Dinamani - ஸ்பெஷல் - https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3178959 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி! RKV Tuesday, June 25, 2019 04:29 PM +0530  

வியாபார நிமித்தமாகத் தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆன இந்திய வம்சாவளிக் குடும்பங்களில் ஒன்று குப்தா ஃபேமிலி. இவர்களது பூர்வீகம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம். 1993 ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர். அன்று முதல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன் உலகின் பலநாடுகளில் தங்களது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்களை ஏன் உத்தரகாண்டு முனிசிபாலிட்டி தற்போது குப்பைகளை நீக்குவதற்காக ஃபைன் கட்டச் சொல்லி உத்தாவிட்டிருக்கிறது என்றால் சமீபத்தில் இவர்கள் இந்தியாவில் ஊருலகம் மெச்ச நடத்தி முடித்த ஒரு பிரமாண்டத் திருமண விழாவின் காரணமாகத்தான்.

பிரபலங்கள் எல்லோரும் வெகு விமரிசையாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டு ரிசப்சனை இந்தியாவில் கொண்டாடும் மோகம் தலைவிரித்தாடும் இந்தியாவிலிருந்து சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குப்தா ஃபேமிலுக்கு அவர்களது குடும்பத் திருமணம் ஒன்றை பூர்வீக பூமியில் நிகழ்த்தும் ஆசை வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் உத்தரகாண்ட் மாநில ஆலி ஹில்ஸ் மலைப்பிரதேசம்.

அங்கே திருமணம் வெகு ஆடம்பரமாக சுமார் 200 கோடி ரூபாய் செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. திருமணத்தில் உத்தரகாண்ட் முதல்வர் முதல் நடிகை காத்ரீனா கைஃப், யோகா குரு பாபா ராம்தேவ், மாநில மந்திரிகள் எனப் பல வி ஐ பிக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விஐபிக்கள் வருகைக்காக அந்த ஏரியாவில் இருந்த அத்தனை ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் புக் செய்யப்பட்டு செலிபிரிட்டி கூட்டத்தாரால் நிரம்பி வழிந்தன. திருமணத்திற்குத் தேவையான பூக்கள் ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்டன. அந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஹை ப்ரொஃபைல் வெட்டிங்காக நடத்தி முடிக்கப்பட்டது திருமணம்.

எல்லாம் சரி தான். பல் இருக்கிறவன் பகோடா திங்கறான். பணம் இருக்கறவன் 200 கோடி செலவுல கல்யாணம் பண்றான். நாம கண்ணுக்குக் குளிர்ச்சியா வேடிக்கை பார்ப்போம் என்று தான் அந்த மலைவாசிகள் அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால் முனிசிபாலிட்டியால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம் திருமணம் முடிந்ததும் அந்த ஏரியாவில் குவிந்த குப்பைகளைக் கண்டதும் ஒரு மாநில அரசுக்கே மலைப்புத் தட்டியதென்றால் அதிசயம் தான். மொத்தமாகச் சொல்வதென்றால் 4000 கிலோ குப்பைகள்!

முன்னதாக கழிவுப்பொருளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து வரும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் குப்தா ஃபேமிலியின் விரிவான ஆடம்பரத் திருமண ஏற்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி ஒரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் உத்தரகாண்ட் ஆலி முனிசிபாலிட்டி சுரணை வந்து விழித்துக் கொண்டு குப்தா ஃபேமிலி விட்டுச் சென்ற குப்பைகளை அகற்ற ஃபைன் கட்டுமாறு வலுயுறுத்தியது.

முனிசிபாலிட்டியின் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட குப்தா ஃபேமிலி தரப்பு முதற்கட்டமாக ரூபாய் 54,000 ரூபாய் அனுப்பியுள்ளது. அதைக் கொண்டு சுமார் 150 குவிண்டால் குப்பைகளை இதுவரை அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தகவல். இது ஆரம்பம் தான். குப்பை அகற்றும் பணி இன்னும் நிறைவடையவில்லை. துப்புரவுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் மொத்த பில்லையும் குப்தா ஃபேமிலி கட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர முனிசிபாலிட்டிக்கு ஒரு வாகனம் வாங்கித் தருவதாகவும் குப்தா ஃபேமிலி ஒப்புக்கொண்டுள்ளதாக நகராட்சித் தலைவர் ஷலேந்திர பன்வார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குப்தா ஃபேமிலி திருமணத்தில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், திருமணம் மூலமாக இந்த மலைப்பிரதேசத்தை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத தலமாக மாற்றி அமைத்திருக்கும் குப்தா ஃபேமிலிக்கு பாராட்டு என்று எதையோ பேசி வைக்க தற்போது அந்த சமாச்சாரமும் மக்களிடையே தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆயினும் குப்தா குடும்பத்தாரைப் பொருத்தவரை தங்களது தவறுக்குப் பிராயசித்தம் தேடும் முயற்சியாக தங்களால் விளைந்த சூழல் சீர்கேட்டுக்கு ஃபைன் கட்டிய வகையில் தாங்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

]]>
https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/25/கல்யாணத்துக்கு-மட்டும்-தான்-அனுமதி-குப்பைக்கு-இல்லை-கட்டுங்க-ஃபைன்-குப்தா-ஃபேமிலியிடம்-கறார்-காட-3178959.html
3178195 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கடைசியா எப்போ நீங்க ஹேப்பியா ஃபீல் பண்ணீங்க?  கார்த்திகா வாசுதேவன் Monday, June 24, 2019 06:08 PM +0530  

இந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புதத் தருணங்களால் நிரம்பியது...

உங்க வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவண்ட் செய்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும்.

நீங்க எப்போல்லாம் சந்தோசமா உணர்ந்தீங்கன்னு யோசிச்சுப் பாருங்க;

ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வந்து கிளாஸ் டீச்சர் பென் கிஃப்ட் கொடுக்கும் போதுன்னு ஆரம்பிக்கலாம். ஆனா அது க்ளிஷேவா ஆயிடும். உங்க மனசுக்குள்ள இன்னும் கொஞ்சம் ஆழமா ட்ராவல் பண்ணுங்க. யெஸ்... போர் அடிச்சுக் கிடக்கிற சம்மர் ஹாலிடேஸ் நாட்கள், இன்னும் 1 மாசம் லீவிருக்கே, எங்கயும் போக முடியலையேன்னு நொந்து போய் பராக்குப் பார்த்துட்டு இருக்கும் போது திடீர்னு அம்மாவோ, சித்தியோ, பக்கத்து வீட்டு ஆண்ட்டியோ, உங்க வயசுல ஒரு குட்டிப் பெண்ணையோ, பையனையோ அழைச்சிட்டு வந்து, இவளையும் விளையாட்டுல சேர்த்துக்குங்கன்னு சொன்ன நிமிஷத்துல சோர்ந்து போன மனசு சும்மா பல்ப் போட்ட மாதிரி உற்சாக ஒளி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பிச்சிரும் அதுல தொடங்கலாம் ஹேப்பி மொமெண்ட்ஸை...

அப்புறம் இருக்கே வரிசையா...

ஸ்கூல்ல நம்ம கிரஷ் எய்தர்  பாய் ஆர் கேர்ள் திடீர், திடீர்ன்னு நம்ம எதிர்ல வரும்போதெல்லாம் சும்மா ஜிவ்வுன்னு காத்துல பறக்கற மாதிரி இருக்கும் மனசு...

அப்புறம் கில்லி ஆடினாலும் சரி கோலி ஆடினாலும் சரி தாயமாடினாலும் சரி ஜெயிச்சுட்டா வருமே ஒரு கிறக்கம். அதுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

நைன்த் படிச்சு முடிக்கற வரை கவர்ன்மெண்ட் பஸ் மாதிரி ஸ்லோவா ஜாலியா போற லைஃப் 10 த் வந்ததுமே எக்ஸ்ட்ரா லோட் ஏத்தினா மாதிரி கொஞ்சம் மூச்சுத் திணறி வருஷக் கடைசில பரீட்சை எழுதி முடிச்ச கடைசி நாள் சாயங்காலப் பொழுதுகளை யோசிங்க... அப்புறம் ரிசல்ட் வரனும். 11 த் போகனும். ஆசைப்படற குரூப் கிடைக்கனும். பாஸாகி 12 த் போகனும். அப்புறம் திரும்ப பப்ளிக் எக்ஸாம் ஃபீவர். அது முடிஞ்சதும் ஒரு சின்ன ஹேப்பி மொமெண்ட்ஸ். ரிசல்ட் வந்ததும் காலேஜ் போற சந்தோசமிருக்கே.

அது எஞ்சினியரிங் காலேஜோ, ஆர்ட்ஸ் காலேஜோ எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்

.

முதல் நாள் காலேஜ் போற அனுபவம் இன்னைக்கும் கூட அப்படியே பசுமையாக மனசுல நிக்கும். காரணம் அந்த தருணங்கள் அத்தனை அழகானவையாக நம்மால் டிஸைன் செய்யப்பட்டிருக்கும் என்பதால். முதல் நாள் காலேஜ், அதுலயும் கோ எட் காலேஜ்னா சொல்லவே வேண்டாம் மனசின் பரபரப்பை. ஒட்டுமொத்த காலேஜும் நம்மள தான் பார்க்குதுன்னு ஒவ்வொரு பொண்ணும், ஒவ்வொரு பையனுமே தனக்குத் தானே கற்பனை பண்ணிட்டு மந்தாரமா திரியற அந்தக் காலம் இருக்கே நத்திங் கேன் ரீப்ளேஸ் இட் தெட் குட் ஓல்ட் டேய்ஸ்.

இங்கே காதலில் விழுந்து கசிந்துருகி வாழ்க்கைக்கு எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸ் சேர்த்துக்கிறவங்களும் இருக்காங்க. சும்மா வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் கூட்ட கிரஷ் மட்டும் போதும்னு கண்களால் மட்டும் பேசி காணாமல் போறவங்களும் இருக்காங்க. எப்படிப் பட்டவங்களுக்கும் காலேஜ் டேய்ஸ் சம்திங்க் ஸ்பெஷல் தான்.

ஒரு டிகிரி முடிச்சாச்சா? பொண்ணுங்கன்னா அடுத்து கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவாங்களே வீட்ல.

வரப்போற ராஜகுமாரன் எப்படி இருப்பான்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள கல்யாணமாகி அடுத்த கட்ட புது வாழ்க்கையே ஆரம்பமாயிரும் பலருக்கு. இந்த வாழ்க்கையில் ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் அடுத்தடுத்து சுவாரஸ்யம் கூட்ட நிறைய தருணங்கள் இடைப்படும். முதலாவதா முதல் குழந்தைக்கு கருத்தரிக்கிற மொமெண்ட். அடுத்து அது ஆணா, பெண்ணாங்கற கற்பனைகளோட 9 மாதம் வயிற்றில் சுமக்கும் மொமெண்ட்... பிறந்ததும் அது யார் ஜாடைன்னு கண்டுபிடிக்கற மொமெண்ட், அப்புறம் குழந்தை வளர்கிற ஒவ்வொரு நொடியுமே எல்லா அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்குமே சம்திங் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான்.

அப்படி வளர்கிற குழந்தைகளை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பற அனுபவம்... குழந்தைகளைப் பொருத்தவரைக்கும் அவங்களுக்காக நாம செய்யற ஒவ்வொரு விஷயமுமே சந்தோசமான அனுபவங்களை மட்டுமே அடிப்படையா கொண்டு தான் கட்டமைக்கப்பட்டிருக்கறதா ஒவ்வொரு பேரண்ட்ஸுமே நினைச்சுக்கிறோமே அது அற்புதமான சந்தோஷ தருணமில்லையா.

யெஸ் அப்புறம் ஆணோ, பெண்ணோ முதன் முதல்ல ஒரு வேலையில் சேர்ந்து முதல் மாச சம்பளத்தை கையில் வாங்கி ஸ்பர்சிக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வராத குறையா ஒரு ஃபீல் வரும் பாருங்க. அந்த ஹேப்பியஸ்ட் மொமெண்ட்ஸுக்கும் இந்த உலகத்தில் ஈடு இணை கிடையாது.

அப்புறமா இருக்கவே இருக்கு சொந்தமா வீடு கட்டி கிரஹப் பிரவேஷம் செய்து குடி போகற ஹேப்பி மொமெண்ட்...

வளரும் பிள்ளைகளின் ஒவ்வொரு சக்ஸஸையும் கிட்ட இருந்து பார்த்து பரவசப்படுகிற ஹேப்பி மொமெண்ட்ஸ்... 

அட நில்லுங்க... நில்லுங்க...

ஆமா இப்போ எதுக்கு இப்படி ஒரு ஹேப்பி மொமெண்ட்ஸ் லிஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்னு நீங்க கேட்கலாம்.

கேட்கனும்.

ஏன்னா? வாழ்க்கைங்கறது சந்தோசமான தருணங்களைப் போலவே சில கசப்பான தருணங்களையும் தன்னகத்தில் கொண்டதா தான் இருக்கு. அந்த மாதிரியான நேரங்களில் மீண்டும் ஒரு வெளிச்சப் புள்ளியை தரிசிப்பதற்கான நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க உதவியா இருக்கிறது நாம் மேலே சொன்ன அந்த அற்புத தருணங்களே! அதனால, வாழ்க்கையை புரிஞ்சு வாழும் யாருமே பிரச்னைகளுக்கான தீர்வா ஒரு போதும் வன்முறையையோ, வஞ்சத்தையோ, தற்கொலையையோ, அல்லது துரோகத்தையோ நினைச்சுப் பார்த்திட வேண்டாம்.

ஏன்னா இந்த வாழ்க்கை ஆயிரமாயிரம் அற்புத தருணங்களால் நிரம்பியது.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோன்னு கேட்ட நம் மகாகவி பாரதியின் வார்த்தைகளைப் பின்பற்றி வாழ்வை மேலும் மேலுமென அற்புத தருணங்களால் நிரப்பிக் கொள்வோம்.

]]>
Happiest moments in life!, WONDERFUL MOMENTS, அழகான தருணங்கள், ஹேப்பி மொமெண்ட்ஸ், அற்புதத் தருணங்கள், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/24/happiest-moments-in-life-3178195.html
3178166 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மனுஷன்னா இப்படி இருக்கனும்யா... ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்! கார்த்திகா வாசுதேவன் Monday, June 24, 2019 01:23 PM +0530  

 KV ப்ரியேஷ் ஒரு மீனவர்...

ஆனால் இந்த 30 வயது இளைஞரின் வலையில் இப்போது மீன்களை விட அதிகம் சிக்குவது பிளாஸ்டிக் கழிவுகளே!

இப்படி கடந்த 3 மாதங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 3.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு வந்து கரையில் கொட்டியிருக்கிறார். பொதுவில், ஒரு மீனவருக்கு இது மிகப்பெரிய எரிச்சலூட்டக்கூடிய நிகழ்வு. மீன்கள் சிக்குமென்று வலை விரிக்கும் போது அதில் மீன்கள் சொற்பமாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் எடையுடனுடம் சிக்கினால் அந்த மீனவரின் மனநிலை எப்படி இருக்கும்? கிடைத்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பெருங்கோபத்துடன் கடலில் விசிறி அடித்து விட்டு வந்து விட மாட்டார்களா என்ன? வாஸ்தவத்தில் யாராக இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள். ஆனால் பிரியேஷ் அப்படிச் செய்யவில்லை என்பதோடு சிக்கிய கழிவுகளை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகப் பலமுறை கரைக்கு எடுத்து வந்து கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். 

அப்போ இவர் வித்யாசமான மனிதர் தான் இல்லையா?

ப்ரியேஷ் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள்...

ப்ரியேஷுக்கு எப்படி வந்தது இப்படி ஒரு ஐடியா?

பள்ளிக்காலங்களில் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த ப்ரியேஷுக்கு 8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க குடும்பத்தின் வறுமையான சூழல் இடமளிக்கவில்லை. இதனால் வலையைத் தூக்கிக் கொண்டு கடலுக்குச் சென்று பிழைக்க வேண்டியவரானார். ஆனாலும், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையாவது படித்தே ஆக வேண்டும் என்ற ஏக்கம் குறையவே இல்லை. எனவே 30 வயதில் 10 ஆம் வகுப்புக்கு இணையான அரசுத் தேர்வு எழுத தனியார் கல்வி மையத்தில் இணைந்து படித்து வந்திருக்கிறார். இதோ வரப்போகும் டிசம்பரில் பரீட்சை வருகிறது. எழுதிப் பாஸ் ஆனால் ப்ரியேஷ் பத்தாம் வகுப்பு முடித்தவர் ஆகி விடுவார். இந்நிலையில் ப்ரியேஷுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை ஸ்ருதி என்பவர், ஒருநாள் மாணவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். மறுநாள் மாணவர்கள் அனைவரும் தங்களது கட்டுரைகளுடன் வகுப்பறையில் ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் தங்களது சுற்றுப்புறங்களை, வாழ்விடங்களை, வீடுகளை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்வது? அவற்றைப் பாதிக்கும் பெரும்பான்மையான காரணிகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்கள் நிறைந்த கட்டுரைகளே! ஆனால், ப்ரியேஷுக்கு அவற்றைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் தனது தினசரிப் பிரச்னையான கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் கடலில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தலையாய கடமை போல தினசரி அப்புறப்படுத்தும் ஆர்வம் தனக்கு வந்தததாகக் கூறுகிறார் ப்ரியேஷ்.

முதலில் சிக்கிய கழிவுகளை மட்டுமே கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்த ப்ரியேஷ் பின் கடலில் மீன்களைத் தேடி அலைவது போல பிளாஸ்டிக் கழிவுகளைத் தேடி அலையத் தொடங்கி இருக்கிறார். மீன்களுக்காக வலை விரித்து வைத்து விட்டு காத்திருப்பதைப் போலவே பிளாஸ்டிக் கழிவுகள் எங்கே அதிகம் கிடைக்கின்றன என்று வலையைப் போட்டுக் கொண்டு பலமணி நேரங்கள் நடுக்கடலில் காத்திருக்கத் தொடங்கினார். அப்படி அவர் சேகரித்துக் கொண்டு வந்து கொட்டியவை தான் மேற்கூறிய பிளாஸ்டிக் குப்பைகள்.

சரி ப்ரியேஷ் படிக்காதவர், அதிலும் மீனவர், இவரென்னவோ கடலுக்குப் போய் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்தால் ஊர் மக்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வார்களா என்ன? அட நீ என்னய்யா சொல்ற? கடல் எம்மாம் பெருசு, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால என்ன பண்ணிட முடியும்? என்று தட்டிக் கழிக்கத்தானே செய்வார்கள். அந்த புறக்கணிப்பு நிகழ்ந்து விடகூடாது என்று தான் முன்னதாக ஊர் பஞ்சாயத்தாரை அணுகிய ப்ரியேஷ், கடலில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் எடுத்த புகைப்படங்களை ஊர் மக்களுக்கு காட்டியிருக்கிறார். அத்துடன், எப்போதெல்லாம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சிக்குகின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்திருப்பதாகவும், கழிவுகளை நீக்கிய பின் ஓரிரு நாட்களில் அதே இடங்களுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அப்போது அங்கே கணிசமாக மீன்கள் சிக்கிய வித்யாசத்தையும் ப்ரியேஷ் தன் கிராமத்தாருக்கு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட கிராமப் பஞ்சாயத்தார் தற்போது ப்ரியேஷுக்கு உதவிகரமாக பிளாஸ்டிக் சுத்திகரிப்புக் கூடம் ஒன்றை ஊர்ப்பொதுவில் நிர்மாணித்துத் தந்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சேவையை அவ்வப்போது ஊக்குவிக்கவும் தவறுவதில்லை.

ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழைக் காலம் தொடங்கி விடுகிறது. எனவே கேரள் கடல் பகுதிகள் வழக்கத்தைக் காட்டிலும் கொந்தளிப்பாக இருக்கும். எனவே அந்த இரு மாதங்களிலும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நியாயமான காரணத்திற்கான தடையே என்றாலும் இந்த 2 மாதங்களுக்குள் கடலில் சேர்ந்து விடக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் எடையைப் பற்றிய பெருங்கவலையில் தற்போது ஆழ்ந்திருக்கிறார் ப்ரியேஷ். ஏனெனில் அந்த இரு மாதங்களிலும் நாட்டுப்படகுகளுக்கு மட்டுமே கடலுக்குச் செல்லும் அனுமதி உண்டு. அப்படிச் செல்லும் மீனவர்கள் கடல் கொந்தளிப்பின் காரணமாக மிகப்பெரிய துன்பங்களில் சிக்கி உழல்வார்கள். அவர்களை கடலில் இருந்து மீட்க  அரசு மீன்வளத்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அதில் என் படகையில் சேர்த்திருப்பதால், நான் தான் படகோட்டியாகச் செல்ல வேண்டும். அந்த வேலைக்கு நடுவே கடலில் பிளாஸ்டிக் சேகரிக்க முடியாது என்பது தான் எனக்கு தற்போது வருத்தமான செய்தியாக மாறியிருக்கிறது. விரைவில் இந்த 2 மாதங்கள் முடிந்ததும் மீண்டும் நான் என் பழைய வேலையைத் தொடங்கவிருக்கிறேன் என்கிறார் ப்ரியேஷ்.

கேரள மாநிலம் ஆழியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ப்ரியேஷுக்கு தற்போது கடலை மாசு படுத்தி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டு அதைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறியவும், அந்த விவரங்களை அய்வுக்கட்டுரைகளாக்கி உலகின் முன் வைக்கவும் மிகப்பெரிய விருப்பம் இருக்கிறது. குறிப்பாக பள்ளிகள் தோறும் சென்று குழந்தைகளிடத்தில் பிளாஸ்டிக் மாசு குறித்த விவரங்களைப் பகிரும் ஆசை நிறைய உண்டு என்கிறார். ஏனெனில் மாற்றம் என்பது எப்போதுமே குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தால் மட்டுமே அது முழு வாழ்க்கைக்குமான நிரந்தரப் பாடங்களாக மனதில் தங்க முடியும். எனவே பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பற்றி பெரியவர்களிடத்தில் பேசிப் புரிய வைப்பதைக் காட்டிலும் பள்ளிக் குழந்தைகளிடத்தில் எளிதில் புரிய வைப்பதே தனது நோக்கம் என்கிறார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ப்ரியேஷ் தனது குடும்பத் தேவைகளுக்காக பார்ப்பது மீன்பிடி தொழில். ஒரு மீனவனாக கடலன்னைக்குச் செய்து கொண்டிருப்பது அழிந்து கொண்டிருக்கும் அதன் ஜீவனை பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்துதல் மூலமாக மீட்டு எதிர்கால மீனவர்களிடம் ஒப்படைப்பது மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

ஏனெனில், யோசித்துப் பாருங்கள், 

 • நாம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம், தீடீரென எதிர்ப்படுகிறது மூடியின்றித் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை, நம்மில் எத்தனை பேர் அதை மூடி விட்டோ அல்லது அது குறித்து புகார் அளித்து விட்டோ நம் பணியைத் தொடர்கிறோம்.
 • தெருக் குப்பைத்தொட்டியில் குப்பைகள் சேர்ந்து அப்புறப்படுத்த முடியாமல் கிடக்கிறது... நம்மில் எத்தனை பேர் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடியிருப்பு வாசிகளை ஒருங்கிணைத்து அதை உடனடியாக அப்புறப்படுத்த முயல்கிறோம்...
 • அவ்வளவு தூரம் போவானேன்? இரவில் மனநலமற்ற வயதான பெண்மணி சாலையோரம் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றால் நம்மில் எத்தனை பேரு அவரை உரிய முறையில் விசாரித்து காவல்துறைக்கு தகவல் அளித்து குடும்பத்தாரிடம் சேர்க்க நினைப்போம்?

இப்படி நீளும் பொதுநலக் கேள்விகளில் ஒன்றில் கூட தேறாதவர்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கும் இந்த தேசத்தில் ப்ரியேஷ் போன்ற மனிதர்கள் அரிதானவர்கள் தான் இல்லையா?! அதனால் தான், 

ஹேட்ஸ் ஆஃப் டு யூ ப்ரியேஷ்!

]]>
கேரள மீனவர், ப்ரியேஷ் KV, கடலில் பிளாஸ்டிக் மாசு, priyesh KV, PLASTIC POLLUTION IN SEA, KERALA FISHER MAN, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/24/kerala-fisherman-who-has-removed-35-tonnes-of-plastic-from-the-sea-3178166.html
3176898 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அடேங்கப்பா! இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன? சரோஜினி Saturday, June 22, 2019 01:07 PM +0530  

யோகா என்றாலே காத தூரம் ஓடக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யோகா என்றாலே ஏதோ உடற்பயிற்சி, தியானம் என்ற எண்ணமிருப்பதால் தான் அப்படி உணர்கிறார்கள். ஆனால், யோகாவை சுவாரஸ்யமாகக் கற்றுத்தர அருமையான ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் யோகா செண்ட்டரே கதி என்று கிடக்க வேண்டியது தான். அப்படி ஒரு அற்புதமான கலை இது. அதிலும் அழகு மற்றும் இளமையுடன் யோகாவில் பெரும் ஈடுபாடும் கொண்ட ட்ரெய்னர்கள் கிடைத்து விட்டார்கள் என்றால் பிறகு யோகாவைப் போன்ற ஒரு அற்புதமான ஃபிட்னஸ் மந்திரத்தை நம்மால் அத்தனை எளிதில் புறக்கணித்து விட முடியாது.

பாலிவுட் செலிபிரிட்டிகளில் பலருக்கு யோகாவில் ஆழமான ஈடுபாடு உண்டு. அவர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் மன அமைதிக்காகவும், தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும் யோகாவுக்கும் தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க அளவிலான நேரத்தை ஒதுக்கத் தவறுவதில்லை. யோகா என்றால் வெட்டவெளியிலோ அல்லது பூட்டப்பட்ட பெரிய ஏ சி அறைகளிலோ ஓம் சாண்ட்டிங் மந்திரத்துடன் தியானம் செய்வது மட்டுமல்ல, அதிலும் ஏரியல் யோகா, காஸ்மிக் ஃபியூஷன் யோகா, ஆண்ட்டி கிரேவிட்டி யோகா, அஸ்டாங்க யோகா, எனப் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அப்படி பாலிவுட்டையே யோகா மந்திரத்தால் கட்டி வைத்திருக்கும் டாப் 5 யோகா ட்ரெய்னர்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

அடேங்கப்பா! இவங்கள மாதிரி யோகா டீச்சர்கள் கிடைச்சா, யோகா கத்துக்கிட கசக்குமா என்ன?

அனுஷ்கா பர்வானி

அன்ஷுகா ஏரியல் (பறவைகளைப் போன்று பறந்துகொண்டே செய்யும் ஒருவிதமான யோகக் கலை) யோகா கலையில் வல்லவர். இவரிடம் ஏரியல் யோகா கற்றுக் கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்... கரீனா கபூர் கான், சயீஃப் அலி கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், துஷார் கபூர் உள்ளிட்டோரைக் கூறலாம். இவர்களில் கரீனாவுக்கு தனிப்பட்ட பெர்ஸனல் யோகா ட்ரெய்னராக கோல்மால், வீ ஆர் தி ஃபேமிலி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமும் அன்ஷுகாவுக்கு உண்டு. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாக்குலினுக்கு தொடர்ந்து ஏரியல் யோகா இன்ஸ்ட்ரக்டராகச் செயல்பட்டுவ் அரும் அன்ஷுகாவுக்கு யோகாவின் மீதான ஆர்வம் அவரது அம்மாவிடமிருந்து கடத்தப்பட்டதாகக் கூறுகிறார். அவரது அம்மாவும் ஒரு யோகா குரு தான். இவை தவிர, யோகா மூலமாக மட்டுமே தனது கடுமையான காயங்களில் இருந்து விடுபட முடிந்ததாக அன்ஷுகா கருதுகிறார். அதனால் யோகா தனக்குஅளித்த நம்பிக்கையை தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வரும் அனைவருக்கும் கடத்த விரும்புவதாக அனுஷுகா கூறுகிறார். 

தியானி பாண்டே

தியானி பாண்டே மும்பைக்கு ஆன்டிகிராவிட்டி யோகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். அவர் பிபாஷா பாசு, லாரா தத்தா, குணால் கபூர் மற்றும் அபய் தியோல் ஆகியோருக்கு யோகா ட்ரெய்னராகச் செயல்பட்டு வருகிறார். யோகாவை மையமாக வைத்து இதுவரை இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அவை முறையே 1. ஷட் அப் அண்ட் ட்ரெய்ன் (Shut up and Train)’ மற்றும் ‘நான் அழுத்தமாக இல்லை: அமைதியான மனது மற்றும் ஆரோக்கியமான உடலுக்கான ரகசியங்கள்’ (I’m Not Stressed: Secrets for a calm mind and a healthy body’). தியானி பாண்டேவுக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் மற்றொரு நெருக்கமான தொடர்பு என்றால் அது இவர் சங்கி பாண்டேவின் அண்ணியாகவும், அனன்யா பாண்டேவின் அத்தையாகவும் இருப்பது தான்.

பாயல் கித்வானி திவாரி

பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், மலாய்க்கா அரோரா, ஃபர்ஹான் அக்தர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மறைந்த ஸ்ரீதேவி கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலருக்கு காஸ்மிக் ஃபியூஷன் யோகா பயிற்றுவிப்பாளராக இருக்கிறார் பாயல் கித்வானி. யோகாவில் மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு தனது இண்டீரியர் டிஸைனர் வேலையைக் கூட இழக்கத் தயங்காதவர் பாயல். யோகா பயிற்சியை மையமாக வைத்து இதுவரை பாயல் திவாரி நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார் - அவை முறையே, 1.ஓன் தி பம்ப், 2. யோன் சே யோவன் தக், 3. உடல் தேவதை: பெண்களுக்கான முழுமையான யோகா வழிகாட்டி,  4. எக்ஸ்எல் முதல் எக்ஸ்எஸ் வரை: உங்கள் உடலை மாற்றுவதற்கான உடற்தகுதி குருவின் வழிகாட்டி போன்றவை.

ராதிகா கார்லே

சோனம் கபூரின் ஒல்லியான உடல்வாகுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருப்பார்களெனில் அதற்கான முழு கிரெடிட்டும் ராதிகா கார்லேவையே சேரும். யோகா மற்றும் பைலேட்ஸ் இன்ஸ்ட்ரக்டரான ராதிகா மும்பையில் ‘பேலன்ஸ் பாடி’ எனும் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரிடம் ஃபிட்னஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பாலிவுட் செலிபிரிட்டிகள் யாரெல்லாம் என்றால்... சோனம் கபூர், நர்கீஸ் ஃபக்ரி, கிருத்திகா ரெட்டி, தான்யா காவ்ரி மற்றும் ரியா கபூர்.

தீபிகா மேத்தா

பாலிவுட்டின் மோஸ்ட் ஃபேமஸ் அஸ்டாங்கா யோகா குரு யார் என்றால் அது தீபிகா தான். 1997 ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சியின் போது மோசமான விபத்தில் சிக்கி மரணத்தை வெகு நெருக்கத்தில் கண்டு தப்பியவர் தீபிகா. தப்ப உதவியது யோகப் பயிற்சி என்கிறார். விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்தவரிடம் டாக்டர்கள்... இனிமேல் பழையபடி எழுந்து நடப்பதே சிரமம் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இருந்து தன்னை மீட்டு மீண்டும் பழைய தீபிகாவாக மாற்றியது யோகா தான் என்கிறார் அவர். இன்றைக்கு தீபிகா வெறும் ஃப்ட்னஸ் எக்ஸ்பர்ட் மட்டுமல்ல. தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, வித்யா பாலன், லிஸா ஹெய்டன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அலியா பட், விது வினோத் சோப்ரா, அனுபமா சோப்ரா, நேஹா துபியா, நிம்ரத் கெளர் என பல பாலிவுட் செலிபிரிட்டிகளுக்கு டயட் மற்றும் லைஃப்ஸ்டைல் அட்வைஸராக இயங்கி வருகிறார்.
 

]]>
Bollywood Celebrities Top 5 Yoga Trainers!, பாலிவுட் செலிபிரிட்டிகளின் டாப் 5 யோகா ட்ரெய்னர்கள், சர்வ தேச யோகா தினம், international yoga day special, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/22/bollywood-celebrities--top-5--yoga-trainers-3176898.html
3175475 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி! கார்த்திகா வாசுதேவன் Thursday, June 20, 2019 11:26 AM +0530  

கிருஷ்ணா மெக்கன்ஸி... 

யூ டியூபர்களுக்கு இவரை முன்பே தெரிந்திருக்கலாம். இதுவரை தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், தமிழர்களான நம்மால் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய நபர் இவர். இவர் பேசும் தமிழ் கொள்ளை அழகாக இருக்கிறது. நம்மூர் ராஜாஸ்தான் பட்டாணிக்காரர்கள் பேசுவதைக் காட்டிலும் அழகான தமிழில் அடித்து விளாசுகிறார். சமீபத்தில் உலகத் தமிழர்களுக்கான விழாவொன்றில்... தமிழ் மண்ணின் உணவுக்கலாச்சாரம் குறித்து இவர் பேசிய விடியோ ஒன்று காணக்கிடைத்தது. நிலம் குறித்த, அந்நிலத்து மக்களின் உணவுப் பழக்கக்கங்கள் குறித்த, மனிதர்கள் எதைத் தேடிக் கண்டடைய வேண்டும் எனும் மானுட தரிசனம் குறித்த புரிதலுடன் கூடிய மிக அருமையான பேச்சாக அமைந்திருந்தது அது.

 

 

பாண்டிச்சேரி ஆரோவில் கிராமத்தில் Solitude Farms அதாவது நாட்டுக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களுக்கென தனிப்பண்ணை அமைத்து தற்போது இயற்கை விவசாயம் செய்து வரும் கிருஷ்ணா மெக்கன்ஸியின் மனைவி தீபா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். ஆம், தமிழ்ப்பெண்ணைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவர். இரண்டு குழந்தைகள் உண்டு. தமிழகத்துக்கு வந்தது தனது குருவான ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசினோவின் இன்ஸ்பிரேஷனால் என்று சொல்லும் கிருஷ்ணா பாண்டிச்சேரியில் செட்டிலாக 26 வருடங்கள் ஆகின்றனவாம்.

இயற்கை ஹோட்டல்...

வெள்ளைக்காரராக இருந்து கொண்டு தமிழர் பாரம்பர்ய விவசாய முறைகளில் ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு, நான் தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் பார்த்தேன், பரத நாட்டியம் பார்த்தேன், இங்க இருக்கற நாட்டுக்காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகளைப் பார்த்தேன். என்னால் இந்த மண்ணின் மகத்துவத்தை உணர முடிந்தது. இங்கேயே வாழந்தால் என்ன என்று தோன்றியது. இந்த ஊர்ப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டு இயற்கை விவசாயம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டேன். பாண்டிச்சேரி ஆரோவில்லில் நான் ஒரு ஹோட்டல் நடத்துகிறேன், அதில் நாட்டுக்காய்கறிகளுக்குத் தான் முதலிடம். தினம் சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை, பண்ணைக்கீரை, பப்பாளிக்காய் கூட்டு, நாட்டுப்பழங்களில் சாலட், என்று வெரைட்டியாக சத்தான உணவுகளைச் சமைத்துத் தருகிறேன். 4 மணிக்கு ஹோட்டலை மூடி விடுவேன். குடும்ப வாழ்க்கை இருக்கே, அதனால் காலையும், மதியமும் மட்டும் ஹோட்டல் என்று சிரிக்கிறார். கிருஷ்ணாவின் ஹோட்டல் பெயர் இயற்கை. அதற்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை அவர் தனது பண்ணை மற்றும் வயலில் இருந்தே பெறுகிறார். எதையும் விலைக்கு வாங்குவதில்லை.

அந்தக் காய்கறி இங்க விளைய மாட்டான், தூரம்ல இருந்து வரான்...

சிலரிடம் உங்களுக்குப் பிடிச்ச காய்கறி என்னன்னு கேட்டா? கேரட், பிரக்கோலி, பொட்டேடோன்னு சொல்வாங்க. அதெல்லாம் இங்க தமிழ்நாட்ல விளையறது இல்லை. உங்க ஊர்ல விளையறதைச் சாப்பிட்டா உனக்கு பொல்யூஷன் கிடையாது. இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை கட்டுமானம் செய்ய இரும்பு ஃபேக்டரி, பிளாஸ்டிக் ஃபேக்டரி, பெயிண்ட் அடிக்க பெயிண்ட் ஃபேக்டரி எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரனும். இதனால என்னாகும்? ஃபேக்டரிகள் உள்ளே வந்து இண்டஸ்ட்ரியலைசேஷன் ஆகும் போது எல்லா விதமான பொல்யூஷனும் உள்ளே வரும். இப்படித்தான் நாம நம்ம பாரம்பர்யத்தைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்து உணவுக் கலாச்சாரத்தை கொஞ்சமா கொஞ்சமா கை விட்டிடறோம். எனக்கு அந்த முறை மாறனும்னு தோணுச்சு. என் குருவோட கான்செப்ட் படி பாரம்பர்ய உணவு வகைகளை புழக்கத்துக்கு கொண்டு வந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்ற்சியாகத் தான் ஆரோவில்லில் தங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். எனும் இந்த வெள்ளை மனிதரின் பேச்சுக்கூட அவரைப் போலவே வெள்ளையாகத் தான் இருக்கிறது. இவர் சொல்வது நிஜம் தான்.

தினம் மூன்று வேலை உணவு உண்ணும் பழக்கம் கொண்ட நம்மில் எத்தனை கைப்பிடி கவளம் உண்பதற்கு முன் யோசித்திருக்கிறோம்? நாம் உண்ணும் இந்த உணவு நமக்கு எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று? உடனே கடையில் இருந்து என்று யாரேனும் சொல்லி விடாதீர்கள். நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும், கீரைகளும், ஏன் அரிசி முதற்கொண்டு எல்லாமே நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோவொரு விவசாயியால் விளைவிக்கப்படுவது தான். அது நம்மை வந்தடையும் முன் அதனில் நிகழும் மாற்றங்கள் குறித்து நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அதனால் தான் கிருஷ்ணா மெக்கன்ஸி போன்றோரைப் பார்க்கையில் நமக்கு அதிசயமாக இருக்கிறது. அவர் அவருக்குத் தேவையான காய்கறிகளை தாமே உற்பத்தி செய்து கொண்டு மிஞ்சியதில் இயறகை ஹோட்டலும் நடத்தி அசத்தி வருகிறார்.

 

Courtesy:  World Tamilar Festival you tube channel

]]>
Krishna mckenzi, natural farmer, solitude farm, aurovile, கிருஷ்ணா மெக்கன்ஸி, தனிப்பண்ணை முறை, இயற்கை விவசாயி, ஆரோவில், தமிழ் பேசும் வெள்ளைக்கார விவசாயி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/20/natural-farmer-krishna-mckenzie-speech-at-5th-annual-world-tamizhar-festival-2019-3175475.html
3174021 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மழை வேண்டி ‘மழைக்கஞ்சி எடுத்து உருவ பொம்மை எரிக்கும்’ சம்பிரதாயம் அறிவீரா நீங்கள்?! கார்த்திகா வாசுதேவன் Tuesday, June 18, 2019 04:21 PM +0530  

கட்டை விரலில் பல் துலக்குபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?!

நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும், கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.

பெயருக்குத்தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி, கழுநீர்ப் பானை, அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்கு டிமாண்ட் ஜாஸ்தி) ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். 

சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.

அப்போதெல்லாம் ஊரில் பருவ மழை தப்பினால் உடனே ‘இளசு’களும் ‘பெருசு’களும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள். இதைத் தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.

‘வானா லேது... வர்ஷா லேது

வான கெஞ்சி பொய்யண்டி;

புழுவா லேது புல்லா லேது

புல்ல கெஞ்சி பொய்யண்டி’

இதற்கான தமிழ் வடிவம் ...

‘மேகம் இல்லை மழை இல்லை

மழைக் கஞ்சி ஊற்றுங்கள்!

புழுக்கள் இல்லை புல்லும் இல்லை

புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள்!’

- என்பதாகும்.

இந்த வரிகளைக் கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கூழ் ,அரிசிச்சோறு, நீராகாரம் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற் கொண்டு உப்புக் கருவாடு... கத்தரிக்காய் புளிக் கூட்டு, பச்சை வெங்காயம், பாசிப் பருப்பு துவையல், கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர்) இப்படி சகல வீடுகளிலும் போடப்படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.

கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்க்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லோரும் உண்பார்கள், சில ஊர்களில் தேங்காய்ச் சிரட்டை, அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுகிறோம் எனக் கம்மாயில் இறங்கி நன்றாகத் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .

இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கெத்தாக அரசியல் மேடைகள் அல்லது லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் கூட்டங்களில் பேசுவதைப் போல அல்ல... 

வீடு வீடாகப் போய்...

"வான கெஞ்சி பொய்யண்டி" என்று கெத்துப் பாராமல் பெரிய அண்டாவை ஏந்திச் சென்று ‘பகவதி பிச்சாந்தேஹி’ கேட்க வேண்டும். அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு. கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.

வானம் பார்த்த பூமி அந்தக் கிராமம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குளு குளுவென மழைக் கஞ்சி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அப்போதெல்லாம்.

கூடுதல் எஃபெக்டுக்காக மழை வேண்டி உருவ பொம்மை எரிக்கும் வேடிக்கையான சம்பிரதாயமும் அப்போது அங்கு வழக்கத்தில் இருந்தது. உருவ பொம்மை என்பது வைக்கோல் திணிக்கப்பட்ட கழனிக்காட்டு பொம்மை தான்.

வாழை என்றொரு மனிதர் இருந்தார். அவரது மனைவி என அந்த உருவ பொம்மையைக் கற்பிதம் செய்து கொண்டு, இறந்த மனைவியை பாடையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்கிறோம் என்று ஊர் முழுக்க மனிதர்களைத் திரட்டி பொம்மையைச் சுமந்து சென்று ஊர் மந்தையில் எரித்து விட்டு, வான கெஞ்சியைக் கம்மாய் கரையில் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடும் வழக்கமும் அன்று இருந்தது.

இவற்றையெல்லாம் செய்து முடிப்பதால் வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்றொரு நம்பிக்கை... இது ஊர் ஐதீகம். அந்நாட்களில் சிலமுறை மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது 

இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

]]>
மழைக்கஞ்சி, மழை வேண்டி உருவ பொம்மை எரிப்பு, ஐதீகம், கிராம சம்பிரதாயம், மானாவாரி சம்பிரதாயம், folk practice, traditional practice, rain porridge, effigy burning practice for rain, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/18/anybody-remember-rain-porridge-and-effigy-burning-traditional-folk-practice--in-your-village-or-town-3174021.html
3173330 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எது எகனாமிக்கலி குட் மென்சுரல் கப்பா? மென்சுரல் பேடா? வாங்க வரலாற்றைச் தெரிஞ்சுக்குவோம்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, June 17, 2019 04:04 PM +0530  

மாசமானால் இதற்காக மட்டுமே 300 ரூபாய்களுக்கு குறைவில்லாமல் எடுத்து வைக்க வேண்டியதாய் இருக்கிறது. 

‘சாதாரண பேட் எல்லாம் யூஸ் பண்ண முடியாது. எனக்கு 88 ரூ பேட் தான் வேணும்... வேற வாங்கி வச்சீங்கன்னா நான் அதை யூஸ் பண்ண மாட்டேன், டஸ்ட் பின்ல வீசிடுவேன்... காலங்காலையில் பொரிந்து கொட்டி விட்டு பள்ளிக்குச் சென்று விட்ட 14 வயது மகளை எண்ணியவாறு ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் சுலோசனா. ஈவினிங் வீட்டுக்குப் போகும் போது மெடிக்கல் ஷாப்ல அவ கேட்கற மென்சுரல் பேடையே வாங்கிக் கொடுத்துட வேண்டியது தான், இதுல எல்லாம் சிக்கனம் பார்த்து குழந்தையை ஏன் சங்கடப் படுத்தனும்?... என்ற கதியில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. நேரம் பார்த்து ஸ்மார்ட் ஃபோனை தூக்கிக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் ஆமினி. 23 வயது சின்னப் பெண். சுலோசனாவை விட 12 வயது சின்னவள். சுலோசனாவின் ஆஃபீஸில் தான் அவளுக்கும் வேலை. இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் ஒரே ஏரியாவில் இருந்து இந்த ஆஃபீஸுக்கு வந்து செல்வதால் வாகனங்களை பகிர்ந்து கொண்ட வகையில் நெருக்கமான நட்பாகி விட்டார்கள். ஆமினிக்கு, தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத சில சங்கடமான சந்தேகங்களை எல்லாம் ஒரு சகோதரியைப் போல சுலோசனாவிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு இருவரும் உடன்பிறவா சகோதரிகள் போல நட்பாகி விட்டனர்.

ஸ்மார்ட் ஃபோனைத் தூக்கிக் கொண்டு வருகிறாள் என்றால், ஏதோ புடவை, சல்வார் கமீஸ் மெட்டீரியல், இல்லை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏதேனும் ஆர்ட்டிஃபீஷியல் ஜூவல்லரி என ஏதாவது செலவிழுத்து வைக்கப் போகிறாளோ? என்று சுலோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்த ஆமினி, 

‘அக்கா, இந்த விடியோ பாருங்களேன். ஒரு லேடி டாக்டர் மென்சுரல் கப் பத்தி விலாவாரியா பேசறாங்க, நானும் இவ்ளோ நாளா, இதைப் பத்தி என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கிட்டக்கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். ஆனா, ஒருத்தியும் ஒழுங்கா பதில் சொன்னதே இல்லை. யூஸ் பண்ணிப் பாருடீ.. .உனக்கே தெரியும்னு மழுப்பிடுவாளுங்க. ஆனா, இவங்க ரொம்பத் தெளிவா சொல்றாங்க, நீங்களும் பாருங்க, என்று ஃபோனை நீட்டினாள்.

சுலோவுக்கு அந்த நேரத்தில் அதைப் பார்க்க விருப்பமில்லை, இருந்தாலும், சின்னப்பெண் காரணமில்லாமல் இதை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்துப்பார்க்கச் சொல்ல மாட்டாள், முடிவில் ஏதாவது சந்தேகம் இருக்கும். அதைக் கேட்கத் தான் இப்படி வந்து நீட்டுகிறாள் என்றெண்ணி ஃபோனை வாங்கிப் பார்க்கத் தொடங்கினாள்.

அதில் மகப்பேறு மருத்துவர்  ஒருவர், மென்சுரல் கப் பற்றி பேசத் தொடங்கியிருந்தார்.

மென்சுரல் கப்பின் வரலாறு... 

1930 களில் உலகின் முதல் மென்சுரல் கப் இப்படித்தான் இருந்தது...

மென்சுரல் கப் என்னவோ இப்போ தான் புதுசா கண்டுபிடிக்கப் பட்ட மாதிரி நாம நினைச்சுக்கறோம். அப்படி இல்லை. இது 1860 - 70 களிலேயே அமெரிக்காவில் புழக்கத்தில் வந்து விட்டது. ஆரம்பகாலங்களில் இடுப்பைச் சுற்றி ஒரு பெல்ட் போன்ற வளையமிருக்கும் அந்த வளையைத்தில் இந்த மென்சுரல்கப்பை இணைத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் கப்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே சுத்தம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த மாடலை ‘கேட்டமினியல் சாக்ஸ்’ என்ற பெயரில் பதிவு செய்து அதற்கு அந்தக் காலத்தில் காப்புரிமையும் பெறப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ இவை அந்தக் காலத்தில் பெரிய அளவில் மார்க்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவில்லை.

பின்னர் 1937 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகை லியோனா சால்மர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் கிட்டத்தட்ட இன்று நாம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோமே அது போன்றதொரு தோற்றம் கொண்ட மென்சுரல் கப்.

சால்மர் கண்டுபிடித்த மென்சுரல் கப்கள் லேட்டக்ஸ் ரப்பரால் தயாரிக்கப்பட்டவை. அதற்கென அவர் காப்புரிமையும் பெற்றிருந்தார்.  ‘இதை அணிந்து கொள்வதால் பெண்கள் மிக செளகர்யமாக உணர்வார்கள். இப்படி ஒரு வஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைப்போ, அசெளகர்ய நினைப்பு அவர்களுக்கு கொஞ்சமும் இருக்காது. அத்துடன், முந்தைய கண்டுபிடிப்புகளைப் போல இவற்றின் இருப்பை உணர்த்தும் வகையிலான பெல்ட் அல்லது முடிச்சுகள் போன்ற எந்த ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இதில் இல்லை என்பதே இதன் கூடுதல் சிறப்பம்சம்’ என அதன் காப்புரிமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது லேட்டக்ஸ் ரப்பருக்கு டிமாண்ட் அதிகரித்தது. அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. எனவே சால்மரின் கம்பெனி, தனது தயாரிப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தபின் 1950 ல் மிஸஸ். சால்மர் தனது தயாரிப்பில் மேலும் கூடுதல் வசதிகளைப் புகுத்தி நவீனப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். 

1930 ஆம் ஆண்டு வாக்கில் Tass-ette என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்த மென்சுரல் கப்கள் Tassette என்ற ஒரே பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் மிகப்பெரிய விளம்பர அறிமுகத்துடன் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது இந்த மென்சுரல் கப்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 1000 கணக்கான சாம்பிள்கள் அமெரிக்காவில் மருத்துவமனைகள் தோறும் இருந்த நர்ஸ்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. ஆனால், 30 களில் வாழ்ந்த பெண்களைக் காட்டிலும் 50 களில் வாழும் பெண்களிடம் மனதளவில் மென்சுரல் கப்கள் பயன்படுத்துவதில் மாற்றம் இருந்த போதிலும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ரீயூஸபில் மென்சுரல் கப்கள் இழிவானவை என்ற கண்ணோட்டமே விஞ்சி நின்றது. 

பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை எதிர்நோக்கியிருந்த Tassette க்கு எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்காத காரணத்தால் 1963 வாக்கில் அது காணாமல் போனது.
 
Tassette ஐப் பொறுத்தவரை அதன் தோல்விக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டவை 2. அவை;
1. பெண்கள், அந்த வகை நாப்கின்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு மீண்டும் அதைக் கழுவிப் பயன்படுத்த அசூயைப் பட்டது அதற்கான அசெளகர்யங்களில் ஒன்றாக இருந்தது.
2. செளகர்யமாக உணர்ந்த பெண்களும் கூட ஏன் மறுபடியும் மென்சுரல் கப்கள் வாங்கவில்லை என்றால். ஒருமுறை வாங்கியதே நெடுநாட்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்த காரணத்தால் மீண்டும் மென்சுரல் கப் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வந்தது. 

இதன் காரணமாகவே 1970 ஆம் ஆண்டு வாக்கில் மகளிரின் இருவகையான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் Tassaway என்றொரு டிஸ்போஸபிள் மென்சுரல் கப் அறிமுகமானது.

இதற்கான டிமாண்டில் எந்தக் குழப்பமும் பிறகு வரவில்லை. அந்தக் காலத்தில் ஐரோப்பாவிலும், ஃபின்லாந்திலும் கிடைத்த ஒரே டிஸ்போஸபிள் மென்சுரல் கப் என்ற பெயரும், பெருமையும் இதற்கு கிடைத்தது.

பின்னர், 1980 ஆம் ஆண்டு வாக்கில் மென்சுரல் கப்கள் ‘ The Keeper' என்ற பெயரில் உலகம் முழுவதும் மீள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்று வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பவை இத்தகைய மாடல்களையே. இவை லேட்டக்ஸ் ரப்பரால் செய்யப்பட்டவை.
21 ஆம் நூற்றாண்டு வாக்கில் மென்சுரல் கப் தயாரிப்பில் மெடிகல் கிரேட் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டது. இது தான் இன்றைய நவீன யுக பல்வேறு டிஸைன் மென்சுரல் கப்களின் தோற்றத்துக்கான மூலவிதை. இன்று லேட்டக்ஸ் ரப்பர் மென்சுரல் கப் அலர்ஜி என்பவர்கள் தாராளமாக சிலிக்கான் மென்சுரல் கப்களுக்கு மாறிக் கொள்ளலாம். இதில் அலர்ஜி பயமோ, பக்க விளைவுகளோ கிடையாது.

இத்தகைய சிலிக்கான் மென்சுரல் கப்களின் காலம் 2005 முதல் தொடங்குகிறது. இதை ஸ்தாபித்தவர்கள் ஹெலி குர்ஜனென் & லுன்னெட் ஃபவுண்டர். இவர்களது மென்சுரல் கப்களின் ஸ்பெஷல் என்னவென்றால் இவற்றைக் கழுவி மீண்டும் ரீயூஸ் செய்வதால் அலர்ஜி எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம் இவற்றின் ஃப்ளாட் வடிவமைப்பு. அது மட்டுமல்ல மிக மெல்லியவை என்பதால் பயன்படுத்துப் போது வலி இருப்பதில்லை. ஒருமுறை அணிந்து கொண்டால் பிறகு அதை அணிந்திருக்கிறோம் என்ற உணர்வே எழாத அளவுக்கு அத்தனை செளகர்யமான உணர்வைத் தரும் என்பது இதற்கான கூடுதல் பிளஸ்கள்.

அதனால் தான் இத்தகைய மென்சுரல் கப்கள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படி மென்சுரல் கப்பின் வரலாற்றைச் சொல்லி முடித்து விட்டு அடுத்தபடியாக மென்சுரல் கப்களுக்கான அவசியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்;

மென்சுரல் கப்களின் அவசியம் என்ன?

மென்சுரல் பேட்களே ஏகப்பட்ட பிராண்டுகளில் நிறைய வெரைட்டிகள் வரத் தொடங்கியுள்ள இந்த நாட்களில் மென்சுரல் கப்களின் அவசியம் என்ன என்று நிறைய பேர் யோசிக்கலாம். நியாயமான யோசனை தான் அது. ஆனால், இப்போது வரக்கூடிய மென்சுரல் ஃபேடுகளில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக சந்தேகம் உண்டு. அத்துடன் பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பைப் பை மற்றும் செர்விக்கல் கேன்சருக்கு இந்த பேடுகள் கூடக் காரணமாகக் கூடிய வாய்ப்புகள் அனேகம், அப்படி இருக்கும் போது முற்றிலும் பாதகம் அற்ற சிலிக்கான் பேஸ்டு மென்சுரல் கப்களைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது தானே!

விலை மலிவானவை! 

அது மட்டுமல்ல, இன்றைக்கு மார்கெட்டில் ஆர்கானிக் மென்சுரல் பேடுகள் கிடைத்தாலும் அவற்றின் விலையோடு ஒப்பிடுகையில் மென்சுரல் கப்கள் மிக மலிவானவை. அத்துடன் ஒருமுறை வாங்கி சுகாதாரமான முறையில் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து விட்டால் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பயமே இல்லை. அந்தளவுக்கு அதன் விலை ஓரிரு ஆயிரங்களுக்குள் தான். என்றார்.

மென்சுரல் கப்களைப் பயன்படுத்துவது எப்படி?

இதைப் பயன்படுத்துவதும் வெகு எளிது. இந்தியன் டாய்லட்டுகளில் உட்காரும் போஸில் கால்களை அகட்டி அமர்ந்து கொண்டு, மென்சுரல் கப்பை நீளவாக்கில் இரண்டாக மடித்து பெண்ணுறுப்பின் உள்ளே பொருத்திக் கொண்டால் சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடிய இந்த கப்கள் உள்ளே சென்றதும் விரிந்து அதன் பழைய கூம்பு வடிவ நிலைக்குத் திரும்பி விடும். அவ்வளவு தான். குறைந்த பட்சம் 8 மணி நேரம் தாங்கும். பிறகு மீண்டும் வெளியில் எடுத்து வாஷ்பேஸின் அல்லது பாத்ரூம் டாய்லெட்டில் கொட்டி சுத்தம் செய்து விட்டு ஸ்டெரிலைஸ் செய்து மறுமுறை பயன்படுத்தலாம்.

ஸ்டெரிலைஸ் செய்யும் முறை...

குழந்தைகளுக்கு பால் பாட்டில் ஸ்டெரிலைஸ் செய்து பழக்கமுள்ளவர்களுக்கு இது மிக எளிது. அதே விதத்தில் ஒரு பாத்திரத்தில் 20 நிமிடங்கள் நீரைக் கொதிக்க விட்டு அதில் மென்சுரல் கப்களைப் போட்டு 5 நிமிடங்களின் பின் வெளியில் எடுத்தால் முடிந்தது.

மென்சுரல் கப்பை வெளியில் எடுக்கும் முறை...

மென்சுரல் கப் பயன்படுத்தும் போது\, அதை வெளியில் எடுக்க வேண்டுமென்றால், முன்னதாகச் சொன்னவாறு அது சக்ஸன் ஃபார்முலாவில் இயங்கக் கூடியது என்பது தெரியுமில்லையா? அதனால் அப்படியே அதன் காம்புப் பகுதியைப் பிடித்து இழுக்காமல். கையை உள்ளே விட்டு கப்பை உட்புறமாக மிருதுவாக அழுத்தி மடித்துப் பின் வெளியில் இழுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தோலுடன் ஒட்டிக் கொண்டு எரிச்சலை ஏற்படுத்தி விடக்கூடும். அதில்லாமல் காப்பர் டி கர்ப்பத்தடை சாதனம் பொருத்தி இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தி விட்டு யோசிக்காமல் அப்படியே இழுத்தீர்கள் என்றால் கப்புடன் அந்த சாதனமும் வெளியில் உருவிக் கொண்டு வந்து விடக்கூடும். எனவே அம்மாதிரி சூழலில் பொறுமையாக அதை வெளியில் எடுக்க முயல வேண்டும். ஓரிரு முறை பயன்படுத்திப் பார்த்து விட்டீர்கள் என்றால் பழகி விடும்.

விடியோவை முழுவதுமாகப் பார்த்து முடித்த சுலோசனாவுக்கு, இப்போது தன் மகளுக்கு இதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே ஆமினியை அருகே அழைத்து, ஆமாம், இந்த டாக்டர் ரொம்பத் தெளிவாவும், விளக்கமாவும் சொல்றாங்கப்பா, உனக்கு ஓக்கே ன்னா வாங்கி யூஸ் பண்ணித்தான் பாரேன்’ என்றாள்.

நீங்களும் கூட மாறிடுங்கக்கா, நாமளும் ஃபேஷன் தான்னு இப்ப அவங்க தெரிஞ்சுக்கட்டும்’ என்று பழைய மென்சுரல் ஃபேடு விளம்பர பாணியில் ஆமினி சொல்ல’ சுலோசனாவுக்கு சிரிப்பு வந்தது.

சரி போய் வேலையைப் பார் பெண்ணே’ என்று அவளை திருப்பி விட்டு தானும் வேலைக்குள் மூழ்கிப் போனாள்.

]]>
MENSTRUAL CUP HISTORY, ECONOMICALLY GOOD MENSTRUAL CUPS, மென்சுரல் கப்கள், மென்சுரல் கப் VS மென்சுரல் பேட், மென்சுரல் கப்பின் வரலாறு, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/17/menstrual-cups-are-economically-good-or-bad-and-its-history-3173330.html
3173303 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பிகாரில் 100 க்கும் மேலான குழந்தைகளைக் காவு வாங்கிய லிச்சிப்பழம்! அதிர்ச்சி ரிப்போர்ட்! கார்த்திகா வாசுதேவன் Monday, June 17, 2019 12:30 PM +0530  

ஏழைக் குழந்தைகளுக்கு எமனான லிச்சிப் பழங்கள்!

மிக இனிப்பான லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால் பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தமாக ஒரே நாளில் சுமார் 48 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்றொரு செய்தியை இரண்டு நாட்களுக்கும் முன்பு காலை நாளிதழ்களில் காண நேர்ந்தது. இப்போது கூடுதலாக 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதே லிச்சியால் உயிரிழந்ததாக இன்று இணையச் செய்திகளில் காண நேர்ந்ததும் பகீரென்று இருந்தது.

லிச்சிப் பழங்கள் உண்ணத்தகுந்தவை தானே? அவையொன்றும் விஷமென்று ஒதுக்கப்பட்டவை அல்லவே! பிறகெப்படி என்று குழப்பமாக இருக்கிறதா உங்களுக்கும்?! காரணம் இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அத்தனை பேருமே வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். காலை முதலே எதையும் உண்ணாமல் லிச்சிப் புதர்களுக்குள் சுற்றித் திரிந்து பசிக்கும் போதெல்லாம் அந்த லிச்சிப் பழங்களை அதிகமாகப் பறித்து உண்டதால் அவர்களுக்கு இப்படியொரு விபரீத மரணம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் இறந்தவர்களின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள். பிகாரின் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இது லிச்சி சீசன். பெருமளவில் காய்க்கும் லிச்சிப் பழங்கள் தான் அங்கு வாழும் ஏழைக்குழந்தைகளின் காலை உணவாக மாறி வருகிறது.

இறந்த குழந்தைகள் அனைவருமே 10 வயதுக்குக் கீழானவர்கள். இவர்களது இறப்புக்கு காரணம் லிச்சிப் பழம் தான் என்று கண்டறியப்பட்ட பின்பு மாநில அரசின் சுகாதாரத் துறை மூலம் அப்பகுதி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை!

முஸாபர்பூர் மற்றும் பாட்னாவைச் சார்ந்த ஏழைப் பெற்றோர், தங்களது  குழந்தைகள் பசிக்கும் போது தங்களையும் அறியாது காலை வேலையில் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களை அதிக அளவில் உண்பதைத் தடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அரைகுறையாய் பழுத்த பழங்கள், அல்லது காயாகவே உள்ள லிச்சிகளை உண்பதையும் தடுக்க வேண்டும். அத்துடன் லிச்சிப் பழங்களை அதிகம் உண்ட குழந்தைகளை வெறும் வயிற்றுடன் இரவில் படுக்கைக்கு அனுப்பக்கூடாது. ஒருவேளை தங்களது குழந்தைகள் பசி தாங்கமுடியாமல் லிச்சிப் பழங்களை அதிகமாக உண்டு விட்டார்கள் என்று தெரிந்தால், இரவில் வேறு சத்தான உணவுகளை எதையேனும் அளித்து அவர்களது வயிற்றை நிரப்பி பின்னரே அவர்களைத் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முஸாஃபர்பூர் அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மருத்துவரான எஸ்.பி சிங்.

லிச்சியில் ஏது நஞ்சு?!

லிச்சிப் பழம் சாப்பிட்டால் உயிர் போகுமா? பழங்கள் ஆரோக்யமானவை தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்கு விஷயம் அப்படி இல்லை. Acute Encephalitis Syndrome (AES) என்று சொல்லப்படக்கூடிய கொடிய மூளைச் செயலிழப்பு நோய் வரக் காரணமான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் ஒன்று லிச்சிப்பழங்களில் இருப்பதால் அதை வெறும் வயிற்றில் உண்ணும் குழந்தைகளிடத்தில் கொடிய விளைவுகளை அப்பழங்கள் ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். லிச்சியில் இருக்கும் மெத்திலீன் சைக்ளோ ப்ரொபைல் கிளைசீன் (MCPG) எனும் வேதிப்பொருள் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது அதாவது பசியின் காரணமாக ஏற்படக்கூடிய வளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தைகளிடையே சர்க்கரை அளவு குறையும் போது அவர்களது மூளைச்செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மரணம் வரை இட்டுச் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஹைப்போகிளைசீமியா என்பார்கள். 

தொடர் மரணங்களுக்குக் காரணம் லிச்சியாக இருக்க வாய்ப்பில்லை என மறுக்கும் மருத்துவர்!

இப்பகுதி குழந்தைகளின் இறப்பிற்கு லிச்சிப் பழங்களை உண்டது தான் காரணம் என அரசு பொது மருத்துவரும் வேலூரைச் சேர்ந்த டாக்டர் ஜான் மற்றும் டாக்டர் அருண் ஷா இணைந்து சமர்பித்த ஆய்வுக் கட்டுரையும் உறுதியாகக் கூறிய பின்னரும். குழந்தைகளின் தொடர் இறப்புக்குக் காரணம் லிச்சிப் பழங்கள் அல்ல என்று மறுத்திருக்கிறார் முஸாஃபர்பூர், ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மூத்த மருத்துவரும், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவரும், உள்ளூர் மருத்துவ ஆய்வாளருமான டாக்டர் கோபால் ஷங்கர் சாஹ்னி. ஏனெனில், அக்யூட் என்செபாலிட்டீஸ் காரணமாக நிகழும் குழந்தைகளின் தொடர் மரணம் குறித்து 1995 ஆம் ஆண்டு முதலே ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருபவர் அவர். லிச்சிப் பழங்களினால் தான் மரணம் ஏற்படுகிறது என்றால், அந்தப்பகுதியில் இன்னும் லிச்சி விளையும் கிராமப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பாதிப்பு இருக்க வேண்டுமில்லையா? அங்கெல்லாம் இப்படிப் பட்ட மரணங்கள் இல்லையே! அப்படியானால், குழந்தைகளின் தொடர் இறப்பிற்கு லிச்சிப் பழங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது தெளிவாகிறது. லிச்சி சீஸனில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மட்டும் கொத்துக் கொத்தாக் அக்யூர் என்செபாலிட்டீஸ் பாதிப்புக்கு உள்ளாகி உடனடியாக மரணிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நாம் தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாகத்தான் கண்டறிய வேண்டுமே தவிர அவசரப்பட்டு லிச்சிப் பழங்களின் மீது பழியைப் போட்டு விஷயத்தை முடித்து விடக்கூடாது என்கிறார் இவர்.

அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பத குழறுபடிகளே மரணத்திற்கு காரணம்!

அதுமட்டுமல்ல, இந்த நோய் பரவும் போது இங்கு நீடிக்கும் அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கூட நோய் பரவுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகி விடுகிறது. இதை என்னால் கடந்த ஐந்தாண்டுகளாகச் சேகரித்து வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆதாரத்துடன் எளிதில் மெய்பிக்க முடியும். வெப்பநிலை 35 டிகிரிக்கும் அதிகமாகி ஈரப்பதம் 65% முதல் 80% க்குள் வரும்போது நோய் அதி தீவிரமாகப் பரவத் தொடங்கி விடுகிறது.

ஐந்தாண்டு புள்ளி விவர ஆதாரம்!

2015 ஆம் ஆண்டில் AES (Acute Enchepalitis Syndrome) பாதிப்புக்கு உள்ளானவர்கள் 390 பேர். 2014 ஆம் ஆண்டில் 1,028 பேர், 2016 ஆம் ஆண்டில் 9 பேர், இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் அப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் மிக அதிகமாக இருந்திருப்பது தெரிகிறது. அதனால் நோய் பரவும் வேகமும் அதன் தாக்கமும் கூட அதிகமாகவே இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு சில வருடங்களில் 10 முதல் 25% நோய் பரவும் வேகம் கட்டுக்குள் இருந்திருக்கிறது. இந்த ஆண்டு வெப்பநிலை 42 டிகிரியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஈரப்பதமும் 65% முதல் 70% க்குள் இருக்கிறது. அதனால் தான் AES பாதிப்பு என்றுமில்லாத அளவில் தன் கொடூர முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது.

டாக்டர் கோபால் ஷங்கர் இவ்விதமாக வாதிட்டாலும், பிகாரைச் சேர்ந்தவரும் கிஷான் பூஷன் விருது பெற்றவருமான SK துபே, குழந்தைகள் மரணத்திற்கு லிச்சிப் பழங்களே அடிப்படைக் காரணம் எனத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மருத்துவர்களின் மாறுபட்ட கருத்திலும் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் இந்த மருத்துவர்கள் இந்த மரணங்களில் தங்களது ஆய்வுகளை மேலும் முன்னோக்கி எடுத்துச் சென்று ஆராய்ந்து தொடர் மரணங்களுக்கு காரணமான வைரஸை கண்டறிந்து மேலும் பல விலைமதிப்பற்ற குழந்தைகள் மரணமடையாமல் தடுக்குமாறு கோரியுள்ளார். 

லிச்சிப் பழங்களுக்கான வரவேற்பு அதலபாதாளத்தில் விழும்!

ஒருவேளை இவர்களில் பலரது கூற்றுப்படி இந்த அக்யூட் என்செபாலிட்டீஸ் சிண்ட்ரோம் மரணங்களுக்கு லிச்சிப்பழங்கள் தான் அடிப்படைக் காரணம் எனத் தெரியவந்தால் முதலாவதாக இப்பழங்களுக்கான விலை, பழச்சந்தையில் அதல பாதாளத்தில் விழக்கூடும். எனவே இப்பகுதியில் வாழும் லிச்சி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மருத்துவர்கள் தொடர் மரணங்களுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சொல்லும் வரை குழப்பமான பீதிநிலையே இங்கு நீடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

இப்படி பிகாரில், தொடரும் குழந்தைகள் மரணத்திற்கு ஒரு புறம் லிச்சிப்பழம் தான் காரணம் எனச் சிலரும், மறுபுறம் அந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலையும், ஈரப்பதமும் தான் காரணம் எனச் சிலரும் அவரவர் வாதத்தில் உறுதியாக நிற்கும் போது , தள்ளியிருந்து இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் மக்களுக்கோ உண்மையான காரணம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகள் மரணங்களுக்கெதிரான கண்டனமும் அதிகரித்து வருகிறது. 

அமைச்சர் பார்வையிடும் 1 மணி நேர இடைவெளியில் சடுதியில் 4 குழந்தைகள் மரணம்!

தற்போது ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாகி வரும் குழந்தைகளை நேரில் கண்டு ஆறுதல் கூற சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச்வர்த்தன் இன்று முஸாஃபர்பூர் SKMC சென்றார். அங்கு அமைச்சர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அந்த 1 மணி நேர இடைவெளியில் மேலும் 4 குழந்தைகள் மரணமடைந்தது அமைச்சரை திகைக்கச் செய்வதாக இருந்தது. மேலும் மரணங்கள் நிகழாமல் இருக்க தடுப்பு மருத்துவ முறைகளை மேம்படுத்தச் சொல்லி மருத்துவர்களிடம் உத்தரவிட்ட அமைச்சர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

]]>
லிச்சிப்பழ மரணங்கள், பிகார், காலநிலை மாற்றங்கள், தொடரும் குழந்தை மரணங்கள், 100 க்கும் மேல்மரணம், bihar deaths, 100 more deaths in bihar, litchi fruits, ACUTE ENCHEPALITIES SYNDROME, AES, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/17/100-more-dead-in-bihar-due-to-aes-litchi-to-blame-3173303.html
3166149 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இரண்டுமே இளம்பெண்களின் ஆடை பற்றிய விமர்சனம் தான், ஆனால், இறுதியில் யாருடைய அணுகுமுறைக்கு வெற்றி? கார்த்திகா வாசுதேவன் Thursday, June 6, 2019 03:16 PM +0530  


ஓரிரு நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒரு விடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது. அது இரு இளம்பெண்களுக்கு இடையிலான மிகச்சிறிய அந்நியோன்யமான உரையாடல். அதில் என்ன ஸ்பெஷல் என்று தோன்றுமே? இரண்டு பெண்களில் ஒருவர் பாலிவுட் டாப் ஸ்டார் சல்மான் கானின் தத்துச் சகோதரி அர்பிதா கான் சர்மா. மற்றொருவர், சல்மானின் சகோதரரான அர்பாஸ் கானை மணந்து கொள்ளவிருக்கும் ஜார்ஜியா. இருவரும் நேற்று மும்பையில் மாஜி எம் பியும், பாலிவுட் பிரபலங்களிடையே வெகு பிரபலமானவருமான பாபா சித்திக் அளித்த இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ளச் சென்றனர்.

அர்பிதா கான் முன்னரே சென்று விருந்தில் அமர்ந்திருந்தார். அர்பாஸ் கானுடன் வந்த ஜார்ஜியா, மரியாதை நிமித்தம் அர்பிதாவைப் பார்த்து ஏதோ பேசி விட்டு நகர, அவரை இடைமறித்த அர்பிதா, ஜார்ஜியாவிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ சொன்னார். வருங்கால நாத்தனார் சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பாகத் தலையசைத்த ஜார்ஜியா பிறகு தனது துப்பட்டாவை சரி செய்ய முயற்சித்தார். பின்னர் அடுத்தொரு விடியோ க்ளிப்பிங்கில் ஜார்ஜியா, தனது துப்பட்டாவை, கழுத்தைச் சுற்றி மூடி மிகச்சரியாக அணிந்து கொண்டு காட்சியளித்தார்.

விஷயம் இது தான். முதல் விடியோ கிளிப்பிங்கில் ஜார்ஜியா அணிந்திருந்த சல்வாரின் கழுத்துப் பகுதி அபாயகரமான அளவில் கீழிறங்கி, ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பார்ப்பவர்களின் முகத்தில் அறைவது போன்று இருந்தது. இஃப்தார் விருந்துக்கு இத்தனை கவர்ச்சி எதற்கு? அதுவும் புனிதமான மதச் சடங்குக்காக கடைபிடிக்கப்படும் நோன்பு நேரத்தில் இந்த கவனச் சிதறலை ஏற்படுத்தும் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் தேவையில்லை என அர்பிதா கூறியிருக்கலாம். அதை ஆமோதிக்கும் விதத்தில் ஜார்ஜியா அடுத்த விடியோ கிளிப்பிங்கில் மிகச் சரியாக துப்பட்டாவால் கழுத்தை மூடிக் கொண்டு வளைய வந்திருக்கலாம் என்று நெட்டிஸன்கள் கிளப்பி விடுகின்றனர். அதை இந்த விடியோவும் நிஜம் என்கிறது.

 

சரி இது அவர்களது பெர்சனல் விவகாரம் அதை விட்டு விடலாம். 

கடந்த ஏப்ரலில் டெல்லி, குருகிராம் ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்த விவகாரம் ஒன்று இணையத்தில் இதை விட அதிகமாக ட்ரெண்ட் ஆனது.

நடுத்தர வயது முரட்டுத்தனமான பெண் ஒருவர், ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்த இளம்பெண் முழங்காலுக்கு மேலே தோல் தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததைக் கண்டு, அவர்களை அதட்டலாக அழைத்து, இப்படியெல்லாம் குட்டை, குட்டையாக உடையணிந்து கொண்டு பொது இடங்களில் கவர்ச்சியாக வளைய வந்தீர்கள் என்றால் ஆண்கள் உங்களை நிச்சயம் மானபங்கம் செய்வார்கள். அதற்குத் தகுதியானவர்கள் நீங்கள்! என்று மிரட்டலாகச் சொல்ல, இதைக் கேட்ட அந்த இளம்பெண்கள் கொதித்துப் போய் அந்தப் பெண்மணியை, இப்போதே, நீங்கள் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், அறிவுரை என்ற பெயரில் நீங்கள் சொன்ன அருவருப்பான வார்த்தைகளை எல்லாம் நாங்கள் விடியோவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதை அப்படியே நெட்டில் பதிவேற்றி விட்டு உங்களை உண்டு, இல்லையென்று செய்து விடுவோம் என எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

அந்தப் பெண்மணி இளம்பெண்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளை அப்பட்டமாகச் சொல்வதென்றால்; ‘இப்படியா முட்டிக்கு மேல் கால்கள் வெளியே தெரியும் வண்ணம் உடையணிவீர்கள்? நீங்களெல்லாம் ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்முறைக்கு உட்படத் தகுதியானவர்கள், என்று சொன்னதோடு, அந்தப் பெண்கள் இவரை எதிர்த்து வாயாடத் தொடங்கிய போதும் தான் கூறிய அபத்தமான வார்த்தைகளில் இருந்து பின்வாங்காமல், ஷாப்பிங் மாலில் இருந்த ஆண்களை நோக்கி, ‘வாங்க, வந்து இந்தப் பெண்களை இப்போதே மானபங்கம் செய்யுங்கள்’ என்று வேறு அசிங்கமாக விமர்சித்திருக்கிறார். அந்தச் சமயத்தில், இளம்பெண்கள் அவரது அசிங்கமான கற்பனைக்காக உடனடியாக மன்னிப்புக் கேட்கச் சொல்லி காட்டமாக அந்தப் பெண்மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மற்றொரு நடுத்தரவயதுப் பெண் அவர்களது சண்டையில் தலையிட்டு, 

‘பெண்களின் உடை விஷயத்தைப் பற்றி விமர்சிக்க நீங்கள் யார்? இந்தப் பெண்களில் யாராவது உங்களது மகளா? உங்களது மகள்கள் என்றால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா? அவர்கள் யாராக இருந்த போதும், பெண்களை விமர்சிக்கையில் அதற்கொரு வரைமுறை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவது தவறு, எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பெற்றவள் என்ற முறையில் சொல்கிறேன், எனக்கு இந்தப் பெண்களின் உடையில் ஆபாசம் எதுவும் தெரியவில்லை. உங்களால் நல்லபடியாக சிந்திக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டிருப்பதே மேல்! என்று நறுக்குத் தெறித்தார் போல அந்தப் பெண்மணியின் முரட்டுத்தனமான அதட்டலை தட்டிக் கேட்டார். இத்தனைக்குப் பிறகும், சண்டைக்குக் காரணமான முரட்டுப் பெண்மணியோ, தன் கடுமையான விமர்சனம் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளாமல், சண்டையை விடியோ எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை நோக்கி, உரத்த குரலில், நீங்கள் என் பேச்சை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டால் அது உங்களது இஷ்டம். எனக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. பெண்கள், அதீத கவர்ச்சியாக உடையணிந்தால் ஆண்களால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம், இதை நான் எங்கே வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன்’ உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மொபைல் திரையைப் பார்த்து தில்லாகச் சொல்லி விட்டு கூலாக அங்கிருந்து நடையைக் கட்டினார்.

குருகிராம் வாக்குவாதம் காணொலியாகக் கீழே....

 

மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளிலுமே விஷயம் ஒன்று தான்.

இருவருமே ஆடையைப் பற்றித்தான் விமர்சித்திருக்கிறார்கள்.

ஒருவர் வயதில் சின்னவராக இருந்த போதும், கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்த பெண், தனது வருங்கால அண்ணி என்ற போதும், அவரிடம் உடையைப் பற்றி பக்குவமாக விமர்சித்து, தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைத்து விட்டார். ஆனால், குருகிராம் முரட்டுப் பெண்மணியோ, என்னவோ, உலகில் ஒழுங்காக ஆடையணியும் பெண்களுக்கெல்லாம் தான் மட்டுமே ஜவாப்தாரி என்பது போல அதட்டி, ஆபாசமாக விமர்சித்து அந்தப் பெண்களுக்கு தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைக்க முயற்சிக்காமல், பூர்ஷ்வா மனப்பான்மையுடன் மேலும் சண்டைக்கு வித்திட்டு விட்டு நடையைக் கட்டினார். ‘நான் அப்படித்தான் சொல்வேன், நீ ஒழுங்காக இரு’ என்றால் இந்தக் காலத்துப் பெண்கள் அதைக் கேட்பார்களா? மாட்டார்களா? என்பதைக் கூட யோசிக்காமல் பேசிய அவரைக் கண்டால் ச்சே... உள்ளதையும் கெடுக்கும் மூர்க்கவாதி போல என்று எரிச்சலாகக்கூட இருந்தது.

அவ்வளவு தான் வித்யாசம்.

எதைச் சொல்வதாக இருந்தாலும். லேசான கண்டிப்பு இருப்பது தவறில்லை. ஆனால், அந்தக் கண்டிப்பின் எல்லை என்பது எதிரில் இருப்பவரது சுயமரியாதையையும், தன்மான உணர்வுகளையும் புன்படுத்தாத வண்ணம் கண்ணியமான வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும். அப்போது தான் அது பிறரால் மதிக்கப்படும். இல்லாவிட்டால் மீண்டும் ஏவியவரையே தாக்கி அழிக்கவல்ல பூமாராங் ஆகிவிடும்.

]]>
Arpitha khan, salman khan, GIORGIA, ARBAAZ KHAN, GLAMOUROUS DRESSING, GURUGURAM LADY'S CONTROVESIAL COMMENT, GIRLS DRESSING STYLE CRITICISM, GURUGRAM SHOPPING MALL CONTROVERSY https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/06/both-are-criticisms-of-young-womens-clothing-but-who-finally-succeeded-in-the-approach-3166149.html
3164913 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நடு வீட்டில் வைத்து நாயைக் குளிப்பாட்டினால்... RKV Tuesday, June 4, 2019 01:11 PM +0530  

வார்த்தைகளுக்குள் உள்ளர்த்தம் கற்பித்துக் கொள்வது மனிதர்களின் பொதுவான இயல்பு. நாய் வாலை நிமிர்த்த முடியாது போல, மனிதர்களின் இந்த இயல்பையும் மாற்ற முடியாது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், காரணமாகத்தான், கட்டுரையின் இறுதியில் அதற்கான பதில் உண்டு. 

சரி இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள்.

நீங்கள் எப்போதாவது நாயைக் குளிப்பாட்டி இருக்கிறீர்களா? 

வளர்ப்பு நாயைத்தான், தெரு நாய்களைக் குளிப்பாட்டும் அளவுக்கு மிருகங்களின் மீதான பரிவுணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருப்பதில்லை. 
அதற்கெல்லாம் நம்மூரில் மேனகாகாந்திகளும், அமலாக்களும், திரிஷாக்களும் பிறந்து வர வேண்டும். நான் கேள்விப்பட்ட வரை அவர்கள் தான் மிருகங்களின் மீது சாலப் பரிந்தூட்டும் அன்னைகளாக இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, என் வீட்டின் அருகிலும் கூட ஒரு மேனகா காந்தி இருக்கிறார் என்பதை நான் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். அவர் வீட்டிலிருந்து தினமும் வேலைக்காரர்கள் உணவு சமைத்து எடுத்து வந்து தெரு முக்கில் அமர்ந்து எங்கள் ஏரியாவில் இருக்கும் அத்தனை நாய்களுக்கும் உணவிடுவார். தங்களிடம் தொடர்ந்து சாப்பிட்டுப் பழகிய தெரு நாய்களுக்கு அவர்கள் கழுத்துப் பட்டி அணிவித்து தடுப்பூசி எல்லாம் போட்டு பராமரித்து வருவதாகக் கேள்வி. இது நிச்சயமாக மிகப்பெரிய சேவையே தான். இதில் அண்டை வீட்டுக்காரர்கள், அக்கம் பக்கத்தார் என எங்களது பங்கு என்னவென்றால், அவர்களை கரித்துக் கொட்டி, எப்போ பார், நாய் வளர்க்கறேன்னு 10, 15 நாயக்கூட்டிட்டு வாக்கிங் போறாங்க. ச்சே, கொஞ்சம் நிம்மதியா தெருவுல நடக்க முடியுதா? என்று எங்களுக்குள் கம்ப்ளெய்ண்ட் செய்து கொண்டு அவர்களை அன்ஃப்ரெண்டு செய்யாமல், நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதே மேல் என்றிருப்பது தான்.

சிலருக்கு அனிமல்ஸ் என்றாலே அலர்ஜி. எனக்கும் தான். ஆனால், அதற்காக யாராவது பெட் அனிமல்ஸ் வளர்த்தால் அதைப் பார்த்து காண்டாகும் அளவுக்கு மனவிலாசம் அற்றுப் போய்விடவில்லை 

சமீபத்தில் வெளிநாட்டில் பெட் அனிமல்ஸ் என்று சொல்லப்படக்கூடிய வளர்ப்பு மிருகங்களை அவர்கள் எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள் என்று ஒரு விடியோ பார்த்தேன். கைக்குழந்தையைப் பராமரிப்பது போல அத்தனை பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக நீங்களும் தான் அந்த விடியோவைப் பாருங்களேன்!


 

நம் நாட்டிலும், இப்படி பெட் அனிமல்ஸ் மேல் உயிராக இருப்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள் என்பதை மேலே சொன்னேனில்லையா அந்த அண்டை வீட்டுக்காரம்மா மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். அவர்கள் வீட்டில் மனிதர்களுக்குத் தான் தடுப்பு அரண் உண்டே தவிர நாய்களுக்கு இல்லை. வீட்டுக்குள் நாய்கள் சர்வ சுதந்திரமாக வளைய வருகின்றன. மேலே இரண்டு மாடிகளும், அவற்றில் சில ஆடம்பர அறைகளும் உண்டு. எங்கும் நாய்களுக்குத் தடையே இல்லை. தெரு நாய்கள் தவிர பெர்மனண்ட்டாக வீட்டுக்குள்ளும் நான்கைந்து நாய்களை சொந்தப் பிள்ளைகள் போல வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்னென்ன உரிமைகளை எல்லாம் அளித்திருக்கிறோமே அதெல்லாம் அவர்கள் வீட்டில் அந்த நாய்களுக்கு உண்டு. நாங்கள் வாக்கிங் செல்கையில் பார்த்திருக்கிறோம். அந்த வீட்டில் மிரள வைக்கத் தக்க சைஸில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டிருப்பதை. இன்னொரு மிடில் சைஸ் அல்சேஷன் உண்டு, அது வீட்டருகில் யார் நெருங்கினாலும் சரி, தன் பாணியில் குரைத்துக் குரைத்தே, வந்திருப்பது யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்ன வேண்டும்? என்றெல்லாம் தெரிந்து கொண்டாற் போல மேலே சென்று அந்த வீட்டம்மாவிடம் சொல்லி விட்டு வரும். இன்னொருபக்கம் ஒரு குட்டி பொமரேனியன் எந்நேரம் பார்த்தாலும் கால் துடைக்கும் மேட் போன்ற குட்டி மெத்தையில் சமைந்த பெண்ணைப்போல குத்த வைத்து உட்கார்ந்திருக்கும். யாராவது வாசலைக் கடப்பது தெரிந்தால், வீட்டிலிருக்கும் வயதான பாட்டிகள் முனகுவார்களே, அதைப் போல மென்ஸ்தாயி அதட்டல் வரும் அதனிடமிருந்து. இன்னொரு வெரைட்டி நாய், அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை, உடல் நீளமாக உருளை போல இருக்கும். வால் நீண்டு வளைந்து அரைவட்டமாக இருக்கும். கண்களில் எப்போதும் கோபம் கொப்பளிக்கும். கொஞ்சம் டேஞ்சரான நாய் தான். இது வரை யாரையும் கடித்து வைத்ததெல்லாம் இல்லை. அவர்கள் தான் கேட்டைப் பூட்டியே தானே வைத்திருக்கிறார்கள். எப்போதாவது நேரம் வாய்த்தால் அந்தம்மா, சூரிய பகவான் எட்டுக் குதிரை பூட்டிய சாரட்டில் வானவீதியில் ஊர்வலம் போவது போல அந்தம்மா தனது பஞ்ச பாண்டவ நாய்ப்பிள்ளைகளை கழுத்துப் பட்டை பூட்டி ஒற்றை ஆளாக வாக்கிங் அழைத்துச் செல்வார். நாய்க்கொரு திசையில் இழுத்தாலும் பொறுமையாக வாண்டுப் பிள்ளைகளை அதட்டுவது போல அதட்டி ஒரு சுற்று அழைத்துப் போய் வருவார். இதெல்லாம் பார்க்க படு வேடிக்கையாக இருக்கும். ஆக மொத்தம், அந்த வீட்டில் நாய்களை, நாய்களாகப் பார்த்தது நாங்கள் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். 

அப்போதெல்லாம் யோசித்திருக்கிறேன். எல்லாம் சரி தான். ஆனால், இந்த நாய்களுக்கு சாப்பாடு போட்டு பராமரித்து வளர்ப்பதெல்லாம் சரி தான். ஆனால், குளிப்பாட்டுவது தான் மிகக் கடினமான காரியமாக இருக்குமென்று. ஏனென்றால், எனக்கு வாய்த்த அனுபவம் அப்படி.

நான் என் அத்தை வீட்டில் நாய் வளர்த்தார்கள். அதன் பெயர் விக்கி. சுத்த வெள்ளை நிறம். ஒரு நடுத்தரக்குடும்பத்தில் நாய் வளர்க்க ஆசைப்படுவோர் படக்கூடிய சிரமங்கள் அத்தனையையும் என் அத்தை பட்டார். நாய் வளர்த்துக் கொண்டு அதை மாதம் ஒரு முறையாவது குளிப்பாட்டாமல் விட முடியுமா? அது கிராமம். இன்று நகரத்தில் அபார்மெண்டுகளிலோ அல்லது தனி வீடுகளிலோ நாய் வளர்ப்பது போல இல்லை அந்த நாட்களில் கிராமத்தில் நாய் வளர்ப்பது என்பது. அது, அதன்பாட்டில் எங்கெங்கோ ஊர் சுற்றி விட்டு வரும். வரும் என்பதை சற்று அழுத்து வாசியுங்கள். ஏனென்றால், நாய் எங்கே சுற்றினாலும் கடைசியாக நிச்சயம் வீட்டுக்கு வந்தே தீரும். அப்போது அதன் கோலத்தைப் பார்த்தீர்கள் என்றால் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சில சமயங்களில், அத்தையின் கண்களில் ரத்தக் கண்ணீர் வராத குறை! 

அத்தையோ, ஒரு குக்கிராமத்து அரசுப்பள்ளியில் தலமை ஆசிரியை வேறு! ஆனாலும், ஏதோ ஒரு ப்ரியத்தின் பேரில் நாய் வளர்த்துக் கொண்டு இருந்தார். நாய் மட்டுமல்ல, அவர்கள் வீட்டில் அப்போது சில காலம் பூனை, முயல் எல்லாம் கூட வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் வெகுகாலமாக எட்டிப்பார்க்கப் படாமல் இருந்த மரப்பரணில் எலிகளும், எலிக்குஞ்சுகளும் கூட வளர்ந்து கொண்டிருந்தன. எப்போதாவது வெள்ளை வெளேரென்று எலிக்குஞ்சொன்று தரையில் தவ்விச் சென்றால் திடுக்கிட்டு அதிராமல் இருக்க நாங்கள் சில நாட்களில் பழகிக் கொண்டோம். இப்படி சக ஜீவராசிகளுடன் கனிந்துருகி வாழ்ந்து நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் அத்தை ஒரு ஞாயிறு விடுமுறையில் விக்கிக்கு வீட்டில் குளிப்பாட்டலாம் என்று முடிவெடுத்தார்.

வழக்கமாக மாமா, கிணற்றுக்கோ  அல்லது கம்மாய்க்கோ அழைத்துச் சென்று குளிப்பாட்டுவது தான் வழக்கம்.

ஆனால், அன்று விதி செய்த சதி... வீட்டில் குளிக்கச் செய்யலாம் என்றெடுத்த முடிவு.

அத்தையின் வீடு... ஒரு நீண்ட தாழ்வாரப் பத்தி. வலது பக்கம் நுழைந்தால் இடது பக்கம் வெளியில் வரலாம். நடுவில் ஒரு கூடம். வீட்டினுள் நுழையும் இரண்டு பாதைகளையும் மூடி விட்டி, கூடத்தை ஒட்டியுள்ள வெளிக்கதவையும் மூடி விட்டு, கூடத்து  சிமெண்ட் தொட்டியில் இருக்கும் நீரை வாரி இறைத்து விக்கியைக் குளிப்பாட்டினால் ஆயிற்று. தீர்ந்தது வேலை. என்று சிம்ப்பிளாக நினைத்து விட்டார் அத்தை.

வலது, இடது பக்க கதவுகளை மூடத் தாழ்ப்பாள் எல்லாம் கிடையாது. வெறும் கொக்கிகள் தான். நாங்கள் அதை இழுத்து தாங்கியில் பொருத்தி  கதவுகளை மூடி விட்டு விக்கியை குளிப்பாட்டத் தொடங்கினோம். அது அப்படியொன்றும் முரடு அல்ல. ஆனால், அன்று படுத்திய பாடு இருக்கிறதே. இன்றும் கூட நினைத்ததுமே மூச்சடைத்து மிரளச் செய்வதாக இருக்கிறது.

அத்தை தண்ணீர் சொம்பைக் கையில் எடுத்ததுமே, விக்கி என்ன நினைத்ததோ தெரியவில்லை. எங்களிடம் இருந்து திமிரத் தொடங்கியது. நாங்கள் இரண்டு பேர் இருந்தும் அதை சமாளிக்க முடியவில்லை. கையில் வழுக்கிக் கொண்டு நழுவியது. விக்கி நல்ல உயரம். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னைக் காட்டிலும் 4 வயது விக்கி சற்று உயரமாகவே இருந்த நினைவு. என்னையெல்லாம் சர்வ சாதாரணமாக ஏமாற்றி வலது பக்க கதவுக் கொக்கியை இடித்துத் தள்ளித் திறந்து ஓடத் தொடங்கியது. ஒரு பக்கம் அத்தை கையில் பிளாஸ்டிக் மக்கில் தண்ணீருடன் அதைத் துரத்த, மறுபக்கம் நானும் கையில் சோப்புடன் அதை இடது பக்க கதவு வழியாகத் துரத்தத் தொடங்கினேன். நான் சோப்புடன் ஓட, அத்தை, மக்கில் தண்ணீரை வாரி, வாரி விக்கி மீது வீச அது எங்களிடமிருந்து தப்பிவதிலேயே குறியாக முழு வீட்டையும் இடஞ்சுழியாகவும், வலஞ்சுழியாகவும் சுற்றிச் சுற்றி ஓட. கடைசியில் தொட்டித் தண்ணீர் தீர்ந்தது தான் மிச்சம். வீடெல்லாம் ஒரே வெள்ளக்காடு. விக்கி மழையில் நனைந்த வெற்றி வீரனாக இன்னும் வீட்டைச் சுற்றுவதை விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில் ஓய்ந்து போன அத்தை. ச்சீ போ நாயே என்று சலித்து போய் மெயின் கதவைத் திறந்து விட்டு விட விட்டான் பாரு ஜூட் என்பதாக பாய்ந்தோடித் தப்பியது விக்கி.

அத்தை தான் மாட்டிக் கொண்டார், மாமாவிடம்.

இதெல்லாம் உனக்குத் தேவையா? இப்போ அதைக் குளிப்பாட்டச் சொல்லி யார் அழுதாங்க, மொத்த வீட்டையும் இப்படி ரணகளப்படுத்தி இருக்கீங்க, என்று ஒரே காட்டுக் கத்தல்.

அப்புறமென்ன, முக்கால் குளியல் நடந்த வீட்டுக்கு முழுக்குளியல் நடத்தி வீட்டைக் கழுவித் துடைத்து, நனைந்த பொருட்களையும், ஆடைகளையும், பெட்டிகளையும் ஆற வைத்து எடுத்து என்று அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலை பின்னி எடுத்தது. அத்தை பள்ளிக்கு லீவு போட்டு விட்டு இதைச் செய்தார். அவ்வளவு தான், பிறகு எப்போதும் நாயைக் குளிப்பாட்டுகிறேன் பேர்வழியென்று எந்த ரிஸ்க்கையும் அவர் எடுத்ததே இல்லை.

ஆனால், அந்த விடியோவைப் பாருங்கள். வெளிநாட்டில் வளர்ப்பு மிருகங்களை எத்தனை அழகாக, எத்தனை நறுவிசாகப் பதமாக குளிப்பாட்டுகிறார்கள் என்று.

இதெல்லாம் நிச்சயம் நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை அப்படித்தான் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கியை குளிப்பாட்டிய கதை தான். ஐ மீன் நடுவீட்டில் நாயைக் குளிப்பாட்டிய கதை தான்.

இப்போது கட்டுரையின் முதல் வரிக்கு வாருங்கள்...

தலைப்பைக் கண்டு இது ஏதோ அரசியல் கட்டுரை என்று ஆர்வமாய் நுழைந்தவர்களின் ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பல்ல. இது வளர்ப்பு மிருகங்களை குளிக்க வைப்பதைப் பற்றியதான ஒரு நேரடியான கட்டுரை. 

]]>
பெட் அனிமல்ஸ், வளர்ப்பு மிருகங்கள், வளர்ப்பு மிருகங்களை குளிப்பாட்டுதல், pet animals, bathing pet animals, bathing baby animals, sattirical pet animals https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/04/if-your-dog-taking-bath-in-the-middle-of-the-house-3164913.html
3164294 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஃபேஸ்புக் புகழ் போலி ஐபிஎஸ் ஆஃபீஸர் கைது!  RKV Monday, June 3, 2019 12:57 PM +0530  

இந்த இளைஞனின் புகைப்படத்தைப் பாருங்கள்.

பெயர் அபய் மீனா. வயது 20. அதற்குள் ஊருக்குள் எங்கு செல்வதாக இருந்தாலும் ஐ பி எஸ் என்று சொல்லி மூன்று நட்சத்திரங்கள் பொறித்த காவல்துறை போலி வாகனத்தில் சென்று மிடுக்காக இறங்கி பல்வேறு விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊரை ஏமாற்றி இருக்கிறான்.

எப்போதிருந்து இவன் இந்த வேலையைத் தொடங்கி இருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால், இப்போது வகையாக மாட்டிக் கொண்டான். சில விழாக்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட இவனுடன் கலந்து கொண்டு சம இருக்கையில் அமர்ந்து சிரித்துப் பேசி, இவனது பாராட்டுகளில் திளைத்துக் கை தட்டிக் களைந்திருக்கிறார்கள். ஏன் யாருக்குமே சந்தேகம் வரவில்லை என்பது பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது மட்டுமல்ல, பலவேறு தனியார் கல்லூரிகள் மற்றும் போட்டித் தேர்வு மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் இவன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறான். அங்கெல்லாம் ஐ ஐ டி தேர்வுகளுக்கும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் வெற்றிகரமாகத் தயாராவது எப்படி? என்று  டிப்ஸ் அளித்திருக்கிறான். இத்தனைக்கும் இவன் பள்ளி இறுதி வகுப்பைக் கூடத் தாண்டவில்லை என்கின்றன இவனது பள்ளிச் சான்றிதழ்கள்.

எப்படி சாத்தியமானது இத்தனை பெரிய ஏமாற்று வேலை?

மொத்த ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் திகைத்துப் போய் இவனைப் பற்றிய வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையின் சிறப்புச் செயல்பாடுகள் பிரிவைச் சார்ந்த SOG (ஸ்பெஷல் ஆபரேசன்ஸ் க்ரூப்) காவலர்கள் அபய் மீனாவை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுற்றி வளைத்துப் பிடித்த பின்னர் தெரிய வந்திருக்கிறது அவனது வண்டவாளங்கள்.

மூன்று நட்சத்திரங்கள் பொரித்த அரசு வாகனம் என்பது காவல்துறையில் DG மற்றும் ADG ரேங் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து அடையாளம். 20 வயதுக்குள் எந்த காவல்துறை அதிகாரிக்கும் இத்தகைய சிறப்புச் சலுகை வழங்கப்படுவது இல்லை. அபய் மீனா மீது சந்தேகம் எழ முதல் காரணம் இதுவே, அடுத்தபடியாக SOG பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு அபயின் அடையாள அட்டையிலும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவனது அடையாள அட்டையில் காணப்பட்ட முக்கியமான ஸ்பெல்லிங் மிஸ்டேக். அவனது அடையாள அட்டையில் Crime  Branch என்பதில் branch என்பதற்கு பதிலாக branche என்றும் capitol என்பதற்கு பதிலாக Capitol என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு சந்தேகம் கொண்ட காவலர், அதைத் தனது உயரதிகாரிக்குத் தெரியப்படுத்தவே, அதன் பின்னரே அபய் மீனா மீதான சந்தேகம் வலுத்து அவனைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் முழு வேகத்தில் ஆராயப்பட்டிருக்கின்றன. 

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த இளைஞன், டெல்லியில் ACP யாகப் பணிபுரிவதாக தன்னைப் பற்றி பிறரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில், தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொருத்தமான எழுச்சி வாசகங்களுடன் பகிர்வது இவனது வழக்கமாக இருந்திருக்கிறது. கடைசியாக கடந்த மே 11 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததோடு சரி, அதன்பின் அபய் மீனாவின் அட்டகாச ஒளி பொருந்திய போலிப் பெருமித வாழ்வில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டன.

காவல்துறை அதிகாரி என்று எண்ணி, தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள இவனை அணுகிய பல்வேறு நபர்களிடம் ஏமாற்றிப்  பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு அபய் மீனா பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அபய் மீனாவும் அவனுடைய லைஃப் பார்ட்னரும் இணைந்து டெல்லி, ராஜஸ்தானில் இருக்கும் ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று பார்ட்டி செய்திருப்பதும், பல முறை உணவருந்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எங்கும் இவர்கள் கட்டணம் செலுத்தியிருக்கவில்லை. தான் ஒரு ACP என்று சொல்லியே பல்வேறு விதமான சலுகைகளை இலவசமாக அனுபவித்திருக்கிறான். இத்தனையும் காவல்துறை விசாரணையில் தற்போது தெரிய வந்திருக்கிறது.

வழக்குகளை தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட முறையில் அபய் மீனாவை யாரெல்லாம் அணுகியிருக்கிறார்கள். அவர்களிடம் இவன் பெற்ற தொகை குறித்த விவரங்கள். மற்றும் இவனால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது என ராஜஸ்தான் SOG பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மக்களின் கற்றல் சதவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க இதுபோன்ற நூதன ஏமாற்றுக்காரர்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம், என்ன தான் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்த போதிலும் மக்கள் இம்மாதிரியான போலிகளைக் கண்டு ஏமாறுவதற்கான காரணம், எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பாராமல், மேம்போக்காக மனிதர்களை அவர்களின் பகட்டின் அடிப்படையில் நம்புவது தான்.

ஒரு 20 வயது இளைஞன், தன்னை காவல்துறை உயரதிகாரி எனச் சொல்லி பல நிஜ காவல்துறை அதிகாரிகளை ஏமாற்ற முடியும் என்றால் இந்த நாட்டில் சாமான்ய மக்களை எதைச் சொல்லி வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும் எனப் பல நூதனத் திருடர்கள் நம்புவது அப்பட்டமாகத் தெரிகிறது. 

20 வயதில் ஒருவன், ஐ பி எஸ் பரீட்சையையையும், ஐ ஐ டி சிவில் இஞ்சினியரிங் தேர்வையும் வெற்றிகரமாக கடந்து விட்டதாகச் சொன்னால், உடனே அவனது பின்னணியை ஆராயாமல், அவனது பகட்டு வார்த்தைகளை நம்பி, அவன் சமூக ஊடகங்களில் பகிரும் அட்டகாசமான புகைப்படங்களை நம்பி உடனே அவனை தனியார் விழாக்களுக்கும், அரசு அதிகாரிகளிடையே உரையாற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் அங்கீகரித்து வரவேற்று பெருமைப்படுத்தினால் அவன் என்ன செய்வான்? அடடா... கிடைத்த வரை லாபம் என்று மொத்த பேரையும் இதுநாள் வரை முட்டாளடித்து வந்திருக்கிறான்.

அபய் மீனா விவகாரத்தில், கடந்த வெள்ளியன்று அவனை அவன் தங்கியிருந்த ஜகத்புரா அபார்ட்மெண்ட் வளாகத்தில் காவல்துறை SOG  சுற்றி வளைத்து கையும், களவுமாகக் கைது செய்த பின்னரும் கூட அவன் அசந்ததாகத் தெரியவில்லை. உடனடியாகத் தன்னுடன் தொடர்பில் இருக்கும் நிஜ காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக புகார் அளித்திருக்கிறான். ஆனால், அவன் மீதான குற்றத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கிறபடியால் அவனால் இம்முறை தப்ப முடியாமலாகி விட்டது.

மக்கள் உஷாராக இல்லாவிட்டால் இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

திருடர்களை அல்ல இனிமேல் நல்லவர்கள், திறமைசாலிகள் என வேடம் போட்டுக் கொண்டு வருபவர்களையும் கண்டுபிடித்து இனம் காணும் அளவுக்கு மக்களின் உள்ளுணர்வின் திறன் அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் தற்காலத்தில் அதிகரித்திருப்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு உதாரணம்.

இவர்களை அடையாளம் காணாமல் விட்டால், அபய் மீனா செய்த குற்றத்தின் வீரியம் எந்த அளவுக்கு கெடுதல் விளைவிக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்கள், தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்து ஏமாற்றத் தயாராக இருப்பார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்களிலும் கூட ஈடுபடுவார்கள். 

இந்த இளைஞன் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பதிவேற்று ஆக்டிவாக இருந்திருக்கிறான், அங்கே இவனுக்கு ரசிகர்கள் வேறு அனேகம் பேர் இருந்திருக்கிறார்கள். இவன் ஒவ்வொருமுறை தனது போலி அரசு வாகனத்தில் டிராஃபிக் சிக்னல்களைக் கடக்கும் போது ஒரு டிராஃபிக் காவலருக்குக் கூடவா இவன் மீது சந்தேகம் வரவில்லை? என்று நெட்டிஸன்கள் தற்போது கொதிக்கிறார்கள். அதுசரி!

தற்போது கைதாகி ஜெய்பூர், பிரதாப் நகர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் அபய் மீனா மீது போலி காவல்துறை அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றியதாக வழக்குப் பதியப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக SOG காவல்துறை அதிகாரி சஞ்சய் ஷர்மா தெரிவித்துள்ளார்.

]]>
அபய் மீனா, போலி ஐ பி எஸ், ராஜஸ்தான் போலி ஐ பி எஸ், ஃபேஸ்புக் பிரபலம், abhay meena, fake IPS Officer, rajasthan, facebook famous, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jun/03/abhay-meena-fake-ips-officer-arrested-by-jaipur-sog-police-power-officials-3164294.html
3161610 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தினமணி கொண்டாடும் இசை! ஜூன் 2 EVP ஃபிலிம் சிட்டி இசைமழையில் நனைய டிக்கெட் புக் செய்துட்டீங்களா? கார்த்திகா வாசுதேவன் Friday, May 31, 2019 08:34 PM +0530  

 

இசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 2 பிறந்தநாள். அந்த நற்தருணத்தில் சென்னை, EVP  ஃபிலிம் சிட்டியில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான முன்னோட்டமாக தினமணி மற்றும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மற்றும் இணையதளங்களில் ராஜாவின் நேர்காணல்களும் அவர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ராஜாவின் ரசிகர்களுக்கு அவர் குறித்த ஒவ்வொரு சின்னஞ்சிறு தகவலும் கூட பொக்கிஷம் போன்றதே! 

எத்தனை ராகங்கள் - எத்தனை பாகங்கள்! இன்றைய தினமணி கடைசிப் பக்கம் பாருங்கள்.

‘சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம். நல்ல ட்யூன் இல்லை. இசையில் உயிர் இல்லை. இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள், இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை. இந்தியா முழுக்க இந்த நிலை தான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது’

- இது தனது நேர்காணலில் ராஜாவே சொல்லி ஆதங்கப்பட்ட விஷயம். இதற்கான பதில் அளிக்க கடமைப்பட்டவர்களென இன்றைய இளம் இசையமைப்பாளர்களைச் சொல்லலாம்.

தினமணி கொண்டாட்டம் பகுதியில் இளையராஜாவின் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரிடம் 75 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அத்தனை கேள்விகளுக்கும் ராஜா ஸ்டைலில் பட் பட்டென பாப் கார்ன் பொறித்திருந்தார் இசைஞானி.

சாம்பிளுக்கு சில கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்.

1. அதிகம் கேட்டு ரசித்த பாடல்?

மாலைப்பொழுதின் மயக்கத்திலே... கேட்டதை விட அதிகமாக முறை பாடிய பாடல் இது.

2. டி. வி யில் பார்க்கும் நிகழ்ச்சி?

டி வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை

3. படித்ததில் பிடித்த புத்தகம்?

ரமணர் வாழ்க்கை வரலாறு

4. பொது வாழ்க்கையில் பிடித்த தலைவர்?

என் வாழ்க்கையே பொதுவாக இருக்கிறது.

5.முதல் சம்பளம்?

வைகை அணையில் வேலை செய்த போது ஒருநாளைக்கு ஒரு ரூபாய் வீதம் வாரத்துக்கு 7 ரூபாய்கள், எல்லாம் புத்தம் புது ரூபாய் நோட்டுகள்.

6. மகன்கள், மகளுக்குச் சொல்லும் அறிவுரை?

அதை தனியாகச் சொல்லிக் கொள்வேன்.

7. சென்னையில் பிடித்த பகுதி?

பிரசாத் ஸ்டுடியோ

8. இசை தவிர்த்து வேறு என்னென்ன வேலைகள் செய்துள்ளீர்கள்?

இசையே பெருங்கொடை. வேறு என்ன வேண்டும்?

9. வாலி எழுதிய பாடல்களில் பிடித்தது?

மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா?

10.  பாதுகாத்து வரும் பொருள்?

மனசு.

:)) ஆம் அது தான் இளையராஜா. பாதுகாத்து வரும் பொருள் மனசு. அந்த மனசு சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துக்களை எண்ணிச் சொல்லி சர்ச்சைகளிலும் சிக்கி விடுவதுண்டு. ஆயினும் இன்றும் நெடுஞ்சாலைகளில் ஊறும் ஒவ்வொரு லாரியிலும், வேன்களிலும், விரையும் ஒவ்வொரு சொகுசுப்பேருந்திலும் சில்லென்று மனசைத் தொட்டுப் பறப்பது ராஜாவின் ராகங்கள் தான் என்பதால் ராஜாவை அவரது வார்த்தைகளுக்காக அதிகமும் வெறுப்பவர் என எவருமில்லை தமிழகத்தில்.

இசைஞானியிடம், தினமணி வாசகர்கள் கேட்ட 75 கேள்விகளுக்கான ஒட்டுமொத்த பதிலையும் அறிந்து கொள்ளும் ஆவலிருந்தால் இந்த லிங்கை அழுத்துங்கள். 

சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்று;

இப்போது இண்டர்நெட் இருப்பதால் உலக இசை பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இசையில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்று எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள், அந்தக்காலத்திலேயே மேற்கத்திய இசையை உங்களது திரைப்படங்களில் தேவையான, பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி இருந்தீர்கள், இது எப்படி சாத்தியமானது? என்கிற கேள்வி சினிமா எக்ஸ்பிரஸ் சுதிர் நேர்காணலின் போது இளையராஜாவின் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்;

‘கேட்டுக் கேட்டு வருவது தான். உலக இசையைக் கரைத்துக் குடித்தவர்கள் பலர் இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு சினிமாவைப் பற்றி எல்லாமும் தெரியும் என்று சொல்லி விட முடியுமா? அது ஒரு லைப்ரரியனின் வேலை. அவர்களுக்கு இசையின் வகைகளைப் பற்றி, இசையமைப்பாளர்களின் பெயர்களைப் பற்றி வேண்டுமானால் தெரியலாமே தவிர அதற்காக அவர்களுக்கு சப்ஜெக்ட் முழுதாகத் தெரியும் என்று சொல்லி விட முடியுமா? சப்ஜெக்ட் தெரிய வேண்டும். இங்கு சப்ஜெக்ட் என்பது சப்ஜெக்டே அல்ல, அது வேறு!’ - என்று புன்னகைக்கிறார் ராஜா. அது தான் ராஜா.

இசையமைப்பாளர் இளையராஜா, பாடகரானதின் சுவாரஸ்யப் பின்னணி?

‘பாடல்களுக்கு நோட்ஸ் எழுதும் போது அதனடியில் அதை எந்தப் பாடகர் அல்லது பாடகி பாட வேண்டும் என்பதையும் குறிப்பிடுவது எனது வழக்கம். அதைப்பார்த்து விட்டுத்தான் எனது அசிஸ்டெண்டுகள் அந்தந்த பாடகர்களை அழைத்து பாடல்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள். அப்படி பாடகர்களை அழைக்கும் போது சில சமயங்களில் எவருமே அந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், சரி விடு, நானே பாடி விடுகிறேன் என்று தொடங்கியது தான்.

ஜனனி, ஜனனி ஜகம் நீ, அகம் நீ பாடல் ஜேசுதாஸ் பாடுவதாக இருந்த பாடல். ஆனால், அவர் அன்று வரவில்லை என நான் பாடினேன். ட்ராக் பாடி விட்டு அவர் வந்ததும் அவரை வைத்து ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால், பிறகு அந்தப் பாடல் என் குரலிலேயே நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டதால் அப்படியே விட்டு விட்டேன். நான் பாடகனானது இப்படித்தான்.

இந்தப் பாடலை நானே பாடலாம் என்று ஆசைப்பட்டு பாடிய பாடல் என்றால், ‘நான் தேடும் செவ்வந்திப்பூ இது’ பாடலைச் சொல்லலாம். நான் பாடகனானது என் ஆசையாலோ, இயக்குனர்களின் வேண்டுகோளினாலோ அல்ல, மக்கள் கை தட்டி ரசித்தார்கள், நான் பாடகனானேன். என்கிறார் ராஜா.

இன்று இசை உருவாக்குபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

- என்ற கேள்விக்கு ராஜா அளித்த பதில்;

என் உடம்பே நான் சொல்வதைக் கேட்பதில்லை. இதில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கெங்கே அருகதை இருக்கிறது. என்கிறார்.

ராஜாவுக்கு, எம் எஸ் வி முத்தம் கொடுத்த அனுபவம்?

ராஜாவின் இசையைக் கேட்டு மெய்மறந்து ரசித்து சிற்சில தருணங்களில் அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து திக்குமுக்காடச் செய்வது எம் எஸ் வி ஸ்டைல். ஒருமுறை ராஜாவின் இசை நிகழ்ச்சியொன்றில் மூன்றாம் பிறை திரைப்படத்தின், ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாட ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ராஜாவை அணுகிய எம் எஸ் வி, டேய், இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா/ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா, ஆனந்த அதிர்ச்சியில், ‘என்னண்ணே, இப்படிக் கேட்கறீங்க, என்று அதை முழு மனதுடன் அங்கீகரிக்க, எம் எஸ் வி ஆர்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். பாடலில்,  

‘ஏழை என்றால் ஒரு வகை அமைதி, ஊமை என்றால் அதிலொரு அமைதி, நீயோ கிளிப்பேடு’ என்ற வரிகள் வருகையில் ராஜாவின் கம்போஸிங்கைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட எம் எஸ் வி ஓடிப்போய் ராஜாவுக்கு கொடுத்தது தான் இந்த உம்மா. இப்படி பாராட்டுதலாக எம் எஸ் வியிடம் முத்தம் பெற்ற பொன்னான தருணங்கள் இன்னும் சிலவும் கூட உண்டு என்று புன்னகைக்கும் ராஜாவின் முகத்தில் அந்த நாள் ஞாபகங்கள் இன்னும் பசுமையுடனே நினைவிலிருக்கின்றன.

ராஜாவைப் பற்றி சிலாகிப்பதென்றால் இப்படிச் சொல்லிக் கொண்டே போக நிறைய விஷயங்கள் உண்டு. 

எத்தனை இசையமைப்பாளர்கள் புதுசு புதுசாக முளைத்து வந்தாலும் ராஜா ராஜா தான்.

ஜூன் 2 அன்று நடைபெறவிருக்கும் இளையராஜா இன்னிசை மழையில் இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா?

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க இப்போ தெரிஞ்சுக்குங்க. ராஜாவுடன் அன்னைக்கு பாடும் நிலா பாலுவும், கான கந்தர்வன் ஜேஸுதாஸும் கூட உங்களை இசை மழையில் நனைவிக்கப் போறாங்களாம். கூட எஸ். ஜானகி, சித்ரா, சுதாரகுநாதன், எல்லாம் பாடறாங்களாம்.

இப்போதைக்கு இது போதும். மீதியை ஜூன் 2, EVP ஃபிலிம் சிட்டி, இளையராஜா இன்னிசை மழையில் நீங்களே நனையும் போது நேரடியாக நீங்களே உணர்வீர்கள்.

‘சிந்திய வெண்மணி, சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா’

‘அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்த்தவன்... குருவே சரணம், குருவே சரணம் ராகவேந்திரா, ஸ்ரீராகவேந்திரா’

வீணைக்கு வீணைக்குஞ்சு, நாதத்தின் நாதப்பிஞ்சு விளையாட இங்கு வரப்போகுது... என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறதா? 

அப்படியென்றால் நீங்கள் ஒரு தீவிரமான ராஜா பைத்தியம்.

பித்தம் தெளிய குற்றாலத்திற்குச் செல்வதைப் போலத்தான் இசை மழையில் நனைவதும். நனைந்தால் தெளிந்து விடும் :)

ஜுன் 2 EVP ஃபிலிம் சிட்டி, பெங்களூர் ஹைவே, சென்னை.

புக் யுவர் டிக்கெட்ஸ் நெள!

மேலும் பல சுவாரஸ்யத் தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்...

இசை கொண்டாடும் இசைக்காக இளையராஜா, எஸ் பி பி சந்திப்பு குறித்த சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்...

இசைஞானி எப்படி ஒரு பாடலை உருவாக்குகிறார் என்பதை அறிய EVP ஃபிலிம் சிட்டிக்கு வாங்க.... இசையமைப்பாளர் தினா கூறும் சுவாரஸ்யத் தகவல்.

இளையராஜா, எஸ் பி பி , ஜேஸுதாஸ் மூவேந்தர்களின் இன்னிசை மழையில் நனைய வாங்க...

இசை கொண்டாடும் இசை - இளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்,  நீங்க உங்க கையெழுத்தைப் போட்டாச்சா?

ராஜாவுடனான தினமணி.காம் நேர்காணல்...

 

 

 

 

]]>
Isaignani Ilaiyaraja, இளையராஜா, ISAI CELEBERATES ISAI, JUNE 2 EVP FILM CITY, இசை கொண்டாடும் இசை, EVP ஃபிலிம் சிட்டி, இசைஞானி இளையராஜா, மாபெரும் இசை நிகழ்ச்சி, எஸ் பி பி, ஜேசுதாஸ், மூவேந்தர்களின் இசை சங்கமம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/30/isai-celeberates-isai--isaignani-ilaiyarajas-concert-in-evp-film-city-3161610.html
3160911 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் புகழின் உச்சியில் இருக்கையில் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் இறங்கவிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி! RKV Wednesday, May 29, 2019 11:36 AM +0530  

கர்நாடகா, எஸ் பி அண்ணாமலை ராஜினாமா விவகாரம் தற்போது இரு மாநில மக்களிடையேயும் மிகுந்த ஆர்வத்தைக் கிளறி விட்டுள்ளது. தன் பணியில் சிறந்து விளங்கி சிறந்த காவல்துறை அதிகாரியாகப் போற்றப்படும் இளைஞர் ஒருவர் திடீரென பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புவதின் பின்னணி என்ன? எதற்காக எஸ் பி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்கிறார்? பின்னணியில் அரசியல் அச்சுறுத்தலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ ஏதேனும் உண்டா? எனும் குழப்பம் அண்ணாமலையைப் பற்றி அறிந்த மக்களிடையே எழுந்தது. அந்தக் குழப்பத்தை அண்ணாமலையே தீர்த்து வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வந்த அனுபவமும், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான மதுகர் ஷெட்டியின் மறைவும் தன்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. பணி அழுத்தத்தின் காரணமாகத் தன்னால் தனக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்க முடியவில்லை என்பதோடு அலுவல் சார்ந்த வாழ்க்கை குறித்த மனநெருடலும் அதிகரித்து விட்டதால் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உறுதி செய்ய மேற்கண்ட இரு சம்பவங்கள் போதுமானதாக இருந்தன. எனவே இப்போது எவ்வித தயக்கமும் இன்றி நான் எனது பணியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எஸ் பின் அண்ணாமலை.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான எஸ்பி அண்ணாமலையின் பிறந்த ஊர் கரூர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றார். கர்நாடகம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலாவில் ஏ எஸ் பியாகப் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு எஸ் பி யாகப் பதவி உயர்வு கிடைத்தது. கர்நாடகாவின் அயோத்தி என்றழைக்கப்படும் பாபா புதன்கிரியை மையமாக வைத்து நடந்த கலவரத்தில் அண்ணாமலையின் அடக்குமுறை பலரைக் கவர்ந்தது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் பாஜகவிடம் விலை போகாமல் பாதுகாத்துக் கொள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த எம் எல் ஏக்களை வெளியில் கொண்டுவர எடியூரப்பாவால் ராம்நகர எஸ் பியாக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இப்படியெல்லாம் தான் பணியில் இணைந்த குறுகிய காலத்திலேயே திறமை சார்ந்து புகழின் உச்சியில் ஏறத்துவங்கிய அண்ணாமலை திடீரெனப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தமது வாழ்க்கையை இரு சம்பவங்கள் பாதித்ததால், தாம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

முதலாவதாக கடந்த ஆண்டு மேற்கொண்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையானது, மனிதர்கள் தம் வாழ்க்கையில் எதற்கு முதலில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் எனும் தெளிவை தமக்கு அளித்ததாகவும். 

இரண்டாவதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலைவிரித்தாடிய சுரங்க  ஊழலைக் கண்டுபிடித்தவரான திறமை வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மதுக்கர் ஷெட்டியின் மரணம் தன்னை மிகவும் பாதித்து பணியை ராஜினாமா செய்வது பற்றிய தனது எண்ணத்தை ஓங்கச் செய்தது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே தாம் ராஜினாமா செய்ய நினைத்ததாகவும், ஆனால், தனது முடிவுகள் அரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் தேர்வு முடிவுகள் வெளிவந்தபிறகு தனதுமுடிவை அறிவித்திருப்பதாகவும் கூறும் அண்ணாமலை இதுவரை தனது பணியில் தனக்கு கிடைத்த அனுபவங்களைத் தன்னால் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இணையும் எண்ணமிருக்கிறதா? என்று சிலர் கேட்பதாகவும், இதுவரை அப்படியொரு எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனவும், வருங்காலத்தைப் பற்றி உடனே எந்த முடிவுகளையும் எடுப்பதைக் காட்டிலும் முன்னதாக ஓய்வெடுத்து விட்டு குடும்ப அளவில் தாம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பூர்த்தி செய்து விட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்யும் எண்ணம் மட்டுமே தற்போது தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழக அரசியல் தலைவர்கள் யாருடனும் தனக்கு எவ்விதமான பழக்கமும் இல்லை என்பதால் இதுவரை தான் யாருடனும் பேசக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றதோடு,  மக்கள் சேவைப்பணியில் ஈடுபடவும் தனக்கு விருப்பமிருக்கிறது. அதைப்பற்றிய முடிவுகளைத் தீர ஆலோசித்து விட்டே எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

]]>
S P ANNAMALAI RESIGNS, KARNATAKA, POLICE FORCE, எஸ் பி அண்ணாமலை ராஜினாமா, கர்நாடகா, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/29/karnataka--singham-sp-annamalai-resigns-from-police-force-3160911.html
3157218 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஒரு மாடலிங் கேர்ள் இந்த சமூகத்தை நோக்கி வீசியெறிந்த அணுகுண்டு கேள்வி! RKV Thursday, May 23, 2019 03:57 PM +0530  

கலாட்டா.காமில் சமீபத்தில் ஒரு குறும்படம் பார்க்க வாய்த்தது. படம் மாடலிங் உலகின் இருட்டுப் பக்கங்களைப் பற்றியது. அனாதை ஆசிரமத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு (ஏஞ்சலினா) மாடல் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை வரக் காரணம், அதே ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்து சூப்பர் மாடலான மற்றொரு பெண் குழந்தையின் வளர்ச்சியே! மதுபாலா எனும் அந்த மாடலைப் பற்றி அறிய நேர்ந்த நொடியில் இருந்து இந்தப் பெண்குழந்தைக்கு தானும் ஒரு மாடலாக வேண்டும் என்ற ஆசை உந்தப்பட்டு மதுபாலா குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்தித் துணுக்குகளை சேகரிக்கத் தொடங்குகிறாள். ஒருமுறை தான் பிறந்து வளர்ந்த ஆசிரமத்தைப் பார்வையிட வரும் மதுபாலாவின் கண்களில் இவளது சேகரிப்புகள் படுகின்றன. மதுபாலா, தன் மீது இந்த இளம்பெண்ணுக்கு இத்தனை ஆர்வமா என்று அவளைப் பாராட்ட, இருவரும் இணைந்து நிற்க புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்த கேமிராமேனுக்கு ஏஞ்சலினா போன்ற ஒரு புதுமுகம் லட்டு மாதிரி மாடலிங் துறைக்கு பொருத்த முகவெட்டுடன் கிடைத்ததும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். 

மதுபாலாவுடனான புகைப்படம் தவிர, ஏஞ்சலினாவை மட்டுமே தனியாக ஃபோகஸ் செய்து தான் எடுத்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை அவர் பெண்கள் பத்திரிகைகளுக்கு அனுப்ப மாடலிங் வாய்ப்புகள் ஏஞ்சலினாவைத் தேடி வரத் துவங்குகின்றன. தனக்கு வாய்ப்புகளைத் தேடித் தந்த கேமிராமேனை வழிகாட்டியாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங்கில் முன்னேறத் துவங்குகிறார். மாடலில் இருந்து சூப்பர் மாடல் நிலைக்கு முன்னேற வேண்டுமென்றால் வாய்ப்புகளை அடைய தயாரிப்பாளர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும் எனும் வற்புறுத்தல் ஏஞ்சலினாவைத் துரத்த அவள் கேமிராமேன் அபிநவ்விடம் ஆலோசனை கேட்கிறாள். சுயநலத்திற்காக அந்தப் பெண்ணை மாடலிங் துறைக்குள் அழைத்து வந்த மனிதன் தானே அவன், அவனும் அவளை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை, இங்கே இது சகஜம் தான் என்று சொல்லி ஒத்துப்பாட, ஏஞ்சலினா தன்னுடைய சூப்பர் மாடல் கனவுகளை அடைய சர்வதேச விளம்பர வாய்ப்புகளைப் பெற பல ஆண்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறாள். 

சூப்பர் மாடல் எனும் புகழேணியின் உச்சியில் அமர்ந்து அவள் விளம்பரப் படம் ஒன்றுக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், தோழியிடம் இருந்து அவளுக்கொரு மொபைல் அழைப்பு வருகிறது. ’எனக்குத் திருமணம், நீ எத்தனை பிஸியாக இருந்தாலும் என் திருமணத்திற்கு வந்து சேர்’ என்று; தோழி அழைப்புடன் நிறுத்திக் கொண்டிருந்தால் ஏஞ்சலினா தனக்குத்தானே குற்ற உணர்வில் மூழ்காமல் இருந்திருப்பாளோ என்னவோ?! ஆனால், தோழி, நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், உனக்கும் வயதாகவில்லையா? நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று ஏஞ்சலினாவின் அகத்தைக். கிளறி விட, அவளுக்குள் திருமண வேட்கை மூள்கிறது. ஆனாலும், வாய்ப்புகளுக்காகப் பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்ற நிலையில் தன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற அவநம்பிக்கை துரத்தவே, அவள் சற்றும் யோசிக்காமல் ஷாட்டுக்குத் தயாரா என்ற கேள்வியுடன் தன்னை அணுகும் அபிநவ்வைப் பார்க்கிறாள்.

தன்னுடன் இத்தனை நாள் இருந்த, தன்னுடைய வழிகாட்டியாகத் தான் நம்பிய கேமிராமேன் அபிநவ்வையே கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றவே, அவள், ‘அபிநவ், என்னைத் திருமணம் செய்து கொள்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று சட்டெனக் கேட்டு விடுகிறாள்; அந்தக் கேள்வியின் கனம் தாளாமல் வாய்மூடி மெளனம் சாதிக்கும் அபிநவ்வைக் கண்டு ஏஞ்சலினாவுக்கு கோபம் தலைக்கேறுகிறது. அவன் அடுத்த ஷாட்டுக்கு அவளை துரிதப்படுத்துவதில் தான் சிரத்தையுடன் இருக்கிறானே தவிர ஏஞ்சலினாவை மணந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குத் துளியும் இல்லை. அப்போது அவள் மீண்டும் மீண்டும் அவனை திருமணத்திற்கு வற்புறுத்தத் தொடங்கவே, அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... அவன் சாடாரெனச் சொல்லி விடுகிறான், உன்னைப் போன்ற (Bitch) பெண்நாயை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என? 

இந்த வார்த்தை அவளைச் சுட்டெரிக்கிறது.

ஆம், நான் அப்படிப்பட்டவள் தான், அது தெரிந்து தானே இத்தனை நாட்கள் நீ என்னுடன் இருந்தாய், அப்படியென்றால் நீ ஆண்நாயா? என்ற கேள்வியை மனதுக்குள் விழுங்கி அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். தனிமை அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்த தற்கொலைக்கு முயல்கிறாள். எந்த அழகு தன்னை இந்த நிலைக்கு இட்டு வந்ததோ, அந்த அழகைச் சிதைக்கத் தொடங்குகிறாள். இறுதியில் விஷம் அருந்தப் போகையில், யாரை முன்னுதாரணமாகக் கொண்டு ஏஞ்சலினா மாடலிங் துறைக்குள் நுழைந்தாளோ அந்த மதுபாலாவே வந்து அவளை தற்கொலையில் இருந்து மீட்பதாகக் கதை முடிகிறது.

இந்தக் குறும்படத்தில் ஏஞ்சலினா கிளைமாக்ஸில் லிப்ஸ்டிக் கொண்டு கண்ணாடியில் எழுதும் வாசகம் ஒன்று;

YES, I'M A BITCH BUT WHO ELSE NOT?

என்று பார்வையாளர்களைக் கேள்வி கேட்பதாக முடிகிறது.

அவள் பெண்நாய் என்றால் அவளை இவ்விதமாக ஆக்கி வைத்த ஆண்களை என்னவென்பது? இப்படி ஒரு சூழலை அவளாக வலியப்போய் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு சூப்பர் மாடலாவது வாழ்நாள் கனவு. அந்தக் கனவை அடைய அவள் இப்படியாகிறாள். அதற்காக அவள் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவள் சார்ந்திருக்கும் துறை அவளை அதற்காக வற்புறுத்தி இந்த எல்லைக்குத் துரத்தியதை நிச்சயம் கண்டித்தே ஆக வேண்டும். கனவுகளை அடைய நினைக்கும் பெண்கள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டே ஆக வேண்டும் என்பது மாடலிங் மற்றும் சினிமாத்துறைக்கு எத்தனை பெரிய அவமானம்?! இந்த அவமானத்தைக் களைய வேண்டும் என்ற முயற்சி அங்கிருக்கும் ஒருவருக்கும் இல்லையெனும் போது பிறகு காலத்திற்கும் அவர்களை கூத்தாடிகள் என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்? வீடு வாடகைக்கு விடுவது முதல், திருமணத்திற்கு மணமகன், மணமகள் தேடுவது வரை எல்லா விஷயங்களிலும் அவர்களை இந்தச் சமூகம் இரண்டாம் நிலையில் வைத்துப்பார்க்க அங்கு நிலவும் ‘காம்ப்ரமைஸ்’ வற்புறுத்தல் தானே முதலிடம் வகிக்கிறது. அங்கு எல்லாமும் கட்டமைக்கப்படுவது பெண்களின் சதையைக் கொண்டே என்றால் அவளை நாய் என்று சொல்லக் கூச வேண்டாமோ!

அதனால் தான் ஏஞ்சலினா கேட்கிறாள்...

YES, I'M A BITCH BUT WHO ELSE NOT?

இதற்காக அவள் தற்கொலை செய்து கொண்டால், அவளை இந்த உலகம் BITCH இல்லை புனிதவதி என்று கொண்டாடி விடப்போகிறதா என்ன?

ஆகவே, அவள், தன்னை விமர்சிக்கும் இந்த சமூகத்தை நோக்கி ஒரு கனமான கேள்வியை வீசியெறிந்து விட்டு அவளறிந்த அவளாகவே மீண்டும் தன் வாழ்வில் எட்டி நடை போடத் துவங்குகிறாள்.

ஏஞ்சலினாக்கள் தற்கொலை செய்து கொள்ளப் படைக்கப்பட்டவர்கள் அல்ல. சொல்லப்போனால் வாழ்வின் உன்னதங்கள் இப்படிப் பட்டவர்கள் அடையும் மனமுதிர்வின் அனுபவ நீட்சியாகவே வெளிப்படுகின்றன.

அவார்ட் வின்னிங் ஷார்ட் ஃபிலிம் என்று அடையாளத்துடன் குறும்படம் தொடங்குகிறது. கமெண்ட் பகுதியில் ‘2008’ ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபேஷன் திரைப்படத்தின் சாயல் இதிலிருக்கிறது என்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்தக் குறும்படத்தைப் பார்க்க வாய்த்தவர்கள் நிச்சயம் ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் நடித்த ஃபேஷன் திரைப்படத்தையும் ஒருமுறை பார்த்து விடுங்கள்.

இரண்டிலுமே சொல்லப்பட்டுள்ள, வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ள உண்மைகள் அப்படியப்படியே தான் இருக்கின்றன இன்றளவும். இப்போதும் இந்தத் துறையில் சாதிக்கும் முனைப்பில் நுழைந்து காமுகக் கழுகுகளின் பிடியில் சிக்கி வாழ்விழந்த உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

திடீர், திடீரென நடிகைகள், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் தற்கொலை என்று செய்தி வந்தால் இனிமேல் கண்டதையும் இட்டுக்கட்டி கமெண்ட் அடிக்காமல் அவர்களின் வலி புரிந்து ஒரு நொடியேனும் அனுதாபப்படுங்கள்.

 

]]>
MODELING WORLD, COMPROMISE ATTIDUDE, DARK SIDE OF MODELING, மாடலிங் உலகம், மாடலிங் உலகின் இருட்டுப் பக்கங்கள், ஏஞ்சலினா, காம்ப்ரமைஸ், சமூகச் சீர்கேடு, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/23/yes-im-a-bitch-but-who-else-not-question-from-a-modelling-girl-3157218.html
3155942 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, May 21, 2019 02:47 PM +0530  

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வெள்ளி வெள்ளி வேலை செய்யும் தட்டான் ஒருவர், தன்னையும் தன் மனைவி மற்றும் சகோதரனையும் குடிக்கச் சொல்லி தொந்திரவு செய்த அண்டை வீட்டுக்காரர்களான 8 கட்டடப் பணியாளர்கள் மீது அமில வீச்சு நடத்தியது நேற்றைய திடுக்கிடும் செய்தி. 

சென்னை நெற்குன்றம், முனியப்ப நகரிலிருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் மனைவி மற்றும் சகோதரரருடன் வசித்து வருகிறார் கண்ணப்பன். அடிப்படையில் வெள்ளி வேலை செய்யத் தெரிந்த தட்டானான கண்ணப்பனின் வீடு அந்த அபார்ட்மெண்டின் மூன்றாம் தளத்தில் இருக்கிறது. சம்பவத்தின் போது கண்ணப்பனுடன் அவரது மனைவி ரஞ்சனியும், பெயிண்டரான சகோதரன் பாஸ்கரும் இருந்துள்ளனர். இவர்கள் வசித்த அதே அபார்மெண்ட்டின் இரண்டாம் தளத்தில் அரியலூரிலிருந்து கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வேலை செய்து பிழைக்க வந்த 8 இளைஞர்கள் தங்கியிருந்தனர்.

ஞாயிறு அன்று இரவு, அந்த 8 இளைஞர்களும் அபார்மெண்டின் மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். குடிபோதையில் அவர்களின் உரையாடல் எல்லை மீறி கூச்சலாக மாறி இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கண்ணப்பனும் அவரது சகோதரர் பாஸ்கரும் அவர்களிடம் சென்று ஆட்சேபணை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குடிவெறியில் அவர்கள் கண்ணப்பனின் கோரிக்கையையோ, ஆட்சேபணையையோ ஏற்காமல் மீண்டும் கூச்சலிட்டு குடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கண்ணப்பனும் அவரது சகோதரரும் மீண்டும் மீண்டும் அவர்களது செயலை கண்டிக்கவே, குடிவெறியில் அந்த 8 இளைஞர்களும் இவர்களை கடுமையாகத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களது குடிவெறித் தாக்குதலுக்கு கண்ணப்பன் மனைவி ரஞ்சனியும் தப்பவில்லை. ரஞ்சனிக்கு கையிலும், பாஸ்கரனுக்கு தலையிலும் பலமான அடி. இதனால் கோபம் தலைக்கேறிய கண்ணப்பன் உடனடியாக வீட்டுக்குள் ஓடி, தான் வெள்ளி வேலை செய்யும் போது பயன்படுத்தவென்று வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த 8 இளைஞர்களின் மீது விசிறியடித்திருக்கிறார். அந்த 8 இளைஞர்கள் பெயர்கள் முறையே; அழகுமுத்து (38), கருப்புசாமி(32), வாஞ்சிநாதன்(18), வேல்முருகன்(23), வீராசுவாமி(23), அசோக்(19), வேல்முருகன்(25), வேல்முருகன்(23).

அமில வீச்சில் பாதிக்கப்பட்ட 8 இளைஞர்களும் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமில வீச்சில் ஈடுபட்ட கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது செய்தி! 

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இளைஞர்கள், அதிலும் பிழைப்புக்காக சென்னை வந்த இளைஞர்கள் குடித்து விட்டு மொட்டைமாடியில் கும்மாளமடித்ததும்,  அதை தட்டிக் கேட்க வந்த அண்டைவீட்டுக்காரர்களை எரிச்சலுக்குட்படுத்தி சண்டைக்கு இழுத்த விவகாரமும் தான். அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து எடுத்துச் சொல்லும் போது அதில் நம் தவறு என்ன என்பதைக் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, தவறைச் சுட்டிக்காட்டியவர்களையே எதிர்த்துத் தாக்கத் தொடங்கியது அராஜகம். அந்த அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் தட்டான் கண்ணப்பன் கோப மிகுதியில் ஆசிட் வீசியிருக்கிறார். சட்டப்படியும், மனசாட்சிப்படியும் இது முற்றிலும் தவறு. ஆனால், இந்தத் தவறு நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்தது யார்? அந்த இளைஞர்கள் தானே! இப்போது அவர்கள் சிகிச்சையில் இருந்தாலும் உண்மையில் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! தட்டான் கண்ணப்பனை மட்டும் கைது செய்யப்படுவதில் நியாயம் இல்லை.

ஏனெனில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய கோபத்திற்கு வடிகால் தேடவுமே, என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணப்பன் அந்த இளைஞர்கள் மீது அமிலம் வீசியிருக்கிறார். இந்நிலையில் கண்ணப்பன் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமா?! இது குறித்து வாசகர்கள் உங்கள் கருத்தைப் பகிரலாம்.

இந்த வழக்கில் அமில வீச்சை நடத்தியவருக்கும், பிழைக்க வந்த இளைஞர்களுக்கும் இடையே முன் பகை ஏதாவது இருந்திருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படியே முன்பகை இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்ந்து தூண்டப்படக் காரணமாக இருந்தவர்கள் இரு தரப்பினரில் யார் என்ற விசாரணையும் தேவை. தட்டான் கண்ணப்பன் கோபம் வரும் போதெல்லாம் அமில வீச்சில் ஈடுபடக்கூடியவரா? என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். ஏனெனில், எந்தவகையிலும் இந்தச் செய்தி இதே போன்று அபார்மெண்ட்களில் வசித்து மனஸ்தாபம் கொள்ளக்கூடிய எவரொருவருக்கும் முன்மாதிரியாக  அமைந்து விடக்கூடாது.
 

]]>
chennai, சென்னை, மொட்டை மாடி , அமில வீச்சு, குடியிருப்புத் தகராறு, நெற்குன்றம், acid attack, silver smith kannappan, nerkunram https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/21/8-injured-in-acid-attack-one-silversmith-arrested-3155942.html
3155246 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவானவர்களே, ஆயினும் அரசு முடிவை எதிர்த்து திடமாய் வென்றிருக்கிறார்கள்! கார்த்திகா வாசுதேவன் Monday, May 20, 2019 01:00 PM +0530  


‘எங்கள் காடுகளை என்ன செய்வது என்று நாங்களே முடிவு செய்வோம்’: அமேசான் பழங்குடி மக்கள்!

இப்படியான அபூர்வமான தீர்ப்புகளையும், நிஜத்தில் சிறு முயல்குட்டி, அச்சுறுத்தும் வனராஜா சிங்கத்தை பாழும் கிணற்றில் தள்ளிக் கொன்ற கதையையும் நீங்கள் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே தான் இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் ஒன்றாகக் கருத வேண்டியதாயிருக்கிறது.

கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி, திடீரென நூற்றுக்கணக்கான வோரானி பழங்குடி இன ஆண்களும், பெண்களும் வெகு தீரத்துடன் நீண்ட பேரணியாக ‘புயோ’ நகரச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். புயோ நகரமே, ஈக்வடார் தேசத்தின் தெற்கு மாகாணத் தலைநகரம். பழங்குடிகள் காடுகளில் தானே வசிப்பார்கள். நகரங்களில் பேரணி செல்வது ஏன்? காரணம் இருக்கிறது. அவர்கள் ஈக்வடார் அரசை எதிர்த்து தாங்கள் மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் நியாயமாகக் கிட்டிய வெற்றியைக் கொண்டாடவே அவ்விதமாகப் பேரணியாகச் சென்றனர். என்கிறார்கள் என்கிறார்கள் அங்கத்திய ஊடகத்தினர்.

ஆம், இது நிச்சயம் பேசப்பட வேண்டிய வெற்றி தான்! ஏனெனில், அம்மக்கள் வாழும் காட்டுப்பகுதி அழுத்தமான அடர் வனம். நகர மக்கள் அங்கே செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. லேசான சிறு படகுகள் மற்றும் சிறு விமானங்கள் மூலம் மட்டுமே அவர்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்குள் நம்மால் நுழைய முடியும். அப்படிப்பட்ட நிழல் காணாப் பசுங்காட்டுக்குள் வசித்துக் கொண்டு சாலை வசதிகளோ அல்லது அரசின் இன்னபிற வசதிகளோ கூட சென்றடைய முடியாத பகுதியில் வாழும் மக்கள் தங்கள் உரிமைக்காக அரசையே எதிர்த்துப் போராடி வென்றால் அது லேசான காரியமில்லையே! 

‘அரசாங்கம் எங்கள் அனுமதி இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு எங்கள் காடுகளை விற்க முயற்சிக்கிறது. எங்களது வெப்பமண்டலக் காடுகளே எங்கள் வாழ்க்கையும் வாழ்வாதாரமுமாக எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் நிலங்களை என்ன செய்வது என்று நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நாங்கள் எங்களது காடுகளை ஒருபோதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம். இன்று, நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது... இந்தப் பரந்து விரிந்த அமேசான் காடுகள் அனைத்தும் வோரானி பழங்குடி மக்கள் மற்றும் அவர்களைப் போன்ற பிற பழங்குடி இன மக்களுக்கு மட்டுமே சொந்தம் என. நீதிமன்றத்தின் இந்த தெளிவான முடிவை நாங்கள் மதிக்கிறோம். அந்த எண்ணெய் நிறுவனங்கள் மீது அரசு கொண்டிருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும் எங்களது உரிமை, எங்களது காடு, எங்களது வாழ்வு விலை மதிப்பற்றது.’

- இப்படித் தீரமுடன் உரைத்து தங்களது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஈக்வடார் நாட்டைச் சார்ந்த அமேசான் வனப்பகுதியின் வோரானிய பழங்குடி மக்கள்.

காடுகளையும், நிலங்களையும் அபகரிக்க நினைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் முன்னெச்சரிக்கையாகப் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம் போன்றதே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அப்பாவி மக்களின் நிலங்களையும், வனப்பகுதிகளையும் கையகப்படுத்துகிறோம் எனும் அறிவிப்பு. இந்த அறிவிப்பின் மீது பூசப்படும் முலாம்களே, பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணெய் எடுக்கிறோம், கனிமங்களை வெட்டி எடுக்கிறோம் எனும் மாய்மாலங்கள். இப்படி உலகம் முழுவதிலுமாகப் பல்லாயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றன.

அந்தக் கணக்கில் ஒன்றாகத்தான் இவர்களது போராட்டமும் ஆகி விடக்கூடும் என்று எதிர்பார்த்தது ஈக்வடார் நாட்டு அரசாங்கம். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணத்துடன் ஈக்வடார் அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அமேசான் காட்டில் வசிக்கும் வோரானி பழங்குடி இன மக்களின் பூர்விக பூமியில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஏக்கம் நிலங்களை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை வழங்கி இருந்தது. ஈக்வடார் அரசு இதற்காக, அங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களிடம் அனுமதி எதுவும் பெற்றிராத நிலையில் அரசின் இந்த பொறுப்பற்ற அராஜக முடிவை எதிர்த்து வோரானியப் பழங்குடி இனமக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன் தங்களது போராட்டத்தை சட்டப்படி கையாளும் முடிவில் நீதிமன்றத்தையும் நாடினர். சில வாரங்களுக்கு முன்பு மத்திய ஈக்வடார் பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றக் கோரி பழங்குடியினர் வழக்குத் தொடர்ந்தனர்.

பலநாடுகளுக்கும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அமேசான் காடுகளில் தலைமுறை, தலைமுறைகளாக நாங்கள் மிக அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காடே எங்களது  அன்னை. அதை எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நினைத்தால் எங்களால் அமைதியாக இருக்க முடியுமா? மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மோதுவது என்பது எங்களைப் போன்ற அழிந்து வரும் மிகச் சொற்பமான பழங்குடி இனக்குழுவுக்கு வாழ்வா, சாவா போராட்டாம் போன்றதே. ஆனாலும் இது எங்கள் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, எங்களது வாழ்வே இது தான் எனும் போது நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். எனவே தான் எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றியே தீருவோம் எனும் எங்கள் போராட்டத்தில் மிக திடமாக நின்று சட்டப்பூர்வமாக இன்று அதில் வென்றிருக்கிறோம். என்கிறார் வோரானிய பழங்குடி இனத்தலைவரான நெமோந்தே நெங்கிமோ.

ஈக்வடார் நாட்டு சட்டத்தின் படி காடுகள் பழங்குடிகளுக்கே சொந்தம், அவர்களுக்கு அங்கு வசிக்க பூரண சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை வோரானிய பழங்குடிமக்கள் நீதிமன்றத்தில் தங்களது வாதமாக வைத்துப் போராடினர். வழக்கை விசாரித்த நீதிமதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து அவற்றைத் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. காட்டுநிலத்தின் மீது பழங்குடியினருக்கே முதலுரிமை என்று சட்டம் சொல்லும் போது அதை தனியாருக்கு விற்க முயலும் அரசின் நடவடிக்கை சட்டத்தை மீறிய செயல். சட்டத்தை மீறி ஒரு அரசு செயல்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே பழங்குடிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காட்டு நிலப்பகுதி அத்தனையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டு அரசும், தனியார் எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என ஈக்வடார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சட்டப்போராட்டத்தில் ஈக்வடார் நாட்டு அரசாங்கம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அமேசான் காடுகளை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததாகச் சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், நீதிமன்றம், அந்த வாதத்திற்கு சான்றுகள் இல்லையெனச் சுட்டிக்காட்டி அந்த வாதத்தை தள்ளுபடி செய்தது. எது எப்படியானாலும் அரசைக் காட்டிலும் மக்களின் வாழ்வுரிமை முக்கியமானது என்பதை மட்டுமே பிரதான காரணமாகக் கொண்டு நீதிமன்றம் வோரானிய பழங்குடி மக்களுக்குச் சாதகமாக இவ்வழக்கில் தீர்ப்பளித்திருப்பது உலகம் முழுவதிலும் வாழும் பழங்குடி இன் மக்களுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்கியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அரசுக்கு எதிரான இந்த சட்டப்போராட்டத்தில் பழங்குடி மக்கள் வென்றதில் அப்படி என்ன அதிசயம்? தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், எனினும் இறுதியில் தர்மம் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என யாரும் எளிதில் இவ்விஷயத்தைப் பற்றிக் கருத்துக் கூறி விலகிச் செல்லலாம். ஆனால், பாருங்கள், ஈக்வடார் அரசை எதிர்த்துப் போராடிய வோரானிய பழங்குடி மக்களின் எண்ணிக்கை வெறும் 5000 க்கும் குறைவே என்பதை அத்தனை எளிதில் நாம் புறக்கணித்து விட முடியாது. இங்கே சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் டெல்டா பகுதி மக்கள் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக அரசுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். இருப்பினும் மக்களுக்குச் சாதகமான முடிவொன்றை எட்ட முடியாத நிலையே இப்போதும் நீடித்து வருகிறது. அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவு தான் என்றாலும் தங்களது உரிமைகளுக்காக சட்டப்படி போராடி வென்றிருக்கிறார்கள் எனும் போது நம்மாலும் முடியும் என்ற உத்வேகம் நம் மக்களுக்கும் வரவேண்டும்.

ஏனெனில், அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் காட்டிலும் மனிதர்களின் வாழ்க்கை பெரிது. 

மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசின் திட்டங்களுக்காக மக்களின் வாழ்க்கை அல்ல!

]]>
AMAZON rainforest saved, A historic lawsuit., அமேசான் காடுகள் மீட்கப்படன, வோரானிய பழங்குடியினரின் சட்டப்போராட்டம், ஈக்வடார் அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/20/a-tiny-amazon-tribe-just-defeated-big-oil-in-a-historic-lawsuit-3155246.html
3146796 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா? கார்த்திகா வாசுதேவன் Monday, May 6, 2019 03:43 PM +0530  

பட்டர் சிக்கன், ஜிஞ்சர் சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன் தெரியும், அதென்ன பிளாக் சிக்கன்?! அப்படி ஒரு சிக்கன் இருக்கிறது. அதன் விலையும் மிக அதிகம் என்கிறார்கள். உலகின் மிக விலையுயர்ந்த உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம்! உங்களுக்குத் தெரியுமா?

உலகின் விலையுயர்ந்த சிக்கன்!

உலகின் அதி விலையுயர்ந்த சுவையான உணவு வகைகளைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது இந்த பிளாக் சிக்கன் விஷயம் கண்ணில் பட்டது. அசைவ பட்ஷிணியான எனக்கு இது புத்தம் புதிதாக இருந்ததால் அதைப் பற்றி மேலும் கூகுள் செய்ததில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

பிறப்பிடம்...

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வளர்த்தெடுக்கப்படும் ஒரு வகை ஸ்பெஷல் கோழி இனம் தான் இந்த அயாம் செமனி பிளாக் சிக்கன் வெரைட்டி. இதில் சேவலும் உண்டு. இதன் ஸ்பெஷாலிட்டியே நிறம் தான். முழுக் கருப்பு. மூக்கு, இறகு, கால் மட்டுமில்லை இந்தப் பறவையின் நாக்கு, குடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் கூட அடர் கருப்பு தான். ரத்தம் மட்டும் பிற கோழிகளைப் போல சிவப்பாக இருக்கும். கேட்க அதிசயமாகத்தானே இருக்கிறது.

எங்கெங்கு இறக்குமதியாகின்றன?

இந்த வகை கோழியினங்கள் ஆரம்பத்தின் ஜாவா தீவில் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது உலகின் பிற பகுதிகளுக்கு உடனடியாகப் பரவாததற்கான காரணம் கருப்பு நிறத்தின் மீதிருக்கும் அச்சம். இந்தியர்களைப் பொருத்தவரை கருப்பு, பிளாக் மேஜிக்கின் அடையாளம். அத்துடன் பறவைக் காய்ச்சல் வேறு அப்போது தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த காரணத்தால் இந்தப் பறவைக்கான வரவேற்பு இந்தியாவில் சுத்தமாக இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் சில தமது வாடிக்கையாளர்களுக்காக இந்தப் பறவைகளை இறக்குமதி செய்கின்றன. இவற்றின் அதீத கருப்பு நிறத்திற்குக் காரணம் ஹைப்பர் பிக்மண்டேஷன் எனும் நிறமிக் குறைபாடே. அந்தக் குறைபாட்டினால் ஃபைப்ரோமெலனோசிஸ் எனும் மரபியல் குறைபாட்டால் கோழியின் திசுக்களில் மெலனின் அதிகரிக்க அதிகரிக்க அவற்றில் தோலின் நிறம் மாறும். அதனால் தான் இவ்வகைக் கோழிகள் அடர் கருப்பாகத் தோற்றமளிக்கின்றன.

அயாம் செமனி என்றால் என்ன?

இந்தோனேசிய மொழியில் ‘அயாம்’ என்றால் சிக்கன் என்று பொருள். ‘செமனி’ என்பது ஜாவாவில் குறிப்பாக அந்த வகைக் கோழிகள் மட்டுமே அதிகம் உற்பத்தியாகும் கிராமத்தின் பெயர். எனவே உற்பத்தியாகும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழியினங்களுக்கு ‘அயாம் செமனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜாவா தீவில் இந்த வகைக்கோழிகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே மதம் மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்காக வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால், இப்படி ஒரு கோழி வகை இருப்பதை உலகத்தார் அறிய நேர்ந்தது இந்தோனேசியாவில் டச்சு காலனி ஆதிக்கத்தின் பின்னரே. டச்சுக்காரரான ஜான் ஸ்டீவன்ரிக் தான் முதன்முதலாக அயாம் செமனி வகை கோழிகளை 1998 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்தார். தற்போது இந்த வகை ஸ்பெஷல் கோழிகள் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவோக்கியா, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.

ஏன் அரிதானதாகக் கருதப்படுகிறது?

இவற்றில் பொதுவாக சேவல் இனங்கள் 2 முதல் 2.5 கிலோ கிராம் வரை எடை கொண்டிருக்கும். கோழிகள் 1.5 முதல் 2 கிலோ கிராம் வரை எடைகொண்டிருக்கும். இவற்றின் முட்டைகள் வெண்மையாக இருப்பதில்லை. மாறாக க்ரீம் அல்லது அரை வெள்ளை நிறத்தில் இருக்கும். அத்துடன் இவ்வகைக் கோழிகள் குயில்களைப் போல அரிதாகவே அடைகாத்து குஞ்சு பொரிக்கக் கூடியவை என்பதால் இந்த இனமும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் முட்டைகள் 45 கிராம் எடை கொண்டவை.

சந்தை மதிப்பு...

இந்த வகைக் கோழிகள் இந்தோனேசிய பறவைச் சந்தைகளில் மட்டுமே தற்போது கிடைத்து வருகின்றன. இவற்றின் சந்தை மதிப்பை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக இருப்பவை இவற்றின் எடை மற்றும் நிறமே! பறவை எத்தனைக்கெத்தனை அடர் கருப்பாக இருக்கிறதோ, கறி எத்தனை கருப்பாக இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் விலை அதிகரிக்கும். அதன் அடிப்படையில் கோழிகளின் தரத்தைப் பொருத்து கிலோவுக்கு $50 முதல் $2500 வரை விலை வித்யாசப்படுகிறது. இவற்றில் இந்தோனேசியன் கிங் வகை அயாம் செமனி கோழிகள் $2500 வரை விற்பனையாகின்றனவாம்.

அடேயப்பா... நம்மூர் மதிப்புக்கு 1,73,435.00 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தந்தூரி என்ற பெயரில் நம்மூரில் சிக்கனைக் கருக விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், இந்தச் சிக்கனை அப்படிச் சமைக்க நினைத்தால் கருகியிருக்கிறதா? வெந்திருக்கிறதா? என்பதை எப்படிக் கண்டுகொள்வதாம்?! இத்தனை விலை கொடுத்து வாங்கி நம்மவர்கள் எங்கே இதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் நம் மக்கள் பிளாக் சிக்கனையும் ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்று யூ டியூப் சொல்கிறது.

இதோ கிராண்ட்பா கிச்சன் சேனலில் ஒரு வயதானவரும், நவாப்ஸ் கிச்சன் ஃபுட் ஃபார் ஆல் ஆர்பன்ஸ் சேனலில் செஃப் நவாபும் பிளாக் சிக்கன் சமைப்பது எப்படி என்று விலாவரியாக விளக்கிச் சிறப்பித்திருக்கிறார்கள்.

நவாப்ஸ் கிச்சனின் க்வாஜா சொல்கிறார் இந்த வகைக் கோழிகள் மிகை புரதத்துக்கும், குறை கொழுப்புக்கும் பேர் போனவை என்று.

 

வாய்ப்புக் கிடைத்தால் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.

]]>
பிளாக் சிக்கன், அயாம் செமனி சிக்கன், இந்தோனேசியா, ஜாவா, விலை உயர்ந்த சிக்கன், black chicken, Ayam Cemani Black Chicken, poultry breed, world's costly poultry breed https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/06/ayam-cemani-black-chickens-story-3146796.html
3145584 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! RKV Saturday, May 4, 2019 12:36 PM +0530  

வருஷா வருஷம் மே மாசம் ஆனாலே அக்னி நட்சத்திரம்னு ஒன்னு வந்துடுதே... அது ஏன்னு எப்போவாது யோசிச்சிருக்கீங்களே?

உண்மையில் வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு வார்த்தைப் புழக்கமே அதில் இல்லை என்பதே நிஜம்.

பிறகு ஏன் அப்படி ஒரு வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

வானிலை ஆய்வு மைய அடிப்படையிலான தகவல்!

வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலத்திற்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்துக்கும் நடுவில் நிலவும் இடைவெளியே அக்னி நட்சத்திர காலம் என வானிலை ஆய்வும் மையத் தகவல் கூறுகிறது. இது அறிவியல் பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணம். இது தவிர அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர இன்னும் அக்னி நட்சத்திர காலத்துக்கு இதிகாச உதாரணங்களுடன் கூடிய தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

வேதகாலத்தில் ஒரு சமயத்தில் சுவேதக யாகம் என்று சொல்லப்படக்கூடிய யாகம் ஒன்றை அப்போதிருந்த மன்னர்களும், முனிவர்களும் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இந்த யாகம் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிவடைந்து விடுவது அல்ல, 12 ஆண்டுகள் தொடர்ந்து அக்னி வளர்த்து நெய்யூற்றி இடைவிடாது சுவேதக யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் அக்னிதேவனுக்கு மந்த நோய் ஏற்பட அந்த நோயிலிருந்து விடுபட பெரு நெருப்பை விழுங்க வேண்டும் எனத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. பெருநெருப்பை உருவாக்க, அன்றிருந்த நிலையில் அடர் வனமாக இருந்த காண்டவ வனத்தை எரித்து விழுங்கும்படி அக்னிதேவனுக்கு சொல்லப்பட அக்னியும் அதற்கு முயன்றிருக்கிறார்.

அப்போது காண்டவ வனத்தை இருப்பிடமாகக் கொண்ட வன உயிர்கள் அனைத்தும், ஐயோ! அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே! எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள். வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை. இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா!  காண்டவ வனத்தை வருணன் அணுக முடியாதவாறு உன் அம்புச்சரங்களால் வனத்தைச் சுற்றி ஒரு கோட்டை கட்டு. கோட்டைக்குள் அக்னி தேவரின் பசி தீரட்டும். இதில் அக்னிக்கு ஒரே ஒரு நிபந்தனை, உன் பசியை 21 நாட்களுக்குள் நீ தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எங்களால் வருணனை கட்டுப்படுத்த முடியாது’ என்று அபயமளித்திருக்கிறார். அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.

இது மகாபாரத உதாரணம். அந்தக் காண்டவ வனம் தான் பின்னாட்களில் இந்திரப் பிரஸ்தமானது. அந்நாளைய இந்திர பிரஸ்தத்தின் இன்றைய பெயர் என்ன தெரியுமா? டெல்லி. ஆம், நமது இந்தியத் தலைநகரமே தான். ஸோ அக்னி நட்சத்திரத்துக்கு இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் கால அவகாசமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது. இதைக் கத்தரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஞ்சாங்கப்படி அக்னி நட்சத்திர காலத்தில் விவசாயிகள் மனம் குளிர மண் வளம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. இதை அவர்கள் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று குறிப்பிடுகிறார்கள். 


 

]]>
unknown facts about agni natchathiram, kaththari veyil, agni natchathiram, அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில், அபூர்வ தகவல்கள் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/04/agni-natchathiram-unknown-facts-3145584.html
3143105 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் 2021 லாவது தீருமா 'மூன் லேண்டிங்' சர்ச்சைகள்! (விடியோ) கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 30, 2019 01:08 PM +0530  

அமெரிக்காவின் நிலவுப் பயணம் குறித்த முழுமையான தகவல்களைப் பெறவும் மூன் லேண்டிங் குறித்து இதுவரை உலகநாடுகள் முன் வைக்கும் சர்ச்சைக்குரிய கேள்விகள் மற்றும் அதற்கு இதுவரை நாசா அளித்த பதில்கள குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள கட்டுரை இணைப்பைத் திறந்து வாசியுங்கள்.

 

மூன் லேண்டிங் நிஜமா? பொய்யா?  கட்டுரை வடிவில் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

மூன் லேண்டிங் சர்ச்சை குறித்த விடியோ...

 

 

1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியது. நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமைக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொந்தக்காரர் ஆனார். இது வரலாறு. உலகறிந்த உண்மை. ஆனால், அமெரிக்காவின் இந்தச் சாதனையை பொய் என்று மறுக்கக் கூடியவர்கள் அனேகம் பேர். அதற்காக அவர்கள் சில பொருத்தமான கேள்விகளை முன் வைக்கிறார்கள். அந்தக்கேள்விகளுக்கு நாசா பதிலும் அளித்துள்ளது. ஆனாலும், உலகளவில் இன்றும் கூட மூன் லேண்டிங் என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் 2021 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தற்போது உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்து வருகின்றன. 

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒளிப்பதிவு: ராகேஷ் குமார்
தொகுப்பு: நவீன்குமார்

]]>
America, அமெரிக்கா, moon landing conspiracy theories, மூன் லேண்டிங் சர்ச்சைகள் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/30/moon-landing-conspiracy-theories--when-it-will-be--proved-video-3143105.html
3141240 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தமிழகத்தில் பிறப்பது விளையாட்டு வீரர்களின் துரதிர்ஷ்டமா?! வாங்க தெரிஞ்சுக்கலாம் கோமதி மாரிமுத்து ஜெயித்த கதையிலிருந்து! கார்த்திகா வாசுதேவன் Saturday, April 27, 2019 03:18 PM +0530  

திருச்சியில் ‘முடிகண்டம்’ என்றொரு  குக்கிராமம். சரியான சாலை வசதி கிடையாது. பக்கா கிராமம். அந்த கிராமம் இன்று இந்தியா முழுவதும் அறியப்படுகிறதென்றால் காரணம் அங்கு பிறந்து வளர்ந்து இன்று 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பாக ஓடி தங்கம் வென்ற முதல் மங்கையான கோமதி மாரிமுத்துவால் தான். 

யார் இந்த கோமதி மாரிமுத்து?

கடந்த வாரம் வரை இந்தப் பெயரை தமிழகத்தில் யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று அவரை அழைத்து விருதளித்து விருந்தளித்து சிறப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக விளையாட்டுத்துறை.

கோமதி மாரிமுத்து பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிக்கு அருகில் இருக்கும் முடிகண்டம் கிராமத்தில். மாரிமுத்து தம்பதியினருக்கு 4 பிள்ளைகள். அவர்களில் இளையவர் கோமதி. பண்ணைக்கூலிகளான ராசாத்தி, மாரிமுத்து தம்பதியினர் தங்களது கடைக்குட்டி மகளான கோமதியின் தடகள ஆர்வத்தைக் கண்டு ஆரம்பம் முதலே ஆதரிக்கத் தொடங்கினர்.

அதிலும் தந்தை மாரிமுத்துவுக்கு வெயிலானாலும் சரி அடை மழையானாலும் சரி மகள் கோமதி ஓட்டப் பந்தயப் பயிற்சி எடுத்துக் கொள்வதென்றால் எதுவும் பொருட்டில்லை. கருக்கிருட்டில் மகளை எழுப்பித் துணையாக சைக்கிள் எடுத்துக் கொண்டு அவள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல துணையாக நிற்பார். அந்த அப்பாவுக்கு மகள் இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்திருக்கிறது. அப்படித்தான் விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் கோமதி.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இளநிலை பி ஏ எகனாமிக்ஸ் முடித்து விட்டு சென்னை எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் எம் ஏ மீடியா மேனேஜ்மெண்ட் பயின்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் வென்றெடுத்த பதக்கங்களை வைக்க இப்போது அவரது 150 சதுர அடி முடிகண்டம் வீட்டில் இடமே இல்லை என்கிறார்கள் பேட்டிக்காக அங்கு சென்று வந்தவர்கள். கோமதியின் அம்மா ராசாத்தி தன் மகள் பெற்ற பதக்கங்களையும் கோப்பைகளையும் வைக்க இடமின்றி ஒரு பெரிய பெட்டியிலும், பேகிலுமாக திணித்து வைத்திருக்கிறார். அத்தனை பதக்கங்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கோமதிக்கு கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில் வேலை கிடைத்து தற்போது பணிநிமித்தம் அங்கு வசித்து வருகிறார் கோமதி.

அவருடன் பிறந்த இரு சகோதரிகளுக்குத் திருமணமாகி விட்டது. கோமதி, தனது வெற்றிக் கனவுகளுக்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார் என்கிறார் அம்மா ராசாத்தி. தோகாவில் தங்கம் வென்ற தமிழகத்து கோமதியின் கதை இப்படித் தான் தொடங்குகிறது அவரைப் பற்றி செய்தி வெளியிடும் அத்தனை ஊடகங்களிலும்.

அதே சமயம் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற நொடியில் இருந்து இப்போது வரை கோமதியைச் சந்தித்த அத்தனை ஊடகத்தினரிடமும் கோமதி மறவாமல் தெரிவிக்க விரும்பிய ஒரு விஷயம் உண்டு. அது;

‘எனக்கு இந்தப் போட்டியில் ஜெயிக்கும் வரை ஸ்பான்சர்கள் யாரும் கிடையாது. இந்தப் போட்டிக்கே நான் என் சொந்த செலவில் தான் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டு சென்றேன். இங்கே தங்குமிடம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், முக்கியமாக ஓட்டப் பந்தய வீரங்கனையான எனக்குத் தேவையான தரமான ஷூ, சத்தான சாப்பாடு எல்லாவற்றுக்கும் நான் என்னை மட்டுமே நம்பியிருந்தேன். எனக்கு வெற்றியைத் தேடித் தந்த இந்தப் போட்டியில் கூட நான் கிழிந்த ஷூவைப் போட்டுக் கொண்டு தான் ஓடி ஜெயித்திருக்கிறேன். போட்டியில் என்னுடன் பங்கேற்ற அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் இது தெரியும். பிற விளையாட்டு வீரர்களுக்கு இருந்த பகட்டான உடை வசதி எல்லாம் என்னிடம் கிடையாது. நான் சுமாரான உடைகளுடன் தான் அங்கு தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படவில்லை. நான் என்னுடைய குறிக்கோளில் மட்டுமே ஆழ்ந்த கவனத்துடன் இருந்தேன். அந்த கவனமும், அதை அடையும் மன உறுதியும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்று நம்புகிறேன் நான், ஆனாலும், நான் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்ததால் இது சாத்தியப்பட்டது. நம் மாநிலத்தில் என்னைப் போல பலர் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சாதித்த பின்னும் கூட விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை தான் இன்றும் நீடிக்கிறது. காரணம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான பொருட்செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் தான். 

சரியான ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. வெற்றியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. போட்டிகளில் பங்கேற்கத் தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, கோச்களுக்கான செலவு, விளையாட்டு உபகரணங்களுக்கான செலவு என்று எதுவுமே கிடைக்காமல் வீரர்கள் எத்தனை நாட்களுக்குத் தான் தாக்குப்பிடிக்க முடியும்?! அத்தனை கஷ்டங்களும் எனக்கு இருந்தன. காயம் காரணமாக நடுவில் 2 வருடங்கள் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் மொத்தமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழலும் வந்தது. கஷ்டமான அந்தக் காலத்தையும் கடந்து வந்தேன். ஆனால், எத்தனை பேரால் இப்படித் தடைகளைக் கடந்து வெல்ல முடியும்?. விளையாட்டில் ஆர்வமுடைய, சாதிக்கக்கூடிய அளவுக்கு திறமைகள் கொண்ட பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால் மேற்சொன்ன கஷ்டங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விளையாட்டே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் பலர். திறமையுள்ளவர்களை அடையாளம் காண முடியாமல் போவதால் யாருக்கு நஷ்டம்? தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் விட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். வடமாநிலங்களில் அப்படியல்ல. அவர்கள் தங்களது மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் கடைசி வரை அவர்களுடன் நின்று போராடத் தயங்குவதே இல்லை. அங்கே விளையாட்டு வீரர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.

அப்பா தான் குலதெய்வம்!

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு விளையாட்டு வீரங்கனையாக உருவாக வேண்டும், சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் என்னை வளர்த்து வந்த என் அப்பா ஒரு சமயத்தில் முற்றிலுமாக உடல் நலிந்து படுக்கையில் வீழ்ந்தார். அவருக்குத் தேவையான உணவுக்குச் செலவளிக்க கூட வீட்டில் பணமே இல்லாது போல சூழல் வந்தது. அப்படியும் அப்பா, என்னை எப்படியாவது மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான ஊக்கம் அளித்து அனுப்பி வைக்கத் தவறவில்லை. அப்பாவுக்குத் தன் நண்பர்களிடம் எல்லாம் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேச எப்போதுமே ப்ரியம் அதிகம். ஒருமுறை கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்த நிலையிலும் கூட வீட்டில் சாப்பிட உணவின்றி மாட்டுக்கு வைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு என்னைப் போட்டிகளுக்கு அனுப்ப ஆர்வத்துடன் இருந்தார் என் அப்பா, இன்றைக்கு அப்பா இல்லை, அவர் இப்போது என் முன்னால் இருந்தால் அவரைத் தான் என் குலதெய்வம் என்பேன் நான். என் வெற்றிகளுக்கெல்லாம் என் அப்பா தந்த ஊக்கமே முதல் காரணம்”

-  என்று கண்ணீருடன் நெகிழ்ச்சியாகத் தன் கதையைப் பகிர்கிறார் கோமதி மாரிமுத்து.

தங்க மங்கையை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் கண்டுகொள்ளவில்லையா?

நேற்று வெள்ளியன்று ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்ற கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தியா திரும்பினார் கோமதி. அவரை உடனடியாக வரவேற்கச் சென்றவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் அல்ல, வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினரே! ஆசிய தடகளப் போட்டிகளில் முதல்முறையாகத் தங்கம் வென்ற பெண் எனும் சிறப்புக்குரிய கோமதி மாரிமுத்துவை வரவேற்பதில் தமிழக ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் ஏன் இத்தனை மெத்தனம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர், தங்களது வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோமதியிடம் முன் வைக்கப்பட்டது. அப்போது கோமதி அளித்த பதில்;

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசனுக்கு தான் ஊர் திரும்பும் விவரங்கள் தெரியாது. அதனால் அவர்கள் முதலாவதாக என்னைத் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. நான் இந்தியா திரும்பியதும் முதன்முதலாக வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர் என்னை அணுகி, அவர்கள் எனது அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இருப்பதாக விருப்பம் தெரிவித்தனர். ஸ்பான்சர்களுக்காக மேலும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று வேலம்மாள் பள்ளி விழாவில் கலந்து கொண்டபின் நாளை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நாளை நான் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் எனது வெற்றியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் சரியான செய்தி அல்ல’ என்றார் கோமதி மாரிமுத்து.

கோமதி மாரிமுத்துவின் ரோல்மாடல் யார்?

ஓட்டப்பந்தயப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த ரோல்மாடலாக கோமதி கருதுவது தடகள வீரங்கனை சாந்தியை.

சாந்தியை தமிழகம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது என்று நம்புவோம்.

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. 2006-ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டதோடு அவர் தடகள போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. அதில் மனமுடைந்த சாந்தி, மேற்கொண்டு இந்த விஷயத்தில் தனது போராட்டத்தை எப்படி மேற்கொள்வது என்பதறியாமல் செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டார். அத்துடன் தற்போது அவர் தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்ட பதக்கக் கனவை திறமையுள்ள பிற இளம் விளையாட்டு வீரர்கள் பெறும்படியாக அவர்களுக்கு இலவசத் தடகளப் பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல்.

அந்த சாந்தி தான் தனது ரோல்மாடல் என்கிறார் கோமதி மாரிமுத்து. சாந்தி குறித்துப் பேசும் போது, ‘அக்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்ததால் தான் அவருக்கு இப்படி ஒரு நிலை. ஒருவேளை அவர் வடமாநிலங்களில் பிறந்திருந்து இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருந்தால் நிச்சயம் அந்த மாநிலத்தார் அக்காவை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.’ என்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்யத் தவறவில்லை.

தோகாவில் தங்கம் வென்றதுமே கோமதியை மகிழ்ச்சியில் உச்சி குளிர வைத்த ஆரத்தி வரவேற்பு!

தோகாவில் வசித்த தமிழ் குடும்பங்கள் சில ஒன்றிணைந்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து இங்கே ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தங்களது மண்ணின் வெற்றி மங்கையை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள். அதற்காக தோகாவில் இருக்கும் இந்திய அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட போது முதலில் மறுத்தவர்கள் பின்னர் 1 மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அப்படித்தான் அங்கிருந்த தமிழ்க்குடும்பத்தினரில் ஒருவரது வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார் கோமதி மாரிமுத்து. வீட்டுக்கு வந்த விளையாட்டு வீரங்கனையை ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் தமிழ்ப்பெண்கள். அதைக் கண்டு நெகிழ்ந்து போன கோமதி, ‘எனக்கு இப்படியெல்லாம் இதுவரை யாருமே செய்ததில்லைங்க’ என்று நெகிழ, கோமதிக்குப் பிடித்த மீன் குழம்பை மண்பானையில் சமைத்துச் சுடச்சுட அரிசிச்சாதத்துடன் தலைவாழை இலையில் விருந்தளித்து அசத்தி இருக்கிறார்கள் அங்கத்திய தமிழர்கள். ஆசிய தடகள வெற்றிக்காக கோமதிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். 

கோமதியின் ட்ராக் ரெகார்டு...

இந்த வருடத் துவக்கத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பைக்கான தடகளப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2:03:21 நிமிடங்களில் ஓடி சாதனை படைத்திருந்தார். தன்னுடைய இந்த சாதனையை மீண்டும் தோகாவில் நடைபெற்ற ஆசியத் தடகளப் போட்டியில் அதே 800 மீட்டர் தூரத்தை 2:02:70s நிமிடங்களில் ஓடிக் கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடித்திருக்கிறார் கோமதி மாரிமுத்து.

கோமதியை வந்தடைந்த அன்பளிப்புகள்!

திமுக சார்பாக 10 லட்சமும், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ 5 லட்சமும் தடகள வீரங்கனை கோமதிக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என அந்தந்த கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு 1 லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசியத் தடகளப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற கோமதியை தமிழக அரசு சார்பாக வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.

கோமதியின் அடுத்தடுத்த இலக்குகள்...

தற்போது டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் கோமதி அடுத்தபடியாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியுடையவராகத் தன்னை தயார் செய்து கொள்வதே தந்து அடுத்தகட்டப் பணியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கோமதியின் வெற்றி கர்நாடகத்துக்கா? தமிழகத்துக்கா?

கோமதி மாரிமுத்துவின் வெற்றிக்குப் பின் பலர் அவரது வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழகத்துக்கா? அல்லது கர்நாடகத்துக்கா? யாருக்கு உரியது இந்த வெற்றிக்கான பெருமை என்றொரு கேள்வியை முன்வைக்கிறார்கள். காரணம் கோமதி தற்போது பணிபுரிந்து வருவது கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில். பணிபுரிவது அங்கு என்றாலும் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் தான். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் தான் தனது இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தடகளப் பயிற்சி பெற திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்திற்குச் செல்வாராம். அங்கு கோச் ராஜாமணியிடம் பயிற்சி பெறச் செல்ல வேண்டுமென்றால், கோமதி முடிகண்டத்தில் இருந்து அதிகாலை 4.30 மணி பேருந்தை பிடிக்க வேண்டும். அப்படியெல்லாம் கஷ்டப் பட்டு பயிற்சி எடுத்துப் பெற்றது தான் இந்த தங்கப் பதக்கம். இன்று பணிக்காக அவர் கர்நாடகத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும் வெற்றிக்கான பெருமையை தமிழகத்துக்கு வழங்கவே தான் எப்போதும் விரும்புவதாக கோமதியே தெரிவித்திருக்கிறார்.

 

 

 


 

]]>
கோமதி மாரிமுத்து, தடகள வீரங்கனை, தங்க மங்கை, 23 வது ஆசிய தடகளப் போட்டி, தோகா, 23 rd asian athletetic games, athlete, gomathi marimuthu, trichy, Gomathi marimuthu's tale, gomathi marimuthu wins india's first gold, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/27/born-in-tamilnadu-is-unlucky-for-sports-persons-come-lets-go-through-it-from-gomathi-marimuthus-success-story-3141240.html
3139240 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அமர் சித்ர கதா ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, April 24, 2019 01:28 PM +0530  

ஆயகலைகள் 64 என்று அறிந்திருப்பீர்கள். கிருஷ்ணர் தன் அராஜக மாமன் கம்சனைக் கொல்வதற்காக பயிற்சி எடுத்துக் கொள்ள சந்தீபனி முனிவரைத் தேடிச் சென்றார். உடன் அண்ணன் பலராமனும் உண்டு. அங்கு அவர்கள் வெறும் அறுபத்தி நான்கே நாட்களில் 64 கலைகளையும் 14 விதமான அறிவியல் உட்பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்து திரும்பியதாக இந்து புராணங்கள் சொல்கின்றன. கிருஷ்ணர் கற்றுக் கொண்ட அந்த 64 கலைகளையும் ஒரே இடத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு நமது இன்றைய தலைமுறையினருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?! ஆஹா, ஓஹோ அமேஸிங் என்று துள்ளிக் குதிக்கும் படியாகத்தான் இருக்கும். 

அதற்கு முன் 64 கலைகள் என்னென்ன என்று பார்த்து விடுவோம்.

 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
 2. எழுத்தாற்றல் (லிகிதம்)
 3. கணிதவியல்
 4. மறைநூல்(மறைநூல்)
 5. தொன்மம் (புராணம்)
 6. இலக்கணவியல் (வியாகரணம்)
 7. நயநூல் (நீதி சாஸ்திரம்)
 8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்)
 9. அறநூல் (தரும சாஸ்திரம்)
 10. ஓகநூல் (யோக சாஸ்திரம்)
 11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்)
 12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்)
 13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்)
 14. மருத்துவ நூல் ( வைத்ய சாஸ்திரம்)
 15. உறுப்பமைவு நூல் ( உருவ சாஸ்திரம்)
 16. மறவனப்பு (இதிகாசம்)
 17. வனப்பு
 18. அணிநூல் (அலங்காரம்)
 19. மதுரமொழிவு (மதுர பாடணம்)
 20. நாடகம்
 21. நடம்
 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
 23. யாழ் (வீணை)
 24. குழல்
 25. மதங்கம் (மிருதங்கம்)
 26. தாளம்
 27. விற்பயிற்சி (அஸ்திர வித்தை)
 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
 29. தேர்ப்பயிற்சி (ரத பரீட்சை)
 30. யானையேற்றம் (கஜ பரீட்சை)
 31. குதிரையேற்றம் ( அஸ்வ பரீட்சை)
 32. மணிநோட்டம் (ரத்ன பரீட்சை)
 33. மண்ணியல் அல்லது நிலநூல் (பூமி பரீட்சை)
 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
 35. மல்லம் (மல்யுத்தம்)
 36. கவர்ச்சி (ஆகருடணம்)
 37. ஓட்டுகை (உச்சாடணம்
 38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
 39. காமநூல் (மதன சாஸ்திரம்)
 40. மயக்குநூல் (மோகனம்)
 41. வசியம் (வசீகரணம்)
 42. இதளியம் (ரசவாதம்)
 43. இன்னிசைப் பயிற்சி (காந்தர்வ வாதம்)
 44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
 45. மகிழுறுத்தம் (கவுத்திக வாதம்)
 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
 47. கலுழம் (காருடம்)
 48. இழப்பறிகை (நட்டம்)
 49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
 50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
 51. வான்செலவு (ஆகாய கமனம்)
 52. கூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்)
 53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
 54. மாயச்செய்கை (இந்திரஜாலம்)
 55. பெருமாயச் செய்கை (மகேந்திரஜாலம்)
 56. அழற்கட்டு (அக்னித் தம்பனம்)
 57. நீர்க்கட்டு (ஜலத்தம்பனம்)
 58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
 59. கண்கட்டு (திருஷ்டித்தம்பனம்)
 60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
 61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
 63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

சரி இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் யார் கற்றுத் தருகிறார்கள்? என்ற கேள்வி வருமே?!

‘அமர்சித்ரகதா’ நிறுவனத்தார் தான். ACK ALive (Amar Chitra Katha Alive) என்ற பெயரில் நடிகர் ராணா டகுபதி, அமர் சித்ர கதாவின் CEO அனுராக் அகர்வால், விதிஷா பாக்ரி மூவரும் இணைந்து ஸ்தாபித்துள்ளனர்.

எங்கே என்றால்? 

தற்போது முதற்கட்டமாக ஹைதராபாத் ராமாநாயுடு ஸ்டுடியோ வளாகத்தில் இருக்கும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் மட்டுமே துவக்கப்பட்டுள்ள ACK Alive கூடிய விரைவில் இந்தியா முழுவதும் தனது கிளைகளைப் பரப்ப உள்ளதாம்.

அதெல்லாம் சரி தான். ஆனால், இவர்களால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆய கலைகள் 64 ஐயும் கற்றுத்தர முடியுமா? முதலில் இவை அத்தனையையும் கற்றுத்தர பொருத்தமான ஆசிரியர்கள் தற்காலத்தில் இருக்கிறார்களா? என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த அனாவசியக் கேள்விகளை புறம் தள்ளி விட்டால் ACK Alive அருமையான முயற்சி.

கற்பனை செய்து பாருங்கள். நாம் சிறு வயதில் புத்தகத்தை எடுத்த கை விடாமல் அப்படி விழுந்து விழுந்து படுத்துக் களிப்போமே சுப்பாண்டியின் சாகஷங்கள், துப்பறியும் சாம்பு, வேட்டைக்காரன் வேம்பு, காளி தி க்ரோ, பட்டி விக்ரமாதித்தன், கிருஷ்ண பலராமன், உஷை அனிருத்தன் போன்ற அருமையான ஃபேண்டஸி கதாபாத்திரங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும், சிற்பங்களாகவும், பொம்மைகளாகவும் நம்மைச் சுற்றி உலவ அவர்களுக்கு நடுவே அவர்கள் அமர்சித்ர கதைகளில் வெளிப்படுத்திய ஆயகலைகளையும் நாம் கற்கும் அனுபவம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை! நிச்சயம் அது ஒரு அற்புதமான அனுபவமாகவே இருக்கும். 

ACK Alive  வகுப்புகளில் சிறுவர், சிறுமிகள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. கார்ப்பரேட் பணியில் அலுப்பும், சலிப்பும் மிக்கவர்கள், தினமும் ஒரே வேலையைச் செய்து செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறோமே என்று சலிப்புத் தட்டியவர்கள், வயதானாலும் சுறுசுறுப்பாக புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்வர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த வகுப்புகளில் தங்களை என்ரோல் செய்து கொண்டு பயிலத் தொடங்கலாம். டிப்ளமோ வகுப்புகளும் உண்டு என்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் தமிழர்கள் அல்லது தமிழ் அறிந்தவர்கள் எவரேனும் ஆர்வமிருப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று விட்டு உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்களேன்.

அமர்சித்ரா கதா ரசிகர்களுக்கு இது நிஜமாகவே சர்ப்ரைஸ் தான் இல்லையா?!

]]>
ACK Alive, amarchitrakatha, rana daggubatti, ACK Alive, அமர் சித்ர கதா, அம்புலிமாமா, ராணா டகுபதி, ஆயகலைகள் 64, 64 art forms of indian culture, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/24/அமர்-சித்ர-கதா-ப்ரியர்களுக்கு-ஒரு-சர்ப்ரைஸ்-3139240.html
3138545 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை! கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 23, 2019 12:42 PM +0530  

என் பெயர் அருண் குமார் புருஷோத்தமன். கடந்த ஏழரை வருடங்களாகப் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸிங் ஆஃபீஸராக இருந்தேன். இப்போது இடுக்கி ஜில்லா மருத்துவமனையில் கேரளா ஹெல்த்கேர் சர்வீஸில் நர்ஸாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது குழந்தைகளுக்காக கடந்த ஏழரை மாதம் மிகுந்த சிரத்தையோடு இந்த மினி ஆட்டோவை உருவாக்கி இருக்கிறேன். இந்த ஆட்டோவின் பெயர் சுந்தரி ஆட்டோ.

இதை நான் எப்படி உருவாக்கினேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதில் நான் பயன்படுத்தி இருக்கும் பொருட்களில் பலவும் நமது வீடுகளில் நாம் முன்பே உபயோகப்படுத்தி கழித்துப் போட்டவை தான். இந்த ஆட்டோவின் முன்புறத்தின் வலப்பகுதியை உருவாக்க நான் என் வீட்டில் ரிப்பேர் ஆகி பயனற்று இருந்த சன் டைரைக்ட் டி டி ஹெச்சை வொர்க்‌ஷாப்பில் மோல்ட் செய்து வாட்டமாக வளைத்துப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆட்டோவின் அடியில் இருக்கும் மெட்டல் பாகத்திற்கு வீட்டில் இருந்த பழைய ஸ்டீல் ஸ்டவ்வை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். அதே போலத்தான் இந்த ஆட்டோவின் உட்புறத்தில் சாவி போட்டால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறேன். சாவி தவிர கிக் ஸ்டார்ட் செய்வதற்கும் இதில் வசதி உண்டு. அது மட்டுமல்ல, சாதாரணமாகப் பெரிய ஆட்டோக்களில் காணப்படும் வைப்பர் மெக்கானிஸன் என் குழந்தைகளுக்கான ஆட்டோவிலும் உண்டு. 

இது தவிர ஆட்டோவின் முன்புறக் கண்ணாடிப்பகுதியின் ரப்பர் மெட்டீரியலுக்காக பழைய செருப்புகளில் இருக்கும் ரப்பரை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மினி ஆட்டோவை இயக்க இரண்டு 12  வோல்ட் டி சி மோட்டாரைப் பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தம் 24 வோல்ட் மோட்டார் பவர் இதற்குப் போதும். பெரிய ஆட்டோக்களில் இருப்பதைப் போன்றே இதிலும் முன்புற ஹெட் லைட்டுகள், உட்புற லைட், பிரேக் வசதி, ஹார்ன் வசதி, முதலுதவிப் பெட்டி வசதி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சும்மா ஃபேன்ஸிக்காகவேனும் மீட்டர் பாக்ஸ் வசதி என ஒரு பெரிய ஆட்டோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் நான் என் மினி ஆட்டோவிலும் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆட்டோவில் செல்லும் போது என் குழந்தைகளுக்குச் சலிப்புத் தட்டக்கூடாது என்பதற்காக இதில் டிரைவர் ஷீட்டுக்கு அடியில் பென் டிரைவ் வசதியும், மெமரி கார்டு வசதியும் கூட செய்து வைத்திருக்கிறேன். ஆட்டோ ஓட்டும் போது பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டலாம் பாருங்கள், அதற்காகத்தான், அதோடு, இதை உருவாக்க அதிக செலவாகவில்லை, வீட்டிலிருக்கும் பழைய பிளாஸ்டிக் கண்டெய்னர் பாக்ஸைத்தான் இதற்காக உபயோகித்திருக்கிறேன்’ என்கிறார் அருண்குமார் புருஷோத்தமன்.

பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகள் விளையாடுவதற்காக எதைக் கேட்டாலும், அந்தப் பொருள் எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் இந்தக் காலத்தில் வாங்கித் தர சித்தமாகவே உள்ளனர். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாதபோது, குழந்தைகளை இப்படியாவது திருப்திப்படுத்தலாமே என்ற ஆசையில் தான் அப்படிச் செய்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் பணம் செலவழித்தும் கூட அவர்களால் தமது குழந்தைகளை முழுமையாகத் திருப்திப் படுத்தி விட முடியாது போகிறது. காரணம், கடைகளில் பணத்தைக் கொட்டி வாங்கித் தரும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் (கார், ஸ்கூட்டர், ட்ரெய்ன் போன்றவை) சில மாதங்களிலேயே தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கி விடும். முதலில் அவற்றிற்கு பேட்டரி வாங்கி மாளாது. இரண்டாவது மெயிண்டனென்ஸ் தொல்லை. சில குழந்தைகளுக்கு அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாது. அவர்கள் ஏனோதானோவென்று உபயோகித்து சில மாதங்களிலேயே அவற்றை ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இந்தக் கஷ்டம் எல்லாம் அருண்குமார் புருஷோத்தமனுக்கு இல்லை.

இந்த சுந்தரி மினி ஆட்டோவை அவர் தானே தன் கைகளால், தன் குழந்தைகளுக்காகச் செய்வித்திருக்கிறார். அதனால் என்ன? பாசமுள்ள எல்லா அப்பாக்களும் செய்யக் கூடியது தானே? என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். ஏனெனில், இந்த அப்பா, தான் வாங்கித் தந்த பொருள் ரிப்பேர் ஆனால், அதை உடனடியாக சரி செய்யக்கூடிய அளவுக்கு பொருள் குறித்த ஞானம் கொண்டவராகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அதனால் தான் இந்த விடியோவைப் பகிரத் தோன்றியது.

அருண்குமார் உருவாக்கிய இந்த மினி ஆட்டோ, இரவுகளிலும் பயணத்திற்கு ஏற்றதாம். குழந்தைகள் இரவில் எங்கே செல்லப்போகிறார்கள். இந்த ஆட்டோக்களை குழந்தைகள் மட்டும் பயன்படுத்துவதைக்காட்டிலும் பிறவியிலேயே குள்ளமாகப் பிறந்து வாழ்க்கைத் தேவைக்கு என்ன செய்வது? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் குள்ள மனிதர்களுக்கும் கூட பயன்படுத்தலாம். அவர்கள் இந்த ஆட்டோக்களை பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்று பள்ளி மற்றும் வீடுகளில் விடப் பயன்படுத்தலாம். இது ஒரு மாற்று உபயோகமே தவிர இப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அருண்குமார் இதை உருவாக்கவில்லை என்பது நிஜம். அவரது நோக்கம் அவரது குழந்தைகளின் சந்தோஷம் மட்டுமே!

இந்த விடியோவை முதல்முறை காணும் போது, மேலுமொன்று தோன்றியது. இது குழந்தைகள் இயக்கும் ஆட்டோ என்பதால் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ் கருவி வசதியையும் இதில் இணைக்கலாம். தவிர குழந்தைகள் தனியே இந்த வாகனத்தில் செல்லும் போது புதியவர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்படுமாயின் உடனடியாக பெற்றோர்க்கும், காவல்துறைக்கும் அந்த அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கை கடத்தப்படும்படியான அலார்ம் செட்டப் வசதிகளையும் இதில் இணைக்கலாம். இத்தனையையும் இணைத்து விட்டால் சற்று வயதில் மூத்த குழந்தைகள் இதில் தாராளமாகப் பள்ளி சென்று திரும்பலாம்.

தன் குழந்தைகளுக்காகத் தான் என்றாலும் கூட புதுமையாக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்த அருண்குமாரை நாம் பாராட்டினால் தவறில்லை.

வாழ்த்துக்கள் அருண்குமார்.

]]>
MINI AUTO, SUNDHARI MINI AUTO, ARUNKUMAR PURUSHOTHAMAN, மினி ஆட்டோ, சுந்தரி ஆட்டோ, அருண்குமார் புருஷோத்தமன் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/23/sundhari-mini-auto-made-by-arunkumar-purushothaman-3138545.html
3133834 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோசடிகள்! கார்த்திகா வாசுதேவன் Monday, April 15, 2019 12:46 PM +0530  

அயல்மொழித் திரைப்படங்களை அதிகம் கண்டதில்லை. கண்டவரையில் இந்தியத் திரைப்படங்களில், கதாநாயகி கர்ப்பமானால் உடனே அவளது வெட்கம் கலந்த தலைகுனிந்த முகத்தைக் காட்டிய அடுத்த செகண்டில் கேமரா கதாநாயகனின் முகத்துக்குத் தாவும், ஐயா சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார் அல்லது அளவிலா பெருமிதத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ரொமாண்டிக்காக கதாநாயகியைப் பார்த்துச் சிரிப்பார். இது தமிழ்சினிமாவில் நாயகி கர்ப்பம் என்றதும் நாயகன் அடைய வேண்டிய பாவமாக கருதப்படும் கிளிஷே காட்சிகளில் ஒன்றாக நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கர்ப்பம் என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆணும், பெண்ணும் இணைந்தால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கருமுட்டைகளும் ஆரோக்யத்துடன் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்யத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் பெருமிதம் என்பது இருவருக்கும் சரி சமமான உரிமை. 

நாம் தான் என்றைக்கோ தந்தை வழிச் சமூக மரபுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு விட்டோமே! அதனால் தான் இப்போதும் கூட யாரோ ஒரு பெண் கருவுற்றால் உடனடியாக அவளை அழைத்துப் பாராட்டுவதைக் காட்டிலும் அவளது கணவனை அழைத்து வாழ்த்துவதையும் பாராட்டுத் தெரிவிப்பதையுமே முதன்மையானதாகக் கருதுகிறோம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் இத்தகைய நடைமுறைகளால் தான் கீழ்கண்ட அனர்த்தங்கள் எல்லாம் கூட விளைகின்றனவோ என்றொரு சந்தேகம் எழுந்தது. அதனால் தான் நீட்டி முழக்கி இத்தனை விஷயம் பேச வேண்டியதாயிற்று.

கரு உண்டாதலையும், குழந்தை பிறப்பையும் ஆண் அணுகும் முறையும், பெண் அணுகும் முறையும் எப்போதுமே இங்கே வேறு வேறாகத்தான் இருக்கின்றது. ஆணுக்கு தனது ஆண்மையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக அந்நிகழ்வு அமைந்து போனது காலத்தின் கோலம்.

அதனால் தான் இந்த டச்சு டாக்டர் இப்படிச் செய்து விட்டாரோ என்னவோ?

டாக்டர் ஜேன் கர்பாத்

டாக்டர் ஜேன் கர்பாத், 2017 ல் இறந்து விட்டார். ஆனால் இறப்புக்கு முன்பு அவர் செய்த அடப்பாவி ரகமான காரியமொன்று இன்று உலகம் முழுக்கப் பரவி பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.

டாக்டர் ஜேன் கர்பாத், மகப்பேறு மருத்துவர். இன்னும் சொல்லப்போனால் மகப்பேற்றுத் துறையில் குழந்தையின்மை சிகிச்சைமுறைகளில் ஒன்றான IVF  சிகிச்சை அளிப்பதில் நிபுணர். IVF சிகிச்சை முறை என்பது குழந்தைப்பேறு அடைய முடியாத கணவன், மனைவி சோதனைக்குழாய் சிகிச்சை முறை மூலமாகவோ அல்லது வாடகைத்தாய் சிகிச்சை முறை மூலமாகவோ தங்களது விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் மருத்துவமனையில் சேமித்து குறிப்பிட்ட காலத்தில் அவற்றை சோதனைக்குழாய் அல்லது வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி கரு உண்டாகச் செய்யும் முறை. இந்த நடைமுறையில் சில சமயங்களில் கணவரது விந்தணுக்கள் கரு உண்டாக்கும் அளவுக்கு பலமிக்கதாக இல்லாத போது விந்தணுக்களை சிகிச்சைக்கு உட்படும் தம்பதியினரின் ஒப்புதலுடன் பிற ஆண்களிடமிருந்து (அவர்களது அடையாளம் மறைக்கப்படும்) தானமாகவும் பெறுவார்கள். 

இங்கே தான் இந்த டச்சு டாக்டர் திட்டமிட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே விந்தணு தானமாக தனது விந்தணுக்களையே அவர்களது அனுமதியின்றி செலுத்தியிருக்கிறார். ஒன்று, இரண்டு குழந்தைகள் அப்படிப் பிறந்திருந்தால் அதை யாரும் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இந்த டாக்டர் தான் உயிருடன் இருந்தவரையிலும் தனது விந்தணுக்களை இப்படித் தன்னிடம் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த அனைத்துப் பெண்களுக்கும் அவர்களுக்கே தெரியாமல் இணைத்திருக்கிறார்.  அப்படிப் பிறந்த குழந்தைகள் இதுவரை 49. அதில் ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் டாக்டரின் இந்த திருட்டுத் தனத்தை எதிர்த்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடிய போது தான் மரபணுச் சோதனை மூலமாக சுமார் 49 குழந்தைகளின் மரபணுக்கள் டாக்டரின் மரபணுவோடு ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. ஒத்துப் போவது என்றால் ஏதோ ஒரு சில குணநலன்களுடன் அல்ல, டாக்டரின் நேரடி வாரிசுகளாக அந்த 49 குழந்தைகளையும் கருதலாம், அந்த அளவுக்கு மரபணுக்கள் அச்சுப் பிரதி போல ஒத்துப் போகின்றன என்கிறது சோதனை முடிவுகள்.

டாக்டர் கர்பாத், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே சிகிச்சையின் போது கரு உருவாக்கத்திற்கு தனது விந்தணுக்களையே பயன்படுத்தியிருக்கிறார். தானே  போலியான டோனர் டாக்குமெண்டுகளைத் தயாரித்து அதை சிகிச்சைக்கு வரும் தம்பதியினருக்கு அளித்து அவர்களை அடையாளம் தெரியா நபர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெற்றிருப்பதாக நம்ப வைத்து இப்படியொரு விஷயத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறார் கர்பாத். இதை முதலில் கண்டுபிடித்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக நீதிமன்றத்திற்குப் போக, அதற்கான காவல்துறை விசாரணையின் போது டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாததுடன், சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு சிகிச்சை அளித்து நன்மை செய்த டாக்டரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். எனவே தான் நீதிமன்றம் மரபணுச் சோதனைக்கு உத்தரவிட்டது. தற்போது மரபணுச் சோதனை முடிவு வெளிவந்த பிறகு டாக்டரின் செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக பாதிக்கப்பட்ட டச்சு குழந்தைகள் உரிமைக்காக இவ்விஷயத்தில் போராடி வரும் அமைப்பு கூறியுள்ளது.

டாக்டர் கர்பாத்தின் விந்தணுக்களை அவரே பயன்படுத்திக் கொண்டதோடு அந்நாட்டின் பிற கருத்தரிப்பு மையங்களுக்கும் தனது விந்தணுக்களை அவர் தானமாக அளித்திருப்பது கொசுறுத் தகவல்.

டாக்டர் 2017 ஆம் ஆண்டு வாக்கில் இறந்து விட்டார். ஆயினும் சேமிப்பில் இருக்கும் விந்தணுக்கள் வாயிலாக அவரது நேரடி வாரிசுகள் தொடர்ந்து பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இதை தானமென்று எடுத்துக் கொள்வதா? அல்லது தனது ஆண்மையை நிரூபிக்க டாக்டர் இவ்விதமாகச் செய்தார் என்று எடுத்துக் கொள்வதா? 

புரியத்தான் இல்லை.

 
 

]]>
டச்சு டாக்டர், டாக்டர் ஜேன் கர்பாத், IVF FRAUDULENT, Dr Jan Karbaat, secretly fathered 49 children, IVF சிகிச்சை மோசடிகள், ரகசியத் தந்தை https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/15/dutch-fertility-doctor-used-own-sperm-to-inseminate-patients-3133834.html
3131906 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் டிரம்ப்புக்கு எதிராக கண்டனங்களைக் குவித்த புகைப்படத்துக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச செய்தி புகைப்பட விருது! RKV Friday, April 12, 2019 12:35 PM +0530  

 

கடந்த ஆண்டின் துவக்கத்தில் இணையதளங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை ஒரு புகைப்படம் வைரல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. பார்ப்பவர் மனதைக் கரையச் செய்யும் விதத்தில் இருந்த அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றது ஒரு பெண்குழந்தை. அமெரிக்கா, மெக்ஸிகோ பார்டரில் தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் தாயின் முழங்காலைப் பற்றிக் கொண்டு விசும்பும் அந்தச் சிறுமியின் புகைப்படம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைக் கொள்கையை மாற்றிக் கையெழுத்திடத் தூண்டியது என்றால் மிகையில்லை.

ஆண்டுதோறும் முறையான பாஸ்போர்ட் இன்றி எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவும் அண்டை நாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த முறைகேட்டைத் தடுக்கும் பொருட்டே எல்லை தாண்டி வந்து ஆவணங்கள் இன்றி பிடிபடுவோரது குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களின் பராமரிப்பில் விடுத்து பெற்றோரை உரிய விசாரணையின் பின் எல்லை தாண்டிய குற்றத்துக்கான தண்டனை அளிக்கும் நடைமுறையை டிரம்ப் அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நடைமுறையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவிய தங்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் காப்பகங்கள் ஒரே இடத்தில் இருப்பவை அல்ல. அவை அமெரிக்காவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். டிரம்பின் இந்தப் புதிய கட்டுப்பாடு உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியது.

குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது சட்டப்படி குற்றம். அதை டிரம்ப் தலைமையிலான அரசு எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்து வருகிறது. என உலகநாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் குறை கூறின. ஆயினும் ட்ரம்ப், தனது இந்த நடவடிக்கை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரோடு களையும் பொருட்டு தொடங்கப்பட்டதே என்று சாதித்தார். அந்தப் பதட்டமான சூழலில் மெக்ஸிகோவின் கொண்டூராவில் இருந்து தனது மகள் யனெலாவுடன் அமெரிக்க எல்லையைக் கடக்க முயற்சித்தார் சாண்ட்ரா சான்செஸ் எனும் பெண். எல்லை தாண்டும் போது அமெரிக்க காவல்துறையின் தேடுதல் வேட்டையில் சாண்ட்ரா சிக்கிக் கொள்ள சிறுமியை அவளது அம்மாவிடன் இருந்து பிரித்து தனியே நிற்க வைக்க முயல்கிறார் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரியொருவர். அதற்கு ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும் குழந்தை தன் அம்மாவின் முழங்காலை விட்டு நகர மறுத்து அழுகிறது.

டிரம்ப் அரசின் எல்லைப்புறக் கொள்கையை கண்டிக்கும் விதத்தில் மறுநாள் ஊடகங்களில் வெளியான இந்தப் புகைப்படம் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியது. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியா? இது கொடூரம், இத்தகைய மன உளைச்சலுக்கு பெற்றோரையும், குழந்தைகளையும்  உள்ளாக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கண்டனக்குரல்கள் வலுத்தன. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் எல்லைப்புறக் கொள்கையின் கடுமையைக் குறைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார் டிரம்ப்.

அந்தப் புகைப்படத்திற்கு தற்போது சர்வதேச செய்தி புகைப்படத்திற்கான விருது கிடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஜான் முர்ரே எனும் செய்திப் புகைப்படக் கலைஞர்.

அமெரிக்காவின் எல்லைப்புறக் கொள்கைகள் கடுமையான போது தகுந்த அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ நினைத்த அண்டை நாட்டார் ஆயிரக்கணக்கில் அமெரிக்க எல்லைப்புறங்களில் கைதானார்கள். வாஷிங்டன் எல்லைக் காவல்படை வீரர்களின் சைரன் ஒலிக்கும் காவல் வாகனங்களில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்களில் தங்களது குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அச்சம் பனி போல் உறைந்திருந்தது. அவர்களால் எதுவும் செய்வதற்கு இயலாத அந்த நிலையின் துயரத்தை இந்த உலகத்திற்கு நான் ஒரு கதையாகச் சொல்ல முற்பட்டேன். அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இந்தப் புகைப்படத்திற்கு கிடைத்த கவனமும், விருதும் என்கிறார் முர்ரே.

புகைப்படம் ஊடகங்களில் வைரலாகி ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பிய நேரத்தில் வாஷிங்டன் காவல்துறை குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.

அந்த குறிப்பிட்ட குழந்தை, தன் தாயைப் பிரிய மறுத்ததால் நாங்கள் சோதனையுடன் நிறுத்திக் கொண்டோம். சிறுமி அவளது அம்மாவுடனே தான் தங்க அனுமதிக்கப்பட்டாள். என்ற விளக்கமும் பின்னாட்களில் வெளிவந்தது.

ஆயினும் அமெரிக்காவின் கடுமையான எல்லைப்புறக் கொள்கைகளைத் தளர்த்தியதில் இந்தப் புகைப்படம் மிகப்பெரும் பங்காற்றியதை மறுக்க முடியாது. அந்தப் புகைப்படத்திற்கு இன்று விருதும் கிடைத்திருப்பதைக் கண்டு பாராட்டத் தோன்றும் அதே வேளையில் உலக அவலங்களை பத்திரிகை தர்மம் என்ற பெயரில் இப்படிப் புகைப்பட ஆவணமாக்க முயலும் புகைப்படக் கலைஞருக்கு இதனால் நேரும் மன உளைச்சலையும் மறந்து விடக்கூடாது.

]]>
migrant toddler crying, photo journalism, photo journalism award, us border, John Moore, ஜான் முர்ரே, சர்வதேச செய்தி புகைப்பட விருது, அமெரிக்கா எல்லைப்புறக் கொள்கை, கண்டனம், டிரம்ப், கொண்டூரா அகதிப் பெண், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/12/migrant-toddler-crying-at-us-border-photograph--wins-photo-journalism-award-3131906.html
3130662 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 MBA கல்வி நிறுவனங்கள்! Wednesday, April 10, 2019 02:30 PM +0530  

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தி நேஷனல் இன்ஸ்டிட்டியூஷனல் ரேங்கிங் ஃப்ரேம் வொர்க் அதாவது சுருக்கமாகச் சொல்வதென்றால் NIRF தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருக்கும் டாப் 20 MBA கல்லூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக நடமுறையில் இருக்கும் இந்த வழக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும்  கல்லூரிகள் எவையெவை என இப்போது தெரிந்து கொள்வோம். நேற்று புது தில்லியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுச் சிறப்பித்திருப்பது நமது இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள். தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்லது  B ஸ்கூல் வகைப்பிரிவின் கீழ் IIM அகமதாபாத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றிருக்கிறது IIM பெங்களூரு. கடந்த ஆண்டு டாப் டென் MBA கல்லூரிகள் லிஸ்டில் 10 ல் 4 இடங்களை B  ஸ்கூல் வகைப்பிரிவு கல்லூரிகளான IIM கல்லூரிகள் வென்றிருந்தன. இம்முறை எண்ணிக்கையில் மேலும் 2 கூடி டாப் 10 ல் 6 கல்லூரிகள் B ஸ்கூல் வகைப்பிரிவைச் சேர்ந்த IIM கல்லூரிகளாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரி கடந்தமுறை பெற்றிருந்த 10 ஆம் இடத்திலிருந்து இந்தாண்டு 7 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. IIM இந்தூர் கடந்தாண்டு NIRF பட்டியலில் இடம்பெறா விட்டாலும் இந்தாண்டு நேரடியாக NIRF பட்டியலில் 5 ஆம் இடத்தை வென்றிருக்கிறது.

NIRF  தர வரிசைப் பட்டியலின் கீழ் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், இதர கல்லூரிகள், தனியாரி கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கட்டடக்கலை பயிற்றுவிக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தம் 9 பிரிவுகளின் கீழான கல்லூரிகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து சிறந்த கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

அந்த அடிப்படையில் NIRF பட்டியலில்  IIT மெட்ராஸ் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.

NIRF தரவரிசை அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்:

1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு
2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்
3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா
4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM)  லக்னெள
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM)  இந்தூர்
6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்
7. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்
8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM)  கோழிக்கோடு
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி
10. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மும்பை

NIRF தரவரிசை அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்:

1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்
2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு
3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா
4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM)  லக்னெள
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT)  மும்பை
6.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM)  கோழிக்கோடு
7. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்
8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) ரூர்கி
10. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்

 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான மேற்கண்ட தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு இடம்பெற்ற ரூர்கி இந்தாண்டு பட்டியலில் டாப் 10 ல் இடம்பெறவில்லை. அதே போல கடந்தாண்டு பட்டியலில் இடம்பெறாத இந்தூர் IIM இந்தாண்டு டாப் 10 ல் இடம்பெற்றுள்ளது. மற்றப்டி தரவரிசையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. 

]]>
Top 10 Management colleges in india 2019!, இந்தியாவின் டாப் 10 MBA கல்லூரிகள் 2019, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/10/top-10--management-colleges-in-india-2019-3130662.html
3130066 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் சென்ற கேரள மாணவி! (வைரல் விடியோ) கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 9, 2019 11:28 AM +0530  

கிருஷ்ணா, கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மலா பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது தந்தை அஜய் காளிந்தி, தாயார் இந்து. இத்தம்பதியினரின் ஒரே குழந்தை கிருஷ்ணா. அஜய் காளிந்தி மலாவில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராகப் பணிபுரிகிறார். பெரிய வருமானமென்று சொல்ல முடியாது. ஆயினும் தன் மகளுக்கு குதிரைகளின் மீது இருந்த ப்ரியத்தைக் கண்டு கிருஷ்ணாவின் 11 ஆம் பிறந்த நாளின் போது சாம்பல் நிறக் குதிரை ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். பிறகு கிருஷ்ணா 10 ஆம் வகுப்பில் சேர்ந்ததும் புதிதாக ஒரு வெள்ளைப் புரவியும் பரிசாக வந்து சேர்ந்தது. இந்த இரண்டு குதிரைகள் மட்டுமல்லாது மேலும் ஒரு பசு மற்றும் எருமை மாடும் வளர்க்கிறார்கள். வீட்டு மனிதர்களோடு விலங்குகளையும் சேர்த்தால் இப்போது அஜயின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 7. இவர்களைப் பராமரிப்பதே தற்சமயம் போதுமானதாக இருப்பதால் இனி மேற்கொண்டு குதிரைகளை வாங்கித் தன் மகளுக்கு பரிசளிக்கப்போவதில்லை என்று சிரிக்கிறார் அஜய். குதிரைகளின் மீதான மகளின் ஆசை பெரிதில்லை... ஆனால், பெண் பிள்ளைக்கு குதிரையேற்றமெல்லாம் எதற்கு? என்று தட்டிக் கழிக்காமல் கிருஷ்ணாவின் ஆசையை நிஜமாக்கிய தகப்பன் என்ற வகையில் அஜயைப் பாராட்ட வார்த்தையில்லை.

 

 

கிருஷ்ணா குதிரையில் பள்ளிக்குச் செல்வது புதிதில்லை. அவர் இவர் முன்பும் தேர்வுக் காலங்களில் ஏதாவது ஒரு நாளில் குதிரையில் பள்ளிக்குச் செல்வது வழக்கம் தானாம். சிலர், அதெல்லாம் தேவையற்ற ஆபத்து! நகரத்தின் வாகன நெரிசலில் குதிரையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும், கிருஷ்ணாவுக்கு தனது குதிரையேற்றத் திறமையின் மீது அபார நம்பிக்கை. தன்னால் தனது குதிரையை செம்மையாகக் கையாள முடியும் என்று அந்தச் சிறுமி நம்பினார். அதன் விளைவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் கடைசி நாளான சமூக அறிவியல் தேர்வு அன்று குதிரையேறி தேர்வெழுத பள்ளிக்குச் சென்ற அழகு! கிருஷ்ணா 7 ஆம் வகுப்பிலிருந்தே குதிரையேற்றம் கற்று வருகிறார். கற்றுத்தர இரண்டு பயிற்சியாளர்கள் உண்டு. முன்பெல்லாம் கிருஷ்ணா குதிரையில் பள்ளி செல்கையில் பெரிதாக எவ்வித வியப்பும் இருந்ததில்லை. உடன் பயிலும் மாணவர்களும், அங்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சும்மா வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இம்முறை கிருஷ்ணா குதிரையில் சென்றதை அவரது பயிற்சியாளர்களின் ஒருவர் விடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர அதுவே தற்போது வைரலாகி பலரும் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்களாம்.

இதென்ன கூத்து! பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியேதும் இல்லை. யாராவது பப்ளிசிட்டிக்காக உயிரைப் பணயம் வைத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்வார்களா என்ன? அப்படியெல்லாம் எதுவுமில்லை. என் மகள் முறையாக குதிரைச் சவாரி கற்றிருக்கிறாள். அவளுக்குக் குதிரையேற்றம் பிடிக்கும். தன்னால் திறமையாக குதிரையைக் கையாள முடியும் என அவள் நம்பினாள். அந்த நம்பிக்கை எங்களுக்குப் பெருமிதம் தந்தது. அதனால் நாங்கள் அவளை அனுமதித்தோம். என்கிறார் அஜய்.

சூப்பர் அப்பா, சூப்பர்ப் பொண்ணு!

ஹாட்ஸ் ஆஃப் டு யூ கிருஷ்ணா!

]]>
KRISHNA, KERALA GIRL, HORSE GIRL OF KERALA, கிருஷ்ணா, கேரள பள்ளி மாணவி, 10 ஆம் வகுப்பு தேர்வு, குதிரைச் சவாரி, தேர்வு எழுத குதிரையில் சென்ற மாணவி, கேரளாவின் குதிரை சிறுமி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/09/krishna---kerala-girl-who-went-to-her-board-exam-riding-a-horse-3130066.html
3129483 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான வேலை மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள்! கார்த்திகா வாசுதேவன் Monday, April 8, 2019 01:14 PM +0530  

கடந்த வெள்ளியன்று 2018 -19 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 759 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்று தரவரிசைப்பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கனிஷ்கா கட்டாரியா. தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று ஐ ஏ எஸ் ஆகப் பொறுப்பேற்க உள்ளனர். தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த அபிஷேக் சென்னை குரோம்பேட்டையைச் சேந்தவர். மின்னணு பொறியியல் பட்டம் பெற்றவரான அபிஷேக், தனது தனியார் துறை வேலையை ராஜினாமா செய்து விட்டு 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்து இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் குறித்தும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் இல்லையா?! ஏனெனில் ஐஏஎஸ் கிட்டாவிட்டால் என்ன? ஐ ஏ எஸ்ஸுக்கு இணையான வேறு பல வேலைவாய்ப்புகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கின்றனவே. அது குறித்த விழுப்புணர்வை மாணவர்களிடையே உண்டாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.

இப்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இம்முறை வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான பிற வாய்ப்புகள் குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்பவை கடுமையானதாகக் கருதப்படுகின்றன. இத்தேர்வுகளுக்காகத் தயாராவது என்பது சாதாரண காரியமில்லை. மிக மிகக்கடுமையான உழைப்பைக் கோரக்கூடிய தேர்வுகள் இவை. நுட்பமான திட்டமிடலும், அயராத முயற்சியும், தளராத மனமும் இருந்தால் மட்டுமே இத்தேர்வுகளை எவரொருவராலும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய இயலும். அத்தனை உழைப்பும் இருந்த போதிலும் சிலருக்கு தேர்வில் வெற்றி கிட்டவில்லை என்றால் அதற்காக மனம் சோர்ந்து விடத் தேவையில்லை. அவர்களுக்கான பிற வாய்ப்புகளும் நிறையவே இங்கு கொட்டிக் கிடக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றியைத் தவற விட்டவர்கள் அடுத்தபடியாக அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். மாநில அளவிலான PSC தேர்வுகள், SSC CGL, வங்கி அதிகாரி பணிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் (TET) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற முயற்சிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டங்களை நன்கு படித்துத் தயாரானவர்களுக்கு மேற்கண்ட தேர்வுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களால் எளிதில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

போட்டித் தேர்வுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். MBA, MTech உள்ளிட்ட மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். முதலில் தாங்கள் அடைய விரும்பும் வேலையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம் அவசியம். அதற்கேற்ப திட்டமிடலும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் பெறவிருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ் பதவிகளுக்கு நிகரான வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டுமெனில் அதற்கேற்ப சிறந்த கல்லூரிகளை நாம் மேற்படிப்புக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் நாம் தேர்வு செய்யும் கல்லூரியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தரவரிசை, கல்வி முடிந்ததும் தங்களது மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் அந்தக் கல்வி நிறுவனம் காட்டும் முனைப்பு அவற்றின் கடந்தகால வேலைவாய்ப்பு விகித வரலாறு போன்றவற்றை முக்கியமாகக் கவனித்த பின் அக்கல்லூரிகளில் சென்று மேற்படிப்பு பயில்வது உத்தமம்.

சிலருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காகத் தயார் செய்யும் ஆவல் இருக்கலாம். அத்தகையோர் தங்களது பயிற்சிக்குக் குந்தகம் விளைவிக்காத  தனியார் துறை வேலைவாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான முயற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால சான்றிதழ் பட்டங்களைப் பெறுவதற்கான கோர்ஸுகள் எதையாவது முடிக்க முடியுமென்றால் அதையும் முயலலாம். ஏனெனில் ஒருவேளை சிவில் சர்வீஸில் வெற்றி பெற முடியாமலானாலும் இத்தகைய சான்றிதழ் படிப்புகள் மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற நமக்கு உதவும்.

மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்ற ரேஞ்சில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது ஒன்றே வாழ்க்கையின் ஒற்றைக் குறிக்கோள் என்று சங்கல்பம் செய்து கொண்டவர்கள் எனில் நீங்கள் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியையே மிகுந்த முனைப்புடன் தொடரலாம். கற்பதைக் காட்டிலும் கற்றுக் கொடுப்பது மேலும் அதிக பலன்களைத் தரக்கூடும். எனவே இரண்டு முறைகளுக்கு மேல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அனுபவம் கொண்டவர்கள் எனில் நீங்கள், உங்களைப் போல சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில் முனைப்புடன் இருக்கும் பிற இளைய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்து கொண்டு அவர்களுடன் இணைந்து தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

ஒருவேளை நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏதேனும் இரு நிலைகளை வென்று இறுதிப் போட்டியில் வெல்ல முடியாதவர்களாக இருந்தால் கவலை வேண்டாம். நேர்மையான கடின உழைப்பு ஒருபோதும் சோடை போகாது. நிச்சயம் அடுத்த முறை வெற்றிக்கனி உங்கள் கை சேர்ந்தே தீரும் எனும் நம்பிக்கையுடன் பயிலத் தொடங்குங்கள். வெற்றி நமதே!
 

]]>
சிவில் சர்வீஸ் தேர்வுகள், மாற்று வேலைவாய்ப்பு, மேற்படிப்பு வாய்ப்புகள், தேர்வைத் தவற விட்டவர்களுக்கான வாய்ப்புகள், Alternate career options, UPSC CSC https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/08/alternate-career-options-if-you-didnt-clear-upsc-cse-3129483.html
3125092 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இந்துக்களுக்கு பிராமணர்கள் செய்த நல்ல காரியம்! RKV Wednesday, April 3, 2019 12:54 PM +0530  

இந்தியாவில் பிற மதங்களைப் போல அல்லாது இந்துக்கள் வழிபாடு செய்ய ஏராளமான தெய்வங்கள் உண்டு. தெய்வங்களின் ரிஷிமூலத்தை ஆராயக்கூடாது என்பது ஆன்றோர் வாக்காக இருந்த போதும். உண்மை நிலையை ஆராயும் குணம் வரலாற்று ஆய்வாளர்களுக்கு அன்றும், இன்றும், என்றுமே இருந்து வருகிறது. இந்தியாவில் ஆதியில் இருந்து வந்தது தாய் தெய்வ வழிபாடே, அதன் பின் வேதகால நாகரீகத்தின் அடிப்படையில் தந்தை வழிச் சமூகம் உருவான போது ஏராளமான ஆண் தெய்வங்களும் உருவாகிப் பெருகினர். நமது தெய்வங்கள் உருவான வரலாற்றைச் சொல்வதே இக்காணொலியின் நோக்கம்.

 

அத்துடன் இந்திய நாகரீகத்துக்கும், கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகத்துக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு. அவர்களது வழிபாட்டு முறைகளுக்கும், இந்திய வழிபாட்டு முறைகளுக்கும் தெய்வங்களுக்குள் இடையில் மிக நெருங்கிய ஒற்றுமைகள் பல உண்டு. நம்முடைய கிருஷ்ணனுக்கும், கிரேக்கக் கடவுளான ஹெர்குலிஸுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை கூட அசாத்தியமானது. இத்தனை தெய்வங்களையும் ஒருங்கிணைத்த பெருமை அன்றைய வைதீக பிராமணர்களையே சாரும். அது பிற்கால பிராமணர்கள் இன்றைய இந்துக்களுக்குச் செய்த நல்ல காரியமென்றால் அதில் மிகையில்லை. 

]]>
Brahmins, good work, indian history, bramins part in indian history, anciant indian history, பண்டைய இந்திய வரலாறு, பிராமணர்கள் செய்த நல்ல காரியம், கடவுள் உருவாக்கத்தில் பிராமணர்களின் பங்கு https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/01/brahmins-good-work-in-indian-history-3125092.html
3125068 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எச்சரிக்கை! கற்றலைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்தெறிய வேண்டிய தருணமிது! RKV Monday, April 1, 2019 12:04 PM +0530  

இன்றைக்கு உலகம் முழுவதுமிருக்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களின் ஒற்றைப் பெரும் போர் எது தெரியுமா? கற்றல் குறித்து காலம் காலமாக நமது சமூகத்தில்  நிலவி வரும் கட்டுக்கதைகளை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்துக் கட்டுவது ஒன்றே!

இணையமும், சமூக ஊடகங்களும் எப்போதும் மனித வாழ்க்கை, ஆரோக்யம், மற்றும் அரசியல் குறித்த போலியான செய்திகளால் மட்டுமே நிரம்பியவை அல்ல, அவை கல்வி குறித்தும் எப்படிக் கற்பது என்பது குறித்தும் கூட எண்ணற்ற கட்டுக்கதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. கல்வி வடிவமைப்பாளர்கள், கற்றல் குறித்த கொள்கை வகுப்பவர்கள், கல்வித்திட்டம் குறித்து நன்கு அறிந்த கல்வியாளர்கள், உள்ளிட்டோர் இதைப்பற்றிய புரிதலை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது தற்போது, ஏனெனில், கற்றல் திட்டங்கள் வகுப்பதற்காகவும், ஆற்றலுடன் கற்பது எப்படி? என்பது குறித்தும் அறிந்து கொள்ள இன்று அதீதமாக பணமும், நேரமும் செலவளிக்கப்பட்டு வருகின்றது. அத்தனை மெனக்கெடலும் நிஜமானால், அதாவது கற்றல் திறனை மேம்படுத்துவதாக இருந்தால் சரி. ஆனால், அத்தனையும் போலி அறிவியலின் அடிப்படையில் வெறும் வியாபார நிமித்தமாகவும், பயனற்றதாகவும் இருந்தால் நிச்சயம் அதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. 

இன்று மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும், கல்வியில் மேம்படவும் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளை ஆரம்பக் கல்வி முதற்கொண்டே மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியிருக்கும் போது எப்படிக் கற்பது? தங்களது கற்றல் வேகத்தை, கற்றம் திறனை மேம்படுத்திக் கொள்வது எப்படி? என்பது குறித்த போலியான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதென்பது முற்றிலும் மோசமான முன்னுதாரணமாகி விடும். அடுத்து வரும் தலைமுறையும் இதனால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாக நேரும் அபாயமும் இதில் உண்டு. எனவே கற்றல் குறித்த போலி நம்பகங்களை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் உடைத்தெறிவோம்.

வாழ்க்கையில் ஒருமுறையல்ல பலமுறை கீழ்க்கண்ட வாக்கியங்களை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்;

 • நாம் நமது மொத்த மூளைத் திறனில் வெறும் 10% மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், மீதியுள்ள அத்தனை திறனையும் வீணடிக்கிறோம்.
 • அவரவருக்கு விருப்பமான கற்றல் பாணியில் கற்கும் போது தனிநபர்கள் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
 • டிஸ்லெக்ஸியாவின் பொதுவான அறிகுறி எழுத்துக்களைப் பின்னோக்கி எழுதுவதும், அப்படியே புரிந்து கொள்வதுமாகும்.
 • நம்மில் சிலருக்கு வலது மூளை திறம்பட செயலாற்றும், சிலருக்கு இடது மூளை திறம்பட செயலாற்றும். பொதுவாக இது கற்றல் வேறுபாடுகளை விளங்கிக் கொள்ள உதவுகிறது. 
 • கர்நாடக சங்கீதம் கேட்கும் பழக்கமுள்ள குழந்தைகளின் பகுத்தறிவுத் திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளின் கற்றல் பாணி அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு குழந்தைக்கு குழந்தை மாறுபடும் எனும் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

அப்படியெனில் வாருங்கள் கற்றலின் அடிப்படையான உன்னத நியூரோமித் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம். 

கல்வி பற்றி பல தவறான கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன. இதில் கல்வியாளர்கள், கற்பவர்கள், கற்றுக்கொடுப்பவர்கள், அத்துறையில் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், கல்வி ஆய்வாளர்கள் என்று எவரும் விதிவிலக்கில்லை. அவர்களும் கற்றல் குறித்த இப்படியான பல தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கைக்களுடன் தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றல் தொடர்பான கருத்தரங்குகளில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் ‘நியூரோமித்’ தொடர்பான பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கற்றல் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் தங்கள் முடிவுகளை மிகச்சுருக்கமாக முன் வைக்கும் பொருட்டு, ஆழமான ஆராய்ச்சிகளையும், அவற்றின் முடிவுகளையும் கூட பிறரைக் குழப்பும் வண்ணம் மிகச்ச்ருக்கமாகவும், மிக நீண்ட புரிதலுக்கான தேவை கொண்ட முடிச்சுகளாகவும் தீர்வுகளை வெளியிடுகிறார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெளிவை ஏற்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான தொடக்கங்கள் உண்மையல்லாதவற்றையும் உண்மையாக்கிக் காட்டும் முனைப்பை போலி ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது. இப்படியான போலி நம்பிக்கைகளின்பாலான நியூரோமித்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை என்பதை நாம் உணர வேண்டும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் கற்றல் கொள்கைகள் போலியானவை, அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கல்விக்கூடங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பைத் தந்தாலும் நிச்சயம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தையின் போக்கிலேயே சென்று பிறவிலேயே அதற்கென இயற்கையாக அமைந்திருக்கும் கற்றல் திறனின் அடிப்படையில் கல்விக் கற்றுத்தரப்படும் என்பது மாதிரியான வாக்குறுதிகள் பெற்றோரைக் கவரலாம். ஆனால் அவற்றால் நீண்ட காலப் பயன் எப்போதும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

சரி, இம்மாதிரியான அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி?

சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் அவை கேட்கும் கேள்விகள் எப்போதும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கப்பட்டே ஆக வேண்டும்.

கூகுள் ஸ்கூலரில் ஒரு விஷயத்தைத் தேடும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் தேடும் தகவல் டாட்.காமில் இருந்து பெறப்பட்டதா அல்லது பலரும் தேடிக் கண்டடைந்த தேடுபொறி மூலத்தில் இருந்து கிடைத்ததா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

எதிர்க்கருத்துக்கான கோரிக்கைகளை இருமுறை சரிபார்க்கவும். வலைத்தளத்தில் இருந்து ஒரு தகவலை அறிகிறீர்கள் என்றால் அதில் முதற்படியாக ‘எங்களைப் பற்றி’ என்றிருக்கும் பகுதியை படியுங்கள்.

அத்துடன் அத்தகவலுக்கான மூல இணையதளம் மற்றும் தகவல் ஆதாரங்களையும் ஒன்றிற்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.

கற்றல் குறித்த தகவலைப் பகிரக்கூடிய மனிதரின் பின்புலம் மற்றும் கற்றலியலில் அவரது நிபுணத்துவம் குறித்தும் ஆராய வேண்டும்.

தகவல் அளிப்பவரின் பாணி, தொனி மற்றும் எழுத்துப்பிழைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்துங்கள். கற்றல் குறித்த வியத்தகு சிற்றேடு மற்றும் புல்லட்டின் செய்திகள் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

இறுதியாகக் கல்வியியல் குறித்து அறிந்து கொள்ள முற்படுபவர்கள், பள்ளி மற்றும் கொள்கை அளவில், நியூரோ சயின்ஸ் விஞ்ஞானிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதோடு, அறிவியல் பத்திரிகைகள் வாசிக்கவும் தவறக்கூடாது. இது ஆராய்ச்சிக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியை பாதிப்பதுடன், ஒரு புறநிலை மட்டத்தில் விமர்சன ரீதியாக கேள்விகளை கேட்கவும் உதவுகிறது.

]]>
Debunking learning myths, education, கற்றலைப் பற்றிய மனத்தடைகள், கல்வியியல், கற்றலியல், நியூரோமித், learning myths https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/01/warning-time-to-break-myths-about-learning-3125068.html
3122590 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே மீண்டும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய்! RKV Thursday, March 28, 2019 12:24 PM +0530  

பங்களாதேஷைச் சேர்ந்த 20 வயது ஆரிஃபா சுல்தானாவுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. அட, 20 வயதுப் பெண்ணுக்கு குழந்தை பிறப்பதில் என்ன பெரிய அதிசயம் இருந்து விட முடியும் என்கிறீர்களா? 

ஆரிஃபா விஷயத்தில் அதிசயம் தான். ஆரிஃபாவுக்கு கடந்த மாதம் பிறந்தது ஒரே ஒரு குழந்தை, சரி அப்படியெனில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க அவர் மேலும் ஓராண்டு அல்லது 10 மாதங்களாவது காத்திருக்கத்தான் வேண்டுமில்லையா? ஆனால் ஆரிஃபாவுக்கு முதல் குழந்தை பிறந்த அடுத்த மாதமே இரண்டாவதாகவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியைக் கிளப்பியது. அதெப்படி சாத்தியம்?! என்று அவர்கள் மூளையைக் கசக்கி யோசித்ததில் தெரிய வந்தது ஆரிஃபாவுக்கு இருந்த இரண்டாவது கருப்பை உண்மை.

கடந்த மாதம் ஆரிஃபாவுக்கு சுகப்பிரசவத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது கருப்பையில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரியாமல் போனது பேரதிசயம். ஆனாலும் அந்த அதிசயம் நிகழ்ந்ததின் காரணம் ஆரிஃபாவின் இரண்டாவது கருப்பையில் குழந்தை உண்டாகி இருந்ததே!

தனக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அதில் முதல் குழந்தை பிறந்த பின்னும் கூட இரண்டாவது கருப்பையில் டபிள் டிலைட்டாக இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்ததும் ஆரிஃபாவுக்குமே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. முதல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த 28 நாட்களில் மீண்டும் தனக்கு பனிக்குடம் உடைதல் நிகழவே ஆச்சர்யபட்டுப் போன ஆரிஃபா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததில் அவருக்குப் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரான ஷீலா போடருக்கும் பேரதிர்ச்சி. 

அந்த அதிர்ச்சி தந்த பதட்டம் நீங்காமலே ஷீலா அறுவை சிகிச்சைக்கு தயாராக இம்முறை கடந்த வெள்ளியன்று ஆரிஃபாவுக்குப் பிறந்தது ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள்.

ஆரிஃபா கடந்த செவ்வாய் அன்று ஆரோக்யமான தனது மூன்று குழந்தைகளுடன் வீடு திரும்பி விட்டதாகத் தகவல்.

ஆரிஃபா சிகிச்சை பெற்ற ஜெசூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான திலீப் ராய், தனது 30 ஆண்டுகால மகப்பேறு மருத்துவர் வாழ்வில்  இப்படியொரு கேஸை இதுவரை சந்தித்ததே இல்லை என்கிறார்.

ஏழைப்பெண்ணொருத்தி எவ்வித சுகவீனங்களும் இன்றி மூன்று குழந்தைகளைப் பிரசவித்தது ஆரோக்யமானதே என்றாலும் கூட ஆரிஃபா முதலில் சிகிச்சைக்குச் சென்ற ஹுல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்கள் ஆரிஃபா சுல்தானாவின் இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்வதை தங்களது சிகிச்சையின் போதும் குழந்தைப் பேற்றுக்கான சோதனைகளின் போதும் கண்டுபிடிக்காமல் விட்டது மிகப்பெரிய மருத்துவத் தவறுகளில் ஒன்று என்று கண்டிக்கவும் தவறவில்லை அவர்.
மருத்துவருக்கு இப்படி ஒரு கவலை என்றால்.. இப்போது ஆரிஃபாவுக்கு வேறொரு கவலை பிரதானமாக விஸ்வரூபமெடுத்து அச்சுறுத்தி வருகிறது.
தனக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டது என்று நிம்மதியாக இருந்த நேரத்தில் மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரப்பினாலும் கூட இந்த மூன்று குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற கவலை தான் கடந்த ஒரு வாரமாக ஆரிஃபாவை ஆட்டிப் படைக்கிறது.
ஆரிஃபாவின் கணவருக்கு மாதச் சம்பளமாகக் கிடைப்பது 6000 டாக்கா மட்டுமே. அமெரிக்க டாலரில் சொல்வதென்றால் மாதம் $70 மட்டுமே. இதை வைத்துக் கொண்டு இந்த மூன்று குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை எப்படி என்னால் ஆரோக்யமாக வளர்க்க முடியும் என்று தெரியவில்லை. அந்தக் கவலை தான் என்னை வாட்டுகிறது என்கிறார் ஆரிஃபா.

ஆரிஃபாவின் மனக்கிலேசம் அவரது கணவரான சுமோன் பிஸ்வாஸுக்கு இல்லை. அவரது முகத்தில் பெருமிதம் கூத்தாடுகிறது. இந்த எதிர்பாராத குழந்தைச் செல்வம் அல்லா கொடுத்தது. அவர்களை ஆரோக்யத்துடன் அளித்ததற்காக அல்லாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்பாடு பட்டாவது என் குழந்தைகளை மகிழ்வுடன் வளர்க்க நான் உழைப்பேன் என்கிறார் அவர்.

]]>
medical miracle, Bangladeshi Woman, women gives birth to Twins One Month After First Baby, triplets, பங்களாதேஷி பெண், ஒரே மாத இடைவெளியில் 3 குழந்தைகள் பிரசவிப்பு, மெடிக்கல் மிராக்கில் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/28/woman-gives-birth-to-twins-one-month-after-first-baby-3122590.html
3118125 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்!  கார்த்திகா வாசுதேவன் Thursday, March 21, 2019 02:39 PM +0530  

தினமணி.காம்  ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலுக்காக திலகவதி ஐபிஎஸ் அவர்களுடனான உரையாடலில் பணியிடங்களில் பெண்களுக்கு நேரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பணி நிமித்தமான அடக்குமுறைகளை ஒரு பாதுகாப்பு வரம்பில் நின்று எப்படிக் கையாள்வது என்பது குறித்தான கேள்விக்கு பதில் கிடைத்தது. கேள்விக்கான பதிலை அவர் தனது சொந்த வாழ்வியல் அனுபவமொன்றின் மூலமாகவே பகிர்ந்து கொண்டார்.

திலகவதி ஐபிஎஸ் அளித்த  விளக்கத்தின் காணொலி...

 

பணியில் சேர்ந்த முதல்நாளே எனக்கு மெமோவுடன் தான் தொடங்கியது. நான் அப்போது ஒரு கொலை வழக்கு பற்றி விசாரிக்க நேரடியாகக் களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் இருந்ததால் அந்தப் பணியை முதலில் முடிக்க அங்கே சென்று விட்டேன். அதே நேரத்தில் வேலூரில் விவசாயப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தை சமரசம் செய்ய மாவட்ட ஆட்சியர் வந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வரும் போது அதை முக்கியமாகக் கருதாமல் அவர் வரும்ப்போது அங்கே இல்லாமல் எங்கே ஊர் சுற்றப் போய்விட்டீர்கள் என்று கேட்டு என் மேலதிகாரி அப்போது எனக்கு மெமோ கொடுத்தார். இது தான் பணியேற்றிக் கொண்ட எனது முதல்நாள் அனுபவம். இந்த மெமோவை நான் அப்படியே தூக்கிப்போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும் என்று என் மேலதிகாரி விரும்பினார். ஆனால், நான் அப்படிச் செய்ய விருப்பமற்று என் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு நியாயமில்லை என்று விளக்கி மெமோவுக்கு பதில் அனுப்பினேன்.

இப்படித் தொடங்கி எனது பணிக்காலம் முழுவதுமே மெமோக்கள் மற்றும் அதற்கான எனது பதில்களால் நிரம்பியதாகத் தான் இருந்தது. இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. என் மீது கோபம் கொண்டு என் செயலை முடக்க நினைத்தவர்கள் என்னை எங்கே ட்ரான்ஸ்ஃபரில் அனுப்பனாலும் நான் அங்கே செல்லத் தயாராகவே இருந்தேன். ஒருமுறை என் மேலதிகாரி என்னை அழைத்து; காவல்துறை அதிகாரி பணிக்கு இப்படிப்பட்ட ஆக்ரோஷமான பதில்கள் எல்லாம் ஒத்துவராது. உங்களுக்கு மெமோ கொடுத்த அதிகாரியை நேரில் சந்தித்து, அவரிடம், சார், நான் உங்கள் சகோதரியைப் போல, உங்களது ஆணைக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பெண் அதிகாரி. எனக்குப் போய் ஏன் இப்படியெல்லாம் மெமோவுக்கு மேல் மெமோ தருகிறீர்கள், கொஞ்சம் தயவு செய்யுங்கள்’ என்று சொல்லிப்பாருங்கள், அவர் உங்கள் மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டு பிறகு சமாதானமாகி விடுவார். விஷயத்தை இப்படிச் சமாளியுங்கள் என்றார்.

எனக்கு அதில் விருப்பமில்லை. நான் அந்த மேலதிகாரியைச் சந்தித்தேனே தவிர, எங்கள் இருவருக்கும் மேலதிகாரியாக இருந்தவர் சொன்னது போல தயவுபண்ணி என்னை உங்கள் சகோதரியாக நினையுங்கள் என்றெல்லாம் மன்றாடவில்லை. நியாயமான முறையில் என் மீதான குற்றச்சாட்டை மறுத்துப் பேசி விளக்கம் அளித்து விட்டு வந்தேன். என்னை விட வயதில் மூத்தவராக இருந்ததால் அவர் மேலதிகாரியாக இருந்து வந்தார், அதற்காக அவரிடம் போய் உறவுமுறை சொல்லி சமரசமாக வேண்டுமென்ற நிர்பந்தம் எனக்கு இல்லை.

நான் பெண்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்;

பெண்கள் இன்று அலுவலகம் சென்று பலதிறப்பட்ட ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படியான சந்தர்பங்களில் பெண் என்பதற்காக ஆண்கள் நம்மை முடக்க நினைக்கும் போது, என்னை தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள், அக்கா, அம்மாவாக, மகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பெரும்பாலான ஆண்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை என்பதே நிதர்சனம். அதே போல அந்த ஆண்களையும் அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக நினைத்துக் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நியாயப்படி அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற ஏற்றத்தாழ்வெல்லாம் பார்க்கக் கூடாது. எல்லோரும் சமம் எனும்போது அவர்களை சக ஊழியர்களாகக் கருதி, அதற்குண்டான மரியாதையை அளித்தால் போதும். அதுவே பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடும்.
- என்றார்.
 

]]>
திலகவதி ஐபிஎஸ், பணியிட பாதுகாப்பு, அத்துமீறும் ஆண்கள், பெண்களின் பாதுகாப்பு வரம்பு, Thilakavathi IPS, WOMEN SAFETY, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/21/women-nees-not-to-treat--men-like--their-brothers-and-sisters-thilakavathi-ips-3118125.html
3117546 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் உலக கதை சொல்லல் தினம், எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க கேளுங்க! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, March 20, 2019 06:11 PM +0530  

இன்று உலக கதை சொல்லல் தினம். நீங்கள் தினமும் உங்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுகிறீர்களா? இல்லையென்றால் இன்றிலிருந்து கூடத் தொடங்கலாம் அந்தப் பழக்கத்தை...


வனிதாமணி (கதை சொல்லி)

 

 

தினமும் இரவுகளில் குழந்தைகளுக்குக் கதை சொல்வதை பெற்றோர்கள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று கதைகள் சொல்வதில் எனக்கு ஆர்வம் மிகுதி.

புராணக் கதைகளை நான் கேட்டு வளர்ந்ததில்லை என்பதால் நான் எனக்குப் பிடித்த சூழலியல் பாதுகாப்பு விஷயங்களை என் கதைகளுக்குள் புகுத்தி குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லும் போது குழந்தைகள் எழுப்பும் புதுப்புது கேள்விகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். சமீபத்தில் ஓரிடத்தில் சூழலியல் எக்ஸ்பர்ட் ஒருவரை அழைத்துச் சென்று குழந்தைகளுக்குக் கதை சொல்ல வைத்தோம். அப்போது தேனீக்களைப் பற்றிய அந்தக் கதை முடிந்ததும் குழந்தைகள் கேட்ட சில கேள்விகள் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

ஒரு குழந்தை கேட்ட கேள்வி... தேனீக்கள்... பூக்களில் தேன் எடுத்து விட்டுப் பறக்கையில் ஏன் அந்தப் பூக்களில் மகரந்தத்தின் நிறம் மாறுகிறது? என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இன்னொரு குழந்தை கேட்டது. தேன்கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தானே இருக்கும்... ஒருவேளை அந்தத் தேன்கூட்டுக்கு இன்னொரு ராணித்தேனீயும் வந்து விட்டால் அப்போது முன்பே இருக்கக் கூடிய ராணித்தேனீ என்ன செய்யும்? அந்தக்குழந்தையின் கேள்வி... குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று எங்களை அசர வைத்தது. அந்தக் குழந்தையின் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கண்டுபிடித்து சொன்னோம். முன்னதாக இருக்கும் ராணித்தேனீ புதிதாக வந்த ராணித்தேனீயை கொன்று விடும் அல்லது தேவைக்காக வேறொரு கூட்டை உருவாக்கும் என்று.

குழந்தைகள் உலகம் எப்போதுமே கேள்விகளால் நிரம்பியது.

அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய விதத்திலும், குழந்தைகளின் கற்பனையைத் தூண்டக்கூடிய விதத்திலும் நமது கதை சொல்லல் இருந்து விட்டால் நிச்சயம் நம்மால் ஆரோக்யமான சிந்தனையை குழந்தைகளுக்குள் வளர்த்தெடுக்க முடியும். எனவே பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்கு கதை சொல்வதை பழக்கப்படுத்திக் கொள்வதோடு அவர்களைக் கதை சொல்லுமாறு தூண்டவும் வேண்டும்.

விழியன் உமாநாத் (சிறார் இலக்கியப் படைப்பாளி)

இரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன?

இரவு நேரக்கதைகளில் ஒன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்திலிருந்து வாசித்து காட்டுவது அல்லது தானாக கதைகள் சொல்வது. இரண்டாவது குழந்தைகள் தானாக ஒவ்வொரு இரவும் வாசிப்பது. அந்த சமயம் பெற்றோர் உடன் இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். இரவு நேரக்கதைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்ன நேர்கின்றது?

1. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்


ஒரு நாளின் ஒட்டுமொத்த இறுக்கத்தையும் போக்க வல்லது கதைகள். பெற்றோருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிறைய இறுக்கம் இருக்கும். சக குழந்தையுடன் சண்டை, நினைத்தது செய்யமுடியாமல் போவது, பெற்றோரிடம் திட்டு வாங்குவது, விளையாட்டு என நிறைய இறுக்கம் இருக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் அதனை தகர்ப்பது என்னது சுவாரஸ்யமான விஷயம்? கதைகள் அதனைச் செய்யும்

2, புதியவை அறிமுகம்


புதிய சொற்கள், புதிய உயிரினங்கள், புதிய செடிகள், புதிய மரங்கள், புதிய விலங்குகள், புதிய மனிதர்கள். ஆதிகாலத்தின் கற்பனை உலகம், யாருமற்ற புதிய உலகம் என பற்பல புதிய விஷயங்கள் அறிமுகமாகின்றன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல கதையின் ஊடாக பல்வேறு சத்தங்களும் அறிமுகமாகும். கதை சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் அதனை செய்யலாம். அது கதையினை சுவாரஸ்யமாக்குவதோடு அல்லாமல் அந்த சத்தமும் அவர்களுக்கு உள்ளே செல்லும்.

3. உரையாடலுக்கான சாத்தியங்கள்


கதை சொல்லும் ஆரம்ப நாட்களில் உங்கள் குழந்தைகள் அதிகமாக கதையினை குறுக்கிடுவார்கள். கதையை குதறுவார்கள்/ கதாபாத்திரங்களை மாற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பமான பெயர்களை உள்ளே நுழைப்பார்கள். இது மிக இயல்பானது. கதையை சொல்ல முடியவில்லையே என வருத்தமே வேண்டாம். இது தான் கதை சொல்லலின் வெற்றி. அப்படி அவர்கள் குறுக்கிடும்போது பேச விடுங்கள். அவர்களின் உலகினை உள்வாங்க இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடப்போவதில்லை. மெல்ல மெல்ல கதை கேட்க ஆரம்பிப்பார்கள். கதை சொல்லும்போது அவர்களையும் கதைசொல்லலில் ஈடுபடுத்த வேண்டும், எங்கே விட்டேன், அந்த மான் பேரு என்ன சொன்னேன், அந்த காக்கா நிறம் என்ன ? அப்படி…

4, கேட்கும் திறன்


இதைத்தான் நாமும் இழந்திருக்கின்றோம். பெரிய காதுகள் தேவைப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான ஒன்று. அதே போல குழந்தைகளுக்கு இந்த கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம். அவர்களுடைய கவனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவும் குவிய வைத்தால் தான் பின்நாட்களில் அவர்களின் வலுவான ஆளுமைக்கு வித்திடும். கதைகளை சொல்லச் சொல்ல அவர்களின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

5, கற்பனை வளம்


கற்பனைத்திறன் வளர்க்கும் என சொன்னால் என் குழந்தை ஒன்னும் கதை எழுத தேவையில்லை, ஓவியம் வரையத்தேவையில்லை என பேச்சு அடிபடும். ஆனால் கற்பனைத்திறன் என்பது வெறும் கலைகளில் கவனம் செலுத்த அல்ல. அது வாழ்வின் அன்றாட தேவைகளில் உதவும். ஒரு அறையில் நான்கு சோபாக்களை போடவேண்டும் இடமும் வசதியாக இருக்க வேண்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்த கற்பனை வளம் வேண்டும். கதைகள் அவர்களுடைய கற்பனை உலகினை பெரியதாக்குகின்றன. கதை கேட்கும் போது சொல்லும் கதையை ஒரு வீடியோவாக மனதில் ஓட்டிப்பார்க்கின்றான். விடுபட்ட விஷயங்களை தன் கற்பனை உலகில் தானே நிரப்பி முழுமையாக பார்க்கின்றான். கதை கேட்பதிலும் வாசிப்பதிலும் தான் இது சாத்தியமாகும்.

கதை கேட்டலின் அடுத்த கட்டம் தானாக வாசித்தல். இதனை 7-8 வயது முதல் செய்யலாம். ஆரம்பத்தில் பெற்றோருடன் அமர்ந்து கூட்டாக வாசித்தலில் ஆரம்பிக்கலாம். இந்த பெரிய உலகினை வாசித்தல் மூலமே மேலும் கற்றுக்கொள்ளலாம் என கதைகள் சொல்லிக்கொடுத்துவிடும்.

இப்படி நன்மைகள் இருக்கே என கதை சொல்ல முற்பட வேண்டாம். கதையே ஒரு மகிழ்ச்சியான் அனுபவம். அதற்காகவேனும் கதைகள் சொல்லலாம், அது உங்கள் குழந்தையின் மொழி வளத்தை, கற்பனைத்திறனை, விலாசமானை பார்வையை, கேள்வி கேட்கும் பாங்கினை, காதுகொடுத்து கேட்கும் பண்பினை, வாழ்வின் மதிப்பீடுகளை, நெறிகளை வளர்த்தெடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் சிரமமானது சரியான கதைகளை சேகரிப்பதும் கொஞ்சம் மெனக்கெட்டு முன்னரே வாசித்துவிடுவதும், குழந்தைகளுடன் அமர்ந்து அந்த கதைகளை சொல்வது தான். நம் குழந்தைகளுக்காக இதனை செய்தே தீரவேண்டும். வளர்ப்பது மட்டுமல்ல நம் கடமை அவர்களை உயர்த்துவதும் நம் கடமையே.
 

]]>
international story telling day, சர்வதேச கதை சொல்லல் தினம், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/20/international-story-telling-day-march-20-2019-3117546.html
3117514 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல் கார்த்திகா வாசுதேவன் Wednesday, March 20, 2019 03:11 PM +0530  

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம் - என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய அவருடைய கருத்துச் சீற்றத்தைக் காணொலியாகக் காண...

 

அதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்டு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.

- என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், எழுத்தாளரும், பதிப்பாளருமான திலகவதி ஐபிஎஸ்.

 

]]>
திலகவதி ஐபிஎஸ், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, மதுபோதை, Thilakavathi IPS, POLLACHI SEXUAL ABUSE, BAN TASMAC, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/20/root-cause-of-pollachi-incident-thilakavathi-ips-shocking-information-3117514.html
3114998 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘அன்றொரு நாள் இல்லத்தரசி இன்று பல்ப் ஃபேக்டரி முதலாளி’ எனப் பலருக்கும் வெளிச்சம் தரும் தனலட்சுமியின் கதை! கார்த்திகா வாசுதேவன் Saturday, March 16, 2019 01:06 PM +0530  

திருநெல்வேலிக்குப் பக்கத்துல அரசனார் குளம் தாங்க எங்க ஊரு. ஆரம்பத்துல என் கணவர் அசோக் தூத்துக்குடியில ஒரு பல்ப் ஃபேக்டரியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். வருமானம் போதல. என்ன பண்றதுன்னு சதா யோசனை. அப்போ தான் ஒரு நாள் திடீர்னு நானும் என் கணவருமா சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். என் கணவர் கிட்ட இருந்த பல்ப் தயாரிக்கிற திறமையை நானும் கத்துக்கிட்டு அதையே மூலதனமா வச்சு நாமளே சின்னதா ஒரு பல்ப் கம்பெனி ஆரம்பிச்சா என்னன்னு... அந்த நோக்கத்தை உடனடியா செயல்பாட்டுக்கு கொண்டு வர எங்களுக்கு ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்காரங்க உதவி செய்ய முன் வந்தாங்க. இந்த நிறுவனம் டி வி எஸ் மோட்டார் கம்பெனிக்காரர்களுடைய கிராம சேவை அமைப்புகளில் ஒன்று. அவங்க எங்களுக்காக ஸ்மால் ஸ்கேல் பிசினஸ் பிளான் ஒன்றை தயாரிச்சதோட இதை திறம்பட நடத்த 15 பெண் உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் தன்னார்வக் குழு ஒன்றைத் தொடங்கவும் வழிகாட்டினாங்க. அப்படி ‘காந்தி’  என்ற பெயரில் நாங்க தொடங்கின மகளிர் அமைப்பு மூலமா திருமண வீடுகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் விழாக்களுக்குத் தேவையான சீரியல் பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளைத் தயாரிச்சு விற்கத் தொடங்கினோம்.

நாங்க தயாரித்த பல்புகளுக்கான விற்பனையைப் பெருக்க எங்களது தன்னார்வ அமைப்பும், என் கணவரும் உதவினாங்க.

நாங்க இருக்கற அரசனார்குளம் ஒரு ஒதுக்குப்புறமான கிராமம், இங்கே பெரும்பாலான பெண்கள் வீட்டுப்படி தாண்டி வேற்றூருக்கோ அல்லது நகரங்களுக்கோ செல்வதெல்லாம் அரிது. அப்படியான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு எங்களது ‘காந்தி’ மகளிர் தன்னார்வக் குழு மூலமாக இந்த பல்ப் ஃபேக்டரியைத் தொடங்கி இன்று என்னைப் போன்ற பல பெண்களுடன் அதை வெற்றிகரமாக நடத்தி வருவது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய சாதனை.

இப்போது எங்களுடைய வருடாந்திர டர்ன் ஓவர் 9.6 லட்சம் ரூபாய். இதில் மூலதனம் மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் எல்லாம் போக நிறுவனத்தின் வருடாந்திர வருமானமாக 4.1 லட்ச ரூபாய் நிற்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஆரோக்யமான வளர்ச்சி. நிறுவனத்தின் தயாரிப்பு திறனும் தற்போது 30 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டுகள் வரை அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி இருக்கும் அதே நேரத்தில் பெண்கள் அனைவரும் இணைந்து நடத்தும் இந்தத் தொழிலில் சவால்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பகட்டத்தில் நாங்களும் பல தடைகளைத் தாண்டித்தான் இதில் வளர்ச்சியை எட்டி இருக்கிறோம். என் கணவர் SST யின் துணையுடன் எங்களது காந்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் பல்ப் தயாரிப்பதில் இருக்கும் தொழில்நுட்பத்தை மிகப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பார். நான் எங்களது தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டிங் வேலை முதற்கொண்டு சந்தையில் எங்கு எங்களுக்கான ரா மெட்டீரியல்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று தேடுவது போன்றதான வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன். தற்போது சென்னை, கேரளா, மும்பை மற்றும் கொல்கத்தா வரை எங்களது தயாரிப்புகளுக்கான விற்பனையாளர்களைக் கண்டடைந்துள்ளோம். சில சமயம் இங்கே சீசன் டல்லாக இருக்கும் போது வேற்று மாநிலங்களுடனான வியாபாரம் எங்களுக்குக் கைகொடுக்கும்.

- என்று சொல்லும் தனலட்சுமி, இன்று தனது கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலருக்கும் ரோல் மாடல். பல பெண்களுக்கு தனலட்சுமியைப் போல திறமையுடனும், தன்னிச்சையாகவும் இயங்க ஆசையும், கனவும் வளர்ந்திருக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்கித் தந்த பெருமையும் இன்று தனலட்சுமிக்கே! கணவனுடன் இணைந்து குடும்ப வருமானத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் குடும்ப நிர்வாகத்தில் மட்டுமல்ல எடுத்து வைக்கும் அத்தனை அடியிலும் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலே தனலட்சுமியை இவ்விதமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தச் சிந்தனையானது தனலட்சுமியை மட்டுமல்ல அவரது கிராமத்திலிருக்கும் பல பெண்களையும் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வைத்திருப்பதோடு சுயகால்களில் நிற்கவும் வைத்திருக்கிறது. இப்போது தனலட்சுமி மட்டுமல்ல அவரோடு இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அத்தனை பெண்களுக்குமே அவர்களது அடுத்த இலக்கு தங்களது வாரிசுகளுக்கு அருமையான கல்வியறிவைப் பெற்றுத் தந்து அவர்களையும் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு முன்னேற்றுவது ஒன்றே! பெண்கள் தங்களுக்கான சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தை வெளியில் தேட வேண்டியதில்லை அது தங்களிடத்திலேயே எப்போதும் உறைந்திருக்கக் கூடிய விஷயம். அதை வெளிக்கொண்டு வரும் முனைப்பு மட்டுமே பெண்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த முனைப்பிருந்தால் வெற்றி உறுதி என்பதற்கு தனலட்சுமியும் அவரது காந்தி தன்னார்வ மகளிர் சேவை அமைப்பு உறுப்பினர்களுமே முன்னுதாரணம்.


 

]]>
Bulb Factory, Dhanalakshmi, arasanarkulam, thirunelveli, பல்ப் ஃபேக்டரி, அரசனார் குளம், திருநெல்வேலி, தனலட்சுமி, பெண்கள் முன்னேற்றம், women empowerment, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/16/dhanalakshmi-lighting-up-livesone-bulb-at-a-time-3114998.html
3109848 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே?! கார்த்திகா வாசுதேவன் Friday, March 8, 2019 01:23 PM +0530  

முன்பெல்லாம் பள்ளிக்கூட வாசல்கள் தோறும் நாவல்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிப் பிஞ்சு, மாம்பழக்கீற்றுகள், பனங்கிழங்கு, பனம்பழம், பலாச்சுளைகள், பலாக்கொட்டைகள் விற்றுக் கொண்டு நடுத்தர வயதுப் பெண்கள் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

ஆண்கள் யாரும் அப்படி உட்கார்ந்து பார்த்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் பெட்டிக்கடைகள் கை கொடுத்து விடும். பள்ளிக்கூட மதிற்சுவரை ஒட்டி உட்கார்ந்து கொண்டு கூடையிலோ அல்லது கூறு கட்டியோ பழங்களும், கிழங்குகளும் விற்றுக் கொண்டிருந்தது பெரும்பாலும் பெண்களே! அந்தப் பெண்களை எல்லாம் இப்போது இழந்து விட்டோம். சென்னையில் தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்களில் தான் விழ வேண்டியிருக்கும் ஆயினும் மதிற்சுவரை ஒட்டி இப்படிப் பட்ட சிறு பெண் வியாபாரிகளை பள்ளி நிர்வாகங்கள் அண்டவிடுவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக என்று சிலர் சால்ஜாப்பு சொன்னாலும் முக்கியமான காரணம் அவர்கள் தான் உள்ளேயே கேண்டீன் வைத்துக் கொண்டிருக்கிறார்களே! சரி அவற்றிலாவது மேலே குறிப்பிட்ட கொய்யாப்பழங்களும், பனங்கிழங்குகளும், கொடிக்காப்புளியும், பலாக்கொட்டைகளும், சீனிக்கிழங்கும் கிடைக்கிறதா? என்று பார்த்தால்.... மூச்! அங்கு அதற்கெல்லாம் இடமே இல்லை. பப்ஸ்கள், மில்க் ஷேக்குகள், ரெடிமேட் மாம்பழ, ஆரஞ்சு ஜுஸ்கள், விதம் விதமான சாக்லேட்டுகள், கேக்குகள், சாக்கோ ஸ்டிக்குகள், சமோஸாக்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

சரி மீண்டும் கொய்யாப்பழக்காரிகளுக்கு வருவோம்.

இன்றைக்கு அற்றுப் போய்விட்ட அந்த கொய்யாப்பழக்காரிகளை நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் தெரியுமா? அவர்களுக்கு பள்ளிக்கூட வாசல்கள் மறுக்கப்பட்டு விட்டதால் பத்துப்பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் வீட்டு வேலைக்காரிகள் ஆகிவிட்டார்கள். சென்னையில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆள் வைக்காத வீடு என்ற ஒன்று இருக்கிறதா என்ன? அப்படி இருந்து விட்டால் இந்தக் காலத்தில் அது மிகப்பெரிய அதிசயம்! சர்வதேச மகளிர் தினமான இன்று சுயமாய் சின்னஞ்சிறு தொழில் செய்து பிழைத்து வந்த பெண்களை இந்த நகரமயமாக்கலும் மக்களின் மாறி வரும் சிற்றுண்டித் தேர்வுகளும், பள்ளிக்கூட நிர்வாக முடிவுகளும் எவ்விதமாக வீட்டு வேலைக்காரிகளாக ஆகும் நிலைக்குத் தள்ளி விட்டன எனும் கதையை இன்று நினைவு கூராமல் வேறு எப்போது நினைவு கூர்வது?

உழைக்கும் மகளிருக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும், பிழைத்தலுக்கான கெளரவமான வழிமுறைகளும் பறிக்கப்படுதலும் கூட ஒருவிதமான சமூக பாரபட்சமின்றி வேறென்ன?

கையில் 100 ரூபாய் இருந்தால் போதும் அன்றெல்லாம் ஒரு பெண் கொய்யாப்பழம் விற்றோ, நெல்லிக்காய்கள் விற்றோ தன் குடும்பத்தைக் காப்பாற்றி விடமுடியும் எனும் நம்பிக்கைக்கு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மதிற்சுவரை ஒட்டிய இடங்கள் உத்தரவாதமளித்த காலம் அது. நான் படித்த பள்ளியின் வாசலை நம்பி ரத்னா, கோட்டையம்மா, செல்லி, வீரம்மா என நான்கு பெண்கள் பிழைத்தனர். காலையில் பள்ளி துவக்கப்பட்டு சற்று நேரத்திற்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார்கள். ஒருத்தி கூடை நிறைய அன்று பறித்த கொய்யாப்பழங்களுடன் உட்கார்ந்திருப்பாள். இன்னொருத்தி மலைநெல்லி, சிறுநெல்லியென நெல்லிக்காய் மூட்டையும், சறுகுப் பையில் மிளகாய்ப்பொடியுமாக உட்கார்ந்திருப்பாள், இன்னொருத்தி கொடிக்காப்புளியும், பனம்பழமும், நீளவாக்கில் கீறி வைத்த கிளிமூக்கு மாம்பழக் கீற்றுமாக உட்கார்ந்திருப்பாள் ஈக்களோ, கொசுக்களோ வந்தால் முந்தானை தான் விசிறி. 50 பைசா இருந்தால் போதும் நிச்சயம் ஒரு கொய்யாப்பழமும், ஒரு கைப்பிடி நெல்லிக்காய்களும் நிச்சயம் கிடைக்கும். உப்பும் உறைப்புமாக மிளகாய்ப்பொடியில் தொட்டுத் தொட்டுக் கடித்து மென்று விழுங்கலாம். சாப்பிட்டு விட்டுக் கை அலம்பித் தண்ணீர் குடித்தால் தொண்டைக்குள் இனிக்கும்.

அந்தப் பெண்கள் அத்தனை பேருக்கும் சொல்வதற்குத் தனித்தனியே வாழ்க்கைக் கதைகள் உண்டு.

கோட்டையம்மாளின் புருஷன் விவசாயக் கூலி. ஒருநாள் வயலில் அரணை கடித்து விஷம் ஏறி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முன் அவர் உயிரை விட குடும்ப பாரம் முழுதும் கோட்டையம்மாள் தலையில். கோட்டையம்மாளுக்கு ஆண் ஒன்றும் பெண்கள் மூவருமாக 4 குழந்தைகள். நான்கு பேருமே படித்ததும், உண்டதும், உடுத்தியதும் கோட்டையம்மா கொய்யாப்பழம் விற்ற காசில் தான். இன்றைக்கு கோட்டையம்மாளின் பிள்ளைகள் கோடீஸ்வரர்களாகி விடாவிட்டாலும் கூட தன்மானத்துடன் எப்படிப் பிழைப்பது என்பதை தங்கள் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்வதைக் கேட்கும் போது கோட்டையம்மாளை எனக்கும் தெரியும் என்ற உணர்வில் மனம் நிறைந்து உதடுகள் புன்னகைக்கத் தவறுவதில்லை.

ரத்னாவின் கதை வேறு தினுசு. ரத்னாவின் புருஷனுக்கு சாராயப் பழக்கம் இருந்தது. அத்துடன் மலையாளத்துப் பெண்ணொருத்தியுடன் தொடுப்பும் இருந்து வந்ததை ரத்னா அறிய நேர்ந்த பொழுதில் நீதிமன்றப்படிகளெல்லாம் ஏறாமலே தன் புருஷனை விவாகரத்து செய்து விட்டாள் ரத்னா. அந்த நொடி முதல் வயதான மாமியார், வாழாவெட்டி நாத்தனாருடன் சேர்த்து தன் இரண்டு மகன்களின் பொறுப்பும் ரத்னாவுக்கு மட்டுமே என ஆகிப்போனது. புருஷன் மலையாளத்துப் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து பிறகு அவளையும் ஏமாற்றி விட்டு எங்கோ பரதேசம் போனான் என்று சொல்லிக் கொள்வார்கள். அவன் கதை என்னவானதோ கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ரத்னா தன் பிள்ளைகளைக் காப்பாற்ற கொடுக்காப்புளி மூட்டையைத் தூக்கினாளோ இல்லையோ இன்று மகன்கள் இருவருமே ஊரறிந்த வியாபார காந்தங்கள் ஆகி விட்டனர். (அட அதாங்க பிஸினெஸ் மேக்னட்) சிறு வயதில் அம்மா கற்றுக் கொடுத்த உழைப்பு இன்று அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மகன்களைப் பெரிதாகப் படிக்க வைக்க முடியவில்லை என்றால் இருவரையுமே தொழில் பழக்கி இன்று அவர்களின் வெற்றிக்கு தானும் ஒரு காரணமாகிப் போனாள் ரத்னா.

செல்லிக்கு நடுத்தர வயது தாண்டியும் கல்யாணம் குதிர்ந்திருக்கவில்லை. காலம் செல்லச் செல்ல அவளுக்கு கல்யாணம் என்றாலே வேப்பங்காயாகிப் போக திருமணமற்றுத் தனியொரு பெண்ணாக வாழ விரும்பினாள். அப்பா இல்லாத குடும்பம்... பாதுகாப்புக்கு அண்ணனின் தயவு வேண்டியிருந்தது. அண்ணனோ, அண்ணிக்கு ஒரு வேலை வெட்டி இல்லாத ஒரு விருதா தம்பி இருந்தான். அவனை எப்படியாவது செல்லியின் தலையில் கட்டி விட்டால் போதும் தன் சகோதரக் கடமை முடிந்தது என்றொரு மனக்கிலேசம். செல்லியோ கல்யாணமே இல்லாமலிருந்தாலும் இருப்பேனே தவிர இப்படி ஒரு முட்டாளை மணந்து கொள்ளவே மாட்டேன் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்படியென்றால் வீட்டை விட்டு வெளியோ போ... அனாதையா இருந்தா தெருநாயெல்லாம் வீட்டுக்குள்ள வரும் அப்போ இந்த மாப்பிள்ளைக்கு நீ சரி சொல்வே பார்’ என்று அண்ணனும் அண்ணியும் உறும. ச்சீ ச்சீ போங்கடா உங்க பாசமும், பந்தமும் என்று உதறி விட்டு வெள்ளரிப் பிஞ்சு விற்கத் தொடங்கினாள் செல்லி. இன்று செல்லிக்குச் சொந்தமாக ஊரில் வெள்ளரித் தோட்டமே இருக்கிறது. தனியாகத்தான் வாழ்ந்தாள். தன்னை பழிவாங்கிய அண்ணியும், அண்ணனும் பெற்றுப் போட்ட பிள்ளைகளுக்கெல்லாம் செல்லி தான் பின்னாட்களில் திருமணம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. ஆயினும் அவள் அலுத்துக் கொள்ளவில்லை. வெயிலோ, மழையோ, குளிரோ, பனியோ வெள்ளரிப் பிஞ்சும், மாம்பழங்களுமாக சீசனுக்குத் தக்கவாறு பள்ளிக்கூட மதிற்சுவரை ஆக்ரமித்து தனது தன்மானத் தொழிலை தொடங்கி விடுவாள். சரியாக 20 வருடங்களேனும் இருக்கும்.

ஆம்... அந்தப் பெண்களை அந்த இடங்களில் பார்த்து... சரியாக 20 வருடங்கள் கடந்திருக்கலாம்.

இன்றும் அந்தப் பெண்களை எல்லாம் என்னால் மறக்க முடியவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உழைப்பு அவர்களுக்கொரு தன்னம்பிக்கையை, சுயமரியாதையைத் தேடித் தந்திருந்தது என்பதால் தான் அவர்கள் பிற பெண்களில் இருந்து எனக்கு தனித்துத் தெரிந்தார்கள். பெண்கள் சுயதொழில் தொடங்குவதை நமது அரசுகள் பல்வேறுவிதமாக ஊக்குவிப்பதாக அரசு விளம்பரங்கள் வெளிவருகின்றன. அவர்களிடம் சொல்லிக் கொள்ள ஒன்றுண்டு. அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் கேண்டீன் வைப்பதெல்லாம் சரி தான். ஆனால், அந்தக் கேண்டீன்களுக்கான ஒப்பந்தங்களை இப்படி வாழ்வில் போராடி வெல்ல நினைக்கும் உழைக்கும் மகளிர் வசம் ஒப்படைத்தால் என்ன? குறைந்த பட்சம் குழந்தைகளின் ஆரோக்யமாவது கெடாமல் இருக்கும்... அத்துடன் நாம் சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடுவதிலும் ஒரு அர்த்தம் கிடைக்கும்!

உழைக்கும் மகளிர் அத்துணை பேருக்கும் தினமணி.காம் குழுவினரின் மகளிர் தின வாழ்த்துக்கள்!
 

]]>
women empowerment... Transition From Owner to housemaid!, International Women's day, மகளிர் சக்தி, சுயதொழில் முனைவோரிலிருந்து வீட்டு வேலைக்காரிகள் வரை, சமூக பாரபட்சம், பள்ளிகள், பெண்களுக்கான வேலை வாய்ப்பு, கெளரவம், மரியாதை, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/08/women-empowerment-transition-from-owner-to-housemaid-3109848.html
3109157 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நாப்கினை கையில் கொண்டுபோனா என்ன? மாதவிடாய் இயல்பான விஷயம் தானே? சுவாமிநாதன் Thursday, March 7, 2019 04:49 PM +0530
சமூக வலைதளங்களை மீம்ஸ் பக்கங்களும், யூடியூப் சேனல்களும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய இந்தியாவோடு இணைந்து பிறந்தது நக்கலைட்ஸ் யூடியூப் சேனல்.

அரசியலில் தொடங்கி அம்மா, அப்பா, காதல், நட்பு, பைக் அலப்பறைகள் என தொடர்ச்சியாக அலப்பறைகள் விடியோக்களை வெளியிட்டு இணையதளத்தில் அலப்பறை செய்து கொண்டிருந்த நக்கலைட்ஸ் குழுவினர் மகளிர் தினம் வருவதை முன்னிட்டு 'பீரியட்ஸ் அலப்பறைகள்' என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்களின் மாதவிடாய் குறித்த விடியோவாக இது அமைந்துள்ளது. 

இந்த விடியோ அம்மா, அண்ணன், தங்கை என மூன்று பேர் அடங்கிய சிறிய நடுத்தர வர்க குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உடன்பிறந்த தங்கைக்கு நாப்கின் வாங்கி வர அண்ணன் மறுக்கிறார் என்பதில் இருந்து இந்த விடியோ தொடங்குகிறது. அதற்கு அம்மாவும் இது பெண்கள் சமாச்சாரம்,  ஆண்களிடம் தெரிவிக்காமல் கலாச்சாரத்தை பேணி காக்கவேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறுகிறார்.  

இதையடுத்து, அந்த பெண்ணே நேரடியாக மருந்தகத்துக்குச் சென்று வாங்க நினைத்தால், அதில் அந்த பெண் எத்தனை இன்னல்கள் எதிர்கொள்கிறார் என்பதை கச்சிதமாக காட்சிப்படுத்தி நிதர்சனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர். 

தங்கைக்கு அண்ணன் நாப்கின் வாங்கி வந்தால் என்ன? நாப்கினை எந்தவித பேக்கிங்கும் இல்லாமல் கையில் எடுத்து வந்தால் என்ன? அது ஏன் பெண்கள் சமாச்சாரம்? என அடுத்தடுத்த காட்சிகள் மூலம் கேள்விகளை அடுக்கியுள்ளனர்.  

இந்த கேள்விகளோடு நில்லாமல் இதைவிட மிக முக்கியமான விஷயங்களை இந்த விடியோ பதிவு செய்கிறது.

அந்த பெண் நாப்கினை கையில் வாங்கி வந்ததற்காக பெண்ணின் அம்மா கதாபாத்திரம் ஒரு விளக்கம் அளிப்பார். அதன் மூலம், முந்தைய தலைமுறையில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு இழிவுபடுத்துகிறோம் என்பதை அறியாமலே இழிவுபடுத்தப்பட்டதை பதிவு செய்கிறார். மேலும், அதை காரணம் காட்டி உன்னை வீட்டுக்குள் விட்டதே பெரிய விஷயம் என்பது போல் சித்தரிக்கிறார்.   

பிறகு, இவள் 3 நாட்கள் வேலை ஏதும் செய்யாமல் ஓப்பி அடிப்பதற்காக இப்படி பேசுகிறாள். விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அதில் பெண்கள் நாப்கின் வைத்துக்கொண்டே பாட்மிண்டன் விளையாடுகிறார்கள் என்று ஒரு காட்சியில் அந்த அண்ணன் தனது அம்மாவிடம் பேசுவான். 

அதற்கு அந்த தங்கை அளிக்கும் பதில் மிகவும் கவனிக்கத்தக்கது. "விளம்பரங்களில் யாரோ கார்பிரேட் கம்பெனி சொல்வதை நம்புவீர்கள், ஆனால், கண் முன்னே நாங்கள் படும் வேதனையை உணரமாட்டீர்கள்" என்பார். இந்த வசனம், அந்த அண்ணன் கதாபாத்திரத்துக்கு தங்கை எழுப்பும் கேள்வியாக அல்லாமல், மாதவிடாய் குறித்த புரிதலற்ற ஆண் சமூகத்துக்கு பெண்கள் எழுப்பும் கேள்வியாகவே அமைந்துள்ளது.

இந்த உரையாடலில், அண்ணன் கதாபாத்திரத்தின் வசனமும் மிக முக்கியம். 

காரணம், மாதவிடாய் பற்றின போதிய புரிதல் அல்லாமல் 2019-ஆம் ஆண்டிலும் மாதவிடாய் என்றால் தீட்டு என போற்றி, இதை ஆண்களிடமிருந்தும், ஆண் குழந்தைகளிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதை பற்றின உரையாடலை ஆண் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லாமலே காலம் காலமாக மறைக்கப்பட்டு, தவிர்க்கப்பட்டு வருகிறது. 

அப்படி இருக்கையில் அதை பற்றின போதிய விவரம் அறியாத ஒரு சமூகத்திடம், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் மலை ஏறுகிறாள், பாட்மிண்டன் விளையாடுகிறாள், கிரிக்கெட் விளையாடுகிறாள் என்று அதன்பின் இருக்கும் வலியை முற்றிலுமாக மறைத்து விளம்பரங்களை உருவாக்கினால், அது எத்தனை அபத்தமாக இருக்க முடியும். 

கடைசியாக, அந்த பெண் எழுப்பிய கேள்விகள் மூலம் அண்ணன் கதாபாத்திரமும், அம்மா கதாபாத்திரமும் இயல்பை உணர்ந்து, இந்த காலகட்டத்தில் பெண்ணுக்கு அவசியமான உணவுப் பழக்கங்களை என்ன என்பதை அறிந்து பழங்கள் எடுத்துச் சென்று கவனிப்பது போல் நேர்மறையாக முடித்துள்ளனர். 

இந்த இயல்பை விடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் உணர்ந்துவிட்டன. ஆனால், சமூகத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் முன்னேற்றம் எப்போது உணரப்படும். நாளை மகளிர் தினம். 

பெண்கள் ஆலயத்தினுள் நுழையக் கூடாது என்று தடை விதித்து எதிர்ப்பு தெரிவித்து பரிகார பூஜை செய்யப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் கொண்ட விடியோக்களை எதிர்பார்ப்பதே மிகவும் அரிது. அதனால், அந்த வகையில் மாதவிடாய் இயல்பானது என்பதை உணர்த்தி, அதை பற்றின உரையாடலையும், விவாதத்தையும் பொது தளத்தில் எழுப்பும் இதுபோன்ற கருத்துகளுடைய விடியோக்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கதே. பிறகு, யூடியூப் சேனல் என்பதால் எளிதில் இளைஞர்களை சென்றடைந்துவிடும் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விடியோவை யூடியூப்பில் இதுவரை சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். யூடியூப் ட்ரெண்டிங்கில் ஏழாவதாக உள்ளது. 

விடியோ இணைப்பு கீழே:

 

 

]]>
https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/07/நாப்கினை-கையில்-கொண்டுபோனா-என்ன-மாதவிடாய்-இயல்பான-விஷயம்-தானே-3109157.html
3106125 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மானுட கிருஷ்ணர் கடவுளான கதை! RKV Saturday, March 2, 2019 12:52 PM +0530  

கிருஷ்ணர் மகாபாரத காலத்தில் கடவுள் இல்லை. அன்று அவர் யது குலத்தில் பிறந்த மானுடரே. யதுக்கள் மேய்ச்சல் நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அவர்களது தொழில் ஆநிரைகளை வளர்ப்பதும், பால் பொருட்களை உற்பத்தி செய்து மதுரா நகரத்துச் சந்தைகளில் விற்றுப் பொருளீட்டுவதுமே! அது மட்டுமல்ல  இவர்கள் தாய்வழிச் சமுதாய மரபைப் பின்பற்றியவர்கள். தாயே குடும்பத்தின் தலைவி. குடும்பத்தின் பெண் வாரிசுக்குப் பிறக்கும் ஆண்களே அரசாளும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்... வேதகால நாகரீகத்தின் நீட்சியான மகாபாரத இதிகாச காலத்தில் வேதங்களின் பெயரைச் சொல்லி கணக்கற்ற ஆநிரைகளும், அஸ்வங்களும் (குதிரைகள்) யாகங்களில் பலியிடப்பட்டு மக்களில் ஒருசாரரது வாழ்வாதாரங்கள் குலைக்கப்படுகையில் இயல்பிலேயே அவர்கள் கிளர்ந்தெழத் தயாராக இருந்தார்கள். அப்போது கிருஷ்ணன் அவதரித்தான்.

 

சாமான்ய மக்களின் தலைவன் ஆனான். எளியவர்களின் காப்பாளானாக அவதரித்த கிருஷ்ணன் அன்று அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டு குலத்தளவில் மேல்தட்டில் இருந்த சத்ரியர்களின் அராஜகத்தை எதிர்த்து சத்ரியர் அல்லாத பிற இனக்குழு தலைவர்களை ஒருங்கிணைக்கும் கருவியானான். இறுதியில் அராஜகத்தை எதிர்த்து போரிடத் தயங்கிய அர்ஜூனனுக்கு கீதாஉபதேசம் செய்து போரிடத் தூண்டி அவனே கர்த்தாவுமாகி போர் முடிவில் காரியமும் ஆனான். 

]]>
KRISHNA, MYTHS OF KRISHNA, UNTOLD STORY OF KRISHNA, MYTH VS REALITY, கிருஷ்ணா, கிருஷ்ணர் கடவுளான கதை, இதிகாசம், வேதம், நிஜம், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/mar/02/untold-myths-of-lord-krishna-3106125.html
3102724 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய ஆவணப்படம் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ’ RKV Monday, February 25, 2019 01:11 PM +0530  

‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ எனும் குறும்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திய இன்னல்களைப் பற்றிப் பேசும் இந்த ஆவணப் படத்தின் உருவாக்கத்தில் தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் பங்கு அனேகம். கடந்தாண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பேட்மேன்’ இந்தித் திரைப்படம் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதையே. இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மாத விடாய் காலங்களில் இப்போதும் கூட சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்த வகையற்று சுத்தமற்ற பழைய கிழிசல் துணிகளையே பயன்படுத்தி வரும் போக்கி இன்றும் கூட கிராமப்புறங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அருணாச்சலம் முருகானந்தத்தின் குழுவினர் எடுத்த ஒரு சர்வேயில் வெறும் 2% பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலங்களில் நாப்கின்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மிச்ச அனைவரும் துணிகளையே மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்து மத்திய மாநில அரசுகள் திடுக்கிட்டன. கிராமப்புற பெண்கள் இன்னும் எத்தனை தூரம் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சர்வே ஒரு உதாரணம்.

அந்த அறியாமையைக் களைவதற்காக உருவானது தான் பேட்மேன் திரைப்படம். கிராமப்புறப் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதன் அவசியத்தை உணர வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ஆவணப்படம். கிராமப்புற பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து காலம் காலமாக சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைக் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தாங்களது ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி தங்களுக்குத் தேவையான மாதாந்திர நாப்கின்களை தாங்களே தயாரித்துக் கொள்ளப் போராடி வெற்றி அடைவது தான் இந்தக் குறும்படத்தின் அடிநாதம். இதில் ரியல் பேட்மேன் ஆன அருணாச்சலம் முருகானந்தனும் இடம்பெற்றுள்ளார் என்பது சிறப்பு.

இந்த ஆவணப் படத்தின் இயக்குனர் இரானியப் பெண் ராய்கா செடாப்சி, தயாரித்தவர் மெலிஸா பெர்டன்

]]>
PERIOD END OF SENTENCE SHORT FILM, OSCAR WON SHORT FILM, DOCUMENTARY, ARUNACHALAM MURUKANANDHAM, PADMAN, பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ், அருணாச்சலம் முருகானந்தம், பேட்மேன் திரைப்படம், பெண்கள்மாதாந்திர பிரச்னை, மாதவிடாய் காலம், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/feb/25/period-end-of-sentence-short-film-won-oscar-for-best-documentary-film-3102724.html
3099582 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஆபத்து, நெருக்கடின்னா இனி இது தான்... புதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்... கார்த்திகா வாசுதேவன் Thursday, February 21, 2019 10:57 AM +0530  

அமெரிக்காவின் 911 ஐப் போல இந்தியாவிலும் சிங்கிள் எமர்ஜென்சி ஹெல்ப் லைன் நம்பர் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் நாடு முழுவதும் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த எண்ணை ஆப் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கி வைத்துக் கொண்டால் ஆம்புலன்ஸ்கான எமர்ஜென்சி எண் 108, போலீஸ் கண்ட்ரோல் ரூம் சர்வீஸுக்கான எமர்ஜென்சி எண் 100, தீயணைப்புப் படைக்கான எமர்ஜென்சி எண் 101,  தனித்திருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு எமர்ஜென்சி எண் 1090, ஹெல்த் ஹெல்ப் லைன் எண் 108 இவற்றையெல்லாம் தனித்தனியாக கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக் கொண்டு அவசரம் நேர்ந்தால் தனித்தனியாக அழைக்கத் தேவையில்லை என்கிறார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 112 சேவை எண். மேற்கண்ட அனைத்து எமர்ஜென்சி எண்களையும் ஒரே எண்ணின் கீழ் இணைத்து ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ஆபத்து காலங்களிலோ அல்லது நெருக்கடி நேரங்களிலோ இந்த எண்ணை அழைத்தால் போதும் மற்றெல்லா சேவைகளையும் இயக்க முடியும் என்கிறார்கள். 

இந்தப் புதிய சேவை எண் தற்போது இந்தியாவில் ஆந்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி,  லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா நகர்ஹவேலி,  டாமன், டையூ மற்றும் ஜம்மு கஷ்மீர் என மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்த நேர்பவர்கள் 3 முறை இந்த எண்ணை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக அழைத்தால் போதும். சம்மந்தப்பட்ட சேவை அமைப்புகளுக்கு அந்த அழைப்பு அவசர அழைப்பாகப் பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்டு உடனடி உதவி கிடைக்கும் என்கிறார்கள்.

]]>
அவசர எண் 112, எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112, emergency helpline number 112 https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/feb/20/single-emergency-helpline-number-112-launched-3099582.html
3099563 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... இது நெறிமீறல்! (விடியோ) கார்த்திகா வாசுதேவன் Wednesday, February 20, 2019 12:41 PM +0530  

சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்  'ரெடி ஸ்டெடி போ’  மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜில் ஜங் ஜக்’ எனும் இரு நிகழ்ச்சிகளைத் தடை செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைப்பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பில் தெரிய வந்த நிஜம்...

 

 

மக்களில் ஒருசாரர் ரியாலிட்டி ஷோக்கள் நமது கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையெல்லாம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மக்களையும், இளைய தலைமுறையினரையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்கச் செய்யும் விதத்திலான நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து அவற்றையே ஒளிபரப்ப வேண்டும் என்பதாகவும், வீண் வேடிக்கைக்காக நமது கலாசாரத்தை கேலி செய்யும் விதத்தில் அல்லது பண்பாட்டுக்கு ஒத்து வராத விதத்தில் அயல் மாநில நிகழ்ச்சிகளை காப்பி அடித்து அதை அப்படியே இங்கே பரப்பி விட்டு வெற்றுப் புகழ் தேடுவதாக இருக்கக் கூடாது என்பதாகவும் இருந்தது.

கருத்துக் கணிப்பில் சிலர்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெறும் பொழுது போக்குக்கானவை. அவற்றை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமே தவிர அவற்றை அப்படியே பின்பற்ற நினைக்கக் கூடாது. அவற்றில் அப்படியொன்றும் ஆபாசமாக இல்லை. சும்மா எதையோ நினைத்துக் கொண்டு எதையோ தடை செய்யச் சொல்லக் கூடாது. தடை செய்தால் மட்டும் நம் நாட்டில் கலாசாரம், பண்பாட்டு சீர்கேடுகள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது நன்மையும்ம், தீமையும். தீய எண்ணத்துடன் பார்த்தால் நல்லவை கூட தீயவையாகவே கண்ணில் படும். அதற்கென்ன செய்வது? என்கிறார்கள்.

ஆண்களில் சிலரோ, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு சேனல் இருக்கிறது. அவற்றை முதலில் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு செய்தியையும் அவரவர் சுயநலங்களுக்கு ஏற்றார் போல அவர்கள் இட்டுக் கட்டி சொல்லுகிறார்கள். பாரபட்சமாக இருக்கிறது. இதை முதலில் தடை செய்ய வேண்டும். என்றார்கள்.

பெண்களில் பலர் ஆச்சர்யகரமாக மெகா சீரியல்களைத் தடை செய்ய வேண்டும் என்றார்கள். 

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒருங்கிணைப்பு: திவ்யா தீனதயாளன்
ஒளிப்பதிவு: ராகேஷ்
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி
 

]]>
https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/feb/20/glamourous-reality-shows-vs-tempting-young-generations-3099563.html
3099569 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, February 20, 2019 12:38 PM +0530  

 

ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான்கு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஹம்பி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்று. விஜயநகர சாம்ராஜயத்தை உருவாக்கியவர்களுள் மூலவர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் காலத்தில் பிரிசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக ஹம்பி விளங்கியதற்கான சரித்திரக் குறிப்புகள் உண்டு. இங்கிருக்கும் விருபாஷர் ஆலயம் இந்திய கோயில் கட்டடக் கலைக்கு மிகப்பெரிய சான்று. இங்கு இப்போதும் புராதனத்தின் மிச்சங்களாக பிரும்மாண்டமான கற்கோயில்களும், சிற்பங்களும், கடவுள் ரூபங்களும் உண்டு. அவற்றில் ஒன்றில் மேற்கண்ட நான்கு இளைஞர்களும் தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். 

ஹம்பியில் இருக்கும் கற்தூண்களில் சிலவற்றைக் வெறும் கையால் பலம் கொண்ட மட்டும் தாக்கி கீழே விழ வைக்கச் செய்யலாம் என விளையாட்டுத் தனமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். விபரீதமான இந்த விளையாட்டில் இரண்டு தூண்கள் நிஜமாகவே கீழே விழுந்து வைக்க அதை விடியோ பதிவு செய்து அவரவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவ்விஷயம் உடனடியாக அங்கிருக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

 

கலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் இப்படிப்பட்ட வினைகளைத் தேடிக் கொண்டால் அதை மன்னிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் திரும்புவதற்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த அந்த நான்கு இளைஞர்களும்  கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் நாட்டின் கலைப்பொக்கிஷங்களான சிற்பங்களுக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நிரூபணம் ஆன காரணத்தால் அவர்கள் நால்வருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது செய்த குற்றத்திற்கு தண்டனையாக தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அபராதத் தொகையை செலுத்தினால் அவர்களுக்கான சிறைத்தண்டனையில் இருந்து தப்பலா, ஆயினும் கீழே விழுந்து சேதமடைந்த அந்த புராதனத் தூண்களை மீண்டும் பழையபடி நிர்மாணிக்க வேண்டியதும் அவர்களது பொறுப்பே என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மீண்டும் இது போன்றதொரு விளையாட்டுத் தனமான விபரீதக் குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என்று ஒப்புதல் உறுதிமொழிக் கடிதமும் எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இப்படியொரு விபரீதவழக்கில் சிக்கிய அந்த இளைஞர்கள் நால்வருமே தற்போது கர்நாடக கொசபேட் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதுடன் கீழே விழுந்து விட்ட தூண்களை தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பி நிறக வைத்து விட்டு தங்களது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து வந்த பதில், ‘நாங்கள் விளையாட்டாகச் செய்தோம், இந்த இடத்தின் சரித்திர முக்கியத்துவம் குறித்தெல்லாம் எங்களுக்குத் தெரியாது. விளையாட்டு விபரீதமாக விட்டது என்று தெரிவித்திருக்கிஏறார்கள்.

Video Courtesy: The News Minute

]]>
youth, vandalised hampi pillars, court orders re erect it, 70000 Rs fine, ஹம்பி பில்லர்ஸ், 70000 ரூபாய் அபராதம், பொதுச்சொத்து சேதம், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/feb/20/youths-who-vandalised-hampi-pillarscourt-orders-to-re-erect-it-3099569.html
3094419 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? நிஜம் எது? கட்டுக்கதை எது?  கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Tuesday, February 12, 2019 06:00 PM +0530  

பரோட்டா, சோளாபூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளார்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 

மைதா,  கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.

ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்பதில்லை. 

மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்...

பென்ஸாயில் ஃபெராக்ஸைட்:

மைதாவுக்கு அதன் தூய வெள்ளைநிறம் பெறப்படுவதற்காக அதில் பென்ஸாயில் பெராக்ஸைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பொதுவாக ஹேர்டை, ஃபீனால், ப்ளீச்சிங் பெளடர் முகப்பரு க்ரீம் போன்றவற்றுக்கான தயாரிப்பில் கலக்கப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. இதை உட்கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் என்கிறார்கள். இந்த ரசாயனம் அவற்றில் மூலப்பொருளாகச் சேர்க்கப்படக் காரணம் க்ரீம்கள், லிக்விட்கள் மற்றும் பெளடர்களை பிளீச் செய்து அவற்றை வெண்மையாக்கவே.

அதே பயன்பாட்டுக்காகத் தான் மைதாவிலும் அது கலக்கப்படுகிறது. கோதுமையில் இருந்து மைதா பிரித்தெடுக்கப்படுகையில் கோதுமையின் வெளிர் மஞ்சள் நிறம் எஞ்சும். அந்த நிறத்தைப் போக்கி சுத்தமான வெண்மை நிறம் பெறவே இந்த பென்சாயில் ஃபெராக்ஸைடு மைதாவில் கலக்கப்படுகிறது. உடல்நலனைப் பொருத்தவரை இது மிக மோசமான பலன்களையே அளிக்கும். தோல் அலர்ஜி, உலர்ந்து போதல், தோல் உறிதல் போன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தான். யோசித்துப் பாருங்கள், இந்த பென்ஸாயில் ஃபெராக்ஸைட் மைதா வாயிலாக நம் குடலுக்குள் செல்லும் போது என்ன ஆகுமென்று? துணிகளை வெளுக்கச் செய்வது போல அது குடலை வெளுக்கச் செய்து விடும். அப்புறம் பரோட்டா, பரோட்டாவாகச் சால்னாக்களில் குளிப்பாட்டி விழுங்கி விட்டு குடலில் கொப்புளம் வரச்செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டியது தான்.

அலாக்ஸன்:

பென்ஸாயில் ஃபெராக்ஸைட் தவிர அலாக்ஸன் என்றொரு ரசாயனமும் மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படுகிறது. மைதாவை வெண்மை நிறமாக்க அதை ப்ளீச் செய்யும் போது அதிலிருந்து குளோரின் டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது. இந்த குளோரின் டை ஆக்ஸைடு மைதாவில் இருக்கும் ஸ்டார்ச்சுடன் வினை புரிந்து அலாக்ஸனாக மாறுகிறது. இந்த அலாக்ஸனும் மைதாவை வெள்ளை நிறமாக்க உதவக்கூடிய ஒருவகை ரசாயனமே. இது பென்ஸாயில் ஃபெராக்ஸைடை விட மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை இது கற்பிதமான பயமாகக் கூட இருக்கலாம். மைதாவில் அலாக்ஸான் கலக்கப்படுவது 100% நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில் வளர்ந்த நாடுகளில் அது தடை செய்யப்பட்ட ரசாயனங்களில் ஒன்று. கணையச் செல்களில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது இந்த அலாக்ஸன்.

மோனோ சோடியம் குளூட்டமேட்:

மைதா என்பது கோதுமையிலிருந்து பெறப்படும் சக்கை என்றும் முன்பே கண்டோம். அந்தச் சக்கையில் என்ன சுவை இருந்து விடப்போகிறது. எனவே மைதாவில் சுவை கூட்ட அதனுடன் கலக்கப்படும் ரசாயனமே மோனோ சோடியம் குளூட்டமேட். உணவியல் வல்லுனர்களால் சுருக்கமாக MSG என்று குறிப்பிடப்படக் கூடிய இந்த ரசாயனத்திற்கு மனித மூளைத்திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.

இவை தவிர குளோரின் டை ஆக்ஸைட், பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்போனேட், சுண்ணாம்பு போன்ற மேலும் பல ரசாயனங்கள் மைதாவின் நிறம், சுவை, மற்றும் கெட்டுப்போகாத தன்மை பெறுவதற்காக அதனுடன் கலக்கப்படுகிறது. இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களிலும் கூட இந்த ரசாயனங்கள் இல்லாமலில்லை. ஆனால், மிகக்குறைந்த அளவே இருக்கும். அதே மைதாவை எடுத்துக் கொண்டால் அதன் சதவிகிதம் அதிகம். எனவே மிக மோசமான ஆரோக்யக்கேடுக்கு 100% உத்தரவாதமுண்டு.

மைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்லோர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான். 

மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்?

மைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி,  ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக்கொந்தளிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.

மைதா உயிருக்கு எமனா?! நிஜம் எது? கட்டுக்கதை எது?

இல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கருதாது உழைத்தே தீர வேண்டிய  நிர்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமைகளுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்ஸா உருவான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்லாரின் அருமை புரிய வரும். 

இதைத்தான் நம்மூர் உழைப்பாளி வர்க்கத்தினர் மிக எளிதாக..

‘ரெண்டு பரோட்டவப் பிச்சுப் போட்டு சால்னால பாத்தி கட்டி சாப்பிட்டுட்டு  படுத்தா போதும் நடுவுல பசியில வயிறு காந்தாம காலைல வரைக்கும் நிம்மதியா தூங்கலாம்’ என்று ரசித்துச் சொல்வார்கள்.

அர்த்தம் வெகு சிம்பிளானது. பரோட்டா பசி தாங்கும்.

ஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள்  ருசிக்காக தொடர்ந்து  சாப்பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அதனால் ஜாக்கிரதை!

அறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...

எந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதாவில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும்  காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிகமாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்கரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று; 

ஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.

 

 

 

]]>
diabetes, சர்க்கரை நோய், மைதா, உயிர்கொல்லி, இனிப்புகள், maida, killing food, barotta, maida sweets, all purpose flour https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/feb/12/can-we-eat-maida-based-food-and-sweets-3094419.html
3081078 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘தி கிரேட் காளி’ யைக் கேலி செய்கிறதா இந்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, January 22, 2019 12:51 PM +0530  

நெஸ்லே மஞ்ச் சாக்லெட்டின் புதிய விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் தாட்டியான பிரம்மாண்ட மனிதரை நினைவிருக்கிறதா? நம்மூரில் பிரம்மாண்டமாக இருந்தால் உடனே தாராசிங் என்றோ எஸ் வி ரங்காராவ் என்றோ அல்லது கொஞ்சமும் விவஸ்தையே இன்றி உசிலைமணி, குண்டுக்கல்யாணம் என்ற ரீதியில் தான் ஞாபகம் வைத்திருப்போம். இந்த பிரம்மாண்ட மனிதர் அவர்களைப் போன்றவர் இல்லை. சின்ன வயதில் நீங்கள் WWE ப்ரியராக... வெறியராக இருந்திருந்தீர்களெனில் உங்களுக்கு நிச்சயமாகக் காளியைப் பற்றித் தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை.

காளியைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவர் இப்படி நெஸ்லே சாப்பிடும் புத்திசாலி இளைஞனால் முட்டாளாக்கப்படுவதாகக் காண்பிக்கப் படுவதில் ஆட்சேபணை இருக்கக் கூடும்.

நீங்களே அந்தப் புதிய நெஸ்லே மஞ்ச் விளம்பரத்தைப் பாருங்களேன்...

 

காளியை இந்த விளம்பரத்தில் காணும் போது எனக்கு பி ஆர் சோப்ராவின் பழைய தூர்தர்ஷன் மகாபாரதத்தில் பீமனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரவீண் குமார் சோப்தியின் ஞாபகம் மேலெழுகிறது.

சக்திமிகுந்த பலவான் பீமனாக அவரை மகாபாரதத்தில் கண்டு வியந்து விட்டு பிறகு சில ஆண்டுகளின் பின் நம்மூர் மைக்கேல் மதனகாமராஜன் திரைப்படத்தில் குட்டைக் கமலின் ஆக்ஞைகளுக்கெல்லாம் ஏனென்று கேட்காது கட்டுப்படும் கட்டுமஸ்தான பாடிகார்ட் வேடத்தில் கண்டதும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்த மகாபாரத பீமன் கண்களில் கண்ணீர் குளம் கட்ட உறைந்து போனான்.

அப்படித்தான் இருந்தது இந்த கிரேட் காளி நடித்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்.

அப்படியென்ன பெரிய அப்பாடக்கரா தி கிரேட் காளி என்று நினைப்பவர்கள் காளியின் மகிமையை கீழே விரியும் கட்டுரையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர் மட்டுமல்ல இவர் ஒரு நடிகரும் கூட. காளி 1995 , 1996 ஆம் வருடங்களில் இந்திய ஆணழகன் பட்டத்தையும் வென்ற முன்னாள் எடை தூக்கும் வீரர் என்றும் கொண்டாடப்படுகிறார். தற்பொழுது உலக மல்யுத்த கேளிக்கை அமைப்பின் (வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட், டபிள்யூ டபிள்யூ ஈ ) ஸ்மேக்டவுன் வர்த்தகச்சின்னத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார். தொழில்நிலை மல்யுத்த வீரராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பஞ்சாப் மாநில காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

காளி ஒரு காலத்தில் உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக WWE  - ல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தி லாங்கஸ்ட் யார்ட் (2005) மற்றும் கெட் ஸ்மார்ட் (2008) போன்ற திரைப்படங்கள்லும் தோன்றியுள்ளார்.

காளியின் முதல் போட்டி (2000)!

ஜெயண்ட் சிங் என்ற புனைப் பெயரில் அமெரிக்காவின் ஆல் ப்ரோ ரெஸ்லிங் எனும் மல்யுத்த அபிவிருத்தி முகமையில் முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக பொறுப்பேற்ற அவர், 2000 ம் ஆண்டு அக்டோபர்-ல் டோனி ஜோன்ஸோடு அணி சேர்ந்து வெஸ்ட்சைட் ப்ளேயஸ் அணிக்கு எதிராக ஆடினார்.

நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணி (2001–2002)

2001 ஆகஸ்டில், குழு 2000 ன் அணித்தலைவரான மஸாஹிரோ சோனோவால் ஜெயண்ட் சிங்காக நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணியில் (என் ஜே பி டபிள்யூ) மற்றொரு மாமனிதரான ஜெயண்ட் சில்வாவோடு கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டார் சிங். தொழில் நிலை மல்யுத்த வரலாற்றில் சராசரி உயரமாக 7 அடி 2½ அங்குலங்களையும் கூட்டு எடையாக 805 பவுண்டுகளையும் கொண்ட உயரமான இணைக் குழு இவர்கள். இவ்விருவரும் முதன் முதலில் அக்டோபர் மாதம் டோக்கியோ டோம் விளையாட்டரங்கத்தில் அணிசேர்ந்தனர். சோனோவால் கிளப் 7 என்று அடையாளங் காணப்பட்ட இவர்கள் யுடாகா யோஷீ, கென்சோ சுசுகி, ஹிரோஷி டனாஷி மற்றும் வெற்றாறு இனோ ஆகியோரை சம பலமற்ற அணிகளின் போட்டி (ஹேன்டிகேப் மேட்ச்) ஒன்றில் தோற்கடித்தனர். இப்போட்டியில் சில்வா டனாஷி மற்றும் இனோ ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் வீழ்த்தினார். ஜனவரி 2002 ல் ஹிரோயோஷி டென்சானால் தொட்டில் நுணுக்கம் {கிராடில்}மூலம் வீழ்த்தப்பட்டதின் விளைவாக இணை போட்டிகளில் சிங் தனது முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. மார்ச் மாதத்தில் மனாபு நகானிஷி எனும் வீரரால் ஜெர்மன் சூப்ளக்ஸ் பின் எனும் மல்யுத்த நுணுக்கத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதால் இணைப் போட்டியின் மற்றொரு பெரிய தோல்வியை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்டு மாதம் டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் ஒருநபர் போட்டி ஒன்றில் சில்வாவால் வீழ்த்தப்பட்டதின் நிமித்தம் முக்கியத்துவம் வாய்ந்த தோல்வி ஒன்றை தழுவினார் சிங்.

வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (2006 முதல் இன்று வரை)

WWE ல் தி கிரேட் காளீ!

2 ஜனவரி 2006 இல் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) எனப்படும் உலக மல்யுத்த கேளிக்கை அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக் கொண்ட முதல் இந்திய தொழில் நிலை மல்யுத்த வீரரானார்;[ அவ்வமைப்பின் மேம்பாட்டு சம்மேளனமான டீப் சவுத் ரெஸ்லிங்கை கவனித்து வந்த அவர் தனது பூர்வாங்க பெயரிலேயே ஆடிக் கொண்டிருந்தார்.

தலிப் சிங் தி கிரேட் காளியான கதை...


தலிப் சிங் எனும் இயற்பெயர் கொண்ட காளி 2006 ஆ ஆண்டில் WWE சூப்பர் ஸ்டார் தி அண்டர்டேக்கருடனான சண்டைக்குப் பிறகே கிரேட் காளியானார்.

டைவரி-ஐ தனது மேலாளராகக் கொண்ட, 2006 ம் ஆண்டின் ஏப்ரல் 7 ம் தேதி WWE தொலைகாட்சி நிகழ்ச்சியான ஸ்மாக்டவுனில், தனது பூர்வாங்க பெயரில் தி அண்டர்டேக்கருடனான மார்க் ஹென்றியின் ஆட்டத்தில் அறிமுகமான சிங், அண்டர்டேக்கரைத் தாக்கி போட்டியற்ற நிலையை உருவாக்கினார். அதற்கடுத்த வாரம் தி க்ரேட் காளீ என அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்வாறு இறுதியில் தி அண்டர்டேக்கரை வீழ்த்த தனக்கொரு வீரர் கிடைத்தார் என்று விவரித்தார் டைவரி (முஹம்மது ஹசன் மற்றும் மார்க் ஹென்றியின் தோற்றுவிட்ட முயற்சிகளுக்குப் பிறகு). ஏப்ரல் 21 ஸ்மாக்டவுனின் அறிமுக மல்யுத்த ஆட்டகள நிகழ்ச்சியில் ஃபுனாகியைத் தோற்கடித்தார் சிங்.

அண்டர்டேக்கரை தோற்கடித்த கதை...

மே 12 ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் உலக முன்னணி குத்துச்சண்டை வீரரான ரே மிஸ்டீரியோவுக்கெதிராக ஜான் பிராட்ஷா லேஃபீல்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்தேர்வு காளீ ஆவார். மிஸ்டீரியோவை ஒரு ஸ்குவாஷ் போட்டியில் வீழ்த்திய காளீக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது அவரது இரண்டடி அதிக உயரமும் 250 பவுண்டுகள் அதிக எடையுமே. ஜட்ஜ்மென்ட் டே என்று பெயரிடப்பட்ட குத்துச்சண்டை நிகழ்ச்சியில் டைவரியின் சட்டத்திற்குப் புறம்பான யோசனைகள் சிலவற்றைப் பெற்ற பின்பு, காளீ தி அண்டர்டேக்கரைத் தலையில் உதைத்து தோற்கடித்தார். பின்வந்த பல வாரங்கள் சம பலமற்ற அணி போட்டிகளை வெல்லுதல், சக்தியைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த அசகாய சூரர்களையெல்லாம் வீழ்த்துதல்,தி அண்டர்டேக்கரின் வீழ்த்தும் விதம் மற்றும் வெற்றிச் சாடைகளை எள்ளி நகையாடல் என காளீ தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தார்.

தி கிரேட் அமெரிக்கன் பாஷ் எனும் நிகழ்ச்சியில் நடத்தப்படவிருந்த பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் எனும் போட்டியில் பங்கேற்குமாறு தி அண்டர்டேக்கருக்கு சவால் விட்டார் சிங். எனினும் மருத்துவ தகுதியின்மையால் காளீ அப்போட்டியில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. பிக் ஷோ எனும் மல்யுத்தவீரர் அவருக்குப் பதிலாகக் களமிறங்கி காளீயின் தலையீட்டுக்குப் பின்னும் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. மருத்துவத்தகுதி பெற்றபின் சம்மர்ஸ்லாமில் லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங் மேட்ச் என்றழைக்கப்படும் மயங்க வைக்கும் அடி போட்டியில் கலந்துகொள்ளுமாறு காளீக்கு தி அண்டர்டேக்கரிடமிருந்து சவால் விடப்பட்டது. போட்டி ஸ்மாக்டவுன் நிகழ்ச்சிக்கு மாற்றப்பட்டு சம்மர்ஸ்லாமுக்கு சற்று முன்பே அண்டர்டேக்கரால் வெற்றிவாகை சூடப்பட்டு, காளீக்கு WWE  ன் முதல் தீர்மானமான தோல்வியைக் கொடுத்தது.

தி கிரேட் காளியின் சொந்த வாழ்க்கை!

தலிப் சிங் அலைஸ் காளி... சிங் ஜ்வாலா ராமுக்கும், தன்டி தேவிக்கும் பிறந்தவர்; இந்தர் சிங், மங்கத் சிங் ராணா ஆகியோரை உள்ளடக்கிய ஏழு உடன்பிறந்தவர்களில் ஒருவர். பிப்ரவரி 27, 2002 ஃபிப்ரவரியில்  சிங் ஹர்மீந்தர் கவுரை திருமணம் செய்து கொண்டார். இத்தனை ஆஜானுபாகுவான காளி தனக்கு எச்சூழலிலும் புகையிலை மற்றும் மதுவின் மீது சபலம் தோன்றியதே இல்லை எனவும் அதைத் தான் மிகவும் வெறுப்பதாகவும் கூறுகிறார்.

அவர் தனது புனைப்பெயரான "தி கிரேட் காளி" தெய்வீக சக்தியை உள்ளடக்கிய இந்து பெண் தெய்வமான காளியிடமிருந்தே உருவானது என்று கூறுகிறார். அவரது பெற்றோர் சராசரி உயரமுடையவர்களாகவே இருந்த போதிலும் அவரது தாத்தா 6 அடி 6 அங்குல உயரமுடையவராக இருந்ததால் காளியும் அதீத உயரத்துடனான தோற்றம் கொண்டவராக விளங்கிய போது அது அவரது குடும்பத்தாருக்கு வியப்பேதும் அளிக்கவில்லை என்கிறார்.

சிங்கின் பயிற்சி அட்டவணை நாள்தோறும் காலையும் மாலையும் இரண்டு மணிநேர எடைப்பயிற்சியை உள்ளடக்கியது. அவர் தனது உடல்பருமனைக் கட்டுக்குள் வைக்க கடுமையான தினசரி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகிறார். காளியின் ரெகுலர் டயட்டில் தினம் ஒரு கேலன் பால், ஐந்து கோழிகள் மற்றும் இரண்டு டஜன் முட்டைகள், இவற்றுடன் சப்பாத்திகள், பழரசம் மற்றும் பழங்கள் ஆகியவை தவறாது இடம்பெறுகின்றன.

]]>
The Great Khali, WWE, UNDERTAKER, WRESTLER, NESLE MUNCH ADVERTISEMENT, MOCKING KHALI, தி கிரேட் காளி, காளியைக் கேலி செய்யும் நெஸ்லே, விளம்பரம், நெஸ்லே மஞ்ச், மல்யுத்த வீரர், அண்டர்டேக்கர், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/22/does-nesle-munch-advertisement-really-mocking-the-great-khali-3081078.html
3079328 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் முதல்ல ரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்! (காணொளி) கார்த்திகா வாசுதேவன் Saturday, January 19, 2019 05:19 PM +0530  

முத்தம் இந்த உலகில் எல்லோரும் விரும்பத்தக்க ஒரு அதிசய ரிலாக்ஸ் ஃபேக்டர்.

வழங்குபவருக்கும் சரி.. .பெற்றுக் கொள்பவருக்கும் சரி அதீத ஆனந்தத்தைத் தரக்கூடிய செயல் இது.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் முத்தமிடத் தெரியும் என்று யோசித்துப் பாருங்கள்...

முத்தம் வெறும் சடங்கல்ல!

மிக ரசனையாக முத்தமிடத் தெரிந்தவர்களுக்கு ஆகாயத்தை கையால் வளைத்து விட்டாற் போன்ற பெருமித உணர்வு கூட வரக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தோர்.

 

காற்றில் மிதப்பதைப் போலவோ...
கனவில் திளைப்பதைப் போலவோ...
கடலில் நீந்தித் துழாவுவதைப் போலவோ...

முத்தமிடும் போதோ... அதை வழங்கும் போதோ தோன்றவேயில்லை எனில் நீங்கள் இன்னும் சரியாக முத்தமிடக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஆகவே... முதலில் ஒழுங்காக முத்தமிடக் கற்றுக்கொள்ளுங்கள் மக்களே!
 

]]>
kiss me, french kiss, learn kiss, quick kiss, lock kiss, angels kiss, முத்தம், ஃப்ரெஞ்ச் கிஸ், க்விக் கிஸ், பறக்கும் முத்தம், தேவதை முத்தம், முத்தமிடுவது எப்படி?, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/19/learn--how-to-kiss-3079328.html
3073188 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்! RKV Tuesday, January 8, 2019 12:38 PM +0530  

மதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அதே பள்ளியில் 5 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரே பள்ளியில் 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் வேதமுத்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் இத்தனை ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு மாணவர்களின் வாழ்க்கை சிறக்க அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதைப் பாராட்டி அவரைக் கெளரவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கி பரிசளிக்கப்பட்டுள்ளது.

பல ஆசிரியர்கள் நகரங்களில் பணிபுரிவதையே வசதியாகக் கருதும் இந்தக்காலத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறப்புரப் பணியாற்றி தமது தடத்தை மிகச்சிறப்பாகப் பதித்த வகையில் ஆசிரியர் வேதமுத்துவைப் பாராட்டியே தீர வேண்டும். அவர் இதுவரை எந்த மாணவ, மாணவியரையும் மோசமாகக் கடிந்து கொண்டதே இல்லை. மாணவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு குணமாக எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்துவார். அதனால் ஆசிரியர் வேதமுத்துவை கிராமத்தினர் அனைவருக்குமே பிடிக்கும். அத்துடன் அவர் மாணவர்களுக்கும் மிக நெருங்கிய நல்லுள்ளமாக இருந்த காரணத்தால் அவரது பிரிவுபசார விழாவை கொட்டக்குடி ஊர் கூடி நடத்தியது. மாணவர்கள் கண்ணீர் மயமாக தங்களது தலைமை ஆசிரியருக்குப் பிரியா விடை கொடுத்த காட்சி நெகிழ்ச்சியான ஆனந்த அனுபவமாக இருந்தது. ஊர் கூடி நடத்தப்பட்ட பிரிவுபச்சார விழாவில் வைத்து ஆசிரியர் வேதமுத்துவுக்கு ஊரார் சார்பில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட என்ஃபீல்டு பைக் பரிசளிக்கப்பட்டது.

]]>
head master vedhamuthu, 1.50 lakshs royal enfield gift, kottakudi, ஆசிரியர் வேதமுத்து, ஒன்றரை லட்சம், பரிசு, பிரிவுபச்சார விழா, கொட்டக்குடி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/08/head-master-rewarded-150-lakhs--royal-enfield-bike---gift-for--retirement-3073188.html
3072508 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம்! சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்? RKV Monday, January 7, 2019 11:44 AM +0530  

நேற்று யூ டியூப் பிஹைண்ட்வுட்ஸ் டிவியில்  ‘நதியோரம்’  என்றொரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தின் டைட்டில் கார்டு என்னை எப்படி ஈர்த்தது என்று தெரியவில்லை. சும்மா பார்த்து வைப்போமே என்று தான் அதை ஓட விட்டேன். பார்க்கத் தொடங்கும் போது தெரியாது அது சுஜாதாவின் சிறுகதை என்று. ஆனால் கிளைமேக்ஸில் ஒப்புக் கொள்ள முடிந்தது. சுஜாதாவைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு கதையை நச்செனச் சொல்லி முடிக்க முடியாது என்பதை. கதை மிக எளிமையானது.

வடக்கில் வேலையில் இருக்கும் பிராமண இளைஞர் ஒருவருக்கு அவரது அப்பா பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். எல்லாம் முடிவான பிறகே மகனை அழைத்து பெண்ணின் புகைப்படத்தை அளித்து ‘இவள் தான் பெண், இந்தத் தேதியில் திருமணம் நீ வந்து தாலி கட்டு என்கிறார். மகனோ, இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம் என மறுக்க, தகப்பனார் ஒரேயடியாக ‘எல்லாம் பேசி முடிச்சாச்சு...  நீ வந்து தாலி கட்டறேன்னா, கட்டறே.. அவ்வளவு தான்’ என்று கட்டளையிடுகிறார்.

அந்தப்பக்கம் பெண் வீட்டில் ‘பையனின் புகைப்படத்தை பெயருக்குக் காட்டி அவளது சம்மதமும் வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. கூடக் கொஞ்ச நேரம் புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் ஆசையில் பெண் இருக்கையில், அவளது தந்தை... வெடுக்கென புகைப்படத்தை அவளிடமிருந்து பிடிங்கி... எத்தனை நேரம் இப்படி உத்துப் பார்த்துண்டு இருப்ப’ கல்யாணத்துக்கெல்லாம் உன் சம்மதம் அநாவசியம் என்பதாக நடந்து கொள்கிறார்.

அந்தப் பக்கம் பையனுக்கு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாது.

இந்தப்பக்கம் பெண்ணுக்கும் பையனைப் பற்றி எதுவும் தெரியாது. அப்படியென்றால் கதை நிகழும் காலம் நமக்குத் தெரியாமலா போய்விடும்.. ஆமாம் இந்தக் கதை நிகழ்வது 1980 களில்.

நிகழுமிடம் சென்னை என்கிறார்கள் (நம்பத்தான் முடியவில்லை). சென்னையை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை என்பதைக் காட்டிலும் வெகு குளுமையாக இருக்கிறது என்று சொல்லலாம்.

என்னால் நம்ப முடியாததாக இருந்தது... நாயகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியை அழைத்துக் கொண்டு காலற நடந்து சென்று அமரும் ஆற்றங்கரையைத் தான். சென்னையில் இப்படியொரு ஆற்றங்கரை 80 களில் இருந்ததா? அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா? என்பது தான். ஏனென்றால் இப்படியான ஆறுகளெல்லாம் தெற்கத்திப் பக்கம் மட்டுமே காணக் கிடைத்த நற்கொடைகள் என்று நினைத்திருந்த காலம் அது.

 

 

ஒருவேளை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், அடையாறு ஏரியாக்களில் இப்படியொரு பரிசுத்தமான ஆறு இருந்ததோ என்னவோ?

சரி மேலே செல்வோம்... கதையில் தம்பதிகள் 80 களைச் சேர்ந்தவர்கள் என்றறிய மேலுமொரு ஆவணமாக முதலிரவன்று பால் சொம்புடன் அறைக்குள் நுழையும் மணப்பெண், கணவன் உத்தரவின் பேரின் அவனருகில் கட்டிலில் அமர்ந்த போதும், அவன் திரும்பி இவளை நோக்கி கை நீட்டுகையில் உடனே வெட்கத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்து விடுகிறாள். இதைக் கண்டு அந்தக் கணவனுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. அப்படியே இருவரும் தூங்கி எழுந்து ஓரிரு நாட்களுக்குப் பின் மணமகனின் அம்மா, அப்பா ஊருக்குச் சென்ற பின் காலாற நடந்து ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.

இருவரும் பேசிப் புரிந்து கொள்ளத் துவங்குவது அந்த நொடியில் இருந்து தான்.

அவளுக்கு அவனைப்பற்றி... அவனது செயல்களைப் பற்றி அறிந்து கொள்வதைக் காட்டிலும் அவனது அம்மா சொல்லி விட்டுச் சென்ற ‘பூணூல் விஷயம்’ மட்டுமே மனதில் நிற்கிறது.

எனவே தன்னிடம் மற்றவர்கள் அவனைப் பற்றிச் சொல்லிச் சென்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அவனைப் புரிந்து கொள்ள யத்தனிக்கிறாள்.

யத்தனிக்கிறாள் என்பதை விட அவன் இனி தன்னுடைய உரிமை, தன்னுடைய பொறுப்பு என்பதாகக் கற்பனை செய்து நம்பத் தொடங்கி... நீங்க ரொம்ப கோபக்காரராமே... உங்கம்மா சொன்னாங்க, பூணூல் கூடப் போட்டுக்க மாட்டீங்களாம். என்கிட்ட சொல்லி கட்டாயம் பூணூல் போட்டுக்கச் சொல்லி ஒத்துக்க வை’ ந்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதனால நீங்க கண்டிப்பா பூணூல் போட்டுண்டே ஆகனும். அப்போ தான் என்னையும், உங்களையும் சாமி நல்லா பார்த்துக்கும். என்கிறாள் கொஞ்சம் கோபமாக.

கோபப்படும் மனைவியை சாந்தப்படுத்த கணவனாகப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமென்றால்? 

சுஜாதா சொல்படி முத்தமிட்டு விடுவேன்.. என்று மிரட்டினால் போதும் போல.

உடனே அவள் சிரித்து சமாதானமாகி விடுகிறாள்.

அப்புறமென்ன இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இனிய இல்லறத்தில் சந்தோஷமாக இறங்கிச் சிறகடித்துப் பறந்திருப்பார்கள் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள்.

அது தான் இல்லை. பிறகு தான் ட்விஸ்ட்டே!

மிக மிகத்துக்கமான முடிவு தான். ஆயினும் மிக அருமையானதொரு சோகக் கவிதையை வாசித்தாற் போன்ற நிறைவு. 

சுஜாதா ஏன் அவர்களை வாழ விட்டிருக்கக் கூடாது? என்ற கோபம் மிஞ்சியது உண்மை. அது தான் இந்தச் சிறுகதையின் வெற்றி.

குறும்படத்தின் வெற்றியும் கூட.

விருப்பமிருப்பவர்கள் பார்க்கலாம்.

சுஜாதாவின் ‘ஒரே ஒரு மாலை’ சிறுகதைக்கு நியாயம் செய்திருக்கிறது இக்குறும்படம்!

* ஒரு சிறுகதையை அதன் ஜீவன் சிதையாமல் குறும்படமாக்கியிருப்பதில் இயக்குனர் அன்பிளமதியைப் பாராட்டலாம். வெகு முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இக்குறும்படத்தில் ஒளிப்பதிவாளர் திலீபன் பிரபாகர். கதையின் ஜீவனைச் சிதைக்காது நம் கண்களறியாது ஒசிந்து நகர்கிறது கேமிரா. புதுக் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இருவரும் பாத்திரமறிந்து  நடித்து 80 களில் புதுக்குடித்தனம் துவக்கவிருக்கும் தம்பதிகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அந்தப் பெண்ணின் நீளக்கூந்தல் பொறாமை கொள்ள வைக்கிறது.


Video Courtesy: Behindwoods TV

]]>
sujatha, short story, short film, Nadhiyoram short film, chennai in 80 s, chennai rivers, சென்னை, சுஜாதா, சிறுகதை, குறூம்படம், நதியோரம், ஒரே ஒரு மாலை சிறுகதை, எழுத்தாளர் சுஜாதா, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/jan/07/why-did-sujatha-forget-to-save-them-3072508.html
3062429 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இந்த உலகத்துல பேய் இருக்கா? இல்லையா?! நீங்க நம்பறீங்களா? கார்த்திகா வாசுதேவன் Friday, December 21, 2018 04:05 PM +0530  

நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான்.  அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்  காணொளி தான் இது...

 

 

அதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்


 

]]>
black magic, பேய், பேய் நம்பிக்கை, ghost , ghost belief, அமானுஷ்யம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/dec/21/இந்த-உலகத்துல-பேய்-இருக்கா-இல்லையா-நீங்க-நம்பறீங்களா-3062429.html
3058616 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அடடே ஆச்சர்யம்! உங்கள் மீனவன் மூக்கையூர் சொல்லும் சங்கதி கேளுங்கள்! RKV Saturday, December 15, 2018 04:01 PM +0530  

யூ டியூபில் உங்கள் ‘மீனவன் மூக்கையூர்’ என்று தேடிப் பாருங்கள். மீனவ நண்பரொருவர் கடல் சார்ந்த பல விஷயங்களைப் பற்றி சின்னச் சின்னதாக விடியோ பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கிறது. அவர் தான் அறிந்த விஷயங்களைத் தனது வாழ்வாதாரமான கடல் சார்ந்து பலருக்கும் அறியத் தருகிறார். ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு பிரத்யேகமான தகவலைத் தருகிறது. 

 • சாப்பிடக்கூடாத நண்டுகள் லிஸ்ட்
 • இரவு மீன் பிடிப்பது எப்படி?
 • அறிய வகை கடல்வாழ் உயிரினங்கள்...
 • சங்கு கறி சமைப்பது எப்படி?
 • மீனை மஞ்ச ஊத்தி அவிப்பது எப்படி?
 • ஐந்து கிலோ கடல் பாம்பு
 • சங்கு சமைப்பது எப்படி?
 • கடலில் மீன் பிடித்து ஸ்பாட்டில் மீன் சுட்டு சாப்பிடும் அனுபவம்
 • நல்ல மீன் எது? கெட்டுப்போன மீன் எது?
 • நல்ல பாம்புக்கு இணையான விஷம் கொண்ட கடல் வாழ் உயிரினம்
 • நங்கூரம் பயன்படுத்துவது எப்படி?
 • கடல் பூவின் அழகு...
 • ஆமையின் வரலாறு...
 • மீன் பிடிக்கும் போட்டை சுத்தம் செய்வது எப்படி? இத்யாதி... இத்யாதி....

இப்படிப் பல விஷயங்களை லைவ் வீடியோக்களில் விளக்குகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

சாம்பிளுக்கு ஒரு காணொளி லிங்க்...

மேற்குறிப்பிட்டுள்ள காணொளியில்,

சங்கைப் பற்றிய பல அபூர்வமான தகவல்களை இவர் பகிர்ந்திருக்கிறார். சங்கில் ஆண் சங்கு, பெண் சங்கு என 2 வகை உண்டு.  சங்கின் வாய்ப்பகுதியில் மெல்லிய கோடு இருந்தால் அது பெண் சங்கு என்றும் கோடு இல்லாது இருந்தால் அது ஆண் சங்கு என்றும் அடையாளம் காணப்படுகிறது. மேலுள்ள கூம்பு போன்ற வடிவமைப்பில் கீழ்ப்பகுதி வரிகளின் மேல் மஞ்சள் பூத்திருந்தால் அது தாய் சங்காகக் கருதப்படுமாம்.  அந்த வகைச் சங்குகளுக்கு மார்க்கெட்டில் வரவேற்பு அதிகமிருக்காது. இது தவிர சங்கில் இடம்புரி, வலம்புரி என்றும் இரண்டு விதம் உண்டு.

 • இடப்பக்கம் வளைந்திருந்தால் அது இடம்புரிச் சங்கு,
 • சங்கு வலப்புறம் திரும்பி இருந்தால் அது வலம்புரிச் சங்கு.

இதில் வலம்புரிச்சங்கு கிடைத்தற்கரியது. மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. 

சங்கு ஒரு கடல்வாழ் உயிரினம். சங்கின் உள்ளே வாழும் சதை நிறைந்த உயிரினத்திற்கு எலும்புகள் கிடையாது. அவை மிக மிக மெதுவாக ஊர்ந்து வாழக்கூடியவை. ஆழ்கடல் பகுதியில் வாழக்கூடிய சங்கு கவிழ்ந்து விட்டால் மெல்லச் சாகும் தன்மை கொண்டது. நத்தை போல ஓட்டை முதுகில் சுமந்து திரிந்தாலும் மீன் பிடிக்கும் வலைகளில் சிற்சில சமயங்களில் சிக்கும் வழக்கம் உண்டு. 

பெங்காளிகளுக்கு சங்கு ஆபரணங்கள் தயாரிக்க உதவுகிறது.

தமிழ்நாட்டிலிருந்தும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் இருந்தும் கொல்கத்தாவுக்குச் செல்லும் சங்குகள் அங்கு அழகழகான ஆபரணங்களாக மாற்றப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன என்கிறார் இந்த மூக்கையூர் மீனவர்.

யூடியூபை சாமானியர்களும் பயனுள்ள முறையில் இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.
 

]]>
ungal meenavan mookaiyur, உங்கள் மீனவன் மூக்கையூர், சங்கு, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/dec/15/ungal-meenavan-mookaiyur-3058616.html
3050971 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்! RKV Monday, December 3, 2018 03:44 PM +0530  

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி கிருபாவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்று மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மாணவிக்கு மருத்துவப் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்த சமயத்தில் அவர்களது குடும்பநிலை மருத்துவக் கட்டணம் செலுத்தும் நிலையில் இருந்ததால் முதற்கட்டமாக 8 லட்ச ரூபாய் செலுத்தி மருத்துவப் படிப்பில் இணைந்திருக்கிறார் கிருபா. பிலிப்பைன்ஸில் மருத்துவம் பயில முதலாண்டை புனேயில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் முடித்து விட்டு வரவேண்டும் என்று நிபந்தனை இருந்ததால் புனேவில் முதலாண்டுப் படிப்பை முடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் விதி விளையாடி கிருபாவின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்கு கட்டணம் செலுத்த வழியில்லாது போயிருக்கிறது. மருத்துவக் கல்லூரி அளித்திருந்த காலக்கெடு தாண்டியும் கட்டணம் செலுத்த வகையற்றுத் திகைத்த கிருபா தனது மருத்துவப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு தற்போது தொழில் நொடித்ததால் தெருவோரத்தில் இட்லிக் கடை வைத்து நடத்தி வரும் தன் அம்மாவுடன் இட்லி விற்பனை செய்து வரும் காட்சி அப்பகுதி மக்களின் வருத்தத்திற்குரிய செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

சைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா என இன்று கிருபாவின் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்றாட குடும்பப் பாட்டுக்கே கஷ்ட ஜீவனமாயிருக்கிற இந்த சந்தர்பத்தில் கிருபாவின் மருத்துவப் படிப்புக்கு எங்கிருந்து கட்டணம் செலுத்த முடியும்? என கண்ணீர் வடிக்கிறார் கிருபாவின் தாயார்.

]]>
philippines to pazavanthangal, road side idly vendor, medicine to idly shop worker, medicine student kruba, ப்லிப்பைன்ஸ் டு பழவந்தாங்கல், மருத்துவம் டு தெருவோர இட்லிக் கடை, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/dec/03/girl-once-studied-medicine-in-philippines-now-selling-idly-in-roadside-shop-3050971.html
3046253 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘பிறவி மேதை’ சிறுவனை ஆதரித்து இலவசக் கல்வியளிக்க ஒப்புக் கொண்ட கர்நாடகத் துறவி! கார்த்திகா வாசுதேவன் Monday, November 26, 2018 01:06 PM +0530  

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த குழந்தை மேதை முகமது யூசுபை பற்றித் தெரியுமா உங்களுக்கு? ஆசிரியை கணிதம், அறிவியல், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என எந்தப் பாடத்தில் இருந்து கேள்விகளை எழுப்பினாலும் சற்றும் தயங்காது ஆசிரியை கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே பதிலுடன் நிற்கிறான் இந்தச் சிறுவன். அவனது பதில் அளிக்கும் திறன் கண்டு அவனுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ‘ இவனென்ன தெய்வப் பிறவியோ’ என வியந்து போய் நிற்கிறார்கள். காரணம் அவனது வயது வெறும் 5 மட்டுமே! அதுமட்டுமல்ல முகமது யூசுப்பின் அம்மா, அப்பா இருவருமே பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி சென்று படிக்க இயலாத அளவுக்கு வறுமையில் உழல்பவர்கள். நகரத்துப் பெற்றோர்களைப் போல தங்களது குழந்தையை டியூசன் செண்ட்டருக்கு அனுப்பியோ அல்லது தாங்களே கற்றுத் தந்தோ மேதையாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஞானமும் இல்லை... நேரமும் இல்லை. பிறகெப்படி சிறுவன் தான் இதுவரை படித்தறியாத விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்டால் கூட உடனடியாக டக் டக்கென்று பதில் சொல்கிறான் என்பது தான் அவனது ஆசிரியப் பெருமக்களுக்கு  மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் கூட மிகப்பெரிய ஆச்சர்யம். இப்படி கற்றுத்தராமலே தங்கள் மகன் 5 வயதில் நடமாடும் என்சைக்ளோபீடியா போல திகழ்வது அவனது பெற்றோர்களுக்கு பெருமகிழ்ச்சி. 

குழந்தை மேதை முகமது யூசுப்பின் தந்தை யமனுர்சாப் நந்திபுரா டிரைவராகப் பணிபுரிகிறார். அம்மா ரோஜா பேஹம் கிராமத்தில் வயல் வேலைகளில் ஈடுபடும் ஒரு விவசாயக்கூலி. தங்களது வறுமை நிலை குழந்தையின் மேதமைத்தனத்துக்கு தடையாக அமைந்து விடக்கூடாது என்று எண்ணிய யமனுர்சாப் நந்திபுரா நந்திபுராவில் இயங்கி வரும் சிரந்தேஸ்வரா வித்யா சமஸ்தே எனும் கல்வி நிலையத்தை அணுகினார். ஹாகரிபொம்மனஹள்ளியில் இயங்கும் அப்பள்ளியில் தங்களது மகனைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யமனுர்சாப் அக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வரும் மகேஸ்வர ஸ்வாமிஜியை அணுக... அவரோ பள்ளியில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் சிறுவனின் எதிர்காலக் கல்விச் செலவையும் தங்கள் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று உறுதியளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். ஸ்வாமிஜி... சிறுவன் முகமது யூசுப்பிடம் கேள்விகள் கேட்க, அதற்கு சிறுவன் கேள்விகள் முடியுமுன்னே டணார், டணாரென பதிலளிக்கும் காணொளி தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. சிறுவனைப் பற்றிப் பேசும் போது ஸ்வாமிஜி தெரிவித்தது... இந்தத் தலைமுறை குழந்தைகள் குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிராமப்புறக் குழந்தைகள் வெகு சூட்டிகையானவர்கள், அவர்களுக்கு தேவை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சரியான வழிகாட்டல் மட்டுமே... அவர்களை சரியான வகையில் நல்வழிப்படுத்த ஆட்கள் இருந்தால் போதும் உரமிக்க திறமிக்க அடுத்தடுத்த தலைமுறை உருவாக்கப்படுவதற்கான அஸ்திவாரத்தை அவர்களே இடுவார்கள். இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை என்னால் முடிந்த நன்மைகளை எல்லாம் நான் அவனுக்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார். தற்போது ஸ்வாமிஜியின் அன்புக்குரிய மாணவனாக பள்ளியில் வலம் வரும் முகமது யூசுப் விரைவில் அப்பள்ளியின் தலை சிறந்த மாணவன் எனும் நற்பெயரை அவர்களுக்குப் பெற்றுத்தருவான் எனும் நம்பிக்கை அங்கிருப்பவர்களின் பார்வையில் தெரிந்தது.

நன்கு கற்றறிந்த பெற்றோருக்குப் பிறந்த நகரத்துக் குழந்தைகள் பிறவி மேதைகளாக திகழ்வதில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை. முகமது யூசுப் போன்ற கிராமத்து கூலித்தொழிலாளி பெற்றோருக்குப் பிறந்து பிறவி மேதையாகத் திகழ்வது சவாலான விஷயம். இச்சிறுவனுக்கு மட்டும் சரியான, முறையான வழிகாட்டலும் உதவியும் கிடைக்குமாயின் நிச்சயம் வருங்காலத்தில் இவனொரு மிகப்பெரிய ஆளுமையாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்கிறார்கள் முகமது யூசுப்பை பற்றி அறிந்தவர்கள். அவர்களது நம்பிக்கை மெய் தான் இல்லையா?
 

]]>
பிறவி மேதை, முகமது யூசுப், பெல்லாரி கர்நாடகா, Child prodigyBallari, Mohammed Yusuf , bellari, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/26/child-prodigyballari-3046253.html
3044424 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஸ்விக்கி, பீட்ஸா, பர்க்கர்லாம் வந்ததால பாட்டி சுட்ட வடை போணியாகல! கார்த்திகா வாசுதேவன் Friday, November 23, 2018 04:15 PM +0530  

 

 

தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலின் போது எழுத்தாளர் விழியன் உமாநாத் செல்வனுடனான உரையாடலில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகிறது. நாம் நம் குழந்தைகளை மிகச்சரியாக  தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தான் அது. குழந்தைகளுக்கு இது தான் நல்லது, இதெல்லாம் கெட்டது என்று நினைத்து நான் சில விஷயங்களை அவர்களிடம் திணிக்கிறோம். உண்மையில் அப்படித் திணித்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் உளவியலைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இது தவறான அணுகுமுறை என்பதோடு குழந்தைகளை குறிப்பாக சிறுவர்களைக் கையாள்வதில் நிச்சயம் பின்பற்றப் படக்கூடாத முறையுமாகும். சிறார் இலக்கியம், சிறுவர்களிடையே வாசிப்பின் மீதான நேசிப்பை ஊக்குவிப்பது எப்படி? சிறார் இலக்கியத்தை நீரூற்றி வளர்ப்பதில் அரசின் கடமை, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு, வாசகர்களின் சிறப்பான பங்கு என்ன? என்பன போன்ற மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள முழுமையான நேர்காணலில் விளக்கமாகக் காணுங்கள்.

]]>
VIZHIYAN UMANATH SELVAN, DINAMANI.COM, NO COMPROMISE -5, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/23/dinamanicoms-no-compromise-5-with--vizhiyan-umanath-selvan-3044424.html
3043030 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நம்ம சிஸ்டமே பார்த்தீங்கன்னா பதில் சொல்றதுக்கு மட்டும் தான் குழந்தைங்க, கேள்வி கேட்கறதுக்கு இல்ல! கார்த்திகா வாசுதேவன் Wednesday, November 21, 2018 05:53 PM +0530  

தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வரிசையின் இன்றைய விருந்தினர் சிறுவர் இலக்கியப் படைப்பூக்கத் தன்னார்வலரும், எழுத்தாளருமான விழியன் உமாநாத் செல்வன். சிறுவர்களின் குறிப்பாக குழந்தைகளின் படைப்பூக்கத்திறனை செம்மைப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நமது கவனம் திரும்ப வேண்டிய திசை... சிறார் வாசிப்புத் திறனூக்கம். அதை நாம் சரியாகச் செய்கிறோமா என்றால் பெரும்பான்மையினரின் பதில் இல்லையென்றே இருக்கக் கூடும். அதன் அவசியம் பற்றில் விளக்கமாக அறிந்து கொள்வதற்கும், சிறுவர்களின் உளவியலைப் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்கும் விழியனுடனான இந்த நேர்காணல் நம் வாசகர்களுக்குப் பயன்படலாம். 

நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே இது...

 

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (23.11.18)
வெளியாகும்.

]]>
VIZHIYAN UMANATH SELVAN, CHILD LITERATRY ACTIVIST, WRITER, DINAMANI.COM, NO COMPROMISE INTERVIEW SERIES, விழியன் உமாநாத் செல்வன், சிறார் இலக்கியப் படைப்பாளி, எழுத்தாளர், தினமணீ.காம், நோ காம்ப்ரமைஸ் நேர்காணல், https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/21/our-system-encouraging-our-children-only-to-give-answers-not-to-raise-questions-3043030.html
3042337 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஏ ஆர் ரகுமானை மட்டுமல்ல நம்மையும் தான் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார் இந்த நித்திலா! கார்த்திகா வாசுதேவன் Tuesday, November 20, 2018 03:53 PM +0530  

நித்திலா... 

இவள் பிறந்தது 2000 ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம்.  

பிறக்கும் போதே அவளுக்கு ‘மிட் ஃபேஸியல் டிஃபார்மிட்டி’ எனும் நோய்க்குறைபாடு இருந்தது. அவள் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மகப்பேறு மருத்துவர் எங்களிடம் சொன்னார்... கருவிலிருக்கும் குழந்தையின் அசைவில் ஏதோ தவறுதலாகத் தெரிகிறது என்று... குழந்தையைக் கருவில் தாங்கி நிற்கும் எந்த அம்மாவுக்கும் மிகுந்த மன உளைச்சலைத் தரத்தக்க சொற்கள் இதுவாகத்தான் இருக்க முடியும். பிறக்கவிருக்கும் குழைந்தையை சந்தோசமான மனநிலையில் எதிர்கொள்ள இயலாமல் குறைபாட்டுடன் எதிர்கொள்ளவிருக்கும் நிலையை எண்ணி மிகுந்த மன வருத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் நாங்கள் உள்ளானோம். அப்போது மருத்துவர் சொன்னார்... நீங்கள் நிதானமாக யோசிக்க ஒருநாள் எடுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். என்றார். அந்த வார்த்தைகள் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கொடுங்கனவாக இருந்தது.

ஏனென்றால் பிறக்கும் போதே எங்கள் குழந்தைக்கு நிறைய பிரச்னைகள் இருந்தன. அவளுக்கு சுவாசம் இல்லை. அதனால் உடனடியாக நியோனேட்டல் ஐசியூ வில் அட்மிட் செய்தார்கள். பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலில் ஏராளமான ரப்பர் குழாய்கள் சொருகப்பட்டன. இப்போது யோசிக்கையில் என்னால் அவை என்னென்னவென்று கூட நினைவுறுத்திச் சொல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. எங்களது குழந்தையிடம் அப்போது நாங்கள் கண்ட ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால்... அது அவளது வாழ்க்கைப் போராட்டம் தான். குழந்தையால் சுவாசிக்க முடியவில்லை என்ற நிலையில் அது சோர்ந்து போய் ஜடமாகக் கிடக்கவில்லை. தன்னுடைய நிலையை எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்துக்கான அசைவுகள் குழந்தையின் உடலில் இருந்தன. அது மட்டுமே எங்கள் குழந்தை உயிருடன் இருக்கிறது என்பதற்கான ஆறுதலாக எங்களுக்கு இருந்தது. எனக்கு இப்போதும் என் குழந்தையின் அன்றைய ஜனனப் போராட்டத்தை நினைத்தால் ஆச்சர்யம் தான். 

அப்போது தான் ஒரு நண்பர் ‘குழந்தையின் கேட்கும் திறன்’ குறித்தும் பரிசோதனை செய்து பார்த்து விடுங்களேன் என்றார். நாங்கள் அந்த சோதனையையும் செய்தோம். ரிசல்ட் வந்தது எங்கள் குழந்தைக்கு கேட்கும் திறன் இல்லையென்று.  குழந்தை விஷயத்தில் மேலும் மேலும் எதிர்மறையான விஷயங்களையே கேட்டுக்கொள்ள நேர்ந்த போதும் நானும், என் மனைவியும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தோம். இந்தக் குழந்தைக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இவள் வளர்ந்த பிறகு தனது சிறு சிறு தேவைகளுக்காகக் கூட என்னையோ, என் கணவரையோ அல்லது வேறு யாரையுமோ நம்பியோ, எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது என்று. எங்கள் குழந்தை இப்படி ஒரு குறைபாட்டுடன் பிறந்து விட்டதே என்ற வருத்தம், அதைக் குறித்த சமூகத்தின் விமர்சனப் பார்வை எல்லாவற்றையும் தாண்டி எங்களுக்கு எங்கள் நித்திலாவை... நித்திலாவாகவே இந்தச் சமூகத்தின் முன் நிறுத்தும் ஆவல் மிகுந்திருந்தது. எனவே நாங்கள் அதற்குத் தயாரானோம்.

எங்கள் குடும்பத்தில் யாரும் அதுவரை இசைத்துறையில் இல்லை. சென்னையில் வசிக்கும் எங்களது உறவினர் ஒருவர்... ஒருமுறை... தனது பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன் மிக அருமையாகப் பியானோ வாசிப்பான் என்றார். நாங்கள் உடனே அந்தச் சிறுவன் வாசிப்பதைக் காணச் சென்றோம். அவனிடம் நான், உன்னால் பியானோ வாசிக்க முடியுமா? என்று கேட்டேன். அவன் சரி என்று வாசித்துக் காட்டினான். வாசித்துக் காட்டினான் என்றா சொன்னேன். இல்லையில்லை இசைப் பிரவாகமாக ஒரு விளையாட்டை நிகழ்த்திக் காட்டினான் அவன்... ஆம் பியானோவில் வெகு லாவகமாக விளையாடின அவனது விரல்கள்.... அவனது பியானோ வாசிப்பு மிகப்பெரிய மாயாஜாலம் போல இருந்தது. அப்போது நானும் என் மனைவியும் நினைத்துப் பார்த்தோம்... இந்தப் பையனைப் போலவே நம் நித்திலாவும் பியானோ வாசித்தால் ஐ மீன் பியானோவில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று?!

அந்த எண்ணத்தின் தொடர்ச்சியாகத்தான் நித்திலாவை கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரியில் சேர்த்தோம்.

அங்கு கேட்கும் திறனற்ற எங்கள் மகளை பியானோ கற்றுக் கொள்ளச் சேர்த்தோம்.

இனி நித்திலாவைப் பற்றியும் அவளது திறமையைப் பற்றியும் அவளுக்கு பியானோ கற்றுக் கொடுத்த டாக்டர் சுரஜித் சாட்டர்ஜி (ஹெட் ஆஃப் ரஷ்யன் பியானோ ஸ்டுடியோ) என்ன சொல்கிறார் என்று  தெரிந்து கொள்ளுங்கள்...

நித்திலா இங்கே சேர்ந்த பிறகு... நான் அவளுக்காக புதியதொரு கற்பித்தல் முறையை தேர்ந்தெடுத்தேன். என் இளமையில் அதைக் கண்டுபிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ஆனால், அப்போது நான் அந்தக் கற்பித்தல் முறையில் இருந்து ஒருவேளை தப்பித்திருக்கக் கூடும். நித்திலா வந்த பிறகு தான் அதைக் கண்டறிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. எனது கற்பித்தல் முறை ஸ்ட்ரிக்டானது. அதனால் பொதுவாக எனது பியானோ வகுப்புகளில் பல மாணவ, மாணவிகள் கடினமாக இருக்கிறது என்று அழுவதுண்டு. ஆனால், நித்திலா ஒருபோதும் அழுததில்லை. எனக்குள் சில நேரங்களில்... இந்தக் குழந்தை உண்மையிலேயே திறமைசாலி தானா? அல்லது இவள் விரும்புவதால் இவள் திறமைசாலியானாளா? என்றெல்லாம் குழப்பம் எழுந்ததுண்டு. ஆனால், அவள் சாதித்தாள்.

அவள் முடிவு செய்து விட்டாள்... என்ன ஆனாலும் சரி சந்தோசமாக இருப்பது என்று அவள் முடிவு செய்து விட்டாள். எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறையான சிந்தனைகளில் மூழ்கிக் காணாமல் போய்விடக்கூடாது என்பதில் நித்திலா உறுதியாக இருக்கிறாள். அவள் எப்போதும் நேர்மறையான சிந்தனைகளையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள். வலிமையுடனும் மன உறுதியுடனும் இருப்பது எப்படி என்று இப்போது அவளிடமிருந்து தான் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்று புன்னகைக்கிறார்கள் நித்திலாவின் பெற்றோர் ராஜி, ராஜசேகர் மற்றும் அவளது பியானோ மாஸ்டரான சுரஜித் சாட்டர்ஜியும்.

நித்திலாவின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது என்ன தெரியுமா? தனக்கு பிரச்னை இருப்பதாக நித்திலா என்றுமே நம்பியதில்லை என்பது தான்!

நித்திலாவைப் பற்றிய குறும்படம் ஏ ஆர் ரகுமானின் யூ டியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. விருப்பமிருப்பவர்கள் இந்த லிங்கில் நுழைந்து நித்திலாவைப் பற்றி காணொளி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=_zp7cJVb4_I

நித்திலாக்கள் என்றென்றும் ஆச்சர்யமூட்டக்கூடியவர்கள் மட்டுமல்ல, பின்பற்றத் தகுந்தவர்களும் கூட!

ஹாட்ஸ் ஆஃப் டு யூ நித்திலா!

]]>
நித்திலா, பியானோ, ஏ ஆர் ரகுமான், NITHILA, A R RAHMAN, PIANO, K M MUSIC CONSERVATORY, GIFTED CHILD, அதிசயச் சிறுமி, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/20/undefeated-victory-of-nithila-3042337.html
3038614 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?! கார்த்திகா வாசுதேவன் Wednesday, November 14, 2018 05:30 PM +0530  

எழுத்தாளர் பா. ராகவனுடனான தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல். வெகுஜனப் பத்திரிகை உலகில் தமது தடங்களை அழுத்தமாகப் பதித்து வந்த பாரா தமிழ் இலக்கிய உலகிலும் இதுவரை நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள் வாயிலாக தமது அடையாளத்தை வெகு ரசனையுடன் பதிவு செய்து வந்திருக்கிறார். சின்னத்திரையிலும் கெட்டிமேளம், வாணி, ராணி என இவரது பங்களிப்பு தொடர்கிறது. ஒரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சின்னத்திரை, பெரிய திரை வசனகர்த்தா என ஊடகப் பரப்பில் அவர் பயணித்துக் கொண்டிருக்கும் எல்லைகள் எங்கெங்கும் வியாபித்துக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன.

குழந்தைப் பருவத்தில் ஒரு ரெளடியாகவோ அல்லது துறவியாகவோ ஆக நினைத்ததாக தன்னைத் தானே பகடி செய்து கொண்டு பாரா பேசுவது வேடிக்கையாக இருந்தாலும் அவரது ஆசையின் வெளிப்பாடு தான் இன்று அவர் இன்று எழுதிக் கொண்டிருக்கும் ‘யதி’ எனும் பெருநாவலுக்கான களம் என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு எழுத்தாளராக தனது எழுத்தில் ‘நோ காம்ப்ரமைஸ்’ செய்து கொள்ளாத பாரா, சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல் பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார்.

அவருடனான நேர்காணல் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

நேர்காணலுக்கான முன்னோட்டம் இதோ...

 

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகும்.

]]>
நோ காம்ப்ரமைஸ், தினமணி.காம், writer Pa.Ra, எழுத்தாளர் பா.ராகவன் நேர்காணல், Dinamani.com, No Compromise series, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/14/i-wish-i--would-be-a-rowdy-or-saint-when-i-grow-up-3038614.html
3035534 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?! கார்த்திகா வாசுதேவன் Monday, November 12, 2018 01:08 PM +0530  

 

தினமணி.காம் 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...

நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கையூட்டு மனப்பான்மை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, எழுத்துலகில் பரவலாக முன்வைக்கப்படும் வணிக எழுத்து, இலக்கிய எழுத்து அக்கப்போர்கள் குறித்த விமர்சனங்கள், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையிலான வாசகபந்தம் எப்படி இருந்தால் அது உறுத்தாமல் இருக்கக் கூடும் எனப் பலப்பல விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நேர்காணல் லிங்க்...

 

இவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

முக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.

இவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.

வித்யா சுப்ரமணியத்துடனான 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.

நேர்காணலை முழுமையாகக் கண்ட வாசகர்கள் தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிரலாம்.

]]>
dinamani.com, தினமணி.காம், தினமணி, NO COMPROMISE, நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள், Vidya subramaniam, WRITER VIDYA SUBRAMANIAM, எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/09/me-too-came-from-middle-class-how-many-people-i-can-bribe-everyday-3035534.html
3032048 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் குற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன!: லீனா மணிமேகலை! கார்த்திகா வாசுதேவன் Friday, November 2, 2018 11:44 PM +0530  

நம் சமூகத்தில் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன் வந்து பேசும் போதெல்லாம் ‘பேசினால் உங்களுக்குத்தான் அசிங்கம்’ எனும் ஆயுதம் தொடர்ந்து அப்பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்ப் பத்திரிகைகளைப் பொருத்தவரை மீடூ வை சர்ச்சைக்குரிய அல்லது பரபரப்பான செய்தியைத் தாங்கிய ஒரு விஷயமாகத்தான் அணுகுகின்றன. ஆனால் அது அப்படி அணுகப்படத் தக்க விஷயமல்ல. ‘நேம் தெம்... ஷேம் தெம்’ (Name them... Shame them)  என்பதற்கேற்ப பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் தான் அவ்விஷயம் குறித்து அவமானப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதில் எந்த விதமான அவமானமும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த மீடூ இயக்கம். நம் சமூகத்தில் பாலியல் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே மூடு மந்திரமாகவோ அல்லது பேசத்தக்க விஷயமல்ல என்பது போன்றோ தான் கையாளப்படுகிறது. இந்தியா மாதிரியான வேறுபாடுகள் நிறைந்த நாட்டில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் பற்றி வெளியில் சொன்னால் உடனடியாக அவளை நோக்கி வீசப்படும் கேள்வி...

நீ என்ன செய்தாய்? என்பதாகத்தான் இருக்கிறது.

அப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தலை வெளியில் சொல்லத் தயங்குவார்கள். அதைத்தான் தங்களது மிகப்பெரிய ஆயுதமாக இந்த ஆணாதிக்க சமூகம் இதுவரை பயன்படுத்தி வந்தது. 

அப்படியான நிலையில், இது பேசக்கூடிய விஷயம் தான். இந்தத் தவறைச் செய்தவர்கள் தான் இதற்காக அசிங்கப்பட வேண்டும். பெண்ணின் உடலுக்கு மட்டுமே கற்பு இருந்தாக வேண்டும் என்று கற்பித்து விட்டு ஆணுக்கு அதில் சுதந்திரமாக விலக்கு அளித்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவம் இனியும் வேண்டாம். ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி உடல் ரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமல்ல கருத்து ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ கூட பாலியல் அச்சுறுத்தல் செய்வது தவறு. அப்படியான தவறுகள் நேரும் பட்சத்தில் அதை தைரியமாக 
பொதுவெளியில் பகிர்ந்து அதனால் நேரக்கூடிய அதிகார பலம் பொருந்திய எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் சக்தியை பாதிக்கப்பட்ட பெண்கள் பெற வேண்டும் என்பது தான் மீடூவின் ஒரே நோக்கம்.

அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கிறது லீனா மணிமேகலையுடனான நேர்காணல்.

 

நேர்காணலை முழுமையாகக் கண்டு விட்டு வாசகர்கள் மீடூ குறித்த தங்களது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், சந்தேகங்களையும் இங்கு பகிரலாம்.
 

]]>
interview, dinamani.com, Leena Manimekalai, மீடூ, metoo, NO COMPROMISE, லீனா மணிமேகலை, நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/02/tamil-medias-doesnt-want-to-understand-the-metoo-it-always-stands-for-the-accused-leena-3032048.html
3030757 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அதிகாரத்தின் கரங்களில் ஒரு பெண் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, October 31, 2018 01:52 PM +0530  

மானநஷ்ட வழக்கு என்பது என்ன? பாசிஸ சக்திகளின் பயன்பாட்டுக்காக இந்த நாடு உருவாக்கி வைத்த ஒரு சட்டம் அது! அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகார பலம் மிக்கவர்களே! : லீனா மணிமேகலை

ஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா? பொய்யானதா? என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?  நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே! அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே? வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு! அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.

- லீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.

நேர்காணலுக்கான முன்னோட்டம் இதோ...

 

முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.

 

]]>
https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/31/அதிகாரத்தின்-கரங்களில்-ஒரு-பெண்-தனியாக-மாட்டிக்-கொண்டால்-என்ன-ஆகும்-நீங்களே-கற்பனை-செய்து-கொள்ளுங்க-3030757.html
3030747 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் என்னய்யா செல்பீ? சும்மா சும்மா செல்ஃபீ?! கார்த்திகா வாசுதேவன் Wednesday, October 31, 2018 12:39 PM +0530  

நடிகர் சிவகுமார் மதுரையில் கருத்தரிப்பு மையத் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த போது இளைஞர் ஒருவர் அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்றார். அப்போது திடீரென உஷ்ணமான சிவக்குமார்... இளைஞரின் செல்ஃபோனை படாரெனத் தட்டி விட்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக நிற்பது போன்ற காணொளியொன்று நேற்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் சிவக்குமாரின் செயலை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். சரி தானென்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இளமைக்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிவக்குமார் தன்னிலை மறந்து இப்படி ரசிகர் ஒருவரின் செல்ஃபோனைத் தட்டி விடலாமா? பொதுவெளியில் இச்செயல் அவர் மீதான மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாக ஆகாதா? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் சிவக்குமார்;

'எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் போது காரிலிருந்து இறங்கியது முதல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்லும் வரை நிம்மதியாக நடக்கக் கூட விடாமல் பாதுகாவலர்களை எல்லாம் பின்னால் தள்ளி விட்டு செல்ஃபீ எடுக்கிறேன் என்கிற பெயரில் பத்து, இருபது பேர் வி ஐ பிக்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டால் என்ன அர்த்தம்? சார் உங்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா? என்று அனுமதி கூட கேட்பதில்லை. விஐபிக்கள் என்றால் செல்ஃபீ எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் சொல்கிற படியெல்லாம் நிற்க வேண்டும், செல்ஃபீ எடுத்துக் கொள்ள வேண்டும்... என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?! நான் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வில் ஹீரோக்கள் தான். விமானநிலையத்திலும் வேறு பல பொது இடங்களிலும் நானும் ஆயிரக்கணக்கானவர்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டவன் தான், ஆனாலும். ஒரு மனிதனை எந்த அளவுக்குத் துன்புறுத்தலாம் என்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்’

- என்று பதில் அளித்திருந்தார்.

நடிகர் சிவக்குமார்  நடந்து கொண்ட முறை சரியா? தவறா? என்பது மாதிரியான விமர்சனங்களைத் தூண்டும் விதத்தில் அனைத்து ஊடகங்களிலும் தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யோசித்துப் பாருங்கள்...

விஐபிக்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதென்பது அத்தனை அவசியமான விஷயம் தானா?

இம்மாதிரியான ஆர்வத்தை உங்களுக்குள் தூண்டுவது எது?

செல்ஃபீ எடுத்துக் கொண்டு அதை ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டரில் ஸ்டேட்டஸாகப் போட்டுக் கொள்ளும் உந்துதல் தானே?!

அப்படியான மோகம் நமக்குள் எப்போது இருந்து மூண்டது?

எல்லாம் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்த பின்பு தானே? ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆப்களை தரவிறக்கி வைத்துக் கொண்டு இப்போது நமக்கு நாமே வெகு ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்கிறோம் பலவிதமான விபரீத ஆப்புகளை.

சில மாதங்களுக்கு முன் தன் ஐந்து வயது மகனுடன் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில் பாலத்தில் நின்று செல்ஃபீ எடுக்க முயன்ற பெற்றோருக்கு நேர்ந்த இழப்பு ஊடகங்களில் செய்தியானதே மறந்து விட்டீர்களா? பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில் அதனுடன் செல்ஃபீ எடுக்க முயன்று தங்கள் ஐந்து வயது மகனை வெள்ளத்துக்கு காவு  கொடுத்து திரும்பினார்கள் அந்தப் பெற்றோர். அந்தச் சிறுவனுக்கு பிறந்த நாளே, இறந்த நாளுமானது! இது எத்தனை பெரிய சோகம்... காரணம் செல்ஃபீ மோகம்!

இந்த செல்ஃபீ மோகத்தால் கணிசமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாகத் திரும்பும் செய்திகளும் ஆண்டுக்கு சில வந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த மாதம் முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என் டி ஆரின் மகனும் நடிகருமான நந்தமூரி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கார் விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. லைம்லைட்டில் இருக்கும் நடிகரான ஜூனியர் என் டி ஆரின் தந்தை என்ற முறையிலோ அல்லது ஆந்திராவின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் தலையாயதெனக் கருதப்படும் என் டி ஆர் குடும்ப வாரிசு என்பதாலோ என்ன காரணத்தாலோ சற்றும் சிந்திக்காது ஸ்ரீகிருஷ்ணாவின் சடலத்துடன் அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த  மருத்துவமனை ஊழியர்கள் செல்ஃபீ எடுத்துக் கொண்டதோடு அதை தங்களது குழுமத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள். இது மறுநாள் இணைய வாயிலாக ஊடகங்களில் வைரல் செய்தியாகி கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இப்படி ஒரு பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் பணியிலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்கள்.

இறந்த உடலுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முனைவது சைக்கோத்தனம் அல்லாது வேறென்ன?

இவையெல்லாம் தாண்டி ‘செலிபிரிட்டி கிட்ஸ்’ என்று மீடியாக்களால் அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிற வி ஐ பி குழந்தைகள் பொதுவெளியில் எங்கு தென்பட்டாலும் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு மிரள வைக்கிற அளவுக்கு இந்த செல்ஃபீ மோகமும் பாப்பரஸிகளின் தொல்லையும் வரலாறு காணாத அளவுக்கு அதன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் பல நட்சத்திரங்கள், தாங்கள் நடித்த திரைப்படங்களைப் பார்க்கக் கூட தங்களது குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்பது தான். கார்ட்டூன்களும், அந்நிய மொழித் திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டு வளர்க்கப் படும் வி ஐ பி குழந்தைகளை அவர்கள் எங்கே சென்ற போதும் துரத்தித் துரத்தி மீடியாக்கள் புகைப்படம் எடுக்கிறோம், செல்ஃபீ எடுக்கிறோம், வீடியோ எடுக்கிறோம் என்று படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சிலருக்கு இந்த துரத்தல் மூச்சு முட்டச் செய்திருக்கலாம்.

இதற்கு எதிர்வினையாற்றினால் என்ன என்று தோன்றச் செய்திருக்கலாம்.

அதன் வெளிப்பாடும் தான் நடிகர் சிவக்குமார் நேற்று தன்னுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்ஃபோனை பட்டென்று தட்டி விட்ட நிகழ்வு! அதைத் தவறு என்று விமர்சிப்பதை விட அவர்களின் வேதனையை புரிந்து கொள்வது தான் முக்கியம். ஒருவேளை இளைஞரின் செல்ஃபோன் உடைந்திருந்தால் அதற்கு சிவக்குமாரை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதைத் தவிர இதில் அவரது செயலை விமர்சிப்பதற்கான எந்த ஒரு நியாயமும் இல்லை.

சிலரது வேதனையை பலர் பொழுது போக்காகக் கருதும் மனநிலையை வளர்க்கும் இந்த செல்ஃபீ மோகத்திற்கு ஒரு வரைமுறையும், கட்டுப்பாடும் வகுக்கப்பட வேண்டும்.

அது மட்டுமே இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.
 

]]>
சிவக்குமார், செல்ஃபீ, செல்ஃபீ மோகம், ரசிகர், மதுரை, actor sivakumar, selfie adiction, fan selfie, madurai, sivakumar, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/31/selfie-adiction-selfie-what-selfie-man-3030747.html
3030121 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’  நேர்காணல் வித் லீனா மணிமேகலை! கார்த்திகா வாசுதேவன் Tuesday, October 30, 2018 04:58 PM +0530  

தினமணி.காமின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் தொடர் வரிசையில் நேற்றைய விருந்தினராகப் பங்கேற்றார் கவிஞரும், ஆவணப் பட இயக்குனரும், பெண்ணுரிமைப் போராளியும், சமூக ஆர்வலருமான லீனா மணிமேகலை. நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. நேர்காணலில் லீனா பகிர்ந்து கொண்ட சமரசமற்ற கருத்துக்கள் பலவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்கும், அவர்களுக்கான நீதிக்குமானது மட்டுமல்ல அவை நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பாரபட்சமின்மைக்கும் உத்திரவாதமளிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மீடூவைப் பொறுத்த வரை ‘Name them, Shame them' என்பது தான் அந்த எழுச்சியின் ஒற்றை வரி தாரக மந்திரம். பெண்கள் தங்களது வேலைத்தளத்தில் அதிகாரத்தின் பெயரால் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நிலை வந்தால் அப்படியான நேரங்களில் சம்மந்தப்பட்டவர்களின் கோர முகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி, தயக்கமின்றி பொதுவெளியில் வெளிப்படுத்த முன் வரவேண்டும். அப்படிச் செய்வதால் தொடர்ச்சியாக குற்றவாளிகளிடையே ஒரு வித அச்சத்தைத் தூண்டி பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிப் படுத்தலாம். இனியொரு பெண் இந்த உலகில் அதிகார அச்சுறுத்தலின் பெயரால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் அவலம் நிறுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை சமூகத்தில் விதைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதை மேலை நாடுகள் மட்டுமல்லாது வட இந்திய மீடியாக்கள் கூட ஓரளவுக்கு மிகச் சரியாகவே கையாண்டு கொண்டிருக்கின்றன. ஆனால், நம் தமிழத்தில் மட்டும் ஏனோ இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதோடு பொதுவெளியிலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும் அளவிலான காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது (அது கவிஞர் வைரமுத்துவாகட்டும், சுசி கணேசனாகட்டும், எம் ஜெ அக்பராகட்டும், முன்னாள் அமைச்சராகட்டும், பிரபல பாலிவுட் குணசித்திர நடிகராகட்டும் யாராக இருந்தாலும் சரி தான், இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே!) செலவிட்டதாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா? பொய்யானதா? என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?  நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே! அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே? வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு! அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.

லீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.

நேர்காணலுக்கான முன்னோட்டம் நாளை காலை வெளியாகும்.

முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.
 

]]>
LEENAMANIMEKALAI, SUSI GANESHAN, METOO, DINAMANI NO COMPROMISE, தினமணி.காம், நோ காம்ப்ரமைஸ், லீனா மணிமேகலை, சுசி கணேசன் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/30/dinamani-no-compromise-interview-with-leena-manimekalai-3030121.html
3027484 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்றால் தான் என்ன? என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’ நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ஜீவா! கார்த்திகா வாசுதேவன் Friday, October 26, 2018 03:35 PM +0530  

சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தில் எங்கும், எப்போதும் ‘நோ காம்ப்ரமைஸ்’ 

வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்ல விரும்புபவர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டியவை இந்த வார்த்தைகளே!

இந்த வார்த்தைகளுக்கு உதாரணர்களாகக் காட்டத்தக்க மனிதர்கள் நம்மிடையே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். வாரம் ஒருவரென அவர்களுடன் உரையாடலாம் வாருங்கள்.

இந்த வார விருந்தினர் திருநங்கை ஜீவா சுப்ரமண்யம்!

தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து... ஒரு திருநங்கையாகத் தன்னை அங்கு சுயமரியாதையுடன் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் பின் பிழைப்புத் தேடி சகலமானவர்களையும் போல் சென்னை நோக்கி ஈர்க்கப்பட்டவர் ஜீவா. சென்னைக்கு வந்த பின் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறி பல தடங்கல்களைக் கடந்து தற்போது ஒரு திறமையான ஒப்பனைக் கலைஞராகவும், நடிகையாகவும் பரிமளித்து வருகிறார். 

வாழ்வில் அடுத்த அடியை எங்கே எடுத்து வைப்பது? எங்கே சென்றாலும் தன்னை கேலிக்குரியவளாகக் கருதி எள்ளி நகையாடும் இந்த சமூகத்தின் பார்வையில் தனக்கான கெளரவத்தை எப்படி மீட்டெடுப்பது? எப்படியாவது பிறர் மதிக்க வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும். விரும்பியதைக் கற்கும் ஆர்வம் இருக்கிறது. அதில் ஜெயிக்கும் திறமை இருக்கிறது. அது போதும். மூலையில் அமர்ந்து அழுவதைக் காட்டிலும் விரும்பியதில் வென்று விட்டு அடுத்தடுத்த பிறவிகளிலும் மீண்டுமொரு திருநங்கையாகவே பிறக்க விரும்பும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் என்ன? வாழ்வில் சோர்வு தன்னைத் துரத்தும் போதெல்லாம் இப்படித்தான் யோசித்ததாகச் சொல்கிறார் ஜீவா. 

அந்த உணர்வு தந்த வெற்றியின் அடையாளம் தான் இன்றைய ஜீவா!

சொந்த வீட்டிலிருந்து வெளியேறியது முதல் இன்றைய சென்னை வாழ்க்கை வரையிலாக தன் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை தினமணி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது நாம் திருநங்கைகள் குறித்து அதிகம் பேசத்தொடங்கி இருக்கிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரமும், சுயமரியாதையும் எள்ளளவும் குறையக் கூடாது. அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல, நம்மைப்போன்ற சகமனிதர்களே எனும் சகிப்புத் தன்மையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினர் மாறி வருகின்றனர். அந்த மனநிலையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் இருக்குமென நம்புகிறோம்.

இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ஒரு புது விருந்தினருடன் நமது தினமணி இணையதளத்தில் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள் வெளியாகவிருக்கின்றன.

நேர்காணலைக் காணும் வாசகர்கள்  தங்களது கருத்துக்களைப் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

மீண்டுமொரு  புது ‘நோ காம்ப்ரமைஸ்’ விருந்தினருடன் அடுத்த வெள்ளியன்று சந்திப்போம்.

நன்றி!

Video clippings courtesy: 

‘அவள் நங்கை’ short film

DharmaDurai movie

 

]]>
dinamani.com, திருநங்கை ஜீவா சுப்ரமண்யம், நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் -1, NO COMPROMISE INTERVIEW SERIES - 1, TRANSGENDER JEEVA SUBRAMANYAM https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/26/dinamanicoms-no-compromise-interview-with-transgender-jeeva-subramanyam-3027484.html
3026881 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இதெல்லாம் தெரிஞ்சா... இனி நீங்க ஹோட்டல், ஹோட்டலா போய் அசைவம் சாப்பிட நிச்சயம் யோசிப்பீங்க பாஸ்! கார்த்திகா வாசுதேவன் Thursday, October 25, 2018 01:04 PM +0530  

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற சகோதரர் ஒருவர்... தற்போது அத்துறையில் பணியில் இல்லை. மேற்கொண்டு எம் பி ஏ பட்டம் பெற்றுத் தற்போது வங்கித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மதுரையில் பிரபல கல்லூரியொன்றில் இளநிலை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று கொண்டிருக்கையில் இரண்டாம் ஆண்டின் இறுதியில் களப் பயிற்சி அனுபவத்திற்காக அலகாபாத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பயிற்சிக்காக அனுப்பப் பட்டார். தனியாக அல்ல குழுவாகத்தான். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சிக்காலங்கள் அத்தனை உவப்பானதாக இருக்காது என்பது பெரும்பாலான ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்களின் கருத்து. ஏனெனில் அங்கு பயிற்சிக் காலங்கள் என்பவை ஹாஸ்பிடாலிட்டி, உணவுத்தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பயிற்சிகளுக்காக மட்டும் அல்ல, அந்தக் காலங்கள் உண்மையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் கோர முகங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தவிர்க்க முடியாத வாய்ப்பு என்று கூட சொல்லலாம். 

குறிப்பிட்ட நண்பர் அலகாபாத் நட்சத்திர ஹோட்டலில் பயிற்சிக்காகச் சென்ற போது அங்கே பின்பற்றப் பட்டதாகச் சொன்ன ஒரு வழிமுறையைக் கேட்ட போது பீதி வயிற்றைக் கலக்கியது. அங்கே பார்ட்டிகளுக்காக தயாராகும் அசைவ உணவு வகைகள் அவற்றுக்காக ஆர்டர் செய்தவர்கள் வருகைக்காக ஃப்ரோஸன் அறையில் மசால் தடவி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். பார்ட்டி ஹால் புக் செய்து ஆர்டர் அளித்தவர்கள் வந்து நிகழ்ச்சி சரியாகத் தொடங்கி விட்டால் பிரச்னையில்லை. அன்றைய அசைவ உணவுகள் அன்றே காலியாகி விடும். ஆனால், சில சமயங்களில் பெரிய மனிதர்கள், அரசியல் பிரபலங்கள் திட்டமிடும் பார்ட்டிகள், விழாக்கள், திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டால் அவர்களது விழாக்களுக்கென்று தயாரான ஸ்பெஷல் அசைவ உணவுகளை குப்பையிலா கொட்ட முடியும். மசால் தடவி தயாராக இருக்கும் கோழி, ஆடு, மீன், இறால், நண்டு, நத்தை, சிப்பி, எல்லாமும் மசாலாக்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு மீண்டும் ஃப்ரோஸன் அறைக்குள் அதி உயர் குளிர்நிலையில் சேமிக்கப்பட்டு விடுமாம். மீண்டும் தேவைப்படும் போது எடுத்து மசால் தடவி பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வார்கள் என்று அந்த நண்பர் சொன்னார்.

இதைக் கேட்ட போது நம்மூர் பார்பிக்யூ உணவகங்களும், தந்தூரி, கபாப், கிரில் அசைவ உணவகங்களும் கண்களில் நிழலாடின.

அங்கெல்லாம் விதம் விதமான அசைவ பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் மாமிசங்கள் எங்கே, எப்போது, எப்படி வாங்கப்பட்டனவோ? அதைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காமலே நாம்... நம் தட்டில் வந்து விழும் வகை... வகையான ரோஸ்டுகளையும், ஃப்ரைகளையும், கபாப்களையும், முர்க் மசாலாக்களையும் ஒரு கை அல்ல... பலகை பார்த்து விடுகிறோம். பிறகு வீட்டுக்கு வந்து செரிமானமாகாமலோ அல்லது வயிற்றுப் போக்கினாலோ அவஸ்தைப்படுவதும் நிகழ்ந்தாலும் கூட... நம்மால் அத்தகைய உணவகங்களின் மீதான மோகத்தைக் குறைத்துக் கொள்ள முடிவதே இல்லை. காரணம் சுவை. 

இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாரம் ஒருமுறையாவது குறைந்தபட்சம் மாதம் இருமுறைகளாவது ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்தும் பழக்கம் மிகப் பிடித்த ஹாபியாகி விட்டது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பிரபல ஹோட்டல்களில் நாம் ஆர்டர் செய்யும் அசைவ உணவு வகைகள் அனைத்தும் அன்றன்றே வாங்கப்பட்டு அப்படியப்படியே ஃப்ரெஷ் ஆக நமக்கு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன என்று. தயவு செய்து இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். நாம் ஹோட்டல்களில் உண்ணும் எந்த ஒரு உணவு வகையும் ஃப்ரெஷ் ஆக நமக்குத் தயாராவதில்லை. அவை எப்படியும் இரண்டு நாட்களாவது குறைந்த பட்சம் ஒரு நாளாவது பழசான மாமிசமாகத் தான் இருக்க முடியும். அதிலும் இம்மாதிரியான நட்சத்திர ஹோட்டல்கள் எனில் அங்கு அசைவ உணவுகளைக் குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை கூட ஃப்ரீஸ் செய்து வைத்துக் கொள்ளும் வசதி உண்டு என்கிறார்கள். சில செஃப்கள் கூறுகிறார்கள் அதி உயர் குளிரில் சேமிக்கப்பட்ட அசைவ உணவுகள் ஃப்ரெஷ் ஆக கிடைக்கும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும் ஹைஜீனிக்காகவே இருக்கும் என்று, ஆனால், அதை எப்படி நம்புவது?!

ஃப்ரோஸன் அறையில் உறைய வைத்து விட்டால் அதில் கிருமிகளின் பெருக்கம் ஏற்படாது தவிர்த்து விடலாம் என்று சிலர் கருதலாம். நிச்சயமாக இல்லை. இப்படியான உணவு வகைகளை சுவை கருதி அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமெனில் கடைசியில் இந்தப் பழக்கம் கேன்சரில் கொண்டு விடத்தக்கது என உணவியல் வல்லுனர்கள் பலர் பல்வேறு சந்தர்பங்களில் நமக்கு அறிவுறுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், ஹோட்டல் உணவுப் ப்ரியர்களான நாம் தான் அதைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. 

ஃப்ரோஸன் உணவுகளின் பாதக அம்சங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்;

ஃப்ரோஸன் உணவு வகைகளில் ஹெல்த் அனுகூலங்கள் மிக மிகக்குறைவு. ஏனெனில் ஃப்ரெஷ் ஆன அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சத்துக்கள் அப்படியேவோ அல்லது சற்றுக் குறைவாகவோ ஃப்ரோஸன் உணவு வகைகளில் கிடைக்கும் என்று நம்ப முடியாது. சில வகை உணவுகளில் நாள்பட, நாள்பட சத்துக்கள் வெகுவாகக் குறைந்து கடைசியில் வெறும் சக்கை மட்டுமே கூட மிஞ்சலாம். அவற்றுடன் கார சாரமான மசாலாக்களை கலப்பதால் அவை சுவையாக இருக்குமேயன்றி சத்தானவையாக இருக்குமென்று கருத முடியாது.
அதோடு ஃப்ரோஸன் உணவு வகைகளில் கலக்கப்படும் சோடியத்தின் அளவு மனித ஆரோக்யத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. பலவகையான ஃப்ரோஸன் உணவு வகைகளில் 700 மில்லி கிராம் முதம் 1800 மில்லி கிராம் வரை சோடியம் சேர்க்கப்படுகிறது. ஒரு மனிதன் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சோடியத்தின் அளவு 2300 மில்லிகிராம் மட்டுமே. இந்த அளவு நாள் முழுக்க நாம் உண்ணும் மூன்று வேளை உணவுக்கும் சேர்ந்து அளவிடப்படுகிறது. ஆனால் ஃப்ரோஸன் உணவு வகைகளை ஒரே ஒரு முறை உண்டாலும் போதும் அதிக அளவில் சோடியம் சேருமென்றால் அவற்றை நாள் முழுவதும் நாம் உண்ணக்கூடிய ஃப்ரோஸன் உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சோடியத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

எனவே இனிவரும் நாட்களில் மேற்கண்ட உணவகங்களில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ்வாகவும் ஸ்பெஷலாகவும் கிடைக்கக் கூடிய அசைவ உணவு வகைகளையும் கூட வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று கஷ்டப்பட்டாவது கற்றுக் கொண்டு செய்து ருசிப்பது மட்டுமே நல்லதென்று தோன்றுகிறது.

]]>
ஹோட்டல் உணவுகள், பார்பிக்யூ உணவகங்கள், அசைவம், non veg foods, barbique restaurents, star hotel NV foods, sodium, non veg hotels, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/25/if-you-this-secrets-of-star-hotels-you-wont-prefer-to-go-again-there-for-non-veg-menus-3026881.html
3019019 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் திருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்! கார்த்திகா வாசுதேவன் Friday, October 12, 2018 04:15 PM +0530  

திருநங்கைகள் மின்சார ரயில்கள், பேருந்து நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில் வளாகங்கள், நகரத்தின் ஜன நெருக்கம் மிகுந்த சாலைகள், டிராஃபிக் சிக்னல்கள் என்று பிச்சையெடுக்கிறார்கள். அவர்களுக்கு பணம் தராமல் நகர்பவர்களை அவர்கள் சும்மா விடுவதும் இல்லை... சபிப்பதும், இன்னோரன்ன வார்த்தைகளில் திட்டுவதும் சர்வ சாதாரணமாக பலருக்கும் காணக்கிடைக்கின்ற காட்சிகளே! இந்த விஷயத்தை மையமாக வைத்து தினமணியில் சில மாதங்களுக்கு முன்பு சிறப்புக் கட்டுரை கூட வெளிவந்தது. ஒரு பக்கம் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. திருநங்கைகளில் ஒரு சிலர் இந்தியக் குடிமைப் பணித்தேர்வுகளில் வென்று அதிகாரிகளாகவும் ஜெயித்திருக்கிறார்கள். மூன்றாம் பாலினமாக அவர்களுக்கு ஒரு நல் விடியல் கிடைத்திருக்கிறது. குடிமைப்பணிகள், காவல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சினிமா, மருத்துவத்துறை என அவர்களில் பலர் ஸ்திரமான முன்னேற்றம் பெற்று இன்று அவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் இன்னும் பிச்சையெடுக்கும், பாலியல் தொடர்பான சொற்களைக் பிரயோகித்து தங்களுக்கு பணம் தராதவர்களை அச்சுறுத்தும் திருநங்கைகளும் இருக்கிறார்களே? 

இவர்களுக்கு அரசு என்ன சலுகை செய்து என்ன பலன்? இவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்களை யாராலும் திருத்தவே முடியாது என்று சிலர் திருநங்கைகளைப் பற்றி அவ்வப்போது பொது வெளியில் கருத்துக்களை வெளியிடுவது சகஜமாகி வருகிறது. திருநங்கைகள் குறித்த இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் பொருத்தமான பதில் தான் இதுவரை கண்டடைந்திருக்கப்பட மாட்டாது. இந்நிலையில் திருநங்கைகள் குறித்த ஒரு கட்டுரைக்காக அவர்களைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது திருநங்கை கோமதி என்பவர் கடந்தாண்டு இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்று காணக்கிடைத்தது. அவரது நேர்காணலில் மேற்கண்ட கேள்விக்கான பதில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.

அவரென்ன சொல்கிறார் என்றால், 

‘திருநங்கைகளில் பலரை அவர்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நிராதரவாக சென்னை, மும்பை மற்றும் பிற இந்திய நகரங்களில் தனித்து வாழும் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான நேரங்களில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் என அனைத்துத் தேவைகளுக்காகவும் அவர்களே பாடுபட வேண்டியதாயிருக்கிறது. அம்மாதிரியான நேரங்களில் தங்களைப் போலவே நிராதரவாக விடப்பட்டு தனித்து வாழும் திருநங்கைகளைக் காணும் போது அவர்களுக்கு மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. நம்மைப் போன்ற இன்னும் பல ஜீவன்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஆதரவு நிலையில் அவர்களுடன் இவர்கள் இணைந்து கொள்கிறார்கள். அப்படி இவர்கள் விவரம் அறியா வயதுகளில் இணைந்து கொள்ளும் அந்த திருநங்கைகளில் நல்லவர்களும், பக்குவமானவர்களும் இருப்பார்கள். அதே சமயம் இந்த சமூகம் தங்களை நிராகரித்ததின், குடும்பம் தங்களைக் கைவிட்டதன் பலனைச் சுமந்து சுமந்து மனம் ரணப்பட்ட திருநங்கைகளும் இருப்பார்கள். நாம் இணையும் கூட்டம் அல்லது நமக்குக் கிடைக்கும் மற்றொரு திருநங்கை அறிமுகம் மிக நல்லதாக அமைந்தால் இந்த சமூகத்தின் மீதான புரிதலைப் பற்றியெல்லாம் யோசிக்கக் கூடிய அளவுக்கு பக்குவம் கொண்டதாக அமைந்தால் அவர்களால் நாமும் நல்வழிப்படுத்தப் படுவோம். ஒருவேளை நாம் சென்று சேரக்கூடிய திருநங்கைக் கூட்டம்... சிறு வயதில், தாம் திருநங்கைகள் என்பதற்காக குடும்பத்தினரால் கைவிடப்பட்டு இந்த சமூகத்தின் நச்சுப் பக்கங்களை இளமையிலேயே மிக அதிகமாகக் காண நேர்ந்து துன்பத்தில் உழன்றவர்களாக இருந்தால், பாலியல் ரீதியிலான பசியைத் தீர்த்துக் கொள்ள எதையும் செய்யலாம் எனும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுடன் சேரும் பிறரும் வேறு வழியின்றி அதையே பின்பற்றத் தொடங்கவேண்டியதாகி விடும். 

என்னைப் பொறுத்தவரை எனக்கு பிற திருநங்கைகளைப் போல பாலியல் ரீதியிலான தொல்லைகள் எல்லாம் இருந்ததில்லை. ஏனென்றால் என் பெற்றோர், நான் திருநங்கையாக இருந்த போதும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களே தவிர, என் உடன்பிறந்த சகோதரர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்களில்லை. ஏனென்றால் அவர்களது நண்பர்கள் அவர்களை என்னைக் காரணம் காட்டி கேலி செய்திருக்கிறார்கள். அதனால் விளைந்த கோபத்தில் என் அண்ணன் என்னை அடிப்பதும் சண்டையிடுவதும் உண்டு. இதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். உணர்ந்தேன் என்று ஏன் சொல்கிறேன் என்றால், உணர்தல் என்பது என் அண்ணனுக்கு என் காரணமாக நிகழக்கூடிய அவமானங்களை, கேலிகளை நான் உணர்ந்த காரணத்தினால் மட்டுமே என்னை திருநங்கை என்று ஒதுக்கும் கூட்டத்தினரே மீண்டும் என்னை பாராட்டும் படியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வை எனக்கு ஊட்டியது. அதனால் நான் என் அண்ணனையும் அவனது வெறுப்பையும் புரிந்து கொண்டு எனக்கு என்ன தேவை? நான் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெளிவாக முடிவு செய்து கொண்டேன்.

எனக்கு கையில் ஒரு கலை இருக்கிறது. மிக அழகாக சுவாமி அலங்காரம் செய்வேன். இன்றூ சென்னையைச் சுற்றி பல கோயில்களில் நான் சுவாமி அலங்காரம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நானே தனியாக ஒரு கோயிலையும் நிர்வகித்து வருகிறேன். ஒரு பக்கம் அம்மா மெஸ்  கேண்டீனையும் எடுத்து நடத்தி வருகிறேன். நடு நடுவே கல்லூரி மாணவர்கள் திருநங்கைகளைப் பற்றி எடுக்கும் ஆவணப் படங்களிலும் நடித்து வருகிறேன். இப்போது எனக்கென்று ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்படி எல்லா திருநங்கைகளுக்கும் நம்பிக்கையான ஒரு அங்கீகாரம் கிடைக்குமாயின் அவர்கள் ஏன் பிச்சையெடுக்கப் போகிறார்கள்? சக மனிதர்களைச் சபிக்கப் போகிறார்கள். என அண்ணன் என்னை அடித்துத் துன்புறுத்தும் சமயங்களில் நான் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியில் சென்று விடுவேன், அப்போது ஆஷாபாரதி எனும் திருநங்கை ஒருவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரை என்னுடைய முன்னோடி என்று சொல்லலாம். அவருடைய அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் நானும் கூட நீங்கள் மின்சார ரயில்களிலோ, அல்லது சாலையோரங்களில் காசு கேட்டு அடாவடி செய்யும் பிற நிராதரவான திருநங்கை கூட்டத்தினருடன் சேர்ந்து வீணாய்ப் போயிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் எனக்கு அளித்த வழிகாட்டலால் மட்டுமே எனது இன்றைய சமூக அங்கீகாரத்தை நான் அடைந்திருக்கிறேன் என்பது மெய்! வீட்டில் கோபித்துக் கொண்டு நான் ஆஷா பாரதியிடம் சென்று என் மனக்கவலைகளைப் பகிர்ந்தால்... அப்போது அவர் சொன்னது இதுதான். இதோ பார் எப்போதும் உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நீ உன் குடும்பத்தினரைப் புரிந்து கொள்ள முயற்சி செய். அவர்களும் உன்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். என்பார்.

அவர் காட்டிய வழியில் தான் இன்று வரை நான் பிரயாணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி நல்லவிதமான வழிகாட்டிகள் நமக்குக் கிடைத்து விட்டால் நமக்கான சமூக அங்கீகாரம் எளிதாகி விடும். அதை விடுத்து திருநங்கைகள் இந்த சமூகத்தின் மீதும், சமூகம் திருநங்கைகளின் மீதும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது மட்டுமே திருநங்கைகள் மீதான பயம் குறித்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும்.

- என்கிறார் கோமதி.

]]>
Transgender, குடும்பம், தீர்வு, family, சமூகம் , social fear of transgenters, society, திருநங்கைகள் குறித்த சமூக அச்சம் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/12/social-fear-of-transgenders-can-burst-out-by-this-answer-3019019.html
3016312 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஒரு மைக்ரோ கதை! அ.ப.ஜெயபால், கொள்ளிடம் DIN Monday, October 8, 2018 05:13 PM +0530 அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்தவர், "எனக்கு ஒரு வாரமா மிரட்டல் வருது சார்'' என்றார். 

"மொட்டைக் கடிதமா?'' என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். 

"இல்லை'' என்றார் வந்தவர். 

"கொலை மிரட்டலா?'' கேட்டார் இன்ஸ்பெக்டர். 

"இல்லை சார்'' என்றார் வந்தவர். 

"பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டு கையைக் காலை உடைக்கிறேன்னு மிரட்டுறாரா?'' 

"அதெல்லாம் இல்லை சார்... போனிலே மிரட்டல் வருது சார்''

"யார் மிரட்டுறது?''

"டெலிபோன் பில் கட்டலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்ன்னு மிரட்டல் வருது சார்''

]]>
micro story, short story, mini story, மைக்ரோ கதை, சிறு கதை, சிறுகதை https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/08/micro-story-3016312.html
3016308 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஐ லவ் யூ டீச்சர்!  கி.நடராசன் Monday, October 8, 2018 04:29 PM +0530 கடைத் தெருவில் பல்பொருள் அங்காடியின் முன் நின்று கொண்டிருந்த மீனாளின் இடுப்பை ஒரு கை வளைத்து பிடித்து அணைக்க முயன்றது. அதிர்ச்சியில் கோபமாக பதட்டத்துடன் திரும்பியபோது அவளின் பக்கத்தில் குழந்தையுடன் ஒரு பெண் புன்னகைத்து கொண்டு இருந்தாள். 

இயல்பு நிலைக்கு வந்த மீனாள் இந்த பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் நினைவுக்கு வர மறுக்கின்றதே என்று சிந்தனை செய்து கொண்டிருந்தாள். 

அவள் குழப்பத்தை உணர்ந்த அந்த பெண், "மிஸ் என்னைத் தெரியவில்லையா? கண்டுபிடிங்க பார்க்கலாம்'' 

மீனாள் தெரிந்ததும் தெரியாதுமாக தலையை ஆட்டினாள். ஆசிரியையான அவளிடம் எத்தனையோ மாணவர்கள் படித்து விட்டு கடந்து செல்கிறார்கள். சிலரை நினைவு இருக்கும். பலரை மறந்து விட்டிருக்கும். வளர்ந்த பின் பலரது தோற்றங்களே மாறி போய் விடுகிறது. 

"இப்ப கண்டு பிடிச்சிடுவீங்க பார்...பாப்பா.... அம்மாவிற்கு ஒரு முத்தா கொடு....'' என்றாள் அந்த பெண். 

அவள் கையில் இருந்த குழந்தை தாவி மீனாள் கன்னத்தில் "இச் இச்' வைத்தது.
ஓ...

தாயைப் போல பிள்ளை...

"நட்சத்திரா தானே நீ? ஆளே அடையாளம் தெரியாமல் வளர்த்து விட்டியே....?''
பதினாறு... பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் காலம் சுழன்று முன் பயணித்தது.

"புடவை அழகா இருக்கு மிஸ்....''

மூன்றாம் வகுப்பில் மாணவர்களின் வீட்டு பாடங்களைத் திருத்தி மதிப்பெண்களை போட்டு கொண்டிருந்த மீனாளின் காதில் யாரோ கிசுகிசுத்ததால் திடுக்கிட்டாள்.

பக்கத்தில் நட்சத்திரா அவளின் புடவை முந்தானையை பிடித்து கொண்டிருந்தாள்.

குட்டி குட்டி மயில்கள், பெரிய தோகை விரித்த மயிலும் போட்ட புடவை அது. புதுப் புடவை அணிந்து வந்தால் இப்படிதான் மாணவிகள் செய்வார்கள். மழலையர் வகுப்பில் சுற்றி வந்து அருகில் பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இரு பாலருமே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது புடவையை மெதுவாக சிமிட்டி விட்டு....

"மிஸ்.... புடவை அழகாக இருக்கு மிஸ்....'' என்று மெல்ல ஒருத்தர் ஆரம்பிப்பார்.

"தாங்க்ஸ் பாப்பா'' பாடத்தை நிறுத்திவிட்டு அக்குழந்தை கன்னத்தில் மீனாள் மெல்லிய முத்தம் தருவார். 

அடுத்த விநாடி எல்லா குழந்தைகளும் 

"மிஸ்.... மிஸ்.... புடவை சூப்பரா இருக்கு மிஸ்....''

"இந்த கலர் பளபளன்னு இருக்கு மிஸ். எனக்கு பிடிச்சுருக்கு மிஸ்''- இன்னொரு வாண்டு...

"எங்க அம்மா கூட இந்த புடவை வச்சு இருக்காங்க மிஸ்'' என்று சேர்ந்திசை ராகம் பாட தொடங்கி விடுவர்.

இந்த ராகமும், பாராட்டும் மழலையர் வகுப்புகளில் அதிகமாக இயல்பாக கவித்துமாக இருக்கும். அங்கு பெண், ஆண் என்ற வேறுபாடு இருக்காது. புத்தாடைகள், புதிய வண்ணங்கள், புதிய வடிவங்களைக் கண்டதும் குழந்தைகள் இயல்பாக வெளிப்படுத்தும் குணமாகும். குழுவாகச் சேர்ந்து மீனாளை சூழ்ந்து அவர்கள் கொஞ்சுவது சில நேரம் எல்லையை மீறி விடும். செல்லமாக அதட்டி அவர்களை மீனாள் கலைந்து போக வைப்பாள். 

இப்படிதான் மழலையர் வகுப்பில் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தவற்றைப் படம் வரைய சொன்னாள். 

பூனை, நாய், காகம், மரம், வீடு, கதிரவன், அக்கா, அம்மா என்று அவரவர் விருப்பதற்கு வரைந்து மீனாளிடம் காட்டினர். ஒரு குட்டி பையன் ஆசையாக ஓடி வந்து காட்டினான். 

அவன் ஆர்டினுடன் அம்பும் வரைந்து "ஐ லவ் யு மிஸ்' என்று எழுதி வைத்து இருந்தான். மீனாள் சிரித்து கொண்டே , "ஐ டூ லவ் யு பேபி....'' என்று கன்னத்தை செல்லமாக கிள்ளி அனுப்பி வைத்தாள். அந்த குட்டி பையனும் மகிழ்ச்சியில் வெட்கப்பட்டு கொண்டு சென்றான், குழந்தைகளின் அன்புக்கு, குறும்புக்கும் அளவே இல்லை, நாம் எதை தருகிறோமோ அதையே திருப்பி தருவார்கள். 

ஆனால், உயர் வகுப்புகள் போகப் போக இந்த குறும்புகள், இந்த குழு ஒற்றுமை இருக்காது. சிறிது சிறிதாக சுருங்கி கொண்டு வரும். + 2 வகுப்புகளில் யாராவது ஓரிரு மாணவிகள்தான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில்தான் புடவைகள், அணிந்துள்ள மணிகளை பற்றி சொல்வார்கள். மீனாள் மணிகளை கழட்டி மாணவிகளிடம் சில சமயம் கொடுத்து விடுவாள், அவர்கள் கையில் வைத்து இருந்து திருப்பி தந்து விட்டுவார். சின்ன சின்ன ஆசைகள்தானே! 

இவை எல்லா ஆசிரியைகளிடமும் கிடையாது.... நடக்காது! 

காதைத் திருகும், தலையில் கொட்டு வைக்கும், பிரம்பால் பேசும் ஆசிரியர்கள் உண்டு. கைகளால், கண்களால், உடல் மொழிகளால் மிரட்டி வகுப்பில் அமைதியை வன்முறையாக நிலைநாட்ட அயராது உழைக்கும் ஆசிரியைகளுக்கு நிச்சயம் இந்த அன்புகள் கிடைக்காது.... கதைகள் சொல்லும், ராகம் போட்டு சேர்ந்திசை பாடும், ஆடல் மொழிகளால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியோடு கற்பிக்கும் மீனாள் போன்ற சில ஆசிரியைகளுக்குதான் அந்த களங்கமற்ற எதிர்பார்ப்பற்ற அன்பும், பாசமும் கிடைக்கும்.

ஒரு நாள் மூன்றாம் வகுப்பில் சில பசங்க வந்து, "மிஸ்... மிஸ்... நட்சத்திரா செந்திலுக்கு முத்தம் கொடுத்துட்டா'' என்று கோள் முட்ட வந்தார்கள். 

உடனே மீனாள்... "போங்கடா... இத போய் பெரிய விசயமாக என்னான்ட சொல்ல வந்தீட்டீங்க.... ஓடுங்க.... ஓடுங்கடா...'' என்று அதட்டி அந்த மாணவர்களை விரட்டி அமர செய்து விட்டாள். அதைப் பெரியதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போய் விட்டாள்.

மறு நாள் குறும்புகார பையனான செந்திலிடம் ஒருமாற்றம் தெரிந்தது. இரண்டு நாள்களாக செந்தில் சரியாக வீட்டுப் பாடம் செய்யவில்லை. வகுப்பில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான். அவன் யாரிடமும் சரியாகப் பேசுவது இல்லை. அவனிடம் ஒரு வித்தியாசம் தெரிந்தது. இதை கவனித்து கொண்டு இருந்த மீனாள், "என்ன செந்தில் உடம்பு சரியில்லையா... ஒருமாதிரியாக இருக்க... இங்கே வா....'' என்று அழைத்து, "உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா, வேற ஏதாவது பிரச்னையா?'' என்று எவ்வளவோ கேட்டும் அதற்கு அவன் அப்படி ஏதுவுமில்லை என்று கூறி மழுப்பு விட்டான். "சரி போய் உட்கார்'' என்று மீனாள் அவனை அனுப்பி விட்டார். 

ஒரு வாரம் கழித்து இருக்கும். மீனாள் அன்று பள்ளிக்கும் ஒரு மணிநேரம் முன்னதாக வந்து இருந்தாள். பள்ளிகளில் முறை வைத்து வாரத்திற்கு ஒருநாள் இப்படி முன் கூட்டியே பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பே வருவது பள்ளி நிர்வாக நடைமுறை. முன்னதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்த இது தேவையாக இருந்தது. 

அப்பொழுது செந்தில் அம்மா கோபமாக மீனாளிடம் வந்தார்.

"மிஸ்.... செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்திட்டான்னு... ஒரு வாரமா எம் புள்ள சரியாக சாப்பிடவில்லை... தூங்கவில்லை... எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரியாக உம்முனு முகத்தை வைச்சுகிட்டு கிடக்கிறான். நா அவனை துருவி துருவி கேட்ட பின்பு இத சொல்றான். இத கேட்ட அவன் அப்பாவுக்கு கோபம் வந்து விட்டது "வா பள்ளிக்கு போய் தலைமை ஆசிரியரிடம் கம்பிளயின்ட் பண்ணலாம்'' என்று கூச்சல் போடுகிறார். 

நான் தான் சின்ன குழந்தைகள் விஷயம்... நான் போய் ஆசிரியரிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு உங்களை பார்க்க வந்திருக்கிறேன்'' என்றார்.

"என்னிடம் குழந்தைகள் கூறினார்கள்... நான் அதை பெரியதாக எடுத்துகொள்ளவில்லை. குழந்தைகள் தானே என விட்டு விட்டேன். இந்த அளவிற்கு பாதிக்குமென நான் நினைக்கவில்லை. சரி... என்னிடம் கூறி விட்டீர்கள் அல்லவா... நா பார்த்துக்கிறேன்... நீங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்... குழந்தைகளுக்கு புத்திமதிகளை கூறி சரி செய்வது என் பொறுப்பு. இதை தலைமையாசிரியரிடம் கூற வேண்டாம். ஏன் என்றால் இது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிந்தால் சில ஆசிரியர்கள் நட்சத்திராவை திட்டுவார்கள். அடிக்கக் கூட செய்வார்கள். அதனால் அந்த பெண் குழந்தையின் மனநிலை பாதிக்கும்... அது உங்க மகனையும் கூட பாதிக்கலாம்... இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். நா செந்திலுக்கு புத்திமதி கூறி சரி செய்கிறேன்... நீங்க கவலை படாம போங்கள்'' என்றாள் மீனாள்.

அவரும் "சரி'' என்று சென்று விட்டார்.

"என்ன பிரச்னை செந்தில்...?'' என்றாள்.

"நா நட்சத்திராவுக்கு என்ன பதில் சொல்றது... மிஸ்?''

முகத்தை சீரியசாக வைத்து கொண்டு இப்படி சொன்னான். மீனாளுக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த தமிழ் சினிமாக்கள் படுத்தும் பாட்டை நினைத்து...

"அம்மா, அக்கா, தங்கை, பாட்டி, அப்பா அண்ணன்... என வீட்டில் நிறைய பேர் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பாங்க... அது போல தான் நட்சத்திரா உனக்கு முத்தம் கொடுத்து இருக்காள்... . அவளை உன் தங்கை, அக்கா, தோழியாகப் பார்க்க வேண்டும்... அத போய் சினிமாவில் வரும் காதலி போல நீ நினைக்கக் கூடாது... இது ஒரு சாதாரண விஷயம் ... பள்ளி வேனில், பஸ்சில் போகும் பொழுது சில நேரங்களில் ஒருத்தர் ஒருத்தருடைய உடல் மீது படுகிறது... அதை எல்லாம் பெரிதாக நினைத்து கொள்ள முடியுமா?... இதை எல்லாம் பெரிசாக கற்பனை பண்ணிக்க கூடாது... தங்கை ... தாயாக நினைக்க வேண்டும்... ஃபிரண்டா நினைக்கனும்... சினிமா மாதிரி நினைத்து கற்பனை செய்யக்கூடாது... இதோடு இந்த எண்ணத்தை மனசில் இருந்து அழிச்சிடணும் சரியா?'' என்றாள் மீனாள்.

செந்தில் தலை ஆட்டவும் நட்சத்திரா வகுப்பில் நுழையவும் சரியாக இருந்தது. அவளையும் மீனாள் அருகில் அழைத்தாள். துருதுருவென்று இருக்கும் அந்த சிறுமி அருகில் ஓடி வந்தது. 

நடந்ததை விளக்கி கூறினாள் மீனாள். 

"நீ இனிமேல் இப்படி எல்லாம் விளையாடக் கூடாது... செந்தில் குழம்புகிறான் பார்... செந்தில் மட்டுமல்ல, யாரிடமும் வகுப்பில் இப்படி விளையாடாதே''
அவள் தலையை தலையை ஆட்டினாள். அது அந்த குட்டிப் பெண்ணுக்கு புரிந்து விட்டு இருக்குமா என்று நினைத்த மீனாள்...

"செந்தில் , நட்சத்திரா இருவரும் கை குலுக்கி கொள்ளுங்கள்... அக்கா, தம்பியா இருக்கணும்... நட்பா இருக்கணும்... இதை எந்த பசங்க கிட்டயும் சொல்ல கூடாது...ஓ.கே வா?''

இருவரும் தலையை தலையை ஆட்டினர். மீனாள் இருவர் கைகளையும் எடுத்து தன் இரு உள்ளங்கைக்குள் சிறிது வினாடிகள் வைத்து இருந்தாள்.
"மகிழ்ச்சியாக இருங்க... சந்தோசமா பாடம் படிங்க... நட்பா இருங்க... அவ்வளவுதான்... ஒகே... புரிந்ததா?'' என்று அனுப்பி வைத்தாள். 

புரிந்து கொண்டிருப்பார்கள். மீனாளுக்கு அந்த மாணவர்களுக்குமான உறவு அப்படியானது. 

அன்று முழுவதும் மீனாள் செந்திலை அடிக்கடி கவனித்து கொண்டு இருந்தாள். அவன் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து விட்டான். எல்லாம் இயல்பாகி விட்டது. 

மூன்று மாதங்கள் சென்று இருக்கும். இரண்டு மூன்று மாணவர்கள் "குசு குசு' என்று பேசிக்கொண்டு இருந்தனர். மீனாள் என்னவென்று கேட்டாள்.

அவர்கள் மீண்டும் செந்திலுக்கு நட்சத்திரா முத்தம் கொடுத்ததை பேசுகிறார்கள் என்பதை அறிந்தாள். 

ஒவ்வொருவருக்கு நாலு அடிகள் போட்டாள். மீனாளின் இப்படியான கோபத்தைப் பார்க்காத அவர்கள் மிரண்டு போனார்கள். 

"அவ்வளவுதான் . இனி இத பத்தி மூச்சு விட்டீங்க ...பின்னி எடுத்துடுவேன் ஜாக்கிரதை...'' என்று மிரட்டி அனுப்பினாள்.

அத்துடன் அந்த முத்தம் முடிந்த போனது. அதற்கு பிறகு செந்திலும், நட்சத்திராவும் சக வகுப்பு தோழர்களாக சில ஆண்டுகள் படித்து பின் மேல் வகுப்புக்குப் போய் விட்டார்கள்... 

இருபது ஆண்டுகளுக்கு பின் இன்று நட்சத்திராவின் குழந்தையின் முத்தம் மீனாளுக்கு அனைத்தையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது. 

"அடையாளம் தெரியாமலே வளர்ந்திட்டீயம்மா... எங்கே இங்கே...?'' என்றாள் மீனாள். 

"அதோ பைக்கில் என் கணவரும் பெரிய பையனும் இருக்கிறார்கள்'' என்று காண்பித்தாள். சிறிது நேரம் உரையாடி விட்டு பிரிந்தனர். 
நட்சத்திராவின் குழந்தை அவளிடம் போகும் பொழுது மீனாளுக்கு மீண்டும்...

"இச்...இச்' என்று முத்தங்களை அள்ளி வாரி கொடுத்து விட்டு சென்றது. 

"இன்னொரு குட்டி நட்சத்திரா!' அந்த குழந்தையின் கண்கள் வானில் நட்சத்திரங்களாக பளபளவென மின்னின. 

இந்த பழைய முத்தம் நிகழ்வை பற்றியே சிந்தித்து கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் மீனாள் சென்றாள். 

இரண்டு மூன்று தெருக்களைக் கடந்திருப்பாள். 

பைக்கில் வந்த ஓர் இளைஞன் வண்டியை நிறுத்தி, "குட் மார்னிங் மிஸ்...'' என்று சொல்லி விட்டு சென்றான். அவன் பின்னால் அவன் இடையை சேர்த்து அணைத்துக் கொண்டிருந்த புத்தம் புது தாலி அணிந்த பெண் மீனாளை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

"குட் மார்னிங்... குட் மார்னிங்...'' என்று தலையாட்டி சொல்லி கொண்டே வண்டியில் விரைந்த மீனாள். 

யாராக இருக்கும் அவன். எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே என்று நினைவுகளை பின்னால் இழுத்து கொண்டு சென்றாள்.

"ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...'' 

செந்தில்தான் அவன்!

]]>
short story, சிறுகதை, தினமணி கதிர் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/08/ஐ-லவ்-யூ-டீச்சர்-3016308.html
3016289 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி! RKV Monday, October 8, 2018 01:28 PM +0530 வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

மொழியால் வெளிப்படுத்த முடியாத பேரன்பின் வெளிப்பாடு இது. 28 ஆண்டுகளாகத் தேக்கி வைத்த அன்பெனும் அணை உடைந்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது அது வெளிப்படும் தன்மை இப்படியாகத்தான் இருக்க முடியும். இலங்கையைச் சேர்ந்த விஜயா புலம் பெயர் தமிழராக தமிழகத்திற்கு வந்தார். இங்கு கலைக்கூத்தாடியாக நடனம் ஆடிப் பிழைத்துக் கொண்டிருந்த விஜயாவுக்கு திருப்பூர் நாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் தீவிர ரசிகர். விஜயா எங்கு நடனம் ஆடினாலும் அங்கு சுப்ரமணியம் இருப்பார். இந்த அதி தீவிர ரசிகத் தன்மை காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். கலைக்கூத்தாடிப் பெண்ணைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று யோசித்த சுப்ரமணியம் 1985 ஆம் ஆண்டில் தன் குடும்பத்தை உதறி விட்டு விஜயாவைக் கரம் பிடித்தார். விஜயாவின் மீதான பெருங்காதலுடன் அவருடைய கலையையும் சுப்ரமணியம் வெகு விரைவில் கற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து கலைக்கூத்தாட்டங்களில் கலந்து கொள்வது வாடிக்கையானது. 1990 ஆம் ஆண்டில் இப்படித்தான் ஒரு கலைக்கூத்தில் நடனமாடி விட்டு சாலையோரம் களைத்துப் போய் அசந்து உறங்கிக் கொண்டிருந்த விஜயாவிடம் யாரொ ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயல தற்காப்புக்காக அவரிடம் சுப்ரமணியம் சண்டையிட நேர்ந்தது. இருவருக்குமிடையிலான மோதலில் அந்த நபர் உயிரிழக்க... ஆடிக் களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கணவன், மனைவி இருவரும் கொலை வழக்கில் கைதாகினர். வழக்கு விசாரணையின் போது 500 ரூபாய்க்காக இவர்கள் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட போது கொலை நடந்ததாக வழக்கு திசை மாற்றப்பட்டு பதியப்பட்டது. நேரடியாக கொலையில் தன்னுடைய பங்கு இல்லாவிட்டாலும் கூட விஜயா, இணைந்தே கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சொல்ல இருவரும் ஆயுள் தண்டனைப் பெற்றனர். இணைந்து வாழ வேண்டியவர்கள் இணைந்து சிறை சென்றனர்.

இருவரும் தனித்தனியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்கள் செல்லச் செல்ல விஜயாவின் பேசும் திறன் பறிபோனது. சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆன நாள் முதலாக விஜயா அறியூரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தில் தனது கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார். எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தற்போது சிறையிலுள்ள சுப்ரமணியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேசும் திறனை இழந்த போதும் சிறையிலிருந்து கணவர் விடுதலையாகித் தன்னிடம் வந்து சேர்ந்த போது அவரை மாமா என அழைக்கும் விஜயாவின் ஆர்வம் பொங்கும் குரலிலும், சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளிலும் குற்றமற வெளிப்படுகிறது அவருக்குத் தன் கணவர் சுப்ரமணியத்தின் மீதுள்ள எல்லை கடந்த அன்பு. தான் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் சுப்ரமணியத்தைக் காட்டி மாமா, என் மாமா என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் விஜயா. காலம் இவர்களை சிறையில் தள்ளினாலும் காலம் கடந்தும் காதலும். அன்பும் தீராமல் பேருவையுடன் ஒன்றிணைந்திருக்கும் விஜயாவையும் சுப்ரமணியத்தையும் உண்மையான காதலுக்கு சாட்சியாக எப்போதும் நினைவுகூரலாம்.

வாழ்வின் கடைநிலையில் இருக்கும் இவர்களுக்கு அரசும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், இச்செய்தியை அறிய நேர்பவர்களும் அடுத்தொரு அமைதியான வாழ்வை மேற்கொள்ள வழிவகை செய்து தரலாம்.

 

COURTESY: PUTHIYATHALAIMURAI T.V

]]>
காதல், அன்பு, 28 ஆண்டு சிறைதண்டனை, விஜயா, சுப்ரமணியம், எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா விடுதலைகள், vijaya, subramaniyam, eternal love, MGR CENTENARY RELEASES, 28 YRS JAIL https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/08/real-love-tn-couple-jailed-28-years-for-murder-case-3016289.html
3013816 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் சீனாவில் தன் தந்தைக்கு அன்னையான 6 வயதுச் சிறுமியின் அயராத சேவைகள்! வைரல் வீடியோ இணைப்பு கார்த்திகா வாசுதேவன் Thursday, October 4, 2018 06:02 PM +0530  

சீனாவில் 6 வயதுக்குட்டிப் பெண், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு பள்ளிக்கும் சென்று வருவது அவள் வாழும் பகுதியைச் சேர்ந்த மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதோடு சிறுமிக்கு ஏராளமான பாராட்டுகளையும் குவித்துள்ளது. சிறுமியின் தந்தை டியான் ஹாய்செங் சீனாவின் நிங்சியா மாகாணத்தைச் சேர்ந்தவர். 40 வயதான டியான், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கடுமையாகக் காயமுற்றதில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய்க்கு தன் கணவரது பக்கவாதப் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் மனமில்லாத காரணத்தால் அவர் தன் கணவரையும், 6 வயதுப் பெண் குழந்தையையும் விட்டு விட்டு தன் மூத்த மகனோடு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். முதலில் சில நாட்களுக்கு மட்டும் அங்கிருந்து விட்டு பிறகு கணவரது வீட்டுக்கு திரும்புவதாகச் சொன்ன மனைவி மீண்டும் திரும்பி வரவே இல்லை. யோசித்துப் பாருங்கள் கணவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் போது மனைவி உடனிருந்து அன்பாலும், கரிசனத்தாலும் அவரை மீண்டும் பழையநிலைக்கு மீட்பதைப் பற்றித்தான் நாம் இதுவரை ஆசியக் கதைகள் மற்றும் திரைப்படங்களில் கண்டு களித்திருப்போம். ஆனால், சிறுமியின் தாயாரைப் போல வாழ்க்கைத்துணையின் வலிகளை உணராமல் இப்படி விட்டுச் செல்பவர்கள் விதிவிலக்குகளாக இந்தியாவிலும் இருக்கிறார்கள் தான். அதனால் இதில் என்ன புதுமை என்று பலர் நினைக்கலாம். இந்த விஷயத்தில் சிறுமி ஜியா ஜியா தான் புதுமை.

ஜியா ஜியா தன் தந்தைக்கு ஆற்றும் சேவைகளைக் காணொளியாகக் காண...

 

6 வயதுச் சிறுமி, அப்படியானால் இப்போது சிறுமி 1 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம். 1 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் பிஞ்சுத் தளிரை கவனிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டும். அவள் இன்னும் குழந்தை தான். ஓடினால்... எங்காவது இசகு பிசகாக விழுந்து அடிபட்டுக் கொண்டு ‘ம்மா வலிக்குது... தரை என்னை அடித்து விட்டது, என்று அழுது கொண்டு அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ புகார் கூறும் வயது! ஆனால் இவளுக்குத்தான் அம்மா காட்சியிலேயே இல்லையே. 4 வயதிலேயே ஜியா, ஜியாவையும் அவளது தந்தையையும் புறக்கணித்து விட்டு அவளது அம்மா தான் தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாரே! இப்படியான சிக்கலான தருணங்களில் தான் வாழ்க்கை அதைத் தாங்கிக் கொள்வதற்கான மனோதிடத்தையும் நம்முள் உருவாக்கி விடுகிறது. இதில் சிறுமி ஜியா ஜியாவும் விதிவிலக்கில்லை. 

சிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறிசேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த தந்தைக்குத் தேவையான மசாஜ். சுமார் அரைமணி நேரம் மசாஜ் முடிந்தவுடன் தந்தைக்கு பல் துலக்கி விட்டு முகம் கழுவித் துடைத்து சுத்தம் செய்து முடிப்பார். அதன் பின் தான் பள்ளி செல்லும் நேரத்தில் தந்தையை வயதான தாத்தா, பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டுப் பள்ளி செல்லும் ஜியா ஜியா பள்ளி விட்டு வந்தது முதலே, தந்தைக்கு உணவு ஊட்டுவது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது, வீட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி நாற்காலி மற்றும் மேலெழும்பியும், கீழிறக்கியும் இயக்கக் கூடிய வகையிலான தானியங்கி கம்பத்தின் மூலம் தந்தையை தூக்கி அமர வைப்பது, வீட்டைச் சுற்றி உலவச் செய்வது என  மீண்டும் தன் தந்தைக்கான உதவிகளைத் தொடங்கி விடுகிறாள்.

ஜியா ஜியாவின் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயிகள் என சீன மீடியாக்கள் தகவல் அளித்துள்ளன. அதனால், அவர்களால் முற்றிலுமாகத் தங்களது மகனை கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க முடியாததோடு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக பொருளீட்டியாக வேண்டிய தேவைகளும் இருப்பதால் அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மகனைக் கவனித்துக் கொள்ள தங்களது சின்னஞ்சிறு பேத்தியின் உதவியை நாடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும் சிறுமி ஜியா ஜியா இதனாலெல்லாம் தான் சோர்ந்து போய் விடவில்லை என சீன ஊடகமொன்றின் நேர்காணலில் பதில் அளித்திருப்பது இந்தச் சிறு வயதில் அவளுக்கு வாய்த்திருக்கும் மன உறுதியைக் காட்டுகிறது.

தற்போது 40 வயதாகும் டியானுக்கு விபத்தில் மார்புக்கு கீழான பகுதிகளில் இயக்கமற்றுப் போய் முழுதாக இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமி ஜியா ஜியா தான் தந்தை டியானுக்கு ஒரு தாயினும் மேலான சேவைகளை அன்போடும் அக்கறையோடும் வழங்கி வருகிறாள். டியான் தன் மகள் ஜியா ஜியா பெயரில் சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் ஒரு கணக்குத் துவக்கி இருக்கிறார். நம்மூர் ஃபேஸ்புக், டிவிட்டர் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் தன் மகள் ஜியா ஜியா தனக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்த காணொளியை டியான் தொடர்ந்து பதிவு செய்வது வழக்கம். குறிப்பிட்ட அந்த சமூக ஊடகக் கணக்கில் ஜியா ஜியாவுக்கு 4,80,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்கிறது டெய்லி மெயில் பத்திரிகை. தற்போது தன் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத் தேவைகளை இந்த இணைய ஊடகப் பதிவுகள் ஓரளவுக்கு நிறைவு செய்வதாக டியான் தெரிவித்திருக்கிறார்.

 

]]>
china, பக்கவாதம், சீனச் சிறுமி, 6 வயது சீனச் சிறுமி, ஜியா ஜியா, டியான், six-year-old girl , jia jia, paralysed father , abandoned mother https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/04/six-year-old-girl--jia-jia-takes-care-of-her-paralysed-father-after-her-mother-abandoned-them-3013816.html
3013148 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் 6 வயதுச் சிறுமி! வைரல் வீடியோ! RKV Wednesday, October 3, 2018 12:43 PM +0530  

அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைக் கொலைகளுக்கு எதிராக 6 வயதுச் சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று சமீபத்தில் காண்போர் மனதை உருக்கி நெகிழச் செய்யும் வண்ணம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வன்முறையாளர்களுக்கு எதிராகக் கொந்தளிப்பாகப் பேசும் அச்சிறுமி, 

'சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது பெற்றோர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என எல்லோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுவதற்காக கடவுள் இந்த உலகத்தையும் மக்களையும் படைக்கவில்லை. இங்கே அதிக அளவில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். எங்களுக்கு அந்த வன்முறையும் சுத்தமாக விருப்பமே இல்லை. எங்களுடன் வாழும் சக மனிதர்கள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இத்தனை விரைவில் சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று கூட நாங்கள் விரும்பவில்லையே. 

நாங்களும் கடவுளை விரும்புகிறோம்... அவர் எப்போது எங்களை எதிர்கொள்ள விரும்புகிறாரோ அப்போது நாங்கள் அவரைச் சென்றடைவோம். ஆனால், இப்போது நாங்கள் சாகத் தயாராக இல்லை. கடவுள் எங்களிடம் உடனே மரணித்து என்னிடம் வாருங்கள் என்று எங்களை அழைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை இப்போதிருக்கும் நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் நாங்கள். மற்ற சக மனிதர்களும், என்னையொத்த குழந்தைகளும் இங்கு வாழ வேண்டும். வன்முறையாளர்களான உங்களுக்குத் தெரியாது, நான் என்னுடம் இருக்கும் சகமனிதர்களுக்காக எத்தனை தூரம் வருந்துகிறேன் என, எனக்கு அவர்கள் அறிமுகமற்றவர்களாகவே இருந்தாலும் கூட நீங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது. அவர்களை வாழ விட்டிருக்க வேண்டும்.

கெல்ஸி எனும் இந்த 6 வயதுச் சிறுமி வசிப்பது அமெரிக்காவின் பால்ட்டிமோரில். அமெரிக்காவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 2017 ஆண்டில் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகம். அதை அறிந்த அதிர்ச்சியில் தான் சிறுமி இப்படியோர் காணொளியைத் தன் தாயாரின் உதவியுடன் பதிவு செய்து ட்விட்டரில் வெளியிடச் செய்துள்ளார். 

 

காணொளியில் தன் சக மனிதர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான கொடூரத்தை தாங்க முடியாமல் கதறும் இந்தச் சிறுமி,
இங்கு நடக்கும் அதிகப்படியான கொலைகளை என்னால் நம்பவே முடியவில்லை. இதோ என் கண்களில் கசியும் இந்தக் கண்ணீர் எதற்காக என்று உணர்வீர்களா நீங்கள்? நீங்கள் தொடர்ந்து நிகழ்த்தி வரும் வன்முறைகளைத் தாங்க இயலாமல் தான் நான் இங்கு கதறி அழுகின்றேன். இந்த உலகில் அதிகக் கொலைகள் நிகழ்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் உணரவேண்டும், கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என. நீங்கள் சக மனிதர்களை நடத்தும் முறையில் அவருக்குச் சிறிதும் உவப்பில்லை, விருப்பமில்லை.

என்னை மன்னியுங்கள், மன்னியுங்கள், என்னை மன்னியுங்கள்... இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உலகம் மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நீங்கள் மாற வேண்டும். இந்த உலகம் மீண்டும் இயல்பாகச் சுழலுமாறு நீங்கள் தான் செய்யவேண்டும். எங்கள் உலகம் மோசமானதாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் உலகம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் இந்தக் கொலைகளைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது  இதைச் சொல்கிறோம் என்றால், நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம் என்று தான் அர்த்தம். அது தான் அர்த்தம்! எங்களுக்கு எங்களது வாழ்க்கை வேண்டும்.’

- என்று 6 வயதுச் சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருப்பது இணையத்தில் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வைரலாகி இருப்பது காண்போர் கண்களைக் கசியச் செய்கிறது. 

]]>
அமெரிக்கா, துப்பாக்கிச்சூடு, கெல்ஸி, பால்ட்டிமோர், GUN VIOLENCE, KELSEY HINES, AMERICA, BALTIMORE, VIRAL VIDEO https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/03/we-are-not-ready--to-die-right-now-3013148.html
3011698 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஒரு பசுவுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகம்! பரணி Monday, October 1, 2018 03:19 PM +0530  

இந்த விவகாரம் நடந்து ஒரு மாதமிருக்கலாம். எங்கள் ஏரியாவில் பசுக்களும், எருமைகளும் அதிகம். சென்னையில் ஆநிரைகள் அதிகமுள்ள இடங்களில் திருவேற்காடு பகுதியும் ஒன்று. இங்கு நான் வசிக்கும் பகுதியில் பசுக்கள் மந்தை, மந்தையாகத் திரிவதைக் காணலாம். எல்லாப்பொழுதுகளிலும் பசுக்களின் தரிசனம் இங்கு உண்டு. மாலை அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் சாலையை அடைத்துக் கொண்டு தொடர்ச்சியாக அணிவகுத்து வரும் பசுக்களையும், எருமைகளையும் கண்டு சில நேரங்களில் அச்சமாகக் கூட இருக்கும். ஆனாலும் இதுவரை எந்தக் கால்நடையாலும் சாலைப் பயணிகளுக்கு எந்த வித இடையூறும் இன்றி எல்லாம் ஸ்மூத்தாகவே சென்று கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு காலத்தில் தான் திடீரென அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதற்கு காரணமென யாரைக் குற்றம் சாட்டுவதென்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர்கள் என இதுவரை ஒருவரும் அதைத் தேடி வராத துக்கம் தான் நாளாக, நாளாக மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. அடடா... இப்படி நான் வருந்தும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்து விட்டது என்று இன்னும் நான் சொல்லவே இல்லை பாருங்கள்.

முதலில் அதைச் சொல்லி முடிக்கிறேன்.

கடந்த மாதத்தில் ஒரு நாள்... மாலை வீடு திரும்பியதும் எதிர் வீட்டு அம்மாள் சொன்னார். எங்கள் வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அதே தெருவில் இருந்த காலி மனை ஒன்றில் நிறைசூல் கொண்ட பசுவொன்று உட்கார்ந்த வாக்கில் இறந்து விட்டிருக்கிறது என; எனக்கு ஒரு நொடி அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, புரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டை பாம்போ அல்லது வேறு ஏதேனும் விஷப்பூச்சிகளோ கடித்திருக்கலாம். அதனால் விஷமேறி காலிமனையைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாகப் போட்ட வேலியை உடைத்துக் கொண்டு வெளியேறத் தெம்பின்றி மாடு பகல் முழுதும் எவர் கவனமும் இன்றி உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது என்று நினைத்தோம் நாங்கள். சரி எப்படி இறந்திருந்தாலும், அது ஒரு உயிர், அதிலும் நிறைசூல் கொண்ட பசு, காலி மனை எவருடையதோ தெரியவில்லை. அங்கே உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது. உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். என்று நினைத்து அருகில் உள்ள இரண்டு கிராமங்களுக்கும் தகுந்த ஆட்கள் மூலமாகத் தகவல் அறிவித்தோம். அது நடந்தது வெள்ளிக்கிழமை மாலை. பசுவின் உரிமையாளர்கள் என்று எவரேனும் இருந்திருந்தால் இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக வந்திருப்பார்கள். ஆனால், நேரம் ஏறி, ஏறி இருள் கவிந்து கொண்டிருக்க அப்படி யாரும் வரவே இல்லை. இறந்த பசுவின் உடல் கையெழுத்து மறையும் அந்திக் கசங்கலில் அசாதரணமாகத் தீட்டிய இந்தியன் இங்க் பெயிண்ட் போல தெய்வீக சோகத்தை சுமந்து கொண்டு தேமேவென்று அப்படியே கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களது மனங்களில் பாரம் ஏறிக்கொண்டே இருந்தது. இரவில் தூங்கினாலும் இறந்த பசுவின் நினைவு ஊடாடிக் கொண்டே தான் இருந்தது. 

ஆயிற்று, இரவு கழிந்து சனிக்கிழமை பிறந்து விட்டது. ஆனால் பசுவைத் தேடி யாருமே வரவில்லை. சர் இனி கதைக்காகாது என்று கார்ப்பரேஷனில் தகவல் தெரிவித்தார்கள் குடியிருப்பு வளாகம் சார்ந்த அசோசியேஷன்காரர்கள். அங்கிருந்தும் பெரிதாக எந்த விதமான பதிலோ அல்லது நடவடிக்கையோ இல்லை. கார்ப்பரேஷனில் இருந்து யாராவது வந்து பசுவின் உடலை அப்புறப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனே சனிக்கிழமை முழுதும் கழிந்தது. பசு இன்னமும் அப்படியே தான் உட்கார்ந்தவாக்கில் கண் மூடியிருந்தது. அதன் உடலில் முதல் நாளில் இருந்த காவிய சோகம் மெலிதாக மறையத் தொடங்கி சருமம் வற்றிச் சுருங்கத் தொடங்கியிருந்தது இப்போது. முகத்தில் கருமை லேசாக எட்டிப் பார்த்தது. இனி தாங்காது... இது உடல் அழுகத்தொடங்குவதின் அறிகுறி. இப்படியே விட்டால் நாளை பசுவின் உடலை ஜேசிபி கொண்டு கூட அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு அதன் உடல் அலங்கோலமாகி விடக்கூடும். ஆனாலும் கார்ப்பரேஷன்காரர்கள் பக்கமிருந்து எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றப்படக் காணோம். இந்தப் பசுவுக்கு ஏன் இப்படியொரு கதியானது? பாவம் குட்டியை ஈன முடியாது இறந்ததோடு மட்டுமின்றி சடலத்தை எடுக்கவும் ஒரு ஏற்பாடும் ஆக மாட்டேனென்கிறதே! இதென்ன விபரீதம்? அதோடு கூட மாடு என்று ஒன்றிருந்தால் அதை விலை கொடுத்து வாங்கிய அல்லது தொழுவத்தில் வைத்து வளர்த்த உரிமையாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் தானே? அவர்கள் எங்கே போனார்கள்? இப்படியா ஈவு இரக்கமின்றி இரண்டு முழு நாட்களாக பசுமாட்டைத் தேடாமல் அப்படியே விட்டு விடுவார்கள். குறைந்த பட்சம் அதன் பாலுக்காகவேனும் பசுவைத் தேடத் தோன்றவில்லையே?! இவர்களெல்லாம் என்னவிதமான மனிதர்கள்? என்று ஆற்றாமை கலந்த கோபம் தன்னைத் தானே வாட்டியது. அந்தக் கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய? பசுவின் உரிமையாளர்களை சிரத்தையுடன் தேடி இருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கக் கூடுமொ என்னவோ? ஆனால், அங்கிருந்தவர்களான எங்களில் எவருக்கும் அதற்காக செலவிட நேரம் தான் சுத்தமாக இல்லவே இல்லாமலிருந்தது. அதனால் பசுவின் உடல் அழுகும் நாற்றம் காற்றோடு கலந்து தெருவெங்கும் வீசத் தொடங்கும் வரை கையாலாகாதவர்களாயும் அடுத்தென்ன செய்வது? என்ற குழப்பம் கொண்டவர்களாகவும் பசுவின் உடலை அகற்ற நாங்கள் மீண்டும் அசோஸியேஷன்காரர்களையே அணுகினோம்.

இறுதியில் அவர்களும் வேறு வழியின்றி சொந்த முயற்சியில் ஒரு ஜேசிபி அரேஞ்ஜ் செய்து இறந்த பசுவின் உடலை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு எங்கோ ஓரிடத்தில் புதைத்தனர்.

இதில் யோசிக்க வைத்த இன்றளவும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி...

அந்தப் பசுவின் உரிமையாளர் யார்?

அவருக்கு ஏன் தன் பசுவின் மீது கொஞ்சம் கூட அக்கறையோ, இரக்கமோ இல்லாமல் போய்விட்டது? 

இறந்து இத்தனை நாட்களாகியும் கூட அந்தக் குறிப்பிட்ட பசுவைப் பற்றிய தேடுதலே இல்லாமலொழிந்தது எப்படி?

பொதுவாக பசுக்களை வளர்ப்பவர்கள் அவற்றின் மீது இனம் புரியாத நேசத்தையும் வளர்த்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். நானறிந்த வரை அப்படித்தான். அப்படி இருக்கையில் இந்தப் பசு என்ன பாவம் செய்தது.. இப்படி எவரும் தேடுவாரின்றி அனாதையாய் மரிக்க?

எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம். பசு இறந்த காலி மனையின் உரிமையாளர்களுடையது. அவர்கள் அங்கே இடம் வாங்கியதைத் தவிர எந்தப் பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்கு உடனே தெரிந்திருக்கப் போவதில்லை என்றாலும் இப்போது யார் மூலமாகவேனும் தெரிந்திருக்கக் கூடும் தங்களது மனையில் நிறை வெள்ளிக்கிழமையில் நிறை சூல் கொண்ட பசுவொன்று கன்று ஈன முடியாமல் அப்படியே உட்கார்ந்தவாக்கில் இறந்த சேதி. சடங்கு, சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட இந்துக்களிடையே இது மிக மன உளைச்சல் தரக்கூடிய சங்கதி. யார் வீட்டுப் பசுவோ, தாம் காசு கொடுத்துப்பெற்ற மனையில் வந்து உயிர் விட்டால் அந்தப் பாவம் தங்களையும் சேருமா? சேராதா? என்ற குழப்பம் வேறு இனி அவர்களை வாட்டத் தொடங்கலாம்.

ஒருவேளை மனைக்கு உரிமையானவர்கள் நாத்திகராகவே இருந்த போதும், வீடு கட்ட வாங்கிய மனையில் பசு இறந்து, அதன் உடல் மூன்று நாட்களாகியும் அப்புறப்படுத்தப் படாமல் அங்கேயே கிடந்த கொடுமையை பரவாயில்லை அதனாலென்ன? என்று ஏற்றுக் கொள்வார்களாவெனத் தெரியவில்லை.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இறந்த பசுவின் உரிமையாளர்கள் மட்டுமில்லை பசு இறந்து கிடந்த காலிமனையின் உரிமையாளர்களும் கூட இதுவரை அவர்களது இடத்தை வந்து ஒருமுறையேனும் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

நடந்த சம்பவம் இதுநாள் வரையிலும் அவர்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை.

ஆனாலும், மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. 

இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போது தான் திருந்தப் போகிறார்களோ?

பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ வாசித்திருக்கிறீர்களா? அதிலொரு வெள்ளாடு வரும். அதன் பெயர் தான் பூனாச்சி. பூனாச்சி வாயிலாக கால்நடைகளின் வாழ்வில் இந்த சுயநலம் கொண்ட மனிதர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு துரோகங்களைப் பற்றிப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் பெருமாள் முருகன். அந்த துரோகங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பசு மாட்டுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகமும் கூட! அந்தப் பசுவுக்கு ஆன்மா என ஒன்றிருந்திருக்குமாயின் நிச்சயம் அது தன் இறப்பின் இறுதி நொடியில் ஒரு முறையேனும் உரிமையாளரின் உதவியை நாடி இறைஞ்சியிருக்கும். பசுவைத் தேடி வந்திராத அதன் உரிமையாளர் காணாமல் போன பசுவைத் தேடுவதைக் காட்டிலும் அப்படியென்ன அதிசயமான பணியில் மூழ்கியிருந்திருப்பார் என்பது தான் இன்று இந்த நிமிடம் வரை புரியாத புதிர்!

ஆகவே பசு வளர்ப்பாளர்களே! இதன் மூலம் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருப்பது என்னவென்றால்?

உங்களுக்கு பசு வளர்க்க வேண்டுமானால் அதைப் பொறுப்புடனும், கரிசனத்துடனும் வளர்க்கப் பாருங்கள். இல்லையேல் சும்மாவேனும் இருக்கப் பாருங்கள்.

நீங்கள் பசு வளர்த்ததும் போதும், அதை இப்படி நிர்க்கதியாக சாக விட்டதும் போதும்.

]]>
கைவிடப்பட்ட பசு!, The abadoned cow, blue cross, ஒரு பசுவுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகம்! https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/oct/01/the-abandoned-cow-3011698.html
3010506 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘பிரண்டை‘ ஒரு புன்செய் மூலிகைச் செடியில் இத்தனை பலன்களா? ஆச்சர்யம்! DIN Saturday, September 29, 2018 05:56 PM +0530  

பெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதீத கோபமிருந்தால், ‘உன்னைப் பெத்த வயித்துல பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும்’ என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தித் தீர்ப்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் கண்டு கொள்ளமாட்டர்கள். ஆனாலும் அதென்ன பெத்த வயித்துல பிரண்டையை வைத்து மட்டும் கட்டச் சொல்கிறார்களே, அது ஏன் என்ற எண்ணம் மட்டும் உள்ளுக்குள் உருத்தியிருக்கக் கூடும். என்ன ஒரு கஷ்டம் என்றால் அதைக் கேட்டு விளக்கம்பெறும் அளவுக்கு அந்நேரத்தில் அம்மாக்களின் பொறுமை இருந்தபடியால் நாம் அவர்களிடம் இதைப் பற்றியெல்லாம் விளக்கம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்களேன் அந்த விளக்கத்தை.

பிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை. பிரசவத்தின் போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவாலும்,  குழந்தையின் பாரத்தாலும்  பெண்களின் கருப்[பையும், பிரசவ உறுப்புகளும், வயிறும் புண்ணாகி இருக்கும், அந்தப் புண்களை  வெகுவாக ஆற்றக் கூடியது பிரண்டை. இகழ்ச்சிக் குறிப்பாக இருந்தாலும்

பெற்ற குழந்தைகளின் நடத்தை  அவர்களது வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும்போது அந்த புண்ணையும், அவர்களின் மனப்புண்ணையும் ஆற்றும் வகையில் இரண்டையும் இணைத்து  அப்படி சொல்வார்கள்

பெத்த வயித்துக்கு பிரண்டை  என்னும் சொல் வழக்கு உண்டு

பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடி வகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத் தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகை உண்டு. பெண் பிரண்டையின் கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.

இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம் குணமாகும், வாயு அகற்றல், பசி மிகுதல், நுண்புழுக் கொல்லுதல் போன்ற பலன்கள் கிட்டும்.

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெயிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தையின் வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2  முதல் 3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கலந்து கொடுக்கவும்.

வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை இந்த மோரை மூன்று நாள் கொடுக்க நல்ல விதமாகக் குணமாகும்.

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 முதல் 96 நாள் வரை இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ் ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு கொடுத்தால் குணமாகும்.

300 கிராம் பிரண்டை 100 கிராம் உப்புடன் ஆட்டி அடை தட்டி மண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

பிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.ந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, நீரிழிவு குணமடையும்.

மூன்று வேளை  2 கிராம் பிரண்டை உப்பை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவந்தால் உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், சிறு குடல், பெருகுடல் புண் நீங்கி நல்ல பசி உண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளிநீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவ மூலிகை...

இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

மெலிந்த உடல் குண்டாக...

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல்...

எலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்...

உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

]]>
பிரண்டை, மூலைக்கைச் செடி, வயிற்றுப்புண்., வயிற்று உபாதை, pirandai, health benefits https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/29/pirandai---health-benefits-3010506.html
3004261 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி! பரணி Thursday, September 20, 2018 12:26 PM +0530  

இதென்னடா இது? புரட்டாசி மாசத்தில் மீன் வாங்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே? என்று சைவப் பட்சிணிகள் ஆட்சேபிக்கலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் சினேகிதி ஒருவர் மதிய உணவுக்கு மத்தி மீன் குழம்பு வைத்து வஞ்சிரத்தைப் பொரித்து, இறாலை வறுத்து, சுறாவைப் புட்டு செய்து, நண்டு மசாலா செய்து சாப்பிட்டதாக பதிவிட்டிருந்தாரா? அதைக் கண்டதும் புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தத் தகவல் உதவுமே என்ற ஒரு பொதுவான நோக்கில் இந்த காணொளியைப் பகிர்கிறோம். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து பலர் ஒப்புக் கொண்டாலும் எல்லா மாதங்களிலும் அசைவம் குறிப்பாக கடல் உணவுகளைப் பேருவகையுடன் உண்ணும் பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு மார்கழி கிடையாது, சித்திரை கிடையாது, புரட்டாசி கிடையாது, ஏன் நாள், கிழமை கூட கிடையாது. அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுசரி நாணயத்திற்கு இருபக்கம் என்பதைப்போல ஒரு சாரர் அப்படி இருந்தால் பிறிதொரு சாரர் இப்படியும் இருக்கத்தான் செய்வார்கள். அது தானே சமநிலை.

அட ஒரு மீன் மார்க்கெட் காணொளிக்கு இத்தனை வியாக்யானம் தேவையில்லை தான். ஆனாலும், யாராவது ஆட்சேபிக்கும் முன் நாமாக முன்வந்து சமாதானம் சொல்லி வைத்து விடுவது உத்தமம் இல்லையா?

பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட் காணொளி...

 

யூ டியூபில்  ‘மது சமையல்’ என்ற பெயரில் ஒருவர் விதம் விதமான சமையல் குறிப்புகள் வழங்கி அசத்தி வருகிறார். அவரது காணொளிகளில் எனக்கு முதலில் காணக் கிடைத்தது இந்த பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட். புதிதாக மீன் வாங்க மார்க்கெட் செல்பவர்களுக்கு இந்த காணொளி நிச்சயம் பயனுள்ளது. மிகத்தெளிவாக பலவகை மீன்களையும் அவற்றுடன் பெயர்களுடன் விளக்குகிறார். காணொளியின் கடைசியில் மீன் வாங்க கீழுள்ள மூன்று டிப்ஸ்களையும் வழங்கி இருக்கிறார்.

மீன் வாங்கும் போது அது ஃப்ரெஷ் மீனா அல்லது பழைய மீனா என்று கண்டுபிடிப்பதில் பலருக்கும் குழப்பமுண்டு. வழக்கமாக வாரா வாரம் மீன் வாங்கி சமைத்து உண்பவர்களுக்கே கூட இதில் சில தடுமாற்றங்கள் உண்டு. மீன் வாங்கும் முன்பு எதையெல்லாம் சோதித்துப் பார்த்து உறுதி செய்து கொண்டு பிறகு மீன் வாங்கினால் திருப்தியாக இருக்குமென்று தோன்றியதோ அதையெல்லாம் இங்கு பட்டிலிடுகிறோம். குழப்பமிருப்பவர்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

வாங்கப் போகும் மீனைத் தொட்டுப் பாருங்கள். விரல் வைத்து அழுத்தினால் மீன் ‘கிண்’ னென்று இருக்க வேண்டும். விரல் உள்ளே பதியும் அளவுக்கு மீனின் உடல் இளகியிருந்தால் அது பழைய மீன் என்று அர்த்தம்.

மீனின் கண்களுக்குக் கீழிருக்கும் செதில் பகுதியைத் தூக்கிப் பார்த்தால் ஃப்ரெஷ் மீன் என்றால் நிறம் ரத்தச் சிவப்பில் இருக்கும். பழைய மீன் என்றால் சிவப்பு நிறம் மாறி அழுக்குப் பழுப்பு நிறம் வந்து விடும். மீனின் செதிலுக்கு அடியில் இப்படி நிறம் மாறி இருப்பின் அப்படியான மீன்களைத் தவிர்த்து விடுதல் நல்லது.

அடுத்ததாக மீனின் கண்களைச் சோதியுங்கள். மீனின் கண்கள் பொலிவுடன் கலங்கல் இல்லாது மினுங்கினால் அது ஃப்ரெஷ் மீன். கண்கள் பொலிவிழந்து மங்கலாக இருந்தால் அது பழைய மீன்.

கடல் உணவுப் ப்ரியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.

]]>
Pallavaram Gandhi Fish market video, பல்லாவரம் காந்தி ஃபிஷ் மார்க்கெட், மது சமையல், யூ டியூப் காணொளி, madhu samaiyal, lifestyle special, home sweet home https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/20/pallavaram-gandhi-fish-market-video-3004261.html
3000241 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘தினமணியும் நானும்’  - வாசகர் ம.சுந்தரமகாலிங்கம்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, September 14, 2018 03:54 PM +0530  

தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, 

என் பெயர் ம.சுந்தர மகாலிங்கம். வயது 67. விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் பிறந்து வளர்த்த ஊர். மாயாண்டிபட்டி தெருவில் உள்ள திரு மா.கோவிந்தன் பி.ஏ.  நினைவு ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு. பள்ளிக்கு  தினமணி பத்திரிக்கை வரும். 1962ம் ஆண்டு என ஞாபகம்.   5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் காலை  வணக்கத்தை தொடர்ந்து பள்ளி கட்டிடம் முன்னே தினமும் அன்றய தினமணி  செய்தித்தாளில் வந்த  செய்திகளின் சுருக்கம் ஆசிரியரின் உதவியோடு தயாரித்து வாசித்தது மங்கிய நினைவாக இருக்கிறது.

இப்போது தர்மபுரியில் தற்காலிகமாக இருக்கிறேன். தொழில் மையம் அருகே உள்ள எர்ரபட்டியில் உள்ள ஒன்றிய பள்ளியில் இப்போது அதுபோல் குழந்தைகள் தலைப்பு செய்திகளை வாசிப்பதை காணும் சந்தர்ப்பத்தில் அரை ட்ரையர் போட்டு அன்று படித்தது நினைவுக்கு வரும்.

சில வருடங்கள் பத்திரிக்கை வாசிக்க வில்லை. உயர்நிலை பள்ளியில் 9, 10, 11 ம் வகுப்பு படிக்கையில் ஆண்டாள் கோவில் அருகே உள்ள பென்னிங்டன் நூலகத்தில்   தினமணி படிக்கும் பழக்கம் மீண்டது.  பென்னிங்டன் நூலகம் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு இணையானது; அறகட்டையையால் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

பின் 1969-70ல் பி.யு.சி. படிப்புக்காக திருநெல்வேலி மாவட்டம்  ஆழ்வார்குறிச்சி. அப்போது ஆழ்வார்குறிச்சி சிறிய கிராமம். பத்திரிக்கை படிக்கவில்லை. 1970-71 ல் மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த பிறகு தினமணி படிப்பது தொடர்ந்தது; தொடர்கிறது.

ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுத்துகள் படித்தது ஞாபகம். ஏ.என்.எஸ். அவர்கள் பல புனை பெயர்களில் பொருளாதாரம், அரசியல் குறித்து எழுதியவை விரும்பி படித்ததவை. ஜெர்மனியின் விகிதாசார தேர்தல் முறைகள் பற்றி எழுதியவை குறிப்பிடத்தக்கது. ஏ.என்.எஸ். அவர்களின் புனை பெயர் களில் ஒன்று “ஒன்னரை ஏக்கர் சொந்தக்காரன்” என்பதாக ஞாபகம்.

இப்போது தலையங்கங்கள் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள்,   செவ்வாய் கிழமை "இளைஞர் மணி ", புதன் கிழமையின் "மகளிர் மணி", ஞாயிற்று கிழமையின் "கொண்டாட்டம்", "தமிழ் மணி"   மற்றும் "கதிர்" படிக்கிறேன்.

சில தலையங்கங்கள் -குறிப்பாக - வரலாற்று பிழை (01 செப்.2018) - இந்தியர்கள் என்றால் இளக்காரமா (27 ஆகஸ். 2018) - சரிகிறதே ரூபாய் (22 ஆகஸ். 2018) - இதனால் ஆயிற்றா? (13 ஜூலை 2018) - சமச்சீராக இல்லாத வளர்ச்சி (22 ஜூன் 2018) - போன்றவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை; தேசிய சிந்தனையும் தேசத்தின் மீது அக்கறையும்  கொன்டவை.

தருமபுரி பதிப்பு தொடங்கப்பட்டமைக்கு  பாராட்டுக்கள்.

நான் 67. தினமணியோ 85. வாழ்த்துவது என்பது சம்பிரதாயம். 85ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமணிக்கு வாழ்த்துக்கள்.  

ம.சுந்தரமகாலிங்கம்

படம்: சித்தரிப்பு

]]>
ம.சுந்தரமகாலிங்கம், தினமணியும் நானும், வாசக அனுபந்தம், தினமணி, dinamaniyum nanum, my journey with dinamani, https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/14/my-journey-with-dinamani-4-3000241.html
3000235 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தினமணியும் நானும் - வாசக அனுபந்தக் கடிதங்கள்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, September 14, 2018 02:56 PM +0530  

1. வாசகர் பாரதிராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்...

ஆஹா நல்ல தலைப்பு!

என்னுடைய 6 வது வயதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புது சீவரம் என்றும் வாலாஜாபாத் என்ற கிராமத்தில் முதல் முதலாக திணமனி நாளிதழில் இருந்து தொடங்குகிறேன்.என் அம்மா காலமான பின்னர் என் அம்மாவின் அப்பா அதாவது என் பாட்டனார் மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் இந்து மத பாடசாலை திரு.கே.சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள் பள்ளியில் தான் நான் 7 ஆம் வகுப்பு வரை வாசித்தேன்.என் பாட்டனார் வீட்டுக்கு த்தான் தமிழ் செய்தித்தாள்கள் திணமனி, சுதேசமித்திரன் , ஆங்கில நாளிதழ் ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வார இதழ்கள் குமுதம், ஆனந்த விகடன்,கல்கி , சுதேசமித்திரன் மற்றும் மாத இதழ் களான கலைமகள்,மஞ்சரி போன்றவை வரும் . என் பாட்டனார் செய்தித்தாள்களில் வரும் தலைப்பு செய்திகள் அவர் சொல்ல நான் எழுதிய பின் பாடசாலை போர்டில் எழுதப்படும் அனைவரும் தெரிந்துகொள்ள வசதியாக இருந்தது அப்போது , இப்போது இம்மாதிரி இல்லை என்பது சற்றே வருத்தப்பட வேண்டிய விஷயம்.அதன்மூலம் நான் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.இந்திரா அவர்களின் எமர்ஜென்சி காலமட்டுமல்ல செல்வி ஜெயலலிதா அவர்கள் 2003 ல் தமிழக அரசு ஊழியர் கள் மேல் நடத்திய விவரங்கள் உடனுக்குடன் திணமனி நாளிதழில் படித்து அனைவரும் தெரிந்து கொண்டனர்.மேலும் திரு .ஏ.என் சிவராமன் அவர்கள் ஆசிரியராக இருந்த போது அவரை பலமுறை சந்தித்து உரையாடி இருக்கிறேன்.பிறகு திரு.இராம‌.சம்பந்தம் , என் இனிய நண்பர் திரு .மாலன், எக்ஸ்பிரஸ் எஸ்டேட் அண்ணா சாலை யில் இருந்த போது நிறைய முறை அலுவலகம் சென்று வந்தேன்.மறக்க முடியாத நினைவுகள்.தற்போது அம்பத்தூர் தொழில்பேட்டை வந்த பின்னரும் அலுவலகம் செல்வது தொடர்கிறது . நாளிதழ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். 

பாரதிராஜன்.

பெங்களூரில் இருந்து.

2. வாசகர் பிரதீப் குமாரிடமிருந்து வந்த மின்னஞ்சல்

Dear Dinamani,


One of the prestigious newspaper which I ever prefer to read at online is DINAMANI.com

It has the contents like what you mentioned has your vision. 

Every topic it makes to read and get to know right information. 
Thank you for all your efforts.

Convey my regards to all Editor, Journalists, Technicians, Delivery Persons, Agents, News Reporters and all associates.

Keep up your great SPIRIT & continue your great SUPPORT.

Regards,
Pradeep Kumar. R

3. வாசகர் அருளானந்திடம் இருந்து வந்த மின்னஞ்சல்...

தமிழில் விருப்பமான ஒரு நாளிதழ்  உண்டென்றால் அதில் தினமணிக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் வாசகர்களுக்கு எது தேவை என்பதை மிகவும் நேர்த்தியாக நாளிதழுக்கான இலக்கணக்கூறுகளுடன் உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை பக்கம் பக்கமாக தெளிவாக இருக்கும் மற்ற செய்தி தாள்களை போல் விளம்பரங்கள் க்ரைம் செய்திகள் அதாவது கொலை கொள்ளை பற்றிய செய்திகள்  மிகவும் அரிதாக தான் இருக்கும் அதேபோல் அரசியல் சார்ந்த செய்திகளிலும் நடுவுநிலை தவறாது மக்களுக்கு கருத்தினை வழங்குவது என்போன்ற போட்டித்தேர்வு மாணவர்களுhttp://www.dinamani.comக்குத் தேவையான அன்றாட நடப்பு நிகழ்வுகள் குறிப்பு களுக்கு ஏற்ற சிறந்த நாளிதழ் என்றால் அது தினமணி என்று கூறினால் அது மிகையாகாது அதேபோல் இன்று விரல்நுனியில் உலகம் சுருங்கி விட்டபோதிலும் காலத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறது  அத்தகைய தினமணிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

அருளானந்தம்

 

4. வாசகர் மகேஷ்குமாரிடம் இருந்து வந்த மின்னஞ்சல்...

வாழ்த்துக்கள். நான் தினமணி பத்திரிக்கையை விரும்பி வாசிப்பதற்கு காரணம். உணர்சசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செய்திகளை செய்தியாய் சொல்லும் தன்மை. தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்த்தல். முக்கியமாக இடதுசாரி வலதுசாரி பார்வைகளை தவிர்த்து, நடுநிலையில் நிற்கும் தன்மை. இது தான் நமது நாட்டின் தற்போதைய தேவை. ஆனால் இந்த தகுதியுடன் இருக்கும் பார்வை எந்த பத்திரிகை, தொலைக்காட்ச்சி ஊடகத்திலும் பார்க்கவே முடிவதில்லை. தினமணி மட்டுமே இந்த தகுதிகளுடன் உள்ளது. இருக்கும் வர்த்தக, அரசியல் நெருக்கடிகளில் இந்த தகுதியை தயவு செய்து இழந்து விடாதீர்கள். இது கமெண்ட் அல்ல. தினமணிக்கு நான் எழுதும் கடிதம் எனவே எண்ணிக்கொள்ளுங்கள். 

மகேஷ் குமார்.
குவைத்.
சிவில் என்ஜினியர்.

]]>
My Journey with Dinamani, தினமணியும் நானும், வாசக அனுபந்தம், readers contribution, dinamani VS readers, www.dinamani.com https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/14/my-journey-with-dinamani---3-3000235.html
3000225 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘தினமணியும் நானும்’ வாசகர் பாலகிருபாகரன்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, September 14, 2018 01:13 PM +0530  

‘தினமணியும் நானும்’


நான் இலங்கையிலுள்ள முன்னணி தமிழ் பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்றான தினக்குரலில் சுமார் 20 வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளேன். இதில் 15 வருடங்களாக நாடாளுமன்ற செய்தியாளராகவும் உள்ளேன். அத்துடன் தினமணியின் நீண்டகால வாசகனாகவும் உள்ளேன். தினமணி 85 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி.
 
எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கு தினமணியும் ஒரு பிரதான காரணம், அதற்கு முதலில் பிரதம ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். இலங்கையில் உள்ள ஊடகவியலாளன் ஒருவனுக்கு தமிழ் நாட்டிலுள்ள  தினமணி எப்படி உதவியது என நீங்கள் நினைக்கலாம். நான் 20 வயதில் தினக்குரல் ஊடாக  பத்திரிகைத்துறையில் பயிற்சி பத்திரிகையாளராக காலடி எடுத்து வைத்த போது  அப்போது செய்தி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் இருந்த வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை நீ சிறந்த தொரு ஊடகவியலாளராக  வேண்டுமானால் செய்திகள் ,கட்டுரைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதிப்பழகிக் கொள், அவ்வாறு எப்படி எழுதுவதென்பதை நீ தெரிந்து கொள்ள  வேண்டுமானால் தினமணியில் வெளிவரும் செய்திகள் ,,கட்டுரைகளை தினமும் படி, என்பது தான்.

அன்றிலிருந்து இன்றுவரை நான் தினமணியை இணையமூடாக தினமும் படித்துவிடுவேன். [ஏனெனில் கொழும்பில் தினமணியை ஒரு சில இடங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்] அதிலும் ஆசிரியர் தலையங்கங்களை ஒரு நாளும் தவற விட்டது  கிடையாது.ஒரு சிறு பத்திக்குள் ஒரு பாரிய விடயத்தை ஆசிரியர் அலசியிருக்கும் விதம் அற்புதம் ,ஆச்சரியம். ஒரு நாட்டின்,.ஒரு இனத்தின் பிரச்சினைகளைக்கூட   இவ்வளவு சிறிய பத்திக்குள் காத்திரமாக கூறிவிட முடியுமென்பதை தினமணி ஆசிரியர் தலையங்கமூடாகவே நான் கற்றுக்கொண்டேன். அதிலும் இலங்கை தொடர்பாக  எழுதப்பட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கங்கள் இங்குள்ள நாம் கூட சிந்திக்காத ,வகையில் அமைந்திருப்பதை பார்த்து,படித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் பல அதனால்.  தினமணி ஆசிரியர் தலையங்கங்களை எமது பத்திரிகையில் நாம் பல தடைவைகள் நன்றி தினமணி என்ற குறிப்புடன் மறு பிரசுரம் செய்துள்ளோம்..

அடுத்ததாக தினமணியில் வெளிவரும் கட்டுரைகள் .வடிகட்டியெடுக்கப்பட்டுள்ளவையாகவே உள்ளன. எமது ஈழத்தமிழர் பிரச்சினைகளைக் கூட எமது எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள் எழுதுவதை,அலசுவதை விட ஆழம்மிக்க தாக தினமணி கட்டுரைகள் அலசி,ஆராய்வதை சொல்லியேயாக வேண்டும். அதனால் எமது பத்திரிகையை தினமணி கட்டுரைகள் பல தடைவைகள் அலங்கரித்துள்ளன.அடுத்ததாக தினமணியில்  அரசியல் பயில்வோம் எனும் பகுதி மிகவும் பெறுமதிமிக்கது.கண்டிப்பாக இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய பகுதி அது.

தற்போதைய போட்டிமிகு ஊடகத்துறையில்  நிமிடத்துக்கொரு பரபரப்பு செய்திகளை உண்மை ,பொய்களை அறியாது,தெரியாது வெளியிட்டு நாட்டையும் மக்களையும் குழப்புவோர் மத்தியில் தினமணி மிகவும் தள்ளி நிற்பது பாராட்டுக்குரியது.விளம்பர யுக்திகள்,வாசகர்களை கவரும் தந்திரமென அச்சு.இலத்திரனியல் ஊடகங்கள் தறிகெட்டு நடக்கும் இக்கால கட்டத்தில் தினமணி இவற்றுக்கு விதி விலக்காக உண்மை.நேர்மை,தெளிவு என்ற வழித்தடத்தில் பயணிப்பதனால் தினமணியின் ஓசை இன்னும் பல சந்ததிகளுக்கு கேட்கும்.

நன்றி
பாலசுப்ரமணியம் கிருபாகரன் 
பிரதி செய்தி ஆசிரியர்,
தினக்குரல்.
கொழும்பு.

படம்: சித்தரிப்பு.

]]>
My Journey with Dinamani, balasubramanyan kirubakaran from kozhumbu, கொழும்பு, பால கிருபாகரன், வாசக அனுபந்தம், தினமணியும் நானும் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/14/my-journey-with-dinamani--2-3000225.html
3000224 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘தினமணியும் நானும்’ - வாசகர் நடராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்! கார்த்திகா வாசுதேவன் Friday, September 14, 2018 01:05 PM +0530  

எனக்கும் தினமணிக்கும் உள்ள பந்தம் இன்று, நேற்றல்ல... மே 1976 நான் 

இந்தியன் எக்ஸ்பிரஸ் , தினமணி சென்னை அலுவலகத்தில் ஒரு அக்கௌன்டன்ட் ஆக எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் வளாகத்தில் நான் என் 25ஆம் வயதில்  பணியில் சேர்ந்த அன்று தொடங்கியது மறக்க முடியாத அந்த வசந்த ஆரம்பம் !
தினமணி ஒரு ஆலமரம்.... அதன் நிழலில் நான் கற்றுக் கொண்ட பாடமும் அனுபவமும் என்னை ஒரு குரு குல வாச மாணவனாக மாற்றியது அந்த குருகுலம்! கட்டுக்கோப்பான அலுவல் பணி... கணினி ஏதும் இல்லாத காலத்திலேயே கணினி வேகத்தில் நடந்த அலுவல் பணி ....இன்று நினைத்தாலும் எனக்கு ஒரு பிரமிப்பு !

எமெர்ஜென்சி கால விதி முறை .... பத்திரிகை தொழிலே முடங்கி அடங்கும் நேரத்திலும் "அடங்க மாட்டேன் நான்" என்று  அடக்குமுறைக்கு எதிராக துணிவுடன் பத்திரிகை தர்மத்தை காத்து இந்த நாட்டின் ஜனநாயக மலரை மீண்டும் மலர செய்த மாமனிதர் திரு RNG அவர் காட்டிய வழியில் நான் பணி  ஆற்றிய  அந்த நேரம் என் வாழ்வில் பொன்னான நேரம்.

இரண்டு வருட தினமணி அலுவல் பணியில் நான் சந்தித்த சாதனையாளர் பலர் அங்கே! அவருள் , தினமணி ஆசிரியர் திரு  A.N .சிவராமன் {ANS}

தினமணி கதிர் ஆசிரியர் திரு. T.K.தியாகராஜன் {TKT},ROTARY PRESS, திரு .D.S .ராகவன், NewsPrint Manager திரு சுந்தரம், உதவி மேனேஜர் திரு .H.சிவகுமார், புகைப்பட நிபுணர் Mr.Harry Miller என்று பல பிரபலங்களை சொல்லலாம். கணக்கு பிரிவு பணியை மிகவும் சீரிய முறையில் கட்டுக் கோப்பாக நடத்தி சென்ற திரு.ராஜ் நாராயண், திரு குப்புசாமி ஐயர் , திரு R.சேதுராமன்.

இவர்களுடன் நியூஸ்ப்ரின்ட் வேஸ்ட் என்னும் இழப்பை மிகத் துல்லிய முறையில் கணக்கிட்டு கண்காணித்த திரு லோபெஸ் என்னும் அலுவலரை நான் மறக்க முடியவில்லை. 
மேலும் கணக்கு பிரிவில் பணியாற்றிய  வெங்கடராமன், கிருஷ்ணன், நாராயணன் சுந்தரேசன், சுந்தரம், ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், அமீனுதீன், ராமநாதன் போன்ற சிலர் இன்னும் என் நினைவில் நிற்கிறார்கள். திரு  L சேஷன், தினமணி கதிர் இதழின் cost price and sale price மதிப்பீடு செய்யும் பணியில் திறமையுடன் திகழ்ந்த திருமதி K.H.லலிதா என்னும் என் சக அலுவலரையும்  இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் .

அந்த கால கட்டத்தில்  திரு R.ராமகிருஷ்ணன், எக்ஸ்பிரஸ், தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் குழுமம் பத்திரிகை அனைத்துக்கும் "RK " என்னும் ஒரு மந்திர சொல்லாக இருந்தார் என்பது அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை! தொழிற்சங்க நல்லிணக்கத்துடன் தொழிலாளர் ஆசிரியர் என்னும் சீரிய பணியை திறம்பட செய்து வந்த திரு. தேவராஜு , மற்றும் டைம் கீப்பர் திரு கோவிந்தசாமி இவர்களின் அயராத பணித்திறன் கண்டு வியந்து இருக்கிறேன் நான்! 

1976ல்  முடிவடைந்த என் தினமணி தொடர்பு,  39 ஆண்டுக்குப் பிறகு 2015ல் கவிதைமணி வாசகர் கவிதை வாயிலாக மீண்டும் அரும்பி மலர்ந்து இன்று வரை மணம் வீசுவது பார்த்து என் இதயம் இசைக்குது ஒரு இனிய ராகம் தினமும்! 

 'தாய் நாடு தாண்டி  அயல் நாட்டில் பணி புரிந்து மீண்டும் 

தன்  நாடு திரும்பி அன்னையின் மடியில் புது உலகம் 

காணும் ஒரு " குழந்தை" போலவே   என்னை மாற்றி  

விட்டது வாசகர் கவிதை, கவிதைமணி !

அகவை 85 காணும் தினமணி தொடர வேண்டும்

அதன் பணி , ஆண்டு 100 தாண்டியும் !

அகவை 69ல்  அடி எடுத்து வைக்கப் போகும் நான் 

சொல்லவேண்டும் நன்றி தினமணிக்கும்,

என் கவிதைக்கு ஒரு முகவரி தந்த கவிதைமணி 

வாசகர் கவிதைக்கும் !'


K.Natarajan

]]>
தினமணியும் நானும், வாசக அனுபந்தம், தினமணி வாசகர் நடராஜன், dinamani, my journey with dinamani, readers engagement with dinamani, dinamani birthday https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/14/my-journey-with-dinamani-1-3000224.html
2998321 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘தினமணியும் நானும்’ - தினமணியுடனான உங்களது அனுபவங்களைப் பகிர ஒரு வாய்ப்பு! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, September 11, 2018 03:28 PM +0530  

வாசக அனுபந்தம்

தினமணி இன்று 85 வது பிறந்தநாள். 1934 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காலம் தொட்டு தினமணி கடந்து வந்த பாதை மிக அற்புதமானது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கிய தினமணியின் பயணம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தில் அதன் பூரணத்துவத்தை எய்தியது எனலாம். அதிகாரத்திற்கு எதிரான அத்தனை குரல்களும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட அந்நாட்களில் தினமணி அதைக் கண்டு அஞ்சியிருக்கவில்லை. தனது பத்திரிகைச் சுதந்திரத்தை கைவிடாது அன்று தமிழகத்தின் கடைக்கோடி வாசகருக்கும் நாட்டின் உண்மையான நிலையைப் பிரகடனப் படுத்தி தனது தீரத்தை வெளிக்காட்டியதை சரித்திரம் மறக்காது.

தலைமுறைகள் தாண்டியும் மாளாத பொலிவுடன் காலத்திற்கேற்ப தனது வடிவில் மட்டுமே மாற்றங்களை ஏற்றுக் கொண்டு பீடு நடை போடும் தினமணிக்கு அன்றும் இன்றும் என்றென்றுமாக நிரந்தர வாசகர்கள் உண்டு.

பலமுறை நேரிலும், தொலைபேசியிலுமாக தினமணியுடனான தங்களது வாசக பந்தத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளத் தவறியது இல்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. இன்று 85 வது பிறந்தநாள் கொண்டாடும் தினமணியுடனான உங்களது பயணத்தையும் மன நெருக்கத்தை சுவையான அனுபவங்களாக நீங்கள் எங்களுடன் dinamani.readers@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாம். பகிரும் வாசகர்கள் அனைவரது பொன்னான அனுபவங்களையும் தினமணி இணையதளத்தில் வெளியிடுவதில் தினமணி பெருமை கொள்கிறது.

‘தினமணியும் நானும்’ பகுதிக்கு அனுபவங்களை அனுப்பும் வாசகர்கள் மேலே உள்ள முகப்புப் புகைப்படத்தை போலவே உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமாக தினமணியுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து அனுப்பினால் உங்கள் அனுபவங்களுக்கு மேலும் சுவை கூடும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : dinamani.readers@gmail.com

]]>
தினமணியும் நானும், தினமணி வாசக அனுபந்தம், me with my dinamani, journey with dinamani, my dinamani, dinamani readers contribution https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/11/my-journey--with-dinamani-readers-contribution-2998321.html
2998306 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் உங்கள் தினமணிக்கு இன்று 85 வது பிறந்தநாள்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, September 11, 2018 02:31 PM +0530  

ஹேப்பி பர்த்டே தினமணி!

தினமணி, இந்தியாவில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணி தமிழ் நாளிதழ். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம், நாகபட்டிணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் தினமணியை வெளியிடுகிறது. (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் மலையாளம் வாரிகா (மலையாளம்) பத்திரிகையையும் வெளியிட்டு வருகிறது.

தினமணி முதல் இதழ்...

1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

தினமணி கதிர்...

தினமணி கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் பல்சுவை இதழ். இதில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெறும். ஆரம்பத்தில் தினமணி இதழுடன் சிறப்புப் பக்கமாக வெளிவந்து கொண்டிருந்த தினமணி தனி வாரஇதழ் வடிவத்தில் தற்போது வெளியாகி வருகிறது.

சிறுவர்மணி...

சிறுவர்களுக்கான பல்சுவை இதழாக சிறுவர்மணி இதழ் வாரம்தோறும் சனிக்கிழமையன்று தினமணி இலவச இணைப்பாக வெளியாகிறது.

தினமணியின் சிறப்புப் பக்கங்கள்...

இவை தவிர தினமணியின் சிறப்பு இலவசப் பக்கங்களாக செவ்வாய் தோறும் இளைஞர் மணி, புதன் தோறும் இளைஞர் மணி, வெள்ளி தோறும் வெள்ளிமணி, ஞாயிறு தோறும் கொண்டாட்டம் உள்ளிட்டவை வெளியாகின்றன.

தினமணி ஆசிரியர்கள்...

"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் இயங்கும் தினமணி நாளிதழின் பெருமைக்குரிய ஆசிரியர்களாக இதுவரை இருந்தவர்கள்...

 • டி. எஸ். சொக்கலிங்கம்
 • ஏ.என்.சிவராமன்
 • ஐராவதம் மகாதேவன்
 • கி. கஸ்தூரிரங்கன்
 • மாலன்
 • இராம.திரு.சம்பந்தம்
 • கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)

இணையவழிப்பயணம்...

தினமணி நாளிதழ் தற்போது காலத்திற்கேற்ற மாற்றமாக இணைய தளத்திலும் வெளிவருகிறது. அதில் தினமணி நாளிதழை மின்னிதழ் வடிவிலும், இணையதளச் செய்திப்பக்கங்கள் வடிவிலும் வாசகர்கள் வாசித்து மகிழலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.dinamani.com

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் பிற மொழி அதிகாரப்பூர்வ இணையதளங்கள்.

http://www.dinamani.com (தமிழ்)
http://www.newindianexpress.com/
http://www.indulgexpress.com/
http://www.cinemaexpress.com/
http://www.edexlive.com/
http://www.kannadaprabha.com (கன்னடம்)
http://www.samakalikamalayalam.com/
http://www.eventxpress.com/

டிஸ்க்கி:

தினமணியை வாழ்த்த விரும்பும் அதன் நெடுநாள் வாசகர்கள் #Happybirthdaydinamani என்ற ஹேஷ்டேக்கில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம்.

]]>
dinamani, ஹேப்பி பெர்த்டே தினமணி!, தினமணிக்குப் பிறந்தநாள், இன்று பிறந்தது தினமணி, HAPPY BIRTHDAY DINAMANI, www.dinamani.com, 85 வது பிறந்தநாள் https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/11/happy-birthday-dinamani-2998306.html
2998280 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று’ சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்கான தேவை இன்றும் அப்படியே! பரணி Tuesday, September 11, 2018 11:18 AM +0530  

1893 ஆம் ஆண்டு, அமெரிக்கா... சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இப்போது 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.

விவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையிலிருந்து மதத்தின் தேவை பற்றிய அவரது கூற்றை இப்போது உங்களுக்குத் அறியத் தருகிறோம்...

நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரச்சாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.

இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக்  கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.

இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரச்சாரம் செய்பவரை ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்கு வந்தேன். கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து பிற மதத்தினருக்காக உதவி கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

 

Image Courtsy: 123RF.com

]]>
swami vivekandha's chicago speech, religion is not an urgent need for india, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, மதம் இந்தியாவின் அவசரத் தேவை இல்லை https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/11/religion-is--not-an-urgent-need-for-india-swamy-vivekananda-in-his-chicago-speech-2998280.html
2995443 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘சென்னையின் சமையல்ராணி’ மெகா சமையல் போட்டி ஹைலைட்ஸ்! கார்த்திகா வாசுதேவன் Thursday, September 6, 2018 10:55 PM +0530  

தினமணி இணையதளம் சார்பாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சென்னையின் சமையல் ராணி மெகா சமையல் போட்டி குறித்து தினமணி வாசகர்களிடம் ஒரு பகிரல்.

முன்னதாக அறிவித்தபடி போட்டிக்கான பதிவு காலை 8.30 மணி முதல் தொடங்கியது. தினமணி வாசகர்களுடன் எம் ஓ பி கல்லூரி மாணவிகள் வாயிலாக போட்டி குறித்த விவரங்களை அறிந்து மாணவிகளின் அம்மாக்களில் பலரும் கூடப் பெருவாரியாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் குலுக்கலில் தங்களுக்குக் கிடைத்த சீட்டில் குறிக்கப்பட்டிருந்த மெனுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமைக்கத் தயாராக அவரவருக்கான இடங்களில் நின்றனர்.

முதலில் 11.30 மணியளவில் ஸ்டார்ட்டர் மெனு தொடங்கியது.

சமையல் போட்டியில் பங்கேற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் போட்டிக்கான வளாகத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. சமையல் போட்டிக்குத் தேவையான இண்டக்‌ஷன் அடுப்பு வசதிகள், அரைப்பதற்கான மிக்ஸிகள், டிஸ்ப்ளே ட்ரேக்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் அனைத்தும் அங்கேயே ஒருங்கமைக்கப் பட்டிருந்தன.

அது தவிர போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கூடுதலாகத் தாங்களே கொண்டு வந்தும் பயன்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் பழரசங்கள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட்டர் பிரிவு 11.30 க்குத் தொடங்கி சரியாக 12.30 மணியளவில் முடிவுற்றது. ஸ்டார்ட்டர் பிரிவு உணவுகளை உணவியல் வல்லுனரான மீனாக்‌ஷி பெட்டுக்கோலா நடுவராகப் பங்கேற்று தேர்ந்தெடுத்தார். 

ஸ்டார்ட்டர் பிரிவில்... முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்மா மூவரும் பெற்றனர்.

அடுத்ததாக மெயின் கோர்ஸ் மெனு சிறு உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணியளவில் துவக்கப்பட்டது. சரியாக 1 மணி நேரத்தில் போட்டியாளர்கள் மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சாஃப்ரான் புலாவ், நவதானிய பிரியாணி, கத்தரிக்காய் தீயல், ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதம் விதமான ரய்தாக்கள் என்று சமைத்து அசத்தியிருந்தனர். சமையல் வாசனை உணவு இடைவேளையின் பின்னும் கூட மூக்கைத் துளைத்துப் மீண்டும் பசியுணர்வைத் தூண்டும் விதமாக இருந்தது.

மெயின் கோர்ஸ் மெனுவில் பரிசுக்குரியவர்களை நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் நடுவராக வந்திருந்து தேர்ந்தெடுத்தார்.

மெயின் கோர்ஸ் பிரிவில்... முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா. மூவரும் பெற்றனர்.

அடுத்ததாக 3.30 மணியளவில் டெஸ்ஸர்ட் மெனு துவங்கியது. இப்பிரிவில் பரிசுக்குரியவர்களை அறுசுவை அரசு நடராஜன் அவர்களின் புதல்வி ரேவதி தேர்ந்தெடுத்தார்.

டெஸ்ஸர்ட் பிரிவில் எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா மூவரும் பெற்றனர்.

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.

காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான முழு நாள் நிகழ்வாக நடந்த இந்த மெகா சமையல் போட்டியின் பிரதான நோக்கம் நம் சென்னைப் பெண்களின் சமையல் திறனைப் பற்றி மீண்டுமொரு முறை ஊருக்குப் பறைசாற்றும் விதத்தில் மிக இனிதாக நடந்தேறியது.
 

]]>
மெகா சமையல் போட்டி, சென்னையின் சமையல் ராணி வெற்றியாளர்கள், தினமணி இணையதளம் சமையல் போட்டி, dinamani.com's mega cooking contest, chennaiyin samaiyal rani 2018, Dinamani.com mega events https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/06/dinamanicoms-chennaiyin-samaiyal-rani-mega-cooking-event-2018-highlights-2995443.html
2994723 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அம்மியில் அரைத்து சாப்பிட்ட வரை ஆரோக்கியமாக இருந்தோம்! - ஸ்ரீதேவி குமரேசன் DIN Wednesday, September 5, 2018 03:38 PM +0530 அம்பத்தூர் ஓ.டி ரயில்வே பாலம் அருகில் போக்குவரத்து பேரிரைச்சல் நிறைந்த அந்தப் பகுதியில் தன்னந்தனியாக சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய குடிசையில் அம்மி கல், உரல் செய்து விற்பனை செய்வதையும், அதனுள்ளே இருந்து எழும் உளிக்கல் இடும் ஓசையையும் அந்தப் பகுதியைக் கடந்து செல்பவர்கள் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. நமது கவனத்தை ஈர்த்த அந்த கல் உரல் செய்பவரான லட்சுமி குடும்பத்தாரை சந்தித்தோம்:

'கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து கடை போட்டோம். நல்ல வியாபாரம் ஆனது. அதனால இங்கேயே குடிசைப் போட்டு தங்கிவிட்டோம். எங்களுக்கு பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் அருகில் உள்ள திருபனம்பூர். எங்களுடைய பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே அம்மி, உரல் செய்வதுதான் தொழில். பரம்பரை தொழிலானதால், எங்களது அப்பாவிற்கு பிறகு நாங்களும் இந்த தொழிலையே கற்றுக் கொண்டு செய்து வருகிறோம். இந்த தொழிலைத் தவிர எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆம்பள, பொம்பள என எல்லாருமே அம்மி, உரல்ன்னு எல்லாமே செய்வோம்.

அந்தக் காலத்தில் எங்க ஆளுங்க, வீட்டில உள்ள ஆம்பள புள்ளைக்கு 5 வயசு ஆனதும் அம்மியும், உரலும் செய்ய கற்றுக் கொள்ள ஸ்கூல் மாதிரி கொண்டாந்து விட்டுடுவாங்க. முதல் படிப்பு பொத்தல் போடுறதல தொடங்கி படிப்படியா போய் கடைசியா அறுவ போடச் சொல்லித் தருவாங்க. ஒரு புள்ள முழுசா இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ள குறைஞ்சது 16 வருஷம் ஆகும்.

அம்மியும் - உரலும் சக்தியும், சிவனும் மாதிரி வீட்டோட சாமி. அதனாலதான் அந்தக் காலத்தில் அம்மியும், உரலும் இல்லாத வீடே இருக்காது. புருஷனும், பொண்டாட்டியும் அம்மி கல்லும், ஆட்டு உரலும் மாதிரி நீண்ட காலத்துக்கு நல்ல ஆயுளோட உறுதியா சேர்ந்து வாழணும்தான் கல்யாணத்துல அம்மியும், உரலையும் வைப்பாங்க.

எங்கள் பாட்டன் காலத்தில் 25 முதல் 35 ரூபாய்க்கு விற்ற அம்மி, உரல். என் அப்பா காலத்தில் 100-150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போதெல்லாம் எங்களுக்கு ஓய்வில்லாமல் வேலை இருந்து கொண்டே இருக்கும். காஞ்சிபுரத்தை ஒட்டிய சுற்று கிராமங்களான வாலாஜா, சங்கராபுரம் போன்ற கிராமங்களில் உள்ள மலைகளுக்குச் சென்று இளவட்ட ஆம்பளைங்க கல் அறுத்து வந்து போடுவாங்க, மீதி உள்ள ஆம்பள, பொம்பள எல்லாம் சேர்ந்து அம்மி, உரல் எல்லாம் செய்வோம். முதல் போட வேண்டிய அவசியமில்லாததால் நல்ல லாபம் கிடைத்தது.

இப்போது நாங்க நேரடியாக கல் அறுக்க முடியாது, அரசாங்கம் தடை விதிச்சாட்டாங்க. கான்ட்ராக்ட்காரங்கதான் அறுத்து தரணும். அதனால கல்லுக்கு பணம் கட்டி வாங்கி வர வேண்டியதா இருக்குது. மேலும், பெட்ரோல் விலை உயர்வு, வண்டி கூலி அது இதுன்னு இப்போ முதலே கணிசமாக ஒரு தொகை வந்துடுது. இதற்கு மேலே செய்கூலியை சேர்த்து இப்போ அம்மி 600 ரூபாய்க்கும், உரல் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம். நியாயமா நாங்க அம்மியை 2000த்துக்கும், உரலை 3,000க்கும் விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனா, அந்த விலைக்கு மிக்ஸி, கிரைண்டர்ன்னு கிடைக்கிறதால 2000, 3000 கொடுத்து அம்மியும், உரலும் வாங்க யாரு இருக்கா? அந்த மவுசு எல்லாம் இப்போ மாறிப் போச்சு.

ஊர்லயும் எங்க ஜனங்க குறைஞ்சு போய்ட்டாங்க. இந்தத் தொழில விட்டுட்டு வெவ்வேறு தொழிலுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. எங்க பேரப்பிள்ளைங்க காலத்துல இந்தத் தொழில் இல்லாமயே போய்டும்ன்னுதான் நினைக்கிறேன். இப்போ, எங்க பையன் இந்த வேலையை எடுத்துச் செய்றான். நாங்க அவனுக்கு ஒத்தாசையா இருக்கிறோம். மருமக, பேர குழந்தைகள்ன்னு இந்த குடிசையிலதான் தங்கியிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, அம்மியில மசாலா அரைச்சு குழம்பு வெக்கறதுக்கும், ஆட்டு உரலில் மாவு அரைத்து இட்லி சுட்டு சாப்பிடுவதிலும் உள்ள ருசியே தனிதாங்க. அதெல்லாம் இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரியாமயே போய்டுச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

அம்மியிலும், உரலிலும் அரைத்து சமைத்து சாப்பிட்ட வரை ஜனங்களும் ஆரோக்கியமாதான் இருந்தாங்க. அதெல்லாம் இப்போ மறக்கடிக்கப்பட்டதால, சுகரு, பீபின்னு கண்ட நோயுங்க வந்து ஆட்டிப் படைக்குது. இப்பல்லாம், கல்யாணம்- காட்சி, தீபாவளி பண்டிகைன்னு வந்தா தான் அம்மி, உரலைத் தேடி வர்றாங்க. ஒருநாளைக்கு ஒரு அம்மி, உரல் விற்பதே பெரிய விஷயமா இருக்கு. அதனால, இப்போ தொங்கு ஊஞ்சல் செய்யவும் பழக்கிக் கொண்டு வர்றோம்.

பெரிய கடைகள், ரோட்டோர கடைகள்ன்னு நிறைய இடத்துல நாமக்கல், சேலம் பகுதியில மிஷ்ன்ல செய்ற சின்ன உரலை வாங்கிவந்து விக்கிறாங்க. சரி நாங்களும் வாங்கி வந்து விற்கலாம்ன்னு போய்பார்த்தோம். அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரிந்தது. அந்த கல்லு எல்லாம் உறுதியான மலைக்கல்லுல செய்யலங்க. பாதி கல்லு மாவுக் கல்லுப்போட்டு செய்றாங்க. அது வாங்கி வந்து உபயோகித்தோம்ன்னா, சீக்கிரத்தில் உடைஞ்சு போய்டும். அதுவுமில்லாம, அந்த கல்லுல மசாலா இடிக்கும்போது சிறு மண் நறநறன்னு வந்துக்கிட்டே இருக்கும். இதையெல்லாம் பார்த்துட்டு எங்களுக்கு வாங்க புடிக்காம திரும்பி வந்துட்டோம்.

இப்போது நாங்களே நல்ல மலைக்கல்லா பார்த்து வாங்கி வந்து சின்ன உரல் செய்து விற்க ஆரம்பிச்சுட்டோம். பெரிய வருமானம் இல்லனாலும், ஏதோ, எங்க குடும்பத்த நடத்துற அளவுக்கு வருமானம் கிடைக்குது அதுவே போதும்' என்றார்.

]]>
Ammi kal, aatural, அம்மிக்கல், உரல், அம்மி https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/sep/05/அம்மியி