Dinamani - யோகா - https://www.dinamani.com/health/yoga/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2945709 மருத்துவம் யோகா உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா? இதைச் செய்யுங்க! உமா Saturday, June 23, 2018 05:01 PM +0530  

யோகா செய்வதால் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலமும் மேம்படும். அதிலும் சர்வ அங்க ஆசனம் செய்வதால் ஒருவரது மூளைத் திறன் அதிகரிக்கும் என்கிறது ஆய்வுகள். சர்வம் என்றால் அனைத்து என்று பொருள். அங்கம் என்றால் அவயங்கள் என்று பொருள். உடலிலுள்ள அனைத்து அவயங்களும் ஆரோக்கியம் வழங்கும் ஆசனம் என்பதால் சர்வ அங்க ஆசனம் (சர்வாங்காசனம்) என்று பெயர் பெற்றது இந்த ஆசனம்.

இந்த ஆசனத்தின் செய்முறை

  • முதலில் யோகா செய்யப் பயன்படுத்தும் பாயைத் தரையில் விரித்து, அதில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும்
  • கால்கள் இரண்டையும் சேர்த்து உயர்த்தி தலைக்கு மேலே கொண்டு சென்று ஹாலாசன நிலையில் இருக்கவும்.
  • அதே நிலையில் இருந்து இரண்டு கால்களையும் ஆகாயத்தை நோக்கியவாறு மேலே உயர்த்தி நிறுத்தவும்.
  • இரண்டு கைகளையும் முதுகில் வைத்து அழுத்தமாகத் தள்ளவும், அப்படியே தாங்கியவாறு உயர்த்தி நிறுத்திக் கொள்ளவும். அதே நிலையில் சுமார் பத்து சுவாசங்கள் விடவும்.
  • பிறகு கால்களை மீண்டும் ஹாலாசனத்துக்கு கொண்டு வந்தபின், மிகவும் மெதுவாகத் தளர்த்தியபடி இறக்கி கொண்டே வந்து இயல்பான நிலையில் விரிப்பின் மீது வைத்துவிட்டுச் சற்றே இளைப்பாறவும்.

இதனை மூன்று முறை செய்யவும்.

உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும். 

]]>
Yoga, யோகா, Sarvangasana, சர்வ அங்க ஆசனம் https://www.dinamani.com/health/yoga/2018/jun/23/how-to-do-sarvangasana-2945709.html
2912576 மருத்துவம் யோகா யோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து! இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை உமா பார்வதி Thursday, May 3, 2018 01:02 PM +0530
தினமும் யோகா செய்வது உங்கள் கர்மாவுக்கு வேண்டுமானாலும் நல்லது செய்யலாம், ஆனால் உங்கள் முழங்கால்களுக்கு அது ஆபத்தாகிவிடக் கூடும் என்று இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பல முன்னணி யோகா ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள டாக்டர் அசோக் ராஜகோபால் அண்மையில் ஒரு பத்திரிகை பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவரது கூறியதிலுள்ள உண்மை யோகாவை வர்த்தமாக்கிவிட்ட பலருக்கு சவாலாகிவிட்டது. காரணம் இன்றைய தேதியில் யோகாதான் உலகம் முழுவதும் எளிதாக பணம் குவிக்கும் தொழில்முறையாக மாறி இருக்கிறது. இத்தகைய யோகா மையங்கள் கூறுவது என்னவென்றால், நீங்கள் தினமும் யோகா செய்தால் உங்கள் இளமையை தக்க வைக்கலாம், ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும், உடல் நலம் பேணலாம், உலக அமைதிக்கான வழி யோகாவில் மட்டுமே சாத்தியம் என்று இப்படி பலவிதமான நம்பிக்கைகள் விதைத்துவருகிறார்கள். இவற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் யோகாவை கற்றுக் கொடுப்பவர்கள் முதலில் அதனை முழுமையாகவும் முறையாகவும் கற்றுத் தேற வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உலகளாவிய கவனத்தை உருவாக்கிய இந்தியாவின் பாபா ராம்தேவைப் போன்ற மிக கவர்ச்சிகரமான யோகா ஆசிரியர்களில் சிலர், அதன் மூச்சு பயிற்சிகளால் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை குணப்படுத்த முடியும் என நம்புகின்றனர். அமெரிக்காவில் மட்டும், ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களுக்கும் மேலதிகமாக யோகா உபகரணங்களுக்காக செலவழிக்கப்படுகிறது. மேலும் 15 மில்லியன் மக்கள் தீவிரமான யோகப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

டாக்டர் ராஜகோபாலின் கூற்றின் படி, யோகாவை செய்யும்போது ஒருவரின் இதயம் விரிவடைகிறது, இத்தகைய தீவிர பயிற்சிகள் ஒருவரின் மூட்டுகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, தொடர்ந்து செய்து வருகையில் இது மூட்டுவலிக்கு வழிவகுக்கிறது.

அதுவும் யோகாவை தினமும் செய்பவர்களுக்கு எலும்பு வியாதிகள் அதிகளவில் காணப்படுகிறது. சரியான சூழ்நிலையில் முறையாக செய்யப்படும் யோகா அற்புதமாகத்தான் இருக்கும், ஆனால் யோகாவை மக்கள் கூட்டம் கூட்டமாக கற்றுக் கொள்ள பயிற்சியளிக்கப்படுகையில் அவர்கள் கவனமாகக் கற்றுக் கொள்வதில்லை, உத்தேசமாகவே செய்கின்றனர். எனவே தவறாகக் கற்றுக் கொண்ட ஒரு பயிற்சியை அது தவறெனவே தெரியாமல் தினமும் உடலை பிரயாசைப்படுத்தி செய்வதன் மூலம் அது அவர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக பிரச்னைகள் விளைவித்துவிடுகின்றன’ என்று டாக்டர் அசோக் கூறினார்.

'பல யோகா ஆசிரியர்களுக்கு நாங்களே முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தினமும் பலவிதமாக செய்து கொண்டிருந்த யோகா உடல் இயக்கங்களினால் (postures) கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று டாக்டர் ராஜகோபால் 'தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையாளரிடம் கூறினார்.

'இத்தகைய யோகா பயிற்சியில் தீவிரமாக தினந்தோறும் ஈடுபடும்போது முழங்காலில் கடுமையான, ஆழமான வளைவுகள் ஏற்படும். உடலில் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக அவை தீங்கு விளைவிக்கும், மற்றும் குருத்தெலும்புகளில் சேதம் விளைவிக்கும்.

சிறிய குழுவினராக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு அதிகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு வகுப்பில் யோகா பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது, அவர்களுக்கு பின்னாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை நானே கண்கூடாக பார்த்துள்ளேன்’ என்றார்.

தங்களுடைய உடல் பாகங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஒவ்வொருவரும் யோகாவை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் உடலில் நிலையையும், இதற்கு முன்னால் ஏதேனும் பிரச்னை இருந்துள்ளதா என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் யோகாவின் மூலம் உடலை பலவிதமாக வளைத்தும் நீட்டியும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் உடல் அவர்களை ஒருகட்டத்தில் பழிவாங்கிவிடும். கடுமையான மூட்டு வலி மற்றும் உடல் வலிகளால் பாதிக்கப்படுவார்கள்.

பல யோகா ஆசிரியர்கள் 'வஜ்ராசனம்' கற்றுத் தருவார்கள். இது ஒரு எளிமையான ஆசனமாக தோன்றலாம். வஜ்ராசனத்தில் உட்கார்ந்து பிராணயாயம் செய்ய வேண்டும் என்பார்கள்.

இந்த நிலைக்கு 'thunderbolt’ என்றும் சொல்வார்கள். இந்த வஜ்ராசன நிலையில் உட்காரும் போது பலர் முழங்கால் வலி உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்தனர். 

யோகா மையத்தில் பயிற்றுவிப்பாளராக உள்ள சாவிரா குப்தா கூறுகையில், 'யோகா செய்யும் போது காயங்கள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படலாம் எனவே ​​மெதுவாக பயிற்சியைத் தொடங்க வேண்டும். அவசரம் கூடவே கூடாது. கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது நம் உடல் அதற்கு ஒத்துழைக்கிறதா, நம்முடைய உடல் யோகாவுக்கு ஏற்ற வகையில் அப்பயிற்சிக்கு தயாராக உள்ளதா என்பதை அறிந்து கொண்ட பின்னரே ஒருவர் தீவிர யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம்’ என்றார்.

'யோகாவை கற்பிக்கும் போது, ​​உடற்கூறு மிகவும் முக்கியம், காரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பும் உடல் ஆற்றலும் இருக்கும், அதனை கருத்தில் கொண்டு தான் பயிற்சிகளைத் தர வேண்டும். உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறதோ, எந்தளவுக்கு தாங்கிக் கொள்ளும் சக்தியை உடையதோ அதற்கேற்ற வகையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட வகையில் உடலை இருத்தி, குறிப்பிட்டபடி சுவாசத்தில் கவனம் வைத்து ஒரு பயிற்சியை செய்ய முடியாமல் போனால், அது உங்களுக்கு உள்காயம் ஏற்படுத்திவிடும். எனவே யோகாவை கற்றுக் கொள்ளும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான ஒழுங்கமைவுகள் மற்றும் பயிற்சியால் மட்டுமே ஒருவர் இத்தகைய காயங்களை தவிர்க்க முடியும்’ என்று அவர் கூறினார்.

1910-ம் ஆண்டில் பிரிட்டனில் ஒரு யோகா அமைப்பு உருவானது, 1950-களின் பிற்பகுதியில் பி.கே.எஸ்.ஐயங்கார், சர் யெஹூடி மெனுஹின் என்பவருக்கு யோகா கற்றுத் தந்தார். 1968-ம் ஆண்டு பிரபல பீட்டில்ஸ் குழுவினருக்கு இந்தியாவில் யோகப் பயிற்சி அளித்தார் ஆன்மிக குரு மகரிஷி மகேஷ் யோகி.

1970-களில் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமூக பொது மையங்களின் ஊடாக யோகா வகுப்புகள் பரவலானது. யோகாவால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று பிரபலப்படுத்தப்பட்டது. இன்று உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்கள் யோகா பயிற்சிகள் மேற்கொள்கின்ற்னார். பிரிட்டனில் மட்டுமே கிட்டத்தட்ட 500,000 யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளன.

நன்றி - தி டெலிகிராஃப்

]]>
Yoga, யோகா, பாபா ராம்தேவ், Baba Ramdev, மூட்டுவலி, yoga cause pain, முழங்கால் வலி https://www.dinamani.com/health/yoga/2018/may/03/yoga-bad-for-your-knees-indian-doctor-warns-2912576.html
2804115 மருத்துவம் யோகா நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா? யோக ஆசான் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! Wednesday, November 8, 2017 04:04 PM +0530 1888-ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் நாள் கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார். இவர் நாதமுனிகள் வம்சத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அவரது மகன் டி.கே.வி. தேசிகாச்சார் இப்படி எழுதுகிறார்.

'இளம் வயதில் வேதத்தை சந்தை முறையில் தன் தந்தையிடம் கற்றார். இவருக்குப் பத்து வயது இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக தந்தையை இழந்தார். பாட்டனார் மைசூரில் இருக்க, 12 வயதில் அங்கே சென்று பரகால மடத்தில் மாணவராகச் சேர்ந்தார். 16-ம் வயதில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கனவில் நாதமுனிகள் தோன்றி தெற்கே உள்ள அழ்வார் திருநகரிக்கு வருமாறு கட்டளையிட்டார். பணத்தைச் சேர்த்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டார். .

ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தடியில் ஒரு பெரியவரை அணுகி 'நாதமுனிகளை எங்கு தரிசிக்கலாம்?' என்று கேட்க, அவர் தனது கையால் காட்டிய திசையை நோக்கிச் சென்றார். அது தாமிரபரணி நதிக்கரையில் ஒரு மாமரத்தடி. உணவருந்தாமல் மிகவும் களைத்திருந்த இவர் அங்கு மயக்கமாக விழுந்தார். அங்கு இவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. மூன்று மாமுனிவர்கள் மத்தியில் அவர் இருந்தார். அவர்களை நமஸ்கரித்து, நாதமுனிகள் இயற்றிய யோக ரஹஸ்யத்தைத் தனக்கு போதிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டர். நடுவில் இருந்த நாதமுனிகள் தனது இனிமையான குரலில் யோக ரஹஸ்யத்தை செய்யுளாகக் கூற, அதைக் கேட்டுக்கொண்டார். சில மணி நேரம் சென்று ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் தன் சுயநினைவு வந்தபோது முனிவர்கள் மறைந்தனர். மாமரத்தடியையும் காணவில்லை.

மீண்டும் கோயிலுக்குத் திரும்பினார். அங்கு அந்தப் பெரியவர் இவரைப் பார்த்தவுடன் “என்ன, நாதமுனிகளிடமிருந்து யோக ரஹஸ்யம் உபதேசமாயிற்றா? கோயிலுக்குப் போய்ப் பெருமாளைச் சேவி” என்று கூற, கோயிலுக்குச் சென்று திரும்பி வந்ததும் அந்தப் பெரியவரையும் காணவில்லை. அப்போதுதான் அந்தப் பெரியவர் தனது கனவில் தோன்றிய, மூன்று மாமுனிவர்கள் நடுவில் காட்சி தந்த நாதமுனிகள் தோற்றமாய் இருந்தது தெரிந்தது.

இவ்வகையில், காலத்தால் அழிந்திருந்த ‘யோக ரஹஸ்யம்’ என்ற அரிய நூல் இவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் தன் யோக தத்துவங்களை வகுத்துக்கொண்டார். மீண்டும் மைசூர் திரும்பி மேலும் படித்து ‘வித்வானாக’ தேறி, சம்ஸ்கிருத மேற்படிப்புக்கு வாரணாசிக்கு தன் 18-ம் வயதில் புறப்பட்டார். அங்கும் ஓர் ஆச்சரியம் நடந்தது.

அங்கே சிவகுமார சாஸ்திரியிடம் மாணவரானார். ஒரே இரவில் தனது குருவிடமிருந்து சம்ஸ்கிருத மொழியிலிருந்து நுண்ணிய அரிய விஷயங்களைக் கேட்டறிந்தார். மறுநாள், இவரது குரு தன் பேசும் சக்தியை இழந்தார்! இவருக்காகக் காத்துக்கொண்டு இருந்தது போல இருந்தது இச்சம்பவம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் வந்த பிறகு வீணை, மீமாம்ஸம், பகவத் கீதை, ஸ்ரீவேதாந்த தேசிகரின் ரஹஸ்யத்ரயசாரம், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம், ஆகியவற்றைக் கற்றார். காசி அவரைக் கவர்ந்திழுத்தது, மீண்டும் கற்க வாரணாசி பயணமானார்.

உஞ்சவிருத்தி எடுத்துப் பெற்ற மாவிலிருந்து தேவையான ரொட்டியைச் செய்துகொண்டு படித்து, படிப்பில் சிறந்து விளங்கிப் பல பட்டங்களைப் பெற்றார். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் (மூன்று மாதங்கள்) இமய மலைச்சாரலுக்கு அருகில் உள்ள கோயில்களுக்கும் புண்ணியத் தலங்களுக்கும் சென்று வருவார். மலைப்பிரதேசத்தில் நெடுந்தூரம் ஏறிச் செல்வதிலும் இயற்கையைக் கண்டு களிப்பதிலும் தன் பொழுதைப் போக்குவார். இவரது பூகோள அறிவு வியக்கத்தக்கது. ஒருவன் நிறைய இடங்கள் செல்வதின் மூலமே நல்ல அறிவைப் பெறுகிறான் என்று வலியுறுத்துவார்.

வாரணாசியில் படிக்கும்போது தந்தையாரிடம் கற்றிருந்த ஆசனப் ப்ராணாயாமங்களைச் செய்து வந்தார். இதைக் கவனித்து வந்த ஒரு சாது இவரை யோக நிபுணர் ஸ்ரீபாபு பகவன் தாஸிடம் அனுப்பினார். அவர் இவரை பாட்னா பல்கலைக்கழகத்தில் மணவனாக அனுமதித்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் இவரது யோகா ஆசிரியர் ஸ்ரீ கங்காநாத்ஜா என்பவர் ‘யோகாச்சார்யா’ பட்டம் பெற்றவர். அவரிடம் யோகா பயின்று அதில் மேலும் தேர்ச்சி பெற விருப்பம் தெரிவித்தார். அதற்கு அவர் 'யோகத்தை முறையே பயில வேண்டுமானால் நேபாளம் தாண்டி திபெத்தில் யோகிவர்யர் ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொல்ல ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார் தனது குறிக்கோளை அடைய முடிவு செய்தார்.

அந்தக் காலத்தில் நாடுவிட்டு வெளியே செல்வது அவ்வளவு எளிதல்ல. சிம்லாவில் இருந்த வைஸ்ராயிடம் இவரது ஆசிரியர் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். துரதிஷ்டவசமாக வைஸ்ராய் சர்க்கரை வியாதியால் உடல்நலம் குன்றி இருந்தார். ஒருநாள் வைஸ்ராயிடமிருந்து அழைப்பு வர, அவருக்கு ஆறு மாதம் யோகப் பயிற்சி அளிக்க, சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தது. வைஸ்ராய் சந்தோஷமாக இவர் ஹிமாலயத்தைக் கடந்து இந்தியாவுக்கு வெளியே நோபாளம் திபெத் செல்ல உதவி செய்தார். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிம்லா வந்து இவருக்கு யோகா கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தே மானஸரோவர் சென்று ஸ்ரீ ராமமோஹன ப்ரம்மச்சாரியைத் தேடி, ஒரு குகையில் அவரைக் கண்டுபிடித்தார். வணங்கி சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். சில நாளில் ஸ்ரீராம மோஹன ப்ரம்மச்சாரியின் குடும்பத்தில் ஒருவரானார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் விவரிக்கப்பட்ட பல யோக நிலைகளை நேபாள மொழியில் உள்ள யோக கூரண்டத்தைக் கொண்டு அறிந்துகொண்டார்.

முதல் மூன்று வருடங்கள் யோக சூத்திரம் கற்றார். அடுத்த மூன்று வருடங்கள் யோகாப்யாஸ்யம் செய்வதில் கழித்தார். அதை அடுத்து ஒன்றரை வருடங்கள் சிஷ்ண க்ரமம், சிகிச்சா க்ரமம் என்ற யோகாபியாசத்தை மொத்தம் ஏழரை வருடங்கள் கற்றார். நடுவில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிம்லா சென்று வைஸ்ராய்க்கு யோகா பயிற்சி அளித்தார்.

ஏழரை வருடங்கள் குருவுடன் தன் வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்தார். அங்கேயே ஆனந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இவர் குருவோ இவரை திரும்ப இந்தியா சென்று, குடும்ப வாழ்க்கை நடத்தி, யோக விஷயங்களை மக்கள் சேவைக்காக உபயோகப்படுத்துமாறு கட்டளையிட்டார்.

1922 திபெத்திலிருந்து திரும்பினார். மீண்டும் கல்கத்தா, அலகாபாத், பாட்னா, பரோடா ஆகிய பல்கலைக்கழங்களில் பல பட்டப்படிப்புகள் படித்தார். பிறகு மைசூர் ராஜகுடும்பத்தில் யோககுருவாக இருந்தார். அங்கே பலருக்கு நாடி பிடித்து உடல்நலக் குறைவானவர்களுக்கு உதவி செய்தார். இவர் ஆயுர்வேதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர்.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி ஆசனப்பயிற்சி முறையில், உடல், மூச்சு, மனது மூன்றும் சேர்ந்து இயங்கும். இவர் சொல்லிக்கொடுத்த முறை பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறிய தத்துவங்களைத் தழுவியது.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் யோகா முறை இது - உடலை ஆசனம் செய்வதன் மூலம் தயார் படுத்திக் கொள்ளவேண்டும். ஆசனம் செய்யும்போது உடலுடன் மனமும் மூச்சும் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவேண்டும். பிறகு ப்ராணாயாமம் (மூச்சைக் கவனமாக கையாள்வது) செய்ய வேண்டும். ப்ராணாயாமம் என்பது ஏதோ மூச்சை இழுத்து, அடக்கி விடுவது என்று நினைப்பார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் சொல்லிக் கொடுப்பது வேறு - மூச்சை உள்ளே இழுக்கும் போது உள்ளுக்குள் ஓர் அரிய சக்தி, நம்மைக் காக்கும் சக்தி போன்ற நிலை வர வேண்டும். அடக்கும் போது அந்த சக்தி நம்மைச் சுத்தம் செய்வதாக உணர வேண்டும். வெளி விடும்போது மனதால் ‘எதுவும் என்னுடையது அல்ல, எல்லாம் உனக்கே சொந்தம்’என்ற உணர்வுடன் வர வேண்டும். அடுத்த நிலை ஆசன ப்ராணாயாமம் செய்வது.

உடல் ஊனமுற்றோருக்கும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இவர் காட்டிய வழி மிக உயர்ந்தது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மூளை செவ்வனே வேலை செய்ய பல வழிகளைக் கையாண்டார். இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகச் சில கருவிகளை உருவாக்கினார். இவர் யோகத்தை ஒரு உடற்பயிற்சியாகக் கொள்ளாமல் கடவுளை அடையும் மார்க்கமாகக் கருதினார். மற்ற கலாசார, மதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் கடைப்பிடிக்கும் புனிதமான பெயர்கள் இருந்தால் அதை உபயோகப்படுத்துங்கள் என்று சொல்லிவிடுவார். தன் நம்பிக்கையை ஒருபோதும் அவர்களிடம் திணிக்கமாட்டார்.

யோகாவில் மக்களை ஈர்க்க, யோகத்தால் இதயத் துடிப்பு, நாடி எல்லாவற்றையும் சில நிமிஷங்கள் நிறுத்தினார். இவரைப் பரிசோதித்த வெளிநாட்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர் 'I would have pronounced him dead’ என்றார் ஒரு ஜெர்மானிய மருத்துவர். இந்த உத்தியைத் தனக்குச் சொல்லித் தரவேண்டும் என்று அவரது மகன் தேசிகாச்சார் கேட்க, 'இது ஈகோவைத்தான் வளர்க்கும், இதனால் சமுதாயத்துக்கு ஓர் உபயோகமும் இல்லை' என்று மறுத்துவிட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். கவிதை எழுதுவார், தோட்ட வேலை செய்வார். சங்கீதத்தைக் கேட்டுத் துல்லியமாக ராக, தாள தவறுகளைச் சுட்டிக் காட்டுவார். சங்கீத வித்வான்கள் இவரிடம் தங்கள் உடல் உபாதைகளுக்குத் தீர்வு கேட்கும்போது சங்கீத நுணுக்கங்களைக் கொண்டே தீர்வுகளை எடுத்துரைப்பார். வீட்டிலேயே ஆயூர்வேத மூலிகைகள் வளர்த்தார். நாட்டியத்தில் முன்னணியில் இருந்த பலர் இவரிடம் சந்தேகம் தீர்த்துக்கொள்வார்கள். ஜோதிடம் அவருக்குப் பிடித்த பிரிவு.

தனது அறையில் உள்ள நாற்காலி மேசைகளைக் காலத்துக்குத் தகுந்தவாறு மாற்றிப் போடுவது இவர் வழக்கம். ஒருமுறை முதல்நாள் மாற்றி போட்டது நினைவில்லாமல் அதிகாலை சூரிய உதயத்துக்குமுன் எழுந்து இருட்டில் நாற்காலி இல்லாத இடத்தில் நாற்காலி இருப்பதாக எண்ணி அமரப்போய், 1984ல் கீழே விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்தது. அப்போது அவருக்கு வயது 96! படுத்த படுக்கையான இவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்துவிட்டார். படுக்கையிலேயே தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக் கொண்டார். அதற்குத் தகுந்த ஆசனங்கள் செய்தார். இரண்டே மாதங்களில் இவர் எழுந்து உட்கார முடிந்தது. இதன் வீடியோ தொகுப்பை யூ ட்யூபில் காணலாம்.

கலிகாலத்தில் இறைவனை அடைய ‘சரணாகதி’ ஒன்றே வழி என்று திண்ணமாக நம்பினார். அதையே பலருக்கு உபதேசமும் செய்தார். 1988-ல் நூறாவது வயதை அடைந்தார். விழாவை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுமாறு பணித்தார். அந்த விழாவின் போது, ஸ்ரீகிருஷ்ணமாச்சாரியார் ஓம் என்று மூச்சு விடாமல் 55 நொடிகள் ஓதினார். அதைத் தவிர மூன்று மணி நேரம் சம்ஸ்கிருதத்தில் உரை நிகழ்த்தினார்.

யோகா உடலையும் மனதையும் பிரித்துப் பார்ப்பதில்லை. யோகா ஒரு வித உடற்பயிற்சி இல்லை. உடற்பயிற்சி செய்த பிறகு உடம்பு சோர்வாக வியர்த்துக்கொட்டும். ஆனால் யோகா செய்த பிறகு உடல் புத்துணர்ச்சி அடையும். கடவுளை நம் மனம் நினைக்க, உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் மட்டும் ஒத்துழைத்தால் போதாது, மனதும் ஒத்துழைக்க யோகா உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோதி 2015ல் யோகா நாள் அறிவித்து யோகா பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. யோகா நாதமுனிகள் காலத்திலேயே, ஏன் அதற்கு முன்பும் இருந்திருக்கக்கூடும். சில வருடங்கள்முன் யான். ஓய் தயான்ஸ்கி என்ற ரஷ்ய அறிஞர் சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்தில் யோகாசனம் இருந்ததை உறுதிப்படுத்தினார். அந்த ஆசனத்துக்குப் பெயர் மூலபந்தாசனம். இந்த மாதிரி ஆசனத்தில் யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்ச்சியாளர் தேடியபோது, இந்தியாவில் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் செய்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வீடு தேடி வந்து பார்த்தார்கள். அது கச்சிதமாகப் பொருந்துகிறது என்று ஆச்சரியப்பட்டார்கள்.

யோகா ஏதோ ஹிந்து சமாசாரம், மோடி அரசின் அரசியல் நகர்வு என்று நினைக்காமல், யோகா பற்றி நம் இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் பற்றி நாம் எந்த ஆவணப்படமும் எடுக்கவில்லை, வெளிநாட்டவர்கள்தான் எடுத்துள்ளார்கள் என்பது வருத்தமான விஷயம்.

உடம்பு ரஜோ குணத்தை படிப்படியாகக் குறைத்து, ‘லெத்தார்ஜி’யாக இருக்கிறது என்கிறோமே, அதை முற்றிலும் நீக்கி சுறுசுறுப்பு தருகிறது யோகா. குழந்தைகளை லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி படிப்பைச் சொல்லித் தருவதை விடவும் முக்கியமானது, அவர்கள் காலை நீட்டி மடக்கி யோகா செய்யச் சொல்லித் தருவது. இதனால் அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும்.

நன்றி - சுஜாதா தேசிகன்  

]]>
Krishnmacharya, KYM, Yoga, ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, யோகா, பதஞ்சலி, நாதமுனி https://www.dinamani.com/health/yoga/2017/nov/08/sri-krishnamacharya-2804115.html
2633288 மருத்துவம் யோகா ரமணர் சொன்ன இரண்டு 'ம்'கள் ! சுந்தர்ஜி பிரகாஷ் Monday, January 16, 2017 03:00 PM +0530 ரிஷிகேஷ் வசிஷ்ட குகையின் ஸ்வாமி சாந்தானந்த பூரியின் "Stories for Meditation" ல் அபூர்வமான பல கதைகளைப் படிக்க வாய்த்தது. அதிலிருந்து இரு கதைகள்.

முதலில் ரமணர் சொன்ன கதை. 

ரமண மகரிஷியின் அனுபூதியைப் பேச இந்த ஒரு கதை மட்டுமே போதும் என்று படித்த பின் தோன்றியது. கதை இதுதான்.

***

தியானம் என்றால் என்ன?அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

‘இரண்டு 'ம்'களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?’ என்றார் மகர்ஷி புன்னகைத்தபடி.

கதை முடிந்தது.

ரமணர் சொன்ன இரண்டு 'ம்'கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது எனவும் எனக்குப் புரிந்தது.

ஆழமாகவும், எளிமையாகவும் செல்லும் தியானத்தின் பரிமாணங்களை சிவ சம்ஹிதையில் "திரிபுரா ரகஸ்யத்தில்" படிக்க முடிந்தது. அது வேறொரு சமயத்தில்.

**
இரண்டாவது.

ஒரு மன்னனின் அரசவையில் விசித்ரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

புகார் அளித்தது ஒரு நாய்.

‘இன்றைக்குப் பக்கத்துத் தெருவில் நான் படுத்திருக்கும் போது, என்னை ஒரு பெருங் கல்லால் ஒரு துறவி அடித்து துன்புறுத்தினார். ரத்தம் எப்படிப் பெருகி ஒடுகிறது பாருங்கள் மன்னா? அவரைத் தண்டித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும். என்னைத் தாக்கிய துறவி இன்னும் அங்கேதான் இருக்கிறார்’ என்று கண்ணீர் வடித்தது.

மன்னன் உட்பட எல்லோர்  மனதையும் அந்த நாயின் கண்ணீர் தொட்டது.

மன்னனின் உத்தரவின் பேரில் துறவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப் பட்டார்.

தனக்குப் போதிய இடமின்றி அந்த நாயே முழு இடத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதால் சினமுற்று கல்லால் தாக்கியதைத் துறவி ஒப்புக் கொள்ள, ஒரு துறவிக்கு இத்தனை சினம் ஆகாது என்று நினைத்த மன்னன், தன் மந்திரிகளிடம் அவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க உத்தரவிட்டான்.

மந்திரிகளோ அந்த நாய் விரும்பும் தண்டனையை அந்தத் துறவிக்கு அளிக்கலாம் என்று ஒரே குரலில் சொல்ல நாயின் வசம் வழக்கு திரும்பியது.

‘இங்கிருந்து நூறு மைல் தொலைவில் ஓர் மடாலயம் இருக்கிறது. நிரப்பப்படாதிருக்கிற அதன் தலைமைத் துறவியின் இடத்துக்கு இந்தத் துறவியை நியமியுங்கள்’ என்றது நாய் தன் தீர்ப்பில்.

எல்லோர் முகத்திலும் - எல்லாக் கதைகளிலும் இம்மாதிரியான தருணங்களில் வருவது போலக் - குழப்பம்.

‘அந்தத் தலைமைத் துறவி இறந்து போய் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த இடம் நிரப்பப்படவில்லை.’

அதற்கும், தண்டனைக்கும் என்ன பொருத்தம் என்ற புதிர் இன்னும் நீடித்தது.

நாய் தொடர்ந்தது.

‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, அந்த மடாலயத்தின் தலைமைத் துறவி நான்தான். அதன் தலைமைத் துறவியாய் இருந்து மண், பொன், பெண் என்னும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்காத ஒருவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். செய்த பாவங்களுக்கு இப்போது நாயாய்ப் பிறந்து அனுபவிக்கிறேன்’.              

]]>
Ramana Maharishi, ரமண மகரிஷி, ரிஷிகேஷ் வசிஷ்டர் குகை https://www.dinamani.com/health/yoga/2017/jan/16/ரமணர்-சொன்ன-இரண்டு-ம்கள்--2633288.html
2559973 மருத்துவம் யோகா நலம் தரும் முத்ரா! Tuesday, September 6, 2016 11:03 AM +0530 இன்று மருத்துவத்துறை வணிகமயமாகிவிட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நீங்கள் மருத்துவமனை சென்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் இருக்க காப்பீட்டுத்துறையும் உங்களை கவனிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் இது எதுவுமே தேவை இல்லை. நீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று தைரியமாகக் கூறுகிறார், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் பட்டம் பெற்ற பாசு கண்ணா. அவர் முத்திரைகளின் மூலம் நமது நோயை நாமே தீர்த்துக்கொள்ளும் முறை பற்றி கூறுகிறார்:

'உடம்பைப் பொருத்தவரை இரண்டே இரண்டு தான் நமக்கு மிக முக்கியம். ஒன்று நோய் வந்தால் சரி செய்து கொள்வது எப்படி? மற்றது நோய்வரும் முன் காப்பது எப்படி? இந்த இரண்டும் நமக்குத் தெரிந்தால் நமக்கு நாமே சிறந்த மருத்துவர். 

எனக்குச் சிறுவயது முதலே ஆராய்ச்சி என்றால் பிடிக்கும். என் மனைவி ஒரு சித்த மருத்துவர். ஒரு முறை நான் ஆராய்ச்சி செய்வதைப் பார்த்த அவர், இது நல்ல விஷயம், தொடருங்கள் என்று ஊக்கப்படுத்தினர். நமது விரல்களே நமக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றால் நம்மில் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மை. ஆரம்பத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது முத்திரைகளைப் படிக்கப் படிக்க என் மனமும் அறிவும் விசாலமடைந்தது மட்டுமல்லாமல், உடம்பில் வித்தியாசமான ஓர் உணர்வும் ஏற்பட்டது. இதை டாக்டர் என்ற முறையில் எனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மேலும் என்னை உற்சாகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை நான் முத்திரைகளைச் செய்து எனக்குத் தெரிந்த பலரையும் குணப்படுத்தி உள்ளேன். சுமார் 3000 முத்திரைகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு என்ன நோய்கள் வருமோ அதை சரி செய்ய தேவைப்படும் என்று பார்த்துப் பார்த்து முத்திரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். ஒரு முத்திரை ஆராய்ச்சி என்றால் அதற்கு கிட்டத்தட்ட 90,000 ரூபாய் செலவு ஆகும். ஆராய்ச்சி என்றால் மற்றவர்களை இதைச் செய்யச் சொல்லி அவர்களின் ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை மற்றும் அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க மட்டும் அல்லாமல், மற்ற செலவுகளையும் சேர்த்து ஆகும் செலவு இது. ஒரே வேளையில் என்னால் ஒரு முத்திரையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டும் அல்லாமல்,வேறு பல பிரச்னைகளும் ஏற்பட்டன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் இப்படி ஆராய்ச்சி செய்ததன் பயனாக 226 முத்திரைகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அதன் பயன்கள் எவை என்றும் எழுதி வைத்தேன்.

இந்த முத்திரைகள் எல்லாமே நம் சரீரத்தில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். நான் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் பல்வேறு வகையான சிகிச்சை முறைகளையும் என்னுடைய ஆராய்ச்சியில் இணைத்து, அந்த அந்த முறைகளை விட நம் கை விரல்களே நமக்கு எவ்வளவு முக்கியமானது, உபயோககரமானது, சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் செய்ததால், இதை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த முத்திரைகளைச் செய்ய ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. வரும்முன் காப்போம் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா? அது போல நோய் இல்லாதவர்களும், நோய் வரும் என்று நினைப்பவர்களும், 'உதாரணமாக சார் எனக்கு ஜுரம் வரும் போல இருக்கு... தொண்டை கரகரனு இருக்கு சார், இருமல்ல கொண்டு போய் விட்டுடுமோ?' என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த முத்திரைகள் மிக மிக உபயோகமாக இருக்கும். குறிப்பாக ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

முத்திரைகளால் 21 நாட்களில் ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய முடிந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், வேலை செய்யாத சிறுநீரகத்தை இந்த முத்திரைகள் வேலை செய்ய வைத்திருக்கின்றன. இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும்.முத்திரைகளை நாம் உட்காரும்போது மட்டுமே செய்ய வேண்டும். நடக்கும் போதோ அல்லது படுக்கும் நிலையிலோ செய்வது சரி அல்ல. ஒரு முத்திரையை சுமார் 20 மற்றும் 30 நிமிடங்களுக்கு செய்தால் நலம். உணவு உண்ட பின் சுமார் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப்பின் செய்தால் பலன் அதிகமாகும்.

என் மகள் அம்ருதவானி பிட்ஸ் பிலானியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு நாள் அவளுக்குத் தலைவலி. அவளது அறை தோழி ஒரு சில முத்திரைகளைச் சொல்லி இதை செய்தால் உனக்கு குணமாகிவிடும் என்றாள். எங்கிருந்து இந்த முத்திரைகளைக் கற்றாள் என்று என் மகள் அவளிடம் கேட்டாள். 'நான் டிவியில் பார்த்தேன். யூடியூபிலும் இருக்கிறது. நீ தைரியமாகப் பண்ணலாம். உன் தலை வலி பறந்து விடும்' என்று சொல்ல என் மகள் உடனே எனக்கு தொலைபேசியில் அழைத்து, 'டாடி உங்கள் முயற்சி வீண் போகவில்லை' என்று பெருமையுடன் கூறினாள். நான் செலவு செய்தாலும் எல்லாரும் இன்புற்றிருப்பதே என் நோக்கம் என்று ஒரு கால கட்டத்திலிருந்து யார் கேட்டாலும் இலவசமாக முத்திரைகளைச் சொல்லித் தருகிறேன். அது மட்டுமல்லாமல், 108 முத்திரைகளை அதன் படங்களுடன், பலன்களையும் சேர்த்து ஒரு புத்தகமாகத் தயாரித்து வெளியிட்டு விட்டேன். யார் வேண்டுமானாலும் பார்த்து, செய்து பயன் பெறலாம். முத்திரை பலவும் கற்று கொள்வோம் முதுமையில் கூட நோயில்லா வாழ்வை பெற்று மகிழ்வோம்' என்கிறார் டாக்டர். பாசு கண்ணா. 
 -சலன் 

]]>
mudra, benefits of mudra https://www.dinamani.com/health/yoga/2016/sep/05/நலம்-தரும்-முத்ரா-2559973.html
3265 மருத்துவம் யோகா யோகா மூலம் புற்றுநோய் குணமாகும்! test Wednesday, August 10, 2016 12:54 PM +0530 யோகா செய்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
 கோவாவில் தேசிய மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில் மத்திய ஆயுஷ் மருத்துவத் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்துகொண்டு பேசியதாவது: ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவத்தை மாற்று மருத்துவ சிகிச்சையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுஷ் மருத்துவம் என்பது அலோபதிக்கு எதிரானது அல்ல.

நோயாளிகளை குணப்படுத்துவதே அனைத்து மருத்துவ சிகிச்சை முறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற குறைபாடுகளை குணப்படுத்த வேண்டுமெனில் மருந்துகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும். ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி செய்வது குறித்து அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். யோகா மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முடிவில் நிரூபித்துள்ளது.

ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறையின் சிறப்புகளை விளக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளதுபோல், அனைத்து மாநிலங்களிலும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீபாத் நாயக்.

]]>
yoga, health, cancer https://www.dinamani.com/health/yoga/2016/aug/10/யோகா-மூலம்-புற்றுநோய்-குணமாகும்-3265.html