Dinamani - அழகே அழகு - https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3298267 லைஃப்ஸ்டைல் அழகே அழகு பார்லர் செலவின்றி வீட்டிலேயே பெடிக்யூர் செய்து கொள்ள எளிமையான டிப்ஸ்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Thursday, December 5, 2019 04:58 PM +0530  

இன்று சாதாரண பியூட்டி பார்லர்களில் கூட பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டுமெனில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். பிரபலமான பார்லர்கள் என்றால் கேள்வியே இல்லை.. ஒருமுறை பெட்க்யூர் மாதச் சம்பளத்தை அப்படியே தாரை வார்த்து விட்டு வர வேண்டியது தான். இதனாலேயே பல பெண்கள் பாதங்களில் பெடிக்யூர் செய்து கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ.. வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்து கொள்ள முடியுமென்பது. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நமது பாட்டிமார் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கக் கூடிய எளிமையான டிப்ஸ் தான்.

தேவையான பொருட்கள்:

சூடான பால்: 2 லிட்டர்
கல் உப்பு: 1 கைப்பிடி
நறுக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை பேக் செய்ய உதவும் பிளாஸ்டிக் உறைகள்: தேவையான அளவு
சூடான தண்ணீரில் நனைத்த மென்மையான டர்க்கி டவல் -1
ஆலிவ் அல்லது பாதாம் ஆயில்: 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கால்களை குளிர்ந்த நீரில் முதலில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடான பாலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி கல் உப்பைப் போடவும். அடுத்ததாகப் பாதம் தாங்கும் அளவிலான சூட்டிற்குப் பால் வந்ததும் அதில் இரண்டு கால் பாதங்களையும்  வைத்து சற்று நேரம் ஊற விடவும். பாதங்கள் பாலுக்குள் ஊறும் போதே உள்ளே நெருடும் கல் உப்பில் குதிகால்களையும், கால் ஓரங்களையும் கூட ஸ்கிரப் செய்து கொள்ளலாம்.

பாலில் சூடு இருக்கும் வரை இதைச் செய்து விட்டுப் பிறகு கால்களை வெளியே எடுத்து சூடான தண்ணீரில் நனைத்து கால் பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பாக இருக்கும் டர்க்கி டவல் கொண்டு பாதங்களை மென்மையாகத் துடைக்கவும். பின்பு ஆலிவ் அல்லது பாதாம் ஆயிலால் கால்களை மசாஜ் செய்து பிளாஸ்டிக் உறை கொண்டு இறுக்கமாக மூடி சற்று நேரம் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமில்லை சுமார் 5 நிமிடங்கள் அந்த நிலை நீடித்தால் போதும். பிறகு பாதங்களை உறையிலிருந்து விடுவித்து விடலாம். இப்போது நீங்களே உணரலாம் உங்களது பாதங்கள் இந்த செயல்முறைக்கு முன்பு இருந்ததை விட இப்போது எத்தனை மென்மையானதாக மாறி இருக்கிறதென! அவ்வளவு தான்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/5/w600X390/pedicure_at_home.jpg pedicure with milk https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/dec/05/how-can-we-do-pedicure-at-home-3298267.html
3277974 லைஃப்ஸ்டைல் அழகே அழகு வெண்ணெய் போல வழுக்கும் வெண்ணிற சருமம் பெற ஆர்கானிக் டிப்ஸ்.. RKV Tuesday, November 12, 2019 05:44 PM +0530  

உங்கள் சருமம் இய்றகை முறையில் வெண்ணிறம் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா? 

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக ரசாயன வெண்மையாக்கும் பொருட்களால் உண்டாகக் கூடிய கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம் என்பதால் பலரும் தற்போது ஆர்கானிக் முறைகளையே பின்பற்ற விரும்புகிறார்கள். மிக நியாயமான ஆர்கானிக் டிப்ஸ் சொல்ல வேண்டுமென்றால் வெயிலிலிருந்து விலகி இருப்பது ஒன்றே சருமம் வெண்ணிறம் பெறுவதற்கான   எளிய நடைமுறை என்று சொல்லலாம். ஆனால், அப்படியெல்லாம் இருந்து விட யாராலும் முடியாது எனவே பின் வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

இதில் எவ்விதமான மந்திர ஜாலங்களோ அல்லது மயங்க வைக்கும் தந்திரங்களோ இல்லை. உங்கள் சருமத்தை கருமையாக்காமல் வைத்திருக்கும். எனவே வெண்ணிற சருமத்திற்கான உங்கள் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக வைத்திருங்கள். அதற்கு முன்பு அதைவிட மிக மிக முக்கியமான ரகசியம் ஒன்றையும் நீங்கள் தெரிந்து கொண்டால் நல்லது. ஆம், அது என்னவென்றால் கருமையான சருமமும் அழகானது என்பதே அது! 

இயற்கை பொலிவூட்டி எலுமிச்சை சாறு மூலமாக சரும வெண்மை பெற..

எலுமிச்சை சாறு கரைசலைப் பயன்படுத்துங்கள். எலுமிச்சை சாறு இயற்கையான தோல் ஒளிரும் பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் அமிலங்கள் உள்ளன, அவை சருமத்தை லேசாக வெளுத்து, கருமையான சரும செல்களின் மேல் அடுக்கை வெளியேற்றும். தூய எலுமிச்சை சாறு சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், எலுமிச்சை சாறு பாதிதண்ணீர் பாதி கலந்து எலுமிச்சை சாறு கரைசலைத் தயாரிக்கவும். கரைசலைப் பஞ்சில் தோய்த்து எடுத்து சருமத்தில் அந்தக் கரைசலைப் பூசவும். அதைப் 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பின்னர் அதை வெதுவெதுப்பான
நீரில் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வரை பயன்படுத்துங்கள். இதை அடிக்கடி பயன்படுத்துவதால் தோல் எரிச்சல் ஏற்படலாம். எலுமிச்சை சாற்றை கழுவிய பின் மாய்ஸ்சரைசரைப்
பயன்படுத்துங்கள், ஏனெனில் சாறு உங்கள் சருமத்தை வறட்சியடையச் செய்து விடும்.

இந்த முறையை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குப் பின்பற்றி விட்டுப் பிறகு நீங்கள் முடிவுகளைப் பார்க்கத் தொடங்க வேண்டும். எலுமிச்சை சாறு உடனடி மின்னல் விளைவுகளை வழங்காதுஎன்றாலும், இது மிகவும் பயனுள்ள இயற்கை தீர்வு என்பதில் சந்தேகமில்லை.

வார்னிங்:

உங்கள் முகத்தில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தும் முன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். ஏனெனில், சில நேரங்களில் சிட்ரஸ் பழங்களில் காணப்படும் புற ஊதா கதிர் மற்றும் ஒளிச்சேர்க்கை ரசாயனங்களுக்கு இடையிலான எதிர்வினையால் பைட்டோபோட்டோடெர்மாடிடிஸ் ஏற்படலாம். எனவே சருமத்தில் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துவது இயற்கை முறை.. நல்லது என்றாலும், வெயிலில் வெளியே செல்வதற்கு முன்பு அதை நன்கு கழுவ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 

]]>
Organic Tips to Get Butter like white Skin https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/12/w600X390/butter_like_white_skin.jpg lifestyle skin whitening https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/nov/12/organic-tips-to-get-butter-like-white-skin-3277974.html
3267112 லைஃப்ஸ்டைல் அழகே அழகு அழகு அழகு அத்தனை அழகு! பயனுள்ள 4 அழகுக் குறிப்புகள் உங்களுக்காக Thursday, October 31, 2019 10:35 AM +0530 பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள். ஆனால், இயற்கையான பொருட்களிலேயே அழகினைக் கூட்ட முடியும்.

அந்த வகையில் நெய் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகில் கூட பெரிதும் பயன்படுகின்றது. நெய்யைப் பயன்படுத்தி எளிய முறையில் சரும அழகினை மெருகூட்ட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்:

சிறிதளவு நெய்யைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து சரும வறட்சியை தடுக்கும் பாதுகாப்பான மருந்தாகும்.

5 மேசைக் கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.

சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.

தினமும் படுக்கப் போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
- கவிதாகணேஷ்

]]>
Beauty tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/beautyful_lips.jpg beauty https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/oct/31/beauty-tips-for-women-3267112.html
3261973 லைஃப்ஸ்டைல் அழகே அழகு கருப்பா இருக்கோமேன்னு கவலையா இருக்கா?! RKV Thursday, October 24, 2019 11:54 AM +0530  

கலரில் என்ன இருக்குன்னு சிலர் சொல்லலாம். ஆனால், கருப்பாக இருப்பவர்களில் பலருக்கு தங்கள் நிறம் குறித்த தாழ்வுணர்ச்சி இருந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லாம் மனம் சார்ந்ததென்று எல்லோருக்கும் தெரிந்திருந்தும் இப்படியான மனநிலை சில நேரங்களில் வாய்த்து விடும் போது, அதிலிருந்து விடுபட இயற்கை முறையில் முயலலாம். 

 

அதில் தவறொன்றும் இல்லை. இந்த எளிய அழகுக் குறிப்புகளை பின்பற்றிப் பார்த்து விட்டு பலன் கிடைத்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

இது போன்ற பயனுள்ள அழகுக் குறிப்புகளுக்கு தினமணி யூ டியூப் சேனலுடன் தொடர்பில் இருக்க மறவாதீர். தினமணி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் மறவாதீர்!

 

]]>
Are you worried about being black skin https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/24/w600X390/black5.jpg lifestyle beauty tips https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/oct/24/are-you-worried-about-being-black-skin-3261973.html
3253290 லைஃப்ஸ்டைல் அழகே அழகு வறண்ட சருமம் உள்ளவர்கள் முக வறட்சி நீங்க இதை செய்யுங்கள்! Sunday, October 13, 2019 04:08 PM +0530 முக அழகு முதல் முடியின் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் பயன்படுகிறது ட்ராகன் பழம். இந்தப் பழத்தில் அடங்கியுள்ள புரதம், நீர்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புசத்து, வைட்டமின் பி, கால்சியம் போன்ற ஊட்ட சத்துகளே முக அழகிற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது, என அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

அந்தவகையில், ட்ராகன் பழத்தைக் கொண்டு செய்யப்படும் அழகு குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்:

முகம் பொலிவு பெற:

ட்ராகன் பழத்தை நன்கு அரைத்து முகத்தில் பூசி வந்தால் விரைவில் முகப் பருக்கள் நீங்கி, முகத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். 

ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை: 

தேவையானவை : தயிர் (யோகர்ட்) 1 - தேக்கரண்டி, ட்ராகன் பழம் - பாதி அளவு
முதலில் ட்ராகன் பழத்தை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அவற்றுடன் யோகர்ட் சேர்த்து மறுபடியும் அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்யவும். இதை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் செல்களை சுறுசுறுப்பாக்கி பொலிவு பெற செய்யும். 

இந்தப் பழத்தை ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும் முகம் பளபளப்பாகும். மேலும், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சொரசொரப்பான சருமத்தை மென்மையாக்கி முக வறட்சி நீக்கி, ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும். 

முடி அடர்த்தியாக வளர:
முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த ட்ராகன் பழம் இருக்கிறது. இந்தப் பழம் ஒன்றை எடுத்து, தோலை நீக்கிவிட்டு நன்கு அரைத்து முடியின் அடி வேரில் தடவி வந்தால் முடி உறுதி பெறும். மேலும், முடி உதிரும் பிரச்னையும் நின்று விடும். 

பற்களின் அழகு :

இந்தப் பழத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே, இதனை அடிக்கடி உண்டு வந்தால் பற்கள் வெண்மையாக மாறும். அத்துடன் பற்கள் சார்ந்த கோளாறுகளும் குணமாகும். பற்கள் உறுதியாக இருக்க இந்த ட்ராகன் பழம் பயன்படும். 
- ரிஷி
 

]]>
beauty https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/Beauty-of-Food-Kitchen-Foods-1-630x315.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/oct/13/tips-for-dry-face-to-glow-3253290.html
3195844 லைஃப்ஸ்டைல் அழகே அழகு 60 ல் கூட 16 மாதிரி ஜொலிக்க வைக்க உதவும் எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்! (விடியோ) கார்த்திகா வாசுதேவன் Friday, July 19, 2019 03:45 PM +0530  

எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் சிலருக்கு சருமம் பொலிவா இல்லையேங்கற கவலை எப்பவுமே இருக்கும். காரணம் சருமத்தை சரியா பராமரிக்காததால தான். நம்மை 60 ல கூட 16 ஆக உணர வைக்கக் கூடிய அளவுக்கு அருமையான எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்கள் சிலவற்றை இந்த விடியோ மூலமா இப்ப நாம தெரிஞ்சுக்கலாம்.

 

 

விடியோவில் சொல்லப்பட்டதை கட்டுரை வடிவிலும் அறிந்து கொள்ளலாம்...

பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் அவங்க ஸ்கின் பொலிவா இல்லையேங்கற வருத்தம் ரொம்ப இருக்கும். ஏன்னா, நம்ம ஸ்கின் ஒரு ஷீல்ட் மாதிரி செயல்பட்டு மொத்த உடம்பையும் தூசு, துரும்பு அண்டாம பாதுகாக்கறதால ஸ்கின் எனர்ஜெட்டிக்கா பளிச்சுன்னு இருந்தா தான் நம்மளால உற்சாகமா செயல்பட முடியும்.

அப்படிப்பட்ட ஸ்கின்னை பாதுகாப்பதற்கான எளிய டிப்ஸ் தான் இப்ப நான் சொல்லப் போறேன்.

ஸ்கின் கேரின் முதல் எதிரின்னா அது முகப்பருக்கள் தான். பருக்கள் எப்படி உண்டாகுதுன்னா? நம்ம ஸ்கின்ல இருக்கற சின்னச் சின்ன துவாரங்களில் அழுக்குகள் சேரத் தொடங்கி அது ஏற்கனவே ஸ்கின்ல இருக்கற எண்ணெய்ப்பசையோட சேரும் போது பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கு. முகப்பருக்கள் வரக்கூடாதுன்னு நினைக்கறவங்க தினமும் இரண்டு தடவை குளிக்கனும். குறைந்த பட்சம் நாலஞ்சு தடவையாவது முகத்தைக் குளிர்ந்த தண்ணீர்ல கழுவனும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தா முகப்பருக்களைத் தடுக்கலாம்.

ஸ்கின் எப்பவுமே ஃப்ரிஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி ஃப்ரெஸ்ஸா இருக்கனும்னா நிறைய தண்ணீ குடிங்க. ஒருநாளைக்கு அட்லீஸ்ட் 3 லிட்டர் தண்ணீராவது குடிச்சா தான் ஸ்கின்ல இருக்கற நச்சுப்பொருட்கள் நீங்கி நாள் முழுக்க ஸ்கின் பொலிவா இருக்கும்.

ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளிப்பழங்களை தினமும் ஒருமுறையாவது சாப்பிடுங்க. அப்படியே சாப்பிட்டாலும் சரி இல்லை ஜூஸா குடிச்சாலும் சரி. எப்படி எடுத்துக்கிட்டாலும் அது ஸ்கின்னுக்கு நல்லது தான்.

வெஜிடபிள்ஸ்ல கேரட், பீட்ரூட், சுரைக்காய், முட்டைக்கோஸ், நூல்கோல், முள்ளங்கி, டர்னிப், சவ்சவ் காய்களை எல்லாம் வாரம் தவறாம சாப்பாட்டுல சேர்த்துடுங்க. அதெல்லாம் ஃபைபர் ரிச் ஃபுட். ஸ்கின் கேருக்கு ரொம்ப ரொம்ப நல்லது.


அலர்ஜியால ஸ்கின்ல சிலருக்கு சின்ன சின்ன கொப்புளங்கள் வரும். அந்தக் கொப்புளங்களைத் தடுக்கனும்னா வேப்பிலைக் கொழுந்தை அரைச்சு கொப்புளங்கள் மேல தடவலாம். வந்த சுவடே இல்லாம கொப்புளங்கள் மறைஞ்சுடும்.

எப்பவுமே நாம சாப்பிடற சாப்பாடு எல்லாச் சத்துக்களும் நிறைந்த பேலன்ஸ்டு டயட்டா இருந்தா அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லது/

ஸ்கின் கேர் மேல ரொம்ப அக்கறை இருக்கறவங்க தயவு செஞ்சு வாரத்துல மூணு நாள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுங்க. கீரை சாப்பிட்டா இயற்கையாவே ஸ்கின் பளபளப்பா ஆயிடுமாம்.

தினமும் தூங்கப் போறதுக்கு முன்னால சுத்தமான ஆலிவ் ஆயில் வச்சு முகம், கை, கால்கள்னு மிருதுவா மசாஜ் பண்ணிக்கிட்டு படுத்து தூங்குங்க. காலையில வழக்கமா நீங்க யூஸ் பண்ற மைல்ட் சோப் வச்சு முகம் கழுவித் துடைச்சா போதும் முகம் சூப்பர் சாஃப்டா ஆயிடறதோட மாசு மரு இல்லாம பளிச்சுன்னும் இருக்கும்.

வினிகர் ஒரு பங்கு, தண்ணீர் ஒரு பங்கு சேர்த்து உடம்புல தேய்ச்சுக் குளிச்சா ஸ்கின்னுக்குப் பாதிப்பை ஏற்படுத்தற நச்சுக்கிருமிகளைத் தூர விரட்டலாம்.

தினமும் தூங்கறதுக்கு முன்னால  ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் சாப்பிட்டுப் படுங்க. அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லதாம்.

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான டிப்ஸ் ஒன்னு இருக்கு. அது என்னன்னா? நம்ம ஸ்கின் இயற்கையாவே ரொம்ப சாஃப்டானதுங்கறதால கூடுமான வரை  கெமிக்கல்ஸ் கலந்த ஸ்கின் கேர் & அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தறதைத் தவிர்த்துட்டு நேச்சுரல் ஸ்கின் கேர் பொருட்களான பயத்தமாவு, கடலை மாவு, பீர்க்கை ஸ்கிரப்பர், கற்றாழை ஜெல், பழங்களில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதெல்லாம் ஸ்கின்னுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்க ரெகுலரா ஃபாலோ பண்ணாலே போதும். உங்க ஸ்கின் 60 ல கூட 16 மாதிரி பளிச்சின்னு மினுங்கும்.

ஓகே வியூவர்ஸ்... அப்புறம் இந்த விடியோ பிடிச்சிருந்தா தினமணி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீங்க.

அப்போ தான் இது மாதிரியான சுவாரஸ்யமான விடியோக்களை உங்களால தொடர்ந்து பார்க்க முடியும்.

நன்றி 


 

]]>
SKIN CARE TIPS, SKIN CARE VIDEO, ஸ்கின் கேர் விடியோ, சருமப் பாதுகாப்பு டிப்ஸ், ஸ்கின் கேர், லைஃப்ஸ்டைல் அழகே அழகு, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/19/w600X390/skin.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2019/jul/19/even-in-the-age-og-60-this-help-to-shine-like-16-years--skin-care-tips-video-3195844.html
2995426 லைஃப்ஸ்டைல் அழகே அழகு முகச் சுருக்கம் நீங்கி பொலிவுடன் முகம் ஜொலி ஜொலிக்க! Wednesday, September 12, 2018 06:04 PM +0530 நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் சருமத்திற்கு மெருகூட்டக் கூடும். அதனால் ஆரம்பித்திலேயே கவனித்தால் சுருக்கங்கள் வருவதை தள்ளிப் போடலாம். 50 வயதிலும் இளமையாக தெரியலாம்.

பீட்ரூட் : பீட்ரூட்டை அரைத்து அதன் விழுதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்தால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து சருமம் இளமையாகும்.

சந்தனப் பொடி : சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் மூன்றும் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். சில வாரங்களில் 5 வயது குறைவாக தெரிவீர்கள்.

சுடு நீர் : சுடு நீரில் குளிப்பதை தவிருங்கள். இவை சரும துவாரங்களை சுருங்கச் செய்வதோடு விரைவில் சுருக்கங்களை தந்துவிடும். அதிக நேரம் சுடு நீரில் குளிப்பதாலும் சுருக்கங்கள் உண்டாகும். பச்சைத் தண்ணீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

உணவு : வைட்டமின் ஏ, சி, ஈ அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சுருக்கங்கள் ஏற்படாது. ஏற்கெனவே உண்டான சுருக்கங்களும் நாளடைவில் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

கேரட் சாறு: கேரட் சாறு எடுத்து அதனை சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும். மேலும் நிறமும் மிளிரும்.

ரோஜா இதழ்கள்: ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் சுருக்கங்கள் மறைந்து புதுப் பொலிவு உண்டாகும்.
 - முத்தூஸ்.

]]>
அழகு டிப்ஸ், skin, சருமம், age, பீட்ரூட், age gracefully https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/6/w600X390/11.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/sep/06/முகச்-சுருக்கம்-நீங்கி-பொலிவுடன்-முகம்-ஜொலி-ஜொலிக்க-2995426.html
2985396 லைஃப்ஸ்டைல் அழகே அழகு பெண்களின் முகம் மாசு மருவின்றி ஜொலிக்க பயனுள்ள டிப்ஸ்! பா.பரத்  Wednesday, August 22, 2018 12:56 PM +0530 பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.  கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு, நல்ல வைத்தியம் கஸ்தூரி மஞ்சள்.  

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போகும் முன் 1 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில்  குழைத்து முகத்தில் தடவி சிறுது நேரம் வைத்திருந்து பின்னர். நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சளும்  உடனடியாக  முகத்தில் உள்ள முடிகளை  நீக்கி விடாது.

நாளடைவில் தான் போக்கும்; ஆனால், புதிதாக முடிகளை வளர விடாது. அதனால், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். மேலும், நல்ல வழுவழுப்பான முக அழகையும் பெறலாம்.

சரும பிரச்னைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசி வர வேண்டும் அல்லது குளிக்க போகும் முன் கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன்  கஸ்தூரி மஞ்சள் தூளை பூசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் தினமும் நேரம் கிடைக்கும் போது முகத்தில் தடவி வைத்திருந்து நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு  செய்து வர  சரும பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

]]>
skin care, சரும பராமரிப்பு, face, kasthuri manjsal, கஸ்தூரி மஞ்சள், நாட்டு மருந்து கடை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/22/w600X390/facial-waxing-864x576.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/aug/22/ஆண்கள்-இதைப்-படிக்க-வேண்டாம்-2985396.html
2985406 லைஃப்ஸ்டைல் அழகே அழகு கவர்ச்சி மட்டுமே அழகல்ல! புகைப்பட நிபுணர் மிஹேலா நோராக் பேட்டி! (படங்கள்) பனுஜா DIN Wednesday, August 22, 2018 12:54 PM +0530 இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரோமானியாவைச் சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் மிஹேலா நோராக் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு உலகை சுற்ற கிளம்பினார்.  

பல நாடுகளில்  பெண்களின் அழகில் இருக்கும் வேற்றுமைகளில் ஒற்றுமையை புகைப்படங்களாக வார்த்து  The  Atlas  of  beauty என்ற  தொகுப்பை வெளியிடவே இந்த உலக சுற்றுப் பயணம்.  

மிஹேலா ஐம்பத்தி மூன்று நாடுகளை சுற்றி ஆயிரக்கணக்கான இளம், வயோதிக பெண்களை ஆயிரக்கணக்கில் படங்கள் எடுத்து அதில் ஐநூறு படங்களைத் தெரிவு செய்து  தொகுப்பினை  வெளியிட்டுள்ளார்.  மிஹேலா இந்தியா வரவும் மறக்கவில்லை.

தொகுப்பிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு.  ஒவ்வொரு படம் குறித்தும் எங்கே எப்போது படம் எடுக்கப்பட்டது என்ற விளக்கமும் உண்டு. பாடகி, ஹெலிகாப்டர் பைலட், காய்கறி விற்பவர், புற்றுநோய் வந்து குணமானவர், கவிதாயினி, செவிலி, வீட்டுத் தலைவி என்று பல தரப்பட்டவர்களை  படம் எடுத்திருக்கிறார். 

'பெண்களை காட்சிப் பொருளாக்கி, பாலியல் பண்டமாக காண்பிக்கப்படுவதுதான் அழகு என்று சொல்லப்படுகிறது. அழகான பெண் என்று கூகுளில் தேடினால் கவர்ச்சியான பெண்களின் படங்கள்தான் வரும்.

அழகு என்பதின் பொருளே மாறிவிட்டிருக்கிறது. கவர்ச்சியும் அழகுதான். ஆனால் கவர்ச்சி மட்டுமே அழகல்ல. அழகில் பாலியல் கவர்ச்சியை பார்க்கும் அணுகு முறைதான் அதிகமாக உள்ளது. பெண்கள் விரும்பியும் விரும்பாமலும் அவை நடந்து விடுகின்றன. என்னைக் கவர்ந்த பெண்களைப் படம் பிடித்திருக்கிறேன். அழகு என்பதன்  உண்மையான பொருளினை  விளக்கவே  இந்த   தொகுப்பு.   

'ஒரு புகைப்படம் எடுப்பதில் சில நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவழித்தேன். இந்தத் தொகுப்பின் அட்டைப் படத்தில் இருக்கும் பெண் இந்தியர். காசியில் கங்கையில் அந்தப் பெண் பூஜை செய்யும் போது எடுக்கப்பட்டப்  படம்.  அதிகாலையில் கங்கைக்கு வந்திருந்த அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு பல படங்களை எடுத்து முடித்தேன்.

இந்தத் தொகுப்பு மூலமாக நான் பெரிதும் பக்குவப்பட்டிருக்கிறேன். பல நாட்டுப் பெண்கள் குறித்து பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

நான்  இயல்பாகவும்  எளிமையாகவும்  இருக்கும் சாதாரண சாமான்ய பெண்களின் வித்தியாசமான அசாதாரண அழகினை கூடுமானவரை ஒப்பனை இல்லாமல் பிரதிபலித்திருக்கிறேன்.

அதனால் படங்களை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியம். செயற்கைத்தனம் எனது படங்களில் சற்றும் இல்லாததால் என் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்.

சில பெண்கள்  லேசாக மேக்கப்  செய்து கொண்டு வந்தார்கள். அது அவர்கள் விருப்பம். நான் அதற்கு ஒத்துப் போனேன். அவர்களது விருப்பங்கள் மதிக்கப்பட  வேண்டாமா?

சில பெண்களை படம் எடுக்கும் போது வீட்டில் அனுமதி பெற்று காமிரா முன் நின்றார்கள். சிலர் 'படம் எல்லாம் பிடிக்க வேண்டாம்' என்று ஒதுங்கி விட்டார்கள். பெர்லின் நகரில் என்னை ஒரு பெண் சந்தித்தாள்...  நான் பெர்லின் வந்த நோக்கத்தைச் சொன்னதும்...

' உங்களுக்கு ஒரு  யோசனை' என்றாள். நல்ல தரமான புதிய காமிரா வாங்கச் சொல்லப் போகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் சொன்ன  யோசனையைக் கேட்டதும் நான் கலகலவென்று சிரித்தே விட்டேன். நல்ல ஷூ ஒன்றை வாங்குங்கள்.. ஏனென்றால் நீங்கள் இன்னும் பல நாடுகள் சுற்ற வேண்டும்...பல நாட்டுப் பெண்களை சந்தித்து படங்களை  காமிராவினால் பிடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் நடை நடை என்று நடக்க வேண்டும்... அதனால் சொல்கிறேன்.. நல்ல ஷூ வாங்கிக் கொள்ளுங்கள்' என்றாள். 

அழகு என்பது இயல்பாக  இருப்பதுதான். இயல்பாக வெளிப்படுவதுதான். எனது தொழில் அந்த இயல்பை பதிவு செய்வது. பெண்கள் வல்லமை கொண்டவர்கள். பன்முகத் தன்மையைக் கொண்டிருப்பவர்கள்.

அதிலும் இந்திய பெண்கள் தைரியமும் அழகும் கொண்டிருப்பவர்கள். இந்தப் பண்புகளை மீண்டும் உலகுக்கு  உரக்கச்   சொல்வதற்காக   வரும் செப்டம்பர் மாதம் என்னுடைய 'த அட்லஸ் ஆஃப் ப்யூட்டி' இரண்டாவது பாகத்தை பிரசுரிக்க உள்ளேன்''  என்கிறார்  மிஹேலா நோராக்.

மிக்கேல் எடுத்த சில புகைப்படங்கள் :

**

**

**

**

**

**

**

**

**

**

**

**

**

 

]]>
mihaela noroc, The  Atlas of  beauty, romania photographer, women across the world, beauty, பெண்கள், மிஹேலா நோராக் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/22/w600X390/beauty.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/aug/22/the--atlas-of--beauty-a-photography-book-by-mihaela-noroc-2985406.html
2977923 லைஃப்ஸ்டைல் அழகே அழகு உங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக வேண்டுமா? இதோ டிப்ஸ்  - முத்தூஸ் Friday, August 10, 2018 05:49 PM +0530 ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள், மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது. ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம்:
 
ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும்.
 

முகப்பருவைத் தடுக்க

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும். முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.
 

 பளிச் தோற்றத்திற்கு

ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர, அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.
 

தோல் வறட்சி நீங்க
 ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர . மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.
 

முகத்தில் உள்ள கருமையை அகற்ற

ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவி, காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும்.
 

ஜொலிப்பை பெற

திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால், அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும். ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.
 

கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள், கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர, ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.
 

]]>
facial, apple, pimple, ஆப்பிள், அழகு, முகப் பொலிவு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/10/w600X390/Tamannaah-Bhatia-Entertainment.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/aug/10/உங்கள்-முகம்-தெய்விக-அழகுடன்-தேஜஸாக-வேண்டுமா-இதோ-டிப்ஸ்-2977923.html
2969597 லைஃப்ஸ்டைல் அழகே அழகு இனி நீங்கள் ப்யூட்டி பார்லரைத் தேடி அலைய வேண்டாம்! உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் மொபைல் பார்லர்! - கண்ணம்மா பாரதி Saturday, July 28, 2018 05:38 PM +0530 ஒரு ஃபோன் செய்தால் போதும். பால், காய்கறி, பலசரக்கு, உணவு, குடிதண்ணீர், மருந்து வகையறாக்கள் வீட்டுக்கு உடனே வந்துவிடும். அப்படி காலமும் அதன் கோலமும் மாறியிருந்தாலும், போன் செய்தால் பியூட்டீஷியன் வருவார்... ஆனால் "அழகுநிலையம்' வீடு தேடி வருமா..? "வரும்' என்கிறார் ஸ்ரீதேவி.

வீட்டில் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் என்றால் பியூட்டீஷியன் வீட்டுக்கு வந்து அலங்காரம் செய்துவிட்டுப் போவார். வீட்டில் விசேஷம் இல்லாத போது, பொதுவாக நாம்தான் முடி வெட்ட அல்லது தலை முடியை கூந்தலைச் சீர் செய்து கொள்ள, ஃபேஷியல், கூந்தலை சுருட்டிவிட, கோடு போல நீட்ட , சாயம் பூசிக் கொள்ள, புருவங்களை சீராக்க, பிளீச்சிங் செய்ய.. அழகுநிலையம் நோக்கிப் போக வேண்டும். வீட்டிலும், வெளியிலும் வேலைப் பளு உள்ள ஆண், பெண்களுக்கு பல்வேறு சிகை, முக அலங்காரம் செய்து கொள்ள விருப்பம் இருந்தாலும், நேரம் கிடைக்காததால் "நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள். அப்படியே அழகு நிலையம் தேடிச் சென்றாலும், பல நேரங்களில் அரைமணி நேரமாவது காத்திருக்க வேண்டி வரும். 

இந்த நடைமுறை சிரமங்களை தவிர்த்து, எப்போது வேண்டுமோ அப்போது போன் செய்தால் உடனே நடமாடும் அழகுநிலையத்தை வீட்டுக்கு கொண்டுவந்து அழகு சேவைகளைச் செய்து முடிக்கிறது ஸ்ரீதேவியின் "கியூ 3 சலூன்'. டெம்போ வாகனத்தை ஒரு நட்சத்திர அழகு நிலையமாக மாற்றி கோவை நகரை வலம் வரச் செய்திருக்கிறார் ஸ்ரீ தேவி.

அழகு தொடர்பான அனைத்து சேவைகளும் மெனிக்யூர், பெடிக்யூர் உட்பட எங்கள் அழகு நிலையத்தில் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏசி செய்யப்பட்டு, டிவி, சொகுசு இருக்கைகள், வருடும் இன்னிசை... தரமான அழகு பொருள்கள், கூந்தலைக் கழுவ தண்ணீர் வசதி... இருக்கும் Q3 அழகு நிலையத்தின் கட்டணங்களும் கட்டடங்களில் இயங்கிவரும் அழகு நிலையங்களின் கட்டணங்களும் ஏறக்குறைய ஒன்று போலவே அமைந்திருக்கின்றன. சிகை அலங்காரத்திற்காக இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும், நடமாடும் அழகு நிலையத்தில் பணி புரிகின்றனர். ஸ்ரீதேவி சொல்கிறார்: "கல்லூரியில் படிக்கும் போதே புறத் தோற்றத்தை மேன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வு வந்துவிடும். அது எனக்கும் வந்தது. படிப்பு முடிந்ததும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை. பிறகு திருமணம். மகன் பிறந்தான். சுமார் ஏழாண்டுகள் பணிபுரிந்ததில், புறத் தோற்றத்தை ரம்மியமாக வைத்துக் கொள்வதில் பணிக்கு குறிப்பாக ஐடி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆண்களிடத்திலும் இந்த விழிப்புணர்வு வந்துள்ளது. அதனால் அழகுநிலையங்களுக்கு நல்ல வருமானம். அதனால் இந்தத் துறையில் நுழைய தீர்மானித்தேன். மும்பையில் இரண்டாண்டு காலம் அழகைப் பராமரிக்கும் கலையைப் பயின்றேன்.

 2008- இல் கோவையில் சலூன் ஒன்றைத் தொடங்கினேன். அந்த அனுபவத்தில் அழகு நிலையத்திற்கு வந்து போவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உணர்ந்தேன். வீட்டிலிருந்து அழகுநிலையத்திற்கு வர ஆகும் ஸ்கூட்டி, ஆட்டோ, கால்டாக்சி செலவு .. சின்னதா மேக்கப் போட்டுக் கொள்ளணும்... எல்லாவற்றிற்கும் மேலாக நேரம் வேணும். இவற்றைத் தவிர்க்க அழகுப்படுத்திக் கொள்ளும் சேவைகள் தேவை என்பவர்களுக்கு வீட்டிற்கு அருகே, அல்லது வீட்டு காம்பவுண்டுக்குள் நடமாடும் அழகுநிலையத்தைக் கொண்டு சென்றால் என்ன என்று மாற்றி யோசித்தேன். Q3 நடமாடும் அழகுநிலையம் பிறந்தது. ஒரே நேரத்தில் மூன்று பேர் செய்து கொள்ளும் வசதி உள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பமே நேரவிரயமின்றி சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம். 

பெண்கள் கல்லூரியின் விடுதிகளில் விடுமுறை நாட்களில் அழகு நிலையம் போக பல மாணவிகள் அனுமதி கேட்கிறார்கள். மாணவிகள் வெளியே போய் வருவதில் பாதுகாப்பு பிரச்னை, அப்படி வெளியே போவதற்கு அனுமதி தருவதில் உள்ள தயக்கம் போன்ற சிரமத்தைத் தவிர்க்க எங்கள் நடமாடும் அழகு நிலையம் உதவுகிறது. அழைப்பின் பேரில் எங்கள் நடமாடும் அழகுநிலையம் மாணவிகள் விடுதிக்கே செல்கிறது. 

திருமணங்களின் போது மணமகன் மணமகள் இவர்களுக்கு அலங்காரம் செய்வதுடன், திருமணத்தில் கலந்து கொள்ளும் இரு வீட்டார் பெண்களுக்கும் கல்யாண மண்டபத்தில் அலங்காரம் செய்து கொள்ளும் வாய்ப்பினை நடமாடும் அழகு நிலையம் வழங்குகிறது. 

கோவையில் நடமாடும் அழகுநிலையத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இன்னொரு நடமாடும் அழகுநிலையம் விரைவில் அறிமுகமாகும். கோவையை அடுத்துள்ள நகரங்களுக்கும் நடமாடும் அழகுநிலையங்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்'' என்கிறார் ஸ்ரீதேவி.

]]>
mobile beauty parlour, beauty parlour, மொபைல் அழகு நிலையம், அழகு நிலையம், ப்யூட்டி பார்லர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/28/w600X390/8b1c0fc203401d3311ac90b56b9f51a6.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/jul/28/mobile-beauty-parlour-2969597.html
2820191 லைஃப்ஸ்டைல் அழகே அழகு குதிரைவால் போன்ற நீளமான பட்டுக்கூந்தலுக்கு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் போதும்! உமா பார்வதி Monday, December 4, 2017 04:09 PM +0530  

பளீரெனும் அழகும், பளபளப்பான முகமும், ஆரோக்கியமான கூந்தலையும் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? இந்த இரண்டு விஷயங்களில்தான் பல பெண்கள் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடுகிறார்கள். பார்லர்களுக்குச் சென்றும், பல லட்சம் ரூபாய் செலவழித்து முகச் சீரமைப்பு செய்து கொள்ளும் சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இவற்றைவிட சிறந்த வழிமுறை அவரவர் வீட்டிலேயே உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

எளிமையான அதன் பெயர் விளக்கெண்ணை. நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை மருத்துவத்துக்கும் இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். காலம் காலமாக மென்மையான சருமத்துக்கு விளக்கெண்ணையத்தான் பயன்படுத்தினார்களாம்.

'போடா விளக்கெண்ணை' என்று யாராவது திட்டினால் அவர்கள் உங்களை மட்டம் தட்டுவதாக நினைக்க வேண்டாம். விளக்கெண்ணையில் எத்தனைவிதமான பலன்கள் உள்ளன என்பதை அவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். அது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல இயற்கையான அழகுக்கும் மிகச் சிறந்ததாகும்.

காரணம் அதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.

விளக்கெண்ணையைப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வது குறையும், இளநரை தடுக்கப்படும், மண்டையில் உள்ள பிரச்னைகள் நீங்கி தலைமுடி நன்கு வளரும்.

சருமத்தைப் பொருத்தவரையில், பருக்கள் வராமல் முகத்தைப் பாதுகாக்கும், வயதாகையில் முகச்சுருக்கம் ஏற்படாமல் காக்கும். இவைத் தவிரவும் விளக்கெண்ணையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், செழிப்பான அழகுக்கும் தினமும் விளக்கெண்ணையைப் பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். அவர்கள் பரிந்துரைத்தவை :

1. பருக்கள் வராமல் தடுக்கும் 

அழகு சாதனப் பொருட்களை வாங்கி, அடிகக்டி பயன்படுத்துவதில் உள்ள பிரச்னை என்னவென்றால் அது நாளடைவில் உங்கள் சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்த்தன்மையை உறிஞ்சிவிடும். வறட்சியான சருமத்தில் மீண்டும் எதாவது க்ரீம்களைத் பயன்படுத்துவதால் பருக்களை ஏற்படுத்திவிடும்.

ஆராய்ச்சியே செய்யாமல் செயற்கையான க்ரீம்களை நம்பி முகத்தைக் கொடுக்கும் பலர் விளக்கெண்ணையை முகத்தில் தேய்ப்பதற்கு தயங்குவார்கள். அது பிசுபிசுவென்று இருக்கிறது. அதன் வாசனை குமட்டுகிறது என்றெல்லாம் காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்காமல் அதன் பலன்களை நினைத்துப் பார்த்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள். இயற்கையாக சருமத்துக்கு சமச்சீரான போஷாக்கை தரவல்லது விளக்கெண்ணை மட்டுமே. 

சில துளி விளக்கெண்ணையை எடுத்து, உங்கள் முகம் முழுவதும் படரும்படி மென்மையாக தேய்த்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அது உங்கள் முகத்தை ஊறினாலும் நல்லதுதான். காலையில் எழுந்தவுடன் முகத்தை சுத்தமான நீரால் கழுவிவிடுங்கள். இரவு முழுவதும் ஊற வைக்க முடியவில்லை என்றால்  ஒரு மணி நேரம் ஊற வைத்தபின், வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். இதன்மூலம் முகத்திலுள்ள மென்துவாரங்கள் திறந்து விளக்கெண்ணையைச் சருமம் நன்றாக உறிந்துக் கொள்ளும்.

2. தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்

எந்த எண்ணெயாக இருந்தாலும் அதை ரெகுலராகப் பயன்படுத்தும்போது கூந்தலுக்கு போஷாக்கினைத் தரும். அது விளக்கெண்ணையாக இருந்தால் கூடுதல் பலன்களைத் தரும் என்பது உண்மை. காரணம் விளக்கெண்ணையில் மற்ற எண்ணெய்களில் இல்லாத ரிஸினொலைக் எனும் ரசாயனம் உள்ளது. மேலும் ஒமேகா 6 கொழுப்புச்சத்தும் அதிகளவில் பொதிந்திருப்பதால், தலையில் தேய்க்கும் போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

மேலும் விளக்கெண்ணை தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. தினந்தோறும் சிலருக்கு கொத்து கொத்தாக தலைமுடி உதிரும். தொடர்ந்து விளக்கெண்ணையைத் தேய்த்து வர கைமேல் பலனைக் காண்பார்கள்.  

வாரம் ஒரு முறையேனும் இந்த எளிய குறிப்பைப் பின்பற்றுங்கள் :

 • விளக்கெண்ணையை வெந்தயப் பொடியுடன் கலந்து கொள்ளவும்.
 • தலை முழுவதும் படும்படி நன்றாக தேய்த்து ஊற வைக்கவும்.
 • மெல்லிய துணியால் தலையைக் கட்டியபின், ஆவி பிடிக்கவும்.
 • அதன்பின் மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசவும். 

இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி உதிர்வது குறைவதுடன் அதன் வேர்க்கால்கள் பலம் பெறும்.

3. முகச் சுருக்கத்தை தடுக்கும்
 
விளக்கெண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். சருமம் மென்மையாகவும் புத்துனர்ச்சியுடன் இருக்கும். காரணம் விளக்கெண்ணெய் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் ஆற்றலை உடையது.

ஏற்கனவே முகச் சுருக்கம் இருந்தால் கூட தினமும் இரவு சில துளிகள் விளக்கெண்ணெயை சுருக்கங்களில் தடவி ஊற வைத்தபின் காலையில் கழுவிவர நல்ல பலன்களைத் தரும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் வயிற்றுச் சுருக்கத்தையும் விளக்கெண்ணையைத் தொடர்ந்து தடவி வர விரைவில் சுருக்கங்கள் நீக்கும்.

4. கண்களில் ஏற்படும் கட்டியை குணப்படுத்தும்

விளக்கெண்ணெயில் மருத்துவ பலன்களும் அதிகம் உள்ளது. கண்களில் ஏற்படும் சிறு கட்டிகளுக்கு விளக்கெண்ணெய் சிறந்த மருந்தாகும். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து ஒரு துளி விளக்கெண்ணையை காலை மட்டும் இரவில் கட்டியில் விட்டு வந்தால் கட்டி குணமாகும். கட்டியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பும் நீங்கி, குளிர்ச்சியாக உணரச் செய்யும்.

5. புண்களை ஆற்றும்

வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரித்தால், அது மலச்சிக்கலை ஏற்படுத்தி அடிக்கடி அடிவயிற்றில் வலியைத் தரும். பாட்டி வைத்தியம் செய்வது போல் தொப்புளில் சிறிதளவு விளக்கெண்ணெயைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். சித்த மருத்துவரின் பரிந்துரைப்படி வரையறைக்கப்பட்ட அளவில் விளக்கெண்ணையைக் குடிப்பதாலும் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுதலைக் கிடைக்கும். விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும்,  நரம்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் பயன்படும். பூச்சிக்கடி அல்லது அலர்ஜியால் உட‌லி‌ல் ஏற்படும் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணை மருந்தாகும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே இதனை பழக்கிவிட்டால் அவர்கள் வளரும் போது, அதன் பயன்களை முழுவதும் அடையலாம். 
 

]]>
skin care, தலைமுடி பராமரிப்பு, Castor Oil, hair care, விளக்கெண்ணெய், சருமம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/hair.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/dec/04/5-incredible-castor-oil-benefits-for-beautiful-skin-and-hair-2820191.html
2759260 லைஃப்ஸ்டைல் அழகே அழகு உங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டுமா? Friday, September 22, 2017 11:09 AM +0530  

சிலருக்கு முகம் அன்றலர்ந்த தாமரை போல இருக்கும். ஆனால் உதடுகள் பொலிவின்றி கருமையாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதட்டைச் சுற்றி கருமையாக இருக்கும். இத்தகைய கருமை நீங்கி உதடுகள் சிவப்பாகவும் சிறப்பாகவும் தோற்றம் அளிக்க இதோ சில டிப்ஸ்

உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனை கலந்து உதட்டில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். தினமும் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும். பாலாடை மற்றும் நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்

உடலில் பித்தம் அதிகரித்தால் உதடு கருமையாகும் என்கிறது சித்த மருத்துவம். சிலர் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்த நாக்கு நுனியைப் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யக் கூடாது. அது உதட்டின் அழகைக் கெடுத்துவிடும். உதடு வறட்சியடையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதையெல்லாம் மீறி உதடு கருத்தால் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம்

வறண்ட தன்மை நீங்கி ஈரப்பதத்துடன் ஜொலிக்க தினமும் உதட்டின் மேல் சிறிதளவு வெண்ணெயை தடவலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கி மென்மையாகும்.

எலுமிச்சை சாறில் சிறிதளவு மஞ்சள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவவும். தினமும் இதைச் செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

தினமும் இரவு சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளைச் சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் தயிரை உதட்டில் தடவி வாருங்கள். தயிருக்கு பதில் யோகர்ட்டும் தடவலாம். 

]]>
lips, pink lips, உதடுகள் சிவக்க, உதடு கருமை நீங்க https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/22/w600X390/Beautiful-Lips.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/aug/21/how-to-retain-the-pink-lips-2759260.html
2775921 லைஃப்ஸ்டைல் அழகே அழகு உங்கள் முக அமைப்புக்குப் பொருத்தமான பெஸ்ட் ‘ஐப்ரோ’ த்ரெட்டிங் டிப்ஸ்...  ஹரிணி Tuesday, September 19, 2017 12:30 PM +0530  

இந்தியப் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், அந்த அழகு தங்களுக்குப் பொருத்தமான வகையில் தான் அமைந்திருக்கிறதா? என்று அறிந்து கொள்வதில் இருப்பதில்லை. பெரும்பாலும்  'பெர்ஃபெக்ட் பியூட்டி 'என்று வெகு சிலரிடமே சொல்ல முடிகிறது. காரணம் அழகென்பது அவரவர் சொந்தப் பார்வை சார்ந்த அதாவது மனம் சார்ந்த விஷயம் என்பதாலும் தான்.

சிலருக்கு குளிர்நீரில் முகம் கழுவித் துடைத்து, நெற்றிக்குச் சின்னதாகப் பொட்டிட்டு... நீளமான கேஷத்தை வெறுமே ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டினால் போதும். அந்தத் தோற்றமே அவர்களை அப்சரஸ்களாகக் காட்டி விடக்கூடும். சிலருக்கோ தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது மெனக்கெட வேண்டியதாக இருக்கும். இது அவரவர் தோற்றப் பொலிவைப் பொருத்த விஷயம். யெஸ்... அஃப்கோர்ஸ் சில நேரங்களில் மனப் பொலிவைப் பொருத்ததும் தான்.

சரி இப்போது பார்லருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையுமே, நமக்கு மிகக் குறைந்த செலவை மட்டுமே இழுத்து வைக்கக் கூடிய  ‘ஐப்ரோ’ திரெட்டிங் குறித்துக் கொஞ்சம் பார்ப்போம். 

இப்போதையா பார்லர்களில் திரெட்டிங் செய்து கொள்வதற்கென அணுகினால், அதற்கான மாதிரிகளைப் பார்த்து தேர்ந்தெடுக்க எந்த விதமான கேட்லாக்குகளும் தரப்படுவதில்லை. ஆனால் பார்லர்கள் அரிதாக இருந்த காலங்களில் ஹேர் கட் முதல் ஐப்ரோ த்ரெட்டிங் வரை அனைத்துக்குமே கேட்லாக்குகள் இருந்தன. கஸ்டமர்கள் அவற்றைப் பார்த்து தங்களது முக அமைப்புக்குத் தக்கவாறு ஹேர் கட் மற்றும் ஐப்ரோ த்ரெட்டிங் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போது பார்லர்களின் அழகுக் கலை நிபுணர்கள், கேட்டலாக்குகள் எதுவுமின்றி வருகின்ற கஸ்டமர்களின் முக அமைப்பைக் கிரகித்து அதற்கு ஏற்றாற் போன்ற ஐப்ரோ த்ரெட்டிங்கை அவர்களே தீர்மானித்து விடும் அளவுக்கு வல்லவர்களாகி விட்டார்கள் போலும்! அதனால் தான் இப்போதெல்லாம் பார்லர்களில் ஐப்ரோ கேட்டலாக்குகள் கேட்டால் ‘இல்லை’ என்ற் பதிலே கிடைக்கிறது.

சரி அதை விடுங்கள்;

தினமணி வாசகிகள், இங்கே நாங்கள் தரவுள்ள கேட்டலாக் புகைப்படத்தை பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டு அவற்றை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனெனில். ஐப்ரோ @ புருவம் முகத்தின் மிக முக்கியமான அழகு அம்சங்களில் ஒன்று. ஆணோ, பெண்ணோ அவர்களது முகத்தின் கம்பீரத்தை புருவங்களே தூக்கி நிறுத்துகின்றன. ஆகவே அவற்றை அழகு படுத்திக் கொள்வதில் கொஞ்சம் மெனக்கெட்டால் தவறேதுமில்லை.

பெண்களின் முக அமைப்பை ஆறு வகையாகப் பிரிக்கலாம்;

1. நீள் வட்டமுகம்

நீள்வட்ட முகம் கொண்டவர்களுக்கு முன் நெற்றிப் பகுதி, முகவாய்ப் பகுதியைக் காட்டிலும் அகலமாக இருக்கும், எனவே இத்தகைய முக அமைப்பு கொண்டவர்கள் மேற்கண்ட விதமாக, மெல்லிய வில் போன்று புருவத்தைத் திருத்துவதைக் காட்டிலும் சற்றே அடர்த்தியாகத் தொடங்கி கண் பாவைக்கு நேர் மேலே வளைத்து முடிவில் மெல்லிய கோடாக  இழுத்துத் திருத்தினால் பார்க்க அழகாக இருப்பதோடு, அது இந்த வகை முகத்திற்குப் பொருத்தமாகவும் இருக்கும். இந்த வகை த்ரெட்டிங்கில் துவக்கத்தை விட முடிவில் நீளம் அதிகமாக இருக்கலாம்.

2. வட்ட முகம்

நிலவைப் போன்ற வட்ட முகம் என்பார்கள்... அந்த வகையான முகத்தில் முகத்தின் நீளத்துக்கு ஏற்ப அகலமும் அதே விதமாக அமைந்திருக்குமென்பதால் கன்னப் பகுதி அதிகமாக இருக்கும், நெற்றியும் அகலமாக இருக்கும். முகமே விரிந்து மலர்ந்த தாமரை போல அகண்ட தோற்றம் தருவதால் புருவங்கள் கண் விழிக்கு நேர்மேலே ஆரம்பமும், முடிவும் இணையும் இடத்தில் வளைவு வரும் வண்ணம் த்ரெட்டிங் செய்து கொண்டால் அழகாக இருக்கும்.

3. குதிரை போன்ற நீள முகம்...

இந்த வகை முகத்தில் முன்நெற்றிப் பகுதியைப் போலவே முகவாய்ப் பகுதியும் நீளமாகவே அமைவதால், புருவங்களை வில்லாய் வளைக்காமல் நீளக் கோடிழுத்ததைப் போலத் திருத்தி முடிவில் மட்டும் சன்னமாக வளைத்து விடலாம். இல்லாவிட்டால் ஏற்கனவே நீளமாகத் தோன்றும் முகம் மேலும் நீளமாகி பார்க்க ஒவ்வாமல் இருக்கும்.

4. சதுர வடிவ முகம்

இந்த வகை முகத்துக்கு, புருவமும் கூட கணித வடிவங்களைப் போல வளைவுகள் சரி கோணத்தில் வெட்டிக் கொள்ளும் வண்ணம் ஐப்ரோ திருத்திக் கொண்டால் பார்க்க ‘நச்’சென்று இருக்கும்.

5. இதய வடிவ அல்லது வெற்றிலை வடிவ முகம்

இந்த வகை முகம் மிகவும் அரிதாகத் தான் காண முடியும். வெற்றிலை அல்லது இதய வடிவ முகத்துக்குப் புருவங்களை அரை வட்ட நிலா போல திருத்திக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும்.


6. டைமண்ட் அல்லது ஐங்கோண வடிவ முகம்

டைமண்ட் வடிவ முகத்துக்கு ஐப்ரோ திருத்தும் போது, முதலில் கண்களுக்கு அருகே ஆழமாகத் தொடங்கி அடர்த்தி குறையாது மேல் நோக்கி நீளமாக இழுத்து வளைத்து கூர்மையான வில் போன்று நீட்டி முடிக்கலாம்.

இந்தியப் பெண்கள் காலம், காலமாக இந்த 6 வகையான முக அமைப்புகளுடன் தான் இருந்து வருகிறார்கள். இந்த அறுவகை முகத்திற்கும், முகத்திலுள்ள மோவாய், நாசி, உதடுகள், கன்னங்கள், கன்ன எலும்புகள், முன் நெற்றி, முன் நெற்றியில் விழும் கூந்தல் அமைப்பு என சர்வமும் கவனித்தறியப் பட்டு அந்தந்த முகங்களுக்குத் தக்கவாறு ஐப்ரோ த்ரெட்டிங் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல காலமாக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ப, அந்தந்த முகத்துக்குத் தோதான ஐப்ரோ த்ரெட்டிங் முறையைக் கண்டறிந்து அதைப் பின்பற்றிப் பார்த்தீர்களானால் அது உங்களுக்கே புரியும்.
 

Image courtesy: eyebrowz.com

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/19/w600X390/eyebrows_catalogue.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/sep/19/eyebrow-threading-tips-2775921.html
2763113 லைஃப்ஸ்டைல் அழகே அழகு பட்டுப் போன்ற மென்மையான கூந்தல் வேண்டுமா? உமா Monday, August 28, 2017 01:13 PM +0530  

மென்மையான தலைமுடி வேண்டும் என்பதுதான் பெண்கள் பலரின் கனவு. நீளமான தலைமுடியோ, சற்றுக் குட்டையான தலைமுடியோ அது மென்மையாக காற்றில் அலையாடும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் கூந்தலை அப்படி பராமரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே கூந்தலை அழகு படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ஆரோக்கியமான கூந்தல்தான் அழகான கூந்தல் எனவே கூந்தலை பேணி பாதுகாத்து, வாரத்தில் மூன்று தடவை தலைக்கு குளித்து, சிறப்பான பாதுகாப்பு முயற்சிகள் எடுத்தால் தலை மேல் பலன். முயற்சி செய்யலாமா?

1. முட்டை

தலைமுடியைப் பளபளப்பாக மாற்ற முட்டை தலைசிறந்த பொருள். இதில் புரோட்டீன், ஃபேட்டி ஆசிட், லெசிதின் போன்றவை இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவும். பொலிவிழந்த கூந்தலுக்கும், உடைந்த தலைமுடிக்கும் முட்டையை தொடர்ந்து பயன்படுத்தினால் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும். அடர்த்தியான வலுவான தலைமுடிக்கு முட்டை உதவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனைக் கலக்கி நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடி மற்றும் மண்டை ஓட்டில் தடவி, ஒரு மெல்லிய காட்டன் துணியால் தலையை நன்றாகக் கட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலையைக் கழுவி விடவும். 

இரண்டு முட்டையை எடுத்து நன்றாக அடிக்கவும். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆல்மெண்ட் எண்ணெயை மற்றும் அரை கப் யோகர்ட்டை கலக்கவும். தலையில் நன்றாகத் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் ஷாம்பு போட்டு அலசி விடவும். வாரம் ஒரு முறை இதைக் கடைப்பிடிக்கவும்.

2) மயோனிஸ்

மயோனிஸில் அமினோ ஆசிட், புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இதை தலைமுடி பராமரிப்புக்கு பயன்படுத்தினால் உறுதியான, அதே சமயம் மென்மையாக சில்கி ஹேர் கிடைக்கும். 

முதலில் தலைமுடியை அலசிக் கொள்ளவும். உங்கள் தலைமுடி அளவுக்கு ஏற்ப அரை கப் அல்லது ஒரு கப் மயோனிஸை எடுத்துக் கொள்ளவும். தலை முழுவதும் மயோனிஸைத் தடவியபின், அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அதன் பின் தலைமுடியை மீண்டும் குளிர்ந்த நீரால் மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி அலசவும். வாரம் ஒரு முறையாவது இதைக் கடைப்பிடிக்கவும்.

3) ஹேர் பேக்

கூந்தல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். இது கடைகளில் கிடைக்கும். அதை வீட்டிலும் தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள் 

முட்டைக்கோஸ்- 300 கிராம் 
முட்டை வெள்ளைக்கரு - 1
கோதுமை மாவு- ஒரு டீஸ்பூன்  

மேற்சொன்னவற்றை நன்றாக அரைத்து உச்சம் தலையில் மற்றும் மண்டை முழுவதும் நன்றாகத் தடவவும். தலைமுடியிலும் முழுவதாகப் பூசவும். ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் தலையை நன்றாக அலசிவிடவும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஹேர் பேக்குடன் இரண்டு புரோட்டீன் மாத்திரைகளை உடைத்து சேர்க்கவும். ஒரு டவலை சுடுநீரில் முக்கி, பிழிந்து தலையில் கட்டி, மண்டை ஓட்டில் லேசாக ஆவிபடும்படி செய்ய வேண்டும். புரோட்டின் மாத்திரை சேர்க்கப்பட்ட ஹேர் பேக்கை எடுத்து தலைமுழுவதும் பூசவும். பின்பு மைல் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்றாக கழுவி விடவும். தொடர்ந்து இதைச் செய்து வர பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். 
 

]]>
hair care tips, soft and silky hair, hair packs, ஹேர் பேக், தலைமுடி பராமரிப்பு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/28/w600X390/Long-black-hair-girl-beautiful-face_2560x1600.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/aug/28/tips-for-a-smooth-and-shiny-hair-2763113.html
2735514 லைஃப்ஸ்டைல் அழகே அழகு அழகாக நகம் வளர்த்து அருமையாக நெயில்பாலீஷ் போட்டுக் கொள்ள சில டிப்ஸ்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, July 11, 2017 05:11 PM +0530  

பெரும்பாலான பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளில் அழகாக நகம் வளர்த்து அதற்கு அருமையாகக் கியூடெக்ஸ் போட்டுக்கொள்ளும் ஆசையும் ஒன்றாக இருக்கும். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால்... பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு கண்டிப்பாக நகம் கடிக்கும் பிரச்னையும் இருப்பதால் சிலரால் என்ன தான் பிரயத்தனப் பட்டாலும் கூட அழகாக நகம் வளர்த்தல் என்பதெல்லாம் அடையா முடியாத நிராசையாகவே இருந்து வருகிறது. எப்படி இதைத் தவிர்ப்பது?

 

 • பொதுவாக நமது நகங்கள் புரதத்தினால் ஆனவை. நமது தலைமுடியில் இருக்கும் கரோட்டின் எனப்படும் புரதம் தான் நகங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. எனவே கேரட், மஞ்சள் நிறப்பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் நகங்கள் வலிமையுடையதாக வளரும். 

 • பூண்டுச் சாறு எடுத்தோ அல்லது பேஸ்டாகவோ வாரம் இருமுறை நகங்களில் தேய்த்து சற்று நேரம் ஊற வைத்துக் கழுவித்துடைத்தாலும் நகங்கள் விரைவாக வளரும். பூண்டுச்சாற்றை நகங்கள் உறிஞ்சிக் கொள்ளும் வரை பொறுமையாகக் காத்திருந்து காய்ந்த பின்னரே நகங்களைக் கழுவ வேண்டும். 

 • பாத்திரம் துலக்கும் வேலைக்கும் நமது விரல் நகங்களுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம். பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் டிடர்ஜெண்டுகள் மற்றும் திரவங்களில் இருக்கும் ரசாயனங்கள் நகங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியவை. எனவே அப்படி ஒவ்வாமை எதுவும் இருப்பின் தயவு செய்து கிளவ்ஸ் அல்லது கையுறைகள் அணிந்து கொண்ட பின்னரே பாத்திரம் துலக்கும் வேலையைச் செய்வது எனும் கட்டுப்பாட்டை தமக்குத் தாமே விதித்துக் கொள்ள வேண்டும். 

 • தினமும் நகங்களை வெட்டி ஒழுங்குபடுத்துவதை ஒரு கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்வதால் மட்டுமே எளிதில் உடையக் கூடிய மெல்லிய நகங்களை நாம் அடையாளம் கண்டு அதற்குப் பொருத்தமான தீர்வுகள் காண முடியும்.

 • நகங்கள் மிக மெல்லியதாக எளிதில் உடைந்து வடிவமும், அழகும் கெடும் நிலையில் இருப்பின் அத்தகைய நகங்களில் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பெட்ரோலியம் ஜெல்லி தடவி பராமரிக்க வேண்டும்.  

 • அதே போல நீங்கள் தினம் தோறும் விதம் விதமாக, அணியும் உடைகளுக்குப் பொருத்தமான அத்தனை நிறங்களிலும் கியூடெக்ஸ் அல்லது நெயில் பாலிஷ் பயன்படுத்தும் கியூடெக்ஸ்பிரியர்கள் எனில்... ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; எப்போதும் தரமான நெயில் பாலிஷ் பிராண்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் நகங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த நெயில் பாலிஷ்கள் எல்லாம் இப்போது மார்கெட்டில் கிடைக்கிறது. அவற்றுள் தரமான பிராண்டுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தலாம். 

 • வறண்ட, பொலிவு குன்றிய நகங்களே எளிதில் உடையும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. எனவே நகங்களை எப்போதுமே வறண்டு போக அனுமதிக்காதீர்கள். உள்ளங்கையில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதை நகங்களில் தேய்த்து தினமும் மசாஜ் செய்ய வேண்டும். 

 • தப்பித் தவறியும் நகங்களை கடிப்பதையோ, அல்லது கீறுவதையோ ஒரு போதும் செய்யாதீர்கள். அப்படிச் செய்வதால் நகங்களின் வலிமை குறையும். 

 • நீங்கள் தேர்ந்தெடுக்கும் நெயில் பாலீஷ்களில் ஃபார்மால்டிஹைடு, டொலுவீன், மற்றும் சல்ஃபோனமைட் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவை நகங்களின் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. 

மேற்கண்ட டிப்ஸ்களை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது நகங்கள் அழகாக, ஆரோக்யமாக வளரும். அதில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் எல்லாம் நீங்கள் நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம்.
 

]]>
நகப்பராமாரிப்பு டிப்ஸ், நெயில் பாலீஷ் தேர்வுகள், nail care tips, nail polish, beauty tips, அழகே அழகு, லைஃப்ஸ்டைல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/11/w600X390/beautyful_nails.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/jul/11/nail-care-beauty--tips-2735514.html
2711312 லைஃப்ஸ்டைல் அழகே அழகு அழகுக் குறிப்பு, கிச்சன் வேலை, ஹெல்த் கான்சியஸ் - ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்: மதர்ஸ் கிஃப்ட்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, May 30, 2017 04:56 PM +0530  

தமது தோற்றப் பொலிவின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? காஃபீ, டீ எல்லாம் அருந்துவதற்குப் பதிலாக அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து அதை ஒரு கப் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கலந்து அருந்தலாம். இது தான் கிச்சன் பியூட்டி டிப்ஸின் முதல் படி. இதிலிருந்து தொடங்கி தனியாக அழகு படுத்திக் கொள்வதற்கென நேரம் ஒதுக்காமல் நமது வேலைகளினூடே நாம் செய்து கொள்ளக் கூடிய ஆயிரத்தெட்டு விதமான பியூட்டி டிப்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் இதற்கென நேரமில்லையே என அலுத்துக் கொள்ளத் தேவையே இல்லை.

பெடி கியூர், மெனி கியூர்...

சரி எலுமிச்சை வெந்நீர் அருந்தி முடித்ததும் காலை இளஞ்சூரியனின் இதமான பொன்னொளிக் கிரணங்கள் நம் மேனியில் படுமாறு மொட்டைமாடியிலோ, அல்லது பால்கனியிலோ 15 நிமிடங்களேனும் வெயிலில் நில்லுங்கள். அப்படி நிற்கும் நேரத்தில் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது, கை, கால் விரல் நகங்களை நறுக்குவது போன்ற பெடிகியூர், மெனிகியூர் சமச்சாரங்களைச் செய்து கொள்வது அவரவர் சாமர்த்தியம். அப்போது அவற்றை செய்து கொள்ள முடியாவிட்டாலும் கூட சும்மாவேனும் வெயிலில் நில்லுங்கள் தோலுக்கு விட்டமின் டி வேண்டுமில்லையா பின்னே! 

நேச்சுரல் ஃபேஸ் பேக்...

அப்புறம் வந்து ஃபேனைப் போட்டுக் கொண்டு சமையலுக்கு காய்கறிகளைக் கழுவி நறுக்கத் தொடங்கலாம். காய்கறிகளை நறுக்கும் போது நிச்சயம் ஏதாவது ஒன்று மிஞ்சத் தான் செய்யும் அல்லது கழிவாகவாவது வீணாகும். அவற்றில் நமது அழகுப் பராமரிப்புக்கு உதவக் கூடியது என்று நீங்கள் நினைப்பவற்றை ஒரு கிண்ணத்தில் தனியாகச் சேகரித்து விடுங்கள். உதாரணத்திற்கு கேரட் துண்டுகள், பழச்சாறு தயாரித்து வடிகட்டும் போது மிஞ்சும் பழச்சக்கை, எலுமிச்சைத் தோல், ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்தோல்கள் இத்யாதிகளை குப்பையில் எறியாமல் எடுத்து வைத்துக் கொண்டால் ஹோம் மேட் ஃபேஷியல் செய்து கொள்ள அவை உதவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக முதலில் ஆப்பிள் அல்லது கேரட் ஜூஸ் தயாரிக்கிறீர்கள் என்றால் அவற்றை தயாரித்து முடித்ததும் அதிலிருந்து கிடைக்கும் கலவையான சக்கையுடன் 1 டீஸ்பூன் தயிரும், ஒரு டீஸ்பூன் கடலை மாவும் சேர்த்து கண் சிமிட்டும் நேரத்தில் இயற்கை பியூட்டி பேக் தயார் செய்து விடலாம். ஒன்றுமில்லை அதை அப்படியே கண்ணாடியெல்லாம் பார்த்துக் கொண்டிராமல் முகத்தில் பேக் போட்டுக் கொண்டு அதே நேரத்தில் சமையலுக்கு காய்கறிகளை நறுக்கி முடித்து விடலாம். 

முழுச் சமையல் முடிய முக்கால் மணி நேரமாகலாம்... முகத்தில் போட்டுக் கொண்ட இயற்கை பழ பேக்கையும் அத்தனை நேரம் ஊற விட்டு சமையலை முடித்து விட்டு சுத்தமான குளிர் நீரில் கழுவித் துடைத்தோமென்றால் முகம் பளிச்சிடும். சமையலும் முடிந்தது, அழகுப் பராமரிப்புக்கான நேரமும் கிடைத்தது. இதெப்படி இருக்கு?! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாயிற்றா?! சரி இதோடு முடிந்து விட்டதா என்ன? இன்னுமிருக்கிறது.

ஸ்கின் கேர்...

சமையலில் நெய் சேர்ப்பவர்கள் எனில் அதில் கொஞ்சம் எடுத்து கை முட்டிகளில் தேய்த்து ஊற விடலாம், சிலருக்கு என்ன தான் மாய்ஸ்சரைஸர்கள் தேய்த்தாலும் கை முட்டிகள் வறண்டு போய் அசிங்கமாகத் தோற்றமளிக்கும். இப்படி நெய் அல்லது பாலாடைக் கட்டி கிடைத்தால் பாலாடைக் கட்டியை கொஞமாக முட்டிகளில் தேய்த்துக் கொண்டு ஊற வைத்துப் பிறகு குளிக்கும் போது தேய்த்து கழுவி விடலாம்.

ஹேர் கேர்...

தினமும் முட்டை சாப்பிடும் வீடுகள் உண்டு, வாரத்தில் இரு நாட்கள் முட்டையே தொடாத வீடுகளும் உண்டு. வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் முட்டை சாப்பிடாதோர் அந்த நாட்களில் முட்டையை உடைத்து அதிலிருக்கும் வெள்ளைகருவை மட்டும் தனியே பிரித்தெடுத்து தலைக்கு தேய்த்து ஊற வைக்கலாம். முட்டை அருமையான இயற்கை கண்டீஷனர். வேலையோடு வேலையாக அல்புமினை தலையில் தேய்த்துக் கொண்டு கிச்சன் வேலைகளை முடித்து விட்டீர்கள் என்றால் பேப்பர் படிக்கத் தொடங்கலாம். நடுவில் குழந்தைகள் எழுந்து பள்ளி செல்லத் தயாராக வேண்டும் என்று வந்தால்; முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தச் செய்து அவர்களுக்கும் இதைக் கொஞ்சம் தேய்த்து விட்டு காலை இளம் வெயிலில் நிறுத்தி சின்னச் சின்னதாக ஏதாவது உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி கற்றுத் தரலாம். பிறகு அவர்களைக் குளிக்க வைத்து நாமும் குளித்து வெளியேறி மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.

அடுத்து என்ன? காலைச் சாப்பாடு தானே?!

எதை அருந்தினால் அது அழகுப் பராமரிப்புக்கும் உகந்ததாக இருக்கக் கூடுமென முதல் நாளிரவே யோசித்து வைத்துக் கொண்டீர்கள் எனில் மிக எளிமையாக முடிந்து விடும் காலைச் சாப்பாட்டு நேரம்.

சாப்பாட்டில்  பியூட்டி கான்சியஸ்... 

ப்ரேக்பாஸ்ட்...

குழந்தைகளுக்கு அரிசி அல்லது கோதுமையைக் குறைத்து வீட்டில் தயார் செய்த கோதுமை பிரட் இருந்தால் அவற்றுடன் காய்கறிக் கலவை வைத்தோ அல்லது முட்டை அல்லது கீரை வகைகள் எதையாவது  வைத்தோ சாப்பிடத் தரலாம், அதோடு ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, கொய்யா, வாழை இப்படி பழங்களில் ஏதாவது ஒன்று நிச்சயம் சாப்பிடத் தர  வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் பழச்சாறுகள் அருந்தலாம். அது சாதாரண லெமன் ஜூஸகவோ அல்லது தக்காளி ஜூஸாகவோ கூட இருக்கலாம். அருந்த வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். ஏனெனில் தினமும் பழச்சாறுகள் அருந்தினால் நாளடைவில் முகம் ஃப்ரெஷ் ஆன பழங்களைப் போலவே தக தகவென பொலிவோடு மின்னத் தொடங்கி விடும் என்பது அம்மாக்களின் வாக்கு.

லஞ்ச்...

மதிய உணவாக நிறையக் காய்கறிகளும் கொஞ்சமே கொஞ்சம் அரிசிச் சாதமும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றோடு கண்டிப்பாக காய்கறி சாலட் அல்லது பழ சாலட்டுகள் சாப்பிடுவது வழக்கமாக வேண்டும்.

மாலைச் சிற்றுண்டியாக முளைகட்டிய பயறு வகைகள் எதையாவது கொஞ்சம் கொறிக்கலாம். அதோடு சூடாகக் கொஞ்சம் கிரீன் டீ அல்லது பிளாக் டீ போதும். மிஞ்சும் டீத்தூளை கீழே கொட்டாமல் வெயில் கருத்துப் போன சருமத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட தழும்புகள் மாறிவிடும் என்கிறது சித்த மருத்துவம். 

டின்னர்...

இரவுக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என எது சாப்பிடுவதானாலும் 3 அல்லது 4 க்கு மேல் வேண்டாம்.  அதையும் 6 மணிக்கு முன்னதாக சாப்பிட்டு விட்டு 8 மணிக்குள் கொஞ்சம் வெது வெதுப்பான பாதாம் பால் அருந்தி விட்டு பற்களைத் தேய்த்து குளித்து விட்டு தூங்கச் செல்லலாம். இரவில் எப்போதும் மிதமான சூட்டிலுள்ள வெந்நீர் தான் குளிப்பதற்கு உகந்தது. குளிக்கும் போது மறக்காமல் 10 நிமிடங்கள் வாளித் தண்ணீரில் பாதங்களை ஊற வைக்க மறக்க வேண்டாம். காலை முதல் செய்த வேலைகளின் அலுப்பெல்லாம் காணாமல் போக இந்தப் பயிற்சியை தினமும் செய்வது நல்லது.

கடைசியாக படுக்கைக்குச் சென்றதும் ஆலிவ் ஆயில் இருந்தால் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடாக்கி பாதங்களில் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்து விட்டுப் படுக்கலாம். நன்றாகத் தூக்கம் வரும். பாதங்களும் பித்த வெடிப்புகள் மறைந்து அழகாகும்.

அப்புறமென்ன அழகுக் குறிப்புகள், கிச்சன் வேலைகள், உடல் நலப்பராமரிப்பு என எந்தக் கவலைகளும் இன்றி நன்றாகத் தூங்கி விடுவோம். அவ்வளவே தான். ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!

குட்நைட்!

]]>
அழகே அழகு, kitchen beauty tips, மதர்ஸ் கிஃப்ட், நேச்சுரல் பியூட்டி டிப்ஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/Beauty-of-Food-Kitchen-Foods-1-630x315.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/may/30/beauty-tips-cooking-health-conscious-3-mangoes-in-one-stone-mothers-gift-2711312.html
2694919 லைஃப்ஸ்டைல் அழகே அழகு ஜலக்கிரீடை... பார்வை தெளிவுற, முகம் பொலிவுற முழு எண்ணெய் குளியல் செய்வதெப்படி? மாரியம்மாள் கிருஷ்ணசாமி Tuesday, May 2, 2017 05:13 PM +0530  

நம் முன்னோர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கென்றே சில வரயறைகளை வைத்துள்ளனர். அதன் படி ஆண்களென்றால் புதனும், சனியும் எண்ணெய் முழுக்குப் போடலாம். பெண்கள் என்றால் செவ்வாயும், சனியும் எண்ணெய்க் குளியல் செய்யலாம். எண்ணெய் என்றால் எல்லா எண்ணெய்களிலும் கிடையாது குளியலுக்கென்றால் எப்போதும் அது நல்லெண்ணெயில் மட்டுமே தான்! ஏனெனில் நல்லெண்ணெய் சூட்டைத் தணிக்கும் என்பதால். இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் நாட்டில் மக்களுக்கு உஷ்ணப் பிரச்னைகள் பல வரும், போகும். அதைத் தவிர்க்கத் தான் பன்னெடுங்காலமாக நமது மக்களின் வாழ்க்கைமுறையில் இப்படி ஒரு வழிமுறை பின்பற்றப் பட்டு வந்திருக்கிறது.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்:  4 டேபிள் ஸ்பூன் (ஆண்களுக்கு), 6 முதல் 7 டேபிள் ஸ்பூன் (பெண்களுக்கு)
பூண்டு: 3 பல்
மிளகு: 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் முதலில் மிளகைப் போடவும், மிளகு பொறிந்து மேலே மிதந்ததும் அதைக் கருக விடாமல் ஸ்டவ்வை சிம்மில் வைத்து பூண்டை எண்ணெயில் சேர்க்கவும், பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பூண்டு இஷ்டம் எனில் வதங்கிய பூண்டை எடுத்துச் சாப்பிடு விடலாம். மிளகையும் தனியே எடுத்து வைத்து சமைக்குப் போது வேறு எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் காய வைக்கும் போது ஏன் இவற்றை சேர்க்க வேண்டும் எனில் எண்ணெயின் அதீத குளிர்ச்சியை இது முறிக்கும் என்பது ஐதீகம்! சரி இனி ஜலக்கிரீடை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்...

எண்ணெய் குளியல் செய்து கொள்ளும் நாட்களில் காலையில் இளஞ்சூரியன் உதிக்கையில் தொடங்கலாம். ஆண்கள் எனில் வீட்டின் திறந்த முற்றங்கள் அல்லது சூரிய ஒளி படக்கூடிய இடமாகப் பார்த்து வெறும் கெளபீனத்துடன் அமர்ந்து கொண்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மிருதுவாக மசாஜ் செய்து கொதித்து ஆறிய நல்லெண்ணெயைத் தேய்க்கவும். இதற்கு பொறுமை மிக அவசியம். அரக்கப் பரக்கத் தேய்த்து அவசர அவசரமாகக் குளித்தால் அதன் பொருள் முழு எண்ணெய்க் குளியல் செய்து கொண்டதாக ஆகாது. பெண்கள் என்றால் மார்பு வரை பெட்டிகோட் அணிந்து கொண்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நக இணுக்குகளைக் கூட விடாது நல்லெண்ணெய் தேய்த்து ஊற விட வேண்டும். முழுதாய் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் எண்ணெய் தேய்த்த உடல் பகுதிகள் படுமாறு நடமாடி 1 மணி நேரம் கழிந்ததும் வீட்டில் தயாரித்த சிகைக்காய் கொண்டு எண்ணெய்ப் பிசுக்கு போகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சிகைக்காய் இல்லாதவர்கள் தரமான ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம். 

நிபந்தனை:  எண்ணெய் குளியல் செய்து கொள்ள விரும்புபவர்கள் மழை நாட்களைத் தவிர்த்து விடலாம். அது மட்டுமல்ல எண்ணெய் குளியல் முடித்து குளியலறை விட்டு வெளி வந்ததும் குளிர்ச்சியாக எதையும் அருந்தி விடக் கூடாது. சூடாக சூப், ரசம் என எதையாவது அருந்தலாம். ஏனெனில் முழு எண்ணெய்க்குளியலால் மொத்த உடலும் குளிர்ந்திருக்கும் நேரத்தில் மேலும் குளிர்ச்சியாக எதையாவது அருந்தினால் சளி பிடித்துக் கொள்ள 100 சதம் வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்ல, எண்ணெய்க் குளியல் செய்யும் நாட்களில் இரு சக்கர வாகனங்களில் நீண்ட நெடும் பயணங்களை தவிர்த்து விட வேண்டும். வெயிலில் அதிகம் சுற்றக்கூடாது. 

]]>
complete oil bath, men &women, முழு எண்ணெய் குளியல், ஜலக்கிரீடை, நல்லெண்ணெய், sesame oil https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/2/w600X390/oil_bath1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/may/02/how-to-take-complete-oil-bath-to-live-long-life-2694919.html
2672655 லைஃப்ஸ்டைல் அழகே அழகு சம்மர் வெயிலில் முகப்பரு வராமல் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி? இந்த டிப்ஸ் போதுமா பாருங்க! ஹரிணி Saturday, March 25, 2017 02:40 PM +0530  

கோடையில் தான் குளிர்காலங்களை விட அதிகமாக முக சருமத்தில் அழுக்குகள் தங்கும், அதோடு உடலில் கோடை வெயிலை அதிகம் தாங்கும் பகுதியும் நமது முகம் தான். எனவே தான் நமது முகங்கள், வறண்டு போதல், பருத்தொல்லை, வேனற்கட்டிகள், தோல் சுருக்கங்கள், சருமம் கருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் தாங்கவேண்டியதாகி விடுகிறது. இவற்றிலிருந்து எளிதாக தப்புவது எப்படி? இதோ மீ கிளினிக்கின் பிரபல ஈஸ்தெடிக் வல்லுனரும் டெர்மாடலஜிஸ்டுமான ஆலியா ரிஸ்வியும், காஸ்மெட்டாலஜிஸ்ட் மேகா ஷாவும் கூறூம் சரும டிப்ஸ்களை கேட்டு, அவற்றை செயல்படுத்திப் பாருங்களேன்.

 • முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், பார்ட்டிகளுக்க்கோ அல்லது நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கோ சென்று திரும்பும் போது மறக்காமல் முகத்தில் செய்து கொண்ட ஒப்பனைகளை மறக்காமல் சாலிஸிலிக் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள். இந்தியாவில் லோரியல் பிராண்டுகளில் சாலிஸிலிக் ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. இல்லாவிட்டால் உங்களது ஃபேஸ் வாஷ் டியூப்கள் அல்லது பாட்டில்களின் மூலப்பொருள் லிஸ்டில் சாலிஸிலிக் இருக்கிறதா என்று சோதித்து அது இருக்கக் கூடிய ஃபேஸ் வாஷ் பிராண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
 • எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது.
 • முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில் தோலை அழுத்திக் கழுவினால் தோல் அழற்சி ஏற்பட்டு விரைவில் முகத்தில் தோல் எரிச்சலும், முகச் சுருக்கங்களும் தோன்றும்.
 • வீட்டிலோ, அலுவலகத்திலோ எங்கிருந்தாலும் சரி அடிக்கடி முகத்தை விரல்களால் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. விரல்களில், இதனால் நகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்தில் உள்ள சருமத் துளைகள் வாயிலாக ஊடுருவி பருக்களும், தேமல்களும் உருவாகும் வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.
 • உங்களது ஒப்பனை சாதனங்களில் நான் கமெடோஜெனிக் லேபிள் இருக்கிறதா என்று சோதித்து பொருட்களை வாங்குங்கள். ஏனெனில் அந்த லேபிள்கள் இல்லாத ஒப்பனைப் பொருட்கள் முகச் சருமங்களில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் தோன்றக் காரணமாகும் சாத்தியம் இருக்கிறது.
 • அடிக்கடி வெயிலில் அலையத் தேவையில்லை. ஏனெனில் வெயில் பருக்கள் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்தி விடும்.
 • வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளைப்( முகப்பரு எதிர்ப்பு முகமூடிகள்!) பயன்படுத்தலாம். 
 • சில நேரங்களில் முகப்பருக்கள் தோன்ற அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன் சமநிலையின்மையும் காரணம் என்பதால் டெர்மட்டாலஜிஸ்டுகளிடம் செல்லும் போது அவர்கள் உங்களை ஹார்மோன் டெஸ்டுகள் எடுக்கச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.
 • முகத்திலும், முன் நெற்றிப் பகுதியிலும் பருக்கள் தோன்ற தலையில் இருக்கும் பொடுகும் ஒரு காரணம் என்பதால், உங்களது டெர்மட்டாலஜிஸ்டுகளை அணுகி உங்களது உடல்வாகு மற்றும் தோல் இயல்புக்குத் தக்கவாறு பொடுகு நீக்கி ஷாம்புக்களைப் பயன்படுத்துங்கள். 
 • உங்களது உடலிலும் பருக்களோ, இன்ஃபெக்ஸன்களோ இருக்கும் பட்சத்தில் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்து விடுங்கள்.

மேற்சொன்ன சரும நல டிப்ஸ்களை மறவாமல் பயன்படுத்தி வரப்போகும் கோடையின் கடுமையான அக்னி நட்சத்திர நாட்களை கடந்து செல்லுங்கள்.

]]>
beauty tips, avoid acne, summer skin care, அழகே அழகு, பியூட்டி டிப்ஸ், முக அழகு, சருமப் பாதுகாப்பு https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/skin_care_summer.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/mar/25/சம்மர்-வெயிலில்-முகப்பரு-வராமல்-சருமத்தைப்-பாதுகாப்பது-எப்படி-இந்த-டிப்ஸ்-போதுமா-பாருங்க-2672655.html
2667142 லைஃப்ஸ்டைல் அழகே அழகு மென்மையான சருமத்தை பெற Thursday, March 16, 2017 04:29 PM +0530 * உங்களுடைய சருமம்  எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை  தேர்ந்தெடுங்கள். உங்கள் சருமம் எந்த வகை என்பது தெரியவில்லையா? பரவாயில்லை. ஆரோக்கியமான சருமத்திற்கு ஆழ்ந்து சுத்தம் செய்யும் கிரீம்களை பயன்படுத்துங்கள். எந்த கிரீமாக இருந்தாலும் அவை உங்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்துமா என்பதை கண்டறிய முதலில் முழங்கையில் சிறிதளவு தடவி நாள் முழுக்க அப்படியே விட்டுவையுங்கள். ஆல்கஹால் கலவை வேண்டாம். எந்தவித பாதிப்பும் இல்லையென்றால் ஓகே.

* எண்ணெய் பசையுள்ள சருமமாக இருப்பின்  ஆல்கஹால்  கலந்த கிரீம்களை தவிர்ப்பது நல்லது. "ஆல்கஹால்'  உடலில் உள்ள வியர்வையை வெளியேற்ற கூடியதாகும். ஆல்கஹால் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் அடைபட வாய்ப்புள்ளது. எண்ணெய் பசையுள்ள சருமமாக இருப்பின் நீங்கள் பயன்படுத்தும் கிரீமில் என்னென்ன வேதி பொருட்கள்  கலந்துள்ளன என்பதை வாங்குவதற்கு முன் பரிசீலனை செய்வது நல்லது.

* உங்கள் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் குறித்து நீங்கள் சிறப்பு கவனம் எடுப்பது நல்லது. ஏனெனில் அப்பகுதி மிருதுவானதோடு உணர்வு மிக்கவை ஆகும். கண்களின் கீழே தொங்கும் சதை மற்றும் தெளிவாக தெரியும் கருவளையத்தையும் போக்க ஜெல் அடிப்படையிலான சில கிரீம்கள் உள்ளன. இவை கண்களின் கீழ் உள்ள சுருக்கத்தை போக்கும் அல்லது தற்காலிமாக நீக்கும்.

* பகல் நேரத்தில் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் இரவில் நிவர்த்தியாக வாய்ப்புள்ளது. இது போன்ற சந்தர்ப்பத்தில் சிறந்த கிரீம்களை இரவில் பயன்படுத்தினால் உங்கள் சருமம் நீண்ட காலம் வனப்புடன் காட்சிதரும்.

* முகத்தில் வெயில் அதிகமாக படும் என்பதால் அதிக சுருக்கங்களும், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். சூரியனிடமிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலெட்'  கதிர்கள் சருமத்தில் உள்ள நார் தன்மையை குறைத்து எரிச்சலையும், தோலை உரிக்கும் தன்மையையும் ஏற்படுத்தும். அதனால் உதடுகளை பாதுகாக்கும் கிரீம்கள், லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவதோடு, வெயில் படாமல் முகத்தை மறைப்பது நல்லது.

* இதுபோன்ற சரும கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன் சரும நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அவர்கள் உங்கள் சருமத்தின் தன்மை, எந்த வகையானது என்பதை தெரிவிப்பதோடு, அதற்கேற்ற கிரீம்களை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.
- பூர்ணிமா

 

]]>
skin care, சரும அழகு, மென்மையான சருமம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/16/w600X390/bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/mar/16/மென்மையான-சருமத்தை-பெற-2667142.html
2630448 லைஃப்ஸ்டைல் அழகே அழகு பார்லர் போகாமலே ரோஸி லிப்ஸ் வேணுமா? இந்தாங்க படிங்க நேச்சுரல் பியூட்டி டிப்ஸ்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, January 10, 2017 04:55 PM +0530 “ஜோஸி நீ சிகரெட் பிடிக்க கத்துண்டியா என்ன?”

“என்னக்கா நீ திடீர்னு இப்டி கேக்கற? என்னப் பார்த்தா சிகரெட்லாம் பிடிக்கறவ மாதிரியா தோணுது?”

“இல்லடீ, கோச்சுக்காத. உன் லிப்ஸ் பார்த்தா அப்படி கேட்கத் தோணுது. ஏன் இத்தனை டார்க்கா வச்சிருக்க?”

“நானா? இல்லையே... ஜோஸி ஓடிப்போய் கண்ணாடி பார்த்தாள்.”

அக்கா சொன்னது சரி தான். உதடுகள் அதன் இயல்பான நிறத்தை இழந்து கருத்து, வறண்டு போய் வெடிப்புகளுடன் காட்சியளித்தது. ஜோஸிக்கு கவலையாக இருந்தது. ஆனால் பார்லருக்குப் போகவெல்லாம் அவளுக்கு நேரமே இல்லையே! அதனால் ஆளுயரக் கண்ணாடியிலிருந்து சலிப்புடன் முகம் திருப்பி; 

“டார்க்கா தான் இருக்கு, என்ன பண்ணச் சொல்ற? நாள் முழுக்க அதலெடிக்ஸ் பிராக்டிஸ் பண்றேன். மீதி நேரம் செமஸ்டர் எக்ஸாமுக்கு. நடுவுல அப்பப்போ ஹெல்தியா சாப்பிடனும். அதோட  எக்ஸர்சைஸ் வேற எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது. ஸோ... லிப்ஸ் தான அப்பப்போ வாஸலின் தடவினா போதும்னு விட்டுட்டேன்க்கா...”

அக்கா ஜோஸியின் காதைப் பிடித்து வலிக்கும்படி திருகிக் கொண்டே;

“ஏண்டீ லிப்ஸ் தானன்னு விட்டேத்தியா சொல்ற. பெண்களோட உதடுகளைப் பத்தி பாடாத கவிஞன் உண்டோ! ஆண்டவனுக்கே கொவ்வை செவ்வாய்ன்னும், செம்பவள இதழ்கள்ன்னும் வர்ணிக்கற அளவுக்கு அழகுக்கு முக்கியத்துவம் தருகிற கூட்டம் நாம. இங்க வா.. ரொம்பலாம் ஒண்ணும் சிரமப் பட்டுக்க வேணாம். சிம்ப்பிளா ரெண்டு மூணு டிப்ஸ் சொல்றேன். நீ போற போக்குல செய்து முடிச்சுடலாம். நோ டைம் வேஸ்ட்.”

“வேணாம்னா விடவா போற... சொல்லு கேட்டுத் தொலைக்கிறேன்.”

“கேட்டுத் தொலைச்சிடாத... செஞ்சு தொலைச்சிடு” 

அக்கா சிரிப்புடன் ஜோஸியின் தலையில் குட்டி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

உதடுகள் நிறமிழக்காமல் இருக்கவும், வறண்டு வெடிப்புகளுடன் இல்லாமல் பராமரிக்கவும் நீங்களும் இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதோ அந்த பியூட்டி டிப்ஸ்;

நேச்சுரல் லிப் பாம்:

தேவையான பொருட்கள்:

தேன் மெழுகு: 1 துண்டு

தேன்: 1/4 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய்: 1/2 டீஸ்பூன்

செய்முறை: தேன்மெழுகில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஒரு சின்ன பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது ஒரு சின்ன காட்டன் துண்டில் ஒற்றி எடுத்து உதடுகளில் தேய்த்து வந்தால் இந்தக் கலவை உதடுகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கும். இது மிகச் சிறந்த நேச்சுரல் லிப் பாம் ஆகச் செயல்படும். 

நேச்சுரல் லிப்ஸ் ஸ்கிரப்பர்:

உதடுகள் வறண்டு போய் வெடுப்புகளுடன் தோற்றமளிக்க மற்றுமொரு காரணம், உதடுகளின் மேலுள்ள நீக்கப் படாத செல்களும் தான். இந்த இறந்த செல்களை அகற்ற நேச்சுரல் லிப் ஸ்கிரப்பரை நாமே வீட்டில் தயாரிக்கலாம். எப்படி என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய் அல்லது தேன்: 1/4 டீஸ்பூன் 
சர்க்கரை: 1/2 டீஸ்பூன்

செய்முறை: 1/4 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேனில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து உதட்டில் தடவி 10 நிமிடங்களுக்கு மென்மையாக  மசாஜ் செய்யவும். இந்தக் கலவை உதட்டின் மேல்புறம் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதை நாம் உணரலாம்.

இரண்டு டிப்ஸுமே ரொம்ப, ரொம்ப ஈஸி தான். செய்து பாருங்க.

]]>
rosy lips, natural beauty tips, இளஞ்சிவப்பு உதடுகள், இயற்கையான அழகுக் குறிப்புகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/10/w600X390/lips_2.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/jan/10/பார்லர்-போகாமலே-ரோஸி-லிப்ஸ்-வேணுமா-இந்தாங்க-படிங்க-நேச்சுரல்-பியூட்டி-டிப்ஸ்-2630448.html
2601 லைஃப்ஸ்டைல் அழகே அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் 7 பொருட்கள் டாக்டர் வெங்கடாசலம் DIN Thursday, July 28, 2016 04:40 PM +0530
எல்லா பெண்களின் ஆசை அழகான தோற்றம் வேண்டும் என்பதே. ஆரோக்கியமான சருமம் இதற்கு மிகவும் முக்கியம். தூசி, வெயில், ஸ்ட்ரெஸ் போன்றவை சருமத்தின் இயற்கை எழிலை சிதைத்து சோர்வான தோற்றத்தையும் பொலிவற்றத் தன்மையையும் அதிகரித்துவிடும். இதை சரி செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்வார்கள் ஆனால் அவை சில நாட்கள் மட்டுமே சருமத்தை அழகாக்க காட்டும்.

இதற்கு நிரந்தர தீர்வு நம் வீட்டிலேயே இருக்கிறது. தேவை நேரம் மற்றும் நம் மீதான நமக்கு இருக்க வேண்டிய அக்கறை. இதோ உங்கள் வீட்டின் சமையல் அறைப் பொருட்களை வைத்தே உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறக்க செய்யும் ஏழு பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/11/w600X390/antony.jpg https://www.dinamani.com/life-style/lifestyle-beauty/2016/jul/11/அழகுக்கு-அழகு-சேர்க்கும்-7-பொருட்கள்-2601.html
2746 லைஃப்ஸ்டைல் அழகே அழகு தேவையா  இத்தனை ஃபேர்னஸ் கிரீம்கள்?! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, July 28, 2016 04:38 PM +0530  

ஆண்களோ.பெண்களோ தொடர்ந்து மனிதர்களின் நிறத்தை மட்டுமே வலியுறுத்தி ஒளி பரப்பாகும் முகப்பொலிவு, நிறப்பொலிவு  கிரீம் விளம்பரங்கள் சலிப்பூட்டுகின்றன. டிபார்ட்மென்டல் ஸ்டோரின் அழகு சாதனப் பொருட்கள் அடுக்கப்பட்ட அலமாரிகளைக் கடக்கும்  ஒவ்வொரு முறையும்  எதற்கு இத்தனை க்ரீம்கள்? இத்தனை சோப்கள்? பவுடர்கள்? லோஷன்கள்? என்ற சன்னமான எரிச்சல் பரவுவதைத் தடுக்க முடிவதில்லை.

காலை கண் விழிக்கும் கணம் முதல் இரவு தூங்கப் போகும் வரை முகம் கழுவ ஒரு கிரீம், முகம் கழுவிய பின் தடவிக் கொள்ள ஒரு கிரீம்.  குளிக்க உடம்புக்கு ஒரு சோப், முகத்துக்கு வேறு ஒரு கிரீம். கை, கால் சரும அழகைப் பாதுகாத்து அவற்றை மிருதுவாக்க  மற்றொரு கிரீம்  அல்லது  லோஷன், முகம் என்று எடுத்துக் கொண்டால் மூக்கு, கண்கள், உதடு என்று எல்லா உறுப்புகளுக்கும் தனித்தனி கிரீம்கள் அல்லது லோஷன்கள்.உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் கொள்ள ஆயிரமாயிரம் கிரீம்களும், லோஷன்களும், சோப்களுமாக தினம் தினம் இப்படி அமிலங்களிலும், காரங்களிலும் முங்கி எழுந்து கொண்டு இருக்கிறோம், எல்லாம் எதற்காக? பெரும்பான்மை பதில்  முகப்பொலிவை பாதுகாக்க  என்பதாகவே இருக்கிறது.

'முகம் நம் அகத்தின் கண்ணாடி' ஆகவே முகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் தான், ஆனால் யோசித்துப் பாருங்கள்  நம் அம்மாக்கள், பாட்டிகளில் அந்தந்த வயதுக்குரிய  அழகான முகப் பொலிவுடன் எத்தனையோ லட்சம் பேர்கள்  நம்மோடு வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள், அவர்கள் காலத்தில் ஏது இத்தனை கிரீம்கள்?!  முக அழகு நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்ளும் குண அழகில் இருக்கிறதே தவிர எல்லாக் கிரீம்களையும் வகைக்கொன்றாக அள்ளிப் பூசிக் கொள்வதில் இல்லை! 

சருமப் பாதுகாப்பு என்பதை  மீடியாக்கள் தவறாகப் புரிந்து கொண்டனவா அல்லது நுகர்வோராகிய நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டோமா என்று தெரியவில்லை நாளொன்றுக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும்  ஒளிபரப்பாகும் முக அழகு க்ரீம்கள், குளியல் சோப், ஹேர் ஆயில் விளம்பரங்கள் மட்டும் லட்சக் கணக்கில்  இருக்கலாம். இவற்றின் வருடாந்திர நிகர லாபங்களில் நமது மாதச்சம்பளங்களும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை மறுக்க முடியாது.

இன்டர்வியூவா எங்கள் முகப்பவுடரை பூசிக் கொண்டு சென்றால் வேலை நிச்சயம்!, காதலைத் தெரிவிக்கப் போகிறீர்களா?  எங்கள் ஃபெர்பியூம் தெளித்துக் கொண்டு செல்லுங்கள் காதலில் வெற்றி பெறுவீர்கள், எங்கள் சோப் போட்டுக் குளித்தால் கணவர் உங்கள் அழகில் மயங்கி தம்பதிகளுக்குள் சண்டையே வராது எனும் ரீதியில் சென்டிமென்ட் கயிற்றில் நம்மை கட்டிப் போட்டு வதைக்கும் இந்த விளம்பரங்களில் காட்டப் படும் பொருட்களை மாதக் கடைசி பணப் பற்றாக்குறையில் கிரெடிட்  கார்டிலாவது நாம் வாங்கித் தான் தீர வேண்டுமா?!  அத்தனை முக்கியமானதா இப்படி செயற்கையாக பெறப்படும்  நிறமும், முகப் பொலிவும்?!

பெண்ணோ,ஆணோ, குழந்தையோ,குமரியோ எல்லோருக்குள்ளும்  தன்னம்பிக்கை விதைக்க இத்தகைய  விளம்பரங்களால் மட்டும் தான் முடியுமா?!

முதலில் எது அழகு? என்ற புரிதலை உருவாக்குவது தான் அதிமுக்கியமான விசயம்.எங்கிருந்து வேண்டுமானாலும் இதற்கான விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம். இல்லையேல் கிண்டர்கார்டன் குழந்தைகள் கூட முக அழகு கிரீம் பூசிக்கொண்டு தான் பள்ளிக்குப் போவேன் என்று அடம்பிடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களாவோம்!.

இந்த முகப்பொலிவு கிரீம்களால் தோல் அரிப்பு மற்றும் அலர்ஜியில் தொடங்கி தோல் புற்றுநோய் வரை பலவிதமான பிரச்சினைகளால்  பாதிப்பு வரும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.அவற்றில் பொதுவான ஐந்து பிரச்சினைகளைப் பற்றி இப்போது பார்போம்.

 • தொடர்ந்து இத்தகைய கிரீம்களை பயன்படுத்தி வந்தால் நமது சருமம் சூரியக் கதிர்களை எதிர்கொள்ளும் ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவில் சூரியனைக் கண்டாலே ஒவ்வாமை என்ற நிலைக்குத் தள்ளப் படுவோம்.இதனால் தோலுக்கு  விட்டமின் 'டி' பற்றாக்குறை ஏற்படும்.

 • உணவில் அதிகப்படியான எண்ணெய்யோ ,கொழுப்போ சேர்த்துக் கொண்டால் முகத்தில் அவை பருக்களாக வெளிப்படும்,இது ஒரு சாதாரண சரும மாறுபாடு. உடல்  எடைக்குத் தக்க அதிக அளவில் தண்ணீர் அருந்தி எண்ணெய்ப் பலகாரங்களை தவிர்த்தாலே போதும் நாளைடைவில் பருக்கள் தானாக காணாமல் போகும். அதைச் செய்ய சோம்பேறித்தனப்   பட்டுக்கொண்டு கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தினால் பருத்தொல்லை அதிகமாக வாய்ப்பிருக்கிறதே தவிர குறையாது.

 • அதுமட்டுமல்ல தொடர்ந்து கிரீம்களும்,லோஷன்கள் என்று பயன்படுத்தி வந்தால் சருமம் வறண்டு அதன் மிருதுத்தன்மையை இழக்கும்.இதனால் வயதுக்கு மீறிய மூப்படைந்த தோற்றம் பெறுவோம்.

 • மேலும் முகப்பொலிவு கிரீம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் மெர்குரி,ஹைட்ரொக்யுனோன்,ஸ்ட்டீராய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள்  இருப்பின்  அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய சூழலில் இவை  தோல் புற்று நோயை உண்டாக்க வல்லவை.

 • அந்தந்த மாநிலத்தின் அல்லது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு இயற்கையே அவரவர்களுக்கு உரிய நிறத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறது. ரஷ்யர்களின் பொன்னிறம், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்களின் வெளுப்பு, ஆப்ரிக்கர்களின் கருப்பு, வட இந்தியர்களின் கோதுமை நிறம், தென்னிந்தியர்களின் மாநிறம் எல்லாமே இயற்கை தேர்ந்தெடுத்தது, இதை நாம் மாற்ற வேண்டிய அவசியமென்ன?! சருமத்தின் இயற்கை நிறமும், மென்மையும் கெடாமல் பாதுகாத்தாலே போதும். அதிக எதிர்பார்ப்புடன் பயன்படுத்தப்படும் இந்த  நிறமூட்டிகள் அவற்றில் கலந்துள்ள வேதிப் பொருட்களால் உண்மையில் தேவையற்ற  சரும பாதிப்புகளையே உருவாக்குகின்றன.

ஜீன்ஸ் படத்தின் ஹோம்லீ ’ஐஸ்வர்யா ராய்’ போல பேசாமல் "முகத்துக்கு கடலை மாவு, தலை முடிக்கு சிகைக்காய் பொடி, உடம்புக்கு பயத்தம் பருப்பு பொடி" என்று  மாறி விடுவது உத்தமம். சரியான வழிகாட்டல்கள் இருந்தால் அடுத்த தலைமுறையினர் இப்படி மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 

]]>
fairness cream, beauty, natural products, advertisement https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/f1.jpg https://www.dinamani.com/life-style/lifestyle-beauty/2016/jul/28/தேவையா -இத்தனை-ஃபேர்னஸ்-கிரீம்கள்-2746.html