Dinamani - செய்திகள் - https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3363629 லைஃப்ஸ்டைல் செய்திகள் விமானத்தில் பாலிதீன் உடை அணிந்து சென்ற பயணிகள்! ஏன் தெரியுமா? DIN DIN Friday, February 21, 2020 12:51 PM +0530  

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பாலிதீன் பையினால் உடலை முழுவதும் மூடிக்கொண்டு இருவர் விமானத்தில் பயணித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சீனாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பல தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த இருவர் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வித்தியாசமான தற்காப்பு முறையை கையாண்டுள்ளனர். 

இருவரும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தனர். மேலும், பாலிதீன் பையினால் உடல் முழுவதையும் மூடிக்கொண்டு விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் இதனை விடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் சுவாரசியமாக, கலவையான பல விமர்சனங்கள் வந்துள்ளன.

 

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/Capture.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/21/air-passengers-donning-plastic-coverings-to-thwart-coronavirus-rile-fashion-geek-3363629.html
3363618 லைஃப்ஸ்டைல் செய்திகள் இந்த செயலியில் உங்கள் தரவுகள் திருடப்படலாம்! - எச்சரிக்கை விடுக்கும் கூகுள் DIN DIN Friday, February 21, 2020 12:03 PM +0530  

டோட்டோக் செயலி பயன்பாடு குறித்து கூகுள் ஸ்டோர் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.

டோட்டோக் (ToTok) செயலி சாட்டிங், ஆடியோ, விடியோ வாய்ஸ் கால் செய்ய பயன்படுகிறது. இந்நிலையில், இந்த செயலி எஸ்.எம்.எஸ் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், அழைப்பு வரலாறு போன்ற பயனர்களின் தனிப்பட்ட தரவை உளவு பார்க்க முயற்சிக்கிறது. 

டோட்டோக் ஒரு உளவு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து முன்னதாக நீக்கப்பட்டது.  

அந்த சமயத்தில், டோட்டோக் இணை நிறுவனர் ஜியாக், ஒரு விடியோ பதிவை வெளியிட்டார். தொடர்ந்து, இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களிடமும் தங்களது செயலியை மீண்டும் கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தார். 

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் ஜனவரி மாத தொடக்கத்தில் டோட்டோக் செயலி மீண்டும் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த செயலியில் பயனர்கள் தகவல் ஏதேனும் திருப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கவனித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து வாட்ஸ்ஆப், ஸ்கைப், பேஸ்புக் விடியோ கால் வசதி துண்டிக்கப்பட்டதையடுத்து, டோடோக்  போன்ற செயலிகள் மாதாந்திர கட்டணத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் விரல் இந்த செயலியை முடக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த செயலி குறித்த எச்சரிக்கை செய்தியும் கூகுள் தனது பயனர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவித்துள்ளது. 

]]>
ToTok https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/totok.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/21/google-play-store-warns-on-totok-3363618.html
3363592 லைஃப்ஸ்டைல் செய்திகள் உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா? DIN DIN Friday, February 21, 2020 11:29 AM +0530  

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மட்டுமே உடல் எடை குறைப்புக்கு உதவாது என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தின்(BYU) புதிய ஆய்வின்படி, தினமும் வெறுமனே நடப்பது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் எடுத்து வைப்பது உடல் எடையை குறைக்க ஒருபோதும் பயன்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 10,000 முதல் 15,000 அடிகள் வரை, ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆய்வு தொடக்கத்திலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஆய்வின் முடிவிலும் மாணவர்களின் எடை கணக்கிடப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. 

இதில், மாணவர்கள் உடல் எடையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்படவில்லை என்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 

நடைப்பயிற்சி மட்டுமே உடல் எடையை குறைக்காது. தற்போதைய உடல் செயல்பாட்டை சீராக்க அல்லது உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டுமானால் நடைப்பயிற்சி பயன்படலாம்.

மாறாக, நடைப்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது. ஆனால், உட்கார்ந்தே இருப்பதைவிட நடப்பது மேலும் நமது உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் என்று கூறுகிறார் உடற்பயிற்சி அறிவியல் துறையின்  பேராசிரியர் புரூஸ் பெய்லி. 

எனவே, உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டுமின்றி, உணவு கட்டுப்பாடுகளுடன் தேவையான இதர உடற்பயிற்சிகளையும் செய்வது அவசியமானது என்று அறிவுறுத்தப்படுகிறது. 

]]>
walking, weight loss https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/exercise-walking-2.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/21/walking-may-not-help-you-in-weight-loss-study-3363592.html
3362751 லைஃப்ஸ்டைல் செய்திகள் கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது டிவி ரிமோட்! DIN DIN Thursday, February 20, 2020 03:22 PM +0530  

கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது உங்கள் டிவி ரிமோட்!

சொன்னால் நம்ப முடியாமல்தான் இருக்கும், ஆனால், அதுதான் உண்மை என்று தெரிவிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று.

வீட்டில் எல்லா நேரங்களிலும் எல்லாருடைய கரங்களிலும் சுழன்று வந்துகொண்டிருப்பது டிவி ரிமோட். ஆனால், அதனுடைய லெவல் அப்படித்தான் இருக்கிறதாம்.

இந்த ஆய்வில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

குப்பைத் தொட்டி, படுக்கையறைத் தரைவிரிப்பு, டிவி ரிமோட், கழிப்பறை அமர்விடம் என்று பலவற்றிலும் கிருமி, யீஸ்ட் மற்றும் பூஞ்சைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது.

இருப்பதிலேயே மிகவும் அசுத்தமாக இருந்தது டிவி ரிமோட்தான். ரிமோட்டில் இருந்த கிருமிகள், யீஸ்ட் ஆகியவற்றின் அளவு ஒரு குறிப்பிட்ட பரப்பில் 290 அலகுகளாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால், கழிப்பறை அமர்விடத்தில் 12.4 அலகுகள் மட்டுமே.

ஆய்வு நடத்தியவர்களுக்கே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சித் தகவல் இது.

கழிப்பறையைவிட எட்டு மடங்கு அசுத்தமாக இருக்கிறது உங்களுடைய ஸ்மார்ட் கடிகாரம் என்றோர் ஆய்வு முடிவு வெளியான நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடுத்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

ரிமோட்டைத் தொடாமலிருப்பது நல்லது, தொட்டால் கைகழுவிக் கொள்வது மிகவும் நல்லது அல்லது குறைந்தபட்சம் இயன்றவரை ரிமோட்டைச் சுத்தமாகப் பராமரிக்கப் பார்ப்பது நல்லது.

]]>
tv remote https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/tv_remote.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/20/tv-remote-20-times-dirtier-than-toilet-3362751.html
3362720 லைஃப்ஸ்டைல் செய்திகள் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட இதுதான் காரணம்! - ஆய்வில் தகவல் DIN DIN Thursday, February 20, 2020 12:56 PM +0530  

பெரும்பாலான சாலை விபத்துகள் பள்ளி நேரங்களில்தான் நிகழ்வதாகக் கூறும் ஆய்வாளர்கள், பள்ளி செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். 

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி பகுதியைச் சேர்ந்த இளம் வயதினர் பங்கேற்றனர். மேலும், சாலை விபத்துக்கும், பள்ளி நேரத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பள்ளி நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவும், இரண்டு மணி நேரம் பின்னதாகவும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 முதல் 18 வயதுடைய இளம் வயதினர் சாலை விபத்தில் அதிகம் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிகள் காலை 7-8 மணியளவில் தொடங்கியதும் இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பள்ளிகள் சற்று தாமதமாக தொடங்கினால் விபத்துகளின் விகிதம் கணிசமாக குறைந்திருந்ததையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். 

பள்ளிகள் சற்று தாமதமாகத் தொடங்குவது பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது, காலையில் 7 முதல் 8 மணிக்குள் பள்ளிகள் தொடங்கும்பட்சத்தில், மாணவர்கள் வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வாகனங்களில் வேகமாக செல்கின்றனர். அதிலும், சிலர் பாதுகாப்புக்கான சீட் பெல்ட் போன்றவைகளை அணிவதில்லை. இதுபோன்ற காரணங்களால் அதிக விபத்து ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, பள்ளி தொடக்க நேரங்களை மாற்றுவதனால் மாணவர்கள் அதிக நேரம்  தூங்குகின்றனர். வழக்கத்தை காட்டிலும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றனர். மேலும், இதுபோன்ற அவசர விபத்துகளும் தவிர்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

]]>
road accident, school https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/3/w600X390/car_accident.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/20/starting-school-late-reduce-car-crashes-3362720.html
3362730 லைஃப்ஸ்டைல் செய்திகள் முகத்தைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்..! DIN DIN Thursday, February 20, 2020 12:53 PM +0530 முகபாவனைகள் மனித உணர்ச்சிகளின் உண்மையான வெளிப்பாடு அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஒருவரின் முகபாவனையை வைத்து அவரது உணர்வுகளைப் பற்றி முடிவுக்கு வருவது தவறானது எனவும் சில உணர்ச்சிகளை முகபாவங்களின் வழியாக காட்ட முடியாது எனவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

சாதரணமாக, சிலர் வருத்தத்தில் இருந்தாலோ, மகிழ்ச்சியாக இருந்தாலோ அவர்களது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விடும். ஆனால், சிலர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

இந்நிலையில், ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரது உணர்ச்சிகள் குறித்த முடிவுக்கு வந்துவிடக்கூடாது, அதாவது, முகபாவனைகளிலிருந்து ஒருவரது உண்மையான உணர்ச்சியை கண்டறிய முடியாது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மனித முகத்தில் தசை இயக்கத்தின் இயக்கவியலை ஆராய்ந்து அதனை ஒரு நபரின் உணர்ச்சிகளுடன் ஒப்பிடப்பட்டது. இதில், ஒரு நபரின் முகபாவனைகளின் அடிப்படையில் உணர்ச்சிகளைக் கண்டறியும் முயற்சிகள் தவறானது என கண்டறியப்பட்டது. சூழல் மற்றும் கலாசார பின்னணியின் அடிப்படையில் ஒருவர் வெவ்வேறு முகபாவனைகளை செய்கிறார்கள் என்று ஆய்வாளர் மார்டினெஸ் கூறினார்.

புன்னகையுடன் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் அனைவரும் சிரிப்பதில்லை. சில நேரங்களில் பொது இடங்களில் சமூக சூழ்நிலை கருதி, கவலையுடன் இருப்பவர்கள் கூட சிரிக்கின்றனர். உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். 

 

]]>
emotions, lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/mask.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/20/facial-expressions-not-true-indicator-of-emotions-3362730.html
3362713 லைஃப்ஸ்டைல் செய்திகள் உடல் எடை இழக்க வேண்டும் என்றால் இதை மட்டும் செய்யாதீர்கள்! IANS IANS Thursday, February 20, 2020 11:15 AM +0530 காலை உணவை நன்றாக சாப்பிடுங்கள், இரவு உணவைக் குறையுங்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு.

இரவு உணவைக் காட்டிலும் காலை உணவை நன்றாக உட்கொள்வது உடல் பருமன் மற்றும் உயர் ரத்தச் சர்க்கரையைத் தடுக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஜெர்மனியின் லூபெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி மற்றும் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், காலையில் உணவை சாப்பிடுவதால் உடல் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிகிறது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல், செரிமானம், போக்குவரத்து மற்றும் சேமிப்பிற்காக உணவை ஜீரணிக்கும்போது நம் உடல் ஆற்றலை செலவிடுகிறது.

உணவு-தூண்டப்பட்ட தெர்மோஜெனெசிஸ் (டிஐடி) என அழைக்கப்படும் இந்தச் செயல்முறை, நமது வளர்சிதை மாற்றம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். மேலும் இது உணவு நேரத்தைப் பொறுத்து வேறுபடலாம்.

"காலை உணவைச் சாப்பிடும் அளவு, அதில் உள்ள கலோரிகளின் அளவு நீங்கி, இரவு உணவிற்கு உட்கொள்ளும் அதே உணவை விட இரண்டு மடங்கு அதிக ஆற்றலை உருவாக்குகிறது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன" என்று ஆய்வாளர் ஜூலியன் ரிக்டர் கூறினார்.

"இந்த கண்டுபிடிப்பு அனைத்து மக்களுக்கும் முக்கியமானது, ஏனெனில் இது காலை உணவில் போதுமான அளவு சாப்பிடுவதன் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று ரிக்டர் மேலும் கூறினார்.

இந்த ஆய்வுக்காக, குறைந்த கலோரி காலை உணவு மற்றும் அதிக கலோரி கொண்ட இரவு உணவை உட்கொண்ட 16 ஆண்களை வைத்து மூன்று நாட்களுக்கு பரிசோதனை முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஆய்வின் இரண்டாவது சுற்றில்.ஒரே மாதிரியான கலோரி நுகர்வு அதிக கலோரி மற்றும் குறைந்த கலோரி உணவுக்குப் பிறகு மாலை நேரத்தை விட காலையில் 2.5 மடங்கு அதிக டிஐடிக்கு வழிவகுத்தது என்பது கண்டறியப்பட்டது.

இரவு உணவோடு ஒப்பிடும்போது காலை உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் செறிவு அதிகரிப்பதால் உணவு குறைந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கலோரி கொண்ட காலை உணவை சாப்பிடுவதால் பசியின்மை அதிகரிக்கும், குறிப்பாக இனிப்புக்கு இது பொருந்தும்.

"உடல் எடையைக் குறைப்பதற்கும் வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுப்பதற்கும் உடல் பருமன் நோயாளிகளும் ஆரோக்கியமான மக்களும் இரவு உணவை விட காலை உணவை நன்றாகச் சாப்பிட பரிந்துரைக்கிறோம்" என்று ரிக்டர் கூறினார்.

வடக்கு ஜெர்மனியில் உள்ள லூபெக் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு ஆராய்ச்சி நிறுவனம், முற்றிலும் மருத்துவம் மற்றும் அறிவியலில் ஆய்வுகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

]]>
lose weight https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/obese_woman.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/20/want-to-lose-weight--have-big-breakfast--light-dinner-3362713.html
3361891 லைஃப்ஸ்டைல் செய்திகள் கறிவேப்பிலையை நுகர்ந்தாலே போதும்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்! DIN DIN Wednesday, February 19, 2020 01:25 PM +0530  

நமது பாரம்பரிய சமையல் முறைகளில் தவறாமல் இடம்பெறும் கறிவேப்பிலை, மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் காணப்படும் நன்மைகள் ஏராளம். நாம் சாதாரணமாக உணவு உண்ணும்போது இடையூறாக இருக்கிறது என்றோ பிடிக்காது என்றோ கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறோம். ஆனால், அதன் நன்மைகள் குறித்து தெரிந்தால் நீங்கள் ஒருபோதும் அதனை ஒதுக்கி வைக்கமாட்டீர்கள். 

கிருஷி ஜாக்ரான் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், நீரிழிவு நோய் மேலாண்மைக்கும், இரைப்பை குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் முக்கியமாக பயன்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்

கறிவேப்பிலையை வழக்கமாக நுகர்ந்தாலே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கிருஷி ஜாக்ரானில் உள்ள ஒரு சுகாதார நிபுணர் கூறுகிறார். ஏனெனில் அவை ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை மாவுச்சத்தை குளுக்கோஸாக மாற்றுவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் நீரிழிவு அளவைக் கட்டுப்படுத்துகின்றன என்று விளக்கம் தெரிவிக்கிறார். 

கர்ப்பிணி பெண்களுக்கு

கறிவேப்பிலையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சொல்லும் குமட்டல் மற்றும் வாந்தியை இது கட்டுப்படுத்துகிறது. கறிவேப்பிலை செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டி குமட்டலை எளிதாக்குகிறது.

இரைப்பை குடல் ஆரோக்கியம்

கறிவேப்பிலையின் இலைகள் செரிமான நொதிகளால் நிரம்பியுள்ளதால் அவற்றை உண்பதால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகள் குணமாகும். மேலும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் பயன்படுகின்றன. 

அதுமட்டுமின்றி, கண் பார்வையை சீராக்குதல், இரத்த சோகை, கெட்ட கொழுப்பினை குறைத்தல், கல்லீரலை பாதுகாத்தல், வயிற்றுப்போக்கு, மூல நோய் சிகிச்சைக்கு மற்றும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

]]>
curry leaves https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/curry_leaves.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/19/the-many-benefits-of-magic-herb-curry-leaves-3361891.html
3361855 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் 'ஸ்மார்ட் டயப்பர்' கேள்விப்பட்டிருக்கீங்களா? DIN DIN Wednesday, February 19, 2020 01:23 PM +0530  

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் தற்போது ஸ்மார்ட் டயப்பர்' வந்துவிட்டது. குழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது குழந்தையின் டயப்பரை சரியான நேரத்தில் மாற்றுவதுதான். அந்த வகையில் 'ஸ்மார்ட் டயப்பர்' தாய்மார்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அதன்படி, ஸ்மார்ட் டயப்பர், குழந்தையின் டயப்பரை சரியான நேரத்தில் மாற்றுவது குறித்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிடும். அதன்படி, இந்த ஸ்மார்ட் டயப்பர் சென்சார் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. டயப்பர் ஈரப்பதம் அடைந்தால் உடனடியாக ஒரு சிக்னலை ரிசீவருக்கு கொடுக்கும். இந்த ரிசீவர் ஸ்மார்ட் போன் அல்லது கணினிக்கு தகவலை அனுப்பும்.  

இதன் மூலமாக ஈரப்பத்தினால் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவும்.  ஐஇஇஇ சென்சார்கள்(IEEE Sensors) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டயப்பர்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வயதான மக்களுக்கும் அல்லது படுக்கையில் இருக்கும், தங்களை கவனித்துக் கொள்ள முடியாத நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே வயதானவர்களுக்கும் ஸ்மார்ட் டயப்பர் விரைவில் உருவாக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

டயப்பரில் உள்ள சென்சார் ஒரு செயலற்ற ரேடியோ அதிர்வெண் அடையாள(RFID) குறிச்சொல்லைக் கொண்டுள்ளது.  இது டயப்பரின் பாலிமருக்கு கீழே வைக்கப்படுகிறது. பாலிமர் என்பது ஈரப்பதத்தை ஊறவைக்க டயப்பர்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை ஹைட்ரோஜெல் ஆகும்.

ஈரப்பதம் மட்டுமின்றி, டயப்பர் அசுத்தமாக இருந்தாலோ, டயப்பர் குழந்தைக்கு அசவுகரியமாக இருந்தாலோ பெற்றோருக்கு மொபைல் ஆப் மூலமாக தகவல் சென்று விடும். 

குழந்தை வளர்ப்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட் டயப்பர் தாய்மார்களுக்கும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பராமரிக்க செவிலியர்களுக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
smart diaper https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/smart_diaper.png https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/19/this-smart-diaper-can-alert-caregiver-when-its-wet-3361855.html
3361862 லைஃப்ஸ்டைல் செய்திகள் மாடலிங்கை விட நடிப்பு மிகவும் சவாலானது: பிரபல பாலிவுட் நடிகை கருத்து DIN DIN Wednesday, February 19, 2020 01:10 PM +0530  

பிரபல பாலிவுட் நடிகை டயானா பெண்டி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான காக்டெயில் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். முன்னதாக, 2005 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பாலிவுட் நடிகை டயானா பெண்டி, ஃபேஷன் ஷோக்கள் தனக்கு மிகவும் விருப்பமானவை என்றும் தற்போது அதனை இழப்பது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். 

எனினும், 'காக்டெய்ல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அந்தப்படத்தில் நடித்தது தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை, மாடலிங்கை விட நடிப்பு மிகவும் சவாலானது. ஏனென்றால், ஒவ்வொரு படத்திலும் புது விஷயங்களை முயற்சிக்க வைக்கும். நான் என்னையே சவாலாக நினைக்கிறேன். மீண்டும் எனது மாடலிங் துறைக்கு முழுவதுமாக செல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், முயற்சிப்பேன். சவாலான நடிப்புத் துறையிலும் சாதனைகள் செய்வேன். 

நியூயார்க் பேஷன் வீக்கில் நிகழ்ச்சிகளை நடத்துவது மிகப் பெரியது. அந்த நாட்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 

'ஷிதாட்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இது ஒரு தீவிரமான காதல் கதை. இதற்கு முன்பாக காதல் கதையில் நான் முயற்சித்தது இல்லை. எனவே, இதுபோன்ற ஒரு கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

'காக்டெய்ல்' படத்திற்குப் பிறகு நான் மீண்டும் மடோக் அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தார். 

]]>
bollywood actress, பாலிவுட் நடிகை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/diana_penty.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/19/acting-is-way-more-challenging-than-modelling-diana-penty-3361862.html
3361045 லைஃப்ஸ்டைல் செய்திகள் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்'; பெற்றோர்கள் கவலை DIN DIN Tuesday, February 18, 2020 04:30 PM +0530  

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஒருவருக்கொருவர் சேலஞ்சுகள்  விடப்படுவது வழக்கம். இதில் கிகி சேலஞ்ச் போன்ற ஆபத்து நிறைந்தவையும் அடங்கும், 

அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளங்களில் 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்' (Skull-breaker challenge) என்ற ஒரு ஆபத்தான விளையாட்டு பரவி வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரைப் பறிக்கக் கூடிய இந்த விளையாட்டை செய்து மாணவர்கள் டிக்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி, மூன்று பேர் வரிசையாக நிற்க வேண்டும். ஓரத்தில் உள்ள இருவரும் முதலில் எகிறி குதிப்பர். பின்னர் நடுவில் உள்ளவர் குதிப்பார். நடுவில் உள்ளவர் குதிக்கும்போது ஓரத்தில் நிற்பவர் இருவரும் சேர்ந்து காலால் அவரை தடுத்து கீழே விழ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நடுவில் நிற்பவர் பின்னோக்கி விழுகிறார். இந்த விளையாட்டில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சவாலில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் என்றும் மாணவர்கள் இதனை கைவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

 

]]>
tiktok https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/skulll_breaker.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/skull-breaker-challenge-3361045.html
3361031 லைஃப்ஸ்டைல் செய்திகள் மேம்பாலத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி, 5 பேர் காயம் UNI UNI Tuesday, February 18, 2020 03:29 PM +0530  

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சாலை நடுவில் இருந்த டிவைடரில்  கார் மோதியதில் எர்ரகடா-பரத்நகர் மேம்பாலத்திலிருந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அனைவரும் நண்பர்கள். ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மூசாபேட்டிலிருந்து எர்ரகடாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

போலீஸாரின் தகவலின்படி, நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, டிவைடரைத் தாக்கி, ஃப்ளைஓவரிலிருந்து விழுந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

]]>
One killed 5 injured https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/flyover_accident.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/one-killed-5-injured-as-car-falls-off-flyover-in-hyderabad-3361031.html
3361010 லைஃப்ஸ்டைல் செய்திகள் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடும் பிரபலம், காரணம் இதுதான் IANS IANS Tuesday, February 18, 2020 02:00 PM +0530  

உலகப் பிரபலமான பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரும் அவரது மனைவி ஹெய்லி பால்ட்வினும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட்டுள்ளனர். 

இந்த ஜோடி 2018-இல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகளைப் பெறுவதற்கு அவசரம் காட்டவில்லை, அதற்குக் காலம் இருக்கிறது என்று அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளனர்.

"நாங்கள் நிச்சயம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோம், ஆனால் சரியான நேரத்தில். உலகச் சுற்றுப் பயணம் செய்யவும், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும், எங்கள் உறவை மேலும் வளர்த்துக் கொள்ளவும் அவகாசம் தேவை. பொறுமையாக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் ஜேன் லோவுக்கு அளித்த பேட்டியின் போது பீபர் கூறினார்.

பால்ட்வினுடனான தனது திருமணத்தில் தங்கள் உறவை மிகச் சிறந்ததாக மாற்றுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து பிபர் சமீபத்தில் பேசியுள்ளார்.

"திருமண வாழ்க்கை மிகவும் அருமை, நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், அதை முறித்துக் கொண்டு விடாதீர்கள். காரணம் திருமணம் எளிதானது அல்ல" என்று கூறினார் இந்த 25 வயதான திருமணமான இளைஞர். கடந்த வாரம் பிப்ரவரி 11 அன்று லண்டனில் ரசிகர்களுடன் கேள்வி பதில் அமர்வில் இவ்வாறு கூறினார் ஜஸ்டின் பீபர்.

அவர் மேலும் கூறியதாவது: "இது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. திருமணம் எளிதானது என்றால், அனைவரும் அதைத்தான் விரைவாகச் செய்வார்கள்." என்றார்.

]]>
Bieber explains https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/model_and_singer.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/bieber-explains-why-hes-in-no-rush-to-have-kids-3361010.html
3361004 லைஃப்ஸ்டைல் செய்திகள் பெண்களே.. இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? DIN DIN Tuesday, February 18, 2020 01:31 PM +0530  

தற்போதைய வாழ்க்கை முறையில் படுத்தவுடன் தூங்கி விடுபவர்கள் கடவுளின் வரம் பெற்றவர்கள் என்றே கூறலாம். டிஜிட்டல் சாதனங்களால் பலர் தூக்கத்தை இழந்து வாழ்கின்றனர். பெண்கள் பலர் குடும்பச்சுமை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டு தூக்கத்தை இழக்கின்றனர். 

தூக்கமின்றி தவிப்பவர்களின் பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு,  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

அதில், நல்ல தூக்கத்தைப் பெற உங்கள் துணைவரின் டி-ஷர்ட் அல்லது சட்டை போதுமானது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

நெருங்கிய உறவுகள் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. நெருங்கிய உறவுகள் அருகில் இருக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒருவேளை அவர்கள் அருகில் இல்லாத காரணத்தினால் கூட தூக்கம் இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர் அருகில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அவர் பயன்படுத்தும் டி- ஷர்ட் ஒன்றின் வாசனையை நுகர்ந்துக்கொண்டே கண்ணை மூடுங்கள். சிறிது நேரத்தில் நீங்கள் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விடுவீர்கள். 

இதற்கு முன்னதாக நீங்கள் உணர்வுப்பூர்வமாக இதனை உணர்ந்து இருக்கிறீர்களா? இல்லையா? என்பது முக்கியமல்ல. ஆனால், ஒரு சில முறை இதனை முயற்சி செய்து பாருங்கள் என்று கூறுகிறார் ஆய்வாளர் பிரான்சிஸ் சென்.

நெருங்கிய உறவுகள் என்பது உங்களது காதலராகவோ அல்லது கணவராகவோ இருக்கலாம். ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில் கடந்துசென்ற முக்கிய நபராக இருக்கலாம் என்று கூறுகிறார். 

சுமார் மூன்று மாதத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தம்பதியரில் ஆணுக்கு ஒரு டி-ஷர்ட் வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து 24 மணி நேரம் அணியச் செய்தனர். பின்னர் அந்த டி-ஷர்ட் அவரின் மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த டி-ஷர்ட்டை தலையணை மேல் வைத்து உறங்கும்போது பெண்கள் 9 மணி நேரத்திற்கும் மேலான ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்றனர். தூக்கத்தை அளவிடும் கருவி கொண்டும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அன்புக்குரியவரின் வாசனை அருகில் இருக்கும்போது பெண்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
lifestyle, Sleep https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/13/w600X390/sleep.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/smelling-your-lovers-t-shirt-can-improve-sleep-3361004.html
3361003 லைஃப்ஸ்டைல் செய்திகள் சுருட்டை முடி அழகுதான் ஆனால் பராமரிப்பு? இதோ 5 குறிப்புகள் IANS IANS Tuesday, February 18, 2020 01:13 PM +0530  

ஒருவருக்கு சுருட்டை முடி இருந்தால், அது மற்றவர்களை விட தனித்துக் காட்டும். ஸ்ப்ரிங் முடி என்று சிலர் கேலி செய்தாலும், சுருட்டை முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம்தான். சுருள் சுருளாக கட்டுக்கடங்காததாக இருப்பதால் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படலாம். ஆனால் அது உங்கள் ஆளுமைக்கு வலு சேர்க்கும் இயற்கையான விஷயம் என்றால் மிகையில்லை. சுருட்டை முடியை வழிக்குக் கொண்டு வர சில வழிகள் உள்ளன :

தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர்

சுருட்டைத் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தலைமுடி பராமரிப்புப் பொருட்களில் கூடுதல் ஊட்டச்சத்து இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். உச்சந்தலையில் இருந்து உற்பத்தி ஆகும் இயற்கை எண்ணெய் கூந்தலை அடையாது, மேலும் சுருட்டை முடிக்கு நிறைய ஈரப்பதம் தேவைப்படுகிறது, அதனால்தான் சுருள் முடி மிகவும் சிக்கலாகவும், கடினமாகவும் இருக்கும். உங்கள் சுருட்டை முடியை சீராக வைத்திருக்கப் பால் கிரீம் கண்டிஷனர் நல்ல தேர்வு.

தரமான சீப்பைப் பயன்படுத்தவும்

உங்கள் தலைமுடியை வேர்களிலிருந்தோ அல்லது தலைமுடியின் நடுவிலிருந்தோ வாறத் தொடங்க வேண்டாம். எப்போதும் உங்கள் தலைமுடியை முனைகளிலிருந்து துவங்கி, மெதுவாக உங்கள் வேர்களுக்கு மேலே செல்லுங்கள். உங்கள் சுருள் முடிக்கு அப்படித்தான் படிய வைக்க வேண்டும்.

ஹேர் மாஸ்க்

உச்சந்தலையில் இருந்து இயற்கையான எண்ணெய் உங்கள் தலைமுடியை எட்டாததால் சுருள் முடி மிக விரைவாக வறண்டு போகும் என்று கூறப்படுகிறது, எனவே தேங்காய் எண்ணெய், ஆர்கன் போன்ற எண்ணெய் சார்ந்த கண்டிஷனர்கள் மூலம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.  அதே கண்டிஷனரை நீங்கள் ஹேர் மாஸ்காகவும் பயன்படுத்தலாம். மேலும் 10-15 நிமிடங்கள் உட்கார்ந்து அதை நன்கு கழுவவும். இந்த முறை சில்கியான சுருட்டை முடிகளைத் தருவது மட்டுமல்லாமல் தலைமுடி அலை அலையாகக் கலைவதைத் தடுக்கும்.

அதிக வெப்பத்தைத் தவிர்க்கவும்

சுருள் முடி எளிதில் சேதமடையக் கூடும், மேலும் அதை வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் ஸ்டைலிங் தயாரிப்புகளை வைத்து சிகிச்சையளித்தால் அது அதன் அமைப்பையும் தரத்தையும் இழக்கக் கூடும். ப்ளோ ட்ரையர்கள், டிஃப்பியூசர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், சுருட்டை முடி சேதமடையாமல் பாதுகாக்கும் ஸ்ப்ரேக்கள் மற்றும் ஜெல் உள்ளிட்ட ஸ்டைலிங் தயாரிப்புகள் அதன் தரத்தைப் பொருத்து பயன்படுத்தலாம். உங்கள் சுருள் முடியை இயற்கையாக உலர வைக்கவும்.

தூக்க நேரம்

ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் உங்கள் சுருட்டை முடியை கவனித்துக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால் சிக்கலான கூந்தலுடன் எழுந்திருக்க வேண்டாம். இரவு தூங்கும் போது பன் கொண்டை போட்டுவிட்டுத் தூங்கவும். தலைமுடி சிறியதாக இருந்தால் ஒரு சாடின் துணியால் சுற்றி படுக்கவும். காலையில் எழுந்திருக்கும் போது தலைமுடியைப் பராமரிக்க எளிதாக இருக்கும்.

]]>
healthy curls https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/hair_care_tips.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/5-tips-for-your-healthy-curls-3361003.html
3360987 லைஃப்ஸ்டைல் செய்திகள் குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னைக்கு இதுதான் காரணம்! DIN DIN Tuesday, February 18, 2020 11:54 AM +0530  

உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சரியான உடல் வடிவத்தைப் பெற வேண்டுமெனில் அவர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பதை முழுவதும் தவிர்த்து விட அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

வயதுக்கு மீறிய உடல் எடை மற்றும் உயரத்துடன் காணப்படும் குழந்தைகள் ஏராளம். சிறுவயதிலேயே உடல் எடை அதிகரித்து காணப்படும் இவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியமான காரணம். உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, உங்கள் குழந்தைகள் சரியான உடல் வடிவத்தில் இருக்க விரும்பினால், அவர்கள் பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளை உண்ண அனுமதிக்காதீர்கள். துரித உணவுகளே குழந்தைகளின் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைய கால கட்டத்தில் குழந்தைப் பருவத்திலே உடல் பருமனுடன் இருக்கும் குழந்தைகள், இளம் வயதிலேயே பல உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரி பேராசிரியர் ஜெனிபர் எமண்ட் கூறுகிறார்.

மேலும், 'குழந்தைகளின் உடல் பருமன் தொடர்பான முந்தைய ஆராய்ச்சிகள்  துரித உணவு உட்கொள்வது பொதுவானது என்பதைக் காட்டுகிறது. ஆனால், துரித உணவுகளுக்கும், உடல் எடைக்கும் உள்ள தொடர்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட எங்கள் ஆய்வில், துரித உணவுகளே உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று கண்டறிந்தோம்.

3 வயது முதல் 5 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்கு சில மாதங்கள் துரித உணவுகள் அளித்தும் சில மாதங்கள் துரித உணவுகளை முழுவதுமாக தவிர்த்தும் உடல் பருமன் அளவுகள் கணக்கீடு செய்தோம். இரண்டாம் நிலையில், பெரும்பாலான குழந்தைகளின் உடல் எடை குறைந்திருந்தது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான உணவு பழக்கவழக்க முறைகளையே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

]]>
உடல் பருமன், child obesity https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/childobesity.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/eating-fast-food-can-make-kids-fat-3360987.html
3360971 லைஃப்ஸ்டைல் செய்திகள் மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது எது? ANI ANI Tuesday, February 18, 2020 11:18 AM +0530  

வாழ்க்கையில் பணத்திற்காக போராடுவதை விட்டுவிட்டு நல்ல மன ஆரோக்கியத்திற்காக போராடுங்கள் என்றும் அதுவே மனிதனுக்கு அதீத மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மனிதனின் அடிப்படைத் தேவைகள் கூட வியாபாரமாகியுள்ள இந்த உலகத்தில் பணம் அவசியம்தான். அதேநேரத்தில் பணம் இருந்தும் பல வியாதிகளால் மனிதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதவனாக இருக்கிறான். உடல் நோய்களுக்கு பல சிகிச்சை முறைகளை பெற்றாலும் அதன்பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு போராடாமல் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழிகளைத் தேடுங்கள். அந்த வகையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனிதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதாகவும், உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 

அதன்படி, உடற்பயிற்சி செய்வது ஒரு நபரை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்குகிறது என்று 'தி ஹில்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்ஸ்போர்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்  12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவில், பணத்தை பொருட்படுத்தாமல் தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

அவ்வப்போது மட்டுமே சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் மிகவும் மோசமான உடல்நலத்துடன் வாழ்கின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, பணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன, உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தின் மூலமே மனிதன் மகிழ்ச்சியை முழுவதும் பெறுகிறான் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆதலால், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; அதன் அவசியம் அறிந்து செலவு செய்ய வேண்டும். நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைவிட அதனை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆகவே, தேவைக்கேற்ப பணம் சம்பாதித்து செலவு செய்யுங்கள். அதைவிட உடல்நலத்தில் கவனம் செலுத்தி ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுங்கள்..

]]>
lifestyle, money https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/healthy_life.jpeg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/18/ditch-your-wallet-grab-your-sneakers-for-a-better-mental-health-3360971.html
3360083 லைஃப்ஸ்டைல் செய்திகள் இது ஹோட்டல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? DIN DIN Monday, February 17, 2020 01:07 PM +0530  

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று ஸ்வீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தின் ஸ்கேண்டிநேவியனில் 'ஆர்க்டிக் பாத்' எனும் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இது இயற்கையுடனும், மனிதனால் உருவாக்கப்பட்ட படைப்பாற்றலுக்கும் இடையிலான உரையாடலாக செயல்படுகிறது. 

கோடை காலத்தில், குளிர் சூழ்ந்த வெயிலிலும், குளிர்காலத்தில் பனிக்கட்டி சூழ்ந்தும் காணப்படும். இந்த மிதக்கும் மாளிகை லூலே நதியில் ஒரு வட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. மரத்தினால் ஆன நடைபாதை வழியே இதனை சென்றடைய முடியும். 

'ஆர்க்டிக் பாத்' எனும் மிதக்கும் ஹோட்டலின் நடுவே மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடம் உள்ளது. இது ஒரு அழகான ஸ்பா அனுபவத்தைத் தருகிறது. கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகள் பல வித்தியாசமான அனுபவங்களையும் தரும். 

கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் ஜோஹன் கவுப்பி ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டலில் 12 அறைகள் உள்ளன. அனைத்துமே நீர் சூழ்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹோட்டலில் யோகா, தியானம் ஆகியவற்றுக்கான தனி இடமும், மேலும் குதிரை சவாரி மற்றும் வனவிலங்கு காட்சிகள் உள்ளிட்டவைகளுக்கான இடங்களும் உள்ளன. 

'ஆர்க்டிக் பாத்'தின் வடிவமைப்புகள் 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையிடப்பட்டன. 

தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எங்ஸ்ட்ரோம் கூறுகையில், ஒரு வடிவமைப்பை உண்மையாக கட்டமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தொழில்நுட்ப சவால்களைப் பற்றி அணிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், ஒருவேளை நாங்கள் இதனை கைவிட்டிருக்கலாம்' என்று கூறுகிறார். 

லூலியா விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். இறுதியாக, ஹோட்டல் வடிமைப்பு உள்ளூர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. 

]]>
Sweden https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/sweden.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/17/new-luxurious-floating-hotel-opens-in-sweden-3360083.html
3360047 லைஃப்ஸ்டைல் செய்திகள் பெற்றோர்களே...குழந்தைகளுக்காக காதல் செய்யுங்கள்! ANI ANI Monday, February 17, 2020 11:46 AM +0530  

பெற்றோர்களுக்கு இடையிலான அன்பு/காதல் குழந்தைகளின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. 

மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் கியூபெக்கிலுள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் டெமோகிராஃபி இதழில் வெளியானது. நேபாளத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் பண்புகள் குறித்த தரவுகள்  இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ஆய்வில், பெற்றோருக்கு இடையிலான அன்பு குழந்தைகளின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் மிகவும் எளிதாக குழந்தைகளை எதிர்காலத்துடன் இணைகிறது என்றும் தெரிய வந்துள்ளது. 

அதாவது, திருமணம் ஆன புதிதில் கணவன் - மனைவி எவ்வாறு காதலுடன் இருக்கிறார்களோ, அதே காதலுடன் வாழ்க்கையைத் தொடர வேண்டும். உங்களுக்கு இடையே காணப்படும் உணர்ச்சி ரீதியான அன்பு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளுதல் உள்ளிட்டவை குழந்தைகளின் மனதில் பல நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பெற்றோர்களுக்கு இடையே உள்ள புரிதல், குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, பெற்றோர்கள் சிறுசிறு காரணங்களுக்காக சண்டையிட்டால் இளம் வயதிலேயே குழந்தைகளின் மனதில் மன அழுத்தம் ஏற்பட்டு அவர்களின் எதிர்காலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது. 

பெற்றோர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் பட்சத்தில், அவர்களது குழந்தைகள் அதிக கல்வியை பெறுகின்றனர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இல்லற வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என அவர்களுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அதேபோன்று, குழந்தைகளின் எதிர்காலத்திலும் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

எனவே, குடும்ப வாழ்க்கை அழகாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனில் பெற்றோர்கள் ஒருவரையொருவர் காதல் செய்யுங்கள்..

]]>
lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/16/3/w600X390/parents.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/17/study-links-love-between-parents-to-childs-future-3360047.html
3360060 லைஃப்ஸ்டைல் செய்திகள் பள்ளி பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வி: பரிந்துரைக்கும் ஆய்வாளர்கள் DIN DIN Monday, February 17, 2020 11:32 AM +0530  

நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டங்களில் புற்றுநோய் கல்வியைச் சேர்ப்பது மாணவர்களிடையே புற்றுநோய் கல்வியறிவை மேம்படுத்தக்கூடும் என்றும் இதனால் புற்றுநோய் விகிதங்கள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மார்க்கி புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, புற்றுநோய் கல்வியின் அவசியம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், கென்டக்கியில் உள்ள 349 நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் கல்வியறிவு எவ்வளவு இருக்கிறது என்று சோதனை செய்யப்பட்டது. இதன்பின்னர் புற்றுநோய் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்த விளக்கக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. 

பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த கல்வியறிவு அளவீடு செய்யப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு பிறகு மாணவர்கள் புற்றுநோய் பற்றிய அதிக விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர். சராசரியாக, 30 சதவீதம் அதிகம் பெற்றனர். 

ஆராய்ச்சி உதவி இயக்குநரும், ஆன்காலஜி திட்டத்தின் இயக்குநருமான நாதன் வாண்டர்போர்டு, 'நான் எனது பள்ளிப்பருவ காலத்தில் புற்றுநோய் குறித்த கல்வியைப் பெற்றதாக எனக்கு நினைவு இல்லை. அதுபற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல்தான் இருந்திருக்கிறேன். ஆனால், அன்றைய காலகட்டத்தில் அதன் தேவை குறைவாகவே இருந்தது. 

தற்போது, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, ஆரம்பக்கல்வியிலே குழந்தைகள் அனைத்துவிதமான அடிப்படை அறிவையும் பெறுவது அவசியமாகிறது. 

கென்டக்கி நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகளவில் உள்ளது. இதுகுறித்த போதுமான கல்வியறிவு இல்லாததாலேயே தொடர்ந்து நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து மக்களுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, முதலில் குழந்தைகளின் பள்ளிக்கல்வி வழியாக இதனை எடுத்துச் செல்ல வேண்டும். நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தற்போதுள்ள பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வியை அமல்படுத்துவது விரைவில் புற்றுநோயின் தாக்கம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர் வாண்டர்போர்டு குறிப்பிடுகிறார்.

அதே நேரத்தில், புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்த கல்வியறிவை அனைவரும் பெற முடியும் என்பதனால் புற்றுநோய் இல்லாத உலகத்தைக் கூட உருவாக்க முடியும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

]]>
cancer https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/child.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/17/cancer-education-in-school-curriculum-can-pay-off-in-the-long-run-3360060.html
3356706 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் இதயத்தின் நிறம் என்ன? DIN DIN Thursday, February 13, 2020 03:47 PM +0530 உலகம் முழுவதும் இன்று, (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினம் நம் நாட்டு கலாச்சாரத்துக்கு எதிரானது என்று இன்றளவும் சொல்லிக் கொண்டிருப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் இயல்பானது, இயற்கையானது. உண்மை காதல் என்றால் என்ன? எந்தப் புள்ளியிலிருந்து காதலிக்கத் தொடங்க வேண்டும் என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

 

கருத்தாக்கம் மற்றும் குரல் - உமா ஷக்தி படத்தொகுப்பு - சவுந்தர்யா முரளி

]]>
valentines day https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/balloon.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/13/what-is-the-color-of-your-heart-3356706.html
3356693 லைஃப்ஸ்டைல் செய்திகள் மகிழ்ச்சியான, நீண்ட எதிர்காலத்திற்கு நல்ல துணைவரைத் தேர்வு செய்யுங்கள்..! DIN DIN Thursday, February 13, 2020 03:08 PM +0530  

ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல துணைவரைப் பெற்றால் அவர் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நீண்ட எதிர்காலத்தை பெறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

தற்போதைய நவீன காலகட்டத்தில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை என்பது பல வகைகளில் கேள்விக்குறியாகியுள்ளது. ஒருபக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும், அதன் காரணமாக மறுபக்கம் உறவில் விரிசல், நோய்கள் என மக்கள் வாழ்க்கையுடன் போரிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆரோக்கியமான நீண்ட எதிர்காலத்திற்கு வாழ்க்கைத்துணை மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

ஒருவரது வாழ்க்கையில் நம்பிக்கையான துணைவர் இருந்தால் அவர் வாழ்க்கையில் எதனையும் எதிர்த்து போரிடலாம் என்கின்றனர். வாழ்க்கைத்துணையான கணவனோ அல்லது மனைவியோ உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருக்கும்போது அது துணைவரின் வாழ்க்கையிலும் நேர்மறையான பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

உதாரணமாக, நம்முடைய வாழ்க்கைத்துணை ஒரு கெட்டபழக்கத்தை கைவிடும்பட்சத்தில், நாமும் அதனை விட முயற்சிப்போம். அதேபோன்று நாம் சோகமாக இருக்கும்போது, வாழ்க்கைத்துணைவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது, அன்பின் மிகுதியால் நம்முடைய மனதிலும் தானாகவே புத்துணர்ச்சி எழுகிறது. 

அல்சைமர் அல்லது டிமென்ஷியா உள்ளிட்ட நோய்களினால்  பாதிக்கப்பட்டோரும் அந்த நோய்களில் இருந்து மீண்டுவர வேண்டுமெனில் அவர்களுக்கான வாழ்க்கைத்துணை அருகில் இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு வாழ்க்கை மிகவும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நீண்ட வாழ்க்கையைத் தருகிறது. 

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இதுகுறித்த ஆய்வில் 4500 தம்பதியினர் கலந்துகொண்டனர். சுமார் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் பெர்சனாலிட்டி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. 

]]>
lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/10/w600X390/love_poem.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/13/happy-partner-leads-to-a-healthier-longer-future-3356693.html
3355870 லைஃப்ஸ்டைல் செய்திகள் காதலர் தின யோசனைகள் இவர்களிடம் செல்லுபடியாகாது ANI ANI Wednesday, February 12, 2020 04:53 PM +0530  

காதலர் தினம் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள தம்பதிகள் டேட்டிங் இரவுக்கான இரவு உணவு அட்டவணையை முன்பதிவு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

சிலர் கடந்த ஆண்டுகளைப் போலவே கொண்டாட முடிவு செய்திருந்தாலும், சிலர் புதுமையாக கொண்டாடவும் விரும்புகிறார்கள்.

அன்பின் நாள் நெருங்கி வருவதால், காதலர் வசம் சில புதுமையான டேட்டிங் யோசனைகள் உள்ளன, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பிணைக்கச் சில வேடிக்கையான வழிகளை யோசித்து வருகிறார்கள்.

காதலர் தினத்தில் தம்பதிகளைப் பிணைக்கக் கூடிய பல புதுமையான வழிகளில் இவை சில கீழே தரப்பட்டுள்ளது. அன்பைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட நாள் இல்லை என்றாலும், காதலர் தினம் தம்பதியினருக்கு பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்குவதற்கும், முக்கியமானவருடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கும் ஒரு காரணத்தை அளிக்கிறது.

1) செல்லப் பிராணிகளுடன்

நாய்கள் அல்லது பூனைகள் அல்லது பிற செல்லப் பிராணிகளை விரும்பும் ஜோடிகளுக்கு, செல்லப் பிராணி பார்லர் போன்ற இடம்  சொர்க்கத்தை விட குறைவுதான். செல்லப்பிராணிளுடன் இந்த நாளை செலவழிப்பதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் இணையரிடம் மட்டுமல்ல, நான்கு கால் நண்பர்களிடமிருந்தும் அளவில்லாத அன்பைப் பெறுவீர்கள்.

2) போதைப் பிரியர்களுக்கு

மிகச் சிறந்த உணவகத்தில் உங்களுக்கு பிடித்த மதுபானம் இருப்பது நல்லது, திராட்சைத் தோட்டத்தில் புதிதாக நொதிக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையிலிருக்கும் மதுவை ருசிப்பது எப்படியிருக்கும்? பல்வேறு திராட்சைத் தோட்டங்கள் இந்த மதுவை ருசியான அமர்வுகளை வழங்குகின்றன. இதில் பசுமையான திராட்சைத் தோட்டங்கள் வழியான உலாவுதலும் அடங்கும். இத்தகைய சுற்றுப்பயணங்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பயனுள்ளதாக மற்றும் வேடிக்கையாகவும் இருக்கும்.

3) உணவு ரசிகர்களுக்கு

பிடித்தமான உணவை இணையருடன் உண்ணுதல்தான் உங்கள் டேட்டிங் குறிக்கோள் என்றால், உணவகத்தைத் தள்ளிவிட்டு, உணவு நடைப்பயணத்தை மேற்கொள்வதன் மூலம் வேடிக்கையாக மாற்றலாம். மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான உணவு நடைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் அவை காதலர் தினத்தையொட்டிபெரும் தள்ளுபடியை தருகின்றன. இது ஜோடிகளுக்கு வெவ்வேறு உணவு வகைகளை ஆராயவும் அதே நேரத்தில் அவற்றைப் பற்றி அறியவும் உதவுகிறது.

4) பிஸியாக இருப்பவர்களுக்கு

வாழ்க்கையில் அதிவிரைவான வேகத்தைக் கடைப்பிடிப்பது பெரும்பாலும் அச்சுறுத்தலாகிவிடும், அதுவும் காதலர் தினத்தன்றும் எக்ஸ்ப்ரஸ் வேகம் வேண்டாம். நிதானமான ஸ்பாவில் ஒரு நாளைக் கழிப்பது என்பது சிலருக்கு கொண்டாட்டத்தின் சிறந்த வழியாகும். ஜோடிகள் ஸ்பா அமர்வுகளைப் பெற்று, நிதானமாக ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசலாம்.

]]>
Valentine's date ideas https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/romance_1.jpg couple https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/12/these-valentines-date-ideas-will-make-you-ditch-yours-3355870.html
3355841 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'மன்னிப்பது தவறு; பழிவாங்குதலே சரி' DIN DIN Wednesday, February 12, 2020 03:26 PM +0530  

தன்னை ஏமாற்றியவரை, மன்னிப்பதை விட பழிவாங்குவதையே மனிதர்கள் அதிகம் விரும்புவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 184 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு வெவ்வேறு வகையான சிறுகதைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் 15 கதைகளைப் படித்தனர்.

முடிவில் அவர்களிடம் ஒவ்வொரு கதை குறித்தும் அதில் வழங்கப்பட்டுள்ள தீர்வு குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதில், மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மன்னிப்பு கதைகளை விரும்பவில்லை. மாறாக, ஏமாற்றியவர்களுக்கு மன்னிப்பை விட சரியான தண்டனை கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஏமாற்றுபவர்களின் செயலுக்கு ஏற்றவாறு சமமான தண்டனையை அளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். 

சில கதைகளை மக்கள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் பார்க்கின்றனர். சில விஷயங்களில், தவறு செய்தவர்கள் மன்னிக்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் தண்டனையைப் பெறும்போது பாதிக்கப்பட்டவர்கள் அதனை ரசிக்கின்றனர். 

சில நபர்கள் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் சிலர் மன்னிக்கப்பட்ட கதைகள் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மன்னிப்பு கதைகளை பாராட்டி அவர்களது மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.

'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் கதைகளை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் தகுதியான தண்டனையைப் பெறும்போது அதனை நாங்கள் ரசிக்கிறோம்' என்று பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர். 

மேலும், 'ஒரு தவறுக்கு எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் வித்தியாசமான பதிலைக் கொண்டுள்ளனர், மேலும் ஒரு கதை அவர்கள் எதிர்பார்ப்பதை வழங்கும்போது, ​​அவர்கள் பெரும்பாலும் விரைவாக பதிலளிப்பார்கள். தண்டனை குற்றத்திற்கு பொருந்தாதபோது,​​பங்கேற்பாளர்கள் வெறுப்புடன் பதிலளித்தனர்' என்றும், 

பழிவாங்கலிலும் நியாயமான பழிவாங்கல் இருக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/12/w600X390/men_women.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/12/revenge-sweeter-than-forgiveness-3355841.html
3355835 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'ஃபேஷன் பொருட்களில் பெண்களைவிட ஆண்களுக்கே ஆர்வம் அதிகம்' DIN DIN Wednesday, February 12, 2020 01:24 PM +0530  

ஃபேஷன் பொருட்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது. 

வளர்ந்துவரும் நவீன கால கட்டத்தில், இருந்த இடத்தில் இருந்துகொண்டே, ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்து வாங்குவதை  மக்கள் பழக்கப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பெண்களைவிட ஆண்கள் ஃபேஷன் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அதிலும், ஆண்களே இ.எம்.ஐயில் அதிக பொருட்கள் வாங்குவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

நுகர்வோர் கடன் வழங்கும் பிரபல தளமான ஸெஸ்ட்மனியின்(ZestMoney) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், பெண்களை விட அதிகமான ஆண்கள் இ.எம்.ஐ(EMI) இல் ஃபேஷன் பொருட்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆண்களாக இருந்தனர். அவர்களது சராசரி ஆர்டர் விலை ரூ.16,000. அவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள். அதன்பிறகு, 31-35 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பொருட்களை வாங்குகின்றனர். மூன்றாவது இடத்தில் 18-24 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கின்றனர். 

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
fashion https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/12/w600X390/men.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/12/more-men-buy-fashion-items-on-emi-than-women-3355835.html
3355824 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா? DIN DIN Wednesday, February 12, 2020 12:36 PM +0530  

நீண்ட நேரம் இருக்கையில் அமரும்போது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

தற்போதைய காலகட்டத்தில் அலுவலகங்களில், முக்கியமாக ஐ.டி. நிறுவனங்களில் பலர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அவ்வாறான நிலையில், செங்குத்தாக அல்லாமல், வளைந்த நிலையில் அமர்வது மோசமாக தோற்றமளிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வளைந்த நிலையில் உள்ள நமது உடல், உறுப்புகளின் இயற்கையான செயல்பாட்டை பாதிப்பதால் இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. மேலும், உடல் மற்றும் மன அழுத்தத்திற்கும் இவை வழிவகுக்கும். சில நேரங்களில் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். 

எனவே, வேலை செய்யும் இடங்களில் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்கவும், அவ்வப்போது இடங்களை மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். நடக்காவிட்டாலும் அவ்வப்போது எழுந்து நிற்பது உடல்வலி ஏற்படுவதைத் தடுக்க உதவும். உடலை சரியான செயல்பாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. 

சரியான நேரத்தில் சரியான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு பயிற்சிக்கு பிறகும் சிறிது ஓய்வெடுப்பது சிறந்தது. தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும் இடுப்புப் பகுதியும் செங்குத்தாக இருக்குமாறு அமருங்கள். அதே நேரத்தில் இருக்கையும் உங்களுக்கு ஏற்றவாறு வசதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதும் முதுகின் வளைவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 

]]>
lifestyle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/12/w600X390/upper-crossed-syndrome.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/12/tips-to-build-better-posture-for-good-health-3355824.html
3354947 லைஃப்ஸ்டைல் செய்திகள் மனச்சோர்விலிருந்து விடுபட வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்! DIN DIN Wednesday, February 12, 2020 12:30 PM +0530  

மனச்சோர்வு நவீன கால வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. மனச்சோர்வை போக்குவதற்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும், அந்த சமயத்தில் சரியான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மனச்சோர்வை எதிர்கொள்ளும்போது உடனடி அதிகபட்ச நன்மைகளைப் பெற சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட ஊட்டச்சத்து நிபுணரும் டயட் போடியத்தின் நிறுவனருமான டி.டி. ஷிகா மகாஜன் அறிவுறுத்துகிறார். 

மனச்சோர்வின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 

அக்ரூட் பருப்புகள்:

அக்ரூட் பருப்புகளை அளவோடு சாப்பிடும்போது, ​​அவை இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் புரதத்தைத் தருகின்றன. அதேபோன்று அவற்றில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்று. இது மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

தானியங்கள்:

மனச்சோர்வை எதிர்க்கும் உணவுகளில் தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள ஃபைபர் கார்போஹைட்ரேட்டுகள் மனநிலையை விரைவாக மேம்படுத்த உதவுகின்றன. பழுப்பு அரிசி, பார்லி, இனிப்பு உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளையும் உணவாக எடுத்துக்கொள்வது சிறந்தது.

மஞ்சள்:

மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக இருக்கும் மஞ்சள், உங்களது மனநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும், மஞ்சள் பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன. 

கிரீன் டீ:

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். ஆனால், மனச்சோர்வை எதிர்கொள்ளும் திறன் என்று பார்த்தால் கிரீன் டீ-யில் உள்ள தியானைன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. தேநீர் இலைகளில் இயற்கையாகவே இருக்கும் ஒரு அமினோ அமிலம் தியானைன். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்: குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களான ஸ்கிம் பால், தயிர், குறைந்த கொழுப்புள்ள பன்னீர் மற்றும் பிற பால் பொருட்கள் ஆகியவற்றில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் அதிகம். மனச்சோர்வை எதிர்கொள்வது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். 

]]>
depression https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/1/1/14/w600X390/Depression.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/11/5-foods-that-might-help-you-fight-depression-3354947.html
3354935 லைஃப்ஸ்டைல் செய்திகள் 50 வயதிலும் ஃபிட்டாக இருக்க ஆசையா? IANS IANS Tuesday, February 11, 2020 11:36 AM +0530  

உடற்தகுதி என்று வரும்போது மனதில் கொள்ள வேண்டியது, வயது என்பது வெறும் எண் மட்டும்தான் என்பதையே. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் சிறிய அளவு உடற்பயிற்சி செய்வதுகூட, அவர்களுக்குப் பெறும் அளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது உண்மை.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தசைகளை வலுவாக்க உதவுகிறது மேலும் உங்கள் உடலை லகுத்தன்மையுடன் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீங்கள் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று உடற்கூறு நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க வசதியாக, முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் அதிகரித்துக் கொள்ளும்படியான உடற்பயிற்சிச் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கி நீங்கள் முயற்சி எடுக்கும் போது, முதலில் தேவையற்ற பதற்றத்தை அல்லது பயத்தை விட்டுவிடுங்கள். தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் இதற்கென உழைப்பதன் மூலம் அடிப்படை உடற்பயிற்சி இலக்குகளை எளிதாகவே அடைய முடியும். பொறுமையாகத் தொடங்குவது மிகவும் முக்கியம், பின்னர் உங்கள் சகிப்புத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் லகுத்தன்மையை படிப்படியாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் செய்ய முடிந்த அளவு பயிற்சிகளைச் செய்தால் போதுமானது, அதிகமாகச் செய்து உடலை வருத்திக் கொள்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக புதிய வொர்க்அவுட்டை முயற்சிப்பது இதுவே முதல் முறை என்றால் கற்றுக் கொண்டு அதனை படிப்படியாக பழகி வருவது நல்லது.

மூன்று-நான்கு வாரங்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சிக்குப் பின்னர், நீங்கள் வேலை செய்யும் போது மிகவும் உங்கள் உடல் நீங்கள் சொன்னதைச் செய்யும். 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கான உடற்பயிற்சிகள் ஆரம்பத்தில் குறைந்த தாக்கம்தான் தருவதாக இருக்கும், ஆனால் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்றவை மிகவும் பயனுள்ள பயிற்சிகள். ஆரம்பத்திலேயே நம்பிக்கையையும் வலிமையையும் வளர்க்க இவை உதவும்.

உடற்தகுதிக்கு நீங்கள் தகுதியான பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 30 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டைச் செய்ய வேண்டும், வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தசையை வலுப்படுத்த வேண்டும், வாரத்தில் இரண்டு நாட்கள் சமநிலை பயிற்சிகள் செய்ய வேண்டும். டாய்ச்சி, பால் ரூம் நடனம் ஆகியவை உள்ளிட்டவை உங்களை உற்சாகமாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

யோகாவை தவறாமல் பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளை அளிக்கும். இது உடல் மற்றும் மனத்தின் சமநிலையை மேம்படுத்தவும், மூட்டுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது மற்றும் நாள்பட்ட வலியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

]]>
Tips to be fitter https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/do_yoga.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/11/50-and-fabulous-tips-to-be-fitter-after-hitting-half-a-century-3354935.html
3354931 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது தற்கொலைக்கு வழிவகுக்கும்' - ஆய்வில் தகவல் DIN DIN Tuesday, February 11, 2020 11:29 AM +0530  

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் இடம்பெறும் மின்னணு சாதனங்களும் அதிகரித்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட மொபைல் போன் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. 

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து உபயோகிக்கும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது நீங்கள் நினைப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஸ்மார்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடாவின் மருத்துவ சங்க இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தூக்கம், கல்விப்பணி, சமூக செயல்பாடு, உறவுகள் ஆகியவை பாதிக்காத வகையில் ஸ்மார்ட் போன்களை எப்படி பயன்படுத்துவது என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமெனில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதன்மை ஆய்வாளர் எலியா அபி கூறுகிறார்.

இன்றைய இளம் பருவத்தினர் சமூக ஊடகங்கள் இல்லாத உலகத்தை அறியாதவர்கள், டிஜிட்டல் இடையூறுகள், சமூக ஊடக செயல்பாடுகளின் தாக்கம் இவர்களிடையே சாதாரணமாகிவிட்டன.

சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை விட, அதன் பயன்பாட்டை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் உரையாடல்களின் ஒரு பகுதியாக பெற்றோர்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிலும், முக்கியமாக சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் அபாயங்களை எவ்வாறு தடுப்பது, ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு ஒரு வரையறை விதிப்பது அவசியம் என்றும் இளம் பருவத்தினரிடம் பெற்றோர்கள் கலந்துரையாடி எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். 

ஏனென்றால், இளைஞர்கள் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் எதிர்மறையான தாக்கத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றன மற்றும் ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவின் சமீபத்திய கருத்துக்கணிப்பில், 54 சதவீத இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

]]>
smartphone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/7/w600X390/0000000000_smartphone_adiction.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/11/excess-smartphone-use-linked-to-mental-distress-suicidality-3354931.html
3354047 லைஃப்ஸ்டைல் செய்திகள் பெற்றோர்களே.. குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க இதில் கவனம் செலுத்துங்கள்! DIN DIN Monday, February 10, 2020 12:30 PM +0530  

குழந்தைகள் தூங்கும் நேர அளவைப் பொறுத்து அவர்களது உடல் மற்றும் மனத்திறன் நிர்ணயிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் மூலக்கூறு உளவியல் இதழில் வெளியானது. இளம்பருவ குழந்தைகளின் தூக்க நேரத்துக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய பகுப்பாய்வு செய்யப்பட்டது. 9 முதல் 11 வயதுக்குட்பட்ட 11,000 குழந்தைகளிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், குழந்தைகளிடையே மனச்சோர்வு, பதற்றம், நடத்தை சார்ந்த விஷயங்கள், அறிவாற்றல் குறைதல் உள்ளிட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவற்றுக்கும், குழந்தைகளின் தூக்க நேரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வினை பேராசிரியர் ஜியான்ஃபெங் ஃபெங், பேராசிரியர் எட்மண்ட் ரோல்ஸ், டாக்டர் வீ செங் மற்றும் வார்விக் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை மற்றும் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து மேற்கொண்டனர்.

ஆய்வில், '6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 9 முதல் 12 மணி நேரம் வரையிலான தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கக் கலக்கம் என்பது பொதுவாக அனைத்து இளம் குழந்தைகளுக்கும் பொதுவானது. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது குழந்தைகள் 9 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும், டிவி பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்கக் கூடாது.

அமெரிக்காவில் 60 சதவிகித பள்ளி குழந்தைகள் எட்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர். 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகளிடையே பல்வேறு நடத்தை சிக்கல்கள் காணப்படுகின்றன. அவர்களது மதிப்பெண் சதவிகிதம் 50 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. எனவே, தூக்கம் இல்லையெனில் அறிவாற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 11 மணி நேரம் தூங்கும் குழந்தை அறிவாற்றலுடன் சிறந்த மனத்திறனையும் பெற்றுள்ளது. இதனால், குழந்தைகளின் தூக்க நேர அளவிற்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தூக்க காலம், மூளை அமைப்பு, அறிவாற்றல் மற்றும் மனநல நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பை கண்டறிந்துள்ளோம் என்றும் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வுகள் தொடரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

]]>
children https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/11/5/15/w600X390/children-reading-book.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/10/study-links-childrens-mental-health-to-sleep-duration-3354047.html
3354040 லைஃப்ஸ்டைல் செய்திகள் இளம்பருவத்தில் உடல் பருமன் சிகிச்சை நல்லது: ஆய்வு முடிவில் தகவல் ANI ANI Monday, February 10, 2020 11:31 AM +0530  

இளம்பருவத்தில் உடல் பருமன் சிகிச்சையானது நேர்மறையான உளவியல் விளைவுகளையும், உடல்நலம் குறித்த விழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதாக  ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. 

ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை (பிஎம்ஐ) இல்லாமல் இருந்தால் உடல் பருமன் பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. ‘பிஎம்ஐ’ கணக்கீட்டின் அடிப்படையில் உடல் பருமன் பிரச்னையின் தீவிரத் தன்மையை மருத்துவா்கள் மதிப்பிடுகின்றனா். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியமான காரணம்.

சமீபகாலமாக இந்தியாவில்தான் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்னைகளும், மன ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர், முனைவர்.மேகன் கோவ் மற்றும் அவரது குழு இளம்பருவத்தில் உடல் பருமன் ஏற்படுவது, அவர்களது சிகிச்சை முறைகள், எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

இதில் இளம்பருவத்தில் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

மேலும், குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னை குறித்த 64 ஆய்வு முடிவுகளையும் கருத்தில் கொண்டு, அதன் முடிவுகள் மேலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பது தொடர்ந்து எதிர்காலத்திலும் அவர்களது உடல் உருவத்தை மேம்படுத்த உதவுகிறது. மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்களாக மாறுகின்றனர். உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
Obesity https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/exercise.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/10/obesity-treatment-can-bring-positive-psychological-outcomes-3354040.html
3354029 லைஃப்ஸ்டைல் செய்திகள் பயணிகள் அமரும் இடத்தில் தக்காளி சாஸை ஊற்றிய நபர்! ANI ANI Monday, February 10, 2020 10:56 AM +0530  

நியூயார்க்கில் சுரங்கப்பாதை ரயிலில் பயணி ஒருவர், இருக்கை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாஸை ஊற்றியுள்ளார். 

நியூயார்க் நகரில் சுரங்கப்பாதை ரயிலில் தினமும் பயணிக்கும் பயணி ஒருவர் ரயிலில் கூட்டமாக இருப்பதால் இருக்கை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'வித்தியாசமான முயற்சி'யில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தனது நிறுத்தம் வந்ததும், தான் அமர்ந்த இருக்கையிலும், இருக்கைக்கு கீழும் தக்காளி சாஸை ஊற்றியுள்ளார். இதனால் அந்த இடத்தில் யாரும் அமர மாட்டார்கள் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளார்.

அந்த ரயிலில் பயணித்த பத்திரிகையாளர் பெர்வைஸ் ஷல்வானி என்பவர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'இன்று காலை ரயிலில் ஒருவர் தனது இருக்கையை யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில், தனது பையில் இருந்து கெட்ச்அப் பாட்டிலை எடுத்து இருக்கையில் ஊற்றினார்' என பதிவிட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் இதனை கவனித்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பயணிக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதனை மிகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொண்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.  

]]>
நியூயார்க், New York https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/111.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/10/man-uses-ketchup-to-mark-territory-on-new-york-subway-train-3354029.html
3352430 லைஃப்ஸ்டைல் செய்திகள் உள்நாட்டு பீர் தயாரிப்பில் ஒரு புதிய வருகை! IANS IANS Saturday, February 8, 2020 02:47 PM +0530  

புதிய பீர் பிராண்டுகளான யவிரா மற்றும் பீ யங், இந்தியச் சந்தையில் மிகச் சிறந்த தரமான தயாரிப்புகளுடன் களமிறங்கியுள்ளன. நவம்பர் 2018-இல் நிறுவப்பட்ட கிமயா இமாலயன் பெவரேஜஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டு பீர், பண்ணையிலிருந்து ப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 

கிமயா இமாலயன் பெவரேஜஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபிநவ் ஜிண்டால் இது குறித்து கூறுகையில், ‘இந்தியாவின் கிராஃப்ட் பீர் தொழில், நாட்டின் பீர் சந்தை பங்கில் 2-3 சதவிகிதத்தை வாங்கியுள்ளது, பயனர்களின் தேவைக்கேற்ப  சில மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பீர், கோதுமை, அலெஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், 'கிராஃப்ட் லாகர்' வகை இன்னும் இங்கு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது என் கருத்து. எனவே, பண்ணையிலிருந்து நேரடியாகத் தருவிக்கப்பட்ட மிகச் சிறந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட பெஸ்போக் பீர்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். சிறப்பான பீர் ப்ரூயிங், பிரமாதமான சுவை, ப்ரெஷ்ஷான பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் காரணமாக கிமயா நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 
பீர் தயாரிப்பில் புதிய வருகையான நாங்கள், எல்லாவற்றிலும் புதுமையாக இருக்கிறோம். முக்கியமாக பேக்கேஜிங் மற்றும் சுவை மூலம் எங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்துகிறோம். 500 மில்லி கொண்ட தனித்துவமான பேக்கேஜிங்கை அறிமுகப்படுத்திய பின்னர், 330 மிலி (இது பகிர்ந்து கொள்ள மிகவும் சிறியது) மற்றும் 650 மில்லி (சரியான வெப்பநிலையை பாதியிலேயே இழக்கிறது) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க உத்தேசித்துள்ளோம். சரியான வெப்பநிலையுடன், லாபகரமான விலையில் சரியான அளவுகளில் சிறந்த தரத்துடன் வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்க முயல்கிறோம்.

குறிப்பாக எங்கள் பிராண்டுகளைப் பற்றி கூறுகையில், பீ யங் பயனர்களால் மிகவும் விரும்பத்தக்க பிராண்ட் ஆகும். காரணம், இதன் ப்ரெஷ்ஷான ருசியான, சுத்தமான தயாரிப்பு பயனர்களை கவர்ந்துவிடும்.  ஒவ்வொரு மிடறும் இளமைத் துள்ளலை வழங்கும். மேலும் இது சாகச உணர்வையும், ஆர்வத்தையும், சிலிர்ப்பையும் பருகியவுடன் உணர்த்தக் கூடிய மிகச் சிறந்த பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதன் பிரகாசமான மஞ்சள் நிறமானது, 'ஹேப்பி & வைப்ரண்ட்' மனநிலையை குறிக்கிறது. 

யவீரா, பிரீமியம் அடர் கருப்பு மற்றும் தங்க நிற பேக்கேஜிங்கில் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'யவிரா' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தமாகவே இந்த  பீரின் பெயர் உருவானது.  மேலும் இது உள்நாட்டு கள்ளின் பாரம்பரியத்தை தொடர்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்களால் ஆன இந்த பீர், மிருதுவான, கிரீமியான, மென்மையான, அட்டகாசமான நறுமணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய உணவு வகைகளுடன் அற்புதமாக இணைகிறது’ என்றார்.

]]>
Yavira and Bee Young beer https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/6/30/10/w600X390/beer.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/08/homegrown-beer-brands-yavira-and-bee-young-3352430.html
3351578 லைஃப்ஸ்டைல் செய்திகள் காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்? ANI ANI Friday, February 7, 2020 03:19 PM +0530  

காதலர் தினம் இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, காதலர்கள் அதனை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். பிப்.7 முதல் பிப். 14 வரை கொண்டாடப்படும் 'காதலர்கள் வாரம்' வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது.

வழக்கமான நாட்களிலேயே பொது இடங்களில் ஜோடியாக சுற்றும் மனிதப் புறாக்கள் காதலர் தினத்தன்று சொல்லவே தேவையில்லை. வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ்-இல் ஆரம்பித்து டேட்டிங் வரையில் ஒரே கொண்டாட்டம்தான். சரி, இந்த நாளில் சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்? இதற்கு சிங்கிள்ஸ் அளித்த பதில் என்னவாக இருக்கும்? பார்க்கலாம்.

தில்லியைச் சேர்ந்த அபிமன்யு கட்வால் என்பவர் 32 வயதாகும் ஒரு இளைஞர், பத்திரிகையாளர். வழக்கமாக அந்த நாளில் வெளியில் செல்வதை தவிர்த்து விடுவேன், வீட்டில் இருந்து டிவி பார்ப்பது, யூ ட்யூப்பில் விடியோ பார்ப்பது, புத்தகம் படிப்பதில் செலவிடுவேன் என்று கூறுகிறார். 

பெயர் குறிப்பிட விரும்பாத 32 வயது புகைப்படக் கலைஞர் ஒருவர், அன்பை வெளிப்படுத்த குறிப்பிட்ட நாள் ஏதும் தேவையில்லை என்றும் அன்றைய தினம் வழக்கம்போல எனது அன்றாட வேலைகளை கவனிப்பேன் என்றும் தெரிவித்தார்.

ஒருவர் தனது பைக் பழுதுபார்க்கும் வேலையை செய்யவிருப்பதாகவும் மாலை தனது நண்பர்களுடன் வழக்கம்போல ஹோட்டலுக்குச் செல்வேன் என்றார். 

24 வயதான இளம் எழுத்தாளர் அங்கூர் சிங் கூறுகையில், 'இது ஒரு சாதாரண நாளாகத்தான் இருக்கும். மற்றவர்களின் செய்கைகளை பார்த்து ரசிப்பேன். அந்நாளில் என்னை மகிழ்விக்கும் நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் காத்திருக்கிறது' என்று கிண்டலுடன் கூறினார். 

கட்வால் என்பவர், காதலர் தினத்தில் டிவி பார்ப்பதையும் சமூக ஊடகங்களில் நேரம் செலவழிப்பதை விரும்புவதாகக் கூறினார். சிங்கிள்ஸாக இருப்பதை நினைத்து வருந்துவதை விட சந்தோஷமாக சில மீம்ஸ்களை உருவாக்குங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

சிங்கிளாக இருந்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் எந்தவொரு வெறுமையையும் ஒருபோதும் உணரவில்லை என்று கூறும் இளைஞர் ஒருவர் தனிமை ஒரு இனிமையான நிறைவான அனுபவம். நமது குறிக்கோள்களில் கவனம் செலுத்த வைக்கிறது. நமக்கென்ன நிறைய நேரம் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்களுக்கு நேர்மையாக இருக்க முடிகிறது. பிடித்த நண்பர்களுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தனியாக இருப்பதனால்தான் நம்மை நாமே உணர முடிகிறது என்று சிங்கிள்ஸ்-களுக்கு ஒரு வகுப்பே எடுத்துவிட்டார். 

கடந்தகால உறவுகளின் நினைவுகளை திரும்பி பார்க்கவும், அனுபவிக்கவும் உதவுவதாக வயதான சிங்கிள் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ், உங்களது நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/13/w600X390/lovers.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/07/the-single-guys-survival-guide-for-valentines-day-3351578.html
3351562 லைஃப்ஸ்டைல் செய்திகள் மோர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான்! DIN DIN Friday, February 7, 2020 12:42 PM +0530  

மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மோர் உடல் சூட்டை தணிக்கும் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் மோர் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.

வழக்கமாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் மோர் எடுத்துக்கொள்கிறோம். உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, நல்ல செரிமானத்திற்கும், தோல் நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கவும், வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும், அஜீரணம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யவும் மோர் அருந்துகிறோம். இதனை ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், மோர் குடிப்பதனால் உங்களது அழகையும் நீங்கள் மேம்படுத்தலாம். தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதன் மூலமாக, அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், மறைய மோரை முகத்தில் தடவலாம். பருக்கள் இருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு மோரை தடவி வந்தால் பருக்கள் மறந்து நல்ல மாற்றத்தைக் காணலாம். வயதான தோற்றமளிக்கும் முகச்சுருக்கங்கள் மறையும். முதுமையிலும் இளமையாக இருக்கலாம். மோரை பயன்படுத்துவதன் மூலமாக இயற்கையான முறையிலேயே சருமத்தினை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். 

]]>
buttermilk https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/buttermilk.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/07/benefits-for-eating-buttermilk-3351562.html
3351549 லைஃப்ஸ்டைல் செய்திகள் உணவின் முழு சுவையைப் பெற, கைகளால் சாப்பிடுங்கள்! DIN DIN Friday, February 7, 2020 11:34 AM +0530
உணவைத் தொட்டு ரசித்து ருசித்து சாப்பிடும்போது அதுவொரு அலாதியான சுக அனுபவத்தைத் தருகிறது என்றும் அதனால்தான் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் கைகளால் உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

'ஜர்னல் ஆஃப் ரீடைலிங்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வினை அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதில், உணவை கைகளினால் உண்பதற்கும், ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களினால் உண்பதற்கும் உள்ள வித்தியாசம் குறித்து மாணவர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மியூன்ஸ்டர் சீஸ் வழங்கப்பட்டது. இதில் கைகளில் நேரடியாக சாப்பிட்டவர்கள் மற்றும் ஸ்பூன் கொண்டு சாப்பிட்டவர்களிடையே உள்ள வித்தியாசத்தின் அனுபவம் பெறப்பட்டது. அதிலும் தங்களுக்குப் பிடித்த சுவையான உணவு என்றால் அதனை நேரடியாக கைகளினால் சாப்பிடுவதை விரும்புகின்றனர். 

கைகளினால் உணவை நேரடியாகத் தொடும்போது, அவர்கள் உணவின் சுவையை உணருகிறார்கள். சுவையை ரசித்து உண்கிறார்கள். மேலும், உணவு எடுத்துக்கொண்டதற்கான ஒரு திருப்தி மனதளவில் ஏற்படுகிறது. அடுத்த முறை சாப்பிடும்போது உணவு மிகவும் விரும்பத்தக்கதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. சுவை குறைந்த உணவுகள் கூட கைகளால் சாப்பிடும்போது நல்ல சுவையானதாகத் தெரிகிறது. 

அதேபோன்று சிலர் என்னதான் பிடித்த உணவுகள் கொடுத்தாலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு குறைவாக சாப்பிடும் சுயக் கட்டுப்பாடு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் தங்கள் எடை, உடல்நிலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் சுவையான உணவுகளில் தங்களை அடிக்கடி ஈடுபடுத்திக்கொள்கின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன உலகில் பெரிய பார்ட்டிகளில், திருமண விழாக்களில் ஸ்பூன் கொண்டு சாப்பிடுவதை சிலர் நாகரிகமாக கருதுகின்றனர். ஆனால், உணவின் இன்பத்தை ரசித்து உண்ணும் அந்த சுகானுபவம் வேண்டுமானால் உணவை நேரடியாக கைகளால் சாப்பிடுங்கள். 

]]>
food https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/food.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/07/eat-your-food-with-hands-to-enjoy-it-more-3351549.html
3350677 லைஃப்ஸ்டைல் செய்திகள் நல்ல வேலை வேண்டுமா? ஃபேஸ்புக்கில் அழுத்தமான கருத்துகளை பதிவிட வேண்டாம் IANS IANS Thursday, February 6, 2020 03:12 PM +0530
நியூ யார்க்: ஒரு நல்ல வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும், நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆழமான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு.

இன்டர்நேஷனல் ஜார்னலில் வெளியிடப்பட்ட தேர்வு மற்றும் மதிப்பீடு தொடர்பான ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக்கில் தங்களது அழுத்தம் திருத்தமான கருத்துகளை பதிவிடும் நபர்களை, சமூக வலைத்தளங்களில் தீயாக வேலை செய்யும் குமார்களை பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியமர்த்த யோசிக்கின்றனவாம்.

2018ம் ஆண்டில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள், வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அவர்களது பணித்திறனை ஆய்வு செய்ததாகவும், அதே சமயம், 60 சதவீதம் நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் எதிர்மறையான கருத்துகளால், விண்ணப்பங்களை நிராகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே, எனது கருத்து, எனது ஃபேஸ்புக் பக்கம் என நாம் நினைத்ததை எல்லாம் சொல்லலாம் என்று இனியும் நினைத்தால் அது உங்களுக்கே பிரச்னையாகிவிடும். நீங்கள் பதிவிடும் கருத்துகளை உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நினைக்காமல், இனி இதுபோன்ற நிறுவனங்களும் பார்க்கலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/27/w600X390/facebook.jpg பேஸ்புக் https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/06/want-a-good-job-dont-express-strong-views-on-fb-3350677.html
3350658 லைஃப்ஸ்டைல் செய்திகள் குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள்..! DIN DIN Thursday, February 6, 2020 01:17 PM +0530  

குழந்தைகளை ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வைப்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரும் வேலையாக இருக்கிறது. துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள அடம்பிடிக்கின்றனர்.

இந்நிலையில், குழந்தைகளே ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டுமெனில், உணவைத் தேர்வு செய்யும் வேலையை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்றும் உங்கள் குழந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இதுதொடர்பான ஆய்வின் முடிவுகள் அப்பீடைட் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெற்றோர்கள் தேர்வு செய்து கொடுத்த உணவுகளில் குழந்தைகள் எதனைத் தேர்வு செய்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சூழ்நிலைகளைப் பொறுத்தும், உடல்நிலையைப் பொறுத்தும் குழந்தைகள் உணவைத் தேர்வு செய்கின்றனர். 

அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி ஒரு உணவை குழந்தை சாப்பிடும்போது, அதனை விருப்பமில்லாமலே குழந்தை சாப்பிடுவதால் அந்த நேரத்தில் குழந்தையின் மனநிலை மோசமானதாக இருக்கும். சிறிது காலம் உணவுத் தேர்வை குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிட்டால், அவர்கள் சில ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும்பட்சத்தில் குழந்தைகளும் அதைப்பார்த்து  ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்யும். குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப இவ்வாறான எளிய முறைகளை கையாள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

]]>
children https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/food.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/06/letting-your-child-pick-their-snack-may-help-you-eat-better-3350658.html
3350648 லைஃப்ஸ்டைல் செய்திகள் நின்றுகொண்டே தண்ணீர் அருந்தக்கூடாது! ஏன் தெரியுமா? DIN DIN Thursday, February 6, 2020 12:08 PM +0530  

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழ தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. உடலை சீராக வைத்திருப்பதற்கு பெரிதும் உதவும் தண்ணீரை முறையாக அருந்தவில்லை என்றால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும். இதனாலே, தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தண்ணீரை எவ்வாறான நிலையில் அருந்த வேண்டும் என்பது அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அவசர உலகத்தில் நாம் பெரும்பாலானோர் நின்றுகொண்டு தான் தண்ணீர் அருந்துகிறோம். ஆனால், அவ்வாறு நின்று கொண்டு தண்ணீர் அருந்தக்கூடாது. தொடர்ச்சியாக, எப்போதுமே நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.. 

தண்ணீரை நின்று கொண்டு குடிப்பதால் முதலில் தாகம் அடங்காது. தண்ணீர் வயிற்றுப்பகுதிக்குச் சென்று பல இடங்களில் சிதறுவதால் வயிற்றுக்கோளாறு ஏற்படும். இரைப்பையும் பாதிக்கப்படும். தொடர்ச்சியாக செய்யும்பட்சத்தில் நரம்பு பிரச்னைகள் கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், அல்சர் போன்றவையும் ஏற்படலாம். தண்ணீரில் உள்ள மினரல்கள் உடல் உறுப்புகளுக்குச் செல்லாமல் நேரடியாக சிறுநீரகத்திற்கு சென்றுவிடுகிறது.

இதனால் மற்ற உறுப்புகள் இயங்கத் தேவையான தண்ணீர் குறைந்து உடல் உறுப்புகளின் செயல்பாடு தொய்வடையும். எனவே, தண்ணீரை அமர்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடலின் அனைத்து பகுதிகளிலும் சென்று சேரும். உடலில் அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்கும். நாம் சாப்பிடும்போது எவ்வாறு தரையில் கால்களை மடக்கி அமர்ந்து உண்கிறோமோ, அவ்வாறு தண்ணீரையும் அருந்துவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்யும் செய்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

]]>
water, drinking water https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/drinking_water.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/06/do-not-drink-water-while-standing-3350648.html
3350638 லைஃப்ஸ்டைல் செய்திகள் இளம்பெண்களிடையே அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்! DIN DIN Thursday, February 6, 2020 11:13 AM +0530  

ஆண்களை விட இளம்பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கனடாவின் கல்காரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரிடையே நுரையீரல் புற்றுநோய் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 40 நாடுகளில் உள்ள 30-64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் சமீபத்திய காலங்களில் ஆண்களை விட பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கம் அதிகம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. புவியியல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறைகள் இதற்கு காரணமாக அமைகின்றன. மேலும், குறிப்பாக பெண்களிடையே அடினோகார்சினோமா நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் இளம் வயது ஆண்களிடையே குறைந்துவிட்டன. அதே சமயம் பெண்களிடையே  விகிதங்கள் பல நாடுகளில் வேறுபடுகின்றன.

முன்னதாக, பெண்களை விட ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகமாக இருந்தது. காரணம், ஆண்கள் பலர் அதிக எண்ணிக்கையில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது பெண்களிடையே புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவுகள் உண்மையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த எதிர்கால ஆய்வுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

]]>
Lung cancer https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/cancer.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/06/lung-cancer-rates-are-rising-in-young-women-3350638.html
3349891 லைஃப்ஸ்டைல் செய்திகள் சாலையை கடக்கும்போது சாட்டிங் செய்வதுதான் அதிக ஆபத்து! DIN DIN Wednesday, February 5, 2020 01:25 PM +0530  

சாலையைக் கடக்கும்போது மொபைல் போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிர்போகும் நிலை கூட ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலையும் மலிந்து வருவதால் வீட்டில் உள்ள அனைவருமே தனித்தனியே மொபைல் போன் வைத்திருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுபவை சமூக ஊடகங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தள போதைக்கு அடிமையாகியுள்ளனர். இரவு, பகல் பாராது பல மணி நேரங்கள் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கம் பொதுவாகவே காணப்படுகிறது.

ஓய்வு நேரங்கள் மட்டுமின்றி, பொது இடங்களில், அதாவது பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும், சாலையைக் கடக்கும் போதும் கூட பலர் மொபைல் போனில் பேசிக்கொண்டே செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஏன், அந்தப் பட்டியலில் நாமும் ஒருவராகக்கூட இருக்கலாம். இந்நிலையில், அவர்களுக்கெல்லாம் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றனர் சாலையைக் கடக்கும்போது முக்கியமாக மொபைல் போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிர்போகும் நிலை கூட ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.

சாலையைக் கடக்கும் போது போனில் பேசிக் கொண்டே செல்வது, பாட்டு கேட்டுக் கொண்டு செல்வதுகூட பரவாயில்லை. மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

போனில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக்கொண்டே சென்றால் கூட நமது கவனம் கொஞ்சமாவது வெளியில் இருக்கிறது. அதாவது, சிறிதளவு கவனச்சிதறலே ஏற்படுகிறது. ஆனால், மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் நம்முடைய முழுக்கவனமும் போனில் இருப்பதால் அருகில் வரும் வாகனத்தின் ஒலி கூட சிலரது காதில் விழுவதில்லையாம். இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்தால், கண்டிப்பாக மொபைல் போன்களின் பயன்பாட்டினால் உயிரிழப்புகள் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பாட்டு கேட்டுக்கொன்டே செல்வதை விட, மெசேஜ் அனுப்பிக்கொண்டே செல்வது இரு மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். 

எனவே, பொது இடங்களில் செல்லும் போது, முக்கியமாக சாலையை கடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!

]]>
mobile phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/phone.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/05/texting-while-walking-more-dangerous-and-deadly-3349891.html
3349877 லைஃப்ஸ்டைல் செய்திகள் முகப்பரு நீங்க இதைச் செய்தால் போதுமானது! DIN DIN Wednesday, February 5, 2020 12:32 PM +0530
காற்றில் உள்ள மாசுக்கள் சருமத்தில் படிவதாலும், முகத்தில் அழுக்கு சேருவதாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இந்த முகப்பருக்களை விரட்ட எளிய வழி ஒன்று இருக்கிறது. இதற்காக நீங்கள் பெரிதாக செலவு செய்ய வேண்டியதும் இல்லை.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை கொதிக்க வைத்து அதில் துளசி இலை, யூகலிப்டஸ், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிப்பதே போதுமானது. ஆவி முழுவதும் முகத்தில் படும்படி, கனத்த துண்டு வைத்து மூடிக்கொண்டு, 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும். முகப்பரு உள்ளவர்கள் மேலும் சிறிது நேரம் பிடிக்கலாம். ஆவி பிடித்த பின்னர், சுத்தமான துணியில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிய பின்னர் துடைக்கலாம்.

ஆவி பிடிக்கும்போது முகத்தில் உள்ள துவாரங்கள் விரிந்து, அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும். ஓரிரு நாட்களிலேயே முகப்பரு மறைந்து விடும். மேலும், சருமத்தை அழகாக, இளைமையுடன் வைத்துக்கொள்ள வாரத்திற்கு ஒருமுறை ஆவி பிடிப்பது சிறந்தது. இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால்  சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும். 

]]>
pimples, beauty tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/acne-pimples.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/05/tips-to-remove-face-pimples-3349877.html
3349874 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் நைட்-ஷிப்ட் வேலை செய்கிறீர்களா? DIN DIN Wednesday, February 5, 2020 12:14 PM +0530  

தற்போது பல்வேறு துறைகளில் இரவு நேர வேலை(நைட்-ஷிப்ட்) என்பது சாதாரணமாகி விட்டது. முக்கியமாக ஐ.டி நிறுவனங்களில் பலர் இரவில்தான் அதிக வேலை செய்கிறார்கள். இயற்கைக்கு மாறாக இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பதால் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் வேலை செய்வதால் வரும் விளைவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஆராய்ச்சியாளர்கள் சிலர், இரவு நேர வேலை செய்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு தூக்க கோளாறுகள் இருப்பதால், பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களின் ஆபத்து அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனக் கூறுகின்றனர்.

'தி அமெரிக்கன் ஆஸ்டியோபதி அசோசியேஷனின் ஜர்னல்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களில் 9% பேர் ஒரு சில ஆண்டுகளில் வளர்சிதை மாற்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் படிப்படியாக அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் நமது உடல் அமைதியடைவதைத் தடுத்து உடலை இயக்க வைப்பதால் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் மேற்குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுகிறது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, முடிந்தவரை இரவு நேரத்தில் விழித்திருப்பதை தவிருங்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் இரவு நேர வேலை செய்பவர்கள், வேலையின் இடையே சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், நாள்தோறும் ஒரே நேரத்தில் தூங்குவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சோர்வு ஏற்படும்போதும் அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கத்துடன், சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

]]>
night shift https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/night_shift.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/05/night-shift-workers-at-risk-of-heart-disease-diabetes-3349874.html
3349002 லைஃப்ஸ்டைல் செய்திகள் உடற்பயிற்சி செய்யும்போது துள்ளல் பாடல்களை கேளுங்கள்..! DIN DIN Tuesday, February 4, 2020 12:38 PM +0530  

உடற்பயிற்சிக் கூடத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது வேகமான தாளத்துடன் கூடிய துள்ளல் பாடல்களை கேட்பது பயிற்சியின் முழு நன்மைகளையும் பெற வைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பொதுவாக எந்த ஒரு செயலையும் சிறப்பாக மன அமைதியுடன் செய்வதற்கு இசை முக்கியக் காரணியாக இருக்கிறது. அந்த வகையில், நம்மை பாதிக்கும் இசையின் குறிப்பிட்ட பண்புகள் உடற்பயிற்சியின்போது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து இந்த முடிவினை வெளியிட்டுள்ளனர். 

உடற்பயிற்சி கூடத்தில் பாடல்கள் கேட்பது உடற்பயிற்சியின் நன்மைகளை அதிகரிக்கக்கூடும் என்பது பல்வேறு கட்ட ஆய்வின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகள், டிரெட்மில்லில் நடப்பது போன்ற கடினமான பயிற்சிகளின் போது அதிகவேக தாளத்துடன் கூடிய பாடல்களை கேட்கலாம். அவ்வாறு கேட்கும்போது, நாம் உடல் சோர்வை மறந்து, சுறுசுறுப்புடன் பயிற்சியில் ஈடுபட உதவும். 

'உடற்பயிற்சி செய்யும் போது துள்ளல் பாடல்களை கேட்கும்போது, இதயத் துடிப்பு அதிகமாகிறது. இதனால் இதய செயல்பாடுகள் சீராகின்றன. எனவே, உடல் சோர்வு மட்டுமின்றி பயிற்சியின் முழுமையான பலனைப் பெற முடிகிறது' என்று இத்தாலியின் வெரோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லூகா ஆர்டிகோ கூறுகிறார். 

]]>
gym https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/gym.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/04/fast-tempo-music-makes-exercise-easier-more-beneficial-3349002.html
3348982 லைஃப்ஸ்டைல் செய்திகள் செல்போனில் எச்சரிக்கையூட்டும் அலார ஒலிகளை வைக்காதீர்கள்! DIN DIN Tuesday, February 4, 2020 11:56 AM +0530  

எச்சரிக்கையூட்டக் கூடிய கடுமையான அலார ஒலிகள் மூளையின் செயல்திறனை பாதிக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 

நாம் பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் விழிப்பது அலாரம் ஒலியைக் கேட்டுத்தான். சிலர் எச்சரிக்கையூட்டும் ஒலியை வைத்திருப்பர். சிலர் மனதுக்கு இதமாக மெல்லிசையுடன் கூடிய ஒலியை வைத்திருப்பர். 

இந்நிலையில், அலார ஒலிகள் கூட ஒருவரின் மனதளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மெல்லிய இசையுடைய அலாரங்கள், கவலையை விலக்கி, மன அமைதியை கொடுக்கும் என்றும், மெல்லிசை அலாரங்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் எச்சரிக்கையூட்டக்கூடிய கடுமையான அலார ஒலிகள் மனதளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும், ஒரு கட்டத்தில் மூளையின் செயல்திறனை கூட பாதிக்கும் என்று கூறுகின்றனர். 

50 பேரிடம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு நபரும் வித்தியாசமான அலார ஒலியை பயன்படுத்தி அதன் அடிப்படையில் மனக்குழப்பம் மற்றும் விழிப்புணர்வு அளவை மதிப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

ய்வாளர் ஸ்டூவர்ட் மெக் பார்லேன் என்பவர் இதுகுறித்து கூறுகையில், 'காலையில் நல்ல மனநிலையுடன் எழுந்திருக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் செய்யப்போகும் சிறந்த பணிக்கு நல்ல மனநிலை அவசியம். ஒருவேளை சரியான மனநிலையில் எழுந்திருக்காவிட்டால் அன்றைய பணிகள் முடங்கிப்போகும். எனவே, காலை நீங்கள் எழுவதற்கு முன்னாலே உங்கள் காதுகளில் கேட்கப்படும் ஒலி இனிமையானதாக, மெல்லியதாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்' என்று கூறுகிறார். 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/04/melodic-alarms-can-improve-alertness-reduce-morning-grogginess-study-3348982.html
3348992 லைஃப்ஸ்டைல் செய்திகள் இவர் என்ன மேகன் மெர்கலின் சகோதரியா? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! DIN DIN Tuesday, February 4, 2020 11:52 AM +0530  

இளவரசர் ஹாரியின் மனைவியும், அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்கெலின் உருவத்தை ஒத்த மற்றொரு பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேகன் மெர்கெல், இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியும், அமெரிக்க முன்னாள் நடிகையும் ஆவார். கடந்த 2018ம் திருமணமான இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினரை உலகம் முழுவதுமே பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்நிலையில், மேகனைப் போன்று உருவத்தில் ஒத்த பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் மிசோரி பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் அகெய்ஷா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தனது பெண் குழந்தையுடன் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் .மேகன் மெர்கலின் சகோதரி. அவர்கள் இரட்டையர்கள்' என பதிவிட்டுள்ளனர். சிலர் அவரை 'மேகன்' என்று நினைத்ததாகக் கூறுகின்றனர். 

கிரேசன்_லாண்ட் என்ற பெயருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது குடும்பத்தினரின் புகைப்படங்கள் பலவற்றையும் பதிவிட்டுள்ளார். 

]]>
Meghan Markle https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/akeisha.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/04/missouri-resident-is-exact-copy-of-meghan-markle-3348992.html
3348068 லைஃப்ஸ்டைல் செய்திகள் மார்பக புற்றுநோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கலாமா? DIN DIN Monday, February 3, 2020 12:32 PM +0530  

மயக்க மருந்து எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோய் உள்ளவர்களிடையே மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால், மயக்க மருந்து அடிக்கடி எடுத்துக்கொள்வது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், மார்பக புற்றுநோய் ஆரம்ப(மெட்டாஸ்டேசிஸ்) நிலையில் உள்ளவர்கள் மயக்க மருந்து எடுத்துக்கொள்வது புற்றுநோய் செல்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மயக்க மருந்து நமது உடலில் உள்ள சைட்டோகைன் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமாக மார்பக புற்றுநோயின் மெட்டாஸ்டேடிக் செயல்முறையை மாற்றக்கூடும்.

ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மெத்தில் ஐசோபிரைபில் - செவோஃப்ளூரேன்(methyl isopropyl - sevoflurane) மயக்க மருந்து அதிக மெட்டாஸ்டேடிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கிறது என்பதை பல்வேறு கட்ட ஆய்வின் மூலமாக அவர்கள் கண்டறிந்தனர்.

எனவே, மார்பக புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளிகளின் தன்மைக்கு ஏற்பவும், நோயின் வீரியத்தைப் பொறுத்தும் மயக்க மருந்துகளை மருத்துவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

]]>
Breast Cancer https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/doris-metastatic-breast-cancer-1280.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/03/choice-of-anesthesia-may-affect-breast-cancer-metastases-3348068.html
3348059 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம்' - லடாக்கில் பனி ஏறும் விழா! DIN DIN Monday, February 3, 2020 11:34 AM +0530  

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் மலையேறுதல் சங்கம் சார்பில் பனி ஏறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பனி சூழ்ந்த மலைத்தொடர்களால் நிறைந்த லாடக் பகுதி சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக சாகசப் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் லடாக் போன்ற பகுதிகளில் மலையேறுதலில்  ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கென லடாக் பகுதிகளில் பல்வேறு மலையேற்ற நிறுவனங்கள் உள்ளன. மலையேற்றத்தின்போது அதற்கான பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அந்நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்நிலையில், லடாக் மலையேறுதல் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கேங்லஸ் கிராமத்தில் பனி ஏறும் விழாவை ஏற்பாடு செய்கிறது. குறிப்பாக சாகச வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கேங்லஸ் கிராமத்தில் பனி ஏறும் விழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஒரு அழகிய பனி கோபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாகச வீரர்கள் பலர் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டு மலையேறினர். புதிதாக பலரும் மலையேறுவதில் ஆர்வம் காட்டியதாகவும், இந்த ஆண்டு பெண்களுடன் அதிகளளவில் இதில் கலந்துகொண்டதாகவும் மலையேறுதல் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் லாடக் வரும்போது, மலையேற்ற நிகழ்வில் பங்கேற்கும்போது வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். 

]]>
Ladakh https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/3/w600X390/Ladakh.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/03/ladakh-mountaineering-association-organises-ice-climbing-festival-3348059.html
3348049 லைஃப்ஸ்டைல் செய்திகள் கடினமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்..! IANS IANS Monday, February 3, 2020 10:57 AM +0530  

கடினமான உடற்பயிற்சிகளை விட குறைந்த தீவிரத்தன்மை கொண்ட எளிதான உடற்பயிற்சிகளை செய்யும்போது மூளை சிறப்பாக இயங்குவதாகவும், அறிவாற்றல் பெருகுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி இன்றியமையாததாக மாறிவிட்டது. மாறிவரும் நவீன உலகத்தில், என்னதான் உணவு முறைகளை சரியாக மேற்கொண்டாலும், உடலியக்க செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள அனைத்து வயதினருமே உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வழக்கமாக உடல் உறுப்புகள் சீராக இயங்கவும், உடலும், மனமும் அமைதியுடன் இருக்கவும் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கவும் குறிப்பாக பல உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

இந்நிலையில், உடற்பயிற்சியினால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், குறைந்த தீவிரம் கொண்ட(எளிதான) உடற்பயிற்சி, அதிக தீவிரம் கொண்ட(கடினமான) உடற்பயிற்சி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மனிதனின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை Rs-fMRI என்ற நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது.

அப்போது, குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சி நல்ல அறிவாற்றலை ஏற்படுத்துகிறது. ஒரு செயலை மிகுந்த ஈடுபாட்டுடன் கவனத்துடன் செய்வதற்கு உதவுகிறது என்றும், அதிக தீவிரம் கொண்ட கடுமையான உடற்பயிற்சிகள் உடல் ரீதியாக அதிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பல்வேறு மனித உணர்ச்சிகளை தூண்டுவதில் வழிவகுக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடினமான பயிற்சிகளை விட எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், முதல்முறையாக உடற்பயிற்சிகளின் தன்மையை பொறுத்து மூளையின் செயல்பாடு மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். 

]]>
Exercise https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/3/w600X390/1280-arms-exercise-standing-curls.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/03/exercise-intensity-influences-brain-function-differently-3348049.html
3347314 லைஃப்ஸ்டைல் செய்திகள் தூக்கத்தில் கூட திறமையுடன் இருக்க வேண்டுமா? DIN DIN Sunday, February 2, 2020 06:00 PM +0530 ரோஜாவின் வாசனை ஒருவரின் கற்கும் தரத்தை மேம்படுத்துவதோடு, இரவில் நன்றாக தூங்கவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.  ஆங்கில அகராதியைக் கற்றுக் கொள்ளுமாறு இரண்டு வகுப்புகளின் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவற்றில் ஒரு குழுவினர் ஊதுபத்தி வாசனையை நுகரும்படியான இடத்தில் படித்தனர். மற்றொரு குழுவினர் எந்த வாசனையும் இல்லாத அறையில் படித்தனர்.

"ஊதுபத்தி நறுமணத்தின் விளைவு இயல்பாகவே ஒருவரின் நினைவுத் திறனை அதிகரித்து அருமையாக செயல்படுவதை நாங்கள் கண்டுபிடித்தோம், இயல்பாக இருக்கும் ஒரு விஷயத்தை இலக்காக வைத்தும் பயன்படுத்தலாம்" என்று ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் தலைவர் ஜூர்கன் கோர்ன்மியர் கூறினார்.

ஆய்வுக்காக, தலைமை எழுத்தாளரும் மாணவர் ஆசிரியருமான ஃபிரான்சிஸ்கா நியூமன் தெற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு பள்ளியின் 6-ஆம் வகுப்பைச் சேர்ந்த 54 மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து பல பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பரிசோதனைக் குழுவில் பங்கேற்ற இளம் பங்கேற்பாளர்கள் ஆங்கில அகராதியைப் படிக்கும் போது ரோஜாப்பூ வாசனை வரும் ஊதுப்பத்திக் குச்சிகளை வீட்டில் தங்கள் மேஜைகளிலும், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கைப் பக்கத்திலிருக்கும் மேசையில் வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மற்றொரு பரிசோதனையில், பள்ளியில் ஆங்கில அகராதிப் பரீட்சையின் போது இந்த ஊதுபத்திக் குச்சிகளை அவர்களுக்கு அடுத்த மேஜையில் வைத்தார்கள்.

ஊதுபத்திக் குச்சிகள் பயன்படுத்தப்படாத சோதனை முடிவுகளுடன் பயன்படுத்தப்பட்ட முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

"ஊதுபத்திக் குச்சிகளைப் பயன்படுத்தினால் மாணவர்கள் கற்கும் திறனில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று நியூமன் கூறினார்.

ஊதுபத்தியின் வாசனை நினைவுத் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

"ஆரம்ப ஆய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட கண்டுபிடிப்பு என்னவென்றால், ரோஜா ஊதுபத்தியின் நறுமணம் இரவு முழுவதும் இருக்கும்போது கூட வேலை செய்கிறது" என்று கோர்ன்மியர் கூறினார்.

முந்தைய ஆய்வுகள் பகலில் மட்டுமே இந்த வாசனை உணர்திறனாக இருக்கும் என்ற நிலையில் தற்போது உறக்கத்திலும் கூட இருக்கும். அதனால் கற்றன் திறன்பாடு அதிகரிக்கும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. இதற்கெல்லாம் காரணம் நம் மூக்கு என்று யார் நினைத்திருக்க கூடும்’ என்று கோர்ன்மியர் கூறினார்.

]]>
Scent of rose https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/26/w600X390/rose_petals.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/02/scent-of-rose-improves-learning-and-sleeping-3347314.html
3347299 லைஃப்ஸ்டைல் செய்திகள் கேஸ் மாஸ்க் அணிந்தததால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்! DIN DIN Sunday, February 2, 2020 03:28 PM +0530  

கேஸ் மாஸ்க் அணிந்ததற்காக அமெரிக்க விமானத்தில் இருந்து ஒருவர் பயணிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இருந்து ஹூஸ்டன் நகரம் நோக்கி சென்ற FYI 2212 விமானத்தில் ஒரு இளைஞர் முகத்தில் கேஸ் மாஸ்க் அணிந்த நிலையில் ஏறியுள்ளார். இதைப் பார்த்த பயணிகள், ஏன் மாஸ்க் அணிந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். மேலும், மாஸ்க்கை கழற்றவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதனை அகற்ற மறுத்துள்ளார். 

இதனால், பயணிகளுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் விமான அதிகாரிகள் வந்து சமரசம் செய்து வைக்க முயன்றனர். ஆனால், பயணிகள் பிடிவாதமாக இருக்கவே, அந்த நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பயணித்தது. 

உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மாஸ்க் அணிந்த நபருக்கு கரோனா வைரஸ் இருக்குமோ என்ற நோக்கத்தில் பயணிகள் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஆனால், மற்ற பயணிகளோ, அவரது பாதுகாப்பு கருதிதான் நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். 

]]>
america https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/images.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/02/man-gets-kicked-out-of-flight-for-wearing-a-gas-mask-3347299.html
3347281 லைஃப்ஸ்டைல் செய்திகள் இந்த நூற்றாண்டின் இன்றைய தேதி: அறிவோம் அரிய செய்தி! ராகவேந்திரன் DIN Sunday, February 2, 2020 12:50 PM +0530  

இந்த நூற்றாண்டின் இன்றைய தேதி (02.02.2020) மிகவும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ள ஆச்சரியத்துக்குரியதாகும். 

முன்னதாக, சுமார் 909 ஆண்டுகளுக்கு முன் 11.11.1111 என்ற தேதி அமைந்துள்ளது. அதேபோன்று இன்றிலிருந்து அடுத்த 101 ஆண்டுகளுக்குப் பிறகு 12.12.2121 என்ற தேதி அமையவிருக்கிறது.

இந்த நிலையில், 2ஆம் எண்ணுக்கு அடுத்தபடியாக எதிர்காலத்தில் 3ஆம் எண் இடம்பெறும் விதமாக 03.03.3030 என்ற தேதியும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனை ஆங்கிலத்தில் பேலிண்ட்ரோம் என்று வகைப்படுத்துகின்றனர். அதாவது ஒரு எழுத்து, எண் உள்ளிட்டவற்றின் தொடரில் ஒரு சொல்லாகவோ, சொற்றொடராகவோ அல்லது எண்களின் குவியலாகவோ முதல் மற்றும் கடைசி வரிசை முதல் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஒரே மாதிரியாக இடம்பெறுவது ஆகும்.

தமிழில் ''விகடகவி'' என்ற சொல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

]]>
Palindrome https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/2/w600X390/02-02-2020.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/feb/02/02022020-a-rare-day-occurs-once-in-a-century-3347281.html
3345575 லைஃப்ஸ்டைல் செய்திகள் முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா, கெட்டதா? DIN DIN Friday, January 31, 2020 02:56 PM +0530  

முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இறுதியில் பல கலவையான முடிவுகளே வெளியாகின்றன. எனினும், சமீபத்திய ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வினை மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஹாமில்டன் ஹெல்த் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் முட்டை சாப்பிடுவதற்கும், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

முட்டைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவாக இருக்கிறது. மேலும், மலிவான விலையிலும் கிடைக்கிறது. ஆனால், வயதானவர்கள் அதிகம் முட்டை சாப்பிடக்கூடாது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும், வயதானவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டை மட்டும் எடுத்துக்கொள்வது சிறந்தது என்றுஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

21 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வில் பெரும்பான்மையான நபர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை உட்கொண்டனர். அவர்களுக்கு பெரும்பாலும் உடல்ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இறுதியில், முட்டை அளவாக உட்கொள்வது இதயத்திற்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாதது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
முட்டை , egg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/Z_EGG_EATING.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/31/eating-an-egg-a-day-not-bad-for-your-heart-3345575.html
3345565 லைஃப்ஸ்டைல் செய்திகள் கர்ப்பிணி பெண்கள் மது அருந்தக்கூடாது! ஏன்? DIN DIN Friday, January 31, 2020 01:39 PM +0530
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களைப் போன்று பெண்களும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. எனினும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

அதிலும் ஆல்கஹால் அதிகமுள்ள மதுவை அருந்தும் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் ஆல்கஹால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையை பெரிதும் பாதிக்கும். குழந்தை பிறக்கும்போது எடை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. முகம் பெரிதாகத் தோன்றும். குழந்தையின் அறிவாற்றல் குறைவதற்கு வழிவகுக்கும்.

பிற்காலத்தில் குழந்தையின் நினைவுத்திறன் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தையின் கல்வி உள்ளிட்ட முக்கிய செயல்திறன் பாதிக்கப்படும். குழந்தை கருவில் இருக்கும்போதே குழந்தையின் செயல்பாடு குறைகிறது. மேலும், மரபணுவில் சில மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் மது அருந்தும்போது குடல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து கணையம், கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வினை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், கர்ப்பிணிகள் மது அருந்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் முழு பாதிப்பினையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

]]>
pregnancy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/pregnancy.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/31/why-women-should-avoid-drinking-during-pregnancy-3345565.html
3345542 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஆசிரியர்களே, மாணவர்களின் சிறு முயற்சியையும் பாராட்டுங்கள்! DIN DIN Friday, January 31, 2020 11:23 AM +0530  

ஆசிரியர்களின் பாராட்டு மாணவர்களின் நன்னடத்தையை அதிகரிக்கும் என்று ஆய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது.

பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் 'மாணவர்களின் கல்வி உளவியல்' குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் நடத்தைகளில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான காரணிகளைக் கண்டறிந்தனர்.

ஆசிரியர்கள் பழகும் விதம் மாணவர்களிடையே நேர்மறையான பல தாக்கத்தினை ஏற்படுத்தும். முக்கியமாக ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டும்போது அவர்களது நடத்தையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காண முடிகிறது. கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 

மாணவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அவர்களை தண்டிக்காமல், மாறாக அவர்களுக்கு தவறை உணர வைத்து அறிவுரை கூறும் ஆசிரியர்களை அவர்களுக்கு பிடிக்கிறது. ஆசிரியர்கள் எளிமையாக, சாதாரணமாக நடந்துகொள்ள வேண்டும் என்றே மாணவர்கள் விரும்புகின்றனர். மாணவர்களின் சிறு முயற்சிகளைக் கூட ஆசிரியர்கள் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆசிரியரின் பாராட்டுகளே மாணவர்களின் அடுத்த முயற்சிக்கு வித்திடுகிறது.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது அவர்களது மனதில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. முன்பை விட அவர்களது கல்வித்திறன் குறைகிறது; நடத்தைகளில் தவறான மாற்றம் ஏற்படுகிறது. ஆனால், மாணவர்களைப் பொறுத்து சிறு கண்டிப்பும் அவசியம்

எனவே, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், நன்னடத்தைகளை பழகிக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களது சிறு முயற்சியையும் ஆசிரியர்கள் பாராட்ட வேண்டும். இதன் மூலமாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. 
 

]]>
Teacher https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/childrens.jpg கோப்புப் படம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/31/teachers-praise-boost-good-behaviour-in-students-3345542.html
3344650 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் முகம் ரோசாப்பூ போல அழகாக வேண்டுமா? இதை தினமும் பயன்படுத்துங்கள் IANS IANS Thursday, January 30, 2020 04:22 PM +0530  

குளிர்காலத்தில் கடுமையான காற்று உங்கள் முகத்தின் மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிடலாம். தேவையற்ற சிறு சுருக்கங்கள் அல்லது கோடுகளை முகத்தில் உருவாக்கி உங்கள் அழகிய தோற்றத்தைத் கெடுக்கலாம். இதற்கு தீர்வாக பன்னீரைத் (ரோஸ் வாட்டர்) தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் சருமப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். முகத்திலுள்ள மாசுக்களை அகற்றக் கூடிய சக்தி ரோஸ் வாட்டருக்கு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.  மேலும் இது வீட்டில் ஃபேஸ் பேக்குகள் / ஸ்க்ரப்களை உருவாக்கவும் பயன்படுகிறது. அனைத்து சரும வகைகளுக்கும் வரம் இந்த ரோஸ் வாட்டர். அதன் நன்மைகள் இதோ:

உங்கள் சருமத்தின் தரம் குறைவதற்குக் காரணம் நீங்கள் செய்யும் மோசமானத் தேர்வுகள்தான். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரையின் முன்னால் நீண்ட நேரம் இருப்பது, மிகக் குறைவான நேரத் தூக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் உங்கள் சருமம் பாதிப்படையும். குறிப்பாக உங்கள் கண்களைச் சுற்றி கருவளையத்தை ஏற்படுத்திவிடும். கண்களுக்குக் கீழே சில சமயம் பைப் போன்ற சதைப்பற்று உருவாகும். அந்தப் பைகளை அகற்ற நீங்கள் விலை உயர்ந்த கண் கிரீம்கள் வாங்கித் தடவலாம். ஆனால் அவை எல்லாம் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தராது. உடனடித் தீர்வாக தினமும் சிறிதளவு ரோஸ்வாட்டரைப் பயன்படுத்துவது எளிது.

எண்ணெய்ச் சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் சிறந்தது. ஆனாலும், இது சருமத்துக்கு  ஆபத்தில்லை என்றும் கூறிவிட முடியாது. ஒரு நாளைக்கு ஒரு முறை ரோஸ் வாட்டர் மூலம்  உங்கள் முகத்தை சுத்தம் செய்வதால் நுண் துவாரங்கள் திறந்து சருமத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரோஸ் வாட்டர் முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைப்பதற்கும் உதவும்.

பொதுவாக மழை மற்றும் குளிர் காலநிலை என்றால், சருமத்தைச் சீராக்க அதிக மாய்ஸ்சரைசர் தேவைப்படும். இந்தப் பருவத்திற்கான உங்கள் பிரச்னை 'மாய்ஸ்சரைசர் போதுமானதாக இல்லை' என்பதுதான். நாள் முழுவதும் நம் சருமம் வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மாய்ஸ்சரைசர்களுக்கு பெரும்பாலோர் நிறைய பணம் செலவழிப்பார்கள். ஆனால் இரவிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அதே வகையில் முக்கியம். உங்கள் சருமத்தை நீரோட்டமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க ரோஸ்வாட்டரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

ரோஸ்வாட்டர் முகப்பரு மற்றும் தோல் அரிப்பு அழற்சியால் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியா இருப்பதால் சருமப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் அதன் செறிவூட்டப்பட்டப் பண்புகள் சேதமடைந்த தோல் செல்கள் மற்றும் திசுக்களை மீட்டெடுக்க உதவுகின்றன.  தொடர்ந்து பயன்படுத்த சரும வயதைக் குறைக்கிறது.  

பனிக்காலம் பெரும்பாலோருக்கு சற்று பிரச்னைக்குரியதாக இருக்கும். ரோஸ்வாட்டர் அரோமாதெரபியாக இச்சமயங்களில் பயன்படுத்தலாம். அதன் இனிமையான வாசனை நல்ல மனநிலையைத் தரும். அது மட்டுமல்லாமல் பதற்றத்தை சமாளிக்கச் சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது. ரோஸ் வாட்டரில் ஊற்றப்பட்ட மெழுகுவர்த்திகளை வாங்கி வீட்டில் ஏற்றி வைக்கலாம் அல்லது சுற்றுப்புறத்தை நறுமணத்தால் ஒளிரச் செய்ய உங்கள் அறையைச் சுற்றி ரோஸ் வாட்டரைத் தெளிக்கலாம்.

ரோஸ்வாட்டர் என்பது உங்கள் சருமத்திற்கு மட்டுமான வரமல்ல,  உங்கள் தலைமுடிக்கும் சில அதிசயங்களை அது செய்யும். லேசான அளவிலான வீக்கத்திற்கு ரோஸ்வாட்டர் சிகிச்சைப் பயன் தரும். உங்கள் உச்சந்தலையில் இருந்து பொடுகை ரோஸ்வாட்டர் பயன்படுத்தி நீக்க முடியும். உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குளில் ரோஸ் வாட்டரைக் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம.  சில துளிகள் ரோஸ் வாட்டரை உங்கள் உச்சந்தலையில் தேய்த்துக் கொள்வதால் வாசனையாக இருக்கும். மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ரோஸ்வாட்டரைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் சருமப் பிரச்னைகள் அத்தனைக்கும் எளிய தீர்வாகச் செயல்படும்.  டோனரைப் போல உங்கள் முகத்தில் நேரடியாக தெளிக்கச் செய்யலாம் அல்லது ஃபேஸ் பேக்கில் நேரடியாக கலக்கலாம். ரோஸ்வாட்டரை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் குளிர்காலத்திலும் ஜொலி ஜொலிப்புடன் இருக்கும்.

]]>
rose water https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/30/w600X390/rosy_skin.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/30/use-rose-water-for-a-real-glowing-face-3344650.html
3344649 லைஃப்ஸ்டைல் செய்திகள் கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்! DIN DIN Thursday, January 30, 2020 04:17 PM +0530  

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். 

உலகின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சமீபத்தில் கரோனா வைரஸ் குறித்து தேடுபொறி தளமான கூகுளில் மக்கள் அதிகம் தேடிப் படிக்கின்றனர். 

இந்நிலையில், கூகுளில் கரோனா வைரஸ் குறித்து தேடும் பல நபர்கள் கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இந்தக் குழப்பத்தில் கரோனா வைரஸுக்கு பதிலாக 'கரோனா பீர் வைரஸ்' குறித்து சிலர் படித்துள்ளனர். 'கரோனா பீர் வைரஸ்' என்ற தலைப்பில் சமீபத்தில் கூகுளில் அதிக தேடல்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கரோனா என்ற பெயரில் பிரபலமான ஒரு பீர் ப்ராண்ட் இருப்பதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

சில பகுதிகளில் 'கரோனா' என்று தேடும்போது கூகுள், 'கரோனா பீர்' என பரிந்துரைப்பதாலேயே மக்கள் குழப்பமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தகுறித்து ரீலேபோகா மாஷியானே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸுக்கும். கரோனா பீருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இரண்டு புகைப்படத்தின் மூலமாக விளக்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

எனவே மக்கள் கூகுளில் தேடும்போது, 'கரோனா வைரஸ்' என்று தெளிவாக பதிவிட்டு சரியானதை படிக்கவும்.

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/30/w600X390/EO3L4tIWkAA0uGc.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/30/people-confusing-between-corona-beer-and-coronavirus-3344649.html
3344637 லைஃப்ஸ்டைல் செய்திகள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா? DIN DIN Thursday, January 30, 2020 03:30 PM +0530  

சமையல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும் என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. துரித உணவுகளையே விரும்பி சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். இதனை எளிதாக்கவே, ஒரு சிறந்த வழியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, குழந்தைகளை ஆரோக்கியமான சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்க வைக்க ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் எஜுகேஷன் அண்ட் பிஹேவியர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், டிவியில் சமையல் நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை தானாக எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 முதல் 12 வயதுடைய 125 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கச் செய்தனர்.தொடர்ந்து அதுபோன்ற பல்வேறு உணவு/ சமையல் சம்மந்தப்பட்ட  நிகழ்ச்சிகளை காணச் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆரோக்கியமான உணவுகள் தக்காளி, வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெற்றிருந்தன. ஆரோக்கியமற்ற உணவுகளை மையமாகக் கொண்ட சில காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அங்கு காண்பித்த உணவுகளில் சில சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. அதனை அவர்கள் விருப்பமாகவே தேர்வு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்த குழந்தைகள் பல ஆரோக்கியமான உணவுகளையே தேர்ந்தெடுத்தனர். 41 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஆப்பிள் அல்லது வெள்ளரி போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டியைத் தேர்ந்தெடுத்தனர். 20 சதவிகித குழந்தைகளே மிகவும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டியைத் தேர்ந்தெடுத்தனர். 

பெற்றோர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு முறைகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

]]>
சமையல், cooking https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/24/w600X390/children_menu.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/30/watching-cooking-shows-may-motivate-kids-to-eat-healthy-food-3344637.html
3344620 லைஃப்ஸ்டைல் செய்திகள் இடம் சார்ந்த அறிவாற்றலில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? DIN DIN Thursday, January 30, 2020 01:41 PM +0530  

இடம் சார்ந்த அறிவாற்றல் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவில் உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில், அறிவாற்றல் சோதனைகளின்போது ஆண்களும் பெண்களும் வெவ்வேறு உத்திகளை கையாள்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் ஒரே மாதிரியான முடிவுகளையே வெளிப்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாற்றல் சோதனைகளில் ஆண்களுக்கு மன சுழற்சி சோதனை என்ற தனித்துவமான செயல்திறன் உள்ளது என்றும் அதே நேரத்தில் பெண்களுக்கு வரைபட வாசிப்பு திறமை அதிகளவில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சோதனைகளில் அவர்கள் பயின்ற பள்ளி, கல்லூரிகளைப் பொறுத்தும் செயல்திறன் மாறுபடுகிறது. அறிவாற்றல் சோதனைகளில், ஆண்களை விட பெண்கள் பல திறமைகளை கொண்டுள்ளனர். ஆனால், அனைத்தையும் பொதுவாக கணக்கிட்டால் சராசரியாக ஆண்கள், பெண்கள் இருவருமே இடம் சார்ந்த அறிவாற்றல் திறன்களில் சம அளவிலேயே இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில்,அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் மற்றும் விளையாட்டு அறிவியல் துறையைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 

]]>
spatial cognition https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/30/w600X390/unnamed.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/30/men-and-women-have-equal-spatial-cognition-skills-3344620.html
3343726 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94% பேர் மன அழுத்தத்தில் உள்ளனர்' DIN DIN Wednesday, January 29, 2020 12:44 PM +0530  

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர். 

இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். 

ஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர். 

ஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.

எனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம். 

]]>
ஆசிரியர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/10/w600X390/good_teacher.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/29/94-middle-school-teachers-suffer-high-stress-levels-study-3343726.html
3343695 லைஃப்ஸ்டைல் செய்திகள் முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா? DIN DIN Wednesday, January 29, 2020 11:07 AM +0530
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டால் அறிவாற்றல் பெருகும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், வால்நட் எனும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் அறிவாற்றல் நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லோமா லிண்டா மற்றும் ஸ்பெயினின் கேடலோனியா, பார்சிலோனா பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். நடுத்தர வயதுடைய மற்றும்  வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வால்நட் சாப்பிடுவது உடல்ரீதியாக பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

வயதானவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தினமும் சிறிது வால்நட் எடுத்துக்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது அறிவாற்றல், நினைவுத்திறன் அதிகரித்திருந்தது. அதேபோன்று, நடுத்தர வயதுடையவர்கள் தினமும் உணவில் வால்நட் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், பிற்காலத்தில் அதிக நினைவுத்திறன் கொண்டிருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், புகைப்பிடிப்பது, மது அருந்துவது,  நரம்பியல் பிரச்னை உள்ளவர்களிடம் குறைவான மாற்றமே தெரிந்தது. அவர்கள் மற்றவர்களை விட குறைவான நினைவுத்திறனையே கொண்டிருந்தனர்.

'இது ஒரு சிறிய மாற்றம்தான். வால்நட் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டவை. முக்கியமாக, உடல் ஆரோக்கியத்தில் இதுவரை கவனம் செலுத்தாதவர்கள், தற்போது உடல்ரீதியாக பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து வால்நட் எடுத்துக்கொண்டால் குறுகிய காலத்திலே அதிகளவு மாற்றத்தை உணர முடியும்' என்று அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோன் சபேட் கூறினார்.

அக்ரூட் பருப்புகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. அவை 'ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' எனப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும்,, வீக்கத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டுள்ளன. உடலில் அனைத்து செயல்பாடுகளையும் சமநிலையில் வைக்க உதவுகின்றன. 

மேலும், அக்ரூட் பருப்புகள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டதால் பல்வேறு நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. 

முன்னதாக, வால்நட் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று மற்றொரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
Walnuts , வால்நட் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/brain1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/29/walnuts-can-help-you-stay-sharper-at-old-age-3343695.html
3341924 லைஃப்ஸ்டைல் செய்திகள் திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரிக்குமா? ஆய்வு ANI ANI Monday, January 27, 2020 12:34 PM +0530  

திகில் படங்கள் பார்ப்பது உற்சாகத்தை அதிகரித்து மூளையின் செயல்பாட்டைக் பாதிக்கின்றன என்பதை ஆய்வு வெளிப்படுத்தியது.

திகில் திரைப்படங்களைப் பார்க்கும் போது, அவை மூளையின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி நடந்தது. அச்சத்தில் நரம்பியல் செயல்பாட்டின் மாற்றங்கள் வரைபடமாக்கப்பட்டது.

பின்லாந்தின் துர்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் நாம் ஏன் ஈர்க்கப்படுகிறோம் என்று ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் கடந்த நூற்றாண்டின் 100 சிறந்த / பயங்கரமான திகில் திரைப்படங்களை தேடிப் பிடித்தனர். அவை எவ்வாறு மக்களை உணர வைத்தன என்பது குறித்து விரிவான ஆய்வு நிகழ்த்தினர். இந்த ஆய்வு நியூரோல்மேஜ் இதழில் வெளியிடப்பட்டது.

முதலாவதாக, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 72 சதவிகித மக்கள் கடைசியாக ஒரு திகில் படம் பார்த்ததாக தெரிவித்தனர். அவ்வாறு செய்வதற்கான காரணங்கள், பயம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளைத் தவிர, அத்தகைய படங்களைப் பார்க்கும்போது உற்சாகமாக இருந்தது என்று கூறினர். திகில் திரைப்படங்களைப் பார்ப்பதும் சமூகமயமாவதிலிருந்து  தவிர்க்கவும், பலரும் திகில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்.

இயற்கையில் உளவியல்ரீதியான மற்றும் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திகிலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் பார்க்கக் கூடியதைக் காட்டிலும் திரையில் காட்சிப்படுத்தப்படும் விஷயங்களால் பயம் கொண்டனர்.

இதற்குக் காரணம் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுதான். முக்கியமாக மக்கள் அனுபவிக்கும் இரண்டு வகையான பயத்தை அவை பிரதிபலிக்கிறது. ஏதோ சரியாக இல்லை என்று ஒருவர் உணரும்போது ஏற்படும் ஒருவிதமான உணர்வு, ஒரு பேய் அல்லது பிசாசின் திடீர் தோற்றத்திற்கு நம்மிடம் ஏற்படும் அச்ச உணர்வு இவை நம்உணர்வுநிலையை கொதிக்க வைக்கிறது என்று துர்கு பி.இ.டி மையத்தைச் சேர்ந்த முதன்மை புலனாய்வாளர் பேராசிரியர் லாரி நும்ன்மா கூறுகிறார் .

பல்வேறு வகையான பயங்களுக்கு மூளை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை எம்.ஆர்.ஐ சோதனை வெளிப்படுத்தியது. இந்தச் சிக்கலான மற்றும் எப்போதும் மாறிவரும் சூழலுக்கு பதிலளிக்கும் விதமாக மூளை எவ்வாறு பயத்துடன் சமாளிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய விரும்பினர். காந்த அதிர்வு இமேஜிங் ஸ்கேனரில் நரம்பியல் செயல்பாட்டை அளவிடும் அதே வேளையில், இந்தக் குழு மக்களை ஒரு திகில் திரைப்படத்தைப் பார்க்கச் செய்தது. 

பதற்றம் மெதுவாக அதிகரித்து வரும் அந்தச் சமயங்களில், காட்சி மற்றும் செவிவழிப் பார்வையில் ஈடுபடும் மூளையின் பகுதிகள் மிகவும் சுறுசுறுப்பாகின்றன, ஏனெனில் சூழலில் அச்சுறுத்தல் குறித்த குறிப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. திடீர் அதிர்ச்சிக்குப் பிறகு, உணர்ச்சி செயலாக்கம், அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பதில் ஈடுபட்டுள்ள பகுதிகளில் மூளையின் செயல்பாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது, விரைவான பதிலை செயல்படுத்துகிறது. அவ்வகையில் திகில் திரைப்படங்கள் நம் உற்சாகத்தை அதிகரிக்கத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர் மத்தேயு ஹட்சன் விளக்கினார்.

]]>
horror movies https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/27/w600X390/horror_films.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/27/study-reveals-horror-movies-manipulate-brain-activity-to-enhance-excitement-3341924.html
3339302 லைஃப்ஸ்டைல் செய்திகள் விமானத்தில் உள்ளோரை முகம் சுளிக்க வைத்த இளைஞர்! DIN DIN Saturday, January 25, 2020 11:56 AM +0530  

வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது ஈரமான ஷூவை உலர வைப்பதற்காக விமானத்தில் இருக்கைக்கு மேலுள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட்டை பயன்படுத்தியுள்ளார். இளைஞரின் இந்த செயல் அங்கிருப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும், இதனை மற்றொரு பயணி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்து பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த இளைஞரை வறுத்தெடுத்து வருகின்றனர். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், சில பயணிகளும் விமானத்தில் இவ்வாறு நடந்துகொள்வதாக பயணிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வேறு எங்கேனும் இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்ற பயணிகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் விமானத்தில் ஒரு 'தாக்குதல்' நடத்த வேண்டும் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயணிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார விழிப்புணர்வு அவசியமாகிறது. இம்மாதிரியான செயல்கள் அருகில் இருப்போரிடையே நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே, பொது இடங்களில் இவற்றை உணர்ந்து சுகாதார விழிப்புணர்வுடன் மற்றவர்களுக்கு இடையூறு இன்றி நடந்துகொள்வது அவசியம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/24/w600X390/22.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/24/airline-passenger-uses-air-conditioning-vent-as-personal-shoe-dryer-3339302.html
3339274 லைஃப்ஸ்டைல் செய்திகள் குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா? DIN DIN Friday, January 24, 2020 03:30 PM +0530
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மணப்பெண்கள் தங்கள் திருமணம் நடக்கும் இடத்திற்கு குதிரையில் சவாரி செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கந்துவா பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் சாக்ஷி மற்றும் சிருஷ்டி. ஜனவரி 22ம் தேதி நடந்த இவர்களது திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வழக்கமாக மணமகன் குதிரையில் சவாரி செய்து அழைத்து வரப்படுவார். ஆனால், மாறாக இந்த சகோதரிகள், குதிரையில் சவாரி செய்து திருமணம் நடக்கும் மணமகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெண்களின் தந்தை அருண் கூறும்போது, 'இது 400-500 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம். பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' (Beti Bachao, Beti Padhao) திட்டத்தினை ஆதரிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளேன். இந்நாட்டின் மகள்களை சமமாக நடத்த வேண்டும். எங்களுடைய பாரம்பரியமும் இதைத்தான் தெரிவிக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம். மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டின் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். 

சகோதரிகள், இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று கூறினர். மணமகள்கள் இருவரும் குதிரையில் வலம் வரும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. 

]]>
brides https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/24/w600X390/1111.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/24/two-brides-ride-to-their-wedding-venue-in-mp-3339274.html
3338408 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? DIN DIN Thursday, January 23, 2020 04:25 PM +0530  

ஸ்மார்ட்டா இருக்கணும்னா ஸ்மார்ட் போன் பயன்படுத்துங்கள் என்று கூறும் அளவுக்கு நம்முடைய ஆறாவது விரலாக மாறிவிட்டது இந்த மொபைல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரும் தங்கள் உலகில் ஆழ்ந்திருப்பது என்பது போனில் மூழ்கியிருக்கையில்தான். நவீன வாழ்க்கையில் எல்லாம் மெய் நிகர் உலகமாகிவிட்ட நிலையில், உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஜிமெயில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தினந்தோறும் கையடக்க ஃபோனிலேயே பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

ஆன்லைன் பயன்பாடுகளையும் தற்போது ஸ்மார்ட்போன்கள் நிறைவு செய்வதால் சதா போனும் கையுமாக பலர் உள்ளனர். ஆன்லைன் ஷாப்பிங் மட்டுமல்லாமல் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றவும், பதிவிறக்கவும் செய்வது முதல், திரைப்படங்கள் பார்த்து வரை இணையத்தில் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. இப்படி நாளில் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமிக்கும் உங்கள் ஸ்மார்ட்போனை யாரேனும் களவாடி விட்டால்? போன் கையில்தானே உள்ளது எப்படி இது சாத்தியம் என்று நினைக்காதீர்கள். எதிக்கல் ஹாக்கிங் முதல் சைபர் க்ரைம் வரை பலவகையான ஹேக்கிங் உள்ளது. ஒருவரது தகவல்களை அவருக்குத் தெரியாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேவு பார்ப்பது முதல் டேட்டாக்களைத் திருடி விற்பது வரை பல குற்றச் செயல்கள் நடந்துவருகின்றன. தகவல் திருட்டுதான் இந்த நவீன யுகத்தின் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.  வங்கியில் வைத்திருக்கும் இருப்புத் தொகை ஒரே நொடியில் திடீரென்று காணாமல் போய்விட்டால் என்ன செய்வது? உங்களுடைய போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அவை 

மொபைல் டேட்டா பயன்பாடு : உங்கள் ஸ்மார்ட்போனில் உளவுக் கருவிகள் உங்களுக்கே தெரியாமல் இணைக்கப்பட்டிருந்தால் அதிக டேட்டா பயன்பாடு இருக்கும். உஷாராக எந்தளவு உங்கள் பயன்பாடு உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். மேலும் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு இருந்தால் டேட்டா  அதிகமாக செலவழியும். கூகுள் தரும் டெட்டாலி எனும் செயலி உங்களது இணைய பயன்பாட்டைக் கணித்துச் சொல்லும். 

மெதுவான செயல்திறன்: உங்கள் மொபைல் அடிக்கடி ஹாங் ஆனாலோ அல்லது மெதுவாகச் செயல்பாட்டாலோ நீங்கள் ஹேக்கர்களின் பிடியில் சிக்கியிருக்கலாம். சில சமயம் குறிப்பிட்ட சில செயலிகளின் பயன்பாடுகள், அதிக டேட்டா பயன்பாடு இருந்தாலும்கூட மொபைல் ஸ்லோவாக இருக்கலாம். 

எஸ்எம்எஸ்:  புதிய நம்பர்கள், அல்லது உங்களுக்குத் தெரியாத நம்பருக்கான அழைப்புகள் சென்றிருந்தால் உடனடியாக அது என்னவென்று ஆராய்ந்து பாருங்கள்.  மற்ற நம்பர்களுக்கு கால் செய்யும் போது அல்லது குறுஞ்செய்தி அனுப்புகையில் கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  புதிய நம்பர் பதிவு பில்லில் இருந்தால் உங்கள் ஃபோனில் உளவுக் கருவிகள் இருக்கலாம். உங்களது தொலைபேசிக்கு சம்பந்தமே இல்லாத பல ஃபைல்கள் தாமாகவே தோன்றியிருக்கும். உங்களது அனுமதி இல்லாமலேயே போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உங்கள் தொலைபேசியில் இருந்து செல்லும். உங்களது மின்னஞ்சல்கள் நீங்கள் திறப்பதற்கு முன்னதாகவே திறக்கப்பட்டுப் படிக்கப்பட்டிருக்கும்.

பேட்டரி ஆயுள்: உங்களுக்குத் தேவையில்லாத செயலிகளைத் தரவிறக்கம் செய்யாதீர்கள். உங்கள் கைபேசியில் அவற்றின் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இயக்கத்தில் இருக்கும். பேட்டரி ஆயுள் காலப்போக்கில் தவிர்க்க முடியாமல் குறையும். உளவு கருவிகள் இருந்தாலும், அவைகள் ஸ்னேன் செய்வதாலும் ஆட்டோ மேடிக்காக ஸ்மார்ட்போன் குறையும். 

உங்களுக்குத் தெரியாத மின்னஞ்சல் இணைக்கப்பட்டிருந்தால் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உங்களது போனிலுள்ள காமிரா தானாகவே திறந்துவிடும். உங்கள் போன் முழுவதும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாமலேயே தானியங்கி தொடல்களைச் (Automatic Touches) செய்யும். மொபைல் எப்போதும் சூடாகவே இருக்கும். மேலும் முக்கியமாக மொபைலில் பேட்டரி சீக்கிரமாகத் தீர்ந்துவிடும். மர்ம பாப் ஆப்கள் தாமாகவே திறக்கும்.

மேற்சொன்னவற்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் நிச்சயம் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுத்துவிடுங்கள்.

]]>
smart phone hack https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/19/w600X390/jammumobile.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/23/how-to-know-if-your-phone-is-hacked-3338408.html
3338381 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் வெறுக்கும் நபரை ஒரு விழாவில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? ANI ANI Thursday, January 23, 2020 02:00 PM +0530  

உங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கி மன அழுத்தம் ஏற்படக் காரணகர்த்தா ஒரு நபராக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் அவரை விரும்பவில்லை என்றால் நிச்சயம் அது உங்களுக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது

2,000 அமெரிக்கர்கள் வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட பலர் எளிதில் குழப்பமடைவதாக தெரிய வந்தது. பார்டிக்குச் சென்ற முதல் பத்து நிமிடங்களில் அவர்கள் பதற்றம் அடைந்துவிடுகின்றனர். வீட்டுக்கே திரும்பிவிடலாமா அல்லது இன்னும் சிறிது நேரம் கொண்டாடிவிட்டுச் செல்லலாமா என்ற மன சஞ்சலத்துக்குள்ளாகின்றனர்.

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவது தாங்கள் விலக்கப்பட்டதாக, அல்லது தனித்துவிடப்பட்டதாக உணர்வது. இரண்டாவது அவர்கள் வெறுக்கக் கூடிய நபர்கள் அந்த பார்ட்டியில் பங்கேற்றிருப்பது.

பார்ட்டியில் நேரம் செலவழிப்பதால் தங்களுக்கு பயன் அளிக்குமா என்று உள்ளே நுழைந்தவுடன் உடனடியாக அறிந்ததாக பங்கேற்பாளர்களில் 78 சதவிகிதத்தினர் ஒப்புக் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எந்தவொரு பார்ட்டிக்குச் சென்றாலும் சகஜமாக அந்தச் சூழலுக்குப் பழக சுமார் 14 முதல் 15 நிமிடங்கள் தேவைப்படும் என்று பங்கேற்பாளர்கள்  கூறினர். ஒருவழியாக அதில் கலந்து கொண்டு சற்று நேரம் கடந்து கொண்டிருக்கையில், பாதிக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூறியது ஆச்சரியப்படுத்தியது. தங்களுக்குப் பிடிக்காத நபரை அங்கு பார்த்துவிட்டால் அத்துடன் கொண்டாட்ட மனநிலை குறைந்துவிடுகிறது என்று கூறினார்கள்.

முன் எச்சரிக்கையாகப் பார்ட்டி தருபவரிடம் பார்ட்டிக்கு யார் யார் வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தாலும்,  பெரும்பாலும் அத்தகவலைப் பெற முடிவதில்லை. இருப்பினும், மூன்று நபர்களில் ஒருவராவது பார்ட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களைப் பற்றியத் தகவலை அறிந்து கொள்ளவே விரும்புகிறார்கள். 16 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் எப்போதும் தாங்கள் அப்படிக் கேட்டதை மறுக்கிறார்கள். 

மெக்ஸிகோவைச் சேர்ந்த அவகொடாஸ் சார்பாக இந்த ஆய்வினை நடத்தியதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

]]>
party https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/23/w600X390/party.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/23/people-you-hate-may-increase-your-anxiety-level-at-parties-3338381.html
3338371 லைஃப்ஸ்டைல் செய்திகள் பெண்கள் குடும்பத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்கின்றனர்: பிரபல பாலிவுட் நடிகை IANS IANS Thursday, January 23, 2020 01:03 PM +0530
பெண்கள் தங்களது உடல்நலத்தை கவனத்தில் கொள்ளாமல் அனைத்தையும் குடும்பத்துக்காக தியாகம் செய்கின்றனர் என்று பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் ஹிந்தி, பெங்காலி, ஆங்கில மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலப் பராமரிப்பு குறித்த ஒரு தனியார் நிறுவனம் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அதில் நடிகை சோஹா பேசியதாவது,

'ஆரோக்கியமே செல்வம்' என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கேற்ப எனது வாழ்வில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். என்னுடைய வாழ்வில் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்களது உடல் ஆரோக்கியம் சரியில்லை எனில், அதனை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனில், பல சந்தோஷமான நிகழ்வுகளை வாழ்வில் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மகிழ்ச்சியைத் தரும். எனவே, உடல்நலத்தை பேணுவதில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் வாழ்க்கை கடினமாகி விடும்.

உங்களுடைய தொழில், குடும்பம் உள்ளிட்ட அனைத்திற்கும் உடல் ஆரோக்கியம் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பெண்களுக்கு உடல்நல பராமரிப்பு எவ்வாறு அவசியம் என்பதை அனைத்து பெண்களும் அறிவார்கள். இருந்தபோதிலும், பெரும்பாலான பெண்கள் நேரமின்மை காரணமாக, தங்களுடைய குடும்பத்துக்காக உடல்நலத்தை தியாகம் செய்கின்றனர்.

பெண்களே, உங்கள் புற அலங்காரத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ளாவிட்டாலும், அக ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம். உடல்நலத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். குடும்ப சூழ்நிலையில் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வது சிரமம் என்றாலும் உங்களுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி உங்களையும் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குவது அவசியம்' என்றார்.

சோஹா, நடிகர் குணால் கெம்முவை ஜூலை 2015ல் திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதியினருக்கு இனாயா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

]]>
health https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/23/w600X390/soha-ali-khan1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/23/health-is-number-one-on-my-priority-list-bollywood-actress-3338371.html
3337522 லைஃப்ஸ்டைல் செய்திகள் குழந்தைகளுக்கு உடல் பருமனைத் தடுக்க என்ன செய்யலாம்? DIN DIN Wednesday, January 22, 2020 04:13 PM +0530
குழந்தைகள் வயதுக்கு மீறி உடல் பருமனுடன்  காணப்படுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தினால் உடல் இயக்கம் இல்லாமை, தவறான உணவுப்பழக்க முறைகள் உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கொழு கொழு என்று இருப்பதுதான் சரி என்று நினைக்கின்றனர். அதே நேரத்தில், அளவுக்கு மீறி பருமனாக இருப்பது பிற்காலத்தில் அவர்களின் உடல்நலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகள்:

குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தலினால் உடலில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

குழந்தைகளுக்கு உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது?

உடல் இயக்கம் இல்லாமை, மரபியல் குறைபாடுகள், தவறான உணவுப் பழக்க முறைகள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, ஹார்மோன் உள்ளிட்ட உடலியல் பிரச்னைகள், அதிக நேரம் டிவி பார்ப்பது, விளையாட்டு இல்லாதது, அதிகம் இனிப்பு சாப்பிடுவது என பல காரணங்கள் உள்ளன. 

எவ்வாறு தடுக்கலாம்?

இதனைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் உணவு பழக்கமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் அதிகளவு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அதிகம் இருக்கும் குழந்தைகளுக்கு கொள்ளு, சோளம் உள்ளிட்ட தானியங்களில் தயாரித்த உணவுகளை கொடுக்கலாம். குழந்தையின் உடலுக்கு ஒத்துப் போகக் கூடிய உடல் எடையை குறைக்கக் கூடிய உணவுகளை வழங்கலாம். குழந்தையின் வயதுக்கேற்பவும் சாப்பிடும் அளவை நிர்ணயிக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 

முக்கியமாக இனிப்பு உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல் இடைவெளி விட்டு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உடற்பயிற்சி.. கணினி, விடியோ கேம்ஸ், செல்போன் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது மட்டுமே அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. 

குழந்தைகளுக்கு போதுமான தூக்கமும் அவசியம். குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் குழந்தைகள் தூங்குகின்றனவா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதுபோன்று, மன அழுத்தத்தால் கூட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். எனவே, குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். முடிந்தவரை அவர்களிடம் நேர்மறையான எண்ணங்களை விதைத்து அவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 

]]>
Obesity https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/22/w600X390/obesity.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/22/obesity-in-children-3337522.html
3337493 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'இசையால் மன அமைதி மட்டுமல்ல...13 வகையான உணர்ச்சிகள் வெளிப்படும்' DIN DIN Wednesday, January 22, 2020 03:54 PM +0530  

இசை மனிதர்களிடையே 13 விதமான உணர்வுகளைத் தூண்டுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.

உலகளவில் மிகவும் பொதுவான மொழியாக விளங்கும் இசை, மனிதனில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இசை ஒவ்வொரு மனிதனிடமும் 13 வித்தியாசமான உணர்வுகளைத் தூண்டுகிறது என தெரிய வந்துள்ளது. கேளிக்கை, மகிழ்ச்சி, சிற்றின்பம், அழகுணர்வு, மன அமைதி, சோகம், கனவு, வெற்றி, பதட்டம், பற்றாக்குறை, எரிச்சல், எல்லை மீறுதல் உள்ளிட்ட வெவ்வேறு வித உணர்ச்சிகள் இசையின் வாயிலாக வெளிப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்காக, ராக், நாட்டுப்புறப் பாடல்கள், ஜாஸ், கிளாசிக்கல், உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவிலும், சீனாவிலும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பாடல்களை கேட்கும்போது, அவர்களிடம் இருந்து வரும் உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். வெவ்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள்கூட இசை மூலமாக ஒத்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களிடையே நேர்மறை, எதிர்மறை என்ற இரண்டு விதங்களாக உணர்வுகள் வேறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
இசை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/music.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/22/music-evokes-13-key-emotions-in-people-3337493.html
3337482 லைஃப்ஸ்டைல் செய்திகள் கடைகளில் தரும் பைகளுக்குக் காசு தர வேண்டாம்! DIN DIN Wednesday, January 22, 2020 03:40 PM +0530  

வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்கும்போது, அவற்றை எடுத்துச் செல்ல  வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தரும்  பைக்குக் காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை காரணமாக, பெரும்பாலான கடைகளில் காகிதப் பைகள், துணிப் பைகள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதேநேரத்தில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பல கடைகளில் பொருள்களை எடுத்துச் செல்லும் பைகளுக்கென குறிப்பிட்ட தொகை விலையாக வசூலிக்கப்படுகிறது. பில் போடும்போது, பைகளுக்கு எனத் தனியே காசு வழங்க நிர்பந்திக்கும்போது நாம் பலரும், வேறு வழியில்லாமல் வெறும் ரூ. 5 தானே, ரூ. 3 தானே என்று கொடுத்துவிட்டு சாதாரணமாக அதைக் கடந்து விடுகிறோம். 

ஆனால், துணிக் கடைகளிலோ அல்லது மற்ற கடைகளிலோ பொருள்கள் வாங்கும்போது, தரப்படும் கடையின் விளம்பரம் அச்சிடப்பட்டிருக்கும் பைகளுக்குக் காசு வசூலிக்கக் கூடாதென நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதையும் மீறி இப்போதும் பல கடைகளில் விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இதுதொடர்பாக நுகர்வோர் எதிர்ப்புத் தெரிவித்து பணம் செலுத்த மறுக்க முடியும். கேள்வி எழுப்பி நியாயத்தையும் பெறலாம்.

சண்டீகரில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

சண்டீகரில் வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாட்டா கடையில் ஷூ ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு ரூ. 402 பில் வந்தது. பணம் செலுத்திய பின்னரே ரசீதைப் பார்த்த அவர், காகிதப் பைக்குத் தனியே ரூ. 3 வசூலித்தது தெரிய வந்தது. இதன் பின்னர் சண்டீகரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில், வாடிக்கையாளரிடம் பைக்குக் கட்டணம் வசூலித்தது, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு, வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்கு என அனைத்தும் சேர்த்து பாட்டா நிறுவனம் ரூ. 9 ஆயிரம் அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும், நீதிமன்ற உத்தரவில், வாடிக்கையாளர் கடையில் ஒரு பொருளை வாங்கும்பட்சத்தில், அந்த பொருள்களை எடுத்துச் செல்லும் பைகளை நிறுவனமே வழங்க வேண்டும். அதற்காக வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு சுற்றுசூழலுக்கு உகந்த மாற்று ஏற்பாடுகளை நிறுவனத்தின் தரப்பில் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதே போன்று தமிழகத்தில் ஒரு சம்பவத்தில் திருநெல்வேலியில் வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு ரூ. 7 வசூலித்த துணிக்கடை நிறுவனம் பின்னர் ரூ. 15 ஆயிரம் அபராதம் செலுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர் கடந்த ஜூலை மாதம் அங்குள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடையில் துணி வாங்கியுள்ளார். துணியைக் கொண்டுசெல்லும் காகிதப் பைக்கு என்று தனியாக 7 ரூபாய் தர வேண்டும் என்று கூறிய கடைக்காரரிடம் அவர் சண்டை போட்டுள்ளார். உங்களுடைய கடை விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளை நாங்கள் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் எனக் கேட்டு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில், வேறு வழியின்றி ரூ.7 செலுத்தி பை வாங்கிவிட்டு, ஆதாரத்திற்கு விடியோவையும் மொபைலில் பதிவு செய்தார். 

இதன் பின்னர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணை முடிவில், நீதிமன்றம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மேலும், 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கடைகளில் கொடுக்கப்படும் பைகளில் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. கடைக்காரர்களும் விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளை இலவசமாகத் தர வேண்டுமே தவிர, பைகளுக்குக் காசு கேட்டு வாடிக்கையாளர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.  

அல்லாமல் விளம்பரம் அல்லாத பைகளைத் தந்து அவற்றுக்காகப் பணமும் பெற்றால் அந்தப் பையில் விலை, தயாரிப்புத் தேதி, காலாவதியாகும் தேதி போன்றவை எல்லாம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எதுவுமே குறிப்பிடாமல் சட்டப்படி விற்க முடியாது' என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்ற மற்றொரு வழக்கில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி புணே நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளரிடம் பைக்கு ரூ. 8 வசூலித்த காரணத்திற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் கிடைக்கும் வெற்றிகளால் தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 

எனவே, துணிக்கடைகள் மட்டுமின்றி, எந்தவொரு பெரிய நிறுவனங்களிலும் பொருள்களை வாங்கும்போது, நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டிருக்கும் பைகளைத் தந்தால் பணம் கொடுக்க வேண்டியதில்லை. பொருள்களுக்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒருவேளை பைக்குப் பணம் செலுத்தினால் சற்றும் தயங்காமல், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தோ, நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியோ தீர்வு காணலாம். இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோர் விழிப்புணர்வே முக்கியம்.

]]>
carry bag, plastic https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/22/w600X390/11.png https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/22/retailers-cant-charge-consumers-for-carry-bag-3337482.html
3336581 லைஃப்ஸ்டைல் செய்திகள் டயட்டிற்கு ஸ்விக்கியில் உணவுகளை பரிந்துரைக்கும் பிரபல மொபைல் செயலி DIN DIN Tuesday, January 21, 2020 02:53 PM +0530  

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான 'ஹெல்திஃபைமி'(HealthifyMe) என்ற மொபைல் செயலி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு உடல்நலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை ஸ்விக்கியில் பரிந்துரைக்கிறது.

தில்லி, குர்கான், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ளோர் மொபைல் செயலி மூலமாக ஸ்விக்கியில் பரிந்துரை செய்யப்பட்ட உணவகங்களில் இருந்து தேவையானவற்றை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். பரிந்துரைக்கப்பட்ட உணவகங்கள் டயட்டிற்குத் தேவையான உணவுகளை வழங்குவதாக மொபைல் செயலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 'ஹெல்திஃபைமி' மொபைல் செயலி மூலமாக ஸ்விக்கியில் இரண்டு ஆர்டர்கள் செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. உடற்பயிற்சி தொடர்பான மொபைல் செயலியில் இரண்டு முறை ஸ்விக்கியில் பரிந்துரைக்கப்பட்ட டயட் உணவுகளை ஆர்டர் செய்தால், அவர்களுக்கு நிறுவனம் இலவச டயட் திட்ட பட்டியலை (Diet Plan Schedule)  வழங்குகிறது.

தற்போது ஹெல்திஃபைமி செயலியை 1.2 கோடி பயனர்கள் உபயோகிக்கின்றனர் எனவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்விக்கியில் டயட் உணவுகளை ஆர்டர் செய்யும்போது ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்திஃபைமி நிறுவன துணைத் தலைவர் அஞ்சன் இதுகுறித்து கூறும்போது, 'ஸ்விக்கியில் ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் உணவகங்களின் பட்டியலை உடற்பயிற்சி நிபுணர்களை வைத்து உருவாக்கியுள்ளோம். 'ஃபிட்பிக்ஸ் காலெக்ஷன்' என்ற பட்டியலில் உள்ள உணவுகளை ஜனவரி 31ம் தேதிக்கு முன்னதாக இரண்டு முறை ஆர்டர் செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு எங்களது முதன்மை ஸ்மார்ட் திட்டங்களை இலவசமாக வழங்குகிறோம்' என்றார்.

]]>
diet, swiggy https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/13/w600X390/Swiggy.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/21/order-healthy-food-on-swiggy-via-healthifyme-app-3336581.html
3336560 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'பெற்றோர்கள் படித்தால் குழந்தைகளுக்கு நல்லது' DIN DIN Tuesday, January 21, 2020 12:29 PM +0530
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் படிப்பது/வாசிப்பது எதிர்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு பல வழிகளில் பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பெற்றோர்கள் படிப்பது அவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறு வயதில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதில் ஒரு பகுதியாக குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் வாய்விட்டு படிக்க வேண்டும். அப்போது குழந்தைகள் தானாகவே அருகில் வந்து கவனிப்பர். குழந்தையை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை விட இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு படிப்பின் மீதான கவனம் தானாகவே வரும்.

எடுத்துக்காட்டாக இரவு படுக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் நேரத்தின் இடையே ஒரு சிறு கதையை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வாசித்துக் காட்டலாம். குழந்தைகளின் சிறுவயதில் இவ்வாறு செய்யும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.


குழந்தைகளுக்கு வாசித்து காட்டும்போது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடனான உறவின் தரத்தை மேம்படுத்துகிறது. பெற்றோர்களுக்கும் அவர்களது செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், பெற்றோரின் மன அழுத்தத்தையும் இது குறைக்கக்கூடும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் கற்றல் திறன் தொடர்ந்து மேம்படும். குழந்தைகளுக்கு எளிதாக சொற்கள் பழக்கப்படும். கருத்துகளை எளிதாக உள்வாங்குவர். எதிர்காலத்தில் வாழ்வியல் ரீதியாகவும் பல்வேறு பலன்களை அளிக்கும். 

]]>
lifestyle, children https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/21/w600X390/children.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/21/reading-out-to-your-child-beneficial-in-multiple-ways-3336560.html
3336548 லைஃப்ஸ்டைல் செய்திகள் 10ல் 9 பேர்: வீடியோ கேமிற்கு அடிமையாகும் பதின்வயதினர்! DIN DIN Tuesday, January 21, 2020 11:29 AM +0530  

பதின்வயதினர் 10 பேரில் 9 பேர் வீடியோ கேமில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 86 சதவீதம் பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் பெரும்பாலான நேரங்களை கேமிங்கில்தான் செலவழிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் உடல்நலம் குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில், குழந்தைகள் மற்ற விளையாட்டுகளை விட ஆன்லைன் விளையாட்டுகளில் நேரம் செலவிடுவதை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பதின்வயது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் வித்தியாசமான பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் கவனம் செலுத்துவதாகவும், குறைந்தது தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் அதில் ஈடுபடுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

கருத்துக்கணிப்பு நடத்திய மருத்துவமனையின் இணை இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான கேரி ஃப்ரீட் என்பவர் இதுகுறித்து கூறும்போது, 'வீடியோ கேம்கள் பதின்ம வயதினருக்கு நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். அதன் மூலமாக அவரது செயல்பாடு மேம்படுவதாக நினைக்கின்றனர். அதே நேரத்தில் குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேமில் இருப்பதை பெற்றோர்கள் விரும்பவில்லை. 

பதின்வயது குழந்தைகளின் நடவடிக்கையை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தூக்கம், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், பள்ளிகளில் குழந்தைகளின் செயல்திறன் ஆகியவை குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

மேலும், பெற்றோர்களில் 54 சதவிகிதம் பேர் தங்களது பதின்வயது குழந்தைகள் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வீடியோ கேமில் விளையாடுவதாக தெரிவிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் தினமும் விளையாடுவதில்லை; நேரம் இருக்கும்போது விளையாடுவதாக 13 சதவிகிதம் பெற்றோர்கள் கூறுகின்றனர். 

78 சதவிகிதம் பெற்றோர்கள், மற்ற குழந்தைகளை ஒப்பிடுகையில் தங்களது குழந்தைகள் குறைவான நேரத்தையே கேமிங்கில் செலவழிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதிலும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் நேரம் செலவிடுவதை மறைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஆய்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கேமிங்கில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த, பிற செயல்பாடுகளை ஊக்குவித்தல், நேர வரம்புகளை நிர்ணயித்தல், கேமிங்கைக் கட்டுப்படுத்த ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் கேமிங் கருவிகளை மறைத்தல் உள்ளிட்ட பல உத்திகளை கையாள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
video game https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/21/w600X390/video_games.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/21/about-9-out-of-10-parents-say-teens-spend-too-much-time-on-gaming-3336548.html
3335738 லைஃப்ஸ்டைல் செய்திகள் விருந்தினர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்த மணமகள்! எதற்காகத் தெரியுமா? DIN DIN Monday, January 20, 2020 01:09 PM +0530  

அமெரிக்காவில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம் மணமகள் நுழைவுக் கட்டணம் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணம் ஒன்றில் ஒரு விநோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில், நுழைவுக் கட்டணமாக 50 டாலர்(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3500) வழங்க வேண்டும் என்று மணமகள் நிபந்தனை விதித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, நுழைவுக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு திருமண விழாவில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் எங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் 'பிரத்யேக விருந்தினர் பட்டியலில்' இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி, பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

மணமகளின் உறவினர் ஒருவர் திருமணம் நடக்கும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டபோது, அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால், அந்த பெண் அதனை தடுத்ததோடு மணமகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னரே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

திருமணத்திற்கு ஆகும் செலவுகளை ஈடுசெய்ய, மணமகள் மற்றும் மணமகளின் வீட்டார் சிலர் சேர்ந்து இந்த நிபந்தனைகளை விதித்தது தெரிய வந்தது. 

திருமணங்கள் என்றாலே செலவு அதிகமாகத்தான் இருக்கும். திருமணத்தின்போது உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு தாமாக பரிசுகளை வழங்குவது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் திருமணச் செலவை ஈடுசெய்ய விருந்தினர்களிடம் கட்டாயமாக பணம் வசூல் செய்த மணமகளின் செயல் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

]]>
அமெரிக்கா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/20/w600X390/marriage.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/20/bride-asks-for-entrance-fee-from-guests-to-make-up-for-expenses-3335738.html
3335728 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இல்லையா? DIN DIN Monday, January 20, 2020 12:28 PM +0530
சுறுசுறுப்பு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருவரது உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை(பி.எம்.ஐ) இல்லாமல் இருந்தால் அவருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. வழக்கமாக உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உடல் பருமனானது சிறு குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியினால் குழந்தைகளில் உடல் இயக்க செயல்பாடு இல்லாமை, உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், ஒரு குழந்தை பிறந்த 12 மாதங்களிலேயே அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் உடல் பருமன் ஏற்படுமா என்பதை தெரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைப் பருவத்தில் சுறுசுறுப்பு இல்லாத குழந்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 3, 6, 9 மற்றும் 12 மாத வயது கொண்ட 506 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சராசரியான கால அளவில் குழந்தைகளின் சுறுசுறுப்பு குறித்து கண்காணிக்கப்பட்டது. குழந்தைகளின் உடல் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு கருவியும் பொருத்தப்பட்டது. முடிவில், அதிக உடல் அசைவைக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், எனவே அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சுறுசுறுப்பு குறைந்த குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படும் என்றும் சிறு வயது முதலே உடலில் கொழுப்பு சேர்வதால் எளிதாக உடல் பருமன் நோய் அவர்களைத் தாக்கும் என்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாரா பெஞ்சமின்-நீலன் கூறியுள்ளார். இந்த ஆய்வு குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல் பருமன் குறித்த முக்கியமான ஆய்வு என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

மேலும், 'குழந்தைகள் தவழ்ந்து செல்வத்தையும், நகர்வதையும் எந்த சாதனத்தின் மூலமும் கட்டுப்படுத்தாதீர்கள்; குழந்தைகள் சிறுவயது முதலே சுறுசுறுப்பாக இருக்க உதவ வேண்டும்' என்று பெற்றோர்களுக்கு  வலியுறுத்தப்பட்டுள்ளது. 

]]>
உடல் பருமன், Obesity https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/20/w600X390/baby_1.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/20/less-active-babies-have-higher-obesity-risk-3335728.html
3335712 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'தினமும் வால்நட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது' DIN DIN Monday, January 20, 2020 11:50 AM +0530  

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. 

தற்போதைய நவீன காலகட்டத்தில் உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முறையான உணவுப் பழக்கவழக்கங்களில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலமாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்களும் பல்வேறு ஆய்வு முடிவுகளும் வலியுறுத்துகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அதன்படி, தினமும் வால்நட் எனும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், குடலில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இந்த பாக்டீரியாக்கள் குடல் மற்றும்  இதயத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், 30 முதல் 65 வயதிற்குட்பட்ட உடல் பருமன் கொண்ட 42 பேர் பங்கேற்றனர். இவர்கள் 6 வாரங்கள் வீதம் மூன்று ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல் ஆய்வில் முழுமையாக அக்ரூட் பருப்புகளும், இரண்டாம் ஆய்வில் அக்ரூட் பருப்புகளில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் கொண்டுள்ள இதர பொருட்கள், மூன்றாவது ஆய்வில் அக்ரூட் பருப்புகள் இல்லாத சராசரி உணவுகளும்  வழங்கப்பட்டன.

இறுதியில், உணவின் ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு 50 - 80 கிராம் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த வழி என்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, வால்நட்ஸில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைத்தல் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கிறது என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

]]>
வால்நட், walnut https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/walnut.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/20/eat-walnuts-daily-for-better-gut-heart-health-3335712.html
3335029 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளை சுவாரஸ்யமாக்க 5 வழிகள் IANS IANS Sunday, January 19, 2020 05:19 PM +0530  

குழந்தைகளுக்கு தினமும் இரவில் கதைகள் சொல்லி வளர்ப்பது நல்ல பழக்கம். நம் முன்னோர்களிடம் அந்தப் பழக்கம் இருந்தது. கதை சொல்லிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த காலக்கட்டங்கள் உண்டு. ஆனால் அண்மைக் காலங்களில் மொபைல் ஃபோன் வருகைக்குப் பிறகு கதை சொல்லும் பழக்கம் குறைந்து கிட்டத்தட்ட காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளை சாப்பிட வைப்பது முதல் தூங்கச் செய்வது வரை எல்லாம் அலைபேசி மயமாகிவிட்டது. யூட்யூபில் உள்ள கதை கேட்டு குழந்தைகள் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகிவிடுவதை விட நீங்களே உங்கள் குரலில் அன்புடனும் அரவணைப்புடனும் சொல்லும் கதைகளுக்கு ஆழம் அதிகம். மேலும் உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவை வளர்ப்பதற்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பாக அமையும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவழிக்க நேரம் கிடைக்காத நிலையில், இரவில் கதை சொல்லித் தூங்க வைப்பது சிறப்பான நேரத்தை அவர்களுடன் செலவழிக்க முடியும்.

உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது, குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழ்ந்தைகளின் கற்பனைத் திறன் பெறுகுவதுடன் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும். அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும்.

இருப்பினும், பல பெற்றோர்கள், குறிப்பாக இந்தக் காலத்து இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பதைப் புரிந்துக் கொள்ள போராடுகிறார்கள். இதற்கான சிறந்த  ஐந்து வழிகளைப் பரிந்துரைக்கிறார் இக்கட்டுரையாளரான அபுர்வா பூட்டா.

குழந்தைகளுடன் பேசிப் பழகுங்கள்

நாள் முழுவதும் நீங்கள் உங்கள் குழந்தைகளிடமிருந்து விலகி இருக்கும்போது, ​​அவர்கள் தூங்குவதற்கு முன்னான நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் அவர்களிடம் கொஞ்சிப் பேசிப் பழகுவதுதான். ஒரு பெற்றோராக, அவர்களுடைய பள்ளி மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த நாள் எப்படி இருந்தது, இன்று அவர்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயங்கள் என்ன என்பதைப்பற்றி அவர்களுடன் விவாதிப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். அடிப்படையில், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள். கதை சொல்லும்போது அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்வதும் முக்கியம். இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத் திறப்பாக கதை சொல்லும் நேரம் மாறும். அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள், பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து விவரித்துக் கூறுங்கள்.

கதாபாத்திரமாக மாறுங்கள்

உங்கள் குழந்தைகள் உங்கள் கதைகளை ரசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அக்கதையின் கதாபாத்திரமாகவே மாற வேண்டும். வெறும் வாசிப்பு கதை சொல்லுதலை அலுப்பாக்கி சலிப்படையச் செய்கிறது. நீங்கள் சொல்லும் கதையில் முக்கிய கதாபாத்திரங்களை நீங்களாக மாறும் முயற்சிகளை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும், இதன் விளைவாக அவர்கள் உங்கள் கதைகளை ரசிக்கத் தொடங்குவார்கள், மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.

அவர்களின் நண்பராகுங்கள்

உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உறவை உருவாக்க விரும்பினால், அவர்களுடன்  இணக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள், அவர்களைப் போன்ற குழந்தையாகுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு,  நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து மகிழ்வார்கள்.

கதை முடிந்தவுடன் விவாதம் முக்கியம்

கதை புத்தகத்தில் வருவது போல் கதை முடிவடைந்தவுடன் புத்தகத்தை மூடி வைப்பது போல,  உங்கள் இரவு நேரக் கதை சொல்லல் முடிவடையக் கூடாது. கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள், அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். கதை சொல்லலின் நோக்கம் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும். அதற்கான சிறந்த வழி, கதை வடிவத்தில் சரி எது தவறு எது என்பதற்கான வித்தியாசத்தை அவர்களுக்குக் கற்பிப்பதாகும்.

படிப்பதன் முக்கியத்துவம் கொடுங்கள்

கடைசியாக, வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான ஒரு புத்திஜீவியின் பண்புகளை நீங்கள் அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள். கதையின் மூலமாக விரியும் ஒரு அற்புத உலகத்தின் அத்தனை மாயங்களையும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.

]]>
bed time stories https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/warner_with_wife_and_kids.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/19/5-ways-to-make-your-bedtime-stories-magical-3335029.html
3330926 லைஃப்ஸ்டைல் செய்திகள் நாம் அதிக நேரத்தை வீணடிப்பது எப்போது தெரியுமா? DIN DIN Monday, January 13, 2020 05:54 PM +0530  

வெளியூர் பயணத்தின் போதே நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

நமக்கு கிடைக்கும் நேரத்தை திட்டமிட்டு முழுமையாக சரியாக பயன்படுத்த வேண்டும்.நேரத்தின் அருமையை உணர்ந்தவர்களே வாழ்வின் வெற்றியாளர்கள் என பலர் கூறுவதுண்டு.

இந்த நிலையில், மக்கள் எப்போது அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள் என தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. அதில், வெளியூர் பயணத்தின்போதே நாம் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் விடுமுறை எடுக்கும்போது கிட்டத்தட்ட அந்த ஒருநாள் முழுவதும் வீணடிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதையடுத்து, இவெளியூர் பயணம் அல்லது சுற்றுலாவின் போது அதற்கான திட்டமிடல் செய்யும் நேரம், பயணத்திற்கான ஏற்பாடுகள், பார்வையிட வேண்டிய இடங்களைத் தேடுதல், புதிய இடங்களை வரிசையில் நிற்பது ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடுகிறோம். மேலும், பெரும்பாலானோர் திட்டமிட்டதை முழுமையாக செய்து முடிப்பதில்லை. திட்டமிட்ட நேரத்தை விட சரியாக பயன்படுத்திய நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டடுள்ளது. 

சராசரியாக ஏழு நாட்கள் பயணம் மேற்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 17 மணி நேரம் வீணடிக்கிறார்கள் என்றும் அதே நேரத்தில், இதற்கு பின்புறத்தில் பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
travelling https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/13/w600X390/travel111.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/13/people-do-not-utilise-time-as-they-should-while-travelling-3330926.html
3330898 லைஃப்ஸ்டைல் செய்திகள் மேக் அப் போடுவது சரியா தவறா? IANS IANS Monday, January 13, 2020 02:30 PM +0530 உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் ஸ்க்ரால் செய்யும்போது,  மேக் அப் இல்லாமல் பகிரப்பட்ட சில படங்களிலுள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இந்த "மேக்கப் இல்லாத" தோற்றம் உங்கள் வழக்கமான மேக்கப் தோற்றத்துடன் ஒப்பிடும்போது உங்களின் சருமத்திற்கு அதே அளவில் சேதத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா?

தோல் மருத்துவரும் சோலி ஸ்கின் கிளினிக்கின் நிறுவனருமான டாக்டர் நிருபமா பர்வாண்டா இந்த கேள்விக்கான இரண்டு பதிலைக் கூறுகிறார்.

முதலாவதாக, பெரும்பாலான பெண்கள் மேக் அப் செய்து கொள்வதை விரும்புகிறார்கள். தினமும் முகத்தில் அடிப்படையான மேக் அப்பை செய்து கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேக் அப் போடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை சிறிய அளவிலாவது அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் சிறப்பான அம்சங்களை மேம்படுத்த உதவுவது மேக் அப்தான். அலங்காரம் செய்து கொள்வது என்பது பெண்களின் உடன் பிறந்தது’ என்றார் பர்வாண்டா.

மேலும் அவர் கூறுகையில்,  மேக் அப் பற்றிய தவறான புரிதல்கள் இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம். கனமான மேக்கப்பை தினமும் அதிகப்படியாக பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் மேக் அப்பே போடாதது போலத் தோன்றச் செய்யும்  "நோ-மேக்கப்-மேக்கப் தோற்றம்" உங்கள் சருமத்தை அதே அளவில் சேதப்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

இதற்கான காரணம் மிகவும் அடிப்படையானது, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் மேக் அப்பே போடவில்லை என்று தெரிந்து கொள்வதற்காக நீங்கள் போடும் இந்த மேக் அப் அதே அளவுக்குத் தீங்கானது. இந்த மேக் அப்பின் பல அடுக்குகளைப் பார்க்க முடியாது என்பதால், உங்கள் முகத்தில் மேக்கப் எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை.

இந்த "ஒப்பனை இல்லாத ஒப்பனைத் தோற்றம்" உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை அழகுக் கலை நிபுணர்கள் உங்களுக்கு உகந்த வகையில் விளக்கியிருப்பார்கள். இந்தத் தோற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், உங்கள் அழகை இயல்பாக மேம்படுத்திக் காட்டுவதன் காரணமாக இருக்கலாம். நான் மேக்கப்பே போடவில்லை, ஆனால் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை எடுத்துக் காட்டும்விதமாகவும் இத்தகைய மேக் அப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். சுவாரஸ்யமாக, இந்த தோற்றத்தை உலகெங்கிலும் உள்ள பலர் பாராட்டியதற்குக் காரணம், இது உங்கள் தோற்றத்தை பளிச்சென்று மேம்படுத்துவதானால்தான். 

இத்தகைய மேக் அப்பில் உங்கள் தோற்றம் இயல்பானதாகத் தோன்றினாலும், அந்தத் தோற்றத்தை அடைய சருமத்தில் எத்தனை அடுக்குகளை நீங்கள் நிரப்ப வேண்டும் என்பதை மறுக்க முடியாது. இது உங்கள் சருமத்தில் முகப்பரு, சுருக்கம், வறண்ட சருமம், ஒவ்வாமை, கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது வழக்கமான ஒப்பனையிலிருந்து பெரிய மாற்றங்கள் எதையும் தருவது இல்லை என்று பர்வாண்டா சுட்டிக்காட்டுகிறார்.

முன்னதாகக் கேட்கப்பட்ட கேள்வியின் இரண்டாவது பதில், உங்களுடைய தினசரி மேக் அப் பழக்கத்தை விட்டுவிட முடியாவிட்டால், "நோ-மேக்கப்-மேக்கப்" தோற்றம் ஏன் உங்கள் சிறந்ததாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றவேண்டும். அதற்கு உண்மையிலேயே மேக் அப் போடாமல் இருந்துவிடலாம். அல்லது மிகக் குறைந்த அளவில் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகுச் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தலாம்’ என்று அவர் கூறினார்.

குறைவான ரசாயனங்களைக் கொண்டத் தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால், "நோ-மேக்கப்-மேக்கப்" என்பதிலுள்ள சரும நன்மைகளைக் உணர்ந்து கொள்வதன் மூலம், அதனையே உங்கள் சருமத்திற்கான வழக்கமான மேக் அப்பாக மாற்றிக் கொள்ளலாம். 

சந்தையில் பல்வேறு தரமான தயாரிப்புகள் தினசரி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் இத்தகைய தயாரிப்புகளில் உங்கள் சருமம் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது என்றால் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

டீ ட்ரீ, வைட்டமின் சி, ரெட்டினோல் போன்றவற்றைக் கொண்ட மேக் அப் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள், இதனால் உங்கள் சருமம்  பாதிப்படையாது, மாறாக மெருகேறும் என்று பார்வாண்டா அறிவுறுத்தினார்.

குறிப்பு:  எந்த மேக் அப் போட்டுக் கொண்டு வெளியே சென்றாலும், வீடு திரும்பியதும், உங்கள் மேக் அப்பை முதலில் அகற்றிவிடுங்கள். தினமும் சருமப் பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுங்கள். அதற்குத் தேவைப்படும் தரமான க்ளென்ஸர், டோனர், மாய்ஸரைஸர் போன்ற அத்யாவசியமான பொருட்களை தினமும் இரவில் பயன்படுத்துங்கள். 

]]>
no make up make up https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/17/w600X390/BEAUTY.JPG https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/13/does-no-make-up-look-affect-your-skin-3330898.html
3330895 லைஃப்ஸ்டைல் செய்திகள் தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! DIN DIN Monday, January 13, 2020 02:01 PM +0530  

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தேநீர் அருந்துவது நீண்ட மற்றும் நலமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங்கின் சீன அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் தேநீர் அருந்துவது குறித்த ஒரு ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேநீர் அருந்துவது இருதய நோய் உள்ளிட்டவைகளினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேயிலை அல்லது நீண்டகாலமாக தேநீர் குடிப்பவர்களுக்கு எளிதாக எந்த நோயின் தாக்கமும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர் வாங் கூறினார்.

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் அல்லாத 1 லட்சத்து 902 பேர் பங்கேற்றனர். இவர்கள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர்: வழக்கமாக தேநீர் குடிப்பவர்கள் (வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை) மற்றும் வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக தேநீர் குடிப்பவர்கள்.

இதில், வழக்கமாக தேநீர் அருந்துபவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் உள்ளிட்டவைகள் தாக்கம் மிகவும் தாமதாகவே ஏற்பட்டது. அதே நேரத்தில் வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக தேநீர் குடிப்பவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்குறிப்பிட்ட நோய்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்விரண்டு பிரிவினருக்கும் நோய் தாக்கத்திற்கான இடைவெளி 5 முதல் 8 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இருதய பாதுகாப்பிற்கு தேநீர் உட்கொள்வது சிறந்தது என்றும் முக்கியமாக கிரீன் டீ மற்றும் பிளாக் டீ ஆகியவை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், டிஸ்லிபிடீமியா (dyslipidaemia) உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

]]>
தேநீர் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/13/w600X390/tea.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/13/drink-tea-at-least-3-times-a-week-3330895.html
3330881 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்' DIN DIN Monday, January 13, 2020 12:28 PM +0530  

அதிகம் காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்கிசோஃபெரினியா (Schizophrenia) என்பது நாள்பட்ட, மோசமான மனச்சிதைவு நோய் ஆகும். அதன்படி, ககாற்று மாசுபாட்டின் அளவு உயர்ந்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஸ்கிசோஃப்ரினியா ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கன மீட்டருக்கு காற்று மாசுபாட்டின் செறிவு 10 µg/m3 சராசரியாக அதிகரிக்க, ஸ்கிசோஃப்ரினியாவின் ஆபத்து சுமார் 20 ஆக அதிகரிக்கிறது என டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹென்றிட் திஸ்டட் ஹார்ஸ்டல் கூறினார்.

காற்று மாசுபாட்டின் செறிவு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10µg /m3-க்கும் குறைவாக வெளிப்படும் பட்சத்தில் பெரிதாக ஆபத்து ஒன்றும் இல்லை. நாள் ஒன்றுக்கு 25 µg/m3க்கு மேல் வெளிப்படும் குழந்தைகளுக்கு ஸ்கிசோஃப்ரினியா உருவாகும் ஆபத்து 60 சதவீதம் அதிகம் என்றும் ஹார்ஸ்டல் கூறினார்.

ஜமா நெட்வொர்க் ஓப்பன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆய்வுக் குழுவில் மொத்தம் 23,355 பேர் பங்கேற்றனர். இவர்களில் 3,531 பேருக்கு ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு ஏற்பட்டது. காற்று மாசுபாட்டிற்கும் ஸ்கிசோஃப்ரினியாவிற்கும் இடையிலான தொடர்பை இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர் விளக்கியுள்ளார். 

குழந்தைப் பருவத்தில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், ஸ்கிசோஃப்ரினியா பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் மேலும் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/13/w600X390/air_pollution.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/13/air-pollution-may-affect-psychological-health-in-kids-3330881.html
3326660 லைஃப்ஸ்டைல் செய்திகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பார்வையில் 2019-ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்கள்! DIN DIN Saturday, January 11, 2020 06:19 PM +0530  

1.நான்காம் சுவர் (பாக்கியம் சங்கர்)

பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும்,  காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

ஜம்பு என்ற `கவர்ச்சி வில்லன்’ கட்டுரையில் கலைஞர்களுக்கான நியாயத்தை, காலம் தரவே மாட்டேன் என்கிறது  எனச் சொல்கிறார் பாக்கியம் சங்கர். அது அறியப்படாத திறமைசாலிகளின் ஒட்டு மொத்தக் குரல் என்றே சொல்வேன் .

கண்பார்வை அற்ற தெருப் பாடகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பாடிமேன், குடிக்கு அடிமையானவர்கள். நாடோடிகள், திரைத்துறை கலைஞர்கள், பிச்சைக்காரர்கள்  என்று பாக்கியம் சங்கர் காட்டும் மனிதர்கள் தங்கள் வேதனைக்களைத் தாண்டி பரிசுத்தமான அன்போடு வாழ முற்படுகிறார்கள்.

நான் வடசென்னைக்காரன் என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார் .

வாழ்த்துகள் பாக்கியம் சங்கர்

2.அக்காளின் எலும்புகள் (வெய்யில்)

வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன்.

ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை.

கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன.

சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே தோன்றுகிறது.

தனது அன்றாட உலகிற்குள் கரைந்துவிட மறுக்கும் ஒருவனின் போராட்டங்கள் அவன் நினைவுகளின் வழியே மீள் உருவாக்கம் கொள்கின்றன. எதிலும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத தனிமையும் தவிப்பும் கொண்டவனின் குரலில் தான் இக்கவிதைகள் வெளிப்படுகின்றன.

குரூரம் அவரது கவிதைகளில் புதிய வெளிப்பாடு கொள்கிறது. காமத்தின் அலைக்கழிப்பு  கவிதைகளில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவர் உடலினை புனிதப்படுத்தவில்லை., மாறாக உடலென்பது காமத்தின் வானகம் என்றே அடையாளப்படுத்துகிறார்.

இந்த ஆண்டிற்கான ஆத்மாநாம் விருது பெற்ற வெய்யிலுக்கு என் வாழ்த்துகள்.

வெய்யிலின் அக்காளின் எலும்புகள் வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய கவிதைகளைக் கொண்டிருக்கின்றன.

3.என்றும் காந்தி (ஆசை)

இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள்  ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது.

அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது.

ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள்  இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன.

“காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

நேர்மையாக இருப்பதற்குக் காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாகக் காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை.“ எனத் தனது கட்டுரையில் ஆசை காந்தி பற்றித் தெரிவிக்கிறார். இந்த நூலின் சாராம்சத்திற்கு இந்த இரண்டு பத்திகளே எடுத்துக்காட்டு

காந்தியை அறிந்து கொள்வதற்கான சிறந்த நூல்.

ஆசைக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

4.கல் முதலை ஆமைகள் (ஷங்கர் ராமசுப்ரமணியன்)

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது..

110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவித்துவம் தமிழ் மரபிலிருந்து தனது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கிறது.

அசலான கவிமொழியும் பாடுபொருளும் கொண்ட இக்கவிதைகள் ஆழமும் செறிவும் கொண்டிருக்கின்றன. காலை வெளிச்சத்தைப் போலத் தூய்மையும் பேரழகும் கொண்டதாகயிருக்கின்றன

வாசிக்கும் போது மனதில் சலனத்தை ஏற்படுத்தும் இக்கவிதைகள் வாசித்து முடிந்தவுடன் வேறொரு அமைதியை அடைகின்றன என்று தனது முன்னுரையில் கவிஞர் ஆனந்த் குறிப்பிடுகிறார்.

அது முற்றிலும் உண்மை என்றே  உணர்ந்தேன்

5.கற்பனையான உயிரிகளின் புத்தகம் (கார்த்திகை பாண்டியன்)

The Book of Imaginary Beings என்ற போர்ஹெஸின் கற்பனை உயிரினங்களைப் பற்றிய கையேட்டினைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் கார்த்திகை பாண்டியன்.

தனது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகினை வளப்படுத்தி வரும் அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள், சீனாவின் புராணங்கள், இஸ்லாமிய மற்றும் பௌத்த சமயத்தில் இடம்பெற்றுள்ள கற்பனையான விலங்குகள் எனப் பல்வகையான கற்பனா ஜீவராசிகளைக் குறித்த ஒரு கையேட்டினை உருவாக்கியதன் மூலம் புனைவின் விசித்திரங்களை அடையாளப்படுத்துகிறார் போர்ஹெஸ்.

மொழிபெயர்ப்பதற்குப் பெரும் சவாலான இந்தப் புத்தகத்தை மிகுந்த கவனத்துடன், நுட்பத்துடன் கார்த்திகை பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

சிறப்பாக நூலை வெளியிட்டுள்ள எதிர் வெளியீட்டிற்கும் என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

6.ஓவியம் : தேடல், புரிதல்கள் (௧ணபதி சுப்பிரமணியம்)

நவீன ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் குறைவு. அதிலும் மேற்கத்திய ஓவியங்களின் வகைமை மற்றும் சிறப்புகள் குறித்து எழுதப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஓவியம் : தேடல்கள், புரிதல்கள் என்ற நூலை ஓவியர் கணபதி சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

இதில் ஓவியங்கள் குறித்த நாற்பது கட்டுரைகள் உள்ளன. நூலை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள்.

ஓவியங்களின் அடிப்படைகள்,  ஓவியத்தினை ரசிக்கும் விதம். அழகியல், கோட்பாடுகள். உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் ஆளுமைகள் என்று ஓவிய உலகின் முப்பரிமாணத்தையும் விவரிப்பதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

“ஒரு உருவ ஓவியத்திலுள்ள கோடுகளின் தடிமன் அந்த உருவத்தின் வடிவத்திற்கு ஏற்ப மாறுகின்றபொழுது அது நம் கண்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்குகிறது ஓவியத்தில் அமைந்துள்ள வடிவங்களும் (Shapes and Forms) அவை தொகுக்கப்பட்டிருக்கும் விதங்களுமே அதன் கட்டமைபிற்குப் பெரிதும் காரணமாகின்றன.

இரு வடிவங்கள் ஒரே நிறத்திலோ, ஒளித்திண்மயிலோ இருந்தால் அங்கே ஒரு தட்டைத்தன்மை உருவாகும். மாறாக இரு மாறுபட்ட நிறங்களோ, ஒளிதிண்மையோ இந்த இருவடிவங்களுக்கு இருக்கும் பொழுது அங்கே ஒரு விசை (Force) உருவாகி வலிமையினை (Strength) ஏற்படுத்துகின்றது. அதுபோலவே வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்பொழுது ஒரு தெளிவான ஊடுருவல் (penetration or interlocking) ஏற்படும்பொழுது ஒரு ஸ்திரத்தன்மை அந்த கட்டமைப்பிற்கு ஏற்படுகின்றது“  என ஒரு கட்டுரையில் சுப்ரமணியம் கூறுகிறார்.

எவ்வளவு அழகாக, எளிமையாக, தமிழ்  கலைச்சொற்களைக் கொண்டு விளக்குகிறார் பாருங்கள். அது தான் நூலின் சிறப்பு.

சுயமாக ஓவியம் கற்றுக் கொண்டு நவீன ஓவியராகத் திகழும் கணபதி சுப்பிரமணியம் தனது தீவிர கலைஈடுபாட்டின் வெளிப்பாடாக இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறார்.

அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கலை நேர்த்தியுடன் நூல்களை வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்

7.தம்மம் தந்தவன் (காளிப்ஸ்ராத்)

விலாஸ் சாரங் எனக்குப் பிடித்த மராத்தி எழுத்தாளர். ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதியவர். மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்தவர்.

இவரது சிறுகதைகள் The Women in Cages: Collected Stories  என்ற தொகுப்பாக வந்துள்ளது. அது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியிருக்கிறேன்.

விலாஸ் சாரங் எழுதிய The Dhamma Man என்ற நூலை தம்மம் தந்தவன் என்ற பெயரில் காளிப்ரஸாத் மொழியாக்கம் செய்திருக்கிறார்

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூல்  ஒரு மகனாக, கணவனாக, தந்தையாகப் புத்தர் ஏற்படுத்திய விளைவுகளை முதன்மைப்படுத்துகிறது. புத்தர் எவ்வாறு. தம்ம நாயகனாக உருமாறுகிறார் என்பதை விவரிக்கிறது.

புத்தன் ஒரு அவதார புருஷர்  என்பதற்கு மாற்றாக, சுகதுக்கங்களை அறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஞானியாகிறான் என்ற கோணத்தில் சாரங் விவரிப்பதே இதன் தனித்துவம்.

புத்தரின் வாழ்வை கவித்துவமான மொழியில்  சாரங் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறந்த மொழியாக்கம் நூலினை தமிழ்ப் படைப்பு போல வாசிக்கச் செய்கிறது.

காளி ப்ரஸாத்திற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

8.வாரணாசி (பா. வெங்கடேசன்)

புனைவின் புதிய உச்சங்களை உருவாக்கும் தனித்துவமிக்கப் படைப்பாளி. பா.வெங்கடேசன். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் ஆகிய நாவல்கள் முற்றிலும் புதிய புனைவுவெளியைக் கொண்டவை.

வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’காதலையும் காமத்தையும் கனவுகள் மற்றும் ரகசிய இச்சைகளின் வழியே ஆராய்கிறது. வாரணாசியை ஒரு குறியீடு போலவே வெங்கடேசன் முன்வைக்கிறார்

பவித்ரா தன் கணவனைப் பழிவாங்குவதற்காகத் தன் உடலின் நிர்வாணத்தைப் புகைப்படமாக்கி வெளியிடுகிறாள். உடலுறவு மறுக்கப்படுவதும் உடல் காட்சிப்படுத்தபடுவதும் பவித்ராவின் இரண்டு பக்கங்கள் போல முன்வைக்கப்படுகின்றன.

காமத்தின் கொந்தளிப்பை ஆராயும் இந்நாவல் இதிகாசம், புராணீகம் தொன்மம், வரலாறு எனப் பல்வேறு அடுக்குகளை நினைவின் வழியாகக் கலைத்துப் போடுகிறது.

காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 

9.உலகின் மிக நீண்ட கழிவறை (அகர முதல்வன்)

கவிஞரும் சிறுகதையாசிரியருமான அகரமுதல்வன் ஈழப்போர் குறித்த காத்திரமான படைப்புகளை எழுதிவருபவர்.

உலகின் மிக நீண்ட கழிவறை அகரமுதல்வனின் குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு . இதனை நூல் வனம் வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு

‘அகல்’ குறுநாவல் தடுப்பு முகாமில் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞனின் கடந்தகால நினைவுகளையும் நிகழ்கால சிக்கல்களையும் விரிகிறது. ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியாத அகதியின் பரிதவிப்பை, துயரத்தைப் பேசுகிறது ‘எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல். சந்தேகத்தின் கண்கள் தன்னை எப்போதும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அகதி முழுமையாக உணருகிறான். அகதிக்கு மீட்சி கிடையாது. அவன் அலையவிதிக்கபட்டவன் என்கிறார் அகரமுதல்வன்.

‘உலகின் மிக நீண்ட கழிவறை  முள்ளி வாய்க்காலின் முன்னும் பின்னுமான கால மாற்றங்களைப் பேசும் முக்கியமான கதை. குளத்தில் புதைக்கப்பட்ட உடல்களுடன் புதைக்கப்பட்ட உண்மைகளும் கலந்திருக்கின்றன என்கிறார்.

போர்நிலத்தின் நினைவுகளுக்கும், புலம்பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அகரமுதல்வன் இந்தக் குறுநாவல்களின் வழியே நீதி கேட்கும் குரலை வலிமையாக ஒலிக்கிறார்.

அகரமுதல்வனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

10.மதுரை அரசியல் வரலாறு 1868  (ச. சரவணன்)

Political History of the Madura Country J.H. Nelson மதுரையின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் முக்கியமான ஆவணம்.

இதனை  ச. சரவணன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

மதுரையின் அரசியல் வரலாறு 1868 என அந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்

மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் எனப் பலரும்  ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நாட்களில் நடந்த போர்கள். மற்றும் கிறிஸ்துவ மெஷினரிகளின் வருகை. சமய மாற்றம் சார்ந்த சண்டைகள். மதுரை நகரில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள்  இவற்றை நெல்சன் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

வரலாற்றில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

11.தீக்கொன்றை மலரும் பருவம் (லதா அருணாச்சலம்)

நைஜீரியா எழுத்தாளர் அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimson Blossoms நாவலின் தமிழாக்கமே தீக்கொன்றை மலரும் பருவம் நைஜீரியாவில் 2015ல் வெளியான இந்நாவலை லதா அருணாசலம் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பல ஆண்டுகள் நைஜீரியாவில் வசித்தவர் என்பதால் நாவலின் நுட்பங்களை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

Season of Crimson Blossoms 2016 ஆம் ஆண்டிற்கான நைஜீரியாவின் உயரிய இலக்கிய விருதினை வென்றிருக்கிறது.

நாவலின் கதை 2009 மற்றும் 2015க்கு இடையில் நடைபெறுகிறது. அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பிந்த்தா ஜுபைரு என்ற 55 வயதுப் பெண்ணை மையமாகக் கொண்ட கதை, ஹஸன் ’ரெஸா என்ற போதைப் பொருள் விற்பவனுடன் அவளுக்கு எதிர்பாராத உறவு ஏற்படுகிறது. இந்த உறவின் பின்புலத்தில் சமகால அரசியல் நிகழ்வுகள். போதை மருந்து கடத்தல் என நைஜீரியாவின் சமகால வாழ்வையும் விசித்திரமான காதலின் மூர்க்கத்தையும் இணைத்து விவரிக்கிறது இந்நாவல்.

12.ஒரு சிற்பியின் சுயசரிதை (கிருஷ்ண பிரபு)

ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் சுயசரிதை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து எடிட் செய்து, தேவையான புகைப்படங்களைத் தேடிக்கண்டுபிடித்து  கிருஷ்ணபிரபு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ எனத் தனி நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்நூலை சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம்

தனபால் சென்னை ஒவியக்கல்லூரியில் பயில்வதற்குச் சென்ற நாட்கள். ராய் சௌத்ரியோடு அவருக்கு ஏற்பட்ட நட்பு. சிற்பத்துறையின் மீது கொண்ட ஈடுபாடு. அவரோடு படித்த ஒவியர்கள், கல்லூரி படிப்பு முடித்த பிறகு நடனக்கலைஞராக அவர் நிகழ்ச்சிகள் செய்தது. அவர் உருவாக்கிய முக்கியச் சிற்பங்கள் எனத் தனபாலின் கலை ஆளுமையைச் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.

சிற்பி தனபால் குறித்த சிறந்த நூலின் பதிப்பாசிரியர் கிருஷ்ண பிரபுவிற்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள். 

நன்றி : சந்திரபிரபா ராமகிருஷ்ணன் முகநூல் பக்கம்

]]>
2019 tamil literature https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/8/w600X390/s_ra.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/08/writer-s-ramakrishnan-recommends-2019-best-books-3326660.html
3329226 லைஃப்ஸ்டைல் செய்திகள் மாணவர்கள் தேர்வு நேரங்களில் உடல்நலத்தைப் பேணுவது எப்படி? DIN DIN Saturday, January 11, 2020 02:39 PM +0530
மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பது மிகவும் முக்கியமானது. படிப்பதை நினைவில் வைத்துக்கொள்ள உணவு பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி, தேர்வு நேரங்களில் மாணவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

ஆரோக்கியமான உணவு

மூளை திறமையாக வேலை செய்ய ஆற்றல் தேவை. இதற்காக நீங்கள் ஆரோக்கியமான, சீரான உணவைக் கொண்டிருக்க வேண்டும். மனநலத்துக்கு வழிவகுக்கும் உணவுகளும் அதில் இருக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், முளைகட்டிய தானியங்கள், முட்டை, கோழி, மீன் மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், ஆரோக்கியமான தானியங்கள், முழு கோதுமை பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.

சிலருக்கு என்ன தான் படித்தாலும் நினைவில் இருக்காது. அப்படி இருப்பவர்கள் நினைவுத்திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை உண்ணுவதன் மூலமாக பிரச்னையை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்.

குப்பை உணவுகளைத் தவிருங்கள்

நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதோடு, அதோடு தொடர்புடைய நீர் ஆகாரங்களையும் எடுத்துக்கொள்ளலாம். பாதாம் அக்ரூட் பருப்புகள், மீன், ஆளிவிதை, வாழைப்பழம், பட்டாணி, கீரை, ப்ரோக்கோலி போன்றவைகளை உண்ணலாம். ஜீரணிக்க கூடுதல் நேரமும் சக்தியும் தேவைப்படும் குப்பை உணவுகளை தவிர்க்கவும்.

குளிர்பானங்களுக்கு பதிலாக மில்க் ஷேக்குகள், சூடான சூப்கள், எலுமிச்சைப் பழச்சாறு, லஸ்ஸி, இளநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை குடிக்கவும். ஒன்று அல்லது இரண்டு கப் காபி அல்லது தேநீர், டார்க் சாக்லேட் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் காஃபின் உங்களை எச்சரிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் ஆக்குகிறது.

அதே நேரத்தில் காபி, தேநீர் ஆகியவற்றைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

பல மாணவர்கள் பள்ளி செல்லும் அவசரத்திலோ, தூக்கம் வரும் என்றோ காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது. காலை உணவைத் தவிர்த்தல் பின்னாளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். 

நொறுக்குத் தீனிகள்

உணவு நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகளை உண்ணாமல், புரோடீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்கள், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது உடலுக்கு சக்தியை அளிக்கும். குறிப்பாக இரவு அதிக நேரம் விழித்திருந்து படிக்கும்போது தேவையான ஆற்றலை வழங்கும்.

தூக்கம் அவசியம்

உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ தூக்கமும் அவ்வளவு அவசியம். குறைந்தது 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மை சிலருக்கு அன்றாட வேலைகளை பாதிக்கும். நல்ல தூக்கம் உங்களது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

எனவே படிக்கும்போது தேவையான நேரத்தில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் குறைந்தது 6 மணி நேரமாவது தூக்கம் வேண்டும். சரியான நேரத்தில் தூங்கும்போது உங்களுடைய கற்றல் திறனும் மேம்படும். 

மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்

டிவி, மொபைல், கேம்ஸ் போன்றவைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தற்போது சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் அதிக நேரம் செலவளிக்கின்றனர். ஒருகட்டத்தில் அதற்கு மாணவர்கள் அடிமையாகும் போது, மாணவர்களின் கற்றல் திறன் பெரிதும் பாதிக்கிறது. எனவே, படிக்கும் சமயத்தில் மொபைல் உபயோகிப்பதை அறவே தவிர்த்து விடுங்கள். உங்களை மகிழ்ச்சியாகவும், உந்துதலாகவும் வைத்திருக்க நண்பர்களுடன் விளையாடுவது  போன்ற சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் சிறிது நேரம் ஈடுபடலாம். 

மனநலம் அவசியம்

உணவு முறை ஒருபக்கம் இருந்தாலும், மன நலத்தை பேணுவதும் அவசியம். தேர்வு குறித்த மனப்பதற்றத்தை தவிர்க்க வேண்டும். பயத்தில் பாடங்களை படிக்கும்போது அது நினைவில் இருக்காது. எனவே, பயமின்றி தெளிவான மனநிலையில் படிப்பது சிறந்தது. எனவே, தேர்வு சமயங்களில் பயம் எதுவுமின்றி, உங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு படியுங்கள்; தேர்வில் வெற்றி பெறுங்கள். 

]]>
diet tips https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/11/w600X390/food.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/11/diet-tips-for-students-this-exam-season-3329226.html
3327487 லைஃப்ஸ்டைல் செய்திகள் மகளிர் உடல்நலன் செயலிகளை பயன்படுத்துவோரில் 18% பேர் ஆண்கள் IANS IANS Thursday, January 9, 2020 03:11 PM +0530 லக்னௌ: வட இந்திய மக்களில் ஆண்களும், பெண்களும் உடல் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொண்டவர்களாகவும், பெண்களின் உடல் நலன் பற்றி அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஹெல்த்டெக் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகளிர் உடல் நலன் தொடர்பான ஆப்களைப் பயன்படுத்தும் இந்தியர்களில் 18.3 சதவீதம் பேர்  ஆண்கள் என்றும், 81.7% பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலன் தொடர்பான செல்போன் ஆப்- ஆன நைராவை பயன்படுத்துபவர்களில் 43% பேர் வட இந்தியர்கள் என்றும், 30 சதவீதம் பேர் தென்னிந்தியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மாதவிலக்கு, கருவுறுதல், கருமுட்டை வெளியேற்றம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனிக்க இந்த ஆப்கள் உதவுகின்றன.

இதுபோன்ற ஆப்களை தற்போது 4.2 லட்சம் பயனாளர்கள் பயன்படுத்துவதாகவும், நைரா ஆப்பை 77 ஆயிரம் ஆண்கள் பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

]]>
app https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/26/w600X390/cellphone.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/09/womens-health-app-has-18-indian-male-users-3327487.html
3325862 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' DIN DIN Tuesday, January 7, 2020 05:59 PM +0530
ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் ஆட்டிசம் தொடர்புடைய குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில், ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் மன உளைச்சல் அதிகம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு, 2 முதல் 20 வயது வரையிலான குழந்தைகளிடம் ஆய்வு செய்து, குழந்தைகளின் செயல்பாடுகள் குடும்பத்தினரிடையே எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ஆட்டிசம் கோளாறு கொண்ட குழந்தைகளின் செயல்பாடுகள் தங்களது அன்புக்குரியவர்களை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.

மேலும், அவர்களிடையே ஒருவித தனிமையை ஏற்படுத்துவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக பணம் செலவழிப்பதே குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

]]>
ஆட்டிசம் , autism https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/25/w600X390/autism-child.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/07/families-of-kids-with-autism-face-mental-social-burdens-3325862.html
3324912 லைஃப்ஸ்டைல் செய்திகள் சர்க்கரை அதிகம் உட்கொள்வது ஆண்களா..? பெண்களா..? IANS IANS Monday, January 6, 2020 05:06 PM +0530  

ஆண்களை விட பெண்களே அதிகளவில் சர்க்கரை உட்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்.ஐ.என்) இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம்  நிதியுதவி அளித்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, பெண்கள் ஒரு நாளில் 20.2 கிராம் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறார்கள். ஆண்கள் நாள் ஒன்றுக்கு எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அளவு 18.7 கிராம் ஆகும். இந்த ஆய்வின் மூலமாக ஆண்களை விட பெண்களே அதிகளவு சர்க்கரை எடுத்துகொள்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் மெட்ரோ நகரங்களில், எடுத்துக்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவு மும்பையில் அதிகமாகவும், ஹைதராபாத்தில் குறைவாகவும் உள்ளது.

மும்பை மற்றும் அகமதாபாத் மக்கள்தொகையின் சராசரி சர்க்கரை உட்கொள்ளும் அளவு முறையே 26.3 கிராம் மற்றும் 25.9 கிராம். தில்லியில் 23.2 கிராம். பெங்களூரு- 19.3 கிராம், கொல்கத்தா -17.1 கிராம் மற்றும் சென்னை -16.1 கிராம்.

அனைத்து மெட்ரோ நகரங்களிலும் சேர்த்து சராசரியாக ஒரு நாளைக்கு 19.5 கிராம் சர்க்கரை எடுத்துக்கொள்ளப்படுகிறது. சர்க்கரை உட்கொள்வதன் மூலமாக கிடைக்கப்பெறும் எனர்ஜி அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் 6.6% , அதைத் தொடர்ந்து தில்லி (6.1%), அகமதாபாத் (5.9%), ஹைதராபாத் (5.4%) பெங்களூரு (4.1%), சென்னை (3.9%), கொல்கத்தா (3.5%) முறையே இடம்பெற்றுள்ளன.  

தொடர்ந்து, வயதின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பொதுவாக, வயதானவர்கள், இளையவர்களை விட சற்றே அதிகமாக சர்க்கரை உட்கொள்வது தெரிய வந்துள்ளது. 36-59 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 20.5 கிராம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 20.3 கிராம் சர்க்கரை எடுத்துக்கொள்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு சராசரியாக 19.9 கிராம் சர்க்கரை 18-25 வயதுடையவர்கள் நாள் ஒன்றுக்கு19.4 கிராம், பள்ளிக் குழந்தைகள் 17.6 கிராம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15.6 கிராம் சர்க்கரை சேர்க்கிறார்கள்.

]]>
Sugar, சர்க்கரை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/is-added-sugar-bad-2.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/06/women-take-more-sugar-than-men-3324912.html
3324922 லைஃப்ஸ்டைல் செய்திகள் அழகுசாதனப் பொருட்கள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஏன்? IANS IANS Monday, January 6, 2020 05:04 PM +0530  

கிரீம்கள் உள்ளிட்ட சில அழகுசாதனப் பொருட்களில் காணப்படும் பலவிதமான ரசாயனக் கலவைகள் சருமத்தில் ஒவ்வாமை உள்ளிட்ட எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. தோலில் லிப்பிடுகள் எனப்படும் இயற்கையான கொழுப்பு போன்ற மூலக்கூறுகளை சில ரசாயனங்கள் அழிப்பதால் ஒவ்வாமை உள்ளிட்ட தோல் அழற்சிகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற தோல் அழற்சிகளை நிறுத்துவதற்கான ஒரே வழி, சருமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ரசாயனத்தைக் கண்டறிந்து, அதனை தவிர்ப்பதுதான்.

நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள டி-செல்கள் ஒரு வேதிப்பொருளை உடலில் அனுமதிக்காதபோதுதான், ஒவ்வாமை எதிர்வினை தொடங்குகிறது. டி-செல்கள் சிறிய அளவிலான வேதிப்பொருட்களை நேரடியாக அடையாளம் காண்பதில்லை.

மாறாக, குறைந்த அளவிலான ரசாயனம் கலந்த சேர்மங்கள் மற்றொரு புரத்துடன் வேதியியல் எதிர்வினைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. 

இருப்பினும், தோல் அழற்சியைத் தூண்டும் பராமரிப்புப் பொருட்களில் பல சிறிய சேர்மங்களும் உள்ளன. ஆனால், குறைந்த அளவிலான ரசாயனம் கலந்த சேர்மங்கள் அதிக எதிர்வினைகளை கொண்டிருப்பதில்லை என்று கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

நமது தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள நோயெதிர்ப்பு செல்களான லாங்கர்ஹான்ஸ் செல்கள், சி.டி.1ஏ என்ற மூலக்கூறுகள் உள்ள ரசாயனங்களை டி-செல்களுக்கு தெரியப்படுத்தும். அதன் பின்னர் டி-செல்களின் மாற்றங்களினால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

இந்த வேதிப்பொருட்களில் முக்கியமானவை பெருவின் பால்சம் மற்றும் ஃபார்னெசோல். இவை தோல் கிரீம்கள், பற்பசை மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற தயாரிப்புகளில் காணப்படுகின்றன. 

பெருவின் பால்சம் குறித்து ஆராய்ச்சி செய்கையில், அதில் பென்சில் பென்சோயேட்(benzyl benzoate) மற்றும் பென்சில் சின்னாமேட்( benzyl cinnamate) ஆகியவை எதிர்வினைக்கு காரணமான ரசாயனங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  எனவே, மேற்குறிப்பிட்ட ரசாயனங்கள் இல்லாத அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது உங்களது சருமத்திற்கு நல்லது. 

]]>
beauty, skin care https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/6/w600X390/skin_rash.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/06/why-some-cosmetics-may-cause-a-skin-rash-3324922.html
3322454 லைஃப்ஸ்டைல் செய்திகள் கொழுப்பு நீக்கப்படாத பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படாது! DIN DIN Friday, January 3, 2020 01:20 PM +0530
கொழுப்பு நீக்கப்படாத பால் அல்லது முழு கொழுப்பு பாலை அருந்தும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக குழந்தைகளுக்கு முழுவதும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்(Fat-free Milk) அல்லது குறைந்த கொழுப்புடைய பால்(Low fat milk) கொடுக்கவே தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொழுப்பற்ற பாலை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனென்றால் உடலில் அதிக கொழுப்பு சேரும்போது அது உடல் எடைக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக பல நோய்களும் ஆட்கொள்கின்றன.

இந்த நிலையில், கொழுப்பு நீக்கப்படாத பாலை அருந்தும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு குறைவு என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த கொழுப்புள்ள பாலை உட்கொண்ட குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு நீக்கப்படாத பாலை அருந்தும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு 40% முரண்படுவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஏழு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 28 ஆய்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 

 

மேலும், தற்போதைய ஆய்வில் ஒன்று முதல் 18 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 21,000 குழந்தைகள் ஆய்வுகளில் பங்கேற்றனர். 28 ஆய்வுகளில் 18 ஆய்வுகள் இந்த முடிவை உறுதி செய்கின்றன.

அதாவது கொழுப்பு நீக்கப்படாத பாலை அருந்தும் குழந்தைகள், உடல் பருமனானவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'கனடாவிலும், அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தினசரி பசுவின் பாலை உட்கொள்கிறார்கள். மேலும் இது பல குழந்தைகளுக்கு உணவுக் கொழுப்புக்கு பசும் பால் முக்கிய பங்களிப்பாக இருக்கிறது' என்று ஆராய்ச்சியாளர் மாகுவேர் கூறினார். 

வழக்கமாக குழந்தைகளின் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க இரண்டு வயதிலிருந்து குறைந்த கொழுப்பு கொண்ட பாலை அருந்த அறிவுறுத்தப்படும் நிலையில், இந்த ஆய்வின் முடிவு அதற்கு முரண்பாடான முடிவுகளை வழங்கியுள்ளது. 

]]>
milk https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/3/w600X390/milk.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/03/kids-who-drink-whole-milk-less-likely-to-be-obese-study-3322454.html
3322442 லைஃப்ஸ்டைல் செய்திகள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் மூளை எவ்வாறு சமன் செய்கிறது தெரியுமா? DIN DIN Friday, January 3, 2020 12:22 PM +0530  

மூளையில் உள்ள நியூரான்கள் நம்மில் ஏற்படும் சந்தோஷத்தையும், துக்கத்தையும் எவ்வாறு சமன் செய்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மனித உடலின் அனைத்து முக்கிய செயல்பாட்டுக்கும் காரணமாக இருப்பது மூளைதான். ஐம்புலன்களின் உணர்ச்சிகள், இதயத்துடிப்பு, கை, கால் உறுப்புகளின் செயல்பாடு, தசைகளின் செயல்பாடு உள்ளிட்ட உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் ஆணிவேராக மூளை செயல்படுகிறது. நமது உடலில் மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதுதான் கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு மூளை இன்னும் அறிவியலாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அந்த வகையில், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூளையின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

அதில், மூளையில் உள்ள வெவ்வேறு வகை நியூரான்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை என கலவையான உந்துதலை ஏற்படுத்துகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நாம் துக்கத்தில் இருக்கும்போதும், மகிழ்ச்சியில் திளைக்கும்போதும் எதிரெதிர் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

நாம் ஆழ்ந்து சிந்திக்கும் போது இடதுபக்க மூளைதான் அதிகம் செயல்படுகிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்போது வலதுபக்க மூளை செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலையும் உருவாகிறது. இந்த இரண்டு வகையான உயிரணுக்களுக்கு இடையிலான செயல்பாடுதான் சமநிலை. அந்த சமநிலையில், நமது மூளை செயல்பாட்டை பொறுத்தே நாம் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தேடி செல்கிறோமா அல்லது துக்கத்தினை தவிர்க்க விரும்புகிறோமா என்பதை முடிவு செய்கிறோம். இது ஒவ்வொரு நபரை(ஒவ்வொரு மூளையின் செயல்பாட்டை) பொறுத்தும் வேறுபடும்.

மன அழுத்தத்தால் நாம் அதிகம் பாதிக்கப்படும்போது, மூளையில் உள்ள நியூரான்கள் நமக்கு ஒரு சிக்னலை அனுப்பும். அது தற்போதைய நிலைக்கு எதிரான செயல்களை செய்யத் தூண்டும். அதாவது, துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியான வழியைத் தேடிச் செல்ல தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, மனநிலை சரியில்லாத சமயத்தில் நீண்ட தூரம் பயணிக்கும்போது அந்த நடத்தை மாற்றங்களினால் துக்கநிலை சமன் செய்யப்படுகிறது. ஒருவேளை அந்த நேரத்தில் நடத்தை மாற்றங்கள் நிகழாதபோதுதான், நாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அது உச்ச கட்டத்தில் செல்லும்போது மனநலம் பாதிக்கப்படுகிறது. 

நமது நடத்தை மாற்றங்களே நமது மூளையின் செயல்திறனை நிர்ணயிக்கின்றன. நமது மூளையின் முக்கிய பரிணாமப் பகுதியான வென்ட்ரல் பாலிடத்தில் நியூரான்களைத் தடுக்கும் அல்லது உற்சாகப்படுத்தும் சிக்னல்களுக்கு இடையிலான சமநிலையே இம்மாதிரியான உந்துதலை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, மகிழ்ச்சி, துக்கம் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். துக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதன் வழிகளைத் தேடிச் செல்லுங்கள். உடலையும், மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். 

தொடர்ந்து, மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்படுகிறது? மனநல பாதிப்பு ஏற்பட்ட பின்னர் அவர்களது மூளை எவ்வாறு செயல்படுகிறது என அடுத்த ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

]]>
brain, மூளை https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/3/w600X390/brain.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/03/how-your-brain-balances-pleasure-and-pain-3322442.html
3321669 லைஃப்ஸ்டைல் செய்திகள் புகைபிடித்தல் தொடர்பான நோய்களுக்கு விட்டமின் ஈ அசிடேட் காரணமா? DIN DIN Thursday, January 2, 2020 06:09 PM +0530  

ஈ-சிகரெட் அல்லது வேப்பிங் புகைத்தலினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்க்கும், விட்டமின் ஈ அசிடேட்டுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புகைப் பிடித்தல் நுரையீரல் புற்று நோய்க்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. இதுவே உடலில் பல்வேறு புற்று நோய்க் காரணிகளைக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் மரணங்கள் புகைபிடித்தலின் காரணமாகவே ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புகைத்தலில் நவீனமயமாக, இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. இது வழக்கமாக புகைக்கும் சிகரெட்டை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல நாடுகளும் இ- சிகரெட்டுக்கு தடை விதித்துள்ளன.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 51 ஈவாலி(EVALI) நோயாளிகள் பங்கேற்றுள்ளனர். ஈவாலி என்பது இ-சிகரெட் அல்லது வேப்பிங் புகைத்தலினால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 51 பேரில் 48 பேரின்  பி.ஏ.எல் திரவத்தில் (BAL fluid) விட்டமின் ஈ இருந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஆரோக்கியமானவர்களின் பி.ஏ.எல் திரவத்தில் இது காணப்படவில்லை. 

அதேபோன்று, வைட்டமின் ஈ அசிடேட் பெரும்பாலும் தாவர எண்ணெய்கள், தானியங்கள், இறைச்சி, பழங்கள் மற்றும் லோஷன்களில் காணப்படுகிறது, ஆனால் பொதுவாக சாப்பிடும்போது அல்லது சருமத்தில் தடவும்போது தீங்கு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மற்றும் மாநில ஆய்வகங்களால் பரிசோதிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரிகளிலும் காணப்படும் வைட்டமின் ஈ அசிடேட்டுக்கும் புகைப்பதனால் ஏற்படும் நுரையீரல் நோய்க்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். 

இதனால் நுரையீரல் புற்றுநோய்க்கு வைட்டமின் ஈ காரணமாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/2/w600X390/vaping.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/02/study-strengthens-link-between-vitamin-e-vaping-illness-3321669.html
3320804 லைஃப்ஸ்டைல் செய்திகள் தூக்கம் அதிகமானாலும், குறைவானாலும் ஆபத்துதான்! DIN DIN Thursday, January 2, 2020 04:11 PM +0530  

நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நேஷனல் சயின்ஸ் அகாடமியின் புரோசிடிங்ஸ்(Proceedings) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஒருவர் தூங்கும் நேரத்தைப் பொறுத்து நுரையீரலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்காணித்தது. 

அதன்படி, நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடும்போது, 11 மணி நேரத்திற்கும் மேலாக அல்லது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-3 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்(Pulmonary fibrosis) என்பது தற்போது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. 


மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜான் பிளேக்லி இதுகுறித்து கூறுகையில், 'நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தூக்க காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிப்பதற்கு எங்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியது. மேலும், சில ஆய்வு முடிவுகள் இதனை உறுதி செய்தால் சரியான நேரத்திற்கு தூங்குவது இந்தப் பேரழிவு நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

அதே நேரத்தில் ஒரு நாளில் 11 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவோர் இந்நோய்க்கான வாய்ப்பை மூன்று மடங்காக வழங்குகின்றனர். அதேபோன்று நள்ளிரவில் விழித்திருக்கக் கூடியவர்கள் முக்கியமாக இரவுப் பணியில் இருப்பவர்களிடையே பிற்காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 'REVERBa' என்ற ஒரு புரதத்தை கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்த புரதத்தின் மூலமாக, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்களில் உள்ள கொலாஜனைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.  

]]>
தூக்கம், Sleep https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/sleep.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/01/too-short-long-sleep-linked-to-incurable-lung-disease-3320804.html
3321620 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை! துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடிய கெளதமி DIN DIN Thursday, January 2, 2020 03:34 PM +0530  

நடிகை கெளதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சை, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை, வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், தன்னம்பிக்கை, மன உறுதி, உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஆசோலசனைப் பெற்று நலம் அடைந்து செல்கிறார்கள். 

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் தன்னுடைய பகுதியில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசி, அவர்களுக்கு அன்பளிப்பு அளித்து புத்தாண்டை தொடங்கியிருக்கிறார். எல்லாருக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது.  அதையெல்லாம் மீறி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று அவர்களிடம் கூறினார் கெளதமி. நீங்கள் இல்லையெனில் நாங்கள் இல்லை என்று தன்னுடைய அன்பை அவர்களுட பரிமாறிக் கொண்டார் கெளதமி.

 

 

]]>
gowthami https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/8/w600X390/gowthami.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/02/gowthami-celebrated-new-year-with-corporation-workers-3321620.html
3320778 லைஃப்ஸ்டைல் செய்திகள் தாய்மார்களே! குளிர்காலத்தில் சரும பராமரிப்பு அவசியம் DIN DIN Wednesday, January 1, 2020 03:29 PM +0530

குளிர்காலம் தொடங்கிவிட்டது. இப்பருவத்தில் குளிர்ந்த காற்றானது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, மந்தமான, வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். இதனால் பொதுவாக அனைவருமே சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க நல்ல குளிர்கால தோல் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது அவசியம். 

அதிலும் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும் தாய்மார்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களது சருமத்தை பராமரிக்க வேண்டும். 

தோல் பராமரிப்பு விதிமுறை ஒருவரை உடல் ரீதியாக திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு அமைதியான நிலையைக் கொண்டிருக்கிறது. ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தோல் பராமரிப்புக்கு நாம் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். 

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்ய தாய்மார்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். தங்களையும், தங்களது குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க எந்தவிதமான கடுமையான ரசாயனங்களில் கலந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது. 

சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள, மென்மையான, ஹைட்ரேட்டிங் க்ளென்சர், ஈரப்பதம் நிறைந்த பொருட்களான விர்ஜின் தேங்காய் எண்ணெய், கோகோ மற்றும் மா வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். 

வெண்ணெய், கிளிசரின் போன்ற பொருட்களைப் பயன்படுத்தும்போது லோஷன்களைக் காட்டிலும் இது சருமத்தை தேவையான ஆற்றலைத் தருகிறது. 

அதேபோன்று ஈரப்பதத்தை மசாஜ் செய்வது சிறந்தது. மசாஜ் என்பது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பிரசவத்திற்குப் பின்னர் உடலை வேகமாக மீட்க உதவுவதற்கும் ஒரு சிறந்த மற்றும் நிரூபிக்கப்பட்ட தீர்வு என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கும் போது, தனிப்பட்ட கவனிப்பு மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு பால் கொடுக்கும் மார்பு முலைக்காம்புகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்றவற்றை தடவுவதன் மூலமாக  ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதைவிட நீர்ச்சத்து உள்ள சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்தமாக தாய்மார்களுக்கு சிறந்தது. 

]]>
skincare https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/1/w600X390/mom.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/jan/01/heres-how-moms-can-follow-good-winter-skincare-regimen-3320778.html
3320105 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஆட்டிசம் அறிகுறிகள் இரட்டையர்களிடையே மாறுபடும்: ஆய்வில் தகவல் DIN DIN Tuesday, December 31, 2019 05:56 PM +0530  

ஆட்டிசம் அறிகுறிகள் இரட்டையர்களிடையே பெரிதும் மாறுபடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ஏஎஸ்டி) கொண்ட ஒரே இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏவைப் பகிர்ந்து கொண்டாலும் அறிகுறிகள் தீவிரமாகும்போது பெரிய வேறுபாடுகளை உணர்வார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு என்பது ஒரு வளர்ச்சிக் கோளாறு. ஒரு நபர் எவ்வாறு நடந்துகொள்கிறார், மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் மற்றும் கற்றுக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது.

இந்நிலையில், இரட்டையர்களிடையே இந்த ஆட்டிசம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆட்டிசம் கோளாறுக்கான வாய்ப்புகள் இரட்டையர்களுக்கும் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மொத்தம் 366 ஒத்த இரட்டை ஜோடிகளை உள்ளடக்கிய மூன்று முந்தைய ஆய்வுகளின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இரட்டையர்களில் மன இறுக்கம் மற்றும் பெற்றோரின் மதிப்பீடுகள் அளவிடப்படுகிறது. இரட்டையர்களில் ஒருவருக்கு ஆட்டிசம் வரும் பட்சத்தில் மற்றொருவருக்கு ஆட்டிசம் வர 96% வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஏ.எஸ்.டி நோயால் கண்டறியப்பட்ட இரட்டையர்களிடையே அறிகுறிகள் பெரிதும் வேறுபடுகின்றன. இதில், மரபணு காரணிகள் இதற்கு முக்கிய காரணம் மரபணு மற்றும் பெரும்பாலான சுற்றுச்சூழல் காரணங்களை பொறுத்து மாறுபடுகின்றன என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
ஆட்டிசம் , Autism https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/31/w600X390/twins.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/31/autism-symptoms-severity-varies-greatly-among-twins-3320105.html
3317084 லைஃப்ஸ்டைல் செய்திகள் புற்றுநோயை எதிர்கொள்ளும் திறன் இவர்களுக்குத்தான் அதிகம்! DIN DIN Friday, December 27, 2019 05:55 PM +0530  

அதிக உடல் எடை அல்லது அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கொண்டவர்களுக்கு புற்றுநோயை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ) உள்ளவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்நிலையில் குண்டாக இருப்பவர்களுக்கென ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை குறித்த ஆய்வில், அதிக எடை கொண்டவர்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களுடன் போரிடும் குணம் கொண்டவர்கள் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளர் கணேசன் கிச்செனடாஸ் கூறுகையில், 'அதிக எடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.8 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். அதிக எடை மற்றும் உடல் பருமன் இரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றில் வளர்சிதை மாற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

கரோனரி இதய நோய், இஸ்கிமிக் ஸ்ட்ரோக்(ischemic stroke) மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை தாக்கும் அபாயங்கள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கேன்சர் நோயை எதிர்க்கும் திறன் அதிகமாக இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜமா ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 1,434 பேர் பங்கேற்றனர். இதில் 49% பேர் சாதாரண எடை கொண்டவர்கள், 34% பேர் அதிக எடை மற்றும் 7% பேர் உடல் பருமன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
Body weight https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/27/w600X390/fat_people.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/27/higher-body-weight-may-improve-cancer-survival-3317084.html
3316293 லைஃப்ஸ்டைல் செய்திகள் டயட்டில் இருப்பவர்கள் தனிமையை உணர வாய்ப்பு அதிகம் DIN DIN Thursday, December 26, 2019 05:29 PM +0530  

விடுமுறை அல்லது பண்டிகை காலங்கள் என்றால் நாம் வழக்கத்தினை விட சற்று அதிகமாகவே சாப்பிடுவோம். அப்படி இருக்கும்போது, டயட்டில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் தனிமையை உணர வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏனென்றால் பண்டிகை நாட்களில் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது டயட்டில் இருப்பவர்கள் அதிகம் பகிர்ந்து சாப்பிட முடியாத காரணத்தால் அவர்கள் தனிமையை உணர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழுமுறை செய்யப்பட்ட ஆய்வுகள், பல சோதனைகள், சமூக உளவியல் கண்டுபிடிப்புகள், உணவு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல கருவிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, ஒரு பரிசோதனையில், இதுவரை எந்தவித கட்டுப்பாடும் இன்றி உண்பவர்களை முதல்முறையாக டயட்டில் ஈடுபடுத்தும்போது அவர்கள் அதிக தனிமையை உணர்ந்தார்கள் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கைட்லின் வூலி கூறும்போது, யூதர்களின் பஸ்கா பண்டிகையில் பார்வையாளர்களின் ஆய்வில் இருந்து பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. உணவுகளைப் பகிர முடியாததால் சிலர் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வலுவான பிணைப்பு இருந்ததை காண முடிந்தது.

உணவு மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் குறித்து மற்றவர்கள் அறிவுரை கூறும்போது, டயட்டில் இருப்பவர்கள் வருத்தப்படுகிறார்கள். அதிலும், திருமணமாகாத அல்லது குறைந்த வருமானம் உடையவர்கள்தான் அதிகம் தனிமையை உணர்ந்துள்ளனர்' என்று தெரிவித்தார்.

ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் 30 சதவீதம் பேர் வரை டயட்டில் இருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

]]>
diet https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/diet.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/26/people-with-restricted-diets-more-likely-to-feel-lonely-3316293.html
3316271 லைஃப்ஸ்டைல் செய்திகள் காபி குடித்த கோப்பையையும் சாப்பிடலாம்! - புதுமையை புகுத்தும் ஏர் நியூசிலாந்து விமானம் DIN DIN Thursday, December 26, 2019 04:10 PM +0530  

விமானத்தில் கழிவு உற்பத்தியைக் குறைக்க ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் விமானங்களில் காபி வழங்குவதற்கு உண்ணக்கூடிய கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், நியூசிலாந்தின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு, நட்பு ரீதியான கழிவு மேலாண்மை தீர்வுகளை பல்வேறு அமைப்புகளுக்கு பரிந்துரைத்து வருகிறது. அதன்படி, ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் விமானத்தில் மட்கும் பொருட்களை பயன்படுத்த முன்வந்துள்ளது. 

ஏற்கனவே, கழிவறைகள் உள்ளிட்டவைகளில் மட்கும் பொருட்களை பயன்படுத்தி வரும் அந்நிறுவனம் ஒருபடி மேலே சென்று உணவுக்  கழிவுகளையும் குறைக்கும் பொருட்டு மட்கக்கூடிய/ உண்ணக்கூடிய காபி கோப்பைகளை(edible cups) அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன்படி, விமானத்தில் வழங்கும் காபியை குடித்துவிட்டு அந்த கோப்பையையும் சாப்பிடலாம். இந்த காபி கோப்பையானது வெண்ணிலா சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், காபி போன்ற சூடான திரவங்கள் இருக்கும் போது உருகாது.

'ஆண்டு ஒன்றுக்கு ஏர் நியூசிலாந்து விமானங்களில் சுமார் 8 மில்லியன் கப் காபி வழங்கப்படுகிறது என்றும் கழிவு மேலாண்மையை கருத்தில் கொண்டு இந்த புதுமையான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிறுவன இயக்குனர் ஜேமி காஷ்மோர் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகளும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

]]>
edible cups https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/edible_cup.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/26/air-new-zealand-switches-to-edible-coffee-cups-3316271.html
3315380 லைஃப்ஸ்டைல் செய்திகள் இந்த ஆண்டும் பிரியாணியே முதலிடம்; நிமிடத்திற்கு சராசரியாக 95 ஆர்டர்கள் DIN DIN Wednesday, December 25, 2019 01:17 PM +0530  

2019ஆம் ஆண்டில் ஸ்விக்கியிலிருந்து நிமிடத்திற்கு சராசரியாக 95 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தென் இந்தியாவில் சாப்பாடு என்றாலே பிரியாணி எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்கள் அதிகமாகி விட்டனர். அந்த வகையில் நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் ஸ்விக்கியிலிருந்து ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 95 பிரியாணியை(நொடிக்கு 1.6 பிரியாணி) இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஸ்விக்கியில் புதிய பயனர்களின் மிகவும் பொதுவான முதல் ஆர்டராக பிரியாணி உள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நான்காவது ஆண்டு தகவல்' அறிக்கையின்படி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் முதலிடத்தில் பிரியாணி உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு கிச்சடிக்கான ஆர்டர்கள் இந்த ஆண்டு 128 சதவீதம் அதிகரித்துள்ளன.

அசைவம் என்றால் பிரியாணி என்பதுபோல பீட்ஸாக்களில் சைவ பீட்ஸாவை அதிகம் பேர் விரும்புகின்றனர். அவற்றின் மேல் சீஸ், வெங்காயம், பன்னீர், கூடுதல் சீஸ், காளான், கேப்சிகம், சோளம் மற்றும் ஆலிவ் ஆகியவை அதிகம் சேர்க்கவும் விரும்புகின்றனர். 

இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் 17,69,399 குலாப்ஜாமுன் ஆர்டர்கள் மற்றும் 2,00,301 அல்வா ஆர்டர்கள் வந்துள்ளன. சமீப காலமாக ஃபலூடாவும் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. இந்த ஆண்டு ஃபலூடாவிற்கு 11,94,732 ஆர்டர்கள் வந்துள்ளன. மும்பையில் 6,000 தடவைகளுக்கு மேல் ஃபலூடா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பிரபல உணவான 'சாக்கோ பை மற்றும் ட்ரிங்க்' சண்டிகரில் மட்டும் 79,242 முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 

'டெத் பை சாக்லேட்', 'டெண்டர் கோகநட் ஐஸ்கிரீம்', 'டிராமிசு ஐஸ்கிரீம்' மற்றும் 'கேசர் ஹல்வா' போன்ற இனிப்புகளும் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. 


ஒட்டுமொத்தமாக, 2019 ஆம் ஆண்டில் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட உணவுகள் சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, பன்னீர் வெண்ணெய் மசாலா, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, சிக்கன் தம் பிரியாணி, வெஜ் ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் மற்றும் பருப்பு மஹானி. அதேபோன்று டயட் உணவுகள் இந்த ஆண்டில் 306 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

ஸ்விக்கியில் தற்போது 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவு டெலிவரி செய்கின்றனர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பெண்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் ஸ்விக்கி டெலிவரி வசதி உள்ளது. 

]]>
Biryani, பிரியாணி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/biryani.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/25/indians-order-95-biryanis-per-minute-from-swiggy-3315380.html
3315369 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'உணர்ச்சிகளை வெளிப்படுத்த தாய்மொழியே சிறந்தது' DIN DIN Wednesday, December 25, 2019 12:46 PM +0530  

நமது உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்துவதில் மொழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் மொழிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. உதாரணமாக 'காதல்'(Love) என்பது ஒருவகை உணர்ச்சி. ஆனால், துருக்கிய வார்த்தையான 'செவ்கி' அல்லது ஹங்கேரிய வார்த்தையான 'ஸ்ஸ்ரெலெம்' என காதல் பொருள்படும் வார்த்தைகள் அதே உணர்வை வெளிப்படுத்துதில்லை. இது மற்ற அனைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் பொருந்துகிறது. ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று அவை வெவ்வேறு மாறுபட்ட அளவிலே அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றன.

பூமியில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மொழிகள் மற்றும் அவர்களது கலாச்சாரங்கள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்களது கலாச்சாரத்திற்கேற்ப உணர்ச்சிகளின் வெளிப்பாடு அந்தந்த மொழிகளில் வேறுபடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அதன்படி, பல மொழிகள் தெரிந்திருந்தாலும் அவரவர் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த தாய்மொழியிலே சிறப்பான சொற்கள் உள்ளன. முக்கியமாக, காதல் அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்த தாய்மொழிகளே பெரிதும் உதவுகின்றன. அதேபோன்று ஒரு சில தாய்மொழிச் சொற்களுக்கு சரியான, இணையான ஆங்கில வார்த்தைகள் இல்லை. எடுத்துக்காட்டாக, இல்லாத அல்லது இழந்த ஏதோவொன்றின் ஏக்கத்தால் ஏற்படும் ஆழ்ந்த மனச்சோர்வை குறிக்கும் போர்ச்சுக்கீசிய சொல் 'சவுடே', ஆங்கிலத்தில் இதற்கு இணையான வார்த்தை இல்லை. 

இவ்வாறு, உணர்ச்சிகள் மனித நிலையை வரையறுக்கும் அம்சமாக இருக்கும்போது, ​​அவற்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொற்களின் பொருளானது நுணுக்கமாக இருக்க வேண்டும். 

இதுகுறித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோசுவா ஜாக்சன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள்,  'கோலெக்ஸிஃபிகேஷன்' என்ற முறையைப் பயன்படுத்தி மொழிகளில் ஒரு உணர்ச்சிக்கு சொற்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த புதிய ஒப்பீட்டு முறை, ஒரு சொல்லின் பொருளில் உள்ள மாறுபாட்டையும் கட்டமைப்பையும் அளவிடும். மொத்தம் 2,474 மொழிகளில் இருந்து பல்வேறு விதமான வார்த்தைகளை ஒப்பிட்டு பார்த்து தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று சில வார்த்தைகள் நேர்மறையான வார்த்தைகளா அல்லது எதிர்மறையான வார்த்தைகளா என்பதை அந்தந்த இடத்தின் புவியியல் அமைப்பை பொறுத்தே கணிக்க முடியும் என்று கூறுகின்றனர். 

]]>
Languages https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/25/w600X390/languages.png https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/25/languages-differ-in-way-they-express-emotions-through-words-3315369.html
3313640 லைஃப்ஸ்டைல் செய்திகள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதால் மாரடைப்பு வராது! DIN DIN Monday, December 23, 2019 03:01 PM +0530  

நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் கார்டியாலஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு பயனளிப்பதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடையே கடந்த 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகிய உடற்பயிற்சிகளை செய்யும் நபர்களிடத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைந்துள்ளது. 

2011 இங்கிலாந்து மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாக வைத்து, 25 முதல 74 வயதுடைய 43 மில்லியன் மக்கள் ஆய்வில் பங்கேற்றனர். இதில், 11.4% பேர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும், சைக்கிள் ஓட்டுவதை(2.8%) அதிகம்பேர் நடைப்பயிற்சி(6.8%) மேற்கொள்வதும் கணக்கிடப்பட்டது. 

இங்கிலாந்தின் உள்ளூர் அதிகாரிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் வெறும் 5% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அதேபோன்று பெண்களை(1.7%) விட அதிகமான ஆண்கள் (3.8%) அதிகமாக சைக்கிள் ஓட்டுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் ஆண்களை(6%) விட அதிகமான பெண்கள் (11.7%) வேலைக்குச் செல்கிறார்கள்.

இதய நோய்க்கான பெரிய ஆபத்து காரணிகளாக உடற்பயிற்சியின்மை, அதிக எடை, புகைப்பிடித்தல் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை பார்க்கப்படுகிறது. 

வேலைக்கு நடந்து செல்லும் பெண்களுக்கு அடுத்த ஆண்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 1.7% குறைந்தது. வேலைக்கு சைக்கிளில் செல்லும் ஆண்களுக்கு அடுத்த ஆண்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 1.7% குறைந்துள்ளது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/23/w600X390/walking.jpg https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/dec/23/walking-cycling-to-work-may-be-good-for-your-heart-3313640.html