Dinamani - ஃபேஷன் - https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3305057 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஃபேஷன் டிரெண்ட்ஸ்! மாரீஸ் Friday, December 13, 2019 04:14 PM +0530  

சிநேக் பிரிண்ட் மேலாடை

Snake print Top

லெப்பர்ட் ப்ரிண்ட் மேலாடை

Leopard printing

வாடாமல்லி  & மஸ்டர்டு எல்லோ (Mustard Yellow)நிற ஸ்வெட்டர்கள்

PURPLE SWEATER
MUSTARD YELLOW SWEATER

உடைகளில் ஃப்ளோரல் பிரிண்டுகள் போன்றவை 2019 ஆம் ஆண்டுக்கான ஃபேஷன் தேர்வுகளாகக் கருதப்பட்டன.

கடந்தாண்டு முழுவதுமே எந்த ஒரு ஃபேஷன் ஷோ, விருது விழா என்று எடுத்துக் கொண்டாலும் மேற்கண்ட டிசைன்கள் முன்னிலை வகுத்தன என ஃபேஷன் டிசைனர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அவர்களது வாடிக்கையாளர்களின் பிரதான விருப்பங்களாக இருந்தவை மேற்கண்ட டிசைனில் அமைந்த உடைகள் மட்டுமே என்கிறார்கள்.

ஃப்ளோரல் டிசைன்கள் அணிபவர்களுக்கு

 • மூடி,

 • ரொமாண்டிக்,

 • டார்க்,

 • விக்டோரியன்

என 4 வகையான ஃப்ளோரல் பிரிண்ட் சாய்ஸ்கள் இருந்திருக்கின்றன. உள்ளன. 

இவை தவிர உடைகளின் மீது நீளமான பிளெய்ன் கோட்டுகளை அணிவது.

லெதர் பேண்டுகளை அணியும் போது அவற்றுக்கு மேட்ச்சாகப் பிளெய்ன் வெண்ணிற ஷர்ட்டுகள் அணிவது

ஜீன்ஸ்கள் அணிவது போன்றவையும் கூட 2019 ஆம் ஆண்டுக்கான டிரெண்டிங் ஃபேஷனாக இருந்தன என்கிறார்கள் பிரபல காஸ்ட்யூம் டிசைனர்கள்.

ஹைஹீல் ஷூக்கள் அணிவதில் பெண்களைப் போல ஆண்களும் கூட 2019 ஆம் ஆண்டில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஷூக்களைப் பொருத்தவரை அவற்றுக்கான ஒரே நிறத்தேர்வாக பிரெளன் மற்றும் கருப்பு நிறங்கள் இருந்திருக்கின்றன. 

அதுமட்டுமல்ல சிநேக் பிரிண்ட் ஆடைகளில் நியான் வண்ணங்களைப் பயன்படுத்தும் முறையும் பரவலாக டிரெண்டிங்கில் இருந்திருக்கிறது.

மக்களின் ஃபேஷன் தேர்வு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏன் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளுமே கூட மாறிக்கொண்டே இருப்பது தான். ஆனாலும், கடந்தாண்டில் அதிகமும் ஃபேஷன் உலகில் தென்பட்ட மாற்றங்களையும், விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட டிசைன்களும், வண்ணங்களும், பேட்டர்ன்களும் டிரெண்டிங்காக இருந்தன என ஃபேஷன் டிசைனர்கள் கருதுகின்றனர்.

]]>
Best Fashion Trends for 2019! https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/13/w600X390/fashion.jpg TrendY Fashions of 2019 https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/dec/13/best-fashion-trends-for-2019-3305057.html
3268100 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பிராண்டுகள்.. கார்த்திகா வாசுதேவன் DIN Friday, November 1, 2019 01:38 PM +0530  

இப்போதெல்லாம் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் நீங்கள் அலுவலகம் செல்லக்கூடிய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்று பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் இல்லாவிட்டால் அது ஒரு மாற்றுக் குறைவான விஷயமெனக் கருதும் அளவுக்கு பெண்கள் தங்கள் தேர்வுகளில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். அவர்களது வசதிக்காக இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பட்டியலை இங்கே இணைத்திருக்கிறோம்.

இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பிராண்டுகள் லிஸ்ட்.. 

 1. டா மிலனோ (Da Milano)
 2. ஹைட் சைன் (Hidesign)
 3. பாக்கிட் (Baggit)
 4. கேப்ரேசி (Caprese)
 5. லெவி (பேக்ஜோன் லைஃப்ஸ்டைல்ஸ்) (Lavie (Bagzone Lifestyles))
 6. லாடிடா (Ladida)
 7. தி ஹவுஸ் ஆஃப் தாரா (The House of Tara)
 8. லைனோ பெரஸ் ( சுமிட்சு அப்பேரல்) (Lino Perros (Sumitsu Apparel))
 9. எஸ்பெடா (இன்டச் லெதர் ஹவுஸ்) (Esbeda (Intouch Leather House))
 10. பெப்பர் ஒன் (யுனிகோ ரீடெயில்) (Esbeda (Intouch Leather House))
]]>
Indias top ten hand bag brands 2019 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/1/w600X390/branded_hand_bags.jpg indias top ten hand bag brands https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/nov/01/indias-top-ten-hand-bag-brands-2019-3268100.html
3268093 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் யாருக்கு அனுகூலமானது?! கார்த்திகா வாசுதேவன் Friday, November 1, 2019 01:07 PM +0530  

ஒரு விஷயம் கவனத்தீர்களா?! முன்பெல்லாம் துணிக்கடைக்கு சென்றால் ஆடைகள் மட்டும் வாங்கி விட்டு வெளிவந்து விடலாம். இப்போது அது முடியாது. கண்டிப்பாக கீழ்தளத்திலோ அல்லது பக்கவாட்டிலோ ஜவுளிக்கடையுடன் இணைந்திருக்கும் அக்ஸஸ்ஸரீஸ் கடைகளுக்குள் சும்மாவேணும் தலை காட்டாமல் நம்மால் நகர்ந்து விட முடிவதில்லை. அங்கே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தில் நம் அனைவருக்குமான லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கை முடித்துக் கொள்ளலாம். 

லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கா? அப்படின்னா?

ஃபேமிலி லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்..

அதென்ன புதிதாக எதையோ கிளப்பி விடுகிறீர்களே? என்று யோசிக்கத் தேவையில்லை. ஆடைகள், அவற்றுக்குத் தோதான செயற்கை அலங்காரப் பொருட்கள், காஸ்மெடிக்ஸ் அயிட்டங்கள், ஃபேஷன் உபகரணங்களான பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள், பர்ஸுகள், ஆண்களின் பெல்ட்டுகள், வாலட்டுகள், டை, கிச்சன் நாப்கின்கள், குழந்தைகளுக்குத் தேவையான ஸ்டேஷனரிகள், பிராண்டெட் பேனாக்கள், பென்சில்கள், பொம்மைகள், இதர விளையாட்டுச் சாமான்கள் என எல்லாமே ஒரே இடத்தில் நம்மால் ஷாப்பிங் செய்து கொள்ள முடிந்தால் அத்தகைய ஷாப்பிங் மால்களை லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் மால்கள் என்று நாம் கருதலாம். அதாவது ஒவ்வொன்றுக்காகவும் நாம் வெவ்வேறு இடங்களைத் தேடி அலைந்து கொண்டிராமல் ஒரே இடத்தில், ஒரே கூரையின் கீழ் ஒட்டுமொத்த ஷாப்பிங்கையும் முடித்துக் கொள்ள முடிந்தால் அது தான் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்.

இப்போ புரியுதா?

சரி இந்த லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கால் யாருக்கு அனுகூலம்?

நிச்சயமாக பணம் படைத்தவர்களுக்குத்தான். கை நிறைய சம்பாதிப்பவர்களுக்கு இம்மாதிரியான ஷாப்பிங் மால்களில் ஒட்டப்பட்டிருக்கும் விலைப்பட்டியலைக் கண்டு மயக்கம் வராது. நடுத்தர வர்க்கத்தினருக்கு இது கொஞ்சம் சிரமத்திற்குரியது மட்டுமல்ல, ஏமாற்றம் தரக்கூடியதுமாக இருந்தாலும் கூட அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டுமென இத்தகைய லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் அனுபவத்தை வழங்க விரும்பும் நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங் வசதிகளையும் தருகின்றனவே. 

ஆன்லைன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்..

ஆன்லைன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்... 

அவற்றில் கடை வாடகை, ஏ சி கட்டணம், தொழிலாளர் சம்பளம் என்ற எந்தப் பிரச்னைகளும் இன்றி இத்தகைய நிறுவனங்கள் மிக சல்லிசான விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. கூகுளைத் திறந்தாலோ, சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருந்தாலோ நிச்சயம் அனைவருமே இத்தகைய ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸைப் பெறாமல நழுவ வாய்ப்பில்லை. அமேஸான், பீச்மோட், வயோலா, ஸ்னாப் டீல், ஃபிலிப் கார்ட் என பரந்து விரிந்து கிடக்கிறது இத்தகைய நிறுவனங்களின் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் சாம்ராஜ்யங்கள். உள்ளே சென்று விட்டு வெறுமே விண்டோ ஷாப்பிங் செய்து விட்டு வெளியில் வந்து விடலாம் என்று நினைத்துத் தான் அதில் நுழைவோம். ஆனால், வெகு நிச்சயமாக குறைந்த பட்சம் அவரவர் பணவசதிகளுக்கேற்ப 500 ரூபாய்க்காவது ஏதேனும் பொருளை கேஸ் ஆன் டெலிவரியிலோ அல்லது கடனட்டை டெலிவரியிலோ ஆர்டர் செய்யாமல் நாம் தப்ப முடிவதில்லை.

இத்தகைய லைஃப் ஸ்டைல் ஷாப்பிங் அனுபவங்கள் ஒரு பக்கம் அனுகூலமானதாகத் தோன்றினாலும் மறுபுறம் ஏமாற்றங்களையும் தராமலிருப்பதில்லை.

இப்படி ஆன்லைனில் ஸ்மார்ட் ஃபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு வெறும் செங்கற் கட்டிகளை அனுப்பி ஏமாற்றும் நிறுவனங்களும் இருக்கின்றன. தரமான நிறுவனங்கள் எவை என்பதை அந்தந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கி இருக்கும் ஸ்டார்களைக் கொண்டு எது தரமானது என்பதைக் கண்டறிய முயற்சிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது நுகர்வோர் உரிமைகளில் தெளிவாக இருத்தல் நலம்!

கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதாக இருந்தாலும் சரி, ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பெறுவதாக இருந்தாலும் சரி இரண்டிலுமே வாடிக்கையாளர்கள் மிகவும் தெளிவாக இருந்தால் போதும், மக்கள் தங்களுக்கான நுகர்வோர் உரிமைகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டால் எந்த ஷாப்பிங்கிலும் ஏமாற்றத்தைப் பெருமளவில் தவிர்த்து விடலாம்.
 

]]>
Lifestyle shopping means what?! https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/1/w600X390/lifestyle.jpg Lifestyle shopping https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/nov/01/lifestyle-shopping-means-what-3268093.html
3169298 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் இந்த ஹேண்ட் பேக் விலை 1 லட்சம் ரூபாய், இது யாருடையது தெரியுமா? ஹரிணி Tuesday, June 11, 2019 01:25 PM +0530  

லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன தெரியுமா?

 

காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது? என்று பட்டென்று சொல்வீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஃபேஷன் சென்ஸ் இருக்கிறது என்று நம்பலாம்.

காஸ்ட்லி ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது இப்போது ஒன்றும் அதிசயிக்கத் தக்க செய்தியில்லை. தனியார் இணைய ஊடகமொன்றில் இடம் பெறும் கேளிக்கை நிகழ்ச்சியின் பெயர் ‘இன்சைட் தி ஹேண்ட் பெக்’ பிரபலங்களை விருந்தினர்களாக அழைத்து அவர்களது ஹேண்ட் பேக்குகளில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று சோதித்து அதை ஆடியன்ஸுக்கு காண்பிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் எளிமையான கான்செப்ட். சிலர் குப்பை நிகழ்ச்சி என்று இதை கலாய்த்தாலும் தொடர்ந்து தவறவிடாமல் பார்த்து ரசித்தும் வருகிறார்கள். அந்தளவுக்கு யூ டியூபில் பெயர் போன நிகழ்ச்சியாக இது மாறி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது, செலிப்பிரிட்டி பெண்கள் தங்களது ஹேண்ட் பேக்குக்களுக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் என்று. நம்மூரைப் பொருத்தவரை அவர் ஒரு டி வி பிரபலம். அந்தப் பெண் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கொண்டு வந்து திறந்து காட்டிய ஹேண்ட் பேக்கின் விலை 3 லட்சமென்கிறார். இன்னொரு செலிப்பிரிட்டி இளம்பெண்ணோ, தான் பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் மட்டும் தான் பயன்படுத்துவது வழக்கம் என்கிறார். பிராண்டெட் என்று போய் விட்டால் எப்படிப் பார்த்தாலும் குறைந்த பட்ச விலையே அரை லகரத்தைத் தொட்டுக் கொண்டு தான் நிற்கும். அப்படி இருக்க, இங்கே ஒரு பாலிவுட் நடிகரின் மனைவி 1 லட்சம் ரூபாய் விலையுள்ள ஹேண்ட் பேக் வாங்கிப் பயன்படுத்துவதில் அப்படியொன்றும் பெரிய அதிசயம் இல்லை தானே? 

மேலே புகைப்படத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகர் சாஹித் கபூரின் மனைவி. சாஹித் கபூரைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. பத்மாவத் திரைப்படத்தில், தீபிகா படுகோனின் கணவராக வந்து அலாவுதீன் கில்ஜியின் சூழ்ச்சியால் செத்துப் போவாரே அவரே தான் சாஹித் கபூர். அந்த சாஹித் கபூர் மணந்து கொண்ட பெண்ணின் பெயர் மீரா ராஜ்புத். அவர் நடிகை அல்ல. ஆயினும் கணவர் ஒரு ஸ்டார் என்பதால், கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள 1 லட்ச ரூபாய்க்கு ஹேண்ட் பேக் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த ஹேண்ட் பேகுடன், மீராவை புகைப்படமெடுத்து விட்ட பாப்பரஸிகள் சும்மா இருப்பார்களா? இதோ ஹேண்ட் பேக் சீக்ரெட் சந்திக்கு வந்து விட்டது. இந்த பேக்கை ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்று யாரும் கேட்டு விடாதீர்கள். 1 லட்ச ரூபாய் ஹேண்ட் பேக் என்றால் அதற்கேற்ப அந்த பேக் ஒரிஜினல் முதலை அல்லது பாம்புத் தோலில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். வெளிநாடுகளில் தயாராகும் இத்தகைய ஹேண்ட் பேக்குகளை இறக்குமதி செய்து பயன்படுத்துவது பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, தற்போது கோலிவுட் நடிகைகளும் தான் என்றாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடிகை சரண்யா பொன் வண்ணன் கூட தனது ‘இன்சைட் தி ஹேண்ட் பேக்’ நேர்காணல் செஷனில் இது குறித்துப் பகிர்ந்திருந்தார்;

‘முன்னால எல்லாம் எனக்கு காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக் மேல எல்லாம் இண்ட்ரெஸ்ட் இருந்ததில்லை. ஆனால், இப்போ, என் பெண்கள் சொல்கிறார்கள். நீங்க உங்களுக்குப் பிடித்த மாதிரி எதை வேண்டுமானாலும் உங்க இஷ்டத்துக்குஷாப்பிங் செய்துக்கோங்க, ஆனால், ஹேண்ட் பேக் மட்டும் நாங்கள் தான் வாங்கித் தருவோம்’ என. அவர்கள் தேடித்தேடி அன்பளித்தது தான் இப்போது நான் வைத்திருக்கும் இந்த காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக்’ - என்கிறார்.

ஆகவே சின்னத்திரை, பெரிய திரை நடிகைகளும், நடிகர்களின் இல்லத்தரசிகளும் காஸ்ட்லி ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வதில் அப்படியொன்றும் அதிசயமில்லை.

உடைகளில், ஆபரணங்களில் மட்டுமல்ல தற்போது ஹேண்ட் பேக்குகளிலும் ஃபேஷன் மற்றும் காஸ்ட்லி மோகம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இது சின்ன சாம்பிள்.

]]>
costly hand bag, mira rajput, rs 1 lakh worth hand bag, மிரா ராஜ்புத், காஸ்ட்லி ஹேண்ட் பேக், விலை ரூபாய் 1 லட்சம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/11/w600X390/hand_bag_1_lakh_price.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/jun/11/this-luxury-hand-bag-worth-rs-1-lakh--who-owns-it-3169298.html
3164309 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் மணப்பெண் அட்ராசிட்டீஸ்! இந்தக்காலத்துல பொண்ணுங்க இப்படியும் ரவிக்கை தச்சுப் போட்டுக்கறாங்கப்பா! மாடர்ன் மங்கம்மா Monday, June 3, 2019 03:31 PM +0530  

திருமணம்... அன்னைக்கு யார் ஹீரோ, ஹீரோயின்ஸ்? கண்டிப்பா பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அப்போ அந்த முழு நாளும் அவங்களுக்கே, அவங்களுக்கு தானே சொந்தம்! ஸோ, தன்னை எப்படி எல்லாம் அழகு படுத்திக்கலாம்கறதை இப்போ மொத்தமும் பெண்களே முடிவு செய்திடறாங்க. முன்னாடி மாதிரி அப்பா, அம்மா, சித்தி, அத்தை, பாட்டி, மாமான்னு யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் அவங்க விடறதா இல்லை. இன்விடேஷன் டிசைன் பண்றதுல தொடங்கி, திருமண டிரஸ் டிசைன், மணவறை அலங்காரம், அன்றைய மேக் அப், ஃபோட்டோகிராபி (இதுல போஸ்ட் வெட்டிங், ப்ரி வெட்டிங்னு எல்லாம் வந்தாச்சு இப்போ), ரிஷப்சன் கச்சேரி களை கட்ட டிஜே செலக்‌ஷன், திருமணத்துக்குப் பிறகான ஹனிமூன் டெஸ்டினேஷன் செலக்‌ஷன்னு எல்லாப் பொறுப்பையும் தன்னோட பொறுப்பிலேயே எடுத்துக்கிட்டு ஜமாய்க்கிறாங்க இந்த தலைமுறை மணப்பெண்களும், மணமகன்களும். இதில் மணமகன்களின் பொறுப்பு பர்ஸை மணப்பெண்ணிடம் அடமானம் வைப்பதோட முடிஞ்சிடறதுன்னு யாராவது கலய்ச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. சும்மா ஒரு அளவுக்குத்தான் சொல்ல முடியும். மீதியெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டியது தான்.

சரி இப்போ அதில்லை பிரச்னை...

ஃபேஷன் அட்டேட்ஸ்க்காக தேடும் போது இந்த ஃபோட்டோ கண்ல சிக்குச்சு. இது நிச்சயம் வருங்கால மணப்பெண்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய விஷயமாச்சேன்னு தான் உடனே அப்டேட் பண்ண வேண்டியதாயிடுச்சு :))

இன்றைய தலைமுறை மணப்பெண்களின் ரவிக்கை டிசைன்கள் நம்ம கற்பனை எல்லைகளையும் தாண்டி சிறகு விரித்துப் பறந்துருக்கு பாருங்க. 

டிசைன் நம்பர் 1

இந்த மணப்பெண் அணிந்திருக்கும் ரவிக்கையின் முதுக்குப்புறம் இது. ஐய்யோ... இதென்ன திறந்த முதுகுல இப்படிப் பேரை எழுதி வச்சுருக்காளேன்னு யாரும் திட்டிடாதீங்க. அது திறந்த முதுகு இல்லை. இதுக்கு பேர் Sheer Blouse Design, அதாவது, பழைய படங்கள்ள நடிகைகள் அரசிளங்குமரியா வேஷம் கட்டும் போது உடலின் திறந்த பகுதிகள் வெளியே தெரியா வண்ணம் ஏதோ ஒரு மெட்டீரியலில் ஸ்கின் மாதிரி ஒரு அங்கி மாட்டி இருப்பாங்க. நம்ம கண்ணுக்கு அது தோல் மாதிரி தெரிஞ்சாலும், அங்கே தோலை விட மெல்லிய சல்லாத்துணியால் சருமம் மூடப்பட்டிருக்கும். பார்க்க திறந்த முதுகு போலத் தெரிந்தாலும் அங்கே துணி மூடியிருக்குன்னு தான் அர்த்தம், அந்த மாதிரி சல்லாத்துணியில் டிசைன் செய்யப்பட்டது தான் இந்த ரவிக்கை. அட, எதுக்கு இந்த கர்மம்?! பேசாம அழகா ரவிக்கை தச்சு போட்டுக்கலாமேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது! ஆனாலும், பாருங்க. இதுக்குப் பேர் தான் ஃபேஷன் படுத்தும் பாடு. அதனால தான் மணப்பெண்கள் வித்யாசம்க்ற பேர்ல இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. 

ஒன்னும் மட்டும் போதுமா? இன்னும் சில சாம்பிளையும் பாருங்களேன்.

ரவிக்கையில் வேடிக்கையான டிசைன்கள்...

ரவிக்கையில் மட்டுமா? லெஹங்காவிலும் கூட இதை ட்ரை பண்ணலாம் வாங்க...

லெஹங்கா மட்டுமா? இதோ மெஹந்தி அன்னைக்கு கூட இப்படி டிசைன் பண்ணிப்பேன்.

மணப்பெண்களின் இத்தகைய முயற்சிகள் ரசனையின் எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் எந்த ஒரு பிரச்னையும் இருக்கப் போவதில்லை. ரசனை என்பது எல்லை மீறாததாக இருந்தால் எல்லோராலும் அது நிச்சயம் ரசிக்கப்படும் என்பதற்கு இந்த முயற்சிகள் உதாரணங்கள் ஆகின்றன.
 

]]>
FASHION UPDATES, LAIFESTYLE FASHION, BRIDE ATROCITIES, SHEER BLOUSE, TRENDY BRIDAL BLOUSE DESIGNS, ஃபேஷன் அப்டேட்ஸ், ரவிக்கை டிசைன்கள், மணமகள், திருமண ஃபேஷன், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/3/w600X390/sheer_blouse.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/jun/03/bride-atrocities-fashion-updates-wedding-market-3164309.html
3158368 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஸ்டைல் ஹேர் கட்டுக்கு! RKV Saturday, May 25, 2019 06:00 PM +0530  

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஹேர் கட்டிங்கில் பலவிதமான டிஸைன்கள் வந்து விட்டன. சில வருடங்களுக்கு முன்பு ஸ்டெப் கட், லேயர் கட், ஃபெதர் கட் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்போது பார்த்தால் ஃபையர் கட்டில் வந்து நிற்கிறது. யூடியூப் சேனல் ஒன்றில் அவ்விதமான ஹேர் கட் தமிழ்நாட்டிலும் வந்து விட்டதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருந்தது. தீ பட்டால் தலைமுடி தாங்குமா? கருகி நிறம் மாறி விடாதா? இதென்ன கோமாளித்தனம் என்று தானே தோன்றுகிறது. ஆனால், தேர்ந்த ஹேர் ஸ்டைலிஷ்ட் கொண்டு ஃபயர் ஹேர் கட் செய்துகொள்வது கொஞ்சம் த்ரில்லிங்காகத் தான் இருக்கும் போல. பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பின்விளைவுகளை யோசித்தால் பயமாய் இருக்கிறது.

ஃபயர் ஹேர் கட்டால் ஏதேனும் ஆபத்து உண்டா? என்று கூகுளில் தேடிப்பார்த்ததில், நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட் வாய்த்து விட்டால், பெரிதாக அப்படி ஒன்றும் ஆபத்து இல்லை என்று தான் சொல்கிறது கூகுள். ஆனா, தேர்ந்த ஹேர் ஸ்டலிஸ்ட் சிக்க வேண்டுமே?! 

இந்த செய்தியைப் பார்த்து விட்டு உங்களில் யாருக்கேனும் இந்த விதமாக ஹேர் கட் செய்து கொள்ளத் தோன்றினால் தயவு செய்து நல்ல ஹேர் ஸ்டலிஸ்டாகத் தேடிச் சென்று செய்து கொள்ளுங்கள். அனுபவமில்லாதவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டு மொத்தமாக தலைமுடியைத் தீய்த்துக்கொண்டு விடாதீர்கள்.

ஃபயர் ஹேர் கட் செய்து கொள்வதால் நெருப்பில் காட்டப்படும் முடிப்பகுதி தான் கருகுமே தவிர மீண்டும் வேரில் இருந்து புதிய முடி வளர்ந்து வருவதற்குத் தடை எதுவும் இல்லையாம். இந்த வகை ஹேர் ஸ்டைலுக்கு ஒருமுறை முயற்சித்து விட்டவர்கள் மீண்டும் புதிய ஸ்டைலுக்கு மாற வேண்டும் என்றால், உங்களது ஃபயர் ஹேர் கட் முடிகளைக் கட் செய்து நீக்கிக் கொண்டால் மட்டுமே புதிய முடி வளர்ச்சி ஏற்பட முடியும். ஒரு முறை தீய்ந்து போன முடி தீய்ந்தது தான், அது மீண்டும் வளர வாய்ப்புகள் இல்லை என்பதை மனதில் வையுங்கள். இதை அயல்நாடுகளில் கேண்டில் ஹேர் கட் என்றும் சொல்கிறார்கள்.

இர்ஃபான்ஸ் வியூ யூ டியூப் சேனலை நடத்தி வரும் இர்ஃபான் என்ற இளைஞர் இந்த விதமான ஹேர் ஸ்டைலை முயன்று விட்டு அதை காணொலியாகவும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். பார்க்க படு வேடிக்கையாக இருக்கிறது. மதுரையில் இருக்கும் சலூன் ஒன்றில் இந்த விடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. 

 

 • இதில் பொடுகு நீக்குதல் ஃபயர் ஸ்பா
 • தலை முடி கொட்டாமல் இருக்க ஃபயர் ஸ்பா
 • ஃபயர் ஸ்மூத்தனிங்
 • ஃபயர் ஸ்ட்ரெயிட்டனிங் என்று பல்வேறு சாய்ஸ்கள் வேறு உண்டு.

இவற்றில் எந்த வகை ஹேர் கட் உங்களுக்குத் தேவையோ, அதை நீங்கள் உங்கள் பர்ஸின் கனத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

இந்த காணொலியில் இதை முயன்று பார்த்த இர்ஃபான், ஃபயர் ஹேர் கட் ரொம்ப எக்ஸ்பென்சிவ். அவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு அனுபவத்தை பெற வேண்டுமா? என்றதோடு ஹேர் கட் செய்துகொண்ட பல மணி நேரங்களுக்குப் பிறகும் கூட முடி தீய்ந்த வாசம் வேறு துரத்துகிறது என்கிறார். அத்துடன் இந்த வகை ஹேர் கட்டிங்கில், ஹேர் கட்டுக்கு முன்பும், பின்பும் திருப்தியான மாற்றங்களென எதுவும் கிடைக்காத காரணத்தால் இதை முயற்சிப்பதற்கு முன்பு ஒருமுறை யோசித்து விட்டு பிறகு பர்ஸைத் திறங்கள் என்கிறார்.

இந்த ஹேர் கட்டுக்கு அப்படி என்ன செலவாகி விடப்போகிறது என்று தோன்றுமே? அதிகமில்லை ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஹேர் கட்டுக்கு.

ஒருமுறை நீங்க ட்ரை பண்றீங்களா பாஸ்?!

]]>
fire hair cut, just 5000 rs, ஃபயர் ஹேர் கட், ரூ 5000 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/25/w600X390/fire_hair_cut.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/may/25/fire-hair-cut-3158368.html
3157186 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ‘எனக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்யறேன்னா காரணம் இது டேலண்ட் பிஸினஸ்’: ஃபிட்னஸ் குறித்து மிலிந்த் சோமன்! RKV Thursday, May 23, 2019 12:17 PM +0530  

இந்தியாவின் ஆண் சூப்பர் மாடல் லிஸ்டில் எப்போதும் மிலிந்த் சோமனுக்கு முதலிடம் உண்டு. மனிதருக்கு 50 வயதான பின்னும் பார்க்க பக்கா பெர்ஃபெக்ட் ஃபிட்னஸுடன் அசத்துகிறார். இப்படி இருக்க, நீங்க எத்தனை மணி நேரம் ஜிம்மில் தவம் கிடக்கிறீர்கள் என்று கேள்விக்கு, ஐயோ ஜிம்மில் தவமெல்லாம் ஆகற கதையில்லை, நான் எனக்குத் தோன்றும் போது தோன்றும் உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதற்காக தனியாக நேரம் ஒதுக்குவதெல்லாம் இல்லை என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

‘என்னைப் பொறுத்தவரை நான் சிறுவனாக இருக்கும் போதிருந்தே ஃபிட்டாகத் தான் உணர்கிறேன், இருக்கிறேன். காரணம் தனிப்பட்ட சிரத்தைகள் எதுவும் இல்லை. 9 வயது முதலே நானொரு ஸ்விம்மர். தொடர்ந்து நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்று தேசிய அளவிலான நீச்சல் சாம்பியனாக இருந்தேன். நீச்சல் மிகச்சிறந்த உடற்பயிற்சி. அதை இடைவிடாமல் பின்பற்றியதால் என்னுடைய உடல் எப்போதும் ஃபிட்டாகவே இருந்தது.

தவிர நான் மிகவும் கூச்ச சுபாவி என்பதால் மாடலிங்கில் நுழைய வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைத்துப் பார்த்தது இல்லை. ஒரு நாள் திடீரென யாரோ ஒருவர் என்னைப் பார்த்து, நீ பார்க்க மேன்லியாக இருக்கிறாய், மாடலிங் செய்தால் சூப்பராக ஷைன் ஆவாய் என்றார்கள். இந்த ஆஃபர் நன்றாக இருக்கிறதே, என்று அதை ஏற்றுக் கொண்டு அதற்காக முயற்சித்தேன். இதோ இன்று உங்கள்முன் சூப்பர் மாடலாக இருக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், என் வாழ்வின் இத்தனை வெற்றிக்கும் நான் பிரத்யேகமாக மெனக்கெட்டு எதுவும் செய்ததில்லை. நீச்சல் பயிற்சி என்பது எனக்கு அனிச்சை செயல் மாதிரி. அதே போல ஃபிட்னஸுக்க்காக உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சலித்துக் கொள்வதுமில்லை. 2 நிமிடம் கிடைத்தாலும் எனக்குப் பிடித்த ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்கிறேன்.

எனக்கு விருப்பம் இருக்கும் போது அல்லது விளம்பர வாய்ப்புகள் கோரும் போது ஃபிட்னஸ் மராத்தான்களில் கலந்து கொண்டு ஓடுகிறேன். ஒருமுறை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தார் என்னை அவர்களது பிங்கத்தான் பந்த்யங்களின் விளம்பரத்ட் தூதுவர் ஆக்கினார்கள். அதில் கலந்து கொண்டது முதல் எனக்கது பிடித்துப்ப் போய் விட்டது. முதலில் மராத்தான் ஓட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் இருந்தது உண்மை. ஆனால், இப்போது அதில் மிகப்பெரிய ஆர்வம் வந்து விட்டது. அதுவும் நன்றாகத்தானே இருக்கிறது என்று இப்போது அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரம் இது தான். ஃபிட்னஸுக்கு என்று தனியாக நான் எதையும் திட்டமிடுவதில்லை. என் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும், திரையில் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் நன்றாகத் தெரியவேண்டும் என்பதற்காக, சுருக்கமாகச் சொல்வதென்றால் என் திறமைகளை நான் விற்பனை செய்வதற்கு இது அவசியம் என்பதால் இதை நான் அனிச்சையாகத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆரம்பத்தில் என்னை யாராவது புகைப்படம் எடுத்தால் எனக்கு அது பிடிக்காது. ஆனால், அதுவே தொழில் என்று வரும்போது எப்படி புகைப்படம் எடுத்தால் நான் அழகாகத் தெரிவேன், ஃபிட்டாக இருப்பேன் என்பதைக் கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கது அத்துப்படி. என் திறமையும், உழைப்பும் சிறந்த முறையில் வெளிவர வேண்டுமென்றால் நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். இது முற்றிலுமாக டேலண்ட் பிஸினஸ் என்பதை நான் புரிந்து கொண்டேன். இதை எல்லோருமே புரிந்து கொண்டால் ஃபிட்னஸுக்காக எதையும் வலிந்து செய்ய வேண்டியதில்லை. அது தானாக நமது வாழ்க்கைமுறைகளில் வாட் ஐ மீன் லைஃப்ஸ்டைல்களில் ஒன்றாகி விடும். பிறகது எப்போதும் சுமையாகவோ, குற்ற உணர்வாகவோ இருக்காது. 

அதுசரி! இந்தியாவின் சூப்பர் மாடல் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்.
 

]]>
மிலிந்த் சோமன், வொர்க் அவுட்ஸ், ஃபிட்னஸ், டேலண்ட் பிஸினஸ், milind soman, talent business, work outs, fitness https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/23/w600X390/pinkathon_milind.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/may/23/all-are-come-under-talent-business-says-milind-soman-3157186.html
3155272 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் 1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா! கார்த்திகா வாசுதேவன் Monday, May 20, 2019 04:23 PM +0530  

டாட்டூ போட்டுக் கொள்வது இன்றைய ஃபேஷன் அல்ல. டாட்டூக்கள் இட்டுக் கொள்வது பல்லாண்டுகளாகவே புழக்கத்தில் இருப்பது தான். இப்போது மாடர்ன் ஆர்ட் போல வரைந்து கொள்கிறார்கள். நமது அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் மீன், கும்பம், நெளி கோலங்கள், துளசி மாடம், முதலை, பிறை, தீபம், என  பாரம்பர்ய சித்திர வடிவங்களை தடக்கை, முன்கை, முழங்கால், தோள்பட்டை, முதுகு, புறங்கைகள் என பச்சை குத்திக் கொண்டார்கள். இரண்டுக்கும் பெரிய வித்யாசங்கள் ஏதும் இல்லை.

 

என்ன ஒரு சின்ன வித்யாசம் என்றால், இன்று ஃபேஷன் ட்ரெண்டுக்கு ஏற்றார்போல வண்ணங்களையும் டாட்டூக்களில் பயன்படுத்துகிறார்கள். அன்று வெறும் பச்சை மச்சம் குத்திக் கொள்வது மட்டுமே வழக்கம். அது கூட நம் நாட்டில் மட்டுமே, கிரீக்கிலும், ரோமிலும் வண்ண மச்சங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தகவல்.

 

டாட்டூ குத்திக் கொள்வதிலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட். 

சிலர் தோள்பட்டையில் டாட்டு இட்டுக் கொள்வார்கள்.

 

சிலர் பெங்களூரு டேய்ஸ், ஃபகத் பாசில் போல், அகன்ற முதுகு முழுவதுமாக மிகப்பெரிய டாட்டூ இட்டுக் கொள்கிறார்கள்.

 

பெண்களில் சிலரோ புதுமைப் பெண்களாகக் காட்டிக் கொள்ள மகாகவி பாரதியை டாட்டு இட்டுக் கொள்கிறார்கள்.

 

இன்னும் சில பெண்களோ, பிக்பாஸ் பிரபலங்களான ஓவியா, காயத்ரிக்களைப் போல தண்டுவடத்தின் மேற்பகுதி, அல்லது கழுத்தின் இடப்புறம், வலப்புறம், தோள்பட்டை என எங்காவது டாட்டூ இட்டுக் கொள்கிறார்கள்.

 

இதெல்லாம் நமக்கு சாதாரணமாகக் காணக் கிடைக்கக் கூடிய காட்சிகள். ஆனால், இங்கே பாருங்கள், ஒரு மனிதர் தன் உடலின் 97% பாகத்திலும் முழுக்க டாட்டூக்களை இட்டு நிரப்பியிருக்கிறார். இது நிச்சயம் வித்யாசமானது தானே!

 

இதோ, அவரைப் பற்றி அவரே என்ன சொல்லிக் கொள்கிறார் என்று பாருங்கள்.

‘என் பெயர் மார்சலோ டிசோஸா ரிபெய்ரோ (Marcelo de Souza Ribeiro) . இன்றைய தேதிக்கு மார்சலோ பிபாய் (Marcelo Bboy) என்று சொன்னால் உலகில் அனேகம் பேருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நான் என் 15 வயதில் என்னுடலில் முதல் டாட்டூ போட்டுக் கொண்டேன். அதென்னவோ தெரியவில்லை, அன்று முதல் டாட்டூ மீது பைத்தியமானேன். முதல் டாட்டூ போட்டுக் கொண்டது முதலே நான் டாட்டூ பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு அந்த துறையில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கி விட்டேன். அடிப்படையில் நான் ஒரு நடன ஆசிரியர். பிரேசில், ரியோ டிஜெனிரோவில் தெருக்களில் நடனமாடக் கற்றுத் தரும் ஆசிரியராக இயங்கிக் கொண்டிருக்கிறேன். அத்துடன் ஹிப் ஹாப் உலகத்திலும் நான் இயங்கிக் கொண்டிருப்பதால் என் முதல் டாட்டூவே Hip Hop எனும் வாசகத்தை உடலில் பதித்துக் கொள்வதாக அமைந்து விட்டது. 

அடுத்ததாக என் மகளின் பெயரை எனது ஒரு பக்கத் தோள்பட்டையில் டாட்டூவாகப் பதித்துக் கொண்டேன். இந்த இரண்டு டாட்டூக்களைப் பதித்துக் கொண்டது தான் நினைவிலிருக்கிறது. அதற்குப் பிறகு என் உடலை நான் பார்த்துக்கொண்ட போது எனக்கே தெரியாமல் ஏராளமாக டாட்டூ போட்டுக் கொள்ளத் தொடங்கி இருந்தேன். எந்த டாட்டூ எப்போது? எப்படி? எதற்காகப் போட்டுக் கொண்டேன் என்பதையே கண்டறிய முடியாத வண்ணம் இப்போது என் உடல் முழுவதும் கவனியுங்கள் முழு உடலும் டாட்டூக்களால் நிரம்பி வழிகிறது. 

ஆம், நான் என் பற்கள், கண் இமை, கண் விழித்திரை என எந்தப் பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. எல்லா இடங்களிலும் டாட்டூக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. எண்ணிப்பார்த்தால் 1000 டாட்டூக்களைத் தாண்டி இருப்பேன் என்று நிச்சயமாக நம்புகிறேன். என் உடலின் 97% பகுதி டாட்டூக்களால் நிரம்பியுள்ளது. சொல்லப்போனால் இதன் காரணமாக என் உடல் அமைப்பு மாறிப்போனதால் ஏழெட்டு முறை சிலிக்கான் அறுவை சிகிச்சைகளுக்கும் உட்பட வேண்டியதாயிற்று. ஏனென்றால் நாக்கின் உள்ளண்ணம், கண்களின் விழித்திரை, காது மடல்கள், பற்களின் அமைப்புகளை டாட்டூக்கள் வரைந்து மாற்றிக் அமைத்துக் கொள்வதற்கு சிலிக்கான் சர்ஜரிகள் தேவைப்பட்டன. 

உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொள்வது பிறருக்கு வித்யாசமாகத் தோன்றி இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை என் அம்மாவும், அப்பாவும் எனக்கு ஆதரவாகவே இருந்தனர். இப்போது நானும் ஒரு அப்பா எனக்கு 6 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உண்டு. சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள், 8 மாதத்தில் ஒரு பேரனும் கூட இருக்கிறான் எனக்கு. சிலர் என்னிடம் கேட்கிறார்கள், உன் குழந்தைகள் உன்னைக் கண்டு பயந்து போக மாட்டார்களா? இப்படி விகாரமாக டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறாயே என்று?! அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில் ஒன்றே! என் குழந்தைகள் என்னைப் பார்த்து பயந்ததே இல்லை. அவர்கள் பிறந்தது முதல் என்னுடனே வளர்கிறார்கள், நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம். எனவே நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே  என்னை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு எப்போதுமே பிரச்னை இருந்ததில்லை. என் உடலில் உள்ளங்கால், உள்ளங்கை என மிகச்சிறிய அளவிலான இடம் மட்டுமே இன்னமும் டாட்டூ இடாமல் மீந்துள்ளது. அந்த இடங்களிலும் எதிர்காலத்தில் நான் டாட்டூ இட்டுக் கொள்ளமாட்டேன் என்று சொல்ல முடியாது. சீக்கிரமே அந்த இடங்களையும் நான் டாட்டூக்களால் நிரப்பிக் கொள்வேன் என்று நம்புகிறேன். 

டாட்டூக்கள் போட்டுக் கொள்வதென்றால் அளவில்லாமல் செலமாகுமே என்று பலர் கேட்கிறார்கள். இல்லை, என்னைப் பொருத்தவரை என் உடலில் முக்கால்வாசி டாட்டூக்களை நான் என் கையால் மட்டுமே போட்டுக் கொண்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். என் கண்விழித்திரை மற்றும் நாக்கு, உள்ளண்ணம் உட்பட நானே தான் என் கையால் டாட்டூ இட்டுக் கொண்டேன்.

என் கண்விழித்திரையில் டாட்டூ இட்டுக் கொண்டது எப்படி என்றால்?  ஒருநாள் மதியம் நான் என் வீட்டின் குளியலறைக்குச் செல்லும் போது திடீரெனத் தோன்றியது, கண்களின் டாட்டூ இட்டுக் கொண்டால் என்ன என்று, உடனே டாட்டு இங்க் எடுத்துக் கொண்டு குளியலறையைத் தாழிட்டேன். விழித்திரையில் துளையிடும் போது மிகுந்த கவனத்துடன் இருந்தும் டாட்டூ இங்க் விழித்திரை முழுவதுமாகப் பரவி விட்டது. இப்போது விழித்திரை வெண்மையாக இல்லை. பாவை போல கரு நிறத்தில் வித்யாசமாக இருக்கிறது அந்த டாட்டூ. அதைத் தவிர என் பற்களில் நான் செய்த மாற்றம் மற்றும் டாட்டூவைக் கண்டு, இதென்ன காட்டேரி மாதிரி பற்கள், இதைக் கண்டு உன் கேர்ள் ஃப்ரெண்டு பயந்து அலறி விடமாட்டாளா? முத்தமிடத் தடையாக இருக்காதா? இந்த பற்கள் என்றெல்லாம் வேடிக்கையாகக் கேள்வி எழுப்புகிறார்கள். என் பற்கள் எங்கள் முத்தத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. சொல்லப்போனால் என் கேர்ள் ஃப்ரெண்டின் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது என்பேன் நான்.

முதல்முறை என் கேர்ள் ஃப்ரெண்டு கூட என்னிடம், இப்படித்தான் கேட்டாள், இந்தப் பற்களுடன் முத்தமிட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என நாங்கள் இருவரும் எங்களது விடியோ சாட்டிங்கில் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். என் கேர்ள் ஃப்ரெண்டு என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாரான போது, அவளைப் பலர் தடுத்தார்கள். என்னைப் பற்றி, என் தோற்றத்தைப் பற்றி அவளிடம் விமர்சித்தார்கள். ஆண்கள் அழகழகான பெண் தோழிகளைத் தேடும் போது, நீயும் கொஞ்சமாவது சுமாரான பையனைத் தேர்ந்தெடுக்கலாமே? ஏன் இப்படி ஒரு விகாரமான டாட்டூ பைத்தியத்தைப் போய் பாய் ஃப்ரெண்டாகத் தேர்வு செய்திருக்கிறாய்? என்று அவளை அதைரியப்படுத்தியவர்கள் அனேகம் பேர். ஆனாலும், அவள் என்னையே தேர்ந்தெடுத்தாள், அவளுக்கு எனது குற்றமற்ற மனம் மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. எனவே நாங்கள் இணைந்து வாழ்கிறோம். பலரும் என்னை கெட்டவன் என்றும் சாத்தான் என்றும் விமர்சிக்கிறார்கள். இறந்த பின் நான் நரகத்துக்குத் தான் செல்வேன் என்று கூட சபிக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்ளத் தயாரில்லை. 

நான் எனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் யாருக்கு என்ன இடைஞ்சல்?! ஒரு பக்கம் என்னை சிலர் விகாரமாக நினைக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் வித்யாசமான மனிதன் என்று சேர்ந்து நின்று செல்ஃபீ எடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு நான் வித்யாசமானவன் என்ற அடையாளமே திருப்தி அளிப்பதாக இருப்பதால் அதையே தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் தான் இந்த உலகத்தில் ஒன்றே போல பிறக்கிறார்கள், இருக்கிறார்கள், வாழ்கிறார்கள், மடிகிறார்கள். நான் சற்று வித்யாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆசையை நிறைவேற்றும் தைரியம் எனக்கிருந்தது. இதோ என்னிஷ்டப்படியே என் டாட்டூக்களுடன் நிம்மதியாக வாழ்கிறேன் என்று சிரிக்கிறார் மார்சலோ.’

என்ன விதமான மனிதர் இவர்?

இவர் மட்டுமல்ல, இப்படிப் பட்ட வித்யாசமான ஆசைகள் கொண்ட, அல்லது இயற்கையிலேயே வித்யாசமான பிறவிகள் கொண்ட பலரைப் பற்றியும் இந்த யூடியூப் தளத்தில் காண முடிகிறது. அவர்களைப் பற்றிய ஏராளமான கதைகளும், செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன இங்கு. ஆர்வமிருப்பவர்கள் ஒரு முறை அந்தப் பக்கம் போய் பாருங்கள்.

 ‘வித்யாசமாக இருப்பது தங்களுக்குப் பெருமை என்பதே இவர்களது ஒரே தாரக மந்திரம்.

அந்த வித்யாசம் என்பது இயற்கையாக அமைந்ததாகவும் இருக்கலாம், அல்லது தாங்களே விரும்பி ஏற்படுத்திக் கொண்டதாகவும் இருக்கலாம். சேனலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இவர்களை எளிதாக மதிப்பிட்டு விடத் தேவையில்லை. ஏனெனில், இவர்களில் பலர், பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறந்து விட்ட மாற்றுத்திறனாளிகள் பலருக்கு ரோல்மாடல்களாகத் திகழ்கிறார்கள். வாழ்வின் மீதான ஆசையைத் தூண்டு குறைகளுடன் பிறந்து விட்டதொன்றும் தங்களது குறையல்ல, அந்தக் குறையையே தங்களால் நிறையாக மாற்றிக் கொள்ள முடியும். நிறைகுடங்களாக உலகையே வலம் வர முடியும். எனும் நம்பிக்கையைத் தூண்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே மனதில் வெறுமை தோன்றும் போது இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.


 

]]>
Man With 1,000 Tattoos, Inks Own Eyeballs, Marcelo De Souza Ribeiro, ஆயிரம் டாட்டூக்களுடன் ஒரு அப்பா, டாட்டூ மனிதன், மார்சலோ டிசோஸா ரிபெய்ரோ, பிரேசில், வித்யாசமான மனிதர்கள், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/20/w600X390/marcelo_tattoo_man.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/may/20/man-with-1000-tattoos-inks-own-eyeballs-3155272.html
3107290 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் நக அழகுப் பராமரிப்பின் 100 ஆண்டுகால வரலாறு! ஹரிணி வாசுதேவ் Monday, March 4, 2019 02:50 PM +0530  

1920 களின் நக அழகுப் பராமரிப்பு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினீர்கள் என்றால் அப்போது நெயில் பாலிஷில் சிவப்பு நிறம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

 

சிவப்பு நிற நெயில் பாலீஷ்களை நீளமாக வளர்ந்த நகங்களில் மேல் முனைகளையும், கீழடிப் பாகத்தையும் பிறைச்சந்திர வடிவில் தோற்றம் தருமாறு இடைவெளி விட்டு அப்ளை செய்து கொள்வது அந்தக்கால வழக்கமாக இருந்திருக்கிறது.

இதை அப்போது மூன் மெனிக்யூர் என்ற பெயரில் குறிப்பிட்டார்கள். நெயில் பாலீஷில் வண்ணங்களைப் புகுத்தும் முறையை முதலில் கொண்டு வந்தவர் மிச்சல் மெனார்டு என்பவர்.

1930 களில் பெண்கள் நெயில் பாலீஷ் இட்டுக் கொள்ள விரும்பினார்கள் எனில்  பாதாம் பருப்பு வடிவில் நகங்களை கட் செய்து அவற்றில் சிவப்பு நிற நெயில் பாலீஷ் இட்டுக் கொண்டு நகங்களின் டிப்பில் சில்வர் நிற கோட்டிங் இட்டுக் கொள்வார்கள்.

 

 

இப்படி ஒரு ஃபேஷனை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ப்ரின்சஸ் டி ஃபாஸிக்னி லூசிஞ்சே எனும் பாரீஸைச் சேர்ந்த சமூகசேவகியே!

1937 ஆம் ஆண்டில் டப்பர் வேரைக் கண்டுபிடித்தவரான இயர்ல் டப்பர் என்பவர் நகங்களில் அணிந்து கொள்ள அல்லது பிணைத்துக்கொள்ளத் தக்கதான நெயில் ஆர்ணமெண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ட்ரா போலி நகங்களைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கினார்.

1940 களில் நீளமான சிவப்பு நிற நகங்கள் அல்லது குறுகிய ஓவல் ஷேப் கொண்ட சாஃப்ட் பிங் நிற நகங்கள் ட்ரெண்டிங்கில் இருந்தன.

அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் முதல் நடிகைகள் வரை பலரும் இதையே விரும்பினர். அந்நாளில் ரீட்டா ஹெய்வொர்த் என்பவர் தனது நீளமான நக வளர்ப்பு மற்றும் அடிக்கிற நிறத்திலான நெயில் பாலீஷ் உள்ளிட்ட விஷயங்களுக்காக மிகப்பெரிய பிரபலமாகக் கருதப்பட்டார்/ ஏனெனில் அந்தக் கால கட்டத்தில் பெண்கள் வீடு, அலுவலகம் எனப் பறந்து பறந்து வேலை செய்ய வேண்டிய அவசியத்தில் இருந்ததால் நீளமான நகங்களைப் பராமரிக்க முடியாமல் பெரும்பாலும் குறுகிய நகங்களையே பராமரித்து வந்தார்கள்.

1950 களில் அக்ரிலிக் நகங்கள் சிவப்பு, ஆரஞ்சு நிற நகங்கள், உறஞ்சுவது போன்ற உணர்வைத் தருவதான வண்ணங்கள் பிரபலமாக இருந்தன.

1955 ஆம் ஆண்டில் அக்ரிலிக் நகங்களை பல் மருத்துவரான ஃப்ரெட் ஸ்லாக் என்பவர் மெனிக்யூர் உலகில் முதல் முறை அறிமுகப்படுத்தினார்.

1960 களில் நேச்சுரல் வண்ணங்கள், பியர்லி பிங்க், பீச் நிறம் மற்றும் சதுர வடிவ நகப்பராமரிப்பு ஸ்டைல் ட்ரெண்டிங்கில் இருந்தது. இவ்வகை நகப்பராமரிப்பு ஸ்டைலுக்கு ஷெர் என்பவர் பிரபலமானவராக இருந்தார். ஏனெனில் தனது நகப்பராமரிப்பு ஸ்டைலிஸ்டிடம் ‘ஏதாவது வித்யாசமாக ட்ரை பண்ணுங்களேன் என்று கேட்டு இப்படியொரு ஸ்டைலை அவர் தான் முதன்முதலில் கண்டுபிடித்தார்.

1962 ல் முதன்முறையாக டயோர் (Dior) என்ற பெயரில் முறையான நகப்பராமரிப்பு ஸ்டுடியோ அறிமுகமானது.

1970 ல் முதன்முறையாக ஃப்ரெஞ்ச் மெனிக்யூர் அறிமுகமானது. ஹாலிவுட்டில் மேலும் மேலும் அதிகமான வித்யாசமான நக அழகுப் பராமரிப்பு முறைகளின் தேவை இருந்தபடியால் ஜெஃப் பிங்க் ஓர்லி எனும் ஃப்ரெஞ்ச் மெனிக்யூர் முறையை   அறிமுகமானது.

1980 களில் நீளமான நகங்களில் நியான் கலர் நெயில் பாலீஷ் பூசிக் கொள்வது ட்ரெண்ட் ஆக இருந்தது. பாப் பாடகி மடோனா அடர்த்தியான நியான் நிற நெயில் பாலீஷ்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டார்.

1985 ல் லீ ப்ரெஷ் செயற்கை நகங்களை அறிமுகப்படுத்தினார்.

1990 களில் நெயில் ஆர்ட் அறிமுகமானது. குட்டையான நகங்களில் டார்க் நெயில் பாலிஷ் இட்டுக் கொள்வது ஸ்டைல் சிம்பலாகக் கருதப்பட்டது. மிஸ்ஸி எல்லியட் உள்ளிட்ட ஹிப் ஹாப் கலைஞர்களைப் பார்த்து நெயில் ஆர்ட் செய்து கொள்வது அப்போதைய ட்ரெண்ட் ஆக இருந்தது. லில் கிம் டாலர் ரஷீதுகளைக் கூட அக்ரிலிக் நெயில் ஆர்ட் முறையில் டிஸைன் செய்து நகங்களில் மாட்டிக் கொண்டார்.

பல்ப் ஃபிக்ஸன் நாவல்களில் இடம் பெற்ற உமா துர்மனின் நகங்களைப் பார்த்த பின் வேம்ப் எனப்படும் சேனல் நெயில் பாலீஷ்களுக்காக மெளசு கூடிப்போனது. அடர் ரத்தச் சிவப்பில் அறிமுகமானவை அந்த நெயில் பாலிஷ்கள்.

2000 மாவது ஆண்டுகளில் அறிமுகமான பியான்சஸ் கோல்டு மிங்ஸ் எனப்படும் நெயில் ஃபாயில்கள் மிகச்சிறந்த நக ஆபரணமாகச் செயல்பட்டது. தங்க நிறத்திலும், சில்வர் நிறத்திலுமான நகங்கள் ஃபாயில்களாகச் செய்யப்பட்டு நகங்களில் அணிந்து கொள்ளப்பட்டன.

2000 ரிசெஷன் காலங்களில் நெயில் ஆர்ட் மக்களின் கலக மனதை மறைபொருளாக வெளிப்படுத்தும் கலைகளாகச் செயல்பட்டன.

இன்றைக்கு மெனிக்யூரில் பலவிதமான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நெயில் ஆர்ட், ஆர்ட்டிஃபீசியல் நெய்ல்ஸ் தாண்டி நாம் விரும்பும் விதமாக எல்லாம் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தக்க விதத்தில் புத்தம் புதிய ட்ரெண்டுகள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் முதன்முதலில் நகப் பராமரிப்பு மற்றும் நக அழகு படுத்துதல் கலை உலகில் எப்படித் தோன்றியது அது எவ்விதமாகவெல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பார்க்கையில் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது இல்லையா?!


 
 

]]>
100 Years of Manicure History, 100 ஆண்டுகால நக அழகுப் பராமரிப்பு, manicure, nail art, lifestyle fashion https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/4/w600X390/1990_s_nail_art.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/mar/04/100-years-of-manicure-history-3107290.html
3082967 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ஜிமிக்கி, கம்மல் ஃபேன்ஸ்... இந்த விஷுவல் ட்ரீட் உங்களுக்குத் தான்! ஹரிணீ Friday, January 25, 2019 12:44 PM +0530  

ஃபேஷன் உலகில் ஒவ்வொரு வருடமும் புதுமைகள் நிகழ்ந்த காலம் மாறி இப்போதெல்லாம் மாதா மாதம் ட்ரெண்ட் மாறிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட அது வாரா வாரம் அப்டேட் ஆகக்கூடிய நிலை வந்து விட்டது எனும் நிலையில் பெண்களின் காதணிகளில் இந்த மாதத்தைய ஸ்பெஷல் அப்டேட்டுகள் என்னென்னவென்று பார்ப்போமா?

இப்போதெல்லாம் தங்கமும், வைரமும் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்கம் அரிதாகி விட்டது. திருட்டு பயம் ஒருபக்கம் என்றால் மேட்சிங் சென்ஸ் இன்னொரு பக்கம் இருந்து கொண்டு பெண்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. எனவே இதுமாதிரியான ஸ்டேஷனரி அக்ஸஸரிஸ் அதாவது கோல்டு கவரிங் ஆபரணக் கடைகளில் கூட்டம் எப்போது பார்த்தாலும் நிரம்பி வழிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி பெண்கள் வயது வித்யாசங்கள் ஏதுமின்றி குறைந்த பட்சம் தங்களைத் தாங்களே ரசிக்கும்படியாகவாவது ஃபேஷன் ஜுவல்லரிகளை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது தான் இப்பொருட்களுக்கான வரவேற்பின் முதல் காரணி என்று சொல்லலாம்.

சரி ஃபேஷன் உலகின் இப்போதைய ட்ரெண்ட் என்ன தெரியுமா?

கனமான பெரிய பெரிய காதணிகளே! 

அவற்றை பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளத் தெரிந்திருந்தால் போதும்.. பிறகு கழுத்தணி ஏதும் கூட அணியத் தேவை இல்லை.

வெறும் கழுத்தாக வைத்துக் கொண்டு புடவையை மட்டும் சற்று கிராண்டாக உடுத்துக் கொள்வது தான் இன்றைய ஃபேஷன்.

இது முதலில் வட இந்திய மெகா சீரியல்கள் வாயிலாகப் பரவி இன்று நம் தமிழ் மெகா சீரியல்கள் நாயகிகள் வாயிலாக சாதாரண வெகுஜனம் வரையிலும் மிக நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது.

இன்றைக்கு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவிகள் தவிர்த்து கிராமங்களிலேயே வசிக்கக் கூடிய இல்லத்தரசிகள் வரையிலும் கூட இவ்விதமான காதணிகள் ட்ரெண்டிங்கில் தான் உலவுகின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக் கூடிய விதத்தில் விலையும் சல்லிசாகக் கிடைப்பதால் இத்தகைய ஃபேஷன் காதணிகளுக்கு வரவேற்பு எகிறிக் கொண்டிருக்கிறது.

]]>
Fashion jewelleries, trending earings 2019, fashion update, ட்ரெண்டி காதணிகள், ஃபேஷன் ஜூவல்லரி, டஸ்ஸல் காதணிகள், பட்டுநூல் காதணிகள், பீட்ஸ், கண்ணாடிக் காதணிகள், சில்வர் ஆக்ஸைடு காதணிகள், ஃபேஷன் அப்டேட், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/25/w600X390/multicolour_beads_earing1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2019/jan/25/are-you-jimikki-kammal-fan-this-visual-treat-is-for-u-only-3082967.html
3051636 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் மழைக்காலத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் வார்ட்ரோப் செலக்‌ஷன்... சும்மா ஃபாலோ பண்ணிப் பாருங்க! ஹரிணி வாசுதேவ் Tuesday, December 4, 2018 04:32 PM +0530  

மழைக்காலம் விட்டு விட்டுத் தொடர்கிறது. தொடர் மழையாக இல்லா விட்டாலும் கடந்த சில வருடங்களாகவே நம்மூர் வானிலை மாற்றங்களை நம்பவே முடியவில்லை. திடீரென்று கருமேகங்கள் திரண்டு வானம் பிளந்து கொண்டு கொட்டித் தீர்க்கும் மழை! சில நேரங்களில் பார்த்தால் பளீர் வெள்ளையில் வெளுத்த வானம் கண் சிமிட்டும். பருவமழைக் காலங்களில் இந்த இருவிதமான சீதோஷ்ணங்களையும் அப்படியே தொடரப் போகிறது என்று நம்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் நாம் மழையில் நனைந்து போகும் வாய்ப்பிருக்கிறது. எனவே மழைக்காலத்துக்கான ஸ்பெஷல் வார்ட்ரோப் கலெக்‌ஷன் என்னவென இணையத்தில் தேடிப் பார்க்கையில் லண்டனைச் சேர்ந்த வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட் எரின் புஸ்பியின் காணொளியொன்று கண்ணில் பட்டது. அட இது சூப்பரா இருக்கே என்று தோன்றியதால் தினமணி.காம் வாசகர்களுக்கும் அதைப் பகிர்கிறோம்.

நம்மூரில் பொதுவாக நாம் காணும் ரெயின் கோட்டுகள் எல்லாம் வாளிப்பான, சராசரிக்கும் அதிகமான உயரமான உடல்வாகு கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுவதில்லை. பொதுவாக நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் தான் பெரும்பாலான ரெயின் கோட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. ரெயின் கோட்டுகள் மட்டுமல்ல மற்றெல்லா உடைகளுக்கும் கூட இது பொருந்தும். நான் சொல்வது எக்ஸ்ளூசிவ்வான கடைகளில் இல்லை. பெரும்பான்மை புழக்கம் கொண்ட கடைகளில் கிடைப்பவை அனைத்துமே இப்படித்தான் எனவே வெயில் காலமோ மழைக்காலமோ, குளிர்காலமோ  அது எந்தக் காலமானாலும் சரி நமக்கே நமக்கேயான உடைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவரவருக்கெனத் தனியாக வார்ட்ரோப் ஸ்டைலிஸ்டுகளை வைத்துக் கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை. தற்போது மேலைநாடுகளில் பரவலாக இருக்கும் இந்த முறை இந்தியாவில் பன்னெடுங்காலங்களாகப் புழக்கத்தில் இருப்பது தான். ஆனால் என்ன ஒரு கஷ்டம் என்றால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தொகை தான் சாமானியர்களுக்குக் கட்டுப்படியாக விலையில் இருக்கக் கூடும்.

வாரன் பஃபெட் டெக்ஸ்டைலில் புரட்சி செய்து மிக சகாய விலையில் டிசைனர் உடைகளை அளித்தார் போல இம்மாதிரி பிரத்யேக ஸ்டைலிஸ்ட்களை தேர்ந்தெடுப்பதென்பதும் சகாய விலையில் சாத்தியப் பட்டால் நன்றாகத்தான் இருக்கும். சீக்கிரமே அந்த வசதி தமிழகத்தில் அனைவருக்கும் சாத்தியமானால் எல்லோருமே கச்சிதமான உடைகளை அணிந்து ஆனந்தத்தில் உய்வார்களோ என்னவோ?!

சரி இப்போதைக்கு நம்மூரில் மழைக்காலம் நீடிக்கிறது இல்லையா? அதற்கேற்றாற்போல் என்ன விதத்தில் உடை அணிந்து சென்றால் ஸ்டைலாக இருக்கும் என்று எரின் புஸ்பி சொல்வதைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

எரின் புஸ்பி வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட்...

எரின் புஸ்பியின் ரெய்னி டே செக்லிஸ்ட்...

தரமான குடை....

வெறும் மழை மட்டும் என்றால் சாதாரணக் குடை போதும். சில நேரங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும். சில சமயம் பெருந்தூறலோடு காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும். அப்படியான மழையைச் சமாளிக்க தரமான மழைக்குடை அவசியம். அந்தக்குடைக்கான கம்பிகளை நன்கு சோதித்துப்பார்த்த பின் வாங்கலாம். தாத்தா குடை என்று அந்தக் காலத்தில் சொல்வார்களே அது போன்ற ஹெவியான குடைகள் தரமானவையாக இருக்கும். குடையின் தரம் என்பது காற்றுடனான மழை பெய்யும் போது குடை பின்னுக்கு மடங்காமல் இருக்கும் தன்மையைப் பொறுத்தது.

மழைக் காலத்துக்கான பிரத்யேகத் தொப்பி...


காணொளியில் எரின் உபயோகிக்கும் இந்தத் தொப்பி மழைக்கு இதமாக இருப்பதுடன் தலை நனையாமல் காக்கவும் உதவும். ஸ்டைலிஸ் ஆகவும் இருக்கும்.

வெதுவெதுப்பூட்டும் ஸ்கார்ப்...

கண்டிப்பாக மழைக்காலங்களில் வெதுவெதுப்பூட்டும் ஸ்கார்ஃப் அவசியமானது. காதைச் சுற்றியோ அல்லது கழுத்தைச் சுற்றியோ மடித்துப்போட்டுக் கொண்டால் போதும். தலைப்பகுதி சில்லிடாமல் வெது வெதுப்பாக மழையிலிருந்து பாதுகாக்கப்படும்.

நீளமான ட்ரெஞ்ச் ஓவர்கோட் (வாட்டர் ரெசிஸ்டண்ட் அல்லது வாட்டர் ப்ரூஃப்)

வீட்டிலிருந்து நடந்து செல்லக் கூடிய தொலைவில் பள்ளிகளோ அல்லது அலுவலகங்களோ இருக்கும் பட்சத்தில் இந்த நீளமான ட்ரெஞ்ச் கோட் மழைக்காலத்துக்கேற்ற சூப்பர் சாய்ஸ்.

ரெயின் பூட்ஸ்...

நம்மூரில் டிராஃபிக் போலீஸ்காரர்கள் இப்படியான பூட்ஸ்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு வேண்டுமென்றால் நமக்கான ஸ்டைலிஸ்ட் வைத்துக் கொண்டு வெவ்வேறு நிறங்களில் நமக்கேற்ற ரெயின் பூட்ஸ்களை வடிவமைத்துக் கொள்ளலாம். பூட்ஸுக்கெல்லாம் ஸ்டைலிஸ்ட் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாம் அத்தனை பெரிய அப்பாடக்கரா என்று நினைத்தீர்களானால் இந்த ஆப்ஷனை அடியோடு நிராகரித்து விட்டு கால் நனையாமலும் சூடாகவும் இருக்கும் படியாக வடிவமைக்கப்பட்ட வேறு ஏதேனும் பூட்ஸுகளையும் பயன்படுத்தலாம்.

மழைக்கேற்ற சூப்பர் ஸ்டைலிஸ்ட் கெட் அப் ரெடி!

இனி என்ன அப்படியே ஸ்டைலாக அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இந்த கெட் அப்பில் நீங்கள் சென்றீர்கள் என்றால் உங்களைப் பார்த்து நிச்சயம் நாலு பேர் இதே ஸ்டைலில் மழைக்காலத்தை பாதுகாப்பாகக் கடக்க முயற்சிப்பார்கள்.

]]>
rainy day stylish wardrob collection, erin busbe, rainy season, மழைக்காலத்துக்கு ஏற்ற உடைகள், ஸ்டைலிஸ் வார்ட்ரோப் கலெக்‌ஷன், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/12/4/w600X390/rainy_1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/dec/04/rainy-day-special-stylish-wardrobe-collection-2018-3051636.html
2780745 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் அவரவர் ராசிகளுக்குப் பொருத்தமாக ஹேர்ஸ்டைல் செய்து கொண்டால் நல்லதாமே! ஹரிணி Saturday, November 24, 2018 11:14 AM +0530  

நீங்கள் தினமும் பத்திரிகைகளில் ராசிபலன் பார்க்கிறவரா? அப்படியானால் உங்கள் ராசிப்படி எந்த நாளில், எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்றெல்லாம் பார்ப்பவர் எனில் உங்களுக்கு இன்னொரு போனஸ் ஆச்சர்யம் இருக்கிறது எங்களிடம், இனிமேல் நீங்கள் முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கோ, பார்லருக்கோ செல்வதாக இருந்தால் அதையும் கூட உங்கள் ராசிபலன் படி செய்து கொள்ளலாம் என்பது தான் அது! அட... அவரவர் ராசிக்கு ஏற்றவாறு முடி வெட்டிக் கொள்ள முடியுமா? என்பீர்களானால், அட... ஆமாங்க, உங்கள் ராசிக்கு ஏற்றவாறு அதற்குப் பொருத்தமான வகையில் உங்கள் ஹேர் ஸ்டைல் இருந்தால் தானே அதற்கான பலன்கள் சரியாகக் கிடைக்கக் கூடும். (வாட் ஐ மீன்? நான் சொல்வது இந்த ஜாதகம், ஜோசியமெல்லாம் நம்புகிறவர்களுக்கு மட்டும்) அதன்படி இந்தப் பட்டியலைப் பாருங்கள், இதில் உங்கள் ராசிக்குத் தகுந்த ஹேர்ஸ்டைலை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் மேஷ ராசிக்கான ஹேர்ஸ்டைல்...

மேஷம் (Aries)


சாகஸங்களில் ஆர்வமுள்ள மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு நேரான, நீளமான கூந்தல் அமைய வாய்ப்பில்லை, எங்கும், எதிலும், எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்ய விரும்பும் உங்களுக்கு பறவையின் இறகுகளைப் போன்ற அடுக்கடுக்கான அலைகளாக விரியும் ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் என்பதோடு உங்கள் ராசிக்கான ஹேர்ஸ்டைலும் இது தான்.

ரிஷபம் - Taurus


பழகுவதற்கு இனிமையான சுபாவம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எப்போதும் யாரையாவது சார்ந்திருக்க விருப்பமுள்ளவர்களாகவும், பிறருக்கு நம்பகமானவர்களாகவும் இருப்பீர்கள், எனவே உங்களுக்கு உங்கள் ராசிப்படி நீளமான லேயர் கட் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த வகை ஹேர் கட்டில் உங்களது கூந்தல் தேவையற்ற அதிக மாற்றங்களை அடையப்போவதில்லை.

மிதுனம் - Gemini


மிதுனராசிக்காரர்களுக்கு அழகான ஹேர்ஸ்டைல்கள் செய்து கொள்வதென்றால் கொள்ளை இஷ்டம். ஆனாலும் எப்போதுமே தலைமுடியை உயரத் தூக்கிக் கட்டி, பன் கொண்டை இட்டுக் கொள்வதென்றால் எளிதாக உணர்வீர்கள். ஏனென்றால் எங்கு செல்வதற்குத் தயாராவதென்றாலும் உங்களுக்கு அதிக நேரம் செலவளிக்கப் பிடிக்காது. சட்டு புட்டென்று எளிமையான ஹேர் ஸ்டைலில் நச்சென்று தயாராகி வெளியில் செல்வது உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் முடியை இப்படி சுருள், சுருளாக்கி சுதந்திரமாக விட அனுமதிக்கும் விதமான ஹேர் ஸ்டைல் உங்கள் ராசிக்கு மட்டுமல்ல உங்களது மனதிற்கும் பொருத்தமாக இருக்கும்.

கடகம் - cancer


கடகராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலிகள், வன்முறையில் நம்பிக்கையில்லாதவர்கள். பழகுவதற்கு இதமானவர்கள் என்பதோடு தனிமை விரும்பிகளும் கூட. கடக ராசிக்காரர்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருந்தார்களெனில் அவர்களை கண்டுபிடிப்பது கூடக் கஷ்டம். அப்படிப்பட்டவர்களுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல் என்றால் அது ஆழமாக, குட்டையாக வெட்டப்படுவது அல்ல. உங்களது கூந்தல் உங்களுடனும் ஒவ்வொரு நிமிடமும் ரகசியமாகவும், கனவுகளைத் தொட்டெழுப்பக் கூடிய விதத்திலுமாக அலங்கரிக்கப்பட வேண்டும்.

கன்னி- virgo


தங்களது உடைகளாகட்டும், ஹேர் ஸ்டைலாகட்டும் அதிக அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களான கன்னி ராசிக்காரர்களுக்கு எப்போதும், எதிலும் ஸ்டைலிஷான தோற்றம் வேண்டும் என நினைப்பார்கள். அதோடு அவர்களது கம்பீரத்தை மிளிரச் செய்ய மேலே உள்ள ஹேர்ஸ்டைல் தான் பொருத்தமாக இருக்கும்.

துலாம்- Libra


தங்களது தோற்றப் பொலிவில் கச்சிதமான அழகை விரும்பக் கூடியவர்களான துலாம் ராசிக்காரர்களுக்கு தோள்பட்டையோடு முடிந்து விடக்கூடிய விதத்திலான பாப் கட்டிங் ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும். அந்த முடியைக் கொண்டு அவர்கள் விதம், விதமான ஹேர்ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

விருச்சிகம் - scorpio


கவர்ந்திழுக்கும் மர்மம் போன்ற குணாதிசயத்துக்குச் சொந்தமான விருச்சிக ராசிக்காரர்களுக்கு டச்சு மணப்பெண் போன்ற இந்த ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும்.

தனுசு- sagittarius


தனுசு ராசிக்காரர்களுக்கு தங்களது கூந்தலை எந்தவிதமான இணைப்புகளையும் கொண்டு கட்டி வைத்துக் கொள்ள பிடிக்காது. அவர்களுக்கு கூந்தல் எப்போதும் சுதந்திரமாக காற்றில் அலையவேண்டும். எனவே மேற்கண்ட ஹேர்ஸ்டைல் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மகரம்- capricorn


தங்களது சோம்பலான இயல்பு மற்றும் மந்தமான செய்கைகளால் அடையாளம் காணப்படும் மகரராசிக்காரர்கள் பொதுவாக சமச்சீரற்ற பாப் கட்டிங் செய்து கொள்ளலாம். ஏனெனில் இந்த ராசிப்பெண்களுக்கு தாடைப்பகுதி கூர்மையாக இருக்கும் பட்சத்திலோ அல்லது ஓவல் ஷேப்பில் முகம் இருந்தாலோ அவர்கள் மீடியம் லெங்த் லேயர் கட் ஹேர் ஸ்டைலைத் தவிர்த்து விடுவது நல்லது.

கும்பம்- aquarius

சுதந்திரமான, எங்கும், எதிலும் பாகுபாடு காணாத மனநிலை கொண்ட கும்பராசிக்காரர்களுக்கு அவர்களுடைய மனதின் இயல்பு தேர்ந்தெடுக்கக் கூடிய ஹேர்ஸ்டைலிலும் கூட பிரதிபலிக்கும். பெளன்ஸிங் ஹேர்ஸ்டைலை விட புதுமையான முறையில் ஹேர்ஸ்டைலிங் செய்யப்பட்டு மிக மெதுவாக அசையும் தன்மை கொண்ட கூந்தல் இவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கக் கூடும். அத்தைகைய ஹேர்ஸ்டைல் இவர்களுக்குத் தவறாமல் பாராட்டுதல்களையும் பெற்றுத்தரும்.

மீனம் - pisces


மீனராசிக்காரர்களுக்கு தங்கள் கூந்தல் அலங்காரத்தில் பல்வேறு விதமான புதுமைகளைச் செய்து பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். பிறர் என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் எப்போதும் யோசிப்பதே இல்லை. ஹேர் ஸ்டைலைப் பொருத்தவரை தங்களுக்குப் புதுமை எனத் தோன்றும் எல்லாவற்றையும் முயன்று பார்ப்பவர்கள் இவர்கள். பல்வேறு விதமான புதுமையான ஹேர் கட்டுகளை இவர்கள் முயன்றாலும் கூட இவர்களுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல் என்றால் அது தோள்பட்டை வரை வெட்டப்பட்ட ஹேர்ஸ்டைல் தான்.

மேலே சொல்லப்பட்ட ஹேர்ஸ்டைல்களை அந்தந்த ராசிக்காரர்கள் முயன்று பாருங்கள். தவறாமல் அவற்றால் பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள் :)

]]>
லைஃப்ஸ்டைல் ஃபேஷன், hairstyles suitable for your zodiac signs, ராசிகளுக்குப் பொருத்தமான ஹேர்ஸ்டைல், life style fashion https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/27/w600X390/zodiac_hairstyles.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/sep/27/hairstyles-suitable-for-your-zodiac-signs-2780745.html
3022293 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் 2018 ஆம் ஆண்டில் ஃபேஷன் உலகில் வைரல் ட்ரெண்டான 10 ஐட்டங்கள் என்னென்ன? சரோஜினி Wednesday, October 17, 2018 03:24 PM +0530  

2018 ஆம் ஆண்டு ஃபேஷன் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பது லாவெண்டர் வண்ணம்.

இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரையிலும் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள புத்தம் புது ஆடை ரகங்கள், அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள், பத்திரிகைகளின் முகப்புப் பக்கங்கள், விளம்பரப் பதாகைகள், சின்னத்திரை, பெரிய திரைகளில் அதிகமும் பரந்து விரிந்து காணக் கிடைத்த வண்ணமென்றால் அது லாவெண்டர் தான். மற்ற நிறங்களும் அதிகமாக இருந்த போதும் எங்கும் நீக்கமறப் பரவி கண்களை நிறைத்தது இந்தக் குளு குளு லாவெண்டர் வண்ணமே!

 

ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது செக்டு லாங் ஓவர் கோட்.

அதாவது கட்டம் போட்ட ஓவர் கோட். பார்க்க ஸ்டைலிஷாகவும், மிடி, சுரிதார், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், ஃபார்மல் பேண்ட் என எந்த உடையுடனும் மேட்ச் செய்து அணியத்தக்கதாகவும் இருப்பதால் இளம்பெண்கள் இந்த ஓவர்கோட்டை அதிகமும் விரும்பி அணிந்து டாப் டென் ட்ரெண்டிங் லிஸ்டில் நீடிக்க வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள் மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள், பிரபல தொழிலதிபர்கள், வீடியோ ஜாக்கிகள், என அனைவருமே விரும்பி அணியக்கூடிய ஸ்டைலிஷான ஃபேஷனாக செக்டு ஓவர் கோட் மாறியுள்ளது.

மூன்றாவதாக ட்ரெண்டிங்கில் இருப்பது வண்ண வண்ண ப்ளேஸர்கள்...

இப்போதெல்லாம் தொழில் நிமித்தமாக வியாபார சந்திப்புகளில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் கூட தங்களது உடைகளுக்குப் பொருத்தமாக வண்ண வண்ண பிளேஸர்கள் அணிந்து வந்து அசத்துகிறார்கள். பிளேஸர்கள் அவற்றை அணிபவர்களுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிப்பதால் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள் இம்மாதிரியான உடையலங்காரம் செய்து கொள்வது தோரணையாக இருக்கிறது. பார்க்கவும் அழகு! ஃபேஷன் உலகத்துப் பெண்கள் வண்ண மயமான பிளேஸர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் இளைஞர்கள் செக்டு பிளேஸர்களை அதிகமும் விரும்பி அணிகிறார்கள்.

நான்காவதாக ட்ரெண்டிங்கில் இருப்பது பலூன் ஸ்லீவ்ஸ் ரக மேற்சட்டைகள்.

பலூன் ஸ்லீவ்ஸ் என்றால் மேலே புகைப்படத்தில் உள்ளதைப் போல சட்டையின் கைப்பகுதி முழங்கைகளுக்குக் கீழ் ஊதப்பட்ட பலூன் போல பெரிதாக உப்பி பின் மணிக்கட்டில் சுருங்கி முடியும். இதைத்தான் பலூன் ஸ்லீவ்ஸ் என்கிறார்கள் மேற்கத்தியர்கள். நம்மூரில் இது பபூன் சட்டை 

ஐந்தாவதாக ட்ரெண்டிங்கில் இருப்பது ஃப்ளோரல் கிரப் டாப், ஃப்ளோரல் ராப் டாப்

ஃப்ளோரல் க்ரப் டாப்ஸ்

ஆறாவதாக ட்ரெண்டிங்கில் ஹிட் அடித்திருப்பது ஸ்லீக் சோலே ட்ரெண்டி ஹேண்ட்பேக்...

 

ஏழாவதாக ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருப்பது ஃப்ரிஞ் பூட்ஸ்...

இதை ஆண்கள், பெண்கள் என அனைவரும் அணிகிறார்கள். 

அதைத் தொடர்ந்து எட்டாவதாக ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருப்பது சாக் பூட்ஸ்.

இந்த வகை பூட்ஸ்களை மாடலிங் செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். இவ்வகை பூட்ஸ்களில் ஷூவுடன் அப்படியே சாக்ஸும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். 

ஒன்பதாவதாக ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பவை ஃபாக்ஸ் லெதர் பேண்ட்டுகள்..

இவை பாலியூரிதேன் ஃபேப்ரிக்கினால் ஆனவை.. பார்க்கப் பளபளப்பாக இருப்பதுடன் அணிவதும் எளிது. 

2018 ஆம் ஆண்டில் 10 வதாக உலகம் முழுவதும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரை ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பது குச்சி ஷர்ட்கள்.

இந்த வகை டி ஷர்ட்டுகள் அணிய எளிதாக இருப்பதோடு சூப்பர் கூல் லுக்கையும் அள்ளித்தருவதால் பெண்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கின்றன இவ்வகை குச்சி டி ஷர்டுகள்.

அவ்ளோ தாங்க 2018 ல் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் டாப் டென் ட்ரெண்டுகள் இவை தான்.

இதில் உங்களுடைய சாய்ஸுக்கு ஏற்றவாறு நீங்களே ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அணியலாம். அனைத்தையுமே அணிவதென்றாலும் அது அவரவர் இஷ்டமே!

சிலர் சதா சர்வ காலமும் ஃபேஷன் விஷயங்களில் அப்டேட்டாக இருப்பார்கள். சிலருக்கு ஃபேஷன் ட்ரெண்ட் பற்றிய ஞானமே இருக்காது. அதற்காக அவர்களுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு ஃபேஷன் அப்டேட் பற்றியெல்லாம் பெரிதாக கவனமில்லாமல் இருக்கும். யாராவது அணிந்து கொண்டு வந்தால் அதைப்பார்த்து ஆர்வமாக அதே போல அணிய ஆசைப் படுவார்கள். உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஃபேஷன் விஷயங்களில் அப்டேட்டாக இருப்பது சதா காலமும் நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் உபாயமாகவும் இருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது தான். இல்லாதவர்கள் எப்போதும் போல பிறரது விரல் நுனி ஃபேஷன் அப்டேட்டுகளைப் பார்த்தும்... ஆடை அலங்காரங்களைப் பார்த்தும் அட என்று ஆச்சர்யப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

சர்வம் ஃபேஷனானந்தாய நமக!


 

]]>
டாப் 10 ஃபேஷன் ட்ரெண்ட்ஸ், 2018 டாப் டென் ஃபேஷன் ட்ரெண்ட்ஸ், top 10 fashion trends, 2018 top ten fashion trends https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/lavendaor_1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/oct/17/top-10-trendy-fashion-updates-for--year-2018-3022293.html
3009795 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் காதியில் ஒரு புதிய அகராதி! இதோ உங்களுக்குப் பிடித்த டிசைனில் கலக்கும் காதி உடைகள்! Friday, September 28, 2018 03:42 PM +0530 பொதுவாக ஆடைகள் விஷயத்தில் நேற்று இருக்கும் 'ஸ்டைல்' இன்று இல்லை. இன்றைய ஸ்டைல் நாளை மாறிவிடும். இந்த நியதிக்கு 'காதி' துணிமணிகள், ஆடைகள் மட்டும் விதிவிலக்காக இருக்குமா..?

நேற்று வரை, 'காதி' ஆடைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் நத்தை வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அதிரடி மாற்றத்துக்கு 'காதி'யும் தயாராகிவிட்டது. உள்நாட்டு சந்தை மட்டுமில்லாமல் வெளிநாட்டுச் சந்தையையும் 'காதி' குறி வைத்திருக்கிறது. அதற்கேற்ற மாற்றங்களை துணிகளில் இருக்கும் டிசைன்களில், ஆடைகளின் வடிவமைப்புகளில் கொண்டு வந்துள்ளது.

அதிலும் பெண்கள் ஆடைகளில், ஜனரஞ்சக வடிவமைப்பில் ஆயத்த ஆடைகள் இதர பிராண்டுகளின் ஆடைகளுக்கு சவால் விடுகின்றன. முன்னணி ஆடை டிசைனர்களான ராஜேஷ் பிரதாப் சிங், ரோஹித் பால், அஞ்சு மோடி, பாயல் ஜெயின், பூனம் பகத், மனிஷ் மல்ஹோத்ரா போன்றோரின் வடிவமைப்பில் உருவான பெண்களின் கதர் ஆடைகளை பிரபலப்படுத்த அழகிகளை 'கேட் வாக்' வரச் செய்து 'காதி' அசத்தியுள்ளது. அழகிகள் அணிந்து வந்த விதம் விதமான ஆடைகளைத்தான் பார்க்கிறீர்கள்..!
 - சுதந்திரன்
 

]]>
khadi, dressing, style, fashion, காதி, புது ஆடைகள், ஸ்டைல், ஃபேஷன் காதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/mm2.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/sep/28/காதியில்-ஒரு-புதிய-அகராதி-இதோ-உங்களுக்குப்-பிடித்த-டிசைனில்-கலக்கும்-காதி-உடைகள்-3009795.html
3009775 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பெண்களுக்கான ஸ்பெஷல் ஆடை விற்பனையில் கால்பதித்த ரிலையன்ஸ் நிறுவனம்! Friday, September 28, 2018 02:17 PM +0530  

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான வர்த்தமான் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்- இலான்’ என்ற பிராண்டின் கீழ், பெண்களின் தேவைகளுக்கான ஆடை வகைகள் உட்பட பலவிதமான ஃபேஷன் ஆடைகளை உருவாக்கும் துறையில் கால்பதித்துள்ளது.

இந்நிறுவனம் உருவாக்கும் ஆடைகள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. 

மேலும், புதுமையான உயர்தரமான ஜவுளி தயாரிப்பு முறையால் பெண்களுக்கென பிரத்யேகமான கேஷுவல், ஃபார்மல்ஸ் போன்ற உடைகளை ஆர்-இலான் ஆடைகள் தயாரிக்கவிருக்கின்றன. 

ஆர்-இலான் தயாரிப்புகள் பேஷனுடன் ட்ரெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு. மேலும் இது இளைஞர்களின் விருப்பத் தேர்வாக அமையும் வகையில் லேட்டஸ்ட் ஃபேஷன் உள்ளடக்கி இருக்கும். இதற்காக சுமார் 30 ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் கைக்கோர்த்துள்ளது. இவை அனைத்தும் ஆர்- இலான் பிராண்டின் கீழ் ஆடைகளை தயாரித்து வழங்கும்.

]]>
fashion, ஆடை, ரிலையன்ஸ், Reliance, r elan, fabric, ஆர்- இலான் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/28/w600X390/R-Elan.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/sep/28/பெண்களுக்கான-ஸ்பெஷல்-ஆடை-விற்பனையில்-கால்பதித்த-ரிலையன்ஸ்-நிறுவனம்-3009775.html
3009047 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் அனுஷ்கா  உடுத்தும் பனாரஸ் சில்க் புடவைகளின் பின்னிருக்கும் சமூக அக்கறை! ஹரிணி வாசுதேவ் Thursday, September 27, 2018 11:34 AM +0530 பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தும் அனுஷ்கா ஷர்மா!

பாலிவுட் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் ப்ரியதர்ஷினி குளோபல் அகாதெமி விருது விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அனுஷ்கா ஷர்மாவிற்கு ஸ்மிதா பட்டீல் விருது வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அமைச்சர் பியூஷ் கோயலிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் அனுஷ்கா.

விழாவின் ஹைலைட் அனுஷ்கா விருது பெறுவது அல்ல. விருது பெற்றுக் கொள்வதற்காக அவர் அணிந்து வந்த புடவை தான். அன்றைய தினம் அடர் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தினார் அனுஷ்கா. பச்சை நிற பனாரஸில் உடல் முழுவதும் தங்கப் பொட்டு சரிகை வேலைப்பாடுகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன. பனாரஸ் நெசவே கொள்ளை அழகென்றால் இதில் பனாரஸ் நெசவுடன் சந்தேரி ஸ்டைலையும் கலந்திருந்தார்கள் நெசவாளர்கள். எனவே புடவை லைட் வெயிட்டுடன் கண்களுக்கு விருந்தானது. அழகான ராயல் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவைக்குத் தோதாக கிளாஸிக் ஸ்டைலில் தலைமுடியை வகிடெடுத்துப் படிய வாரிக் கொண்டையிட்டு  பொருத்தமான ஒப்பனைகளும் பச்சை நிற பிந்தியுமாக அனுஷ்கா உள்ளம் கவர்ந்தார். அன்று அவரது ஒப்பனை மொத்தமும் புடவையின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாகவே இருந்தது. அழகான பச்சை நிற குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட கைவளைகள், கழுத்தை ஒட்டினாற் போல பச்சை நிறக் கற்கள் பதித்த சோக்கர் (நெக்லஸ்), புடவை கிராண்டாக இருப்பதால் காதுகளுக்கு ஒற்றை மரகதக்கல் தோடு என்று ஆடம்பரத்தில் எளிமை என அசத்தினர் அனுஷ்கா ஷர்மா.

விருது விழாவிற்கு மட்டுமில்லை. அனுஷ்கா, விராட் தம்பதியினர் இத்தாலியில் திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கள் மும்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளித்த ரிஷப்சனிலும் கூட அனுஷ்கா அழகான சிவப்பு நிற பனாரஸ் கைத்தறி சில்க் புடவையே உடுத்தி வந்து பாந்தமாக தரிசனம் தந்தார். முன்பெல்லாம் வட இந்திய ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளிலும், காக்ரா சோளி, லெஹங்காவிலும் மட்டுமே பார்க்க வாய்த்த அனுஷ்கா ஷர்மா தற்போது இந்தியப் பாரம்பரிய உடையான புடவைகளில் வலம் வருவது அவரது ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ். அதற்கேற்றார் போல அடுத்து வரவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘சுய் தாஹியின்’ தீம் மேட் இன் இந்தியா என்பதாகவே இருப்பதால் அதற்குப் பொருத்தமாக இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய கைத்தறிப் பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.

]]>
anushka sharma, அனுஷ்கா ஷர்மா, பச்சை பனாரஸ் சந்தேரி சில்க், மேட் இன் இந்தியா, anushka sharma, made in india, green banaras chanderi silk, fashion, ஃபேஷன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/27/w600X390/red_banaras.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/sep/27/anushka-sharma--love-to-wear-benarasi-sarees---again-3009047.html
2964861 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர் எனில் இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்! Saturday, July 21, 2018 03:13 PM +0530 கைவினைப் பொருட்களை தங்களுடைய வீடுகளில் அலங்காரப் பொருட்களாகவும், அத்தியாவசிய பயன்பாட்டுக்கான பொருட்களாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கைவினைப் பொருட்கள் எக்காலத்திலும், எல்லோரிடத்திலும் வரவேற்பு பெறக் கூடியவையாகும். அவற்றின் விலைமதிப்பும் அதிகமாகவே இருக்கும். அதனால் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு தொழில் இன்றும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கைவினைப் பொருட்களை அனைவரும் வாங்க விரும்புகின்றனர். 

கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியைப் பெற்றவர்கள் அத்தொழிலில் ஈடுபட்டு நல்ல வருவாய் ஈட்டலாம். 

கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை வழங்கும் நிறுவனங்கள்:

Indian Institute of Crafts and Design, Jaipur - https://www.iicd.ac.in/
Mahatma Gandhi Institute for Rural Industrialization - http://www.mgiri.org/rural-craft-engineering/
International Centre For Indian Crafts  - http://www.nid.edu/activities/icic.html
ARCH - https://www.archedu.org/b-des-craft-accessory-design.html#
Centre for Cultural Resources and Training, Ministry of Culture, Government of India - http://ccrtindia.gov.in/supw.php
CENTRE FOR INDIAN BAMBOO RESOURCE AND TECHNOLOGY -  http://www.cibart.in/Training.aspx
 

- எம்.அருண்குமார் 

]]>
handmade, art pieces, கைவினை பொருள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/21/w600X390/6899fc1c1790271de1124288f859163c.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/jul/21/கைவினைப்-பொருட்கள்-செய்வதில்-ஆர்வம்-உள்ளவர்-எனில்-இந்தத்-தகவல்-உங்களுக்கானதுதான்-2964861.html
2953124 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் நானே நானா யாரோ தானா என அசத்த வைக்கும் நவீன அழகுக் கலை சிகிச்சைகள்! ரிஷி Wednesday, July 4, 2018 04:28 PM +0530 பொதுவாக நாம் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை வழங்கும் தொழில்நுட்பத்தை தருவதுதான் தற்போது டிரெண்டில் உள்ள நவீன ஒப்பனைச் சிகிச்சை முறைகள். கடந்த பத்தாண்டுகளில் ஒப்பனைச் சிகிச்சைகளைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்களது தோற்றம் குறித்த உணர்வு இளைஞர்களிடம் பெருகியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் பிரபல ஒப்பனை சருமவியல் நிபுணர் டாக்டர் சயித்ரா வி.ஆனந்த். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

'மரபியல் ரீதியாகத் தங்களது தோற்றம் எப்படி இருப்பினும் அதனை தாங்கள் விரும்பிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ள உதவுவதுதான் இன்றைய நவீன சிகிச்சை முறைகள். இதில் தற்போது, லேசர் ஹேர் ரிடக்ஷன், பாடி ஓடர், ஃபேஷியல் காண்டரிங்க், லிப் ஃபில்லர்ஸ் என உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தாங்கள் விரும்பியபடி மாற்றி அமைத்துக் கொள்ள பல வகையான நவீன சிகிச்சைகள் நாளுக்கு நாள்அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

லேசர் ஹேர் ரிடக்ஷன் என்பது முகம் மற்றும் உடலிலுள்ள தேவையற்ற முடியை லேசர் மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் அகற்றுவதாகும். மேலும், முடியை நீக்கும் போது வலியோ, பக்க விளைவோ ஏற்படாத வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது போன்று பிறக்கும் போது இருக்கும் முக அமைப்புகளுடன் ஆயுள் முழுமைக்கும் வாழும் காலம் தற்போது மலையேறி விட்டது. அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஒட்டு மொத்த முகத்தின் வடிவத்தை மாற்றிப் புத்துணர்வுடன், அழகாகவும், எழிலாகவும் தோற்றமளிக்க உதவும் நவீன சிகிச்சைகள் ஏராளமாக வந்துள்ளன. உதாரணமாக புருவங்களை ஏற்றியும், மூக்கைக் குறுகலாகவும், உதடுகளை மென்மையாவும், கன்னங்களை பூசினாற்போலவும், உருண்டையான முகத்தை ஓவல் வடிவத்திலும், தாடைகளை கூராகவும் மாற்றி அமைக்கலாம்.

உதடு ஃபில்லர் சிகிச்சை முறை, இதன் மூலம் முக அழகுக்கு எழில் சேர்க்க, மென்மையான, கவர்ச்சியான, குவிந்த உதடுகள் வேண்டுமென்று விரும்புபவர்கள் லிப் ஃபில்லர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உதடு ஃபில்லர் ஊசிகள் மூலம் அவரவர் ஆசைப்படும் உதடுகளைப் பெற இந்த சிகிச்சை உதவுகிறது.

இதுபோன்று இன்னும் பல சிகிச்சை முறைகள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டில் உள்ளது. எத்தனை நவீன சிகிச்சைகள் வந்துவிட்டாலும், இவ்வகைச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு இந்த சிகிச்சை குறித்த விவரங்களையும், விளைவுகளையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். பிரபலங்களைப் போன்று நாமும் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பில்லாத எந்த சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தரமான மற்றும் தேர்ந்த நிபுணரிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது’ என்கிறார் சயித்ரா.

]]>
beauty, face make up, முக அழகு, அழகு கலை சிகிச்சை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/Alia.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/jul/04/laser-hair-reduction-and-other-beauty-tips-2953124.html
2929831 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள்!   பா. கவிதாபாலாஜி Wednesday, May 30, 2018 11:52 AM +0530 பெண்களுக்கு ஆடை , அலங்காரம் என்றாலே பிரியம் தான். உடல் அமைப்பை அழகாக காட்டும் ஆடைகளையே விரும்புவார்கள். இதனால் உள்ளாடைகளையும் இறுக்கமாக அணிகிறார்கள். உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் பல இன்னல்களை சந்திப்பார்கள். இருப்பினும் அவர்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள். இப்படி இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பார்க்கலாம்.

பெண்கள் கட்சிதமாக ஆடை அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. நாள் கணக்காக அரிப்பு ஏற்படும். எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பதும் இல்லை.

ரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன.

சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது. தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம்.

சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடத்திற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.

இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாகவும் அமைகிறது.

சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நைலான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Image Courtesy - Google Images

]]>
inners, under garments, உள்ளாடைகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/kendall-jenner-cannes-naked-dress.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/may/30/dont-wear-tight-inner-garments-2929831.html
2927304 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் காஸ்ட்லி நகைகளைப் பராமரிப்பது எப்படி? ஈஸி டிப்ஸ்! ஹரிணி வாசுதேவ் Saturday, May 26, 2018 02:48 PM +0530  

சிலருக்கு நகைகள் வாங்கிக் குவிப்பதென்றால் கொள்ளை ஆசை. ஆனால், வாங்கிக் குவிக்கத்தான் தெரியுமே தவிர, அவற்றை வாங்கிய அன்று இருந்ததைப் போலவே எப்படி நறுவிசாகப் பராமரிப்பது என்பது தெரியாது. ஏதோ பணம் இருக்கிறது நகை வாங்கினோம். நகை தான் சொந்தமாகி விட்டதே, இனியென்ன என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள். அத்தகையோரின் நகைகளை அடுத்தடுத்து தொடர்ந்து திருமணங்கள், திருவிழாக்கள் என விசேஷ நாட்களில் மீண்டும், மீண்டும் அவர்கள் அணியும் போது கவனித்துப் பாருங்கள். நகைகள் சில வருடங்களிலேயே பொலிவிழந்து, சிறு சிறு டேமேஜ்களுடன் நசுங்கிப் போய் காட்சியளிக்கும்.

லைட் வெயிட் நகையென்றால் தானே நசுங்கும் தொல்லையெல்லாம், நாங்களெல்லாம் கெட்டியான ஆன்ட்டிக் நகைப் ப்ரியர்கள் என்று யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கெட்டியான நகைகளைப் பராமரிப்பது இன்னும் கஷ்டம். வைரம், முத்து, பவளம், என காஸ்ட்லி கற்கள் பதித்த அல்லது கற்களே இல்லாமல் ப்ளைன் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆன்ட்டிக் நகைகளில் வெகு சீக்கிரமாகவே அழுக்கு சேரத் தொடங்கி நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பளீர் பொன்னிறம் மங்கி பித்தளை போலத் தோன்றிவிடக்கூடிய ஆபத்துகள் அவற்றில் அதிகமுண்டு.

எனவே விசேஷ நாட்களில் நகை அணிபவர்கள் வீட்டுக்கு வந்ததும் அந்த நகைகளை ஏனோ தானோ என்று கழற்றி அப்படியே சுருட்டி மடக்கி நகைப்பெட்டியில் புதைக்கப் பழகாதீர்கள். அது நகைகளுக்கு நல்லதல்ல. நகைகளை அணிந்து சென்று விட்டு கழற்றி வைக்கும் போது அவற்றைப் பாதுகாக்க தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைப்பெட்டிகளையே பயன்படுத்துங்கள். ஒவ்வொருமுறை நகைகளை அணிந்து விட்டு கழற்றும் போதும் வெதுவெதுப்பான நீரில், மைல்டு ஷாம்பூ அல்லது திரவ டிஷ்வாஷ் சோப் கலந்து ஊறவைத்து பிறகு மென்மையான டோத் பிரஸ் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்துக் கழுவி உலற வைத்து நகைப்பெட்டியில் எடுத்து வையுங்கள். இப்படியெல்லாம் செய்தால் நீங்கள் நகைகளைக் காதலிப்பதைப் போல்வே உங்கள் நகைகளுக்கும் உங்கள் மீது காதல் பெருகி எப்போது எடுத்து அணிந்தாலும் பளீரெனப் பொலிவாக ஜொலிக்கும். என்கிறார் பிரபல நகை வடிவமைப்பாளரான ராதிகா ஜெயின். 

நகைகளைப் பராமரிக்க ராதிகா ஜெயின் அளித்துள்ள சில உபயோகமான டிப்ஸ்கள்...

நகைகளை சுத்தமாக வைத்திருங்கள்...

நகைகளை அணிந்து விட்டு கழற்றி வைக்கும் போது அப்படியே வியர்வை, தூசு, எண்ணெய்ப்பிசுக்கு கலந்த கோலத்தில் வைக்காமல், ஒவ்வொரு முறை நகை அணிந்து கழற்றும் போதும் மைல்டான ஷாம்பூ அல்லது டிஷ்வாஷ் பார் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து மென்மையான பிரஸ்ஸால் தேய்த்துக் கழுவித் துடைத்து உலர வைத்து நகைப்பெட்டியில் எடுத்து வைக்க மறக்கக் கூடாது. நகைகளைச் சுத்தமாகப் பராமரிக்க சோம்பலாக இருந்தால் பிறகு உங்கள் நகைகள் பொலிவிழந்து களை மாறி பழைய நகை போலக் காட்சியளிக்கத் தொடங்கி விடும் என்பதை ஒவ்வொரு முறையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நகைகளை முறையாகப் பத்திரப்படுத்த வேண்டும்...

நகைகளை நகைப்பெட்டியில் பராமரிக்கிறீர்கள் எனில், உங்களது நகைப்பெட்டி கடினமானதாக இல்லாமல் சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்டு அதனுள் வளையல்கள், மோதிரங்கள், நெக்லஸ்கள், கற்கள் பதித்த நகைகளை ஸ்டோர் செய்வதற்கான தனித்தனியான ஸ்டோரேஜ் செக்‌ஷன்கள் இருக்கின்றனவா எனப் பார்த்து வாங்கி அத்தகைய நகைப்பெட்டிகளையே பயன்படுத்துங்கள். ரெகுலர் மாடல் நகைப்பெட்டிகளைப் பயன்படுத்தினீர்கள்  எனில் அவற்றில் லாங்க் செயின்கள், கனமான ஆன்ட்டிக் நகைகள், மெல்லிய நெக்லஸ்கள், மோதிரங்கள், சிறு சிறு ஃபேன்ஸி தோடுகள் முதல் கனமான ஜிமிக்கிகள் வரை தனித்தனியே ஸ்டோர் செய்யும் வசதி இருக்காது. பிறகு பழங்காலத்தில் சுருக்குப் பையில் அனைத்து வகையான நகைகளையும் சேர்த்துப் போட்டு கட்டி இரும்பு பீரோவில் பூட்டி வைப்பதைப் போலாகி விடும். எனவே நீங்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான நகைகளையும் சேமித்து வைக்கத் தகுந்த வகையில் பொருத்தமான தரமான துணியாலான நகைப்பெட்டிகளை வாங்கிப் பயன்படுத்தில் சுணக்கம் கூடாது.

குளிக்கச் செல்லும் முன் அனைத்து நகைகளையும் நீக்க வேண்டும்...

சிலர் கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு அப்படியே குளிக்கச் செல்வார்கள். இது தவறு. கை நிறைய தங்க வளையல்கள் அணிந்து கொண்டு துணிகளை சோப்பு போட்டு தேய்த்துக் கொண்டிருப்பார்கள் இதுவும் தவறு. குளிக்கச் செல்லும் முன் உடலில் அணிந்திருக்கும் அத்தனை நகைகளையும் கழற்றிப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் பிறகு தான் குளிக்கத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் சோப் பிசிறுகள் நகைகளில் ஒட்டிக் கொள்ளும், மோதிரம், தோடு, ஜிமிக்கிகளின் இடுக்கில் சோப் அழுக்கு படிந்து நாளடைவில் நகையைப் பொலிவிழக்கச் செய்யும். நீச்சல் குளம், கடற்கரைக் குளியலின் போது கண்டிப்பாக நகைகளைக் கழற்றி விட்டு குளிக்கச் செல்வது நல்லது. ஏனெனில் அத்தகைய இடங்களில் பொதுவாக காற்றில் ஈரப்பதத்துடன் உவர் தன்மையும் அதிகமிருக்கும். உப்பின் அரிக்கும் தன்மை நகைகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கொரகொரப்பான பொருட்களைக் கொண்டு நகைகளை கிளீன் செய்யாதீர்கள்...

நகைகளைச் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட் அவ்வளவு ஏன் சிலர் பாத்திரம் துலக்கும் கடினமான ஸ்டீல் ஸ்கிரப்பர்களைக் கூடத் துணிந்து பயன்படுத்தி விடுகிறார்கள். மோதிரங்களில் உள்ள அழுக்கை நீக்க ஊக்கு, கூர்மையான ஊடி போன்ற பொருட்களையும் சிலர் பயன்படுத்துகிறார்கள். இது அறியாமை. நகைகளைத் தேய்த்துக் கழுவ மென்மையான பிரஸ்கள் தான் எப்போதும் ஏற்றவை. கடினமான பொருட்களால் தேய்த்துக் கழுவும் போது நகைகளில் கீறல் விழ 100 சதம் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்ல விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகள் எனில் கற்கள் நிச்சயம் சேதமடையும், முத்து, பவளங்கள் உடைந்து நொறுங்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே நகைகளைச் சுத்தம் செய்யும் போது இதை மறக்காதீர்கள்.

வாசனைத் திரவியங்களை நகைகளின் மேல் ஸ்ப்ரே செய்யாதீர்கள்...

சிலர் நகைகளை அணிந்து கொண்டு வெளியில் கிளம்புகையில் வாசனைத் திரவியங்களை புடவை மற்றும் நகைகளின் மேலும் ஸ்ப்ரே செய்து கொண்டு செல்கிறார்கள். அது சரியானதல்ல. வாசனைத் திரவியங்கள் அவை கிரீம்களாக இருந்தாலும் சரி திரவ ஸ்ப்ரேக்களாக இருந்தாலும் சரி முற்றிலும் ரசாயனங்களே! அவற்றை நகைகளின் மீது தெளித்துக் கொண்டு வெளியில் செல்லும் போது காற்றிலுள்ள தூசுக்கள், நச்சு வாயுக்கள், புகை மற்றும் வெயிலினாலான வியர்வை உள்ளிட்ட வெளியுலக மாசுக்களுடன் வினை புரிந்து நகைகளின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சிலரது நகைகள் தரமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்த போதும் வெளுப்பதும், கருப்பதும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதும் இதனால் தான். எனவே முகம், கூந்தல் என வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவோர் நகைகளை அணியும் முன் அவற்றை ஸ்பிரே செய்து கொண்டு பிறகு நகைகளை அணியவும். அதே போல வெளியில் சென்று திரும்பிய உடனே முதல் வேலையாக நகைகளின் மீது படிந்துள்ள வெளியுலக அழுக்குகளை முறையே மேற்சொன்னபடி சுத்தம் செய்து உலர்த்திப் பின் நகைப்பெட்டிகளில் எடுத்து வைக்கவும்.

உடற்பயிற்சி செய்யும் போது நகைகள் அணிவதைத் தவிருங்கள்...

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை பெருமளவில் உடலில் இருந்து வெளியேறும். அப்போது நகைகளை அணிந்திருந்தீர்கள் எனில் வியர்வையில் வெளியேறும் சோடியம் அப்படியே நீங்கள் அணிந்துள்ள நகைகளின் மேல் படிந்து விடும். நாட்பட, நாட்பட அந்தப் பழக்கம் தொடரும் போது நகைகளின் மேல் படிந்துள்ள சோடியம் தடிமனாகப் படியத்துவங்கி நகைகளின் பொலிவை குன்றச் செய்வதோடு நிறமாற்றத்துக்கும் காரணமாகி விடும்.

கழுத்துப் பகுதியில் அழுத்தமாக லோஷன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்...

சிலர் முகம் தவிர கழுத்துப் பகுதியில் வியர்க்கும் என்பதால் சற்று அதிகமாகவே முகப் பெளடர் மற்றும் க்ரீம்களைக் பூசிக் கொள்கிறார்கள். இதுவும் கூட நகைப் பராமரிப்பிற்கு ஒவ்வாத செயலே. கழுத்துப் பகுதியில் வியர்க்கும் போது அந்த வியர்வையுடன் கலந்து இந்த பெளடர், க்ரீம் ரசாயனக் கலவைகளும் நகைகளின் இடுக்குகளில் படிந்து நகைகள் பொலிவிழக்கக் காரணமாகி விடுகின்றன.

தரமான நேச்சுரல் கலர் நெயில் பாலிஷ் கோட்டிங் செய்து ஃபேன்ஸி ரோல்டு கோல்டு நகைகளைப் பாதுகாக்கலாம்.

இப்போது ஒரிஜினல் தங்க, வைர நகைகளுக்கு ஈடாக ரோல்டு கோல்டு செய்யப்பட்ட தரமான கவரிங் நகைகளையும் கணிசமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. அந்த நகைகளும் காஸ்ட்லியானவையே. அப்படிப்பட்ட நகைகளைப் பராமரிக்க ரோல்டு கோல்டு ஃபேன்ஸி நகைகளின் மீது தரமான பிராண்டு நேச்சுரல் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் அடித்துப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் நகைகளின் மீது படியும் எண்ணெய்ப்பிசுக்கு மற்றும் தூசுகளைத் துடைத்தால் போதும். நகைகள் சீக்கிரம் கருத்து மானத்தை வாங்காமல் இருக்கும். 

வருடத்துக்கு ஒருமுறை நகைகளை சோதித்து டேமேஜ் இருக்கிறதா எனக் கண்காணியுங்கள்...

இப்படியெல்லாம் நகைகளைப் பாதுகாப்பு செய்தால் மட்டும் போதாது. நீங்கள் அடிக்கடி நகை அணியும் வழக்கம் இல்லாதவர். நகைகள் எப்போதும் பேங்க் லாக்கர் அல்லது உங்கள் வீட்டு இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டப்பட்டே கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை பூதம் காப்பது மாதிரி திறந்தே பார்க்காமல் காப்பாற்றிக் கொண்டிராலம் வருடத்துக்கு ஒருமுறையாவது வெளியில் எடுத்து நகைகளில் சேதாரம் ஏதாவது உண்டா? நிறம் மங்கியிருக்கிறதா? கற்கள் கழன்று விழும் நிலையில் இருக்கின்றனவா? என்று சோதித்துப் பார்த்து தேவையெனில் எல்லாவற்றையும் பழுது நீக்கிய பின்னர் உள்ளே பூட்டி வைக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறையாவது இதைச் செய்தால் நல்லது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது நகைகளைப் பாலீஷ் செய்யுங்கள்...

தங்க நகைகளை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பாலீஷ் செய்து பத்திரப் படுத்தினால் புது நகை எது? பழைய நகை எது? என வித்யாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நகைகள் என்றென்றும் பளபளப்பாக இருக்கும்.

தினமும் அணியும் முத்து மற்றும் பவளம் கோர்த்த மாலைகளை வருடத்திற்கு ஒருமுறை கழற்றி மீண்டும் நெருக்கமாகக் கோர்த்து அணியுங்கள், இதனால் மாலைகளில் தொய்வு நீங்கும்.

அவ்வளவு தான் மேலே சொன்ன முறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது பொன்னகை என்றைக்கும் உங்கள் முகத்தில் கவலை ரேகைகள் அற்றுப் புன்னகைகளை வரவழைப்பதாகவே நீடிக்கும்.

]]>
Love your jewellery, jewell maintainence tips, நகை பராமரிப்பு டிப்ஸ், காஸ்ட்லி நகைகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/26/w600X390/Love_your_jewellery.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/may/26/dont-just-dump-your-jewellery-in-a-box-2927304.html
2898815 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் சரண்யா பொன்வண்ணனின் D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல்! ஹரிணி வாசுதேவ் Thursday, April 12, 2018 05:52 PM +0530  

நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு நடிப்பு தொழில். அதைத்தாண்டியும் அவரது வாழ்வில் அவருக்கு மிகப்பிடித்த விஷயம் ஒன்றிருக்கிறது என்றால் அது அவரது D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல் தான். வளசரவாக்கத்தில் இருக்கும் டிஸைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி பேஷன் ஸ்கூலில் சரண்யாவே ஓய்வு நேரங்களில் வந்து பாடம் எடுக்கிறாராம். 2014 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை பத்துக்கும் மேலான மாணவிகள் குழுவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். கற்றுக் கொண்ட பழைய மாணவிகளிடமிருந்தே புது பேட்சுக்கான ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

டிஸைனருக்கு ஆடைகளை வடிவமைப்பது மட்டும் தான் வேலை... தைப்பதெல்லாம் டெய்லர்களின் வேலை என்றிருக்கையில் ஒரு டிஸைனரின் கனவை டெய்லரால் நனவாக்க முடியாத போது அந்த ஆடை வடிவமைப்பில் திருப்தி கிடைப்பதில்லை. கனவு காண்பவர்களுக்கு நிச்சயம் அந்தக் கனவை தாங்களாகவே நனவாக்கிக் கொள்ளும் திறனும் இருக்க வேண்டியது அவசியம். டி சாஃப்டின் தாரக மந்திரம் இது தான். இங்கு வந்து டிஸைனிங் கற்றுக் கொள்ளும் மாணவிகளுக்கு நிச்சயம் தையல் கலையும் கற்பிக்கப்படுகிறது. டிஸைனர்களே இங்கே தைக்க முடிவதால் அவர்களால் தாங்கள் கற்பனை செய்த ஆடைகளை தையலிலும் கொண்டு வர முடிகிறது. என்பது தான் எங்களது ஃபேஷன் ஸ்கூலின் வெற்றி என்கிறார் சரண்யா.

இவரது ஃபேஷன் ஸ்கூலின் ஸ்பெஷல் என்ன?

கோர்ஸ் முடித்துக் கொண்டு சென்ற பழைய மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் சரண்யாவிடமும் அவரது பிற ஆசிரியர்களிடமும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆசிரியர், மாணவிகளிடையே நட்புறவை வளர்த்து அவர்களை எந்தவிதமான மனச்சங்கடங்களும் இன்றி தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதே டி சாஃப்டின் ஸ்பெஷல்.

உண்மையில் சரண்யா பொன் வண்ணன் அவரது நடிப்பைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் அவரது ஃபேஷன் ஸ்கூல் பற்றிப் பேசுவதில் தான் ஆனந்தம் கொள்கிறார்.

சரண்யாவுக்கு எப்படி வந்தது இந்த ஃபேஷன் ஸ்கூல் ஆர்வம்?

சரண்யா தமிழ்த்திரையுலகில் நாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் அவருக்கு ஃபேஷன் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறை இருந்ததில்லை என்கிறார். அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களுக்கும் அவரது அம்மாவே தன் கையால் டிஸைன் செய்த உடைகளைத் தயாராக எடுத்துத்தருவாராம். சரண்யாவுக்கு அவை எப்படி உருவாகின என பெரிதாக கவனமிருந்ததில்லை. அம்மா தனக்காக அனைத்தையும் தைத்து தயாராக நீட்டும் ஆடைகளையும், அக்ஸசரிஸையும் அணிந்து கொண்டு அப்படியே விழாவுக்குச் செல்ல மட்டும் தான் ஆரம்பத்தில் தனக்கு தெரிந்திருந்தது என்று கூறும் சரண்யா... திடீரென ஒரு காலகட்டத்தில் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் அவர் இவ்வுலகை விட்டே மறைய வேண்டிய நிலை வந்ததும் மனதளவில் மிகுந்த துயரம் வந்து சேர்ந்திருக்கிறது. அம்மா உயிருடன் இருக்கையில் பலமுறை சரண்யாவிடம் ஃபேஷன் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் அப்போதெல்லாம் கற்றுக் கொள்ளாமல் போனோமே என்று வருந்தியவர் அம்மா இறந்த பின் அவரது நினைவில் உருகிப் போய் அவர் ஆசையை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியோடு தூசி பிடித்துக் கிடந்த அம்மாவின் தையற்கருவிகளை எல்லாம் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். இதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்ட பின் இன்று வரையிலும் கூட சரண்யா தனக்குத் தேவையான, தன் மகள்களுக்குத் தேவையான அத்தனை உடைகளையும் கூட அவரே தனது கரங்களால் தானே வடிவமைத்துப் பயன்படுத்துவது வழக்கம் என்கிறார்.

நடிப்பு தாண்டியும் நடிகைகள் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு அதை பிறருக்கும் போதிக்க முன்வருவது அபூர்வம். அந்த வகையில் சரண்யா வித்யாசமான நடிகை என்பதைக் காட்டிலும் பாராட்டப்பட வேண்டிய பெண்மணி என்பதில் ஐயமில்லை.

]]>
saranya ponvannan, D SOFT Fashion school, சரண்யா பொன்வண்ணன், டி சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/12/w600X390/z_saranya_ponvannan_d_soft.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/apr/12/saranya-ponvannans-d-soft-fashion-school-2898815.html
2893583 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் நிவியா காஸ்மெடிக்ஸின் பிராண்ட் அம்பாஸிடராகிறார் டாப்ஸி பன்னு! ஹரிணி Wednesday, April 4, 2018 01:01 PM +0530  

இந்தியாவில் பிரபலமான அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்களில் நிவியாவும் ஒன்று. முகக் கிரீம்கள், சருமத்தை மென்மையாக்க உதவும் மாஸ்ச்சரைஸர்கள், சோப், உள்ளிட்ட பல அழகு சாதனப் பொருட்கள் நிவியா எனும் பிரபல பிராண்ட் லேபிளில் இந்தியாவில் விற்பனையாகிறது. தரமான அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்தளிக்கும் நிறுவனம் என்றொரு நற்பெயரும் நிவியாவுக்கு உண்டு. டாப்ஸியைப் பொறுத்தவரை நிவியாவுக்கு முன்பே அவர் கூந்தல் தைலம், குளியல் சோப், நகைக்கடை விளம்பரம், புடவைக்கடை விளம்பரம் என 6 க்கும் மேற்பட்ட பொருட்களின் விளம்பரத்துக்காக பிராண்டு அம்பாஸிடராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நிவியாவும் இந்தியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பிங்க்’ திரைப்படத்திற்குப் பிறகு ஆல் இந்தியா ஸ்டார் ஆகி விட்ட டாப்ஸிக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு அவரைத் தங்களது அழகு சாதனப் பொருட்களுக்கான பிராண்ட் அம்பாஸிடராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்திய மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு விஷயத்தில் தனிப்பெரும் நம்பிக்கையைச் சாதித்து அதை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிவியா போன்ற பாப்புலர் பிராண்ட் தன்னை பிராண்ட் அம்பாஸிடராக அணுகியிருப்பது பெருமைக்குரிய விஷயம் தான் என்று குறிப்பிட்டு நிவியா அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் டாப்ஸி.

ஆகவே, இனிமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிவியா காஸ்மெடிக் விளம்பரங்களில் டாப்ஸி தவறாது இடம்பிடிப்பார் என நம்பலாம்.

தற்போது இந்தியில் ‘மன்மரிஸான்’ திரைப்படத்தில் அபிஷேக் மற்றும் விக்கி கோஷலுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸியின் கையில் மேலும் சூர்மா, முல்க் எனும் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இரண்டில் ‘சூர்மா’ விளையாட்டு வீரர் சந்தீப் சிங்கின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வெளிவரவிருக்கும் பயோ பிக் ரகத் திரைப்படம். இதில் டாப்ஸி தொழில்முறை ஹாக்கி வீரங்கனையாக நடித்து வருகிறார். இது தவிர ரிஷி கபூர் தயாரிப்பில் பிரதிக் பாப்பருடன் ஜோடியாக முல்க் என்ற இந்தித் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் டாப்ஸி மிகச் சுறுசுறுப்பாக விளம்பரப் படங்கள், தென்னிந்திய திரைப்படங்கள், இந்தித் திரைப்படங்கள், என சூறாவளியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

]]>
டாப்ஸி பன்னு, நிவியா காஸ்மெடிக்ஸ், பிராண்ட் அம்பாஸிடர், Taapsee, Nivea India, brand ambassador https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/nivia_brand_ambasadar_tapsy_pannu.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/apr/04/taapsee--roped-in-as-the-brand-ambassador-of-nivea-india-2893583.html
2884277 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பிரபல அமெரிக்க பாப்பாடகி பியான்ஸ் நோல்ஸின் பிரமாண்ட தங்க கவுனை வடிவமைத்தது யார்? ஹரிணி வாசுதேவ் Tuesday, March 20, 2018 02:35 PM +0530  

பிரபல அமெரிக்கப் பாடகி பியான்ஸ் நோல்ஸின் இந்த தங்க கவுனை வடிவமைத்தது இந்தியர்களாம்.

பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸைப் பற்றி அறிந்திருப்பீர்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவுக்கு விருப்பமான பாடகியான பியான்ஸ் சமீபத்தில் குடும்பத்துடன் விருது விழாவொன்றில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் இரண்டு கெளரவ விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளைக் காட்டிலும் அன்று அதிகம் மெச்சிக் கொள்ளப்பட்டது பியான்ஸின் உடையலங்காரம் தான். அவரே பார்வைக்கு, ஒரு மெகா தங்கப் கோப்பை போலத் தான் இருந்தார்.

தங்கச் சிப்பியிலிருந்து முத்து விளைந்து வருவது போன்ற தோற்றம் கொண்ட அந்த உடை பியான்ஸைப் பொறுத்தவரை வெகு ஸ்பெஷலானது. இதை பியான்ஸின் பிரத்யேக ஸ்டைலிஷ்ட்டான மார்ட்னி செனெ ஃபாண்ட்டியுடன் இணைந்து நம்மூர் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தான் மெனக்கெட்டு படு சிரத்தையுடன் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். உடல் முழுதும் மெல்லிய கண்ணாடி போன்ற தங்க இழைகளால் நெய்யப்பட்ட அந்த நீளமான தங்க கவுனின் கால்பகுதி மட்டும் பலமடங்கு நீளத்துடன் கீழே மடக்கி, மடக்கித் தைக்கப் பட்டிருந்தது. தங்க இழைகள் குவிந்து தங்கத்தினாலான முத்துச் சிப்பி போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உடை.

இந்த உடைக்கான இன்ஸ்பிரேஷனை கற்பனை தேசமான வகாண்டாவில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள். அதென்ன வகாண்டா என்று யோசிப்பவர்களுக்கு வகாண்டா ஆப்ரிக்காவில் சித்தரிக்கப்படும் ஒரு கற்பனை தேசம், அந்த தேசத்திலிருந்து தான் கற்பனை சாகஷக் கதாபாத்திரமான பிளாக் பாந்தர் தோன்றுவார். அந்த தேசத்தின் வில்லாளி நுபியன் ராணுவத்தால் வெல்லப்படுவதாகக் கதை உண்டு. அந்தச் சித்தரிப்பை மனதில் வைத்தே இந்த உடையை உருவாக்கி இருக்கிறார்களாம். 

விழாவில் பியான்ஸுடன் கலந்து கொண்ட அவரது இளைய மகள் ஐவியும் தன் தாயின் மினியேச்சர் போல அந்தச் சிறுமியின் அளவுக்கு தைக்கப்பட்ட ஒரு பிரமாண்ட தங்க கவுனில் தான் வலம் வந்தார். இந்த ஆடைகளை வடிவமைத்திருப்பது இரு இந்தியர்கள் அவர்களது பெயர்கள் முறையே ஃபல்குனி மற்றும் ஷேன் பீகாக்.

இப்படி இரு தங்க மங்கைகளுக்கு நடுவில் பியான்ஸின் கணவரும் பிரபல பாப் பாடகருமான ஜே.சி கார்ட்டர் என்ன தான் அம்சமான கோட் ஷூட்டில் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தாலும் கூட பார்வையாளர்களின் கண்கள் மொத்தமும் மொய்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மா, மகள் டியோ தேவதைகள் மேல் தான்.
 

Image courtesy: swirlster.ndtv.com

]]>
பியான்ஸ் நோல்ஸ், பிரமாண்ட தங்க கவுன், ஃபல்குனி, இந்திய ஆடை வடிவமைப்பாளர், beyonce noles giant gold dress, falguni, shane peacock https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/beyonce_noels_pop_singer.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/mar/20/beyonces-giant-gold-dress-was-made-by-indian-designers-2884277.html
2856745 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பெண்கள் சேலையில் ‘ஸ்லிம்’ தோற்றம் பெறச் சில டிப்ஸ்! பரணி Saturday, February 3, 2018 05:53 PM +0530 புடவை பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். சிலருக்கு உடுத்திக் கொள்ள ஆசையிருந்தாலும் ‘ஸ்லிம்’ ஆக இருப்பவர்களுக்குத் தான் புடவை தோது... நம்மைப் போல பூசின உடல்வாகு கொண்டவர்களுக்கு புடவை நன்றாக இருக்காது. பூசனிக்காய் மாதிரி இருக்கிறாய் என்று யாரேனும் கேலி செய்து விடுவார்களோ! என்ற மனத்தாங்கலில் புடவை உடுத்தப் பிடித்தே இருந்தாலும் அடிக்கடி உடுத்திக் கொள்ள விருப்பமிருக்காது. அந்தக் கவலை இனி வேண்டாம். ஸ்லிம் சுந்தரிகள் மட்டுமல்ல கொஞ்சம் பூசினாற் போல உடல்வாகு கொண்டவர்களையும் ஸ்லிம் தோற்றம் பெறச் செய்யும் வகையிலான புடவை கட்டும் ஸ்டைல்களை இப்போது  அறிந்து கொள்ளுங்கள்.

சிறிய பார்டர்கள் உள்ள புடவைகளைப் போலவே புடவையின் மேற்பகுதியில் ஒரு நிறம், கீழ்பகுதியில் ஒரு நிறம் என கிடைமட்டமாக இருநிறத்தில் வடிவமைக்கப்படும் புடவைகளை உடுத்திக் கொண்டால் சற்றுப் பூசினாற்போல உடல் எடை கொண்டவர்களும் ஸ்லிம் ஆகத் தோன்றுவார்கள்.

பளீர் கருப்பு நிறம் புடவையின் மேற்பகுதியிலும் சற்றே அரை வெண்மை அல்லது கிரீம் நிறம் புடவையின் கீழ்ப்பகுதியிலும் வடிவமைக்கப்பட்ட புடவைகளை அணிந்தால் அப்போதும் காண்போர் கவனமெல்லாம் பளீர் கருப்பில் ஆழ்ந்து கீழுள்ள அரை வெண்மை நிறம் மேலும் மங்கலாகக் கவனம் பெற்று காண்போருக்கு ஸ்லிம் தோற்றம் ஏற்படுத்தக் கூடும்.

முற்று முழுதாக கருநிறப் புடவைக்குப் பொருத்தமாக முழுக்கருப்பு நிறச் சோளி அணிந்து விழாக்களுக்குச் சென்றீர்களெனில் உங்களது தோற்றம் கருமையின் மகிமையால் பிறர் கண்களுக்கு ஸ்லிம் ஆகவே தெரியக்கூடும் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.

புடவையின் முந்தானைப் பகுதியை இவரைப் போல மடிப்புகள் வைத்துப் பின் குத்தாமல் அப்படியே சுதந்திரமாக ஒற்றைப் பள்ளுவாக விரித்து விட்டுக் கொண்டாலும் சற்றே குண்டாக இருப்பவர்களும் கூட ஸ்லிம் ஆகவே தோற்றமளிப்பார்கள். ஏனெனில், ஒற்றைப் பள்ளு ஸ்டைலில் புடவை உடுத்துகையில் இடுப்புப் பகுதி வெளியே எக்ஸ்போஸ் ஆகாமல் மறைந்து விடுவதால் ஸ்லிம் தோற்றம் பெறலாம்.

படத்தில் சோனாக்‌ஷி அணிந்திருப்பது போல கடற்கன்னி ஸ்டைலில் புடவை உடுத்திக் கொண்டாலும் கூட சற்றே சதைப்பற்றுடனும் இருக்கும் இடுப்பு மற்றும் தோள்ப்பட்டை பகுதிகளில் கவனம் குவிவதைக் காட்டிலும் கீழே பாதங்களின் அருகே விசிறி போல அசைந்து புரளும் மடிப்புகளில் காண்போர் கவனம் சிதறும். அதன் காரணமாக ஸ்லிம் லுக் பெறலாம்.

படத்தில் சோனம் கபூர் அணிந்திருப்பது போல ஃப்ரண்ட் லூப் பள்ளு ஸ்டைலில் புடவை உடுத்திக் கொண்டாலும் உங்களது தோற்றம் ஸ்லிம் லுக் தரலாம். அது மட்டுமல்ல, இடுப்பு, புஜம், முதுகு என எங்கேனும் சதை பிதுங்கிக் கொண்டு தெரிவதாக உணர்ந்தாலும் அதை இப்படி புடவை உடுத்துவதன் மூலமாக நீங்கள் சற்று மறைக்கலாம். இந்த ஸ்டைலில் புடவை உடுத்தும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், உங்களது புடவை இப்படி உடுத்திக் கொள்ளும் அளவுக்கு நீளமானதா என்று யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் புடவையின் உள்மடிப்புக்கு இதே நிறத் துணி வாங்கி புடவையின் உட்பகுதியுடன் இணைத்துத் தைத்து உங்களுக்கேற்ற பெரிய புடவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

மேற்கண்ட ஆறு விதமான ஸ்டைல்களிலும் புடவை உடுத்திக் கொண்டால் உடுத்துபவர் ஸ்லிம் தோற்றம் பெறலாம் என்பதோடு, தினமும் ஒரே விதமாகப் உடவை உடுத்தும் அலுப்பிலிருந்தும் மீளலாம்.

]]>
சேலையில் ‘ஸ்லிம்’ தோற்றம் பெறச் சில டிப்ஸ்!, 6 sari draping tips to look slim , lifestyle fashion, லைஃப்ஸ்டைல் ஃபேஷன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/celebrities-in-boat-neck-designs.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/feb/03/6-sari-draping--tips-to-look-slim-2856745.html
2848106 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ட்ரெண்டி ஜாக்கெட் ஸ்லீவ்ஸ் டிசைன்ஸ்! ஹரிணி வாசுதேவ் Saturday, January 20, 2018 05:46 PM +0530 இந்த உலகம் நினைப்பது போல பெண்களின் ஆகச்சிறந்த பிரச்னை ஆண்கள் அல்ல, வருடம் முழுக்க ஒன்று மாற்றி ஒன்றாய் வந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு விசேஷ நாளுக்காகவும் பார்த்துப் பார்த்து வாங்கக் கூடிய  ஒவ்வொரு புடவைக்கும் பொருத்தமாக பிளவுஸ்கள் தைத்து முடிப்பது தான் அவர்களின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இன்றைய தேதிக்கு ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் வார்ட்ரோபை ஆராய்ந்தாலும் கூட குறைந்த பட்சம் 50 புடவைகளாவது வைத்திருப்பார்கள். தினமும் அலுவலகத்துக்கு புடவை மட்டுமே உடுத்திச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் எத்தனை புடவைகள் இருக்கின்றன என்ற கணக்கு அவர்களுக்கே தெரியுமோ, தெரியாதோ?! புடவை என்றால் வெறும் புடவை மட்டும் இல்லையே? அதற்குத் தோதாக பிளவ்ஸ் அமைந்தால் மட்டும் தான் புடவை சோபிக்கும். சுரிதார்களைப் போல புடவையில் மிக்ஸ் அன்ட் மேட்ச் செய்வது அத்தனை எளிதில்லை. எனவே, கடை, கடையாக ஏறி இறங்கியாவது ஒரு பெர்ஃபெக்ட் டெய்லரைக் கண்டடைவதை தங்களது வாழ்நாள் லட்சியமாகவே வைத்திருக்கிறார்கள் அனேகம் பெண்கள். பொருத்தமான ஜாக்கெட்டுகள் கூட பெரும்பாலும் கிடைத்து விடுகின்றன. ஆனால், அதைக் கச்சிதமாக தைத்துத் தரக்கூடிய டெய்லர்கள் தான் பலருக்கும் கிடைக்க மாட்டேனென்கிறார்கள். பெண்களின் வாழ்வில் இந்தத் தேடல், பெருந்தேடலாகி விடுவதோடு மட்டுமல்ல, தீராத ஏக்கமாகவும் ஆகி விடுகிறது.

நல்ல டெய்லர் அமையவில்லை,  எந்த ஜாக்கெட்டை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு சின்னப் பிழை, மூச்சுக் கூட விட முடியாமல் இறுக்கித் தைத்து விடுகிறார்கள், அல்லது பாட்டி மாதிரி தொள, தொளப்பாய் தைத்து வைக்கிறார்கள். என்பதற்காக பெண்கள் புதுப் புது ஃபேஷனில் ஜாக்கெட் தைத்துக் கொள்ளாமல் இருந்து விட முடியுமா? சில வாரங்களுக்கு முன்னால் ஜாக்கெட்டின் நெக் டிசைன்களைப் பற்றி லைஃப்ஸ்டைல் ஃபேஷனில் ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அதையொட்டி தற்போது  ஜாக்கெட்டில் லேட்டஸ்ட் ஸ்லீவ்ஸ் டிசைன்கள் என்னென்ன ட்ரெண்டியாகப் பலராலும் பின்பற்றப்படுகின்றன என்று இந்தப் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த டிசைன்களை எந்தெந்தப் புடவைகளுக்குப் பொருத்தமாகத் தைத்துப் போட்டுக்கொள்ளலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். 

பஃபி ஸ்லீவ்ஸ்


ப்ளீட்டட் ஸ்லீவ்ஸ்


டர்ட்டில் நெக் பிளவ்ஸ்


ஃபிஷ் கட் எண்ட் ஸ்லீவ்


 

ஃபுல் ஸ்லீவ்ஸ்


கேப் ஸ்லீவ்ஸ்


குவார்ட்டர் ஸ்லீவ்ஸ்


ஸ்பாகெட்டி ஸ்ட்ராப் ஸ்லீவ்ஸ்


ஸ்லீவ்லெஸ்


பெல் ஸ்லீவ்ஸ்

பெப்லம் ஸ்லீவ்ஸ்

விங்ஸ் ஸ்லீவ்ஸ்

காலர் நெக் ஸ்லீவ்ஸ்

சுஷ்மா ஸ்வராஜ் ஸ்டைல் ஸ்லீவ்ஸ்

ஹாஃப் ஸ்லீவ்ஸ்

]]>
ட்ரெண்டி ஜாக்கெட் ஸ்லீவ்ஸ் டிசைன்ஸ், trendy blouse sleevs designs, lifestyle fashion https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/20/w600X390/bhel_blouse.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2018/jan/20/ட்ரெண்டி-ஜாக்கெட்-ஸ்லீவ்ஸ்-டிசைன்ஸ்-2848106.html
2833371 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் பழசு! இதுதான் புதுசு! சினேகா Tuesday, December 26, 2017 04:53 PM +0530  

இந்தியப் பெண்கள் என்றாலே உலக மக்கள் வியக்கும் பல விஷயங்களில் ஒன்று நம் பெண்கள் அணியும் புடவை. அதை எப்படித்தான் கட்டுகிறார்களோ என்று ஒருகாலத்தில் வெளிநாட்டினர் வியந்து கொண்டிருந்தனர். இன்றைய நிலையில் நம் நாட்டுப் பெண்களே அப்படி சொல்லும்படியாகிவிட்டது.

வெஸ்டர்ன் ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் இளசுகள் பண்டிகை, அல்லது திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குப் போகும் போது இன்னும் புடவைகளில் வலம் வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். 

சேலைக்கு ஏன் இளம் பெண்கள் நோ சொல்கிறார்கள் என்று கேட்ட போது அதற்கு ஜாக்கெட், பாவடை என மேட்சிங்காக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. மேலும் அந்த ஜாக்கெட்டை தைத்து அணிவதற்குள் பொறுமை போய்விடும். ஒருவருக்கு எல்லா உறவுகளும் வாழ்க்கையில் சரியாக அமைந்துவிட்டாலும், ஒரு சரியான டெய்லர் அமையவில்லையெனில் கஷ்டம்தான். பெண்களைப் பொருத்தவரையில் டெய்லர்கள் அன்றாடம் சந்திக்கக் கூடிய ஒரு முக்கிய நபர்களாகிவிட்டனர். 

மேட்சிங் ப்ளவுஸ் வாங்கி தைத்தாகிவிட்டது.  எந்தந்த புடவைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் அணியலாம் என்ற ஜென்ரல் நாலெட்ஜ் இருந்தால் சேலை ஸ்பெஷிலிஸ்ட் ஆகிவிடலாம்.

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

முழு நீளக் கை வைத்து ஜாக்கெட் தைப்பது பழைய கால பேஷன் என்று நீங்கள் சொல்ல முடியாது. காரணம் இப்போது இதுதான் லேட்டஸ்ட் ரசனை.

லேஸ் வைத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகள் அழகாகவும் இன்றைய யுவதிகளின் சாய்ஸாகவும் உள்ளது.

ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்

முக்கால் கை ஜாக்கெட் என்று இதனைச் சொல்வார்கள்.

இதில் கழுத்துப் பகுதி மேலே ஏறி இருக்கும். நெக் டிசைன் அதற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து தைத்துப் போட்டால் அழகாக இருக்கும்.

பஃப் ஜாக்கெட்

அந்த நாள் முதல் இந்த நாள் வரை பெண்கள் விரும்புவது பஃப் கை ஜாக்கெட்தான்.  

இது விதம் விதமாக டிசைன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியாக இந்த ஜாக்கெட்டை அணியலாம்.

டபுள் கலர் ஜாக்கெட்

இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். அந்தந்த புடவைக்கு ஏற்றபடி கலர் மேட்ச் செய்து தைக்கப்படும்.

இந்த ஜாக்கெட் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

இன்வர்டட் ஏ  ஜாக்கெட்

முன்பெல்லாம் லோ நெக் ஜாக்கெட் அணிந்த பெண்களைப் பார்க்கலாம். இப்போது நோ நெக் என்பதுதான் ஃபேஷன் போலும்.

அதாவது முதுகுப்புறத்தை பெரும்பான்மையாக ஃப்ரீயாக விடுவதுதான். இதில் இன்வர்டட் ஏ, வி நெக், டீப் யூ, ஷீர் டைப் என பலவகையில் உள்ளது. 

ஹை நெக் ஜாக்கெட்

கழுத்து வரை இழுத்து போர்த்தி தைக்கப்படும் அழகான சிம்பிள் ஜாக்கெட் இது. 

போட் நெக் ஜாக்கெட்

உங்கள் டெய்லரிடம் சொன்னால் அந்த டிசைனில் ஜாக்கெட் தைத்து தருவார்கள்.

புடவையின் லுக்கை இந்த ஜாக்கெட் மாற்றிக் காண்பிக்கும். ரிச் லுக் கொடுக்கும் ஜாக்கெட் இது. 

க்ளிட்டரிங் ஜாக்கெட்

இதுவும் லேட்டஸ்ட் ஃபேஷன்தான். கல்லூரி அல்லது பள்ளி ஃபேர்வெல் பார்டிகளுக்கு டீன் ஏஜ் பெண்கள் இதையே விரும்பி அணிகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இந்த ஜாக்கெட்டில் சம்கி, மிர்ரர் வொர்க் கலந்து தைக்கலாம். பொதுவாக ஜிகு ஜிகுவென அழகிய நிறங்களில் மின்னும் ஜாக்கெட் இது. 

சோளி ஸ்டைல் ஜாக்கெட்

இந்த ஜாக்கெட் மிகவும் எளிமையாக இருக்கும். 

பாரம்பரிய சேலைகளை அணியும் போது இந்த வகை ஜாக்கெட்டுகளை விரும்பி அணிகிறார்கள் இன்றைய யுவதிகள்.

கோல்டன் மற்றும் ரெட் கலர் ஜாக்கெட்

கோல்டன் கலர் புடவை, மற்றும் ஹாஃப் வொயிட் சேலைகளுக்கு, இந்த சிவப்பும் தங்க நிறமும் கலந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும். பண்டிகை தினங்களில் அணிய ஏற்றது.

]]>
Saree, Jaccket, Blouse, சேலை, புடவை, ஜாக்கெட், ப்ளவுஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/samantha_saree-wide.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/dec/26/latest-and-trendy-blouse-designs-2833371.html
2820165 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் சர்வதேச சூப்பர் மாடல் பெண்ணுக்கு நம்மூர் 6 கஜப்புடவையின் மீது தான் கொள்ளைப் பிரியமாம்! ஹரிணி வாசுதேவ் Monday, December 4, 2017 11:03 AM +0530  

யார் அவர்?

ஃபேஷன் உலகில் நவோமி கேம்பெல்லைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. உலகின் டாப் 10 சூப்பர் மாடல்களில் ஒருவர் நவோமி. கறுப்பினப் பெண்ணான நவோமி மாடலிங் உலகில் ஜொலித்தது வெறும் அதிர்ஷடத்தின் துணையால் மட்டும் அல்ல அந்த இடத்தை அடைய அவர் கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார். அதற்காக அவர் பிற மாடல்களைப் போல உடலை வருத்திக் கொண்டு உணவுக் கட்டுப்பாடு, சதா சர்வகாலமும் ஜிம்மில் வொர்கவுட், நோ ஸ்மோக்கிங், நோ ஆல்கஹால் என்றெல்லாம் தன்னை வருத்திக் கொள்ளவில்லையாம். அதே சமயம் துக்கம் மேலிட்டால் நிச்சயம் வாய் விட்டு அழுது விடுவதிலும், பார்ட்னருடனான சண்டையின் போது மனதிலிருப்பதை தடித்த வார்த்தைகள் மூலம் கொட்டி விடுவதன் மூலமும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் தயங்கியதில்லையாம் நவோமி. அவரது ஸ்ட்ரெஸ் தீர இது தான் மிகச்சிறந்த நிவாரணம் என்கிறார் அவர். எப்படியோ இந்த கறுப்பழகி தன் மனதை கவலைகள் இன்றி நிம்மதியாக வைத்துக் கொண்டால் சரி அவ்வளவு தானே! 

நவோமிக்கு இந்தியா என்றாலும் இந்திய உடைகள் என்றாலும் கூட கொள்ளைப் பிரியம். எத்தனை வேலைப்பளு என்றாலும் கூட சமயம் வாய்த்தால் இந்தியா வரத் தயங்குவதில்லை நவோமி. இந்தியா வருவதோடு மட்டுமல்ல, நம்மூர் 6 கஜப்புடவை, லெஹங்கா, டிசைனர் ஆர்ட் புடவைகள் என எதையும் ஒரு கை பார்த்து விடுவதும் வழக்கம். இதற்கு அவருக்கு உதவுபவர் மனிஷ் மல்ஹோத்ரா.

இந்தியாவின் செலிபிரிட்டி ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்திரா நவோமியின் நண்பர் மட்டுமல்ல, நவோமி இந்தியா வருகையில் அவருக்கேற்ற வகையில் இந்தியப் புடவைகளையும் மற்ற பிற உடைகளையும் வடிவமைத்துக் கொடுப்பதும் அவரே தான்!

சமீபத்தில் இந்தியா வந்த நவோமி மேற்கண்ட புகைப்படத்தில் அணிந்திருக்கும் சிவப்பு நிற லெஹங்கா மனீஷ் மல்ஹோத்திராவின் கோச்சர் நிறுவனத்தின் தயாரிப்பு தான். 

நவோமி இந்தியா வரும் ஒவ்வொரு முறையில் மனீஷின் கோச்சரில் அவருக்குத் தேவையான புதுப் புது புடவைகள் டிசைன் செய்யப்பட்டு தயார்நிலையில் இருக்கும்.

இந்தப் புகைப்படத்தில் நவோமியின் சிவப்பு லெஹங்கா உடை அவரது நெற்றியில் மின்னும் செஞ்சிவப்புத் திலகத்துடன் மட்டுமே நிறைவுறுகிறது.

பிறப்பால் அந்நியராக இருந்தாலும் இந்திய ஃபேஷன் உலகுக்கு வருகை தருகையில் தவறாமல் புடவைகளை அணிந்து கொள்ள மறக்காத நவோமி பிரமிக்க வைக்கிறார். அவருக்கு வயது 47 என்றால் நம்பமுடிகிறதா?!

]]>
லைஃப்ஸ்டைல் ஃபேஷன், lifestyle fashion, நவோமி கேம்பெல், சர்வதேச மாடல், இந்தியப் புடவைகள், Naomi Campbell Still Loves Indian Fashion, international model, indian saree lover https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/Naomi_Campbell.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/dec/04/naomi-campbell-still-loves-indian-fashion-2820165.html
2818562 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் டாட்டூ போட்டுக்கறதுல மட்டுமில்லை அதை அழிக்கிறதுலயும் இந்தியா தான் ஃபர்ஸ்ட்! ஏன் தெரியுமா? ஹரிணி வாசுதேவ் Friday, December 1, 2017 05:15 PM +0530  

டாட்டூ கலாச்சாரம் பாட்டிகள் காலத்ததுன்னு நினைச்சுக்கிட்டிருந்தது ஒரு காலம். இப்போது டாட்டூ போட்டுக்கிறது ஃபேஷனோ ஃபேஷன். சமீபத்துல தமிழ்நாட்டுல டாட்டூ ஃபேஷன் மேலும் மும்முரமாகப் பரவ பிக் பாஸ் புகழ் ஓவியா, நமீதா முதல் காயத்ரி ரகுராம் வரை எல்லோருமே கூட ஒருவகையில் உதவினாங்கன்னு தான் சொல்லனும். பிக்பாஸ் வீட்டில் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக்கூட ரசிகர்கள் அத்தனை ஆர்வமாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களின் புறங்கழுத்திலும், தண்டுவடத்தின் துவக்கப் பகுதியிலும் வரைந்திருந்த அழகு டாட்டூக்களை நிச்சயம் மிஸ் செய்திருக்க மாட்டார்கள். இவங்க மட்டுமில்லை இந்தியாவில் டாட்டூ பிரியர்களாக நிறைய நடிகர், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். த்ரிஷா, நயந்தாரா, தீபிகா படுகோன், கரீன கபூர், எல்லோருமே டாட்டூ லவ்வர்ஸ் தான். த்ரிஷா பூலோகம்னு ஒரு படத்துல உடல் முழுவதுமே டாட்டூ வரைந்து நடித்திருந்தார். நயன்தாரா இன்னும் ஒரு படி மேலே போய் தன்னுடைய முன்னாள் காதலர் பெயரையே கையில் டாட்டூவாக வரைந்து வைத்திருந்தார். டாட்டூக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று தற்காலிகமானது எளிதில் அழிக்கக் கூடியது. இது கிட்டத்தட்ட பெயிண்டிங் மாதிரி. ஆனால் சில வகை டாட்டூக்கள் நிரந்தரமானவை அவற்றை அத்தனை எளிதில் அழித்து விட முடியாது. பெரும்பாலும் தீவிரமான காதலில் இருப்பவர்களே இப்படியான நிரந்தர டாட்டூக்களை வரைந்து கொள்வதுண்டு. 

சென்ற நூற்றாண்டில் நமது பாட்டிகளும், அம்மாக்களும், அக்காக்களும் கூட கையில் பச்சை குத்திக் கொள்வார்கள். கிராமத்தில் சில பாட்டிகள் பாவடையை தூக்கிக் கட்டிக் கொண்டு ஆற்றில் குளிக்கும் போது கண்டதுண்டு கை புஜங்களில் மகர மச்சம், காலின் ஆடுசதையிலும், முன் காலிலும் மறிமான்கள், புறங்கையில் அன்னப் பட்சிகள், நெற்றியில் நெற்றி வட்டம், என்று உடலில் வெயில் படும் வண்ணமிருக்கும் பகுதிகளில்  எல்லாம் பச்சை குத்தியிருப்பார்கள். இன்று வயதாகி தோல் வழண்டிருந்தாலும் கூட பார்க்க ஆச்சர்யமாக இருக்கும் அந்தப் பச்சை குத்தலில் இழையோடும் கலை நுணுக்கம். பாட்டிகளின் காலத்தின் பின் அம்மாக்கள் மற்றும் அத்தைகளின் காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பெயர்களையும், இனிஷியல்களையும் பச்சையாகக் குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் முன்கை சதைகளில் இந்த வகைப் பச்சைகள் இடம்பெறும். அதே சமயத்தில் தான் ஆண்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் சின்னங்களை கைகளில் பச்சையாகக் குத்திக் கொண்டு கொள்கப் பற்றோடு இருக்கும் வழக்கமும் இருந்து வந்தது. பிறகு அக்காக்களின் காலம் வந்தது அவர்கள் எளிமையாக கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் மேலுள்ள திரளான சதைப்பற்றில் கும்பம், பிறைச்சந்திரன், சூரியன், என்று பச்சை குத்திக் கொண்டார்கள். 

பிறகு இன்டர்நெட் யுகம் வந்து உலகம் சுருங்கி குளோபல் வில்லேஜ் ஆனதோ இல்லையோ... பச்சை குத்திக் கொள்ளல் என்ற பெயர் புழக்கமே இல்லாமல் ஒழிந்தது. அன்றைக்கு பச்சை குத்துதல் என்பது குறவன், குறத்திகளின் தொழில், வீட்டுக்கு வந்து பச்சை குத்தி விட்டு கூலியாக படி நெல்லும், கம்பும், கேழ்வரகும் வாங்கிச் செல்வார்கள், பழைய துணிகள் கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். ஆனால் இன்று அதையே டாட்டூ என்ற பெயரில் இயற்கை அல்லது செயற்கை வண்ணங்கள் கலந்து வரைந்து கொள்ள அழகு நிலையங்களில் குறைந்தபட்சம் சின்னதாக ஒரு டாட்டூ வரைந்து கொள்ளவே 5000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம். இப்படிச் சென்று கொண்டிருக்கிறது டாட்டூக்களின் கதை.

சரி அதை விடுங்கள்;

உலக அளவில் டாட்டூ வரைந்து கொள்வதில் இந்தியாவிற்குத்தான் முதலிடம். போலவே ஆசைப்பட்டு வரைந்த டாட்டூக்களை மனம் வலிக்க வலிக்க அழித்துக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் அதிகம், இந்தியா தான் அதிலும் முதலிடம் வகிக்கிறது என இண்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜன்ஸ் அஸோசியேஷன் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் டாட்டூ அழித்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜன்களை நாடியவர்களின் எண்ணிக்கை நாடு வாரியாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டாட்டூ நீக்கியவர்களின் புள்ளி விவரம்

 1. இந்தியா 22,860
 2. ஜப்பான் 20,159
 3. அமெரிக்கா 14,124
 4. இத்தாலி 11,356
 5. தைவான் 5,759
 6. மெக்சிகோ 4,739
 7. பிரேசில் 4,290
 8. துருக்கி 3,912
 9. எகிப்து 3,640
 10. கொலம்பியா 2,715

டாட்டூ நீக்குவதற்கான காரணம்...

மிக, மிக எளிதான ஒரு காரணம் மட்டுமல்ல வழமையான ஒரு காரணமும் கூடத்தான். சர்வதேச அளவில் டாட்டூக்களை நீக்குவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் ஒரே காரணம்... முன்னால் காதலன் அல்லது காதலி பெயர்களையோ அல்லது இனிஷியல்களையோ தான் பச்சை குத்திக் கொண்டிருப்பதால் காதல் தோல்வி அல்லது முறிவுக்குப் பின் அந்த டாட்டூக்களை தொடர்ந்து மெயிண்டெயின் செய்வதில் பல்வேறு அகச்சிக்கல்கள் இருப்பதால் ஒரேயடியாக அவற்றை அழித்து விடப் பார்க்கிறார்கள் என்பதே! 

]]>
tattoos culture, டாட்டூ கலாச்சாரம், இந்தியா, உலகம், india, world https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/0000_tattoos.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/dec/01/worldwide-indians-are-first--to-erase-their-tattoos-2818562.html
2776514 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்' பெண்களுக்கான தனித்துவமான ஸ்டோர்! DIN Wednesday, September 20, 2017 12:54 PM +0530  

அனுபவித்துணரும் தனித்துவமான ஸ்டோர்

பெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ரீமியம் அனுபவித்துணரும் ரீடெய்ல் சங்கிலிதொடர்

சென்னை, இந்தியா, செப்டம்பர் 16, 2017– இந்தியபெண்களின் ஷாப்பிங் அனுபவத்தை மறு நிர்ணயம் செய்யும் ஒரு முன்னோடித்துவ முயற்சியாக, புராஜக்ட் ஈவ் அதன் மூன்றாவது முதன்மை ஸ்டோரை சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிமால்-ன் 2வது தளத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், ப்ரீமியம் துறையில் ஒரு தனிச்சிறப்பான கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. 25-லிருந்து 40 வயதுக்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு சுதந்திரமான, நவீனமான, வலுவான கூர் நோக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருபெண் சிறப்பாகத் தோன்றுவதற்கு மட்டுமல்லசிறப்பாக உணர்வதற்கும் தேவைப்படுகிற அனைத்து விஷயங்களையும் வழங்குவதற்காக முற்றிலும் பெண்கள் தொடர்பான விஷயங்கள் குறித்த ஒருரீடெய்ல் ஸ்டோராக ‘புராஜக்ட் ஈவ்’ அமைந்திருக்கிறது. 

இதன் நேர்த்தியான சூழல், ஸ்டோரிலேயே அமைந்திருக்கும் ஒருதனிப்பட்ட ஸ்டைலிஸ்ஸான சலூன் - பவுன்ஸ், வசதியான ட்ரையல் அறைகள், சிறப்பான வரவேற்பு அமைவிடம், ஆடைகள் மற்றும் அலங்காரத்துறையில் சிறப்பான பொருட்களின் தொகுப்பு, ஆகிய அம்சங்கள் மூலமாக இந்த ஸ்டோர் பெண்களுக்காகப் பிரத்யேகமாக இதுவரை அனுபவித்திராத உன்னதமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் சொந்த லேபிளான - புராஜக்ட் ஈவ் என்பது உட்பட இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகளின் மிக விரிவான கலெக்ஷனை இந்த ஸ்டோர் கொண்டிருக்கிறது. 

விவேகமான முடிவுகளை மேற்கொள்ளும் அறிவார்ந்த பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர், சம்போர், லோரியல் பாரிஸ்,இசடோரா ஆகிய பிரபல நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை வழங்குகிறது. பிவில்கேரி, இஸே மியாகே, ஹ்யூகோபாஸ், க்யூச்சி, எலிசபெத் ஆர்டன் ஆகிய நிறுவனங்களின் நறுமணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல தயாரிப்புகளை இந்த ஸ்டோர் கொண்டிருக்கிறது. புராஜக்ட் ஈவ் என்பது பெண்களை மையப்படுத்தியதாக, பெண்களை முழுதாக உணர்ந்து கொண்டாடும் ஒரு அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரின் ஒவ்வொரு அம்சமும் பெண்களுக்காக உரத்தகுரலில் பேசுகிறது. அது சலூனாகவோ அல்லது ஆடைகள், உள்ளாடைகள், துணைப்பொருட்கள் அல்லது காலணிகளாகவோ, ஃபேஷன் அல்லது லைஃப்ஸ்டைல் ஆகியவற்றின் சிறப்பான தயாரிப்புகளின் அற்புதமான தொகுப்பை கொண்டிருப்பதன் மூலம் பெண்களைக் கொண்டாடுகிறது. 

பிரத்யேகத் தன்மைக்காக, இத்தொகுப்புகள் குறிப்பிட்ட அளவுகளை கொண்டதாகவும் சர்வதேச அனுபவமும், சூழலும் திகழும் அமைவிடமாக சிறப்பான ஸ்டோர் பணியாளர்கள் அல்லது2 ட்ரையல் அறைகள் கொண்டமிகச்சிறிய, ஆனால் அத்தியாவசிய அம்சம் கொண்டதாக இந்த ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களை சார்ஜிங் செய்வதற்கான வசதி மற்றும் அழகுசாதனப்பிரிவில் மிக விரைவாக பில்லிங் செய்து வெளியேறும் வசதி என்பவை இதன் சிறப்பம்சங்களாகும். விசாலமான ட்ரையல் அறைகள், பக்கவாட்டு மேஜைகள் அமர்வதற்கான இடம் மற்றும் பகல் மற்றும் மாலைநேர தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒளியமைப்புகள் ஆகியவை உட்பட சிறப்பான சிந்தனையின் அடிப்படையில் மிகசவுகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் புதிய பிரிமீயம் ரீடெய்ல் ஸ்டோர் வடிவத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் தீவிரமான திட்டங்களைக் கொண்டிருக்கிறது. நாடெங்கிலும் முதன்மையான 10 நகரங்களில் இந்த ஸ்டோர்களை அமைத்து நவீனயுகப் பெண்களைச் சென்றடைய இது திட்டமிட்டிருக்கிறது. இந்த ஸ்டோரில் Cafe Noir இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் பிரத்யேக நோக்கம்... அழகியல் சார்ந்த தயாரிப்பு பொருட்களை வழங்குவது என்பதையும் கடந்து, புராஜக்ட் ஈவ்-ன் செயல்நோக்கம் பெரிதாக இருக்கிறது. ‘My Evespiration’ என்ற இந்தபிராண்டின் விளம்பரபரப்புரை என்பது... ஒருவர் மற்றொருவரை ஊக்குவித்து உத்வேகமளிக்கிற பெண்களை அடையாளம் காண்கிற மற்றும் கொண்டாடுகிற ஒரு சமூக இயக்கமாகும். தனிப்பட்ட அழைப்பிதழ்களோடு சேர்த்து நகரமெங்கும் இந்த ஸ்டோருக்குப் பெண்களை வரவேற்பதற்காகச் சிறப்பு காம்ப்ளிமெண்ட் பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளன. 

ரிலையன்ஸ் ரீடெய்ல் குறித்து...

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-ன் ஒரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் (RIL), 2006ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதன் முதல் ரீடெய்ல் ஸ்டோரைத் தொடங்கியது. 

2017 ஜூன் 30 அன்று 13.8மில்லியன் சதுரஅடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டு 703 நகரங்களில் 3,634 ஸ்டோர்கள் என்ற மிகப்பெரிய வளர்ச்சியினை இது பெற்றிருக்கிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல்,இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமாக, பல்வேறு முக்கிய துறைகளில் தனது தலைமைத்துவ நிலையை வலுவாக நிறுவியிருக்கிறது. ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஃபுட்பிரிண்ட் ஆகியவை அந்தந்த வகையின் பிரிவுகளில் மிக அதிக எண்ணிக்கையில் ஷோரூம்களைக் கொண்டு சந்தையில் முதன்மை வகித்து வருகின்றன. 

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) குறித்து...

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)என்பது, 2017 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய ரூபாய் 330,180 கோடி ($50.9 பில்லியன்) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட விற்றுமுதலையும் மற்றும் ரூ.29,901 கோடி ($4.6பில்லியன்) நிகரலாபத்தையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார்துறை நிறுவனமாகும்.

உலகின் மகிப்பெரிய நிறுவனங்கள் கொண்ட ஃபார்ச்சூன் 500 தரவரிசைப் பட்டியலில் வருவாய் வகையில் தற்போது 215 வது இடத்தையும் மற்றும் இலாபவகையில் 126வது இடத்தையும் வகிக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம் தான் இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பெறும் முதல் தனியார் நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளடங்கிய ஃபினான்சியல் டைம்ஸ்-ன் 500 நிறுவனங்கள் தரவரிசைப்பட்டியலில் (215) RIL, 238வது இடத்தை வகிக்கிறது. ஃபோர்ப்ஸின் 2000 நிறுவனங்கள் அடங்கிய உலகத் தரவரிசைப் பட்டியலில் (2016) RIL 121 வது இடத்தை வகிக்கிறது. RIL -ன் செயல் நடவடிக்கைகளில் ஹைட்ரோகார்பன் (பெட்ரோலிய) ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் 4ஜி டிஜிட்டல் சேவைகள் முதலியன உள்ளடங்கும்.

அதிக தகவலுக்கு தொடர்புகொள்க (ஊடகத்தினர் மட்டும்): 
நம்ரதா ஷா 
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் லிமிடெட்
9004085188 / Namrata.shah@ril.com

 

]]>
Reliance retails ' Project Eve' outlet exclusive for women!, 'புராஜக்ட் ஈவ், சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்', எக்ஸ்ளூசிவ் ஃபார் வுமென், பெண்களுக்கான பிரத்யேக அவுட்லெட் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/20/w600X390/Project_eve_Store_Launch-1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/sep/20/reliance-retails--project-eve-outlet-exclusive-for-women-2776514.html
2769078 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் விதம் விதமாய், ரகம் ரகமாய் லேட்டஸ்ட் ஃபேன்ஸி காதணி சாய்ஸ்கள்... ஹரிணி Thursday, September 7, 2017 06:00 PM +0530  

ஒவ்வொரு முறை புதுப்புது உடைகள் வாங்கும் போது சரி, அதோடு நிறைவடைந்து விடுவதில்லை நமது ஷாப்பிங். உடை வாங்கினால் அதற்குப் பொருத்தமாக காதணிகளும், கழுத்தணிகளும் கூட வாங்கித்தானாக வேண்டும். சில சமயங்களில் உடைகள் மிக கிராண்டாக அமைந்து விட்டால் கழுத்தணிகள், கை வளையல்களைக் கூட தவிர்த்து விடலாம். ஆனால் என்றைக்கும் காதணிகளை மட்டும் நாம் தவிர்க்கவே மாட்டோம். இப்போது தான் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் கூட பழைய காலங்களைப் போல காதுகளில் ஒற்றைக் கம்மல் அணிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்களே! பிறகு பெண்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?!

அதெல்லாம் சரி தான், ஆனால் யாருக்கு எந்த மாதிரியான காதணிகள் பொருத்தமாக இருக்கும், எந்த விதமான உடைகளுக்கு என்ன விதமான காதணிகள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும் என்பதையெல்லாம் முடிவு செய்து செய்து கொண்டு தான் பிறகு காதணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இல்லா விட்டால் பொருத்தமற்ற காதணிகளை ஒருமுறைக்குப் பின் அணியப் பிடிக்காமல் யாருக்காவது தானமளிக்கவோ அல்லது  டிரெஸ்ஸிங் டேபிள் செல்ஃபுகளில் பயனற்று வீணாகப் பதுக்கி வைக்க வேண்டியதாகவோ ஆகி விடும் நிலமை.  இதோ... உங்களுக்குப் பொருத்தமான காதணிகளைத் தேர்ந்தெடுக்க பயனுள்ள சில டிப்ஸ்கள்...

ஃபிலிக்ரீ டைப் காதணிகள்...

 

இந்த வகைக் காதணிகளை நீண்ட கழுத்துடையவர்கள் அணியலாம். இவற்றை அணியும் போது வேறு கிராண்டான நகைகள் எதுவும் தேவைப்படாது. இந்தக் காதணியே ஹெவியாக இருப்பதால் திருமண விழாக்களில் கலந்து கொள்ள இவற்றை அணிந்து செல்லும் போது, கிராண்டான சல்வார் போன்ற உடைகளுக்கு இது மட்டும் அணிந்தாலும் கூடப் போதும். சல்வார்களுக்கு மட்டுமல்ல டெனிம் ஜீன்ஸ், சற்று ஆழமான கழுத்துப் பகுதி கொண்ட டாப்ஸ்கள் அணியும் போதும் கூட இந்தக் காதணிகளை அணிவது பொருத்தமாகவே இருக்கும்.

கிராஸ் டிஸைன் காதணிகள்...

பல தசாப்தங்களாக, கிராஸ் டிஸைன் காதணிகள் நமது கல்லூரி பயிலும் மாணவிகளின் சிறந்த சாய்ஸ்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கப் ஆஃப் லோப் டைப் காதணிகள்...

இப்போது கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் கூட இந்த வகை காதணிகளை கலாச்சார விழாக்கள் மற்றும் கெட் டுகெதர்கள் நடைபெறும் போது அணிந்து செல்ல விரும்புகின்றனர்.

ஹூப்ஸ் டைப் காதணிகள்...

இது பெரும்பாலும் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்குப் பிடித்தமான எளிய காதணி வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. லைட் வெயிட் மற்றும் ஸ்டைல் லுக்கிங் இதன் தனிச்சிறப்பு.

ஃபெதர் டைப் காதணிகள்...

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஃபேஷன் வாக், அல்லது கல்ச்சுரல் நிகழ்வுகள் நடைபெறும் போது அணிந்து கொள்ளத் தோதான காதணி வகைகளில் ஒன்று...

ஸ்டட் டைப் சிம்பிள் காதணிகள்...

முத்துக்கள் மட்டுமே பதித்த காதணிகள்...

சாண்ட்லியர் டைப் காதணிகள்...

ஜிமிக்கி வகைகள்...

சந்த்பாலிஸ் டைப் காதணிகள்...

 

 

]]>
fancy earring types, ஃபேன்ஸி காதணி வகைகள், lifestyle fashion, fashion https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/earring1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/sep/07/latest-fancy-earrings-2017-2769078.html
2769070 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ஃபேஷன் அப்டேட்ஸ்... டிரெண்டியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர் ஜூவல்லரிகள்! ஹரிணி Thursday, September 7, 2017 04:55 PM +0530  

ஹேர் பேண்டுகள் மற்றும் கிளிப்புகளில் எத்தனை வெரைட்டி இருந்தாலும், நம்மிடம் இருப்பவற்றுள் நமக்கு எப்போதுமே திருப்தியே வருவதில்லை. ஒவ்வொரு முறையும் திருமண விழாக்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், அலுவலக கெட் டுகெதர்கள், பிறந்தநாள் பார்ட்டிகள், இலக்கியச் சந்திப்புகள், சுற்றுலாக்கள் என எங்கே செல்வதாக இருந்தாலும்... நமது ஆண்களுக்கு என்ன பாக்கெட் சீப்பில் அப்படி ஒரு இழுப்பு, இப்படி ஒரு இழுப்பாக தலைமுடியை வாரிக் கொண்டால் போதும் அவர்கள் ரெடி. 

ஆனால் பெண்களுக்கு அப்படி தலைவாறுதல் என்பது அத்தனை எளிதாகவா முடிந்து விடுகிறது? என்ன தான் முடியை பாப் கட் செய்து கொண்ட போதும் சில பெண்களுக்குத் தலைமுடியை அழகாக்கிக் காட்ட ஹேர் கிளிப்புகள் மற்றும் மெட்டல் பேண்டுகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதிலும் கூட கைக்குச் சிக்கும் ஏதோ ஒன்றை அணிந்து கொண்டு அவசரக் கோலத்தில் விழாக்களுக்குக் கிளம்ப எந்தப் பெண்களுக்கும் மனம் வராது. தம்மை அழகாகக் காட்டிக் கொள்வது, பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்குமான உரிமையும் கூட. அதனால் அதில் எந்தக் குறையும் சொல்வதற்கில்லை. 

ஆனால் சில சமயங்களில், மாலையில் கலந்து கொள்ளப் போகும் விழாவில் அணிந்து கொள்வதற்காக நாள் முழுக்க ஷாப்பிங் மால்களில் தேடினாலும் கூட நாம் விரும்பிய வண்ணம், நமது மனதுக்குத் திருப்தியாக ஒரு ஹேர் கிளிப்பையோ அல்லது ஹேர் பின்னையோ அல்லது சென்ட்டர் கிளிப்பையோ கூட நம்மால் உடனே வாங்கி விட முடியாது. முதலில் மனத்திருப்தி அமையாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ட்ரெண்டியான தலை அலங்கார ஜோடனைப் பொருட்கள் கிடைக்கும் இடங்களைப் பற்றிய நினைவூட்டலும் நமக்கு அப்போது கிட்டாமல் போய்விடும். இதனால் நேர விரயம் ஆவதோடு, மனம் விரும்பிய பொருள் கிட்டாத ஏமாற்ற உணர்வும் நமக்கு ஏற்பட்டு விடும். அதனால் விழாக்களுக்குச் செல்வதாக இருந்தால், முக்கியமாக பெண்களுக்கு, தலை அலங்கார ஜோடனைப் பொருட்களின் மீது ஆர்வமிருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே தமக்குரிய ஃபேஷன் அலங்காரப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

இதோ இங்கே சில தலை அலங்கார ஃபேஷன் ஜூவல்லரி பரிந்துரைகளை உங்களுக்காகத் தருகிறோம். இங்கே புகைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஃபேஷன் கிளிப்புகள் அனைத்தும் சென்னையின் அனைத்து ஷாப்பிங் மால்களில் இருக்கும் ஷோ ரூம்கள் மற்றும் பெரிய ஃபேஷன் ஜூவல்லரி கடைகளில் கிடைக்கக் கூடியவை தான்.

இவற்றில் தங்களுக்குப் பொருத்தமானவை எவை எனத் தேர்ந்தெடுத்து, அதை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்துவது மட்டுமே பெண்களுக்கான சாமர்த்தியம்!

சிக் ஹேர் ஸ்டட்ஸ்...

குட்டையான கூந்தல் இருப்பவர்கள் ‘சிக் ஹேர் ஸ்டட்ஸ்’ என்று சொல்லப்படக் கூடிய இந்த வகை ஹேர் கிளிப்புகளைப் பயன்படுத்தலாம்.

ஃபுளோரல் ஹெட் பேன்ட்ஸ்...

வின்டேஜ் ஹேர்பின்ஸ்...

ஸ்போர்ட்டி பேன்ட்ஸ்...

கிரெளன் பேன்ட்ஸ்...

ஹெட் பேன்ட்ஸ் வித் பீட்ஸ்...

பிரீசியஸ் ஹேர் ஜூவல்லரி...

சில்வர் & கோல்டு மெட்டல் பேன்ட்ஸ்...

போவ்ஸ்& ரிப்பன்ஸ்...

முகத்தை மறைக்கும் நெட்டுடன் கூடிய ஹேர் கிளிப்புகள்...

இம்மாதிரியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர்பின்களை நாம் அணியும் உடைகளுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத்து நாம் கலந்து கொள்ளவிருக்கும் விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் ஏற்றவாறு பொருத்தமாக அணிந்து செல்லலாம்.

]]>
ஹேர் கிளிப்ஸ், ஹேர் ஜூவல்லரிஸ், ஃபேஷன் அப்டேட்ஸ், லைஃப்ஸ்டைல் ஃபேஷன், lifestyle fashion, fashion updates, trendy hair clips& pins https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/trendy_hair_clips.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/sep/07/trendy-hair-clips-and-hair-accessories-2769070.html
2760471 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் அடேங்கப்பா கண்டுபிடிப்பு! பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று! ஹரிணி Wednesday, August 23, 2017 02:10 PM +0530  

நெயில் ஆர்ட் தெரியும்... ஆனால் இது அதை விட அட்வான்ஸ் முயற்சி போல!; இதில் பின்பற்றப்பட்டிருக்கும் கலையுணர்வு நெயில் ஆர்ட்டிலிருந்து நெயில் ஜூவல்லரிக்கு முன்னேறியிருக்கிறது பெண்களின் ரசனை. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் எல்லாப் பெண்களுக்குமே இதைப் போன்ற அழகான நெயில் நகைகளை வாங்கி அணிந்து கொள்ள ஆர்வம் வரத்தானே செய்யும். பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு. ஆனால் இது இன்றைக்கு புதிதாக கண்டுபிடிப்பென்று கூறி விட முடியாது.

அந்நாளில் எகிப்து மற்றும் கிரேக்கப் பெண்களுக்கு உலோகத்தில் பட்டை தீட்டப்பட்ட நகங்களை அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. அதை அவர்கள் நெயில் நகை என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் அப்போதிருந்தே நகங்களைச் சோடிக்கும் வழக்கம் பெண்களிடையே இருந்திருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் பல உள்ளன. அது மட்டுமல்ல, சத்ரபதி சிவாஜி தன்னை உறவாடிக் கொல்ல உத்தேசித்த எதிரியான அப்சல்கானைக் கூட தனது நகங்களில் மாட்டிக் கொண்ட புலி நகங்களால் தான் கொலை செய்தார் என்பது வரலாறு. ஆகவே ஆபரணமாக அல்லாது உலோகங்களால் போலி நகங்களைச் செய்து மாட்டிக் கொள்வது தொன்று தொட்டே இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பில் இருந்த பிற தேசங்களிலும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆகவே ஆண்கள் யாரும் இதென்னடா நமது பர்சுக்கு வந்த புதுச் சோதனை என பீதியாக வேண்டாம்.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால் மறைந்து போயிருந்த பழக்கமொன்று இப்போது புனர்ஜென்மமெடுத்திருக்கிறது அவ்வளவு தான்.

பெண்கள் அணிந்து கொள்ள கிடைத்த புதிய நகையென்று இதைச் சொன்னாலும் கூட இதை அணிந்து கொள்வதில் இருக்கும் அசெளகரியத்தையும் பெண்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்களில் வைரக் கற்களைப் பதித்து இவ்வகை நெயில் ஆபரணங்களைச் செய்தால் பார்க்க அழகாக இருக்கும். அணிந்து கொள்ளும் போது கம்பீர உணர்வையும் தரும்.
 

]]>
Nail Jewelery,Nail Art,Fashion Design,நெயில் ஜூவல்லரி,நெயில் ஆர்ட், ஃபேஷன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/23/w600X390/gold_fake_nails.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/aug/23/nail-jewellery-among-women-2760471.html
2759923 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் லாக்மே ஃபேஷன் வீக் 2017 பாலிவுட் தேவதைகளின் ராம்ப் வாக்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, August 22, 2017 04:22 PM +0530  

சென்சேஷனலான திரைப்படங்கள் மூலமாக மட்டுமல்ல, வர்ண ஜாலத்தில் மெய் மறக்கச் செய்யும் அனுபவங்களுடன் தனது ஃபேஷன் ஷோக்களுக்காகவும் புகழ்பெற்றது பாலிவுட். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக கம்பீரமான சிவப்பு, அமர்த்தலான கருப்பு, அசர வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஷேட்களுடனான ஆடைகள், மிருதுவான ஐவரி, குளுமை தரும் ஐவரி என அத்தனை நிறங்களிலும் பறந்து விரிந்த கவுன்களை ஆடையென அணிந்து வந்து அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருக்கிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டும். கீழே லாக்மே ஃபேஷன் வீக்கில் பாலிவுட் தேவைதைகள் ராம்ப் வாக்கிய... அதாவது ஒய்யார நடையிட்ட புகைப்படங்களைக் கண்டால், உங்களுக்கே புரியக் கூடும்.

நவீன ரகத்தில் வடிவமைக்கப்பட்ட டிஸைனர் ஆடைகளுக்காக மட்டுமல்ல அவற்றில் பயன்படுத்தப்பட்ட கிரியேட்டிவ்வான வண்ணங்களின் சங்கமமும் கூடத்தான் லாக்மே ஃபேஷன் 2017... என்பதை உணர்த்தும் வகையில் சுமார் 14 மாடலிங் அழகிகள் மேடையில் அவரவர் பிரத்யேக டிஸைனர்கள் வடிவமைத்த ஆடைகளுடன் படு ஸ்டைலாக ராம்ப் வாக் செய்தனர். மாடலிங் அழகிகளோடு, பாலிவுட் ஸ்டார்களும் கண்களைக் கொள்ளை கொண்டது அழகு!

1. வண்ணங்களின் மீதான காதல்...

2. வாணி கபூர்:

லாக்மே ஃபேஷன் வீக் 2017 க்காக படு ஃப்ரெஷ் ஆன இளஞ்சிவப்பு நிற வெட்டிங் கவுனில் வலம் வரும் வாணி கபூர்.

3. நர்கிஸ் ஃபஹ்ரி...

டிஸைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கைவண்ணத்தில் உருவான, மென்மையான மஞ்சளில், தங்க நிறச் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான வெட்டிங் கவுனில் வலம் வந்தார் நடிகை நர்கிஸ் ஃபஹ்ரி.

4.திஷா பதானி...

டிஸைனர் ரீத்து குமாரின் கைவண்ணத்தில் உருவான வெள்ளையில் இளஞ்சிவப்பு பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட கேஷுவல் கவுனில் திஷா பதானி.

5. சித்ராங்கதா சிங்... 

நேஹா அகர்வாலின் பிரத்யேக டிஸைனான பழங்குடித் தேவதைத் தனமான ஒரு அடர் நீல வண்ண நீண்ட கவுனில் ஓவியம் போல ஒய்யாரமாக வலம் வந்தார் நடிகை சித்ராங்கதா சிங்...

6. ஸ்ரீதேவி & குஷி கபூர்...

தங்களது குடும்ப நண்பரான மனிஷ் மல்ஹோத்ராவின் ஆர்ப்பாட்டமில்லாத ஃபுளோரல் கவுனில் குஷி கபூரும், ஐவரி நிற பிரின்ஸஸ் டாப் உடையில் ஸ்ரீதேவியும் மனிஷுடன் கை கோர்த்து ராம்ப் வாக் செய்தது கம்பீர அழகுடனிருந்தது.

7. ஷ்ரத்தா கபூர்...

ராகுல் மிஸ்ரா வடிவமைத்த செர்ரி பிளாஸம் நிறத்து பார்ட்டி வியர் நீளக் கவுனில் ஒரு தேவதையாகவே ஜொலித்தார் நடிகை ஷ்ரத்தா கபூர்...

8. மலாய்க்கா அரோரா...

 

 

 

 

 

ரித்தி மெஹராவின் முழு அடர் சிவப்பு நிற டிஸைனர் உடையில் மலாய்க்கா அரோரா ராம்ப் வாக்கிய ஒவ்வொரு நொடியும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 

9. க்ரிதி செனான்...

டிஸைனர் அர்பிதா மேதாவின் கருப்பும், ரோஸும் கலந்த லெஹங்கா உடையில் மாடல் க்ரிதி செனான் நிச்சயம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருப்பார் என நம்பலாம்.

10. கல்கி கோச்சலின்...

 

டிசைனர் நிகிதா மாசல்கரின் ஐவரி நிற பார்ட்டி அவுட்ஃபிட்டில் படு கிளாமர் லுக்கில் அசத்தினார் நடிகை கல்கி கோச்சலின்.

11. இலியானா டி குரூஸ்...

டிஸைனர் நான்ஸி லுகருவாலாவின் அடர் கறுப்பு நிற வெட்டிங் கவுனில் இழையோடிய தங்கம் மற்றும் வெள்ளி நிறப் பூச்சரிகை வேலைப்பாடு கொண்ட ஆடையில் பார்வையாளர்களை மெர்சலாக்கினார் நடிகை இலியானா டி குரூஸ்.

12. தியா மிர்ஸா...

டிஸைனர் குஸும் மற்றும் கரிஷ்மா லுகருவாலாவின் வடிவமைப்பில் தயாரான ஃபேபியான லேபிளுடன் கூடிய கிரீமி நிற கவுனில் என்றும் 16 ஆக ஒட்டுமொத்த பார்வையாளர்களின் விருப்பத்தையும் அள்ளிக் கொண்டார் நடிகை தியா மிர்ஸா.

13. பூமி பெமினேஹர்...

ருசேரு லேபிளின் கீழ் வடிவமைக்கப்பட்ட அடர் சிவப்பு நிற உடையுடன் கம்பீரமாக வலம் வந்த நடிகை பூமி பெட்னேஹர் தான் ஷோ டாப்பராம்.

14. அதிதி ராவ் கிதாரி...

ஜெயந்தி ரெட்டியின் ராயல் கிரியேஷன் சார்பாக வடிவமைக்கப் பட்ட கரும்பட்டும், வெள்ளிச்சரிகை வேலைப்பாடுகளும் ஊடாடிய நீண்ட கவுண் அதிதியின் அழகைப் பன்மடங்காக்கிக் காட்டியது.

15. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்...

கடைசியாக ராம்ப் வாக் செய்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டிஸைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் கருப்பு நிற ஃஃபுளோரல் டிஸைன் கவுனில் ராம்ப் வாக் செய்த விதம் பலரையும் ஈர்ப்பதாக இருந்தது.

]]>
லாக்மே ஃபேஷன் வீக் 2017, பாலிவுட் தேவதைகள், ராம்ப் வாக், lakme fashion week 2017, ballywood divas https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/22/w600X390/0001sradha_kaboor.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/aug/22/lakme-fashion-week-2017--bollywood-divas-ramp-walk-with-their-favorite-designer-2759923.html
2738978 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் கோலாப்புரி செருப்புகளுக்கும், நாட்டுப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? கார்த்திகா வாசுதேவன் Monday, July 17, 2017 02:15 PM +0530  

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற TNPL போட்டிகளின் துவக்க விழாவில் கடவுள் வாழ்த்துப் பாட என் மகள் படிக்கும் பள்ளியின் கர்நாடக இசைப்பிரிவு மாணவிகளுக்கு அழைப்பு வந்தது. ஆஹா... பிரபல திரையிசைப் பாடகர் கார்த்திக்குடன் சேர்ந்து பாடக் கிடைத்த வாய்ப்பு என்று மாணவிகளுக்கெல்லாம் ஒரே குதூகலமாகி விட்டது. அப்புறம் இந்த நிகழ்ச்சி ஸ்டார் டி.வியில் ஒளிபரப்பாகும் என்று வேறு ஒரே ஆனந்தம்... பரமானந்தம் எனும் நிலையில் இருந்தார்கள் மாணவிகளனைவரும். நடுவில் ஒரே ஒரு சின்ன கண்டீஷன்... கடவுள் வாழ்த்துப் பாடும் மாணவிகள் அனைவரும் நமது தமிழ் பாரம்பரியப் படி பட்டுப்பாவடை, சட்டை, வங்கி, ஒட்டியாணம், வளையல்கள், நெத்திச்சுட்டி, கழுத்துக்கு நெக்லஸ் எல்லாம் அணிந்து வர வேண்டும். இது ஒரு சாதாரணமான கண்டீஷன் தான் என்பதால் பெற்றோர்களான எங்களால் உடனடியாக இதை ஒப்புக் கொள்ள முடிந்தது. சென்னையில் தடுக்கி விழுந்தால் ஃபேன்ஸி ஸ்டோர்கள், கோல்டு கவரிங் செட் கடைகள், வெரைட்டி சென்ட்டர்கள் என அனேகம் உண்டே! அதனால் ஒப்புக் கொண்டோம். ஆனால் மியூசிக் டீச்சர்களுக்கு... விழாக்குழுவினரிடமிருந்து மற்றுமொரு கட்டளை வந்தது, பெற்றோர்கள் அனைவரும் அவரவர் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பவிருந்த நிலையில் மேலுமொரு உப கண்டீஷன்! அது என்னவென்றால், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் அத்தனை மாணவிகளும் கோலாப்புரி செருப்புகள் மட்டுமே தான் அணிந்து வர வேண்டும். என்பதே அந்த கட்டளை! 

எனக்கு அது வரை இந்தி நடிகை பத்மினி கோலாப்புரியை மட்டும் தான் தெரிந்திருந்தது. கோலாப்புரி என்ற பெயரில் ஒரு பிரசித்தி பெற்ற செருப்பு பிராண்டு ஒன்று இருப்பதை அந்த நிமிடம் வரை அறிந்திராத அஞ்ஞான அம்மாவைப் பெற்றதில் என் மகளுக்கு ஒருவேளை மனக்கஷ்டங்கள் இருந்திருக்கலாம்... ஆனால் அவள் அப்படி எதுவும் சொல்லாமல் களைத்துப் போய் தூங்கி விட்டதால், எப்படியாவது அந்தச் செருப்பை குழந்தைக்கு வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்றொரு மன உறுதி பிறந்தது. ஒரு வேளை நம்ம ஊர் நதியா கம்மல், நதியா கொண்டை, குஷ்பூ இட்லி போல இதேதோ அந்த நடிகையின் பெயரால் அப்படி ஒரு செருப்பு வடநாட்டில் ஃபேமஸ் போல என்று நினைத்துக் கொண்டு, அந்தச் செருப்புகள் எங்கே கிடைக்கும்? என மியூசிக் டீச்சர்களிடம் விசாரித்தோம். அப்போதே நேரம் இரவு 9 மணியை நெருங்கி இருந்தது. அவர்களோ... டிசைனர் ஃபுட்வேர் கடைகளில் தேடிப் பாருங்கள் மேடம், இல்லாவிட்டால் டி.நகரில் பெரிய செருப்புக் கடைகளில் தேடிப்பாருங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றார்கள். என்னது டி.நகர் செருப்புக் கடைகளிலா... இந்நேரம் அதெல்லாம் சாத்தியமில்லை எனச் சில பெற்றோர்கள் உஷ்ணமானாலும், ‘வேறு வழியில்லை மேடம்... பார்த்தீர்கள் இல்லையா? அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக எவ்வளவு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள் என்று!... தயவு செய்து அந்தச் செருப்புகளை ஏதாவது கடைகளில் தேடி வாங்கி மாணவிகளைப் போட்டுக் கொண்டு வரச்சொல்லுங்கள். நாளை மாலை வரை உங்களுக்கு நேரமிருக்கிறதே!’ என்று கூறி விட்டுச் சென்று விட்டார்கள்.

எங்களில் சிலர், சுமார் நான்கைந்து மாணவிகளின் பெற்றோர் சேர்ந்து, நேரு ஸ்டேடியத்திலிருந்து கிளம்பியது முதல் வீடு திரும்பும் வழி நெடுக கோலாப்புரி செருப்புகள் எந்தக் கடையில் கிடைக்கும் எனத் தேடிக் கொண்டே வந்தோம்... பல கடைகளிலும் இல்லை என்றோ அல்லது இப்போது வேண்டுமானால் ஆர்டர் கொடுங்கள் அடுத்த வாரம் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம் என்றோ தான் பதில் வந்து கொண்டிருந்தது. சரி இனி கோலாப்புரி செருப்புகள் கிடைக்காது, நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த அடுத்த நொடியில் அமைந்தகரையில் ஒரு செருப்புக் கடையில் அந்தச் செருப்பு இருப்பதாக மியூசிக் டீச்சர் வாட்ஸப்பில் புகைப்பட ஆதாரம் அனுப்பி இருந்தார். உடனே அங்கே சென்றோம்.

ஒரு வழியாக முகப்பில் சிவப்புக் குஞ்சம் வைத்த அந்தச் செருப்புகளை பார்த்ததும் பல கடைகள் இதற்காக ஏறி இறங்கி அலுத்த பின்... இலக்கை அடைந்து விட்ட திருப்தியில் எனக்கு பரமாத்வையே நேரில் கண்டு விட்டதைப் போல அத்தனை ஆசுவாசமாக இருந்தது. அதற்கேற்றாற் போல செருப்பும் முதல் பார்வையிலேயே மனதுக்கு மிக நெருக்கமான உணர்வை அளிப்பதாக இருந்தது. ஆனால் அங்கிருந்த கோலாப்புரிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில்; இன்னும் வேறு சில கடைகளிலும் வேண்டுமானால் தேடிப் பார்த்து விடலாமா? என்ற யோசனையில் இருக்கையில், எங்கே நாங்கள் செருப்பௌ வாங்காமல் போய் விடப்போகிறோமோ என்னவோ என்ற அவசரத்தில் கடைக்காரர் சொன்னார்... ‘மேடம் இது பியூர் லெதர் செருப்பு மேடம்... மேட் இன் இண்டியா, நாட்டுப்பற்று இருக்கிற எல்லாரும் இந்தச் செருப்பைத் தான் வாங்கிப் போட்டுக்குவாங்க... குட் லுக்கிங் ஃபுட்வியர், நீங்களும் வாங்கி யூஸ் பண்ணி உங்க நாட்டுப்பற்றை நிரூபிங்க மேடம் என்றாரே பார்க்கலாம். அம்மாக்களான எங்களில் சிலர் அப்படியே வாயடைத்துப் போனோம். அப்போது நேரம் இரவு 10 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மேற்கொண்டு அவரிடம் இந்தச் செருப்பு எப்படிங்க நாட்டுப்பற்றை நிரூபிக்கும்? என்றெல்லாம் அசட்டுப் பிசட்டென்று எதுவும் கேட்டு வைத்து நேரத்தை வீணாக்க வகையின்றி அப்படியே கப் சிப்பென்று வாயை மூடிக் கொண்டு செருப்பை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

மற்றவர்களுக்கு எப்படியோ? எனக்கு வீடு திரும்பிய பின்னும் அந்தக் கடைக்காரர் சொன்ன விசயம் மூளையிலிருந்து கழன்று மறைவேனா? என்று உறுத்திக் கொண்டே இருந்தது. கோலாப்புரி செருப்பு வாங்கிப் போட்டுக் கொண்டால் அது எப்படி நாட்டுப்பற்றாகும்? என்று உடனே தெரிந்து கொண்டே ஆக வேண்டியதாயிருந்தது எனக்கு. பிறகென்ன இணையத்தில் தேட வேண்டியது தானே பாக்கி! தேடினேன். கிடைத்த சங்கதிகள் ஒருபாடு கொஞ்சம் பயனுள்ளதாகவே இருந்தன.

கோலாப்புரி ஹேண்ட்கிராஃப்டேட் செருப்புகள்...

கோலாப்புரி அல்லது கோல்ஹாப்புரி செருப்புகள் என்பவை இயந்திரங்களால் அல்ல முழுக்க, முழுக்க மனிதக் கைகளினால் தயாரிக்கப்படும் நேச்சுரல் ஃபுட்வியர் வகையைச் சேர்ந்தவை. அதாவது இது ஒரு ஹேண்ட்கிராஃப்ட் வகைச் செருப்பு. மேலும் இதில் பயன்படுத்தும் வண்ணங்களை எடுத்துக் கொண்டால் அவையும் இயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் சாற்றிலிருந்து பெறப்படக் கூடியவையே தவிர செயற்கை ரசாயன வண்ணங்கள் இந்த செருப்பு தயாரிப்பில் பயன்படுத்தப் படுவதில்லை. மஹாராஷ்டிரத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான கோல்ஹாப்பூர் அல்லது கோலாப்புரியில் இருந்து தயாராகி வரும் இந்தச் செருப்புகள் டி ஸ்ட்ராப் எனப்படும் அடிப்படை வடிவத்திலேயே எப்போதும் வடிவமைப்படுவது வழக்கம். விரல்களும், நகங்களும் வெளித்தெரியும் வண்ணம் பாதங்களை வெளிக்காட்டிக் கொண்டு நடக்க இந்த கோலாப்புரி செருப்புகள் உதவும். மஹாராஷ்டிரர்கள் இவற்றைப் பெரும்பாலும் பண்டிகைக்காலத்துக்கான செருப்புகளாகவே பத்திரமாகக் கையாண்டனர். ஏனெனில் இவை பியூர் லெதர் வகை செருப்புகள் என்பதால் மழைக்காலத்தில் இவற்றை அணிவது உசிதமல்ல. அப்படி அணிந்தால் செருப்பின் ஆயுள் குறைந்து சீக்கிரமே செருப்பு டேமேஜ் ஆகக் கூடும்.

கோலாப்புரி செருப்பின் வரலாறு...

வரலாற்று ஆவணங்களின் படி கோலாப்புரி செருப்புகள், கோல்ஹாப்புரி அல்லது கோலாப்புரி என்ற பெயரைப் பெற்றது 13 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்திலிருந்து தான்.. அதற்கு முன்பு இந்த வகைச் செருப்புகளுக்கு கபஷி, பாய்தான், கச்கடி, பக்கல்னலி, புகாரி என்று அவை தயாராகும் ஊர்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களைப் பூர்வீகமாகக் கொண்டு வேறு வேறு பெயர்கள் இருந்தன. 

ஒரு செருப்பு தயாரிக்க ஆகும் காலம்...

ஒரு ஜோடி கோலாப்புரி செருப்புகள் தயாரிக்க சுமார் 6 வார காலம் தேவைப்படும். ஒரிஜினல் கோலாப்புரி செருப்புகள் என்றால் அவை எருமைத்தோலைப் பதப்படுத்தி செய்யப்படக் கூடியவையாகவே இருப்பதால் ஒரு ஜோடி செருப்புகளின் எடை சுமார் 2 கிலோவாக இருக்கும். ஏனெனில் இந்தச் செருப்புகள் மகாராஷ்டிரத்தின் மலைகளும், வறண்ட சமவெளிப்பகுதிகளுமான நில அமைப்பிற்கும், மாறி மாறி வந்து வாட்டும் கடும் வெயிலும், கடும் குளிருமான தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல பிற செருப்புகளைக் காட்டிலும் தடிமனான வகையில் வடிவமைக்கப் பட்டவை. 

கோலாப்புரி செருப்புகளின் இன்றைய வடிவம் மற்றும் ஆயுள்...

இன்று நாம் தென்னகத்தில் காணும் கோலாப்புரி பிராண்ட் செருப்புகளில் பழைய பாரம்பரிய வடிவமைப்பைப் பெரும்பாலும் காண இயலாது. ஏனெனில் பழைய ஒரிஜினல் கோலாப்புரி அதிக எடை கொண்டது. தற்போதைய இளம் தலைமுறை நுகர்வோர் அத்தனை எடை மிக்க செருப்புகளை அணிந்து கொள்ள விரும்புவதில்லை. எனவே இன்றைய நவீன ஃபுட்வியர் வடிவமைப்பாளர்கள், மராட்டியர்களின்  பழம்பெருமை மிக்க கோலாப்புரியின் எடையை எத்தனைக்கெத்தனை குறைக்க முடியுமோ அத்தனைக்கத்தனை குறைத்து, சற்று வேகமாகக் காற்றடித்தாலே நழுவிக் கொண்டு பறக்கும் வகையிலான அளவில் மலிவு விலையில் லைட் வெயிட், ஸ்லீக் மாடலில் கோலாப்புரியை வடிவமைத்து செருப்புகளுக்கான சந்தையில் உலவ விட்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரிஜினல் கோலாப்புரி வேண்டுமெனில் நாம் மகாராஷ்டிரத்திலிருந்து அதன் ஒரிஜினல் கோலாப்புரி கலைஞர்களிடமிருந்து தான் ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்ள வேண்டும் போல! அப்படியாகி விட்டது நிலமை. அதற்கேற்றாற் போல ஒரிஜினல் ஹேண்ட்கிராப்ட் ஆன கோலாப்புரி செருப்பு தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து இப்போது தேடிக்கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் அந்தக் கலை ஷீணித்துக் கொண்டிருக்கிறது.

கோலாப்புரியின் மைனஸ்...

கோலாப்புரி செருப்புகள் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் ஒருமுறை மழையில் நனைந்தாலும் போதும்... அப்புறம் அந்த செருப்புகளின் கதி அதோ கதி தான். இந்த குறைப்பாடே கூட இந்த வகைச் செருப்புகள் தற்காலத்தில் அறுகி விட்டதற்கான காரணமாகவுமிருக்கலாம். ஆனால் 70 களில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஹிப்பி கலாச்சார அலை உச்சத்திலிருந்த போது இந்த கோலாப்புரி செருப்புகள் அணிந்து கொள்வது அமெரிக்காவில் மிகப்பெரிய டிரெண்ட் ஆக இருந்து வந்தது. தற்போது அந்த டிரெண்ட் தேய்ந்து காணாமலே போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்று ஃபேஷன் அணிவகுப்புகளில் வரும் மாடல்கள் மட்டுமே ‘டோ ரிங் செப்பல்’ என்ற பெயரில் இந்த வகைச் செருப்புகளை ராம்ப் ஷோக்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

கோலாப்புரி செருப்புகளுக்கான இன்றைய வியாபார வாய்ப்புகள்...

இன்று இந்தியாவில் மாறி விட்ட அரசியல் சூழலில் மாட்டுத் தோலுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கோலாப்புரி செருப்புகளின் தயாரிப்பு முற்றிலுமாகக் குறைந்து விட்டது. தொழில் நசிந்ததால் இந்த செருப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பங்கள் அவற்றைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வரும் சூழல் நிலவுவதால் இப்போதிருக்கும் தலைமுறையினர் தான் ஒரிஜினல் கோலாப்புரி செருப்பு தயாரிப்பாளர்களின் இறுதிக் கலைஞர்களாக இருப்பார்களாயிருக்கும். மாட்டுத்தோலுக்கான பஞ்சம் மற்றும் செருப்புத் தயாரிக்க தேவைப்படும் கால எல்லை இவையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு காணும் போது கோலாப்புரி செருப்புகளில் நிகழ்ந்த கலாச்சார மாற்றத்தை, வடிவமைப்பில் மாறிப்போன பழைய பாரம்பரியத்தை இனி மீட்டெடுக்க முடியாமல் போகும் நிலையும் வரலாம்.

மேட் இன் இந்தியா என்பதால் நாட்டுப்பற்று நிரூபணமாகிறதா?

எல்லாம் சரி தான் ஆனால் கடைசி வரை கோலாப்புரி செருப்பை வாங்கினால் நாட்டுப்பற்றை எப்படி நிரூபித்திருக்க முடியும் என்று மட்டும் எனக்குப் புரியவே இல்லை. இந்த வட இந்திய செருப்பு வியாபாரிகள் என்னவெல்லாம் சொல்லி மூளைச்சலவை செய்து தங்களது பொருட்களை மக்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த போது ஒரே வியப்பாகி விட்டது. அப்புறமும் அவர்களது விற்பனை உத்தியை ஒரேயடியாகப் புறம்தள்ளவும் முடியாமல்... ஒரு வேளை  ‘மேட் இன் இந்தியா’ என்பதால் செருப்புக்கடைக்காரர் அப்படிச் சொன்னாரோ? இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் திறன்களில் இதுவும் ஒன்று என்பதால் அப்படிச் சொன்னாரோ? என யோசனைகள் நீண்டன. எது எப்படியோ இன்றைக்கு மார்கெட்டில் கிடைக்கக் கூடிய கோலாப்புரி செருப்புகளை வாங்கிப் பயன்படுத்த நினைப்போர் காலடியில் சரியாகப் பிடிமானம் கிடைக்கிறதா? என்று சோதித்துப் பார்த்து விட்டு பின்னர் அணிந்து கொண்டு அவரவர் தெருக்களில் ராம்ப் வாக்குங்கள் ஏனெனில் நாங்கள் வாங்கிய செருப்பு சாதாரண மண் தரையில் கூட பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் இருந்தது. அப்புறம் ஒருமுறை மழையில் நனைந்து விட்ட இந்த வகை செருப்புகள் என்றால் நாய்களுக்குக் கொள்ளைப் ப்ரியம். எனவே நாட்டுப்பற்றை நிரூபிக்க நினைப்பவர்கள் அதையும் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

]]>
kolhapuri chappals, kolapuri chappals, patroitism, நாட்டுப்பற்று, கோலாப்புரி செருப்புகள், டிசைனர் வியர் செருப்புகள், கைத்தொழில், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/17/w600X390/kolapuri_2.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/jul/17/is-there-any-relationship-between-kolhapuri-chappals-and-patriotism-2738978.html
2716766 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ‘ரிசார்ட் வியர்’ டிசைனர் நிதி முனிமின் புது அவதாரம்! ஹரிணி Thursday, June 8, 2017 02:25 PM +0530  

தீபிகா படுகோன், சன்னி லியோன், நர்கீஸ் பஃஹ்ரி உள்ளிட்ட பிரபலங்களைக் கவர்ந்த ரிசார்ட் வியர் டிசைனர் நிதி முனிம், லேட்டஸ்டாக காலணி வடிவமைப்பில் இறங்க உள்ளார். பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான கிராக்ஸுடன் இணைந்து நிதி இனி காலணிகளையும் வடிவமைக்கவிருக்கிறார். முன்னதாக அவர் கிராக்ஸ் நிறுவனத்தின் டிஜிடல் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப் பட்டுள்ளார். அதோடு கிராக்ஸுடன் இணைந்து நேற்று, புதன் அன்று, 2018 ஆம் ஆண்டுக்கான ஸ்பிரிங் சம்மர் கலெக்சன்ஸ் எனும் நிகழ்வில், நடிகையும், மாடலுமான கெளகர் கான் ஷோ டாப்பராக வலம் வர, காலணி வடிவமைப்பில் தனது முதல் ராம்ப் வாக் அறிமுகத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.

காலணி வடிவமைப்பாளர் எனும் தனது இந்த புதிய அவதாரத்தைப் பற்றிப் பேசுகையில் முனிம்; கிராக்ஸுடன் இணைந்த இந்த புதிய அத்யாயம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், காலணி வடிவமைப்பில் இனி அழகான, படு ஸ்டைலான, அணிய விருப்பமுள்ள பல புதுமைகளை தாங்கள் செயல்படுத்தி வருவதாகவும்... இது ஒரு எதிர்பாராத கூட்டணி என்றாலும், காலணி வடிவமைப்பில் மிக அருமையான விளைவுகளைத் தரப்போகும் கூட்டணி இதுவாக இருக்கும் எனத் தான் உணர்வதாகவும் கூறினார்.

புதன் அன்று நடத்தப்பட்ட ராம்ப் வாக்கில் தாங்கள் முன்னதாக அறிமுகப்படுத்திய DIY கிராக்ஸ் கலெக்ஸன்களுடன் காதலை சித்தரிக்கும் வகையிலான காலணிகளை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கவிருப்பதால் எங்களது வடிவமைப்புகளை அணிபவர்களுக்கு அது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது டிசைனிங் அனுபவங்களில் எப்போதும் புதுமையையும், புத்துணர்ச்சியையும் விரும்பும் நிதி முனிம் போன்ற டிசைனருடன் இணைந்து காலணி வடிவமைப்பில் இறங்கியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கிராக்ஸின் இந்திய செயல் இயக்குனர் தீபக் சாப்ரா தெரிவித்துள்ளார்.

]]>
ஃபேஷன், லைஃப்ஸ்டைல், காலணி வடிவமைப்பு, கிராக்ஸ், நிதி முனிம், footwear debut, nidhi munim, resort wear designer, crocs https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/nidhi_munim.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/jun/08/nidhi-munim-debuts-in-footwear-designing-2716766.html
2696735 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பாகுபலிக்கும் அம்ராபலிக்குமான சுவாரஸ்யமான தொடர்பு... கார்த்திகா வாசுதேவன். Friday, May 5, 2017 03:21 PM +0530  

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்தியாவெங்கிலும் பெருநகர மக்களிடையே இன்னும் படத்தைப் பற்றிய பிரஸ்தாபங்கள் மட்டும் ஒழிந்தபாடில்லை. நான்கைந்து பேர் கூடிப் பேசிக்கொண்டிருக்கையில் நிச்சயமாக ஓரிரு வார்த்தைகளாவது பாகுபலி பற்றிப் பேசாமல் அவர்களது சம்பாஷனைகள் முற்றுப் பெறுவதில்லை. பாகுபலி 1 & 2 திரைப்படங்களைப் பொறுத்தவரை பலரும் பல விசயங்களுக்காக நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் படத்தைப் பற்றி விமர்சித்து வருகிறார்கள். எது எப்படியாயினும் மொத்தத்தில் பாகுபலி ஒரு டிரெண்ட் செட்டர் திரைப்படம் என்பதில் எவருக்கும் எந்த வித ஐயமும் இல்லை.

யாருக்குத் தெரியும்? இன்னும் சில நாட்களில் பாகுபலி ஹேர் ஸ்டைல், பாகுபலி நகைகள், பாகுபலி புடவைகள், பாகுபலி ஸ்டைல் பொட்டுகள், வளையல்கள், என ஒவ்வொரு விசயமாக விழாக்கால சிறப்புத் தள்ளுப்படிகளாக மாறி மாகரங்களில் கடை விரிக்கப் படுமோ என்னவோ? டிரெண்டுகள் வெவ்வேறாயினும் அதை உருவாக்கிய பிராண்ட் பாகுபலி மட்டுமே!

பாகுபலி இரண்டாம் பாகம் படம் வெளியாவதற்கு முன்பே முதல் பாகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கிராபிக் நாவல் வெளியிடப்பட்டது, வாசிப்பில் ஆர்வமுள்ள சிறுவர்களை ஈர்க்க காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகின. பாகுபலி பிராண்ட் சித்திரம் பொறித்த டி. ஷர்ட்டுகள் தயாராகின. இவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கும் இப்போது பாகுபலியால் வியாபாரம் எகிறியிருக்கும் என்பது நிஜம் தான். அந்த வகையில் பாகுபலியால் பிரபலமாகி விட்ட இன்னொரு விசயம் அம்ராபலி நகைக்கடை. 

ஜெய்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நகைக்கடையின் கிளைகள் இந்தியாவெங்கும் முக்கிய நகரங்களில் கடை விரித்துள்ளன. இங்கு தயாராகும் நகைகளில் பெரும்பாலானவை வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்டவை. வெகு சில நகைகளை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கத்திலும் வடிவமைத்துத் தருகிறார்கள். பாகுபலி முதல் பாகத்தில் ராஜமாதா சிவகாமி, பிங்கல தேவர், கட்டப்பா, பல்லாள தேவன், அமரேந்திர பாகுபலி, அவந்திகா, சிவுவின் தாய் சங்கா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் அணிந்து வரும் நகைகள் வித்யாசமான புதுமையான வடிவமைப்பில் இருந்தன. முதல் பாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இரண்டாம் பாகத்திலும் அந்த கதாபாத்திரங்கள் அணிந்து வரும் நகைகள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் தான் அதிகப்படியான நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கப் பட்டிருக்கக் கூடும் என நம்பலாம். அந்த நகைகளை வடிவமைத்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்ராபலி நகை வடிவமைப்பாளர்கள் தானாம். இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை சிவகாமி தேவி, தேவசேனா கதாபாத்திரங்களுக்காகத் தான் அதிகமான நகைகளை வடிவமைக்க வேண்டி இருந்ததாம். மொத்தமும் ஆண்டிக் வகை நகைகள். பழங்கால அரச குடும்பங்களை நினைவுறுத்தும் வகையிலான இந்த நகைகளை வடிவமைக்க இவர்கள் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது படத்தில் அந்த நகைகளைப் பார்க்கும் போது புரிகிறது. 

படம் பார்த்து விட்டு அம்ராபலி நகை டிசைன்களால் ஈர்க்கப்பட்டு அதை கூகுளில் தேடிப் பார்த்தால் நகையை விட சுவாரஸ்யமான விசயமெல்லாம் வந்து விழுந்தது. பாகுபலிக்கு அம்ராபலி நகையா? பெயர் பொருத்தம் ரிதமிக்காக இருக்கிறதே என்று யோசித்தால்... அது மட்டுமில்லை கி.மு. 500 ஆம் ஆண்டு வாக்கில் அம்ராபலி என்ற பெயரில் வைஷாலியில் ஒரு பேரழகி இருந்திருக்கிறாள் என்று குறிப்புகளை அள்ளித் தந்து தலையில் நறுக்கென கொட்டுகிறது கூகுள். யாரந்த பேரழகி என்று தேடினால் 60 களில் வைஜயந்திமாலாவை வைத்து அம்ராபலியின் வாழ்வை திரைப்படமாகவே ஆக்கி வைத்திருக்கிறார்கள் பாலிவுட்காரர்கள். தூர்தர்ஷனும் தன் பங்குக்கு 80 களில் அம்ராபலியின் கதையை ‘WOMAN OF INDIA' என்ற பெயரில் மெகாத் தொடராக்கி இருக்கிறது. அம்ராபலியாக நடித்து தொடரை இயக்கி இருப்பது அப்போதைய பாலிவுட் டாப் ஹீரோயின் ஹேமாமாலினி. 

யாரந்த அம்ராபலி?  

வைஷாலி குடியரசின் அரசவை நர்த்தகியான அந்தப் பேரழகியின் பெயரை ராஜஸ்தான் நகைக்கடைக் காரர்கள் எதற்கு தங்களது கடைக்குச் சூட்டி பெருமிதப் பட வேண்டும்? என்று தோன்றும் தானே? எல்லாம் சாம்ராட் அசோகா டைப் கதை தான். வைஷாலியின் அழகுப் பெட்டகம் அம்ராபலியின் மீது தாங்கொணா மயக்கம் கொண்டிருந்த அரசன் அவள் தனியொருவருக்குச் சொந்தமாக இருக்க மனமொப்பவில்லை. வைஷாலியின் இளவயது காதலைக் கொலை செய்து விட்டு அவளை அரசவை நர்த்தகியாக்கி வைஷாலி ஜனபத கல்யாணியாக்குகிறான். இது அங்கே தென்னகத்தின் தேவதாசி முறைக்குச் சற்றும் குறையாத ஒரு பட்டம். அம்ராபலியின் அழகில் வைஷாலி அரசன் மட்டுமல்ல மகதத்தின் பிம்பிசாரனும் கூட  தேனில் விழுந்த வண்டாக மயக்கம் கொள்கிறான். பிம்பிசாரன் அந்நாளில் வீணை கற்றுக் கொண்டு கலையில் தேர்ந்தவனாகவும் இருந்ததால் அவனை அம்ராபலியும் விரும்பத் தொடங்குகிறாள். இதற்கு நடுவில் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வைஷாலி ராஜ்ஜியத்தின் மீது படை கொண்டு வருகிறான் பிம்பிசாரன். பெரும்போர் நடைபெறுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் போரில் மாண்டு போகிறார்கள். வைஷாலி தீக்கிரையாக்கப் படுகிறது. இதனால் மனமுடைந்து போன அழகி அம்ராபலி மன அமைதி வேண்டி புத்தரை நாடிச் செல்கிறாள். ஆரம்பத்தில் பெளத்தத் துறவிகள் அவளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் புத்தர் அம்ராபலியின் குற்றமற்ற தன்மையைப் பற்றி விளக்கியதும் பெளத்த துறவிகளில் ஒருவராக அம்ராபலியும் ஏற்றுக் கொள்ளப் படுகிறார். இப்போதும் கூட அம்ராபலி புத்தரைச் சந்தித்த மாமரச் சித்திரம் பெளத்த ஜாதகக் கதைகளில் குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது.

சமஸ்கிருதத்தில் அம்ரா என்றால் மாங்கனி என்று பொருளாம். அம்ராபலி பிறந்ததுமே அவளது தாய் அவளை ஒரு மாமரத்தின் அடியில் கிடத்தி கை விட்டுச் செல்கிறாள். பிறகு அம்ராபலி வைஷாலியைச் சேர்ந்த அரசவை நடன ஆசிரியரான குமார் பட்டால் வளர்க்கப்பட்டு வாழ்வின் அழகியலையும், துன்பியலையும் ஒரு சேர அனுபவித்து முடிவில் அமைதி நாடி புத்தரைத் தேடிச் சென்று துறவியாவதாக பெளத்தக் கதைகள் சொல்கின்றன.

அந்த அம்ராபலியின் நினைவாகத் தான் இந்த ஜெய்பூர் நகைக்கடைக்கு இந்தப் பெயர் அமைந்திருக்கிறது. பாகுபலி ரசிகர்கள் கவனத்துக்கு ஒரு டிப்ஸ்... சென்னையில் அம்ராபலியின் கிளை நுங்கப் பாக்கம் காதர்நவாஸ்கான் சாலையில் இருக்கிறதாம். கூகுளாண்டவர் சொல்கிறார். நகைகளின் விலைகள் ரூ 600 தொடங்கி பாகுபலியின் அனுஷ்கா அணிந்து வந்த நகைகளைப் போல என்றால் 60000, 70000 ரூபாய் வரையிலும் வெரைட்டியாக கிடைக்கிறதாம். பாகுபலிக்காக வடிவமைத்த டிசைன்களில் படப்பிடிப்புத் தேவை போக எஞ்சிய நகைகளெல்லாம் கூட தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவாம். விரும்புவோர் வாங்கிச் செல்லலாம் என அறிவித்திருக்கிறார்கள்.

பாகுபலிக்காக மட்டும் இல்லை இதற்கு முன்பே பாலிவுட்டின் ராம்லீலா திரைப்பட்த்துக்கும், ஹாலிவுட்டில் ட்ராய் திரைப்படத்துக்கும் இவர்கள் நகைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு தான் பாகுபலிக்கும், அம்ராபலிக்குமான தொடர்பு!
 

Image courtsy: Google

]]>
bahubali , chennai, பாகுபலி, jaipur, அம்ராபலி, பெளத்தம், நகைக்கடை, பெளத்த பிக்குணி, amrapali, amrapali jewell shop, haydrabad https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/amrapali_j1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/may/05/interesting-link-between-tha-bahubali-amrapali-2696735.html
2677871 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் பெட்டிகோட்களுக்கு முடிவு கட்டுங்கள், சேலைக்கு பெல்ட் போதும்... புது ஃபேஷன் புரட்சி! கார்த்திகா வாசுதேவன் Monday, April 3, 2017 01:36 PM +0530  

ஆறு கெஜப் புடவைகளை ஒரே மாதிரியாக 8 ஃப்ளீட்ஸ் வைத்து இடுப்பில் சொருகியும், 6 ஃப்ளீட்ஸ் மடிப்பு வைத்து மேலாக்காக மடித்துப் போட்டுக் கொள்வதையும் தவிர்த்தால் புடவையை வைத்து வேறு எந்த விதமான ஃபேஷனையும் உருவாக்க முடியாது. மிஞ்சிப் போனால் வட இந்திய பாணியில் மேலாக்கை பின்புறமாகப் படர விடாமல் முன்புறமாக விசிறிப் போட்டுக் கொள்வது ஒரு பெரிய ஃபேஷன் மாற்றம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் திருமண வரவேற்புகளில் மட்டும் இப்படி கலாச்சாரப் மாற்றம் நடக்கும். மற்றபடி புடவை என்றால் மேலே சொன்னபடி தான் உடுத்துவது என்பது மரபு.

அதை உடைத்து, ஒரு மாற்றத்துக்காக, புடவைகளை வேறு, வேறு விதமாக உடுத்திப் பழகினால் என்ன? என்கிறார்கள் ஃபேஷன் டிஸைனர்கள். அவர்கள் சொல்வதிலும் தவறில்லையே! ஆறு கெஜம் புடவைகளை எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி ஸ்டைலாக உடுத்தலாம் எனச் சொல்கிறார்கள் வூனிக் நிறுவனத்தின் சீப் ஸ்டைலிஸ்ட் பவ்யா சாவ்லாவும், ஸ்டைல்டேக்.காமின் நிறுவனர் மற்றும் இயக்குனரான யசோதரா ஷெரிப்பும்;

 • பாரம்பரியமாக புடவைக்கு மேட்ச் ஆக இடுப்பைக் காட்டும் பிளவுஸ் அணியும் வழக்கத்தை தூக்கிக் கடாசி விட்டு, சிக்கென்று உடலுக்குப் பாந்தமாய் கிரப் டாப் ஜாக்கெட் வகையறாக்களைப் பயன்படுத்தலாம். இவற்றை வயிற்றுப் பகுதியை மறைக்கும் விதமாகவும் வடிவமைக்கலாம். புடவை இடுப்பில் நழுவாமல் நிற்கச் செய்ய பெட்டிகோட் அணிவார்கள். அந்த வழக்கத்தையும் இனி உதறி விட்டு, சேலைக்குப் பொருத்தமாக கிரப் டாப் அணிந்து, அதற்குப் பொருத்தமாக பெட்டிகோட்டுகளுக்குப் பதிலாக பெல்ட்டுகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பார்க்க புது ஃபேஷனாக இருப்பதோடு அணிந்து கொண்டு நடமாடவும் எளிதாக இருக்கும். கிரப் டாப் தேர்ந்தெடுக்கும் போது, டாட்டட் பிரிண்ட்டுகள், மோனோகுரோம் பிரிண்டுகள் உள்ளவற்றுக்கு முன்னுரிமை தரலாம். மேலும் இந்த முறையில் புடவைகளை அணிய கிரப் டாப்புகள் தவிர பெப்லம் வகை டாப்ஸ்களையும் பயன்படுத்தலாம். புதுமையாக இருக்கும்.

 • அது மட்டுமல்ல சுஷ்மா ஸ்வராஜ் கோட் அணியும் ஸ்டைலில், புடவைகளுக்கு மேட்ச் ஆக ஜாக்கெட்டுகள் அல்லது ஃபீமேல் ஷர்ட்டுகள் அணியலாம். அந்த ஜாக்கெட்டுகளுக்கு வெல்வெட், டெனிம், அல்லது எம்பிராய்டரி செய்யப்பட்ட காலர்களை புடவைகளுக்கு மேட்ச் ஆக டிஸைன் செய்து உடுத்தலாம். உடலை முழுதாக கவர் செய்யும் ஜாக்கெட்டுகள் மற்றும் முழுதாக பிரிண்ட் வொர்க் செய்யப்பட்ட ஷர்ட்டுகளை புடவைகளுக்கு மேட்ச் ஆக அணிந்தால் அது புது டிரெண்டாக இருக்கும். உதாரணமாக பிளெயின் புடவைகளுக்கு மேட்ச் ஆக ஹெவியாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டுகளையும், விக்டோரியன் ஹை காலர் வைத்த நீண்ட ஸ்லீவ்கள் கொண்ட ஜாக்கெட்டுகளையும் பயன்படுத்தலாம். அது தரும் ரிச் லுக் அலாதியானது. 

 • புடவைகளுக்கு பெல்ட் அணியும் ஸ்டைல்: புடவைகளுக்கு பொருத்தமாக பெல்ட் தேர்ந்தெடுத்து அணிந்தால் அது தரும் கிளாஸி லுக் அபாரமாக இருக்கும். மெல்லிய உலோக பெல்ட்டுகள், லெதர் பெல்ட்டுகள், துணி பெல்ட்டுகள் என எந்த மெட்டீரியலைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் பெல்ட் அணியலாம். முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய விசயம், பெல்ட் உங்களது இடுப்புக்கு சற்றே மேலிருக்க வேண்டும். இந்தன் முக்கியமான பயன் என்னவெனில், முன்புற பிளீட்ஸ்களை நகராமல் மடிப்பு கலையாமல் பாதுகாத்து கச்சிதமான உடலமைப்பை அழகாக வெளிப்படுத்தும். அதோடு பள்ளு டிஸனையும் அழகாக விசிறி போல உடுத்த உதவும்.
 • பெட்டிகோட் அணியும் வழக்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு உங்கள் புடவைகளுக்கு மேட்ச் ஆக பலாஸோக்கள், தோத்திகள் மற்றும் ஜீன்ஸ்களைப் பயன்படுத்தலாம். புடவைகளை இவற்றோடு மிக்ஸ் செய்து அணியும் போது அவை தரும் தோற்றம் நிச்சயம் வேறு விதமாக இருக்கும்.
 • வழக்கமாக உடுத்தும் காஞ்சிபுரம் மற்றும் ஜார்ஜெட் புடவைகளை விட்டு விட்டு ஒரு மாற்றத்துக்கு டெனிம் அல்லது ஜீன்ஸ் துணியாலான புடவைகளை முயற்சிக்கலாம். டெனிம், ஜீன்ஸ் மட்டுமல்ல எண்ணிலடங்கா வகையில் குவிந்துள்ள வேறு வகையான ஃபேப்ரிக்குகளையும் புடவைகளாக டிஸைன் செய்து வித்யாசமாக உடுத்தி புது ஸ்டைல் கிரியேட் செய்யலாம்.
]]>
belt your sari, ditch the petticoats, fashion trend, change tradition, மாற்றம் ஃபேஷன் முன்னேற்றம், புடவைகளுக்கு பெல்ட், விக்டோரியன் ஹை காலர் ஜாகெட்டுகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/3/w600X390/1_crop_top_fashion.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/apr/03/பெட்டிகோட்களுக்கு-முடிவு-கட்டுங்கள்-சேலைக்கு-பெல்ட்-போதும்-புது-ஃபேஷன்-புரட்சி-2677871.html
2651261 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் ஷாலினி விசாகனின் சுவஸ்திரா டிசைன் ஸ்டுடியோ வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் அணிவகுப்பு! கார்த்திகா வாசுதேவன் Friday, February 17, 2017 03:56 PM +0530  

அழகிப் போட்டிகளும், பொருட்களை அறிமுகம் செய்விக்கும் புரமோஷன் மேடை அணிவகுப்புகளும் அதிகரித்து வரும் இன்றைய நாட்களில் ‘ராம்ப் வாக்’ என்றால் என்னவென்று எல்லோருக்கும் புரிந்தே இருக்கும். ராம்ப் வாக் என்றால் அதில் அழகிகள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்று சட்டமில்லை. பிரபல டிசைனர்களில் ஒருவரான ஷாலினி விசாகன் சுவஸ்திரா என்ற பெயரில் தனது பிரத்யேக பிராண்டுகளில் புதுப் புது வகையான ஆடைகளை வருடம் தோறும் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த முறையும் ஷாலினி மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஆடைகளை வடிவமைத்து அந்த ஆடைகளின் அறிமுக விழா அணிவகுப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளையே பங்கேற்க வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

இந்த முயற்சியில் ஷாலினியுடன் கைகோர்த்திருப்பவர்கள் சர்வ தேச அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக ‘மாஸ்டெக்டோமி’ வகை ரவிக்கைகளை வடிவமைத்த ஃபேஷ்ன் இரட்டையர்களான ஷிவன்& நரேஷ். புகழ்பெற்ற நீச்சல் ஆடை வடிவமைப்பாளர்களான இவர்கள் இந்த முறை ஷாலினியுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான செளகரியமான புது ஆடை வகைகளை வடிவமைத்து அவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

 

நாள் முழுக்க சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக முதுகுத் தண்டுவட பாதிப்ப்புள்ளவர்கள், கைகள் அல்லது கால்களில் சீரான இயக்கம் இல்லாதவர்கள், தங்களது ஆடைகளின் பட்டன்களையோ, ஷிப்களையோ போட்டுக் கொள்ள முடியாதவர்கள் போன்றவர்களுக்கென்றே ஸ்பெஷலாக காந்தங்களையும், ஒட்டும் பட்டன்களையும் பயன்படுத்தி ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


 
தேசிய ஃபேஷன் டிசைனர் பள்ளி மாணவியான 30 வயது ஷாலினி மனந்து கொண்டதும் ஒரு மாற்றுத் திறனாளியைத் தான். ஷாலினியின் கணவர் ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு வசதியாக ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கியது தான் இந்த முயற்சியின் தொடக்கம் என ஷாலினி தெரிவித்தார். தனது கணவருக்காக ஸ்பெஷல் லூப்கள் வைத்து முதன்முதலாக ஷாலினி ஒரு ஆடையை வடிவமைத்தார். பின்பு தண்டுவடப் பாதிக்கப்பட்ட தனது பக்கத்துவீட்டுப் பெண்மணிக்காக எளிதில் உடுத்துக் கொள்ளும் வகையிலான ஒரே பீஸ் துணியால் ஆன புடவையை வடிவமைத்துக் கொடுத்தார். இப்படித் தொடங்கியது தான் பின்னர் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளின் செளகரியத்தை மட்டுமே மனதில் வைத்து ஆடைகளை வடிவமைக்கும் எண்ணத்துக்கு உந்துகோளானது.

ஷாலினியின் டிசைன் ஸ்டுடியோவில் தற்போது மாற்றுத் திறனாளிகளில் பெண்களுக்கான கிரப் டாப்ஸ், மேக்ஸி ஸ்கர்ட்டுகள், பல்லாஸோக்கள் மற்றும் ஆண்களுக்கான குர்தாக்கள், ஷெர்வானிகள், வேஷ்டிகள் உள்ளிட்டவை குறைந்த பட்சமாக 1000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. எல்லா உடைகளிலும் மேனுவலான ஷிப்கள் தவிர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஆடைகளில் காந்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஷாலினியின் சுவஸ்திரா டிசைன் ஸ்டுடியோ ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 9962318808 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
ramp walk, suvasthra design studio, shalini visakan, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடைகள், ஷாலினி விசாகன், சுவஸ்திரா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/17/w600X390/shalini_visakan.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/feb/17/ஷாலினி-விசாகனின்-சுவஸ்திரா-டிசைன்-ஸ்டுடியோ-வழங்கும்-மாற்றுத்திறனாளிகளுக்கான-ஃபேஷன்-அணிவகுப்பு-2651261.html
2622171 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் குழந்தைங்க கண்ல படாம பார்த்துக்குங்க... இல்லைன்னா உங்க பர்ஸ் பழுத்துடும்! கார்த்திகா வாசுதேவன் Monday, December 26, 2016 05:02 PM +0530 உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியானால் நிச்சயமாக குறைந்த பட்சம் ஐந்தாறு பார்பி பொம்மைகள், இரண்டு மூன்று எல்சா பொம்மைகள், கணக்கு வழக்கற்று ஃபர்ரில் தயாரான டெடி பியர் பொம்மைகள், நாய்க்குட்டி பொம்மைகள் எனக் கூடை நிறைய பொம்மைகள் வைத்திருப்பீர்கள். அதிலும் பெண் குழந்தைகள் இருக்கும் வீடென்றால் சொல்லவே தேவையில்லை நிச்சயம் பார்பிகளும், எல்சாக்களுமாக விடுமுறைநாட்களில் வீடு முழுக்க பொம்மைகள் இரைபடும். வெறும் பார்பிகள் மட்டுமென்றால் கூட அவற்றை கைக்கோ, காலுக்கோ சிக்கும் போதெல்லாம் அவ்வப்போது எடுத்து வைத்து விடலாம். ஆனால் இந்த பார்பிகளுக்கும், எல்சாக்களுக்குமாக அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தார் அள்ளி வழங்கும் ஈடு இணையற்ற இணைப் பொருட்கள் அரை டஜன் இருக்கும். அவை

சிறு முகம் பார்க்கும் கண்ணாடி
இரண்டு மூன்று விதமான ஹை ஹீல்ஸ் ஷூக்கள்
பார்பி ஹேண்ட் பேக்
பார்பிக்களுக்கு பொருத்தமாக இரண்டு மூன்று செட் உடைகள்
பார்பிக்களுக்கு தலை வார ஒரு ஸ்பெஷல் சீப்பு
எல்சா பொம்மைகளுக்கு தலையில் ஒரு குட்டி கிரீடம்
கழுத்துக்கு குட்டி நெக்லஸ் வேறு!

இவற்றை பத்திரப் படுத்துவதற்குள் சில அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் போதும், போதுமென்றாகி விடும்!. இவையெல்லாம் பார்க்க அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் மூன்றூ வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடென்றால் அந்தக் குழந்தைகள், அளவில் சின்னஞ் சிறியவையான இந்த பார்பி துணைப் பொருட்களை வாயில் போட்டு விழுங்கி விடக் கூடாதே என்பது வேறு அனாவசியமான பீதி! இதுவரை பார்பி பொம்மைகள் குறித்து அப்படியான எதிர்மறை செய்திகள் எதுவும் பதிவானதாகத் தெரியவில்லை. ஆனாலும் அம்மாக்களுக்கு என்றே இருக்கும் பொதுவான பயத்தைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும் தானே? 
பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப் பட்ட காலம் தொட்டே உலகம் முழுதும் இன்றளவிலும் அதற்கு மிகப்பெரிய வரவேற்பிருக்கிறது. கிடைத்த வரவேற்பை என்றென்றைக்குமாக தக்க வைத்துக் கொள்ளவென்றே பார்பி பொம்மை தயாரிப்பாளர்கள் குழந்தைகளை ஈர்ப்பதற்கென்றே புதிது, புதிதாக எதையாவது கண்டுபிடித்து குழந்தைகளின் பொம்மை வாங்கும் ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள் எனவும் சொல்லலாம். அந்த வகையில் பார்பியின் சமீபத்திய கண்டு பிடிப்பு ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ்’

பார்பி பொம்மைகளுடன் இணைக்கப்பட்டு வரும், கைக்கண்ணாடி, சீப்பு, ஷூக்கள், உடைகள் இவற்றைத் தாண்டி இப்போது பார்பிகளுக்கென்றே லிஃப்ட் வசதியுடன் குட்டியாக ஒரு பொம்மை வீட்டையும் பார்பி நிறுவனத்தார் வடிவமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுக்கான சந்தையில் விற்பனைக்கு விட்டுள்ளனர். இதன் பெயர் தான் ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ்’ இந்த டிரீம் ஹவுஸில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?  இந்த பொம்மை வீட்டில் லிஃப்ட் இருக்கிறது. பாத்ரூமில் ஷவ்ர் இருக்கிறது, பார்பி பொம்மைகளைத் தூங்க வைக்க அருமையான பெட் ரூம் கூட உண்டு. அதோடு வீட்டிற்கு லிஃப்ட் தவிர மாடிப்படிகளும் உண்டு. தேவைப்பட்டால் படிகளை சறுக்கு மரம் போல மாறச் செய்து பொம்மைகள் வீட்டின் முதல் மாடியிலிருந்து சரிந்தும் இறங்கலாமாம்! பார்பிகள் ஹோம் வொர்க் செய்ய அழகான ஸ்டடி ரூம் உண்டு. இந்த பொம்மை வீட்டின் எல்லா அறைகளிலும் விளக்குகள் பொறுத்தப் பட்டுள்ளன. இந்த ‘ஹலோ பார்பி டிரீம் ஹவுஸை’ மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் குழந்தைகள் கூகுள் வாய்ஸ் தேடுதல் பொறி முறையைப் பயன்படுத்துவது போல இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ் செயல்பாடுகளை தங்களது குரல் மூலம் கட்டுப்படுத்த முடியும். 

பார்பி டிரீம் ஹவுஸ் வசதிகள் அனைத்தும் குழந்தைகளை ஈர்ப்பதாகத் தான் இருக்கின்றன. ஆனால் அதன் கட்டமைப்பில் முதற்கட்டமாக என்ன கோளாறுகள் இருந்தனவோ தெரியவில்லை. நேற்றைய கிறிஸ்துமஸ் நாளில் உலகம் முழுக்க இந்த பொம்மை வீட்டை வாங்கியவர்களிடையே மிகப் பெரும் ஏமாற்றமாகி விட்டது. கிறிஸ்துமஸ் தினமும் அதுவுமாக விடுமுறை நாளில் குழந்தைகளால் இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸில் நேற்று சரி வர விளையாட முடியவில்லையாம். குழந்தைகளின் குரலுக்கு கட்டுப்படாமல் பார்பி டிரீம் ஹவுஸ் மெளனம் சாதித்தால் என்ன அர்த்தம்?! விளையாட முடியாமல் ஏமாற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் இந்த பொம்மை வீடுகளைத் தயாரிக்கும் மேட்டல் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். புகாருக்கு பதிலளித்த மேட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு;

குறைந்த பட்சம் 15 நொடிகளுக்கு தங்களது ஹலோ பார்பி டிரீம் ஹவுஸின் மின் இணைப்பை, துண்டித்து மீண்டும் இயக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இப்படிச் செய்ததால் பிரச்சினை தீர்ந்ததா என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.

எது எப்படியோ குழந்தைகளை ஈர்ர்க்கவென்று  பொம்மை தயாரிப்பாளர்கள் புதிது, புதிதாக எதையெல்லாம் சிந்திக்கிறார்களோ? அவையெல்லாம் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கு சாதனங்களாக இருக்கின்றதோ இல்லையோ? பெற்றோர்களின் பர்ஸை கணிசமாகப் பதம் பார்க்கக் கூடிய வகையானதாகவே இருக்கின்றன.

ஹலோ பார்பி டிரீம் ஹவுஸில் எப்படி விளையாடுவதென்று தெரிந்து கொள்ள இந்த வீடியோ உதவலாம்...

இந்த ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ் பார்க்க வெகு அழகாக இருக்கிறது. ஆனால் ஒரே விதமான விளையாட்டு அனுபவத்தை மட்டுமே தான் தரக் கூடியதாக இருக்கும் போல் தெரிகிறது. இதனால் குழந்தைகளிடம் பெரிதாக என்ன சந்தோசத்தை விளைவித்து விட முடியுமென்று தான் தெரியவில்லை.

]]>
பார்பி பொம்மைகள், ஹலோ பார்பி டிரீம் ஹவுஸ், barbie dolls, hallo barbie dream house https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/26/w600X390/barbie_dream_house.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/dec/26/குழந்தைங்க-கண்ல-படாம-பார்த்துக்குங்க-இல்லைன்னா-உங்க-பர்ஸ்-பழுத்துடும்-2622171.html
2600304 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் டைட்டன்ல இனி புடவைகளும் வாங்கலாமாமே! Thursday, November 17, 2016 04:26 PM +0530 டைட்டன் நிறுவனம் சோதனை முயற்சி அடிப்படையில் இனிமேல் பெண்களுக்கான பாரம்பரிய உடைகளை விற்பனை செய்யும் நிலையங்களையும் தொடங்க இருக்கிறதாம். டாட்டா குழுமத்தைச் சார்ந்த டைட்டன் முன்பே ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட பிற பிராண்ட் கைக்கடிகாரங்களை டைட்டன் பிராண்டின் கீழ் விற்பனை செய்வது நமக்குத் தெரிந்த விசயமே! இந்நிறுவனம் ’தனிஷ்க்’ என்ற பெயரின் கீழ் நகை விற்பனையும், டைட்டன் ஐ பிளஸ் என்ற பெயரில் ஸ்டைலிஷ் ஆன மூக்குக் கண்ணாடிகளும் விற்பனை செய்து வருகிறது. வெற்றிகரமான பிற முயற்சிகளைப் போலவே இனி வருங்காலத்தில் தனிஷ்க் ஷோரூம் செல்லும் பெண்கள் அங்கேயே தங்களுக்குத் தேவையான பட்டுப்புடவைகள் அல்லது பிராண்டட் உடைகளையும் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளும் வசதி வந்து விடும். ரிலயன்ஸ் நிறுவனத்தார் ரிலயன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலயன்ஸ் ஃப்ரெஷ், ரிலயன்ஸ் கிரீன் டிரெண்ட்ஸ் என்று ரீடெயில் மார்கெட்டில் தங்களது எல்லைகளை விரித்துக் கொண்டே செல்வது போலவே டாட்டாவும் தனது எல்லைகளை  விரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்று பார்த்தால்... பெரிதாக ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், போன்ற பெரிய ஜவுளிக் கடல்கள் நகைக்கடை, துணிக்கடை, அழகு சாதனப் பொருட்களுக்கான கடை, கேண்டீன் என்று ஒரே இடத்தில் அனைத்தையும் விற்று மக்களை செலவு செய்யத் தூண்டுவதைப் போலத்தான் இதுவும். வாட்ச் வாங்கலாம் என்று டைட்டன் ஷோரூம் செல்பவர்கள் இனிமேல் தனிஷ்க் அவுட்லெட்டில் ஏதாவதொரு நகையும், டைட்டன் ஐ பிளஸில் உடைக்குப் பொருத்தமாக லென்ஸ்களும் வாங்கி மாட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஃபேஷன் உலகுக்கு டைட்டனில் இருந்து இன்னொரு தரமான பிராண்ட் கிடைத்தது என்ற வகையில் இந்த முயற்சியைப் பாராட்டலாம்.                                                                   
 

]]>
titan women's ethnic wear, டைட்டனில் புடவை விற்பனை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/17/w600X390/titan_pilot_effort.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/nov/17/டைட்டன்ல-இனி-புடவைகளும்-வாங்கலாமாமே-2600304.html
2588534 லைஃப்ஸ்டைல் ஃபேஷன் புத்தம் புது மோஸ்தர் நகை விரும்பிகளுக்கு ஜோயாவின் கிருஷ்ணா கலெக்‌ஷன்ஸ்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, November 1, 2016 12:41 PM +0530 நகை வடிவமைப்பு அப்படி ஒன்றும் எளிதான வேலையில்லை, இதில் போட்டிகள் நிறைய இருந்தாலும் ஒரு நகையை வாடிக்கையாளர் விருப்பத்திற்கும், திருப்திக்கும் ஏற்ப வடிவமைத்து வெற்றி காண்பதென்பது மிகவும் சவாலான விசயம். இதைச் சொல்வது யார் தெரியுமா?  டாட்டாவின் ’ஜோயா’ ஜூவல்லரி கலெக்சன்ஸின் தலைமை நகை வடிவமைப்பாளரான சங்கீதா திவான்.

நகை வடிவமைப்பில் கிட்டத்தட்ட 20 முழு ஆண்டுகள் பரிச்சயமும், அனுபவமும் உள்ள சங்கீதா சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். ஏனெனில் பெண்கள் தங்களுக்கான நகைகளைத் தேர்வு செய்வதில் அத்தனை எளிதாக திருப்தி அடையவே மாட்டார்கள் என்பதற்கு நம் ஊர் நகைக்கடைகளே மவுன சாட்சிகள். சங்கீதாவின் நகை வடிவமைப்பு மேன்மைக்கு சிறந்த உதாரணமாக ’ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் ஜோதாவாக வரும் ஐஸ்வர்யாவின் நகை மாதிரிகளைக் கூறலாம்.

அண்ணாச்சி பலசரக்குக் கடை ரேஞ்சில் இப்போதெல்லாம் பெரு நகரம், சிறு நகரம் எங்கு பார்த்தாலும் மூலை, முடங்குகளில் கூட நகைக்கடைகள் எங்கிருந்தோ முளைத்து விடுகின்றன. தங்கமோ, வைரமோ விலை ஏறினாலும், இறங்கினாலும் மக்களிடையே நகை வாங்கிக் குவிக்கும் ஆர்வம் மட்டும் ஒரு குறையும் இன்றி போஷாக்காக பேணி வளர்க்கப்படுகிறது. அதற்கு முதல் காரணம் தங்கத்திலும், வைரத்திலும் பணத்தைக் கரைப்பது செலவே அல்ல அது ஒரு முதலீடு என்ற ஆழமான அடிப்படை எண்ணம் தான். 

தங்கமும், வைரமும் முதலீடு என்பதற்காக அதை அப்படியே தங்க பிஸ்கட்டுகளாகவோ, தனிக் கற்களாகவோ சேமிக்க முடியும் தான். ஆனால் அதை நண்பர்களிடம் காட்டிப் பெருமை கொள்ள முடியாதே. அங்கே தான் நகை வடிவமைப்பிற்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பத்தில் பூக்கள், இலைகள், முக்கோணம், வட்டம், கோளம் கணித வடிவங்கள் என்று திருப்தி அடைந்த மக்கள் இப்போது நகைகளில் நாளுக்கொரு புது மோஸ்தர் தேடுகிறார்கள். கற்பனைக்கு எட்டாத கலைநயமிக்க பல நகை வடிவமைப்பு மாதிரிகளுக்கு மக்களின் அல்லது வாடிக்கையாளர்களின் தணியாத இந்த ஆர்வம் தான் மிகப்பெரிய உந்துசக்தி.

அதற்கொரு உதாரணமாக டாட்டாவின் சமீபத்திய ஜோயா பிராண்ட் நகை கலெக்‌ஷனான ’கிருஷ்ணா’வைச் சொல்லலாம். கிருஷ்ணனைப் பற்றிய பாரதக் கதைகள், பாகவத புராணக் கதைகள் இவற்றிலிருந்தெல்லாம் சம்பவங்களை ஒருங்கமைத்து அதைச் சார்ந்து நகை வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். அதாவது கோகுலத்தில் மரத்தடியில் கன்றோட்டிக் கொண்டு புல்லாங்குழல் இசைக்கும் கண்ணன் தங்கமாகவும், வைரமாகவும் இழைக்கப்பட்டு குட்டி பென்டண்ட்டாக நம் கழுத்தில் ஆடினால் கசக்குமா நமக்கு?! குழலூதும் கண்ணன் மட்டுமல்ல கோபிகைகளுடன் ஆடும் கண்ணன், ராதையுடன் ஏகாந்தமாய் ஊஞ்சலில் ஆடும் கண்ணன்...

விளையாட்டுப் பிரியனான பிருந்தாவனக் கண்ணனின் பிள்ளைக் குறும்புகள், கோவர்த்தன மலையைத் தூக்கும் கண்ணன், மைக்ரோ பகவத் கீதை பென்டண்ட், மயிற்பீலி அணிந்த மாயோனின் புன்னகை முகம் இத்தனையையும் அணிவதற்கு எளிதாக காம்பாக்ட் டிஸைன்களில் வடிவமைப்பது நகை வடிவமைப்பாளர்களுக்கு மிகப்பெரும் சவால் மட்டுமல்ல சாதனையும் கூடத்தான் இல்லையா?

நெய்க்குடமும், பால்குடமும் சுமந்து செல்லும் ஆயர்குலப் பெண்களைப் பாருங்கள்...

ஒரு தேர்ச்சி பெற்ற நகை வடிவமைப்பாளராக தன்னை கவர்ந்திழுப்பவை இத்தகைய சவால்கள் தான் என்கிறார் சங்கீதா திவான். ஏனெனில் மக்களிடையே பணப் புழக்கம் பெருகி விட்ட இந்நாட்களில் தேவைக்காக நகை வாங்குவதைத் தாண்டி விருப்பதிற்காக நகை வாங்கும் பழக்கம் மற்றும் அடிக்கடி நகைகளை எக்சேஞ்ச் செய்யும் பழக்கம் பெருகி வருகிறது. இப்படியான சூழலில் வாடிக்கையாளர்களின் விருப்பம் சில சமயங்களில் புதுமையையும், பழமையையும் ஒருசேர எதிர்பார்க்கிறது. ஜோயாவின் கிருஷ்ணா கலெக்‌ஷன் நகைகள் அத்தகைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் தான் இதற்கு ‘கேப்ஸூல் கலெக்‌ஷன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் சங்கீதா கூறினார்.

ஜோயாவின் ’கிருஷ்ணா கேப்சூல் கலெக்‌ஷன்ஸ்’ நகைகளைக் காண்பதற்கான யூ டியூப் வீடியோ இணைப்பை இங்கு தரிசிக்கலாம்.

அதெல்லாம் சரி தான் ஆனால் இந்த வகை நகைகளின் விலையை அறிந்தால் கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது, ஏனெனில் சங்கீதா ’கிருஷ்ணா’ கலெக்‌ஷனுக்காக உருவாக்கிய தங்கம் மற்றும் வைர நகைகளின் விலை 1.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறதாம். வடிவமைப்பு, வைரங்களின் எண்ணிக்கை மற்றும் கலைநயத்தைப் பொறுத்து 15 லட்சம் வரை விலைப் பட்டியல் நீள்கிறது.

]]>
கிருஷ்ணா கலெக்‌ஷன்ஸ் நகைகள், ஜோயா பிராண்ட், டாட்டா, சங்கீதா திவான், நகை வடிவமைப்பாளர், krishna collections, zoya brand, tata collections, sangeeta dewan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/27/w600X390/krishna_pendants.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/oct/27/புத்தம்-புது-மோஸ்தர்-நகை-விரும்பிகளுக்கு-ஜோயாவின்-கிருஷ்ணா-கலெக்zwnjஷன்ஸ்-2588534.html
3291 லைஃப்ஸ்டைல் ஃபேஷன்  லேட்டஸ்ட் வெட்டிங் லெஹங்கா ஸ்பெஷல்! கார்த்திகா வாசுதேவன் Monday, August 15, 2016 12:24 PM +0530 வீட்டில் திருமணமா? முதல் வேலையாக நாம் எல்லோரும் திட்டமிடத் தொடங்குவது உடைகளுக்காகத் தான். மணமகன், மணமகள் மட்டுமல்ல இரு வீட்டு அம்மா, அப்பாக்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், அவர்களது வாரிசுகள், நெருங்கிய உறவினர்கள் என்று தொடங்கி  நெருங்கிய நண்பர்கள் வரை எல்லோருக்குள்ளும்  சந்தோஷக் கற்பனைகளை விரியச் செய்வது உடைகளாகத் தான் இருக்கும். திருமண வைபவத்தன்று கலந்து கொள்ளும் அனைவரது உடைகளுமே அத்தனை ஸ்பெஷல். 

எல்லா நாட்களையும் போல ஏனோ...தானோ என்று அன்றைக்கு யாரும் கவனமில்லாது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இன்டர்நெட், வைபை என்று உலகம் சுருங்கி நமது சுட்டு விரல் நுனியின் கீழ் வந்து விட்டதால் திருமணத்திற்கு பாரம்பரியமான பெரிய ஜவுளிக்கடைகளைத் தேடிப்போய் ஆடைகளைத் தேர்வு செய்த காலமெல்லாம் போயே போச்சு. கூகுளில் தேடினால் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களின் ஆன்லைன் விற்பனை அங்காடிகள்  கண்ணுக்கு குளிர்ச்சியாக  கணக்கற்ற கலெக்சன்களை அள்ளி வீசுகின்றன. எல்லா பிரிவு மக்களிடையேயும் பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளுக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

அதையொட்டி கடந்த  வாரம் மும்பையில் 'இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் வாரம் 2016' என்ற பெயரில் இந்தியாவின் பிரபல ஆடை நிபுணர்களின் வடிவமைப்பில் உருவான  பிரத்யேக திருமண உடைகளுக்கான அறிமுகவிழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஃபேஷன் அணிவகுப்பில் பிரபல நடிகைகள் மற்றும் மாடல்கள்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வந்தனர். 

முன்பெல்லாம் பெண்களுக்கு திருமணமென்றால் அம்மாக்களின் கவலை மகள்களின் கழுத்து எலும்பில் வந்து நிற்கும். ’பார் திருமணத்திற்காக இப்படியா மெலிந்து போவாய், கழுத்து எலும்பெல்லாம் துருத்திக் கொண்டு இருப்பதால் எத்தனை அழகாக ஜாக்கெட் தைத்தாலும் பார்க்க அம்சமாகவே இல்லை’ என்று குறைபட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! இப்போதைய புது டிரெண்ட் என்ன தெரியுமா? தைரியமாக கழுத்து எலும்பை வெளியில் காட்டிக் கொள்ளலாம், அது கூட ஒருவகையில் அழகே! என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய திருமண உடைகள். அந்த விழாவில் அணிந்து வரப்பட்ட பெரும்பாலான உடைகள் கழுத்து எலும்பு வெளித்தெரியும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மும்பை மற்றும் டெல்லியின் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் டிசைனர்களான மனிஷ் மல்ஹோத்ரா, தருண் தகிலியானி, அனிதா டோங்கரி, நிகில் தம்பி, போன்றோர் வடிவமைத்த புத்தம் புதிய கலெக்சன்களை அணிந்து வந்து மாடல்கள் ஃபேஷன் அணிவகுப்பை வண்ண மயமாக்கினார். 

மனிஷ் மல்கோத்ராவின் 'பெர்சியன் கனெக்ட்' எனும் உடையை அணிந்து வந்த தீபிகா படுகோன் அனைவரது கவனத்தையும் கொள்ளை கொண்டார். மெரூன் நிறத்தில் தாமிர நிற ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய இந்த லெஹங்கா அழகோ அழகு! கழுத்து எலும்புகள் மட்டுமல்ல அகலமான வழ வழப்பான தோள்களும் வெளித்தெரியும் வகையில் இந்த ஆடை வடிவமைப்பட்டிருந்தது, இந்த ஆடையை வடிவமைக்க மனிஷ் பெர்சியன் கலை அம்சங்களை பயன்படுத்தி இருப்பது உடைக்கு வெகு பாந்தம்! ஆனால் இதன் விலையைப் பார்த்து தயவு செய்து மூர்ச்சை ஆகி விடாதீர்கள்! அப்படியொன்றும் அதிகமில்லை சுமார் ரூ 5.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறதாம்! வாங்கி அணிந்து கொள்ளத் திறனுடையவர்கள் புது டெல்லியில் இருக்கும் மனிஷ் மல்கோத்ரா ஸ்டோர்ஸில் இந்த ஆடையை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு -09818684859.


இது டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைத்த ’சாம்பெயின் கோடேட் லெஹங்கா’. ஆழமான 'வி' வடிவக் கழுத்துடன் விரியும் இந்த உடையின் சிறப்பு அதன் ஆர்கன்ஸா பள்ளு (முந்தானை). இந்த உடையின் இன்னொரு சிறப்பு அணியும் போது அதிகமாக நகைகள் தேவைப்படாது. சுத்தமாக நகைகள் அணியாவிட்டால் கூட நகைகளற்ற குறையை இந்த உடையுடன் கூடிய உங்களது சிறுபுன்னகை  நிவர்த்தி செய்து விடும். இதன்இ விலை ரூ 2.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.  ஆடையை வாங்கும் ஆர்வம் இருப்பவர்கள் தொடர்புக்கு  gauravguptastudio.com எனும் இணையதளத்தை அணுகலாம்.

 

 

 

இந்த ராயல் மெரூன் உடை  மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் நிகில் தம்பியின்  சமீபத்திய அறிமுகம். மெரூன் நிறத்தில் தங்க நிற ஜரிகைப் பூக்கள் மின்னும் இந்த ஸ்கர்ட் வெகு அழகு! இந்த உடைக்கான துப்பட்டா  தூக்கலாகத்  தெரியும் வண்ணம்தங்க நிற பிளைன்  நெட் என்பதால் இதற்குப் பொருத்தமாக இதன் சட்டைப் பகுதியில் மெரூன் நிறத்தில் நீளமான  கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான உடைகளை அணியும் போது நீளக்கைகள் மறைப்பதால் அதிகமான வளையல்கள் அணியாத தேவை இருக்காது. இதன் விலை ரூ 70,000 லிருந்து  தொடங்குகிறது. இதை ஆர்டர் செய்ய perniaspopupshop.com எனும் இணையதளத்தை அணுகலாம்.

டெல்லியைச்  சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மணவ் கங்வானியின் சமீபத்திய அறிமுக ஆடையான இந்த ஆனியன் பிங்க்  லெஹங்காவைப் பாருங்கள். இதை திருமணத்திற்கு மட்டுமல்ல பிறந்த நாள் வைபவங்களில் அணியலாம். ஆடையின் வட்டக் கழுத்துப் பகுதி மற்றும் நீளமான ஸ்கர்ட்டின் கீழ்பகுதியைச் சுற்றிலும் பதிக்கப்பட்டுள்ள  கிரிஸ்டல் கற்கள் ஆடையின் அழகை மேலும்அதிகப் படுத்துகின்றன. இதன் விலை ரூ 1,20,000 இதை ஆர்டரில் பெற perniaspopupshop.com எனும் இணையதளத்தை அணுகலாம்.

அடுத்ததாக அனிதா டோங்கிரியின் இந்த சிவப்பு நிற திருமண லெஹங்காவைப் பாருங்கள். கழுத்தை சுற்றி பதிக்கப்பட்டுள்ள தங்க நிற வின்டேஜ்  ஜம்க்கிகள்  இதன் சிறப்பு, அதோடு கிரிஸ்டல் மற்றும் தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய சிவப்பு  ஜார்ஜெட்  துப்பட்டா  உடைக்கு மிகப் பொருத்தம் .இந்த உடையில் கோட்டா பட்டி எம்பிராய்டரி அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது உடையை பிரமாண்டமாக உணரச் செய்கிறது. இதன் விலை ரூ 2 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதைப் பெற eshop@anitadongre.com  எனும் இணைய முகவரியை அணுகலாம். 

]]>
deepika padukone, manish malhothra, clavicle bone trend, wedding collection, india couture 2016 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/Gaurav_Gupta.jpg https://www.dinamani.com/life-style/lifestyle-fashion/2016/aug/11/nbspலேட்டஸ்ட்-வெட்டிங்-லெஹங்கா-ஸ்பெஷல்-3291.html