Dinamani - விஐபி ஹெல்த் - https://www.dinamani.com/health/vip-health/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2982376 மருத்துவம் விஐபி ஹெல்த் நடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்! சினேகா Saturday, August 18, 2018 10:00 AM +0530  

நடிகர் கமலுடன் உத்தமவில்லன்,  விஸ்வரூம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பூஜா குமார். 40 வயதுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதன் காரணம் தனது உடலை ஆரோக்கியமான பராமரிப்பதால்தான். தனது ஹெல்த் சீக்ரெட்ஸ் பற்றி கூறுகிறார் பூஜா.

'என்னோட ஆரோக்கியத்தின் ரகசியம் ரொம்ப சிம்பிள். அரிசி சாதத்தை அறவே தவிர்த்துட்டேன். கோதுமைக்கும் தடா தான். கஞ்சி, ஜூஸ் போன்ற திரவ உணவுகள் தான் அதிகமா எடுத்துக் கொள்வேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். பழரசம் எதுவானாலும் எனக்கு பிடிக்கும். நான் சுத்த சைவம். காய்கறி, பழங்கள் நல்ல சாப்பிடுவேன். சூப், சாலட் தவிர்க்க மாட்டேன். இதுக்கு முன்னால் எடை அதிகம் இருந்ததால், 25 வாரங்கள் சாலன்ஜ் எடுத்துக்கிட்டேன், 25 கிலோ குறைச்சேன். ஜாக்கிங் தினமும் பண்ணினேன். ஒரு ஆப் உதவியோடு என்னால பழையபடி ஸ்லிம் ஆக முடிஞ்சுது. 

இது தவிர தினமும் யோகா செய்வேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே மாட்டேன். மனதை எப்பவும் மகிழ்ச்சியா வைச்சிருப்பேன். ரொம்ப டென்ஷன் ஆக மாட்டேன். நல்லது கெட்டது என லைஃப்ல எல்லாமும் இருக்கும். அது நடிகையா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி வாழ்க்கை எப்பவும் ஒரே சீரா இருக்காது. அதையெல்லாம் உணர்ந்து பேலன்ஸ் செய்து அதுக்கேத்தபடி வாழ்க்கையை சுகமா ஆக்கிக்கணும். அதான் சீக்ரெட்’ என்றார் பூஜா.

]]>
pooja kumar, health, beauty, tips, பூஜா குமார், கமல், ஹெல்த், ப்யூட்டி சீக்ரெட்ஸ் https://www.dinamani.com/health/vip-health/2018/aug/18/நடிகை-பூஜா-குமாரின்-அழகு-ப்ளஸ்-ஆரோக்கிய-ரகசியம்-2982376.html
2889118 மருத்துவம் விஐபி ஹெல்த் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்! (விடியோ) ராம் Wednesday, March 28, 2018 04:51 PM +0530  

டோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் திரும்பிப்  பார்க்கக் கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொழு கொழு அமுல் பேபிகளாக வலம் வந்த நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் இருந்துவந்தனர். நடிகை ஜெயலலிதா, குஷ்பு, ஹன்ஷிகா என இந்த பட்டியலில் உள்ள நடிகைகள் பலர் உண்டு. அதன் பின் வந்ததுதான் ஜீரோ சைஸ் நடிகைகளின் எண்ட்ரி. இலியானா, எமி ஜாக்சன், தமன்னா போன்ற ஒல்லி பெல்லி நடிகைகளின் வருகையும் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் முக்கிய அடையாளம் அவரது அழகிய சிரிப்பு. 

அறிமுகமான குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அத்தனை சுலபமில்லை. இதனை நிரூபிக்க ரகுல் ப்ரீத் சிங் தனது உடல் பராமரிப்பை எப்படி மேற்கொள்கிறார், தினமும் ஜிம் வொர்க் அவுட்டுகளை எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதை அவ்வப்போது யூட்யூப் விடியோவின் மூலம் பகிர்ந்து கொள்வார். 

நிறைய தண்ணீர் குடியுங்கள். வொர்க் அவுட் செய்யுங்கள், சரியான உணவைச் சாப்பிடுங்கள், ஜன்க் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டால் மனமும் நன்றாக இருக்கும் என்பதே அவர் கூறும் முத்தான சில ஹெல்த் டிப்ஸ்.

பரபரப்பான அவரது ஜிம் வொர்க் அவுட்ஸ், ஆப் பயிற்சிகளைப் பார்க்கும் போது, உடலை நாம் இது போல் பராமரித்தால் ஆரோக்கியம் மேம்படுவது உறுதி.

 

]]>
kollywood, ரகுல் ப்ரீத் சிங், Rakul Preet Singh, work out, வொர்க் அவுட்ஸ், ஜிம் https://www.dinamani.com/health/vip-health/2018/mar/28/gym-work-out-of-rakul-preet-singh-2889118.html
2888446 மருத்துவம் விஐபி ஹெல்த் உடல் நலம் பேணுங்கள்! கிரிக்கெட் வீரர் தோனி இளைஞர்களுக்கு அறிவுரை! சினேகா Tuesday, March 27, 2018 03:30 PM +0530  

உடலை பேணி காப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார். பெங்களூரில் விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் செவன் விற்பனை மையத்தை அண்மையில் திறந்து வைத்த போது அவர் பேசியது: 'பெங்களூரில் அதிக நாள்கள் தங்கி, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். அழகான நகரமான பெங்களூரு மீது அன்பு வைத்துள்ள ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

விளையாட்டில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணி காப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். கிரிக்கெட், கால்பந்தாட்டத்தில் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வாய்ப்புகள் வரும்போது உடல் உறுதியாக இருந்தால் மட்டுமே தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டில் வெற்றி பெற முடியும். விளையாட்டில் வெற்றி பெற்றால், எந்த வயதிலும் புகழின் உச்சத்தை அடைய முடியும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து விளையாட்டு மட்டுமின்றி, உடற்பயிற்சியும் அவசியம்’ என்றார் அவர். பேட்டியின்போது ரித்தி குழுமத்தின் மூத்த மேலாண் இயக்குனர் அருண் பாண்டே உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

]]>
ms dhoni, seven, fitness, தோனி, உடல்நலம் https://www.dinamani.com/health/vip-health/2018/mar/27/ms-dhoni-inaugurates-a-seven-store-in-bangalore-2888446.html
2812876 மருத்துவம் விஐபி ஹெல்த் ஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்! Wednesday, November 22, 2017 03:13 PM +0530  

உலக அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த  மனுஷி சில்லாரின் உடல் அமைப்பு நம்மில் பலரை வியப்பும் அதே சமயம் பொறாமையும் அடைய செய்திருக்கும். இவர்களைப் போன்ற அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியத்தை அவரே கூறியிருக்கிறார்.

1. காலை உணவைத் தவிர்க்க கூடாது: காலை உணவைத் தட்டிக்கழிப்பது உடல் அமைப்பிற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அது நாளின் முடிவில் பசி வேதனையை அதிகரித்து நம்மை அதிகம் சாப்பிட தூண்டும்.


2. சிறிய தட்டை உபயோகியுங்கள்: சிறிய தட்டை உபயோகிப்பது இயற்கையாகவே நம்மைக் குறைவாக சாப்பிடத் தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாகச சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டதே எனக் கவலை படுவதில் பயனில்லை.

3. சர்க்கரையைத் தவிருங்கள்: பழங்களை ஜூஸாக்கி குடிக்கும் போதும் அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதிலும் முக்கியமாகச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும்.

உணவு அட்டவணை:

  • அதிகாலை: தூங்கி எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீர் (சில சமயம் எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து)
  • காலை உணவு: புளிப்பேறாத தயிருடன் ஓட்ஸ் அல்லது கோதுமை ஃப்லேக்ஸ் மற்றும் பழங்கள்; இரண்டு அல்லது மூன்று முட்டை வெள்ளை மட்டும் கரு இல்லாமல் மற்றும் அவகேடோ, காரேட் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
  • பிரன்ச்: இளநீர் மற்றும் பழங்கள்.
  • மதிய உணவு: அரிசி, சப்பாத்தி, காய்கறி அல்லது கோழிக் கறி மற்றும் பருப்பு.
  • மாலை: வாழைப்பழம் அல்லது அத்தி பழத்தை கொட்டையுடன் அரைத்து ஸ்மூத்தி (பழச்சாறு). உப்பு சேர்க்காத கொட்டைகள் (முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட்)
  • இரவு உணவு: வேக வைத்த காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட், பீன்ஸ், காளான்) மீன் அல்லது கோழிக் கறி.

இவற்றை எல்லாம் சாப்பிடும் போது அதிக கொழுப்பு சத்து நிறைந்த எந்த ஒரு விஷயத்தையும் ருசிக்காகவும் சேர்க்கக் கூடாது. இதை அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் பின்பற்றினாலும் உலக அழகியின் உடல் அளவான 34-26-34 அளவைப் பெற்றுவிடலாம். வாழ்த்துக்கள்!

]]>
food, fitness, miss world, eat, secret, shape, manushi, chillar https://www.dinamani.com/health/vip-health/2017/nov/22/manushi-chillar-food-diet-and-fitness-secret-2812876.html
2721178 மருத்துவம் விஐபி ஹெல்த் என்றும் வசீகர இளமை! நடிகர் மோகன்லால் ஜிம் பயிற்சி! உமா பார்வதி Friday, June 16, 2017 10:54 AM +0530 மொழிகளைக் கடந்து தன்னுடைய திறமையால் திரை ரசிகர்களின் மனத்தை வென்றவர் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் விஸ்வனாதன் நாயர். இவர் மே 21, 1960-ல் கேரளாவின் பத்தனம்தித்தா மாவட்டத்தின் எலந்தூர் எனும் கிராமத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வளர்ந்தவர். மலையாளத்தில் இதுவரை 320 படங்களில் நடித்துள்ள மோகன்லால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 56 வயதான இந்த இளைஞர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், நாடக நடிகர் எனும் பன்முகத் திறமை கொண்டவர். 

1978-ஆம் வருடம் தன்னுடைய 18 வயதில் 'திறநோட்டம்' என்னும் படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றில் நடித்து திரைத்துறைக்குள் நுழைந்தார் மோகன்லால். ஆனால் அந்தப் படம் சென்சார் பிரச்னைகளில் சிக்கி வெளிவரவில்லை. அதன்பின் 1980-ல் வெளிவந்த மஞ்சில் விரிஞ்ச பூக்கள் உள்ளிட்ட 25 படங்களில் வில்லனாக நடித்தார். 1983-வெளியான படயோட்டம் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தும் அக்காலகட்டத்தில் அவரை வில்லனாகவே மலையாளத் திரையுலகம் ஏற்றுக் கொண்டது.

1984-ல் இயக்குனர் சசிகுமாரின் இவிடே துடங்குன்னு படத்துக்குப் பின்னர்தான் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அவரது வளர்ச்சி நாடறிந்தது. பாலிவுட் திரைப்படங்களான கம்பெனி, ராம் கோபால் வர்மாவின் கி ஆக் மற்றும் டெஸ் திரைப்படங்களில் நடித்தார். 1985-ல் ஒண்ணாம் குன்னில் ஓரடி குன்னில் எனும் திரைப்படத்தில் சிந்தூர மேகம் எனும் பாடலையும் பாடியுள்ள பெருமை லாலுக்கு உண்டு. ராஜாவின்டே மகன் திரைப்படம் எனும் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனும் பெருமையைப் பெற்றார் லால்.

மனைவி சுசித்ராவுடன் மோகன்லால்

1986-ல் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. திரைப்படத்திற்காக மோகன்லாலுக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்திய அரசின் உயரிய விருதான பத்ஸ்ரீ விருதினை 2001 ஆம் வருடம் பெற்றார் மோகன்லால். இது தவிர ஐந்து முறை கேரள அரசு விருது, எட்டு ஃபிலிம் ஃபேர் விருதுகள் ஆகியவற்றை தனது சிறந்த நடிப்பாற்றலுக்குப் பெற்றுள்ளார். 2009-ல் மோகன்லால் கெளரவ லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டார். ராணுவத்தின் கிளை என வர்ணிக்கப்படும் டெரிட்டோரியல் ஆர்மியிலும் மோகன்லால் தனது பங்களிப்பை வழங்கினார். கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு கிடைத்த இந்தக் கெளரவம் நடிகர் மோகன்லாலுக்குக் கிடைத்தது பெருமை. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே நடிகர் அவர் என்பதும் கூடுதல் சிறப்பு. ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காராரனான மோகன்லால் நடித்து வெளிவந்த குரு எனும் திரைப்படம் 1997-ல்  சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய பரதம் திரைப்படத்துக்காக இந்திய சினிமாவின் 25 சினிமா ஆளுமைகளில் ஒருவராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால்.

மோகன்லாலுக்கு விளையாட்டுகளிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் ஆர்வம் அதிகம். 1978-ல் குஸ்தி வீரராக வீரகேரள ஜிம்கானாவில் பரிசு பெற்றவர் அவர். 2013-ம் வருடம் கொரியாவை சேர்ந்த டேக்வாண்டோ அமைப்பு மலையாள நடிகர் மோகன்லாலை கவுரவிக்கும் வகையில் பிளாக் பெல்ட் வழங்கியது. மார்ஷியல் ஆர்ட்ஸில் மோகன்லாலை பெரிதும் ஈர்த்தவர்கள் புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான். டேக்வாண்டோ ஃபிட்னெஸ் விஷயங்களில் அதிகம் உதவுவதில்லை ஆனால் மனத்தை உறுதியாக்க அது உதவும் என்றார் லால்.

மோகன்லாலுக்கு கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் பிடித்தமான விளையாட்டுக்கள். ஜிம் சென்று பயிற்சி செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர். புஷ் அப்ஸ் மற்றும் பிற பயிற்சிகளை விடாப்பிடியாக செய்து வருபவர். அவருடைய பயிற்சியாளருடன் சமூக வலைத்தளங்களில் சில சமயம் புகைப்படங்களை வெளியிட்டு தன் ஜிம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் லால். அவர் உணவு விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர் என்றாலும், ஃபிட்னெஸ் விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். பங்களூருவில் 'தி ஹார்பர் மார்கெட்' எனும் ஸீ ஃபுட் ரெஸ்டாரண்ட் ஒன்று மோகன்லாலுக்கு உண்டு. இதன் கிளை துபாயில் உள்ளது. இந்தக் கடையை தில்லி, ஹைதராபாத், மும்பய் மற்றும் கொச்சியிலும் துவங்க வேண்டும் என்று லாலுக்கு விருப்பம். காரணம் உணவின் மீதானே பிரியம்தான். அது சமைப்பது, சாப்பிடுவது அல்லது பரிமாறுவது என எதுவாக இருந்தாலும் சரி, லாலேட்டனுக்கு அது மனத்துக்கு நெருக்கமான விஷயம். மொத்தத்தில் தான் ஒரு உணவுப் பிரியர் என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கு பெருமையே.

த்ருஷ்யம் திரைப்படத்துக்காக 2014-ம் வருடம் ஆயுர்வேத சிகிச்சை ஒன்றினை மோகன்லால் மேற்கொண்டார். 'லோஹம்' திரைப்படத்துக்காக கடினமாக ஜிம் பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். எந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்றபடி தன்னை முற்றிலும் உருமாற்றிக் கொள்ளும் ஒரு அற்புதக் கலைஞன் மோகன்லால். 

விருதுகளும் அங்கீகாரங்களும் உண்மையான கலைஞர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்துவிடாது. அவர்களது உண்மையான விருது என்பது தொடர்ந்து தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருப்பதுதான். அவ்வகையில் இன்றைய இளம் கதாநாயர்கள் பலருடன் ஆரோக்கியமாகப் போட்டி போட்டுக் கொண்டே மோகன்லாலின் திரைப்பயணம் 37 வருட வெற்றிப் பயணமாக தொடர்கிறது. இந்தியாவின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக எப்போதும் திரையுலகில் நிலைத்திருப்பார் இந்த மலையாள சூப்பர் ஸ்டார் என்பதுதான் அவருக்கு பெருமை.

]]>
மோகன்லால், Mohanlal https://www.dinamani.com/health/vip-health/2017/jun/16/south-indian-superstar-mohanlals-health-regime-2721178.html
2712418 மருத்துவம் விஐபி ஹெல்த் சூர்யாவின் சிக்ஸ் பேக் சீக்ரெட் மாலதி சந்திரசேகரன் Thursday, June 1, 2017 03:45 PM +0530 ஒரு மனிதனின் நலமான வாழ்வில், ஆரோக்கியம் என்பது முக்கியமான பங்கினை வகிக்கிறது. 

ஒருவரை நேரில் பார்த்தாலும் சரி, அவருடன் ஃபோனில் பேசினாலும் சரி, நாம் கேட்கும் முதல் கேள்வியே 'சௌக்கியமா?' என்பதாகத்தான் இருக்கும். இன்றைய நாட்களில், ஆண்கள், பெண்கள் இருவருமே ஆரோக்கியத்துடன், உடல் கட்டமைப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆண்கள் பெரிய தொப்பையுடன் இருப்பதை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களே விரும்புவதில்லை. அதேபோல், பெண்கள் ஊளைச் சதையுடன், இடுப்பில் டயர்களுடனும், குதிர் போன்ற உடம்புடனும் இருப்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களே விரும்புவதில்லை. 

தங்களை ட்ரிம் ஆக வைத்துக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஜிம்மிற்குக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சாதாரணமானவர்களே இப்படி என்றால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட வெள்ளித்திரை நட்சத்திரங்களின் தேக பராமரிப்பு எப்படி இருக்கும்.? 

என்னங்க சுத்தி வளைக்கிறீங்க? சப்ஜெட்டுக்கு வாங்க என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. இதோ வந்து விட்டேன். எல்லாம் நம் சினிமா உலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் மகன் சூர்யாவைப் பற்றிதான். 

அட்டகாசமாய், அனாயசமாய், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய மனதிலும் சம்மணம் போட்டு அல்லவா உட்கார்ந்து இருக்கிறார். 

அதற்கு முக்கியமான காரணம், படத்திற்குப் படம் வித்தியாசமான ரோல்களை சவாலாக ஏற்றுக்கொண்டு, நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு,படத்திற்கு வெற்றியை ஈட்டித் தருவதுடன், தன் பங்கிற்கு அமோக ரசிகர்களையும் அல்லவா சேர்த்துக்கொண்டு விடுகிறார்!

அடுத்ததாக, விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் முடியும் கட்டத்தில் உள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தில், செந்தில்,  ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

வித்யாசமான படங்களைத் தரும் நம்ப சூர்யா, இதை, காமெடி படமாகக் கொடுக்கிறார். பிசியான ஷெட்யூலுக்கு நடுவே,  தினமணி டாட் காமிற்காக சில நிமிடங்கள் ஒதுக்கினார். 

ஒரு படத்தில் பார்த்த கெட் அப்பை அடுத்த படத்தில் பார்க்க முடிவதில்லை. ட்ரிம்  ஹீரோ, ஒல்லி ஹீரோ, குண்டு ஹீரோ என்று உடல் கட்டமைப்பு மாறி மாறி இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? அவர் அனுசரிக்கும்  டயட் சார்ட் பற்றியும் உடற்பயிற்சி பற்றியும் கேட்டோம். 

‘நான் வியந்து ரசிக்கும் முதல் கதாநாயகன் என் அப்பாதான். எனக்கு அவரின் உடல்வாகு என்று பலர் நினைக்கிறார்கள். தவறில்லை. ஆனால் முக்கியமாக நாம் உட்கொள்ளும் உணவு, மேற்கொள்ளும் உடற்பயிற்சி இவற்றின் மூலம் நம் சரீரத்தை நம் விருப்பப்படி ஷேப் செய்து கொள்ள முடியும். 

எனக்கு ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும். சாப்பிட முடிவதில்லை. ஏனென்றால் நடிக்கவென்று வந்துவிட்டால் வெயிட் போடும் பதார்த்தங்களை ஒதுக்க வேண்டியதாகிறது. அதுவும் என்னுடைய உடற்பயிற்சியாளர், அல்காஸ் ஜோஸஃப் இருக்கின்றாரே, ரொம்ப ஸ்ட்ரிக்ட். 

காலையில் முதலில் கார்டியோ சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி, பிறகு ஒன்றரை மணி நேரம் ஏரோபிக்ஸ் மற்றும் தசை நார்களுக்கு வலுவூட்டும் பயிற்சிகள் ஆகியவைகளை நான் செய்தே தீரவேண்டும். ஒவ்வொரு நாளும், செய்யும் உடற்பயிற்சியின் ஷெட்யூல் மாறும். 

வழக்கமாக, ஜாகிங், ஸ்விம்மிங் போவேன். ஜோவிற்கு யோகா பிடிக்குமாதலால், மனைவிக்காக யோகா. 

உடற்பயிற்சி முடிந்த பிறகு, தசைகளுக்கு உரமிட அதிகமாக புரதச்சத்து உட்கொள்ள வேண்டும். அதனால், காலை உணவிற்கு பழங்கள் மற்றும் ஆறு அல்லது ஏழு முட்டைகளின் வெள்ளைப்பகுதியை மட்டும் சாப்பிடுவேன். 

நான் பொதுவாகவே ஜெனரல் மோட்டார் டயட் ப்ளானின் படிதான் உணவு உட்கொள்வேன். 

முதல்நாள்... வாழைப்பழம் தவிர்த்து இதர பழங்கள் மட்டும். இதில் தர்பூசணி அடங்கும். 

இரண்டாம் நாள்... சிற்றுண்டிக்கு வேக வைத்த உருளைக்கிழங்குகள் மட்டும். மற்ற வேளைகளில் காய்கறிகள்  மட்டும். 

மூன்றாம் நாள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்த்து மற்ற கறிகாய், பழங்கள் மட்டும். 

நான்காம் நாள், வாழைப்பழங்கள், பால் மட்டும். 

ஐந்தாம் நாள், தக்காளி மற்றும் சிக்கன் மட்டும். 

ஆறாம் நாள், சிக்கன் மற்றும் காய்கள் மட்டும். 

ஏழாம் நாள், பிரவுன் ரைஸ் உடன் காய்கறிகள் மட்டும். 

நான், எண்ணை பதார்த்தங்களை உண்பதில்லை. டயடீஷியன் அறிவுரை இல்லாமல் பால் சம்பந்தப்பட்ட ஐட்டங்களை சாப்பிடுவதில்லை. மைதா நிச்சயமாக உணவில் கிடையாது. உடலிலுள்ள நச்சுக்கழிவுகள் வெளியேற, நிறைய தண்ணீர் குடிப்பேன். வாரத்தில் ஒரு நாள் உப்பைத் தவிர்த்து விடுவேன். 

இந்தி நடிகர் அமீர்கான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதைப் பார்த்து விட்டு தான், நானும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டேன். அதற்கு எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்பட்டது. 

ஃபிட்னஸ் என்பது அதுவும் முக்கியமாக நடிகர்களுக்கு  ஈஸியான சமாசாரம் இல்லை. 

வாசகர்களுக்கு ஒரு முக்கியமான சமாசாரம். சூர்யா சாப்பிடுகிறார் என்று நீங்களே உங்கள் டயட்டை மாற்றிக்கொள்ளாதீர்கள். அவரவர் உடலுக்கு எது ஒத்துப் போகுமோ அதைத் தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.’ என்று முடித்தார். 

நாமும் வாசகர்களுக்காக, தன் ஃபிட்னஸ்ப் சீக்ரெட்டைப் பகிர்ந்து கொண்ட சூர்யாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் கூறிவிட்டு விடை பெற்றோம். 

- மாலதி சந்திரசேகரன்

]]>
Surya, Six pack, சூர்யா, சூர்யாவின் சிக்ஸ் பேக் https://www.dinamani.com/health/vip-health/2017/jun/01/சூர்யாவின்-சிக்ஸ்-பேக்-சீக்ரெட்-2712418.html