Dinamani - கலைகள் - https://www.dinamani.com/lifestyle/art/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3256958 லைஃப்ஸ்டைல் கலைகள் 2019 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இது! கார்த்திகா வாசுதேவன் Friday, October 18, 2019 12:55 PM +0530  

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படம் தான் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராபர் விருதினை சீனாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் யோங்க்யூங் பவோவிற்கு பெற்றுத்தந்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகெங்கும் இருந்து பாராட்டுகளும், மெச்சுதல்களும் குவிந்து வருகின்றன இந்தப் புகைப்படத்திற்கு.

தொடர்பான கட்டுரை... காட்டுக்கு ராஜா சிங்கமென்றாலும், புலி தான் கம்பீரமானது!

திபெத்திய நரியும், அணிலும் இருக்கும் இந்தப் புகைப்படம் எந்த வகையில் சிறந்ததாகக் கருதப்படுகிறது என்றால், புகைப்படத்தை நன்கு உற்றுப் பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கே மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். தனது இரையைக் கண்டதும் நரி பதுங்கியவாறு அதைப் பிடித்துண்ண ஆயத்தமாகிக் கொண்டிருப்பதும், தன்னைக் கொல்லவிருக்கும் எதிரியைக் கண்டதும் அந்த குட்டி அணிலின் கண்களில் தெரியும் அதிர்ச்சியும் மிகது துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புகைப்படத்தில். இதை ஆக்‌ஷன் ஃபோட்டோகிராபி என்பார்கள். விலங்குகளின் வாழ்வைப் படம் பிடிக்கும் போது அவற்றின் வாழ்க்கை முறையை அணு அணுவாகப் பதிவு செய்வதென்பது மிகக்கடினமான காரியம். ஏனெனில், விலங்குகள் மனிதர்களைப் போல புகைப்படங்கள் என்றதும் உடனே... தலைமுடியை ஒதுக்கிக் கொண்டோ, அல்லது தோகை முடியை சரி செய்து கொண்டோ புகைப்படம் எடுப்பவர்களுக்கு போஸ் தந்து கொண்டிருப்பவை அல்ல. அவற்றின் வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டுமென்றால் நாள்கணக்காக, மாதக் கணக்காக காடுகளில் காத்திருக்க வேண்டும். அப்படித் தவம் கிடந்தால் மட்டுமே இத்தகைய அரிய பதிவுகள் சிக்கக் கூடும்.

மேலும் படிக்க... காடு திறந்து கிடக்கு, அள்ளிப் பருக என் கேமரா போதாது!  

அதிலொன்று தான் இந்தப் புகைப்படம். ‘தி மொமெண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் நரியைக் கண்டு பீதியில் அதிர்ந்து நிற்கும் அணிலின் உணர்வுகள் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. இப்படியான மிக அரிய தருணங்களைப் பதிவு செய்வது தான் கானுயிர் புகைப்படக் கலையின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை விருதுக்குரியதாகத் தேர்வு செய்த லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆய்வுக் குழுத் தலைவர் ராஸ் கிட்மான், ‘மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று இது, இதைத் தக்க தருணத்தில் பதிவு செய்த செயல் பாராட்டுக்குரியது. அதற்குத் தான் விருதளிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.

விருது வென்றுள்ள இந்த புகைப்படமானது லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 48,000 பேரைக் கடந்து இந்த விருதை வென்றுள்ளார் யோங்க்யூங். 


 

]]>
best photographer of the year 2019, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/18/w600X390/wild_life_action.jpg The Moment https://www.dinamani.com/lifestyle/art/2019/oct/18/2019-wildlife-photographer-of-the-year-award-goes-to-3256958.html
3242700 லைஃப்ஸ்டைல் கலைகள் கம்போடியாவில் தமிழுக்குப் பெருமை மாலதி சந்திரசேகரன் Friday, September 27, 2019 04:10 PM +0530  

கம்போடியாவில், உலகக் கவிஞர்கள் மாநாடு, செப்டம்பர் 21 முதல் 25 வரை நடந்து முடிந்தது. 

முன்னதாக 21.09.2019 அன்று கம்போடியா அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய உலகக் கவிஞர் மாநாடு முதலாம் நாள் நிகழ்வில் வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்  தன்முனைக் கவிதைகள் - 52 கவிஞர்கள் தொகுப்பு சிறப்பாக வெளியிடப்பட்டது. கம்போடிய பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் செப்பீப் வெளியிட மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராசேந்திரன் பெற்றுக்கொண்டார். பாடலாசிரியர் விவேகா முன்னிலையில் வெளியானது.

22/09/2019 அன்று உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம் பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து 'சர்வதேச இளங்கோவடிகள் விருது' கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதளித்தவர், கம்போடிய பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் சொபீப் அவர்கள். கவிஞர் விவேகா மற்றும் அங்கோர் தமிழ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தார்கள். 

தன்முனைக்கவிதைகளுக்கு பன்னாட்டு மேடையில் அங்கீகாரம் கொடுத்தது தமிழுக்கும் நமக்கும் பெருமை.மேடையில் கவிஞர்கள் சுமதிசங்கர், அன்புச்செல்வி சுப்புராஜ் , இர.தர்மாம்பாள் மற்றும் ஓசூர் மணிமேகலை ஆகியோருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. (இவர்கள் தன்முனைக்கவிதைகள் எழுதிய கவிஞர்களில் ஐவர்)  முனைவர் பேரா.மறைமலை இலக்குவனார், முஸ்தபா, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராசேந்திரன், கருமலை தமிழாழன், ஓசூர் மணிமேகலை, மலர்வண்ணன், வணங்காமுடி, உமையவன், ரோகினி,யோ புரட்சி, கஸ்தூரி மற்றும்  பாடலாசிரியர்கள் இந்துமதி, அஸ்மின், கவிரிஷி மகேஷ், ரவி தமிழ்வாணன் உள்ளிட்ட பல கவிஞர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் இந்தியா  மலேசியா சிங்கப்பூர் சுவிஸ் இலங்கை மொரீடியஸ் மற்றும்  வளைகுடா நாடுகளைச்சேர்ந்த கவிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் சித்தர் திருத்தணிகாசலம், அங்கோர் தமிழ் சங்க தலைவர் சீனிவாசராவ், செயலர் ஞானசேகரன் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ்வரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கவிஞர்களுக்கு இரண்டு நாள் சுற்றுலாவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

- மாலதி சந்திரசேகரன்.

]]>
புத்தக வெளியீடு, tamil love, thamizh, power of Tamil in world, world tamilians, தமிழர் பெருமை, கம்போடியாவில் தமிழ், தமிழ் நூல்கள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/26/w600X390/tamil.gif https://www.dinamani.com/lifestyle/art/2019/sep/26/tamil-in-world-and-cambodia-3242700.html
3235716 லைஃப்ஸ்டைல் கலைகள் பி பி கிங் எனும் ப்ளூஸ் இசையரசனுக்கு கூகுளின் டூடுல் பிறந்தநாள் வாழ்த்து! RKV Monday, September 16, 2019 11:54 AM +0530  

ரைலி பி. கிங் அலைஸ் பி பி கிங் ஒரு அமெரிக்கப் பாடகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கிடாரிஸ்டும் கூட. கிடார் இசையே மிக மிக மென்மையானது... அதிலும் இவர் கேட்போரின் உடல் நரம்புகளை அதிரச் செய்வதான மிக மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய புது விதமான இசையை கிடாரில் உருவாக்கி தனது ஆஸ்தான ஸ்டைலாக மேடைகளில் இசைக்கத் தொடங்கினார். இது அந்தக் காலத்தில் பல கிடாரிஸ்டுகளைக் கவர்ந்து புளூஸ் இசைக்கலைஞர்கள் வரிசை என இசையில் கிங்கை பின்பற்ற வைத்தது.

பி பி கிங் தனது வயோதிகத்தில்...

கிங் 1987 ஆம் ஆண்டில் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரே மிகவும் செல்வாக்கு மிக்க புளூஸ் இசைக்கலைஞர்களில் ஒருவர் எனும் பெருமை கிங்குக்கு கிடைத்தது. அப்போது கிடார் இசையில் கிங் எனும் பட்டத்துக்குரிய இசைக்கலைஞர்கள் மூவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எனும் பெருமை ரைலிக்கு கிடைத்தது. அதன் பின்னரே ரைலி பி கிங்... பி பி கிங் ஆனார். பி பி கிங்குடன் இணைந்து அக்காலத்தில் மேலும் புகழ்மிக்க புளூஸ் இசைக்கலைஞர்கள் இருவர் இருந்தார்கள் எனில் அவர்கள் முறையே ஆல்பர்ட் மற்றும் ஃப்ரெட்டி கிங் எனும் இருவரே. கிங்கின் புகழை மேலும் அழுத்தமாகச் சொல்லவேண்டுமெனில் இப்படிச் சொல்லலாம். வருடத்திற்கு 200 க்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிஸியாக இருந்த போது கிங்கின் வயது 70. வயோதிகத்திலும் மிக அதிக அளவிலான கிடார் ரசிகர்களைப் பெற்றிருந்த கிங் 1956 ஆம் ஆண்டில் மட்டுமாக சுமார் 342 இசைக் கச்சேரிகளில் இடைவிடாமல் இசைத்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இசையின் மீது அவருக்கிருந்த அபிரிமிதமான ஆசையையும், ஆர்வத்தையும்.

இதையும் படிங்க... ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

இத்தனைக்கும் கிங்கின் இளைமைக்காலம் அத்தனை ஒன்றும் அன்பும், அரவணைப்பும் கொட்டி முழக்கவில்லை. மிக இளம் வயதிலேயே கிங்கின் அம்மா, அவரது அப்பாவை விட்டு விட்டு வேறு ஒரு மனிதருடன் வாழச் சென்று விட்டார். கடைசியில் கிங் தனது அம்மா வழிப் பாட்டியின் பொறுப்பில் தான் வளர்ந்து வர வேண்டிய சூழல் உருவானது. அப்போதெல்லாம் ஆறுதலுக்காகவும் தன்னைத் தானே  மீட்டுக் கொள்ளவும் கிங் அருகிலிருக்கும் தேவாலயத்துக்குச் செல்வதுண்டு. அங்கு கிறிஸ்தவ மதப்பாடல்களைப் பாட காயர் எனப்படும் இசைக்குழுக்கள் உண்டு. முதலில் அவற்றின் பாடல்களிலும், இசையிலும் ஈர்க்கப்பட்டு தேவாலயப் பாடகரான கிங்குக்கு கிடாரின் மேல் ஆர்வம் மிகுதியானது அதன் பின்னரே. இப்படித்தான் கிங் உலகறியும் இசைக்கலைஞர் ஆனார்.

இன்று பி பி கிங் எனும் புளூஸ் இசைக்கலைஞருக்கு, கிடார் இசை மன்னனுக்கு 94 ஆம் பிறந்தநாளாம்.

அதற்காக நினைவு வைத்துக் கொண்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

இதைக் கொஞ்சம் பாருங்க.. .ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை!

இவரது கிடார் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு மனமெல்லாம் ‘இளையநிலா பொழிகிறது’ தான் கேட்டுக் கொண்டிருந்தது. மிகச்சாதாரண இசை ஞானம் கொண்டவர்களுக்கு கிடார் இசையின் உச்சம் என்றால் அது இளையநிலா பொழிகிறது தான். எது எப்படியானால் என்ன? கிடாரைக் கண்டுபிடித்தவர்களை நிச்சயம் மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும். கேட்கக் கேட்க என்ன ஒரு இதம். 

நாமும் பி பி கிங்கின் நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுப்போம்.

]]>
b b king, blues king, american singer, lyricist, song producer, google doodle, 94 th birthday, 94 வது பிறந்தநாள், கூகுள் டூடுல், ப்ளூஸ் இசைக்கலைஞர், கிடாரிஸ்ட், பாடகர், அமெரிக்க இசையமைப்பாளர், பி பி கிங், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/16/w600X390/b_b_king.jpg https://www.dinamani.com/lifestyle/art/2019/sep/16/b-b-kings-94-th-birth-day-google-celeberated-his-day-with-doodle-3235716.html
3019003 லைஃப்ஸ்டைல் கலைகள் கவிஞர் கலாப்ரியாவுக்கு ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’! RKV Friday, October 12, 2018 12:22 PM +0530  

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம், கவிஞர் கலாப்ரியாவுக்கு இந்த ஆண்டுக்கான ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’ அளித்துக் கெளரவித்துள்ளது. கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கக்கூடிய இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக 2014 ஆம் ஆண்டில் பேராசிரியர் இளையபெருமாள் மற்றும் சீனி விஸ்வநாதனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 2015 ல் தமிழறிஞர் ச.வே. சுப்ரமணியனுக்கும் 2016 ல் கரிசக்காட்டு எழுத்தாளுமை கி.ராஜநாராயணனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த ஆண்டு இவ்விருது கவிஞர் கலாப்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். நெல்லை, கடையநல்லூரில் பிறந்த கலாப்ரியா தற்போது இடைக்காலில் வசிக்கிறார். இவரது மனைவி கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாப்ரியா, வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த புத்தகத் திருவிழாவில் இவர் எழுதிய வேனல் நாவல் பெருவாரியான புத்தக ப்ரியர்களால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லப்பட்டது. இன்று நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருதும், ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பணமும், பட்டயச்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

]]>
கலாப்ரியா, கவிஞர் கலாப்ரியா, மனோன்மணியம் சுந்தரனார் விருது 2018, kalapriya, manonmaniyam sundharanar award 2018, art, கலை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/kalapriyan.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/oct/12/2018-manonmaniyam-sundharanar-virudhu-for-poet-kalapriya-3019003.html
2978639 லைஃப்ஸ்டைல் கலைகள் கர்னாடக சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை இனிமேல் இயேசு, அல்லாவுக்கும் உண்டு: பாடகர் டி எம் கிருஷ்ணா! ஹரிணி வாசுதேவ் Saturday, August 11, 2018 04:29 PM +0530  

கர்னாடக இசைப்பாடகரான டி எம் கிருஷ்ணா சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கர்னாடக இசை 'எலைட்' மக்களுக்கும், ரசிகர்களுக்கும் மட்டுமே சொந்தமானதில்லை. சேரிப்புறத்து இளைஞர்களும், சிறுவர், சிறுமியரும் கூட கர்நாடக இசை கற்றுக் கொண்டு அதை ரசிக்கவும், பாடவும் முடியும் என்று ஆணித்தரமாக நம்பக் கூடியவர் டி எம் கிருஷ்ணா. நம்புவதோடு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சென்னையில் மீனவக் குப்பங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கர்னாடக இசையை அறிமுகம் செய்யவும் அவர் தவறுவதில்லை. இதனால் அவர் மீது சிலருக்கு அதிருப்தி இருந்தாலும் அதை கிருஷ்ணா பொருட்படுத்துவதாக இல்லை.

இதோ பாரம்பரிய சங்கீதம் என்பது இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை அல்லா, இயேசு கிறிஸ்துவுக்கு கூட கர்னாடக இசையில் வழிபாட்டுப் பாடல்களை இசைக்க முடியும். இனிமேல் மாதந்தோறும் இயேசு அல்லது அல்லாவிற்காக பாடி வெளியிடவிருக்கிறேன் என்று அடுத்தொரு வெடிகுண்டுக்கான திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக தனது முகநூல் பக்கத்தில் ‘சருவேசுரா’ என்ற கிறிஸ்தவப் பாடல் ஒன்றையும் வெளியிட்டு கிறிஸ்தவர்களில் கர்னாடக இசைப் பிரியர்களாக இருப்பவர்களை சந்தோஷக் கடலில் மூழ்கடித்திருக்கிறார்.

சருவேசுரா பாடலைக் கேட்க... 

 

கிருஷ்ணா முகநூலில் வெளியிட்ட பாடலுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல கர்னாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக இசை ராகங்களில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதின் மூலம் மதமாற்றத்தை ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்றும், தான் பாடி வெளியிட்ட ஸ்ரேஷ்டா ஆல்பத்தின் ‘சமானுலேவரு பிரபோ’ எனும் இசை பாடல் தொகுப்பை பணத்திற்காகவோ அன்றி வேறு உள்நோக்கங்களுக்காகவோ தான் பாடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

டிஎம் கிருஷ்ணா, நித்யஸ்ரீ மட்டுமல்ல கர்நாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதற்காக... முன்னதாக ஓ.எஸ் அருண் மற்றும் அருணா சாய்ராம் உள்ளிட்ட கர்னாடக இசைப்பாடகர்கள் தீவிர கர்னாடக இசை ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தாண்டு தஞ்சையில் நடைபெறவிருக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவில் மேற்கண்ட பாடகர்களை எல்லாம் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூட போர்க்கொடி உயர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாடகர் டி எம் கிருஷ்ணாவின் ‘கர்னாடக இசையில் மாதந்தோறும் ஒரு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய பாடல்’ எனும் அறிவிப்பு எத்தனைகெத்தனை ஒரு சாரரால் வரவேற்கப்படுகிறது அத்தனைக்கத்தனை ஒரு சாரரால் வெறுக்கப்படுவதாகவும் விமர்சிக்கப் படுவதாகவும் உள்ளது.

ஏனெனில், கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடும் போது அது இந்து மதப் பாடல்களைப் போலவே ஒலிக்கக் கூடும். அதை வைத்து அவர்கள் எளிதாக மதமாற்றம் செய்ய முனைவார்கள். மதமாற்றத்தை வலியுறுத்தும் மார்க்கங்களில்  கர்னாடக இசையில் பாடப்படும் கிறிஸ்தவப் பாடல்கள் நாளை முன்னுதாரணமாகி விடக்கூடாது. என பாரம்பர்ய கர்நாடக இசை ரசிகர்கள் மற்றும் கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்கல் எனும் அறிவிப்பின் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். 

]]>
கர்னாடக இசையில் கிறிஸ்தவப் பாடல்கள், டி எம் கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர்கள், தியாகராஜர் ஆராதனை திருவிழா, T M Krishna bold statement, christian songs in karnatic music https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/tmkrishna.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/aug/11/will-release-a-carnatic-song-on-jesus-or-allah-every-month-says-magsaysay-award-winner-t-m-krishna-2978639.html
2976263 லைஃப்ஸ்டைல் கலைகள் ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா? ஹரிணி வாசுதேவ் Tuesday, August 7, 2018 03:25 PM +0530  

நட்கர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியைத் தெரியும் தானே? அவரது சமீபத்திய நேர்காணலொன்றில் தனது பெயருக்கான காரணத்தை அவர் விளக்கினார். மதுவந்தி என்றால் அது ஒரு ராகத்தின் பெயராம். அது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் என்கிறார். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்றும் அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவார்களாம். மது என்றால் தேன் என்றொரு பொருளிருக்கிறதில்லையா? அதற்கேற்ப இந்த ராகத்தைக் கேட்கக் கேட்க காதில் தேனாறு பாயும் என்கிறார்கள். 

மதுவந்தி ராகத்துக்கான வாத்தியஸ்வரங்கள்...

இதன் வாத்தியஸ்வரம்...

மதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

மதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஆரோகணம்: ஸ க ம ப நி ஸ
அவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்...

 • கண்ட நாள் முதல் (N.S.ராமசந்திரன்)
 • நரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)
 • எப்படி நான் அழைப்பேன் (சிதம்பரநாதன்)
 • நின்னையே ரதி (பாரதியார்)
 • அனுமனை அனுதினம் நினை மனமே - ராகமாலிகை
 • நினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)
 • தில்லானா (கணேஷ் & குமரேஷ்)

திரையிசைப் பாடல்கள்...

நந்தா என் நிலா - நந்தா என் நிலா - தட்சிணாமூர்த்தி.


 

ஹலோ மை டியர் - மன்மத லீலை - எம். எஸ். விஸ்வநாதன்

 

 

 • வானவில்லே - ரமணா - இளையராஜா
 • கனா காணும் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் ஷங்கர் ராஜா

 

]]>
madhuvandhi rag, மதுவந்தி ராகம், லைஃப்ஸ்டைல் கலை, lifestyle art, https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/7/w600X390/000000_divine_music.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/aug/07/rag-madhuvandhi-2976263.html
2952371 லைஃப்ஸ்டைல் கலைகள் பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு! dns Tuesday, July 3, 2018 01:00 PM +0530  

மதுரை, ஜூலை 2: மதுரை மாவட்டப் பள்ளிகளில் தோல் பாவைக்கூத்து கலைப்பயிற்சி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியைச் சோ்ந்த தோல் பாவைக்கூத்து கலைக்குழுத் தலைவா் ஏ.முத்துலட்சுமண ராவ், மதுரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்; ‘எங்கள் குழுவின் சார்பில் பாரம்பரிய தொல்கலைகளில் ஒன்றான தோல் பாவைக் கூத்து கலையை பலருக்கு கற்றுத் தருகிறோம். எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

]]>
puppet show in schools, தோல் பாவைக்கூத்து வகுப்புகள், பள்ளிகளில் தோல்பாவை கூத்து, puppet show in scholls https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/3/w600X390/tholpavai_koothu.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/jul/03/பள்ளிகளில்-தோல்பாவைக்-கூத்து-வகுப்புகள்-நடத்த-அனுமதி-கோரி-கலெக்டரிடம்-மனு-2952371.html
2938840 லைஃப்ஸ்டைல் கலைகள் அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு பற்றிப் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை! ஆர்ஜே பார்வதி பேட்டி! மணிகண்டன் தியாகராஜன் Wednesday, June 13, 2018 11:08 PM +0530  

மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ரேடியோ சிட்டி பண்பலை ஒலிபரப்பானால் இவரின் குரலை கேட்க முடியும்.

இவருடைய குரலை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அவர் வேறு யாரும் இல்லை. காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆர்ஜே பாரு (எ) பார்வதிதான்.

அவரிடம்  உரையாடியதிலிருந்து:

நான் பிறந்து வளர்ந்தது மதுரையில். சென்னை எம்சிசி கல்லூரியில் பி.ஏ. இதழியல் படித்தேன். அம்மா தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முன்னணி வார இதழில் மாணவர் பத்திரிகையாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஃபேஷன் துறை உள்பட பல்வேறு துறைகள் குறித்து எழுதி எனது எழுத்தாற்றலை வளப்படுத்திக் கொண்டேன். ஊடகத் துறையைத் தேர்வு செய்ததால் பல ஊடக நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். பண்பலை ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்தபோது ஆர்ஜே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.

இரவு நேரங்களில் ரேடியோ கேட்டு அதன் மீது இளம் வயது முதலே தீராக் காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் கம்யூனிட்டி ரேடியோவிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இதழியல் மற்றும் அறிவியல் படித்தேன். அதைத் தொடர்ந்து, மதுரை ரேடியோ சிட்டியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. காலை 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நகைச்சுவையில் தொடங்கி சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். என்னுடன் சேர்ந்து மற்றொரு ஆர்ஜேவும் பேசுவார். 

மதுரையில் ஜல்லிக்கட்டு முதல் வேறு எந்தவொரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தாலும் நேரில் அதை பார்த்துவிட்டு நிகழ்ச்சியில் அது தொடர்பாக பேசுவேன். சமூக பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்று அதிகம் விரும்புகிறேன். அழகுக் குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் சொல்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் எனக்கு நாட்டம் இருந்ததில்லை. 

ஆணவக் கொலைக்கு எதிராக போராடிவரும் கெளசல்யா, சமூக விழிப்புணர்வு ஆவணப் படம் எடுத்த திவ்ய பாரதி உள்ளிட்டோரை ரேடியா சிட்டிக்காக சிறப்புப் பேட்டி எடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன். ஜெயமோகன், சல்மா உள்ளிட்ட எழுத்தாளர்களையும், சில அரசியல் தலைவர்களையும் எனது நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்கள். பணி நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

குடும்பம்?

அப்பா, அண்ணன், அக்கா என்று குடும்பத்தில் அனைவரும் வழக்குரைஞர்கள். நானும் வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம். ஆனால், அது நடக்கவில்லை.

நிகழ்ச்சிகளுக்கு முன் தயாரிப்பு செய்வது எப்படி?

நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பதை ஆர்ஜேவாகிய நாங்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது. தினசரி நாளிதழ்கள் படிப்பதன் வாயிலாக பேசுவதற்கு பல்வேறு தலைப்புகள் கிடைக்கும். உள்ளூரில் நடக்கும் முக்கியப் பிரச்னைகளையும் பேசும் பொருளாக எடுத்துக் கொள்வேன்.

எதிர்கால லட்சியம்?

ரேடியோ ஜாக்கியாக இருந்து பண்பலை துறையில் அதிகம் சாதிக்க வேண்டும். விடியோ ஜாக்கியாக ஆக வேண்டும் என்பதும் எனக்கு விருப்பம். ஒலித்துறையில் இருந்து ஒளித்துறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். குறும்படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பின் மீதும் தீராக் காதல் உண்டு. சமூகத்துக்காக எப்போதும் எனது எழுத்தும், பேச்சும் தொடரும்.

பிடித்தது?

பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். சினிமாவும், புத்தகங்களும் நான் மிகவும் நேசிக்கிறேன்.

மறக்க முடியாத பாராட்டு?

மாதவிடாய் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பெண் ஆர்ஜேக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டு கிடைத்தது என்றும் நினைவில் இருக்கும்.

ஆர்ஜே ஆக விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை?  

தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீடியா என்றால் அச்சம் இருக்கிறது என்று கருதுகிறேன். அச்சத்தை தவிர்த்தால் மீடியா துறையில் ஜொலிக்கலாம். திறமை இருந்தால் போதும் பெண்களும் ஆர்ஜே ஆகலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. மதுரை ரேடியோ சிட்டியில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்பும் தருகிறார்கள். அதைப் பயன்படுத்தி, இந்தத் துறையில் ஜொலிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

]]>
madurai, பார்வதி, RJ, Radiocity, RJ Paru, RJ Parvathy, ஆர்ஜே பார்வதி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/rj-paaru-th-madurai.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/jun/13/radiocity-rj-paru-interview-2938840.html
2934977 லைஃப்ஸ்டைல் கலைகள் வாசகர்களே, உங்கள் திறமைக்கு ஒரு சவால்! தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி போட்டிகள், ரொக்கப் பரிசுகள்! Thursday, June 7, 2018 03:15 PM +0530  

நெய்வேலி: தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரைகள், குறும்படங்கள் மற்றும் சிறுகதைப் போட்டிக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றறன.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூன் 29 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் நடக்கவுள்ளது.இப்புத்தகக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் இளம் திரைப்படக் கலைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படங்கள் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். அதன்படி, 21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் குறும்படங்கள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு வரவேற்கப் படுகின்றன.

கட்டுரைப் போட்டி:

பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள்: விழுவதெல்லாம் எழுவதற்கே, அகத் தூய்மையை பெருந் தூய்மை, நல் உரைகளே நல்ல உரைகல்.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகள்: வேதனை சாதனை ஆவதே போதனை, வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள்.தேசம் என் சுவாசம்.

மேற்கண்ட தலைப்புகளில் கீழ்காணும் விதிகளுக்குள்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல் தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவா் என்பதற்கான சான்றும் இணைக்க வேண்டும்.

பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும். தகவல் தெரிவிக்க வசதியாக மாணவா்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி மற்றும் தொடா்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் ஜூன் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும்.

பரிசு விவரம்: முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.1,500, 3-ஆம் பரிசு ரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500, நெய்வேலி மாணவா்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500.

குறும்படம்:

குறும்படங்கள்: தமிழா்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணா்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமல், டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயா், முகவரி, தொடா்பு எண் இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தோ்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது வழங்கப்படும்.

போட்டி முடிவுகள் ஜூன் 3-வது வாரம் வெளியிடப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்தப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம். இது தவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா ரூ.2,000, நடுவா் குழுவின் பரிசுகள் (5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா ரூ.1,000.

சிறுகதைப் போட்டி:  சிறுகதைகள் தமிழா்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணா்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் பிரசுரமாகாதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழியும் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம். ஒருவா் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் ஜூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும்.

தோ்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்: முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.

கட்டுரைகள், குறும்படங்கள் மற்றும் சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளா், நெய்வேலி புத்தகக் கண்காட்சி, செயல் இயக்குநா் / மனிதவளம், மக்கள் தொடா்புத் துறை அலுவலகம், என்எல்சி இந்தியா லிமிடெட், வட்டம்-2, நெய்வேலி-607 801, கடலூா் மாவட்டம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.6.2018.

]]>
Neyveli book fare, Dinamani Neyveli book fare, நெய்வேலி புத்தகக் கண்காட்சி, தினமணி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/7/w600X390/download.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/jun/07/வாசகர்களே-உங்கள்-திறமைக்கு-ஒரு-சவால்-தினமணி-நெய்வேலி-புத்தகக்-கண்காட்சி-போட்டிகள்-ரொக்கப்-பரிசுகள-2934977.html
2926068 லைஃப்ஸ்டைல் கலைகள் உங்களுக்கு கதகளி பயிற்சி பெற ஆர்வம் உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்! பூர்ணிமா Thursday, May 24, 2018 05:27 PM +0530 திருவனந்தபுரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த லலிதாவுக்கு சிறுவயது முதலே, கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி மீது தீராத ஆர்வமிருந்ததால், தானும் கதகளியை முறையாக கற்றிருந்தார். 17-ஆவது வயதில் கே.ஜி.தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டபின் கேரளாவைவிட்டு கணவருடன் வெளியேற வேண்டியதாயிற்று. இவரது கணவர் ஒரு தலைமைப் பொறியாளர் என்பதால் ஒடிசா, டெல்லி, புணே, பாக்தாத், திரிபோலி என பல இடங்களுக்கு மாற்றலாகி கொண்டிருந்தார். இந்தியாவில் தங்கும் போதெல்லாம் கதகளி நிகழ்ச்சியை நடத்த லலிதாதாஸ் தவறுவதில்லை. சில சமயங்களில் ஆர்வம் காரணமாக கதகளி நடன நிகழ்ச்சியைக்காண பல தடவை கேரளா சென்றதும் உண்டு.

1999-ஆம் ஆண்டு கணவர் காலமான பின்பு, அடிக்கடி கேரளா சென்று கதகளி நடனத்தை பார்த்துவிடுவது லலிதாவுக்கு சிரமமாக இருந்தது. பெங்களூரில் தன் மகளும், எழுத்தாளருமான மீனா தாஸ் வீட்டில் தங்கியிருந்த லலிதா தாஸ், ஒருநாள் தன் இயலாமையை மகள் மீனாதாஸ் மற்றும் அவரது கணவர் நாராயணனிடம் கூறியபோது, பெங்களூரிலேயே "கதகளி' பயிற்சி மையமொன்றை தொடங்கினால் என்ன என்ற யோசனை சொன்னனர். 2009-ஆம் ஆண்டு "பெங்களூரு கிளப் ஃபார் கதகளி அண்ட் த ஆர்ட்ஸ்' என்ற அமைப்பு உருவாயிற்று.

மலையாளிகள் மட்டுமன்றி கன்னடர், தெலுங்கர், தமிழர் என பிற சமூகத்தினரும் கதகளி பயிற்சி பெற வேண்டுமென்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் எதிர்பார்த்ததை விட நிறைய பேர் பயிற்சி பெற தொடங்கினர். கதகளி நடனத்துடன் குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற பிற நடனங்களும் கற்று தரப்பட்டன. தன்னுடைய தாய்க்கு உதவும் பொருட்டு லலிதா தாஸின் மகள் மீனாதாஸ் கதகளி நடன அடிப்படையிலேயே இதிகாச கதைகளை நாட்டிய நடாகமாக வடிவமைத்து தந்ததோடு, தானும் மேடையேறி ஆடத் தொடங்கினார். இதனால் கதகளி நடன பயிற்சியளிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமை லலிதா தாஸþக்கு கிடைத்தது. 'கதகளி' பயிற்சி மையத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்த காரணம் என்ன என்பதை லலிதா தாúஸ (81) கூறுகிறார்:

சிறுவயது முதலே "கதகளி' நடனத்தில் ஈடுபாடு கொண்ட நான், தற்போது வயது முதிர்வு காரணமாக கேரளா செல்ல முடியாது என்ற காரணத்தால் பெங்களூரிலேயே என் மகள் உதவியுடன் கதகளி பயிற்சி மையமொன்றை தொடங்கினேன். எனக்காக என் மகள் மீனா தாஸ், கர்ணன், வால்மீகி பிரதிபா, சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்களை நாட்டிய நாடகமாக வடிவமைத்து கொடுத்தார். கதகளி நாட்டிய அடிப்படையில் இவைகளை நடத்த கேரளாவிலிருந்தே 55 பேரை வரவழைத்து மேடை ஏற்றினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூன்று நாட்டிய நாடகங்களையும் பெங்களூரில் மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலும் நடத்தியுள்ளேன். இதற்காக "சமன்வே கலாஸ்ரீ விருது' உள்பட எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நாட்டிய நாடகத்திற்காக உடைகளை கலா மண்டலம் கோபி வடிவமைத்து கொடுத்ததோடு, நாடகத்திலும் நடித்து வருகிறார்.

கதகளி பயிற்சி பெற நல்ல இசை, இசைக்கேற்ப முகபாவம், நடிப்பு முக்கியம். கதகளி கலைஞர்கள் வெளிபடுத்தும் கண்ணசைவுகள், முத்திரைகள் மூலமாகவே பார்வையாளர்கள் கதையை புரிந்து கொள்ளலாம். கதகளிக்காகவே தங்களை அர்ப்பணித்து கொண்ட கலைஞர்களும் உண்டு. நிறைய பொது நிகழ்ச்சிகள், சபாக்களில்இருந்து இந்த நாட்டிய நாடகங்களை நடத்த வாய்ப்புகள் வருகின்றன. என் ஆயுள் உள்ளவரை ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு முறையாவது இந்த நாட்டிய நாடகத்தை மேடை ஏற்ற வேண்டுமென்பதே என் கனவாக உள்ளது' என்கிறார் லலிதா தாஸ்.
 

]]>
kathakali, lalitha das, bangalore arts, கதகளி, லலிதா தாஸ், கேரளா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/24/w600X390/d973a77274dd48e32caea716d30af33e.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/may/24/kathakali-training-centre-at-bangalore-2926068.html
2859176 லைஃப்ஸ்டைல் கலைகள் விண்ணோடும் முகிலோடும் விளையாடிய சங்கநாதத்துக்கு இன்று நூற்றாண்டு விழா! சரோஜினி Wednesday, February 7, 2018 06:14 PM +0530  

 ‘வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்...’

 ‘காவியமா... நெஞ்சின் ஓவியமா...’

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’

‘குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...’

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்’

- போன்ற காலத்துக்கும் நிலைத்து நிற்கும் திரைப்படப் பாடல்களைப் பாடியவரும் காலஞ்சென்ற இசைக் கலைஞருமான சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெறுகிறது. 1993 ஆம் மறைந்தவரான சி.எஸ் ஜெயராமன் கலைஞர் கருணாநிதியின் மைத்துனர் ஆவார். இவரது மூத்த சகோதரி பத்மாவதியே கலைஞரரின் முதல் மனைவி. மு.க முத்துவின் அம்மா. அவரது சகோதரி மகனான மு.க. முத்துவே பின்னாட்களில் சி.எஸ்.ஜெயராமனின் மகளான சிவகாம சுந்தரியைமணந்து கொண்டார். இவரது நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்நிகழ்வில் பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
 

சிதம்பரம் ஜெயராமனின் காலத்துக்கும் அழியாத 10 சிறந்த திரையிசைப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்...

 

தமிழ்த்திரையிசைப் பாடல்களில் சி.எஸ்.ஜெயராமனின் பங்களிப்பு இசைத்துறையில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் காலத்தால் அழியாப் பெருமை கொண்டது. இன்றும் அவரது பாடல்களை முணுமுணுக்காதவர் இல்லை.

]]>
singer, c.s.jayaraman, centenary year, சி.எஸ்.ஜெயராமன், இசைக்கலைஞர், நூற்றாண்டு விழா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/jayarama.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/feb/07/விண்ணோடும்-முகிழோடும்-விளையாடிய-சங்கநாதத்துக்கு-இன்று-நூற்றாண்டு-விழா-2859176.html
2847433 லைஃப்ஸ்டைல் கலைகள் குழலிசை இன்றும் இருக்கையில், யாழிசை ஏன் இல்லாமலானது? கார்த்திகா வாசுதேவன் Friday, January 19, 2018 06:00 PM +0530  

பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளில் முதன்மையாக வாசித்த நரம்பு இசைக்கருவி யாழ். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த யாழ் பின் வீணையின் வரவால் வழக்கிழந்து விட்டது எனலாம். குறிஞ்சி நிலத்து மக்கள் பயன்பாட்டில் இருந்த வில்லின் முறுக்கேற்றிக் கட்டப்பட்ட நாணிலிருந்து அம்பு செல்லும் போது தோன்றிய இசையினால் யாழ் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும், புராணத்தில் சொல்லப்பட்ட ‘யாழி’ என்ற விலங்கிலிருந்து செதுக்கப்பட்டு தோன்றியதாக இருத்தல் வேண்டும் என்ற மற்றொரு கருத்தும் நிலவி வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரும்பாணாற்றுப் படை, சீவக சிந்தாமணி, பெரியபுராணம் மற்றும் பல இலக்கியங்களில் யாழின் குறிப்புகள் உள்ளன. ஈழத்தவரான சுவாமி விபுலானந்தர் “யாழ்நூல்” என்னும் இசைத்தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

“பேரியாழ் பின்னும் மகரம் சகோடயாழ்
சீர்பொலியும் செங்கோடு செப்பினார் - தார் பொலிந்து 
மன்னும் திருமார்ப வண் கூடற் கோமானே
பின்னுமுளவோ பிற” 

- என்ற பாசுரப்படி தமிழ்நாட்டில் வழங்கி வந்த யாழ்கள் நான்காகும்.

ஒன்றுமிருபதும் ஒன்பதும்பத்துடனே
நின்ற பதினான்கும், பின்னேழும் - குன்றாத 
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன் முறையே
மேல் வகுத்த நூலோர் விதி’

- என்ற பாசுரப்படி பேரியாழுக்கு 21-ம், மகரயாழுக்கு 19 - ம், சகோடயாழுக்கு 14-ம் செங்கோட்டியாழுக்கு 7- ம் நரம்புகளாகக் கொண்டு வழங்கி வந்துள்ளது கண்கூடு. இவை நான்குமில்லாது ஆயிரம் நரம்புகளுடைய  ‘ஆதியாழ்’ எனும் யாழொன்றும் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பு அது வழக்கு வீழ்ந்து அழிந்து போயிற்று.


யாழின் வகைகள்:

 • ஆதி யாழ்: 1000 நரம்புகளைக் கொண்டது (வனத்தில் விலங்குகளை விரட்டப் பயன்படுத்தப்பட்டது)
 • நாரத யாழ்: 1000 நரம்புகளைக் கொண்டது, முக்கோண வடிவை உடையது.
 • ஆதிகால பேரியாழ்: 100 நரம்புகளை கொண்டது.
 • பேரியாழ்: 21 நரம்புகளைக் கொண்டது.
 • மகரயாழ்: 17 அல்லது 19 நரம்புகளைக் கொண்டது.
 • சகோடயாழ்: 16 நரம்புகளைக் கொண்டது
 • செங்கோட்டியாழ்( சீறியாழ்): 7 நரம்புகளைக் கொண்டது
 • தும்புருயாழ்: 9 நரம்புகளைக் கொண்டது
 • கீசக யாழ்: 14 நரம்புகளைக் கொண்டது.
 • மருத்துவ யாழ்: 100 நரம்புகளைக் கொண்டது (தேவ யாழ் என்ற பெயரும் உண்டு)
 • வில் யாழ்: வில் போன்ற வடிவமுடையது.
 • மயில்யாழ்: மயில் போன்ற வடிவமுடையது.
 • கிளியாழ்: கிளி போன்ற வடிவமுடையது.

தகவல் உபயம்: சகோடயாழ் புத்தகம் 
ஆசிரியர்: பு.உ.கே.நடராஜன்
 

]]>
yazh, sakodayazh, யாழிசை, யாழ், சகோட யாழ், லைஃப்ஸ்டைல் கலைகள், lifestyle art https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/19/w600X390/Yaaz.jpg https://www.dinamani.com/lifestyle/art/2018/jan/19/yazh-sakodayazh-2847433.html
2833992 லைஃப்ஸ்டைல் கலைகள் செம்புலப் பெயல் மழையென ஒரு சங்கீத அனுபவம் பெறச் செய்யும் ‘சந்தூர்’ இசைக்கருவி! ஹரிணி வாசுதேவ் Thursday, December 28, 2017 12:00 AM +0530  

‘செம்புலப் பெயல் மழை’ என்று சங்க இலக்கியங்களில் சொல்லக் கேள்வி, செம்மண் நிலத்தில் மழை பெய்தால் மண்ணும், மழைநீரும் ஒத்த இயைபோடு ஒருங்கே கலந்தால் அந்த மழைக்கு செம்புபபெயல் மழை எனப்பெயர். பொதுவாக இதை தலைவன், தலைவியின் ஒத்திசைந்த வாழ்க்கைக்கு உதாரணமாகக் குறுந்தொகைப்பாடலொன்றில் பாடி வைத்திருக்கிறார்கள். இதை வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஒத்திசைவான எல்லா விஷயங்களுக்குமே நாம் உதாரணமாகக் காட்டலாம் தான். அந்த வகையில் அப்படியோர் அருமழையை இசை வடிவாக ரசிக்க முடியுமா? எனில்; ஆம் முடியும், அதற்கு நீங்கள் சந்தூர் இசை கேட்க வேண்டும். சந்தூர் பெரும்பாலும் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பயன்படுத்தப் படுவதில்லை அது ஒரு இந்துஸ்தானி இசைக்கருவி. கேட்கக் கேட்க நாதவெள்ளம் செவிக்குள் பாய்ந்து நயம்படப் புகும் அழகையும், அனுபவத்தையும் நாம் செம்புலப்பெயல் மழையோடு தான் ஒப்பிட வேண்டியதாய் இருக்கிறது. வேண்டுமானால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

இந்தியாவின் புகழ்பெற்ற சந்தூர் இசைக்கலைஞர்களில் பண்டிட் சிவ்குமார் ஷர்மாவுக்குத்தான் என்றுமே முதலிடம். அவரது லயமான சந்தூர் இசையாடலைக் கேளுங்கள்;

சந்தூர் இந்தோ- பெர்ஷியன் வகை இசைக்கருவிகளில் ஒன்று. இதன் தோற்றம் காஷ்மீர் என்றாலும் இன்று இக்கருவியை தேசிய இசைக்கருவியாக அறிவித்திருப்பது ஈரான் தேசம். பொதுவாக வால்நட் அல்லது மேப்பிள் மரங்கள் மட்டுமே இவ்விசைக்கருவியை தயாரிக்க உகந்தவை. இந்தியாவின் சந்தூர் இசைக்கருவி, 72 நரம்புக் கம்பிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும் பண்டைய இந்தியாவில் இதை ‘சத தந்த்ரி வீணா’ என்ற பெயரில் ஜம்மு& காஷ்மீர் பகுதிகளில் பெருமளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். சதம் என்றால் 100 என்று பொருள். அவ்விதம் 100 வலிமையான நரம்புக் கம்பிகள் கொண்டு இக்கருவியில் இருந்து இசை எழுப்பப் பட்டதால் இதை அப்போது ‘சத தந்த்ரி வீணா’ என்று அழைத்திருக்கிறார்கள். இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்திய மூதாதையர்கள் என மெசபடோமியர்களும், பாபிலோனியர்களும் அடையாளம் காட்டப்பட்டாலும் அதற்கான உத்திரவாத சான்றுகள் எதுவும் கிட்டவில்லை என்கிறார்கள்.

சந்தூர் இசைக்கருவியை வாசிக்க உகந்த முறை அர்த்தபத்மாசன முறை. ஒருவர் சந்தூர் இசைக்கருவியை வாசிக்க வேண்டுமெனில் அர்த்தபத்மாசனமிட்டு அமர்ந்து தொடையில் சந்தூரை ஒரு குழந்தையாகப் பாவித்து அமர வைத்தே வாசிக்க முடியும். அப்படி வாசிக்கையில் சந்தூரின் அகலாமான பகுதி இசைக்கலைஞரின் இடுப்பை ஒட்டியும், குறுகிய பகுதி வெளிப்புறமாகவும் அமையும். வீணை போன்ற பிற நரம்பிசைக்கருவிகளைப் போல இதை விரல்களால் வாசிக்க முடியாது. இதற்கென மரத்தாலான சின்னஞ்சிறு சுத்தியல் போன்றதொரு கருவி இசைக்கருவியோடு சேர்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு தான் இவ்விசைக்கருவியில் இருந்து இசை பிரவகித்துப் பொங்கியெழுந்து கேட்பவர் செவியெங்கும் இன்னிசை மழையால் நிறையச் செய்கிறது. அடிப்படையில் சந்தூர் இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்வது மிகக்கடினமானதென்றே கருதப்படுகிறது. ஏனெனில் மிக மெல்லிய ஸ்ட்ரோக்குகள் மற்றும் இசையின் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் சாத்தியமாகச் செய்யும் சந்தூரில் பாண்டித்யம் தப்பினால் பெரும்பிழையும் எளிதில் நிகழச் சாத்தியமுண்டு. ஆகவே இதைக் கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் ஆட்கள் வெகு குறைவே!

இந்தியாவின் புகழ்மிக்க சந்தூர் இசைக்கலைஞர்கள்... 

 • சிவ்குமார் ஷர்மா
 • பஜன் சோபொரி
 • தருண் பட்டாச்சார்யா
 • ஆர்.விஸ்வேஸ்வரன்
 • ராகுல் ஷர்மா
 • உல்லாஸ் பபட்

- உள்ளிட்டோர் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சந்தூர் இசைக்கலைஞர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்தியத் திரைப்படங்களில் சந்தூர் இசை...

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சந்தூர் இசைக்கோவையைக் கேளுங்கள்...


 

 

 

இது மட்டுமல்ல, இன்னும் பல பாலிவுட் திரைப்படங்களில் சந்தூர் இசைக்கோவை மிக அருமையான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு சிறந்த உதாரணம் அமிதாப், ஜெயபாதுரி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு  வெளியான சில்சிலா இந்தித் திரைப்படத்தின் தீம் இசை. ஏனெனில் இதை வாசித்தவர் சாட்ஷாத் பண்டிட் சிவ்குமார் ஷர்மாவே தான்.

 

இந்தியாவில் சந்தூர் கற்றுக் கொண்டு வாசிக்க ஆண்களே தயங்கிய நிலையில், சந்தூர் இசையைக் கற்றுக் கொண்டு அற்புதமாக மேடைக்கச்சேரிகளும் செய்து வரும் முதல் இந்தியப் பெண் ஸ்ருதி அதிகாரி, அவரது இசைத்திறனைக் கேளுங்கள்;

இத்தனை அருமையான சந்தூர் இசையை வாசிக்க தமிழில் கலைஞர்கள் இல்லையா என்கிறீர்களா? ஏன் இல்லை... இதோ சந்தூர் சீனு என்று ஒரு இசைக்கலைஞர் இருக்கிறார். தமிழில் அவர் வாசிக்காத இசையமைப்பாளர்கள் இல்லை. வாசிக்காத இசைக்கருவிகள் இல்லை. எல்லாக் கருவிகளை விடவும் சந்தூர் இவரது ஸ்பெஷல் என்கிறார்கள். இதோ அவரது கைத்திறனில் சந்தூர் இசை கேளுங்கள்;

மின்னலே திரைப்படத்தில் வரும் வெண்மதி,வெண்மதியே நில்லு பாடலில் கூட சந்தூர் இசைக்கருவி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வாசித்திருப்பது சந்தூர் சீனு என அவரது நேர்காணலொன்றில் அவரே கூறியிருக்கிறார். அந்தப் பாடலைக் கேட்டால் பிற வாத்தியங்களுடன் சந்தூர் இசை தனித்து ஒலிப்பதை நீங்களே அடையாளம் காணலாம்.

சந்தூர் பற்றி சீனு என்ன சொல்கிறார் எனில், சந்தூரில் மட்டும் 10 வெரைட்டிகள் இருக்கின்றனவாம். காஷ்மீர் சந்தூர், பெர்ஷியன் சந்தூர், ஐரோப்பிய நாடுகளின் டல்சிமர் எல்லாமும் சந்தூரின் வெவ்வேறு வடிவங்களே தவிர, அவற்றிலிருந்து வெளிவரும் இசையும், நாதமும் ஒன்றே என்கிறார். 

]]>
santhoor instrumental music, சந்தூர், இந்திய இசைக்கருவிகள், indian musical instruments https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/27/w600X390/santoor.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/dec/28/music-of-santoor-2833992.html
2825809 லைஃப்ஸ்டைல் கலைகள் பொன்விழா கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமியின் விருது வழங்கும் விழா! Wednesday, December 13, 2017 05:25 PM +0530
சென்னை: பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கவின் கலைகள் விழா இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை தி.நகரின் ஹபிபுல்லா சாலையில் உள்ள ராமாராவ் கலா மண்டபத்தில் நடைபெறும் கவின் கலைகள் விழாவை திருமதி ரஜினி ஹரிஹரன் துவக்கி வைக்கிறார். சென்னை கல்சுரல் அகாடமியின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி துவக்க உரையாற்றுகிறார். 

இந்த கலை நிகழ்ச்சியில், பல்வேறு கலைத்துறையில் தங்கள் ஈடு இணையற்ற சேவையை ஆற்றி வரும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

நிகழ்ச்சியில், மேல்நாட்டு வாத்தியம் எனக் கருதப்பட்டு வந்த கிளாரினட்டில் நம் தமிழ்நாட்டின் இசையினை வாசிக்கும் முறையை அறிவித்த முன்னோடியாகக் கருதப்படும் ஏ.கே.சி. நடராஜனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது.

கர்நாடக இசைக் கலைஞர்களான ஓ.எஸ். தியாகராஜனுக்கும், நெய்வேலி ஆர். சந்தானகோபாலனுக்கும் சங்கீத 'கலா சிரோமணி' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனப் பள்ளியைத் துவங்கி கலைச் சேவை செய்து வரும் நடனக் கலைஞர் ஷீலா உன்னிக்கிருஷ்ணனுக்கு நிருத்ய 'கலா சிரோமணி' விருது வழங்கப்படுகிறது.

கிரேஸி மோகன் நாடகக் குழுவில் மது என்று பிரபலமாக அறியப்படுபவர் ஆர். பாலாஜி, 4 ஆயிரத்துக்கும் அதிகமாக நாடகங்களில் தோன்றியுள்ளவர். 25 முறை சிறந்த நடிகர் விருது பெற்ற பாலாஜிக்கு நாடக 'கலா சிரோமணி' விருது வழங்கப்படுகிறது.

குறைந்த செலவில் சிறந்த சேவை அளிக்கும் வகையில் சுவாமி விவேகானந்தா டயாக்னஸ்டிக் மையம் மூலம் ஏழைகளுக்கு உதவி வரும் லையன் பிரேம்நாத்துக்கு சென்னை கல்சுரல் அகாடமியின் 'சிறப்பு விருது' வழங்கப்படுகிறது.

விருது பெறும் கலைஞர்களை கௌரவித்து விருதுகளை வழங்க டாக்டர் பத்மா சுப்ரமணியம், டாக்டர் கண்ணன் புகழேந்தி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

கேசிடி கோவை நிர்வாகி டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர்  விருது பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். டிசிஎஸ் சென்னை பிரிவின் சிஏஓ சுரேஷ் ராமன், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிர்வாகி ஜி. ஸ்ரீனிவாசன், கோபுரம் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஒய்.வி. ஹரி கிருஷ்ணன், மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாகி டாக்டர் வி.மோகன், பீ.பி. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் விருது பெறுபவர்களை கௌரவிக்க உள்ளனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக இரவு 7.30 மணிக்கு கிளாரிநெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

தொடர்ந்து 15.12.17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 4ம் தேதி வியாழக்கிழமை வரை பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளும் நடைபெற உள்ளன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/13/w600X390/20171213_163846.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/dec/13/சென்னை-கல்சுரல்-அகாடமியின்-விருது-வழங்கும்-விழா-2825809.html
2825136 லைஃப்ஸ்டைல் கலைகள் லஷ்மண் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’  உமா பார்வதி Wednesday, December 13, 2017 11:30 AM +0530  

லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், ‘சென்னையில் திருவையாறு’ என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த 12 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தற்போது இதன் 13-ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வரும் டிசம்பர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது.

அனைவராலும் திருவையாறுக்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது. அக்குறையை போக்கவும், சென்னைவாசிகள் பயன்பெறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இவ்விழாவை வருகின்றனர் விழாவின் அமைப்பாளர்களான லஷ்மண் ஸ்ருதி. அவ்வகையில் இந்த இசை உற்சவம் டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 25 வரை எட்டு நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. தவிர, தினமும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

பிரபல இசைக் கலைஞர்கள் முதல் புதியவர்கள் வரை பங்கேற்கிறார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் 60 நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவரும் ரசித்து மகிழலாம். இந்நிகழ்ச்சியை திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா தொடங்கி வைக்கிறார். முன்னணி கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த உற்சவத்தில், 500 பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மரியாதை

தொடக்க விழாவை முன்னிட்டு பத்மவிபூஷன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவாகவும் அவருக்கு மரியாதை செய்யும் வகையாகவும், அவரது மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டு, 8 நாட்கள் காமராஜர் அரங்க வளாகத்தில் வைக்கப்படும்.

இலவச பேருந்து

இசை நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் அவரவர் வீடுகளுக்கு பத்திரமாகத் திரும்பிச் செல்ல காமராஜர் அரங்கத்திலிருந்து சோழிங்க நல்லூர், திருவான்மியூர், மேடவாக்கம், தாம்பரம், குன்றத்தூர், பூந்தமல்லி, ஆவடி, ரெட் ஹில்ஸ், திருவற்றியூர், பாரிமுனை, பெரம்பூர், மைலாப்பூர் ஆகிய இடங்கள் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இரவு 7.15 முதல் இலவசமாகப் பேருந்து இயக்கப்படும்.

பம்பர் பரிசுகள்

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து, அமெரிக்காவுக்குச் சென்று வருவதற்கான இலவச விமான டிக்கெட்டுகளை கும்பகோணம் அரசு ஜுவல்லர்ஸ் வழங்க இருக்கிறார்கள். 

சீனியர் சிட்டிசன்களுக்கு மரியாதை 

இந்த ஆண்டு மூத்த குடிமக்களுக்கு மரியாதை செய்யும் வகையில், முதியோர் இல்லங்களிலிருந்து 500 முதியவர்களுக்கு காலை 7 மணி நிகழ்ச்சியை தினமும் கண்டு களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம், உபன்யாஸம், மற்றும் பக்திப் பாடல்களை கேட்பது ஆகியவை மறக்க முடியாத தெய்விக அனுபவமாக மலரும். இதற்காக விரிவான ஏற்பாடுகளை நிகழ்ச்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். இலவச போக்குவரத்து மற்றும் காலை உணவு, காபி மற்றும் தேனீர் அரங்கில் வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருக்கும் சில அத்தியாவசிய மருந்துகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, துண்டு, நோட்டுப் புத்தகம், பேனா, முதலுதவிப் பெட்டி ஆகியவை உள்ளிட்ட ஒரு பரிசுப் பை வழங்கப்படும்.

அரங்கத்தில் இவலச மருத்துவ முகாம், இசைக்கருவிகள் விற்பனை, அறிவுத் திறன் போட்டி, உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளது.

உணவு விழா

'சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரசிகர்களை மகிழ்விக்க, உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை விழாவுடன் சேர்ந்து, அதே வளாகத்திற்குள் விதவிதமான உணவு வகைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை உணவு உள்ளிட்ட பலவேறு உணவுக் கடைகள், முன்னணி சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ருசியான உணவு வகைகள், வெஜிடபுள் கார்விங், ஐஸ் கார்விங் உள்ளிட்ட சில சமையல் போட்டிகள் என தனித்துவமான உணவுத் திருவிழாவாக இது நடைபெற உள்ளது. நம்ம வீட்டுக் கல்யாணம் எனும் உணவு அரங்கில் ஐயப்ப பக்தர்களுக்கு 50% சிறப்பு தள்ளுபடி உண்டு.

காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி

பாரத மாதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக 50 அடி அகலமும் 24 அடி உயரமும் கொண்ட, காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி உணவு வளாக அரங்கத்தின் நுழைவாயிலில் ஏற்றப்படும்.

ரூஃப் டாப் கார்டன்

மொட்டைமாடி தோட்டக் கலையின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு 10 அடி உயரம் 40 அடி அகலம் மற்றும் 40 அடி பரப்பளவில் ரூஃப் டாப் கார்டனை வடிவமைத்துள்ளார்கள். மாடி / கூரை தோட்ட வளர்ப்பை வலியுறுத்தும் விதமாக கண்ணைக் கவரும் வண்ணம் அது இருக்கும். மேலும் தோட்டக் கலை வல்லுநர்களிடம் சந்தேகங்களைப் பற்றி விவாதிக்கலாம்.  

நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைவது உறுதி. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள www.lakshmansruthi.com ஆகிய இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :

தொலைபேசி எண்கள் - 044-48562170, 88070 44521 
மெயில் ஐடி - ct@lakshmansruthi.com 
இணைய தளம் : www.lakshmansruthi.com / www.chennaiyilthiruvaiyaru.com
முகநூல் - https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial

 

]]>
Chennaiyil Thiruvaiyaaru, சென்னையில் திருவையாறு 2017 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/13/w600X390/musical.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/dec/13/chennaiyil-thiruvaiyaaru-music-concert-commences-from-december-18-to-december-25-2825136.html
2820156 லைஃப்ஸ்டைல் கலைகள் கார்டூன் வரைந்தால் இதுதான் கதியா? இவர் வரைந்த இந்த ஓவியங்களுக்காக நாடு கடத்தப்பட்டார்!   உமா பார்வதி Monday, December 4, 2017 11:09 AM +0530  

மானுடத்தின் வலி நிறைந்த பக்கங்களை ஒருவரும் புரட்டிப் பார்க்க விரும்புவதில்லை. கண் முன்னே நிகழும் அவலங்களைக் கூட கடந்து போகிறவர்களாகவே நம்மில் பலர் இருந்து வருகிறோம்.

காரணம் அவசர உலகம், நம்மை நிற்க நிதானிக்க அடுத்தவர்களை கவனிக்க இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது என்று கூறுவோம். 

ஆனால் கலைஞர்களால் அப்படி இருக்க முடியாது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தை அழிக்கும் ரெளத்திரம் அவர்களுக்கு ஏற்படும். 

Bait

சம காலத்தில் நிகழும் சம்பவங்களை அந்தக் காலத்தின் பதிவாக அவர்களுடைய பேனா அல்லது தூரிகை அழுத்தமாக பதிந்துவிடும்.

குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev) எனும் ஓவியர் அத்தகைய காத்திரமான படைப்புக்களை தனது ஓவியங்கள் மூலமும் கேலிச்சித்திரங்களாகவும் படைத்து வருகிறார். ஒருவர். அவருடைய ஓவியங்கள் அனைத்தும் வித்யாசமானவை. 

Just Leader

உண்மையை தனது ஓவியத்தின் மூலம் உரக்கச் சொல்வதில் குன்டஸ் தயங்கியதேயில்லை.

War and Peace

தனது தாய்நாடான அசர்பைஜானில் நிகழும் சமூக அநீதிகளை அவரது ஓவியங்கள் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது.

Political Prisoners

அவரிடம் இருந்தது தூரிகையா அல்லது கண்ணுக்குத் தெரியாத சவுக்கா என்று புரியாத அசர்பைஜான் அரசு, அவரை நாடு கடத்தியது.

Migration

சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனாலும் குன்டஸ் அகயெவ் முடங்கிப் போய்விடவில்லை.

Smile We will become famous

இன்னும் தீவிரமாக கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நேர்மையாகவும் தன் மனச்சாட்சிக்கு உட்பட்டும் இயங்கி வருகிறார். 

Made In China

அவர் வரைந்த இந்தச் சித்திரங்களுக்கு விளக்கம் வேண்டியதில்லை. காரணம் உலகின் எந்த மூலையாக இருந்தாலும் அவை பொருந்தக் கூடியதே.

மேலும் சில ஓவியங்கள்,

Tourist

***

Sweet Dreams

***

Justice is Dead

***

Virtual Patriatism

***

Flying Cage

ஓவியங்கள் / நன்றி - குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev)

]]>
Azerbaijan, Cartoonist Gunduz Agayev , குன்டஸ் அகயெவ், கார்டூனிஸ்ட், அசர்பைஜான் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/gunduz.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/dec/04/illustrations-of-cartoonist-gunduz-agayev-2820156.html
2741633 லைஃப்ஸ்டைல் கலைகள் குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா! Friday, July 21, 2017 12:38 PM +0530 குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா ஜூலை 22 முதல் 27 வரை நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் :

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 6 மணி – 2017 வருடாந்திர விருது வழங்கும் விழா. தலைமை – திரைப்பட இயக்குனர் பாம்பே சாணக்யா.

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 7 மணி – கிரேஸி கிரியேஷன்ஸ் வழங்கும் கிரேஸி மோகன் மற்றும் மாது பாலாஜி நடிக்கும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி க்ரேஸி தீவ்ஸ்’ (Return of the Crazy Thieves) (குபீர் சிரிப்பு நாடகம்)

23.7.2017 (ஞாயிற்றுகிழமை) மாலை 6.45 மணி – U.A.A வழங்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சுப்புணி, ஆனந்தி நடிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ (சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் நாடகமாக்கம்)

24.7.2017 (திங்கள்கிழமை) மாலை 6.45 மணி – சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ Dr. நல்லி K.குப்புசாமி செட்டியார் அவர்கள் முன்னிலையில் நாடக காவலர் கலைக்கூடம் வழங்கும் ‘அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர்’ (ஸ்ரீ ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு ஆன்மிக நாடகம்)

25.7.2017 (செய்வாய்கிழமை) மாலை 6.45 மணி – சத்யசாயி கிரியேஷன் வழங்கும் மாப்பிள்ளை கணேஷ் நடிக்கும் ‘மனிதன் என்பவன்’ (புதிய நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : திரைப்பட புகழ் எழுச்சூர் அரவிந்தன்

26.7.2017 (புதன்கிழமை) மாலை 6.45 மணி – ஸ்டேஜ் கிரியேஷன் வழங்கும் காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் ‘நீயா நானா’ (சமூக நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : S.L.நாணு

27.7.2017 (வியாழக்கிழமை) மாலை 6 மணி மயூரபிரியா வழங்கும் ‘விவாஹமாலை.com’ (சமூக நாடகம்) 11 விருதுகளைப் பெற்ற சிறந்த நாடகம் கதை, வசனம் : P.முத்துக்குமரன்

20.7.2017 முதல் அரங்கத்தில் டிக்கெட் கிடைக்கும்.

ஃபோன் 22651809, மொபைல் : 9840892413 / 9444690174 டிக்கெட் கிடைக்கும்.

நேரம் காலை 9.00 மணி முதல் 10.30 வரை மாலை 5.30 முதல் 7.30 மணி வரை

விழா நாட்களில் மாலை 6 மணி முதல் கேண்டீன் வசதி உண்டு

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் அவசியம்

முகவரி :

குரோம்பேட்டை கல்சுரல் அகடமி Regd Trust

3, Indira Gandhi Cross Street, Off Radha Nagar Main Road

(Near St. Mark's School) Radha Nagar, Chrompet

Chennai - 44 

Ph - 22651809 / email - cca1969@rediffmail.com

மேலும் விபரங்களுக்கு : ஜி.நாகராஜன் - 9444690174

]]>
Nadaga vizha, Crazy Mohan, நாடக விழா, கிரேஸி மோகன் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/logo-cca.png https://www.dinamani.com/lifestyle/art/2017/jul/21/chromepet-cultural-academy-celebrates-12th-nadaga-vizha-2741633.html
2683301 லைஃப்ஸ்டைல் கலைகள் கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நேரத்தில் குச்சிப்புடி நடனம் ஆடிய 7000 மாணவிகள்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, April 12, 2017 01:52 PM +0530  

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் (வைசாக்) கின்னஸ் சாதனை முயற்சியாக அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று பாடல்களுக்கு ஒரே நேரத்தில் சுமார் 7000 மாணவிகள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடினர். 

ஆந்திராவின் வடக்கு கடற்கரை மாவட்டங்களின் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 7000 மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவுகளைப் போற்றும் விதத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினரும் எளிதில் அறியும் வண்ணம் எழுதப்பட்ட மூன்று பாடல்களுக்கு அம்மாணவிகள் ஆந்திராவின் பாரம்பரிய நடமான குச்சிப்புடி நடனம் ஆடினர்.

இந்த மாபெரும் நிகழ்வை ஆந்திர அரசின் சமூக நலத்துறையும், ஆந்திர அரசின் உண்டு, உறவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பும் இணைந்து நடத்தியது.

பாரம்பரிய குச்சுப்புடி நடனத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்பு 6,117 கலைஞர்கள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடியது தான் கின்னஸ் சாதனையாகப் பதிவானது. அந்த முயற்சியை இது முறியடித்து விட்டது இம்மாபெரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக திறமை வாய்ந்த பாரம்பரிய குச்சுப்புடி நடனக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை முயற்சி குறித்துப் பேசுகையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு; ‘குச்சுப்புடி ஆந்திராவின் பாரம்பரிய நடனம், இதன் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியது நம் அனைவரின் கடமை!’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில்; குச்சிப்புடி பாரம்பரிய நடனக்கலை வளர்ச்சிக்காக ஆந்திர மாநில அரசின் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் தங்களது புது தலைநகரமாக உள்ள அமராவதியில் ‘குச்சுப்புடி அகாடமி’ ஒன்றும் பிரத்யேகமாக அமைய உள்ளதாக அறிவித்தார்.
 

]]>
andhra, கின்னஸ் சாதனை, ஆந்திரா, 7000 மாணவிகள் குச்சுப்பிடி, guiness record, 7000 girls kuchipudi dance https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/w600X390/kuchipudi_guiness.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/apr/12/ஆந்திராவில்-கின்னஸ்-சாதனை-முயற்சியாக-ஒரே-நேரத்தில்-7000-மாணவிகள்-குச்சுப்புடி-நடனம்-ஆடினர்-2683301.html
2678611 லைஃப்ஸ்டைல் கலைகள் பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் கிஷோரி அமோங்கர் மறைவு! கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 4, 2017 02:44 PM +0530 பிரபல இந்துஸ்தானி சாஸ்திரிய இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கர் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். இந்துஸ்தானி இசையை அதன் இயல்பு கெடாமல் நவீன உத்திகளுடன் பாடும் திறன் வாய்ந்த கலைஞர்களில் கிஷோரி அமோங்கர் முதன்மையானவர். 6 வயதில் தனது தந்தையை இழந்த கிஷோரி அவரது தாயாரும் பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞருமான மோகுபாய் குர்திகருடன் இணைந்து கச்சேரிகளுக்கு செல்லத் தொடங்கினார். முதலில் தம்பூரா இசைப்பதில் தொடங்கி பின்னாட்களில் தனது தாயாரைப் பின்பற்றி பிரசித்தி பெற்ற ‘ஜெய்பூர் கரணா’ இசையை அடியொற்றி பல்வேறு இந்துஸ்தானி குருக்களிடம் இசை பயின்று வட இந்திய இசை மேடைகளில் கிஷோரி தனது இசைத்திறமையை வெளிப்படுத்த தொடங்கினார். 6 வயதில் தனது தந்தையை இழந்தவர். கிஷோரியையும் அவரது இரு உடன்பிறந்தவர்களையும் தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்கியவர் அவரது அம்மா மோகுபாய். 

கிஷோரி அமோங்கர் பிரபல இந்துஸ்தானி இசை வடிவங்களான கஜல், தும்ரி, பஜன்ஸ் உள்ளிட்டவற்றை ஜெய்பூர் கரணா இசையை அடியொற்றி பாடுவதில் கை தேர்ந்தவர். கிஷோரி மேடையில் பாட வேண்டுமென்றால் அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் உண்மையான இசை ஆர்வலர்களாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அந்தப்பக்கம் இசைப் பிரவாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்க இந்தப் பக்கம் ரசிக சிகாமணிகள் தங்களது பிரதாபங்களை சகட்டுமேனிக்கு அளந்து கொண்டு இசைக்கச்சேரிக்கு காது கொடுக்காமல் கண்டதையும் பேசிக் கொண்டிருந்தால் கிஷோரி கடும் கோபம் கொண்டவராகி தனது கச்சேரியையே ரத்து செய்து விடுவாராம். அந்தளவுக்கு தனது இசையை நேசிப்பவராக இருந்தார் அவர் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். ரசிகர்கள் இசையை ரசிக்கலாம், ஆனால் அவரகளது ரசனை இசைக் கலைஞர்களை இடைஞ்சல் செய்வதாக இருக்கக் கூடாது என்பாராம் கிஷோரி.

கிஷோரிக்கு அந்நாட்களில் இந்தி திரைப்படங்களில் பாடுவதற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. 1990 ல் வெளிவந்த ‘திருஷ்டி’ இந்தி திரைப்படத்தில் கிஷோரி பாடி இருக்கிறார். மேலும் சில இந்திப் படங்களிலும் கிஷோரி பாடி பாடல்கள் வெளிவந்த நிலையில்... இந்தி திரைப்பட உலகினரின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை கிஷோரி போன்ற அசல் இசைக் கலைஞரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர் தனது பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத உலகிற்கே திரும்பி விட்டார்.

திரை இசையில் கிஷோரி மீண்டும் பங்கு பெறாமல் போனதற்கு அவரது தாயாரையும் சிலர் காரணமாக்குகின்றனர். கிஷோரியின் தாயார் மோகுபாய்க்கு தனது மகளின் திரையிசைப் பிரவேஷம் பிடிக்கவில்லை என்றும், ‘தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கிஷோரி பாட்டிக் கொண்டிருந்தால், தனது கச்சேரி மேடைகளில் கிஷோரிக்கு இடமில்லை என அவர் கூறியதாகவும். அதனால் தான் கிஷோரி அமோங்கர் இந்தி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்தி விட்டார். என்று கூறுபவர்களும் உண்டு. எது எப்படியோ கிஷோரி தான் கற்றுக் கொண்ட தனது இந்துஸ்தானி இசைக்கு பல்வேறு விருதுகள் மூலம் நியாயம் செய்து விட்டார்.

மும்பையில் 1932 ஆம் வருடம் ஏப்ரல் 10 ஆம் நாள் பிறந்த கிஷோரி, தான் பிறந்த அதே ஏப்ரல் மாதத்தில், தனது 85 வது பிறந்த நாளுக்கு சில தினங்களே இருக்கையில் ஏப்ரல் 3 ஆம் தேதி தனது தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கிஷோரியின் கணவர் ரவீந்திர அமோங்கர், பள்ளி ஆசிரியராக இருந்து 1992 ஆம்வருடத்தில் மறைந்தார். கிஷோரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கருக்கு சோனியா காந்தி உள்ளிட்ட வட இந்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் ரசிகர்களுக்கு கிஷோரி புதியவராக இருந்தாலும், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பட்டியலில் இருப்பவர் தான்.

எழுபது ஆண்டுகளாக இந்துஸ்தானி இசை மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த கிஷோரிக்கு “கான சரஸ்வதி” விருது கொடுத்து மகிழ்ந்தது வட இந்திய இசை உலகம்.

கிஷோரி பின்பற்றிய ஜெய்பூர் கரணா இசை உத்திக்காக அவருக்கு பத்ம விபூஷன், சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இசைக் கலைஞராக மட்டுமல்ல, பாடல்களின் போது பாவங்களை வெளிப்படுத்துவதைக் குறித்து மிக அருமையாக உரையாற்றக் கூடியவர் கிஷோரி. ராகங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பாவனைகள் குறித்த கிஷோரியின் மேடைப் பேச்சுகள் இன்றளவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றவை.

கிஷோரி அமோங்கரின் டாப் டென் பாடல்களைக் கேட்க...

கிஷோரி பாடிய திருஷ்டி இந்தி திரைப்படப் பாடல்...

 

]]>
kishori amonkar, hindusthani vocalist, jaipur gharana, thumri, kazals, bajans, kishori amonkar dies, கிஷோரி அமோங்கர் மறைவு, பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/1_kishori_amonkar.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/apr/04/பிரபல-இந்துஸ்தானி-இசைக்-கலைஞர்-கிஷோரி-அமோங்கர்-மறைவு-2678611.html
2667137 லைஃப்ஸ்டைல் கலைகள் கதக் நடனப் புகழ் மது நட்ராஜ்! Monday, March 20, 2017 02:31 PM +0530  

"நடனம் என்பது நான் என் தாயின் கருவில் இருந்தபோதே உருவானதாகும்'' என்று கூறும் மது நடராஜ் (44) பிரபல கதக் நடனக் கலைஞர் மாயாராவின் புதல்வியாவார். கூடவே பக்கபலமாக உதவியவர் இவரது உறவினர் சித்ரா வேணுகோபால்.

கதக் நடனத்தை முறையாகக் கற்பதற்கு முன் சிறுமியாக இருந்த மதுவுக்கு ஒருவிதமான பயம் இருந்தாலும், தாயுடன் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அவரது நடன அசைவுகளுடன் எழுந்த சலங்கை ஒலியைக் கேட்டபோதுதான் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டதாம்.

"நடனம் எப்போது என்னுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாயிற்று என்பது எனக்கு நினைவில்லை. என்னுடைய தாயின் நடனப் பயிற்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கூடவே சென்ற போதுதான் இந்த நடனம் என்னை வசீகரித்தது மட்டுமின்றி எனக்கோர் அடையாளத்தையும் கொடுத்தது. இருந்தாலும் எனக்கென்று சுதந்திரமான தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. சில காரணங்களுக்காக நடனத்திலிருந்து விலகியிருக்க நினைத்தேன்.

ஜர்னலிசத்தில் ஆர்வம் காட்டினேன். உடனடியாக ஒரு வேலையைத் தேடவும் விரும்பவில்லை. அம்மாவும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. ஒருநாள் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வரும்படி அம்மா அழைத்தார். நானும் போயிருந்தேன். நாட்டியத்தைப் பார்க்கும்போது என் மனதிற்குள் ஏதோ ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்ய வேண்டியது என்ன என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தேன். இப்போது நடனத்திற்காகவே என்னுடைய நேரத்தைச் செலவழிக்கிறேன்'' என்கிறார் மது நடராஜ்.

நியூயார்க் சென்ற மது, இந்திய நடனத்துடன் சமகாலத்திய நடனங்களில் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பியதும் இந்திய நடனங்களுடன், கதக் நடனத்திற்கென்று ஓர் அடையாளத்தையும் புகழையும் ஏற்படுத்தித் தந்த தனது தாயார் நடனத்துடன் மேல்நாட்டு நடனத்தையும் இணைத்து கதக் நடனத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார் மது.

1995-ஆம் ஆண்டு நாட்டியா ஸ்டெம் (ஸ்பேஸ் டைம் எனர்ஜி மூவ்மெண்ட்) என்ற நடனக் குழுவை உருவாக்கி, பெங்களூரில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதக் நாட்டியப் பள்ளியுடன் இணைத்தார் மது.

'பெங்களூரில் இந்திய நடனங்களுடன் சமகால நடனங்களையும் இணைத்து நடனக் குழுவை உருவாக்கியபோது, இதுபோன்று வேறு நடனக் குழுவினர் யாரும் இல்லை. எதற்காக இந்திய நடனங்களுடன் மேற்கத்திய நடனங்களை இணைக்க வேண்டும் என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். ஆனால், எங்கள் புதுமையான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதக் நடனத்துடன் ஜாஸ், கிராமிய நடனம், மார்ஷல் ஆர்ட்ஸ், யோகா போன்ற கலைஞர்களும் இணையத் தொடங்கினர். எங்களுடைய மாணவர்களும் இந்தப் புதிய நடனக் கலவையை மிகவும் விரும்பிக் கற்றனர். சுமார் 75 வகையான புதுமையான படைப்புகள் உருவாயின. இந்தப் புதுமையான பாடத்திட்டம் அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்தது.

கதக் நடனத்துடன் மார்ஷல் ஆர்ட், யோகா போன்ற கலைகளைக் கற்க மாணவர்கள் விரும்பினர். எங்கள் புதுமை முயற்சிகள் மேலும் தொடர்ந்தன. மாணவர்கள் தாங்களாகவே புதிய தயாரிப்புகளை உருவாக்கினர். இதன் மூலம் பல சமூகக் கருத்துகள் வெளியாயின. இதற்கென்று நாங்கள் மேடைகளைத் தேடுவதில்லை. எந்த இடத்திலும் எங்கு வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டோம். எந்தக் கலையாக இருந்தாலும் அவை சமூகம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் ஒட்டியிருப்பதால் மக்களிடையே சுலபமாகப் போய்ச் சேரும்'' என்கிறார் மது.

"நடனப் பயிற்சி பெறுவதற்கு முன் அந்த நடனங்களைப் பற்றிய சரித்திரத்தை அறிவது அவசியமாகும். ஏனெனில் அப்போதுதான் ஒரு நடனக் கலைஞரை உங்களால் உருவாக்க முடியும். என் குழந்தைப் பருவத்தில் தாயுடன் இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் எனக்கு தாயாகவும், ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர். நான் தற்போது செய்து வரும் முயற்சிகள், கதக் நடனக் கலைக்கு அவர் ஆற்றிய சேவைக்கு காணிக்கையாகும்' என்கிறார் மது நடராஜ்.
 

-பூர்ணிமா

]]>
மது நடராஜ், கதக், kATHAK, Madhu Natraj https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/NATYA-STEM-DANCE-KAMPNI-1.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/mar/16/புதிய-முயற்சிக்கு-கிடைத்த-வரவேற்பு--2667137.html
2657010 லைஃப்ஸ்டைல் கலைகள் சிதம்பரம் நாட்டியாஞ்சலி! Monday, February 27, 2017 05:50 PM +0530  

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழா மென்மேலும் வளர்ச்சி பெறும் என்று நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில், கடந்த 24-ஆம் தேதி முதல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா மற்றும் அவரது குழுவினர் பரத நாட்டியம் ஆடினர். பின்னர், அவர் கூறியதாவது:
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானே நடத்தும் விழாதான் இந்த நாட்டியாஞ்சலி விழா. இது மென்மேலும் வளர்ச்சி பெறும்.
ஆண்டுதோறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று, நான் நாட்டியமாடுவேன் என்றார் ஸ்வர்ணமால்யா.

]]>
பரதநாட்டியம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி, ஸ்வர்ணமால்யா, classical dance, chithambaram natiyanjali, swarnamalya https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/27/w600X390/swarnamalya.jpg https://www.dinamani.com/lifestyle/art/2017/feb/27/சிதம்பரம்-நாட்டியாஞ்சலி-2657010.html
2622724 லைஃப்ஸ்டைல் கலைகள் ஹமீர் கல்யாணியில் கம்பராமாயணம்! DIN Tuesday, December 27, 2016 11:29 AM +0530 நாரத கான சபா சிற்றரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று காலை 8.30 மணி கச்சேரி சுபா கணேசனுடயது. மீரா சிவராமகிருஷ்ணன் வயலின், குருராகவேந்திரா மிருதங்கம்.

சுபா கணேசன் எம்.எல். வசந்தகுமாரியின் கடைக்குட்டி சீடர். இப்போது டி.என். சேஷகோபாலனிடம் தனது சங்கீதத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். இவர் நல்ல இசைக் கலைஞர் மட்டுமல்ல, தேர்ந்த இசை ஆச்சார்யரும்கூட. நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களை சங்கீதத்தில் தயார் செய்து கொண்டிருக்கிறார்.

சுவாமி உன்னை என்கிற பாபநாசம் சிவனின் ஆரபி ராக வர்ணத்துடன் தொடங்கியது இவரது நிகழ்ச்சி. தமிழில் வர்ணம் பாடியது ஆச்சரியமாக இருந்தது. காரணம், தமிழில் அதிகமாக வர்ணங்கள் கிடையாது என்பதுதான்.

மார்கழி மாதமாகையால், கேதாரம் ராகத்தில் அமைந்த பாடும் பரஞ்சோதி திருவெம்பாவையை அடுத்து, தர்பார் ராகத்தில் கோடீஸ்வரய்யர் இயற்றிய ஸ்ரீவேணுகோபால. அதற்குப் பிறகு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விஸ்தாரமாக ஹமீர் கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு அவர் பாடுவதற்கு எடுத்துக் கொண்டது கம்பராமாயணத்திலிருந்து "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' பாடல். இதென்ன கம்பராமாயணத்தை சாகித்யம்போல இவர் பாடுகிறாரே என்கிற வியப்பு அடங்கவே சற்று நேரமாயிற்று. அவ்வளவு அற்புதமாக கம்பராமாயணப் பாடலை ஹமீர் கல்யாணி ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். கச்சேரி முடிந்து சுபா கணேசனிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, இதுபோல ஐந்நூறுக்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களுக்கு டி.என். சேஷகோபாலன் மெட்டமைத்து வைத்திருக்கிறார் என்பதும் தனது சீடர்களுக்கு கற்றுத் தருகிறார் என்பதும். டி.என். சேஷகோபாலனுக்கு கம்பனின் ரசிகர்களின் சார்பில் கோடானுகோடி நன்றி.

அன்றைய நிகழ்ச்சியில் முக்கியமான ஆலாபனைக்காக சுபா கணேசன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் மோஹனம். எம்.எல்.வி.யின் சீடர். டி.என். சேஷகோபாலனால் பட்டை தீட்டப்படுபவர். அவர் ஆலாபனையில் ராக லட்சணங்களை வெளிப்படுத்தும் நேர்த்தி குறித்து சொல்லவா வேண்டும். அப்பழுக்கில்லாத இலக்கண சுத்தமான ஆலாபனை. பாபநாசம் சிவனின் நாராயண திவ்யநாமம்தான் சாகித்யம். "மாரஜனகன் கருணாலயன்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார்.

தொடர்ந்து சாருகேசி ராகத்தில் அமைந்த "வசன மிகவேற்றி மறவாதே' என்கிற திருப்புகழும், தண்டபாணி தேசிகர் பாடி பிரபலப்படுத்திய பந்துவராளி ராகத்தில் அமைந்த "அள்ளி உண்டிடலாம் வாரீர்' என்கிற பாடலையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இன்னும்கூட சுபா கணேசன் ஹமீர் கல்யாணியில் இசைத்த கம்பராமாயணப் பாடலை மறக்க முடியவில்லை.

]]>
subha ganeshan, karnatic vocalist, t.n.sesha gobalan, kamba ramayanam poems, hamir kalyani ragam, சுபா கணேசன், கர்நாடக சங்கீதம், டிசம்பர் உற்சவம், டி.என். சேஷ கோபாலன், கம்பராமாயண பாடல்கள், ஹமீர் கல்யாணி ராகம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/27/w600X390/subha_ganeshan_1.jpg https://www.dinamani.com/lifestyle/art/2016/dec/27/ஹமீர்-கல்யாணியில்-கம்பராமாயணம்-2622724.html
2618072 லைஃப்ஸ்டைல் கலைகள் சென்னையில் திருவையாறு: இசை சங்கமம்! கார்த்திகா வாசுதேவன் Monday, December 19, 2016 01:02 PM +0530 பன்னிரெண்டாவது ஆண்டாக 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து லஷ்மண்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்களில் ஒருவரும், விழா அமைப்பாளருமான வி.லட்சுமணன், பாடகி ஷோபா சந்திரசேகர், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பன்னிரெண்டாவது ஆண்டாக நடைபெறவிருக்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, திருப்பாம்புரம் டி.எஸ்.எச்.ராமநாதனின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, மதியம் 2 மணிக்கு பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் 500- க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு "சென்னையில் திருவையாறு' இசை விழாவை கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெய்ராம் முறைப்படி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவின் சிறப்பம்சமாக, "சென்னையில் திருவையாறு' அமைப்பின் சார்பாக தலைசிறந்து விளங்கும் கலைஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும். இசைச் சேவை, வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக "இசை ஆழ்வார்' என்ற கௌரவ விருதும், தங்கப்பதக்கமும், நிகழாண்டு வயலின் இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுகிறது.
மாலை 4.45 மணிக்கு அவரின் வயலின் இசை நிகழ்ச்சியோடு, இசை விழா நிகழ்வுகள் தொடங்கி, இரவு 7.30 மணிக்கு ஷோபனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா நிறைவு பெறும்.
டிசம்பர் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து எட்டு நாள்கள் விழா நடைபெறுகிறது. டிசம்பர் 19-ஆம் தேதி முதல் காலை 7 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். நாள்தோறும் எட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இசை விழாவுடன் இணைந்து பிரம்மாண்டமான உணவு திருவிழா நடைபெறும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை முன்னிட்டும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச் சிலைகள் லண்டன் வேக்ஸ் அருங்காட்சியத்தில் உள்ளதை போன்று அமைக்கப்படுகிறது.
இந்தத் திருவுருவச் சிலைகளுடன் பொது மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைக்கிறார். அரங்கில் 30 அடி உயரமுள்ள மாயா பஜார் கடோத்கஜனின் பிரம்மாண்டமான சிலையும், உணவுத் திருவிழாவில் அமைக்கப்படும்.
இசை ரசிகர்களுக்கான இலவச இரவுப் பேருந்து, முதியவர்களுக்கு முதல் மரியாதை, ரசிகர்களுக்கான அறிவுத் திறன் போட்டியின் மூலம் மெகா பரிசுகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் விழாவில் இடம்பெறவுள்ளன.
நாள்தோறும் காலை 7, 8.30, 9.45, 11, பிற்பகல் 1, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.45, இரவு 7.30 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நுழைவுச் சீட்டு விற்பனை நடைபெறும் என்றனர்.

]]>
சென்னையில் திருவையாறு, லக்‌ஷ்மண் ஸ்ருதி, chennaiyil thiruvaiyaru, lakshman sruthi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/19/w600X390/chennaiyil_thiruvaiyaru.jpg https://www.dinamani.com/lifestyle/art/2016/dec/19/சென்னையில்-திருவையாறு-இசை-சங்கமம்-2618072.html