Dinamani - உடல்நலம் காக்கும் ஹோமியோபதி - https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2807745 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி டாக்டர் வெங்கடாசலம் DIN Tuesday, November 14, 2017 11:27 AM +0530 தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது. மனிதனின் உணர்வுடன் கூடிய உழைப்பிற்கு வடிவம் தரக் கூடியது கட்டைவிரல். மகாபாரதத்தில் போர்க்கலை வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் குருதட்சணை என்ற பெயரில் உயர்ஜாதி ஆதிக்கத்திற்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான். 

பாரதத்தில் நேர்த்தியான கைத்தறி நெசவு காரணமாக அன்னியத் துணிகளை விரிவாக விற்பனை செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டை விரல்கள் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் மனிதாபிமானமின்றி துண்டிக்கப்பட்டதை இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தக்கறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் லட்சியக் கனவுகள் எல்லாம் கட்டைவிரல் இல்லாமல் நனவாக முடியுமா?

கட்டைவிரலில் வலிக்கிறது’ என்று சிகிச்சைக்கு வந்தார் ஒருவர். இடதுகையை நீட்டி, மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். வலியின் தன்மை, அதிகரிப்பு - குறைதல் குறித்த விவரம், இதரக் குறிகள் எல்லாம் விசாரித்தேன். ‘வேறு எந்தப் பிரச்சனையுமில்லை; இரண்டு, மூன்று மாதமாக இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை’ என்று சுருக்கமாகப் பதிலளித்தார். ஓரளவு கூட அவரைப் பற்றிய புரிதல் ஏற்படாமல் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான நிலை. 

ஓரிரு நிமிட இடைவெளி கடந்து, ‘உங்களைப் பற்றிய விவரங்களையும் வலியுடன் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களையும் நீங்கள் தெரியப்படுத்தினால் தான் உதவியாக இருக்கும்’ என்று கேட்டுக்கொண்டு, தாகம், நீர்,மலம், பசி... குறித்து விசாரித்தேன்.

மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக ‘வேறு எந்தப் பிரச்னையும் இல்லை; இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை என்று கூறியதையே கூறிமுடித்தார். சிகிச்சைக் குறிப்புகள் நூல்களில் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மருந்து கொடுத்தனுப்பினேன்.

ஒருவாரம் கழித்து வந்தபோது, ‘ஒரளவு மட்டும் வலி குறைந்துள்ளது’ என்றார். மேலும் ஒருவார மருந்து தரப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமும் மருந்தளிக்கப்பட்டது. நான்காவது வாரம் அவர் மீண்டும் வந்தபோது முகம் சற்று வாடியிருந்தது. ‘வலி எப்படி உள்ளது?’ என்று விசாரித்தேன். ‘முதல் வாரம் வலி குறைந்தது; இரண்டாவது வாரம் மேலும் கொஞ்சம் வலி குறைந்தது. இப்போது மூன்றாவது வாரம் மருந்து சாப்பிட்டபின் வலி மீண்டும் வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் இரவு தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து ஆடையும் படுக்கையும் பாழாகி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

‘இதுபோல் இதற்குமுன்னர் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்ட துண்டா?,’ என்று கேட்டபோது ‘இல்லையே! இப்போது சிலநாளாகத் தான் அப்படி உள்ளது. கொஞ்ச நாளாக கனவில் சிறுநீர்கழிப்பது போல் தோன்றும். ஆனால் தற்போது அந்த மாதிரிக் கனவு ஏற்படும்போது நிஜமாகவே சிறுநீரும் வெளிவந்து விடுகிறது’ என்றார்.

அவருக்கு மீண்டும் பழைய மருந்து தரவில்லை. கனவுக் குறியை மையமாகக் கொண்டு கிரியோசோட்டம் என்ற ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து கொடுத்தனுப்பினேன்.

அதன் பின்னர் அவர் நீண்டநாள் வரவேயில்லை. ஒருநாள் அவரது உறவுக்காரப் பெண்ணுக்குச் சிகிச்சை பெற அழைத்து வந்திருந்தபோது ‘கடைசியாக நீங்கள் எனக்குக் கொடுத்த மருந்தில் கையிலிருந்த வலி மறைந்துவிட்டது. இரவு உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் நின்றுவிட்டது’ என்று சொல்லிவிட்டு உறவுக்காரப் பெண்ணை அறிமுகப்படுத்தத் துவங்கினார்.

மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்-GANGLION

மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம்  அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது. (போயரிக் இதனை An encysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ  (on top of wrist), கீழ்ப்புறத்திலோ, விரல்கள் முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக் கூடும். இது நோயின் விளைவாக தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப் பை (cyst) இதனுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.

இந்த மணிக்கட்டு வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும் விகாரமாகவும் தெரியும். தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised)  மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப் பரவி வேதனை தரும்.

ஆங்கில மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச் சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy)  வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யேக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics) இல்லாமல், உடம்பில் தழும்பு ஏற்படுத்தாமல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம் பெற முடிகிறது.

மணிக்கட்டு நரம்பணு முடிச்சு வீக்கத்திற்கும் பயன்படும் முக்கிய முன்று மருந்துகள் 1.ரூடா (Ruta) 2. பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) 3. சிலிகா (Sililca). வீக்கத்துடன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர் வீரியம் அற்புதமான பலன் தருகிறது. இருப்பினும் ரூடா 30 மற்றும் 200C வீரியத்திலேயே விகிச்சையைத் துவங்கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர் வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப்பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்ஷியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியாகார்ப் மருந்தும் தேவைப்படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM  வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம் மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்தைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.

Ganglion வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியாகார்ப் போன்ற  மருந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும் உதவுகின்றன.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

]]>
Thumbs pain, wrist pain, homeopathy treatment, கட்டை விரல் வலி, மணிக்கட்டு வலி, ஹோமியோபதி சிகிச்சை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/14/w600X390/thumbs_up.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/nov/14/pain-in-thump-and-wrist-homeopathic-treatment-2807745.html
2803457 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி உங்கள் குழந்தை மண்ணை அள்ளி சாப்பிடுகிறதா? டாக்டர் வெங்கடாசலம் DIN Tuesday, November 7, 2017 12:13 PM +0530 மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. மண் மட்டுமின்றி சாம்பல், காகிதம், கோலப்பொடி, விபூதி, பல்பொடி, குச்சி, சாக்பீஸ், துணி என்று உண்ணத் தகாத பல பொருட்களை விரும்பி ருசித்துச் சாப்பிடும் குழந்தைகளை ஹோமியோபதி, லண்டன் மலர் மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து விரைவில் மாற்ற முடியும். 

பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயது நெருங்கும் சமயத்திலிருந்து இரண்டு வயது வரை கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும். அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்து இத்தகைய பழக்கத்துக்குட்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும். குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.

மேலும் அடித்தட்டு வர்க்க ஏழ்மை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் இப்பழக்கம் ஒப்பீட்டளவில் அதிகம் நிலவுகிறது. அதேபோல் நல்ல மனவளர்ச்சியுடன் உள்ள குழந்தைகள் உணவு அல்லாத இதரப் பொருட்களைத் தின்றாலும் உரிய காலத்தில் நிறுத்தி விடுகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இப்பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்கின்றனர். 

குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட் செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

மண்ணும் காகிதமும் தின்னும் பழக்கமுடைய நான்கு வயதுச் சிறுமியை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு மலம் மிக இறுகலாகவும் சற்று கருநிறமாகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலி தாங்காமல் அழுகிறாள். உணவையோ, திண்பண்டங்களையோ விரும்பி உண்பதில்லை. மண் தின்பதும் பேப்பர்களை மென்று ருசித்துத் தின்பதும் எவ்வளவு திட்டி அடித்த போதும் நிறுத்த முடியவில்லை. சில மாத காலம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வளர வளரச் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறிய வலுவற்ற கருத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தக் குழந்தைக்கு ஹோமியோபதியில் நைட்ரிக் ஆசிட் என்ற மருந்தும், மலர் மருத்துவத்தில் செர்ரிப்பழம் மற்றும் வால்நட் போன்ற  மருந்துகளும் கொடுக்கப்பட்டது. பத்து நாட்களில் குழந்தையின் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. மேலும் சில நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தபின் சிறுமி முழு நலம் அடைந்தாள். அவள் இப்போது மண், காகிதம் உண்பதில்லை. உணவை விரும்பி சாப்பிடுகிறாள். மலச்சிக்கல் தொந்தரவோ, வலிகளோ இல்லை. பெற்றோருக்கும் நிம்மதி.

மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை, சந்தோஷம், பயம், தாழ்வு மனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறை கூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் மலர் மருந்துகள் அற்புதமாக பயனளிக்கின்றன. சிறுவர்களிடம் காணப்படும்  திருட்டு, புகை, குடிப்பழக்கம் போன்றவற்றையும் மலர் மருந்துகளால் மாற்ற இயலும். குழந்தைகளுக்கு மட்டுமன்றி எந்த வயதினருக்கும் இம்மருந்துகள் பயன்படும். எதிர்மறையான இயல்புகளை நீக்கி மனநலத்தையும், உடல்நலத்தையும் அளிப்பதே இவற்றின் சிறப்பம்சம்.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் Cell : 94431 45700
Mail : alltmed@gmail.com

]]>
child eats mud, homeopathy, மண், காகிதம், குழந்தை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/7/w600X390/dirty_child_playing_outside.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/nov/07/child-eating-mud-homeopathy-remedies-2803457.html
2799154 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மார்பக அழற்சி (Mastitis) என்றால் என்ன? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, October 30, 2017 10:00 AM +0530 ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. 

மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனத்திற்கும் பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது ஹோமியோபதி. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோமியோபதி கூறுகிறது. 

உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவு, பாதிப்புகளால் வெளிப்படும் அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மனக்குறிகள் [Mental Symptoms]. இரண்டாவது, உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புறக்குறிகள் [Physical Symptoms] இவைகளைத் தொகுத்து குறிகளின் முழுமைக்கு பொருந்தக் கூடிய ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுப்பதால் நோயாளி உடலாலும் மனதாலும் முழுமையாக, நிரந்தரமாக குணமாகிறார். 

பெண்களுக்கு பயன் தரக் கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிக அளவு உள்ளன. பருவமடைந்த காலம் முதல் மாதவிலக்கு நிற்கும் காலம் வரை [from menarche to menopause] ஏற்படக் கூடிய பெண்களின் உடல் நலப் பிரச்சனைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாத நிலையில், தங்கள் பிரச்சனைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருக்கும் பெண்கள் பலர். 

கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் செய்துகொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்றைக்கு இங்குள்ள சமூக அமைப்பில் ஒரு பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படும். எனவே பெண்கள் தங்கள் நலத்தை பற்றி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. 

மற்ற மருத்துவ முறை கைவிட்ட, சிக்கலான, பெண்களின் நாள்பட்ட வியாதிகளைக் கூட ஹோமியோபதியில் எளிமையாக, இயற்கையான வழி முறைகளில் குணப்படுத்த முடியும். எனவே பெண்கள் தங்களுக்கு எந்த உடல்நல, மனநலப் பிரச்சனைகளாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு ஹோமியோபதி மருத்துவத்திற்கு வரலாம். 

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் 13-லிருந்து 15 வயதிற்குள் பெண்கள் பருவமடைந்து விடுகின்றனர். ஒரு சில பெண்கள் உரிய வயது கடந்தும் பருவமடைவதில்லை. அவர்களது உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பல மருந்துகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் ரத்த பரிசோதனையை வைத்தோ, மற்ற மருந்துகளைத் தேர்வு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை விருப்பு, வெறுப்பு பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பு, நடவடிக்கைகள், குடும்பப் பின்னணி, அப்பெண்ணைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து அதன் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கும் போது அந்தப் பெண்ணுக்கு விரைவில் முதல் மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. 

பெரும்பாலான பெண்களுக்குள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Menses). இந்தப் பிரச்சனையும் பெண்ணுக்குப் பெண் மாறுகிறது. எனவே மருந்தும் மாறுபடுகிறது. முந்திய மாதவிடாய் (Early Menses), பிந்திய மாதவிடாய் (Late Menses), பெரும்பாடு-எனப்படும் அதிகளவு மாதப்போக்கு ஏற்படுதல், மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலியும், உடல் வலிகளும் ஏற்படுதல், ரத்தப் போக்கின் நிறத்திலும், தன்மையிலும் மாறுபாடு என்பவை எல்லாம் கர்ப்பப்பை இயக்கம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகள். 

கர்ப்பப்பையின் இயக்கம், செயல்பாடுகளை மையமாக வைத்தே பெண்களின் ஆரோக்கியம் அமைகிறது. எனவே கர்ப்பப்பை சார்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தாமதமின்றி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

திருமணமான பின் ஏறக்குறைய ஓராண்டுக்குள் கருத்தரிக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவருமே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பெண்களைப் பொறுத்தவரையில் மலட்டுத்தன்மையை நீக்கித் தாய்மைக்குரிய தகுதியை ஹோமியோபதி மருந்துகள் மூலம் பெறலாம்.

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பலவீனம் மற்றும் இரத்தசோகை காரணமாகவே ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. கர்ப்பப்பை பலவீனத்தைப் போக்க மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த Caulophyllum, pulsatilla, Nat.mur, Sepia போன்ற பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன. 

சினைப்பையில் (Ovary) அல்லது கர்ப்பப்பையில் (Uterus)பலவித கட்டிகள், இயற்கைக்குப் புறம்பான வளர்ச்சிப்போக்குகள் (Cysts, Fibroids, Tumors) ஏற்பட்டு அதனால் மலட்டுத்தன்மை உருவானாலும் ஹோமியோபதி மருந்துகள் அவற்றை அகற்றி முழுமையான நலமளிக்கும். மலட்டுத்தன்மையை மாற்றுவதற்கான ஆபரேஷன், செயற்கை முறைக் கருத்தரிப்போ எதுவும் தேவைப்படாது. 

கர்ப்பகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை MORNING SICKNESS என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் இது காலை நேரத்திலேயே ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி நாள் முழுதும் கூட நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தி வருவது இயல்பானதே.

இருப்பினும் நீண்ட நாட்களுக்கு வாந்தி நீடித்தால் அது பெண்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். உணவு மீது வெறுப்பு ஏற்படும். இதனால் தாய் பலவீனமடைந்து கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேராமல் எடையிழப்பு ஏற்படும். இதனால் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு உபாதைகளுடன் பிறப்பது நேரிடுகிறது. மேலும் தாயின் உடலில் நீர்ச்சத்து குறைந்து அபாய நிலை ஏற்படுவதும் உண்டு.இதற்கு அலோபதி முறையில் நிறைய மருந்துகள் இருந்தாலும் ஹோமியோபதியில் பக்க விளைவுகள் இல்லாத, கர்ப்ப காலத்தில் உடலின் பிற நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. உணவின் வாசனையே பிடிக்காதபோது, உணவு மீது வெறுப்பு ஏற்படும்போது காக்குலஸ் கோல்சிகம், இபிகாக், செபியா ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும். சிம்போரி கார்பஸ் – என்ற ஹோமியோ மருந்து கர்ப்ப கால வாந்திக்கு  பிரத்யேகமானது.

கர்ப்ப காலத்தின் இடை மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு, மலச்சிக்கல், மூலம், அசுத்த இரத்தக்குழாய் வீக்கம், திடீரென ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் எளிமையாக, மென்மையாக குணப்படுத்தலாம். மேலும் ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள், பின் விளைவுகள் இல்லாததால் பாதுகாப்பானவை. கர்ப்பப் பையிலுள்ள கருவிற்கும், கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது ஹோமியோபதி. 

பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனையும் உடனுக்குடன் நீங்கி சுகப் பிரசவம் ஏற்படச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உதவுகின்றன. பிரசவித்த தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பதேயில்லை. அல்லது குறைவாகச் சுரக்கும் நிலை இருக்கும். அதனால் குழந்தை பிறந்த நாட்களிலேயே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தாய்மார்கள் போதுமான அளவு பால் சுரப்பதற்கு ஹோமியோபதியில் மருத்துவம் செய்து கொள்வது அவசியம். 

மார்பகப் பராமரிப்பிலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும். கட்டிகளோ, சினைப்புகளோ, வீக்கமோ, வலியோ, காம்புகளில் வெடிப்போ, புண்களோ காணப்பட்டால் கை வைத்தியம் செய்து அப்படியே விட்டு விடக்கூடாது. மார்பகக் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. ஹோமியோ சிகிச்சை மூலம் அவற்றை கரைத்து குணப்படுத்தி மீண்டும் கட்டிகள் வராமல் செய்ய முடியும். மார்பக அழற்சி (Mastitis) காரணமாக ஏற்படும் கல் போன்ற இறுக்கத்தால், வீக்கத்தால் துணி பட்டால் கூட தாங்க முடியாத வலி சிலருக்கு ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணம் மட்டுமல்லாமல் முழு குணமும் பெற ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது. ஹோமியோபதி மருத்துவம் பெண்களின் நம்பகமான, உற்ற தோழியாகத் திகழ்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் Cell : 94431 45700
Mail : alltmed@gmail.com

]]>
Mastitis, Homeopathy, ஹோமியோபதி மருந்துகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/31/w600X390/homeow.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/oct/30/signs-of-mastitis-2799154.html
2794727 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மாயத் தோற்றங்கள்! மாயக் குரல்கள்! மனச்சிதைவு நோயின் மர்மங்கள்!! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, October 23, 2017 10:00 AM +0530 நாதன் என்ற பட்டதாரி இளைஞன் ஒருவிதக் கலவரத் தோற்றத்துடன் அறைக்குள் நுழைந்தான். அவன் ஒரு பலசரக்கு கடை உரிமையாளரின் மகன். அப்பாவிற்கு உடல்நலமில்லாத நாளில் அவன் கடையில் அமர்ந்திருந்த போது, திடீரென ஏற்பட்ட உள்ளுணர்வின் உந்துதலால் கடையை விட்டு வெளியேறி, மிக விரைவாக மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

அவனைக் காவல்துறையினர் வலை வீசித் தேடி வருவதாகவும், தற்போது தனது கடையை அவர்கள் நெருங்கி விட்டதால் தான் தப்பித்து வந்ததாகவும் பீதியுடன் கூறினான். தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருமே தனக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அவர்களால் தனக்கு ஏதோ ஓர் தீங்கு நேரப் போகிறது என்றும்  அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் பதற்றத்துடன் கூறினான். மேலும் அதற்கான காரணங்களைக் கேட்டால் அவனால் தர்க்கப்பூர்வமாக சரியாக எந்தக் கருத்துக்களையும் விளக்கிச் சொல்ல முடியவில்லை.

மட்டுமின்றி, தன்னை யாரோ ஒருவர் மறைமுகமாக, ஆனால் மிக அருகில் இருந்து கொண்டே, சில காலமாக இயக்கி வருவதாகவும், தனக்கு உத்தரவிட்டு வருவதாகவும், அந்த உத்தரவை தன்னால் மீற முடியவில்லை என்றும் கூறி கண் கலங்கினான். அந்த இளைஞனின் பெற்றோரை வரவழைத்து அவனைப் பற்றிய பல விவரங்களை கேட்டறிந்த பின் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மாத காலத்தில் அந்த இளைஞன் நலம் பெற்றான்.

***

சரஸ்வதி என்ற இளம் பெண்ணை அவளது பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவள் வேலை பார்த்த ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர் அவளைத் தவறான நோக்கத்தில் பேசி, தொட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும் பெற்றோரிடம் வலியுறுத்தவே, அவர்கள் அதே கடையில் பணி புரியும் மற்ற இரண்டு பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  சரஸ்வதியின் சமீபத்திய பேச்சு, செயல், நடத்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவளது தோழிகள் மூலம் அறிந்து மனவேதனை அடைந்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவத்தை நடந்தது போல் அவள் கூறியதை தோழிகள் நம்பவில்லை. உரிமையாளர் எவ்வளவு கண்ணியமானவர் என்பதை அவர்கள் எடுத்துரைத்த பின்னர் தான் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அவள் சொன்ன தகவல்களையும் அவள் பரிசோதனையின் போது நடந்து கொண்ட விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது அவள் ஓர் முதிர்மன நோயால்[psychosis] பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சரஸ்வதியின் எண்ணவோட்டங்களையும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவளது சந்தேகக் குணமும் புனைவு நம்பிக்கைகளும் நீங்கி, மீண்டும் முழு மனநலம் பெற்றாள்.

***

அப்பா அரசியல்வாதி. ஊரெல்லாம் மேடைமேடையாய் முழங்கி வரும் அவருக்கு வாயில்லா பூச்சியாய், கூச்ச சுபாவமுள்ள மகனாய் முப்பது வயது பாஸ்கரன். உறவினர்களிடம் அல்லது குழந்தைகளிடம் கூட சிரித்துக் கல்கலப்பாகப் பேசியது கிடையாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதும், மிகக் குறைந்த சத்தத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் தான் முழு நேரப் பணி.

எல்லோரும் கண்கூடாகப் பார்க்கும் வண்ணம் திடீரென அவனது செயல்பாடுகளில் சில மாற்றங்கள் நடந்தன. தனக்குத் தானே பேசுவது, யாருக்கோ சைகையில் பேசுவது போல் ஜாடை காட்டுதல், அழுதல், கண்ணீர் விடுதல், அறை மற்றும் குளியலறையின் அனைத்து ஜன்னல்களையும் மூடுதல், சில சமயம் பெற்றோரிடம் கண்மூடித்தனமாகக் கோபப்படுதல் போன்றவைகளால் பெற்றோரும் சகோதரர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும்,  தனது பிரச்னைகள் தெரியாமல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் விரைவில் தான் கொல்லப்படவிருப்பதாகவும் அவன் கூறிய போது குடும்பமே பீதிக்குள்ளானது. சில மாத சிகிச்சைக்குப் பின்னர் பாஸ்கரன் நலமடைந்தான்.

***

ஒரு நடுத்தர வயதுப் பெண். நான்கு இளைஞர்கள் சில ஆண்டுகளாக தன்னைப் பின் தொடர்வதாகவும், தெருவில், கடைகளில் பொருள் வாங்கும் நேரங்களில், ஹோட்டலில் சாப்பிடும் நேரங்களில் தொந்தரவு செய்வதாகவும், தெருவுக்கு வந்தாலே தன்னைப் பின் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள் என்றும், பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் ஒரு நாள் போலீசில் புகார் செய்தாள். விசாரணை நடைபெற்றது. நான்கு இளைஞர்களும் குற்றமற்றவர்கள் என்பதும் இந்தப் பெண்ணுக்கு மன நோய் பாதித்துள்ளது என்பதும் ஊர்ஜிதமானது.

***

இவர்கள் எல்லோரும் மனச்சிதைவு நோயாளிகள். அதீத சந்தேகங்களும், மாயத் தோற்றங்களும், மாயக் குரல்களும் அவர்களை வாட்டி வதைக்கும். இத்தகைய மாய உணர்வுகளே மனச்சிதைவு நோய்களின் மிக முக்கியமான அறிகுறிகளாகும்.

மனச்சிதைவு என்பது ஒரு தீவிர மனநலக் கோளாறு. அசாதாரண நடத்தை. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்வதில் சிக்கல். தம் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதில் சிக்கல். பிரமைகள். மருட்சி. ஒழுங்கற்ற சிந்தனைகள். மன பேதலிப்பு.

இன்று உலகளவில் சுமார் 50 மில்லியன் மனச்சிதைவு நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 7 மில்லியன் மனச்சிதைவு நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பாதிப் பேர்கள் மட்டும் மருத்துவ உதவியை நாடுகின்றனர். 7% பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆதரவின்றி வீதிகளில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயாளிகளே!

இவர்கள் தனக்கு மனநோய் என்பதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே மருந்து உண்ண ஒத்துழைக்கமாட்டார்கள். மாத்திரை மருந்துகளை பிறர் அறியாமல் வெளியில் எறிந்து விடுவார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. இவர்கள் எதிர்பார்ப்பது புரிதலையும் அரவணைப்பையும் தான்.

மனச் சிதைவிற்கான பிரதான காரணங்கள்;

மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்; மூளையில் வேதியியல் மாற்றங்கள் – டோபமைன், குளூட்டோ மேட் போன்ற நரம்பு கடத்திகளில் ஏற்படும் சிக்கல்கள்; சாரமற்ற வாழ்க்கைச் சூழல்; மன அழுத்தம்; போதைப் பழக்கங்கள், வாழ்வில் குறுக்கிடும் அதிர்ச்சிகள், அவமானங்கள், ஆத்திரங்கள் போன்ற குடும்பக் குழப்பங்கள்.

மனச் சிதைவு ஏற்படுவதற்கு முன் இவர்களின் குண இயல்புகள்; சமூக உறவுகள் மிகவும் குறைவு; அன்பு இல்லாத நிலை; பிறரிடம் நம்பிக்கை இல்லாமை மற்றும் வெறுப்பு; ஒதுங்கியிருத்தல்; எதிலும் ஈடுபாடின்றி பட்டும் படாமலும் இருத்தல்; அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடன் தனித்திருத்தல்; எப்போதும் மன அழுத்தம். [சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களின் அறிவுத் திறன் மங்காமலிருக்கும்]

பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் ஏமாற்றம், வறுமை, அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் வாழும் பதின்பருவப் பிள்ளைகள் ஆகியோருக்கும் இந்நோய் வர வாய்ப்பு உள்ளது.

நிஜத்தில் நடக்காத ஒன்றை உண்மை போல் உறுதியாக நம்புதல்; அடிக்கடி சந்தேகப்படுதல், உண்மையை எடுத்துச் சொன்னதற்குப் பிறகும் அதை நம்ப மறுத்தல்; தன்னைக் கடவுளாக, தனிச் சிறப்பு பெற்ற பிறவியாகக் கருதுதல்; தன் துணை மீது தீவிர சந்தேகம் கொள்ளுதல்; சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகித்து அடிப்படையற்ற வகையில் குற்றஞ்சாட்டுதல்; மாயக் குரல்கள் கேட்பதாகவும், யாரோ தன்னைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுதல்; யாருமேயில்லாத நிலையில் உருவங்கள், காட்சிகள் தெரிவதாகக் கூறுதல்; தானாகப் பேசுதல், சிரித்தல்;பொருட்களை உடைத்தல்,ஆக்ரோசமான செயல்களில் ஈடுபடுதல்; தற்கொலை எண்ணம் மற்றும் முயற்சி செய்தல்; தூக்கமில்லாமலும் தன்னைப் பேணாமலும் இருத்தல்..  இவை போன்ற அறிகுறிகள் எவரிடம் காணப்பட்டாலும் மனச்சிதைவின் வெளிப்பாடுகளே.

கணிதவியல் மேதை ஜான்நாஷ் மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, நிவாரணம் அடைகின்றார். அதன் பின்னரும் கூட அவரது காதினுள் மாயக் குரல் கேட்கிறது. ஆயினும் அவர் தன் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். 1994-ல் கணிதம் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். ‘A BEAUTIFUL MIND’    எனும் ஹாலிவுட் படம் இவரது வாழ்க்கை மற்றும் மனச்சிதைவு நோயை சித்தரிக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் மனச்சிதைவு நோய் அறிகுறிகளுக்கு மிக அற்புதமான மருந்துகள் உள்ளன.

அனகார்டியம்,ஹையாசியாமஸ்,ஸ்டிரமோனியம், லாச்சசிஸ், கன்னபிஸ் இண்டிகா,பிளாட்டினா,பாஸ்பரஸ் போன்ற மருந்துகள் அதிகளவிலும் முக்கியமாகவும் பயன்படக் கூடிய மருந்துகளாகும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

]]>
Dr.S.வெங்கடாசலம், SCHIZOPHRENIA, homeopathy, மனச் சிதைவு, ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/23/w600X390/bayam.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/oct/23/schizophrenia-and-homeopathic-remedies-2794727.html
2792336 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி தீபாவளி ஆரோக்கியம் டாக்டர் வெங்கடாசலம் DIN Thursday, October 19, 2017 02:47 PM +0530 தீபாவளி என்பது குழந்தைகளுக்கு அதிக குதூகலம் தரும் பண்டிகை. இனிப்புகளும் சுவையான பண்டங்களும் பட்டாசுகளும் புத்தாடையும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் கொண்டாட்ட நாள். அதே சமயம் மிக மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொண்டால் மட்டுமே அர்த்தமுள்ள கொண்டாட்டமாக அமையும்; இல்லையெனில் ஆரோக்கியப் பாதிப்புகளிலும் ஆபத்துக்களிலும் போய் முடிந்து விடும். அதனால் தான் தீபாவளியன்று தீயணைக்கும் படையினரும், நோயணைக்கும் [மருத்துவப்] படையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீபாவளி என்பது ஒரு கடின நாள்.அவர்களோடு மேலும் பலர் மூச்சுத் திணறல், கடுமையான இருமல், மற்றும் வேறு பல சுவாச உபாதைகளுடன் தீபாவளி நாளன்று மருத்துவமனைகளுக்கு வருவது வாடிக்கை. தீபாவளியன்று சுவாச நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது 6-12 வயது குழந்தைகளே. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஆஸ்துமா போன்ற மோசமான சுவாச நோய்கள் தாக்குவதிலிருந்து தப்பிக்க சில வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. சுவாச ஒவ்வாமைக்குக் காரணமான உணவுப் பண்டம், தட்பவெப்ப மாற்றம், புகை, அதிக உடலியக்கம் போன்றவற்றைக் கவனமாகக் கருத்திற் கொண்டு தவிர்க்க வேண்டும்.

2. மாசு நிறைந்த சூழலில் இருக்கக் கூடாது.

3. மழை மற்றும் குளிர்காலமாக இருப்பதால் காலை நேர உடற்பயிற்சியை அல்லது நடைப்பயிற்சியை நன்கு சூரியோதயம் [ஓரளவு வெயில்] வந்த பின் [காலை 7 மணிக்குப் பின்] மேற்கொள்ள வேண்டும். மாலையெனில் வெயில் மறையும் முன் மேற்கொள்ள வேண்டும்.

4. பண்டிகை நாள் எனும் உற்சாகத்தில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை மறந்து விடக் கூடாது.

5. ஆஸ்துமா  நோயாளிகளுக்கு மென்மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் புகை, மது இரண்டையும் பண்டிகை எனற பெயரில் எக்காரணம் கொண்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் ஹோமியோபதியின் பங்கு;

ஹோமியோபதி மருத்துவம் என்பது மனிதனிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை முறியடிக்கக் கூடியது. ஆஸ்துமா போன்ற அவசர, திடீர் நோய் நிலைகளிலும் கூட ஹோமியோபதி சிறப்பாகப் பயன்படக் கூடிய ஆற்றல்மிக்க மருத்துவம் என்பது நிரூபணமான உண்மை. நோயின் பெயருக்கு அல்ல பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து பரிந்துரைகள் அமையும். எனவே ஒரே நோயில் பாதிக்கப்பட்டாலும் நபருக்கு நபர் மருந்து மாறுபடும்.ஆஸ்துமா துயரர்களுக்குப் பயன்படும் சில மருந்துகளைப் பார்ப்போம்;

1. ஆர்சனிக்கம் ஆல்பம் – பொதுவாக ஆஸ்துமாவிற்கு அதிகம் பயன்படும் தலைசிறந்த ஹோமியோ மருந்து. ஒவ்வாமையால் இழுப்பு ஓசையுடன் மூச்சுவிடச் சிரமப்படும் போதும், நள்ளிரல்  அதிகரித்து படுக்க முடியாமல் திணறும் போதும்,ஆர்சனிகம் தான் கண்கண்ட மருந்து.ஆர்சனிக்கம் நோயாளிகளுக்கும் வெந்நீர் குடிப்பது இதம் அளிக்கும்.

2. இபிகாக் – நாள்பட்ட ஆஸ்துமாவிற்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அதிகம் பயன்படக் கூடியது. இரவுகளில் நெஞ்சுப்பகுதியில் ஒருவித வலியுடன் தலையில் சற்று உஷ்ணத்துடன் மூச்சுத் திணறல் ஏற்படும். மார்பில் கட்டிய சளியுடன், சற்று குமட்டலும் மூச்சுத் திணறலும் இருக்கும். தீவிர ஆஸ்துமா தாக்குதலில் அகோனைட் எனும் ஹோமியோ மருந்தையும் இபிகாக் மருந்தையும் மாற்றி மாற்றிக் கொடுத்து சில மருத்துவர்கள் துரிதமாக பலன் கண்டிருக்கிறார்கள்.

3. ஸ்பாஞ்சியா – குரைப்பது போல் இருமுதல், சிறிதளவே சளி வெளியேறும், இனிப்பு சாப்பிட்டால் இருமலும் மூச்சிரைப்பும் அதிகரிக்கும்.

4. கார்போ வெஜ் – வயிற்றுப் பகுதியில் அழுத்தத்துடனும், நெஞ்சுப் பகுதியில் இறுக்கத்துடனும் மூச்சுவிடச் சிரமம் ஏற்படும் போது சிறப்பாகப் கார்போ வெஜ் பயன்படும். ஜீரணப் பகுதிகளில் வாயு உப்பு சத்தால் திணறல் இருப்பின் கார்போ வெஜ் கைகொடுக்கும்.

5. நேட்ரம் சல்ப் -  ஈரமான தட்பவெப்பம், ஈரமான இடங்கள் மற்றும் மூடுபனி போன்ற சூழல்களில் உபாதை அதிகரிக்கும். வறண்ட குளிர்காற்று பாதிக்காது.

6. போதாஸ் – தூசி, புகை படிந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் உபாதைக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

இனிப்புகளும் பட்டாசுகளும் பண்டிகை தினத்தை சுவையூட்டுவது போலவே எச்சரிக்கையாக இல்லாவிட்டால் துயரூட்டும் நிகழ்வாக மாறிவிடும். பண்டிகை கால தயாரிப்புகளான பெரும்பாலான இனிப்புகள் நெய் மற்றும் சீனி சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. சற்றே அளவிற்கு அதிகமாக உண்ணும் போது அஜீரணமோ, வயிற்றுப் போக்கோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. பால் பொருட்களில் செய்த இனிப்புகள் [மில்க் ஸ்வீட்ஸ்] தயாரிக்கப்பட்ட 3 - 4 நாட்களுக்குப் பின் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு  நல்லதல்ல.

நமது காது 90 டெசிபிள் அளவு சப்தம் மட்டுமே தாங்கக் கூடியது. ஆனால் சில வகை பட்டாசுகளால் எழும் இரைச்சலோ 95 டெசிபிள் முதல் 115 டெசிபிள் வரை உள்ளது. இதனால் செவிப்பறை கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேலும், தீ விபத்து இல்லாத தீபாவளியைக் காண்பது அரிதாகி விட்டது. பூவானம், வான வெடிகள், சிலவகை பெரிய பட்டாசுகள், மத்தாப்புகள், மெழுகு வர்த்திகள் போன்றவை களால் எதிர்பாராத விதத்தில் தீ விபத்து ஏற்பட்டு காயங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டு வேதனை வடுக்களை உருவாக்கி விடுகின்றன. இத்தகைய தீவிபத்து ஏற்படும் நெருக்கடியான நேரத்தில் முகத்திலோ கண்களிலோ நெருப்புக் காயங்கள் ஏற்பட்டால் மிக விரைவாக உரிய மருத்து நிபுணர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை பெறுதல் அவசியம். காலதாமதத்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு உண்டாகி விடும்.

சக்திமிக்க வெடிகளை வெடிக்கும் போது பெரியவர்கள் குழந்தைகளுடன் இருக்க வேண்டும். வெடிகளை வேடிக்கைக்காக கைகளில் பிடித்துக் கொண்டே வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ராக்கெட் போன்ற வெடிகளை ஏவுவதற்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. பற்றிய நிலையில் எந்தப் பட்டாசுகளுடனும் வேடிக்கை விளையாட்டு கூடாது. எளிதில் பற்றக் கூடிய ஆடைகள் அணிய வேண்டாம். வெறும் காலுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். காலம் செல்லச் செல்ல நாமும் நம் குழந்தைகளும் ஆரோக்கியத்தை, இயற்கையை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கக் கூடிய, பறவைகளையும் விலங்குகளையும் பாதுகாக்கக் கூடிய பசுமைத் தீபாவளியைக்       [GREEN DEEPAVALI] கொண்டாடக் கூடிய வண்ணம் மாற வேண்டியது அவசியம்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

 

]]>
asthma, homeopathy, ஹோமியோபதி, ஆஸ்துமா, air pollutioon https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/19/w600X390/Diwali_post.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/oct/16/cure-for-asmatic-problems-2792336.html
2787853 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மனம்  என்னும்  மேடையின்  மேலே டாக்டர் வெங்கடாசலம் DIN Tuesday, October 10, 2017 04:04 PM +0530  

அக்டோபர் 10 உலக மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘பணிச் சூழலில் மனநலம்’ என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.  

‘ஒருவர் தனது உடல் மனத் திறன்களை உணர்ந்து கொண்டு, வாழ்வின் சாதாரண அழுத்தங்களை எதிர் கொள்வதிலும், பயனுள்ள மற்றும் படைப்பூக்கமுள்ள பணிகளை மேற்கொள்வதிலும் தனக்கான சூழலமைவை உருவாக்கவும் பங்களிக்கவும் போதிய திறன் பெற்றிருப்பதே உள நல நிலை ஆகும்’ என்று உலக சுகாதார நிறுவனம் மனநலம் பற்றி அதிகாரபூர்வமாக வரையறை செய்துள்ளது. இதற்கு முன்பாக மனநலம் பற்றிய வரையறுப்பு ஏதும் வரலாறில் எங்கும் இல்லை.

ஆதிகாலத்தில் மனநோய்கள் துர்தேவதைகளின், பேய் பிசாசுகளின் விளைவு எனக் கருதினர். நோய்கள் கடவுளின் தண்டனை என்றும்,  மரணம் பாவத்தின் சம்பளம் என்றும், மருந்தளிப்பது கடவுளின் செயலில் குறுக்கிடுவது என்றும், எனவே மருந்தளிக்காமல் கடவுளிடம் மண்டியிடுவதே சரி என்றும் முற்காலத்தில் கருதினர். இதன் தொடர்ச்சியை இப்போதும் ஒரு பிரிவு கிறிஸ்தவர்களிடம் காணலாம். பிற்காலத்தில் உருவான வைதீக எதிர்ப்பு மதங்கள் மருத்துவத்தையும் ஒரு கடமையாக கருதிச் செயல்பட்டனர். இந்த வழியில் வந்தவர்களே புத்த, சமண, துறவிகள், சித்தர்கள் போன்றோர்.

எல்லா நோய்களையும் மருத்துவர் வசம் ஏற்றுக் கொண்டோர் மனநோய்களை மட்டும் 18-ஆம் நூற்றாண்டு வரை கடவுளிடமே விட்டுவிட்டனர். இதன் தொடர்ச்சிதான் பள்ளிவாசல்களிலும், கோவில்களிலும் மனநோயாளிகளைக் கட்டி வைக்கும் பழக்கம். தர்க்கப்பூர்வமான உளவியல் ஆய்வுகள் எல்லாம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தோன்றின.

1808-ல் ஜோகன் கிறிஸ்டியன் ரெயில் எனும் உடலியல் அறிஞர் PSHCHIATRY எனும் சொல்லை உருவாக்கினார்.  PSYKHE என்றால் ஆன்மா, ஆற்றல், மூச்சு என்று பொருள்.1879-ல் வில்ஹெல்ம் உளண்ட் என்பவர் ஜெர்மனியிலுள்ள லீப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வுக் கூடத்தை அமைத்தார். ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு 1890 முதல் 1939ல் மறையும் வரை பல உளவியல் பகுப்பாய்வுகளை மேற்கொண்டார். ஃபிராய்டு செய்முறையின் போதாமை குறித்து பின்னால் வந்த காரல்பாப்பர் போன்றோர் நிரூபணங்களை உருவாக்கினர்.  இவர்களெல்லாம் தான் உளவியல் துறை முன்னோடிகளாக ஆங்கில மருத்துவக்கல்விப் புலம் சார்ந்த வரலாறு எழுதுநர்களால் முன்னிறுத்தப்பட்டனர்.

இவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாற்றுச் செய்தி என்னவெனில் 1792-லேயே உளவியல் துறையில் அரிய சாதனை புரிந்தவர் ஹோமியோபதியின் தந்தை டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பது தான். உலகின் முதல் மனநல மருத்துவமனை அமைத்துச் சிகிச்சை அளித்தவர் டாக்டர் ஹானிமன் அவர்களே. அவர் ஹோமியோபதி மருத்துவ முறையின் நிறுவனர் என்கிற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இருட்டடிப்பு செய்யப்பட்டார். எனினும் உளவியல் துறையில் ஆங்கில மருத்துவம் இன்று வரை எட்டாத சாதனைகளை அன்றே சாத்தியமாக்கியவர் டாக்டர். ஹானிமன்.

‘ஒவ்வொரு சாதாரண நோயிலும் கூட மனநலத்தில் மாற்றங்களும் திரிபும் ஏற்படுகின்றன. நோயாளியை ஆய்வு செய்யும் போது உடல் சார்ந்த குறிகளுடன் உணர்வுகளையும் மனக்குறிகளையும் கவனத்தில் கொண்டு மொத்தக் குறிகளையும் ஒரு சேர நலமாக்குவதே முழுநலம்.’ என்பது மனநலத் துறையில் ஹானிமன் அவர்களின் முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். மேலும் மனம் அல்லது சிந்தனை என்பதன் மூல ஊற்று வாழ்க்கை தான். அது தொடர்பான சிக்கல்களின் மீதான எதிர்வினையாகவே உள்ளார்ந்த திரிபுகள் உருவாகின்றன என்பது குறித்து ஹானிமனுக்கு தெளிவு இருந்தது.

ஹானிமனின் பார்வையை, பாதையை இருட்டடிப்பு செய்ததன் மூலம் ஆங்கில மருத்துவம் மனநலச் சிகிச்சைத் துறையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மனநோய்க்கான காரணங்களை கிருமியியல், நரம்பியல், அகச்சுரப்பியியல் எனப் பல தளங்களில் இன்னமும் ஆங்கில மருத்துவம் தேடிக் கொண்டுள்ளது. எனவே மூளையின் ரசாயன மாற்றங்களாக மட்டுமே மனநலப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன.

மன அழுத்தம், மனச் சோர்வு, மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் வலிகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் பல மருந்துகள் நோயாளிகளை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகின்றன. மது மற்றும் போதைப் பொருட்களைப் போல சில ஆங்கில மனநோய் மருந்துகள் மது, அபின், ஹெராய்ன் போன்ற போதைப் பொருட்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. சரியாகச் சொன்னால் அவற்றை விட இன்னும் கொடூரமானவை. இத்தகைய ஆங்கில மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி விட்டால் பின்னர் அவற்றிலிருந்து விடுபடுவது மிக மிகச் சிரமம். அவ்வாறு விடுபட நினைத்து மருந்தை நிறுத்தினாலோ, குறைத்தாலோ கூட நோயாளி WITHDRAWEL SYMPTOMS எனப்படும் மீள்குறிகள் போன்ற மிகுந்த துன்பத்திற்கு ஆளாக நேரிடும். மேலும் இம்மருந்துகள் இல்லாது வாழ முடியாது என்ற மனநிலையையும் இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன.

மருந்துகளுக்கு அடிமையாவது, அதிக அளவில் மருந்துகளை உட்கொள்வது, மருந்துகளை நிறுத்துவதால் மனதும் உடலும் துன்பத்திற்கு ஆளாவது போன்றவை அனைத்தும் மருந்து உட்கொள்பவரின் இயல்பான உடல், மனக் குறிகள் அல்ல. மருந்துகளால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் செயற்கையான விளைவுகளே ஆகும். நோய்கள் ஆபத்தானவைகளாக இருக்கலாம். அதை விட ஆபத்தானவைகளாக மருந்துகள் இருக்கலாமா?

மனநலம் குறித்து மாமேதை ஹானிமன் தனது புகழ்பெற்ற ஆர்கனான் நூலில் 210 முதல் 230 வரையிலான 21 மணிமொழிகளில் மிக அருமையாக விளக்கியுள்ளார். மணிமொழி 212ல் ‘எல்லா வகை நோய்களிலும் மனிதனின் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன’ , மணிமொழி 215ல் ‘மனதைப் பற்றியவை என்றழைக்கப்படும் எல்லா நோய்களும் உடலைப் பற்றிய நோய்களே என்பதில் சந்தேகமில்லை. இந்நோய்களில் மனக்குறிகள் அதிகரிக்கின்றன. அதே சமயத்தில் உடல் குறிகள் [பல சமயங்களில் மிக வேகமாக] மறைய ஆரம்பிக்கின்றன’, மணிமொழி 225ல் ‘உடலைப் பற்றிய நோயையே முழுக்காரணமாக கருத முடியாத மன நோய்களும் சில இருக்கின்றன. ஓயாத கவலை, நீங்காத ஏக்கம், வெறுப்பு, அடிக்கடி பயம், பீதி முதலிய காரணங்களே மன நோய்களைத் தோற்றுவித்து நீடித்திருக்க உதவுகின்றன’ என்று மிகச் சரியான பார்வையை மருத்துவத்துறைக்கு வழங்கிய டாக்டர். ஹானிமன் ஆர்கனான் நூலின் 230 வது மணிமொழியில், ‘மனநோய்களில் உலகிலுள்ள மற்ற எல்லா வைத்திய முறைகளையும் விட ஹோமியோபதி பன்மடங்கு உயர்வானதென்பதை என் அனுபவத்திலிருந்து தைரியமாய் கூற முடியும்’ என்கிறார்.

ஹானிமனைக் கற்றறிந்த ஒவ்வொரு ஹோமியோபதியரும் சிறந்த மனநல மருத்துவரே என்பதில் சந்தேகமில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 1987-ஆம் ஆண்டின் 14-வது சட்டமாக இயற்றப்பட்டுள்ள THE MENTAL HEALTH ACT பிரிவு 2[K] [iii ]-ன்படி பதிவு பெற்ற M.D.[HOM].,B.H.M.S.,D.H.M.S.,R.H.M.P., ஹோமியோபதி மருத்துவர்கள் மனநல சிகிச்சையின் எல்லா நிலைகளைகளையும் கையாள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். அலோபதியின் பக்கவிளைவுகளை, பின்விளைவுகளை முறியடிக்கும் வண்ணம், ஹோமியோபதி மீதான இருட்டடிப்புகளை, பொய்மைப் புனைவுகளை முறியடிக்கும் வண்ணம் ஹோமியோபதியர்களின் மருத்துவப் பணிகள் அமைந்திட வேண்டும்;

பொதுமக்களும் ஹோமியோபதியின் மனநல சிகிச்சைகளை பயன்படுத்தி முழுமையான மனநலமும் உடல்நலமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

]]>
Depression, October 10, Homeopathy, மன நலம், ஹோமியோபதி, ஹானிமன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/10/w600X390/depression.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/oct/10/complete-cure-for-depression-in-homeopathy-2787853.html
2783678 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? மாற்றமுடியுமா? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, October 2, 2017 10:00 AM +0530 விரல் சூப்புவதற்கான உளவியல் காரணங்கள்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இது போன்ற தாயின் அரவணைப்பில்லாத, நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.

பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், ஒரு ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.

குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம் தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
       
பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும்போது அவை விரல் சூப்புவதைத் தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்புகின்றன. நான்கு வயது முதல் 16 வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. 4 முதல் 6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கும். பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தைகளைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.

இதுபோல் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால் விரல்களில் ரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும். அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.

விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல்,புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.

சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களை எடுத்து விடவேண்டும். இது போல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது. 

ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப், கல்கேரியா பாஸ், சிலிகா, நேட்ரம் மூர், பல்சடில்லா, இபிகாக், சக்காரம் போன்ற மருந்துகளும், பாச் மலர் மருத்துவத்திலும் வால்நட், ஒயிட் செஸ்ட் நட், செர்ரிபிளம், செஸ்ட்நட்பட், அக்ரிமோனி, கிளமேடிஸ் போன்ற மருந்துகளும் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற உதவுகின்றன. 

குழந்தைகளின் உடல், மன அமைப்பிற்கேற்ப ஹோமியோபதியிலும், மன நிலைக்கேற்ப மலர் மருத்துவத்திலும் மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன.

- Dr.S.வெங்கடாசலம்,  

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.  

செல் - 94431 45700 / Mail - alltmed@gmail.com

]]>
children, fear, finger, குழந்தைகள், விரல் சூப்பும் பழக்கம், ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/3/w600X390/iStock_000002892311_Small.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/oct/02/children-sucking-finger-how-to-stop-2783678.html
2779466 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி குழந்தைகளின் பயங்களை விரட்டுங்கள்! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, September 25, 2017 11:09 AM +0530 சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிக் கலவரத்தின் போது மனிதர்கள் (மிருகங்கள் போல) ரத்த வெறி பிடித்து ஆயுதங்கள் ஏந்தி தெருக்களில் அலைந்து திரிந்ததையும், பரஸ்பரம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாவதையும் நேரில் பார்த்த குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களது உடலிலும் உள்ளத்திலும் நிரந்தரமான பயமும் பதற்றமும் ஒட்டிக் கொண்டன. அவர்களால் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதன் பாதிப்பிலிருந்து விடுபடவும் முடியவில்லை. கண்களில் மருட்சி, இருதயத்தில் படபடப்பு, உடலில் நடுக்கம், மனதில் அலை அலையாய் பீதி உணர்வுகள் ... இப்படியே குழந்தைகளின் நாட்கள் நகர்ந்தன. சாதி, மதக் கலவரங்களும், யுத்தமும், பெற்றோருக்கிடையில் நடைபெறும் சண்டைகளும் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சங்களை உடைத்து நொறுக்கி விடுகின்றன. பயம் எனும் நோய் தொற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு குழந்தையின் மனவளர்ச்சியிலும் ஒரு பகுதியாக பயம் அல்லது தைரியம் அமைகிறது. மரபுரீதியாகவும், வளர்ப்பு, வாழ்நிலை, சூழ்நிலை காரணமாகவும் குழந்தைகளிடம் பயம் தோன்றி வளர எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளின் மன உலகம் எளிமையானது. மாசு மரு இல்லாதது; மலர் போன்ற மென்மையானது. ஆனால் புற உலகோடு தொடர்பு ஏற்படும் போது பிரச்சினைகளும், முரண்பாடுகளும் தோன்றுகின்றன. அதன் விளைவாக பயமும், பயத்துடன் பதற்றமும் கவலையும் இதர உளவியல் சிக்கல்களும் பிறக்கின்றன.

வயது அதிகரிக்கும் போது பயங்கள் அதிகரிப்பதுண்டு; அல்லது பயங்கள் குறைவதுண்டு. வினோதமான கற்பனைகள் மற்றும் சமுதாய மூடக் கருத்துக்களின் தாக்கம் காரணமாக இருட்டு, பேய், பூதம் சம்பந்தமான பயங்கள் அனைத்து இளம் சிறுவர்களையும் பாதிக்கின்றன. அதிலும் தனிமையில் விடப்படும் குழந்தைகளின் பயங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மேலும் இயற்கையின் சீற்றங்கள், இடி, மின்னல், புயல், நோய்கள், வலிகள், மருத்துவமனைகள், டாக்டர்கள், போலீசார், கோபாவேசப் பெற்றோர், சில மிருகங்கள் குறித்து பல குழந்தைகளிடம் அளவு கடந்த பயம் காணப்படுகின்றன. குழந்தைகளின் வயது, பேசும் திறனுக்கேற்ப பயங்களை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு பேச இயலாத குழந்தைகள் ஆதரவு நாடுதல், அலறுதல், அழுதல் மூலமும், தப்பித்து ஓடுதல் மூலமும் பயமூட்டும் சூழ்நிலையிலிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர்.

குழந்தைகளின் பயங்கள் எவை? அவற்றுக்கான காரணங்கள் என்ன? என்பதை அறிந்து பெற்றோர் அறிவுபூர்வமாக, ஆதரவாக குழந்தைகளுக்கு உதவ வேண்டும். மாறாகப் பெற்றோர் தமது பயங்களையும், தவறான நம்பிக்கைகளையும் பிள்ளைகள் மனதில் புகட்டினால் எவ்வளவு அறிவுள்ள குழந்தையாக இருந்தாலும் பயம் காரணமாக குடத்திலிட்ட விளக்காகக் குன்றி விடுவார்கள்.

ஹோமியோபதி, மலர்மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளில் பயம், அதிர்ச்சி, பீதி, குழப்பம், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்ற பல மனப் பிரச்சினைகளுக்கு இனிய தீர்வுகள் உள்ளன. 80 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பாச் அவர்களின் மலர் மருத்துவமும், 200 ஆண்டுகளுக்கும்  மேலாக டாக்டர் ஹானிமன் அவர்களின் ஹோமியோபதி மருத்துவமும் எண்ணற்ற உளவியல் பிரச்னைகளைத் தீர்த்து நலமளிப்பதில் தமது ஆற்றலை நிரூபித்துள்ளன.

ஹோமியோபதியில் கீழ்க்கண்டவாறு பயம் சார்ந்த குறிகளின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுகின்றன.

பயமும் பதற்றமும் - ஆர்ஸ் ஆல்ப்

இரவில் தனிமையில் பயம் - ஸ்டிரமோனியம்

கூட்டத்தைக் கண்டால் பயம் - அகோனைட்

பொது இடங்களுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்ல பயம் - ஜெல்சிமியம்

அடைக்கப்பட்ட வாகனத்திற்குள் பயணிக்கப் பயம் - சிமிசிஃபூகா

பட்டாசு வெடிச் சத்தங்களால் பயம் - லாக்கானினம்

இருட்டு பயம் - ஸ்டிரமோனியம்

தனிமையிலிருக்கும் போது சாவு பயம் - ஆர்ஸ் ஆல்ப்

தோல்வியை எண்ணி பயம் - சோரினம்

ஆவிகள், பேய்கள் குறித்து பயம் - ஸ்டிரமோனியம்

உயரமான இடங்களில் பயம் - அர்ஜெண்டம் நைட்

கத்தியைக் கண்டு பயம் - அலுமினா

மின்னலைக் கண்டு பயம் - அகோனைட்

கூரிய பொருட்கள், ஊசிகள் மீது பயம் - ஹையாசியாமஸ்

மழையைக் கண்டு அச்சம் - எலாப்ஸ்

எலிகளைக் கண்டு பயம் - சிமிசிஃபூகா

அன்னியர்களைக் கண்டு பயம் - பரிடாகார்ப்

மோசமான செய்திகள் மீது பயம் - சோரினம்

தண்ணீரைக் கண்டு பயம் - லைசின்

அந்தி நேரம் பயம் - கல்கேரியா கார்ப்

காற்றைக் கண்டு பயம் - சாமோமில்லா

நாய்கள் மீது பயம் - ஸ்டிரமோனியம்   

விழுந்து விடுவோம் என்ற பயம் - ஜெல்சிமியம்

கீழிறங்குவதால், கீழிறங்கும் அசைவுகளால் பயம் - போராக்ஸ்

பலவித கற்பனையான பயங்கள் - பெல்லடோனா

குறுகலான தெரு, இடம் கண்டு பயம் - அர்ஜெண்டம் நைட்

போன் மணி ஓசை கேட்டு பயம் - விஸ்கம் ஆல்பம்  

அழைப்பு மணி எழுப்பும் ஓசை கேட்டு பயம் - லைக்கோபோடியம்

நிழலைக் கண்டு பயம் - கல்கேரியா கார்ப்

- Dr.S.வெங்கடாசலம்,  

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.  

செல் - 94431 45700 / Mail - alltmed@gmail.com

]]>
Children, fear, homeopathy, குழந்தைகள், அச்சம், பயம், ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/25/w600X390/childhood-fears-2.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/sep/25/how-to-overcome-fear-in-children-through-homeopathy-treatment-2779466.html
2775260 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி ஆண்களை அவதிப்படுத்தும் விந்து நீர் சுரப்பி வீக்கம் டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, September 18, 2017 10:47 AM +0530  

சுக்கிலச் சுரப்பி அல்லது விந்து நீர் சுரப்பி எனப்படும் பிராஸ்டேட் சுரப்பி ஆண்கள் உடலில்  மட்டுமே அமைந்துள்ள உறுப்பு ஆகும். ஆண்களை ஆண்மையுடையவர்களாக்குவது இந்தச் சிறிய கூம்பு வடிவிலான சுரப்பி தான். சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் சிறுநீர் புறவழிக் குழாய் [URETHRA] ஆரம்பமாகும் இடத்தில் அமைந்துள்ளது.

இதிலிருந்து மெல்லிய, வெண்ணிற, குழகுழப்பான திரவம் [PROSTATIC FLUID] சுரக்கிறது. இந்த சுக்கிலச் சுரப்பு நீருக்கு இரண்டு முக்கிய பயன்கள் உண்டு.1] உடலுறவின் போது பெண்ணுறுப்பில் உராய்வைத் தவிர்த்து வழவழப்பாக்குவதற்காக உடலுறவிற்குச் சற்று முன்பே இத்திரவம் வெளிவருகிறது. 2] விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்து அணுக்கள்  [SPERM] மேலேறி வந்து இந்தத் திரவத்துடன் கலக்கும். இதனால் உடலுறவிற்குப் பின்னர் விந்தணுக்கள் சுலபமாக நீந்தி பெண்ணின் ஒரு கருமுட்டையை நோக்கி முன்னேறிச் செல்ல முடிகிறது.

குழந்தைப் பருவத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இச்சுரப்பி பதின்பருவத்தில் வேகமாக வளர்ச்சியைத் தொடங்குகிறது. 40 அல்லது 45 வயதில் இதன் வளர்ச்சி குறைந்து சீரான வடிவத்தில் இருக்கிறது. சிலருக்கு 50 வயதிற்குப் பின்னர் மேலும் வளர்ந்து பருமனாக மாறுவதில்தான் பிரச்னை ஆரம்பமாகிறது. ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் ஹார்மோன்களின் அளவில் ஏற்றத்தாழ்வு நிகழும். இதனால் பிராஸ்டேட் சுரப்பியிலுள்ள இணைப்புத் திசுக்கள் அதிகரித்து விரிவடையும். முதுமையில் டெஸ்டோஸ்டிரான் என்கிற ஆண் ஹார்மோன் அதிகமாக சுரந்து டைஹைட்ரோடெஸ்டரான் அளவு அதிகரிப்பதால் தான் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இது சுக்கிலச் சுரப்பி வீக்கம் [PROSTATE ENLARGEMENT] எனப்படுகிறது.

இந்தச்  சுக்கில நீர் வீக்கம் சுருக்கமாக ‘BPH’ எனப்படுகிறது. இதற்கு Benign Prostate Hypertrophy  - தீங்கற்ற சுக்கிலச் சுரப்பி வீக்கம் எனப் பொருள். இந்தச் சுரப்பி பெருத்து விரிவடையும் போது சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதி அழுத்தப்படும். நீர்த்தாரை நசுக்கப்பட்டு நீர் வரும் பாதை சுருங்குவதன் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

சிறுநீர்ப் பாதை அழுத்தப்பட்டு அடைக்கப்படுவதால் சிறுநீர் தேக்கம் ஏற்பட நேரிடலாம். இத்தேக்கம் தொடருமானால் அழற்சியும், கற்கள் உருவாகும் நிலையும் மேலும் சில பாதிப்புகளும் ஏற்படும். இந்த வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரிடம் இது சுக்கிலச் சுரப்பி புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

விந்துநீர் வீக்கத்தை சில அறிகுறிகள் மூலமாக அறியலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல் ஏற்படும் நிலையே இதன் ஆரம்ப அறிகுறியாகும். இதனால் தூக்கத்தின் இடையிடையே எழவேண்டிய நிலை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கப்படும். அல்லது தூங்கவே முடியாதளவு போகலாம். கண்விழித்து, கண்விழித்து கழிப்பறைக்குச் சென்றால் சிறுநீர் இயல்பாக வெளியேறாமல் சிரமத்தைக் கொடுக்கும். சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுவதால் எரிச்சலும் வலியும் ஏற்படக்கூடும். [சிலருக்கு இந்த எரிச்சலோ வலியோ இருப்பதில்லை]. சிறுநீரை அடக்க முடியாமல் போவதால் ஆடைகளில் சிறுநீர் கசிந்து பாழ்படுத்தி அவதிக்குள்ளாக நேரிடும். நாளடைவில் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். முழுவதுமாக சிறுநீரை வெளியேற்ற முடியமல் கொஞ்சம் சிறுநீர்ப்பையில் தங்கி விடுவதால் பல்வேறு தொற்றுகளும் ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட பின் அழற்சியும் வலியும் ஏற்படுவது நிச்சயம்.

முதுமையில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்குப் பயன்படும்.ஹோமியோபதி மருந்துகள்;

பரிடாகார்ப் [ BARYTA CARB ]

கோனியம் [ CONIUM ]

சபல் செருலேட்டா [ SABAL SERULETTA ]

பல்சடில்லா [ PULSATILLA  ]

ஃபெர்ரம் பிக்ரிக்   [ FERRUM PICRIC ]

அயோடியம் [ IODIUM ]

சிலிகா [ SILIA  ]

தூஜா [ THUJA  ]

கல்கேரியா ஃபுளோர் [ CALCAREA FLOUR  ]

சிமாபிலா  [ CHIMAPHILLA ]

ஸ்டாபிசாக்ரியா [ STAPHYSAGRIYA  ]

புருனுஸ் ஸ்பைனோசா [PRUNUS SPINOSA]

மெடோரினம் [ MEDORHINUM ]

விந்துநீர் சுரப்பியோடு தொடர்புள்ள மற்றொரு முக்கிய பிரச்னை விந்துச் சுரப்பி திரவம் தன்னுணர்வின்றி கழிதல் ஆகும். சுக்கிலச் சுரப்பியின் திடீர் வேக்காடு [ ACUTE PROSTATITIS ]  நிலையில் சிலரிடம் சிரமப்பட்டு சிறுநீர் கழிக்கும் போதோ, முக்கி மலம் கழிக்கும் போதோ சுக்கில திரவமும் சேர்ந்து வெளிப்பட்டு விடும். சிலருக்கு மேகவெட்டைக் கழிவுடன் சேர்ந்து இத்திரவமும் வெளிவரக்கூடும்.

நீண்ட, தொடர் சுய இன்பப் பழக்கத்தால் ஏற்பட்ட பலவீனம் அல்லது இளமைக் கால அதிக உடலுறவுச் செயல்களால் விளைந்த பலவீனம் அல்லது சில தொற்று நோய்கள் காரணமாக சுக்கிலச் சுரப்பி வேக்காடு மற்றும் சுக்கில திரவ வெளிப்பாடு ஏற்படுகிறது. இதனால் கஷ்டப்பட்டு சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு முறையும் சுக்கில திரவமும் வெளியேறுகிறது. இதனால் இளைஞர்கள் படும் மன அச்சத்துடன் கூடிய அவதியையும் குழப்பதையும் எழுத்தில் வடிப்பது இயலாது. மேற்குறிப்பிட்ட காரணங்களின்றி, வயதானவர்களிடம் பிராஸ்டேட் வீக்கத்தால் மட்டுமே இத்திரவம் வெளியேறுவதுண்டு. இத்திரவம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வெளியேறுவதால் மனப்பதற்றமும், உடல் பலவீனமும் ஏற்படுகிறது.

இந்த திரவ வெளிப்பாட்டை முழுமையாய் நலப்படுத்துவதற்கு ஆற்றல்மிக்க பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன; அவற்றில் சில முக்கியமான மருந்துகளாவன...

அக்னஸ் காஸ்டஸ் [ AGNUS CASTUS ]

டாமியானா [ DAMIANA ]

லைகோபோடியம்  [LYCOPODIUM ]

பாஸ்போரிக் ஆசிட் [ PHOSPORIC ACID ]

நக்ஸ்வாமிகா [ NUXVOMICA ]

ஏஸ்குலஸ் [ AESCULUS ]

அலுமினா [ ALUMINA ]

அனகார்டியம் [ ANACARDIUM ]

கோனியம் [ CONIUM ]

சல்பர் [ SULPHUR  ]

சபல் செருலேட்டா [ SABAL SERULETTA ]

பல்சடில்லா [ PULSATILLA ]

செலினியம் [ SELENIUM ]

- Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

]]>
PROSTATIC FLUID, prostate gland , பிராஸ்டேட் சுரப்பி, ஆண்மை, சிறுநீர்ப் பாதை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/18/w600X390/man.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/sep/18/prostate-gland-problems-in-men-and-homeopathic-remedies-2775260.html
2771246 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி பணம் போனது! ஷுகர் வந்தது! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, September 11, 2017 11:06 AM +0530 ஒரு வியாபாரி மரணத்தை எதிர்நோக்கி மயங்கிய நிலையில் படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் மனைவி மக்கள் உற்றார் உறவினர் பெரும் கவலையோடு அமர்ந்திருக்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாக வியாபாரி தலையை லேசாக அசைத்து, விழிகளை மெல்லத் திறந்து, பலவீனமான குரலில் ‘என் மனைவி எங்கே’ என்று கேட்கிறார். தலைமாட்டில் சோகத்தோடு சோகத்தோடு இருந்த மனைவி எழுந்து அவர் முன்பாக வந்து, ‘இங்கே தான் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்றுமில்லை; ஓய்வெடுங்கள்’ என்று கூறுகிறார். ‘பிள்ளைகள் எங்கே என்று?’ என்று மனைவியை விசாரிக்கிறார்.’ அவர்களும் தந்தை அருகில் நெருங்கி வந்து நின்று, ‘எல்லோரும் இங்கே தான் இருக்கிறோம். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்’  என்கிறார்கள். அந்த இறுதி நிமிடங்களிலும் கூட வியாபாரி முகத்தில் எரிச்சலுடன் கூடிய ஒருவித மாற்றம். ‘அப்படியென்றால் இன்றைக்கு யாருமே கடைக்குப் போகவில்லையா? கடையை மூடி விட்டீர்களா?’ என்று உடல் பலவீனங்களை மீறிய கோபத்துடன் விசாரிக்கிறார். அனைவரின் மனத்திலும் ஓர் அசவுகரியம் உருவானது.

இது ரஜ்னீஷ் சொன்ன குட்டிக்கதை. இக்கதையில் வரும் வியாபாரியின் மனநிலையினைக் கணக்கில் கொண்டு ஹோமியோபதியில் உரிய மருந்தளித்தால் அவரைக் காப்பாற்றவும், நலப்படுத்தவும் வாய்ப்பு உண்டு. அவருக்கு என்ன மருந்து ஏற்றது என்பதை இறுதியில் பார்ப்போம்.

***

வெளியூரிலிருந்து கண்ணன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். வயது 35. இரண்டாண்டு காலமாக சர்க்கரை வியாதிக்காக, ரத்தக் கொதிப்பிற்காக, மூட்டு வலிகளுக்காக ஆங்கில சிகிச்சை எடுத்து வருகிறார். பல்வேறு பரிசோதனை அறிக்கைகள் கொண்டு வந்திருந்தார். அவற்றையும் பார்த்து விட்டு, நோய்க்குறிகளையும் கேட்டறிந்து கொண்டு, பின்னர் அவரது குடும்பம், தொழில், அவற்றிலுள்ள லாப நஷ்டங்கள் பற்றிக் கூறுமாறு கேட்டேன்.

அவர் புறநகர் பகுதியில் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு கட்டிடத்தை வாங்கி, பலசரக்குக் கடை துவங்கியுள்ளார். வியாபாரம் சரிவர நடைபெறாமல் போகவே, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கூட்டாக நகரின் மையப் பகுதியில் மற்றொரு வியாபாரத்தை துவங்கியுள்ளார். மூலதனமும், வாடகையும், இதரச் செலவுகளுமாக  பணம் கரைந்ததே தவிர எதிர்பார்த்தபடி வியாபாரம் மூலம் லாபம் கிடைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குறை கூறி வந்தனர்.மேலும் அவருக்கு எதிராக இருவரும் சேர்ந்து கொண்டு பல்வேறு புகார்களைக் கூறினர். எனவே அந்த வியாபாரக் கூட்டிலிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேர்ந்தது.

‘தொழில் விஷயமாக அங்குமிங்குமாய் அலைய வேண்டிய நிலையில் வீட்டை, குடும்பத்தைக் கவனிக்க முடிகிறதா?’ என்று கேட்டேன்.

‘எங்கு போனாலும், எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்குத் திரும்பி விடுவேன். வீட்டுக்கு வந்தால் தான் மனசுக்கு நிம்மதி. வெளியிடங்களில், கடையில், கடன்காரர்கள் வந்துவிட்டால், வேறு பிரச்னைகள் வந்து விட்டால் எப்படியாவது சமாளித்து விட்டுப் பின்னர் சிறிது நேரமாவது வீட்டிற்குப் போய் தங்கி விட்டு வந்தால் தான் நன்றாக இருக்கும்.”

‘தூக்கம்?’

‘தூக்கம் வரவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் கனவிலும் இந்தப் பிரச்னைகள் தான். வியாபாரம், தொழில், கடன்கார்ர்கள், கணக்குவழக்கு, பகலில் நடந்தது எல்லாம் கனவிலும் வரும்’

அவருக்குரிய ஒரு மருந்தைத் தேர்வு செய்து 200 வீரியத்தில் ஒருவேளையும், 1எம் என்ற வீரியத்தில் ஒரு வாரம் கழித்து ஒரு வேளையும் சாப்பிடச் சொல்லி அனுப்பினேன். 15 நாட்கள் கழித்து சற்றே புத்துணர்ச்சியுடன் மீண்டும் வந்தார். ரத்த சர்க்கரை 15 நாட்களில் 330மி.கி. அளவிலிருந்து 210.மி.கி. ஆகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மூட்டு வலிகளும் குறைந்திருந்தன. பசி, தாகம், நீர், மலம் எல்லாம் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பதாகக் கூறினார். ரத்த அழுத்தம் குறித்து எந்தத் தொந்தரவும் இல்லை என்றார்.

மீண்டும் அதே மருந்து 1எம் வீரியத்தில் ஒரு வேளை மட்டும் தரப்பட்டது. 30 நாட்களுக்குப் பின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆய்வுகளோடு வந்தார். ரத்த சர்க்கரை அளவு 140மி.கி.,ரத்த அழுத்தம் நார்மல். அவரது ஆரோக்கியத்தில் மட்டுமில்லை, அவரது நடவடிக்கைகளிலும், மனநிலையிலும் கூட குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. மேலும் சிறிது காலம் மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்த சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்த ஹோமியோபதியில் சில மருந்துகளும், தாய் திரவங்களும் பயன்படுகின்றன. என்றாலும் ஹோமியோபதிக்குரிய அணுகுமுறைப்படி நோயாளியை ஆய்வு செய்து மருந்தளித்தால் முழுநலம் ஏற்படுகிறது.

‘முழுமையாக குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று’ என்று ஆங்கில மருத்துவம் கூறிவருவதை இந்திய மருத்துவங்களும் ஹோமியோபதியும் நிராகரிக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மருத்துவ முன்னோர்களால் எழுதப்பட்டுள்ள எந்தப் பதிவுகளிலும் நீரிழிவு நோய் என்பது பூரணமாகக்  குணப்படுத்த முடியாத நோய் என்று குறிப்பிடப்படவில்லை.

மிகப் பழமையான ஆயுர்வேத நூல்களிலும் இந்நோயை ‘பிரமேகம்’ என்று விளக்கியுள்ளனர். சிறுநீரின் தன்மையின் அடிப்படையில் இந்த பிரமேகத்தை நம் முன்னோர்கள் 20 வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றுள் மதுமேகம், சத்ரமேகம் என்ற இரு வகை மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மதுமேகம் என்பது அல்லது சத்ரமேகம் என்பதற்கு ‘தேன் போன்ற சுவையுள்ள சிறுநீர்’ என்பது பொருள் .கி.மு.6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதர் எழுதிய ஆயுர்வேத நூல்களில் சர்க்கரை நோயின் வகைகள், அறிகுறிகள், பின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உண்மைகளுக்கு நெருக்கமாக சுஷ்ருதர் எழுதியிருப்பது வியக்கத்தக்கது. அதே போல சித்தர்களும் சர்க்கரை நோய் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். இத்தகைய முன்னோர்களின் மருத்துவ  இலக்கியங்களிலும், ஹோமியோபதி கோட்பாடுகளை விவரிக்கும் ஆர்கனான் நூலிலும், ஆங்கில மருத்துவம் கூறுவது போல் ‘நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்த மட்டுமே இயலும். முழுமையாக குணப்படுத்த இயலாது’ என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை.

***

கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட ரஜ்னீஷ் கதையில் வரும் வியாபாரிக்குத் தேவையான ஹோமியோபதி மருந்து ‘பிரையோனியா’. ‘always talks of business’ ‘always business thoughts’ என்ற மனக்குறி அடிப்படையில் பிரையோனியா மருந்து அவருக்கு உரிய மருந்தாகிறது. இதே மருந்து தான் நீரிழிவுத் துயருக்கு வந்த கண்ணனுக்கும் வழங்கப்பட்டது. ‘dreams about business of the day’ wants to go home’ ‘thinks and talks constantly about his business’ போன்ற முக்கிய குறிகள் அடிப்படையில் பிரையோனியா அவருக்கு பொருத்தமான மருந்தாக அமைந்து நன்மை அளித்துள்ளது. ஹோமியோபதி சிகிச்சை என்பது விஞ்ஞானமும் கலையும் இணைந்தது. ஆழ்ந்த படிப்பும் பயிற்சியும் அனுபவமும் மனிதநேயமும் மட்டுமே வெற்றிக்குத் துணைபுரியும்.

Dr.S.வெங்கடாசலம்,                                                                                                மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்/ செல் : 94431 45700  / Mail : alltmed@gmail.com

 

]]>
Restlessness, Haunting thoughts, Dreams, Fear, சர்க்கரை வியாதி, நீரழிவு வியாதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/11/w600X390/Homeopathy.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/sep/11/haunting-thoughts-amd-restlessness-homeopathic-remedies-2771246.html
2767230 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி வலி  தீரும் வழி என்னவோ? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, September 4, 2017 10:33 AM +0530 ஆதியிலே தாய் வழிச் சமுதாயம் இருந்ததாகவும், ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தாயே தலைவியாய், வழிகாட்டியாய், நம்பிக்கையாய் இருந்திருக்கிறாள் என்றும் மானுட சரித்திரம் பறைசாற்றுகிறது. மனித குலத்தை மறு உற்பத்தி செய்கிற சக்தி கொண்ட பெண்ணினத்தைத் தலைமை தெய்வமாய் ஏற்றுக் கொண்ட காலம் மாறி, சமுதாய அமைப்புக்கள் மாறி, இன்று பெண் இரண்டாந்தர குடிமக்களாய் வாழுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பெண்களுக்கு கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, ஓட்டுரிமை எனப் பல்வேறு வாழ்வியல் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் ஆண்களை விட அதிகம் உழைக்க வேண்டியுள்ளது; ஆனால் ஆண்களை விடக் குறைவான ஊதியமும் சலுகைகளும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது.

ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் குடும்பப் பணிகள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகப் பணிகள் என ஓய்வு ஒழிச்சலின்றி பலவித பணிச் சுமைகளை ஏற்று இயந்திரமாய் இயங்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் அவர்களது நோய் நொடிகளைக் கவனிக்க, ஆரோக்கியத்தைக் கவனிக்க நேரமில்லை. அதனால் தான் பெரும்பாலான  பெண்கள் பிணிகள் முற்றிய நிலையில் வேறு வழியின்றி சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஆயினும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெண்களுக்கு மாதவிடாய் என்பது நெருப்பை நீந்திக் கடப்பது போன்ற துயர அனுபவமாகவே இருக்கிறது. வலியின் கடுமையால் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மூலையிலேயே முடங்கிக் கிடப்பதும், தரையில் விழுந்து உருள்வதும் புரள்வதும் சாதாரணமாக நடக்கக் கூடியவை. ‘மாதவிடாயே ஏற்படாமல் இருந்தால் கூட நல்லது;  கர்ப்பப் பையை ஆபரேஷன் செய்து அதை வெளியே எடுத்து விட்டால் கூட நிம்மதி கிடைக்கும்’ என்று சிந்திக்கக் கூடிய அளவு சில பெண்களை மாதவிடாய் கால வேதனை வாட்டி வதைத்து விடும்.

வலிமிக்க மாதவிடாய் மருத்துவரீதியில் DYSMENORROHEA எனக் குறிப்பிடப்படுகிறது. அதன் பிரதான அறிகுறிகள்...மாடவிடாய் காலத்தில் அடிவயிற்றிலும், முதுகிலும், தொடைகளிலும் வலிகள் ஏற்படுகின்றன. நரம்பியல் காரணங்களாலோ, பிறப்புறுப்புகளில் ஏற்படும் ரத்தத் தேக்கத்தாலோ [CONGESTION], கர்ப்பப்யையின் உட்புறத் தோலில் ஏற்படும் நீர்வீக்கம் மற்றும் சில கோளாறுகளினாலோ, கர்ப்பப்பையின்  சளிச் சவ்வுகள் சிதைவடைந்து கட்டிகட்டியாகப் போக்கு ஏற்படுவதாலோ, கர்ப்பப்பையின் இடப் பெயர்ச்சியாலோ, கட்டிகள் போன்ற தேவையற்ற வளர்ச்சிகளாலோ, நாள்பட்ட மலச்சிக்கலாலோ கடுமையான மனநிலைப் பாதிப்புகளாலோ மாதவிடாயின் போது வலிகள் ஏற்படுகின்றன.

இவ்வலி தாக்கும் போது கர்ப்ப்ப்பையின் கழுத்து [CERVIX] வீங்கியிருக்கக் கூடும். இடுப்பு, தொடைப் பகுதிகளிலும் வலிகள் தாக்கக் கூடும். வலிமிக்க மாதவிடாய் நீடித்துக் கொண்டே சென்றால் மலட்டுத் தன்மை, ஹிஸ்டீரியா மற்றும் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும்.

இந்தப் பிரச்சினைக்கு  நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க உதவும் மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. அவரவர் குணங்குறிகளுக்கேற்ப கீழ்க்கண்ட மருந்துகளிலிருந்து தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் போது துயரங்கள் மறையும். வலியற்ற இயல்பான மாதப்போக்கு ஏற்படும்.

மருந்துகளும்  அவற்றின்   குறிகளும்

சிமிசிஃபியூகா : பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய். கரு நிறக் கட்டிகளாய் போக்கு குறைந்தளவு ஏற்படும்.போக்கு அதிகரித்தால் வலிகளும் அதிகரிக்கும். மாதவிடாயின் போது தலைவலி, கைகால் வலி, மூட்டு வலிகள், தொடை நரம்பு வலி, வலிப்பு மற்றும் உடல் வலிகள்.

கோலோசிந்திஸ் : குறைவான மாதவிடாய், இடது சினைப் பையில் வலி. மாதவிடாயின் போது கடுமையான அடிவயிற்று வலியும், குமட்டலும், வாந்தியும், பாதங்களில் குளிர்ச்சியும், கெண்டைத் தசைகளில் பிடிப்பு வலியும் ஏற்படும். உடலை முன்புறம் வளைத்தால் அல்லது அழுத்தினால் வலி குறையும்.

காலோபைலம் : குறைவான போக்கு, வலி உடலின் எல்லா பாகமும் பரவும். கெண்டை இழுப்பு, வலிப்பு, கடும் சோர்வு ஏற்படும்.

வைபூர்ணம் ஓபுலஸ் : தாமத விடாய், குறைவான அளவு, சில மணி நேரம் ஏற்படும். கடுமையான தசை இழுப்பு வலி. மாதவிடாய்க்கு முன் கர்ப்ப்ப்பையிலிருந்து, அடிவயிற்றிலிருந்து வலி கீழிறங்கி தொடைகளுக்குப் பாயும். பிரசவ வலி போல் விட்டு விட்டு வலிக்கும்.

காக்குலஸ் : உரிய நாளுக்கு முந்திய, நீடித்த, அதிகளவிலான போக்கு. [15 நாள்களுக்கு ஒரு முறைப் போக்கு] வயிறு உப்பி, ஊசி குத்துவது போல் வலி, அதிகச் சோர்வு.

போராக்ஸ் : முந்திய விடாய், சதைத் துண்டுகள் போல் அதிகப் போக்கு, கடுமையான வயிற்றுப் பிடிப்பு வலிகள்.

சைக்ளமென் : கருநிற சதைத் துண்டுகளாய் - பெரிய கட்டிகளாய் வயிற்று வலியுடன் போக்கு ஏற்படுதல், மாதவிடாயின் போது தலைவலி, மயக்கம், பார்வைக் கோளாறுகள் ஏற்படுதல், மாதவிடாய் நின்ற பின் மார்பகங்கள் வீக்கம் ஏற்படுதல், பால் சுரத்தல்.

செபியா : ஒழுங்கற்ற, தாமதமான, வலிமிக்க குறைந்த அளவிலான மாதவிடாய், மாதவிடாய்க்கு முன்பு வெளியுறுப்பில் எரிச்சல், வீக்கம், வயிற்று வலி, மாதவிடாயின் போது பல்வலி, தலைவலி, மூக்கிலிருந்து ரத்தம், மனக் கவலை எரிச்சல்.

சாந்தோசைலம் : மிகவும் முந்திய மாதவிடாயில் கருப்பை நரம்பு வலியானது இடுப்பு, தொடைகளுக்குப்  பரவும்.இட்து கருப்பையில் வலி. பயங்கர வலி உடல் முழுதும் [இருதயத்திற்கும் கூட] பரவும். மாதவிடாய் தோன்றும் போது வெள்ளைப்பாடும் தோன்றி அதிகளவு வெளிப்படுதல்.

பல்சடில்லா : தாமதமான, குறைவான, கருநிறப் போக்கு. அடிமுதுகிலும், பிறப்புறுப்பின் மேட்டுப் பகுதியிலும் வலி, விடாயின் போது வயிற்றுப் போக்கு, வயிறு இடுப்பு வலிகள், குமட்டல், வாந்தி, தலைவலி, தலைசுற்றல்.

மெக் பாஸ் : முந்திய, கருநிற மாதவிடாய். வலது பக்க சினைப் பையில் அதிக வலி. கர்ப்பப்பையிலிருந்து முதுகு வரை வலி பரவும். உஷ்ணத்தால் வலி குறையும்.

Dr.S.வெங்கடாசலம், மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் / Cell : 94431 45700/ Mail : alltmed@gmail.com

]]>
Period, Pain, Homeopathy, மாதவிடாய், பீரியட்ஸ், ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/4/w600X390/periods_pain.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/sep/04/cure-for-the-pain-during-periods-2767230.html
2763091 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி கணைய நோய்களா? கவலை வேண்டாம்! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, August 28, 2017 10:41 AM +0530  

கணையம் எனும் உறுப்பு மனித உடலின் வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாகவும், மிகச் சிக்கலான இடத்திலும், முன் சிறுகுடலுக்கு சற்று இடது புறத்திலும் அமைந்துள்ளது. இதன் நீளம் 15-20 செ.மீ. எடை 85 -100 கிராம். கணையம் என்பது ஒரு கலப்படச் சுரப்பி. EXOCRINE மற்றும் ENDOCRINE எனும் இரண்டு சுரப்பிகளாலும் ஆனது. பல நூறு பைகளைக் கொண்டது இது.

கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ எனும் சிறப்புத் திசுக்கள்  பரவிக் கிடக்கின்றன. ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன.  ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகை செல்கள் உள்ளன. ‘பீட்டா’  செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்கான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும்  சுரக்கின்றன. 

கணையத்தின் முக்கியமான பணி அன்றாடம் உட்கொள்ளும் உணவினைச் செரித்து உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுகளுக்கு மாற்றிக் கொடுப்பதாகும். இதன் ஒரு சதவிகித வேலையால் உருவாகும் இன்சுலின் குறைபாட்டினால் தான் நீரழிவு எனும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.

நாம் எந்தவித உணவுகள் சாப்பிட்டாலும் அவை இறுதியில் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாகவும், கிளிசரினாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றப்பட்டால் மட்டுமே உடல்திசுக்கள் அவற்றை எரித்துச் சக்தியைப் பெற முடியும்.

டிரிப்ஸின், அமைலேஸ் மற்றும் லிப்பேஸ் எனும் மூன்று என்சைம்களைக் கணையம் உற்பத்தி செய்கிறது. இவை முறையே புரோட்டின்களை அமினோ அமிலங்களகவும், ஸ்டார்ச்சை சர்க்கரையாகவும், கொழுப்பினைக் கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றுகின்றன.

கணையத்திற்கும், கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகிய உறுப்புகளுக்கும் பொதுவான ஒரு வெளியேற்றும் குழாய் [CBD-COMMON BILE DUCT] உண்டு. இதன் காரணமாக சில நேரங்களில் கல்லீரலில் உள்ள பித்த நீர், கணையத்திற்குள் இந்த வழியாகச் சென்று, கணையத்தைச் சேதப்படுத்துவதும் உண்டு.

அதே போல, பித்தப்பைக் கற்கள் கணையத்தின் குழாயை அடைத்து விடுவது உண்டு. இதனால் கணைய நீர் மீண்டும் கணையத்திற்குள்ளேயே திரும்ப வந்து அந்த உறுப்பையே செரித்து அரித்து விடும் அபாயமும் உண்டு. கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமானால், கணையத்தையே  அழித்துவிடக் கூடியவை. இக்காரணங்களாலேயே கணையத்தில் அழற்சி தோன்றுகிறது.

இன்றைய பெரும்பாலான உணவுகளில் ருசிக்காக, அழகுக்காக வண்ணங்கள், ரசாயனப் பொருட்கள், மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகளால் உடலுக்குப் பெருந்தீங்குகள் ஏற்படுகின்றன. இவற்றை விரும்பி உண்போருக்கு கணையக் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். பலவித ஆங்கில மருந்து மாத்திரைகளின் பின்விளைவுகளாகவும் கணையக் கற்கள் உருவாகின்றன. கணையக் கற்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் SECONDARY DIABETES ஏற்படுகிறது. இப்பிரச்னைகளோடு கணையத்தில் பல்வேறு கட்டிகள் வரும் வாய்ப்பும் உண்டு. அதிக மது, புகைப் பழக்கமுள்ளவர்களுக்கு கணையப் புற்று ஏற்படக்கூடும். புற்று நோய்களில் இது கடுமையானது; கொடுமையானது. பலரும் விரைவில் மரணத்தைச் சந்திக்க நேர்கிறது.

சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிப்பதால் கணையம் பாதிக்கப்படலாம்.  பரம்பரைக் கோளாறுகள், புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள், விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம்.

இரைப்பைப் புண் இருப்பவர்களுக்கு ஏற்படுவது போன்ற வயிற்று வலி கணைய நோயிலும் காணப்படும். குமட்டல் வாந்தியும் காணப்படும். அல்சர் வயிற்றுவலி வாந்திக்குப் பின் குறைந்துவிடும். கணைய நோயில் வாந்திக்குப் பின்னரும் வலி குரையாது. இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பிக்கும். பின்பு முதுகுப் பக்கத்துக்குப் பரவும்.  சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும்.வயிற்று உப்புசம் ஏற்படும் 

ஒரு காலத்தில்  கணையத்தில் கோளாறு என்றாலோ, ஆபரேஷன் என்றாலோ மரணம் உறுதி என்று கருதப்பட்டது. இன்றைய நிலையிலும் அலோபதியைப் பொறுத்தளவில் கணையக் கற்களை ஆபரேஷன் மூலம் வெளியேற்றுவது அல்லது அதிர்வு அலைகள் மற்றும் லேசர் கதிர்களைக் கொண்டு உடைத்து வெளியேற்றுவது சிக்கலான ஆபத்தான செயலாகவே உள்ளது.

கணையப் புற்றின் முற்றிய நிலைத் தவிர இதர கணைய நோய்களுக்கு ஆபரேஷனின்றி குணப்படுத்த ஹோமியோபதியில் அரிய மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி சிகிச்சை மூலம், கணைய நோயால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக ஆய்வு செய்து மருந்துகள் அளிக்கப்பட்டால் பெருமளவு நிவாரணமோ, முழு நலமோ பெறமுடியும்.

கணைய நோய்களுக்குப் பயன்படும் சில முக்கிய மருந்துகளாவன;

பெல்லடோனா [BELLADONNA] - கணைய அழற்சி [INFLAMMATION OF PANCREAS]

அகிரந்தஸ் / பெல்லடோனா - தீவிர ரத்தக் கசிவுடன் கணைய அழற்சி [ACHYRANTHES CALEA  / BELLADONNA]

சியோனாந்தஸ் [CHIONANTHUS-Q] - கல்லீரல் உபாதைகளுடன் கணைய அழற்சி

கல்கேரியா கார்ப் [CALCAREA CARB] - கணைய வீக்கம் [ENLARGEMENT]

புடிரிக் ஆசிட் [BUTYRIC ACID] - கணையக் கட்டி [PANCREAS FIBROCYSTIC]

ஃபிராகரியா [FRAGARIA VESCA–Q] - கணையக் கற்களை வெளியேற்ற

ஐரிஸ் வெர்ஸ் [IRIS VERS] - வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுப் போக்கு, அமிலச் சுரப்பு [ACIDITY], பித்தநீர் உட்பாய்தல் போன்ற பல குறிகளுடன் கணைய வேக்காடு மற்றும் கணைய நோய்கள் .

பாஸ்பரஸ் [ PHOSPHORUS ] - அதிக  ரத்தப்பெருக்குடன் கணையப் புற்று, எண்ணெய் பிசுக்குடன் மலம் கழித்தல்.

Dr.S.வெங்கடாசலம், மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் / Cell : 94431 45700/ Mail : alltmed@gmail.com

]]>
Pancreas, DIABETES, கணையம், ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/28/w600X390/pancreas_probelms.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/aug/28/pancreas-2763091.html
2759229 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி குதிகால் வலியா? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, August 21, 2017 01:09 PM +0530 கிரேக்க புராணத்தில் பிரபல கதாபாத்திரங்களில் முக்கிய வீரன் ஒருவனின் பெயர் ‘அக்கிலீஸ்’. தன் மகனுக்கு எவராலும் சாவு வரக் கூடாது என்று அவனது தாய் பேராசையுடன் கடவுளிடம் வரம் கேட்டாள். ‘ஸ்டிக்ஸ்’ என்ற மந்திர நதியில் உன் குழந்தையை மூழ்கி எடுத்தால் யாராலும் அவனைக் கொல்ல முடியாது’ என்று கடவுள் வரம் அளிக்க அவ்வாறே செய்தாள்.

அக்கிலீஸ் யாராலும் தோற்கடிக்க முடியாத வீர தீரம் மிக்கவனாகத் திகழ்ந்தான். ஆனாலும் ஒரு தவறு நடந்துவிட்டது. அக்கிலீஸை நீரில் மூழ்கச் செய்த போது அவனது தாய் அவனது இரு கால்களையும் பிடித்துத் தலைகீழாகத் தொங்க விட்டு மூழ்கச் செய்தாள். கால்களைப் பிடித்திருந்த கணுக்கால் பகுதியில் மட்டும் மந்திர நதியின் நீர் படவேயில்லை. இதையறிந்த அவனது எதிரிகள் கடைசியாக அவனது கணுக்கால் பகுதியைக் குறி வைத்துத் தாக்கிக் கொன்றனர். இந்தக் கதையிலிருந்து தான் குதிகால் பகுதி எலும்புக்கு ‘அக்கிலீஸ் எலும்பு’ என்றும், குதிகாலுக்கு மேலேயுள்ள ‘குதி தசை நாணுக்கு’ ‘அக்கிலீஸ் தசை நாண் [ACHILLES TENDON]’ என்றும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கெண்டைச் சதையையும் குதி எலும்பையும் [CALCANEUM] இணைக்கும் அக்கிலீஸ் தசை நாண் அடிக்கடி பாதிக்கக் கூடிய பலவீனமான பகுதி. இப்பகுதியில் அடிக்கடி வீக்கம், வலி ஏற்படலாம். கால்களுக்கு அதிகமான உழைப்பு, குறிப்பாக கரடு முரடான பாதையில் நடப்பது, அதிகக் குளிரில் அல்லது தண்ணீரில் நடப்பது, அதிக எடையைத் தூக்குதல், பழக்கமின்றி அதிகளவு உடற்பயிற்சி, வாதத்தை அதிகரிக்கும் உணவுகள், சிலருக்கு அதிக உடல் எடை போன்ற காரணங்களாலும் குதி வலி மற்றும் குதிதசை நாண் வலி ஏற்படக் கூடும்.

ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் 50 சதவிகிதப் பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

இவ்வலியால் நடக்கச் சிரமமாய் இருக்கும் குறிப்பாக சிலருக்கு காலை நேரம் படுக்கையிலிருந்து தூங்கி எழும் போது பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவு மிகக் கடுமையாக வலி காணப்படும். அருகிலுள்ள சுவரை  பிடித்தபடி தடுமாறி நடக்கும் நிலை ஏற்படும். வெயில் நேரம் வந்த பின், தொடந்து நடந்து கொண்டே இருந்த பின் வலி சற்று குறையும். சிலருக்கு இரவிலும் ஓய்விலும் கூட வலி இருக்கும். இந்த வலி சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும். சிலருக்கு குதிங்கால் வீக்கமடையும்; சிலருக்கு குதிகாலின் பின்பக்கம் சிவந்து வீங்கியிருக்கும்.சிலருக்கு கருமையடையும். சிலருக்கு அதிக வலி காரணமாக சுரம் ஏற்படக்கூடும்.

கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்து விட்டால் அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு, சூடு தாங்கும் அளவிலான வெந்நீரை ஊற்றி அதனுள் பத்து நிமிடங்கள் காலை மாலை இரு வேளையும் பாதங்களை வைத்திருந்தால் அல்லது தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்தால் குதிகால் வலிக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

குதிகால் மற்றும் குதிதசை நாண் வலிகளுக்கு ஹோமியோபதியில் உரிய மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று பரிபூரண நலம் பெறலாம். கீழ்காணும் பட்டியலிலுள்ள ஹோமியோ மருந்துகள் குதிகால் வலிக்கு உடனடியான நிவாரணம் தருவதோடு முழு நலமும் அளிக்கின்றன.

*அரேனியா டயடேமா [ARENIYA DIADEMA] - குதி எலும்பில் வலி [OS CALCIS]

*பெர்பெரிஸ் வல்காரிஸ் [BERBERIS VULGARIS] 200C - புண்போன்ற வலி,உடல் எடையைக் குதிகால்களில் தாங்கி நின்றால் குறையும்.

*லாதிரஸ் சடைவா [LATHIRUS SATIVA] - கடுமையான வலி காரணமாக குதிகாலை தரையில் ஊன்றாமல், பாத முன் பாகத்தை ஊன்றி நடத்தல்.

*பைட்டோலக்கா [PHYTOLACCA] - குதிகளில் கடுமையான வலி மற்றும் கணுக்கால், பாதம், கால் விரல்களில் வலி, பாதத்தை உயர்த்திக் கொண்டால் வலி குறையும்.

*வலேரியனா [VALERIANA] - நடந்தால் வலி குறையும்; உட்கார்ந்திருந்தால் வலி அதிகரிக்கும் .

*கல்கேரியா காஸ்டிகம் [CALCAREA CAUSTICUM] - இடது குதிகாலில் கிழிக்கும் வலி.

* காலிகார்ப் [KALI CARB] - வலது குதிகாலில் வலி.

*சிலிகா [SILICA] - கணுக்காலில் சுளுக்கிய வலியுடன் குதிகாலில் கிழிக்கும் வலி.

*கோல்சிகம் [COLCHICUM] - குதிகால் வாதவலி - குதிகாலைத் தொடவோ அசைக்கவோ முடியாது.

*லைக்கோபோடியம் [LYCOPODIUM] - குதிகால் வெடிப்புகளுடன் வலி.

*பல்சடில்லா[PULSATILLA ] & ஜிங்கம் மெட் [ZINCUM MET] - குதிகாலில் குடைச்சல் வலி.

*பேசியோலஸ் [ PHASEOLUS] - நீரிழிவுடன் குதிகால் வலி.

*அனகார்டியம் [ ANACARDIUM ] - குதிகால் முதல் கெண்டைக் கால் வரை வலி.

* கால்மியா [KALMIA] & காலி ஐயோடு [KALI IOD] - இடுப்பிலிருந்து குதிகால் வரை வலி பரவுதல்.

*பாஸ்பரஸ் [PHOSPHORUS] - குதிகாலில் ஆணிகள்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

]]>
ACHILLES TENDON, CALCANEUM, குதிகால் வலி, அக்கிலீஸ் எலும்பு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/21/w600X390/AdobeStock_83713030.jpeg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/aug/21/achilles-tendon-pain-in-leg-2759229.html
2755189 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி கர்ப்பப்பை கட்டிகளா? ஆபரேசனைத் தவிர்க்கலாம்! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, August 14, 2017 11:09 AM +0530 பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்ற பின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும்  அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. கர்ப்பப்பையைத் தாக்கும் பொதுவான நோய்களில் ஒன்றே ஃபைப்ராய்டு எனப்படும் கட்டி.

இன்று உலகளவில் கர்ப்பப்பை கட்டி பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது பற்றிய போதிய விழிப்பின்மை, அறிவின்மை காரணமாக பெரும் சிரமத்திற்கும் துயரத்திற்கும் பெண்கள் ஆளாகின்றனர். இதனை புற்றுநோய்க் கட்டி என்றெண்ணி மன உளைச்சலில் வீழ்கிறார்கள்.

கர்ப்பப்பைக் கட்டிகள் இரண்டு வகைப்படும்.1.FIBROIDS எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் 2.MALIGNANT TUMOURS எனப்படும் புற்றுநோய்க் கட்டிகள். FIBROID என்பது லத்தீன் & கிரேக்கச் சொற்சேர்க்கை. FIBRA  என்பதன் பொருள் [FIBRE] நார்; EIDOS என்பதன் பொருள் [FORM]  உருவம். கர்ப்பப்பையில் தோன்றும் கட்டிகளில் நார்த்திசு கட்டிகளே அதிகம் ஆக்கிரமிக்கின்றன. இவை எப்போதும் தீங்கு விளைவிக்காத BENIGN TUMOURS எனப்படுகின்றன. இவை பொதுவாகப் புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை.0.5 சதவீதம் மட்டுமே [1 சதவிகிதத்திற்கும் குறைவாக] புற்றுக்கட்டியாக மாற வாய்ப்புள்ளது

கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டிகள் கர்ப்பப்பையின் உட்சுவர், நடுச்சுவர் மற்றும் வெளிச்சுவர் பகுதிகளில் தோன்றுகின்றன. வெளிச்சுவர் மற்றும் நடுச்சுவர் பகுதிகளில் தோன்றும் கட்டிகள் மகப்பேற்றில் தொந்தரவு கொடுப்பதில்லை. உட்சுவரில் தோன்றும் கட்டிகளால் கரு வெளியேற்றப்படும் நிலையும், அதன் விளைவாக குழந்தையின்மையும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கர்ப்பப்பை கட்டிகள் வட்ட வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் காணப்படுகின்றன. சிறு பட்டாணி அளவு முதல் ஒரு தேங்காய் அளவு வரை [1 மி.மீ. முதல் 20 செ.மீ. வரை] வெவ்வேறு அளவுகளில் ஒன்றாக அல்லது பலவாக [SOLITARY OR MULTIPLE] வெவ்வேறு எண்ணிக்கையில் வளர்ந்து கர்ப்பப்பையின் உருவ அமைப்பையே மாற்றக்கூடும். இக்கட்டிகள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.

1.SUBMUCUS FIBROIDS : கர்ப்பப்பையின் உட்சுவரில் [ENDOMETRIUM] வளரக் கூடியது. கரு எங்கே வளருமோ அங்கே கட்டிகள் வளர்வதால் அதிகளவு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் FALLOBIAN TUBE எனப்படும் கருக்குழாயினை அழுத்தும் நிலை ஏற்படுவதால் மலட்டுத்தன்மை [INFERTILITY] ஏற்படக்கூடும். அதிகளவு மற்றும் அதிக நாட்பட்ட மாதப் போக்கு ஏற்படக்கூடும். இரண்டு மாதவிடாய் காலங்களுக்கு இடையிலும் மாதப்போக்கு ஏற்படக்கூடும்.

2. SUBSEROUS FIBROIDS; கர்ப்பப்பைக்கு வெளியே தோன்றக் கூடியது. வெளிப்பகுதி கட்டி என்பதால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இராது. இருப்பினும் இதன் அருகிலுள்ள சிறுநீர்ப்பை உள்ளிட்ட வயிற்றுப் பாகங்கள் அழுத்தப்படும்.

3. INTRAMURAL FIBROIDS; கர்ப்பப்பையின் உள், வெளிச் சுவர்களுக்கு இடையில் அமைந்துள் நடுப்பகுதியில் தோன்றக் கூடியது. இங்கு தோன்றும் கட்டிகளால் கர்ப்பப்பை விரிவடையும்; கர்ப்பம் தரித்துள்ளாரோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு எடை அதிகரிக்கும். 5 செ.மீ.அளவிற்கு மேல் வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தக் கட்டிகளின் அழுத்தம் காரணமாக வயிற்றுத் தொந்தரவுகளும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்படும்.

4. PEDUNGULATED FIBROIDS; கர்ப்பப்பையின் உள்சுவர் மற்றும் வெளிச்சுவர் இரு பகுதிகளிலும் தொங்கு நிலையில் வளரக் கூடியது. இவை மெல்லிய தண்டுடன் [STALK] தொங்கிக் கொண்டிருக்கும்.

முதல் மாதவிடாய் துவக்க காலத்திலிருந்து மாதவிடாய் முற்றுப் பெறும் காலம் வரை எந்த வயதிலும் கட்டிகள் தோன்றலாம். மாதவிடாய் நடைபெறும் பெண்களில் 40%, குழந்தை பெறாத பெண்களில் 30% குழந்தை பெற்ற பெண்களில் 20%, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்ற பெண்களில் 40%, முதிர்கன்னிகளில் 10% இக்கட்டிகள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வயதுக்கு வராத பெண்களிடமும், 20 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடமும் நார்த்திசுக் கட்டிகள் தோன்றுவதில்லை. பொதுவாக இக்கட்டிகள் மெதுவாக வளரும் தன்மை உள்ளவை. மாதவிடாய் முற்றுக்குப் [MENOPAUSE] பின் ஹார்மோன் அளவுகள் குறைவதால் கட்டிகள் தானாகச் சுருங்கிவிடும்.

காரணங்கள் : 1.ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம். 2. பத்து வயதிற்குள் பூப்படைதல் - முதல் மாதவிடாய் தொடங்குதல் 3. குடும்ப வரலாறு 4. நாள்பட்ட கர்ப்பப்பைத் தொற்று மற்றும் மிகை ரத்த அழுத்தம் 5. அடிபடுதல், விபத்து காரணங்களால் கர்ப்பப்பை காயமடைந்ததன் பின்விளைவாக 6. மணமாகாத முதிர்நிலை 7. கருத்தடை மாத்திரைகள் [ORAL CONTRACEPTIVES] தொடர்ந்து உபயோகித்தல். 8. மரபணுக் கூறுகளில் மற்றங்கள் 9. மது அருந்துதல்..குறிப்பாக பீர் அருந்துதல். 10. பல முறை கருச்சிதைவு.

உளவியல் காரணங்கள் [PSYCHOLOGICAL FACTORS] : FIBROID கட்டிகள் பாதித்த பெண்கள் சிலரை ஹிப்னாடிச முறையில் ஆய்வு செய்த மருத்துவ அறிஞர்கள் சில முக்கிய மனவியல் காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளனர். 1. பாலியல் உறவில் திருப்தி குறைபாடு. 2. பாலியல் முறைகேடுகளால் பாதிப்பு. 3. மணமுறிவுகள் 4. விரும்பத்தகாத கர்ப்பங்கள் 5. சுய வெறுப்பு, எனவே நார்த்திசுக் கட்டிகளுக்கான காரணங்கள் பெண்ணின் உடலிலா மனதிலா என்பதையும் கண்டறிவது அவசியமாகிறது.

அறிகுறிகள் : சிறியளவிலான கட்டிகளால் எந்த பாதிப்பும் இல்லை. பெரிய அளவிலான கட்டிகளால் இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகள் அழுத்தப்படும். இதனால் அடிவயிற்று வலி அல்லது அடிமுதுகு வலி ஏற்படும். சிறுநீர்ப்பை அழுத்தப்படுவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். உடலுறவில் வலி ஏற்படும். மாதப்போக்கு அதிகளவிலும் கட்டிகட்டியாகவும் வெளிப்படும். இதன் விளைவாக ரத்த சோகை ஏற்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் சுருக் சுருக் என்று தைப்பது போன்று வலி உண்டாகும். அந்த வலி பிரசவ வலி போன்று கடுமையாக இருக்கும். சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும்.

ஹோமியோபதி சிகிச்சை : ஹோமியோபதி மருந்துகள் எவ்வாறு பணியாற்றுகின்றன? எவ்வாறு கட்டிக்களைக் கரைத்துக் குணமாக்குகின்றன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.1.கட்டிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை குறைத்தல் [REDUCING BLOOD FLOW TO THE TUMOUR] மூலம் கட்டியின் வளர்ச்சி தடைபட்டுச் சுருங்குகிறது. 2. கட்டிகளுக்குச் செல்லும் ரத்தம் முழு அளவில் நிறுத்தம் [BLOCKING THE BLOOD FLOW] காரணமாக FIBROID கட்டி முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஒரு சில மாத காலத்திற்குள் அழிந்து போகிறது.

மேலும் ஹோமியோபதி சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணை முழுமையாக ஆய்வு செய்து முழுமைத்துவம் [TOTALITY] அடிப்படையில் மருந்து தேர்வு செய்வது என்பது முதன்மையான பரிந்துரையாக மதிக்கப்படுகிறது. மேலும் ஹோமியோபதி மருந்துகளில் பக்கவிளைவுகள் இல்லை என்பது உலகறிந்த உண்மை. நீண்ட காலம் எடுத்தாலும் எவ்வித தீமையுமில்லை. 100% பாதுகாப்பானது. கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டிகளைக் கரைக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. இம்மருந்துகள் மூலம் தேவையற்ற அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம். AURUM MET, AURUM MUR NATRUM, CAL CARB, FRAXINUS, LACHESIS, SILICA, CAL FLOUR, PHOS,CONIUM, THUJA  போன்ற மருந்துகள் அதிகளவில் பயன்படக் கூடியவை.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்

Cell : 94431 45700 , Mail : alltmed@gmail.com

]]>
Uterus problems, Fibroid, Malignant tumour, கருப்பை பிரச்னை, கர்ப்பப்பைக் கட்டிகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/14/w600X390/4.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/aug/14/uterus-problems-in-woman-2755189.html
2751167 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, August 7, 2017 11:35 AM +0530 குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரணக் குறைபாடு தான் படுக்கையில் சிறுநீர் கழித்தல். இதனைக் கண்டு பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பிரச்னை குறித்து பெற்றோர் தெளிவாக அறிந்து கொள்வது குழந்தைகள் இப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு உதவியாக அமையும். தூக்கத்தின் போது தன்னையறியாமல் படுக்கையில் சிறுநீர் கழித்தல் ‘NOCTURNAL ENURESIS’ எனப்படும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10ல் 1 குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை 15 வயதுக்கு மேல் பதின்ம வயதில் 100ல் 2 குழந்தைகளாகக் குறைந்து விடுகிறது. 7-9 வயதுள்ள 9% ஆண் குழந்தைகளும் 6% பெண் குழந்தைகளும் தன்னையறியாமல் இரவு நித்திரையில் ஆடையையும் படுக்கையையும் நனைத்து விடுகின்றனர்.

தன்னுணர்வு இல்லாமல் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குறைபாட்டினை மருத்துவரீதியில் இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர். 1.இரவு உறக்கத்தில் ஒரு நாள் கூட சிறுநீர் கழிக்காத நாள் இராது. இது PRIMARY NOCTURNAL ENURESIS  எனப்படும். 2. பொதுவில் 5 வயதுக்குள் கழிப்பறையில் தான் மலஜலம் கழிக்க வேண்டும் எனும் பழக்கத்தைப் பழகி விடுகின்றனர். கழிவறைப் பழக்கம் பழகிய பின் சில மாத காலம் முதல் சில வருட காலம் வரை படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்து விட்டு மீண்டும் படுக்கையை நனைக்கும் நிலை ஏற்படும்.இது SECONDARY  NOCTURNAL  ENURESIS எனப்படும்.

காரணங்கள்

குழந்தைகளிடம் பெற்றோரின் எதிர்மறை மனப்பான்மை, குழந்தைகளின் மன அழுத்தம், பதற்றம், பயம், மனவளர்ச்சிக் குறைபாடு [MENTAL RETARDATION], மிகை இயக்கக் கோளாறு [ADHD], குழந்தைகளின் கழிவறைப் பழக்கங்களில் பெற்றோரின் அதீத அக்கறை, பிறர் முன், பிறர் அருகில் சிறுநீர் கழிக்க கூச்சம், தயக்கம், அதன் எதிர்மறை விளைவு, வீட்டில், பள்ளியில் பல்வேறு கவலைகள், பள்ளி விட்டுப் பள்ளி, வீடு விட்டு வீடு மாறும் சூழ்நிலை போன்ற உளவியல்ரீதியான காரணங்கள்.

ஹார்மோன் சமச்சீரின்மை [ADH- Anti diuretic hormone குறைபாடு], நீர்ப்பை நிறைந்துவிட்ட உணர்வின்மை, நீர்ப்பையின் தசை பலவீனம், சிறிய நீர்ப்பை அமைந்திருத்தல், சிறுநீர்த்தாரை தொற்று, மலச்சிக்கல், நீரிழிவு,வலிப்பு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் [SLEEP APHNEA], சில வகை தோல் நோய்கள் [ERYTHEMA, ECZEMA, PRURITUS], குடற்பூச்சிகள் [WORM], ஆணுறுப்பின் முன் தோல் அகற்றிய ஆபரேஷன் [CIRCUMCISION], ஜீரணக் கோளாறுகள் போன்ற உடல்ரீதியான காரணங்கள்.

சிறுநீரகங்கள் என்பது மிக அற்புதமான இயற்கைப் படைப்பு. இருதயத்திற்கு அடுத்த ஓயாத உழைபாளி! சுமார் 10 லட்சங்கள் நெப்ரான்கள் மூலம் சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவு நீரை பிரித்து சிறுநீர் வடிகுழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு சேர்க்கிறது. நீர்ப்பை நிரம்பியதும் மூளைக்குத் தகவல் கிடைத்து, பின் சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. அதன் பின்னர் சிறுநீர்ப்பை தானாகச் சுருங்கி நீரை வெளியேற்றுகிறது. சிறுநீர்ப்பையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கே உள்ளது. வயது கடந்து, கழிப்பறை பயிற்சியும் நடந்து முடிந்த பின்னரும் குழந்தைகள் படுக்கையை நனைத்தால் சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்தும் நரம்பியல் திறன் குறைபாடு என்பதாகத்  தான் பொருள்.

சிகிச்சை 

ஆங்கில மருத்துவத்தில் இதுபோன்ற பிரச்சினைக்கு சிறந்த தீர்வுகள் இல்லை. குழந்தை நல நிபுணர்கள் பெற்றோருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பல ஆலோசனைகள் வழங்கி இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.குறிப்பாக இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே திரவ உணவு அருந்துவதை, தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் [தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்தாமல் உடலின் தேவையை புறக்கணிப்பது சரியல்ல] படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டுச் செல்ல வேண்டும். படுக்கை மீது மெல்லிய பிளாஸ்டிக் மேலுறை அல்லது நீர் உறிஞ்சும் விரிப்புகள் விரிக்க வேண்டும். தூக்கத்தின் இடையில் எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும் [இது எவ்வளவு பெரிய கொடுமை!].

‘குழந்தை உறங்கும் போது படுக்கை விரிப்பின் கீழ் ஒரு பிரத்யேகத் தகடை வைத்து ஈரம் படும் போது மெதுவான மின் அதிர்ச்சிகளைத் தரும்படி பேட்டரிகளைப் பொருத்தி வைப்பர். குழந்தை சிறிநீர் கழிக்கத் துவங்கியதும் மின் அதிர்வுகளால் எழுந்து விடும். உடனே பெற்றோர்குழந்தையைக் கழிப்பிடம் அழைத்துச் சென்று பின் மீண்டும் தூங்கச் செய்ய வேண்டும்’ என்று மேல்நாட்டுச் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். இது தான் சிகிச்சையா? இதில் எத்தனை குழந்தைகள் நலமடைந்துள்ளனர்? எத்தனை சதவீதம் வெற்றி கிட்டியுள்ளது?என்பது கேள்விக்குரியது.

ஹோமியோபதி சிகிச்சை 

ஹோமியோபதி சிகிச்சை அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகளின் உடலமைப்பு, மன அமைப்பு, குணநலன்கள், பழக்கவழக்கங்கள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் காணக்கூடிய தனித் தனி அடிக் காரணிகள் [UNDERLYING CAUSES] அனைத்தையும் ஆய்வு செய்து மருத்து அளிக்கப்படுகிறது. ஹோமியோபதி சிகிச்சை மென்மையானது. ஆனால் ஆற்றல்மிக்கது.பக்க விளைவு இல்லாதது. பாதுகாப்பானது [குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்த சிகிச்சையாயினும் பாதுகாப்பு முக்கியமல்லவா?] பலன்களோ நிரந்தரமானது. சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பெற்றோர் ஹோமியோபதி சிகிச்சையின் அற்புத பலன்களால் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஹோமியோபதி மருத்துவத்தின் நோக்கம் பலவீனமான நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்துதல். இதன் விளைவாக சிறுநீர்ப்பை மீதான கட்டுப்பாட்டுத் திறன் அதிகரிக்கும். நீண்ட காலமாக தினமும் படுக்கையில் சிறுநீர் கழித்து ஈரப்படுத்திக் கொண்டிருந்த குழந்தை சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் ஆச்சரியப்படத் தக்க வகையில் படுக்கையை உலர்ந்த படுக்கையாக மாற்றிக் காட்டுகிறது. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் அன்றாடம் ஏற்பட்டுக் கொண்டிருந்த தீராத தர்ம சங்கடம் விரைவில் மாயாஜாலம் போல மாறிவிடுகிறது.

குழந்தைகளிடம் காணப்படும் குறிகளுக்கேற்ப உரிய மருந்துகள் தேர்வு செய்து சிகிச்சை அளித்தால் ENURESIS [OR] BED WETTING  எனும் பிரச்னையிலிருந்து குழந்தைகள் உறுதியாக நிரந்தரமாக விடுதலை பெற முடியும். இப்பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படும் முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகளை அறிந்து கொள்வோம்....

காஸ்டிகம் :   இரவின் முதற்பகுதியில் [FIRST HALF OF NIGHT] தன்னுணர்வின்றி தூக்கத்தில் சிறுநீர் கழித்தல். இருமல், தும்மல் மற்றும் சிறிய உடல் கிளர்ச்சியிலும் கூட சிறுநீர் பிரிதல்.

செபியா : இரவின் முதற்பகுதியிலேயே படுக்கையை ஈரமாக்கிவிடுதல். இம்மருந்து சிறுமிகளுக்கு அதிகளவில் பயன்படுகிறது. இந்த மருந்துக்குரிய குழந்தைகளிடம் மனச்சோர்வும், மந்தமான தன்மையும் வேலை செய்வதில் ஆர்வமின்மையும் காணப்படும்.

கிரியோசோட்டம் : எழுப்ப முடியாத ஆழ்ந்த தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்.தூக்கத்தில் கனவில் சிறுநீர் கழிப்பதற்கு இடம் தேடி அலைந்து இறுதியில் சிறுநீர் கழிக்கும் போது படுக்கையில் உண்மையாகவே சிறுநீர் கழித்து விடுதல். சிறுநீரில் துர்நாற்றம் காணப்படும்.

கல்கேரியா கார்ப் : உடல் பருமனுள்ள, எளிதில் வியர்க்கக் கூடிய, சளி பிடிக்க்க் கூடிய குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.

சினா : குடற்புழுக்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தம் காரணமாக ஒருவித உறுத்தல் ஏற்பட்டு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நிலைக்குச் சிறந்த மருந்து. சற்றே கலங்கிய சிறுநீர் சில நிமிடங்களில் பால் போல் மாறும். அதிக பசி என்பதும் முக்கிய குறி. குடற்பூச்சிகள் காரணமாக குழந்தைகள் மூக்கைத் தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள். அதிக முன்கோபம் காணப்படும்.

ஈக்விசிடம் : இது அன்றாடப் பழக்கமாக மாறி விடுதல். இரவு பகல் எப்போது கண்ணயர்ந்தாலும் நீர்ப்பை உறுத்தல் ஏற்பட்டு அடிக்கடி அதிகளவு சிறுநீர் கழித்தல். கனவில் அதிக மக்களை, கூட்டத்தைக் காணுதல்.

சோரினம் : முழுநிலவு நாளன்று இரவில் படுக்கையை நனைத்தல்.

பல்சடில்லா : மாறும் இயல்புகள், தாகமின்மை,குளிர்ச்சியும் திறந்தவெளிக் காற்றும் விரும்பக்கூடிய, உஷ்ணமான உடல்வாகு உடைய, அழும் சுபாவமுள்ள [WEEPING TENDENCY-TEARFUL HABITS] குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.

இப்பிரச்சினையைத் தீர்க்க இன்னும் ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. பெற்றோர் சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்தக் குழந்தையும் வேண்டுமென்றே படுக்கையை நனைப்பதில்லை.அது குழந்தைகளின் மனதையும் பாதிக்கக் கூடியதே.எனவே குழந்தையைத் திட்டுவதோ, தண்டிப்பதோ, பிறர் முன் பேசி அவமானப்படுத்துவதோ தவறு.இதனால் எந்த நற்பயனும் கிடைக்கப் போவதில்லை. அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணர்களை நாடுங்கள். உங்கள் குழந்தையின் பிரச்சினைக்கு இனிதே விடை கொடுங்கள்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல் - 94431 45700  / Mail - alltmed@gmail.com

]]>
Bed wetting, Homeopathy, படுக்கையில் சிறுநீர் கழித்தல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/7/w600X390/image.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/aug/07/bed-wetting-a-major-problem-for-children-and-its-remedies-2751167.html
2746641 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி டெங்கு காய்ச்சல் தடுப்பது எப்படி? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, July 31, 2017 10:00 AM +0530 டெங்கு சுரம் – சில தகவல்கள் :

உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு சுரம். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.

டெங்கு சுரம் எப்படி ஏற்படுகிறது?

டெங்கு 1,2,3,4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5,6 நாட்களில் சுரம் வருகிறது. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்து 2, 3 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையிலும் இவை கடிக்கும்.

தண்ணீர் தேங்க விடாதீர்கள் !

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களில் ஏடியஸ் கொசுக்கள் பெருகி வருகின்றன.ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம், ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள்,டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றை சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் சேரும் தண்ணீரிலும் சலனமின்றி ஓரிடத்தில் கிடக்கும் நீர் நிலைகளிலும் ஏடிஸ் பெண் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?

நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும் 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.

டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள் என்ன ?

டெங்கு காய்ச்சல் (Dengue Fevar – DF)
டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fevar –DHF)
டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)

இவ்வாறு டெங்கு சுரத்தின் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.

DF: கடுமையான [1030 -1050 F] சுரம்,கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி (Retro Orbital pain), தசைவலி,எலும்பு வலி & மூட்டுவலி கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash).

DHF : கடும் சுரம்,தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி, மூக்கு, குடற்பகுதியில் ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.
DSS : நோய் உக்கிர மடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு    12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.

டெங்கு சுரத்தை உறுதிபடுத்த சோதனைகள் உள்ளதா?
    
நேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு சுரத்தை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும். நோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS)அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும்.இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion  Platlets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!

சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன. நிலவேம்பு கசாயம் தினம்-காலை/ மாலை 30மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸால் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25மிலி மருந்து சம அளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும். சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தை தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. ரத்தத் தட்டணுக்கள் (PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ள போது – 1 லட்சம் TO 1½ லட்சம் அளவுக்குள் இருக்கும் போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால்  அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்கா விட்டால்….. பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன்படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் ஏற்றுவது மிகவும் அவசியம் – நல்லது.)

'டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?

உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன்குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.

1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘EUPATORIUM PERF’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொது மக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு  டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். 

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர்
Cell : 9443145700
Mail : alltmed@gmail.com

]]>
Dengue fever, Platelets https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/30/w600X390/dengue-fever-633x319.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jul/31/how-to-control-dengue-fever-2746641.html
2738965 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி நதிமூலங்கள் டாக்டர் வெங்கடாசலம் DIN Sunday, July 30, 2017 02:39 PM +0530 மனிதன் கண்ட சொற்களிலே அற்புதமான சொல் ‘மனிதன்’ என்றும் மனிதன் மகத்தானவன் என்றும் இலக்கிய மேதை மாக்சீம் கார்க்கி கூறுகிறார். மனிதனை ஆய்வு செய்வதாகச் சொல்லி ‘அகம்’ என்றால் என்ன? ‘ஆத்மா’ என்றால் என்ன? ‘மனம்’ என்றால் என்ன? ‘நான் என்றால் என்ன? என்று நீண்ட காலச் சர்ச்சைகள் நிறைய உண்டு.

புறச்சூழல் அகச்சூழலை உணர்வுகளை மனத்தைத் தூண்டி செயலை உண்டாக்குகிறது. அந்த மன உணர்வுகள் புறச்சூழல் மீது தாக்கம் செலுத்தி மறுவினை புரிகிறது. பிறந்த சிசு தாயிடம் பால் அருந்துவது உள்ளுணர்வுகளால் நடக்கிற இயல்புச் செயல்பாடு ஆனால் மனம் என்பது பிறப்பிலேயே அமைந்து விட்டாலும் புறச்சூழல்களால் தூண்டப்பட்டு உருவாக்கப்படுகிறது.

புறக்காரணங்கள் என்பது மாற்றத்திற்கான சூழ்நிலைதான். அகக் காரணங்களே மாற்றத்திற்கான அடிப்படை என்கிறது இயங்கியல். மனத்தை பித்துக் குளியாக, குரங்காக, கல்லாக, கரும்பாக எத்தனை விதமாய் சித்தரிக்கிறோம். எல்லாம் பொருந்துகிறதே!

கையளவு உள்ளம் வைத்து

கடல் போல் ஆசை வைத்து

விளையாடச் சொன்னான்டி' என்பார்

கண்ணதாசன். ஆசைகளும், அச்சங்களும், எண்ணங்களும், வண்ணங்களும், பிறப்பு முதல் ஐம்புலன்களின் வழியாய் பதிவானவை. நுகரப்பட்டவை, எல்லாம் தொகுப்பாகி மனம் என்கிற அமைப்பாகிறது. யாராலும் படைக்கபடுவதல்ல மனம். தனி ஒரு உறுப்பல்ல மனம். புறநிலைமைகளின் காரணமாக தூண்டப்பெற்ற மனம், அகமுரண்பாடுகளிலிருந்து பாதிக்கப்படுகிறது. மாறுகிறது. வளர்கிறது.

COLLECT THE SYMPTOMS, SELECT THE REMEDY என்பது ஹோமியோபதி அணுகுமுறை. அப்படிக் குறிகளைச் சேகரிக்கும் போது மனக்குறிகள் வலுவாக நின்றால் அவற்றுக்கு முதன்மை கொடுத்து மருந்துத் தேர்வு செய்வது அவசியம்.

மனம் என்னும் மேடையின் மேலே...

பெண்கள் மீது எத்தனை இழி மொழிகள், அடைமொழிகள்.

வாழாவெட்டி, வேசி, விதவை, அபலை என்பதும் பெண்ணைத் தானே சுட்டிக் காட்டுகிறது.

ஒரு காலைப் பொழுதில் அபலையாய் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். வலதுபுற விலா எலும்புகளின் கீழே சற்று நடுவயிற்றுப் பகுதிக்கு அருகில் அடிக்கடி வலி வருவதாகக் கூறினார். வலி எந்த நேரம் வரும்? எந்த நேரம் அதிகமாக இருக்கும் என்று கேட்டேன். காலையில் எழுந்தவுடன் வலிக்கும். பஸ்ஸில் வரும் போது கூட வலித்தது என்று பல நேரங்களைக் குறிப்பிட்டார்? வலி எப்போது குறையும்? அல்லது குறைக்க என்ன செய்வீர்கள்? என்று மீண்டும் கேட்டேன். ஒவ்வொரு சமயம் ரொம்ப நேரம் வரை இருந்து வாட்டி வதைக்கும் என்றார்.

எனக்கு திருப்தி ஏற்படவில்லை. மருந்துக்கான படம் (Drug Picture) தெளிவு படவில்லை. வேறொரு கோணத்திலிருந்து குறிகளைக் கேட்க துவங்கினேன். அப்போது அந்த பெண் சம்பந்தமாக கிடைத்த விவரங்கள்:

 அந்த பெண்ணின் வயது 33. மணமாகி 13 வருடமாகிறது. கணவன் அன்பற்றவன். குடிகாரன், இரவு சாராய நெடியோடு கழியாத நாட்கள் இல்லை. 10 ஆண்டாக குழந்தை இல்லை. அதற்கு அவள் தான் காரணம் என்று மூர்க்கமான குற்றச் சாட்டுடன் கணவனின் ஏச்சு பேச்சுகளைத் தாங்கிக் கொண்டிருந்தவள் மனதில் மின்னலாய் ஒரு எண்ணம் வெளிச்சம்.

தன்னிடம் இணக்கமாய் சிரித்துப் பேசிய இன்னொரு வாலிபனுடன் உறவு கொண்டு தாய்மை அடைந்துவிட்டாள். கணவன் மூலமாகவே தான் கர்ப்பமடைந்ததாக அவனை நம்பச் செய்து விட முடியும் என்று நினைத்திருந்தாள். கணவன் நம்பவில்லை. அவனிடம் சந்தேகம் விசுவரூபம் எடுத்தது. கருவைக் கலைத்து விடுமாறு வற்புறுத்தினாள். அவள் மறுத்தாள். கரு சுமந்த வயிற்றில் தாக்குவதற்கு அவன் எத்தனிக்க அவள் எதிர்த்து போராட, பிரச்சனை ஊரார் முன்னிலையில் வந்து நின்றது. கணவனும் மனைவியும் பிரிந்தார்கள். அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான்.

அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற உதவிய வாலிபனுக்கும் மணம் முடிந்தது. அவனுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அவனுடைய வீடு அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது. அவன் வீட்டு விசேசங்களும், சந்தோஷங்களும், அவனுடைய பெண் குழந்தை வளரும் விதமும் அவள் மனதை தீவிரமாகப் பாதிக்கத் துவங்கியது. அது மட்டுமா?  அவன் அவளைச் சந்திக்கும் போதெல்லாம் யாரோ எவரோ என்று ஏறெடுத்துப் பார்க்காமல் அந்நியானாக நடந்து கொள்வதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனவேதனை அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சிறு இடத்தில் வேதனை ஏற்பட்டு விடுகிறது.

நதி மூலம் தெரிந்து விட்டதால் எளிதில் மருந்தை அறிய முடிந்தது. IGNATIA 200 இரண்டு வேளை மட்டும் கொடுத்தனுப்பினேன். ஆதரவு வார்த்தைகளோ, அறிவுரைகளோ ஏதும் சொல்லவில்லை. நாட்கள் நகர்ந்தன. எதிர்பாராத ஒரு நாளில் இன்னொரு பெண் மூலம் அவள் சொல்லி அனுப்பிய தகவல் கிடைத்தது. வலி நின்றுவிட்டது. அவரைப் பார்த்தால் வருத்தம் ஏற்படவில்லை. மனம் திடமாகி உள்ளது. சந்தோஷத்தோடு உடன் வேலை செய்யும் பெண்களைப் போலவே நானும் இயல்பாக மாறி தீப்பெட்டி ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இனி என் குழந்தை தான் எல்லாம்!

கலக்கம் எனது காவியம் – நான் கண்ணீர் வரைந்த ஓவியம்....

கோடையிலும் ஓர் இதமான நாள் குளிர்ந்த மாலைப் பொழுது. 18 வயது இளைஞன் ஒருவன் சோர்ந்த முகத்தோடு சாந்தமே வடிவாய் என்முன் அமர்ந்திருந்தான். கொஞ்ச நாட்களாக பசிக்கவில்லை. சாப்பிட முடியவில்லை என்பது தான்  அவன் பிரச்சனை. அவனுடைய உணவுப் பழக்க வழக்கங்கள் , சிறுநீர், மலம் வியர்வை நிலை, விருப்பு- வெறுப்புகள் எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தேன். கோடையானலும் அவ்வளவாக தாகமில்லை. தண்ணீர்க் குடிக்கும் நினைப்பே வராது என்றால் பளிச்சென்று வேறு குறிப்புகள். புலப்படவில்லை. ஆனாலும் நான் கேட்காமலேயே அவன் சொல்லத் துவங்கிய விசயம் மருந்துத் தேர்வுக்கு பெரிதும் உதவியது. பத்தாம் வகுப்பு வரை நான் படித்ததே பெரிய விசயம். அம்மா அப்பா ரெண்டு பேருமே பிரிந்து வாழ்கின்றார்கள். என் அப்பாவிற்கு என் அம்மா இரண்டாம் தாரம். என் அம்மாவுக்கு என் அப்பா இரண்டாம் தாரம்.

அப்பாவின் முதல் மனைவிக்கு (அவர் இல்லை) ஒரு பிள்ளை உண்டு அவனிடம் அப்பாவுக்கு அதிகமாய் பாசம் உண்டு. அம்மாவின் முதல் கணவருக்கு (அவர் இறந்து விட்டார்) 2 பிள்ளைகள் உண்டு. அம்மா அவர்கள் மேல் தான் அன்பாய் இருக்கும் நான் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை நான் இங்குள்ள வீட்டில் பெரும்பாலும் தன்னந்தனியாக இருப்பேன். பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. இப்போது எனக்கு ஆறுதலாக யாரும் இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்.

நான் தான் வீட்டில் சமைப்பேன். அப்பா குடித்து விட்டு வந்து சாப்பிட்டு தூங்கி விடுவார். சில நாட்களில் என்னுடன் வாதாடிக் கொண்டிருப்பார். எனக்குப் பசிப்பதே இல்லை. நிர்பந்தமாய் சாப்பிட்டால் வயிற்றில் சிரமங்கள் வந்து விடுகின்றன. அவன் இன்னும் சொல்லிக் கொண்டே போனான். ஏனோ தெரியவில்லை. எனக்கு அபூர்வ ராகங்கள் திரைப்படம் நினைவில் மிதந்தது. அவன் தன் நிலை குறித்து சொல்லிக் கொண்டிருந்த போது அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. நான் உனக்கு உதவுகிறேன். நானும் கூட உன் நண்பர் தான்.

உறவு என்பது வானத்திலிருந்து விழுவது அல்ல, நாம் உருவாக்கியக் கொள்வது, உன் விளையாட்டுத் தோழர்கள். வகுப்பு நண்பர்கள், உன்மீது அன்பு செலுத்தும் எத்தனையோ பேர்களோடு இருக்கிறார்கள் என்று சொன்ன போது  விழிகள் பனித்திருக்க புன்னகை பூத்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மருந்து பல்சடில்லா 1m

ஒரு வேளை நாட்கள் சில நகர்ந்தன. அவன் அவ்வப்போது வந்து என்னைச் சாதாரணமாக சந்தித்து சிறிது நேரம் உரையாடிவிட்டு செல்கிறான். நன்றாகப் பசித்து சாப்பிடுகிறான்.

நானே எனக்குப் பகையானேன் – என் நாடகத்தில் நான் திரையானேன்…

கல்லூரி மாணவர் ஒருவர், மிகவும் சிக்கலான உபாதை தனக்கிருப்பதாகச் சொல்லத் துவங்கினார். பிரச்னையை நேரடியாகக் குறிப்பிடாமல் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டே போனார். பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன்.

சாப்பிட்டுச் சிறிது நேரம் கழித்ததும் ஆண்குறி விறைப்படைந்து விடுவதாகவும், அந்நிலை நீண்ட நேரம் நீடித்திருந்து பின்னர் குறைவதாகவும் உள்ளடங்கிய குரலில் சொன்னார். பாலுணர்வுக் கிளர்ச்சியோ, சிந்தனைகளோ ஏதுமற்ற மனநிலையில் கூட சாப்பிட்ட பின் இப்படி ஏற்படுகிறதே என்று வருந்தினார். ஆனால் விறைப்பு ஏற்பட்டு கொஞ்ச நேரத்தில் மெதுமெதுவாக வேட்கை கிளம்புகிறது என்றார். குறிப்பாக மதிய உணவுக்குப் பின் இந்தத் தொந்தரவு கடந்த சில மாதங்களாக இருப்பதாகவும், வகுப்பில் அமர்ந்து கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அவரை வெகு சீக்கிரமே குணப்படுத்திய மருந்து  NUXVOMICA 200

நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஹோமியோபதி சிகிச்சை நோயாளியின் நதி மூலம் தெரிந்தால் மருந்து தேர்வு செய்வதற்கான கதவு திறக்கும்.

மனதின் பதிவுகள் உடலில் நோயாக வெளிப்படும் போது, முழு மனிதனுக்கு மருந்தளிக்காமல் புண்ணுக்கு புணுகு தடவுவதால் புண்ணியமில்லை. ஹோமியோபதியர்களாகிய நாம் நோய் நாடி நோய் முதல் நாடிச் செல்லல் வேண்டும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

 

]]>
mental health, homeopathy, மனநலம், ஹோமியொபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/17/w600X390/depressed-person.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jul/24/homeopathy-gives-remedy-for-mental-health-issues-2738965.html
2737300 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி வெள்ளைப்பாடு தொல்லையிலிருந்து விடுதலை! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, July 17, 2017 12:28 PM +0530 பெண்களின் பிறப்புறுப்புத் தசைப் பகுதியிலிருந்தும், கருப்பையின் வாய் மற்றும் உள்சுவர்களிலிருந்தும் ஒருவித பிசுபிசுப்பான திரவம் (VAGINAL DISCHARGE) இயற்கையாகவே சுரக்கிறது. பிறப்புறுப்புப் பகுதிகள் எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கவும், உறுப்புகளுக்கிடையில் உராய்வு ஏற்படாதிருக்கவும் இச்சுரப்பு உதவுகிறது.

சாதாரணமாக மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட  நாள்களில்- சினைமுட்டை வெளிவரும் நாளையொட்டி (OVULATION PERIOD) இத்திரவம் அதிகம் சுரக்கக்கூடும். சிலருக்கு மாதவிடாய்க்குச் சிலநாள் முன்பாகவோ அல்லது மாதவிடாய் முடிந்த பின்போ இச்சுரப்பு சற்று அதிகரிக்கிறது. வேறு சில சூழ்நிலைகளிலும் மிகுவதுண்டு.

பருவமடையக் காத்திருக்கும் பெண்களிடமும், சமீபத்தில் பருவமடைந்த பெண்களிடமும் அதிகம் சுரக்கலாம். கர்ப்பகாலத்தில் அதிகமிருக்கலாம். உடலுறவில் பெண் உச்ச நிலை உணர்ச்சியை அடையும் போது அதிகரிக்கலாம். இது உடலியல் தேவை. இது குறித்து பெண்கள் கவலையோ, பயமோ கொள்ளத் தேவையில்லை.

ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக சோம்பலான, ஆடம்பர வாழ்க்கை அதீக உடலுறவு ஈடுபாடு, பிறப்புறுப்புகளைச் சுத்தமாக பேணாமை, கர்ப்பப்பை, பிறப்புறுப்பில் புண்கள், அழற்சி, கட்டிகள் இருந்தல் போன்ற காரணங்களாலும் இயக்குநீர் (HORMONES) குறைப்பாடுகளாலும், இனப்பெருக்கமண்டல பலவீனங்களாலும், பாலியல் தவறுகளாலும் வெள்ளைப்பாடு விபரீதமாக ஏற்படுகிறது. அப்போது இயல்பான திரவச்சுரப்பு போலின்றி அளவு, நிறம் மாறிவிடுகிறது.  துர்நாற்றமும் அரிப்பும், உள்ளாடை நனையுமளவும், ஆடையில் பட்ட கறை போகாதளவும், கால் வழியே வழிந்தோடி வருமளவும் வெள்ளைப்பாடு தீவிரப்படுகிறது.

வெள்ளைப்பாடு வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல், நிறமின்றியோ, வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ, பச்சையாகவோ, ரத்த நிறமாகவோ வெளிப்படுகிறது. நீர்போல், பால்போல், பசைபோல், சீழ்போல், தயிர்போல் முட்டை வெண்கரு போல் பலவிதங்களில் பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. மாதப்போக்கிற்குப் பதிலாக முழுவதும் வெள்ளைப்பாடாக வெளியேறும் துயரத்தையும் சில பெண்கள் அனுபவிக்கின்றனர்.

பொதுவாக வெள்ளைப்பாடு, காரணமாக புணர்புழைப்பகுதி அதிகம் பாதிக்கப்படுகிறது. அரிப்பினால் சொறிந்து புண்ணும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் வீக்கமும், உடறுறவின் போது எரிச்சலுடன் கூடிய வேதனையும், நீர்க்கடுப்பும் ஏற்படுகின்றது. இடுப்புவலி, அடிவயிற்றுவலி, சினைப்பைகள் கருப்பை, கருப்பை இணைப்புக் குழல்கள் பாதிக்கப்படுகிறது. கடுமையான உடல்சோர்வும், மனசோர்வும் சிலசமயம் காய்ச்சலும் தாக்குகிறது. ஜீரணப்பாதிப்பு, படபடப்பு, மூச்சுத்திணறல், மாதவிடாய் போக்கில் தகாத மாறுதல்கள் ஏற்படுகிறது. சிலருக்கு மலட்டுத் தன்மையும் ஏற்பட்டு விடுகிறது. அதிகளவு வெள்ளைப்பாடுள்ள பெண்கள் பிள்ளை பெற்றால் வலிப்பு உட்பட பல ஆபத்தான வியாதிகள் குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. வளரும் பருவத்தில் காசநோய் தாக்கலாம்.

கருப்பை சார்ந்த கோளாறுகளால் பலருக்கும் வெள்ளைப்பாடு மிகுதியாக ஏற்படுகிறது. கருப்பை வாய்ப்பகுதி அழற்சி, புண், சிறு கட்டிகள் உண்டாதல் காரணமாக மஞ்சள்நிற வெள்ளைப்பாடு வரக்கூடும். அடிவயிற்றில் கடும்வலியும் ஏற்படும் சில பெண்களுக்கு அழுகல் கருச்சிதைவு ஏற்படும்போதும், பிரசவத்திற்குப்பின் நீடித்த அசுத்தத்தாலும், அரைகுறையானக் கருக்கலைப்புக்கு ஆளாவதாலும் கருப்பையில் சீழ்தன்மையிலான வெள்ளைப்பாடு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் வெளிப்படும் கர்ப்பப்பையில் கட்டி, புற்று உள்ள பெண்களுக்கு மிகுந்த துர்நாற்றமுள்ள வெள்ளைப்பாடு ஏற்படும். இது ஆபத்தானது, இதன் ஆரம்ப அறிகுறி செங்கல் நிறத்தில் விட்டுவிட்டுக் கசிந்துவரும். பின்னர் அதிகளவிலும், உள்ளாடை நனைந்து விடுமளவும், இரத்தம் கலந்தும் கூட வெளிப்படும். இத்தகைய நிலையில் ஆங்கில மருந்துவத்தில் டூச்சிங் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் முழுநலம் பெறுதல் என்பது கானல் நீர்தான். ஆனால் மொத்தக்குறிகளுக்கேற்ப ஹோமியோ மருந்து கொடுத்து மிகச் சிறந்த பலன் காணலாம். முதுமையில்(SENILE VAGINTIS) புணர்புழை அழற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைப்பாடில் இரத்தம் கலந்திருக்கக்கூடும். ஆனால் அது புற்று அல்ல பயமும் தேவை இல்லை.

பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம் ஏற்படும் வெட்டை நோய் (GONORRHOEA)  கிரந்தி நோய் (SYPHILLIS) காரணமாகவும் வெள்ளைப்பாடு துயரம் நிகழ்கிறது. யோனி உதடுகளில் புணர்வழியில் குழிப்புண்கள் உருவாகி எந்த நேரமும் வேதனை இருக்கும். சிறுநீர்க்கடுப்பும் இருக்கும். கருப்பைக் கழுத்து வழியாக, கருப்பை இணைப்புக் குழல்கள் வரை பாதிப்பு பரவி கடும் அடிவயிற்று வலியுடனும் இடுப்பு வலியுடனும் சீழ்போன்ற மஞ்சளான வெள்ளைப்பாடு ஏற்படுகிறது.

பெண்ணுறுப்பில் ‘காப்பர் டி’ லூப் போன்ற கருத்தடைச் சாதனங்களைப் பொருத்துதல், செருகு மாத்திரைகளை (அலோபதி) பயன்படுத்துதல், களிம்புகள், சிலவகை மருந்துகள் காரணமாக அழற்சி உருவாகி வெள்ளைப்பாடு ஏற்படுமானால் அவற்றை நீக்கினால் மட்டுமே வெள்ளைப்பாடும் நீங்கும்.

வெள்ளைப்பாடுள்ள பெண்கள் தம் பிறப்புறுப்பை குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் தினமும் 2,3 தடவை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். எளிய உணவுப்பழக்கம், எளிய உடற்பயிற்சிகளும் அவசியம். இவ்வியாதிக்கு 80 சதவீதம் பெண்கள் ஆளாகியிருந்தாலும் மருத்துவம் செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களும் ஆங்கில மருந்துகள் மூலம் தற்காலிக நிவாரணம் மட்டுமே பெறுகின்றனர். மேலும் கர்ப்பப்பையைச் சுத்தம் செய்வது எனும் பெயரில் ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர். இதனால் வேதனையும் கர்ப்பப்பை அழற்சியும்தான் மிஞ்சும்.

வெள்ளைப்பாடு துயரிலிருந்து விடுதலை பெற ஹோமியோபதியில் பலமருந்துகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணின் மனநிலை, உடல்நிலை, தனிதன்மைகள் போன்ற மொத்தக் குறிகளுக்கேற்ப ஹோமியோ மருந்து கொடுக்கப்படும் போது வெள்ளைப்போக்குப் பிணி பனிபோல் விலகும். வெள்ளைப்பாடுத் துயரை நீக்க உதவும் சில ஹோமியோ மருந்துகள்.{pagination-pagination}

வெள்ளைப்பாடு நிறமும், தன்மையும் மருந்துகளும்

முட்டை வெண்கரு போன்ற, வெதுவெதுப்பான, தெளிவான

வெள்ளைப்பாடு - போராக்ஸ்

 

நீர்போன்ற, அரிக்கக்கூடிய, கால்கள் வழியே வழியுமளவு அதிக வெள்ளைப்பாடு - அலுமினா

பால் போன்ற வெள்ளைப்பாடு - பல்சடில்லா

பால் போன்ற கெட்டியான நாற்றமுள்ள வெள்ளைப்பாடு நீர்போன்ற ஏராளமான பாதம் வரை வழியும் மஞ்சள்நிற வெள்ளைப்பாடு -  செபியா

மீன் நாற்றமுள்ள காரமுள்ள, நீர்க்கொப்பளம் உண்டாக்கக்கூடிய வெள்ளைப்பாடு -  சிபிலினம்

சிவப்பான வெள்ளைப்பாடு - மெடோரினம்

ரத்தம் கலந்த தடித்த வெள்ளைப்பாடு - சைனா / லைகோபோடியம்

துவைத்தாலும் போகாத ஆடையில் மஞ்சள் கறையை ஏற்படுத்தும் நாற்றமுள்ள ஏராளமான வெள்ளைப்பாடு - வைபூர்ணம் ஓபுலஸ்

பிறப்புறுப்பில் கடும் அரிப்பை ஏற்படுத்தும், காரத்தன்மையுள்ள, ஏராளமான வெள்ளைப்பாடு, பிறப்புறுப்பிலும் தொடையிலும் பலவீனத்தையும் கடும்வலியையும் ஏற்படுத்தும்  - பியூலெக்ஸ்

அரிசிக்கஞ்சி போன்ற வெள்ளைப்போக்கு இறைச்சி கழுவிய நீர் போன்ற வெள்ளைப்போக்கு - கிரியோசோட்டம் ஃபெர்ரம் அயோடு

மாதவிடாய் 1 நாள் மட்டும் இருக்கும், 2 ஆம் நாளிலிருந்து ரத்தம் கலந்த வெள்ளைப்பாடு வெளியேறும் - நைட்ரிக் ஆசிட்

தண்டுவடமே உடைந்துவிட்டது போன்ற முதுகுவலி ஏற்படுத்தும் வெள்ளைப்பாடு - காலி அயோடு ரேடியம் ஓவாடோஸ்டா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

Dr.S.வெங்கடாசலம் - மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

]]>
homeopathy, ஹோமியோபதி, Vaginal discharge, வெள்ளைப்பாடு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/14/w600X390/sick.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jul/17/homeopathy-remedies-for-vaginal-discharge-2737300.html
2734778 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மனச்சோர்வு நோய் டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, July 10, 2017 12:19 PM +0530 ழுத்திக் கொல்லும் வாழ்க்கையின் அவலங்களும், சமுதாயச் சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் ஏமாற்றங்களும் தாக்குதல்களும் இளைத்த மனங்களை பாதிக்காமல் விடாது. மனதின் இயல்பு நிலைகளில் தொய்வும், தளர்ச்சியும் உண்டாகும்.

மனத்தளர்ச்சியை, விரக்தியை தன்னம்பிக்கை கொண்டவர்களால் எதிர்த்து முறியடித்து இயற்கையான மனநிலைக்கு மீள முடியும். ஆயினும் பெரும்பாலானவர்களை மனச்சோர்வு நோய் ஆட்டி அலைக்கழித்து விடுகிறது. ஒரு சிலரோ தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உந்தித் தள்ளப் படுகின்றனர்.

பிரபல திரை நட்சத்திரங்களாய் மின்னிய ஷோபா, விஜயஸ்ரீ, லட்சுமிஸ்ரீ, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, பிரதீக்‌ஷா, மோனல், ஜீவி போன்றோர் முதல் சராசரி மனிதர்கள் வரை அன்றாடம் தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பாதுகாப்பற்ற தன்மையின் (Insecured feeling) எல்லைக்கே வந்து நிற்கும் போதுதான் தற்கொலை தவிர வேறுவழியில்லை என்ற மனநிலை உருவாகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவீதம் பேர்கள் வரை இந்த மனமுடக்கத்திற்கு ஆளாகிறார்கள். இம்மனநிலை சற்று நீடித்து நிலைக்குமானால் உறுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய உணர்வும் எண்ணமும் தோன்றும் போது முறையான கவுன்சிலிங் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தற்கொலை முடிவிலிருந்து வெளியேற முடியும்.

அவமானம், நீடித்த மன உளைச்சல், ஏமாற்றம், விரத்தி போன்ற மனோ காரணங்களால் பாதிக்கபட்டு தற்கொலைக்கான தூண்டுதல் ஏற்படுகிறது. மன அழுத்தம், ஆழ்மன வருத்தம் போன்ற பாதிப்பதை நீக்க ‘இக்னேஷியா’ என்ற மருந்தும், கடுமையானவேதனையால் விரக்தியால் ஏற்படும் தற்கொலை உணர்வை மாற்ற ‘ஆரம்மெட்’ என்ற மருந்தும் பயன்படுகின்றன.

வாழநினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்?

Depression என்ற சொல்லுக்கு சரியான பொருள் பள்ளம் Mind De Pression என்பது உள்ளத்தில் ஏற்பட்ட பள்ளம். மனவியலில் ‘மனத்தளர்ச்சி நோய்’ என்று விவரிக்கப்படுகிறது. 1.மனம் சார்ந்த சோர்வு 2.நரம்பியல் சார்ந்த சோர்வு என்று இருவகையாக இந்நோய் காணப்படுகிறது. மனம் சார்ந்த சோர்வு மனதிலேயே தோன்றுகிறது. நரம்பியல் சார்ந்த சோர்வு கடுமையான மன உளைச்சலின் விளைவாக தோன்றக்கூடியது. Depression காரணமாக தூக்கம் தூரப் போகக் கூடும், பசி பறி போகக் கூடும். தலைவலியும் உடல் அசதியும் துயரப்படுத்தக் கூடும். “தரை மீது காணும்யாவும் தண்ணீரில் போடும் கோலம்! வாழ்வே மாயம்!” என்று வாழ்க்கை மீதான விரக்தியும் வெறுப்பும் மேலோங்கக் கூடும். “சாவது ஒன்று தான் தீர்வு” என்று முடிவெடுக்கக் கூடும்.

இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய மனசோர்வு நோயை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும் அறிகுறிகளை ஆய்வு செய்து உரிய மருந்து கண்டறிந்து பயன்படுத்தினால் மனசோர்விலிருந்து உறுதியாக மீள முடியும்.

மருந்துகள் குறிகள்

 • அம்ப்ரா கிரிஸா - முதுமை காரணமாக மனத்தளர்ச்சி (Senile Depression)
 • கோனியம் - மாதவிடாய் காலத்தில், கர்ப்ப காலத்தில் மாதவிடாய் நிற்கும் (Menopause)  காலத்தில் ஏற்படும் மனசோர்வு.                                                                          
 • அக்னஸ் காஸ்டஸ் கலாடியம், ஜெல்சிமியம் - ஆண்மைக் குறைவு காரணமாக உள்ளத்தில் சோர்வும் விரக்தியும்
 • இக்னேஷியா -முரண்பாடுகளால், ஆழ்மன வருத்தங்களால், அழுகையால் மனத்தளர்ச்சி.
 • நக்ஸ்வாமிகா - விந்து வெளியேற்றத்தைத் தொடர்ந்து கடுமையான மனச்சோர்வு.
 • ஸ்டாபிசாக்ரியா - அவமானங்களாலும், பீறிடும் கோபத்தாலும் ஏற்படும் மனத்தளர்ச்சி, பாலியல் பிழைகளால், பலாத்காரம் அல்லது  நிர்பந்தமான பாலியல் உறவால் விரக்தி       
 • ஆரம்மெட் - வாழ்க்கை மீது வெறுப்புணர்ச்சியால் தற்கொலை எண்ணம்.
 • கோகா - அதிக உழைப்பின் காரணமாக மனசோர்வு.
 • காலி புரோமெட்டம் - திருப்தியற்ற உடலுறவுக்குப் பின் மனசோர்வு, ஒழுக்கக் குறைபாடு குறித்த பயமும் காணப்படும் (Fear of Moral deficiency).
 • காலி பாஸ் - அதிக பணிகளால், கவலைகளால், மனக் கிளர்ச்சிகளால், தூக்கமில்லாமையால் உடல் மனச்சோர்வு.
 • பாஸ்பரஸ் - தனக்கு குணப்படுத்த முடியாத இருதய நோய் இருப்பதாக பயந்து கடுமையான மனச்சோர்வும், விரக்தியும் அடைதல்.
 • பைடோலக்கா - கீல்வாதம் காரணமாக மனசோர்வு.
 • ஆர்ஸ் ஆல்பம் - அடிமனதில் மறைந்துள்ள குற்ற உணர்ச்சியால் மனச்சோர்வு, மருந்துகளால் பலனில்லை என்று எண்ணம், மனச்சோர்வு, பயம், பதற்றம், அமைதியற்ற தன்மை அனைத்தும் காணப்படும்.
 • மான்சினெல்லா - பூப்படையும் காலத்தில் பருவப் பெண்களிடம் ஏற்படும் மனச்சோர்வு நோய்.
 • லைகோபோடியம் - பள்ளித் தேர்வில் தோல்வி காரணமாக ஏற்படும் மனசோர்வு நோய்.
 • பல்சடில்லா - இயக்குநீர் இயக்க மாற்றங்களால் (Hormonal Changes) மனச்சோர்வு, அழும் சுபாவம், அனுதாபத்தை, ஆறுதலைத் தேடும் ஏக்கம், குளிர்பானங்களில் விருப்பம், புத்துணர்வூட்டும் காற்றில் நாட்டம்.

 

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்

Cell : 9443145700 / Mail : alltemed@g,mail.com

]]>
Depression, Homeopathy, மன அழுத்தம், மனச்சோர்வு, ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/10/w600X390/depressed.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jul/10/depression-and-homeopathy-remedies-2734778.html
2730995 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளதா? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, July 3, 2017 10:30 AM +0530 இருண்ட வீட்டில் ஒளி!

அவர்  ஒரு கல்லூரி விரிவுரையாளர். மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தையில்லை என்று உறவினர்கள் விசாரிக்கத் துவங்கி விட்டனர். உண்மை நிலை இவருக்கு மட்டும் தான் தெரியும். மணமான நாள் முதல் மனைவிக்கு தாம்பத்தியத்தில் வெறுப்பு. இனிய சங்கீதமாய் இழையோட வேண்டிய இல்லறம்… சூறாவளியாய் சுழன்றடித்தது. நண்பர்களோ, உறவினர்களோ, அக்கம்பக்கத்தினரோ எவருடனும் இணக்கமில்லை. யாருடனும் பேச, பழகப் பிடிக்காத மனைவியின் மனநிலையை அவரால் மாற்ற இயலவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்தால் வர மறுக்கிறாள்.

இந்நிலையில் அவர் எங்கள் மருத்துவமனையில் ஆலோசனை பெற வந்தார். வருத்தங்களைக் கொட்டித் தீர்த்தார். ‘இவளுடன் எப்படி நான் காலந்தள்ளுவது?’ என்று மனம் உடைந்து கேள்வி எழுப்பினார். அவரிடம் ஹோமியோபதி மருத்துவத்தின் ஆற்றல் பற்றி விவரித்தேன். சற்றே பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டேன். SEPIA என்ற மருந்தினை உயர்வீரியத்தில் கொடுத்தேன். ‘இதைச் சாப்பிட மறுப்பாளே?” என்றார். மனைவிக்குத் தெரியாமல் எப்படி மாத்திரையைக் கொடுக்கலாம் என்று எளிய வழிமுறையைச் சொன்ன பின் சமாதானம் அடைந்தார்.

30 நாட்கள் கடந்தன. அவர் சற்றே புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். மனைவியின் நடவடிக்கைகளில் தெரியும் நேர்மையான மாற்றங்களைப் பட்டியல் இட்டார். அன்பான வார்த்தைகளையும் உபசரிப்பையும் சில நாட்களாகப் பார்க்கும் போது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகக் கூறினார். சிகிச்சை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இனிய தென்றல் தவழத் துவங்கியதை அடுத்தடுத்த வருகையின் போது மனநிறைவோடு தெரிவித்தார். சிகிச்சை 5ஆவது மாதத்தைக் கடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் இனிப்புகள் பழங்களுடன் வந்து… மனைவி கருத்தரித்திருப்பதாய் உற்சாகமாய் கூறி… அன்பளிப்பையும் மனம் நிறைந்த நன்றியையும் வழங்கிவிட்டுச் சென்றார்

Aversion towards beloved ones… என்ற மனக் குறி அடிப்படையில் செபியா தேர்வு செய்யப்பட்டது. தான் ஈன்ற கன்றையே நெருங்க விடாமல் முட்டித் தள்ளி பாலருந்த அனுமதிக்காமல் தடுத்த பசுவிற்கு செபியா அளித்து தாய்மையை மீட்டு தந்த அனுபவம் ஹோமியோபதிக்கு உண்டு. (மருந்து தேர்வு செய்வதும், வீரியம் மற்றும் உட்கொள்ளும் அளவு, தொடர் மருந்துகள் போன்றவற்றை முடிவு செய்யவும் அனுபவமிக்க ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை அவசியம்).

இரு நாள் ஊமை வாழ்க்கை

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த தாழ்த்தப்பட்டவர்களின் கிராமத்தில் பலருடன் இரண்டறக் கலந்து பழகியிருக்கிறேன். அந்த மக்களின் அன்பும் உபசரிக்கும் பண்புகளும் மறக்க முடியாதவை.

எனது மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட ஆரம்ப நாட்களில் 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் நாள் மாலை 3 மணியளவில் அவர் மனைவியுடன் வந்தார். நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாகவும், மாலை 5 மணிக்கு வருமாறும் பணிப்பெண்கள் கூறியுள்ளனர். அவர் கண்ணீருடன் கும்பிட்டு வேண்டியிருக்கிறார்; அவரின் மனைவியும் டாக்டருக்கு இவரை நல்லாத் தெரியும்: இவரு பேரைச் சொல்லுங்க. என்று சொல்லியிருக்கிறார். பணிப்பெண்கள் விவரத்தைக் கூறியதும்… அவரைக் காண வந்தேன்.

என்னைக் கண்டதும் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் பெருகி வழிந்தது. ஊமை போல சைகையில் ஏதோ சொல்ல முயன்றார்… சிறுகுரல் கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவரது மனைவிடம் விசாரித்தேன். ‘மதியம் ஒன்றரை மணிக்கு வழக்கம் போல சாப்பிட வந்தார். ரொம்பப் பசிக்குது என்றார். அவரை உட்காரச் சொல்லி விட்டு தட்டில் சோறு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால்…. அவரால் பேச முடியவில்லை.. தொண்டையை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு புரண்டு அழுதார். சத்தமும் வரவில்லை. நானும் பயந்து விட்டேன்’ என்றார்.

பீதியில் இருந்த நோயாளிக்கு முதலில் ACONITE அளித்தேன். அவரது துயரம் தணியவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை… குழந்தையாய் கேவிக் கேவி அழுதார். அடுத்து…CAUSTICUM உயர்வீரியத்தில் ஒரு வேளை கொடுத்து விட்டு, ‘BRAIN- CT’ ஆய்வு செய்து வருமாறு அனுப்பினேன். இரண்டாம் நாள் மதியம் வந்தார். CTஆய்வு அறிக்கை BULPAR PALSY’ என்று சுட்டிக் காட்டியது.ARNICA-10M’ மருந்தினை நீரில் கலந்து (உறங்கும் நேரம் தவிர) ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் தொடர்ந்து அருந்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன்.

மூன்றாம் நாள் காலை அவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுமாய் சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. இன்று காலை எழுந்ததும் அவர் வழக்கம் போல பேசினார். நன்றாகப் பேசினார்… என்று அவரது மனைவி நன்றி பெருக்கோடு கூற… அவர்  மீண்டும் கண்களில் நீர் வழிய கும்பிட்ட படி’ சார்! என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சுன்னு நெனச்சேன். கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க…ரொம்ப நன்றி’ என்று நா தழுதழுக்கக் கூறினார். சுவரில் மாட்டிருந்த ஹோமியோபதியின் தந்தை மாமேதை டாக்டர் ஹானிமனைக் காட்டி.. ‘நாம் எல்லோரும் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

இந்தச் சிகிச்சைக்குப் பின் அவரை எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தால்…  இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

6 மாத அவஸ்தையும் 6 நாளில் நிவாரணமும்!

26 வயது பெண் நோயாளி ஆறு மாதகாலமாக தொடர்ந்து டைபாய்டு சுரத்தின் பிடியிலும் அதற்கான தொடர்ச்சியாக அலோபதி மருத்துவத்தின் பிடியிலும் சிக்கிய நிலையில் அவரது கணவர் ஹோமியோபதி சிகிச்சைக்கு எங்களிடம் அழைத்து வந்தார்.

எலும்பும் தோலுமாய் தோற்றம்... ஓரளவு திரவ உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது… எது சாப்பிட்டாலும் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு… மோசமான பலவீனம்… பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கள் சொருகின… தலை முதல் கால் வரை வலிகள்..இடுப்பிலும், கால்களிலும் கைகளிலும் அடித்துப் போட்டது போல் வலிகள்… காலையில் குளி்ர்… மாலையில் தினமும் கடும் சுரம்… மனக் குழப்பம்… தலைசுற்றல்…. ஆங்கிலச் சிகிச்சைகளுக்கான அனைத்து அறிக்கைகளையும் காட்டினார்கள். நோயைக் கண்டறிய அதிநவீனக் கருவிகளையும் அறிவியல் ஆய்வு முறைகளையும் பயன்படுத்தும் அலோபதி மருத்துவம்… நோயின் பெயருக்கு சிகிச்சை அளிப்பதால் தோல்விகள் தவிர்க்க முடியாதவையே.

ஹோமியோபதியில் ஆர்ஸ், பாப்டீஸியா, டைபாய்டினம் ஆகிய மூன்று மருந்துகள் குறைவான டோஸ்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. முதல் மூன்று நாளில் நல்ல முன்னேற்றம். வாந்தி கட்டுக்குள் வந்தது. பசி சற்றே கூடியது. சோர்வு குறையத் துவங்கியது. ஆறு நாட்களில் சுரம் முற்றிலும் விலகியது. இருப்பினும் மேலும் சிலநாட்கள் சில வேளை மருந்துகள் வழங்கினோம். 10 நாட்களுக்கு பிறகு இயல்பான நிலைக்குத் திரும்பினார். மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் முதன் முறையாக WIDAL TEST- NEGATIVE என்பதை உறுதி செய்தது.

கிழிந்த உதடுகள்

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருவிலிருந்து மூன்றரை வயதுச் சிறுவனை அவனது தாய் பதற்றத்துடன் தூக்கி வந்தார். ஓடி விளையாடும் போது படிக்கட்டில் முகம் பதிய விழுந்திருக்கிறான். உதடுகளில் அடிப்பட்டு கிழிந்துவிட்டன. வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை கைக்குட்டையால் தாய் துடைத்துக் கொண்டிருந்தாள்.

உடனடியாக ARNICAவும் RESCUE REMEDYயும் கொடுத்தோம். அழுது கொண்டே இனிப்பு மாத்திரைகளை சுவைத்து விழுங்கினான். அவனுக்குத் தொடர் மருந்தாக Calendula 30c தினசரி மூன்று வேளையும் பின்னர் Calendula 200 c வீரியத்தில் தினம் ஒரு வேளை வீதம் இரண்டு நாட்களுக்கு கொடுத்து அனுப்பினோம். ஆங்கில மருத்துவ உதவி இல்லாமல் கிழிந்த உதடுகளில் தையல் போடாமல் முழுமையாகக் குணமடைந்திருந்தான். பையனின் அப்பாவும் ஹோமியோபதி மருத்துவத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர் என்பதால் நன்கு ஒத்துழைத்தனர். இது போன்ற காயங்களில் காலண்டுலா-வின் ஆற்றல் வியக்கத்தக்கது.

ஊனம் ஆக்குவதற்குப் பெயர் தான் சிகிச்சையா?

25 வயது பெண். மணமாகி 4 வருடங்கள் கடந்தும் குழந்தையில்லை. ஸ்கேன் ஆய்வில் வலது சினைப் பையில்(RIGHT OVERY) 2 நீர்மக் கட்டிகளும்(CYSTS), இடது சினைப் பையில் (LEFT OVARY) ஒரு பெரிய நீர்மக் கட்டியும்(LARGE CYST) இருப்பதை கண்டறிந்து பெண் சிறப்பு மருத்துவர்களிடம் (GYNAENOCOLOGISTS) சிகிச்சை பெற்றார்.

அவருக்கு அடிவயிற்றின் இருபுறமும் வலி; குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. ஒழுங்கற்ற, வேதனைமிக்க மாதப் போக்கு; சுமார் ஒன்றை ஆண்டு ஊசி, மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் ஸ்கேன் ஆய்வு செய்து பார்த்தனர். வலது சினைப் பையில் 4 நீர்மக் கட்டிகளும், இடது சினைப் பையில் 3 நீர்க்கட்டிகளும் இருந்தன. கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் கட்டி ஒன்றும் உருவாகியிருந்தது.

வலியின் அளவும் அதிகரித்திருந்தது. கர்ப்பப்பையும் வீங்கியிருந்தது. மாதப் போக்கோ பெரும் துயரமாய் மாறியது. குழந்தை பெறும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு,அறுவைச்சிகிச்சை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பெண்மைப் பிணியியல் நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

மனமுடைந்த நிலையில் ஹோமியோபதி மருத்துவம் செய்து கொள்ள வந்த அப்பெண்ணின் துயர்குறிகளை ஆய்வு செய்து மருந்துகள் அளிக்கப்பட்டன. 10 நாட்களில் வலிகள் நன்கு குறைய துவங்கின. உடலில் புத்துணர்ச்சியும் உள்ளத்தில் நம்பிக்கையும் ஏற்பட்டது. மிகுந்த ஆர்வத்தோடும், பொறுமையோடும் ஹோமியோபதி சிகிச்சைக்கு அப்பெண்மணி ஒத்துழைத்தார்.

ஒரு மாத காலத்தில் மாதாந்திரப் போக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்றரை மாதங்களுக்குப் பின் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், சினைப் பைகளை முற்றிகையிட்டிருந்த நீர்மக் கட்டிகள் மற்றும் கர்ப்பப்பையின் ஃபைப்ராய்டு கட்டி அனைத்தும் மறைந்து போயிருந்தன. தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பபையும் சினைப்பைகளும் இயல்பான ஆரோக்கிய நிலைக்கு வந்து விட்டன. அடுத்த மூன்று மாதங்களில் அப்பெண் தாய்மையடைந்தார்.

உள்ளே அமைந்த உறுப்பானாலும், வெளியே அமைந்த உறுப்பானாலும் உடலின் எந்த உறுப்பை அகற்றினாலும் ஊனம் என்பதுதானே பொருள். கர்ப்பப்பை அகற்றப்படுகிறது என்றால் அதுவும் ஊனம் தானே?

மலட்டுத்தன்மை அல்லது குழந்தையின்மை என்பதையும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் ஊனம் எனலாம். இந்த இரண்டு ஊனங்களும் ஏற்படாமல் அப்பெண்ணைப் பாதுகாத்தது ஹோமியோபதி மருத்துவம். இது போன்ற அரிய சிகிச்சைகளை ஆரவாரமின்றி எளிமையாகச் செய்து காட்டி வருகிறது. விபத்துக் காலங்கள் தவிர பெரும்பாலான  வியாதிகளில் அறுவைச் சிகிச்சைகள் அவசியமில்லை என்று சொல்கிறது ஹோமியோபதி.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltemed@g,mail.com

 

]]>
homeopathy, ஹோமியோபதி சிகிச்சை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/3/w600X390/AAEAAQAAAAAAAAY7AAAAJGE4OTE2MzEyLTQ5NmMtNGU3My05N2JhLWE0NWU5ZjM3ZTk4Ng.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jul/03/homeopathy-treatment-for-couples-2730995.html
2727381 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி பெண்ணே! பசியைப் புறக்கணிக்காதே! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, June 26, 2017 11:45 AM +0530 அனைத்து உயிர்களின் அன்றாட இயக்கங்களுக்கு அடிப்படைத் தூண்டுதலாக இருப்பது பசி. உயிர்களின் அடிப்படை இயல்பு பசி. மனிதனின் பசியைத் தீர்க்க இயற்கை எண்ணற்ற வளங்களை வாரி கொடுத்துள்ள போதிலும், அனைவரும் அவற்றைத் தேவைக்கேற்ப துய்க்க முடிவதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த சமுதாயச் சூழலில் அளவுக்கு மீறி உண்பவர்கள் ஒருபுறமும் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள் மறுபுறமும் உள்ளனர். பசி என்பது பிணியாக மாறி (பசிப்பிணி) மனிதர்களை வாட்டி வதைக்கிறது.
 
பசியும், பசிப்பிணியும், பசிப்பிணியால் ஏற்படும் துயரங்களும் பெருகியுள்ள சூழலில் பசியின்மை என்ற உடலியல் பிரச்சனையும் சிலரிடம் காணப்படுகிறது. பசியற்ற, பசி உணர்வற்ற நிலை ‘ANOREXIA’ என்றும் மனரீதியான, நரம்பியல் சார்ந்த பசியின்மை ‘ANOREXIA NERVOSA’என்றும் கூறப்படுகிறது.
 
பசியின்மைக்கு சில உடலியல் காரணங்கள் இருந்த போதிலும் நரம்பியல் பசியின்மைக்கு மன உண்ர்ச்சிகளே அடிப்படைக் காரணங்களாக உள்ளன. இந்நோய் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பருவ வயது / இளம் வயதுப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நடுத்தர வயது, முதிர்ந்த வயதுப் பெண்களிடம் சிலரிடம் மட்டுமே இந்நோய் உள்ளது. 


 
நரம்பியல் சார்ந்த பசியின்மைக்கு ஒரே ஒரு முக்கியக் காரணம் உடலை மிகவும் ஒல்லியாக, [SLIM] வாளிப்பாக வைத்து கொள்வதற்காக பசியைப் புறக்கணிப்பதுதான். ஏற்கனவே ஒல்லியாக உள்ள பெண்கள் கூட பருமனாகி விடக்கூடாது என்று கருதி உணவைக் குறைத்து உடலை இளைக்கக் செய்ய வேண்டும் என்பதற்காக எவ்வளவு பசித்தாலும் பட்டினி கிடப்பது, சில பெண்கள் பருவமடையப் பயந்து உணவை வெறுத்து ஒதுக்குவது போன்ற காரணங்களால் மனரீதியான பசியின்மை(ANOREXIA NERVOSA) ஏற்படுகிறது. 
 
தொடர்ந்து பசியினைப் புறக்கணித்து உண்ணாமல் இருப்பதால் பல்வேறு ஹார்மோன்களின் குறைபாடுகள் ஏற்படுகின்றன. தேவையான எடையிலிருந்து 25 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து விடுகிறது. முறையான உணவும், தேவையான சத்துக்களும் கிடைக்காமல் மாதவிடாய் அடக்கப்படுதல், தாமதமாகுதல், நின்று விடுதல், அளவு மாறுபடுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்நோயால் சில பெண்களுக்கு மூன்று, நான்கு மாதகாலம் மாதவிடாய் தாமதமாகவும் வர நேரலாம்.
 
இளைஞர்களிடம் மனரீதியான பசியின்மை நோய் ஏற்பட்டால் பெண்கள் மீதான கவர்ச்சியும் பாலியல் உணர்ச்சிகளும் குறைந்து விடும். எடை குறைந்து வலிமை குன்றி உடல் பலவீனங்கள் உண்டாகும். பொதுவாக இந்நோய் ஆண், பெண் இருபாலருக்கும் இருதயத் துடிப்பு குறையும்; ரத்த அழுத்தம் குறையும்; பாலியல் உணர்வுகள் தோன்றாது. சிலரது உடலில் (கை, கால் பகுதிகளில்) நீலம் பூக்கும்; ஹார்மோன் கோளாறுகள் விபரீதங்களை ஏற்படுத்தும்.
 
இந்நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் போது அவர்களிடம் காணப்படும் பல்வேறு தவறான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ணாமையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை விளக்க வேண்டும். நோயாளிகளின் பெற்றோரிடம் இவ்விவரங்களை கூறி கவனமாய் பராமரிக்கக் கேட்டு கொள்ள வேண்டும். படிப்படியாய் சரியான அளவு உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.பொதுவான பசியின்மையையும் சூழ்நிலை மற்றும் மனநிலைக் காரணங்களால் ஏற்படும் பசியின்மையையும் நீக்கி இயல்பான பசிச் சுவையை (Natural Appetite) ஏற்படுத்த ஹோமியோபதியில் கீழ்க்கண்ட மருந்துகளை பயன்படுத்தலாம்.
 

 • பசியின்மை (Loss Of Appetite) - சைனா, லைகோ, பல்சடில்லா, நக்ஸ்வாமிகா, சல்பர்
 • சாதாரண பசியின்மை அல்லது நோய்க்குப் பின் பசி குறைதல் - ஜென்டியானா லூட்டிகம் [தாய் திரவம்] உணவிற்கு 1/2 மணி நேரம் முன்பு 10 சொட்டு அஜீரணம், கசப்பு ருசி, நாக்கின்  பின் பகுதியில் மஞ்சள் மாசுபடிதல் போன்ற குறிகளுடன்  பசியின் - நக்ஸ்வாமிகா
 • சாப்பிடுவதிலோ, குடிப்பதிலோ கொஞ்சம் கூட விருப்பமில்லாத நிலை [ உணவு மற்றும் பானங்கள்]  - இக்னேஷியா
 • வாரக்கணக்கில் எதுவும் குடிக்காமல், உண்ணாமல் இருக்கும் நிலை - அபிஸ்மெஸ் மாதக்கணக்கில் எதுவும் சாப்பிட பிடிக்காமல் இருக்கும் நிலை - சிபிலினம்
 • சாப்பிட வேண்டும் என்ற மனம் இருப்பினும், பசிக்காத நிலை - மெசிரியம்
 • காலை நோரங்களில் மட்டும்  பசியின்மை - அபிஸ் நைக்ரே
 • பகலில் பசியின்மை - ஆர்சனிகம் ஆல்பம்
 • சாதாரண உணவுகளில் பசியின்மை மாறாத ஜீரணமாகாத, அமிலத் தன்மையான வேறு பொருள்கள்  சாப்பிட விருப்பம் -  இக்னேஷியா
 • அதிக வேலை காரணமாக பசியின்மை -  கல்கோரியா கார்ப்
 • வருத்தம் காரணமாக பசியின்மை - பிளாட்டினா
 • புகையிலையால் பசியின்மை - செபியா
 • மூளை உபாதைகளில் பசியின்மை - ஹெல்லி போரஸ்
 • உடலுறவுக்குப்பின் பசியின்மை - அகாரிகஸ்
 • நீர் குடித்தபின் பசியின்மை - காலிமுர்
 • கர்ப்பகாலத்தில் பசியின்மை - காஸ்டிகம், சபடில்லா

குறிப்பு : பொதுவாக பசியின்மை நோய்க்கு கல்லீரல் செயல்பாடு குறைவாக இருப்பதே (Inactive Liver) காரணமாக உள்ளதால் ஆங்கில / ஆயுர்வேத மருத்துவத்தில் Liv-52 மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளித்து கல்லீரல் செயல்பாட்டினை அதிகரித்து பசி தூண்டப்படுகிறது.

ஹோமியோபதி செலிடொனியம் 30 காலை, இரவு [உணவுக்கு முன் சியோனான்தாஸ் தாய்திரவம் 5 சொட்டு (Chionanthas – Q) உணவுக்கு பின் தொடர்ந்து சில நாட்கள் [ஓரிரு வாரம்] சாப்பிட்டால் பசி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை பசியின்மை போக்க பயன்படும் அரிய ஹோமியோபதி டானிக் ஆல்பால்பா. சில குழந்தைகளிடம் ஒரு நேரம் நல்ல பசியும் மற்றொரு நேரம் முழுமையான பசியின்மையும் காணப்படும். குழந்தைகள் சில சமயம் பசியின் போது ஏதேனும் விரும்பிக் கேட்பதைக் கொடுத்தால் உண்ணாமல் கோபத்தில் எறியக்கூடும். இத்தகைய மன உணர்வுள்ள பசி நிலையை’CINA APPETITE’ என்று கூறலாம். ‘CINA’ தான் இதற்கான மருந்து. சின்கோனா ரூப்ரா Q + ஜென்டியானா லூட் Q கலவை மருந்து உணவு நேரத்தில் ½ மணி முன்பு 10 சொட்டுகள் [நீரில் கலந்து] சாப்பிட்டு வர ஓடி மறைந்த பசி தேடிவரும்.
 
Dr.S..வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.

செல் - 94431 45700  / Mail : alltmed@gmail.com

]]>
Food aversion, no appetite, உணவு மறுப்பு, பசியின்மை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/26/w600X390/18lftc2ozb3ukjpg.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jun/26/food-aversions-and-homeopathy-remedies-2727381.html
2724328 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி பெண்கள் பூப்பெய்துவதில் உள்ள பிரச்னைகள்! ஹோமியோபதி தீர்வுகள்! டாக்டர் வெங்கடாசலம் DIN Tuesday, June 20, 2017 11:16 AM +0530 ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு   மாமலையும் ஓர் கடுகாம்!’ என்பார் புதுமைக் கவி பாரதிதாசன். பருவ மலர்ச்சியின் ஆற்றல் அப்படிப்பட்டது. ஆனால் பருவம் கண் திறக்காவிட்டால், பூப்பு என்கிற பருவகால பரிணாமம் நிகழாவிட்டால் வாழ்க்கையே சுமையாகி விடுகிறது.

பருவகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணும் இயக்கு நீர்களின் (HORMONES) மாற்றங்களுக்கு ஆளாகும் காலம். நாளமில்லாச் சுரப்பி நோய்களின் நிபுணர்கள் இப்பருவத்தை ஹார்மோன்களின் சமன்பாட்டுக்குரிய காலக்கட்டம் என்கின்றனர். பெண்ணிடம் பூப்படையும் பருவத்தையொட்டி சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் தோற்றத்தில் விரைவான மாற்றம், உயரமும் எடையும் அதிகரிப்பு, இடுப்பு விரிவடைதல், மாதவிடாய் வர ஆரம்பித்தல், மார்பக வளர்ச்சி, பிறப்புறுப்பின் மேட்டுப்பகுதியிலும், சுற்றிலும், அக்குளிலும் முடி முளைத்தல், சிந்தனையில், நடத்தையில் மாறுதல், உணர்வுகளில் மாறுதல் ஆண் மீதான ஆர்வம் போன்ற புற, அக மாற்றங்கள் நிகழ்கின்றன.

சிறுமியாக இருந்த பெண்ணைப் பருவ மங்கையாய் பரிமளிக்கச் செய்வது இயக்குநீர்கள் தான். பூப்படைவதற்கு 4 ஆண்டுக்கு முன்பு மூளையின் முக்கியப் பகுதியான ஹைப்போதாலமஸின் (HYPOTHALAMUS) சுரக்கும் இயக்குநீர்கள். ரத்த நாளங்கள் மூலம் பிட்யூட்டரிக்குச் செல்கின்றன. பிட்யூட்டரியில் பல ரசாயன ஹார்மோன்கள் சுரக்கும்படி தூண்டுவதால் முதல் இரண்டு வருடம் பெண்ணிடம் நன்கு வளர்ச்சி ஏற்படும்.

பிட்யூட்டரி என்னும் சுரப்பி மூளை அடிப்புறத்தில் சிறு பட்டாணி அளவில் அமைந்துள்ளது. இதில் சுரக்கும் கொனடோட்ராபின் இயக்குநீர் (GONADOTROPIN HORMONE) பெண்ணின் சினைப்பையையும் (OVARY) ஆண்களின் விரையையும் (TESTIS) கட்டுப்படுத்தும். பாலிக்கிள் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FSH) கருவணுக்கள் உற்பத்தியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை வெளிப்படுத்தும். பிட்யூட்டரி சுரக்கும் மற்றொரு ஹார்மோன் பெண்ணின் கார்பஸ் லூட்டியத்தின் புரொஜெஸ்டிரான் உற்பத்தியைத் தூண்டுகிறது; ஆண்களின் விரைவில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இத்தகைய செக்ஸ் ஹார்மோன்கள் கருமுட்டையை உருவாக்கி, முதிரச் செய்கிறது; கர்ப்பப்பையின் உட்புற அமைப்பை கரு வளர்ச்சிக்கு ஏற்றபடி மாற்றுகிறது; மாதவிடாய் ஏற்படச் செய்கிறது. ஹைப்போதாலமஸில் சுரக்கும் ‘கொனடோட்ராபின் ’ரீலிசிங் ஹார்மோன்’ (GONADOTROPIN RELEASING HORMONE) ரத்த நாளங்கள் வழியாகப் பிட்யூட்டரி அடைத்து பாலிகிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனை சுரக்க செய்கிறது. இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது கருவணுக்கள் வளரத் துவங்கும் இக்கரு அணுக்கள் வளரும் போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் கருப்பையிலுள்ள தசையணுக்கள் அதிகரிக்க உதவுகிறது. கருப்பையின் உள்புறம் பஞ்சுமெத்தை போல் மாறுகிறது. கரு தங்கி வளர வசதி அமைகிறது.

ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பிட்யூட்டரி சுரப்பி (FSH) சுரப்பு அளவை குறைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகக் கரு அணுக்களும் குறையும். கருப்பையில் வளரும் இணைப்புத் திசுக்களுக்கு (கருவுறுதல் நடக்காத போது) ரத்தம் கொண்டு செல்லும் நாளங்கள் உறைந்து ரத்தப் பெருக்கு ஏற்படுகிறது. இணைப்புத் திசுக்களும் தசையணுக்களும் (எண்டோ மெட்ரியம் எனும் கருப்பையின் உட்புற ஜவ்வு) நொறுக்கி உதிரத் தொடங்கி பிறப்புறுப்பு வழியே வெளி வருகிறது. முதன் முதலாக இது நிகழும் போது ‘பூப்பெய்துதல்’ என்றும் தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறும் போது  ‘மாதவிடாய்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போக்கு அழுக்கு இரத்தம், கெட்ட ரத்தம், கிருமிகள் உள்ள ரத்தம் என்ற கருத்துக்கள் உண்மையல்ல.

ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பிட்யூட்டரி சுரப்பைக் குறைக்கும்; LH (LUTEINISING HORMONE) இயக்குநீரை சுரக்கும்.இந்த LH கருமுட்டையை வெடிக்கச் செய்து சினைப்பையிலிருந்து வெளியேற்றும். சினைப்பையின் அருகிலுள்ள புனல் போன்ற அமைப்பை கருமுட்டை நெருங்கும். ’CILIA’ எனப்படும் சிறுவிரல்கள் போன்ற பாகம் கருமுட்டையை உள்வாங்கி கருக்குழாய் வழியே கர்ப்பப்பையை நோக்கி நகர்த்தும். கருமுட்டை ஆண் விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகும். சினைப்பையில் (OVARY) கருமுட்டை வெளியேறிய இடத்தில் ஏற்படக்கூடிய ரத்தப்பாகு கெட்டியாகி (CARPUS LUTEUM) புரொஜெஸ்டின் (PROJESTRON) என்ற இயக்குநீரை சுரக்கிறது. கருமுட்டை வெடித்துக் கிளம்பி வரும் சமயத்தில் ‘ENDOMETRIUM’ எனப்படும். கர்ப்பையின் உட்சுவர் நன்கு வளர ’ஈஸ்ட்ரோஜன்’ இயக்குநீர் உதவுகிறது. இந்த உட்சுவர் மீது ரத்தக்குழாய்களை உருவாக்குவதற்கும் மென்மையான ஜவ்வு போன்ற படலம் வளர்வதற்கும் சளி போன்ற திரவம் சுரப்பதற்கும் ‘புரொஜெஸ்டின்’ இயக்குநீர் உதவுகிறது. கருமுட்டை திரவம் விந்தணுக்கள் எளிதில் நீந்திச் செல்ல உதவுகிறது. கருமுட்டை வெளியேறும் சமயத்தில் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏற்படும் மாற்றங்களால் பெண்ணின் உடலில் வெப்பம் காணப்படும்.

பூப்படையாமைக்கு முக்கியக் காரணங்கள்:

1. கர்ப்பப்பை மற்றும் சினைமுட்டைப்பை(UTERUS & OVARY) பிறவியிலேயே இல்லாமலிருத்தல் அல்லது சரியாக வளர்ச்சி பெறாமல் (INFANTILE UTERUS) இருத்தல்.

2. மரபுவழிக் காரணங்கள்

3. சுரப்பிகளின் இயக்க கோளாறு

4. சர்க்கரை வியாதிகள் அம்மைக் கட்டு போன்ற தொற்றுநோய் சினை முட்டைப் பையைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்; சினைப் பையினுள் கட்டிகள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட உடற்கூறு, உடலியக்க விஞ்ஞான உண்மைகள் அனைத்தையும் எல்லா மருந்துவ முறைகளும் ஒத்துக் கொள்கிறது. தேவைப்படும் பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை கண்டறிந்து கொள்கின்றன. ஆயினும் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஹார்மோன் பிரச்னைகளை தீர்க்க ஹார்மோன் மாத்திரைகளை மட்டும் கொடுத்துச் சிகிச்சை அளிப்பதில்லை. பெண்ணின் உடல்நிலை, மனநிலை போன்றவைகளைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுத்து இயற்கையான வழி முறையில் நிரந்தர குணம் கிடைக்கும்படிச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

பூப்படையும் காலப் பிரச்சனைகளுக்கு உதவும் ஹோமியோ மருந்துகள்:   

1. பிட்யூட்டரினம் 30/200 (Pitutarinum) - பருவமடைவதில் தாமதம் மார்பகங்கள் வளர்ச்சியின்மை. பிறப்புறுப்புப் பகுதிகளிலும், அக்குளிலும் முடிகள் முளைக்காமலிருத்தல்.

2. காலிகார்ப் (Kalicarb)     - முதல் மாதவிடாய் தாமப்படுதல் அல்லது முதல் முறைவிடாய் ஏற்பட்ட பின் மீண்டும் மாதக்கணக்கில் வெளி வராமை.

3. பல்சடில்லா (Pulsatilla) - பூப்படைந்த காலத்தில் பல்வேறு மாதவிடாய் கோளாறுகளைக் குணப்படுத்தும். முதல் மாதம் விடாய் தாமதம்.

4. ஆஸ்டீரியஸ் (Asterias Rub) - பூப்பு காலத்தில் முகப்பருக்கள் வெடித்தல்.

5. ஆரம்மெட் (Aurum Met) - பூப்படைந்த பெண்களிடம் படபடப்பு, வாய் துர்நாற்றம்.

6. அலுமினா (Alumina) - பசலை நோய், முகவெளுப்பு, சோம்பல், பசிமந்தம், ஜீரணக்குறைவு, மாதவிடாய் ஏற்படாத பெண்களிடம் ரத்த சோகை.

7. மான்சினெல்லா (Mancinella) - பூப்பு காலத்தில் மனச்சோர்வு, காதல் தோல்வியால் மனவேதனை.

8. லைகோபோடியாம் (Lycopodium) - பருவமடைந்தும், வயதுகூடியும் மார்பகங்கள் வளர்ச்சியற்ற நிலை.

9. ஓனோஸ்மோடியம் (Onosmodium) - மார்பகங்கள் வளராமை அல்லது மிகச்சிறு அளவில் அமைந்திருத்தல்.

10. மெர்க்சால் (Merc sol) - மாதவிடாய்க்குப் பதிலாக மார்பகங்களில் பால்சுரப்பு.

11. கல்கேரியாகார்ப் (Calcarea carb) - மாதவிடாய் தோன்றும் முன் வெள்ளைப்பாடு தோன்றுதல்.

12. யூபரேஷியா (Eupharasia) - மாதவிடாய் ஒரு மணி நேரமே வருதல்.

13. லாச்சஸிஸ் (Lachesis) - மாதவிடாய்க்கு முன்பு வலி; போக்கு வெளியானதும் வலி குறைதல்.

14. கிராபைட்டிஸ் (Graphites) - மாதவிடாய்க்கு முன் பிறப்புறுப்பில் கடுமையான அரிப்பு.

15. மெக்னீஷியம் கார்ப் (Magnesium Carb) - மாதவிடாய்க்கு முன் தொண்டையில் புண் ஏற்படுதல்.

16. சபீனா (Sabina), ஃபெர்ரம் மெட் (Ferrum Met) - மாதவிடாய் பாதி கட்டியாகவும் பாதி தண்ணீராகவும் இருத்தல்.

17. பொவிஸ்டா (Bovista) - மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் வயிற்றுப்போக்கு.

18. டிரில்லியம் (Trillium) - இரண்டு வாரத்தில் மாதவிடாய் வருதல்; சிவந்த நிறப்போக்கு; கடுமையான முதுகுவலி; இடுப்பு வலியுடன் போக்கு ஒரு வாரமோ அல்லது அதிகமாகவோ நீடித்தல்; மாதவிடாய் நாள்களுக்கிடையில் வெள்ளைப்பாடு.

19. கல்கேரியா கார்ப் (Calcarea Carb) - மூன்று வாரத்தில் மாதவிடாய் ஏற்படுதல்; அதிகளவு. அதிக நாள் நீடித்தல்; குளிர்ந்த நீர்பட்டால் தடைபடுதல்.

20. கோலோசிந்திஸ் (Colocynthis) - மாதவிடாயின் போது அடிவயிற்று வலி.

21. வைபூர்ணம் ஓபுலஸ் (Viburnum Opulus) - மாதவிடாயின் போது வலி முதுகில் ஆரம்பித்து கர்ப்பப்பையில் முடிதல் .

22. பிளம்பம் மெட் (Plumbum Met) - வளர்ச்சியடையாத கர்ப்பப்பை.

23. தூஜா (Thuja) ஓலியம் ஜெகோரிஸ் (Oleum Jecoris) – மேலுதடு, முகவாய் கட்டை, கை, கால்களில் தேவையற்ற முடி வளர்ச்சி.

24. பல்சடில்லா (Pulsatilla) - திருமணம், உடலுறவு, ஆண்கள் மீது வெறுப்பு.

25. கல்கேரியா பாஸ் (Calcarea phos) - பெண் பெண்ணையே விரும்பிக் காதலித்தல்.

Dr.S..வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.

செல் - 94431 45700  / Mail : alltmed@gmail.com

]]>
homeopathy, ஹோமியோபதி, Teen problems, Puberty problems, பூப்பெய்துவதில் பிரச்னை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/20/w600X390/teen_age_girls.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jun/19/homeopathy-remedies-for-hormones-related-problems-in-teen-age-girls-2724328.html
2719143 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, June 12, 2017 02:54 PM +0530 ங்கிலத்தில் ACNE, PIMPLES, ACNE VULGARIS, ACNE ROSASEA, BLACK HEAD PIMPLES என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதமான பருக்கள் அழைக்கபடுக்கின்றன. ’ACNE’ என்பது கிரேக்கச் சொல். ‘Point’ (புள்ளி) என்பது அதன் பொருள். முகத்தோல் பரப்பில் புள்ளிகள் போல் தோன்றுவதால் Acne என்று பருக்கள் குறிப்பிடப் படுகின்றன.

மனித உடலைப் போர்த்தியுள்ள போர்வை சருமம். இது வெளிச் சூழலின் பல்வேறு பாதிப்புக்கள், கிருமிகள், வெப்பம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கவசம். உடற்கழிவுகளை வியர்வை மூலம் அகற்றி உடல் உஷ்ண சம நிலையை தோல் பாதுகாக்கிறது. முகம் போன்ற சில பகுதிகளிலுள்ள மென்மையான தோலின் அடிப்பகுதியில் கொழுப்பு சேமிப்பு கொண்ட தளர்ந்த இணைப்பு திசுக்கள் அடுக்கு உள்ளன. இந்த கொழுப்பு அடுக்கு பெண்கள் உடம்பில் சற்று அதிகம் உள்ளன.

தோலுக்கடியிலுள்ள SEBACEOUS GLANDS பருவ வயதில் (Teen age) தீவிரமாக செயல் படுகிறது. பருக்கள் தோன்றுகின்றன. 20 - 30 வயதுகளில் இவ்வேகம் படிப்படியாக குறைகிறது. பொதுவாக பருவ வயதில் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளின் இயக்கமும் வேகமாக இருக்கும்.  தோலின் அடிப்பகுதியிலுள்ள கொழுப்புச் சுரப்பியும், வழக்கத்திற்கு மாறாக மிக அதிக அளவில்  இயங்கும். இச்சுரப்பு தோலின் மேல் பகுதியை அடைந்ததும், வியர்வை அசுத்தம் , உயிரணுக்களின் இறந்த செல்கள் இவற்றுடன் காற்றில் கலந்துள்ள  தூசிகள், கிருமிகள் எல்லாவற்றிடனும் சேர்ந்து படியும் இவைகளே முகப்பருக்களுக்கு முலக்காரணம்.சுரப்பிகளின் சுரப்புப் பணி இயல்பாக நடைபெற விடாமல் வியர்வை குழாய்களின் அடைப்புகள் ஏற்பட்டு தேக்க நிலை காரணமாக பருக்கள் அதிகரிக்கும். பருவகால உடல் மாற்றங்களால் ஏற்படும் பருக்கள் மருத்துவரீதியாக ஐந்து முக்கிய வகைகளாகப் பிரிக்கபட்டுள்ளன.

1.ACNE CONGLO BATE  - பெரிதாக வலியுடன் முகத்திலும் பின்புறக் கழுத்திலும் காணப்படுபவை.

2.EXCORIATED ACNE - சாதாரண பருக்களாக இல்லாமல் கடினப் பருக்களாக இருக்கும்.

3.MEDICA MENTOSA ACNE – மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பருக்கள், அயோடின் புரோமைடு மற்றும் சில மருந்துகளால் குறிப்பாக ஸ்டீராய்டு போன்றவை உபயோகிப்பதால்  வரக்கூடிய பருக்கள்.

4.ACNE COSMETICS - கூர் உணர்ச்சி மிக்க தோலில் ரசாயனக் கலவைகள் நிறைந்த அழகுப் பொருள்களை பயன்படுத்துவதால் வரக்கூடிய பருக்கள். தோலை விரிவுபடுத்தினால் வெண்ணிறப் புள்ளிகளாக தெரியும். சருமம் சோர்வுற்றுக் காணப்படும்.

5.OCCUPATIONAL ACNE  -தொழில் சூழ்நிலையில், எண்ணெய்கள், தார் அல்லது குளோரின் கலந்த பொருட்களால் ஏற்படும் பருக்கள்.

பருக்களை இவ்வாறு வகைப்படுத்திய போதிலும் அவற்றின் தோற்றம், இயல்பு, உபாதைகள் போன்ற குணம் குறிகளுக்கேற்பவே ஹோமியோபதியில் மருந்துகள் தேர்வு செய்யபடுகின்றன. சாதாரணப் பருக்கள் முதல் சீழ் பிடித்த பரு வரையிலும், பருக்கள் ஆறிய பின்னர் நீங்காது நிற்கும் விகாரமான தழும்புகள் வரையிலும் குணப்படுத்த கூடிய ஏராளமான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. அவற்றில் சில

பெர்பெரிஸ் அஃகுபோலியம் (Berberis Aquifolium) –                                                அனைத்து வகைப் பருக்களுக்கும் ஏற்றது (Dry Pimples & Blotches)

யூஜீனியா ஜாம்(Eugenia Jam) – சாதாரண, கடின வகையிலான, வலியுடன் கூடிய பருக்கள் கருந்தலைப்பருக்கள். மாதவிடாயின் போது அதிகரிக்கும்.

காலிபுரோமேட்டம் (kali Bromatum) – பருவ வயதினருக்கு வரும் பருக்களுக்குச் சிறந்த மருந்து; அரிப்புள்ள பருக்கள் பருக்களுடன் பாலுணர்ச்சியும் நிறைந்திருக்கும்; பருக்கள் குணமான பின் தழும்புகள் அகலவும் இம்மருந்து உதவும்.

மெக்னீஷியம் மூரியாடிகம் (Magnesium Muriaticum) – மாணவிகளுக்கும், பருவப்பெண்களுக்கும் பயன்படும். மாதவிடாய் தோன்றுவதற்கு முன்பும், மலச்சிக்கலின் போதும் பருக்கள் தோன்றும். கடலில் குளித்த பின் அதிகரிக்கும்.

ஊஃபோரினம் [oophorinum ]– மாதவிடாய் நிற்கும் காலத்தில் வெடிக்கும் பருக்களுக்கும் இதரத் தோல் தொல்லைகளுக்கும் இம்மருந்து அற்புத பலனளிக்கும்.

பல்சடில்லா (Pulsatilla) – பருவமடையும் போது அதிகளவு ஏற்படும் பருக்கள் மற்றும் தாமதவிடாயுள்ள பெண்களிடம் மாதவிடாய் வருமுன்னர் தோன்றக் கூடிய பருக்களுக்கு ஏற்றது.

பெல்லடோனா (Belladonna) – சிவந்த பருக்கள் – வலி அல்லது எரிச்சல் இருக்கக் கூடும்.

ரேடியம் (Redium) – அரிப்பும், எரிச்சலும்,சிவந்த தன்மையும் உள்ள பருக்கள், அதிக எரிச்சல் இம்மருந்தின் சிறப்புக் குறி.

கல்கேரியாபாஸ் (Calcarea phos) – ரத்த சோகையுள்ள பருவ வயதுப் பெண்களிடம் (மாதவிடாய் தொல்லைகளுடன்) முகப்பருக்கள்.

நேட்ரம் மூர் (Netrum Mur) – எண்ணெய் வடியும் முகத்தோலுடன் பருக்கள்.

ஆஸ்டீரிபஸ் ரூப் (Asterias Rub) – மூக்கின் இருபுற ஓரங்களிலும், கன்னம் மற்றும் வாய்ப்பகுதிகளிலும் சிவந்த பருக்கள் பருவத்தினரின் அரிப்புடன் கூடிய பருக்களுக்கு ஏற்றது.

சிலிகா (Silica) – குளித்தவுடன் உடல்வாகு – மெழுகு பூசியது போன்றும் வெளுத்தும் காணப்படும் முகத் தோலில் கொப்புளங்கள் போன்ற ரோஸ் நிறப்பருக்கள்.

ஃபாகோபைரம் (Fagopyurm) - சிவந்த, புண் போன்ற சீழ் பருக்கள் – அரிப்பு இருக்கும் - முடி நிறைந்த பகுதிகளிலும் இப்பருக்கள் காணப்படும்.

ஹீபர்சல்ப் (Hepar sulp) – பெரிய சீழ்கோர்த்த பருக்களாக – பட்டாணி அளவுப் பருக்களாகக் காணப்படும்.

லேடம்பால் (Ledum Pal) – நெற்றியிலும் கன்னங்களிலும் சிவந்த பருக்கள்.

போராக்ஸ்(Borax) - மூக்கிலும் உதடுகளிலும் பருக்கள்.

ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum Album) – கருநிறப் பருக்கள்.

ஜக்லன்ஸ் ரெஜ் (Juglans Reg) - கருந்தலைப் பருக்கள் மற்றும் சிவப்பான சீழ்ப்பருக்கள்.

பாஸ்பாரிக் ஆசிட் (Phosphoric Acid) -  சுய இன்பப் பழக்கமுள்ள இளம் வயதினருக்கு அடிக்கடி தோன்றும் பருக்கள்.

ஆர்ஸ் புரோம், சோரியம், யூஜீனியா – சிவப்பு நிற முகப்பருத் திட்டுக்கள்

டியூபர்குலினம் (Tuberculinam) –   நாட்பட்ட, பிடிவாதமான பருக்களுக்கு இம்மருந்தை 200 வீரீயத்தில் வாரம் 1 வேளை கொடுக்கலாம்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு கடைகளில் விற்கும் முகப்பரு கிரீம்களை வாங்கிப் பயன்படுத்தி எவ்வித பலனுமின்றி முகத்தை மென்மேலும் அலங்கோலமக்கிக் கொள்பவர்கள் ஏராளம். ஹோமியோபதியில் கீழ்கண்ட மருந்துகளைத் தாய்திரவத்தில் (MOTHER TINCTURE) வாங்கி ஒவ்வொரு  மருந்தையும் சம அளவில் கலந்து ACNE FACE LOTION தயார் செய்து கொள்ளலாம். இது நம்பகமானது. இரவில் முகத்தைக் கழுவித் துடைத்த பின் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு ஹோமியோ லோஷனை சிறிது சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளலாம். சில நாள் சிகிச்சையில் முகப்பருக்கள்  நீங்கும் முகத்தோல் பொலிவு பெறும்.

தேவைப்படும் ஹோமியோ மருந்துகள் :

பெர்பெரிஸ் அகுபோலியம் Q(Berberis Aqufolium) +வேடம் பால்Q(Ladum Pal) + எக்சினேஷியா Q (Echinacea)

கல்கேரியா பாஸ் 6 என்ற ஹோமியோ-பயோகெமிக் மாத்திரை சிலவற்றை சிறிது ஆறிய வெந்நீரில் கரைத்து இரவில் முகப் பருக்களில் மீது தடவி வரலாம். தினம் 3 வேளை 4 மத்திரைகள் வீதம் இதே மாத்திரைகளை சாப்பிடுவதும் நல்லது. விரைவில் பலன் கிட்டும். பருக்களின் தன்மைக்கேற்ப இச்சிகிச்சையை ஓரிரு வாரங்கள் தொடரலாம்.

முகப்பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதாகக் கருதும் டீன்ஏஜ் பெண்களும் இளைஞர்களும் தன்னம்பிக்கை இழந்து மிகுந்து மனச் சோர்வுக்கு ஆளாவதுண்டு. அத்தகையவர்களுக்கு ஹோமியோபதி சிகிச்சையே சிறந்த முழுமையான தீர்வளிக்கிறது. மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்புகள், ஐஸ்கிரிம்கள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும் தினம் நான்கைந்து தடவையாவது குளிர்ந்த நீரில் முகம் கழுவிச் சுத்தமாக்க வேண்டும்.

Dr.S..வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல் - 94431 45700  

Mail : alltmed@gmail.com

]]>
Acne, Pimples, பரு, முகப்பரு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/12/w600X390/topical-acne-treatment.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jun/12/homeopathy-remedies-for-pimples-2719143.html
2714738 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி புகைப்பழக்க அடிமைத்தனத்திலிருந்து (Smoking addiction) விடுதலை டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, June 5, 2017 12:33 PM +0530 மே 31 உலக புகையிலை எதிர்ப்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஆக்டோபஸ் போலப் பரவியிருக்கிறது புகையிலை. இது குறுக்கிய காலப் பணப்பயிராக உலகின் 100 நாடுகளின் பயிர்செய்யப்பட்டு வருகிறது. 10 கோடி மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின் புகையிலை பழக்கம் மக்களிடம் பரவியது. அந்நியக் கலாச்சாரங்களின் நல்ல அம்சங்களை விட தீய அம்சங்கள் விரைந்து பரவுகின்றன.   

அதிகார பீடங்கள் தரும் அதிர்ச்சியான சில புள்ளி விவரங்கள்:      

இந்தியாவில் இன்று வருவாய் ஈட்டும் நான்கு துறைகளில் ஒன்றாக புகையிலைப் பொருட்கள் உற்பத்தி உள்ளது. மற்றவை  1.டெக்ஸ்டைல்ஸ் 2. பெட்ரொலியப் பொருட்கள் உற்பத்தி  3.  இரும்பு \ ஸ்டீல் உற்பத்தி. நாம் அறிய வேண்டிய சிந்திக்க வேண்டிய முக்கியமான மற்றொரு செய்தி….

புகையிலைப் பொருள்களால் இந்திய அரசுக்கு ஆண்டு வருமானம் ரூ.5,550 கோடி. ஆனால்  புகையிலைப் பொருள்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு செலவிடும் தொகை ரூ. 13,517 கோடி.  சுண்டைக்காய் கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்! என்பது தமிழ் சொலவடை.

1990-ல் உலகில் புகைப்பழக்க தொடர்புள்ள வியாதிகளால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சம். இந்த எண்ணிக்கை 1998-ல் 48 லட்சமாக உயர்ந்தது. 2020ஆம் ஆண்டில் இந்த மரண எண்ணிக்கை 1 கோடியை எட்டிவிடும் என்று எச்சரிக்கிறது உலக நல நிறுவனம். உலகப் போர்களில் எற்பட்ட மனித இழப்புகளைவிட புகைபழக்க நோய் மரணங்களின் எண்ணிக்கை அதிகம்.

முன்னேறிய நாடுகளில் பெண்களும் புகை, மது, போதைப் பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். உலகளவில் 30 சதவிகித ஆண்களும் 19 சதவிகிதப் பெண்களும் புகைத்து வருகின்றனர். தினமும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 1,00,000 பேர்கள் புகைப்பிடிக்கத் துவங்குகின்றனர். உலகில் அன்றாடம் பலகாரணங்களால் நிகழும் 10 மரணங்களில் ஒரு மரணம் புகைப்பழக்கத்தால் எற்படுகிறது.

உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பிடிக்கின்றனர். இந்தியாவில்  இப்போதைய புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 12 கோடி. புகை தொடர்ப்பன நோய்களால் உலகளவில் தினமும் 11,000 பேர்கள் சாகின்றனர். இவர்களில் இந்தியர்கள் 2200 பேர்கள்- அதாவது  ஐந்தில் ஒருவர் இந்தியர். இன்றைய அமெரிக்காவில் ஒவ்வொரு  ஆண்டும் 3,90,000 உயிர்கள் புகைப்பழக்க விளைவுகளால் பலியாகின்றன.

இவை கற்பனையான புள்ளி விவரங்களல்ல! இந்திய சுகாதாரத் துறை சார்ந்த, அமெரிக்க அரசு சார்ந்த, உலக நல நிறுவனம் சார்ந்த ஆய்வுகளின், அறிவிப்புகளின் ஒரு சில அம்சங்கள்.

புகையிலையில் புதைந்துள்ள கேடுகள் :

புகையிலையில் 4000 க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இதிலுள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவை நுரையீரலின் உட்பகுதிகள் வரை ஊடுருவி புற்று நோய் அல்லது புற்று நோய்க்கு சமமான வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. அதிக, ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய தசைகளின் ஒரு பகுதி செயலிழப்பு, நரம்பியல் பாதிப்புகள் என ஏராளமான வியாதிகள் உருவாக்குகின்றன.

புகைபழக்கத்திற்கு காரணங்கள்

புகைபிடித்தல் பழக்கத்தினை துவங்கவும், தொடரவும் பல உளவியல் காரணங்கள் உள்ளன. வளர்பருவத்தில் இயற்கையாக ஏற்படும் புதிய ஆர்வங்களும் புதிய உணர்வுத் தேடல்களும், நண்பர்களின்  வற்புறுத்தலும், தன்னை பெரியவனாய் அடையாளப்படுத்தி கொள்ளவும், முன்மாதிரி மனிதர்கள், பெற்றோர்கள், உறவினர் , கதாநாயகன் போல மாறுவதற்கு முயற்சி செய்யவும் புகைப்பழக்கத்தை நாடுகின்றான்.

ஒரு பள்ளியின் ஆண்டு விழா. மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பிரபல ஓவியர்  ஒருவர் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றார். அவர் புன்னகை செய்யும் அழகிய முகம் ஒன்றை வரைந்து…. சில நிமிடங்களில் அதிலுள்ள சில கோடுகளை திருத்தினார். புன்னகை முகம் அழும் முகமாக  மாறிவிட்டது. மாணவர்களின் ஒரே ஒரு மாணவன் தவிர எல்லோரும் கரவொலி எழுப்பினர். ‘இந்த படம் வரைந்தது குறித்து உனக்கு எதும் மறுபட்ட கருத்து உள்ளதா தம்பி?’ என்று  மாணவனை ஓவியர் வினாவினார். அவன். ‘என் பெற்றோர் உங்களை விட திறமைசாலிகள் சார். ஒன்றிரண்டு கடும் சொற்களை சொல்லியே என் புன்னகை முகத்தை அழும் முகமாக்கி விடுவார்கள்’ என்று  உடைந்த குரலில் கூறியவுடன் அவனுக்கு பின் வரிசையில் இருந்த பெற்றோர் வெட்கி தலை குனிந்தனர். ஆம்! இம்மாணவனை போல பெற்றோரின் அன்பும் அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைக்காமல் சிறுவயதிலேயே புகைப்பழக்கத்தில் வீழ்கிறார்கள்.

பதின்பருவமும், புகைப்பழக்கமும்:  

பதின் பருவத்தினர் புகை, மது உபயோகிக்கும் நிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. சிலர் இப்பழக்கத்த இடையிலேயே நிறுத்தி விடுகின்றனர். சிலர் இடைவிடாமல் புகைபழக்கத்தினை வலிமையான பிடியில் சிக்கி விடுக்கின்றனர். இவர்களால் அருகிலுள்ள மற்றவர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்படி புகையின் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களை [SECOND HAND SMOKERS] என்கின்றனர்.

முன்று வித புகைபழக்க அடிமை தனம்:

புகைபழக்க அடிமைத்தனத்தை மூன்று கோணங்களில் காணலாம். (1) உடல்ரீதியான அடிமையாகி விடுதல், உடல் சுறுசுறுப்புக்கும், தொழிலில் ஈடுபடவும், இரவு விழித்திருக்கவும் புகைப்பார்கள். (2) பழக்கத்தின்  காரணமாக அடிமைதனம் - தினசரி காலை தூங்கி விழித்தவுடன், கழிப்பறை செல்லும்போது, டீ, காபி, குளித்தவுடன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித நேரங்களில் புகையை நீடிப்பார்கள். மகிழ்ச்சியோ, கவலையோ எந்தவித உணர்வு எழுச்சிகளின் போதும் புகைபிடிக்கத் தவற மாட்டர்கள்.

எப்படி புகை பழக்கத்தை நிறுத்துவது?:

புகைப்பழக்கத்தை உடனடியாக நினைத்தவுடன் நிறுத்திவிடுவது சுலபமான செயல் அல்ல. அதே சமயம் நிறுத்துவது அசாத்தியமான செயலுமல்ல. புகைபழக்கத்தை விட்டு வெளியேற முதலில் தீர்மானம் ஆழ்மனதில் ஏற்படவேண்டும். உடல், மன தேவைகளுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி, அதிக திரவ உணவுகள், பழச்சாறுகள், புதிய ஈடுபாடுகள் அவசியம்.

நிறுத்திய பின் ஏற்படும் உடல், மன பின் விளைவுகள் மாற்றங்கள்:

நிக்கோடின் போதைக்கு நாள் முழுவதும் குருதியில் நிரம்பி வழிந்த  நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது இரண்டு வாரங்கள் சில அசெளகரியங்கள் எற்படும். அவை நிரந்தரமான நீடித்த பிரச்னைகள் அல்ல- முற்றிலும் தற்காலிகமானவை.  இச்சந்தர்ப்பங்களில் நோயாளி நலத்தில் அக்கறை கொண்ட நண்பர்கள், உறவினர், மருத்துவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும். புகைபிடித்தலை நிறுத்திய பின், ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பின் விளைவு அறிகுறிகள் தெரிய துவங்கும். தூக்கம் பாதிப்பு, எரிச்சல், கோபம், மனமுடைதல், பதட்டம், அமைதி குலைதல், முழுகவனம் செலுத்த இயலா நிலை இந்த அறிகுறிகள் அனைத்தும்  2 முதல் 6 வாரங்களில் குறையும். மறையும்.

புகைபிடித்தலை நிறுத்திய பின்னர் நிகழும் நல்ல மாற்றங்கள்:

புகைபிடித்தலை நிறுத்திய 20 நிமிடங்களில் ரத்த அழுத்தமும், நாடி துடிப்பும் இயல்புக்கு வருகிறது. 8 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு பாதி குறைகிறது. 24 மணி  நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு உடலை விட்டு நீங்கி விடுகிறது. அதனை தொடர்ந்து  சுவை, மணம், உணரும் திறன், அதிகரிக்கிறது. 3 நாளில் சுவாச குழாய்கள் சீரடைந்து  சுவாசம் எளிதாகிறது. 3 முதல் 9 மாதங்களுக்கு இருமல், மூச்சடைப்பு, சுவாச கோளாறுகள் ஆகியன குறைந்து விடுகின்றன. 5 ஆண்டுகளில் இருதயத் தாக்குதல் அபாயம் குறைகிறது. 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் குறைகிறது. (ஆண்டு தோறும் புகையிலை தொடர்பான நோய்களால் ஏற்படும் நுரையீரல் புற்று நோயால் மில்லியன் கணக்கில் மரணமடைகின்றனர் என்பது சிந்திக்கத்தக்கது).

எனவே புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் முலம் உடனடியாக நற்பலன் கிட்ட ஆரம்பிக்கின்றன. ‘மனம் ஒர் வலிமையான வேலைக்காரன்; ஆனால் மோசமான எஜமான்’ என்பர்கள். புகைபிடிப்பவர்கள் தம் மனதை எப்பாடு பட்டேனும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கொடூரமான ஆபத்துகளுக்கு இரையாக கூடாது.

புகைபிடிப்பதை வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிட முடியாது. அது மீளமுடியாத போதைப்பழக்கம். அதனை நிக்கோடின் போதையடிமை நோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றன.

புகைப்பழக்கத்திலிருந்து மீள உதவும் ஹோமியோபதி மருத்துகள்:

கலாடியம் - புகைப்பழக்க அடிமைதனத்திலிருந்து விடுபட உதவும் முக்கிய மருந்து. புகைப்பவர்களுக்கு ஏற்படும் தலைவலி, இருதய பிரச்சனை, சுவாசக் கோளாறுகள் குறிப்பாக ஆஸ்துமா, மனநிலை மாறுபாடுகள் போன்ற குறிகளுக்கு தீர்வு தரும்.

பிளாண்டகோ - புகையிலை மோகத்தை மாற்றி வெறுப்பை ஏற்படுத்தும் ஆற்றலுள்ள மருந்து. புகைப்பழக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தும். புகையிலை அடிமைத்தனத்தால் ஏற்பட்ட மனச்சோர்வையும் தூக்கமின்மையையும் விரட்டி நிவாரணமளிக்கும்.

நிக்கோடினம் - புகையிலையிலுள்ள நிக்கோடின் நஞ்சினை வீரியப்படுத்தி தயார் செய்யப்பட்ட மருத்து. உடலிலுள்ள நிக்கோடின் நஞ்சினை முழுமையாக சுத்திகரிக்கவும் புகையிலை மீதான ஆர்வத்தை கட்டுபடுத்தவும் உதவும்.

டபாகம் - புகையிலையை வீரியப்படுத்திய மருந்து. புகையிலை பொருள்கள் மீதான ஆர்வத்தை குறைக்கவும், புகையிலை பொருள்களால் எற்பட்ட குமட்டல், வாந்தி ,அஜீரணக் கோளாறு, மனச்சோர்வு, தலைசுற்று போன்ற குறிகளையும் குணப்படுத்தும்.

லொபீலியா - புகைப்பழக்க அடிமைதனம் இருத்த போதிலும், புகையிலையின் வாசனை ஒத்து கொள்ளாது. புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களின் வாயு கோளாறு, வயிற்றுவலி, மூச்சுத்திணறல், போன்ற பிரச்சனைகளையும் நலமாக்கும்.

டாப்னே இண்டிகா - புகைப்பதில் தீவிர நாட்டமும், புகைப்பதால்  தூக்கமின்மை பிரச்சனையும் இருப்பவர்களுக்கு ஏற்றது.

ஆர்ஸ்.ஆல்பம் - புகைப்பழக்கத்தின் பின் விளைவுகளுக்கு ஏற்றது.

பாஸ்பரஸ் & லைகோபோடியம் - புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாலியல்     பலவீனங்கள், ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு நம்பகமான நிவாரணிகள்.

Dr.S.வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல்;94431 45700  

Mail : alltmed@gmail.com

                            

]]>
No Smoking https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/5/w600X390/smoking.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jun/05/smoking-addiction-and-relief-2714738.html
2709799 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி சித்ரவதை செய்யும் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS) டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, May 29, 2017 10:00 AM +0530 சிறுநீரகங்கள் வயிற்றின் பின்புறமாக தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. சிறுநீர்ப்பை இடுப்பெலும்பின் கீழ்பக்கத்தில் அமைந்துள்ளது.உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் இவ்வுறுப்புகள் வழியாகத்தான் வெளியேற்றப்படுகின்றன.

சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்புப் பிரச்னை, ஆண்களிடம் அதிகம் காணப்படும், சிறுநீர்ப்பாதையின் நீளம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITS) என்பது பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது, இதற்குப் பல்வேறு காரணங்கள்  உள்ளன.

இருப்பினும் சிறுநீர்ப்பைக்கு அருகிலேயே சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை, பெண்ணுறுப்பு எல்லாம் அமைந்திருப்பதும் அவற்றில் ஏற்படும்  தொற்றுகளும் தான் இதற்கு முக்கிய காரணம். சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பதால் அழற்சி ஏற்படலாம். செயற்கை கருத்தடை சாதனங்கள் சிறுநீர்ப்பையை அழுத்தி நீர் முழுமையாக வெளியேற முடியாமல் தங்கி விடுவதுண்டு.கர்ப்பகாலத்தில் சிசு சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் நீர்ப்பை அழற்சி ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் தூய்மையற்ற துணிகளை உபயோகிப்பதாலும் பெண்களுக்கு இந்த உபாதை வரக்கூடும்.

பிரசவ காயங்களாலும், இடுப்பு எலும்பின் உள்பகுதியில் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும், சிறுநீர்ப்பை அழற்சியுறலாம். புதுமண தம்பதியருக்கு அடிக்கடி HONEY MOON CYSTITIS ஏற்படக்கூடும். சிறுநீர்ப்பாதையில் புண்கள், நரம்புத்தளர்ச்சி, மூளை வளர்ச்சி குன்றுதல்,கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றாலும் அழற்சி ஏற்படலாம். வயிற்று வலிக்காக சாப்பிடும் ஆங்கில மாத்திரைகள் (ANTI –SPASMODIC) சிறுநீர்ப்பையில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தி அழற்சியை ஏற்படுத்துவதுண்டு.

சிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கம் (Retention of urine), சிறுநீர்க்கசிவு (incontinence of urine) அதிக சிறுநீர் கழித்தல் (Polyuria), இரவில்  அதிக சிறுநீர் கழித்தல் (Nocturnal), சிறுநீர்ப்பாதை தொற்று (Urinary tract infection), இரவில் அனிச்சையாக சிறுநீர் கழித்தல் (Nocturnal enuresis),  சிறுநீரில் ரத்தப்போக்கு (Haematuria), சிறுநீர்ப்பாதையில் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் (Calculi in urinary tract or bladder) போன்றவை சிறுநீர்ப்பை  சார்ந்த இதர பிரச்சனைகள்.

சிறுநீர்ப்பை அழற்சி என்பது பலவிதமான குறிகளை பெண்களிடம் ஏற்படுத்துகிறது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உறுத்தல் ,சிறுநீரின் நிறம் மாற்றமடைதல், சிறுநீரில் துர்நாற்றம், அடிவயிற்றிலும், இடுப்பு எலும்புப் பகுதியிலும் வலி, சில சமயம் முதுகுவலி, காய்ச்சலடித்தல்,சிறுநீரை அடக்க இயலாமை, இருமினால், தும்மினால் கூட சிறுநீர் கசிதல் போன்ற உபாதைகள் சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படக்கூடும்.

பேருந்து நிலையத்தில் பழங்கள் விற்பனை செய்யும் பெண்ணுக்கு கொளுத்தும் வெயிலடித்து கொண்டிருந்த நாளொன்றில் நீர்க்கடுப்புக்கு மருந்து கேட்டு வந்தார். மரத்தடியில் குளிர்ந்த காற்றடித்தால் உடம்புக்கு இதமாக இருப்பதாகவும், நீர்க்கழிக்கும் போது கடுகடுவென்று வலியும், எரிச்சலும் இருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு முறையும் குறைந்தளவே சிறுநீர்க் கழிப்பதாகவும் கடைசி சொட்டுகள் வெளிவரும் போது தாங்க முடியாத வலி ஏற்படுவதாகவும் கூறினார். அபிஸ்மெல் சில வேளைகள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்த பின், அவரது பிரச்சனை முழுமையாக தீர்ந்தது.

வங்கியில் பணியாற்றுக்கும் பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்பு சிறுநீர்ப்பை கற்களை வெளியேற்ற ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு குறிகளுக்கேற்ப லைகோபோடியம்,பெர்பெரிஸ் வல்காரிஸ் ஆகிய மருந்துகள் உரிய முறையில் கொடுக்கப்பட்டன.

ஓராண்டு கழிந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண் சிகிச்சைக்கு வந்தார். பதினைந்து நாட்களாக சிறுநீர்கடுப்பு என்று மட்டும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்த பின்,இதரக் குறிகளை விவரித்தார். எப்போதும் சிறுநீர்ப்பை நிறைந்த உணர்வு இருப்பதாகவும், ஆனால் மிகவும் சிரமபட்டு முயற்சி செய்து தான் சிறுநீரைச் சொட்டு சொட்டாக வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும்,சிறுநீர் உஸ்ணமாக வெளியேறுவதாகவும், சிறுநீர் கழிக்கும் போது அடிமுதுகு, இடுப்பு பகுதியில் வலி பரவுவதாகவும் கூறினார். அவருக்கு லைகோபோடியம் மற்றும் பெர்பெரிஸ் வல்காரிஸ் சில வேளைகள் கொடுக்கப்பட்ட பின் ,மூன்று நாளில் முழு  நிவாரணம் பெற்றார்.

சிறுநீர்ப்பை அழற்சி தோன்றிய ஆரம்ப நிலையிலேயே ஹோமியோபதியில் எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இருப்பினும், இக்குறைபாடு உள்ளவர்களுக்கு எந்தக் கட்டத்திலும் ஹோமியோபதி மருந்துகள் முழு நிவாரணமளித்து குணப்படித்துகின்றன. சிறுநீர்ப்பை அழற்சி சம்பந்தப்பட்ட குறிகளுக்கான சிறப்பாக வேளை செய்யும் சில மருந்துகள்

சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். தாகமிருக்கும், நீர் அருந்தினால் நீர்ப்பையில் கடுகடுப்பு வலி அதிகமிருக்கும் (Tenesmus bladder) அமைதியற்ற தன்மை ஏற்படும், நின்றால் , நடந்தால் தொந்தரவு அதிகரிக்கும், உட்கார்ந்தால் சமனப்படும். சிறுநீர் கழிக்கும் போதும், முன்னும், பின்னும் வலியும், எரிச்சலும் இருக்கும்.

அபிஸ்மெல் (Apismel):  நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு சிறந்த மருந்து. பெண்களுக்கு அதிகம் பயன்படும். பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் குறைந்தளவு சிறுநீர் வெளிவருதல். வீக்கம், எரிச்சல், கொட்டும் வலி , தாகமின்மை இம்மருந்தின் முதன்மை குறி. சிறுநீர்ப்பையில் சிறிதளவு நீர் சேர்ந்தாலும் உடனே கழிக்க தூண்டுதல் ஏற்படும். சூடான உறுக்கிய ஊசியை உள்ளே திணிப்பது போல கடைசி சொட்டுகள் மிகுந்த வேதனை ஏற்படுத்தும். சில சமயம் ரத்தம் கலந்த சிறுநீர் வரும், தாகமிருக்காது. குளிர்ச்சியும், குளிர்ந்த காற்றும் இதமளிக்கும்.

பெர்பெரிஸ் வல் (Berberis vul) : சிறுநீரகங்களில் ஏற்படும் வலி சிறுநீர்க்குழல் , முதுகு போன்ற இடங்களுக்கும் பரவும். மேல் முதுகு,  இடுப்பு பாகங்களுக்கு அல்லது சிறுநீர்ப்பை, பிருஸ்டம் கால்களுக்கு வலி செல்லக்கூடும். சிறுநீரகங்களில் கற்கள் உற்பத்தியாகுதல், சிறுநீர்ப்பையில் நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வலி ஏற்படும், பெண்களுக்கு சிறுநீரகக் கோளாறும், கர்ப்பப்பை கோளாறும், உடலுறவின் போது கடுமையான வெட்டும் வலியும் (Dyspaerunia) ஏற்படும்.

டெரிபிந்த் (Terebinth) : சிறுநீர்ப்பையில் கடும் எரிச்சலும் வெட்டும் வலியும் காணப்படும். நீர்ப்பையிலிருந்து நீர்த்தாரை நெடுக கடுமையான வலியுடன் (Urethritis) நீர்த்தேக்கம் ஏற்படலாம். மூத்திரக்கற்கள் மற்றும் அழற்சி வலியுடன் சிறுநீர்கரித்தல். சர்க்கரை, புரதம் (அல்புமின்), கெட்டியான குழகுழப்பான ரத்தம் போன்றவை நீரில் கலந்து (Haematuria) வெளிவரக்கூடும். சிறுநீர் கழிக்கையில் கர்ப்பப்பையில் எரிச்சல் ஏற்படும்.

 

எந்தவொரு கடுமையான நோய்க்குப் பின்னரும் ஏற்படக்கூடிய சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) போன்ற உபாதைகளுக்கு சிறந்த மருந்து.மேலும் சிறுநீரக கற்களைக் கரைத்துக் குணப்படுத்துவதோடு மீண்டும் கற்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் ஆற்றலும் இம்மருந்துக்கு உண்டு.

லைகோபோடியம் (Lycopodium) : நாள்பட்ட சிறுநீர்ப்பை அழற்சிக்கு உதவும் மருந்து. சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுப்பகுதியில் கடும் வலி நீர் கழித்தபின் குறையும், சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பின்பும் நீர்த்தாரை நெடுக எரிச்சலும், வெட்டும் வலியும் இருக்கும். சிறுநீரில் சிவந்த மஞ்சள் நிற மணற்படிகங்கள் காணப்படும். அவசரமாக நீர் வந்தாலும் நெடுநேரம் காத்திருக்க நேரும். இரவில் படுக்கும் போதும், சிறுநீர்ப்பையில் வலி தெரியும். சிறுநீர்ப்பையில் நீர்த்தேக்கத்தால் சிறுநீர்கழிப்பதற்கு முன்பு குழந்தை கதறியழும். பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க உறுத்தும். நீர் உக்ஷ்ணமாக இருக்கும். இரவில் கார் பயணத்தின் போது அதிகளவு சிறுநீர் கழித்தல் (Polyuria).

பரைரா பிரேவா (Parira Preva) : சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் கற்கள் காரணமாக ஏற்படும் வலி ,தொடைகளுக்கும், பாதங்களுக்கும் பரவும். முழங்காலிட்டு கைகள் மற்றும் தலையைத் தரையில் அழுத்திக் கொண்டு வேதனையுடன் சிறுநீர் கழித்தல். சிறுநீர்ப்பை உப்பிய உணர்வுடன் வலி  இருக்கும். சிறுநீர்ப்பாதை முழுவதும் கினவு வலியுடன் சிறுநீர் கழிக்கத் தொடர்ந்து உறுத்தல்.

மெர்க் கரசிவ் (Merc.cor) : சிறுநீர்ப்பையில் கடுகடுவலி. சிறுநீர் சூடாக ,எரிச்சல் வலியுடன்  சொட்டுசொட்டாக ரத்தம் கலந்து வரும். சில சமயம் சிறுநீர் கழித்த பின் ரத்தம் மட்டும் வரக்கூடும். சிறுநீர் கழிக்கும் போது வியர்க்கும். ஆசன வாயிலும்,சிறுநீர்ப்பையிலும், ஒரே நேரத்தில் கடுகடுப்பும், எரிச்சலும் காணப்படும். கர்ப்பகால ஆரம்பத்தில் புரதச் சிறுநீர்(Albuminuria) ஏற்படும்.

அஸ்பாரகஸ்  (Asparagus) : அடிக்கடி எரிச்சல் வலியுடன் சிறுநீர் கழிக்கும் போதும், கழித்த பிறகும் சிறுநீர்ப் புறவழியில் குத்தல் வலி, சிறுநீரில் சீழ் , கோழை கலந்திருத்தல். பலவீன நாடி, நெஞ்சு இறுக்கம், இருதய வலி, இடது தோள்பட்டை வலி போன்ற குறிகளுடன் சிறுநீர்ப்பை தொந்தரவுகள் சேர்ந்து இருத்தல்.

ஸ்டாபி சாக்ரியா (Staphy sagria) : சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போது நீர்த்தாரையில் எர்ச்சல், வயதானவர்களின் ப்ராஸ்டேட் சுரப்பி பாதிப்புடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல் ஏற்படுதல் , அல்லது சிறுநீர் கழித்த பிறகும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியாதல்.

ப்ரூனஸ் ஸ்பைனோசா (Prunus spinosa) : சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற தூண்டுதல்  திடீரென ஏற்பட்டு சிறுநீரை கழிக்க அவசரமாக ஓடுதல்,   அதற்குள் சிறுநீர் வெளியே வந்து விடுதல், அதை அடக்க முயலும் போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

பென்சோயிக் ஆசிட் (Benzoic acid) : சிறுநீர் மஞ்சளாகவும், நாற்றமாகவும் இருக்கும். சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்யாது.சிறுநீரில் குதிரையின் சிறுநீர் போன்று நாற்றமடித்தல்.

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com

]]>
CYSTITIS and Homeopathic cure, சிறுநீர்ப்பை அழற்சி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/27/w600X390/bladder-problems.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/29/cystitis-and-homeopathic-cure-2709799.html
2706737 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி ஆரோக்கியமான  மார்பகங்கள் பெற... டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, May 22, 2017 11:24 AM +0530 பெண்மையின் முக்கிய அடையாளங்கள் மார்பகங்கள். பெண்மைக்கு அழகு சேர்க்கும் மார்பகங்கள் பெண்கள் அனைவர்க்கும் ஒரே அளவில் அமைவதில்லை. திசுக்கள் (TISSUES), கொழுப்பு (FAT), சுரப்பிகள் (GLANDS), மற்றும் நாளங்களால் (DUCTS) ஆனது மார்பகம். இதன் பருமன், அளவு  போன்றவை பாரம்பரியக் காரணங்களாலும், கொழுப்பின் அளவைப் பொறுத்தும் அமைகின்றன. வடிவம் வயதுக்கேற்பவும், கர்ப்ப காலத்திலும் மாறுபடும். மார்பகங்களின் பிரதான பணிகள் தோற்றப் பொலிவைத் தறுதல்; பாலுணர்ச்சியில் பங்கு வகித்தல்; பால் சுரந்து ஊட்டுதல்.

பெண்களுக்கு  பத்து  வயதளவில்  மார்புக் காம்புகள் சற்று  பருக்கின்றன. சினைப்பைகள்  சுரக்கும்  ஈஸ்ட்ரோஜன்  மற்றும் புரோஜஸ்டிரான்  போன்ற (ஹார்மோன்களால்) இயக்குநீர்களால் மார்பகங்கள்  வளர்ச்சி  பெறுகின்றன.. காம்புகளின்  நுனியில் உணர்ச்சிகளைத்  தூண்டும்  நரம்புகள்  வலை  போல பின்னிக்கிடக்கின்றன. காம்பிலிருந்து உள்நோக்கி பால் நாளங்கள் (MILK DUCTS)செல்கின்றன. இவை சிறு நாளங்களாக பிரிந்து மேலும் பால் உற்பத்தி செய்யும் சிற்றறைகளாக (ALVEOLI) பிரிகின்றன. நாளங்களைச் சுற்றிக் கொழுப்பு படிவதால் மார்பகங்கள் கூம்பு வடிவம் அடைகின்றன. பெண் மலர்ச்சியடைந்த பின் மார்பகங்கள் வேகமாக வளர்ச்சி பெறுகின்றன. சராசரியாக பதினாறு வயதுக்கு மேல் மார்பகங்கள் முதிர்ச்சியும் திண்மையும் பெறுகின்றன.

மார்பகக் காம்பிலிருந்து வரும் திசு நார்களால் மார்பகம் 15 முதல் 25 மடல்களாகப் (ஆரஞ்சுச் சுளைகள் போல) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மடலிருந்தும் நாள அமைப்பு கருவட்டம் (AREOLA)வரை வந்து காம்பு வரை நீளுகிறது. காம்பின் மேற்பரப்பை அடையுமிடத்தில் ஒவ்வொரு மடல் சார்ந்த ஒரு சிறுநாளம் திறந்து துளையாக இருக்கும். காம்பில் சுமார் 15 முதல் 25 துளைகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு மடலிலும் 10 முதல் 100 பால் சுரப்பு சிற்றறைகள் இருக்கும்.

மாதவிலக்குக் காலங்களிலும், கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மார்பகங்களின் அளவு, செயல்பாடு, தன்மைகளில் மாற்றங்களில் நிகழ்கின்றன. பெண்களில் ஒரு பகுதியினருக்கு கடினமடைந்து வீங்கிச் சிவந்து வலி ஏற்படுகின்றது. மாதவிடாய் முற்றிலும் நின்றபின்  MENOPAUSEக்குப் பின் நாளங்கள், சிற்றறைகள் சிறுத்து,கொழுப்பு கரையத் துவங்கும். இதனால் மார்பகங்களின் கவர்ச்சித் தோற்றம் குறைந்து சுருங்கித் தொங்கிய நிலை ஏற்படுகிறது.

மார்பக் கட்டி நோய் உள்ள பெண்களில் ஐந்தில் ஒருவர்க்கு புற்றுக்கட்டி உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. பெண்கள் சுய பரிசோதனை மூலம் மாதம் ஒரு முறையேனும் மார்பகத்தின் அமைப்பில் மாற்றங்கள் உள்ளனவா எனக் கண்டறிவது நல்லது. ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை சார்ந்தது மார்பகங்களின் ஆரோக்கியம். ஆரோக்கியமே அழகு, வலிமை தரும். வளமான, நலமான மார்பகங்கள் அமைய பின்வரும் ஹோமியோபதி மருந்துகள் உதவுகின்றன.

பெல்லடோனா : மார்பகம் கனத்தல், கடினமடைதல், சிவந்து உஷ்ணமடைதல்.

பெல்லிஸ் பெரனிஸ் : எப்போதேனும் அடிபட்டு உள்பாதிப்பு.

பிரையோனியா : பால் கட்டுதல் அல்லது வேறு காரணங்களால் மார்பகம் வீங்குதல், கடினமடைதல்.

பைட்டோலக்கா : மாதவிடாய்க்கு முன்பு அல்லது மாதவிடாய் நேரத்தில் கல் போல் கடினத் தன்மையடைதல், கடுமையான வலி, வீக்கம், தொடமுடியாதளவு எரிச்சல் ஏற்படுதல்

சைக்ளமென் : மாதவிடாய்க்குப் பின் வீக்கம் (சில பெண்களிடம் பால் சுரக்கக் கூடும்) பால் நாளங்களில் அலர்ஜி வலி

மார்பகங்களின் வளர்ச்சி, அளவு சம்பந்தமான மருந்துகளும்            பிரச்னைகளும்

சிமாபிலா Q - சிறுத்துவிட்ட மார்பகங்கள் சற்று பெரிதாக மாறவும், பெறுத்துவிட்ட மார்பகஙகள் சற்று பெரியதாக

சபல் செருலேட்டா Q : வளர்ச்சியடையாத  சினைப்பைகள், கருப்பைகள், கர்ப்பபை பலவீனங்கள் மற்றும் தாமதமான மாதவிடாய் காரணமாக மார்பகச் சுரப்பிகள் வளர்ச்சி பெறாமல் வதங்கி இருத்தல் அல்லது மெதுவாக வளருதல்.

லைக்கோபோடியம் 1M : இளம் பெண்களுக்குத் தாமதவிடாயுடன் மார்பக வளர்ச்சி இல்லாமலிருத்தல்.

நக்ஸ்மாஸ் : முன்பு வட்டவடிவில் சதைப்பற்றுடன் அழகாக இருந்த மார்பகங்கள் இப்போது தட்டையாகிச் சிறுத்து விடுதல் - காம்புகள் உள் அமுங்கி இருத்தல்.  

ஒனோஸ்மோடியம் 10M,CM : வளர்ச்சியடையாத கர்ப்பபையுடன் (INFANTILE UTERUS) மார்பகமே வளராமை அல்லது மிகச் சிறியளவில் மார்பக வளர்ச்சி காணப்படுதல் முழுவளர்ச்சி ஏற்படும் வரை மாதம் ஒரு  வேளை).

பிட்யூட்டரி : பருவமடைந்த பிறகும் குறைவான மார்பகவளர்ச்சி.

சபீனா : ஒரு மார்பகம் மட்டும் அளவில் சிறுத்துக் காணப்படுதல்

கோனியம் : மார்பகங்கள் சிறுத்து பை போல் தொங்குதல் (மார்பக வீக்கம், வலி, கடினத்தன்மை, கட்டி போன்ற குறிகளும் இம்மருந்தில் உள்ளன.

சரசபரில்லா Q : காம்பு சிறுத்து தட்டையாகி உள்ளடங்கி இருத்தல் (தினம் இரண்டு சொட்டு இரண்டு வேளை)

பைட்டோலக்கா  : காம்பு உள்ளடங்கி இருத்தல், குழந்தை வாய் வைத்தாலே கடுமையான வலி  உடல் முழுவதும் பரவும்

சிலிகா : பாலூட்டும் போது உடல் முழுவதும் வலி பரவுதல்

குரோட்டன் டிக் : மார்புக் காம்பிலிருந்து  முதுகு வரை நூலால்  கட்டி இழுப்பது போல் பாலூட்டும்  போது வலி ஏற்படும்.

பெல்லாண்டிரியம் : எல்லா நேரத்திலும் மார்பக வலி இருக்கும், பாலூட்டும் போது மட்டும் வலி இருக்காது.

போராக்ஸ் : ஒரு மார்பகத்தில்  பாலூட்டினால் மறுபக்க மார்பகத்தில் வலி வந்து விடும்.

பருவ வயதிலும் தளர்ந்து இருக்கும் மார்பகங்களுக்கு எழுச்சியூட்டும் மருந்துகள் : கோனியம், காலி அயோடு, சபல் செருலேட்டா, பெர்பெரிஸ் அக், அயோடியம்,

மிகவும் பருத்த பெரிய மார்பகங்கள் அளவைக் குறைக்க உதவும் மருந்துகள் : மம்மரி, கல்கேரியா ப்ளோர், சிமாபிலா.

பால் சுரப்புப் பிரச்சனைகளும் ஹோமியோபதி மருத்துவமும்

பருவமடைந்து வயது கடந்தும் சில பெண்களுக்கு மார்பகங்கள் போதுமான தசைப்பிடிப்புடன் வளர்ச்சி பெறாம,சிறுத்து, தட்டையாக இருக்கும்,சிலருக்கு மார்பகம் ஓரளவு கூட எழும்பியிராது (ABSENCE OF BREAST). சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு அழகு, கவர்ச்சி குறைந்திருப்பதாக கவலை இருக்கலாம், ஆனால்  உண்மையான பிரச்சனை பால் சுரப்பிகளின் வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் என்பது தான். இதனால் பிரசவத்திற்குப் பின் பாலூட்டுவதில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. போதிய பால் சுரக்காமல் அமையலாம். எனவே இப்பிரச்சனை உள்ள பெண்களுக்கு பொலிவுடன் எடுப்பான மார்பகங்கள் வளரச் செய்யவும் பால் சுரப்பினை ஊக்குவிக்கவும் ஹோமியோபதி மருந்துகள் பேருதவி புரிகின்றன.

பால் முற்றிலும் சுரக்காமலிருப்பின் சுரக்க வைக்கவும், குறைவாக சுரந்தால் அதிகரிக்கச் செய்யவும், மிகவும் அதிகமாகச் சுரந்தால் சற்று குறைவாக சுரக்கச் செய்யவும் தவிர்க்க முடியாத நிலைமைகளில் பாலை வற்றச் செய்யவும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.

மாதவிலக்கு நேரத்தில், மார்பகத்தில் சில பெண்களுக்கு பால் சுரக்கக்கூடும். பால் உப்பு கரிப்பதால் குழந்தை பால் குடிக்க மறுக்கக்கூடும். சில சமயம் பாலுடன் ரத்தம் கலந்து வரக்கூடும். இது போன்ற மார்பகம் சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் அருமையான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன.

பால்சுரப்புப் பிரச்சனைகள் தீர்க்கும் சில மருந்துகள்;

(கன்னிப்பருவத்தில் சுய இன்பத்தில் மூழ்கித்திளைத்த பெண்கள்) பிரசவமாகி சில நாட்களாக பால் சுரக்காமல் இருத்தல் – அக்னஸ் காஸ்டஸ்

பால் சுரந்துகொண்டிருக்கும் போதே திடீரென நின்று விடுதல் – அசபோடிடா

பயம், அதிர்ச்சியில் பால் சுரப்பு தடைபடுதல் - அகோனைட்

அதிக கோபத்தால் சுரப்பு நின்றால் – சாமோமில்லா

MILK FEVER காய்ச்சலோடு மார்பகங்கள் சிவந்து வீங்கிப் பால் சுரக்காதிருத்தல் - பெல்லடோனா

தாய் பால் உப்பு கரிப்பதால் குழந்தை பாலருந்த மறுத்தல் - கல்கேரியா பாஸ்

தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் சுரப்பை வற்றச் செய்ய பயன்படும் மருந்து - லாக்கனினம்.

மணமாகாத இளம்பெண்களுக்கு (எப்போதும் கருவுற்றிராத நிலையிலும்) மார்புகள் வீங்கிப் பால் வருதல் - அஸபோடிடா

சிறுமிகளின் மார்பகங்களில் பால் சுரத்தல், புண் போன்ற வலி - பல்சடில்லா

பொதுவாக பால் சுரப்பை அதிகரிக்கப் பயன்படும் மருந்துகள் -  கல்கேரியா பாஸ், லாக்டுசாவிரோசா, சபல்செருலேட்டா, ஸ்டிக்டா, லெசிதின், ரிஸினஸ் கம்யூனிஸ், பல்சடில்லா, கல்கேரியா கார்ப், பெல்லாடியம்,  அசபோடிடா, ஆல்பால்பா

பால் அளவை நிறுத்த   உதவும் மருந்து - சியோனாந்தஸ்

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com

]]>
breast feeding, Breast, ஆரோக்கியமான  மார்பகங்கள், மார்பகங்களின் அளவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/22/w600X390/011-1024x768.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/22/breast-related-problems-and-cure-in-homeopathy-treatments-2706737.html
2703177 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி குழந்தைகளின் நடத்தைக் குறைபாடுகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் டாக்டர் வெங்கடாசலம் DIN Tuesday, May 16, 2017 10:30 AM +0530 ஒரே வீடு தான். ஒரு கூரையின் கீழ் தான் உணவு, உறக்கம், வாழ்க்கை எல்லாம். நெருங்கித் தான் இருக்கிறோம்; ஆனாலும் இடைவெளி அதிகம். ஒரே வகுப்பறை தான். ஒரே கூரையின் கீழ் தான் பாடம், படிப்பு, பரிட்சை எல்லாம்.ஆசிரியர்களும் மாணவர்களும் அருகருகே தான் இருக்கிறார்கள். ஆனாலும் இடைவெளி அதிகம். குழந்தைகளின் இதயங்களில் பெற்றோரும் ஆசிரியர்களும் இடம் பிடிக்கவில்லை. இதன்  பின்விளைவு, ‘அவன் வீட்டின் பெயர் அன்னை இல்லம்; அவன் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’, என்ற துயர நிலை.

தாலாட்டுப் பாடி மழலைகளைத் துயில வைக்கும் தாய்மார்கள் அருகி விட்டனர். மரங்களையும், நிலவையும் காட்டி அன்பையும் சேர்த்து அமுதூட்டும் அம்மாக்கள் அபூர்வமாகிவிட்டனர். சின்னத் திரையின் வண்ணக் காட்சிகளுக்கு முன் இவையெல்லாம் எம்மாத்திரம்? மனித உறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

இன்றைய சமுதாய, பொருளாதார, வாழ்வியல் சூழ்நிலையில் குழந்தைப் பருவ சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ‘அன்றைய நாளைக் காட்டும் காலை நேரம் போல வருங்கால மனிதனைக் காட்டுகிறது குழந்தைப் பருவம்.’ என்று மில்டன் கூறுவதிலிருந்து குழந்தைப் பருவம் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு கவனிக்கத்தக்கது என்பது புலனாகும். குழந்தைப் பருவச் சிக்கல்கள் குழந்தைகளின் நிகழ்காலத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும்.குழந்தைகளின் நடத்தைக் குறைபாடுகளில் ‘கவனக்குறைவு மற்றும் மிகை செயல் கோளாறு’ குறிப்பிடத்தக்கது.

கற்க இயலாத,கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாத குறைபாட்டை ATTENTION DEFICIT DISORDER [ADD]  என அழைக்கின்றனர். மிதமிஞ்சிய சேட்டைகள், செயல்பாடுகளை HYPERACTIVE DISORDER [HD] என அழைக்கின்றனர். இவ்விரு குறைபாடுகளும் இணைந்திருந்தால் ‘ADHD’  என அழைக்கின்றனர். ‘ADHD’ என்பது பிஞ்சுக் குழந்தைகள் [INFANTS], சிறுவர்கள் [CHILDREN], பதின் பருவவயதினர் [TEENS] போன்றவர்களிடம் காணப்படுகிறது.

குழந்தைகளிடம் காணப்படும் ADHD போன்ற நடத்தை மாறுபாடுகளுக்கு பாரம்பரியக் கூறுகளும், சமூக-உளவியல் பிரச்னைகளும், தைராய்டு இயக்கக் கோளாறும், சத்துப் பற்றாக்குறையும், கழுத்து முள்ளெலும்புப் பகுதியில் ஒருவித அழுத்தமும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் பயன்படுத்திய புகை, போதை மற்றும் மருந்துப் பொருட்களும், தலைக் காயங்களும் அடிப்படைக் காரணங்களாக இருக்கக்கூடும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

ADHD-ன் பிரதான இயல்புகள் கற்க இயலாமையும் [LEARNING DISABILITY] அமைதியற்ற தன்மையும், மேலும் ஒழுங்கீனம், பொய், திருட்டு, ஆக்ரோஷம் [AGGRESSIVE BEHAVIOUR TOWARDS PEOPLE OR ANIMALS] போன்ற நடத்தைக் கோளாறுகளும், அதிகமான பேச்சும், வரம்பு மீறிய செயல் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமையும், பிறர் சொல்லைக் காதில் வாங்கிக் கொள்ளாத தன்மையும், ஒரு வேலையை முடிக்கும் முன்பே மறு வேலைக்கு அல்லது வேறு விஷயத்திற்குத் தாவும் மனப்பான்மையும் அமைந்திருக்கும்.

ADHD இயல்புகளை மனவியல் நிபுணர்கள் மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

1. கவனக் குறைவு வகை [INATTENDIVE TYPE] : கல்வியில் கவனம் செலுத்த முடியாது. மொழியைக் கற்க சிரமம். எந்த விதிகளையும் அறிவுரையையும் பின்பற்ற இயலாமை, ஒரு பணியை முடிக்காமல் வேறொன்றுக்குத் தாவுதல்,மறதி,பார்ப்பது,கேட்பது,செயல்படுவது எல்லாவற்றிலும் கவனக்குறைவு. அதனால் நிறையத் தவறுகள் ஏற்படும்.

2. ஆவேசப்படும் வகை [ IMPULSIVE TYPE] : எதையும் யோசிக்காமல் செய்தல்,தன் நேரம் வரும் வரைக் காத்திருக்க இயலாமை, தெருவின் குறுக்கே - சாலையின் குறுக்கே அவசரக் கோலமாய் ஓடுதல், நட்பைக் காக்க இயலாமை, யாரும் எதிர்பாராத நேரம் அடித்தல், பொருட்களைச் சேதப்படுத்துதல்

3. வரம்பு மீறிச் செயல்படும் வகை [HYPERACTIVE TYPE] : பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமர்ற காரியங்களைச் செய்தல், பிறருடன் இணைந்து விளையாட, செயல்பட இயலாது. பிறருக்கு இடையூறு செய்தல், மேலே கூறிய மூன்று வகை ADHD இயல்புகளோடு பொதுவாக உண்பதற்கு மறுத்தல், அன்பை மறுத்தல், அலறுதல், கதறி அழுதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், குறைந்தளவு தூங்குதல், அமைதின்மை போன்றவையும் காணப்படும்.

குழந்தைகளின் நடத்தைக் கோளாறுகளைக் குணப்படுத்த பன்முகச் சிகிச்சை [MULTIFACETED TREATMENT] தேவைப்படுகிறது. நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் சிகிச்சை [BEHAVIOURAL THERAPY], தனி மற்றும் குடும்பரீதியிலான ஆற்றுப்படுத்துதல், சத்தூட்டச் சிகிச்சை, மருந்துச் சிகிச்சை போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மூளையிலுள்ள DOPAMINE போன்ற நரம்புக்கடத்தி வேதிப் பொருட்களை [NEUROTRANSMITTER] உற்பத்தி செய்ய உதவும் இரும்புச் சத்தினைச் செயற்கையாக வழங்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக குறிப்பிடத்தக்க பலன்கள் நிகழவில்லை.   

குழந்தைகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் புழக்கத்திலுள்ள மனநோய் மருத்துகளைப் [PSYCHIATRIC DRUGS] பயன்படுத்துவதால் நன்மைக்குப் பதில் தீங்குகளே ஏற்படுகின்றன. இம்மருந்துகளை நிறுத்த முடியாத [ADDICTIVE] பழக்க அடிமைத்தனமும், பசியின்மை, எரிச்சல், மயக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத் துடிப்புகள், சுவாசத் திணறல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

மருத்துவத் துறையில் புரட்சிகரமான கண்டுபிடிப்பான ஹோமியோபதியில் ADHD போன்ற குழந்தைகளின் நடத்தைப் பிரச்சினைகளுக்கு பக்கவிளைவு இல்லாத சிகிச்சை அளிக்க முடியும். இதனால் குழந்தைகளின் குணநலன் மேம்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளின் உடல் உள்ளம் இரண்டின் அமைப்பிற்கேற்பவும், பாரம்பரிய மற்றும் குடும்பப் பின்னணி போன்ற காரணங்களுக்கேற்பவும் ஹோமியோபதியில் மட்டுமே மருந்தளித்துச் சிகிச்சை மேற்கொள்ள முடியும். குறிப்பிடத்தக்க பலன்களும் ஏற்படும்.

குழந்தைகளிடம் காணப்படும் வன்முறைத்தனங்கள், கோபம், விதிமீறல்கள், மிருகவதை ஆர்வங்கள், பிறருக்கு இடையூறு, பொய்கள், திருட்டு, போதைப் பழக்க ஆர்வங்கள், கல்வி ஆர்வமின்மை, டிவி & வீடியோவின் வன்முறைக் காட்சிகளில் ஆர்வம், பாலியல் தவறுகள், முரட்டுப் பிடிவாதங்கள், மற்றும் பல வரம்பு மீறிய குணக்கேடுகளை அலட்சியம் செய்தல்,பள்ளி வன்முறை/கல்லூரி வன்முறை [SCHOOL VIOLENCE/COLLEGE VIOLENCE] , ரேக்கிங் பழக்கம், பெண்ணை இழிவு செய்யும் [EVE TEASING] பழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் நன்னடத்தைக் குறைபாடுகள், இயக்கக் குறைபாடுகளை முழுமையாக ஆய்வு செய்து ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டால் நடத்தைகளை மேம்படுத்த இயலும். ADHD குழந்தைகளைக் குணப்படுத்தும் ஆற்றல்மிக்க ஹோமியோபதி மருந்துகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கிய பத்து மருந்துகளைப் பற்றிப் பார்ப்போம்.முதல் மூன்று மருத்துகள் குழந்தைகளின் ADD  நிலையை மாற்றவும் மற்ற மருந்துகள் ADHD நிலையைச் சீர்படுத்தவும் குறிகளுக்கேற்ப பயன்படக் கூடியவை.

1. ஓபியம் (OPIUM) : குழந்தையின் மூளை செயல்திறன் குறைவு. எதிலும் உணர்ச்சியற்ற மந்த நிலை [தாயார் கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் ஏராளமான மருந்துகள் எடுத்திருப்பார். எப்போதும் தூக்க நிலை. தூக்கத்தில் உள்மனம் விழித்திருக்கும். அருகில் நடப்பது தெரியாது. தூரத்து மணி ஓசை, ஹாரன் சத்தம், பறவைச் சத்தம் கேட்கும். எதிலும் மனம் ஒன்றுதல் இயலாது. மிரட்டிய பின் அல்லது பயத்திற்குப் பின் அல்லது தலைக் காயத்திற்குப் பின் ஏற்படும் பாதிப்புகள். [மாடு, நாய் ஏதேனும் துரத்தியதற்குப் பின், இரவு பேய், பிசாசு எதேனும் பார்த்ததாகக் கூறும் அனுபவத்திற்குப் பின்]. மிக கடுமையான மலச்சிக்கல்.மலம் கழிக்கும் உணர்வே இல்லாமை. வறண்ட காய்ந்த உருண்டை மலம், வலி இருக்க வேண்டிய சீழ்கட்டி, புண்களில் கூட வலி இராது. நினைவுடன் மயக்கம் [COMA VIGIL]

2. பரிடா கார்ப் [BARYTA CARB] : குறிப்பிடத்தக்க உடல், மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தை. பாதுகாப்பற்ற, கூச்ச சுபாவமுள்ள, மந்தத் தன்மையுள்ள, இயலாத தன்மைகளுள்ள குழந்தைகள். பள்ளிப் பாடங்களில் சிரமப்படுதல். வயதிற்கேற்ற முதிர்ச்சியின்றி குழந்தைத்தனமான செயல்பாடுகள். வாயில் உமிழ்நீர் ஒழுகுதல், பிறர் கேலி செய்யக்கூடும், விமர்சிக்கக் கூடும் என எண்ணுதல், எளிதில் சளி பிடிக்கும் தன்மை. டான்சில் சதை வளர்ச்சி.

3. அபிஸ் மெல் [APS MEL] : மோசமாகப் பொருட்களைக் கையாளுதல், அடிக்கடி அவற்றை நழுவ விடுதல், கால்களைத் தரையில் கீழே தேய்த்து நடத்தல் [தோல் வியாதிகளை அடக்கிய வரலாறு]

4. ஹெல்லிபோரஸ் [HELLEPORUS ] : மந்தமான மனநிலை [SLUGGISH]. பதிலளிக்க நீண்ட நேரம் ஆகும் அல்லது பதிலளிக்க மறுத்தல். உண்ணும் போது உணர்வின்றி ஊட்டும் கரண்டியைக் கடித்தல். படித்தது, கேட்டது, சொன்னது, சொல்ல நினைத்தது மறந்து விடுதல். மன பலவீனம் உடலைப் பாதிப்பதால் கையிலுள்ள பொருட்களை கீழே விட்டுவிடுதல், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் ஒரு கை கால் தானாக தொடர்ந்து ஆடுதல். உதடுகளை, ஆடைகளைத் தொடர்ந்து கிள்ளுதல், தலையணைக்குள் தலையைப் பின்பக்கமாக அழுத்துதல் சுய உணர்வுடன் வலிப்பு. வலிப்புக்குப் பின் ஆழ்ந்த தூக்கம் [தலையில் அடிபட்ட வரலாறு அல்லது நீர்கோர்த்த-HYDRUCHEPALLUS வரலாறு]

5. சினா [CINA] : குழந்தை யாரும் அருகில் வருவதையோ, தொடுவதையோ, கொஞ்சு வதையோ, உற்றுப் பார்ப்பதையோ விரும்பாது. ஒவ்வொருவரையும் அடித்தல், எதிர்த்தல், சொல் கேளாமை, தண்டித்தாலோ,திட்டினாலோ வலிப்பு ஏற்படுதல், குடற்பூச்சிகளால் மூக்கைக் குடைதல், இரவில் பற்கடிப்பு, படுக்கையில் சிறுநீர் கழித்தல், லேசான வலிப்புகள், பலவிதப் பொருட்களை விரும்பிக் கேட்டல், கொடுத்தால் வாங்க மறுத்தல் அல்லது வாங்கி வைத்துக் கொண்டால் அமைதி, எரிச்சல், சிடுமூஞ்சித்தனம், பிடிவாதம், கடும்பசி, கடும் தாகம், இனிப்புகளில் ஆர்வம்.

6. ஸிங்கம் மெட் [ZINCUM MET] : திகில், கவலை, கோபம், அறுவைச் சிகிச்சை, அதிகம் படித்தல், இரவில் கண் விழித்தல் ஆகியவற்றின் பின் விளைவுகள், முழங்காலுக்குக் கீழே அமைதியற்ற தன்மை, பாதங்களை இடைவிடாமல் அசைத்தல், பிறர் சொன்னதையே குழந்தை திரும்பத் திரும்பச் சொல்லுதல், கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டுவிட்டு பின்னர் பதிலளித்தல், பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி பிழைகள், அதிக மறதி, மூளைச் சோர்வு, உட்கார்ந்து உடலைப் பின்புறம் வளைத்தால் தான் சிறுநீர் கழிக்க இயலும். இருமும் போது பிறப்புறுப்பில் கையை வைத்துக் கொள்ளுதல்.

7. ஸ்டிரமோனியம் [STRAMONIUM] : ஏதேனும் பயம் ஏற்பட்ட பின் அல்லது அடிபட்டதாலான மன அழுத்தக் கோளாறுக்குப் பின் குழந்தைகளிடம் காணப்படும் ADHD நிலை. கடுமையான மிகைச் செயல்பாடு. கோபம், மூர்க்கம், ஆவேசம், கடித்தல், உதைத்தல், மோதுதல், வலிப்பு வருதல், வன்முறை, சப்தமாய் பேசுதல், வேகமாய் தொடர்பற்றுப் பேசுதல், இருள், நாய்கள், ஆவிகள், பேய்கள் மீதான பயம், தாகம் இருந்தாலும் நீர் அருந்தப் பயம், சாவு பயம், இரவில் தனிமை பயம். பயங்கள் காரணமாக அதிக விழிப்போடிருத்தல், நள்ளிரவு 2 மணிக்கு பீதிகள் அதிகரிப்பு, எழுந்து அலறல், வன்முறை குணமும், ஆக்ரோஷமும், பயமும் நிறைந்த கடின நடத்தையுள்ள குழந்தைகள்.

8. டாரெண்டுலா ஹிஸ்பானியா [TARENTULA HISPANIA] : அதிகளவு அமைதியற்ற தன்மை, குதித்தல், ஆடுதல், கைகள், கால்கள் இயங்கிக் கொண்டே இருத்தல், ஒரு இடம் விட்டு மறு இடம் மாறி மாறிச் செல்லுதல், தன்னையோ பிறரையோ அடித்தல், தலையணைக்குள் தலையை உருட்டுதல், இசை கேட்டு அமைதியடைதல்.

9. டியூபர்குலினம் [TUBERCULINUM] : எதையாவது செய்ய, எங்காவது பயணம் செல்ல நிலையான விருப்பம். ஒரே இடத்தில் தங்கியிருக்க இயலாமை. நாய், பூனை, மிருகங்கள் பயம், பறப்பது போல, மிருகங்கள் சூழ்ந்து விட்டது போல பிரமை. கோபத்தில் பொருட்களை உடைத்தல்.

10. அயோடியம் [IODIUM] : பரபரப்பான மனநிலை. எப்போதும் நடத்தல், பொருட்களைக் கிழித்தெறியும் உணர்ச்சி வேகம், தனக்குத் தானே தீங்கிழைத்தல், வன்முறையில் ஈடுபடுதல், எப்போதும் பசி, உணவு இடைவேளைகளிலும் சாப்பிடுதல், ஆனாலும் உடல் மெலிவு. குளிர் அறை விருப்பம். அமைதியாக உறங்காமல் எப்போதும் பரபரப்பாய் ஓடித்திரிதல்.

இம்மருந்துகள் மட்டுமின்றி வேறுபல மருந்துகளும்  ADHD குறிகளுக்கு உதவக்கூடும். குறிகளைக் கவனத்திற் கொண்டு உரிய மருந்துகளை ஹோமியோ மருத்துவர்கள் தேர்ந்தெடுத்துச் சிகிச்சையளிக்கும் போது குழந்தைகள் நலம் பெறுவது திண்ணம்.

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com
 

]]>
ATTENTION DEFICIT DISORDER [ADD], HYPERACTIVE DISORDER [HD], குழந்தைகளின் நடத்தைக் குறைபாடு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/16/w600X390/ADHD-Child.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/16/behavior-problems-in-children-adhd-homeopathy-treatments-2703177.html
2698333 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி காதல் கோட்டையா? மணல் கோட்டையா? டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, May 8, 2017 11:29 AM +0530 இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாகப் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் காதல். சிறந்த படிப்பாளிகலையும், திறமைசாலிகளையும், அறிவுஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது காதல் மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் குழப்பமடையக் காரணம்... காதல் குறித்துத்  தெளிவு இல்லாமல் குழம்பிய மனதுடன் காதலிக்க ஆரம்பிப்பது தான்.

முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் என்று கருதப்படுவோரில் பலர் தமது பிள்ளைகளின் காதல் பற்றித் தெரிந்தவுடன் சராசரிக்கும் கீழே சரிந்து விடுகின்றனர். பாரதி, பாரதிதாசனைப் பயின்று தம் பார்வையை விசாலப்படுத்தியவர்களில் பலர் தம் வீட்டு ஜன்னல் வழியே காதல் காற்று நுழைந்து விடாமல் எச்சரிக்கையாய் பூட்டிக் கொள்கின்றனர்.ஏட்டிலும் எழுத்திலும் இனித்த விஷயம் வீட்டிற்குள் வந்தால் கசக்கிறது. என்ன காரணம்?காதல் ஏன் பெற்றோரைப் பீதியுறச் செய்கிறது?

பெற்றோரை,உற்றோரை இழக்க நேர்ந்தாலும் காதலை இழக்க முடியாது என்று கருதுமளவு காதல் வலிமையும் வசீகரமும் நிறைந்ததாய் உள்ளது. எல்லா காதலர்களும் தாங்கள் உடலை நேசிக்கவில்லை உள்ளத்தைத் தான் நேசிக்கிறோம் என்கிறார்கள்.காதல் புனிதமானது என்கிறார்கள். மகத்துவமும் தெய்வீகமும் நிறைந்த்து என்று பெருமைப்படுத்துகிறார்கள்.

காதல் உணர்வு பருவகால வாழ்க்கையின் இயற்கை என்பதில் சந்தேகமில்லை. மனதின் படைப்புத் திறனை, கனவு காணும் ஆற்றலை முழுவீச்சில் இயக்கும் சக்தி காதலுக்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.காதலில் ஒத்த கருத்தும் புரிதலும்,தெளிவும் இல்லாமல் புனிதமானது காதல்’ 'காதல் தெய்வீகமானது’ ‘காதலுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்று பிதற்றுவது சினிமாவில் ரசிக்கத்தக்க வசனமாக இருக்கலாம். வாழ்க்கையின் வெற்றிக்கு வழி வகுக்காது.

**

சில ஆண்டு முன்பு பக்கவாதம் தாக்கி கிடந்த ஒருவருக்குச் சிகிச்சையளிக்கச் சென்றிருந்தோம். பக்கவாத நோய் ஏற்பட்ட பின்னணியை அறிய விரும்பி.. அவரது மனைவியிடம் கேட்டோம். 'புகைப்பாரா? குடிப்பாரா? வேறு ஏதேனும் கெட்ட பழக்கம் உள்ளதா?' அப்பெண்மணி வழிந்தோடும் விழிநீரை சேலைத் தலைப்பால் துடைத்தப்படி சோகம் இழையோடிய மெல்லிய குரலில் கூறினார். 'நல்ல ஒழுக்கமான மனுசன்!  நாலு பேருக்கு உதவி செய்யிற நல்ல மனுசன்! பெத்த பொண்ணு ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் யாரோ ஒருத்தனோட ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்னு கேள்விப்பட்டதும் துடிச்சிப் போயிட்டார். அன்னிக்கு  ராத்திரி தூங்காம அழுது புலம்பிக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் இடது காலும் இடது கையும் விளங்காமல் போயிருச்சி, சொந்தக்காரங்க மகள் இருக்குமிடத்தைத் தேடிப் போய் அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சின்னு சொல்லியும் அவ வரலை, வருத்தப்படவில்லை. அதைக் கேள்விப்பட்ட  மனுசன் ரொம்பவும் வேதனைப்பட்டார். பேச்சும் நின்னுபோச்சு.  இப்ப வலது காலும் வலதுகையும் சேர்ந்து பக்கவாதம் வந்திருச்சு’   
   
படுக்கையில் கிடந்தவரின் முகம் கசங்கியிருந்தது. ஒரு மாபெரும் இழப்பின் பதிவுகளாய் நெற்றியிலும் ஒரு பக்கக் கன்னத்திலும் ஆழமான ரேகைகள். கண்களில் நீர் தளும்பி நின்றது. வீட்டின் எல்லாச் சுவர்களும் களையிழந்து ஊமைச் சோகத்தோடு நின்று கொண்டிருந்தன. மிகவும் வயதான ஒரு முதாட்டி இருமிக் கொண்டே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். படுக்கையில் கிடந்தவரை அதிர்ச்சியிலிருந்து மீட்க, இக்னேஷியா எனும் ஹோமியோ மருந்தையும், ஸ்டார் ஆஃப் பெத்லஹெம் எனும் மலர் மருந்தையும் அளித்த பின்னர் அவரால் ஓரளவு பேச முடிந்தது.கைகளில் குறிப்பிட்த்தக்க இயக்கம் ஏற்பட்டது.சிகிச்சை சில மாத காலமே நீடித்திருக்கும். அதற்குள் அவர்கள் தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். திரும்பவேயில்லை.

காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வது இதனால் தான். சாதி, மதம் பாராமல், பொருளாதார ஏற்றத்தாழ்வு பாராமல் ஒருவரை ஒருவர் நேசிப்பதால் காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வதுண்டு. சமூகம் மதிக்கிற,உயர்த்திப் பிடிக்கிற பல விஷயங்களை, மரபுகளை, தடைகளை, தனிநபர் ஒழுக்கங்களை காதல் பொருட்படுத்துவதில்லை என்பதால் காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வதுண்டு. அன்பிற்குரிய அனைத்தையும் இழந்து புதிய வசீகரமான அன்பைப் பெறத் தயாராவதால் தான் காதலுக்குக் கண் இல்லை என அழுத்தம் திருத்தமாய் கூறுகிறார்கள் போலும்.

ஒரு பெண்ணின் தோற்றம் கண்டு கிறக்கம் கொண்டு அதையே காதல் ஏற்பட்டதாக கருதும் ஒருவன் அவளது ஒவ்வொரு அசைவிற்கும், செயலுக்கும் ஓர் அர்த்தம் கற்பிக்கிறான். அவள் அருகிலிருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் அவனை விரும்புவது மாதிரியே மாயத் தோற்றம் தருகிறது.அதனைத் தொடர்ந்து காதலுக்கான மாமூலான கற்பிதங்களும் சம்பிரதாயங்களும் அரங்கேறுகின்றன. காதல் காவியங்களாய் உயிரை உருக்கிச் சில கடிதங்கள், பூங்கா, திரையரங்கம், கேளிக்கை என ஒவ்வொன்றாய் நிகழ்ந்து பின் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரின் அகம் வெளிப்படும் சூழ்நிலை வரும் போது இருவரும் புழுவாய் துடித்து சங்கடப்படுகிறார்கள்.

இவன் இவ்வளவு தானா? இவள் இவ்வளவு தானா? என்று சலிப்படைந்து வருந்தி கோபமுற்று, பிரிவதற்கான வழிவகைகளை  மும்மரமாய் தேடத் துவங்குகிறார்கள். காதலிப்பதாக கருதி ரம்மியமான மன நிலையோடு  உலா வந்தவர்கள் பிடிக்கவில்லை என்று வெறுப்பான மனநிலையோடு விலகி நிற்பது வினோதமான முரண்பாடு இல்லையா? விரும்பிய, நேசித்த, காதலித்த, அன்பு செலுத்திய ஒன்று.. பிடிக்காமல் போகுமா? அப்படியானால் இத்தகைய காதல் எத்தகைய பலவீனமான அடித்தளத்தில் உருவானது எத்தகைய கண்மூடித்தனமான வேகத்தில் நடந்துள்ளது என்பதை பாருங்கள்.

ஒரு அழகான இளைஞனும் சுமாரான தோற்றமுள்ள் ஓர் பெண்ணும் காதலர்களாக, தம்பதிகளாக இருப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு அழகான பெண்ணும் சுமாரான ஆணும் கணவன் மனைவியாய் பார்த்திருக்கிறோம். இத்தகைய இணைகள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். இந்த ஆளுக்கு இப்படி ஓர் அழகான பெண்ணா? இந்த பெண்ணுக்கு இப்படி ஓர் மாப்பிள்ளையா?என்று இவர்களைப் பார்க்கும்போது மனதிற்குள் வினாக்கள் புகைபோல சூழ்ந்துவிடுமல்லவா? இத்தகைய இணைகளின் அன்னியோன்யமான வாழ்க்கைக்கு அடிப்படை எது?

பொதுவாக ஆண்ணோ, பெண்ணோ, தனக்கு வரவேண்டிய வாழ்க்கைத் துணை எப்படியிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு கற்பனையான தோற்றத்தை மனதிற்குள் வரைந்து வைத்திருப்பார்கள். இதில் பெரும்பாலோரின் மனச்சித்திரங்களில் புற அழகு குறித்த எதிர்ப்பார்ப்புகளே அதிகமிருக்கும். அக அழகினைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்திருக்கவே மாட்டார்கள் [அதென்ன அக அழகு என்று கேட்கத் தோன்றுகிறதா?] காதல் நம்மைச் சிந்திக்க விட்டால் தானே சிந்திக்க முடியும்?

காதலுக்கு அழகு [புற அழகு] முக்கியம் இல்லையா? கண்ணுக்கு லட்சணமாகத் துணை அமைய வேண்டும் என்று எண்ணூவது தவறா? என்று பலரும் கேட்கக்கூடும். இதை முற்றிலும் மறுத்துவிட முடியாது. எனினும் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால்,எனக்கு ஏற்ற துணை இவன் தான், இவள் தான் என்று அகம் அறிந்து, குணநலன் புரிந்து தேர்வு செய்வதற்கு தெளிவும் முதிர்ச்சியும் தேவை. இங்கே காதலிப்பவர்களுக்குப் பிரதானப் பிரச்சினையே சிந்திக்க அவகாசம் இல்லாமலிருப்பது தான். மனமுதிர்ச்சியும் கிடையாது. இவர்களுக்கு பாதை காட்டும் ஒளிவிளக்குகளாய் திகழ்வது திரைப்படங்களே. பக்கமேளம் வாசிப்பவர்கள் [இவர்களையொத்த மனமுதிர்ச்சியற்ற] நண்பர்களே.

யதார்த்த வாழ்வில் காலூன்றி நிற்கும் காதல் தெளிவும், புரிதலும் நிறைந்த காதல் நியாமானது; வாழத் தகுதியானது.கற்பனைகளில் காலூன்றி மின்மினிக் கனவுகளில் வளர்க்கப்படும் காதல் ஊனமுள்ள காதல்;உதவாக்கரை காதல்.காலமும் வாழ்க்கை சூழலும் எத்தனை வேகமாக ஓடினாலும்,பரபரப்பாய் சென்றாலும்,காதல் என்பது நிதானமானது. நிதானமாகச் சிந்தித்து செயல்படக்கூடிய காதல் மட்டுமே காதல் கோட்டையாக வாழ முடியும்; மற்றவை மணற்கோட்டையாகவே சிறு காற்றிலும் சரியும்.

ஒரு கல்லூரி மாணவன் சிகிச்சைக்கு வந்தான். அவன் அருகிலுள்ள கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தான். திடீரென்று காதல் வந்துவிட்டது. அவனுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கி நிலைகுலந்து செய்வதறியாமல் தடுமாறி, படிப்பில் கவனம் செலுத்தவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டான்.ஏனிந்த நிலை என்று விசாரித்து ஆய்வு செய்தோம். தினசரி கல்லூரி செல்லும் பஸ்ஸில் ஓர் இளம் பெண் அவளைச் சற்று வித்தியாசமாகப் பார்த்த்தாகவும் அவள் தன்னை விரும்புவதாகவும் கூறினான். அதனால் தான் இவ்வளவு பிரச்சினைகளா? அவன் தூக்கம் கெட்டு, அரைப் பைத்தியமாய் ஆகியிருந்தான்.

அவளிடமிருந்து வாய்ச் சொல்லாய் காதல் சம்மதம் வர வேண்டும் என்று அவசரப்பட்டான். அவள் எப்படிப்பட்ட பெண் என்பதெல்லாம் அவனுக்குத் தேவைப்படவில்லை. கட்டற்ற வெள்ளமாய், உணர்ச்சிப்பெருக்கு அவனை இழுத்து ஓடிக் கொண்டிருந்தது. நீந்திக் கரை சேர இயலாமல் தவித்தான். அவசரப்பட்டான்; அவஸ்தைப்பட்டான்.

காதல் கைகூடாமல் தத்தளித்த அவனை சுய உணர்வுக்கும், நிதான நிலைக்கும் கொண்டு வர ‘இம்பேஷ்ன்ஸ்,செர்ரிப்பிளம், ஒயிட்செஸ்ட்நட், ரெட்செஸ்ட்நட்’ போன்ற மலர்மருந்துகளும், ஸ்டாபிசாக்ரியா, இக்னேஷியா, நேட்ரம்மூர் போன்ற ஹோமியோபதி மருத்துகளும் கொடுத்தோம். எங்கோ முட்டி மோதி சேதமடையப் போகும் பிரேக் இல்லாத வண்டிபோல இயங்கிய அந்த மாணவன் சில வாரங்களில் நிதானத்திற்கு வந்தான். மனம் சமநிலை அடைந்தது. அவனால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது.

அதன் பின்னரும் அந்தப் பெண் அதே பஸ்ஸில் சென்று வருகிறாள். அவள் ஓர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவள் அவளாகவே இருந்தாள். அவன் நிதானமடைந்த பின் எல்லாம் புரிந்தது. காதலில் மின்னல் வேகம் விபரீதமானது என்பதை அவன் அறிந்து கொண்டான்.

ஆண் பெண் நட்பு என்பது மிகமிக மகிழ்ச்சியான ஆரோக்கியமான ஒன்று. மனத் தெளிவும் முதிர்ந்த சிந்தனையும் உள்ளவர்க்கே இந்த நட்பு சாத்தியம். நட்பு தொடரும் போது நெருக்கம் இறுக்கம் அதிகரித்து இடைவெளியாய் இருந்த மெல்லிய இழை மறைந்து போகும். அப்போது அறிவிக்கப்படாமலேயே காதல்பூ பூக்கும்.அதன் மணம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.

-Dr.S.வெங்கடாசலம்,                                                                                           மாற்றுமருத்துவ நிபுணர்,          

சாத்தூர்.
செல்;94431 45700  
Mail:alltmed@gmail.com
 

]]>
காதல், love, Lust, Elopement https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/8/w600X390/india.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/08/love-affair-and-elopement-homeopathic-treatment-for-anxiety-due-to-emotional-imbalance-2698333.html
2694219 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி இனம் புரியாத பயம்! பீதி! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, May 1, 2017 12:21 PM +0530 ஓர் மழை நாளில் அந்தி சாயும் நேரம் இளைஞர் ஒருவர் தாயுடன் வந்திருந்தார். வெளியில் சென்றிருந்த நான் சற்று தாமதமாகத் திரும்பினேன். அதுவரை காத்திருந்தவர்கள் என்னைப் பார்த்ததும் பரபரத்தனர். அனுபவத்திலும், அன்பிலும் பண்பிலும் மூத்த அந்தத் தாய் கையெடுத்துக் கும்பிட்டு அழத் துவங்கினார். அருகில் ஆழ்ந்த துயரத்தின் சாயலோடு அந்த இளைஞர், இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்று அமரச் சொன்னேன். தாயை அமைத்திப்படுத்தினேன். என்ன பிரச்னை என்று கேட்டேன்.

அந்த இளைஞர் முதுகலைப் பட்டதாரி. எம்.பில். படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு பய உணர்ச்சி அடிக்கடி ஏற்படுகிறது. இது அவருடைய முக்கியத் துயர்.

'எப்போதிருந்து இந்த பயம்?’

'என் ஃபிரண்ட் ஒருத்தன் திடீர்னு காய்ச்சலில் படுத்தான். பிறகு கை, கால் விளங்காம போச்சு. எவ்வளவோ செலவழிச்சும் அவனை காப்பாத்த முடியல. இறந்து போயிட்டான். அதிலிருந்து எனக்கு எந்த சாதாரண வியாதி வந்தாலும் பயமாக இருக்கு’ இடையில் அந்த தாயார் தழுதழுத்த குரலில் குறுக்கிண்ட்டார்.

'இவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. இவனோட அப்பா கூடப் பிறந்தவங்க யாருக்கும் ஆம்பிளை பிள்ளைகள் இல்லை. அதனால அவங்க ஏதாவது செய்வினை வச்சிட்டாங்களோன்னு என் ஈரக்குலையே நடுங்குது. எம் பிள்ளைய எப்படியாவது காப்பாத்துங்கய்யா.’

'நம்பிக்கையா இருங்க. கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்க மகனுக்கு நல்லபடியாக குணமாகும்’ என்றேன்.

இந்த ஆறுதல் வார்த்தைகளுக்காக அந்த அன்னை கலங்கிய கண்களால் நன்றி சொன்னார்.

அந்த இளைஞரிடம் மேலும் விசாரித்தேன். ‘உங்களுக்கு வேறு என்ன மாதிரியான பயங்கள் இருக்கு?’

‘கயிறைப் பார்த்தால் பாம்பு போலத் தோன்றி பயம் ஏற்படுகிறது. வீட்டுக்குள் கொடியில் அசையும் துணிகள் கூட பாம்புகளாய் தெரியும். கனவிலும் பாம்புகள் வந்து போகின்றன. ரோட்டு ஓரமாய் நடந்து போகும்போது பஸ் மோதி அல்லது நான் மயங்கி விழுந்து அடிபட்டு செத்துப் போய் விடுவேனோ என்ற பயமும் வருகின்றது.’

அவருடன் உரையாடிய போது மேலும் சில குறிகள் கிடைத்தன. அவருக்கு குளிர்பானங்களும், இனிப்பு வகைகளும் பிடிக்கும். ஆனாலும் வயிற்று தொந்திரவுகளும் ஏற்படும். தேர்வுகளை நினைத்தாலே பயம் ஏற்படும். அவர் ஒவ்வொரு குறியாக சொல்லிக் கொண்டே வந்தபோது கைகள் நடுங்கி கொண்டு இருந்ததைக் கவனித்து விசாரித்தேன். படபடத்து விரல்களை நீட்டி சில நாட்களாக கை நடுக்கம் அதிகம் இருப்பதாகச் சொன்னார்.

கனவில் பாம்புகள் என்ற குறிக்கு ஐந்து முதல் தர மருந்துகள் இருந்தாலும் அதில் முதல் மருந்து ‘அர்ஜெண்டம் நைட்ரிகம்’. இம்மருந்தின் பல குறிகள் இவருக்கு பொருந்தி இருந்ததால் 1000 வீரியத்தில் ஒரு வேளை மருந்தும் தொடர் மாத்திரைகளும் கொடுத்தனுப்பினேன். 22 நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். முகத்தில் தெளிவும், மலர்ச்சியும் காணப்பட்டது. கைகளில் நடுக்கம் இல்லை. பய உணர்ச்சி பெரும்பாலும் குறைந்து விட்டதாகக் கூறினார். ஆனாலும், முன்பு போல தீவிரமாக இல்லாவிட்டாலும் ஓரிரு முறை லேசான பயம் வந்து போவதாகக் கூறினார். மீண்டும் ‘அர்ஜெண்டம் நைட்ரிகம்’ 1000 வீரியத்தில் ஒரு வேளையும் தொடர் மாத்திரைகளும் கொடுத்தனுப்பினேன். சில நாள் கழித்து சகஜ நிலைக்கு தான் வந்துவிட்டதாக திருப்தியோடு தெரிவித்தார்.

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழ ஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த தாழ்த்தப்பட்டவர்களின் கிராமத்தில் பலருடன் இரண்டறக் கலந்து பழகியிருக்கிறேன். பல நாட்கள் அங்கு உண்டு உறங்கித் தங்கியிருக்கிறேன். அந்த மக்களின் அன்பும் உபசரிக்கும் பண்புகளும் மறக்க முடியாதவை. எனது மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட ஆரம்ப நாட்களில் 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் நாள் மாலை 3 மணியளவில் அவர் மனைவியுடன் வந்தார். நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாகவும் மாலை 5 மணிக்கு வருமாறும் பணிப்பெண்கள் கூறியுள்ளனர். அவர் கண்ணீருடன் கும்பிட்டு வேண்டியிருக்கிறார். அவரின் மனைவியும் டாக்டருக்கு இவரை நல்லாத் தெரியும்; இவரு பேரைச் சொல்லுங்க என்று சொல்லியிருக்கிறார். பணிப் பெண்கள் விவரத்தை கூறியதும், அவரைக் காண வந்தேன்.

என்னைக் கண்டதும் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக பெருகி வழிந்தது. ஊமை போல சைகையில் ஏதோ சொல்ல முயன்றார். சிறுகுரல் கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவரது மனைவிடம் விசாரித்தேன். 'மதியம் ஒன்றரை மணிக்கு வழக்கம் போல சாப்பிட வந்தார். ரொம்பப் பசிக்குது என்றார். அவரை உட்காரச் சொல்லு விட்டு தட்டில் சோறு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால், அவரால் பேச முடியவில்லை. தொண்டையை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு புரண்டு அழுதார். சத்தமும் வரவில்லைல். நானும் பயந்து விட்டேன்’ என்றார்.

பீதியில் இருந்த நோயாளிக்கு முதலில் ACONITE அளித்தேன். அவரது துயரம் தணியவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை. குழந்தையாய் கேவிக் கேவி அழுதார். அடுத்து Causticum உயர்வீரியத்தில் ஒரு வேளை கொடுத்துவிட்டு, Brain - CT ஆய்வு செய்து வருமாறு அனுப்பினேன். இரண்டாம் நாள் மதியம் வந்தார். சிடி ஆய்வு அறிக்கை Bulpar Palsy என்று சுட்டிக் காட்டியது. ARNICA 10M மருந்தினை நீரில் கலந்து (உறங்கும் நேரம் தவிர) ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. வீதம் தொடர்ந்து அருந்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன்.

மூன்றாம் நாள் காலை அவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுமாய் சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. இன்று காலை எழுந்ததும் அவர் வழக்கம் போல பேசினார். நன்றாகப் பேசினார். என்று அவரது மனைவி நன்றி பெருக்கோடு கூற, அவர் மீண்டும் கண்களில் நீர் வழிய கும்பிட்ட படி 'சார் என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சின்னு நினைச்சேன். கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க, ரொம்ப நன்றி’ என்று நா தழுதழுக்க கூறினார். சுவரில் மாட்டியிருந்த ஹோமியோபதியின் தந்தை மாமேதை டாக்டர் ஹானிமனைக் காட்டி, 'நாம் எலோரும் அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்’ என்றேன்.

இந்தச் சிகிச்சைக்குப் பின் அவரை எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தால், இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

ஹோமியோ மருத்துவத்தின் அணுகுமுறைகளை, உன்னதங்களை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும். ஹோமியோபதி என்பது மூடு மந்திரங்களும், ரகசியங்களும் நிறைந்த செப்பிடு வித்தையல்ல. இது மகத்தான மருத்துவ விஞ்ஞானம். இதைக் கையாளுவது ஓர் அசாதாரணமான கலை. சாதனைகள் நிறைந்த அனுபவமிக்க மருத்துவர்கள் தமது மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இளம் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்ல மக்கள் அனைவருக்குமே பயன்படும்.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர்
செல் - 9443145700
Mail - alltmed@gmail.com

]]>
Homeopathic remedies for fear, ACONITE, கனவில் பாம்புகள், பய உணர்ச்சி, ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/1/w600X390/558196_fear.jpeg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/may/01/homeopathy-remedies-for-fear-and-anxiety-2694219.html
2690143 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி கொழுப்புக் கட்டிகளைக் குணப்படுத்தும் ஹோமியோபதி டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, April 24, 2017 10:43 AM +0530 மருத்துவ உலகில் புரிந்து கொள்ளப்படாத விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘LIPOMA’ எனப்படும் கொழுப்புக்கட்டி. இது திடீரெனத் தோன்றும் நோயல்ல. படிப்படியாக நீண்ட காலம் எடுத்து மெல்ல உருவாகக்கூடியது. ஒரு கட்டத்தில் தொட்டால் தெரியுமளவு வளர்ந்த பின்னரே நமது கவனத்திற்கு வரும். வெளிப்படையாகப் பார்த்தவுடன் கட்டி தெரிவதற்கு மேலும் பல காலம் ஆகும். பொதுவாக இக்கட்டி குறித்து ஆயுளுக்கும் அச்சப்படத் தேவையில்லை. 30க்கு மேற்பட்ட வயதினரிடம் அதிகமாக இக்கட்டி காணப்படுகிறது. பெண்களிடம் அதிகமாக SINGLE LIPOMAவும் ஆண்களிடம் அதிகமாக MULTIPLE LIPOMA வும் காணப்படுகிறது. குழந்தைகளிடம் அரிதாக காணப்படுகிறது.

அமைப்பும், அறிகுறிகளும் :

தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியே Lipoma கட்டியாக உருவெடுக்கிறது. மனித உடல் போர்வை போல Adipose திசுக்களால் மூடப்பட்டுள்ளது. இது உடலுக்கு வெப்பத்தை, மென்மையை, அழகைத் தருகிறது. தோலின் கீழ் நளுக்நளுக்கென்று தோலில் ஒட்டாமல் நழுவிச் செல்வதுபோல் இருப்பது கொழுப்புக் கட்டியின் முக்கிய அடையாளம். இதை தவிர வேறெந்த அறிகுறிகளும் (Asymptomatic) தென்படுவதில்லை. கொழுப்புக் கட்டி மென்மையானது; புற்றல்லாத, தீங்கற்ற கட்டி[BENIGN] குழைத்த மாவு போல (ரப்பர் போல) காணப்படுவது.

இக்கட்டிகள் உருண்டை வடிவில் அல்லது முட்டை போன்ற நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். சிறிய கட்டிகள் ஒரு செ.மீ. வரை விட்ட அளவு இருக்கும். பெரிய கட்டிகள் சிலரது உடலில் வளரலாம். பொதுவாக தொட்டாலோ, அழுத்திப் பார்த்தாலோ வலி இருக்காது. விதி விலக்காக சில கட்டிகளில் வலி இருக்கலாம். அவை சற்று ரத்த ஓட்டம் அதிகமுள்ள Angio Lipoma எனப்படும் கொழுப்புக் கட்டிகளாகும். எனினும் ஆபத்தானவை அல்ல. LIPOMA எப்போதுமே (பிற கட்டிகள் போல) புற்றாக மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?   

கொழுப்புக் கட்டிகள் தோன்றுவதற்கான பிரதான காரணிகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. சிறு காயங்கள் கூட இக்கட்சி வளர்ச்சியினைத் தூண்டலாம். அதிக எடை, உடல் பருமன், கொலஸ்டிரால் போன்ற காரணங்களால் தான் LIPOMA ஏற்படுகிறது என்று உறுதியிட மருத்துவ உலகம் கூற முடியவில்லை. பாரம்பரியக் காரணங்களால் வளர்வது உறுதி செய்யப்படுகிறது. அத்தகைய நிலையில் (Familial Multiple Lipomatosis) குடும்ப வழிப் பன்மடங்கு கொழுப்புக் கட்டிகளாக வளர்கிறது. செயல்திறன் குன்றிய - மந்தமான கல்லீரல் இயக்கத்துடன் இக்கட்டிகளுக்கு தொடர்பு உள்ளதாக சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆபத்து உண்டா?  

உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடியது கொழுப்புக்கட்டி. பொதுவாக கொழுப்பு சேகரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (Fat depositing Areas) குறிப்பாக கழுத்துப்பிடரி, தோள், முதுகு, முன் உடல் (Trunk), கைகள், பிருஷ்டம், இடுப்பு, தொடை, வயிறு போன்ற இடங்களில் தோன்றுகிறது.

கொழுப்புக் கட்டிகளால் உடனடியாக எந்தவித ஆபத்தும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் இவை கேன்சராக மாறிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. ஆனால் அவ்வாறு மாறாது. ஆயினும் LIPOSARCOMA எனும் ஒருவகைக் கொழுப்புப் புற்றுநோய் உள்ளது. இது தோலில் அல்லாமல் சற்று ஆழத்தில் கண்களுக்கு தெரியாமல் பதுங்கியிருக்கும்.

உள்ளுறுப்புகளின் மீது வளரும் கொழுப்புத் திசுக்கட்டிகள் மிக அபாயகரமாக அமையக்கூடும். சில கட்டிகள் பெரிதாகி பருமனடைந்து (குறிப்பிட்ட நரம்புகளை அழுத்தினால்) வலி ஏற்படும். (இந்நிலையில் திசு பரிசோதனை (BIOPSY) செய்து பார்ப்பதுண்டு). இரைப்பை மற்றும் குடல்பாதை மீது கொழுப்புத்திசு கட்டி அமையுமானால் வலிமிக்க அடைப்பு, புண், ரத்தப்போக்கு, உணவு விழுங்க முடியாத நிலை (dysphagia), உணவு எதிர்க்களிப்பு, வாந்தி போன்ற பிரச்சினைகள் உருவாக்கலாம். நுரையீரல் காற்றுப் பாதைகளில் கொழுப்புத்திசுக் கட்டிகள் அமையுமானால் சுவாசம் தடைப்படக்கூடும். முதுகெலும்பு மீது ஏற்பட்டால் நிரந்தர அழுத்தம் காரணமாக பல வித சிக்கல்கள் பிறக்கும். இதே போல் பெண்களின் மார்பகங்களிலும், பிறப்புறுப்புகளிலும் உண்டாகும் கொழுப்புத்திசுக் கட்டிகளால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 

சந்தர்ப்பசமாக கொழுப்புத்திசுக் கட்டிகளால் நரம்பியல் பாதிப்புகள் (Neurological Discomforts) மற்றும் கடும் வலிகள் ஏற்படுமாயின், அருகிலுள்ள தசைகள், உறுப்புகளின் இயக்கத்திற்கு பிரச்சினை எனில் ஆங்கில மருத்துவமுறைச் சிகிச்சையின்படி LIPOSUCTION மூலம் உறிஞ்சப்பட்டு அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நிவாரணம் பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்.

கொழுப்புத் திசுக்கட்டிகள் எத்தனை வகை?

பலவகை கொழுப்புத் திசுக் கட்டிகள் உள்ளன. அவற்றில் பரவலாக பெரும்பாலோரிடம் காணப்படுவது மேலோட்டமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி [Superficial Subcutaneous Lipoma]. தோல் புறப்பரப்பின் அடியில் (Just below the surface of the skin) கொழுப்புத் திசுக்களால் ஏற்படும் கட்டி. கொழுப்புத் தேக்கமுள்ள இடங்களில் எல்லாம் இக்கட்டிகள் தோன்ற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முன்கையில், தொடையில், முன் உடலில் (Trunk) ஏற்படும்.

Adiposa dolorosa என்பது ஒன்றுக்கு மேல் ஒன்று தோன்றும் கட்டிகள். Intra Muscular Lipoma என்பது கைகால் பெருந்தசைகளின் ஆழத்தில் காணப்படுவது. Chondroid Lipomas என்பது பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள். Spindle Lipomas எனப்படும் கதிர்செல் கொழுப்புத்திசுக் கட்டி மெதுவாக வளரும் தோலடிக் கட்டி வகையாகும். (Subcutaneous Lipoma) பெரும்பாலும் முதிய ஆண்களிடம் ஏற்படும் கழுத்து, மூக்கு, தோற்பட்டையில் உருவாகும். Neural Fibrolipoma என்பது நரம்புச் சார்ந்த மிகை கொழுப்புத்திசுக் கட்டி ஆகும். இதனால் நரம்பு அழுத்தம் ஏற்படும். Neural Fibrolipoma என்பது வலிமிக்க தோலடி முடிச்சு. இது கொழுப்புத்திசுக் கட்டியின் அனைத்துக் கூறுகளையும் கொண்டது. இது ரத்த நாளப் பாதைகளில் காணப்படும் Subcutaneous Lipoma ஆகும். வலிமிக்கது. Post traumatic Lipoma என்பது காயத்திற்கு பின் ஏற்படும் கொழுப்புத்திசுக்கட்டி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சிறுகாயங்களும் காரணங்களாக இருப்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. [ஆயினும் இது குறித்த சர்ச்சைகளும் உண்டு.]

சிகிச்சை என்ன?

கொழுப்புத் திசுக்கட்டியைப் பொறுத்தவரை எந்தவிதச் சிகிச்சையும் தேவைப்படாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதன் வளர்ச்சி தானகவே நின்றுவிடும். இருப்பினும் மறையாது. இக்கட்டிகள் மூலம் உள்ளார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமே அறுவைச் சிகிச்சை அவசியப்படுகிறது.
மாறாக தோற்ற அழகைக் கொடுக்கிறது என்று கருதி (Cosmetic reasons) அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளுபவருக்கு மீண்டும் அதே இடத்தில் அல்லது அருகில் புதியதாக கொழுப்புத் திசுக்கட்டி மீண்டும் தோன்றி வளரும். கொழுப்புத் திசுக்கட்டி அனைத்துமே ஆபரேசனுக்குரிய நோய் (Surgical Disorder) அல்ல.

ஹோமியோபதியில் கட்டியைக் குணப்படுத்த இயலுமா?

ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட வெற்றி கிடைக்கிறது. சர்ஜரி மூலம் கட்டியை அகற்றுதல் என்பது நோய்க்காரணத்தை அல்லாமல், நோயின் விளைவுகளை அகற்றியுள்ளதாக ஹோமியோபதி கருதுகிறது.

ஹோமியோபதி சிகிச்சையில் 1 செ.மீ.க்கும் குறைந்த அளவிலுள்ள சிறிய கட்டிகளை கரைப்பது எளிது. ஆரம்ப நிலையிலுள்ள சிகிச்சை மேற்கொள்வது துரிதமான நல்ல பலனை அளிக்கும். பெரிய கட்டிகளுக்கு ஹோமியோ சிகிச்சை மூலம் பலன் கிடைப்பினும் முழுவெற்றியாக அமைவதில்லை. கட்டியளவு பெரிதும் குறைவது சாத்தியம்.

ஒரு குறிப்பிட்ட கட்டி படிப்படியாக வளர்வதைத் தடுத்து நிறுத்தவும், புதிய பல கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கவும் ஹோமியோ சிகிச்சை உதவும். சிலரது கட்டிகள் வலி ஏற்படுத்தும் நிலையில் வலி உபாதைகளைக் குறைப்பதற்கும் ஹோமியோ சிகிச்சை பயன்படும்.

மனிதனிடம் காணப்படும் நோயை மட்டும் தனியே பிரித்துப் பார்க்காமல், நோயுற்ற மனிதனை முழுமையாக ஆய்வு செய்து நோயின் அடிப்படை காரணங்களை, நோய் தோன்றுகிற, மீண்டும் மீண்டும் தோன்றுகிற உள் இயல்புகளை கண்டறிந்து ஹோமியோவில் சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறந்த நன்மை பெற முடியும்.

கொழுப்புத்திசுக்கட்டி சிகிச்சையில் பயன்படும் சில முக்கியமான ஹோமியோபதி மருந்துகள் பட்டியல் :

பரிடா கார்ப், கல். ஆர்ஸ், கல். கார்ப், கல். ஃப்ளோர், செலிடோ, கோனி, கிரா, காலி ஐயோடு, லாபிஸ் ஆஸ், நக்ஸ்வாம், பைட்டோலக்கா, சிலிக்கா, சல், ஸ்பைஜீ, தூஜா.

Dr.S.வெங்கடாசலம், 
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700 
Mail Id: alltmed@gmail.com

]]>
Lipoma, கொழுப்புக்கட்டி, ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/24/w600X390/homeopathy.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/apr/24/கொழுப்புக்-கட்டிகளைக்-குணப்படுத்தும்-ஹோமியோபதி-2690143.html
2684973 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி பெண்களின் முகம், கைகால்களில் தேவையில்லாத முடிவளர்ச்சிக்கு ஹோமியோ தீர்வுகள் டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, April 17, 2017 10:00 AM +0530  

முடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும். 1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ மாற்றங்களின் அறிகுறிகளாக பருவ முடிகள் முளைக்கிறது. பருவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இயற்கையான ஒரு பகுதியாக இது அமைகிறது. ஆண்களுக்கு பருவ முடி ஏறு முக்கோண அமைப்பில் மேல்நோக்கியும் பெண்களுக்கு இறங்கு முக்கோண அமைப்பில் கீழ் நோக்கியும் வளர்ந்து படர்கிறது. இந்த ஏறு முக்கோணமும் இறங்கு முக்கோணமும் எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பொருந்துகிற அமைப்பாக இயற்கை வடிவமைத்துள்ளது.

பெண்களின் பிரச்சனையும் வேதனையும்:

அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பருவ முடி வளர்ச்சி ஏற்படும்போது பெண்கள் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படுவது பெண்களுக்கு தீராத பிரச்சனையாகி விடுகிறது. ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன. சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக ரோமங்கள் காணப்படுவதுண்டு. இவை பெண்மையை, பெண்மையின் நளினத்தை தட்டிப் பறித்து விட்டதாகக் கருதி பெண்கள் வேதனைப்படுகின்றனர்.

அந்த முடிகளை எப்படியாவது அகற்றினால்தான் நிம்மதி என்று அழகு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தோல் நிபுணரிடம் சென்றோ பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இவ்விடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதுமில்லை. சில பெண்களுக்கு இம்மாதிரியான சிகிச்சைகள் தோற்று வியாதிகளை ஏற்படுத்திவிடக் கூடும். தேவைப்படாத முடிகள் அகற்றப்படுவதற்குப் பதில் ரோமக் காடாகப் பெருகிப் போவதும் நேரிடுகிறது.

காரணங்கள் என்ன?

முளைக்கக் கூடாத இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாரம்பரிய (ஜீன்ஸ்) காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது. பாட்டிக்கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் பருவ காலத்தில் முகத்தில் முடிவளர்ச்சி தொடரும். ஆணிண் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.

அதிகளவு மாதவிடாய் போக்கு ஏற்படும்போது அதனைத் தடுக்கவும் மார்பகங்களில் கட்டியோ, கழலையோ உருவாகி அறுவைச் சிகிச்சை செய்யும்போது வீரியம் பெருக்கவும், ஆண் ஹார்மோனை பெண்ணுடலில் செலுத்துதல் வழக்கம். இதனால் தேவைப்படாத இடங்களில் ரோம வளர்ச்சி ஏற்படும். முகத்திலும்,கைகால்களிலும், உடம்பிலும் தேவையின்றி முடிகள் வளர்கின்றன.

இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்ற போதிலும் அத்தகைய, அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களின் சுபாவம் ஏற்பட்டு விடுவதில்லை. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு எல்லாம் மற்ற பெண்களைப் போலவேதான் அமைகின்றன. இவர்களில் சிலரது பழக்கம், குரல், நடத்தை போன்றவற்றிலும் சிறிது ஆண்மைச் சாயல் இருக்கக்கூடும். இருப்பினும் இவர்கள் பெண்மையின் பிரதான இயல்புகள் எதையும் இழப்பது இல்லை.

ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினால் பாதிக்கப்படும் பெரும்பாலான இளம் பெண்களுக்கு பெண்மை பிணியியல் நிபுணர்கள் அதிக அளவு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை அளிப்பதாலும், தோலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் அடிக்கடியும் அதிக அளவிலும் உபயோகிப்பதாலும் (முடி என்பது தோலின் ஒரு பகுதிதானே!) பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும், (வாக்சினேஷன்) வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதன் காரணமாகவும் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது.

ஆண் ஹார்மோன் என்பது என்ன?

ஆண்ட்ரோஜன் என்பது ஆண் ஹார்மோன் ஆகும். ஆணின் விதைகளிலும் அட்ரினல் புறணியிலும் பெண்ணின் சினைப்பையிலும் சுரக்கக்கூடிய இயக்குநீர் இது. இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகளை குறிப்பாக குரல் தடித்தலையும், உடல் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியது.

சினைப்பையில் அல்லது அட்ரீனலில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்ட்ரோஜன் அதிகச் சுரப்பு நிகழும். அதிக ஆண்ட்ரோஜன் சுரப்பு ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

1. சினைப்பையில் உருவாகும் நீர்மக் கட்டிகள். இக்கட்டிகளால் ஓழுங்கற்ற மாதப்போக்கு, மலட்டுத் தன்மை, முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய நீர்மக் கட்டிகள் தோன்ற பரம்பரைத் தன்மை, தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் கோளாறும்,நீரிழிவும் காரணங்களாக உள்ளன.

2.அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால் கூட ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.

3.வலிப்பு, மனநோய், கர்ப்பத்தடை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சில ஆங்கில மருந்துகளாலும் ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.

4.சிலரது உடலில் அதிக அளவு இன்சுலின் சுரப்பதுண்டு (இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்). இரத்த சர்க்கரையளவு இயல்பான நிலையில் இருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தால் இன்சுலின் சுரப்பு அதிகம் காணப்படும். அதிக இன்சுலின் அதிக ஆண்ட்ரோ ஜனை சுரக்கச் செய்யும். மிகக் குறிப்பாக சினைப்பைகளில் தோன்றக்கூடிய நீர்மக் கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்) தான் அதிகளவு ஆண் ஹார்மோன் சுரப்பதற்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அதிக ஆண்ட்ரோஜன் தான் 70 முதல் 80 சதவீதப் பெண்களுக்குரிய ஹிர்சுசிசம்[HIRSUTISM] என்ற அவசியமற்ற முடி வளர்ச்சிப் பிரச்சனைக்குக் காரணமாகும்.

தேவையற்ற முடி வளர்ச்சியை அகற்றுவது எப்படி?

தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் 4 வித வழிமுறைகளை நாடுகின்றனர்.

1. சாதாரண சவரம் செய்தல்: மீண்டும் முளைத்தால் மீண்டும் மழித்தல்.

2. ப்ளீச்சிங் செய்தல்: இதன் மூலம் முடிகளைப் பார்வைக்குத் தெரியாமல் செய்தல்- இரசாயனப் பொருட்களை உபயோகித்து முடிகளை மெல்லிய நிறமாக்குதல்.

3. எலக்ட்ரோலைசிஸ்: மின் சக்தியைக் கொண்டு ஒவ்வோரு முடியின் வேரினையும் (ஹேர் பாலிக்குள்) அழித்தல்- இதன் மூலம் முடி மீண்டும் வளராமல் தடுத்தல். இது எண்ணற்ற முறை சிகிச்சை செய்ய வேண்டும். மிகவும் செலவு செய்ய வேண்டிய சிகிச்சையாகும்.

4. லேசர் முறை: லேசர் பயன்படுத்தி தனித் தனியாக முடிகளை அழித்தல்- இதற்கும் பலமுறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும், மிக அதிக பணச் செலவும் ஏற்படும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஹிர்சுசிசம் பாதிப்பு உள்ள பெண்கள் சுமார் 10 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்காவில் 22 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் நாடுவதில்லை. மிகக் குறைவான பெண்களே (மிக வசதி படைத்த பெண்களே) செயற்கைச் சிகிச்சை முறைகளை நாடுகின்றனர். மற்றவர்கள் முகச் சவரம் மூலம் அல்லது பிடுங்குதல்  (பிளக்கிங்) மூலமே அகற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே இப்பிரச்சனை கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது.

ஆங்கில மருத்துவத் தோல் நிபுணர்களால் பெண்களின் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது. ஹோமியோபதி மருத்துவம் இப்பிரச்சனைக்கு எளிய இனிய தீர்வளிக்கிறது. தேவையற்ற இடங்களில் முடி வளருவதற்கு நாளமில்லாச் சுரப்பிகளும் நிணநீர் பெருக்கக் குழப்பமும் காரணங்களாக கருதி சில வசதி மிக்க பெண்கள் தோல் நிபுணர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். இச்சிகிச்சைகளில் கவர்ச்சிகரமாக ஆங்கில மருத்துவ முறையின் விளம்பரம் செய்கிற அளவுக்கு பலன்கள் கிடைப்பதில்லை. ரோமங்களைப் பறிப்பதும்,  பொசுக்குவதும் சிறந்த முறைகள் இல்லை. இதனால் சிக்கல்களும்,  ஆபத்தும்,  எதிர்விளைவுகளும் மனச் சஞ்சலங்களும்தான் ஏற்படும்.

தேவையற்ற முடி வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவும் ஹோமியோபதி மருந்துகள் எவை?

குழந்தைப் பருவத்தில் முகத்தில் முடிகள் வளர்ச்சி ஏற்படுமானால் பயன்படும் மருந்துகள்: கல்கேரியா கார்ப், நேட்ரம் மூர், ஒலியம் ஜெக்,சோரினம், சல்பர்.

உடம்பு முழுதும் முடிவளர்ச்சி ஏற்படுமானால்: மெடோரினம், தூஜா, தைராய்டினம்.

ஹிர்சுசிசம் மற்றும் அதன் தொடர்புள்ள அறிகுறிகளுக்கு: தூஜா, மெடோரினம், சபால் செருலேட்டா, தைராய்டினம், கல்காரியா கார்ப்,கல்காரியா பாஸ், பல்சடில்லா, செபியா, நேட்ரம் மூர், இக்னேசியா, கிராபைட்டீஸ், ஒலியம் ஜெகோரிஸ்.

இச்சிகிச்சையில் ஒலியம் ஜெகொரிஸ், தூஜா, செபியா ஆகிய மருந்துகள் முக்கியப் பங்காற்றி சிறந்த பயனளிப்பதாக ஹோமியோ மேதைகளின் அனுபவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

வெளிநாட்டுப் பெண் ஒருத்திக்கு மிகுந்த மனச் சோர்வும், வேதனையும் ஏற்பட்டு ஹோமியோ நிபுணரை நாடினாள். அவளது வயது 30. அவளது மார்புக் காம்புகளைச் சுற்றிலும் முடிகள் முளைத்து விட்டதால் அவள் மிகவும் துயரமடைந்து, மிகவும் தயங்கி, தாமதமாக ஹோமியோ சிகிசசையை நாடினாள். அவளுக்கு தூஜா 1 M மாதம் ஒரு முறை வீதமும், மற்ற நாட்களில் ஒலியம் ஜெகோரிஸ் 3 Xம் அளிக்கப்பட்டு ஆறுமாத காலத்தில் குணமடைந்தாள்.

தூஜா மிகச் சிறந்த நிவாரணி என்றாலும் சில பல ஹோமியோ மருத்துவர்கள் தோல்வி அடையக் காரணம் வீரியம் மற்றும் மருந்து அளவு பிச்சனைதான். பல நோயாளிகளுக்கு  10M  வரை கூட உயர்வீரியம் தேவைப்படலாம்.

ஒலியம் ஜெகோரிஸ் மருந்தை மற்ற மருந்துகளைப் போல் ஏறு வரிசையில் வீரியம் உயர்த்தி கொடுக்கக் கூடாது.

1. தூஜா மருந்துண்ணும் நாட்களில் ஒலியம் கொடுக்கக்கூடாது.

2.கோடையில் ஒலியம்ஜெகோரிஸ்30 C வீர்யத்திலும், குளிர், மழை காலங்களில் 6 C, 6 Xம் நல்ல பலன்களைத் தருகின்றன.

முகத்தில் முடி வேகமாக வளரும் தன்மையை தடுக்க மெடோரினம் 1 M ஓரிரு வேளைகள் தேவைப்படும்.

ஆகவே பெண்களின் முகத்தில் வளரும் முடி, கைகால் மற்றும் உடம்பின் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை முற்றிலும் இயற்கையான முறையில் அகற்ற இயற்கை வனப்பை மீட்க ஹோமியோபதி மருந்துகளே மிகச் சிறந்த நம்பகமான தீர்வாகும்.
                                                   
- Dr.S.வெங்கடாசலம், 
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்:94431 45700 / Mail Id: alltmed@gmail.com

]]>
Hair growth, Homeopathic remedies, பெண்களின் முகம், கைகால்களில் தேவையில்லாத முடிவளர்ச்சி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/15/w600X390/woman.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/apr/17/unwanted-hair-growth-in-woman-how-to-avoid-homeopathic-remedies-2684973.html
2682107 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி சிறுநீரக செயலிழப்புக்கு ஹோமியோ சிகிச்சை டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, April 10, 2017 11:27 AM +0530

நம்உடலில் சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள். உழைப்பும், உழைப்பாளிகளும் நடைமுறையில் குறைந்தளவே மதிக்கப்படுவதைப் போல சிறுநீரகங்களும் குறைவாகவே மதிக்கப்படுகின்றன. அவற்றின் வேலைத்திறன் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறையும் வரை அவை உடலுக்கு பெரிய சிரமங்களை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை செயலிழப்பை அறியமுடியாமல், மோசமான நிலையை நோக்கி நோய்நிலை முன்னேறி வருகிறது.

இந்தியாவில் ஆரம்ப கூட்டம் முதல் முற்றிய நிலை வரையிலான சிறுநீரக நோயாளிகள் சுமார் 7 கோடி பேர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 80லட்சம் புதிய சிறுநீரக நோயாளிகள் உருவாகின்றனர். 1.5 லட்சம் பேர்களுக்கு முற்றிய (நிரந்தர) சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இவர்களில் எவரும் டயாலிசிஸிஸ் அல்லது செயற்கை சிறுநீரகம் இல்லாமல் தப்பிவிட முடியாது என்கின்றனர் ஆங்கில மருத்துவ சிறுநீரக நிபுணர்கள்.

செயலிழப்பு என்பது என்ன?

உடலின் சுத்திகரிப்பு ஆலையாகவும், ரத்த செல்கள் உருவாக்கும் முக்கிய காரணியாகவும், உடலின் உள்ளார்ந்த இயல்பு நிலைகளைச் சமச்சீராகப் பராமரிக்கும் கருவியாகவும் சிறுநீரகங்கள் பங்காற்றுகின்றன. இப்பணிகள் பாதிக்கப்பட்டால் குறிப்பாக உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை, சிறுநீர் வெளியேற்றும் தன்மை போன்றவை படிப்படியாக இழந்தால் அதுவே சிறுநீரக செயலிழப்பு ஆகும்.

காரணங்கள் என்ன?

சிறுநீரக செயலிழப்புக்கான பிரதானமான காரணங்கள் (1) சிறுநீரகங்களைப் பாதிக்கும் நோய்கள் : சிறுநீரகக்கற்கள், சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீரகப் பாதை அடைப்பு, சிறுநீரகங்களில் கட்டிகள், அடிக்கடி சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்று (2) சிறுநீரங்களின் உள்ளமைப்புக் கூறுகள் வருடக்கணக்கில சேதடைதல் (3) கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயும், உயர்ரத்த அழுத்தமும், (4) முதல் மூன்று காரணங்களுக்கும் அடிப்படையாக உள்ள செயற்கை உரங்களில் விளைந்த உணவுப் பொருட்கள், வெளிநாட்டு துரித உணவுகள், சுகாதாரமற்ற குடிநீர், போதைப் பொருட்கள் போன்றவற்றால் ரத்தத்தில் அசுத்தங்களும், வேதிப்பொருட்களும் பெருகுகின்றன. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சிறுநீரகங்களின் ரத்த சுத்தகரிப்புப் பணி தோற்றுப்போகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து தவிக்கின்றன.

வேறு காரணங்கள் உள்ளனவா?

ஆம். சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு ஏதேனும் ஓர் ஒற்றைக் காரணத்தை மட்டும் கூறிவிட்டு போக முடியாது. பன்முகத்தன்மை கொண்ட நோய் என்பதால் பன்முகத் தன்மை கொண்ட காரணங்கள் உள்ளன.

உணவில் அதிகம் உப்பு சாப்பிடுவதால் கூட சிறுநீரகங்கள் பாதிக்கப்படக்கூடும். பொதுவாக சோடியம், பொட்டாசியம், மெக்னீஷியம்,கால்சியம் போன்ற 4 வகை உப்புகள் உள்ளன. ஒரு உடம்பிற்கு சோடியம் (உணவு உப்பு) ஒரு நாளைக்கு 1.5 கிராம் அளவு போதுமானது. ஆனால் நாவின் ருசிக்காக எல்லா உணவுப் பொருட்களிலும் உப்பு சேர்க்கிறோம். ஹோட்ட லில் உணவு பரிமாறும் முன் இலையின் மூலையில் 5 கிராம் அளவுக்கு வைக்கப்படும் உப்பு போதாமல் மேலும் கேட்டு வாங்கி உணவில் கலந்து உண்பவர்கள் பலர்.

மிகை உப்பு வியர்வை வழியே வெளியேறும். மிஞ்சிய உப்பு சிறுநீரில் வெளியேறும். வியர்க்கவே வழியில்லாத வசதிகளும், உழைப்பற்ற, உடற்பயிற்சியற்ற நிலைமைகளும் இருந்தால் மிதமிஞ்சிய உப்பு குருதியில் கலந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். (கல் உப்பை விட Refined உப்பில் சோடியம் அளவு அதிகம்)

உணவுகள் செயற்கை ரசாயனக் கலவையாகிவிட்டதைப் போல பாலியல் செயற்பாடுகளும் செயற்கைமயமாகிவிட்டது. இயற்கையான பாலியல் உந்துதல், உடலுறவு என்பது அரிதாகி, செயற்கை தூண்டல்களும், அதீத பாலுறவு செயற்பாடுகள், வரைமுறையற்ற சுய இன்பப் பழக்கங்களும் மனித ஆற்றலை பாழ்படுத்துகின்றன. விளைவாக எதிர்ப்பாற்றல் நலிவடைகின்றன. சிறுநீரக மற்றும் இனப்பெறுக்க உறுப்புகளின் செயல்திறன் பெரிதும் வீழ்ச்சி அடைகின்றன.

ஆங்கில மருத்துவமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பலவித வலிநிவாரணிகள், எதிர் உயிரி மருந்து மாத்திரைகளின் வீரியமிக்க நச்சுத்தன்மையால் சிறுநீரகங்கள் தாக்கப்பட்டு நிலைகுலைந்து செயலிழந்து போகின்றன.

மேலும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளின் தாக்குதலால் சிறுநீரகங்கள் அடிக்கடிநோய்வாய்பட்டு நாளடைவில் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரக செயலிழப்பினால் ஏற்படும் பாதிப்புகள் எவை ?

1. சிறுநீரகங்கள் தான் ரத்தத்திலுள்ள பல்வேறு அமிலங்கள் மற்றும் ரசாயனங்களின் அளவைக் கட்டுப்படுத்தும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

2. யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புக்களின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இவை ரத்தத்தில் அதிகரிப்பதனால் விஷப்பொருட்களைப் போல செயல்பட்டு உடலெங்கும் பாதிப்புகள் ஏற்படும்.

3. ரத்த அழுத்தம் அதிகரிக்கும். (சிறுநீரகங்கள் தான் ஆடஐக் கட்டுப்படுத்தும் ‘ரெனின்’ என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன)

4. சிவப்பணுக்கள் தொடை, இடுப்பு போன்ற பெரிய எலும்புகளின் மஜ்ஜையிலிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு இரும்புச் சத்து உட்பட பலவித சத்துக்களும் சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகும் ‘எரித்ரோ பாயிட்டின்’ என்ற ஹார்மோன் சத்தும் தேவை. இதன் உற்பத்தி குறைந்துபோவதால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கமுடியாமல் நிகழும்.

5. எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் ‘கால்சிட்ரியால்’ என்ற ஹார்மோனையும் சிறுநீரகங்கள் தான் உற்பத்தி செய்கின்றன. சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் வலுவிழக்கும்; எளிதில் எலும்பு முறிவு, எலும்புகளில் வலி, கை கால் குடைச்சல் ஏற்படும்.

6.     (உடலில் கழிவு உப்புகள் அதிகரித்து) சிறுநீரின் அளவும் குறையும். இதனால் கை, கால், முகம், வயிறு வீக்கம் ஏற்படும்.

7. இவ்வீக்கம் தொடர்ந்து அதிகரித்து நுரையீரல்களில் நீர்புகுந்து சுவாசத்தடையும் மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றன.

8. பசியின்மை, வாய்கசப்பு, விக்கல், வாந்தி ஏற்படுகிறது.

9. சோர்வு, தூக்கமின்மை, பகலில் மயக்கம், களைப்பு, எப்போதும் குளிராக உணர்தல், நடுக்கம், உதறல், வலிப்பு ஏற்படும். சிலருக்கு (கோமா) ஆழ்நிலை மயக்கம் ஏற்படலாம்.

10. நிறம் கருத்தல், அல்லது சில சமயம் வெளுத்தல் ஏற்படும்.

இவற்றில் அதிகபட்ச தொந்தரவுகள் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 70% குறையும் போது உண்டாகும்.

சிறுநீரக செயலிழப்பு எனும் பாதிப்பின் வெவ்வேறு நிலைகள் என்ன?

1ஆம் நிலையில் சிறுநீரகங்கள் பாதிப்பு இருந்தாலும் செயலிழப்பு ஏற்படாது. உயர்ரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை கால் உடல் வீக்கம் இருக்கலாம்.

2. லேசான செயலிழப்பு : - கிரியேட்டினின் அளவு 2mgக்குள் இருக்கும். 1 & 2ஆம் நிலைகளில்   உணவுகளில் மாற்றம் மற்றும் சிகிச்சை மூலம் பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம். (சிறுநீரகங்களைப் பாதிக்கும் ஆங்கில வலி மருந்துகளை தவிர்க்க வேண்டும்).

3. அதிக செயலிழப்பு : - கிரியேட்டினின் அளவு 2mg முதல் 6mg வரை உயர்ந்துவிடும். சிகிச்சை யுடன் ரத்த விருத்திக்கான மருந்துகளும் தேவை.

4. முற்றிய செயலிழப்பு : - இந்நிலையில் செயல்திறன் 10%க்கும் கீழே வந்துவிடுகிறது. கிரியேட்டினின் அளவு 6-க்கு மேல் அதிகரித்துவிடுகிறது ரத்தஅளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால் பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஆங்கில மருத்துவமுறையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிறரிடமிருந்து ஹெபடிடிஸ் கிருமி தொற்றாமலிருக்க ஏங்ல்.ஆ தடுப்பூசி போடப்படுகிறது. டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்துதல் போன்றவை மூலமே உயிர்வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

டயாலிசிஸ் - மேலும் சில செய்திகள் :

கழிவு உப்புகள் கலந்த ரத்தம் வெளியே எடுக்கப்பட்டு செயற்கை சிறுநீரக எந்திரம் வழியே செலுத்தி கழிவு உப்புகள் நீக்கப்பட்டு, சுத்தமான ரத்தம் மீண்டும் நோயாளி உடலில் செலுத்தும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது. இந்த ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis) எனும் ரத்தவழிச் சுத்திகரிப்பு கருவி 1940களில் இரண்டாம் உலகப் போரின் போது படுகாயமடைந்து சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதாகும். அன்று ஓர் அறையை அடைத்திருக்கக் கூடிய பெரிய கருவியாக இருந்தது. இன்று நவீனமடைந் துள்ளது.

ஹீமோடயாலிசிஸ் மூலம் நோயாளி உடலிலிருந்து ஒரே சமயம் 200 ம்ப் முதல் 400 ம்ப் வரை மட்டுமே ரத்தம் வெளியே எடுக்க இயலும். இந்தச் சுத்திகரிப்பு செயல் பலமுறை சுமார் 4, 5 மணி நேரம் திரும்ப திரும்ப செய்தபின் ரத்த கழிவு உப்புகள் அளவு ஓரளவு குறையும்.

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் - டயாலிசிஸ் செய்தபின் குறைந்து விட்ட கழிவு உப்புகள் சிலநாளில் மீண்டும் உயர்ந்துவிடும். எனவே குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

சிறுநீரக செயலிழப்புக்கு ஹோமியோ சிகிச்சை :

திடீரென ஏற்படும் சிறுநீரக செயலிழப்புக்கு (ARF) ஹோமியோ மருந்துகள் சிகிச்சை பெரிதும் பலனளிக்கின்றது. தகுதியும், நிறைவான அனுபவ மும் உள்ள தேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் களால் மட்டுமே வெற்றிகரமான சிகிச்சை அளிக்கமுடியும். ஆர்சனிகம் ஆல்பம், குப்ரம் ஆர்ஸ், பிளம்பம்மெட், நேட்ரம்மூர், கோல்சிகம், ஓபியம், அபோசினம், ஏகில்போலியா, ஈல்சீரம் போன்ற மருந்துகளை நோயாளியிடம் காணப்படும் குறிகள் மற்றும் தனித்துவ வெளிப்பாடு அடிப்படையில்  தேர்வு செய்து பயன்படுத்தினால் நற்பலன் கிடைக்கிறது. மேலும் ஆரம்மெட், ராவோல்பியா, கிரேடகஸ், யுர்டிகா, ஆல்பால்ப போன்றவையும் பயன் அளிக்கின்றன.

நாள்பட்ட, நிரந்தர செயலிழப்பு நோயாளியிடம் எதிர்ப்பாற்றல் வீழ்ச்சி அடைந்து, பல பாகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். இந்நிலையில் உடல், மன அமைப்புக்கேற்ற மருந்தும் (CONSTITUTIONAL HOMOEOPATHIC MEDICINE) தேவைக்கேற்ற இதர மருந்துகளும் அவசியநிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் தேவை.

-  Dr.S.வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல்;94431 45700

Mail Id : alltmed@gmail.com

]]>
Kidney failure, Renal dysfunction, சிறுநீரக செயலிழப்பு, ஹோமியோபதி தீர்வு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/10/w600X390/dialysis.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/apr/10/சிறுநீரக-செயலிழப்புக்கு-ஹோமியோ-சிகிச்சை-2682107.html
2677855 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி அதிக எடை! ஆபத்து!! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, April 3, 2017 12:17 PM +0530  

நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்னையாய் எழுந்துள்ளது ‘உடல் பருமன்’. இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்துக்குப் பின் அல்லது கர்ப்பத்துக்கு பின் அல்லது மாத சுழற்சி முற்றுப் பெற்ற பின் உடல் பருமன் உண்டாகிறது.

மனிதரைத் தவிர பிற உயிரனங்களில் எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செச்டி, கொடி, மரம் அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும் எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல் அவதிப்படுவதைப் பார்க்க முடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

அதிக எடையும் உடல் பருமனும் (Obesity and overweight)

அதிக எடை என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் அதிக பருமன் என்று கூற முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் சராசரி எடையை விடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகம் கொழுப்புச் சத்து இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலில் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை:

ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில 100ஐக் கழிக்க வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவிகித அளவை அறியவேண்டும் ஒருவர் 170 சென்டிமீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90 சதவிகிதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடை தான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவிகிதம் அதிகரித்தால் கூட உடல் பருமன் என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் (Mildy Obese) எனக் கருதலாம். 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் (Moderately Obese) எனக் கருதலாம். 20 சதவிகிதத்துக்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் (Very Obese) என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு (Mild Obesity) குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து (Cosmetic Point of View) பார்பப்வர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் (Moderate & Severre Obesity) உடல் செயல்பாடுகள் கட்டுப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கஙக்ளுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்உத் தேவையான அளவை விட (Over eating) அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செல்ஷியஸிலிருந்து 160 டிகிர் செல்ஷியஸ் வரை சூடாகத் தேவையான உஷ்ண சக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப்பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு (Sedantary workers) அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவுக்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவை விட தரத்தையும் கலோரிகளையும் கொள்ள வேண்டும். 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும், 1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதிக கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லெட் இனிப்புகள், ஐஸ்க்ரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைக்கிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகளை (Tit bits) மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத் தீனிகள் தின்னும் பழக்கமும் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிக நேரம் தூங்குவதால் பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்திஅகள் பிறக்கின்றனர்.

ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், (Hypothyroidism, Hypothalamus & Pituitary Disorders) அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கிய குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்னைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்தநாளப் புடைப்பு.. போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பல்கீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதர பணி இடங்களில் நிற்பது, நடப்பது பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச் சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை (Neurosis) எற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச் சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத்துக்கும், உலகத்துக்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்ய வேண்டும்?

ஓரளவு மட்டுமே எடிஅ அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்க வேண்டும். ஓரளவு உடற்பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ள வேண்டும். அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழ வகைகள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும், குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும். திறந்த வெளிக்காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

பசி குறைக்க மாத்திரைகள், சில வேசேஷ உணவுத் திட்ட தயாரிப்புகள் பருமனைக் குறைப்பதற்கான சரியான தீர்வு அல்ல. மசாஜ் மூலம் எடை குறைப்பு, இடுப்பு பெல்ட்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் போன்ற சில கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகக் கூடாது. சில சமயம் இவற்றால் ஆரம்ப நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும் போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை உணவு முறையை மாற்ற வேண்டும்.

உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்புவோர் மும்முனைப் போருக்கு தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் (Regulation of Eating habits) 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் (Regulation of way of life) 3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக உதவுகின்றன.

உடல் பருமனுக்கு ஹோமியோபதி சிகிச்சை

ஹோமியோபதியில் நோயாளியின் உடல் அமைப்புக்கேற்ற (Constitutional) மருந்து மிக முக்கியம். அதனுடன் பருமனைக் குறைக்க ஹோமியோ மேதைகள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

PRESCRIBER நூலில் Dr.J.H.கிளார்க் Phytoberry தினம் 3 வேளை வீதம் 1 மாதம் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறார். பலன் அளிக்காவிட்டால் Ammonium Brom 3x, Cal, Carb30, Cal.ars30 ஒன்றன்பின் ஒன்றாய் முயற்சிக்குமாறு கூறுகிறார்.

போயரிக் அவர்கள் Fucus Ves Q அல்லது 1 X மருந்தினை (5 முதல் 60 சொட்டுகள் வரை) உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். அபானவாயு, அஜீரணம், பிடிவாதமான மலச்சிக்கல் குறிகளுடன் உள்ள உடல் பருமனுக்கு இம்மருந்து மிகவும் பொருந்தும் என்கிறார். போயரிக் சுட்டிக்காட்டும் பிற மருந்துகள் Am.brom, Antim crud, Capsicum, Graph, Thyroidine, Iodothyrene.

T.P. சாட்டர்ஜி அவர்கள் Hight Hights of Homeo Practice நூலில் J.H.கிளார்க் பரிந்துரை என்று கூறி Calatropis மருந்தினை 3 மாத காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வயிறு பெருத்த ஆண்களுக்கு Nuxvomica 10m, வயிறு பெருத்த பெண்களுக்கு Nuxvomica 200 மருந்தினை சாட்டர்ஜி பரிந்துரை செய்கிறார்.

உடல்பருமனை குறைக்க உதவும் சில முக்கியமான ஹோமியோ மருந்துகளும் அவற்றின் குறிகளும் :

கல்கேரியாகார்ப் – ஊளைச் சதை, உடல் பருமன், தலை, கழுத்துப் பகுதியில் அதிக வியர்வை (இரவில் தலையணை நனையுமளவு). பல நாள் மலச்சிக்கல் நீடித்தாலும் நலமாயிருக்கும் உணர்வு, மந்தம், சோர்வு மூச்சு வாங்குதல்.

கிராபைட்டிஸ் – உடல் பருமனுடன் தோல் நோய்கள், கரப்பான் படை போன்ற நோயில் ஒட்டும் தன்மையுள்ள திரவகசிவு, தோலில் கடினத் தன்மை, சொர சொரப்பு, கிஅக் குறைவான மாதப்போக்கு (மாதவிடாய் நிற்கும் காலப் பருமனுக்கு செபியாவும், கிராபைட்டிசும் ஏற்றவை).

அம்மோனியம்மூர் – உடல் பருமனாகவும் கால்கள் மெலிந்தும் காணப்படும்.

ஆண்டிமோனியம் குரூடம் / கல்கேரியா கார்ப் – சிறுவர், இளம் வயதினர் உடல் பருக்கும் தன்மை.

அம்மோனியம்கார்ப் / பாரிடா கார்ப் – முதியோரின் உடல்பருமன்.

அம்மோனியம் புரோம் – அனைத்து உறுப்புக்களிலும் கன உணர்வுகளுடன் உடல் பருமன்.

தைராய்டினம் : உடல், கழுத்துக் கோளங்கள் பருத்திருத்தல், முகம் உப்பியிருத்தல், உடலில் நீர் கோர்வை (அதிகளவு சிறுநீரை வெளியேற்றி உடலை இளைக்கச் செய்யும்) உடல் வளர்ச்சி, சத்து தொடர்பான இயக்கத்தை ஒழுங்கமைக்கும் ஆற்றல் இம்மருந்துக்கு உண்டு.

- Dr.S.வெங்கடாசலம்                                                                                                                       மாற்று மருத்துவ நிபுணர்                                                                                                   சாத்தூர்                                                                                                                                                       Cell – 9443145700 / Mail : alltmed@gmail.com

]]>
Obesity, Homeo cure, உடல் பருமன் ஹோமியோ தீர்வு, உடல் எடை, டயட் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/3/w600X390/obseity.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/apr/03/அதிக-எடை-ஆபத்து-2677855.html
2673163 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி நினைவோ ஒரு பறவை! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, March 27, 2017 04:09 PM +0530 மனித ஆற்றல்களில் மகத்தானது நினைவாற்றல், நினைவுத்திறன் என்பது மனிதனின் அரிய சொத்து, மனித குலத்தின் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை தனிமனித ஆளுமை மலர்ச்சிக்கும் முழுமைக்கும் நினைவுத்திறனே ஆதாரம்.

நினைவாற்றலே இல்லாத, நினைவாற்றலை முற்றிலும் இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம். ஞாபக சக்தி எனப்படுவது, மனிதன் அனுபவித்த, கற்றிருந்த விஷயங்களை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

ஞாபக மறதி எனும் பலவீனம், அனுபவம் இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. திருக்குறளை ஒப்பித்தவரானாலும், உலக நாடுகள், சரித்திர நிகழ்வுகள், ஆயிரக்கணக்கான பெயர்கள் என எதையும் தலைகீழாகச் சொல்பவரானாலும், அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு மறதி இருக்கவே செய்யும். (தளிர் நடைக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும், மறதிகள் பலவிதம்.

சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின்றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை மறந்து விடுகின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்துக்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்துவிடுகின்றனர்.

உலகில் நிலவும் சகல தேசத்து நாட்டுப் புறக் கதைகளிலும் மறதி நாயகர்களைப் பற்றிய கதைஇகள் ஏராளம் இருக்கின்றன. விசித்திரமான மறதிப் பேர்வழிகளின் நடவடிக்கைகளை கவனித்தால் சிரிப்பும் அனுதாபமும் சேர்ந்தே பிறக்கும்.

விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்து விருந்தினர்கள், எல்லோரும் விடைபெற்றுச் சென்றபிறகும் ஐன்ஸ்டின் மட்டும் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐன்ஸ்டின் எழுந்து செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. நண்பர் யோசித்தார், ‘நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்று எப்படிக் கூற முடியும்? ‘அடடா நேரமாகிவிட்டது போலிருக்கிறதே! என்றார். அதனைக் கேட்ட ஐன்ஸ்டின், ‘ஆம், நண்பரே நேரமாகிவிட்டது! இன்னும் நீங்கள் புறப்படவில்லையா? குடும்பத்தோடு என் வீட்டிலேயே இருக்கிறீர்களே! என்றார். நண்பர் அதிர்ச்சியடைந்து உண்மையை விளக்கி ஐன்ஸ்டினின் மறதியைக் கலைத்து நிஜத்தை நினைவூட்டி அனுப்பி வைத்தார். சராசரி மனிதர்கள் முதல் தலைசிறந்த மனிதர்கள் வரை நினைவாற்றல் குறைபாடு இல்லாத மனிதர்கள் கிடையாது. நினைவு எனும் பறவை திசைமாறி பறப்பதும் உண்டு. கூடு திரும்பாமல் போவதும் உண்டு.

மறதி எனும் நுட்பமான பிரச்னை பெரும்பாலும் மனநலத்தோடு தொடர்ப்புடையது. இது குறித்து உளவியல் நிபுணர்கள் மறதிக்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மன பாதிப்புகள், மன ஒருமையின்மை கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency) கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல், புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல் நோய்கள் (குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் – வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்னைகள்)

இத்தகைய காரணங்கள், பின்னனிகள், சூழ்நிலைகள் சிறு வயதினரிடம்  நினைவுக் குறைவை பலவீனத்தை (memory weakness) ஏற்படுத்துகின்றன. இளம் பருவத்தில், நடுத்தர வயதில் அதிகளவு மறதியை ஏற்படுத்துகின்றன (forgetfulness / loss of memory) முதுமையில் பேரளவிலான மறதியை, நினைவு அழிவை ஏற்படுத்துகின்றன. அத்தகைய மூளை பாதிப்பினை Amnesia என்றும், Dementia என்றும் அல்ஜீமர் நோய் என்றும் மருத்துவ உலகம் வகை பிரிக்கின்றன.

உலகின் தலைசிறந்த அதியற்புத கணினி மனித மூளையே, இதனுள் நம்புவதற்கரிய வகையில் நினைவுகள் பதிந்துள்ளன. மூளையின் கோடானு கோடி செல்கள் மனிதன் விழித்துள்ள போதும் தூங்கும் போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை எத்தனை எத்தனையோ விஷயங்களை பலவிதங்களில் பதிவு செய்து கொண்டும் அசைபோட்டுக் கொண்டும் இருக்கின்றன. வாழ்நிலை, சூழ்நிலை, உடல்நிலை, மன நிலைக் காரணங்களால் பல்வேறூ உடலியல் காரணங்களால் மறதி சற்று அதிகமாக இருக்கலாம். ஆயினும் எல்லா வயதினருக்கும் மறதி ஏற்படக் கூடும். இருப்பினும் மறதி அல்லது ஞாபக சக்திக் குறைபாடு என்பது மாணவர்களோடும், பாடங்களோடும் மட்டுமே தொடர்புடையவையாகக் கருதப்படுகிறது.

ஒரு மாணவருக்கு ஆர்வம், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றைய கல்விமுறையில் மாணவரின் இயற்கையான விருப்பங்களும், திறன்களும், படைப்பாற்றலும் பரிமளிப்பதற்குப் பதிலாக மழுங்கப்படிப்படுகின்றன. கல்வி என்பது மாணவரின் ஆளுமையை மலரச் செய்து முழுமை பெறச் செய்ய வேண்டும் எனும் விவேகானந்தருடைய வழி காட்டுதலை நமது கல்வி நிறுவனங்கள் தூர எறிந்துவிட்டன. மாணவரை மார்க் வாங்கும் எந்திரமாக விடை எழுதும் எந்திரமாக உருப்போடும் எந்திரமாக மாற்றிவிட்ட பெருமை நம் கல்விக்கு உண்டு. இதனால் கோடானுகோடி சிறுவர்களின், இளையவர்களின் இயல்பான திறன்களும், உற்சாகத் துடிப்புகளும் பாடநூல்களுக்குள் புதைக்கப்பட்டுவிட்டன.

சில மாதங்களுக்கு முன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தாய் அழைத்து வந்தார். ஐந்தாம் வகுப்புவரை நன்கு படித்ததாகவும் தற்போது மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகவும் சரித்திரப் பாடத்தில் தோல்வியடையும் அளவு மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் குற்றம் சாட்டினார். அந்தச் சிறுமியின் உண்மையான பிரச்னைகளை விசாரித்து அறிவது சிரமமாக இருந்தது. கவனக்குறைவு பிழைகளும் (Careless mistakes) மறதியும் (forgetfulness) விளையாட்டு புத்தியும் தான் முக்கியமான பிரச்னைகள் என்பதாக சிறுமியின் தாய் கூறினார். அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை.

ஒவ்வொரு முறை அச்சிறுமி வரும்போதும் மதிப்பெண் குறைவுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்று படிப்பதில் ஆர்வமின்மை மன நிலையை மட்டுமே அறிய முடிந்தது. ஒருமுறை அச்சிறுமியை மிகுந்த மகிழ்ச்சியோடு அழைத்து வந்தார். இம்முறை சரித்திரத்தில் 90 சதம் மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறினார். அச்சிறுமி எந்தவிதப் பூரிப்போ, மலர்ச்சியோ முகத்தில் காட்டாமல் வழக்கம் போல அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்தளவு மதிப்பெண் அதிகம் பெற என்ன காரணம்? முன்பை விட கூடுதல் நேரம் படித்தாயா? கூடுதல் நேரம் எழுதிப்பார்த்தாயா? என்று விசாரித்த போது, இம்முறை அவளால் சரியாக காரணத்தை கூறிவிட முடிந்தது. History missஐ மாற்றி விட்டார்கள். இந்த மாதம் புதுசா ஒரு சார் ஹிஸ்டரி எடுத்தாங்க. அந்த மிஸ்ஸை எனக்குப் பிடிக்காது. திட்டிக் கிட்டே இருப்பாங்க. சிரிக்கவே மாட்டாங்க. அவங்க பாடம் நடத்துவதும் புரியவே புரியாது. இப்போது வந்திருக்கும் புது சார் பிரியமா இருக்கிறார். திட்ட மாட்டார். இவர் சொல்லித் தர்றது நல்லா புரியுது. அதனால பரிட்சையில் நல்லா எழுத முடிஞ்சுது.’ என்றாள்.

இவளுக்கு இதுவரை அளித்த சிகிச்சை நிறுத்தப்பட்டது. சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இச்சிறுமியின் மதிப்பெண் குறைவுக்கு, தோல்விக்கு அவளது கவனக்குறைவும், ஞாபக குறைவும் காரணம் என்று கருதியது பெரியவர்களாகிய நமது அறியாமை அல்லவா? குறிப்பிட்ட ஆசிரியர் மீது வெறுப்பு ஏற்படும் போது அவரது பாடநூல் மீதும் வெறுப்பு படர்கிறது. இதுபோல் வெவ்வேறு எண்ணற்ற காரணிகளால் நமது மாணவச் செல்வங்கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.

வினோதமான ஒருபோட்டி குறித்த கதையொன்று கேளுங்கள். ‘ஓர் ஆடும் அதற்கு ஒரு மாதத்துக்கான தீனியும் தரப்படும். தினசரி அந்த தீனியைக் கொடுத்து ஆட்டினை பராமரிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து ஆட்டின் எடை முன்பிருந்ததை விடக் குறைவாக இருக்க வேண்டும். அப்படி வளர்ப்பவருக்கு பரிசு’ என்று அறிவிக்கப்பட்டது. பலரும் கலந்து கொண்டனர். ஆனால் மாத இறுதியில் தோற்றுவிட்டனர். ஒரே ஒரு நபர் மட்டும் ஆட்டிற்கு தினமும் தீனி கொடுத்து வளர்த்து வந்த போதிலும் கடைசியில் எடை குறைந்திருப்பதை நிரூபித்து வெற்றி பரிசினைத் தட்டிச் சென்றார்ல் எல்லோரும் ஆச்சரியத்தால் வாய் பிளந்தனர். ‘இது எப்பை முடிந்தது?’ என்று அவரிடம் விசாரித்தனர். ‘இதற்காக நான் ஒன்றும் சிரமப்படவில்லை. ஓரிடத்தில் ஆட்டைக் கட்டினேன். அதற்கு நேர், எதிரே ஓர் ஓநாயைப் பிடித்துக் கட்டிவைத்தேன். ஆட்டுக்கு தேவையான தீனியை தினமும் கொடுத்தேன். ஆடு பயந்து பயந்து தின்றது. அதனால் சாப்பிட்டது உடலில் சேரவில்லை என்றார்.

ஆம் நண்பர்களே! நம் பிள்ளைகளும் இதே நினையில் தான் தத்தளிக்கின்றன. அவர்களின் மனங்களைக் கலங்கடித்து மார்க் பெற எண்ணும் முயற்சிகள் அதனால் தான் தோற்றுப் போகின்றன.

தாமதமாக கற்கும் மனநிலை, எழுதுவதில் உச்சரிப்பதில் வாசிப்பதில் தவறிழைத்தல் போன்றவற்றையும் மாணவரின் இயல்பு, தேவை, பயம், குழப்பம், கவலை, திறமை போன்றவற்றையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நெருக்கமாகக் கண்டறிதல் வேண்டும். கற்பதில், குணநலனில் மாணவரின் பிரச்னைகள் என்ன என்பதை அக்கறையோடு புரிந்து, பரிவோடு புரிய வைத்து, நட்போடு திருத்தினால் மாணவர்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியும். மாணவர்களையும் வெல்லச் செய்ய முடியும்.

கிராமங்களிலிருந்து பயில வரும் மாணவர்கள் மற்றும் பின் தங்கிய வாழ்க்கைச் சூழல்களும், தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மாணவர்களின் பிரச்னைகளும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வீட்டுப் பிள்ளைகளின் பிரச்னைகளும் வெவ்வேறானவை. வாகன வசதியின்றி தூரத்திலிருந்து கல்வி நிலையம் வந்து போகும் மாணவர்கள் ஏராளம். இவர்கள் புயல், மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் வர வேண்டும். வீடுகளில் அடிப்படை வசதிகள் இருக்காது. கழிப்பிடம், மின்சாரம், சுகாதார வசதிகள், சத்தான உணவுகள் எதுவும் இருக்காது. இவர்களை வறுமைக் கோடும் சமூக பொருளாதாரப் பிரச்னைகளும் இறுக்கித் துன்புறுத்தும் பல பெற்றோர் எழுத்தறிவற்றவர்களாய் பிள்ளைகளின் சிரமம் அறிந்து உதவ முடியாதவர்களாய் டியூஷன் அனுப்ப முடியாதவர்களாய் இருப்பார்கள். சிறப்புக் கவனமும், உண்மையான அக்கறையும் காட்டப்பட வேண்டிய இவர்களை ‘மக்குகள்’ ‘ஞாபகமறதிப் பேர்வழிகள்’ என்று குற்றம் சாட்டி ஒதுக்குவது துரதிருஷ்டவசமானது.

ஹோமியோபதி மருத்துவர்கள் எந்த ஒரு மாணவரின் கல்விப் பிரச்னையையும் ஆய்வு செய்யும் போது மாணவரின் கவனக்குறைவு, ஞாபகச் சக்திக் குறைவு என்று மட்டும் பொதுப்படையாக அணுகுவதில்லை அவரது மனநிலை, உடல்நிலை, விருப்பு, வெறுப்பு, கடந்த கால நோய்கள், பெற்றோர் உடன் பிறந்தோர் பற்றிய விவரங்கள், குடும்ப பின்னணி, வகுப்பறைச் சுழல் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பிரச்னைகளின் மையப்புள்ளியைக் கண்டறிவார்கள். அதன் அடிப்படையில் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்குவார்கள்.

சில மாணவர்களுக்கு நினைவாற்றல் அபாரமாக அமைந்திருந்தும் அவர்களது இயல்பும் சுபாவமும் படிப்புடன் காலகதியோடு ஒத்துப் போகாமல் அமைந்துவிடும். அன்றாடம் சிறிது நேரம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளாமல் தேர்வு நேரங்களில் மட்டும் விழுந்து விழுந்து படித்து மூச்சுத் திணறுவார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும் கெடும். இறையன்பு அவர்கள் கூறும் கதையொன்று : ‘ஓர் இளைஞர் நன்கு வளர்ந்த பசுமாடு ஒன்றைத் தூக்கி மார்பில் அணைத்து ஊரைச் சுற்றி வந்தார். ஊர்க்காரர்கள் வியந்து இவ்வளவு பெரிய பசுவை உன்னால் எப்படி அப்பா தூக்க முடிந்தது என்று கேட்டனர். இது கன்றாக இருந்த நாளிலிருந்தே தினம் தினம் தூக்கிக் தூக்கிக் கொஞ்சுவே, விளையாடுவேன். அது பழகிவிட்டது. வளர்ந்து கனம் கூடினாலும் இப்போது எளிதில் தூக்க முடிகிறது’ என்று இளைஞர் பதிலளித்தார்.

பள்ளிப் பாடங்களும் படிப்புகளும் அப்படித்தான். தினமும் படித்து வந்தால் மொத்த கனம் குறையும். ஒரு வருடப் பாடஙக்ளைத் திடீரென ஓரிரு நாளில் தூக்கிச் சுமக்க முற்பட்டால் மூளை தாங்குமா? 365 நாட்கள் தினமும் சிறிது நேரம் உசைப்பதைத் தவிர்த்துவிட்டு மூன்று நாளில் அல்லது மூன்று மணி நேரத்தில் முழு வெற்றி பெறுவது முடிகிற காரியமா?

இன்றைய கல்வி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து கவிஞர் வைரமுத்து, ‘விதைகளைப் போல் மனங்களில் தூவப்பட வேண்டிய பாடங்கள் ஆணிகளைப் போல் அறையப்படுகின்றன’ என்று விமரிசிக்கிறார். மற்றொரு இடத்தில் கவிஞர் வைரமுத்து தேர்வு குறித்து கூறும்போது, ‘மாணவரே இந்தக் கல்வி முறையில் தேர்வுதான் உன் அறிவைக்காட்டும் அடையாளம் என்றால் அதிலிருந்து நீ அங்குலமும் பின்வாங்காதே. தேர்வு என்பது தேசிங்குராஜன் குதிரை. அதை நீ அடக்கிவிட்டால் அது  உனக்குப் பொதி சுமக்கும் கழுதை’ என்று ஊக்கமூட்டுகிறார். ஹோமியோபதியில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் தேவையறிந்து நினைவுத்திறனை மேம்படுத்த, மனத்தை ஒரு நிலைபடுத்தும் ஆற்றலை அதிகரிக்க, சுய நம்பிக்கையை பெருக்க, வீண் பயங்களை விரட்ட பலவித மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முக்கியமான சில மருந்துகள்.

கோனியம் (CONIUM) : படிப்பிலோ, தொழிலிலோ, மனதை ஒருநிலைப்படுத்த இயலாமை (Loss of concentration) பிறருடன் பேசாமல் கவலையுடனும் மெளனமாகவும் இருத்தல். பயம், தலைசுற்றல் (மேலும் நீண்ட நாள் பிரமச்சரியம் இருப்பவர்க்கு, இளம் விதவைகளுக்கு, பாலுறவு ஆசைகளை அடக்கியவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனப்பிரச்னைகளுக்கு கோனியம் சிறந்த தீர்வு).

ஏதுசா (Aethusa) : மனத்தை ஒரு நிலைப்படுத்த முடியாதளவு மனக்குழப்பம், மனச்சோர்வு, சிறுகுழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் ஏதுசா மிகவும் நல்லது என்று Dr.குரன்சே சுட்டிக் காட்டுகிறார்.

லைகோபோடியம் (Lycopodium) : தன்னம்பிக்கை இல்லாமை (Loss of self confidence) ஞாபக சக்தி இழத்தல் (Loss of memory) தவறாக உச்சரித்தல், எழுதும் போது எழுத்துக்களை அல்லது வார்த்தைகளை விட்டுவிடுதல், தவறான சொற்களை எழுதுதல். தனிமையில் பயம்.

லாக்கானினம் (Laccanium) : அதிகமான ஞாபக மறதி. எழுதும் சமயம் முழுச் சொற்களையே விட்டுவிடுதல், கடையில் வாங்கிய பொருட்களை (பணம் கொடுத்துவிட்டு) அங்கேயே விட்டுவிட்டு திரும்புதல்.

நக்ஸ் மாஸ்சடா (Nux Moschata) : அதிக ஞாபக மறதி படித்துக் கொண்டிருக்கும் போதே அவற்றை மறந்து விடுதல். பழைய விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. பழகிய நண்பர்களை, பழகிய தெருக்களைக் கூட சுலபமாக அடையாளம் காண முடியாது. (அதிக தூக்கம் இரவு பகல் எந்நேரமும் தூங்கி கொண்டிருத்தல் அல்லது தூக்கக் கலக்கம். எந்த நேரமும் சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல்).

குளோனைன் (Glonoine) : வினோதமான ஞாபக மறதி, மிக நன்கு அறிந்ததன் வழியை தன் வீதியைக் கூடத் தவற விடுமளவு ஞாபக சக்தி இழப்பு.

ஜெல்சிமியம் (Gelsemium) : எந்நேரமும் படுத்துக் கிடத்தல். பயம், துக்க செய்தி காரணமாக பாதிப்புகள். படிப்பதற்குப் புத்தகத்தை திறந்தவுடன் தூக்கம் வருதல்.

எயிலாந்தஸ் (Ailanthus) : ஞாபகசக்தியை படிப்படியாக இழத்தல். பேசிய சம்பவங்களை, நடந்த நிகழ்வுகளை மறந்துவிடுதல், அவைகளை எப்போது படித்தது போல, கேள்விப்பட்டது போல தோன்றுதல், சிவினாடிகளுக்கு முன்பு பேசியதைக் கூட மறந்துவிடுதல்.

பரிடாகார்ப் (Baryta Carb) : ஞாபகமின்மை, எதையும் தாமதமாக கற்றல் அல்லது செய்தல், கவனமின்மை, படிக்க இயலாமை பலமுறை சொல்லித் தந்தாலும் மனத்தில் நிறுத்த முடியாமை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் சக்தியின்மை, சரியாகப் பேசவும் இயலாமை, (மூளை மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இது ஒப்பற்ற மருந்து) குழந்தைத்தனமான, முட்டாள்தனமான செய்கைகளைக் கொண்ட முதியோர்களுக்கும், ஞாபக மறதி அதிகமுள்ள முதியோர்களுக்கும் பரிடா கார்ப் நன்கு பயன்படும்.

பாஸ்பாரிக் ஆசிட் (Phospohoric Acid) : அதிக சுய இன்பம், அதிக பாலுறவு, அதிக கவலை போன்ற காரணங்களால் உடலும் மனமும் மிகவும் பலவீனமடைந்தவர்களுக்கு ஏற்றது. அதிக சோர்வு காரணமாக திக தூக்கம், அதிக ஞாபக மறதி, சமீபத்தில் நடந்தவை கூட மறந்துவிடும் அளவுக்கு மறதி. எதையும் நன்கு யோசிக்க முடியாத நிலை, அக்கறையின்மை அலட்சியம் கேள்விக்கு பதில் சொல்லாமை.

செலினியம் (Selenium) : நூதனமான ஞாபக மறதி, எவ்வளவு முயற்சி செய்து சிந்தித்தாலும் நினைவுக்கு வராத விஷயங்கள் தூக்கத்தில் (கனவுகளில்) ஞாபகத்திற்உ வந்து விடும்.

அனகார்டியம் (Anacardium) : பள்ளி மாணவ, மாணவியர் படித்த பாடங்களை மறந்து விடுதலுக்கு சிறந்த மருந்து.

காலிபாஸ்க் 6x (Kaliphos 6x) (சூஸ்லர் – பயோமருந்து) : ஞாபக மறதி, மூளைச் சோர்வு நரம்பியல் பலவீனம், கண்களின் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த பலனளிக்கும் மருந்து.

- Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்

செல் - 9443145700

Mail - alltmed@gmail.com

]]>
memories, homeopathy, நினைவுத் திறன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/27/w600X390/memory_kids.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/mar/27/நினைவோ-ஒரு-பறவை-2673163.html
2669293 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி உணர்வுகள் தொடர்கதை டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, March 20, 2017 09:46 AM +0530 சில நூற்றாண்டுகள் முன் மாயக் கண்ணாடிகளும் பறக்கும் கம்பளங்களும் மற்றும் பல வினோதப் பொருட்களும் வெறும் கற்பனைகளாய் இருந்தன. இப்போது மனித குலம் நிஜவாழ்வில் தினசரி இவற்றை வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருகிறது. மனிதனின் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் புதுமைகளை சிருஷ்டிக்கும் ஆற்றல் உண்டு.

இதற்கு மாறாக, இயற்கைக்குப் புறம்பான கற்பனா அவஸ்தைகளும், பிரமைகளும் மனிதரிடம் விதவிதமாய் காணப்படுவதும் உண்டு. இயல்பான வாழ்க்கையை, செய்லபாடுகளைப் பாதிக்ககூடிய இத்தகைய மருட்சிகளை மாய எண்ணங்களைக் குறிளாகக் கொண்டு உரிய ஹோமியோ மருந்து அளித்தால் பாதிக்கப்பட்ட மனிதனை நிஜவாழ்க்கைக்கு மீட்டுவர முடியும். உணர்வுகளின் ஊர்வலத்தை ஒழுங்கமைக்கும் அதிசய ஆற்றல் ஹோமியோ மருந்துகளுக்கு மட்டுமே உண்டு. உதாரணத்துக்கு சில குறிகளும், சில மருந்துகளும் -

 • ஒரே சமயத்தில் ஒரு நபர் இரண்டு இடங்களில் இருப்பதாக எண்ணம் - லைகோபோடியம்
 • மனிதர்களும், பொருட்களும் கருப்பு நிறமாக தோன்றுதல் - ஸ்டிரமோனியம்
 • தான் ஓர் அதிகாரி போன்ற உணர்வு - குப்ரம்மெட்
 • வீட்டிலிருக்கும் போது, வேறு எங்கோ இருப்பதாக எண்ணம் - ஒபியம்
 • பிறரை விட எல்லாவிதங்களிலும் தான் உயர்வு என்ற உணர்வு - பிளாட்டினா
 • தனக்கு மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தல் - பெட்ரோலியம்
 • உடம்பு முழுவதும் எறும்புகள்  ஓடுவது போன்ற உணர்வு - சிஸ்டஸ்
 • அறையின் குறுக்காக பூனைகளும், நாய்களும் ஓடுவது போன்ற பிரமை - ஏதுஸா
 • பிறர் தன்னுடன் படுக்கையில் படுத்திருப்பதாக பிரமை - பைரோஜனியம்
 • எப்போதும் சிற்றின்பச் சிந்தனை. தனியாக இருக்கும் போது காம நினைவுகளில் மூழ்குதல். தன்க்கு நேர்ந்த அவமரியாதைகளை நினைத்து மனக்கவலை - ஸ்டாபிசாக்ரியா
 • தன் முன்பு ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வால் அதைப் பிடிக்க முயற்சித்தல், தன்னை நோக்கி ஒரு நாய் அல்லது துஷ்ட மிருகம் ஓடிவருவது போலவும் அதை அடிக்கவும், அதனுடன் சண்டை செய்வதும் போன்ற செய்கைகள் - ஸ்டிரமோனியம்
 • யாரோ துரத்தி வருவதாக, உறவினர் குரல் கேட்பதாக உணர்வு - அனகார்டியம்
 • தான் சிதறிக் கிடப்பதாக உணர்வு - பாப்டீஸியா
 • சங்கீதம் கேட்க நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் - நேட்ரம்கார்ப்
 • தான் கடவுள் என்ற நினைப்பு, தான் ஒரு பெரிய மனிதர் எனக் கருதி அனாவசியமாகப் பணச் செலவு செய்தல் - வெராட்ரம் ஆல்பம்
 • கடவுளே தன்னிடம் நேரில் வந்து பேசுவதாக எண்ணம்; தான் இறந்தது போலவும், தனது  இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகள் நடைபெறுவது போலவும் பிரமை - லாச்சஸிஸ்
 • மாதவிடாய் நாட்களிலும் உடலுறவு வேட்கை - பிளாடினா
 • கணவனைத் தவிர வேறு மணமான ஆணுடன் உறவு - நேட்ரம் மூர்
 • ஆபத்தான நேரம் சிரித்தல், மகிழ வேண்டிய நேரம் அழுதல் - அனகார்டியம்

மனங்களைப் பண்படுத்தும் மகத்தாம மருந்துகள்

மனநோய்கள் ஏற்படுவதற்கு மனநலம் கெடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலையில் பலத்த அடிபடுதல், பொருள் நஷ்டம், பல்வேறு தோல்விகள், பாலுணர்வுத் தடைகள், பயங்கள், அதிர்ச்சிகள் போன்ற காரணங்களாலும் மனநோய்கள் ஏற்படுகின்றன.

தண்ணீர் வைத்தியம், வெந்நீர் வைத்தியம், உலோக வைத்தியம், ஊசி வைத்தியம் என்று உலகில் எத்தனையோ வைத்திய முறைகள் உள்லன. இவை எல்லாமே மனிதனின் உடல் நலிவை மட்டுமே சீர் செய்ய முயல்கின்றன. ஒரு சில போலி மருத்துவ முறைகள் கற்கள், தகடுகள், தாயத்துகள், மை வேறு சில பொருட்களை அப்பாவி மக்களிடம் விற்று, ஆயிரக்கணக்கில் ரூபாயைப் பறித்துக் கொண்டு, இழந்த இளமை மீண்டும் கிடைக்கும் என்றும், குடும்பக் கஷ்டங்கள் எல்லாம் மாயமாய் மறையும் என்றும், ஐஸ்வரியங்கள் வந்து குவியம் என்றும் ஏமாற்றி வருகின்றன.

இத்தகைய பொய்மைகளுக்கும், போலித்தனங்களும் அப்பால் ஹோமியோபதி மட்டுமே மனிதனின் உடல், மனச் சீர்குலைவை முழுமையாகப் பரிசீலித்து நலப்படுத்துகிறது. ஹோமியோபதியில் மனிதனின் பொதுத்தன்மை மட்டுமல்ல தனித்தன்மைகளும் கவனிக்கப்படுகின்றன. நோயைப் பற்றிய குறிகளை விட நோயாளிகளைப் பற்றிய குறிகளும் விவரங்களும் தான் மிக முக்கியம்.

பாரம்பரிய அம்சங்களால் மட்டுமன்றி, குடும்பச் சூழல், கல்வி , சமூக, கலாச்சார மாசுபடுத்தக்கூடிய, சல்லடைக் கண்களாய் துளைத்து நாசப்படுத்தக் கூடிய காரணிகள் இன்றைய சமுதாயத்தில் ஏராளம் உள்ளன. இதனால் மனநலம் கெடுவதோடு, குடும்ப அமைதி குலைந்து, தனிமனிதனின் சமூகத் தொடர்புகளும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய புறத்தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் மன ஆரோக்கியமும், மனவலிமையும், நேர்மையும் உள்ளவர்கள் குறைவு. பாரதிதாசன் குறிப்பிடுவது போல கற்றவர்களிடம் கூட கடுகு உள்ளம் தான் காணப்படுகிறது. மனித மனங்களைப் பண்படுத்த எல்லா நிலைகளிலும் ஹோமியோபதி உதவுகிறது. மனத்தின் ஆரோக்கியமே மனிதனின் ஆரோக்கியம்.

மனம் சார்ந்த குறிகளும் - மருந்துகளும் :

நேட்ரம்சல்ப் - தலையில் அடிபட்டதால் ஏற்படும் மனநோய் (யாரிடமும் பேச விரும்பாத நிலை)

இக்னேஷியா, ஜெல்சிமியம் - குழந்தை இறந்ததால் மனம் பாதிப்பு

ஓபியம், ஜெல்சிமியம், அர்ஜெண்டம் நைட்ரிகம் - மன அதிர்ச்சியில் மனம் பாதிப்பு

பல்சடில்லா - மாதவிலக்குத் தடைபடுவதால் ஏற்படும் மனநோய்.

ஸ்டிரமோனியம் - கர்ப்பமாயிருக்கும் போது ஏற்படக்கூடிய மனநோய்

அகோனைட், ஒபியம் - பயம், பதற்றத்தால் மனம் பாதிப்பு

அனகார்டியம், ஹிபர்சல்ப் - ஈடு இரக்கமற்ற கொடூரமான மனநிலை, பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல்

ஹையாஸ்யாமஸ் - ஆபாசமாகப் பேசுதல், பாடுதல், ஆடைகளை அவிழித்து விட்டு பிறப்புறுப்புகளைக் காட்டுதல்

இக்னேஷியா, ஸ்டாபிசாக்ரியா, நேட்ரம்மூர் - ஏமாற்றத்தால் மனம் பாதிப்பு

இக்னேஷியா, ஸ்டாபிசாக்ரியா - மனம் புண்பட்டதால், அவமானப்பட்டதால் மனம் பாதிப்பு 

பல்சடில்லா - திருமணத்தின் மீதும், உடலுறவின் மீதும் வெறுப்பு

லாச்சஸிஸ் - தனக்குள் ஓர் அபூர்வ சக்தி - தேவதை இருந்து கொண்டு தன்னை இயக்குவதாக எண்ணம்

ஸ்டிரமோனியம் - கண்ணாடியைப் பார்த்து ப் அயம், இருளைக் கண்டு பயம்

சிபிலினம் - கைகளை மீண்டும் மீண்டும் கழுவிக் கொண்டு இருத்தல்

நக்ஸ்வாமிகா - போதைப் பொருள்கள் மீது நாட்டம்

விபரீதமான வெறுப்புணர்ச்சிகளும் விரட்ட உதவும் மருந்துகளும் 

மனிதனைப் போன்று விருப்பு வெறுப்புகளைச் சுமந்து திரியும் வேறு உயிரினங்கள் இருக்கவே முடியாது. வெறுப்புகளை மூட்டை கட்டிச் சுமக்கும் மனிதர்களின் உள்ளங்கள் குறுகி விடுகின்றன அறிவின் எல்லைகளும் மனிதநேயமும் சுருங்கி விடுகின்றன.

தனிமனித நலனுக்கு குடும்ப நலனுக்கு சமுதாய நலனுக்குத் தீங்கு தரும் எதன் மீதும் வெறுப்பு கொள்வது நியாயமானது. ஏற்கத்தக்கது. மாறாக, எந்தவித அடிப்படையும் இன்றி சக மனிதர்களை வெறுத்தல், அழகான விஷயங்களை வெறுத்தல் என்பது விபரீதமானது; வினோதமானது; வேதனைக்குரியது. மனித மனத்தின் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு உண்டு. மனிதனிடம் காணப்படும் விருப்பத்தகாத வெறுப்புணர்ச்சிகளை நீக்கி, மன இயல்புகளைச் சீராக்க உதவும் மருந்துகள் சிலவற்றின் பட்டியல் இதோ -

வெறுப்புக்கு உள்ளாகும் மனிதர்களும் மற்றவைகளும் :

குறிப்பிட்ட நபர்களை வெறுத்தல் - அம்மோனியம், மூரியாடிகம்

பெற்றோரை, மனைவியை வெறுத்தல் - ப்ளோரிக் ஆசிட்

குடும்ப உறுப்பினர்களை வெறுத்தல் - பிளாட்டினா

குடும்ப உறுப்பினர்களை, அன்பிற்குரியவர்களை வெறுத்தல், மேலும் தொழில் உடலுறவு, எதிர் பாலினம் ஆகியவற்றையும் வெறுத்தல் - செபியா

பெண்களை, திருமணத்தை, உடலுறவை வெறுத்தல் - பல்சடில்லா

கணவரை வெறுத்தல் - குளோனாய்ன்

(பெண்கள்) ஆண்களை வெறுத்தல் - ரபேனஸ்

திருமணத்தையும் திருமணப் பேச்சுகளையும் வெறுத்தல் - பிக்ரிக் ஆசிட்

இறைச்சியை வெறுத்தல் - பல்சடில்லா

கோழிக்கறி பிடிக்காமல் வெறுத்தல் - பாசிலினம்

மாட்டு இறைச்சியை வெறுத்தல் - மெர்க் - சால்

மீன் கறியை வெறுத்தல் - கிராபைட்டீஸ்

முட்டையை வெறுத்தல் - ஃபெர்ரம்மெட்

பாலை வெறுத்தல் - நேட்ரம்கார்ப், செபியா

இனிப்பை வெறுத்தல் - கிராபைட்டீஸ், காஸ்டிகம்

ப்ளம்ஸ், வாழைப்பழங்களை வெறுத்தல் - பரிடாகார்ப்

ஆப்பிளை வெறுத்தல் - ஆண்டிம்டார்ட்

ஐஸ்க்ரீமை வெறுத்தல் - ரேடியம்

குளிர்பானங்களை வெறுத்தல் - கார்போவெஜ்

வெங்காயம், வெள்ளைப் பூண்டை வெறுத்தல் - சபடில்லா

காய்கறிகளை வெறுத்தல் - மெக்னீசியம் கார்ப்

பொழுது போக்கையும், மகிழ்வூட்டும் விஷயங்களையும் வெறுத்தல் - இக்னேஷியா

குளிப்பதை வெறுத்தல் - சல்பர்

ஓரினச் சேர்க்கையாளர்கள் பெண்களை வெறுத்தல் - டாரண்டுலா ஹிஸ்பானியா

புன்னகை தவழும் முகங்களை வெறுத்தல் - அம்ப்ராகிரீஸா

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் 

Cell - 9443145700

Mail - alltmed@gmail.com

]]>
mental disorders, homeopathic remedies, மனநலம் பாதிப்பு, ஹோமியோபதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/PTSD-1024x682.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/mar/20/உணர்வுகள்-தொடர்கத-2669293.html
2664705 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி மரண பயம் (Thanatophobia) நீக்கும் மகத்தான ஹோமியோ மருந்துகள்! டாக்டர் வெங்கடாசலம் DIN Thursday, March 16, 2017 12:11 PM +0530 கடவுளிடம் பயம் வேண்டுமா? வேண்டாமா? என்ற பொருளில் சிந்தனைச் சிற்பி நேருவிற்கும், மூதறிஞர் ராஜாஜிக்குமிடையில் ஓர் சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. இருவரின் கருத்துக்களும் ஒன்றாக இணையவில்லை.

‘நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன்’ என்று ராஜாஜி அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ‘நான் இறைவனுக்கு அஞ்சமாட்டேன்’ என்று நேரு கம்பீரமாய் பதில் கூறினார்.

பைபிள் பழைய ஏற்பாட்டிலுள்ள ‘இறைவனுக்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம்’ என்ற சொற்றொடரை ராஜாஜி மேற்கோள் காட்டினார். பைபிள் புதிய ஏற்பாட்டிலுள்ள ‘என் இறைவன் அச்சப்படத்தக்கவன் அல்லன். நேசிக்கப்படத் தக்கவன்’ என்று சொற்றொடரை நேரு சுட்டிக் காட்டினார்.

அச்சநோயின் பிடியில் உள்ளவர்களின் இதயத்தில் கோழைத்தனம் குடியிருக்கும்! கோழைகள் சாலைப் பயணத்தைக் கண்டும் பயப்படுவார்கள்! வாழ்க்கைப் பயணத்தைக் கண்டும் பயப்படுவார்கள்! மரண விளக்கின் வெளிச்சம் அச்ச நோயாளிகளின் பார்வையில் பட்டுக் கொண்டே இருக்கும். சில மதங்கள் இதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மனித குலமே அழியப் போவதாக, உலகமே நிர்மூலம் ஆகப் போவதாக சில மதங்கள் கூக்குரலிடுகின்றன. சில மதங்கள்… இறப்பு பயத்தை அடிக்கடி மிகைப்படுத்துகின்றன.

இறப்பு பயம்…பலரையும் சமய ஈடுபாட்டுக்குள் தள்ளுகிறது. இறப்புக்குப் பின் மற்றொரு வாழ்க்கை இருப்பதாக ஊட்டப்படும் நம்பிக்கை மூலம் பயம் சற்று மட்டுப்படுத்தப்படுகிறது.

2005ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தேசியளவில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 13 முதல் 15 வயதிற்குள் உள்ள பதின்பருவத்தினரிடம் ‘எதன் மேல் அதிக பயம்?’ என்ற வினா முன் வைக்கப்பட்டது. பெரும்பாலோர் அளித்த பதில்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன பாருங்கள்!

தீவிரவாதம், இறப்பு, போர், அணு ஆயுதப் போர், வன்முறை, வருங்காலம், தனிமை, தோல்வி, உயரங்கள், சிலந்தி (இவற்றில் தீவிரவாதம், போர், அணு ஆயுதப் போர், வன்முறை, உயரங்கள் போன்றவை மீதான பயங்களுக்கு மூல காரணமாக புதைந்திருப்பது மரண பயமே!)

பொதுவாக பயத்துக்கு மனவலிமைக் குறைவுதான் காரணம். பிறக்கும் குழந்தைகள் எல்லோருமே தைரியசாலிகள் தான். உரிய பருவத்தில் உரிய மாற்றங்கள் ஏற்பட்டு வளரும் போது குழந்தைகளின் கால்களை முன்னேறவிடாமல் அச்ச விலங்குகள் பூட்டுவது ‘வளர்ப்புச் சூழ்நிலையே’. இதனால் குழந்தைகளின் இயற்கையான மனவலிமை சிதைக்கப்பட்டு அச்சத்தால் நிரப்பப்படுகிறது. வளர் பருவத்தில் மக்கள் அபிப்பிரயாங்களுக்கு அளவுக்கு அதிகமாக மதிப்பளிப்பது அச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

மரண பயம் (Death Phobia) – என்பது எண்ணற்ற அநாவசியமான துயரங்களுக்கு காரணமாகிறது. இதனால் மனித ஆரோக்கியமும் மன அமைதியும் பறிபோகிறது. மரண பயத்தின் கொடூரக் கரங்களில் சிக்கிக் கொண்ட யாவரும் உயிரோட்டமான சமுதாய வாழ்க்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள்.

மரணம் என்பது மனித வாழ்க்கையின் இயற்கையான ஒரு பகுதி. ஆயினும் மரணம் பற்றிய சிலரின் பார்வை பலவீனமாக பீதியூட்டக் கூடியதாக உள்ளது. விபத்துக்கள், கொலைகள், தற்கொலைகள், நோய்களின் இறுதித் தாக்குதல், திடீர் தொற்று நோய்த்தாக்குதல்கள் (காலரா, அம்மை, மஞ்சள் காமாலை, டெங்கு, பன்றி காய்ச்சல்) இடி, மின்னல், புயல், பெருமழை, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் பேரழிவுத் தாக்குதல் போன்றவை காரணமாக நிகழும் மரணங்கள் தினசரி செய்திகளாக நேரிலும், ஊடகங்களிலும் காணுகிறோம். இந்த யதார்த்த அனுபவம் சிலரது மனங்களைப் பக்குவப்படுத்துகிறது. சிலரது மனங்களை மரண பீதிக்கு உள்ளாக்குகிறது.

இறந்துவிட்ட தன் மகனை புத்தரிடம் எடுத்துவந்த அன்புத் தாய் கவுதமி மகனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு மன்றாடினாள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓர் எள் வாங்கி வருமாறு அதிலும் குறிப்பாக இதுவரை ஓர் இறப்பு கூட நடக்காத வீடுகளிலிருந்து எள் வாங்கி வர வேண்டும் என்றும் புத்தர் அவளிடம் கேட்டுக் கொண்டார். வீடுவீடாகச் சென்று விசாரித்த பின் தான் மானுட வாழ்வின் உண்மையை அவள் உணர்ந்தாள் என்று புத்தரின் வாழ்க்கை தொடர்புள்ள ஒரு கதை உண்டு.

ஓர் இறப்பு என்பது உடன் வாழ்வோருக்கு ஓர் இழப்பு மட்டுமல்ல, பெருந்துயரம்! ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் இறப்பு என்பது இழப்பு அல்ல, இயற்கை! வாழ்வின் இறுதி அத்தியாயம். ஆயினும் ஒருமுறை இயற்கையாக இறப்பதற்கு முன்பு பல்லாயிரம் முறை மரண பயம் காரணமாக இறந்து கொண்டேயிருப்பது தவிர்க்கப்பட வேண்டிய துயரம்!

மரணபயத்திற்கான காரணங்களை ஆய்வு செய்தோமானால் அதன் வேர்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த மரணங்கள், மரணம் தொடர்பான விஷயங்களில் தோன்றி மரண பயத்தின் தோற்றுவாய். இது வாழ்வின் எஞ்சிய பகுதி முழு வதையும் மரண பீதி எனும் மாபெரும் உணர்ச்சிக் குழப்பத்தினுள் மனிதனை மூழ்கடித்து மூச்சுத் திணறச் செய்து விடுகிறது.

பெரும்பாலோரின் மரண பயம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. பெற்றோரின் அறியாமையால் குழந்தைகளிடம் பேய், பூதம், பிசாசு, பூச்சாண்டி, இருட்டு என்று பலவித அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால் இனம்புரியாத பயத்தின் விதைகள் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகின்றன. இவையே மரண பயம் எனும் விருட்சமாக விரைவில் வளர்கின்றன. மரணம் குறித்த எந்தவித புரிதலும் இல்லாத வயதிலும் கூட தன்னை அழிக்கக் கூடியளவு ஏதோ ஒன்று நேர்ந்துவிடும் என்ற பேரச்சம் ஏற்பட்டு விடுகிறது.

வயதான காலத்தில் வரும் மரண பயம் அவர்களின் துணையின் மரணத்தின் போது அதிகரிக்கிறது. இதர முதியோரின் மரணத்தைப் பார்க்கிற போதும் அதிகரிக்கிறது. இச்சம்பவங்கள் இவர்களின் மரண நாளை நினௌவூட்டுவதால், வயதால் முதுமை அடைந்த போதிலும் மனதால் முதிர்ச்சியடையாத காரணத்தால் மரண பயம் எனும் பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து தவிக்க நேர்கிறது.

அதீத மரண பயம் உள்ள சிலர் ஆங்கில மனநல மருத்துவர்களை அணுகிச் சிகிச்சை பெறுகின்றனர். ஆயினும் முழுத் தீர்வு கிட்டாமல் தவிப்பதைக் காணமுடியும். மாற்றுமருத்துவ முறைகளில் மரண பயத்திலிருந்து மனிதனை முழுமையாக மீட்க, மகிழ்ச்சியான மறுவாழ்வு அளிக்க ஹோமியோபதி மருந்துகளே தலைசிறந்தவை என்று உலகளவில் நிரூபணமாகியுள்ளன.

மரண பயங்களிலிருந்து முழுவிடுதலை அளிக்கும் மகத்தான ஹோமியோபதி மருந்துகள் : அகோனைட், ஆர்சனிகம் ஆல்பம், ஜெல்சிமியம்.

மரபணுக்கள், அச்சுறுத்தலூட்டும் சூழ்நிலைகள், போதை மருந்துப் பொருட்கள், கடந்தகால மோசமான அனுபவங்கள், நிகழ்கால பெரிய மாற்றங்கள் (கர்ப்பம், கருச்சிதைவு, வேலை இழப்பு, வேலைமாற்றம், வீடு மாற்றம், கடன் நெருக்கடி) போன்ற காரணங்கள் அச்சமெனும் பெருவெள்ளத்தை வரவழைத்து விடுகின்றன.

அச்ச நோய்களிலிருந்து மீட்பதற்கு ஆங்கில மருத்துவத்தில் வழங்கப்படும் தூக்க மருந்துகள், அமைதியூட்டி மருந்துகள், மன அழுத்தம் தடுப்பிகள் பக்க விளைவுகள் உள்ளவை. வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியவை. மேலும் மருந்து உண்பவரை மிக விரைவில் அடிமையாக்கிவிடும் தன்மை உள்ளவை. முழுநலம் முழுத்தீர்வு என்பதை ஆங்கில மருந்துகளிடம் எதிர்ப்பார்க்க இயலாது. உளவியல் ஆலோசனை சிகிச்சை, நடத்தை மாற்றச் சிகிச்சை போன்ற ஓரளவு நிவாரணம் தரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் ஹோமியோபதி சிகிச்சை என்பது மிக மிக அத்தியாவசியமானது. பாதிக்கப்பட்டவரின் உடல், மன ஆய்வுகளுக்குப் பின்னர் Constitutional Remedy எனப்படும் உடல்வாகு மருந்தையும், அச்சக் குறிகளுக்கு ஏற்ற இதர மருந்துகளையும் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிட்த்ஹால் வியக்கத்தக்க வகையில் அச்சநோய்களிலிருந்து வெளியேறி மன ஆரோக்கியத்துடன் வாழ வழிபிறக்கும்.

அச்சம் நீக்கும் ஹோமியோபதி மருந்துகளாக மாமேதை கெண்டின் மருந்துகாண் ஏட்டில் (Repertory) 149 மருந்துகளைக் குறிப்பிடுகிறார். பயத்தின் தன்மைகளுக்கேற்ப (என்ன பயம்? எப்போது பயம்? எதற்காக பயம்? எப்படிப்பட்ட பயம் என்ற அடிப்படையில்) இம்மருந்துகளை அணுகினால் நிச்சயமான பலன் உண்டு.

அகோனைட் : (ACONITE)

குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட மணி நேரத்தில் (குறிப்பாக இதயத் துயர் மற்றும் பிரசவ நேரம்) இறந்து போவோம் என்ற பயம் -  மக்கள் கூட்டத்திலும், நெருக்கடியான இடங்களிலும் மூச்சுத் திணறி இறந்து விடுவோமோ என்ற பயம், வீதியை, சாலைகளைக் கடக்கும் போதும் பயம்.

அர்ஜெண்டம் நைட் : (ARG.NIT)

நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும் போதே பயம். நீண்ட சுவர்கள், உயர்ந்த கட்டிடங்கள் அருகில் செல்ல மாட்டார். அவை தன்மீது விழுந்து விடுமோ என்று பயம். வீதி, சாலை, பாலங்களைக் கடக்கும் போதும் பயம். மலை உச்சியிலிருந்து அல்லது மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது, விழுந்து விடுவோமோ என பயம். அந்த பயத்தினால் சுயகட்டுப்பாடு இழந்து விழுந்தும் விடுவார்.

ஆர்சனிகம் ஆல்பம் : (ARSENICUM ALBUM)

சாவைப் பற்றிய பயம் - தனியாக இருக்க பயம் - நோய்த் துயர்களில்னால் செத்துப் போவோம் என்ற பயம் (குறிப்பாக புற்றுத் துயரினால்) கணக்கில் அடங்காத பயங்கள்.

பாரிடா கார்ப் : (BARTTA CARB)

பிறர் தன்னை நெருங்கினாலே குழந்தைகள் பயப்படுவார்கள். புதியவர்களைக் கண்டு பயம் - தனியாக மூலையில் அமர்ந்திருப்பார்கள். (ஆனாலும் பிறரைச் சார்ந்தே வாழ்பவர்கள்).

பெல்லடோன்னா : (BELLADONNA)

விலங்குகளிடம் குறிப்பாக நாயைக் கண்டாலே பயம். கற்பனையான பொருட்களை எண்ணிப் பயம். தூங்கி விழிக்கும் போதெல்லாம் படுக்கைக்கு கீழே ஏதோ ஒன்று இருப்பதாகப்  பயம். தன்னுடல் அழுகிக் கெட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

கல்கேரியா கார்ப் : (CALCAREA CARB)

ஈ, கொசு, மூட்டைப்பூச்சி போன்ற சிற்றுயிர்களைக் கண்டாலே பயம். தொற்றும் கொள்ளை நோய்களைப் பற்றியும் புற்றுநோய் போன்ற பெருந்துயர்கள் பற்றியும் (அவை குணப்படுத்த இயலாதவை என்று) பயம். பேய், பிசாசு குறித்த பயம்.

பல் மருத்துவரிடம் செல்லும் போதும், காயங்களைக் காணும் போதும், அறுவைச் சிகிச்சைப் பற்றி எண்ணும் போதும் பயம்.

ஜெல்சிமியம் : (GELSEMIUM)

புறப்படும் போதே பயம். பொது இடங்களிலும், மேடைகளிலும், கூட்டத்தில் பலர் முன்பும் நிற்கப் பயம். குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் போதே விழுந்து விடுவோமென்று பயந்து தாயை இறுகப் பிடித்துக் கொள்ளும், அசையாதிருந்தால் இதயம் நின்று விடுமெனப் பயம், சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்ற பயம். பயம் காரணமாக உடல் நடுங்குதல்.

ஹையாசியாமஸ் (Hyosyomus)

காட்டிக் கொடுப்பார்களோ, துரோகமிழைப்பார்களோ என்று பயம், விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயம். யாரோ பின் தொடர்கிறார்கள் என்று பயம். தனியாக இருக்க பயம் – தண்ணீரைக் கண்டாலே பயம்.

இக்னேஷியா (Ignatia)

பிறர் தன்னை அணுகுவது கூட பயம் தரும். பறவைகளிடம் பயம். மருத்துவர்களிடம் பயம். தீராத வியாதி (குறிப்பாக புற்றுநொய்ய்) வர போகிறதென்று பயம். அதிலிருந்து மீள முடியாதென்றும் பயம். (Ars).

கிரியோசோட்டம் (Kreosotum)

உடலுறவை நினைத்தாலே பெண்களுக்கு பயம். உண்ணாவிரதம், நோன்பு, பட்டினி என்றாலே பயம்.

லாச்சஸிஸ் (Lachesis)

காலரா பற்றிய பயம், தூங்கப் போகும் போது தூக்கத்தில் மூச்சுத் திணறி இறந்து விடுவோமோ என்ற பயம், பாம்பு பற்றிய பயம். விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் எனப் பயம்.

லில்லியம் டிக் (Lilium Tig)

பாலுறவுத் தூண்டுதலால் நன்னடத்தை தவறிவிடுவோமோ என்ற பயம்.

பாஸ்பரஸ் (Phosphorus)

கரப்பான் பூச்சிக்குப் பயம். புயல் மழையைக் கண்டு பயம். விருப்பமில்லாத பொருளை எண்ணினாலே பயம் மருத்துவரைக் கண்டு பயம்.

ரஸ்டாக்ஸ் (Rhustox)

விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என்ற பயம். மூட நம்பிக்கைகள் சார்ந்த பயம்.

சிலிகா (Silica)

குண்டூசி மற்றும் கூர்மையான பொருட்களை கண்டு பயம். கூட்டத்திலும், பொதுமேடையிலும் பயம். ஏதாவது புதிய முயற்சியை மேற்கொள்ளும்போது பயம்.

- Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

]]>
homeo, depression , death, ஹோமியோபதி தீர்வு, fear, மரணபயம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/12/w600X390/own-experiences-to-inspire-others-to-overcome-the-fear-of-death.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/mar/13/மரண-பயம்-thanatophobia-நீக்கும்-மகத்தான-ஹோமியோ-மருந்துகள்-2664705.html
2661102 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி ஆசனவாய் நோய்கள் அலட்சியம் வேண்டாம்! டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, March 6, 2017 12:44 PM +0530 முக அழகிற்கும், முடி அலங்காரத்திற்கும் தினமும் கவனம் செலுத்துபவர்கள் ஆசனவாய் சார்ந்த நோய்களான மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், சதைகள், கட்டிகள், வெடிப்புகள் ரத்தப்போக்கு ஆகியவை குறித்து அக்கறை செலுத்துவதில்லை. காரணம் கூச்சத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கம். ‘அறுவை சிகிச்சை அவசியம்’ என்று மருத்துவர்கள் சொல்லி விடுவார்களோ என்றுபயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டே போய், நோயை முற்றிய நிலைச் சிக்கலாக வளர்த்து விடுகிறார்கள். ஆசனவாய் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறீகள் தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமாக்கல் எளிது.

ஆசனவாயும், மலக்குடலும் இருபுட்டங்களுக்கு நடுவில், பாலுறுப்புகளுக்கு அருகாமையில் மறைவாக அமைந்துள்ளன. சுற்றியுள்ள கொழுப்பு திசுக்களால் ஆசனவாய் பாதுகாப்பாக உள்ளது. மலமும் வாயுவும் வெளியேறும் போது மட்டும் விரிந்து மற்ற நேரங்களில் இறுக்கமாகச் சுருங்கியிருக்கும் தன்மையுள்ள சுருங்கு தசைகள் (sphincters) இங்கு உள்ளன. ஆசனவாயில் நடைபெறும் ஆபரேஷன்களை எளிய, சிறிய (Minor Surgeris) ஆபரேஷன்கள் என்றே ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆயினும் மைனர் ஆபரேஷனுக்குப் பின் பேரிய பின் விளைவுகள் (Major side effects) ஏற்படுவதை முதலில் கூறுவதில்லை.

ஆபரேஷனுக்குப் பின்பு ஆசனவாய் சுருங்குதசைகள் (Sphincter Muscles) பாதிக்கப்பட்டு மலத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது (Incontinence). சிலருக்கு மலக்குடல் அடைப்பு (Stricture) ஏற்பட்டு விடுகிறது.

மூலம் (Piles), பவுத்திரம் (Fistula in Ano), பவுத்திர சீழ்க்கட்டி (Perianal Abscess), பிளவுப் புண் (Fissure in Ano), ஆசனவாய் நமைச்சல் அரிப்பு (Anal Pruritus), தொங்குசதைக் கட்டி (Anal Polyp), மலக்குடல் & ஆசனவாய் பிதுக்கம் (Anal & Rector Prolapse), ரத்தப்போக்கு போன்றவை ஆசனவாய் சார்ந்த பொதுவான நோய்களாகும். ஆயினும் இவற்றில் எந்த நோய் ஏற்பட்டாலும் ‘எனக்கு பைல்ஸ் உள்ளது’ என்று தான் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தீர விசாரித்தும், உடற்பரிசோதனை செய்தும், தேவையெனில் ஆய்வுக் கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் நோயையும், நோய் நிலையையும் மருத்துவர்கள் கண்டறிந்து உறுதி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கின்றனர்.

‘மூலம்’ என்ற நோய் தவிர்த்து பிற முக்கிய ஆசனவாய் நோய்களையும் அவற்றை நலமாக்கப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் பற்றியும் பார்ப்போம். (மூலம் தனி கட்டுரையாக விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று).

ஆசனவாய் பிளவுகள் (fissures in Ano) : மலங்கழித்தல் என்பது இயல்பான, சிரமமற்ற உடலியல் நிகழ்வாக நடைபெற வேண்டும். மாறாக மிகக் கடினமான, வேதனை மிக்க நிலை மலங்கழிக்கும் போது ஏற்பட்டால் ஆசனவாய் பகுதி காயம்பட்டு விடும். மலச்சிக்கல் பேர்வழிகளுக்கு மலப்பாதை வழியே மிகக் கடினமான இறுக்கமான மலம் சிரமப்பட்டு வெளியேறுவதன் விளைவே ஆசனவாய் பிளவுப் புண்கள் (Cracks). இது ஆசனவாய் கிழிந்து விடும் நிலையாகும் (Tear in Anus). பிறப்புறுப்பு வழியே பிரவசிக்கும் (Vaginal Delivery) பெண்களுக்கும் ஆசனவாயில் ஏற்படும் அழுத்தங்களால் பிளவுப் புண்கள் ஏற்படக் கூடும்.

ஆசனவாய்ப் பிளவுப் புண்கள் இருப்பதற்கான முக்கிய அறிகுறி

மலங்கழிக்கும் போதும், சிலருக்கு மலம் கழித்த பின்னரும் ஆசனவாயில் கடும்வலி ஏற்படும். இந்நோயைப் பலரும் மூலம் (Piles) என்றே கருதி சிகிச்சைக்கு வருவதுண்டு. இந்நோய் தீவிர (acute) வலியுள்ள வகை. நாள்பட்ட (acute) வலியுள்ள வகை எனப் பிரிக்கப்படுகிறது. நாள்பட்ட வகையில், ஆசனவாயில் முக்கோண வடிவமுள்ள தோல் தொங்கும். இதை Sentinal Pile என்று அழைத்த போதிலும் இது மூல நோய் அல்ல.

தீவிர மற்றும் நாள்பட்ட ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷன் இன்றி, பக்க விளைவுகள் இன்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை. மிகவும் பாதுகாப்பானவை.

நைட்ரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷனின்றி, பக்க விளைவுகளின்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை, மிகவும் பாதுகாப்பானவை.

நைட்டிரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோஒபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு அற்புத நலமளிக்கும் திறன் கொண்டது. ஆசனவாயில் கிழிபடுகிற, குத்துகிற, கொட்டுவது போன்ற, வெட்டுவது போன்ற வலி ஆசனவாயில் ஏற்படுமாயின் இம்மருந்து பேருதவி புரிவது திண்ணம். மேலும் கடினமலம், மலத்துடன் ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வு கிட்டும்.

ரட்டானியா (Ratanhia) என்ற ஹோமியோ மருந்தும் ஆசனவாய் பிளவு நோயில் சிறந்த நிவாரணமளிக்கக் கூடியதாக திகழ்கிறது. மலம் கழித்த பின் மலப்பாதையில் & ஆசனவாயில் அதிகளவு எரிச்சல் உணர்வும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய வலியும் காணப்படும். ஆசனவாய் வாய் வழியாக மலக்குடலுக்குள் ஒரு கத்தியையோ, உடைந்த கண்ணாடித் துண்டையோ கொண்டு செருகியது போல் வலிப்பதாக நோயாளி விவரிப்பார். ஆசனவாய் மிகவும் இறுகிவிட்டது போல (Constricted) இளகிய மலத்தைக் கூட மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றும் நிலை ஏற்படும். இத்தகைய நிலையில் ரட்டானியா அற்புதங்கள் நிகழ்த்தும் என்பதை ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் அறிவார்கள்.

இவ்விரண்டு மருந்துகள் தவிர சல்பர், பேயோனியா, கிராபைட்டீஸ், தூஜா, இக்னேஷியா, Sedun Acre போன்ற சில மருந்துகளும் ஆசனவாய் பிளவுப் புண்களை முழுமையாகக் குணப்படுத்தும் முன்னணி மருந்துகளாகத் திகழ்கின்றன.

ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் (PRURITUS ANO) : ஆசனவாயைச் சுற்றித் தாங்க முடியாத அரிப்பு (Itching) ஏற்படுவதை தான் PRURITUS ANO என்கிறோம். பொது இடத்தில் இருக்கும் போது கூட ஒரு நபர் ஆசனவாயில் கை வைத்து தேய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரிப்பு இருக்கும். இதைக் காணும் பிறருக்கு அருவருப்பாக இருக்கும். ஆசனவாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும், குடற்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் இத்தகைய ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளால் பெரும்பாலும் குழந்தைகள் தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சல்பர், நைட்ரிக் ஆசிட், காஸ்டிகம், லைகோ, சபடில்லா போன்ற ஹோமியோபதி மருந்துகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகின்றன.

தொங்குசதை (POLYP) : மலக்குடலினுள்ளும் சில சமயம் ஆசனவாயின் வெளியேயும் தெரியும் தொங்குசதை POLYP எனப்படுகிறது. சிவப்பான ரத்தம் கசியும் சதை இது. ஆங்கில மருத்துவத்தில் இதனை POLYPECTOMY எனும் சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர். சிலருக்கு ஒன்றுக்கு மேல் இச்சதை இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இச்சதையை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் : டுக்ரியம், பாஸ்பரஸ், தூஜா, காலிபுரோம்.

மலக்குடல் பிதுக்கம் (PROLAPSE RECTUM) : மலம் கழிக்கும் போது, மலக்குடல் முழுவதும் ஆசனவாய் வழியாக வெளியே தள்ளப்பட்டு பிதுங்கித் தொங்கும். இந்தச் சதை 3 அல்லது 4 அங்கும் நீளத்திற்குத் தொங்கும். இச்சதை பார்ப்பதற்கு அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகளும், முதியவர்களும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவயதில் வரும் இந்நோய் தானாகவே குணமாவதுண்டு. பெரியவர்களுக்கு வந்தால் மலக்குடலை உள்ளே தள்ளி நிலைநிறுத்தும் RECTOPEXY அறுவைச் சிகிச்சை ஆங்கில மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹோமியோபதியில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை ஆலோ, இக்னேசியா, மூரியாடிக் ஆசிட், போடோ பைலம், ரூடா, அபிஸ், கல்கேரியா கார்ப், சிலிகா, செபியா, மெர்க்சால் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மலக்குடல் இறக்கத்திற்கு முழு நிவாரணம் அளிக்கின்றன. கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலக்குடல் இறக்கத்திற்கு போடோபைலம், ரூடா ஆகிய இருமருந்துகள் அற்புதமாக பயன் தருகின்றன.

ஆசனவாய் நோய்களுக்கு ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவங்களில் மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரத்தப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த, கடுமையான வலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க, பின் விளைவுகள் நிறைந்த அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்க்க ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே மிகவும் சிறந்தவை.

Dr.S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

]]>
ஆசனவாய் நோய்கள் , Piles https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/6/w600X390/homeopathy-pregnancy.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/mar/06/ஆசனவாய்-நோய்கள்-அலட்சியம்-வேண்டாம்-2661102.html
2648245 தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகளும் ஹோமியோபதி தீர்வுகளும் டாக்டர் வெங்கடாசலம் DIN Monday, February 13, 2017 10:00 AM +0530 இந்திய சமூக அமைப்பில் ஒரு குடும்பத்தில் பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்து விடக்கூடாது. பருவமடைந்த காலம் முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை ஏற்படக்கூடிய பெண்களின் உடல்நலப் பிரச்னைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாமலும், தங்கள் பிரச்னைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமலும் இருக்கும் பெண்கள் பலர். கல்வியும், நாகரிகமும் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்னைகளுக்கு மருத்துவம் செய்து கொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு சிறப்பாக பயன் தரக்கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிகளவு இருப்பதால், பெண்கள் தங்களின் எவ்வித உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கும் முழுநம்பிக்கையோடு ஹோமியோபதி சிகிச்சைக்கு வரலாம்.

பெண்களின் ஐந்து முக்கிய அந்தரங்கப் பிரச்னைகளைப் பற்றிப் பார்ப்போம்.

முன்மாதவிடாய் நோய்க்குறிகள்

P.M.S (Pre Menstrual Syndrome) எனப்படும் முன் மாதவிடாய் நோய்குறிகள் சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிருநாள் முன்பாகவே வந்துவிடுகிறது. இதன் விளைவாக அன்றாட வாழ்க்கையும், பணிகளும் பாதிக்கப்படுகின்றன. மாதவிடாய் முற்றுப்பெற்றதற்கு (Menopause) பின்பு தான் P.M.S பிரச்னைகளிலிருந்து சில பெண்கள் விடுதலை அடைகின்றனர்.

பெண் உடலில் ஹார்மோன்கள் நடத்தும் திருவிளையாடல்கள் இவை. மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் அதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது கூறுணர்ச்சி மிக்க பெண்களை அதிகம் தாக்குகிறது. ஏற்கனவே மன அழுத்தமும் மன நெருக்கடிகளும் இருப்பின் P.M.S தொந்தரவுகள் மேலும் அதிகரிக்கின்றன.

P.M.S.ன் முக்கிய அறிகுறிகள் : பயம், பதற்றம், படபடப்பு, சிடுசிடுப்பு, கோபம், எரிச்சல், பலவீனம், தூக்கம் பாதிப்பு, பசியின்மை, உடல்வலிகள், தலைவலி, மார்பக வீக்கம், வலி, தாம்பத்திய வெறுப்பு போன்றவை P.M.S.ன் முக்கிய அறிகுறிகளாகும். பெண்ணுக்குப் பெண் அறிகுறிகள் வேறுபடலாம். துல்லியமாக உற்றுநோக்கி, பாதிப்புகளை ஹோமியோபதி மருத்துவரிடம் எடுத்துரைத்தால் குறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் மூலமும் உடலைப்புக்கேற்ற (Constitutional Remedy) மருந்து மூலமும் முழுகுணம் பெற முடியும். சிமிசிபியூகா, பல்சடில்லா, லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், கிரியோசோட்டம், லில்லியம் டிக், பொவிஸ்டா, லைகோபோடியம் போன்ற போன்ற மருந்துகள் மாதவிடாய் அவதிகளிலிருந்து முழுவிடுதலை அளிக்க உதவுகின்றன.

வலிமிக்க மாதவிடாய் (Dysmenorrhea)

மரங்களில் செடி கொடிகளும் பருவ காலங்களில் பூத்துச் சிரிப்பது போல் பெண்களும் மாதமாதம் பூக்கிறார்கள். ஆனால் இது பல பெண்களுக்கு தொந்தரவும் துயரமும் ஏற்படுத்திவிடுகிறது. மாதவிடாயுடன் தொடர்புடைய பல பிரச்னைகளில் பெண்களை பெருமளவு வாட்டி வதைக்கும் பிரச்னை மாதவிடாய் கால வலிகள் தான். இதனால் மாதவிடாய் காலம் என்பது நெருப்பை நீந்திக் கடக்கும் துயர அனுபவமாக அமைந்துவிடுகிறது.

நரம்பியல் காரணங்களால், பிறப்புறுப்பில் ஏற்படும் ரத்த தேக்கத்தால் (Congestion), கர்ப்பப்பையின் உட்புற சவ்வு வீக்கத்தால், கர்ப்பப்பையின் இடப்பெயர்ச்சியால், கட்டிகள் போன்ற தேவையற்ற வளர்ச்சிகளால், நாட்பட்ட மலச்சிக்கலால், கடுமையான மனநல பாதிப்புக்களால் மாதவிடாயின் போது வலிகள் தோன்றுகின்றன அடிவயிறு, முதுகு, இடுப்பு, தொடைப்  பகுதிகளில் வலிகள் தாக்கக் கூடும். இது நீடித்தால் மலட்டுத்தன்மை, ஹிஸ்டீரியா மற்றும் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக்கூடும். இந்தப் பிரச்னைக்கு அவரவர் குணங்குறிகளுக்கேற்ப ஹோமியோபதியில் மருந்துகள் அளிக்கப்படும் போது வலித்துயரம் நீங்கி இயல்பான மாதவிடாய் ஏற்படும். முக்கிய மருந்துகள் : கோலாசிந்திஸ், அக்டியாரசிமோசா, காலோபைலம், வைபூர்ணம் ஓபுலஸ், மேக்பாஸ், சைக்ளமென், லாக்கானினம், செபியா, பெல்லடோனா, சாந்தோசைலம், போராக்ஸ், பல்சடில்லா

மார்பக அளவும் ஆரோக்கியமும்

பெண்மைக்கு அழகூட்டும் மார்பகங்கள் பெண்கள் அனைவருக்கும் ஒரே அளவில் அமைவதில்லை. திசுக்கள் (Tissues), கொழுப்பு (Fat), சுரப்பிகள் (Glands), மற்றும் நாளங்களால் (Ducts) ஆனது மார்பகம். இதன் பருமனும் அளவும் பாரம்பரியக் காரணங்களாலும் கொழுப்பைப் பொறுத்தும் அமைகின்றன. மார்பகங்களின் பிரதானப் பணிகள் தோற்றப் பொலிவைத் தருதல், பாலுணர்ச்சியில் பங்கு வகித்தல், பால் சுரந்து ஊட்டுதல்.

மாதவிடாய் காலத்திலும், கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மார்பகங்களின் அளவு, செயல்பாடு, தன்மைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனினும் வயதுக்கேற்ற, உயரம் மற்றும் உடல் அமைப்புக்கேற்ற மார்பகங்கள் அமையாவிட்டால் பெண்மனம் படும்பாடு கொஞ்சமல்ல! பருவமடைந்த பிறகும் குறைவான மார்பக வளர்ச்சி, ஒரு மார்பகம் மட்டும் அளவில் சிறுத்துக் காணப்படுதல், முன்பு வட்ட வடிவில் சதைப்பற்றுடன் அழகாக இருந்த மார்பகங்கள் இப்போது தட்டையாகிச் சிறுத்துவிடுதல் – காம்புகள் உள் அமுக்கி இருத்தல், கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமையுடன் (Infantile Uterus) மார்பகமே வளராமை அல்லது மிகச் சிறிய அளவில் மார்பக வளர்ச்சி காணப்படுதல், வயதுக்கும் உடலுக்கும் பொருந்தாத பெருத்த மார்பகங்கள் போன்ற அனைத்து வித மார்பக அளவு சார்ந்த பிரச்னைகளுக்கும் ஹோமியோபதியில் சிறந்த நிவாரணம் பெற முடியும். சிறைய மார்பகங்களின் அளவை அதிகரிக்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், சபல்செருலேட்டா, சிமாபிலா, கோனியம், மமரி, கல்கேரியா, கார்ப், ஓனோஸ்மோடியம், பிட்யூட்டரினம், அயோடியம், லைகோபோடியம், நக்ஸ்மாஸ் போன்ற ஹோமியோபதி மருந்துகள் நம்பகமான பலன் அளிக்கின்றன.

வெள்ளைப்பாடு என்ற தொல்லைப்பாடு

கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளால் பலருக்கும் வெள்ளைப்பாடு ஏற்படுகிறது. கருப்பை வாய்ப்பகுதி அழற்சி, புண், சிறுகட்டிகள் காரணமாக மஞ்சள் நிற வெள்ளைப்பபாடு வரக்கூடும். அடிவயிற்றிலும் கடும்வலி ஏற்படும். கர்ப்பப்பை கட்டி, புற்று உள்ள பெண்களுக்கு மிகுந்த துர்நாற்றமுள்ள வெள்ளைப்பாடு ஏற்படும். இது நாளடைவில் அதிகளவிலும் உள்ளாடை நனைத்து கறையேற்படுமளவும், ரத்தம் கலந்தும் கூட வெளிப்படும். புணர்புழை அழற்சி காரணமாகவும் வெள்ளைப்பாடில் ரத்தம் கலந்திருக்கக்கூடும். ஆனால் அது புற்று அல்ல. பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம் வெட்டை நோய் (Gonorohea). கிரந்திநோய் (Syphillis) காரணமாகவும் வெள்ளைப்பாடு நிகழ்கிறது. காப்பர் டி போன்ற கருத்தடைச் சாதனங்களைப் பொருத்துதல், செருகு மாத்திரைகளை பயன்படுத்துதல், களிம்புகள், சிலவகை மருந்துகள் காரணமாக அழற்சி உருவாகி வெள்ளைப்பாடு ஏற்படுமானால் அவற்றை நீக்கினால் மட்டுமே வெள்ளைப்பாடு நீங்கும்.

வெள்ளைப்பாடு துயரிலிருந்து விடுதலைபெற போராக்ஸ், அலுமினா, செபியா, பல்சடில்லா, சிபிலினம், பியூலெக்ஸ், கிரியோசோட்டம், நைட்ரிக் ஆசிட், ஓவாடோஸ்டா போன்ற ஹோமியோ மருந்துகள் உறுதுணை புரிகின்றன.

பாலுணர்வுப் பிரச்னைகள்

பதின்பருவம் (teen Age) சுவாரசியமானது. இந்த வயதில்தான் ஆண் பெண் இருவரும் எதிர் எதிர் துருவங்களை விட வேகமாக ஈர்க்கப்படுகின்றனர். இத்தகைய ஈர்ப்பை, இனக்கவர்ச்சியை (Infactuation) காதல் என்று தவறாகக் கருதி பாதிப்புக்குள்ளாகும் பருவப் பெண்கள் ஏராளம். ஊடகங்களின் தவறான வழிகாட்டல்களால், மேற்கத்திய கலாச்சார தாக்கங்களால், அதீத உடல், மன இயக்கங்களால் சுய இன்பப் பழக்கத்திற்கு ஆண்களைப் போலவே பெண்களும் ஆட்படுகின்றனர்.

இன்றைய பெண்களில் 60 சதவிகிதங்கள் மேற்பட்டோரிடம் சுய இன்பப் பழக்கம் காணப்படுகிறது. எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், அடிக்கடி சுய இன்பம் காணுதல், நீண்ட கால சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு குளிர்ந்து, தளர்ந்து, பலவீனமடைதல், பருவமடையும் முன்னரே இப்பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பத்தில் ஈடுபடுதல், மாதவிடாய் நாட்களில் சுய இன்ப உணர்வு மேலோங்குதல், கீரிப் பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுதல், ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில் ஈடுபடுதல். பெண்ணுறுப்பில் கடுமையான தினவு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல், விதவைகள் மற்றும் துணைவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்குக் கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு தூண்டுதல் நிலை காரணமாக சுய இன்ப பழக்கம் ஏற்படுதல் போன்ற வெவ்வேறு தன்மைகள் கொண்ட இப்பழக்கத்திலிருந்தும், அதன் தீய பின் விளைவுகளிலிருந்தும் பெண்களின் ஆரோக்கியத்தை மீட்க ஹோமியோபதியில் நூற்றுக்கும் மேலான மருந்துகள் பயன்படுகின்றன. அவைகளில் சில : அக்னஸ் காஸ்டஸ், பிளாட்டினா, ஜிங்கம் மெட், கலாடியம், ஜெல்சிமியம், ஸ்டாபிசாக்ரியா, மூரக்ஸ், அபிஸ்மெல். மிகக் குறிப்பாக சுய இன்பப் பழக்க அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்க ஓரிகானம், கிராஷியோலா, மூரக்ஸ், ட்ரைகிளினம் ஆகிய மருந்துகள் சிறந்த பயனளிக்கின்றன. பெண்கள் தங்களின் எவ்வித பாலியல் குறைபாடுகளையும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து இல்லறத்தை நல்லறமாக்க முடியும்.

Dr. S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் 94431 45700

Email – altmed@gmail.com 

]]>
பெண்களின் பாலியல் பிரச்னைகள், woman related problems, homeopathic solutions https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/12/w600X390/a-happy-woman.jpg https://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/feb/13/பெண்களின்-அந்தரங்கப்-பிரச்னைகளும்-ஹோமியோபதி-தீர்வுகளும்-2648245.html