Dinamani - மனநல மருத்துவம் - https://www.dinamani.com/health/mental-health/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3054149 மருத்துவம் மனநல மருத்துவம் இவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்ன? மாலதி சுவாமிநாதன் Saturday, December 8, 2018 11:27 AM +0530 மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

பாகம் 5: வளர்ச்சிக்குத் தெளிவே உறுதுணை!

தெளிவாகப் பரிசோதித்து, கூர்மையாகவும், முழுமையாகவும் ஆராய்ந்தால், பிடிப்பு கூடும்! அத்துடன், செய்வதை ரசித்துச் செய்தால் வளர்ச்சி தானாக ஏற்படும். இலக்கை அடைவது மிக எளிதானதாகும்!

சென்ற வாரம் இப்படிப்பட்ட அகண்ட பார்வை உள்ளவர்களை மையமாக வைத்தே விவரித்து வந்தோம். இப்படி இருப்பவர்கள் ‘பரந்த மனப்பான்மை’ உள்ளவர்களாக இருப்பது நிதர்சனம். இப்பொழுது, இவர்களைப் பற்றிய விவரங்களைப் பேசலாம்.

நாம் நடந்து கொள்ளும் முறை நம் உணர்வுகளையும் சிந்தனையையும் நிர்ணயிக்கும். இவை ஒட்டுமொத்தமாக நம் மனப்பான்மையாகும். அப்படியானால் மனப்பான்மை மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? இந்தத் தொடரின் முதல் பாகத்தில் மாற்றமில்லாமல் இருப்பது எதனால் என்பதைப் பார்த்துவிட்டு, கேள்வியின் இரண்டாவது  புறமான மனப்பான்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி இப்பொழுது பார்த்து வருகிறோம்.

தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாதவர்கள் அடுத்தவர்கள் சொல்லுக்கு ஏங்கி, பிறர் தரும் சபாஷில் ஊக்கம் பெற்று, எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள அஞ்சி, நாட்களைக் கடத்துவார்கள். மன உறுதி மிக மங்கியதாக இருக்கும்.

மனப்பான்மை ‘மாற்றக்கூடியது’ என்றவர்கள் என்றுமே ‘இது போதும் / இது மட்டும்’ என்ற எல்லையோ, தடையோ போட்டுக் கொள்ள மாட்டார்கள். இதைப் போன வாரம் பார்த்தோம்.

உதாரணத்துக்கு : சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பொழுது: ‘நாம் கீழே விழக் கூடாது, அடிபடாமல் கற்றுக் கொள்வேன்’ மனப்பான்மை மாற்றமில்லாதது என எண்ணுவோரின் கையாளும் விதமாக இருக்கும். ஏதாவது செய்யும்போது சாவதானமாக இருப்பது நல்லது தான். எல்லாவற்றுக்கும் சாவதானம் கொள்வதால் சவால்களைப் புறக்கணிப்பார்கள். முன்னேற்றத்தைப் பாதிக்கும். இப்படி அவர்கள் பலவிதமான ‘கவசம்’ அணிவதைப் பற்றியும் பேசி வந்தோம். இவர்கள், மற்றவர்கள் சொற்படி செயல் படுவார்கள்.

அதற்கு மாறாக, அதே மாதிரியான சூழலில் (சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பொழுது), ‘அடி படலாம்’, ‘விழக்கூடும்’, என்று ஒப்புக் கொண்டு, கற்க வேண்டியதை எவ்வாறு மேம்படுத்துவது ‘எப்படி என்று பார்க்கலாம்?’ என்று அணுகுவார்கள். இதைத்தான் பறந்த மனப்பான்மை என்கிறோம். எந்த ஒரு தடையின்றி, எதிர்பார்ப்புகளை முன் வைக்காமல் இருப்பவர்களாக  இயங்குவார்கள்.

மனப்பான்மை மாற்றி அமைக்க முடியும் என்பவரே இப்படிச் செய்வார்கள். மனப்பான்மை மாற்றி அமைக்க முடியும் என்ற கண்ணோட்டம் உள்ளவர்கள் எப்போதும் எதையும் செய்யச்செய்ய, சபாஷைவிட முயற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள்.

எதைச் செய்தாலும், மிகைப்படுத்தி செய்வார்கள்!

தன் தகுதி நிலையை உயர்த்தல்!

பறந்த மனப்பான்மை உள்ளவர்கள் வெளி மனிதர்களுடன் போட்டி இட மாட்டார்கள். இவர்களுக்கு, போட்டியாளர், தனக்குத் தானே வகித்துக் கொள்ளும் தகுதியே! ஒவ்வொரு முறையும் எதைச் செய்கிறார்களோ அதனுடைய தரத்தை ஓர் படி அளவிற்கு உயர்த்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஒரு விதத்தில் அது அவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறே இருக்கும்.

இதிலிருந்து தெளிவாக தன்னைப் பற்றிய புரிதல் அமைவது கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது இதுவெல்லாம் செய்ய முடியும், இதுவோ செய்ய முடியாது எனத் தெரிந்து செயல்படுவது மிக முக்கியமான பங்கு. இன்னொரு விதத்தில் பார்க்கையில், இவர்கள் தங்களைப் பற்றி எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருப்பதால் இந்த அறிதல் ஏற்படுகிறது என்றும் தெரிகிறது. மேலும், ஏற்றவாறு செயல் படுகிறார்கள் என்பதிலிருந்து அவர்களுள் உள்ள பக்குவத்தை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

நம்மை நாமே அறிந்து கொண்டால், மேம்படுத்திக் கொள்ள வழிகளை அமைத்துக் கொள்வோம். அதனால் தான் மற்றவர்களுடன் போட்டியிட வேண்டும் என்றே இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் செய்ததைவிட மேம்படுத்திக் கையாளுவதாலும், செய்வதில் முழு கவனத்தை செலுத்துவதாலும் முடிவு நன்றாக அமையும். அவர்கள் செய்யும் வகைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், முடிப்பதற்கு அல்ல.

இவர்களுக்கு விளைவுகள் முக்கியமற்றவை. அவர்களைப் பொருத்தவரை, கொடுத்த வேலையை அவசரமாகச் செய்வதிலோ, இல்லை முடித்து வெற்றி அறிவிப்பதோ இவர்களின் குறிக்கோள் ஆகாது. இவர்கள் செய்வதில், செய்யும் பொழுது அதில் ஏதோ ஒன்று தெரியவில்லையோ இல்லை புரியவில்லையோ என்றால், அவற்றை கற்றுக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள். தோல்விகளை, இடையூறுகளை ஒரு புதிராகக் கருதிச் செய்வதால் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனால் பல விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்கும்.

இதுதான் அவர்கள் தரத்தை அதிகரித்து வைப்பதற்கு ஓர் காரணியாகும். அதாவது ஒன்று செய்கையில் அதன் பல விவரங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதாகலாம். ‘எதற்காக இவையெல்லாம்?’ என்று இல்லாமல் இதையும் அறிந்து கொள்ள வாய்ப்பு என்று கருதி கற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் இவர்களைப் பொறுத்தவரை ஒளவையார் சொன்ன 'கல்லாதது உலகளவு' என்ற மனப்பான்மையினால்.

இதன் இன்னொரு பிரதிபலிப்பு, மற்றவரின் பாராட்டுக்கு மட்டும் இணங்கிச் செய்யமாட்டார்கள். கடுமையாக உழைத்து, உதவி நாடி, முன்-பின் இருக்கும் தவற்றைத் திருத்தி, நிவர்த்தி செய்து வேலையை முடிப்பார்கள். தனக்குத் தானே சபாஷ் சொல்லிக் கொள்வார்கள். அதாவது அவர்களாகவே தங்களுக்கு தாமே தரத்தை வகிப்பதுண்டு. இவ்வாறு வகித்துக் கொண்ட தரத்தை அடைந்து விட்டார்கள் என்றால் அதை ஆமோதித்துக் கொள்வதில் எந்த வித ஆட்சேபனைப் பட மாட்டார்கள். இப்படிச் செய்வதில் எந்தவிதமான கர்வப் படுவதும் அல்ல.

எடுத்ததை முடிக்க முடியும் என்றே அணுகுவார்கள். இங்குப் போட்டிக்கோ, பொறாமைக்கோ, தன்னலத்துக்கோ, கசப்புக்கோ துளியும் இடம் இருப்பதில்லை. இவர்களின் யுக்தி, இதற்கு முன் தாம் செய்ததை விட ஒரு படி மேம் படுத்தப் பார்ப்பார்கள்.

இவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் இன்னொன்று உண்டு. தாங்கள் செய்வதை மற்றவருடன் ஒப்பிட மாட்டார்கள். அவர்களின் சூழ்நிலையை அறிந்து கொள்வதால் இப்படி அணுகுவது சாத்தியமாகிறது. இதன் விளைவாக, யதார்த்த கணிப்பும், தன் நம்பிக்கையும் கை கொடுக்கிறது.

தம் குறைபாடுகளை புரிந்து சரி செய்வதால் இப்படி இயங்க முடிகிறது! இதனாலேயே, இவர்களிடம் கர்வம், அகம்பாவம் துளியும் இருக்காது. தோல்வியைச் சந்தித்தால் 'எதை மிஸ் பண்ணோம்?' என்று தேடுவார்கள். இப்படி வளைந்து கொடுக்கும் தன்மையினால் பாதுகாப்பின்மை இருக்காது. இதன் முக்கியமான விளைவு, மற்றவர்களின் செயல்பாட்டை புகழ்வார்கள். தாராளமாகச் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதும் சேரும்.

கவசம் காப்பாற்றவோ, புகழுக்காகவோ ஏக்கமோ இருக்காது. சமநிலையில் இருப்பதால் மற்றவரும் சுலபமாக இவர்களிடம் சந்தேகங்கள் கேட்பார்கள். இவ்வாறு, சுதந்திர மனப்பான்மை உள்ளவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தாராளமாக அவர்களின் வகுப்புத் தோழர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். உதாரணமாக, தனக்கு எழும் சந்தேகங்களை வகுப்புத் தோழர், டீச்சர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வார்கள். தேவையானால், இன்டர்நெட், நூலகம் போன்ற இடங்களில் தேடி தெளிவு படுத்துவார்கள். கேட்பதிலும் சரி, தெரிந்து கொள்வதிலும் சரி, ஏற்றத்-தாழ்வு என எண்ணம் எந்நாளும் இருப்பதில்லை. சுதந்திர மனப்பான்மையே வெற்றியைத் தருகின்றது!

இதனாலேயே, பல சமயங்களில் இவர்கள் வரம்புகளுக்கு அப்பால் செயல் படுவார்கள்! மதிப்பெண் தான் என் பிரதிபலிப்பு என்று கருதவே மாட்டார்கள். தெரியல-புரியல என்றால் கேட்டு-அறிவது தான் இவர்களின் அட்டை, அடையாளம். புது இடம் செல்ல வேண்டுமானால், இவர்களே சரியான ஜோடி!

நாம் கவனித்தோமானால், இவர்கள் வாழ்க்கையில், வெற்றி கூடிக் கொண்டே இருக்கும். அதைச் சத்தம் போடாமல், வெளிப் படுத்தாமல், தன் புகழை பாடாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

பயமில்லாமல், தன்நம்பிக்கை நிறைந்தவராக, வாய்ப்புகளைப் பூர்ணமாக உபயோகித்து, தன்னை வளர்த்துக் கொள்ள எந்த விதத்தில் செயல்படுவது என்பதைப் அடுத்த வாரங்களில் பார்வையிடலாம்.

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

 

]]>
mananalam, mental health, mind power https://www.dinamani.com/health/mental-health/2018/dec/08/இவர்களின்-வெற்றிக்கு-அஸ்திவாரம்-என்ன-3054149.html
3042304 மருத்துவம் மனநல மருத்துவம் 5. மனப்போக்கு: மாற்றக் கூடியவை! அகண்ட பார்வை மாலதி சுவாமிநாதன் Tuesday, November 20, 2018 11:30 AM +0530 மனப்பான்மையைப் பற்றி, குறிப்பாக, அது எவ்வாறு ‘மாற்றமில்லாததா?’ என்பதைப் பற்றி கடந்த சில வாரங்களாக பேசிக் கொண்டு  வருகிறோம். நம்முடைய மனப்பான்மை நாம் நினைக்கும் விதங்களில், ஆற்றலில், செயல்பாட்டில் தென்படும். இதுவரையில் நாம் பார்த்தது, ‘ஆம், மனப்பான்மை மாற்ற முடியாது, நான் இப்படித்தான்’ என்பவர்கள் எவ்வாறு மற்றவர்கள் நற்சொல்லுக்குக் காத்திருப்பார்கள், ஊக்குவிக்கும் பலவற்றை தங்களது அடையாளங்களாக்கிக் கொள்வார்கள் என்று. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண், ஊதியம், சான்றிதழ் எல்லாம் அடங்கும். இதன் விளைவுகளையும் விவரித்துப் பேசி வந்தோம். இவர்கள் தாமாக யோசித்தோ, சுயமாகவோ வேலை செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘மற்றவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்’ என்ற நினைப்பு உண்டு. இவர்கள் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இனி வரும் பாகங்களில் பேசப் போவது,  மனப்போக்கு: மாற்றக் கூடியவை’ இதற்கு, ‘அகண்ட பார்வை’ தேவையானது.

மனப்பான்மை மாற்றக் கூடியவை!

மனப்பான்மை என்பது ஒரே விதமாகவும், அதே நிலையில் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே இல்லை. மாற்றி அமைக்க முடியும். மனப்பான்மையை மாற்றிக் கொள்ள விரும்புவார்களை எளிதாக அடையாளம் காணமுடியும். வளைந்து கொடுப்பவர்களாக இருப்பார்கள், சூழ்நிலைக்கு ஏற்றபடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்..

முக்கியமாக இவர்களின் யுக்திகள் மிக எளிமையானவையே இருப்பதால் அடையாளம் கண்டு அறிதல் மிகவும் ஈஸி! அவர்களின் அடையாள அட்டைகள் இப்படித் தென்படும்: இவர்களுக்குக் கற்றல் என்பதை எப்பொழுதும் ஆர்வமாக அணுகுவார்கள். எதை எடுத்தாலும் அவர்களின் ஆவல் மிகத் தெளிவாகத் தென்படும். தெரிந்து கொள்வதையும் புரிந்து கொள்வதையும் பிரதானமாகக் கருதுவார்கள். இதற்குக் காரணமே அவர்கள் தங்களுக்கு ‘தெரிந்தது, கை அளவே’ என்று இருப்பதுதான்.

இந்தத் தன்னடக்கம் மிகவும் வெளிப்படையாகத் தென்படும். எந்த ஒரு அச்சமின்றி, ‘தெரியவில்லை’ என்றால் அதை எந்தவித ஒளிவு மறைவின்றி சொல்வார்கள். இப்படி, வெளிப்படையாகக் காட்டுவதில் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார்கள். தெரியாத நிலையில் இருப்பதற்குப் பதிலாக, தானாகத் தேடியோ, அல்ல மற்றவர்களிடம் உதவிக் கேட்டு கொண்டோ தெரிந்து கொள்வார்கள். தெரியாததை அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் தருவார்கள்.

இப்படிச் செய்வதில் எந்த ஒரு உள் நோக்கமும் இருப்பதில்லை. அதாவது, இவர்களைப் பொருத்தவரை மதிப்பெண்கள், பட்டங்கள், என்ற கவசங்கள் அணிவதற்கு என்றும் முக்கியத்துவம் இல்லை.

அதற்குப் பதிலாக, கேள்வி எழுப்புதல், தேடுதல் - முடிக்கும் வரை முயற்சி என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும்! இந்தச் சுபாவத்தினால் ஆக்கப்பூர்வமாக இருக்க முடிகிறது.

எதை எடுத்தாலும் செய்வதில்தான் அதிகமான சந்தோஷம் அடைவார்கள். முடிப்பதிலேயே குறியாக இருக்க மாட்டார்கள். எதைச் செய்தாலும் அவர்களின் கண்ணோட்டத்தில் அதைப் புதிர் போல் எடுத்து அதன் ஒவ்வொரு பாகத்தைப் புரிந்து, அறிந்து கொள்வதில் ஆனந்தப் படுவார்கள். இந்த உணர்வுதான் அவர்களை ஊக்கவிக்கும். முடித்துவிட்டு “சபாஷ்" கிடைப்பதில் இல்லை.

இவர்களின் பக்குவமான அணுகு முறை இப்படித் தோன்றும்:

‘நீங்க சொல்றாப்புல, இது கஷ்டம் தான். ஃபர்ஸ்ட் என்னவென்று புரிந்து கொள்ளலாம். செய்யறது, அப்புறம்’

‘ஓ, வாயேன், எனக்குத் தெரிந்ததை சொல்லித் தரேன்’

‘(மனதுக்குள்: இத எங்க நுழைக்கலாம்? இங்கே? ம் ம்) அண்ணே, ஒன் மினிட் ஒரு ஹெல்ப், ப்ளீஸ்’

‘ஸாரி, டீச்சர். இதை எனக்குக் கொஞ்சம் திரும்ப விளக்க முடியுமா, ப்ளீஸ்?

அகண்ட பார்வை உள்ளவர்களை வித்தியாசப்படுத்துவதே: விளக்கம் கேட்பது, சந்தேகங்களைத் தெளிவு செய்வது, இவை எல்லாமே கற்றலில் அடங்கும் என்று ஏற்றுக் கொள்வார்கள். இந்த வழிமுறைகள் தலை குனிவு என்று கருத மாட்டார்கள்.

தன் குறைபாடுகளைச் சரி செய்ய முயல்வார்கள். இவர்கள், வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்க முயற்சிப்பவராக இருக்க மாட்டார்கள். இவர்களுக்குப் போட்டி, பதவி முக்கியம் என்பதே இல்லை. மற்றவர்களுக்கு உதவுவது, சொல்லித் தருவது, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வது, இவர்களின் அங்க அடையாளமாகும். இதுவே அவர்களின் தனித்துவமாகும்.

முயற்சி, உதவி கேட்பது, உதவுவது, புரிந்து கொள்வது என்பதற்குத் தான் பிரதான இடம் கொடுப்பார்கள். பரிசு, பதவி இருக்கிறதோ, இல்லையோ ஆனாலும் வாழ்க்கைப் பாதையில் வெற்றி மட்டும் காண்பார்கள்.

நன்மைகள்

நம்மை மாற்றிக் கொள்வதற்கு நாம் இடம் கொடுத்து விட்டாலே உடனடியாக நமக்குள் ஒரு சுதந்திர உணர்வு ஏற்படும். ஏன்? வரும் தகவல்களை, கருத்துக்களை, எண்ண அலைகளை வரவேற்போம். வருவதை ஏற்றுக்கொள்வோம். நாமும் முயற்சிப்போம். நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, தேவையானதைத் தேர்வு செய்வோம். அதாவது, ஒரு பரந்த மனப்பான்மையுடன் பார்ப்போம், செயல்படுவோம்.

பல தரப்பட்ட கருத்துக்களைக் கேட்டு கொள்வதால் நமக்கு மேலும் புரிந்து கொண்டு நல்ல முறையில் செயல்பட உதவிடும். மற்றவர்கள் சொல்வதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று மதிக்கத் தெரிவதே நல்ல குணமாகும்.

‘ஆம் எனக்குத் தெரியாது’ என்று ஏற்றுக் கொள்வதினால் நம்மைத் தாழ்த்திக் கொள்கிறோம் என்பதல்ல. மாறாக அப்படிச் சொல்வதற்கு தெளிவு ஒரு முக்கியமான அம்சமாகும். அத்துடன், தைரியமும் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக நேரும். ஏன், எப்படி? நம்மைப் பற்றிய குறைகளைப் பகிர்ந்து கொள்ள, அதைச் சரி செய்ய நமக்குள் உள்ள மனோதிடம் தென்படும். அதுவும் நம் சக்தியே!

இப்படித் தன்னை தானே சுதாரிப்பதால், ‘எனக்கு எல்லாம் தெரியும்’, ‘யாராலையும் என்னை மிஞ்ச முடியாது’ என்று எண்ணுவதாகாது. தெரிந்து கொள்ள இன்னும் இருக்கிறது என்றே இருப்பார்!

இவர்களின் அடையாளம்: பக்குவம், அடக்கம், தெளிவு! மற்றவர் சொல்லையும் உள்வாங்கிக் கொள்வார் (இப்படி இருக்கையில், மற்றவருக்கும், இவர்கள் மேல் மரியாதை கூடுமோ?) இதை மேலும் விளக்க, வரும் வாரங்களில் பேசலாம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
mental health, பார்வை, மனநலம், mana nalam, perspective, views, அகண்ட பார்வை https://www.dinamani.com/health/mental-health/2018/nov/20/5-மனப்போக்கு-மாற்றக்-கூடியவை-அகண்ட-பார்வை-3042304.html
3037322 மருத்துவம் மனநல மருத்துவம் மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? பாகம் 4 விளைவுகள் மாலதி சுவாமிநாதன் Monday, November 12, 2018 12:23 PM +0530  

மனப்பான்மை என்பது நம் கண்ணோட்டத்தை குறிக்கிறது. நமக்கு எவ்வாறான மனப்பான்மை உண்டோ அது போலவே நம் ஆற்றல், நடத்தை, எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளும் அமையும். இந்த மனப்போக்கு மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்பதைத் தான் இந்தத் தொடரில் ஆராய்ந்து வருகிறோம்.

இது வரையில் பார்த்ததில், நாம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதம் நம் மனப்பான்மையில் அடங்கும், நம் நடத்தையை அமைக்கும். உதாரணத்திற்கு, அதிக மதிப்பெண் பெறுவதால் தான் “சிறந்தவன்” என்று அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டால், அதைக் காப்பாற்றவே சவால்களை நெருங்க விடமாட்டோம்.

'புரியவில்லை, தெரியவில்லை' என்றாலும் கேள்விகள் கேட்க மாட்டோம், தெரியவில்லை என்ற சொல்லுக்கு இடமே தர மாட்டோம். தெரியவில்லை என்று சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் இப்படிச் செய்வோம்.

விளைவுகள்

இது கடிவாளம் அணிவது போல் ஆகும். நாம், சந்தேகங்கள் கேட்க சங்கோசப் படுவோம். உதவி கேட்கத் தயங்குவோம். உதவிக் கேட்பதை பலவீனமாக நினைப்பதால் அந்த வழியைத் தேர்வு செய்ய மாட்டோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பது தான் தமக்கு மிக முக்கியமாகும். இதனால், நம்முடைய சந்தேகங்கள் அனைத்துமே 'தெரியவில்லை+ புரியவில்லை' என்றே தொடர்ந்து பயணம் செய்யும். நமக்கு எதுவெல்லாம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவெல்லாம் அப்படியே இருக்கும். இது நம்மை 'முடியவில்லை'யில் கொண்டு விட்டு விடும்.

அது மட்டுமின்றி, நாம், மற்றவர் சொல்லுக்கு ஏங்கி இருப்போம். அவர்களின் பாராட்டுகளே நம்மை ஊக்குவிக்கும். அந்தச் சொற்கள் ஒரு வேளை வராவிட்டால் நாம் செயலற்ற நிலையில் நிற்போம்.

மற்றவர்கள், புகழில் நம் வாழ்வு, செயல்களை ஒவ்வொன்றையும் அதனுள் அடக்கி வாழ்வோம். இதன் விளைவு - என்றென்றும் நாம் செய்ததை நன்றாக இருக்கிறது என்று தானே சொல்லவும் மாட்டோம், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். இது பணிவு அல்ல. மற்றவர் சொல்லுக்கு ஏங்கும் விதம். வேலை செய்யும் பொழுது, தானாக இயங்க மாட்டோம். மேலதிகாரியோ, மற்றவரோ கட்டளை இடக் காத்திருப்போம். ஏன் இப்படி நிகழ்கிறது? நாமாக அடிமைத்தனத்தை அமைத்துக் கொண்டதினால்!

இப்படியே பழகிவிட, நம் தன்னம்பிக்கை குறைந்து விடுகிறது. ஒவ்வொரு சமயமும் மற்றவர்கள் சொல்லியே செயல் படுவதால் நாமாக, சுயமாகச் செய்யும் துணிச்சல் சரிந்து விடுகிறது. அதனால் ஒவ்வொரு நேரமும் மற்றவர்களின் வழிகாட்டுதலுக்கே காத்துக் கொண்டு இருப்போம். நாமும் யோசிக்கலாம், செய்யலாம் என்பது நமக்குத் தோன்றாது. நாளடைவில் நமக்கு மற்றவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை நம்மேல் இருக்காது.

அதுவும் குறிப்பாக, அதிகாரிகள், செல்வாக்கு உள்ளவருக்கு மட்டும் மரியாதையும், கவனமும் செலுத்துவோம். நம்மைப் பொறுத்தவரை இவர்களுக்குத் தான் எல்லாம் தெரியும். மற்றவர்களைத் துச்சமாகப் பார்ப்போம்.

நம் கண்ணோட்டங்கள் சூரிக்கி போய் கொண்டு இருக்கும். போகப்போக மற்றவர்கள் நம்மை அடையாளம் கொள்ள கஷ்டமாக இருக்கும், வெகு சீக்கிரத்தில் நமக்கும் நம்மை தெரியாமல் போய்விடும்.

நம்முடைய மனப்பான்மை விதமே, மற்றவர்களின் அந்தஸ்தை மதிப்பிட்டு, அது உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே அவர்களின் பேச்சை ஏற்றுக் கொள்வோம். மறுப்பு சொல்ல மாட்டோம். இப்படிப் பார்த்தால் எத்தனைக் குறுகிய மனப்பாங்கு கொண்டவர்களாக ஆகி விட்டோம் என்பதையும் பொருட் படுத்தாமல் இருப்போம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நமக்கு வேறுபட்ட கருத்துகளை மற்றவர் நமக்குத் தெரிவிக்கலாம். ஆனால், அசட்டுச் சிரிப்புடன் அவர்கள் சொல்வதை ஆமோதிப்போம், ஏற்றுக் கொள்ள மாட்டோம். சில நேரங்களில் கண் ஜாடையினாலே வெறுப்பைக் காட்டிடுவோம். அதாவது, அவர்கள் சொல்லி, நம்மைச் சரி செய்வது நம் அகராதியில் இல்லாத ஒன்றாகும்.

எப்பொழுதும் இப்படியே நாம் இயங்கிக் கொண்டு இருப்போம், சொல்லப் போனால், பிற்காலத்தில், நாமாகச் செயல்படுவதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சபாஷ் என்ற உணர்வு மட்டும் நம்மைச் செயல் படுத்தும்!

இதுபோல் இல்லாமல், தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து, புரிந்து செயல் படுபவரும் உண்டு. தன்னையே ஊக்கப் படுத்தி, செய்யும் காரியமே ஊக்கம் என்று மொழி கொள்பவரை அடுத்தபடி பார்க்கலாம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
mindset, view, perception, opinion, மைண்ட், புத்தி, மனம், தெளிவு https://www.dinamani.com/health/mental-health/2018/nov/12/மாற்றமில்லாததா-மாற்றக்-கூடியவையா-பாகம்-4-விளைவுகள்-3037322.html
3029431 மருத்துவம் மனநல மருத்துவம் 3. சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா! மாலதி சுவாமிநாதன் Monday, October 29, 2018 02:49 PM +0530  

சென்ற வாரங்களில் நாம்  ‘மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?’ என்று ஆராய்ந்து வந்திருக்கிறோம். மனப்பான்மை என்பது நாம் எந்த விதத்தில் நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோம் எனக் குறிக்கும். நம்முடைய செயல்பாடு எந்த அளவிற்கு மற்றவர்களின் சொற்களினால், எடை போடுவதால் பாதிக்கப்படுகிறது என்பதையும் காட்டும்.

அப்படி பாதிக்கப்பட்டால் மனநலம், மனவளம் வளராது. ‘இப்படித்தான் நான், இப்படி மட்டும் தான்’ என்று நாம் அடையாளங்களை மாட்டிக்கொண்டு இருப்போம். நம்மில் பலருக்கு சம்பளம், செல்வம், சான்றிதழ்கள் என்ற வெவ்வேறு விதமான மதிப்பெண்கள் அங்க அடையாளமாக ஆகிவிடுகிறது ‘ஆ, எப்பவும் போல 90தான்’ என்று நாமும் நம்முடைய நிலைமையை எடுத்துக் குறிப்பிடுவோம். மற்றவரும் இதைப் போலவே ‘ஆ, என்ன இப்பவும் 80ஆ? 90ஆ?’ என்று கேட்பதால் அந்த மதிப்பெண்கள் ஏறத்தாழ நம் அடையாளம் ஆகிறது.

அதில் எப்பொழுதாவது சற்று குறைவு வந்து விட்டால் கூட, தவிப்பு தான் மிஞ்சும்.

இந்தக் குழப்பங்கள் நிலவுவதற்கு முக்கியமான காரணிகள் இருக்கின்றன. போன முறை ‘புரியல+தெரியல = (அதனாலேயே) முடியல!’வில் சொன்னது போல் நமக்குள் நிலவும் தயக்கத்தினால் இது நேரிடும். நம்மைப் பற்றி மற்றவர்கள் உயர்வாக நினைக்கையில், அது மாறாமல் இருக்க, நம்முடைய பலவீனங்கள் தெரியாமல் இருக்க வழிகளை நாம் கடை பிடிப்போம்.

பெரும்பாலும் தயக்கங்கள், குழப்பங்கள் நிலவுவதற்குக் கீழ் வரும் ‘சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா!என்ற ஜோடிகள் காரணிகளாக ஆகலாம்.

ஜோடி 1. தோல்வியே நெருங்காதே, சவாலே தூர நில்

தோல்வி அடையாமல் இருக்கவே, நாம் அனுகூலமான நிலையிலிருந்து சற்றும் விலகாமல் இருக்க முடிந்த வரை முயற்சிப்போம். நமக்கு அளிக்கப் படும் பாடம், ப்ராஜெக்ட், கேள்விகள் என்று எதுவானாலும்,  நமக்குச் சற்று சவாலாக இருந்து விட்டால், அதனால் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றால் அதைத் தட்டிக் கழிப்பதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்வோம். தட்டிக் கழித்தும் விடுவோம். ஏனென்றால், சவாலாக இருந்தால், ஏற்றம்-இறக்கம் இருக்கும்; நிறைய மதிப்பெண்கள் வாங்குவது கடினமே. அதற்காக அதன் பக்கம் போக மாட்டோம்.

நம்மைப் பொருத்த வரை நாம் புத்திசாலி என்பதால், கடினமாக உழைப்பது தேவையில்லை. அப்படி எல்லாம் உழைக்காமலேயே மதிப்பெண் வாங்கிவிடலாம் என்று நினைத்து சவால்களை எல்லாம் மறுத்து விடுவோம். குறைவாக மதிப்பெண் வாங்குபவர்கள் தான் உழைக்கத் தேவை என்ற மனப்பான்மை உள்ளவர்களாக இருப்போம். அவர்களுக்கு ஏன் பாடங்கள் நம் போல் புரிவது இல்லை என்று வியந்து போவோம்.

நமக்கு எல்லாமே தெரியும் என்ற அபிப்பிராயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. எப்பொழுதாவது பாடம் புரியாமல் போனாலும் போகும். அப்பொழுது உதவிக் கேட்பதால், நமக்கு விஷயங்கள் தெளிவு இல்லை என்று தெரிந்து விட்டால்? நமக்கு ‘தெரியல-புரியல’ அதனால் தான் ‘செய்யல’ என்று வெளியானால்? நம்முடைய மதிப்பு என்னவாகும்? இதனாலேயே, நாம் சவால்களை ஏற்காமல் தட்டிக் கழித்து விடுவோம், அவற்றை எடுக்கத் தவிர்ப்போம்.

சரி, செய்து பார்க்கலாம் என்றால், நேரம் கூடுதலாகலாம். நம்மை, மற்றவர்கள் ‘எல்லாம் தெரிந்தும், இவ்வளவு டைம் தேவையா?’ என்று நினைத்துக் கேட்டுவிட்டால்? தவிர்ப்பதே நம் யுக்தியாகும். யுக்திகள் யாவும், மதிப்பெண் குறையாமல், நம் அடையாளக் கவசங்களைக் காப்பாற்றவே செய்யப் படுகிறது. தோல்வி நம் அஸ்திவாரத்தை ஆட்டிவிடும். நம் முத்திரை நழுவித் தொலைந்து விடும்.

சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலமை வந்து விட்டால் சஞ்சலம் சூடு பிடிக்கும், அச்சம் அதிகரிக்கும். துணிச்சல் அந்நியனாகும். எதிர்த்து போராடத் தத்தளிப்போம். உதாரணத்திற்கு, திடீர் பரீட்சை என்றால் பயம் வந்து விடும், ஒரு சின்னக் குழு முன் பேச வேண்டுமானாலும் வெலவெலத்துப் பதற்றம் அடைவோம், எதிர்மறை எண்ணங்களும் செயல்களும் கூடிக்கொண்டே போகும்.

இதெல்லாம் தேவையா?

 ஜோடி 2.  நம் நலத்தை மட்டும் காப்போம் ; உதவி செய்ய மறுப்போம்

அதிக மதிப்பெண் பெறுவதே நம் கவசங்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதற்காக, அதை நோக்கியே நம்முடைய எல்லாச் செயல் பாடுகளும் இருக்கும். மற்றவருக்கு சொல்லித் தருவதால் நமக்குப் பாடம் இன்னும் நன்றாகப் புரியும், தெளிவு வரும் என்றாலும், நாம் சொல்லித் தருவதை தவிர்ப்போம்.

நம் பாதுகாப்பின்மை, நமக்கு மதிப்பெண் குறைந்துவிடுமோ, மற்றவர்கள் தனக்கு ஈடாக வந்து விடுவார்களோ என்ற அச்சமே: தன்னுறுதி சரிய, இப்படியும் செய்வோம்.

அதே போல், தேர்வுக்கு முன், சந்தேகங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள மற்றவர் கேட்டால், ‘தூங்கிட்டேன், படிக்கலே’ என்றும், புத்தகத்தைக் கேட்டு விட்டால் ‘கொண்டு வரல’ என்றும் சமாளித்து விடுவோம். நாம் படித்ததையோ, பாடப் புத்தகங்களையோ எக்காரணத்திற்கும் பகிர்ந்து கொள்ளும் கொள்கை இருக்கவே இருக்காது.

பகிர்ந்து கொண்டால், அவர்கள் நமக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற பயம் தான் இந்தச் செயல்பாட்டின் மிக முக்கியமான காரணம். இது வளரும் பருவத்தில். போகப் போக எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததால், வேலை செய்யும் இடங்களிலும் தன்னலம் மட்டும் பிரதிபலிக்கும். அதையும் பொருட் படுத்தாமல் தனிமனிதனாக இயங்கிக் கொண்டிருப்போம். வேலையிலோ, குடும்ப வாழ்க்கையிலோ இது சரி வராது.

நமக்குள் ஊறி இருக்கும் பாதுகாப்பின்மை, இப்படியெல்லாம் வெளிப்படுகிறது. போகப்போக உதவி செய்வதே குறையும்.

ஜோடி 3: பாராட்டு மட்டும் போதும் / பாராட்ட மாட்டாரா?

மதிப்பெண்களால் வரும் பாராட்டு நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். மற்றவர் தரும் பாராட்டும், அபிப்பிராயமும் மட்டுமே நாம் கணக்கில் சேர்த்துக் கொள்வோம். நம் மனப்பான்மை இதைச் சுற்றியே அமைந்திருக்கும்.

நாமோ, புகழாரத்துக்கு வானம் பார்த்த பூமி போல் காத்திருப்போம். ஏங்கியும் இருப்போம். இந்தச் சொற்கள் மட்டுமே நமக்கு ஊக்கம் ஊட்டும். மேலும், கேட்கக் கேட்கக் கர்வம் சூழும்! நம் இயல்பை எங்கோ, என்றோ தொலைத்து இருப்போம்.

ஏதோ காரணத்தினால் நமக்கு வரும் புகழும், சபாஷும் தாமதப் பட்டாலோ, நின்று விட்டாலோ, உடனே சொல்லி  வைத்தது போல் நம் ஊக்கமும் ஊசல் ஆடிவிடும். கூடவே, ஏன் இப்படி ஆனது என்ற கவலை அதிகரிக்கும். மற்றவரின் பார்வை நம்மேல் பட்டாலே அவர்களின் சொல்லுக்காகவே காத்திருப்போம். அந்தச் சொற்கள் கேட்கவே நாம் மதிப்பெண்களை எடுப்போம்.

அப்போது புகழ் இல்லையேல் மதிப்பெண் எடுப்போமா? ‘யாருக்காக? எதற்கு?’ என்று இருந்து விடுவோமா? யோசிக்க வேண்டிய விஷயம்.

ஜோடி 4: பாராட்டுவோரை நாடுவது / ஓரவஞ்சகம்!

நம் ஊக்கத்தின் நாடித் துடிப்பு மற்றவரின் சொல்லில் இருக்கும். பாராட்டுபவரிடம் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். பெருமைப்படுத்தும் கூட்டத்துடன் மட்டும் இருப்போம். இவர்களை மட்டும் மதிப்போம்.

நமக்குக் கிடைக்கும் மதிப்பெண்ணான கவசங்களைப் பற்றி யாரேனும் வேறு கருத்து தெரிவிக்கலாம், அல்ல அவற்றிடமிருந்து விடுபடச் சொல்லலாம். நிதர்சனம் தான். அப்படி நடந்ததும், சொல்லப் பட்டதையும். சொல்வோரையும் ஒரு அணு கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை நம்மிடம் நெருங்கி வர விட மாட்டோம்.

மாறாக, சொல்வோரைப் பார்த்து, துச்சமாக “பாவம், பொறாமை” என்று நகைப்போம்!

மதிப்பெண் கவசமானால், நம்முடைய அடையாளம் என்று ஏற்றுக் கொண்டால், அந்த அங்கீகாரம் பெறுவதற்காக நம் நடத்தையில், பல குணாதிசயங்களில் மாறுதல் தெரிய ஆரம்பிக்கும். நம் பரந்த மனப்பான்மையும், மற்றவர் நற்சொல்லை ஏற்கும் தன்மையும் மிகக் குறைவாகிவிடும். இது நமக்கு ஓகேவா?

அடுத்ததாக இதனால்,மனப்போக்கு: மாற்றமில்லாததா? என்பதால் நேரும் விளைவுகளைப் பார்க்கலாம்.

- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

malathiswami@gmail.com

]]>
https://www.dinamani.com/health/mental-health/2018/oct/29/3-சவாலே-தூர-நில்-பாராட்டு-மட்டுமே-வா-வா-3029431.html
3025534 மருத்துவம் மனநல மருத்துவம் புரியல+தெரியல = (அதனாலேயே) முடியலை! மாலதி சுவாமிநாதன் Tuesday, October 23, 2018 03:25 PM +0530  

நம் மனப்பான்மை உருவாகுவதில் நம்முடைய யோசிப்பு, கண்ணோட்டம், மற்றவரின் கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்கிறோம், இவை எல்லாவற்றிற்கும் பங்கு உண்டு.

பல முறை பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அத்துடன் நம்முடைய எதிர்பார்ப்புகளையும் கலந்து, அதையே நம்முடைய அடையாளமாக அமைத்துக் கொள்வோம். போகப் போக நம் இயல்புகள் பின் தங்கி விடும். அதன் விளைவே, பலமுறை, நம்மை பற்றி பிறர் சொல்வதை போலவே இருக்க முயற்சிப்போம்; நாளடைவில் அவர்கள் எண்ணப்படியே இருந்து விடுவோம். நாமாக யோசிக்க மாட்டோம்.

19 அக்டோபர் 2018 தினமடணி.காம் இதழின் மனநல மருத்துவம் பகுதியில் மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? தொடரின் முதல் பாகத்தில் ‘நம் அடையாளம்’ பற்றிப் பேசியிருந்தோம்.

இப்படி ‘நம் அடையாளத்தை’ அமைப்புவதால் விளையும் விளைவுகளை இங்கு புரிந்து கொள்ளலாம். இவற்றை புரிந்து கொள்ள, நாம் மாணவர்களின் செயல்பாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இங்கு மதிப்பெண்கள் என குறிப்பிடுவதில் நமக்குக் கிடைக்கும் சான்றிதழ்கள், வேலையில் கிடைக்கும் பாராட்டு எல்லாம் அடங்கும்.

புரியல+தெரியல = (அதனாலேயே) முடியல

நமக்குத் திறமை இருக்கும். இருந்தாலும், மற்றவர்களும் சரி, நாமும் சரி, அதிக மதிப்பெண்களைப் பெறுவதைக் குறித்தே அதிக கவனம் செலுத்துவோம், மதிப்பெண்களைச் சுற்றியே மற்றவரின் கேள்விகளும் இருக்கும். இந்த மதிப்பெண் அங்கீகாரம் பெற நாம் என்னென்ன வழிகளைப் பின்பற்றுகிறோம் என்பதை ஆராயலாம்.

இப்படி மதிப்பெண்களையே பின் தொடர்வதின் விளைவு புரியல, தெரியல, என்பதினால் ‘முடியல’ என்றாகிவிடும். எதனால் புரியல-தெரியல என்றால் ‘முடியல’/ ‘முடியவில்லை’ என்பதாகிறது? மதிப்பெண்களுக்கும் இந்த ‘புரியல- தெரியல- முடியல’ விற்கும் உள்ள நெருக்கமான உறவை முதலில் புரிந்து கொள்வோம். இவற்றுக்குள் நடக்கும் அம்சங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்.

i. ‘மதிப்பெண் தான் நான் : என் அடையாளம்

மதிப்பெண்களுக்கு, ‘மதிப்பெண் தான் நான் : அதுவே என் அடையாளம்’ என்றொரு அங்கீகாரத்தை தருவதால், நம்மைப் பொறுத்தவரை மதிப்பெண்ணே மதிப்பினை சேர்க்கும் என்று எண்ணுவோம்.

நிறைய மதிப்பெண் பெறுவோரே புத்திசாலி என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வதாலும் அதிக மதிப்பெண் பெறுவது மட்டும் நம்முடைய குறிக்கோளாகும். அதிக மதிப்பெண் பெறுபவரே வெற்றி பெறுவார் என்றும், எல்லோராலும் மதிக்கப்படுவார் என்று எண்ணுவதால், மதிப்பெண்ணினால் கிடைக்கும் முழு மரியாதையைத் தக்க வைக்க அதிக மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டே இருக்க முயற்சிப்போம். மதிப்பெண்கள் அதிகரிக்க, புகழும் கூடுகிறது!

மீண்டும் மீண்டும் எடுக்கும் மதிப்பெண்களே நம் அங்க அடையாளம் போல் சேர்ந்து விடுவதால் நம்முடைய இன்னொரு அடையாள அட்டையாகிறது! நம்முடைய பெயர் போல் இதுவும் நிலைத்து நிற்கிறது. அதிக மதிப்பெண்கள் நாம் அணியும் ஒரு கவசமாகிறது.

அதாவது ‘கிடைக்கும் மதிப்பெண் தான் நான். அதுவே என் 'அடையாளம்’ என்றே இருப்போம். நம் மதிப்பெண்களை தெரிவிக்கின்ற பொழுதிலும் அதை பெருமையாக சொல்லிக் கொள்வோம். மேலும், நம் புத்திசாலித்தனத்துக்கு எப்படியும் மதிப்பெண்கள் வந்து விடும் என்று உறுதியாக இருப்போம்.

ஏதோ காரணத்தினால் யாரெல்லாம் 60-70 எனக் ‘குறைந்த’ மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அவர்கள் கஷ்டப்பட்டு படிப்பவர்கள் என்றும், பல முறை சந்தேகங்களைக் கேட்டுப் புரிந்து கொண்டு படிப்பார்கள், என்றும் பல ட்யூஷன்களுக்கு செல்பவர் என்றும், ஆக மொத்தம் அவர்கள் புத்திசாலிகள் அல்ல, முன்னேறக் கஷ்டப் படுபவர்கள் என்று எண்ணுவோம்.

இந்த மதிப்பெண் வித்தியாசத்தினால் அதிக மதிப்பெண் பெறுவோர், ‘சிறந்தவன்’ பட்டம் பெற்றுவிடுகிறார்கள். இதைத் தக்க வைத்துக் கொள்ள எப்பொழுதும் அதிக மதிப்பெண் தேவையாகிறது!

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை ‘எல்லாவற்றிலும்’ பின் தங்கி இருப்பதாக கருதுவதுண்டு. அவர்களுடன் இணைய தயக்கமும் இருக்கும். வீட்டிலும் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதனால் தான் என்றைக்காவது நாம் பெறும் மதிப்பெண் குறைந்து, பாதிப்பு வந்து விட்டால், நாம் படும் பாடே பாடு!

உடனே, அவமானம் சூழ்ந்து கொள்ளும், தைரியம் தளர்ந்து விடும், குற்ற மனப்பான்மையுடன், வெறுப்புடன் ‘நான் சுத்த வேஸ்ட்’ என்று பட்டம் சூட்டிக் கொள்வோம், நம் கவசம் + அடையாளம் தொலைந்திடுமோ என்று அஞ்சுவோம்.

இது வெளிப்படும் விதங்கள் ஒவ்வொருக்கு வெவ்வேறு விதங்களில் தென்படும்: சட் சட்டென்று கண் கலங்கிவிடும், வெட்கம், தயக்கம் சூழ்ந்துக் கொள்ளும் அவ்வப்போது தலை சுற்றுவது போலத் தோன்றும், கண்மயங்குவது போல் தோன்றும், இருந்தாலும், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கேட்கும், தெரிந்திருக்கும். நம்முள் சலிப்பு, சோர்வு, பதற்றம், தயக்கம் நம் மன விளும்பில் தளும்பும். இப்படி ஏதேதோ விதத்தில் மனம் (மனநலம்) தளருவதைத் தான் உடல் இவ்வாறு வெளிப்படுத்துகிறது. உஷார்!! இதை அறிந்துக் கொள்வது அவசியம். மனதில் தோன்றுவதை உடலின் அசைவுகள் பிரதிபலிக்கும்.

இதனால் படிப்பில் கவனம் சிதறிவிடும், மதிப்பெண் குறையும். இப்படி இன்னும் குறைவது மேலும் நம்மை ஆட்டிவைக்கும். இந்த (மதிப்பெண் - அடையாளம் - மதிப்பெண் குறைவு - பதட்டம் - மேலும் மதிப்பெண் குறைவு) என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வோம்.

ii. மதிப்பெண்களே விலங்காகிறது

இப்படி ஆகிவிடும் என்று அஞ்சுவதால்தான் மதிப்பெண் நமக்கு விலங்காய் உருவெடுகிறது. நம்முடைய மனப்பான்மை இவ்வாறு இருந்து விட்டால், அப்படியே நிலைப்பதும் உண்டு. இதன் விளைவுகள் என்ன என்று இங்கு பார்ப்போம்.

‘நிறைய மதிப்பெண்’, ‘சிறந்தவன்’ என்று பட்டம் பெற்ற அடையாளங்கள் நம்மை விட்டு விலகாமல் இருக்க நாம் பல விதத்தில் முயல்வோம். முயல்வது என்றும் நன்றே!  ஆனால், நம் முயற்சி: பாடத்திலோ, டீச்சர் கேள்வி கேட்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ இப்படிப் செய்வோம்:

மாட்டேன், நான் கையைத் தூக்க மாட்டேன்.

சந்தேகம் கேட்க மாட்டேன்.

எனக்குப் புரியலேன்னு யாருக்கும் தெரியக் கூடாது

கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கலாம் ஆனால் அச்சத்தில்:

நான் சொல்ற பதில் தப்பா இருந்தா?

'சரியாக இல்லை என்றால் டீச்சர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

 ‘இது கூட தெரியலன்னு! அப்டின்னு கருதி விட்டால்?’

 ப்ரெண்ட்ஸோட, கும்பலா போகும் போது ‘விளக்கம் கேட்பேன்

(நண்பர்கள் போகவில்லை என்றால்?)

‘(வகுப்பில் ஆசிரியர் கேள்விகள் கேட்டாலும் சரி எனக்கு சந்தேகங்கள் இருந்தாலும், கண்கள் கீழே பார்த்திருக்கும்)’

மொத்தத்தில், நம் வகுப்புத் தோழர்களுக்கோ, இல்லை ஆசிரியருக்கோ நம் குறை தெரிந்து போய் விடுமோ என்ற அச்சத்தில் இப்படிச் செய்வோம். நமக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். இருந்தும் நம் சந்தேகங்களைக் கேட்காமல் இருந்து விடுவோம். இப்படிச் செய்வது, நாம் அணிந்திருக்கும் மதிப்பெண்கள் என்ற கவசங்களையும், அடையாளங்களையும் காப்பாற்றவே. எங்கே நம்முடைய இந்த அடையாள கவசங்கள் கழன்றுவிடுமோ என்று அஞ்சுவோம். இதனாலேயே, ‘தெரியவில்லை’ என்றாலும் சரி ‘புரியவில்லை’ என்றாலும் சரி, மொளனமாக இருப்போம். அதனால் தான் தெரியவில்லை+புரியவில்லை= முடியவில்லை

பதில் தெரிந்தால், ‘இது சரியா? தப்பா’? என்று மனதிற்குள் அலை மோதி, நமக்குள் எழும் போராட்டத்தில் மூழ்கி விடுவோம். சந்தேகங்களும் நீங்காமல் இருந்து விடுகின்றன. இப்படிச் செய்தால் மதிப்பெண் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் அறிவோம். அதனால், குழப்பம் கலந்த பயம் அதிகரிக்கும்.

இப்படி, நாம் செயல் படுவதற்கு பல மன ஜோடிகள் காரணம். அவற்றில் சில ஜோடிகள்: ஜோடி 1. தோல்வியே நெருங்காதே, தூர நில், ஜோடி 2.  நம் நலத்தை மட்டும் காப்போம்; உதவி செய்ய மறுப்போம், ஜோடி 3:பாராட்டு மட்டும் போதும் / பாராட்ட மாட்டாரா?, ஜோடி 4: பாராட்டை நாடுவது / ஓரவஞ்சகம்! இவற்றை, அடுத்த வரும் பகுதியில் பார்ப்போம்.

- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

malathiswami@gmail.com

]]>
mindset, External message, influence, மனப்பான்மை, மனநலம் https://www.dinamani.com/health/mental-health/2018/oct/23/letting-only-external-message-influence-us-3025534.html
3022902 மருத்துவம் மனநல மருத்துவம் மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? மாலதி சுவாமிநாதன் DIN Thursday, October 18, 2018 11:54 AM +0530 1: நம் அடையாளம் 

மனப்பான்மை என்பது மிகச் சுவாரஸ்யமான ஒன்று. நம்முடைய மனப்பான்மை நம்மை உருவாக்குகிறது. இதுவரை அறிமுக பாகத்தில் நாம் பார்த்தது: இந்த மனப்பான்மையை உருவாக்குவது நம் சிந்தனை, ஆற்றல், கண்ணோட்டம், மற்றவர்கள் நமக்குத் தெரிவிப்பது என்று பலவற்றே.

நம்முடைய மனப்பான்மை, நம்மை யார் என்று எடுத்துக் காட்டும். இந்தப் பகுதியில் இது எப்படி நிகழ்கிறது, நாம் எவ்வாறு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆராய்வோம்.

நம் அடையாளம் : நம்மை அடையாளப்படுத்தும் விதங்கள்

நாம் எல்லோரும் விரும்புவது: வாழ்வில் நலமாக, வளமாக இருக்கவே. நம் உடல்+மன வளம் ஆரோக்கியமாக இருந்திடவே, நன்கு ஆரோக்கியமாக இருந்திடவே. இப்படிப்பட்ட வாழ்வை அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும் நமக்குள்:

சில சந்தேகங்கள்: கேட்கலாமா? வேண்டாமா?

சில அச்சங்கள் : மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

சில பயங்கள் : என்னால் இதைச் செய்ய முடியுமா? என்னாலயா? சான்ஸே இல்லை!

எப்பொழுதாவது ஒரு முறை இது போல் நிகழ்ந்தால் அது பொதுவானது என்றும், சாதாரணமான ஒன்று என்று நடக்கக் கூடியவை என்றும் விட்டு விடலாம். திரும்பத் திரும்ப இப்படியே நிகழ்ந்தால், நம்முடைய மனநலனை பாதிக்கும். மனநலன் பலவீனம் அடைய வாய்ப்பாகிவிடும்.

அப்படி நேராமல் இருக்க, மனப்பான்மை உருவாகும் விதங்கள் என்னென்ன, அது நம் அடையாளத்தை நிலை நாட்டுவது எப்படி என்பது, கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இப்படி அறிந்து செய்யும் போது சலசலப்பு அடைய வாய்ப்புண்டு. ஏனென்றால் இதுவரையில் இருந்த விதத்தைப் பற்றி யோசித்து, அது நமக்குச் சாதகமான ஒன்றா இல்லை மாற்ற வேண்டியதா என்பதைச் சிந்திக்க வைக்கும். சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டாலும் நம்முடைய மனநிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரி செய்வதே நன்று.

செய்யாவிட்டால் இப்படி நேரலாம் :

போச்சு போ. வெறும் 45 மார்க்! மீதி 5 மார்க்கை கோட்டை விட்டேன். வெட்கமா இருக்கு. சரியான மக்கு நான்’

ஆமா, இந்தப் பேச்செல்லாம் வீட்டில் தான்.

ஸ்கூல்ல கப்-சிப்.’

ஊஹும், வேலை வாங்காதே. படிக்கட்டும்’

நல்லா படித்து,  நிறைய மார்க் வாங்கினா, அதுவே எங்களுக்குப் போதும்’

எனக்கு இப்படிதான் வேலை செய்து பழக்கம்.  அப்படியே செஞ்சுடறேன்’

அவங்க பொறுப்பா வேலை செய்வாங்க. ஆன புதுசா ஏதானும் செய்யச் சொன்னா தயங்குவாங்க’

நன்றாகப் படித்து, பிறர் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளித்து, புரிய வைத்து, உடன் பிறந்தவர்கள் - கூடப் பணி புரிபவர்கள் – வீட்டினருக்கும் உதவி செய்வோரைப் பற்றி நாம் இங்கு அதிகம் பேசப் போவதில்லை. வெவ்வேறு காரணங்களினால் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, தன் திறமைகளின், முயற்சிகளின் முழுப் பயனை அடைய முடியாமல் போவது எதனால், அதைத் தவிர்ப்பது எப்படி என்று வர வாரங்களில் பார்ப்போம்.

மற்றவர்களுக்கு நம்முடைய அடையாளமாகவும்,  முத்திரையாக படுத்துவது நம் பெயர். நமக்குள் அடையாளப் படுத்துவது தன்னைப் பற்றிய அபிப்பிராயம். இதில் அடங்குவது: தேர்வில் நமக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள், மற்றவர் அளிக்கும் சபாஷ், அடுத்தவர்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்கள். இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு, தம்முடைய அடையாள முத்திரையாக நாம் வைத்துக் கொள்வதுண்டு.

எக்காரணத்தினால் இந்த நிலையில் செல்கிறோம் என்பதின் புரிதல் மிகவும் அவசியம். நாம் யார் என்று நம் புரிதலிருந்தே மற்றவர்களுக்கும் காட்டுவோம். புரிதலினால் மாறும் நம் செயல்கள், நாம் யார் என்பதை எடுத்துக் கூறும். அதுவே நம் அடையாளம் ஆகிவிடும்

தனக்கென்று இல்லாமல், மற்றவர்களின் அபிப்பிராயத்தை வைத்தே தன்னைப் பற்றி முடிவு எடுப்பவர்கள் எப்படி செயல் படுவார்கள் என்பதைப் பற்றி முதலில் பேசலாம்.

எல்லோரும் சொல்வதனால் தான் நான் தான் புத்திசாலி’

குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதை அதிகம் பார்க்க நேரிடும்.

நிறைய மார்க் கிடைக்கிறது. அதனால் தான் எல்லாரும் என்னைப் புத்திசாலி என்கிறார்கள். அப்படின்னா நான் புத்திசாலி தான்’.

எப்பவும் நிறைய மார்க் எடுக்க வேண்டும்.

அப்போது தான் மதிப்பு’.

குறைந்த மார்க் வந்தா? மத்தவங்க என்னை மார்க் கேட்டா, என்ன பதில் சொல்வேன்?’

மதிப்பெண் குறைந்தால், நானே என்னை மதிக்க மாட்டேனே’

வளரும் பருவத்திலிருந்தே இப்படிக் கணக்கிடுவதால் இந்த மனப்பான்மை அவர்களின் அடையாளமாகிறது. மேற்சொன்னதை திரும்பப் படித்து பார்த்தால், அதில் தன்னைத் தாழ்த்திக் கொள்வது தெளிவாக தெரியும்.

அன்னிக்கி மீடிங்க்ல தவறா பேசிட்டேன். எனக்கு கஸ்டமர் கிட்ட பேச வராது’

எல்லாரும் நான் தயார் செய்த ரிப்போர்ட் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ரிப்போர்ட் தயார் செய்வதுதான் எப்பவும் என் வேலைன்னு வெச்சுப்போம்’

கல்வி கற்றுக் கொள்ளும் வரையில் மதிப்பெண்களே குறியாக இருப்போம். மதிப்பெண் ஒன்றே நம் அடையாளம் என்று இருந்துவிட்டால், வேலை செய்யும் போதும் மற்றவர்களின் சொல்லுக்கு ஏங்கி, எதைச் செய்தால் மற்றவர்களின் நற்சொல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அதை மட்டும் செய்து கொண்டிருப்போம். ஒரு முறை முடியாமல் போய்விட்டால் அதற்கு என்றென்றைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடுவோம்.

எந்த விதத்தில் இவற்றைப் பார்த்தாலும், ஒவ்வொன்றும் அவர்களின் ஒரு பகுதியை தான் காட்டுகிறது. அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து, அதுதான் தன் முழு அடையாளம் என்று ஏற்றுக்கொள்வார்கள்.இப்படித் தான் நான்’ என்ற உறுதியோடு இருப்பார்கள். ஏன் இப்படிச் செய்தோம் என்பதை ஆராயாமல் இருப்பதும் உண்மை.
 

இவர்களின் திறமைகளில், திறன்களோ எந்த ஒரு குறைபாடும் இருக்காது. இருந்தாலும், மற்றவர்கள் தரும் சான்றிதழ்களுக்கும், மதிப்பெண்களுக்கும் மதிப்பீட்டிற்கும் மட்டும் ஏன் இத்தனை ஒரு மவுசு? அடுத்து வரும் பகுதியில் இதைப் பற்றி பேசுவோம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
Mindset, lifestyle, mananalam, மனநலம் https://www.dinamani.com/health/mental-health/2018/oct/18/mindset-identifiers-3022902.html
3019007 மருத்துவம் மனநல மருத்துவம் இப்போதுதான் பெண்கள் தங்கள் பிரச்னையை வெளிப்படையாக கூற முடிகிறது! சின்மயி முகநூலில் விளக்கம் (விடியோ) உமா Friday, October 12, 2018 02:27 PM +0530  

பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் என்பதை வார்த்தைகளால் வரையறுத்துக் கூற முடியாது. குடும்பரீதியாக, சமூக ரீதியாக அவர்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். இந்நிலையில் பாலியல் ரீதியாகவும் தொல்லைகளுக்கு உட்படுபவர்களின் மனநிலை எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதையும் அத்தனை எளிதாகக் கூறிவிட முடியாது. உள்ளுக்குள் ஒடுங்கி, தன்னிலை இழந்து பாதிக்கப்பட்டவர்களின் தவிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தனக்குள் அமிழ்ந்து போய்விடும் கசப்பான நினைவுகளை மீறி அவர்கள் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. மறந்துவிட்ட நினைவுகள் எதன் காரணம் கொண்டோ மீண்டும் நினைவுப் பரப்பில் வந்துவிட்டால் அந்த நொடி நரகத்தைக் கடக்க அவர்கள் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அண்டை வீடுகளில், அலுவலகத்தில், என நம்மைச் சுற்றிலும் எத்தனை எத்தனை பெண்கள், ஒரு முறையாவது தங்களுக்கே தெரியாமல் இது போன்று சிக்கியிருக்கக் கூடும்.? அன்பின் பெயரால் முதுகைத் தட்டுவது, பாராட்டுகிறேன் என்று கன்னத்தில் கிள்ளுவது, சற்று அத்துமீறறுவது என்று சிறுமிகளை சீண்டும் ஆசாமிகள் அக்கம் பக்கத்தில் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனை என்ன? இத்தகைய சீர்கேடுகளை, வஞ்சகர்களின் மன வக்கிரத்தை சிலர் காலம் தாழ்த்தியேனும் வார்த்தைகளாலும், பலர் வேறு வழியின்றி மௌனத்தாலும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் இதற்கான தீர்வு வெகு அருகில் இருக்கிறது என்பதை பாடகி சின்மயி உள்ளிட்ட தைரியமான பெண்களின் மூலம் மற்ற அனைவருக்கும் கிடைக்கவிருக்கிறது. தவறு செய்ய அஞ்சினால் தான் அவர்கள் அத்தவறை செய்ய மாட்டார்கள். யார் தட்டிக் கேட்கப்போகிறார்கள் என்ற நினைப்பு தான் பல ஆண்களுக்கு இத்தகைய திமிரான தைரியத்தை தருகிறது. 

சின்மயி தனது முகநூலில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நேர்ந்த இக்கட்டான நிலைமையும், அதிலிருந்து மீண்டு வந்ததையும், இத்தனை காலம் ஏன் இதனை வெளிப்படுத்தவில்லை என்பது போன்ற தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதில்களைத் தெரிவித்துள்ளார். அதன் காணொலி இதோ.

Strongly support #metoo

 

 

Posted by Chinmayi Sripada on Thursday, October 11, 2018

 

]]>
வைரமுத்து, vairamuthu, Chinmayi, சின்மயி, chinmayi facebook, சின்மயி ஃபேஸ்புக் https://www.dinamani.com/health/mental-health/2018/oct/12/chinmayi-facebook-speech-and-allegations-against-vairamuthu-3019007.html
3019006 மருத்துவம் மனநல மருத்துவம் மீடூ குறித்து மனநல மருத்துவர் ஷாலினி என்ன சொல்கிறார்? உமா Friday, October 12, 2018 12:50 PM +0530  

மீடு ஹேஷ்டேக் உலகளாவிய அளவில் கடந்த ஆண்டு பரபரப்பாகி தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதுதான் தொடக்கம். இனிமேல் தான் இருக்கிறது அசலான போராட்டம் எனும் நிலையில், அண்மையில் சின்மயி வைரமுத்து மீது எழுப்பிய குற்றச்சாட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்தாலும், அது எடுபடவில்லை என்பதே உண்மை.

கடந்த ஆண்டு ஹாலிவுட்டின் உயரிய விருதான் ஆஸ்கர் விருதை பெறுகையில் பழக்பெரும் நடிகை மெரீல் ஸ்ட்ரீப் மீடூ இயக்கத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகைகள், மீடியாவில் பணிபுரியும் பெண்கள், என அனைத்துத் தரப்பிலிருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். சமூக வலைத்தளங்களில் மீடூ (Metoo#) என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதில் அனேகம் பெண்களை மனம் திறந்து தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளை பகிரங்கப்படுத்த தைரியம் அளித்தனர். இப்படித் தொடங்கிய இந்த இயக்கம், வைரலாகி, ஆசிய நாடுகள் முழுவதும் பரவி, இந்தியாவிற்கு இந்த ஆண்டு அதுவும் மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. இது குறித்து மனநல மருத்துவர் ஷாலினி அளித்த பேட்டியில் கூறியது,

மீடூ - உலகம் தழுவிய சுனாமி அது. இந்தியாவிற்கு தாமதமாகத்தான் வந்துள்ளது. ஒரு மாதம் முன்னால் பாலிவுட்டிற்கு வந்து, தற்போதுதான் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறது. இதனால் பல ஆண்கள் கலவரத்தில் உள்ளனர். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்கொண்டால் இந்த சமுதாயத்தை எப்படி ஃபேஸ் பண்ணுவது என்று தப்பு செய்த ஆண்கள் பீதியில் உள்ளனர்.

உலக நாடுகள் முழுக்க பெண்கள் இப்படி துணிச்சலாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதால் கலவரமுற்ற சில ஆண்கள் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்களை தாக்கவும் எதிர்வினை புரியவும் செய்கிறார்கள். ஏன் 20 வருஷத்துக்கு முன்னால் நடந்ததை இப்போது சொல்கிறீர்கள் என்பதுதான் அவர்களின் முதன்மைக் கேள்வி. அதற்குக் காரணம் அப்போது அதை வெளிப்படுத்த தைரியமோ சூழலோ இல்லை, வாய்ப்புக்களும் இல்லை. இப்போது மீடூ என்ற ஒரு மிகப் பெரிய ஆதரவு அனைத்து பெண்களுக்கும் உள்ளது. ஒட்டுமொத்த பெண்கள் களத்தில் இறங்கவே, ஆண்கள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.

சமூகரீதியாக உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களை சீண்ட நினைத்தால் இனி அது நடக்காது. இந்த இயக்கத்தின் மூலம் அத்தகைய ஆண்களின் எண்ணங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டனர் பெண்கள்.

வைரமுத்துவைப் பொருத்தவரையில், ஆண்டாள் சர்ச்சை என்பது அவரது கருத்துரிமை சார்ந்த ஒன்று என்பதால் அவரை ஆதரித்து சில முன் வந்தனர். ஆனால் ஒரு பெண் இந்த ஆதாரத்துடன் இதனைச் சொல்கிறேன் என்று வெளிப்படையாக கூறும் போது அறிவுள்ள ஆண்கள் யாரும் அவருக்கு ஆதரவு தர முன்வர மாட்டார்கள். காரணம் அவர்களும் அப்படி ஆதரவு தெரிவித்தால் குற்றம் சாட்டப்படலாம். அதனால் தான் பெரும்பாலானவர்கள் மெளனமாக உள்ளனர். இதற்கு சப்போர்ட் செய்தால் அது அசிங்கம், சமூக இழுக்கு. 

பாலிவுட்டில் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தைப் பற்றி ஒரு பெண் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறினார் அவர். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டு, இனி பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்கிறேன் என்று அறிவித்தார். அதுதான் வீரம், மனிதாபிமானம். ஆனால் வைரமுத்து இதனை மறுப்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு எடுக்க மறுக்கிறார்.

சமூக ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கும் ஆண்கள் இனிமேல் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதையே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன் வைக்கின்றன. இனி ஆண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை வைத்து பெண்களை வேட்டையாட முடியாது. இனி எந்த பெண்ணும் ஹெல்ப்லெஸ் விக்டிம் கிடையாது. இது வரலாற்றுரீதியாக பெரிய மாற்றம். இது சோஷியல் மீடியா வந்த பிறகு நிகழ்ந்த நல்ல விஷயம். கிராமத்தில் எப்படி பெண்களின் கையைப் பிடித்து இழுத்தால், அதை அவள் வெளியே சொல்லும்போது ஒட்டுமொத்த கிராமமே அவனை சாத்தி எடுப்பதைப் போல, சோஷியல் மீடியாவால் உலகமே ஒரு கிராமமாக மாறி, பெண்களுக்கு நிகழும் வன்முறையை எதிர்த்து கேள்வி கேட்க முடிகிறது. அவ்வகையில் பெண்கள் தங்களின் பிரச்னையை வெளிப்படையாக கூற முடிகிறது. இது மாற்றத்துக்கான காலகட்டம், வரவேற்கத்தக்கதே’ என்றார் ஷாலினி.

]]>
metoo, chinmayi, vairamuthu, dr.shalini, ஷாலினி, மீடூ, வைரமுத்து, சின்மயி https://www.dinamani.com/health/mental-health/2018/oct/12/doctor-shalini-says-about-metoo-movement-and-vairamuthu-3019006.html
3017002 மருத்துவம் மனநல மருத்துவம் மனப்போக்கு மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? மாலதி சுவாமிநாதன் Tuesday, October 9, 2018 05:29 PM +0530  

நம் சிந்தனை எப்படியோ, நம் நினைவாற்றல் அப்படியே அமையும். நம்முடைய செயல்களும் அதே போலவே இருக்கும். நாம் எதை எப்படிச் செய்கிறோமோ, அவை நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு மட்டுமின்றி, நமக்கும் கூட தெரிவிக்கும். இதுதான் நம் மனப்பான்மையாகும். இதை, இது அமையும் விதங்களைப் புரிந்து கொள்வது முக்கியம்.

தன்னைக் கணக்கிடும் விதங்களை அறிய வேண்டும். நம் திறன்களை, அறிவுக் கூர்மையை, ஆற்றல்களை நாம் எப்படிப் பார்க்கிறோம், வளர்த்துக் கொள்கிறோம், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதே நம் வெற்றி, தோல்வி, சந்தோஷம், நிராசைகளை நிர்ணயிக்கும். அப்படி என்றால், மனப்போக்கு மாற்றமில்லாததா?

இவற்றை வைத்தே நாமும் தன்னை மதிப்பிடுகிறோம். இந்த சுயமதிப்பீட்டை நாம் பல சைகைகள், நடத்தைகள் மூலம் மற்றவருக்கும் தெரிவித்து விடுகிறோம், அவற்றை வைத்தே மற்றவரும் நம்மை எடை போட்டு விடுவார்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதையும், அதைத் தெரிவிப்பதையும் கேட்டு, ‘ஆம், நாம் இப்படித்தான்’ என்று நாமும் முழுதாக நம்பி விடுகிறோம், இது நம் மனப்பான்மையாக வலுவடைந்து விடுகிறது. இந்த மனப்பான்மையில், நம்முடைய கண்ணோட்டங்கள், கருத்துகள் எனப் பல அடங்கும்.

அதாவது, புத்திசாலியா இல்லையா என்பதும், நம்மைக் கணக்கிடும் விதங்களில், நம்முடைய கருத்துக்கள், மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதும் அதைத் தெரிவிப்பதும் அடங்கும். இதிலிருந்து நம்முடைய கண்ணோட்டங்கள், கருத்துகள் எனப் பலவற்றே நம் மனப்பான்மையாகும்.

மனப்பான்மை என்பது நம்பிக்கைகள் மட்டும் அல்ல. நம் நம்பிக்கைகளை உருவாக்கும் விதங்கள், நம்முடைய தாக்கம், எதிர்வினைகளும் இதில் சேரும். இவை நம் கவனத்தை பல்வேறு வகைகளில் அமைத்துத் தரும், பலமுறை நம் செயல்களுக்கு வழிகளை வகுத்துத் தரும். நம்முடைய மனப்பான்மை நம்முடைய கையெழுத்து போல் வழக்கமான, வாடிக்கையான ஒன்றாக இருக்கையில், அதுவே நம் அடையாளமாகும், நாம் எப்பேர்ப்பட்டவர் என்பதை எடுத்துக் காட்டும்..

அதே போல், நம்மை மற்றவர்கள் கணக்கிடும் விதங்கள் பல உண்டு. அவர்களின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு அவர்களின் கணிப்பு வெவ்வேறு சூழ்நிலைகளில் நமக்குத் தெரிவிக்கப் படும். இவை மதிப்பெண்களாக, பரீட்சை முடிவுகளாக, பாராட்டுக்களாக, கோப்பைகளாகக் கிடைக்கும். சான்றிதழ்கள், பிறகு ஊதியம் என எவ்வளவோ இதில் அடங்கும்.

இதில், எதை எடுத்துக் கொண்டாலும் அதில் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நிதர்சனம். மேலும், இந்த ஒவ்வொன்றிலும் மற்றவர்களுடன் போட்டியின் பங்கும் அதிகமாக இருக்கிறதை நன்றாகக் காணலாம்.

இவை அனைத்துமே மற்றவரின் கணிப்பினால் சூட்டப்படும் புகழும், (பெருமை / இழிவு) பட்டமும், பரிசுமாகும். பலமுறை இப்படி மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொண்டு, நாம் இப்படித் தான் என்று இருந்து விடுவோம், மாறவே மாறாமல் அப்படியே இருப்போம்! அதனாலேயே நம்மை அப்படியே இருக்க அமைத்துக்  கொள்வோம். அதுவே நம்மை ஆட்கொள்ளும்.

நம்முடைய மனப்பான்மை சிலவற்றை நாம் நம் கலாச்சாரங்கள், பெற்றோரின் பழக்க வழக்கங்கள், நம்மைச் சுற்றி நடப்பதைப் பார்த்துக் கற்றுக் கொள்வதாகும். குறிப்பாக சில மாற்றங்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்த ஒருவரிடமிருந்து நாம் உட் கொண்டதாகும். இன்னும் சில மாற்றங்கள், ஒரு புரிதலால், ஒன்று படித்த பின்னால், கேட்டதால், இல்லை உரையாடியதில் ஆனதாக இருக்கலாம்.

அதனாலேயே நம் ஒவ்வொருவரின் மனப்பான்மையில் வேறுபாடுகளைப் பார்க்கிறோம். அதனால் தான் நம்மில் சிலர், தோல்வி என்றாலே பயந்து ஓடி விடுவார்கள். மற்றவர்கள் தோல்விகளைக் கையாளும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருப்பவர்கள், தோல்வியைக் கற்றலுக்கு வைப்பாக வரவேற்கும் நபர்களாக இருப்பார்கள்.

நம் எல்லோருக்கும் உள் உணர்வில் புதியதை ஆராய, வெவ்வேறு விதமாகச் செய்ய, சாதிக்க ஆசை இருக்கிறது. இதை நிறைவேற்ற, நாம் எவ்வாறு நம் மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்கிறோம் என்றும், அவை எப்படி ஒன்று சேர்ந்து நம்முடைய மெய்ப்பொருளாகிறது என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியம்.

அதே போல் நாம் நம்முடைய சமுதாய திறன்களை, மற்றவர்களுடன் பழகும் திறன்களை, நம்முடைய ஆராயும் திறன்களை பற்றியும் புரிந்து கொள்வது தேவை. இவற்றை அறிந்து கொண்டு, எப்படி நம் மனப்பான்மை உருவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டாலே பல விதத்தில் நமக்கு முன்னேறும் பாதை தெரிய வரும்.

மனப்பான்மை என்பது நிரந்தரமாக இருப்பது இல்லை. மனப்போக்கு மாற்றக் கூடியவையா? மாற்ற முடியும். அதற்கு நாம் நம்மைக் கணிக்கும் விதங்கள் என்ன? நமக்கே கொடுக்கும் பரிசுகள் எவை? நாம் கையாளும் முறைகள் என்னென்ன? மற்றவர்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவல்களை எவ்வாறு / எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்? இவற்றை நமக்குச் சாதகமாகவும், எதிராகவும் நாம் செய்வதை வர வாரங்களில் இந்தப் பகுதியில் மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?” என்று சற்று ஆராய்வோம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
Mindset, rigid, mind power, மனநலம், இறுக்கம், மனக்குழப்பம், மதிப்பீடு https://www.dinamani.com/health/mental-health/2018/oct/09/mindset-flexible-rigid-3017002.html
3016286 மருத்துவம் மனநல மருத்துவம் அதீத அன்பும் ஆபத்தானதே பிரியசகி Monday, October 8, 2018 01:08 PM +0530  

தம் அதீத அன்பால் பெற்றோர் தன்னையும் அறியாமல் எப்படி சுயநலனே பெரிதென நினைக்கும் பிள்ளைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றனர் என்பதை முந்தைய கட்டுரையில் கண்டோம்.

எம்மா பட்டாக்ளியா என்ற உளவியலாளர், ‘அதிகப்படியான பொருட்களை வாங்கி கொடுத்துதான் உங்கள் பிள்ளைகளைக் கெடுக்க வேண்டும் என்பதில்லை, உங்கள் அதீத அன்பாலும் அவர்களைக் கெடுத்து விட முடியும். அன்பை சரியான விதத்தில் காட்டுவதெனில்  அது பிள்ளைகளை இந்த உலகை எதிர்கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும் அதே சமயம் பணிவும் மனித நேயமும் கொண்டவர்களாகவும் வளர்ப்பதுதான்’, என்கிறார். 

பெற்றோர் அதீத அன்பு காட்டும் சமயங்கள்

குழந்தையை சுற்றியே தன்  உலகை அமைத்துக் கொள்வது:

சில பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடனே தன் முழு நேரத்தையும் செலவழித்து தன் குழந்தை மட்டும் தான் உலகம் என்பது போல் நடந்து கொள்கின்றனர் . குழந்தையின் மகிழ்ச்சிக்கென தனது எந்த சந்தோஷத்தையும் விட்டுத் தர தயாராகவுள்ளனர் . குழந்தைகள் நமக்கு முக்கியம்தான், ஆனால்  தனக்கான இடத்தையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர பெற்றோர்களுக்கு வேறு முக்கிய வேலை ஏதும் இல்லை என பிள்ளைகள் நினைத்து விடக் கூடாது. வயது வந்த பிள்ளைக்குக் கூட குளிக்கச் செல்லும் முன் உள்ளாடை எடுத்து தருவதிலிருந்து வீட்டுப்பாடம் செய்து தருவது வரை  ஓடி ஓடி பணிவிடை செய்யும் பெற்றோர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.

தன் பெற்றோரின் உடல் சுகமின்மையையும் பொருட்படுத்தாமல் அதிகார தொனியுடன் பிள்ளை வேலை வாங்கினாலும் பிள்ளை கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று நிற்கும் பெற்றோர் இந்த பட்டியலில் அடங்குவர். பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என்ற எண்ணமே துளியும் இல்லாமல் படிப்பது மட்டும் தான் என் வேலை, வீட்டு வேலைகள் பெற்றோருக்கானது என்று நினைக்கும் இப்பிள்ளைகள் வெளி உலகமும் இப்படி தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டுமென நினைத்து,  அது நடக்காத போது ஏமாற்றத்தால் உடைந்து போவார்கள். தன்னை கவனிப்பது மட்டுமே பெற்றோர்களின் வேலை அல்ல; அவர்களுக்கென வாழ்க்கை, வேலை, ஆசை, சமூகப் பொறுப்பு எல்லாமே உண்டு; எனவே அவர்களுக்கு ஏற்றபடி தானும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விட்டுக் கொடுத்தலும் வளைந்து கொடுத்தலுமே வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்கும் என்பதையும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

பிள்ளைகளை சிறு துன்பமும் படாமல் வளர்க்க நினைப்பது

பிள்ளைகள் சிறு துன்பம், மன உளைச்சலுக்கும் ஆளாகி விடக் கூடாது என ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டும் பெற்றோர் அத்தகைய சூழலை எப்படி மேற்கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர தானே எப்போதும் உடனிருந்து உதவ எண்ணக் கூடாது. குழந்தை கீழே விழுந்து விட்டால் தரையை அடிப்பதும் குழந்தை யாரால் காயப்பட்டதோ அவர்களை அடிப்பதும் குழந்தையின் மனதில் தான் சரி மற்றவர்கள் மீது தான் தவறு என்ற எண்ணத்தை ஆழமாக பதியவைத்துவிடும். மாறாக அழும் குழந்தையை எல்லாம் சரியாகிவிடும் என சமாதானப்படுத்தி மீண்டும் விளையாட வைப்பதே சரியான வழியாகும்.

கண்டிக்கவோ தவிர்க்கவோ வேண்டிய செயலை ஊக்கப்படுத்துவது

ஏதாவது ஒன்றை கேட்டு அடம் பிடித்து  அழும் குழந்தையை சமாளிக்க கேட்டதை கொடுப்பது தவிர்க்க வேண்டிய ஒன்று. அடம் பிடித்து அழுதால் கண்டு கொள்ளாமல் விடுவதே சரியான வழி .

சரியான எல்லைகளையும் தெளிவான விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்காமலிருப்பது

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு சரியான நடத்தைக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். மருத்துவரான சூசன் பட்றாஸ்  என்பவர், ‘விதிமுறைகள் பின்பற்றப்படாத  குடும்பத்தில் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்ட, மரியாதையற்ற, ஒத்துழைக்காதவர்களாக இருப்பார்கள்’, என்கிறார். தான் நினைத்தபடி நடக்க அனுமதிக்கப்படும் குழந்தைகள் கீழ்படிதலற்றவர்களாக, பிறரைப் பற்றிய உணர்வு அற்றவர்களாகவே இருப்பார்கள்.

விதிமுறைகளை ஒரே சீராக அனுசரிக்காமலிருத்தல்:

அளவுக்கு மீறிய செல்லமோ, கண்டிப்பா ஆபத்தானது என்பதுபோல் ஒரே விஷயத்திற்கு ஒரு நேரம் கண்டிப்பதும், ஒரு நேரம் போனால் போகிறது என விடுவதும் தவறாகும். உதாரணமாக வேறு யாரும் வீட்டில் இல்லாத போது குழந்தை தன்னை ஒருமையில் அழைப்பதையோ, திட்டுவதையோ, ஏன் அடிப்பதையோ கூட கண்டிக்காமல் ரசிப்பவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் மட்டும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்த்தால் எப்படி சாத்தியமாகும்?

தவறுக்கு தண்டனை உண்டென உணர்த்தாமலிருத்தல்:

பிள்ளைகள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டும். உதாரணமாக தன் தம்பியை அடித்தல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தல், பொருட்களை உடைத்தல், பெற்றோரை எதிர்த்து பேசுதல்,போன்றவை தவறான செய்கைகள் என்பதை உணர்த்தி சரி செய்யாவிடில், தான் தவறே செய்யமாட்டோம்; தான் செய்வது எல்லாமே சரியானது என்ற எண்ணம் பிள்ளையின் மனதில் பதிந்துவிடும்.

தவறான முன்னுதாரணமாக இருத்தல்:

பெற்றோர் நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் எப்போதும் சண்டையிடுவது,அழுவது, பொய் சொல்வது, கோபப்படுவது என்றிருந்தால்  பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள்.

பிள்ளையின் தவறான  நடத்தைக்கான விளைவையும் தானே ஏற்றல்:

தன் தவறுக்கான குற்றவுணர்வினையோ, மன அழுத்தத்தையோ பிள்ளைகள் உணர அனுமதிக்க வேண்டும். அதையும் பெற்றோர் தன்  தலையில் சுமக்க வேண்டியதில்லை. தன் செயலுக்கான விளைவு இது என்பதை உணரும் போதுதான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பார்கள். அவமானம், ஏமாற்றம், மன அழுத்தம் தரும் பாடங்களே அவர்களை வலிமையுள்ளவர்களாக்கும். அவற்றை எதிர்கொள்ள நம் உதவி தேவைப்படுமாயின் அப்போது உதவலாம்.

பெற்றோர் தன் பிள்ளையை உண்மையான உலகை எதிர்கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டும். தான் நினைத்ததையெல்லாம் நினைத்த நேரத்தில் பெற்றுக் கொள்வது நிஜ உலகில் சாத்தியமில்லை என்பதையும், எதிர்படும் இன்னல்களையும், ஏமாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்ளவும், இன்ப துன்பங்களை சமநிலையில் கையாளும் பக்குவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதீத அன்பு காட்டும் பெற்றோர் பின்வரும் எண்ணங்கள் பிள்ளையின் ஆழ்மனதில் பதியக் காரணமாகின்றனர் :

 • மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை
 • நான் எனக்குத் தேவையானதைப் பெறுவதற்குத் தான் மற்றவர்கள் இருக்கிறார்கள்
 • பிறரை சார்ந்திருக்கவோ, பிறரிடம் எதிர்பார்க்கவோ எனக்கு எல்லா உரிமையும் உண்டு
 • என் நோக்கத்தை அடைய பொய் சொல்வது, ஏமாற்றுவது, பிறரைப் பயன்படுத்துவது எதுவும் தவறில்லை
 • எனது வழி சரியானது, மற்றவர்களின் வழி தான் தவறானது. என்னைப் பற்றி புரிந்து கொள்ளாதது அவர்களது தவறு  
 • என் நன்மைக்காக மற்றவர்களை என் கட்டுப்பாட்டில் கொண்டுவர நான் எதையும் செய்யலாம்
 • நான் கடினப்பட்டு உழைக்க வேண்டிய அவசியமில்லை; கடின உழைப்பு என்பதெல்லாம் மற்றவர்களுக்கு தான்
 • நான் உழைக்காவிட்டாலும் எல்லாவிதமான பலன்களையும் பெற எனக்கு உரிமையும், தகுதியும் உண்டு 
 • மற்றவர்களின் பொருளை அவர்களின் அனுமதியோடுதான் எடுக்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை
 • பிறரின் தேவையைவிட என்னுடைய தேவையே மிக முக்கியம்
 • சிறப்பான சலுகைகளை பெற எனக்கு எல்லா தகுதியும் உண்டு
 • ஏனென்றால் நான் சிறப்பு வாய்ந்தவன். மற்றவர்களுக்கான விதிமுறைகளுக்கு நான் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

பொறுப்புமிக்க பிள்ளைகளை உருவாக்குவது எப்படி?

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது தாயையே கொலை செய்யத் துணிந்த உமாபதி போன்று பொறுப்பற்ற, தன்னலமிக்க, பிறரைப் பற்றிய அக்கறையற்ற, கல்நெஞ்சர்கள் ஆகின்றனரா அல்லது தனித்துவமும், செயல் திறனும், தன்னம்பிக்கையும், சமுதாயத்தைப் பற்றிய அக்கறையும் கொண்ட நல்லவர்களாக உருவாகின்றனரா என்பது பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.

பெற்றோர்களுக்கு உதவும் சில குறிப்புகள் :

 1. பிள்ளைகளிடம் அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள், சிறப்பானவர்கள் என்று பாராட்டுவதைத் தவிருங்கள். அவர்கள் கடவுளால் எவ்வளவு ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்பதையும் மற்றவர்களோடு நாம் எப்படி ஒத்துப் போகிறோம் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில் திரும்பத் திரும்ப தான் மிகச் சிறப்பானவன், தன்னைப் போல் வேறு எவரும் இல்லை என்ற புகழைக் கேட்டு வளரும் குழந்தை சுய ஆராதனை மனோபாவம் (Narcissistic personality) கொண்ட சுயநலவாதிகளாக மாறிவிடுவர்.
 2. மக்கள் ஒருவரை அவரது நல்ல குணங்களுக்காக ஏற்றுக் கொள்வார்களே தவிர அவரது தனித்துவத்திற்காக அல்ல. அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட பிக் பாஸ் தொலைக்காட்சித் தொடரின் முடிவு இதற்கு நல்லதோர் உதாரணம். இளம் வயதிலேயே நல்ல உடல் வலிமையும், மனவலிமையும் கொண்டு டாஸ்க்குகளில் எல்லாம் சிறப்பாக விளையாடிய போதிலும் மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட யாஷிகா மக்களால் நிராகரிக்கப் பட்டார். அதே போல் அழகும், கவர்ச்சியும், திறமையும் கொண்டிருந்தாலும், வெற்றி பெற பொய் சொல்லவோ ஏமாற்றவோ தயங்காமல், பிறரை ஹிட்லரைப்போல்  அடக்கியாள நினைத்த ஐஸ்வர்யாவும் தோற்றுப் போனார். மாறாக பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நியாயமாக, தன்னம்பிக்கையுடன் விளையாடிய ரித்விகாவே மக்களின் மனதை வென்று பரிசைத்  தட்டிச் சென்றார். எனவே நம் சொல்,செயல், நடத்தை நமக்கோ பிறருக்கோ தீங்கு தராததாக , நியாயமானதாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிக அவசியம்.
 3. வீட்டு வேலைகளில் உதவ பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சில பெற்றோர் பிள்ளைகள் பொதுத் தேர்வுக்குப் படிக்கிறார்கள் என்று வேறு எந்த வேலையும் அவர்களுக்கு கொடுப்பதில்லை. சிலர் கடைக்குச் செல்ல, வீடு பெருக்க, பாத்திரம் கழுவ பிள்ளைகள் உதவி செய்ய லஞ்சமாக காசு கொடுத்து பழக்கப் படுத்துகின்றனர். இது தவறு. வீட்டு வேலைகளில் உதவ தனக்கும் பொறுப்பு உண்டு என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். இது எதிர்காலத்தில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் என்கின்றனர் குழந்தைகள் நல வல்லுநர்கள்.
 4. தெளிவான எல்லைகளையும், விதிமுறைகளையும் குழந்தைகளுக்குக் கொடுங்கள். விதிகள் மீறப்பட்டால் தண்டனை உண்டு என்பதையும் முன்பே சொல்லி விடுங்கள். தண்டனை என்பது அடிப்பதோ திட்டுவதோ அல்ல . குழந்தை விரும்புவதை தராமல் தள்ளிப் போடுவதால், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மீண்டும் அத்தவறை செய்யாதிருப்பார்கள் .
 5. தம் கடமைகளை செய்வதற்காக அல்லாமல் நல்ல நடத்தைகளுக்காக பாராட்டியோ சிறு பரிசுகள் தந்தோ ஊக்குவிக்கலாம் .
 6. பெறுவதை காட்டிலும் தருவதே சிறந்ததது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தன் பிறந்த நாளுக்கோ பண்டிகை நாட்களுக்கோ கிடைத்த இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை தேவை உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம்.
 7. குடும்பத்தில் உள்ளோர் மீது அக்கறை காட்டுவது பிள்ளைகள் கற்க வேண்டிய முக்கியமான குணம். அதே போல் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோர் மற்றும் நோயாளிகள் மீதும் அன்பும் அக்கறையும் காட்டவும் கற்று கொடுப்பது அவசியம்.
 8. எப்போதும் எல்லோரிடத்திலிருந்தும் நமக்கு சாதகமான பதிலே கிடைக்காது. எனவே 'இல்லை', 'கிடைக்காது', என்ற வார்த்தைகளுக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவது மிக முக்கியம்.
 9. ‘இந்த உலகம் நம் தேவைகளை பூர்த்தி செய்யும், ஆனால் நம் ஆசைகளை அல்ல’ என்பது இயற்கையின் விதி. எனவே ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்கள் ஆசைப்படுவது எல்லாமே தேவையானவை அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும்.
 10. கிரேக்க தத்துவ மேதை எப்பிகூரஸ் என்பவர் , 'போதும்' என்ற வார்த்தையை அறியாதவர்க்கு எதுவுமே போதாது’ என்கிறார். மனித மனம் எப்போதும் இன்னும் சிறந்ததை, பெரியதை தேடிச்  செல்லக் கூடியதுதான் என்றாலும், இருப்பதை கொண்டு திருப்தி அடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம். ஆசைப்படுவதை எல்லாம் அடைய நினைத்தால் மகிழ்ச்சி பாலைவனச் சோலையாகிவிடும்.

குழந்தைகளுக்கு நிலையான மகிழ்ச்சியை தரக் கூடியவை பெற்றோர்களிடமிருந்து கிடைக்க கூடிய அன்பு, ஏற்பு, பாதுகாப்பு ஆகியவை தான். இவை எத்தனை கோடி விலை கொடுத்தாலும் எந்த கடைகளிலும் கிடைக்காதவை. இந்தியாவை வல்லரசாக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும் அதை நல்லரசாக்குவது என்பது எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும் பெற்றோர்களின் கைகளில்தானே உள்ளது? எனவே பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். அதீத அன்பும் ஆபத்தானதே. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!

- பிரியசகி

- ஜோசப் ஜெயராஜ்   

]]>
child, parenting, parents, good children, குழந்தை வளர்ப்பு, பெற்றோர்கள், பிள்ளைகள் https://www.dinamani.com/health/mental-health/2018/oct/08/அதீத-அன்பும்-ஆபத்தானதே-3016286.html
3011711 மருத்துவம் மனநல மருத்துவம் இப்படியா பிள்ளையை வளர்க்கிறது? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா? பிரியசகி Monday, October 1, 2018 05:41 PM +0530  

வைதேகி தன்  மகன் உமாபதி சிறு குழந்தையாக இருந்தபோது சோறு ஊட்ட தெருவெங்கும்  அவனைத் தூக்கிக் கொண்டு படாதபாடு படுவாள். குழந்தைக்கு வேடிக்கை காட்ட பொம்மைகளை வைத்துக் கொண்டு அவள் கணவன் சுந்தரமும் அவர்கள் பின்னால் திரிவான். சுந்தரத்தின் அப்பா ஒரு நாள்  ‘ஏண்டா சுந்தரம் குழந்தையை நல்லா விளையாட விட்டா தன்னால பசிச்சி சாப்பிடும். கீழயே இறக்கிவிடாம சாப்பிடு சாப்பிடுன்னா அது எப்படி சாப்பிடும். அந்தக் காலத்திலே எங்க வீட்ல பன்னிரண்டு பசங்க, அம்மா தோசை சுட ஆரம்பிச்சா எல்லோரும் தட்டைத் தூக்கிட்டுப் போய் பக்கத்துல உட்கார்ந்துப்போம். ஆளுக்கு ஒரு தோசைன்னு ஒரு ரவுண்டு முடியறதுக்குள்ள பள்ளிக்கூட மணியடிச்சிடும் பசியோட ஸ்கூலுக்கு போவோம். எப்படா மதியம் சாப்பாட்டு மணி அடிக்கும்னு காத்திருந்து வீட்டுக்கு வந்து அம்மா போட்ட சாப்பாட்டை வயிறார சாப்பிடுவோம். எதையும் வீணாக்க மாட்டோம். ஏதாவது ஆசையா சாப்பிடக் கேட்டா அப்பா சம்பள நாள் வரை காத்திருக்கணும்.

இந்த தீபாவளி விட்டா அடுத்த தீபாவளிக்கு தான் புது டிரஸ் இப்படி எல்லாத்துக்கும் காத்திருந்ததால சாப்பாட்டோட அருமையும், பொருளோடு அருமையும் தெரிஞ்சு வளர்ந்தோம். உன் புள்ளைய இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் தூக்கிக்கிட்டே திரிஞ்சா அது எப்படிடா சாப்பிடும்,  கூடவே சாக்கலேட்டு, பிஸ்கெட்டுன்னு நொறுக்குத் தீனி வேற’, என்றார். ஒரு வினாடியும் யோசிக்காமல் வைதேகி, ‘மாமா அது உங்க காலம். பன்னிரண்டு பேர்ல ஒருத்தரா பொறந்ததால நீங்க எல்லாத்துக்கும் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. நாங்க ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணுன்னு வெச்சிருக்கோம். நீங்க எங்களுக்கு உதவி செய்யலன்னாலும் பரவாயில்ல, இந்த மாதிரி தொணதொணக்காம இருந்தாலே போதும்’, என முகத்திலடித்தாற்போல பதில் சொல்லவும் அதற்குப் பிறகு கிளம்பி தன் இரண்டாவது மகன் வீட்டிற்குப் போனவர் திரும்பி வரவேயில்லை.

ஒற்றைப் பிள்ளையை கணவனும் மனைவியும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பாதுகாத்தனர். வெளியே போய் விளையாடி கீழே விழுந்து விட்டால் அந்த பிள்ளைகளின் வீட்டிற்குப் போய் சண்டை போட்டு விட்டு இனிமே அந்த கெட்ட பசங்க கூட சேராதே, அம்மா உன் கூட விளையாடுறேன்,’ எனத்  தன் வேலையை விட்டுவிட்டு அவனுடனே இருப்பாள் வைதேகி. சுந்தரம் ஒரு படி மேல போய் மகன் கை வலிக்கிறதென சொல்லி விட்டால் வீட்டுப் பாடங்களைத் தானே எழுதுவான். மகன் காலை படுக்கையிலிருந்து எழ அடம் பிடித்து பள்ளிக்குத்  தாமதமானால் கூட பைக் ரிப்பேராகிடுச்சு என பழியைத் தன் மீது போட்டுக் கொண்டு பள்ளியில் சென்று அவமானப்படுவான். பிள்ளை ஒரு கார் பொம்மை கேட்டால் நிறத்துக்கு ஒன்றாக விதம்விதமாக வாங்கித் தருவான். அடுத்த நாள் ஒன்று கூட உருப்படியாக இல்லாமல் தூக்கி எறிந்து உடைத்திருப்பான் பிள்ளை. மழலை மாறாமல் மகன் தங்களை வாடா , போடி என அழைப்பதையெல்லாம் பெருமையாகக்  கொஞ்சி மகிழ்ந்தவர்கள் , வீட்டிற்கு விருந்தாளிகள்  வரும் போது அவர்களையும் அவன் அப்படியே மரியாதையின்றி பேசுவது கண்டு அவர்கள் முகம் சுழிக்கவே ‘பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுப்பா’ என்றதற்கு ‘அப்படிதான் சொல்லுவேன் போடா’, என்றதும் அவமானமாகிப் போனது.

இப்படியே வரைமுறையின்றி வளர்ந்த உமாபதியின் முரட்டுத்தனமும், அடம் பிடிக்கும் குணமும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. 5-வது படிக்கும் போதே என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஸ்மார்ட்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் வேண்டுமென கேட்டான். கேட்டது  உடனே கிடைக்கவில்லை என்றால் பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைப்பது, மரியாதையின்றி எதிர்த்துப் பேசுவது என கைமீறிப் போகும் பிள்ளையைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் வாங்கித் தந்தனர். அப்படியே  பத்தாவது முடித்ததும் பைக் கேட்டு அடம் பிடித்தான் என வாங்கித் தந்தனர், அதி வேகத்தில் போய் காலை முறித்துக் கொண்டான். 12-வது முடித்ததும் கார் கேட்டதும் பயந்தனர். நீ எங்களுக்கு  ஒரே பிள்ளை, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களால தாங்கிக்க முடியாதுப்பா என்று அழுது பார்த்தனர். அதெல்லாம் நான் பத்திரமா ஓட்டுவேன் என சமாதானப்படுத்தினான். ‘காசு இல்லடா , இப்ப தான் வீடு கட்டி கடன்ல இருக்கோம்’ என்றதற்கு, ‘ நான் கேக்குறத வாங்கிக் குடுக்க முடியலைன்னா அப்புறம் எதுக்கு என்ன பெத்தே?’ என தன் கண்ணெதிரே மனைவியை மகன் மரியாதையின்றி பேசுவதைக்  கண்டு ஆத்திரமடைந்த சுந்தரம், ‘என்ன தைரியம் இருந்தா அம்மாவை இப்படி பேசுவே’, என கை ஓங்கினார். ஓங்கிய அப்பாவின் கையை பிடித்து ‘இந்த அடிக்குற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். நான் கேட்ட காரை வாங்கித் தந்தா தான் காலேஜ்க்கு போவேன் என அடம் பிடித்தான். வேறு வழியில்லாமல் வாங்கித் தந்தனர்.

ஏழு லட்சம் கொடுத்து என்ஜினீயரிங் சீட் வாங்கினால் ஒரு மாதம் போனவன் எனக்கு அந்தக் காலேஜ் பிடிக்கலை எஸ் ஆர் எம் காலேஜ்ல தான் என் ப்ரெண்ட்ஸ் படிக்கிறாங்க அங்க சேருங்க என்றான். மேலும் சில லட்சங்கள் தந்து மகனின் அந்த ஆசையையும் நிறைவேற்றினர். வாரக் கடைசியில் குடித்துவிட்டு வர ஆரம்பித்தவன் பிறந்த நாள் பார்ட்டிக்கு நண்பர்களுடன் ரெசார்ட் போகிறேன்,  ஒரு லட்சம் கொடுங்கள் என்றதும் இனியும் நீ சீரழிய காசு கொடுக்க மாட்டேன் என வைதேகி உறுதியாக இருந்ததைக் கண்டு குடிபோதையில் அவள் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு வீட்டிலிருந்த நகை பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியவனை காவல்துறை கைது செய்தது. இன்று புழல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த சோகத்திலும், ஒரே பிள்ளை என ஈ, எறும்பு அண்டாமல் பாசமாய் வளர்த்த மகன் தாயையே கொல்லுமளவு தறுதலையாய் ஆனதை நினைத்தும் நோயாளியாகி படுக்கையில் விழுந்தார் சுந்தரம்.

இன்று படித்த இளைஞர்களே ஆடம்பர வாழ்க்கைக்காக பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கணவன் மனைவியைக் கொல்வதையும், மனைவி கணவனைக் கொல்வதையும்,  தன் சுகத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணி  தாயே குழந்தைகளைக் கொல்வதையும் பத்திரிகைகளில் காணும் போது எப்படி இவர்களால் மனிதத்தன்மையே இல்லாமல் இப்படி நடந்து கொள்ள முடிகிறது என விமரிசனம் செய்து விவாதிப்பதோடு நம் வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம். ஆனால் பிறருடைய உயிருக்கும் உணர்வுகளுக்கும் சற்றும் மதிப்பளிக்காத இத்தகைய சுயநலவாதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்க இன்றைய பெற்றோர்களின் குழந்தை  வளர்க்கும் முறையும் ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தைகளின்  உரிமை துஷ்பிரயோகம்  (Children Entitlement Abuse)

குழந்தைகள் தவறான விதத்தில் நடத்தப்பட்டால் அதை குழந்தைகள் மீதான வன்கொடுமை என்கிறோம். இவ்வன்கொடுமைகள் பாலியல் ரீதியானதாகவோ, உணர்வு ரீதியானதாகவோ அல்லது உடல்ரீதியானதாகவோ இருக்கலாம். ஆனால் குழந்தைகளோ, பெற்றோர்களோ குழந்தைகளுக்குள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது அல்லது பிள்ளைகள் பெற்றோர்களின் நற்குணத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது குழந்தை உரிமை துஷ்பிரயோகம் எனப்படும். இதனால் பிள்ளைகள் மனதளவில் முதிர்ச்சியடையாமல் குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவர்களின் நிலையை அடையாமல் முதிர் குழந்தைகளாகவே நடந்து கொள்கிறார்கள்

தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையுடன் நடந்து கொள்ளும் சில பிள்ளைகளைப் பார்த்திருப்போம், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் யாவரும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும்,  தான் கேட்பது எதையும் மறுக்கக் கூடாது என இவர்கள் நினைப்பார்கள். அப்படி மறுக்கப்பட்டால் அழுது அடம் பிடிப்பது, பொருட்களைத் தூக்கி எறிவது, கத்துவது, கடிப்பது, அடிப்பது எனப் பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விடுவார்கள்.

குழந்தைகளின் இத்தகைய நடத்தை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் தன்னைப் பற்றிய அதீதமான சுய மதிப்பீடு கொண்டவர்களாக இக்குழந்தைகள் மாறிவிட பெற்றோர்களே காரணமாகி விடுவர். மிகச் சிறிய பலூனில் மிக அதிகமான காற்று ஊதப்பட்டால் எப்படி பொருத்தமில்லாமல் காட்சியளிப்பதோடு வெடிப்பதற்குத் தயாராக இருக்குமோ அது போன்றே இவர்களது சுயமும் இருக்கும். தான் வேண்டுமென நினைப்பது எதையும் பெற தனக்கு உரிமையுண்டு என்ற மனப்பான்மை உடையவர்கள் இவர்கள். அதைப்  பெற தான் குழந்தையாக இருக்கும் தகுதியே போதுமானது, எவ்விதமான உழைப்பும் அவசியமில்லை,  பிறரை விட தான் எல்லாவிதத்திலும் மேலானவன் / மேலானவள் என்று இவர்கள் கருதுவார்கள். பிறரோடு நட்புடன் இனிமையாக பழகுவது போல் தெரிந்தாலும் தான் நினைத்ததை அடைய எவ்வழியையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். எளிதில் எரிச்சலுற்று பிறர் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிறர் மனதை காயப்படுத்துவது, அவமானத்திற்குள்ளாக்குவது, உடைமைகளை சேதப்படுத்துவது, தன் சுயலாபத்திற்காக பிறரைத் தந்திரமாகக் பயன்படுத்திக் கொள்வது என எதையும் செய்வார்கள். நாளடைவில் அன்பு, இரக்கம், மனித நேயம், போன்ற நற்பண்புகளே இவர்களிடம் இல்லாமற் போகலாம்.

இது தோலின் நிறம், கண்ணின் நிறம், சில பரம்பரை வியாதிகள் போன்று பெற்றோரிடமிருந்து மரபு வழியாக வரும் பிரச்னையல்ல. வரமாகப் பெற்ற ஒற்றைக் குழந்தை என்ற காரணத்தால் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அதீத பாசத்தால் இந்த உலகத்தில் நீதான் எனக்கு முக்கியம், உன் மகிழ்ச்சிக்காக நான் எதையும் செய்வேன் நீ நினைத்ததை அடைவது உன் உரிமை என்ற செய்தியை குழந்தையின் மனதில் தன்னையுமறியாமல் தன் செய்கையால் பதிய வைத்து விடுகின்றனர் பெற்றோர்கள்.

தான் பட்ட துன்பங்களைத் தன் பிள்ளை அனுபவிக்கக் கூடாது தனக்கு சிறு வயதில் கிடைக்காததெல்லாம் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும், தான் சிறு வயதில் பட்ட அவமானங்கள் எதுவும் தன் பிள்ளைக்கு நேரக் கூடாது, தன் குழந்தை எப்போதும் சந்தோசத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களே, பிறரது துன்பங்களைப் பற்றி கருத்தில் கொள்ளாத தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட சுய ஆராதனை மனோபாவம் (Narcissistic personality) கொண்ட குழந்தைகள் உருவாகக் காரணமாகின்றனர் .

இக்கட்டுரை பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல; கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் வேலைக்குப் போகும் பெற்றோர் படாதபாடு பட்டு பிள்ளைகளை வளர்க்கின்றனர். தனக்கிருக்கும் சொற்ப நேரத்தில் தன் ஒற்றைப் பிள்ளையின் மீது அத்தனை பாசத்தையும் கொட்டிவிட்டது துடிக்கும் இவர்களது அதீத அன்பே  பிள்ளைகளின் வாழ்க்கைக்கு வில்லனாகிப் போகின்றது. எந்தெந்த சமயங்களில் பெற்றோர்கள்  தவறிப் போகிறார்கள் என்பது பற்றியும் பிள்ளைகளை வல்லவர்களாக சமுதாய பொறுப்பு மிக்க நல்லவர்களாக வளர்க்கத் தேவையான சில குறிப்புகளையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.

-பிரியசகி

ஜோசப் ஜெயராஜ்

]]>
parenting, parent, Narcissistic, adamant kids, குழந்தை வளர்ப்பு, அடம், பெற்றோர் https://www.dinamani.com/health/mental-health/2018/oct/01/parenting-skills-3011711.html
3008341 மருத்துவம் மனநல மருத்துவம் சாதாரண மறதிக்கும் அல்ஸைமர்ஸ் மறதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? விளக்குகிறார் மனநல நிபுணர் வந்தனா! Wednesday, September 26, 2018 02:47 PM +0530 இந்த தலைப்பை பார்க்கும் பொழுது பலரின் பதில் இல்லை என்றே தோன்றும். ஆனால் உண்மையில் மறதி ஒரு நோய். ஞாபக மறதி என்ற நோய் பலரையும் சிரமபடுத்துகின்றது. இதிலிருந்து விடுபட முடியாமல் பலரும் தவிக்கின்றனர். 

குழந்தைகளுக்கு மறதி வந்தால் அது அவர்களது படிப்பை பாதிக்கும், அந்த சமயத்தில் பெற்றோர் தீர்வை நோக்கி செயல் படுகிறார்கள், ஆனால் முதியவர்களுக்கான மறதியை யாரும் கண்டு கொள்வது இல்லை. வயது ஆனாலே மறதி வரும் என்று எண்ணுகிறார்கள். அல்ஸைமர் நோய் (நினைவாற்றல் பாதிப்பு) முதுமையில் வரக்கூடிய நோய் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.

சாதாரண மறதி உள்ளவர்களுக்கு பொதுவாக பேனா, சாவி போன்ற பொருட்களை எங்கே வைத்தோம் என்று தேடுதல், தேதி நினைவுக்கு வராமல் இருப்பது, பாக்கெட்டில் கண்ணாடியை வைத்து கொண்டு வேறு இடத்தில் தேடுதல். மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே ஃபோனை தேடுவது. சீப்பை தலையில் வைத்துக் கொண்டே அதை தேடுவது போன்ற சிரமங்கள் இருக்கும்.
அல்ஸைமர் மறதி நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக இப்படி சில அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் வரக்கூடியவை. 

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்களுக்கு, இந்த நோய் முற்றி போய் . தினசரி வாழ்க்கையில் நடத்தையில் தடுமாற்றம் உண்டாகும். அவர்களுக்கு அடிக்கடி குழப்பம் உண்டாகும், அன்றாட வேலைகளைச் செய்வதில் பிரச்னை, முடிவு எடுப்பதில் சிரமம், கவனிப்பதில், நேரம், தேதி, இடம் குழப்பம், சரியான வார்த்தைகள் தேர்வு செய்து பேசுவது.

செய்த வேலையை திரும்ப திரும்ப செய்வது, வீட்டில் உள்ளவர்களின் பெயர் மற்றும் அவர்கள் யார் என்று தெரியாமல் தடுமாறுவது. சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாப்பிடுவது, சிறு குழந்தைகள் போல நடந்து கொள்வது, வீட்டை விட்டு வெளியே சென்று விடுவது , திரும்பி வர முடியாமல் சிரமப்படுவது. 

இவை தொடரும் போது அவர்களாகவே தனக்கு ஏதோ பிரச்னை வந்துவிட்டது என்று நினைக்கின்றனர். அவை அதிகரிக்கும் போது உடல் மற்றும் மனதளவில் பாதிக்க படுகிறார்கள்.

முதியவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது ஆகையால் அல்ஸைமர்ஸ் நோயின் விகிதாச்சாரமும் அதிகரிக்க கூடும். ஆகையால், இதற்கான விழிப்புணர்வு அவசியமாகும். 

மறதி என்பது வெறும் முதியவர்களுக்கு மட்டும் வரக்கூடியவை அல்ல, சில சமயங்களில் 45 - 50 வயது உடையவர்களுக்கும் வரும். இவை 65 வயது உள்ளவர்களுக்கு 5%, 80 வயது உடையவர்களுக்கு 20% முதல் 25% வரை இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் சுமார் 41லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2006- ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2050 -ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மறதிநோய் Dementia என்பது 'சிதைவடையும் மனம்' என்ற பொருள் கொண்டதாகும். ஏழு வகையான dementia stages உள்ளது (mild to severe dementia). Alzheimer's disease மிக தீவிர stage Dementia வின் நோய் தாக்குதலாகும். (Mild cognitive impairment) வயது முதிர்ச்சியினால் சாதாரண அறிவாற்றல் சரிவா அல்லது முதுமையினால் மோசமான அறிவாற்றல் சரிவா என்பதை மருத்துவருடன் கலந்தாலோசித்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

மறதி காரணிகள்: இம்மறதி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை வயது, மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச் சத்து குறைபாடு, தைராய்டு மற்றும் சர்க்கரை நோயினால் கூட வரக்கூடும்.

நீங்கள் நேசிப்பவருக்கு இந்த மறதி நோய் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி காப்பகத்தில் விட வேண்டாம். அவர்களை குடும்ப உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சிகிச்சை முறை : உங்கள் வயது, ஒட்டுமொத்த சுகாதாரம், மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் நோய் எவ்வளவு கடுமையானது இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் மருத்துவர் உங்களுக்கு சிறந்த சிகிச்சையைத் தேர்வு செய்வார்.

நினைவாற்றல் அதிகரிக்கும் உத்திகள் : எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். தினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஒரு வெள்ளை போர்டில் எழுதி வைக்கலாம். முதலில் அன்றைய தேதியை எழுத வேண்டும். பிறகு அன்றைய நடவடிக்கைகளை எழுத வேண்டும். பின்னர், எந்த நடவடிக்கை முடிந்து விட்டதோ அதை அழித்து விட வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் சாப்பாடு, மருந்துகள், மற்றும் இதர சில நடவடிக்கையை திரும்பத்திரும்ப செய்யாமல் இருப்பதை தவிர்க்கலாம். அடுத்த நாள் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்பது தேதியை மாற்ற வேண்டும். மருந்துகளை தினசரி காலை, மதியம், இரவு என வகைப்படுத்தப்பட்ட டப்பாவில் போட்டு வைக்கலாம்.

தினசரி நாளிதழ் படிக்க பழக வேண்டும். தன் பேரக் குழந்தைகளுடன் அன்றைய செய்தி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடன் (Snake & Ladder) பரமபதம் விளையாடலாம். இதில், கூட்டல் கழித்தல் செய்வதன் மூலம் மூளை stimulate ஆகும். கல்லாங்காய் ஆடுவதன் மூலம் கண் மற்றும் கை மற்றும் (fine motor skills) விரல்கள் வலிமை பெறும். 

தனது குடும்ப நபர்களின் தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து, திரும்ப திரும்ப சொல்லாம் அல்லது எழுதி பார்க்கலாம். 

வீட்டை விட்டு வெளியே போகும் போது கண்டிப்பாக பாக்கெட்டில் குடும்ப நபர்களின் ஃபோன் லிஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப விழாக்களுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுடன் கலந்துரையாட செய்ய வேண்டும். திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னால் அவர்களை வேறு விதத்தில் திருப்ப (divert) வேண்டும். இப்படி சில உத்திகளை கையாளும் போது நாம் இந்த மறதி நோயை சுலபமாக கையாளலாம்.

அல்ஸைமர் நோய் ஒரு குடும்ப நோயாக அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நாம் நேசிப்பவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் வீழ்ச்சியடைவதைப் பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அல்ஸைமர் நோய் உள்ள முதியவர்களை பராமரிப்பவர்கள் (care takers) முதலில் தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அவசியமாகும். 

]]>
Dementia, Alzheimer, Mild cognitive impairment, மறதி, நினைவுத் திறன், நோய் https://www.dinamani.com/health/mental-health/2018/sep/26/சாதாரண-மறதிக்கும்-அல்ஸைமர்ஸ்-மறதிக்கும்-உள்ள-வேறுபாடு-என்ன-விளக்குகிறார்-மனநல-நிபுணர்-வந்தனா-3008341.html
3004992 மருத்துவம் மனநல மருத்துவம் வளரும் பருவத்தினருக்கு ரூல்ஸ் மிகவும் தேவை! மாலதி சுவாமிநாதன் Friday, September 21, 2018 11:52 AM +0530  

சுதந்திரமாக வளர்க்கிறோம் என்றும், வளரும் பருவத்தினருடன் நண்பர்கள் போல் பழக்கம் என்று சொல்வோர் பலர் உண்டு. அதனால் அவர்களுக்கும் வளரும் பிள்ளைகளான குழந்தைகள் (8 வயது வரையில்), டீன் (9-12 வயதுடையவர்கள்), அடாலெஸன்ட்ஸ் (13 -19 வயதுடையவர்கள்) இடையே உறவு முறையே வேறு லெவலில் என்றும் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.  மிகவும் நல்லது! ஆனால் இதே நபர்கள், மற்றொருபுறம் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் அவ்வளவாகக் கேட்பதில்லை என்றும் சொல்வதுண்டு.

ஏன் இப்படி நிகழ்கிறது? மிக எளிதான பதில்: ஏனென்றால், விதிகள், கட்டுப்பாடு, ஒழுங்குமுறை என்ற ரூல்ஸ் வளரும் பருவத்தினருக்கு ரூல்ஸ் மிகவும் தேவை! நண்பர்களாக இருப்பதற்குப் பிரதான இடத்தைக் கொடுத்து விடுவதால் ரூல்ஸை அமைத்தாலும் பிள்ளைகள் பராமரிக்கா விட்டாலும் அதைப் போனால் போகட்டும் என்று விட்டு விடுவதினால் நேர்வது இப்படிப்பட்ட விளைவுகள்.

முதலிலிருந்து, அதாவது குழந்தை பருவத்திலிருந்தே ரூல்ஸை அமைப்பது வளர்ச்சிக்கு முக்கியம். இந்த ரூல்ஸ் என்பதில், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் எல்லாம் அடங்கும். வளரும் டீன், அடாலெஸன்ட்ஸ் என்ற பருவத்தினருக்கும் இது தேவைதான்.

ரூல்ஸ் படிப்படியாக, அந்தந்த வயதிருக்கு ஏற்றாற் போல் மாற வேண்டும். ரூல்ஸ் அமைக்கும் பொழுது, அதற்கான அடிப்படை காரணங்களை எடுத்துக் கூறுவது அவசியம். என்ன, ஏன் என்று சொல்லித் தருவது பெரியவர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும். ரூல்ஸ் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதை கடைப்பிக்காவிட்டால் நிகழக் கூடிய விளைவுகளையும், குழந்தைகளுக்கும், டீன் பருவத்தினருக்கும், பருவம் அடைவோருக்கும் புகட்டுவது மிக அவசியம். இப்படி முறையாகச் செய்து வருவது நன்மையில் தான் முடியும். இவற்றின் அவசியத்தை இங்கு ஆராய்வோம்.

கட்டுப்பாடுகள் என்பது சுதந்திரத்தை பறிக்கும் கருவியாக உபயோகித்தால் ரூல்ஸை வெறுப்புடன் பார்க்கத் தோன்றும். ரூல்ஸின் குறிக்கோளே அளவோடு, வயதுக்கேற்ற சுதந்திரங்களையும், பொறுப்புகளையும் கொடுத்து, அந்தச் சுதந்திரங்களை பிள்ளைகள் உபயோகித்துத் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளிப்பதுதான்.

உதாரணத்திற்கு, குழந்தை மற்றவரின் விளையாட்டு பொருட்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம் (கேட்டு வாங்க வேண்டும் என்ற பழக்கம் ஒரு ரூலாகும்). அதை வைத்து விளையாடலாம் என்பது  குழந்தைக்கு சுதந்திரமாகும். விளையாடிக் கொண்டிருக்கையில் இன்னொரு குழந்தை கேட்டால் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (இது கட்டுப்பாடாகும்).  குழந்தை பகிர்ந்து கொள்வதை விதிமுறையாக்கி அதைப் பின்பற்ற வேண்டும். விளையாட்டுப் பொருளை சேதமில்லாமல் திருப்பித் தர வேண்டும் (இது ஒழுங்குமுறையாகும்). 

ஏன், எதற்காக என்பதை முதலிருந்து தெளிவாக்க வேண்டும். வளரும் குழுந்தைகளுக்கும், வளரும் பருவத்தினரான டீன், அடாலசென்டுக்கும் வயதிற்கு ஏற்றவாறு தெளிவுபடுத்தி சொல்ல வேண்டும். அவற்றுடன் வழியுரைகளை வகுத்தால் தான் அவர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் தடைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

அதற்கு மாறாக, ‘நீ இப்போ பெரியவனாக / பெரியவளாக ஆயாச்சு, நீயா செய்’ என்று சொன்னால் அது விவாதத்தில் கொண்டு விட்டுவிடும். ‘சொல்லிண்டே இருக்கேன், செய்வதே இல்லை” அல்லது ‘சரியாக செய்வது இல்லை’ என்பார்கள். வளரும் பருவத்தினரான டீன், அடாலசென்டும் தன் பங்கிற்கு, ‘சரி, சரி..’ என்ற பதிலுடன் தான் செய்வதையே செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு, குறிக்கப்பட்ட விதிமுறைகளைப் பற்றிப் புரியாமல், எப்படிச் செய்வது என்று  தெரியாமல், அதனாலேயே செய்யாமல் விட்டு விடுவதினாலும் இப்படி நேர்வதுண்டு.

ஏன் இப்படித் தெரியாமல், புரியாமல் இருக்கும் நிலை? குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு எல்லாவற்றையும் பெற்றோர் தான் செய்து கொடுக்க வேண்டும் என்று மிகக் கவனமாக செய்வதுண்டு. பல முறை, குழந்தைகளின் பத்து வயது வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துப் பெற்றோர்களே செய்து தர, அது பழகி விடுகின்றது. பத்து வயது, டீன் பருவத்தில் இருப்பவர்கள். திடீரென அவர்களை செய்யச் சொன்னால் செய்வது தெரியாது, செய்ய மனதும் வராது. ரூல்ஸை நிராகரிப்பார்கள், வாத விவாதங்கள் எழும்.

அப்படி நேராமல் இருக்க, சிறு வயதிலிருந்தே விதிமுறைகள் அமைத்து, வயதிற்கேற்ப பொறுப்புகளை, வாய்ப்புகளைக் கொடுத்து, அவைகளைப் பராமரிக்கக் கற்றுத் தர வேண்டும்.

எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக, முரணற்ற முறையில் பொறுமையாக  பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் வளரும் குழந்தைகளுக்கும், டீன், பருவம் அடைவோருக்கும் விதிமுறைகளை, கடமைகளை தன் பங்குக்கு நன்றாக, உறவுகளை ஒருங்கிணைக்கச் செய்கிறோம் என்ற திருப்தி வளரும். அவர்களை ஊக்குவிக்கும். அத்துடன் தங்களது திறன்களை மேம்படுத்தக் கூடிய வாய்ப்பாக புரிந்து கொண்டதும் தானாகச் செய்ய முன்வருவார்கள்.

சிறு வயதிலிருந்தே, வளரும் பருவத்தில், யாரெல்லாம் இந்த வயதுடையவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்களோ (அதாவது பெற்றோர், ஆசிரியர், மற்ற பெரியவர்கள்) இது தான் எல்லைகள், வரம்புகள், அவற்றை மீறினால் இதுதான் விளைவுகள் என்றும் கூடவே சேர்த்துத் தெரிவித்தால், பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டது தெரிய வரும். அத்துடன் அவர்கள் தங்களின் எல்லைகளை அறிய, அதற்கு முறையாக நடந்து கொள்ள முயல்வார்கள்.

வளரும் போதே ஒழுங்கு, கட்டுப்பாடுகளை, தடைகளை எழும் சந்தர்ப்பங்களில் பட்டியிலிட்டாற் போல் தெளிவாக விவரித்தால், அதை அடையாளம் கண்டு பின் தொடங்குவது எளிதாகும். ஒவ்வொரு வாய்ப்பும் கற்றுக் கொள்ளும் கருவியாகும். மற்றொரு பலனையும் அடையச் செய்யும்.  கட்டுப்பாடுகளைப் புரிய, பின்பற்றும் போது  முடிவு எடுக்கும் திறன்களையும், அவற்றை வளர்க்கும் விதங்களைக் கற்றுக் கொள்ளும் வழியாகிவிடும். இதனாலேயே, பிரச்னைகளுக்கு விடை காண்பதும், பயிலுவதும் நேரும். பல வாய்ப்புகளில் பயின்றால் பிசகாமல் செய்ய வரும். ‘பாடப் பாட ராகம்’ என்பார்களே அதே போல், புரிந்து சரி செய்வது வாழ்க்கைப் பாதையின் மிக முக்கியமான அங்கமே!

போகப் போக முடிவு எடுப்பதில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். நல்லது-கெட்டதை எதை வைத்து எடை போடுவது, மற்றும் அவற்றினுள் வித்தியாசத்தை அறிய நல்ல வாய்ப்பாக அமையும். செய்து பழகி வந்தால் தான் பிள்ளைகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிய நேரும். இவை வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் உதவும்.

இப்படிச் செய்வதற்காக, வளரும் பருவத்தினருக்கு சுதந்திரமாக முடிவுகளை எடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். மிக அவசியமும். அதே சமயத்தில், அவர்களுக்கு ஆதரிக்க, அரவணைக்கப் பலர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலே துணிவுடன் செயல் படுவார்கள். வரம்புகள் அவர்களுக்குப் பாதுகாப்பாகும்.

மாறாக, வளரும் பருவத்தில், சிறு வயதிலிருந்தே அவர்களுடன் இருக்கும் பெரியவர்களே எல்லாவற்றையும் அவர்களுக்காக, யோசித்துச் செய்து விடுவார்கள். ‘பாவம், குழந்தை என்ன தெரியும்?’ என்றும் ‘செய்வது எங்க, பெற்றோர் கடமை’ எனப் பல பட்டியல் இட்டுச் செய்வார்கள்.

அதன் விளைவாக, வளர்வோர் உடலுக்கோ மனதுக்கோ எந்த ஒரு வேலை இல்லாமல் மந்தமாக இருப்பார்கள். கேட்டது அப்பொழுதே கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை வளரும், அதே போல் அடம், ஆர்ப்பாட்டம் என்ற குணாதிசயங்களை அவர்கள் குணங்களாக ஆகும். இப்படியா இருக்க விரும்பினோம்?

பல நிபுணர்களின் கருத்துப் படி, குறிப்பாக அடோலசன்ட் என்ற பருவ காலம் மன அழுத்தமும் புயலும் என்று நிகழ்வதே அவர்களுக்குத் தடைகளை, கட்டுப்பாடுகளை, சொல்லாததால் தான். கட்டுப்பாடுகளை, ஒழுங்குகளை போதுமான அளவிற்கு கற்றுக் கொள்ளாததாலும் அவற்றைச் செயல்படுத்த வாய்ப்புகள் மிகக் குறைந்தோ, அல்லது இல்லாமல் போவதினாலோ உணர்ச்சி மிக்கவர்களாக ஆக நேர்கிறது.

பருவ வயதினரும், டீன்களும் தங்களின் சமூக வலைகளை விஸ்தரிப்பதில் குறிப்பாக இருப்பார்கள். இப்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முகநூல், ட்விட்டர், என்று பல ரூபங்களில் வாய்ப்புகள் உள்ளன. . இவற்றை மறுத்து, தடுப்பதற்குப் பதிலாக அவற்றைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் செயல்பட வேண்டும்.

தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அதைச் சாபம் என்றும், தேவையற்றது என்றும் சொல்வதற்கு பதிலாக, அவை தேவை என்பதை ஏற்றுக்கொள்ள நம்மை பக்குவப்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக டீன், அடாலெஸன்ட்ஸ் வீட்டில் உள்ளவர்களை விட தங்கள் நண்பர்கள், வெளி உலகில் பலருடன் பழக விரும்புவார்கள். இது அவர்களின் வளர்ப்பைச் சேர்ந்ததாகும். இதை நிராகரித்து, தடை செய்தால் அவர்களின் பல திறன்களை ஊணப்படுத்தவதாகும்.

ஒரு விதத்தில் பார்த்தால் வேலை செய்யும் போது இந்தக் குணாதிசயம் மிகத் தேவையானது. எந்த வயதிலும் மற்றவருடனும், மற்றவர்களுடனும் இருப்பதும் நேரிடும். அதனால், இந்தத் திறன்களை நல் வழிகளில் கொண்டு செல்வது முக்கியம். அதற்குப் பதிலாக தடை செய்தால் அதை திருட்டுத் தனமாக செய்யத் தூண்டும். பெரிய சமூக நிலையைக் கூட்டுவதும், வைத்துக் கொள்வதும் ஒரு கலை. அந்தக் கலை வளரப் பல திறன்கள் மேம்படும்.

படிப்பிலும் மிகக் கவனம் தேவை. அதற்கும் அதிகமான கவனமும், நேரமும் தரப்படுகிறது. அதே போல் இந்த வயதினருக்கு விளையாட்டு, ஆட்டம்-பாட்டம் தேவை தான். இவ்விரண்டுக்கும் சமமாக நேரம் ஒதுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல், தத்தளித்து விட்டு, சரியாக வழி காட்டுவதற்கு ஒருவர் இல்லை என்றால் அதன் விளைவாகத் தோல்வி ஏற்படும்.

பயின்று, முடிவு செய்யும்  திறன்களை வளர்த்துக் கொள்ள  பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக முக்கியம். அவர்களின் சுற்றுப் புறங்களில் தான் பத்திரமாக இருக்கிறோம் என உணர்வது மிக முக்கியம். நம்மை ஆதரிக்க இருக்கிறார்கள் என்பது தெம்பை அதிகரிக்கும். தேவைப்படும் போது, வழிமுறைகளை, கோட்பாடுகளை எடுத்துச் சொல்வது குடும்பம், நண்பர்கள், மற்றவர்களின் பொறுப்பாகும்.

வளரும் பருவத்தில் தாங்கள் பார்க்கும், பழகும் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது நேரும். அதற்காகவே குழந்தைகளுடன், பருவம் அடைவோருடன் இருப்பவர்கள் பொறுப்பாக செயல் பட வேண்டும். பெரியவர்கள் தன் பேச்சில், நடத்தையில் ரூல்ஸ் கைப்பற்றுவது அவசியம். அவர்கள் செய்வதை பல விதங்களில் வளரும் பருவித்தனரும் கற்றுக் கொள்வார்கள்.

இதனால் அனைவரும் ஏற்கும் விதமாக விதிமுறைகளை விதித்து, ஒவ்வொருவரும் அதைப் பின்பற்ற வேண்டும். சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து எப்போதும் இருக்க வேண்டும்.

ஒரு வேளை வளரும் குழந்தைகளுக்கோ, பருவம் வருவோருக்கோ எந்த விதமான ஆதரவும் இல்லை என்றால், அவர்கள் சோகமாகவும் கோபமாகவும் வளரக் கூடும். வன்முறை, போதைக்கு அடிமை எனப் பல ரூபங்களை எடுக்கலாம். ஆனால், அவர்கள் மதிக்கும் எவரோ ஒருவர், பெற்றோரோ, ஆசிரியரோ, சமுதாய நலனில் அக்கறை உள்ளவரோ அல்லது ஒரு தலைவரோ, அவர்களுக்குத் தடைகளை விதித்து, அவற்றை எடுத்துச் சொல்லி அவற்றை பின்பற்றிச் செல்லும் பாதை வகுத்தால் போதும், அதை உடனே பின்பற்றுவார்கள்.

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

 

]]>
teen age, children, freedom for kids, parenting, குழந்தை வளர்ப்பு, டீன் ஏஜ் https://www.dinamani.com/health/mental-health/2018/sep/21/rules-discipline-regulation-very-much-needed-for-children-tweens-and-adolescents-3004992.html
3002116 மருத்துவம் மனநல மருத்துவம் மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக எளிய தமிழ் நூல்கள்! சா.ஜெயப்பிரகாஷ் Monday, September 17, 2018 01:37 PM +0530 தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட  தமிழ்நாட்டில்,  பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் தமிழ்ச் சொற்களை சரியாகப் படிக்கவும், எழுதவும் தடுமாறுகிறார்கள் என்பதும் அதிகரித்து வருகிறது. 

நெருக்கடியான இந்தச் சூழலில் 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' (slow learners) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் குழந்தைகளுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, எளிய முறையில் தமிழ் கற்கும் வகையிலான மூன்று சிறு பாடநூல்களை உருவாக்கியிருக்கிறார் தருமபுரியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் நெடுமிடல்.

தற்போது 72 அகவையை நிறைவு செய்திருக்கும் நெடுமிடல், இளங்கலை அறிவியல் (கணிதம்) பட்டப்படிப்பு முடித்தவர். தண்டராம்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து,  ஓராண்டில் அப்பணியில் இருந்து வெளியேறினார்.  தொடர்ந்து தேவநேயப் பாவாணரின் "முதல் மொழி' மற்றும் 'தேனமுதம்' ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு, சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், கடத்தூருக்கே திரும்பி திருவள்ளுவர் "பொத்தக நிலைய'த்தைத் தொடங்கியுள்ளார் (ஏடுகளாக எழுதப்பட்டவற்றைப் "பொத்தல்' போட்டு நூலால் பிணைத்ததனால் அது 'பொத்தகம்' ஆனது என விவரிக்கிறார் நெடுமிடல்). 

1999-இல் எளிதாகத் தமிழ் கற்பிப்பதற்கான சிறிய அளவிலான பாட நூல்களை தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்காக தயார் செய்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.  நெடுமிடலின் குழந்தைகள் அறிவுத்தென்றல், அறிவுடைநம்பி, செல்லக்கிளி ஆகியோரின் பெயரில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

'26 எழுத்துகளைக் கொண்ட ஆங்கில மொழியைக் கற்பித்தல் எளிது,  247 எழுத்துகளைக் கொண்ட தமிழைக் கற்பித்தல் கடினம் என்பதை மாற்றி, தொடக்கத்தில் அடிப்படையான வெறும் 18+18 எழுத்துகளைக் கொண்டு மிகச் சுலபமாக 700 சொற்களைக் கற்றுத் தர முடியும் என்பதே எனது கருவி' என்கிறார் நெடுமிடல்.

எடுத்துக்காட்டாக, எளிய வடிவமைப்பைக் கொண்ட "ட', "ப', "ம' ஆகிய மூன்று எழுத்துகளுடன் அவற்றின் புள்ளி வைத்த எழுத்துகளையும் சேர்த்து முதல் பாடமாகச் சொல்லித் தரும்போது,  படம், மடம், பட்டம், மட்டம் ஆகிய சொற்களை எளிதாக எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழக்கவும்,  எழுதப் பழக்கவும் முடியும். அது ஆழமாக மூளையில் பதிவாகும், எக்காலத்திலும் மறக்காது; அழியாது என்றும் விவரிக்கிறார் அவர்.

அடுத்து 'வ', "ச' ஆகிய எழுத்துகளைச் சேர்த்தால் வடம், வட்டம், சட்டம், சமம், வம்சம், வசம், மச்சம், சம்பவம், பப்படம், வட்டப்படம், பட்சம்  ஆகிய சொற்களை எளிதாக எழுதவும், படிக்கவும் பழக்க இயலும். 

இப்படியாக அடிக்கடி புழக்கத்தில் உள்ள எழுத்துகள், சொற்களில் தொடங்கும் இவரது நூல்கள், பிறகு மூன்றாம் நூலில் முழுமையான தமிழ்ப் பாடநூலாக நிறைவடைகிறது.

சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியினரும், தனிப்பயிற்சி நிலையத்தினரும் இவற்றை வாங்கி மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனராம்.

'தமிழ்நாட்டரசு தற்போது பள்ளிப் பாடநூல்களை மாற்றி எழுதிவரும் இச் சூழலில், எளிமையான இக் கருவிகளையும் துணை நூலாக இணைத்துக் கொள்வதானால், எவ்வித எதிர்பார்ப்புமின்றி பதிப்புரிமையை அரசுக்கு வழங்கவும் தயாராக இருக்கிறேன்' என முடிக்கிறார் நெடுமிடல். 

தமிழ் மீது தணியாப் பெருங்காதல் கொண்ட, வயதால் முதிர்ந்த தமிழறிஞர் ஒருவரின் எதிர்பார்ப்புகள் வசப்பட வேண்டும். அதற்கு அரசும், தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோரும், ஆர்வலர்களும் துணை புரிய வேண்டும்!

]]>
slow learners, children, கற்றல் குறைபாடு, மெல்லக் கற்கும் குழந்தைகள் https://www.dinamani.com/health/mental-health/2018/sep/17/மெல்லக்-கற்கும்-குழந்தைகளுக்காக-எளிய-தமிழ்-நூல்கள்-3002116.html
3000240 மருத்துவம் மனநல மருத்துவம் ஸ்ட்ரெஸ் நல்லதாம்... எப்போ தெரியுமா? மாலதி சுவாமிநாதன் Friday, September 14, 2018 03:41 PM +0530  

மன அழுத்தம், இதை எல்லா வயதினரும், பல அன்றாட அனுபவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று குறிப்பிடுவோம். இதனால் நமக்கு நன்மை, தீமை இரண்டும் நேரலாம். எந்தத் தருணங்களில் இது நமக்கு உதவுகிறது என்பதை முதலில் பார்வையிட்டு, பிறகு எப்பொழுது பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்

ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.

இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.

இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!

இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.

போராடுவது - ஓடுவது - உறைவது

மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.

சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.

சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.

காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ப்ளாஸ்டீஸிடீயும்

மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.

இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.

இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!

இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உடல்-மனம் ஒருங்கிணைப்பு

எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.

அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி  தெம்பாக உணருவோம். 

எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.

மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.

தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
stress, tension, destress, eustress, மன அழுத்தம், கவலை, பிரச்னை, ஸ்ட்ரெஸ் https://www.dinamani.com/health/mental-health/2018/sep/14/eustress-and-stress-helpful-stress-3000240.html
2986785 மருத்துவம் மனநல மருத்துவம் பெறுவதினும் தருதலே நன்று!   பிரியசகி -ஆசிரியர், எழுத்தாளர்  ஜோசப் ஜெயராஜ் - Saturday, August 25, 2018 05:30 PM +0530  

முதியோர் இல்லத்தில் தன் அறையில் அழுது கொண்டிருந்த கீதாவை தேற்றும் விதமாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் இல்லத்தை நடத்தி வரும் மாலதி 

'கீதாம்மா என்னாச்சு? எதுக்கு இப்படி சாப்பிடக் கூட வராம  அழுதுகிட்டிருக்கீங்க?

'பாருங்க மேடம், இன்னைக்கு என் பிறந்தநாள், என் பையன் ஒரு போன் கூட செய்யல. என்னதான் அமெரிக்காவில பெரிய வேலைல பிஸியா இருந்தாலும் ஒரு போன் கூடவா பண்ண முடியாது? பெத்தவ ஒருத்தி இங்கத் தனியா இருக்கேங்கிற ஞாபகமே அவனுக்கு இல்லையே. அவன் இந்த நிலைக்கு வர்றதுக்கு நான் தானே காரணம்?'

'ஆமா கீதாம்மா உண்மைதான், ஆனா அங்க உங்க பிள்ளையோட சூழ்நிலை என்னவோ நமக்குத் தெரியாது. பையன் போன் பண்ணா தான் பிறந்தநாளா? நாங்க இவ்ளோ பேர் இருக்கோம் இல்லையா, வாங்க சாப்பிடப் போகலாம்', என்று கீதாவை அழைத்துச் சென்றார் மாலதி.

முப்பது ஆண்டுகளாக கீதாவின் குடும்பத்தை நன்கு அறிந்தவர் மாலதி. ஒரே மகன் எல்லாவற்றிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என நகரின் தலைசிறந்த பள்ளியில் சேர்த்து விட்டனர் . பள்ளி முடிந்ததும் டியூஷன், ஹிந்தி கிளாஸ், பாட்டு கிளாஸ், டென்னிஸ் என ஓய்வற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமென ஆறாம் வகுப்பிலேயே நாமக்கல்லில் புகழ் பெற்ற  ஒரு பள்ளி விடுதியில் சேர்த்து விட்டனர். படிப்பு ஒன்றைத் தவிர வேறெதையும் மாணவர்களுக்குத் தராத சிறைச் சாலையைவிட மோசமான சூழல்;  பெற்றோரின் நெருக்கத்தை இழந்தது; எல்லாம் சேர்ந்து அவனை ஐ ஐ டி யில் தலை சிறந்த பொறியாளனாக்கியதோடு மட்டுமல்லாமல் பாசமறியா கனத்த இதயம் கொண்டவனாகவும் ஆக்கி விட்டது. இதனால் அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்து விட்டதென அங்கேயே செட்டிலானவன் இந்தியாவிற்கு வருவதையே நிறுத்திக்கொண்டான். நல்லா படி அப்பத் தான் நல்ல வேலை கிடைக்கும் , கை நிறைய சம்பாதிக்க முடியும் என அம்மா சொல்லிக் கொடுத்ததை தவறாமல் செய்தான். ஆனால் சொல்லிக் கொடுத்த அம்மாவை மறந்து விட்டான். அப்பா இறந்தப்பின் அம்மாவை வசதியான முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு மாதந்தோறும் பணம் மட்டும் அனுப்பி விடுகிறான். வயதான காலத்தில் பணமிருந்தால் மட்டும் போதுமா ?

'அம்மா எனக்கு ரெண்டு கம்பெனியில் இருந்து வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு , ஒன்னு உணவுப் பொருட்கள் உற்பத்தி பண்ணக்கூடியது , இன்னொன்னு  ஐ டி கம்பெனி நான் எதில்  சேரட்டும்?',  என்றான் சந்திரன் . 

'சந்திரன் இது உன்னோட வாழ்க்கையில முக்கியமான முடிவெடுக்கும் நேரம். என் ஐடியா இருக்கட்டும் எதுல சேரலாம்னு நீ நினைக்குற?'

'எனக்கு முடிவெடுக்க முடியலம்மா' 

'ரெண்டு வேலையிலும் இருக்குற நல்லது கெட்டதை யோசிச்சுப்பாரு'. 

'ஐடி கம்பெனியில சம்பளம் நிறைய கிடைக்கும் . ஆனா கொஞ்ச நாள் தான் இங்க இருக்க முடியும் , அப்புறம் வெளிநாட்டுக்குப் போக வேண்டியிருக்கும். அதுல எனக்கு எப்பவுமே விருப்பம் இருந்ததில்லை . உங்களையும், அப்பாவையும்,  நம்ம சொந்தக்காரங்களையெல்லாம் இங்க விட்டுட்டு நான் மட்டும் வெளிநாட்டுல போய் வசதியா வாழறதுல என்ன சந்தோஷம் இருக்கு ? நான் படிச்ச படிப்புக்கும்  இந்த வேலைக்கும் சம்பந்தமில்லை. என்னால கம்பெனிக்கு லாபம், கம்பெனியால  எனக்குப் பணம் கிடைக்கும் அவ்ளோ தான்.  இன்னொன்னு இயற்கை உணவு தயாரிக்கும் கம்பெனி. இன்னைக்கு மார்க்கெட்டில் இருக்கும் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் போட்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களாலயும், உணவுப் பொருட்களை பதப்படுத்தவும், சுவையூட்டவும் சேர்க்கும் வேதிப் பொருட்களாலயும் மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் நிறைய இருக்கு. இதுக்கு மாற்றா இந்த கம்பெனியோட இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்குறதால இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா என்னோட உழைப்பு இந்த சமுதாயத்துக்குப் பயனுள்ளதா இருக்கும் என்ற மனநிறைவு கிடைக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்கம்மா?'

'ரொம்ப நல்ல முடிவு சந்திரா . நாம செய்யக் கூடிய எந்த விஷயமும் நமக்கோ மத்தவங்களுக்கோ சிறு கெடுதலும் இல்லாம நன்மையைத் தரக் கூடியதா இருக்கணும். அதுவும் வேலையைத்  தேர்ந்தெடுக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும். நிலம், நீர் , காற்று எல்லாமே மாசுப்பட்டு போயிருக்கும் இந்த காலத்துல மக்களோட ஆரோக்கியம் ரொம்ப கெட்டுப் போயிருச்சு . இதுக்கு நம்மளோட உணவு பழக்கங்களும் , வாழ்க்கை முறையும் இயற்கையை விட்டு ரொம்ப விலகிப் போனதும் ரொம்ப முக்கியமான காரணம். அறிவியலுக்கும் ,பகுத்தறிவுக்கும் உட்பட்டு இயற்கையான வழியில் வாழ்க்கை தொடர்ந்தா  மனித வாழ்க்கை மகிழ்ச்சியானதா இருக்கும். அதுக்குத் துணை போகக் கூடிய ஒரு வேலையை நீ தேர்ந்தெடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்பா', என பெருமிதப்பட்டார் சந்திரனின் தாயார்.

இருவகைப் பெற்றோர்கள்:

இருவிதமானப் பெற்றோர்களை நாம் இங்கு கண்டோம். ஒருவர் தன் மகனைப் பணத்தைத் தேடி ஓடும் பந்தயக் குதிரையாகத் தயார் செய்கிறார். அவனோ இறுதியில் பணமே பிரதானம் என்று பாசமற்று அன்னையை மறந்து அயல்நாட்டில் அடைக்கலம் புகுந்து விடுகிறான். மற்றொரு தாயோ மகனுக்கு தாய் பாசத்தோடு பிறர் மீது அக்கறையையும், இவ்வுலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிக்கடனைத் தான் செய்யும் செயல்கள் மூலமாகத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற மாண்பினையும் கற்றுக் கொடுத்துள்ளார். அவனும் அவ்வாறே  நடந்து கொள்கிறான். இதை ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெரியோரும் உளவியலாளர்களும் கூறுவதென்ன?

பிறர் மீது அக்கறை கொள்வது எப்படி என்பதை அண்மையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் "நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஓட்டும். நான் என்று சொல்வது அகங்காரம், நாம் என்ற எண்ணமே சமூகத்திற்கு நன்மை பயக்கும்" என்று அழகாகக் கூறியுள்ளார்.

ஆல்பர்ட் பந்தூரா என்ற உளவியலாளரின்  சமூகக் கற்றல் கொள்கையின்படி (Theory of vicarious learning - 1977) பிள்ளைகள் தம் பெற்றோரையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் பார்த்து தானாகக் கற்றுக் கொள்கின்றனர். கற்றுக் கொண்டது நல்லதோ கெட்டதோ எதுவாயினும் அதைத் தன் வாழ்வில் பிரதிபலிக்கின்றனர். மேற்கண்ட இரு வேறு குடும்பங்களிலும் பிள்ளைகள் தம் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டபடியே வளர்ந்த பின்னும் நடந்து கொள்வதைப் பார்த்தோம்.

பந்தூராவின் 'பிறரால் தூண்டப்படுத்தல்' ( Theory of Reinforcement ) என்ற கொள்கையின்படி ஒரு குடும்பத்தில் அண்ணனின் நற்செயல்களுக்காகக் கிடைக்கும் பாராட்டு தம்பியையும் அத்தகு செயல்களைச் செய்யத் தூண்டும். அல்லது அண்ணனின் தீய செயல்களுக்கு பெற்றோரிடமிருந்தோ அல்லது சமூகத்திடமிருந்தோ கிடைக்கும் தண்டனை தம்பியை அத்தீய செயல்களிலிருந்து விலகியிருக்கச் செய்யும் என்பதையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று வழிப் பாதை:

பிறருக்கான சேவை என்பது பூமி என்ற வீட்டிற்கு நாம் கொடுக்கும் வாடகை. பிறருக்காக வாழாத வாழ்க்கை வீணானது. - முகமது அலி .

நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் மீதான அக்கறையை வளர்க்க பெற்றோர் மூன்று வழிகளைப் பின்பற்றலாம்.

துன்புறுவோர் மீது இரக்கம் கொள்வது நல்லது தான். ஆனால் இரக்கம் கொள்வதைவிட பரிவிரக்கத்துடன் (  Empathy )நடந்து கொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியம். ஏனெனில் இரக்கம் என்பது பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவதைப் போல துன்புறுவோரிடமிருந்து நம்மை உணர்வு ரீதியாக தள்ளி நிற்கச் செய்யும். 'அப்பாடா நான் இவரைப் போல் இல்லை' என்று தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கச் செய்யும். ஆனால் பரிவிரக்கமோ 'இவரைப் போல் நான் இருந்திருந்தால் எனக்கு எவ்வளவு துன்பமாக இருக்கும்' என்று நினைக்க வைத்து, கருணையுடன் பிறருக்காக சேவையில் ஈடுபடத் தூண்டும். அண்மையில் புயலால் கேரளம் பெரும் பாதிப்புக்குள்ளான போது  மிதிவண்டி வாங்குவதற்கென  நான்காண்டுகளாகத் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரளாவின்  சீரமைப்பு பணிக்கென தர முன்வந்த விழுப்புரம் சிறுமியின் செயலை பரிவிரக்கத்திற்கு நல்லதோர் உதாரணமாய் கூறலாம்.    

இவ்வுலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்டதை விட  அதிகத்தைத் திருப்பிக் கொடுப்பது தான் உண்மையான வெற்றி. - ஹென்றி ஃபோர்டு

வீட்டை விட்டு வெளியில் சென்று சேவையில் ஈடுபடுவதற்கு முன் அன்றாட வாழ்க்கையில் தன் குடும்பத்து உறுப்பினர்களின் தேவையை, துன்பங்களை உணர்ந்து நடந்துகொள்ள குழந்தைகள் பழக்கப் படுத்தப்பட வேண்டும். இதனால் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அதனால் தனக்கும் மகிழ்ச்சி என்பதை பிள்ளைகள் உணர்வார்கள்.

என் உறக்கத்தில் வந்த கனவில் வாழ்க்கை என்பது கொண்டாட்டமாக இருந்தது. கண் விழித்தபோது தான் வாழ்க்கை என்பது சேவைக்கானது என்று புரிந்தது. -ரவீந்திரநாத் தாகூர் 

சமூக சேவை நிறுவனங்களுடன் பிள்ளைகளுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது இயன்ற போது அங்கு சென்று உடல் ரீதியான உழைப்பு, பணம் அல்லது நேரத்தை செலவிட்டால் எத்துணை மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை பிள்ளைகள் அனுபவபூர்வமாக உணர முடியும்.

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. எதை விதைப்போமோ அதையே அறுவடை செய்வோம். முட்களை விதைத்து விட்டு முல்லைப் பூக்களை எதிர் பார்க்க முடியாது. நல்லதை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால் நல்லதை திரும்பப் பெறுவோம். தன்னுள் வரும் காற்றைத் தானே வைத்துக் கொள்ளும் மூங்கில் சாரம் காட்டவே பயன்படும். உள்வாங்கும் காற்றைத் திருப்பித் தரும் மூங்கிலே புல்லாங்குழலாகும். நம் தோட்டத்து மூங்கில்கள் புல்லாங்குழலாகப் போகின்றனவே அல்லது சாரம் கட்டப் பயன்படப் போகின்றனவா என்பது பெற்றோர்களின் வளர்ப்பில் தான் உள்ளது.

]]>
https://www.dinamani.com/health/mental-health/2018/aug/25/பெறுவதினும்-தருதலே-நன்று-2986785.html
2984708 மருத்துவம் மனநல மருத்துவம் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? - ஸ்ரீதேவி குமரேசன் Tuesday, August 21, 2018 02:15 PM +0530 சென்ற இதழின்  தொடர்ச்சி....   

குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும்போதே, குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம். வேலைக்குச் செல்ல வேண்டுமா? வேண்டாமா?  குழந்தையை யார் வளர்ப்பது, யார் பார்த்துக் கொள்வது போன்றவற்றையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். முடிந்தளவிற்கு பெற்றோர் அருகில் இருந்து குழந்தையை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.  அல்லது தாத்தா - பாட்டி உறவுகளையாவது அவர்களுடன் இருக்கச் செய்ய வேண்டும்.  தாத்தா - பாட்டி  உறவுகளைவிட ஆயாக்கள் யாரும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளமாட்டார்கள். 

சில பெற்றோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடி ஓடி சாம்பாதிக்கிறார்கள். ஆனால் சரியான முறையில் குழந்தையை கவனிக்காமல் ஒரு நாள் அந்த குழந்தையே இல்லாமல் போனால் பின் யாருக்காக சம்பாதிக்கிறார்கள், எதற்காக சம்பாதிக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. 

பெண்  குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் பெற்றோர் தான் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மீது எப்போதும் கவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் அவ்வப்போதைய உடல் வளர்ச்சி  குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களின் நார்மலான செயல்களிலிருந்து ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே அதனை உணர்ந்து, எதனால் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களுடைய பிரச்னைகளை பற்றி பயமில்லாமல் பெற்றோரிடம்  பேசுவதற்கான இடத்தை வழங்க வேண்டும்.

காலையில் இருந்து மாலை வரை என்ன நடந்தது, யாருடன் எல்லாம் பேசினார்கள், விளையாடினார்கள் என்பதையெல்லாம் விளையாட்டாகவே பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டும்.  இப்படி பேசும்போது அவர்களை அறியாமலே குழந்தைகள் பலவற்றை கொட்டிவிடுவார்கள். குழந்தைகளை காத்தாடி போன்று சுதந்திரமாக பறக்க விட வேண்டும்.  ஆனால், கயிறு நம்மிடம் இருக்க வேண்டும். காத்தாடியை ரொம்ப இழுத்துப் பிடித்தால் கயிறு அறுந்து விடும். இலகுவாக விட்டால் கத்தாடி அறுந்துவிடும் எனவே கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும்.

தற்போது  11 - வயது குழந்தைக்கு இப்படி  ஓர் அவலம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து  நமக்கு  பதறுகிறது. பல மாதங்களாக இந்த கொடூர செயல் நடைபெற்றுள்ளது என்று கூறுகிறார்கள். இது பெற்றோருக்கு தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்குக் கூடவா தெரியாமல் இருந்திருக்கும். யோசித்து பாருங்கள். அப்படி யாராவது அறிந்திருந்தால் அவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று இருந்திருக்கலாம் அல்லவா.

இது நாளை நமக்கும் வரலாம் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டதும் இதற்கு ஒரு காரணம். மக்களிடம் சமூகப் பொறுப்பு குறைந்து போனதுதான் இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வதற்கு காரணங்கள் ஆகிறது. உள்ளங்கையில் உலகையே கொண்டு வரும் செல்போன்கள் தற்போது குழந்தைகளின் விளையாட்டு சாதனமாகிப் போனதால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும்,  அதனால் ஏற்படும் வக்கிரங்களும் கூடுகிறது. இதனால் ஆண், பெண் உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து அறிவியல்ரீதியாக குழந்தைகளுக்கு பாடமாக வகுப்புகளில் புரிய வைத்துவிட்டால் இது போன்ற கொடூரமான செயல்கள் குறைந்துவிடும். 

ஒவ்வொரு மனிதனும் தன் மனதை தன் வசத்துக்குள் வைத்துக் கொள்ள யோகா, தியானம் போன்றவற்றை பழக்கிக் கொள்ள வேண்டும். மனதை சுத்தமாக வைத்துக்  கொள்ள யோகாசனங்களும், தியானங்களும்தான் உதவும்.

ஒரு தவறு நடந்துவிட்டால், குற்றம் இழைத்தவன் மீது நமக்கு கோபம் வருகிறது. அதே சமயம் அந்த தவறு எந்த சூழலில் நடந்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் பெற்றோரின் கவன குறைவால்தான் நிகழ்ந்திருக்கும். இதனால் பெற்றோர் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் மீது நிகழ்த்தும் கொடுமைகளுக்கு அரபு நாடுகளில் இருப்பது போன்று கடுமையான தண்டனையை நமது அரசாங்கமும் அறிவிக்க வேண்டும். கடுமையான தண்டனைகள் மூலம் அடுத்து தவறு செய்ய நினைப்பவருக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.  அது போன்று சமுதாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தனி மனித ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்,  அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும் இவைதான் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி' என்றார்.  

]]>
parenting, children, parent children, relationship, குழந்தை வளர்ப்பு, தாய் https://www.dinamani.com/health/mental-health/2018/aug/21/மனதை-சுத்தமாக-வைத்துக்-கொள்ள-என்ன-செய்ய-வேண்டும்-2984708.html
2978629 மருத்துவம் மனநல மருத்துவம் நல்ல குழந்தைகளை உருவாக்குவது எப்படி? உளவியலாளரின் கண்டுபிடிப்பு! பிரியசகி, ஜோசப் ஜெயராஜ் Saturday, August 11, 2018 03:31 PM +0530
மணிமாறனும் கோபியும் அலுவலக நண்பர்கள். தன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்கும் பொருட்டு மணிமாறன் கோபியின் வீட்டிற்குச் சென்றிருந்தார். காம்பவுண்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கோபியின் மகன் ஓடிவந்து, ‘மணி அங்கிள் வாங்க. நல்லா இருக்கீங்களா? ஹரியைக் கூட்டிட்டு வரல்லயா? என்று பேசிய படியே வீட்டிற்குள் அழைத்து வந்தவன், ‘அம்மா,  அப்பாவோட ஃப்ரெண்ட் மணி அங்கிள் வந்திருக்காங்க’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்பாவை அழைக்கப் போனான். சமையலறையிலிருந்து வெளியே வந்த கோபியின் மனைவி ’வாங்கண்ணா, எப்படி இருக்கீங்க? சாந்தி, பிள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா? உட்காருங்க’ என்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ‘ஜுஸ் எடுத்துட்டு வர்றேன்’ என எழுந்திரிப்பதற்குள், அவரது மகள் கையில் ஜுஸ் கொண்டு வந்து மணிமாறனிடம் தந்து விட்டு, எப்படி இருக்கீங்க அங்கிள்? ராகவி எப்படியிருக்கா? அவ ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ்லாம் தொடங்கி விட்டாங்களாமே?’ என்று விசாரிக்கும் போதே  மாடியிலிருந்து கோபி இறங்கி வந்தார்.

‘வாங்க வாங்க மணி சார். தங்கை கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டிருக்கு? ஒரு வாரம் நீங்க லீவு போட்டாலும் போட்டீங்க ஆபீஸ்ல         கலகலப்பே இல்ல’, என்றார்.

விருந்தினரை உபசரிக்கும் கோபியின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பண்பைத் தன் குடும்பத்தோடு ஒப்பிடத் தொடங்கியது மணிமாறனின் மனம். வாசலில் யாராவது வருவது போல் தெரிந்ததுமே ஹாலில் விடியோ   கேம் விளையாடிக் கொண்டும்,  டிவி பார்த்துக் கொண்டுமிருக்கும் மணிமாறனின் மகனும், மகளும் உடனே எழுந்து வேறோர் அறைக்குச் சென்று விடுவார்கள். சமையலறையிலிருக்கும் அவரது மனைவி, வந்தது மணியை தேடி வந்தவரெனில் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார். மணி சமையலறைக்குப் போய் காபி போடச் சொன்னால் காபியைப் போட்டு அவரது கையிலேயே    கொடுத்து விடுவார். வந்தவர்கள் விடாப்பிடியாக 'எங்கே வீட்டில் யாரையும் காணோம்’ என்று கேட்டால் வேறு வழியின்றி மனைவி, பிள்ளைகளை அழைத்து அறிமுகப்படுத்துவார். அப்போதும் சில நிமிடங்கள் அவர் கேட்பதற்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மறுபடி உள்ளே சென்று விடுவார்கள்.

விருந்தினர் சென்ற பிறகு 'வந்தவர்களை வாங்கன்னு கூட சொல்ல மாட்டீங்களா, அவரு சும்மாவே எல்லாரைப் பத்தியும் புறம் பேசுவாரு, நாளைக்கு ஆபிஸ்ல போய் என்னைப் பத்தி என்ன பேசுவாரோ' என்று சொன்னால், 'அது உங்க பிரச்னை, அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது' என முதல் எதிர்ப்பு மனைவியிடமிருந்து வரும். பிள்ளைகளும் இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல என்று முணுமுணுப்பார்கள்.  இங்கோ அதற்கு முற்றிலும் மாறான நிலையைக் காணும் போது மணிமாறனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘கோபி சார் உங்க குடும்பமும், என் குடும்பமும் போன வருஷம் ஒரு விழாவில் அறிமுகமாகி கொஞ்சம் நேரம்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா உங்க மனைவியும் பிள்ளைகளும் ஒரே ஒரு முறை பார்த்த என்னையும் என் குடும்பத்தையும் பத்தி இவ்வளவு அழகா விசாரிக்குறாங்க. ரொம்ப  சந்தோஷமாயிருக்கு’ என்றார்.
 
அதுவா சார் சில வருஷங்களுக்கு முன்னாடி டி.ஆர்.ஆர். டோல்கின் என்ற உளவியலாளரோட புத்தகத்தைப் படிச்சேன். அதில் 'பிள்ளைகள் எதை நம்புகிறார்களோ அப்படியாக மாறி விடுவார்கள், எனவே உங்கள் பிள்ளைகளோடு பேசும் போது உலகிலேயே அவர்கள்தான் ஞானமுள்ளவர்கள், கருணையுள்ளவர்கள், அழகிற் சிறந்தவர்கள், அதிசயமானவர்கள் என்பது போல பேசுங்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அப்படியே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நன்மைகளின் கருவூலம் என்ற புதையல் பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மேற்கூரையிலோ, பரண்மீதோ மறைவாய் உள்ளது. மூடியுடன் இணையாத, பூட்டப்படாத பெட்டியாக இருப்பினும் மறைவாயிருப்பதால் நீங்களாக அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியாது. அதில் நீங்கள் செய்யும் நன்மைகளின் பலன்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். எப்போது அவசியமோ அப்போது அப்பலன்கள் உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் பேரப் பிள்ளைகளுக்கோ தானே வந்து சேரும் என்று எழுதியிருந்ததைப் படிச்சேன். அன்றையிலிருந்து நானும் என் மனைவியும் எங்க பிள்ளைங்க கிட்டப் பேசும் போது நல்லதையே பேசுறதுன்னு முடிவு செய்தோம். நாங்க எங்களை சுத்தி இருக்கவங்ககிட்ட பேசுற விதம், நடந்துக்கிற விதம், யாருக்காவது உதவி தேவைப்படும் போது தானா முன் வந்து உதவி செய்யுறது, அதனால எங்களுக்கு கிடைக்கும் நல்ல பெயர் இதையெல்லாம் பார்த்து பிள்ளைகளும் அதே போல நடந்துக்குறாங்க. எதையும் இப்படித்தான் செய்யணும்னு வலிந்து திணிக்காததாலேயே நல்ல குணம் என்பது பிள்ளைகளோட இயல்பான விஷயமாகிடுச்சு. அன்னைக்கு உங்க குடும்பத்தைப் பார்த்துட்டு திரும்பி வரும் போது உங்க ஒவ்வொருத்தர் பத்தியும் எனக்குத் தெஞ்ச நல்ல விஷயங்களையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தேன். உங்க பிள்ளைகள் ஏதாவது போட்டிகள்ல ஜெயிச்சதை  நீங்க ஆபிஸ்ல என்கிட்ட சொல்லும் போதும் அதை வீட்ல வந்து சொல்வேன். அதனால அவங்களுக்கு உங்க எல்லோரைப் பத்தியும் நல்லா தெரியும்.’ 

‘ஆச்சர்யமா இருக்கு சார், இப்படி மத்தவங்களைப் பத்தி பேசக் கூட உங்க எல்லோருக்கும் நேரம் கிடைக்குதா? எங்க வீட்ல இப்படி சேர்ந்து பேசுறதே கிடையாதே? என் பசங்களுக்கு படிப்பு, டிவி, செல்போன் தவிர வேறு எதுக்கும் நேரமில்லையே?’

‘நைட் எல்லோரும் ஒண்ணா சாப்பிடும் போது டிவி பார்க்க மாட்டோம். அன்னைக்கு நடந்த நல்ல விஷயங்களை அந்த நேரத்துல எல்லோரும் பகிர்ந்துக்குவோம். ஏதாவது வருத்தப் படக் கூடிய விஷயங்கள் நடந்திருந்தா அதுக்குக் காரணமானவங்களை பத்தி தப்பா பேசாம, அது போல திரும்ப நடக்காம இருக்க என்ன பண்ணனும் என்பதைப் பத்தியும் பேசுவோம்’ என்று கோபி சொன்னதும்தான் மணிமாறனுக்குத் தன் குடும்பத்தில் முதலில்  மாற்றம் தேவைப்படுவது தன் பிள்ளைகளின் நடத்தையில் அல்ல,   தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய நடத்தையில் என்பது புரிந்தது.
 
பிரபல உளவியலாளரான எரிக் எரிக்சன் என்பவர் 'குழந்தைகள் ஒன்று முதல் இரண்டு வயது வரை பெற்றோர் என்ன செய்கின்றனர், எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைப் பார்த்து (Imitation) கற்றுக் கொள்கின்றனர்’ என்கிறார். பெற்றோரின் பேச்சு, நடத்தை, பழக்கம் யாவும் பிள்ளைகளின் ஆழ் மனதில் பதிந்து அவர்களது ஆளுமைத் தன்மையை உருவாக்கும். வீட்டிற்கு விருந்தினர் வருகையில் அவர்கள் இருக்கும் போது நன்றாக பேசி உபசரித்து விட்டு அவர்கள் சென்றபின் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது பிள்ளைகளின் மனதில் வந்தவர்களைப் பற்றி ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடும். மீண்டும் ஒரு முறை அவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மீது மரியாதை இருக்காது. பெற்றோரின் நல்ல எண்ணங்கள், நல்ல பேச்சு, நற்பழக்கங்கள், நன்னடத்தை யாவும் நன்மைகளின் கருவூலம் போன்றது. கண்களுக்குத் தெரியாத, கைகளால் தொட முடியாத இந்நன்மைகளின் பலன்கள் நாம் நினைத்த நேரத்தில் அல்லாமல் தேவையான போது நம் பிள்ளைகளுக்கு வந்து சேரும். வங்கியில் நம் கணக்கில் பண இருப்பு இருந்தால் தான் அதற்கான வட்டி நமக்கு வந்து சேரும். பணமே போடாமல் வட்டியை எதிர்பார்க்க முடியாது என்பது போல நம்மிடம் இல்லாத நற்பழக்கங்களை நம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்க முடியாது. கணவனும், மனைவியும் எப்போதும்  சண்டை போடுவது, மரியாதையின்றி பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவதுமாக இருந்தால் அதைத்தான் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். நன்மைகளின் கருவூலம் காலியாக இருந்தால் நாம் நன்மைகளை எப்படி எதிர்பார்கக முடியும்? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்? நற்சிந்தனையால் நற்செயல்களால் நன்மைகளின் கருவூலத்தை நிரப்புவோம், நம் பிள்ளைகளின் வாழ்வு சிறக்க வழி செய்வோம்.

பிரியசகி 
ஜோசப் ஜெயராஜ்
 

]]>
child, children, family, குடும்பம், குழந்தைகள், குழந்தை வளர்ப்பு https://www.dinamani.com/health/mental-health/2018/aug/11/நல்ல-குழந்தைகளை-உருவாக்குவது-எப்படி-உளவியலாளரின்-கண்டுபிடிப்பு-2978629.html
2977921 மருத்துவம் மனநல மருத்துவம் பெண்கள் மீதான வன்மங்களும், வக்கிரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? ஸ்ரீதேவி குமரேசன் Friday, August 10, 2018 05:43 PM +0530 கடந்த சில ஆண்டுகளாகத்தான் மெல்லமெல்ல மேலெழுந்து வந்து கொண்டிருக்கும் பெண் இனத்தை, தொடங்கிய இடத்திற்கே மீண்டும் தள்ளிவிடும் பரமத பாம்பு போன்ற இறக்கமற்ற சிலரின் செயல்களால் பெண் இனம் மீண்டும் முடக்கப்படும் சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை. நிர்பயா, ஸ்வாதி, இன்னும் வெளிச்சத்துக்கு வராத இன்னபிற தோழிகள் என தொடர் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க. சட்டங்களும், திட்டங்களும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்ட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுபோன்ற கொடுமைகளை கண்டித்து, சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஓர் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட மனநல ஆலோசகர் வசந்தி பாபு நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

இன்றைய சமுதாய சூழலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புகள் அதிகம் உள்ளது. பொதுவாக மனிதர்கள் எல்லாரும் பொருள் சேர்க்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், புகழ் சேர்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் தனிமனித ஒழுக்கம் முக்கியம் என்பதை யாரும் நினைப்பதில்லை. மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது போன்று நல்ல சாப்பாடு, தூக்கம், அமைதி போன்றவற்றை இழந்து இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருப்பதும், துக்கம், கோபம், சந்தோஷம் என எதையும் ஒருநிலைப்படுத்த தெரியாமல் மனித மனசு மாசுபட்டுள்ளதும், கரை பட்டுள்ளதும்தான், பெண்கள் மீதான வன்மங்களும், வக்கிரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணமாகிறது.

முன்பெல்லாம், கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான பெண்கள் இல்லதரசிகளாக இருந்தனர். இதனால் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பியதும் அவர்களுடன் பேசவும், அவர்களுக்கு தேவையானதை செய்யவும் ஆட்கள் இருந்தனர். ஆனால் தற்போது, 80 சதவீத குடும்பங்கள் தனிக்
 குடித்தனங்களாக உள்ளனர். அதிலும் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் பள்ளி முடிந்து திரும்பியதும், அவர்களே வீட்டின் பூட்டை திறந்து உள்ளே வந்து தாளிட்டுக் கொண்டு , பிரிஜ்ஜில் வைத்துள்ள உணவை எடுத்து சூடாக்கி சாப்பிட வேண்டும். அவர்கள் பேசவோ, தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவோ, பிரச்னைகளை சொல்லவோ ஆளில்லாமல் குழந்தைகள் மனம் இறுகிக் கிடக்கிறது. அப்படியே பெற்றோர் வீடு திரும்பினாலும், ஒரு வித டென்ஷனுடனேயே அவர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, பகிர்ந்து கொள்வோ நேரமில்லை.

மேலும், ஆரோக்கியமற்ற உணவு, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது, வேலைப் பளு, உடல் அசதி போன்றவற்றினால் கண்மூடி படுத்திருந்தாலும் மனசு தூங்காமல் விழிப்புடன் இருக்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. மனிதனுக்கு தூக்கம் குறைந்து போனாலே உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுபோன்று வேகம் அதிகம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனின் நிதானமும் வரவரகுறைந்து போகிறது. இதனால் மன ஆரோக்கியமும் கெட்டு போகிறது. மனிதனின் நிதானம் குறையும் நிலை தொடர்ந்து ஏற்படும்போது மனதில் வக்கிரங்கள் தோன்றுகின்றன.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நினைக்கும்போது அவர்களுக்கு தனியாக சாப்பிட பழக்குவது, பாத்ரூம் செல்ல பழக்குவது போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம் அல்லவா, அப்போதே வேற்று ஆள் தங்களைத் தொட அனுமதிக்கக் கூடாது என்பதையும், குட் டச், பேட் டச் போன்றவற்றையும் புரியும்படி சொல்லித் தர வேண்டும். இப்படி செய்வதனால் குழந்தைகளை ஒருவர் தொட நேரிடும்போது அது சரியா, தவறா என்பதை அவர்களால் உணர முடியும்.

இனியும் இதுபோன்ற வன்மங்கள் தொடராமலிருக்க, பெற்றோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் ரோல்மாடல் ஆவார். எனவே, குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன் சண்டையிட்டு கொள்ளும் பெற்றோர் பின்னர், ஒருவருக்கு சமரசமாகி தனியாக கொஞ்சிக் கொள்வார்கள். ஆனால் குழந்தையின் மனதில் அவர்களின் சண்டை மட்டும்தான் நிற்கும். இதனால் குழந்தைகள் தனது நண்பர்கள் இடத்தில் இலகுவாக சண்டை போடுகிறார்கள்.

அது போன்று நிறைய வீடுகளில் குழந்தைகளை வளர்க்க ஆயாக்களை அமர்த்துகிறார்கள். பல வீடுகளில் அந்த ஆயாக்களே குழந்தைகளின் பிரச்னையாக இருக்கிறார்கள். குழந்தையை, ஆயா எந்நேரமும் திட்டுவதும், அடிப்பதும், மயக்கமருந்து கொடுத்து தூங்க வைப்பதுமாக இருக்கிறார்கள். இது தெரியவந்த பின் பெற்றோர் தவிக்கிறார்கள்'  என்றார்.

 இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்யலாம்?

 இவர் கூறும் ஆலோசனைகள் அடுத்த பதிவில்....
 

]]>
women, abuse, violence against woman, பெண்கள், வன்முறை, குடும்ப வன்முறை https://www.dinamani.com/health/mental-health/2018/aug/10/பெண்கள்-மீதான-வன்மங்களும்-வக்கிரங்களும்-நாளுக்கு-நாள்-அதிகரித்து-வருவதற்கு-காரணம்-என்ன-2977921.html
2972935 மருத்துவம் மனநல மருத்துவம் சிறப்புக் குழந்தையின் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு நற்செய்தி இதோ! Thursday, August 2, 2018 03:07 PM +0530  

ஆட்டிஸம் (Autism), செரிப்ரல் பால்சி (Cerebral Palsy), டௌன்ஸ்  குறைபாடு (Downs Syndrome) மற்ற பிற மனவளர்ச்சி குன்றிய, குறைபாடுடைய குழந்தையின் பெற்றோரா நீங்கள்? 

உங்கள் பதில் ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்...

சிறப்புக் குழந்தைகளைப் பற்றி நம் எல்லோருக்கும் உள்ள சில கேள்விகள்..

* வயதான நான் எவ்வாறு வளர்ந்த குழந்தையைப் பேணுவது?

* எவ்வாறு அவர்களை அன்றாட வேலைகளில் தொடர் ஈடுபாட்டுடன் வைத்திருப்பது?

* நமக்கு பிறகு நம் குழந்தையின் நிலை என்ன?

* அவர்களை பாதுகாப்பது யார்?

* அவர்கள் இவ்வுலகில் என்ன செய்வார்கள்?

இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் / தீர்வு,  'பெற்றோர்களால், பெற்றோர்களுக்காக, சிறப்பு குழந்தையின் எதிர்காலத்துக்காக' அதாவது 'நமக்காக நம்மால்' உருவாக்கப்பட உள்ள கிளாப்ஸ் (CLAPS - Community Living Association for Parents of Special Citizens) அமைப்பு.

சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த வளாகத்தில், சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. 

ஐம்பது பெற்றோர்களால் அமைக்கப்படும் இந்த சிறப்பு வளாகம்,  திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலி கிராமத்தில் அமைய உள்ளது. 

சிறப்புக் குழந்தைகளுக்கான தனிக் குடியிருப்பு, பெற்றோர்களுக்கான குடியிருப்பு, பொதுவான சமையலறை, உணவருந்தும் இடம், தொழில்முறைக் கூடம், அரங்கம், நீச்சல் குளம், யோகா மற்றும் தெரபி சென்டர், ஸ்கேட்டிங் ட்ராக் இன்னும் பல வசதிகளும் இருக்கும்.

உங்களுக்கு இவ்வமைப்பில் சேர விருப்பமிருந்தால் அல்லது இது பற்றிய விவரம் அறிய விரும்பினால் இளங்கோவன் – 91766 20551, சஞ்சய் ராவ் – 98400 24619,  குருமூர்த்தி – 97909 94041 ஆகியோரைத் தொடர்புகொள்ளுங்கள்.

]]>
autism, குறைபாடு, special children, சிறப்புக் குழந்தைகள், CLAPS, Cerebral Palsy, Downs Syndrome, ஆட்டிஸம், மனவளர்ச்சி https://www.dinamani.com/health/mental-health/2018/aug/02/a-good-news-to-parents-of-special-children-2972935.html
2968968 மருத்துவம் மனநல மருத்துவம் முழு படிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’! மாலதி சுவாமிநாதன் Saturday, July 28, 2018 11:00 AM +0530 ஒற்றுமை, பாசம், உதவும் தன்மை , போன்ற குணாதிசயங்கள் உள்ளவராக இருப்பது நமக்கும், அவர்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையைச் செய்யும். இவை இல்லாததும், கூடவே இவை இல்லை என்ற புரிதலும் இல்லா விட்டால், நேர்வது பதட்டம், கோபம், மனச் சோர்வு, தற்கொலை முடிவுகள் போன்றவையாகும். இதன் மற்றொரு  பிரதிபலிப்பு மனக்கசப்பு, சண்டை, ஏற்றத்தாழ்வு எனப் பல நிகழும்.

இந்தியாவில் சமீபப் புள்ளி விவரத்தின் படி மனநலம் மற்றும் அதைச் சார்ந்த ஒழுங்கின்மை, ஆயிரம் நபர்களில் குறைந்த பட்சம் 9.5 நபர்களுக்கு மனநோய் இருப்பதாகவும், அதிக பட்சமாக ஆயிரத்தில் 102 நபர்களுக்கு மனநல குறைபாடுகள் இருக்கக்கூடும் என்கிறது. இந்தப் பட்டியலில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரீனியா, போதை அடிமை என்று பலவற்று உள்ளன. இதைச் சீர்திருத்த வழிகளை அமைத்துச் செய்வது தேவையாகும். நாம் வாழும் நகரத்தை ‘ஸ்மார்ட்’டாக ஆக்கி வரும்போது நம் நலனை நன்றாக்குவதின் வழியைத் தேடி அமைப்பதும் ‘ஸ்மார்ட்’ தான்!

சரி, எல்லோருக்கும் சம அளவில் மனதிடம் அளிப்பது சாத்தியமா? கண்டிப்பாக இது முடியும் என்று உறுதியாகச் சொல்லலாம்! குறைந்த செலவில் எல்லோரும் சமமாக உபயோகிக்கக் கூடியதாக ஏதேனும் வழி இருக்கிறதா? ஒரு வழி இருக்கிறது, அதைச் சுலபமாக அமைக்கலாம். இதோ, அதன் விவரிப்பு.

இது ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’ / ஸோஷியல்-எமோஷனல் லர்னிங் (Social-Emotional Learning) என்ற முறை. இதைப் பள்ளியின் தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்தால் அதன் பலன், வளரும் பிள்ளைகளின் வளர்ச்சியில் தெரியும். இதை, பிறகு செய்தாலும் நன்மையே! கல்லூரிகளிலும் வேலை செய்வோருக்கும் இந்தத் திறன்களை பயிலச் செய்ததில், பலன் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதற்கு  தனியாகச் செலவு செய்ய வேண்டி வரும்.

சமூக-உணர்வுகளின் கற்றலை வெளிநாட்டில் பல பள்ளிக்கூடங்களில் செய்து வருவதால், அதன் பயனை பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன: படிப்பு, குணங்கள், மற்றவரிடம் பழகுதல், தன்னைக் காத்தல் எல்லாம் சீரடைந்தது. சமூகநீதி நிலவியது. பொறுப்பான நபர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்று காணப்பட்டது.

அப்படி என்ன இருக்கிறது இந்த ‘சமூக-உணர்வுகளின் கற்றலில்’ என்பதைப் பார்ப்போம்.

‘சமூக-உணர்வுகளின் கற்றல்’: புரிந்து கொள்வோம்

சமூக-உணர்வுகளை கற்றுக் கொள்வதால்,  செய்திறனும் மனோபாவமும் மேம்படும். இதன் இன்னொரு வடிவத்தை ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்று மேல்நாட்டு ஆராச்சியாரான டேனியல் கோல்மேன் விவரித்தார். இதன் அடிக்கல்லை அதற்கு முன்னதாக ‘வர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஸேஷன் (WHO)’ நாட்டி, இதற்கு, ‘வாழ்க்கைத் திறன் கல்வி’ (life skills) என்று பெயர் சூட்டினார்கள். இதில், முடிவு செய்யும் திறன்கள்,  உணர்வு வண்ணங்கள் திறன்கள், தன்னாட்சித் திறன்கள், மற்றவருடன் சகவாசத் திறன்கள் எனப் பட்டியலிட்டார்கள். திறன்கள் யாவும், வீட்டிலிருந்து வளரத் தொடங்குகிறது. இவற்றைப் பள்ளிக்கூடங்களில் மேம்படுத்தப் பல வாய்ப்புகள் உள்ளன.

மற்றவர்களுடன் பழகுதல், உணர்வுகளின் கற்றல், தன்னைப் பற்றி அறிதல், உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு வெளிப்படுத்துவது,  மற்றவர்களுடன் பழகுவது, நம் உடலின் பரிச்சயம், முடிவு எடுப்பது, பிரச்சனைகளைச் சீர் செய்வது என்று பல திறன்கள் இதில் அடங்கி இருக்கிறது. இந்தத் திறன்களின் கலவை, நம் மனப்பாங்கு, கோட்பாடுகள், முக்கியமான கருத்துகள், நடத்தை முறைகள், செயல்படும் விதங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன.

அதனால் தான் ஒவ்வொரு திறனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. ஒன்றுக்கொன்று பின்னி இருப்பதால் எந்தத் திறனும் பெரிது, சிறிது என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து ‘வர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஸேஷன்’ நலன் பற்றி குறிப்பது நன்றாகவே பொருந்தும்! அவர்கள் வர்ணிப்பது: நலன் என்றால், வெறும் நோய் அற்ற நிலை அல்ல. நம் உடல் நலம், மனவளம், சமூக இடைவினைகள் எல்லாமே நலன் என்றதினுள் அடங்கும். நலன் முழுமையானது என்பதால், ஒன்றை விட்டு ஒன்று இருக்க இயலாது: ஒன்று இல்லாவிட்டால், மற்றவற்றிலும் குறைபாடுகள் வந்து விடும் .

முழு நலனைப் பற்றி நம் முன்னோர்களும், பயிற்றுநர்களும் சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் திரும்ப திரும்ப வலியுறுத்துவது, கற்றலில் யோசிப்பும், கூர்மையான கவனம் செலுத்துவதற்கான சூழல் இருக்க வேண்டும் என்று. இதை எல்லாம் ஒன்றாக்குவது  மேற் சொன்ன ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’.

அப்படி இல்லாமல், பள்ளியில், பாடத்தை மட்டும் கற்றால், அறிவு வளரும். ஆனால் கற்றதை செயல் படுத்துவது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திறன்கள், மனப் பக்குவம் எல்லாவற்றிலும் குறைபாடுகள் நிலவக் கூடும். ஆராய்ச்சி செய்து, வாழ்க்கை சாதிப்பில் படிப்பை விட இந்தத் திறன்களின் பங்குதான் அதிகம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்.

இதைத் தான் நாமும் சமீப காலத்தில் காண்கிறோம்: கல்லூரியிலும், வேலை அலுவலகங்களிலும், பிறருடன் கூடி வேலை செய்வது, ப்ராஜெக்ட் செய்வது கடினமாகிறது, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததாலும் கருத்து வேறுபாடுகள் நேர்கிறது, பெரும்பாலானோர் டென்ஷனில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. இவை, திறன்களின் குறைபாட்டினால் தான். இதைச் சுதாரிக்க, பயிற்சியாளரை அழைத்து பள்ளிகளில், நிறுவனங்களில் பயிற்சி கொடுப்பதும் உண்டு.

அதற்குப் பதிலாக, பள்ளி ஆரம்பத்திலேயே இந்தத் திறன்களை வகுப்புகளில் கற்றலுடன் புகுத்தி விட்டால் செலவின்றி முழுமையான வளர்ச்சி அடைவார்கள்.

தற்போதைய சூழலில், பள்ளிக்கூடங்களில் ‘சமூக- உணர்வுகள் கற்பது’ என்பதற்கான பயிற்சி, குறிப்பாக் கோபம், புகை பிடிப்பு, தைரியமாக இருப்பது இவற்றை மையமாக வைத்து வகுப்புக்களுக்குப் பிறகு எடுக்கப்படுகின்றன.

இன்னொரு விதம், ‘சமூக-உணர்வுகள் கற்றல்’ திறன்களைப் பாடம் சொல்லித் தரும் முறையிலேயே சேற்றுக் கொள்வது. இதைப் பல்வேறு வகையில் செய்யும் முறைகள் உள்ளன. குறிப்பாகக் கூடிப் படிப்பதின் வகைகளான ‘கோலாப்ரெட்டிவ் லர்னிங்’ (collaborative learning), ‘கோவாப்ரேடிவ் லர்னிங்’ (cooperative learning), ‘ரேஸிப்ரோக்கல் லர்னிங்’ (reciprocal learning). இந்த மூன்றிலும், ஆசிரியர் பாடங்களை கற்றுக் தரும் முறையை மாற்றி வகுப்பார்கள். ஆசிரியர் பயிற்சியாளராக இருப்பார்; மாணவர்களை ஒருவருக்கொருவர் ‘கூட்டு கற்பிக்கும் குழு’வாக அமைப்பார்கள். குழுவில் படிப்பது, சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்வது, மற்றவருக்கு உதவுவது, என்ற பொறுப்பு மாணவரிடமே இருக்கும். அதாவது மேற்கூறிய யோசிப்பு-உணர்வு-சமூக திறன்கள் உபயோகிக்க,நேர் விளைவாக ஒவ்வொன்றும் மேம்படும்!

இப்படிச் செய்வதற்கு மிக அவசியமானது: படிக்கும் பள்ளிக்கூடத்தின், மற்றும் வகுப்புகளின் சுற்றம்-சூழல், அனுபவங்கள். மேலும், பாரபட்சமின்றி ஆசிரியர்கள் செயல் பட்டால் அதுவும் மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கும்.

இந்த மாதிரியான சூழலில் வளரும் மாணவர்களுக்கு அறிவுடன் பொறுப்பும், அக்கறையும் திடமாகும். அவர்களின் படிப்புத் திறன், வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்தும். பிள்ளைகள் தங்களைத் தானே மதித்துக் கொள்வார்கள். இதனாலேயே தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நன்றாகச் செயல் படுவார்கள். இந்தக் கற்றலின் தன்மையினாலேயே வளர்ச்சி கூடி, சமூக நீதி ஏற்பட்டு,  பிரத்தியேகமாக திறன்களைக் கற்றுத் தரத் தேவை இல்லாததாதல், செலவுகள் குறையும்.

‘சமூக - உணர்வுளின் கற்றல்’: வெவ்வேறு கண்ணோட்டம்

சமுதாய உணர்வுகள் கற்பதால் பல நலன்கள் உள்ளன. இந்த ஊக்குவிக்கும் கருவியால் கற்பதினால், மற்றவருடன் பழகுவதும் கற்றலும் மேம்பட, குறிக்கோள்களை அடைந்து, வளர்ச்சி அடைகின்றோம். செலவுகளைக் குறைகிறது, சமூகநீதி நிலவுகிறது.

சொல்லப் போனால், வகுப்பறைகள் முழுமையாக ஆர்வம் காட்டி, மற்றவர்களுடன் சேர்ந்து சிந்தித்து, விடைகளைக் காணும் இடமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் பல கோணங்களிருந்து புரிந்து கொள்வதால் கற்றலில் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். இப்படி வகுப்புகள் ஆதரவாக இருந்தால், திறன்கள் வளர்ப்பதோடு ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் காட்டுவார்கள்.

இந்த கற்றலில் அடங்குவது:

வளர்ச்சியின் கண்ணோட்டத்திலிருந்து ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’

வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் பல பொருத்தங்கள் உண்டு. இரண்டும் இயற்கையாக வளர்வதே. கற்றுக் கொண்டிருந்தால் வளர்ச்சி் கூடிக்கொண்டே போகும். அதற்கு, அறிவு + சமூக + உணர்வுகளுக்குப் பாடங்களில் சம பங்களித்தால், பல விதங்களில் ஊக்குவிக்கத் தூண்டுதலாகி, வளர்ச்சியை மேம்படுத்தும்.

இந்த ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’ திறன் என்பதில் பல திறன்கள் அடங்கியுள்ளதால் இதனால் முழு நலனை (உடல்+மனம்+சமூக) அடைவோம். வாழ்வின் எந்த நிலையை எடுத்துக்கொண்டாலும் யோசிப்பு-உணர்வு-சமூக என மூன்று திறன்களின் பங்களிப்பும் இருக்கிறது. மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் தர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், மூன்றும் இருக்கும் இடத்தில், ஆற்றுமையுடன் செயல் படுவார்கள்.

இதன் பிரதிபலிப்பு அவரவரின் தைரியத்தில், படைப்பாற்றலில், மற்றும் அறிவில் தெரிய வர, மேலும் தேடி கண்டுபிடித்து, புரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது. இது போல் நாம் எல்லோரும் செய்து பல தருணங்களில் திருப்தி அடைந்து இருக்கின்றோம்.

மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை, வளரும் பருவத்தில், பிள்ளைகளைப் பெரியவர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிடியில் பிடித்து வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, வழிகாட்டியாக இருந்து சுதந்திரம் தர வேண்டும். அப்பொழுது தான் நமக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கையைத் தெரிவிப்போம். இதுவே ஊக்குவிக்கும். விளைவாக, அவர்களுக்கும் எந்த சூழலையும் எதிர்கொண்டு சரி செய்யும் திறன்கள் வளரும். குறிப்பாக, யோசிக்கும் திறன்கள் வளர வாய்ப்பாகிறது.

அதே போல், மற்றவர்களுடன் பழகுவதற்கான திறன்களைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தச் சமூக சூழ்நிலை தேவைப்படுகின்றது. உலகின் மிகப் பிரபலமான ஆய்வாளரான லெவ் வைகாட்ஸ்கீ இதைத் தெளிவாக விவரித்திருக்கிறார். சமூக வட்டாரங்களில் ஒருவருக்குத் தெரியாததை, அதை அறிந்த மற்றொருவர் புரிய வைக்கும் வாய்ப்புகள் அமைந்திடும். புரிந்து கொள்ளும் வரை, நிழல் போல் கூடவே இருந்து, புரிந்து விட்டதும் விலகி விடுவார்கள். இங்குச் கூச்சப்படத் தேவையே இல்லை.

வகுப்பின் சிற்பி

வைகாட்ஸ்கீ சொல்வதை வகுப்புகளில் செயல்படுத்த முடியும். மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, அவர்களுள் உள்ள திறன்களை வெளியே கொண்டு வருவதற்கு, மேலும் கற்றுக்கொள்ள சூழலை அமைப்பது தேவை. இதில் தானாக ‘சமூக-உணர்வுளின் கற்றல்’ அமைந்துவிடும்.

இப்படிச் செய்தாலும் கூட, எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காமலும் போகலாம், அதற்குக் காரணங்கள் உண்டு. ஒரு விதத்தில் இது சமுதாய நிதர்சனம் என்றே விவரிக்கலாம்.

சிலர், தங்களைப் பற்றி கேள்விப் படுவதை உள் வாங்கிக் கொண்டு, அதன் படியே செயல் படுவார்கள். இது எப்படி சாத்தியம்? ஒரு சிற்பி தனக்குத் தோன்றுவதை செதுக்கி அப்படியே சிலையாக்குவார். அதே போல், வளரும் பிள்ளைகளுக்கு அவர்களைப் பற்றி வீட்டுப் பெரியவர்களோ, பள்ளி/ ட்யூஷன் ஆசிரியர்களோ அவர்களைப் பற்றி சொல்கின்றதை அப்படியே நம்பி,  ‘ஓகோ இவர்கள் சொல்வது போல் தான் நான்’ என்று எண்ணி செயல் படுவார்கள். இந்த ‘பிக்மெலியின் எஃபக்ட்’ (Pygmalion effect) வளரும் காலகட்டங்களில், குறிப்பாக ஆசிரியர்கள் ‘எனக்குத் தெரியும், உங்களுக்கு முடியும்’ என்றால், அது அப்படியே பதிந்து, ஊக்குவிக்கும். அதுவே ‘முட்டாள்’ என்று அழைத்தால் தன்னை அப்படியே செதுக்கிக் கொள்வார்கள். சொல்லினால் பாதிப்பாகிறது. இப்படிச் செய்து விட்டால் இவர்களின் சமூக-உணர்வு திறன்கள் குன்றி இருக்கும்.

வகுப்பு ஆசிரியர்களின் பங்களிப்பு

உணர்வுகளின் கற்றல்  நிலவுவதற்கு அந்தச் சூழலில் உள்ளவர்களின் பங்களிப்பு முக்கியமானது. சொற்களினால் வளரும் பிள்ளைகள் எந்த அளவிற்கு ஆழமாக பாதிக்கப் படுகின்றன என்று அறிய வேண்டும்.

மாறாக, சொல்பவரின் சமுதாய-உணர்வு ஆழமாக இருந்தால், அவர்களின் சொல்லிலிருந்து ஊக்குவிக்கப் பட்டு, தங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வளர, சுய மதிப்பீடு நன்றாக இருக்க வாய்ப்பாகிறது. இதை, சமுதாய உணர்வைப் பள்ளிக்கூடத்தில் புகட்டும் விதம் எனலாம்.

வகுப்புகளில் எல்லோருக்கும் சம பங்கு அளித்து, ஒருவரின் கருத்தை மற்றவர்கள் கேட்பது என்று வகுத்தாலே அது சம உரிமை பெற்று, திறன்கள் வளர்கிற இடமாகும்.

சமூக-உணர்வின் கற்றலின் இடையூறுகள்

மாற மாட்டேன் என்ற மனப்பான்மையும், தன் புத்தியின் கூர்மை பற்றிய தவறான அபிப்பிராயமும் இடையூறாகும்.  கருத்து தெரிவித்ததிலும், புகழ்வதற்கும் இடம் உண்டு.

கருத்தைத் தெரிவிக்கும் போது, அவர்களின் புத்திக் கூர்மையை குறித்து ‘நீ புத்திசாலி அதனால்தான் முடிந்தது’ என்ற தெரிவிக்கக் கூடும்.  கேட்பவரும் தாங்கள் புத்திசாலி என்பதால் மட்டும் செய்ய முடிந்தது என்று நம்புவார்கள். இந்த அபிப்பிராயத்திற்கு எந்தப் பங்கமும் வராதிருக்க, தனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே செய்வார்கள். இப்படி இருப்போர், ‘மாற்றமில்லாத நுண்ணறிவு/புத்திசாலித்தனம்’ என்று சொல்லலாம். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் எழும் சந்தேகங்களை கேட்க அஞ்சுவார்கள். எங்கே கேட்டால் அவர்கள் புத்திசாலி இல்லை என்று எடை போட்டு விடுவார்களோ என்பதற்காகவே மொளனம் சாதிப்பார்கள். சற்று சரிந்தாலும், தாங்க முடியாமல் போகும். அச்சம் அதிகரித்து கோழையாக இருப்பார்கள். இந்த மாற்றமில்லாத நுண்ணறிவு ஆவதற்கு மற்றவர்கள் கருத்தை தெரிவிக்கும் விதம் பொறுப்பாகும்.

இடையூற்றுக்கு வெளிச்சம்

அதற்குப் பதிலாக, வேலையைக் குறித்து தகவல்களை விவரித்தால், செய்ததில் எது நன்றாக அமைந்தது என்றும், எதை மேம்படுத்த வேண்டும் என்றும் வித்தியாசம் புரிய வரும். அவர்களின் செய்த முறையைக் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் அதுவே ஊக்குவிக்கும்.

இதில் இன்னொரு நலனும் உண்டு. செய்வோருக்கு, தன் உழைப்பின் மீது நம்பிக்கை, உழைத்தால் சாதிக்கலாம் என்ற எண்ணம் வலுவாகும். இந்தக் கண்ணோட்டம் கொள்பவர்கள் தங்களுடைய புத்திசாலித்தனம் ‘வளையக்கூடிய நுண்ணறிவு’ என்பதாகப் பார்ப்பார்கள். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முயற்சிப்பார்கள், தோல்வியைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

தங்களின் கடுமையான உழைப்பின் மீதும், திறமை மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிச் செய்வதினால் திறன்களைக் கற்றுக்கொள்வது, அந்தச் சூழ்நிலையால் இயங்கும். இவர்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவர்களாக இல்லா விட்டால் கூட வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பார்கள்.

கருத்து தெரிவித்தல்

சமூக-உணர்வுத் திறன் இல்லாதது கருத்து தெரிவிப்பில் தெரியும். புகழ்ந்து, கருத்து தெரிவிப்பில் வேற்றுமை அமையலாம். ஒரு உதாரணத்திற்கு, நன்றாகச் செய்தால் ‘சபாஷ்’ என்கிறோம். ஒற்றை வார்த்தைப் புகழில் தகவல் அதிகம் இல்லாததால் உதவியற்றவையாகும். இந்த சபாஷ் எதற்கு, தன்னைப் பற்றி என்ன குறிக்கின்றது என்பதை யூகிக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த சபாஷ் கிடைத்தால் மட்டுமே தங்களின் வேலைச் சரியாக இருந்தது என்று எண்ணிக் கொள்வார்கள். இதையும் தன் புத்திசாலித்தனத்தினால் தான் பெற முடிகிறது என்று முடிவு செய்வார்கள். மாற்றமில்லாத நுண்ணறிவு ரகத்திற்குள் இருந்து விடுவார்கள்.

அதற்குப் பதிலாக நம் கருத்தை, எது நன்றாக அமைந்திருக்கிறது என்பதை விவரித்து அத்துடன் பிழையை பற்றிய தகவல்களை பகிர்ந்து சொன்னால், உபயோகமாகும். இப்படிச் செய்தால், அணுகுவதற்கான வழிமுறைகளைப் புரிந்து, திருத்திக் கொள்வார்கள்.

யார் கருத்தை தெரிவித்தாலும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். கருத்து தெரிவிக்கையில், மற்றவருடன் ஒப்பிட்டுச் சொல்லும் போது, ஒருவரின் உழைப்பைத் தாழ்த்தி மற்றவரை உயர வைக்கிறோம். தாழ்த்தப்பட்டவர் தன் உழைப்பைக் குறைப்பார். பொறாமை வளர இடமாகிறது, கருத்தை உதறி விடுவார்.

அதே போல், ஓர் சிலரை மட்டும் சிலாகித்து, புகழ்வதால் பாரபட்சம் காட்டுவதாகும். இப்படிச் செய்தால், கண்டிப்பாக மனக்கவலை பலவீனமாக்கும். இவர்களின் சுயமதிப்பீட்டை குறைப்பதால், திறன்களைக் கற்பது அவசியம்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் இப்படிச் செய்தால் பாதிப்பு செய்து பிறகுச் சரியும் செய்வதாகும். ‘குழந்தையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது’? அதனால் தான் பெரியவர்களின் பங்கு மிக முக்கியம்.

இதிலிருந்து மிக தெளிவாகத் தெரிவது, கருத்துக்களைத் தெரிவிக்கும் விதங்களில்  சமூக-உணர்வுகளின் கற்றல் அடங்கி உள்ளது. அதைக் கவனமாக செய்வது நம் அணுகுமுறையில் இருக்கின்றன. செய்யாமல் போனால், காலம், பணம், குணம் மூன்றும் வீணாகும்.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ உருவாக்க வழிமுறைகள்

ஒன்று கூடி படித்தலில், கற்றலை மேம்படுத்த முடியும். ஆராய்ந்து, சந்தேகத்தைப் போக்கி, ஒருவரை ஒருவர் ஊக்க வைப்பது செயலில் செய்ய முடியும். இப்படி கூட்டுப் படிப்பில் மற்றவரிடம் கேள்வி கேட்கும் விதம், பதிலளிப்பது, புரிதலை உருவாக்குவது எல்லாம் திறனை வளர்க்கச் சாதகமாகும். கற்பவர்கள் கற்றுக்கொள்ள, சொல்லித் தரும் வாய்ப்புகள் அமையும். கொடுத்த வேலையை முடிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு, பாசம், வெளிப்படையாகும்! இங்கிருந்து நம்பிக்கை மேலோங்க சுயமதிப்பீடு அதிகரிக்கும். இவை ஒவ்வொன்றும் சமூக-உணர்வுகளின் கற்றல்.

இதில் மிக உன்னதமானது, கற்றல் என்பது அவரவர்களுக்குத் தனிப்பட்டது என்று இருந்தாலும் இங்கு ஒரு கூட்டு முயற்சியாக அமைகிறது. இந்தக் கூட்டணியில் ஆசிரியரின் பங்களிப்பும் இருக்கும். மாணவர்களுடன் ஆசிரியரும் கேள்விகளை சேர்ந்து அலசி ஆராய்ந்து, பதில் தேடுவார்கள். வளரும் பிள்ளைகள் ஆசிரியரின் அணுகுமுறையில் பல வற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றன.

ஊக்கமளித்தல், கற்றலை மேற்க் கொள்ளச் செய்கிறது. கூட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருப்பதால் பல கண்ணோட்டங்களில் ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சமூக உணர்வுகள் கற்பதின் நுணுக்கங்களில் இவையெல்லாம் அடங்கி உள்ளது.

சமூக உணர்வுகள் கற்பிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று விதங்கள் உள்ளன. இவை கூட்டுமுயற்சிப் பயிற்சி (Collaborative Learning), கூட்டுக் கற்கை (Cooperative learning), இருபுறமும் பரிமாறுதல் (Reciprocal Learning). மூன்றிலுமே, ஆராய்ந்து, கூட்டில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கு முறைகள் பல இருக்கின்றன. மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால், ஒவ்வொருவரின் சமூக திறன்கள், உணர்வுகள், அணுகுமுறை எல்லாம் உபயோகிக்கத் தேவையாகும். பல ஆராய்ச்சிகளில் இந்த மூன்றினால் சமூக உணர்வுகள் கற்பதின் எல்லா நுணுக்கங்களிலும் தானாக பயின்று, மேம்படுத்த முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது.

முழு நலனும் திறன்களும்

‘வரும் முன் காக்க’ என்பதைக் கேட்டதுண்டு. நம் உடல், மனம், சமூக நலம், முழு நலனை மேம்படுவதிற்கான வாய்ப்புகள் சமூக-உணர்வுகள் கற்பதில் அடங்கியுள்ளது. லாபகரமாகவும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாமலும் செய்து விடும்! திறன்களை, பாடதிடங்களையும், நடத்துவதையும், கருத்து தெரிவிப்பதையும் மேற் சொன்ன முறையில் அமைத்தால் நேரும்.

கற்றுக் கொள்ளும் போதே, தன் கட்டுப்பாட்டில் தான் நலன் மேம்படுதல் இருக்கிறது என்பது புரிய வரும். வளர வளர, நலன்களை ஒரு முழு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பார்கள். நம் உடல் மன நலன் குறைந்தால் மற்ற திறன்கள் நமக்கு என்ன தெரிவிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் பக்குவம் வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகிறது. அதைப் புரிந்து கொள்ளவே சமூக-உணர்வு திறன்களை மையமாக்க வேண்டும்.

(சமூக-உணர்வு திறன்களை கற்றாவிட்டால்) செலவினங்கள்

சமூக உணர்வுகள் கற்பதை பாடத்திலும், பாடம் நடத்துவதிலும், பள்ளியின் சூழலிலும் செய்து வந்தால், திறன்கள் இன்னும் தரம் பெற வாய்ப்பாகும். இதற்கென்று தனி ஒருவரை கற்றுத் தர நியமிக்கவோ அல்ல வகுப்புகளுக்குப் பின்பு நேரம் ஒதுக்கி வைக்கவோ தேவைப் படாது. நேரத்தையும், பணச் செலவுகளையும் தவிர்க்கலாம். நேரம் தேவைப்படுவது, இந்தத் திறன்களை பாடத்தை நடத்துவதிலும், பாடத்திட்டங்களிலும் நுழைக்க, ஆசிரியர் கலந்து ஆலோசித்து, திட்டங்கள் தீட்டுவதற்கே.

இப்படிச் செய்தால், முதல் சொன்ன மனநோய் உள்ளோரின் ஆய்வின் எண்ணைக் குறைக்கலாம். இல்லையேல் சிகிச்சைக்கு செலவு கூடுவது தான் மிஞ்சும்.

ஒரு வேளைப் பாடத்தில் புகட்டவில்லை எனில், இதற்கென்று ப்ரத்யேகமாக தனிப் பாடம் நடத்தி வரவேண்டியது தான்.

சமூக உணர்வுகள் கற்பதை, எப்படிச் செய்தாலும் பாடத்தின் மேல் ஆர்வம் கூடுவதாக, குணாதிசயங்கள் மேம்படுவதாக, பல மன நலப் பிரச்சினையை சீர் செய்வதாக ஆராய்ச்சிகள் தெக்குத் தெளிவாக காட்டுகின்றன.

சமூகநீதியும் சமூக-உணர்வுகள் கற்பதும்

சமூக-உணர்வுகள் கற்பதின் மூலம் எல்லோருக்கும் சம மேடை உண்டாகிறது. சமூக உணர்வுகள் கற்பதில் யாருக்கும் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் பிள்ளைகள் செயல் படுவார்கள். பள்ளிக்கூடம் என்றால் அதில் சமூகநீதியின் பாதை அமைய வேண்டும். சமூக-உணர்வு திறன்களை பாடத்துடன் இணங்கிப்  புகட்ட இதைச் செய்ய முடிகிறது.

வளரும் பருவத்திலிருந்தே இந்த பரந்த மனப்பான்மை பயில ஆரம்பித்தால், ஏற்றத்-தாழ்வு வித்தியாசங்களை அழிக்கும் கருவியாகும். இதனால், மற்றவர்களை ஈன கண்ணோட்த்துடன் பார்ப்பதும் இல்லாமல் போவதற்காக அறிய வாய்ப்பாகிறது.

மேல் சொன்ன கூட்டுப் படிப்பினாலும் இந்த நீதிமுறையை அமல் படுத்த முடியும். பள்ளிக்குள் நிகழும் இந்த நிலை வெளியிலும் பரவ, சமூகத்துக்கும் உதவ, அதன் விளைவு சம உரிமை, சம வாய்ப்பு!

இதில் முக்கிய பங்கு பள்ளியின் செயல்படும் ஒவ்வொருக்கும் உண்டு. அவரவர், தன் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து தங்களின் சமூக-உணர்வைப் பக்குவத்துடன் வெளிப்படுத்தினால், வளரும் பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டாக இருப்பார்கள். இதன் விளைவாக, பள்ளியின் ஆரம்பத்திலிருந்து மாற்றம் ஆரம்பிக்கும்.

எப்படியெல்லாம் செய்யலாம்

பயிற்சி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பில் சமூக-உணர்வு திறன்களை புகட்டி, பயிற்சி அளிக்கலாம்.

முதலில் பல மாதங்கள் பயிற்சி தேவையாகும்.

போகப் போக அவ்வப்போது புத்தறிவு பயிற்சி அமைத்துக் கற்றலை, செய்முறையை, மேம்படுத்தலாம்.

வெற்றி காணும் முயற்சிகளை வரிசைப் படுத்தி, பகிர்ந்து கொள்வதென்று செய்வது.

பெற்றோருக்கும் இதைப் புரிய வைக்கப் பிரத்தியேகமான பயிற்சி கொடுத்தல்

அவர்களை ஆசிரியர்களுடனும் இணைத்துப் பயிற்சி தர, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பமாகும்.

பள்ளிகளில் கொளன்ஸிலராக இருக்கும் ஸோஷியல் வர்கர், ஸைக்காலிஜிஸ்ட், இதைப் புகட்டும் விதத்தில் பணியாற்ற வேண்டும்.

பெற்றோர், பள்ளியின் பக்கத்தில் உள்ளவர்களையும் சேர்த்துக் கொள்வது.

அரசாங்கம்

மனநலத்தில் ‘வரும் முன் காப்போம்’ என்ற பிரிவில் முழு நலன் என்ற பட்டியலில் ‘சமூக உணர்வுகள் கற்பது’ திட்டத்தை அமல்படுத்துவது.

சமூக உணர்வுகள் உபாதைகளால் அவதிப் படுவோரின் எண்ணிக்கை எடுத்து அதன் விளைவுகளை விவரித்துப் பதிவு செய்தல்.

பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகத்திலும் சமூக- உணர்வுகள் கற்றல் அமலாகும் வரை, இதைப் புரிந்து சிகிச்சை அளிக்க இந்தப் பயிற்சி பெற்றவர்களை ஆலோசகராக அமைப்பது நலனை கூடச் செய்யும்.

சமூக-உணர்வுகள் கற்றல் வரவு செலவை, அதனால் வரக்கூடிய நன்மை, அதிலிருந்து செலவு குறைவின் கணக்கீடு அவசியமாகும்.

கல்விதிட்டத்தில்

கல்வி திட்டத்தில் பிள்ளைகள் நர்சரி வகுப்பிலிருந்து பாட திட்டங்களைச் சமுதாய உணர்வுகள் சேர்ந்து கற்பதாக அமைப்பது.

கூட்டாகப் படிப்பதை, ஆசிரியர், மனநலம் படிக்கும் மாணவர்களுக்குப் பாட திட்டமாக அமைப்பது.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ குழு

ஆசிரியர், பெற்றோர், மற்ற ஊழியர்கள் மற்றும் மனநல நிபுணர் சேர்ந்த ஒரு குழு அமைக்க வேண்டும்.

பள்ளியின் நிலவரம், கூடுதலாகச் செய்ய வேண்டியதைக் கவனித்து செயலில் கொண்டு வருவது.

வருடா வருடம் சமூக உணர்வுகள் கற்றலின் விளைவை ஆய்வு செய்வது.

படிப்பில் முன்னேற்றம், பள்ளிக்கு வருவது, ஒற்றுமை, உதுவும் மனப்பான்மை, நடத்தை மற்றும் உணர்வுகளின் தேர்ச்சி.

பள்ளிகளில் பயிலுவதை வீட்டிலும் சமுதாயத்திலும் பரவப் பயிற்சி முகாம்களை அமைத்துச் செய்து வருவது.

பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில், அக்கம் பக்கத்தில் மாறும் சமூகநீதி நிலமையைச் சீர் செய்ய வழி செய்வது.

ஆசிரியர்கள் தமக்குள் ‘கற்றல் குழு’ அமைத்துக் கொள்ளலாம். ஒருவருக்கு ஒருவர் தாங்கள் செய்வதைப் பகிர்வதற்கு இது ஒரு இணைக்கும் மேடையாகும்.

வகுப்பில்

சகமாணவர்கள் ஒருங்கிணைந்து செயல் படத் திட்டங்களை தீட்ட வேண்டும்.

பள்ளியில் சாப்பிடும்போது, விளையாடும்போது அங்கெல்லாம் திறன்கள் வெளியாவதைக் கவனித்து, எதில் குறை தெரிகிறதோ அவற்றைப் பாடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

‘மாணவரின் ஒத்துழைப்புக் குழு’ என்று குழுக்களை அமைப்பது, முழு நலனை மேம்படுத்தச் செய்வதற்கு.

எதிர்காலத்தில்

முழு வளர்ச்சி தேவையானது. சமூக உணர்வுகள் கற்பதால் இது சாத்தியமாகும். நம் இந்தியர்களுக்கு இது புதியதே அல்ல. நம் குருகுலங்களில் இப்படித் தான் அமைந்திருந்தது. அன்றாட பாட திட்டங்களுடன் தினசரி தேவைகளைச் செய்து கொள்வது, மற்றவருடன் சேர்ந்து பயிலுவது, செய்து, மற்றவரிடமிருந்து கற்பது எல்லாம் நிலவியது. அங்கிருந்து வெகு தூரம் சென்று விட்டதால் சின்ன சின்ன அடிகளை வைத்துத் திரும்ப இந்த முறையை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ பயின்றால், உறவுகள் மேம்பட்டு, ஒத்துழைப்பு, ஒற்றுமை அதிகரிக்கும்.  பள்ளிகளில் இதைப் பயில எல்லோரின் நலன்கள் கூட, ‘வரும் முன் காப்போம்’ அமலுக்குக் கொண்டு வர முடிகிறது. இதனால் நலன் மேம்பட, செலவுகள் குறையும், சமூகநீதி நிலை உயரும். செயல்படுத்தத் தயக்கமே தேவையில்லை! விடிவெள்ளி தோன்ற சமூக-உணர்வுகள் கற்றல் ஒரு வழியாகும் !’

மாலதி சுவாமிநாதன் / malathiswami@gmail.com
 

 

]]>
children, learning, skill of kids, குழந்தைகள், பாடம், படிப்பு, மாணவர்கள், கற்றல் https://www.dinamani.com/health/mental-health/2018/jul/28/a-holistic-health--learning-way-2968968.html
2959304 மருத்துவம் மனநல மருத்துவம் இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்களின் சேட்டைதானா? வியக்க வைக்கும் உளவியல் ரகசியங்கள்! பிரியசகி & ஜோசப் ஜெயராஜ் Friday, July 13, 2018 04:05 PM +0530
 
வீட்டில் யாருமில்லாத சூழலில் இதுவரையில்லாத சந்தோஷத்துடன் ஹெட்போனை காதில் மாட்டியபடி ஆனந்தமாக தனக்குப் பிடித்த ஆல்பம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வினோத் சுளீரெனத் தன் மீது விழுந்த அடியால் திடுக்கிட்டுப் பார்த்தான். எதிரே கையில் பெல்ட்டுடன் அப்பா. பதினாறு வயது வரை எதற்காகவும் தன்னை அடித்திராத அப்பா இப்போது எதற்கு தன்னை அடிக்கிறார் என்ற காரணமே புரியாமல் விழித்தவனின் மேல் மேலும் சில அடிகள் தொடர்ந்து விழுந்தன. ‘அப்பா, எதுக்குப்பா அடிக்குறீங்க; வலிக்குதுப்பா’ என்று அவன் அலறியதையடுத்து சில வினாடிகள் நிறுத்தியவர், 'ஏண்டா? உனக்கு என்னடா குறை வைச்சோம்? ஏண்டா இப்படி தறுதலையா வந்து பொறந்து தொலைச்சிருக்க?  அன்னைக்குத் தம்பி பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டான்னு பொய் தான சொன்ன? நீ தான் அவனத் தள்ளி விட்டேன்னு உன் ஃப்ரெண்டு சொல்லிட்டான். அங்க அவ்ளோ காயப்பட்டு ஆஸ்பிட்டல்ல இருக்கான்னு நானும் உங்கம்மாவும் துடிச்சிக்கிட்டு இருக்கோம். நீ இங்க ஜாலியா பாட்டுக் கேட்டுக்கிட்டு இருக்க!’ என்று ஆவேசமாக மறுபடி அடிக்க  ஆரம்பித்தார்.
 

அது வரை அவர் அடித்ததை வாங்கிக் கொண்டிருந்தவன் தன் கையால் பெல்டைப்  பிடித்து, 'நிறுத்துங்க. ஆமா, நான் தான் அவனைக் கூட்டமாயிருந்த பஸ்ல இருந்து பிடிச்சுத் தள்ளுனேன். அவன் என்னைக்கு இந்த வீட்டுல வந்து பொறந்தானோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. அது வரைக்கும் நான்தான் உங்கச் செல்லப் பிள்ளையா இருந்தேன். அவன் பொறந்துலேர்ந்து நீங்களும், அம்மாவும் என்னை கவனிக்குறதே இல்லை. அவனையே தான் கொஞ்சுனீங்க. அவன் ஏதாவது தப்பு செஞ்சாலும் என்னை தான் திட்டுவீங்க. அவன் நல்லா படிச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? சின்னப் பையன் 95% எடுக்குறான், நீயும் இருக்கியே, அவன்கிட்ட கத்துக்கோடான்னு என்னை இன்சல்ட் பண்றீங்க. ரோட்ல கிரிக்கெட் வெளையாடப் போனாக் கூட என்னடா உன் தம்பி சிக்ஸரா வெளாசுறான், நீ டக் அவுட் ஆவுறேன்றானுங்க. தினமும் காலைல எழுந்ததுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் எனக்கு இதே டார்ச்சராயிருக்கு. அவன் இல்லைன்னா இந்த தொல்லையிருக்காது. அதான் பஸ்ல கூட்டமா இருந்ததைப் பார்த்து அவனா தெரியாமா கால் தவறி விழுந்தா மாதிரிப் பண்ணேன்" என்றதைக் கேட்டு தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார் யுவராஜ்.

வினோத்திற்கு ஐந்து வயதாகும் போது தனக்கு விளையாட ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அதுவரை தனக்கு மட்டுமாகக் கிடைத்து வந்த பெற்றோரின் அன்பும், அருகாமையும் தம்பியால் பங்கிடப்படுகிறது என்ற நிஜம் உணர்ந்த போது அது பொறாமையாக உருவெடுத்தது. அம்மா அருகில் இல்லாத போது தம்பியை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது என அது வன்முறையாக வளர்ந்தது. பெற்றோருக்கு இதை சரியானபடி கையாளத் தெரியாததால், குழந்தையை அடித்தான் என்ற அவனது செயலை மட்டும் பார்த்தவர்கள் அதற்குக் காரணமான உளவியலைப் புரிந்து கொள்ளாமல், தம்பியை ஏண்டா அடிச்சே என அவனை திட்டவும், அடிக்கவும் செய்தனர். இது இன்னும் தம்பியின் மீதான வெறுப்பை அவனுள் வளர்த்தது.

பள்ளிக்குச் சென்றபிறகு தன் தம்பி தன்னை விட படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்திருக்கும் காரணத்தால் தான் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என எல்லோர் முன்னிலையிலும் தான் அவமானத்திற்குள்ளாகிறோம் என்ற உணர்வு அவனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து அவன் இல்லாது போனால் மட்டுமே தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஓடும் பஸ்ஸிலிருந்து தம்பியைத் தள்ளி விடுமளவு வன்முறையாளனாக வினோத் மாறியதற்கு உண்மையிலேயே காரணம் என்ன?

ஒவ்வொரு மனிதரின் முழுமையான ஆளுமைத் திறனுக்கு மரபணுக்கள் 40 சதவிகிதமும் வளர்ப்பு முறை 60 சதவிதமும் காரணமாகிறது. உருவ அமைப்பு, நிறம், முடி, குணம் போன்றவற்றில் பெற்றோரைப் போல குழந்தைகள் இருப்பதற்கு மரபணுக்கள் காரணம். ஆனால் ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் எல்லாவற்றிலும் ஒன்று போல் இருக்க வேண்டுமென அவசியமில்லை. உதாரணத்திற்கு வினோத் குழந்தைப் பருவத்திலிருந்தே பூச்சிகளைப் பிடித்து அதன் கால்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து ரசிப்பது, நாய், பூனை மீது கல்லெறிவது என முரட்டுத்தனமாக இருப்பான். வினோத்தின் தம்பி அரவிந்தோ மிக மென்மையானவன். செல்லப் பிராணிகளிடத்தில் அன்பானவன். வினோத் டிவியில் வன்முறைகள் நிறைந்த தொடர்களையும். படங்களையும் விரும்பிப் பார்ப்பான். அரவிந்தோ அதைச் சற்றும் விரும்பாததால் சேனலை மாற்றச் சொல்லி ரிமோட்டுக்காக இருவரும் அடிக்கடி சண்டை போடுவர். கடைசியில் அரவிந்த் விட்டுக் கொடுத்து விடுவான். 

அரவிந்தின் பொறுமை, பொறுப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய குணங்கள் எப்போதும் எல்லோரிடத்திலும் பாராட்டைப் பெறுவதும் முரட்டுத்தனம், கோபம், பொறுமையற்ற பொறுப்பற்ற குணத்தால் வினோத் திட்டு வாங்குவதும் இயல்பு தானே. ஒரே பெற்றோருக்குப் பிறந்து ஒரே சூழலில் வளரும் இருவர் வெவ்வேறு விதமாக இருப்பதை டிப்ரன்சியல் சஸ்சப்டிபிளிட்டி (Differential Suseptibity) என்கிறார் பெல்ஸ்கி என்கிற உளவியலாளர். 1990-ல் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் 40% சிறுவர்களும், 28% சிறுமியரும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், 80% பேர் தம் சகோதர சகோதரிக்கிடையே வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் (Sibling rivalry) என்றும், அக்கா தங்கை இல்லாத சகோதரர்களிடையே இது அதிகமுள்ளதாவும் கண்டறியப்பட்டுள்ளது.

பருவ வயதுக்கு முன் கூட்டியே பூப்பெய்தும் சிறுமியர் சுற்றுச்சூழல் சரியில்லாத போது அதிக வன்முறையான செயல்களில் ஈடுபடுவதாக 500 சிறுமியரைக் கொண்டு மூன்றாண்டுகள் நடந்த ஆய்வில் தெரிகின்றது. இக்குழந்தைகள் தன் வயதொத்தவர்களின் அங்கீகாரமும் பெற்றோர்களின் அரவணைப்பும் கிடைக்காத பட்சத்தில் சமூக விரோதிகளின் இலக்காகவும் மாறிவிட வாய்ப்புண்டு. தன்னை அன்பு செய்ய யாரும் இல்லை என்ற உணர்வே இதற்கு முக்கியக் காரணம்.

பதின்ம வயது என்பது துரித உடல் வளர்ச்சியையும் அதிக ஹார்மோன் மாற்றங்களையும் கொண்டது. நோட்டில்மேன் என்ற உளவியலாளர் டெஸ்டோஸ்டீரான் அளவு பதின்ம வயது சிறுவர்களின் உடலில் பதினெட்டு மடங்கு அதிகம் சுரக்கிறது என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஆண் இனப்பெருக்க ஹார்மோன் என்றாலும் திருடுதல், பொருட்களை உடைத்தல், குடித்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கு இதன் மிகை சுரப்பு காரணமாகிறது. சமூக எதிரி எனப்படும் கார்டிசாலின் அளவு அதிகரித்தால் மனஅழுத்தம் மற்றும் பிற மன நலப் பிரச்சனைகள் வரும். டெஸ்டோஸ்பீரானின் மிகை சுரப்பு ஏமாற்றுவதற்கான தைரியத்தைக் கொடுப்பதோடு தண்டணைக்கான பயத்தைக் குறைக்கிறது என்றால் கார்டிசால் ஏமாற்றுவதற்கு காரணத்தைத் தருகிறது; தனக்கு சந்தோஷத்தைத் தரும் செயல்களிலும், வலியைக் குறைக்கும் நடத்தைகளிலும் ஈடுபடச் செய்கிறது என்கிறார் ஜோசப் என்னும் உளவியலாளர்.
 

மன அழுத்தம் என்பது பரம்பரையாகத் தொடர 5-HTTLPR என்ற ஜீன் காரணமாக உள்ளது. சிறுவயதில் அதிகப் பிரச்சனைகளுக்காளான குழந்தைகள் பிற்காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்புண்டு. சரியான அன்பும் அரவணைப்பும் பெற்ற குழந்தைகளுக்கு மன அழுத்தத்திற்கான மரபணுக்கள் இருந்தாலும் மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் குறைவு. மனிதர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க உதவும் முன்மூளைப் புறணி பத்தொன்பது வயதில் தான் முழு வளர்ச்சியடையும். மேலும் மூளையின் அடிப்பகுதியில் பாதாம் பருப்பு போன்றுள்ள அமிக்தலா உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கச் செய்து விடும். இதனால் தான் டீன்ஏஜ் பிள்ளைகள் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக நடந்து கொள்வது எடுத்தெறிந்து பேசுவதெல்லாம் செய்கின்றனர். மூர்க்கத்தனமாக நடத்தல் என்பது ஆரம்ப கட்டத்திலேயே பெற்றோரால் முழு காரணம் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் தான் நடந்து கொள்வது சரி என நினைத்து பிள்ளைகள் மேலும் மூர்க்கத்தனமாக மாறிவிடுவர் என்கிறார் மார்கரெட் வீட்லே என்னும் உளவியலாளர்.

பிள்ளைகளுக்கு உணர்வுகளைக் கையாளக் கற்றுக் கொடுப்பது மிக மிக்கியம். மன அழுத்தத்தில் இருக்கும் பிள்ளைகளை அவர்களது திறமைகளைச் சுட்டிக் காட்டி பாராட்டி ஊக்கப்படுத்தும் போது கார்டிசால், டெஸ்டோஸ்டீரான் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைந்து ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனும் சிரட்டோனின் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டரும் அதிகம் சுரக்கும். இதனால் பிள்ளைகள் கலகலப்புடன் உற்சாகமாக தன் திறன்களில் மேம்படுவர். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் புரிந்து கொண்டு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே முதல் குழந்தையின் மனதைத் தயார்படுத்த வேண்டும். 

இருகுழந்தைகளுமே தன் அன்பிற்குரியவர்கள் என்பதை பிள்ளைகள் உணரும் படிச் செய்ய வேண்டும். இது உன்னுடைய தம்பி \ தங்கை நீதான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாசத்தையும், பொறுப்புணர்வையும் வளர்க்க வேண்டும். பிள்ளைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள். அவர்களது அறிவு, குணம், ரசனை, திறமை எல்லாமே தனித்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து அவர்களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சூழலால் பாதிக்கப்படாதிருக்க கற்றுக் கொடுக்க வேண்டும். 

அதிக கண்டிப்பையும், கடுமையான விதிமுறைகளைக் காட்டிலும், நல்ல குழந்தை வளர்ப்பு முறையும் ஆரோக்கியமான கண்காணிப்பும் பிள்ளைகள் நல்ல விதத்தில் வளர உதவும்..
 
- பிரியசகி &
ஜோசப் ஜெயராஜ்

]]>
உளவியல், ஹார்மோன், hormone, sibling, gene, hormone balance, பதின்வயது, ப்ரியசகி https://www.dinamani.com/health/mental-health/2018/jul/13/hormone-balance-needed-for-happy-life-2959304.html
2956473 மருத்துவம் மனநல மருத்துவம் இந்தக் கால இளைஞர்கள் சிலரிடம் இல்லாதது இதுதான்! மாலதி சுவாமிநாதன் Monday, July 9, 2018 03:50 PM +0530  

சமீப காலமாக என்னை ஆலோசிக்க வரும் இருபது வயதுடையவர்களிடம் ஒரு போக்கை பார்த்து வருகிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் பல ஆற்றல்கள் உள்ளவர்களே. ஆலோசிக்க வந்த காரணங்கள் என்னை சிந்தனை செய்ய வைத்தது. மூன்று நபர்கள் பற்றி விவரிக்கிறேன், நீங்களே பாருங்கள்:

இந்த நபர், உயரமான ஓட்ட பந்தைய வீரர். என்னிடம் வந்ததோ, தனக்கு தன்னம்பிக்கை இல்லை என்று. எதிலும் கூர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை, தலைவலி வந்து விடுகிறதாம்.

இன்னொருவர், படிப்பில் சிறந்தவள். சோர்வு அதிகரிப்பில், மதிப்பெண்கள் சரிந்து போய்க் கொண்டிருக்கிறது என்றாள். எழுதினால், கை வலிக்கத் தொடங்கி விடுகிறதாம். இதனால் ரெக்கார்ட் முடிக்க முடியவில்லை, தனக்கு கேவலமாக இருக்கிறது என்றாள்.

மற்றொருவர், படிப்பு எல்லாம் சரியாக போய்க் கொண்டு இருந்தாலும், முடிக்க முடியுமா என்ற கேள்வி மனதில் எழுவதால், படிப்பை நிறுத்தி விடலாம் என்றே எண்ணம். கோபம் பொங்கி வர, கண்ணீரும் கொட்டுமாம்.

அவர்களில் ஒரு ஒற்றுமையைப் பார்த்தேன். எல்லோரும் தன் வயதிற்கு ஏற்றார் போல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டு இருந்தார்கள். வெளி உலகப் பார்வைக்கு எல்லாம் நன்றாக இருப்பது போல் தான் தோன்றியது. எங்கிருந்து இந்தக் கலக்கங்கள், எதிர்மறை எண்ணங்கள்?

இதில் ஊக்கமூட்டும் விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களுடைய சூழ்நிலையைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததே! டாக்டர்,  அவர்களிடம், சிந்தனை-உணர்ச்சி-மனம் போராட்டம் இருந்தால் அது உடலில் உபாதையாகக் காட்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு ஒரு சபாஷ் தரவேண்டும், பலர் நம்புவதில்லை! இதைப் புரிந்து சரி செய்ய சில காலம் ஆகலாம் என்பதை ஏற்று, டாக்டர் சொன்னதை மதித்து, என்னிடம் வந்தார்கள்.

மேலும் பேசி ஆராய்ந்து பார்த்ததில் இன்னொரு ஒற்றுமை தென்பட்டது.  அனைவருக்குமே, அவர்களுக்காக யோசிப்பது அவர்களின் பெற்றோர்கள். குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில பெற்றோர் அவர்களுக்கு படிக்கும் நேரம் வரை நிர்ணயித்து கொடுத்தார்கள். எந்தவிதமான கவனக்குறைவு இல்லாமல் இருக்க, அவர்களே அனைத்தையும் பார்த்துச் செய்து கொடுத்தார்கள். அதாவது, எதைப் படிக்க வேண்டும், எங்கு படிப்பது என்பது முதல் தீர்மானிப்பது, எல்லாவற்றையும் கண்டுபிடித்துத் தேர்வு செய்து கொடுப்பது, எப்படி செய்யலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.

இங்கு விவரித்தவர்களின் பெற்றொரும் தெளிவாக இப்படி எல்லாம் செய்தோம் என்றார்கள். அவர்களைப் பொருத்த வரை குழந்தைகளை (!) கண்காணிப்பது தேவை என்றார்கள். பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டே இருக்காவிட்டால், படிப்பும் சரியாக இருக்காது, மற்ற கெட்ட பழக்கங்கள் வந்து சேர்ந்துவிடும் என்று அஞ்சினார்கள். தானே இவர்களுக்காக யோசித்தால், இந்த இன்னல்களைத் தவிர்த்துவிடலாம் என்று நம்பினார்கள். இதனால், ஓய்வு நேரம், பொழுது கழிக்கும் வழிகள், முடிந்த வரை நண்பர்களையும் தேர்வு செய்தார்கள். எந்தவித பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பதுப் பார்த்து கொண்டார்கள். இந்த ‘என்னிடம் விட்டு விடு’ தெரிந்து, சில நண்பர்கள் இவர்களுக்கு ‘அம்மா பிள்ளை’ என்று பெயரும் சூட்டினார்கள்.

இப்படி செய்வது, நல்ல பராமரிப்பு என்று பெற்றோர் எண்ணினார்கள். செய்த ஒவ்வொரு முயற்சியும் நல்ல எண்ணத்துடன் தான் செய்தார்கள். ஆனால் இது போல் பார்த்து-பார்த்துச் செய்வதின் விளைவு, வளர்ந்து வருவோருக்கு ‘சிக்கல் தீர்த்தல்’ (Problem Solving) அதாவது பிரச்னைகளுக்கு விடை கண்டறிதல் திறன் வளர வாய்ப்பு இல்லாமல் இருந்து விடுகின்றது. நம் அன்றாட வாழ்க்கைக்கு ‘சிக்கல் தீர்த்தல்’ மிகத் தேவையான திறன். இது இல்லாவிட்டால், தன்னம்பிக்கை வளராது. தானே தீர்மானம் செய்ய வேண்டிய சூழ்நிலை என்றால் பயம் வந்து தலை வலி போன்ற உபாதையாக வெளிப்படலாம்.

இது வரையில் பெற்றோர் சொல்லுக்கும், முடிவுக்கும் கட்டுப்பட்டிருந்தவர்கள், ஏற்றுக் கொண்டவர்கள், சூழ்நிலை காரணமாக தானாக யோசிக்க வேண்டிய நிலையில்,  குழம்பிப் போய், ஸ்தம்பித்துப் போனார்கள். ஓர் சிலர், இதற்குச் சம்மந்தமே இல்லாமல், குடும்ப வழக்கத்தின் நேர் எதிரானப் பழக்கங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதிலொன்றான டேட்டூ (tattoo) போட்டுக் கொள்வது பிரபலமாக உள்ளது.
 

புரியாப் புதிர்

ஒரு வினோதமான பகிர்ந்தலும் இருந்தது. பெற்றோர்கள், வளர்ந்து வரும் இவர்கள் அடைய வேண்டிய குறிக்கோளை, உயர்த்தி கொண்டே போனார்கள். இதை அடைய ஒரு சுலபமான வழியையும் (தூண்டுகோலை) செய்து கொடுத்தார்கள். அதிக மதிப்பெண் கிடைத்தால், பிடித்த பொருள் வாங்கித் தருவதாக ஒரு உத்திரவாதம். பெற்றோர் தாங்கள் காட்டும் அக்கறைக்கும், செலவழிக்கும் பணத்திற்கும் அதிக மதிப்பெண்ணை எடுத்தால் போதும் என்று இருந்தார்கள்.

இது, ஆங்கிலத்தில் ‘carrot and stick policy’ (காரட் அண்ட ஸ்டிக் பாலிசி) என சொல்லப்படும். அதாவது  குச்சி முனையில் கேரட்டை கட்டி வைத்து, அதைக் காட்டி, இதைச் செய், கேரட் கிடைக்கும் என்று விரட்டுவார். நாமும் அதை அடைய ஒடிகொண்டு இருப்போம்! மதிப்பெண் பெற்றால் கேரட் (லஞ்ச பொருட்கள்). இதைச் செய், அப்போது தருவேன் என்றாலே அது லஞ்சம் தான்.

மதிப்பெண் மேல் மட்டும் கவனம் இருந்ததால் தங்களின் திறன்களை வளர்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே நிலவியது. மேலே விவரித்தவர்கள் தனக்கு என்று ஒரு முடிவை எடுக்கத் தெரியாமல் தத்தளித்துக் குழம்பிப் போனார்கள். அவர்கள் மனதின் கவலை தலைவலியாகவும், எழுத கஷ்டமாகவும் தோன்றியது.

உணர்ச்சிவசப்பட்ட இணைப்பு

ஒரு விதத்தில், இங்கு குறித்த வருவோர், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' போன்ற ‘சந்தோஷ்’கள். பெற்றோர்கள், ‘அபியும், நானும்’ அப்பா போன்றவர்களாக. பெற்றோர் சொன்னதை ஏற்றுக் கொண்டாலும் தங்கள் விருப்பத்ததடன் இணையாததால் தங்களை ஊக்கப்படுத்தி கொள்வதில் தவிப்பு உணர்ந்தார்கள். தனக்காக இவ்வளவு செய்யும் பெற்றோர் சொன்னதை நிராகரிப்பதில் குற்ற உணர்வும் குறுகுறுப்பும்.

இப்படி இருப்பதால், வளர்ந்து வருவோருக்கு சின்ன விஷயத்திலும் முடிவு எடுப்பது சவாலாக தோன்றி விடுகிறது. தானாக சிந்தித்தால் சரியாக இருக்குமா? பதில் கிடைத்தால், பிரச்னைக்கு ஏற்றதாக அமையுமா? என்று சந்தேகமே. ஒரு வேளை, பெற்றோர்கள் திரும்ப, திரும்ப தங்களை அறியாமல், ‘உனக்குத் தெரியாது’, ‘உனக்கு இதில் எல்லாம் என்ன அனுபவம் இருக்கு’? ‘நான் செய்கிறேன், அப்பொழுது தான் சரியாக வரும்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்ல, வளரும் பருவத்தில் அவர்கள் மனதில்  வாங்கி கொள்வது, ‘என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது’,‘செய்ய தெரியாது’ உறுதி மொழியாகிறது.

இதே போல், அவர்களுக்கு எது பொருத்தம் என்று பார்ப்பதோடு எதனால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் படிப்பு தேர்வாயிற்று. இங்கு விவரித்த ‘கை வலிக்கிறது’ என்பவர், கணக்கு விரும்பி. ஆனால் சேர்ந்ததோ மருத்துவம் (பெற்றோர் இருவருமே மருத்துவர், அவர்களின் பெரிய நர்ஸிங் ஹோமை எதிர்காலத்தில் நடத்த).

படிப்பை விடலாம் என யோசித்தவர், எக்கனாமிக்ஸ் படிக்க ஆர்வம், படித்திருந்ததோ இன்ஜினியரிங். பெற்றோருக்கு எக்கனாமிக்ஸால் எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பிக்கையில்லை.

இதனால் படிப்பில், மனம், உணர்ச்சி இரண்டும் ஒன்றுபடுத்த முடியாததால், தங்களுக்குள் எழுந்துள்ள கேள்விகளை முடிவு செய்யவும் முடியாததால் குழப்பம் அடைந்தாற்கள், மனம் தளர்ந்து, தாழ்வு மனப்பான்மை போல உணர தொடங்கினார்கள்.

தங்களுக்கு பிடித்தம் இல்லாமல் இருக்க, மறு மொழி சொல்லாததால், உடல் இதை வேறு தோரணங்களில் காட்டியது. இவர்கள் ஆலோசனைக்கு வந்தார்கள், பலருக்கு வருவதற்கு கூச்சம், பயம்; இப்படி ஆலோசிக்கலாம் என்று தெரியாமலும் இருக்கலாம்.

மனப்பாடமும் நோட்ஸும்

பல மேல் படிப்பு இடங்களுக்கு தங்களின் வளர்ச்சியின் பாதை மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விளம்பரப்படுத்துவது. இதனால், தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று இருக்க, அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் குறிக்கோளானது.

இத்துடன், பாடத்தின் எல்லா நுணுக்கங்களை நோட்ஸாக தயாரித்துத் தருவதால், மனப்பாடம்  பண்ண சௌகரியமாகி விடுகிறது. மதிப்பெண் கிடைக்கும் என்பதால் இதையே செய்தார்கள். இத்துடன், பரிட்சைக்கு வரக் கூடும் கேள்வியையும் க்வஸ்டியன் பாங்க்காக (question bank) கொடுத்து விடுவதால் வர போகும் கேள்விகளுக்கு மட்டும் தயாரானார்கள், சுலபமாக மார்க் வாங்க முடிந்தது. இந்த 100% என்ற முத்திரை தப்பாமல் இருக்க, சில இடங்களில், அடித்தாவது மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்தினார்கள்.

மற்றவர்களே நமக்காக யோசிப்பதால் நமது ஆராயும் திறன் முடங்கிப் போய் விடுகிறது. இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது காலத்தின் போக்கு.

மாற்ற வேண்டுமே

அவர்களுக்காக இல்லாமல், அவர்களுடன் யோசித்தால் தானாகவே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர் தேர்வு செய்யும் முறைகளை பகிர்ந்து கொண்டால், அதன் நுணுக்கங்கள் புரிய வரும். படிப்புடன் தினசரி வாழ்க்கையிலும் முடிவு எடுக்கக்கூடிய  வாய்ப்புகள் தாராளமாக தரலாம்.

முடிவு செய்யும் விதத்தை தெளிவாக காண்பித்தால், செய்முறை புரிய வரும். தானாக யோசித்து, விஷயங்களை ஆராய அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன் வளரும். பிரச்சனையோ,தூண்டதல்களைகளோ தீர்க்க தேவையான வளங்களை உபயோகித்து, முடிவு செய்யும் திறன் வளர, மனோ பலமும் கூடும், உடல் நலனும்!

கல்விக்கூடங்களில் ‘சோஷியல் இமோஷனல் லேர்னிங்” (Social Emotional Learning, SEL) கற்றலில், பழக்கங்களில், இடைவினைகளில், கற்பிக்கும் கலைகளிலும் இருந்து விட்டால், வளரும் பருவத்தில் முடிவெடுப்பதுடன் அதன் துணை திறன்களும் பலமடையும்!

மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

]]>
youth, mind balance, decision making, stress, இளைஞர், மனத்திடம், துணிவு https://www.dinamani.com/health/mental-health/2018/jul/09/இந்தக்-கால-இளைஞர்கள்-சிலரிடம்-இல்லாதது-இதுதான்-2956473.html
2942804 மருத்துவம் மனநல மருத்துவம் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம் இவர்தான்! உடல் சோதனைகளை மனோ பலத்தால் வென்று வரும் பள்ளி ஆசிரியர்! கே.எஸ்.இளம்மதி Tuesday, June 19, 2018 10:41 AM +0530  

அவர் பெயர் புஷ்பராஜ். தற்போது 33 வயது. சில வருடங்களுக்கு முன்னால் உளவியல் மருத்துவரின் சிபாரிசால் அடியேன் எழுதியுள்ள ‘தியானம்' என்ற நூலை (கிழக்குப் பதிப்பகம்) வாசித்து விட்டுத் தொடர்பு கொண்டார். தியானப் பயிற்சிகளால் நற்பலன்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

இவருக்குச் சிறுவயது முதலே கொடிய எலும்புத் துளை நோய் ஏற்பட்டு பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் பெயர் POLYOSTOTIC FIBROUS DYSPLASIA. இந்நோய் எலும்புகளை எல்லாம் துளையிட்டுக்கொண்டே போகும்! அதனால் எலும்புகள் வலுவிழந்து போய் நைந்துவிடும். சாக்பீஸ் போலத்தான் இவரது எலும்புகள் இருக்குமாம்! இதுவரை 38 எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன! அத்தனை வலிகளையும் சகித்துக் கொண்டு போராடி வந்திருக்கிறார் புஷ்பராஜ். இவரால் நிற்கவோ நடக்கவோ இயலாது. அதுமட்டுமல்லாது, தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதியோடும் அன்றாடம் போராடி வருகிறார்!

இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதுதான் வேதனையளிக்கும் செய்தி!

இவர் தனது தாயாருடன் விழுப்புரம், காணை, காங்கேயநல்லூர் என்ற சின்னஞ்சிறுக் கிராமத்தில் சின்னஞ்சிறு வாடகை வீட்டில் வசித்து வருகிறார், இவரது தகப்பனார் காலமாகிவிட்டார். ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. அவர்கள் மணமாகித் தனித்தனியே இருக்கிறார்கள்.

இவரை இன்னும் ஒரு குழந்தையாகவேப் பாவித்து, இவரது தாயார்தான் காலைக் கடன்களுக்கு ஒத்தாசை புரிந்து வருகிறார்.

அந்த நிலையிலும் மனம் தளர்ந்துவிடாமல் படித்து பள்ளி இறுதி வகுப்பில் முதல் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து பள்ளி ஆசிரியப் பயிற்சிகளைப் முடித்துவிட்டு, தான் படித்த காங்கேயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலேயே ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார் புஷ்பராஜ்! சேரும்போது இவருக்கு வயது இருபது!

சக்கர நாற்காலியோடு பள்ளிக்குச் சென்று, பதின்மூன்று ஆண்டுகளாகச் சலியாத மனத்தோடு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இவர்!

காலையில் பள்ளி மாணவர்களே வந்து இவரைச் சக்கர நாற்காலியில் வைத்து அன்புடன், பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் வீடு வந்து மரியாதையோடு விட்டுச் செல்கிறார்கள். இவருக்குப் பள்ளி மாணவர்கள் அனைவருமே ஆர்வத்தோடு முன் வந்து பணிவிடைகளைச் செய்து வருகிறார்கள். மாணவச் செல்வங்களின் மட்டற்ற அன்பில் நெக்குருகிப் போயிருப்பதாகச் சொல்லிக் கண் கலங்குகிறார் புஷ்பராஜ்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு ஒத்துழைப்பு நபர்களுடன் சென்னைக்கு வந்து சிகிச்சை எடுத்துச் செல்வது வழக்கம்.

தான் வாங்கும் சம்பளப் பணம் கார் வாடகை, விடுதி வாடகை, உணவுச் செலவு என்று அதற்கே சரியாகி விடுகிறது என்கிறார்.

ஆனாலும் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முனைகிறார் புஷ்பராஜ். எவரையும் எதற்கும் இவர் எதிர்பார்ப்பதில்லை!. இறைவனே கதி என்று சரணாகதித் தத்துவத்தில் இருக்கும் புஷ்பராஜ் எப்போதும் தன் கையில் இறை நூல்களை வைத்து வாசித்துக் கொண்டே இருக்கிறார்!

அடியேன் சொல்லித் தந்த சில ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியானத்தை இடைவிடாது மேற்கொண்டு தனக்குள்ளே வல்லமைகளை வளர்த்துக் கொண்டு வருகிறார்!

தனக்குப் பிறகு, தன் மகனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலையால் தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறார் இவரது தாயார்!

‘இறைவன் இருக்கும் போது என்ன கவலை அம்மா‘ என்று அன்னைக்கு ஆறுதல் சொல்லி வருகிறார் பிள்ளை. சோதனைகளைச் சாதனையாக்கிக் கொண்டு ஒரு சித்தருக்கு உரிய மன நிலையில் சத்தமின்றி வசித்து வருகிறார் இந்த நல்லாசிரியர்.

மாணவச் செல்வங்களுக்கு வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் தத்துவங்களையும், உபதேசங்களையும் வகுப்பு நேரங்களில் சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இவர்.

அண்மையில் திருவண்ணாமலை சென்றுவிட்டு இவர் ஆசிரியராக வேலை பார்க்கும் விழுப்புரம் மாவட்டம், காணை, காங்கேயநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று வந்தேன்.

‘அன்பே சிவம்‘ என்பதற்கு அடையாளமாகத் திகழும் புஷ்பராஜ் அடியேனைக் கண்டதுமே ஆர்வத்துடன் ஊர்ந்து வந்து வாரியணைத்துக்கொண்டார்!

தன் குறைபாடுகளை மறந்து எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழகும் இயல்புடையவர் புஷ்பராஜ். பெயர் மட்டுமல்ல, இவரது வார்த்தைகளில் ‘பேரன்பூ‘ மணக்கிறது! நோயோடு புண்பட்டாலும் பண்பட்ட மனதோடு புன்னகை மாறாத உதடுகளுக்குச் சொந்தக்காரர்!

சின்னத் தலைவலி வந்தாலே சுக்கு நூறாகிப் போய் சிறப்பு மருத்துவர்கள் காலடியில் போய் மண்டியிடும் கோழைகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

வாடாத பாரிஜாதப் பூவாகத் திகழ்கிறார். எதற்குமே கலங்காத மதி நுட்பமே இவருக்கு உள்ள ஒரே அடையாளம்!  எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும், எவருக்குமே இவரைக் கண்டால் மனம் இரங்கும்!

ஆசிரியர்கள், மாணவர்கள், அண்டை அயலார்  என்று அனைவர் மனதிலும்  இடம் பிடித்து மணம் பரப்பும் மனோரஞ்சிதப்பூ இவர்! இந்தப் பூ வாடிவிடாமல் இருக்க, இறைவன் தான் காத்தருள வேண்டும்.

- கே.எஸ்.இளம்மதி, யோகாசிரியர், ‘பிராணாயாமம்‘ இதழ் ஆசிரியர், சென்னை. மின்னஞ்சல்: ksilamathy@gmail.com

]]>
meditation, yoga, disability, மன நலன், யோகா https://www.dinamani.com/health/mental-health/2018/jun/19/best-example-for-self-confidence-2942804.html
2931231 மருத்துவம் மனநல மருத்துவம் உங்கள் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்! Saturday, June 2, 2018 11:15 AM +0530  

அழகு என்பது எதில் உள்ளது?

நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். தவிர உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் 

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

]]>
complex, inferiority https://www.dinamani.com/health/mental-health/2018/jun/04/get-over-from-inferiority-complex-2931231.html
2931227 மருத்துவம் மனநல மருத்துவம் நம் வெற்றிக்குச் சில இடையூறுகள் என்ன? மாலதி சுவாமிநாதன் Saturday, June 2, 2018 11:06 AM +0530  

வெற்றி அடைவது எப்படி? அதற்கு வரும் இடையூறுகளை அடையாளம் கண்டு கொண்டு அகற்றி விட்டாலே, வெற்றியின் பாதையில் பயணம் துவங்கி விட்டோம் என்றே சொல்லலாம். இங்கே சில பொதுவாகத் தோன்றும் இடையூறுகளையும், அவற்றை மாற்றி அமைக்கும் வழிகளையும் சற்று பார்ப்போம்.

செய்தே ஆக வேண்டும் என்ற விலங்குக்குள் பூட்டிக் கொள்வது

செய்ய வேண்டும் என்ற ஆவலும், உறுதியும், வெற்றிக்கு மிக அவசியம். நிச்சயம் செய்வோம் என்று தீர்மானித்து செயல் படுவது நமக்குத் தைரியம் ஊட்டி, செய்வதில்  உறுதியை நிலை நாட்டுகிறது.

ஆனால் எடுத்ததை முடிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, எப்படிச் செய்யப் போகிறோம் என்ற செயல்திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல் இருந்து விட்டால் செய்து முடிப்பது கடினமாகிறது. அதுவும், எடுத்துச் செய்வதை, செய்தே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அது பாரமாக இருக்குமே தவிர முடிவு காண முடியாது.

செய்தே ஆக வேண்டும் என்று இருக்கும் போது நம் சிந்தனை, பொறுமை, இப்படியும் மாற்றிச் செய்யலாமே, என்பதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். இது நம்மை ஒரு கட்டாயத்தில் தள்ளி விடுகிறது. வேலையை முடிக்க முடியாமல் போனால், நமக்கு நிராசை ஏற்படுகிறது. அதிருப்தி, ஏமாற்றத்தினால், எடுத்துக்கொண்ட காரியத்தின் மேல் வெறுப்பு தட்டக் கூடும்.
இதை நிவர்த்தி செய்ய

செய்வதை, இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை அகற்ற வேண்டும். செய்து முடிக்கப் பல பாதைகள் தேடி, யதார்த்தமான போக்கைக் கைப் பிடிப்போம். அதாவது, ஒரு வழி சரியாக அமையவில்லை என்றால் இன்னொன்றை வகுத்துக் கொள்ளலாம்.

'செய்தே ஆக வேண்டும்' என்ற எண்ணம் முடிப்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்வதால், சுமையைத் தரும். அதற்குப் பதிலாக, செய்ய வேண்டியதைப் பல குறிக்கோள்களாக வரிசைப்படுத்திக் கொள்வது உத்தமமானது. இதில் எப்போது, எதை, எப்படிச் செய்வது என்பது அடங்குவதால் நாம் முன்னேறுவதைக் கண்டறிந்து கொள்ள முடியும். செய்வதால் வரும் சந்தோஷமே நம்மை ஊக்குவிக்கும்.

விமரிசனங்களைத் தன்னைப் பற்றி என்று எடுத்துக்கொள்வது

நாம் ஒரு வேலையைச் செய்யும் பொழுது, மற்றவர்கள் நமக்கு அதைப் பற்றியோ, செய்முறையைப் பற்றியோ ஏதாவது சொல்வார்கள். இப்படி எடுத்துச் சொல்வதை தங்களைப் பற்றியே என்று உறுதியாக நம்புவார்கள். அதை, தங்கள் மேல் தாக்குதல் என்றும் எண்ணுவார்கள். அதாவது என்ன சொன்னார்களோ, ஒவ்வொன்றும் தங்களது  குணாதிசயங்களைக் குறித்து ஆய்வு செய்வதாக எடுத்துக் கொள்வார்கள். இதனால், சொல்வதை நிராகரிப்பார்களே தவிர, சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், இதைச் சொல்பவர் பொறாமை உள்ளதால் அப்படிச் சொல்கிறார் என்றும் எண்ணி, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேறு எப்படிச் செய்ய?

விமரிசனத்தில் சொல்வதில் எது நம் குணாதிசயத்தை விவரிக்கிறது, எவை நம் வேலையை வர்ணிக்கிறது என்று வித்தியாசப் படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்தால் நிஜமாகவே நம்மைப் பற்றி தான் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதின் விவரணை நமக்கே புரிய வரும். நம்மைப் பற்றி அல்ல, வேலையைப் பற்றி தான் என்று புரிந்ததுமே, வந்த விமரிசனத்தை நன்றாக உபயோகிப்போம்.

ஒரு வேளை விமரிசனம் நம்மைக் குறித்து இருந்தால் உடனடியாக அந்தக் கருத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது இல்லை. நாம் உணர்ச்சிவசமாக இருக்கும் போது கோபம், வருத்தம், அதிகமாக இருக்கும். அப்பொழுது பேசினால், நம்மைக் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பேசுவோம். அதற்குப் பதிலாக, அந்த நாள் முடிந்த பின் இதை எடுத்து யோசித்து, உசிதமான படி நடந்து கொள்ளலாம்.

நாம், நம்மிடம் ஒன்று கேட்டுக் கொள்ளலாம்: 'மற்றவரின் அபிப்பிராயம் எற்றுக் கொள்ள முடிகிறதா? என்ன தடுக்கிறது?’ என்று.

காலம் கடத்துதல்/ தள்ளி வைத்தல் அழிவே:

நாளை, நாளை என்று காலத்தை தள்ளிப் போடுவதற்குப் பல காரணங்கள் தோன்றும். வேலை நடக்காது, முடிக்கவும் இயலாது. முடிக்க முடியும் என்பதற்கு ஒரு காரணி கூட கண்ணுக்குத் தெரியாது! தெரிந்தாலும் அதற்கும் ஏதாவது சொல்லி தள்ளி விடுவோம்.

இப்படிக் காலம் தாழ்த்து செய்வதைத் தான் 'ஃப்ரோக்ராஸ்டினேஷன்’ (procrastination), தள்ளி போட்டுக் கொண்டே இருப்பது என்று சொல்லப் படுகிறது. இப்படி, நாளை என்று அடுக்கிக் கொண்டே போவதால், போகப் போக, “செய்ய வேண்டும்" என்ற அழுத்தம் அதிகரித்து, அதுவே இமய மலை போல் தோன்றும். “இவ்வளவு செய்ய வேண்டுமா?” என்று நினைத்து, ஆரம்பிக்கப் பயம் தொற்றிக் கொள்ளும்.

தள்ளிப் போடுவதற்கு வேறு சில காரணிகள்: நம் திறன்களுக்கு சற்று சவாலானதை முயற்சிப்பது; உதவிக் கேட்காமல் இருப்பது; பயந்தோ இல்லை கர்வத்தினாலோ மேற்கொண்டு எப்படிச் செய்வது என்று தெரியாமல் இருப்பதாலும் நேரிடலாம்.

இன்னொரு முக்கிய காரணி, பர்ஃபெக்ட்டாக செய்வேன் என்று இருப்பதாலும் முடிக்காமல் இருப்பதுண்டு. க்வாலிடி செக் என்பது வேறு. இங்குச் சொல்லப்படும் பர்ஃபெக்ட்டில் ஒரு முடிவு இல்லாமல் போகும்.

விடிவு

ஆரம்பித்து, செய்து கொண்டே போனால் முடிந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள்ளே சொல்லிக் கொண்டு இருந்தால் (இதை ஆட்டோ ஸஜெஷன் auto suggestion, என்போம்) செய்ய ஆரம்பிக்கத் தோன்றும், செய்ய ஆரம்பிப்போம்.

மனதுக்குப் பிடித்த ஒன்றைச் செய்த பின்னர் (பாட்டுக் கேட்ட பின்பு, கதையின் ஒரு பக்கம் படித்த பிறகு, வெளியே நடந்து வந்த பின்பு), முடிக்க வேண்டிய வேலையை சில நிமிடங்களுக்குச் செய்வது என்று ஆரம்பிக்கலாம். ஆரம்பித்தால் ஆர்வம் தட்டும், போகப் போக வேலையை முடித்து விடுவோம்.
செய்யப் போவதை, சிறு பங்குகளாக பிரித்துக் கொண்டு, செய்து முடிக்கலாம். இந்த நிலையில், எப்போதாவது, “அப்புறமாக” / ”நாளைக்கு” என்பது நுழைந்து விட்டால், வேலையும் நீண்டு கொண்டு போய் விடும். பொறுமை இழந்து விடுவோம். செய்து முடிக்க வேண்டிய வேலையின் மீது கோபம் வரும். இதனாலேயும் அந்த வேலை செய்ய கை ஒத்துழைப்பு தராது. திரும்ப அதே ஃப்ரோக்ராஸ்டினேஷனில் வந்து நிற்கும்.

பழி சுமத்துவது: பழி சுமத்தி விட்டால், எந்த விதமான பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்க மாட்டோம். தன் தவறின் பங்கைப் பார்க்க மாட்டோம். வெளி சூழ்நிலைகளை,  “அது”, “அவர்கள்” என்று மற்றவர்களை கை காட்டுவோம். அவர்களைப் பொறுப்பாக்குவோம்.

நம் பங்கை உணர, பொறுப்பை எடுத்துக்கொள்ள மனோதைரியம் இல்லாததாலும் பழி சுமத்துவோம். சௌகரியமாகத் தோல்விக்கு பழி சுமத்தி விடுவதனால் வெற்றிப் பாதையை அமைக்கக் கடினமாக முற்பட மாட்டோம்.
ஊகம் செய்தல்: வேலைகளுக்குத் தேவையான தகவல்களை கேட்டுக் கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் தானாக அனுமானிப்பதனால், நாமே அதைப் பற்றி பல ஊகம் செய்து கொள்வோம். தெரிந்த சில அம்சங்களை  வைத்து, அதனுடன் கற்பனை ( என்றே சொல்லலாம்) விவரங்களைச் சேர்த்து, இந்த ஜோடித்ததை நிஜம் என்று நம்பி விடுவோம். விவரங்களைத் தேடி அறிவதற்கு முயற்சி எடுக்காமல் இருப்பதால், போலிக் கருத்து நிலவும். இல்லாததை வைத்துக் கொள்வதில் பயன் இல்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாது.

மற்றவரின் ஆமோதிப்பு தேவை: செய்யத் தொடங்குவதற்கு, செய்து கொண்டு இருப்பவற்றிற்கு ஒருவருடைய ஆமோதிப்பை எதிர்பார்ப்பது. மற்றவர்கள் சொன்னால் மட்டுமே நன்றாகச் செய்தோம் என்று எண்ணுவது.  அவர்களின் பாராட்டுக்காக ஏங்குவது இதில் அடங்கும்.

இன்றைய கால கட்டத்தில், ஊடகங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஆமோதிப்பதில் சந்தோஷப் படுவது, அது இல்லாவிட்டால் துவண்டு போவது பரவலாகி விட்டது.  மற்றவரின் அபிப்பிராயம், ஆமோதிப்பிற்குக் காத்திருப்பது  பெரும்பாலும், தன்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வரும்.

பொறாமை: மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடுகையில் பொறாமை தோன்றலாம். ஏதோ குறைபாட்டினால், மற்றவரைப் போல் இல்லையே என்பதாலும் இந்த உணர்வு எழலாம். பொறாமைப் படுவதால், மற்றவரைக் கடினமாக விமர்சிப்பது உண்டு. அவர்களைப் பற்றி எண்ணினாலே கடுகடுப்பான நிலை ஏற்படும். அவர்கள் வளர்ச்சி பற்றி கேள்விப் பட்டாலோ, பார்த்தாலோ சீற்றம் அடைவோம். பிறரின் வீழ்ச்சி எதிர்பார்த்திருப்பதால், பொறாமையால், செய்யும் வேலைத் தடைப்படும். பொறாமை இருக்கும் இடத்தில் சந்தேகம் நிலவும், அதனால் மற்றவர்களை நம்ப மனம் ஒப்பாது. இதனால் நஷ்டம் நமக்குத் தான்.

'டைமே இல்லை’: எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இல்லை என்றால் என்றும் எதற்கும் நேரம் இருக்காது. பல மணி நேரங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், விடியோ கேம்ஸ், கைபேசியில் பேச்சு, டிவியில் செலவழித்து, வேண்டிய வேலைக்கு நேரம் இல்லை என்போம். இதனால், எதையும் நேரத்திற்குச் செய்யாததால் குற்ற உணர்ச்சி மேலோங்க, வெட்கம் அதிகமாகும். பெரிய பதவியில் உள்ளவர்கள் என்றுமே நேரம் இல்லை என்று சொல்லி கேட்டிருக்க மாட்டோம்.

மன உளைச்சலின் எல்லை (Burnout): என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் தன் நலனைப் பார்த்து கொள்ளாவிட்டால் சளைத்துப் போய் இந்த மன உளைச்சலின் எல்லை உண்டாகும். இதைத் தான் பர்ன் அவ்ட் (burnout) என்பார்கள். இது எந்தத் துறையினருக்கும் வரலாம். பல மாதங்களுக்கு எந்த விதமான ஓய்வு எடுத்துக்கொள்ளாமல், செய்வதைச் செய்து கொண்டு இருக்கையில் உடலுக்குச் சோர்வு, மனதுக்கு அலுப்பு தட்டும். இரண்டும் சேர்ந்து, செய்வதின் மீது வெறுப்பை உண்டு பண்ணும். இதன் அறிகுறிகள்: சலிப்பு, முழுச்சோர்வு, முன் போல் உற்சாகம் இல்லாதது, எந்திரன் போல் செயல் படுவது, அலங்காரத்தில் கடுகு அளவு கூட கவனம் செலுத்த மாட்டார்கள்.

இது வராமல் தடுக்க

மனதுக்குப் பிடித்ததை ஐந்து-பத்து நிமிடத்திற்கு தினம் செய்வது நலனைத் தரும். அதனுடன், உடற்பயிற்சி செய்வதில் உடல்-மனம் இரண்டிற்கும் நன்மை சேர்க்கும். மனதுக்கு பிடித்தவர்கள், நண்பர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்வது ஊக்கத்தை அதிகரிக்கும். ஹாஸ்ய படம் / நாடகம் பார்ப்பது, புத்தகம் படிப்பது, வருடத்தில் ஒரு முறையாவது இயற்கை இடத்திற்கு சென்று வருவது நன்கு.

மொத்தத்தில் நமக்கு நன்றாகச் செய்ய வருவதைச் செய்தால் வெற்றி பெறுவோம். நம தனித்துவம் புரிந்து செயல் படுவது வெற்றியுடன் மனநிறைவை அளிக்கும். நம்முடைய குறைகளை அறிந்து, சரி செய்து கொண்டால் தடைகளை நீக்கும். இவை நம்மை இலக்கிலிருந்து திசை திருப்புவதை அடையாளம் காண்பது மிக முக்கியம், அவசியம். கண்டறிந்து, சரி செய்வது இனி நம் கைகளில் உள்ளது.

அறிவோம், மாற்றுவோம், வெல்வோம்!

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்.   malathiswami@gmail.com

]]>
பயணம், வெற்றி, success, path of victory, வெற்றியின் பாதை https://www.dinamani.com/health/mental-health/2018/jun/02/நம்-வெற்றிக்குச்-சில-இடையூறுகள்-2931227.html
2925401 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ ஒரு எளிய வழி! மாலதி சுவாமிநாதன் Thursday, May 24, 2018 10:46 AM +0530  

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, கனவு கண்டு, துணிந்து, செய்து காட்டுவது (I dream, I dare, I do)! இதிலிருந்து மனநிறைவு வருகிறது. நாம் ஒன்றை நினைத்து, அதை முடித்ததால் இப்படி நேர்கிறது. வரும் கரவொலி, மனத்துக்கு மிக இதமானதாகவும் தோன்றும்! இதுதான்  நம்மை ஊக்கப்படுத்தி, முன்னேறுவதற்கு வழி செய்யும் கருவி. அதுவும், நாம் செய்வது மற்றவருக்கும் பயன்படுவதை பார்த்தால், அது மேலும் செய்ய தூண்டி விடுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, நம் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று எண்ண வைத்து, நம் மனநலனைக் காக்க, வாழ்வு நன்றாக இருக்க உதவுகிறது.

ஆனால் எல்லோரும், எப்பொழுதும் இப்படி அமைத்துக் கொள்வதில்லை. நம் கருத்துக்கள், எண்வோட்டங்கள், சூழ்நிலைகள், மனப்பான்மை எல்லாமே மனநலனைப் பாதிக்கச் செய்யும். இவற்றை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், நம் நடைமுறை வாழ்வில் இன்னல்களாகவும், உபாதைகளாகவும் அமையும். நினைத்ததை முடிக்க முடியாமல் போக, வெறுப்பு ஏற்படக் கூடும். இந்த பாதிப்புகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? நாம் வாழ்க்கையை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பார்த்து, நம் மன நலம் பாதிக்கப் பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியுமா? பாதிப்பின் சில ரூபங்களையும் அதன் அடையாளங்களையும் இங்கே பார்க்கப் போகிறோம்.

மனநலம் அறிய, கீழ் சொல்லப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருவித தோற்றங்கள் காணலாம். ஒன்று நம் மனநலனைக் காத்து, நம் வாழ்வைச் செழிக்க வைக்க உதவுகிறது. மற்றொன்று நம் மனநலத்தை, குறிக்கோள்களை அடைவதைப் பாதிக்கும் தடைகளின் அறிகுறி. இதனால் மனக்கலக்கம், மனக்கிலேசம் ஏற்படலாம்.

கீழே விவரித்ததிலிருந்து, நமக்கு எந்த சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது  என்பதை அறிந்து கொள்ளலாம். அதை மாற்ற  வேண்டும் என்று எண்ணுபவர்கள், அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். எந்த வயதினரும், எந்த வயதிலும் மாற்றத்தை அமைத்துக் கொள்ளலாம். மாற்றத்தின் முதல் படி, நாம் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதாகும். அதிலிருந்து மாற்றத்தை வகுக்கலாம். ஆரம்பிக்கலாமா?

நன்றியுணர்ச்சி (அல்லது) என் உரிமை!

மனநலத்தைக் காக்கும் மிக உத்தமமானது, நன்றியுணர்ச்சி (Gratitude)! கடவுள், பெற்றோர்கள், கூடப்பிறந்தவர், ஆசிரியர், படித்த புத்தகம், நண்பர், சக ஊழியர், சமயத்திற்கு உதவுபவர், அலையின் ஓசை, குயில் பாட்டு என்று பலவற்றிற்கு நமக்கு நன்றி உணர்வு இருக்கலாம். நன்றி உணர்வு இருந்தால் அது சந்தோஷத்தை மேம்படுத்தும்.நமக்கு இப்படித் தோன்றுவதே நமக்குச் செய்த உதவியை, பெற்றதையும் மனதில் வைத்திருப்பதைக் காட்டுவதாகும். 

அவர்கள், நம்மேல் காட்டிய பாசமும், அக்கறையும், கொடுப்பினைகளும் நமக்கு ஆதரவு, பாதுகாப்பாகிறது. இந்த அனுபவிப்பின் பிரதிபலிப்பே நம் நல்லுணர்வு. இதனால், நாம் பல நல் விளைவுகளை அனுபவித்திருப்போம். இதை விவரிக்கும் போது, யாரால் நடந்தது என்பதைச் சொன்னால் அது நன்றி உணர்வு எனச் சொல்லலாம். பலரிடம் பகிர்ந்து கொள்வதே நம்முடைய நன்றி உணர்வைக் காட்டுகிறது.

நன்றியுணர்வு உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களுக்கு செய்தது போல், பலருக்கு தங்களால் முடிந்ததைச் செய்வார்கள். மேலும் தான் பெற்ற ஆதரவுக்குக் கைமாறாக, அதைப் பற்றி எல்லோரிடமும் பகிரங்கமாக நினைவூட்டிப் பகிர்ந்து கொள்வார்கள். நன்றி சொல்வது, ஓயாத சொல் என்றே சொல்லலாம்!

நன்றியுணர்வு உள்ளவர்களிடம் அவர்களின் பாதுகாப்புத் தன்மை நன்றாகத் தெரியும். அதனாலேயே, எந்த வித பகட்டு, சத்தம் இல்லாமல் நன்மை செய்து கொண்டே இருப்பதால் இவர்களை அணுகுவது மிக எளிதானது. அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், அவர்களுடன் இருப்பவரும்!

இதற்கு நேர்மாறானது, எல்லாம் என் உரிமை (my entitlement) என்பது, மனநலனைப் பாதிக்க கூடிய ஒன்றாகும். யார் தனக்கு எது செய்தாலும், செய்வது அவர்கள் கடமை, பெறுவது தன் உரிமை என்று கருதுவார்கள். மேலும், மற்றவர்கள் செய்யட்டுமே, என்று எண்ணுவார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இதை தெரியப் படுத்துவார்கள். தங்களுக்கு விழுந்து விழுந்து உழைப்பாக, காசு பணமாக, பொருளாகச் செய்ய விடுவார்கள். இவர்களிடம் லஞ்சம், ஜால்ரா அடிப்பது செல்லும்.

இப்படி, தன் உரிமை வழங்கல் பிரதானமாக எண்ணுபவர்கள் தங்களின் அதிகாரத்தை மையமாக்கி உரிமைகளைக் கொண்டாடுவார்கள். செய்வோரின் மீது முழு உரிமை செலுத்திக் கொண்டு, தங்களின் அடிமையாக நடத்துவார்கள். தன் முன்னேற்றம், செழுமை எல்லாம் தன் சாமர்த்தியம், தன் உழைப்பினால் தான் என்று சாதிப்பார்கள், மற்றவரின் பங்கேற்பை மூடி மறைத்து விடுவார்கள், துச்சப் படுத்துவார்கள்.

தங்களின் திறமையை, திறனை மேம்படுத்தத் தெரியாதவர்கள் இப்படியே இருப்பார்கள். இப்படி நடந்து கொள்வதும், அதிகாரத்தை உபயோகிப்பதும் அவர்களின் சுய திறன் இல்லாததினால் தான்.

தாங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், எந்த ஒரு சிரமமும் படாமல் மற்றவர்களை வைத்தே செய்து முடிப்பார்கள். உள் மனதில் அவர்களுக்கு தங்களின் இயலாமை தெரியும். அதை மறைப்பதற்கு இந்த அகம்பாவமும், பந்தா போர்வையும்.

உங்களின் அடையாளம்: பணிவா? என் உரிமையா? சரி, அடுத்ததைப் பார்ப்போம்

பகிர்ந்து கொள்வது (அ) பதுக்கி,மறைத்து வைப்பது

நமக்குத் தெரிந்ததையும், தகவல்கள் கிடைத்த இடங்களையும் சொல்வது பாதுகாப்பு தன்மையையும் பரந்த மனப்போக்கையும் காட்டுகிறது. அடுத்தவர்களுக்கு விளக்கிச் சொல்வது, சந்தேகத்தை தனக்கு தெரிந்த வரையில் நீக்கி விடுவது, பதில்களை எங்குக் கிடைக்கும் என்ற விவரங்களை எடுத்துச் சொல்லுவது எல்லாம் பகிர்ந்து கொள்வதற்குள் அடங்கும். பகிர்ந்து கொள்வதால் தெரிந்தது இன்னும் அதிகமாகுமே தவிர குறையவே குறையாது. இந்த புரிதலே நன்றாக இருக்கும் மனநலத்தின் அறிகுறியாகும்!

இதற்கு எதிர்ப்பதமாக,தகவல்களைப் பதுக்கி, மறைத்து வைப்பவர்கள் ஆவார்கள். இவர்கள்,  மனக்கலக்கம் உள்ளவர்களாக இருப்பவர்கள். மழுப்பலான விடை, பொய் சொல்வது, தாமதித்துத் தருவது என்ற பல வகையில் மறைப்பதைச் செய்வார்கள். அந்தத் தகவல் தன்னிடம் இல்லாதது போல் காண்பித்துக் கொள்வது, ஒளிப்பதற்கு தன் உயர் அதிகாரியே காரணம் என்று பழியை யார் மேலேயோ போடுவது என்ற ஏதோ ஒரு யுக்தியைக் கையாளுவார்கள்.

மறைத்துப் பதுக்கி வைக்கும் நபர்கள் அந்த விஷயம் தங்களிடம் இருப்பதால் தான் மற்றவர்கள் தங்களை அணுகுகிறார்கள், மதிக்கிறார் என்று எண்ணும் காரணத்தினால் யாரிடமும் அதை முழுவதாகச் சொல்ல மாட்டார்கள். தங்களை மேம்படித்திக் கொள்ள வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் இப்படி நேர்கிறது.

எப்பொழுதும் ஒளித்துவைப்பதால் தன்நம்பிக்கை இழந்தவர்களாகத் தென்படுவார்கள். சில சமயங்களில், தன்னிடம் மட்டுமே அந்த தகவல் இருக்கிறது என்ற கர்வத்துடன் தென்படுவார்கள். இப்படிச் செய்வதை நினைத்து, உள்ளுக்குள்ளே வெட்கத்தில் மூழ்கி இருப்பார்கள். சஞ்சலங்கள் நிறைந்து இருப்பதால், மனதில் அலை மோதிக் கொண்டே இருப்பதால், மனநலம் சரியாக இருக்காது. நீங்கள் கையாளும் விதம்? உங்கள் மனநிலை?

பாராட்டுவது (அ) விமரிசனம் / குறை காணல்

தனக்குத் தெரிந்தவரோ, தெரியாதவர்களோ என்று யாராக இருந்தாலும், செயல்பாட்டு நன்றாக இருந்தால், பலனை எதிர்பார்க்காமல் தாராளமாக பாராட்டைச் சொல்வார்கள். தன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருப்பவர்கள், ஓர் அளவிற்கு நன்றாகத் தன்னை அறிந்திருப்பதால், யாராக இருந்தாலும் நன்றாகச் செய்வோரை முழு மனதுடன் பாராட்டுவார்கள்.

இதற்கு நேர்மாறானவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எல்லாவற்றையும் விமரிசனம், குறை காணல் செய்வார்கள். எளிதாகக் எதிலும் குறை காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் குறையை மட்டும் பார்ப்பதால் அவர்கள் அருகில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இதுவே அவர்களை மேலும் வெறுப்பூட்டும், விளைவு, மேலும் மேலும் விமர்சனம் செய்வதாகும்.

குறைபாட்டையே அடையாளம் காண்பதால் ஏளனமாகத் தெரிவிப்பார்கள். இதனால், சிலருக்கு இயல்பாகவே நக்கல், நையாண்டி பேச்சாக இருக்கும். நக்கலாகப் பேசுவதும், கிண்டல் அடிப்பதும், அதிகமாகக் குறை கூறுவதும் உள்ளதால் அவர்களிடம் பேச விருப்பம் இல்லாமல் இருக்கும். இதை மரியாதை என்று எடுத்துக் கொண்டு, தங்களைப் பற்றி பெருமை பட்டுக் கொள்வார்கள், மற்றவர்களின் மனது துன்படுதுவதை உணர மாட்டார்கள். வார்த்தைகள் கசப்பாக இருப்பதால் இவர்களின் முக பாவமே சிடுசிடுவென்று, முறைப்பாக இருக்கும். இதுவெல்லாம் மனநல குறைவே. நாம் எதைச் செய்கிறோம்?

கருத்துக்கள் பரிமாற்றமா? (அ) மற்றவர்களைப் பற்றிப் பேச்சா?

ஒருவரைச் சந்தித்து பேசும் போது மூன்றாமவர்களைப் பற்றிப் பேசலாம், அல்ல கருத்துக்களை பரிமாறவும் செய்யலாம். என்ன வித்யாசம்?

கருத்துக்களைப் பரிமாறி கொள்வதால் நாம் அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கலந்து ஆலோசித்து, தான் யோசித்த விதத்தை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும். மற்றவர்களின் குறிப்புகளை கேட்பது, மதிப்புடன் பதில் கூறுவது இதில் அடங்கும். நான் சொல்வது மட்டுமே சரி என்று இருந்தால் அதில் ஒருத்தரின் கருத்து மட்டும் வெளியாகும். பேசிக் கொள்பவர்களின் இடையில் நல்ல புரிதல் இருந்தால் பகிர்ந்து கொள்வது எளிதாகும். இருவரும் மற்றவர் கருத்துக்கு மரியாதை கொடுத்துப் பகிர்ந்தால் அதில் சண்டை, கூச்சல் இருக்காது. அதற்குப் பதிலாக பல தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள். தெரியாத பலவற்றை தெரிந்து கொண்டதால், இவர்களை மறுபடியும் சந்திக்க தோன்றும்.

மற்றவர்களைப் பற்றி பேச்சு என்றால், அந்த குறிப்பிட்ட நபரின் வாழக்கையை அலசி நம்முடைய விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்வோம். பேசப் படுபவர்கள் அங்கு இல்லாததால் அது வீண் பேச்சாகும். இதில் அவர்களின் குறைவுகள் தான் அதிகம் பேசப்படும். இதனால் பேசுபவருக்கோ, பேசப்படும் நபருக்கோ எந்த விதத்திலும் உபயோகம் இல்லை. இப்படிப் பேசுபவரை கண்டு அஞ்சுவார்கள்.
எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து (அ) 'அவர்கள் தோல்வி அடைய வேண்டும்' நம் இந்திய கலாச்சாரத்தில் மிக அழகானது ‘ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என்ற எண்ண ஓட்டம். பிறர் நலன் விரும்புவது, செழிப்பிலும், ஐஸ்வர்யத்திலும், உடல் நலத்திலும். இப்படி விரும்புவோர், தனக்கு மட்டுமே இன்றி எல்லோருக்கும் நல்லதையே எண்ணுவார்கள். இந்திய நாடு, கூட்டுச் சமுதாயமாக இருப்பதும் இப்படித் தோன்றச் செய்கிறது. அதனால் தான் பகிர்ந்து கொள்வது நாம் எப்போதும் செய்வதே. எல்லோர் நலத்தில் நம் நலனும் அடங்கி விடுகிறது.

போட்டி, பொறாமையினால் வருவது, மற்றவர் தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம். இதில் மற்றவருக்கு எப்படிச் சரிவு ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையே கொண்டிருப்பது, வருத்தப் பட வேண்டிய ஒன்றாகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் போட்டி அதிகரிப்பதால், இது வளரும் பருவங்களிலும் பார்க்கிறோம். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? தன் திறமையினால் வெல்ல வேண்டும் என்பதைவிட, எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற மனப்பான்மை. தங்களுக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம். எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

எந்த வழியைப் பின்பற்றுவது?

கற்றுக் கொண்டு இருப்பது / இதெல்லாம் தெரியும்

வாழ்நாள் முழுவதும், நமக்குத் தெரியாது என்று பல உண்டு. ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ தெரியாததை, தெரிந்து கொள்ளத் தூண்டும். இப்படி, கற்றுக்கொண்டே இருப்பதால் பலவகையான விஷயங்களை அறிந்து கொள்கிறோம். “ஆம், எனக்கு இது தெரியாது” என்று ஏற்றுக்கொள்வதே நம் அடக்கத்தை உயர்த்தும். இந்த ஆற்றல் நாம் மேலே வளர உதவுகிறது.

பின்பற்றத்தக்க வழிமுறைகளில் இதன் இடமும் உண்டு. மேலும், விஷயம் தெரியவில்லை என்பவரை ஏளனப் படுத்த மாட்டோம்.

நமக்குத் தெரியும் என்று எண்ணி விட்டால் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ‘இதுவா? தெரியும்’ என்றே எப்போதும் இருந்தால் அது நம் கற்றலுக்கு குறுக்கே நிற்கும். அத்துடன் கர்வத்தை உண்டு செய்யும். தெரியாதென்றால் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டோம், மற்றவர் நம்மை மூடர் என்று நினைப்பார்களோ என்று அஞ்சுவோம். அதனால் முன்னேற மாட்டோம்.

கடந்த மாதங்களை எந்த விதத்தில் நாம் அணுகினோம்? 

இப்போது, நாம் எதை ஏன், எப்படிச் செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே மாற்றத்தின் முதல் படி. தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து நலனை அடைவது இனி நம்மிடமே! அப்படி என்றால் நான்? என்பதற்கும் விடைகள் நம்மிடமே உள்ளது!

- மாலதி சுவாமிநாதன் - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

]]>
depression , மன நலம், who am i, dream, யார்? https://www.dinamani.com/health/mental-health/2018/may/24/how-i-define-myself-2925401.html
2921612 மருத்துவம் மனநல மருத்துவம் விதவிதமாய் தவறு செய்கிறீர்களா? கவலை வேண்டாம் திருத்திக் கொள்ளலாம் வாருங்கள்! மாலதி சுவாமிநாதன் Thursday, May 17, 2018 01:59 PM +0530  

தவறு என்றாலே ஏனோ துச்சமாக, இழிவாகப் பார்க்கப்படுகிறது. ஒரு செயலைச் நாம் செய்யும்போது, சில சமயம் தவறுகள் நேரலாம். தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்ததும், நம்மை வெட்கம் சூழ்ந்து விடுகிறது. மற்றவர்கள் நாம் செய்த தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது குற்றவுணர்வும் குத்திக் காட்டும் போது கோபமும் ஏற்படுவது சகஜம்.

‘என்ன இப்படி?’, ‘பார்த்துச் செய்யக்கூடாதா?’, ‘எப்பவுமே இப்படியா?’ என்று அவர்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க, ஒரு அமைதியற்ற நிலை நமக்குள் தோன்றும். இப்படி நிகழ்வதால், அந்தத் தவறை சீர் தூக்கிப் பார்க்க நம் மனம் ஒப்பாது. நேர்ந்துவிட்டத் தவறை ஆராய்ந்து பார்க்கத் தவிர்ப்பதனால், மீண்டும் அதே போன்ற தவறுகளைச் செய்யலாம்,

முயற்சிகளின் இடையில் தவறுகள் ஏற்படுவது சகஜம் என்று அதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் அச்சமின்றி அணுகுவதால், செய்ததை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதால், அடுத்த நிலையை அடைய முடிகிறது. இவர்கள் தவறை பற்றி யோசித்து, ‘ஏன் இது நிகழ்ந்தது?’, ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று எண்ணுவதால் திருத்திக் கொண்டு முன்னேறுகிறார்கள். நேர்ந்த தவறுகளை தங்களுக்கு வந்த வாய்ப்பாகக் கருதி, செயல்படுகிறார்கள்.

தவறுகளை மதிப்பீடு இல்லாமல், துச்சமாகப் பார்ப்பதற்கு பதிலாக, அவை, ஏன் தோன்றுகிறது என்பதை அறிந்து கொண்டால் அது நம்மை மேம்படுத்த உதவும். தவறுகளின் வெவ்வேறு வகைகள் என்ன, அவற்றின் மூல காரணிகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் அவைகளை கண்டு கொண்டு சரி செய்ய உதவும். எட்வர்ட் ஃப்ரைசேன்யோ என்றவர் தவறுகளை, ஸ்ட்ரெச் (stretch) தவறு, ஆஹா மோமென்ட் (Aha moment), ஸ்லாப்பி (sloppy) தவறு, ஹை ஸ்டேக்ஸ் (high stakes) தவறு என்று பகுத்திருக்கிறார். இவற்றைப் பற்றின விவரங்களை மேற்கொண்டு பார்ப்போம். பிறகு, தவறுகளைப் பார்த்து அஞ்ச மாட்டோம், நம் வெற்றியை நிர்ணயிக்கும் யுக்தியாக உபயோகிப்போம்!

கூடுதலாக எட்டிச் செய்வது?

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. இதிலிருந்து, நம்முடைய தனித்துத்துவம் வெளிப்படையாகிறது. இவையே நம் அடையாளமாகும், வெற்றிகளைக் கொடுக்கும். அதற்காகவே இந்தத் திறன்களை மேம்படுத்தும் பலவிதமான முயற்சிகளை செய்வோம். ஈடுபாடு அதிகமிருந்தால், மேலும் மேலும் சவாலாக இருப்பதைச் செய்ய முயற்சிப்போம். சில சமயங்களில், தவறுகள் வரலாம். நமக்கு முடிந்த வரை, மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்து பார்ப்போம்.

முயற்சிக்கும் போது, ‘இப்படிச் செய்யவா?’, ‘அப்படியா?’ என்று செய்ய, சிலவற்றில் தவறுகள் ஏற்படும். அதற்காக, தவறுகள் வந்துவிடுமோ என்று அஞ்சினால், முயற்சிக்கவே மாட்டோம். ‘செய்து பார்ப்போமே’ என்று செய்தால் தான் நாம் செய்து கொண்டு இருப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். அப்பொழுது நிகழும் தவறுகள், இப்படி நம் திறன்களை சற்று இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதே ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்பது.

இது எப்படி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். நாம் ஒன்று செய்வதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகையில், தவறு நிகழ்ந்தால், வேறு உத்திகளை யோசிக்க வேண்டிவரும். இதைத் தொடர்ந்து செய்தால், நம்மால் எந்த அளவிற்கு முடிகிறதோ நாம் செய்வோம். அடுத்ததாக எப்படிச் செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் போது இப்படி-அப்படிச் செய்து பார்ப்போம். அப்போது, தவறுகள் நேரலாம். அதனால், நிறுத்தி விடலாமா என்ற யோசனை வரலாம். அந்த எண்ணத்தை நிராகரித்து விட்டு, முயற்சி செய்வோம்.

மேலும் செய்வதற்கு, பிறர் உதவியை நாடுவோம்.  இந்த நிலையை ‘ஜோன் ஆஃப் ப்ராக்ஸிமல் டிவலப்மென்ட்’ (Zone of proximal development, ZPD) என்று லெவ் வைகாட்ஸ்கீ (Lev Vygotsky) என்ற ஸோவியட் உளவியாளர் விவரித்தார். இந்த ZPD நிலையில், நமக்கு ஓர் அளவிற்குச் செய்ய வரும். அதற்கு மேல் செல்ல, மற்றவரின் உதவி தேவையாகும். இந்த, ஒரு நிலையில் நாமாகவும், மற்ற நிலைக்கு இன்னுருவர் உதவுவதே ZPD என்பது. நம்முடன் மேலும் நன்றாக இந்த விஷயத்தை அறிந்தவர் நமக்குக் கற்று தந்து, நமக்குப் புரியும் வரை கூட இருப்பார். நாமாகச் செய்ய முடிகிறது என்று தெரிந்ததுமே அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வார்கள்.

வைகாட்ஸ்கீயின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதால், சில குணங்களும் மேம்படுகின்றன. நமக்கு உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. உதவிக் கேட்க தைரியமும் மனோபலமும் தேவையாகிறதால், கூடவே வளரச் சந்தர்ப்பமாகி விடுகிறது. அது மட்டும் அல்லாமல், இவை எல்லாம் ஒன்றாகக் கூடி தவறுகளை சரி செய்யவும் வழி காட்டுகிறது.

இதில் முக்கியமான அம்சம், நாம் மற்றவர்களுடன் போட்டி இடாமல், நம்மைச் சீர்திருத்தி கொள்கிறோம் என்பதே. இதனாலேயே, நாம் அடுத்த முறையும் முயற்சிப்போம், தவறுகள் வந்தாலும், உதவிக் கேட்டு, அடுத்த நிலைக்குப் போக வழியைத் தேடுவோம். இப்படிச் செய்து வருவதால், ஒவ்வொரு முறையும் நம் தரத்தை உயர்த்திக் கொண்டு போவோம். இப்படி இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதினால் தான் ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்ற பெயர். ‘ஸ்ட்ரெச் தவறு’, ZPD, எல்லா வயதினருக்கும் பொருந்தும்!

உள்ளத்தில் திடீரென தோன்றும் ‘ஆஹா!’

சில சமயங்களில் நாம் ஒன்றைச் செய்து முடித்த பின் நாம் செய்ததை பார்த்ததும், திடீரென நமக்கு, ‘ஆஹா!’, நாமா செய்தோம் என்று தோன்றும். சில சமயங்களில், குறிப்பிட்ட ஒரு நிகழ்வினால், நாம் ஒன்றை நினைத்தாலும் வெறொன்றை செய்துவிடுவோம், அது சரியாக இல்லாமல் போகும் போது ‘ஆஹா, தவறல்லவா!’ என்று உணர்வோம்.

உதாரணத்திற்கு, நாம் ஒருவருக்குப் பாடத்தை விளக்கித் தெளிவாக்கியதும், அவர்கள் இதற்காக நம்மை நாடவில்லை என்று திடீரென உணர்வோம், ‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ என்று தோன்றும். அவர்களுக்கு இது தேவையா என்பதை கூர்மையாகக் கவனிக்காததால் நேர்கிறது.

‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ நம்முடைய கவனக்குறைவினாலும் நேரலாம். நமக்குத் தெரிந்த ஒருவரைக் கைப்பேசியில் அழைத்துப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறோம். வாழ்த்தின மறுகணம் அன்றைக்கோ அவர்களின் திருமண நாள் என்று நினைவுக்கு வர, ‘ஆஹா!’ எனத் தோன்றும்.

இன்னொரு உதாரணம், ஒரு மீட்டிங் முடிந்ததும் ‘ஆஹா நாம் எப்பொழுதும் மற்றவரை ஒதுக்கி விட்டு இருவரை மட்டும் மிகத் திறமைசாலி என்று புகழ்கிறோமே’ என்று. ஒரு முறை அவர்களின் திறமையை உணர்ந்த பிறகு அவர்களின் பங்களிப்பு மட்டுமே கணக்குகள் எடுத்துக் கொள்வது என்று இருந்து விடுவதால் இந்த ஆஹா தவறு நேர்கிறது. ஓரளவிற்குப் பார்த்தபின், புரிந்த கொண்டபின், முழுமையாகப் பார்க்காமல், தீர யோசிக்காமல், இவ்வளவுதான், இப்படித்தான் என்று எண்ணிவிடுவது தான் இதற்குக் காரணம். கண்டிப்பாக நாம் கவனத்தை சுதாரித்துக் கொள்ள வழிகளை அமைக்க வேண்டும். இல்லையேல், மேலும் மேலும் ‘ஆஹா!’ தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஈடுபாடற்ற காரியம் 

சில நேரம், ஒரு காரியத்தைச் செய்கையில் நம் கவனம் சிதறும். இதனால், செய்யும் வேலையில் தவறுகள் வர நேரிடும். இது தான் ‘ஸ்லாப்பி தவறு’. இப்படி ஆவதற்குக் காரணங்கள்: எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் செய்வதால்; ஒரு எந்திரம் போல் செய்து கொண்டே போனால்; அவசரப்பட்டு செய்வதால்; ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்வதால் என்று பல. சில சமயங்களில், பல மணி நேரம் அதையே செய்து கொண்டு இருந்தாலும் நிகழலாம். ‘ஸ்லாப்பி’ தவறுகள் நம் உடல்-மனத்திற்கு நாம் செய்வது சரியாக இல்லை, மாற்றிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன. சில சமயங்களில், நமக்கு ஓய்வு தேவை என்பதை நமக்கு ‘ஸ்லாப்பி தவறு’ புரியச் செய்கிறது. சொல்வதை மதித்து, மாற்றி அமைத்தால் நன்று.

‘ஸ்லாப்பி’, நம் வழிகளை எப்படி சீர் செய்தால் நன்றாக அமையும் என்று ஆராய ஓர் வாய்ப்பாகிறது. சற்று சிந்தித்தால், நமக்கே புரிய வரும், நமக்குத் தேவை வேறு விதமாகச் செய்வதா, இல்லை உதவி தேவையா, இல்லை ஓய்வு தேவையா என்று. அதே போல், நாம் ஒன்றைச் செய்யும் போது எது அதனுடன் ஜோடி சேர்வதில்லை என்றும் அறிந்து கொள்வோம். உதாரணத்திற்கு, நம் வேலையுடன், டிவி பார்ப்பது ஒப்புவதா இல்லையா என்று. நாம் உடற்பயிற்சி செய்தால் அதன் பின்னர் வேலையை நன்றாகச் செய்கிறோம் என்று உணர்ந்தால், அது உடற்பயிற்சியின் நேரத்தை நிர்ணயிப்பதற்கு உதவும்.

நம் மூளை நாற்பத்தைந்து நிமிடத்திற்குக் தான் முழு கவனம் செலுத்தும். அதற்குப் பிறகு அதற்கு ஓய்வு தேவை. இந்த ஓய்வு எதற்கென்றால், இதுவரை வந்த தகவல்களை பத்திரப்படுத்தி வைக்கவே. அதனால்தான் கல்வி நிலையங்கள், கான்ஃப்ரென்ஸ் என்று பாடங்கள் நடத்தும் இடங்களில், தொடர்ந்து நடத்தும் நேரம் 45 நிமிடமே. இதைப் புரிந்து செயல்பட்டால், நமக்குச் சாதகமாகும்.

இனிமேல், ஏதோ செய்யத் தேவை என்றால், நாம் கவனிக்க வேண்டியது: அதிலிருந்து நம் மனம் திசை திரும்புகிறதா? வேலையை ஒரு அவசரத்துடன் முடிக்க முயலுகிறோமா? ஈடுபாடு குறைகிறதா? இவை எல்லாம் இருந்தால், நிச்சயமாக ‘ஸ்லாப்பி’ தவறுகள் ஆவதற்கு இடம் கொடுக்கிறோம்.

பெரிய இக்கட்டு

ஆணவமாக, ‘எல்லாம் என் கட்டுப்பாட்டில் தான்’ என்று எண்ணி செயல் படுவது ‘ஹை ஸ்டேக்ஸ் தவறு’ என்று குறிப்பிடப்படுகிறது. அது ஆபத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கலாம். போதை பொருள் உபயோகிப்பது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது போன்றவை உள்ளடங்கும். ஆரம்பிக்கும் பொழுது ‘என்ன செய்துவிடும்? என்னால் இதைக் கட்டுப்படுத்த முடியும்’ என்ற அகந்தை. இந்த மனோபாவம் தான் ஹை ஸ்டேக்ஸ் தவற்றின் அடிக்கல்லாகும், பெரும் தோல்வியில் கொண்டு விடும்.

சில முறை நம்மால் நிச்சயம் முடியாது, அல்லது ஆபத்தானது என்று எண்ணுவதை முயற்சிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். மொழி தெரியாத ஊரில் போய் பிழைப்பது, கடினமான ப்ராஜெக்ட் பொறுப்பை ஏற்றுக் கொள்வது போன்றவை. முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் அதிக கவனம் செலுத்தத் தேவை, இங்கே மேலே சொல்லப்பட்ட ZPD நேரிடும். ஒரு விதத்தில் ‘ஸ்ட்ரெச்’ தவறுகளின் அம்சங்களும் இருக்கும்.

இந்த ‘பெரிய இக்கட்டு’ நிலையில் தவறு வராமல் இருக்க, நாம் கடும் உழைப்பாளியாக, அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். செய்வதை, முன்னேற்றத்தைக் கூர்ந்து கவனித்து குறித்துக் கொள்ளும் பழக்கம் செய்வதை மேம்படுத்த உதவும். ஒவ்வொரு முறையும் செய்ததையும், செய்யப் போவதையும் ஆராய்ந்து வந்தால் தவறுகளையும் அகற்றலாம், அதே நேரத்தில், தடங்களை, தடுப்புகளைக் கவனித்து, சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் வேண்டும். நாம் நினைத்ததை அடைய முடியும்.

தவறுகள் பல வண்ணங்களில்

வாழ்வில் பல இடங்களில் நம் கவனத்துடன் செயல்பட்டால், செய்வது நன்றாக அமையும். அதே சமயம், நம்மைத் திசை திருப்பும் தருணங்களும் உண்டு. தவறுகள் ஒரு விதத்தில் எச்சரிக்கைகளே. அவற்றை மதிப்போம், புரிந்து செயல்படுவோம்.

எந்த ஒரு செயலிலும் தவறுகள் நேருவது நிதர்சனம். அது நேர்ந்த பின் என்ன செய்கிறோம் என்பதுதான் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.

மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

malathiswami@gmail.com

]]>
மன அழுத்தம், தவறு, mistake, stretch, ZPD, தப்பு, மிஸ்டேக் https://www.dinamani.com/health/mental-health/2018/may/17/mistakes-too-have-variations-2921612.html
2919569 மருத்துவம் மனநல மருத்துவம் திருமணமே வேண்டாமா? தாம்பத்திய உறவில் பயமா? உங்களுக்கு ஜீனோஃபோபியாவா? மாலதி சந்திரசேகரன் Monday, May 14, 2018 11:50 AM +0530  

தேவகி, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு ஜாலியான பெண். அவள், எல்லோரிடமும் மிகவும் சகஜமாகப் பழகுவாள். அவள் இருக்கும் இடத்தில், சிரிப்பலைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அவளது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நல்ல ஒரு வரனாகப் பார்த்து, சிறப்பாக அவள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அவளது பெற்றோர்கள் தீர்மானம் செய்து இருந்தார்கள். அதற்காக சொந்தக்காரர்கள், அறிந்தவர்களிடம் நல்ல நாளாகப் பார்த்து, தேவகியின் ஜாதகத்தினை கொடுத்தார்கள்.

பெண் பார்க்கும் படலமும் தொடர இருந்த சமயத்தில், எந்த வரன் வந்தாலும் 'வேண்டாம் 'பிடிக்கவில்லை', 'எனக்குக் கல்யாணம் வேண்டாம்' போன்றவையே தேவகியின் பதிலாக இருந்தது. பெற்றோர்கள் மிகவும் குழம்பிப் போனார்கள். பெண்ணுக்கு ஏதாவது காதல் விஷயம் இருக்குமோ என்று நினைத்து, 'உனக்குப் பிடித்த பையன் யாராவது இருக்கிறானா? சொல்லித் தொலை. கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுகிறோம்' என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். எதுவுமே இல்லை என்று துண்டைப் போட்டுத் தாண்டும் பெண்ணிடம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்?

வீட்டில் பெரியவர்களோ, 'ஒரு வயசுப் பெண் அப்படித்தான் சொல்வாள். கல்யாணம் வேண்டும் என்றா சொல்லிக் கொண்டு அலைவாள்? என்று கூறியதின்  பேரில், உறவிலேயே ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து, திருமணத்தை, நல்ல முறையில் நடத்தினார்கள். முதல் இரவும் வந்தது. வீட்டில் வயதில் மூத்தவர்கள் என்னென்ன அறிவுரைகள் கூற வேண்டுமோ அவற்றை தேவைக்கு அதிகமாகவே கூறியும் வைத்திருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

தேவகி, அறைக்கதவைத் திறந்து கொண்டு, அலறிய வண்ணம் முதலிரவு அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்த அவளுடைய கணவன், காரணம் புரியாமல், வெட்கிய மனநிலையில், அவளை வெளியே விட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழி நடந்தான். ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என்று நம்பியிருந்த அவள் பெற்றோர், கணவன் மற்றும் புக்ககத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

கடைசியில், அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒரு சிட்டிங், இரண்டு சிட்டிங் ஆன பின்பு மூன்றாவது சிட்டிங்கில் தான், தேவகி மனம் திறந்தாள். அவள், தோழியருடன், தாம்பத்தியம், குழந்தைப் பேறு  போன்ற விஷயங்களை பற்றி பேசுவதோடு, யூட்யூப் மூலம் அவற்றைப் பார்த்து தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறாள். உடலுறவு கொள்ளுதல், கர்ப்பம் தரித்தல், குழந்தைப் பெறுதல் போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் செய்திருக்கிறாள். அவளுடைய பயம் எல்லாம் உடலுறவிற்கு சம்மதித்தால், கர்ப்பமுற்று விடுவோம். பிறகு குழந்தை எப்படி சிறிய துவாரம் வழியாக வெளியே வரும்? மிகவும் வேதனையைக் கொடுக்குமே? நம்முடைய உடல் இதைத் தாங்குமா? என்பதே அவளுடைய பயமாக இருந்திருக்கிறது. இதை அவள் வெளியில் சொல்லி விடை தேட முடியாமல் பயந்து போயிருந்திருக்கிறாள்.

தேவகியின் மன நோயினை அறிந்து கொண்ட மருத்துவர், அவளின் பயத்தினைப் போக்கி, உலகில் உள்ள எல்லா தாய்மார்களின் அனுபவமும் இதுதான் என்பதை விளக்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒரு தாயால்தான் நல்ல பிரஜைகளை உருவாக்கித் தர முடியும் என்பதை விளக்கி, அவளது கணவரிடமும் சில நாட்கள் பக்குவமாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார்.

உடலுறவு சம்பந்தமாக பல சம்பவங்கள் நித்தமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, பொதுவாக இதுபோன்ற மனபீதிக்கு, ஜீனோஃபோபியா (XENOPHOBIA) என்று பெயர். புது மனிதர்களைக் கண்டாலோ, வேற்று நாட்டவர் மீதான வெறுப்பையோ ஜீனோஃபோபியா என்று சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுடன் அன்யோன்யமாகப் பழகும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் இதே போன்ற மனவுணர்வு தோன்றிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக சிலருக்கு கடும் பீதி ஏற்படுவதுண்டு. இதற்கு மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? '18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் பெண்களுக்கு, 'டெஸ்ட்டாஸ்டரோன் என்னும் ஹார்மோன், வழக்கத்தை விட குறைந்த அளவில் சுரப்பதால், இந்தக் குறை ஏற்படுகிறது. இக்குறை தனக்கு இருப்பதை ஒருவர் உணர்ந்தால் மருத்துவரை அணுகி உபாயம் தேடிக் கொள்வது நல்லது' என்கிறார்கள்.

தாம்பத்தியம் என்பது பயப்படவேண்டிய விஷயம் அல்ல என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதியளவு உடலுறவு கொள்வதால், பெண்களுக்கு, ஸ்ட்ரோக், மார்பகப்  புற்று நோய், இருதய சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம் வருவது போன்றவை குறைகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுதும், ஆண்களுக்கு 200 கலோரிகளும், பெண்களுக்கு 70 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

இவ்வளவு சாதகமான விஷயங்கள் பெண்களுக்கு இருக்கும் பொழுது தாம்பத்திய உறவுக்குப் பயப்படுவானேன்? ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு ஸ்பூன் விந்துவில், 300 மில்லியன் உயிரணுக்கள் இருந்தாலும், ஒரு உயிரணு மட்டுமே,  மாதத்தில் ஒரு முறை, பெண் வெளிப்படுத்தும் ஒரு கரு முட்டையுடன் சேர்ந்து குழந்தையாக ஜனிக்கிறது.

ஆகையால், பெண்களே, கண்டதை படித்தும், கண்டதை பார்த்தும் மனதைக் குழப்பிக் கொள்ளாமல், உங்களுக்கு எழும் சந்தேகங்களை, பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். வீட்டில் மூத்தவர்களும், சந்தேகங்களை அலட்சியப்படுத்தாமல், கேள்வி கேட்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களின் பயத்தினைப் போக்குங்கள். ஏனென்றால், இதில் வெட்கப்படுவதற்கு எதுவுமே இல்லை. பள்ளிப் பாடங்களிலேயே  எல்லாமே மாணவர்களுக்கு, அறியப்படுத்தப் படுகிறது.

இக்கட்டுரையே ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். ஆகையால்,  குழந்தை வேண்டுபவர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபடும்பொழுது முழுமனதுடன் ஈடுபட்டால்தான், அதற்குண்டான பலன் கிடைக்கும்.

]]>
xenophobia, phobia, marriage fears, திருமணம், பயம், உடலுறவு, தாம்பத்திய உறவு https://www.dinamani.com/health/mental-health/2018/may/14/how-to-overcome-anxiety-and-xenophobia-2919569.html
2912582 மருத்துவம் மனநல மருத்துவம் வேண்டவே வேண்டாம்! இனி ஒருபோதும் சொல்லாதீர்கள் அந்த வார்த்தையை! மாலதி சுவாமிநாதன் Friday, May 4, 2018 11:35 AM +0530  

அப்படி என்ன வார்த்தை அது?

சமீப காலத்தில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று சொல்வது ஒரு ஃபாஷன்  வார்த்தையாக மாறிவிட்டது. அதுவும், ஒரு வயது வரம்பு இல்லாமல், இப்பொழுது எல்லா வயதினரும் தங்கள் நிலையை வர்ணிப்பதே ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தையால்தான். ஸ்ட்ரெஸ் என்பது மன அழுத்தம், இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஸ்ட்ரெஸ் நன்மையும் அளித்து, ஊக்கப் படுத்தவும் செய்கிறது. ஒரு வேலையை குறிப்பிட்ட கால வரையறைக்கும் செய்து முடித்தாக வேண்டும் எனும் போது நம்மில் பலருக்கு மன அழுத்தம் உருவாகிறது. எதிர்பார்த்த ஒன்று நடக்காத போது ஏமாற்றம் விளைகிறது. அதுவும் கூட ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணம். ஸ்ட்ரெஸ் ஏற்பட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மென்மையான மனது உடையவர்களுக்கு வசைச் சொற்கள் கூட ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும். சிலருக்கு இந்த சமூகத்தைப் பார்த்தும், சுற்றியிருக்கும் விஷயங்களை அவதானிக்கும் போதும் கடுமையான மன பாதிப்புக்கள் ஏற்படலாம். அல்லது வாழ்க்கை சூழல், குடும்பப் பிரச்னை, உடல் உபாதை என பல்வேறு வகையாக துயர்களாலும் அழுத்தங்களாலும், ஒருவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஒரு விஷயம் கைமீறிப் போகும் போதெல்லாம் ஸ்ட்ரெஸ் எனச் சொல்லப்படும் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

சில சமயம் ஸ்ட்ரெஸ் நல்லதாகவும் பாசிட்டிவாகவும் இருக்கும். இதில், ‘நாம் செய்யப் போகிறோம்’ என்பது முன்னே நிற்பதால், ஸ்ட்ரெஸ் நன்மையைச் செய்யும். பரீட்சைக்கு நன்றாகத் தயாராக இருக்க, எழுதத் துடிக்கையிலும் நாம் அனுபவிப்பது ஸ்ட்ரெஸ் தான். இப்படி, செய்யத் தயார் படுத்தி வழிகளை அமைத்துக் கொடுப்பது, ‘யூஸ்ட்ரெஸ்’ (Eustress), அதாவது நலம் தரும் ஸ்ட்ரெஸ்!

அதற்கு நேர்மாறாக, ஸ்ட்ரெஸினால், நம்முடைய மனோபலம், உறவுகள், உணர்வுகள் பாதிக்கப்படும்போது, அந்த ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் தரும். மனநலத்தில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் மன நிலையில் தொடர்ந்து நாம் இருந்து கொண்டே இருந்தால், உடலும், மனமும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஸ்ட்ரெஸின் அறிகுறிகளைப் புரிந்து செயல்பட்டால், அதிலிருந்து வெளியேறி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அறிதலும், அதற்கு ஏற்றாற் போல் பாதை அமைத்துக் கொள்வதும், உடல்-மனநல பாதுகாப்பின் முதல் படி!

ஸ்ட்ரெஸ் எதைக் குறிக்கிறது? ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?

ஏதோ அவசரம் மற்றும் அபாயமான நேரங்களில், நம் உடலும் மனமும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையே ஸ்ட்ரெஸ். பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் தரும் சூழ்நிலைகளை சந்திக்கக் கையாளும் முறைகளை ‘ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ்’ (Stress response) என்போம். இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. போராடுவது (Fight): சூழ்நிலையில் வெற்றி பெற முயற்சிப்பது. அடுத்தது, சூழ்நிலையை விட்டு ஓடி விடுவது (Flight): வெற்றி பெற முடியாது என்று எண்ணி விட்டு விடுவது. மூன்றாவது, உறைந்து நிற்பது (Freeze): சண்டையும் போடாமல், விட்டும் விடாமல், என்ன செய்வது என்று புரியாததால், ஒன்றுமே செய்யாமல் திகைத்திருப்பதும் நேரலாம்.

எதற்கோ பயந்தோ, ஆர்வப்பட்டாலோ, உடனே ஸ்ட்ரெஸை சமாளிக்க, நமது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormone) ஆட்ரினலினும், (adrenaline), கார்ட்டீஸால் (cortisol) உற்பத்தியாகும். இந்தப் போராளிகள், நம்மைச் சவாலுக்கு தயார்படுத்தும்.

அதன் உடல் அறிகுறிகள்: இதயம் வேகமாகத் துடிப்பது, மூச்சு வேகமாக விடுவது, நம் மற்ற உறுப்புகள் தயார் நிலையில் இருப்பது. இப்படி ஆனதும், ஆட்ரினலின், கார்டிஸால் சுரப்பதால் இன்னும் தெம்பு கூடுவது போல் தோன்றும். உடல், மூளை சுருசுருப்பாக வேலை செய்யும். இதைப் பல முறை கவனித்து இருப்போம், தேவை என்றால் அசதி கூடத் தெரியாமல் வேலை செய்வோம். பின்பே அசதி தெரியும்.

அதே சமயம் நம் மனது இதை உணர்ந்து, நம் உடலின் செய்கைகளுக்கு ஏற்றாற் போல் பயம், தைரியம் என்ற உணர்வுகளைக் காட்டும். ஸ்ட்ரெஸை, ஆட்கொள்ளவா, ஓடிப்போய் விடவா என்று அலசிக் கொண்டிருப்போம்.

செயல் முடிந்த பின் நம் மனம் அதிலிருந்து விலகவில்லை என்றால், உடலும், மனமும் ஸ்ட்ரெஸ் நிலையிலேயே இருக்கும், ஸ்ட்ரெஸ் அறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் விளைவுகள்

உடலும் மனமும் அதிவேகத்தில் செயல்படுவதால், சதா சர்வகாலமும் ஸ்ட்ரெஸுடன் இருந்தால், நம் மன நலனை அது பாதிக்கும். சில சமயங்களில் இருக்கும் வலிகள், நோய்கள் ஸ்ட்ரெஸினால் இன்னும் அதிகரித்தது போலவும் கூடத் தோன்றும். நீடித்த ஸ்ட்ரெஸ் நம்முடைய ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கக்கூடும். பதற்றம், படபடப்பு, வலிகள், சோம்பல், அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தோல் பிரச்னைகள், மறதி, நினைவாற்றலில் தடுமாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படலாம்.

 ஸ்ட்ரெஸ் ஆட்கொண்டால்

ஸ்ட்ரெஸ் ஒரு முறை நிலைக்கச் செய்து விட்டால், அது ஒரு பழக்கம் போல் ஆகி, திரும்பத் திரும்ப அப்படியே செயல் படுவோம். இப்படித் தான் இருக்கும், இதிலிருந்து விடுதலை இல்லை என்று ஏற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் நம்முள் வளர்ந்து, நம்மை ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறது.

நம் அறிவுணர்வியலில் (Cognitive) அதாவது, யோசித்து, புரிந்து கொள்வதில் ஸ்ட்ரெஸ் உட்புகுந்து கொண்டால் மறதி ஏற்படும். ‘ஞாபகம் இருப்பதில்லை’ என்று சொல்லி கொண்டே இருந்தால், இதை மாற்ற மாட்டோம். இப்படி நமக்குளே சொல்லி நிலை நாட்டுவதை ‘ஆடோ ஸஜஷன்’ (Auto suggestion) என்பார்கள். ஸ்ட்ரெஸினால் மறதி - மறதியால் ஸ்ட்ரெஸ் என்ற ஜோடி சேர்ந்துவிடும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எப்பொழுதும் கவலையான எண்ணங்கள் ஓடும், அதிகமாகக் குறை கூறுவோம், கவனம் சிதறும்.

நம்முடைய உணர்வுகள்: ஸ்ட்ரெஸ் இருந்து கொண்டே இருந்தால், அதிகமான நேரம் பதற்றம், சோகம் இருந்து, ஒருவிதமான வெலவெலத்துப் போதலான உணர்வு தோன்றும். சலிப்பு, எரிச்சல் தோன்றி, வெறுப்பு தட்டும். ஸ்ட்ரெஸ் இருக்கையில், எல்லோருடன் இருந்தாலும், தனிமையாக இருப்பது போலவே உணருவோம்.

நம் உடல் ஸ்ட்ரெஸை பற்றி தெரிவிக்கும் விதம்: உடல் வலி, தலை சுற்றல், அடிக்கடி சளி, ஜுரம், மார்பில் வலி, வாந்தி பேதி, என்று ஏதோ ஒரு பாகத்தில் பாதிப்பு இருக்கலாம்.

ஸ்ட்ரெஸினால், ஒரு சிலருக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும், சிலருக்கு சுத்தமாகப் பசி எடுக்காது. அதே போல், தூக்கமும் அதிகம், குறைச்சல் ஆகலாம். செய்ய வேண்டிய வேலைகள் தாமதமாகும். இதைச் சமாளிக்க, நகத்தைக் கடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துவது, போதைக்கு  அடிமையாவது என்ற பழக்கங்கள் ஆரம்பமாகும். 

இவையெல்லாம் அதிகமான ஸ்ட்ரெஸ் தொடர்ந்து ஏற்படும் போது தலை தூக்கும். சூழ்நிலைகளை நன்றாக சமாளிக்கக் கற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

ஸ்ட்ரெஸின் காரணிகள்

நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களும், நெருக்கடிகளும், கட்டாயங்களும், ஸ்ட்ரெஸின் காரணிகள் ஆகலாம். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், இழப்பு, உறவுமுறை மாறுதல் இவையும் காரணியாகலாம். வாழ்வில் தினந்தோறும் நேரிடும் நிகழ்வுகள்: காலை நேரத்திற்குள் வேலையை முடிப்பது / வேலைக்குப் பயணம் செய்வது இதுபோல் ‘தினசரி தொந்தரவுகள்’ (daily hassles) என்பதும் காரணிகளாகலாம். இவற்றைச் சமாளிக்கும் திறன், அல்லது வலு இல்லாமல் போனால் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. இதைத் தவிர, நம்முடைய கண்ணோட்டங்கள், சிந்தனைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நிலவும்.

எந்த ஸ்ட்ரெஸ் வகைகள், நலம் குறைக்கக் கூடும் என்பதை ஹோம்ஸ், ராஹே (Holmes and Rahe) ஸ்ட்ரெஸ் பட்டியல் இட்டிருக்கிறார்கள். அவற்றில் முதல் பத்து : வாழ்க்கைத் துணையின் மரணம், விவாகரத்து, கல்யாண வாழ்க்கையில் பிரிவு, சிறைத் தண்டனை, நெருங்கிய குடும்பத்தினரின் மரணம், உடல் நலக் குறைவு, திருமணம், வேலை இழப்பது, திருமண வாழ்க்கையில் இணக்கமின்மை, வேலையிலிருந்து ஓய்வு பெறுவது.

ஸ்ட்ரெஸ் பாதிக்காமல் இருக்க

வலுவான, நம்பகமான, ஆதரவான உறவினர், நண்பர்கள் கூட்டமைப்பு (network) இருந்தால், ஸ்ட்ரெஸ் உணரும் போது மற்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற மனதிடம் பாதிப்பு வராமல் காக்கும். இதற்கு மாறாக, தனிமை சூழ்ந்திருந்தால், ஸ்ட்ரெஸின் தாக்கம் தெரியும்.

என் கட்டுக்குள் இருக்கிறது’ என்ற எண்ணம் இருந்தால் ஸ்ட்ரெஸை எதிர் கொள்ள வழிகளை அமைப்போம். ‘எதுவும் என் கையில் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எதையும் செய்ய முயல மாட்டோம். ஸ்ட்ரெஸ் தன் ராஜ்யத்தை நிலை நாட்டி நம்மை அதற்கு அடிமையாக்கும்.

மனப்பாங்கு, மனப்பான்மையின் பங்கு உண்டு! பாதிப்புகளை வாய்ப்பாகப் பார்க்கிறவர்கள், நன்மையை யோசிக்கும் பக்குவம் உள்ளவர், தன் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து செயல்படுபவர், வாழ்க்கை என்றால் சுக-துக்கத்துக்குச் சம பங்கு என்று நினைப்பவர், இவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் எனலாம். இந்தப் பட்டியலில், ஏதேனும் இரண்டு இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நெருங்காது.

உணர்வுகளை கையாளத் தெரிவதும் உதவும்! உணர்வுகளைப் புரிந்து, அவைற்றைக் கண்டு கொண்டு, உணர்வைச் சமாதானம் படுத்தத் தெரிவது உதவும். இதனால், உடல்-மனநலம் பாதிக்காமல் இருக்கும், உடலும் பாதிப்பு இல்லாமல், ஸ்ட்ரெஸை சமாதானப் படுத்தி அனுப்பி விடும். ஸ்ட்ரெஸ் ஏற்பட்டாலும் உணர்வைப் புரிவதனால், முடிந்த பிறகு உணர்வைப் புரிந்து கொள்வோம், அதுவே நம்மை நல்ல நிலைக்கு வரச் செய்ய உதவும்.

உங்களின் ஸ்ட்ரெஸ் அடையாளம் காணுங்கள்

ஸ்ட்ரெஸ் எப்பொழுது தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானது. அதற்கு ஏற்றவாறு எப்படி அணுக வேண்டும் என்பது புரிய வரும்.

ஸ்ட்ரெஸ், என்னவெல்லாம் செய்யலாம்?

உடற் பயிற்சி

தினசரி விடாமல், உடல் பயிற்சி செய்வது. அது நடப்பதோ, நீச்சலோ, ஓடுவதோ, ஏதேனும் விளையாட்டு என்று தினம் 30-40 நிமிடத்திற்குச் செய்வதால் வலு அதிகரிக்கும். பயிற்சிகள் நம் மனநலத்தை மேம்படுத்த, அதன் விளைவு, செய்வதை அருமையாகச் செய்வோம்.

உணர்வாற்றல்

நம் ஐந்து புலன்கள் (sensory organs): நமக்கு நேர்ந்த ஸ்ட்ரெஸ் சரி செய்ய, பார்வை, சத்தம், ஸ்பரிசம், சுவை, மணம் உபயோகமாகலாம். இவற்றில் எந்த உறுப்பு ஸ்ட்ரெஸை குறைக்கிறது என்று நாம் அறிய வேண்டும்: பாட்டுக் கேட்பதா, மணல், புல் மேல் நடப்பதா, நற்மணம் சுவாசிப்பதா என்று.

மற்றவர்களுடன் சந்திப்பு

சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் கழிப்பது என்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் என்று இல்லாமல், நண்பர்கள், மற்றவருக்கு உதவி செய்வதற்காக என்று ஏதோ ஒரு விதத்தில் குறிக்கோளற்ற நேருக்கு நேர் சந்திப்புகள் வளர்த்துக் கொள்ளலாம். இப்படி இருப்பது, நம் மனதுக்கு இதமாக இருக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தரும். உடல்-மனதுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

உணவு வகைகள்

சாப்பாட்டில், காய்கறிகள், பழங்கள், நிறைய உட்கொள்ள வேண்டும். சிப்ஸ், எண்ணெய்யில் பொறித்த பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவு, 2-3 லிட்டர் தண்ணீர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஓய்வு

நன்றாகத் தூங்குங்கள் நேக பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாகும். தினந்தோறும் அதே நேரத்திற்குத் தூங்க வேண்டும். கைப்பேசி, லேப்டாப் படுக்கை அறையில் இல்லாமல் பழகிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் என்பது நாம் கையாளும் விதத்தில் அடங்கி உள்ளது. மேற்சொன்ன விஷயங்களைப் புரிந்து செயல்பட்டால், ஸ்ட்ரெஸ் நமக்கு ஊக்கம் தரும் கருவியாக உபயோகிக்க முடியும். ஸ்ட்ரெஸ், டென்ஷன் மன அழுத்தம் எல்லாம் நம்மை ஆக்கிரமிக்க நாம் ஏன் விட வேண்டும்?

- மாலதி சுவாமிநாதன் - மனநல மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

]]>
மன அழுத்தம், Stress, ஸ்ட்ரெஸ், mental pain, agony, tension, மன பாதிப்பு, பிர்ச்னை https://www.dinamani.com/health/mental-health/2018/may/03/live-a-happy-and-stress-free-life-2912582.html
2898769 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்க எந்த டைப்? மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதவரா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! மாலதி சுவாமிநாதன் Thursday, April 12, 2018 11:41 AM +0530 மற்றவர்கள் பேசும் போது அவர்கள் சொல்வதை நாம் கேட்பது பொதுவாக அனைவரும் செய்வதே. காது கொடுத்து கேட்பதை நாம் பல விதங்களில்
செய்வதுண்டு.

தினசரி வாழ்க்கையில் செய்வதை 'நடைமுறை கேட்பது' (Practical listening) என்பார்கள். இதை, தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உபயோகிப்போம். 'என்ன,முடிச்சியா?’, ’சாப்பிட்டியா?’ என்று கேட்டறிவது போல், சாதாரண வாழ்கையில் பரிமாறப்படும் தகவல்கள் இதில் அடங்கும். மற்றவர்களுடன் மேலோட்டமாகப் பேசும் போதும் இது இயங்கும், உதாரணமாகச் சாலையில் பார்ப்பவரை 'எப்படி இருக்கீங்க?’, அல்லது 'எல்லாம் ஓகே தானே?’ என்ற விசாரிப்புகள்.

இந்த நடைமுறை கேட்பதில், மற்றவர் நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பேச பெரும்பாலும் யாரும் முயற்சிப்பதில்லை. வாழ்க்கையின் சிறுசிறு விவகாரங்கள், உறவாடல்கள் நடத்திக் கொள்வதுதான் குறிக்கோளே தவிர, யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் மனநிலை அறிவதற்காக அல்ல. பதில் வராவிட்டால் கூட சில சமயம் அடுத்ததிற்கு நகர்ந்து விடுவோம்.

மற்றொரு வழிமுறை 'தொடர்புடன் கேட்பது’ (Relational listening). இதில் நம்முடன் பேசிக் கொண்டிருப்பவரின் நிலை, அவர்களின் உணர்வுகள், நமக்கு என்ன தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதில் கவனத்தை செலுத்துவோம். சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், நாம் எப்போதும் இப்படிச் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக, பெரும்பாலும் நாம் மற்றவர்களுடன் பேசும் போது நாம் பேசுவதற்கு எப்பொழுது வாய்ப்பு வரும் என்று அவர்கள் சொல்வதை முடிப்பதில் ஆர்வம் காட்டுவோம்! அதற்கான சைகைகளான, வாயை கொஞ்சம் திறந்த படி, தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு, 'ஆ’, 'நா..’ என்றெல்லாம் ஆரம்பித்த படி காத்திருப்போம். 

இப்படி நிகழ்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்கையில், நம் சிந்தனை வேறு ஒன்றுடன் இருக்கலாம். அவர்கள் பகிர்ந்து
கொள்ளுவதைப் போல் வேறொன்று நமக்கு நடந்ததையோ, கேட்டதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்கலாம். இப்படி இருந்தால், நாம் காத்திருப்பதே,  
பதிலை அளிக்கத்தான். சில நேரங்களில், சொல்லுபவரை விட நாம் ஒரு படி மேலாகச் சொல்வோம் என்பதை நிரூபிப்பதே நோக்கம் ஆகும்.

சொல்பவருக்கு, தான் சொன்னதைக் கேட்பது போல் நாம் பாவனை செய்தோம் என்று கூடத் தோன்றலாம். நிஜத்தில், சொல்பவரின் விஷயத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இத்துடன், பேசிக்கொண்டு இருப்பவரைக் கண்ணோடு கண் பார்க்காமல், அவர்களைத் தாண்டி எதையோ கவனித்தபடி அவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொண்டிருப்போம். நாமே கூட, இதை அனுபவித்திருக்கலாம். அவர்கள் சொல்வதை பாதியில் நிறுத்தி விடுவார்கள். அதற்கு 'ஓ, அவ்வளவு தானா?’ என்று நாம் கூறும்போது, சொல்லுவோரின் முக வாட்டத்தைக் கவனித்தால், நமக்கு நம் தவறு புரிய வரலாம், ஏதோ மிஸ்ஸிங் என்று. சில சமயங்களில் இதைத் திருத்தி, மன்னிப்பு கேட்டு, அவர்களைத் தொடர்ந்து சொல்லச் சொல்வோம். கவனிக்காமல் இருந்து விட்டால், சொல்லுபவர் தன் பேச்சை நிறுத்தி கொள்ளவும் செய்வார்கள். இதனாலேயே அடுத்த முறை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். 

நமக்கும், இது நேர்ந்திருக்கலாம். அப்படியும் ஏன் மற்றவர்களுக்கு அதையே நாமும் செய்கிறோம்? தொடர்புடன் கேட்பதில், சொல்லுபவரும், கேட்பவரும் ஒருங்கிணைந்து பேச்சை எடுத்துச் செல்வார்கள். இப்படி நேர்வதற்காக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்: 

இதுவரையில் கேட்டதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு நாம் சொல்ல வந்ததைச் சொல்லலாம். அப்பொழுது, அவர்கள் பகிர்ந்ததை எந்த அளவிற்கு நாம் கேட்டு உள் வாங்கிக் கொண்டோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். கேட்கும் விஷயத்தில் ஆர்வமுள்ளதைத் தெரிவிக்க வேண்டும்: 'ம்ம்ம், ….’, 'இன்னும் சொல்லுங்க’, 'விளக்கம் அளிக்க முடியுமா?’

நாம் கேட்கும் கேள்விகள் வெறும் ஆம்/ இல்லை பதில் உள்ளதாக  இல்லாமல், அவர்கள் மேலும் தகவல்கள் சொல்லுவதற்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும். இப்படித் தொடர்புடன் கேட்பதில், அவர்களுக்கு முகம் கொடுத்துப் பேசுவோம். அவர்கள் கண்களிலிருந்து நம் கண்கள் நகராது. நம் எண்ணங்கள் எதை எதையோ நினைத்து ஓடிக்கொண்டு இருக்காது. அவர்கள் சொல்லுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகள், நம் குரலின் த்வனி, சப்புக் கொட்டுவது, சைகைகள் எல்லாம் பொருத்தமாக இருக்கும். இதன் மிக முக்கியமான விளைவாக, சொல்பவர் தான் சொல்வது முழுமையாக கேட்கப்படுகிறது என்று எண்ணுவார்கள். தாம் சொல்வதைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதே மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்!

வாய்ச் சொற்களுடன், நம் உடலின் அசைவுகளாலும் சொல் இல்லாமலே நாம் உற்றுக் கேட்பதை தெரிவிக்க முடியும். இதைத்தான் 'நான்-வெர்பல் கம்யூனிகேஷன்’ (Non-verbal communication), 'பாடி லேங்குவேஜ்’ (Body Language) என்பார்கள். 20% தான் வார்த்தைகள், 80% நம் உடலின் பேச்சுகள்!

இதிலிருந்து 'ஆழ்ந்து கேட்பது’ (Profound listening) உருவாகும். மேல் விவரித்த, தொடர்புடன் கேட்பதின் நுணுக்கங்களுடன், கேட்பவரின் ஒவ்வொரு உணர் திறன்கள் உட்கொள்ளும் விவரங்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அவற்றை புரிந்து கொள்வதற்கு உபயோகிப்பார்கள். வாய் வார்த்தைகள் மட்டும் அல்ல, இந்த ஆழ்ந்து கேட்பதில் நம் கண்கள் பார்ப்பதை, காதுகள் கேட்பதை, மூக்கு முகர்வதை, ரோமங்கள் உணர்வதை எல்லாம் சொல்லப்படுகிற விஷயங்களுடன் இணைத்து அர்த்தங்களைப் புரிந்து கொள்வோம்.  உதாரணமாக, சொல்பவரின் அசைவுகள், அவர்களின் விசும்பல், சிரிப்பு என்ற சத்தங்கள், வியர்வை-மணம், சொல்வதினால் நம் ரோமங்களின் பாதிப்பு இவையெல்லாம் சொல்லும் வார்த்தைகளுடன் ஒன்றிணைந்தால், அதன் தகவல் ஒன்று.  ஒன்றிணையாவிட்டால், அதன் தகவல் வேறு.

ஆழ்ந்து கேட்டால், மௌனமும் பேசும். பாஷையாகும். அதாவது, சொல்பவர் சற்று நிறுத்தி விட்டால், கேட்பவரிடமிருந்து அதைத் தொடர வேண்டும் என்ற அவசரமோ, அழுத்தமோ இருக்காது. அடுத்தவருக்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை தெளிவாகத் தெரியும். இருவரின் மனநிலையும் ஒன்றிணைந்திருக்கும். வித்தியாசங்கள் நேர்ந்தால், அதுவும் ஏற்கப் படும்.

இப்படி ஒரு பரந்த நிலை நிலவுவதால், இன்னொரு முக்கியமான அம்சம் தோன்றுகிறது. 'சுய பிரதிபலிப்பு’ (Self-reflection) வந்து விடுகிறது. இதன் வருகையினால், 'நான் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறேன்? 'நான் சொல்வதில் எது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது? 'சொல்பவர், என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்? 'அவர்கள் சொல்வதில், எதைப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது?’ இந்தத் தெளிவு பெறவே பல நேரத்தில் மொளனம் தேவையாகிறது. மேலும் பல தெளிவு பெறும் பாதைகள் அமைகின்றன. சொல்வதை ஆக்கப் பூர்வமாக படைப்பது, தன்னுடைய தனித்துவம் பங்கமாகாமல் இருப்பது, ஆழமான தெளிவு பெறுவது, நிலையாக இருப்பது என்று பல விதங்கள். அமைதியாக இருந்தால் மேலும் கேட்கும்!

மாலதி சுவாமிநாதன்
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர் 
malathiswami@gmail.com

]]>
communication, hearing, listening, கேட்பது, செவி https://www.dinamani.com/health/mental-health/2018/apr/12/listening-problems-2898769.html
2889752 மருத்துவம் மனநல மருத்துவம் கொஞ்சம் மானர்ஸ் கத்துக்கங்க மக்களே! வாழ்க்கை தேன் போல் இனிக்க அது மிகவும் முக்கியம்! சினேகா Thursday, March 29, 2018 12:21 PM +0530  

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன்னளவில் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறது. தன்னை சுற்றி இன்னொரு உலகம் இயங்குகிறது என்றே சிலருக்கு மறந்துவிடும். அந்த அளவுக்கு சுயமோகம் தலைக்கேறிய காலகட்டமாக ஆகிவிட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் இருப்பு என்பது அனர்த்தம். அல்லது தங்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைப்பவர்கள் அடுத்தவரை சமயத்துக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொண்டு வேண்டாத சமயத்தில் விட்டெறிந்துவிடுவார்கள். பொய்மையும் கயமையும் ஏமாற்றமும் சூழ்ந்த இந்த மனித வாழ்க்கையில் மனிதர்கள் மேலும் மேலும் தற்குறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். சில மனிதர்களும் சில சம்பவங்களும் அதில் கிடைக்கும் அனுபவங்களையும் பாடமாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து நம் வாழ்க்கையில் தெளிவை நோக்கிப் பயணப்படுவதே வாழ்வதை எளிமைப்படுத்தும்.

பொது இடங்களிலில் சத்தமாக ஃபோனில் சிலர் பேசுவார்கள். அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரங்கால் தொலைபேசியில் பேசுவதைப் போல அவர்களின் அலறல் போன்ற குரல் பலசமயம் அடுத்தவர்களை அச்சுறுத்தும். வீட்டு விஷயம் முதல் நாட்டு விஷயம் வரை அவர்கள் தங்கள் சொந்தக் கதை சோகக் கதையை உரக்க பேசி முடிப்பதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடும். சங்கீதம் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை, இங்கிதம் தெரிந்திருக்க வேண்டும். சில இளம் பெண்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஃபோனில் பேசுகிறார்களா அல்லது உதடுகளை சும்மாவேனும் அசைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியாது. சத்தமே இல்லாமல் செல்ஃபோனில் பேசுவது எப்படி எனும் கலை அறிந்தவர்கள் அவர்கள். அந்தளவுக்கு நாகரிகமாகப் பேசாவிட்டாலும் அடுத்தவர் காது ஜவ்வைக் கிழிக்காமல் சற்று மென்மையாகப் பேசலாமே? அல்லது வீடு வரும் வரை அந்த உரையாடல் காத்திருக்கலாம் என்றால் பொறுமையாக சாவகாசமாக ஏன் சத்தமாகக் கூட பேசி மகிழுங்கள்.

வங்கி முதல் வாக்கிங் போவது வரை சிலருக்கு அடுத்தவரை குறுக்கிடுவதில் அலாதி சுகம். எங்கேர்ந்து சார் வரீங்க என்று ஆரம்பிப்பார்கள். நம் கையில் செய்தித்தாள் இருந்தால் ஒரு நிமிஷம் தரீங்களா என்று பதிலை எதிர்ப்பார்க்காமல் பறித்துக் கொள்வார்கள். ரயிலில் போகும்போது நம்மிடம் புத்தகம் இருந்தால் அபேஸ்தான். தாகத்துக்குத் தானே கேட்கிறார்கள் என்று நம் கையில் உள்ள பாட்டிலை கொடுத்தால் ஒரு சொட்டு கூட நமக்கு வைக்காமல் முழுவதையும் குடித்து வைப்பார்கள். இன்னும் சிலர் என் ஃபோனில் சார்ஜ் போச்சு அர்ஜெண்டுக்கு ஒரு கால் பேசிக்கறேன். மிஸ்டு கால் கூட தர மாட்டார்கள். நேரடியாகப் பேசத் தொடங்கு நம் பிபி அதிகளவு ஏறியபின் தான் மனமிறங்கித் திருப்பித் தருவார்கள். மறக்காமல் அவர்கள் பேசிய நம்பரை அழித்துவிட்டுத்தான் தருவார்கள். இப்படி வெளியே சொல்ல முடிகிற, சொல்ல முடியாத எரிச்சல்களை எல்லாம் தினந்தோறும் கூசாமல் அடுத்தவர்களுக்குத் தந்துவிட்டு தன்போக்கில் அவர்கள் ஜாலியாக போய்விடுவார்கள். நம்மைப் பற்றி நமக்கே தெரியாமல் புறம் பேசுவார்கள். நமக்குத் தான் மண்டைக்குள் நமநமவென்று வெகு நேரம் ஏதோ செய்யும். இதுபோன்ற ஆசாமிகளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு பர்லாங்கு தூரம் எட்டியிருப்பதே மன அமைதிக்கு ஒரு எளிய வழி.

சிலர் டிப்ஸ் தருவதையே வாழ்க்கை தர்மமாக கடைபிடித்து வருவார்கள். நம்மைக் கண்டுவிட்டால் போதும், அவர்களின் அன்றைய பொழுதுபோக்கு சாட்சாத் நாமேதான், என்ன சார் இவ்வளவு டல்லா இருக்கீங்க? இப்படி கருத்துப் போயிட்டீங்க? உடம்பு இவ்வளவு இளைச்சிருக்கே உங்களுக்கு சுகர் வந்திருக்கும்னு நினைக்கறேன்...உடனே போய் செக் பண்ணுங்க என்பார்கள். அல்லது அய்யோ ஒரேடியா வெயிட் போட்டுட்டீங்க உங்களுக்கு ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது...இல்லையில்லை உங்களுக்கு கேன்சர் அபாயம் இருக்குன்னு வேணும்னா இந்தப் புத்தகத்துல இருக்கற அறிகுறிகளைப் படிச்சுப் பாருங்க என்று சொல்லி வேண்டாத அறிவுரைகளை எல்லாம் நம் தலையில் கட்டி, கிட்டத்தட்ட அரை நோயாளிகளாக நம்மை மாற்றிய பின் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். தாங்கள் படித்ததையோ பின்பற்றியதையோ அடுத்தவர் மீது திணிக்கும் நபர்களை அடுத்த முறை கண்டால் அவர்களை நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். ஏன் இப்படி ஆயிட்டீங்க முகத்துல பரு மாதிரி ஏதோ இருக்கே, என்று நீங்கள் ஆரம்பித்தால் போதும் ஆசாமி எஸ்கேப் ஆகிவிடும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தின் ஒட்டுமொத்த துயரத்தையும் தன் தலைமீது சுமந்து வலம் வருவார்கள். அவர்கள் பிரச்னையை நம்மிடம் சொல்லி அதற்கு தீர்வு கேட்பார்கள். நாமும் பாவம் என்று பச்சாதப்பட்டு ஏதாவது சொன்னால் உங்களுக்கு என் வலி தெரியாது அப்படி எல்லாம் செய்தால் சரிவராது என்று மேலும் தங்கள் பிரச்னையை கூறுவார்கள். நாமும் இப்படி பண்ணுங்க இது தான் தீர்வு என்றெல்லாம் சொல்லியும் அவர்களை அத்தனை எளிதாக சமாதானம் செய்ய முடியாது. உண்மையில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். உங்களையும் ஏதோ ஒருவகையில் துயரெனும் பள்ளத்தாக்கில் தள்ளிவிட நினைப்பவர்கள். நான் இப்படி அழுதுட்டு இருக்கேன், அவன் மட்டும் எப்படி சந்தோஷமாயிருக்கான் என்று சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் நம்மைப் பார்த்து பொருமிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உஷாராக இருந்து அவர்களிடமிருந்து விலகி இருப்பதே மேல். உண்மையிலேயே உங்கள் உதவியோ அறிவுரையோ தேவைப்படுபவர்கள் நீங்கள் சொல்வதை ஒருகட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். எனவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கப் பார்ப்பது நம்முடைய அமைதியான மனநிலையைத்தான். 

நம்மில் சிலர் திடீரென்று ஒரு பீடத்தில் நின்று கொண்டு அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று பெரும்பான்மையான நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்போம். நமக்கு சொந்தமாக ஒரு குடும்பம் இருக்கிறது பிள்ளைகள் உள்ளார்கள் என்றெல்லாம் மறந்து அடுத்தவர் நலனில் மகிழ்ச்சி கொள்பவர்கள் நாம். ஆனால் ஒரு உண்மை நமக்குத் தெரியாது. நம்மிடம் ஆதாயம் கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அது கிடைத்ததும் நம்மிடம் ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் ஓடிப் போவார்கள். கடைசியில் குடும்பமும் விலகி, நம்மை அண்டிப் பிழைத்தவர்கள் ஒருவரும் இல்லாமல் நாம் மட்டுமே தனிமையில் நிற்போம். வேறென்ன செய்வது? உதவ மறுப்பது பாவம் இல்லையா என்று தோன்றுகிறதா? அவர்கள் துன்பத்திலிருந்து எப்படி விடுதலை அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா? நம்மை நம்பி வந்துவிட்டார்கள் நாமே கைவிட்டால் எப்படி என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?  இந்த உலகத்தை திருத்த அல்லது அறிவுரை கூட நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருமுறை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குக் கிடைக்கும் பதிலை வைத்து நீங்கள் மேற்படி விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒருபோதும் பயத்தாலும், சந்தேகத்தாலும், கெட்ட எண்ணங்களாலும் சூழப்பட்ட ஒருவரை உங்களால் மாற்ற இயலாது. அதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம்.

எதையாவது ஆழ்ந்து சிந்திக்கலாம் என்றால் அப்போதுதான் ஒரு மெசேஜ் உள்ளேன் ஐயா என்று செல்ஃபோன் வடிவத்தில் தன் இருப்பை மீட்டுருவாக்கம் செய்யும். கண நேரம் கூட அந்த ஃபோனை பிரிந்திருக்க முடியாமல் கையில் சங்கு சக்கரம் தரித்த பெருமாள்களைப் போல ஒட்டுமொத்த சமூகமே செல்லடிமைகளாக மெள்ள மாறிக் கொண்டிருக்கிறது. பாத்ரூம் முதல் பாடை வரை செல்ஃபோனில் ஆதிக்கம் சற்று அதிகம்தான். எனக்கு தெரிந்தவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவர் மிகவும் வருத்தப்பட்டது வாணி ராணி முடிவதற்குள் இறந்து போகிறோமே என்றுதான். அந்தளவுக்கு தொலைக்காட்சியும் அலைபேசியும் லேப்டாப்பும் வாழ்வின் அந்திம காலம் வரை நீக்கமற நிறைந்துவிட்டது. கிருஷ்ணா ராமா கோவிந்தா என்ற காலம் எல்லாம் போய், பெரிசுகளுக்கும் சீரியல், வாட்ஸப், பேஸ்புக் காலமாகிவிட்டது. இந்த கருவிகள் எல்லாம் தேவைதான். அத்யாவசியம் தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? எதை எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கிருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

இந்த மின்மயமான வாழ்க்கையில் சிலருக்கு சினிமா ஆறுதல், சிலருக்கு அரசியல் இன்னும் சிலருக்கு ஆன்மிகம். அவரவர் புத்திக்கும் அனுபவத்திற்கும் ஆசைக்கும் ஏற்ப தங்களுக்கு தேவையானதை ஒன்றையோ அல்லது அத்தனையும் சேர்த்து ஒரு பாதையை தேர்ந்தெடுப்பார்கள். இதில் என்ன பிரச்னை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்குத் தேவை வழிகாட்டி. வழிகாட்டி என்று ஒருவரை நினைத்துவிட்டால் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றத் தொடங்குவார்கள். அவன் தான் தலைவன். அவன் தான் நடிகன். அவர் தான் குரு என்று தங்களை ஒட்டுமொத்தமாக ஒரு தனி மனிதருக்கு சமர்ப்பணம் செய்துவிடுவார்கள்.

பேஸ்புக் முதல் பேஸ் டு பேஸ் வரை அந்த மனிதரைப் பற்றி யாரேனும் குறை சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அடிதடியில் இறங்கக் கூடத் தயங்க மாட்டார்கள். இது தேவையா என்று கேட்டால் ரசனை தவறா, அவர் போல நான் ஒருநாள் ஆவேன் என்பார்கள். ஒருவரைப் போல நீங்கள் ஆவதற்கு அல்ல நீங்கள். உங்களைப் போல இருக்கவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். ரோல்மாடல்களாக சிலரை நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதிலே விழுந்து கிடப்பதுதான் தவறு. தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பெயர் ஏன் அப்படி ஆனது? யோசித்துள்ளீர்களா? இலக்கியம் முதல் இயல்பு வாழ்க்கை வரை உங்களுக்கு முதல் ஹீரோ நீங்கள் தான். தன்னை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொள்பவர்கள் நிச்சயமாக பிறரையும் நேசிப்பார்கள். ஆனால் தலைவா என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தொலைத்துக் கொண்டால் யார் மீது தவறு? தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாத அளவுக்கு தனி மனித வழிபாட்டில் சுயம் தொலைத்தவர்களின் மயக்கம் தீருவதற்குள் அவர்கள் ஆயுள் முடிந்திருக்கும். இத்தகைய காலவிரையச் செயல்களில் ஈடுபடாமல் தன்னுள் இருக்கும் ஒளியை கண்டு அடைய வேண்டியது தான் இந்த வாழ்க்கையின் இந்த இருப்பின் அர்த்தம். அவரவர் வேலை அவரவர் வாழ்க்கை அவரவர் பாடு என்று பறந்து கொண்டிருப்பார்கள். நம்முடைய நிதானமும் பொறுமையையும் அமைதியும் மட்டுமே நமக்கான விளக்கு. புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை ஒளிரும். 

]]>
டிப்ஸ், toxic people, rude people, nasty people, அறிவுரை, மானர்ஸ் https://www.dinamani.com/health/mental-health/2018/mar/29/learn-some-manners-for-happy-and-free-life-2889752.html
2885547 மருத்துவம் மனநல மருத்துவம் என்றென்றும் ஜொலிக்கும் இளமையுடன் வலம் வர வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்! சினேகா Thursday, March 22, 2018 11:28 AM +0530  

மனித வாழ்க்கையில் பால்யம் அனைவருக்கும் பிடிக்கும். பதின் பருவம் முதிராத பருவம் எனினும் முத்தானது. இனிக்கும் இளமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நாற்பதுக்கு பின்? அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்படத் தொடங்கும். இன்னும் சில காலத்தில் முதுமையடைவோம் என்ற அச்சத்தில் அதை முன்னதாகவே வரவழைத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் பலர். 

என்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது அல்லது கூடுமானவரை எனது முதுமையைத் தள்ளிப் போடுவேன் என்று நினைக்கத் தொடங்கினால் மன அழுத்தம்தான் ஏற்படும். அதனை வரவேற்கும் பக்குவம் கைகூடினால் தானே தாமதப்படுத்திக் கொள்ளும் என்பதுதான் இயற்கையின் விதி. இளமையை நீட்டிக்க இதோ சில வழிகள் :

இளமையை இழக்கிறோமோ என்று மனத்தில் சந்தேகத்தை விதைத்துக் கொள்ளாதீர்கள். இரவு பகல் போலவே வாழ்வில் இளமை முதுமை இரண்டும் முக்கியம். பக்குவப்பட வாழ்க்கை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. யாராவது உங்களிடம், 'என்ன வெயிட் போட்டு விட்டீர்கள், முடி நரைத்துவிட்டதே, இப்படி கறுத்துவீட்டீகளே? ஏன் சோர்வாக இருக்கீறீர்கள் உடல் நலமில்லையா? என்ன வெயிட் போட்டுவிட்டீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள். அதை நீங்கள் ஒருபோது தலையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. அவர்கள் போகிற போக்கில் கேட்டு வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், கேட்கப்பட்டவர்களுக்கு அது எத்தகைய மன அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏதோ அக்கறையாக இருக்கிறோம் என்பதை காண்பித்துக் கொள்ளவும் கூட இருக்கலாம்.

உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களே அதற்கொரு தீர்வையும் சொல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அதை அதில் உண்மை எது பொய் எது என பகுந்தாய்ந்து உங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்வதுதான். வயது ஏற ஏற நம்முடைய நிறம், உருவம் எல்லாமே மாற்றத்துக்கு உள்ளாகும். அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் இருப்பதுதான் அழகு. எல்லா காலத்திலும் யாரும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியாது. எனவே இதுபோன்ற கேள்விகளில் மன சஞ்சலம் அடையாமல் உங்கள் போக்கில் இருப்பதுதான் நல்லது.

ஜீரோ சைஸ் எல்லாம் தேவையில்லை ஆரோக்கியமே முக்கியம்

அழகாக இருப்பதென்றால் ஒல்லியாக இருப்பது என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். பருமனாக இருந்தால் வயது கூடுதலாகத் த்ரெஇயும், அழகு குறையும் எனக் குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது முக்கியம்தான். ஆனால், அது நீங்கள் ஜீரோ சைஸில் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காலையில் எழுந்து கொள்ளும் போது எப்படி உணர்கிறீர்கள். அந்த நாளை எதிர்கொள்ள உடலும் மனமும் தெம்புடன் உள்ளதா, உற்சாகத்துடன் இருக்க முடிகிறதா என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை உடல் சோர்வாக இருக்கும் போது அதை சரிப்படுத்த முயலுங்கள். என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் தீர்வை தேடுங்கள். முக்கியமாக சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் வேலை செய்து, மிகச் சரியான நேரத்தில் தூங்கச் சென்றால் இளமை ஒரு பூனைக்குட்டியைப் போல உங்கள் வசம் எப்போதும் இருக்கும்.

வயது என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது

சிலர் இளம் வயதிலேயே மிகவும் முதிர்ச்சியடைந்தவராக காணப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களும் அப்படித்தான் இருக்கும். நாற்பது வயதுக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அலுப்பும் சலிப்பும் அவர்களிடம் காணப்படும். இன்னும் சிலர் நாற்பது வயதிலிருந்தும் இருபது வயதினரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பார்கள். உயிர்த் துடிப்பும் உற்சாகமுமாக அவர்களின் வாழ்க்கை இன்பத்தின் ஒட்டுமொத்த ரேகைகளை கொண்டிருக்கும். வயது என்பதெல்லாம் சும்மா மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குத்தான் என்று நினைப்பார்கள் அவர்கள். மற்றபடி அவர்கள் தங்கள் மனத்திலோ புத்தியிலோ அதை ஏற்றிக் கொள்வதில்லை. 

ஒரு போதும் எதற்காகவும் கவலை கொள்ளாதீர்கள்

காலை ஒரு தொற்றுநோய். அது உங்களைத் தொற்றிவிட்டால் உங்கள் இருப்பை நிம்மதியிழக்கச் செய்துவிடும். நீங்கள் கவலைப்பட பட காலம் உங்களை மிக வேகமாக முதுமையடைய ஆயத்தப்படுத்திவிடும். வயது பற்றியே நினைக்காமல் என்ன வந்தாலும அதை துணிவாக எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாழ்ந்தீர்கள் எனில் அதுவே உற்சாக டானிக்காக செயல்பட்டு உங்கள் இளமைக்கு கியாரண்டி கொடுக்கும். 

ஹாபியில் ஈடுபடுங்கள் ஜாலியாக வாழுங்கள்

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றத் தெரிந்து கொண்டால் படு பிஸியாக உள்ள உங்களுக்கு வயதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க நேரம் எப்படி இருக்கும்? பதின் வயதில் செய்ய முடியாமல் போனவற்றை பட்டியல் இடுங்கள். வயலின் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேனே, இப்போது நிறைய நேரம் இருக்கிறது எனவே துணிந்து வகுப்புகளில் சேருங்கள். சில வருடங்களில் உங்கள் மனத்தை குளிர்விக்க நீங்களே வயலின் வாசிக்க முடியும். ஓவியம், மொழி, நடனம் என எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதை கற்றுக் கொள்ளுங்கள். வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனும் உண்மை உங்களுக்குப் புரியும்.

நீங்கள் பழகும் சுற்றம் எப்படியிருக்க வேண்டும்

எப்போதும் இளைஞர்கள் சூழ இருங்கள். அவர்களின் பேச்சும் உற்சாகமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்கள் உங்களை சீனியர் என்று உணர வைக்க முடியாத அளவிற்கு நீங்கள் அப்டேட்டாக இருந்தால் போதும், உங்களை விட மூத்தோர்களிடம் நட்பாக இருப்பது நல்லது. அவர்களுடன் பழகும் போது நீங்கள் தான் மிக இளமையானவர். உங்கள் வயதுள்ளோர் புலம்பல்காரர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து தூர விலகியே இருங்கள்.

உங்களை விட இளையவரோ, மூத்தவரோ அல்லது சம வயதினரோ சதா கவலையைச் சுமந்தபடியே இருப்பவர்கள், துயரத்துடன் காணப்படுவர்கள், எதிர்மறை சிந்தனையாளர்கள் ஆகியோரை விட்டு பத்து அடி தள்ளியே இருங்கள். அவர்கள் ஒரு குட்டைப் போல, தானும் சேறாகி தன்னுடன் பழகுபவர்களையும் சகதியாக்கிவிடுவார்கள். உங்கள் உற்சாகத்தைத் தக்க வைக்க வேண்டுமெனில் உங்கள் எண்ண அலைவரிசைக்கு ஒத்திசைவாக இருப்போரிடம் நட்பு பாராட்டுங்கள். 

இயற்கையான விஷயங்களுக்கு வரவேற்பு கொடுங்கள்

நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்னைகள் ஏற்படும், சிலருக்கு முடி நரைக்கத் தொடங்கும், உடல் முன்பு போல் இருப்பதில்லை. அடிக்கடி ஏதேனும் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். இதற்கெல்லாம் சோர்ந்து போய் இனி அவ்வளவுதான் என வயோதிகர் லிஸ்டில் நீங்களாக போய் சேர்ந்து கொள்ளாதீர்கள். இவையெல்லாம் இயல்பாக நடப்பதுதான் என்ற விழிப்புணர்வுடன் மலர்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாமே ஈஸியாக உங்களை கடந்து போகும். வாழ்க்கையை ரசிப்பதுபோல் உங்கள் உடலின் மாற்றங்களை ரசிக்கப் பழகுங்கள். வாக்கிங், உடற்பயிற்சி, யோகா, என சிலவற்றை தினமும் செய்து பழங்குங்கள். உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமும் துணிவும் வாழ்க்கை கொடுத்த பக்குவமும் உங்களை ஒரு முழுமையானவராக மாற்றியிருக்கும். அந்த பக்குவத்துடன் நடந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இனிக்கும்.

மனசை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்

குடும்பத்தில் பிரச்னையா அல்லது உடல் பிரச்னையா எதையும் மனத்துக்குள் பூட்டி வைத்து மருகிக் கொண்டிருக்காதீர்கள். அது மன அழுத்தம் ஏற்படுத்தி உங்களை சோர்வுக்குள்ளாக்கிவிடும். உங்கள் தோற்றத்திலும் சிறுகச் சிறுக சோகம் ஒட்டிக் கொள்ளும். உங்கள் செல்களும் உற்சாகம் இழந்து ஏனோ தானோவென்று இயங்கும். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் மனம் திறந்து பேசுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாய்விட்டு அட்டகாசமாகச் சிரியுங்கள்.

சிரித்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும், இளமையாக இருப்பவர்கள் பலரைப் பார்த்தால் தெரியும் அவர்கள் விட் அடித்து சிரித்துக் கொண்டும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிரும் இருப்பார்கள். அவர்களைச் சுற்றி சிரிப்பு ஒரு அலையாக ஒரு அரணாக அவர்கள் இளமையை காப்பாற்றிக் கொண்டிருக்கும். எனவே ஸ்மைல் ப்ளீஸ்...

]]>
age, young, youth, 40 years, இளமை, வயது, முதிமை https://www.dinamani.com/health/mental-health/2018/mar/22/how-to-remain-young-always-2885547.html
2876207 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்கள் எப்போதும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? இதோ உங்கள் மகிழ்ச்சிக்கான எளிய வழிமுறைகள்! சினேகலதா Wednesday, March 7, 2018 01:12 PM +0530  

இந்த பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களின் நோக்கமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே. சிலர் மட்டுமே அடுத்தவரையும் சந்தோஷப்படுத்த ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் அடுத்தவர் சந்தோஷங்களைப் பறித்து அதில் இன்பம் காண்பார்கள். இவர்கள் சாடிஸ்டுகள் அல்லது மனப்பிறழ்வு உடையவர்கள். சரி சந்தோஷம் என்பது அத்தனை எளிதில் வந்துவிடுமா? வாழ்க்கையில் நமக்கு எது தேவை? நிம்மதியா சந்தோஷமா அல்லது இவை இரண்டுமா?

என்னதான் அரும்பாடுபட்டு நம்முடைய சந்தோஷங்கள் எதுவென்று கண்டடைந்து அதை நோக்கிய பயணத்தில் பல பிரச்னைகளை துயரங்களை எதிர்நோக்கி இறுதியாக, அதனை அடைந்தாலும், அது கானல் நீரைப் போன்றதாகிவிடுகிறது. கையில் அள்ளிய நீரைப் போலவே நொடி நேரத்தில் காணாமலாகிறது. ஏன் இவ்விதம்? ஏன் சந்தோஷம் என்பது தற்காலிகமானதாகவே இருக்கிறது?

எனக்கு இது கிடைக்கவில்லை. அது படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் இதுதான் கிடைத்தது. அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் கிடைத்ததோ இதுதான். என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. என் உறவுகள் எல்லாமே என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்கு உண்மையாக இருப்பவர்கள் யாருமில்லை என ஒவ்வொருவருக்கும் ஒருபாடு குறைகள், குற்றம் சுமத்தல்கள் எந்நேரமும் உள்ளது. மிஸ்டர் ரைட் அல்லது அதி உன்னத மனிதர் என்பவரை நீங்கள் என்றேனும் பார்த்ததுண்டா? முதலில் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? எது சரி? எது தவறு?

நீங்கள் சுட்டிக் காட்டும் நபர்களையோ பிரச்னைகளையோ ஒரு நிமிடம் புறம் தள்ளிவிட்டு அந்த விரலை உங்கள் நெஞ்சுக்கு எதிராக விரல்களை சுட்டிப் பாருங்கள். பிரச்னை அங்கிருந்துதான் தொடங்கியிருக்கும். அந்த நூல்கண்டின் முனையை நீங்கள் தான் முதலில் விடுவித்திருப்பீர்கள். இயலாமைகளை ஒருபோதும் பட்டியல் இடாதீர்கள். தோல்விகள் இடர்பாடுகள் இவையெல்லாம் வெற்றிக்கான இன்னொரு வாய்ப்பு என்பதை புரிந்து கொண்டால் வீண் புலம்பல்களில் நேரத்தை விரயம் செய்ய மாட்டோம். எல்லாம் என் விதி, தலையெழுத்து, கடவுள் என் விஷயத்தில் கருணையே இல்லாமல் இருக்கிறார் என்றெல்லாம் மருகிக் கொண்டிருக்காமல், சரி இப்படி ஆகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம். முதலில் இதிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதே தெளிவுக்கான பாதையின் முதல் படி.

ஒவ்வொருவர் வாழ்விலும் வெவ்வேறு பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நமக்கே கூட ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் நம் முன் வந்து நிற்கும். ஏன், எதற்கு என்று ஆழமாக சிந்தித்து பிரச்னையை வேர்நுனி முதல் ஆழ்ந்து ஆய்ந்து பார்த்தால் அதைத் தகர்த்தெறியும் உளி நம்மை வந்தடையும். எதற்கும் சோர்வு அடையாமல் ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கட்டுக்களாக்கிவிடும் வல்லமை நமக்கு உண்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

அதற்கு முதலில் என்ன நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற உறுதியை ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுத்துவிட்டால் அது நிச்சயம் வசப்படும்தானே? மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கான கதவு என்றும் திறந்தே இருக்கிறது அதை உணராதவர்களே மகிழ்ச்சிக்கான சாவியைத் தேடி பல இடங்களில் அலைகிறார்கள் என்பார் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி. எனவே இன்று இல்லையில்லை இப்போது இந்த நொடியே உங்கள் மகிழ்ச்சிக்கான திறவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும்தான் உள்ளது.

மனிதனின் செயல்பாடுகளில் பெரும் சதவிகிதம் அவனது ஆழ்மனத்தைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒருவரின் நடை உடை பாவனை செயல்கள் என எல்லாம் அவரது ஆழ்மனத்தின் இயல்புப்படியே நடக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த ஆழ்மனத்தின் விந்தைமிகு ஆற்றலுடன் உங்கள் மகிழ்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். உங்கள் ஆழ்மனத்தை நீங்கள் சரியான விதத்தில் பயன்படுத்தினால் சந்தோஷம், வெற்றி, அமைதி என எதை நீங்கள் விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் ஆழ்மனத்தை சரியான வகையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி, உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். கவலை உங்களை அரித்துக் கொன்றொழிக்கும் குணம். எனவே உங்களால் மாற்ற முடியாதவற்றைப் பற்றி சிந்திப்பதை விடுத்து உங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது அக்கறை காட்டுங்கள். நிதானம், பொறுமை, பக்குவம் ஆகியவற்றை அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க கோபக்காரனாகவே இருப்பேன் என்பது உங்கள் முடிவாக இருந்தால் சந்தோஷம் எப்படி நிலைக்கும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட பரவசங்கள் கொட்டிக் கிடக்கும். கண் விழித்துப் பார்ப்பதில் தான் உள்ளது. எந்த நிலையிலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அது உங்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும்.

எது எனக்குத் தேவை, என்னுடைய கனவுகளை நாம் எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றெல்லாம் தயங்காதீர்கள். எல்லாமும் முடியும். உங்களுடைய கனவுகள் உங்களுக்குப் பெரிதாகவும், எதைவிடவும் முக்கியமானதாக உங்களுக்கு இருந்தால், நிச்சயம் அதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். அப்படி உங்கள் ஓய்வெடுக்க விடாது உங்கள் ஆழ்மனது. இடையறாது அது உங்களுக்கு பக்கபலமாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி அடையும்போது நீங்கள் பட்ட பாடெல்லாம் கரைந்து சந்தோஷம் மட்டுமே உங்கள் முன் தடாகமாக நிரம்பியிருக்கும். 

எந்த இடர்பாடுகள், பிரச்னைகள் வந்தாலும், இவை என் சந்தோஷத்துக்கும் கனவுகளுக்கும் தொந்திரவாக உள்ளது இதனை மாற்ற என்ன வழி வகை உள்ளது என்று ஆராய்ந்து பாருங்கள். மாற்றி யோசித்தால் போதும் எந்தப் பிரச்னையும் சுலபமாக நீங்கிவிடும். இதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். நாம் அனைவரும் ஜூவுக்குச் செல்லும்போதெல்லாம் வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதுடன் அவர்கள் மீது திடீரென்று பொங்கும் பாசத்தால் அவை சாப்பிட நாம் எடுத்துச் சென்ற பழங்கள் அல்லது பிஸ்கெட்டுக்களைப் போடுவோம். சிலர் ஆர்வ மிகுதியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் அல்லது கறி மீன் உள்ளிட்ட முழு சாப்பாட்டையும் கூட போட முன் வருவார்கள். ஆனால் உப்பு புளி காரம் போட்டு சமைக்கப்பட்ட உணவுகள் அந்த விலங்குகளின் உடல் நலத்துக்கு ஏற்றவை அல்ல என்பது பற்றி யாருக்கும் அக்கறை இருக்காது.

இதில் பெரிய இம்சையை அனுபவிக்கும் விலங்குகள் யானைகள் மற்றும் குரங்குகள்தான். அதற்கு அடுத்தபடியாக மீன்கள். ஒரு குளத்தைக் கண்டால் போதும் நம்மவர்கள் பொரியை அள்ளி வீசுவார்கள். பொரி கூட பரவாயில்லை சிலர் மிதமிஞ்சிய அன்பால் சாக்லெட்டுகள், கடலை உருண்டைகள் என மீனுக்கு உணவுத் தருகிறேன் என்று கையில் கிடைத்தவற்றை எல்லாம் குளத்தில் எறிவார்கள். கோவில் அல்லது ஆறில் உள்ள மீன்களுக்கு பொரியைப் போடலாம். ஆனால் பராமரிப்பில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு அந்த வனவிலங்கு காப்பாளர்கள் அதற்குரிய உணவினை சரியான நேரத்துக்கு அளித்துவிடுவார்கள். 

ஜூவிலுள்ள விலங்குகளுக்கு நீங்கள் சாப்பிட வைத்திருக்கும் உணவை அளித்து தேவையற்றதை அவைகளுக்குத் திணிக்காதீர்கள். காரணம் மிருகங்களில் உணவுப் பழக்கம் வேறானது. நீங்கள் போடும் உணவு வகைகளை அவை சாப்பிடும்போது அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும். பலவிதமான உடல் பிரச்னைகள் வரும். இந்த பிரச்னை அதிகமிருந்த ஒரு வனவிலங்கு பூங்காவில் ‘விலங்குகளுக்கு உணவு தராதீர்கள்’ என்ற வாசகம் தாங்கிய பதாகைகளை பூங்கா முழுவதும் வைத்தனர். ஆனால் அங்கு வருகை தரும் பார்வையாளர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் மிருகங்களுக்கு சாப்பாடு போட்டு அவற்றின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு விளைவித்த வண்ணம் இருந்தார்கள்.

என்ன செய்வது என அந்தப் மிருகக் காட்சி சாலையின் ஊழியர்கள் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு பழைய அதிகாரி மாற்றாகி சென்றுவிட புதியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்தப் பிரச்னையை முறையிட்டார்கள் ஊழியர்கள். அவரும் சிரித்தபடி இது ரொம்ப சுலபம் என்று கூறி ‘விலங்குகளுக்கு உணவு தர 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என அறிவித்து ஒரு பதாகையை வைத்தார்.

மறுநாளிலிருந்து அங்கு வருகை தந்த பார்வையாளர்கள் அதைப் படித்து எங்களுடைய உணவைத் தருவதற்கு நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும். வேற வேலையில்லை என்று முடிவு செய்து அதன் பின் விலங்குகளுக்கு உணவு போடுவதை நிறுத்திவிட்டனர். ஊழியர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டது. விலங்குகளும் அவற்றுக்குரிய உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்தன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மாற்றத்துடன் யோசிப்பவர்களே ஜெயிக்கிறார்கள்! மேற்சொன்ன பிரச்னையில் முதல் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஜூவுக்குள் மிருகங்களைப் பாதுகாக்கும் காவலர்களா, தேவையற்ற உணவை போடும் மனிதர்களா இல்லை மாற்றத்தை யோசித்து வழிமுறையை கூறிய வெற்றியாளரா? யாராக இருக்க நாம் விரும்புவோம்? வெற்றியாளராக இருக்க ஆசைப்பட்டால் அதற்காக நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கனவுகள் நனவாகும்போது மனது தன்னம்பிக்கையை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அப்போது மனத்துக்குள் சந்தோஷம் தானாகவே வந்தடையும்.

]]>
self esteem, வெற்றி, success, மகிழ்ச்சி, சந்தோஷம், Happiness, self analysis https://www.dinamani.com/health/mental-health/2018/mar/07/here-is-the-secret-of-happiness-and-success-2876207.html
2864001 மருத்துவம் மனநல மருத்துவம் ஓய்வு என்கிற பெயரில் வீட்டுப் பெரியவர்களை கூண்டில் அடைக்கிறோமா நாம்? மனநல ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்! மாலதி சுவாமிநாதன் Friday, February 16, 2018 04:10 PM +0530  

தினந்தோறும் வாழ்வில் அர்த்தம் செய்து கொண்டு, மற்றவர்களுக்கும் நம்மால் பிரயோஜனம் உண்டு என்று இருந்தாலே வயதானாலும், உடல், மன நலம் கூடி இருக்கும்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வயதானவர்கள் பலவற்றை செய்வதைப் பார்க்கிறோம். பலர், தினம் வாக்கிங் போவது, பூங்காவில் சந்தித்து, குழுவாக பேசிக் கொள்வது, கச்சேரிக்குப் போவது, ட்யூஷன் எடுப்பது என்று இருப்பார்கள். இன்னும் சிலர் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது, பள்ளிக்குக் கூட்டி செல்வதும் உண்டு. பூத்தொடுத்து விற்பது, மீன், முட்டை, கீரை, காய்-கனிகள் விற்பது என்று தொழில் செய்வோர்களையும் பார்க்கிறோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மோர் விற்கும் தாத்தா மிகப் பிரபலமானவர்!

இவர்களைப் போல் இல்லாமல், துவண்டு போய், ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ இருக்கும், அல்லது நாள் முழுவதும் டிவி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும்  வயதானவர்களும் உண்டு.

நம் வீட்டில் உள்ள வயதானவர்களை, நாம் மிக அக்கறையாக பார்த்துக் கொள்ள எண்ணுவோம். அதனால்  அவர்களை எதையும் செய்ய விடமாட்டோம், சிரமப் படுவார்களோ, அல்ல தடுமாறி, விழுந்து விடுவார்களோ என்ற பயத்தினால் நாமே எல்லாவற்றையும் செய்து விடுவோம். நாம் வயதானவரை வேலை வாங்குகிறோம் என்று யாரேனும் எண்ணி விடுவார்களோ என்று கூட அஞ்சிச் செய்வோம்.

பார்த்துக் கொள்வது நல்லது தான். ஆனால், கூண்டில் அடைத்த பறவை போல் அல்ல. அவர்களும், முடிந்த அளவிற்கு தன் வேலையை சுயமாக செய்யலாம், வீட்டிலும்  எதிலாவது தன் பங்கிற்கு உதவி செய்யலாம். அப்போது, தன்னாலும் உபயோகம் உண்டு என்பதை உணருவதே அவர்களின் நலனை மேம்படுத்தும். ஆனால், வற்புறுத்திச் செய்ய வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எதைச் செய்வது என்று அவர்கள் சொந்தமாக முடிவெடுத்தால்  நன்மை உண்டாக்கும். அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதும் ஒரு விதமாகும்.

நாற்பது வருடத்திற்கு முன்னால், வெளி நாட்டில், தேர்ந்தெடுத்த சில முதியோர் இல்லங்களில் இதைப் பற்றின ஆராய்ச்சி செய்தார்கள். அங்குள்ளவர்களில் சிலருக்கு பூந்தொட்டி கொடுத்து  அதைப் பாதுகாக்கும் பணி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களின் தீர்மானத்திற்கே விட்டு விட்டார்கள். தண்ணீர் விடுவது, காய்ந்த இலைகளை அகற்றுவது அவர்களாகப் பார்த்துச்  செய்தார்கள் . ஆராய்ச்சி செய்வோர் என்ன கவனித்தார்கள் என்றால், செடியை ஈடுபாட்டுடன் கவனித்த முதியோரின் உடல் நலன் நன்றாகத் தேறி வந்தது. அவர்களின் ஞாபகத் திறன், பிரச்சினைகளைச்  சமாளிக்கும் திறன்களிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது .

அர்த்தமுள்ள செயலை செய்வதால், அதிலும்  சொந்தமாக  தேர்ந்தெடுப்பு  இருந்து விட்டால், அதற்கு நம் உடலைச் சீர் செய்யும் சக்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில், அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் நம் அரசாங்க கணிப்பின் படி 8.6% உள்ளார்கள். இவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம் .

ஆரோக்கியம் என்றால் என்ன? உலகளவில், WHO-வின் (வர்ல்ட் ஹெல்த் ஆர்க்கனைஸேஷன்) ஆரோக்கியத்தின் வர்ணனையையே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் படி, ஆரோக்கியம் என்றால்  “நோய் இல்லாததும், நலிந்த, தளர்ந்த நிலை இல்லாதிருப்பதை மட்டும் குறிப்பது அல்ல; உடல், மனம், சமூக தொடர்பு நலன் எல்லாம்  உட்கொண்டுள்ளது”. உடல்/மனம்/சமூக தொடர் நலனில், ஏதாவது  ஒன்றில் ஏற்றத்தாழ்வு நேர்ந்து விட்டால், நலன் தடுமாறிவிடக்கூடும். 

எதையும் செய்யாமல் இருந்தால், தன் தேவைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்தால், மற்றவர்களே முடிவுகளை எடுத்தால், இல்லை தனிமைப்பட்டு இருந்தால், இவற்றினாலேயே நலன் கெடும். அதற்காகத்தான்  நம் கலாச்சாரத்தில் பெரியவர்களுடன்  கலந்து ஆலோசிப்பது, முக்கியமான காரியங்களில் அவர்களுக்குப்  பங்களிப்பு என்று அமைந்து இருக்கின்றது. இப்படிச் செய்து வருகையில், அவர்கள் இருப்பதற்கு அர்த்தம் இருக்கிறது என்பதைச் செயல் மூலம் காட்டுகிறோம்.

அதே நேரத்தில் ஒரு சிலருக்கு ஞாபக மறதி, பக்கவாதம், பார்க்கின்ஸன்ஸ், டிமென்ஷியா, மனச்சோர்வு என இருக்கலாம். இதற்கு மாத்திரை மருந்து அவசியமே. அத்துடன் சிறிதளவு சுறுசுறுப்பைச் சேர்த்துக் கொண்டால் நலனைக் கூடுதலாக்கும். 

எந்த வயதினரையும் உடலையும், மூளையையும் ஆக்டிவாக வைத்துக் கொள்ளவே டாக்டர் பரிந்துரைப்பார்கள். தினம் ஏதாவது ஒன்று செய்வது என்றும், வெவ்வேறு விதமாக வைத்துக் கொண்டால், ஆவலுடன் செய்யத் தோன்றும். எந்த அளவு முடிகிறதோ அந்த அளவிற்கு மட்டும் செய்து வந்தால், தொடர்ந்து செய்யலாம்.

சிலருக்கு,  முன் போல், செய்ய முடியாததாலோ, அடுத்தவர்கள் செய்து கொடுப்பதினாலோ  தயக்கமும்  தடுமாற்றமும்  வரலாம். மற்றவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றும் சிலர் மௌனமாக, ஊமையாக  இருப்பார்கள்.

இப்படி எந்த மனப்பாங்குடன் இருந்தாலும் அவர்களின் நலனை உயர்த்திக் கூடுதலாக்கச் செய்யலாம். செய்யக் கூடிய பல வகைகளை வரிசைப் படுத்த போகிறேன். இதில், எதைத் தேர்ந்தெடுத்தாலும் வயதினரின் உடல் நலனை மனதில் வைத்தே தேர்வு செய்ய வேண்டும். 

I. ஒரே இடத்தில், படுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு

 • வீட்டுக்  குழுந்தைகளுக்கோ , பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கோ  சில பாடங்களை படிக்கும்போது, செய்யும்போது கவனிக்கலாம் . உதாரணத்திற்குக் கணக்கு வாய்ப்பாடு, கவிதை மனப்பாடம் செய்வதை, க்ராப்ஃட் செய்வதை  என்று.
 • தினசரி நாளிதழ்களை வாசிப்பது: அவர்கள் அருகில் உட்கார்ந்து, வாய் விட்டுப் படிக்கலாம்.
 • கதை, கவிதை, கட்டுரைகள் படிக்கலாம்.
 • அவர்களுடன் பாட்டு கேட்கலாம், பாடலாம்.
 • வார்த்தை, பாடல் அந்தாக்க்ஷரி விளையாடலாம்
 • அவர்களுடன் சுடோகு (Sudoku), க்ராஸ்வர்ட் (crossword) போடலாம்.
 • பல்லாங்குழி, தாயக் கட்டை, லுடோ விளையாடலாம்.

அவர்களையும் சேர்த்துக்.கொண்டு செய்வது என்பது பாசம் காண்பித்து, அவர்கள் உயிர் வாழ்வதை நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும். இதனால், அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

II.அவர்களுக்கு, நாம் தெரிவிப்பது, “உங்களின் இடம், என் வாழ்க்கையில்..

 • ஆலோசிக்க, பகிர்ந்துகொள்ள, முடிவுகள் எடுப்பதில்.
 • அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் உள்ளது என்பதைக் காட்டுவது முக்கியம்: நம்முள் ஒருவராகக் கருதுகிறோம் என்பதைக் காட்ட, நம் நண்பர்களை அறிமுகம் செய்வது, விருந்தாளிகளுடன் கலந்து கொள்வது.

நடந்து கொள்ளும் முறை முக்கியமானது. பெரியவர்களுடன் வாழும் நபர்களே இதை வார்த்தைகளாலும், செயலாகவும் காட்டலாம்.

III. ஒதுக்கி வைத்து விடுவதலின் காரணங்கள் 

 • தினசரி வாழ்வில் இடைஞ்சல் என்று கருதி ஒதுக்கி வைப்பது.
 • பாரம் என்று கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது
 • மறதி இருப்பதால் 
 • நலன் குறைந்ததால்

இவர்களின் நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று  
யோசிக்காமல், மிக எளிதாக எதிர்மறை முடிவெடுப்பது. 
தீர்வு: டாக்டரை சந்தித்து ஆலோசித்து மேற்கொண்டு எப்படிப் பார்த்துக்  கொள்வது என்ற தெளிவு பெறலாம்.

IV. பெரியோர்கள்

வீட்டில், பக்கத்தில் இருக்கும் ஸ்கூல், மருத்துவ மனை, கோயில்களில் தங்களால் முடிந்ததைச்  செய்யலாம்.
நலன் இருப்பதைப் பொருத்து, முடிந்த அளவில் தன்னுடைய திறன்களைப் பகிர்ந்து கொண்டால், மேலே குறித்த மூன்று நலன்களும் நன்றாக இருக்கச் செய்யும்.

 • தன் பேரக்குழந்தைக்கோ, மற்ற குழந்தைகளுக்கு கற்றுத் தருவது
 • பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் கதை சொல்லலாம் (கலாச்சாரம், வீரர்கள் பற்றி, சாதனையாளர்கள்…)
 • கண் பார்வை இல்லாதவர்களுக்கு எழுதி உதவுவது
 • பாடங்களை விளக்கிச் சொல்வது .
 • பாடங்களைப் கேஸட்டுகளில், பதிவு செய்தல்
 • ஹாஸ்டல், அனாதை விடுதி பிள்ளைகளுக்குப் பாடம், பாட்டு, நடனம் கற்பிப்பது.
 • பூக்களைத் தொடுப்பது
 • பூச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது.
 • துணிகளை மடிப்பது
 • குடும்பத்தினருடன் வேலையைச் செய்வது: சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைப்பது.
 • எப்பொழுது சாப்பிட விரும்புகிறார்கள் என்பதின் முடிவை  அவர்களிடமே விட்டு விடலாம்.
 • அவர்கள் அணியும் ஆடையைத்  தானாகவே தேர்ந்தெடுப்பது.
 • டிவி பார்ப்பதா? இல்லையா என்பதையும். நாம் பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

V. “ரிட்டையர்மென்ட் கம்யூனிடி ” ஓய்வு பெற்றவர்கள் இருப்பிடம்

சமீப காலங்களில், வயதானவர்கள் இருப்பிடமாக இது அமைந்து வருகிறது. இந்த இல்லங்களிலும் தங்குவோரின் வாழ்விற்கு அர்த்தம் தர பலவற்றைச் செய்து வரலாம். அன்றாடம் ஏதாவது ஒன்றைக் குறிக்கோளுடன்  செய்வதால் அவர்களின் நலன் மேலோங்கும்.

ரிட்டையர்மென்ட் கம்யூனிடியில் வாழலாம் என்று முடிவெடுப்பது பெரியோர்களே. தங்கள் பிள்ளைகளுக்கு பாரம் இல்லாமல் இருக்கவும், அதே சமயம், தங்களுக்குத் தேவைப்படும் வசதிகளுடன் இடமாக இருப்பதால் இதைத் தேர்வு செய்கிறார்கள். பெற்றோர் தங்களின் முடிவினால் அங்குச் சேர்வதால் பெற்றோர்-பிள்ளைகள் இருவருக்கும், குற்ற மனப்பான்மை இல்லாமல் இருக்கும்.

மொத்தத்தில், வயதானவர்களிடம் பல சொத்துக்கள் உண்டு. அனுபவம் என்ற மிகப் பெரிய சொத்து. வேறொன்று அறிவும், அவர்களிடம் இருக்கும் பல திறன்கள். இதை எல்லாமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், புரிய வைக்கலாம், வாதாடலாம். இதில் எதைச் செய்து வந்தாலும் அவர்களின் நலன் கூடும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எதற்காக வயதானால், பாரம், அல்லது முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து? 

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்        
malathiswami@gmail.com

]]>
old age, சிறை, cell, life, rest, வயதானவர்கள், முதுமை, கொடிது https://www.dinamani.com/health/mental-health/2018/feb/15/how-to-treat-old-people-2864001.html
2853471 மருத்துவம் மனநல மருத்துவம் படிச்சதெல்லாம் பரீட்சையின் போது மறந்து போகிறதா? இதோ ஒரு ஸிம்பிள் ட்ரிக்! மாலதி சுவாமிநாதன் Monday, January 29, 2018 03:53 PM +0530  

படிப்பதை எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம்? 

பரீட்சை என்பது நாம் படித்ததையெல்லாம் சரியாக எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல நம்முடைய கட்டுப்பாட்டின் அடையாளம் அது. எந்த அளவிற்கு நாம் ஒழுக்கமாக இருந்து செயல் பட்டு இருக்கிறோம் என்பதிற்கான அளவு கோள் ஆகும். எவ்வாறு நம்முடைய பொறுப்புகளை கையாளுகிறோம் என்பதை பற்றியும் காட்டும். இதற்கு, வயது வரம்பு என்பது இல்லை.

இப்போழுது தான் உயர் கல்வி நிலயங்களில் பரீட்சைகள் முடிந்துள்ளது, மூன்று மாதத்துக்குப் பிறகு மறுபடியும் தயாராக வேண்டும். இதோ, ஒரு மாதத்தில், பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வு வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டிற்கும் தரும் கவனம் மற்றதற்குக் கொடுப்பதில்லை. அதனாலேயே இந்தப் பரீட்சையை எழுதப் போகிறவர்கள் பல வாரங்களுக்குத் திகில் படம் பார்ப்பது போல் இருப்பார்கள். இப்படி இருப்பது தேவையா?

இங்கு வயது வித்தியாசம் இல்லாமல், எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம் என்பதை விவரிக்கப் போகிறேன். முதலில் வெற்றியை அடையச் செய்ய அதிகமாக விவரிக்கப் படாத சிலவற்றை எடுத்துச் சொல்ல போகிறேன். இதைத் தொடர்ந்து, தெரிந்தவற்றையும், கடைசியில் அன்றாடம் செய்ய வேண்டியவை (ஆனால் பலர் இவற்றை தள்ளிப் போட்டோ, தவிர்த்தோ விடுவார்கள்) பற்றியும் சொல்லப் போகிறேன்.

அம்மா-டீச்சர்-தாத்தா சொன்னதே:

“வாய் விட்டுப் படியுங்கள்” என்றதையே ஆராய்ச்சிகளும் காட்டுகிறது. வாய் விட்டுப் படித்தால், சீக்கிரமாகப் புரியும் என்பதை காட்டி இருக்கிறார்கள். அம்மா-டீச்சர்-தாத்தா சொல்லிக் கொண்டு இருப்பதை ஆராய்ச்சிகளும் உறுதிப் படுத்துகிறது!

எப்படி?: வாய்விட்டுப் படிக்கும்போது, நாம் பாடத்தை பார்க்கச் செய்ககிறோம் அதே நேரம், கேட்டும் கொள்கிறோம். அதனாலேயே நம் கவனம் பாடத்தில் மட்டும் இருக்கும். நன்றாக புரிந்துக் கொள்வோம்.

முக்கியமானதை:
●    வாய்விட்டுப் படித்து, குறித்துக் கொள்ளலாம், அடிக்கோடு போட்டுக் குறிப்புகளை வலியுறுத்தச் செய்யலாம்.
●    படித்து முடித்து, மூன்று நிமிட அவகாசம் விட வேண்டும்.
●    மூன்று நிமிடங்கள் சென்ற பின், பாடத்தைப் பார்க்காமல், ஞாபகப் படுத்தி பார்க்கலாம். இப்படி செய்தால், நாமே கணித்துக் கொள்ளலாம், எந்த அளவிற்குக் கவனம் செலுத்தினோம், புரிந்து இருக்கிறது என்பதை அறிவோம்.
●    ஞாபகத்தைச் சோதனை செய்ய, அதே பாடத்தை நாள் முடிவிலும், மூன்று நாட்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்றும் சோதனை செய்து கொள்ளலாம். ஞாபகம் இருந்தால், நல்ல அறிகுறி!

இப்படிச் செய்தால் நேரம் வீணாகிப் போய்விடும் என்று நினைக்கக் கூடும். இதைப் பின்பற்றி பழக்கமாகியவர்கள் பலனைத் அனுபவித்து இருக்கிறார்! 

கான்ஸெப்ட் மேப் (Concept Map): 

படித்த முக்கியமான ஒரு விஷயத்தை எழுதி அதைத் தொடர்ந்து வரும் தகவல்களை இதனுடன் சேர்த்துக் கொண்டே போகலாம். இதை வரைப்படமாக செய்துக் கொள்ளலாம். தேவைக்கு ஏற்றார் போல், குறிப்புகளை வெவ்வேறு வர்ணத்தில் செய்யலாம். புது விவரங்களை இணைத்துக் கொண்டே இருக்கலாம்.

புதிர் போல், தேடிக் கண்டுபிடித்து சேர்ப்பதால், படிப்பின் மீது பிடிப்பு ஏற்படுத்தும். புதிதாகப் படித்ததை எங்குச் சேறும் என்ற தேடுதலே ஒரு பயிற்சி மையமாகி விடும். புதியதைச் சேர்க்க, பாடங்களை மனதில் பதிய வைக்கும்.  

இவ்வாறு செய்வதால் கற்றுக் கொள்வது பிடித்து விடும். பரீட்சை என்பதற்கு சஞ்சலப் பட மாட்டோம். இது தானே படிப்பின் குறிக்கோள்!

இடைவெளியும் பொறுப்பும்:

படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இடைவெளி தேவை. ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பலன்களை காட்டி வருகின்றனர்!

நாற்பது நிமிடம் படிக்க வேண்டும். படித்ததை ஒரு சிறுகுறிப்பாக செய்து கொண்டவுடன் 5-10 நிமிடம் இடைவெளி கொடுத்துக் கொள்ளலாம். அப்போழுது அடுத்ததாகப் படிக்க போவதைக் கவனம் கொடுத்துப் படிப்போம். 

சிட்டிகீ பொறுப்பு:

இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து படிக்க துவங்குவது படிப்பவரின் பொறுப்பாகும். 5-10 நிமிடம் என்பதை நீட்டிக் கொண்டே போனால், அது சாக்கு-போக்கு, இடைவெளி இல்லை. பரீட்சைக்குத் தயாராகும் விதம் நம் பல குணாதிசயங்களைக் காட்டி விடும்!

இடைவெளி எடுத்துக் கொள்வதே, நாம் படித்ததை நன்றாக உள் வாங்கிக் கொள்ளத் தான். இந்தப் பத்து நிமிடங்களில், குறும்செய்தி, டிவி பார்ப்பது, தவிர்க்க வேண்டியவை. 

கலவையாகப் படிப்பது:

தினம் இரண்டோ, மூன்றோ பாடங்களை படித்தால் கவனம் தளராமல் படிக்க ஒரு வழி என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதே போல், ஒரே வகையான பாடங்களாக இருக்கக் கூடாது. வெரைட்டி இருந்தால், ஆர்வம் கூடும். 

“ஓபன் ஸிஸேமீ”:

ஆ, மாயப் கதவு திறந்தது! இதில், உங்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: இப்படி எதுவாகவும்  இருக்கலாம்:

❏    “நான் பரீட்சையை நன்றாகச் செய்வேனா?” இதுவாகவும் 
❏    “கடைசி நிமிடத்தில், ஞாபகம் வரவில்லை என்றால்”? இல்லை,
❏    “நான் நினைப்பதை விட பரீட்சை இன்னும் கடினமாக இருந்து விட்டால்?” என்று பல இருக்கலாம்.

ஏன் “ஓபன் ஸிஸேமீ”?: பயம், சந்தேகம் வருவதும், இப்படி எல்லாம் யோசிப்பதும் இயல்பு. என்றாலும், இவையே நம் மூளையில் ஓடிக் கொண்டே இருந்தால், இந்த உணர்வுகளில் நாம் மூழ்கிப் போய் விடுவோம். ஃபெயில் என்றே முடிவெடுத்து விடுவோம். படிக்க முயல மாட்டோம். 

வழி என்ன:

மாணவர்கள், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது முக்கியம். நம் அனைவருக்கும் இது பொருந்தும்.

நம் உணர்வுகளைப் பற்றி எழுதுவது ஒரு வழியாகும். எழுத, எழுதப் பதட்டத்திலிருந்து விடுபடுவதை உணர முடியும்.

இதைப் பதட்டத்துடனோ, அவசரமாகவோ, அடித்து புடிச்சுன்னு இல்லாமல் எழுத வேண்டும். 

குறிப்பாக
●    “படித்தேன், ஆனால்…” என்பதைப் பூர்த்தி செய்யலாம்.  
●    “நன்றாகச் செய்ய, நான்….” என்பதை விவரிக்கலாம்.
●    “மறந்து போகிறதே” என்னவென்று பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி எழுதுவது தான் ஜர்னலிங் (Journaling) என்றது. மெதுவாக, எதிர்மறை எண்ணங்கள் குறைய, கவனம் அதிகரிக்கும். 

உணர்வை குறித்துக் கொள்ள, சரியான ஆரம்பம்

படிப்பதற்கு முன்னால், “இப்பொழுது எனக்கு -----” நாம் உணரும் உணர்வை எழுதி விட வேண்டும். அதைத் தொடர்ந்து மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, வெளியே விட்டுப் படிக்க ஆரம்பித்தால், படிப்பது பதியும். 

பயங்களைக் கணக்கிடுவது: 

பதட்டத்தைக் தருவதை குறித்துக் கொள்ளலாம். நமக்கு, ஆதரவு புரியும் பெற்றோர்களுடனோ, டீச்சருடனோ, ஸ்கூல் கொளன்ஸ்லருடனோ பகிர்ந்து கொள்ளலாம். ஆறுதலும், வழியும் தெரிய, மனதைப் பாடத்தின் மீது செலுத்த மிக ஈஸியாக இருக்கும்.

தெரியும், ஆனால் செய்வதில்லை:

இங்கு, பேசப் படுபவை அனைத்தும் தெரிந்ததே ஆனால் பெரும்பாலும் பின்பற்ற மாட்டோம்!

நாமே நமக்குப் பரீட்சை அமைத்தல்:

நாமாக, நமக்கு வினா-விடை, பரீட்சை அமைத்து-எழுதி-திருத்திக் கொள்ளுதல். நம்முடைய கற்றலை நாமே மேம்ப் படுத்திக் கொள்ள இது ஒரு வழியாகும். நம் வகுப்பு பாட புத்தகங்களுடன் மற்ற வளங்களிலிருந்தும் இப்படி நமக்குப் பரீட்சையை அமைத்துக் கொள்ளலாம். 

ஏன்?: நன்றாகப் புரிந்ததையும், புரியாததையும் தெளிவு படுத்தவே! 

மிக முக்கிய  தேவை: உதவி கேட்பது!

பரீட்சை வரும் வேளையில் சந்தேகங்களை கேட்கச் சங்கடமாக இருக்கலாம். “இவ்வளவு நாளா என்ன செஞ்ச?” என்று கேட்பார்கள். அதற்காகவே அச்சம் கொண்டு, தள்ளிப்போட நேர்ந்திருக்கும். சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொண்டால், பாடமும் புரியும், மதிப்பெண்களும் கூடும்! 

“நாளை, அப்புறமாக படிக்கிறேன்”
தெரியாததைத் தள்ளி போடாமல் படிக்க தேவை.

நமக்குக் கடினம் என்று கருதும் பாடங்களை நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பொழுது இதை எடுத்துப் படிக்க வேண்டும். புரியாததை புரிந்து கொள்ள அதிக நேரமாகக் கூடும். தாராளமாக நேரத்தைக் கொடுத்தால், அதன் விளைவு நமக்கே நன்மையைச் சேர்க்கும்! இன்னுமா தயக்கம்?

அவ்வப்போது திறனாய்வு: திறனாய்வு செய்து கொள்வது பழக்கமாக வேண்டும்.

படிப்புடன் டிவி, ஃபோன்:

இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் கவனம் சிதரும். அதிலும், படித்துக் கொண்டே டி.வி. பார்ப்பதும், குறும்செய்தி அனுப்புவதும். இந்த நேரங்களில் நெட் இல்லாமல், தோலைப்பேசியை வேறு அறையில் வைத்தால், அதன் கவனத்தை தவிர்க்கலாம். 

அன்றைய தினத்தின் பாடம் படித்து விட்டால்:

அன்றைய பாடத்தை குறித்து வைத்தது போல், முடித்த பின், கொஞ்சம் வேறு ஏதாவது செய்யலாம். இதில் சில தினங்களுக்கு உடற் பயிற்சிக்காக நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது என்றெல்லாம் செய்யலாம். சில தினங்கள் டிவி பார்க்கலாம், குடும்பத்தினருடன் ஜோக்ஸ் அடித்து, ஜாலியாக பேசலாம், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.

அன்றாடம்…

வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும்.
சுத்தமாக இருப்பது.
குளிப்பது அவசியம்.
எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். 
எட்டு மணி நேரம் தூக்கம் தேவை. நம் மூளை படித்ததை பதிவு செய்ய நேரம் கொடுப்பதால், படித்ததை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். 

பாடம் கற்பது நம்முடைய ஆர்வத்தையும் புரிதலையும் காட்டுகிறது. பரீட்சை என்பது நம் ஆற்றல், சமாளிக்கும் திறன்களை குறிக்கிறது. படிப்பதும், பரீட்சையும் நம் நண்பர்களே!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

]]>
பரீட்சை, அன்றாடம், ட்ரிக், மறப்பது https://www.dinamani.com/health/mental-health/2018/jan/29/படிச்சதெல்லாம்-பரீட்சையின்-போது-மறந்து-போகிறதா-இதோ-ஒரு-ஸிம்பிள்-ட்ரிக்-2853471.html
2847418 மருத்துவம் மனநல மருத்துவம் வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை! மாலதி சுவாமிநாதன் Friday, January 19, 2018 03:11 PM +0530  


நம் வீட்டில், உபயோகமாக இல்லாத பல்வேறு பழைய பொருட்களை பரணையில் வைப்பது பழக்கமே.  இங்கு நான் விவரிக்கப் போவது வீட்டின் “மேல்” பரணை என்பதோ அலுவலகத்தைச் சார்ந்ததோ அல்ல. நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளம்” பற்றி கொஞ்சம் உரையாடலாம். 

நம் “தலை-மனம்-உள்ளத்தை”, வீட்டின் பரணையை போலவே இதையும் நாம் உபயோகிப்பதுண்டு. வித்தியாசம் என்னவென்றால், பல்வேறு பொருட்களை வைத்துக் கொள்ள இது இடம் செய்து கொண்டே போகும்! ஒரு விதத்தில், இப்படிச் சேகரித்து வைப்பது உதவி செய்யும். ஆனால், சில சமயம் இப்படிக் குவித்து வைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழும். அப்பொழுது, அந்த சேமிப்பிலிருந்து சிலவற்றைத் தூக்கி எறிய வேண்டியது மிகவும் அவசியம். 

உலகளவிலும் வருடத்திற்கு சில முறை இதே போல் வீட்டை முழுவதும் துப்புரவு செய்வது வழக்கம். சில வெளிநாடுகளில் குளிர் காலத்தை ஒட்டியும், சில கலாச்சாரங்களில் குறிப்பிட்ட மாதத்தில் என்றும் அமைந்திருக்கிறது. நம்முடைய நாட்டிலும் இதைப் போகி, ஹோலீ, விஷு, புது வருடப்பிறப்பு, எனப் பல பண்டிகைகளுடன் தழுவிய சடங்குகளாகச் செய்கிறோம்.

இடங்களை எப்படி அவ்வப் பொழுது சுத்தம் செய்கிறோமோ, அதே போல் நம்  தலை-மனம்-உள்ளம் ஆகிய சேமிப்பு இடங்களையும் சுத்தம் செய்ய முடியும். நம்முள்ளே ஓடிக் கொண்டிருக்கும் முன்னீடுபாடுகளை, உள் காயங்களை, வடுக்களை, கசப்பான அனுபவங்களை நம்முடைய மேல் மாடியில் வைத்துக் கொள்கிறோம். அவைகளை ஆராய்ந்து, வேண்டாததை அகற்றி விடுவது மனதுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

ஏன் இப்படிக் குவிந்து கிடைக்கிறது? நம் தலை-மனம்-உள்ளத்தில் கடந்த கால நிகழ்வுகளினாலோ, மற்றவர் சொன்ன சொல்லினாலோ இப்படி நடக்கலாம். அதாவது, அந்த கால கட்டத்தில் ஒன்று நடந்து விட்டது, அல்லது சொல்லி விட்டார்கள். நம்மைப் பாதித்தது, மறக்க முடியாததால், மனதில் வைத்துக் கொள்கிறோம். நடந்ததை மறுபடி நினைத்து நினைத்து, பத்திரப் படுத்தி கொள்கிறோம். அதை நினைவூட்டும் படி எதைச் சிந்தித்தாலும் அந்தச் சம்பவம் மீண்டும் உயிர் பெறுகிறது. நாம், அசை போட ஆரம்பிப்போம். நாளடைவில், இதுவே, நம்மை வாட்ட ஆரம்பிக்கும்.

மேல் மாடியில் இருப்பவை: சில உதாரணங்கள்

மனக் குவிப்புகள்  பல விதங்களில் இருக்கலாம்.  நாம் சந்தித்த தருணங்கள் எப்படி இருந்திருக்கலாம், அவைகளால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று சற்று பார்ப்போம்:

●    “அன்று அவர்கள் வாய் வைத்ததால் தான் என் வாழ்வே மாறி, வீணாகி விட்டது” என்று நாம் கணிக்கலாம்.

என்றோ நடந்ததை மையமாக வைத்து, அதுதான் நம்முடைய இன்றைய வாழ்வைத் தீர்மானிக்கிறது என்று நாம் நம்புகிறோம். கேட்ட வார்த்தைகளுக்கு அடிமையாகி விடுகிறோம்? இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அவர்கள் சொல் நம் வாழ்வை எப்படி மாற்ற முடியும்? அவர்களின் சொல்லுக்கோ, அவர்களுக்குக்கோ, அப்படி என்ன சக்தி உள்ளது? அந்தச் சொல்லினால் நம் முயற்சிகள் எப்படி செயலற்றதாக ஆக முடியும்?

●    நம்மை எல்லோர் முன்னிலும் அலட்சியப் படுத்தியது.

அதை நினைக்க நினைக்க, செய்தவரை  சும்மா விடக்கூடாது என்ற உறுதி மேலோங்கலாம்.

●    என்னைத் தாழ்த்தியவர்கள் தவித்தால், மனதுக்குக் குஷி (வெளியில் காட்டிக் கொள்ளாமல்).

நாம் பழி வாங்க நினைப்பது, அவர்கள் நடந்து கொண்டது இரண்டும் ஒற்றுப் போகிறது. இப்படிப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால், நாம் அவர்கள் சொல்லின் / செயலின் பிடியில் சிக்கிக் கொண்டோம் எனலாம். இப்படி நடப்பதற்குக் காரணம், நம்முடைய தன்நம்பிக்கை குறைந்து விட்டதாலும் அதனால் தோன்றிய பயத்தினாலும் ஆகலாம். பழி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு நம் குறைகளை சீர்திருத்தி, மனதை திடப் படுத்திக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.

●    அன்று சொன்னது இன்றும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதே வார்த்தைகள் நிரந்தரமான எதிரொலியாக நீடித்துக்  கொண்டே போவதால், மன அமைதி தொலையத் தான் செய்கிறது. இருந்தும் அந்த வார்த்தைகளை நம்மிடமே பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம். ஏன்?

மேல் மாடியில் வைத்ததால்

அன்று, மனம் தளர்ந்து போனதால் தடுமாறினோம்.  தர்மசங்கடமாக இருந்ததால் மனதைச் சுதாரித்து செயல்பட இயலவில்லை. வார்த்தைகள் மனதைப் பாதித்தது. அதற்குப் பிறகு சமாதானம் பெற என்ன தடுத்தது? இவை, நமக்குள் குமிறல்களாக இருந்து கொண்டே இருப்பதற்கு சில காரணங்கள்: 

●    அன்று நடந்தது நமக்குத் தலை குனிவாக ஆயிற்று. அதைச் சமாளிக்க திண்டாடினோம். வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம், இன்றும்!
●    நமக்கு ஏற்பட்டது இன்னும் யாருக்கெல்லாம் தெரியுமோ என்ற சஞ்சலம் வாட்டலாம். மற்றவரைச் சந்திக்க தயக்கம், வெட்கத்தினால் ஒளிந்து கொண்டு நமக்குள்ளேயே புழுங்கிக் கிடப்போம்.
●    இதைப் பற்றி யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? “நம்மை இன்னும் ஏளனமாகக் கருதிவிட்டால்…” என்ற அச்சம் தடுக்கலாம். பகிர்ந்து கொள்ளாததினால் குமுறல்கள் நமக்குள்ளேயே இருந்து விடுகிறது. 
●    “இவர்களை இப்படியே விட்டு வைக்கக் கூடாது. நலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும்.அவர்களுக்குப் பாடம் கற்பித்தால் தான் என்னுடைய ரணம் ஆறும்”.
●    “பழி வாங்க, சரியான வேளைக்குக் காத்திருப்பேன்…”
●    “நான் பின் தங்கி இருப்பதற்கு அவங்க தான் காரணம்" (தன் குறைபாடுகளை பார்க்காமல் மற்றவர் மேல் பழி போடுதல்).

இதன் விளைவாக நம் உடல்-மனநலம் சோர்ந்து போகிறது. உறவுகள் முறிகிறது, இதனால் எஞ்சி இருப்பவர்களிடமும் விட்டேத்தியாக இருக்கின்றோம். நியாயமா? 

அந்த நிகழ்ச்சி நடந்து வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகி இருக்கலாம். நடந்ததை ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தால் அதை விட்டுத் தாண்டி வர இயலாது. மேலும் தகவல்களை அடுக்கிக் கொண்டே போவோம். 

மேல் மாடியில் வைத்துக் கொள்வதை நியாயப் படுத்த: “எப்படி மறக்க முடியும்?”, “இப்படித் தான் சொன்னார்”, “என்னை மட்டும்...” என்று பல விதமான சுமைகளை ஏற்றிக் கொண்டே போவோம்.  உடைந்த டேப்ரெக்கார்டரை போல அதே சம்பவத்தை ரீவைன்ட் செய்வதால் ரணங்கள், மனவெறுப்பு அதிகரிக்கும்.

ரணங்கள் ஏற்பட்டது அவர்களினால் இருக்கலாம். ஆனால் அதை அதிகரித்தது யார் என்று ஆராய்ந்தாலே, நம் மேல் மாடியை சுத்தப் படுத்த தயாராகி விடுவோமோ?

யாருக்குப் பாதிப்பு?

அன்று நடந்ததை நம்மிடமே பொக்கிஷமாக வைத்துக் கொண்டுவிடுகிறோம். அவர்களின் சொல்லுக்கு வெற்றி மாலை சூட்டி, நம்மிடம் வைத்துக் கொள்கிறோம்.

இவைகளின் சுமை உணர முடிகிறது. இருந்தும் ஏன் அப்படியே விட்டு விடுகிறோம்? அதனால் வரும் அழுகை, மனபாரம், துவண்டு போவது, எரிச்சல் எல்லாம் திரும்ப திரும்ப அனுபவிக்க, பழக்கமாகி விடுகிறது என்பதாலா?

நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பதால் அதன் வீரியம் அதிகரித்து விடுகிறது. நாளடைவில், அது தோற்றத்தில் பெரிதாகி, மன வடுவாக மாறி விட நேரிடலாம். 

இந்த மேல் மாடி சேமிப்புகளையே யோசித்துக் கொண்டு இருந்தால், இதனால், கோபம் வரச் செய்யலாம், துவேஷமுமாக இருக்க நேரிடலாம், நம்மைப் பழிவாங்க தூண்டுவதும் ஆகும். இப்படிச் செய்வதால், “தலை-மனம்-உள்ளம்” எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அது நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மொத்தத்தில், வெறுப்பு, மனக்கசப்பு, தன்னிரக்கம் அதிகரித்து விடும்.

எச்சரிக்கை மணி

ஒன்று, இரண்டு என்று இல்லாமல் பலவற்றை இப்படி வைப்பதால் அதைத் தாங்க முடியாமல் நம் உடல் வலிகள் மூலமாக முதல் எச்சரிக்கை மணி அடிக்கும். 

இந்த வலிகளுக்கு டாக்டரை ஆலோசிப்போம். செய்யும் பரிசோதனைகளில் எல்லாம் “நார்மல்” என்று வரும். அப்படியும் நாம், மேல் மாடியைச் சுத்தம் செய்யாமல் இருந்து விட்டால், பதட்டம், துக்கம், கோபம், அழுகை, சாப்பிடப் பிடிக்காமல், தூக்கம் சரியாக இல்லாமல், சோர்வாகவே இருப்பது போல் தோன்றும். அடுத்த கட்டமாக மன உளைச்சலின் அறிகுறிகள் ஆரம்பமாகும். விளைவாக, சுயப் பச்சாதாபம் அதிகரிக்க, காலப் போக்கில் தன் மேல் வெறுப்பாக மாறக் கூடும்.

நமக்குத் தற்காப்பாக ஒன்றும் செய்து கொள்ளவில்லை என்று நம் மேல் கோபத்துடன், நம்மை நாமே தாழ்வாக பார்க்கவும் செய்வோம். ஆனால், நம்மை இந்தப் பரிதாப நிலையில் பார்க்கப் பிடிக்காததால், இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வுகள், கதாப்பாத்திரங்கள்-உணர்வுகளை எதிர்மறை எண்ணங்களுடன் பார்க்கத் தோன்றும்.

நாளடைவில் கூடவே நம்முடைய சில கொள்கைகளும் மங்கலாகித் தளர நேரிடலாம். உதாரணத்திற்கு, அதே வார்த்தைகளை, நிகழ்வுகளை நாம் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தால் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலோ, பார்த்தாலோ பொறாமை ஏற்படும். அவர்களைப் பழி வாங்கத் தோன்றும். நம்முடைய நல்ல குணங்கள் நழுவாரம்பிக்கும்.

நம் எண்ணங்கள் இப்படி இருந்தால், அவர்கள் சொன்னது சரி இல்லை, நியாயம் இல்லை என்று சொன்ன நாம், நமக்குள் குமுறி பொரிந்து அவர்களைப் பற்றி தாழ்வாக நினைப்பது, பேசுவது, சாபம் இடுவதுமாக இருந்தால், நம் கொள்கைகள் குலைந்து விட்டதை எப்படி நியாயப் படுத்த முடியும்?

மறுபடியும் அவர்களுக்கே வெற்றி! நம்மைத் தாழ்த்தி, வீழ்த்தி விட்டார்கள்!

ஏன் இந்த நிலைமைக்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கிறோம்? மன்னிக்க மனம் விடவில்லையா? இல்லை மறக்க நாம் தயாராக வில்லையா? “மன்னிக்க நான் என்ன மஹானா” என்ற எண்ணமா?

நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளத்தை” சுத்தம் செய்கிறோம் என்றால் அது யாருக்காக?  யாருக்குப் பாதிப்பு? நாம் நம்முடைய நலனுக்காகத்தான் செய்கிறோம் என்ற தெளிவு வந்துவிட்டால், “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்வது சாத்தியமாகும், சுலபமும் ஆகும்.

சுத்தம் செய்ய:

நம் “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்ய, கண்டிப்பாக நமக்கு மனதில் பலம் தேவை.  தாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்தால் தான் நமக்கு உறுதி வரும், நாமும் முயற்சிப்போம். மனோ தைரியம் உடன் இருந்தால் மன உறுதி கூடும். இந்த இரண்டுமே கைகோர்த்து கொண்டால், நமக்கு உபயோகமே! இல்லாததையும், தேவைக்கு மிகுதியான விஷயங்களையும், மனக்கசப்பை அதிகரிக்கும் முன்னீடுபாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, வெளியே எறிந்து விடத் தயாராவோம். செய்யவும் செய்வோம். 

மாற்றம் கொண்டு வரப்போகிறேன் என்ற எண்ணமே மாற்றத்தின் முதல் படி. மாற்றங்கள் கொண்டு வர எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோமோ அதைப் பொருத்து தான் மாற்றங்கள் ஏற்படும். எக்காரணத்திற்கோ நாம் ஆயத்தமாக இல்லை என்றால் நாம் ஜுவித்து இருந்தும் ஜுவன் இல்லாதது போல்.

நம் மேல் மாடியில் நம்மைத் துன்புறுத்துவதை சேகரித்து வைத்துக் கொண்டே வந்தால், வரும் சந்தர்ப்பங்களை பார்க்காமல் இருந்துவிட நேரிடலாம். வாய்ப்புகள் நம்மைக் கடந்து செல்வதையும் கண்டறிய மாட்டோம். 

நம் தலை-மனம்-உள்ளம் மூன்றையும் அவ்வப்பொழுது சுத்தப் படுத்திக் கொண்டால், புது வழிகள் தென்படும். ஒவ்வொரு அனுபவம், ஆச்சரியங்களிலிருந்து, திருப்பங்களிலிருந்து, துணிவான முயற்சிகளிலிருந்தே நமக்கு ஆழ்ந்த அறிவு, தாங்கும் தன்மை பிறக்கும். 

என்றோ நடந்ததை, நம்முடைய இன்றைய வாழ்வை நிர்ணயிக்க விடுகிறோம், உடல்-மனநலம் கெட! இதைப் புரிந்து கொண்டு, மாற்றத் தீர்மானிப்பதே, நலமாவதின் முதல் கட்டம்! சிந்திப்பீர்!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்    
malathiswami@gmail.com

]]>
SAD, memories, old, ஞாபகங்கள், சோகம் https://www.dinamani.com/health/mental-health/2018/jan/19/erase-your-unwanted-old-memories-2847418.html
2843647 மருத்துவம் மனநல மருத்துவம் தந்தி அடிப்பது போல ‘குட்’ ‘சூப்பர்’ ‘நைஸ்’ என ஒரே வார்த்தையில் ஃபீட்பேக் கொடுப்பவரா நீங்கள்? சரிதானா அது? மாலதி சுவாமிநாதன் Friday, January 12, 2018 03:36 PM +0530  

நம் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால், அது, நாம் அனைவருமே எல்லாவற்றிற்கும் நம் அபிப்ராயத்தைத் தெரிவிப்பதாகும். கருத்துக்களைத் தெரிவிப்பதும், ஃபீட்பேக் கொடுப்பதும் இதில் அடங்கும். இவற்றை மற்றவரின் மேம்பாட்டுக்கு ஒரு கருவியாக உபயோகிக்க முடியும். 

யாரிடம் கருத்தை தெரிவிக்கிறோமோ, அதைச் சொல்கின்ற முறையில் சொன்னால், அவர்களை ஊக்கப்படுத்தி, எதைச் செய்து கொண்டு இருக்கிறார்களோ அதைக் கவனமாக செய்ய உதவிட முடியும். கருத்தைத் தெரிவிக்கும் விதத்தினாலேயே, அறிவு வளர வாய்ப்பை அமைத்து, கூடவே ஆற்றலும் பெருகச் செய்ய முடியும். மாறாக, ஃபீட்பேக் கொடுக்கும் விதத்தில் செய்பவரின் ஆர்வத்தைப் பூஜ்யமாக்கவும் முடியும்.

ஒற்றை வார்த்தை ஃபீட்பேக் பொதுவாக, கருத்து தெரிவிப்பவர் தந்தி அடிப்பது போலச் சுருக்கமாக, ஒரு வார்த்தையில் ஃபீட்பேக்கை சொல்லி நிறுத்திக் கொள்வதுண்டு. இதில், நாம் சொல்லும் “குட்”, “சபாஷ்”, “புவர்” ,”எக்ஸலென்ட்”, பேஸ்புக்கில் போடும் “லைக்” எல்லாம் அடங்கும். 

ஏன், எதற்கு “குட்”? எதைக் குறிக்கின்றது “புவர்”? எதை வைத்து “எக்ஸலென்ட்” தீர்மானிக்கப் பட்டது? எதனால் “லைக்” போட்டார்கள்? என்பது எல்லாவற்றையும் தாமே யூகித்துக் கொள்வதா?  

கருத்தைத் தெரிவித்தவர்கள், எதைக் குறித்து இப்படிச் சொன்னார்கள்? எதை யோசித்தார்கள் என்று எப்படித் தெரிய வரும்? இந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு என்னவென்று புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் தெரிவித்த ஃபீட்பேக்கோ, கருத்தோ என்ன தகவலை தெரிவிக்கிறது? 

கருத்து தெரிவிப்பதினால் வெவ்வேறு பாதிப்புகள், தாக்கங்கள் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் தான் நம்மால் கருத்து என்ற கருவியை பயனுள்ளதாக மாற்ற முடியும். 

இதற்காக, எங்கு, எதைச் செய்தால் பயனுள்ளதாக ஆக்க முடியும் என்றும், எவையெல்லாம் நேர் எதிராக நேரிடும் என்பதைப் இங்குப் பார்க்கலாமா?

செய்வதைக் குறித்து கருத்து தெரிவித்தல் நாம், ஒருவர் செய்ததை பார்த்தோ, படித்தோ நம் எண்ணத்தைத் தெரிவிப்பதுண்டு. இது, செய்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சொன்னால் அதை பீஃட்பேக் என்று கூறப்படும்.

பீஃட்பேக் உபயோகமாக இருக்க, கருத்து தெரிவிக்கும் பொழுது, செய்பவர் செய்து கொண்டு இருப்பதை மையமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள்
செய்ததில் எது சரியாக இருக்கின்றது என்று குறிப்பது மிக அவசியமாகும். வித்தியாசமாகச் செய்ததைத் தழுவிய தகவல்கள் பற்றிய ஃபீட்பேக் அளிப்பதால், ஊக்குவிக்கவும் செய்யும், தெளிவும் ஏற்படும்! நாம் அவர்கள் செய்வதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதும்  தெரிய வரும். மறுபடி அதைச் செய்யம் போது, அந்த வித்தியாசத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று முயல்வார்கள், வேறு புது மாற்றங்கள் கொண்டு வரவும் முயற்சி செய்வார்கள்.

அதே போல், அவர்கள்  செயல்படும் விதத்தைப் பற்றிய தகவலை எடுத்துச் சொல்வதாலும் அவர்கள் மேலும் தெளிவு அடைவார்கள். சிலாகிப்பதிலும், குறை காண்பதிலும் மட்டும் அல்ல. 

அவர்கள் இந்த முறை வேறு என்ன வெற்றி தரும் வழிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள் என்று எடுத்துச் சொல்வதும் அடங்கும். இப்படி ஃபீட்பேக் தெரிவிப்பது ஒரு சிறந்த கருவியாகிறது. அதனால் தான், ஃபீட்பேக் தெரிவிப்பதில் ஊக்கப் படுத்துவதும், மனந்தளர்வதும் இரண்டுமே அடங்கி உள்ளது என்று சொல்லலாம். இதைத் தெரிவிக்கும் விதத்திலும், தெரிவிப்பவர் காட்டும் அக்கறையிலும் இது வெளிப்படுகிறது.

ஃபீட்பேக்கினால் ஈடுபாட்டை இழக்க வைக்க முடியும்!

சில நிலைகளில், நாம் கருத்து தெரிவித்த விதத்தினால் செய்பவர் ஈடுபாட்டை இழக்கக் கூடும். சில நேரங்களில், நாம் செய்பவரை மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டே இருப்பதால் இது நேரிடலாம். இல்லையேல், கண் சிமிட்டாமல், மிகக் கூர்ந்தோ, மிகப் பக்கத்திலிருந்தோ அவர்களைக் கவனித்து, கருத்தை எடுத்துச் சொல்லும் பொழுதும் இப்படி ஆகலாம். 

இப்படி நிகழ்ந்தால், செய்பவருக்கு, நடுக்கமும் அச்சமும் கூடி விடுவதற்கான சந்தர்ப்பமாகலாம். இதனால் தடுமாற்றம் வரலாம். இதன் விளைவாக, தாம் செய்வதின் மீது சந்தேகம் சூழ்ந்து கொள்வதால், செய்வதை நிறுத்தியும் விட நேரிடலாம். இதனாலேயும், மிக நுண்ணிப்பாகவும், துல்லியமாகவும் கவனித்துச் சொல்லும் கருத்தை எடுத்துக் கொள்ள மனம் ஒப்பாமல் போகலாம்.

அதே போல், கருத்தைத் தெரிவிக்கும் பொழுது, அவர்களின் வேலையைப் பற்றி சார்ந்ததாக இல்லாமல் அவர்களின் குணாதிசயங்களை பற்றி விமர்சனம் செய்தால், அது வேறு திசையில் போகக் கூடும். அதாவது “நீ எப்பவும் ஸ்லோ”, “எது செஞ்சாலும், தப்பாகச் செய்யற” என்பதெல்லாம் நபரைக் குறிப்பதாகும். அதுவும் குறிப்பாகக் குறைபாடுகளை பற்றி இருப்பதால் அது மன வருத்தத்தைத் தரும். ஏனெனில், இந்த மாதிரியான ஃபீட்பேக்கில், செயலைப் பற்றி மட்டுமின்றி, செய்பவரையே நமக்குப் பிடிக்க வில்லை என்றே தோன்றி விடும்.

மற்றவருக்குக் கருத்து தெரிவிக்கும் பொழுது, “இதை நீ இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று சொல்லி விட்டால், ஒரு தடை போடுவது போல தோன்றி விடலாம். அதாவது, அவர்களை நம் எண்ணத்தின் படி செய்ய வேண்டிய நிலையில் கொண்டு வருவது போல் ஆகிவிடும். இதனால் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்க வேண்டி நேரிடும். இப்படிச் செய்வதில், அவர்களின் சுதந்திரம் தடைப் படுவதால் அடிமை சாயல் தோன்றிவிடும். இதன் விளைவாக, சிலர், சாவி கொடுத்த பொம்மை போல், சொன்னால் மட்டும் செய்வார்கள். மற்றவர்களோ, சுரம்  இல்லாமல் இயங்குவார்கள்.

சொல்லுவதை, மனக்கசப்பு இல்லாமல், மனம் புண்படாத விதத்திலும் தெரிவிக்க முடியும்.

பயனுள்ள வழிமுறைகள்

தகவல்கள் கிடைக்கும் மையங்களைப் பற்றி நமக்குத் தெரிந்ததை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்று நினைத்தால் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.

அவர்கள் செய்து வரும் வேலையின் பலன்களை மதிப்பிடும் விதம் ஏதேனும் இருக்கும். அதைப் பற்றின விவரங்களை அவர்களுக்கு விவரிக்கலாம். அப்பொழுது அவர்கள், தாங்கள் செய்வதை தாமாக சுதாரித்துக் கொண்டு, செய்யும் வழிகளை நன்றாக உருவாக்கிக் கொள்ள முடியும். 

அதாவது, வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக நாமே நாம் செய்வதற்கான கருத்தைக் கணித்து சரி செய்து கொள்ளலாம். தாமாகவே, செய்வதை உன்னிப்பாகக் கவனித்து, ஆராயும் முறையும் சமீப காலங்களில் பிரபலமாகி வருகிற ஒன்றே!

இப்படிப் பகிர்ந்து கொள்வதனால் திறமைகள் வலுப்பட்டு, தெரியாததைத் பற்றித் தெளிவு பெற்று, செய்வது நன்றாக அமையும்! 

நம் பாதையை பற்றிப் புரிந்து கொள்ள, நாம் ஒவ்வொரு கட்டத்திலும் சிந்திக்க வேண்டும். நாமே நமக்கு  ஃபீட்பேக் கொடுப்பதால், “நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன்?”, “எப்படி?”, “எந்த வழியை உபயோகிக்கிறேன்?”, “அடுத்து, என்ன செய்யலாம்?” என்பதற்குப் பதில் தெளிவாக இருக்கும். இப்படி இருந்து விட்டால், நம்மை நம் இலக்கின் அருகில் அழைத்துச் செல்லும். இதனுடன், அடுத்தவரின் ஃபீட்பேகும் நமக்கு உபயோகமாக இருக்கும்.

இது தான் நம் குறிக்கோள் என்று உறுதியாகத் தெரிந்து, கருத்துக்கள் வரும் தோரணையில், நாம் நோக்கத்தை எந்த அளவிற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்.

மெட்டா காக்நிஷன் (Meta cognition)

மெட்டா காக்நிஷன் (Meta cognition) என்பது, நாம் நமக்கு வரும் ஃபீட்பேக்கை புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் விதம் என்று சொல்லலாம்.

நமக்குக் கிடைக்கும் கருத்துக்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனை முறைகளைப் பற்றி நாமே ஆராய்ந்து, அதை மேலும் சிறப்பாக்க முடியும். அதாவது, நம் சிந்தனைகளை நாமே ஆராய்வதால், நமது குறைகள், புரியாத விஷயங்களை அடையாளம் கண்டு, நாமாக யோசித்து வழி செய்து கொள்வோம். நம்மை மேம்படுத்திக் கொள்ள, மேலும் உழைத்து, பாதையை வகுத்துக் கொள்வோம். இதனால், நேரத்தையும் நன்றாக உபயோகிப்போம். நாம் செய்வதை பார்த்து, அதன் உபயோகத்தையும், விளைவுகளையும் பார்த்து, மற்றவரும் பின்பற்றுவார்கள்!

ஃபீட்பேக் கொடுப்பதின் பயன், சொல்லின் வன்னத்திலும், தேர்ந்தெடுக்கும் வார்த்தையைப் பொருத்து இறுக்கு. இதிலிருந்தே, இது, எந்த அளவிற்கு மற்றவருக்கு உபயோகப் படும் என்பதும் நிர்ணயமாவதும் எனலாம்.

கருத்துச் சொல்வதின் மூலம் மற்றவர்களை எப்படி ஊக்கப் படுத்தி மேலும் வளரச் செய்யலாம், எப்படி உதவலாம் என்பதைப் பார்த்தோம். இதே போல் பிசக்கு சொல்லும் கருத்தினால் மற்றவர்களைக் கீழ்ப் படுத்தவும் முடியும். இனிமேல் எந்த விதத்தில் கருத்து தெரிவிப்பது, ஃபீட்பேக் கொடுப்பது என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

]]>
metacognition https://www.dinamani.com/health/mental-health/2018/jan/12/metacognition-2843647.html
2840066 மருத்துவம் மனநல மருத்துவம் நம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்?  மாலதி சுவாமிநாதன் Saturday, January 6, 2018 02:53 PM +0530  

2018-ல், இது வரையில் நம் நடைமுறையில் இல்லாததைக் கொண்டு வர முயற்சிக்கலாமா?

புதிய வருடத்தை புதிய எண்ணங்களுடன், புதிய செயல்களுடன், புதிய விதத்தில் ஆரம்பிப்பது என்பது வழக்கமாகச் செய்வதே. “இதை எல்லாம் இந்த வருடம் செய்தே தீருவேன்” என்ற முடிவு எடுப்பதும் இதில் அடங்கும். எதைச் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அதை 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் நிலைத்து விடும் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம்.

மாற்றத்தை நாம் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தே துவங்க வேண்டும் என்று  நிர்ணயித்து, உறுதியாக இருப்போம். அதனாலேயே, டிசம்பர் 31வது மாலை நெருங்க, இன்னமும் சுருசுருப்பு கூடிவிட, ஒரு பரபரப்புடன் இருப்போம். நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது அதனுடன் வரும் ஆவலால் தவிப்பூட்டும் சேர்ந்து விடும். செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வதும், நம்மை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பது என்ற அணுகுமுறையும் மிக நல்ல விஷயமே!

புது வருடத்தின் ஆரம்பக் காலத்தில் இன்னொரு விஷயமும் வருவதுண்டு. வருடப்பிறப்பை முன்னிட்டு, நாம் எந்த அளவிற்குச் சந்தோஷமாக இருக்கலாம் என்பதைக் குறித்தே விளம்பரங்கள் காட்டப் படுகிறது. வித விதமாகப் பொருட்கள் நமக்கு மிக அத்தியாவசியம் போல், நம் மனது வசப்படும் அளவிற்குத் தகவல்கள் விளம்பரங்களில் அமைக்கப் பட்டிருக்கும். இது, “பர்சுவேஸிவ் தின்கிங்” (Persuasive Thinking) என்பதைச் சார்ந்தது, அதாவது நம்மை மறைமுகமாகத் தூண்டிவிடுவது என்று வர்ணிக்கலாம். அதன் விளைவாக, நாம் இவற்றை வாங்கி உபயோகப் படுத்துவதும் உண்டு. விளம்பரத்தின்  வெற்றி, நாம் ஈர்க்கப் படவிடுவதிலேயே!

ஒரு விதத்தில், நமக்கு என்று வாங்கி, நம்மை அலங்கரித்துக் கொண்டு, புது வருடத்தை வரவேற்பது நமக்கு இனிய தருணங்களாகும். இன்னொரு விதத்தில், வருட ஆரம்பத்திலேயே நம்மைச் தன்னலம் தூண்டி விட, நாமும் பர்சுவேஸிவ் தின்கிங்கினால் அதை ஏற்றுக் கொள்கிறோமே என்பதும் நினைத்துப் பார்க்க வேண்டியவையே. 

இதை ஒட்டினார் போல், அன்றைய தினத்தில், தொடர்ந்து எதைச் செய்தாலும், நமக்கே என்று மட்டும் என்று எண்ணி விடக்கூடும். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்ய, மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதைப் பற்றி யோசிக்கக் கூட மனம் மறுத்து விடக்கூடும்.

இதனுடைய பிரதிபலிப்பை நாம் புது வருடம் பிறக்கும் வேளையில் பார்க்க முடிகிறது. பலர், வெளியில் கவனமின்றி வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டி,  கூச்சலிட்டு, தாம் படும் சந்தோஷத்தை உலகுக்கே காட்டுவதை பார்க்கிறோம். இது மருத்துவ மனை அருகிலும் நடக்கிறது. பறவைகள், சத்தத்தில் பயந்து, விழித்துக் கலங்கி பறந்தால் என்ன, விலங்குகள் அரண்டால் தான் என்ன என்று கண்டு கொள்வதில்லை. இதில் பகிர்ந்து கொள்வது கடுகளவாகும். இப்படிச் செய்வது, புத்தாண்டு என்ற போர்வையில் போடப்படுகிறது. 

எல்லா விதத்திலும் அப்படியே இயங்கினால் இது சுயநலத்தையே காட்டும். இந்த நிலையினால் கிடைக்கும் மன நிறைவு மிகச் சிறிய காலமே நிலைக்கும். கொஞ்சம் வித்தியாசமாக, மற்றவர்களுடன் நம் பொருட்களையோ, சந்தோஷத்தையோ பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம்.  நம் தேவைகளை தாண்டி யோசித்துச் செய்வதில் வரும் அனுபவம், சந்தோஷம் மிக அலாதியானது. அதனால் தானே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”! இதை அனுபவிக்க வில்லை என்றால், இதோ ஒரு வாய்ப்பு.

பகிர்ந்து கொள்வதில் பல விதங்கள் உள்ளன. நமக்கு என்று வாங்கிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்காகத் தேடி, பார்த்து வாங்குவதில் வருவதும் இனிய சுகமே! யார் சொல்லியோ, கேட்டோ, படித்தோ, நமக்கு அடுத்தவர்களின் அடிப்படைத் தேவைகள் இதுதான் என்று தெரிய வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒன்றைத் தரமுடியும். பெரிய-சிறிய தொகையோ, பொருட்களோ என்பதில் இல்லை, கொடுப்பதை முழு மனதுடனும் விருப்பத்துடனும் கொடுப்பது தான் மிக முக்கியம். இது, பண்டிகைகளுக்கு உடை, இனிப்பு தருவது போலவே ஆகும். நாம் மனதார பங்களித்துக் கொள்வதின் இனிய உணர்வை உணரவே பண்டிகைகளுக்குக் கொடுக்கும் பழக்கமே. செய்யச் செய்ய, பகிர்ந்து கொள்வது ஒரு பழக்கமாகிவிடும்!

கொடுப்பது பழகி வர, ஒரு சிறு வித்தியாசத்திற்கு, யாருக்குக் கொடுக்கிறோம் என்று அடையாளம் தெரியாமல்,  அவர்களுக்கும் நாம் யார் என்று காட்டாமல் செய்யலாம். இந்த அனுபவமும் மிக இனியதாகும். செய்து பாருங்கள், வெகு நாளைக்கு மனநிறைவு நிறைந்து இருப்பது, நிச்சயம்!

அதே போல், நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதும் நம் மனதின் விசாலத்தைக் காட்டும். கிழிந்து கந்தலான பிறகு கொடுப்பதில் பெரிய விஷயம் இல்லை. ஒரு ஸூஃபி மகான் சொன்னது போல் “என்னிடம் கொஞ்சம் இருந்தாலும், இருப்பதிலிருந்து மற்றவருக்கும் கொடுக்கும் மனது எனக்கு இருந்தால் போதும்” என்று. 

கொடுப்பதில் வரும் சந்தோஷத்துடன், பெற்றுக் கொள்பவர்களின் முக பாவத்தில் பிரகாசிக்கும் ஆனந்தம் நமக்கு மன நிறைவை அளிக்கிறது. அது மட்டுமல்ல நம்மால் இன்னொருவரின் தேவையை உணர்ந்து, செயல் பட முடிந்தது என்பது திருப்தி அளிக்கிறது.

இதனுடன், எந்த அளவிற்கு நாம் பவ்யமாக கொடுக்கிறோம் என்பதிலும் முக்கிய பங்கும் உண்டு. இப்படி இயங்குவதால், நாம் வாழ்வதற்கான ஒரு அர்த்தம் புரிய வரும்.

மற்றவரின் கவனம் நம்மேல் வருவதற்காகத் தான் செய்து வருகிறோம் என்றால் அதை வாங்கிக் கொள்பவர்கள் கூச்சத்துடன் பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் இதில் முழுக்க முழுக்க கர்வமே தலை தூக்கி நிற்கும். 

அதே போல், எக்காரணத்திற்கோ “அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள்?” என்பது எண்ணத்தில் நுழைந்து விட்டால், சந்தோஷம் போய், பேரமாகிவிடும். நாம் செய்வது மற்றவரின் புகழுக்காகவோ, கவனத்திற்காகவோ என்று இருந்து விட்டால் இதில் சுயநலம் கலந்து நல்லெண்ணம் மறைந்துவிடும்.

ஒரு செயலில் ஈடுபடும்போது அதை முழுமனதோடு, நன்றாகச் செய்ய வேண்டும் என்றிருந்தால், அது மேலோங்கும். ஆரம்பத்திலேயே விளைவுகளின் எண்ணிக்கையைத் தொடங்கினால் நம் சிந்தனை முடிவை நோக்கி இருக்குமே தவிர செய்வதில் இருக்காததால், செய்வது கடினமாகும். 

அதே போல், “என்ன” நோக்கத்துடன் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி கவனம் செலுத்தினால் பயன் அடையலாம். நாம் செய்வதில் எந்த விதமான உள் அர்த்தமும் இல்லாமல் இருந்தால், சந்தோஷம் தானாக வரும், நீண்ட காலம் நல் உணர்வைக் கொடுக்கும். அதிலும், நமக்கு அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவுவது இதில் அடங்கும்.

இந்த வருட ஆரம்பத்தில், “இதைச் செய்யலாம்” என்ற பட்டியலில் நம்மால் பலர் சந்தோசப்படச் செய்வதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம்முடன் இருப்பவர்களின் சந்தோஷத்தை எப்படி எல்லாம் ஊர்ஜிதம் செய்ய முடியும் என்பதையும் சேர்த்து கொள்ளலாம். அந்நியர்களுக்கும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் கவனமாக செய்து வந்தால், வருகிற பன்னிரண்டு மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கச் செய்யும்!

“எதை மாற்ற? ஏன்? எப்படி மாற்ற வேண்டும் புரிந்தது. இனி, ஆக்க்ஷன் தான்!”        

மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

]]>
resolution, new year, january 1, start https://www.dinamani.com/health/mental-health/2018/jan/06/new-year-with-resolutions-2840066.html
2835815 மருத்துவம் மனநல மருத்துவம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அழுதால் நமக்கும் கண்ணில் நீர் வர இதுதான் காரணம்! ‘மிரர் நியுரான்ஸ்’ மாலதி சுவாமிநாதன் Saturday, December 30, 2017 04:37 PM +0530  

வருட முடிவில் நாம் எல்லோரும் வழக்கமாகச் செய்வது வருடத்தின் நிகழ்வுகளை புரட்டிப் பார்த்துக் கொள்வதே!  இந்த 12 மாதங்களில் நாம் உணர்ந்த பல விதமான சந்தோஷம் தரும் தருணங்களை நினைத்துப் பார்க்கையில், நம் மனதைத் தொட்ட பல ஞாபகங்கள் மறுபடி அப்படியே அச்சு அசலாக உணர்வது போலத் தோன்றும். அப்பொழுது உணர்ந்த அதே குதூகலமும், புத்துணர்ச்சியும் திரும்ப அப்படியே உண்டாகும்! இப்படித்தான் என்று ஆராய்ச்சியிலும் உறுதி செய்திருக்கிறார்கள்.

அதாவது, ஃப்ளாஷ்பக்கில் தோன்றும் சந்தோஷப் படும் நேரங்களை, நம் மூளை அதை நாம் அப்பொழுது எப்படி அனுபவித்தோமோ அது போலவே மறுபடி தத்ரூபமாக உணரச் செய்யும். ஒரு சில நிமிடங்களுக்கு, அப்பொழுது இருந்த நிலைக்கே சென்று விடுவோம். நம் ரசாயனங்களும் இதற்கு ஏற்றார் போலவே சுரக்கும்.

இதன் இன்னொரு வடிவமும் உண்டு. நம்மைச் சார்ந்தவர்கள் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று அறிந்ததுமே, அது நமக்கே கிடைத்தது போல் பூத்துக்குலுங்கி ஆனந்தப்படுவோம். 

இதே போல் வெவ்வேறு அனுபவங்கள் நமக்கு மனச் சந்தோஷத்தைத் தரக்கூடும். பல முறை, புத்தகத்தில், சினிமா, நாடகங்களில் வரும் கதாப்பாத்திரங்களின் அனுபவங்களுடன், சூழ்நிலைகளுடன் நாமும் ஒன்றிவிடுவோம். அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதாப்பாத்திரத்துடன் நாமும் சிரிப்பதும், அழுவதும், சந்தோஷப் படுவதும் உண்டு!

இதற்கான காரணம், “மிரர் நியுரான்ஸ்” என்பதால் தான். இந்த நிலையில் இருவரும் (கதாப்பாத்திரம் + பார்வையாளர்கள்/படிப்பவர்கள்) ஒன்றிணைந்து அனுபவிப்பது போல் ஆகும். அதாவது காட்சிகள் அங்கே நடந்து கொண்டிருந்தாலும், இங்கே நமக்கு அதே நிலை தொற்றிக் கொண்டு விடுகிறது.  இருவருமே அதே உணர்ச்சிகளைக் காண்பிப்பார்கள். இது, கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் இருப்பதாலேயே இதை “மிரர் நியுரான்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

விளையாட்டிலும் இதைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டு களத்தில் அவர்கள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து ஆனந்தப் பட, பார்வையாளர்களான நாமும் அதே அளவுக்குச் சந்தோஷப் படுவோம். இதுவும் “மிரர் நியுரான்ஸ்”! 

சந்தோஷம் எத்தனை எளிதானது! நாம்தான் அவ்வப்போது, இதை வேறு ஒரு விஷயத்துடனோ, செயலுடனோ கோர்த்து விடுகிறோம். அதாவது இதைச் சாதித்தால் தான் சந்தோஷப் படுவேன், இது மட்டும் கிடைத்து விட்டால் அல்லது நடந்து விட்டால் தான் எனக்குச் சந்தோஷம் என்று முடிவு செய்து கொள்கிறோம். இப்படி இருந்தால் நாம் சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.

இப்படிச் செய்வதால் நாம் சந்தோஷத்தை பின்னோடியாக செய்து விடுகிறோம். நிஜத்தில், சந்தோஷம் என்பது முன்னோடி. நாம் முடிந்த வரையில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொண்டால், தானாகவே நன்றாக இயங்குவோம். புத்துணர்ச்சி கூடி, செய்யும் எல்லாவற்றையும் கவனித்து செய்வோம், வெற்றி பெற வாய்ப்பு அதிகரிக்கும். சந்தோஷம் முன்னோடியாக இருந்தால் நிலைத்து நிற்கும்!

இதன் பயன்களோ கணக்கிலடங்காது! இப்படி மனச் சந்தோஷத்துடன் செயல்பட, எதை நாம் செய்கிறோமோ அது கடினமாக தோன்றவே தோன்றாது. அதற்குப் பதிலாக பல மடங்கு பலம் வந்தது போல் தோன்றும். ஆனந்தமாக ஆழ்ந்து செய்வதால், நேரம் கடந்து போவதும் தெரியாது, சோர்வும் தெரியாமல் செயல்படுவோம். இப்படி மும்முரமாக, ஆழ்ந்து செயல்படும் நிலையில் இருப்பதற்கு “ஃப்ளோ” (flow) என்ற பெயர் சூட்டப் பட்டிருக்கிறது!

சந்தோஷம் நிலைத்து விட்டாலே, எல்லாவற்றையும் நாம் பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்ப்போம். இதனாலேயே பரந்த மனப்பான்மையும் சேர்ந்துவிடும். நாம் பல முறை கேட்டிருக்கிறோம் - “சந்தோஷம் என்பது உன் கையில்” என்று. ஆராய்ச்சியும் இதைக் காட்டி இருக்கிறது: 80% சந்தோஷம் நம்முள்ளிலிருந்தே, 20% மற்றவற்றிடமிருந்து. ஒரு வேளை நாம் தடுமாறினாலும் சற்று முன் சொன்னது போல், கடந்த கால சந்தோஷங்களை நினைவூட்டி அதே நிலையை உணர்ந்து, திரும்பவும் சந்தோஷ நிலையைக் கொண்டு வர முடியும். சந்தோஷம் என்பது பின்னோடியாக இருக்கத் தேவையில்லை, முன்னோடியாக்க முடியும்!

- மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

]]>
mirror neurons https://www.dinamani.com/health/mental-health/2017/dec/30/mirror-neurons-facts-2835815.html
2831857 மருத்துவம் மனநல மருத்துவம் பெற்றோர்கூட அடம் பிடிப்பார்களா? ஆர்ப்பாட்டம் செய்வதுண்டோ? மாலதி சுவாமிநாதன் Saturday, December 23, 2017 03:53 PM +0530  

தம் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அதைப் பெற்றோர்கள் தம் பேச்சில், உரையாடலில் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் தான் குழந்தைகளால் அதைப் பின் பற்ற முடியும்.

அதே நேரத்தில், பெற்றோர்களே தம் பேச்சிலும், நடந்து கொள்வதின் முறைகளிலும் தத்தளித்தால் எந்த விதமான பெற்றோராக இருக்க விரும்புகிறார்களோ அப்படி இருக்க முடியாமலேயே போய்விடும். இப்படி நடப்பதற்கான காரணங்களோ, பெற்றோர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள், செய்கைகளில் அடங்கி உள்ளது.

ஆனால், பெரும்பாலான புத்தகங்கள், மற்றும் ஊடகங்களில் பிள்ளைகளை “கண்ட்ரோல்” (control) “கட்டுப்படுத்துவது”, “கட்டுக்குள் வைப்பது” எப்படி என்பதைப் பற்றியே உள்ளது. பெற்றோரைப் பற்றி விவரித்திருந்தாலும், Parenting Styles (பேரென்டிங் ஸ்டைல்) என விவரிப்பிலும், பிள்ளைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதைச் சார்ந்ததாகவே இருக்கின்றது.

பெற்றோரின் தாக்கங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது தெரிந்ததே. அவற்றைச் சரி செய்யும் முறை புரிய வர, பெற்றோர்கள் தன்னை தானே கண்காணிக்கும் அவசியத்தைப் புரிந்து கொள்வார்கள். இதைப் புரிந்து கொண்டு செயல் பட, அவர்களுக்கும் நன்றாக இருக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துவிடும். 

இதை மையமாகக் கொண்டு, இங்குப் பரிந்துரைக்க போவது மூன்று அம்சங்கள். பெற்றோர்கள்

 • தங்களை பார்த்துக் கொள்வதின் அவசியம்,
 • உணர்ச்சிகளுக்கு வசப்படுவதால் நடத்தும் அடமும், ஆர்ப்பாட்டம்,
 • தன்னை மாற்றிக் கொள்ள சில வழிமுறைகள்.

பெற்றோர் தம்மை கண்காணித்துக் கொள்வது அவசியமே!

பெற்றோர்களின் பேசும் விதம், எண்ணத்தைத் தெளிவு படுத்தும் திறன்கள், உணர்ச்சியைக் கையாளும் விதங்கள் சரியாக இல்லையென்றால், அவர்களிடம் பிடிவாத ஆர்ப்பாட்டங்கள் தலை தூக்கி ஆட ஆரம்பிக்கும். இது வெளிப்படையாகும் விதங்களோ: பெற்றோர் தான் சொல்வதை மட்டும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்பார்கள். மறுத்தால், கண்களை விரித்து, குரலை எழுப்பி, தான் சொன்னதை செய்யும் வரை கோபமாகவோ, மௌனமாகவோ, கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது. கருத்து வேறுபாடுகளும் நிலவி இருக்கும்.

பெற்றோர் சூழ்நிலைகளை எப்படி அணுகுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் கையாளும் முறைகளையே பிள்ளைகள் தாங்களும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய பிரதிபலிப்பை பிள்ளைகள் பயன் படுத்தும் வார்த்தைகள், உடை அலங்காரம், அணுகுமுறைகளில் பார்க்கலாம். இப்படி இயங்குவதை “அப்ஸர்வேஷ்னல் லர்நிங்” (Observational Learning) என்போம். 

ஒரு மிக முக்கியமான அம்சம், பெற்றோர் நிபந்தனையற்ற அன்பு (unconditional love) செலுத்துவது. இது, மிக அற்புதமானது! இதில், நீ இப்படிச் செய்தால் தான், இருந்தால் தான், அன்பாக இருப்பேன் என்றே இருக்காது. இந்த நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடம் பேசுகையில், புறக்கணிப்பதோ, திட்டுவதோ, கசப்பான வார்த்தைகளோ உபயோகிக்காமல், அன்பு பூசிய சாந்தத்துடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
 
இப்படிச் செய்வதால், பெற்றோர் தன் சொல்லினாலும், செயலினாலும் வழி காட்டுவார்கள். ஆகவே, எந்த விதமான சிக்கலோ, விரக்தியோ இல்லாமல் இதமான உறவை அமைத்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளும் தங்கள் பங்கிற்கு நன்றாக ஒத்துழைப்பார்கள்; உறவுகள் மேலும் வலுப்பெற்று, பிள்ளையுடன் பற்றும் பிடிமானமும் பலப்படும். இதற்காகத் தான் பெற்றோர் தம்மைப் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

இந்த அணுகுமுறையை எளிதாகப் பழக்கமாக்கி கொள்ளலாம். அதற்கு, பெற்றோர் தன்னையும் நிபந்தனையற்ற தன்மையுடன் ஏற்றிக் கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால், தம்மைப் பாசத்துடன் அரவணைப்பதால், தேர்வுரிமை அளித்துக் கொள்வார்கள். இதனாலேயே தம்மை மதிக்கவும் செய்வார்கள். மன தைரியம் உறுதியாகும். விளைவாக, தம்முள் உள்ள அறிவையும் நம்பிக்கையையும் பூரணமாக உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். 

இப்படிச் செய்வதில், அழுத்தம் அகன்று விடும். என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் சுமூகமாக முடிக்க முடிகிறது. இதே பாதையில் இருந்து வர, மனக் கண்ணாடியில் பார்த்துப் பழகிக் கொள்ளலாம். 

பெற்றோர், நிபந்தனையற்ற அன்பு செலுத்தாமல் இருந்தால், தன்னிலும் சரி, பிள்ளைகளிடத்திலும் குறைகளே தென்படும். சந்தேகம் அதிகரிக்க இதிலிருந்து பிடிவாதமும், ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பமாகும்.

உணர்ச்சிகள் நம்மைக் கடத்தாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை.

சில நேரங்களில் நாம் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் நாமே விரும்பாத வகையில் சில நொடிகளுக்குப் பேசுவோம், நடந்து கொள்வோம்.

உணர்ச்சிகளும் சிந்தனையும் நம்மைக் கடத்தி விடுகின்றதனாலேயே சமநிலையில் இல்லாமல் இருப்போம். இப்படிக் கடத்தாமல் இருக்க உணர்ச்சிகளான கோபம், ஆத்திரம், புண்படுதல் எனப் பலவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இவை நம்மைக் கடத்தி விடுவதின் தோற்றம் தான் பிடிவாதமும் ஆர்ப்பாட்டமும் ஆக காணப் படுகிறது.

பிடிவாதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் தூண்டி விடுவதோ நாம் நம்மேல் சுமத்திக் கொள்ளும் நிபந்தனைகளும், வற்புறுத்தல்களும் ஆகும். அவற்றில் சில:
 
“நான், இதைச் செய்தே ஆக வேண்டும்”,
“இப்படித் தான் செய்ய வேண்டும்”, 
“இதை முடித்தே தீர வேண்டும்”. 
“இப்போதே”, எனப் பல.

இவற்றுக்கு இடம் கொடுத்து விட்டால், தன்னை ஒரு சிறையில் அடைத்துக் கொள்வது போல் ஆகும். இதனால், சமாளிக்க முடியாமல் தத்தளிப்பதில், செய்ய வந்தது கைக்குள் அடங்காமல் போய் விடுமோ என அஞ்சி, பதட்டம் வர ஆரம்பிக்கும் பொழுதே, ஆர்ப்பாடங்கள் தலையை காட்டும். நம்மையே நாம் கேட்டு கொள்ளலாம் (இதுவும் மனக்கண்ணாடியிலே பார்த்துக் கொள்வதே) “நான் எந்தக் காரணத்திற்கு இப்படி ஒரு நிபந்தனை போட்டுக் கொள்கிறேன்”? “செய்து கொள்வதின் அவசியம் என்ன”? இவை இரண்டுக்குமே விடைகள் கிடைக்க, அடம், ஆர்ப்பாட்டம் இடமில்லாமல் போய்விடும். பல முறை நாமே யோசித்திருப்போம், “இப்படி, முகம் சுளித்து, படபடப்புடன் பேசுவதும், சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதை நான் ஆசைப்படவில்லையே.” என்று. 

பெற்றோர் உணர்வுகளைக் கையாளுகிற விதத்தைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு அதிகமே! பல சமயங்களில் பெற்றோர்கள் செய்வதை போலவே பிள்ளைகளும் செய்வார்கள், இதை, “இமிடேஷன் லர்நிங்” (Imitation learning) என்போம். பெற்றோரிடம் இல்லா விட்டால், பிள்ளைகளிடம் இருக்காது.

இதன் ஒரு உருவத்தை நாம் பார்த்திருப்போம். உணர்வுகளைக் கடத்துவது பிள்ளைகளின் முன் நடப்பதால், நகல் அடித்தது போல், பிள்ளைகளும் தங்களுக்கு ஏதேனும் வேண்டுமென்றால் பெற்றோர் செய்வது போலவே செய்வார்கள். சாதித்தும் கொள்ளக் கற்றுக் கொள்வது இந்தத் தவறான யுக்திகளிடமிருந்து.

வித்தியாசம் என்னவென்றால், இதைப் பிள்ளைகளிடம் பார்த்தவுடன் “என்ன இது?” என்று பெற்றோர் பிள்ளையைக் கடுமையாக கண்டிப்பதும், தண்டிப்பதும் தான்!
இவை இல்லாமல் ஆர்ப்பாட்டங்களையும், அடம் பிடிப்பதையும் சம நிலையில் கொண்டு வர முடியும். அதற்கு:

 • செய்து கொண்டிருப்பதை ஒரு நிமிடத்திற்கு நிறுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
 • நிதானமாக யோசிக்க ஒரு குவளை தண்ணீர் குடித்தால் கூட மனதைத் திசை திருப்பி விட முடியும்
 • கை, கால்களை ஓடும் தண்ணீரில் காட்டியும் மனதை அமைதிப் படுத்த முடியும்.
 • ஆர்ப்பாட்டம் வரும் காரணத்தை வாய் விட்டுச் சொன்னாலும் மனதை சாந்தப் படுத்தி, தெளிவுடன் செயல் பட முடியும். 
 • மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு, மெதுவாக வெளியில் விடுவதினாலேயே நம் சிந்தனையை தெளிவு செய்ய முடியும்.
 • செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றனவே என்ற பதட்டத்தை விலக்க, ஒரு மணிக்கு ஒரு தடவை எச்சரிக்கை மணி வைத்துக் கொள்ளலாம். 

மணி அடித்தவுடன், செய்ய வேண்டிய பட்டியலில் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் ஒவ்வொரு வேலையாகச் செய்து முடிக்க, பளுவும் குறையும், ஆர்ப்பாட்டமும்!

இப்படிச் செய்து வந்தால், உணர்வுகள் நம்மைக் கடத்தி விட முடியாது. 

செய்வதை பாரமாக கருதுவது:

ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு முகம், பிள்ளை வளர்ப்பதை பாரமாக கருதி விடுவது. இக் கருத்து, பெற்றோரே பிள்ளைகளுக்கு எல்லாம் செய்து கொடுப்பதாலையும் வருவதுண்டு. எல்லாவற்றையும் செய்வதை உணர்த்தவே “பார் உனக்கு எவ்வளவு செய்கிறேன்” என்று கணக்கிடுவார்கள். தங்களைத் தியாகி போல் பாவிப்பதால், நாளடைவில் விரக்தி வளர்ந்து விடும். சொல்லிக் காண்பிப்பது பழக்கமாகும். இவற்றால், உறவை ஒரு கணக்காக பார்க்க நேர்கிறது. இதையே பிள்ளைகளும் கற்றுக் கொள்வதால் தான், பிற் காலத்தில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வாழ நேர்கிறது (?)

மாற்றத்திற்காகச் செய்ய வேண்டியவை:

அன்றாடம் என்ன செய்து வருகிறோம் என்பதைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மன கனத்துடன், பரபரக்க வேலைகள் செய்து வந்தால், இயந்திரம் போல் தோன்றி விட, நம்மை ஒரு எந்திரன் போலவே உணர்வோம். இதனால், பிடிப்பு இல்லாமல், வேலையை முடித்தால் போதும் என்றே இருப்போம்.
 
இதில், பிள்ளைகளுடன் உறவு இணைந்து இருக்காது. உணர்வுகள் பின் தங்க, பிள்ளைகளும், எப்படி இயங்குவது என்று தெரியாமலேயே, மந்தமாகி மெதுவாகச் செயல் படுவார்கள். பெற்றோரின் நடத்தையில் அடமும், ஆர்ப்பாட்டமும் தொடங்கும். விளைவாக, பெற்றோர்கள் பிள்ளையை தண்டிக்க, உறவில் விரிசல் ஏற்பட நேரிடலாம்.
இதைச் சுதாரிக்க, நேரம் கூடுதலாக வேண்டும் என்றால், சற்று முன் எழுந்து கொள்ளலாம். சிலவற்றை முன் தினமே கொஞ்சம் தயார் செய்து கொள்ளலாம். 

பிள்ளைகளுடன் போராடுவதற்கு பதிலாக நிறையச் சிரித்து, ரசித்துச் செய்யலாம். இணைந்து சிரிப்பதில் ஆக்சிடோசின் (Oxytocin) ரசாயன பொருள் சுரக்கும். இதுதான், சந்தோஷத்தையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் ரசாயனம். அத்தோடு, உறவும் பலமாகும்!

இந்த நிலை நீடிக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் சில தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அவர்களால் செய்ய முடியும் என்று நம்பிக் கொடுப்பதால், “நம்மால் முடியும்” என எண்ணி செயல் படுவார்கள். இது உறவை மேலும் மேம் படுத்தும்.

அதனால் தான் பெற்றோரிடமிருந்து மாற்றம் தொடங்க வேண்டும்!

இன்னொரு விஷயத்தையினாலையும் இதைச் செய்ய தேவைப் படுகிறது. பல முறை பெற்றோரின் மைன்ட் வாயஸ் இதையே சொல்லும் “நான் ஒரு பெற்றோராக தோல்வி அடைந்ததால் தான் பிள்ளையை சரிப் படுத்த முடியவில்லை. அதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்” என்று. பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவுக்கும், பெற்றோர் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்வதனாலேயே இப்படித் தோன்றிவிடுகிறது.

இதுவும், பெற்றோர்களின் ஆர்ப்பாட்டம், அடம் பிடிப்பதின் தொடக்க நிலையாகலாம். இதை மாற்றி, “நான் எதற்கு இப்படிச் செய்கிறேன்? ஏன் செய்கிறேன்?” என்று தைரியத்துடன் கேட்டுக் கொண்டால், இப்படித் தோன்றுவதையும் மாற்றிக் கொள்ள இயலும்.

பெற்றோருக்கு தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. பிள்ளைகளின் செயல்களை எல்லாம் தம்முடைய பிம்பம் என்று எண்ணுவதும் பெற்றோரின் அடத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒரு காரணமாகும். பிள்ளைகள் பெறும் சபாஷும் தனக்கு என்று, முன்-பின் இருந்தாலும் “என்னாலேயே” என்று நினைப்பது. இதை “பர்ஸ்னலைஸேஷன்” (personalization) என்றும் சொல்லலாம். அதாவது பிள்ளைகளுக்கு நேர்வதற்கான காரணமே நாம் என்று எடுத்துக் கொள்வது. பெற்றோர், தம்மை வளர்ப்பு வடிவத்தில் மட்டும் பார்த்துக் கொள்வதால் இது நேர்வதுண்டு. இதன் விளைவாக, பெற்றோரின் சுய அடையாளம் மறைந்து விடுகிறது. இதனால் மன இறுக்கம் தோன்றலாம். இப்படிச் செய்வது நியாயம் இல்லையே!

மாற்றத்தைக் கொண்டு வருதல்:

பிள்ளைகள் எப்பொழுதும் சரியான பாதையில் போக வேண்டும் என்று பெற்றோர் விரும்புவதுண்டு. ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் அது தங்களின் வளர்ப்பினால் தான் என்று அஞ்சி, பிள்ளை செய்வதை ஓடிப் போய் நிறுத்துவதும் இல்லாமல், தன்னையே குற்றம்சாட்டிக் கொள்வார்கள். இது அவசர பட்டனை அழுத்துவது போல் ஆகும்.
இந்த அவசர நிலை திரும்ப நிகழும் பொழுது நாம் எப்படி அதை அணுகுகிறோம் என்று பெற்றோர்கள் கவனித்துக் கொண்டால், ப்ரேக் போட்டுச் சுதாரித்து அதற்குத் தீர்வு காணலாம் என்ற சிந்தனையை மேம்படுத்தும்.

இப்படிச் செய்யா விட்டால், பிள்ளைகளின் எல்லா அசைவுக்கும் தடுப்பு போட்டு விடுவதால் வளர்ச்சி குன்றி விடும். பெற்றோரும் எல்லாவற்றையும் ஆபத்து என்று கருதினால், “டென்ஷன் பார்டீ” என்ற பெயர் கொள்வார்கள். பிள்ளைகளும் தானாக மாற்றிக் கொள்ள முயல்வதற்கு அஞ்சுவார்கள்.

இதற்காகத் தான் பெற்றோர் நிபந்தனையற்ற அன்புடனும் தன்மையை நடந்து கொண்டால், தம்மையோ, பிள்ளைகளையோ குற்றவாளி கூண்டில் வைத்துப் பார்க்கும் அவசியம் இருக்காது. பெற்றோர் செய்வதை பிள்ளைகளும் பார்த்து, புரிந்து, மாற்றிக் கொள்வார்கள்.

சுய பராமரிப்பு:

இவற்றையெல்லாம் செயல்படுத்த, முதலில் பெற்றோர் தம்மை அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியமாகும்! 

வேளாவேளைக்கு சாப்பிடுவது, ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், பிடித்ததைச் செய்வது, என்பதெல்லாம் தம்மை சுயமாகப் பராமரிப்பதாகும். நம்மை பார்த்துக் கொள்வது சுய நலம் அல்ல. நம்மை பார்த்துக் கொள்வதும் நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். பெற்றோரின் இந்த அணுகுமுறையைப் பார்க்க பார்க்க, பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

நாம் நமக்கே தயை (self-compassion) காட்டிக் கொள்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும். தன் மேலேயே தயை காட்டி கொள்பவர்கள், உறுதியாயிருப்பதினால் எந்த விதமான கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கங்களில் (அடம், ஆர்ப்பாட்டம் சேர்த்துக் கொள்ளலாம்) மாற்றங்களை மிகச் சுலபமாக செய்து கொள்ள முடிகிறது. 

இதை எல்லாம் செய்து வந்தால், பெற்றோருக்கு அடம் பிடிக்கவோ ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையோ வராது. அதற்குப் பதிலாக புத்துணர்ச்சி நிலவி இருக்கப் பிள்ளை வளர்ப்பு பாசத்துடன் சுகமாக இருக்கும்!

ஆக, பெற்றோர்களின் பலம், நிபந்தனையற்ற தன்மையிலா? அடம் ஆர்ப்பாட்டத்திலா?


மாலதி சுவாமிநாதன்,
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
 

]]>
https://www.dinamani.com/health/mental-health/2017/dec/23/parents--their-tantrums-why-when-what-way-out-2831857.html
2814146 மருத்துவம் மனநல மருத்துவம் மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய் தான்! மாலதி சுவாமிநாதன் Friday, November 24, 2017 03:18 PM +0530  

நிகழ்வு 1:

“டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?” 
“டாக்டர் ஸ்டென்ட் போட...” சொல்லி முடிப்பதற்குள் 
“சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே கையில் இருக்கும் ஃபோனை நோண்டினார்)

நிகழ்வு 2:

அவர்: “ஹலோ, கேள்விப் பட்டேன்.”
இவர்: “அவ்வளவு வேகமா நடந்து போச்சு”(விசும்பல் சத்தம்).
அவர் : “ஆமாம், ரொம்ப கஷ்டம் தான்”.
இவர் : “உனக்குத் தான் தெரியுமே…”
அவர் : (டக் டக் என்று எதிர் முனையில் கணினி சத்தம்) ஓ!
இவர் : (கணினி சத்தம் கேட்க, உள்ளூர “ஏன் கூப்பிட்டு விட்டு, இப்படி”?) என்று தோன்கிறது.
அவர்: “ம், சொல்லு”(டைப் அடிக்கும் சத்தம் தொடர்ந்தது).
இவர்: “நான் கவனமா இருந்திருக்கலாம்”
அவர்: “... அப்புறமா” தொலைப்பேசி துண்டிக்க பட்டது. 
இவர்:  (“அவரே ஃபோன் செய்து விட்டு எண்ணிடமும் ஒழுங்காகப் பேசாமல் அங்கு எதையோ டைப் செய்து கொண்டிருந்ததும் இல்லாமல் பேசும் போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்!”)

இவை இரண்டுமே, நிஜ வாழ்வின் நிகழ்வுகள். இரண்டிலும்,  ஒருவர் தம்மை பற்றிக் கேட்டதால், தன் விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கேட்டவர் தன் வேலையில் கவனத்தை செலுத்த, அரவணைப்பு மறுக்கப் படுகிறது. இதை பல்பணியாக்கம் (multitasking) என்ற போர்வையில் சேர்த்து விட முடியாது.

அக்கறையும், நிராகரிப்பும் நம்மால் பல விதங்களில் காட்ட முடியும். இரண்டையுமே, சைகைகளிலும், பேச்சிலும் தெரிவிப்போம்.

மற்றவர்களை நலம் கேட்கும் போது அக்கறை வெளிப்படும். பொதுவாக, மற்றவர்களைப் பரிவோடு நலம் விசாரிப்போம். அவர்களைச் சான்றவர்களை பற்றியும் கேட்போம், “எப்படி இருக்கீங்க? வீட்டில்? வேலை எல்லாம் நல்லா போய் கொண்டு இருக்கா?” என்று. இப்படிக் கேட்கும் விதத்திலேயே உறவுக்குக் கொடுக்கப்படும் இடமும், முக்கியத்துவமும் தெளிவு படுகிறது!

இதை நிராகரிப்பு கலந்த வகையிலும் காட்ட முடியும். ஒருவரைப் பார்த்ததும், நம் மனதில், “இன்றைக்கு என்ன கேட்கலாம்?” என்பதே மனதில் ஓடும். அவர்கள் எதோ தகவல் சொல்ல வர, “ஆ ஆ”, “சரி, இருக்கட்டும்”, “அதை விடு” என்று நிறுத்தி விட்டு, “எனக்கு, இதை செஞ்சிட்டு” என்று சொல்லுவது, நன்றிக்கோ, ஸாரீக்கோ இடமே இல்லை.

இன்னொரு வடிவமும் எடுப்பதும் உண்டு. ஒருவரை அழைத்து விட்டு, அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், டிவி, பார்த்துக் கொண்டு இருப்பது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள், இல்லை வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு, ஈமேய்ல் டைப் அடித்தபடியோ, கேம்ஸ் ஆடியபடியோ இருக்கக் கூடும்!

“அது இருக்கட்டும்” மற்றும் “அது கிடக்கட்டும்” உடன் சேர்ந்ததே. இவை என்ன தெரிவிக்கின்றன? மற்றவரின் நிலையோ, நிலைமையைத் தெரிந்து கொள்வதோ முக்கியமில்லை என்று. அதாவது, தமக்கு வேண்டிய வேலையை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது. மற்றவரை ஒரு ஜீவனாகக் கருதாமல் அவர்களை வெறும் பொருட்கள் போல்க பார்ப்பது தெரிகிறது.

இதில், மற்றவர்களை தமக்கு பயனுள்ள “பொருளாக” மட்டும் கருதுவார்கள். இப்படிச் செய்வதை “ஆப்ஜெக்டிஃபிக்கேஷன்” (objectification) என்று சொல்வார்கள். இதில் சுயநலம் தெரியும், மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருக்கும். இவர்களைப் பொருத்த வரை உறவைத் தராசில் போட்டு, ஏதேனும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினால் மட்டும் உறவைத் மதிப்பார்கள் . 

இப்படிச் செய்வோருடன், மற்றவர்கள் உறவு வைத்துக் கொள்வது பல வகைகளில் இருக்கும். சிலர் இவர்களிடம் உள்ள வேறு நல்ல குணாதிசயங்களினால் இதைப் பொறுத்து கொள்வார்கள். இவர்களிடமிருந்து தமக்கு வேறு ஏதாவது செய்து கொள்வதாலும், இந்த உறவினால் மற்றவரிடம் தம்மை உச்ச நிலையில் காட்டிக் கொள்வதற்கும்  “ஜால்ரா”வாக மாறி விடுவார்கள். வேறு சிலர் இப்படிப்பட்ட உறவை முறித்து விடுவார்கள், சிலருக்குத் தாங்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

பல சமயங்களில் நாம் மற்றவரைப் பற்றி சிந்திக்காமலேயே, அவர்களைப் பொருளாக அணுகி விடுகிறோம். நிராகரிப்பதோ, ஒரு பொருளாக கருதுவதோ நமக்குப் பிடிக்காது. பல நேரங்களில், பணிபுரியும் சிப்பந்திகளை ஒரு மனிதராகப் பார்க்க மாட்டோம், அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் அடையாளமாக நாம் பார்ப்போம். இதுவும் நிராகரிப்பு தான். “வசூல் ராஜா” திரைப்படத்தில் ஒரு வயதானவர் இதைத் தான் ஆணி அடித்தார் போல் தெரிவிப்பார் “நாற்பது வருஷமா வேலை செய்கிறேன், என் பேர் கூடத் தெரியாது”. 

அக்கறையோடு இருப்பது இதமாக இருந்தாலும் பின் ஏன் நிராகரிப்பு செய்கிறார்கள்? மற்றவர்கள் அலட்சியப் படுத்துவது, ஒதுக்கி வைப்பதைப் பார்த்து தானும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து வருவார்கள். 

“வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்” என்ற எண்ணம் உள்ளவர்களாகச் செயல்படுபவர்கள் வேறுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. அடிமைகளை வைத்தே வாழ்க்கையை ஓட்ட எண்ணுபவர்கள். உறவுகளை தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும் வைத்துக் கொள்வார்கள். சமநிலையில் இருக்க அஞ்சி இப்படிச் செய்வதும் உண்டு. 

ஏதோ ஒரு இழப்பைச் சந்தித்திருக்கலாம் அதனாலேயே அக்கறை காட்ட அஞ்சி நடக்க, நிராகரிப்பே அவர்களின் குணமாகிவிடும்.

தெளிவு இல்லாமல், தன்னுறுதி இல்லாததால் இப்படிச் செய்வதும் உண்டு. இதை மறைக்கவே தன்னை உயர்ந்தவராகக் காட்டுவதாக நினைத்து ஆணவம் என்ற ஆடை அணிவார்கள். இவை எல்லாமே நிராகரிப்பின் பல தோற்றங்கள். தன்னைச் சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக் கொள்கிறார்கள். 

டாம் டூம் என இருப்பதும், அதிகாரம் செய்வதால் மட்டும் வெல்ல முடியும் என்று நம்புவதால் பலர் இப்படிச் செய்வார்கள். இவையும், நிராகரிப்பதும்,  பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

மாற வேண்டும் என்றால், வேறு வழி தெரியாமலேயே இருக்கிறோமா இல்லை வழிகளை அரிந்தும் பின் பற்ற மறுப்பதால் இப்படி எல்லாம் செய்கிறோமா என்று சிந்தித்தால், விடை கிடைக்கலாம்!

உறவை மதிப்பவர்கள் தான் என்ன செய்து கொண்டிருந்தாலும் தன் நேரத்தை மற்றவருடன் செலவிடுவார்கள். அக்கறை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகச் சுலபம். இவர்கள் சைகையால் வரவேற்பார்கள், கண்களைப் பார்த்து பேசுவார்கள். மற்றவருடன் இருக்கும் நேரம் தன் வேலையை அந்த நிமிடத்திற்கு நிறுத்தி வைத்துக் கொள்வார்கள். இதை க்வாலிடி டைம் என்றும் சொல்லலாம், இதனாலேயே சுமுகமான சூழல் உண்டாகும், கேட்பதற்கும், பேசுவதற்கும்!

அக்கறை காட்டுவதா? நிராகரிப்பதா?

மாலதி சுவாமிநாதன்
மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
 

]]>
Facebook, whatsapp, addiction, mental problem https://www.dinamani.com/health/mental-health/2017/nov/24/giving-quality-time-to-others-2814146.html
2795177 மருத்துவம் மனநல மருத்துவம் இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்! உமா Thursday, October 26, 2017 11:43 AM +0530 சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.

தூங்குவதில் கூடவா பிரச்னை? ஆம் உலகளாவிய பிரச்னை இது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ஆன்ட்ரூ வீல்  தியானம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். தூக்கமின்மை பிரச்னைக்கான எளிதான ஒரு தீர்வை முன் வைக்கிறார். மூச்சில் கவனம் வைத்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும் என்கிறார் டாக்டர் வீல். உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை விடும் போது மூளையானது தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு அமைதியான நிலைக்கு தானாகவே வரும்.

மேலும் அவர் கூறுகையில், 'மூக்கின் வழியே சுவாசம் நான்கு நிமிடங்கள் உள் எடுக்கவும். ஏழு அல்லது எட்டு நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியே எட்டு நொடிகள் வெளி மூச்சை விட வேண்டும். இப்படி செய்யும் போது மூளை புத்துணர்ச்சி பெறுவதுடன் தூக்கமும் நன்றாக வரும்’ என்கிறார் டாக்டர் வீல்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால், இதயத்துக்கும் மிக நல்லது. தேவையற்ற பதற்றங்கள், ரத்த அழுத்தங்கள் குறைந்து மன அமைதி ஏற்படும். ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தால் தான் இதை நன்கு உணரமுடியும்.

இவ்வாறு மூக்கின் வழியே உள்மூச்சு எடுத்து, சில நொடிகள் உள்ளே மூச்சை நிறுத்தி அதன் பின் வாய் வழியே வெளிமூச்சை விடும் செயலை நாலு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாகச் செய்யும் போது, மூச்சை கவனித்தபடியே நீங்கள் உறக்கத்தில் விழுவீர்கள். 60 நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தினுள் அமிழ்வீர்கள் என்பது உறுதி.

ஆரம்பக் கட்டத்தில் இது வேலை செய்யாதது போல தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறிய பின் மந்திரம் போட்டது போல், அல்லது ஸ்விட்ச்சை அணைத்தது போல் மூச்சுப் பயிற்சியின் இசையில் தூக்கம் கண்களை சுழற்றும். 

]]>
meditation, உறக்கமின்மை, தூக்கமின்மை, தியானம், sleepless, restless, calmness, மூச்சு பயிற்சி https://www.dinamani.com/health/mental-health/2017/oct/24/you-can-train-your-brain-to-fall-asleep-in-just-60-seconds-heres-the-best-trick-to-fall-asleep-immed-2795177.html
2759273 மருத்துவம் மனநல மருத்துவம் உங்கள் காதலி ஃபேஸ்புக்கிலேயே வாழ்கிறாரா? Tuesday, August 22, 2017 10:00 AM +0530  

ஃபேஸ்புக்கிற்கு அடிமையாக இருக்கும் காதலியை எப்படி மீட்பது என்று சில இளைஞர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் (வேறெங்கே அதே ஃபேஸ்புக்கில் தான்) அவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு :

தனது காதலிக்கு பேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆண்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுமாம். யார் இவன் எதற்கு உனக்கு லைக் போடுகிறான் என்று ஆரம்பித்து தரமணி பட ஹீரோவைப் போல் பல கேள்விகள் கேட்கத் தொடங்குவார்கள். என்னுடன் பேசும் நேரத்தை விட உன் நண்பர்களுடன் அரட்டையடிக்கும் நேரம் தான் அதிகம் என்று மனம் வேதனைப்படுவார்கள். மேலும் சாட் செய்யும் போது மேசேஜ் தாமதமாக வந்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் தான் தோன்றும்! இதனால் எத்தனை அன்புள்ளவர்களாக இருந்தாலும் கூட அந்த சூழ்நிலையில் ஃபோனை அல்லது கணினியை ஆஃப் செய்துவிடுவார்கள். (வேறு எதற்கு நேரடியாகப் போய் ஒரு கை பார்த்துவிடலாம் என்றுதான்)

காதலர்களுக்குள் நடக்கும் பர்சனல் விஷயங்கள், புகைப்படங்களை எல்லாம் கூட நண்பர்களிடம் இருந்து லைக் வாங்குவதற்காக பேஸ்புக்கில் போடும் போது, நமக்குள் எந்த ஒரு விஷயமும் பர்சனாலாக இல்லையா? என்ற எண்ணம் தோன்றும். உங்களிடையே உள்ள இடைவெளி குறையும் என்கிறது ஒரு க்ரூப். இரவு எல்லாம் தூங்காமல், இன்னும் பேஸ் புக்கில் அப்படி என்ன தான் வேலை? என்று மனம் குமைந்து போகும் எண்ணங்கள் தொடர்ந்தால் மன அழுத்தம் ஏற்படும்.

பொழுதுபோக்க பயன்படும் ஃபேஸ்புக் உங்கள் வாழ்க்கையை பழுதடையச் செய்துவிடலாம். கவனமாக கையாளும் போது அதுவே உறவுப் பாலமாகிவிடும். அன்பின் இருப்பிடங்கள் எத்தனை எத்தனையோ அதில் மெய் நிகர் உலகமும் ஒன்றுதானே?

]]>
facebook, fb, முகநூல் https://www.dinamani.com/health/mental-health/2017/aug/22/facebook-creates-personal-life-problems-2759273.html
2757597 மருத்துவம் மனநல மருத்துவம் மன அழுத்தத்தால் மலட்டுத்தன்மையா? அல்லது மலட்டுத்தன்மையால் மன அழுத்தமா? கார்த்திகா வாசுதேவன் Friday, August 18, 2017 01:03 PM +0530  

பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கக் கூடும். மன அழுத்தமே மலட்டுத் தன்மைக்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இப்போதெல்லாம் மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தமே வருகிறது. அப்படியானால் மன அழுத்தத்துக்கு காரணம் மலட்டுத் தன்மையா? அல்லது மலட்டுத் தன்மையால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறதா? என்பது பெரும்பாலோரிடையே குழப்பத்திற்குரிய கேள்வியாக எஞ்சி விடுகிறது. இப்போது நீங்கள் சொல்லுங்கள் இந்தக் கேள்விக்கான பதிலை. கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? கதை தான். சைவப் பட்ஷிணிகள் வேண்டுமானால்; காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா? என்று மாற்றிக் கேட்டுக் கொள்ளலாம். அத்தனைக்கு விடை காண முடியாத குழப்பம் இந்த விஷயத்திலும் நிலவுகிறது என்பதே நிஜம்!

சரி இப்போது மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏன் மனிதர்களுக்கு வருகிறது? என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறதா... என்று பாருங்கள்;

மனிதர்களுக்கு மன அழுத்தம் எதற்கு வருகிறது? எத்தனை முயன்றாலும் செய்து முடிக்க முடியாத மிதமிஞ்சிய வேலைப்பளு, நெருங்கிய உறவுகளுடனான மன மற்றும் கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள், நெருங்கியவர்களுக்குச் செய்து விட்ட துரோகத்தை மனதில் பூட்டி வைக்கும் போது ஏற்படும் கலக்கம், உறவுகள் மற்றும் நட்புகளுக்கிடையே சந்தர்ப வசத்தில் வளர்ந்து விடும் தேவையற்ற சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, அறிந்தும், அறியாமலும் செய்து விட்ட தவறுகளுக்குப் பொறுப்பேற்கத் தயங்கும் கோழைத்தனம், மானுட வாழ்வின் பல்வேறு சிக்கல்களைக் கையாளத் தெரியாத தெளிவின்மை, புறக்கணிப்பு, பணம் மற்றும் கல்வியால் அமையும் வாழ்க்கைத் தரம் சார்ந்து ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கோபங்கள், சந்தான பாக்கியம் இல்லாத குறை இத்யாதி, இத்யாதி என்று மனிதனுக்கு மன அழுத்தம் வரத்தக்க, உண்டாக்கத்தக்க காரணங்களை நாம் நீட்டித்துக் கொண்டே செல்லலாம். சரி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எனும் போது அவற்றுக்கான தீர்வுகளுக்கும் அங்கே இடமிருக்கிறது என்று தானே அர்த்தம். ‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற பழமொழிக்கு இணங்க பிரச்னைகளைத் தருவது கடவுள் என நாம் நம்பினால் அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் அவரே உண்டாக்கி வைத்திருப்பார் தானே?! அப்படி எடுத்துக் கொண்டு இந்த விஷயத்தை அணுகினால் மன அழுத்தம் வருவதற்காக காரணங்களை அடுக்கியது போல அதைத் தீர்ப்பதற்கான காரணங்களையும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

உள்ளுக்குள் அடக்கி வைக்க, வைக்கத்தான் அது அழுத்தம். அதையே வெளியே தூக்கிப் போட்டு விட்டால் ஒரே நிமிடத்தில் நீர்க்குமிழி போல எந்தப் பிரச்னையும் லேசாகிக் காற்றில் பறந்து காணாமலாகி உடையும்! பெரும்பாலும் அதை நாம் செய்வதில்லை. காரணம் நமது பிடிவாதங்கள். மனிதன் தனது தனி மனிதப் பிடிவாதங்களை மட்டும் சற்றே தளர்த்திக் கொள்வான் எனில் அவனுக்கு மன அழுத்தமாவது ஒன்றாவது. வேறு எந்தப் பிரச்னையுமே வராது தவிர்க்கலாம். சக மனிதர்களிடம் எத்தனை துவேஷமிருந்தாலும் தேவை ஏற்படும் பட்சத்தில் மனம் விட்டு உங்களது கவலைகளை எங்காவது நம்பிக்கையான ஓரிடத்தில் இறக்கி வையுங்கள். மனதை ரணமாக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகளை வேறு எங்கும் மனமுவந்து பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் கூட உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக் கொள்வதன் மூலமாகவாவது உங்கள் பிரச்னைகளை ஆழ் மனதிலிருந்து கொஞ்சம் இறக்கி வைக்கப் பழகுங்கள். பிறகு மன அழுத்தம் தரத்தக்க வாழ்வின் தடைகள் அனைத்தும் எங்கோ காணாமல் போகும். மன அழுத்தம் என்று மருத்துவரை அணுகுவது சிலருக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆனால், பலருக்கும் மன அழுத்தத்திற்கான மருந்து தங்களிடமே இருப்பது தெரிந்தே இருப்பதே நல்லது. ஏனெனில் பிறகு வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாகி விடும். எவரெல்லாம், தங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்காது, அவற்றுக்கான தீர்வுகளை நோக்கி முன் நகர்கிறார்களோ... அவர்களுக்கு மன அழுத்தம் என்பது நிரந்தரமாக வாய்ப்பே இல்லை. இதில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா? பிற உயிரினங்களுக்கிடையே இப்படி ஒரு விஷயமே கிடையாதா? என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமே! சரி இனி மலட்டுத்தன்மை பற்றிப் பார்க்கலாம்.

மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்ன?

இந்திய மருத்துவத்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப் பட்ட பின்னரும் கூட மனிதர்களில் மலட்டுத்தன்மைக்கு இன்னது தான் காரணம், அதைத் தீர்க்க இது தான் மருந்து என ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப் படவேயில்லை. இன்னதெல்லாம் காரணங்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது... இப்படியெல்லாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு காணலாம் எனச் சில வழிமுறைகள் முன் வைக்கப் படுகின்றனவே தவிர, மலட்டுத்தன்மை நீங்க நிரந்தரத் தீர்வென்ற ஒன்று இதுவரை கண்டிபிடிக்கப் படவேயில்லை. போலவே; மலட்டுத்தன்மை இதனால் தான் வருகிறது என்பதற்கும் எந்த விதமான முகாந்திரங்களும் இதுவரை அறியப்படவில்லை. மன அழுத்தம், தீரா வியாதி, விபத்து, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் முதற்கொண்டு தற்போது மடிக்கணினி, அலைபேசி, லேசர் விளக்குகளில் இருந்து கசியக் கூடிய ஒளி, ஒலி அலைகள் வரை பல காரணங்கள் மலட்டுத்தன்மைக்கான காரணிகளாகக் கருதப்பட்டாலும் அவையெல்லாம் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்ட இந்நாளில் மலட்டுத் தன்மை என்பதும் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகத் தான் ஆகிக் கொண்டிருக்கிறது. 

மலட்டுத்தன்மை என்பது ஒரு நோயல்ல; அது ஒரு குறைபாடு மட்டுமே. தகுந்த முறையில் உடல் அல்லது உள சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது தீரக்கூடியது தான். தீர்வு என்பதற்கான அர்த்தம்  உடனடியாக மலட்டுத்தன்மை நீங்கி தாங்களே பயலாஜிக்கலாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே இல்லை. ஒருவேளை குழந்தைப் பேறு கிட்டாவிட்டாலும் கூட, தத்தெடுத்தல் அல்லது சோதனைக்குழாய் முறையில் குழந்தைப் பேறு அடைவதும் கூட மலட்டுத்தன்மையை வெல்வதற்கான வழி தான் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மனதார நம்பவேண்டும். அப்படித்தான் இதனால் உண்டாகக்கூடிய மன அழுத்தத்தைக் கடக்க வேண்டும். 

மனித வாழ்வில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இந்த இரு முக்கியமான பிரச்னைகளையுமே இவ்விதமாக அணுகுவதே நல்ல பயனைத் தரக்கூடும். அதை விடுத்து மீண்டும் முதலிலிருந்து மன அழுத்தத்தால் தான் மலட்டுத் தன்மை வருகிறது என்றோ அல்லது மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தம் வருகிறது என்றோ எண்ணிக் கொண்டு தானும் குழம்பி தன்னைச் சார்ந்தவர்களையும் குழப்பி வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளத் தேவை இல்லை.


 

]]>
Stress, Infertility, stress VS infertility, மன அழுத்தம் VS மலட்டுத்தன்மை, மருத்துவம், ஹெல்த், health https://www.dinamani.com/health/mental-health/2017/aug/18/stress-vs-infertility-which-comes-first-2757597.html
2741670 மருத்துவம் மனநல மருத்துவம் உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது?  IANS Friday, July 21, 2017 06:57 PM +0530 பயணங்கள் வாழ்வின் தலைசிறந்த ஆசான். அதுவும் ஆன்மிகப் பயணங்களைப் பொருத்தவரையில் இன்னும் ஆழமானவை. காரணம் ஆன்மிகப் பயணம் என்பது சாதாரணமாக இடங்களைச் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. ஒருவரின் ஞானத்தையும் தேடுதலையும் விரிவுபடுத்திவிடும் அற்புதத்தன்மை உடையவை பயணங்கள்.

புத்தம் என்பது மதமல்ல அது மகிழ்ச்சியை கண்டடையும் நல்வழி என்கிறார் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வரும் புத்தத் துறவியான கேயல்வா துகம்பா (Gyalwa Dokhampa). 'உங்களுடைய வாழ்வின் சந்தோஷத்தை கொண்டு வருவதில் பொருட்களின் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் 21 நூற்றாண்டில் தன் இளமையின் பெரும் பகுதியைக் கழித்த இந்த இளம் துறவி.

புத்தம் என்பது சூழலியல் சார்ந்தது. மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஆண் பெண் சமத்துவத்தையும் வலியுறுத்துவது என்ற கருத்தை வெளிப்படுத்தியவர் கேயல்வாங் திருபா என்ற பெளத்த துறவி. கேயல்வாங் திருபா, கேயல்வாங் திருபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர். திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமாவால் ஒன்பதாம் கேயல்வா துகம்பா என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.

'பெரும்பாலோருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். வெற்றியாளராக வலம் வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். ஏன் வெற்றியாளராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியுமா? காரணம் ஒருவர் வெற்றியை அடைந்துவிட்டால் பிற்சேர்க்கையாக சந்தோஷமும் உடன் வரும் வசதி வாய்ப்புக்கள் என எல்லாம் கிடைக்கும் என்பதற்காக வெற்றியை மகிழ்ச்சியின் இலக்காக நினைக்கிறார்கள்.

ஆனால் சந்தோஷத்தை அப்படியெல்லாம் துரத்திச் சென்றுவிட முடியாது. இது எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி ஒன்றைத் துரத்தி செல்வோம் அதை அடைந்துவிடுவோம். ஆனால் அது போதாது. அது நம்மை முழுமையாக சந்தோஷப்படுத்தாது. வேறு ஒன்று நமக்கு தேவைப்படும். அதையும் நம்மால் அடைந்துவிட முடியும்...ஆனால் மறுபடியும் இன்னொன்று தேவையாக இருக்கும்.

ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக பெரும் புகழ் அல்லது பொருள் கிடைக்கும் என்றால் அதனை விட்டுக் கொடுப்பீர்களா? மன மகிழ்ச்சி என்பது நட்பில், அன்பில், திருப்தி உணர்வில், மற்றவர்களுடைய தவறுகளை பொறுத்துக் கொள்வதில் என சில விஷயங்களில் அடங்கியுள்ளது. 

இளைஞர்கள் சிலர் நினைக்கலாம் வெற்றி பெற்ற சில முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. வயதானால் என்ன? அவர்களும் தாம் முக்கியமாக கருதும் ஏதோ ஒன்றை இன்னும் கூட துரத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி வாழ்நாள் முழுதும் அடையவே முடியாத ஏதோ ஒன்றினை துரத்தியபடி இருக்கிறார்கள். 

இந்தப் போராட்டத்தில் அவர்கள் இழப்பது அவர்கள் முதலில் தேடிய சந்தோஷத்தைதான். அதன் பின் நட்பு, சிரிப்பு, ஆரோக்கியம் என நீளும் இந்தப் பட்டியல், இறுதியில் வாழ்க்கையையே தொலைக்கச் செய்துவிடும். எல்லாவற்றையும் இழந்து எதைப் பெறத் துடிக்கிறோம், இப்படி ஒன்றுமே பெற முடியாதவர்களாகி விடுவதற்காகவா இந்த வாழ்க்கை’ என்று கேள்வி எழுப்புகிறார் இந்த 36 வயதான குரு.

நேபாள் மற்றும் பூடானில் பெரும்பாலும் வசிக்கும் கேயல்வா துகம்பா தான் கற்றத் தேர்ந்த பழமையான பெளத்தம் சார்ந்த பாடங்களை மிகவும் எளிமைப்படுத்தி புதிய பார்வையுடன் எடுத்துரைக்கிறார். ஒருவருடைய சந்தோஷத்துக்கும் துயரத்துக்கு காரணம் அவரவர் மனம்தான் என்கிறார் இவர். மகிழ்ச்சி அல்லது திருப்தி வெளியிலிருந்து வருகிறதா அல்லது உள்ளிருந்தா என்று கவனித்துப் பாருங்கள் என்று வலியுறுத்துகிறார்.

'யாரேனும் உங்களுக்கு மில்லியன் டாலர்கள் தந்தால், உங்களுக்கு உடனே மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏன் அவ்வளவு சந்தோஷம் கொள்கிறீர்கள்? காரணத்தை நீங்களே சொல்வீர்கள் நான் இப்போது மில்லினியர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கேன்சர் வந்துவிட்டது. அதை குணப்படுத்த ஒரு மில்லியன் தேவை என்றால் அந்தப் பணத்தை என்ன செய்வீர்கள்? அந்த ஒரு மில்லியனை சந்தோஷத்துடன் கொடுத்து விடுவீர்கள் அல்லவா? 

இதிலிருந்து ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சந்தோஷம் என்பது அந்த ஒரு மில்லியன் டாலரில் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது திருப்தி உணர்வில் கிடைத்ததா? ஒரு மில்லியன் டாலர் கையில் இருந்தால் ஒருவர் வெற்றியாளராகிவிட முடியுமா? அனைவருக்குமே வெற்றியாளராக வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அனைவராலும் பில்லியனாரவோ மில்லியனராகவோ முடியாது என்பது தானே உண்மை. அதற்காக நாம் என்ன தோல்வியுற்றவர்கள் ஆகிவிடுவோமா என்ன? இவ்விதமான வெற்றி என்பது புற வயமானது. உள்ளார்ந்த மகிழ்ச்சி தேவை எனில் வாழ்க்கையில் திருப்தியும் நிறைவும் இருக்க வேண்டும். அதற்கு இந்தத் தருணம் விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி’

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வருபவர் கேயல்வா துகம்பா. சூழல் பற்றிய விழிப்புணர்வு குறித்து இளைஞர்களிடம் கலந்துரையாடுவதை விரும்புகிறவர். கேயல்வா துகாம்பரைப் பொருத்தவரையில் இமாலயம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக் ஆகிய இடங்கள் இந்தியாவுடன் 300 வருட காலத்துக்கும் மேலாக ஆழமான சரித்திர தொடர்புடையவை. 'இமய மலைப்பகுதி மற்றும் லடாக்கில் நாங்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பயணிகள் அதிகளவு குப்பை கூளங்களைப் போட்டுவிட்டு சென்றதைப் பார்த்தோம். அந்தக் குப்பைகள் அங்குள்ள ஆறு, குளம் மற்றும் சிற்றோடைகளில் விழுந்து அந்த நீர்நிலைகளை மாசுபடுத்திவிடுகிறது. இந்த ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் தான் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகித உலக மக்களின் நீராதாராமாக விளங்குகிறது. எங்களுடைய பணி இந்தக் குப்பைகளை அகற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது’ என்று கூறியுள்ளார் கேயல்வா துகம்பா.

ஆன்மிக தலைவராக மட்டும் இல்லாமல் செயல்வீரராகவும் இருப்பவர் கேயல்வா துகாம்பர். அவருடைய வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் டார்ஜிலிங்கில் கழித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம், மலேஷியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் உரையாற்றி, நல்ல பல கருத்துக்களை கூறி வருகிறார். தீவிரமான ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். 

அவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் ‘தி ரெஸ்ட்ஃபுல் மைண்ட் - எ நியூ வே ஆஃப் திங்கிங், எ நியூ வே ஆஃப் லைஃப்’ (The Restful Mind - A New Way of Thinking, A New Way of Life). இந்தப் புத்தகம் நவீன வாழ்க்கையின் அழுத்தங்களையும் அதிலிருந்து மீள வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. தவிர இப்புத்தகம் மனத்தை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான ஒரு கையேடு எனலாம். 

It isn't about never being angry or upset, but about how much we hold on to such restless emotions.

"The Restful Mind", by His Eminence Gyalwa Dokhampa

]]>
Buddhist monk, Gyalwa Dokhampa, கேயல்வாங் திருபா, புத்த துறவி https://www.dinamani.com/health/mental-health/2017/jul/21/for-this-buddhist-monk-happiness-is-a-sense-of-satisfaction-within-2741670.html
2739627 மருத்துவம் மனநல மருத்துவம் இளமைக்கு என்ன கியாரண்டி? Tuesday, July 18, 2017 01:33 PM +0530 சிறியவர்களாக இருக்கும் போது நமக்கெல்லாம் ஒரே கனவு. நான் சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிவிட வேண்டும் என்பதே அது. ஆனால் பெரியவர்களாகி வாழ்க்கையில் நாம் நினைத்தவை சில கிடைத்து, பல கிடைக்காமல் போகும் போது ஒரு ப்ளாஷ்பேக் போடுவோம். 'ஆஹா, என்னுடைய சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நினைச்சது எல்லாமே எனக்கு கிடைச்சுது’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது பால்யமும் இளமைக்காலமும் அதைக் கடந்த முதிய பருவமும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள். வயது அதிகரிக்க அனுபவமும் நிறைவும் நமக்கு ஏற்பட வேண்டும், மாறாக ஏக்கமும் சுய பச்சாதபமுமே நம்மில் பெரும்பாலோருக்கு மிஞ்சுகிறது.

இதற்கு யார் காரணம்? ஏன் இப்படி எனக்கு மட்டும் நிகழ்கிறது? என்று யோசிக்கிறீர்களா? சாட்சாத் அதற்கு காரணம் நாம் தான். நம்முடைய சிக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் நாமே தான் காரணம். அடுத்தவர் மீதோ ஆண்டவன் மீதோ அல்லது விதியின் மீதோ பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இன்றைய நம்முடைய நிலைக்கு வெளிக் காரணிகள் சில இருந்தாலும் உண்மையில் நாம் தான் காரணம். நம்முடைய தேர்வுகள் தான் நம்மை இந்த நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளது. ஏன் எனக்கு மட்டும் என்ற கேள்வியைக் கேட்காத மனிதர்கள் வெகு சிலரே. ஏன் என்றால் அதற்குக் காரணமும் நாம் தான். எதிலும் அதிருப்தி மற்றும் சுயநலம் இன்னும் சில குணக் கேடுகள் இவைதான். ஆச்சரியமாக உள்ளதா? ஆம். சிறிதும் சமரசம் இன்றி உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து பாருங்கள். கிடைக்கும் விடை உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

வேலை, குடும்பம், அலுவலகம், சமூகம் என ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் கூட நமக்கு இருப்பதில்லை. அடிபடையாக ஒரு மனிதனுக்கு என்ன தேவை. உணவு, வசிப்பிடம், குடும்பம், நல்லுறவுகள் இவை போதாதா. இவற்றை சம்பாதித்துக் கொள்ள போதுமான பணம். ஆனால் அந்தப் போதுமான பணம் போதவே இல்லை என்பதால் தான் மேலும் மேலும் பணம் தேடி ஓடுகிறோம். அப்படி ஓடும் போது உயிர் வாழ்தலுக்கு அடிப்படை விஷயமான உணவைப் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி உணவை தவிர்ப்த்து அல்லது தாமதப்படுத்தி அல்லது குப்பை உணவுகளை சாப்பிட்டோ உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு என விதம் விதமான நோய்கள் ஒவ்வொன்றும் இதோ நான் இருக்கிறேன் என்று தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு கவனக் குறைவாக இருக்கிறோம். 

எதற்காக சம்பாதிக்கிறோம்? ஆர அமர சாப்பிட வழியின்றி, ரசித்துப் பிடித்து வாழ வகையின்றி பந்தயத்துக்கு நேர்ந்துவிட்டது  போல் நமக்கு இந்த ஓட்டம் அவசரம் ஏன்? குடும்பத்துடன் அமர்ந்து நல்ல சத்தான உணவை சாப்பிடுவதில் என்ன பிரச்னை? காலை உணவைச் சாப்பிடச் சொல்லி நம் உடலில் இயங்கும் பயாலாஜிகல் க்ளாக் பசி உணர்வு எனும் அலாரத்தை அடிக்கும். போலவே எப்போதெல்லாம் தேவையோ மதியம் மாலை இரவு என அது உள்ளார்ந்த குரல் கொடுக்கும். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்பட்டால் ஒருகட்டத்தில் அது குழம்பி அலாரம் தருவதை நிறுத்திவிடும். நன்றாகப் பசியெடுத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏதோ ஒரு நேரத்துக்கு என்னமோ ஒரு உணவு என வாழப் பழகிவிட்டால் உடல் நம்மை ஒரு கட்டத்தி பழிவாங்கிவிடுவது நிச்சயம். மேலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நம் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கத் தொடங்கும். எனவே, குறைந்த அளவு கொழுப்புச்சத்து உடைய உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஆறு முதல் எட்டு க்ளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. அசைவப் பிரியராக இருந்தால் கோழி, இறைச்சி உணவுகள் அடிக்கடி சாப்பிடாமல் தினமும் மீன் உணவை சாப்பிடலாம். இதில் ஒமேகா எனும் அரிய சத்து உள்ளது. செல் மீட்டுருவாக்கத்துக்கு மிகவும் நல்லது. எனவே உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடன் இருப்பது தான் இளமையை தக்க வைப்பதற்கான முதல் படி.

அடுத்து மனம் சார்ந்த அமைதியும் திருப்தி மிகவும் முக்கியம். அவனிடம் கார் இருக்கிறது, என்னிடம் பைக் கூட இல்லை. ஒரு சைக்கிளுக்காவது வழி இருக்கிறதா என்று நினைத்துப் பொறுமிக் கொண்டிருந்தால் நடக்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். காரணம் மனத்தில் எதிர்மறை எண்ணங்களான பொறாமை, கோபம், வெறுப்பு ஆகியவை ஒருபோதும் நம்மை ஏற்றமான வழிகளுக்கு இட்டுச் செல்லாது. அது ஒரு புதைகுழி போலத்தான். ஒருநாள் இல்லையெனில் மற்றொரு நாள் நம்மை அமிழ்த்திவிடும். நமக்கான அரிசியில் நம்முடைய பெயர் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மையிலும் உண்மை. நமக்குக் கிடைக்கவேண்டியதை நியாயமான முறையில் நமக்குக் கிடைக்கச் செய்வதுதான் வாழ்க்கையில் முக்கியமானது. அடித்துப் பிடுங்கி, ஊழல் செய்து, அடுத்தவர் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் பணம் வந்த வழி தெரியாது போய்விடும்.

நம்மை மேன்மையான உயிர்களாக தக்க வைக்க எளிமையும், அன்பும், சக மனிதர்கள் மீதான அக்கறையும், எளியோர் மீதான கருணையும் தான். அன்பு, நன்றி, மன்னிப்பு இவை மூன்றும் நேர்மறையானவை. உங்களை முன்னேற்றப் பாதைக்கு மேன்மேலும் உயர்த்திச் செல்லும் மந்திரத்தன்மை உடையவை. இக்குணங்கள் எல்லோருக்கும் இயல்பில் இருப்பதுதான். ஆனால் அவற்றை முன்னெடுக்க விடாமல் ஈகோ தடுக்கும். நேர்முறை உணர்வுடன் வாழ்ந்தால் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அப்போது உள் அமைதியும் ஏற்படும். அது முகத்தில் புன்னகையாக வெளிப்படும். இயல்பாகவே சிரிப்புடன் இருப்பவர்களைப் பாருங்கள், அவர்களின் வயதைக் கணிக்கவே முடியாது. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் அவர்களின் வயதை தள்ளிப்போட்டுவிட்டது. இளமையும் வசீகரமும் அவர்களுக்கு இவ்வகையில் வசமானது. 

இத்தகைய இளமையுடன் இருக்க நம்மை நாமே உள்ளும் புறமும் சரியாக பேணுவோம். அப்போது நம்முடைய இளமைக்கு நாமே கியாரண்டி!

]]>
youth, young, beauty, அழகு, இளமை https://www.dinamani.com/health/mental-health/2017/jul/18/how-to-he-young-always-2739627.html
2736155 மருத்துவம் மனநல மருத்துவம் விடுப்பு எடுத்த பெண் ஊழியரின் மின்னஞ்சலுக்கு தலைமை நிர்வாக அதிகாரியின் பதில் என்ன? Wednesday, July 12, 2017 03:26 PM +0530 இந்த உலகம் எப்போதுமே கடுமையான ஓரிடமாக இருக்க வேண்டுமா என்ன? சில சமயம் இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்படும் போது அடடே என்று நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். அத்தகைய ஒரு விஷயம் தான் இது.

மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த மேட்லின் பார்கர் என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வெப் டெவலப்பராக பணி புரிந்து வருகிறார். சமீபத்தில் மனது சரியில்லை என விடுப்பில் சென்ற அவர், தனது சக பணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தனக்கு  மனச் சோர்வினால்,  இரண்டு நாட்கள் பணி விடுப்பில் இருப்பதாகவும், விரைவில் மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த மின்னஞ்சலுக்கான பதிலை தலைமை நிர்வாக அதிகாரியே மேட்லினுக்கு அனுப்பியிருந்தார். அந்த மெயிலைப் படித்த மேட்லின் நெகிழ்ந்துவிட்டார். 

மேட்லின் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

'மனச் சோர்வு காரணமாக லீவில் இருந்த சமயத்தில், டீம் நண்பர்களுக்கு அனுப்பிய மெயிலுக்கு என்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி ஆதரவாக பதில் சொல்லியதுடன், பணி விடுப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்’

இந்தப் பதிவு இணையத்தில் உடனே பரவத் தொடங்கி மேட்லினுக்கும் அவரது தலைமை நிர்வாக அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. 

மேட்லின் பகிர்ந்திருந்த டிவீட்டுகளுக்கு குவிந்த வரவேற்பைப் படித்த அவருடைய தலைமை நிர்வாக அதிகாரி பென் காங்லிடன் மற்றொரு பதிவை எழுதினார். அதன் தலைப்பு - இந்த 2017-லும் கூட மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் இன்னும் பணி இடங்களில் விவாதிகப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இது 2017, இன்னும் கூட பணி இடங்களில் மன நலம் குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை என்பதை என்னால் நம்ப
முடியவில்லை. இத்தனைக்கும் ஆறில் ஒரு அமெரிக்கருக்கு மன அழுத்தப் பிரச்னை உள்ளது.

இது 2017,  இன்னும் என்னால் முழுவதும் நம்ப முடியவில்லை. பணி செய்பவர்கள் விடுப்பில் செல்லும் போது அவருக்கு பணி ஊதியம் தர வேண்டுமா என்பது இன்னும் சர்ச்சைக்குள் தான் உள்ளது. 37 சதவிகித முழு நேரப் பணியாளர்கள் மட்டும்தான் சிக் லீவுக்கான சம்பளத்தைப் பெறுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது 2017. நாம் பொருளாதாரத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருக்கிறோம். நம்முடைய வேலைகள் நம் மனதையும் உடலையும் சக்கையாக பிழிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. ஒரு தடகள வீரர் காயமடைந்தால், அவர்கள் சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து ஓய்வு எடுத்த பின் சரியாகிவிடுவார்கள். ஆனால் மூளையால் செய்யக் கூடிய வேலைகள் அப்படியல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

]]>
Madalyn Parker, CEO, Sick Leave, மன நலப் பிரச்னை, பணி விடுப்பு https://www.dinamani.com/health/mental-health/2017/jul/12/woman-requests-time-off-for-mental-health-boss-sends-the-perfect-reply-2736155.html
2729506 மருத்துவம் மனநல மருத்துவம் ஆசைகள், துன்பங்கள் எப்படி கையாள்வது? DIN DIN Friday, June 30, 2017 12:20 PM +0530 நிறைவேறாத ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?

ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன்மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்து விட்டீர்கள் தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.

துயரங்கள் நீங்களே உருவாக்கிக் கொள்வது. அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய் விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடி கூட அதைவிட்டு விலகி வர முடியவில்லை. அது தான் பிரச்சினை.

‘துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?’ என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம் தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ‘ஸ்விட்ச்’ தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சிலநேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத் தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலநேரம் வேறேதோ ஒன்றைத் தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது நீங்கள் ஒரு ‘காரை’ வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழி தெரியாமல் இருப்பது போல. மனம் போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித்தானே நடக்கும்? இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு காரை ஓட்டவேண்டும் என்றால் அதைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம். இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.

இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான். வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள் போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். ‘இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது’ இப்படிக் கூட நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக் கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா? மண்ணில் தேவையான உரங்களைக் கலந்து, அதைச் சரியான பதத்தில் தயார் செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அது வளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத் தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும். நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. “அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறது” என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர் தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்ன செய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.

ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது ‘வேண்டும், வேண்டும்’ என்று ஆசை கொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். ஒரு மலரை உங்களால் மலரச் செய்யமுடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும். வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால் போதும், தேவையானது நடந்துவிடும்.

உங்களுக்கு சாதம் சமைக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால் போதும், சமைப்பது தானாக நடந்துவிடும். முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளே விட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, அங்கே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் கூட இதேபோன்று தான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அது நடப்பதில்லை.

ஒரு சிறு கடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அது தாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக் கொண்டுவிட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப் பிடித்துப் போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை. உங்களுக்கு எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அது நடக்காது.

இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும். அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிட வேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதை விட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். ‘எப்படியேனும் நான் என்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்’ என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களை விட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக் கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களை விட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள். அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்கமுடியாதவற்றை வகுக்க நினைப்பதால் தான். என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அது போதும், வேண்டியது நடக்கும்
 
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டுமெனில், அதற்கு எவ்வகையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? இதில் ஒன்று, நாம் ஏற்கெனவே பார்த்தது போல், அடிப்படை ஆசை எப்போதும் எல்லையற்று விரியவே முயல்கிறது. அதனுடைய வழியில் நீங்கள் முட்டுக்கட்டை உருவாக்கினால், அது உங்களுக்குத் துயரத்தை உருவாக்கும். நிறைவேறாத ஆசை என்பது அப்படித்தான் நிகழ்கிறது. ஆசை என்றாலே அது ஒரு பெரிய மாளிகைக்கோ, தங்க அட்டிகைக்கோ உருவாவது என்பதல்ல. அது ஒரு சாதாரண கூழாங்கல்லிற்குக் கூட உருவாகலாம். அப்பொருளின் மதிப்பு துயரத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால் விரிவடையவேண்டும் என்ற அந்த ஏக்கத்திற்கு தடை வந்துவிட்டது. அதுதான் அங்கே துயரத்தை விளைவிக்கிறது.

இந்தத் துயரம் எப்படி உருவாகிறது, ஆனந்தம் எப்படி உருவாகிறது என்று அவற்றின் இயக்கமுறையைப் பாருங்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளை அடைந்துவிட்டால், அது எல்லையற்று விரிவதற்கு ஒரு படியென நினைத்தீர்கள். ஆனால் அது நிறைவேறவில்லை, துயரம் வந்துவிட்டது. இதைச் சற்று கவனியுங்கள். அந்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்பதனால் துயரம் வரவில்லை. எல்லையற்று விரியும் அந்த ஆசை நிறைவேறவில்லை என்பதால் தான் துயரம் வந்தது.

எதன் மீது உங்களுக்கு ஆசை வருகிறது என்பது, எத்தகைய சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. ஒரு கூழாங்கல், ஒரு தங்க ஆபரணம், ஒரு ஆண், ஒரு பெண், அது எதுவாய் இருந்தாலும், நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ, அது கிடைக்காதது உங்கள் துயரத்திற்குக் காரணமல்ல. எப்படியேனும் விரிவடைந்திட நீங்கள் கொண்ட ஏக்கம் நிறைவேறாது போனது தான் உங்கள் துயரத்தின் காரணம். பலநேரங்களில் நீங்கள் ஆசைப்படும் பொருளின் மீது கூட உங்கள் கவனம் நிலைத்திருப்பதில்லை. ஆனால் இக்கணமே அது கிடைக்காவிட்டால், அந்த ஒன்றே உங்கள் வாழ்க்கை என்பது போல், உங்கள் முழு கவனமும் அதில் படிந்துவிடும். நிஜத்தில் அந்தப் பொருள் உங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை. அதைக் கொண்டு நீங்கள் சற்றே விரிவடைய நினைத்தீர்கள். அது தான் முக்கியம். ஆசை என்பது இந்த ‘விரிவடைதலுக்கு’ ஒரு வழி.

ஆனால் இந்த விரிவடையும் ஏக்கத்திற்கு பொருள்நிலையில் நீங்கள் வடிகால் தேடினால் அது நடக்காது. நொடிக்கு நொடி ஆசைகள் இதை, அதை என்று மாற்றி மாற்றிக் கேட்கும். அப்போது துயரம் தவிர்க்க முடியாததாக ஆகிறது. ஆம், உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் அடைந்திட முடியாதே! உங்களிடம் என்னவெல்லாம் இருந்தாலும், உங்களிடம் இல்லாததும் இருக்கும் தானே! இவ்வழியில் நீங்கள் சென்றால், ஆனந்தமாய் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆம், உங்களின் ஒரு ஆசை நிறைவேறும் போது, அந்த நிமிடம் சந்தோஷமாக இருந்தாலும், அடுத்த நொடியே வேறொன்றின் மீது ஆசை வருகிறது. ஆக ஆசைகள் ஒழுங்கற்ற முறையில் வெளிப்படுகிறது.

ஆசை என்பது சரியும் அல்ல தவறும் அல்ல. ஆசைக்கு பொருள் முக்கியமில்லை. அப்பொருளோடு உங்கள் ஆசையை இணைத்தது நீங்கள். இது வேண்டும், அது வேண்டும் என்ற பாகுபாடு எல்லாம் மனதில் தான் இருக்கிறது. இதன் மேல் ஆசை கொள்ளலாம், அதன்மேல் வேண்டாம் என்ற வரையறைகளை வகுத்தது யார்? கடவுளா? இல்லை. நீங்கள் தான். நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், அதற்கு பலன்கள் கிடைக்க வேண்டும் தானே. இந்த வரையறையை விதித்துக் கொண்டதால், உங்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், பெறுவதற்கு பதிலாக இழந்திருக்கிறீர்கள், இம்முழு உலகத்தை, உங்கள் முழு வாழ்வை இழந்திருக்கிறீர்கள்.

நன்றி - சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
Desires, Wishes, Failure, ஆசை, தோல்வி https://www.dinamani.com/health/mental-health/2017/jun/30/desires-and-failures-how-to-handle-them-2729506.html
2728454 மருத்துவம் மனநல மருத்துவம் பிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது Wednesday, June 28, 2017 01:07 PM +0530 ‘உலகில் இத்தனை பேர் துயரத்தில் இருக்க, நான் மட்டும் எப்படி சந்தோஷத்தில் இருக்கமுடியும்?’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது! ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும்? அடுத்தவருக்கு உதவ நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது என்ன? 

'முதலாளித்துவம்’ நிறைந்த நமது சமூகத்தில், லாப நோக்குடன் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. கடையில் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கினால், என் சுயநலத்திற்காக, மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற சமூகங்கள்தான் ஏதோ ஒரு வகையில் உலகில் வன்முறையைத் தூண்டுகின்றன என்று எண்ணுகிறேன். இப்படி நினைக்கும்போது, என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனவே நான் என்னைப் பற்றி மட்டும் நினைக்கவும் உலகில் உள்ள மற்ற துயரங்களைப் புறக்கணிக்கவும் என்ன செய்வது?

ஒரு மனிதன், மனிதனாக ‘ஆக’ வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு பிறக்கும்போதே ஒருவர் மனிதராகப் பிறப்பதில்லை. மெதுமெதுவாக பண்பட்டு, அவர் மனிதனாக ‘ஆகிறார்’. மனித கருவில் இருந்து பிறப்பதால் மட்டும் நீங்கள் மனிதராவதில்லை. ‘மனிதன்’ என்பது மிக சிக்கலான ஆனால் அழகான ஒன்று. அதை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. உங்கள் தாய் உங்களை அற்புதமான மனிதனாக பெற்றெடுப்பதில்லை. வெறும் ஒரு மூலப்பொருளாகத்தான் பெற்றெடுக்கிறாள். நீங்கள் எவ்வளவு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள் என்பது, இந்த உயிரை நீங்கள் எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. ஆக, அடுத்தவரின் துயரத்தை உணர ஆரம்பித்து இருக்கிறீர்கள். இது நல்லது தான். ‘மனிதனாகும்’ பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

பாதி உலகம் இன்று துயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன, அதுதான் உண்மையான நிலை. இப்போது நீங்களும் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் இருக்கும் பிரச்சினையை அதிகரிக்கிறீர்களா, குறைக்கிறீர்களா? மற்றவர்கள் ஒரு காரணத்திற்காக துயரத்தில் இருந்தால், நீங்கள் வேறொரு காரணத்திற்காக துயரத்தில் இருக்கிறீர்கள். இது இருக்கும் பிரச்சினைக்கான தீர்வல்ல. நீங்கள் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறீர்கள்.

நீங்கள் ஆனந்தமாய் இருந்து, அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவராய் இருந்தால்தானே, அடுத்தவருக்கும் அதை அமைத்துக் கொடுக்க முடியும்? உங்களுக்கே ‘சந்தோஷம் என்றால் என்ன’ என்று தெரியாவிட்டால், அதை அடுத்தவருக்கு எப்படி வழங்குவீர்கள்? உங்களை சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும். உங்கள் உயிர், உங்கள் வாழ்க்கையை உங்களால் சரியாக பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்றால், அடுத்தவரை நீங்கள் எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள்? உங்களை மிகச் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருந்தால், அடுத்தவரை எப்படி நன்றாக வாழவைக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையெனில், உங்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டு, பிறருக்கு இன்னும் பாதிப்பை தான் உண்டு செய்வீர்கள். கெட்ட எண்ணத்தை விட நல்ல எண்ணங்கள் தான் இவ்வுலகிற்கு பெருமளவில் தீங்கு இழைத்திருக்கின்றன.
 
உலகில் வாழும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்றால், இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும், இவற்றில் எது சிறந்தது: அவர்களையும் உங்களாகவே நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொள்வதா? அவர்களை ‘மற்றவர்’களாக எண்ணி விட்டுவிடுவதா? உங்கள் மீது நீங்கள் எப்படி அக்கறை கொள்கிறீர்களோ, அதேவிதமாக எல்லோர் மீதும் அக்கறை கொள்வது தானே சிறந்தது? அப்படியென்றால் இந்த உயிரை (உங்களை) முதலில் சரிசெய்து கொள்ளாமல், அந்த உயிரை (மற்றவரை) நீங்கள் சரி செய்யச்சென்றால், அது உங்களுக்கு புத்தி சொல்லும், ‘முதலில் உன்னை நீ சரியாக வைத்துக்கொள். நீ இப்படி இருந்து கொண்டு, எனக்கு என்ன முட்டாள்தனத்தை செய்ய நினைக்கிறாய்’ என்று.

எங்கு எதை செய்ய நினைத்தாலும், உடலளவிலும், மனதளவிலும் எந்த நிலையில் இருக்க நீங்கள் விரும்புவீர்கள்? ஆப்பிரிக்க நாட்டின் ஸியரா லியோன் பகுதியில் நாம் சில சமூகநல செயல்கள் செய்து வருகிறோம். உங்களை அவ்விடத்தில் விட்டு, இரண்டு ஆண்டுகள் நேரமும் கொடுத்து, அங்கிருக்கும் நிலையை சரி செய்யுங்கள் என்று சொன்னால், அங்கிருக்கும் பிரச்சினைகளில் நீங்கள் தொலைந்தே போவீர்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்கென்றே, நான்கு ஐந்து வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு, தங்களை தயார் செய்து கொண்டவர்களை அங்கே சமூகப் பணியில் ஈடுபட அனுப்பியிருக்கிறோம். அங்கு சென்ற மூன்றே மாதங்களில், அவர்கள் அங்கு பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தினர். ஏனெனில் அவர்களுக்கு தங்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரியும், அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும். இந்த அளவிற்கு உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இப்படி இல்லாமல், அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, இருக்கும் சூழ்நிலையை சரிசெய்யப் பார்த்தால், அந்தப் பிரச்சினையில் நீங்கள் தொலைந்து போவீர்கள்.

ஒரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால், நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை நிகழ்த்துவதற்குத் தேவையான திறனும் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டியது தான். உண்மையிலேயே ஏதோ ஒன்று செய்ய நினைத்தால், முதலில் உங்கள் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது எனப் பார்த்து, உங்கள் வாழ்வை நல்ல நிலையில் நீங்கள் நடத்திக் கொள்ளவேண்டும். உங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு நீங்கள் என்ன நல்லது செய்துவிட முடியும்? ஒவ்வொரு டீக்கடையிலும் அமர்ந்துகொண்டு, இந்நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று பேசுகிறவர்கள் ஏராளம். அவர்கள் பிரதமருக்கு ஆலோசனை சொல்கிறார்கள், டென்டுல்கர் எப்படி மட்டை பிடித்து ஆட வேண்டும் என்று அவருக்கு பயிற்சியாளராகவும் ஆகிவிடுகிறார்கள். அங்கேயே, அந்த டீக்கடையிலேயே, புரட்சிகள் பல செய்து உலகத்தை மாற்றுகிறார்கள்… என்ன, டீ முடிந்தவுடன், புரட்சிகளும் அங்கேயே, அக்கணமே முடிந்து போகிறது. வெறும் அக்கறையும், உணர்ச்சிவசப் படுவதும் மட்டும் போதாது. நம் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் நேரம் ஒதுக்காவிட்டால், இவ்வுலகின் நிலை மேன்மேலும் மோசமாகிக் கொண்டே தான் இருக்கும்.

மனித இனத்தின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், முதலில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களை எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையில் வைத்தாலும், நீங்கள் உடைந்து போக மாட்டீர்கள், தூள் தூளாக நொறுங்கிப் போக மாட்டீர்கள் என்ற அளவிற்கு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முழுத் திறனிற்கு நீங்கள் செயல்படுவீர்கள். அதனால், முதலில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தான் யோகா – உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வதற்கான தொழில்நுட்பம்.

நன்றி - சத்குரு

]]>
Worries, mental health, கவலை https://www.dinamani.com/health/mental-health/2017/jun/28/stop-worrying-start-living-2728454.html
2719782 மருத்துவம் மனநல மருத்துவம் ஃபேஸ்புக் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யலாமா? IANS Tuesday, June 13, 2017 11:18 AM +0530 சமூக இணைய தளங்களில் உலகம் முழுவதிலும் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் ரகசியமாக ஒரு வேலையைத் தொடங்கியுள்ளது. அதாவது உங்கள் கணினியின் வெப்காம் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள கேமராவின் மூலம் உங்களை ரகசியமாகக் கண்காணித்து சிலவற்றை பதிவும் செய்யப் போகிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தப் புதிய போக்கைப் பற்றி அதன் பயனாளிகளுக்குத் தெரியப்போவதில்லை. இது ஒரு புதிய தொழில்நுட்பம் எனும் அளவில் தான் அறிமுகமாக உள்ளது. நீங்கள் உங்கள் நண்பரின் ஒரு புதிய புகைப்படத்தைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தால் உடனே உங்கள் முக உணர்வுகள் படம் பிடிக்கப்பட்டு, நீங்கள் விரும்பிய அந்தப் புகைப்படம் அல்லது அதை ஒத்த புகைப்படங்கள் உங்கள் பார்வையில் படும் படி அடிக்கடி ந்யூஸ் ஃபீடில் வந்து கொண்டிருக்கும்’ என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சியைப் பற்றி பதிவு செய்துள்ளது Independent.co.uk எனும் இந்த இணையதளம்.

உங்கள் முகத்தைப் படம் பிடித்ததுடன் இல்லாமல் அதை ஆய்ந்து எது உங்கள் விருப்பப் பதிவுகள் என்பதை அலசி நீங்கள் சைட்டில் வெகு நேரம் இருப்பதற்கான மறைமுக வேலையைச் செய்வது தான் அதன் நோக்கம். உதாரணமாக ஏற்கனவே சொன்னபடி, உங்கள் நண்பரின் புகைப்படத்தை பார்த்து சந்தோஷத்தில் நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், ஃபேஸ்புக்கின் அல்காரிதம் அந்தத் தகவலை பதிவு செய்து அதே போன்ற புகைப்படங்களை உங்கள் காட்சிக்கு தந்து கொண்டிருக்கும். அதே போல் ஒரு பூனை விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது உங்களைக் கவரவில்லை என்று முகத்தை வேறு பக்கம் திருப்பினாலும் கூட அதையும் பதிவு செய்து கொண்டிருக்கும் வெப்காம் உங்கள் பார்வைக்கு ஒருபோதும் அத்தகைய காட்சிகளைக் கொண்டு வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்’. உங்கள் முக மாற்றத்துக்கு ஏற்றபடி புகைப்படங்கள் தேர்வு செய்யப்படும். சிரிப்பதும் முறைப்பதும் பதிவு செய்யப்பட்டு அதற்கேற்றாற் போல உங்கள் மனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும்.

அதாவது உங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டு இயங்கும் ஒரு சாதனமாக ஃபேஸ்புக் உருமாறிக் கொண்டிருக்கிறது. இது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றுகிறதா? நிச்சயமாக இல்லை. அதிலுள்ள ப்ரொக்ராம்கள் மூலம் ஒரு உளவாளியைப் போல உங்கள் முகம் படம் பிடிக்கப்பட்டு, உங்களை எலியைப் போல ஒரு பொறியில் சிக்க வைக்கும் தந்திரம் தான் இது. நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் அடிமைப்பட்டு கிடந்தால் உங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிப்படைந்துவிடும். ஃபேஸ்புக்குக்கு தேவை பயனர்கள். அவ்வளவே ஆனால் அதற்கு நம்முடைய பொன்னான நேரத்தையும் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுப்பது எத்தகைய முட்டாள்தனம்?

இன்னும் ஃபேஸ்புக் இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை. ஆனால் எந்த நேரமும் அது இந்த திட்டத்தைச் செயல்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தேவையற்ற விஷயங்களுக்கு வாழ்க்கையிலும் சரி ஃபேஸ்புக்கிலும் சரி இடம் கொடுக்காதீர்கள். இந்த பரந்து பட்ட உலகில் செய்ய வேண்டிய பயனுள்ள வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. தேடிக் கண்டடைய நெகிழ்ந்து கரைய வேண்டிய தருணங்கள் எவ்வளவோ மிச்சம் உள்ளன. மெய் நிகர் உலகை மறந்து நிகழ் நிறை உலகில் என்றென்றும் துடிப்புடனும் மகிழ்வுடனும் வாழுங்கள்.

]]>
Facebook tracking users, webcam, ஃபேஸ்புக், வெப்காம் https://www.dinamani.com/health/mental-health/2017/jun/13/facebook-considering-secret-tracking-via-webcam-2719782.html
2690796 மருத்துவம் மனநல மருத்துவம் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது! Tuesday, April 25, 2017 11:49 AM +0530 நான் எங்கு சென்றாலும், மனிதர்கள் அவர்கள் மொபைல் போனுடன் கட்டுண்டு கிடப்பதைக் காண்கிறேன். தொழில்நுட்பம் என்பது அதுவாகவே நல்லதோ கெட்டதோ கிடையாது, அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. தங்களுடைய புகைப்படங்களையும், அவர்கள் மனங்களில் எழும் எண்ணங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிந்தாக வேண்டும் என்ற நிர்பந்தமும் அவசரமும் மனிதர்களுக்கு ஏன் வந்தது? அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அவர்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்காததால்தான். அவர்கள் குப்பையை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைவிட அர்த்தமுள்ளது எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை டைரியாக பதிந்த நாட்கள் உண்டு. அப்போதெல்லாம் எவராவது அவர்களது டைரியைத் திறந்து படித்துவிட்டால் “என் வாழ்க்கையைப் பற்றி நீ எப்படி படிக்கலாம்?” என்று மனமுடைந்து போவார்கள். ஆனால் இப்போதோ, அவர்கள் முகநூலில் பதிந்ததை எவரும் படிக்கவில்லை அல்லது லைக் செய்யவில்லை என்றால் மனமுடைந்து போகிறார்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் என்ன செய்தீர்கள், எங்கு சென்றீர்கள் என்று எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். மகத்துவம் ஏதும் இல்லாத இடத்தில் மகத்துவம் தேட முயல்கிறீர்கள். வாழ்க்கை மகத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போவது, உங்கள் மன மற்றும் உணர்வு கட்டமைப்பைக் கடந்து உணரும் திறனை மேம்படுத்தும்போது மட்டுமே. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும் உணர்வுகளிலுமே சிக்குண்டபடி தங்கள் வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து செல்கிறார்கள். அவர்கள் வேறெதையும் உணராமல், இதுமட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள். எண்ணங்களும் உணர்வுகளும் நீங்கள் நடத்தும் மனோரீதியான நாடகம். உதாரணத்திற்கு, இப்போது ஏதோவொன்று தவறாகிவிட்டது என்று நீங்கள் நினைத்தால், உண்மையில் எதுவும் நடக்காவிடிலும் நீங்கள் உடனே வேதனைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள். மாறாக, உண்மையிலேயே உங்களைச் சுற்றி ஏதோவொன்று தவறாகிப் போனாலும் எல்லாம் சரியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உங்கள் உருவாக்கம், நிஜத்திற்கும் அதற்கும் எவ்விதத்திலும் தொடர்பு கிடையாது.

அதேபோல, மற்றவர்களின் அனுபவங்களைப் பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வேறொருவருக்கு நடப்பதற்கு நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களுக்கு எதுவும் நடக்காது. பார்வையாளராக இருக்காதீர்கள் – வாழ்க்கையில் பங்கேற்பாளராக இருங்கள். நீங்கள் செய்யும் செயலின் தீவிரத்தை அதிகரிக்கமுடியுமா என்று பாருங்கள். சும்மா முயன்று பாருங்கள். நீங்கள் ஏதோவொன்றை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் – அதை பத்து சதவிகிதம் அதிக தீவிரத்துடன் பார்க்கமுடியுமா என்று பாருங்கள். எல்லோருடைய கண்களும் அதே விஷயங்களைக் காண்பதில்லை. உங்கள் அனுபவத்தின் அளவு, நீங்கள் எந்த அளவு தீவிரத்துடன் ஏதோவொன்றைச் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. உங்கள் தீவிரத்தை அதிகரிக்க, நீங்களாக சற்று முயற்சியும் முனைப்பும் கொள்வது தேவைப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் எங்கும் போய்ச்சேருவதில்லை, ஏனெனில் அவர்கள் எப்படியோ ஒரு படி முன்னால் கால்வைப்பார்கள், பிறகு ஒரு படி பின்னால் செல்வார்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடன் ஒரு படி முன்னால் சென்று அதனை அங்கீகரித்தால், அடுத்த படி எடுப்பதற்கான உத்வேகம் பிறக்கும். தீவிரம் என்பது தன்னால் வராது. உங்கள் வாழ்க்கையின் மின்சாரத்தை உயர்த்தாமல், நீங்கள் அதிக விழிப்புணர்வாய் மாறமுடியாது. உங்களால் ஏதோவொன்றை எந்த அளவு அனுபவித்துணர முடிகிறது என்பது நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. 

நீங்கள் இப்போது உங்கள் விழிப்புணர்வை முழுவதுமாக இழந்துவிட்டால், நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரியாது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் தெரியாது. நீங்கள் ஓரளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. உங்கள் தீவிரத்தை நீங்கள் துரிதப்படுத்தினால், உங்கள் விழிப்புணர்வும் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை சாத்தியம் என்று நினைத்துக்கூட பார்த்திராத விஷயங்களை கிரகித்துக்கொள்ளத் துவங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உண்மையாகவே அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். சலிப்பினால் இறப்பதை விட உற்சாகப்பெருக்கால் இறப்பது மேலானது.

நன்றி : சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
Face book, social media addiction, முகநூல், சமூக வலைதளம் https://www.dinamani.com/health/mental-health/2017/apr/25/face-book-and--social-media-addition-2690796.html
3305 மருத்துவம் மனநல மருத்துவம் மனவளம் பெற தினமும் யோகாசனம் செய்யுங்கள்! மதி Thursday, August 11, 2016 12:46 PM +0530 மனவளம், மன அமைதியைப் பெற தினமும் யோகாசனம் செய்யுங்கள் என்று பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி அறிவுரை வழங்கிப் பேசினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவு, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், மாவட்ட யோகா சங்கம் இணைந்து சர்வதேச யோகா தின விழாவை புதன்கிழமை நடத்தின. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார்.

மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் ப.சிவக்குமார், மாவட்ட யோகா சங்கத் தலைவர் மு.மண்ணுலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, யோகக் கலை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, யோகாசன பயிற்சிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவ - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சா.பழனி பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது யோகக்கலை. யோகக்கலையின் தாயகம் இந்தியா என்பதை மாணவ - மாணவிகள் நினைவில் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றலை தரும் வல்லமை யோகாசனத்துக்கு உண்டு.

எனவே, ஒழுக்கம், ஆளுமைத் திறன், மன வளம், மன அமைதியைப் பெற மாணவ - மாணவிகள் தினமும் குறைந்தது 5 நிமிடமாவது யோகாசனம் செய்ய வேண்டும். இளமையில் தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால், முதுமையில் இளமையோடு இருக்கலாம் என்றார்.

தொடர்ந்து, சிறந்த முறையில் யோகாசனம் செய்த பள்ளி மாணவ - மாணவிகள் 7 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, மாணவ - மாணவிகள் அனைவரும் யோகாசன உறுதிமொழியேற்றனர்.

யோகா தலைமைப் பயிற்சியாளர் டி.சவுந்தரராஜன், பயிற்சியாளர்கள் என்.செந்தில்குமார், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

விழாவில், செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் செ.வெங்கடாசலபதி, கிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி நிறுவனர் கிருஷ்ண கஜேந்திரன், ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி பி.டி.எல்.சங்கர், மாவட்ட யோகா சங்கப் பொருளாளர் கு.ப.நாகராஜன், செயலர் கோ.அருள்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
Yoga https://www.dinamani.com/health/mental-health/2016/aug/11/மனவளம்-பெற-தினமும்-யோகாசனம்-செய்யுங்கள்-3305.html
3199 மருத்துவம் மனநல மருத்துவம் நவீன  உளவியல்! dn Tuesday, August 9, 2016 12:47 PM +0530 மனித மனத்தை ஆராய்வது உளவியல் (Psychology). இதை மேற்கத்திய கல்விப் பின்புலத்துடன் அறிவியல் துறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தவர் நரேந்திரநாத் சென் குப்தா.

வங்க மாநிலத்தின் ஃபரித்பூரில் 1889, டிச. 23-இல் பிறந்தார் நரேந்திர நாத் சென் குப்தா. சுதேசிக் கல்வி எழுச்சியால்  கொல்கத்தாவில் உருவான வங்க தேசியக் கல்லூரியில் (இதன் முதல்வராக இருந்தவர்தான் அரவிந்தர்) தனது இடைநிலைக் கல்வியை முடித்த நரேந்திரநாத்துக்கு, இளம் வயதிலேயே அறிவியலை செயல்முறைப் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதில் ஆர்வம் மிகுந்திருந்தது. அவரது முறையான உடற்பயிற்சி, வலிமையான உடலையும் திடமான சிந்தனைகளையும் அவருக்கு அளித்தது.

மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நரேந்திரநாத் சென்றார். 1910 முதல் 1913 வரை அங்கு படித்த அவர் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த கல்வித் தகுதிக்காக, ரிச்சர்டு மானிங் ஹாட்ஜஸ் கல்வி உதவித்தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. தவிர, பெருமைக்குரிய பை பேட்டா கப்பா சங்கத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

ஹார்வர்டிலேயே 1914-இல் எம்.ஏ. பட்டம் பெற்ற நரேந்திரநாத், உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய அமெரிக்கரான உளவியல் நிபுணர் ஹூகோ மன்ஸ்டெர்பர்க்கின் வழிகாட்டுதலில் உளவியலில் ஆராய்ச்சி செய்தார். அவரது 'Anti-Intellectualism: A Study in Contemporary Epistemology’ என்ற தலைப்பிலான ஆய்வேட்டுக்காக அவருக்கு 1915-இல் பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டது.

பிறகு நாடு திரும்பிய அவர், 1916-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்தார். அதேசமயம் அங்கு புதிதாகத் துவங்கப்பட்ட பரிசோதனை உளவியல் (Experimental Psychology) துறையின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தத்துவம் பயிற்றுவித்தல், உளவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி ஆகியவை அவரது பணிகளாக இருந்தன. அதே ஆண்டில் கமலாவை அவர் மணம் புரிந்தார்.

அவரது ஆய்வக ஆராய்ச்சியின் அங்கங்களாக, முப்பரிமாண தொலைவு உணர்திறன் (Depth Perception), உளவு உடலியல் (PsychoPhysics), கவனக்கூர்மை (Attention) ஆகியவை இருந்தன.

உளவியலின் அறிவியல் தன்மையை வெகுவாக வலியுறுத்தி வந்த நரேந்திரநாத், 1923-இல் கூடிய இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்று, உளவியலை அறிவியலின் ஒரு துறையாக அங்கீகரிக்கச் செய்வதில் வெற்றி பெற்றார். அதில் துவங்கப்பட்ட உளவியல் தனிப்பிரிவுக்கு அவரே தலைவராகப் பொறுப்பேற்றார்.

உளவியலின் வளர்ச்சிக்காக, நரேந்திரநாத்தின் தீவிர முயற்சியால்  இந்திய உளவியல் சங்கம் 1924-இல் துவங்கப்பட்டது; அதன் சஞ்சிகையாக, Indian Journal of Psychology-ஐ 1925-இல் துவக்கி, அதன் நிறுவன ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

பரிசோதனை உளவியலில் நிபுணராக இருந்தபோதும், சமூகம் சார்ந்த, இன அடிப்படையிலான, கல்விப் பின்புலம் கொண்ட, குற்றம் தொடர்பான, சமயம் சார்ந்த உளவியல் பிரிவுகள் தொடர்பாகவும் அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பொறுப்பேற்க 1928-இல் கொல்கத்தாவிலிருந்து சென்றார். அங்கு பிரபல சமூகவியலாளரான ராதாகமல் முகர்ஜியுடன் இணைந்து சமூக உளவியல் குறித்த நூலை நரேந்திரநாத் சென் குப்தா எழுதினார். Introduction to Social Psychology: Mind in Society என்ற அந்த நூல், இந்தியாவில் எழுதப்பட்ட சமூக உளவியல் நூல்களில் முதல் நூலாகும். மேற்கத்திய நாடுகளின் அனுபவ ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்நூல் எழுதப்பட்டது; அதில் இந்திய அனுபவங்கள் குறைவே என்று நூல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

1929-இல் லக்னெள பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார்; அப்போது, தத்துவவியல் (Philosophy) துறையில் உளவியலை ஒரு பாடமாகச் சேர்க்க முயன்று, அதில் வெற்றி பெற்றார். மேலும் அங்கு பரிசோதனை உளவியல் ஆய்வகத்தை 1940-இல் அமைத்தார்.

அங்கு அவரிடம் பயிற்சி பெற்ற  ராஜ்நாராயண், ஹெச்.எஸ்.ஆஸ்தானா போன்ற பலர் தேசிய அளவில் புகழ் பெற்ற உளவியல் நிபுணர்களாக உருவாகினர்.

பின்னாளில் அவரது கவனம், சமயம் சார்ந்த உளவியலில் குவிந்தது. யோக சாதனா குறித்த அவரது ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவை. சமஸ்கிருதம், பாலி மொழிகளில் அவர் பெற்றிருந்த பாண்டித்தியம் அவருக்கு உதவிகரமாக இருந்தது. பாரதத்தின் பண்டைய சமய நூல்களை ஆராய்ந்த அவர், கிறிஸ்தவ மாயாவாதத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

அவர் கடைசியாக எழுதிய உச்ச இன்பத்தின் பின்புலம் (Mechanisms of Ecstasy) என்ற சமய உளவியல் நூல் கைப்பிரதியாக இருந்தது. 1944, ஜூன் 13-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நரேந்திரநாத் சென் குப்தா காலமானார். அப்போது நேரிட்ட குழப்பத்தில் அந்த நூல் காணாமல் போனது, பெரிய இழப்பாகும். 

உளவியல், தத்துவவியல், கல்வி, மானுடவியல் துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளித்தவர் நரேந்திரநாத்.  அவரது சமூக உளவியல் -ஓர் அறிமுகம் (1928), மனவளர்ச்சியும் மனச்சிதைவும் (1940), மனப்பண்புகளில் பரம்பரைத் தாக்கம் (1942) ஆகியவை முக்கியமான நூல்களாகும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையை 1943-இல் துவக்கிய குணமுதியன் டேவிட் போஸ் (1908- 1965) உடன் சேர்த்து, இந்தியாவில் நவீன உளவியலின் நிறுவனராக நரேந்திரநாத் சென் குப்தா போற்றப்படுகிறார்.

- வ.மு.முரளி

]]>
Pshychology, mental health https://www.dinamani.com/health/mental-health/2016/aug/09/நவீன -உளவியல்-3199.html