Dinamani - வணிகம் - https://www.dinamani.com/trade/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3389731 வணிகம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க அனுமதி DIN DIN Friday, March 27, 2020 06:40 PM +0530  

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, பிஎஸ் 4 ரக வாகனங்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020 மாா்ச் 31-க்குப் பிறகு இந்தியாவில் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் பத்து நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

]]>
பிஎஸ் 4 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/w600X390/20200317070957_Bajaj-BS4-bikes.jpg https://www.dinamani.com/trade/2020/mar/27/supreme-court-gives-carmakers-10-day-window-after-lockdown-to-sell-bs-4-stock-3389731.html
3385461 வணிகம் ஒரு கிட்னியுடன் வாழும் 2 வயது குழந்தை: அவசர உதவியின்றி புற்று நோயால் உயிரிழக்கும் அபாயம்.. உதவ முன்வருவீர் DIN DIN Friday, March 20, 2020 04:48 PM +0530  

சில மாதங்களுக்கு முன்பு வரை, எங்களது 2 வயது மகன் ஹரிஷ் தான், எங்களது குடும்பத்தின் ஒளி விளக்கும் வாழ்க்கையுமாக இருந்தான். அவனிடம் எந்த சுணக்கமான நடவடிக்கையும் காணப்படவில்லை. அவன் மொத்த இல்லத்தையும் தத்தி தத்தி சுற்றியும், பேசியும், சிரித்தும் மழலைக்கே உரித்தான தந்திரங்களையும் செய்து வந்தான். 

ஆனால் ஒரு நாள், இவையனைத்தும் நின்றுபோயின. அவன் திடீரென நோயுற்ற போது, எங்களது வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. அவனது வயிறு வீங்க ஆரம்பித்து அவனுக்குக் காய்ச்சல் வந்தது. அது சாதாரணமானதல்ல. அவனது மொத்த உடலும் கொதிக்க ஆரம்பித்தது. நாங்கள் பயந்து போய் அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். 

நாங்கள் அவனை மருத்துவரிடம் எடுத்துச் சென்றபோது, அவர் சில பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொன்னார். அப்பரிசோதனை முடிவுகள் எங்களது வாழ்க்கையை மிகவும் மோசமானதாக என்றென்றும் மாற்றப்போகிறது என்பதை நாங்கள் துளியும் அறிந்திருக்கவில்லை. சில தூக்கமற்ற இரவுகளுக்கும், கடவுளிடம் செய்த எண்ணற்ற பிரார்த்தனைகளுக்கும் பிறகு, எங்களது மகனுக்கு நியூரோப்ளாஸ்டோமா என்ற ஒரு வகை தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குக் கூறப்பட்டது. நாங்கள் உடைந்து போனோம். 
 
அதற்குப் பிறகு உடனடியாக ஹரிஷ் -க்கான சிகிச்சை தொடங்கப்பட்டது. கடுமையான கீமோதெரபி கொடுத்த போதும், அவனது ஆரோக்கியம் தொடர்ந்து கவலைக்கிடமானது. அவனது நோய் கண்டறியப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு, அவனது ஒரு கிட்னி சதைக்கட்டிய காரணமாக எடுக்கப்பட்டது. எங்களது இதயமே உடைந்து போனது. 

எங்களது குழந்தை அவ்வாறான ஒரு மோசமான நிலையிலிருப்பதை எங்களால் வார்த்தைகளால் விளக்க இயலாது. தற்போது அவனுக்கு வலியையும் வேதனையையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது. அவன் விளையாடுவதுமில்லை சிரிப்பதுமில்லை. அவன் எங்களுடன் பேசுவது கூட இல்லை. நாங்கள் அவனது இனிமையான குரலைக் கேட்டும், குறும்புகளைப் பார்த்தும் நீண்ட நாட்களாகி விட்டது. அவன் மிகவும் பலவீனமாகி விட்டான். 

மருத்துவர் அல்லது செவிலியரின் பார்வை கூட அவனை ஏக்கத்துக்கு ஆட்பட வைக்கிறது. ஊசியால் குத்துவதும் பிடுங்குவதுமான செயலால் அவன் பயந்து போயுள்ளான்.  கடவுளின் கருணையாலும் அன்பாலும் எனது குடும்பத்தாலும், நண்பர்களாலும், நாங்கள் எப்படியோ எங்களது மகனின் ஆரம்பக் கட்ட சிகிச்சைக்கான நிதியைச் சமாளித்து விட்டோம். ஆனால் தற்போது அவனுக்கு இரண்டு ஆட்டோலோகோஸ் ஸ்டெம் செல் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு ரூ.10 இலட்சம் ($13,952) செலவாகும். அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய எங்களுக்கு எந்த வழியும் இல்லை. 

எனது கணவர் ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் அவரது சிறு வருமானத்தில் எங்களது செலவுகளை சமாளித்து வருகிறோம். அவர், சில ரூபாய் நோட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என்பதற்காகப் பகலில் நிறுவனத்திலும், இரவில் வேறு பணிகளும் செய்து வருகிறார். ஆனால் அவையனைத்தும் மருத்துவச் செலவுக்கே சென்று விடுகின்றது.  

கடந்து போகும் ஒவ்வொரு நாளும், எனது மகனின் உடல் நிலை மோசமாகி வருகிறது. அவன் துணிச்சலுடன் தனது வாழ்க்கைக்காகப் போராடி வருகிறான். ஆனால் தங்களது உதவியின்றி அவன் தனது உயிரை இழப்பார். நான் எனது மகனைப் புற்றுநோய் என்ற கோரப்பிடியிலிருந்து காப்பாற்றி, அவனுக்கு ஒரு ஆரோக்கியமான மகிழ்வான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும்.   
 
தயவுகூர்ந்து எங்களுக்கு உதவுங்கள். இது, தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்கான ஒரு தாயின் ஆற்றொணா கோரிக்கையாகும். தயவு கூர்ந்து தானமளியுங்கள். புற்று நோய்க்கான நிதி சேகரிப்பு என்பது மருத்துவச் செலவுத் தொகைக்கான உதவி புரியும் ஒரு வழியாகும். கெட்டோ என்பது புற்று நோய், இதய நோய் மற்றும் பல இதர சிகிச்சைகளுக்கான பொதுமக்கள் நிதியளிப்புக்கான ஒரு மாபெரும் வலைத்தளமாகும். 

பொறுப்பு துறப்பு - "இதில் உள்ள விபரங்கள் யாவும், கெட்டோ என்பவரால் வழங்கப்பட்டது. இந்த விளம்பர கூறுகளை உருவாக்குவதில் TNIE ன் எந்த பத்திரிக்கையாளர்களும் ஈடுபடுத்தப்படவில்லை"

]]>
cancer, kidney problem https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X390/1.jpg https://www.dinamani.com/trade/2020/mar/20/2-year-old-child-living-with-a-kidney-at-high-risk-of-cancer-without-emergency-assistance-3385461.html
3384733 வணிகம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு DIN DIN Thursday, March 19, 2020 02:51 PM +0530  

ஸியோமி தயாரிப்புகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆகியவை மார்ச் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ஸியோமி தயாரிப்புகளான ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை கடந்த மார்ச் 12ம் தேதி அறிமுகமாகின. நோட் 8 சீரிஸ் போன்களைப் போலவே நோட் 9 சீரிஸ் போன்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இதன் தொடர்ச்சியாக ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆகியவை மார்ச் 31ம் தேதி வெளியாகும் என நிறுவனத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ரெட்மி நோட் 10 விவரக்குறிப்புகள்:

6.5 அங்குலம் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர்,  20 எம்.பி + இரண்டாம் நிலை 12 எம்.பி + மூன்றாம் நிலை 5 எம்.பி கேமராவை கொண்டுள்ளது.

டிரிபிள் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 40W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், அத்துடன் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரி உள்ளது. 

8 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரவுள்ளது. விலை தோராயமாக ரூ. 32,700.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்:

6.5 இன்ச் அளவில் 90 ஹெர்ட்ஸ் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 SoC, 4,500mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ரெட்மி போன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 

விலையைப் பொறுத்தவரை, ரெட்மி 10 ப்ரோ( 12 ஜிபி ரேம் + 128 ஜிபி) குறைந்தபட்சம் ரூ38,900 எனவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.42,000, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.46,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/note_10.JPG https://www.dinamani.com/trade/2020/mar/19/redmi-note-10-series-smartphone-release-date-announced-3384733.html
3384721 வணிகம் டெலிகிராம் செயலியில் புதிய வசதி அறிமுகம் DIN DIN Thursday, March 19, 2020 01:48 PM +0530  

பிரபல தகவல் தொடர்பு செயலியான டெலிகிராமில் 'டிஸ்கஷன் பட்டன்' என்ற வசதி அறிமுகமாகிறது. 

வாட்ஸ்ஆப், மெசஞ்சர் போன்று டெலிகிராமும் தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு செயலியாக இருக்கிறது. இதில் தனி ஒருவருக்கோ அல்லது குழுவிலோ செய்திகளை அனுப்ப முடியும். இந்நிலையில், டெலிகிராம் செயலியில் ஒரு புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, டெலிகிராம் 'சாட்' ஆப்ஷனில் 'டிஸ்கஷன் பட்டன்' என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, நிறுவனங்கள் அல்லது அதிகாரப்பூர்வ \டெலிகிராம் கணக்கில் குரூப் அட்மின் மட்டுமே செய்திகளை பதிவிட முடியும். குரூப்பில் உள்ளவர்கள் செய்திகளை பதிவிட முடியாது. செட்டிங்ஸ்-இல் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கும் வசதி உள்ளது. 

இந்நிலையில், குரூப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர் தனது கருத்தை தெரிவிக்க விரும்பினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஸ்கஷன் பட்டனை பயன்படுத்தி சேர்க்க முடியும். இந்த அம்சம் குழுவில் உள்ளவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

]]>
Telegram https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/telegram-passport-1-1080x608.jpg https://www.dinamani.com/trade/2020/mar/19/telegram-introduces-a-discussion-button-to-channels-3384721.html
3384707 வணிகம் ஆப்பிள் ஐபேட் புரோ மற்றும் மேக்புக் ஏர் விரைவில் அறிமுகம் DIN DIN Thursday, March 19, 2020 12:56 PM +0530  

ஆப்பிளின் அடுத்த புதுவரவாக ஐபேட் புரோ மற்றும் மேக்புக் ஏர் ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

11 அங்குல ஐபேட் புரோ (வைஃபை மாடல்) ரூ 71,900 ஆகவும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.85,900 முதல் தொடங்கும். 12.9 இன்ச் ஐபேட் புரோ வைஃபை மாடல் ரூ.89,900 ஆகவும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.1,03,900 ஆகவும் இருக்கும். 

இருமடங்கு வேகமான செயல்திறன், ப்ரோ கேமராக்கள், ப்ரோ ஆடியோ, லிடார் ஸ்கேனர் மற்றும் ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விடியோ வசதி உள்ளது. 

அதேபோன்று ஐபேட் புரோவுக்கான நவீன கீ போர்டு, 11 அங்குல ஐபேட் புரோ ரூ.27,900 மற்றும் 12.9 அங்குல ஐபேட் புரோவுக்கு ரூ.31,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபேட் புரோவில் உள்ள அமைப்பு சிறந்த புகைப்படங்களையும், 4கே வீடியோவையும் வழங்குகிறது. இது  12 எம்பி வைட் கேமரா மற்றும் 10 எம்பி அல்ட்ரா வைட் கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும், ஆப்பிள் மேக்புக் ஏர் நிறுவனம் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.92,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 13 அங்குல ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் கீ போர்டை கொண்டுள்ளது. 

]]>
apple https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/19/w600X390/d0a2514553209ddfe119322a925813a6.jpg https://www.dinamani.com/trade/2020/mar/19/apple-ipad-pro-and-macbook-air-to-be-introduced-soon-3384707.html
3384159 வணிகம் சாம்சங் கேலக்ஸி எம் 21 மார்ச் 23ல் அறிமுகமாகிறது DIN DIN Wednesday, March 18, 2020 06:05 PM +0530  

சாம்சங் கேலக்ஸி எம் 21 இந்தியாவில் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம் 20க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 21 அறிமுகமாக இருக்கிறது. இது முந்தைய மாடலை விட பல நவீன அம்சங்களுடன் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 21, டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 10 தளம், அதிகபட்சமாக 6 ஜிபி வரை ரேம், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 21 விலை ரூ. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 12,999 ரூபாய். 6 ஜிபி ரேம் + 128 ஜிபியின் விலை குறித்து தகவல் இல்லை. எனினும் இரண்டிற்குமே அதிகாரப்பூர்வ விலை வெளியாகவில்லை. 

அமேசானில் மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 21 விவரக்குறிப்புகள்: 

டூயல் சிம் (நானோ) 

ஆண்ட்ராய்டு 10 தளம்

6.4 இன்ச் முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC

48 எம்.பி முதன்மை சென்சார் கேமரா + 8 எம்.பி + 5 எம்.பி என மூன்று பின்புற கேமரா அமைப்பு

முன்பக்கத்தில் 20 எம்.பி கேமரா 

ஃபேஸ் அன்லாக் 

128 ஜிபி வரை உள்சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை

பின்புறத்தில் கைரேகை சென்சார் 

15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6,000 எம்ஏஎச் பேட்டரி

 

]]>
Samsung https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/gsmarena_001.jpg https://www.dinamani.com/trade/2020/mar/18/samsung-galaxy-m21-3384159.html
3383525 வணிகம் மார்ச் 24ல் ரெட்மி  நோட் 9 ப்ரோவின் அடுத்த விற்பனை DIN DIN Tuesday, March 17, 2020 05:43 PM +0530  

ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகின. 

இதையடுத்து, ரெட்மி  நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் எம்.ஐ டாட் காம் தளத்திலும், அமேசான் தளத்திலும் இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தன. விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த விற்பனை மார்ச் 24ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்-ம் முதல்முறையாக  மார்ச் 26ம் தேதியும் ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது. 

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகின்றன. இதில்  ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகிய வேரியண்டுகளிலும், ரெட்மி நோட் 9 புரோ  4 ஜிபி ரேம் + 64 ஜிபி,  6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டுகளிலும் அறிமுகமாகியுள்ளது.

இரண்டுமே நீல (Aurora Blue), வெள்ளை(Glacier White) மற்றும் கருப்பு (Interstellar Black) நிறங்களில் வருகிறது.

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் விலை

6 ஜிபி ரேம் + 64 ஜிபி- ரூ.14,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி- ரூ.16,999

8 ஜிபி ரேம் + 128 ஜிபி - ரூ.18,999-

ரெட்மி நோட் 9 புரோ விலை

4 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ.12,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி-  ரூ.15,999

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/Redmi_Note_9_Pro_max_redmi2.jpg https://www.dinamani.com/trade/2020/mar/17/the-next-sale-of-the-redmi-note-9-pro-on-march-24th-3383525.html
3383521 வணிகம் ரெட்மி கே30 ப்ரோ அறிமுகம் எப்போது? DIN DIN Tuesday, March 17, 2020 04:51 PM +0530  

ரெட்மி கே30 ப்ரோ மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த புதுவரவாக ரெட்மி கே30 ப்ரோவின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரெட்மி கே30 ப்ரோ மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் அதே மார்ச் 26 ஆம் தேதி  அதிகாரப்பூர்வமாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மி கே30 ப்ரோ முக்கிய விவரக்குறிப்புகள்:

எச்.டி+ 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர்

4,700 எம்.ஏ.எச் பேட்டரி 

33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

டிஸ்பிளேவில் கைரேகை சென்சார்

8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 தளம்

பின்புறத்தில் 64 எம்பி கேமரா, குவாட் கேமரா அமைப்பு 

மேலும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா இடம்பெறலாம்.

முன்பக்கத்தில் 32 எம்பி சென்சார் கேமரா;  டூயல் செல்பீ கேமரா வாய்ப்பு

இந்தியாவில் இதன் விலை தோராயமாக ரூ.31,990.

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/17/w600X390/Redmi-K30-Pro-2.jpg https://www.dinamani.com/trade/2020/mar/17/redmi-k30-pro-when-will-be-launched-3383521.html
3382882 வணிகம் விவோ வி 19 விவரக்குறிப்புகள் வெளியானது! DIN DIN Monday, March 16, 2020 05:41 PM +0530  

விவோ வி19 மொபைல் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி17 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ வி19  கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வி19, விவோ வி17 போலவே பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பையும், முன்புறத்தில் பன்ச்- ஹோல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. விவோ வி 19க்கான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 

விவரக்குறிப்புகள்:

குவாட்-கேமரா அமைப்பு, இரட்டை துளை-பஞ்ச் செல்பி கேமரா

6.44 அங்குல முழு எச்டி + சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC ஐ, 

8 ஜிபி ரேம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும்.

பியானோ பிளாக் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கும். 

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா , 2 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், டிஸ்ப்ளே 32 மெகாபிக்சல் பிரதான செல்பி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரட்டை துளை-பஞ்ச் ஹோல் உள்ளது. 

கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 10 தளம், 

பேட்டரி 4,500mAh

33W விவோ ஃப்ளாஷ் சார்ஜிங் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 

குறைந்தபட்சம் இதன் விலை ரூ. 25,000 இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

]]>
VIVO https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/16/w600X390/111.JPG https://www.dinamani.com/trade/2020/mar/16/vivo-v19-specifications-3382882.html
3382874 வணிகம் கரோனா எதிரொலி: பிளே ஸ்டோரில் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆப்பிள் நிறுவனம்! DIN DIN Monday, March 16, 2020 04:56 PM +0530  

கரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் பிளே ஸ்டோரில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸினால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் பல்வேறு வணிக, தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிகங்கள் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் பிளே ஸ்டோரில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதாவது, அரசாங்க நிறுவனங்கள், சுகாதாரத்தை மையமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வெளியிடும் கரோனா தொடர்பான தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும். கரோனா வைரஸுக்கு தொடர்பான ஆன்லைன் கேம் ஆப், காரோனா குறித்த பொழுதுபோக்கு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் பயனர்கள், ஆப் ஸ்டோர் மூலம் தங்கள் சாதனங்களில் நம்பகமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதை கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தைப் போன்று கூகுளிலும் கரோனா வைரஸ் தொடர்பான பயன்பாடுகள் மற்றும் கேம்களை கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

]]>
apple https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/apple.jpg https://www.dinamani.com/trade/2020/mar/16/apple-restricts-corono-virus-related-games-3382874.html
3380579 வணிகம் ஒன்பிளஸ் 8 சீரிஸ் அனைத்திலுமே 5ஜி தொழில்நுட்ப வசதி DIN DIN Friday, March 13, 2020 03:58 PM +0530  

ஒன்பிளஸ் 8 தொடரின் ஒவ்வொரு சாதனமும் 5 ஜி தொழில்நுட்பத்துடன் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் தெரிவித்தார். 

வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் புதுவரவாக ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. 

அதன்படி,  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் கூறுகையில், 'ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே 5ஜி தொழில்நுட்பத்துடன் வரும். 5ஜி குறித்த எங்கள் நீண்ட கால முதலீட்டிற்கான உறுதிப்பாட்டை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். நாங்கள் பல ஆண்டுகளாக 5ஜி- யில் முதலீடு செய்து வருகிறோம். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக இதனைப் பார்க்கிறோம். வரும் ஏப்ரல் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை' என்று தெரிவித்தார். 

இதில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப், ஆண்ட்ராய்டு 10 தளம், இரட்டை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, குவாட்-கேமரா அமைப்பு, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் மூன்று லென்ஸ்கள் உள்ளிட்ட அம்சசங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
OnePlus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/OnePlus-7T-6T-980x653.jpg https://www.dinamani.com/trade/2020/mar/13/every-device-from-oneplus-8-series-will-be-5g-compatible-3380579.html
3380576 வணிகம் கூகுள் 2- ஜென் குரோம்காஸ்ட் அல்ட்ரா விரைவில் அறிமுகம் DIN DIN Friday, March 13, 2020 03:45 PM +0530  

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட தேடுபொறி நிறுவனமான கூகுள் இரண்டாம் தலைமுறை க்ரோம்காஸ்ட் அல்ட்ராவை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது வெளிப்புற ரிமோட் மூலம் ஆண்ட்ராய்டு தளம் மூலம் இயக்கப்படும். இந்த சாதனம் 'சப்ரினா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 4கே எச்.டி.ஆர் உள்ளடக்கத்தை ஆதரிக்கும். அத்துடன் வழக்கமான புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பைக் கொண்டுள்ளது. 

தொலைதூரத்தில் மைக்ரோஃபோன் மற்றும் பயனர்களின் குரலுடன் இணைக்க முடியும். இந்த சாதனம் வழக்கமான 'ஜி 'லோகோவுடன் தற்போதைய குரோம்காஸ்ட் (Chromecast) அல்ட்ராவைப் போன்ற ஒரு HDMI இணைப்பைக் கொண்டிருக்கும்.

கூடுதலாக, சாதனம் பயனர்களுக்கு யூடியூப் டிவி, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி +, ஹுலு மற்றும் பல பயன்பாடுகளுக்கு உதவும். இதன் விலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், கூகுள் பிக்சல் 4ஏ உடன் இதனை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. 

இருப்பினும், கரோனா வைரஸ் (COVID-19) காரணமாக இந்த தயாரிப்பு சற்று தாமதமாக அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
google https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/google.JPG https://www.dinamani.com/trade/2020/mar/13/google-prepares-to-launch-2nd-gen-chromecast-ultra-with-remote-3380576.html
3380568 வணிகம் கூகுளின் பிக்சல் 4ஏ விவரங்கள் கசிந்தது.. DIN DIN Friday, March 13, 2020 03:16 PM +0530  

கூகுளின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட் போன் குறித்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகின்றன. ஏற்கெனவே இதில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இது  ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் வரக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூகுள் தயாரிப்புகளில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்பட்ட பிக்சல் 3ஏவின் அடுத்த வெர்ஷனாக பிக்சல் 4ஏ பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பிக்சல் 4ஏவில் புதிய அம்சங்கள் பல வரும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

பிக்சல் 4ஏ-வின் 5.7- அல்லது 5.8-இன்ச் டிஸ்ப்ளே போன்களில் கேமரா சென்சாருக்கான பஞ்ச்-ஹோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் வரக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இன்டர்னல் ஸ்டோரேஜ் 64 ஜிபி உள்ளது. இதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனரை கொண்டிருக்கிறது.

பிக்சல் 4இன் இரட்டை சென்சார் போலல்லாமல், பட்ஜெட் 4ஏ-இல் 4 கே வீடியோவை பதிவு செய்யக்கூடிய ஒற்றை 12 எம்.பி சென்சார் இருக்கக்கூடும், டிஸ்ப்ளேயில் ஒரு ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா உள்ளது மற்றும் 3,080 எம்ஏஎச் பேட்டரியுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
google https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/google_pixel_4a.JPG https://www.dinamani.com/trade/2020/mar/13/googles-pixel-4a-3380568.html
3379805 வணிகம் தொழில்நுட்பத்தில் தனி முத்திரை பதித்த ரெட்மி! DIN DIN Thursday, March 12, 2020 04:39 PM +0530  

எல்.சி.டி திரையின் கீழ் கைரேகை ஸ்கேனரை அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்று பெருமையை ரெட்மி பெற்றுள்ளது. 

சீன கைபேசி தயாரிப்பாளரான ரெட்மி எல்.சி.டி.யின் கீழ் கைரேகை ஸ்கேனரை செயல்படுத்தும் சமீபத்திய கருவி உற்பத்தியாளராக (ஓ.இ.எம்) மாறிவிட்டதாக ரெட்மி பிராண்ட் மேலாளர் லு வெய்பிங் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில், கைபேசி உற்பத்தியாளர்கள் முக்கியமான கைரேகை ஸ்கேனர் பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சத்தை வழங்க புதுமையான வழிகளை வகுத்து வருகின்றனர்.

ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தில் இது எவ்வாறு இயங்குகிறது என்பது சோதனை முயற்சியாக புகுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் சில நிறுவனங்கள் எல்சிடி பேனலின் கீழ் சென்சார் வைப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்து செயல்படுத்தியது.  ரெட்மி நோட் 9 அல்லது ரெட்மி கே 30 ப்ரோவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/f4f506d95e79c28d072ad0ae635701db.jpg https://www.dinamani.com/trade/2020/mar/12/redmi-becomes-first-smartphone-manufacturer-to-introduce-fingerprint-scanner-under-lcd-screen-3379805.html
3379799 வணிகம் ரெட்மி பயனர்களே.. நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியானது! DIN DIN Thursday, March 12, 2020 04:16 PM +0530  

ஸியோமி தயாரிப்புகளான ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை இன்று அறிமுகமாகியுள்ளன.

ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நோட் மற்றும் நோட் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரெட்மி சீரிஸ் இந்த முறை  நோட் ப்ரோ மற்றும் ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ் என்ற மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகின்றன. இதில்  ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆகிய வேரியண்டுகளில் வருகிறது. 

அதேபோன்று, ரெட்மி நோட் 9 புரோ  4 ஜிபி ரேம் + 64 ஜிபி,  6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டுகளில் வருகிறது. 

இரண்டுமே நீல (Aurora Blue), வெள்ளை(Glacier White) மற்றும் கருப்பு (Interstellar Black) நிறங்களில் வருகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மார்ச் 17 ஆம் தேதியும், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மார்ச் 25 ஆம் தேதியும் அமேசான், எம்.ஐ டாட் காம் தளங்களில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் விலை

6 ஜிபி ரேம் + 64 ஜிபி- ரூ.14,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி- ரூ.16,999

8 ஜிபி ரேம் + 128 ஜிபி - ரூ.18,999-

ரெட்மி நோட் 9 புரோ விலை

4 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ.12,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி-  ரூ.15,999

 

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/w18ePUdo.jpg https://www.dinamani.com/trade/2020/mar/12/redmi-note-9-series-launched-3379799.html
3379801 வணிகம் கரோனா எதிரொலி: ஆப்பிள் ஐபோன் 12 வெளியீடு தாமதமாகலாம்! DIN DIN Thursday, March 12, 2020 04:16 PM +0530  

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 வெளியீட்டை தாமதப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா வைரஸ் காரணமாக ஆப்பிள் நிறுவன பொறியாளர்கள் ஆசியாவிற்கு பயணிக்கத் தடை விதித்துள்ளதால், நிறுவனத்தின் அடுத்த புதுவரவான ஐபோன் 12 வளர்ச்சியை பாதித்துள்ளது. இதனால், ஐபோன் 12 வெளியாவது தாமதமாகலாம் என்று பேசப்படுகிறது. 

கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் சீனாவில் 5 ஜி ஐபோன்களுக்கான பொறியியல் சரிபார்ப்பு சோதனைகளை (ஈ.வி.டி) தாமதப்படுத்தியுள்ளன என்று டிஜி டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது.

மேலும், கரோனா தாக்கம் காரணமாக நடப்பு காலாண்டில் ஸ்மார்ட் போன்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/apple.jpg https://www.dinamani.com/trade/2020/mar/12/apples-travel-restrictions-due-to-coronavirus-may-delay-iphone-12-launch-3379801.html
3378177 வணிகம் 5ஜி தொழில்நுட்பத்தில் எல்.ஜி.யின் புதிய வி60 தின்க் DIN DIN Tuesday, March 10, 2020 12:24 PM +0530  

5ஜி தொழில்நுட்பத்தில் எல்.ஜி.யின் புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

மின்னணு சாதனங்களின் தயாரிப்பில் பிரபல முன்னணி நிறுவனமான எல்.ஜி. சமீபத்தில் எல்ஜி வி60 தின்க் 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

இது 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா, ஸ்நாப்டிராகன் 865 சிப்செட், 5 ஜி தொழில்நுட்பம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி, இரட்டை திரைகள், பல கேமரா சென்சார்கள் அடங்கிய 8கே வீடியோ பதிவு, சிறந்த ஆடியோ செயல்திறன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 

நடப்பு ஆண்டில் 5ஜி தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த வரிசையில் எல்ஜி வி60 தின்க் 5ஜி முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/1111.JPG https://www.dinamani.com/trade/2020/mar/10/lg-v60-thinq-5g-3378177.html
3378170 வணிகம் குறைந்த விலையில் இலகுவான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ். DIN DIN Tuesday, March 10, 2020 11:28 AM +0530  

குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ் அறிமுகமாகியுள்ளது. 

வடிவமைப்பில் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ். ஸ்போர்ட்ஸ் தற்போதைய ஹூண்டாய் கார்களில் பொதுவாக காணப்படும் அதே கூர்மையான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.

கறுப்பு நிற மேற்பரப்பு, சிவப்பு நிற வண்ணம் என பார்ப்பவர்களை கவரும் விதத்தில் வெளிப்புறத் தோற்றம் உள்ளது. 1.0 டி-ஜிடிஐ(T-GDI) மோட்டார் மூலமாக இயங்குகிறது. 

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவுரா காம்பாக்ட் செடானில், ஹூண்டாய் இதே எஞ்சினை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இது எஞ்சின் 100 பிஎஸ் உந்து சக்தியையும், 175 என்.எம் முறுக்குவிசையையும் வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி இது மிகவும் இலகுவான கார் என்பதால்  வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் விலை 7.68 லட்சம் ரூபாய். 

]]>
hyundai https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/Capture.JPG https://www.dinamani.com/trade/2020/mar/10/hyundai-grand-i10-nios-sportz-3378170.html
3378164 வணிகம் போக்கோ எக்ஸ் 2 இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனை DIN DIN Tuesday, March 10, 2020 10:57 AM +0530  

பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட் போன் ஃபிளிப்கார்ட்டில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது. 

ரெட்மி, ரியல்மி தயாரிப்புகளைத் தொடர்ந்து போக்கோ தயாரிப்புகளும் சந்தையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. 

இதன் தயாரிப்புகளில் ஒன்றான போக்கோ எக்ஸ் 2 கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக, கடந்த மார்ச் 3 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. அப்போது சில மணி நேரங்களிலேயே போக்கோ எக்ஸ்2 விற்றுத் தீர்ந்தது. இதைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ரியல்மிக்கு போட்டியாக இது சந்தையில் களமிறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. 

போக்கோ எக்ஸ் 2, 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 16,999, 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999. ஃபிளிப்கார்ட்டில்  ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

போகோ எக்ஸ் 2 பியோனிக்ஸ் ரெட், அட்லாண்டிஸ் ப்ளூ மற்றும் மேட்ரிக்ஸ் பர்பில் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/10/w600X390/poco.JPG https://www.dinamani.com/trade/2020/mar/10/poco-x2-sale-today-via-flipkart-at-12-noon-3378164.html
3377436 வணிகம் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி; சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் சரிவு DIN DIN Monday, March 9, 2020 01:36 PM +0530  

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,950.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. பிற்பகல் 1.20 மணியளவில் சென்செக்ஸ் 2300 புள்ளிகள் சரிந்து 35,256ல் வர்த்தகமானது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 574 புள்ளிகள் சரிந்து 10,415ல் வர்த்தகம் ஆனது. 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10% வீழ்ச்சி அடைந்துள்ளது. 

]]>
Sensex https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/18/w600X390/sensex.jpg https://www.dinamani.com/trade/2020/mar/09/sensex-skids-2300-pts-nifty-below-10400-3377436.html
3377426 வணிகம் ஆப்பிள் வாட்ச்சுக்கு போட்டியாக களமிறங்கிய ஓப்போ ஸ்மார்ட் வாட்ச்! DIN DIN Monday, March 9, 2020 11:56 AM +0530  

ஓப்போ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ஃபைண்ட் எக்ஸ் 2 (Find X2) வெளியீட்டை அடுத்து ஓப்போ ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இது ஓப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். 

ஆப்பிள் வாட்ச் போன்று காணப்படும் ஓப்போ வாட்சின் புகைப்படம் ஏற்கெனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சதுர வடிவில் பார்ப்பதற்கு  அழகாக இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் வரும் இதில் புதிதாக, 3டி கிளாஸ் அறிமுகமாகிறது. எனவே இன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5ல் உள்ளதைப் போலவே ஓப்போ ஸ்மார்ட் வாட்சும் உடலியல் செயல்பாடு குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக, இதயத்துடிப்பு கண்காணிக்கப்படுகிறது. 

மேலும், 41 மிமீ மற்றும் 46 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் வருகிறது. கூகுளின் வியர்(Wear ) ஓ எஸ்.யை அடிப்படையாகக் கொண்டது. கலர் ஓ.எஸ்.இன் பதிப்பையும் கொண்டுள்ளது. அமோல்டு டிஸ்பிளே ஃப்ளாஷ் சார்ஜ், ஃபாஸ்ட் சார்ஜிங்  தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 

]]>
smart watch https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/oppo.JPG https://www.dinamani.com/trade/2020/mar/09/oppo-smart-watch-launched-3377426.html
3377417 வணிகம் சோனி கேமரா வாங்கப் போறீங்களா? DIN DIN Monday, March 9, 2020 11:42 AM +0530  

சோனி இந்தியாவில் புதிய காம்பாக்ட் 4கே ஹேண்டிகேம் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

சோனி நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  கேமராக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய 4கே ஹேண்டிகேம் 'எஃப்.டி.ஆர்-ஏ.எக்ஸ் 43'யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் பாராட்டப்பட்ட கிம்பல் மெக்கானிசம்(gimbal mechanism) முறையை உள்ளடக்கியது.

மேலும், மென்மையான வீடியோ காட்சிகளைப் பெறுவதற்காக ஆப்டிகல் ஸ்டெடிஷாட் தொழில்நுட்பம் உள்ளது. புகைப்படப்பிரியர்களுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹேண்டிகேம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற கேமராக்களை ஒப்பிடுகையில் இது சிறப்பான தரத்தை கொடுக்கும். இது AX43 லென்ஸைக் கொண்டுள்ளது. 26.8 மி.மீ பரந்த கோணத்தைக் கொண்டுள்ளது. எந்த ஒரு அளவினையும் ஃபிரேமில் பொருத்தக்கூடிய வசதியினை கேமரா கொண்டுள்ளது. இது 20x ஆப்டிகல் ஸூம் (26.8-536.0 மிமீ; 16:9 பயன்முறை), பிளஸ் 30 எக்ஸ் (4கே) 7 அல்லது 40எக்ஸ் (எச்டி) ஸூம் மற்றும் 250 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் மூலம் பலவகையான காட்சிகளைப் பிடிக்க பயனர்களை அனுமதிக்கிறது.

பிரீமியம் ஆடியோ இணைப்பிற்காக உள்ளமைக்கப்பட்ட மல்டி-காப்ஸ்யூல் மைக்ரோஃபோன் உள்ளது. திரைப்படத் தயாரிப்புக்காக வெளிப்புற மைக்ரோஃபோனுக்கு ஒரு இணைப்பு வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் மூவி எடிட்டிங்கை ஹைலைட் மூவி மேக்கருடன் இணைக்க இது உதவுகிறது. 

ஹேண்டிகேம், சோனி சென்டர், ஆல்பா ஃபிளாக்ஷிப் கடைகள், சோனி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மின்னணு கடைகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.83,490. 

]]>
sony https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/9/w600X390/camera.JPG https://www.dinamani.com/trade/2020/mar/09/sony-unveils-new-compact-4k-handycam-in-india-with-an-in-built-gimbal-mechanism-3377417.html
3377421 வணிகம் கரோனா வைரஸ் எதிரொலி: சாம்சங் உற்பத்தி ஆலை இடமாற்றம் DIN DIN Monday, March 9, 2020 11:25 AM +0530  

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம், தனது 'சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ.' நிறுவனத்தை தற்காலிகமாக வியட்நாமிற்கு  மாற்றி அறிவித்துள்ளது.

முன்னதாக தென் கொரியாவில் குமி(gumi) நகரில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து வியட்நாமில் தற்காலிகமாக ஒரு ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. 

சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி எஸ் 20 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஆகியவை முழுமையாக குமி நகரில் உள்ள நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து, வியட்நாமில் உள்ள தளத்தில் 2,00,000 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேபோன்று யோங்கினில் உள்ள சாம்சங் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. எனினும் அந்த தொழிற்சாலை மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

]]>
coronavirus, Samsung https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/6/w600X390/samsung.jpg https://www.dinamani.com/trade/2020/mar/09/due-to-a-coronavirus-samsung-temporarily-moves-smartphone-production-to-vietnam-3377421.html
3375203 வணிகம் இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்! DIN DIN Friday, March 6, 2020 12:15 PM +0530  

ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 'இன்ஃபினிக்ஸ்' என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று மார்ச் 6ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 

இந்தியாவின் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் எஸ் 5 ப்ரோவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 என்ற அளவில் விலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

16 எம்.பி. பாப்-அப் செல்பி கேமரா மற்றும் 48 எம்.பி. பின்புற கேமரா,6.53 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே திரை, ஆண்ட்ராய்டு 10  தளம், இன்பினிக்ஸ் எக்ஸ்ஓஎஸ் 6.0 டால்பின் ஓ.எஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. 

]]>
smartphone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/infinix.JPG https://www.dinamani.com/trade/2020/mar/06/infinix-is-all-set-to-launch-the-s5-pro-smartphone-on-march-6-3375203.html
3375198 வணிகம் சென்ஹைசரின் புதிய வயர்லெஸ் இயர்போன்! DIN DIN Friday, March 6, 2020 11:44 AM +0530  

ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சென்ஹைசர், சிஎக்ஸ் 350 BT எர்டா புதிய வயர்லெஸ் இயர்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவான மற்றும் நம்பகமான செயல்பாட்டிற்காக புளூடூத் 5.0 தொழில்நுட்பம் உள்ளது. பேட்டரி 10 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடியது. மார்ச் 3ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. 

சென்ஹைசரில் தொடர்ந்த்து புதுமையை புகுத்தி வருவதால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறோம் என்று சென்ஹைசர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய நுகர்வோர் பிரிவின் இயக்குனர் கபில் குலாட்டி தெரிவித்தார். 

நான்கு வெவ்வேறு அளவிலான இயர் பட்ஸ்கள் வழங்கப்படுவதனால் பயனர்கள் வசதிக்கேற்ப அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். 

சிஎக்ஸ் 350 பிடி ஆப்ட்எக்ஸ் சரியான ஒலியை சிறந்த ஒத்திசைவில் வழங்கக்கூடியது. திரைப்படங்கள் அல்லது கேமிங்கை ரசிப்பதற்கு சிறந்தது. சிஎக்ஸ் 350 BT மற்றும் சிஎக்ஸ் 150 BT - இந்தியாவில் முறையே ரூ .7,490 மற்றும் ரூ .4,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

]]>
headphone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/earphone.JPG https://www.dinamani.com/trade/2020/mar/06/sennheiser-launched-a-new-range-of-wireless-earphones-3375198.html
3375188 வணிகம் வந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் 'டார்க் மோடு' வசதி! DIN DIN Friday, March 6, 2020 11:09 AM +0530  

உலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு முறையை  அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக்  கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கேற்ப டார்க் மோடு வசதியை சோதனை முயற்சியாக சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட் போன்களிலேயே 'டார்க் மோடு' வசதி வந்துவிட்டது.டார்க் மோடு என்பது இரவில் குறைந்த ஒளியில் நாம் திரையை பார்க்கும் வசதி. வழக்கமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் பின்திரை 'டார்க் மோடு' ஆன் செய்யும் பட்சத்தில் கருப்பு/சாம்பல் நிறத்தில் மாறிவிடும். இதன்மூலமாக கண்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, பேட்டரி சார்ஜ் கணிசமாக குறைவதைத் தடுக்க முடியும்.  தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'டார்க் மோடு' அம்சத்தை உலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வெளியாகியுள்ளது.  

பேஸ்புக்கிற்குச் சொந்தமான சமீபத்திய பதிப்பைக் கொண்டு இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. கண் சோர்வை குறைக்கும் வகையில் அதே நேரத்தில் குறுஞ்செய்திகளை வாசிக்கும் வகையில் அடல் சாம்பல் நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 10 மற்றும் iOS 13 வைத்திருக்கும் பயனர்கள் டார்க் மோடு முறையை கணினி அமைப்புகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று 'தீம்' அல்லது 'டார்க்' என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். வெகு விரைவில் அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் டார்க் மோடு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
whatsapp https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/6/w600X390/WhatsApp_dark_mode.jpg https://www.dinamani.com/trade/2020/mar/06/whatsapp-rolls-out-dark-mode-for-both-iphone-and-android-globally-3375188.html
3373691 வணிகம் நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் பத்தி தெரிஞ்சுக்கோங்க..! DIN DIN Wednesday, March 4, 2020 12:45 PM +0530  

நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 

5ஜி தொழில்நுட்பம், 6.65-இன்ச் எச்டி டிஸ்பிளே, 1080 பிக்சல் அளவு, சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியினால் வேகமாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,.

முதல்முறையாக அதிகபட்சமாக 64 எம்.பி பிரைமரி கேமராக்களுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும். அதில் 32 எம்.பி செல்பி கேமராவும் அடங்கும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக், 55W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும். மற்ற 5ஜி ஸ்மார்ட் போன்களை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த விலை மற்றும் முழு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள மார்ச் 12 வரை காத்திருக்க வேண்டும். 

]]>
Smart phone, 5G https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/nubia-red-magic-5g-1582964519.jpg https://www.dinamani.com/trade/2020/mar/04/nubia-red-magic-5g-coming-on-march-12-3373691.html
3373676 வணிகம் iQOO3 5ஜி ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கியது! DIN DIN Wednesday, March 4, 2020 12:16 PM +0530  

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகமாகியுள்ள  iQOO3 ஸ்மார்ட் போன் விற்பனை புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் iqoo.com இணையதளத்தில் தொடங்கியுள்ளது. 

iQOO நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான iQOO 3யை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இது முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் iQOO3 யில் ஸ்னாப்டிராகன் 865 செயலி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 180 ஹெர்ட்ஸ் சூப்பர் டச் ரெஸ்பான்ஸ் வீதத்தை கொண்டுள்ளது. ஸ்கிரீன் டச் ஸ்கேன் அதிர்வெண்ணை 120 ஹெர்ட்ஸ் தரத்திலிருந்து 50 சதவீதம் மேம்படுத்த முடியும். 

கேமராவைப் பொறுத்தவரையில் குவாட்-கேமரா அமைப்பு, 48 எம்.பி பிரதான கேமரா, 13 எம்.பி டெலிஃபோட்டோ (20 எக்ஸ் ஜூம்), 13 எம்.பி சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்.பி சாதாரண கேமரா மற்றும் 16 எம்.பி முன்பக்க கேமரா உள்ளன. 

மேலும், 4,440 எம்.ஏ.எச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தினால் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். கூடுதலாக, புதிய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது. 

இன்று (மார்ச் 4ம் தேதி) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் iqoo.comஇல் விற்பனை தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட்டில் ஐசிஐசிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இஎம்ஐ மூலமாக வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் மற்றும் மூன்று வகைகளில் கிடைக்கும். அதன் விலை முறையே ரூ.36,990(4ஜி, 8ஜிபி+128ஜிபி), ரூ.39,990 (4ஜி, 8ஜிபி+256ஜிபி) மற்றும் ரூ.44,990 (5 ஜி, 12ஜிபி+ 256 ஜிபி). 

]]>
5G, iQOO3 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/ERmyj0ZU0AEVB2F.jpg https://www.dinamani.com/trade/2020/mar/04/-iqoo3-5g-smart-phone-sale-started-3373676.html
3373681 வணிகம் மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மார்ச் 16ல் வெளியாகிறது! DIN DIN Wednesday, March 4, 2020 12:16 PM +0530  

மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், மோட்டோரோலா ரேஸர் மார்ச் 16ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

4ஜியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

அந்த வரிசையில், மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் 'மோட்டோரோலா ரேஸர்' குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.  மோட்டோரோலாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் இதுவாகும். 

மோட்டோரோலா ரேஸர் உயரமான 6.2 அங்குல பி-ஓஎல்இடி பேனலைக் கொண்டுள்ளது. இது 876x2142 பிக்சல்களுடன் திரைத்தன்மையும் கொண்டது. கைரேகை வைத்து போனை அன்லாக் செய்துகொள்ளலாம். இதனை மடிக்கும்போது, நீளம் 2.7 அங்குலமாக இருக்கும். 16 எம்.பி. பிரதான கேமராவும், 5 எம்.பி இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ரேஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட,  6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. விரிவாக்க ஸ்டோரேஜ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்குகிறது. 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 2,510 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவில் பிரபலமான நிலையில் இந்தியாவில் வருகிற மார்ச் 16ம் தேதி அறிமுகமாக இருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தியாவில் இதன் விலை குறித்த  விபரங்கள்  மார்ச் 16 அன்றே தெரிய வரும். 

]]>
Motorola https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/w600X390/ESPoPrbUwAEd43Q.jpg https://www.dinamani.com/trade/2020/mar/04/motorola-razr-2019-india-launch-date-set-for-march-16-3373681.html
3372937 வணிகம் ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட் போன் மார்ச் 12ல் அறிமுகம் DIN DIN Tuesday, March 3, 2020 03:59 PM +0530  

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகியவை மார்ச் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஸியோமி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில்,  ரெட்மி நோட் 8யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் போன்கள் வருகிற மார்ச் 12ம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டும் முறையே ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவற்றின் அடுத்த வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெட்மி நோட் 8(4ஜிபி+64ஜிபி) குறைந்த விலையில் (ரூ.9999) அறிமுகமானதைப்  போன்று நோட் 9 சீரிஸுலும் குறைந்த விலையில் ஒரு மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கின்றனர் வாடிக்கையாளர்கள். 

ரெட்மி நோட் 9 சீரிஸ் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும். ஐபோன் 11  போன்று இருப்பதாகவும் சிலர் டீசரைப் பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.  எம்.ஐ டாட் காம் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 12 முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/3/w600X390/74446674.jpg https://www.dinamani.com/trade/2020/mar/03/redmi-note-9-series-to-launch-in-india-on-march-12-3372937.html
3372932 வணிகம் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் எப்போது? DIN DIN Tuesday, March 3, 2020 03:42 PM +0530  

வருகிற மார்ச் 6ம் தேதி சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாக உள்ளது.

ஓப்போ தனது புதிய ஸ்மார்ட்போனான ஃபைண்ட் எக்ஸ் 2 (Find X2) வெளியீட்டிற்குப் பின்னர் ஓப்போ ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மார்ச் 6ம் தேதி சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது மற்றொரு புதுவரவான ஃபைண்ட் எக்ஸ் 2 ஸ்மார்ட் போனுடன் சேர்ந்தே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள் வாட்ச் போன்று காணப்படும் ஓப்போ வாட்சின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சதுர வடிவில் பார்ப்பதற்கு  அழகாக இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் வரும் இதன் வலது பக்கத்தில் இரண்டு பொத்தான்கள் இருக்கும். புதிதாக, 3டி கிளாஸுடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் வாட்ச் இளம் தலைமுறையினரை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5ல் உள்ளதைப் போலவே ஓப்போ ஸ்மார்ட் வாட்சும் ஈ.சி.ஜி தகவலைக் கொண்டிருக்கும். மேலும் இதர பல  உடல் இயக்க செயல்பாடுகளின் நிலைமையை கண்காணிக்கும். இதன் விலை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

]]>
smart watch https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/3/w600X390/oppo.jpg https://www.dinamani.com/trade/2020/mar/03/oppo-confirms-oppo-watch-launch-date-3372932.html
3372095 வணிகம் ரூ.2,999க்கு நவீன லெனோவா HE18 ஹெட்போன் DIN DIN Monday, March 2, 2020 02:09 PM +0530  

நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள லெனோவா HE18 ஹெட்போன் ஆடியோவுக்கான சிறந்த தரத்தை வழங்குகிறது. வயர்லெஸ் ஹெட் போன்களில் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒலிகளை தரமாக வழங்குவதால் இசைப்பிரியர்களுக்கு இந்த ஹெட்போன் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதேபோன்று வீடியோ அழைப்புகள் சிறந்த தரத்தையும் நிர்ணயிக்கிறது. 

இதன் விலை ரூ.2,999. ஆன்லைன் தளங்களில் மற்றும் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

]]>
headphone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/indulge.JPG https://www.dinamani.com/trade/2020/mar/02/lenovo-he18-headphone-3372095.html
3372088 வணிகம் ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட் போன் அறிமுகமானது! DIN DIN Monday, March 2, 2020 01:45 PM +0530  

பிரபல மொபைல் போன் நிறுவனமான ஓப்போ, ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட் போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஓப்போ நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரெனோ 2 மாடலைத் தொடர்ந்து ரெனோ 3யை அறிமுகப்படுத்தியுள்ளது.   அதன்படி, ரெனோ 3 ப்ரோ 5ஜி தொழில்நுட்பத்தை (dual-mode 5G) கொண்டுள்ளது. 

ரெனோ 3 ப்ரோ 5 அம்சங்கள்: 

8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மற்றும்  8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ்கள் உள்ளன.

4,025mAh பேட்டரி, 

குவாட் ரியர் கேமரா; 43 மெகா பிக்சல் + 13 மெகா பிக்சல் ஷூட்டர், 8 மெகா பிக்சல் ஸ்னேப்பர் மற்றும் 2 மெகா பிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.

கலர்ஓஎஸ் 7 ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு 10 தளம் 

6.5 இன்ச் தொடுதிரை; அமோல்டு டிஸ்பிளே

குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி SoC, ஆக்டா கோர் ப்ராசசர்

விலை: ரூ.22,990(8 ஜிபி + 128 ஜிபி) மற்றும் ரூ.32,990 (8 ஜிபி + 256 ஜிபி) 

 

 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/ESFoFVSUEAAnBup.jpg https://www.dinamani.com/trade/2020/mar/02/oppo-reno-3-pro-smart-phone-launched-3372088.html
3372075 வணிகம் ஒன்பிளஸ்-இன் புதுவரவு 'ஸ்மார்ட் போன் அல்ல'! என்னவாக இருக்கும்? DIN DIN Monday, March 2, 2020 12:34 PM +0530  

ஸ்மார்ட் போன் அல்லாத ஒரு புதிய மின்னணு சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் நாளை வெளியிட உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த குறுகிய வீடியோ கிளிப்பை ஒன்பிளஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சீனத் தயாரிப்பான ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நிறுவனம் புதிய மின்னணு சாதனம் ஒன்றை நாளை(மார்ச் 3) அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், இந்தத் தயாரிப்பு 'ஸ்மார்ட் போன் அல்ல' என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

இத்துடன் கூடுதலாக, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட் போன்களை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரவிருக்கும் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 10 தளத்தில் இயங்குகிறது. மேலும், இரட்டை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, குவாட்-கேமரா அமைப்புடன் மூன்று லென்ஸ்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 

எனினும், ஒன்பிளஸ் நிறுவனம் நாளை அறிமுகப்படுத்தும் புதிய சாதனம் என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

]]>
oneplus, ஒன்பிளஸ் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/2/w600X390/ER3FrbbWoAAbF7R1.jpg https://www.dinamani.com/trade/2020/mar/02/not-a-smartphone-oneplus-teases-with-brand-new-concept-device-3372075.html
3371361 வணிகம் ஹவாய் நோவா 7 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்! DIN DIN Sunday, March 1, 2020 05:17 PM +0530  

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவின் அறிக்கையின்படி, ஹவாய் நோவா 7 ஸ்மார்ட் போன் வருகிற ஏப்ரல் மாதத்தில்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மார்ச் 26 அன்று பாரிஸில் இந்நிறுவனத்தின் ஹவாய் பி40 சீரிஸ் வெளியான பின்னர் ஹவாய் நோவா 7 வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  நோவா 7 கிரின் 990 SoC உடன் வர உள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி ஹவாய் நிறுவனம் நடக்கவிருக்கும் ஒரு மாபெரும் விழாவில் நோவா 7 யை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நோவா 6 யைத் தொடர்ந்து அடுத்த வெர்ஷனாக நோவா 7 அறிமுகமாகிறது. 

6.40 அங்குல தொடுதிரை, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 810 SoC ப்ராசசர், 2.27GHz வேகத்தில் இரண்டு கோர்களும், 1.88GHz வேகத்தில் ஆறு கோர்களும் உள்ளன. 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.18,900 என்று கூறப்படுகிறது. 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/Huawei_Nova_7_Pro_5G.jpg https://www.dinamani.com/trade/2020/mar/01/huawei-nova-7-launch-set-for-early-april-3371361.html
3371350 வணிகம் ரியல்மி 6, ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை என்ன தெரியுமா? DIN DIN Sunday, March 1, 2020 04:04 PM +0530  

இந்தியாவில் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ வருகிற மார்ச் 5ம் தேதி முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இரு சாதனங்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்டுத்தப்படும் மார்ச் 5ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் கிடைக்கும். 

ரியல்மி 6 விலை ரூ.9999 என்றும், ரியல்மி 6 ப்ரோ 4ஜிபி+64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 5 ப்ரோ தற்போது ரூ.11,999-க்கும், ரியல்மி 5 ரூ.8,999-க்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட்டில் மார்ச் 5ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விற்பனை தொடங்கும் என்றும் நிறுவனம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
ரியல்மி https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/realme-6-e1582706839927.jpg https://www.dinamani.com/trade/2020/mar/01/realme-6-specs-and-price-3371350.html
3369661 வணிகம் மார்ச் 5ம் தேதி ரியல்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்! DIN DIN Friday, February 28, 2020 04:35 PM +0530  

ரியல்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்ச், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மார்ச் 5ஆம் தேதி ரியல்மி டாட் காமில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி பேண்ட் ஸ்மார்ட் வாட்சுகளைப் போலவே தற்போது ரியல்மி ஸ்மார்ட் வாட்சுகளும் இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரியல்மி பேண்ட், ஹானர் பேண்ட் 5 யைப் போன்ற ஒரு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். வளைவுத் தன்மையுடன் மூன்று வண்ணங்களில் அறிமுகமாகிறது. 

ரியல்மி பேண்ட் இந்தியாவில் மார்ச் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ரியல்மியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தனித்துவமான வண்ணங்களில் அறிமுகமாகும் ரியல்மி ஃபிட்னஸ் பேண்ட் மற்ற ஸ்மார்ட் வாட்சுகளைப் போலவே உடற்பயிற்சி தொடர்பான விபரங்களை தரக்கூடியது. இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் திறனையும் கொண்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன்களைப் போன்றே ரியல்மி பேண்டும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

]]>
realme https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/28/w600X390/realme.JPG https://www.dinamani.com/trade/2020/feb/28/realme-band-smart-watch-on-march-5th-3369661.html
3369652 வணிகம் புகைப்படப் பிரியர்களுக்காக புதிய கேனான் ஈஓஎஸ் 850டி கேமரா! DIN DIN Friday, February 28, 2020 03:56 PM +0530  

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேனான் ஈஓஎஸ் 850டி (EOS 850D )கேமரா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கேனான் ஈஓஎஸ் 850டி கேமரா, இரட்டை பிக்சல் சிஎம்ஓஎஸ் ஏஎஃப், ஈஓஎஸ் இன்டெலிஜெண்ட் ட்ராக்கிங், ஆப்டிகல் வ்யூஃபைண்டர் மற்றும் முகம் கண்டறிதலுக்கான அதிவேக ஆட்டோ ஃபோகஸ் (ஐ.டி.ஆர்.ஏ.எஃப்) மற்றும் 4K வீடியோ ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. 

கேனான் பயனர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு  அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இதனை வடிவமைத்துள்ளோம். முடிந்த வரையில் சிறப்பான வாடிக்கையாளரின் சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறோம். மலிவான விலையில் ஒரு தயாரிப்பை விரைவில் வழங்க இருக்கிறோம். புகைப்படப் பயணத்தில் கேனான் முக்கியப் பங்காற்றும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கசுதாடா கோபயாஷி தெரிவித்தார். 

மேலும், புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் படைப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கேனான் ஈஓஎஸ் 850டி உதவும் என்றும் கூறினார். 

]]>
gadget https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/28/w600X390/canon_850D.jpg https://www.dinamani.com/trade/2020/feb/28/canon-eos-850d-camera-launched-in-india-3369652.html
3369657 வணிகம் விவோவின் முதல் 5ஜி ஸ்மார்ட் போன்! பிப்.29 முதல் முன்பதிவு தொடக்கம் DIN DIN Friday, February 28, 2020 03:55 PM +0530  

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ புதிய 5ஜி தொலைபேசி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அதன்படி இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக ரியல்மி எக்ஸ்50 ப்ரோ அறிமுகமானது. தொடர்ந்து விவோ நிறுவனம் 'விவோ இசட்6' என்ற 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 

விவோ இசட்6 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் பிரதான கேமராவையும், அத்துடன் 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் கேமராக்களுடனும் உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 

இரட்டை சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 10 அடிப்படை செயலி,  6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்) டிஸ்ப்ளே 20:9 விகிதம் மற்றும் 90.74 சதவீதம் ஸ்கிரீன் விகிதத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி SoCஆல் இயக்கப்படுகிறது. 128 ஜிபி வரை உள்சேமிப்பை வழங்குகிறது. 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இது 44W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. அதன்படி, 35 நிமிடங்களில் 70 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், விவோ இசட்6 5ஜி திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது கேமிங் போன்ற தொடர் உபயோகத்தின்போது போனின் வெப்பநிலை சீராக இருக்க உதவுகிறது. 

விவோ இசட்6 5ஜி இரு வகைகளில் வருகிறது. அதன்படி, 6ஜிபி + 128ஜிபி வேரியண்தின் விலை தோராயமாக ரூ .22,000 இருக்கும். அதையடுத்து, 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கான விலை ரூ. 26,000 வரையில் இருக்கும். பிப்ரவரி 29 முதல் இதனை முன்கூட்டியே ஆர்டர் செய்துகொள்ளலாம். 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/28/w600X390/vivo.JPG https://www.dinamani.com/trade/2020/feb/28/vivo-z6-5g-launched-3369657.html
3368787 வணிகம் குறைவான எடையுடன் நீண்ட காலம் இயங்கக்கூடிய செயற்கைக் கால்கள்! DIN DIN Thursday, February 27, 2020 01:49 PM +0530  

கிங் ஜார்ஜின் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலம் இயங்கக்கூடிய எடை குறைந்த செயற்கைக் கால்களை உருவாக்கியுள்ளனர்.

உடல் மருத்துவம் மற்றும் கால்களில் மறுவாழ்வுத் துறையில் நவீன தொழில் நுட்பத்தில் குறைந்த எடையுடன், நீண்ட காலம் இயங்கக்கூடிய செயற்கைக் கால்களை பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். 

'செயற்கைக் கால்களை தயாரிக்க, படிப்படியாக தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கிலிருந்து பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கிற்கு மாறியுள்ளோம். பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் செயற்கைக் கால்கள் இலகுவாக உள்ளன. மேலும், இவை நீண்ட காலம் இயங்கக்கூடியவை. இதனால் நோயாளிகளுக்கு உடல் ரீதியாக நன்மை கிடைக்கும். 

தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செய்யப்படும் சாதனங்கள் பெரும்பாலாக ஒரு வருடத்திற்கு மேலாக நீடிப்பதில்லை. எனவே தான் இதற்கு மாற்றாக புதிதாக பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கால்களுக்கு மட்டுமின்றி கைகளுக்கும் பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை  பயன்படுத்தி செயற்கை சாதனங்களை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

]]>
Artificial limbs https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/27/w600X390/333.JPG https://www.dinamani.com/trade/2020/feb/27/artificial-limbs-to-be-lighter-in-weight-and-more-long-lasting-3368787.html
3368782 வணிகம் புதுவரவு: நவீன தொழில்நுட்பத்தில் 'ஹவாய் மேஜிக் புக்' மடிக்கணினிகள் DIN DIN Thursday, February 27, 2020 01:34 PM +0530  

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர்(HONOR) தனது புதிய தயாரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

ஹானர் 9 எக்ஸ் புரோ, ஹவாய் ஆப் கேலரி, ஹானர்வியூ 30 ப்ரோ மற்றும் ஹானர் மேஜிக் புக் சீரிஸ் உள்ளிட்ட புதுவரவுகள் விரைவில் அறிமுகமாகவுள்ளன. 

ஹானரின் அதிநவீன தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே நிறைவான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. எனவே நவீன தொழில்நுட்பத்தில் பல புதிய சாதனங்களை அறிமுகப்படுத்துகிறோம். 

கனலிஸ் நடத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் பேர் பணியில் இருக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் சாதனங்களை கொண்டு செல்கின்றனர். பயணத்தின்போது அல்லது வீட்டில் இருக்கும்போது இது 68 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஹானர் குளோபலின் தலைவர் ஜார்ஜ் ஜாவோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது டிஜிட்டல் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. ஸ்மார்ட்போன்கள் முதல் டிஜிட்டல் நோட்புக்குகள், தனிப்பட்ட ஆடியோ சாதனங்கள் வரை, உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையிலே ஹானர் நிறுவனம், டிஜிட்டல் மேஜிக் புக் 14 மற்றும் மேஜிக் புக் 15 முறையே 14 அங்குல மற்றும் 15.6 அங்குல லேப்டாப் சாதனங்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளன. 

கிரின் 990 5ஜி சிப்செட் மூலம் இவை இயக்கப்படுகின்றன. வியூ 30 ப்ரோ 6.7 இன்ச் 1080p டிஸ்ப்ளே, துளை-பஞ்ச் செல்பி கேமரா மற்றும் 4,100 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

மேலும், ஹானரின் மடிக்கணினிகளில் கைரேகை ஸ்கேனர்கள் மற்றும் வெப்கேம்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட இரு சாதனங்களும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பகத்துடன் ஜோடியாக AMD ரைசன் 5 3500U ப்ராசசரை கொண்டிருக்கும்.
 

]]>
Honor https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/27/w600X390/hawai.JPG https://www.dinamani.com/trade/2020/feb/27/honor-announces-its-new-line-up-of-devices-3368782.html
3368763 வணிகம் 2019-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ஆப்பிளின் ஐபோன் எக்ஸ்ஆர் IANS IANS Thursday, February 27, 2020 12:04 PM +0530  

2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் ஐபோன் எக்ஸ்ஆர் ஆதிக்கம் செலுத்தியதாக ஓம்டியாவின் ஸ்மார்ட்போன் சந்தை டிராக்கரின் அறிக்கை கூறியுள்ளது.

ஆப்பிள் 2019 ஆம் ஆண்டில் 46.3 மில்லியன் ஐபோன் எக்ஸ்ஆர் யூனிட்களை அனுப்பியது, அதே நேரத்தில் புதிய ஆப்பிள் மிட் ரேஞ்சர் ஐபோன் 11, 2019 ஆம் ஆண்டில் 37.3 மில்லியன் ஏற்றுமதிகளை நிர்வகித்தது.

"உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி தரவரிசையில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆப்பிள் தொடர்ந்து பிடித்துள்ளது. இந்நிறுவனம் இந்த மேலாதிக்க நிலையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறது" என்று ஓம்டியாவின் ஸ்மார்ட்போன் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு இயக்குனர் ஜூசி ஹாங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆப்பிள் வழங்கும் பிற மாடல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம், ஆப்பிள் அதன் விற்பனையை ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற பரந்த முறையீடு கொண்ட சில ஸ்மார்ட்போன்களில் குவிக்க முடிந்தது" என்று ஹாங் மேலும் கூறினார்.

ஆப்பிள் முதல் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தாலும், சாம்சங் கேலக்ஸி ஏ 10, கேலக்ஸி ஏ 50 மற்றும் கேலக்ஸி ஏ 20 ஆகியவற்றுடன் முறையே 30.3 மில்லியன், 24.2 மில்லியன் மற்றும் 23.1 மில்லியன் யூனிட்டுகளை ஏற்றுமதி செய்தது.

ஐபோன் 11 புரோ மேக்ஸ் 17.6 மில்லியன் ஏற்றுமதிகளுடன் ஆறாவது பிரபலமான ஸ்மார்ட்போனாகவும், ஐபோன் 8 ஐ 17.4 மில்லியனாகவும் கொண்டுள்ளது.

கூடுதலாக, கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் சமீபத்திய அறிக்கையில், ஐபோன் எக்ஸ்ஆர் 2019 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
Apple's iPhone XR https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/27/w600X390/iphone_xr_range.jpg https://www.dinamani.com/trade/2020/feb/27/apples-iphone-xr-dominated-2019-smartphone-market-3368763.html
3367974 வணிகம் ரியல்மி எக்ஸ்50 ப்ரோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள அடுத்த 5ஜி போன் #iQOO3 DIN DIN Wednesday, February 26, 2020 04:38 PM +0530  

இந்தியாவில் iQOO நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான iQOO 3யை 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இது முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'IQOO 3 தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஸ்னாப்டிராகன் 865 செயலி போன்ற தொழில்துறையின் சமீபத்திய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். IQOO 3 அதிநவீன மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது' என நிறுவனத்தின் இந்திய வர்த்தக இயக்குனர் ககன் அரோரா தெரிவித்தார்.

இது 180 ஹெர்ட்ஸ் சூப்பர் டச் ரெஸ்பான்ஸ் வீதத்தை கொண்டிருப்பதால் சிறந்த தொடுதிறனைக் கொண்டது. ஸ்கிரீன் டச் ஸ்கேன் அதிர்வெண்ணை 120 ஹெர்ட்ஸ் தரத்திலிருந்து 50 சதவீதம் மேம்படுத்த முடியும். சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் இயங்குகிறது.

குவாட்-கேமரா அமைப்பு 48 எம்.பி பிரதான கேமரா, 13 எம்.பி டெலிஃபோட்டோ (20 எக்ஸ் ஜூம்), 13 எம்.பி சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்.பி சாதாரண கேமரா மற்றும் 16 எம்.பி முன் கேமராவும் உள்ளது.

மேலும், இது 4,440 எம்.ஏ.எச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளதால் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். கூடுதலாக, புதிய இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது. இது திரை முடக்கப்பட்டிருக்கும்போது சாதனத்தை 0.31 வினாடிகளில் திறக்கும் என்று கூறுகிறது.

இதன் விலை ரூ.36,990லிருந்து தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் iqoo.comஇல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் மற்றும் மூன்று வகைகளில் கிடைக்கும். விலை ரூ.36,990(4ஜி, 8ஜிபி+128ஜிபி), ரூ.39,990 (4ஜி, 8ஜிபி+256ஜிபி) மற்றும் ரூ.44,990 (5 ஜி, 12ஜிபி+ 256 ஜிபி).

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/26/w600X390/iqoo_3.JPG https://www.dinamani.com/trade/2020/feb/26/iqoo-3-with-5g-variant-launched-in-india-3367974.html
3367953 வணிகம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! DIN DIN Wednesday, February 26, 2020 01:55 PM +0530  

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மிவின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்50 ப்ரோ 5ஜி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. 

2020ம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இதனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர், அட்ரினோ 650 GPU உடன் ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 

6.44 இன்ச் சூப்பர்-அமோல்டு டிஸ்ப்ளே, 20: 9 விகிதத்துடன் உள்ளது. ஆன்லைன் கேம் விளையாடும்போது தொடுதிரை உணர்திறன் மற்றும் மென்மையை மேம்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 64 எம்.பி. குவாட் கேமராவும், முன்பக்கத்தில் இரட்டை கேமராவும் உள்ளன. 

பின்புற கேமராக்களில் 20X ஸூம் கேமரா, 12 எம்பி டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்பி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவை அடங்கும். கேமராக்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4200 எம்.ஏ.எச் இரட்டை செல் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. 

ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்கள் மற்றும் மூன்று வகைகளில் கிடைக்கும் - ரூ. 37,999 (6 ஜிபி + 128 ஜிபி), ரூ.39,999 (8 ஜிபி + 128 ஜிபி) மற்றும் ரூ.44,999 (12 ஜிபி + 256 ஜிபி) . இந்த ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி டாட் காமில் கிடைக்கிறது. 

இந்தியாவில் அறிமுகமானதன் மூலமாக, இந்தியாவின் முதல் 5ஜி, அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி பெற்றுள்ளது.

செயல்திறன், வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் எக்ஸ் 50 புரோ 5 ஜி எதிர்காலத்தில் வாடிக்கையாளரின் முதன்மையான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் கூறுகிறார். 

]]>
realme https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/26/w600X390/realme.JPG https://www.dinamani.com/trade/2020/feb/26/realmes-first-5g-smartphone-arrives-in-india-x50-pro-5g-3367953.html
3367957 வணிகம் மார்ச் 5 முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி எம் 31 DIN DIN Wednesday, February 26, 2020 01:53 PM +0530  

சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட் போன் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகமான நிலையில் மார்ச் 5ம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் பிரிவில் மிகப்பெரிய சந்தைப் பங்கைப் பெற உதவியுள்ளது.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 30,  2019ஆம் ஆண்டில் அதிக வருவாயை ஈட்டிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

இதனைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 25ம் தேதி அறிமுகமாகியுள்ளது. தொடர்ந்து, மார்ச் 5ம் தேதி முதல் அமேசான் தளத்திலும், சாம்சங் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரவிருக்கிறது. 

கேலக்ஸி எம் 31 போன், 6 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இரண்டு வகைகளில் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. அதிகபட்சமாக 64 எம்பி கேமரா மற்றும் 6,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது. 

அதன்படி, 64 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.15,999, 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.16,999 விலையில் அறிமுகமாகியுள்ளது. அமேசான் தளத்தில் அறிமுகச் சலுகையாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ஆரம்ப விலையாக ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
Smart phone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/26/w600X390/samsung.jpg https://www.dinamani.com/trade/2020/feb/26/samsung-launches-the-megamonster-galaxy-m31-in-india-3367957.html
3367042 வணிகம் குழந்தைகளைக் கவரும் பென்ட்லி ஸ்ட்ரோலர் ட்ரைக் என்ற நவீன சைக்கிள் DIN DIN Tuesday, February 25, 2020 04:49 PM +0530  

குழந்தைகளின் நிலைகளுக்கு ஏற்றாற்போல் பென்ட்லி மோட்டார்ஸ் புதுமையான ஸ்ட்ரோலர்/ட்ரைக் (ட்ரை சைக்கிள்) ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இது, 6 மாதம் கைக்குழந்தை முதல் 36 மாதங்கள் அதாவது (3 வயது) வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வண்ணங்களில் இந்த ஸ்ட்ரோலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மழை, வெயிலில் குழந்தைகளைக் காக்கும் தலைக்கவசத்துடன், எளிதில் திருப்பக்கூடிய வகையில் மூன்று சக்கரங்கள் பொருத்திய ட்ரை சைக்கிளை பென்ட்லி நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மார்டன் சைக்கிள் குழந்தைகளை பெரிதும் கவர்ந்து வருவதோடு, மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. 

பென்ட்லி ஸ்ட்ரோலர் ட்ரைக் விலை ரூ.29 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/25/w600X390/Stroller_Trike.jpg https://www.dinamani.com/trade/2020/feb/25/bentley-stroller-trike-3367042.html
3363695 வணிகம் ஏர்டெல் WI-FI காலிங் இண்டோர் காலிங் வசதியை தங்குதடையின்றி எளிதாக்குகிறது வணிகப் பெருக்கச் செய்தி DIN Friday, February 21, 2020 06:36 PM +0530
நீங்கள் எப்போதாவது நெட்வொர்க் பிரச்னை, அழைப்பு துண்டிப்பு ஆகியவற்றை சந்தித்திருக்கிறீர்களா? குறிப்பாக வீட்டினுள்ளோ அல்லது மற்ற உட்புற இடங்களிலோ? இனி அதனைப் பற்றிய கவலையை விடுங்கள். ஏர்டெல் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள  WI-FI காலிங் வசதியானது அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் தடையற்ற மற்றும் வசதியான இண்டோர் காலிங் அனுபவத்தை வழங்குகிறது.

புதுமையான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதில் முதன்மையானதாக விளங்கும் ஏர்டெல்தான் இந்த அம்சத்தையும் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாகும்.

இது எப்படி செயல்படுகிறது?

ஏர்டெல் WI-FI காலிங் வசதியானது செல் கோபுரங்களுக்குப் பதிலாக ஏற்கனவே நிறுவபட்டிருக்கும் WI-FI இணைப்பின் மூலம் காலிங் செய்ய உதவுகிறது. இதனால் உங்களருகில் நெட்வொர்க் கவரேஜ் இல்லையென்றாலும் WI-FI இனைப்பைப் பயன்படுத்தி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களை மேற்கொள்ள உதவுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த வசதியை எந்த ப்ராட்பேண்ட் நிறுவனத்தின் இணைப்புடனும் பயன்படுத்த ஏர்டெல் அனுமதிக்கிறது.

இந்த புதுமையான தொழில்நுட்பத்தின் வசதி வாடிக்கையாளரின் அனுபவத்தை பெரிதும் மேம்படுத்துகிறது, ஏனெனில் நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் VoLTE மற்றும் Airtel Wi-Fi அழைப்புக்கு இடையில் எந்த இடையூறும் இல்லாமல் எளிதாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்

Wi-Fi அழைப்பு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

இந்த சேவை உட்புற பாதுகாப்பு அல்லது இணைப்பு தொடர்பான சிக்கல்களை கட்டுக்குள் கொண்டு வருகிறது. WI-FI அழைப்பிற்கான உடனடி மாறுதல் சிக்கலைத் தீர்க்கிறது, மேலும் நீங்கள் எந்த அழைப்பு துண்டிப்புக்களோ அல்லது நெட்வொர்க் தொடர்பான சிக்கல்களோ இல்லாமல் தொடர்ந்து பேசலாம்.

WI-FI அழைப்பின் மற்றொரு நன்மை என்னவென்றால், இது VoLTE உடன் ஒப்பிடும்போது வேகமான இணைப்பை வழங்குகிறது.

இந்த இலவச சேவையைப் பயன்படுத்த கூடுதல் சிம் கார்டோ, மென்பொருளோ தேவையில்லை. நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் சந்தா திட்டத்துடனேயே இந்த ஏர்டெல் WI-FI  சேவையை அனுபவிக்க முடியும்.

இந்த சேவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் முன்று மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஏர்டெல் கடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளராக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயனரின் அன்றாட வாழ்க்கையில் ஏர்டெல் WI-FI அழைப்பைக் கொண்டுவருவதன் மூலம் ஏர்டெல் இண்டோர் காலிங் அனுபவத்தை மாற்றியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏர்டெல் WI-FI அழைப்பு வசதியை எவ்வாறு செயல்படுத்துவது?

உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் WI-FI அழைப்பை இயக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

1. https://www.airtel.in/wifi-calling என்ற இனையதளத்திற்குச் சென்று உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இந்த வசதியை செயல்படுத்த முடியுமா என்று பார்த்து கொள்ளுங்கள்.

2. உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் இயங்கு தளத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும்

WI-FI அழைப்பு

3. உங்கள் ஸ்மார்ட்போனில் WI-FI அழைப்பைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். தடையற்ற அனுபவத்துக்கு VoLTE வசதியையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த வசதியை 16 பிராண்டுகளில் சுமார் 100 ஸ்மார்ட்ஃபோன்களில் எளிதாக செயல்படுத்தி கொள்ள முடியும். இந்த சேவையை மேலும் இன்னும் பிற சாதனங்களில் கொண்டு வர ஏர்டெல் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, பின்வரும் பிராண்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களில் ஏர்டெல் WI-FI அழைப்பை மேற்கொள்ள முடியும்.

Brand Models
Xiaomi

Redmi K20, Redmi K20 Pro, POCO F1, Redmi 7A, Redmi 7, Redmi Note 7 Pro & Redmi Y3

Samsung

Galaxy J6, A10s, On6, M30s, S10, S10+, S10e,M20, Note 10, Note 9, Note 10+, M30, A30s, A50S

OnePlus

One Plus 7, One Plus 7T, One Plus 7Pro, One Plus 7T Pro, One Plus 6, One Plus 6T

Apple

iPhone models starting 6s and above (including all Variations of different models)

Vivo

V15 Pro, Y17

Tecno

Phantom 9, Spark Go Plus, Spark Go, Spark Air, Spark 4 (KC2), Spark 4-KC2J, Camon Ace 2, Camon Ace 2X, Camon12 Air, Spark Power

SPICE

Spice F311, Spice M5353

ITEL

A46

INFINIX

Hot 8, S5 Lite , S5, Note 4, Smart 2, Note 5, S4, Smart 3, Hot 7

Mobiistar

C1, C1 Lite, C1 Shine, C2, E1 Selfie, X1 Notch

CoolPad

Cool 3, Cool 5, Note 5, Mega 5C, Note 5 Lite

Gionee

F205 Pro, F103 Pro

Asus

Zen Phone Pro, Zen Pro Max

Micromax

Infinity N12, N11, B5

Xolo

XOLO ZX

Panasonic     

P100, Eluguray 700, P95, P85 NXT

மேலும், ஜியோவைப் போலல்லாமல் ஏர்டெல் ஒன்பிளஸ் தொலைபேசிகளிலும் WI-FI அழைப்பு அம்சத்தை வழங்குகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் சந்தைத் முதன்மையானதாக ஒன்பிளஸ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் ஏர்டெல்லின் நெட்வொர்க்கில் ஏற்கனவே சந்தாதாரராக இருக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.

மொத்தத்தில், ஏர்டெல் WI-FI அழைப்பு நிச்சயமாக அதன் பயனர்களின் வாழ்க்கையை அவர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அடித்தளங்களில் இருந்து HD அழைப்புகளை மேற்கொள்ள வைப்பதன் மூலம் அவர்கள் அன்றாட வாழ்கையை எளிதாக்குகிறது.

எனவே இன்னும் நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?
ஏர்டெலைப் பெற்று, உட்புற அழைப்பு துண்டிப்பிலிருந்து விடைபெறுங்கள்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/airtel_TAMIL.jpg ஏர்டெல் வைபை காலிங் https://www.dinamani.com/trade/2020/feb/21/airtel-wi-fi-calling-is-now-introduced-across-india-3363695.html
3363705 வணிகம் ஓப்போ சாதனங்களில் கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் அறிமுகம் DIN DIN Friday, February 21, 2020 05:42 PM +0530  

ஓப்போ சாதனங்களில் தற்போது கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவின் ஓ.எஸ் இயங்குதளத்தில்  கலர்ஓஎஸ் 7(ColorOS 7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ் -யை அடிப்படையாகக் கொண்டது. தற்போது ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெனோ, ரெனோ 10 எக்ஸ் ஜூம், ரெனோ 2, எஃப் 11, எஃப் 11 ப்ரோ மற்றும் ஆர் 17, ஆர் 17 ப்ரோ மற்றும் ஃபைண்ட் எக்ஸ் உள்ளிட்ட ஓப்போ சாதனங்களில் உள்ளது. 

கலர்ஓஎஸ்7 பல உள்ளூர் மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 72 மொழிகளைக் கொண்டுள்ளது. 

கலர்ஓஎஸ் 7 இன் சோதனை பதிப்பை மேலும் மாதிரிகள் மற்றும் பிராந்தியங்களுக்குக் கொண்டுவருவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்துவதால், பயனர் கருத்துக்களை வழங்குவதன் மூலம் ஓஎஸ் மேம்பாட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக மாற ரசிகர்களை அது அழைக்கிறது.

சோதனை முயற்சியில் பயனர்கள் பெறும் அனுபவத்தை வைத்து முழுவதுமாக ஓப்போவின் அனைத்து சாதனங்களிலும் கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
oppo, gadget https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/33.JPG https://www.dinamani.com/trade/2020/feb/21/coloros-7-version-now-available-on-flagship-oppo-devices-on-trial-basis-3363705.html
3363693 வணிகம் சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் பிப்.26 முதல் விற்பனை DIN DIN Friday, February 21, 2020 05:31 PM +0530  

சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 26ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 

சாம்சங் இந்தியாவில் மடிக்கக்கூடிய புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃபிளிப்பிற்கான முன்பதிவை அறிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். 

சாம்சங் போன்களில் முதல்முறையாக மடிக்கக்கூடிய வகையில் கண்ணாடிடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6.7 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.  உங்கள் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய ஸ்டைலாக, ஸ்மார்ட்டாக இருக்கும். 

டைனமிக் அமோல்டு இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவை முக்கிய கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 7 என்எம் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

பவர் கார்டு மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வழியாக வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு  ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் பின்புறத்தில் 12 எம்.பி கேமரா, முன்பக்கத்தில் 10 எம்.பி பஞ்ச்-ஹோல் கேமரா உள்ளது.

மடிக்கக்கூடிய வசதி இருப்பதால் எளிதாக உங்களது பாக்கெட் அல்லது கிளட்ச் பையில் வைத்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட சிறப்பு அம்சங்கள் அடங்கிய சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 26ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 1.10 லட்சம். 

]]>
Samsung https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/samsung.JPG https://www.dinamani.com/trade/2020/feb/21/samsung-z-flip-open-for-pre-bookings-at-inr-110-lakh-from-february21-3363693.html
3362766 வணிகம் தடகள வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! DIN DIN Thursday, February 20, 2020 04:29 PM +0530  

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியைச் சேர்ந்த  தடகள வீரர் ஸ்கைலார் ஜோஸ்லின், தனது உயிரை காப்பாற்ற ஆப்பிள் வாட்ச் உதவியதாகக் கூறுகிறார்.

ஆப்பிள் வாட்ச் வாங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், ஜோஸ்லின் வாட்சில் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. வகுப்பில் அமர்ந்திருந்த அவருக்கு நிமிடத்திற்கு 190 பிபிஎம் என்ற அளவில் இதயத் துடிப்பு அதிகரித்திருப்பதாக செய்தி வந்தது. பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவரது இதயத்துடிப்பு 280 பிபிஎம் வரை சென்றது. உடனே, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். 

பின்னர், அவர் எஸ்.வி.டி எனப்படும் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது விரைவான இதயத்துடிப்பை ஏற்படுத்தி காலப்போக்கில் இதயத்தை பலவீனப்படுத்தி முழுவதுமாக செயலிழக்க வைக்கும். 

இதையடுத்து, ஜோஸ்லினுக்கு எட்டு மணி நேர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமாக இருக்கிறார். 

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஒரு நிகழ்ச்சியில்தான் ஆப்பிள் வாட்சை பெற்றேன். அதை மாட்டும் வாங்காமல் இருந்திருந்தால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜோஸ்லின். 

இதேபோன்று அமெரிக்க மருத்துவர் ஒருவர், சமீபத்தில் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது, ஆட்ரியல் ஃபைப்ரிலேஷனைக் கண்டறிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ஐ தனது பயன்படுத்தி ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றினார்.

இங்கிலாந்தில் உள்ள ஒருவர் தனது ஆப்பிள் வாட்ச் மூலமாக இதயத்துடிப்பு குறைவாக இருந்ததை தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றார். இதுபோல இதயத்துடிப்பு தொடர்பாக ஆப்பிள் வாட்ச் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும்  சீரிஸ் 5 இரண்டும் எலக்ட்ரோ கார்டியோகிராம் குறித்து துல்லியமாக அளவிடக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
Apple Watch https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/apple_watch.JPG https://www.dinamani.com/trade/2020/feb/20/apple-watch-helps-save-life-of-teen-athlete-3362766.html
3362755 வணிகம் டிண்டர் செயலியில் 'ஸ்வைப் நைட்' விடியோ சீரிஸ் விரைவில்.. DIN DIN Thursday, February 20, 2020 03:55 PM +0530  

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் 'ஸ்வைப் நைட்' என்ற விடியோ சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் செயலி இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஜிபிஎஸ் ட்ராக்கிங்குடன் செயல்படும் இதனை பயன்படுத்தி பலர் டேட்டிங் செய்கின்றனர். போதுமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில், டிண்டர் செயலி புதிய விடியோ சீரிஸ் ஒன்றை இந்தியாவில் தொடங்கவுள்ளது. தொடர் விடியோ நிகழ்ச்சியான 'ஸ்வைப் நைட்' என்ற விடியோ தொடரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

கடந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு பயனர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், வருகிற மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஸ்வைப் நைட்டை வெளியிட உள்ளது டிண்டர் நிறுவனம். இதற்கான தீவிர முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இறங்கியுள்ளனர். அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
tinder https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/tinder.JPG https://www.dinamani.com/trade/2020/feb/20/tinder-to-launch-its-interactive-video-show-swipe-night-in-india-3362755.html
3362754 வணிகம் 3டி கிளாஸுடன் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் DIN DIN Thursday, February 20, 2020 03:41 PM +0530  

3டி கிளாஸுடன் கூடிய ஸ்மார்ட் வாட்சை ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது புதிய ஸ்மார்ட் வாட்சை ஃபைண்ட் எக்ஸ் 2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்சில் வளைந்த 3டி கண்ணாடி இடம்பெறும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரையன் ஷென் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, ஷென் ஆப்பிள் வாட்ச் போன்று காணப்படும் ஓப்போ வாட்சின் அதிகாரப்பூர்வ படத்தைப் பகிர்ந்துள்ளார். சதுர வடிவில் பார்ப்பதற்கு  அழகாக காணப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் வரும். ஸ்மார்ட் வாட்ச் வலது பக்கத்தில் இரண்டு பொத்தான்கள் இருக்கும். 

புதிதாக, 3டி கிளாஸுடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் வாட்ச் இளம் தலைமுறையினரை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
smart watch, oppo https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/smart_watch_oppo.JPG https://www.dinamani.com/trade/2020/feb/20/oppo-to-launch-smartwatch-with-curved-3d-glass-3362754.html
3362739 வணிகம் ஆப்பிளுக்கு எதிராக புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்: தடை செய்ய கோரும் ஐபோன் நிறுவனம் IANS IANS Thursday, February 20, 2020 01:54 PM +0530  

"ஆப் ஸ்டோர் ரகசியம்" என்ற புதிய புத்தகத்தின் விற்பனையைத் தடுக்கும் முயற்சியில், ஆப்பிள் ஆசிரியர் டாம் சடோவ்ஸ்கி மற்றும் அதன் வெளியீட்டாளர் முர்மன் வெர்லாக் ஆகியோருக்கு ஆப்பில் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த வழக்கறிஞர் டாம் சடோவ்ஸ்கிக்கும் அவரது வெளியீட்டாளருக்கும் புத்தக ஆர்டர்களை வழங்குவதை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் புத்தகத்தின் அனைத்து நகல்களையும் திரும்பப் பெறவும், புத்தகத்தின் அனைத்து கையெழுத்துப் பிரதிகளை அழிக்கவும் கோரியுள்ளனர்.

ஐபோன் தயாரிப்பாளரின் இந்தக் கோரிக்கைகளை வெளியீட்டாளர் முர்மனும் புத்தக ஆசிரியரும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை என்று ஆப்பிள் வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் மற்றும் முன்னாள் ஜெர்மன் ஆப் ஸ்டோர் மேலாளர் சடோவ்ஸ்கி மற்றும் வெளியீட்டாளர் வெர்லாக் ஆகியோர் ஐபோன் நிறுவனத்துக்கு  எதிராக ஐபோன் தயாரிப்புக்களைப் பற்றி ஜெர்மன் மொழியில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்தை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின்படி, அனுமதிக்கப்படாத ரகசிய "வணிக ரகசியங்களை" புத்தக ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் செவ்வாயன்று இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. சடோவ்ஸ்கியின் "ஆப் ஸ்டோர் ரகசியம்" என்ற இந்தப் புத்தகம், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மேலாளரின் பார்வையிலிருந்து ஆப்பிள் ஆப் ஸ்டோர் எவ்வாறு செயல்படுகிறது, அதன் திரைக்குப் பின்னால் இருக்கும் காட்சிகள்  குறித்து பேசுகிறது.

சாடோவ்ஸ்கியின் ஆப்பிள் நிறுவனத்தின் பயணம், ஆப் ஸ்டோரில்  பணியாற்றிய காலகட்டத்தில் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான சந்திப்புகள் குறித்தும் இந்த புத்தகம் விவரிக்கிறது.

]]>
App Store book over 'secrets' https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/24/w600X390/apple.jpg https://www.dinamani.com/trade/2020/feb/20/apple-wants-to-halt-publication-of-app-store-book-over-secrets-3362739.html
3361996 வணிகம் கேலக்ஸி 2 எஸ் பேனாவுடன் புதிய வடிவத்தில் அறிமுகம் IANS IANS Thursday, February 20, 2020 11:27 AM +0530  

சாம்சங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது, இப்போது வரவிருக்கும் மொபைல் எஸ் பேனா உள்ளிட்ட புதிய வடிவத்துடன் வரும் என்று அறிக்கை கூறுகிறது.

கேலக்ஸி ஃபோல்ட் 2 7.7 அங்குல டிஸ்ப்ளே வரை திறக்கக் கூடிய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது, இது கேலக்ஸி நோட் 10 + ஐ விட ஒரு அங்குலத்திற்கும் பெரியது.

கேலக்ஸி எஸ் 20 பிளஸ்- 12 எம்பி மெயின், 64 எம்பி டெலிஃபோட்டோ, 12 எம்பி அல்ட்ராவைடு, 3 டி டோஃப் சென்சார் மற்றும் விஜிஏ டைம்-ஆஃப்-ஃப்ளைட் சென்சார் போன்ற கேமரா அமைப்பையும் ஃபோல்ட் 2 கொண்டுள்ளது.

வரவிருக்கும் இந்த மொபைல் சாதனம் கேலக்ஸி எஸ் 20 + ஐப் போலவே 3 எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக் ஜூம் மற்றும் 30 எக்ஸ் சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் வரை ஆதரிக்கக்கூடும்.

இதற்கிடையில், அண்டர் ஸ்கிரீன் செல்பி கேமரா போன்ற சில புதிய வசதிகளையும் இந்த தொலைபேசி கொண்டு வருவதாக செய்திபரவியுள்ளது.

]]>
Galaxy Fold 2 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/Samsung-fold-2.jpg https://www.dinamani.com/trade/2020/feb/20/galaxy-fold-2-may-come-with-a-new-form-of-s-pen-3361996.html
3361942 வணிகம் ரியல்மி சி3 விற்பனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு! DIN DIN Wednesday, February 19, 2020 04:41 PM +0530  

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, தனது புதிய தயாரிப்பான ரியல்மி சி3-யை இந்தியாவில் அறிமுகம்  செய்துள்ள நிலையில் அதன் விற்பனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

ரியல்மி தயாரிப்புகளில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ரியல்மி சி2 நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் அடுத்த வெர்ஷனாக ரியல்மி சி3 இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில், ரியல்மி சி3, 3ஜிபி+ 32 ஜிபி -விலை ரூ. 6999, 4ஜிபி+ 64 ஜிபி-யின் விலை ரூ.7,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

6.5 அங்குல டிஸ்ப்ளே, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 12 மெகாபிக்சல் மெயின் ஷூட்டர் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. 

ரியல்மி சி3 பிப்ரவரி 14ம் தேதி முதல் ரியல்மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வந்தது. தொடர்ந்து, வடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்குறிப்பிட்ட தளங்களில் விற்பனையானது பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

]]>
realme https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/realme_c3.jpeg https://www.dinamani.com/trade/2020/feb/19/realme-c3-on-open-sale-till-february-21-3361942.html
3361903 வணிகம் மார்ச் 31ல் குறைந்த விலையில் வெளியாகும் ஆப்பிள் ஐபோன்! DIN DIN Wednesday, February 19, 2020 02:00 PM +0530  

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் வருகிற மார்ச் 31 அன்று குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெர்மன் செய்தித் தளமான iphone-ticker.de என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 31 அன்று ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் 9 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.28,000) இருக்கும் என்றும் வருகிற ஏப்ரல் 3ம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
Apple, iPhone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/apple_iphone_se2.jpg https://www.dinamani.com/trade/2020/feb/19/apples-next-iphone-on-march-31-3361903.html
3361901 வணிகம் பிப். 25 முதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம் 31 DIN DIN Wednesday, February 19, 2020 01:42 PM +0530  

சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட் போன்கள் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் பிரிவில் நிறுவனம் மிகப்பெரிய சந்தைப் பங்கைப் பெற உதவியுள்ளது.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 30,  2019 ஆம் ஆண்டில் வெற்றிகரமான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான கணக்கான போன்கள் விற்பனை செய்யப்பட்டன.

சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் சாம்சங் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரித்துள்ளது. 

கேலக்ஸி எம் 31 போன், 6 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இரண்டு வகைகளில் வருகிறது. 64 எம்பி கேமரா மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட கேலக்ஸி எம் 31 மார்ச் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் இணையதளம், சாம்சங் ஸ்டோர்கள் தவிர சில்லறைக் கடைகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய சாம்சங் நிறுவனம், எம் 10, எம் 20, எம் 30, எம் 40, எம் 10 மற்றும் எம் 30 ஆகிய ஆறு மாடல்களை 2019ஆம் ஆண்டில் எம் தொடரின் கீழ் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ச்சியாக சாம்சங் கேலக்ஸி எம் 31, வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி குறைந்தபட்சமாக ரூ.15,999 ரூபாய் விற்பனையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
Samsung https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/flip_samsung.jpg https://www.dinamani.com/trade/2020/feb/19/the-samsung-galaxy-m31-sale-from-the-feb-25th-3361901.html
3361041 வணிகம் 2020 ஹீரோ பேஷன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் அறிமுகம்! DIN DIN Tuesday, February 18, 2020 04:08 PM +0530  

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட 2020 ஹீரோ பேஷன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள்ளது.

புது ஸ்டைல் மற்றும் புதிய எஞ்சின்களுடன் பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு பைக்குகளும் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் என இரண்டு வகைகளில் வருகின்றன. மேலும் 2020 ஹீரோ பேஷன் புரோவின் விலை முறையே ரூ.64,990 மற்றும் ரூ.67,190 ஆகவும், கிளாமர் பைக்கின் விலை முறையே ரூ. 68,900 மற்றும் ரூ.4 72,400 ஆகவும் உள்ளது

அதிக எரிபொருள் திறன், சிறந்த முடுக்கம், மென்மையான சவாரியுடன்  புதிய தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ பேஷன் புரோ பிஎஸ் 6 இணக்கமான 110 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 7,500 ஆர்.பி.எம்.இல் 9.02 பிஹெச்பி ஆற்றலை வெளியேற்றும், 5,500 ஆர்.பி.எம். -இல் 9.79 என்.எம் டார்க்கை உருவாக்குகிறது.

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதுப்பிக்கப்பட்ட பேஷன் புரோ 9 சதவீதம் அதிக பவரையும், 22 சதவீதம் அதிக டார்க்கையும் வழங்குகிறது. 

மறுபுறம், 2020 ஹீரோ கிளாமர் புதிய 125 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 19 சதவீதம் கூடுதல் சக்தியை வழங்கும். 7500 ஆர்.பி.எம்.இல் 10.73 பிஹெச்பி மற்றும் 6000 ஆர்.பி.எம்.இல் 10.6 என்.எம் டார்க்கை வழங்குகிறது. எஞ்சின் 4-ஸ்பீட் யூனிட்டுக்கு பதிலாக 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேஷன் புரோ 4 புதிய வண்ண விருப்பங்களுடன் ஸ்டைலிங்குடன் வருகிறது.  மஞ்சள், வெள்ளி மற்றும் கருப்பு வண்ணங்கள் கலந்து ஒரு மாடல் வெளியாகியுள்ளது. கிளாமர் பைக்குகளும் 4 வண்ண விருப்பங்களில் வருகிறது. 

]]>
Bike https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/herobike.JPG https://www.dinamani.com/trade/2020/feb/18/2020-hero-passion-pro-and-glamour-bs6-launched-in-india-3361041.html
3361012 வணிகம் புதிய ஆடி ஏ8எல் செடான் கார் அறிமுகம்! DIN DIN Tuesday, February 18, 2020 02:01 PM +0530  

அற்புதமான வடிவமைப்புடன் கூடிய புதிய ஏ8எல் செடான் காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

5.3 மீட்டர் நீளமும், கிட்டத்தட்ட 2 மீட்டர் அகலமும் கொண்ட ஆடி ஏ8எல் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. காரின் விளிம்பில் உள்ள கோடுகள், அதன் வழுவழுப்புத் தன்மை, சூழல் சக்கர வளைவுகள் என மிகவும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளன.

வெளிப்புறத்தில் சிறியதாக காணப்பட்டாலும் அதிகம் பேர் உட்காரக்கூடிய வகையில் இருக்காய் உள்ளது. இருக்கையும் வாடிக்கையாளர்களைகவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 3 லிட்டர் டர்போசார்ஜ் வி6 பெட்ரோல் எஞ்சின், 340 ஹெச்.பி. பவர் மற்றும் 500 என்.எம். டார்க்கை கொண்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தில் 5.7 வினாடிகளில் செலுத்த முடியும்.

மேலும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், பவர் ட்ரெயினில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் பெல்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 10ஏ.ஹெச் லித்தியம் அயன் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் மூலமாக வாகனத்தை அதிகபட்சமாக 55-160 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. எஞ்சினை அணைத்த பின்னரும் 40 விநாடிகள் வரை இயங்கும். மற்ற கார்களை ஒப்பிடுகையில் பெட்ரோலை சேமிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.56 கோடி. 

]]>
audi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/audi1.JPG https://www.dinamani.com/trade/2020/feb/18/audi-india-launches-the-striking-futuristic-new-a8l-luxury-sedan-3361012.html
3360974 வணிகம் பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2ஐ IANS IANS Tuesday, February 18, 2020 11:12 AM +0530  

மார்ச் 31 அன்று ஆப்பிள் ஊடக நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதன் குறைந்த விலை ஐபோனான எஸ்இ2 என்று அழைக்கப்படும் ஐபோன் 9-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மொபைல்ஃபோன் ஏப்ரல் 3-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் 399 டாலருக்கு சில்லறை விற்பனை செய்யும் என்றும் பட்ஜெட் விலை பிரிவில் விற்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானிய வலைப்பதிவான மேக் ஒட்டகாராவின் சமீபத்திய அறிக்கையின்படி, குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் 8 ஐ ஒத்த, 5.4 அங்குல ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ முன்பு இந்த ஐபோன் 11, 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி சேமிப்பகத்துடன் அதே ஏ 13 சிபியுடன் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

5.4 அங்குல ஐபோன் பின்புற கேமராவைக் கொண்டிருக்கும், இது ஐபோன் 8 உடன் ஒப்பிடும்போது மிகப் பெரியது.

ஐபோன் எஸ்இ2 மாடல்கள் அதன் மதர்போர்டுக்கு 10-அடுக்கு அடி மூலக்கூறு போன்ற பிசிபி (எஸ்எல்பி) ஐப் பயன்படுத்தும், ஐபோன் 11 இன் பதிப்பால் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் சொ;வர், ஸ்பேஸ் க்ரே மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

கூடுதலாக, ஆப்பிள் அடுத்த சில மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட ஐபாட் புரோ மாடல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட 13 அங்குல மேக்புக் ப்ரோ உள்ளிட்ட பல தயாரிப்புகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

]]>
iPhone SE 2 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/apple_iphone_se2.jpg https://www.dinamani.com/trade/2020/feb/18/apple-likely-to-launch-iphone-se-2-on-march-31-3360974.html
3360091 வணிகம் ஒன்பிளஸூக்கு போட்டியாக களமிறங்கும் சாம்சங் நோட் 10 லைட் DIN DIN Monday, February 17, 2020 04:35 PM +0530  

கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்திய  சாம்சங் தற்போது 'நோட் 10 லைட்' எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அதற்கு போட்டியாக சாம்சங் நோட் 10 லைட் களமிறங்குகிறது. 

நோட் 10 லைட் 6 ஜிபி வேரியண்ட் 38,999 ரூபாய், 8 ஜிபி வேரியண்ட் 40,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 128 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வருகின்றன. 

கேலக்ஸி நோட் 10 பிளஸ் போனை ஒப்பிடுகையில், இதில் கூடுதலாக சதுர வடிவ கேமரா ஒன்று உள்ளது.  6.7 இன்ச் ஃபுல் எச்டி + அமோல்டு பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு முன் கேமரா கொண்டுள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஓ.ஐ.எஸ் கொண்ட 12 எம்.பி பிரதான கேமரா உள்ளது.  செல்பி கேமராவில் 32 எம்.பி சென்சார்  உள்ளது.

6.7 அங்குல கேலக்ஸி நோட் 10 லைட்டை நோட்பேடாக பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 9810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 10nm 64-பிட் ஆக்டா-கோர் ப்ராசசர், 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

]]>
gadget, Samsung https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/6/w600X390/samsung.jpg https://www.dinamani.com/trade/2020/feb/17/samsungnote10lite-3360091.html
3360106 வணிகம் பணித்திறனை மேம்படுத்த மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் புதிய அம்சம் அறிமுகம் DIN DIN Monday, February 17, 2020 04:35 PM +0530  

அவுட்லுக்கில் ஸ்பேஸ் எனப்படும் மைக்ரோசாப்டின் சமீபத்திய புதிய அம்சம் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. 

மைக்ரோசாப்ட் அவுட்லுக், 'ஸ்பேஸ்' என்ற புதிய அம்சத்தில் செயல்படுகிறது. இது மின்னஞ்சல்கள், முக்கியமான சந்திப்புகள், தேதிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக்கொள்ள பயன்படுகிறது. அனைத்து வகையான ஆவணங்களையும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

இதனால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்ய முடியும். நீங்கள் தரவுகளை கொடுத்திருந்தால் எந்தவொரு நிகழ்வையும் மறந்துபோகத் தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்தும் நினைவுபடுத்தப்படும். 'அவுட்லுக் ஸ்பேஸ்' என்பது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. உங்களது ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் நிகழ்வுகளை ஒன்றிணைக்கிறது. 

]]>
microsoft https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/microsoft.jpg https://www.dinamani.com/trade/2020/feb/17/microsofts-latest-feature-update-on-outlook-called-spaces-focuses-on--improving-organisational-aspec-3360106.html
3358459 வணிகம் மனிதன் பறக்க உதவும் ஆடையை வடிவமைத்து வரும் சாம் ரோஜெர்ஸ் DIN DIN Saturday, February 15, 2020 04:09 PM +0530
மனிதன் பறக்க உதவும் வகையில் காஸ்-டர்பைன்ஸ்-பவர்ட் ஜெட் ஆடைகளை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மார்வெல் மேன் என்று அறியப்படும் சாம் ரோஜெர்ஸ்.

இதுபோன்ற தொரு ஆடையை அணிந்து கொண்டு நதியின் மீது பறந்து ஒரு பரிசோதனையையும் அவர் நடத்திக் காட்டியுள்ளார்.

இது வெறும் பொழுதுபோக்குக்காக செய்யப்படும் ஆராய்ச்சியல்ல. வருங்காலத்தில் மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல ஒரு மாற்று போக்குவரத்து சாதனமாக இதைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்க சாம் ரோஜெர்ஸ் திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

உங்கள் உடலைச் சுற்றி 5 டர்போஜெட்கள் இயங்குவது ஒரு விநோத அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலை மாணவரான சாம்.

தற்போது பல லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த ஆடை, அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும் போது விலைக் குறைவது நிச்சயம் என்கிறார் அவர்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/fly.jpg https://www.dinamani.com/trade/2020/feb/15/மனிதன்-பறக்க-உதவும்-ஆடையை-வடிவமைத்து-வரும்-சாம்-ரோஜெர்ஸ்-3358459.html
3358455 வணிகம் சாம்சங் காலக்ஸி எஸ்20க்கான ப்ரீ-ஆர்டர் துவக்கம் DIN DIN Saturday, February 15, 2020 03:50 PM +0530
செல்போன் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் காலக்ஸி எஸ்20 வரிசை செல்போன்களுக்கான ப்ரீ ஆர்டர் இந்தியாவில் துவங்கியுள்ளது.

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி முதல் இந்த செல்போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியுள்ளது.

இந்த செல்போன்களின் ஆரம்ப விலை ரூ.70 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காலக்ஸி எஸ்20 அல்ட்ரா செல்போனில் விலை ஒரு லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை செல்போன்கள் அதிகபட்சமாக 16 ஜிபி ராம் வசதியுடன் அறிமுகமாக உள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/samsung_3.jpg https://www.dinamani.com/trade/2020/feb/15/samsung-galaxy-s20-can-be-pre-ordered-3358455.html
3356685 வணிகம் ஒன்பிளஸ் போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு வசதி! DIN DIN Thursday, February 13, 2020 05:57 PM +0530  

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு வசதி விரைவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாக உள்ளது. 

கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட்டுக்கான ஆம்பியண்ட் மோடு வசதியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, சமீபத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு(Google Assistant Ambient Mode) வசதியுடன் வருகிறது. 

சோனி, ஸியோமி, லெனோவா உள்ளிட நிறுவனங்களைத் தொடர்ந்து இந்த வசதி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் வருகிறது. சீனத் தயாரிப்பான ஒன்பிளஸ் போன்களில் இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

முதற்கட்டமாக, ஒன்பிளஸ் 3 மாடல் போனில் அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து, விரைவில் மற்ற ஒன்பிளஸ் போன்களில் அருங்குமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு ஆண்ட்ராய்டு ஓரியோ அல்லது அதற்குப் பின்னர் வந்த இயங்குதளத்தில் இயங்கும்.

கூகுள் அசிஸ்டன்ட் ஆம்பியண்ட் மோடு தங்களது மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் ஸ்மார்ட் டிஸ்பிளே-வை வைக்கவும், புகைப்படத்தை டைனமிக் வால்பேப்பர் ஸ்லைடு ஷோவுடன் வைக்க பயன்படுகிறது. ஆம்பியண்ட் மோடு சென்சார்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை ஒருங்கிணைக்கவும், வானிலை, நினைவூட்டல் உள்ளிட்ட பல தகவல்களை வழங்குகிறது. மியூசிக் பிளேபேக்கைக் கட்டுப்படுத்தவும் பயனப்டுகிறது. 

]]>
Smart phone, gadget https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/oneplus_1202chn_1.jpg https://www.dinamani.com/trade/2020/feb/13/oneplus-smartphones-to-have-google-ambient-mode-3356685.html
3356688 வணிகம் ஏழு மாநிலங்களில் பேஸ்புக் நடத்தும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம் DIN DIN Thursday, February 13, 2020 01:06 PM +0530  

டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த தனது 'வீ திங்க்' என்ற திட்டத்தை தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) மற்றும் சைபர் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது

இந்த திட்டத்தின்படி, இந்தயாவில் ஏழு மாநிலங்களில் டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொடங்கி, அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் பிகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெறும். 

டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் குடியுரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இதில் பயிற்சி பெற உள்ளனர். 

மேலும், 'பெண்களை டிஜிட்டல் துறையில் ஈடுபட வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறோம். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், ஆன்லைன் அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவுகிறோம். கற்றல் செயல்முறையில் முறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பயிற்சி பயன்படும்' என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.

'தற்போதைய யுகத்தில் மாற்றத்திற்கான ஒரு இயங்குதளமாக இணையம் மாறிவிட்டது. இந்த பயிற்சி உத்தரப்பிரதேச பெண்களுக்கு பல துறைகளில் வாய்ப்பளிக்கும். மேலும், பேஸ்புக்கோடு சேர்ந்து மக்களை தெளிவு படுத்தவும், கல்வியை வழங்கவும் விரும்புகிறோம். மக்களிடையே, முக்கியமாக பெண்களிடையே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த உதவுவோம்' என்று அம்மாநில பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

]]>
Facebook https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/16/w600X390/Facebook.jpg https://www.dinamani.com/trade/2020/feb/13/facebook-launches-digital-literacy-programme-in-seven-indian-states-3356688.html
3356683 வணிகம் காதல் கெளபாய் ஈமோஜியை இப்படி உருவாக்கலாம்: அறிமுகப்படுத்துகிறது கூகுள் IANS IANS Thursday, February 13, 2020 12:44 PM +0530  

ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்ட் "ஈமோஜி கிச்சன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இது பயனர்கள் வெவ்வேறு ஈமோஜிகளை மாஷ் அப் செய்ய அனுமதிக்கும் அதன்பின் தகவலை அனுப்பும்போது அவற்றை ஸ்டிக்கர்களாகப் பயன்படுத்தலாம்.

"உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் ஜிபோர்டைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு ஸ்மைலி ஈமோஜியையும் தட்டினாலும், ஈமோஜி கிச்சன் கூகுள் வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல ஸ்டிக்கர்களை வெளிப்படுத்தும். எனவே நீங்கள் ஒரு கெளபாய் தொப்பி ஈமோஜியின் முகத்தைத் தட்டும்போது - வாவ், இப்போது உங்கள் திரையில் குரங்கு கெளபாய் வெளிப்படும், போலவே பேய் கெளபாய், சிரிக்கும் கெளபாய், முத்தமிடும் கெளபாய், காதல் கெளபாய், என வெவ்வேறு கெளபாய் உருவங்கள் வெளிப்படும்." என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிமெயில், கூகுள் செய்திகள், மெஸஞ்சர், ஸ்னாப்ஷாட், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற பயன்பாடுகள் முழுவதிலும் இந்த ஸ்டிக்கர்கள் செயல்படும்.

"ஈமோஜிகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன, பயனர்கள் மகிழ்ச்சியான குறியீடுகளையும், மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த வார்த்தைகள் மற்றும் ஈமோஜிக்களையும் ஒன்றிணைத்து உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக மாற்றுவது, முற்றிலும் புதிய கருத்துக்களை உருவாக்குவதற்காகவும் ஈமோஜிக்கள் பயன்படுகின்றன" என்று நிறுவனம் மேலும் கூறியது.

இந்தப் புதிய ஈமோஜி ஸ்டிக்கர் பேக்கில் டெவலப்பர் மேக்சென்ஸ் கியூக்னொல்லே உருவாக்கிய 40 ஈமோஜி சேர்க்கைகள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது.

]]>
emoji mashup stickers https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/cowboy.jpg கெளபாய் ஈமோஜி https://www.dinamani.com/trade/2020/feb/13/google-introduces-emoji-mashup-stickers-to-gboard-on-android-3356683.html
3356681 வணிகம் மிகச்சிறந்த வடிவமைப்புடன் கூடிய ரெட்மிபுக் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் DIN DIN Thursday, February 13, 2020 12:34 PM +0530  

ரெட்மி நிறுவனம், ரெட்மிபுக் 13 என்ற புதிய லேப்டாப் மாடலை கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்தது. மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த சாதனம் சில்வர் நிறத்தில் அறிமுகமானது. 

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் லேப்டாப் ரெட்மிபுக் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், 13 அங்குல மாடல் அல்லது 14 அங்குல மாடல் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி புக் 13 சிறிய 13.3 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே 10-வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில், கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7  என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை முறையே சுமார் ரூ.42,000 மற்றும் ரூ.52,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டுள்ளது. 

மேலும், இந்நிறுவனம் வெப்ப மேலாண்மை முறையை (proprietary thermal management system) ரெட்மிபுக் 13 லேப்டாப்பில் பயன்படுத்தியுள்ளது, அதன்படி இதில் 6மிமீ விட்டம் கொண்ட டூயல் ஹீட் பைப்கள் உள்ளன. 

இதுவரை இல்லாத அளவுக்கு ரெட்மிபுக் லேப்டாப் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
Redmibook https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/w600X390/remibook.JPG https://www.dinamani.com/trade/2020/feb/13/laptop-redmibook-might-launched-in-india-3356681.html
3354948 வணிகம் 25 லட்சம் கேலக்ஸி இஸட் ஃபிளிப் மொபைல்களைத் தயாரிக்க சாம்சங் முடிவு IANS IANS Thursday, February 13, 2020 10:41 AM +0530  

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் கேலக்ஸி இஸட் ஃபிளிப் மொபைல்களை தயாரித்து உலக சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

சில தொழில்துறை வட்டாரங்களுக்கு இடையே இந்த மொபைல் சான் பிரான்சிஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் கேலக்ஸி இசட் ஃபிளிப்பின் 5 லட்சம் போன்களின் முதல் கட்ட வரிசையை உருவாக்கத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.

இந்த மொபைலின் விலை 60,860 முதல் 2,91,295 வரை இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்டால் இயக்கப்படும் மோட்டோரோலா ரேஸரின், 500 1,500 விலையை விட இதன் விலை கணிசமாகக் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி இஸட் ஃபிளிப் ஸ்னாப்டிராகன் 855 மொபைல் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த மொபைல் சீனாவின் 3 சி சான்றிதழ் தரவுத் தளத்தில் உள்ளது.  15W சார்ஜருடன் வருவதாக அறிவித்துள்ளது.

இந்த மொபைல் முந்தயவற்றுடன் பொருந்தக்கூடிய வகையிலான SM-F700 மாதிரி எண்ணைக் கொண்டுள்ளது.

இது 6-லிருந்து 7 வரையிலான அங்குலம் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோவைக் கொண்டிருக்கும். இந்த ஃபோனை செங்குத்தாக மடித்து திறக்கலாம்.

இந்த மொபைலின் வெளிப்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது மற்றும் 10 எம்.பி செல்பி கேமரா இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலால் 8 கே விடியோவை பதிவு செய்ய முடியும், மேலும் 5ஜி பதிப்பானது தென் கொரியாவில் வெளியிடப்படும்.

இந்த ப்ளிப் மடிப்பில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக "அல்ட்ரா தின் க்ளாஸ் டிஸ்ப்ளே" பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தென் கொரியத் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அல்ட்ரா தின் க்ளாஸ் டிஸ்ப்ளே அல்லது யு.டி.ஜிக்கு, ஐரோப்பாவில் காப்புரிமைப் பெற விண்ணப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
Samsung aims to ship 2.5mn Galaxy Z https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/flip_samsung.jpg https://www.dinamani.com/trade/2020/feb/11/samsung-aims-to-ship-25mn-galaxy-z-flip-devices-this-year-3354948.html
3355882 வணிகம் குறைந்த விலையில் இரட்டை கேமராவுடன் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்! DIN DIN Wednesday, February 12, 2020 05:41 PM +0530  

ரெட்மி ஏ சீரிஸ் முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு 'ரெட்மி 8ஏ' என்ற பெயருடன் சந்தையில் களமிறங்குகிறது. 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது. 

6.2 இன்ச் டாட் நாட்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே திரை உள்ளது.  5,000 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது. மேலும், 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும், டைப்-சி போர்ட் வழியான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது. 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ.6,499 அமேசான் மற்றும் எம்.ஐ டாட் காம் தளத்தில் கிடைக்கிறது. பிப்ரவரி 18 முதல் விரைவில் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

இதேபோன்று, ரெட்மி பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச்  முறையே ரூ.799 மற்றும் ரூ.1,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/12/w600X390/news_1113057.jpg https://www.dinamani.com/trade/2020/feb/12/xiaomi-8a-phone-3355882.html
3351629 வணிகம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளை ரூ.70 கோடி நிதியுதவி DIN DIN Wednesday, February 12, 2020 02:50 PM +0530  

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர்(70 கோடி) நன்கொடை அளிக்கிறது.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31,161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 70 கோடி ரூபாய்) வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அரசாங்கம் மட்டுமின்றி பலதரப்பு நிறுவனங்கள், தனியார் துறைகள் இந்த வைரஸை எதிர்த்து போராடவும், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட குடிமக்களை பாதுகாக்கவும் உதவ வேண்டும். இதற்காக தேவைப்படும் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகளை அளிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பும் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறினார்.

வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமடுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

]]>
coronavirus, கரோனா https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/bill_gates.jpg https://www.dinamani.com/trade/2020/feb/07/bill--melinda-gates-foundation-donate-100-million-to-fight-coronavirus-3351629.html
3354953 வணிகம் டிவிஎஸ் அறிமுகப்படுத்தும் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் DIN DIN Tuesday, February 11, 2020 12:51 PM +0530
ஒரு முறை சார்ஜ் போட்டால், 75 கி.மீ. தூரம் ஓடும் 4.4 கிலோ வாட் மோட்டாரைக் கொண்ட தி ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நவீன வடிவமைப்பு மற்றும் அதிகத் திறனே இதன் முக்கியத்துவமாக உள்ளது. எல்இடி ஹெட்லேம்ப், டெயில்லைட், இலுமினேட்டட் லோகோ போன்றவை இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. மேம்படுத்தப்பட்ட டிஎஃப்டி க்ளஸ்டரும் உள்ளது.

இது மட்டுமல்ல, டிவிஎஸ் ஐக்யூப் செயலியை நீங்கள் செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டால், உங்கள் வாகனத்தை எங்கே நிறுத்தியிருக்கிறீர்கள், பேட்டரியின் நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் பெறலாம்.

தற்போது இந்த ஸ்கூட்டரை பெங்களூஐ டிவிஎஸ் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அடுத்தடுத்த நகரங்களுக்கு விரைவில் விற்பனைக்கு வரும்.

ஐக்யூப் அறிமுக விலை ரூ.1.15 லட்சம் மட்டுமே.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/IQube.jpg https://www.dinamani.com/trade/2020/feb/11/tvs-steps-into-electric-domain-with-the-iqube-electric-scooter-3354953.html
3354950 வணிகம் சாவி, பேக் என எதையும் தேட வேண்டாம்.. சிபோலோ ஒன் வந்துவிட்டது! DIN DIN Tuesday, February 11, 2020 12:40 PM +0530
செல்போனைக் காணவில்லை என்றால்.. வேறு ஒரு செல்போனில் இருந்து அழைப்பை மேற்கொண்டு கண்டுபிடித்து விடலாம்.

அதுபோலவே வண்டிச் சாவி, நமது கைப்பை அல்லது மிகச் சிறிய பொருட்களை தேடும் போது, இந்த வாய்ப்பு இல்லையே என்று நீங்கள் யாராவது வருத்தப்பட்டிருப்பீர்களா?

ஆம், அதுபோல யோசித்த போது கண்டுபிடிக்கப்பட்டது தான் சிபோலோ ஒன்.

சூப்பர் ஸ்மார்ட் டிராக்கர் என்ற விளம்பரத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. சிபோலோ ஒன். இதனை சாவி அல்லது கைப்பை என எதனுடன் இணைத்து வைத்தாலும், அது எங்கிருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

நமது செல்போனில் இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிபோலோவை சாவியுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை, சாவி தொலைந்து விட்டால், செல்போனில் ஆப் மூலம் தேடினால், அது எங்கிருக்கிறதோ அங்கிருந்து சத்தம் அல்லது வெளிச்சம் வரும். 

சிஆர் 2032 பாட்டரியுடன் இரண்டு ஆண்டு கால கியாரண்டியும் கிடைக்கிறது. 60 மீட்டர் தொலைவு வரை இது செயல்படும். இதன் விலை ரூ.2,0000.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/11/w600X390/chipolo.jpg https://www.dinamani.com/trade/2020/feb/11/new-arrivals-chipolo-one-3354950.html
3354054 வணிகம் ஆப்பிள் ஐபோன்களுடன் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் பிரபல நிறுவனம்! DIN DIN Monday, February 10, 2020 01:57 PM +0530  

சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து,  ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன்களுடன் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

சீனா மற்றும் உலக நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 806 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. அதற்கான சிகிச்சை முறைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன்கள் மட்டுமின்றி, முகக்கவசம் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. 

சீனாவில் கரோனா வைரஸுக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். தற்போது முகக்கவசம் தேவை அதிகமாக இருப்பதால் அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். சோதனை முயற்சியில் வெற்றி பெற்றதையடுத்து, சான்றிதழ் பெற விண்ணப்பிக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் 20 மில்லியன் முகக்கவசங்களை தயாரிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏற்கெனவே சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மருத்துவப் பொருட்களை நன்கொடைகளாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சை முகக்கவசங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவையும் தயாரிக்க இருக்கிறோம். 

விரைவில் இந்த பொருட்களின் விநியோகம் செய்யப்படும். இந்த கடின காலத்தை நாம் விரைவில் கடப்போம்' என்று ஃபாக்ஸ்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
coronavirus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/corona.jpg https://www.dinamani.com/trade/2020/feb/10/after-coronavirus-outbreak-foxconn-to-make-face-masks-as-well-as-iphones-3354054.html
3354057 வணிகம் இளைஞர்கள் விரும்பும் ரிவர்சாங் மோட்டிவ் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்! DIN DIN Monday, February 10, 2020 01:42 PM +0530  

இளைஞர்களைக் கவரக்கூடிய பல்வேறு நவீன அம்சங்களுடன் கொண்ட  ரிவர்சாங் மோட்டிவ் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளியாகியுள்ளது.

இதன் வடிவமைப்பு பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது. சிலிகான் பட்டையுடன் மணிக்கட்டில் நன்கு சீராக பொருந்தியிருக்கும். அனைத்து  வடிவங்களிலும், வெவ்வேறு அளவுகளிலும் பிரகாசமான வண்ணங்களிலும் இருப்பதால் இளைஞர்களை கவருகிறது. 

இதய துடிப்பு கண்காணிப்பு, உடற்பயிற்சி குறித்த தகவல்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகின்றன. மற்ற ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஒப்பிடுகையில், நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 6 நாட்கள் பயன்படுத்தலாம். இளைஞர்களை திருப்திப்படுத்தக்கூடிய பல அம்சங்கள் இதில் உள்ளதாக பரிந்துரைக்கிறார் கேட்ஜெட் ஆய்வாளர்கள். 

இதன் விலை ரூ.3,499. நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான riversongindia.com -இல் கிடைக்கிறது.  

]]>
smartwatch https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/smartwatch.JPG https://www.dinamani.com/trade/2020/feb/10/riversong-motive-plus-smartwatch-3354057.html
3354056 வணிகம் வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா DIN DIN Monday, February 10, 2020 01:33 PM +0530  

ஸியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. விடியோ தரம்  மற்ற கேமராக்களைக் காட்டிலும் தெளிவாக உள்ளது.

விடியோ காட்சிகளில் வீட்டிற்கு வரும் நபர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகின்றன. விடியோவை பெரிதுபடுத்தி பார்த்தாலும் படங்களை தெளிவாக காண முடியும். 130 டிகிரி அகலமான லென்ஸ் 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல அறைகளைக் கண்காணிக்க உதவுகிறது.

இரவானாலும் சரியான தெளிவான விபரங்களைப் பெற முடியும். காட்சிகளைச் சேமிப்பதற்காக அதிக ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த கேமரா அதிகபட்சம் 64 ஜிபி வரை காட்சிகளை சேமிக்க அனுமதிக்கிறது. வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த கேமராவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

விலை ரூ.1,799. எம்.ஐ மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கிறது.

]]>
Camera https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/10/w600X390/Capture.JPG https://www.dinamani.com/trade/2020/feb/10/mi-home-security-camera-3354056.html
3352435 வணிகம் பயனாளர்களின் புகைப்பட சேகரிப்பை நிறுத்து.. 'க்ளியர்வியூ ஏஐ'க்கு ஃபேஸ்புக் வலியுறுத்தல் DIN DIN Saturday, February 8, 2020 02:46 PM +0530
டிவிட்டர் மற்றும் யூடியூப்புடன் இணைந்து, ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்-இன் ஆகிய சமூக தளங்களும், பயனாளர்களின் புகைப்படங்கள் சேகரிப்பை நிறுத்துமாறு க்ளியர்வியூ ஏஐ-யை வலியுறுத்தியுள்ளன.

தங்களது சமூக வலைத்தளங்களில் இருந்து, பயனாளர்களின் புகைப்படங்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என்று நான்கு சமூக வலைத்தளங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

க்ளியர்வியூ ஏஐ என்ற சர்ச்சைக்குரிய செல்போன் செயலி, சுமார் 100 கோடி புகைப்படங்களை பயன்படுத்தி வருவதும், இவை அனைத்தும் ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக, பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், உடனடியாக புகைப்படங்களை எடுப்பதை க்ளியர்வியூ நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே டிவிட்டர், யூடியூப் ஆகியவை வலியுறுத்திய நிலையில், தற்போது ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன்-னும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளன.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/clearview.jpg https://www.dinamani.com/trade/2020/feb/08/stop-users-photo-collection--facebook-insists-on-clearview-ai-3352435.html
3352421 வணிகம் பட்ஜெட் விலையில் சாம்சங் மொபைல்: கேலக்ஸி எஸ் 10 லைட் IANS IANS Saturday, February 8, 2020 12:05 PM +0530  

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் வித்தியாசமான உத்தியைத் தேர்வு செய்துள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் ​​கேலக்ஸி எஸ் 20 வரிசை அறிமுகப்படுத்த ஒரு வாரத்துக்குச் சற்று முன்னதாக இதனை வெளியிட்டுள்ளது.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 10 லைட், பயனர்களுக்கு சிறந்த வேகத்தையும் செயல்திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  சில சமரசங்களுடன் கேலக்ஸி எஸ் தொடர் மொபைலை சந்தைப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். எனவே இது சாம்சங் தரப்பிலிருந்து ஒரு "மலிவுவான அறிமுகம்" எனலாம். இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 செயலி உள்ளது. மேலும் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.

8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி போர்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.  இதன் விலை ரூ .39,999/- ஆகும். 

6.7 அங்குலம் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் இந்த மொபைல் ஸ்மூத்தாகவும் பெரியதாகவும் இருக்கும்.  இது விலையுயர்ந்த கேலக்ஸி எஸ் 10 + மற்றும் எஸ் 10 ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டுள்ளது.

இதன் மேல்புறத்தில் ஒரு பஞ்ச்-ஹோல் உள்ளது, இது ப்ரென்ட்  கேமராவின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது.

இந்த மொபைல் வரவிருக்கும் எஸ் 20 போலவே செவ்வக கேமரா பம்ப் வடிவமைப்புடன் உள்ளது. இதில்  கண்ணாடிக்கு பதிலாக ஒரு "கிளாஸ்டிக்" ஐப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது: ஒரு நிலையான ஓ ஐ எஸ் கேமரா (48MP), அல்ட்ரா-வைட் (12MP) மற்றும் மேக்ரோ (5MP) சென்சார்களுடன் உள்ளது. இந்த மொபைல் 32 எம்.பி செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இதிலுள்ள சூப்பர் ஸ்டெடி ஓஐஎஸ் தொழில்நுட்பம், லென்ஸை விடியோக்களை கிம்பெல் போல நகரச் செய்யும். பயனரால் லென்ஸை மேல்நோக்கி, கீழ்நோக்கி மற்றும் இடது மற்றும் வலதுபுறமாக நகர்த்த முடியும். அதாவது இது விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் கேமராக்களில் நீங்கள் பெறக் கூடிய ஓஐஎஸ் வசதியைப் போன்றது.

8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஆன்-போர்டு சேமிப்பிடம் உள்ள இந்த மொபைலில் நீங்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியும். ஒரே நேரத்தில் விடியோக்களைப் பார்ப்பது, கேம்களை விளையாடுவது, படங்களை எடுப்பதுடன் இணையத்திலும் உலவலாம்.

மொபைலின் முக்கியமான கூறு இதன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகும், இது 25W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இந்த பேட்டரி கேலக்ஸி எஸ் 10 + இன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை விட அதிகம்.

இந்த மொபைல் பிக்சல் பின்னிங்கைப் பயன்படுத்தி நான்கு பிக்சல்களை ஒன்றில் இணைத்து 12MP ஃபைனல் ரெலலூஷனுடன் படங்களை எடுக்கிறது. பகலில், தரமான படங்களை எடுக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது. குறைந்த ஒளி நிலைகளின் போது, கேமராவின் லைட்டிங் சற்று அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 10 லைட் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸை அதன் சொந்த ஒன் யுஐ 2.0-லிருந்து இயக்குகிறது.

இது பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர், எட்ஜ் ஸ்கிரீன், எட்ஜ் லைட்டிங், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி வழக்கமான மற்றும் பவர்கீ கஸ்டமைசேஷன் போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.

இந்த சாம்சங் மொபைல் வாட்டர் அண்ட் டஸ்ட் ஃப்ரூபை வழங்கவில்லை, இது பயனர்களுக்கு சிறு குறையாக இருக்கலாம்.

இறுதியாக, எஸ்-லைட் என்பது எஸ்-சீரிஸ் ஃபிளாக்க்ஷிப் ஸ்பெக்ஸின் முக்கியமான கூறுகளை பயனர்களுக்கு அளிப்பதன் மூலம் சாம்சங்கின் சிறந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

]]>
Galaxy S10 Lite https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/samsung_s10_lite.jpg https://www.dinamani.com/trade/2020/feb/08/galaxy-s10-lite-samsung-affordable-flagship-is-here-3352421.html
3351553 வணிகம் விழாக் காலம்: 13 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்று சோனி சாதனை DIN DIN Friday, February 7, 2020 11:53 AM +0530
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் சுமார் 13 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்று சோனி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

2019ம் ஆண்டு ஆக்டோபர் - டிசம்பர் வரையிலான 3வது காலாண்டு என்பது விழாக்காலமாகும். இந்த விழாக்காலத்தில் மட்டும் சோனி நிறுவனம் 13 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்துள்ளது.

அதே சமயம், அதற்கு முந்தைய காலாண்டில் வெறும் 6 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்துள்ளது.

வரும் காலாண்டில், பல புதிய வசதிகளுடனான ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தி மேலும் லாபத்தைக் கூட்ட சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/31/w600X390/sony1.jpg https://www.dinamani.com/trade/2020/feb/07/sonys-record-sales-of-13-lakh-smartphones-3351553.html
3351551 வணிகம் கரோனா வைரஸ் எதிரொலி: டிஸ்ப்ளே பேனல், சிப்ஸ் விலைகள் உயரும் அபாயம் DIN DIN Friday, February 7, 2020 11:40 AM +0530
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக நாடுகளில் டிஸ்ப்ளே பேனல் மற்றும் செமிகன்டக்டர்ஸ் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்வு காணும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி உட்பட ஏராளமான தென்கொரிய உற்பத்தி நிறுவனங்களின் தலைமையிடமாக விளங்கும் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுளள்து.

இதுவரை சீனாவில் 636 பேர் கரோனா வைரஸ் பாதித்து பலியாகியுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது வரை சீனாவில் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் உற்பத்தித் தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்கி வருவதாகவும், இந்த உற்பத்தியில் இயந்திரங்களே பெரும் பங்கு வகிப்பதாலும், மனிதர்களின் பயன்பாடு குறைவாகவே இருப்பதாலும் உற்பத்தி பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

எனினும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சீன அரசு அறிவித்த விடுமுறை காரணமாகவே, சில நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/7/w600X390/chips.jpg https://www.dinamani.com/trade/2020/feb/07/corona-virus-echo-display-panel-chips-prices-high-3351551.html
3350688 வணிகம் ரியல்மி சி3 ஸ்மார்ட் போன் அறிமுகமானது; பிப்.14 முதல் விற்பனை DIN DIN Thursday, February 6, 2020 04:07 PM +0530
பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, தனது புதிய தயாரிப்பான ரியல்மி சி3-யை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

ரியல்மி போன்கள் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரியல்மி தயாரிப்புகளில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பயனர்களின் விருப்பமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ரியல்மி சி2 நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் அடுத்த வெர்ஷனாக ரியல்மி சி3 இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில், ரியல்மி சி3, 3ஜிபி+ 32 ஜிபி -விலை ரூ. 6999, 4ஜிபி+ 64 ஜிபி-யின் விலை ரூ.7,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

6.5 அங்குல டிஸ்ப்ளே, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 12 மெகாபிக்சல் மெயின் ஷூட்டர் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. 

ரியல்மி சி3 வருகிற பிப்ரவரி 14ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
realme c3 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/real_me_c3.jpg https://www.dinamani.com/trade/2020/feb/06/realmi-c3-smart-phone-introduced-in-india-3350688.html
3350684 வணிகம் ரூ.12,999-க்கு அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ ஷோ 8 DIN DIN Thursday, February 6, 2020 03:51 PM +0530  

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், 8 இன்ச் டிஸ்பிளேயுடன் கூடிய எக்கோ ஷோ 8 -யை அறிமுகப்படுத்தியுள்ளது. 

எக்கோ ஷோ 8, ஸ்டீரியோ சவுண்ட் மற்றும் ஷட்டருடன் உள்ளமைக்கப்பட்ட 8 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. முக்கியமாக, வீடியோ அழைப்புகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். மேலும் பயனர்களை விரைவாகவும், தடையின்றி மற்ற எக்கோ சாதனங்களுடன் இணைக்கவும் அனுமதிக்கிறது. டிராப்-இன் அம்சத்திற்கும் கேமராவைப் பயன்படுத்தலாம். இது 8 அங்குல தொடுதிரையுடன் இரண்டு அங்குல நியோடைமியம் ஸ்பீக்கர்கள் மற்றும் செயலற்ற பாஸ் ரேடியேட்டர் உள்ளது. 

வருகிற பிப்ரவரி 26 முதல் ஆன்லைனிலும், மொபைல் ஸ்டார்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,999. எனினும், அறிமுகத் தள்ளுபடியாக ரூ.8,999-க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அமேசானின் எக்கோ ஷோ 5 வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

]]>
amazon https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/amazon.JPG https://www.dinamani.com/trade/2020/feb/06/headline-amazon-launches-echo-show-8-for-inr-12999-3350684.html
3350679 வணிகம் நொய்டாவில் 2வது நாளாக நடைபெற்று வரும் 'ஆட்டோ எக்ஸ்போ 2020' DIN DIN Thursday, February 6, 2020 03:17 PM +0530  

ஆட்டோ மொபைல் நிறுவன முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆட்டோ எக்ஸ்போ 2020 நொய்டாவில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இதில் அறிமுகப்படுத்தி வருகின்றன. மேலும், சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள பல கார்கள், பைக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 எஸ்  பிரெஸ்ஸா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் பல புதிய வரவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வோல்க்ஸ்வேகன் ஐடி கிராஸ் என்ற மாடலும், ரேஸ் போலோ காரும் அறிமுகமானது. 

அதேபோன்று, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய இரு சக்கர வாகனங்களையும் காட்சிக்கு வைத்துள்ளன. 

]]>
noida, auto expo https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/20200205047L.jpg https://www.dinamani.com/trade/2020/feb/06/auto-expo-2020-at-noida-3350679.html
3349917 வணிகம் கரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் தாமதமாகுமா? DIN DIN Wednesday, February 5, 2020 03:22 PM +0530  

2020ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று சைபர் மீடியா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 20 கோடி 5ஜி செல்போன்கள் விற்பனையாகும் என்று ஏற்கெனவே அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது.

இந்நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன்களில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இது மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சைபர் மீடியா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

மேலும், '2020 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவுகளில் சுமார் 1 சதவீதத்திற்கு மட்டுமே பங்களிக்கும். அதன்பின்னர், 2025 க்குள் இதன் அளவு 144 மில்லியன் யூனிட்டுகளை எட்டக்கூடும் என்று தெரிவிக்கிறது. 10 முதல் 12 எண்ணிக்கையிலான,  5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்பகால தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்களுக்கு 5ஜி ஏற்றுமதி புதியதாக இருக்கும். 5ஜி ஸ்மார்ட் போன்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் பாகங்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பினால் சீனா முடங்கியுள்ள நிலையில், இது இந்தியாவில் ஸ்மார்ட்போன் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எனினும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

]]>
5G https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/5g.jpg https://www.dinamani.com/trade/2020/feb/05/first-wave-of-5g-smartphones-to-arrive-in-india-in-2020-3349917.html
3349909 வணிகம் விளையாட்டு வீரர்களின் உடல் நலனைக் காக்கும் கைக்கடிகாரம் DIN DIN Wednesday, February 5, 2020 03:05 PM +0530  

விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் ஆராய்ச்சியாளர்கள் விளையாட்டு வீரர்களின் உடல் திறனை கண்டறிந்து, அதனை மேம்படுத்தும் வகையில் ஒரு கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ராணுவ பயிற்சியாளர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பல்வேறு துறைகளில் பயிற்சியில் ஈடுபடும் வீரர் மற்றும் வீராங்கனைகளின் உடல் திறனை பரிசோதித்து, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உடலில் ஏற்படும் குறைபாடுகள் என அனைத்தையும்  இந்த கைக்கடிகாரம் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

உடல் திறன் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களையும், இந்த கைக்கடிகாரத் தொழில்நுட்பம் மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கான வழிமுறைகளையும் எடுத்துக் கொடுக்கும்.

பயிற்சி எடுக்கும் ஒருவரின் மெட்டபாலிஸத்தில் மாறுபாடு ஏற்பட்டால் இந்த கைக்கடிகாரம் உடனடியாக அதனை தெரிவிக்கும். எனவே, அதற்கேற்ற வகையில் உடல்நலத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை வீரர்களும், பயிற்சியாளர்களும் மேற்கொள்ள முடியும்.

உடலில் சுரக்கும் வியர்வை முதல் உடல் வெப்பநிலை வரை பல்வேறு அடிப்படை விஷயங்களையும் இது பரிசோதிக்கும்.

இந்த ஆய்வினை இணைந்து நடத்தும் அமெரிக்காவின் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் டெனிலி இது பற்றிக் கூறுகையில், கையில் மணிக்கட்டில் கட்டப்படும் கடிகாரம் போன்ற கருவியின் அடியில் ஒரு ஸ்டிரிப் பொருத்தப்படும். இது, அந்த கடிகாரத்தைக் கட்டியிருப்பவரின் தோலுடன் ஒட்டியிருக்கும். இந்த ஸ்டிரிப்தான் உடலின் அனைத்து இயக்கத்தையும் கண்டறிந்து சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/hand.jpg https://www.dinamani.com/trade/2020/feb/05/this-new-watch-can-boost-athletic-performance-and-prevent-injury-3349909.html
3349893 வணிகம் சியோல் உணவகத்தில் எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோபோக்கள்! DIN DIN Wednesday, February 5, 2020 02:55 PM +0530  

சியோலில் உள்ள உணவகத்தில் எல்ஜி நிறுவனம்வாடிக்கையாளர்களின் சேவைக்காக ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் கொரிய தலைநகரான சியோலில் உள்ள உணவகத்தில் 'க்ளோய் சர்வ்போட்' என்ற ரோபோவை எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்பதோடு, உணவுகளை டெலிவரி செய்கிறது. ஒரே நேரத்தில் தனது நான்கு அடுக்குகளில் உணவுகளை எடுத்து வருகிறது. சாப்பிட்டு முடிந்த பின்னர் தட்டு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வருகிறது.  

இதுகுறித்து உணவக மேலாளர் கூறும்போது, 'வாடிக்கையாளர்கள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தட்டுகளை எடுத்துச் செல்ல முடியாது. சில நேரங்களில் கனத்த தட்டுகள் என்றால் ஒவ்வொன்றாகத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவே, ரோபோக்கள் எங்களது வேலையை மிகவும் எளிதாக்கியுள்ளது' என்று தெரிவித்தார். 

முன்னதாக நவம்பரில், நூடுல்ஸ் தயாரிப்பதற்கென ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதேபோன்று மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு உதவுவதற்காக சியோல் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் ரோபோக்களை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

]]>
SEOUL, சியோல் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/5/w600X390/robo.png https://www.dinamani.com/trade/2020/feb/05/lg-introduces-service-robots-at-a-restaurant-in-seoul-3349893.html
3349040 வணிகம் பிப்.11ல் விற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்! DIN DIN Tuesday, February 4, 2020 04:25 PM +0530  

போகோ நிறுவனம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போகோ எக்ஸ் 2 குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730ஜி , 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை செல்பி கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போகோ எக்ஸ் 2, பிளிப்கார்ட் மூலமாக வருகிற பிப்ரவரி 11ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

போகோ எக்ஸ் 2 மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். இவை அனைத்துமே ரூ .20,000க்கு கீழ் இருக்கும். ஊதா, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. இது போகோ எக்ஸ் தொடரின் முதல் ஸ்மார்ட் போன் ஆகும். 

போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்: 

6.67 இன்ச் டிஸ்பிளே, 20:9 விகிதம்

ஐ.ஆர். பிளாஸ்டர் மற்றும் பி2ஐ கோட்டிங். 

வைஃபை காலிங் வசதி

கொரில்லா கிளாஸ் 5, ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்

3.5mm ஹெட்போன் ஜேக்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி ப்ராசசர்

4,500 எம்ஏஎச் பேட்டரி

27W பாஸ்ட் சார்ஜிங் 

கேமரா: 64 எம்.பி சோனி சென்சார்,  8 எம்.பி அல்ட்ரா வைடு, 2 எம்.பி சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி போர்டிரெயிட் லென்ஸ்

முன்புறம் 20 எம்.பி + 2 எம்.பி. செல்ஃபி கேமரா

6ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128ஜிபி, 8ஜிபி+256ஜிபி ஆகிய மூன்று வேரியண்டுகளில் வருகிறது. 

விலை:   6ஜிபி+64ஜிபி - ரூ. 15,999,   6ஜிபி+128ஜிபி - ரூ.16,999, 8ஜிபி+256ஜிபி - ரூ.19,999. பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 11ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. ஐசிஐசிஐ வங்கி இ.எம்.ஐ-க்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் ரூ.18,999 முதல் ரூ. 20,999 வரை விற்கப்படும் என்று தெரிகிறது. 

]]>
gadget https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/poco1.jpg https://www.dinamani.com/trade/2020/feb/04/poco-x2-india-launch-highlights-3349040.html
3349012 வணிகம் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ பிப்ரவரியில் அறிமுகம்? DIN DIN Tuesday, February 4, 2020 01:28 PM +0530  

ஸியோமி தயாரிப்புகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ வருகிற பிப்ரவரி 13ம் தேதி சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் ரெட்மி நோட் 10 வெளியாகும் என்று ஸியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஸியோமி தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு, பிப்ரவரி 13ம் தேதி ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ரெட்மி நோட் 10 அம்சங்கள்:

6.5 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்,  20 எம்.பி + இரண்டாம் நிலை 12 எம்.பி + மூன்றாம் நிலை 5 எம்.பி கேமரா கொண்டுள்ளது.

டிரிபிள் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 40W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், அத்துடன் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரி உள்ளது. 

8 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரவுள்ளது. விலை தோராயமாக ரூ. 32,700.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்:

6.5 இன்ச் அளவில் 90 ஹெர்ட்ஸ் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 SoC, 4,500mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ரெட்மி போன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 

விலையைப் பொறுத்தவரை, ரெட்மி 10 ப்ரோ( 12 ஜிபி ரேம் + 128 ஜிபி) குறைந்தபட்சம் ரூ38,900 எனவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.42,000, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.46,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

]]>
redmi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/Xiaomi-Mi-Note-10.jpg https://www.dinamani.com/trade/2020/feb/04/redmi-note-10-update-3349012.html
3349009 வணிகம் வாடிக்கையாளர்களை கவரும் ஒன்மோர் டிரிபிள் டிரைவர் இயர்போன்! DIN DIN Tuesday, February 4, 2020 01:04 PM +0530  

ஆடியோ கேட்ஜெட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ஒன்மோர், சமீபத்தில் ஒரு இயர்போனை வெளியிட்டுள்ளது. டிரிபிள் டிரைவர் பி.டி என்ற இந்த இயர்போன், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் இருக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயர்போனில் ஒலியின் தரம் சிறப்பாக இருக்கும். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு பார்ப்பவர்களை கவருகிறது. காதுகளில் பொருத்துவதற்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் இயர்போனின் பட்ஸ்கள் உள்ளன. இதனால், நீங்கள் நீண்டநேரம் இயர்போனை காதில் பொருத்தினாலும், வலி ஏற்படுத்தாது. 

10 நிமிடம் சார்ஜ் செய்தலே சுமார் 3 மணி நேரங்கள் தொடர்ந்து இயங்கும். சமீபத்தில் வெளியான இயர்போன்களில் சிறந்த வயர்லெஸ் போன் என்று கூறப்படுகிறது. 

]]>
earphone https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/4/w600X390/title.jpg https://www.dinamani.com/trade/2020/feb/04/1more-triple-driver-bt-headphone-3349009.html
3348095 வணிகம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான 'வாட்ஸ்ஆப் பே' செயலி எப்போது வரும்? DIN DIN Monday, February 3, 2020 04:11 PM +0530  

வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் 'வாட்ஸ்ஆப் பே' செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப் செயலி தற்போது பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. உலக அளவில் 80 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், கூகுள் பே, போன் பே போன்று ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கென 'வாட்ஸ்ஆப் பே' செயலியை கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே இதற்கான சோதனை முயற்சிகள் உலகம் முழுவதுமே நடைபெற்றன. இந்தியாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பைலட் மோடு முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் பே செயலி இன்னும் 6 மாதங்களில் உலகம் முழுவதுமே அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது வாட்ஸ் ஆப்பில் எவ்வாறு ஒரு புகைப்படத்தை, வீடியோவை உடனடியாக அனுப்புகிறீர்களோ அதுபோன்று வாட்ஸ் ஆப் பே மூலமாக மிக எளிதாக விரைவாக பணம் அனுப்ப முடியும் என்று மார்க் தெரிவிக்கிறார்.

வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுவதும் உள்ள மக்கள் உபயோகிக்கும் முக்கிய செயலியாக உள்ளது. அவ்வாறு இருக்கையில், வாட்ஸ் ஆப் பேவும் மக்களிடையே அதிகம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
whatsapp https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/3/w600X390/whatsapp.jpg https://www.dinamani.com/trade/2020/feb/03/mark-zuckerberg-says-whatsapp-pay-in-6-months-3348095.html
3348088 வணிகம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் டாங்கி செயலி! DIN DIN Monday, February 3, 2020 03:24 PM +0530  

டிக்டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் 'டாங்கி' செயலி விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

வாட்ஸ் ஆப் செயலிக்கு அடுத்தபடியாக டிக்டாக் செயலி தற்போது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் டிக்டாக் செயலியை உபயோகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் டாங்கி(Tangi) களமிறங்கவுள்ளது. டிக்டாக் செயலியைப் போன்று இதில் குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம். முதற்கட்டமாக இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலியில் பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது என்றும் ஒரு நிமிட அளவிலான குறுகிய வீடியோக்களை இதில் உருவாக்கலாம் என்றும் டாங்கி செயலி நிறுவனர் தெரிவித்துள்ளார். 

தற்போது சோதனையில் இருக்கும் இந்த செயலி விரைவில் இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
கூகுள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/3/w600X390/images_1.jpg https://www.dinamani.com/trade/2020/feb/03/after-tiktok-and-byte-the-latest-short-video-app-to-hit-the-internet-is-googles-tangi-3348088.html
3346404 வணிகம் வெகு விரைவில் இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்! DIN DIN Saturday, February 1, 2020 10:50 AM +0530
2020 மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆன்லைன் ஸ்டோரை தொடங்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஜூலை - செப்டம்பர் மாதங்களுக்கு இடையே இந்தியாவில் ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரை நிறுவுவதற்கான புதிய தற்காலிக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஸ்டோரை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் நிறுவன தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தியாவில், குறிப்பாக மும்பையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை திறக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, ஆப்பிள் தயாரிப்புகளை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் மால் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், நிறுவனம் பெரும்பாலும் ஆன்லைன் விற்பனையின் மூலம் அதன் வருவாயில் தாக்கத்தை எதிர்கொள்கிறது. இந்த இணையதளங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை அதிக தள்ளுபடியுடன் வழங்குவதால் வருவாய் பாதிக்கப்படுகிறது. இதனால், தனியே ஆன்லைன் ஸ்டோரை நிறுவும் பட்சத்தில் அது நிறுவனத்தின் வருவாயில் முக்கியப் பங்காற்றும்.

எனவே, விரைவில் இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரை நாம் எதிர்பார்க்கலாம். 

]]>
ஆப்பிள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/11/w600X390/apple.jpg https://www.dinamani.com/trade/2020/feb/01/apple-to-start-its-online-sales-in-india-3346404.html
3346401 வணிகம் நடப்பாண்டில் 117 புதிய எமோஜிகள் அறிமுகம்! DIN DIN Saturday, February 1, 2020 10:34 AM +0530  

பல்வேறு சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் 117 புதிய எமோஜிகள் நடப்பாண்டில் அறிமுகமாகவுள்ளன.

தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட கலந்துரையாடல்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வார்த்தைகளை விட எமோஜிகள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை மக்கள் விரும்புகின்றனர். எளிமையாக இருப்பதாலும், பார்ப்பதற்கு வித்தியாசமாக வேடிக்கையாக இருப்பதாலும் எமோஜிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு 117 புதிய எமோஜிகள் அறிமுகமாகியுள்ளன. இவை யூனிகோடு கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன், கூகுள், ஆப்பிள், ட்விட்டர் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த எமோஜிகளின் பதிப்பை வெளியிட்ட உள்ளன. ஆண்டின் இரண்டாம் பகுதியில் இது கிடைக்கும் என்று தெரிகிறது. 

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமான பாலினத்தை உள்ளடக்கிய எமோஜிகளைப் பெற இருக்கிறோம், திருநங்கைகளின் கொடி மற்றும் சின்னம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. 

மேலும், குமிழி தேநீர், கட்டிப்பிடிப்பது, குழந்தைக்கு பாலூட்டுவது, நிஞ்ஜா எமோஜி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. ஆனால், இவை முழுவதுமாக ஜூன் மாதத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
எமோஜி, emoji https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/11/20/16/w600X390/emoji.jpg https://www.dinamani.com/trade/2020/feb/01/117-new-emojis-introduced-3346401.html
3344656 வணிகம் ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சத்துடன் கூகுள் மொழிபெயர்ப்பு செயலி! DIN DIN Friday, January 31, 2020 05:00 PM +0530  

ஆண்ட்ராய்டு போன்களில் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷனைக் கொண்டுவர கூகுள் முயற்சி செய்து வருகிறது.

கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலிகளின் பட்டியலில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலி முதல் இடத்தில் உள்ளது. இணையத்தில் 103 மொழிகளுக்கு இந்த செயலி மொழியாக்கம் செய்து தருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் மொழிபெயர்ப்பு பயன்பாட்டில் நேரடி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை கொண்டு வருகிறது. கூகுள் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலமாக பயனர் ஒரு மொழியில் ஒரு பக்கம் ஆடியோவைப் பதிவுசெய்ய, மறுபக்கம் தேவையான மற்றொரு மொழியில் மொழி பெயர்த்து கொடுக்கும். முதற்கட்டமாக இந்த லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதி, ஆடியோவை வைத்து சோதனை முயற்சி செய்யப்படுகிறது மேலும், அது ஸ்மார்ட்போன் மைக்ரோஃபோன் மூலம் வழங்கப்படும் நேரடி ஆடியோவாக இருக்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு ஆடியோவை ஸ்பீக்கர் மூலம் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
google https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/google.jpg https://www.dinamani.com/trade/2020/jan/30/google-mulls-to-bring-live-transcription-to-its-translate-app-for-android-3344656.html
3344677 வணிகம் அமோல்டு டிஸ்பிளே உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ51 DIN DIN Friday, January 31, 2020 05:00 PM +0530  

சாம்சங் கேலக்ஸி ஏ51 அமோல்டு டிஸ்பிளே உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வருகிறது. கேலக்ஸி ஏ51 ஏ தொடரில் முதல் முறையாக முடிவிலி-ஓ டிஸ்ப்ளே வருகிறது. இது நீலம், வெள்ளை, கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.

வருகிற ஜனவரி 31 முதல் அனைத்து சில்லறை கடைகளில் கிடைக்கும். கேமரா, திரை மற்றும் 4000mAh பேட்டரி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48 எம்.பி பிரதான கேமரா, 'நைட் மோட்'' திறனுடன் 12 எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக க்ளோஸ் அப் ஷாட்களை எடுக்கலாம் மற்றும் 'லைவ் ஃபோகஸ்' முறையில் ஷாட்களைக் கிளிக் செய்வதற்கு என தனியே 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது. 10nm Exynos 9611 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள பேட்டரியினால் 19 மணி  நேரம் தொடர்ந்து வீடியோ பார்க்கமுடியும். 

சாம்சங் கேலக்ஸி ஏ51 (6ஜிபி + 128ஜிபி) விலை 23,999 ரூபாய். பின்னர் நிறுவனம் 8ஜிபி/128ஜிபி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

]]>
Galaxy A51 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/30/w600X390/news_1064404.jpg https://www.dinamani.com/trade/2020/jan/30/samsung-india-launched-the-galaxy-a51-3344677.html
3345582 வணிகம் மோசடியைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பேடிஎம் வங்கி DIN DIN Friday, January 31, 2020 05:00 PM +0530  

பாதுகாப்பு கருதி பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் தளத்தில் ஏ.ஐ. (Artificial Intelligence) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. 

பணப்பரிமாற்றத்தின்போது மோசடி செய்பவர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பரிவர்த்தனை விபரங்களை பாதுகாக்கவும்,  பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய  அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. 

அதன்படி, பேடிஎம் தளத்தில் ஏ.ஐ எனப்படும் 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. யாரேனும் உங்களது கணக்கு விபரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சித்தால் அது தெரிய வந்து விடும். மேலும், சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

பயனர் வேறு ஏதேனும் சாதனத்தில் கணக்கு உபயோகிக்கும்போது, அதற்கான எச்சரிக்கை பாப்-அப் செய்தியை இந்த பாதுகாப்பு அம்சம் வழங்கும். 

மேலும், இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவை நிறுவனம் கொண்டுள்ளது .

இந்த குழுக்கள் அனைத்து மாநில, மத்திய போலீஸ் படைகள், சைபர் செல்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு, மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து, தடுக்கவும், புகாரளிக்கவும், உதவும். அதுமட்டுமின்றி, எஸ்.எம்.எஸ் மற்றும் போன் அழைப்பு மோசடிகளில் ஈடுபட்ட 3,500 தொலைபேசி எண்களின் விரிவான பட்டியலை வங்கி அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/26/w600X390/Paytm-Reuters-L.jpg https://www.dinamani.com/trade/2020/jan/31/paytm-payments-bank-has-announced-ai-driven-security-measures-3345582.html
3345594 வணிகம் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலாவின் புதுவரவு! DIN DIN Friday, January 31, 2020 05:00 PM +0530  

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மோட்டோரோலாவின் புதுவரவு விரைவில் வரவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களிலும் அமோடு டிஸ்பிளேயுடன் எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவை மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் சீரிஸ் போன்களுக்கு என சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸுக்கு போட்டியாக லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலாவின் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சந்தைக்கு வரவுள்ளது. மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்டைலிஷ் ஆக புதிய அம்சங்களுடன் வரவுள்ளது.

மோட்டோரோலாவின் புதுவரவு குறித்த அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் அம்சங்களை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட் போன் குறித்த அம்சங்கள் வெளியாகும்.

]]>
Samsung, சாம்சங் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/motorola.jpg https://www.dinamani.com/trade/2020/jan/31/lenovo-motorolas-new-phone-3345594.html
3345589 வணிகம் ரியல்மி சி3 ஸ்மார்ட் போன் பிப்.6ல் அறிமுகம்! DIN DIN Friday, January 31, 2020 04:06 PM +0530
சீனத் தயாரிப்பான ரியல்மி சி3 வருகிற பிப்ரவரி 6ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரெட்மி, விவோ, ஓப்போ தயாரிப்புகளைப் போன்று ரியல்மி போன்கள் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரியல்மி தயாரிப்புகளில் ஏற்கெனவே உள்ள ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பயனர்களின் விருப்பமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ரியல்மி சி2, ரியல்மி போன்களிலேயே இது அதிக விற்பனையை எட்டியுள்ளது.

இதன் அடுத்த வெர்ஷனாக ரியல்மி சி3 வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 6ம் தேதி இங்கு அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

முன்னதாக, ரியல்மி சி1 விலை ரூ. 6999, ரியல்மி சி2 விலை ரூ. 5,999 (2 ஜிபி ரேம்), ரூ.7,999(3 ஜிபி ரேம் ). ரியல்மே சி3 விலையும் அதிகபட்சமாக ரூ.10,000க்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

6.5 அங்குல டிஸ்ப்ளே, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் ஆகிய இரு வகைகளில் வர வாய்ப்புள்ளது. 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 ஜிபி வரை சேமிப்பு வசதி இருக்கும். 12 மெகாபிக்சல் மெயின் ஷூட்டர் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா கொண்டிருக்கும். எனினும் சந்தைக்கு வந்தபிறகே இதன் முழுமையான அம்சங்கள் குறித்த விபரம் தெரிய வரும். 

]]>
Realme C3 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/w600X390/realme_c3.jpg https://www.dinamani.com/trade/2020/jan/31/realme-c3-launch-in-india-next-week-3345589.html
3343223 வணிகம் தங்கம் பவுன் ரூ.31,000-க்கு விற்பனை DIN DIN Wednesday, January 29, 2020 03:56 AM +0530 சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து, ரூ.3,875-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.51.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,875

1 பவுன் தங்கம் ..................... 31,000

1 கிராம் வெள்ளி .................. 51.00

1 கிலோ வெள்ளி ................. 51,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,882

1 பவுன் தங்கம் ..................... 31,056

1 கிராம் வெள்ளி .................. 51.40

1 கிலோ வெள்ளி ................. 51,400.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/3/w600X390/gold-13.jpg https://www.dinamani.com/trade/2020/jan/29/தங்கம்-பவுன்-ரூ31000-க்கு-விற்பனை-3343223.html
3343193 வணிகம் மாருதி சுஸுகி லாபம் ரூ.1,587 கோடி DIN DIN Wednesday, January 29, 2020 02:53 AM +0530 புது தில்லி: நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி மூன்றாவது காலாண்டில் ரூ.1,587.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் மாருதி சுஸுகி செயல்பாடுகள் மூலம் ரூ.20,721.8 கோடியை ஒட்டுமொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.19,680.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 5.29 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,524.5 கோடியிலிருந்து 4.13 சதவீதம் அதிகரித்து ரூ.1,587.4 கோடியானது. மூலப் பொருள்களின் விலை குறைவு, நிறுவன வரி விகித குறைப்பு இதுதவிர செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ஏற்றத்தை சந்தித்துள்ளது.

மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த வாகன விற்பனை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் உயா்ந்து 4,37,361-ஆக இருந்தது. வாகன விற்பனை உள்நாட்டு சந்தையில் 2 சதவீதம் உயா்ந்து 4,13,698-ஆகவும், ஏற்றுமதி 23,663-ஆகவும் இருந்தன.

ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.64,594.5 கோடியிலிருந்து 11.06 சதவீதம் சரிந்து ரூ.57,452.3 கோடியானது. அதேபோன்று, நிகர லாபமும் ரூ.5,819.8 கோடியிலிருந்து 25.16 சதவீதம் குறைந்து ரூ.4,355.3 கோடியானது. இக்காலகட்டத்தில் வாகன விற்பனை 16.1 சதவீதம் சரிந்து 11,78,272-ஆக காணப்பட்டது என மாருதி சுஸுகி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/w600X390/maru075755.jpg maru075755 https://www.dinamani.com/trade/2020/jan/29/மாருதி-சுஸுகி-லாபம்-ரூ1587-கோடி-3343193.html