Dinamani - மகப்பேறு மருத்துவம் - https://www.dinamani.com/health/maternity/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2775914 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமாமே? Tuesday, September 19, 2017 11:34 AM +0530
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமாமே?

தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. குழந்தை கருப்பாகப் பிறப்பதற்கு, இரும்புச்சத்து, மாத்திரைகள் மற்றும் டானிக் ஆகியவை எந்த வகையிலும் காரணமில்லை. குழந்தையின் சரும நிறம், வடிவம், உடல்வாகு, அறிவுத்திறன் மற்றும் குணங்கள் ஆகிய அனைத்தும் பெற்றோரிடமிருந்து வருபவையே.

கர்ப்பமாக இருக்கும்போது சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சூடு தெரியுமா?

கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானம் - உணவுப் பொருள்களை சாப்பிடும் பழக்கம், ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பிடும்போது உணவுக்குழாய் புண்ணாகி அல்சர் வர வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?

தேனில் ஆன்ட்டி - ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்ஸிஜன் ப்ரீ - ரேடிக்சின்களைக் கட்டுப்படுத்தி, மூளை, இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும். ரத்த சர்க்கரை அளவில் இன்சுலின் குறைவாக இருப்பவர்கள், சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். இது 'ரத்த சர்க்கரை' அதிகமாக இருப்போருக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரித்து, வயிற்றில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட்டு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை கூடுமா?

இது முற்றிலும் தவறு. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போ ஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம். உடம்பின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை, தங்களுக்கான இயங்கு சக்திக்கு கார்போ ஹைட்ரேட்டுகளையே பெரிதும் நம்பி உள்ளன.

இவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, நீங்களாகவே ஒரு டயட் பின்பற்றினால், உடம்பில் மாவுச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கர்ப்பகால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகள் வரும்.

கர்ப்பகாலத்தில் ரத்தத்தில் இன்சுலின் - உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன்?
சிலருக்கு ஒபிசிட்டி - மரபியல் காரணமாக இப்படி நிகழலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ இரத்த சர்க்கரை இருந்து, அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. அப்படி பரவும்போது குறைப்பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாவது 'இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன்'. 

உப்பின் அளவு அதிகரிப்பால், கருவிலேயே குழந்தை இறந்துவிடும் நிலைக்கு 'இன்ட்ராயூட்டரின் டெத்' என்று பெயர். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ந்து "செக்-அப்' செய்து வர வேண்டும்.

கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்க படுத்தால், கருவை நஞ்சுக்கொடி சுற்றிக் கொள்ளும் என்கிறார்களே, உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?

மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் பி.பி. இறங்கும். இதனால் தலை சுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய் - சேய் இருவருக்கும் நல்லது.

(பவித்ரா எழுதிய 'பெண்களுக்கான கர்ப்ப  கால ஆலோசனைகள்' நூலிலிருந்து...  வெளியீடு: அருணா பப்ளிகேஷன்)

 

]]>
Pregnancy, Iron, மகப்பேறு, இரும்புச் சத்து, ரத்த சோகை, கர்ப்பிணி https://www.dinamani.com/health/maternity/2017/sep/19/pregnancy-care-frequently-asked-questions-2775914.html
2674997 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் தலைப்பிரசவமா? பயம் வேண்டாம்! Wednesday, March 29, 2017 03:32 PM +0530
 
பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி... அதை உடல் வலுவுடனும், மனவலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள்.
 
அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.
 
மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், 'எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!' என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
 
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ளே செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...  அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!
 
இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும்.  'ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா... இரு நானும் வர்றேன்' என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.
 
வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்... பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
 
நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின!
 
அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனத்தில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்... இரண்டு, நான்கு, ஆறு... என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்....
 
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசயம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

ச.பாலகிருஷ்ணன், கோவை

]]>
https://www.dinamani.com/health/maternity/2017/mar/29/தலைப்பிரசவமா-பயம்-வேண்டாம்-2674997.html
2638782 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் Thursday, January 26, 2017 05:32 PM +0530 பெண்களுக்கு மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும் காலம் கர்ப்ப காலம். இச்சமயத்தில் சில பெண்களுக்கு அழையா விருந்தாளியாக சர்க்கரை நோய் வந்துவிடும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாறி, ரத்தத்தில் கலக்கிறது. கணயத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை உடல் திசுக்கள் பயன்படுத்தும்படியாகச் செய்கிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. அதன் காரணமாக இன்சுலின் செயல்பாடு பாதிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இதைத்தான் மருத்துவர்கள் கர்ப்ப கால சர்க்கரை நோய் என்கிறார்கள். கர்ப்ப காலத்தில் 20 வது வாரத்தில் இது ஏற்படும். பிரசவத்துக்குப் பின் சரியாகிவிடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த சர்க்கரை நோயை உடற்பயிற்சிகள் மூலமாகவும் சத்துணவுகளாலும் கட்டுப்படுத்தலாம்.. 25 வயதுள்ளவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உடையவர்கள் போன்றோர் கர்ப்ப கால ஆரம்பத்திலேயே அதைப்பற்றி மருத்துவரிம் கூறிவிட வேண்டும். கருவுற்ற பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியம். கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக இனிஷியம் குளுகோஸ் சேலன்ஜ் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் சில நாட்கள் கழித்து குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டும் எடுத்து விட வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்கலாம். உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நார்சத்து நிறைந்த உணவுகளாகிய தானிய வகைகள், பழங்கள், முக்கியமாக ஆரஞ்சு, ஆப்பிள், காய்கறிகளான அவரை பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, பசலை கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் சரியாகக் கிடைக்கும் உணவை சாப்பிடவேண்டும். கொழுப்புச்சத்தும் அதிகரித்துவிடாமல் உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

]]>
கர்ப்ப கால சர்க்கரை நோய், diabetes, Pregnancy https://www.dinamani.com/health/maternity/2017/jan/26/கர்ப்ப-காலத்தில்-சர்க்கரை-நோய்-2638782.html