Dinamani - ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3037335 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, November 8, 2018 12:00 AM +0530 தற்காலத்தில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், முக்கியமாகப் பெண்மணிகள் முழங்கால் மூட்டு தேய்வு காரணமாக மிகவும் துன்பப்படுவதைக் காண்கிறோம். இப்போதெல்லாம் KNEECAP REPLACEMENT SURGERY என்ற அறுவைச் சிகிச்சையும் சகஜமான நிவாரணம் ஆகியுள்ளது.

இயற்கையான முழங்கால் மூட்டிற்கு மாற்றாக உலோகத்திலான KNEECAP பொருத்தப்படுகிறது. மிகவும் அதிகச் செலவு வைக்கும் இத்தகைய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களும் திரும்பவும் திரும்பவும் அந்த செயற்கை KNEECAP- ஐ மாற்ற வேண்டி இருப்பதாகச் சொல்கிறார்கள் . உடல் எடை அதிகரித்துள்ளதே இதற்கான காரணம் என்பது உண்மையா? மரச்செக்கில் ஆட்டிய இயற்கையான நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் உட்கொள்வது பற்றி ஆயுர்வேதத்தில் தகவல்கள் உண்டா?

- சுப்ர. அனந்தராமன், சென்னை.

வழுவழுப்பை மூட்டுகளில் ஏற்படுத்தக் கூடிய தன்மையுடைய பொருட்களை வகைப்படுத்தி அவற்றைச் சீராக உட்கொள்வதையும், அதே வழுவழுப்பை வெளிப்புறமாக மூட்டுகளில் தடவி வருவதையும் வழக்கமாக்கிக் கொண்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளிலிருந்து தக்கதொரு பாதுகாப்பை நாம் பெற முடியும். உளுந்து, எள்ளு, பால், கோதுமை, ஆளி விதை, மாமிசசூப்பு, அறுபதாம் குறுவை அரிசி (கார அரிசி), நெய், வெந்தயம், நல்லெண்ணெய், வெண்பூசணி, சுரைக்காய், வெள்ளரி, திராட்சை, மாதுளம்பழம், பேரீச்சம்பழம், இந்துப்பு போன்றவை நெய்ப்பை மூட்டுகளில் ஏற்படுத்தித் தருபவை. இவற்றிலுள்ள பசையை ஜாடராக்னி எனும் பசித்தீயில் வேக வைத்து குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, சிலேஷக கபம் எனும் மூட்டுகளை வழுவழுப்பாக வைத்திருக்கும் தோஷத்திற்கு ஏற்றாற்போல் மாறி சேர்க்கப்பட்டால், மூட்டுகளில் உராயும் தன்மையானது தவிர்க்கப்படும். இதைச் செய்வதற்கு ஆதார பூதமாக பசித்தீ இருப்பதால், மூட்டுகளில் வலியோ வீக்கமோ காணப்பட்டாலும் ஆரம்ப சிகிச்சை என்பது பசியை நேர்படுத்தி, குடல் சுத்தமாக ஆக்கப் பட்டபின்னரே, மூட்டுகளுக்கு சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் கூற்றாகும். இதிலுள்ள சிரத்தைக் குறைவே, பலருக்கும் பல வகைகளில் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றது.

உடல் எடை அதிகரித்தவர்களுக்கு மூட்டுகள் விரைவாக கல கலத்துப் போவதற்குக் காரணமாக, மூட்டுகளில் உள்ள ஜவ்வு வெளிப்பிதுங்குவதாலும், ஜவ்வு கிழிவதாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன. அமர்ந்த நிலையில் தெரியாத கஷ்டம், நிற்கும் நிலையிலோ, நடக்கும் நிலையிலோ, மூட்டுகளில் ஏற்படுத்தும். இந்த நிலை மாற, தொடர்ந்து நெய்ப்பை அப்பகுதிக்கு தருவது ஒன்றே வழியாகும். ஆனால், இதிலுள்ள கஷ்டம், நெய்ப்பைத்தரும் பல பொருட்களும், உடல் பருமனை மேலும் வளர்க்கும் என்பது தான்.

அதனால் உடல் பருமனைக் குறைக்கும் வராதி கஷாயம், வரணாதி கஷாயம், குக்குலுதிக்தகம் கஷாயம், கைசோர குக்குலு, த்ரயோதசாங்க குக்குலு போன்ற மாத்திரைகள் அடிக்கடி சாப்பிடப்பட வேண்டியவை. இதன் மூலம், உடல் லேசாவதுடன், மூட்டுகளிலுள்ள ஜவ்வுகள் வீக்கம், வலி போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடும். அதன் பிறகு, மூலிகை தைலத்தைக் கொண்டு, வறட்சி அடைந்துள்ள மூட்டுகளின் மீது இளஞ்சூடாகத் தடவி 1/2 மணி நேரம் ஊறலாம். பிறகு துடைத்து விடலாம். பிண்ட தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம், முக்கூட்டு தைலம் ஆகியவை இந்த ஏற்பாட்டிற்காக பயன்படுத்தத் தேவையானவை.

ஊடுருவும் தன்மை, செரிமானமாவதற்கு முன்பாகவே உடலில் பரவிவிடும் குணம், தோலின் வலிமை, கண்பார்வை சக்திக்கு வலுவூட்டுதல் (வெளி உபயோகத்தினால்), சூடான வீர்யம், தேய்த்துக் குளிப்பதால் உடல் மெலிந்தவர் பருப்பதும், உள் உபயோகத்தினால் பருத்தவர் இளைப்பதும், மலத்தை இறுக்குவதும், குடல் கிருமிகளை அழிப்பதும், மூலிகைகளால் காய்ச்சப்பட்டதும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயனளிக்கக் கூடிய நல்லெண்ணெய், மனிதர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் தான் ! 
(தொடரும்) 

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/nov/08/நல்லெண்ணெய்-மனிதர்களுக்கு-கிடைத்த-வரப்பிரசாதம்-3037335.html
3002887 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, September 20, 2018 12:00 AM +0530 என் மனைவி அடிக்கடி கண்களை மூடித் திறக்கிறார். இதற்கு முன் இந்தக் குறைபாடு இருந்ததில்லை. பிரபல கண் மருந்துவமனை ஒன்றிலும் காட்டியாகிவிட்டது. அவர்களுக்கும் தீர்வு சொல்லத் தெரியவில்லை. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை ஏதேனும் உள்ளதா?

-த.ரெங்கராஜன், மதுரை. 

கண்கள் வறண்டு விடாமலிருக்க, கண்ணீர் கசிவு எப்போதும் கண்களில் இருக்கும்படியான விதத்தில் நீர் சுரப்பிகள் வேலை செய்து கொண்டே இருக்கின்றன. கருவிழிகளில் இரத்த நாளங்கள் இல்லாமையினால், அதற்குத் தேவையான புத்துணர்ச்சி தரும் சத்தான பகுதிகள் வராததால், கண்ணீர் வழியாக அவை புத்துணர்வு பெறுகின்றன. அதனால் உங்கள் மனைவிக்குக் கண்களில் நீரின் வரத்து குறைந்து போனதற்கான வாய்ப்புகளிருப்பதால், இந்தக் குறைபாடு ஏற்பட்டிருக்கக் கூடும். ஒரே பொருளை உற்று நோக்க வேண்டிய சூழ்நிலையும், பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டு,  குளிரூட்டப்பட்ட அறையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த உபாதை அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கண்களுக்குப் போதுமான அளவு ஓய்வு கொடுக்காதிருப்பதாலும் இந்த உபாதை தலைதூக்க வாய்ப்பிருக்கிறது.


கண்களை மூடிக் கொண்டு, வாயில் நீர் நிரப்பி, கண்களைத் தண்ணீரால் கழுவிவிடுவதால், கண்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும். இதை ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறைக் கூடச் செய்யலாம். கண் இமைகளில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து, அதனால் ஏற்படும் சூட்டை கண் இமைகளின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பது நலம். துணியை சிறிய பந்து போலச் சுருட்டி, வாயின் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது போலச் செய்வதும் நல்லதே. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை செய்யலாம்.


தஞநஉ ரஅபஉத  எனும் பன்னீரில் உள்ள வைட்டமின் "ஏ' சத்து கண் இமைகளை வலுப்படுத்துகிறது. பன்னீரில் கைவிரல் நுனிகளை நனைத்து கண் இமைகளை மூடி, அதன் மீது ஒரு நாளில் இரு முறைதடவி விட்டு, இதமாக மசாஜ் செய்து கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் அல்லது தூய தேங்காய் எண்ணெய்யையும் இது போலப் பயன்படுத்தலாம். உடலில் நீர்சத்து குறையாதிருக்க, நிறைய நீர்த் திரவங்களைப் பருக வேண்டும். 


மேலும்  ஈரப்பசையே இல்லாத காற்றுப் பகுதிகளில் சஞ்சரித்தல், கடும் கோடையில் வெயிலில் குளிர் கண்ணாடி அணியாமல் செல்லுதல், கால்களில் காலணி அணியாமல், சூடான தரையில் நடத்தல், தலைக்கு எண்ணெய் தடவாமல், வெந்நீரைத் தலைக்கு விட்டுக் குளித்தல், தலை கவிழ்ந்து உறங்குதல் போன்ற சில காரணங்களால், கண் இமைகள் வலுவிழந்து கொட்டக் கூடும்.

கண்களையும், கண் நரம்புகளையும் வலுப்படுத்தக் கூடிய பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, பசும்பால், பசு நெய், கேரட், கோழி முட்டை, பப்பாளிப் பழம், நெல்லிக்கனி, இந்துப்பு போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம். உடலில் நீர்வறட்சி, கண்களையும் வறட்சியாக்குவதால், அதைத் தவிர்க்க - இளநீர், பனைநுங்கு, முலாம்பழம், வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடலாம். விலாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர் குடிக்கப் பயன்படுத்தலாம்.


மூக்கினுள் 4 சொட்டு க்ஷீரபலா தைலத்தைவிட்டு  உறிஞ்சுவது, தலைக்கு கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம் இளஞ்சூடாக தலையில் தேய்த்துக் குளித்த பிறகு, உச்சந் தலையில் ராஸ்னாதி சூரணம் பூசுவது, கண்களில் தர்பனம், புடபாகம், அஞ்சனம் போன்ற விசேஷ கண் சிகிச்சைகளைச் செய்து கொள்வது ஆகியவை தங்களுடைய மனைவிக்கு, குணம் தரக் கூடிய சிகிச்சை முறையாகும்.


தலையில் மூலிகைத் தைலமாகிய கார்ப்பாஸாஸ்த்யாதி அல்லது க்ஷீரபலாவை தேக்கிவைக்கும் முறையான "சிரோவஸ்தி' எனும் சிகிச்சை செய்து கொள்வதும் நலமே. வயிறு, குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி, பேதி சிகிச்சை, உடலுக்கு எண்ணெய் தேய்த்து வியர்வையை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகளைச் செய்த பின் மாலையிலோ, காலையிலோ முழுங்கால் அளவு உயரமுள்ள இருக்கையில் அமர்த்தி, நெற்றியின் வழியாக தலையைச் சுற்றி துணி ஒன்றைக் கட்டி, அதன்மேல் தோல்பட்டையைக் கட்டுவார்கள். தோல்பட்டை தளராமலிருக்க நாடா ஒன்றினால் இறுக்கமாகச் சுற்ற வேண்டும். உளுந்து பிசைந்த மாவை அதைச் சுற்றிப்பூசினால், நன்கு பிடித்துக் கொள்ளும், எண்ணெய் வழியாது. இளஞ்சூடாக தைலத்தை தலை முடியின் வேரிலிருந்து மேலே இரண்டு அங்குல உயரம் தேங்கி நிற்கும்படி, சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, தலையில் வைத்திருக்க வேண்டும். தைலத்தின் சூடு ஆறினால், பிழிந்தெடுத்து, மறுபடியும் வெது வெதுப்பாக ஊற்றி வைக்க வேண்டும். இந்த வைத்திய முறையை தொடர்ச்சியாக மூன்று ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரை செய்யலாம்.


தலையைச் சார்ந்த வாத நோய்களை நீக்கவும், கண், காது போன்ற புலன்களுக்கு அதிகத் தெளிவு ஏற்படுத்துவதுடன், குரல், முகவாய்க்கட்டை, தலை இவற்றிற்கு வலுவையும் உண்டாக்குகிறது. 


 (தொடரும்) 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/sep/20/கண்களை-கவனியுங்கள்-காதலியின்-கண்களை-அல்ல-உங்கள்-கண்களை-3002887.html
2998971 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, September 13, 2018 12:00 AM +0530 என் மனைவிக்கு வயது 65. கடந்த ஆறு ஆண்டுகளாக பார்க்கின்ஸன்ஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலிருந்து எழும் போது, நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். SYNCAPONE 100 எனும் ஆங்கில மாத்திரை சாப்பிட்டால் அரை மணி நேரம் கழித்து இயல்பான நிலைக்கு வருகிறார்கள். இந்த உபாதை நீங்க, கட்டுப்பாட்டுக்குள் இருக்க வழி என்ன?

-மா. தமிழ்மணி, திருநெய்ப்பேர், 
திருவாரூர் (மா)
 

மூளையை பாதிப்புறச் செய்யும் ஒரு வகை வாதநோய் இதுவென்பதாலும், அதன் சீற்றத்தை அடக்கி, மூளையிலுள்ள நரம்புகளை வலுப்பெறச் செய்து, அங்குள்ள சுரப்பிகளின் குறைபாடுகளைச் களைய வேண்டியிருப்பதாலும், மருத்துவத்தில் சில கடுமையான சிகிச்சை முறைகளான - மூலிகை நெய், தைல மருந்துகளைப் பருகுதல், நசியம் எனும் மூக்கில் மருந்து விடும் முறை, அனுவாஸன வஸ்தி எனும் ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலங்களை மலப்பையினுள் செலுத்துதல், அதனால் ஏற்படும் வாயுவினுடைய விடுபட்ட நிலையை நன்கறிந்து, கஷாயவஸ்தி எனும் மூலிகை கஷாயங்களை ஆசனவாய் வழியாக, மலப்பையினுள் செலுத்தி, அதை அவ்விடம் விட்டு வெளியேறச் செய்தல், தலை மற்றும் உடல் பகுதிகளில் மூலிகைத் தைலங்களை வெது வெதுப்பாகத் தேய்த்து ஊற வைத்து, நீராவிப் பெட்டியினுள் உட்கார வைத்து, வியர்வையை ஏற்படுத்துதல், சித்தாமுட்டி வேர்க் கஷாயத்தை, நவர அரிசியுடன் வேக வைத்து, பால் கலந்து மூட்டைகட்டி உடலெங்கும் தேய்த்துவிடும் சிகிச்சை முறை என்றெல்லாம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர் ஆட்பட்டுவிடுகிறார். மருந்துவனிடம் என்னை நீ அவ்வளவு எளிதாக சரி செய்து விட முடியுமா? என்று சவால் விடும் நோய் இதுவாகும்.

மூளையை வலுப்படுத்த, இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை சுமார் 15 - 20 மி.லி. நீராவியில் உருக்கி, காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் விதார்யாதி எனும் நெய் மருந்தை, 15 - 20 மி.லி. நீராவியில் உருக்கி வெறும் வயிற்றில் குறைந்தது 21 நாட்களாவது சாப்பிட வேண்டிய அவசியமிருக்கிறது. அதிக பட்சம் 48 நாட்கள் சாப்பிடலாம். ஒவ்வொரு முறையும் நெய் மருந்தை சாப்பிட்டதும், சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். இதனால், மருந்தானது விரைவில் செரித்து, குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, அதன் வீர்யமானது மூளையை வேகமாகச் சென்றடையும். நெய் மருந்தினுடைய முழு வீரியமும் உடலினுள் வந்தடைந்துள்ள விபரத்தை, அறிந்து கொள்ளக் கூடிய உபாயங்களையும் ஆயுர்வேதம் கூறியுள்ளது. பசி தீவிரமாக எடுத்தல், குடல் அழுக்குகள் முழுவதுமாக நீங்குதல், உடல் உட்புற உறுப்புகள் நன்கு வலுவடைதல், உடல் நிறம் தேறுதல் போன்றவை ஏற்படத் தொடங்கும்.

அதன் பிறகு, பசியினுடைய தன்மை சீராக இருப்பதாக அறிந்தால், எளிதல் செரிக்க முடியாததும், நாடி நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், காலையிலும் இரவிலும், உணவிற்குப் பிறகு, தசமூலரஸôயனம் எனும் லேகிய மருந்தை 1 - 2 ஸ்பூன் (5 - 10 கிராம்) அளவில் நக்கிச் சாப்பிட வேண்டும். தலைக்கு ,க்ஷீரபலா தைலம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பிறகு, ராஸ்னாதி சூரண மருந்தை, ஏலாதி சூரண மருந்துடன் சிறிது கலந்து, உச்சந் தலையில் பூசலாம்.
இந்த உபாதைக்கு என்ன தான் சிகிச்சையை வளைத்து வளைத்துச் செய்தாலும் குணம் காண்பது என்பது முழுவதுமாகக் கிடைப்பதரிதாகவே இருக்கிறது. மூளை - இதயம் - சிறுநீரகங்கள் ஆகிய மூன்று பகுதிகளுக்கு "த்ரிமர்மீயம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. ஆக மொத்தமுள்ள நூற்றியேழு உடல் மர்ம ஸ்தானங்களில், இம் மூன்று மட்டுமே மிகவும் முக்கியமானது. எளிதில் நோய் தாக்காதவாறு அவை நன்கு மறைக்கப்பட்டிருப்பதன் ரகசியமே, அவற்றின் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

உணவில் காரம் - கசப்பு - துவர்ப்புச் சுவை குறைத்து இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம். தலைக்குக் குளிர்ந்த நீர் பயன்படுத்துவதை நிறுத்தி வெது வெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தலே நலம். 

ஏசி அறையில் அதிக நேரம் படுத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஓமம், சீரகம் , சுக்கு ஆகியவை தட்டிப்போட்டுக் காய்ச்சிய வெந்நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்தலாம். 

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/sep/13/பார்க்கின்ஸன்ஸ்-நோய்-பாதிப்புகள்-2998971.html
2995381 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, September 6, 2018 10:36 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

இருபது வருடங்களாக தலைபாரத்தால் சிரமப்படுகிறேன். தலை எப்போதும் பாரமாகவே இருக்கிறது. இரவில் படுத்தால் தலை பாரமாக உள்ளது. எழுந்து 10 நிமிடம் உட்கார்ந்து பிறகு படுத்தால் தலை கனமாகிறது. இதனால் தூங்கவும் முடியவில்லை. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

 - ரவிக்குமார், விருதுநகர்.
 நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தினால் கனம் ஏறிய கபம் எனும் தோஷமானது, இயற்கையாக உடலின் கீழ் பாகத்தில் தான் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அது இதயத்திற்கு மேலிருந்து உச்சந் தலை வரை இடம்பிடித் திருப்பதாக ஆயுர்வேதம் ஒரு விந்தையான கருத்தை முன் வைக்கிறது! இது போன்ற இயற்கையான விந்தைகளும் உண்டு. உதாரணத்திற்கு, பனை மரத்தின் நுங்கும், தென்னை மரத்தின் இளநீரும் பகலில் எந்நேரமும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தாலும், அவற்றை உள்ளுக்குச் சாப்பிட்டால் நம் உடல் குளிர்ச்சியடைகிறது. இஞ்சியும், பூண்டும் பூமிக்கடியில் விளையும் கிழங்குகள். சூரிய ஒளியினுடைய சூட்டை நேரடியாக பெறாதவை. ஆனால் அவற்றை நாம் உணவாக சமைத்து உண்டால் உடலில் அபரிமிதமான சூட்டை கிளப்பக் கூடியவை. இது போன்ற புதிரான பல விஷயங்களையும் நாம் பூமியில் காண்கிறோம். மனித உடலிலும் தலையைச் சார்ந்த தர்பகம் எனும் கபம், சுவையறியும் நாக்கில் அமைந்துள்ள போதகம் எனும் கபம் ஆகிய இரண்டும் உங்களுக்கு எளிதில் சீற்றம் அடைவதாகத் தெரிகிறது. இனிப்புச் சுவையினுடைய ஆதிக்க பூதங்களாகிய நிலமும் - நீரும், புளிப்புச் சுவையிலுள்ள நெருப்பும் - நிலமும், உப்புச் சுவையிலுள்ள நீரும் - நெருப்பும், உணவில் சேர்க்கும் பொழுது அவை நீர்க்கோர்வையாக ஏற்றமடைந்து மேற் குறிப்பிட்ட இரு வகை கப தோஷங்களையும் கனக்கச் செய்து, நீங்கள் குறிப்பிடும் உபாதையைத் தோற்றுவிக்கும். இதற்கு மாற்றாக, வாயுவும் ஆகாயமும் அதிகம் கொண்ட கசப்புச் சுவையும், நெருப்பும் காற்றும் கொண்ட காரச்சுவையும், நிலமும் காற்றும் அதிகம் கொண்ட துவர்ப்புச் சுவையும், கபத்தினுடைய கனமான தன்மையை உடைத்து நீர்த்துவிடச் செய்யும் தன்மையுடையவையாக இருப்பதால், இந்த மூன்று சுவைகளையுடைய உணவுப் பொருட்களைனைத்தும் உங்களுக்குப் பத்திய உணவாக அமைகின்றன.

 நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழவழப்பு, பிசுபிசுப்பு, நிலைப்பு ஆகியவற்றின் மேம்பட்ட தன்மை, உங்களுக்கு மிக சிறிய காரணங்கள் கொண்டும் வளர்ந்து விடுவதாகத் தெரிகிறது. நெய்ப்புக்கு எதிரான வறட்சியும், குளிர்ச்சிக்கு எதிரான சூடும், கனத்திற்கு எதிரான லேசும் மந்தத்திற்கு எதிரான ஊடுருவும் தன்மையும் மருந்தாகவும் செயலாகவும் அமைந்தால், உங்களுடைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 அந்த வகையில், வாரணாதி கஷாயம் எனும் மருந்தை சுமார் 15 மிலி லிட்டர் எடுத்து அதில் 60 மிலி லிட்டர் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து அரை ஸ்பூன் (2 ணீ மிலி) தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை நன்கு பொடித்து நுண்ணிய சூரணமாக விற்கப்படும் திரிகடுகம் எனும் மருந்தை 5 கிராம் அளவில் எடுத்து, 10 மிலி லிட்டர் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடலாம். பொதுவாகவே உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன் தொடங்கும் செரிமானத்தில், கபத்தினுடைய குணங்கள் இயற்கையாகவே சீற்றமடையும் நிலை ஏற்படுவதால், அதைக் குறைப்பதற்காகவே இரண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி பாக்குடன் சாப்பிடும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் இருக்கிறது.

 தலைபாரத்தைக் குறைக்கக் கூடிய மூலிகைப் பற்றுகளாகிய ராஸனாதி சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றை இஞ்சிச் சாறுடனோ, வெற்றிலைச் சாறுடனோ குழைத்துச் சூடாக்கி நெற்றியில் சுமார் 1 மணி நேரம் பற்றுப் போட்டு வைக்கலாம். இதை இரவு உணவிற்குப் பிறகு உபயோகிக்கலாம். மூக்கினுள் விடும் நஸ்ய மருந்தாகிய அணு தைலத்தை நான்கு சொட்டுகள் வரை மூக்கினுள் விட்டு மெதுவாக உறியலாம். இதை காலை, இரவு பல் துலக்கிய பிறகு பயன்படுத்தலாம். தலை பாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள், வசம்பு கட்டை, வால் மிளகு போன்றவற்றில் ஒன்றைப் புகைத்து மெதுவாக மூக்கினுள் செலுத்தலாம்.

 கோரைக் கிழங்கு, சுக்கு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகலாம். தேன் கலந்த தண்ணீரையும் அது போலவே பயன்படுத்தலாம். செயல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - குளிரூட்டப்பட்ட அறையில் படுத்துறங்காதிருத்தல், இரவில் தயிர், பால், குளிர்ந்த நீர் ஆகியவற்றை பயன்படுத்தாதிருத்தல், குளிப்பதற்கு முன் அசனவில்வாதி தைலம், அசன மஞ்சிஸ்டாதி தைலம், மரிசாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெது வெதுப்பாக தலைக்குத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து காலையில் குளிக்கவும்.

 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/sep/06/தலைபாரத்தைக்-குறைத்திடும்-விரலி-மஞ்சள்-2995381.html
2812892 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் ரசாயன உணவுகளின் பாதிப்பு: வெல்வது எப்படி? டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Wednesday, November 22, 2017 05:21 PM +0530 இன்று பலவித PRESERATIVE  ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாக்கெட் பால் வகைகள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். உடல் நலத்துக்குத் தீங்கு செய்யக் கூடிய ரசாயனங்களால் வயது, உடல்பருமன், முழங்கால் மூட்டு நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றுடன் வாழ்பவர்கள் இவற்றால் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் அவர்களைப் பாதுகாப்பது எப்படி?

சுப்ர.அனந்தராமன், 
அண்ணாநகர், சென்னை-40
.


நம் முன்னோர்கள் கண்டறியாத, கேட்டறியாத ரசாயனங்களை நவீன வாழ்க்கை காரணமாக நாம் இன்று சாப்பிடவும், அருந்தவும் வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அவற்றை நாம் குடல் வழியாக இரத்தத்தில் உள் வாங்கி, த்ரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சீரான செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சப்த தாதுக்களாகிய ஏஸ-ரக்த -மாம்ஸ - மேத - எலும்பு- மஜ்ஜை - விந்துவிற்குச் செயல் நாசத்தையும், மலங்களாகிய மலம் - சிறுநீர் - வியர்வை போன்ற கழிவுகளின் அடைப்பிற்குமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வருகிறோம். உடலைத் தாங்கி நிறுத்தக் கூடிய ஆணி வேர்களாகிய தோஷ - தாது - மலங்களையே ஆட்டி அசைத்துப் பிடுங்கக் கூடிய இந்த ரசாயனக் கலவைகளே நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு பெரும் ஆபத்தை விந்தணுக்கள் மூலமாகவும் சினை முட்டை வாயிலாகவும் செய்யக் காத்திருக்கின்றன.

உடலில் ரசாயனச் சேர்க்கையை எதிர்த்துப் போராடக் கூடிய திறனை ஐந்துவகையான நபர்களால் மட்டுமே செய்ய இயலும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

1.தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள்
2. நெய்ப்பை உடலில் நன்கு சம்பாதித்துக் கொண்டவர்கள்.
3. பசித்தீ கெடாமல் பார்த்துக் கொள்பவர்கள்
4. இளமைப் பருவத்தை உடையவர்கள்
5. பலசாலிகள் உடற்பயிற்சி என்பது நடையாகலாம், யோகப் பயிற்சியாகலாம், விளையாட்டாகலாம், தண்டால் , குஸ்தியாகலாம். எதுவாக இருந்தாலும், உட்புற ரசாயனக் கழிவுகளை வியர்வை மூலமாக வெளியேற்றி விட வேண்டும். தசைகள் முறுக்கேறி, உடல் லேசாகி, செயல்களை எளிதாகச் செய்ய முடிவதும், தேவையற்ற கொழுப்பை அகற்றுவதும் உடற்பயிற்சியின் விளைவாக ஏற்படுமாயின், நோய் எதிர்ப்பு சக்தியானது உடலில் நன்கு ஏற்பட்டு, எந்த ரசாயனத்தையும் உடல் எதிர் கொண்டு பக்க விளைவுகளை முறியடித்துவிடும். அதனால், சோம்பேறியாய் எந்த வேலையையும் செய்யாமல், எதையாவது எந்நேரமும் கொறித்துக் கொண்டு ஊர் வம்பு பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இது போன்ற ரசாயனங்களால் உடல் அழிவு காத்திருக்கிறது.

உடல் நெய்ப்பைத் தரும் உணவுப் பொருட்களாகிய எள், தேங்காய்ப் பால், உளுந்து, கோதுமை, அரிசி போன்றவற்றை சீரான அளவில் நெய், பால், வெண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து உண்பதாலும், நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தலை முதல் உள்ளங்கால் வரை தடவி, ஊற வைத்துக் குளிப்பதாலும், ரசாயனப் பொருட்களால் அடங்கியுள்ள வறட்சி எனும் குணத்தை வெல்வதும், தாமரை இலைத் தண்ணீரைப் போல உடலில் ஒட்டி உறவாடச் செய்யாமலும் பாதுகாக்கக் கூடியது.

தன் பசி நிலையறிந்து உணவைத் தக்க அளவில் ஏற்று, பசியின் திறன் குன்றாமல் பாதுகாப்பதின் மூலம், ரசாயனங்களை எரித்து பஸ்மமாக்கி வெளியேற்றிவிடலாம். நாக்கிற்கு அடிமையாகி, இஷ்டம் போல உண்பவர்களுக்கு, பசித்தீ கெட்டு, ரசாயனங்களை வெளியேற்ற முடியாமல் அவற்றின் கிடங்காக மாற்றி விடுவார்கள்.

சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், துடிப்பும் நிறைந்த இளமைப் பருவத்தை, வயோதிகத்திலும் தக்க வைத்துக் கொள்ள முன் குறிப்பிட்ட உடற்பயிற்சி, நெய்ப்பு, பசித்தீ ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதொன்றே வழியாகும். அப்படிச் சம்பாதித்துக் கொண்டவர்களை வாலிப வயோதிக அன்பர்கள் என்று குறிப்பிடலாம். 

தாய் தந்தையிடமிருந்து கிடைக்கும் ஸகஜ பலம் - பருவகாலங்களுக்குத் தக்கவாறு உணவு - செயல்முறை மாற்றம் வழியாகக் கிடைக்கும் காலபலம் மற்றும் புத்தியைப் பயன்படுத்தி உடலுக்கு நன்மைதரும் உணவு - செயல்- மருந்து மூலம் கிடைக்கும் யுக்தி பலம் ஆகியவற்றைச் சிரத்தையுடன் காப்பாற்றுவதின் மூலம், ரசாயனங்களை எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

(தொடரும்)

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/nov/23/ரசாயன-உணவுகளின்-பாதிப்பு-வெல்வது-எப்படி-2812892.html
2796298 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் அனைத்து வியாதிகளும் மது அருந்தினால் குணமாகுமா? டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, October 26, 2017 05:56 PM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

சர்க்கரை உபாதையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக காலையில் ஆறு கிலோமீட்டர், மாலையில் ஆறு கிலோமீட்டர் நடக்கிறேன். இதனால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அனைத்து வியாதிகளும் மது அருந்தினால் குணமாகுமா? அல்சர் வர  காரணமென்ன?

 - கா. திருமாவளவன், 
திருவெண்ணெய் நல்லூர்.

நாம் எளிதாக நடப்பதற்காகவும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமலிருப்பதற்காகவும் சிலேஷகம் எனும் ஒரு கபம்  மூட்டுகளைப் பாதுகாக்கிறது. இதனுடைய இயற்கை குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்றவை, அதிக தூரமான நடையால், வறட்சி, சூடு, லேசு, ஊடுருவும் தன்மை, சொர சொரப்பு,  அசைவு போன்ற எதிரான குணங்களைச் சந்திக்க நேருவதால் அவற்றுள் கடுமையான பலப் பரீட்சையைத் தோற்றுவிக்கின்றன. எந்தெந்த குணங்கள் அவற்றிற்கு எதிரான குணங்களை வீழ்த்துகிறதோ, அதற்கு ஏற்றாற் போல் மூட்டுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு விளைவுகளை  ஏற்படுத்துகின்றன. அதனால், தங்களுடைய விஷயத்தில், உணவின் சீரான வரவால் ஏற்படுத்தப்பட்ட மூட்டுகளின் குணாதிசயங்கள், மூட்டுகளின் தாங்கக் கூடிய திறனையோ, அவை கலகலத்து வீழ்வதையோ, செயலின் மூலமாக தீர்மானிக்கக் காத்திருக்கின்றன.

இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளினால் ஏற்றம் பெறும் மூட்டுகளின் சிலேஷக கபமானது, அதிக தூர நடையினால் வீழ்ச்சியடைகின்றது. சர்க்கரை உபாதையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இனிப்புச் சுவை கூடாது என்பதால், மூட்டுகளிலுள்ள கபம் இயற்கையாகவே நெய்ப்பைப் பெற முடியாமல் வறண்ட நிலைக்குத் தள்ளப்படும். அதிக தூர நடையால், வறட்சி மேலும் கூடுவதால், தாங்களுக்கு மூட்டுகளில் பெரிய ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. உட்புற வழியாக வர வேண்டிய நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசை வராமல் போனால், வெளிப்புற வழியாக அதைச் சம்பாதித்துக் கொள்வதே சிறந்தது. எதிர்காலப் பாதுகாப்பும் கூட. அந்தவகையில், சில ஆயுர்வேத தைலப் பூச்சுகள் உதவிடக் கூடும். 

மஹாமாஷ தைலம் எனும் உளுந்தை முக்கிய உட்பொருளாக  மூட்டுகளில் தடவி, சுமார் அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை ஊறிய பிறகு, வேறு ஒரு துணியால் துடைத்து விடுவதையோ, வெது வெதுப்பான நீரால் கழுவிவிடுவதையோ தொடர்ந்து செய்து வந்தால், மூட்டுகளின் நெய்ப்பு காப்பாற்றப்படலாம். புழுங்கலரிசியுடன், கோதுமைக் குருணை, ஜவ்வரிசி, உளுந்து, எள்ளு ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, கஞ்சி காய்ச்சி, அந்தக் கஞ்சியைத் தைலம் தேய்த்து ஊறிய மூட்டுகளின் மீது இதமாக உருட்டி உருட்டித் தேய்த்து சுமார் அரை மணி நேரம் ஊறிய பிறகு, கழுவிவிடுவதும் நல்லதே. இந்த முறை நீரால் கழுவிவிடுவதை விட சிறந்ததாகும்.

க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான பாலுடன் பருகுவதால், மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள வழுவழுப்பான தன்மை குறையாமல் பாதுகாக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தான் குணத்தை எதிர்பார்க்க முடியும்.

நடைக்குப் பிறகும் மூட்டுகளுக்கு ஓய்வு தராமல்  நடப்பதையோ, நிற்பதையோ செய்தால், தேய்மானம் விரைவில் ஏற்பட்டு, முடக்கிவிடும் என்பதால், உழைப்பிற்கு பிறகு ஓய்வு, ஓய்விற்குப் பிறகு உழைப்பு என்ற வகையில் வாழப் பழகுவதே நலம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

மது அருந்துவதால்,  ஒருவர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்று நினைப்பது மாயையே. சூடான வீர்யம் கொண்ட மது, கபத்திற்கு எதிரான குணங்களையே அதிகம் கொண்டிருப்பதால், நடையைப் போலவே, மூட்டுகளிலுள்ள கபத்தை வளரச் செய்யும். அதனால் மூட்டுகளை கலகலக்கச் செய்து வலுவிழக்கும்.

அல்சர் எனும் வயிற்றுப்புண் உபாதை உட்பகுதிகளிலுள்ள சவ்வுப்பகுதியில் ரத்தக் கசிவையும் ஏற்படுத்தக் கூடும். அதிக காரம், புளிப்பு, உப்புச்சுவை, புலால் உணவு, எண்ணெய்யில் பொரித்தவை, வயிற்றுப் புண் உபாதையை தோற்றுவிக்கக் கூடும். சந்தனாதி லேஹ்யம், அப்ரகபஸ்மம், விதார்யாதி கிருதம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் அல்சர் உபாதைக்குப் பயன்படுத்தத் தக்கவை.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/oct/26/அனைத்து-வியாதிகளும்-மது-அருந்தினால்-குணமாகுமா-2796298.html
2788511 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் உடலிலுள்ள பூட்டுகளை கலகலக்கச் செய்வது எது? சரி செய்ய வழி உள்ளதா? டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, October 12, 2017 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்


என் வயது 68. மணிக்கட்டில் நல்லவலி. வலி ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருப்பதில்லை. இன்று 2 விரல், நாளை 1 விரல், அப்புறம் மணிக்கட்டு என்று மாறுபடும். செம்பு வளையம் போட்டால் பலன் இருக்குமா? BYSONIA செடி வலிகளுக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறேன். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க என்ன வழி?

லோகநாயகி, கோவை.

உணவில் உப்பு, புளி, காரம், மசாலா, நெய்ப்பு, சூடு, எளிதில் செரிக்காதவை, நீர்ப்பாங்கான பகுதிகளைச் சார்ந்த மாமிசம், பிண்ணாக்கு, முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, இறைச்சி, கரும்பு, தயிர், காரக் குழம்பு, ஒவ்வாமை வகைகள் (உதாரணம், பால், உப்பு, சூடாக்கிய தயிர்) போன்றவற்றை அதிகம் சேர்ப்பதாலும், முன் உணவு செரிமானமாகாத நிலையிலேயே அடுத்த உணவைச் சாப்பிடுவதும், கோபம், பகலில் தூங்குவது- இரவில் கண்விழிப்பது ஆகியவற்றாலும் வாதமெனும் உடல் தோஷமும், இரத்தமும் சீற்றமடைந்து, உடலிலுள்ள பூட்டுகளை கலகலக்கச் செய்து, வலியை ஏற்படுத்தும்.

உட்புறக் குடலில் எரிச்சலுடன் வாயுவைக் கிளறிவிடும் பொருட்களைச் சாப்பிட்டு, பேருந்து, இரு சக்கரவாகனம், ரயில் பிரயாணம், நெடுந்தூரம் விமானப் பயணம் போன்றவை அடிக்கடி செய்ய நேர்ந்தால், அந்த உணவுப் பொருட்கள், செரித்த நிலையில், உடனே இரத்தத்தை சூடாக்கி, சவாரியினால் ஏற்பட்ட களைப்பினால் தளர்ந்துள்ள பாதங்களின் குழாய்களில் சேருகிறது. கெட்டுப்போன சீற்றமடைந்த வாயுவினோடு, இரத்தமும் சேர்ந்து, நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதையைத்தோற்றுவிக்கும்.

சிலருக்கு கால்களில் தொடங்கி, வேகமாக மற்ற பூட்டுகளில் பரவுவதை போல, வேறு சிலருக்கு, கை மணிக்கட்டில் தொடங்கி, மற்ற பூட்டுகளுக்குப் பரவும், ஓர்இடத்திலிருந்து மற்றோர்இடத்திற்கு அடிக்கடி வலி மாறிக் கொண்டேயிருப்பது, வாயுவினுடைய இயற்கையான தன்மையினால்தான்.

ஆரம்ப நிலையில் மேற்புற தாதுக்களாகிய ரஸ- ரத்த- மாமிசங்களைப் பிடிக்கும் இந்த உபாதையானது, சிகிச்சை செய்யாமலிருந்தால், ஆழமான தாதுக்களாகிய மேதஸ்- எலும்பு- மஜ்ஜை என்ற அளவில் உள் இறங்கி பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்று சரகர், ஸுச்ருதர் போன்ற முனிவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பூட்டுகளுக்கு நெய்ப்பு ஏற்படுத்தும் மூலிகை மருந்துகளாகிய இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், கல்யாண கிருதம் ஆகியவற்றில் ஒன்றை சிலகாலம் சாப்பிடக் கொடுத்து, அம் மருந்தினுடைய வீர்யமானது பூட்டுகளில் நன்கு வந்து சேர்ந்துவிட்டதற்கான அறிகுறிகளை அறிந்த பிறகு, மணிகட்டின் இரண்டு அங்குலத்திற்கு மேலாக உள்ள காரிரத்தக் குழாய்களைக் கீறி, அட்டைப்பூச்சியை வைத்து, இரத்தம் குடிக்கச் செய்து, இரத்தத்திலுள்ள கெடுதிகளை நீக்க வேண்டுமென்றும், இரத்தம் எடுப்பது சிறிய அளவில் மட்டுமே ஆனால் பல தடவை செய்ய வேண்டும் என்றும் வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதனால் வாயுவின் சீற்றம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளைச் செய்தபிறகே, மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற குறிப்பும் ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளன.

எடுத்த எடுப்பிலேயே இன்றைய மருத்துவர்கள் சிகிச்சை செய்வதாலேயே, நோய்மாறாமல் நிற்பதாகத் தெரிகிறது. இரத்த சுத்தியும் வாயுவின் சீற்றமும் கட்டுப்படுத்திய பிறகு, பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியைக்குணப்படுத்தும் மருந்துகளாகிய ராஸ்னா ஏரண்டாதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், ராஸ்னா ஸப்தகம் கஷாயம், சப்தஸாரம் கஷாயம் போன்றவை சாப்பிட வேண்டும்.

அதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த மேம்பொடி எனும் கஷாயத்துடன் சேர்த்து சாப்பிடப்படும் மருந்துகளையே சாப்பிட வேண்டும். க்ஷீரவஸ்தி எனும் பால்கலந்த மூலிகைகளால், ஆஸனவாய் வழியாக உட்செலுத்தும் சிகிச்சையும் சிறப்பானதே. கந்தகபஸ்மம், கோகிலாக்ஷம் கஷாயம் உள்ளுக்குச் சாப்பிடலாம்.

பிண்ட தைலம் வெளிப்புற பூச்சுக்கு உகந்ததைலம். சதகுப்பையை புளித்த மோருடன் அல்லது பூட்டுகளில் எரிச்சல் இருந்தால், பாலுடன் அரைத்து பற்று இடலாம். நோயினுடைய தன்மைக்கேற்ப மருந்துகள் விரிவாகக் கூறப்பட்டு செம்புவளையம், BYSONIA பற்றிய விவரங்கள் அவை பற்றிய நவீன ஆராய்ச்சியாளர்கள் கருத்தை அறிவதே நலம். ஆயுர்வேதத்தில் இவை பற்றிய கருத்துகளை காணமுடியவில்லை. 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/oct/12/உடலிலுள்ள-பூட்டுகளை-கலகலக்கச்-செய்வது-எது-சரி-செய்ய-வழி-உள்ளதா-2788511.html
2773219 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் வறட்சி... உட்புறமும் தோலிலும்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, September 14, 2017 10:33 AM +0530 எனக்கு உடலில் பல இடங்களில் தோல் வெடித்து காய்ந்து போய் வறண்டுவிட்டது. எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பழக்கமில்லை. தேய்த்துக் குளித்தால் வறட்சி நீங்கும் என என் அம்மா கூறுகிறார். உடல் உட்புற வறட்சியால் இது ஏற்படுவதாக எனக்கு தோன்றுகிறது. இதை எப்படி குணப்படுத்தலாம்? ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது.

-மாயா, சென்னை.

உங்களைப் போன்ற உடல் நிலையுள்ளவர்கள் வெகுநாட்கள் எண்ணெய்க்குளியல் இல்லாமலிருந்து திடீரென எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்வதானால் உடலை அதற்குத் தகுந்ததாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்பவர்கள் கூட கடுமையான நோய், விரதம், குடும்பசூழ்நிலை, அன்புக்குரியவரின் மரணம், சோகம் முதலியவற்றால் அதனை விடநேரிடலாம். உள்ளும் புறமும் வறண்டு விடும். அப்போது "கிருஸரம்' என்ற உணவு வகையை ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. அரிசி, உளுந்தம் பருப்பு, எள்ளு இந்த மூன்றையும் 4:2:1 என்ற அளவில் சேர்த்து, லேசாக வறுத்து பெருந்தூளாக்கிக் கொள்ளவும். இதனைக் கஞ்சியாக்கி வெல்லச் சர்க்கரை சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதனால் உடலின் உட்புற வறட்சியும் நெய்ப்பின்மையும் குறையும். உடலை எண்ணெய்குளியலுக்கு ஏற்றதாக்கும். எண்ணெய் தேய்த்துக் கொண்டால் உட்புறச் சூடு அதிகமாவதாகச் சிலர் கூறுவர். அவர்கள் இம்முறையைக் கையாண்டால் இந்த பாதிப்பு ஏற்படாது.

உடல், மனம், புலன்கள், ஆத்மா என்று நான்கு கூட்டுப் பொருள்கள் அடங்கியது வாழும் இந்த உடல். இந்த நான்கின் கூட்டையே பிராணன் என்று குறிப்பிடுவார்கள். பிராணன் உடலில் தங்கவும், பிராணனின் இயக்கம் உடலில் சரியே நடக்கவும் உடலுக்கு நெய்ப்பு தேவைப்படுகிறது. உடலில் இந்த நெய்ப்பு உள்ளவரை தான் உறுப்புகள் உரசல் இல்லாமல் மெதுவாக ஒன்கொன்று பிடிப்புடன் இருக்கின்றன. உயிரே இதனால் தான் உடலில் இருப்பதாக ஸூச்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார். அதனால் நீங்கள் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் சரியானது தான்.

மனிதனின் தோலில் லேசான மெழுக்குப்பூச்சு உண்டு. அதில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றி, மெழுகுப்பூச்சு கரையாமல் பாதுகாக்கவே தோலுக்கு எண்ணெய் தடவுகிறோம். தோலில் எண்ணெய்ப் பதமும் தராமல் சோப்புத் தேய்த்துக் குளிக்கும் போது தோல் வறண்டுவிடுகிறது, வெடித்துவிடுகிறது, சிதில் சிதல்களாகப் பிரிந்து உதிர்கிறது. இவற்றின் விளைவுகளே தலையில் பொடுகு, உள்ளங்கால் வெடிப்பு, தோல் வறட்சி முதலியவை. அதனால் நீங்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கதே.

ரத்த அணுக்கள் குறைவதாலும் தோல் வறட்சி, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். அதனால் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய நெய்யில் காய்ச்சப்பட்ட மூலிகை மருந்துகளைத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உடல் நிலைக்குத் தக்கவாறு தாடிமாதிகிருதம், திக்தகம்கிருதம், பஞ்சகவ்யம் கிருதம் போன்றவற்றில் ஒன்றை நோயாளி அருந்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நெய்ப்பினுடைய வரவு உடலில் நன்கு உணரப்பட்டதும், உலர் திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை கசக்கிப்பிழிந்து வடிகட்டி, நோயாளியை குடிக்கச் செய்து பேதி செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகே ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் கஷாயங்களும் சூரணங்களும் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

திராஷாதி லேஹ்யம், சியவனப்பிராஸம் லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம் போன்ற நெய்ப்பு தரும் மருந்துகள் மூலமாகவும் குடல் உட்புற வறட்சியை நீக்கி அதன் வழியாக தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, வறட்சி போன்ற உபாதைகளையெல்லாம் நீக்கிக் கொள்ளலாம். ஆயுர்வேத மூலிகை எண்ணெய் மருந்துகளாகிய மஹாமாஷ தைலம், தான்வன்திரம் தைலம், பிரபஞ்சன விமர்தனம் குழம்பு ஆகியவற்றில் ஒன்றிரண்டை கலந்து உடலில் வெதுவெதுப்பாகத் தேய்த்துக் குளிப்பதின் மூலமாகவும் தோல் வறட்சியைக் குறைக்க முடியும்.

தேங்காய்ப்பால், எள்ளு, உளுந்து போன்ற நெய்ப்பு தரும் பொருட்களை உணவில் சற்று அதிகமாகச் சேர்த்தால் உட்புற வறட்சியை நீக்கிக் கொள்ளலாம். வறட்சி தரும் கசப்புச் சுவை, காரம், துவர்ப்புச் சுவைகளைக் குறைப்பது நல்லது. "தைலதாரா' எனப்படும் பிரசித்தி பெற்ற சிகிச்சை தற்சமயம் ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. தோலில் மென்மையை ஏற்படுத்தி வலுவூட்டும் இந்த முறை தங்களுக்கு நல்ல பலனைத் தரலாம்.

(தொடரும்)

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/sep/14/றட்சி-உட்புறமும்-தோலிலும்-2773219.html
2749736 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் ஆயுர்வேதத்தில் கண் நோய்க்கு மருந்து! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, August 3, 2017 12:00 AM +0530 எனது பேத்தியின் வயது 10. பிறந்த சில வருடங்களில் NYSTAGMUS-SQUINT EYES கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தான் வழி என கண்மருத்துவமனையில் கருத்து கூறியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்தால் குணப்படுத்த இயலுமா?
-த. நாகராஜன், சிவகாசி.

கழுத்திற்கு மேற்பட்ட, தொண்டை மற்றும் தலையைச் சார்ந்த உபாதைகளில் "நஸ்யம்' எனும் மூக்கினுள் மருந்து விடும் முறையே மிகவும் நல்லது என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. தலைக்கு மருந்தை நேரடியாக எடுத்துச் செல்லும் ஒரே வழியானது மூக்கினுள் அமைந்துள்ள வெற்றிடப்பாதை என்பதாலேயே அதற்கு இத்தனை சிறப்பு. மூன்று வகையான நஸ்யப் பிரயோகங்களாகிய "விரேசனம்',  "ப்ரம்ஹனம்',  "சமனம்' ஆகியவற்றில் தங்களுடைய பேத்திக்கு எதைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவது என்பதை மருத்துவரால் மட்டுமே கூற இயலும். இம்மூன்றிலும் ப்ரம்ஹணம் எனும் நஸ்யப்பிரயோகம் பற்றிய வர்ணணையில் - வாதத்தினுடைய ஆதிக்கத்தால் ஏற்படும் தலைவலிக்கும், சூர்யாவர்த்தம் எனும் வெயில் ஏற ஏற உண்டாகும் தலை வலிக்கும்,  குரல்வளை குன்றிய நிலையில் பேசமுடியாமல் அவதியுறும் நபர்களுக்கும், மூக்கு உட்புறம் வறண்டு போவதிலும், வாய் வறண்டு போகும் நிலையிலும், திக்கு வாயிலும், கண் இமைகள் பிரித்து விரிக்க முடியாத உபாதையிலும், தோள் பட்டை சதை காய்ந்து போவதால் கைகளை உயர்த்த முடியாத கஷ்டத்திற்கும் நல்ல பலனை உண்டாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்த ப்ரம்ஹண நஸ்யம் தங்களுடைய பேத்திக்கு குணமளிக்க ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? என்று முயற்சி செய்து பார்க்கலாம்.

கண் உபாதைக்குத் தக்கவாறு மருந்துகளைத் தேர்வு செய்து தயாரிக்கப்பட்ட கொழுப்பு அல்லது நெய் மருந்துகள், மருந்துகளை அரைத்து உருண்டையாக்கி அந்த கொழுப்பு அல்லது நெய் மருந்துகளுடன் கலந்து உசிதமான கஷாயமும் சேர்த்து, ஆடு, முயல், வெள்ளை நிறப்பன்றி, அவற்றின் இரத்தம் ஆகியவை கலந்து கூட்டாக சேர்த்து செய்யப்படும் ப்ரம்ஹண நஸ்யம் பயன்படுத்த உகந்ததாகும்.

மேற்குறிப்பிட்ட மூக்கில் மருந்துவிடும் முறையால், கண்களைச் சார்ந்த அழுக்குகள் ஏதேனும் இருந்தால், நெகிழ வாய்ப்பிருக்கிறது. அதைச்  சரி செய்து கொள்ள திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் திரவமான மருந்தை கண்ணில் சிறிது தாரையாக ஊற்றுவது, ஆச்யோதனம் எனும் சிகிச்சை முறையாகும். இதனால் கண்ணில் உண்டாகும் வலி, குத்தல், அரிப்பு, உறுத்தல், நீர்க்கசிவு, அழற்சி, சிவப்பு ஆகியவை நீங்கும்.

அஞ்சனம் எனும் கண்களில் மை எழுதுதல் எனும் சிகிச்சை முறையும் ஆயுர்வேதம் கண் நோய்களுக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு தரக்கூடியது என்றும் கூறுகிறது. கண்ணில் ஏற்படும் வீக்கம், அதிக அரிப்பு, பிசுபிசுப்பு, உறுத்தல், கசிவு, சிவப்பு இவை குறைந்து பீளை அதிகரித்தல், பித்தம், கபம், இரத்தம் மற்றும் விசேஷமாக வாயுவால் ஏற்பட்ட உபாதைகள் ஆகியவற்றில் நல்ல பலனைத் தரக்கூடியது.

மேற்குறிப்பிட்ட ஆச்யோதன அஞ்சன பிரயோகங்களால் கண்களுக்கு பலக்குறைவு ஏற்படலாம். அது நீங்க தர்ப்பண புடபாகம் எனும் சிகிச்சை முறைகளாலும் கண்களுக்கு வலுவூட்டலாம். கண்கள் வாட்டமடைதல், தம்பித்தல், காய்ந்திருத்தல், வடுபோதல், அடிபட்டிருத்தல், வாத பித்த தோஷங்களால் வருத்தமடைதல், கண்கள் வளைந்திருத்தல், இமைமயிர் உதிர்தல், கலங்கிய பார்வை, சிரமப்பட்டு கண்விழித்தல், வெண்பகுதியில் சிவந்த கோடுகளுடன் வீக்கம், வேதனை, எரிச்சல் காணப்படுதல், எந்நேரமும் கண்ணீர் ஒழுகுதல், கண்பார்வை மங்குதல், வெண்பகுதியில் சிவப்புப்புள்ளி காணப்படுதல், கண்கூசுதல், மென்னி, கண்பொட்டு அல்லது மற்ற இடங்களிலிருந்து கண்ணில் வேதனையைத்தோற்றுவித்தல், புருவத்திலும் கண்ணிலும் வாயு மாற்றி மாற்றிச் சென்று விசேஷமாகக் கடுமையான வேதனை, குத்தல், கிளர்ச்சி  இவை அடங்கிய நிலையில் யவை எனப்படும் வாற்கோதுமையுடன் உளுந்து சேர்த்து அரைத்து, கண்களில் வெளிப்புறத்தில் இரண்டு அங்குல உயரத்திற்கு சமமாக வரம்பு ஒன்று உறுதியாக அமைத்து, நோய்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட நெய்யை நீராவியில் உருக்கி, கண்களை மூடச் செய்து ஊற்றுவதால் பேத்திக்கு நிவாரணம் கிடைக்குமா என்பதை செய்து பார்த்தால்தான் தெரிய  வாய்ப்பிருக்கிறது. 

கண்களை வலுப்படுத்துவதற்கான சில விசேஷ பயிற்சி முறைகளும் உள்ளன. அவற்றையும் சற்று நிதானமாகச் சொல்லிக் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்துவந்தாலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசில மருந்துகளை உள்ளுக்குச் சாப்பிட்டு, முன் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளையும் செய்வதால், கண்சார்ந்த உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கலாம். இவை அனைத்தும் செய்து குணமடையாவிட்டால், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/aug/03/ஆயுர்வேதத்தில்-கண்-நோய்க்கு-மருந்து-2749736.html
2745116 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் இந்துப்பின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, July 27, 2017 04:32 PM +0530 'சேந்தாநமக்' என்ற பெயரில் தற்சமயம் ஓர் உப்பு விற்கப்படுகிறது. விசாரித்ததில் அது  இந்துப்பு என்று கடையில் கூறினார்கள். இந்துப்பைப் பற்றிய விவரம் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளதா? இதன் மருத்துவகுணங்கள் எவை? மற்ற உப்புகளிலிருந்து இது எவ்வாறு மாறுபடுகிறது? 

- கோ.ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

"அஷ்டாங்கஹ்ருதயம்' எனும் ஆயுர்வேதநூலில் உப்பினுடைய பொது குணம் பற்றிய வர்ணனையில் எல்லா உப்புக்களும் கபத்தை இளக்கும், உட்புறக் குழாய்களில் துளைத்துக் கொண்டு ஊடுருவிச் செல்லும் தன்மை உடையவை. மலச்சிக்கல் உபாதையைப் போக்கக் கூடியவை. மிருதுவான தன்மையுடையவை. குடல் வாயுவைக் கட்டுப்படுத்தும். எளிதில் செரிக்கும். சூடான வீரியம் கொண்டவை. நாக்கிலுள்ள ருசிக்கோளங்களைத் திறந்து ருசியை உண்டு பண்ணுபவை என்றும், கபம் மற்றும் பித்த தோஷங்களைத் தூண்டிவிடும் தன்மை உடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. 

நீங்கள் குறிப்பிடும் சேந்தாநமக் எனும் இந்துப்பானது,  சிறிது இனிப்பான சுவையுடையது. ஆண்மையைப் பெருக்கும். இதயத்திற்கு நன்மை செய்யும். மூன்று தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களைப் போக்கும். எளிதில் செரிக்கும். சிறிதே உஷ்ணவீரியம் உள்ளது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது. பசியைத் தூண்டிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற உப்புக்களை விட இந்துப்பு கண்களுக்கு நல்லது. ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயாரிப்புகளில் இந்த இந்துப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் அந்த மருந்தினுடைய வீரியமானது வேகமாக உட்புற உடலில் எடுத்துச் செல்லப்பட்டு வேலை செய்வதற்கு உதவுகிறது.

உதாரணத்திற்கு ஹிங்குவசாதி எனும் சூரணமருந்தில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் இதய உபாதைகள், விலாவலி, கழுத்தினுடைய குருத்தெலும்பு மற்றும் இடுப்பிலுள்ள வில்லைகளில் ஏற்படும் வலி ஆகியவற்றை இந்த சூரணமருந்து நீக்குகிறது. மாதவிடாயின் பொழுது ஏற்படும் கருப்பை வலி மேலும் ஆசனவாய் வலி, வாயு மற்றும் கபங்களால் ஏற்படும் குடல் உபாதைகள் ஆகியவற்றை நீக்கும். மலம் மற்றும் சிறுநீரை விடுவிக்கும் தன்மையுடையது. நெஞ்சுபிடிப்பு, சோகை, உணவில் விருப்பமின்மை, மூலம், விக்கல், விதைவாதம், மூச்சிரைப்பு, இருமல், பசியின்மை ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை இந்துப்பினால் மேம்படுத்தப்படுகிறது. 

நாக்கில் ருசி, பசி ஆகியவை இல்லாமல் குடல் வாயுவினாலும், மலச்சிக்கலினாலும் அவதியுறும் நபர்களுக்கு கந்தர்வஹஸ்தாதி எனும் கஷாயம் கொடுக்கப்படும் தறுவாயில் அதில் இந்துப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகைச் சேர்த்துக் கொடுக்கப்படுவதால் மருந்தினுடைய செயல்பாடானது குடலில் துரிதப்படுத்தப்படுகிறது. சிரிவில்வாதி எனும் கஷாயம் வெளிமூலம் மற்றும் உள்மூல பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படும்போது இந்துப்பு சேர்த்தே கொடுப்பது வழக்கம். இதனால் மூலத்தில் ஏற்படும் வலி, மலச்சிக்கல் ஆகியவை விரைவில் நீங்குவதோடு பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். 

வைஷ்வானரம் எனும் சூரண மருந்திலும் இந்துப்பு ஒரு முக்கிய மருந்தாகச் சேர்க்கப்படுகிறது. அரை, ஒரு ஸ்பூன் இந்த சூரண மருந்தை சிறிது வெந்நீருடன் கலந்து காலை, இரவு உணவிற்கு அரைமணி முன் சாப்பிடுவதால் குடல் சார்ந்த வாயு உபாதைகள் பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை நீக்கப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுபோலவே, அஷ்டசூரணம் எனும் ஆயுர்வேத மருந்திலும் இந்துப்புச் சேர்க்கப்படுவதால் குடலில் வாயு  பந்து போன்று உருண்டு ஒருபகுதியில் உந்தப்பட்டு பெரிதாகக் காணப்படும் உபாதையையும்,  பசியின்மையையும் குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இந்துப்பு தற்சமயம் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு கடைகளில் கிடைக்கிறது. இதை பழங்களை நறுக்கி அதில் தூவியும் சாப்பிடலாம். பழங்களால் ஏற்படும் குளிர்ச்சியும், கனமான தன்மையும் இந்துப்பினால் நீக்கப்பட்டு விரைவில் செரிமானத்திற்கு உதவுகிறது. கண்களுக்கு நல்லது என்பதால் பல ஆயுர்வேதக் கண்சொட்டு மருந்துகளிலும் இந்துப்பு சேர்க்கப்பட்டே தயாரிக்கப்படுகின்றன. ஒரு சிட்டிகை இந்துப்பைச் சூடாக்கப்பட்ட மூலிகைத் தைலங்களில் சேர்த்து நன்றாகக் கரைத்து அதன் பின்னர் வலியுள்ள மூட்டு போன்ற பகுதிகளில் தடவினால்,  சிறந்த வலிநிவாரணியாக அந்தத் தைலம் செயல்படும். 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை -  600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jul/27/இந்துப்பின்-மருத்துவ-குணங்கள்-பற்றி-அறியலாம்-2745116.html
2715506 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் உண்ணாதீர்கள்... பகைப் பொருட்களை! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, June 8, 2017 12:00 AM +0530 பாலுடன் மீன், உளுந்துடன் தயிர், இரவில் தயிர், உப்புடன் பால்பொருட்கள் போன்றவை பகைப்பொருட்கள் என்று எழுதியிருந்தீர்கள். அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன நேரும்? என்னென்ன வியாதிகள் வரும்? ஏனெனில் என் மனைவி (5 அடி 90 கிலோ), மகன் (5. 6 அடி எடை 105கிலோ) இருவரும் இரவிலும் பகலிலும் இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கெட்டித்தயிர் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. இதனால் என்ன கெடுதிகள் ஏற்படும்?  

சந்தான கோபாலன், சென்னை-8.

ஒன்றோடு ஒன்று சேராத உணவுப்பொருட்களைச் சாப்பிடும் போது அவை பகைப் பொருட்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அவற்றை உண்ணும்போது - உடலில் உள்ள தோஷங்களாகிய வாத- பித்த- கபங்களை அவை இருக்கும் இடத்திலிருந்து நெகிழ வைத்துக் கிளறி விட்டு அதை முற்றிலும் வெளிப்படுத்தாமல் உடலிலேயே தேக்கி வைக்கும் பொருள்களே பகைப்பொருட்கள் எனப்படும். அந்த பொருட்கள், மனிதர்களுக்கு ஆதாரமாகி உடலின் நிலையை நிறுத்தக் கூடிய ஏழு தாதுக்களான- ரஸம், ரக்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, மற்றும் விந்து ஆகியவற்றிற்கு எதிரிடையானவை. இரு உணவுப்பொருட்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று விஷமமாயிருந்தால் (எதிரிடையானது), சமமாயிருத்தல் (மாறுபடாத ஒரே தன்மையுடையது),

சிலகுணங்கள் சமமாகவும், சில விஷமமாகவும் கலந்திருத்தல், மேலும், செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை அதுபோல் இயற்கையாகவே ஒவ்வாதிருத்தல் ஆகிய காரணங்களால் பகைமை ஏற்படுகிறது. 

 இவற்றிற்கு உதாரணமாக - பால், கொள்ளுடன் விஷம குணம் கொண்டிருப்பதால் பகையாகிறது. பால், பலாப்பழத்துடன் சம குணங்களால் பகையாகிறது. பால், மீனுடன் சில விஷமமாகவும் சில சமமாகவுமுள்ள குணங்களால் பகையாகிறது.

தயிரைச் சூடாக்குவது செய்முறையால் பகை குணமாகும். சம அளவில் தேனும் நெய்யும் சேர்ப்பது அளவால் எதிரிடையானது. உவர்ப்பு நிலமும் நீரும் தேசத்தால் ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை. இரவில் சத்துமாவைப் புசிப்பது காலத்தால் தீமையானது. இதே சத்துமாவை இடை இடையே நீர் அருந்திச் சாப்பிட்டால் சேர்க்கையால் பகைகுணமாகிறது. இயற்கையாகவே வாற்கோதுமை அல்லது பார்லியைத் தனியாக சமைத்துப் புசித்தாலும் கேடுவிளைவிக்கும்.

 பகைமையிலுள்ள பொருட்களாலான உணவு, வைசூரி, உடல்வீக்கம், வெறி, பெரியகட்டி, குன்மம், எலும்புருக்கி நோய் போன்றவை ஏற்படுத்தும். உடல் ஒளி, வலிமை, நினைவாற்றல், அறிவுப்புலன், மனோபலம் ஆகியவற்றை அழித்து, காய்ச்சல். இரத்தக்கசிவு, எண்வகைப் பெருநோய்களான- வாதநோய், மூலம், குஷ்டம், நீரிழிவு, பவுத்திரம், நீர்ப்பீலிகை, கிராணி, நீரடைப்பு ஆகியவற்றைத் தோற்றுவிக்கும். நஞ்சைப் போல உயிரையும் மாய்க்கும்.

 மேற்குறிப்பிட்ட உபாதைகளை நீக்குவதற்குத்தக்க மருந்துகளைப் பயன் படுத்தி, வாந்தி செய்வித்தல், பேதிக்குக் கொடுத்தல் போன்றவற்றை விரைவில் செய்து, உடலைச் சுத்தம் செய்ய வேண்டும், அல்லது அத்தகைய பகைமைப் பொருட்களுக்கு எதிரிடையான பொருட்களால் நோயைத் தணிக்கச் செய்வது அல்லது அந்தப்பொருட்களைக் கொண்டே முன்னதாக உடலைப் பண்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. 

பகைப்பொருட்களும் சிலருக்கு தீமையை உண்டு பண்ணுவதில்லை. உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதை உடையவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் பகைப்பொருட்கள் தீங்கை விளைவிப்பதில்லை. அதுபோலவே உடலுக்கு ஏற்ற உணவும், அளவில் குறைந்த உணவும் கூட விரோதகுணம் உள்ளதாயினும் கெடுதலைத் தருவதில்லை.

தீங்கிழைக்கும்  இயல்புள்ள பொருட்களை உண்ணும் பழக்கத்தை நீக்க, முன்பு உண்ட பொருளில் நாலில் ஒரு பங்கை அல்லது சிறிது சிறிதாகக் குறைத்து அதற்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படியே இடையில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என முறையே விட்டுவிட்டு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் தோஷங்கள் விலகிக் குணங்கள் வளர்கின்றன. தீங்கும் ஏற்படுவதில்லை.
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jun/08/உண்ணாதீர்கள்-பகைப்-பொருட்களை-2715506.html
2559959 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் அரிப்புக்குக் காரணம்... உட்புறக் கழிவுகள்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Monday, September 26, 2016 04:07 PM +0530 என் வயது 71. ஓய்வூதியர். இரண்டு கை மணிக்கட்டு, புறங்கைப் பகுதிகளில் அரிப்பு அதிகமாக இருக்கிறது. பிடறியிலும் அதே அறிகுறி உள்ளது. இதற்கான சிகிச்சைமுறையைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 த.நாகராஜன், சிவகாசி.

வயோதிகத்தில் உப்புசத்து உடலில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகங்களின் வழியாக வெளியேற வேண்டிய தேவையற்ற உப்பு மற்றும் தாதுப்பொருட்கள் தேக்கமடைந்தால் அது உடலில் எந்த பகுதி தளர்ந்திருக்கிறதோ, அந்தப் பகுதியில் குடிகொண்டு அரிப்பை ஏற்படுத்தும். அதனால் வெளிப்புறப்பூச்சுகள் மட்டும் இதில் பயன்பெறுவதில்லை. திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமச்சீரான நிலையில் நோய்கள் ஏதும் தோன்றுவதில்லை என்றும், அவற்றில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமுமே நோயாக மாறுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அந்தவகையில் வாயு அதிகரிக்கக் கூடிய வயதில் தங்களுக்கு கபத்தினுடைய சேர்க்கையும் சேருமானால் அதுவே தோலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். இவ்விரு தோஷங்களையும் சமநிலைப்படுத்தக் கூடிய ஏலாதி என்ற பெயரிலுள்ள தைல மருந்தை காலை, மாலை இருவேளை வெளிப்புறப் பூச்சாகப் பயன்படுத்தி சுமார் அரை  மணிநேரம் ஊற வைத்து ஏலாதி சூரணம் என்ற மருந்துடன் கடலை மாவு கலந்து தயிர் மேலில் நிற்கக் கூடிய தண்ணீருடன் குழைத்து அந்த எண்ணெய்ப் பசையை அகற்றுவதற்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

உட்புற உறுப்புகளின் செயல்திறன்பாடானது குறையும் பட்சத்தில் இந்த உபாதை தோல்புறத்தில் பிரதிபலிக்கலாம். அதிலும் முக்கியமாக குடலின் உட்புற சவ்வுகளில் தேங்கும் அழுக்கினால் தோல் அரிப்பு ஏற்படும் என்றும் ஒரு வினோதமான குறிப்பை ஆயுர்வேதம் வெளிப்படுத்துகிறது. அதனால் குடல் சுத்தம் தாதுக்களில் படிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள், மலம், சிறுநீர், வியர்வை ஆகிய பகுதிகளைத் தாங்கக் கூடிய பை மற்றும் குழாய்களில் படியும் படிவங்களையும் நீக்கினால் வெளிப்புறத்தில் ஏற்பட்டுள்ள தோல் அரிப்பானது மறைந்துவிடும். குடல் சுத்தத்தை நேரடியாகச் செய்யக்கூடாது என்ற நியமம் இருப்பதால் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய திக்தம் அல்லது மஹாதிக்தகம் ஆகியவற்றில் ஒன்றை சுமார் பதினைந்து மில்லி லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட உட்புறபடிவங்களை நெகிழ வைத்து அவற்றைக் குடலுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு இந்த நெய் மருந்துகள் மாற்றித் தரும். நெருப்பினுடைய சம்பந்தமில்லாமல் வியர்வையை வரவழைக்கக் கூடிய கம்பளியைப் போர்த்திக் கொள்ளுதல், வேகமான நடைப் பயிற்சி, சிலம்பாட்டம் போன்றவற்றின் மூலமாக நன்றாக வியர்வையை உடலில் ஏற்படுத்தி அதன்மூலம் உட்புறக் கழிவுகளை திரவமாக்கி குடல் உட்புறப் பகுதிகளில் விரைவாக எடுத்துச் செல்லும் வழியை இந்த வியர்வையின் மூலமாகப் பெறலாம். குடல் பகுதியில் குவிந்துள்ள அழுக்குகளை ஆசனவாய் வழியாக நீர்பேதியாக வெளியேற்றும் த்ரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம், மிஸ்ரகஸ்நேஹம், மாணிபத்ரம் குடம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு அதன் மூலம் பெறும் குடல் சுத்தமானது தோலில் ஏற்பட்டுள்ள அரிப்பை நீக்குவதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். அரிப்பு குறைந்தாலும், வேப்பெண்ணெய்யைச் சிறிதுகாலம் இளஞ்சூடாக அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசி அரை முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு குளிக்கலாம்.

 உணவில் புளித்த தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு, உளுந்து சேர்க்கக் கூடிய இட்லி, தோசை, வடை, புலால் உணவு, பகல் தூக்கம், கனமான பொருட்களாகிய மைதா, பன்-பட்டர்-ஜாம், பிஸ்கட்டுகள், இனிப்பு வகைகள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை. குடிக்கக்கூடிய தண்ணீரையும் ஒரு மூலிகைத் தண்ணீராக மாற்றினால் சிறப்பாக அமையும். அந்தவகையில் கருங்காலிக் கட்டை, சரக்கொன்றைப்பட்டை, நன்னாரிவேர்ப்பட்டை ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒருநாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகுவதால் குடல் உட்புற சுத்தம் பெறுவதுடன் இரத்தமும் சுத்தமாகும். அங்குமிங்கும் ஒட்டியிருக்கக் கூடிய கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் போன்ற குணங்களுக்கு நேரெதிராகச் செயல்பட்டு அவற்றை நீர்க்கச் செய்து சிறுநீர் மலம் மற்றும் வியர்வையின் மூலமாக இந்த தண்ணீரே வெளியேற்றிவிடும் சிறப்பு வாய்ந்தது. நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, வில்வமரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தண்ணீரை, குளிப்பதற்காக பயன்படுத்தினால் அரிப்பு குறைவது திண்ணம்.
 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

]]>
https://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2016/sep/06/அரிப்புக்குக்-காரணம்-உட்புறக்-கழிவுகள்-2559959.html