Dinamani - இளைஞர்மணி - https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3231560 வார இதழ்கள் இளைஞர்மணி குழந்தைகளுக்காக "யூ டியூப்' இணையதளம்! அ.சர்ஃப்ராஸ் Thursday, September 12, 2019 01:03 PM +0530 குழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட் போன்களைப் பிரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில் பெற்றோர்களுக்கு பெரும் சவாலான காரியம்.

ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூ டியூப் வீடியோக்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் வீடியோ கேம்களையும்,  வீடியோக்களையும் தான் பெரும்பாலும் காண்கிறார்கள்.  

கார்ட்டூன் வீடியோக்களில் மருந்தை அப்படியே குடித்ததும் பெரும் பலசாளி ஆவதும், எதிரியைக் கத்தியால் தாக்குவது போன்ற காட்சிகளைக் காணும் குழந்தைகளின் ஆழ்மனதில் அவை பதிந்துவிடுகின்றன.  அதிலும் ஆபாசம், வன்முறை வீடியோக்கள் வருவதால் யூ டியூப் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது  என கட்டுப்பாடு  விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன்தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே "யூ டியூப் கிட்ஸ்' என்ற தனி செயலியை (ஆப்) அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலிலும் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வீடியோக்களைப் பிரித்து காண்பிக்கத் தவறிவிட்டது. அதுமட்டுமின்றி வீடியோக்களைக் காணும் குழந்தைகளின் தரவுகள் சேகரித்து விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. 

இதன் அடுத்த கட்டமாக தற்போது  https://www.youtube.com/kids/ என்ற தனி இணையதளத்தை யூ டியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வீடியோக்கள் என தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் கண்ட வீடியோக்களின் தொகுப்புகளும் இடம் பெற்றிருக்கும். இந்த வீடியோக்களில் ஆபாசம், வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இருக்காது என்று யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மேலும் பாதுகாப்பான வகையில் இந்த இணையதளத்தைக் குழந்தைகள் பயன்படுத்த மேற்கொள்ள செய்ய வேண்டிய மாற்றங்களை பெற்றோர்கள் தெரிவிக்காலம் என யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்பதால், குழந்தைகளுக்கான பாதுகாப்பான விடியோக்கள் மட்டுமே இந்த இணையதளங்களில் உலவும் என்று உறுதியாகக் கூற முடியாது. "வரும் முன் காப்போம்' என்பதைப்போல் "குழந்தைகள் முன் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்போம்' என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்தாலே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/w600X390/youtu.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/குழந்தைகளுக்காக-யூ-டியூப்-இணையதளம்-3231560.html
3231561 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய  வெளியினிலே... DIN DIN Tuesday, September 10, 2019 07:38 PM +0530
முக நூலிலிருந்து....

கவிதையில் ஆழம் வேண்டும் என்கிறீர்... அதென்ன கிணறா?
குபீரெனப் பாய்ந்து கடப்பாரை நீச்சலடிக்கப் போகிறீரா?

ரத்திகா பவழமல்லி


இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து...
இன்று வரை...
மரணமடையாதது
மரணம் மட்டும் தான்... 
அது ஒரு நாளும் மரணமடையப் போவதில்லை.

சுதே கண்ணன்


எந்தக் கஷ்டமும் இல்லாம வாழுறதுல என்ன சார் கெத்து?
எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மேல வர்றது தான் சார்... கெத்து!

மணிமேகலை சித்தார்த்தர்

தினம் ஒரு சொல்லாவது...
குத்தீட்டியாகிறது.
தினம் ஒரு சொல்லாவது...
மயிலிறகாகிறது.  

நேசமிகு ராஜகுமாரன்

 

சுட்டுரையிலிருந்து...


சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை...
சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.

கோதை

 

நடப்பது எல்லாம் நன்மைக்கே...  
ஆதலால்... நடந்து செல்லுங்கள்.
சுகர் குறையும்.

சுபாஷினி BAS


நிகழும் யாவற்றிலிருந்தும், ஏதாவதை புதிதாய் ஏற்கிறேன்...
அல்லது பழகிச் சுகித்திருக்கும் ஒன்றை விலக்குகிறேன்...
நிகழ்பனவற்றைப் பின்பற்றுதலல்லவோ வாழ்வு!

ஜீவன்


கைவசம் இருப்பது ஒரே ஒரு பட்டுச்சட்டை.  
அழுக்குப் பிடிக்கும் முன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது பட்டாம்பூச்சி!


இளந்தென்றல்

வலைதளத்திலிருந்து...

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டுப் பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினொரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாற்றி இருப்பாரான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைச் சொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா! 

அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு, "அடடா, என் குழந்தை என்னமா பேசறான்!''  எனப் பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கிறாரு வள்ளுவர். 

பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்குப் பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்? 

முதலில் "தா... தா... தா' என ஒலிக்கத் தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவைத் தொடர்ந்து அத்தை வலம் வரத் தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல. 

... இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ (அத நாங்க சொல்லணும்)
வெப்காம் பார்த்து அழுகை நிறுத்தும் குழந்தை.

சிரித்தபடியே அழும் ஆன்சைட் அப்பா.

இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துக்குங்க. இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.

http://ammanchi.blogspot.com/

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im10.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/இணைய--வெளியினிலே-3231561.html
3231559 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! - 63 DIN DIN Tuesday, September 10, 2019 07:29 PM +0530
நம்மிடம் இருக்கும் அளவுக்கு பலவகையான இசைகள், உலகில் வேறெங்கும் இல்லை.  பல்வேறு இசைகளில் நம்நாட்டு மக்களுக்கு இருக்கும் திறமைகளை இந்தியா உலகிற்கு வெளிக் கொண்டு வருவதில்லை. அந்தத் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. 

குறிப்பாக,  இந்தியாவைப் பொறுத்த அளவில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரண்டு மட்டுமே இந்தியாவின் இசையாக உலகிற்குத் தெரியப்படுத்தி வந்திருக்கிறோம். 

ஆனால்  இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உலகத்திற்கே இசையின் பல்வேறு நுட்பங்களை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். உதாரணமாக இளையராஜா உருவாக்கிய  "திருவாசகம் சிம்பொனி'  உலகிற்கே தமிழின் பழைமையான பக்தி இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது.  ஒரு சிறிய  கிராமத்தில் பிறந்த  அவருக்கு இசையின் மீதிருந்த கட்டுக்கடங்காத ஆர்வமே இத்தகைய முயற்சிகளுக்கு அவரைத் தூண்டியிருக்கிறது என்று சொல்லலாம்.  நாட்டுப்புற இசை, கர்நாடக இசை உட்பட பல இசைகளை ஒருங்கிணைத்து,  புதிய வடிவிலான இசையை உலகிற்கு அளித்தது அவருடைய சாதனை என்று சொல்லலாம். இசையின் மீதான அவருடைய  இடைவிடாத தேடல்,  அவரின் இசைப் பங்களிப்பு  உலக அளவில் புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

இதேபோன்று ஏ.ஆர்.ரஹ்மான் "இன்ஸ்ட்ரூமென்ட்லெஸ் மியூசிக்' (இசைக்கருவிகள் இல்லாத இசை)  என்ற ஒரு புதிய முயற்சியில் இறங்கி பல்வேறு கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார்.   மிகச்சிறிய வயதுள்ள இளைஞராக இருந்தபோதே இந்த முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.

இசைக் கலைஞர்களின் கையில் வாட்ச் போன்று பேண்ட் ஒன்றை மாட்டிவிடுவார்கள்.  அந்த இசைக்கலைஞர்  ஓர் இசைக் கருவியை இசைக்கும்போது கையை  எந்த மாதிரி அசைப்பாரோ அதேபோன்று,  இசைக் கருவி இல்லாமலேயே  அவர் கையை அசைத்தால் போதும்,  அந்த இசைக் கருவியின்  இசை ஒலிக்கும்.   "காக்னிட்டிவ் சயின்ஸ் அப்ளிகேஷன் ஆஃ மியூசிக்' என்ற இந்தத்   இந்தத் தொழில்நுட்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கி பயன்படுத்தியுள்ளார். இது அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.  பல்வேறு இசைகளை ஒருங்கிணைத்து புதிய இசையை உருவாக்கும் இரு தனிப்பட்ட கலைஞர்கள் செய்திருப்பதைப் போன்று நமது இசைப் பல்கலைக்கழகங்களும்  நம்நாட்டின் பல்வேறு இசை வகைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

இன்றைய நாளில், ஒருவர் அவருடைய இசை வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து,  அதை  1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தார்கள் என்றால், அதற்காக அவருக்கு  1000 முதல் 2000 டாலர்கள் வரை வழங்கப்படுகின்றன.  இவர்கள் ஒரு தடவை உருவாக்கிய இசை, பல ஆண்டுகளாக பலரால் உலகம் முழுவதும் கேட்கப்படுகிறது.  இதனால்  வருகிற வருமானம்   அதிகரித்துக் கொண்டே  போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.  

தமிழகத்தின் தாரை, தப்பட்டையாகட்டும், வடகிழக்குமாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் இசையாக இருக்கட்டும்,  கூமார் என்ற ராஜஸ்தான் பழங்குடியின நடனமாகட்டும்,  தாண்டியா, கச்சிபோலி (பொய்க்கால் குதிரை) போன்ற பல்வேறு நடனக் கலைகளாகட்டும் அவற்றை எல்லாம்  உலகெங்கும் காணும் வகையில் இணையத்தின் வாயிலாக   அரங்கேற்றும் வசதி இப்போது உள்ளது.  பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த வசதி இல்லை. 

தனிநபர் ஒருவர்,  அவருடைய திறமையை எடுத்துச் செல்ல இந்த இணையம் உதவியாக உள்ளது. 

இப்போது  இந்தியாவில் இருந்தே ஒருவர்  உலகப் புகழ்பெற்ற பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக் - இல்   இசைக்கான காப்புரிமை ,  இசை பிசினஸ் சம்பந்தமாகப் படிக்க முடியும்.  ஹிஸ்டரி ஆஃப்  ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி, மியுசிக் பிசினஸ் ஸ்ட்ரக்சர் ஆகியவற்றைப் படிக்கலாம். இசை அமைக்க ஒப்பந்தம் எவ்வாறு செய்து கொள்வது? தனிப்பட்ட கலைஞரின் இசை உருவாக்கத்துக்கு காப்புரிமை பெறுவது எப்படி? இந்தத் துறையில் உள்ள பல்வேறு பிரிவினரின் பங்கு என்ன? மியூசிக் பிராண்ட்டை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது? வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்த எவ்வாறு தளம் அமைத்து, ஸ்பான்சர்களைப் பிடித்து,  ரசிகர்களை எப்படி வரவழைப்பது ? என்பது பற்றியெல்லாம் மியூசிக் இன் பிசினஸில் சொல்லித் தருகிறார்கள். நமது மாணவர்கள் அவற்றைப் படிக்கலாம்.


30 ஆண்டுகளுக்கு முன்பாக பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக்கில்  இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்திருக்கிறது.  இந்திய வம்சாவளியினரின் குழந்தைகள் இங்கு பயில்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள இசைக் கல்விநிறுவனங்களில் இருந்து - குறிப்பாக கலாஷேத்ரா- சென்னை, கலாமண்டல் - திருவனந்தபுரம், சாந்திநிகேதன் - மே.வங்கம் மற்றும் தலைக்காவேரி - திருச்சி உட்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து - மாணவர்கள் இங்கு சென்று பயில்கிறார்கள். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ள இசை வகைகளை இணைத்து, வெளிநாடுகளில் உள்ள எல்லா இந்தியர்களும் விரும்பும் வண்ணம் புதிய இசை வகைகளை அளித்து வருகிறார்கள்.  

நமது நாட்டில் சிறந்த நாதஸ்வரக் கலைஞர் கூட வாய்ப்புகளின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது.   நமது இசைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செய்ய வேண்டியதெல்லாம் நமது நாட்டுப்புற இசைக் கலைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய திறமைகளை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.   

இசைக் கலைஞர்கள் இசையில் மட்டுமே திறமையானவர்களாக இருப்பார்கள். நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  அவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய இளைய சமுதாயத்தை நாட்டுப்புற இசைக்கலைஞர்களுடன்  இணைத்து,  அதன் மூலம் அவர்களின் திறமையை உலகுக்குத் தெரியப்படுத்தலாம்.  

தமிழ்நாட்டில் இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம்  அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம்,   உலக அளவில் உள்ள இசைத்துறையின் வளர்ச்சிகளை - பெர்க்லி பல்கலைக்கழகம் போன்ற கல்விநிறுவனங்கள் கற்றுத் தருவதைப் போல    நமது மாணவர்களுக்கும் கற்றுத் தர - அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கிக் கற்றுத் தர முன் வர வேண்டும். 

இசைத்துறையில் பயில விரும்பும் நமது  மாணவர்கள்  சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தில்    (Tamil Nadu Music and Fine Arts University) ) முதுகலைப்பட்டப்படிப்பில் (M.A.  Music) வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், நாகஸ்வரம்  ஆகியவை  கற்றுத் தரப்படுகின்றன. 

அதேபோன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில்   மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.  பிளஸ் டூ  தேர்ச்சி பெற்ற 17 வயதிலிருந்து 22 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், நாகஸ்வரம், தவில், பரதநாட்டியம்,  நாட்டுப்புற கலைமணி  ஆகிய பிரிவுகளில்  இந்த  பட்டயப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.  இரண்டாண்டு நட்டுவாங்க கலைமணி  பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது. 

இந்தப் பட்டயப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பு சொல்லித் தரப்படுகிறது.  அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இசைக்கலைமணி பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  அல்லது இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இங்கு இரண்டாண்டு  மாலை நேர  சான்றிதழ் இசை படிப்புகள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன.  இதில் சேர 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

மதுரை- பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டில் 3 ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு உள்ளது.  மூன்றாண்டு பட்டயப்படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல்,  மிருதங்கம், நாகஸ்வரம், தவில், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன. ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும்,  இரண்டாண்டு சான்றிதழ்  இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றில் கற்றுத் தரப்படுகின்றன. 

அதேபோன்று கோவை - மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் உள்ளன. 

அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின்,   பரதநாட்டியம்   ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன.  ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும், இரண்டாண்டு  சான்றிதழ்  இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகியவற்றிலும் கற்றுத் தரப்படுகின்றன. 

திருவையாறில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை  ஆகிய பிரிவுகளில் உள்ளன.  இதில் முதுகலைப் பட்டமும் சொல்லித் தரப்படுகிறது. 

அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின்,   பரதநாட்டியம், மிருதங்கம், தவில், நாகஸ்வரம்   ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன.  ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும் இங்கு உள்ளது. 

திருச்சிராப்பள்ளியில் உள்ள  கலைக்காவேரி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்,  மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள சத்குரு சங்கீத வித்யாலயம், சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தமிழ் இசைக் கல்லூரி  ஆகியவற்றிலும் இசைதொடர்பான படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. 

நமது நாட்டுப்புற இசைகள்  இந்தக் கல்விநிறுவனங்களில் கற்றுத் தரப்படுவதில்லை.  அவற்றை கற்க விரும்பும் மாணவர்களுக்கு இவை வாய்ப்பளிப்பதில்லை.  இது வருந்தத்தக்கது. 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im9.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்----63-3231559.html
3231558 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை... வேலை...  DIN DIN Tuesday, September 10, 2019 07:19 PM +0530  

இஸ்ரோவில் வேலை  

பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

பணி: Technician B - 40 

1. Fitter - 20 
2. Electronic Mechanic - 15
3. Plumber - 02 
4. Welder - 01 
5. Machinist - 01

பணி: Draughtsman B - 12 

1. Draughtsman Mechanical -10 
2. Draughtsman - Electrical - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,700 + இதர சலுகைககள் வழங்கப்படும். 

பணி: Technical Assistant - 35

1. Mechanical - 20 
2. Electronics - 12 
3. Civil -  3 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைககள் வழங்கப்படும். 

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.isro.gov.in/sites/default/files/hsfc_advt}bilingual_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை: ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ண்ள்ழ்ர்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.isro.gov.in/sites/default/files/hsfc_advt-bilingual_final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2019 


தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை  

பணி: Scientist/Engineer (SD) - 01

சம்பளம்: மாதம் ரூ.67,700 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: முதல் வகுப்பில் இயற்பியல், வளிமண்டல அறிவியல், விண்வெளி இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.   

பணி: Scientist/Engineer (SC) - 01

சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் எம்.டெக் முடித்திருப்பதுடன் மின்காந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: www.narl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   “The Administrative Officer (R&R), National Atmospheric Research Laboratory, P.B. No.123,  S.V. University, Post Office, Tirupati - 517502, Andhra Pradesh   

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.narl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2019


மத்திய அரசில்   வேலை

பணி: Radio Technician

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 20.09.2019 தேதியின்படி 18 வயது  முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.dgil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல், பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Lighthouses and Lightships, “Deep Bhavan” Pt. Nehru Marg, Jamnagar 361008, Gujarat என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.09.2019


தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை

மொத்த காலியிடங்கள்: 405

பணி: மருந்தாளுநர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser) 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 57 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். 

தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற ஏதாவதொரு பிரிவில் மருந்தாளுநர் அதாவது டிப்ளமோ இன் பார்மஸி முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம்: நாளொன்றுக்கு ரூ.750 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தமிழக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnhealth.org -இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  அஞ்சல் முகவரி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், அறிஞர் அண்ணை அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://www.tnhealth.org/nptification.php அல்லது http://www.tnhealth.org/online_notification/notification/N19082117.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.09.2019

தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/job.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/வேலை-வேலை-வேலை-வேலை-3231558.html
3231557 வார இதழ்கள் இளைஞர்மணி எது தேவை? அ.கருணாகரன், ச.ஞானசேகரி DIN Tuesday, September 10, 2019 07:07 PM +0530
பிள்ளைகளுக்கு எது தேவை, எது தேவையில்லை  என்றெல்லாம்  பெற்றோர் எண்ணுவதே கிடையாது.  கடைக்குச் சென்று ஒன்றுக்குப் பத்தாக அள்ளிப் போட்டு பொருட்களின் அருமை தெரியாமல்  வளர்க்கும் நிலையே  இன்றைக்குக் காணப்படுகிறது.  

எந்த வயதில் எந்த ஆடையை நம் பிள்ளைகள் உடுத்த வேண்டும் என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்குப் பிள்ளைகளே அவர்களுக்குரிய  விருப்பமான பொருட்களை, ஆடைகளைத் தேர்வு செய்து  வாங்கிக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களைக் கவனிப்பதோ, தடுப்பதோ, மறுப்பதோ இல்லை.  

பெண் பிள்ளைகளைப் பொருத்தவரை பெற்றோரிடமுள்ள  இத்தகைய பொறுப்பற்ற தன்மையாலேயே பெண்களுக்கு எதிரான சமூகக்குற்றங்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன.  வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன?   தோல்வி என்றால் என்ன?  பாதுகாப்பு என்றால் என்ன?  என்பதையெல்லாம் அறியாமல்  பிள்ளைகள் வளர்கிறார்கள்.  

இத்தகைய பிள்ளைகளே  பிற்காலத்தில் பொறுப்பற்றவர்களாக, பெற்றோர்களை மதிக்காமல் போய்விடுகிறார்கள்.  பிள்ளைகள் வாய் பேசுகிறார்கள், ஒழுங்கீனமாக இருக்கிறார்கள் என்று குற்றப்படுத்துவதில் எவ்விதப் பயனும் இல்லை.  குற்றவாளிகள் பிள்ளைகள் அல்ல.  அவர்களைக் கவனிக்காத, கண்டிக்காத, பொறுப்பெடுக்காத பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்.

இந்த உலகத்தில் தரமான கல்வி, நல்ல அறிவு, தன்னைத்தானே அறிந்து உணர்ந்து தெளிகின்ற திறன், தன் வாழ்க்கையைச் சுயமாகத் தீர்மானிக்கும் தகுதியுடைய, உலகம் தெரிந்த பிள்ளைகளைப்  பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im8.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/எது-தேவை-3231557.html
3231556 வார இதழ்கள் இளைஞர்மணி தடைகளைத் தாண்டி...!  -க. நந்தினி ரவிச்சந்திரன் DIN Tuesday, September 10, 2019 06:32 PM +0530
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே. புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை விரைவில் உள்வாங்கும் திறமை, தளராத முயற்சி, வளர்ச்சியை நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுவது என எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும், தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாத ஒன்று. 

இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 35 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். 

உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும், அவர்களின் உறுதியான பங்களிப்பும்தான்.

இக்கால இளைஞர்கள் நினைத்த நொடியில் அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் உலவி வருகின்றனர். அவர்கள் நினைத்தால், எதையும் வைரலாக்க முடியும். அந்த அளவுக்கு அவர்கள் தொழில்நுட்பத்தோடு ஒன்றிணைந்துள்ளார்கள். தகவல் தொழில்நுட்பம், நவீனத்துவம் என அனைத்திலும் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத் தூண்களாக இருக்கும் அவர்கள் பல பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் சில..

தரமான கல்வியின்மை

இளைஞர்களிடம் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணரும் கருவியாக இருப்பது கல்வி.     ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்த நிலை மாறி, ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பொறியியல் படித்த பல இளைஞர்கள் வேலையில்லாத பட்டதாரிகளாகச் சுற்றி வருகின்றனர்.

வேலையின்மை

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் பணிக்கு தேவையான திறமைகள் இல்லாமல்,  கஷ்டப்படுகின்றனர். சிலர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இது இல்லை என்று கிடைத்த வேலைக்கு செல்லாமல் உள்ளனர். வேலைத் தேடிக் கொண்டிருப்பதற்கு பதிலாக,   தாமே தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.  

விளையாட்டில் குறைவான பங்களிப்பு 

நம் ஊர் தெருக்களிலும், பள்ளிகளிலும் விளையாடும் இளைஞர்கள் எத்தனை பேர் விளையாட்டுத்துறையை தனது எதிர்காலத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். விளையாட்டுத் துறையில் என்ன ஊதியம் இருக்கும், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்  என்று பெற்றோரும், சமூகத்தினரும் கேள்வி எழுப்புவதால், திறமை இருக்கும் பல இளைஞர்கள் அதை விட்டுவிடுகின்றனர். 

விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்

களுக்கு, கல்வி, அரசு வேலைவாய்ப்பு என அனைத்திலும் இடஒதுக்கீடு உண்டு. அதை நினைவில் கொண்டு தங்களை இளைஞர்கள் தங்களைமுன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

அரசியலில் ஆர்வமின்மை 

சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) ஆகியவற்றில் மீம்ஸ் மூலம் அரசியல் பேசும் இளைஞர்கள், நிஜ வாழ்க்கையில் அரசியலில் சாதிக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் அதற்கான முதல் அடியை கூட இன்னும் எடுத்து வைப்பதில்லை. மக்கள்தொகையின் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அவர்களின் உண்மையான வளர்ச்சிக்கு தேவையானது என்ன என்பதை இளம் அரசியல்வாதிகளாலேயே ஊகிக்க முடியும்.

சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருப்பது 

இன்றைய இளைஞர்கள் பலர் எந்நேரமும் செல்லிடப்பேசியையே உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். முகநூலில் மீம்ஸ் பார்ப்பது, அடுத்தவர் என்ன பதிவிட்டிருக்கிறார் என்று தேடித் தேடி பார்ப்பது என நேரத்தை வீணாகக் கழிக்கின்றனர். தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றனவோ அதே அளவு அதில் பின்னடைவுகளும் உள்ளன. 

நமது இளைஞர்கள் பலர் நல்லதில் காலம் செலுத்தாமல், தேடிப் பிடித்து தவறான விஷயத்தில் நேரத்தைச் செலவழித்துக்  கொண்டிருக்கின்றனர். யாரென்றே தெரியாத நபரை மீம் மூலம் கேலி செய்துக் கொண்டிருப்பதால், நமது பொன்னான நேரம்தான் வீணாகுமே தவிர, அந்த நபருக்கு அதில் எவ்வித கெடுதலும் இருக்கப் போவதில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im7.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/தடைகளைத்-தாண்டி-3231556.html
3231555 வார இதழ்கள் இளைஞர்மணி அமையுங்கள்... முழக்க வாசகத்தை ! - மு. சுப்பிரமணி  DIN Tuesday, September 10, 2019 06:29 PM +0530 அரசு அமைப்புகள், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் போன்றவை, தங்களது செயல்பாட்டை மக்களுக்கு எளிமையாகக் கொண்டு சேர்க்கத் தங்களுக்கென்று தனியாக முழக்க வாசகங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதுண்டு. இந்த முழக்க வாசகங்கள் சொல்வதற்கு எளிமையாகவும், அதே வேளையில் அந்தச் செயல்பாட்டை அனைவரது மனதிலும் ஆழமாகப் பதிவு செய்வதாகவும் அமைகின்றன.  

இந்தியாவில் 1871 -ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 2021 -ஆம் ஆண்டில் பதினாறாவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற இருக்கிறது. 2021 -ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஏற்றதாக ஒரு முழக்க வாசகத்தை உருவாக்கும் போட்டி ஒன்றை இந்திய அரசு அறிவித்திருக்கிறது. 

வழிமுறைகள்

1. இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள முடியும். 

2. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஒரு வரியில் அமையும்படியான முழக்க வாசகத்தை உருவாக்கி, அதனை "பிடிஎஃப் கோப்' வடிவில் வலைத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

3. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் வாசகம் சொந்தமாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

4. போட்டியில் பங்கேற்பவர்கள் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பெயர், ஒளிப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட முழுத்தகவல்களை அளித்திட வேண்டும். முழுமையான தகவல்கள் இல்லாத பங்கேற்பு நிராகரிக்கப்படும். 

5. போட்டிக்கு வரப்பெற்ற முழக்க வாசகத்தினை, படைப்புத்திறன், உண்மைத்தன்மை, உருவாக்கமுறை, எளிமை, கவரும் தன்மை போன்றவற்றைக் கணக்கில் கொண்டு, அவ்வாசகம் 2021 - ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியத்தை இந்தியாவிலுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கிறதா என்பதையும் அடிப்படையாகக் கொண்டு நடுவர் குழு சிறந்த முழக்க வாசகத்தைத் தேர்வு செய்யும்.

6. தேர்வு செய்யப்படும் சிறந்த ஒரு வாசகத்திற்கு ரூ. 25,000/- பரிசு வழங்கப்படும்.

7. பரிசு பெற்ற வாசகம், இந்திய அரசின் 2021 -ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுடன் தொடர்புடைய அனைத்திலும் பயன்படுத்தப்படும். 

8. இப்போட்டியில் நடுவர்குழுவின் முடிவே இறுதியானது.

9. போட்டிக்கான முழக்க வாசகத்தை வலைத்தளத்தில் சமர்ப்பிக்கக் கடைசி

நாள்: 19-9-2019.

கூடுதல் தகவல்கள்

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், இந்திய அரசின் https://www.mygov.in/task/create-slogan-census-2021/ எனும் வலைத்தள முகவரிக்குச் சென்று கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im6.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/அமையுங்கள்-முழக்க-வாசகத்தை--3231555.html
3231554 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 208 ஆர்.அபிலாஷ் DIN Tuesday, September 10, 2019 06:22 PM +0530  

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது அவர்கள் put in papers Utßm put down papers ஆகிய வேலைதுறப்பு எனும் பொருள் கொண்ட சொற்றொடர்களின் நுணுக்கமான வித்தியாசம் என்ன எனும் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். சரி இந்த இரண்டுக்கும் தான் வித்தியாசம்? பார்க்கலாமே!

புரொபஸர்:  இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்க? 

நடாஷா: ஐ திங்க் ... when you say I put in my papers formal ஆக வேலையில் இருந்து விலகுகிறேன். ஆனால் when it is I put down my papers அதன் பொருள் வேலையில் இருந்து ஜஸ்ட் லைக் தேட் விலகுவது. சரியா? 

புரொபஸர்: இல்லை தப்பு. 

நடாஷா: பிறகு? 

புரொபஸர்: இரண்டு சொற்றொடர்களுமே இந்திய ஆங்கிலத்தில் நாமாகக் கண்டுபிடித்த பிரயோகங்கள். Native speakers அதாவது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இப்படிச் சொல்வதில்லை. ஆனால் இதற்கு சற்றே நெருக்கமாக வரும் சரியான பிரயோகம் to hand in one’s notice. Or to give in one’s notice. அல்லாவிடில் வெறுமனே to give notice. 

நடாஷா: ஆனால் என்னோட colleagues யாரும் இப்படிச் சொல்வதில்லையே? 

புரொபஸர்: அதனால் தான் இந்த சொற்றொடரை ஒரு Indianism என்றேன். 

கணேஷ்: அதென்ன இந்தியனிசம்? 

புரொபஸர்: இந்தியர்கள் தப்பும் தவறுமாகப் பயன்படுத்தி பயன்படுத்தி இப்போது சரி என நாம் நம்பத் தொடங்கி விட்ட அபத்தங்கள். உதாரணமாக, what is your good name?

கணேஷ்: கணேஷ்

புரொபஸர்: அப்படியென்றால் உன்னிடம் உள்ள பிற விசயங்கள் எல்லாம் கெட்டதா? பெயரில் என்ன நல்ல பெயர், கெட்ட பெயர்? 

கணேஷ்: Polite ஆக சொல்வது.

புரொபஸர்: ஆமாம். ஆனால் பெயரைக் கேட்பதில் எதற்கு தயக்கம், கூச்சம் கொள்ள வேண்டும்? அதற்கு ஏன் பணிவு? அப்படி வேண்டுமெனில் could you please tell your name என சொல்லலாம். May I know your name please எனலாம். இதெல்லாம் polite தான்.

ஜூலி: I passed out of Madras Christian College last year. 

சேஷாச்சலம்: ஆமாம் அதுவும் ஒரு இந்தியனிசம் இல்லையா? 

புரொபஸர்: யெஸ். Pass out என்றால் மயக்கம் போட்டு விழுவது. After drinking the booze for the first time he felt nauseous and almost passed out. முதல் முதலாக மது அருந்திய போது அவருக்கு வாந்தி வருவது போல, கிட்டதட்ட மயக்கம் வருவது போல தோன்றியது. ஆனால் ஒரு கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் பெறுவதை graduate என சொல்ல வேண்டும். He graduated from Madras Christian College last year என்பது தான் சரி. வேறெதாவது இந்தியனிசம் நினைவுக்கு வருகிறதா யாருக்காவது? 

சேஷாச்சலம்:  Kindly revert back immediately after reading this... 

புரொபஸர்: கரெக்ட். அது இன்னொரு இந்திய ஆங்கில பிரயோகம். Revert என்றால் முந்தின நிலைக்கு மீள்வது. To return, retrogress, regress. நான் இங்கு சொல்ல உத்தேசிப்பது Kindly respond immediately after reading this என்பதைத் தான். 

நடாஷா: நான் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானைப் பற்றி படிக்கையில் அவர் ஒரு revert என ஒரு சொல்லைப் படித்தேன். இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை. 

புரொபஸர்: அது ஒரு சரியான பதம் தான். Revert எனும் பெயர்ச்சொல்லுக்கு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் என பொருள் வரும். அதனால் Rahman is a revert என்பது சரியே. 

கணேஷ்: ஆமாம்... many years back his name was Dileep. 

புரொபஸர்: அதென்ன back? Back என்றால் ஒன்று நம் முதுகு. இன்னொன்று திரும்ப செல்வது. He went back என்று சொல்லலாம். ஆனால் ஹ்ங்ஹழ்ள் க்ஷஹஸ்ரீந் என சொல்லக் கூடாது.

கணேஷ்: வேறெப்படிச் சொல்லலாம்?

(இனியும் பேசுவோம்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im5.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்---208-3231554.html
3231552 வார இதழ்கள் இளைஞர்மணி வளர்ச்சிக்கு மாற்று வழி!: மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 34 விஞ்ஞானி வெ. பொன்ராஜ் DIN Tuesday, September 10, 2019 06:12 PM +0530
இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 2019-இல் மூன்றாம்  காலாண்டில் ஜிடிபி 5% ஆக குறைந்து விட்டது. உற்பத்தித்துறை 0.6 சதவீதமாகக் குறைந்து தள்ளாடிக் கொண்டு மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் பல கார்ப்பரேட் கம்பெனிகள் உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைமை தொடர்ந்து ஏற்படுகிறது. அதனால் அவற்றைச் சார்ந்து இருக்கிற பல தொழிற்சாலைகளைத் தொடர்ந்து மூடிக்கொண்டிருக்கிறார்கள்;  வேலைவாய்ப்பு இழப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  Fast-Moving Consumer Goods (FMCG) என்று சொல்லப்படக் கூடிய வேகமாக விற்பனையாகும் - மக்கள் உபயோகப்படுத்தும் சில்லரை பொருள்கள் துறையும் - இன்றைக்கு வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ரூ.5 விலையுள்ள  பிஸ்கட் கூட விற்பனையாகவில்லை என்ற நிலைமை உள்ளது.  உள்நாட்டுத் தேவை மிகவும் குறைந்து உபயோகிப்பின் வளர்ச்சி கடந்த 18 மாதங்களில் மிகவும் குறைந்துவிட்டது.  கடந்த 15 வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அடித்தட்டு நிலையைத் தொட்டு நிற்கிறது.   

வரி பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. முதலீட்டாளர்கள் நம்பிக்கை முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது. 

வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை பொருளாதார வீழ்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்திருக்கிறார்கள். சிறு மற்றும் குறுந்தொழில்துறையில்  (எம்.எஸ்.எம்.இ) கிட்டத்தட்ட 10 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அதில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். 

கிராமப்புற இந்தியா இன்றைக்கு கதிகலங்கி நிற்கிறது. கிராமப்புற வருமானம் முற்றிலும் குறைந்து விட்டது. நமது விவசாயிகளுக்கு தேவையான உற்பத்தி விலை கிடைக்கவில்லை. 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து 1.7 லட்சம் கோடி ஆதார பணத்தை அரசு பெற்று அதை எப்படி செயல்படுத்துவது, வீழ்ந்த பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதற்கான சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.  2019-20 நிதி நிலை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இன்றைக்கு பொருளாதாரம் சரிந்த உடன் விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதே சரியான திட்டமிடல் இல்லை; தொலை நோக்குப் பார்வை இல்லை என்பதை நிரூபிக்கிறது. 

இதுதவிர இன்றைக்கு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார யுத்தத்தின் விளைவாக உருவாகி இருக்கக் கூடிய, ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்பதை இந்தியா பயன்படுத்துவதற்கு இங்கு நிறுவனங்கள் தயாராக இல்லை என்ற நிலைக்கு காரணமாக பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இருக்கிறது. ஆனால் நமது இளைஞர்களும், விவசாயிகளும், விவசாய கூலி மற்றும் அனைத்து தொழிலாளர்களும், தொழில்முனைவோர்களும்,   கடனால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த பொருளாதாரச் சிக்கலில் இருந்து எப்படி மீளப்போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

இதற்கு காரணம்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அவசர கோலத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி ஃபைலிங் சிஸ்டம் என்று சொல்லப்படும் அரைகுறை கணினி மென்பொருளும் தான் என்பது தெரிகிறது.  சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு பயமுறுத்தப்பட்டு, NPA என்ற சர்பாஸி சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டு, தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.   சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் அரசுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்து கொடுத்த பொருளுக்கு, வேலைக்கு, சேவைக்கு,  6 மாதத்திற்கு மேலும் ஒரு வருட கால தாமதமாகக் கூட பணம் கொடுக்க அரசாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலும் இயலவில்லை. அதற்கு எந்தக் கேள்வியும் கிடையாது. அதற்கு எவ்வித ஒழுங்கு முறையும் கிடையாது. சொந்தப் பணத்தைப் போட்டு, சொந்தங்களிடம் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்து வங்கியிடம் கடன் வாங்கி 63 மில்லியன் மைக்ரோ தொழிற்சாலைகள், 0.33 மில்லியன் சிறு தொழிற்சாலைகள், 5000 குறுந்தொழிற்சாலைகள் சேர்ந்து 120 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பை உறுவாக்கி கொடுத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்தியாவில் 40 சதவிகிதம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறையில் கடந்த  8 ஆண்டுகளில் 10 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. 50 லட்சம் பேர்கள் இன்றைக்கு வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.   

இப்படிப்பட்ட துறையை உருவாக்குவதற்கு அரசு எவ்விதச் சலுகையும் வழங்கவில்லை, சிறு குறு தொழில் தொடங்காதே, தொடங்கினால் ஏன்ஜல் வரி போடுவோம் என்று போட்டார்கள்.  அதற்கு பதிலாக மூடு வரி போட்டால் அதிக வரியாவது கிடைத்திருக்கும். தொழில் தொடங்க வரி போட்டவர்கள், அதை மூடுவதற்கு, ""அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்'' என்ற பழமொழிக்கு ஏற்ப, கடனில் தவிக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களை மூடுவதற்கு அரசின் கொள்கையும் அரசு இயந்திரம் கடந்த 10 ஆண்டுகளாக மும்முரமாக இருக்கிறது.  

நலிந்த கம்பெனிகளை மூடுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் போட்ட சட்டங்கள் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு,  வங்கிக்கு கடனை 3 மாதம் அடைக்க முடியாவிட்டால், NPA முதல்கட்டம், அடுத்த 45 நாட்களுக்குள் அடைக்க முடியாவிட்டால் NPA அடுத்த கட்டம், அடுத்த 45 நாட்களில் அடைக்காவிட்டால் ஏலம்,  ஒரு முறை NPA ஆகி விட்டால் வேறு எங்கும் கடன் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு சொத்து அனைத்தையும் கந்து வட்டிகாரர்களிடம் அடமானம் வைத்து அனைத்தையும் இழந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, கம்பெனியை மூடி, நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து, அவமானப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் தொழில் முனைவோர்கள். 

ஜி.எஸ்.டி வரி போட்டு அனைவரையும் தினமும் வரி தாக்கல் செய்வதற்கு மட்டுமே வேலை பார்க்க வைக்கும் ஓர் அரசு,  மாதா மாதம் வரி வசூல் செய்ய முடியும். ஆனால்,  ஜி.எஸ்.டி வரி திரும்பப் பெறும் கோரிக்கையை மட்டும் ஓர் அரசால், ஒரு மிகச்சிறந்த ஜி.எஸ்.சி மென்பொருளால் 6 மாதத்திற்கு மேலும் திரும்ப செலுத்த முடியாது என்றால்,  ஒரு சிறு, குறுந்தொழில் நடத்துபவர்களால் எப்படி மாதச் சம்பளம் தொடர்ந்து கொடுத்து தொழில் செய்ய முடியும்?  சிறு மற்றும் குறுந்தொழில்கள் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர்.  மரத்தின் ஆணிவேரைப் பிடுங்கி விட்டு, அசைத்து விட்டு மரத்தின் கனிகள் மட்டும் வேண்டும் என்றால் எப்படியோ, அது போலத்தான் விவசாயத்தையும், தொழிலையும் முடக்கிவிட்டு இந்தியப் பொருளாதாரத்தை நலிந்த வங்கிகளை லாபம் கொடுக்கும் வங்கிகளோடு இணைத்து மீட்டுவிடலாம்; கடன் வட்டி விகிதத்தை  குறைத்து மீட்டுவிடலாம்; சில சலுகைகளை அளிப்பதால் மீட்டுவிடலாம் என்று நினைத்துச் செயல்படுகிறது அரசு.  

இந்த நிலைக்குக் காரணம் என்ன,  உலகத்தில் எவ்வளவோ பொருளாதார வீழ்ச்சி வந்தாலும், நிலையாக நின்ற இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கும், வேலை இழப்பிற்கும் என்ன காரணம் என்றால்,  வங்கிகளில் சேமிக்க முடியும் என்ற நடுத்தர வர்க்கத்தின் அசையாத நம்பிக்கை முதலில் ஒழிக்கப்பட்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம். அதனால் பணத்தை மட்டுமே நம்பி கோடிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வந்த முறைசாரா தொழில்துறை ஒழிக்கப்பட்டது.  வேலை இழப்பு தொடர்ந்தது. அப்போது யாரும், எந்தத் தொலைக்காட்சி ஊடகமும் இதைப்பற்றி பேசவில்லை; விவாதிக்கவில்லை.  ஆனால் அங்கு தொட்டு, இங்கு தொட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை இந்த பாதிப்பு தொட்டவுடன்   அனைவரும் இதைப்பற்றி பேசும் நிலை வந்து விட்டது.   

இவற்றைச் சரிசெய்ய இந்திய நிதி அமைச்சர்   பல சலுகைகளை, நடவடிக்கைகளை 3 முறை அறிவித்திருக்கிறார். பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தங்களது ஆழ்ந்த கருத்துகளை அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் வீழ்ந்த பொருளாதாரம் எழுவதற்குரிய அறிகுரிகள் அரசின் நடவடிக்கையின் விளைவாக எதுவும் தெரியவில்லை. 

எனவே, எனது பின்வரும் பரிந்துரைகளை நான் நிதி அமைச்சருக்கு அனுப்பினேன்.  அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எவை, நீண்ட கால நடவடிக்கைகள் எவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவை பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல்,  நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கவும், நம் நாட்டின் வளத்தைப் பெருக்கவும் அதே நேரத்தில் நமது பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் உதவும் என்று நம்புகிறேன். 

பொருளாதார மீட்சிக்கு முதல் நடவடிக்கை அதிகபட்ச GSTI 16% ஆக குறைக்கவேண்டும். இதை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அடுத்து ஒன்றோடு  ஒன்று இணைக்கப்பட்ட ஆட்சி முறை நிர்வாகம் இருப்பது உண்மையானால், இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் திறனற்ற, அதிகப்படியான ஆவணங்களை திரும்பத் திரும்ப கேட்டு,  தொழில்துறைக்கு  சுமையாக இருக்கும் எநப தாக்கல் செய்யும் தகவல் தொழில்நுட்ப முறையை தொழில்நுட்ப ரீதியாக தவிர்க்க முடியும்.  எனவே இந்த முறையை ரத்து செய்து மாற்றி அமைத்தால் மட்டுமே ஜி.எஸ்.டி பிரச்னையில் இருந்து மீள முடியும்.  

அதிகப்படியான கட்டுப்பாடு, வரி நெருக்கடி இருந்தும் ஊழல் போன்றவற்றால் அதிகார வர்க்கத்தோடு நெருக்கமாக இருப்பவர்களால் GST-யை ஏமாற்ற முடிகிறது. இது சந்தையில், ஏமாற்றுக்காரர்கள், சட்டத்தை மதிக்கும் வர்த்தகர்கள், மற்றும் வணிகர்களுக்கு இடையே  நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது.   குற்றவாளிகள் தப்பிக்கும் வழிகளை தடுத்து  அவர்களை ஒரு வளையத்திற்குள் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் சரியான ஒரே சமதள வாய்ப்பை வழங்கினால் மட்டுமே ஜி.எஸ்.டி மூலம் நியாயம் கிடைக்கும். தொழிற்சாலைகள் தனது லாபத்தில் 2 சதவிகிதம் சமூக நலனுக்குச் செலவு செய்யாவிட்டால் எடுக்கப்படும் குற்ற நடவடிக்கை இப்போது கைவிடப்பட்டிருப்பது நல்லது. ஒன்று தண்டனை அது முடியவில்லை என்றால் விடுதலை என்பது அறிவார்ந்த நடவடிக்கையல்ல. ஆனால் அதை அனைவரும் பின்பற்றும் படி மாற்றி அமைத்தால் அது நல்லாட்சி.  மத்திய அரசின் திட்டத்தின்படி சமூக பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகள் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு  2%-மும், சுற்றுசூழல் மேம்பாட்டிற்கு 2%-மும், சுற்றுலாவை மேம்படுத்த 2%-மும்,  மொத்தம் 6% செலவிடும் பட்சத்தில் தொழில்துறைகளுக்கான எநப-யை 6% குறைப்போம் என்று சொல்லிப் பாருங்கள், அனைவரும் அதை செய்வார்கள்.  

தவறாமல் GST செலுத்திவரும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு 58 வயதிற்கு பிறகு  ஓய்வூதியம் வழங்குவோம் என்று சட்டம் இயற்றுங்கள்;  அனைவரும் அதை பின்பற்றுவார்கள். வரி நிலுவை 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பட்சத்தில் மொத்த தொகையையும் ஒரே சமயத்தில் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, மொத்த தொகையைப் பிரித்து  தவணை முறையில்  செலுத்த வைப்பதன் மூலம் வரிச்சுமையைக் குறைத்து, வரி செலுத்தும் அனுபவத்தை சுலபமாக்க முடியும்.  சில்லறை செலவினங்களின் மீதான GST-யை குறைத்து, வருமான வரியை விலக்கி, வரி கட்டுவதற்கான இணக்கத்தை  செலவுகளின் அளவைக் கூட்டுவதால் அதிகரிக்கும் பொழுது வரும் வரியின் அளவு, வருமான வரியை விலக்குவதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய கூடியதாகவோ  அல்லது அதற்கு அதிகமாகவோ  இருக்கும். எனவே இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.  செய்வார்களா, பார்ப்போம்.  

சிறு மற்றும் குறு தொழில்களை நசுக்கும் SARFAESI சட்டத்தைத்  திரும்பப் பெற வேண்டும். அரசாங்கம்  மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவற்றிக்குச் செலுத்த வேண்டிய பணத்தை, 3 மாதத்திற்குளாகச் செலுத்த வேண்டிய சட்டத்தை இயற்ற வேண்டும்.  அதைச் செய்ய முடியவில்லை என்று சொன்னால் வாராக் கடன்களை அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை வங்கிகள் அவர்களிடம் வசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால், NPA சட்டத்திலிருந்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் தப்பிக்கும்.  இந்தச் சிக்கலைத்  தீர்க்க வங்கிகள், அரசு மற்றும் பெருநிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும். 

சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையில், நசிந்த தொழில்களை மீட்பதற்கு முதலீடுகளைக் கடனாகவோ, பங்காகவோ செலுத்தவதோடு இவற்றை நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்.  சிறு மற்றும் குறுந்தொழில்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களை மீட்க, அவற்றிற்கு புத்துயிரூட்ட  500 கோடிகள் வரை வருமானம் ஈட்டும் தொழில்துறைகளுக்கு வருமான வரி, புராவிடன் ஃபண்ட் போன்ற ஒழுங்குமுறை அதிகாரிகள் விதிக்கும் அனைத்து அபராதங்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சிறக்கும்; வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் செலவளிக்கும் எண்ணம் தோன்றும்.  

இதைப் போன்ற பல்வேறு ஆலோசனைகளை விவசாயம் மற்றும் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழிற்துறையைப் புதுப்பித்தல் மற்றும் ஏற்றுமதியை நோக்கி கவனத்தைச் செலுத்துதல்,  அதிகப்படியான பெட்ரோல் மற்றும் டீசல் சார்பை குறைக்க எரிசக்தி தாவரங்கள் பயிரிடுவது மற்றும் உயிர் எரிபொருள் உற்பத்தியில் கவனம் செலுத்துதல், நதி நீர் இணைப்பு, சுற்றுச்சூழல்துறை, எரிசக்தித் துறை, மருத்துவத்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் எவ்வாறு கொள்கைகளை மாற்றி வடிவமைத்தல், செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எப்படி எடுத்தால் இந்திய பொருளாதாரம் எப்படி மீட்டெடுக்கப்படும், வேலைவாய்ப்பு எப்படி உருவாகும், அதற்கும் தேசிய கல்விக்கொள்கைக்கும், தொழில் கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும், ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@gmail.com 

(தொடரும்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im4.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/வளர்ச்சிக்கு-மாற்று-வழி-மிச்சமெல்லாம்--உச்சம்-தொடு-34-3231552.html
3231549 வார இதழ்கள் இளைஞர்மணி சிவில் சர்வீஸ் தேர்வு: கற்றுத் தரும் 13 வயது மாணவர்! - வி.குமாரமுருகன்   DIN Tuesday, September 10, 2019 05:57 PM +0530 பொதுவாக பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு கருத்தை சிறியவர்கள் பேசினால், ""ஏய் சும்மா இருக்க மாட்டே. முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள என்ன பேச்சு?''ன்னு சொல்லி வாயை அடைக்கும் பெரியவர்களைப் பார்த்திருப்போம். 

ஆனால், தனது சிறுவயது பிள்ளை சொல்லும் போது அவனது வாயை அடைக்காமல் அவன் கேட்ட விஷயங்களை செய்து கொடுத்ததால்,  இன்று அந்தச் சிறுவன்   யூபிஎஸ்சி தேர்வு தொடர்பான பயிற்சியை வழங்குபவனாக உய்ர்நதுள்ளான். இத்தனைக்கும் அவனது வயது வெறும் 13 தான்... 

தெலங்கானா மாநிலம், மான்சேரியல் என்ற ஊரில் பிறந்த அமர் சாத்விக் தொகிட்டிதான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரச் சிறுவன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகளும், முதுகலைப் பட்டதாரிகளும் இந்த தேர்வில் கலந்து கொண்டாலும் சிலர் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றனர். பலர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இத்தகைய தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான விஷயங்கள் குறித்து கற்றுத்  தர நாடு முழுவதும் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய மையங்களை நன்கு படித்த அனுபவமிக்கவர்கள் நடத்தி வருகின்றனர். வித்தியாசமாக, 13 வயதான அமர் சாத்விக் தொகிடியும் அத்தகைய பயிற்சி மையத்தினை நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனாலும், நம்பித்தான் ஆக வேண்டும். 

தற்போது 9 -ஆம் வகுப்பு படிக்கும் அமர், பத்து வயதில், 2016-ஆம் ஆண்டு, "லேர்ன் வித் அமர்' என்ற "யூ-டியூப்' சேனலைத் தொடங்கினார். இன்று இவரது சானலில் 2,87,669-க்கும் அதிகமான பின்தொடர்வோர்கள் உள்ளனர். 

அமர் தனது யூ-டியூப் சேனல் வாயிலாக அரசியல் அறிவியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார். நாடுகளின் பெயர், தலைநகரங்கள், அதன் இருப்பிடம், ஆறுகளின் பெயர் போன்றவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள பல்வேறு நினைவுக் குறிப்புகளையும், உத்திகளையும் கூறி சுவாரசியமாக அமர் கற்பித்து வருகிறார். 

""ஆசிரியராகப் பணியாற்றி வரும் எனது அப்பாதான் எனது முயற்சிக்கு துணை புரிந்து வருகிறார். நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது அட்லûஸ வைத்துக் கொண்டு பார்ப்பேன். இன்னும் சொல்லப் போனால் அது எனக்கு விளையாடுவது போல் இருந்தது. இதைப் பார்த்த என் அப்பா எனக்கு புவியியல் கற்றுத் தரத் தொடங்கினார். ஒரு முறை நான் அப்பாவிடம் கற்றுக் கொண்டதை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தெரியாமலேயே என் அம்மா அதை வீடியோவாகப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். அந்தப் பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதிருந்துதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன். 

என் தம்பி விக்னேஷும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறான். எனது யூ-டியூப் பார்வையாளர்களில் ஏராளமானோர் போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள். குறிப்பாக ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்களாகத்தான் உள்ளனர். இவர்கள் கேட்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் பாடங்களை முறையாகப் படித்து, வீடியோக்களை உருவாக்குகிறேன். ஒரு தலைப்பு குறித்து ஆராய சுமார் இரண்டு வாரங்கள் எடுத்துக்கொள்கிறேன். அதன் பிறகு நான் ஒன்றிரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே வீடியோவாகப் பதிவிடுகிறேன். நான் பள்ளியில் படித்து வருவதால் வார இறுதியில் மட்டுமே வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்'' என்று கூறும் அமரின் ஆசை ஐஏஎஸ் அதிகாரியாவதுதான். 

learn with amar, learn with amar asia, learn with amar national park, learn with amar rivers போன்ற தலைப்புகளில் நாம் யூ டியூப் வீடியோக்களைப் பார்வையிடலாம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/சிவில்-சர்வீஸ்-தேர்வு-கற்றுத்-தரும்-13-வயது-மாணவர்-3231549.html
3231547 வார இதழ்கள் இளைஞர்மணி நம்பினோர் கெடுவதில்லை! -கே.பி. மாரிக்குமார் DIN Tuesday, September 10, 2019 05:47 PM +0530
விளக்கம் அளிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

- பெஞ்சமின் டிஸ்ரேலி.

பதினேழு இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த  டி.என்.பி.எஸ்.சி., குரூப் -ஐய தேர்வு கடந்த செப்டம்பர் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. பதினேழு இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தாலும் தேர்வெழுத வந்தவர்களின் எண்ணிக்கை என்னவோ...13.5 இலட்சம் பேர் மட்டுமே. அதாவது, விண்ணப்பித்தவர்களில் மூன்றரை இலட்சம் பேர் தேர்வெழுத வரவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்வெழுத வராதவர்களின் எண்ணிக்கை சொற்பமானதாகத் தானிருக்கும். விண்ணப்பித்துவிட்டுத் தேர்வைப் புறக்கணித்தவர்களில் பெரும்பாலானோர், போதிய தயாரிப்பின்றி சுயநம்பிக்கை அற்றவர்களாக, தேர்வினைத் தவிர்க்க அபத்த காரணங்களை அடுக்கி, தங்களது சோம்பலினை மறைக்க முயற்சித்தவர்கள். 

சரி,  தேர்வினைத் தவிர்த்தவர்கள் போக, தேர்வெழுதியவர்களின் தேர்வுக்குப் பிந்தைய மனநிலை, தேர்வில் அவர்களது பங்களிப்பு, வெளிப்படுத்திய தகுதி குறித்த பார்வையோடு,  கேள்வித்தாளில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், அவர்கள் சரியாக விடையளித்த கேள்விகளின் எண்ணிக்கை, அதற்கு அவர்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் குறித்த உரையாடல்களில்... பெரும்பான்மையான மாணவர்கள் மதில் மேல் பூனையாய், தன்னம்பிக்கையற்றவர்களாக அவர்கள் பெறுவதற்கு தகுதியான மதிப்பெண்ணை உறுதியாகக்  கூறவில்லை. ஒரு சில மாணவர்கள் மட்டுமே, ""175 கேள்விகளுக்கு சரியான விடைகளை  "டிக்' பண்ணியிருக்கேன்... சார்''  என்றும், ”""கண்டிப்பா.... கிடைச்சுடும் சார்'' என்றும் பதில் அளிக்கிறார்கள். 

ஒரு தேர்வுக்கு, அதன்  பாட திட்டத்தின்படி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளாதவர்கள்-  படிக்காதவர்களுக்கு - தன்னம்பிக்கையில்லாத, தெளிவில்லாத நிலை ஏற்படலாம். ஆனால், தெளிவாய் திட்டமிட்டு படித்தவர்கள் கூட, தேர்வெழுதிய பின்னர் தெளிவற்று அமர்வது, பேசுவது எல்லாம் எதனால்? வாசித்தது, படித்தது மேலோட்டமாகவே, முடிந்துவிட்டதா? உழைத்ததில் தெளிவில்லையா? கவனம் போதவில்லையா?  

தேர்வெழுதிய 13.5 இலட்சம் பேரில், கவனமாக, தெளிவாக,  தங்கள்மீதும் நம்பிக்கையுடனும் படித்த முதல் ஐயாயிரம் பேர் மட்டும்தானே தேர்ச்சி பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள். அவர்களுக்குத்தானே, தமிழக அரசில் பணிகள் ஒதுக்கப்படும். இதுதான் களநிலவரம் என்று தெரிந்தும் தேர்வெழுதிய பின்னர் கூட,  தங்களது தகுதியைத் தீர்மானிக்க முடியாத  சுயநம்பிக்கையற்ற  தன்மை ஏற்புடையதாயில்லை. 

"உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு' என்கிறார் தமிழ்வாணன். தெளிவே வெற்றியின் நுழைவு. ஒரு செயல் அல்லது தேடல், ஒரு வெற்றி அல்லது வாய்ப்பு ஒன்றிற்காக நாம் முயற்சி செய்கின்றோம்  என்றால், நம்மிடத்தில் என்னென்ன உள்ளது, என்னென்ன இல்லை, என்னென்ன வேண்டும் என்ற தெளிவு முதலில் வேண்டும். என்ன இருக்கிறதோ அதைச் செறிவூட்ட வேண்டும். எது இல்லையோ அதைப் பெற்றிட முயலுதல் வேண்டும். ஏனென்றால் தெளிவே வெற்றியின் நுழைவு. 

உதாரணமாக, நாம் கால்பந்தாட்ட போட்டிக்குச் செல்வதாக வைத்துக் கொள்வோம்.  அந்த விளையாட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு என்ன வழி என்று தெரிந்து கொண்டு பயிற்சி செய்து களமிறங்குவோம் அல்லவா?  ஆர்வம் மட்டும் உள்ளது விளையாடத் தெரியவில்லை என்றால்... படித்தோம், ஆனால், அதில் கவனமில்லை என்றால்? தேர்வு எழுதினோம்... அதில் தெளிவில்லை என்றால்?

நாம் நினைப்பதெல்லாம் முதலில் தன்னம்பிக்கைதானா என்ற தெளிவு வேண்டும். சிலர் நிறைவேறாத ஆசைகளை, விருப்பங்களை, இலட்சியங்களை தன்னம்பிக்கை என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். போட்டித்தேர்வில் வெற்றிபெறுவது என்பது நிறைவேறக் கூடிய... சாத்தியப்படும் தன்னம்பிக்கை செயல்தானே! அதில் ஏன் குளறுபடி? பல நிறைவேறவே முடியாத வெற்று ஆசைகளை “தன்னம்பிக்கை” என்று நம்பி, “தோல்வி சவக்குழியை” அருமையாக தோண்டும் ஓர் அபத்த செயல் அல்ல,  போட்டித்தேர்வுகளும்  அதற்கான தயாரிப்புகளும்.

"இதுவரை எழுதிய பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தோல்வியே அடைந்திருக்கின்றேன். ஆனால்,  “இனி நான் நிச்சயமாக ...  அடுத்தடுத்த தேர்வுகளில் முதல் பத்து இடங்களுக்குள் பிடித்து, நல்லதொரு அரசுப் பணிக்குச் செல்வேன்'”என்பது தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட தன்னம்பிக்கை, தொடங்கிய நிலையில் எப்படி இருந்ததோ, அப்படியே தேர்வு எழுதி முடிக்கும்வரை தொடரவேண்டாமா? முயன்றால் முடிவது தன்னம்பிக்கை, விடா முயற்சியில் படிவது தன்னம்பிக்கை, வெற்றி பெறும் வரை முயற்சியைக் கடுமையாக்குவது தன்னம்பிக்கை. ஆக வெற்று நம்பிக்கைகளை ஒற்றியெடுத்துவிட்டு, வெற்றி நம்பிக்கைகளை பற்றிக் கொள்கிற பக்குவத்தை... வித்தையை நாம் கவனமாக உழைப்பதின் மூலம் பெற்றுவிடலாம். 

"நம்மைப் பற்றி நாம் நினைப்பதல்ல நாம்; நம்மை இவ்வுலகுக்கு,  என்னவென்று, எப்படி நிரூபிக்கின்றோமோ... அதுவே நாம்' என்கிற மந்திரம் நமது ஒவ்வொரு செயலிலும், கடமையிலும் கவனமாக இருந்து கொண்டே இருப்பது, நம்மை நம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக உறுதியேற்றிக் கொண்டே வழி நடத்தும். "நம்பினோர் கெடுவதில்லை... இது நான்குமறை தீர்ப்பு' என்று சொல்லப்பட்டதெல்லாம் அவரவர் தெய்வங்களை ஒருவர் நம்பவேண்டியதை வலியுறுத்தப்பட்டதல்ல. ஒருவர்... தன்னையே எந்த அளவிற்கு நம்பவேண்டும் என்பதற்காகவே அவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மை... நாமே நம்பாவிட்டால்... வேறு யார்தான் நம்புவார்கள்? 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im2.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/நம்பினோர்-கெடுவதில்லை-3231547.html
3231546 வார இதழ்கள் இளைஞர்மணி உலகத் திறன் போட்டி: தண்ணீர் தொழில்நுட்பத்துக்கு தங்கம்! இரா.மகாதேவன் Tuesday, September 10, 2019 05:44 PM +0530
ரஷியாவில் அண்மையில் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது ஒலிம்பிக் போட்டிக்கு இணையான உலகத் திறன் போட்டி கசான்-2019. இதில், இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளதோடு, வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்று சாதனை பட்டியலில் அடியெடுத்து வைத்துள்ளது.

WorldSkills International  என்பது உலக அளவில் சுமார் 82 உறுப்பு நாடுகள் இணைந்த ஒரு சர்வதேச திறன் வளர்ச்சி இயக்கமாகும்.  இது உலகெங்கிலும் உள்ள தொழில், தொழில்நுட்பம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களில், திறன்களின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சிக்கான குரலாக கடந்த 1950 முதல் ஒலித்து வருகிறது. குறிப்பாக, எதிர்காலத்துடன் தொடர்புடைய திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து இளைஞர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தொழில்துறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

WorldSkills அமைப்பு இளைஞர்களையும், கல்வியாளர்களையும் ஒன்றிணைத்து இளைஞர்கள் போட்டியிடவும், அனுபவம் பெறவும், அவர்கள் விருப்பமான திறனில் எவ்வாறு சிறந்தவர்களாக மாறலாம் என்பதை அறியவும் வாய்ப்பளிக்கிறது.

இதன் ஒருபகுதியாக உலகத் திறன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை   நடைபெறும் இந்தப் போட்டியில், தச்சுத் தொழில் முதல் பூக்கடை வரை, சிகையலங்காரம் முதல் மின்னணு தொழில்நுட்பத் தொழில் வரை, மோட்டார் மெக்கானிக் முதல் பேக்கரி தொழில் வரை 6 பிரிவுகளில் அடங்கிய 56 திறன்களில் சர்வதேச அளவில் இளைஞர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம், Medallion of Excellence, Albert Vidal Award, Best of Nation ஆகிய பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 22 முதல் 27 வரை ரஷியாவின் டாடர்ஸ்தான் தலைநகர் கசானில் நடைபெற்ற 45 -ஆவது உலகத் திறன் போட்டியில், 63 நாடுகளைச் சேர்ந்த 1,354 இளம் தொழில் வல்லுநர்கள்  போட்டியிட்டனர். இதில், மொபைல் ரோபாட்டிக்ஸ், முன்மாதிரி- மாதிரிகள், சிகையலங்காரம், பேக்கிங், மிட்டாய், வெல்டிங், செங்கல் கட்டுமானம், கார் பெயிண்டிங், பூக்கடை உள்ளிட்ட 44 திறன்களில் இந்திய அணி பங்கேற்று, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம், 15 Medallion of Excellence, JÚ Best of Nation பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் கடந்த 2007 முதல் இந்தியா பங்கேற்று வந்தாலும்,  தற்போது தங்கம் உள்ளிட்ட 19 பதக்கங்களுடன் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கசான்-2019 போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த எஸ். அஸ்வதா நாராயணா, தண்ணீர் தொழில்நுட்பத்தில் (Water Technology) 11 நாடுகளுடன் போட்டியிட்டு தங்கம் வென்றார். இந்தியப் போட்டியாளர்களிடையே அவருக்கு "பெஸ்ட் ஆப் நேஷன்' என்ற விருதும் கிடைத்தது.

அதேபோன்று, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் நூட்டலபதி, வலைத்தள தொழில்நுட்பத்தில் (Web Technologies) 33 நாடுகளுடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரமானிக், நகை (Jewellery) பிரிவில் 16 நாடுகளுடன் போட்டியிட்டு வெண்கலமும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்வேதா ரத்தன்புரா, வரைகலை வடிவமைப்பில் (Graphic Designing) 35 நாடுகளுடன் போட்டியிட்டு வெண்கலமும் வென்றனர். இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே பெண் திறனாளர் என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார். இந்திய அணி, WorldSkills போட்டியில் 6 ஆவது பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

கசான் நகரில் கடந்த ஆகஸ்ட் 28 -இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த விழாவில், 63 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கலாசாரங்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே பரிசுகள் வழங்கப்பட்டன.

சராசரியாக 22 வயதுடைய இந்திய அணியினர் அனைவரும் நாட்டின் 2 மற்றும் 3 -ஆம் நிலை நகரங்களில், மிகவும் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். இவர்களின் பெற்றோரில் சுமார் 35 சதவீதம் பேர் விவசாயத் துறையினர் மற்றும் கூலித்தொழிலாளர்கள்.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வேர்ல்ட்ஸ்கில்ஸ் இந்தியா (WhorldSkills India) என்ற அமைப்பு,  நாடு முழுவதும் இந்தியாஸ்கில்ஸ் என்ற போட்டியை நடத்தி, சர்வதேச போட்டிகளுக்கான திறனாளர்களைத் தேர்வு செய்கிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் பதிவுசெய்ய வேண்டும். பிறகு, மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். மாநில சாம்பியன்கள் பிராந்திய போட்டிகளிலும், அதில் வென்றவர்கள் இண்டியாஸ்கில்ஸ் தேசியப் போட்டியிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உலகத் திறன் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்திய அணியின் வெற்றி குறித்து, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், ""இந்தியா அணி புதிய வரம்புகளை வரையறுத்து, சீனா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராகத்  தங்கள் திறமையை நிரூபித்துள்ளது. அந்த அர்ப்பணிப்பு மற்றும் உறுதியிலிருந்து, நாட்டின் இளைஞர்கள் பெரும் உத்வேகம் பெறவேண்டும். இந்தியா இளமையான மற்றும் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ளது என்பதை நம் குழுவினர் காட்டியுள்ளனர்'' என்றார். 

46 -ஆவது உலகத் திறன் போட்டி, சீனாவின் ஷாங்காய் நகரில், வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய்- 2021 என்ற பெயரில் நடைபெறவுள்ளது. ரர்ழ்ப்க்நந்ண்ப்ப்ள் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் அமைப்பு 2030-க்குள் 10 கோடி இளைஞர்கள், திறன்களுடன் முன்னேறுவதற்கான ஊக்குவிப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/10/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/உலகத்-திறன்-போட்டி-தண்ணீர்-தொழில்நுட்பத்துக்கு-தங்கம்-3231546.html
3226937 வார இதழ்கள் இளைஞர்மணி புத்தக வாசிப்பு... நடைமுறை... கண்டுபிடிப்பு! DIN DIN Tuesday, September 3, 2019 12:18 PM +0530 உலகில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதைப் போன்றே நோய்களைக் கண்டறியும் கருவிகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. எந்த வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கண்டுபிடிக்கவே ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டிய நிலையில், 17 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அரசும் அந்தச் சிறுவனைக் கெளரவிக்கும் வகையில், ராஷ்டிரிய பால புரஸ்கார் (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) என்ற உயரிய விருதை வழங்கியுள்ளது.
வெறும் 2 ரூபாய் செலவில் ஒரு சோதனையைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தச் சிறுவனை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும், விஞ்ஞானிகளும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர். 
மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கபட்டினத்தைச் சேர்ந்த மொகமது சுஹைல் சின்யா சலீம் பாட்ஷா தான் அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்.
குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் புரதத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டினை துண்டு காகிதத்தைப் பயன்படுத்தி கண்டறியும் முறையை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்த புதிய கண்டுபிடிப்புக்குதான் இந்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. 
சிறு வயதிலிருந்தே பெற்றோர்களது வழிகாட்டுதலின்படி புத்தக வாசிப்பை நேசித்து வந்து சுஹைலுக்கு தான் படிக்கும் விஷயங்கள் உண்மைதானா? என பிராக்டிகலாகச் செய்து பார்க்கும் வழக்கம் இருந்துள்ளது. அதனால் ஒரு விஷயத்தை முழுமையாய் அறிந்து கொள்ளும் வரை அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே அவர் இருந்துள்ளார். சில விஷயங்களுக்கு அவருடைய பெற்றோரால் பதில் அளிக்க முடிந்திருக்கிறது. நிறைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மகனின் படிப்பார்வத்தை அறிந்த அவரது பெற்றோர், சுஹைலுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஒரு மடிக்கணினியை வாங்கிக் கொடுத்துள்ளனர். பெரும்பாலான விஷயங்களை இணையமே அவருக்குக் கற்றுத் தந்துள்ளது.
புத்தக வாசிப்பு தவிர, யோகா, பாடல் எழுதுதல், கராத்தே, சதுரங்கம், போன்றவற்றிலும் சுஹைலுக்கு ஆர்வம். 
"அமெரிக்காவின், ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பேராசிரியராகப் பணியாற்றும் விஞ்ஞானி மனுபிரகாஷின் வீடியோ ஒன்றை 2017- ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்த்தேன். மூன்று நிமிடங்களுக்குள் மலேரியாவைக் கண்டறியக் கூடிய காகிதத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் நுண்ணோக்கியை உருவாக்கியவர் அவர். இந்த வீடியோவைப் பார்த்த எனக்கு எதிர்காலத்தில் என்ன நோய் என்று கண்டுபிடிப்பதற்கே மக்கள் அதிக செலவு செய்யக் கூடாது; அதற்கு மாற்று வழியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 
அதையடுத்து காகிதத்தைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைப்பாட்டைக் கண்டறியும் முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் வந்தது. எத்தனை குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள பல ஆய்வு கட்டுரைகளைப் படித்தேன். இந்தியாவில் லட்சக்கணக்கானோரும், உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது ஆராய்ச்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். "புரதத்தின் அளவுகள் வேறுபட்டவை. எனவே, புரதச்சத்தை அதிகரிக்க பரிந்துரைக்க வேண்டிய உணவு வகை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். இதனால், ஒவ்வொரு குழந்தையின் ரத்தத்தில் உள்ள புரதத்தின் அளவைக் கணிக்கக் கூடிய புதிய முறையைக் கண்டறிய முயன்றேன்.
நான் பரிசோதனை செய்ய ஒரு காகிதத்தைப் பயன்படுத்துகிறேன். ஒரு குழந்தையின் உமிழ்நீரை காகிதத்தில் எடுக்க வேண்டும். காகிதத்தின் நிறம் மாறினால், அது புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததற்கான அறிகுறியாகும். இதற்காக, நான் ஒரு மொபைல் பயன்பாட்டையும் உருவாக்கியுள்ளேன். இந்த காகிதத்தை ஸ்கேன் செய்து புரதத்தின் சதவிகிதம் அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவை தெரிந்துகொள்ளலாம். இதற்கு செலவு வெறும் 2 ரூபாய்தான் என்பதுடன் பரிசோதனை முடிவையும் 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும்'' என்கிறார் சுஹைல். 
இன்றுவரை, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிவதற்கான ஒரே வழி ரத்த பரிசோதனையாகும். இதனால் மருத்துவ கழிவுகள் உருவாகி அதை அகற்றுவதற்கு பல நாடுகள் சிரமப்பட்டு வருகின்றன.
இதற்கு மாற்றாக இந்த காகிதப் பரிசோதனைக் கருவி இருக்கிறது. 
சாதனைக்குத் தேவை புதிய சிந்தனையும், விடாமுயற்சியும்தான் என்பதை உலகிற்கு உணர்த்திய இந்த சிறுவனின் வெற்றிக்கு வாசிப்பும் உதவியிருக்கிறது என்பது இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி.

- வி.குமாரமுருகன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/MOHAMMED.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/புத்தக-வாசிப்பு-நடைமுறை-கண்டுபிடிப்பு-3226937.html
3226936 வார இதழ்கள் இளைஞர்மணி ஆராய்ச்சிப் படிப்பில்...டிவி மெக்கானிக்! DIN DIN Tuesday, September 3, 2019 12:15 PM +0530 வறுமை என்பது பெரும்பாலான இளைஞர்களின் வளர்ச்சிக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல். அதைக் கண்டு பயந்துவிடாமல், உடைத்து நொறுக்கிவிட்டு ஓடும் இளைஞர்களே வெற்றி எல்லையை அடைந்து சாதிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஜெய்குமார் வைத்யா. 
மும்பையின் குடிசைவாழ் பகுதியான குர்லாவில் எட்டுக்கு பத்து சதுரஅடி வீட்டில் தன் தாய் நளினியுடன் வசித்தவர் ஜெய்குமார் வைத்யா. நளினி தன் கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதால் விவாகரத்து பெற்றவர். எந்த ஆதரவுமின்றி வாழ்க்கையைத் தொடங்கியதால் இருவரையும் வறுமை வாட்டியது. நளினியால், தன் மகனின் கல்விக் கட்டணத்தைக் கூட சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் இருந்தது. அந்த நேரங்களில் ஜெய்குமாரை தேர்வு எழுத அனுமதிக்காமல், அவரை ஓட்டுநர் பணியில் சேர்த்து விட அறிவுரை கூறிய நிர்வாகங்களும் இருந்தன.
ஜெய்குமாரும் அவருடைய தாயும் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் வடபாவ், சமோசா, ரொட்டி, தேநீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளூர் கோயில் அறக்கட்டளையிலிருந்து ரேஷன் பொருள்கள், பிறரால் தரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். அவற்றையே அவர்கள் உடுத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமை. 
அந்தநேரத்தில், ஜெய்குமார் ஓர் உள்ளூர் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் கடையில் சால்ட்ரிங் வேலையை மேற்கொண்டார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ. 4000 ஊதியம் கிடைத்தது. அதோடு, அவர் குர்லா பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையிலும் வேலைசெய்துகொண்டு, மற்ற மாணவர்களின் பணிகளையும் செய்தார். 
அவரது தாய் நளினி, ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் மாதம் ரூ. 8000 ஊதியத்தில் பணியாற்றினார். 
இந்த நிலையில் பிளஸ் 2 -வில் தேர்ச்சி பெற்ற ஜெய்குமாருக்கு கே.ஜே. சோமையா பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை (ஐ.டி.எஃப்) உள்ளிட்ட மும்பையில் உள்ள ஒருசில தொண்டு அறக்கட்டளைகள் வழங்கிய வட்டி இல்லாத நிதி உதவி, பல வருட கடின உழைப்பு மற்றும் படிப்புக்குப் பிறகு மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றார் ஜெய்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்லூரியில் படிக்கும்போது, நானோ இயற்பியலில் எனக்கு ஆர்வம் இருந்ததால், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ டெக்னாலஜி போன்றவற்றைத் தீவிரமாகப் படித்தேன். ரோபோட்டிக்ஸில் 3 தேசிய விருதுகளையும், 4 மாநில விருதுகளையும் வென்று கல்லூரியில் எனது அடையாளத்தை வெளிப்படுத்தினேன். அதோடு, உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி- இல் இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் கிடைத்தது'' என்றார் ஜெய்குமார்.
இந்த நிலையில், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) இல் ஜெய்குமார் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஓர் ஆராய்ச்சியாளராக மாதத்திற்கு ரூ. 30,000 வழங்கப்பட்டது. இந்த பணத்தில் தனது வீட்டை குளிரூட்டியுடன் புதுப்பித்த ஜெய்குமார், அயல்நாடுகளுக்குச் சென்று படிக்கும் வகையில், ஜி.ஆர்.இ மற்றும் டோஃபெல் ஆங்கில மொழித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தார்.
இதற்கான பணத் தேவைகளுக்காக, சர்வதேச மாணவர்களுக்கு இணையம் வழியாக பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2017 - இல் இவரது முதல் மாணவர், லண்டனில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்தவர். இவரது மாணவர்கள் அனைவரும் முதலிடத்தைப் பெற்றதால், பிப்ரவரி 2019 -இல் ஜெய்குமார் வைத்யா ஒரு விளம்பரத்தை வெளியிட்டபோது அவருக்கு பலரிடம் இருந்தும் கோரிக்கைகள் வரத்தொடங்கின. இதன்மூலம் அவர் தனது கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தினார்.
3 ஆண்டுகள் TIFR இல் பணிபுரிந்தது பிஎச்.டி திட்டத்திற்கு ஜெய்குமாரை தூண்டும் அடித்தளமாக அமைந்தது. அங்கு பணியாற்றிய காலத்தில், 2017, 2018 ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் பத்திரிகைகளில் 2 அறிவியல் ஆவணங்களை வெளியிட்டார். இவை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் கவனத்தை ஈர்த்தன. தங்களது பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளராகச் சேர வர்ஜீனியா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தது. இதை ஏற்று, வர்ஜீனியாவில் நானோ தொழில்நுட்பத்தில் முழு நிதியுதவி பெற்ற ஐந்தாண்டு பிஎச்டி திட்டத்தைத் தொடர உள்ளார் ஜெய்குமார் வைத்யா. இந்த காலகட்டத்தில் அவருக்கு மாதம் 2,000 அமெரிக்க டாலர் (ரூ. 1.44 லட்சம்) உதவித்தொகையாக வழங்கப்படும்.
ஜெய்குமார் கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி மும்பை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வர்ஜீனியாவுக்குப் புறப்பட்டார். முன்னதாக அவர் கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் விமானத்தில் உட்கார்ந்த முதல் நபர் நான்தான். அதனால், உற்சாகமாக இருக்கிறேன். வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் என் தாயுடன் தொடர்பில் இருக்க நான் அவருக்காக ரூ. 5,000 மதிப்புள்ள மொபைல் போனை வாங்கிக் கொடுத்துள்ளேன். என் அம்மா என்னை அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு வருவார். அவர் வாழ்க்கையில் விமான நிலையத்தையே பார்த்ததில்லை. அவர் இந்த நிலையை எட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மாதம் என்னுடைய தேவைக்காக 500 டாலரை வைத்துக் கொண்டு மீதத்தை அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன்'' என்று கூறியுள்ளார். 
அவர் விமானம் ஏறுவதற்கு முன்னதாக தன்னைப்போல கனவு காண்பவர்களுக்கு ஓர் ஆலோசனை தெரிவித்துள்ளார். "வெற்றி என்பது ஒரு பயணம்; அது நம் நிலைத்தன்மையை சோதிக்கிறது. நாம் ஒருபோதும் அதை கைவிடக் கூடாது. ஒரு மில்லியன் முறை தோல்வியுற்றாலும், அடுத்த நாள் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையைத் தொடரவேண்டும்' என்பதே அது.


- இரா.மகாதேவன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/JAYKUMAR-VAIDYA.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/ஆராய்ச்சிப்-படிப்பில்டிவி-மெக்கானிக்-3226936.html
3226934 வார இதழ்கள் இளைஞர்மணி தன் பலமறிந்த யானைகள்! DIN DIN Tuesday, September 3, 2019 12:10 PM +0530 ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள். அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்" 
- ஆபிரகாம் லிங்கன். 
ஓர் இலக்கை நோக்கிய முயற்சி, பயிற்சியின்றி சாத்தியமாகாது. அப்படியான பயிற்சியைக் கூட நாம் தேர்ந்தெடுத்திருக்கும் இலக்கைச் சென்றடைய உதவுமா என்பதைத் தெளிவாக முடிவு செய்த பிறகே தொடங்க வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் பலருக்கு, "தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமே தங்களுக்கு உகந்தது; பாதுகாப்பானது' என்று கருதுகின்றனர். அதற்கான பிரதான காரணத்தை நாம் உற்று நோக்கினால்... வேதனையும், அதிர்ச்சியுமே ஏற்படுகிறது. 
ஆங்கில மொழித் திறன் பற்றி இங்கு அளவுக்கதிகமாக, பூதாகரமாக சித்திரித்துக் காட்டப்பட்டிருக்கும் கருத்தே, இம்மாணவர்களை ஆங்கிலம் தவிர்க்க கூடிய தேர்வாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நம்பிக்கையோடு அதிகமாக நாடிச் செல்வதற்கு வழிவகுத்திருக்கிறது. இந்தப் போக்கு போட்டித்தேர்வுகளைச் சந்திக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 
தாய்மொழியான தமிழ் மீதிருக்கும் பற்றின் காரணமாக, பிற மொழி மீதான வெறுப்பும், துவேசமும் அவசியமற்றதாகவும், ஏமாற்றும் வழிமுறையாகவுமே தோன்றுகிறது. ஏனென்றால், ஆங்கிலத்தை வெறுக்கும் - தவிர்க்கும் மாணவர்களில் பெரும்பாலோனோர் அப்படி ஒன்றும் அவர்களது தாய்மொழி தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இல்லை. தாய்மொழி அறிவில், திறனில் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், மற்ற மொழிகள், தொடர்பு மொழிகள் என்று எல்லாவற்றையும் தவிர்க்கின்ற மாணவர்களின் இயல்பை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாணவர்களின் இந்த நிலைக்கு அரசு, ஆசிரியர்கள், அரசியல் என்று பல சிக்கலான காரணங்கள்இருந்தாலும், இந்த நிலையை மாற்றியமைப்பது சாத்தியமே. 
மிகவும் பின்தங்கிய குடும்ப, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்த இரண்டு மாணவர்களின் வெற்றிக் கதையை இங்கு பகிர்வது நமக்கு அவசியமாகிறது. இருவருமே கிராமத்து பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களுக்கிருந்த வாய்ப்புகள், கல்லூரிப் படிப்பை முடிக்கின்ற வரை அவர்களுக்கு போதுமான ஆங்கில மொழித் திறனைப் பெற்றுத் தரவில்லை. வேலைவாய்ப்பு... போட்டித்தேர்வுகள்... நேர்முகத்தேர்வு என்கிற நெருக்கடி வந்தவுடன், வேறு வழியின்றி நம்மை அணுகியபோது, நம் அனுபவம் நமக்கு கொடுத்திருக்கும் நுட்பமான வழிமுறைகள் சிலவற்றை அவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுத்தோம். கடினமாக உழைத்தார்கள். ஒரே மாதத்தில் அவர்களுக்கு ஆங்கில மொழி பற்றிய புரிதல் கிடைத்து. அச்சம் அகன்று சாதனை படிகளில் ஏற ஆரம்பித்தார்கள். ஈடுபாடில்லாத பல ஆண்டுகள் முயற்சிக்கும், கவனமான, தீவிர முயற்சிக்கும், பயிற்சிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்பதை ஆங்கிலத்தை கண்டு மிரண்டு ஓடும் மற்ற மாணவர்களுக்கு, இந்த இரு மாணவர்களின் ஒரு மாத உழைப்பு நிரூபித்துக் காட்டியது. 
தமிழோடு ஆங்கில அறிவையும் திட்டமிட்டு உழைத்து பெற்ற அந்த மாணவர்கள் இருவரில் ஒருவர், ஒரு மாணவி. இன்று அவர் ஒரு பிரபல பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக அதிக சம்பளத்தில் பலருக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார். மற்றொரு மாணவரோ, தொடர்ந்து தமிழக அரசுப் பணித் தேர்வுகளில் மட்டும் வெற்றி பெறுவது என்கிற நிலை மாறி, ஆங்கிலமும் அவசியம் என்கின்ற தகுதியோடு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் எந்தவித தயக்கமோ, அச்சமோஇன்றி கலந்துகொண்டு, தொடர் வெற்றிகளைப் பெற்று, எது நல்ல பணி... எது தனக்குத் தேவை என்று தனக்கானதை தேர்வு செய்கின்ற நிலைக்குச் சென்றார். இறுதியில் இப்பொழுது இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்று பக்கத்து மாநிலத்தில் ஒரு காவல்துறை உயர்அலுவலராகப் பணி செய்துகொண்டிருக்கிறார். இந்த இரு மாணவர்களும் இன்று பன்மொழிகள் தெரிந்த அதிகாரிகள் என்பது கூடுதல் செய்தி.
யானைகளைப் பயிற்றுவிக்கும் வேடர்கள் மற்றும் பாகன்கள், யானைகளை குட்டியாகப் பிடித்து வந்தவுடன்... கடினமான, பெரிய இரும்புச் சங்கிலிகள் கொண்டு கட்டிப் போடுவார்களாம். அதே யானைகள் முழுவதும் வளர்ந்து பெரிதாக ஆனவுடன்... சாதாரண கயிறு கொண்டு கட்டுவார்களாம். குட்டியாக இருந்தபோது, தன் காலுடன் பிணைக்கப்பட்ட கடினமான சங்கிலியை இழுத்து... இழுத்து... அறுக்க, உடைக்க முயற்சித்து தோற்றுப் போன குட்டி யானை, பின்னர் வளர்ந்து பெரிதாக ஆன பின்னர், "தன் காலில் கட்டப்பட்டிருப்பது சாதாரண கயிறுதான்.... அதை நாம் நொடியில் அறுத்தெறிந்து விட முடியும்' என்பதை உணராமல், அதன் முயற்சியையே கைவிட்டுவிடுமாம். தாய்மொழியைக் கடந்து பிறமொழி படிக்க அஞ்சும் மாணவர்களின் நிலையும் இதுதான்.
ஒரு பவுண்ட் தேனைச் சேகரிக்க, தேனீக்கள் இருபது லட்சத்துக்கும் மேலான மலர்களைத் தேடிச்செல்கிறதாம். அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற மாணவர்கள், தங்களது தரம் - தகுதியை வளர்த்துக்கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து கொள்ளத் தயங்கலாமா?அச்சப்படலாமா? ஆங்கிலமோ, வேறு மொழியோ எதையும் வெறுத்து, பயந்து, ஒதுங்கி படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான்; எழுந்து பல மொழி படித்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான். 
நமது முன்னோடிகள் மற்றும் சாதித்தவர்களின் சிந்தனைத் துளிகள் நம்மைச் செதுக்கும் உளிகளாக... நமக்கு உதவட்டும். தன்பலம் உணர்ந்த யானை தன் கால்கட்டை அறுத்தெறிவது போல... பிறமொழி அச்சம் என்கிற கால்கட்டுக்களை, தடைகளைத் தகர்த்து வெற்றியாளராக வலம் வருவோம்.
- கே.பி. மாரிக்குமார்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/im6.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/தன்-பலமறிந்த-யானைகள்-3226934.html
3226930 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, September 3, 2019 11:38 AM +0530 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 
உதவியாளர் வேலை
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 130
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 47,500
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.kpmdrb.in/doc_pdf/Notification_2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.09.2019

தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் வேலை
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,450
வயது வரம்பு: 01.01.2001 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு பணியிடத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://drbdharmapuri.net/recruitment/admin/images/Dharmapuri%20UB%20
Advertisement166266_1565268354.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.09.2019

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் வேலை
பணி: Assistant Professor 
காலியிடங்கள்: 179
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது உச்சபட்ச வரம்பில் விலக்கு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar, 2nd Floor, Head Office, NIFT Campus, Hauz khas, Near Gulmohar Park, New Delhi - 110016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://nift.ac.in/sites/default/files/inline-files/Advt_Asstt%20Prof.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.09.2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 
பணி: Professor
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200
பணி: Associate Professor
காலியிடங்கள்: 68
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 67
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
தகுதி: அதிகபட்சம் அனைத்து துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. யுசிஜி விதிமுறைப்படி
சம்பந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள்
ராணுவத்தினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.pondiuni.edu.in/sites/default/files/Advertisement}08092019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2019

தமிழக அரசில் வேலை 
பணி: Assistant Director
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: மனையியல் அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
பணி: Child Development project Officer
காலியிடங்கள்: 87 + 2
சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தகுதி: ஹோம் சயின்ஸ், நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ரூரல் சர்வீசஸ் பிரிவில் முதுகலைப் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 
கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம். 
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
எழுத்துத் தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/VELAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/வேலைவேலைவேலை-3226930.html
3226928 வார இதழ்கள் இளைஞர்மணி ஒட்டுமொத்த உழைப்பு! DIN DIN Tuesday, September 3, 2019 11:31 AM +0530 உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம், தொழில்துறை வளர்ச்சியில் காட்டுகிற வேகம், நம்மிடம் இல்லை. வேகமாக சில நேரம் ஓடுகிறோம். அதைவிட பல நேரங்கள் தளர்ந்து விடுகிறோம். இதுதான் இதற்குக் காரணம். இந்த தளர்ச்சியைப் போக்குவதற்கு புதிய மலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அறிஞர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் படித்த இளைஞர்களும் முன் வர வேண்டும்.
 அதற்கு நம்முடைய உயரம் என்ன என்பதை உணர வேண்டும். ஒரு தந்திக் கம்பத்தின் உயரத்தைப் பார்க்கிறபோது அதனுடைய உயரம் இத்தனை அடி என்று சொல்லிவிடலாம். ஒரு மரத்தினைப் பார்க்கிறபோது அதனுடைய உயரம் என்னவென்று சொல்லிவிடலாம். ஒரு மனிதனைப் பார்க்கிறபோது, அவனுடைய உயரத்தினைச் சொல்லிவிடலாம். ஆனால் குளத்திலே இருக்கிற தாமரையினுடைய உயரம் என்ன என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. ஏனென்றால் தாமரையின் உயரம், தண்ணீரின் உயரத்தைப் பொறுத்தே அமைகிறது. நீர் மட்டம் உயர உயர தாமரைச் செடியின் உயரமும் உயர்ந்து கொண்டே போகும். அதைப் போலவே உலக நாடுகளை வைத்துப் பார்க்கிறபோது, நம்முடைய உயரம் என்பது வெறும் அளவுகோலால் அளவெடுப்பதாக அமைத்துவிடுவது அல்ல. நம்முடைய உயரம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றால் நீரின் உயரம் உயர உயர தாமரையின் உயரம் உயர்வதைப் போல, நம்முடைய உயரமும் நம்முடைய உழைப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. அப்படியானால் நம்முடைய ஒட்டுமொத்த உழைப்பின் வேகமே நம்முடைய உயரம் என்பதை உலகநாடுகள் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
 இதயகீதம் இராமானுஜம் எழுதிய "இலக்கைத் தேடும் இதயங்கள்'
 என்ற நூலிலிருந்து...
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/TEAM_WORK.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/ஒட்டுமொத்த-உழைப்பு-3226928.html
3226927 வார இதழ்கள் இளைஞர்மணி தொழிற்சாலை பாதுகாப்பு... வேலை வாய்ப்புகள்! DIN DIN Tuesday, September 3, 2019 11:27 AM +0530 பாதுகாப்பு என்பது பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நமது வாழ்க்கையில் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மத்தியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். தொழிற்சாலை என்பது இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948-இல் பிரிவு 2 (எம்)-இல் உற்பத்தி நடைமுறையில் ஏதேனும் ஓர் இடத்தில் மின்னாற்றல் பயன்படுத்தப்பட்டு, 10 நபர்களையும், அதற்கு மேற்பட்டவர்களையும் பயன்படுத்தும் போது அது தொழிற்சாலை வளாகம் என அழைக்கப்படுகிறது. 
நாட்டில் 500 தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. சில வெளிநாடுகளில் 100 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில், தொழிற்சாலைப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். 
தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியாக தொழிற்சாலை பாதுகாப்பு முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு ஏதாவது ஒரு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், GATE, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கவுன்சிலிங், டேன்செட் அல்லது கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மூலமாக இப்பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இந்த முதுகலைப் பொறியியல் பட்டப் படிப்பு சுமார் 15 கல்லூரிகளில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 350 முதல் 400 மாணவர்கள், தொழிற்சாலைப் பாதுகாப்பு முதுகலை பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வெளியேறுகின்றனர். தேசிய அளவில் சுமார் 1, 500 முதல் 2,000 பேர் படித்து முடித்து வெளியேறுகின்றனர். எனவே, இப் பிரிவை படித்து முடித்த அவைருக்கும் நல்ல ஊதியத்துடன் வேலை உறுதி என்ற நிலை உள்ளது. 
பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுச்சூழல் பற்றிய நடைமுறைகளை அமல்படுத்தத் தேவையான மேலாண்மைத் திறன், தொழில் நுட்ப அறிவு ஆகியவற்றை ஊட்டுவதற்கு இந்த முதுகலைப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுச்சூழலின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்வதை வலியுறுத்துவதோடு, இந்தத் துறையில் தலை சிறந்த நிலையை எட்டவும் இந்த படிப்பு உதவும். சுமார் 500 பேர் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு ஒரு தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறை உள்ளதால், இந்த படிப்பு படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம். 
சில வேளைகளில் ஒரு மாணவருக்கு ஒரே சமயத்தில் 2 அல்லது 3 தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதில் சிறந்ததை மாணவர் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. வேலைக்குச் சேரும் மாணவர்களுக்கு தொடக்கத்தில் மாதம் சுமார் ரூ .50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. இவர்கள் தொழிற்சாலைகள் குறித்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அரசின் சட்டதிட்டங்களை நிறைவேற்றவும், தொழிற்சாலை விதிமுறைகளை அமல்படுத்தவும், கட்டடங்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்த பின்னர், அனுபவத்தைப் பொறுத்து வெளிநாடுகளிலும் இதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, பெட்ரோல் உற்பத்தியாகும் நாடுகளில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி அவசியம் என்பதால், வளைகுடா நாடுகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
- ச.பாலசுந்தரராஜ்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/SAFETY.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/தொழிற்சாலை-பாதுகாப்பு-வேலை-வாய்ப்புகள்-3226927.html
3226924 வார இதழ்கள் இளைஞர்மணி பன்னாட்டுச் சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி! DIN DIN Tuesday, September 3, 2019 11:23 AM +0530 மெக்சிகோ நாட்டில் செயல்பட்டு வரும் முமேடி அறக்கட்டளை (MUMEDI Foundation) எனும் அமைப்பு, அருங்காட்சியகம், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் வணிக மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் அருங்காட்சியகத்தில், தற்காலிகக் கூட்டு மற்றும் தனியார் கண்காட்சிகளை நடத்திட தேவையான இட வசதி வழங்கப்பட்டு வருகிறது. எந்தவொரு நாட்டின் படைப்பாளியும் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தித் தேவையான விளம்பரத்தையும், நல்ல வாய்ப்பையும் அடைய இந்த அருங்காட்சியகம் உதவி வருகின்றது. 
Graphic design, Industrial, Jewelry, Textile, Interiors, Architecture, Photography, Typography, Illustration மற்றும் பலதரப்பட்ட திட்டப்பணிகளில் உரிய சிறப்பைப் பெற்றிடத் தேவையான கண்காட்சிகளை நடத்துவதற்கு இங்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த அமைப்பு To death with a smile எனும் தலைப்பிலான பன்னாட்டுச் சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி ஒன்றினை அறிவித்திருக்கிறது. 
மரணம் என்பதைக் கருத்தாய்வு அல்லது அணுகுமுறையில், அவர்களது பண்பாட்டின் அடிப்படையில் அதனைக் கண்டு எப்படி அஞ்சுகிறார்கள் அல்லது கொண்டாடுகிறார்கள் அல்லது சமாளிக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில் சுவரொட்டி அமைக்கப்பட வேண்டும். இந்தச் சுவரொட்டியானது மரணத்தைத் தீவிரமானதாகவோ அல்லது விளையாட்டாகவோ பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 
இப்போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்ட, வடிவமைப்புகளில் ஆர்வமுடைய எந்த நாட்டைச் சேர்ந்தவரும் பங்கேற்கலாம். 
போட்டியில் பங்கேற்கும் ஒருவர் மூன்று சுவரொட்டிகள் வரை வடிவமைத்துச் சமர்ப்பிக்கலாம். 
வடிவமைக்கப்படும் சுவரொட்டி கையினால் வரையப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆனால், இறுதியில் அதனை டிஜிட்டலில் மாற்றிச் சமர்ப்பிக்க வேண்டும். 
வடிவமைக்கப்படும் சுவரொட்டியின் அளவு 60 x 80 செ.மீ எனும் அளவில் செங்குத்து வடிவில் இருக்க வேண்டும். 
சுவரொட்டி மூன்று முதன்மை நிறங்களை (RGB) உள்ளடக்கியதாகவும், கணினித்திரை பிரிதிறன் (Resolution) 300 dpi (dots per inch) எனும் படத்தெளிவிலும், 25 எம்பி அளவிற்கு அதிகமாகாமல் JPG  கோப்பாக இருக்க வேண்டும். 
வடிவமைப்புக்கான கோப்பின் பெயர், surname_name of the author.jpg என்றிருக்க வேண்டும். 
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்து கொண்டு, தாங்கள் வடிவமைத்த சுவரொட்டிகளைப் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், சுவரொட்டியினை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தவும், வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதித்தும் இரு ஒப்புதல் கடிதங்களை அளித்திட வேண்டும். போட்டிக்கான சுவரொட்டிகளைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 21-10-2019. 
போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் நடுவர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மூன்று பரிசுகளுக்கான சுவரொட்டிகள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப் பெற்ற சுவரொட்டிகளை வடிவமைத்தவர்களுக்கு முதல் பரிசாக Apple iPad Air ஒன்றும், இரண்டாம் பரிசாக Apple iPad ஒன்றும், மூன்றாம் பரிசாக Huawei Cellphone ஒன்றும் எனப் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர, காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் முதல் மாதத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற சுவரொட்டிக்கு Huawei Cellphone ஒன்று சிறப்புப் பரிசாக வழங்கப்படும். 
பரிசுகளைப் பெற்ற சுவரொட்டி வடிவமைப்பாளர்களுக்கு, இந்த அமைப்பு மெக்சிகோவில் நடத்தி வரும் தங்கும் விடுதியில் தொடர்ச்சியாக இரு நாட்கள், தங்குவதற்கான அறை, உணவும் வழங்கப்படும். இந்த வசதியினை 22-11-2019 முதல் 22-11-2020 வரையிலான காலத்தில் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இந்த அமைப்பு நிறுவியுள்ள தங்கும்விடுதி வணிக மையத்தில் 2000 மெக்சிகன் பீசாசுக்கான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான பரிசுச் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டி குறித்த முடிவுகள் 21-11-2019 அன்று நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். 
பரிசுக்குத் தேர்வு செய்யப் பெற்ற சுவரொட்டிகளுடன் சிறப்புக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்ட 300 முதல் 500 சுவரொட்டிகள் இந்த அமைப்பு நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் நவம்பர், 2019 முதல் ஜனவரி, 2020 வரைக் காட்சிப்படுத்தப்படும். 
இந்தப் போட்டி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள 
https://www.mumedi.mx/convocatoria/42 எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். 
- மு. சுப்பிரமணி 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/im5.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/பன்னாட்டுச்-சுவரொட்டி-வடிவமைப்புப்-போட்டி-3226924.html
3226923 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 207 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, September 3, 2019 11:13 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது chauvinism என்ற சொல்லைப் பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். அந்த சொல்லின் மூலச்சொல் குறித்த சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு என புரொபஸர் சொல்கிறார். அது என்ன என அறிவோமா?
புரொபஸர்: CHAUVINISM என்றால் மிகையான தேசப்பற்று மற்றும் தேசிய வழிபாடு எனக் கண்டோம். குறிப்பாக தன் தேசத்து மக்களே பிற மக்களை விட மேலானவர்கள் எனும் குருட்டுத்தனமான நம்பிக்கை அது என தெரிந்து கொண்டோம். ஆனால் வெறும் தேசப்பற்று மட்டுமே CHAUVINISM ஆகாது. இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த சொல் உருவான கதையை நாம் அறிய வேண்டும். இது பிரெஞ்சில் தோன்றி ஆங்கிலத்துக்கு இறக்குமதியான சொல். நெப்போலினிய போர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? 
கணேஷ்: எந்த நெப்போலியன்? சீவலப்பேரி பாண்டி படத்தில் நடிச்சவரா? 
புரொபஸர்: தமிழ் நாட்டில் முதலில் சினிமாவைத் தடைபண்ணனும். 
நடாஷா: நான் சொல்லவா? 1803 முதல் 1815 வரை நடந்த Napoleonic wars தானே? 
புரொபஸர்: கரெக்ட். இந்த போர்கள் நெப்போலியனின் பிரெஞ்சு படைகளுக்கும் இங்கிலாந்து, ரஷ்யா, புருஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களுக்கு இடையிலான coalitions, அதாவது கூட்டணிகளுக்கும் இடையில் நீண்ட காலம் நடந்தது. ஏழு முறை கூட்டணி அமைத்து இந்த allies, அதாவது பிரான்சுக்கு எதிரான ஐரோப்பிய நேச நாடுகள், நெப்போலியனை எதிர்த்து இறுதியாக 1815 - இல் வாட்டர் லூ போரில் அவரை முழுமையாகத் தோற்கடித்து சிறையில் தள்ளினார்கள். ஆறு வருடங்கள் சிறையில் கிடந்த பின் நெப்போலியன் மரணமடைந்தார். 
ஜூலி: பாவம். ஈழப்போர் போல இல்லையா? உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கினால் எந்த வீரமான நாட்டுப் படையும் ஒருநாள் வீழ்ந்தே ஆகும். 
புரொபஸர்: யெஸ். இந்த காலகட்டத்தில் பிரெஞ்சு படையில் ஒரு வீரர் இருந்தார். அவர் பெயர் நிக்கலஸ் செளவின். அவர் ஒரு மிகப்பெரிய நெப்போலியன் அபிமானி. நெப்போலியனுக்காக போரில் பங்கேற்று கடுமையாகக் காயமடைகிறார். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சொற்ப வருமானத்தைக் கொண்டு அவரால் தன் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. இருந்தாலும் அவர் நெப்போலியன் மீதான அபிமானத்தை விடவில்லை. ஆறாவது நேச நாடுகளின் கூட்டணி போர் தொடுத்து நெப்போலியனை முறியடித்தனர். Nepolean abdicated. 
கணேஷ்: அதென்ன அப்டிகேட்டட்? 
ஜூலி: Stepped down, stood down, quit, renounced. அதாவது பதவியை துறப்பது. 
கணேஷ்: ஓ... வேலையை விடுவது. 
ஜூலி: வேலையை விடுவதெல்லாம் உன்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கும், கார்ப்பரேட் பணியாளர்களுக்கும் தான். ஒரு மன்னர், ஒரு ஆட்சியாளர் பதவியைத் துறப்பார், விட மாட்டார். It is not resignation or putting down papers. இரண்டும் வேறு வேறு. 
கணேஷ்: ம்க்கும். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்னு சொல்றதெல்லாம் என்னவாம். 
ஜூலி: அதெல்லாம் சும்மா பேச்சுக்கு.
நடாஷா: சார், அது put in papers -ஆ இல்ல... put down papers - ஆ? 
புரொபஸர்: நல்ல கேள்வி. ஆனால் நான் சொல்ல வந்ததை முடிச்சுட்டு உன் கிட்ட வரட்டுமாம்மா? 
நடாஷா: ஓ... யெஸ். 
புரொபஸர்: நெப்போலியன் அவராகவே பதவியைத் துறக்கவில்லை, அவர் அப்படி வற்புறுத்தப்பட்டார். பிறகு அவரை சிறைக்கு அனுப்பினார்கள். பதினாறாவது லூயி, மன்னரானதும், மக்களிடையே நெப்போலியன் மீது கசப்பும் புது மன்னரிடம் மதிப்பும் தோன்றியது. இந்தச் சூழலிலும் செளவின் விடாமல் நெப்போலியனின் புகழ் பாடினார். அவரை நெப்போலிய எதிர்ப்பாளர்கள் கேலி செய்தார்கள்; வைதார்கள். ஆனால் செளவ்வின் சளைக்கவில்லை. ஆக, பின்னர் அவரைப் போல விடாப்பிடியாக முரட்டுத்தனமாக, கண்மூடித்தனமாக ஒரு கொள்கை, தரப்பு அல்லது நம்பிக்கையை ஆதரிப்போரை chauvinist என இந்த எதிர்ப்பாளர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். பிறகு இந்த சொல் பின்னர் பிரசித்தமாக நாம் மெல்ல நிக்கலஸ் செளவினை மறந்து விட்டோம். 
நடாஷா: சுவாரஸ்யமான மனிதர். 
புரொபஸர்: இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன். Put in papers and put down papers இண்டும் ஒரே அர்த்தம் கொண்ட idioms. ஆனால் அவற்றுக்கு இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
(இனியும் பேசுவோம்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/eng.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-207---ஆர்அபிலாஷ்-3226923.html
3226921 வார இதழ்கள் இளைஞர்மணி தொழில்கல்விக்கு தொலைநோக்குப் பார்வை முக்கியம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்) DIN DIN Tuesday, September 3, 2019 11:05 AM +0530 மிச்சமெல்லாம் உச்சம் தொடு 33
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து. 
- திருக்குறள் - 353 
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியை விட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
ஆழமான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி வரும் இக்காலத்தில், இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு அடுத்து ஒவ்வொரு துறையிலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் என்று சிந்தித்து அதற்கேற்ப தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை இப்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது Advanced Materials, Artificial Intelligence,  Biotechnology, Block Chain,  Drones & Robotics, Photonics & Electronics, Quantum Computing போன்ற 7 துறைகளில் ஆரம்ப நிலை ஆராய்ச்சியிலிருந்து, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வர்த்தகம் வரை முழுமையான ஒரு வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம், மாறி வருகின்ற தட்பவெட்ப நிலையின் தாக்கத்தை எப்படிச் சமாளிப்பது, 900 கோடி மக்களுக்கு எப்படி உணவளிப்பது, வயதானவர்களை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்ற அடிப்படை இலட்சியங்களைக் கொண்டு இந்த ஆழ்ந்த தொழில்நுட்பங்களின் உதவிகளோடு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுதான்.
இந்த ஆழமான தொழில்நுட்பங்களைத் தீர்மானிக்கக் கூடிய 3 காரணிகள் என்னவென்றால், 1. இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம், 2. இந்த தொழில்நுட்பம் வர்த்தகத்துக்கு ஏற்ற வகையில் உருவாவதற்கான கால அளவு, 3. இதை முழுமையாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கூடிய முதலீடு. இந்த மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உலகத்தில் வளர்ந்த நாடுகள், அந்த நாடுகளில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் இதற்கு ஏற்ற ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்து, இதற்கேற்ற முதலீட்டைக் கொண்டுவந்து, இதற்கு ஏற்ற மனிதவளத்தை பள்ளியில் இருந்து, STEAM (Science, Technology, Engineering, Arts and Maths) கல்வி முறையின் மூலமாக உருவாக்கி, Science Olympiad, Maths Olympiad முறையில் அந்த மாணவர்களைப் போட்டித் தேர்விற்கு தகுதிப்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மனித வளத்தைக் கட்டமைத்து, அந்த மனித வளத்தின் மூலமாக அடுத்த 30 ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சி இந்த உலகத்தை எவ்வாறு வளர்ச்சியடையச் செய்து செழிக்க வைக்கப் போகிறது, இந்த உலகத்தில் இன்றைக்கு இருக்கக் கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற நிலையிலே உலகம் உழைத்துக்கொண்டிருக்கிறது. 
இந்த ஆழமான தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்படும் புது கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய பொருளாதார மதிப்பைக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், நிதி சார்ந்த பொருளாதாரத்தைத் தாண்டி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த ஆழமான தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இந்த ஆழ்ந்த தொழில்நுட்ப புரட்சி இன்றைக்கு ஆரம்பமாகியிருக்கிறது. இதன் விளைவு அடுத்த 20 ஆண்டுகளில் நம் வாழ்வைச் செம்மைப்படுத்தும். 
இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஈடுபடக்கூடிய புது நிறுவனங்களை 4 தகுதிகளை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.
அதாவது தொழில் நுட்பத்தில் புதுமை, இதை வியாபாரமாக்கும் யுக்தி, இந்த குழுவின் தனித்திறன், இதன் மூலம் மனித வாழ்வில் உருவாகக்கூடிய தாக்கம்
இதுதான் ஐக்கிய நாடுகள் சபை வளரும் நாடுகளை வளப்படுத்த உருவாக்கிய இந்த நூற்றாண்டிற்கான நிலைத்த வளர்ச்சிக்கான லட்சியங்களை (Millenium Sustainable Development Goals) அடைவதற்கு தகுதி என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த லட்சியத்தில் முதலிடம் பிடிப்பது தரமான மருத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை. இதில் 51% புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியில் கவனத்தைச் செலுத்துகின்றனர். இதைப்போன்று ஆழ்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தொழிற்சாலை மேம்பாட்டிற்கு 2.0 முதல் 5.0 வரை புதுமையான கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு துறைகளில், சுற்றுச்சூழலில் மனித தாக்கத்தின் விளைவாக ஏற்படும் அவலங்களை முறியடிக்கக் கூடிய வகையில், நீடித்த வளங்களைக் கொண்ட நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள், பொறுப்புள்ள உபயோகிப்பாளர்கள் உருவாக்கம் மற்றும் உற்பத்தித்துறை, தட்பவெட்ப நிலை மாறுபாடு சவால்களைச் சமாளிக்க, குறைந்த விலையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்க, சுத்தமான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இந்த ஆழ்ந்த தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
இந்த ஆராய்ச்சி அடிப்படையிலிருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு கால அளவு, அது எந்தத் துறையைச் சேர்ந்தது என்பதைப் பொருத்து வேறுபடும். ஆராய்ச்சியிலிருந்து விளைந்த தொழில்நுட்பம், அதைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வளர்ந்த நாடுகளில் ஐந்து வருடம் ஆகும் என்றால் வளர்கின்ற நாடுகள் - இதை இப்போது முன்னெடுத்தாலே பத்து வருடங்கள் ஆகிவிடும். 
இப்போது தொழில்நுட்பத்தால் இந்த உலகமே ஒரு கிராமம் என்ற நிலையிலே மாறிவிட்ட போது, அறிவியலுக்கு எல்லைகள் கிடையாது. ஆனால் தொழில்நுட்பத்திற்கு எல்லைகள் உண்டு. அறிவியல் ஆராய்ச்சி தொடர்ச்சியாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டு செல்லும், இதில் அனைவரும் பங்கு பெறலாம். ஆனால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்குப் பல புதுக் கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டும். அதற்கு அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கவேண்டும். அதற்கு அந்தந்த நாடுகள் தனக்கான மனிதவளத்தை பள்ளியில் இருந்து கட்டமைக்க வேண்டும், அதற்கான ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த ஆராய்ச்சியைக் கட்டமைக்கக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கமுடியும். அப்போது தான் நாம் உலகத்தோடு போட்டி போட்டு வளர முடியும். 
ஐக்கிய நாடுகள் சபை வளரும் நாடுகளுக்காக உருவாக்கக் கூடிய நூற்றாண்டிற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலட்சியங்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் தண்ணீர், எரிசக்தி, சுற்றுச்சூழல், விவசாயம், உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவை அடங்கும். இதற்கான அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலமாக வளர்கின்ற நாடுகள் நீடித்த நிலைத்த வளர்ச்சியை அடைவதற்கு, வளர்ச்சியடைந்த உலகம் இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட புதுமைகள், புதுக்கண்டுபிடிப்புகளான சிலிகான் சிப், கணினி தொழில்நுட்பம், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்கள் போன்றவைதான் இன்றைய நவீன தொழில் நுட்ப உலகத்தைக் கட்டமைத்து இருக்கின்றன. இதைப்போல இன்றைக்கு உருவாகக்கூடிய - இன்றைக்கு ஆராய்ச்சி நிலையிலே இருக்கக் கூடிய - பல புது தொழில் நுட்பங்கள் தாம் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த உலகத்தின் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கப் போகின்றன. மென்பொருள் துறையில் மெஷின் லேர்னிங், ஹார்டுவேர் துறையில் குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி துறையில் ஜெனடிக் வரிசை மற்றும் மரபணுவை வெட்டி ஒட்டி மரபணு சார்ந்த வியாதிகளுக்கு தீர்வைக் கொடுக்கும் CRISPR/Cas9 தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில்நுட்பப் புரட்சியை இன்றைய ஆராய்ச்சி உலகம் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அட்வான்ஸ்டு மெட்டீரியல் துறையில் 38 நாடுகளும், செயற்கை நுண்ணறிவு துறையில் 48 நாடுகளும் , உயிரி தொழில்நுட்ப துறையில் 42நாடுகளும் , பிளாக் செயின் துறையில் 20 நாடுகளும், ஆளில்லா விமானம் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் 40 நாடுகளும், போட்டோனிக்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 51நாடுகளும், குவாண்ட்டம் கம்ப்யூட்டிங் துறையில் 4 நாடுகளும் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 
அமெரிக்காவிடமும், ஐரோப்பாவிடமும் போட்டிபோட்டு சீனா கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்பொழுது 400% முதலீட்டை அதிகரித்து வருடத்திற்கு 400 பில்லியன் டாலர் அளவில் ஆராய்ச்சிக்கான முதலீடாகச் செய்கிறது. யுனெஸ்கோவின் சர்வே படி, அமெரிக்கா 2.7% ஜிடிபி, சீனா 2.1% ஜிடிபி, ஐரோப்பிய யூனியன் 2% ஜிடிபி ஆராய்ச்சியில் முதலீடு செய்கின்றன. இதில் இந்தியா ஆராய்ச்சியை 0.8% ஜி.டி.பியில் இருந்து 0.69% ஜிடிபியாக குறைத்து விட்டு 0.1% உயர்த்துவோம் என்று சொல்கிறது. இது எப்படி மேற்கண்ட நாடுகளோடு போட்டி போட்டு வளர வழி வகுக்கும்?
வளர்ந்த நாடுகள் வளர்கின்ற நாடுகளுக்கு தனது ஆராய்ச்சியின் மூலமாக, தொழில்நுட்பத்தின் மூலமாக தீர்வுகளைக் கண்டு கொண்டு இருக்கிறது. இதில் இந்தியா எங்கு இருக்கிறது?
இப்படிப்பட்ட தொழில்நுட்பப் புரட்சியை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதற்கு அடிப்படை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அவற்றிலிருந்து தோன்றும் ஆராய்ச்சி, அந்த ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்படும் புது கண்டுபிடிப்புகள், அந்த கண்டுபிடிப்புகளை தொழில்நுட்ப கருவிகளாக, இயந்திரங்களாக மாற்றும் வர்த்தக கம்பெனிகள் உருவாக்கப்பட்டு இதை செயலாக்கத்திற்கு கொண்டுவரக்கூடிய பெரிய நிறுவனங்கள், இதற்கு உதவியாக அரசு உருவாக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கைகள், அந்தக் கொள்கையின் விளைவாக இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குத் தேவைப்படக்கூடிய முதலீடுகள் ஈர்க்கும் இணக்கமான சூழ்நிலைகள், போட்டி போடக்கூடிய வாய்ப்புகள், ஏற்றுமதிக்கான சலுகைகள், இதற்கு முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்கள், இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லக்கூடிய வர்த்தகர்கள், விற்பனையாளர்கள், இதன்மூலமாக பயன்படக்கூடிய மக்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் ஆழ்ந்த தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா இணைய முடியும். இல்லையென்றால் வெளிநாட்டினர் நம் பிரச்னைகளுக்கு தொழில்நுட்பரீதியாகக் கொடுக்கும் தீர்வுகளுக்கு நாம் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். 
மூன்று வயதிலிருந்து 13 வயது வரை மண்பாண்டம் செய்தல், எலக்ட்ரீசியன், பிட்டர், பிளம்பர், மெக்கானிக், தச்சு வேலை போன்ற வேலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசியக் கல்வி கொள்கை 2019 சொல்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இன்னும் 5 வருடத்தில் இந்த வேலைகளே இருக்காது என்ற நிலையில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது?
இந்தியா எந்த தொழிற் கல்வியை நமது மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால் இந்தியாவிற்கென்று
ஒரு தொலை நோக்குப் பார்வை இல்லை என்பது புரிகிறது. இந்தியாவிற்கு என்று எப்படிப்பட்ட மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாக வைத்து இந்த தேசிய கல்விக் கொள்கையில் தொழில் கல்விக்கான வரைவு உருவாக்கப்படவில்லை என்பது அப்பட்டமாக விளங்குகிறது.
குறைந்தபட்சம் அப்துல் கலாம் கொடுத்த "வளர்ந்த இந்தியா 2020' என்ற இலக்கை அடைவதற்கான அடுத்த பத்தாண்டுகளில் இப்படிப்பட்ட மனிதவளத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று சொல்லி இருந்தார்கள் என்று சொன்னால் அது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைக்கு ஏற்றவாறு மனித வளத்தை உருவாக்குவோம் என்று சொல்லி, கடந்த 15 ஆண்டுகளாக 150 மில்லியன் தனித்திறன் பயிற்சி பெற்றவர்களை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, இந்தியா உழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 
கடந்த 10 ஆண்டுகளாக வெற்றி பெறாத ஒரு தனித் திறன் பயிற்சி மூலமாக ஏற்படுத்தக்கூடிய மனிதவளத்தை வைத்துக்கொண்டு உலகம் உருவாக்கக் கூடிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மனிதவளத்தை எப்படி உருவாக்குவது? ஒட்டுமொத்த தேசிய திறன் வளர்ச்சி கழகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, இப்படி பல்வேறு திட்டங்களில் வெளிநாட்டு இறக்குமதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 
இந்த திட்டங்களை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்க வேண்டுமென்று சொன்னால் தேசிய கல்வி கொள்கையில் இடம் பெற்றிருக்கக்
கூடிய மூன்று வயதில் இருந்து 13 வயது வரை உருவாக்கப்பட்ட தேவையில்லாத தொழில் பயிற்சி முறை கைவிடப்பட வேண்டும். 
ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் பாடத்திட்டத்தின் படி மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை மாற்றியமைத்து இந்தியா எதிர் நோக்கி இருக்கக்கூடிய சவால்கள் ஆன தண்ணீர் பிரச்னை, விவசாய பிரச்னை, உணவு உற்பத்தி பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை, எரிசக்தி பிரச்னை, தட்பவெட்ப மாறுபாட்டை எதிர்கொள்ளக் கூடிய சவால்கள், மருத்துவம், கல்வி, உற்பத்தித்துறை, இண்டஸ்ட்ரி 2.0 முதல் 5.0 விற்கு தேவையான இயந்திரங்கள் என்று 7 ஆழ்ந்த தொழில் நுட்பங்களின் மூலமாக பல்வேறு பிரச்னைகளுக்குத் தேவையான தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்கவும், உருவாக்கவும், அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய மனித வளத்தையும், அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மனித வளத்தையும், சேவைத் துறையையும் கட்டமைக்க கூடிய தொழில் பயிற்சிகளை நாம் முற்றிலுமாக மாற்றியமைத்து உருவாக்கி கொடுப்பதாக தேசிய கல்விக் கொள்கை அமைய வேண்டும். 
எனவே இன்றைய தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் படிக்கும் அனைவரும் டிப்ளமோ முதல் இன்ஜினியரிங் வரை தொழிற்சாலைகளில் ஓராண்டு பயிற்சியை கட்டாயமாக்கி கடைசி ஆண்டில் தொழில்துறைக்கு தேவையான அத்துணை பயிற்சிகளையும் அளித்து, வேலை கேட்பவரைக் காட்டிலும், வேலை கொடுப்போரை உருவாக்க வேண்டும். இந்தியா 2030 -இல் எப்படி உலக நாடுகளோடு போட்டி போடும் வல்லமையோடு இருக்கவேண்டும் என்ற தொலைநோக்குப்பார்வையோடு மனித வளத்தை உருவாக்கக் கூடியதாக தேசிய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். செய்வார்களா?
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@gmail.com 
(தொடரும்)
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/ponraj.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/தொழில்கல்விக்கு-தொலைநோக்குப்-பார்வை-முக்கியம்-விஞ்ஞானி-வெ-பொன்ராஜ்அப்துல்கலாமின்-முன்னாள்-அறிவியல-3226921.html
3226917 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, September 3, 2019 10:42 AM +0530 முக நூலிலிருந்து....
* இடம், பொருள், ஏவலெல்லாம்
மலர்வதற்கில்லை.
கலிய மூர்த்தி

* எல்லாவற்றின் விலையை 
விசாரிக்கிற மனிதன், 
மதிப்பை என்றும் 
உணர்ந்ததே இல்லை. 
விலை மதிப்பற்றது... 
அம்மாவின் அன்பு. 
தஞ்சை தவசி

* நீங்கள் கொடுக்கும்போது, 
உங்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும்
என எதிர்பார்க்காதீர்கள். 
நீங்கள் ரோஜாவைக் 
கொடுக்கும்போது, 
அதன் மணம் உங்கள் 
கைகளில் ஒட்டியிருக்கும்.
- கார்லோஸ் சிலிம், 
மெக்சிகோ தொழிலதிபர்
சுந்தரபுத்தன்

* முதலில் வரத்தைக் கொடு; 
கிடைத்த பின் தவமிருக்கிறேன்.
ஆரூர் தமிழ்நாடன்
சுட்டுரையிலிருந்து...
நானும் கொஞ்சநாள்
சித்தார்த்தனாக வாழ்ந்துவிட்டுத்தான்...
புத்தனாக முடியும்.
கொஞ்சம் பொறுங்கள். 
நல்லநேரம் பார்த்துக் 
கொண்டிருக்கிறேன்!
முதியோன்

* கஷ்டம் என்பது இரவு மாதிரி...
கண்டிப்பா காலைல 
விடிஞ்சிரும்.
ஜனா

* வாழ்வில் வீசும்
கடுமையான புயலை எதிர்கொள்ள...
அமைதியான மனதே...
சக்தி வாய்ந்த உடைவாள்.
சைலேந்திர பாபு

* தலையை உயர்த்தாத வரை...
நீங்கள் வானவில்லைப்
பார்க்கப் போவது இல்லை.
சோலை ராஜா

வலைதளத்திலிருந்து...
சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான். அதற்குக் காரணம் நிறைய... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப் பையை பள்ளியில் வைத்துவிட்டு, கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம். மழை பெய்துவிட்டபின் லேசான தூறலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதைத் தவிர்க்கலாம். இப்படி நிறைய. 
அந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும், நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான். "எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா?' என்று பார்க்கத்தான். எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் விளைந்துவிடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழி வழி வந்த கணக்குகள் உண்டு. 
மழைநாளில் பள்ளியில் இருந்துவரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும். அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் (புத்தகப் பையும் இருக்காதல்லவா?) ஓடும் நீரின் குறுக்கே அணைகட்டி, செங்கல் கற்களை வைத்துப் பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். 
http://vayalaan.blogspot.com

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/im4.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/இணைய-வெளியினிலே-3226917.html
3226907 வார இதழ்கள் இளைஞர்மணி மாணவிகள் உருவாக்கிய செயலி! DIN DIN Tuesday, September 3, 2019 10:33 AM +0530 மக்களின் அன்றாடத் தேவைகளையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக வைத்து தினந்தோறும் ஏராளமான செயலிகள் (ஆப்கள்) உருவாக்கப்படுகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது மனிதர்களின் வாழ்வில் எந்த அளவுக்குச் செயலிகள் ஊடுருவி உள்ளன என்பதைக் காண்பிக்கிறது. 
இந்த போட்டிச் சூழலில் தலைநகர் தில்லி அருகே உள்ள நொய்டாவில் 12 - ஆம் வகுப்பு படிக்கும் அனன்யா குரோவர், வன்சிகா யாதவ், வசுதா சுதிந்தர், அனுஷ்கா ஷர்மா, ஆரிபா ஆகிய 5 மாணவிகள் உருவாக்கிய Maitri எனும் செயலி அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான உலகின் நவீன தொழில்நுட்பப் போட்டியில் பரிசு வென்றுள்ளது. அப்படி என்னதான் அந்தச் செயலியின் பயன்பாடு என்பதைப் பார்ப்போம். 
பாசத்துக்காக ஏங்கும் கைவிடப்பட்ட குழந்தைகளையும், தனிமையில் வாழ்வைக் கழிக்கும் முதியோர் இல்லங்களையும் சமூகத்துடன் இணைப்பதுதான் இந்தச் செயலியின் செயல்பாடு. இந்த செயலியில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும், முதியோர் இல்லங்களும் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது வரை இந்த செயலியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 13 முதியோர் இல்லங்களும், 7 ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் பதிவு செய்துள்ளன. இந்த செயலியில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் நிதி அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

"பகிர்ந்து கொண்டால்தான் சமூக நலம் ஏற்படும் என்ற மையப் பொருளின் மூலம் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளனர் என்பதை வலியுறுத்தவும் இந்தச் செயலியை நாங்கள் உருவாக்கினோம். தற்போது இது தில்லி, அதன் அண்டை மாநிலங்களான என்சிஆர் பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதனை நாடு முழுவதும் இணைக்கும் செயலியாக மாற்ற உள்ளோம்'' என்று பெருமையுடன் கூறுகிறார்கள் பள்ளி மாணவிகள்.
நிகழாண்டில் ரூ. 27 லட்சத்தை கூட்டு நிதி மூலம் பெற்று ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் பகிர்ந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். 
- அ.சர்ஃப்ராஸ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/im2.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/மாணவிகள்-உருவாக்கிய-செயலி-3226907.html
3226897 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! 62 - தா.நெடுஞ்செழியன்   Tuesday, September 3, 2019 10:30 AM +0530 இசை எல்லாருக்கும் பிடித்தமான விஷயமாகும். மக்கள் மனநிலை எவ்வாறு இருந்தாலும், தங்களுக்குப் பிடித்த இசையை அவர்கள் விரும்பி ரசித்துக் கேட்கும்போது தங்களுடைய கவலைகளையெல்லாம் மறந்து விடுகிறார்கள். வேறு ஓர் உலகத்துக்கு இசை அவர்களை அழைத்துச் செல்கிறது. இசை என்பது பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உருவாக்கப்படுவதுதான்.
2019  FORBES இதழில் வெளிவந்த கட்டுரையின்படி, உலக அளவில் இசை தொழில்துறையின் வருமானம், 19 பில்லியன் டாலர். இது 2018 ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். 
இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் போனோகிராபிக் இன்டஸ்ட்ரி (IFPI) என்ற அமைப்பு தற்போது வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, உலக அளவில் இசைத் தொழில்துறையின் வருமான 2018 -ஆம் ஆண்டு 9.7 சதவீதம் வளர்ந்துள்ளது. இணையத்தில் இசை கேட்கும் ரசிகர்களின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 32.9 சதவீதம் ஆகும். இணையத்தில் தரவிறக்கம் செய்து பாடல் கேட்பது 21. 2 சதவீதம் குறைந்துள்ளது. 
உலக அளவில் இசை தொழில்துறை சந்தையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜப்பானும், மூன்றாவது இடத்தில் பிரிட்டனும் உள்ளன. நான்காவது இடத்தில் ஜெர்மனி, ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளன. இசை தொழில்துறை சந்தையில் டிஜிட்டல் மியூசிக்கின் பங்கு 58.9 சதவீதமாகும். 255 மில்லியின் பேர் பணம் கொடுத்து இசையைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள். தற்போது சிடி, கேசட் வழியாக வரும் வருமானம் 10.1 சதவீதம் குறைந்து உள்ளது. ஆனால் டிஜிட்டல் மியூசிக் மூலம் வரும் வருமானம் 21.1 சதவீதம் உயர்ந்துள்ளது. 
 IFPI - இன் ஆண்டறிக்கையின்படி, இணையத்தின் வாயிலாக விளம்பரம், கேம்ஸ், டிவி ஆகியவற்றுக்கு இசை அமைத்துத் தருபவர்களின் (மியூசிக் சிங்கரனை சேஷன் செய்து தருபவர்களின்) வளர்ச்சியும் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆசியா மற்றும் ஆஸ்ட்ரேலிசியாவில் இருந்து இசையை ரசிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 11.7 சதவீதம் உயர்ந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் 16.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐரோப்பிய 0.1 சதவீதம், வட அமெரிக்கா 14 சதவீதம் உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் 17.9 சதவீதம் உயர்ந்துள்ளது. 
இந்த ஆண்டறிக்கையின் மூலம் இசைத் தொழில்துறை மேன்மேலும் வளர்ச்சி அடையும் நிலையிலேயே உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 
இத்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நம் எல்லாருக்கும் இசை என்றவுடன், இசை அமைப்பாளர், பாடகர் மட்டுமே நமது கவனத்தில் வருகிறார்கள். இதையும் தாண்டிஇந்தத்துறையில் எண்ணற்றவர்களின் உழைப்பும், தேவையும் இருக்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. 
இசைக்கான காப்புரிமை மற்றும் அது தொடர்பான சட்டரீதியான அணுகுமுறைகள் என்பவை, இசையை உருவாக்கியவர்கள்; இசையை உபயோகிப்பவர்கள்; இசையை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். இசையமைப்பாளரிடம் அனுமதி பெற்ற பிறகே பிறர் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். இசையின் வழியாக வரும் சட்டவிரோதமான நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பது, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவையும் இசைக்கான காப்புரிமையில் அடங்கும். இசை தொழில்துறை சார்ந்த படிப்பில் இந்த இசைக்கான காப்புரிமை பற்றிய படிப்பும் உள்ளது. 
அமெரிக்காவில் உள்ள பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக் - இல் வழங்கப்படும் இசைத்துறை இளங்கலைப் பட்டப்படிப்புகளில் சிலவற்றைப் பார்ப்போம். 
Music in Composition,  Music in Contemporary Writing and Production,  Music in Electronic Production and Design,  Music in Film Scoring,  Music in Jazz Composition, Music Business/ Management, Music Education, Music Production and Engineering, Music Therapy,  Music in Performance,  Music in Professional Music,  Music in Songwriting
இவை தவிர, Acoustics and Electronics என்ற படிப்பு உள்ளது. இசை அரங்குகளை எவ்வாறு உருவாக்குவது? என்பதைப் பற்றிய படிப்பு இது. பல்வேறு காலகட்டங்களில் இசை எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதைப் பற்றிப் படிக்கும் MUSIC History. டெலிவிஷன் மற்றும் நவீன ஊடகங்களில் இசையைப் பயன்படுத்துவதைப் பற்றிய படிப்பு, பழைய இசையை நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி பாதுகாப்பதைப் பற்றிய படிப்பு, பல இசைக்கருவிகளை வாசிப்பது பற்றிய படிப்பு போன்ற பல்வேறு இசை தொடர்பான படிப்புகளை பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக் வழங்கிவருகிறது. 
முதுகலைப் பட்டப்படிப்பில் Global Entertainment and Music Business, Music Production, Technology, and Innovation, Music in Scoring for Film,Television, and Video Games, Brass Performance,  Choral Conducting, Collaborative Piano, Composition, 
Classical Contemporary Music Performance, Harp Performance,  Marimba Performance,  Music Education: Non-Licensure Program, Music Education - Autism Concentration, Musical Theater, Orchestral Conducting,  Percussion Performance, Piano Performance, String Performance, Vocal Pedagogy, Voice Performance,  Opera Performance,  Woodwind Performance - Multiple,  Woodwind Performance -  Bassoon, Clarinet, Flute, Oboe and Saxophone உட்பட எண்ணற்ற பிரிவுகளில் இசை தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் Berklee Indian Ensemble என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் இசை, வட மற்றும் தென்னிந்திய இசைகள் (ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை) கொன்னக்கோல் இசை ஆகியவற்றை மேற்கத்திய இசையின் நுட்பங்களுடன் தெரிந்து கொள்கிறார்கள். தபலா, மிருதங்கம், சிதார், சாரங்கி உட்பட இந்தியாவில் உள்ள பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். உலகெங்கும் வழக்கத்தில் உள்ள ஜாஸ் மியூசிக் போன்றவற்றுடன் இந்திய இசைநுட்பங்களுக்குள்ள ஒற்றுமை, வேற்றுமை பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். நவீன இசைக்கருவிகள், எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்திய இசையை உருவாக்குவதற்கும் கற்றுக் கொள்கிறார்கள். இந்திய கலைகளின் அடிப்படையான சிந்தனைமுறை, அழகியலைத் தெரிந்து கொள்கிறார்கள். தென்னிந்திய இசையில் உள்ள ராக, தாள முறைகள் மேற்கு ஆப்ரிக்க, பிரேசில் நாட்டு இசை நுட்பங்களுடன் இயைந்திருப்பது பற்றியும் தெரிந்து கொள்கிறார்கள். 
இவ்வாறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் உள்ள நாட்டுப்புற, பழங்குடியின மக்களின் இசை உட்பட பல்வேறு இசை வகைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் நமதுநாட்டில் உள்ள சில இசைப் பல்கலைக்கழங்களில் நாட்டுப்புற, பழங்குடியன மக்களின் இசைகள் கற்றுத் தரப்படுவதில்லை. 
இந்தியா பல்வேறு கலாசாரங்களைக் கொண்டுள்ள நாடு. 50 முதல் 100 கி.மீ. இடைவெளியில் கூட வேறுபட்ட தனித்தன்மையுடைய இசையின் வடிவங்கள் உள்ளன. தமிழகத்திற்கும் இது பொருந்தும். திருமண விழா, கோயில் திருவிழா, மரணச் சடங்குகள் என மனித வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் இசை இடம் பெற்றுள்ளது. தனிமனிதனுடைய வாழ்க்கையில் இசை பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. எனவே இந்தியாவில் உள்ள இசைப் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான இசைகளை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதுடன், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். 
நமது நாட்டில் எண்ணற்ற இசைக்கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுடைய திறமைகளை ரேடியோ, தொலைக்காட்சி எல்லைகளுக்குள் சுருக்கிக் கொள்ளாமல், உலக அளவில் அவற்றை எடுத்துச் செல்லக் கூடிய சூழல் தற்போது உள்ளது. 

(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
 www.indiacollegefinder.org


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/03/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்--62---தாநெடுஞ்செழியன்-3226897.html
3222581 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, August 27, 2019 07:25 PM +0530
முக நூலிலிருந்து....


செயல்களை வைத்து  மற்றவர்களை மதிப்பிடுகிறோம். 
ஆனால்,  மற்றவர்கள் நம் திறன்களை வைத்து நம்மை மதிப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம்.

- போர்ஹே

முருக தீட்சண்யா

 

நாம் கொடுத்ததை நிச்சயம் நமக்கு இயற்கை திருப்பிக் கொடுத்துவிடும்.
கேரள மழை வெள்ளத்தில் ஒதுங்கிய  நெகிழி பாட்டில்கள். 

கவிகவிஉனக்கான என் சுதந்திரம் என்பது, என் மூக்கு நுனி வரைதான்...
மூக்கைத் தொடுவதல்ல.

கணேச குமாரன் 

 

காற்றில் சாய்ந்து கிடக்கும் மரம் குறித்து யாரும் கவலைப் படவில்லை.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதைப் பற்றியே எல்லாரும்  புலம்பிக் கொண்டிருந்தனர்!

நேசமிகு ராஜகுமாரன்

 

சுட்டுரையிலிருந்து...


கேட்கப்படாத  கேள்விக்கு கிடைக்காத பதில் தேடி...
களைப்பதே  இவ்வாழ்வு.

தற்குறி


சிறகு இருந்தால் பறந்து வாருங்கள்.
இல்லையென்றால்...
உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள்.

வெயில்

 

தினமும் 10 பேங்க்ல இருந்து மெசேஜ் வருது...
அக்கவுண்ட்  ஓப்பன் பண்ணுங்க "0' பேலன்ஸ்லன்னு...
ஏற்கெனவே அக்கவுண்ட் இருக்கிற பேங்க்லியே என் பேலன்ஸ் "0' தான்டா சொன்னா...
புரிஞ்சுக்கோங்கடா. 

எமகாதகன்

 

உங்கள் குழந்தை ஏதாவது தவறாகப்  புரிந்து கொண்டால்...
அவர்களைத் திருத்த முயற்சியுங்கள்! 
உங்கள் மனைவி ஏதாவது தவறாகப் புரிந்து கொண்டால், 
நீங்கள் உங்களை மாற்றி கொள்ளுங்கள். 

கோழியின் கிறுக்கல்

 

வலைதளத்திலிருந்து...

நான் பாட்டுக்கு "சிவனே' என்று விரலுக்கு வந்ததைக் கிறுக்கிக் கொண்டு திரிந்திருந்தேன். "கதை எழுதுகிறேன் பேர்வழி' என்று ஆரம்பித்து, நான்கைந்து கதைகளையும் எழுதித் தொலைக்க, ஆளாளுக்கு என்னைப் "படைப்பாளி' ரேஞ்சுக்கு ஏற்றி வைக்க, என்பாடு திண்டாட்டம்!

எதை எழுதத் தொடங்கினாலும்,  "இது நம்ம ரேஞ்சுக்கு(?!) சரியா வருமா?' என்றெல்லாம் யோசிக்கத் தொடங்க, அங்கேதான் சனியன் சம்மணம் போட்டு உட்காரத் தொடங்கினான். கொஞ்சநாள் இடைவேளைக்கு அப்புறம் ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால்... ம்கூம்... மலச்சிக்கல் வந்தவன் போலாகிவிட்டேன். 

தொடர்ச்சியான வாசிப்பு என்பது தரமான எழுத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்தநாட்களில் தெளிவாகவே புரிந்தது. இருப்பதை வைத்துக் கொஞ்சநாள் ஜல்லியடிக்கலாம்... நீடித்திருப்பது கடும் உழைப்பினைக் கோரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.  

என்னதான் எழுதலாம் என்று குழம்பிக்கொண்டே இருந்தேன். பேசாமல் ஏதாவது "அநியாயத்தைக்' கண்டு  பொங்கலாமா? என்றால் வெறுமனே இண்டர்நெட்டில் உட்கார்ந்து "பொங்க' கூச்சமாய் இருக்கிறது. கவிதை கிவிதை...? மூச்! நினைத்தாலே கைநடுங்க ஆரம்பித்து விடுகின்றது. ஆபத்துக்குப் பாவமில்லை... சுயசரிதையைக் கொஞ்சம் உல்டா செய்து கதை எழுதலாம் என்று நினைத்தால் கனவிலும் வந்து கையில் குச்சியோடு மிரட்டுகிறார் கேஆர்பி.செந்தில். என்ன கொடுமையடா இது? ஒரு தமிழ்ப் பதிவனுக்கு வந்த சோதனை? 

என்ன ஆனாலும் சரி... இன்று முடிந்தவரை முக்கிப் பார்த்துவிடுவது என்று தீர்மானம்! ஆழிசூழ் உலகெலாம் நம்முடைய தமிழை மாந்தக் காத்திருக்க(?!), எழுத்து வறண்டு போக நானென்ன ராமநாதபுர மாவட்ட ஏரிகுளமா? என்ற ரோஷம் ஊற்றெடுக்க,  ஒருவழியாய் உட்கார்ந்தாயிற்று!

http://vinthaimanithan.blogspot.com

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im10.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/இணைய-வெளியினிலே-3222581.html
3222580 வார இதழ்கள் இளைஞர்மணி செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! - அ.சர்ஃப்ராஸ் DIN Tuesday, August 27, 2019 07:19 PM +0530 எரிபொருள் மூலம் வாகனங்கள் இயக்கப்பட்டன என்பது கடந்த கால வரலாறாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.  எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை மாற்ற உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.  

பைக்குகள், கார்கள், பேருந்துகள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் மின் பேட்டரிகளால் நீண்ட தூரம் இயங்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதில் நிபுணர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த "நயன்பாட்' நிறுவனம், சிறுகுழந்தைகள் விளையாடும் மூன்று சக்கர ஸ்கூட்டரில் பேட்டரி பொருத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கி உள்ளது. இதுபோன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் "ஷேர்' செய்யும் முறை (அதாவது ஓர் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்து பயன்படுத்திவிட்டு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் விட்டுவிட்டுச் செல்வது) அமெரிக்காவில் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் சார்ஜ் செய்வதுதான் பெரும் சவாலாக உள்ளது. இதற்கும் "நயன்பாட்' நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சார்ஜ் தீர்ந்து விட்டால் அவை தானாகவே சார்ஜிங் மையங்களுக்கும் செல்லும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியுடன் கணினியில் இருந்தபடியே இதனை இயக்கலாம்.

அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2020 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வரும் என்று நயன்பாட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im11.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/செயற்கை-நுண்ணறிவு-எலக்ட்ரிக்-ஸ்கூட்டர்-3222580.html
3222579 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்!   - தா.நெடுஞ்செழியன் DIN Tuesday, August 27, 2019 07:17 PM +0530
வேர்ல்டு கோல்டு கவுன்சிலுடன் (WCC)  இணைந்து  ஐஐஎம் - அகமதாபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையமான  இன்டியா கோல்ட் பாலிஸி சென்டர் (IGPC) தங்கம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.   

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட  வேர்ல்டு கோல்டு கவுன்சில், உலகத் தங்கச் சந்தையை ஆராய்ந்து,  உலக அளவில்  தங்கத்தின் தேவையைக் கண்டறிந்து,  அந்தத் தேவைக்கேற்ற அளவில் உற்பத்தி செய்யத் தேவையான தகவல்களை அளிக்கிறது. அது தனது ஆராய்ச்சிக்கான களமாக இந்தியா,  சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்டிருக்கிறது. 

இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்தில் இயங்கி வரும்  இண்டியா கோல்ட் பாலிசி சென்டர் அதோடு இணைந்து  உயரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வோராண்டும் இந்தியாவுக்கான கோல்ட் பாலிசி ரிபோர்ட்டை அளிக்கிறது. 

இந்தியப் பொருளாதாரம்,  ஜெம் மற்றும் ஜுவல்லரி தொழில்  கட்டமைப்பில் தங்கம் வகிக்கும் பாத்திரத்தை அது ஆராய்கிறது.  அதேபோன்று சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் தங்கம் வகிக்கும் பாத்திரத்தை ஆய்வு செய்கிறது. 

வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் ஆராய்ச்சி எல்லைக்குட்பட்ட பல நாடுகளில், ஒவ்வொரு பகுதியிலும் தங்கத்தைப் பயன்படுத்தும் மக்களின் மனோபாவங்களும், பயன்படுத்தும் முறைகளும் மாறுபடுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்ச்சி  செய்வதோடு மட்டுமல்லாமல், தங்கத்தின் உற்பத்தி, விநியோகம் சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பற்றியும் ஆராய்கிறது. குறிப்பாக இந்திய தங்கத் தொழில்துறையின் உள்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்து,  அதைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

இதுபோன்று, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்தில் "சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட்  ஹெல்த் சர்வீஸஸ் (CMHS)' என்பது  ஜூன் 2004 -ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்டது.   இது 2004 - இல் உருவாக்கப்பட்டாலும், 1975- இல் இருந்தே  மருத்துவ சேவை தொடர்பான ஆராய்ச்சிகளை குறிப்பாக,  ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தொடர்பாகவும், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் தொடர்பாகவும்  ஐஐஎம் - அகமதாபாத்  செய்து வருகிறது. 

சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட்  ஹெல்த் சர்வீஸஸ் இந்தியாவில் எவ்வாறு மருத்துவ சேவைகளை மக்களிடம்   கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முக்கியமான திட்டமிடுதலைச்  செய்கிறது.  அதற்கு எவ்வாறு பாலிசிகளை வரையறுப்பது,  மக்களிடையே ஹெல்த் சர்வீஸசைக் கொண்டு செல்வது எப்படி என்பதற்கு இக்கல்வி நிறுவனம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக நேஷனல் புரோகிராம் ஆன் கேன்சர், நேஷனல் புரோகிராம் ஆன் ஹெச்ஐவி- எய்ட்ஸ் போன்றவற்றை இந்தியா முழுவதும் பரவலாக   எடுத்துச் சென்றது,  பப்ளிக் ஹெல்த்  சிஸ்டம் எவ்வாறு இருக்க வேண்டும், ஹெல்த் செக்டாரில் செய்யக் கூடிய ரிஃபார்ம்ஸ் எவ்வாறு அமைய வேண்டும்,   தகவல் தொழில்நுட் ப வளர்ச்சிகளை  ஹெல்த் செக்டாரில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது  இதன் சாதனைகளாகும்.  

உதாரணமாக காச நோய் சார்ந்த  தகவல்களை இந்தியா முழுவதும்  திரட்டி , அவற்றை ஒருங்கிணைத்து, ஆராய்ந்து அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவில் காசநோய்  எந்தெந்த இடங்களில் அதிகமாக வருகிறது? எவ்வாறு வருகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.   இதனால்  எந்தவகையான காசநோய், எந்தெந்தப் பகுதிகளில் ஏற்படுகிறது,  அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, காசநோய்  மேலும் பரவாமலிருக்கத்  திட்டமிட்டுச் செயலாற்ற முடிந்தது.  அதற்கு   இவர்களின் ஆராய்ச்சியும், ஆவணப்படுத்துதலும்  மிகவும் உதவியாக இருந்தன.  

இவை தவிர,  இந்த சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட்  ஹெல்த் சர்வீஸஸ், மாநிலம் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகள், தன்னார்வக் குழுக்களுடன் எவ்வாறு இணைந்து  நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மையம் ஒன்றை உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் திட்டமிடல்களையும் முன் வைத்துள்ளது.    

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களைப் பாதிக்கும் நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிந்து   நோய்  வராமல் தடுப்பது  மற்றும் நோயிலிருந்து மீள்வதற்கான செயல்முறைகளைப் பற்றிய  தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பது, இந்தத் தகவல்களை உலகில் உள்ள  பிற ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியப்படுத்துவது என இந்த மையம் சிறப்பாகச் செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. 

இவை தவிர,  ஐஐஎம் - அகமதாபாத்தில்  விவசாயம்,  சோசியல் பாலிஸி, இன்ஃப்ராஸ்டரக்சர், கவர்னென்ஸ் அண்ட் ரெகுலேஷன், எனர்ஜி என்விரான்மென்ட் போன்ற 5 துறைகளில் ஆராய்ச்சியும், உயர் கல்வியும் அளிக்கப்படுகிறது. இதன் மாணவர்கள்  எண்ணற்ற  பிசினஸ் கேஸ் ஸ்டடிகளைச் செய்திருக்கிறார்கள்.  குறிப்பாக வங்கிகள் நஷ்டமடைவது பற்றி, கல்விக்கடன் பற்றி, பல தொழில், வணிக நடைமுறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 

இங்கு இரண்டாண்டுகள் Post Graduate Programme in Management,  Post Graduate Programme in Food and Agri-Business Management,  One-Year Full Time Post Graduate Programme in Management, Two-Year Post Graduate Programme in Food and Agri-Business Management (MBA-FABM),  One-Year Full Time Post Graduate Programme in Management for Executives (MBA-PGPX), Faculty Development Programme,  ePost Graduate Programme, Ph.D. Programme in Management, Executive Education Programmes (EEP) ஆகிய உயர்படிப்புகள் வழங்கப்படுகின்றன.  

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு   இளநிலைப் பட்டப்படிப்பிலும் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  காமன் அட்மிஷன் டெஸ்ட் (CAT) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  எழுத்துத் திறன் தேர்வு,  குரூப் டிஸ்கஷன், தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின்மூலம்  மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  

இங்கு கேட் 2019 மூன்று  பிரிவுகளில் -  வெர்பல் அண்ட்  ரீடிங் காம்ப்பிரிகென்சன்,    டேடா இண்டர்பிரட்டேஷன் அண்ட் லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட்டிவ்  எபிலிட்டி   என்ற மூன்று பிரிவுகளில் -  மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.  இந்தத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களில் 0.1 சதவீதம் பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.    10 -ஆம் வகுப்பில் , 12- ஆம் வகுப்பில், இளங்கலைப் பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள்,  பணி அனுபவம் ஆகியவையும்  இந்த உயர்படிப்பில் சேர்வதற்கான  தகுதிகளாக உள்ளன. 

இந்தத் தேர்வு முடிந்து செலக்ட் செய்யப்பட்ட மாணவர்கள்,  இங்கு பயின்று பட்டம் பெற்ற பிறகு,  உலகின் தலைசிறந்த எண்ணற்ற கம்பெனிகளில் மிக அதிக சம்பளத்தில்  உயர் மேலாண்மைப் பணிகளில்  சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  இதுவரை 10,320 மாணவர்கள் அவ்வாறு  பணியாற்றி வருகிறார்கள். 

ரிசர்வ் பேங்க் கவர்னராக பணியாற்றிய ரகுராம் ராஜன் 1978 -ஆம் ஆண்டு  இங்கு பயின்றவர். யுனிவர்சிட்டி ஆஃப் மிக்சிகனில் பேராசிரியராகப் பணியாற்றிய  சி.கே.பிரஹலாத்  1966- இல் இங்கு பயின்றார்.  விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாயின் மகளான மல்லிகா சாராபாய் பிரபல நடனக் கலைஞர்.  இவர் 1974 -ஆம் ஆண்டு இங்கு பயின்றார். 

ஜி.சுப்பிரமணியம் நியூயார்க்கில் உள்ள ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.  அவர் இங்கு பயின்றார்.  இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம், நிறைய குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதிய சேத்தன் பகத், கிரிக்கெட் விளையாட்டு வீரர்   ஹர்ஷா போக்லே ஆகியோர்    இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர்கள்.

ஒருவர்  அதிகச் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினால்,   அவர்   ஐஐஎம் - அகமதாபாத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.   ஏனெனில்  இங்கு சராசரி குறைந்தபட்ச சம்பளமே  ரூ.30 லட்சம் ஆகும்.  இங்கு உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் அதைப் பற்றி வெளியே கூறுவதில்லை.  441 பேர் வேலை செய்கின்றனர். 

இங்கு சேர்ந்து பயில்வதற்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. ஓராண்டு முழுநேரப் பட்டப்படிப்பான  Post Graduate Programme in Management for Executives (MBA-PGPX) படிப்பிற்கு கட்டணம் ரூ.25 லட்சம்.  திறமை மிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.  அது குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் ஆகும். 

இங்கு பயிலும் மாணவர்களில் 150 பேர் ஒவ்வோராண்டும் வெளிநாடுகளில் உள்ள உயர்ந்த கல்விநிறுவனங்களில் பயில்வதற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.  அதேபோன்று,  90 வெளிநாட்டு மாணவர்கள் ஐஐஎம்- அகமதாபாத்தில் பயில அனுமதிக்கப்படுவார்கள். 

 (தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im9.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/சரியான-பார்வை--சரியான-வழி-சரியான-செயல்-3222579.html
3222578 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை... இரா.வெங்கடேசன் DIN Tuesday, August 27, 2019 06:43 PM +0530
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

பணி: Professors
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,68,900 -ரூ.2,20,400
வயதுவரம்பு: 30.08.2019 தேதியின்படி 58 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Assistant Professors
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - ரூ.1,67,400
வயது வரம்பு: 30.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஜிப்மர் விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director, JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, ஜிப்மர் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.  
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி வரைவோலை மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 
முகவரி:The Deputy Director(Admin), Admin-I Recruitment Cell, Second Floor, Administrative Block, JIPMER. Puducherry - 605 006. E}Mail: facultyrect19@gmail.com 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

ttp://www.jipmer.edu.in/sites/default/files/Website%20advertisement%20details.pdf  என்ற அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.08.2019

 

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை

பணி:    Officer (Finance)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது வரம்பு:  01.06.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தகுதி: பி.காம் முடித்து சிஏ இண்டர்மீடியட் தேர்ச்சி, நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி: Dy. General Manager (HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room No.206, Administrative Building, Chembur, Mumbai - 400074. 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.rcfltd.com/webdocs/849/2019/08/Officer_Finance_Detailed_Advt_-Final.pdf   என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.08.2019
அஞ்சலில் விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 03.09.2019


சென்னை நகராட்சித் துறையில் சிறப்பு அதிகாரி வேலை

பணி: Geographical Information System Specialist

தகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், Geography பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனிபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Urban Development Specialist
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.60,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை:  https://www.tnurbantree.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 
முகவரி: Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai - 600 028

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.08.2019

 

இசிஐஎல் நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: புதுதில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Officer on contract (Cat-1,ECE) - 13

பணி: Technical Officer on contract (Cat-2,EEE) - 02
பணி: Technical Officer on contract (Cat-3,CSE) - 04

பணி: Technical Officer on contract (Cat-4,Mechanical) - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.07.2019 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000  
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi -110 028, Ph.No.011-25774645/011-25777676

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.ecil.co.in/jobs/ADVT_30_2019.
pdf?fbclid=IwAR35cKEf5Yt2pLlwe_Oyh98CJFrjmrQWrXw3ytEiSqYI-TBanJLqCjxcDMI என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.08.2019


ஆந்திர வங்கியில் வேலை

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Sub Staff

காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9560 - 18545 
பணி அனுபவம்:  3 முதல் 9 ஆண்டு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.andhrabank.in/download/Sub-Staff-Recruitment-General-Guidelines.pdf   என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2019

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im8.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/வேலை-வேலை-வேலை-3222578.html
3222577 வார இதழ்கள் இளைஞர்மணி கற்றுக் கொண்டே இருக்கலாம்! -  மு. சுப்பிரமணி   DIN Tuesday, August 27, 2019 06:31 PM +0530 பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று விட்டாலே, முழுமையான கல்வியைப் பெற்று விட்டதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது உண்மையில்லை. தான் கற்ற கல்வியுடன் தொடர்புடையவற்றைத் தொடர்ந்து தேடித் தெரிந்து கொள்வது கூடுதல் தகுதியைத் தரும். மேலும், நம் தேவைக்கேற்ப புதிய நுட்பங்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்தி நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், நம் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் எந்த உயர்வையும் பெற முடியாமலே  போய்விடும். வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருப்பதற்கு ஓர் இணையதளம் உதவுகிறது.  

இந்த இணையதளத்தில் Science, Technology, and Math, HUMANITIES, LANGUAGES,  RESOURCES எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.  

அறிவியல், தொழில்நுட்பம், கணிதம்   எனும் தலைப்பின் கீழ் அறிவியல், கணிதம், சமூக அறிவியல்கள், கணினி அறிவியல், விலங்குகள் மற்றும் இயற்கை எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.  

மானுடவியல்  எனும் தலைப்பின் கீழ் வரலாறு மற்றும் பண்பாடு, விஷுவல் ஆர்ட்ஸ், இலக்கியம், ஆங்கிலம், புவியியல், மெய்யியல்,  Issues எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இதோபோன்று, மொழிகள், ஆதார வளங்கள் தலைப்புகளின் கீழும் பல துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.  

ஒவ்வொரு துணைத் தலைப்புகளின் கீழ் துணைத் தலைப்புடன் தொடர்புடைய உள் தலைப்புகளும், ஒவ்வொரு உள் தலைப்புகளின் கீழும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் படத்துடன் கூடிய தகவல் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குறிப்புகளில் சொடுக்கினால், அது குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. 

முதன்மைத் தலைப்புகளுக்கேற்ப துணைத் தலைப்புகளில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் அடங்கியிருக்கின்றன.  உதாரணமாக மொழிகள் என்ற முதன்மைத்  தலைப்பைச் சொடுக்கினால்,  அதில் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச், இத்தாலி, ஜப்பானிய மொழி,  மாண்டரின், ரஷியன்ஆகிய துணைத் தலைப்புகள் உள்ளன. இந்த மொழிகளில் ஒருவர் எதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறாரோ அந்த மொழியைச் சொடுக்கினால், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள நிறைய கட்டுரைகள்,  இலக்கணங்கள்,  உரையாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.  வீடியோ  வகுப்புகளும் உள்ளன.  ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள்,  ஏற்கெனவே தெரிந்த மொழியைக் கூடுதலாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் மொழி என்ற முதன்மைத் தலைப்பில் இடம் பெற்றுள்ள செய்திகள் உள்ளன.  

இந்தத் தளம் பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பல்வேறு அரிய செய்திகளை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் https://www.thoughtco.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im6.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/கற்றுக்-கொண்டே-இருக்கலாம்-3222577.html
3222575 வார இதழ்கள் இளைஞர்மணி விரட்டுவோம்... விரக்தியை!  -க. நந்தினி ரவிச்சந்திரன் Tuesday, August 27, 2019 06:28 PM +0530
காலச்சக்கரம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நாமும் அதனோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஓட்டத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நமக்கு ஒருவித விரக்தி ஏற்படுகிறது. என்னடா வாழ்க்கை இது? என்று புலம்பிக் கொண்டிருப்போம்.  

ஏன் இந்த விரக்தி?

யார் ஒருவர் இரவு பகல் பாராது தனது பணி சிறக்க பணியாற்றுகிறாரோ அவரே இத்தகைய விரக்திக்கு பெரும்பாலும் ஆளாகிறார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் சில இடங்களில் வீணாகும்போதும், அவர்களுக்கான சரியான அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்காதபோதும் விரக்தி ஏற்படுகிறது.

இது தவிர, விருப்பமில்லாத துறையில் பணியாற்றுவது, பணியிடச் சூழல் ஒத்து வராதது, ஓய்வின்றிப் பணியாற்றுவது, பணியில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, பணி வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது என பல்வேறு காரணங்களால் ஒருவர் விரக்தியடைகிறார். 

இந்த விரக்தியில் இருந்து மீள்வது எவ்வாறு?

இலக்கை நிர்ணயிப்பது:

இலக்கற்று நாம் பயணிக்கும்போதே நமக்கு ஒருவித விரக்தி ஏற்படுகிறது. நாம் எதை நோக்கி பயணிக்கிறோம், நம் வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த இலக்கை நோக்கி பயணிக்கும்போது, நாம் ஆர்வத்துடன் செயல்படுவோம். நாம் பயணிக்கும் பாதையில் பல்வேறு தடைகள் வந்தாலும்,  விரக்தி ஏற்படாது. 

வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பது:

இப்போதிருக்கும் துறை, நிறுவனம்  பிடிக்கவில்லை என்றால், வேறு நிறுவனத்துக்கு மாறிச் செல்லலாம். துறை பிடிக்கவில்லை என்றால், நமக்கு எது மனநிம்மதி அளிக்குமோ, அதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கையின் பாதி நேரத்தை நாம் பணியிடத்திலேயே செலவளிக்கிறோம். அந்த பணி நமக்கு பிடித்ததாகவும், திருப்தியளிப்பதாகவும் இருக்க வேண்டியது அவசியம். 

பணியிடத்தில் சுமூகநிலையை உருவாக்குவது:

சிலர் அலுவலகத்தில் நண்பர்கள் அமையவில்லை. என்னிடம் யாரும் சரியாகப் பேசுவதில்லை என்று அற்ப காரணங்களைக் கூறிக் கொண்டு தேவையின்றி விரக்தியில் இருப்பர்.  நாம் அலுவலகம் வருவது பணியாற்றுவதற்காகவே தவிர நண்பர்களைத் தேடவோ, நேரம் செலவழிக்கவோ அல்ல. அதனால், சக பணியாளர் எத்தகைய நபராக இருந்தாலும், நாம் செய்யும் புன்முறுவல், அவரது முகத்திலும் பிரதிபலிக்கும். அவர்களுடன் நாம் இன்முகத்துடன் பழகும்போது, நமக்கு எந்தச் சூழலும் சரியாகிவிடும். 

கடின உழைப்பு மட்டும் போதாது:

பணி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது. சாதுர்யத்துடன் கூடிய புத்திசாலித்தனமே நம்மை உயரக் கொண்டு செல்லும். அதனால் கடினமாக உழைத்தோம்; ஆனாலும் பலனில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதை விடுத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதை யோசித்து செயல்படுத்த வேண்டும். 

அனுபவசாலிகளிடம் தெரிந்து கொள்ளுங்கள்:

பணியில் ஓர் கட்டத்தில் விரக்தி ஏற்படும்போது, எது செய்தாலும் பணியை சிறப்பாகச் செயலாற்ற முடியாதபோது, நம்மை விட வயதில் மூத்த அனுபவமிக்க பணியாளர்களிடம் அதுகுறித்து அறிவுரை கோரலாம். ஏனெனில் அவர்களும் நம் சூழ்நிலையைக் கடந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.   

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im7.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/விரட்டுவோம்-விரக்தியை-3222575.html
3222573 வார இதழ்கள் இளைஞர்மணி பொறுமையின்மை! DIN DIN Tuesday, August 27, 2019 06:21 PM +0530
முன்பெல்லாம் குழந்தைகளின் பொழுதுபோக்குகளாக நாய் வளர்த்தல், மீன் வளர்த்தல், அஞ்சல்தலை, நாணயம் சேகரித்தல்,  ஓவியம் வரைதல் போன்றவையே பெரும்பாலும் அமையும்.  ஆனால் காலப்போக்கில் அத்தகைய பொழுதுபோக்குகள் குறைந்து வருவதே உண்மை.  பெரும்பாலான  குழந்தைகள்

பொழுதை தொலைக்காட்சியிலும் கைபேசியிலும் கணினியிலும் தொலைக்கின்றனர்.  ""ஏன் எப்போதும் செல்போனை வைத்தே விளையாடிக் கொண்டு இருக்கிறாய். மீன் வளர்க்கலாம் இல்லையா?'' என்றேன்.  ""வளர்த்து?'' என்று உடனே பதில்  கேள்வி கேட்டது அந்த குழந்தை.

""தினமும் அதற்கு உணவு வைக்கலாம். வாரந்தோறும் மீன் தொட்டியைச் சுத்தப்படுத்தலாம்.  பின் ஒரு சில மீன்களுக்குள் சண்டை வரும். அவற்றை வேறு தொட்டியில் விடலாம்.  சில மீன் குட்டி போடும். அவற்றைத் தனியே எடுத்து வளர்க்கலாம்.  அது ஒரு தனி சுகம்''  என்றேன்.

"" இதெல்லாம் நடக்க எவ்வளவு நாள் ஆகும்?'' என்று கேட்டது அந்த குழந்தை. ""இதெல்லாம் நடக்க சுமார் ஓர் ஆண்டு ஆகும்''  என்றேன். "" இதையே தான் நான் ஒரு மணி நேரத்தில் VIRTUAL  AQUARIUM எனது  வீடியோ கேமில் முடித்துவிடுவேன்'' என்று  தனது வீடியோ கேமைக் காட்டியது குழந்தை. ஒருபக்கம் அறிவியலில் முன்னேற்றத்தையும், குழந்தைகள் அதனை எளிதில் கற்றுவிடுகின்றன என்று தோன்றினாலும், இன்னொருபுறம் பார்க்கையில் பொறுமையின்மை என்பது குழந்தைப் பருவம் முதலேயே இது போன்ற பழக்கங்கள், பொழுதுபோக்குகளால் தொடங்குகின்றதோ? எனத் தோன்றுகிறது.

க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். எழுதிய "அதுவும் இதுவும்' என்ற நூலிலிருந்து...

]]>
https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/பொறுமையின்மை-3222573.html
3222572 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் DIN DIN Tuesday, August 27, 2019 06:20 PM +0530
புரொபஸர், கணேஷ்  மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களுடன் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள்.

ரொபஸரிடம் என்னவெல்லாம் உளவியல் நோய்க்குறிகள் தென்படுகின்றன என சேஷாச்சலம் விசாரிக்க, அவர் திடீரென தேசியவாதி ஆகி விட்டதாக கணேஷ் சொல்கிறான். அது குறித்த உரையாடலின் போது சேஷாச்சலம் chauvinism பற்றி சொல்கிறார். அதன் பொருள் என்ன? chauvinism } Øm male chauvinism--மும் ஒன்றா என நடாஷா கேட்கிறாள். சேஷாச்சலம் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.

சேஷாச்சலம்: இது ஒரு நல்ல கேள்வி. Chauvinism என்றால் மிகையான தேசபக்தி அல்லது தேசியவாதம் மற்றும் ஒரு தேசத்தின் இனக்குழுவின் மேன்மையை உறுதியாக நம்பி பிற சமூகங்களை, இனங்களை மட்டமாகக் கருதுவது. Linguistic chauvinism என்பது  இத்தகைய மிகையான நம்பிக்கைகளை மொழியின் பால் உருவாக்குவது. உதாரணமாய், தமிழ் மட்டுமே உயர்வான மொழி, தமிழரல்லாதோர் எல்லாரும் கீழ்மக்கள் என நினைப்பது.  

கணேஷ்: அதென்ன சவ்வனி...?
சேஷாச்சலம்: சவ்வனிசம். பெண்களை தாழ்வாகக் கருதி ஒடுக்கும் மனப்பான்மையை male chauvinism என்கிறோம். 
நடாஷா: டாக்டர், அப்படி என்றால் chauvinistsகள் என்றாலே ஆணாதிக்கவாதிகள் தானா? 
சேஷாச்சலம்: அப்படி ஒரேயடியாக சொல்ல முடியாது என்றாலும், பெண்களைப் பயன்பாட்டுப் பொருளாக, உடைமையாகக் கருதும் எண்ணம் மிகையான தேசபக்தியின் அடிநாதமாக உள்ளது தான். உதாரணமாக தேசத்தை, மண்ணை, பண்பாட்டை ஒரு பெண்ணாக உருவகிப்பது, இதன் மூலம் பெண்களை மகிமைப்படுத்துவதாய் கற்பிதம் பண்ணிக் கொள்வது? 

கணேஷ்: பின்னே இல்லையா? பாரதமாதா எனச் சொல்லும் போது பெண்சமூகத்தையே சிகரத்தின் மீது தூக்கி வைக்கிறோம் இல்லையா? 
சேஷாச்சலம்: ஆனால் அதில் ஆபத்தும் உள்ளது. ஒரு தேசத்தை, அதன் நிலத்தை உரிமை கொண்டாட மக்களுக்கு அதிகாரம் உண்டு. அதே போல பெண்களையும் ஆண்கள் உரிமை கொண்டாடலாம் என நம்பத் தொடங்கினார்கள். குடும்பம் என்றால் சமூகத்தின் அடிப்படைக் கண்ணி என நினைத்த இவர்கள் பெண்களை குடும்பத்தை உருவாக்கி பாதுகாக்கும் அடிமைகளாகக் கண்டனர்.  

கணேஷ்: ஆண்கள் என்றாலே கெட்டவர்கள், பலவீனர்கள், அவர்களை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என நினைக்கும் பெண்களும் இருக்கிறார்களே? 
சேஷாச்சலம்: ஆம். இருக்கிறார்கள். இவர்களை female chauvenists என அழைக்கிறோம். 
புரொபஸர்: உண்மை. இப்போதெல்லாம் ஆண்களின் நிலைமை பரிதாபம். எங்கு போனாலும் அடி தான். அவமானம் தான். ஆண்கள் அன்பு காட்டினால் அது ஆபாசம்... ஆண்கள்
கண்டிப்பு காட்டினால் அது ஆதிக்க சுபாவம்... male chauvinism. ஆனால் பெண்கள் இப்படி செய்தால் அது பெண்ணுரிமை. Gyrocentric women are all over the place.

நடாஷா (கோபமாக): I object!  

புரொபஸர்: So be it! 

கணேஷ்: அதென்ன சார் கைரோசென்டிரிக்? 
புரொபஸர்: பெண்கள் அடிப்படையில் நல்லவர்கள். நற்பண்புகளின் உறைவிடம். ஆனால் ஆண்கள் அனைவரும் காமக்கொடூரர்கள், வன்முறையாளர்கள், பண்பற்றவர்கள் என நம்புவதே gyrocentrism.  நம்மூரில் சமீபகாலம் வரை ஒரு சட்டம் நிலவியது - ஒரு பெண் வரதட்சணை புகார் அளித்தால் விசாரணையே இன்றி கணவன், அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி அனைவரையும் கூண்டாக கைது பண்ணி உள்ளே தள்ளி விடுவார்கள். தற்போது அச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது. Gyrocentrism. நமது சட்டத் துறையிலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியதன் உதாரணம் இது. 

சேஷாச்சலம் (புரொபஸரைப் பார்த்து): So you have become a meninist?

கணேஷ்: ஆமா டாக்டர், வர வர இவர் இப்படித் தான் பெண்கள் என்றாலே கொலைவெறி ஆகி விடுகிறார். சதா ஆண்கள் தரப்பில் இருந்தே எல்லாவற்றையும் பார்க்கிறார். மீனாட்சி மேடம் இவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வீட்டை விட்டு போயிடறாங்க. அதில இருந்து தான் இப்படி ம்ங்ய்ண்ய்ண்ள்ற் ஆகிட்டாரோ? 
சேஷாச்சலம்: இருக்கலாம். இவன் வாயில் இருந்து இதையெல்லாம் வரவழைக்கத்தானே பேச்சை இப்படி வளர்த்துப் போனேன்.  
புரொபஸர்: சும்மா உளறாதீங்க. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. 
கணேஷ்: டாக்டர், மென்னினிஸ்ட் என்றால் பெண்களுக்கு எதிராகப் பேசுவதா? 
சேஷாச்சலம்: Meninism is a term used which has been used to describe various groups, including the men’s rights movement and male feminists. இவர்கள் ஆண்களின் பிரச்னைகளைப் பேச, உரிமைகளுக்காக போராட தோன்றிய ஓர் இயக்கம். 
புரொபஸர்: சரி என்னை டார்ச்சர் பண்றதை விட்டுட்டு இதைக் கேளுங்க: இந்த chauvinism என்கிற சொல் எப்படித் தோன்றியது தெரியுமா?

(இனியும்  பேசுவோம்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im5.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-3222572.html
3222570 வார இதழ்கள் இளைஞர்மணி மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 32:  பொதுத் தேர்வும்... நுழைவுத் தேர்வும்... சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்!  விஞ்ஞானி வெ. பொன்ராஜ் DIN Tuesday, August 27, 2019 06:13 PM +0530 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப் புடைத்து.   

திருக்குறள் - 398 

ஒரு பிறப்பில் தான் கற்ற  கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல், அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.   கல்வி என்பது ஒரு மனிதனை அந்த அளவிற்கு உயர்த்தும் என்றார் திருவள்ளுவர்.  இன்றைய கல்வி முறை அப்படி இருக்கிறதா? 

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்ப தறிவு.  

- திருக்குறள்  422 

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும். அப்படிப்பட்ட அறிவுடைமையை நமது கல்வி கொடுக்கிறதா?  

இன்றைய சமுதாயம் தான் கல்வியின் கண்ணாடி. சமுதாயத்தில் நடைபெறும் சம்பவங்கள் நாம் கற்ற கல்வியின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. பெற்றோரும், ஆசிரியரும்தான் ஒரு நல்ல மனிதன் உருவாகக் காரணமாக அமைகிறார்கள்.   ஒரு வேளை பெற்றோர்களால் அத்தகைய கல்வியை பல்வேறு சமூகச் சூழலின் காரணமாகக் கொடுக்க இயலவில்லை என்றால், பள்ளிதான் ஏழு பிறப்பிற்கல்ல; இந்த பிறப்பிற்காவது நல்வழியில் தனது வாழ்க்கையை அமைத்து கொள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும்.   

வருடம் தோறும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் "பஸ் டே' கொண்டாடுகிறோம். "ரெயில் டே' கொண்டாடுகிறோம்.   அதற்கு "ஒரு  ரூட் தலை' என்று பிரிந்து, கையில் கத்தியும், அரிவாளும் கொண்டு சக மாணவர்களைத் தாக்குவதும்,  பொது மக்களை மிரட்டுவதும்,  சாதிரீதியாகப் பிரிந்து மாணவர்களுக்குள் அடித்துக் கொள்வதும் தொடர்ந்து வழக்கமாக நடக்கிறது.  இது கல்லூரி மட்டத்தில். பள்ளியில் என்ன நடக்கிறது?  எட்டாம் வகுப்பு வரை  தேர்வுக்கு அர்த்தம் இல்லாத தேர்ச்சி கட்டாயம் என்ற கல்விக்கொள்கையால், ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி. 

எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் மாணவர்களைக்  கேள்வி கூட கேட்க முடியாத நிலைமையை என்றைக்கு   அரசு ஏற்படுத்தியதோ,  அன்றைக்கே சீரழிவு ஆரம்பித்து விட்டது.  ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் நிலையையும்,   தாக்கும் நிலையையும், கத்தியால் குத்தும் நிலையையும், பள்ளியிலேயே போதைப் பொருட்களை விற்கும் நிலையையும், மாணவ, மாணவிகள் பள்ளியில் சாராயம் குடித்து கும்மாளமிடும் நிலையையும் இன்றைக்கு சர்வ சாதரணமாக நாம் பார்க்கிறோம். 

பள்ளியில் சாதிக்கொரு கயிறு கட்டி வித்தியாசங்களை வெளிப்படுத்தி சண்டை சச்சரவுகளை தோற்றுவிக்கும் நிலையும் இங்கு காணப்படுகிறது, இந்த நிலை 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. இதைக் கண்டிக்கக் கூட வழியில்லாமல் அரசு உத்தரவு போடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இவையெல்லாம் நம் கண்முன்னே காட்சியாக வருவது இந்த சமுதாயத்திற்கும் நேர்ந்த அவலம் ஆக கருதி நாம் வெட்கித் தலைகுனியக்  கூடிய நிலை காணப்படுகிறது.   

இதற்கு அடிப்படை,  ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை; பெற்றோர்கள் ஆசிரியர்களை தங்கள் கடமையைச் செய்ய விடுவதில்லை. பெற்றோர்களும், மாணவர்களும் ஆசிரியர்களை குருவாக மதித்த நிலை போய்விட்டது. ஏன் என் பிள்ளையைக் கண்டித்தாய் என்று ஆசிரியர்களைக் கேள்விகேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.   

ஆசிரியர்களை அடிமைகளாக்கிவிட்டு, அவர்களால் உருவாக்கப்படும் சமுதாயம் மட்டும் எழுந்து நிற்கும் என்று நம்புவது எப்படி அறிவுடமையாகும்? அரசுத் தேர்வின் தேர்ச்சி சதவீதத்தை அதிகமாக்கிக் காண்பிக்க வேண்டும்; நாங்கள் கல்விப்பணியில் மேன்மையானவர்கள் என்று சட்டசபையில் கணக்கு காண்பிக்கும் விதத்தில் ஆசிரியர்களை மிரட்டி  53 வகையான ஆவணங்களைத் தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம் கொடுத்தால், ஆசிரியர்கள் தங்கள் பணியான பாடங்களை  எப்படி நடத்த முடியும்? இதில் மேலும் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும்.  ஆசிரியர்கள் இதைச் செய்வார்களா? மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்களா?  இன்றைய சூழலில் மின்னணு ஆளுமையில் செய்ய வேண்டிய வேலையை, ஆசிரியர்களிடம் செய்யச் சொல்வது எப்படி சரியாகும்? கற்பித்தல் பணியை விட ஆவணங்களை தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டும் சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிப்பு என்ற புள்ளி விவரம் இருந்தால் போதும். இத்தகைய பணிச்சுமையால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.  

இப்படிப்பட்ட சீரழிவில்தான் பள்ளிக்கல்வி இருக்கிறது என்பதற்கு உதாரணம் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் படிப்பதற்கும், எழுதுவதற்கும், சின்ன கணக்குகளைப் போடுவதற்கும் கூட திறன் இல்லாதவர்களாக இருப்பதே.

Annual Status of Education Report - 2018 (ASER) ரிப்போர்ட்டின் படி,   உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வருகிறார்கள்.   15 முதல் 16 வயதில், மாணவியர்கள் இடைநிற்றல் 2008 - இல் 20 சதவீதத்தில் இருந்து 2018 -இல் 13.5 சதவீதமாக குறைந்திருக்கிறது.  2008 - இல் மாணவர்களது இடைநிற்றல் 17.3 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. 6 முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகள் தனியார் பள்ளியில் சேரும் சதவீதம் 2006 -இல் 18.7 சதவீதமாக இருந்தது, அது 2018- இல்  அதிகரித்து 30.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.  ASER 2018 சர்வேயின்படி மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில்  25 சதவீதம் தான் மூன்றாம் வகுப்பிற்குரிய கல்வியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.  அப்படி என்றால்  அடிப்படை கணக்கிலும், கற்றலிலும் 75 சதவீத மாணவர்களுக்கு இன்னும் தீவிரப் பயிற்சி தேவைப்படுகிறது.  இந்தியா முழுமைக்கும் 20 சதவீதம் பேர்தான் மூன்றாம் வகுப்பில் சிறு கணக்கைக் கூட செய்ய முடிகிறது. உத்தரபிரதேசத்தில் மூன்றாம் வகுப்பில் 60 சதவீத மாணவர்கள் வார்த்தைகளை  எழுத்து கூட்டி கூட படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.   

இந்தியா முழுமைக்கும் 2016- இல் 5-ஆம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவர்கள் 50 சதவிகிதம் பேர் தான் எழுத்து கூட்டி படிக்க முடியும், 25 சதவிகிதம் மாணவர்கள்தான் சின்னச்சின்ன கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது.  2018-இல் வகுத்தல் கணக்கை செய்யக் கூடிய 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மாணவர்களது சதவிகிதம் முறையே 34.7, 39, 44.1 சதவீதமாகத்தான் இருக்கிறது.  

அதாவது அடிப்படை கணக்கில் எட்டாம் வகுப்பில் கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் மேல் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று தெரிய வருகிறது. இப்படிப்பட்ட அடிப்படை திறன்கள் கணக்கிலும், படிப்பிலும் ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியிலும் குறைவாக இருந்தால், மேல்நிலைக் கல்வியில் அவர்களால் சமாளிக்க இயலாது. அவர்களுக்குத் தேவையான கூடுதல் கற்றல் மற்றும் புரிந்து படிக்கக் கூடிய , வாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  அடிப்படை கணித வகுத்தலை 14 வயது முதல் 16 வயதுள்ள 50.1 சதவீத மாணவர்களும் 44.1 சதவீத மாணவிகளும் தான் சரியாக செய்ய முடிகிறது.

பொதுவாக 50% மாணவர்களால் வாசித்து படிக்கவே முடியாத நிலையில் இருக்கும்போது பேனாவையும் பேப்பரையும் வைத்து நடத்தப்படக் கூடிய தேர்வுகளுக்கு இங்கு மதிப்பில்லை  எனும் போது, அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் தரமற்ற கல்வியைத்தான் மாநில அரசுகள் கொடுக்கின்றன என்று காரணம் சொல்லி மத்திய அரசு உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வைப் புகுத்துகிறது.  

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

- திருக்குறள் – 948 

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்.  நோயைத் தீர்க்கும் வழிமுறையை போல், இன்றைய பள்ளிக்கல்விமுறையின் அடிப்படை பிரச்னைகளைக்  களைவதற்கு தேசிய கல்விக்கொள்கை 2019- இல் 5+3+3+4 என்று பள்ளிக்கல்வி முறையை மாற்றியமைத்துவிட்டு, 3,5,7இல் கணக்கீட்டு தேர்வையும், 9-12-ஆம் வகுப்பில் செமஸ்டர் தேர்வையும் வைத்து விட்டு, பள்ளிப்படிப்பு தேர்வு முடிந்த பின் உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறது.  இது நோயைக் குணப்படுத்த மருத்துவம் செய்து விட்டு, இந்த முறையில் மருத்துவம் செய்தால் நோய் குணமாகும் என்பதை உறுதிப்படுத்திவிட்டு, நோய் குணமான பின் மீண்டும் MRI TEST எடுத்தால் தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்புவேன் என்று சொல்வதைப்போல் நகைப்பிற்கு இடமாக இருக்கிறது.   அதாவது அரசு எந்தத் தேர்வையும் முறையாக, சரியாக செய்யாது;  ஆனால் மாணவர்களை தொடர்ந்து தேர்வு  எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதை போல இருக்கிறது.

இன்றைய மாணவர்களது கற்றல் திறன் அடிப்படையில் பார்த்தோம் என்றால்,  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மாணவர்களது ஒட்டுமொத்த கற்றல் திறனை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து,  அவர்களது தனித் திறன் மேம்பாட்டை அவர்களது Intellectual Quotient (I.Q), Emotional Quotient (EQ), Cognitive Abilities (CA) இந்த மூன்றையும் மேம்பாடு செய்யக்கூடிய கொள்கை திட்டமாக இந்த பள்ளி கல்வி 5+3+3+4 அமைய வேண்டும். இந்த நிலையில் கணக்கீட்டு தேர்வுகள் 3,5,8 -இல் அவர்களது தனித்திறன்களை கணக்கீடு செய்ய வேண்டுமே ஒழிய, அந்த கணக்கீட்டின் அடிப்படையில் அவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது. 

தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களது தனித்திறன் சதவீதத்தை மதிப்பீடு செய்து தனித்திறனை 70 சதவீதத்திற்கு மேலாக உயர்த்தும் வகையில் தொடர்ந்து கண்காணித்து, தனித்திறன் பயிற்சி கொடுத்து, எந்த இடத்திலும் அவர்கள் இடைநிற்றலுக்கு அது காரணமாகி விடாமல், கல்விமுறையை மாற்றி அமைத்து அவர்களைத் தோல்வியடையச் செய்யாமல்,  தொடர்ந்து அவர்களது தனித் திறனை மதிப்பீடு செய்து,  எட்டாம் வகுப்பில் ஒவ்வொருவரும் தனித் திறனில் எவ்வாறு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை பள்ளிஅளவில் மதிப்பீடு செய்யக்கூடிய முறையில் தான் இந்த கணக்கீடு தேர்வுகள் அமைய வேண்டுமே தவிர,  மாணவர்களைத் தோல்வி அடையச் செய்து அவர்களை அந்தந்த வகுப்பிலேயே தங்கச் செய்யக்கூடிய நிலையில் இருக்கக்கூடாது. இதை எப்படிச் செய்வது?

இந்த கணக்கீட்டின்படி அவர்களது மேல் நிலை கல்விக்கான தேர்வு கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வர்த்தகம் போன்ற பல்வேறு பிரிவுகளை எடுத்துப் படிக்கக்கூடிய அளவில் 9, 10, 11, 12 -ஆம் வகுப்பில் பாடத்திட்டங்கள் அமையப் பெற வேண்டும்.  இந்த தேசிய கல்விக் கொள்கையின்படி 40 பாடங்களை நான்கு வருடத்தில் அவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் 24 பாடங்களில் செமஸ்டர் தேர்வு மற்ற பாடங்களில் விருப்ப பாடங்கள் பள்ளியில் நடத்தப்படும் கூடிய தேர்வும் பொருந்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அந்த வகையில் இந்த பள்ளிக் கல்வியை முடிக்கும் பொழுது உயர்கல்விக்கு பல்வேறு நிலைகளில் மாணவர்களின் தனித்திறனைப் பொறுத்து உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய அளவிலே அந்த செமஸ்டர் தேர்வு முறைகள் அமைக்கப்பட வேண்டும். 

அரசு நடத்தும் பொதுத்தேர்வில் அரசுக்கு நம்பிக்கை இருந்தால் ஒன்று அரசு நடத்தும்  பள்ளிக்கல்விக்கான பொதுத்தேர்வை உயர்கல்விக்கு தகுதி என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இல்லை என்று சொன்னால் பள்ளி கல்விக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்பட்டு உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு மட்டும் என்று முடிவெடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியிலும் அரசு நடத்தும் பொதுத்தேர்வு மற்றும் உயர் கல்விக்குப் போக அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு என்று சொன்னால் 2 தேர்வு முறையிலும் அரசுக்கு நம்பிக்கையில்லை என்றுதான் முடிவாகும்.   

மத்திய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நுழைவுத்தேர்வு வைப்பது என்பது முற்றிலும் சரி என்று சொன்னால், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மாணவர்கள் பல்வேறு சூழலில் இருந்து கல்வித்தரம், கற்றல் முறை வேறுபாடு இருப்பதின் காரணமாக மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.  ஆனால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நுழைவுத்தேர்வு வேண்டுமா? நேர்முகத்தேர்வு வேண்டுமா? அல்லது நுழைவுத் தேர்வும், பள்ளிக் கல்வியில் எடுக்கக்கூடிய தேர்வும், இரண்டும் கலந்து ஒரு மதிப்பீட்டை செய்ய வேண்டுமா? என்பதை முடிவு செய்யக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்கும் இருக்க வேண்டும்.  அதுதான் மாநில சுயாட்சியின் தத்துவம். அதை மத்திய அரசு மீறக்கூடாது என்பதை ஒவ்வொரு மாநில அரசுகளும் உறுதி செய்ய போராட வேண்டும். 

இந்த தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் சில தொழில்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. "இது தேவை இல்லாத ஒன்று; இது குல கல்விக்கு வழி வகுக்கும்' என்ற வாதத்தில் வலு இருக்கிறது.  எனவே இது வேண்டுமா? வேண்டாமா? தொழில் கல்வியை எப்படி மாற்றியமைக்க வேண்டும்? ஏன் மாற்றியமைக்க வேண்டும்? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம். 

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@gmail.com 
 

(தொடரும்)
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im4.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/மிச்சமெல்லாம்--உச்சம்-தொடு---32--பொதுத்-தேர்வும்-நுழைவுத்-தேர்வும்-சிந்திக்க-வேண்டிய-சில-விஷய-3222570.html
3222563 வார இதழ்கள் இளைஞர்மணி முதியோர்களுக்கான மின் வணிகம்! தொடங்கிய இளைஞர்கள்!  - வி.குமாரமுருகன்  DIN Tuesday, August 27, 2019 05:15 PM +0530 நவநாகரீக இளையதலைமுறையினரை கவர்வதற்கான பல்வேறு வணிக, தொழில் வழிமுறைகள் பின்பற்றப்படும்  இக்காலத்தில்,  முதியவர்களுக்காக மின் வணிகத்தைத்  தொடங்கி  வெற்றிக்கனியை பறித்துள்ளனர் இரண்டு இளைஞர்கள். 

புனேவைச் சேர்ந்த தபன்மிஷ்ரா, ஆயுஷ் அகர்வால் ஆகிய இரண்டு இளைஞர்கள்தான் அந்த மின் வணிகத்தைத் தொடங்கியவர்கள்.  

இவர்கள் வேறு மாதிரி  சிந்தித்ததன் விளைவுதான், "சீனியாரிட்டி' என்ற மின்வணிகத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. அவரது வயதான அம்மா, அவருக்குத் தேவையான பல்வேறு பொருள்களை பல்வேறு கடைகளில் வாங்குவதைக் கண்ட ஆயுஷுக்கு உதித்ததுதான் இந்த சிந்தனை.    
2050-ஆம் ஆண்டில் 34 கோடிக்கும் அதிகமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. சிறந்த சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற காரணங்களால் முதியோர்களின் ஆயுட்காலம் நீடித்துள்ளது. இந்தியாவில் தற்போது 120 மில்லியனுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், மேலும், ஆரோக்கியத்திற்காகவும் செலவு செய்ய விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கென்று சிறப்பு மிக்க மின் வணிகம் எதுவும் இல்லை.  

""மின்வணிக நிறுவனத்தை அதன் செயல்பாடுகளும், லாஜிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என்பதால் அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர் தேவைப்பட்டார். அதனால் அத்துறையில் நிபுணரான தபன்மிஸ்ராவுடன் இணைந்து இதைத் தொடங்கினோம்.  இதற்கு முன்பு யாரும் கவனம் செலுத்தாத பகுதியில் முற்றிலும் புதிய பிரிவுகளின் கீழ் எங்களது பிராண்ட் செயல்படுகிறது. எனவே எவையெல்லாம் முதியவர்களுக்குத் தேவை என்பதைப் புரிந்து கொள்ள தொடர்ந்து ஆழமாக ஆராய்ந்து, முதியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஷாப்பிங் தளத்தை உருவாக்கினோம். 

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில், மருத்துவம், ஆரோக்கியம், சமையலறைப் பொருட்கள், பொழுதுபோக்கு விஷயங்கள் என பல்வேறு பிரிவு
களின் கீழ் 6,000 பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வலைத்தளம் மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் ஆப்-லைன் வர்த்தகத்தையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர். 

முதியோர்களைப் பராமரிப்பது இளைஞர்கள்தான் என்ற நிலையில், அவர்களுக்கு சேவையளிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர்களே தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். தினமும் 1,000 முதல் 1,300 ஆர்டர்களைக் கையாள்கிறோம். ஒரு மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எங்களது வலைதளத்தைப் பார்வையிடுகின்றனர்'' என்கிறார் ஆயுஷ்.

""பல லட்சம் முதியோர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் நாங்கள் சில லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைந்துள்ளோம். எனவே வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்பத் தளம் போன்றவற்றில் முதலீடு செய்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தயாரிப்புகளை வழங்க விரும்புகிறோம்'' என்று கூறும் இவர்கள் விரைவில், முதியவர்களுக்கான பிரத்யேக செயலியையும்  அறிமுகம் செய்யவுள்ளனர். 

வாய்ப்புகளை உருவாக்கினால் வாழ்க்கை நம் வசமாகும் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் உருவாகி விட்டால் நிச்சயம் வெற்றி அவர்கள் கையில்தான். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/முதியோர்களுக்கான-மின்-வணிகம்-தொடங்கிய-இளைஞர்கள்-3222563.html
3222562 வார இதழ்கள் இளைஞர்மணி சுடர்மிகும் அறிவுடன் பிறந்தோமே! - கே.பி. மாரிக் குமார். DIN Tuesday, August 27, 2019 05:13 PM +0530
“"வாழ்க்கையில் நீங்கள் பயப்படும் எல்லாவற்றையும் எழுதி, அதை எரித்து விடுங்கள்' 

- யோகோ ஓனோ

காய்ச்சல் பலவகை. 

உழைப்பால், களைப்பால், ஓய்வற்ற உறக்கமற்ற பணிச்சுமையால், மன உளைச்சலால், வெயில், மழை உக்கிரத்தால், காலநிலை மாற்றத்தால் - இப்படி வகைவகையாக காய்ச்சலுக்கான காரணங்கள் இருந்தாலும் மாணவர்களுக்கு வரும் தேர்வு நேர காய்ச்சல் விசித்திர ரகம்.  

மாணவர்களுக்கு பள்ளிப் பருவ  பரீட்சையின்போது வயிற்றுவலியாக இருக்கின்ற காரணம்,  அவர்கள்  வளர வளர காய்ச்சலாகப் பரிணாம  வளர்ச்சி அடைகிறது. கல்லூரிப் படிப்பையும் முடித்து. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற மாணவர்களும் இதுபோன்ற காய்ச்சல் காரணங்களைச் சொல்வார்கள்; சொல்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

தேர்வுக்கு முதல் நாளே,  ""காய்ச்சல் வருது சார். "எக்ஸூம் ஹால்'ல பதட்டத்தில கை, கால் நடுங்குது சார்''”- – இப்படிச் சொன்னவர், ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். அதாவது ஐந்தாண்டு மென்பொருள் அறிவியலில் முதுகலைப் பட்டம். இந்த மாணவருக்கு இந்தப் பட்டத்தை கொடுக்க அந்தக் கல்லூரியும் நடைமுறையில் இருந்த பாடத்திட்டமும், கல்விச் சட்டமும் எடுத்துக் கொண்ட காலம் ஐந்தாண்டுகள். கல்விக் கட்டணமாக அவர்கள் வசூலித்ததோ கிட்டத்தட்ட நான்கு இலட்சங்கள். 

இத்தனை சோதனைகளை பயிற்சிகளைக் கடந்து வந்த அந்த மாணவர்தான் சொல்கிறார்: "போட்டித்தேர்வுகளுக்கு முந்தைய நாள் காய்ச்சல் வருகிறது' என்று. இத்தனைக்கும் எல்லா போட்டித்தேர்வுகளுக்கும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருப்பதில்லை. ஒரு மாணவரின் பட்டப் படிப்பிற்கும் அவர் எழுதி வெற்றிபெறும் போட்டித் தேர்வுக்கும் பெரும்பாலும் எந்தவொரு பெரிய சம்பந்தமும் இல்லை. இந்த தேசத்தின் உச்சப் பதவிகளுக்கான குடிமைப்பணி தேர்வுக்கும் இதே நிலைதான். நமது விவாதத்திற்கு உட்பட்ட அந்த மாணவர்,  தற்போது எழுதத் தயாராகி இருக்கும் தேர்வுக்கு தேவையான அடிப்படை கல்வித் தகுதி வெறும் பத்தாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே. அப்படியென்றால் பத்தாம் வகுப்புத் தேர்ச்சியை கல்வித்தகுதியாக கொண்ட ஒரு போட்டித்தேர்வை எதிர்கொள்கின்ற மனதைரியத்தைக் கூட  கொடுக்காத முதுகலைப் பட்டத்தை அந்த மாணவர் பெற்றிருக்கிறார் அல்லது அந்தக் கல்லூரி கொடுத்திருக்கிறது  என்றுதானே அர்த்தம்?

தேர்வு பயம்கொண்ட அந்த மாணவனிடம் ஒரு சிறிய கதையைக் கூற வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அது இதுதான்:

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தானாம்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா'' என்று கேட்டுக் கொண்டானாம்.

அதற்கு ஞானி, அடுத்த நாள் மாலை அவரை வந்து பார்க்குமாறு அவனிடம் சொன்னாராம்.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு'' என்று கத்திக் கொண்டிருந்த ஞானியைப் பார்த்து குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?அதை விட்டுவிடுங்கள்'' என்றானாம்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போலதான் நீ குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.  அதை நீயே விட்டுவிடு'' என்றாராம். இந்த குடிகாரனைப் போலத்தான் அந்த மாணவனும் பயத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றானே தவிர பயம் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அவனுக்கு விளக்க நமக்கு பெரும் சிரத்தை அவசியப்பட்டது.

முறையான பயிற்சி, திட்டமிட்ட உழைப்பு, படிப்பு ஒரு மாணவனை தன்னம்பிக்கையுள்ளவராக மாற்றும். அப்படி ஒரு மாணவனை திடமானவனாக, தன்னம்பிக்கை உள்ளவராக, மாற்றாத கல்வியும், பட்டமும், பாடத் திட்டமும் எங்கோ தவறு செய்கிறது. தவறு பாடத் திட்டத்திலா, கல்விக்கூடத்திலா நிர்வாகத்திலா, அல்லது ஆசிரியர்களிடத்திலா என்கிற கேள்விக்கான விடை, இடம், பொருள் ஏவலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. 

இன்றைய பணம் மையப்பட்ட உலகில்...  கேவலம் ஒரு 2000 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழப்பதில்லை. ஆனால் மாணவர்களில் ஒரு சிலரோ தேர்வுகளைச் சந்திக்கும் போதுகூட மனமுடைந்து போய் தங்களைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்.

பட்டப் படிப்பை கடந்து பொதுவான உலகை, வாழ்க்கையை, நல்ல இலக்கியங்களை வெற்றி பெற்ற முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் வாசித்த,  வாசிக்கின்ற மாணவர்களின் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  தனித் தன்மை இருக்கிறது. அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொல்லிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழும் ஒவ்வொரு மாணவனையும் பார்த்து தேர்வுகளுக்கு காய்ச்சல் வரவேண்டுமே  தவிர, சுடர்மிகு அறிவுடன் படைக்கப்பட்ட மாணவர்களுக்குக் காய்ச்சல் வரக்கூடாது.

“"நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி; எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!'  என்கிற பாரதியின் தீரமிக்க வரிகளை நெஞ்சில் நிறுத்தி அச்சமற்ற மாணவர்களாக தலைநிமிர்ந்து தேர்வுகளை எதிர்கொள்வோம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im2.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/சுடர்மிகும்-அறிவுடன்-பிறந்தோமே-3222562.html
3222561 வார இதழ்கள் இளைஞர்மணி மாணவர்களின் அறிவியல் சூரிய கிரகண பயணம்! - இரா.மகாதேவன் Tuesday, August 27, 2019 12:00 AM +0530  

ஸ்பேஸ் இந்தியா (SPACE India) உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்று. இது இந்திய மக்களிடையே தீவிர விஞ்ஞான ஆர்வத்தை வளர்ப்பதையும், வானவியலைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஹெலியோடிஸி (Heliodyssey)  என்பது ஸ்பேஸ் இந்தியாவின் மாணவர் அறிவியல் ஆய்வுப் பயண நிகழ்ச்சியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் "அறிவியல் சூரிய கிரகண பயணத்தில்' பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. அதோடு, உலகெங்கிலும் நிகழும் சூரிய கிரகணங்களை ஆய்வு செய்ய வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இது மிகச்சிறந்த வானியல், விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி அனுபவ கற்றல் திட்டமாக இருந்து, மாணவர்களிடம் STEM திறன்களை ஊக்குவிப்பதோடு, கிரகணங்களைக் கண்டுணர்தல், பகுப்பாய்வு செய்தல், பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் கற்றலை மேம்படுத்துகிறது. 

வரும் டிசம்பர் 26 - ஆம் தேதி மத்திய கிழக்கு, ஆசியா, பசிபிக் நாடுகளில் வருடாந்திர சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

இந்த கிரகணம் சவூதி அரேபியா, கத்தார், UAE, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தொடங்கி, தொடர்ந்து அமெரிக்காவின் வடக்கு கடல் தீவுகளைக் கடந்து செல்லவுள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழ் தசாப்தத்தில் இந்தியாவிற்கு மிக முக்கியமான கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதையொட்டி, அறிவியல் ஆர்வமிக்க குழுவினர் உலகெங்கிலும் சூரிய கிரகணங்களைப் பார்த்து ஆய்வு செய்வதற்காக பேரார்வத்துடன் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஸ்பேஸ் இந்தியாவின் இதுபோன்றதொரு பயணத்தில் ஆன்லைன் ஹெலியோடிஸி தேர்வில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். இந்தப் பயணத்திற்கு ஸ்பேஸ் இந்தியா முழுமையாக நிதியளிக்கிறது. இந்தப் பயணத்தில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள முக்கிய இடங்களிலிருந்து கிரகணத்தைக் கண்டு,  அவற்றைப் பதிவுசெய்து, பகுப்பாய்வு செய்வார்கள். மேலும், 2020 - ஆம் ஆண்டில் இந்த கிரகணத்தின் முடிவுகளையும் வெளியிடுவார்கள். 

சூரிய கிரகணங்களை ஆய்வு செய்வதற்காக ஸ்பேஸ் இந்தியாவின் குழுக்கள் ஹாங்காங், சீனா, ரஷியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு ஹெலியோடிஸி பயணங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஹெலியோடிஸி- 2019 பயணம், வரும் டிசம்பர் மாதம் 26 -ஆம் தேதி நிகழவுள்ள வருடாந்திர சூரிய கிரகணத்தை ஓமன் நாட்டிலிருந்தும், கேரளத்தின் செருவத்தூரிலிருந்தும் காண்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்பேஸ் இந்தியாவால் நடத்தப்படும் விண்வெளி ஹெலியோடிஸி டெஸ்ட் 2019- இல் வெற்றிபெறும் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களும், இந்தப் பயணக் குழுவில் இடம் பெறவுள்ளனர். ஓமனுக்கான குழுவில் ஸ்பேஸ் நிபுணர்களுடன், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களும், கேரளத்தின் செருவத்தூருக்கான பயண அணியில் ஸ்பேஸ் நிபுணர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களும் இடம் பெறுவர்.

ஹெலியோடிஸி தேர்வுக்கான பதிவு இணையம் வழியாக ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இந்திய மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 990 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, பதிவைத் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது.

தேர்வு, தேசிய அளவிலான ஆன்லைன் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் ஆங்கிலத்தில் இருக்கும். 6 -8, 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என தேர்வு இருபிரிவாக நடைபெறும். 2 பிரிவுக்குமான பாடத்திட்டங்கள் (Syllabus for Heliodyssey 2019) இதற்கான இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறிப்பாக, பொது அறிவியல், கணிதம், அண்டவியல், வானியல், பிரபல வானியலாளர்கள் மற்றும் ஒளியியல் ஆகிய தலைப்புகளில் இருக்கும். இணையத் தேர்வு வரும் அக்டோபர் 6 -ஆம் தேதி நடைபெறும். இதன் முடிவுகள் அக்டோபர் 10 -ஆம் தேதி அறிவிக்கப்படும். தேர்வுக்குப் பதிவுசெய்த மாணவர்கள் ஸ்பேஸ் இந்தியா இணையதளத்தில் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளில் பங்கேற்கலாம்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் நவம்பர் முதல் வாரத்தில் ஒருநாள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பயணம் குறித்து கலந்துரையாடுவது, தங்களுக்கான அறிவியல் கருவிகளைப் பெறுவது, சக மாணவர்கள் மற்றும் பயணத்திட்டம் குறித்து அறிவது, அறிவியல் சோதனைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து பயிற்சி பெறுவது இதன் நோக்கம். இதற்கான நாள் மற்றும் இடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும். ஓமனுக்கு செல்ல தேர்வுபெறும் மாணவர்கள் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும். சூரிய கிரகணம் டிசம்பர் 26 -ஆம் தேதி நிகழ்வதால், டிசம்பர் 22 -ஆம் தேதி பயணம் தொடங்கும். 

இந்தப் பயணத்தின் போது, ஜூம் லென்ஸ்கள், மேகங்களுக்கு மேலாக பறக்கவிடப்படும் பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் வழியாக கிரகணம், வெவ்வேறு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், புவியின் சுற்றுப்புற வெப்பநிலை, மண்ணின் வெப்பநிலை மற்றும் கிரகணத்தின் போது ஈரப்பதம் போன்ற சுற்றுப்புற இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம், உள்ளூர் சூழலில் கிரகணங்களின் பாதிப்பை புரிந்துகொள்ளும் பொருட்டு பதிவு செய்யப்படும்.

கிரகணத்தின்போது, விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும் (உயிரி இயற்பியல் பரிசோதனை). இளம் விலங்குகள், இரவுநேரங்கள் மற்றும் பறவைகள் மீதும் அந்த ஆய்வு இருக்கும். பின்ஹோல், தொலைநோக்கிகள், சூரிய நோக்கிகள், கேமரா படங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி கிரகணம் காணப்படும். 

பயிற்சி பெற்ற ஓவியர்கள் "ரிங் ஆஃப் ஃபயர்' எனப்படும் மோதிர வடிவில் நெருப்புக் கோளமாகக் காணப்படும் சூரிய கிரகணத்தை ஓவியமாகப் பதிவுசெய்வர். இந்த பயணத்தின்போது விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களால் பதிவுசெய்யப்பட்ட தரவுகளும், கணிதரீதியாகவும், புகழ்பெற்ற மென்பொருள்கள் மற்றும் வலைதளங்களால் கணிக்கப்பட்ட தரவுகளும் ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு www.heliodyssey.org. Gu\  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/27/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/27/மாணவர்களின்-அறிவியல்-சூரிய-கிரகண-பயணம்-3222561.html
3217648 வார இதழ்கள் இளைஞர்மணி மனங்கொத்தி மாணவர்கள்! DIN DIN Tuesday, August 20, 2019 11:40 AM +0530 அப்பாவித்தனமாக இருப்பது மனதுக்கு மட்டுமே நல்லது; மூளைக்கு அது நல்லதல்ல" - அனடோல் பிரான்ஸ்.
 தூக்கம் கலைந்து ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையில் இருந்து எழுவதற்கு, சமயங்களில் ஏதாவது காரணங்கள் கிடைக்கும். அன்று என்னைப் படுக்கையிலிருந்து எழச் செய்தது. மரத்தை ஒரு பெரிய சுத்தியல் கொண்டு அடிக்கின்றதை போன்ற ஒரு சத்தம். கண் விழித்து, படுக்கையின் அருகில் இருந்த சாளரம் வழியாகப் பார்த்தால், எப்பொழுதும் தென்படக்கூடிய தென்னை மரத்தில், ஜோடிகளாக மரங்கொத்திகள் இரண்டு வரிசையாக, மரத்தின் உச்சிக்கு மேலேறி நடந்து கொண்டே, அங்கங்கே நின்று மரத்தை கொத்திப் பார்த்தது; ஆய்வு செய்தது. பிறகு மீண்டும் மேலே ஏறியது. அது வழக்கமான விடியல் அல்ல.
 ஒவ்வொரு விடியலின் போதும் உயிரோடு இருக்கிறோம்; ஆரோக்கியமாகவே விழித்திருக்கிறோம் என்கிற உண்மையே, ஒவ்வொருவருக்கும் வெற்றிப்படிகளில் பயணித்து, சாதித்து வாழ்வதற்கான முதல் தகுதியும், வாய்ப்பும் ஆகும். அன்று என் விடியலைப் பிரகாசமாகத் தொடங்க உதவிய அந்த மரங்கொத்திகளின் சராசரி எடை என்ன தெரியுமா? வெறும் 20 கிராமிலிருந்து 300 கிராம் மட்டுமே. அவை, தங்களது வசிப்பிடத்தை அமைக்க, உணவைச் சேமிக்க, பெருத்த மரங்களில் கூட துளையிடத் துணிவது, அவற்றின் அந்த எடைக்குள் உள்ளடங்கிய அலகுகளை நம்பித்தான். அவற்றின் எடை பார்த்தோம்... அளவு? மிக கூடுதல் பட்சமாக 25 செ.மீட்டரிலிருந்து 30 செ.மீட்டருக்குள்ளாகவே இருக்கிறது. சமயங்களில் இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 2500 முறைகளுக்கும் மேல் மரத்தில் துளையிடக் கொத்துகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 12,000 தடவை மரம் கொத்தும் பணியை, அயர்ச்சியின்றி செய்கிறது, அதன் பணி முடியும்வரை.
 இந்தியக் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய) தேர்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அல்லது வெற்றி பெற்றவர்கள் சிலருடன் நாம் பேசினால், ஒருவர் "தினந்தோறும் பதினைந்து மணி நேரம் படிக்கவேண்டும் என்பார்; மற்றொருவர் "சராசரியாக ஐந்திலிருந்து எட்டுமணி நேரம்வரை படித்தால் போதும் என்பார். அடுத்தவரோ,""இல்லங்க... குறைஞ்சது... டெய்லி பத்து மணி நேரமாவது புத்தகத்தோடு இருக்கணும்ங்க'' என்பார். ஒரு குறிப்பிட்ட தேர்வுக்குப் படித்தவர்களின் நேரக் கணக்கில் ஏன் இந்த வேறுபாடு என்று நமக்கு ஒரு குழப்பம் ஏற்படலாம். இவர்கள் கூறும் - கூறிய நேரக்கணக்கு "சிவில் சர்வீஸ்' தேர்வுகளுக்கு மட்டுமல்ல... எந்தவொரு தேர்வுக்குமே நிலையானது, பொதுவானது என்று கூறி விட முடியாது.
 ஏனென்றால், பத்து மணி நேரம் மட்டும் அல்லது பதினைந்து மணி நேரம் படித்த எல்லோரும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதேவேளையில், தினந்தோறும் ஐந்து மணி நேரம் மட்டும் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெறாமலும் போயிருக்கிறார்கள். இங்கு படிக்கின்ற நேர அளவை விட, படிக்கும்போது செலுத்துகின்ற கவனத்தின் அளவு பிரதானமாகிவிடுகிறது.
 "கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது' என்கிற சொலவடைக்கு ஏற்பவும், "மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' என்கிற சொலவடைக்கு ஏற்பவும், "விடா முயற்சி.... வெற்றியைத் தரும்' என்கிற நம்பிக்கை மொழிக்கு ஏற்பவும், இங்கு நேரத்தின் அளவை விடக் கவனத்தின் அளவும், தளராத தொடர் வினையுமே தேர்ச்சிக்கான, வெற்றிக்கான முக்கிய படிகள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
 பாறைகளை அல்லது மலைகளை உடைப்பதற்கு, குடைவதற்கு இன்று பல்வேறு இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. வெடிகளை வெடிக்கச் செய்தும் பாறைகள் உடைக்கப்படுகின்றன. இருந்தாலும் உளி கொண்டு கல்லையும், பாறைகளையும் பிளக்கின்ற தொழிலும், தொழிலாளிகளும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அதில் கிடைக்கின்ற நேர்த்தி, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படுபவற்றைக் காட்டிலும் அதிக அழகியலோடும், உயிர்ப்போடும் இருப்பது ஒரு காரணம்.
 வேலையோ, கடின உழைப்போ சாபமல்ல; அது மனித மாண்பை வெளிபடுத்தக் கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு. எப்படி, ஒரு மரங்கொத்திப் பறவை அதன் சிறிய உடல் தாங்கும் அலகால் பெரிய மரங்களில் கூட துளையிடத் துணிகிறதோ, உழைக்கின்றதோ... அப்படியேதான் ஒரு கல் உடைப்பவரும் சிறு உளி கொண்டு உழைக்கின்றார். உளி கொண்டு பாறைகளைப் பிளக்க அவர் சுத்தியலால் அடிக்கின்ற ஒவ்வோர் அடியிலும் கண்ணுக்குத் தென்படாத கீறல் பாறைக்குள் பயணிக்கிறது. உளியின் நூற்றி ஒன்றாவது அடியில் பாறை பிளக்கின்றது என்றால், அதற்கு உளியின் அந்த கடைசி அடிமட்டும் காரணம் அல்ல. அதற்கு முன்னே சென்ற அனைத்து அடிகளும் காரணம்.
 பள்ளி, கல்லூரி நாட்களில் புத்திசாலிகளாக ஜொலித்த மாணவர்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளில் ஜொலிக்கின்றார்கள் என்பதில்லை. ஆங்கிலவழிக் கல்வியில் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைகிறார்கள் என்றில்லை. பணத்தோடு, உயரமான நல்ல உருவத்தோடு இருக்கும் மாணவர்கள் மட்டுமே ஜெயிக்கின்றார்கள் என்பதும் இல்லை. எப்படி "மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது' என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மரங்கொத்தி பறவைகளும், பாறைகளைப் பிளப்பவர்களின் கையில் இருக்கும் உளிகளும் நமக்குப் பாடங்களாக விளங்குகிறதோ அப்படிதான் போட்டித்தேர்வுக்கான மாணவர்களின் மன உறுதியும் இருக்க வேண்டும்.
 மரங்கொத்தியின் மனத்திட்பத்தைப் புரிந்து கொண்டீர்களா மாணவர்களே... என்ன, அந்தப் பறவையின் மரம் கொத்தும் சத்தம் கேட்கிறதா?
 கே.பி. மாரிக்குமார்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/IM3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/மனங்கொத்தி-மாணவர்கள்-3217648.html
3217647 வார இதழ்கள் இளைஞர்மணி "மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு! DIN DIN Tuesday, August 20, 2019 11:39 AM +0530 இன்றைய சமூகத்தில் கல்லூரிப் பருவத்தை முடித்து பணிக்குச் செல்லும் இளையோர் அனைவரும் மனஅழுத்தம் மிக்கவர்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கல்வி அழுத்தம், கூடுதல் வேலை நேரம், உட்கார்ந்தே பணியாற்றும் வாழ்க்கை முறை, ஒவ்வொரு நாளும் எலி பந்தயத்தைப் போல ஓடிக்கொண்டிருப்பது போன்றவற்றால், மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் ஒருங்கே கொண்டவர்களாக அவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
ஆனால், இந்தப் பிரச்னைக்கு தில்லி பல்கலைக்கழகம் ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது. தெற்கு தில்லியில் அமைந்துள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் ஹேப்பினெஸ் துறை, மாணவர்களிடையே ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, இந்த ஆண்டு "மகிழ்ச்சி' (course on happiness) என்ற 6 மாத சான்றிதழ் படிப்பை முதன்முதலாகத் தொடங்கியுள்ளது. யோகா மற்றும் தியானம், சமூக சேவை, ஆளுமை மேம்பாடு, தொடர்புத் திறன், மகிழ்ச்சிக்கான வாழ்க்கைத் திறன்கள், வேதங்களின் பார்வை மற்றும் ஆன்மிகம் என 6 பகுதிகளை இந்தப் படிப்பு உள்ளடக்கியுள்ளது. 
இதுகுறித்து ராமானுஜன் கல்லூரியின் முதல்வர் எஸ்.பி. அகர்வால் கூறுகையில், "மகிழ்ச்சி தொடர்பான சவால்கள் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் வேறுபட்டவை. மாணவர்கள் தங்கள் அன்றாட மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் சமாளிக்க ஒரு தீர்வை வழங்குவதே மகிழ்ச்சி பாடத்திட்டத்தின் நோக்கம்'' என்றார்.
பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் நிதி மாத்துர் கூறுகையில், " போட்டி அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் தவறான செயல்கள், கோபம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தம் என்பது மகிழ்ச்சி பற்றாக்குறையின் முக்கிய காரணி. எதிர்கால வேலைச் சூழல்களுக்கு ஏற்ப, மாணவர்களைத் தயார்படுத்தும் அடிப்படையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
கடந்த ஆகஸ்ட் 5 - ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்ற பாடத்திட்டம் குறித்த விளக்க நிகழ்ச்சியின்போது, மாணவர்களுக்கு சஹஜ் யோகா (Sahaj Yoga), மன்னிப்பு (forgiveness), இளகிய மனம்(loving heart), பாராட்டும் மனது (appreciating mind), நன்றியுணர்வு (gratitude) குறித்து கற்பிக்கப்பட்டது. புகழ்பெற்ற உளவியலாளர்களைக் கொண்ட குழு விவாதமும் நடைபெற்றது.
இந்த 6 மாத பாடத்திட்டத்தின் நிறைவாக அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பாடத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 4 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆஸ்திரியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்முனைவோர் பள்ளியான இன்ஸ்ப்ரூக் மேலாண்மை மையத்திற்கு (எம்.சி.ஐ) உயர் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் இருவர் கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். பாடத்திட்டத்தில் பயிலவும், பரிமாற்றத் திட்டத்தில் பயிற்சி பெறவும் கட்டணம் இல்லை.
இந்த கோர்ஸ் தொடங்கப்பட்ட நிகழாண்டிலேயே 150 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நேர்காணலுக்கு வந்த மாணவர்கள் "மகிழ்ச்சி' குறித்து கூறிய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 45 மாணவர்கள் இந்த கோர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 8மணி முதல் 9மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
ஒவ்வோர் ஆண்டும், ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பள்ளியின் 400-க்கும் அதிகமான ஆசிரிய உறுப்பினர்கள், உலகம் முழுவதுமுள்ள 1,000-க்கும் மேற்பட்ட முழுநேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். 1913 -இல் நிறுவப்பட்ட இந்த பள்ளி, பொது சுகாதாரத்தில் அமெரிக்காவின் பழமையான தொழில்முறை பயிற்சித் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 - இல் தொடங்கப்பட்ட "உடல்நலம் மற்றும் மகிழ்ச்சித் துறை'யின் தாக்கத்தால் இந்த கோர்ûஸத் தொடங்கியுள்ளது ராமானுஜன் கல்லூரி, இதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டங்களை மேம்படுத்த அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இரா.மகாதேவன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/HAPPY.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/மகிழ்ச்சிக்காக-ஒரு-படிப்பு-3217647.html
3217646 வார இதழ்கள் இளைஞர்மணி மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்! DIN DIN Tuesday, August 20, 2019 11:29 AM +0530 "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்ற பழமொழியைப் பொய்யாக்கி விவசாயத்திலும் சாதிக்கலாம்; சம்பாதிக்கலாம் என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறார் விவசாயி ஒருவர். 
உத்தரபிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்திலுள்ள தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்சரண்வர்மா என்ற விவசாயிதான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர். 
ராம்சரணின் குடும்பச் சூழலால் அவரால் 10 -ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. அவரின் தந்தைக்கு உதவுவதற்காக விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர் விவசாயத்தில் நுழைந்த போது அவரது தந்தை நெல்,கோதுமை, கரும்பு, கடுகு போன்றவற்றைப் பயிரிட்டு வந்துள்ளார். இவற்றின் உற்பத்தி செலவு மட்டுமல்ல, உழைப்பும் அதிகம், ஆனால் வருமானமோ மிகக் குறைவு. 
இதனால், விவசாயத்தில் லாபம் சம்பாதிப்பதற்கான புதிய நுட்பங்களையும், வழிமுறைகளைகளையும் தெரிந்து கொள்ள விரும்பிய ராம்சரண் வர்மா, தான் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு விவசாயத்தில் சாதித்தவர்களையும், சம்பாதித்தவர்களையும் நிபுணர்களையும் சந்திக்க 1984 -ஆம் ஆண்டு புறப்பட்டார். குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளையும், நிபுணர்களையும் சந்தித்து நுட்பங்களைக் கற்றுக் கொண்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விவசாயத்தைத் தொடங்கினார். ஒரு ஏக்கர் பரப்பில் திசு வளர்ப்பு வாழைப்பழச் சாகுபடி செய்து, மாநிலத்தின் முதல் திசு வளர்ப்பு விவசாயி என்ற பெருமையையும் பெற்றார்.
"திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்கையில் குறுகிய காலத்தில் அதிக மகசூலைப் பெற முடியும் என்பதுடன், பழங்களும் எந்தவித புள்ளிகளோ, கீறல்களோ, அழுகலோ இல்லாமல், பார்ப்பதற்கு பளபளப்பாகவும் ஒரே அளவுடனும் இருக்கும். அதனால், மார்க்கெட்டிலும் திசு வாழைப் பழங்களுக்குக் கிராக்கி இருப்பதுடன், அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் லாபத்தையும் ஈட்ட முடியும். ஓர் ஏக்கர் வாழைத்தோட்டத்தில் 400 குவிண்டால் வாழைப்பழங்கள் கிடைத்தன. அதனால் தனக்கு 4 மடங்கு லாபம் கிடைத்தது'' என்கிறார். 
திசு வளர்ப்பு முறையில் வெற்றி கண்ட அவர், அடுத்ததாக, பயிர் சுழற்சி நுட்பத்தை மேற்கொண்டார். தொடர்ச்சியான பருவங்களில் ஒரே பகுதியில் வெவ்வேறு வகையான பயிர்களை வளர்க்கும் நுட்பமே அது. வாழைத்தாரை அறுத்து விற்பனைக்குக் கொண்டு சென்ற பிறகு, உருளைக்கிழங்கையும், அதன் பின் கலப்பின தக்காளியையும், தொடர்ந்து புதினாவையும் வளர்த்துள்ளார். இந்த சுழற்சி முறை மூலம் விளைச்சல் அதிகரித்து வருமானமும் பெருகியதாகக் கூறுகிறார் ராம்சரண். 
இந்த பயிர் சுழற்சிமுறை மூலம் ஒரு பயிருக்கு விலை கிடைக்காவிட்டால் அடுத்த பயிருக்கு கூடுதல் லாபம் கிடைத்து விடும். அதனால் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்காது என்று கூறும் அவர், விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளையும் அளித்து வருகிறார். 1986 -ஆம் ஆண்டில் 1 ஏக்கர் நிலத்தில் தொடங்கி இன்று பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்யும் அளவிற்கு உயர்ந்து விட்ட அவரைத் தேடி , வேலை வேண்டி ஏராளமான நகர மக்கள் வருகை தருகின்றனர். 
"எங்களது பண்ணையைப் பார்வையிட பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். எனது கிராமத்து மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வது நின்று விட்டது. நகரத்திலிருந்துதான் இப்போது வேலை தேடி எங்கள் கிராமத்துக்கு வருகின்றனர்'' என பெருமிதத்துடன் சொல்லும் அவர் விவசாயிகளுக்காக http://www.vermaagri.com/ என்ற இணையதளத்தையும் உருவாக்கி பல்வேறு தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். அவருக்கு ஜக்ஜீவன் ராம் கிசான் புரஸ்கார், பத்ம விருதுகள் உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன. 
அந்தந்தப் பகுதிகளின் கால நிலைகளைப் புரிந்து கொண்டு பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் விவசாயிகள் பெருமளவு லாபம் ஈட்ட முடியும் என்பதே அவரின் உறுதியான நிலைப்பாடு. 
ராம்சரண் போல் விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினால் நம்மூர் விவசாயிகளும் அறுவடை செய்யும்போது தலை குனிய வேண்டியதைத் தவிர, மற்ற எதற்காகவும் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படாது என்பதே உண்மை.


வி.குமாரமுருகன் 


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/KUMAR.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/மாற்றி-யோசித்தால்-வெற்றி-நிச்சயம்-3217646.html
3217645 வார இதழ்கள் இளைஞர்மணி தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி! DIN DIN Tuesday, August 20, 2019 11:25 AM +0530 கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா தவிர, பாலைவனம் அதிகம் உள்ள ராஜஸ்தான் என பல மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் துன்பத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். என்றாலும் இவ்வளவு தண்ணீரையும் நம்மால் பாதுகாக்க முடிவதில்லை. வெள்ளம் வடிந்த பின்பு, குடிநீருக்கே பஞ்சம் வந்துவிடுகிறது. குடிநீருக்காக மக்கள் தவியாய்த் தவிக்கும்படி ஆகிவிடுகிறது. 
பொறியியலில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர் தண்ணீரை மிச்சப்படுத்தும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்தக் கருவி குளிக்கும், துவைக்கும் தண்ணீரை எல்லாம் மறுசுழற்சி செய்து தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. அந்தக் கருவி இயங்க மின்சாரம், பேட்டரி என்று எதுவும் தேவையில்லை. அதைக் கண்டுபிடித்தவர் ஜிதேந்திர சிங் செளத்ரி. 
மத்தியபிரதேசம் ரத்லம் அருகே உள்ள கிராமத்தில் பிறந்த அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2017-இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார். ஆராய்ச்சிப் படிப்பு படிக்க ஆர்வம் அதிகமாக இருந்ததால் உஜ்ஜையினில் உள்ள எம்.ஐ.டி.(Mahakal Institute of Technology)- இல் விண்ணப்பித்தார். ஆனால் ஆராய்ச்சி செய்வது பற்றி எந்த முன்யோசனையும் அவருக்கு இல்லை. 
எந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அவர், ஒருமுறை ராஜஸ்தானுக்குச் சென்றார். அங்கு பெண்கள் குளித்த, துவைத்த தண்ணீரை வாளிகளில் பிடித்து வைத்து மறுபடியும் பயன்படுத்துவதைப் பார்த்ததும் "பளிச்' சென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 
குளித்த, துவைத்த தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் கருவியை உருவாக்கினால் என்ன என்ற யோசனையே அது. அதற்குப் பிறகு நான்கரை ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு, பல மாறுதல்களுக்குப் பிறகு அவர் அந்தக் கருவியை வெளியிட்டார்.
"நான் உருவாக்கியிருக்கும் இருக்கும் இந்தக் கருவியை இயக்க மின்சாரம் தேவையில்லை. எனவே மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கே சிரமப்படும் மக்களும் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவி புவி ஈர்ப்புவிசையின் அடிப்படையில் இயங்குகிறது. குளித்து, துவைத்து வெளிவரும் நீரை இந்தக் கருவிக்குள் விட வேண்டும். கருவியில் பல அடுக்குகளாக துகள்கள் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றின் வழியாகத் தண்ணீர் செல்லும் போது அதிலுள்ள அழுக்குகள் வடிகட்டப்படுகின்றன. வடிகட்டப்பட்டு அழுக்கில்லாமல் ஆன தண்ணீரை மேலும் தூய்மையாக்க இதற்கென தயாரிக்கப்பட்ட கார்பனின் வழியாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு தூய்மையாகி கருவியிலிருந்து வெளிவரும் தண்ணீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. மற்றபடி, தோட்டத்துக்குப் பாய்ச்சலாம்; குளிக்கலாம்; துவைக்கலாம்; டாய்லட்டுக்குப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியின் பெயர் சுத்தம் (Shuddham).
இது பல ஆய்வுக்கூடங்களில் இந்தக் கருவி சோதிக்கப்பட்டுவிட்டது. நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தக் கருவியின் மூலம் ஒருநாளைக்கு 500 லிட்டர் தண்ணீரை தூய்மையாக்கலாம். இதன் விலை ரூ.7,400. ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தூய்மைப்படுத்திய பிறகோ, இந்தக் கருவியில் உள்ள "தண்ணீரை வடிகட்டி தூய்மையாக்கும் துகள்'களை மாற்ற வேண்டும். மற்றபடி பெரிய செலவு எதுவுமில்லை'' என்கிறார் ஜிதேந்திர சிங் செளத்ரி. 
பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய "நேஷனல் சோஷியல் எண்டர்பிரைஸ் ஐடியா சேலஞ்' போட்டியில் இவரது கருவி முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.
- ந.ஜீவா

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/IM2.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/தண்ணீரைத்-தூய்மையாக்கும்-கருவி-3217645.html
3217644 வார இதழ்கள் இளைஞர்மணி இலவசமாகப் பாட நூல்கள்! DIN DIN Tuesday, August 20, 2019 11:22 AM +0530 இணையத்தில் நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் பல இணைய நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில நூலகங்கள் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொண்ட பின்பு, அங்குள்ள நூல்களைப் படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. சில நூலகங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றன. 
இது போன்ற இணைய நூலகங்களுள் பாட நூல்களை மட்டும் இலவசமாகத் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், வணிக அடிப்படையிலான நூல்களைக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த இணையதளத்தில் பாட நூல்கள் (Text Books) எனும் தலைப்பின் கீழாகக் கணக்குப் பதிவு (Accounting), தொழில் வாழ்க்கை மற்றும் படிப்புகளுக்கான ஆலோசனை (Career & Study Advice), பொருளியல் மற்றும் நிதி (Economics & Finance), பொறியியல் (Engineering), தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டமிடல் (IT & 
Programming), மொழிகள் (Languages), சந்தைப்படுத்தல் மற்றும் சட்டம் (Marketing & Law), இயற்கை அறிவியல் (Natural Science), புள்ளியியல் மற்றும் கணிதவியல் (Statistics & Mathematics), உத்திகள் மற்றும் மேலாண்மை (Strategy & Management) எனும் முதன்மைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 
மேற்காணும் ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், அந்தத் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு துணைத் தலைப்புகள் கிடைக்கின்றன. தேவையான துணைத் தலைப்புகளில் சொடுக்கி, அங்கு இடம் பெற்றிருக்கும் நூல்களை, இத்தளத்தில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இதே போன்று வணிகம் (Business) எனும் தலைப்பின் கீழாக Accounting & Finance,  Career Management, Communication & Presentation, Engineering, Entrepreneurship, IT Management ,
Job Search & CV,  Management & Strategy, Marketing & Sales, Office Programmes & 
Softwares, Personal Development எனும் முதன்மைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 
மேற்காணும் ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், அந்தத் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு துணைத் தலைப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இங்குள்ள நூல்களை இத்தளம் குறிப்பிடும் கட்டணத்தைச் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொண்டு, பின்னர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
பல்வேறு அரிய நூல்களைக் கொண்டிருக்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் https://bookboon.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.
- மு. சுப்பிரமணி
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/FREE_BOOK.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/இலவசமாகப்-பாட-நூல்கள்-3217644.html
3217641 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, August 20, 2019 11:18 AM +0530 தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை
பணி: தொழில் பழகுநர் பயிற்சி
(அப்ரண்டீஸ்) 
மொத்த காலியிடங்கள்: 96
பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்
பயிற்சி: Apprentices
துறைவாரியான காலியிடங்கள்: 
I. Graduate Apprentices - 34
1. Mechanical Engineering - 21 
2. Automobile Engineering - 13 
பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.
II. Technician (Diploma) Apprentices  - 62
1. Mechanical Engineering - 38 
2. Automobile Engineering - 16 
3. Civil Engineering - 04 
4. Electrical and Electronics Engineering - 04 
பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://boat-srp.com/wp-content/uploads/2019/08/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.08.2019 

தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
பணி: Sport Persons (Groups-C)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் - 2 தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் Secunderabad -இல் மாற்றத்தக்க வகையில் குறுக்குக்கோடிட்ட Bank Draft, IPO ஆக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி. மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Personnel Officer (Engg. & Rectt), Room No.412, Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Rail Nilayam, Secunderabad - 500 025 (Telangana).
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.scr.indianrailways.gov.in/cris/uploads/files/1564490633289-sports_quotq.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள வேண்டும். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.08.2019

பொதுத்துறை வங்கிகளில் வேலை
மொத்த காலியிடங்கள்: 4,336 
பணி: Probationary Officer (PO) / Management Trainees
1. Allahabad Bank - 500
2. Bank of India - 899
3. Bank of Maharashtra - 350
4. Canara Bank - 500
5. Corporation Bank - 150
9. Indian Bank - 493
10. Oriental Bank of Commerce - 300
11. UCO Bank - 500
12. Union Bank of India - 644
வயது வரம்பு: 01.08.2019 தேதியின்படி 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 02.8.1989 தேதிக்கு முன்னரும், 01.08.1999 ஆம் தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். 
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் நடத்தப்படும் முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பைப் பெறலாம். கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் 12, 13, 19, 20 ஆம் தேதிகள் 
முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019 
பொது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.08.2019

ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: Manager - Marketing  
தகுதி: எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் மார்க்கெட்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,19,500
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:  https://aavinmilk.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றுகளை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர், விழுப்புரம் - கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், வழுதரெட்டி, கண்டமானடி, விழுப்புரம் - 
605 401. 
மேலும் விவரங்களுக்கு: https://aavinmilk.com/documents/20142/0/cdvpm300719.pdf/  என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 28.8.2019 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/VELAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/வேலைவேலைவேலை-3217641.html
3217639 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 205 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, August 20, 2019 11:10 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப் பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லையே என்கிறார். இதை அடுத்து புரொபஸரிடம் வேறென்னவெல்லாம் நோய்க்குறிகள் தென்படுகின்றன என சேஷாச்சலம் விசாரிக்க, புரொபஸர் திடீரென தேசியவாதி ஆகி விட்டதாக கணேஷ் சொல்கிறான். இதைக் குறித்து பேசும் போது அவர் xenophobia பற்றி குறிப்பிடுகிறார். அதன் பொருள் என்ன? பார்ப்போம்.
சேஷாச்சலம்: ஸீனோபோபியா என்பது அந்நியர் மீதான அச்சம். 
கணேஷ்: ஸீ ஸீனோ ... எனக்கு அது வாயில நுழைய மாட்டேங்குது.
புரொபஸர்: அது கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல். ஆதி கிரேக்கர்கள் அந்நியர்களை barbarians என அழைத்தார்கள். அதாவது பண்பற்ற காட்டுமிராண்டிகள் என பொருள். தாம் உன்னதமானவர்கள், அந்நியர்கள் காட்டுமிராண்டிகள் என நம்பியதால் அவர்கள் வேற்று நாட்டினரைக் கைப்பற்றி அடிமையாக வைத்துக் கொண்டார்கள். Zeno என்றால் வேற்று மனிதர்; phobia என்றால் பீதி. 
கணேஷ்: ஏன் பயப்படணும்? 
புரொபஸர்: பயமுன்னா பயம். அவ்வளவு தான். 
சேஷாச்சலம்: நான் சொல்றேன். ஒரு சர்வாதிகார ஆட்சியில் மக்களிடம் பரவலாக ஒரு கடும் பீதியும் பதற்றமும் மேலிருந்து செலுத்தப்படும். இதுவே பின்னர் ஸீனோபோபியா ஆகிறது என்பது ஒரு பார்வை. ஸீனோபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்நியர்களைத் தம் சமூகத்தின் எதிரிகள் என்றும், தம் சமூகமே தேசம் என அவர்கள் கற்பனை பண்ணுவதால் தேசத்தின் விரோதிகள் என அவுட்-குரூப்பைச் சேர்ந்தவர்களை கருதுவார்கள். அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்புவார்கள்.
டெக்னிக்கலான விளக்கம் Xenophobia can involve perceptions <https://en.m.wikipedia.org/wiki/Perception> of an ingroup <https://en.m.wikipedia.org/wiki/Ingroup> toward an outgroup <https://en.m.wikipedia.org/wiki/Outgroup_(sociology)> and can manifest itself in suspicion of the activities of others, and a desire to eliminate their presence to secure a presumed purity and may relate to a fear of losing national, ethnic or racial identity 
நடாஷா: அதென்ன அவுட்குரூப், இன்குரூப்? 
சேஷாச்சலம்: இன்குரூப்பை முதலில் விளக்குகிறேன். நீங்கள் எந்தக் குழுவுடன் உங்களை அடையாளப்படுத்துகிறீர்களோ அதுவே உங்கள் இன்-குரூப். அது சாதி, மதம் என எந்த அடிப்படையிலும் இருக்கலாம். நீங்கள் எந்த மக்களுடன் உங்களை அடையாளப்படுத்தவில்லையோ அவர்கள் உங்கள் அவுட்-குரூப். அவர்களைக் கண்டு நீங்கள் அஞ்சுவீர்கள். அச்சம் பின்னர் வன்மமாகும். அவர்களைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் இன்-குரூப்புக்கு பெரிய ஆபத்துகள் விளையும் என நம்புவீர்கள். பாகிஸ்தான் நம்மீது படையெடுக்கும் எனும் பீதி, ரஷ்யா போர் தொடுக்கும் என அமெரிக்காவில் ஐம்பதுகளில் இருந்த பீதி எல்லாமே ஸீனோபோபியா தான். 
கணேஷ்: டாக்டர், எங்க புரொபஸர் அப்படி யாரையும் வெறுப்பவர் அல்ல. ஆனால் சமீப
காலமாக அவர் திடீர் திடீரென யாரையாவது குறிப்பிட்டு திட்டுவார். அப்போது அவரது கோபத்தைக் காண பயமாக இருக்கும். 
சேஷாச்சலம்: உதாரணமா? 
கணேஷ்: டாக்ஸி புக் பண்ணி விட்டு டிரைவரே அதை ரத்து பண்ணினால், குடிநீர் வரவில்லை என்றால், செய்தித்தாளில் ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அயல் மாநில மக்களைக் கண்டால், ஏன் அவருக்கு உணவகங்களில் கிடைக்கும் உணவு அவருக்கு தோதாக இல்லை என்றால் கூட. 
நடாஷா: You are talking about intolerence?
சேஷாச்சலம்: இல்ல. Intolerence எனும் சகிப்பின்மை ஒரு அறிகுறி மட்டும் தான். 
நடாஷா: டாக்டர்,  professor you mean he is turning into 
a fascist? 
கணேஷ்: ஐயோ அதென்ன பாசிஸ்ட்? பெரிய வியாதியா? 
சேஷாச்சலம்: அது வியாதி இல்ல, ஓர் அரசியல் கோட்பாடு. சர்வாதிகாரம், centralisation எனும் மையவாதம், chauvenism, ஸீனோபோபியா ஆகியவற்றை உள்ளடக்கியதே ஒரு பாசிச ஆட்சி. 
நடாஷா: இந்த chauvenism-மும் male chauvenism-மும் ஒன்றா?
(இனியும் பேசுவோம்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/ENG.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-205---ஆர்அபிலாஷ்-3217639.html
3217637 வார இதழ்கள் இளைஞர்மணி குளித்தல் DIN DIN Tuesday, August 20, 2019 11:05 AM +0530 குளிர்வித்தல் என்பதுதான் மருவி குளித்தல் என்று ஆனது.
 அதாவது, உள்ளுறுப்புகளைக் குளிர்விக்கவே நாம் குளிக்கிறோம். இருதயம், வயிற்று தசைகள் உட்பட அனைத்து உறுப்புகளும் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இரத்தம் இடைவிடாது சுற்றிக் கொண்டே இருக்கிறது. இத்தனை இயக்கமும் சேர்ந்து உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தும். ஒருநாள் பொழுதில் நமக்கு வருகின்ற கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளில் நமது இரத்தம் கொதிப்படையும். இப்படி தினந்தோறும் என்பதை விட வேளைதோறும் உடலின் வெப்பநிலை உயர்கிறது. உடலுக்குள் ஏறுகிற வெப்பத்தை எப்படித் தணிய வைப்பது? குளித்தல் ஒன்றே அதற்கான தீர்வு.
 சரி, குளித்தால் உள் உடல் குளிர்ச்சியடையும். தலையை எப்படி குளிர்விப்பது? உடலிலேயே மிக அதிகம் இயங்கி அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் மூளைதான் அதிக வெப்பமடையும். தலையில் தண்ணீரை தினமும் ஊற்றினால்தானே தலைப்பகுதி குளிர்ச்சியடைய முடியும்?
 தலையில் வெப்பம் மிகுதியாக இருப்பது நலத்துக்கு நல்லது அல்ல. நீர் பட்டவுடன் உடல் சிலிர்த்து தோலில் சிறு சிறு சொரசொரப்பாக வருவது இரத்த ஓட்டத்தின் நல்ல அறிகுறி. மேலும் உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓடுவதால், உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். உடலில் எங்கும் அடைப்புகள் தங்காது. காரணம் இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்தம் வேகமாக வீச்சுடன் சுற்றும். அப்போது அடைப்புகள் அடித்துச் செல்லப்படும்.
 ச.இரா.தமிழரசு எழுதிய "இங்கே பயம் விதைக்கப்படுகிறது - நோய்க்கான உளவியல்' என்ற நூலிலிருந்து...
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/BOOK.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/குளித்தல்-3217637.html
3217632 வார இதழ்கள் இளைஞர்மணி நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை பள்ளிக்கல்வி! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்) DIN DIN Tuesday, August 20, 2019 10:44 AM +0530 மிச்சமெல்லாம் உச்சம் தொடு 31

"நமது பிறப்பு வேண்டுமானால் ஒரு சம்பவமாகலாம்; ஆனால் நமது வாழ்க்கை ஒரு சரித்திரமாக வேண்டும்'' என்றார் டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்.
ஆனால் எல்லாருடைய வாழ்க்கையும் சரித்திரமாகத்தான் வேண்டுமா, அப்படி எல்லாராலும் தனது வாழ்க்கையைச் சரித்திரமாக மாற்ற இயலுமா என்றால் அது எல்லாராலும் இயலாது; சில பேரால் முடியும். இந்த சில பேரின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பது தான் நமது விருப்பம். இது நடந்தால், நாடும் மக்களும் அவர்களால் சிறப்பு பெறுவார்கள். 
அனைவரும் சரித்திரமாக மாற முடியாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் தனது குடும்பத்திற்கும், தனது வருங்கால சந்ததிக்கும், சுற்றத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக வாழும் வாழ்க்கை அமைவதே ஒவ்வொரு மனிதனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது தான் கல்வி, கல்வியால் பெறும் அறிவு, அறிவால் விளையும் ஆற்றல், அந்த ஆற்றலால் விளைவது தான் நன்மையும் தீமையும்.
நன்மையும், தீமையும் ஒருவருக்கு வாய்க்கும் குணத்தால் விளையும். நற்குணம் வாய்க்கப்பெறுவதும், தீயகுணம் வாய்க்கப் பெறுவதும் ஒருவர் வளரும் சூழலைப் பொறுத்தது.
"நற்குணத்தை குழந்தையிடம் உருவாக்குபவர்கள் மூவர். அவர்கள் அம்மா, அப்பா மற்றும் ஆரம்பபள்ளி ஆசிரியர்' என்றார் அப்துல் கலாம். மனமாற்றம் ஒருவரை மாற்றும். ஆனால் அது நிலையானதில்லை. ஆனால் குணமாற்றம் ஒன்றே வாழ்க்கையைச் சீரமைக்க, சிறப்பிக்க உதவும். அந்த ஒரு நற்சூழலை வறுமையில் வாடி உழைத்து, உழைத்து ஒடாகத் தேயும் பெற்றோர்களால் தனது குழந்தைக்கு இன்றைய நவீனமயமாக்கப்பட்ட சூழலில் எல்லா நேரமும் கொடுக்க முடியாது என்ற நிலையே உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் பெற்றோர்கள் கூட, பணம் இருந்தும் நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. எனவே தான் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை. தரமான கல்வியை உறுதி செய்தால் தான் தன்னம்பிக்கை கொண்ட அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். 
எனவே தான் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமும் நானும் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் 30 செப்டம்பர் 2016- இல் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட "வரைவு தேசிய கல்விக்கொள்கை 2016' -க்கு எங்களுடைய பரிந்துரையை அனுப்பினேன். 
கல்வி என்பது ஆயுள் முழுவதும் கற்ற வேண்டிய 3 அம்சங்களுடையது: (1) அறிவார்ந்து சிந்திக்கக் கற்றுக் கொள்ளுதல்; (2) வாழ்வியலை கற்றுக் கொள்ளுதல்; (3) விரும்பிய தனித்திறனை வளர்த்துக் கொள்ளுதல். ஒரு பள்ளி மாணவனின் வாழ்க்கை 12 ஆண்டுகள் - மொத்தம் 25 ஆயிரம் மணி நேரம் - பள்ளியில் செலவளிக்கப்படுகிறது(1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை). இதில் ஆரம்பக் கல்வியை, நாம் சீரமைத்தாக வேண்டும். மொத்தக் கல்விக்கும் அடிப்படையாக இருப்பது ஆரம்பக் கல்வியே. அதிலும் குழந்தையை 3 வயதில் இருந்து Pre-KG, LKG, UKG என்று தொடங்கி, பேசும் வயதில் பேசக்கூடாது என்று தடுத்துவிடுகிறோம். ஒடி விளையாடி கீழே விழுந்து, எழுந்து, தோல்வியடைந்து வெற்றி பெற்று, வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளவிடாமல் தடுத்துவிட்டோம். தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் போய், ஆங்கில பாடல்களை YouTube-இல் அர்த்தம் புரியாமல் பார்க்கவைத்து மனப்பாடம் செய்ய வைத்து, மனப்பாடக் கல்வி முறை பழக்க வழக்கத்தைத் தொற்றிக் கொள்ளச் செய்கிறோம். ஆனால், மனப்பாட கல்வி முறையில் இருந்து விலகி, கேள்வி கேட்டு, ஆராய்ந்தறிந்து செயல்படக்கூடிய கல்விமுறைக்கு நாம் மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 
3-7 வயதிலே unshooling செய்ய வேண்டும் அதாவது இன்றைய பள்ளிகல்வி முறையில் இருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தோம்.
அதாவது 3 வயது முதல் 7 வயது வரை குழந்தைகளின் ஆக்கப்பூர்வ எண்ணங்களை வெளிக்கொணர வேண்டும். எனவே, ஆரம்பப்பள்ளிகளில் பார்த்து உணரவும், விளையாடி அறியவும், ஒன்றைச் செய்து பார்த்து பழகவும், ஆக்கப்பூர்வ செயல்முறை பாடத்திட்டம், ஆக்கப்பூர்வமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வமான வகுப்பறை மட்டுமல்ல, விளையாட்டு இடமும் இருக்க வேண்டும். மூன்றிலும் மாற்றங்கள் வரவேண்டும்: கற்பித்தல், பாடத்திட்டம், ஆசிரியர்கள். இதை எப்படிச் செய்வது? இதிலும் மூன்று அம்சங்கள் உள்ளன: மாணவர்களின் திறன் வளர்த்தல், திறன் வளர்ச்சிக்கு உபயோகப்படும் உபகரணங்கள், கருவிகள், மற்றும் தார்மீகத் தலைமை வேண்டும்.
அதாவது பள்ளிக்கல்வியை 5+3+3+4 என்ற முறையில் மாற்றி, அதில் முதல் ஐந்தை அதாவது, 3 வயது முதல் 7 வயது வரை ஒரு குழந்தை வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோடு விளையாடி, அவர்களைப் பார்த்து நற்குணங்களை கற்றுக்கொண்டு வளரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அந்த வயதில் அந்த குழந்தையின் அறிவாற்றல், அறிந்து கொள்ளும் ஆற்றல், புலன் உணர்வு போன்றவை சிறப்பாக வளரும். மூளையில் 85 சதவிகிதம் வளர்ச்சியடையும் தருணம். அந்த தருணத்தில் தான் அனைத்து நியூரான்களும் வளர்ச்சி பெறும். அந்த தருணத்தில் அவர்கள் இப்போது இருக்கும் பாலர் பள்ளிக்குச் செல்லக் கூடாது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு குழந்தைகள் செல்லவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தோம். அங்கு ஆசிரியர்கள் பெற்றோர்களாகச் செயல்படவேண்டும். இந்த வயதில் விளையாட்டு மற்றும் செயற்பாட்டின் மூலம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். எழுதவும், படிக்கவும் இந்த வயதில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும்IQ (Intelligent Quetient) இருக்கிறது, அதன் அளவின் படி தனித்திறனும், ஆற்றலும் உருவாகும், அதே நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் E. Q (Emotional Quotient) தான் தன்னோடும், சமுதாயத்தோடும் ஒவ்வொரு குழந்தையையும் இணைக்கிறது, சமுதாயத்தோடு பயணப்பட வைக்கிறது. எனவே தான் இவை இரண்டும் அந்த குழந்தையிடம் இருந்து வெளிக்கொணரப்பட்டு, தனது தனித்திறனை அந்த குழந்தை கண்டறிய வைக்கவேண்டும். 
எனவே தான் கண்டு, உணர்ந்து, அறிந்து, புரிந்து கொள்ளும் முறையில் கல்வியின் செயல்பாட்டு வரைவில் மாற்றம் கொணடு வரவேண்டும் என்று சொன்னோம். அதோடு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு சத்தான உணவைக் கொடுத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அது துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். அதை புதிய கல்விக்கொள்கை - 2019 அங்கீகரித்திருக்கிறது. அதாவது Pre-KG, LKG, UKG-ஐ கலைத்து விட்டு, 1ஆம் வகுப்பு, 2ஆம் வகுப்பையும் சேர்த்து 3 வயது முதல் 7 வயது வரை அடிப்படை வாழ்க்கையை வீட்டு சூழலில் அனுபவப் பாடமாக படிக்க வேண்டிய ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் 7 வயதில் தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அங்கு பெற்றோர்களுக்கு பிள்ளைகளை 7 வயது வரை வீட்டில் வைத்து பராமரிக்கவும், நன்றாக வளர்க்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்தியா 135 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஏழ்மையும், வறுமையும் ஒரு புறம். படித்த கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லவேண்டிய சூழல் மறுபுறம். கூட்டுக்குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்கள் தனித்தீவுகளாக நிற்கும் நிலை அடுத்த புறம். இப்படி இருக்கும் சூழலில் எப்படி அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் 7வயது வரை வைத்து பராமரிக்க முடியும். எனவே தான் வீட்டுச் சூழலை, ஓர் ஆரோக்கியமான சூழலை அந்த குழந்தைகளுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எங்களின் பரிந்துரை ஏற்கப்பட்டு முதல் 5 ஆண்டுகள் ECCE (Early Childhood Care and Education) என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இது அடிப்படைக் கல்வி. இதிலிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்குள் எப்படிப்பட்ட மனித வளத்தை இந்த நாடு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் அடிப்படையை வைத்து தான் கல்விக்கொள்கை கட்டமைக்கப்பட வேண்டும். 
இந்தியா ஒரு வளமான நாடாக வேண்டும்; அறிவில் சிறந்த வல்லரசாக வேண்டும் என்றால், ஒவ்வொரு மாநிலமும், அடுத்த மாநிலத்திற்குப் போட்டியாக அல்ல, ஒரு வளர்ந்த நாட்டுடன் போட்டி போடக் கூடிய வல்லமை பெற்ற மாநிலமாக நாம் உருவாக வேண்டும். அதற்கு நமது நீர் வளம், நிலவளம், மனித வளம் ஆகியவை மேம்பாடு அடைவதற்கான கொள்கைகளின் அடிப்படையில்தான் நமது கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும். இந்தியா தொடர்ந்த 10 ஆண்டுகளுக்கு 10 சதவிகித வளர்ச்சியை விவசாயத்திலும், தொழில்துறையிலும், சேவைத்துறையிலும், உற்பத்தி துறையிலும் என்றைக்கு எய்துகிறதோ அன்றைக்குத் தான் நாம் வளர்ந்த நாடாக மாற முடியும். நாம் அரசுப்பணிக்கு மட்டும் மனிதவளத்தை உருவாக்குவதை விட, தொழில் கல்விக்கு மட்டும் உருவாக்குவதை விட, வேலை தேடுபவர்களை உருவாக்குவதை விட, வேலைவாய்ப்புகளை உருவாக்க கூடிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும். 
அதற்கான அடிப்படை மாற்றம் பள்ளிக்கல்வியில் இருந்து தான் தொடங்க வேண்டும். முதல் 5 ஆண்டு அடிப்படை அனுபவக் கல்விக்கு பிறகு, அடுத்த 3 ஆண்டுகளில் முறையான கல்விக்கு மாணவர்களைத் தயார் செய்யும் நிலை, அதாவது 3 -ஆம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை. விளையாட்டின் அடிப்படையில், கண்டறிதல் அடிப்படையில், பாடத்திட்டம் அடிப்படையில் செயல்பாட்டு கல்வி, வகுப்பறைக்கல்வி இங்கு தான் அறிமுகப்படுத்தவேண்டும்.
இங்கு தான் பல்வேறு பாடத்திட்டங்களின் பொதுவான அடித்தளம் இடப்படும். எழுத்தும், எழுத்து கூட்டி படிப்பும், பேச்சு, விளையாட்டும், கலையும், மொழியும்,
அறிவியலும், கணிதமும் அறிமுகப்படுத்தப்படும். 
இதற்கு அடுத்த இடைநிலைக் கல்வி 3 ஆண்டுகள் இங்கு தான் நடுநிலைக்கல்வி பாடத்திட்டம், கல்விசார் கற்பிக்கும் முறையோடு அறிமுகப்படுத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திலும் அறிவியலிலும், கணிதத்திலும், சமூக அறிவியலிலும், மொழியிலும் கருத்துக்களை எளிதில் புரியும்படி சுருக்கமாகச் சொல்லிக் கொடுக்கும் கற்பிக்கும் முறை செயல்பாட்டிற்கு வரும். அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இங்கு தான் ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் என்ன இணைப்பு மற்றும் தொடர்பு என்ன என்பதை புரிந்து கொள்ளக்கூடிய நிலை இங்கு ஏற்படுத்தப்படும். 
இதற்கு அடுத்து தான் இடைநிலைக்கல்வி 4 ஆண்டுகள். இங்கு தான் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிய சுமைகள் நீக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இந்த பொதுத்தேர்வுகளைப் பற்றிய பயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தை மாணவர்கள், பெற்றோர்கள், சுற்றம், பள்ளி என அனைத்திலும் ஏற்படுத்துகிறது. ஒரு வருடம் படித்து, அதை மொத்தமாக மனப்பாடம் செய்து பள்ளி இறுதி பொதுத்தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்றால் தான் விரும்பிய உயர்கல்வி பயில இயலும் என்ற மனப்பாடச் சுமை மாணவர்களை அழுத்துகிறது. தோல்வியடைந்தால் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை. வெற்றி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டியில் சேர்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 23 ஐஐடி - களில் சேர்ந்த மாணவர்களில் 2461 மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நின்றிருக்கிறார்கள். இதில் 50 சதவிகிதம் 1290 பொதுப்பிரிவிலும், 1171 மாணவர்கள் SC. ST and OBC பிரிவில் இடை நின்றிருக்கிறார்கள். இதில் டெல்லியில் தான் 782 மாணவர்கள், கரக்பூரில் 622, மும்பையில் 263, கான்பூரில் 190, சென்னையில் 128. எனவே மனப்பாடக்கல்வியால், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது சென்னையைக் காட்டிலும் வடநாட்டில் தான் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இடைநிற்றலுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், புரிந்து படிக்காததினால் ஏற்படும் இடைவெளி முக்கிய காரணியாக இருக்கிறது. 
எனவே தான் இடைநிலைக் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து 12 -ஆம் வகுப்பு வரை, இந்தியா முழுமைக்கும் 4 ஆண்டுகளாக்கி ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை பரவலாக்கி, பாடத்திட்டத்தைச் சுருக்கி ஓர் ஆண்டுக்கு 2 செமஸ்டர் முறையில் தேர்வு வைத்து புரிந்து படிக்கக் கூடிய வாய்ப்பை மாணவர்களுக்குக்
கொடுக்க வேண்டும். அதிகமான பாடத்திட்டத்தின் அழுத்தத்தைக் குறைத்து, ஒன்றில் தோல்வியுற்றாலும், அடுத்த முறை ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் இடைநிற்றல் குறையும். தன்னம்பிக்கையோடு படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்குக் கொடுத்தால் கண்டிப்பாகப் புரிந்து படித்து அனைத்து பாடங்களிலும் நல்ல தேர்ச்சி பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 
சரி எதற்கு 3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு கணக்கீட்டு தேர்வு, செமஸ்ட்டர் தேர்வு. இதையும் வைத்துக்கொண்டு உயர்கல்விக்கு எதற்கு நுழைவுத்தேர்வு? கேள்வி நியாயமானதுதான். இரண்டு தேர்வையும் அரசு வைத்தால், தனது தேர்வு முறையின் மீதான நம்பிக்கை அரசுக்கு இல்லையென்பது தான் உறுதிப்படுத்தப்படும்.
ஒன்று பள்ளித் தேர்வை நம்பவேண்டும்; இல்லையென்றால் நுழைவுத்தேர்வை நம்பவேண்டும். எது சரி? அடுத்த தொடரில் பார்ப்போம். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
vponraj@gmail.com  
(தொடரும்)


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/ponraj.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/நாட்டின்-வளர்ச்சிக்கு-அடிப்படை-பள்ளிக்கல்வி-விஞ்ஞானி-வெ-பொன்ராஜ்-அப்துல்கலாமின்-முன்னாள்-அறிவியல்-3217632.html
3217607 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, August 20, 2019 10:30 AM +0530 முக நூலிலிருந்து....
• புழுதி கூட 
பறந்த வண்ணம் தான் இருக்கிறது... 
சரியான பாதை கிடைத்து
படரும் வரை.
தமிழ் உதயா

• ஏன்டா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா?
18 வது மாடி ஜன்னல இப்படி 
தொடைக்கணுமா?
இன்னும் பத்து நிமிஷத்துல பெய்யப் 
போற மழைல
எப்படியும் அது சுத்தமாகத்தான் போகுது. 
சுப்பா ராவ் சந்திரசேகர ராவ்

• நம்ம காலுக்கும், நடைக்கும், கனத்துக்கும்
தகுந்த மாதிரி செருப்பு வாங்கினா... 
நிம்மதியா நடக்கலாம்.
பாக்குறதுக்கு நல்லாருக்கு பிடிச்சிருக்குனு
எதையோ ஆசாசையா வாங்கிட்டு வந்து... 
போட்டு நடந்தா, 
செருப்பு காலை விட்டுப் போய்ட கூடாதேன்னு...
இழுத்துப் பிடிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி
நம்ம நடைய மாத்தி நடக்க வேண்டியிருக்கு!
லதா

சுட்டுரையிலிருந்து...
• சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரை போலாகுமா?
(ஊர்ல கரண்ட்-தண்ணி இல்லை, குண்டும் குழியுமா ரோடு, பஸ் போனா மூஞ்சில புழுதி, இருந்தாலும்)
அம்பாசமுத்திரம் to மங்களூர்
வி.ஸ்ரீதர்

• ஏகப்பட்ட நிறம் மாறினாலும்...
தன் தரம் மாறவில்லை, 
பணம். 
சுஜாதா கண்ணன்

• எதையும் ஈசியா எடுத்துக்கிறதுல
ஒரு பிரச்னை என்னன்னா...
என்னத்த வேணா பேசிட்டு,
இவன் தான் கண்டுக்க மாட்டானேன்னு
பேசி கஷ்டப்படுத்திருவாய்ங்க.
நான் மகான் அல்ல

• "நல்லா இருக்கியா''ன்னு கேட்டா ? 
"நல்லா இல்லன்னா என்ன பண்ணப் போற?''ன்னு
கேக்கிற மனநிலை இருந்தாலும்... 
"நல்லா இருக்கேன் மச்சான்''னு சொல்லதான் தோணுது. 
யார் மனசையும் 
புண்படுத்தக் கூடாது பாருங்க...
பகவான் ஈழ்.எட்டு

வலைதளத்திலிருந்து...
பயணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும், வெளிச்சமாய், இருட்டாய், ஈரமாய், வறட்சியாய், பசுமையாய், பாலைவனமாய் அது பரவவிடும் பாதைகள் அனைத்தையும் எழுத்தில் பதிந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை ! 
மனிதனுக்குப் பயணங்கள் சாத்தியமற்றுப் போயிருக்குமானால், அவனது ஆறாம் அறிவு இவ்வளவு கூர்மை பெற்றிருந்திருக்காது! மொழிகள் தழைத்து, கலாசாரங்கள் ஸ்திரப்பட்டு, மனிதனின் அறிவும் ஞானமும் விருத்தியானதற்கு, அவனது இடைவிடாத பயணங்களே காரணம். 
நாம் தீர்மானித்த இலக்கை விடப் பலபடங்கு அதிகமான ஆச்சரியங்களையும், புதிர்களையும் நாம் கடக்கும் பாதைகளில் நிரப்பி வைத்திருப்பவை பயணங்கள் !
பயணம் என்ற சொல்லை விட "யாத்திரை' என்னும் சொல் ஆழமானதாகத் தோன்றுகிறது. எப்படி வாழ்ந்தாலும் நிறைவு தோன்றாமல், வாழ்க்கையையே யாசிக்கும் பயணம்! "நாடோடி' இன்னும் மேன்மையாகத் தோன்றுகிறது. எந்த தேடுதலுமற்று, வாழ்க்கை பற்றிய தர்க்க, தத்துவங்களற்று இடம் பெயர்தல் மட்டுமே நோக்கமாய்க் கொண்ட ஒரு நாடோடியின் வாழ்க்கை பெரும்பேறு! மண்ணைத் தேடி, அதன் மனிதர்களை, அவர்களின் மொழிகள் மற்றும் கலாசாரங்களைத் தேடியலைந்த மனிதர்களால்தான் மனித குலம் கடந்த பாதை வரலாறாய் நிலைத்தது.
http://saamaaniyan.blogspot.com


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/rs.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/இணைய-வெளியினிலே-3217607.html
3217596 வார இதழ்கள் இளைஞர்மணி வாட்ஸ் ஆப் குழு...இணைவது உங்கள் விருப்பம்! DIN DIN Tuesday, August 20, 2019 10:26 AM +0530 இந்தியாவில் சுமார் 40 கோடி வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னுடைய குடும்பம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தனித் தனி குழுக்களை வைத்திருந்தால் குழுக்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டிவிடும்.
 பெரும்பாலானோர் "என்னுடைய ஒப்புதலின்றி வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்க்க வேண்டாம்' என்ற முகப்பு தகவல்களை வைத்துக் கொள்கின்றனர்.
 தேவையற்ற குழுக்களில் நீங்கள் உறுப்பினராகச் சேர்க்கப்படுவதில் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப் தீர்வு கண்டுள்ளது. இதற்காக உங்கள் வாட்ஸ் ஆப்பை முதலில் அப்டேட் செய்துவிட்டு, " செட்டிங்ஸ் -அக்கவுண்ட் ஆப்சன் - பிரைவசி - குரூப்ஸ்' கிளிக் செய்ய வேண்டும். அதில் "அனைவரும் (எவ்ரிஓன்), என்னுடைய தொலைபேசியில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் (மை கான்டாக்ட்ஸ்), யாருக்கும் அல்ல (நோபடி) என இடம்பெற்றிருக்கும்.
 "அனைவரும்' என்பதை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் உங்களை எந்தக் குழுவிலும் உங்கள் அனுமதியின்றி இணைக்கலாம். "மை காண்டாக்ட்ஸ்' என்பதை தேர்வு செய்தால் உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்பு எண்களில் உள்ளவர்கள் மட்டும் அவர்கள் இடம்பெற்றுள்ள குழுக்களில் உங்களை இணைக்கலாம். "நோபடி'யைத் தேர்வு செய்தால், யாராவது உங்களை ஒரு குழுவில் சேர்க்க முற்பட்டால் உங்களுக்கு தகவல் அளிக்கப்படும். அந்தத் தகவலைப் பரிசீலித்து குழுவில் சேர வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
 புதிய சேவை: இதேபோன்று, வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைவதற்கு கை ரேகையைப் பயன்படுத்தும் புதிய சேவையை வாட்ஸ் ஆப், தனது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. செல்லிடப்பேசியைப் பயன்படுத்த எப்படி திறக்கிறோமோ அப்படியே வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும். தனி மனிதனின் அந்தரங்க தகவல்கள் திருடுபோவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. கைரேகை மூலம் திறக்கப்பட்ட வாட்ஸ் ஆப், உடனடியாக அல்லது ஒரு நிமிடம் அல்லது 30 நிமிடம் இடைவெளிக்குப் பிறகு தானாக மூடிக் கொள்ளும். இதைப் பயன்பாட்டாளர்கள் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இதற்காக "செட்டிங்ஸ் -அக்கவுண்ட் ஆப்சன் - பிரைவசி - ஃபிங்கர்பிரிண்ட்' கிளிக் செய்ய வேண்டும்.
 அ.சர்ஃப்ராஸ்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/whatsup.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/வாட்ஸ்-ஆப்-குழுஇணைவது-உங்கள்-விருப்பம்-3217596.html
3217578 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 60 - தா.நெடுஞ்செழியன்   Tuesday, August 20, 2019 10:21 AM +0530 உலகில் எங்கு அதிகமாகக் காற்று வீசுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து வருகிறார்கள். கடல் மட்டத்துக்கு மேல் 260 அடி உயரத்துக்கும் மேலே காற்று மிக அதிக வேகத்தில் வீசுகிற 8 ஆயிரம் இடங்கள் உலகில் உள்ளன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கு காற்றாலைகளை நிறுவினால் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக கிளாஸ் - 3 வின்ட் என்று சொல்லக் கூடிய ஒரு மணி நேரத்தில் 15.4 மைல் வேகத்தில் வீசும் காற்று அதிக மின்சாரத்தை உருவாக்குகிறது. ஏறத்தாழ இது 72 டெரா வாட்ஸ் மின்சாரத்தை அதாவது 72 லட்சம் கோடி வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும். 1.2 டிரில்லியன் 60 வாட்ஸ் மின்சார பல்புகளையோ அல்லது 48 பில்லியன் பிரெட் டோஸ்டரையோ இயக்கத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும். 
பூமியில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு வானத்தில் உள்ள ஓசோன் லேயரைத் துளையிடுவதால், சூரிய ஒளி பூமியை அதிக அளவில் தாக்குகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை பன்மடங்கு உயர்ந்து பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும்விதமாக மேலை நாடுகளில் பூமியின் மேற்பரப்பில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடை பலநூறு கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் உள்ளே தள்ளுகிறார்கள். இது பாறைகளைத் தாண்டி பூமிக்குள் செல்கிறது. அவ்வாறு சென்ற கார்பன் டை ஆக்ஸைடு மீண்டும் மேல்தளத்துக்கு வருவதற்கு 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் கார்பன் டை ஆக்ஸைடு பூமிக்குள்ளேயே தங்கிவிடும். கார்பன் டை ஆக்ஸைடால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான கண்டுபிடிப்புகளின் தொழில்நுட்பங்களைப் பிறநாடுகளுக்கும் அளித்து உதவுகின்றன. 
எனர்ஜி என்விரான்மென்ட் துறையில் இது போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் முயற்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக, மேலைநாடுகளில் உள்ள மக்கள் மாசற்ற காற்றைச் சுவாசிக்க முடிகிறது. மாசில்லாத தண்ணீரை அருந்த முடிகிறது. நலமான வாழ்க்கையை வாழ முடிகிறது. 
ஆனால் நம்நாட்டில் சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதால், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என எல்லாரும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகிலேயே மிக அதிகமான சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த நகரங்களில் வாழும் மக்கள் பல நோய்களினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இம்மாதிரியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இத்துறை சார்ந்த பட்டப்படிப்புகள் உயர் கல்வியில் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்தேவைகளை உணர்ந்து அரசாங்கம் உயர் கல்வியில் இத்தகைய பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
ஆனால் வேலை வாய்ப்பு என்று சொல்லி கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் என்று பெரும்பாலான மாணவர்கள் படிக்கக் கூடிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. இதனால் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு இல்லை. அப்படிப்புகளின் தேவையை மாணவர்கள் உணரவில்லை. சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் படித்தால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிதலும் மாணவர்களுக்கு இல்லை. 
பொறியியல், மருத்துவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதில் வளர்ந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். 
"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' என்ற கல்விநிறுவனம் அகமதாபாத்தில் 1961-இல் தொடங்கப்பட்டது. 
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947-ஆம் ஆண்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் வெகு நெருக்கமாகப் பழகிய டாக்டர் விக்ரம் சாராபாய், பிலான்தெரபிஸ்ட் புரவலர் கஸ்தூரிபாய் லால்பாய், குஜராத் முதல்அமைச்சராக இருந்த ஜீவராஜ் மேத்தா போன்ற ஒரு சிலரின் முன்முயற்சிகளினாலும், மத்திய அரசு, மாநில அரசுகளினாலும், அகமதாபாத் பகுதியில் உள்ள தொழிலதிபர்களினாலும், வெளிநாடுகளில் உள்ள ஃபோர்ட் பவுன்டேஷன் மற்றும் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் ஒத்துழைப்பாலும் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் -அகமதாபாத் என்ற மேலாண்மைக் கல்விநிறுவனம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை உலகிலேலேய ஒரு சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக அது விளங்கி வருகிறது. இதைத் தொடங்கும்போது சொசைட்டி ஆக தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளானாலும் அதன் தொடக்க காலக் கட்டமைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று அப்போது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டது. குறிப்பாக இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு, அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கும்படி கட்டமைக்கப்பட்டது. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே இன்றைக்கும் இந்த கல்விநிறுவனம் உலகில் தலைசிறந்த ஒன்றாக உள்ளது. 
இதைப் போன்று, இந்தியாவில் உள்ள பிற ஐஐடி, ஐஐஎம் கல்விநிறுவனங்களும் உலக அளவில் சிறந்த கல்விநிறுவனங்களாக இருப்பதற்கும் இந்த அரசியல்தலையீடு இல்லாத நிர்வாக அமைப்பே காரணமாகும். 
ஐஐஎம்ஏ என்பது இந்தியாவின் முதல் மேலாண்மைக் கல்லூரியாகும். யூரோப்பியன் குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் சிஸ்டம் (EFQM) இவர்களை அங்கீகரித்துள்ளது. இந்த கல்விநிறுவனமானது மேலாண்மைத்துறையில் உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறது. மேலாண்மையை தனித்தன்மையுடன் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாலெட்ஜ் சென்ட்ரிக் (Knowledge-Centric) என்பதை உருவாக்க மிகக் கவனத்துடன் இந்தக் கல்விநிறுவனம் இந்நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் படித்த முன்னாள் மாணவர்கள், உலகின் பலதுறைகளில் பணிபுரிகிறார்கள். முடிவெடுக்கும் பல முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தனி முத்திரையை எல்லாத்துறைகளிலும் - அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் - பதித்து வருகிறார்கள். 
இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பகுதி நேர முதல் டைரக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சியாளர். 1961 முதல் 1965 வரை பகுதி நேர முதல் இயக்குநராக இருந்தார். தொழிலதிபரான கஸ்தூரிபாய் லால்பாய் போர்ட் ஆஃப் கவர்னரின் சேர்மனாக இருந்தார். இதில் முழுநேர முதல் டைரக்டராக ரவி ஜெ மத்தாய் 1965- 72 வரை பணியாற்றினார்.
அன்றையச் சூழலில் அப்போது அவசியமாக இருந்த வேளாண்மை, கல்வி, மருத்துவம், கூட்டுறவு, போக்குவரத்து, பொது மேலாண்மை, ஆற்றல், மக்கள் தொகை ஆய்வு போன்ற துறைகளை நிர்வகிக்கக் கூடிய திறமையான அதிகாரிகளை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக அப்போது இருந்தது. 
இந்த கல்விநிறுவனம் உலகிலேயே சிறந்த மேலாண்மை நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டது. குறிப்பாக மேலாண்மைத்துறை சார்ந்த கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கடைப்பிடித்த சிறந்த முறைகளை இந்த நிறுவனமும் கடைப்பிடித்தது. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் கற்பிக்கும் திறனை நமது நாட்டுக்கு ஏற்ப உருவாக்கி, அதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றுத் தந்தது. 
உலகின் சிறந்த கல்வி அளிக்கும் நிறுவனங்களின் தர வரிசை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும், உலக அளவில் உள்ள பலநாடுகளில் உள்ள கல்விநிறுவனங்களின் தர வரிசையில் 20 இலிருந்து 30 இடங்கள் வரையும் இக்கல்வி நிறுவனம் உள்ளது. 
இவர்கள் சமூக வளர்ச்சிக்காக எண்ணற்ற மையங்களை உருவாக்கியுள்ளார்கள். 
Centre for Management in Agriculture (CMA), 
Ravi J. Matthai Centre For Educational Innovation 
(RJMCEI),Centre For Innovation Incubation & Entrepreneurship (CIIE), Centre For E Governance, Centre for Management of Health Services (CMHS என்று பல்வேறு மையங்களை உருவாக்கி அவற்றில் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். 
தற்போது இக்கல்விநிறுவனத்தில் கீழ்க்காணும் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழுக்களாக ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். மேற்குறிப்பிட்ட மையங்கள் தவிர, பிசினஸ் பாலிஸி, கம்யூனிகேஷன், எகனாமிக்ஸ், ஃபினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், மனித வள மேம்பாடு, இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங், Organizational Behaviour, Production and Quantitative Methods, Public Systems Group என்று பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/20/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/20/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்-60---தாநெடுஞ்செழியன்-3217578.html
3212824 வார இதழ்கள் இளைஞர்மணி விளையாட்டில் சாதனை...விருதுநகரிலிருந்து பூடானுக்கு! Tuesday, August 13, 2019 12:05 PM +0530 மாணவர்கள் விளையாடினால் படிப்பு வீணாகிவிடும் என தற்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைக்கும் காலமாக இருக்கிறது. அதுவும் ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்பு மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்காக வெளிநாட்டிற்கு விளையாடச் சென்றார்கள் என்பது வியப்புக்குரிய செய்திதான்.
 அப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.கிருபாகரன், எஸ்.பிரகாஷ் (பிளஸ் 2), எஸ்.மோகன்ராஜ், எஸ்.ராஜேஸ், எம்.காளீஸ்வரன் (பிளஸ் 1), எஸ்.சிரஞ்சீவி (9ஆம் வகுப்பு) ஆகியோர்தான் அந்த சாதனை மாணவர்கள். கைப்பந்து விளையாட 11 பேர் தேவை. இதில் ஆறு பேர் ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
 இது குறித்து பள்ளியின் தாளாளர் ஏ.ஞானசேகரன் கூறியதாவது:
 "எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அந்த விளையாட்டில் பயிற்சி அளிப்போம். கைப்பந்து விளையாட்டில் இந்த ஆறு மாணவர்களுக்கும் ஆர்வம் உள்ளதைக் கண்டறித்து முரளி என்ற பயிற்சியாளரை சிறப்புப் பயிற்சி அளிக்க நியமித்தோம். தொடர்ந்து மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, சரிவிகித உணவு வழங்கப்பட்டதால், பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளிலும், மண்டல அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
 தமிழ்மாநில கிராமப்புற இளைஞர் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு கழகம், 2019 ஏப்ரல் 24-ஆம் தேதி 5 -ஆவது மாநில அளவிலான கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டிகளை கருர் மாவட்டம் தரகம்பட்டியில் நடத்தியது.
 இதில் எங்கள் பள்ளி மாணவர்கள் ஆறு பேரும் 17 வயதுக்குள்பட்டோர் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம், தேசியப் போட்டிக்கு தகுதி பெற்று தமிழ்நாடு அணியில்இடம் பிடித்தனர். தேசியப் போட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 2019 மே 31 -ஆம் தேதி முதல், ஜூன் 2 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியைக் "கிராமப்புற விளையாட்டுக்கள் மற்றும் இந்திய விளையாட்டுக்கழகம்' நடத்தியது. இதில் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநில அணியை தமிழ்நாடு அணி வென்று தங்கப்பதக்கம் பெற்றது. இதில் எங்கள் பள்ளி மாணர்கள் ஆறு பேரும் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். இதையடுத்து எங்கள் பள்ளி மாணவர்கள் இந்திய அணியில் விளையாட இடம் பிடித்தனர். பின்னர் இந்தியா-நேபால் விளையாட்டுக்கழகம் சார்பில் ஜூன் 25-ஆம் தேதி காட்மண்டுவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இதில் சிறப்பாக விளையாடிய எஸ்.கிருபாகரன் மற்றும் எஸ். மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
 ஆசிய அளவிலான 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கைப்பந்து விளையாட்டில், விளையாட இந்த மாணவர்கள் தகுதி பெற்றதையடுத்து, "தமிழ்நாடு கிராமபுற இளைஞர் விளையாட்டுக்கள் மற்றும் விளையாட்டுக்கழகம்' மாணவர்களைப் பாராட்டியது.
 ஆசிய அளவிலான போட்டி பூடான் நாட்டில் நடந்தது. அந்தப் போட்டியிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டது எங்களுக்குப் பெருமையாக உள்ளது'' என்றார் ஞானசேகரன்.
 - ச.பாலசுந்தரராஜ்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/vnr.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/விளையாட்டில்-சாதனைவிருதுநகரிலிருந்து-பூடானுக்கு-3212824.html
3212883 வார இதழ்கள் இளைஞர்மணி காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்! DIN DIN Tuesday, August 13, 2019 11:01 AM +0530 அரசுப் பணி என்றால் நல்ல சம்பளம், பணி நிரந்தரம், குடும்பம் வறுமையின்றி வாழலாம் என பலர் அரசுப் பணிக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பணி ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெற்று பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதையே வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதற்கு மாறுபட்ட வகையில் சிந்திக்கிறார் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கே.ஜி. மோகன்குமார்.
 மனமும் உடலும் வலிமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதற்காக இவர், இயற்கை, மலை, காடுகள், பறவைகள், விலங்குகளைத் தேடி படம் எடுப்பதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் செய்து, எடுத்த பல்வேறு அரிய புகைப்படங்களை "ஒரு சாதாரண மனிதன், புலி மனிதனாக மாறுதல்' (இர்ம்ம்ஹய் ஙஹய் ஆங்ஸ்ரீர்ம்ங்ள் பண்ஞ்ங்ழ் ஙஹய்) என்ற புத்தகத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டார்.
 அப்போது, அவர் தன்னுடைய தேடல் குறித்து கூறியதாவது:
 "எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த பின், விருதுநகரில் மின்வாரியத்தில் இளம்மின் பொறியாளராகப் பணி புரிந்தேன். கடந்த 2008 -இல் எனது மனைவி உயிரிழந்து விட்டார். அப்போது நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த தனிமையை மறக்க வேண்டும். மனமும், உடலும் வலிமை பெற வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்று தீர்மானித்தேன்.
 இந்நிலையில், குற்றாலம் அருகே கும்மாரொட்டி நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் பெரிய விலங்கு இருப்பதாக அங்கிருப்போர் தெரிவித்தனர். நான் மரத்தின் மீதிருந்த பெரிய காட்டு அணிலை சாதாரண கேமராவில் படம் எடுத்தேன். இந்தப் படத்தை எனது மகளின் நண்பர் நந்தினி என்பவர் ஒரு வார இதழுக்கு அனுப்பி விட்டார். அந்த படம் தான் என்னை முதன் முதலில் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியது. இதைத் தொடர்ந்து இயற்கை தொடர்பான படங்கள், பறவையினங்கள், விலங்கினங்களை தேடிச் சென்று படம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
 இதனால், இந்தியா முழுவதும் கிராமங்கள் வழியாக ஒரு லட்சம் கி.மீ. காரில் பயணம் செய்தேன். அப்போது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள காடுகளில் வனத்துறை அனுமதியுடன் பயணம் செய்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். என் பயணம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவுற்ற போதும் என்னால் புலியைப் படம் எடுக்க முடிய வில்லை.

மத்தியபிரதேசம், பந்தேல்கர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு புலியை முதன் முதலாகப் படம் எடுத்தேன். அதைத் தொடர்ந்து பல்வேறு பறவை இனங்கள் மற்றும் யானை உள்ளிட்ட விலங்கினங்களைப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும், ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை, சிறுத்தை மற்றும் சிங்கங்கள் உள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு காடுகளில் பயணித்து, 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.
 தற்போது, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பக தோப்பு உள்ளிட்ட காடுகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு மற்றும் பாட்டில்களால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் அதையும் மீறி சிலர் இது போன்ற தவறுகளைச் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள காடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில், நிகழாண்டு புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, காடுகள், பறவைகள், விலங்கினங்களைப் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சாதிப்பதற்கு வயது என்பது ஒரு தடை அல்ல'' என்றார் அவர்.

-வெ.முத்துராமன்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/im5.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/காடுகளில்-11-ஆண்டுகள்50-ஆயிரம்-புகைப்படங்கள்-3212883.html
3212882 வார இதழ்கள் இளைஞர்மணி கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி! DIN DIN Tuesday, August 13, 2019 10:57 AM +0530 நோயாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் அவர்களே வேறு யாரின் துணையில்லாமல் தங்களது கை மணிக்கட்டு அசைவாலேயே இயக்கிக் கொள்ளும் வகையில் சக்கர நாற்காலியை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகமான என்.ஐ.டி.யில் வேளாண்மை, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி,நவீன வாகனங்கள் உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குரிய ஆராய்ச்சி தொடர்பான போட்டிகள் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2019' என்ற தலைப்பில் நடைபெற்றன. ஜூலை 8 -ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் ஜூலை 12 -ஆம் தேதி நிறைவுற்றன. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தன. இப்போட்டியில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஜி.ஹெச்.ரெய்சானி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த கை மணிக்கட்டு அசைவு சக்கர நாற்காலியானது சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசை வென்றது.
முதியோர்,நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் நடக்க முடியாத நிலையில் அவர்களுக்கு இருசக்கர நாற்காலிகளின் தேவை அவசியமானதாகும். இதை தங்களது கைகளாலேயே இயக்கும் அளவுக்கு உடலில் சக்தி இல்லாத நிலையில் பிறரது உதவியால் மட்டுமே சக்கர நாற்காலிகளை இயக்க முடியும். இதற்கு முடிவு கட்டும் வகையில் இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
நாற்காலியில் இருப்பவர் மோட்டார் பொருத்தப்பட்ட கருவியை (கண்ட்ரோலர் பாக்ஸ்) வலது கை மணிக்கட்டில் பொருத்திக் கொண்டு மணிக்கட்டை எந்தப் பக்கம் அசைக்கிறாரோ அந்தப் பக்கம் சக்கர நாற்காலி திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ப்ளூடூத் மூலமாக இணைக்கப்பட்டால் 50 மீட்டர் தூரத்தில் இருந்தும் இச்சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதி. 
இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்த மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஜி.ஹெச்.ரெய்சானி பொறியியல் கல்லூரி மாணவர்களின் அணித் தலைவரான மந்தார் தோப்ரே கூறியது:
"மருத்துவமனையில் உள்ள இருசக்கர நாற்காலிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாது. பிறரது துணையோடுதான் பயன்படுத்த முடியும். இதே நிலையில்தான் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர நாற்காலிகளும் உள்ளன.
இச்சக்கர நாற்காலியில் நாங்கள் கண்டுபிடித்துள்ள இரு மோட்டார்களில் ஒன்றை நாற்காலிக்கு அடியிலும், மற்றொன்றை நாற்காலியில் அமர்பவரின் வலது கை அல்லது இடது கை மணிக்கட்டில் பொருத்திக் கொள்ள வேண்டும். 
கை மணிக்கட்டின் அசைவுகளால் வேறு யாரின் துணையில்லாமலும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவரே இயக்க முடியும். கை மணிக்கட்டை எந்தப்பக்கம் அசைக்கிறோமோ அந்தப் பக்கம் மட்டுமே நாற்காலி நகரும்.
இதை நாற்காலியில் இருப்பவரே கையில் வைத்துக் கொண்டும் இயக்கலாம் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரும் அவர்களது கையில் பொருத்திக் கொண்டு ப்ளூடூத் மூலம் நாற்காலியில் இருப்பவரை 50 மீட்டர் தூரம் வரை தங்களுக்கு அருகிலும் வரவழைக்க முடியும்.
மோட்டார் பொருத்தப்பட்ட இரு கருவிகளும் அதிக எடை இல்லாதவை. இதற்கு ஆகும் செலவு ரூ.15 ஆயிரம் மட்டுமே. தற்போதுள்ள இருசக்கர நாற்காலிகளிலும் பொருத்திக் கொள்ளலாம். எங்களது இக்கண்டுபிடிப்பு சிறந்த பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் என பலருக்கும் இக்கருவி ஒரு வரப்பிரசாதமாகும்'' என்றார் அவர். 
- சி.வ.சு. ஜெகஜோதி
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/chair.jpg கை மணிக்கட்டு சக்கர நாற்காலியைக் கண்டுபிடித்த நாக்பூர் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் அணியின் தலைவர் மந்த்ரா தோப்ரே (அமர்ந்திருப்பவர்) https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/கை-அசைவால்-இயங்கும்-சக்கர-நாற்காலி-3212882.html
3212879 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, August 13, 2019 10:47 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்ற பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளை கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லையே என்கிறார். இதை அடுத்து புரொபஸரிடம் வேறென்னவெல்லாம் நோய்க்குறிகள் தென்படுகின்றன என சொல்லும் ஜூலி அவர் ஒரு locavore ஆகி விட்டதாய் சொல்கிறது. அதென்ன?
சேஷாச்சலம்: ஓ... லோக்காவோர் ஆகி விட்டாரா?
ஜூலி: ஐயய்யோ...
கணேஷ்: அப்போ எங்க சார் செத்துடுவாரா?
சேஷாச்சலம்: சேச்சே ... ஆனால் அவருக்கு ஆக்கிப் போட முடியாம அவரோட ஆத்துக்காரி தான் செத்துடுவாங்க...
நடாஷா: that’s sad
கணேஷ்: எனக்குப் புரியல...
சேஷாச்சலம்: நான் விளக்குகிறேன். Locavore is a person whose diet consists only or principally of locally grown or produced food. அப்படீன்னா, உள்ளூரில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்பவர் தான் ஒரு லோக்கோவோர். உள்ளூர் உணவு எனும் ஓர் இயக்கம் இன்று வெளிநாடுகளில் பரவலாகி உள்ளது. இந்தியாவில் கூட உள்ளூர் உணவுப்பொருட்களை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தும் உணவகங்கள் உள்ளன. இவர்களின் கொள்கை 100-250 மைல் சுற்றுப்பரப்புக்குள் விளையும் உணவுப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது. பால் வேண்டுமா, பாக்கெட் பால் வாங்காமல் சுற்றுவட்டாரத்தில் பாலை கறந்து விற்பவர்களை அணுகுவது. பழங்களை சூப்பர் மார்கெட்டில் வாங்காமல் தெருவோர சின்னக் கடைகளில் உள்ளூர் பழங்களாகப் பார்த்து வாங்குவது. இப்படி ஒவ்வொரு சின்ன உணவுப்பொருளிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். எண்ணெய் வேண்டுமா? பக்கத்தில் செக்கில் ஆட்டி விற்கும் எண்ணெய்யை வாங்குவார்கள். 
கணேஷ்: உப்பு, சர்க்கரை, தேயிலை?
சேஷாச்சலம்: இவர்களில் சிலர் purist ஆக இருப்பார்கள். ரொம்ப கறாரான ஆசாமிகள். இவர்கள் டீ, காபி, சாக்லேட் எதையும் தொட மாட்டார்கள். உங்க சார் எப்படி? 
கணேஷ்: மேடம் வாங்கிக் கொண்டு வந்த அரிசி, எண்ணெய், மளிகைச் சாமான்களை சாக்கடையில் கொண்டு கொட்டி விட்டார். ரெண்டு நாளா வீட்டில் சமையலே நடக்கலை. தினமும் யுத்தம் தான். சார் இவங்க ஏன் இப்படி இருக்காங்க?
சேஷாச்சலம்: உள்ளூர் உணவை உட்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும், உள்ளூர் வியாபாரிகள் பயனடைவார்கள் மற்றும் சூழலுக்கும் நல்லது. சரி வேறென்ன? 
கணேஷ்: சமீபமா இன்னொரு பிரச்னை, அதுவும் சமீபத்தில் ராணுவத்தினர் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, சார் ஓவரா தேச பக்தி காட்டுகிறார். டிவியில் தன் தலைவர் வந்தால் எழுந்து சலூட் பண்ணுகிறார். படுக்கை விரிப்பில் கூட பெரிசாய் தேசக்கொடியை பிரிண்ட் பண்ணி அதில் தான் தூங்குகிறார். இதனால அவருக்கும் மேடமுக்கும் தினமும் சண்டை. அவங்க தனியா போய் ஹாலில் படுத்து தூங்குறாங்க.
சேஷாச்சலம்: I am not surprised. He has turned into an ultranationalist. It may not be a direct symptom, ஆனால் பதற்றப்படும் பலரிடம் இந்த இயல்பைப் பார்க்கிறேன். 
புரொபஸர்: தேசப்பற்று தப்புங்கிறியா? 
சேஷாச்சலம்: தேசப்பற்று is patriotism. அதாவது தன் தேசத்தின் நல்ல விசயங்கள் குறித்து பெருமை கொள்வது. காந்தியும் தேசப்பற்றாளர்தான். ஆனால் இந்தியாவின் குற்றங்குறைகளைப் பற்றி பேசவும், reform பண்ணவும், அதாவது சீர்திருத்த, அவர் தயங்கவில்லை. ஆனால் தேசத்தின் பெயரில் நடக்கும் அநீதியைக் கூட கண்மூடித்தனமாய் ஆதரிப்பவர்கள் patriots அல்ல, they are nationalists. அதாவது தேசியவாதிகள். குடிமக்களின் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கூட அவர்கள் தேசபாதுகாப்பு / முன்னேற்றம் எனும் பெயரில் ஆதரிப்பார்கள். ஆனால் ultranationalist என்று ஒன்று உள்ளது. அது ஒரு மிகையான தேசியவாதம். இப்படியான அல்ட்ரா-நேஷனலிஸ்டுகளுக்கு என்று சில அடிப்படையான இயல்புகள் உண்டு. அவர்கள் எதேச்சதிகாரம் கொண்ட தலைவர்களைக் கொண்டாடுவார்கள். தம் தலைவர், அவரது கட்சி, தம் தேசம் இம்மூன்றும் ஒன்றே என நம்புவார்கள். அதாவது தலைவருக்கோ கட்சிக்கோ எதிராய் ஒரு சின்ன மாற்றுக்கருத்து வந்தால் கூட அது தம் தேசத்தை அவமதிப்பது என நினைத்து கொதிப்படைவார்கள். 
மேலும் இவர்களிடம் ஒருவித xenophobia இருக்கும். எந்த பிரச்னை எழுந்தாலும் அதன் வேர் என்னவென ஆராயாமல் அதை இந்த ஸீனோபோபிக் மனநிலையிலே எதிர்கொள்வார்கள். 
கணேஷ்: அதென்ன டாக்டர் xenophobia?
(இனியும் பேசுவோம்) 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/eng.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-204---ஆர்அபிலாஷ்-3212879.html
3212878 வார இதழ்கள் இளைஞர்மணி விதி DIN DIN Tuesday, August 13, 2019 10:43 AM +0530 என்னுடைய வாழ்க்கையிலேயே பல கட்டங்களில் விதி என்று நியாயப்படுத்தப்பட்டவற்றை என் முயற்சியின் மூலம் நான் தாண்டி வந்திருக்கிறேன். சார்பாக நடந்தால் திறமை என்றும், எதிராக நடந்தால் விதி என்றும் நாம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம். மாயை என்கிற சொல் இல்லாதது என்கிற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் குறியீடு. "நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்கின்ற திருக்குறளுக்குக் கூட, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பொருள் கொள்ளாமல் நேற்று இருந்த மாதிரி அவன் இல்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று அவன் ஒரு கல்லாக இருந்திருக்கலாம். இன்று சிற்பமாகி இருக்கலாம். நேற்று முள்ளாக இருந்திருக்கலாம். இன்று மலராக இருக்கலாம். நேற்று பெண்ணாக இருந்திருக்கலாம். இன்று தாயாகி இருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு முன் இருந்த உலகம் இப்போது இல்லை. பல மாற்றங்களை அது அடைந்திருக்கிறது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டுமே தவிர, அதனால் எல்லாம் வீண் என்று சொல்லிச் சுழலுகிற பூமியை நிறுத்திவிட்டு இறங்க முற்படுகிறது அறிவுடைமையாகாது.
 எங்கெங்கெல்லாம் விதிகள் மக்களின் தலைவிதி என்று சொல்லப்படுபவற்றை நியாயப்படுத்துகின்றனவோ அவற்றை அனைவரின் ஒத்துழைப்போடு உடைத்து எறிய வேண்டும். எந்த விதி உடைக்கப்பட வேண்டும் என்பதும், எந்தவிதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் அவற்றின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது.
 சுப்ரபாரதி மணியன் தொகுத்த "இறையன்பு வாசக அனுபவம்'
 என்ற நூலிலிருந்து...

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/VITHI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/விதி-3212878.html
3212875 வார இதழ்கள் இளைஞர்மணி அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்) DIN DIN Tuesday, August 13, 2019 10:31 AM +0530 மிச்சமெல்லாம் உச்சம் தொடு 30

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான். 
- திருக்குறள் 972
எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரு தன்மையானதே. ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்கிறது திருக்குறள். 
"பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை; செய்யும் செயலினால் தான் ஏற்றத்தாழ்வு' என்பது தான் நமது திருவள்ளுவர் தந்த உலக பொது மறை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றால், பிறப்பினால் அடையாளப்படுத்தப்படும் சாதி வேற்றுமை தவறு என்பது தான் சரி. செய்யும் தொழிலை வைத்து காலப்போக்கில் ஒருவன் தாழ்ந்த சாதி என்றும், இன்னொருவனை உயர்ந்த சாதி என்றும் அழைக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. செய்யும் செயல் தொழிலாகி, அதுவே அவர்களது சாதியாகி, அவர்களை அந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள், அதனால் ஏற்படும் பெருமை மற்றும் சிறுமைகள், வேறுபாடுகள் இவை யாவும் அரசியல்ரீதியான வாய்ப்புகளாக மாற்றப்பட்டு இன்றைக்கு புரையோடிய பழமைவாதங்களுக்கு அடிமைப்பட்டு, பழம்பெருமை பேசி, அதை வைத்து அரசியல் நடத்தும் நிலைக்கு நாம் பின்தள்ளப்பட்டுவிட்டோம். 
"சாதி ஒரு நாளும் நம்மைச் சாதனையாளனாக்கவில்லை; மதம் நம்மை மனிதனாக்குவதற்கு தானே ஒழிய, மதம் பிடித்து அலைவதற்காக அல்ல; அறிவு ஒன்றுதான் நம்மை மகானாக்கும்' என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது. இதை உணராவிட்டால், நாம் நம்மை நாமே சாதி, மத, இன வேறுபாடு என்ற குழிக்குள் தள்ளி, அறிவால் உயர்ந்த உலக நாடுகளுக்கு நாம் அடிமையாவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது. 
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் 
கடையரே கல்லா தவர். 
-திருக்குறள் 395 
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று- மேலும் கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் - கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். 
உயர்ந்தவர்கள் யார் என்பது, அவர்களது செயலில் தெரியும். அதாவது கல்வி கற்றலினால் கிடைத்த அறிவையும், அதனால் வெளிப்படும் தன்னம்பிக்கையையும், தன்னம்பிக்கையால் வெளிப்படும் தைரியத்தையும், அந்த தைரியத்தால் இந்த சமுதாயத்திற்கு விளையும் நன்மையையும் பொருத்து, அவர்கள் உயர்ந்தவர்களாவார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, செய்யும் செயலால் தான் உயர்வு தாழ்வு உருவாகிறது எனும் போது பிறப்பால் ஒருவனை உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் பிரிப்பது அறிவற்ற செயல் என்பதைத் தவிர வேறில்லை. 
இதை நாம் உணர்ந்து கொண்டால், பரம்பரை பரம்பரையாகப் பிறப்பால் உயர்ந்த சாதி, பரம்பரை பரம்பரையாக ஆதிக்க சாதி, பரம்பரை பரம்பரையாக பிறப்பால் தாழ்ந்த சாதி என்று சொல்லித் திரிவதெல்லாம் சுத்தமான மடமை என்பது புரியும். 
ஒரே சாதி என்று ஒன்றுவிட்ட சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்து நாங்களெல்லாம் கலப்பற்ற ஒரே மரபணு என்று சொல்லி அதைக் கடைப்பிடிப்பவர்கள், தொடர்ந்து வியாதிகளால் தொடர் அழிவை சந்தித்திருக்கிறார்கள் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. 
ஆணும் பெண்ணும் இணையும் போது மரபணு பரிமாற்றம் தானாகவே நடைபெறுகிறது. ஒரு சில மரபணுக்களால் ஒரு சில வியாதிகளும், குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும், ஒரு சில செயல்களும், ஒரு சில உருவ ஒற்றுமைகளும், அந்த பரம்பரையில் வழிவழியாக வந்த மரபணுக்களின் வெளிப்பாடாக விளையும். அடுத்த தலைமுறையில் அல்ல; அடுத்தடுத்து வரும் ஏதோ ஒரு தலைமுறையில் அதன் வெளிப்பாடு தெரிய வரும். அதனால்தான் திருமணம் என்றால் அதற்கென்று ஒரு வரைமுறையையும், உறவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். நெருங்கிய சொந்தத்தில் தொடர்ந்து திருமணம் செய்யக்கூடாது, அவ்வப்போது அந்நியத்தில் மாற்றித் திருமணம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது குறைபாடுடைய மரபணுவால் ஏற்படும் ஒரு சில குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குத்தான். 
இன்றைக்கு குறைபாடுள்ள மரபணுக்களைக் கண்டறிந்து அதை மாற்றி பரம்பரை வியாதிகளைத் தவிர்ப்பதற்கும், ஒரு மனிதனை அனைத்துவிதங்களிலும் ஆரோக்கியமானவனாக மாற்றி அமைக்கும் மரபணு பொறியியல் CRISPR/
Cas9 (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) என்ற தொழில்நுட்பம் மரபணு ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் Cas9 புரோட்டினும், Guide RNAயும் இருக்கின்றன. இந்த Cas9  புரோட்டின் DNA வை வெட்டுவதற்கும், Guide RNA எந்த மரபணு வரிசையை மாற்றுவது என்பதைக் கண்டறிவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் வியாதியை உருவாக்கும் மரபணு வரிசையை ஹீமன் ஜினோமில் இருந்து முதலில் கண்டறிவார்கள். 
பின்பு அந்த குறிப்பிட்ட மரபணுவை உணரக் கூடிய Guide RNA - வை உருவாக்கி, டி. என். ஏவில் இருக்கும் A's, T's, G’s, C’s வரிசையைக் கண்டறிந்து, Guide RNA, டி.என். ஏ வை வெட்டும் என்சைம் Cas9 உடன் இணையும். உருவாக்கப்பட்ட இந்த இணைப்பை, பின்பு எந்த டார்கெட் செல்லில் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்துவார்கள். இந்த இணைப்பு எந்த மரபணு வரிசையை மாற்ற வேண்டுமோ, அதைக் கண்டறிந்து அந்த டி.என்.ஏ வை வெட்டும். அப்போது ஹியுமன் ஜினோமில் இருந்து நல்ல மரபணுவை எடுத்து வெட்டப்பட்ட பகுதியில் ஒட்டி விடுவார்கள். 2012- இல் உருவாக்கப்பட்ட இந்த மரபணுவை மாற்ற, வெட்ட, ஒட்ட, இணைக்கப் பயன்படும் CRISPR/Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இனிமேல் பரம்பரை வியாதிகளைக் குணப்படுத்தவும், நோயாளிகளை பெரும் வியாதிகளில் இருந்து குணப்படுத்தவும் சாத்தியமாகிறது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் ஆராய்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 7 மிகப்பெரிய வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய ஆராய்ச்சிகளில் இந்த உலகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த CRISPR/Cas9 தொழில் நுட்பத்தின் மூலம் ஈஸோபேகஸ் கேன்சரைக் குணப்படுத்த சீனா மருத்துவ சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. இதுவரை கேன்சரால் பாதிக்கப்பட்ட 86 பேரைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏப்ரல் 2019- இல் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கேன்சரை உருவாக்கும் PD1 புரோட்டினை வெட்டி எடுத்து கேன்சரைக் குணப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரத்தத்தில் பிராண வாயு கலந்து செல்லத் தடையாக இருக்கும் ரத்த குறைபாட்டு நோயை உருவாக்கும் பீட்டா-தலசீமீயா மற்றும் சிக்கில் செல் வியாதியைக் குணப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 
பரம்பரை மரபணு பிறழ்வினால் உருவாகும் கண் தெரியாமல் போய்விடும் இந்த நோயை இது வரை குணப்படுத்த வழியில்லாமல் இருந்தது. எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கண் மருத்துவமனைக்கு அனுப்பி இதைக் குணப்படுத்த இப்போது வழியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பல பேரை எனக்குத் தெரியும். அவர்களுக்கு இப்போது CRISPR/Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த நோய்க்கு காரணமான மரபணுப் பிறழ்வைக் குறிவைத்து குழந்தைகள் முழுவதுமாகப் பார்வைத் திறனை இழக்கும் முன்பு, ஒளி உணரும் செல்களை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். 
இதே போல் எய்ட்ஸ், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், மஸ்குலர் டிஸ்ரோபி, ஹின்டிங்க்டன் வியாதி போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கூடிய சீக்கிரம் அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு இது முழுவதுமாக செயல்பாட்டிற்கு மருத்துவத்திற்கு வரும் போது, ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாக்கப்படும். 
அறிவு ஆரோக்கியத்தை உருவாக்குகிறது. சாதி ஆரோக்கியத்தை ஒழிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி மூலம் பரம்பரை வியாதியைக் குணப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இந்த உலகம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. 
பிறப்பால் வரும் பரம்பரை நோயில் இருந்து உடல் நலம் பெற அறிவியல் ஆராய்ச்சி வித்திடுகிறது. வியாதிக்குக் காரணமான மரபணுவை மாற்றி உடல் நோயற்ற உலகத்தை உருவாக்க உலகில் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன. 
சாதி என்ற மனநோயை விரட்ட கல்வி என்ற அருமருந்து அனைவருக்கும் தரமாகக் கிடைக்க வேண்டும். நம் சமுதாயம் அறிவில் முன்னேறவேண்டும். சாதி, மதம், இனம் என்ற இன்றைய குறுகிய பார்வையிலிருந்து மீண்டு ஓர் அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்ததில் பிறந்தது தான் டாக்டர் அப்துல் கலாமும், நானும் இணைந்து எழுதி 2014- இல் வெளியிடப்பட்ட Manifesto for Change என்ற புத்தகம். 
பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை எப்படி மாற்றி அமைத்தால் இன்றைய மாணவர்கள் ஓர் அறிவார்ந்த மாற்றத்தை அடைய முடியும் என்று சிந்தித்தோம். 40 நாடுகளிலும், இந்தியாவிலும், தமிழகத்திலும் பல்வேறு பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு, வளர்ந்த இந்தியாவை, அறிவில் சிறந்த வல்லரசு இந்தியாவை உருவாக்கவேண்டும் என்றால், இன்றைய கல்விமுறையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர வேண்டும். அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் எப்படிப்பட்ட மாற்றத்தை இந்த நாடு அடையவேண்டுமோ, அந்த மாற்றத்தைக் கல்விமுறை மாற்றத்தில் இருந்து தொடங்கினால்தான் அடைய முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்ததின் விளைவுதான், நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்த கல்விக்கொள்கை. 2016-இல் இந்திய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறை தேசிய கல்விக்கொள்கை 2016 -இன் வரைவை வெளியிட்டு மக்கள் கருத்தைக் கேட்டபோது 30 செப்டம்பர் 2018-இல் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமும், நானும் இணைந்து உருவாக்கிய கல்விக்கொள்கையைச் சமர்ப்பித்தேன். 
2019 -இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக்கொள்கை - 2019 எங்களது பரிந்துரையில் 75 சதவிகிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி. அதே சமயத்தில், இந்த வரைவு கல்விக்கொள்கையில் ஆங்காங்கே பல்வேறு முரண்பாடுகள், சில திணிப்புகள், வேறுபாடு கொண்ட சித்தாந்தங்கள், மாநில உரிமை மறுப்புகள் போன்ற பல்வேறு மாற்றப்பட வேண்டிய கொள்கைகளும் காணப்படுகின்றன. அவற்றைக் களைந்து சரி செய்தால், இந்த "தேசிய கல்விக்கொள்கை 2019' ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அறிவார்ந்த இந்திய சமுதாயத்தை உருவாக்கும். அடுத்த அடுத்த தொடர்களில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியின் கொள்கைகளைப் பற்றி பார்ப்போம். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@gmail.com. 
(தொடரும்)


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/im4.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/அறிவால்-உருவாகும்-ஆரோக்கிய-சமுதாயம்-விஞ்ஞானி-வெ-பொன்ராஜ்-அப்துல்கலாமின்-முன்னாள்-அறிவியல்-ஆலோசகர்-3212875.html
3212861 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, August 13, 2019 10:04 AM +0530 ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: Technician Gr-II (Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் "சி' உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Manager (Veterinary) - 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700
தகுதி: Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று யங்ற்ங்ழ்ண்ய்ஹழ்ஹ் இர்ன்ய்ஸ்ரீண்ப்-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
General Manager, Virudhunagar District Co-operative Milk Producers
Union Limited, Srivilliputtur. 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.08.2019

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி
நிறுவனத்தில் வேலை
பணி: Joint Director - 09
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
பணி: Deputy Director (F &A) - 03
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
பணி: Accounts Officer  - 05
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar, 2nd Floor, Head Office, NIFT Campus, Hauz khas, Near Gulmohar Park, New Delhi - 110016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://nift.ac.in/sites/default/files/2019-06/Advt._Gr.%20A%20Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.08.2019

மகாராஷ்டிரா வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 46
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Law Officers  - 25
வயதுவரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Officers - 12 
பணி: Fire Officers - 01
வயதுவரம்பு: 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager Costing - 01
பணி: Economist - 01
பணி: Information System Auditors  - 05
வயதுவரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofmaharashtra.in/downdocs/WEBSITE%20RECRUITMENT%20OF%20SPECIALIST%20OFFICERS111.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.08.2019

செயில் நிறுவனத்தில் வேலை
பணியிடம்: ரூர்கேலா
மொத்த காலியிடங்கள்: 361 
பணி: Specialist (E-3) - 12
1.Radiologist- 03
 2.Pathologist- 03
 3.Biochemistry- 02
 4.Microbiologist- 02
 5.Lab Medicine - 02
பணி: Medical Officer (E-1) - 08 
பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) - 03
பணி: Nursing Sister (Trainee) - 234
பணி: Technician–Laboratory (Trainee) - 81
பணி: Attendant - Dressers (Trainee) -10 
பணி: Laundry Operator (Trainee) - 04 
பணி: Dresser–Burn & Plastic (Trainee) - 02 
பணி: Photographer (Trainee) - 01 
பணி: Dietician (S-3) - 02 
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும். 30 வயது முதல் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sailcareers.com/media/uploads/ADVT_NO.04_2019_MEDICAL_EXECUTIVE__PARAMEDICAL_STAFF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.08.2019
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 62
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Assistant  - 08
பணி: Junior Engineer(Civil/Electrical) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400
பணி: Pharmacist  - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: Senior Technician - 12
பணி: Stenographer  - 05
பணி: Senior Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.25,500
பணி: Junior Assistant - 10
பணி: Technician - 04
சம்பளம்: மாதம் ரூ.21,700
பணி: Office Attendant - 12
சம்பளம்: மாதம் ரூ.18,000 
ஒப்பந்த கால அடிப்படையிலான வேலை: 
பணிக்காலம்: 3 ஆண்டுகள்
பணி: Technical Assistant 06
சம்பளம்: மாதம் ரூ. 35,400
பணி: Junior Assistant 03
பணி: Technician 08
சம்பளம்: மாதம் ரூ.21,7001 
விண்ணப்பிக்கும் முறை: www.nitrr.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, National Institute of Technology, Raipur - 492 010. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.nitrr.ac.in/downloads/recruitment/recruitment2019/1.%20Recruitment%20Notice.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.08.2019 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.08.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/VELAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/வேலைவேலைவேலை-3212861.html
3212815 வார இதழ்கள் இளைஞர்மணி சொந்தக்காலில் நில்லுங்கள்! DIN DIN Tuesday, August 13, 2019 09:48 AM +0530 இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், ஏதேனும் ஒரு வகையில் பிறரைச் சார்ந்துதான் வாழ வேண்டியதாக இருக்கிறது. எனினும் இன்றைய காலகட்டத்தில் பண விஷயத்தில் பிறரை நம்பி இருக்கக் கூடாது என்ற கட்டாயத்துக்கு எல்லாரும் தள்ளப்படுகிறார்கள்.
 தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்கின்றனர்.
 பிற்காலத்தில் யாரையும் சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ்வதற்காக, இளமைக்காலத்தில் கை நிறைய ஊதியம் பெற வேண்டும், வங்கிக் கணக்கில் அதிகப் பணம் சேர்க்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டு இதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இன்றைய தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
 எவர் ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், பணத்தைப் பற்றி கவலைப்படாது, தான் நினைத்த வாழ்க்கையை வாழ்கிறாரோ அவரே உண்மையில் சொந்தக்காலில் நிற்பவர்.
 நமது ஓய்வு காலத்தில் பிறரை நம்பாமல் வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக சேர்த்து வைக்க வேண்டும். ஆனால் பணத்தை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றி பல இளம் வயதினருக்குத் தெரிவதில்லை.
 இலக்கை நிர்ணயிக்க வேண்டும்
 ஓய்வு காலத்தில் இதுதாம் நமது இலக்கு என்று முதலில் நாம் அடைய நினைப்பதை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். சிலருக்கு உலகச் சுற்றுலா செல்ல வேண்டும், சிலருக்கு அழகான வீட்டைக் கட்ட வேண்டும்,சிலருக்குப் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அந்த ஆசையை நாம் இலக்காக நிர்ணயிக்கும்போது, நம்மை அறியாமல் நாம் பணத்தைச் சேமிக்கத் தொடங்கி இருப்போம்.
 சேமிப்புக்கு முக்கியத்துவம்:
 சிலர் இப்போதைய பொழுதைக் கழித்தால் போதும் என்றெண்ணி, எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையின்றி செயல்படுவர். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, அநாவசியமான ஆடம்பரப் பொருள்களை வாங்குவது என்று வீண் செலவு செய்வர். ஒரு சிலர் புதிய மாடல் மொபைல் வரும்போதெல்லாம் தனது பழைய மொபைலை நன்றாக இருந்தாலும் மாற்றிக்கொண்டிருப்பர். பழைய மொபைலைப் போல, வயதான பின் நம்மையும் பிறர் தூக்கி எறியாமலிருக்க பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
 முதலீடு செய்வது:
 நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் அப்படியே வைத்திருந்தால் அது பெருகி விடாது. நல்ல துறை, லாபம் மிகுந்த துறையாக தேர்வு செய்து அதில் நாம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் முதலீடு செய்ய தயங்குபவர்கள், அரசு திட்டங்களில் லாபம் மிக்கதைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே துறையில் மொத்த பணத்தையும் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பல்வேறு துறைகளில் முதலீடு செய்யும்போது, ஒரு துறையில் லாபம் வரவில்லை என்றாலும், மற்ற துறையில் சம்பாதித்துக் கொள்ளலாம்.
 சிறு துளி பெரு வெள்ளம்
 நம்மில் பலருக்கு சம்பாதிக்கும் பணம் செலவுக்கே சரியாகி விடும். இதில் எங்கிருப்பது சேமிப்பது என்று யோசித்துக் கொண்டு அலட்சியமாக இருப்பார்கள். ஆனால் நாம் தினமும் சேகரிக்கும் சிறிய தொகை கூட பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய ரூபாயின் மதிப்பும், எதிர்காலத்திய ரூபாயின் மதிப்பும் சமமாக இருக்கப் போவதில்லை. அதனால், நம்மால் இயன்ற அளவு, 10 ரூபாய் என்றாலும் சேமித்து வைக்கலாம்.
 ஓய்வுக் காலத்துக்கான இலக்கை சரியாக நிர்ணயித்து, திட்டமிட்டு வாழ தொடங்கி,சேமித்தோம் என்றால், பணத்துக்காகப் பிறரை நம்பாமல் தலை நிமிர்ந்து வாழலாம்.
 - க. நந்தினி ரவிச்சந்திரன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/im3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/சொந்தக்காலில்-நில்லுங்கள்-3212815.html
3212802 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... Tuesday, August 13, 2019 09:45 AM +0530 முக நூலிலிருந்து....
* நேர்மறையான அணுகுமுறையுள்ள 
மனிதன், 
எல்லா பருவகாலங்களிலும்
கிடைக்கும் பழம்.
சுந்தரபுத்தன்

* எதிர்பார்க்கும் நேரத்தில்
எந்த அழைப்பும் வருவதில்லை...
கண்ணுறங்கும் நேரத்தில் வரும் அழைப்புகள்
தூங்க விடுவதில்லை...
அயர்ந்து உறங்கும் வேளையில் 
விளையாட்டு காட்டும் 
சிறுகுழந்தையும், செல்ஃபோனும் ஒன்றே..
கிரிதரன்

* எங்கப்பா தறி நெய்துதான்
எங்களை வளர்த்தார்...
"நூலோடு வாழும் வாழ்க்கை
என்னோடு போகட்டும்..
நீ படி' என்றார் அப்பா..
தறி நூலை விட்டு 
நான் படித்த "நூல்'களே நான்..
கவிதா பாரதி

* நாளொன்றுக்கு ஓரடி வளரும்
மூங்கில் புதர்களைவிட
எந்தப் பெரு நகரக் கட்டடங்களும் 
ஆச்சரியத்திற்குரியதல்லா...
யவனிகா ஸ்ரீராம்

சுட்டுரையிலிருந்து...
* ஒரு ஊர்ல ஒரு விஞ்ஞானி 
தவளைய பற்றி ஆராய்ச்சி பண்றதா...
அதோட 4 காலையும் வெட்டிட்டு... 
அது கிட்ட "ஜம்ப்'னு சொன்னானாம்.
அது எந்த அசைவும் இல்லாம 
இருந்ததை கூர்மையா கவனிச்சுட்டு
தவளைக்கு 4 காலையும் வெட்டிட்டா,
அதுக்கு காது கேக்காதுன்னு
முடிவுக்கு வந்தானாம்!
மண்ணாங்கட்டி 

* பிரியங்களிடம் 
திடும்மென்று
சிறிய இடைவெளியை
ஏற்படுத்தி
அமைதியாகி 
விடுகிறோம்...
அவர்களே நாடிவந்து
"ஏன் பேசவில்லை?'' 
என்று கேட்டுவிட 
மாட்டார்களா? 
எனும் பரிதவிப்பை 
மறைத்தபடி.
யாத்திரி

* "பெண்ணைக் கல்யாணம் 
பண்ணிக் கொடுத்துட்டு
ஏன் இப்படி சோகமா 
இருக்கீங்க?''
" பெண் பார்க்க வரும்போது பையனை என்ன வேலைன்னு கேட்டேன்.
பையன் அஐத ஈஐஊஊமநஐஞச ஊஐல அசஈ ஙஞசஐபஞதஐசஎ 
நஇஐஉசபஐநபன்னு சொன்னான்.
பெரிய வேலையா இருக்கும்னு நினைத்தேன்.
போன வாரம் விசாரிச்சதுல பையன் பஞ்சர் ஒட்டற கடை 
வெச்சுருக்கானாம்.''
ரிலாக்ஸ் ப்ளீஸ்

வலைதளத்திலிருந்து...
பொதுவாக கொசுக்கள் சில குறிப்பிட்ட வகையினரை மட்டும் அதிகமாக தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்போது கொசுக்களின் தாக்குதலுக்கு அதிகம் ஆட்படும் ஐந்து பிரிவினரைப் பார்ப்போம்.
1) மது அருந்துபவர்கள் : வாய்யா வாய்யா என் டாஸ்மாக் தங்கம். 2011 -இல் நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி மது அருந்துபவர்கள் இரத்தத்தை கொசுக்கள் மிகவும் விரும்பிக் குடிக்கிறதாம். மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்கள் 30% அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களாம். 
2) குண்டாக இருப்பவர்கள்: கொசுக்களின் அடுத்த இலக்கு கொழுத்த சரீரம் உடையவர்கள். கொசுக்களுக்கு எப்பொழுதுமே கார்பன் டை ஆக்சைடு மீது ஒரு ஈர்ப்பு உண்டு . கொளுத்த சரீரம் உடையவர்கள் மீதிருந்து வெளியாகும் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை அதிகம் ஏற்பதாக Annals of Internal Medicine என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
3) உடற்பயிற்சி செய்பவர்கள்: "இது என்னடா கொடுமையா இருக்குது' என்று நாம் நினைக்கலாம். நல்ல உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலுள்ள வெப்ப ஈர்ப்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் உடலிலுள்ள லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை கொசுக்களுக்கு அடையாளம் காட்டுவதாக Susan Paskewitz என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.
4) இரத்த வகைகள்: பிளட் குரூப்பை நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கிறோம். ஆனால் கொசுக்கள் எப்படித்தான் கண்டுபிடிக்கிறதோ தெரியவில்லை . 83% கொசுக்கள் "ஞ' குரூப் இரத்தம் இருப்பவர்களைக் கண்டால் அங்கிருந்து நகராது என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவு. எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ தெரியவில்லை.
5) கர்ப்பிணிப் பெண்கள் : அட கொசுக்களே... உங்களுக்கு இரக்கமே இல்லையா? கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள அதிகப்படியான உஷ்ணம் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றதாம். சாதாரண பெண்களை விட கர்ப்பிணிப் பெண்கள் இருமடங்கு அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 
http://koodalbala.blogspot.com
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/im2.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/இணைய-வெளியினிலே-3212802.html
3212789 வார இதழ்கள் இளைஞர்மணி பாக்கெட் ஏசி! DIN DIN Tuesday, August 13, 2019 09:39 AM +0530 பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான குளிர்சாதனப் பெட்டி (ஏசி), முதலில் நான்கு சுவர்களில் இருந்து வாகனங்களுக்கு விரிவடைந்தது. இதன் பெரிய அளவிலான வடிவத்தால், கையில் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் சோனி நிறுவனம் "ரியான் பாக்கெட்' எனும் பாக்கெட் ஏசியை அறிமுகம் செய்துள்ளது. செல்லிட பேசி அளவில் மட்டுமே உள்ள இந்த பாக்கெட் ஏசியை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உள்ள பனியனின் முதுகு மேல் பகுதியில் வைத்து சட்டையை அணிந்து கொண்டால் போதும். பாக்கெட் ஏசியில் இருந்து வெளியாகும் குளிர்காற்று நமது உடலை 13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். குளிர் காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைத்துக் கொள்ளும் நவீன தொழில்நுட்பம் "ரியான் பாக்கெட்'டில் உள்ளது.
 இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்துவிட்டால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இதன் விலை, பிரத்யேக பனியனுடன் சேர்த்து சுமார் ரூ. 9 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாக்கெட் ஏசியை செல்லிட பேசியின் ஆப் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும். இவை வெப்ப மாறுதலுக்கு ஏற்ப தானாகவே செயல்படும் வகையில் மேலும் நவீனப்படுத்தும் பணியையும் சோனி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
 இந்த நவீன கருவி அடுத்த ஆண்டு ஜப்பானில் மட்டும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவு ஏசிக்களால் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த சிறிய அளவு பாக்கெட் ஏசிக்கள் அவ்வகையான இயற்கை சீரழிவைத் தடுத்தால் வரவேற்க கூடியதே.

- அ.சர்ஃப்ராஸ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/pocket_ac.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/பாக்கெட்-ஏசி-3212789.html
3212767 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 59 தா.நெடுஞ்செழியன் Tuesday, August 13, 2019 09:28 AM +0530 உலகமெங்கும் உள்ள அணுமின்நிலையங்களின் கழிவுகள் எல்லாம் கடலுக்கடியில்தான் தள்ளப்படுகின்றன. யுரேனியக் கழிவுகள், கடலில் சோதனை செய்து பார்க்கக் கூடிய ராணுவ ரசாயனக் கருவிகள், மருத்துவமனைகளில், பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சிக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கதிரியக்கப் பொருள்கள் இவை எல்லாம் கடலிலியே கலக்கப்படுகின்றன. இவ்வாறு ஏற்படுத்தக் கூடிய கதிரியக்க மாசு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மிகப் பெரிய சவாலாக, 1000 ஆண்டுகளானாலும் தீர்க்க முடியாத பிரச்னையாக உருவாகி வருகிறது. 
வாஷிங்டனில் ஹேண்ஃபோர்டு நியூக்ளியர் வெப்பன்ஸ் புரடக்ஷன் ûஸட் - ஐச் சுத்தம் செய்யும்போது அங்கே 56 மில்லியன் கேலன் கதிரியக்க கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைச் சுத்தம் செய்ய 100 பில்லியன் டாலர் தேவைப்படுமென்று கண்டறியப்பட்டு அதற்காகத் திட்டமிடப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வளர்ந்த நாடுகளில் கூட, கழிவுநீர் செல்லக் கூடிய குழாய்கள் மிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கிருமிகளை தண்ணீர் வாயிலாகப் பரப்புகின்றன. நிமோனியா போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. குடிநீர் வாயிலாக பரப்பப்படும் நோய்க் கிருமிகள், மக்களுக்கு மட்டுமின்றி, பறவைகள், விலங்கினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 
மக்களுக்கு காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் உருவாகின்றன. இவை தவிர, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரக் கூடிய வேதிப்பொருள்கள், பாதரசம், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரேட் உரங்கள் நமது நீரில் கலக்கப்படுகின்றன. இந்த நீரைப் பருகும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மிகக் கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. புற்றுநோய், மூளையைப் பாதிக்கக் கூடிய நோய்கள், ஹார்மோன் சுரப்பிகளைப் பாதிக்கக் கூடிய நோய்கள் என பல வியாதிகளை ஏற்படுத்துகின்றன.
அமெரிக்காவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் 3.5 மில்லியன் மக்களுக்கு நீர் மாசினால் சுவாசக் குழாய் நோய்கள் ஏற்படுகின்றன. மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள் அதிகமாக ஏற்படுகின்றன. 
எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் தயாரிக்கும்போதும், அவற்றை பிற இடங்களக்குக் கொண்டும் செல்லும்போதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. 
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, தடை செய்வது, மறுசுழற்சி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் மாசு உருவாவது தடுக்கப்படுகிறது. எண்ணெய்கள், சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள், மக்காத பொருள்களை எல்லாம் உரியமுறையில் புவியிலிருந்து நீக்க வேண்டும். வீட்டுக்கருகில் உள்ள தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருள்களை உபயோகப்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். கதிரியக்கப் பொருள்களை முறையாகக் கையாள வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் சுற்றுச்சூழலை நாம் மாசடைவதில் இருந்து காப்பாற்ற முடியும். நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சுற்றுச்சூழலை - குறிப்பாக காற்று, நீர் மாசு குறைவாக உள்ள சுற்றுச்சூழலை - நாம் எதிர்காலத்தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
தற்போது பல்வேறு கல்லூரிகளில் சுற்றுச்சூழல் பற்றிய கல்வி வழங்கப்படுகிறது. இவற்றில் எண்ணற்ற பாடப் பிரிவுகள் உள்ளன. என்விரான்மென்டல் என்ஜினியரிங் என்பது நிலம் சார்ந்து, விவசாயம் சார்ந்து படிக்கக் கூடிய கல்வி ஆகும். எனர்ஜி என்விரான்மென்டல் என்ஜினியரிங் படிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர பல்வேறு ஐஐடிகளில் இந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. 
என்விரான்மென்டல் ஆராய்ச்சிக்காக நேஷனல் என்விரான்மெண்டல் என்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (NEERI) என்ற நிறுவனம் நாக்பூரில் இயங்கி வருகிறது. இங்கு உயர் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவர்கள், எண்ணற்ற மாசைக் கட்டுப்படுத்தும் பொருள்களை உருவாக்கி வருகிறார்கள். மக்களுக்கு சுத்தமான நீரை எவ்வாறு வழங்குவது என்பதற்கு நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது இர்ன்ய்ஸ்ரீண்ப் ர்ச் நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ & ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் - இநஐத - இன் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்கிய பொருள்களில் மிக முக்கியமானது நீரி ஜார் என்று அழைக்கப்படக் கூடிய வாட்டர் ஃபில்டர். ஓர் இடத்தில் புயல், மழை அதிகமாகப் பெய்து வெள்ளத்தால் மூழ்கும் போது தண்ணீரை எளிய முறையில் சுத்திகரிப்பதற்கு இந்த வாட்டர் ஃபில்ட்டர் பயன்படுகிறது. இதேபோன்று இவர்கள், பெண்கள் உபயோகப்படுத்தக் கூடிய சானிட்டரி பேட் -ஐ முறையாக டிஸ்போஸ் செய்வதற்கு ஓர் இயந்திரத்தை 2013 - இல் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் 12.3 மில்லியன் சானிட்டரி நாப்கின்களை டிஸ்போஸ் செய்கிறார்கள். இதேபோன்று நீர்ஃபிளெஷ் எனப்படும் டாய்லெட்டைத் தாமாகவே சுத்தம் செய்யும் கருவியைத் தயாரித்திருக்கிறார்கள். இது வழக்கமாக நாம் சுத்தம் செய்வதை விட குறைந்த அளவு நீரில் டாய்லெட்டைச் சுத்தம் செய்துவிடுகிறது. 75 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. 
Electrolytic Defluoridation (EDF) தொழில்நுட்பம், அடிகுழாயில் வரும் தண்ணீரில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்தை நீக்குதல் (Hand Pump attachable Iron Removal (IR) Plant),  High Rate Transpiration System (HRTS), இப்போதுள்ளதை விட உயர்ந்த தரமான முறையில் கழிவுநீரைச் சுத்தப்படுத்துதல், வழக்கமான கழிவுநீர் சுத்தப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல் என நிறைய மாசு நீக்கல் முறைகளைச் செயல்படுத்துகிறார்கள். இங்கே உயர்கல்வியில் என்விரான்மென்டல் படிப்பு படிக்கலாம். எம்எஸ்சி முடித்தும் படிக்கலாம். 
ஐஐடி - கான்பூரிலும் கூட மாஸ்டர்ஸ் எம்எஸ் ரிசர்ச் புரோகிராம் வழியாக சென்டர் பார் என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் என்ற துறையின் கீழ் அவர்கள் Environmental Remediation Technology, Biology and Health,  Advance Chemical Trace Analysis, Atmospheric Particles Technology, Nano-Bio Environmental Technology, Green Energy: Production, Storage and Conversion Technologies ஆகிய துறைகளில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 
இவைபோன்ற ஆராய்ச்சிகள் உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஐஐடி கான்பூரிலும் பிற ஐஐடிகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எண்ணற்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய தகவல்கள் அதிக அளவில் வெளியுலகுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இந்தியாவில் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளை நன்கு கூர்ந்து கவனித்து அவற்றில் ஏற்படும் வளர்ச்சிகளை எல்லாருக்கும் தெரியும்படி செய்யக் கூடிய ஊடகங்கள் இல்லாத காரணத்தால், இத்துறைகளின் வளர்ச்சியானது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கல்லூரிகளுக்கோ, அங்கு பயிலும் மாணவர்களுக்கோ, அவர்களுடைய பெற்றோர்களுக்கோ அல்லது இதுபோன்ற தகவல்கள் சென்றடைவதில்லை. 
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் காற்றாலைகளைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கிறார்கள். திறந்த பாலைவனங்களில் நிறையக் காற்றாலைகளைக் கொண்டு மின்சக்தியைத் தயாரிப்பதோடு மட்டும் அல்லாமல், கடலுக்கு மேற்பகுதியில் பெரிய காற்றாலைகளும், கடலுக்கடியில் சிறிய காற்றாலைகளும் அமைக்கப்பட்டு, காற்று மின்சக்தி உருவாக்கப்படுகிறது. 
இந்தியாவில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து உள்ளதால், இதுபோன்று காற்றாலைகள் மூலம் நிறைய மின்சக்தியை உருவாக்க முடியும். சுற்றுச் சூழலைப் பாதிக்காத காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் தேவையை அரசு உணர்ந்து செயல்படாததால், இன்றைக்கும் கூட பெரும்பான்மையான கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். கடல்பகுதியின் அருகே உள்ள நகரங்களுக்கு இதுபோன்று கடலில் அமைக்கப்பட்ட காற்றாலைகள் வாயிலாக மின்உற்பத்தி செய்து அனுப்பினால், இப்போதுள்ளதை விட, பன்மடங்கு மின்சார உற்பத்தியை நாம் அதிகரிக்க முடியும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இந்த காற்றாலை மின்சாரத்தின் அவசியத்தை ஐரோப்பிய நாடுகள், மேலை நாடுகள் நன்கு உணர்ந்து கடலில் காற்றாலைகளை நிறுவி, அதிக அளவில் மின்சாரத்தை தயாரிக்கின்றன. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/13/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/13/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்-59-தாநெடுஞ்செழியன்-3212767.html
3208201 வார இதழ்கள் இளைஞர்மணி ஆராய்ச்சி மாணவர்களுக்கு அளப்பரிய வாய்ப்புகள்! DIN DIN Tuesday, August 6, 2019 12:15 PM +0530 2021, ஜூலை முதல் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி பட்டம் கட்டாயமாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்துள்ளது. 
அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்டி ஆய்வறிக்கையின் தரம் குறித்து மறுஆய்வு செய்ய பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது. நாட்டில் ஆராய்ச்சியின் தரம் குறைவது மற்றும் பிஎச்டி ஆய்வறிக்கைகள் பிறவற்றின் நகலாக இருப்பது குறித்து பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சர்வதேச அளவில் சிறந்த முதல் 500 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகம், மனிதநேயம், கல்வி, சட்டம், சமூக அறிவியல், அறிவியல், மொழிகள், நூலக அறிவியல், உடற்கல்வி, பத்திரிகை, பொதுமக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெற தகுதியானவர்கள் என பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு தேவையான சதவீதத்துடன் பிஎச்டி பட்டம் பெற்றவர்களும் நேரடி பணி நியமனத்துக்குத் தகுதியுடையவர்கள் என்றாலும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் பிஎச்டி முடித்தவர்களுக்கு, இந்திய மாணவர்களின் முதுநிலை திட்டம் தொடர்பான குறைந்தபட்ச தேவைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், நேர்காணலில் அவர்கள் பங்கேற்று தங்கள் செயல்திறனை நிரூபிக்க வேண்டும்.
இந்த நிலையில், சிறந்த 200 சர்வதேச பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறும் இந்திய மாணவர்கள், மீண்டும் இந்தியாவுக்கு வந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஏதாவதொரு உயர்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்.
40 வயதிற்கு உட்பட்ட இளம் இந்திய கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களின் நிரந்தர வருவாய் மற்றும் இடம்பெயர்வுக்கு வசதியாக இந்தப் புதிய பிஎச்டி திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வகுக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. Prime Minister Academician return Scheme என்ற இந்த முன்மொழியப்பட்ட திட்டம் 2020-க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச பல்கலைக்கழகங்களில் பி.எச்டி. முடித்து திரும்பி வரும் அறிஞர்கள், இந்திய நிறுவனங்களில் சேர்ந்தவுடன் பொருத்தமான ஊதிய தொகுப்பு பெற தகுதி பெறுவார்கள். மேலும், இடமாற்றத்துக்கான தொகை மற்றும் ஆராய்ச்சி மானியம் ஒருமுறை வழங்கப்படும். தொடர் ஆராய்ச்சிகளுக்கு 5 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கவும், விரைவான விசா மற்றும் விரைவான இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை அட்டைக்கு (Overseas Citizenship of India-OCI card) விண்ணப்பிக்கவும் இந்த அறிஞர்கள் தகுதியுள்ளவர்கள்.
மேலும், அறிஞரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு இந்தியாவில் பொருத்தமான வேலை தேடலுக்கான உதவியும், அவர்களுக்கு விரைவான விசாவைப் பெறுவதற்கு உதவியும் வழங்கப்படவுள்ளது.
இதேபோல, முனைவர் ஆய்வை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு பிரதமரின் ஆராய்ச்சி பெல்லோஷிப் திட்டம் (Prime Minister's Research Fellowship (PMRF) Scheme for Doctoral Studies-Ph.D.) மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றில் முனைவர் ஆய்வுக்கான சிறந்த திறமையான மாணவர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
2018-19 இல் தொடங்கி, 7 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 1650 கோடியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் இந்திய அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பி.டெக்., ஒருங்கிணைந்த எம்.டெக்., எம்.எஸ்சி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் குறைந்தது 8 ஒட்டுமொத்த தர சராசரி புள்ளிகள் (சிஜிபிஏ) பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உரிய தேர்வு செயல்முறைகளுக்குப் பிறகு இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு நேரடி அனுமதி வழங்கப்படும். இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
ஆய்வுக்குத் தேர்வு பெறும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம், 3ஆம் ஆண்டில் ரூ. 75 ஆயிரம், 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் மாதம் ரூ. 80 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதவிர, ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதற்கான வெளிநாட்டுப் பயணச் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 2 லட்சம் ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 3 ஆண்டு காலத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதரவை மத்திய அரசு வழங்குகிறது. 
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை இந்திய நிறுவனங்களில் தொடர பல முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிரியர் புத்துணர்வுத் திட்டம், பல்கலைக்கழக மானிய குழுவின் சி.வி. ராமன் முனைவர் பட்டத் திட்டம், ராமானுஜன் பெல்லோஷிப், ஜே.சி. போஸ் பெல்லோஷிப், ஸ்வர்ண்ஜயந்தி பெல்லோஷிப், இளம் விஞ்ஞானி திட்ட விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மகளிர் விஞ்ஞானி திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறையின் ராமலிங்க சுவாமி மறுநுழைவு பெல்லோஷிப் உள்ளிட்டவை இந்த முன்னெடுப்புகளில் அடங்கும்.
- இரா.மகாதேவன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/MAHA2.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/ஆராய்ச்சி-மாணவர்களுக்கு-அளப்பரிய-வாய்ப்புகள்-3208201.html
3208200 வார இதழ்கள் இளைஞர்மணி நாங்கள்லாம் படிச்சா.... அப்படிப் படிப்போம்! DIN DIN Tuesday, August 6, 2019 12:09 PM +0530 "எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே'' 
- ஆப்ரஹாம் லிங்கன்.
போட்டித்தேர்வு... அரசுப்பணிகளுக்காக மாணவர்களை தயார்ப்படுத்தும் எங்களது முயற்சி மற்றும் பயிற்சி வாழ்வுமுறையில், நிறைய மாறுபட்ட அனுபவங்களைக் கடக்க நேரிடும். அப்படி... ஒரு நாள், சற்று வித்தியசமாகவே விடிந்தது.
"சார்..... நீங்க கேக்குற "பீûஸக் கட்டி, நீங்க சொல்ற இந்த நாலு மாச பாடத்தை படிச்சா, கண்டிப்பா வேலைக்கு போயிரலாமா சார்?'' போட்டித்தேர்வு குறித்து விசாரித்துவிட்டு வகுப்பில் சேர்வதற்கு வந்த ஒரு மாணவியின் தந்தை கேட்ட கேள்வி இது.
" போட்டித் தேர்வில் வெற்றிக்கு...வெறுமே "பணம்' கட்டினால் மட்டும் போதாது. மாணவர்களோடு ஆர்வம், திறன், ஒத்துழைப்பும், உழைப்பு... எல்லாமே முக்கியம்'' என்றேன்.
மாணவியின் விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, பணத்தையும் செலுத்திக்கொண்டே பேசிய அவர், " "சார்! நாங்கள்லாம் படிச்சா... அப்படிப் படிப்போம் சார்... ஆனால்... பாருங்க, இந்த காலத்து பசங்களெல்லாம்... சின்னச் சின்ன விமர்சனம், அவமானம், தோல்வி, அதிர்ந்த வார்த்தைகளுக்கு... அப்படியே துவண்டு போயி முடங்கிடுறாங்க. இவங்கள எப்படி தேத்துறதுன்னே தெரியல சார்'' என்றார்.
"சார்... இவங்களுக்கு இயற்பியல்ல "விடுபடு திசைவேகம்' (Escape Velocity), அவங்க ஆசிரியர்கள் சரியா நடத்தலையா... இல்ல, இவங்க சரியா புரிஞ்சுக்கலையான்னு தெரியல. தீர்க்கமா உழைக்கிற மாணவனுக்கு, இந்த உலகம் வீசி எறிகிற விமர்சனங்கள், கேலி பேச்சுக்கள், அவமான வார்த்தைகள் எல்லாம் அவன் மேல விழாது ... காதுக்குள்ள புகுந்து அவனை நிலைகுலையச் செய்யாது. சராசரிகள் தவழ்ந்து கிடக்கும் தளத்திலிருந்து தப்பித்து... 
இவர்களது இரைச்சல் கேட்காத, இவர்கள் தொடமுடியாத உயரத்திலே அவனது பயணப் பாதையை அமைத்துக் கொள்வான். காக்கைகளிடமிருந்து தப்பித்து, அவை நெருங்க முடியாத உயரம் சென்று வட்டமடிக்கும் "பருந்து' புரிந்துகொண்ட "விடுபடு திசைவேக'த்தை இவர்களும் புரிந்துகொள்வது நல்லது'' என்றேன்.
எப்படி? 
இந்த அண்டத்தில் எல்லா பொருள்களுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமியில் இருக்கும் விசை புவியீர்ப்பு விசை. அது தான் பொருள்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது என்பது நமக்கு எல்லாம் தெரியும். நியூட்டன் ஆப்பிள் பழத்தை மேலே எரிந்து கீழே திரும்பி வருவதைக் கொண்டு புவியீர்ப்பு விசையை குறித்து தனது ஆராய்சியை மேற்கொண்டார் என்பதும் நமக்கு தெரியும். ஆனால் ஆப்பிள் ஈர்ப்பு விசையை மீறி எப்படி மேலே போகும்? அப்படிப் போகவேண்டுமானால் அதற்கு எவ்வளவு சக்தி தேவை? எவ்வளவு வேகம் தேவை? இவற்றையெல்லாம் ஆராயும் போது தான் "விடுபடு திசைவேகம்' என்ற ஒரு விஷயம் கண்டறியப்பட்டது.
பூமியில் ஒரு பொருளை விநாடிக்கு 11.2 கிமீ/விநாடி என்ற தொடக்க திசைவேகத்துடன் மேல் நோக்கி வீசினால் அது தப்பி ஓடி விடும். ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம்... அதிர்ச்சியாக இருக்கிறதா? இது கண்டிப்பாக இரு சக்கர வண்டிக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை. விண்வெளிக்கு போகும் ராக்கெட் திரும்பி பூமிக்கே வராமலிருக்க தேவையான வேகம் தான் இது.
"விடுபடு திசைவேகம் (escape velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும். 
ஒரு விநாடிக்கு 11 கிலோமீட்டர் முதல் 11.3 கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட் மேல்நோக்கி போனால் அது புவியை விட்டு விடுபடும். அதாவது கீழே விழாமல் புவியைத் தாண்டிச் செல்லும். இது சுமாராக ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம். இப்படி ஒரு வேகத்துக்கான புரிதலை, தெளிவை, தீர்க்கத்தை, மன உறுதியை தங்களுள் தகவமைத்துகொண்ட மாணவர்களே, இந்த புற சாமானிய உலகின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பொருட்படுத்தாது... "வசை அழுத்த'த்திலிருந்து தப்பித்து விண்ணைநோக்கி- வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். 
அவ்வாறில்லாமல், இந்த சமூகத்தின், சராசரி மனிதர்களின் வாய்க்கு, வஞ்சக வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, அதனால் ஏற்படும் சுணக்கத்தையும், தயக்கத்தையும், சோர்வையும், அண்டவிடாத வேகத்திற்கு, தெளிவிற்கு மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, இந்த "விடுபடு திசைவேகம்' கோட்பாடு பற்றிய புரிதல் மிகவும் கைகொடுக்கும் என்பதே.
"நம்முடைய சம்மதம் இல்லாமல் எவராலும் நம்மை வீழ்த்தவோ... நம்முள் தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்திவிடவோ முடியாது' என்கிற உண்மையை "விடுபடு திசைவேகம்' புரிந்தவராக செயல்படுத்திக் காட்டி வெற்றிபெறுவோம்.
- கே.பி. மாரிக்குமார் 


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im6.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/நாங்கள்லாம்-படிச்சா-அப்படிப்-படிப்போம்-3208200.html
3208199 வார இதழ்கள் இளைஞர்மணி பணியிடத்தில் பணிவு...வேலைப் பாதுகாப்பு! DIN DIN Tuesday, August 6, 2019 12:06 PM +0530 வேலையில்லாத் திண்டாட்டம் உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிகம் படித்த இளைஞர்கள்கூட தங்களது கல்வித் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வேலையில் சேரத் தயாராக இருக்கின்றனர். அப்படி, பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கிடைத்த வேலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை. பணியில் சேர்ந்த ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் வேறு வேலை தேடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுபவர்களை தற்போது அதிகம் காணமுடிகிறது. 
இதற்குக் காரணம், பணியிடங்களில் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ளாததே. 
பணி செய்யும் இடத்தில், மூத்த சக ஊழியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருந்தாலும், அவர்களின் வயதையும், அவர்களது பணி அனுபவங்களையும் மதிக்காமல், அவர்களை அலட்சியம் செய்வதைப் பார்க்க முடிகிறது. இதுவே அவர்கள் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாமல் போவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. 
சமீபத்தில் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கட்செவி அஞ்சலில், "தற்போது எங்கே பணியாற்றுகிறீர்கள்?' என்று கேட்டபோது, ""வேலை போய்விட்டது. போர் அடிக்கிறது, அதுதான் கட்செவியில் உலா வருகிறேன்'' என்றார். அவர் வேலையை இழந்ததற்கு, சீனியர்களை மதிக்காதது, அவர்கள் அறிவுரைகளை அலட்சியம் செய்தது, நேரத்திற்குப் பணிக்குச் செல்லாதது, மேலதிகாரி சொன்ன வேலையை நேரத்துக்கு முடித்துக் கொடுக்காதது காரணங்களாக இருந்திருக்கின்றன. வேலை இழப்பிற்கான இத்தகைய காரணங்களில் ஆண், பெண் வேறுபாடு எதுவுமில்லை. 
இவை அனைத்தும் ஓர் இளைஞரிடமோ, இளைஞியிடமோ இருந்தால், எப்படி அவர் தொடர்ந்து தன் பணியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்? இன்றைய இளைஞர்கள் பலரிடம் அலட்சியப் போக்கு இருக்கிறது. செய்யும் பணியை பொறுப்புணர்வுடன் செய்வதில்லை. இவையெல்லாம் பெரிய குறைகள்தாம். 
கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்; வேலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் பணி இழப்புக்கு இவையே காரணங்களாகி விடக்கூடும். 
இளைஞர்களே நாட்டின் முதுகெலும்பு; அவர்களின் முன்னேற்றமே நாட்டின், உலகின் முன்னேற்றம் என்றும் உறுதியாக நம்பிய சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் நல்வாழ்வுக்கான பல நல் வழிகளைக் காண்பித்திருக்கிறார். குறிப்பாக, "எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா உங்களது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. எழுமின்! விழிமின்!'' என்கிறார். இவரது வீரமுழக்கத்தை செவிசாய்க்கும் இளைஞர்களுக்கு, வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். பிறருடைய அனுபவப் பாடம்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி மரம் என்பதை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது!
இளைஞர்களே! உங்களது பணியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள பணிபுரியும் இடத்தில் கீழ்க்காணும் தாரக மந்திரங்களை மட்டும் கடைப்பிடித்துப் பாருங்கள், பிறகு உங்கள் பணி நிரந்தரம்தான்! 
1. பணிபுரியும் இடத்தில் இரண்டு காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளுங்கள். வாயை மூடிக்கொள்ளப் பழகுங்கள். 
2. பணி இடத்தின் சூழ்நிலை, சக ஊழியர்களின் மனநிலைக்கேற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ளப் பழகுங்கள். 
3. வயதிலும், அறிவிலும் மூத்த பணியாளரை மதித்து, அவர் அறிவுரைகளைக் கேட்டு மதித்துச் செயல்படுங்கள்.
4. மேலதிகாரி "எள்' என்றால், "எண்ணெய்யாக' மாறி உங்கள் சுறுசுறுப்பையும், உழைப்பையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துங்கள்! 
5. செய்யும் வேலையை பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்யுங்கள். 
6. குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்று, காலம் தவறாமையை அவசியம் கடைப்பிடியுங்கள். 
7. சக ஊழியர்களை மதித்து, பணிவுடன் நடந்தால், உங்கள் முன்னேற்றம் வெளிப்படும். பணியிடத்தில், "பணியுமாம் என்றும் பெருமை' என்கிற திருக்குறளை மட்டும் மறக்காதீர்கள். 
8. முக்கியமாக, தவறு செய்திருந்தால் அவசியம் "மன்னிப்பு' கேட்கப் பழகுங்கள். 
9. உங்களைப் பற்றி குற்றம், குறை கூறுபவர்களை விட்டு விலகாமல், அவர்களை நட்புடன் அரவணைக்கப் பழகுங்கள். காரணம், அவர்கள்தான் உங்களைச் செதுக்கும் ஒப்பற்ற உளிகள் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im5.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/பணியிடத்தில்-பணிவுவேலைப்-பாதுகாப்பு-3208199.html
3208198 வார இதழ்கள் இளைஞர்மணி பழுது பார்க்க உதவும் இணையதளம்! DIN DIN Tuesday, August 6, 2019 12:04 PM +0530 தங்களைச் சுற்றியுள்ள உறவுகளிடமும், நண்பர்களிடமும் தங்கள் மதிப்பை உயர்த்திக் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பலர் தங்கள் வீட்டிற்கென்று ஒரு பழைய காரையாவது வாங்கி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தக் காரைத் தாங்களே சொந்தமாக ஓட்டிச் செல்கிறார்கள். சிறுசிறு பழுதுகளைச் சரி செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக ஆட்டோமொபைல் பழுதுகளைக் கண்டறிந்து, அதனைச் சரி செய்ய வழிகாட்டும் ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது. 
இந்த இணையதளத்தில் Auto Repair Library , Auto Parts ,  Accessories ,  Tools ,  Manuals & Books Car BLOG, Links,  Index எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
Auto Repair Library எனுமிடத்தில் சொடுக்கினால், Automotive Glossary,  Air Conditioning,  Alignment, Brake,Cooling System,Driveability,Diagnostics & Emissions,Electrical, Battery, Starting & Charging System, Engine, Exhaust, Front - Wheel Drive, Fuel Related, Ignition & Spark Plugs, Lubrication & Maintenance, Miscellaneous, New Vehicles & Technology, Safety, Steering, Suspension & Tire, Transmission, Clutch and Driveline எனும் துணைத் தலைப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் அத்தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. 
இதேபோன்று பிற முதன்மைத் தலைப்புகளான Auto Parts,  Accessories,  Tools,  Manuals & Books Car BLOG,Links, Index ஆகியவற்றில் சொடுக்கினால் அது தொடர்புடைய பல துணைத் தலைப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் அத்தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. 
Index எனும் தலைப்பில் தானுந்து தொடர்பான பல்வேறு பொருட்கள், செய்திகள் உள்ளிட்டவை ஆங்கில எழுத்துகளின் அகரவரிசையில் பட்டியலிடப்பட்டுப் பார்வைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் தேவையானவற்றின் மீது சொடுக்கி, அதுகுறித்த பல்வேறு கட்டுரைகளையும், இணைப்புகளையும் எளிதாக அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது. 
மகிழுந்து வைத்திருப்பவர்களுக்கும், மகிழுந்து தொடர்பான பணிகளைச் செய்து வருபவர்களுக்கும் பயனுள்ள செய்திகளை வழங்கக் கூடியதாக அமைந்திருக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://www.aa1car.com/ எனும் இணைய முகவரிக்கு பயணிக்கலாம்.
- மு. சுப்பிரமணி

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/AUTO.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/பழுது-பார்க்க-உதவும்-இணையதளம்-3208198.html
3208194 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, August 6, 2019 11:30 AM +0530 தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை
பணியிடம்: நொய்டா
பணி: Attendant Grade-1 (Mechanical)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 52,000
வயது வரம்பு: 30.06.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர்,
மெஷினிஸ்ட், வெல்டர், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், மெஷின் டூல் மெக்கானிக், லோகோ மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேசிய உரத்தொழிற்சாலையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.08.2019

நவோதயா வித்யாலயா 
பள்ளிகளில் வேலை
பணி: Assistant Commissioner (Group-A)
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78800-209200
பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B)
காலியிடங்கள்: 430
சம்பளம்: மாதம் ரூ.47600-151100
வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B)
காலியிடங்கள்: 1154
சம்பளம்: மாதம் ரூ. 44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
பணி: Miscellaneous Category of Teachers (Group-B)
காலியிடங்கள்: 564
சம்பளம்: மாதம் ரூ. 44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
பணி:  Female Staff Nurse (Group B)
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Legal Assistant (Group C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35400-112400
வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Catering Assistant (Group C)
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.25500-81100
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
Lower Division Clerk (Group C)
காலியிடங்கள்: 135
சம்பளம்: 19900-63200
வயதுவரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 முதல் 10.09.2019 வரை.
விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1-FxNbwZNb251QfUFzD7OZSQIaJhr-rVC/view என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.08.2019 

தமிழக வனத்துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 465
பணி: Forest Watcher
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 + சேவைக் கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.8.2019.

துணை ராணுவப் படையில் வேலை
பணி: Constable General Duty (Sports Quota)
காலியிடங்கள்: 150
வயதுவரம்பு: 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். 
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் உயரமும், 80 செ.மீட்டர் மார்பளவும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதி, மருத்துவ தகுதி மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.ssbrectt.gov.in/docs/SPORTS_QUOTA_2019.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.08.2019

செம்மொழி ஆய்வு மையத்தில் வேலை
பணி: Personal Secretary - - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Assistant Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Steno Grade II - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: UDC  - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: LDC - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Superintendent - 01
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, Central Institute of Classical Tamil(CICT), IRTCampus, 100 Feet Road, Taramani, Chennai - 600 113.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
https://www.cict.in/pdf/Non-Academic%20Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 14.08.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/VELAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/வேலைவேலைவேலை-3208194.html
3208190 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 203 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, August 6, 2019 11:10 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம், "புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லையே' என்கிறார். இதை அடுத்து புரொபஸரிடம் வேறென்னவெல்லாம் நோய்க்குறிகள் தென்படுகின்றன என கணேஷும் ஜூலியும் குறிப்பிடுகிறார்கள். 
ஜூலி: டாக்டர், இவர் சமீபமாக இளம்பெண்களைக் கண்டாலே கோபத்தில் கண்டமேனிக்குத் திட்டுகிறார். He strongly dislikes grrls...
டாக்டர்: you mean girls?
புரொபஸர்: இல்லப்பா ஜூலி சொல்வது grrls. இதன் உச்சரிப்பு என்பது கெர்ள் என்பதற்கு ஓரளவுக்கு இணையானது என்றாலும் பொருள் வேறு. இது ஒரு நவீன urban English சொல். அதாவது சற்றே லோக்கலான informal ஆங்கில சொல். கலகம் பண்ணுகிற, தன்னிச்சையாக செயல்படுகிற, சுதந்திரமாக இயங்குகிற, மூர்க்கமான பெண்ணை grrrl என்பார்கள். A young woman regarded as independent and strong or aggressive, especially in her attitude to men or in her sexuality. அதுவும் இது ஒரு கலவைச் சொல். Girl மற்றும் grrr எனும் அடித்தொண்டை உறுமலுக்கும் இடையே தோன்றின குழந்தை இந்த சொல். A blend of grrr, representing the sound of an animal growling (and thus human anger) and girl என ஒரு வேட்டை விலங்கு உறுமுமே அந்த ஒலிக்குறிப்பையும் ஒரு சுதந்திரமான இளம் பெண்ணையும் சேர்த்தால் வருவது இந்த புது அதிரடி சொல். தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஐரோப்பாவில் punk Rock இசைக் கச்சேரிகளில் கலந்து கொள்ளும் பெண்களை பரவலாக grrrl என அழைத்தார்கள். அந்த பண்பாட்டை குறிப்புணர்த்தி இன்று சில பெண்களை அவ்வாறு அழைக்கிறார்கள். 
கணேஷ்: Punk என்றால்? 
புரொபஸர்: A loud, fast}moving, and aggressive form of  rock music, popular in the late 1970s. 
நடாஷா: அது மட்டுமல்ல, உருப்படாதவன் / உதவாக்கரை எனும் பொருளிலும் தானே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது? சும்மா கெத்து காட்டும் இளைஞர்களை young punk என கூறுவார்கள்.
புரொபஸர்: ஆமாம். சில நேரம் உடம்பு சரியில்லை என்றாலும் punk என சொல்வதுண்டு. I am feeling too punk to attend school today என பள்ளிக்கு மட்டம் போடும் ஒரு மாணவன் சொல்லலாம். 
நடாஷா: அதிருக்கட்டும் ... நீங்க பெண்களை grrls என சிலர் மட்டம் தட்டி அழைப்பதை ஏற்கிறீர்களா? 
புரொபஸர்: சத்தியமாக இல்லை. ஆனால் அதேநேரம் பெண்ணியத்தை அவசியமில்லாமல் aggressive ஆக பயன்படுத்தும் பெண்களை நான் ஏற்பதில்லை. ஆண்களை victimise பண்ண பெண்ணியத்தைப் பயன்படுத்துவதைச் சொன்னேன். 
நடாஷா: Are you a meninist? 
புரொபஸர்: சர்.
கணேஷ்: அதென்ன சார் விக்டிமைஸ்? 
புரொபஸர்: to single (someone) out for cruel or unjust treatment. Single out பண்ணுவது என்றால் சிலரை மட்டும் குறிவைத்து தாக்குவது. நான் இத்தகைய அநீதியில் ஈடுபடும் பெண்ணியவாதிகளை ஏற்பதில்லை. ஆனால் அடிப்படையில் நான் பெண்ணியத்தை ஏற்பவன். அதை வைத்து persecute பண்ணுவதை, hound செய்வதை கடுமையாக எதிர்க்கிறேன். 
நடாஷா: Persecution என்பது பெரிய வார்த்தை சார். 
புரொபஸர்: ஏன் இல்லை? ஏன் சில ஆக்டிவிஸ்டுகள் அப்படி பண்ணுவதில்லையா? 
கணேஷ்: பெர்ஸிக்கியூஷன் என்றால் எதாவது லோஷனா? 
சேஷாச்சலம்: ஹா... ஹா... லோஷனைப் போல நெடியடிக்கும் ஒரு சொல் தான். அதன் ஒரு பொருள் to ill-treat  someone over their race or political or religious beliefs. But it is also harassing or annoying someone persistently. அதாவது ஒருவரைத் தொடர்ந்து அச்சுறுத்தி கருத்தளவில் தாக்குவது. உங்க சார் அந்த இரண்டாவது பொருளில் தான் இதை சொல்லி இருக்க வேண்டும். 
புரொபஸர்: ஆமாம். அந்த இரண்டாவது பொருளில் தான் சொன்னேன். 
சேஷாச்சலம்: போகட்டும், அவரிடம் வேறெதாவது சிக்கல் இருக்கிறதா? 
ஜூலி: புரொபஸர் ஒரு locavore ஆகி விட்டார். 
கணேஷ்: அதென்ன?
(இனியும் பேசுவோம்)


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im4.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-203---ஆர்அபிலாஷ்-3208190.html
3208189 வார இதழ்கள் இளைஞர்மணி திட்டமிடுதல் DIN DIN Tuesday, August 6, 2019 10:57 AM +0530 எந்தத் தொழிலாக இருந்தாலும், அவர் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் திட்டமிடுதலே அவர்களின் வாழ்க்கைக்கு வலுவினைச் சேர்க்கிறது. திட்டமிடுதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும்.
 ஒரு விவசாயி பருவத்தைப் பார்த்தே, தான் எதை விதைக்கலாம் என்று திட்டமிடுகிறான். இந்தப் பருவத்தில் இதை விதைத்தால் இத்தனை மகசூல் கிடைக்கும் என்று சரியாக கணக்குப் போடுபவனே ஒரு தேர்ந்த விவசாயியாக இருக்க முடியும். திட்டமிட்டபடியே அவன் சரியான விளைச்சலைப் பெற்று வெற்றி பெற முடியும்.
 சரியாகத் திட்டமிட்டுக் கல்வியில் கவனம் செலுத்தும் மாணவனே கல்வியில் சிறந்தவனாக உயர முடியும். நன்கு திட்டமிட்டு தன்னைச் சரியாகத் தயார்படுத்திக் கொண்டு, வகுப்பறையில் நாளைய தினம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடங்களை இன்றே ஆய்ந்து, தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, மிகச் சரியான திட்டமிடுதலுடன் வகுப்பறைக்கு வந்து, மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராக விளங்க முடியும். நல்ல மாணவர்களையும் உருவாக்க முடியும். அதனால் திட்டமிடுதல் என்பது நம் வாழ்விவ் ஒவ்வொரு நிலையிலும் தேவைப்படுகிறது.
 சிவபாரதி எழுதிய "சிறகுகள் விரித்தால் பறக்கலாம்' என்ற நூலிலிருந்து...
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/திட்டமிடுதல்-3208189.html
3208187 வார இதழ்கள் இளைஞர்மணி புறம் தள்ளாதீர்கள்... அறிவியல் ஆராய்ச்சிகளை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்) DIN DIN Tuesday, August 6, 2019 10:51 AM +0530 மிச்சமெல்லாம் உச்சம் தொடு 29

இந்தியாவில் வருடம் தோறும் ரூ 30,000 கோடி மதிப்புள்ள வேளாண்மைப் பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 200-க்கும் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இது பூச்சிகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அமெரிக்காவில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விளைவால் உருவாகும் உடல் நலக் குறைபாடு ஒரு பெரிய பிரச்னை. 
பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவாக உருவான கேன்சரை மருத்துவ மேலாண்மை செய்வதற்கு, அவசர சிகிச்சைக்கு மற்றும் உயிரிழப்பிற்கு ஆகும் தொகை ஆண்டுக்கு US$200 மில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்தின் விளைவாக தலைவலியில் ஆரம்பித்து, மனஉளைச்சல், நினைவிழத்தல், பார்க்கின்சன், அல்ஸைமர் போன்ற வியாதிகள் வருகின்றன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் போது அதைச் சுவாசித்தாலும், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் உடல்நலக் கேட்டையும், மரணத்தையும் பரிசாகக் கொடுக்கின்றன. 
நேஷனல் கிரைம் ரிக்கார்டு பீரோ (NCRB) அளித்த தகவல்களின்படி, 2015 - இல் கிட்டத்தட்ட 7,060 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை செடிகளுக்கு அடித்ததின் பக்க விளைவுகளால் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை 30 முதல் 60 நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் இதை இன்னும் உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளினால், பாதிக்கப்படுகிறார்கள் அல்லது மரணமடைகிறார்கள். ஆனால் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் பக்க விளைவில் இருந்து மக்களைக் காக்கும் மரபணு மாற்றுப் பயிர்களால் யாரேனும் புற்றுநோயாலோ, ஒவ்வாமையினாலோ மரணமடைந்தார்கள் என்றும் மலட்டுத்தன்மை அடைந்தார்கள் என்றும் இந்தியா மட்டும் அல்ல, உலகத்தில் இதுவரை ஆதாரப்பூர்வமாக, ஆராய்ச்சி முடிவாக நிரூபிக்கப்படவில்லை. 
மரபணு மாற்றுப் பயிர் அறிமுகப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் ஒரே ஒரு கணவனும், மனைவியும், தங்களுக்கு வந்த கேன்சருக்கு காரணம் மான்சான்டோ கம்பெனியின் ரவுண்ட் அப் களைக்கொல்லியில் இருக்கும் கிளைபோசேட் 30 ஆண்டுகள் பயன்படுத்தியதால் தான் ஏற்பட்டது என்று கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுத்து $2 பில்லியன் அபராதத்தை மான்சான்டா கம்பெனிக்கு விதித்தது. அது அதிகம் என்று அதே நீதிமன்றம் $86.7 மில்லியனாகக் குறைத்தது, இதை எதிர்த்து மான்சான்டா கிளைபோசேட்டினால் கேன்சர் வரும் என்பதை ஏற்க முடியாது என்று இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதைக் காரணமாகக் காட்டி மான்சான்டோவின் கிளைபோசேட் மரபணுவிற்கு ஜெர்மனி தடை விதித்து விட்டு, அந்த நாடு தானே மரபணு மாற்று ஆராய்ச்சியைத் தொடர பட்ஜெட் ஒதுக்கி செயல்படுகிறது. இதை பல்வேறு நாடுகள் தொடர்கின்றன. 
அதாவது பூச்சிக்கொல்லியால் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாட்டிலும் சாகிறார்கள். அவர்கள் உயிருக்கு எவ்வித மதிப்பும் இல்லை. ஆனால் நிரூபிக்கப்படாத தகவலை வைத்து அமெரிக்காவில் இவ்வளவு அதிகம் அபராதம் விதிக்கமுடியும் என்றால், அங்கு ஆராய்ச்சிக்கும் மதிப்பு உண்டு, அதன் விளைவால் ஆபத்து வந்தால் அதற்கு அபராதமும் மிக அதிகமாக இருக்கும் எனும் போது, அங்கு அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பயமாவது வரும். மரபணு மாற்றுப் பயிருக்கு எதிராக இன்னமும் நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து, அதற்கு எதிர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. நன்மையும், ஆபத்தும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்திலும் உண்டு. அதைக் கண்காணித்து மக்களைப் பாதிக்காத வகையில் நம் ஆராய்ச்சி இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, மனித உடல் நலத்திற்கு 20 வகையான முக்கிய அமினோ அமிலங்கள் தேவை. இறைச்சியில் இந்த 20 வகையான அமினோ அமிலங்கள் மற்றும் தேவையான புரதங்கள் ஒட்டு மொத்தமாக இருக்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து இந்த புரதம் கிடைக்க வேண்டும் என்றால் பருப்பு மற்றும் பல்வேறு தானியங்களைக் கலந்து சாப்பிடுவதின் மூலம் தான் தேவையான புரதமும், அமினோ அமிலங்களும் கிடைக்கும். 
நாம் மாமிசம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை தான் சாப்பிடுவோம். ஆனால் பருப்பு தினம் தோறும் சாப்பிடுவோம். நமக்குத் தேவையான புரதம் பெரும்பாலும் பருப்பிலிருந்து தான் கிடைக்கும். அதிலிருந்து இரண்டு அமினோ அமிலங்கள் அளவு குறைவாக இருக்கும். ஆனால் மாமிசம் சாப்பிடும்போது அந்த அமினோ அமிலங்கள் தேவையான அளவு இருக்கும். 
ஓர் ஆராய்ச்சி செய்யும்போது எந்த பருப்பு வகைகளில் சிஸ்டைன், மெத்தியோனைன் போன்ற சல்பர் அமினோ அமிலம் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ததில் "பிரேசில் நட்' என்ற கடலை வகையில் ஆல்புமின் என்ற புரதத்தில் சிஸ்டைன், மெத்தியோனைன், சல்பர் அமினோ ஆசிட் அமிலம் அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இந்த ஆல்புமின் புரதம் மாமிசத்தில் கிடைக்கும் புரதம் போல் சமஅளவில் கிடைக்கிறது. 
பிரேசில் நட் தென்அமெரிக்காவில் பெர்தோலேசியா எக்செல்சா அல்லது பிரேசில் நட் மரத்தில் இருந்து கிடைக்கும் ஒருவித கடலையாகும். இந்தக் கடலையில் இருந்து நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் அதிகமான செலினியம் மினரல் கிடைக்கிறது. செலினியம் தாதுவில் உடலில் உள்ள மாசுகளை வெளியேற்ற உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். மாசுகள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப்படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இது டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் சிஸ்டைன், மெத்தியோனைன் போன்ற சல்பர் அமினோ அமிலம் பிரேசில் நட்டின் புரதத்தில் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த ஆல்புமின் புரதத்தை எடுத்து சோயாபீன்ஸில் சேர்த்தால் மாமிசத்திற்கு இணையான புரதம் இதில் கிடைக்கும் என்று சிந்தித்தார்கள், இந்த புரதத்தை சோயாபீன்ஸில் மரபணு மாற்றி சல்பர் அமினோ ஆசிட் அதிகமாக இருக்கும் வகையில் ஒரு சோயாபீன்ஸை உருவாக்கினார்கள். 
பின்பு என்ன தெரிய வந்தது என்றால் பிரேசில் நட்ஸ் சாப்பிடுவர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே அலர்ஜி வந்தது. ஆனால் பிரேசில் நட்ஸில் இருந்து எடுக்கப்பட்ட ஆல்புமின் மரபணு மாற்றப்பட்ட ஜி.எம் சோயாபீன்ஸ் இருக்கும் புரதத்தில் மாற்றப்பட்டதால் அலர்ஜி வந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஏற்கெனவே நாம் பார்த்தபடி, இந்த மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் 3 ஆய்வு நிலைகளில் ஒரு நிலையில் ஒவ்வாமை ஒரு சிலருக்கு வந்தது என்று கண்டறிந்தவுடன் பிரேசில் நட்ஸ் புரதத்தால் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸைத் தடை செய்து விட்டார்கள். 
எனவே, இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் சரியாக கட்டமைக்கப்பட்டிருப்பதால், எங்காவது ஆபத்து இருக்கிறது என்பது ஆய்வுப்பூர்வமாகக் கண்டறியப்பட்டால், அதை தடுத்து நிறுத்திக் கொள்ள இயலும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் அறிவியலை தெளிவாக நம்பிக்கையோடு அறிவியல் வரைமுறைப்படி செய்தோம் என்றால் அறிவியல் ஆராய்ச்சியின் பயன்பாடுகள் நமக்கு கிடைக்கும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. 
சீத் பிளைட் வியாதி (Sheath Blight Disease) என்ற வியாதியால் நெல்லின் உற்பத்தி திறன் 20 முதல் 25 சதவீதம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பூஞ்சை நோய். பொதுவாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தாவரங்களில் எதிர்ப்புத்திறன் கொண்ட மரபணுக்கள் இருக்கும். ஆனால் இந்த நோயை எதிர்க்கக் கூடிய மரபணு நெல்லில் இல்லை. தண்ணீர் அதிகமாக தேங்கும்போது நெல்லைப் பாதிக்கும் பூஞ்சை நோய் வரும். 25 வருடத்திற்கு முன்பாக இந்த ஆராய்ச்சியை நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக இருந்த போது, டாக்டர் வேலுத்தம்பியின் தலைமையில் தொடங்கப்பட்டது. தாவரங்களில் anti-fungal புரோட்டீன்கள் நிறைய இருக்கின்றன; இதை அதிக அளவில் நெல்லில் இருக்கும்படி உருவாக்கினால், அந்த சீத் பிளைட் வியாதியை நெல்லில் குறைக்க முடியுமா என்பதுதான் டாக்டர் வேலுத்தம்பியின் ஆராய்ச்சி. அதனால் அந்த மரபணுவை எடுத்து அதிக அளவில் எம்ஆர்ஐ வரும்படி அதற்கு ஒரு மரபணு மாற்றம் பண்ணி நெல்லை உற்பத்தி செய்தார்கள். இதில் 100% fungus 
resistance வராது. ஆனால் 50% அந்த நோயிலிருந்து காக்கும்படியாக உருவாக்க முடிந்தது. கடலோர தமிழ்நாடு ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் அதிகமாக இந்த பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்பு அதிகமானது. 
இந்த நெல் வகைகளை வெள்ளை பொன்னியில் உருவாக்கிய பின்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரைஸ் ரிசர்ச்’ - ஹைதராபாத் இதை எடுத்து கிராஃப்ட் மூலம் ஆந்திர பிரதேசத்தில் நன்கு வளரக்கூடிய இரண்டு நிலைகளில் ஹைபிரிட் முறையில் பூஞ்சையைத் தாங்கி வளரக் கூடிய சக்தியுடன், ஆந்திராவில் பரவலாகப் பயிரிடப்பட கூடிய நெல் வகைகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி பரீட்சார்த்தமாகச் சோதித்தார்கள். 100 டன் நெல் கிடைக்கும் இடத்தில் வெள்ளத்தால் பூஞ்சை நோய் மூலம் 20 சதவிகிதம் அழிவதற்குப் பதிலாக, இந்த மரபணு மாற்றப்பட்ட நிலையில் இப்போது 90டன் ஆக அந்த நெல் பூஞ்சைக்காளானைத் தாங்கி வளரக் கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இருந்து கள ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் சூழலியல் ஆய்வு செய்து முழுமையான பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் இன்னும் பத்து வருடமாகும். ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டி இருக்கிறது. இன்றைக்கு 900 ரகங்கள் இந்தியா முழுவதும் இது கலப்பினம் ஆராய்ச்சி மூலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கேன்சர் வரும் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் வராது என்று நம்பி சொல்வதற்கு 30 ஆண்டுகால ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
15 வருடத்திற்கு முன்பு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆராய்ச்சி வல்லுநர்கள் இருந்தார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எப்போது பி.டி. கத்திரிக்காய்க்கு தடைவிதிக்கப்பட்டதோ, அதன் பின்பு மாணவர்களுக்கு இந்த உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடு குறைந்து விட்டது. இந்த மரபணு மாற்று ஆராய்ச்சி துறையில் நுணுக்கம் தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்கள். நுணுக்கம் தெரிந்தவர்கள் வேலை இல்லாமல் போய், இந்தத் துறை கிட்டத்தட்ட அழியும் நிலையில் வந்திருக்கிறது. எதையும் உருவாக்குவதற்கு அறிவும் மதிநுட்பமும் வேண்டும், அழிப்பதற்கு பயத்தை உருவாக்கினால் போதும். 
மறுபடியும் இந்தத் துறையை சேர்ந்த விஞ்ஞானிகளைக் கண்டுபிடிப்பது, அவர்களை உருவாக்குவது என்பதற்கெல்லாம் இன்னும் ஓர் இருபது வருடமாகும், இப்போதே நாம் பின் தங்கி விட்டோம். இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மக்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும் என்றால் தவறான செய்திகளின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கக் கூடாது. பொய்யான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்காமல் இருந்தால் தான் இந்தியாவில் ஆராய்ச்சி சிறக்கும். இல்லையென்றால் கற்காலத்துக்கு மக்களை அழைத்துச் சென்றவர்களாவோம். 
எனவே, மக்களது வாழ்வு வளமானதாக வேண்டும் என்றால் அறிவார்ந்து சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்- vponraj@gmail.com
(தொடரும்)
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/ponraj.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/புறம்-தள்ளாதீர்கள்-அறிவியல்-ஆராய்ச்சிகளை-விஞ்ஞானி-வெ-பொன்ராஜ்-அப்துல்கலாமின்-முன்னாள்-அறிவியல்-3208187.html
3208165 வார இதழ்கள் இளைஞர்மணி கணினியிலும் வாட்ஸ் ஆப்! DIN DIN Tuesday, August 6, 2019 10:40 AM +0530 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கணினி இணயதள உலகத்தை சாட்டிங், ஜி-மெயில், மெசேஞ்சர், பேஸ் புக் ஆகியவை ஆட்டிப் படைப்பதைப் போல, ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களை வாட்ஸ் ஆப் சேவை வசீகரித்தது.
 வாட்ஸ் ஆப்பைப் போன்ற வேறு செயலிகள் இருந்தாலும், மக்களிடையே பிரபலமாகாத காரணத்தால் அவை வாட்ஸ் ஆப்பிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் 2014-இல் வாங்கியதில் இருந்து, இளைஞர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால், இந்தியாவில் 20 கோடியாக இருந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2019-இல் 40 கோடியாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
 இதன் மூலம் வாட்ஸ் ஆப் சேவை இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை என்பதாகியுள்ளது.
 வாட்ஸ் ஆப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் 2015-இல் கணினி வாட்ஸ் ஆப் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் ஆன் செய்யப்பட்டு இருந்தால்தான் கணினி வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த முடியும். வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கு இடையூறாக இருந்துவரும் இந்த முறையால், வாட்ஸ் ஆப் கணினிப் பயன்பாடு பெருமளவில் பிரபலமாகவில்லை. இதற்கு தீர்வு காண வாட்ஸ் ஆப் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. ஸ்மார்ட் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தாலும், கணினியில் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கைப் பயன்படுத்தும் புதிய செயலியை உருவாக்கி வருவதாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், ஓர் வாட்ஸ் ஆப் கணக்கை ஸ்மார்ட் போன் மட்டுமில்லாமல் டேப், கணினி போன்ற பல்வேறு கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
 வாட்ஸ் ஆப் வர்த்தக கணக்கைப்போல், "வாட்ஸ் ஆப் "மணி'’ எனும் பணப் பரிமாற்றம் செய்வதற்கான பிரத்யேக செயலியை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மக்களின் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் நிறுவனம் பல்வேறு வகையிலான சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், பயன்பாட்டாளர்களின் தகவல்களின் பாதுகாப்புக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி அளித்தால்தான் மக்களிடம் நிலைத்திருக்க முடியும்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/WHATSAPP.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/கணினியிலும்-வாட்ஸ்-ஆப்-3208165.html
3208157 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, August 6, 2019 10:35 AM +0530 முக நூலிலிருந்து....
* எதிர் வரும் 
காலச்சாலையின் வளைவில்... 
யார் யாரோ 
தொலைந்தது போல் 
உன் நினைவுகளும்.
நர்மதா நர்மதா

* வெற்றி என்பது 
நமது பாக்கெட்டில் இருக்கும் பலூன். 
அதை யார் எடுத்து ஊதுகிறார்களோ...
அவன் வெற்றியாளன் ஆகிறான். 
புலம் லோகநாதன்

* சிலருக்கு விளக்கம் 
கொடுப்பதை விட...
அவர்களிடம் இருந்து 
விலகி இருப்பதே மேல்.
திருப்பதி ராஜா

* "இன்னமும் மனிதனை 
நம்புகிறேன்' என்கிற
கடவுளின் செய்தியைச் சுமந்தே
ஒவ்வொரு குழந்தையும்
பூமிக்கு வருகிறது.
முருக தீட்சண்யா

* உங்க கையால ஒரு மரக்கன்று வைத்து,
அது துளிர்த்து வர்றதைப் பார்க்கும்போது
ஒரு மகிழ்ச்சி வருமே...
வச்சி பாருங்க தெரியும்.
சகோ

சுட்டுரையிலிருந்து...
* ட்விட்டர் வந்து பார்...
காலையிலேயே தத்துவத்தோடு எழுவாய். 
உனக்குள்ளிருக்கும் கண்ணதாசனும்
வைரமுத்துவும் வெளியே வருவார்கள்...
தீய்ஞ்ச பணியாரத்தையும்
ஓடி ஓடி போட்டோ எடுப்பாய்... 
சிறகு முளைக்காத பறவையைக் கூட ரசிப்பாய்...
அரசியல் ஞானியாவாய்...
ட்விட்டர் வந்து பார்.
நட்சத்திரா

* உன்னுடன் 
இருந்தவர்கள்
உன்னை 
விட்டுச் சென்றாலும்... 
தனி ஒருவனாய்ப் போராடு.
மல்லிகா நல்லுசாமி

* கவலை என்னும் 
கதவுகளை மூடி விடுங்கள் 
கண்கள் என்னும் ஜன்னல் வழியே
நல்லவற்றைத் தேடுங்கள்...
நிம்மதி எனும் தென்றல்
உங்களை நிச்சயம் தீண்டிச் செல்லும்.
நீர்ப்பறவை

வலைதளத்திலிருந்து...
ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள், மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத் தொடங்குகின்றன. 
கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.
கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.
குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும். 
சுவரிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.
குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.
குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள். தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள். 
குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.
http://udhayasankarwriter.blogspot.com/
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im2.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/இணைய-வெளியினிலே-3208157.html
3208145 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 58 Tuesday, August 6, 2019 10:32 AM +0530 மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சியை அது மிகவும் பாதிக்கிறது. வளர்ச்சியை மட்டுமல்ல அறிவுத்திறனையும் குறைக்கிறது. 
ஏர் விஷுவல், கிரீன்பீஸ் என்ற இரண்டு தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகம் எங்கும் உள்ள நகரங்களில் காற்று எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதை ஆராய்ந்து, கணக்கிட்டு வெளியிட்டு வருகிறார்கள். அப்படி வெளியிட்ட நகரங்களின் பட்டியலில் மிக அதிக அளவில் காற்று மாசடைந்த நகரங்களாகப் பத்து நகரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. 
உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரம் குருகிராம் ஆகும். இது டெல்லியிலிருந்து 30 கி.மீ. தென்மேற்கே அமைந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த சராசரி காற்று மாசடையும் நிலையில் இருந்து 13 மடங்கு அதிக அளவு காற்று மாசு அடைந்த நகரமாக உள்ளது. உலக அளவில் மோசமாக காற்று மாசடைந்த நகரங்களில் இரண்டாம் இடத்தை காஸியாபாத் பெற்றுள்ளது. நான்காவது இடத்தை ஃபரிதாபாத்தும், ஐந்தாம் இடத்தைப் பிவாடியும் பெற்றுள்ளன. உலக அளவில் மோசமான காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை நொய்டாவும், ஏழாவது இடத்தைப் பாட்னாவும், ஒன்பதாவது இடத்தை லக்னோவும் பெற்றுள்ளன. டெல்லி 11 ஆவது இடத்தையும், ஜோத்பூர் 12 ஆவது இடத்தையும், முசாபர்பூர் 13 இடத்தையும் பிடித்துள்ளன. வாரணாசி, மொராதாபாத், ஆக்ரா ஆகியவை முறைய 14 - 15- 16 ஆவது இடங்களையும், கயா 18 ஆவது இடத்தையும், ஜிண்ட் 20 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன என்பது வேதனையளிக்கும் செய்தியாகும். 
காற்று மாசினால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. நமதுநாட்டில் 70 லட்சம் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னதாகவே இறந்துவிடுகின்றன. நமது சராசரி வயது விகிதத்தை காற்று மாசு குறைத்து விடுகிறது. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது புகைப்பிடிப்பதை விட மிக மிகத் தீங்கானதாக உள்ளது. இந்தியா சுற்றுச்சூழலுக்கு எதிரான போரை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கான செலவினங்களைத் திட்டமிடும்போது, அது 225 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்தினால் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள மக்களின் சராசரி வயது தற்போது இருப்பதை விட 1.3 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது. 1 லட்சம் மக்களில் 195 பேர் காற்றில் ஏற்படக்கூடிய மாசுகளினால் இறந்துபோகிறார்கள். இந்தியா சுற்றுச்சூழலுக்கு எதிரான போரை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து இந்தியா இது தொடர்பாக நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. சீனா காற்று மாசடைவதைத் தடுப்பதை முதன்மையான பிரச்னையாக எடுத்துக் கொண்டு, காற்றில் கலந்துள்ள சல்ஃபர் டை ஆக்ஸைடின் அளவை பெரிய அளவில் குறைத்திருக்கிறார்கள். இதனால் காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள் தொகையில் 5 இடத்தில் உள்ளார்கள். 
ஐரோப்பிய நாடுகளிலும் கூட அங்குள்ள நகரங்களில் உள்ள காற்றின் தன்மை கடந்த தலைமுறை சுவாசித்ததை விட தற்போது மிகவும் தூய்மையாக உள்ளது. 1960 -களில் உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களில் ஒன்றாக கலிபோர்னியா விளங்கியது. அவர்களுடைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கையினால் தற்போது உலகிலேயே காற்று மாசை எப்படிக் குறைப்பது என்பதற்கு வழிகாட்டும் நாடாக அது மாறிவிட்டது. காற்றின் மாசை நீக்குவதற்காக அவர்கள் செலவழித்த தொகையினால், அங்குள்ளமக்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. மருத்துவச் செலவுகள் குறைந்தன. புதியவேலை வாய்ப்புகள் உருவாகின. தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. கலிபோர்னியா நகரம் சிறந்த நகரமாக விளங்க இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்திட்டங்களும் காரணங்களாக இருக்கின்றன. 
காற்று மாசடைந்ததைப் போன்று, இந்தியாவில் உள்ள ஆறுகள், நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கடல்கள் எல்லாமே மாசுபட்டுள்ளன. வேதிப்பொருள்கள், மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக், மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறியும் பொருள்கள் ஆகியவற்றால் நீர்நிலைகள் மாசுபடுத்தப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் 
இந்தப் புவியினில் உயிர் 
வாழ்ந்தார்கள். 
அவர்கள் அன்பில்லாமல் உயிர் 
வாழ்ந்தார்கள். 
ஆனால் ஒருவர் கூட 
தண்ணீரில்லாமல் உயிர் வாழ்ந்ததில்லை 
என்ற டபிள்யூ. எச். ஆடன் என்பவர் எழுதிய கவிதையை நினைவுக்கு வருகிறது. 
உலகில் உள்ள நீர்நிலைகளில் 80 சதவீதம் நீர்நிலைகள் மனிதர்கள் பயன்படுத்திய தூய்மையில்லாத நீரால்தான் நிரம்பியிருக்கின்றன. நாம் பயன்படுத்தும் நீரை தூய்மைப்படுத்தாமல் அப்படியே ஆற்றிலோ, கடலிலோ கலந்துவிடுகிறோம். இந்த மாசடைந்த தண்ணீரானது மக்களுடைய ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. உலகிலேயே அதிகமான மரணங்கள் தூய்மையான குடிநீர் கிடைக்காததால் ஏற்படுகின்றன. இது போர்களினால் ஏற்படும் மரணங்களை விட அதிகமாக இருக்கிறது. 
எந்தவோர் இயற்கைப் பேரழிவையும் விட, தூய்மையான குடிநீர் கிடைக்காததால் மக்கள் உயிர்விடுவது அதிகமாக உள்ளதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உலகில் உள்ள நீர்நிலைகளில் தூய்மையான தண்ணீர் 1 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையே இனியும் தொடருமேயானால் 2050 - இல் இந்த 1% தூய்மையான தண்ணீரில் மூன்றில் இரண்டு பங்கு இல்லாமல் போய்விடும்.
நாம் எல்லாருமே அமெரிக்காவில் நல்ல தண்ணீர் கிடைப்பதாக நம்புகிறோம். அமெரிக்காவில் உள்ள குழாய் தண்ணீரில் காப்பர், கரி, ஆர்செனிக் போன்றவை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
குடிநீர்க்குழாய்களில் வரும் நீரைக் கூட நாம் தூய்மைப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். நீர் மாசடைவதற்கு முக்கிய காரணங்களாக, நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் பொருள்கள் தண்ணீரில் கலந்து, ஓடைகள், ஆறுகளின் வாயிலாக கடலில் கலக்கின்றன. 
நாம் பூமியில் பயன்படுத்தக் கூடிய ரசாயனப் பொருள்களே நிலத்தடி நீரும் கெட்டுப் போவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. மழை பெய்யும்போது இந்த ரசாயனப் பொருள்கள் நீருடன் எளிதாகக் கலந்து, அது நிலத்தின் ஆழமான பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அது நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிவிடுகிறது. குடிப்பதற்கு உகந்த நீராக நிலத்தடி நீர் இருப்பதில்லை. இந்த மாசடைந்த நீரைச் சுத்தமான நீராக மாற்ற ஒரு தலைமுறைக் காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட தேவைப்படலாம். 
பூமியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. கடல், ஏரி, குளங்களாக அவை உள்ளது. இவ்வாறு வெளியே தெரியக் கூடிய சர்ஃபேஸ் நீரும் மாசடைந்தே உள்ளது. 
யுஎஸ் என்விரான்மென்டல் புரடக்ஷன் ஏஜென்சி ஒன்று தற்போது நடத்திய சர்வேயின்படி, உலகில் உள்ள பாதி ஆறுகளும், ஓடைகளும், மூன்றில் ஒரு பங்கு ஏரிகளும் நீந்துவதற்குக் கூட உகந்ததாக இல்லாமல் போய்விட்டன. மீன்கள் கூட வாழத் தகுதியற்ற நீராக அவை மாறிவிட்டன. குடிப்பதற்கு தகுதியற்ற நீராக உள்ளது. நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ரசாயனப் பொருள்கள் இந்த நீர்நிலைகளில் அதிகமாக கலந்திருக்கின்றன. 
குறிப்பாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய விவசாயத்தினால் ஏற்படக் கூடிய கழிவுகள், தொழிற்சாலைகளில் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வதனால் வெளித்தள்ளப்படும் கழிவுகள் நீர்நிலைகளில் அதிகம் கலந்து விடுகின்றன. 
கடல்நீரும் மாசடைந்தே உள்ளது. கடல் நீரில் ஏற்படக் கூடிய மாசின் 80 சதவீதம் நிலத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. நிலத்திலிருந்து வேதிப் பொருள்கள், தொழிற்சாலை கழிவுகள், விவசாய உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் ஏற்படும் கழிவுகள் நிலத்தில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஆறுகள், கால்வாய்கள் மூலமாக கடலைச் சென்று அடைகின்றன. இந்த கழிவுகள் ஆழ்கடல் வரைக்கும் மாசடைய வைக்கின்றன. கடலின் அடியில் இருந்து எடுக்கக் கூடிய எண்ணெய்கள், கப்பல்களில் ஏற்படக் கூடிய எண்ணெய்க் கசிவுகள், கடலில் ஏற்படும் எண்ணெய்க் கப்பல் விபத்துகள் போன்றவையும் கடல் நீரை மாசடையச் செய்கின்றன. கடல்நீரில் கலந்த இந்த மாசு காற்றில் கார்பன் மாசாக வெளிவருகிறது. மனிதர்கள் உருவாக்கக் கூடிய கார்பன் மாசுகளை கடல் உள்வாங்கி, கடல் காற்றை மாசுபடுத்துகிறது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/6/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/aug/06/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்-58-3208145.html
3203398 வார இதழ்கள் இளைஞர்மணி சுற்றுச்சூழல் மேலாண்மைப் படிப்பு! DIN DIN Tuesday, July 30, 2019 12:23 PM +0530 தென் மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த 1997 -ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் என்ற ஊரில் திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) தொடங்கப்பட்டது.
திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 -இல் இங்கு தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறை உருவானது. திராவிடக் குடும்பத்தின் பிற முக்கிய மொழிகள் தொடர்பாக தமிழ் ஆய்வுகளை உருவாக்குதல், இன்றைய வேலைச் சந்தையில் குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் மொழி ஆய்வுகளின் நவீனப் பயன்பாட்டை உருவாக்குதல், திராவிட இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தின் ஒப்பீட்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல், மொழிபெயர்ப்புக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல் ஆகியவை இந்தத் துறையின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
ஆனால் வித்தியாசமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (A Master's Degree in Environmental Management) தொடங்கப்பட்டுள்ளது. மனிதனின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கும், சுற்றுச்சூழலின் தேவைகளுக்கும் இடையில் ஓர் இணக்கமான சமநிலையை உருவாக்கும் செயல்பாடுகளை மேலாண்மை செய்யும் முதல்தர சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாணவர்களை மாற்ற இந்தப் பாடத்திட்டம் உதவுகிறது. தற்போதைய நிலையில், அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவதால், இதற்கான வேலை வாய்ப்புகளும் மிக அதிகமாகவே உள்ளன. இதைப் பயிலும் மாணவர்களுக்கு அதிகப் பயன்தரக்கூடிய படிப்பாகும் இது. 
இந்த முதுநிலை பட்டம் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை ஆதரிக்கும் விஞ்ஞான கொள்கைகளில் உறுதியான அடிப்படையை வழங்குகிறது. 
சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட அம்சங்கள், இயற்கை வள மேலாண்மை, பேரழிவு மேலாண்மை, மாசுபாடு மற்றும் கழிவுகளை அகற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான பகுப்பாய்வு முறைகள், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பல்லுயிர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, நிலையான எரிசக்தி மேலாண்மை, உலகளாவிய காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் தணிக்கை போன்ற அம்சங்கள் இந்த சுற்றுச்சூழல் மேலாண்மையில் உள்ளடங்கியுள்ளன. 
சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானி, சுற்றுச்சூழல் மேலாண்மை பகுப்பாய்வாளர், மேலாளர்- சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் அலுவலர் மற்றும் மேலாளர், சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்ப நிபுணர், சுற்றுச்சூழல் துப்புரவு அதிகாரி, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி, அரசு மற்றும் தனியார் துறைகளில் சுற்றுச்சூழல் ஆலோசகர், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் தயாரிப்பு மேலாளர் என இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதில் சேர BE, BBA, B.sc.,பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மட்டும் ரூ. 56,700. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் மேலாண்மை படிப்பு தவிர, தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறையில் முழுநேர முதுநிலை பட்டம், முழுநேரம் மற்றும் பகுதிநேரம் கொண்ட எம்.பில். பட்டம், முழுநேர மற்றும் பகுதிநேர பி.எச்.டி. பட்ட வகுப்புகளும், ஓராண்டு டிப்ளமா படிப்பு, 6 மாதங்கள் கொண்ட சான்றிதழ் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் திராவிட இலக்கியம் மற்றும் தத்துவ துறை ஒப்பாய்வு (Department of Comparative Dravidian Literature and Philosophy - CDL&P) 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வரலாறு, திராவிட இலக்கியம், தத்துவம், கலாசார ஒப்பாய்வு மற்றும் மதம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, வெளியீடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் துறை தொடங்கப்பட்டது.
இதில், வழக்கமான எம்.ஏ. தத்துவம் (2 ஆண்டுகள்), முழுநேரம் மற்றும் பகுதிநேர எம்.பில். தத்துவம் அல்லது திராவிட இலக்கியம் ஒப்பாய்வு, முழுநேர அல்லது பகுதிநேர பி.எச்.டி. தத்துவம் அல்லது திராவிட இலக்கியம் ஒப்பாய்வு பயிலலாம்.

எனினும் இந்த ஆண்டு தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புப் பாடங்களை அதிகமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை தலைவர் டி. விஷ்ணுகுமாரன் கூறியது:
"இந்தப் பாடங்கள் குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம். மேலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பெறும் தமிழ் பட்டம் தங்கள் மாநிலத்தில் உரிய மதிப்பை அளிக்குமா என்பதில் மாணவர்களுக்கு ஐயம் இருக்கலாம். 
எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இங்கு ஏராளமான வசதிகள் உள்ளன. இந்தத் துறை இதுவரை தமிழ் மொழியில் ரூ. 10.25 கோடிக்கு மேல் ஆராய்ச்சித் திட்டங்களை முடித்துள்ளது. இந்த ஆண்டு 4.5 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு அதிநவீன நூலகத்தைக் கட்டியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் உறைவிடத் தேவைகளுக்கான முழு உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. தற்போது, பி.எச்.டி.யில் முழுநேரமாக 7 மாணவர்களும், பகுதிநேரமாக 7 மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. எங்கள் மாணவர்களில் 60 பேர் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் மத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதோடு, குடியரசுத் தலைவர் விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார் அவர். 
இரா.மகாதேவன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/im4.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/சுற்றுச்சூழல்-மேலாண்மைப்-படிப்பு-3203398.html
3203397 வார இதழ்கள் இளைஞர்மணி நீரில் மூழ்குபவரை காப்பாற்றும் ட்ரோன்! DIN DIN Tuesday, July 30, 2019 12:19 PM +0530 தண்ணீரில் மூழ்கியிருப்பவரைக் காப்பாற்றும் வகையில் அருமையான ட்ரோனை வடிவமைத்துள்ளார் அலியாஸ்கர்.
ஜெர்மனி சீஜென் பல்கலைக்கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர் அந்த சிறப்பான ட்ரோனை வடிவமைத்துள்ளார். கடல் சார் தொழிலில் ஆர்வம் கொண்ட அவர், தனது தந்தை அகமதுஷேக் மற்றும் சகோதரர் தாகிர் அகமது ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுதான் இந்த ட்ரோன். 
EAC Marine Pvt Ltd என்ற நிறுவனத்தை விசாகப்பட்டினத்தில் தொடங்கிய அலியாஸ்கர், இந்திய கடலோர பாதுகாப்பு, இந்திய கடற்படை பாதுகாப்பு போன்ற ஏஜென்சிகளுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியுள்ளார். 
விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதி மிகவும் கடினமாக இருப்பதால் பலர் மூழ்கிவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. அதனால் அப்படி மூழ்குபவர்களை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என சிந்தித்தன் விளைவே ட்ரோன் உருவாக காரணமாகியது என்கிறார் அலியாஸ்கர். 
"எனது தந்தையின் துணையோடு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீர் ட்ரோன் வடிவமைக்க தீர்மானித்தோம். கடந்த மே மாதம் இதற்கான முன்வடிவம் தயாரானது. இந்த ட்ரோன் பிரத்யேக ரிமோட் வாயிலாக இயக்கப்படுகிறது. 
இந்த ட்ரோன் இணையத்தையோ அல்லது டவர் சிக்னலையோ சார்ந்து செயல்படுவதில்லை. இது ரேடியோ அதிர்வலையைக் கொண்டு இயங்குகிறது. குறிப்பாக புயல், நிலநடுக்கம் போன்ற சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் கூட ரேடியோ அலைகள் பயனுள்ளதாக அமையும். தண்ணீரில் ட்ரோன் தூக்கியெறியப்பட்டதும் 7 knots (நொடிக்கு 14 மீட்டர்) வேகத்தில் இது செல்லும். மனிதர்களால் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. எங்களுடைய தயாரிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம்.

ஒரு நபர் நீரில் மூழ்குவதை கண்டால் உடனடியாக ட்ரோனைக் கடலில் வீசலாம். ரிமோட்டை இயக்கி மூழ்கிக்கொண்டிருக்கும் நபரின் திசை நோக்கி ட்ரோனை நகர்த்தி அவரை பாதுகாப்பாக மீட்க முடியும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு, உயிர் காத்தல்,வெள்ளம் பாதித்த இடங்களில் மருந்துகள் விநியோகித்தல் உள்ளிட்ட வெவ்வேறு பயன்பாடுகளுக்காக 12 ட்ரோன் மாதிரிகளை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. ரிமோட்டின் தொடர்பு எல்லை 3 கிலோமீட்டர் என்றபோதும் இது 10 கிலோமீட்டர் வரை நீட்டித்துக் கொள்ளலாம். ரிமோட்டை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படும்
சுமார் 12 கிலோ எடை கொண்டது, மிதமான லோடில் 45 நிமிடங்களும், ஜிபிஎஸ் ட்ராக்கிங்கிற்கு எட்டு மணி நேரமும் பேட்டரி நீடிக்கும். ஹெச்டி கேமிரா, ரோபோடிக் ப்ரோப் உள்ளிட்ட கருவிகளுடன் இதை இணைத்துக்கொள்ளலாம்'' என்கிறார் அலியாஸ்கர். 
- வி.குமாரமுருகன் 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/TRONE1.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/நீரில்-மூழ்குபவரை-காப்பாற்றும்-ட்ரோன்-3203397.html
3203396 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 202 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, July 30, 2019 12:14 PM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்ற பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லையே என்கிறார். இதைத் தொடர்ந்து புரொபஸரின் பல்வேறு இயல்புகளை அவர்கள் விவாதிக்கையில் touch wood எனும் சொல்லாடல் வருகிறது. அதன் பொருளை, பண்பாட்டு வேர்களை விளக்குகிறார்கள். இதை ஒட்டி நடாஷாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 
நடாஷா: சார், touch wood என சொல்வதை கிறித்துவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் இதை பண்ணத் தொடங்கினதாக எங்கேயோ படித்திருக்கிறேன். 
புரொபஸர்: உண்மை தான். இங்கே wood என்பது மரத்தாலான சிலுவையைக் குறிக்கிறது. கர்த்தரைத் தொட்டு வணங்கி அதனால் தீய சக்திகளை விரட்டலாம் எனும் நம்பிக்கை இது. ஆனால் இன்று டச் வுட் சொல்கிறவர்கள் இதையெல்லாம் யோசிக்கிறார்கள் என்றில்லை. தற்செயலாக தெரியாமலேயே இதைக் குறிக்கிறோம். அவ்வளவு தான். 
சேஷாச்சலம்: சரி, கணேஷ்
கணேஷ்: யெஸ் டாக்டர்!
சேஷாச்சலம்: நீ உங்க புரொபஸரிடம் எதாவது வித்தியாசமான நடவடிக்கைகளைக் கவனித்தாயா?
கணேஷ்: ஆமாம் டாக்டர். சமீபமாகவே அவர் ரொம்ப stressed out ஆக உள்ளார். சிலநேரம் பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடக்கிறார். மணிக்கணக்காய் டைம்லைனில் வருவதை எல்லாம் படிக்கிறார். அலுத்தால், refresh பண்ணி மீண்டும் படிக்கிறார்.
சேஷாச்சலம்: Oh, I get it. He is suffering from FAD.
புரொபஸர்: அதென்னடா? 
சேஷாச்சலம்: Facebook Addiction Disorder என்பதன் சுருக்கமே FAD. இந்த போதையில் ஆட்பட்டவர்கள் ஆறுவிதமான அறிகுறிகளில் மூன்றையாவது கொண்டிருப்பார்கள்.
புரொபஸர்: என்னென்ன?
சேஷாச்சலம்: tolerance, withdrawal symptoms, reduction of normal social / recreational activities, virtual dates மற்றும் fake friends.
கணேஷ்: இதில் இந்த tolerance என்றால் சகிப்புத்தன்மை அல்லவா? அது நல்ல விசயம் தானே?
சேஷாச்சலம்: இங்கு தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில சொற்கள் அறிவியலில் டெக்னிக்கலான கலைச்சொற்கள் ஆகும் போது அதன் பொருளே முழுக்க மாறி விடுகிறது. Tolerance என்பது addiction theory -இல் வேறு அர்த்தம் கொள்கிறது. உதாரணமாக, தினமும் குடிக்கிறவருக்கு சாராயம் குறைவாகவே போதையைத் தரும். போதை மருந்தை தொடர்ந்து உட்கொள்ளும் போதும் இதுவே நடக்கிறது. The body gets used to the chemicals that you grow tolerant. You body 
tolerates liquor or drugs so well that you hardly get a high with a regular dosage. இதைத் தான் உளவியலில் டாலரென்ஸ் என்கிறார்கள். 
கணேஷ்: அதென்ன சார் ஹை?
சேஷாச்சலம்: ஒருவித உச்சநிலை போதை. தன்னை மறந்த அனுபூதி. 
கணேஷ்: Withdrawal symptoms என்பது மது போதையில் வருவது போல கைநடுங்குவது, சகஜமாக இருக்க முடியாது தவிப்பது எல்லாமா? 
சேஷாச்சலம்: ஆமாம்... பேஸ்புக் போதையில் இருப்பவர்களால் அன்றாட விசயங்களில் எளிதாக ஈடுபட முடியாது. சதா ஒரு anxiety, எப்போதுமே பேஸ்புக்கை பற்றி பேசிட மனம் தவிக்கும். 
கணேஷ்: அதென்ன வெர்ச்சுவல் டேட்? 
சேஷாச்சலம்: க்ஹற்ண்ய்ஞ் என்றால் தெரியும் இல்லையா, ஆணும் பெண்ணும் ஓர் இடத்தில் சந்தித்து நேரம் செலவிடுவது. ஆனால் பேஸ்புக் பைத்தியங்களால் அது முடியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிதம் காதலன் / காதலியை அப்போது மெஸஞ்சரில் சாட்டுக்கு வரக் கேட்பார்கள். வெளியே சந்தித்து உரையாடுவதை விட பேஸ்புக்கில் உரையாடுவதே அவர்களுக்கு கிக்காக இருக்கும். இது தான் virtual dating. Fake friendsஉம் இப்படியே தான். உங்கள் பேஸ்புக் நண்பர்களில் பத்தில் எட்டு பேர் உங்களுக்கு யாரென்றே தெரியாத strangers என்றால் நீங்கள் பேஸ்புக் பைத்தியம் என அர்த்தம். முழுக்க பரிச்சயமே இல்லாதவர்களை நண்பர்களாக வைத்திருப்பதே உங்களுக்குப் பிடிக்கிறது என்றால் நீங்கள் நட்பின் பலன்களை அனுபவிக்க முடியாதவர் ஆகிறீர்கள். சரி... உங்க புரொபஸர் இந்த நோய்க்குறிகளில் எவ்வளவு ஸ்கோர் வாங்குவார்? 
கணேஷ்: ம்...ம்...ம்... ஒன்று அல்லது ரெண்டு நோய்க் குறிகளை சொல்லலாம். ஆனால் மூணு வராது.
சேஷாச்சலம்: அப்படீன்னா he doesn’t have FAD...
(இனியும் பேசுவோம்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/ENGLISH.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-202---ஆர்அபிலாஷ்-3203396.html
3203395 வார இதழ்கள் இளைஞர்மணி கோபம்! DIN DIN Tuesday, July 30, 2019 12:03 PM +0530 "ரெளத்திரம் பழகு' என்று பாரதி சொல்வது கோபப்படக் கற்றுக் கொள்வதற்குத்தான்.
 பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்கள் மீது கோபப்பட வேண்டும். மாணவர்கள் சோம்பல் மீது கோபப்படலாம். அறிவியலறிஞர் அறியாமை மீது கோபப்படலாம். நடிக்கத் தெரியாத நடிகர்கள் இயக்குநர்கள் மீது கோபப்படலாம். நம்மைச் செதுக்கிக் கொள்வதற்காக நம் மேலேயே நாம் தாராளமாகக் கோபப்படலாம்.
 பரீட்சை மீதிருக்கின்ற கோபத்தை மதிப்பெண்களாக வெளிப்படுத்த வேண்டும். திருடர்கள் மீதிருக்கின்ற கோபம் நாய் வளர்ப்பதில், பைரவர் மீது வைக்கின்ற பாசத்தில் வெளிப்படுத்தப்படுவது போல் இருக்க வேண்டும். நோய் மீதும் "ஆஸ்பிடல் வாசத்திலும்' இருக்கின்ற கோபம், பல்லைக் கடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வதிலும், அதிகாலைச் சூரியனோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதிலும் காட்டப்பட வேண்டும்.
 நம்மை யாரும் கோபப்பட்டுத் திட்டிவிட்டாலோ அல்லது கடிந்து கொண்டாலோ அதற்கான சூழ்நிலைக்கு நம்மைக் கொணர்ந்த நிகழ்வை மாற்றிக் காட்ட கோப ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். தேர்வுக்குத் தயாராகையில் நம்முடையை போட்டி கண்களுக்குத் தெரியாத ஏராளமான பேரோடன்றி, நமது உடன் படிப்பவர்கள் அல்ல. எனவே ஒருவருக்கொருவர் உதவி செய்தே வாழ வேண்டும்.
 இரா.ஆனந்தகுமார் எழுதிய "பொய்க்கடிகாரம்' நூலிலிருந்து...
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/ANGRY.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/கோபம்-3203395.html
3203389 வார இதழ்கள் இளைஞர்மணி அறிவார்ந்து சிந்திக்கத் தயாராகுங்கள்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்) DIN DIN Tuesday, July 30, 2019 11:33 AM +0530 மிச்சமெல்லாம் உச்சம் தொடு 28
மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது என்றால் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கியது எனலாம். அது தான் "டெர்மினேட்டர் சீட்ஸ்' (முடியும் விதை) என்று சொல்லப்படும் (Genetic Use Restriction Technology - GURT) தொழில்நுட்பம். இந்த GURTI 1990-களில் பேடண்ட் செய்தது டூபாண்ட் என்ற கம்பெனி. அதைப் போல டெல்டா மற்றும் பைன் லாண்ட் கம்பெனி, ஜெனிட்டிக் சுவிட்சு என்ற தொழில்நுட்பத்தை பேடண்ட் செய்தது. இந்த கம்பெனியை தான் மான்சான்டோ 2007-இல் வாங்கியது. அதாவது டெர்மினேட்டர் சீட்ஸ் என்றால் ஒரு விதையின் மறுஉருவாக்கத் தன்மையை தடை செய்து, இரண்டாவது முறை மீண்டும் முளைக்கும் வாய்ப்பை அழிப்பது. இதற்கு குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் ஏற்படும் கலப்படத்தை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாலும், இது அறிமுக நிலையிலே அனைவராலும் எதிர்க்கப்பட்டது.
ஏனென்றால் அமெரிக்க நிறுவனங்களுக்கு தங்களது தொழில்நுட்பத்தைக் காத்து, தொடர்ந்து விதைகளை அந்த கம்பெனிகளிடம் இருந்து வாங்க வைப்பதற்கான முயற்சியாக இது இருந்ததுதான் காரணம். இந்த விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் ஒரு கம்பெனிக்கு அடிமைகளாக நேரும் என்பதாலும், ஒரு கம்பெனியின் ஆதிக்க வல்லாண்மையை ஊக்குவிக்கும் என்பதாலும் அறிமுக நிலையிலேயே எதிர்க்கப்பட்டு, இன்றைக்கு டெர்மினேட்டர் விதைகள் உலகத்தில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்பட்டு விட்டன. எனவே இப்போது இருக்கும் எந்த ஒரு மரபணு மாற்ற விதையும் டெர்மினேட்டர் விதையல்ல. 
ஆனாலும் கூட, எந்த ஒரு கலப்பின விதையாக இருந்தாலும் அது தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும்போது முதலில் இருந்த வீரியம், பூச்சி எதிர்ப்புத் தன்மை குறையும். 
எப்படி நம் முன்னோர்கள் சொத்தைகளை ஒதுக்கி, வீரியமான நெல்லை மட்டுமே விதை நெல்லாக்கினார்களோ, அதே போல மரபணு மாற்றப்பட்ட கலப்பின விதைகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் அரசு சரியான கொள்கை செயல்பாட்டு முறைகளை வகுத்து வழங்க வேண்டும். அதை விநியோகிக்கும் உரிமையைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். 
பிடி கத்தரிக்காய் (BT BRINJAL) பூச்சியைத் தாங்கி வளரக் கூடிய சக்தி கொண்ட மரபணு மாற்று பயிரை மகாராஷ்ட்டிரா ஹைபிரிட் சீட்ஸ் (MAHYCO) - மான்சான்டோ, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் UAS, தார்வாட், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் TNAU, கோயம்புத்தூர் இணைந்து தயாரிக்க 2005 -ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆராய்ச்சியின் மூலம் பிடி கத்தரிக்காய் கலப்பின பயிர்கள் உருவாக்கப்பட்டன. இது மரபணு மாற்றுப் பயிர் சோதனை கமிட்டிகளில் 3 நிலைகளை வெற்றிகரமாகத் தாண்டி, எந்த நச்சுத்தன்மையும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, 14 அக்டோபர் 2009- இல் பி.டி கத்திரிக்காய் செயல்பாட்டுக்கும், விவசாயத்திற்கும் ஏற்றது என்று GEAC (Genetic Engineering Appraisal Committee) அனுமதி கொடுத்தது. பிடி கத்தரிக்காய் குறித்த எல்லா ஆராய்ச்சிகளும் இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு, இந்தியாவில் தான் உருவாக்கப்பட்டது. அனைத்து ஆய்வு நிலைகளையும் கடந்த பின்பு ஒரு சில சுற்றுச்சுழல் அமைப்புகளின் ஆதாரமற்ற எதிர்ப்பைக் காரணம் காட்டி, 9 பிப்ரவரி 2019 இல் தற்காலிகதடை விதிக்கப்பட்டது.
ஆனால் இதே நேரத்தில் இந்தியாவோடு பங்களாதேச அரசும், விஞ்ஞானிகளும் இணைந்து பிடி கத்திரிக்காய் மரபணு மாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தியாவில் விஞ்ஞானிகள் தனியாக ஆராய்ச்சி செய்கிறார்கள். அரசு தனியாக நிற்கிறது. அரசு தனியாக அரசியல் சார்ந்து முடிவெடுக்கிறது. பங்களாதேஷில் அரசு விஞ்ஞானிகளோடு சேர்ந்து செயல்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கிறது. 
பங்களாதேஷ் விவசாயத்துறை அமைச்சர் மரபணு மாற்று ஆராய்ச்சியில் முதலில் இருந்து பங்கு கொண்டு அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதன் விளைவுகளை ஆய்வு செய்ய கட்டாய வரைமுறைகள் கொண்டு வந்து ஆய்வு செய்து பி.டி கத்திரிக்காய் மூலமாக சுற்றுச்சூழலுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுகிறதா என்று அனைத்து நிலைகளிலும் ஆய்வு செய்து, அதில் எவ்வித பாதகமும் இல்லை என்பதை முடிவு செய்து, விவசாயிகளிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள். முதலில் சிறு அளவில் விவசாயிகளுக்கு கொடுத்து அதை பரீட்சார்த்த முறையில் சோதனை செய்து பார்த்து, இன்றைக்கு பங்களாதேசில் கத்திரிக்காய் விளைச்சலில் பி.டி கத்திரிக்காய் 15 சதவீதம் பயிரிடுகிறார்கள். தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். எந்தவிதச் சுற்றுச்சூழல் தீய விளைவுகளும், ஒவ்வாமையும், நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து முறை பூச்சிக் கொல்லிகள் தெளிக்க வேண்டிய நிலைமை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, அந்த கத்திரிக்காய் செடிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுவது குறைக்கப்பட்டு, அதற்கு செலவழிக்கக் கூடிய பணம் பங்களாதேஷ் விவசாயிகளால் சேமிக்கப்படுகிறது. நல்ல விளைச்சல் கிடைக்கிறது. பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் எச்சம் உடல் நலத்தை பாதிக்கும் அதன் மூலமாக காற்று மாசு, நிலம் மாசு ஆவது, பங்களாதேஷில் மரபணு மாற்றப்பட்ட பி.டி கத்திரிக்காய் பயிரிடப்பட்ட இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பிடி கத்திரிக்காய்க்கு ஒரு சில அரசியல் ஆதிக்கம் பெற்ற அமைப்புகள் போராட்டம் செய்கின்றன என்று சொல்லி இந்தியா தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதால், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் செய்யப்பட்ட மரபணுமாற்ற ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வளர்க்கப்படும் கத்தரிக்காயை, காய்கறிகளை, பழங்களைத்தான் மக்கள் உண்ணும்படியான நிலையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். 
பூச்சிக்கொல்லி மருந்துகளால் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு அதை உண்ணும் மக்களுக்கு நெஞ்சு எரிச்சல் போன்ற வியாதிகள், அதன் மூலமாக ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகள் இன்றைக்கு வழக்கமாகிவிட்டன. இந்த நிலையிலே பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து உருவாக்கப்படக்கூடிய மரபணு மாற்றுப் பயிர்களைப் பொத்தாம் பொதுவாக கேன்சர் வருகிறது, மலட்டுத் தன்மை ஏற்படும், ஜென்ம ஜென்மத்திற்கு இதனால் தீய விளைவுகள் ஏற்படும், என்று ஒரு சில பேர் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஏதாவது ஒரு சில உண்மை இருக்குமானால், ஒரு சதவீதம் உண்மை இருக்குமானால் கூட, இந்த மரபணு மாற்றுப் பயிர்களை நாம் தடை செய்து விடலாம். 
ஆனால் இதுவரை 30 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கி பல்வேறு நிலைகளில் இதை ஆய்வுசெய்து இதனால் நச்சுத்தன்மையும், கேன்சர், மலட்டுத்தன்மையும் ஒவ்வாமையும் வராது என்று ஆராய்ச்சி செய்து பல்வேறு ஆய்வு நிலைகளைத் தாண்டி, நல்லதை மக்களுக்குக் கொண்டு சேர்த்தால் ஒரு சில சினிமா விஞ்ஞானிகள், அரசியல் விஞ்ஞானிகள், விஞ்ஞானிகளை போல நடிப்பவர்கள், எவ்வித நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி ஆதாரமும் இல்லாமல் கேன்சர் வரும், மலட்டுத் தன்மை வரும், நச்சுத்தன்மை வரும் என்று பயமுறுத்துகிறார்கள். இதை ஊடகங்களும் ஊதிப் பெரிது படுத்துகின்றன என்று சொன்னால் இதற்கு ஏதோ ஒரு பின்புலம் இருக்க வேண்டும். அந்த பின்புலத்தை நாம் உணராத வரை நமக்கு அறிவியலால் கிடைக்கக் கூடிய நன்மைகளை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கிடைக்க விடமாட்டார்கள் இந்த போலி சுற்றுச்சூழல்வாதிகள்.
மரபணுவை வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கித்தான் நாம் அதை ஆராய்ச்சி செய்கிறோம் என்ற குறைபாடு இருந்தது. ஆனால் GM MUSTARD மரபணு கடுகு, இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழத்தின் விஞ்ஞானி பேராசிரியர் தீபக் பென்டல் அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே பிரஸ்ஸிகா ஜின்ஸியா (BRASSICA JUNCEA) என்ற கடுகு இனத்தில் உருவாக்கப்பட்ட மரபணுதான் தாரா மஸ்டர்டு ஹைபிரிட்-11 (DMH-11). சாதாரணமான கடுகு விதைத்தால் 100 டன் வருகிறது என்று வைத்துக் கொண்டால் கலப்பின வீரிய விதைகள் மூலம் மூலம் 130 டன் கிடைக்கும் 30% அதிகமாகக் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் கிராஃப்டிங் பண்ண வேண்டும், அதாவது இரண்டு செடிகளில் ஒன்றிலிருந்து மகரந்தத் தூளை எடுத்து, மற்றொன்றின் சூலகத்தில் போட்டு அதை ஒட்டு பண்ணினால் அதன் விதைகள் வீரியத்தன்மையுடன் விளைச்சல் அதிகமாக இருக்கும். 
இந்தியாவில் 40% கடுகு எண்ணெய்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. வடக்கே மேற்கு வங்காளம் முதல் ராஜஸ்தான் வரை அனைவரும் அதிகமாக கடுகு எண்ணெய்தான் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் எடுக்கும்போது அதில் டி.என்.ஏ வும் இருக்காது; புரோட்டினும் இருக்காது. எண்ணெய் மட்டும் தான் இருக்கும். மரபணு மாற்றப்பட்ட கடுகில் விஷத்தன்மை இருக்கிறதா என்ற பரிசோதனையெல்லாம் ஹைதராபாத்தில் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மரபணு மாற்றப்பட்ட கடுகு எண்ணெய்யால் எவ்வித விஷத்தன்மையோ, ஒவ்வாமையோ, கேன்சரோ வராது என்று ஆராய்ச்சியில் உறுதிப்பட்டுத்தப்பட்டு, இது 3 நிலைகளைக் கடந்து GEAC கமிட்டி அனுமதி கொடுத்து 2 வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்னும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை. ஏன்?
எண்ணெய்ப் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, பிரேஸிலை தாண்டி இந்தியா 4-வது பெரிய நாடு. இருந்தாலும் இந்தியா தனது எண்ணெய்த் தேவைக்கு 70 சதவிகிதம் வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கிறது. ஏறத்தாழ 60 சதவிகித எண்ணெய்த் தேவையை பாமாயில் இறக்குமதியில் இருந்துதான் இந்தியா சமாளிக்கிறது. 2001- இல் 3 மில்லியன் டன் பாமாயில் உபயோகப்படுத்திய இந்தியா, இன்றைக்கு 10 மில்லியன் டன் உபயோகப்படுத்துகிறது, கிட்டத்தட்ட 230 சதவிகிதம் அதிகம். 2017-18- இல் மட்டும் மத்திய அரசு ரூ 46,000 கோடியை பாமாயில் இறக்குமதிக்குச் செலவழித்தது. அதாவது US$ 6,774 மில்லியன் அன்னியச்செலாவணியை செலவழித்தாலும் செலவழிப்போம், நமது எண்ணெய்த் தேவையைச் சமாளிக்க நமது நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை உபயோகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்கிறது நமது நாட்டு ஆதாய அரசியல். 
மரபணு மாற்றப்பட்ட கடுகால் எண்ணெய் உற்பத்தி 30% உயரும், எந்தவித நச்சுத்தன்மையையும் இல்லை என்று பரிந்துரை செய்த பின்பும், எண்ணெய் இறக்குமதி செய்வோர்களின் ஆதிக்கத்தின் காரணமாகவும், பணத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் எதிர்ப்பின் மூலமும், மரபணு கடுகுக்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதிக்காகக் காத்து கிடக்கும்நிலை உள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத கேன்சர் வரும், மலட்டுத்தன்மை வரும், நச்சுத்தன்மை வரும் என்ற எதிர்ப்புதான் காரணம். 
வெளிநாட்டிற்கு சென்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை விட்டுவிட்டு ஒரு சில விஞ்ஞானிகள் நம் நாட்டில் ஆராய்ச்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட நாட்டுப்பற்றுள்ள விஞ்ஞானிகளை நம்ப நம் மக்கள் தயாராக இல்லை.
ஆனால் இனிமேலும் ஏமாறுவதற்கு மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும், அறிவார்ந்து சிந்திப்பவர்களும் தயாராக இல்லை என்று நான் நம்புகிறேன். 
எந்த நாடு அறிவார்ந்த அரசியலுக்கு மதிப்பு கொடுக்கிறதோ, அந்த நாடு தான் அடுத்த தலைமுறைக்கான அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்கிறது. எந்த நாடு தனது அடுத்த 5 ஆண்டுகளை ஆட்சியைப் பற்றி சிந்திக்கிறதோ, அது ஆதாய அரசியல் சார்ந்து முடிவு எடுத்து எதிர்கால தலைமுறைக்கு குழியைத்தான் தோண்டுமே தவிர, வளமான வாழ்க்கையை அல்ல. திருவள்ளுவரின் வாக்கை ஏற்று நாம் அறிவார்ந்து சிந்திக்க தெரிந்தவர்கள் என்று நிரூபிக்க நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ளாவிட்டால், நமது எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் சாதியால், மதத்தால், பணத்தால், சினிமாவால், ஊடகத்தால் தீர்மானிக்க கூடிய சக்திபெற்றவர்களின் அடிமையாக தான் இருப்போம். அடிமையா, அறிவுடைமையா சிந்திப்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்- vponraj@gmail.com
(தொடரும்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/ponraj.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/அறிவார்ந்து-சிந்திக்கத்-தயாராகுங்கள்-விஞ்ஞானி-வெ-பொன்ராஜ்-அப்துல்கலாமின்-முன்னாள்-அறிவியல்-ஆலோசகர-3203389.html
3203388 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, July 30, 2019 11:23 AM +0530 பேங்க் ஆப் பரோடாவில் வேலை
மொத்த காலியிடங்கள்: 35 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale - II) - 01
பணி: Manager IT(Linux Administrator) (MMG/S - II) - 01
பணி:  Manager IT (Windows Administrator) (MMG/S - II) - 01
பணி: Manager IT (SQL) Administrator MMG/S - II - 02
பணி: Manager IT(Oracle Administrator) MMG/S II - 02
பணி: Manager IT(Network Administration) MMG/S II - 02
பணி: Manager IT (Middleware AdministratorWeb Sphere) MMG/S II - 01
பணி: Manager IT (Middleware AdministratorWeb Logic) MMG/S II - 01
பணி: Manager IT (Data Center administration -Building Management System) MMG/S - II - 02
பணி: Manager IT (ETL Developer) MMG/S - II - 01
பணி: Manager IT (Software Developer) MMG/S - II - 05
பணி: Manager IT(Finacle Developer) MMG/S - II - 06
வயது வரம்பு: 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950
பணி: Senior Manager - IT (System Administrator) MMG/S - III - 02
பணி: Senior Manager IT (ETL Developer) MMG/S - III - 01
பணி: Senior Manager IT (Software Developer) MMG/S - III - 02
பணி: Senior Manager IT(Finacle Developer) MMG/S - III - 05
சம்பளம்: மாதம் ரூ.42,020 - ரூ.51,490
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.சி.ஏ முடித்து ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 02.08.2019 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 38
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1.Assistant Engineer (Mechanical) - 01 
2.Farm Manager - 05 
3.Junior Engineer (Electrical) - 01
4. Steno -Typist Gr. III - 04 
5. Junior Assistant - 08 
6. Typist - 08 
7. Fishery Assistant - 02
8. Office Assistant - 01 
9. Seaman - 01 
10. Iceman - 01 
11. Sweeper - 01 
12. Museum Curator - 01  
13. Gardener - 01
14. Driver - 03 
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், 8, 10 -ஆம் தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை முடித்தவர்கள், பொறியியல் துறையில், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் "The Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam - 611 002" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam - 611 002
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20-%20non-teaching%20positions%20-%20advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் பெற: http://tnjfu.ac.in/downloads/carrers/TNJFU-Non-teaching-staff-Application-terms-conditions-and-annexure.pdf லிங்கில் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.08.2019

மத்திய ரயில்வேயில் வேலை
பணி: JR Technical Associate (Electrical)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000
வயதுவரம்பு: பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்குள்ளும், எஸ்டி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்து ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Sr.DFM/SUR என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையெப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள், டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.DFM/SUR, Central Railway, Divisional Railway Manager's Officer, Modikhana, Solapur - 413 001.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 14.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.08.2019

கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 47
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1.Plant Operator - 07
2. Laboratory Assistant - 04
3. Fitter - 12
4. Welder - 02
5. Turner - 01
6. Electrician - 04
7. Instrument Mechanic - 08
8. Electronic Mechanic - 04
9. A/C Mechanic - 01
மற்றொரு அறிவிப்பில் நேரடி தேர்வின் மூலம் 4 டெக்னீசியன் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1. Technician/C (Boiler Operator) - 03 
2. Technician/B (Painter) - 01 
வயதுவரம்பு: 07.08.2019 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 
சம்பளம் : Stipendiary Trainees பணிகளுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500 வழங்கப்படும்.
Technician - C பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,500, Technician - B பணியிடங்களுக்கு மாதம் ரூ. 21700 வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, துறைவாரியாகத் தேர்வு மற்று பணித் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument do=download&action=docfile&process=DAD1B08D743C2694D0F4E93FCDB25033&pid=193 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.barc.gov.in அல்லது BARC Kalpakkam Stipendiary Trainees Syllabus PDF Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.08.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/BW-VELAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/வேலைவேலைவேலை-3203388.html
3203382 வார இதழ்கள் இளைஞர்மணி குறும்படங்களுக்கு ஓர் இணையதளம்! DIN DIN Tuesday, July 30, 2019 11:06 AM +0530 உலகம் முழுவதும், தங்களது எண்ணங்களைத் திரைப்படமாக்க முயற்சித்த பலர், அதைச் செய்ய இயலாத நிலையில் குறும்படங்களை உருவாக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு மொழிகளில் குறும்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழியிலும் பல குறும்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 
ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாகத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதைக் குறும்படம் என்று சொல்லலாம். ஒரு முழு நீளப்படத்திற்கான இலக்கணங்கள் அனைத்துமே, குறும்படத்திற்கும் பொருந்தும். கதை, திரைக்கதை போன்ற படப்பிடிப்பிற்கு முன்னர் செய்ய வேண்டிய முன்தயாரிப்பு வேலைகளும், படத்தொகுப்பு, இசையமைத்தல் போன்ற பிற்சேர்க்கை வேலைகளும் ஒரு குறும்படத்திற்குத் தேவையானதாக இருக்கின்றன. 
நாற்பது நிமிடங்களுக்கு உட்பட்ட படங்களைக் குறும்படம் என்று ஆஸ்கார் விருதுகளை வழங்கும் "அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் வகைப்படுத்துகிறது. இதையே குறும்படத்திற்கான கால அளவாக அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பான்மையான குறும்படங்கள் பத்து நிமிடங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. பத்து நிமிட அளவில் எடுப்பதற்கே அதிகமான பொருட்செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று பொதுவான ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், பத்து நிமிடத்திற்குட்பட்ட படங்களாக இருந்தால், இணையத்தில் அதை எளிதில் பதிவேற்றம் செய்ய முடியும் என்பதுடன், இணையத்தில் அதனைப் பார்வையிடும் பார்வையாளர்கள் பத்து நிமிடத்திற்கு மேல் நேரத்தைச் செலவிடுவதில்லை என்கிற மற்றொரு காரணமும் உண்டு என்கின்றனர். 
மிகக் குறைந்த பணச்செலவு, வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல குறும்படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இந்தக் குறும்படங்கள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது. 
இத்தளத்தில் Short Shorts, Winners, Best, Genres, Ed's Choice, Famous Directors, Competition , Extras,   A - Z  எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
Short Shorts எனும் தலைப்பில் பல்வேறு குறும்படங்கள் சிறு குறிப்புகளுடன் தரப்பட்டிருக்கின்றன. Winners எனும் தலைப்பில் Oscar Films, Oscar Animation, Oscar Docs, FILMS short Films, BAFTA Films, BAFTA Animation, Cannes Films, Cannes Animation, Sundance Films, Sundance Animation, LA Shorts Films, LA Shorts Animation, Berlinale Films, Berlinale Animation என்கிற துணைத் தலைப்புகளில் குறும்படங்களுக்கான சில அமைப்புகளில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப் பெற்ற குறும்படங்கள், அனிமேஷன் படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை சிறு குறிப்புகளுடன் இடம் பெற்றிருக்கின்றன. 
இதேபோன்று Best, Genres,  Ed's Choice ,  Famous Directors, Competition , Extras  ஆகிய தலைப்புகளில் பல்வேறு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசியாக, ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி அனைத்துக் குறும்படங்களும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. 
குறும்படத்தினை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், குறும்படத்தில் ஆர்வமுடையவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் இத்தளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://www.filmsshort.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பயனடையலாம். 
- மு. சுப்பிரமணி 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/SHORT_FILM.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/குறும்படங்களுக்கு-ஓர்-இணையதளம்-3203382.html
3203381 வார இதழ்கள் இளைஞர்மணி பின்னோக்கி நடப்பதில் உலக சாதனை! DIN DIN Tuesday, July 30, 2019 11:01 AM +0530 இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொருவருக்கும் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கே போதிய நேரம் இருப்பதில்லை. ஆனால் பயிற்சி, பாதுகாப்பு, கண்காணிப்பு என அதிக பணிச்சுமையுடன் ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், ஒரு நாள் முழுவதும் (பகல்-இரவு) தொடர்ந்து சுமார் 157 கி.மீ. பின்னோக்கி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சு.பாலமுருகன் (31). நாகலாந்து- அசாம் மாநில எல்லையான திமாப்பூரில் உள்ள படைப் பிரிவில் ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் இவர், சிவகங்கையில் "அண்மையில் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி'யின் ஒரு பகுதியாக, 24 மணி நேரத்தில் சுமார் 157 கி.மீ. பின்னோக்கி நடந்து சாதனை படைத்துள்ளார். 
இதுகுறித்து ராணுவ வீரர் சு.பாலமுருகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்த போது, கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விளையாட்டு சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில் சேர்ந்தேன். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு பாடவேளையின்போது பயிற்சிக்காக சக மாணவர்களுடன் மித வேகத்தில் ஓடுவது வழக்கம். அப்போது, மாணவர்களுக்கிடையே சிறு, சிறு குறும்புத்தனம் வெளிப்படும். அதன் காரணமாக, ஆசிரியர் என்னைத் தேர்வு செய்து மற்ற மாணவர்கள் ஓடும் போது அவர்களுக்கு முன்னால் பின்னோக்கி மெதுவாக ஓடி வருமாறு தெரிவிப்பார். இது எனக்கு முதலில் மிகவும் கடினமாகத் தோன்றியது. அதுவே நாளடைவில் பயிற்சியாகவும், பழக்கமாகவும் மாறியதால் ஒன்றும் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தான் நான் பின்னோக்கி நடப்பதில் சாதனை புரிய வேண்டும் என்பதற்கு அடித்தளமாக அமைந்தது. 
பணிவாய்ப்புப் பெற்றவுடன் வேலையில் எனது முழு கவனத்தையும் செலுத்தினேன். அவ்வபோது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பின்னோக்கி நடந்தும், ஓடியும் பயிற்சி எடுத்தேன். சுமார் 12 ஆண்டுகள் தொடர் பயிற்சி காரணமாக இந்த சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்தது. ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக இன்னும் கூடுதலாக கடின பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்'' என்றார்.


இதுபற்றி "சோழன்' உலக சாதனை புத்தகத்தின் நிறுவுநர் நிமலன் நீலமேகம் கூறியது : 
"சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஜூலை 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு ராணுவ வீரர் சு.பாலமுருகன் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹிநாதன் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தனர்.
அரை கி.மீ சுற்றளவு கொண்ட மைதானத்தில் காலை 9 மணிக்கு பின்னோக்கி நடக்க தொடங்கிய பாலமுருகன், ஜூலை 10 ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது பயணத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் 157 கி.மீ தூரத்தை கடந்திருந்தார். அவருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பழச்சாறு வழங்கப்பட்டது. இதுதவிர 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவக் குழு பரிசோதனை செய்தனர். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் ஓய்வு எடுக்கவில்லை.
இதற்கு முன்னர் கடந்த 1988-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோனி தோர்ட்ன் என்பவர் 24 மணி நேரத்தில் 153.5 கி.மீ. பின்னோக்கி நடந்துள்ளார். அதுவே உலக சாதனையாகப் பதிவு பெற்றுள்ளது. அந்த சாதனையை சு.பாலமுருகன் கடந்து விட்டார். இதனை "சோழன்' உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். மேலும், இந்த விளையாட்டு இதுவரை ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வில்லை. ஆனால் இனி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நடத்துவதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
- ச.சந்தனக்குமார்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/im3.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/பின்னோக்கி-நடப்பதில்-உலக-சாதனை-3203381.html
3203378 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, July 30, 2019 10:52 AM +0530 முக நூலிலிருந்து....
• நீங்கள் உற்சாகமாய் கைதட்டுங்கள்... அது
கேலி பேசுவோரின் கன்னத்தில்
அறைவதாய் இருக்கட்டும்... 
புறம் பேசப்படும் வார்த்தைகள்
கைத்தட்டல் ஓசையில்
கேட்காமல் போகட்டும். 
கிரிதரன்

• ராகங்களுக்குக் கட்டுப்படுகிற 
பேச்சு... 
பாடலாகி விடுகிறது.
டி கே கலாப்ரியா

• மரணத்தைத் தாண்டிய
அமைதியும் இல்லை. 
மறுத்தால்...
மனிதம் வாழ்வது தொல்லை. 
முருகன் மணவாளன்

• வானத்தில் மிதக்கிறதா மேகம்?
மேகத்தில் மிதக்கிறதா வானம்?
மூழ்கி எழும்பும் 
படகாகிறது நிலவு.
ராஜகுமாரன்

சுட்டுரையிலிருந்து...
• மழையை வரைந்து அழித்தேன்... 
ரப்பரில் ஒட்டிக் கொண்டது 
கருமேகம்.
பழைய சோறு 

• காற்றிலும் அணையாமல் இருக்கிறது 
அவள் ஏற்றிய தீபம்...
அவளின் அழகை ரசிப்பதற்காக. 
அரஸ் நவநீ

• மரியாதை வயதைப் 
பொருத்து வருவதில்லை...
அவரவர் செயல்களைப் பொருத்தே வருகிறது. 
செவ்வந்தி 

• பிட் அடித்து எழுதியதை
மறக்காத மாணவர்கள் தான்...
இணையதளத்திலும் 
காப்பி - பேஸ்ட் செய்கிறார்கள்.
போஸ் பாண்டி

வலைதளத்திலிருந்து...
அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்த வாசிப்பின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் தன்னுடைய முன்னகர்வை விரைவுபடுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் புதிய வாசிப்புகளையும் அறிவுகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். 
ஒரு கட்டத்தில் அவர்கள் வாழும் உலகு என்பது ஒரு சராசரி மனிதனின் உலகிலிருந்து மிகவும் முன்னே இருக்கின்றது. ஏனையவர்கள் அத்தகைய முயற்சி ஏதும் இல்லாததால் தங்களுடைய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்தில் கட்டாயத்தின் காரணமாக தங்களைச் சற்றே முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் தங்களால் தங்களுடைய சோம்பேறித்தனத்தை விட முடிந்த அளவிற்கு முன்னேறி, ஓர் இடத்தை அடைகிறார்கள். இதில் இடை நிலையை அடைபவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கிறார்கள். இவர்கள், தான் வாழும் காலத்தில் பெரும் புகழ் அடைகிறார்கள். உதாரணமாக முதன் முதலாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஒரு அறிவியலாளரை விட அதனை ஒரு தொலைக்காட்சிக்கான ஊடகமாக உபயோகிக்கும் ஒருவன் பெறும் புகழ் அதிகம். 
இந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தில் 2 விழுக்காடு மக்களே முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாத் துறையிலும் நிகழ்த்துகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஏனைய பிறர் அவற்றை பின் தொடர்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அந்த 2 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 98 விழுக்காட்டிலிருந்தே மேலே வருகிறார்கள். நாம் அந்த 98 -இல் இருக்கலாம், அல்லது அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அந்த இரண்டு விழுக்காட்டை அடையலாம். அது எது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
http://www.mahiznan.com

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/im2.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/இணைய-வெளியினிலே-3203378.html
3203376 வார இதழ்கள் இளைஞர்மணி பூச்சிக்கொல் மருந்து தெளிக்கும் ஸ்மார்ட் அக்ரிகாப்டர்! DIN DIN Tuesday, July 30, 2019 10:42 AM +0530 விஞ்ஞான வளர்ச்சியால் பல்வேறு துறைகள் நவீனமயமாகி வருகின்றன. ஆனால், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளில் வேளாண்துறையில் விஞ்ஞான தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறைவாக இருக்கிறது என்றே கூறலாம்.
 பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், வேளாண்துறைக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையை அறிந்த சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வேளாண் துறைக்காக "ஸ்மார்ட் அக்ரிகாப்டர்' எனும் தானியங்கி பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
 பார்ப்பதற்கு ட்ரோனைப் (ஆளில்லா விமானம்) போல் இருக்கும் இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டரில் 10 மடங்கு வேகமாக பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்க முடியும். இதில் உள்ள நவீன கேமரா, பயிர்களின் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள ரசாயனங்களால் அதைத் தெளிப்பவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவே ஸ்மார்ட் அக்ரிகாப்டரை உருவாக்கியதாக ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.
 "ஸ்மார்ட் அக்ரிகாப்டரில் ஒரு முறை 15 லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கலாம். மனிதர்களைக் காட்டிலும் 10 மடங்கு வேகமாகத் தெளிக்கும் இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டருக்கும் பணியாள்களை வைத்துத் தெளிக்கும் செலவுதான் ஆகும்' என்று விண்வெளி பொறியியல் மாணவர் கவி கைலாஷ் தெரிவித்தார்.
 "நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்மார்ட் அக்ரிகாப்டரின் விலை சுமார் ரூ. 5.1 லட்சமாக இருக்கும். இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டருக்கு காப்புரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விண்வெளி பொறியியல் மாணவர் ரிஷப் வர்மா கூறினார்.
 - அ.சர்ஃப்ராஸ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/AGRICOPTER.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/பூச்சிக்கொல்-மருந்து-தெளிக்கும்-ஸ்மார்ட்-அக்ரிகாப்டர்-3203376.html
3203375 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை...வழி...செயல்! தா.நெடுஞ்செழியன் Tuesday, July 30, 2019 10:40 AM +0530 கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலம் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. மருத்துவம், சட்டம், நன்னெறி ஆகிய இந்த மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளினால் எந்தவிதப் பக்கவிளைவுகளும் மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் கேம்ப்ரிட்ஜ் சிறிதளவும் பின்வாங்குவதில்லை. இதனால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகத் தோன்றிய தொழில்நுட்ப வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்கு நன்மையளிக்கக் கூடியவையாகவும், ஆக்கப்பூர்வமானவையாகவும் இருக்கின்றன.
ஆனால் இந்த கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி தங்கள் தொழில், வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ள நினைக்கும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள், மருந்துக் கம்பெனிகள், தங்களுடைய சேவைகளுக்கு - மருந்துகளுக்கு - அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் இந்த ஆராய்ச்சிகளின் பயன்கள் பணவசதியில்லாத ஏழைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. 
இன்னும் 50 ஆண்டுகளில் இந்த உயிரணு தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் வாயிலாக ஏற்படக்கூடிய நவீன மருத்துவ முறைகள் பெரிய அளவுக்கு மருத்துவத்துறையில் மாறுதல்களை ஏற்படுத்தப் போகின்றன. மக்களுக்கு இதனால் நிறைய நன்மைகள் விளையப் போவது நிச்சயம். 
இந்தியாவில் ஐஐடி - மும்பை, ஐஐடி - டெல்லி, ஐஐடி - சென்னை ஆகியவற்றிலும் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. 
ஐஐடி - மும்பையில் கீழ்க்காணும் துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள்: 
Bacterial Pathogenesis,  Bio physics and Computational Biology, Biosensors and Bioinstrumentation, Cell and Tissue  Engineering, Cellular Biophysics, Chromosome &  Plasmid Segregation, Computational Neurophysiology, Gene Regulation, Glycobiology, Immunoengineering,  Metabolic Engineering, Metabolism and Enzymology,  Microfluidics and Biological Physics,  Molecular Cell Biology, Molecular Genetics, Molecular Immunology and Cell Signalling,  Molecular Parasitology,   Molecular Virology, Movement Neuroscience and Rehabilitation Technology, Nano Bios, Nanomedicine,   Physical Biology, Protein Crystallography, Protein Engineering and Neurobiology, Protein NMR,    Proteomics, Theoretical and Experimental Bioimaging.
இதேபோன்று ஐஐடி - டெல்லியில் Bioprocess Engineering, Cell and Molecular Biotechnology, Downstream Processing, Systems and Computational Biology, Nanoscale Biophysics, Membrane Biophysics, Cancer Biology, Vascular and Nitric Oxide Biology ஆகிய துறைகளில் பொறியியல், உயிரியல் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். 
ஐஐடி - சென்னையில் பயாலஜிகல் என்ஜினியரிங் துறையில் Industrial metabolite production,Metabolic engineering, Biopolymers, Biocompatibility,Biodegradation of polymers, Tissue engineering, Caffeine degradation, Membrane biochemistry,Plant cell bio processing, Phytoremediation, Biofuels, Process chromatography,Reactive species in biological systems ஆகிய பிரிவுகளிலும். 
பயாலஜிகல் சயின்ஸஸ் துறையில் Molecular oncology, Cancer immunotherapy, Anti-cancer nutraceuticals, HIV pathogenesis, Stem cell biology, Biomarkers for cardiovascular disease, Gene regulation in hypertension, Molecular and cellular basis of cardiovascular complications, Structure- function relationship of Ion channels, Ion channels associated with ischemic heart diseases and stroke, Nanoparticles, Nanobiotechnology of food packaging, Nucleolar GT Pases and cell proliferation, Developmental biology, Pattern formation in cellular slime moulds, Plant developmental genetics, Recombinant Enzymes, Biofuel cells, Biorefinery ஆகிய பிரிவுகளிலும், கம்ப்யூட்டேஷனல் பயாலஜி துறையில் Protein structure, folding and function, Protein dynamics, Computational analysis of protein folding and stability, Binding specificity of protein complexes, Green chemistry, Structure-based drug design and discovery, Comparative genomics, Computational modelling of neurodegenerative disorders, Computational systems biology, Development and analysis of databases and tools, Computational biophysics, GPGPU computing for systems biology ஆகிய பிரிவுகளிலும், கெமிக்கல் பயாலஜி துறையில் Green’ biocatalytic methods for organic transformations, Delivery of siRNAs, Fragment-based drug design, Novel inhibitors against HDACs and HMT, Asymmetric catalysis ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 
இவ்வாறு நமது ஐஐடி -களில் செய்யக் கூடிய ஆராய்ச்சிகள் எண்ணற்றவை. கேம்ப்ரிட்ஜில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்கு இவை எந்த வகையிலும் குறைவில்லாதவை. மருத்துவம், பொறியியல், பார்மஸி, வெட்னரி சயின்ஸஸ் படித்த மாணவர்கள் மேற்கண்ட துறைகளில் அவர்களுக்கு ஆர்வமான பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். 
ஆனால் நம்நாட்டில் மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சிகளில் ஈடுபட - குறிப்பாக பொறியியல் கற்று அதனைப் பயன்படுத்தி மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்புவதில்லை. இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலம் மருத்துவம், பொறியியல் துறைக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கும் நல்ல எதிர்காலத்தையும் உருவாக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உலக அளவில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 
நமது தலைமுறை உலகின் மிக முக்கியமான ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக நமது பூமியை நாம் பயன்படுத்துகிற பொருள்களில் இருந்து ஏற்படக் கூடிய மாசுகளை, கழிவுகளை காற்று, நீர், நிலம் ஆகியவற்றை பாதிக்காமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நாம் பயன்படுத்தக் கூடிய பொருள்களில் இருந்து உருவாகியுள்ள வேதிப்பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. பொறியியலில் என்விரான்மென்டல் என்ஜினியரிங் என்பது மாசை எவ்வாறு கட்டுப்படுத்துவது, எந்த ஓர் உற்பத்தியிலும் ஏற்படக் கூடிய கழிவுகளை எவ்வாறு குறைப்பது என்பதைப் பற்றிய மிக முக்கியமான படிப்பாகும். இந்தத்துறையானது, சுற்றுச்சூழலைச் சீர்படுத்துவதைப் பற்றி, சுற்றுச்சூழல் மாசுகளைக் குறைப்பது பற்றி, அதற்கான தொழில்நுட்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறது. 
சுற்றுச்சூழல் பேரழிவுகளைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது, சரி செய்வது ஆகியவற்றுக்கான திட்டமிடுதல், வடிவமைத்தல், திட்டமிட்டபடி செய்து முடித்தல் ஆகியவை சுற்றுச்சூழல் பொறியாளர்களின் தலையாயப் பணியாகும். 
இவர்கள் கழிவுமேலாண்மை, கழிவுநீர் தூய்மைப்படுத்துவது, நிலங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சரி செய்தல், காற்றில் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார்கள். 
உலகிலேயே மிக மோசமான மாசுநிறைந்த நகரங்கள் என்ற பட்டியலை உலக சுகாதார நிறுவனம்(WHO) அளித்துவருகிறது. உலகசுகாதார நிறுவனம் மிக முக்கியமாக கருதுவது காற்று மாசுபடுவதைத்தான். ஏனெனில் காற்றில் ஏற்படும் மாசு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பல்வேறு மாசுகள் நுரையீரலைச் சென்றடைந்து, நமது ரத்தத்தில் கலந்து பல நோய்களை அதிலும் குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு போன்ற அபாயகரமான நோய்களை உருவாக்குகின்றன. அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் காற்று மாசுபடுவதில் கவனத்தை நிலைநிறுத்துகிறது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/30/w600X390/im1.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/30/சரியான-பார்வைவழிசெயல்-தாநெடுஞ்செழியன்-3203375.html
3198506 வார இதழ்கள் இளைஞர்மணி நுழைவுத் தேர்வு இல்லாத ஐஐடி படிப்புகள்! DIN DIN Tuesday, July 23, 2019 12:12 PM +0530 உயர்கல்வி பயில விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் கனவு நிறுவனமாக இருப்பது, ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology - IIT) ஆகும். இதில் சேர்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் இதற்கான நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் 23 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் மொத்தம் 13, 376 இடங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,050 இடங்கள் அதிகம். இந்த இடங்களுக்கு நிகழாண்டு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) தகவல்படி 9,35,741 பேர். இதில் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 2.45 லட்சம். அட்வான்ஸ் தேர்வு எழுதியோர் 1.73 லட்சம் பேர்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது மாணவர்கள் இந்த அளவுக்கு ஆர்வம் காட்ட காரணம் இல்லாமல் இல்லை. உலகத் தரம் வாய்ந்த கல்வி, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பேராசிரியர்களுடன் தொடர்புகொள்ள, கலந்துரையாட வாய்ப்பு, ஆராய்ச்சித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்டேன்ஃபோர்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களைப் பார்வையிடும் வசதி, ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவது, படிப்பை முடித்தவுடன் பெரும் ஊதியத் தொகுப்புடன் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் போன்ற பல பலன்கள் உள்ளன.
இதிலுள்ள இடங்களின் அளவு ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரிக்கப்பட்ட போதிலும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதைவிட அதிகமாகிக் கொண்டே போகிறது. போட்டி அதிகமாகிறது. 
இதனால், ஐஐடி-யில் சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும், கனவோடும் படித்த மாணவர்கள், அதில் சேரமுடியாத நிலையில் மனச்சோர்வு அடைகின்றனர். அவ்வாறான துடிப்புமிக்க மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு செயல்திட்டத்தை ஐஐடி - காந்தி நகர் முன்னெடுத்து வருகிறது. கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) அல்லது பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வுகளில் (கேட்) தேர்ச்சி பெறாத திறன்மிக்க Humanities, Engineering, Science பிரிவு மாணவர்கள் காந்திநகர் ஐஐடி-யில் சேர்ந்து பயில அது வாய்ப்பு அளிக்கிறது.
பட்டம் அல்லாத திட்டம் (non-degree programme) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு முழுநேர மற்றும் பகுதிநேரப் படிப்பை காந்தி நகர் ஐஐடி வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் முழு கல்வியை இங்கு பயிலவும், இந்த ஐஐடி-யின் ஆய்வகங்கள், வளாக தங்குமிடம், இணையம், நூலகம், கணினி மையங்கள், விளையாட்டு, உணவு போன்ற அனைத்து கல்வி வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கிறது.
இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அந்த நிறுவனங்களின் அனுமதியோடு இங்கு சேர்ந்து பயிலலாம். அவ்வாறு பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் வழக்கமான பாடத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு ஐஐடி-யின் பட்டம் அல்லாத பாடத்திட்டம் உத்தரவாதம் அளிக்கும்.
அதோடு, பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் முடித்த மாணவர்களுக்கு காந்திநகர் ஐ.ஐ.டி. பகுதிநேர படிப்புகளை வழங்குகிறது. இங்கு சேர்க்கை பெற்ற மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துவதோடு, சில விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
படிப்பின் முடிவில், பட்டம் அல்லாத திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அடுத்து வரும் மாணவர்களுக்காக பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிசெய்யவும் பின்னூட்டங்கள் அல்லது பரிந்துரைகளை அளிக்கலாம். பாடத்திட்டம் முடிந்ததும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
காந்திநகர் ஐஐடியில் முழுநேர மற்றும் பகுதிநேர கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் பருவம் 1-க்கு (ஆகஸ்ட்-நவம்பர்) ஜூலை 1, பருவம் 2-க்கு (ஜனவரி-ஏப்ரல்) டிசம்பர் 1-க்குள் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டம் குறித்து காந்திநகர் ஐஐடி-யின் இயக்குநர் சுதிர் கே ஜெயின் கூறுகையில், "ஐ.ஐ.டி-யில் பயிலும் தகுதியுடைய பிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதே பட்டம் அல்லாத திட்டத்தின் முக்கிய நோக்கம். ஐ.ஐ.டி.யின் கலாசாரத்திலிருந்து கற்றுக் கொள்ள விரும்பும் மற்ற மாணவர்களுக்கு இனி JEE அல்லது கேட் தகுதி என்பது தடையாக இருக்கப் போவதில்லை. இணையவழி கற்றல் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஐஐடி திட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் நேரடி தொடர்பு கொள்ள முடியும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே காந்திநகர் ஐ.ஐ.டி.யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஐ.ஐ.டி. நிறுவனங்கள் பிரத்யேகமானவை என்ற கருத்தை மாற்றுவதே! அது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே தான் நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம். எனினும் இப்போது கூட பலருக்கு இந்தத் திட்டம் குறித்து தெரியாது'' என்கிறார் அவர். 
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் ஐஐடி மட்டுமல்லாமல், சட்டீஸ்கர் மாநிலம் பிலாய், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பட்டம் அல்லாத திட்டம் (non-
degree programme) செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இரா.மகாதேவன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/23/w600X390/im5.jpg https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/23/நுழைவுத்-தேர்வு-இல்லாத-ஐஐடி-படிப்புகள்-3198506.html
3198505 வார இதழ்கள் இளைஞர்மணி மந்திரச் சொற்கள் 500 W ! DIN DIN Tuesday, July 23, 2019 12:05 PM +0530 'எது ஒன்றைத் தெரிந்துகொள்வதன் மூலமும், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்'' - இது சுவாமி விவேகானந்தரின் புகழ்மிக்க கூற்று. உலகின் அனைத்து ரகசியங்களையும், உண்மைகளையும் தெரிந்துகொள்கின்ற வித்தைக்குரிய ஒரு புரிதல் நமக்கு கிட்டுகிறதோ இல்லையோ, தன்னைத்தானே புரிந்துகொள்கிற - தனது சுயதிறனை, ஆற்றலை, வல்லமையை உணரச் செய்கின்ற - திறவுகோலை ஒருவருக்கு அளிக்கின்ற வார்த்தைகள் எல்லாமே "மந்திர வார்த்தைகள்' தாம். 
வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது. அதிலும், நல்ல, தரமான வார்த்தைகளுக்கு... கூடுதல் ஊட்டம் தரும் வார்த்தைகளுக்கு... மிகுதியான ஆற்றலும், ஒருவரைப் புரட்டிப் போடுகிற வசிய மந்திர சக்தியும் இருக்கிறது. அப்படி மந்திர சக்திக்குரிய வார்த்தைகளை- மானுட ஆற்றலை நேர்மறையாக மடைமாற்றம் செய்து, சாதனை பாதையில் பயணித்திட செய்யும் வல்லமை கொண்ட வார்த்தைகளை- வள்ளுவரில் தொடங்கி ஒளவை, பாரதி, விவேகானந்தர், காந்தி, மார்டின் லூதர் கிங் என்று எண்ணிலடங்கா முன்னோடிகள், தீர்க்கதரிசிகள் நமக்கு ஒளிவிளக்குகளாக நிறுவிவிட்டு சென்றிருக்கின்றனர்.
வாழ்வில் பெரிதாக ஏதேனும் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதையெல்லாம் கடந்து தங்கள் இருப்பை ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்ளவே, நம் வாழ்க்கை முறையில் அன்றாட செறிவூட்டும் நிகழ்வுகளும், உணர்வுகளும், வார்த்தைகளும், வரிகளும், வாழ்த்துகளும் தேவைப்படுகின்றன.
"உள்ளம் உடைமை உடைமை...' (உள்ள உறுதி உடையவரே அனைத்தும் உடையவர், குறள்: 592), "உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை...'(ஒருவருக்கு வலிமை அவரது ஊக்கமே, குறள்: 600), "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்...' ( விடாமுயற்சி செல்வத்தைத் தரும், குறள்: 616), "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்...'(செயல் வெற்றி உறுதி என்பது ஒருவனது மனஉறுதியே, குறள்: 661), "மரம்போல்வர், மக்கட்பண்பு இல்லாதவர்...'
( அறிவுக்கூர்மை இருப்பினும் நல்லகுணம் இல்லாதவர் மரம் போன்றவர், குறள்: 997) போன்ற வார்த்தைகளை உள்ளடக்கிய குறள் எல்லாமே வள்ளுவர் நமக்களித்திருக்கும் "மந்திர வார்த்தை'கள்.
"அறம் செய விரும்பு, "கீழ்மை அகற்று, "நன்றி மறவேல், "தந்தை தாய்ப் பேண், "இளமையில் கல், "கெடுப்பது ஒழி, "சோம்பித் திரியேல், "பூமி திருத்தி உண் போன்ற ஆத்திச்சூடி வரிகளும், "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை, ஐயம் புகினும் செய்வன செய்" போன்ற கொன்றைவேந்தன் வரிகளும் ஒளவையார் நமக்களித்திருக்கும் "மந்திரச் சொற்கொடை' யாகும். 
புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதி சொல்லும் செய்வது துணிந்து செய், நேர்படப் பேசு, புதியன விரும்பு, பெரிதினும் பெரிது கேள்' என்பன போன்ற உத்வேக வார்த்தைகளும் தன்னிகரில்லாத மந்திர சொற்களே.
ஒவ்வொரு விடியலும் நமக்கு ஒரு புது வாழ்வைப் பரிசளிக்கும் விதமாக வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும், மனிதர்களையும் அறிமுகப்படுத்திகொண்டே இருக்கிறது. அப்படி நமக்கு புதிதாக, அரிதாகவும் கூட கிட்டும் சூழ்நிலைகளின் தன்மையை, தரத்தை நாம் உணர்ந்து செயல்பட, அவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திட நம் உள்ளமும், மனமும் நேர்மறையான சாவி கொண்டு திறக்கப்பட வேண்டும். அப்படி நேர்மறையான எண்ணங்களை கொடுக்கக்கூடிய திறவுகோலாக... இத்தகைய மந்திரச் சொற்கள் இருக்கின்ற காரணத்தால், இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற சொற்களைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் பயணிக்கும் விதமாக தங்களது அன்றாட வாழ்வை அமைத்துக்கொள்வது, அவர்களது அயராத ஓட்டத்தில் அயர்ச்சியைத்தராது.
பால்ய, பள்ளி காலங்களில், குழந்தைகளுக்கான பாடல்களில், ஒவ்வொன்றும் ஒரு வகை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக, வெவ்வேறு சூழ்நிலைகளில், நேரங்களில், தினங்களில் பாடுவது தனி சுகம். அதில், "மலை மேல தீ எரியுது... பிள்ளைகளா ஒடுங்க!' (Fire in the Mountain.... Run... Run) என்கிற கைதட்டி வட்டமிட்டு விளையாடப்பட்ட பாடல் விளையாட்டு, அந்த வயதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
அந்த விளையாட்டைச் சிறிது கற்பனை சேர்த்து நம் மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துவோமேயானால்... நெருப்பு குவியல் ஒன்று மையத்தில் இருக்க, நள்ளிருட்டில் தீ ஜுவாலைவிட்டு எரிய, அதைச் சுற்றி சிறுவர் சிறுமியர்.... கை தட்டி, "மலை மேல தீ எரியுது... பிள்ளைகளா ஒடுங்க!'" என்று மழலையர் ராகம் கொடுத்த ஊக்கம், இன்றும் வாழ்வில் தங்களது இலக்கை தொட்டுவிட ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவசியமாகவே இருக்கிறது.
வாழ்வின் குறிக்கோளாக, இலக்காக ஒன்றைத் தீர்மானித்துக் கொண்டு, அதை நோக்கிய ஓட்டத்தில் இன்றைய மாணவர்கள் அடிமடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு ஒடுவதுபோலவே இயங்க வேண்டியிருக்கிறது. இப்படியொரு முறையை, இயல்பை தங்களுக்கான தொடர் செயலாக, வழக்கமாக மாற்றிக்கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்கள்தம் அடிமடியில் நெருப்பிருப்பதைப் போன்ற உணர்வில் ஓட வேண்டுமே தவிர, அந்த நெருப்பின் சூடு அவர்களை முடக்கிவிடக் கூடாது. அந்த வகையில் இலக்கு, உழைப்பு எனும் சூடு ஒருவர் இயங்க துணைப் புரியவேண்டும்; சுணங்கும் விதமாக தடையாக மாறிவிடக்கூடாது. இந்த நிலைக்கு தேவையான மன நிலையை, உடல் வலிமையை, தெளிவை, அமைதியைக் கொடுக்க வல்லதாக இருப்பவை "மந்திர வார்த்தை'கள்தாம்.
விடியலின் குளியலைப் போல... மந்திர மொழிகளை, வார்த்தைகளை வாசிப்பதையும், கேட்பதையும் நாம் தவிர்க்கவியலாத வழக்கமாக்குவோம். அவ்வழக்கம், நாம் வாழ்க்கையைச் சீர்படுத்தி, நேர்படுத்தி, மேம்படுத்தி நம்மை வெற்றியாளராக இவ்வுலகம் வியக்கும் உயரத்தில் அமர வைக்கும் என்று நம்புவோம். அச்சம் தவிர்த்து... பெரிதினும் பெரிது கேட்போம்.
- கே.பி. மாரிக் குமார் 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/23/w600X390/MARI.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/23/மந்திரச்-சொற்கள்-500-w--3198505.html
3198504 வார இதழ்கள் இளைஞர்மணி அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வு! DIN DIN Tuesday, July 23, 2019 12:01 PM +0530 இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி (NCERT, GOVT.OF INDIA) ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதோடு அறிவியல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 
தேர்வு நடைமுறை குறித்து வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியது:
"இத்தேர்வு இந்தியா முழுவதும் 24-11-2019 (ஞாயிறு) மற்றும் 30-11-2019 (சனி) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதலாம். 
ஆங்கிலம்,தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தையுமே தமிழிலேயே எழுதலாம். 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம். 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். தேர்வு எழுத விரும்புவர்கள் www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 
பள்ளி மூலமாகத் தேர்வு எழுத விரும்புவர்கள் பள்ளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 மாணவர்கள் இருந்தால், அந்த பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும். அப்படி இல்லாமல் தனியாக எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 10 மையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து தேர்வு எழுதலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் ஜூலை 15, 2019 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்கள் பங்கேற்றால் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற 3 மாணவர்களுக்கு பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மாவட்ட அளவில் (6 முதல் 11 ஆம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் அவர்கள் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். 
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும். 
ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். மேலும், தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்கலாம். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். 
மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்கள், விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க, கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள். 
இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்'' என்றார் கண்ணபிரான். 
- வி.குமாரமுருகன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/23/w600X390/VVM.JPG https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jul/23/அறிவியல்-விழிப்புணர்வுத்-தேர்வு-3198504.html
3198503 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, July 23, 2019 11:57 AM +0530 இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 74 
பணி: Junior Engineering Assistant-IV (P&U) -26
பணி: Junior Engineering Assistant-IV (Electrical)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Mechanical)/ Junior Technical Assistant-IV - 17
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Quality Control Analyst-IV -03
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 04
வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 18 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல்துறையில் கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள், இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல்துறையில் பி.எஸ்சி இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபயர்சேஃப்டி
படித்து, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், பணி முன் அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி உள்ளவர்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.07.2019 

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 2,684
1. Skilled Manpower as per specification - 1336
2. Un-Skilled Manpower as per specification-1342
3. Consultant (Electrical Engineer) - 04
4. Accounts Executive  -02
வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்