-3116258.html
  3114411 மருத்துவம் செய்திகள் உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா? (விடியோ) மாலதி சந்திரசேகரன்  DIN Friday, March 15, 2019 03:38 PM +0530
   
  குழந்தைகள் முதல் 50 அல்லது 60-களில் இருக்கிற பெண்கள் வரை எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கிற பிரச்னை ஹீமோகுளோபின் லெவல் குறைவு. புரிகிறபடி சொல்ல வேண்டுமென்றால், அனிமியா பிரச்னை. மாதவிடாய், பிள்ளைப்பேறு, சிசேரியன் என்று பெண்கள் ரத்தம் இழப்பதற்கு 3 பெரிய காரணங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர, சரியாகச் சாப்பிடாதது, சரிவிகித சத்தான உணவு எடுக்காதது போன்ற காரணங்களையும் சேர்த்துக் கொள்வோம். உலக சுகாதார அமைப்பு சொல்லியிருக்கிறபடி பெண்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் 12 கிராம் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் 80 சதவிகிதப் பெண்களுக்கு 9 கிராமுக்கும் கீழேதான் ஹீமோகுளோபின் லெவல் உள்ளது. இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் என்னென்ன, உணவில் மூலம் சரி செய்ய முடியுமா, சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதன் அளவு என்ன? மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் கேட்டோம்.

  ''ஹீமோகுளோபின் லெவலை துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ரத்தப்பரிசோதனை செய்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஹெச்.பி. லெவல் குறைவாக இருக்கிறப் பெண்களுக்கு அடிக்கடி மூச்சு வாங்கும், உடம்பு வெளிறிப் போய் விடும், நடக்க முடியாது, இதயம் படபடப்பாக உணர்வார்கள், தலைச்சுற்றல், அஜீரணம் இருக்கும். தூக்கமும் குறையும்

  ஒருவர் சாப்பிடுகிற சாப்பாட்டில் இருந்து பி 12, பி 6, இரும்புச் சத்து ஆகியவற்றை உடம்பு பிரித்து எடுத்துக் கொள்ளும். இதை ஹீம் என்று சொல்வோம். இது உடம்பில் சேர்ந்து ஹீமோகுளோபின் ஆகிறது. உடம்பு இதைச் செய்ய முடியாத போதும் அல்லது உடம்பால் எடுக்க முடிகிற அளவுக்கு உங்கள் உணவில் மேலே சொன்ன சத்துகள் இல்லை என்றாலும் ஹீமோகுளோபின் லெவல் குறையும்.

  சாப்பாட்டில் கீரை வகைகள், பீட்ரூட், மாதுளம் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வர ரத்தம் ஊற ஆரம்பிக்கும். ஆனால், ஹீமோகுளோபின் லெவல் 6 கிராம்தான் இருக்கிறது என்றால், இரும்புச் சத்து மாத்திரை தருவோம். இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொண்டால் சில பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படலாம். அவர்களுக்கு ஐ.வி. ஐயர்ன் சத்தை இன்ஜெக்‌ஷன் மூலம் செலுத்துவோம். தேவைப்பட்டால் ரத்தம் கூட ஏற்றுவோம்’ என்றவர், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்களையும் சொன்னார்.

  'கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து தேவையான அளவுக்கு இருப்பது மிக மிக அவசியம். இந்த நேரத்தில் பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். ஆனால், நம் ஊரில் 10 கிராமையே தாண்டுவதில்லை பெண்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஆரம்பத்தில் தேவையான அளவுக்கு ஹீமோகுளோபின் கொண்ட கர்ப்பிணிகளுக்குக் கூட, சரியாகச் சாப்பிட முடியாதது, வாந்தி, போன்ற காரணங்களால் ஹெச்.பி. லெவல் குறைய ஆரம்பிக்கும். வேலைக்குப் போகிற கர்ப்பிணிகள், சத்தாகச் சாப்பிடாமல் இந்தப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதை பார்க்கிறேன். அதனால், நாங்கள் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைக் கொடுப்பதை கட்டாயமாக்கி விட்டோம்.

  தைராய்டு பிரச்னை இருக்கிற பெண்களுக்கும் ஹெச்.பி. லெவல் குறைவாகவே இருக்கும். காரணம், அவர்களுடைய தைராய்டு கிளாண்ட் பலவீனமாக இருப்பதால், உடம்பால் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது; உணவில் இருக்கிற சத்துக்களை உடம்பு முழுமையாகக் கிரகிக்கவும் முடியாது. இதனாலும் ஹெச்.பி. லெவல் குறைவாகும்.

  இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால், குறைந்தது 3 மாதம் முதல் 6 மாத காலத்துக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடம்பு தனக்குத் தேவையான இரும்புச் சத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும். தவிர, iron tablet எடுக்கும்போது ஒரு நாளைக்கு 60 மில்லி கிராம் எடுத்தாலே போதும். சில விளம்பரங்களில் ஒரு மில்லி கிராம் எடுக்கலாம் என்பது போல் காட்டுவதைப் பார்க்கிறேன். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், ஒரு நாளைக்கு நம் உடம்பு 60 மில்லி கிராம் இரும்புச் சத்தைத்தான் ஏற்றுக் கொள்ளும். மிச்சத்தைச் சிறுநீர், மலம் வழியாக வெளித் தள்ளி விடும். வருடத்துக்கு இரண்டு தடவை உங்கள் ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று முடித்தார் டாக்டர் வாணி.

  ]]>
  hemoglobin, blood test, ரத்தசோகை, உடல் பரிசோதனை https://www.dinamani.com/health/health-news/2019/mar/15/hemoglobin-count-3114411.html
  3114395 மருத்துவம் செய்திகள் இந்தக் கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி! சென்னையில் பிரம்மாண்ட 3 in 1 கண்காட்சி! அனுமதி இலவசம்! DIN DIN Friday, March 15, 2019 01:33 PM +0530  

  தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமம் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இணைந்து வழங்கும் ‘தி க்ராண்ட் 3.0’ 3 in 1 கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

  தேதி - 22, 23 & 24  மார்ச் 2019
  இடம் - விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டர், YMCA, ராயப்பேட்டை, சென்னை

  ப்ராபர்டி எக்ஸ்போ (Property Expo)

  எளிய தவணையில் DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.

  சென்னையின் முக்கிய இடங்களில் சலுகை விலையில் அபார்ட்மெண்ட்கள் / தனி வீடுகள்

  குறைந்த வட்டியில் எளிதான EMI வசதிகள்

  முன்னணி வங்கிகளின் நிதியுதவி வசதி

  ஹெல்த் எக்ஸ்போ (Health Expo)

  இலவச மருத்துவ பரிசோதனை

  நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள்

  ஆயுர்வேதா & சித்தா, ஹோமியோபதி, அலோபதி மற்றும் அக்குபஞ்சர் பரிசோதனை மையங்கள்

  ஹோம் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போ (Home Products Expo)

  வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் சாதனங்கள், சமையலறை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் மெகா சலுகை விலையில் கிடைக்கும்.

  ]]>
  sales, expo, the grand 3.0., the new indian express, எக்ஸ்போ, கண்காட்சி https://www.dinamani.com/health/health-news/2019/mar/15/the-grand-expo-by-the-new-indian-express-group-3114395.html
  3114384 மருத்துவம் செய்திகள் இளம் வயதில் போதை! பின்னாளில்? அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை! சினேகா Friday, March 15, 2019 12:33 PM +0530  

  பருவ வயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் வாழ்க்கையில் பிற்பாதியில் அப்பழக்கம் அவர்களின் மனநிலையில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்கிறது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவில் (வாஷிங்டன் டி.சி.) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘பயோலாஜிகல் சைக்யாட்ரி’('Biological Psychiatry') என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

  இளம் வயதில் தொடங்கப்படும் அதிகப்படியான குடிப்பழக்கம் இளம் வயதினரின் மூளைத் திறனை பாதிப்பதுடன் நடுத்திர வயதில் அவர்களுக்கு அதிக கவலை, பதற்றம் மற்றும் கடுமையான உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும் என்று கூறுகிறது.

  குடிப்பழக்கத்தை பின்னர் சிலர் விட்டொழித்தாலும், அதன் பாதிப்புக்கள் நிச்சயமாகத் தொடரும், குறிப்பாக நடுத்தர வயதில் நரம்பியல் மற்றும் முதுகெலும்பு பிரச்னைகளை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

  இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது. அதில், ‘இளம் வயதில் ஏற்படும் குடிப்பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கும், குறிப்பாக உணர்ச்சிக் கட்டுப்பாடு இல்லாமை மற்றும் பதற்றம் அதிகரித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் அவை எந்த எந்த வழிகளில் என்பதை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தெளிவாக இருப்பது என்னவெனில், எபிஜெனடிக் மாற்றங்கள் நீடித்திருக்கின்றன, வாழ்க்கையில் இளம் வயதில் குடிப்பழக்கம் ஏற்பட்டு பிற்பாடு அப்பழக்கத்தை நிறுத்திவிட்டால் கூட, அவர்களுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கிறது’ என்று இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் சுபாஷ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, அல்லது மரபணுக்களின் செயல்பாட்டை மாற்றும் குரோமோசோம்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட புரதங்கள் ஜீன்களில் செயல்பாடுகளில் மாற்றம் விளையும், ஆனால் ஜீன்களில் மாற்றம் இருக்காது. இத்தகைய ரசாயன மாற்றங்களைத்தான் எபிஜெனிடினிக்ஸ் குறிக்கிறது. மூளையின் இயல்பான வளர்ச்சிக்கு எபிஜெனிடிக் மாற்றங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அவை ஆல்கஹால் மற்றும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் அல்லது சமூக காரணிகள் உள்ளிட்ட பல விஷயங்களால் மாறுபாடு அடையலாம்.  இந்த வகையான எபிஜெனிடிக் மாற்றங்களால் நோய் மற்றும் நடத்தை கோளாறுகள் ஏற்படும். 

  இதனை நிறுவ, பருவ வயது எலிகளை வைத்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். எத்தனால் (ஒரு வகை மது) எனும் ரசாயனத்தை பயன்படுத்தி முதல் வகை எலிகளுக்கு சலைன் மூலம் அதனை செலுத்தினர், இரண்டாம் வகை எலிகளுக்கு அதைச் செலுத்தாமலும் விடுத்து 14 நாட்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த இளம் எலிகள் அதீதமாக மது அருந்திய நிலைக்குட்பட்டது போன்று ரசாயனத்தால் போதைக்குட்பட்டன. அதன் பின் வந்த காலங்களில் அவற்றுக்கு எத்தனால் செலுத்தப்படவில்லை ஆனால் அவை முதிர்ச்சியடையும் காலம் வரையிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருத்தப்பட்டன. முதல் வகை எலிகளின் வாழ்க்கையின் பிற்பகுதியில் பலவீனமாகத் தென்பட்டன. எத்தனால் பழக்கம் முற்பகுதியில் இளம் பருவத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த எலிகளுக்கு நரம்பியல் மாற்றங்கள் காணப்பட்டன. ஆனால் இரண்டாம் வகை எலிகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. அவை நார்மலாக இருந்தன. இத்தகைய நரம்பியல் மாற்றங்கள் தான் மனிதர்களில் உளவியல் சிக்கல்களுக்கு காரணியாக அமைகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இந்த ஆய்வு முடிவு கூறுவது இளம் வயதில் குடிப்பழக்கத்துக்கு உள்ளாவதால் வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது, அதீதமான கோபம் கொள்வது, பதற்றம் அடைவது, மன அழுத்தத்துக்கு உள்ளாவது போன்ற பிரச்னைகளுக்கு ஏற்படும் என்கிறது.

  ]]>
  drink, boose, alchohol, drink habits, sarakku, சரக்கு, சாராயம், மது, குடிப்பழக்கம், போதை https://www.dinamani.com/health/health-news/2019/mar/15/alchohol-habits-in-early-life-leads-to-probelms-in-later-stage-of-life-3114384.html
  3113727 மருத்துவம் செய்திகள் ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் காபி இது! கோவை பாலா DIN Thursday, March 14, 2019 11:32 AM +0530  
  தேத்தான் கொட்டை காபி
   
  தேவையான பொருட்கள்

  தேத்தான் கொட்டை - 100 கிராம்
  தான்றிக்காய் - 100 கிராம்
  ஏலக்காய் - 100 கிராம்

  செய்முறை : மேற்கூறிய பொருட்களை தனித்தனியாக வறுத்து அதனை தூள் செய்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு பொடியை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடிக்கவும்.

  பயன்கள் : இந்த காபியை தினமும் குடித்து வந்தால் உடல் உறுதி பெறும் மற்றும் உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  blood, platelet, food, cafe, காபி, ரத்தம், தேத்தான் கொட்டை காபி https://www.dinamani.com/health/health-news/2019/mar/14/ரத்தம்-அதிகம்-உற்பத்தியாக-உதவும்-காபி-இது-3113727.html
  3113215 மருத்துவம் செய்திகள் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க குழு: சுகாதாரத் துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு DIN DIN Thursday, March 14, 2019 02:52 AM +0530
  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில்  கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவரான சிலம்பன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை கவனிக்க வேண்டியிருப்பதால் பணியிலிருந்து ராஜிநாமா செய்வதாக கூறி மருத்துவமனை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அந்தக்
  கடிதத்துக்கு மருத்துவமனைத் தலைவர் முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மருத்துவர் சிலம்பன் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணிக்கு வரவில்லை. 
  இதனையடுத்து, அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி, மருத்துவர் சிலம்பனுக்கு, மருத்துவமனைத் தலைவர்  அறிவிப்புக்கடிதம் அனுப்பினார். 
  இந் நிலையில், தனது ராஜிநாமா கடிதத்தை ஏற்று பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி, மருத்துவர் சிலம்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
   இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களின் வரிப்பணத்தில், அரசு கல்லூரிகளில் படித்து சிறப்பான அனுபவத்தைப் பெற்ற அரசு மருத்துவர்கள், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். 
  வணிகமயமாகிவிட்ட மருத்துவ துறையைச் சேர்ந்த பல மருத்துவர்கள் அரசு செலவில் படிப்பது மற்றும் நிபுணத்துவத்தைப் பெற்றுவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதும், வெளிநாடுகளுக்குச் செல்வதும் அதிகரித்து வருவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். 
  மேலும், அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அனுமதியின்றி விடுமுறையில் செல்கின்றனர். எனவே, அரசு மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட  செயல்பாடுகளைக் கண்காணிக்க, கண்காணிப்புக்குழுவை சுகாதாரத்துறை  அமைக்க  வேண்டும். மேலும், அரசு செலவில் தரமான கல்வி, நிபுணத்துவத்தைப் பெற்றுவிட்டு, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் 
  மருத்துவர்களிடம் இருந்து, இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.  
  இந்த விவகாரத்தில் , மருத்துவர் சிலம்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்.

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/14/மருத்துவர்களின்-வருகையைக்-கண்காணிக்க-குழு-சுகாதாரத்-துறைக்கு--நீதிமன்றம்-உத்தரவு-3113215.html
  3113214 மருத்துவம் செய்திகள் சிறுநீரக செயலிழப்புக்கு உடல் பருமன் முக்கிய காரணம்: அரசு சிறுநீரகவியல் மருத்துவர் தகவல் Thursday, March 14, 2019 02:52 AM +0530 உடல் பருமன் காரணமாகவே சிறுநீரக  செயலிழப்பு பாதிப்பு எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் துறை  தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை முதுநிலை ஆலோசகர் டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது:
  சர்வதேச சிறுநீரக தினம் வியாழக்கிழமை (மார்ச் 14) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 85 கோடி பேருக்கும் அதிகமானோர் சிறுநீரகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னைகள் காரணமாக ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 10 லட்சம் பேரில் 800 பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிறுநீரக பாதிப்புக்கு முக்கியமான காரணிகளாக கூறப்படுபவை சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்த பிரச்னையும்தான். இந்தியாவில் அவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
  ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இல்லை என்றாலோ அல்லது ரத்த அழுத்தம் சீராக இல்லை என்றாலோ அதன் தாக்கம் சிறுநீரகத்தில்தான் எதிரொலிக்கும். அதுமட்டுமன்றி, சாதாரண உடல் உபாதைகளுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணி மருந்துகளும், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை குறைக்கும். இதுகுறித்து, உரிய விழிப்புணர்வு இல்லாவிடில் ஆரம்ப நிலையில் சிறுநீரக பிரச்னைகளை கண்டறிய முடியாது. அதேநேரத்தில், நாள்பட்ட பிறகு, அவற்றைக் கண்டறிந்து சிகிச்சையளித்தால் பூரண குணமடைய முடியாது. இதன் காரணமாகவே, இந்தியாவில் சிறுநீரக பிரச்னைகளை எதிர்கொள்ளும் நோயாளிகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க,   இந்தியாவில் சிறுநீரக சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ நிபுணர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதும் உண்மை. சிறுநீரக பாதிப்புகளில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தற்காலிமானது;                      மற்றொன்று நாள்பட்ட பாதிப்பு.  நீர்ச்சத்து குறைவு, நோய்த் தொற்று போன்ற பிரச்னைகளால் தற்காலிகமாக சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் 90 சதவீதம் குணம்பெற வாய்ப்புண்டு.ஆனால், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள் அப்படி அல்ல. அதனால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கிவிடக் கூடிய வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வலி நிவாரணி மாத்திரைகளின் எதிர் விளைவுகள் ஆகியவை அதற்கு முக்கியக் காரணம்.
  சமீபகால ஆய்வின்படி, உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை பல்வேறு தருணங்களில், நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். அதைப் போல, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்த புரிதல்கள் மக்களிடையே வேண்டும் என்றார் அவர்.
  சிறுநீரகத்தை காக்க சில வழிகள்: சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுதல் அவசியம். 
  துரித உணவுகள் கூடாது.உணவில் உப்பின் அளவை குறைப்பது முக்கியம் நடைபயிற்சியும், யோகாவும் சிறுநீரகத்தை காக்கும்.புகை, மது பழக்கம் கூடாது. சிறுநீரை அடக்கக் கூடாது. 
  வலி நிவாரண மருந்துகளை தவிர்க்க வேண்டும் உயரத்துக்கேற்ற உடல் எடை முக்கியம்.

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/14/சிறுநீரக-செயலிழப்புக்கு-உடல்-பருமன்-முக்கிய-காரணம்-அரசு-சிறுநீரகவியல்-மருத்துவர்-தகவல்-3113214.html
  3113092 மருத்துவம் செய்திகள் ஆஸ்துமா பிரச்னையா? குணமாக்கும் கஷாயம் இது! கோவை பாலா DIN Wednesday, March 13, 2019 05:46 PM +0530 துளசி மல்லி கஷாயம்

  தேவையான பொருட்கள்

  பச்சைத் துளசி - 100 கிராம் 
  சுக்கு - 20 கிராம் 
  மிளகு - அரை ஸ்பூன்
  ஏலக்காய் - 5 
  தனியா (மல்லி விதை) - 20 கிராம் 
  பனை வெல்லம் - தேவையான அளவு

  செய்முறை : முதலில்  துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்த வேண்டும்.

  பயன்கள் : இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு ஆஸ்துமா மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  thulasi, thania, dry ginger, சுக்கு, ஏலக்காய், மல்லி https://www.dinamani.com/health/health-news/2019/mar/13/ஆஸ்துமா-பிரச்னையா-குணமாக்கும்-கஷாயம்-இது-3113092.html
  3112602 மருத்துவம் செய்திகள் முழங்கை - தோள்பட்டை அறுவைச் சிகிச்சை: பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டி கையேடு வெளியீடு Wednesday, March 13, 2019 04:37 AM +0530
  முழங்கை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சைகள் குறித்த பிரிட்டனின் மருத்துவ வழிகாட்டி கையேடு சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
  முழங்கை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சைக்கான இந்திய சங்கமும், பிரிட்டன் சங்கமும் இணைந்து நடத்தும் இரு நாள் மருத்துவ மாநாடு, சென்னை மியாட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
  முதல் நாளில், பல்வேறு தலைப்பிலான அமர்வுகள், குழு விவாதங்கள், ஆய்வு உரைகள்  நடைபெற்றன. முன்னதாக, பிரிட்டனில் கடைப்பிடிக்கப்படும் அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய வழிகாட்டி கையேட்டை  பிரிட்டன் துணைத் தூதர் ஜெரிமி பில்மோர் - பெட்ஃபோர்டு வெளியிட்டு பேசுகையில், இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக இரு நாட்டு நல்லுறவும் மேம்படும் என்றார்.
  இது குறித்து, இந்திய முழங்கை - தோள்பட்டை  சிகிச்சை சங்கத்தின் தலைவரும், மியாட் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராம் சிதம்பரம் கூறியதாவது:
  உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியே சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன என்ற விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது. அதேவேளையில், முழங்கை மற்றும் தோள்பட்டை பிரச்னைகளைப் பொருத்தவரை அவற்றுக்கு பொதுவான முடநீக்கியல் மருத்துவம் மட்டுமே உள்ளதாகக் கருதுவது தவறு. முழங்கை மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கென இந்தியா முழுவதும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சங்கம் இயங்கி வருகிறது. புதிய தொழில்நுட்பத்திலான பரிசோதனைகள், ஆராய்ச்சி மருத்துவம், நவீன அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை அச்சங்கத்தின் கீழ் உள்ள மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி, பிரிட்டனில் உள்ள முழங்கை - தோள்பட்டை  நிபுணர்களுடன் இணைந்து இந்திய மருத்துவர்கள் பல்வேறு அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
  அதன் ஒருபகுதியாகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது .மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு அதுதொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் அந்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது என்றார் அவர். இதில் உள்நாடு மற்றும் பன்னாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/13/முழங்கை---தோள்பட்டை-அறுவைச்-சிகிச்சை-பிரிட்டனின்-மருத்துவ-வழிகாட்டி-கையேடு-வெளியீடு-3112602.html
  3112383 மருத்துவம் செய்திகள் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவுகிறது இந்த ரசம்! கோவை பாலா Tuesday, March 12, 2019 10:52 AM +0530  

  பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பையை குறைக்க உதவுகிறது கொள்ளு ரசம். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்:
   
  கொள்ளு - 100 கிராம் 
  மிளகு - 10 கிராம் 
  பூண்டு - 10 பல் 
  சீரகம் - அரை ஸ்பூன் 
  இஞ்சி - 10 கிராம் 
  மல்லி இலை - ஒரு கைப்பிடி 
  உப்பு, மஞ்சள் - தேவையான அளவு 
  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை : முதலில் கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள  திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும்.

  பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம். இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம். 

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  pregnancy, rasam, body slim, tummy, தொப்பை, உடல் எடை, பிரசவம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/12/body-slim-3112383.html
  3111751 மருத்துவம் செய்திகள் தாங்க முடியாத அளவுக்கு இடுப்பு வலியா? இதோ தீர்வு! Monday, March 11, 2019 11:03 AM +0530
  எனது மனைவிக்கு 63 வயதாகிறது. கடந்த மாதம் பொங்கலன்று தரையில் குனிந்து கோலம் போட்டு நிமிரும் போது இடுப்பு பிடித்துக் கொண்டு சரியான வலி எடுத்துள்ளது. அதற்குப் பின் கடந்த நான்கு வாரங்களாக உடலின் இடது பகுதியில் இடுப்பில் இருந்து கால் பாதம் வரை வலி அதிகமாக உள்ளது. சில அடிகள்தான் நடக்க முடிகிறது. சில நொடிகள்தான் நிற்க முடிகிறது. பின் வலி அதிகமாகிவிடுகிறது. பின்பு கண்டிப்பாக உட்கார அல்லது படுக்க வேண்டியுள்ளது. நாற்காலியில் உட்கார்ந்த பிறகு வலி சிறிது குறைகிறது. ஆனாலும் தொடந்து ஒரு மணிக்கு மேல் உட்காருவது மிகவும் சிரமமாயுள்ளது. பல மணி நேரம் படுத்து இருக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் வலி குறைகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன?

  -ரவி, சென்னை.

  இடுப்பிலுள்ள முதுகுத் தண்டுவட எலும்புகளை தாங்கி நிற்கக் கூடிய வில்லைகளின் பிதுக்கல், உயரம் குறைதல், அவற்றினுள்ளே உள்ள நீர்ப்பசை வற்றுதல், அவற்றைச் சுற்றியுள்ள நரம்பு மண்டலங்களில் அவை ஏற்படுத்தும் அழுத்தம், தண்டுவட உட்புற விட்டம் குறைதல், தண்டுவட எலும்புகளின் ஏற்படும் உராய்வு, அப்பகுதிகளிலுள்ள தசைகள் காய்தல் போன்ற சில காரணங்களால் கால்களின் பின்புற வழியாகச் செல்லும் நரம்புகள் பாதிப்படைந்து கடும் வலியை ஏற்படுத்தக் கூடும். இது போன்ற பாதிப்பிலுள்ள நபரால், கீழே மல்லாந்து படுக்க வைத்து, கால்களை தூக்கச் சொன்னால் வலியை பின் தொடை வழியாக உணர்ந்து, கால்களை முழுவதுமாகத் தூக்க முடியாமல் வேதனைப்படுவார்.

  இடுப்பிற்குப் போதுமான அளவு ஓய்வு தராமல் குனிந்து அதிக வேலை செய்தல், தரையில் அமர்ந்து முன்பக்கமாகக் குனிந்து காய்கறி நறுக்குதல், செய்தித்தாள் வாசித்தல், கோலம் போடுதல், கட்டில், மேஜை போன்றவற்றை இழுத்தல், இருக்கையில் அமர்ந்து கால்களை நீட்டி, மேஜையின் மேல் போட்டு அமர்தல், ஒரு கால் மீது மறு காலை போட்டு அமர்தல், குளிர்ந்த நீரில் நின்று கொண்டே துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், ஏஸி அறையில் படுத்துறங்குதல், படுத்தால் நன்கு அமிழ்ந்திடும் படுக்கையில் படுத்தல், உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு உப்புச்சுவையைக் குறைவாகவும் எடுத்துக் கொள்ளுதல், சிறுதானிய வகை பருப்புகளை விரும்பிச் சாப்பிடுதல் போன்ற சில காரணங்களால் இந்த உபாதை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

  இடுப்பின் கீழ்ப் பகுதியிலுள்ள எலும்பு, வில்லை, தசை நார்கள், நரம்புகளிலுள்ள நீர்க்கட்டு ஏதேனும் இருப்பின், ஓய்வு எடுத்து எழும் போது வலி கூடுதலாகத் தெரியும். அது போன்ற நிலையில் அந்த நீர்க்கட்டு வற்றிப் போகும்அளவுக்கு, மூலிகைப் பொடிகளால் வெது வெதுப்பாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். பொடியை பந்து போல் ஒரு துணியில் கட்டி, தவாவில் சூடாக்கி ஒத்தடம் கொடுத்தல் நலம். இதைக் காலை உணவிற்கு முன், சுமார் ணீ அல்லது தீ மணி நேரம் செய்து கொள்ளலாம். மாலையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன் மூலிகைத் தைலங்கள் சிலவற்றை நீராவியில் சூடாக்கி துணியால் முக்கி, இடுப்பில் ஊற வைக்க வேண்டும். எண்ணெய்ச் சிகிச்சை செய்து கொள்ளும் போது, ஏஸி மின்விசிறி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சுமார் இரண்டு வாரங்கள் இதைத் தொடர்ந்து செய்து வர, வலியானது குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  இடுப்பில் வலி உள்ள இடத்தை MRI SCAN செய்து பார்த்தால் பிரச்னை என்ன என்பது மிகத் தெளிவாகத் தெரியும். "கடிவஸ்தி" எனும் சிகிச்சை முறை நன்கு பயனளிக்கக் கூடியது. வலி உள்ள இடுப்பைச் சுற்றி, உளுந்து மாவினால் வரம்பு கட்டி, அதனுள் மூலிகைத் தைலங்களைக் கலந்து வெது வெதுப்பாக, இடுப்புப் பகுதியில் ஊற்றி, சுமார் 25 - 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு, எண்ணெய் மற்றும் வரம்பை அகற்றி, மூலிகை வேர்களால் சூடாக்கப்பட்ட தண்ணீரை, இடுப்புப் பகுதியில் நீராவிக் குளியல் பண்ணுவது, இடுப்பை மட்டும் வலுப்படுத்தும் விஷயமல்ல, ஒரு சிறந்த வலி நிவாரணியுமாகலாம். ஆஸன வாய் வழியாக குடலை வலுப்படுத்தும் எண்ணெய் வஸ்தியும், குடல் காற்றை வெளியேற்றும் கஷாய வஸ்தியும், நல்ல சிகிச்சை முறைகளாகும்.

  ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய சஹசராதி, மஹாராஸ்னாதி, சப்தசாரம், குக்குலுதிக்தகம், போன்றவை, மஹாயோகராஜ குக்குலு, கந்ததைலம், பலாதைலம் போன்ற மருந்துகளுடன் மருத்துவருடைய நேரடி ஆலோசனையின்படி சாப்பிடக் கூடிய தரமான மருந்துகள். குடல் வாயுவை அகற்ற கூடிய விளக்கெண்ணெய் மருந்துகள் சூடான பாலுடன் கலந்து சாப்பிட, வாயுவை நன்கு வெளியேற்றி இடுப்பு வலியையும் நன்கு குறைக்கக் கூடியவை.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771

  ]]>
  hip pain, pain, இடுப்பு வலி, ஆயுர்வேதம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/11/தாங்க-முடியாத-அளவுக்கு-இடுப்பு-வலியா-இதோ-தீர்வு-3111751.html
  3111746 மருத்துவம் செய்திகள் உங்கள் முக அழகைக் கெடுக்கும் அளவுக்கு பருக்கள் தொல்லையா? இதோ தீர்வு! DIN DIN Monday, March 11, 2019 10:38 AM +0530 என் மகளின் வயது 17. பிளஸ்- 2 படிக்கிறாள். கடந்த மூன்று வருடங்களாக பருக்கள் தொந்தரவு உள்ளது. தோல் சுருங்கிவிட்டது. வறண்டும் விட்டது. பருவில் சீழ்பிடித்து அமுங்கி புண்ணாக உள்ளது. பருக்கள் உள்ள இடம் சிவப்பாக உள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

    -ந. குருபரன், ஆசிரியர்,   போடி நாயக்கனூர்.

  மனிதர்களுடைய ரத்தம் இனிப்புச் சுவையுடையதாகவும், சிறிது உப்புச் சுவையுடன் கூடியதாகவும், சிறிது குளிர்ச்சியும் சிறிது சூடும் கொண்ட தன்மையுடையதாகவும், கட்டி போல இறுக்கமில்லாமல் நீர்த்ததாகவும், செந்தாமரை, தங்கம், செம்மறியாடு மற்றும் முயலினுடைய ரத்தத்தைப் போல சிவந்த நிறமாகவும் இருந்தால், அதை சுத்தமான ரத்தமாகக் குறிப்பிடலாம்' என்று வாக்படர் எனும் முனிவர் கூறுகிறார்.

  இது போன்ற சுத்தமான ரத்தம்,  பித்தத்தையும் கபத்தையும் அதிகரிக்கக் கூடிய உணவுகளாலும் செயல்களாலும் கெட்டுவிடுவதாக அவர் மேலும் கூறுகிறார். ரத்தம் கெட்டுவிட்டால், விஸர்ப்பம் (ஸ்ரீங்ப்ப்ன்ப்ண்ற்ண்ள்), சீழ்க்கட்டிகள், மண்ணீரல் வீக்கம், குல்மம் எனும் வாயுபந்து போல உருண்டு வயிற்றினுள் தங்கி அசைவுடனோ, அசைவில்லாமலோ இருத்தல், பசியின்மை, காய்ச்சல், வாய், கண், தலை சார்ந்த உபாதைகளைத் தோற்றுவித்தல், மதம்பிடித்தல், தண்ணீர் தாகம், வாயில் உப்புச் சுவையை உணர்தல், தோல் உபாதைகள், ரத்தவாதம், ரத்தபித்தம், எரிச்சலுடன் கூடிய திகட்டல், புளிப்பு திகட்டல், தலைசுற்றல் போன்ற உபாதைகளை தோற்றுவிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

  பகலில் படுத்துறங்குதல், உடல் உழைப்பில்லாத சோம்பலான வாழ்க்கை முறை, சோம்பேறித்தனம், இனிப்பும், புளிப்பும், உப்புச் சுவையும் தூக்கலாக உள்ள  பேல்பூரி, பானிப்பூரி, சமோசா வகையறாக்கள், குளிர்ந்த, நெய் அதிகம் சேர்ந்த தின்பண்டங்கள், செரிப்பதில் கடினமானவை, வழுவழுப்பு அதிகமுடைய வெண்ணெய், வனஸ்பதி, எண்ணெய் கலந்த பொருட்கள், குடல் பகுதியில் கொசகொசப்பை அதிகரிக்கக் கூடிய பன் பட்டர், ஜாம், சீஸ், ஜிகர்தண்டா, கேக், ரொட்டிகள், உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசிமாவில் வெல்லம் கலந்த பணியாரம், தயிர், பால், பச்சைப்பயறுடன் வேக வைக்கப்பட்ட அரிசி பாயசம், கரும்புச்சாறு, நீர்ப்பாங்கான பிரதேசங்களைச் சார்ந்த மிருகங்களின் கொழுப்பு ஆகியவற்றின் அதிக சேர்க்கையால், உடலில் கபம் எனும் தோஷத்தின் வளர்ச்சியானது கூடுகிறது.

  அடிக்கடி கோபப்படுதல், வருத்தப்படுதல், பயப்படுதல், உடலின்  சக்திக்கு மீறிய வேலை செய்தல், பட்டினியிருத்தல், செரிமானத்தின் போது வயிற்றில் எரிச்சலைக் கிளப்பக் கூடிய வற்றல் குழம்பு, காரக்குழம்பு, ஊறுகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், காரம், புளி, உப்புச் சுவையில் அதிக நாட்டம், துளைத்து செல்லக் கூடியதும், சூடானதும், எளிதில் செரிப்பதுமாகிய நல்லெண்ணெய், கொள்ளு, கடுகு, மீன், ஆடு, தயிர், மோர், தயிர்தெளிவு, பழைய கஞ்சி, புளிப்பான பழங்கள் ஆகியவற்றால் பித்த தோஷம் சீற்றமடைகிறது.

  நெருப்பினருகில் சென்று அதிகம் வேலை செய்தல், வெயிலில் செல்ல வேண்டிய நிர்பந்தம், செரிமானக் கோளாறு, ஒவ்வாமை உணவு ஆகியவற்றால் ரத்தம் கெட்டுவிடக் கூடும்' என்று ஸுஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

  மேற்கூறிய காரணங்களால், கப - பித்த - ரத்தங்களின் கேடானது ஏற்பட்டு, முகத்தில் பருக்களைத் தோற்றுவிக்கிறது. காரணமில்லாமல் காரியமில்லை என்ற கூற்றிற்கு ஏற்ப, உங்களுடைய மகள் மேற்கூறிய காரணங்களில் எதை அதிகம் பயன்படுத்துகிறாரோ, அவற்றைத் தவிர்க்க பழகிக் கொள்ள வேண்டும். தவிர்க்கப் படாமல் அவை தொடர்ந்தால் முகத்தின் மென்மையையும் உருண்டு மேடுபள்ளமில்லாமல் வசீகரத்தையும் அளிக்க உதவும் கொழுப்பு கோளங்களில் அழற்சி ஏற்பட்டு சிறிய சினப்புகளை ஏற்படுத்தும். லேசாகத் தினவு ஏற்படும். இந்தத் தினவை சொறிந்தாலோ, நகங்களாலும் விரல் நுனிகளாலும், நிரடினாலோ, முகம் விகாரமடைந்து விடும், பருக்களிலுள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் வடுவாகி நிலைத்துவிடும். அதை நிரடாமல் விட்டுவிட்டால், தானே அந்தக் கொழுப்பு சமநிலையேற்றுச் சரியாகிவிடும்.

  கப - பித்த - ரத்தங்களின் கெடுதிகளை அகற்றக் கூடிய படோலகடுரோஹிண்யாதி, ஆரக்வதாதி, குடூச்யாதி, திக்தகம், மஹாதிக்தகம் போன்ற கஷாயங்களில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் சாப்பிடலாம். உடற்காங்கை தணிய மாதம் ஒரு முறையாவது லேசான பேதிக்குச் சாப்பிடுவது நல்லது. உலர்திராட்சை, பிஞ்சுக்கடுக்காய், கறிவேப்பிலை இம் மூன்றும் சேர்த்துக் காய்ச்சிய கஷாயம் பேதிக்குச் சாப்பிட நல்ல மருந்தாகும்.

  விபூதிப் பச்சிலை, ஸப்ஜா, திருநீற்றுப் பச்சிலை இப்பெயர்களில் ஒரு செடி தோட்டமுள்ள வீடுகளில் வளரும். இதன் கதிர் நல்ல மணம் தரும். இதன் இலையையோ கதிரையோ நன்கு கசக்கிச் சாற்றைப் பருக்களின் மேல் அடிக்கடி தடவி வர,  பருவின் வேதனைகள் அகலும். சந்தனக் கட்டையை கல்லில் தேய்த்து சூடு ஆறுவதற்கு முன்னரே பருக்களின் மீது தடவி வர, பருக்கள் வாடிவிடும். அதன் பிறகு, குங்குமாதி லேபம், சந்தனாதி தைலம், தூர்வாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை முகத்தில் தடவிவர, தேமல், மங்கு, கருமை, பரு போன்றவை மறைந்துவிடும். இது போன்ற தைலங்களால் முகச் சதையில் தேய்த்து, சதையைப் பிடித்து விடுவது மிகவும் நல்லது.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

  ]]>
  acne, pimple, facial, health, முகம், பருக்கள், பரு https://www.dinamani.com/health/health-news/2019/mar/11/உங்கள்-முக-அழகைக்-கெடுக்கும்-அளவுக்கு-பருக்கள்-தொல்லையா-இதோ-தீர்வு-3111746.html
  3111743 மருத்துவம் செய்திகள் சிறுநீரக செயலிழப்பை சீர் செய்ய சித்தர்கள் கண்டுபிடித்த வீட்டு வைத்தியம்! கோவை பாலா Monday, March 11, 2019 10:22 AM +0530  
  நெருஞ்சில் கஞ்சி 
   
  தேவையான பொருட்கள்

   
  நொய்யரிசி - 100 கிராம் 
  சிறுநெருஞ்சில் - 5 கிராம் 
  மிளகு - 5 கிராம் 
  பூண்டு - ஒரு பல் 
  சீரகம் - கால் ஸ்பூன் 
  மஞ்சள் தூள் - 2 சிட்டிகை 

  செய்முறை : முதலில் அரிசியை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பின்பு சிறு நெருஞ்சில், மிளகு, பூண்டு, சீரகம் போன்றவற்றை நன்றாக மசித்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து சுத்தமான காட்டன் துணியில் முடிந்து நோய் அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் இரண்டு தம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சாதத்தை குழைய வைத்து பின்னர் நெருஞ்சில் முடிச்சு போட்ட துணியை எடுத்து விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும் .

  பலன்கள் : இந்த கஞ்சியை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் செயலிழந்த சிறுநீரகம் சீராக இயங்க உதவும். மேலும் சிறுநீரக கற்களையும் கரைக்கும். இது சித்தர்களின் அற்புதமான முறையாகும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு
  மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  kidney, kanji, treatment, kidney failure, கிட்னி, சிறுநீரகம், நோய், உடல்நலம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/11/சிறுநீரக-செயலிழப்பை-சீர்-செய்ய-சித்தர்கள்-கண்டுபிடித்த-வீட்டு-வைத்தியம்-3111743.html
  3109845 மருத்துவம் செய்திகள் ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்! கோவை பாலா DIN Friday, March 8, 2019 01:14 PM +0530  

  பாதாம் பிசின் பாயாசம்

  தேவையான பொருட்கள்

  பாதாம் பிசின் - 100 கிராம் 
  முந்திரிப் பருப்பு - 25 கிராம் 
  சாரப்பருப்பு - 25 கிராம் 
  பாதாம் பருப்பு - 25 கிராம் 
  சாலாமிசிரி - 25 கிராம் 
  ஏலக்காய் - 10 கிராம் 
  நாட்டுச் சர்க்கரை -  100 கிராம் 

  செய்முறை : முதலில் பாதாம் பிசினை சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவிலேயே ஊற வைக்கவும். பின்பு காலையில் பாதாம் பிசின் உள்ள நீரை கீழே ஊற்றி விட்டு பிசினில் சிறிது சுடுதண்ணீர் விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும்.

  மற்ற பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி தூள் செய்து கொண்டு பிசினுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  பயன்கள்

  • இந்த பாதாம் பிசின் பாயாசம் குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் சிறந்தது .
  • உடல் மெலிந்தவர்களுக்கு இந்த பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தேவையான உடல் எடையை பெறலாம் .
  • வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ள பெண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும் .
  • இது வெட்டைச்சூடு குணமாக்கும் அற்புதமான இயற்கை உணவு இந்த பாதாம் பிசின் பாயாசம்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  badam, body weight, weight gain, health, உடல் மெலிவு, ஒல்லி, உடல் தேற, உடல் எடை அதிகரிக்க https://www.dinamani.com/health/health-news/2019/mar/08/how-to-gain-weight-3109845.html
  3109843 மருத்துவம் செய்திகள் அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க! உமா ஷக்தி Friday, March 8, 2019 12:45 PM +0530 தமிழகத்தில் இந்த கோடை கால துவக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

  • அன்றாட தட்ப வெப்ப நிலை அதிகரித்து வருவதன் காரணமாக தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
  • எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிவது நல்லது.

  • வெயிலில் செல்லும் போது குடை மற்றும் காலணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • வெளியில் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். 
  • வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்குத் தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்தல் வேண்டும்.  
  • உப்புக்கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

  • இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட வேண்டும். நீர்ச் சத்துள்ள காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்
  • மின் விசிறி மற்றும் ஈரத் துணிகளைப் பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
  • பணிபுரியும் இடத்தின் அருகே போதிய அளவு குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
  • தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

  தவிர்க்க வேண்டியவைகள்

  • பொதுவாக வெயிலில் செல்வதையும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை செல்வதையும் தவிர்க்கவும்.
  • அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • டீ, காபி அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கும்.
  • மசாலா மற்றும்  காரம் அதிகமுள்ள உணவு வகைளைத் தவிர்க்க வேண்டும்.
  • புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 
  ]]>
  summer, summer tips, hot climate, hot, வெயில், கோடை, கோடை கால குறிப்புகள் https://www.dinamani.com/health/health-news/2019/mar/08/summer-tips-3109843.html
  3109123 மருத்துவம் செய்திகள் இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? இதோ ஒரு இயற்கை வழி! DIN DIN Thursday, March 7, 2019 12:12 PM +0530
 • மருதோன்றி, ஐனா இலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. 
  • மருதாணி இலை நல்ல கிருமி நாசினி; கை, கால்களில் தோன்றும் சேற்றுப்புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை மருதாணி சாந்து குணமாக்கும்.
  • மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்.

  • மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணையில் வைத்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.
  • மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

  • 6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாகும்.
  • மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்னைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.
  • மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

  • மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.
  • மருதாணி விதை எண்ணெய்யை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும்.
  • மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

  - கவிதாபாலாஜி கணேஷ்

  ]]>
  maruthani, multani, health, மருதாணி, முல்தானி, உடல்நலம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/07/how-to-sleep-well--in-the-night-3109123.html
  3109121 மருத்துவம் செய்திகள் எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும்! கால்நடை மருத்துவர் டாக்டர் ராணி மரியா தாமஸ் பேட்டி! Thursday, March 7, 2019 11:38 AM +0530 முன்பெல்லாம் ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் வீட்டில் பூனை, நாய், புறா, கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தனர். ஆனால், தற்போது வெளிநாட்டில் இருந்து தருவிக்கும் கவர்ச்சிகரமான மிருகங்கள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை "சாராஸ் எக்சாடிக்' என்ற பெயரில் பறவைகளின் சரணாலயமாக மாற்றி அமைத்துள்ளார் கால்நடை மருத்துவரான டாக்டர் ராணி மரியா தாமஸ். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

  "என்னோட சொந்த ஊர் ஆலப்புழா. நான் தற்போது கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வயநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறேன். கேரளாவைப் பொருத்தவரையில் ஒவ்வொரு வீடும் சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ தோட்டத்துடன் கூடிய இயற்கையுடன் ஒன்றி இருக்கும்.

  பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளும் வளர்ப்பார்கள். அந்த வகையில், என் அப்பாவுக்கும் செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பூனை, நாய், புறா, கிளி எல்லாம் வளர்த்து வந்தார். வீட்டிலுள்ள தோட்டத்தில் இவை எல்லாம் சுதந்திரமாகச் சுற்றி வரும். இதனால், எனது சிறுவயதில் பொழுதுபோக்கே அவற்றுடன்தான். இதனால் எனக்கும் செல்லப்பிராணிகள் மீது இயற்கையாகவே ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டது.

  கால்நடை மருத்துவம் படித்தால் அவற்றின் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதற்காகவே கால் நடை மருத்துவம் பயின்றேன். அதன் பிறகு, பறவைகள் குறித்த சிறப்பு பட்டப்படிப்பு படித்தேன். இதன் மூலம் ஒவ்வொரு பறவைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி ஆய்வும் செய்ய தொடங்கினேன்.

  இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சைக் கிளிகளை வீட்டில் வைத்து வளர்க்கத் தடை வந்தது. ஆனால், வெளிநாட்டு கிளிகள், மிருகங்களை வளர்க்கத் தடையில்லை. அதே சமயம், அவற்றை வீட்டில் வைத்து பராமரிக்க முறையான உரிமம் பெற வேண்டும்.

  இதனால், அப்பா வெளிநாட்டு கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஒரு ஜோடி அயல்நாட்டு கிளியான பிரிஞ்சர்ஸ் வகை கிளியை வாங்கினார். அது நாளடைவில் பெருகியது. இப்போது எங்களிடம் 100 வகையான கிளிகள், பிரேசில் குரங்குகள், இக்வானா, மீன்கள் மற்றும் நாய்களும் உள்ளன.

  பொதுவாக பச்சைக் கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பி சொல்லக் கூடியவை. அதுவே, அயல்நாட்டு கிளிகள் நாம் பேசுவதை கூர்ந்து கவனித்து உடனே துல்லியமாக திரும்ப சொல்லும். மக்காவ், அமேசான் மற்றும் கிரே கிளிகள் நன்றாகவே பேசக்கூடியவை. எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். வீட்டில் இருக்கும் மக்காவ் கிளியின் பெயர் காஃபி, நாயின் பெயர் ஜிஞ்சர்... இவற்றை இது பெயர் சொல்லித்தான் அழைக்கும். என்னை, அம்மாவை, அப்பாவைக்கூட பெயர் சொல்லித்தான் அழைக்கும். இசையைக் கேட்டால் நன்றாக நடனமாடும், சேட்டைகளுக்கும் பஞ்சமில்லை.

  பறவைகளுக்கு ஆங்கிலம், தமிழ், ஹிந்தின்னு மொழிகளை பிரித்துப் பார்த்து, வித்தியாசப்படத் தெரியாது. அவைகளுக்கு நாம் பேசுவது ஒரு வகையான சத்தம் மட்டுமே! அதனால் தான் நாம் எந்த மொழியில் பேசினாலும் அவை திரும்பி அப்படியே உச்சரிக்கிறது.

  பொதுவாக வெளிநாட்டு மிருகங்களையோ, பறவைகளையோ வாங்கிச் செல்வது பெரிய விஷயமல்ல, அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதன் குணாதிசயங்களைப் பற்றி நன்கு தெரிந்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சில பறவைகள் கோபம் வந்தால், கத்தி கூச்சலிடும். அந்த சமயத்தில் அதை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதுபோன்று நமது செல்லப்பிராணிகளின் நடத்தையில் சிறிது மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

  நான் விடுமுறையில் ஊருக்கு வரும் போது எல்லாம், அங்கு செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் அக்கம் பக்கத்து விவசாயிகளின் பலரது வீடு அல்லது தோட்டத்திற்கு சென்று அவற்றைப் பார்வையிடுவது வழக்கம். அவைகளுக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் சிகிச்சையும் அளிக்கிறேன்.

  சாராஸ் சரணாலயத்தை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ஒவ்வொரு கிளிகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அது தான் எங்களின் விருப்பமும் கூட'' என்றார்.
   - ஸ்ரீதேவி
   

  ]]>
  birds, parrot, கிளி, https://www.dinamani.com/health/health-news/2019/mar/07/birds-at-home-3109121.html
  3108431 மருத்துவம் செய்திகள் கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது! கோவை பாலா Wednesday, March 6, 2019 10:40 AM +0530 செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி 

  தேவையான பொருட்கள்

  நொய்யரிசி - 100 கிராம்
  சிறுபருப்பு - 100 கிராம்
  மிளகு -  10
  சீரகம் -  கால் ஸ்பூன்
  செம்பருத்திப் பூ - 10

  செய்முறை : தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத் தவிர (நொய்யரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம்) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பின், அதில் செம்பருத்திப் பூவின் இதழ்களை நீக்கி நன்றாக அலசி கஞ்சியுடன் சேர்த்து நன்றாக கிளறி குழைய வேக வைத்து இறக்கி வைக்கவும்.

  பயன்கள் : இந்தக் கஞ்சியை தினமும் ஒரு வேளை உணவாக  குடித்து வந்தால் கடுமையான இதய நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சூடு குறைபாட்டை நீக்கும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  heart problem, heart attack, ஹார்ட் அட்டாக், இதய நோய், kanchi, heart pain, இதயம் https://www.dinamani.com/health/health-news/2019/mar/06/best-food-for-heart-problems-3108431.html
  3107858 மருத்துவம் செய்திகள் பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம் கோவை பாலா Tuesday, March 5, 2019 11:08 AM +0530  
  கொள்ளு ரசம் 
   
  தேவையான பொருட்கள்
   
  கொள்ளு - 100 கிராம் 
  மிளகு - 10 கிராம் 
  பூண்டு- 10 பல் 
  சீரகம் - அரை ஸ்பூன் 
  இஞ்சி - 10 கிராம் 
  மல்லி இலை - ஒரு கைப்பிடி 
  உப்பு மஞ்சள் - தேவையான அளவு எண்ணெய் -  தேவையான அளவு

  செய்முறை : முதலில்  கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள  திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும்.

  பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம் .இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக  நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம்

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/05/பிரசவத்திற்குப்-பின்பு-உண்டாகும்-தொப்பை-குறைந்து-உடல்-இளமையாக-உதவும்-ரசம்-3107858.html
  3106112 மருத்துவம் செய்திகள் அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி! கோவை பாலா Saturday, March 2, 2019 10:57 AM +0530
   
  அன்னாசிப் பூ ரசம்

  தேவையான பொருட்கள்

  அன்னாசிப் பூ  - 50 கிராம்
  பூண்டு - 10 கிராம்
  இஞ்சி - 10 கிராம்
  கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
  மிளகு - 10 கிராம்
  சீரகம் - 10 கிராம்
  பெருங்காயம் - ஒரு துண்டு (2 கிராம்)
  மஞ்சள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
  தக்காளி  - 7

  செய்முறை : முதலில் தக்காளியை சின்னதாக அரிந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கரைசலாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அன்னாசிப் பூ, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித் தழை, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி கரைசலை அடுப்பிலேற்றி அதில் மஞ்சள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்க்கவும்.நன்கு சூடானதும் கொதிப்பதற்கு முன்பாகவே இறக்கி விடவும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  weight loss, body weight, BMI, உடல் கொழுப்பு, உடல் எடை குறைய https://www.dinamani.com/health/health-news/2019/mar/02/weight-reduction-ways-3106112.html
  3105583 மருத்துவம் செய்திகள் மனநலம் பாதித்தவரின் வயிற்றில் சிம் கார்டு, நாணயங்கள்: எண்டோஸ்கோபி மூலம் அகற்றம் Saturday, March 2, 2019 02:40 AM +0530
  மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்த சாவிகள்,  நாணயங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உலோகப் பொருள்களை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி முறை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த  ஜெயக்குமார் (52),  தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நலக் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
   அவரது மூளை செயல்பாடுகளை அறிவதற்காக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, ஜெயகுமாரின் உடலில் ஏதேனும் உலோகப் பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது  அவரது வயிற்றில் சில விநோதமான பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  ஜெயக்குமாரின் வயிற்றில் சாவிகள்,  நாணயங்கள், காந்தத் துண்டுகள்,  சிம் கார்டு உள்ளிட்ட 42 பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரைப்பை - குடலியல் துறைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன்,  டாக்டர் ராஜ்குமார் சாலமன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு எண்டோஸ்கோபி மூலமாக அந்தப் பொருள்களை வெளியே எடுக்கத் திட்டமிட்டனர்.
  சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக எண்டோஸ்கோபி முறையில் ஒவ்வொரு பொருளாக அவர்கள் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சையின்றி எந்த சேதமும் இல்லாமல் அந்தப் பொருள்களை வெளியே எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதனை அரசு மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.

   

  ]]>
  https://www.dinamani.com/health/health-news/2019/mar/02/மனநலம்-பாதித்தவரின்-வயிற்றில்-சிம்-கார்டு-நாணயங்கள்-எண்டோஸ்கோபி-மூலம்-அகற்றம்-3105583.html
  3105424 மருத்துவம் செய்திகள் புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் நீங்கி சீரான ஜீரணம் உண்டாக உதவும் நெய் கோவை பாலா Friday, March 1, 2019 11:21 AM +0530  
  ஓமம் நெய் 

  தேவையான பொருட்கள்

  நெய்   - அரை கிலோ 
  ஒமம்.  -  100 கிராம்
  மஞ்சள்  - அரை ஸ்பூன்

  செய்முறை : முதலில் வாணலியில் ஒரு கரண்டி நெய் விட்டு அவற்றில் ஒமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்பு நெய்யையும், ஒமத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். சிறு தீயில் நெய் நன்கு உருகிய பின் ஓமம் நெய்யின் மேல் மிதக்கும் சமயத்தில் இறக்கி விடவும். பின்பு அதனை வடிகட்டி வைத்துக் கொண்டு  சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக சேர்த்து வந்தால் குடற்பூச்சிகள், நாடாப் புழு உடலை விட்டு வெளியேறும். உடல் பலவீனம் மறையும். இந்த நெய்யை தோசைக்கு வார்த்துச் சாப்பிட்டு வந்தால் நன்கு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். புளிச்ச ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சல் உண்டாகாது.

  பவளமல்லி இலைசாறு ஒரு ஸ்பூன் அளவுக்கு  எடுத்து  இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் இதை  குடித்து வந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும். கீரி பூச்சிகள், நாடா புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  ghee https://www.dinamani.com/health/health-news/2019/mar/01/புளித்த-ஏப்பம்-நெஞ்செரிச்சல்-நீங்கி-சீரான-ஜீரணம்-உண்டாக-உதவும்-நெய்-3105424.html
  3104707 மருத்துவம் செய்திகள் எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்! DIN DIN Thursday, February 28, 2019 10:52 AM +0530 இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. இந்தியா சூரிய ஒளி அதிகம் கிடைக்கக் கூடிய வெப்ப மண்டல நாடு. சூரிய ஒளிக்கும் வைட்டமின் 'டி’க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப் பெரிய ஆதாரம். இதனால்தான் இதற்கு சன் ஷைன் வைட்டமின் என்று ஒரு பெயரும் உள்ளது.

  வைட்டமின் டி மட்டுமே தோலில் இருந்து உற்பத்தியாகும் ஒரே வைட்டமின். மற்ற வைட்டமின்கள் எல்லாம் பழங்கள், காய்கறிகள் மூலமே நமக்கு கிடைக்கின்றன. தோலில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மூளை, நரம்பு, தசை என உடலில் ஒவ்வொரு திசுவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

  இதனால் வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம். கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை வருவதற்கு காரணமாகிவிடுகிறது. 

  வைட்டமின் டி குறைபாட்டை எப்படி கண்டறிவது? எளிய ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைபாட்டை கண்டறிந்துவிடமுடியும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் முதல்கட்டமாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரையின் பேரில், வைட்டமின் டி சத்து மாத்திரையையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர்தான் நீங்கள் எவ்வளவு அளவு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறமுடியும். ஆறு மாதம் கழித்து வித்தியாசத்தை மீண்டும் ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதுதவிர, வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ள முட்டை, பால், மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் ஒரு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். 

  'வைட்டமின் டி'யின் நன்மைகள்

  எலும்பு, பல், முடிக்கு பாதுகாப்பையும், இயங்க வழுவழுப்பையும் (லூப்ரிகன்ட்) அளிக்கிறது

  திசுக்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. 

  எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதைத் தடுக்கிறது

  மெனோபாசுக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பபை குறைக்கிறது.

  - டாக்டர் விஸ்வநாதன், பிடி. கன்சல்டென்ட் தெரபிஸ்ட் (ஸ்போர்ட்ஸ் & மஸ்குலர் ஸ்கெலிடல்) பிசிசி பானல் பிஸியோ தெரபிஸ்ட்

  வைட்டமின் டி பற்றாகுறை பற்றி உணவுச் சத்து நிபுணர் திவ்யா புருஷோத்தமன் அண்மையில் தினமணி நிறுவனத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியதின் காணொளியின் ஒரு பகுதி இது 

  ]]>
  vitamin d, health, sun shine vitamin, வைட்டமின் டி, சூரிய ஒளி, உடல் நலம் https://www.dinamani.com/health/health-news/2019/feb/28/vitamin-d-is-essential-for-life-3104707.html
  3104659 மருத்துவம் செய்திகள் பல் மருத்துவரிடம் உதவியாளர் வேலை வாய்ப்பு பெற இதைப் படிங்க! Thursday, February 28, 2019 10:39 AM +0530 பல் மருத்துவத் துறையில் பல் மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, அத்துறையில் தொழில் நுட்ப உதவியாளராவதற்கான சில டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய படிப்புகளைப் படித்தால் பல் மருத்துவரிடம் உதவியாளர் வேலை வாய்ப்பு பெறலாம். டென்டல் மெக்கானிக், டென்டர் ஆபரேடிங் ரூம் அசிஸ்டன்ட் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 12-ஆம் வகுப்பிற்கு பிறகு அத்தகைய டிப்ளமோ படிக்கலாம். 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்திருப்பவர்கள் டிப்ளமோ படிக்கத் தகுதி பெற்றவர்கள்.

  மருத்துவ கல்வி இயக்ககத்தால் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் மாநில அளவிலான பொது கலந்தாய்வு மூலம் டிப்ளமோ படிப்பில் சேர தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களால் இந்த டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளைப் படித்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்புப் பெறலாம். வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெறலாம்.

  பல் மருத்துவக் கல்வியில் நடத்தப்படும் பாரா டென்டல் கோர்ஸ் (டிப்ளமோ படிப்புகள்) :

  1. Dental Hygienist
  2. Dental Mechanics
  3.Dental Operating Room Assistant
  மேலும் விவரங்களுக்கு :
  https://www.tnmgrmu.ac.in/index.php/courses/allied}health-sciences.html 
  - எம்.அருண்குமார்

  ]]>
  Dentist, dental, பற்கள் பாதுகாப்பு, பல் மருத்துவம் https://www.dinamani.com/health/health-news/2019/feb/28/பல்-மருத்துவரிடம்-உதவியாளர்-வேலை-வாய்ப்பு-பெற-இதைப்-படியுங்கள்-3104659.html
  3104656 மருத்துவம் செய்திகள் அடிக்கடி உடம்பு வலி ஏற்படுகிறதா? மூலநோய் பிரச்னையா? இதை படித்துவிடுங்கள்! கோவை பாலா DIN Thursday, February 28, 2019 10:32 AM +0530  

  கீரை :  பிரண்டைச் சத்து மாவு
   
  தேவையான பொருட்கள்

  நார் நீக்கி காயவைத்த பிரண்டைத் துண்டுகள்  -  அரை கிலோ
  கோதுமை   -  ஒரு கிலோ
  கறுப்பு எள்  -  100 கிராம்
  கறுப்பு உளுந்து  - 100 கிராம்

  செய்முறை : முதலில் பிரண்டை பச்சையாக இருக்கும் போதே ஒரு லிட்டர் புளிப்பு மோரில் இரண்டு நாட்கள் ஊறப் போட்டு பின்பு அதனை காய வைத்த எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் இளம் சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை தேவையான அளவு மாவு எடுத்து கஞ்சி அல்லது களி செய்து  ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் எரிச்சல், நமைச்சல் போன்றவை குணமாகும். 

  சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  body pain, moola noi, piles, பைல்ஸ், மூலநோய், உடல் வலி https://www.dinamani.com/health/health-news/2019/feb/28/அடிக்கடி-உடம்பு-வலி-ஏற்படுகிறதா-மூலநோய்-பிரச்னையா-இதை-படித்துவிடுங்கள்-3104656.html
  3103424 மருத்துவம் செய்திகள் இப்படி ஒரு மாத்திரையை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்க மாட்டீர்கள்! Tuesday, February 26, 2019 03:55 PM +0530 இன்றைய அறிவியல் உலகில் மாத்திரையை விழுங்காமல் வாழ்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உடலுக்கு சத்து அளிப்பது முதல் பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த மாத்திரைகளை விழுங்க விருப்பமில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் விழுங்கத்தான் செய்கிறோம்.

  மாத்திரைகள் வயிற்றுக்குள் கரைந்த காலம்போய், விரிந்து உடல் நிலையைக் கண்காணிக்கும் கருவியாக - ஸ்மார்ட் மாத்திரையாக' இப்போது மாறியுள்ளது. ஆம். அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த விரியும் ஸ்மார்ட் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர். விழுங்குவதற்கு முன் மாத்திரையாகவும், விழுங்கிய சில நொடிகளில் ஜெல்லி பந்தைப் போலவும் விரியும் இந்த மாத்திரையை பாலிமர் மற்றும் நீரை வைத்து உருவாக்கியுள்ளனர். சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மாத்திரை வயிற்றில் ஒரு மாதம் வரை இருந்து உடல் நிலையைத் துல்லியமாக கண்காணிக்கிறது. ஸ்மார்ட் மாத்திரையின் மூலம் வயிற்று புற்றுநோய், அல்சர், வயிற்றின் சூடு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஸ்மார்ட் மாத்திரையை வயிற்றில் இருந்து வெளியேற்ற கால்சியத்தை அருந்தினால் போதும், அது மீண்டும் பழைய அளவுக்கே சுருங்கி, உடலை விட்டு வெளியேறிவிடும்.

  இந்த ஸ்மார்ட் மாத்திரையை பல்வேறு திரவ உணவுப் பொருள்களில் வைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேஸ் நிரம்பிய குளிர்பானங்களில் இந்த ஸ்மார்ட் மாத்திரை மிக வேகமாக 15 நிமிடங்களில் 100 மடங்கு அதிகமாக விரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஸ்மார்ட் மாத்திரையை வயிற்றில் இருந்து வேகமாக வெளியேற்ற தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
   - அ.சர்ஃப்ராஸ்

  ]]>
  tablets, smart tablets, health, medical research, ஸ்மார்ட் மாத்திரை, மாத்திரை https://www.dinamani.com/health/health-news/2019/feb/26/smart-tablets-3103424.html
  3101587 மருத்துவம் செய்திகள் உங்கள் தலைமுடி நீளமாக வளரவும் உதவும் அருமருந்து இதுதான்! கோவை பாலா Saturday, February 23, 2019 12:42 PM +0530  

  கீரை :  கரிசலாங்கண்ணிக் கீரைத் துவையல் 

  தேவையான பொருட்கள் : கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு (200 கிராம்), மிளகு - 1 ஸ்பூன் எலுமிச்சை (பழச்சாறு தோலோடு) - 2, நெய் - 2 ஸ்பூன், உப்பு -  தேவையான அளவு

  செய்முறை : முதலில் கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டு  அதனுடன் நெய் விட்டு நன்றாக வதக்கவும்.

  மிளகை லேசாக வறுத்து அத்துடன் உப்பு, எலுமிச்சைச் பழச்சாறு கலந்து கீரையுடன் சேர்த்து நன்கு அரைத்து துவையலாக்கி தினமும் சாப்பாட்டில் நிறைய எடுத்து கொண்டால் ரத்தசோகை குணமாகும். முடியும் நீளமாக வளரும் அருமையான துவையல்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  ]]>
  iron, Hair growth, Green, தலைமுடி, keerai https://www.dinamani.com/health/health-news/2019/feb/23/உங்கள்-தலைமுடி-நீளமாக-வளரவும்-உதவும்-அருமருந்து-இதுதான்-3101587.html