Dinamani - சிறுவர்மணி - https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3132518 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: ஹரியானா மாநிலம் கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். Saturday, April 20, 2019 12:06 PM +0530 (சென்ற இதழ் தொடர்ச்சி...)

பிரம்ம சரோவர் குளம்!

இக்குளம் மிகவும் பழமையானது. மகாபாரத காலம் தொட்டு இன்று வரை இருக்கிறது. இந்த பெரிய குளம் 3300 அடி நீளமும், 1500 அடி அகலமும், 15 அடி ஆழமும் கொண்டது. இதில் புனித நீராடுவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. விசேஷ காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுகின்றனர். 

இக்குளத்தின் அருகே அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் காட்சியைச் சித்தரிக்கும் வகையில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பெரிய தேரும் அதில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணா அருங்காட்சியகம்!

கிருஷ்ணர் பற்றிய தகவல்கள் கதைகள் மற்றும் தத்துவங்கள் போன்றவற்றை விளக்கும் கலைப்பொருட்கள், சிலைகள், ஓவியங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் நினைவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பீஷ்ம குண்டம்!

மகாபாரதப் போரில் தை மாதம்  உத்தராயணத்தில் (உத்தராயணம் - சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் தோற்றம். )  வளர்பிறை ஏழாம் நாள் அம்புப் படுக்கையில் வீழ்ந்த  பீஷ்மர் வீடு பேறு அடைந்த இடம். இவ்விடம் இந்துக்களுக்கு மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.

ஜோதிசர்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு  பகவத் கீதை அருளிய இடம். 

பிரம்ம குண்டம்!

அர்ஜுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் கொண்டு வந்த இடம்தான் பிரம்ம குண்டம் என்ற குளம். 

கல்பனா சாவ்லா கோளரங்கம்!

இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக அமைக்கப்பட்ட கோளரங்கம் இது.

இன்னும் குருúக்ஷத்திர அறிவியல் அருங்காட்சியகம், பிர்லா மந்திர், சிவன் கோயில் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

மொர்னி மலை!

ஹரியானா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் மொர்னி மலையும் ஒன்று. இமய மலையின் ரம்யமான இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தை இம்மலை உச்சியில் இருந்து பார்த்து ரசிக்கலாம்! மொர்னி கிராமம் சிவாலிக் மலைத்தொடரின் ஒரு பகுதியான மொர்னி மலையின் 1276 மீ  உயரத்தில் அமைந்துள்ளது. மலைச் சரிவில் உள்ள மொர்னி நீர்வீழ்ச்சி, காகர் நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு,  நீர்வீழ்ச்சி, மலையடிவாரத்தில் இரண்டு ஏரிகள், பலவகையான  தாவரங்கள், ஒரு பழைய கோட்டை, 10 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட அருமையான இடம். இயற்கையை நேசிப்பவர்களுக்கும், மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மொர்னி மலை ஒரு வரப்பிரசாதமே!

பிஞ்சூர் தோட்டம்!

மொகலாயர்களின் கற்பனைத் திறனையும் கலை நயத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் இயற்கை எழில் கொண்ட அழகிய தோட்டம் இது! இந்த தோட்டம் 17 - ஆம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தோட்டம் பிஞ்சூர் கிராமத்தில் உள்ளதால் பிஞ்சூர் தோட்டம் எனப்படுகிறது.

காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களினால் இத்தோட்டம் கவனிப்பாரற்றுப் போனது. அழகிய சோலைவனமாகக் காட்சியளித்த தோட்டம் முட்புதர்கள் சூழ்ந்து பாழ்பட்டுப் போனது. அதனை யாத்வீந்திரா என்ற மன்னர் முழுமையாகப் புனரமைக்க முயற்சி செய்தார். மொகலாயர்களின் தோட்டக்கலையில் இருந்து சிறிதும் மாறுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்தோடு அயராது முயற்சி செய்து சீர் செய்தார். அதனால் "யாத் வீந்திரா தோட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இத்தோட்டம் ஏழு அடுக்கு வரிசைகளுடன் மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.

நுழைவு வாயில்ல் "சிஷ் மஹால்' எனப்படும் கண்ணாடி அரண்மனை உள்ளது. இரண்டாவது அடுக்கு வரிசையில் செங்கோட்டை அரண்மனை அமைந்திருக்கிறது. மூன்றாவது வரிசையில் சைப்ரஸ் மரங்கள், அடர்ந்த பூச்செடிகள், பழத்தோட்டங்கள் என காட்சியளிக்கிறது. 

நான்காவது வரிசையில் நீர் சூழ்ந்த அரண்மனை மற்றும் சதுர வடிவ நீர் ஊற்றுகள் உள்ளன. ஐந்தாவது அடுக்கு வரிசை மரங்கள் சூழ்ந்து மலைக்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து வட்ட வடிவ அரங்கம், அதன் அருகில் மியூசியம் என இத்தோட்டம் நேர்த்தியான வடிவமைப்புடன் பர்ப்பவர்களை வியக்க வைக்கிறது. 

தேசிய கள்ளிச் செடித் தோட்டம்! -பஞ்சகுலா-

பஞ்சகுலாவில் இருக்கும் கள்ளிச் செடித் தோட்டம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும்! இங்கு பல அரிய வகைக் கள்ளிச் செடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு "தேசிய கள்ளிச் செடி மற்றும் சதைப் பற்றுள்ள தாவர  பூங்காக்கள் ஆராய்ச்சி மையமும்' உள்ளது.  இங்கு கள்ளிச் செடிகளின் விற்பனையும் நடைபெறுகிறது.

கலேசர் தேசிய பூங்கா!

யமுனா நகர் மாவட்டத்தில் சிவாலிக் மலைத்தொடரில் உள்ள வனப்பகுதியில் 53 ச.கி.மீ. பரப்பளவு வனம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா சிறுத்தை, யானை மற்றும் பறவைகளுக்கு பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

சுல்தான்பூர் தேசிய பூங்கா!

முன்பு பறவைகள் சரணாலயமாக இருந்தது இப்பொழுது பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூர்கான் மாவட்டத்தில் உள்ள இந்த தேசிய பூங்காவில் 250 வகையான பறவைகளை கண்டு களிக்கலாம். ஃபிளமிங்கோ, எகிப்து கழுகுகள், சைபீரியன் கொக்குகள், பிளாக் விங்ஸ், மஞ்சள் வாலாட்டிக் குருவி, உட்பட பல பறவகள் பார்த்து ரசிக்க தொலைநோக்கி வசதியுடன் நான்கு காட்சி கோபுரங்கள், ஒரு சிறுவர் பூங்கா, நூலகம், ஒரு விளக்க மையம், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம்!

இந்த இரண்டு தேசிய பூங்காக்கள் தவிர பத்துக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களும், மான் பூங்காவும் இங்குள்ளன.

பஞ்சகுலா - மானசாதேவி கோயில்!

100 ஏக்கர் பரப்பளவில் 1815 - இல் கட்டப்பட்ட சக்தி தேவிக்கான பழமையான கோயில் இது! சிவாலிக் மலையின் அடிவாரத்தில் இருக்கும் இக்கோயிலுக்கு நவராத்திரியின் போது, ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். 

ஹரியானா மாநிலம் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்றது. வரலாற்றில் விருப்பம் கொண்டவர்களுக்கு தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள், பத்துக்கும் மேற்பட்ட பழமையான கோட்டைகள், ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குருúக்ஷத்திரம், இயற்கையை ரசிப்பவர்களுக்கு மோர்னி மலை மற்றும் வனப்பகுதிகள் என அனைவருக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக ஹரியானா திகழ்கிறது!

நிறைந்தது!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/கருவூலம்-ஹரியானா-மாநிலம்-3132518.html
3136731 வார இதழ்கள் சிறுவர்மணி நேர்மையின் பரிசு! DIN DIN Saturday, April 20, 2019 12:01 PM +0530 வரதனுக்கு வருத்தமாக இருந்தது. அன்றுதான் கடைசி நாள். பள்ளிக்கூடத்தில் கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொள்ள ஒவ்வொரு மாணவனும் இருநூறு ரூபாய் செலுத்த வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான சுற்றுலா அது. "மிகவும் பயனுடையதாக இருக்கும் தவறவிட்டுவிடாதீர்கள்! '' என்று ஆசிரியர் கூறியிருந்தார். கட்டணம் கட்ட அன்றுதான் கடைசி நாள். சுற்றுலாவில் சேர்ந்து விட வேண்டும் என்று வரதனுக்கு மிகவும் ஆசை.
 அவன் அப்பா கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குப் போனால்தான் காசு. போன வாரம் எங்கோ கூலி வேலைக்குச் சென்றபோது கையில் அடிபட்டுக்கொண்டு வந்து விட்டார். எந்த வேலைக்கும் போக முடியவில்லை. ரேஷன் வாங்கவே பணம் இல்லை என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். பள்ளிச் சம்பளமும் அவன் இன்னும் கட்டவில்லை. இந்த மாத இறுதிக்குள் செலுத்தாவிட்டால் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்க மாட்டார்கள். என்று பயமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அறிவிப்புப் பலகையில் அவன் பெயரையும் வெளியிட்டு சிவப்பு மையினால் கீழ்க் கோடிட்டிருந்தார்கள். இந்த நிலையில் வீட்டில் சுற்றுலா செல்ல பணம் எப்படி கேட்பது? சும்மா இருந்து விட்டான்.
 "நாளைக்குள்ளாவது எப்படியாவது பணம் கட்டி விடுடா'' என்று சக மாணவர்கள் அவனை வற்புறுத்தினார்கள். சுற்றுலாக் கட்டணத்தை மட்டும் நீ கட்டி விடு!.... உன்னுடைய உணவு, வழிச் செலவுகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று ஊக்கமூட்டினார்கள்.
 " என்ன செய்வது, எப்படிக் கேட்பது'..... என்று யோசித்துக்கொண்டு நடந்து வரும்போது மைதானத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு பர்ஸ் கீழே விழுந்து கிடந்ததை அவன் பார்த்தான். எடுத்துப் பார்த்தபோது புது இரண்டாயிரம், ஐநூறு ரூபாய்த் தாள்கள் கத்தையாக இருந்தன. பர்சில் ஏதேனும் முகவரி இருக்கிறதா என்று பார்த்தான். வங்கி ஏ.டி.எம். அட்டை, வேறு சில தாள்கள், குறிப்புகள் தவிர வேறு எதுவும் இல்லை.
 "என்னடா வரதா, ஏன் நின்றுவிட்டாய்??'' என்று கேட்டுக்கொண்டே ஓடோடி வந்தார்கள் நண்பர்கள்.
 "நம் பள்ளிக்கூடத்துக்கு வந்த யாரோதான் இதைத் தவற விட்டிருக்க வேண்டும்.... இதை எப்படியடா உரியவரிடம் சேர்ப்பது?'' என்று கேட்டான் வரதன்.
 "இது அதிர்ஷ்டம்!.... கடவுள் உனக்காகக் கொடுத்திருக்கிறார்!... உன்னுடைய பள்ளிச் சம்பளம், சுற்றுலாக் கட்டணம் எல்லாம் செலுத்திவிடு!... மீதியை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொள்!... மணிபர்சை நீ கண்டு எடுத்ததை நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம்!'' என்றான் ஒருவன்.
 "அது தவறுடா,.... பள்ளிக்கூட மைதானத்தில் கண்டெடுத்த பர்சை அலுவலகத்தில் ஒப்படைத்து விடணும்டா!... அதுதான் நியாயம்!....'' என்றான் வரதன்.
 "நீ பிழைக்கத் தெரியாதவன்டா.... அலுவலத்தில் கொடுத்தால் உரியவிரிடம் சேர்ப்பித்து விடுவார்களா?.... அப்படி கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் உனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை வைத்துக் கொடுத்து விடு!! " என்று யோசனை கூறினான் இன்னொருவன்.
 வரதனுக்கு இந்த யோசனை சரியாகப் படவில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் படுவது குற்றம்னு அம்மா எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. மணிபர்சை அலுவலத்தில் ஒப்படைத்து விட்டான்.
 "இதில் பணம் அப்படியே இருக்கிறதா?.... ஏதாவது எடுத்துக் கொண்டாயா?... உண்மையைச் சொல்!...'' என்று கேட்டார் அலுவலகப் பணியாளர்.
 "அப்படியே இருக்கிறது சார்!... நான் எதுவும் எடுக்கவில்லை!....'' என்றான் வரதன்.
 அந்த பர்ûஸ எடுத்துக் கொண்டு பள்ளி முதல்வர் அறைக்குள் சென்றார் பணியாளர்.
 "பள்ளிக்கூட மைதானத்தில் ஒரு மேடை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர் வந்திருந்தார். தன்னுடைய பர்சை தவற விட்டுவிட்டதாக இப்போதுதான் ஃபோன் செய்தார். அவருடையதாகத்தான் இருக்கும்!'' என்று கூறி பர்சை வாங்கி சோதித்துப் பார்த்தார். எல்லாம் சரியாக இருந்ததால் அவருக்கு உடனே ஃபோன் செய்தார்.
 மறுநாள் காலை. மணி அடித்ததும் எல்லா மாணவர்களும் அசெம்பிளியில் கூடினார்கள். இறை வணக்கப் பாடலுக்கு முன் முதல்வர் ஏதேனும் அறிவிப்பு செய்வது வழக்கம்.
 முதல்வர் வரதன் பெயரை உரக்கச் சொல்லி அழைத்தார். தயங்கித் தயங்கி முன்னே சென்று கூட்டத்தின் மத்தியில் முதல்வர் அருகில் போய் நின்றான்.
 "நேற்று நம் பள்ளிக்கூடத்துக்கு வந்த ஒப்பந்தக்காரர் தனது மணி பர்சை இங்கே தவற விட்டுவிட்டார். அதில் கத்தையாகப் பணமும் இன்னும் சில முக்கிய கடிதங்களும் இருந்தனவாம். அந்த பர்சை நமது மாணவர் வரதன் கண்டெடுத்திருக்கிறான். தனக்கு அவசரத் தேவை இருந்தும் கூட பணத்தைக் கண்டு சபலம் அடையாமல் எப்படியோ நமது அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டான்! தகவல் அறிந்த ஒப்பந்தக்காரர் மகிழ்ச்சியடைந்து வரதனின் நேர்மையைப் பாராட்டி அவனுடைய மேல் படிப்புக்கான செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். வரதனின் நேர்மையைப் பாராட்டி அவன் சுற்றுலா செல்வதற்கான கட்டணத்தை நான் செலுத்துகிறேன்....'' என்றார். வரதனைப் பாராட்டும் வகையில் அனைத்து மாணவர்களும் கரகோஷம் செய்தார்கள்!
 மாயூரன்
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/நேர்மையின்-பரிசு-3136731.html
3136730 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, April 20, 2019 11:59 AM +0530 கேள்வி: தீக்குச்சிகளைக் கொண்ட வத்திப் பெட்டி எப்போதி லிருந்து புழக்கத்திற்கு வந்தது?
 பதில்: மிகப் பழமையான சீனப் புத்தகம் ஒன்று, கி.மு. 577-இல் ஸல்ஃபர் போன்ற ரசாயனப் பொருளைக் கொண்ட தீக்குச்சி பயன்பாட்டில் இருந்ததாகச் சொல்கிறது. சீனர்கள் வெடிமருந்துகளில் முன்னோடிகள் என்பதால் இது உண்மையாக இருக்கக்கூடும்.
 1805-ஆம் ஆண்டில், பாரீஸ் நகரைச் சேர்ந்த அறிவியல் உதவியாளரான ஜீன் சான்செல் என்பவரால் ஒரு தீக்குச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தீக்குச்சியின் முனையில் பொட்டாசியம் ஸல்பேட், ஸல்ஃபர், சர்க்கரை மற்றும் ரப்பர் போன்றவற்றின் கலவை ஒட்டப்பட்டிருக்கும். இந்தத் தீக்குச்சியை ஸல்ஃப்யூரிக் அமிலம் நிறைந்த சிறிய பாட்டிலுக்குள் அமிழ்த்தினால் உடனே அது நெருப்பு பற்றிக் கொள்ளும். இந்த முறை அதிக பொருட்செலவு மிக்கதாகவும் மிகவும் அபாயகரமானதாகவும் இருந்தது.
 இப்போது நாம் பயன்படுத்தும் தீக்குச்சி வந்த கதை மிகவும் சுவாரசியமானது.
 1926-ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் வாக்கர் என்ற அறிவியல் அறிஞர் தீக்குச்சியைக் கண்டு பிடிக்கப் பலவிதமான கலவைகளைத் தயாரித்துப் பார்த்து, மிகவும் அலுத்துப் போன சமயத்தில், அவர் வைத்திருந்த சிறிய பாத்திரத்திலிருந்த ஒரு துளி ரசாயனக் கலவையைத் தற்செயலாக அவர் தரையில் தேய்த்து அழிக்க முயற்சித்தபோது அது சட்டென்று தீப்பற்றிக் கொண்டது.
 இப்படித்தான் வத்திக்குச்சிகளைக் கொண்டு பெட்டியின் பக்கவாட்டுப் பட்டையில் உரசினால் தீப்பற்றிக் கொள்ளும் பாதுகாப்பான முறை கண்டுபிடிக்கப்பட்டது..
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 இரவில் வரும் நிலவினால் தாவரங்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/அங்கிள்-ஆன்டெனா-3136730.html
3136729 வார இதழ்கள் சிறுவர்மணி பொருத்துக... DIN DIN Saturday, April 20, 2019 11:58 AM +0530 சில சொற்களுக்கான அர்த்தங்கள் இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. பொச்சாவாமை - வலிமையை அறிதல்
 2. பொறையுடைமை - சோம்பல் இல்லாமை
 3. அழுக்காறாமை - சோர்வின்மை
 4. வெகுளாமை - அறிவில்லாமை
 5. அவாவறுத்தல் - பொறுமையாக இருத்தல்
 6. வலியறிதல் - பொறாமை இல்லாமை
 7. மடியின்மை - கோபம் கொள்ளாமை
 8. பேதைமை - ஆசையை விட்டுவிடுதல்
 விடை
 1. சோர்வின்மை
 2. பொறுமையாக இருத்தல்
 3. பொறாமை இல்லாமை
 4.கோபம் கொள்ளாமை
 5. ஆசையை விட்டுவிடுதல்
 6. வலிமையை அறிதல்
 7. சோம்பல் இல்லாமை
 8. அறிவில்லாமை

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/பொருத்துக-3136729.html
3136728 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, April 20, 2019 11:57 AM +0530  1. ஊர், உலகம் உறங்கினாலும் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்...
 2. நான்கு கால்கள் கொண்டவன், ஆனால் இவனுக்கு வால் கிடையாது...
 3. இந்தச் சின்னப் பையனின் வாலுக்கு உலகமே நடுநடுங்கும்....
 4. கடல் நீரினால் வளருவான், மழை நீரினால் காணாமல் போவான்...
 5. பாடுவான் ஆட மாட்டான், பேசுவான் அசைய மாட் டான்...
 6. கைக்குள் அடங்கும் இந்தப் பிள்ளை கதை நூறு சொல் லுவான்...
 7. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்...
 8. உலகில் மெலிந்தவன், உடுப்பைக் காப்பவன்...
 விடைகள்:
 1. கடிகாரத்தில் சின்ன முள், பெரிய முள்
 2. நாற்காலி, 3. தேள், 4. உப்பு
 5. ரேடியோ பெட்டி, 6. புத்தகம்
 7. இரயில், 8. தையல் ஊசி
 -ரொசிட்டா
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/விடுகதைகள்-3136728.html
3136727 வார இதழ்கள் சிறுவர்மணி சேவை மனப்பான்மை!  ரா.முகுந்த ராஜு DIN Saturday, April 20, 2019 11:57 AM +0530 அரங்கம்
 காட்சி - 1,
 இடம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
 மாந்தர் - தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகள்
 
 (12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலை. 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தலைமை ஆசிரியை சாரதா கலந்துரையாடுகிறார்)
 
 தலைமை ஆசிரியை சாரதா : லக்ஷ்மி, 12 ஆம் வகுப்பு முடிந்து விட்டது! விடுமுறையும் விட்டாகிவிட்டது! அடுத்து என்ன செய்யப்போகிறாய்?...
 லக்ஷ்மி : வணக்கம் டீச்சர்!.... நான் கல்லூரியில் சேர விரும்புகிறேன்.... டிகிரி முடிந்தவுடன் ஐ.ஏ.எஸ். பரிட்சை எழுத நினைக்கிறேன்.... அதற்கான ஆயத்தங்களை நான் முன்னாலேயே செய்து கொண்டிருக்கிறேன்.
 த.ஆசிரியை சாரதா : வெரி குட்!.... விஜயா, நீ என்ன செய்ய இருக்கிறாய்?...
 விஜயா: பிளஸ் டூ முடிந்து விடும் நிலையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர இருக்கிறேன்.... ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் டீச்சர்!
 த.ஆ.சாரதா: நல்லது!... வாழ்த்துகள்!...சாந்தி!.... உன் விருப்பம் என்ன?
 சாந்தி : நான் நர்ஸ் ஆக விரும்புகிறேன்.... அதற்கான கல்லூரியில் சேர்வேன்... பி.எஸ்.சி. சயின்ஸ் எடுத்துப் படிப்பேன்.... நர்ஸ் பயிற்சி பெறுவேன்!.... மருத்துவ மனையில் நர்ஸாக வேலை செய்ய வேண்டும்.... இதுதான் என் ஆசை.... மற்றும் திட்டம் டீச்சர்!
 த.ஆ.சாரதா : எவ்வளவோ துறைகள்.... எவ்வளவோ வேலைகள்.... ஏன் நர்ஸ் ஆவது உனக்குப் பிடிக்கிறது? நோயாளிகளிடம் பழக வேண்டுமே....
 சாந்தி : என் அம்மா நான் நர்ஸ் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.... அதில்தான் மகிழ்ச்சி வரும் என்கிறார்கள்.... நோயாளிகளிடம் அன்பு செலுத்தி, ஆறுதல் தரும் சிறந்த சேவை அது என்கிறார்.... நோயுற்றவர்களின் மனதில் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும்... நோயிலிருந்து விடுபட வைக்கும் புனிதமான தொழில் அது என்கிறார்....மேலும் நோயிலிருந்து விடுபட்ட நோயாளிகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும் அனுபவம் கிடைக்கும் என்கிறார்....எனக்கும் அந்த சேவை மிகவும் பிடிக்கிறது!....
 த.ஆ,சாரதா : எல்லோருக்கும் வாழ்த்துகள்!.... அவரவர்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்.... இறைவன் துணை புரிவார்!
 (கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவடைகிறது. அவரவர்கள் வீட்டுக்குச் செல்கிறார்கள்.
 
 காட்சி - 2,
 இடம் - சாலை, அதன் இடது புறத்தில் ஒரு கார்,
 மாந்தர் - சாந்தி, ஆம்புலன்ஸ் வேன் ஊழியர்கள்-
 முருகேசன், கேசவன், தமிழரசன்.)
 (சாந்தி அந்த சாலையைக் கடக்க வேண்டும். நின்று கொண்டிருக்கிறாள். ஒரு கார் வந்து பக்கத்தில் நிற்கிறது. அதன் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். காரை ஓட்டி வந்தவர் மயக்கம் வந்ததால் ஓரமாகக் கரை நிறுத்தி விடுகிறார். அவருக்கு மயக்கம் அதிகமாகிறது! அப்படியே ஸ்டீயரிங்கில் சாய்ந்து விடுகிறார்.....அவரது உடல்அதிகமான வியர்வையில் நனைந்திருக்கிறது.....சாந்தி, தன் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் மீது தெளிக்கிறாள்... சட்டையைத் தளர்த்தி விடுகிறாள்..... தன் செல்ஃபோனை எடுத்து 108 க்கு ஃபோன் செய்கிறாள். கடவுள் செயல்போல் ஆம்புலன்ஸ் உடனே அருகில் வந்துவிட்டது!... விறுவிறு வென்று ஆம்புலன்ஸிலிருந்து மூவர் -- (முருகேசன்...கேசவன்.... தமிழரசன்) -இறங்கினார்கள்....)
 
 முருகேசன் : என்னம்மா என்ன ஆச்சு?
 சாந்தி : இந்தக் கார்தான் சார்!... யாரோ தெரியலே..... மயக்கம் போலிருக்கு!.... நல்ல காலம்!.... காரை ஓரமாக நிறுத்திவிட்டார்...
 கேசவன் : சரி,... என்ன இது, மூச்சுப் பேச்சையே காணோம்!....தமிழரசன் ஒரு கை பிடி!....ஆளை வண்டியிலே ஏத்திடலாம்....முதலுதவி செஞ்சாகணும்!... ஏம்மா, நீ எங்க கூட ஆஸ்பத்திரி வரைக்கும் வர்றியா?....
 சாந்தி : சரி.
 முருகேசன் : தமிழரசன்!... உனக்குத்தான் கார் ஓட்டத் தெரியுமே!... காரை ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் வா!
 தமிழரசன் : சரி...
 (கார் கதவைத் திறந்து மயக்கமுற்றவரை ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர்.)
 முருகேசன் : கேசவன், நீ... அவருக்கு கொஞ்சம் முதலுதவி செய்!... ஆக்ஸிஜன் சிலிண்டர் கூட வண்டியிலே இருக்கு.... பார்த்துக்க... யாரோ பாவம்!.....உடம்பிலே அசைவே இல்லை....உயிர் இருக்கா, இல்லையான்னே தெரியலே....
 கேசவன் : என்னாலே முடிஞ்ச முதலுதவியை நான் செய்யறேன்!... நீங்க வண்டியை ஓட்டுங்க.... ஏம்மா,.... நீங்க அவர் பக்கத்திலே உட்கார்ந்துக்குங்க...
 சாந்தி : சரிங்க....(ஆம்புலன்ஸில் ஏறுகிறாள்...)
 
 காட்சி - 3,
 இடம் - ஆம்புலன்ஸிற்குள்,
 மாந்தர் - சாந்தி, கேசவன், முருகேசன்
 
 (கேசவன் முதலுதவி செய்கிறார்.... உடல் சற்று அசைகிறது..... மயக்கம் சற்று தெளிகிறது....நினைவு வருகிறது...விழித்துப் பார்க்கிறார்.... கேசவனும், முருகேசனும் சந்தோஷமடைகிறார்கள்.... காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது... )
 
 படுத்திருப்பவர் : (மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்து....) என்னம்மா இது? நான் காரில் அல்லவா வந்தேன்!....
 சாந்தி : சார்!.... காரில்தான் வந்தீங்க....நீங்க ரொம்ப மயக்க
 மடைஞ்சிட்டீங்க.... இப்போ சரியாயிட்டீங்க.... (கேசவனைக் காட்டி) இவர்தான் முதலுதவி செய்து உங்க உயிரைத் திரும்பக் கொண்டு வந்தார்.... உங்கள் கார் பின்னாலே வந்துகொண்டிருக்கிறது.... நாம் இப்போ அரசு மருத்தவ மனைக்குப் போகிறோம்!...
 கேசவன் : ஆமாம் சார்!.... நான்தான் ஹார்ட் ஃபெயிலியர் ஆகியிருக்குமோன்னு முதலுதவி செய்தேன்....கடவுள் கை விடவில்லை.... பிழைச்சுக்கிட்டீங்க.... இந்தப் பெண் ஃபோன் செய்யலேன்னா எங்களுக்கே தெரிஞ்சிருக்காது!...
 படுத்திருப்பவர் : எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்ப்பா!.... ஏம்மா!... உனக்கும் ரொம்ப தேங்க்ஸ்மா....
 
 காட்சி - 4,
 இடம் - அரசு மருத்துவ மனை,
 மாந்தர் - டாக்டர் அப்துல், அரசு மருத்துவர்கள், டாக்டர் லாரன்ஸ், முருகேசன், கேசவன், தமிழரசன்
 
 (அரசு மருத்துவ மனையில் வேன் நிற்கிறது....தமிழரசன் ஓட்டிக் கொண்டு வந்த காரும் வந்து சேருகிறது... டாக்டர் அப்துலுடன், அலுவலர்களும் கூட வருகின்றனர்....)
 
 டாக்டர் அப்துல் : ( ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பவரைப் பார்த்து... வியப்பும், பதட்டமும் மேலிட....) டாக்டர் லாரன்ஸ்!.... என்ன இது?... உங்களுக்கு என்ன?.... ஏன் இப்படி?....
 (முருகேசன் நடந்தவற்றை விவரிக்கிறார்... சாந்தியை டாக்டர் அப்துல் தட்டிக் கொடுக்கிறார். எல்லோரும் சாந்தியைப் பாராட்டுகின்றனர்... )
 டாக்டர் அப்துல் : இந்த டாக்டர் லாரன்ஸ் எத்தனை உயிர்களை நோயிலிருந்து மீட்டிருக்கிறார்....காப்பாற்றியிருக்கிறார்....
 சாந்தி : டாக்டர் சார்!.... (கேசவனைக் காட்டி) இவங்க இல்லேன்னா இவர் பிழைத்திருப்பது கஷ்டம்.... அதிலும் இவர் முதலுதவி நல்ல பலனைத் தந்தது!....
 முருகேசன் : இந்தப் பொண்ணுதான் ஃபோன் செஞ்சது....
 டாக்டர் அப்துல் : (சாந்தியைப் பார்த்து...) உங்க ஃபோன்தான் அவரைக் காப்பாத்தியிருக்கு.... எத்தனையோ பேரை அவர் காப்பாத்தியிருக்கிறார்.... சொந்தமா மருத்துவமனை நடத்துகிறார்... அந்த டாக்டரையே நீங்க காப்பாத்தியிருக்கீங்க....
 (உடனடியாக டாக்டர் லாரன்ûஸ ஐ,சி.யு. விற்கு எடுத்துச் செல்கிறார்கள்... சிகிச்சை அளிக்கப்படுகிறது... )
 
 டாக்டர் அப்துல் : லாரன்ஸ் சார், நீங்க கொஞ்ச நேரம் எங்க மேற்பார்வையிலே இருந்தால் நல்லது... வீட்டுக்கும் மருத்துவ மனைக்கும் சேதி சொல்லி விடலாம்!.... வீட்டு ஃபோன் நம்பர் தாங்க... மருத்துவ மனை நம்பர் எனக்குத் தெரியும்...
 லாரன்ஸ் : வீட்டுக்கு வேண்டாம்!... வெளியூர் போயிருக்காங்க... பயந்துடுவாங்க....அலறி அடிச்சுக்கிட்டு வந்துடுவாங்க....இப்போ வேணாம்.... அப்புறம் சொல்லிக்கலாம்.... மருத்துவமனைக்குச் சொல்லிடுங்க...
 டாக்டர் அப்துல் : யாராவது தெரிஞ்சவங்க கூட இருந்தால் தேவலை... (சாந்தியைப் பார்த்து) ஏம்மா நீங்க இருக்கீங்களா?
 சாந்தி : சரி டாக்டர்!...
 (வீட்டுக்கு ஃபோன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்லி தான் வர தாமதமாகும் என்று தெரிவிக்கிறாள். சற்று நேரத்தில் டாக்டர் லாரன்ஸின் மருத்துவமனையிலிருந்து பலர் வந்து பார்க்கின்றனர். அனைவரும் நடந்ததைக் கேள்விப்பட்டு சாந்தியைப் பாராட்டுகின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பாராட்டுகின்றனர்.... பின் டாக்டரை அவரது காரில் அழைத்துச் செல்கின்றனர்... லாரன்ஸ் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு விடை பெறுகிறார். )
 
 சாந்தி : அப்போ நான் வரேங்க....
 டாக்டர் லாரன்ஸ் : என் கூட என் மருத்துவமனைக்கு வாம்மா!... அங்கேயிருந்து உன்னை நான் உன் வீட்டில் ட்ராப் செய்யச் சொல்றேன்....
 சாந்தி : சரிங்க...
 
 காட்சி - 5,
 இடம் - டாக்டர் லாரன்ஸின் மருத்துவமனை,
 மாந்தர் - மருத்துவமனை ஊழியர்கள்,
 டாக்டர் லாரன்ஸ், சாந்தி.
 
 (டாக்டர் லாரன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைகிறார். எல்லோரும் அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்கின்றனர்)
 டாக்டர் லாரன்ஸ் : சாந்தி உன் உதவுகிற எண்ணம்தான் என்னைக் காப்பாற்றியது!.... உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?.... கேளம்மா!.....
 சாந்தி : நான் ப்ளஸ் டூ பரிட்சை எழுதியிருக்கிறேன்....நர்ஸ் ஆக விரும்புகிறேன்.... என் அம்மாவும் அதைத்தான் விரும்புகிறார்....
 டாக்டர் : நர்ஸ் என்ன? உன்னை டாக்டராகவே ஆக்குகிறேன்!....
 சாந்தி : வேண்டாம்!.... என் அம்மா என்னை நர்ஸ் ஆகணும்தான் விரும்பறாங்க.... அதற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்களை நான் கேட்கிறேன்...இப்போ விடை கொடுங்க....
 (லாரன்ஸ் அந்தப் பெண்ணின் சேவை மனப்பான்மையைக் கண்டு வியப்பும், மகிழ்ச்சியும், அடைகிறார்...)
 (திரை)
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/சேவை-மனப்பான்மை-3136727.html
3136725 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, April 20, 2019 11:54 AM +0530 • "அம்மா என் பேருக்கு அர்ச்சனை 
செஞ்சுக்கிட்டு வரச்சொன்னாங்க!...''
"பரவாயில்லியே....வெரிகுட்!.....
உன் நட்சத்திரம் என்ன?''
"கீர்த்தி சுரேஷ் சாமி...''
குமாரி கே.விஜயலட்சுமி, 
13/5, இ.எல்.ராகவனார் தெரு, 
திருப்பத்தூர் - 635601.

• "இரும்பு, தாமிரம், வெள்ளி போன்ற 
உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்தும்!... சரியா? தவறா?...''
"என்ன இருந்தாலும் கடத்தறது 
தப்புத்தான் சார்!''
உ.சபாநாயகம், சிதம்பரம்.

• "நீ இடது கையிலேயா எழுதுவே?... ''
"அதெப்படி கையாலேயெல்லாம் 
எழுத முடியுபம்?... பேனாவோ, 
பென்சிலோ வெச்சுத்தான் 
எழுதுவேன்!''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

• "உங்க அண்ணன் மிருதங்கம் வாசிக்கும்போது கண்ணை மூடிக்கிறானே? ஏன்?....''
"அவனாலே மத்தவங்க படற 
அவஸ்தையை கண்ணாலே பார்க்க 
முடியலையாம்!'' 
எஸ்.சடையப்பன், அங்குவிலாஸ் 
மேல் நிலைப்பள்ளி, திண்டுக்கல் கலெக்ட்ரேட் - 624004.

• "...."நாய்ஸ் பொல்யூஷன்' னா என்ன?...''
"எங்க தெருவிலே 
பத்து நாய்கள் இருக்கு.... 
ராத்திரி வந்து பார் தெரியும்!....''
பானுமதி, சென்னை - 600110

• "அம்மா, இன்னிக்கு எங்க டீச்சர், "இமயமலை எங்கே இருக்கு?' ன்னு கேட்டாங்க!...''
"அடப்பாவமே!....இன்னுமா கண்டுபிடிக்கலே!.... நான் படிக்கும்போதே இந்தக் கேள்வியைக் கேட்டாங்களே!...''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/கடி-3136725.html
3136724 வார இதழ்கள் சிறுவர்மணி  அலாவுதீன் பூதம்!  சுகுமாரன் DIN Saturday, April 20, 2019 11:52 AM +0530 சூப்பர் சிவா! 5
"முட்டி போட்டது போதும்!.... ரெண்டு பேரும் பாடம் படிங்க.... டேய் சிவா, காப்பி அடிச்ச பொயட்ரியைப் படி!...'' என்றார் அப்பா.
 இரண்டு பேரும் எழுந்து போய் புத்தகத்தை எடுத்து வந்தனர். தங்கை ஜெயா தமிழ் புத்தகத்தை சத்தமாக படித்துக் கொண்டிருந்தாள்.
 "தங்கச்சியைப் பாருங்க.... யாரும் சொல்லாமலேயே படிக்கிறா.... அவள மாதிரி இருங்க....'' என்றார் அப்பா. அப்பா பாராட்டியதைக் கேட்டு, "ஹே...ஹே...'' என்று சிரித்தாள் ஜெயா.
 "எவ்வளவு நேரம் விளக்கைப் போட்டுட்டு இருப்பீங்க.... படுக்கையெல்லாம் போட்டாச்சு!...'' எனறாள் அம்மா.
 "சரி, காலையில் எழுந்து படிங்கடா...'' என்றார் அப்பா.
 புத்தகங்களை அப்படியே தலைமாட்டில் போட்டுவிட்டு இருவரும் படுத்தனர்.
 அம்மா விளக்கை அணைத்தாள். அறையில் இருள் சூழ்ந்தது. சிவாவின் மனதிற்குள் அலாவுதீனின் மந்திர விளக்கின் ஒளி தெரிந்தது. மந்திர விளக்கு கிடைத்தால்?....சிவாவின் மனதிற்குள் கற்பனை.... ஆங்கிலத் தேர்வை அலாவுதீன் பூதத்தை எழுதச் சொல்லலாம்... என்று சிவா நினைத்தான்...
 
 மரக்குரங்கு விளையாட்டு!
 ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை சிவாவும் அவனுடைய நண்பர்களும் மரக்குரங்கு விளையாட்டு விளையாடுவார்கள். காலையில் மரத்தில் ஏறினால் மதியம் சாப்பாட்டுக்குத்தான் கீழே இறங்குவார்கள். இல்லையென்றால் பூங்காவின் வாட்ச்மேன் அவர்களை விரட்டி விட்டால்தான் போவார்கள்.
 சுதந்திரப் போராட்டத் தியாகியின் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்கா மிகவும் அழகானது. பசுமையான புல் தரை,விதவிதமான விலங்குகளின் தோற்றத்தில் வெட்டி விடப்பட்டுள்ள குரோட்டன்ஸ் செடிகள், வண்ண, வண்ணப் பூச்செடிகள், வரிசையாக நிற்கும் மரங்கள் என எல்லோரும் விரும்பும் விதமாக பூங்கா இருந்தது. சீசா, சறுக்கு, பார், ஊஞ்சல் என சிறுவர் விளையாடுமிடமும் இருந்தது. பூங்காவின் மேற்கு பக்கமிருந்த ஆலமரத்தில்தான் சிவாவும், அவனுடைய நண்பர்களும் மரக்குரங்கு விளையாடுவார்கள். ஆலமரம் பூதம் மாதிரி இருந்தது. அதற்குக் கிளைகளாக நூறு கைகள்! விழுதுகளாக நிறையக் கால்கள்! மரக்குரங்கு விளையாட ஏற்ற மரம்! சிவா மரத்தில் ஊர்ந்தும் கிளைகளுக்கிடையில் தாவியும் லாவகமாக விளையாடுவான். அவனை யாரும் தொட முடியாது.
 மரக்குரங்கு விளையாட சிவாவின் நண்பர்களெல்லாம் வந்து விட்டார்கள். தேவராஜ் மட்டும் இன்னும் வரவில்லை. அவனுக்காகக் காத்திருந்தார்கள்.
 "இடையில் அவனைச் சேர்த்துக் கொள்ளலாம்... நாம் விளையாடுவோம்'' என்றான் உதயன்.
 "அவன் வரட்டும்...'' என்று கூறினான் சிவா. வீடுவரைவதற்கு வசதியான ஒரு குச்சியை சிவா தேடினான். ரொம்பவும் நீளமாக இல்லாமலும் குட்டையாக இல்லாமலும் இருக்கிற குச்சி வேண்டும். குச்சி நீளமாக இருந்தால் கவுட்டையில் தட்டும் குட்டையாக இருந்தால் காணாமல் போயிடும்.
 சரியான குச்சி கிடைத்தது. அதை சிவா எடுத்துக் கொண்டு வரும்போதே தேவராஜ் வந்துவிட்டான். தேவராஜைப் பார்த்ததும் நண்பகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
 "நீ லேட்டா வந்தே.... அதனால் நீதான் தொடணும்...'' என்றான் சிவா. அதை தேவராஜ் ஒத்துக் கொள்ளவில்லை....
 அவர்கள் சாட். பூட், ஒன், டூ, த்ரீ.... போட்டுப் பார்த்தார்கள்.
 வழக்கமாக மரக்குரங்கு விளையாடும் நண்பர்களெல்லாம் வந்திருந்தனர். குமார், குமாருடைய நண்பன் கணேசன், கணேசன் தம்பி ரகு, தேவராஜ் நண்பன் மணி, பக்கத்து தெரு ஜோசப், சிவா, சிவாவின் தம்பி உதயன் என ஏழுபேர் இருந்தனர். வழக்கமாக வரும் இரண்டு பேர் இன்னும் வரவில்லை....
 சிவா அவனைச் சுற்றி ஒரு வட்டம் போட்டான். பிறகு வலது காலைத் தூக்கி கவுட்டை வழியாக குச்சியை வீசினான்.... அது வடக்கே தொலைவில் போய் விழுந்தது. தேவராஜ் குச்சியை எடுக்க ஓடினான். தேவராஜ் குச்சியை எடுக்கப் போன நேரத்தில் குச்சியை வீசிய சிவாவும், அவனுடைய நண்பர்களும் மரத்தில் ஏறிக் கொண்டனர். குச்சியை எடுத்து வந்து தேவராஜ் வட்டத்திற்குள் போட்டு விட்டு மரத்தில் ஏறியிருந்தவர்களைத் தொட முற்பட்டான். நாலாப்பக்கமும் கிளை பரப்பியிருந்த ஆலமரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் ஏறியிருந்தனர். ஒரு பக்கம் கிளையில் இருப்பவர்களை ஏறித் தொட தேவராஜ் முயன்றபோது சிவா கீழே குதித்து மீண்டும் குச்சியை கவுட்டைக் கால் வழியாக வீசி எறிந்தான். இப்போது தேவராஜ் குச்சியை எடுக்க ஓடினான். அவன் திரும்பி வருவதற்குள் சிவா மரத்தில் ஏறிக் கொண்டான்.
 சிவாவை எப்படியாவது தொட்டு அவுட் ஆக்கி விடவேண்டும் என்று தேவராஜுக்கு ஒரு உறுதி வந்தது. குச்சியை வட்டத்திற்குள் போட்டுவிட்டு சிவா இருந்த கிளைக்குக் கீழே நின்று எகிறி, எகிறி குதித்து அவனைத் தொட முற்பட்டான். சிவா மேல் கிளைக்குப் போகாமல் அவனை உசுப்பேற்ற கையை நீட்டுவதும், காலைக் காட்டுவதுமாக இருந்தான். அந்த நேரத்தில் குமார் கீழே குதித்து குச்சியை எடுத்து வீசினான். இப்போது தேவராஜ் குச்சியை எடுக்க ஓடினான்.
 மரக்குரங்கு விளையாட்டு ஒரு மணி நேரம் நடந்தது. தேவராஜ் யாரையும் தொட முடியவில்லை. உதயனைத் தவிர மற்றவர்களெல்லாம் குச்சியைத் தூக்கி எறிந்திருந்தார்கள். சிவாதான் அதிகத் தடவை எறிந்திருந்தான். அதனால் தேவராஜுக்கு சிவா மேல் கோபம் ஏற்பட்டிருந்தது.
 ஒருமுறை சிவா குச்சியை வீசி விட்டு ஓடும்போது தேவராஜ் பிடித்தான். ஆனால் ஆட்ட முறைப்படி அது கிடையாது. தேவராஜ் குச்சியை எடுத்து வட்டத்திற்குள் போட வேண்டும். அதற்குப் பிறகுதான் தொட வர வேண்டும்... என்று குமார் சொன்னான். அதனால் சிவா "அவுட்' இல்லை. தேவராஜும் அதை ஏற்றுக் கொண்டான். ஆனால் இன்னொரு முறை சிவாவின் சட்டையை தேவராஜ் தொட்டான். சட்டையைத் தொட்டால் "அவுட்' கிடையாது என்று சிவா மறுத்தான். தேவராஜ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவருக்கும் வாக்கு வாதம்! வாக்குவாதம் நடக்கும்போதே சிவா குச்சியைத் தூக்கி வீசி எறிந்தான்! அது நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரின் காலடியில் போய் விழுந்தது. அவர், ""வானரங்கள்...'' என்று வைது விட்டுப் போனார்.
 அவர் போய் வாட்ச் மேனிடம் புகார் சொன்னாரோ என்னமோ, வாட்ச்மேன் வந்து அவர்களை விரட்டினார். மரக்குரங்கு விளையாட்டு நின்று போனது. ஆனால் மதிய நேரம் ஆகவில்லை. தேவராஜ் யாரையும் "அவுட்' ஆக்கவில்லை. அதனால் அவன் விளையாட வேண்டும் என்றான். வாட்ச்மேன் போன பிறகு வரலாம் என்று அவர்கள் எல்லோரும் கிளம்பினார்கள்.
 குமாரும் தேவராஜும் சறுக்கு, ஊஞ்சல் இருக்குமிடத்திற்குப் போனார்கள். உதயனும் சேர்ந்து கொண்டான். கணேசனும், ரகுவும் வீட்டுக்குதண்ணீர் குடிக்கப் போனார்கள். சிவா பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனான்.
 "எங்கே போறே?'' என்று ஜோசப் சிவாவைக் கேட்டான். அவனுக்கு சிவாவுடன் போக எண்ணமிருந்தது.
 "இன்பராஜ் அண்ணன் கடைக்கு!.... கமர்கட் வாங்கி சாப்பிடலாம்!...'' என்றான் சிவா.
 ஜோசப் தலையாட்டினான். இன்பராஜ் அண்ணன் கடை திறந்திருந்தார். சில சமயம் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டு விடுவார். அவர் கபடி விளையாடுவதில் ஆர்வமுள்ளவர். "டீம்' வைத்திருந்தார். வெளியூருக்கு விளையாடப் போயிருந்தால் கடையைத் திறக்க மாட்டார்!
 இன்பராஜ் அண்ணன் சிவாவைப் பார்த்ததும், "என்னடே,.... லீவு நாள்ள சுத்திக்கிட்டு வாறீங்க?...'' என்று கேட்டார்.
 "..."பார்க்' குக்கு விளையாட வந்தோம்!...'' என்றான் சிவா. இன்பராஜ் அண்ணன் வாடகை சைக்கிளும் வைத்திருந்தார். ஒரு சைக்கிளுக்குப் பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் சிவாவே இரண்டு கமர்கட் எடுத்துக் கொண்டு இருபது பைசா கொடுத்தான். ஜோசப்புக்கு ஒன்று கொடுத்தான். "கமர்கட்' டை இருவரும் வாயில் போட்டு சப்பிக் கொண்டே பூங்காவுக்குத் திரும்பினர்.
 குமார், தேவராஜ், உதயன் மூவரும் இன்னும் சறுக்கு மரம் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குப் போன கணேசனும் ரகுவும் வந்து விட்டனர்.
 தொடரும்....
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/அலாவுதீன்-பூதம்-3136724.html
3136719 வார இதழ்கள் சிறுவர்மணி வண்ணப்பறவைகள் போல் விளையாடு DIN DIN Saturday, April 20, 2019 11:27 AM +0530  தேர்வும் முடிஞ்சிடுத்து கண்ணே! -வரும்
 தினங்கள் விடுமுறைதான் பெண்னே!
 பார்! உனைத் தேடிவரும் கூட்டம்-வண்ணப்
 பட்டாம் பூச்சிகளில் ஆட்டம்.
 
 கோடையும் வந்தாச்சு நேற்றே- உச்சி
 மண்டை கொளுத்தும் வெயி லாச்சு
 மாடும் மரநிழலைத்தேடும்- தினம்
 மாலையில் விளையாட்டு போதும்
 
 பள்ளிக்கு விடுமுறை யென்று-சதா
 படுக்கையே தஞ்சம் ஏன்? நன்றா?
 உள்ளங்கை கைபேசியோடு-பகல்
 இரவுக்கும் உறவாடல் கேடு
 
 காக்கை குருவிகளைப் பார் நீ- கூடிக்
 களிக்கும் பறந்து விளையாடும்
 யார்க்கும் கெடுதல் எண்ணாமல்-விளையாடப்
 பழகிடவே வேணும் கண்ணே!
 
 ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம்-தொழில்
 ஒன்றைக் கற்றிடனும் செல்லம்
 வாய்ப்பும் உனக்குண்டு நாளை-அன்று
 வரவேற்கும் மாலையுடன் ஞாலம்
 
 வீட்டுமுன் ஒர் மரம் நட்டால்-கோடை
 வெயிலதன் தாக்கமது போக்கும்
 பாட்டுகள் இன்னிசை கூட்டி-வன்னப்
 பறவைகள் கூட்டங்கள் சேர்க்கும்
 
 காய்கறித் தோட்டங்கள் போடு-வீட்டுக்
 கழிவுநீர் போய்ப்பாய்ச்சு; ஓடு:
 போய் வளர் களைகளை நீக்கு: }செடி
 பூரிப்பில் பூத்துக்காய் காய்க்கும்
 - சா.கந்தசாமி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/வண்ணப்பறவைகள்-போல்-விளையாடு-3136719.html
3136717 வார இதழ்கள் சிறுவர்மணி மனித நேயம்! DIN DIN Saturday, April 20, 2019 11:26 AM +0530 பாராட்டுப் பாமாலை! 37
 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
 வயது முதிர்ந்த பெரியவர் இராமசாமி
 வறுமையில் வாடி வதங்கி அலைந்து
 மயங்கிய நிலையில் வத்திராயிருப்பு
 மருத்துவ மனைமுன் நிழற்குடை தன்னில்
 
 படுத்துக் கிடந்ததை மக்கள் பலரும்
 பார்த்தும், பாராமல் சென்று வந்தனர்
 அடுத்து வந்த சமூக ஆர்வலர்
 அன்புளம் கொண்ட மாரியப்பன் என்பவர்
 
 எடுத்து மருத்துவ மனையில் சேர்த்து
 எல்லா உதவிகளும் பதினெட்டு நாட்கள்
 விடாமல் விரும்பிச் செய்து காத்து
 விளாத்தி குளமாம் அவர் ஊர் சேர்க்க
 
 பலமுறை முயன்றும் பலனில்லை கண்டு
 பலரிடம் கேட்டு அலைந்து அறிந்து
 நலமுடன் காக்கும் நல்ல இல்லம்
 திண்டுக்கல் புனித ஜோசப் கருணை
 
 இல்லம் கொண்டு சேர்த்து மகிழ்ந்தார்
 இல்லா மக்கட்கு இந்நிலைதான் பாரில்!
 அல்லல் நீக்கி அரவணைத்த மாரியப்பன்
 அருள் நெஞ்சை அனைவரும் வாழ்த்திடுவோமே
 ஞா.விசுவநாதன்
 இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
 அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/மனித-நேயம்-3136717.html
3136716 வார இதழ்கள் சிறுவர்மணி  மருத்துவப் பெட்டகம் - நொச்சி மரம் DIN DIN Saturday, April 20, 2019 11:23 AM +0530 மரங்களின் வரங்கள்!

 
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
 எனது அறிவியல் பெயர் வைடக்ஸ் நிகுண்டோ என்பதாகும். நான் வேர்பீனிஸியா குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவன். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்பமண்டல நாடுகளில் நான் அதிகமாகக் காணப்படுகிறேன்.
 என் பூக்கள் நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் வைடக்ஸ் என்று அன்போடு அழைக்கப்படும் என்னை வீடுகளில் அழகுக்காகவும், பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். ஏன்னா, என்னுடைய மணம் பூச்சிகளையும், கொசுக்களையும் விரட்டும். நான் ஒரு சிறந்த ஜலதோஷ நிவாரணி.
 தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் கணப்படுகிறது. என்னுடைய இலைகளிலிருந்து வாலடைல் எனப்படும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய் ஒரு சிறந்த கொசு மற்றும் பூச்சிகள் விரட்டி. ஏடிஸ் எனப்படும் கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் உங்களைத் தாக்கும்.
 குழந்தைகளே, உங்களைத் தாக்க வரும் அந்தக் கொசுக்களை நான் சும்மா விடுவேனா, என் இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் ஏடிஸ் கொசுக்கள் மட்டுமல்ல எந்தப் பயங்கரமான கொசுவும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். வயல்வெளிகளில் என்னை வேலியாக வளர்க்கிறார்கள். என் பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து சம அளவு தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகும். உலர்ந்த நொச்சிப் பூக்களை தூள் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும்.
 நான் உங்கள் வீட்டில் இருந்தால் ஒரு மருத்துவப் பெட்டகம் இருப்பதற்கு சமமானது. என் இளம் இலைகளைக் கொண்டு கூடை பின்னுவார்கள். இந்தக் கூடையில் வைக்கப்படும் பொருள்களை பூச்சிகள் அண்டாது. என் இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டு வர கட்டிகள் கரைந்து விடும். ஒரு துணியில் என் இலைகளை தலையணைப் போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கினால் தலைவலி, நரம்புவலி, கழுத்துவலி, தலைபாரம், தலைநீர் குணமாகும்.
 இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டி வரை மூட்டு வலி வீக்கம் மறையும். சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிப் பிடித்தால் தலைபாரம், சளிக்கட்டு குறையும், நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி குளித்து வந்தால் தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி, கீல்வாதம் குணமாகும். என் இலையும், பட்டையும் தேள்கடிக்கு நல்ல மருந்து. என் வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அருந்தினால் குடல் புண், வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
 குழந்தைகளே, பசுமையான மரங்கள் பேணி வளர்க்கப்பட்டால் நாட்டில் மழை வளம் பெருகும். மரங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வுகளால் நோய்கள் தீர்கின்றன. மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைகின்றது.
 என் நட்சத்தரம் பூசம். நான் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, திருநீலக்குடி அருள்மிகு மனோக்கியநாத சுவாமி திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/மருத்துவப்-பெட்டகம்---நொச்சி-மரம்-3136716.html
3136715 வார இதழ்கள் சிறுவர்மணி  கங்கை ஆறு! DIN DIN Saturday, April 20, 2019 11:22 AM +0530 கருவூலம்
கங்கை இந்தியாவின் தேசிய நதி! இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படும் ஜீவநதி. இந்தியர்களின் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஆன்மீக நம்பிக்கைகளிலும் பெரும் முக்கியத்துவம் பெற்ற நதி.
 பகீரதன் என்னும் அரசன் செய்த கடும் தவத்தாலேயே விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்ததாகவும், அதனாலேயே பாகீரதி ஆறு என்னும் பெயர் உண்டானதாகவும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.
 புனித கங்கையில் வாழ்நாளில் ஒரு முறையாவது நீராடினால் அவர்கள் பல பிறவிகளில் புரிந்த பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர் என்றும், அவர்களின் ஏழு தலைமுறைகளை சேர்ந்த உறவினர்களை பாவம் அணுகாது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தாயா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடவும், அதனை வணங்கிப் போற்றவும் வருகிறார்கள்.
 கங்கையின் பிறப்பிடம்!

 உத்திரகண்ட் மாநிலத்தின் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். இப்பகுதியில் உள்ள "கங்கோத்ரி' பனிப்பாறைக் கூட்டத்தைச் சேர்ந்த பனிப்பாறைகளிலிருந்து கங்கோத்ரி பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு உள்ளிட்ட பனியாறுகள் இணைந்து பாகீரதி ஆறாக உருவெடுக்கிறது. இவ்விடம் 3892 மீ. உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் இந்நதியினை பாகீரதி என்றே அழைக்கின்றனர்.
 கங்கோத்ரி பனிப்பாறைக்கு 19 கி.மீ. தூரத்தில் கங்கோத்ரி நகரம் உள்ளது. இங்கு நதிக்கரையோரம் கங்கா மாதாவிற்கு கோயில் உள்ளது.
 தேவபிரயாக்!
 பாகீரதி நதியானது 205 கி.மீ. தூரம் பயணித்து தேவபிரயாக் என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கை நதியாக ஆகிறது. இங்கிருந்து இமயமலையின் குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக 250 கி.மீ. தூரம் பாய்ந்து ரிஷிகேஷ் மலைகளில் இருந்து வெளியேறி, ஹரித்வாரில் கங்கை சமவெளிப் பகுதிக்குள் நுழைகிறது.
 சமவெளிப் பயணம்!
 கங்கை நதி, உத்திரகண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கதேச எல்லையை ஒட்டி ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து முறையே மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வங்கதேசம் வழியாகச் சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
 2525 கி.மீ. தூரம் பயணிக்கும் கங்கை ஆற்றினால் 11 மாநிலங்களைச் சேர்ந்த 500 மில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் 35 % மக்கள் கங்கை நீரை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்!
 துணையாறுகள்!
 யமுனை ஆறு, கோசி ஆறு, கோமதி ஆறு, காக்ரா ஆறு, கண்டகி ஆறு, ராம் கங்கா ஆறு, காரா ஆறு, மகாநந்தா ஆறு, தாம்சா ஆறு, சோன் ஆறு, கர்மநாசா ஆறு, சந்தன் ஆறு ஆகியவை கங்கையாற்றின் முக்கிய துணையாறுகள்!
 கரையோர நகரங்கள்!
 கங்கைக் கரையோரம், ரிஷிகேஷ், ஹரித்வார், பராகாபாத், கனோஷ், கான்பூர், அலகாபாத், காசி, பாட்னா, பாகல்பூர், முர்ஷிதாபாத், கொல்கத்தா, சாத்பூர், பாராநகர் உள்ளிட்ட பல நகரங்கள் உள்ளன.
 மன்னராட்சி காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பேரரசுகளின் தலைநகரங்கள் கங்கைக் கரையில் இருந்துள்ளது.
 உயிருள்ள நபர்கள்!
 இந்தியாவின் பெருமை மிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகமும் (கோமுகி) "உயிருள்ள நபர்கள்' என்று இந்திய உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இன்றைய நிலை!
 கங்கையின் இன்றைய நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது! 2007 - ஆம் ஆண்டில் உலகின் மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டுள்ளது! இந்த மாசுபாடானது மனிதர்கள் மட்டுமல்லாமல் 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நில, நீர் வாழ் உயிரின வகைகள் என கங்கையைச் சார்ந்து வாழும் சகல வகையான உயிரினங்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
 தற்சமயம் மத்திய அரசு பெரும் முயற்சி செய்து கங்கையை சுத்தப்படுத்த பாடுபடுகிறது. மனிதர்களின் அறியாமை அலட்சியம், அக்கறையின்மை என பல காரணங்களால் இந்தியா முழுவதுமே பல நதிகள் மாசுபட்டுள்ளது. இனிமேலாவது நாம் நதிகளை மாசுபடுத்தாமல் இருக்க உறுதி பூணுவோம்!
 மேலும் சில தகவல்கள்!
 பாகீரதி ஆறு!

 கங்கையாற்றின் தாய் ஆறு இது! இமயமலையில் 22000 அடி உயரத்தில் உற்பத்தியாகி 10300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்படுகிறது. இந்த ஆறு தேவ பிரயாகை என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து கங்கையாக மாறுகிறது. 205 கி.மீ. தூரம் பாயும் இந்நதி மூலம் 6921 ச.கி.மீ. நிலம் பாசன வசதி பெறுகிறது. உலகின் பத்தாவது உயரமான "டெஹ்ரி' அணை (855 அடி) பாகீரதி ஆற்றின் குறுக்கேதான் கட்டப்பட்டுள்ளது.
 
 கங்கோத்ரி பனிமலை!
 (GANGOTHRI GLACIER)
 30 கி.மீ. நீளமும் 2 முதல் 4 கி.மீ அகலுமும் கொண்ட பனிமலை. இந்த பனிமலையின் கொடுமுடி பார்ப்பதற்கு படுவின் வாய் போல் போல் இருப்பதனால் "கோமுக்' எனப்படுகிறது.
 
 அலக் நந்தா ஆறு!
 உத்தரகண்ட் மாநிலத்தில் பாயும் ஆறு இது! இமயமலைத் தொடரில் உள்ள நந்தாதேவி திரிசூல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களின் பனிப்பாறைகளில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகிறது. சரஸ்வதி, தவுலிகங்கா. நந்தாகினி. பிந்தார், மந்தாகினி ஆகிய நதிகள் அலக்நந்தா ஆற்றின் துணையாறுகளாகும்! இந்த நதி 196 கி.மீ. தூரம் பயணித்து தேவ பிரயாகையில் பாகீரதி நதியுடன் இணைந்து கங்கையாக பிறக்கிறது. தேவபிரயாகையில் கங்கைக்கு பெரும் அளவு நீரை அலக்நந்தா ஆறே அளிக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் கட்டப்பட்டு நீர் மின்சார உற்பத்தி மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பத்ரிநாத் கோயில் இந்நதிக்கரையிலேயே உள்ளது.
 
 நந்தாதேவி சிகரம்!
 7816 மீ. உயரம் கொண்ட சிகரம் இது! இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம்! மலையின் முழுப்பகுதியும் இந்தியாவிற்குள் இருக்கிறது. இச்சிகரம் உத்திரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
 
 தேவபிரயாகை!
 உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற தலம்! கடல் மட்டத்தில் இருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்து புராணஙகளில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆறு!
 மேற்கு வங்காளம் மாநிலத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா பராசு என்னும் இடத்தில் கங்கையில் இருந்து பிரிந்து வரும் நீரோட்டமே ஹூக்ளி ஆறு! 260 கி.மீ. தூரம் பயணிக்கும் ஹூக்ளி ஆறு மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்து சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

பத்மா ஆறு!
 கங்கையிலிருந்து பிரிந்த ஒரு கிளையாறு இது! பங்களாதேஷ் வழியாக ஓடி மேக்னா ஆற்றுடன் கலந்து பின் வங்கக் கடலில் கலக்கிறது. 120 கி.மீ. தூரம் ஓடும் இந்நதி பங்களா தேஷின் முக்கிய நதிகளுள் ஒன்று.
 
 கங்கை டால்ஃபின்கள்!

இந்தியா, வங்கதேசம், மற்றும் நேபாளம் வழி பாயும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளிலும், அவற்றின் துணையாறுகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படுகின்றன. இவை நன்னீரில் மட்டுமே வாழக்கூடியவை! கண் இருந்தும் பார்வையற்றவை! எதிரொலி மூலமே எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்து கொள்ளும்!
 தொடரும்....
 தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/கங்கை-ஆறு-3136715.html
3136714 வார இதழ்கள் சிறுவர்மணி அனுபவம்! முத்துக்கதை DIN DIN Saturday, April 20, 2019 11:14 AM +0530 ஒரு ஊரில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக ஒரு பாறாங்கல் இருந்தது. ஊர் கூடி அதை அப்புறப்படுத்த தீர்மானம் போட்டனர். பொறியியல் வல்லுநர்களை அழைத்து யோசனை கேட்டனர். இந்த பாறாங்கல் உடைத்து அப்புறப்படுத்த ஆறாயிரம் ரூபாய் ஆகும் என்றனர். வேறொருவர் ஐயாயிரம் ரூபாய் கேட்டார்.
 அவ்வழியே வந்த முதியவர் ஒருவர் இருநூறு ரூபாய் கொடுங்கள் அப்புறப்படுத்துகிறேன் என்றார். கல்லை அகற்றும் பணி அவரிடம் ஒப்படைப்பட்டது. இரண்டு ஆட்களின் துணையோடு பாறாங்கல் இருந்த இடத்தை ஒட்டி, ஒரு பெரிய குழியை வெட்டினார். அந்த குழிக்குள் பாறங்கல்லை உருட்டி தள்ளி குழியை மூடினார். பிரச்னை தீர்த்தது. இது தான் முதுமையில் கிடைக்கும் அறிவு.
 -எஸ்.திருமலை,
 சென்னை
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/அனுபவம்-முத்துக்கதை-3136714.html
3136712 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, April 20, 2019 11:08 AM +0530 * சவாரி செய்பவன்தான் மனிதன். கடிவாளத்தைப் பிடித்திருப்பவன் கடவுள்! - யூதர்
* இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால்தான் வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விடமுடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும் அதற்குக் காரணம் நானே என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடாது! - தயானந்த சரஸ்வதி
* இன்று நாம் செய்யும் நன்மையான காரியமே நாளைய இன்பம். - மத்வர்
* நம்பிக்கை உடையோர் இறுதிவரை வெல்வர்! மிக இருண்ட காலங்களிலும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது நம்பிக்கையே!
 - ஸ்ரீ அன்னை
* எல்லா உயிர்களையும் நேசிப்பதும், பிறருக்காக வாழ்வதும் எப்போதும் சந்தோஷத்தை ஒருவனுக்கு அளிக்கும்! - புத்தர்
* எப்பொழுதும் முழு மனதுடன் பணியாற்றிக் கொண்டிரு. அது சோம்பேறித்தனத்தை ஓடச் செய்துவிடுவதோடு வாழ்வையும் இன்பமாக்கும்! - சாந்தானந்தர்
* மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்! - பெர்னார்ட்ஷா
* போட்டி போட்டுக்கொண்டு தொண்டு செய்வதன் மூலம் பெருமையும், சந்தோஷமும் ஓடோடி வந்துவிடும்! - நாலடியார்
* கல்வி என்பது புதிது புதிதாக அறிந்து கொள்வது மட்டுமல்ல!.... ஒழுக்கத்தை மேற்கொள்வது மட்டுமே சிறந்த கல்வி! - ரஸ்கின்
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/பொன்மொழிகள்-3136712.html
3136711 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: பொச்சாவாமை! DIN DIN Saturday, April 20, 2019 11:05 AM +0530 பொருட்பால் - அதிகாரம் 54 - பாடல் 6
 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
 வாயின் அது ஒப்பது இல்
                                                                      -திருக்குறள்
 எதையும் நகர்த்தித் தள்ளாமல்
 யாருக்கு எதைச் செய்வது
 என்றுணர்ந்து செயல்பட்டால்
 அந்தத் தன்மை உயர்ந்ததே
 
 பிறகு பார்த்துக் கொள்ளலாம்
 என்று வழுக்கிப் பேசாமல்
 தேவையைத் தெரிந்து உடனுககுடன்
 செய்வதற்கேதும் இணையில்லை
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/குறள்-பாட்டு-பொச்சாவாமை-3136711.html
3136710 வார இதழ்கள் சிறுவர்மணி கவனம்! DIN DIN Saturday, April 20, 2019 11:04 AM +0530 அகில்குட்டியின் டைரி!
 நான், ரகு, சுவாமி, சித்தப்பா எல்லோரும் மியூசியம் போனோம்! அங்கே பழைய சிலைகள், தொல்பொருட்கள், பாடம் செய்யப்பட்ட விலங்குகள், சரித்திரக் குறிப்புடன் கூடிய பொருட்கள், ஓவியங்கள் அடேங்கப்பா! எல்லாத்தையும் பார்த்தோம்! சித்தப்பா ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்துச் சென்றார். கடை வாசலில் சேர் போட்டிருந்தது! "அகில்! எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கறையா?'' ன்னு கேட்டார்.
 அவர் கிட்டே ரூபாய் நோட்டை வாங்கிக்கிட்டேன்! எல்லோருக்கும் என்னென்ன ஃப்ளேவர் வேணும்னு கேட்டேன். அவங்க அவங்க கேட்டபடி கடைக்காரர் தந்தார்! மீதி சில்லறையை என் பைக்குள் போட்டுக்கிட்டேன்! எல்லோரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்! கோடை வெயிலுக்கு ரொம்ப சுகமாய், டேஸ்டாய் இருந்தது!
 "நேரமாச்சு!.... பஸ்ஸுக்குப் போகலாம்!...'' னு சொன்னார் சித்தப்பா. எல்லோரும் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! என் பையில் ஐஸ்க்ரீம் போக நானூறு ரூபாய் மீதி இருந்தது. அதை சித்தப்பாகிட்டே கொடுத்தேன்!
 "என்னது இது? ஏது இவ்வளவு பணம்?'' னு கேட்டார் சித்தப்பா. ஐஸ்க்ரீம் வாங்கினது போக கடைக்காரர் கொடுத்தது!
 "ஐஸ்க்ரீம் எவ்வளவு?'' ன்னு கேட்டார் சித்தப்பா. "ஒரு ஐஸ்க்ரீம் இருபத்திஅஞ்சு ரூபாய்'' ன்னேன்.
 "நான் கொடுத்ததே புது நூறு ரூபாய்தான்!...'' அப்படீன்னார் சித்தப்பா. "அடப்பாவமே!... நான் ஐநூறு ரூபாய்ன்னு நெனைச்சுக்கிட்டேன்!'' ன்னு சொன்னேன்.
 "நோட்டு ஒரே மாதிரி இருக்கறதனாலே இந்த மாதிரி குழப்பம் வரது!...கடைக்காரரும் கவனிக்கலே போலிருக்கு!....''
 இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலே.... திருப்பியும் மியூசியத்துக்குப் போய் கடைக்காரர் கிட்டே கொடுத்துட்டு வரமுடியாது.... இருட்டிடும்!...
 ராமு சித்தப்பா, நம்பரைக் கண்டுபிடிச்சு மியூசியத்துக்குப் போன் செய்தார். அருங்காட்சியகக் கண்காளிப்பாளர் ஃபோனை எடுத்தார். அவர்கிட்டே அங்கே அருகில் இருக்கும் ஐஸ்க்ரீம் கடையை அடையாளம் சொன்னார். தவறுதலா ரூபாயை அதிகமா நான் வாங்கிக்கிட்டு வந்த செய்தியை விவரமா சொன்னார். கவலைப் பட வேண்டாம்னும், நாளைக்கு மீதியை எடுத்துக்கிட்டு வந்து தந்து விடுவதாகவும் செய்தியை ஐஸ்க்ரீம் கடைக்காரருக்குச் சொல்லும்படியாகவும் சொன்னார். ராமு சித்தப்பாவின் செல்ஃபோன் நம்பரையும் கொடுத்துக் குறிச்சுக்கச் சொன்னார்.
 எனக்கு ரொம்ப வருத்தமா ஆயிடுச்சு! ""நானும் கவனிக்கலே... சாரி சித்தப்பா!'' ன்னேன். என்னால்தானே சித்தப்பாவுக்கு அலைச்சல்! கடைக்காரராவது கவனிச்சிருக்கலாம்! அவரும் ஐநூறு ரூபாய்ன்னு நெனைச்சிக்கிட்டு மீதியைக் கொடுத்துட்டார்!
 கொஞ்ச நேரத்தில் ராமு சித்தப்பாவுக்குப் ஃபோன் வந்தது! கடைக்காரர்தான்! சித்தப்பா சிரித்துக்கொண்டே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார்! கடைக்காரர் தன் கவனக்குறைவுக்கு சாரி சொன்னார். எப்போ மியூசியம் பக்கம் வர சந்தர்ப்பம் கிடைக்குதோ அப்போ வந்து மீதியைக் கொடுத்தால் போதும்னும், இதுக்காக இந்த வெயில்காலத்திலே அலைய வேண்டாம்னும் சித்தப்பாகிட்டே சொன்னார். உடனே சித்தப்பா, "உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்தா நானைக்கு நான் மீதியை கிரெடிட் பண்ணிடறேன்னு சொன்னார். கடைக்காரரும் அக்கவுண்ட் நம்பரைத் தந்தார்...
 நல்ல காலம்! சித்தப்பா அலைய வேண்டாம்! இனிமே கவனமா இருக்கணும்னு நெனைச்சுக்கிட்டேன்.
 - அகில் குட்டி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/கவனம்-3136710.html
3136709 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவுச் சுடர் ! நிஜப்புகழ் Saturday, April 20, 2019 11:01 AM +0530 தாமஸ் மூர் புகழ் பெற்ற அயர்லாந்து கவிஞர். ஒரு முறை தனது நண்பர் பைரன் பிரபு என்ற மற்றொரு கவிஞருடன் உலாவப் போனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தேம்ஸ் நதிக்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புகழ் பற்றிய பேச்சு வந்தது. பைரன், தாமஸ் மூரிடம், "நீங்கள் உங்கள் கவிதைகளால் அடைந்திருக்கிறீர்களே!.... அதை விட புகழுக்கு என்ன சாட்சி வேண்டும்?....'' என்றார்.
 "அதெல்லாம் நிஜப் புகழா!....''
 "அதிலென்ன சந்தேகம்?...''
 தாமஸ் மூர் தன் நண்பரிடம், "இருக்கலாம்.... என்னை எத்தனையோ பேர் மேடையில் புகழ்ந்து பேசியிருக்கின்றனர்.... ஆனால் அதெல்லாம் உண்மையான புகழா?.... மேடையின்றி.... முகஸ்துதி இன்றி எனது புகழ் பற்றி நான் எப்படி அறிந்து கொள்வது?......''
 பைரன், தாமஸ் மூரிடம், ""நிஜப் புகழ் பற்றி கடவுள் உங்களுக்கு காலம் அறிந்து தெரிவிப்பார்!.... கவலைப்படாதீர்கள்!... நீங்கள் உண்மையில் புகழுக்கு ஏற்றவரே!...'' என்றார்.
 "அந்தக் காலம் எப்போது வரும்?... நிஜமான புகழ் என்பது எது? மக்கள் எனது கவிதைகளில் திளைத்து இருப்பதை நான் எப்படி அறிவேன்?...''
 "கவலைப் படாதீர்கள்..... நிஜமான புகழை நீங்கள் தெரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும்!'' என்றார் பைரன்.
 புகழ் பெற்ற தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் தோணியில் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த வேளையில் தோணியில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தாமஸ் மூர் இயற்றிய அயர்லாந்து கீதங்களில் ஒன்றைப் பாடியவாறு சென்று கொண்டிருந்தனர். பைரன் பிரபு, " உடனே குதித்தெழுந்து தாமஸ் மூரின் தோளில் கையை வைத்து நண்பரே! நிஜப்புகழ் என்பது இதுதான்!'' என்றார் சிலிர்ப்போடு....
 " நான் சொன்னேன் இல்லையா?.... "கடவுள் உங்களுக்கு நிஜப் புகழ் பற்றி காலம் அறிந்து தெரிவிப்பார் என்று!.... அந்தக் காலம் இதோ இப்போதுதான்!... வாருங்கள் உங்கள் கவிதைகளை அந்தத் தோணியிலுள்ளோர் கீதமாக இசைப்பதைக் கேட்கலாம்!...'' என்றார் பைரன் மறுபடியும்!
 தாமஸ் மூர், அறிமுகமற்ற அந்த மனிதர்களின் இனிய குரல்களில் தன் நிஜப் புகழை அறிந்து கொண்டார்.... கண்களில் நீர் பனிக்க கடவுளுக்கு நன்றி சொன்னார்!
 -சஜ்ஜா பிரபு
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/20/நினைவுச்-சுடர்--நிஜப்புகழ்-3136709.html
3132533 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா  -ரொசிட்டா DIN Saturday, April 13, 2019 01:49 PM +0530 கேள்வி: கடல் கன்னி இருப்பதாகச் சொல்கிறார்களே, இது உண்மையா?

பதில்:   கடல் கன்னி என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள்? பாதி மனித உருவமும் பாதி மீன் உருவமும் கொண்ட ஓர் உயிரினம் இருப்பதாகக் கருதிப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார்கள்..

எல்லா மொழிகளிலும் இந்தக் கடல் கன்னி பற்றிப் பல கதைகள் கால காலமாகக் கூறப்பட்டு வருகிறது.

கற்கால மனிதர்கள்கூட இப்படிப்பட்ட கடல் கன்னிகள் இருப்பதாகக் கருதி பாறைகளில் சித்திரங்களில் வரைந்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பல சித்திரங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவையெல்லாமே கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமாகவும் விந்தையாகவும் இருப்பதுதான் இந்தக் கதைகள் அழியாமல் காக்கப்பட்டு வருவதற்கான காரணம்.. 

மற்றபடி கடல் கன்னியாவது கடல் கன்னன் ஆவது? எல்லாம் கட்டுக்கதை. கப்ஸா!  எக்காலத்திலும் இவர்கள் இருந்ததில்லை என்று கன்னத்தில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/அங்கிள்-ஆன்டெனா-3132533.html
3132531 வார இதழ்கள் சிறுவர்மணி புத்தகத்தின் மதிப்பு! எஸ்.திருமலை DIN Saturday, April 13, 2019 01:47 PM +0530
அதஸ்தாசியஸ் என்பவர் ஒரு துறவி.  அவர் மடத்தை நிர்மாணித்திருந்தார். அதில் நிறைய சீடர்கள் இருந்தனர். அந்த மடம் நன்றாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மடத்தின் நிர்வாகமும் மிக நன்றாக இருந்தது. அந்த மடத்தில் துறவி அதஸ்தாசியஸ் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருந்தார். அங்கிருந்த நூல்கள்  பெரும்பாலும் விலை மதிப்பு மிக்கவையாக இருந்தன. அதில் ஒரு புத்தகம் மிக அபூர்வமானது. 

ஒரு நாள் அந்த மடாலயத்தில் இருந்த இளந்துறவி ஒருவர் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். அதை எப்படியும் தன் வசப்படுத்திக் கொள்ள நினைத்தார். யாரும் இல்லாத நேரத்தில் அதனைத் திருடியும் விட்டார். திருட்டு நடந்த அன்றே காணாமல் போனது தலைமைத் துறவிக்குத் தெரிய வந்தது. ஆனால் அதை யார் திருடியிருப்பார்கள் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரின் அறையையும் சோதனையிடுவதற்கும் அவரது மனம் ஒப்ப வில்லை. தனது சீடர் ஒருவருக்கு அதனால் அவ மரியாதை ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. 

இதனிடையே புத்தகத்தைத் திருடிச் சென்ற இளம் துறவி அதை வாங்குவதற்குரிய ஒரு சரியான தனவந்தரைக் கண்டுபிடித்து விட்டார். புத்தகத்தை தனவந்தரிடம் காண்பத்தார் இளந்துறவி. அதற்கு ஈடாக ஒரு சவரன் தங்கத்தைக் கேட்டார். 

தனவந்தர் புத்தகத்தைப் படிக்காமல் ஒரு சவரன் தங்கத்தைத் தர விரும்பவில்லை. அதனால் ""புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்... படித்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.... அப்போதுதான் அதன் மதிப்பை என்னால் உணர முடியும்!... ''  என்று கூறிவிட்டார். 

அதற்குச் சம்மதித்த இளந்துறவியும் புத்தகத்தை தனவந்தரிடம் தந்துவிட்டுப் போனார். 

இளந்துறவி சென்றதும் தனவந்தர் அந்தப் புத்தகத்தை கையோடு எடுத்துக் கொண்டு நேராக அதஸ்தாசியஸிடம் சென்றார். ""இந்தப் புத்தகத்தின் மதிப்பைச் சொல்லுங்கள்....'' என்று கேட்டுக் கொண்டார்.  புத்தகத்தைப் பார்த்தார் அதஸ்தாசியஸ். மிக அபூர்வமான புத்தகமான அது மடத்திற்குச் சொந்தமானது என்பதை அறிந்துகொண்டார். எனினும் அதை அவர் தனவந்தரிடம் வெளிப்படுத்தவில்லை. 

தனவந்தரோ, ""என்னிடம் ஒருவர் இந்தப் புத்தகத்தை விற்க வந்தார். ஒரு சவரன்  பொற்காசையும் கேட்டார்.  நீங்கள் பெரிய அறிவாளி. இந்தப் புத்தகம் அவ்வளவு மதிப்பு பெறுமா?... அதைக் கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்....'' என்றார்.

அதஸ்தாசியஸூம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அப்படியா?... இந்தப் புத்தகத்திற்கு ஒரு சவரன் என்பது மிகக் குறைவு!... இதற்கு இரண்டு சவரன் தங்கம் கொடுக்கலாம்!... மேலும் புத்தகங்களிடமிருந்து பெறுகின்ற அறிவுக்கு மதிப்பு என்பதை அளவிட முடியுமா?... ஏதோ நீங்கள் கேட்டீர்கள் என்று சொன்னேன்!....'' என்றார்.

தனவந்தர் நன்றி தெரிவித்துவிட்டு  அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் இளந்துறவி புத்தகத்திற்கான வெகுமதியை பெறப்போனார். இளந்துறவியிடம் தனவந்தர், ""இந்தாருங்கள்!... ஒரு சவரன் தங்கம்! வைத்துக்கொள்ளுங்கள்!... உங்களைப் போன்ற ஒருவரிடம் இந்தப் புத்தகத்தைக் காண்பித்து இதன் மதிப்பு எவ்வளவு பெறும்"... என்று கேட்டேன்!.... அவர் கூடுதலாகச் சொன்னார்... எனவே தாங்கள் கேட்ட ஒரு சவரன் மதிப்பு குறைவுதான். எனவே நீங்கள் கேட்டுக்கொண்டபடி   உங்களுக்கு ஒரு சவரன் தங்கத்தைத் தருகிறேன்....'' என்றார்.

""என்னது?... என்னைப் போன்ற ஒருவரிடமா கேட்டீர்கள்? யார் அவர்?...'' இளந்துறவி படபடத்தார்!

""ஆமாம்!.... அவர் பெயர் அதஸ்தாசியஸ்!...துறவிகளின் மடத்தலைவர்!...'' என்றார் தனவந்தர்.

அதைக் கேட்டதும் இளந்துறவியின் முகம் வெளிறியது! ""அவர் வேறெதுவும் சொன்னாரா?'' என்று கேட்டார்.

""இல்லை'' ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் தனவந்தர்.

அப்போதுதான் தனது குருவின் உயர்ந்த உள்ளம் இளந்துறவிக்குப் புரிந்தது.

"குரு நினைத்து இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அன்புள்ளம் கொண்ட அவர் அதைச் செய்யவில்லை...' என மனதிற்குள் நினைத்துக் கொண்ட இளந்துறவி உடனே ""ஐயா, அந்தப் புத்தகத்தின் அருமை எனக்குத் தெரியாமல் போய்விட்டது!.... இப்போது என் எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்... இனி புத்தகத்தை விற்பதாக இல்லை... தயவு செய்து அந்தப் புத்தகத்தைத் தந்து விடுங்கள்!... '' என்று மன்றாடினார்.

""உனக்கு இரண்டு சவரன் தருகிறேன்... அதுவே துறவி அதஸ்தாசியஸ் கூறிய விலை!... புத்தகம் என்னிடமே இருக்கட்டும்!'' என்றார்.

ஆனால் இளந்துறவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டவர் நேராக அதஸ்தாசியஸ் இருந்த மடத்திற்குச் சென்றார். திருடிய புத்தகத்தை குருவிடம் கொடுத்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

உடனே அதஸ்தாசியஸ், ""இதை உன் வசமே வைத்துக்கொள்!... இந்தப் புத்தகத்தை நீ பெறுவதற்கு விரும்பினாய்!... அதனால் அது உன்னிடமே இருக்கட்டும்! '' என்றார்.

""இல்லையில்லை....  இந்த புத்தகம் மடத்தில் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. எனவே அதை நீங்கள் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும்... இன்னொன்று உங்கள் பரந்த ஞானம் எனக்குக் கிடைக்க வேண்டும்... அதனால் என்னை இந்த மடத்திலேயே தங்கியிருக்கு அனுமதிக்க வேண்டும்!....'' என்றார் இளந்துறவி.

இளந்துறவியின் கேரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது! அதன்பின் தனது வாழ்நாள் முழுவதையும் அந்த மடத்திலேயே கழித்தார் இளந்துறவி! அதன் முன்னேற்றத்திற்காக இயன்ற சேவைகளைச் செய்துகொணடிருந்தார். 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/புத்தகத்தின்-மதிப்பு-3132531.html
3132530 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் -ரொசிட்டா DIN Saturday, April 13, 2019 01:44 PM +0530
1. காய் காய்த்தும் பழம் பழுக்காத மரம்...
2. குண்டுகுழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல்...
3. இரவும் பகலும் ஓய்வில்லை, இவன் படுத்தால் எழுப்ப ஆளில்லை...
4.  இரண்டு தோட்டம் நான்கு வேலி, பூ பூத்தால் பூந்தோட் டம் பாழ்...
5. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்க முடியாத நீர்...
6. வளைக்க முடியும், ஒடிக்க முடியாது...
7. கூடவே வருவான் ஆனாலும் ஒரு உதவியும் செய்ய மாட்டான்...
8. சின்னப்பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரம், ஆயிரம்...

விடைகள்:


1. முருங்கை மரம், 2. மாதுளம்பழம்
3. இதயம், 4. கண்கள்
5.  கண்ணீர், 6.  தலை முடி
7.  நிழல், 8.  ஆர்மோனியப் பெட்டி

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/விடுகதைகள்-3132530.html
3132529 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்: இரு நண்பர்கள்! க. சங்கர் DIN Saturday, April 13, 2019 01:44 PM +0530  

காட்சி : 1
இடம் :  பள்ளி வளாகம் / வகுப்பறை 
நேரம் : ஜூன் மாதம் / காலை 7.40
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்
(அபிஷேக்  சாக்பீஸால் தேதி எழுதிக்கொண்டிருக்கிறான்.  மதுசூதனன் முதுகுப்பையுடன் உள்ளே வருகிறான்.)

மதுசூதனன்  : (சத்தமாக)   டென்த் கிளாஸ் இதானே ?
அபிஷேக்  :  ( சட்டென்று திரும்பி)  ப்ரோ..  ஏன் பயமுறுத்தற?  இதுவேதான்.. நியூ அட்மிஷனா ?  போன வருஷம் எந்த ஸ்கூலு? 
மதுசூதனன் : சேலம்ல படிச்சேன்..  அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனதில ஸ்கூல் மாத்த வேண்டியதாப் போச்சு.. நீ ஓல்ட் ஸ்டூடெண்ட்டா,  ப்ரோ.. ?    
அபிஷேக்  : அஃப் கோர்ஸ்.. எனக்குத் தெரிஞ்சு நான் இங்க மட்டுமேதான் படிச்சிட்டிருக்கேன்..  ஹையர் செகண்ட்ரியும் இங்கதான்.. எல்லாம் அவன் செயல்..  ( மேலே கைகாட்டுகிறான்) 
மதுசூதனன் :அப்போ உனக்கு இந்த ஸ்டாஃப்ஸ் பத்தி நல்லா தெரியும், இல்லியா?
அபிஷேக்  : ஏதோ கொஞ்சம்..  நீ போட்ருக்க கண்ணாடி பவர்-ரா?
மதுசூதனன் : ஆமா மியோப்பியா .. அதாவது கிட்ட பார்வை..
அபிஷேக்  :  மியோப்பியா -னா கிட்ட பார்வைனு எங்களுக்கும் தெரியும்..
(மதுசூதனன் சிரிக்கிறான்.)

காட்சி : 2
இடம் :  பள்ளி வளாகம் /  விளையாட்டு மைதானம்
நேரம் : ஜூலை மாதம் / மாலை 3.10
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் மர நிழலில் அமர்ந்திருக்கிறான்.  மதுசூதனன் வியர்வை வடிய கலைத்துப் போய் வருகிறான்)

அபிஷேக்  :  மது..  உன்னை ரொம்ப நேரமா பார்த்துட்டுத்தான் இருந்தேன்.. ஷார்ட் பாஸ் நல்லா பண்ற.. பட்,  சீக்கிரம் டயர்ட் ஆகிட்டேனு நினைக்கிறேன்..
மதுசூதனன் : ஆமா.. இந்த ஊருக்கு வந்ததுக்கப்றம் காலையில வார்ம் அப் பண்றதேயில்ல..  அதனாலாயிருக்கும்..
அபிஷேக்  : ஏன் பண்றதில்ல..?
மதுசூதனன் : எங்க போய் பண்றது..  வீட்டுக்குள்ள எக்ûஸர்ஸ் பண்ண எனக்கு எப்பவுமே பிடிக்காது..
அபிஷேக்  :  அப்போ,  நீ டெய்லி காலையில ஜி.ஹெச். ரோட்டுக்கு வா.. பார்க்குக்குப் போலாம்..  ஜாக், புல் அப் எல்லாம் பண்ணலாம்..
மதுசூதனன் : நீ டெய்லி அங்கதான் போறியா ?
அபிஷேக்  : அதெல்லாம் உனக்கு எதுக்கு? வா-ன்னா வா..  அவ்ளோதான்..
(மதுசூதனன்  சிரிக்கிறான்)

காட்சி : 3
இடம் :  பள்ளி வளாகம் /  வகுப்பறை 
நேரம் : ஆகஸ்ட் மாதம் / காலை 11. 20
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக்  கையில் விடைத்தாளுடன் வந்து மதுசூதனன் அருகில் அமர்கிறான். மதுசூதனன் அபிஷேக்கின் விடைத்தாளை வாங்கிப் பிரிக்கிறான்)

மதுசூதனன்  : ச்சே..  செம்ம ஹெண்ட்ரைட்டிங்..  அடித்தல் திருத்தலே இல்ல.. திறமை -டா..
அபிஷேக்  :  ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பாரு எவ்ளோன்னு..   பேப்பர்ல ப்ளூ-வை விட ரெட் இங்க்தான் அதிகமாயிருக்கு..  நீதான்  படிப்பாளி..  பக்காவா எழுதியிருக்கே..
மதுசூதனன்  : வீட்டுல கதை புக் நிறைய படிப்பேன்..  இங்க்லீஷ் தமிழ் ரெண்டுலேயும்.. அதனால அவ்வளவா மிஸ்டேக்ஸ் இருக்காது..  உன்னை மாதிரி குண்டு குண்டா எழுத எல்லாம் என்னால முடியாதுப்பா..
அபிஷேக்  :  எனக்கு ஏதாவது கதை புக் கொடு..  நானும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன்..
மதுசூதனன்  : என்ன மாதிரி புக் வேணும் ?
அபிஷேக்  :  அதெல்லாம் என்னான்னே  தெரியாதுடா..  நீயா பார்த்துக் கொடு.
(மதுசூதனன் சிரிக்கிறான்)

காட்சி : 4
இடம் :  பல இடங்கள் 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்

(காஃபி ஷாப் : அபிஷேக் மதுசூதனன் அருகில் ஒரு தட்டு கேக்கை வைக்கிறான். கோயிலுக்குச் செல்கிறார்கள்... மதுசூதனன் அபிஷேக்கின் நெற்றியில் திருநீறு வைக்கிறான்....வீட்டுக்குச் செல்கிறார்கள்.,.. அபிஷேக்கும் மதுசூதனனும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கிறார்கள்)

காட்சி : 5
இடம் :  அபிஷேக்கின் வீடு
நேரம் : ஜனவரி மாதம் /  இரவு 8.15

மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்
அபிஷேக் :  ( திறன்பேசியில்) ஹலோ.. மது,  எங்கப்பா புது மொபைல் வாங்கிட்டாரு..  இப்போ அதிலயிருந்துதான் கால் பண்றேன்.. 
மதுசூதனன் : (குரல்) சூப்பர்.., நாளைக்குத்தானே வாங்கறதா இருந்துச்சு.. இன்னிக்கேவா ?
அபிஷேக் :  தெரியல..  வாங்கிட்டு வந்துட்டாரு..  
ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்-டா என்ன கேம் இன்ஸ்டால்
பண்ணலாம்.. ?
மதுசூதனன் : (குரல்) கேம் -மா? அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் ... வேற எதாவது டவுன்லோட் பண்ணு..
அபிஷேக் :  வேற என்னடா இருக்கு ?  எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாது.. நீயே சொல்லு..
மதுசூதனன் : (குரல்) நியூஸ் ஏப் எடு..  தினமணி,  ஹிந்து மாதிரி. .  ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..
அபிஷேக் :  ( சோர்வாக)  அப்டியா.  சரி, நீ சொல்ற..  அதையே பண்றேன்.. அறிவாவது வளரட்டும்.. 
(மதுசூதனன்  சிரிக்கிறான்)

காட்சி : 6
இடம் :  முதன்மைச் சாலை 
நேரம் : ஃபிப்ரவரி மாதம் /  மாலை 4.45
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மதுசூதனன்  பக்கவாட்டில் நடந்து வருகிறான்)

அபிஷேக் :  ஏன் காலையிலேர்ந்து ஒரு மாதிரி இருக்க?
மதுசூதனன் : (சோர்வாக)  எனக்கு என்னமோ மாதிரி இருக்கு..  சொல்ல தெரியல..
அபிஷேக் : நேரடியா சொல்லுடா... 
நீ நார்மலா பேசறதே எனக்குப் புரியாது..
மதுசூதனன் : ( கவலையாக)  என்னை ஹாஸ்ட்டல்ல சேர்க்கப் போறாங்க..  நான் இதுக்கு முன்னாடி அங்கெல்லாம் இருந்ததே இல்ல..
அபிஷேக் : (  நின்று) எதுக்கு இப்ப ஹாஸ்டல் ?
மதுசூதனன் : எங்கப்பாவுக்கு ப்ராஞ்ச் மாறணும்.. வேற ஏரியா..  சோ,  எக்ஸாம் வர்றதால என்னை ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கச் சொல்றாங்க.. 
அபிஷேக் : நீ என்ன சொன்ன?
மதுசூதனன் : நான் என்ன சொல்றது..  வேற வழியில்ல.. 
அபிஷேக் :  உனக்குப் பிரச்சனை இல்லேன்னா எங்க வீட்லேயே தங்கிக்கலாம்.. எங்கப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. உனக்கும் ஈஸி,  எனக்கும் கூடசேர்ந்து படிக்க ஒரு கம்பெனி  ஆச்சு..  ம்ம்ம்?
(மதுசூதனன் கண் கலங்குகிறான்)


காட்சி : 7
இடம் :  அபிஷேக்கின் வீடு / மாடி 
நேரம் : மார்ச் மாதம் /  இரவு 8.55
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் படியேறி வருகிறான். மதுசூதனன் 
சலவைக் கல்லின் மீது அமர்ந்து ரூபிக் க்யூபைத் திருப்பிக்கொண்டிருக்கிறான்)

அபிஷேக் :  அப்பா நம்பவே மாட்டேங்கிறாருடா..  ரிவிஷன் டெஸ்ட்ல ஃபர்ஸ்ட் டைம் எய்ட்டி ஃபைவ் பர்ùஸண்ட் வாங்கியிருக்கிறேன்னு சொல்றேன்,  மது எங்க உக்காந்து எழுதினான்னு கேக்கிறாரு..
மதுசூதனன் : (நிமிராமல்)  அவர் சும்மா காமெடி பண்றார்..  நம்ம ராத்திரி முழுக்க படிக்கிறது அவருக்குத் தெரியும் ..
அபிஷேக் :  முன்னாடி எல்லாம் அலாரம் வெச்ச மாதிரி டாண் -னு ஒன்பதரைக்குத் தூங்கிடுவேன்..  உன்னாலதான் எனக்குப் படிக்கிறதுல இன்ட்ரெஸ்ட்டே வந்துச்சு.. 
(மதுசூதனன் அமைதியாக ரூபிக் க்யூபைத் திருப்புவதில் மும்மரமாக இருக்கிறான்.)
அபிஷேக் :  ( சோகமாக)  இன்னும் ஒரு மாசத்துல நீ போயிடுவே இல்ல..  அப்றம் நாம மீட் பண்ணவே முடியாதா ?
மதுசூதனன் : ( நிமிர்ந்து)  நோ செண்ட்டிமெண்ட்ஸ்-னு
எத்தனை தடவ சொல்லியிருக்கேன்..  அதான் வீடியோ கால்-னு ஒன்னு இருக்கே..
அபிஷேக் :  ம்ம்ஸ்ஸ்..  அதெல்லாம் பத்தாது..  உன்னைப் பிரியறதை நெனைச்சா ...
(அமைதியாகிறான். மதுசூதனன் அபிஷேக்கிடம் ரூபிக் க்யூபை வீசுகிறான். நிறங்கள் சேர்ந்திருக்கின்றன) 

காட்சி : 8
இடம் :  வெவ்வேறு இடங்கள். 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(கோயில் : அபிஷேக் கும் மதுசூதனனும் கரம் கூப்பி கண்களை மூடியிருக்கிறார்கள்.

தேர்வு அறை : அபிஷேக் தேர்வு எழுதுகிறான் .
மதுசூதனன் விடைத்தாளை நூலால் கட்டுகிறான். 
பள்ளி வளாகம் :  அபிஷேக்கும் மதுசூதனனும்
வினாத்தாள் பார்த்துப் பேசுகிறார்கள்)

காட்சி : 9
இடம் :  அபிஷேக்கின் வீடு / வாசல்
நேரம் : ஏப்ரல் மாதம் / மாலை 6 மணி 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(டெம்போ ஒன்று இரைந்துகொண்டு நிற்கிறது)

அபிஷேக் :  எல்லாம் எடுத்து வெச்சாச்சா ..  செக் பண்ணிடியா ?
மதுசூதனன்: ம்ம்ம்..எல்லாம் ஓ.கே.
அபிஷேக் :  ஒன்னு ஃபோன் பண்ணு இல்ல ஃபோன் பண்ணா ஒழுங்கா எடு.. 
மதுசூதனன் : ம்ம்ம்..
அபிஷேக் :   ரிசல்ட் பார்த்துட்டு கண்டிப்பா கால் பண்ணு..  ரெண்டு  பேரும் நல்ல மார்க்தான் எடுப்போம்..  சந்தேகமே இல்ல..
மதுசூதனன்: ம்ம்ம்..
அபிஷேக் :   ஓ.. மறந்துட்டேன் உன்னோட ஸ்ட்டோரி புக்ஸ் என் கப்போர்ட்லதான் இருக்கு..  இரு,  எடுத்துட்டு வரேன்.. 
மதுசூதனன் : வேண்டாம் அதை நீயே வெச்சுக்கோ..  உன்னோட ரூபிக் க்யூப் எங்கிட்டதான் இருந்துச்சு..  இரு,  பாக்கறேன்.. 
அபிஷேக் : வேண்டாம்..  அதை நீயே வெச்சுக்கோ..
(டெம்போ ஹாரன் ஒலிக்கிறது. மதுசூதனன் புறப்படுகிறான். அபிஷேக் கண்களில் நீர் வழியக் கை அசைக்கிறான். மதுசூதனன் கண் கலங்குகிறான்)

( திரை)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/அரங்கம்-இரு-நண்பர்கள்-3132529.html
3132528 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, April 13, 2019 01:39 PM +0530 ""பைலட் எதுக்கு கோயிலுக்குப் போறார்?''
""தெரியலையே,.... நீயே சொல்லு!....''
""கோயிலில்தான் "விமானம்'  இருக்கே!...''

-சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை.

 

""பாம்பு கடிச்சா அந்த இடத்திலே கீறி விட்டு சுத்தம் பண்ணுவாங்க...''
""அந்த நேரத்திலே கீரிப்பிள்ளைக்கு எங்கே போவாங்க?....''

வி.ரேவதி, எம்.சி. ரோடு, தஞ்சாவூர்.


""நான்தான் உன்னை மிதிச்சதுக்கு 
சாரி சொல்லிட்டேனே....நீ ஏண்டா என்ன மிதிக்கிறே?''
""சாரிடா!...''

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.


""நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியிலே உங்க ஓவியம்தான் பார்க்கறாமாதிரி இருந்தது!..''
""ரொம்ப தேங்ஸூங்க...''
""மற்ற ஓவியங்களைச் சுற்று ஒரே கூட்டம்!.... பார்க்கவே முடியலே!''

கே.கவின்,  பொள்ளாச்சி - 642004.


""ஸ்கூட்டின்னா என்ன?...''
"" ஸ்கூட்டரோட பெண்பாலா இருக்கும்!...''

உ.அலிமா பீவி, கடையநல்லூர் - 527751.


""அட!...உங்க அக்கா சமையல்  கத்துக்கறாங்களா?... என்ன  சமையல்?''
""ஃபேஸ் புக் சாம்பார்!.... வாட்ஸ் அப் ரசம்!...''

எம.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/கடி-3132528.html
3132527 வார இதழ்கள் சிறுவர்மணி சூப்பர் சிவா! - 4: சிவா கண்ட காட்சி! சுகுமாரன் DIN Saturday, April 13, 2019 01:36 PM +0530 அம்மா சிம்னி விளக்கை சமையலறையில் கொளுத்தி வைத்திருந்தாள். புகை பிடித்திருந்த சிம்னியில் வெளிச்சம் நடு அறை வரை தெரியவில்லை. 
தம்பியின் கை சிவாவின் கால் சட்டைப் பைக்குள் தேடியது. தேடிய கைகளில் பேரீச்சம்பழங்களை வைத்தான் சிவா. 
உதயன்  ஒரு பழத்தை அவசர, அவசரமாக சாப்பிட்டான். சாப்பிடும் சத்தம் கேட்டு, ""யாருடா சாப்பிடுறது?'' என்று அம்மா கேட்டாள். பயந்து போன உதயன் கொட்டையோடு பழத்தை விழுங்கினான். 
காலையில் எழுந்திருக்கும்போது உதயனுக்கு வயிறு வலித்தது. முதலில் அவனுக்குக் காரணம் புரியவில்லை. நேற்றிரவு பேரீச்சம்பழத்தைக் கொட்டையோடு விழுங்கியது காரணமாக இருக்குமோ என்று நினைத்தான்.
உதயன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அம்மா, ""என்னடா, விஷயம்?''  என்று கேட்டாள்.
"" வயிறு வலிக்கிறது''
""நேற்று என்ன சாப்பிட்டே?''
பேரீச்சம்பழத்தைக் கொட்டையோடு சாப்பிட்டேன் என்றா கூற முடியும்?... அதனால் அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். 
""கக்கூஸூக்குப் போ!.... வயிறு வலி சரியாயிடும்!...'' என்றாள் அம்மா. 
பாத்ரூம் பக்கத்தில் சிவா நின்று கொண்டிருந்தான். உதயன் சொன்னதை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். தம்பியை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தான்.
""உதயா. பேரீச்சம்பழத்தைக் கொட்டையோடு முழுங்கிட்டியா?'' என்று கேட்டான் சிவா.
""ஆமாம்!....'' என்று தலையாட்டினான் உதயா.
""வயிற்றிலே பேரீச்சம் பழ மரம்தான் முளைக்கும்!...'' என்றான் சிவா.
அதைக் கேட்டு உதயன் பயந்துவிட்டான்.
""என் ஃபிரண்டு தேவராஜ் மாம்பழத்த கொட்டையோடு முழுங்கிட்டான்.... அவனுக்கு வயித்துலே மா மரம் முளைச்சிடுச்சி'' என்றான் சிவா.
""தேவராஜை நான்  பார்த்தேன்.... நல்லாத்தான் இருக்கான்!...'' என்று உதயன் சொன்னான்.
""ஆபரேஷன் பண்ணி சரி பண்ணிட்டாங்க.... உனக்கும் ஆபரேஷன்  இல்லாம சரியாக ஒரு வழி இருக்கு.... ஸ்கூல்ல அடி வாங்கின விஷயத்தையும் பூட்டு விஷயத்தையும் அப்பா, அம்மா கிட்டே சொல்லாம இருந்தா மரம் முளைக்காது....'' என்று சிவா தம்பியிடம் சொன்னான்.
""என்ன, வயிறு வலிக்காரா...., கக்கூஸ் போனியா?....'' என்று அம்மா மீண்டும் கேட்கவே நிறைய தண்ணீர் குடித்து விட்டு வெளிக்கி போய்ப் பார்க்கலாம் என்று உதயன் முடிவு செய்தான்.  இரண்டு சொம்பு தண்ணீர் குடித்தான். அவன் அவசர, அவசரமாக தண்ணீர் குடிப்பதைப் பார்த்து சிவா மனதிற்குள் சிரித்துக் கொண்டான். 
உதயனுக்கு வெளிக்கு வரவில்லை.... பேரீச்சம் பழ மரம் முளைக்கப் போவது உறுதி என்று நினைத்த உதயன் அண்ணன் சொன்னது போல் வாயை மூடிக் கொண்டிருப்பது என்று முடிவு செய்தான். 
சிவா பயப்பட்டது போல் பிரச்னை பெரிதாகவில்லை. இரண்டு நாட்களாக உதயன் வாயை மூடிக்கொண்டு இருந்தான். ஆனால் இராத்திரி தோறும் அம்மா கதவைப் பூட்டும்போது பூட்டைப் பற்றி அவனிடம் கேட்கிறாள். பள்ளிக்கூடத்தில் டிரில் மாஸ்டர் முறைத்துப் பார்க்கிறார். ஒரு வேளை கூப்பிட்டு காப்பி அடிச்ச விஷயத்தைக் கேட்பாரோ என்று பயந்து கொண்டிருந்தான். 
ஊருக்குப் போயிருந்த சந்திரா அக்கா வந்து விட்டார்கள். அதனால் இன்றிரவு கதை கேட்கப் போகலாம் என்று முடிவு செய்து கொண்டான். 
சந்திரா அக்காவிடம் போன போது ""வா பல்லா,.... நேற்று ஏன் வரவில்லை?.... என்று கேட்டார். 
""அக்கா நேத்தே கதை சொல்லிட்டீங்களா...'' என்று சிவா பதட்டத்துடன் கேட்டான். 
""ஆமா,.... "அலாவுதீனும் அற்புத விளக்கும்'...கொஞ்சம்தான் சொன்னேன்.... ஆனால் உனக்காக முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்....'' என்றாள் அக்கா.
சிவாவுக்கு நிம்மதியாக இருந்தது.... அப்போது சந்திரா அக்காவின் அண்ணன் கிருஷ்ணன் வந்தார். ""பல்லா,.... வெளியே போகலாமா?'' என்று கூப்பிட்டார். அவன், ""கதை கேட்கப் போகிறேன்'' என்றான்.
சிவாவுக்கு "பல்லா' என்று பட்டப்பெயர். அவனுக்கு முன்னம் பற்கள் பெரிதாக இருக்கும். சிறிது துருத்திக்கொண்டும் இருக்கும். "பல்லா!' என்று சந்திரா அக்காவும் அவருடைய அண்ணனும் சொன்னால் கோபப்பட மாட்டான். மற்றவர்கள் சொன்னால் அவனுக்கு பயங்கரமாகக் கோபம் வரும். அவனை கோபப்படுத்திப் பார்க்க சில சமயம் தம்பி உதயன் அவனை "பல்லா' என்பான். இரண்டு பேரும் கட்டிப் புரண்டு உருள்வார்கள். எம்.ஜி.ஆர், நம்பியார் மாதிரி சண்டை போடுவார்கள். 
சந்திரா அக்கா மொட்டை மாடியில்தான் கதை சொல்வார். அக்கா கைப்பிடி சுவரில் உட்கார்ந்து சொல்வார். அந்தத் தெருப் பிள்ளைகள் அக்கா காலடியில் வட்டமாக உட்கார்ந்திருப்பார்கள். 
அன்று அவன் மட்டும்தான் வந்திருந்தான். ""அக்கா, அலாவுதீன் கதையைச் சொல்லுங்க...'' என்றான் சிவா. கதை கேட்பதில் சிவாவுக்கு ஆர்வம் அதிகம்! ஆனாலும் அவனுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமென்பதற்காக கதையில் மந்திரவாதி வருவான் என்று தொடங்கினாள் அக்கா.  அதைக் கேட்டதும் அக்கா அருகில் நெருங்கி அமர்ந்தான் சிவா.
""டேய்,.... தள்ளி உட்காருடா!.... வேர்வை நாத்தம் அடிக்குது!... என்னைக்குக் குளிச்சே?...''  என்றாள் அக்கா. 
சிவாவுக்கு வெட்கம் வந்தது. ""நேற்று அக்கா'' என்றான். 
""எட்டாம் வகுப்பு படிக்கிறே!... தினமும் குளி!...'' என்றாள் அக்கா. 
""சரி அக்கா!'' 
""என்ன சரி? குளிக்கலைன்னா சொறிதான் வரும்.... கதையில வருகிற அலாவுதீனும் உன்னை மாதிரி பையன்தான்.... அவன் எவ்வளவு சுறுசுறுப்பு பாரு!.... மந்திரவாதியையே எதிர்த்தான். பாக்தாத் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டான்....''
""எப்படிக்கா?''
""கதையைச் சொல்றேன் கேளு... முதலில் இருந்து சொல்றேன்...'' என்று அக்கா முழு கதையை சொல்லி முடிக்கும் வரை சிவா ஆடவில்லை, அசையவில்லை.
""அக்கா, அலாவுதீனுக்கு மந்திர விளக்கு கிடைச்சது!... அதனாலதான் நினைச்சதெல்லாம் நடக்குது..'' என்று கதை முழுக்கக் கேட்டதும் சொன்னான் சிவா.
அலாவுதீனையும் அவனையும் சம்பந்தப்படுத்தி அக்கா கதை சொன்னதால் அவனுக்குக் கதை பிடித்திருந்தது! மந்திர விளக்கு தனக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டே வீட்டுக்கு வந்தான்.

வீட்டில் சிவா கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. ஒரு மூலையில் உதயன் முட்டி போட்டிருந்தான். அவன் அருகில் பேரீச்சம்பழம் பொட்டல் திறந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் சிவாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அதனால் மெளனமாக நின்றான். 
""சம்பந்தமே இல்லாதவன் மாதிரி நிக்கிறான் பாருங்க.... வாயைத் திற!....'' என்று சிவாவைப் பார்த்துச் சொன்னாள் அம்மா. 
""எதுக்கு வாயைத் திறக்கச் சொல்ற....பேரீச்சம்பழத்தைத் திங்கவா?...''  என்று கேட்டார் அப்பா. 
""அதைக் கேட்டுச் சிரித்தான் சிவா. ""உங்களுக்குக் கண்டிக்கும்போது "சீரியஸ்' கிடையாதா...சிரிப்பு காட்டுறீங்க.... பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான்...'' என்றாள் அம்மா. 
""சரி, விசாரிக்கிறேன்.... பூட்டைத் திருடி பேரீச்சம் பழம் வாங்கினது யார்?'' 
அப்பா நல்ல மன நிலையில் இருப்பதை சிவா புரிந்து கொண்டான். உண்மையைச் சொல்வதனால் அடி கிடைக்காது என்று நினைத்தான். அதனால், ""நான்தான் பூட்டைப் போட்டேன்...'' என்றான் தைரியமாக.
""எதுக்காகப் போட்டே?'' 
""தம்பிக்குப் பேரீச்சம்பழம் வாங்கிக் கொடுக்க...''
""அவன் கேட்டானா?''
""இல்ல.... நான் ஸ்கூல்ல அடி வாங்கினதை உங்க கிட்ட சொல்லாம இருக்கிறதுக்கு...''
""எதுக்கு ஸ்கூல்ல அடி வாங்கினே?''
""காப்பி அடிச்சேன்...''
""அண்ணன், தம்பி ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்க...'' என்றாள் அம்மா. 
""ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா?'' என்று அப்பா கேட்டார். "இல்லை' என்று தலையை ஆட்டினான் சிவா. 
""ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வந்து முட்டி போடுங்க.... அதுதான் உங்களுக்கு தண்டனை!....''
இரண்டு பேரும் சாப்பிட்டுவிட்டு வந்து முட்டி போட்டார்கள். உதயனுக்கு அண்ணன் மீது கோபம். ""உன்னாலதான் நான் முட்டி போடுகிறேன் என்று அழுதான்...''

தொடரும்....

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/சூப்பர்-சிவா---4-சிவா-கண்ட-காட்சி-3132527.html
3132524 வார இதழ்கள் சிறுவர்மணி புத்தாண்டே வருக! நா.இராதாகிருட்டிணன் DIN Saturday, April 13, 2019 01:30 PM +0530  


சித்திரை முதல் நாள் எங்களுக்குச்
சீராய் வந்த புத்தாண்டே!
கடலலை தவழும் தமிழ் மண்ணில் 
காலடி பதிக்க வருவாயே!

விளம்பி ஆண்டு விடைபெறவே
"விகாரி' நீயும் வந்தாயே!
உளத்தினில் மகிழ்ச்சி பொங்கிடவே 
உயர்வினை நீயும் தருவாயே!

ஊர்கள் எல்லாம் வளம் பெறவும் 
உழவும் தொழிலும் சிறந்திடவும்
நீர்நிலை யாவும் நிரம்பிடவும் 
நலமிகு ஆண்டே நீ வருக!

தளரா உழைப்பு வென்றிடவும் 
தக்க பயனைப் பெற்றிடவும் 
களத்தினில் நெல்மணி குவிந்திடவும் 
களிப்புடன் நீயும் வருவாயே!

புவியின் வெப்பம் தணிந்திடவும் 
பெருகிடும் மாசைக் குறைத்திடவும் 
செவியில் இனிக்கும் தமிழாலே
சிறப்பாய் உன்னை வரவேற்றோம்!
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/புத்தாண்டே-வருக-3132524.html
3132522 வார இதழ்கள் சிறுவர்மணி சித்திரை வந்தது! அ.கருப்பையா DIN Saturday, April 13, 2019 01:30 PM +0530  

பார் புகழ் தமிழரின் வாழ்விலே
பற்பல விழாக்கள் இருப்பினும்
சீர்மிகு பெருமையின் சின்னமாய் 
சிறப்புடன் வந்தது சித்திரை!

முக்கனி கிடைத்திடும் பருவமும்
முத்தமிழ் முழங்கிடும் காலமும்
தக்கதோர் வாழ்த்துடன் கூடியே
இத்தரை வந்தது சித்திரை!

ஏர்த்தொழில் தொடங்கிட ஏற்ற நாள்!
எத்தொழில் செய்யவும் இனிய நாள்!
சேர்த்திடும் வளங்களும் செல்வமும்
செழித்திட வந்தது சித்திரை!

புதுமையும், பழமையும் இணைந்திட 
பொங்கும் விழாக்கள் எங்கணும்
மதுரையில் நடைபெறும் ஒரு விழா!
மண்ணில் உதாரணம் சித்திரை!

விளம்பியை அடுத்த "விகாரி' யில் 
சித்திரைப் பெளர்ணமி நாளதில்
முழுநிலாக் காண்பதை யாவரும் 
மற்றுமோர் சிறப்பெனக் கூறுவர்!

தொடங்கிய செயல்களில் மகிழவும் 
தொண்டுகள் சேவைகள் தொடரவும் 
படர்ந்திடும் எங்கும் பசுமையாய்ப்
பயன்களைத் தந்திடும் சித்திரை!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/சித்திரை-வந்தது-3132522.html
3132521 வார இதழ்கள் சிறுவர்மணி பாராட்டுப் பாமாலை!  36: பெருமாட்டி "லக்ஷ்மிக் குட்டி' புகழென்றும் வாழி! வாழி! DIN DIN Saturday, April 13, 2019 01:29 PM +0530  

திருவனந்த புரமாம் கண்ணே
தலைநகராய் திகழுகின்ற 
அரும் நகராய் அமைந்து உள்ள
"பொன்முடி' ஊரின் அருகே

சிறுகாடாய் விளங்கும் "கல்லார்'
சிறியதொரு குடும்பம் தன்னில் 
பெருமாட்டி "லக்ஷ்மிக் குட்டி' 
பாங்குறவே வாழ்ந்து வந்தார்!

கணவரை இழந்து விட்டார்! - தன் 
மகனுடனே வாழ்ந்து வந்தார்!
அவனும் ஒரு நாள் யானை 
மிதித்துவிட மரணமுற்றான்!

அவனியிலே அநாதையாக 
அம்மையார் தனித்து நின்றார்!
எட்டாம் வகுப்பு மட்டும் 
படித்திருந்தார் "லக்ஷ்மிக் குட்டி' 

மகத்துவ மூலிகைகள் 
மருத்துவம் அறிந்து கொண்டார்! - அதை 
இட்டமுடன் பயன்படுத்தி 
ஏற்புறவே விளங்கி நின்றார்!

அவதி தரும் பிணிகள் போக்கும் 
அரும்பணியை நிலத்தில் செய்தார்!
ஏழைகள் நோய்கள் போக்கி
ஏற்றமதை அடைந்திட்டாரே!

மாற்றமது தமது வாழ்வில் 
மக்களுமே அடையச் செய்தார்!
தோற்றோடி அழிந்த தாமே
தோல்வியது இவரைக் கண்டே!

போற்றியது இந்திய அரசு
"பத்மஸ்ரீ' விருதை ஈந்து!
சாற்றுவோம் அவரது கீர்த்தி!
சாதனைப் பெண் இவரே அன்றோ?

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/பாராட்டுப்-பாமாலை--36-பெருமாட்டி-லக்ஷ்மிக்-குட்டி-புகழென்றும்-வாழி-வாழி-3132521.html
3132519 வார இதழ்கள் சிறுவர்மணி மரங்களின் வரங்கள்!: புனிதச் செம்மலர் - நாகலிங்க மரம் பா.இராதாகிருஷ்ணன் DIN Saturday, April 13, 2019 01:27 PM +0530
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

நான் தான்  நாகலிங்க மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் கவுரவ்பீட்டா கயனென்சிஸ் என்பதாகும்.  நான் லெஸிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். தென் அமெரிக்காவின் கரிபியன் கரையிலுள்ள கயானா எனும் நாடு தான் என் தாயகம். படமெடுத்தாடும் நாகப்பாம்பின் தலை சிவலிங்கம் மேல் இருப்பது போல  பூக்களை நான் கொண்டிருக்கிறேன்.  என்னை நீலகிரி மலைப் பகுதியில் ஆங்கிலேயர்கள் தான் அறிமுகப்படுத்தினாங்க. ஒரு காலத்தில் காவேரி நதிக்கரையில் அதிகமாக நான் காணப்பட்டேன்.  இப்போது நான் நகரங்களுக்கும் குடிபெயர்ந்து வந்து விட்டேன்.  நான் நிழல் தருவதுடன், தூசிகளை வடிகட்டி, சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துவேன். 

அடி மரத்திலேயே நீண்ட குச்சிகளுடன், மரத்தை ஒட்டினாற் போல் பூக்களை நான் தாங்கிக் கொண்டிருப்பேன்.  நடு மரம் மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூக்கள் உருவாகும்.  ஒரு மீட்டர் நீளப் பூக்களில் சிமிழ் போன்ற வடிவில் பூ மொட்டுகள் உருவாகும்.  விரிந்த நிலையில் மகரந்த தண்டுகள் இணைந்த பகுதி, நாகப்பாம்பின் படமெடுத்த தலையைப் போல இருக்கும். 4 இதைத் தான் நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் என்பார்கள். விரிந்த பகுதியின் கீழ் பூவின் அண்டம் சிவலிங்கத்தைப் போலிருக்கும். இதனால் என்னை நாகலிங்க மரம் என்றார்கள்.  

குழந்தைகளே, அமேசான் காட்டுப் பகுதியைச் சேர்ந்த மக்கள் என்னை துர்தேவதைகளை விரட்டும் மரம் என்று சொல்கிறார்கள். ஆசிய கண்டத்தில் என்னை செல்வத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். மேலும், என்னை மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையாகக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதுகிறார்கள்.  ஏனென்றால் காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் நான் என் இலைகளை உதிர்த்து அதை வெளிப்படுத்துவேன். 

என் மரத்தின் இலைகளை அரைத்து தேமல், படை போன்ற தோல் நோய்கள் மேல் தடவினால் அது இருந்த இடம் தெரியாது. இலைகளை மென்று தின்றால் பல்வலி போயே போய் விடும். பட்டைகளையும், காய்களையும் பக்குவப்படுத்தி  விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். பாப்புவா புதிய கயானா அருகிலுள்ள "இனி' எனும் தீவை சேர்ந்த மக்கள் என் கனிகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறார்கள். 

நீக்ரோ இனத்தவர் என் கனிகளை உண்பதாகவும், மேலும் கனியிலிருந்து ஒரு வகை பானத்தை தயாரிப்பதாகவும் சொல்கிறார்கள்.  விவசாயிகள் என்னுடைய  இலையை நிலத்திற்கு தழை எருவாக பயன்படுத்துகிறார்கள்.  

நான் வெட்ட வெட்ட தழைப்பேன்.  மரத்திலான வேளாண்மைக் கருவிகள் செய்திட நான் பெரிதும் பயன்படுகிறேன்.   குழந்தைகளே, என்னை வீட்டில் வளர்க்க மாட்டார்கள்.

மனிதனுக்கு விருந்தாவும் மருந்தாகவும் இருப்பது மரங்களே ! ஓடித் திரியும் உயிரினங்கள் அனைத்திற்கும்  இளைப்பாற நிழல் தந்து காப்பவை மரங்களே. பாடித் திரியும் பறவையினங்கள் அமர்வதற்கும், அடைவதற்கும் என உண்மையான சரணாலயமாக  இருப்பதும் மரங்களே. 

சென்னை, கோடம்பாக்கம், அருள்மிகு புலியூர் பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன்.   நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/மரங்களின்-வரங்கள்-புனிதச்-செம்மலர்---நாகலிங்க-மரம்-3132519.html
3132517 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: குருவிகளின் நம்பிக்கையும் உழைப்பும்! - மு.முத்துராம் சுந்தர் DIN Saturday, April 13, 2019 01:18 PM +0530 கடற்கரை ஓரமாக நின்ற பெரிய மரத்தின் உச்சியில் கடற்குருவி ஒன்று அடைகாத்து வந்தது. குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆண்குருவியும், பெண் குருவியும்  ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 

ஒரு நாள் கடுமையான புயல் வீசியது! அலைகள் பொங்கி எழுந்தன!

கிளையிலிருந்த கூடு காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது! குருவிகள் மனம் பதறிக் கதறின. பெண் குருவி, "" எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும்... இல்லையேல் உயிர் வாழமாட்டேன்!....'' என்றது. ஆண் குருவி அதனிடம், "" பயப்படாதே!... முட்டைகள் கூட்டுடன் சேர்ந்துதான் கடலில் விழுந்துள்ளன. எனவே அவை உடைந்திருக்காது!... கடலிலுள்ள தண்ணீரை வற்ற வைத்து விட்டால் முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்!...'' என நம்பிக்கை ஊட்டியது! 

""கடலை எப்படி வற்ற வைப்பது?''

""முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.... எனவே இடைவிடாமல் சில நாட்கள் முயற்சிக்க வேண்டும்!...நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு தொலைவில் கொட்டுவோம்!.... இப்படியே இடைவிடாமல் செய்தால் கடல் நீர் வற்றி முட்டைகள் வெளிப்படும்!... இவ்வாறு பேசிய குருவிகள் இரவு, பகலாகச் செயலில் இறங்கின.
அப்போது ஒரு முனிவர் வந்தார். குருவிகளின் செயல்களைப் பார்த்தார்.

ஆச்சரியப்பட்டார். தன் ஞான திருஷ்டியால் விஷயத்தை அறிந்தார். தாய்க்குருவி
யின் தவிப்பு அவரது உள்ளத்தை நெகிழச் செய்தது. தன் தபோபலத்தால் கடலை சில அடிகள் பின் வாங்க வைத்தார். அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து மகிழ்ந்தன. முட்டைகளை பத்திரமாக வேறிடத்தில் சேர்த்தன. 

""நான் அப்போதே சொன்னேனே.... பார்த்தாயா!.... நமது ஒரு நாள் உழைப்பால் கடல் நீரைக் குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம்!'' என்றது ஆண் குருவி பெருமையாக!

முனிவர் சிரித்தபடி நடந்தார். 

குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா?...

இல்லை....முனிவரின் அருளால்!... ஆனால் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ, தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ எதுவுமே தெரியாது!... ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின. குருவிகள் அதைச் செய்யாமல் இருந்திருந்தால்?.... முனிவர் தம் வழியே போயிருப்பார். 

நம்பிக்கையும், உழைப்பும் கடவுளைக்கூட நம்மிடம் கொண்டுவந்துவிடும்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/முத்துக்-கதை-குருவிகளின்-நம்பிக்கையும்-உழைப்பும்-3132517.html
3132516 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! நெ.இராமன், சென்னை. DIN Saturday, April 13, 2019 01:16 PM +0530  

 • அலமாரி நிறையப் புத்தகங்கள் உள்ள வீட்டில் உள்ள குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் - மெக்காலே
 • புத்தகம் வாங்கி வந்து சந்திப்பவன் தலை சிறந்த நண்பன் - லிங்கன்
 • புத்தகங்கள் நிறைய வாசித்தவன் வழிகாட்டியாய் இருப்பான்! - சீசர்
 • மிகச் சிறந்த ஆயுதங்கள் புத்தகங்களே! - லெனின்
 • உண்மையான படிப்பாளி வாசிப்பதை நிறுத்துவதே இல்லை - ஆஸ்கார் ஒயில்ட்
 • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! - சிக்மண்ட் ஃப்ராயிடு
 • பசி, தாகத்தைக் கூட சில புத்தகங்கள் மறக்க அடித்துவிடும்! - சிசரோ
 • நூல் நிலையம் உள்ள வீட்டில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது! - பிளாட்டோ
 • மனிதனைப் போல புத்தகங்ளுக்கும் உயிர் உண்டு அவை மனதுடன் பேசுகின்றன! - மாக்சிம் கார்க்கி
]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/பொன்மொழிகள்-3132516.html
3132515 வார இதழ்கள் சிறுவர்மணி சுற்றம் தழால் DIN DIN Saturday, April 13, 2019 01:13 PM +0530 பொருட்பால்   -   அதிகாரம் 53   -   பாடல் 6

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் 
மருங்கு உடையார் மாநிலத்து இல்

- திருக்குறள்


குறள் பாட்டு

நிறைய கொடுக்க வேண்டும் 
கோபம் அடக்க வேண்டும்
நல்ல நல்ல தன்மைகள் 
கடைப்பிடித்தால் நன்மைகள் 

சுற்றம் அவரைச் சூழ்ந்திடும்
பற்றுதலாய் வாழுவார்
அவரைப் போல உலகிலே 
எவர்க்கும் சுற்றம் அமையாது

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/சுற்றம்-தழால்-3132515.html
3132514 வார இதழ்கள் சிறுவர்மணி அகில்குட்டியின் டைரி!: தினம் ஒரு வார்த்தை! - அகில் குட்டி DIN Saturday, April 13, 2019 01:12 PM +0530 லீவு விட்டாச்சு!..... ஸ்கூல் திறக்க இன்னும் ரெண்டு மாசம் இருக்கு!....
நான்  சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருந்தேன்!.... மணி ஏழரை!.... பக்கத்தில் ரகுவைக் காணோம்!... அவன் வழக்கமா எழுந்திருக்கறா மாதிரியே ஆறு மணிக்கெல்லாம் எழுந்துட்டான்!  நான் பல்லைத் தேய்ச்சுக் காலைக் கடனெல்லாம்.....அதான்,... பாத்ரூம் போயிட்டுக் காபி சாப்பிட்டேன்....

 ""அம்மா, ரகு எங்கே?....''

 ""மாடியிலே செடிக்குத் தண்ணி ஊத்திக்கிட்டு இருக்கான்!....''

 நான் ரகுவோட சேர்ந்து செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினேன். பிறகு, ஜானகி சித்தியும்,  நானும், ரகுவும் குளிச்சு டிபன் சாப்பிட்டோம்...

ஸ்கூல் இல்லாமப் போச்சா!... இப்போ கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுது.... ஜானகி சித்தி நான், ரகு, சுவாமி எல்லோரும் கொஞ்ச நேரம் கேரம்போர்டு ஆடினோம்....  

அப்போ, ஜானகி சித்தி ஒரு கரும்பலகை கொண்டு வந்தாங்க,....சுமார் மூணு அடி அகலம்,... ரெண்டு அடி அகலம் இருக்கும்...  அதை சுவத்திலே மாட்டினாங்க.... 

""இப்போ எங்களைப் (என்னை, ரகுவை, சுவாமியைத்தான்) பார்த்து, இன்னிக்கு உங்களுக்கு ரெண்டு  டிக்ஷனரி தரப்போறேன்...ஒண்ணு, தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிற டிக்ஷனரி, இன்னொண்ணு ஆங்கில வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் சொல்கிற டிக்ஷ்னரி. அகில் நீ ஒரு இங்கிலீஷ் வார்த்தையையும், அதற்கான தமிழ் அர்த்தம் தருகிற வார்த்தையையும்  இந்த போர்டிலே எழுதணும்.... அதே மாதிரி, ரகு  ஒரு தமிழ் வார்த்தையையும், அதற்கான இங்கிலீஷ் வார்த்தையையும் எழுதணும்....தினம் இதைச் செய்யணும்... 

அப்படிச் செய்தா என்ன ஆகும்? அதனாலே என்ன  பிரயோஜனம்?,,,.'' ன்னு நான் கேட்டேன். 

தினம் ஒரு புது ஆங்கில வார்த்தையைக் கத்துக்கலாம்.... அதற்கான தமிழ் அர்த்தத்தையும் கத்துக்கலாம்.... அதே போல ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஆங்கிலத்திலே என்ன வார்த்தை வரும் என்பதைக் கத்துக்கலாம்!.... இதன் மூலமா மொழி அறிவு நல்லா வளரும்.... தினம் ஒரு வார்த்தை போதும்....''

""ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே!...லீவு வரைக்குமா?...'' அப்படீன்னு  கேட்டான் ரகு. 

""ஏன்?.... இதென்ன பெரிய காரியமா? ரெண்டு நிமிஷம் இல்லே மூணு நிமிஷம் ஆகப்போகுது....ஸ்கூல் திறந்தாக்கூட இதை தினமும் செய்யலாம்!....''  என்றான் சுவாமி. ஒரு வருஷத்திலே நூற்றுக்கணக்கான புதுப்புது வார்த்தைகளைக் கத்துக்கலாம்!

எல்லோரும் உற்சாகமாக ஆகிவிட்டோம்... நான் ஜானகி சித்திகிட்டே, ""லீவுக்கு நாங்க எதாவது ஊருக்குப் போனா?...அப்போ யாரு எழுதறது?....'' ன்னு கேட்டேன்.

""அதுக்குள்ளே உனக்குக் கவலை வந்துட்டுதா?...வீட்டில் இருக்கும்போது எழுதினாப் போதும்... '' என்றாள் சித்தி. 

இந்த வேலை காலையிலேயே சீக்கிரமா முடிஞ்சுடும்.... அப்புறமா என்ன செய்யறது? ஒரு நாள் பூரா என்ன செய்யறது?'' அப்படீன்னு கேட்டான் சுவாமி. 

""விளையாடலாம்!...'' என்றான் ரகு.

எல்லோரும் சிரித்துவிட்டோம்!....  ரகு சொன்ன மாதிரியே அன்னைக்குப் பூரா ஆட்டம்தான்! 

ஆனால் ரகு, மறுநாள் ரொம்பப் பொறுப்பாக ஒரு இங்கிலீஷ் வார்த்தையை எழுதி அதுக்கான அர்த்தத்தையும் போர்டில் எழுதிக்கொண்டிருந்தான். அவன் கையில் இங்கிலீஷ் - தமிழ் அகராதி இருந்தது.

என் கையில் தமிழ் - இங்கிலீஷ் அகராதி இருந்தது! அடுத்தது நான் எழுதணுமில்லே!

அன்னைக்கு ராத்திரி எல்லோரும் சாப்பிட்ட பிறகு மொட்டை மாடிக்குப் போனோம்!... அங்கே போர்டில் எழுதின வார்த்தைகள், அதற்கான அர்த்தம் எல்லாத்தையும் ஒரு தடவை சொல்லச் சொல்லி சித்தி கேட்டாங்க.... 

சொன்னோம். அதுக்கப்புறமா ஜானகி சித்தி ரெண்டு மூணு கதை சொன்னாங்க... கேட்டுக்கிட்டே  தூங்கிட்டோம்!

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/அகில்குட்டியின்-டைரி-தினம்-ஒரு-வார்த்தை-3132514.html
3132512 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவுச் சுடர்!: நேசிப்பில்  மகிழ்ச்சி! - ஆர்.மகாதேவன் DIN Saturday, April 13, 2019 01:09 PM +0530
நார்மன் வின்சென்ட்  பீல் என்பவர் அமெரிக்காவில் அமைச்சராக இருந்தவர். அவருடைய நண்பர் ஒரு நாள் வின்சென்ட் பீலைச் சந்தித்தார்.  

""மிஸ்டர் பீல் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்களா?'' என்று கேட்டார். 

அப்போது வின்சென் பீல் கூறினார்.... ""இதே கேள்வியைத்தான், ஒரு நாள், ஒன்பது வயதான என் மகள் எலிசபெத்திடம் கேட்டேன்!...'' 

""அதற்கு அவள் என்ன சொன்னாள்?'' எனக் கேட்டார் நண்பர்.

எலிசபெத் என்னிடம், ""ஆமாம் அப்பா!.... நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்....'' எனறாள்.

நான் என் மகளிடம், ""காரணம் புரிகிறதா?'' என்று கேட்டேன்.

""தெரியவில்லை!...'' என்றாள் எலிசபெத்.

""ஏதோ காரணம் இருப்பதால்தானே நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்?...அதைச் சொல்லேன்!'' என்றேன் நான்.

அதற்கு எலிசபெத், ""என் சிநேகிதிகளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... என் டீச்சர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... கோயிலுக்குப் போகப் பிடிக்கிறது... என் தம்பி, தங்கை, அம்மா, அப்பா எல்லோரையும் பிடித்திருக்கிறது!... எனது விளையாட்டு இடங்கள், மேகங்கள், இயற்கை அழகு எல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது!....'' என்றாள். 

அவளுடை மகிழ்ச்சியின் ரகசியத்தில் எல்லாம் அடங்கியிருக்கிறது! அவள் சிநேகிதிகளை நேசிக்கிறாள்!... ஆசிரியர்களை நேசிக்கிறாள்....கோயிலை, அங்குள்ள தெய்வத்தை நேசிக்கிறாள்,,,,தம்பி, தங்கைகள்,  உறவினர்களை நேசிக்கிறாள்.... அவர்களிடம் அன்பு செலுத்துகிறாள்...கிடைத்த சூழலை ரசிக்கிறாள்...  இப்படி இவை அத்தனையையும் நேசிக்க, அன்பு செலுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.... இல்லையா? '' 

""புரிகிறது வின்சென்ட் பீல்!....எனது உள்ளமும் இப்போது மகிழ்ச்சியில் தவழ்கிறது.... உங்களாலும், உங்கள் மகளின் சொற்களை என்னுடன் பகிர்ந்ததாலும்!....நன்றி!'' என்றார் நண்பர்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/நினைவுச்-சுடர்-நேசிப்பில்--மகிழ்ச்சி-3132512.html
3132510 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - II DIN DIN Saturday, April 13, 2019 01:07 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - II

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/பிஞ்சுக்-கை-வண்ணம்---ii-3132510.html
3132509 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I Saturday, April 13, 2019 01:06 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/13/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-3132509.html
3128354 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா -ரொசிட்டா DIN Saturday, April 6, 2019 04:00 PM +0530 கேள்வி: சீல் வைக்க உதவும் அரக்கு எதிலிருந்து தயாரிக்கப் படுகிறது?

பதில்:   அந்தக் காலத்தில் சீல் வைக்க உதவும் அரக்கு, தேன்கூட்டிலிருந்து கிடைக்கும் மெழுகு போன்று ஒரு பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது.

இந்தத் தேன்கூட்டு மெழுகுடன் ஐரோப்பாவில் காணப்படும் லார்ச் என்ற மரத்திலிருந்து கிடைக்கும் மஞ்சள் நிற டர்பன்டைன் போன்ற திரவப் பொருளையும் சேர்த்து ஒரு கலவையாக்கி அரக்கு தயாரிக்கப்பட்டது.

அரக்கைப் பார்த்திருப்பீர்கள். அது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அரக்கு சிவப்பு நிறத்தில் இருக்கவில்லை. நிறமற்றதாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகுதான் அத்துடன் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டது.

16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அரக்கு,  ஷெல்லாக் என்று ரசாயனப்பொருள், டர்பன்டைன், பசை, சாக்குப் பொடி (சாக்பீஸ் செய்ய உதவும் பொருள்), மற்றும் சிவப்பு நிறம் கலந்து தயாரிக்கப்பட்டது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/அங்கிள்-ஆன்டெனா-3128354.html
3128353 வார இதழ்கள் சிறுவர்மணி தாயும் குட்டியும்! ஜோ.ஜெயக்குமார்  DIN Saturday, April 6, 2019 03:58 PM +0530 தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“""அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?''”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

""நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு!''”

குட்டி திரும்பவும் கேட்டது. “

 ""அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்?''”

 தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“""பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு!''”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “

""இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?''”

“""அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்!...'' பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

""பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?''  இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. ""பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?''”

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?''

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/தாயும்-குட்டியும்-3128353.html
3128352 வார இதழ்கள் சிறுவர்மணி மரங்களின் வரங்கள்!: குருந்த மரம்! பா.இராதாகிருஷ்ணன் DIN Saturday, April 6, 2019 03:56 PM +0530 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

நான் தான்  குருந்த மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் என்பதாகும். நான் ரத்தாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  நான் முல்லை நிலத்திற்குரிய மரம். குவிந்த என் பூக்கள் வெண்மை நிறத்தில் நறுமணத்துடன் காணப்படும்.   என் இலைகள் பச்சையும், வெளிறிய வெள்ளையும் கலந்தது போல் காணப்படும். என் மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகள் காணப்படும். சங்க இலக்கியத்தில் என் மலரினை குரா, குரவு, குருந்தம் எனவும் அழைத்துள்ளனர். என்னுடைய இலை, பழம் மருத்துவ குணமுடயவை. என் கனியை நீங்கள் உணவாக உண்ணலாம். அது  உடல் வெப்பத்தை நீக்கி, பசியைத் தூண்டி வயிற்று வாயுவை அகற்றும்.  

வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் என் மரத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்னு சொல்றாங்க.நான் ஆற்றோரங்களில் அதிகமாக வளருவேன்.

நமக்கெல்லாம் படி அளக்கும் இறைவன், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள என் மரத்தடியில் தான் குருவாக இருந்து மாணிக்கவாசகப் பெருமானுக்கு உபதேசம் செய்தார்.  அதாவது குரு இருந்த மரம் குருந்த மரமாயிற்று. இம்மரத்தில் உள்ள இலைகள் பல்வேறு வாசனைகளை உடையதாக இருக்கும். ஒரு இலை நார்த்த இலை வாசனை என்றால், இன்னொரு இலை ஆரஞ்சு இலை மணம் தரும். 

சோதியே சுடரே சூழொளி விளக்கே, கரிகுழற் பணைமுலை மடந்தை, பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய், பங்கயத் தயனும்மா லறியா, நீதியே செல்வத் திருப்பெருந் துறையில், நிறைமலர்க் குருந்தமே வியசீர், ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால், அதெந்துவே என்றரு ளாயே (திருவாசகம் அருட்பத்து 1) --என குருந்த மரத்தின் கீழிருந்து தனக்கு அறிவு விளக்கம் செய்த குருவாகிய இறைவனை பாடுகிறார் மாணிக்கவாசகர். 

நான் மலர்களுடன் எப்போதும் செழிப்பாக இருப்பேன் என்பதால், என் மர நிழலில் குருமார்கள் கல்வி போதிப்பதை பண்டைத் தமிழினம் மரபாகக் கொண்டிருந்தது. குழந்தைகளே, நீங்கள் நல்லா படிக்கனும்னா, என் மரத்தடியில் வந்து படிங்க. 

நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில், அருள்மிகு ஆத்மநாதசுவாமி,  திருப்புனவாயில் அருள்மிகு விருத்தப்புரீஸ்வரர் என்கிற பழம்பதிநாதர்,  கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை – அத்திக்கடவு அருகே உள்ள அருள்மிகு குருந்தைமலை முருகன்,  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, அருள்மிகு நீள்நெறிநாதர் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். என் ராசி சிம்மம். மானுடத்தை வழிநடத்தும் பண்புகளில் மரங்களின் பங்கு மிகப் பெரியது.  ஆன்மிகத்திலும் அவை ஆற்றிய பங்கு அளப்பரியது.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/மரங்களின்-வரங்கள்-குருந்த-மரம்-3128352.html
3128351 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, April 6, 2019 03:55 PM +0530 1. இந்த மரம் வழுக்கும், ஆனால் சறுக்காது...
2. இவன் இரவில் அலறுவான், பகலில் உறங்குவான்...
3. இந்தப் பூ பூக்காது...
4.  கண்ணுக்கு அலங்காரம், பார்வைக்கு உத்தரவாதம்...
5. இரண்டே தோலில் முத்து வரும்...
6. முகத்தைக் காட்டுவான், ஆனால் முதுகைக் காட்ட மாட்டான்...
7. மரத்தில் தொங்குதாம் இனிப்புப் பொட்டலம்... காவலர்களோ அதிகமாம்...
8. ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமி...


விடைகள்:


1. வாழை மரம்,  2. ஆந்தை
3. குங்குமப்பூ,  4. மூக்குக் கண்ணாடி
5.  பூண்டு, 6.  முகம் பார்க்கும் கண்ணாடி
7.  தேன்கூடு, 8.  வெள்ளைப்பூண்டு
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/விடுகதைகள்-3128351.html
3128350 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்: மாடித்தோட்டம்! சாய் DIN Saturday, April 6, 2019 03:53 PM +0530
காட்சி -1
இடம் - ராஜசேகர் வீடு
 மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா

கற்பகம் : (கணவரைப் பார்த்து) இதோ பாருங்கள்... அடுத்த வாரம் முதல் நம்ம குழந்தைகள் ராஜாராமுக்கும், சித்ராவுக்கும் கோடை விடுமுறை ஆரம்பம்...
ராஜசேகர்: (ஆச்சரியமாக) அப்படியா?... அதுக்குள்ள சம்மர் லீவு வந்தாச்சா!... 
கற்பகம்: ஆமாம்!... நான் சொல்ல வந்தது... குழந்தைகளை லீவுக்கு எங்கேயாவது அழைத்துப் போகலாமா?...
ராஜசேகர்: சித்தி பசங்க இரண்டுபேரும் லீவுக்கு இங்க வர்றதா சொன்னாங்களே.... மறந்துட்டியா?... 
கற்பகம்: குழந்தைகளை நாம எங்கேயும் அழைச்சிக்கிட்டுப் போனதே இல்லை... பொழுதுக்கும் நம்மைச் சுற்றியே வர்றாங்க.... 
ராஜசேகர்: அவ்வளவுதானே!..... கவலையை விடு!.... சித்தி பசங்களும் வரட்டும்!.... எல்லோருமா "குளு குளு' கொடைக்கானலுக்குப் போய் வரலாம்!
ராஜாராம்: (வந்துகொண்டே) அப்பா!.... கொடைக்கானலா போகப்போறோம்.... நிஜமாவா?
கற்பகம்: அப்பா இப்பத்தான் திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கார்!.... நீ அதுக்குள்ளே ஊரெல்லாம் டமாரம் அடிச்சுடாதே!.... திருஷ்டி பட்டு கடைசியிலே ஒண்ணுமில்லாத புஸ்வாணமாயிடும்!... 
சித்ரா: எங்கம்மா போகப்போறோம்?...
கற்பகம்: நீயும் கேள்வி கேட்டுட்டியா?.... ஒண்ணுமில்லே.... உங்களுக்கெல்லாம் லீவு விட்டவுடனே ஊருக்குப் போகலாம்னு அப்பா சொல்லியிருக்கிறார்.... 
ராஜசேகர்: சித்ரா கண்ணு!.... நாம எல்லாரும் கொடைக்கானல் போகலாம்... சரியா?
சித்ரா: ஓகேப்பா!.... தேங்க்யூ!

காட்சி - 2
இடம் - ராஜசேகர் வீடு
மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா

(பள்ளிக்கூடம் கோடை விடுமுறைக்கு மூடியவுடன் ஸ்ரீகாந்த், சரண்யாவின் அம்மா அவர்களை ராஜசேகர் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். ஒரு வாரம் கழித்து எல்லோரும் கொடைக்கானல் புறப்பட்டனர். அங்கு ஆறு நாட்கள் தங்கி மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்)

சித்ரா: இங்கே வெயில் எப்படிக் கொளுத்துகிறது..... கொடைக்கானலில் எப்படி "குளுகுளு' ன்னு இருக்கு?... 
சரண்யா: ஆமாம்.... மலையிலே உயர ஏற, ஏற குளிர் எப்படி அதிகமாச்சு பார்த்தியா?
ஸ்ரீகாந்த்: ராத்திரியிலே என்ன குளிர்!.... ஏசியே இல்லாம நடுக்குற குளிர்!.... 
ராஜாராம்: அங்கேயே இருந்துடலாம் போல இருந்தது.... அம்மாவும், அப்பாவும்தான் அவசரப்பட்டு அழைச்சிண்டு வந்துட்டாங்க....
சித்ரா: உனக்கென்னடா.... எவ்வளவு செலவு ஆச்சுன்னு பார்த்தியாடா..... தங்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, போட்டிங் போக, குதிரை சவாரி செய்ய.... அப்படி, இப்படின்னு தொட்டதுக்கெல்லாம் பணம்!.... பாவம்டா அப்பா!... 
ராஜாராம்: நாம அங்கேயே ஒரு வீடு வாங்கிட்டா ஜாலியா எப்பவுமே இருக்கலாம் .... இல்லையா சித்ரா?
சித்ரா: நீ படிச்சுட்டு வேலைக்குப் போய் வீடு என்ன பெரிய பங்களாவே வாங்கு....
ஸ்ரீகாந்த்: கொடைக்கானலிலே நாம் பார்த்த பூக்கள் கண்ணுலேயே நிக்குது....எவ்வளவு விதவிதமான வண்ணங்கள்?.... ஒரே இடத்திலே அவ்வளவு பூக்களைப் பார்த்ததும் தேவலோகம் போல இருந்தது!.... 
சரண்யா: நீ ஆசைப்பட்டு வாங்கிண்டு வந்திருக்கிற பூச்செடி விதைகளை தொட்டியிலே போட்டு வளர்த்தா சூப்பரா பூக்கும்னு சொன்னாங்க இல்லே!.... 
சித்ரா: அதெல்லாம் குளிர்ப்பிரதேசப் பூக்கள்.... அங்க பூத்துக் குலுங்கிற மாதிரி இங்கு வருமாங்கிறது சந்தேகம்தான்!....
ராஜசேகர்: (வந்தவாறே) கவலையே வேண்டாம்.... நம்ம ஊர்லே அருமையா பூக்கற குண்டுமல்லி, மல்லி, ஜாதிமல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், செவந்தி, அரளி, சம்பங்கின்னு எல்லாவற்றையும் வெச்சு வளர்த்துட்டா போச்சு!
கற்பகம்: (கேட்டுக்கொண்டே வந்து) பாடுபட்டு வெச்சு வளர்க்கறதை வீட்டுக்கு உபயோகப்படுற மாதிரி காய்கறிப் பயிரைப் போடலாமே.... 
ராஜசேகர்: நீ விரும்பற மாதிரி பூச்செடிகளோடு காய்கறிச் செடிகளையும் வெச்சுட்டா போச்சு!.... கவலையை விடு!
(எல்லோரும் சாப்பிடக் கிளம்புகிறார்கள்)

காட்சி - 3
இடம் - ராஜசேகர் வீடு
மாந்தர் - ராஜசேகர், கற்பகம்.

(குழந்தைகள் நால்வரும் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடச் சென்றிருந்தனர். ராஜசேகர், பூந்தொட்டிகள், மண், செம்மண், மணல், எருமண், இயற்கை உரம், பூவாளி, பூச்செடிகள், காய்கறி பயிர்களின் நாற்றுகள் ஆகியவற்றை வண்டியில் ஏற்றி கூடவே வீடு வந்து சேர்கிறார். )
ராஜசேகர் : கற்பகம்,....  மொட்டை மாடிக் கதவை திறந்துவிடு.... இதெல்லாத்தையும் மாடியிலே கொண்டு போய்ச் சேர்த்திடலாம்...
கற்பகம்: (எல்லாவற்றையும் பார்த்துவிட்டு) என்ன, ஏகமா வாங்கித் தள்ளிட்டீங்க....
ராஜசேகர்: மாடியிலே விசாலமா இடம் இருக்கு....  நாலு குழந்தைகள் ஒண்ணா சேர்ந்தா விளையாடவும் செய்வாங்க.... சண்டையும் போட்டுப்பாங்க.... மாடியிலே தோட்டத்தை அமைத்துக் கொடுத்துட்டா தண்ணீர் விடுகிறது.... அது அது இதுன்னு கவனம் திரும்பிடும்.... இல்லையா?
கற்பகம்: மத்தியானமே பயங்கர சத்தம்!.... கூச்சல்!.... சண்டை.... ஒண்ணுக்கு ஒண்ணு அடிச்சுக்காத குறை.... 
ராஜசேகர் : அதனாலேதான் இப்படி யோசித்து வாங்கிண்டு வந்தேன்.... 
(வண்டிக்காரர் ஒவ்வொன்றாக மொட்டை மாடியில் ஏற்றி முடிக்கிறார்)
ராஜசேகர்: நாளைக்கு மாடித்தோட்ட அமைப்பாளர் வர்றதுக்குள்ளே நீ வந்துடு.... ஏழு ஏழரை மணிக்குள்ளே இங்கே இருக்கிற மாதிரி வந்துடு.... அவர் சொல்றபடி வெயிலுக்கு முன்னாடி தொட்டிகளில் கலந்த மண்ணை நிரப்பி, செடிகளை நட்டு தண்ணீர் விட்டுடலாம்.... சரியா?...
(வண்டிக்காரர் சரியென்னு கூறிவிட்டுக் கிளம்புகிறார்)

காட்சி 4
இடம் - மொட்டை மாடி

மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா, மாடித்தோட்ட அமைப்பாளர்.
(காலையில் மாடித்தோட்ட அமைப்பாளர் மேற்பார்வையோடு எல்லாச் செடிகளும நடப்படுகின்றன.)

சித்ரா:  அப்பா!.... எவ்வளவு தொட்டிகள்! செடிகள்!... ரொம்ப விலையாப்பா?...
ராஜசேகர்: அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.... நீங்க எல்லோரும் இந்தத் தொட்டிகளில் நட்டுருக்கிற பூச்செடிகளை, காய்கறிச் செடிகளை வாடி விடாம தினமும் பூவாளியாலே தண்ணி ஊத்தி வளர்க்கணும்.... காப்பாத்தணும்....
நால்வரும்: நிச்சயமா நாங்க செடிகளைக் காப்பாத்துவோம்!.... 
கற்பகம்: ரொம்ப சந்தோஷம்!....ஒத்துமையா செடிகளுக்கு தண்ணி விடணும்.... ஆளுக்கு நாலு, நாலு செடிகள் வீதம் தண்ணி ஊத்திட்டு அடுத்தவர்களுக்கு சான்ஸ் தரணும்.... 
ராஜாராம்: நான் செடியை வாட விடமாட்டேன்.... ஏன் தெரியுமா?... "வாடிய பயிரைக் கண்டு வாடினேன்' என்று வள்ளலார் சொல்லி வருந்தியதை எங்க தமிழாசிரியர் சொல்லி, எல்லோரும் செடிகளையும், மரங்களையும், கொடிகளையும் பாதுகாக்க வேண்டுமென பாடம் எடுத்தார்.....அவரோட வார்த்தைகளை நான் மறக்கவே மாட்டேன்...
ராஜசேகர்: குட்!.... நீ செடிகளின் மீது வைத்திருக்கிற ஆசையை மனசுல வெச்சுண்டுதான் இவைகளை வாங்கினேன்....
ராஜாராம்: தாங்க்யூப்பா!....
மாடித்தோட்ட அமைப்பாளர்: ஐயா!.... நான் வருகிறேன்..... ஒகு வாரம் கழிச்சு மறுபடி வர்றேன்.... வெயில் அதிகமா இருக்கு....செடிகள் பத்திரம்!....
ராஜசேகர்: உங்க முதலாளியிடம்  நாளைக்கு வந்து பார்க்கறேன்னு சொல்லுங்க....
மாடித்தோட்ட அமைப்பாளர்: சரிங்க ஐயா!.... செடிகளை கவனமாப் பாத்துக்குங்க...
(எல்லோரும் சரி என்கிறார்கள்)

காட்சி - 5
இடம் - ராஜசேகர் வீடு,   மாந்தர் - ராஜசேகர்,
கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா.

(செடிகள் நட்டு ஐம்பது நாட்களுக்கு மேலாகி விட்டது. தொட்டியில் எல்லாச் செடிகளும் நன்கு உயரமாக தழைத்து வளர்ந்து விட்டன. செம்பருத்தி, அரளி, சம்பங்கி, செவந்தி ஆகிய பூச்செடிகள் பூக்க ஆரம்பித்துவிட்டன. வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி ஆகியவை காய்க்கத் தொடங்கி விட்டன. )

ராஜாராம் : மொட்டை மாடி இப்ப பார்க்கறதுக்கு படு ஜோரா இருக்கு!
சித்ரா: என்ன பசுமை!
ஸ்ரீகாந்த்: காற்றடிக்கும்போது குளிர்ச்சியா இருக்கு!.... 
சரண்யா: வண்ண, வண்ணப் பூக்கள்!

(குழந்தைகள் குதூகலத்தோடு செடிகளை வலம் வந்து பேசிக்கொள்வதைக் கேட்டு கற்பகமும், ராஜசேகரும் ரசிக்கின்றனர்.)

சித்ரா: எங்க தமிழ் மிஸ், மாடித்தோட்டம் அமைப்பது பற்றி ஒரு பீரியட் பாடம் எடுத்தார்.... முடிந்தவர்கள் தோட்டம் அமையுங்கள் என்றும் சொன்னார். இவ்வளவு சீக்கிரம்  நம்ம வீட்டிலேயே மாடித்தோட்டம் அமையும்னு எதிர்பார்க்கவே இல்லே.... அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும்!....
ராஜசேகர்: லீவு நாளிலே போய் படிங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்க..... ஓயாது விளையாடினாலும் போரடிக்கும்!.... அதனாலே உங்க எல்லாருக்கும் என்ன வேலையைக் கொடுத்தா ஒற்றுமையா செய்வீர்கள்னு யோசிச்சபோது இது என் மனசுக்குப் பட்டது!.... அதுவே வெற்றிகரமா முடிந்தும் விட்டது!
ராஜாராம், சித்ரா: எங்களுக்கு இந்த சம்மர் லீவிலே கிடைத்த மாடித்தோட்ட அனுபவம் ரொம்பவே புதுசு!... பூச்சிக் கொல்லி மருந்து அடிக்காம இயற்கை உரத்தைக் கொண்டு வளர்த்து ஆளாக்கிய செடிகளிலிருந்து ஆர்கானிக் பூக்களையும், காய்கறிகளையும் உற்பத்தி செய்த பெருமைக்கு எங்க நால்வரையுமே ஆளாக்கிவிட்ட உங்களுக்கு எங்களுடைய நன்றிகள்!
ஸ்ரீகாந்த்: நாங்களும் அப்பா, அம்மா கிட்டே சொல்லி மாடித்தோட்டம் அமைக்கப் போகிறோம்.... எங்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணிய உங்களுக்கு எங்களுடைய அன்பான நன்றிகள்!

(திரை)
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/அரங்கம்-மாடித்தோட்டம்-3128350.html
3128345 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, April 6, 2019 03:26 PM +0530  

""பூஜா கால்மேலே கால் போட்டுக்கிட்டுத்தான் உட்கார்றா!....''
""அப்படியா யாராவது தப்பா நெனச்சுக்கப் போறாங்க....''
"" புதுசா போன் வாங்கியிருக்கா.... அதிலே கால் மேலே கால் போடறான்னு சொன்னேன்!....'' 

-ம.அக்ஷயா, அரூர் - 636903.


""வாத்தியாரோட "நச்சரிப்பு' தாங்கமுடியலேடா....''
""ஏன் ...''
""என்னோட உச்சரிப்பு' சரியில்லியாம்!...''

முத்தூஸ், தொண்டி.

 


""நீ நல்லாப் படிச்சு உயரணும்டா கோபி....''
""படிக்காட்டி உயரமா வளர முடியாதா சார்?....''

மா.பழனி, கூத்தப்பாடி.

 


""ஏம்பா!.... ஒரு இளநீர் "வழுக்கையா' சீவித்தாப்பா!...''
""இதோ தர்றேன் சார் உங்களுக்கு இல்லாத வழுக்கையா?...''

எ.பி.தனஸ்ரீ, அந்தியூர் - 638501.

 


""நூறு வயசு வாழணும்னா என்ன செய்யணும் தெரியுமா?...''
""என்ன செய்யணும்?....''
""நூறு வருஷத்துக்கு முன்னாலே பிறந்திருக்கணும்!...''

நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை - 629601.

 


""என்னடா இது?....சூரியன் படம் வரையச்சொன்னா நட்சத்திரம் மாதிரி வரைஞ்சிருக்கே?...''
""நீங்கதானே சொன்னீங்க.... சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்னு!....''

என்.எஸ்.வி.குருமூர்த்தி - 612001.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/கடி-3128345.html
3128344 வார இதழ்கள் சிறுவர்மணி சூப்பர் சிவா! - 3: பேரீச்சம்பழம்! சுகுமாரன் DIN Saturday, April 6, 2019 03:23 PM +0530
அவர் அடிக்கடி மூக்குப்பொடியை எடுத்து  உறிஞ்சி கையை உதறுவதை பார்த்திருக்கிறான். அவனுக்கும் மூக்குப் பொடி போட வேண்டும் என்று ஆசை வந்தது. மட்டையை திறந்து இரண்டு விரலில் கொஞ்சம் பொடியை எடுத்தான். அதை மூக்குக்கு அருகில் கொண்டு போனான். அருகில் கொண்டு போனதுமே "அச்!...அச்!' என்று தும்மல் வந்தது. அவன்  கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

""டேய் சிவா, .... என்னடா பண்றே?...'' என்று கேட்டுக்கொண்டே  அவனுடன் படிக்கும் பையன் ராஜன் அங்கே வந்தான். 

""மூக்குப்பொடி போட்டேன்...'' என்றான் சிவா. அவன் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

""கொஞ்சம் மூக்குப் பொடி கொடு.... ஓணானுக்குப் போடுவோம்...'' என்றான் ராஜன். அவன் ஒரு ஓணானைப் பிடித்து கயிறால் சுருக்கு மாட்டி இழுத்து வந்திருந்தான். தரையில் ஓணான் தலையை தூக்கிக் கொண்டு நிற்பதை சிவா பார்த்தான். கொஞ்சம் மூக்குப் பொடியை எடுத்து ஓணான் மூக்குக்கு நேராகக் காட்டினான். ஓணான் தலையை "வெடுக்....வெடுக்' என்று பலமுறை ஆட்டியது. 

அப்போது தெருவில் போகும் ஒருவர் , ""டேய், பசங்களா,... ஓணானும் ஒரு உயிர்தாண்டா,.... கொடுமை பண்ணாதீங்க,....,அடுத்த பிறவியிலே ஓணானாத்தான் பிறப்பீங்க....''  என்று சொல்லிவிட்டுப் போனார்.  அதை அப்படியே  நம்பிவிட்ட ராஜன் பயந்து போய் ஓணானை விட்டு விட்டான்! ஓணான் ஓடியது. அதை துரத்திக்கொண்டு ஒரு நாய் பின்னால் ஓடியது.

மூக்குப் பொடியை சந்திரா அக்காவோட அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுத்தான். வீட்டுக்குப் போனால் தம்பி உதயன் வெல்லம் கேட்பான். அதனால் அவனிடமிருந்து தப்பிப்பதற்காக சிவா வீட்டுக்குப் போகாமல் மீண்டும் ரோட்டுக்கு வந்தான்.

ஒரு தள்ளு வண்டியில் பெரிய கண்ணாடி ஜாரில் பேரீச்சம் பழத்தை வைத்துக் கொண்டு ஒருவன் "ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம்' என்று  கத்திக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தான். தம்பிக்கு பேரீச்சம் பழம் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று சிவா நினைத்தான். பழைய இரும்பு சாமான் கிடைக்குமா என்று பார்ப்பதற்காக வீட்டுக்குத் திரும்பினான். 

வீட்டில் தம்பி இருந்தான். சிவாவைப் பார்த்ததும் கண்களாலே கேட்டான். ""சந்திரா அக்கா இல்லை...'' என்று சிவா சொன்னான். ""பேரீச்சம் பழம் வாங்கித் தருகிறேன்...'' என்றான். அதனால் தம்பி அமைதியானான். 

அம்மா சமையலறையில் வேலையாக இருந்தாள். சமையலறைக்குச் சென்று சிவா தேடினான். அம்மா அருகில் வரும்போது நினைவாக வலது கையை கால் சட்டைப் பைக்குள் மறைத்துக் கொண்டான். 

வீட்டுக்குப் பின் பக்கம் போனான். பழைய இரும்பு சாமான்கள் எதுவும் கண்ணில் படவில்லை. புறவாசல் கதவில் ஒரு பித்தளைப் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுத்து இடது கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான். 

சிவா நேராக ரோட்டுக்கு வந்தான். பேரீச்சம்பழம் விற்கிறவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவனிடம் சென்று பூட்டை நீட்டினான். பூட்டை எடை போட்டுப் பார்த்த கடைக்காரன் கை நிறைய பேரீச்சம்பழத்தை எடுத்து பேப்பரில் மடித்துக் கொடுத்தான். சிவா ஒரு பழத்தை எடுத்துத் தின்று கொட்டையைத் துப்பினான். அவனுக்குப் பேரீச்சம்பழம் பிடிக்கவில்லை., அப்படியே பைக்குள் வைத்துக் கொண்டான். 

சிவா வீட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய அப்பா வரவில்லை. பூட்டைத் திருடி பேரீச்சம் பழம் வாங்கியது பற்றிய பயம் மனதிற்குள் வந்தது. 

சிவாவின் கால்சட்டைப் பை பெரிதாக இருப்பதைப் பார்த்த தம்பி, அண்ணன் பேரீச்சம்பழம் வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான். அதனால் பேரீச்சம்பழம் கேட்டு பின்னாலே திரிந்தான். அப்போது அப்பா வந்துவிட்டதால் இருவரும் வீட்டுப் பாடம் படிப்பதற்காக உட்கார்ந்தார்கள். 

 ""அப்பாவ பாத்த பிறகுதான் புத்தகத்தையை எடுக்கிறான்ங்க...'' என்று அம்மா புகார் சொன்னாள். 

""ஒழுங்கா படிக்கலைன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்!...'' என்றார் அப்பா. 

உதயன் திருக்குறளை உரக்கப் படித்தான்.  சிவா வீட்டுக்கணக்கு செய்வதில் மும்முரமானான். 

இரண்டு பேரையும் சாப்பிடக் கூப்பிட்டாள் அம்மா. 

""இப்போதான் படிக்கிறானுங்கன்னு சொன்னே.... எதுக்கு சாப்பிடக் கூப்பிடுறே....'' என்று அப்பா கேட்டார். 

""பழைய சோறு கெட்டுப் போயிடும்னு கூப்பிட்டேன்....'' என்றாள் அம்மா. 

""சரி, ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு படிங்க...'' என்றார் அப்பா. 

இருவரும் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு துள்ளிக் குதித்து எழுந்தனர்.

அப்பா செல்லமான தங்கை ஜெயா கையில் அப்பா கொடுத்த பக்கோடா பொட்டலம் இருந்தது. அதை வாங்க உதயன் தங்கை பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான். ""கொடு,... கொடு...'' என்று கையை நீட்டினான். ஜெயா, "" கொடுக்க மாட்டேன்!...'' என்று கத்தினாள். 

""அண்ணனுக்குக் கொஞ்சம் கொடு...'' என்று அம்மா சொன்னதும் பக்கோடாவில் ஒரு தூளை எடுத்து தங்கை நீட்டினாள். அதை வாங்கித் தின்று விட்டு மீண்டும் கையை நீட்டினான் உதயன். அண்ணன் திருப்பியும் கேட்கிறான் என்று ஜெயா அப்பாவிடம் புகார் சொன்னாள். 

""சின்னப் பிள்ளையைத் திங்க விடு!...'' என்று அப்பா உதயனைக் கண்டித்தார்.

"நான் பேரீச்சம்பழம் தின்பேன்' என்று மனதிற்குள் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டான் உதயன். வெளிப்படையாகத் தின்ன முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. 

அண்ணன், தம்பி இருவரும் சாப்பிட்டு விட்டு புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்காரவில்லை. அப்பா முன்னறையில் உள்ள கட்டிலில் போய் படுத்துவிட்டார்.
ஒரு அறையில் அம்மா, தங்கை, அண்ணன், தம்பி எல்லோரும் படுப்பார்கள். உதயன் சுவரோரமாகப் பாயை விரித்தான். அருகில் அண்ணன் சிவா படுக்க ஒரு இடத்தை ஒதுக்கினான். அண்ணனைப் படுக்கவும் அழைத்தான். அண்ணன் அருகில் படுத்ததும் அவன் கால் சட்டைக்குள் உதயன் கையை விட்டான். தம்பி கையை தட்டிவிட்ட சிவா, ""விளக்கை அணைத்த பிறகு தருகிறேன்...''  என்றான்.

கதவுகளைப் பூட்டிய பிறகு விளக்கை அணைத்து விட்டு அம்மா படுப்பாள். பின் பக்கக் கதவைப் பூட்டப்போன அம்மா பூட்டைக் காணவில்லை என்பதைப் பார்த்து திடுக்கிட்டாள். 

""சிவா, பித்தளைப் பூட்டைப் பாத்தியா?...'' என்று அம்மா அங்கிருந்தே கேட்டாள். ""இல்லையம்மா...''  என்று சிவா இங்கிருந்தே சொன்னாள்.  பிறகு பூட்டிக் கொள்ளலாம் என்று நினைத்த அம்மா கொண்டியில் கொக்கியைப் போட்டுவிட்டுத் திரும்பினாள்... விளக்குகளை அணைத்துவிட்டுப் படுத்தாள். 

அறைக்குள் கும்மிருட்டு பரவியது. 

தொடரும்....

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/சூப்பர்-சிவா---3-பேரீச்சம்பழம்-3128344.html
3128343 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: பச்சைக்கிளியும் சிறுவனும்! பூதலூர் முத்து DIN Saturday, April 6, 2019 03:18 PM +0530  

செல்வன் என்று ஒரு சிறுவன்  
சென்றான்  ஒரு நாள் மாந்தோப்பு -அவன்
கையில் அழகாய் ஒரு கூண்டு!
கிளைதனில் கண்டான் ஒரு கிளியை!

பச்சைக்கிளியே இங்கே வா
பண்பாய் உன்னுடன் பழகிடுவேன்
அச்சம் ஏதும் இல்லாமல் 
அன்பாய் வீட்டில் இருந்திடலாம்!

கழுத்து மணியும் நான் தருவேன் 
காலுக்கு அணியும் நான் தருவேன்!
பழுத்த பழங்கள் நான் தருவேன் 
வெள்ளிக்கூண்டில் வசித்திடுவாய்!

வெள்ளிக்கூண்டால் என்ன பயன்? - வான் 
வெளியில் பறந்திட இயன்றிடுமா?
விருப்பப்பட்ட மரங்களிலே 
விரைந்து அமர இயன்றிடுமா?

தேடிப் பழத்தை அடைந்தால்தான் 
தேடலில் உள்ள மகிழ்ச்சி வரும்!
எளிதாய் எல்லாம் கிடைத்தாலோ
உழைப்பின் மதிப்பும் குறைந்து விடும்!

எனக்குப் பிடித்தவை இன்மரங்கள்
இயற்கைக் காற்று, நற்சூழல்! - நான் 
பறக்கும் அழகைப் பார்த்து ரசி!
பரவசப்படு! என் சுதந்திரத்தால்

அவரவர் எல்லையை மதியுங்கள்
அன்பெனும் பெயரில் தொல்லை ஏன்?
பச்சைக் கிளியின் உரிமைக் குரலை
மதித்தான் செல்வம் செவி கொடுத்து 

மரத்தில் பழுத்த சுவைக் கனியை - மூக்கால் 
பறித்துப் போட்டது சிறுவனுக்கு! - செல்வம் 
புன்னகையோடு விடை பெற்றான்! - வானில் 
பறந்து சென்றது பச்சைக் கிளி!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/கதைப்-பாடல்-பச்சைக்கிளியும்-சிறுவனும்-3128343.html
3128342 வார இதழ்கள் சிறுவர்மணி பாராட்டுப் பாமாலை!  36: நினைவாற்றல்!   -அ.கருப்பையா DIN Saturday, April 6, 2019 03:16 PM +0530 அப்பா பணிதான் சென்னையிலே
அம்மா பணியும் மதுரையிலே
கார்த்திகேயன், திவ்யப்ரபா - தம்பதியின் 
அன்பு மகளாம் காவ்யாஸ்ரீ!

ஒன்றரை வயதில் அவரும்தான் 
பேசிப் பழகத் தொடங்குகையில்
நின்று கேட்ட அம்மாவும்
நினைவாற்றல் கண்டு அதிசயித்தார்!

வண்ணம் தீட்டிய அட்டைகளை 
முதலில் காட்ட நிறம் சொன்னார்!
எண்ணிப் பார்த்து படிப்படியாய்
பறவைகள், விலங்குகள் பெயர் சொன்னார்!

பார்த்து அறிந்த திறமையினை 
பக்குவமாக வளர்த்திடவே
ஆர்வம் கொண்ட அம்மாதான் 
அதிகம் இணையத்தில் ஆராய்ந்தார்!

இணையத்தில் அவர்போல் ஒரு சிறுமி
இருந்தார் அவர் போல் தம் மகளை
இணையாய் ஆக்க அன்று முதல் 
எடுத்த முயற்சிகள் ஏராளம்!

பத்து நாட்கள் பயிற்சியிலே 
"பாரதம்' உட்பட பல நாட்டின் 
சொந்தமான தேசியக் கொடிகளிலே 
நாற்பத்தி ரெண்டைக் கற்பித்தார்!

கொடியை எடுத்துக் காட்டிவிட்டால்
நாட்டின் பெயரைக் கூறிடுவார்!
அடுத்து நாட்டின் பெயர் சொன்னால்
அவற்றின் கொடியைக் காட்டிடுவார்!

மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில்
வேல்டு நிறுவனம் முன்னிலையில் 
இதுவரை வளர்த்த இத்திறனை 
யாவரும் அறியச் செயிதிட்டார்!

திரண்ட அறிவு படைத்தவர்கள் 
உலக சாதனைச் சான்றிதழை 
இரண்டு வயது "காவ்யாஸ்ரீ' க்கு
இனிதே வழங்கிச் சிறப்பித்தார்!

கற்றுக் கொடுத்த பெற்றோர்க்கும் 
"கல்விச் சாதனை' விருதினையே 
பெற்றுக் கொண்ட சிறுமிக்கும்
பெருமையாய்ச் சொல்வோம் பாராட்டு!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/பாராட்டுப்-பாமாலை--36-நினைவாற்றல்-3128342.html
3128341 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: ஹரியானா மாநிலம் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்! கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். DIN Saturday, April 6, 2019 03:13 PM +0530 ஹரியானா என்பதற்கு "கடவுளின் வசிப்பிடம்' என்று பொருள்! வட இந்திய மாநிலமான ஹரியானா 1966 - இல் அன்றைய இந்திய பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. நான்கு திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட இம்மாநிலத்தை பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. 

இம்மாநிலத்தின் வடகிழக்கில் சிவாலிக் மலைத்தொடரும், தென்மேற்குப் பகுதியில் தார் பாலைவனமும், தெற்கே ஆரவல்லி மலைத்தொடரும் உள்ளன. ஆரவல்லி மலைத்தொடர் தனித்தனி குன்றுகளாகவும், பாறை முகடுகளாகவும் டெல்லியின் எல்லை வரை காட்சியளிக்கிறது.

ஹரியானா மாநிலம் டெல்லி மாநகரை வடக்கு, மேற்கு, தெற்கு என மூன்று திசைகளில் சூழ்ந்துள்ளமையால், இதன் சில பகுதிகள் நாட்டின் தலைநகரமான டெல்லி மாநகருடன் இணைக்கப்பட்டுள்ளது.

44212 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஹரியானா மாநிலம் 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசமே இம்மாநிலத்தின் தலைநகரமாகும்.

பஞ்சாப் மாநிலத்திற்கும் சண்டிகர் நகரமே தலைநகரமாகும். சண்டிகரை இரண்டு மாநிலங்களுமே கேட்டதால் இரு மாநில எல்லையில் இருந்த சண்டிகர் நகரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுடன் இரு மாநிலங்களுக்கும் தலை நகரமாக ஆக்கப்பட்டது.

ஹரியானா தொழில்வளம் மிக்க வளமான மாநிலம். வேளாண்மையே மாநிலத்தின் முக்கியத் தொழில்.  மொத்த மக்கள் தொகையில் 70% மக்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். மொத்த நிலப்பரப்பில் சுமார் 86 % விவசாய நிலமே! உணவு மற்றும் பால் உற்பத்தியில் நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது! நம் நாட்டின் தனி நபர் வருமானம் குறித்த தர வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஹரியானா மாநிலம் நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டது. இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்த போர்கள் நடந்த பகுதியாகவும் இம்மாநிலம் உள்ளது. 

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டவர் மற்றும் கெளரவர்கள் இடையே நடந்த பாரதப்போர், இங்குள்ள குருúக்ஷத்திரத்தில்தான் நடந்தது.

பானிபட் போர்கள்!

பானிப்பட் வரளாற்றுப் பெருமை மிக்கக நகரம். மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். அப்பொழுது இந்நகரத்தின் பெயர் பாண்டுப் பிரஸ்தம் என்பதாகும். 

இந்திய வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று பானிபட் போர்களும் இங்குதான் நடந்தது. 

முதல் பானிப்பட் போர்!

கி.பி. 1526 - இல் தில்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும், மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாபருக்கும் இடையில் பானிப்பட்டில் போர் நடந்தது.
இப்போரில் பாபர் வெற்றி பெற்று இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். 

இரண்டாம் பானிப்பட் போர்!

கி.பி. 1556 - இல் பானிப்பட்டில் தில்லிப் பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் அக்பர் வென்றார். 
மூன்றாம் பானிப்பட் போர்!

கி.பி. 1761 - இல் மாராட்டியப் பேரரசின் படைகளுக்கும்,ஆப்கனிஸ்தான் மன்னர் அகமது ஷா ஆப்தாலிக்கும் இடையில் நடந்தது. 

தொல்லியல் களங்கள்!

பாகிஸ்தானில் உள்ள மொஹஞ்சோதாரோ மற்றும் ஹரப்பா அகழ்வு ஆய்வின் முடிவில் சிந்து சமவெளி நாகரிகம் 5500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது ஹரியானா மாநிலத்தில் உள்ள "பிர்ராணா' (BHIRRANA) ராஹிகார்ஹி (RAKHI GARHI) ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆய்வு செய்தபோது, சிந்து சமவெளி நாகரிகம் 8000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்று தெரிய வந்துள்ளது. 

இங்கு நடந்த அகழ்வாய்வுகளில் அதிக எண்ணிக்கையிலானா பசு, ஆடு, மான் போன்ற விலங்குகளின் எலும்புகள், கொம்புகள், பற்கள் போன்றவை கிடைத்துள்ளது.  மேலும் தங்கம் மற்றும் வெள்ளியிலானா பொருட்கள், முத்திரைகள், சமையல் பொருட்கள், சுடுமண் சிலைகள், சீப்பு இரும்பு ஊசிகள், மீன் தூண்டில்கள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளது. 

ராஹிகார்ஹியில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட தொல்லியல் களம் 105 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமும் உள்ளது.

நடைபாதையுடன் கூடிய சாலைகள் கழிவு நீர் ஓடைகள், பெரிய மழைநீர் சேமிப்பு மற்றும் பாதுகாக்கும் அமைப்புகள், சுடுமண் செங்கல்கள், உலோகத்தால் ஆன பொருட்கள் என பல வகையான அமைப்புகள் மற்றும் பொருட்கள் ராஹிகர்ஹியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இப்பொழுது மறைந்து விட்டதாகக் கூறப்படும் சரஸ்வதி நதி மற்றும் காஹர் ஹக்ரா நதிகளின் சமவெளிப்பகுதிவரை சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கி இருந்துள்ளது. பிர்ராணா தொல்லியல் களம்தான் தெற்காசியாவின் மிகவும் பழமையான காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவற்றைத் தவிர ஹரியானா மாநிலத்தில் பானாவாலி (BANAVALI), ஃபர்மானா (FARMANA), கன்வாரி (KANVARI), கூனல் (KUNAL) மிட்டாதல் (MITATHAL)  உள்ளிட்ட பல தொல்லியல் களங்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பத்தில் இங்குதான் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதி வரை பரவியிருக்கலாம்  என்றும் கருதுகிறார்கள். 

பிரித்விராஜ் கா கியாவா (கோட்டை) 

இந்தக் கோட்டை ஹரியானா மாவட்டத்தில் ஹான்சி நகரில் அமைந்துள்ளது. இக்கோட்டை 12 - ஆம் நூற்றாண்டில் ராஜ்புத்திரர்களால் கட்டப்பட்டது. 

30 ஏக்கர் பரப்பளவில் பரந்த சதுர வடிவக் கோட்டை இது. 52 அடி உயரமும், 37 அடி அகலமும் கொண்ட சுவர்கள் கொண்டது. பண்டைய இந்தியாவின் வலிமையான கோட்டைகளில் ஒன்று. கோட்டையின் நுழைவு வாயில்களில் இந்து கடவுளர்கள் மற்றும் பறவைகள் மிருகங்களின் அழகான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோட்டைக்குள் புத்தர் மகாவீரர் சிலைகளும் உள்ளன. 

இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தோஷி மலைக்கோட்டை

தோஷி மலை உச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. 40 அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்ட மதில் சுவர்கள் சூழ்ந்துள்ளது.  

குருக்ஷேத்திரம்!

வரலாற்று சிறப்பு மிக்க புனிதத்தலம் இது! ஹரியானா மாநிலத்தின் குருúக்ஷத்திர மாவட்டத்தில் உள்ளது. 

மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டவர், கெளரவர்களின் முன்னோரான பரதகுல மன்னன் குரு என்பவன் சரஸ்வதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி.மு. 1900 - இல் குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இந்நகரை உருவாக்கியதாக வாமன புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டவர் கெளரவர் படைகளுக்கு இடையே நடந்த பாரதப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. இந்துக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதும் பகவத் கீதை பிறந்ததும் இங்குதான்! 

மிக நீண்ட புராண மற்றும் செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த இடத்திற்கு பெளத்த, மற்றும் சீக்கிய மத குருக்களும் விஜயம் செய்துள்ளனர்.

எனவே ஹிந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் புனித யாத்திரை ஸ்தலமாக இந்நகரம் திகழ்கிறது. இங்கு வழிபாட்டுத் தலங்கள், கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் தீர்த்த குண்டங்கள் என ஏராளமான ஆன்மீக புனிதத் தலங்கள் இந்நகரத்தில் நிரம்பியுள்ளன. 

எண்ணற்ற இடங்கள் குருúக்ஷத்திரம் நகரத்தில் ஆன்மீக பயணமாக பார்ப்பதற்கு உள்ளன. அவற்றில் மிக முக்கியமான தலங்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்....
தொகுப்பு : கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/கருவூலம்-ஹரியானா-மாநிலம்-பற்றி-சுருக்கமாகத்-தெரிந்து-கொள்வோம்-3128341.html
3128340 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! உ.இராஜமாணிக்கம், கடலூர். DIN Saturday, April 6, 2019 03:05 PM +0530  

 • சிரிப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் ஓசை! - கன்பூஷியஸ்
 • புன்னகை தவழும் முகத்திற்கு ஒப்பனை தேவையில்லை! - புளூடார்க்
 • புன்னகை புரிவதால் பிறர் மனதிற்குள் சுலபமாகப் புக முடியும்! - ஷேக்ஸ்பியர்
 • நகைச்சுவை உணர்வு உண்டானால் கவலைகளுக்கு இடமேது? - மாண்டெயின்
 • இதயத்திலுள்ள சுமைகளை இறக்கி வைக்க வேண்டுமா? வாய் விட்டுச் சிரியுங்கள்! - ஜி.வரதராஜன்
 • நல்ல நகைச்சுவை சிரிப்பதோடு கண்களில் நீரையும் வரவழைத்து விடும்! - பெர்னார்ட்ஷா
 • சிரிப்புதான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது! - பிராங்ளின்
 • நகைச்சுவை உணர்வு உடையவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்! - ஆர்னால்டு பென்னட்
 • சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகிறது! - மர்லட்ஜ்
 • புன்னகையைவிட  எளிதான அழகு ஒப்பனை சாதனம் வேறு இல்லவே இல்லை! - வாரியார்.
]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/பொன்மொழிகள்-3128340.html
3128339 வார இதழ்கள் சிறுவர்மணி தெரிந்து விளையாடல் DIN DIN Saturday, April 6, 2019 03:02 PM +0530 பொருட்பால்   -   அதிகாரம் 52   -   பாடல் 6

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு 
எய்த உணர்ந்து செயல்.


-திருக்குறள்

குறள் பாட்டு


செயலைச் செய்பவன் தன்மையை 
உற்றுணர்ந்து பார்த்திடு
செய்யும் செயலின் தன்மையை
கற்றுணர்ந்து பார்த்திடு

எந்தக் காலத்தில் செய்திட 
ஏற்றதென்று தெரிந்திடு
தக்க காலத்தில் அதனையே 
தகுந்த முறையில் செய்திடு

- ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/தெரிந்து-விளையாடல்-3128339.html
3128338 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - II DIN DIN Saturday, April 6, 2019 03:00 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - II

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/பிஞ்சுக்-கை-வண்ணம்---ii-3128338.html
3128337 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I DIN DIN Saturday, April 6, 2019 03:00 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-3128337.html
3128336 வார இதழ்கள் சிறுவர்மணி அகில்குட்டியின் டைரி!: மறக்க முடியாத பிறந்த நாள்! -- அகில் குட்டி DIN Saturday, April 6, 2019 02:59 PM +0530 போன திங்கட்கிழமை பரமேஸ்வரன் தாத்தா,... திருவையாறிலே இருக்காரே, அந்த தாத்தா வந்திருந்தார். அவர் ஊருக்குப் பக்கத்திலே கோயில் திருவிழா! அதுக்கு அப்பா, ராமு சித்தப்பா, விச்சு மாமா, எல்லாருமா சேர்ந்து கொஞ்சம் பணம் கொடுப்பாங்க... அதை வாங்கிக்கிட்டு தாத்தா போவார்! புதன் கிழமை என்னோட பிறந்தநாள்!.... அது மட்டுமில்லே சாமிநாதன் தங்கச்சி, சாத்விகாவுக்கும் அதே நாள்தான் பிறந்த நாள்! அவளுக்கும் லீவு விட்டாச்சு! செவ்வாய்க்கிழமை வந்துட்டா!.... தாத்தா எங்க ரெண்டு பேருக்கும் கவுன் வாங்கிக்கிட்டு வந்தாங்க....

ஒரே கலரில்!.... லேசான ஆரஞ்சுக் கலரில் சின்னச் சின்ன கரும்பச்சைப் பூக்களோட  அழகான பட்டன்களோடு ரொம்ப அழகா இருந்தன! கவுன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுச்சு! சாத்விகாவுக்கும்தான்!  நாளைக்கு ரெண்டு பேரும் போட்டுக்கப் போறோம்! புதன் கிழமை காலை!.... 

அம்மா பால் பாயசம் பண்ணியிருந்தாங்க!.... புது கவுன்களை ஸ்வாமி முன்னாடி வெச்சு, ஓரத்தில் குங்குமம் எல்லாம் வெச்சு  தாத்தா கொடுத்தார்!... ரெண்டு கவுனையும் பிரிச்சு நான் கீழே வெச்சேன். ரகு டேபிளில் இந்தியன் இங்கில் ஏதோ ட்ராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தான்! சாத்விகா அவளோட கவுனை எடுத்துக்கிட்டா! பிரஷ்ஷை தோய்ச்சு எடுக்கும்போது பாட்டில் தவறி இங்க் என்னோட கவுன்லே  கொட்டிடுச்சு!   சுமார் ஒரு சைபால் டப்பா அளவுக்கு ரவுண்டா ஒரே கருப்பா ஆயிடுச்சு!

எனக்கு ரொம்ப வருத்தமா ஆயிடுச்சு! அழுகையே வந்துடும்போல இருந்தது! எவ்வளவு சூப்பர் கவுன்! ஜானகி சித்தி என்னைப் பார்த்தாங்க.... 

சாத்விகா என் பக்கத்திலே வந்தாள்! தன்  கவுனை என் கிட்டே கொடுத்தாள்! ""இந்த கவுனை நீ போட்டுக்கோ அகில்!...'' னு சொன்னா! என்னை மாதிரிதானே சாத்விகாவுக்கும் அந்த கவுன் மேலே ஆசை இருந்தது! வேணாம் சாத்விகா!... பரவாயில்லே...நீயே அதைப் போட்டுக்கோ'' ன்னு சொன்னேன்.  ஜானகி சித்தி என் புது கவுனை எடுத்துக்கிட்டு பாத்ரூமுக்குப் போய் இங்க் பட்ட இடத்தைத் தோய்த்தாங்க... அது வாட்டர் புரூஃப் இங்காச்சே!.... கறை போகவே இல்லே.... 

கிடுகிடுன்னு ரூமுக்குப் போனாங்க! துணியிலே பெயிண்ட் பண்ற கலரை எடுத்தாங்க... கொஞ்சம் பெரிய ரவுண்டா ஒரு புது வெள்ளைத் துணியை எடுத்தாங்க... அதில், ""ஹாப்பி பர்த்டே'' ன்னு எழுதினாங்க... அதை அப்படியே ரவுண்டா கத்தரிச்சு கவுன்லே வெச்சுத் தெச்சுட்டாங்க ரொம்ப அழகா இருந்தது! இப்போ அந்த கவுனைப் போட்டுக்கணும் போல எனக்கே ஆசை வந்தது! ஜானகி சித்திக்கு ரொம்ப தேங்ஸ் சொன்னேன்! நாங்க ரெண்டு பேரும் எல்லோரையும் நமஸ்காரம் செய்தோம்! எல்லோரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் வாழ்த்தினாங்க!.... ஜானகி சித்தி, ""இந்த பிறந்த நாளை நீங்க மறக்கவே முடியாது!.... அந்த இங்க் கொட்டியிருக்காட்டா இது ஒரு முக்கியமான பிறந்த நாளா இருந்திருக்காது... ரெண்டு பேருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!...'' அப்படீன்னாங்க. உண்மைதானே!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/அகில்குட்டியின்-டைரி-மறக்க-முடியாத-பிறந்த-நாள்-3128336.html
3128335 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவுச் சுடர்!: பூரிப்பு! சு.இலக்குமணசுவாமி, திருநகர் Saturday, April 6, 2019 02:55 PM +0530 தீபாவளிக்கு முதல் நாள் இரவு மகாகவி பாரதியார் மிகவும் கவலையுடனும், சிந்தனையுடனும் வெகு நேரம் வரை அமர்ந்திருந்தார். தன் கவலையைப் போக்குமாறு அன்னை பராசக்தியிடம் வேண்டிக்கொண்டே தூங்கிப்போனார். நடுநிசி! யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது!  விழித்துக் கொண்ட பாரதியார் உடனே சென்று கதவைத் திறந்தார்.  வாசலில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். 

அவர்கள் இருவரில் ஒருவர் கையில் ஒரு பை இருந்தது. அதை பாரதியார் கையில் கொடுத்து விட்டு இருவரும் பாரதியை வணங்கி நின்றனர்.  பாரதியார் முகத்தில் கேள்விக்குறி....

""ஐயா, நாங்கள் படுத்து உறங்குகையில் பராசக்தி எங்கள் கனவிலே வந்து, "என் பக்தன் பாரதி கையில் காசில்லாமல் கவலையுடன் இருக்கிறான்.... கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றிக்கொண்டு போ!...'' என உத்தரவிட்டாள்!.... அதனால் பணத்தை சில்லறையாக மாற்றிக்கொண்டு வந்தோம்!...'' என்றனர்.

தன்னைக் காண வரும் தொழிலாளர், ஏவலர்களுக்கு இனாமளிக்கத் தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்தி, யாரிடம் கடன் கேட்பது எனக் கவலையோடு இருந்த பாரதியாருக்கு மறுநாள் மகிழ்ச்சியாக  விடிந்தது. இனாம் கேட்டு வந்தோருக்கு சில்லரைகளை சந்தோஷத்துடன் அளித்து மகிழ்ந்தார். அன்னை பராசக்தியின் அருளை நினைத்து மனம் பூரித்தார் பாரதி!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/apr/06/நினைவுச்-சுடர்-பூரிப்பு-3128335.html
3123297 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: விந்தையான பறவைகள் கோட்டாறு ஆ.கோலப்பன் நாகர்கோவில் Wednesday, April 3, 2019 02:42 PM +0530
விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு

உலக அளவிலேயே கொக்கு இனங்களில் மிகப்பெரிய இனம் சாரசக் கொக்குகள். எழுந்து நிற்கும் பொழுது 5 அடிக்கு மேல் உயர்ந்து இருக்கும். கழுத்தைச் சுற்றி பனிச் சென்று தெரியும் ஒரு கரும் சிவப்பு நிறப்பட்டை இதனை மற்ற சாரசக் கொக்குகளுக்கிடையே அடையாளம் காண உதவுகிறது. 
நுனி கூர்மையான சற்று நீளமுள்ள, மூக்கு கருப்பு கலந்த காப்பி நிறத்தைக் கொண்டதாகும். ஆண், பெண் இனத்தவைகளிடையே வித்தியாசம் இராது.

உயரமான கால்களும் விரல்களும் சிவப்பு நிறமுள்ளவை. பார்வைக்கு மிக அழகான இந்தப் (அன்ன)பறவைகள் வெகுதூம் விருந்தாடிச் செல்லும் ஆற்றலைக் கொண்டது.

நமது இந்தியாவில் மைசூர் வரை மட்டுமே உள்ள சாரசச் கொக்குகள் வட மாநிலங்களில் எங்கும் பரவலாகக் காணப்படுகின்ற ஓர் அழகான பறவையினம். தனது இணை இறந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும். எப்பொழுதும் இணையோடு மட்டுமே சாரசக் கொக்குகளைக் காண முடியும்.
இல்லறத்தில் இணை சேருவதற்கு முன் சற்ற நேரம் இருபாலரும் இறகை விரித்து தாவித் தாவி காதல் நடனமாடும். சாரசக் கொக்குளை அன்னப்பறவை என்று அழைப்பதுண்டு.

ஆண், பெண் இரு இனமும் அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும். ஜுலை முதல் டிசம்பர் வரையிலான காலங்களிலேயே இனப்பெருக்கம் நடக்கும். பாம்புகளம், சிறு உயிரினங்களும், தளிர் இலைகளும், பலதரப்பட்ட தானிய வகைகளும் இதன் உணவாகும். சாரசக் கொக்குகளை நெருங்கும் விரோதிகளான நாய் போன்ற விலங்கினங்களை ஆக்ரோஷத்துடன் விரட்டிவிடும் ஆற்றல் கொண்டவை. விஞ்ஞான ரீதியாக இதை கிரஸ் ஆண்டி கோனே என்று அழைப்பர்.

குட்டை வால் நீளமான இறக்கை "ஆல்பட்ராஸ்'

கடற் பறவையினமான குட்டை வால் ""ஆல்பட்ராஸ்'' மிகவும் ஆபூர்வப் பறவைகளுள் ஓன்றாகும். இதன் உடலில் மஞ்சள், வெள்ளை, நீலம் கருப்பு நிறங்களும், அலகில் இளஞ்சிவப்பு, பச்சை நிறங்களும் கலந்து காணப்படுகின்றன.

6 முதல் 7 கிலோ உடை வரை உடல் வளர்ச்சியை இவை பெறுகின்றன. குட்டை வால் ஆல்பட்ராஸ் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இதன் இறக்கையின் நீளம் 2.4 மீட்டர். உடலின் நீளம் அலகிலிருந்து வாழ்வரை ஒரு மீட்டர் ஆகும். வடக்கு பசிபிக் கடற் கரையோரம் முன்பு அதிகம் காணப்பட்ட இப்பறவைகளின் எண்ணிக்கை இன்று 900 என்று அளவிலேயே தான் உள்ளது. 

வருடத்தில் ஒரு முட்டை மட்டுமே இட்டு பெண் ஆல்பட்ராஸ் குஞ்சு பொரிக்கிறது. ஆறு மாதத்தில் குஞ்சு பறக்கத் தொடங்கி விடுகிறது. அதன் பிறகு பெற்றோர் பறவைகளை மறந்து விட்டு பறந்து கடலில் வெகு தூரத்திற்கு அப்பால் சென்று விடும்.

நாலு வருடம் கழித்து தான் அந்தப் பறவை தனது பிறந்த இடத்திற்கு வந்து சேரும். தற்போது இந்த அபூர்வப் பறவை இனத்தைப் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாண்ட்ஹில் கொக்கு

இந்தக் கொக்குள் கூட்டம் கூட்டமாக இடப் பெயர்ச்சி செய்வதுண்டு. இணை கூடும் போது இவை ஆடும் நடனம் மயில் ஆட்டத்தை விட அழகாக அற்புதமாக இருக்கும்.

ஆண் பறவையும், பெண் பறவையும் நேருக்கு நேர் நின்று இறக்கையை அடித்து மேலே எழும்பும். அப்போது அவற்றின் கால் மட்டும் முன் நோக்கி இருக்கும். பிறகு முதலில் ஆண் பறவையும் பின்பு பெண் பறவையும் ஒன்றுக்கு ஒன்று தலை தாழ்த்தி மரியாதை செய்து கொள்ளும். இதுவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

புத்திசாலிப் பறவை 

கூட் என்றழைக்கப்படும் ஒரு வகை நீர்ப்பறவை ரொம்ப புத்திசாலியானது. இப்பறவை ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் கரை ஓரத்தில் கூடு கட்டி வாழும். நீர்த்தாவரமான நாணல் போன்ற ஒரு வகைப் புல்லினால் தான் கூட்டை அமைத்துக் கொள்ளும். ஆனால், கோடைக் காலத்தில் இத்தாவரம் அதிக அளவில் நீர் நிலைகளில் வளராது. அந்த சமயங்களில் புதியதாக கூடுகட்ட முடியாமல் தவிக்க நேரிடுமே என்று இப்பறவை என்ன செய்யும் தெரியுமா?

நீர்த்தாவரம் நிறைய வளர்ந்திருக்கம் போதே, தனக்கு கூடு கட்ட வேண்டிய இடத்தில் நீர்த்தாவரத்தை சுற்றி 3,6 கி.மீ சுற்றளவுக்கு 90 செ.மீ உயரத்திற்கு கூழாங்கற்களைக் கொண்டு முக்கோண அமைப்பில் பிரமிடு போன்ற அமைத்துக் கொள்ளும். இது அந்தத் தாவரத்துக்கு அரண் போல் அமைந்திருக்கும். கோடைக்காலத்தில் தாவரம் காய்ந்து போனாலும், அந்தக் கற்கள் பிரமிடுக்கு உள்ளேயே தானே இருக்கும். அதைத் தன் கூடாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தப் பறவை. 

கூடு கட்டத் தெரியாத எல்ஃப் ஆந்தை

இவ்வகை ஆந்தைகள் பெரும்பாலும் கள்ளிச் செடிகளின் நடுவே வசிக்கும். இது 38 செ.மீட்டர் நீளமே உடையது. உலகிலுள்ள சிறிய வகைப் பறவைகளில் இதுவும் ஒன்று. கூடுகட்டத் தெரியாத இந்த ஆந்தைகள் பகலில் மரங்கொத்திப் பறவைகள், மரங்களில் ஏற்படுத்தியிருக்கும் மரப் பொந்துகளில் வசிக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும். புழுக்கள், வெட்டுக் கிளிகள் போன்றவற்றை இது விரும்பி உண்ணும்.

பறக்காத "ரோடு ரன்னர்' பறவை

அமெரிக்காவில் தென்மேற்குப் பகுதிகளிலும் மெக்சிகோவிலும் காணப்படும் ரோடுரன்னர் என்ற பறவை பறக்காது. ஆனால் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

இந்தப்பறவை பாம்பு, பல்லி மற்றும் மண்ணுக்குள் இருக்கும். பூச்சிகளைப் பிடித்து பாறையில் அடித்துக் கொன்ற பிறகே உண்ணும்.

அப்பா- அம்மா தெரியாத பறவை

ஆஸ்திரேலியாவின் மாலிபவுல் என்னும் பறவை ரொம்ப விநோதமானது. இந்தப்பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில் தாய்ப்பறவை மூட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடி வைத்துவிட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளி வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடும். (அந்த அளவில் அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன) இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை.

தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. இந்தப் பறவை பற்றி இன்னொரு விசேஷமான தகவல் பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இது தான்.

ஜெயின்ட் பெட்ரெல்ஸ் பறவை

ஜெயின்ட் பெட்ரெல்ஸ் என்பது ஒரு வகைக் கடல் பறவை. பனிக்கட்டியுள்ள கடல் பிரதேசங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பறவைகள் தரையில் இருக்கும் போது அளவுக்கு அதிகமாக உணவு உண்ணும் பறக்க ஆரம்பிக்கும் போது உடல் கனமில்லாமல் இருப்பதற்காக ஓரளவு உணவைக் கக்கிவிடும். 

உறுமும் டானி பறவை

இந்த டானி பறவையின் வாய் தவளை மாதிரி இருக்கும். இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா கண்டத்தைச் சேர்ந்தது. இந்தத் தவளை வாய், பூச்சிகளைப் பிடிக்க பயன்படுகிறது.

இதனுடைய அலகு பரந்து வளைந்து இருக்கும். இறக்கைகளும், உடலும் மிகவும் மிருதுவாக இருக்கும். இதனுடைய கால்கள் குட்டையாகவும் பாதங்கள் சிறியதாகவும் பலமற்றதாகவும் இருக்கும்.

சோம்பேறித்தனமான பறவை . பறவை இனங்களிலேயே பறக்கும் சக்தியற்ற பறவை. இரவில் தரைகள் மீது ஊர்கின்ற பூச்சிகளை பிடித்துத் தின்னும். வாயைச் சுற்றியுள்ள கடினமான கன்ன மீசை இரையைப் பிடிக்க உதவும்.

பகலிலே ஓய்வு எடுக்கும் போது தன்னுடைய இறகுகளை விரித்து வைக்கும். பார்ப்பதற்கு மக்கிப் போன மரத்தின் கிளை போன்று இருக்கும் இறகுகள் மரக்கிளையின் பட்டையின் நிறத்தில் இருப்பதால் எதிரிகள் ஏமாந்துவிடும்.

கிளையின் மீது கண்களை மூடி தலையை மேல் பக்கமாக வைத்துப் படுக்கும். இரவு முழுவதும் ஊம், ஊம், ஊம் என்று ஒரு விரமான உறுமல் சப்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் இந்த டானி பறவை.

பாடும் ஆண் பறவைகள்

பறவைகளுக்கு குரல்வளை கிடையாது. ஆனால் சுவாசக் குழாயின் அடிப்பாகத்தில் பாட்டெழுப்பும் உறுப்பு உண்டு. பாடும் பறவைகளின் பெரும்பான்மையானவை. பெண் பறவைகள் அல்ல. ஆண் பறவைகள் தான்.

பறவை பாடுவது எப்போது?

பறவைகள் தரையில் இருக்கும் போது பாடாது. மரக்கிளைகளில் தான் பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறோம் என்று உணரும் போது தான் பாடும்.

அதிக நாள் வாழும் பறவை

ஃபால்கன்ஸ் என்று ஒரு பறவை இருக்கிறது. இந்த வகைப் பறவை தான் பறவைகள் இனத்திலேயே அதிக நாள் வாழும் பறவையாகும்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/கருவூலம்-விந்தையான-பறவைகள்-3123297.html
3123289 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I Saturday, March 30, 2019 10:00 AM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-3123289.html
3123290 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - II DIN DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - II

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/பிஞ்சுக்-கை-வண்ணம்---ii-3123290.html
3123291 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவுச் சுடர்!: பண்பு - ஜோ.ஜெயக்குமார் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 அந்தக்  கல்லூரி வளாகம் அன்று மாலை மிகவும் பரபரப்பாயிருந்தது. அதற்குக் காரணம் அன்று ஒரு அரசியல் தலைவர் உரையாற்ற ஏற்பாடாகி  இருந்தது. அவரது சுவையான பேச்சால் தமிழகமே மயங்கி இருந்தது! கருத்துச் சுவையுடன் சொற்சுவையும் கூடிய அவரது பேச்சை மக்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது.  

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தலைவர் வரவில்லை. தலைவரின் பேச்சைக் கேட்க எல்லோரும் மிகமிக ஆவலோடு இருந்தனர். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. இருட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் வெகு நேரம் கழித்துத் தாமதமாக வந்து சேர்ந்தார் தலைவர். அவருடை ய பணிச்சுமை அப்படி இருந்தது. 

கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் தலைவரிடம், ""எங்களை வெகுநேரம் காக்க வைத்து விட்டீர்கள்... அதனால் தாங்கள் இன்று நீண்ட நேரம் பேச வேண்டும்...'' என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு மறுமொழியாக, ""எனது காலதாமதத்திற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.... ஆனால் அதிக நேரம் காத்திருந்தவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவதுதான் பண்பு!.... நீண்ட நேரம் காத்திருப்பவர்களை, நீண்ட நேரம் கழித்து அனுப்புவது பண்பல்ல.... எனவே என் உரையை இன்று சுருக்கமாகவே முடித்துக் கொள்கிறேன்... என்று கூறிவிட்டு பேச்சைத் துவங்கினார் அந்தத் தலைவர்! அவர்தான் நம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/நினைவுச்-சுடர்-பண்பு-3123291.html
3123292 வார இதழ்கள் சிறுவர்மணி அகில்குட்டியின் டைரி!:  அப்பப்பா எத்தனை தபால்தலை! -- அகில் குட்டி DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530  

இன்று பெரிய மாமா வந்திருந்தார். அவருடன் சாமிநாதனும்  வந்திருந்தான். விச்சு மாமா கல்யாணத்துக்கு தேங்காய் பை போடறதுக்கு எங்க கூட ஹெல்ப் பண்ணானே,.... அதே சுவாமிநாதன்தான்! கையில் ஏதோ புத்தகம் வைத்திருந்தான். மத்தியானம் எல்லாரும் கேரம் போர்டு ஆடினோம். கேரம் போர்டில் சுவாமிநாதன் கெட்டிக்காரன். நானும், ஜானகி சித்தியும் ஒரு செட்! ரகுவும், சுவாமிநாதனும் ஒரு செட்! மூணு கேம் ஆடினோம்! எல்லாத்திலேயும் சுவாமிநாதன், ரகுதான் ஜெயிச்சாங்க....அப்போ தபால் வந்தது! அப்பாவோட சிநேகிதர் மகனுக்குக் கல்யாணம்னு அழைப்பு வந்திருந்தது! அந்த தபாலில் இருந்த ஸ்டாம்பை சுவாமிநாதன் அழகாகப் பிச்சு எடுத்துக்கிட்டான்! அதை எடுத்துக்கிட்டு அவனோட ரூமுக்குப் போனான்.  நானும் அவன் பின்னாலேயே போனேன்! ரகுவும் கூட வந்தான். அங்கே அவன் கொண்டு வந்த புத்தகத்தை எடுத்தான். அதில் அந்த ஸ்டாம்பை ஒட்டினான். 

""என்னடா அது?'' ன்னு நான் கேட்டேன். சுவாமி சிரிச்சுக்கிட்டே, ""நான் தபால் தலை சேகரிக்கிறேன்...இந்தா பார்....'' அப்படீன்னு சொல்லிட்டு என் கிட்டே அதைக் காண்பிச்சான்....

எனக்கு அதைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆயிரத்துக்கும் மேல தபால் தலை சேகரிச்சி வெச்சிருக்கான்.... ஒவ்வொரு ஸ்டாம்புக்கும் கீழே அந்த ஸ்டாம்போட குறிப்புகள் எழுதி வெச்சிருந்தான்.  அப்பப்பா! எத்தனை அபூர்வமான தகவல்கள், சரித்திரக் குறிப்புகள்! ஒரு ஸ்டாம்ப் சேகரிக்கிறதிலே இவ்வளவு விஷயம் இருக்கான்னு எனக்கு ஆச்சரியமாப் போச்சு! அன்னைக்கு நானும், ரகுவும் அதை ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டே இருந்தோம்! சுமார் நூற்றுக்கணக்கான குறிப்புகளைப் படித்தோம்! இரண்டு மூணு நாட்கள் அந்த ஸ்டாம்ப் ஆல்பத்திலே நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டோம்! இந்திய சரித்திரத் தலைவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், அபூர்வப் பறவைகள், விலங்கினங்கள், பாரம்பரியச் சின்னங்கள் போன்ற எல்லாவற்றையும் பார்த்தோம்! சுவாமி அழகாகக் குறிப்பும் எழுதி வெச்சிருந்தான்! ஸ்டாம்ப் சேகரிக்கறதுலே இவ்வளவு சுவாரசியமும், உபயோகமான தகவல்களும் இருக்கறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு! 

""நாமும் இது மாதிரி ஸ்டாம்ப் சேர்க்கலாமாக்கா!...'' என்று ரகு கேட்டான். 

""வேண்டாம்!.... அதான் சுவாமி சேர்க்கிறானே!.... வேறு ஏதாவது உபயோகமாகச் செய்வோம்....அவனிடம் இல்லாத அபூர்வமான ஸ்டாம்ப் கிடைச்சால் அதை சுவாமிக்கு அனுப்புவோம்!... அவனும் சந்தோஷப்படுவான்''

""அகில், நானே உங்களைக் கேட்கலாம்னு நெனைச்சேன்....'' அப்படீன்னான் சுவாமி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/அகில்குட்டியின்-டைரி--அப்பப்பா-எத்தனை-தபால்தலை-3123292.html
3123294 வார இதழ்கள் சிறுவர்மணி தெரிந்து தெளிதல் DIN DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 பொருட்பால்   -   அதிகாரம் 51   -   பாடல் 6

அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர் 
பற்றிலர்; நாணார் பழி.

-திருக்குறள்

குறள் பாட்டு


சுற்றத்தாரைச் சேராமல் 
தூரத்தில் விலகியிருப்பவர் 
ஒட்டுதல் பற்றுதல் இல்லாமல் 
ஒதுங்கிப் பதுங்கி வாழுவார்

பற்றில்லாமல் இருப்பதால் 
யாரும் காண மாட்டாரென்று 
பழிக்கு நாண மாட்டார்கள் 
அவரை நம்பக் கூடாதே.

- ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/தெரிந்து-தெளிதல்-3123294.html
3123295 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! உ.இராஜமாணிக்கம், கடலூர். DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530  

 • உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்
 • முயற்சியை ஒருவன் நிறுத்திவிடும் அதே விநாடி அவனது சக்தி அவனை விட்டு விலகிவிடுகிறது! - எமர்சன்
 • வணங்கத் தொடங்கினால் வளரவும் தொடங்குவோம்! - கோல்ட்ரிட்ஜ்
 • செயல்களைக் கடினமாக்குவது சோம்பல்!.... எளிமையாக்குவது சுறுசுறுப்பு! - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
 • வளமாக வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையிலோ நண்பர்களை நீ அறிவாய்! - ரஸ்கின்
 • நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போன்று பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது! - நபிகள் நாயகம்
 • மனிதன் வெற்றியடைய தூய்மை, பொறுமை, விடாமுயற்சியுடன் அன்பும் இருந்தாக வேண்டும். - சுவாமி விவேகானந்தர்
 • இடையறாத பிரார்த்தனை இறைவனின் காதுகளில் நிச்சயம் விழும்! - கர்மயோகி
 • நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிடில் வாழ்க்கை பெருஞ்சுமை ஆகிவிடும். - பெர்னார்ட் ஷா
 • தூக்கி எறிகிற குதிரையைவிட சுமக்கிற கழுதை எவ்வளவோ மேல். - ரிச்சர்ட் ஸ்டீலி
]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/பொன்மொழிகள்-3123295.html
3123296 வார இதழ்கள் சிறுவர்மணி நம்பிக்கை!: முத்துக் கதை! - செல்வகதிரவன் PTI Saturday, March 30, 2019 10:00 AM +0530 அந்த ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கத்தில் மாடுகள், ஆடுகள் ஏன்?... குதிரைகள் கூட நீர் போன போக்கில் அடித்துப் போயின. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றின் இருகரைகளையும் தொட்டு வெள்ள நீர் ஒடுவதைக் காண ஜனங்கள் குழுமியிருந்தார்கள்.

ஆற்று வெள்ளம் பார்க்க அப்பாவுடன் வந்திருந்தாள் சிறுமி சித்ரா. அவள் அப்பாவிடம் அர்த்தம் பொதிந்த கேள்வி ஒன்றைக் கேட்டாள். 

""அப்பா, ஆடு, மாடு குதிரை எல்லாம் பலமானதுதானே..... தண்ணீரை அவைகளால் எதுத்து வர முடியலையே.... சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய வெள்ள நீரை எதுத்து நீந்தியும் நீர் போகிற போக்கில் போய் விளையாடுதுங்களே...''

""நம்பிக்கைதான் சித்ரா!.... வெள்ளத்தில் அடிச்சுட்டுப் போகிற ஆடு, மாடுகளைத் தூக்கிக் கரையில் போட்டோம்னு வை... அதுங்க பொழைச்சுக்கிடுங்க.... மீன்களைத் தூக்கிப் போட்டா என்ன ஆகும்?.... செத்துப் போயிடும்!.... தண்ணீர் நம்மளக் காப்பாத்தும்னு தண்ணீர் மேலே மீன் அளவில்லா நம்பிக்கை வெச்சிருக்கு!....அதனால தண்ணியும் மீன்கள் எதுத்துப் போறசதுக்கும் தண்ணீர் போன போக்கில் போறதுக்கும் அனுமதிக்கிறது...''

அப்பாவின் பதில் சித்ராவின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்தது. ஆது மட்டுமல்ல.... யார் மீதும், எதன் மீதும் பரிபூரண நம்பிக்கை வைத்தால் நன்மைகளே கிடைக்கும் என்கிற கருத்தையும் அவளின் மனதில் விதைத்தது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/நம்பிக்கை-முத்துக்-கதை-3123296.html
3123298 வார இதழ்கள் சிறுவர்மணி பாராட்டுப் பாமாலை!  36: லிடியனின்  உலக சாதனை! - ஜனனி ரமேஷ் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530
சென்னை நகரின் சீர்மிகு இடமாம்
சாலி கிராமம் பகுதியில் வாழும் 
அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்
அன்பு மகனாம் ஆருயிர் "லிடியன்'

என்னே திறமை என்னே திறமை
என்றே உலகம் வியந்து போற்ற 
சின்னஞ்சிறிய பன்னிரு வயதில் 
சாதனை படைத்தான் கீர்த்தி பெற்றான்

கடந்த வாரம் அமெரிக் காவில் 
கலையில் சிறந்த கலைஞர்க் கிடையே 
நடந்து முடிந்த "பியானோ' போட்டியில் 
நர்த்தனம் ஆடின லிடியன் விரல்கள்!

இடர்கள் தாண்டி போட்டி போட்ட 
இருபத் தெட்டு நபர்களை வென்று 
அடடா வென்றே புகழும் வண்ணம் 
அகிலம் போற்ற வாகை சூடினான்

இமிழ்கடல் சூழ்ந்த இந்திய நாட்டின் 
இணையிலா கலைஞன் என்ற சிறப்புடன் 
அமிழ்தினும் இனிய நற்றமிழ்க் கலைஞன் 
அருந்தமிழ்ப் புதல்வன் கூடுதல் பெருமை

நிமிடம் ஒன்றில் அதிக "பீட்' களைப் 
பியானோ கருவியில் இசைத்துக் காட்டித் 
தமிழர் மாண்பை உலகில் உயர்த்திய 
தமிழ்த் தும்பி வாழ்க வாழ்கவே!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/பாராட்டுப்-பாமாலை--36-லிடியனின்--உலக-சாதனை-3123298.html
3123299 வார இதழ்கள் சிறுவர்மணி பாராட்டுப் பாமாலை!  36: லிடியனின்  உலக சாதனை! - ஜனனி ரமேஷ் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530
சென்னை நகரின் சீர்மிகு இடமாம்
சாலி கிராமம் பகுதியில் வாழும் 
அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்
அன்பு மகனாம் ஆருயிர் "லிடியன்'

என்னே திறமை என்னே திறமை
என்றே உலகம் வியந்து போற்ற 
சின்னஞ்சிறிய பன்னிரு வயதில் 
சாதனை படைத்தான் கீர்த்தி பெற்றான்

கடந்த வாரம் அமெரிக் காவில் 
கலையில் சிறந்த கலைஞர்க் கிடையே 
நடந்து முடிந்த "பியானோ' போட்டியில் 
நர்த்தனம் ஆடின லிடியன் விரல்கள்!

இடர்கள் தாண்டி போட்டி போட்ட 
இருபத் தெட்டு நபர்களை வென்று 
அடடா வென்றே புகழும் வண்ணம் 
அகிலம் போற்ற வாகை சூடினான்

இமிழ்கடல் சூழ்ந்த இந்திய நாட்டின் 
இணையிலா கலைஞன் என்ற சிறப்புடன் 
அமிழ்தினும் இனிய நற்றமிழ்க் கலைஞன் 
அருந்தமிழ்ப் புதல்வன் கூடுதல் பெருமை

நிமிடம் ஒன்றில் அதிக "பீட்' களைப் 
பியானோ கருவியில் இசைத்துக் காட்டித் 
தமிழர் மாண்பை உலகில் உயர்த்திய 
தமிழ்த் தும்பி வாழ்க வாழ்கவே!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/பாராட்டுப்-பாமாலை--36-லிடியனின்--உலக-சாதனை-3123299.html
3123300 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: கோடைக்காலம் வந்தது! கடலூர் நா.இராதாகிருட்டிணன் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530
குளிரும் பயந்து ஓடிடவே 
கோடைக் காலம் தொடங்கியதே!

ஒளிரும் சூரியன் ஆட்சியிலே
உடலை வெயிலும் வாட்டிடுதே!!

மண்ணும் பொன்னும் உருகிடுதே
மண்ணில் பயிர்கள் கருகிடுதே!

தண்ணீர் எல்லாம் வற்றிடுதே
தாகம் நமக்கு மிகுந்திடுதே!

தண்ணீர் நிறைய குடித்திடணும்
தலைக்கு எண்ணெய் தேய்த்திடணும்

கண்களைக் கவனமாய்க் காத்திடணும்!
குளிர்ந்த நீரில் குளித்திடணும்!

பருத்தி ஆடை நம்முடலைப் 
பாது காப்பாய் வைத்திருக்கும்!

அருவியாய் வியர்வை கொட்டாமல் 
அதுவும் நம்மைக் காத்திருக்கும்!

நீருடன் மோரும் இளநீரும் 
நமதுடல் சூட்டைத் தணித்துவிடும்!

சீருடன் உடலை வைத்திருந்தால் 
சித்திரை வெயிலும் பணிந்து விடும்!

வெய்யில் கொளுத்தும் நேரத்தில் 
வீதியில் வேண்டாம் விளையாட்டு!

செய்யும் செயல்கள் இனிதானால் 
சிறந்திடும் நமது உடற்கட்டு!

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/கதைப்-பாடல்-கோடைக்காலம்-வந்தது-3123300.html
3123301 வார இதழ்கள் சிறுவர்மணி சூப்பர் சிவா! - 2: காப்பியடிச்சு மாட்டிக்கிட்டான்!..... சுகுமாரன் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530  

விக்டர் சார் எல்லோரையும் பேப்பர் எடுக்கச் சொன்னார்.... பேப்பரில் "போயம்' எழுதி வைத்திருக்கிறார்களா என்பதை த் தெரிந்துகொள்ள உயர்த்திக் காட்டச் சொன்னார். அவனும் தைரியமாகக் காட்டினான். 

விக்டர் சார் "ஸ்டார்ட்' என்று சொன்னதும் சிவா தாளில் இருந்த தடத்தின் மேல் எழுதினான். 

எல்லோரும் எழுதிய பிறகு விக்டர் சார், போயமை திருத்துவதற்கு பக்கத்தில் இருப்பவனிடம் மாற்றிக் கொள்ளச் சொல்லுவார். "மிஸ்டேக்' எண்ணிக்கையை எழுதச் சொல்வார். இது வழக்கமாக நடப்பது. 

இன்று முன் பெஞ்சில் இருக்கும் மாணவனிடம் மாற்றிக் கொள்ளச் சொன்னார். சிவாவின் கெட்ட நேரம் முன் பெஞ்சில் அருள் இருந்தான். 

ஒரு "மிஸ்டேக்' கூட இல்லாததைப் பார்த்து திகைத்து விட்டான்! சிவா எப்படி இங்கிலீஷ் படிப்பான் என்பது அவனுக்குத் தெரியுமே! 

அருள் சிவா பேப்பரை ஆராய்ந்தான். போயமை தடம் ஏற்படுத்தி அதன் மேல் எழுதியிருப்பதை அருள் கண்டுபிடித்து விட்டான். விக்டர் சாரிடம் கொடுத்து கண்டுபிடித்ததை சொல்லியும் விட்டான்!

அருள் பேப்பரை தன்னிடம் கொடுக்காமல் சாரிடம் கொண்டுபோய்க் கொடுக்கும்போதே சிவாவுக்கு விளங்கிவிட்டது! உள்ளுக்குள் பயமும் வந்தது. 

விக்டர் சார் உடனடியாகக் கூப்பிடுவார் என்று நினைத்தான். அவர் கூப்பிடவில்லை. கேள்விகளுக்கு கரும்பலகையில் பதில் எழுதிப் போட ஆரம்பித்தார். மாணவர்கள் எல்லோரும் நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தார்கள். சிவாவும் எழுதினான். ஆனால் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. "டிரேஸ்' பண்ணி எழுதியதை அவர்கள் கண்டுபிடிக்கவில்லையோ என்று நினைத்து நிம்மதி அடைந்தான். அந்த நிம்மதி நீடிக்கவில்லை. சார் அவனைக் கூப்பிட்டார். 

சிவாவை ஒருமுறை உற்றுப் பார்த்த அவர் அவனைப் பாராட்டுவதுபோல் கேட்டார். 

""டேய், புத்திசாலித்தனமா காப்பி அடிக்கிறியோ?'' 

""இல்ல சார்.... நான்  காப்பி அடிக்கவில்லை சார்...'' என்று சிவா மறுத்தான்.

""உண்மையைச் சொல்லு.... இல்லைன்னா உன்னை ஹெட்மாஸ்டர்ட்ட அனுப்பிடுவேன், அவர் தோலை உரிச்சுடுவார்'' என்று விக்டர் மிரட்டினார். ஆனால் சிவா அசையவில்லை.   

இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும் விக்டர் சார் அவனை "ஹெட் மாஸ்டர்' அறைக்கு அழைத்துச் சென்றார்.

அவர் கையில் அவன் எழுதிய பேப்பர் இருந்தது. பலி இடுவதற்குச் செல்லும் ஆடு போல் அவன் பின்னால் நடந்தான்.  

இரண்டாவது பீரியட் முடிந்ததும் "இன்டெர்வெல்'  என்பதால் மாணவர்கள் எல்லோரும் வெளியே இருந்தார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் தம்பியும் எதிரே வந்தான்.  அண்ணன் தலை குனிந்து செல்வதை திகைப்போடு பார்த்தான். பின்னால் வந்த செல்வத்திடம் விசாரித்தான். ""உங்க அண்ணன் காப்பியடிச்சு மாட்டிக்கிட்டான்...'' என்று உண்மையைக் கூறிவிட்டான். 

தம்பிக்கு விஷயம் தெரிந்துவிட்டதால் சிவாவுக்குக் கவலை ஏற்பட்டது! அவன் செய்த தவறு வீட்டுக்குத் தெரியாமல் இருக்க என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். 

சிவாவை "ஹெட் மாஸ்டர்' அறைக்கு வெளியே வைத்துவிட்டு விக்டர் சார் உள்ளே சென்றார். 

சிறிது நேரம் கழித்து அவன் அழைக்கப்பட்டான். விக்டர் சார் அவனுடைய பேப்பரில் உள்ள தடங்களை காட்டிக் கொண்டிருந்தார். அதை ஹெட்மாஸ்டர் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பற்களை நறநறவென்று கடித்தார்! இந்தச் சின்ன வயசிலேயே இவ்வளவு மூளை வேலை செய்கிறதா?...காப்பி அடிக்கிறதுக்கு காட்டுகிற திறமையை படிக்கிறதுலே காட்ட வேண்டிதுதானே!....''  என்று கேட்டார். 

சிவா காப்பியடிக்கவில்லை என்றதும் ஹெட்மாஸ்டருக்கு ஆத்திரம் வந்தது. மேசையிருந்த பிரம்பை எடுத்து விளாசினார். அடி வாங்கிய கையை பின்பக்கம் டிரவுசரில் சிவா தேய்த்தான். வலியைத் தாங்கமுடியாமல் ""இனிமே காப்பியடிக்க மாட்டேன் சார்...'' என்று சொல்லி அழுதான். 

அடிப்பதை நிறுத்திய ஹெட்மாஸ்டர் அவன் எழுதிய பேப்பரைக் கசக்கி அவன் முகத்தில் வீசியெறிந்தார்! அதை எடுத்துக்கொண்டு சிவா வெளியே வந்தான். 

அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த "டிரில் மாஸ்டர்' அவன் அழுதுகொண்டு வருவதைப் பார்த்தார். ஹெட் மாஸ்டர் அறைக்குள் சென்ற அவர் சிவா செய்த காரியத்தை அறிந்துகொண்டார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். 

ஆப்பம் மாதிரி உள்ளங்கை வீங்கியிருப்பதை சிவா அவ்வப்போது பார்த்துக்கொண்டான். சில நேரம் "விண்' என்று வலி எடுக்கும். அப்போது கையை பின் பக்கம் துடைத்துக் கொண்டான்.

அண்ணன் செய்வதை தம்பி உதயன் பார்த்தான். தம்பி பார்ப்பதை அண்ணனும் பார்த்தான். தம்பிக்கு தன் மீது இரக்கம் வரும், இரக்கத்தின் காரணமாக வீட்டில் தான் காப்பியடித்து அடி வாங்கியதை சொல்ல மாட்டான் என்று சிவா நினைக்கவில்லை. 

தம்பி வாய் திறக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவன் தின்பதற்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து அவன் வாயை அடைக்க வேண்டும். சிவாவிடம் காசு எதுவும் இல்லை. காசு கிடைக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்தான். வீட்டில் மளிகைக் கடைக்கு அனுப்பினால் பொருள் வாங்கும்போது "கமிஷன்' கிடைக்கும். ஆனால் இந்த வாரம் அனுப்ப மாட்டார்கள். அதனால் கமிஷன் கிடைக்க வழியில்லை. 

சந்திரா அக்கா கடைக்கு அனுப்புவார்கள். ஆனால் "கமிஷன்' அடிக்க முடியாது. ஆறுமுகம் கடையில் கொசுறாக தூள் வெல்லம் கொடுப்பார்கள். அதைத் தம்பிக்குக் கொடுத்தால் வீட்டில் சொல்லாமல் இருப்பான். என்று சிவா நினைத்தான். அதை தம்பியிடம் சொன்னான். அவனும் "சரி' என்றான். இப்போது சிவாவுக்கு நிம்மதியாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக சந்திரா அக்கா வீட்டுக்குப் புறப்பட்டான். அண்ணன் புறப்படுவதை தம்பி கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டான். கிடைக்கபோகும் வெல்லத்தை நினைத்து இப்போதே அவன் வாயில் எச்சில் ஊறியது. 

வாசல் கதவைத் திறந்து கொண்டு சிவா வெளியே போவதைப் பார்த்து அம்மா, ""டேய், எங்கேடா போறே,.... ஸ்கூல்லேர்ந்து வந்ததும் வராதுமா...'' என்று குரல் கொடுத்தாள்.

""இதோ வர்றேம்மா....'' என்று சிவா கதவை சாத்தினான். வீங்கிப் போயிருந்த வலது கையை கால் சட்டைப் பைக்குள் வட்டு மறைத்திருந்தான்.

சந்திரா அக்கா வீடு எதிர் வரிசையில் அவனுடைய வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்த தெருவிலுள்ள பிள்ளைகளுக்கு சந்திரா அக்காதான் கதை சொல்லுவாள். விடுமுறை நாட்களில் சந்திரா அக்காவின் அண்ணன் கிருஷ்ணனுடன் சேர்ந்து சிவா காடு மேடெல்லாம் சுற்றித் திரிவான். 

"அக்கா' என்று கூப்பிட்டுக்கொண்டே சிவா வீட்டுக்குள் போனான். அக்காவைக் காணவில்லை. 

"இங்கே வாடா.... அக்கா ஊருக்கு போயிருக்கா....'' என்று சந்திரா அக்காவின் அப்பா அவனைக் கூப்பிட்டார். 

""கடைக்குப் போய் மூக்குப்பொடி வாங்கிட்டு வா'' என்று வேலை வைத்தார். அவனைத்தான் மூக்குப்பொடி வாங்க அனுப்புவார். சந்திரா அக்காவிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது மூக்குப்பொடி வாங்கி வரச் சொல்லுவார். அவன் போக மாட்டேன் என்பான். அவன் கடைக்கு போயிட்டு வரும் வரை அக்கா கதை சொல்வதை நிறுத்துவார். அதற்குப் பிறகுதான் அவன் கடைக்குப் போவான். 

சிவா கடைக்குப் போய் ரத்தினம் பட்டணம் பொடியை கேட்டு வாங்கினான். கடைக்காரன் சிறு மட்டையில் வைத்து மடித்துக் கொடுத்தான். அந்த மட்டை எப்போதும் சந்திரா அக்கா அப்பாவின் வேட்டி இடுப்பு மடிப்பில் வைத்திருப்பார்.

தொடரும்....

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/சூப்பர்-சிவா---2-காப்பியடிச்சு-மாட்டிக்கிட்டான்-3123301.html
3123302 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530
""காம்பவுண்ட் சென்டென்ஸ்க்கு  உதாரணம சொல்லு''
""நோட்டீஸ் ஓட்டாதீர்கள், இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள் சார்''

-சி.பன்னீர் செல்வம், செங்கல்பட்டு

 

""பசு மாடு ஏன் துள்ளிக்கிட்டு இருக்கு?'' 
""கன்னுக்குட்டி மில்க் ஷேக் கேட்டிருக்கும்!...''

எம்.ஏ.நிவேதா, 
திருச்சிராப்பள்ளி 620015.

 

""படுக்கையில் எந்தப்பக்கம் படுத்துக் கொள்வது நல்லது?''
""மேல் பக்கத்தில்''

எம்.ஏ நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

 

""பூனை குறுக்கே ஓடினா நல்லதா கெட்டதா?''
""க்ரீன் சிக்னல் போட்டிருக்கும் போது ஓடினா அதுக்க நல்லது. 
அடி படாம ஓடிடும்.''

என். பர்வதவர்த்தினி, சென்னை

 

""உங்க அக்கா  இப்பதான் சமைக்க கத்துகிறதா சொன்னியே இன்று காலையில் என்ன சாப்பிட்டே?''
""இரண்டு கிளாஸ் நிறைய உப்புமா குடித்தேன்''

டி.மோகனதாஸ்,  95ஏ, காமராஜபுரம்  நாகர்கோவில்

 

""அதோ போறாரே,...  அவரு சென்னைக்கு வரும் போது ஒரே கிழிஞ்ச சட்டை தான் இருந்தது!... இப்போ கோடி கணக்கிலே  தெரியுமாடா?''
""அவ்வளவு கிழிசல் சட்டைகளை என்ன பண்ண போறாரு?

டி.மோகன்தாஸ், நாகர்கோவில்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/கடி-3123302.html
3123303 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்: தண்டனை கோ. பாலசுப்பிரமணியன் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530
காட்சி-1,    
இடம்: மாணிக்கத்தின் வீடு   
நேரம்: காலை 7 மணி
மாந்தர்: மாணிக்கம், அவனது மனைவி மஞ்சம்மா, மகள் பொன்னி,
மகன் கணேஷ்

மாணிக்கம்: ஏ மஞ்சம்மா.... எவ்வளவு நேரம்... சீக்கிரம் வா
மஞ்சம்மா: தோ.... வந்துட்டேங்க.... இந்தாங்க. (சைக்கிள் சாவியைக் கொடுக்கிறான்)
மாணிக்கம்: சாவியை வாங்கிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மகன் கணேஷைப் பார்க்கிறான்)
தூங்கட்டும்...தூங்கட்டும்... மஞ்சம்மா, புள்ளய பத்தரமா பாத்துக்க. வேளா வேளைக்கு ஆகாரம் கொடு. அடுத்த வருஷம் புள்ளைய கான்வெண்டு ஸ்கூல்ல சேக்கணும். அவன் நல்லா படிச்சி பெரிய வேலைக்குப் போயி பணக்காரனா ஆவனும். நான் வரேன். இப்ப கிளம்பினாத்தான் பஞ்சாலைக்கு நேரத்துக்குப் போக முடியும். டிபன் பாக்சைக் கொண்டா..
மஞ்சம்மா: இந்தாங்க (டிபன் பாக்சைக் கொடுத்தபடியே) ஏங்க....
மாணிக்கம்: என்னடி இழுக்கிற... சீக்கிரமா சொல்லு.. நாழியாவுது...
மஞ்சம்மா: ஏங்க நீங்க செஞ்சது உங்களுக்கே நல்லா இருக்கா?
மாணிக்கம்: என்னடி செஞ்சேன்... எது நல்லாருக்கா?
மஞ்சம்மா: முந்தா நாளு ராத்திரி பக்கத்துவீட்டு செல்வம் அண்ணனோட வெக்கப் போருல நெருப்பு வச்சததான் சொல்றேன்.
மாணிக்கம்: என்ன உளர்ற? நான் தான் வச்சேன்னு உனக்கு யாரு சொன்னா?
மஞ்சம்மா: அவரு பொண்ணு காவேரிதான் நம்ம பொன்னிகிட்ட சொல்லியிருக்கா. ஏங்க இப்படி செஞ்சீங்க?
மாணிக்கம்: ஏய், பொன்னி, இங்க வா! (வருகிறாள்) காவேரி உங்கிட்ட என்ன சொன்னா?
பொன்னி: அப்பா! அது வந்து... முந்தா நாள் ராத்திரி செல்வம் மாமா அவங்க வீட்டு தோட்டது ரூம் சன்னல் வழியா பாத்தப்போ, நீங்க வெக்கப் போருக்கு நெருப்பு வச்சிட்டு ஒடி வந்த நம் வீட்டுக்குள் நுழைஞ்சிங்களாம். உடனே அவர் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி எல்லாருமா சேந்து நெருப்பை அணைச்சிட்டாங்களாம். நீங்க தான் நெருப்பு வச்சிங்கன்னு அவர் யாருகிட்டேயும் சொல்லலயாம். இதுதான்ப்பா காவேரி சொன்னா.
மாணிக்கம்: ஆமாம்! நான் தான் நெருப்பு வெச்சேன். அதுக்கென்னா இப்போ? அவனோட பணக்காரத் திமிரு அடங்கட்டும்னு தான் அத செஞ்சேன்.
மஞ்சம்மா: என்னங்க அநியாயம் இது? செல்வம் அண்ணா எவ்வளவு நல்லவரு? அவருக்குப் போயி!...மாணிக்கம்: வாய மூடு. நியாயம் பேச வந்துட்டா. ஏய் பொன்னி இனிமே அந்தக் காவேரியோட போறதயோ, பேசறதயோ பாத்தேன். உன்ன அந்த இடத்திலேயே கொன்னுபுடுவேன். ஜாக்கிரதை!
(சைக்கிளைத் திறந்து ஏறி வேகமா பெடலை மதித்துக் கொண்டு செல்கிறான்)

காட்சி-2
இடம்: செல்வத்தின் வீடு
காலம்: காலை 8 மணி
மாந்தர்: செல்வம், அவன் மனைவி அம்மணி

செல்வம்: அம்மணி! டிபன் எடுத்துவை. இன்னிக்கு நம்ம கடைக்கு லோடு வருது. சீக்கிரம் போயி கடைய தொறக்கனும்.
அம்மணி: சரிங்க. இதோ எடுத்து வைக்கிறேன் சாப்பிட வாங்க.
(உணவை எடுத்து வைத்துக் கொண்டு) ஏங்க...
செல்வம்: என்ன அம்மணி?
அம்மணி: நம்ம பக்கத்து வீட்டு மாணிக்கம் அண்ணண் ஏங்க இப்படி இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசிலேருந்தே கூட்டாளியா இருந்தீங்க. இப்ப ரெண்டு வருஷமா ஏங்க அந்த அண்ணண் இப்படி மாறிட்டாரு?
செல்வம்:என்ன செய்யறது? அவனும் நல்லவன் தான். பஞ்சாலையிலே வேலை செஞ்சி கஷ்டப்படுறான். நான் டவுன்ல மளிகைக் கடை வச்சு ஒரளவுக்கு வசதியாயிட்டேன். என்னோட முன்னேற்றம் அவனுக்குள் ஒரு தப்பான எண்ணத்த வளத்திடுச்சி. நானும் பல தடவை அவனோட பேசிப் பாத்தேன். ஆனா அவன் முகங்ககொடுக்க மாட்டேங்குறான்.
அம்மணி: அவர் உங்களப் பகையாவே நெனக்கிறாருங்க. இல்லேன்னா நம்ம வீட்டு வைக்கப் போருக்கு நெருப்பு வெக்க மனசு வருமா? அவரு தான் கொளுத்தினார்ன்னு தெரிஞ்சிருந்தும் ஊராருக்கு நீங்க அவரைக் காட்டிக் கொடுக்கலே
செல்வம்: விடு அம்மணி. அவன் மனசிலே தப்பான எண்ணம் வளருது. நாம என்ன செய்ய முடியும்.
அம்மணி: என்னவோங்க. நம்ம ரெண்டு குடும்பமும் முன்னப்போல ஒத்துமையா ஆகணும்னு கடவுள வேண்டிக்கிட்டிருக்கேங்க.
செல்வம்: என்னோட வேண்டுதலும் அது தான் அம்மணி. (அப்போது பக்கத்து வீட்டிலிருந்து மஞ்சம்மாவின் கூக்குரல் கேட்கிறது. இருவரும் மாணிக்கம் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள்.)

காட்சி-3
இடம்: மருத்துவமனை
காலம்: மாலை 5 மணி
மாந்தர்: மாணிக்கம், மஞ்சம்மா, பொன்னி, மருத்துவர்

மாணிக்கம்: (ஒடி வந்து கொண்டே, பதறியபடி) மஞ்சம்மா... மஞ்சம்மா... . கணேசுக்கு எப்படி இருக்கு? அவன் நல்லாயிருக்கானா? ஐயோ, கடவுளே...  இப்படியாயிடுச்சே... . நான் என்ன பண்ணுவேன்... மஞ்சம்மா... . மஞ்சம்மா... . டாக்டர் என்ன சொன்னாரு.... சொல்லு
மஞ்சம்மா: பதறாதீங்க...  நம்ம கணேசு இப்ப நல்லாயிருக்கான். காலைல நீங்க கிளம்பி போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புள்ளய பாம்பு கடிச்சிட்டுதுங்க... செல்வம் அண்ணா தான் ஒடிவந்து என்னையும் புள்ளயையும் தன்னோட வண்டியிலே அழைச்சிக்கிட்டு வந்து ஆசுபத்திரியிலே சேத்து, ஊசி, மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டுது. இனிமே பயமில்லேன்னு டாக்டர் சொன்னதுக்கப்புறந்தான் கிளம்பிப் போனாரு. உங்களுக்கும் அவரு தான் தகவல் சொல்லி அனுப்பிச்சாரு.
பொன்னி: அப்பா...  செல்வம் மாமா இல்லேன்னா நம்ம தம்பி நமக்கு இல்லாம போயிருப்பாம்ப்பா.
மாணிக்கம்: ஆமாம் பொன்னி. நான் தான் பாவி. செல்வத்துக்கு ரெண்டகம் நெனைச்சேன். ஆனா அவன் அதன நெனக்காம எம்புள்ளய காப்பாத்திட்டான். இவ்வளோ நாளா அவனை தப்பாவே நெனச்சிக்கிட்டு இருந்தேனே. (அழுகிறான்)
மஞ்சம்மா: அழாதீங்க...  ஏங்க... நீங்க உங்க பிடிவாதத்தை விட்டுட்டு, அவருகிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க. தப்பில்லங்க
மாணிக்கம்: மஞ்சம்மா...  நான் மன்னிப்பு கேக்கத்தான் நினைக்கிறேன். ஆனா, அவன் முகத்திலே எப்படி முழிப்பேன். எனக்கு அவனைப் பார்க்கவே வெட்கமாயிருக்கு... .
(மருத்துவர் வருகிறார்)
மருத்துவர்: அவர்களைப் பார்த்து உங்க பையன் பூரணமா குணமாயிட்டான். மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கிறேன். மாத்திரைகள், ஆகாரம் எப்படி கொடுக்கணும்னு நர்ஸ் சொல்லுவாங்க. அதன் படி தவறாமல் கொடுங்கள். உங்க பையனை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு போகலாம்.
மாணிக்கம்: ரொம்ப நன்றிங்க... டாக்டர்
மருத்துவர்: நீங்கள் செல்வத்துக்குத்தான் நன்றி சொல்லணும். உங்கள் பையனை சரியான நேரத்திலே கொண்டு வந்ததால் தான் அவனைக் காப்பாத்த முடிஞ்சிது. அதனால செல்வத்துக்குத்தான் நன்றி சொல்லனும். 
மாணிக்கம்: சரிங்க.. டாக்டர்... வணக்கம்

காட்சி-4
இடம்: பள்ளித் திடல்
காலம்: மதிய  உணவு நேரம்
மாந்தர்: பவானி, காவேரி

இருவரும் உணவு அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
பவானி: காவேரி எங்கப்பா செஞ்ச தப்புக்கு உங்கப்பா சரியான தண்டனை கொடுத்துட்டார்டி
காவேரி: வியப்புடன் என்னடி சொல்றே? எங்கப்பா தண்டனை கொடுத்தாரா? உன் தம்பியை காப்பாத்தி நல்லது தானே செஞ்சாரு. நீ என்னவோ தண்டனை கொடுத்தாருங்கிறியே
பவானி: ஆமாண்டி. உங்கப்பா, எங்கப்பாவை ஊராருக்கு காட்டிக் கொடுக்காததோடு, என் தம்பியையும் காப்பாத்திக் கொடுத்தாரில்லையா? அதப்பாத்து எங்கப்பா  தான் செஞ்ச காரியத்துக்காக வெட்கப்பட்டார். வேதனைப்பட்டார். உங்கப்பாவிடம் வந்து கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டாரில்லியா? அது தான் எங்கப்பாவுக்கு சரியான தண்டனைன்னு சொன்னேன்.
காவேரி: ஓ... நீ...அப்படி சொல்றியா? நீ சொல்றதும் சரிதாண்டி. இப்ப எனக்கு, போனவாரம் நம்ம தமிழ்சார் விளக்கம் சொன்ன குறள் ஞாபகத்துக்கு வருதுடி
பவானி: என்ன குறள்?
காவேரி: "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்' 
என்ற குறளுக்கு சரியான அர்த்தம் நல்ல புரியுதுடி இப்ப!
பவானி: ஆமாண்டி நம்மோட அப்பாக்கள் பழையபடி நண்பர்களாயிட்டாங்க.. அது போதும் ரொம்ப சந்தோஷமாயிருக்கு. வாடி போகலாம்..
(இருவரும் உண்டு முடித்து கை கழுவச் செல்கிறார்கள்)

(திரை)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/அரங்கம்-தண்டனை-3123303.html
3123304 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் -ரொசிட்டா DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530  

1. கேணியைச் சுற்றிப் புதர்...
2. பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம்...
3. தொட்டாலும் குத்தும் பட்டாலும் குத்தும்...
4.  ஐந்து நதிகளுக்கும் ஒரே பாலம்...
5. தரையைத் தடவும் மரம், தச்சர் வெட்டாத மரம்...
6. பற்றி எரிந்தாலும் பக்தியை உருவாக்குவாள்...
7. ஆயிரம் பேர் அணிவகுப்பு ஆனாலும் இல்லை சலசலப்பு...
8. தண்ணீரில் துள்ளி மகிழ்வான், தரையில் துவண்டு போவான்...


விடைகள்:


1. கண் புருவம்
2. வெங்காயம்
3. நெருஞ்சி முள்
4. உள்ளங்கை
5.  துடைப்பம்
6.  கற்பூரம்
7.  எறும்புக்கூட்டம்
8.  மீன்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/விடுகதைகள்-3123304.html
3123305 வார இதழ்கள் சிறுவர்மணி நிலைக்கண்ணாடியும் நிம்மியும் -இடைமருதூர் கி.மஞ்சுளா DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 ஜூலி வளர்க்கும் பூனைக்குட்டியின் பெயர் நிம்மி. பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எந்நேரமும் ஜூலியை விட்டுப் பிரியாமல் அது இருக்கும்.  

அன்று பள்ளிவிட்டு வந்து வெகுநேரமாகியும் நிம்மியைக் காணாமல் ஜூலி தவித்தாள். வாசலில் வரும்போதே "மியாவ்வ்...' என்று குரல் கொடுத்தபடி வந்து மடியில் ஏறி அமருமே... எங்கே போனது இன்று... என்று ஜூலி நிம்மியைத் தேடத் தொடங்கினாள். நிம்மி தென்படவே இல்லை....வாசலிலேயே வருத்தமாக உட்கார்ந்து விட்டாள்.  

ஜூலி ஆசைப்பட்டாள் என்பதற்காக ஜூலி அறையில் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்தார்அப்பா. தினமும் நிலைக் கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு எப்போதும் தன்னை அழகு பார்த்துக் கொண்டே இருப்பாள். அடிக்கடி தன் அம்மாவின் புடைவையை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பேசிச் சிரித்தபடி அழகு பார்ப்பாள். "புடவையை வைத்துக் கொண்டு விளையாடாதே' என்று அம்மா பல முறை கூறியும் அவள் அதைக் கேட்கவில்லை.

ஜூலி இப்படி அடிக்கடி நிலைக்கண்ணாடி முன்பு நின்றுகொண்டு அழகு பார்ப்பதையும், தனக்குத்தானே பேசிச் சிரிப்பதையும், நடனமாடுவதையும் ஒருநாள் நிம்மி பார்த்துவிட்டது.  

வழக்கம்போல் ஒரு நாள் பள்ளிவிட்டு வந்ததும்  ஜூலி தன் அம்மாவின் புடவையை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தனக்குத் தானே பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த நிம்மிக்கு, அவளைப் போல தானும் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. சிறிது நேரத்தில் அம்மாவின் குரல் கேட்டு, ஜூலி அந்தப்புடவையைக் கழட்டி அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டாள்.

அப்போது நிம்மி, அந்தப் புடவைக்குள் புகுந்து கொண்டது. வழுவழுப்பாக இருந்த அந்தப் புடவை அதற்கு மிகவும் பிடித்திருந்தது. மகிழ்ச்சியில் அந்தப் புடவைக்குள் உருண்டு  புரண்டு விளையாடியது. புடவையில் முகத்தை புதைத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்தது.  துள்ளிக் குதித்தது. அந்தப் புடவையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டதால், எதிரில் இருப்பது தெரியாமல் கண்ணாடிக்குப் பின் உருண்டு சென்றது. அதனால் புடவைக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. குரல் கொடுத்து கத்தவும் முடியவில்லை. அப்படியே தூங்கிப் போய்விட்டது.  

ஜூலி வாசலில் சோர்வாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அம்மா,  அவளைக் காரணம் கேட்க, அவளும் "நிம்மியைக் காணும்மா...'  என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

""அட, பூனைக்குட்டியைக் காணோம் என்றால் அலமாரி, பீரோ, பெட்டிக்கு அடியில் போய்ப் பாரு. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும், இல்லையேல் எங்காவது வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கும்... இதற்குப் போய் அழலாமா?'' என்றாள்.

ஜூலிக்கு உடனே பொறி தட்டியது. "ஆமாம், காலையில்  என் அறையில்தானே நிம்மி படுத்திருந்தது.  அங்கிருக்கும் பீரோவுக்குப் பின்னாலோ, இல்லை நிலைக்கண்ணாடிக்குப் பின்னாலோ போய்ப் பார்க்கலாமே...'  என்று உடனே தன் அறைக்குச் சென்று பீரோவிக்குப் பின்னால் எட்டிப் பார்த்தாள், நிம்மி அங்கு இல்லை. நிலைக்கண்ணாடிக்குப் பின்னால் சென்று பார்த்தாள். அம்மாவின் புடவையை ஓர் உருண்டை போல சுற்றிக்கொண்டு நிம்மி அங்கு கிடந்தது. அதை மெல்லமாகத் தூக்கினாள்.  மூச்சுவிட முடியாமல் நிம்மி திணறிக் கொண்டு நெளிந்தது. ஜூலியால் புடவையைப் பிரித்து அதை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அம்மாவைக் கூப்பிட்டாள். அறைக்குள் வந்த அம்மா பதறிப் போய் அந்தப் புடவை உருண்டையை வாங்கி மெல்ல மெல்ல பிரித்தாள். ஒரு வழியாக நிம்மி வெளியே வந்து ஜூலியைப் பார்த்து "மியாவ்வ்..' என்று தழுதழுத்த குரலில் கத்தியது..

""இப்படி செய்துட்டியே ஜூலி.... நிம்மி பாவம் மூச்சு விட முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இதற்காகத்தான் பல முறை உன்னை எச்சரித்தேன், என் புடவையை எடுத்து விளையாடாதே என்று... கேட்டாயா...?'' அம்மா கடிந்து கொண்டாள்.   

""சாரிம்மா.... இனிமே இப்படிச் செய்ய மாட்டேன். சாரி நிம்மிக் குட்டி... உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்....'' என்று அம்மாவிடம் இருந்து அதை வாங்கிக் கட்டி அணைத்துக் கொண்டாள் ஜூலி.

நிம்மி அவளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு அவள் அணைப்பில் அடங்கிப் போனது. இந்தக் காட்சியை அந்தப் பெரிய நிலைக்கண்ணாடி பிரதிபலித்தது. 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/நிலைக்கண்ணாடியும்-நிம்மியும்-3123305.html
3123307 வார இதழ்கள் சிறுவர்மணி மரங்களின் வரங்கள்!: கொன்றை மரம்! பா.இராதாகிருஷ்ணன் DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? 

நான் தான்  கொன்றை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர்  கஸ்ஸியா ஃபிஸூலா என்பதாகும். நான் பேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  என்னை தாமம், நீள்சடையோன், கொன்னை,  சரக்கொன்றை, பிரணவ என்றும் அழைப்பார்கள். சங்கக் காலத்தில் காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்திற்குரிய மரமாக நான் இருந்தேன். நான் தங்க மழை பொழிவதை போல தோற்றத்தைக் கொண்டுள்ளேன்.  கொன்றை மலர் சூடியவன் சிவன். "மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே' என சுந்தரமூர்த்தி நாயனார் சிவனை பெருமையாகப் பாடுகிறார். 

நான் ஏப்ரல், மே மாதங்களில் பூ பூக்கத் தொடங்குவேன்.  அதற்கு முன்னதாக இலைகளை உதிர்க்கவும் ஆரம்பிப்பேன்.  நான் இலையில்லாமல் பொன் மஞ்சள் பூக்களால் நிறைந்து சரம் சரமாக தொங்கி உங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து படைப்பேன். அவ்வளவு அழகாக இருப்பேன். "கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்' எனது பெருமையை கவிஞர் வைரமுத்து ஐயாவும் திரைப்பட பாடலில்  பாராட்டியிருக்கிறார்.  

கேரள மாநிலத்தின் மலர் நான். நம் தமிழ்நாட்டின் மலர் செங்காந்தள். கேரள மக்கள் விஷு பண்டிகையின் போது என்னை வைத்து தான் பூஜை செய்வார்கள்.  தாய்லாந்து நாட்டின் மலரும் நான் தான்.  எனது பூ, இலை, காய் மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக் குணம் உள்ளது. 

பூவையும், இளங்கொழுந்தையும் துவையல் செய்து  சாப்பிட்டால் சர்க்கரை வியாதி மட்டுமல்ல வயிற்றுக் கோளாறு, மேகக் கோளாறு போன்றவைகளும் சரியாகும்.  எனது பூவை அரைத்து காய்ச்சியப் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும், நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது நோய்கள் குணமாகும், ஆவியில் வேக வைத்து, பின் சாறை பிழிந்து அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து குடித்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிவிடும், கஷயாமாக்கிக் குடித்து வந்தால்  நீரிழிவு நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.  

எனது இலையை பசையாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி படர்தாமரை உள்ள இடத்தில் பூசினால் அது ஓடி விடும்.      என் காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை நாம் சமையலில் சேர்க்கும் புளியைப் போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். எனது பட்டை சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனது வேர்ப்பட்டை கஷாயம் இதய நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும்.  என் கனியை குரங்கு, நரி, கரடி விரும்பி உண்ணும். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரின் புராணப் பெயர் கொன்றை வனம். கன்னியாகுமரி மாவட்டம்,  சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம், அருள்மிகு ஆட்சீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பந்தநல்லூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆகிய திருக்கோவில்கள் தலவிருட்சமாக இருக்கிறேன். 

நான் தமிழ் ஆண்டு விக்ருதியை சேர்ந்தவன். மரங்களைப் பேணுவோம், மா நிலம் போற்ற வாழ்வோம்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.    

(வளருவேன்)
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/மரங்களின்-வரங்கள்-கொன்றை-மரம்-3123307.html
3123308 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா -ரொசிட்டா DIN Saturday, March 30, 2019 10:00 AM +0530 கேள்வி: வானவில் இரவில் தோன்றுமா? தோன்றினாலும் மனிதக் கண்களுக்குத் தெரியுமா?

பதில்:   இது கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அதிசயமாக இருந்தாலும் வானவில் இரவில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படி இரவிலும் தோன்றியிருக்கிறது.

இந்த அதிசய நிகழ்வு தோன்றுவதற்குத் தேவையானவை மழை அல்லது பனிமூட்டம் அல்லது தேவையான அளவு ஈரப்பதம் (காற்றில்). 
மேலும்,  நிலா மிக அதிக அளவு சூரியனின் ஒளியை வாங்கிப் பளீரென்று மின்ன வேண்டும்.

இவையெல்லாம் இரவில் நடந்தால் வானவில் தோன்றும். அது மனிதக் கண்களுக்கும் தோன்றும். இதைப் பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

உங்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

இரவில் இப்படித் தோன்றும் வானவில்லுக்கு "மூன்  பெள' (நிலா வில்) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.     

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/30/அங்கிள்-ஆன்டெனா-3123308.html
3119362 வார இதழ்கள் சிறுவர்மணி எண்ணம் போல் வாழ்வு DIN DIN Saturday, March 23, 2019 10:12 AM +0530 அரங்கம்
 காட்சி 1
 இடம் கோபாலன் இல்லம்.
 மாந்தர் - சகோதரர்கள் அண்ணன் கோபாலன், தம்பி கோவிந்தன், இருவரின் தாயார் அலமேலு, கோபாலன் மனைவி பாமா,
 கோவிந்தன் மனைவி ருக்மணி,
 
 கோபாலன் மனைவி பாமா : என்னங்க, உங்க அப்பா சொத்தில் பாதி உங்களுக்கு, பாதி உங்க தம்பிக்கா.. வீடு நிலம் எல்லாம் பாதி பாதியா?...
 கோபாலன் : அது தானே பாமா நியாயம்.. சரி பாதியாக பிரிச்சுக்கறது தானே வழக்கம்.
 பாமா : அது சரி.. நீங்க தானே உங்க அப்பா படுத்த படுக்கையா இருந்தப்போ மருந்து கொடுத்து குளிப்பாட்டி சீராட்டி துணி துவைச்சு அள்ளி கொட்டினீங்க!... உங்களுக்குத் தானே சொத்தில் அதிகம் வரணும்!....
 கோபாலன் : அப்படிச் சொல்லாதே பாமா!.... அப்பா நோயாளியாக இருந்தப்போ வைத்திய செலவுக்கு மூணு லட்சம் தேவைப்பட்டதே!.... தம்பி
 தானே வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த பணத்தை அனுப்பி வச்சான்! அதுக்கப்
 புறம் ஆன செலவு மொத்தமும் அவன் தானே பார்த்தான்! நான் விவசாயம் பண்ணி கடன் தானே வச்சிருந்தேன்! அப்பா காலமானதும் விமானத்தில் வந்து, அவரோட இறுதிச் சடங்குக்கான எல்லா செலவும் அவன்தானே பண்ணினான். நம்ம கடனைக்கூட அடைச்சானே!..... இப்பவும் அம்மாவுக்காக வெளி நாடு போகாம இங்கே சின்ன வேலை பார்த்துக்கிட்டு தங்கிட்டானே.....
 பாமா : பணத்தாலே எல்லாம் ஆயிடுமா!..... உங்கப்பாவுக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் நீங்கதானே செய்தீங்க.... அவரு பணம்தானே அனுப்பிச்சார்!.... மூத்தவருன்னு அவரு உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விட்டுத் தர்றதுதான் நியாயம்!
 கோபாலன் : வேண்டாம் பாமா!....தப்பு வழியில் போகச் சொல்லாதே.
 பாமா : நாளைக்கு பஞ்சாயத்தில் சொத்து பிரிக்கும் போது மேடான ஏழு ஏக்கர் பகுதியையாவது கேட்டு வாங்குங்க. மீதி மூணு ஏக்கர் பள்ளத்தை உங்க தம்பி வச்சுக்கட்டும்!
 கோபாலன் : வேண்டாம்....சரி பாதியா பிரிச்சுக்கலாம் பாமா!
 பாமா : ஹூம்.... நான் சொல்லி என்னத்தைக் கேட்டீங்க..... நான் எனக்கா கேட்கிறேன்.... நம்ம பிள்ளைங்க நாளைக்கு நல்லா, வசதியா இருக்கணுமில்லே!.... அவருக்கு என்ன, ஒரே பிள்ளை! இப்பக்கூட அவரு வெளி நாடு திரும்பி போனா கை நிறைய சம்பாதிச்சுக்குவார்!.... உங்களால் ஒத்தை ரூபா கூட சேர்க்க முடியாது!.... என்னமோ சொல்றதைச் சொல்லிட்டேன்.... அப்புறம் உங்க இஷ்டம்,!
 கோபாலன் : சரி,... உன் இஷ்டப் படி கேட்டுப் பார்க்கறேன்... எனக்கென்னவோ அவன் விட்டுக் குடுத்துடுவான்னுதான் தோணுது!..... ரொம்ப நல்லவன்!
 காட்சி 2
 இடம் - ஆலமரத்தடியில் கிராமத்தார்
 பஞ்சாயத்து கூட்டம்,
 மாந்தர் - பஞ்சாயத்தார், கோவிந்தன், கோபாலன் தாயார் அலமேலு ருக்மணி
 பஞ்சாயத்து தலைவர் : என்னப்பா கோவிந்தா!... உன் அண்ணன், உங்க அப்பா சொத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் மேட்டுப்பகுதியை ஏழு ஏக்கர் கேட்கிறார். பள்ளமா இருக்கிற மூணு ஏக்கரை நீ வச்சுக்கறியா? உனக்கு சம்மதமா?... இல்லே, சரி பாதியா பிரிக்கணுமா.
 கோவிந்தன் : தலைவர் ஐயா!... எங்க அப்பா சாகும் வரை அண்ணன்தான் கிட்டே இருந்து பார்த்துக்கிட்டார்!... நான் வெளி நாட்டில் வேலை பார்த்ததால் கிட்டே இருக்க முடியலே!... அண்ணனே ஏழு ஏக்கர் வச்சுக்கட்டும். மூணு ஏக்கர் எனக்குப் போதும்!... என் அம்மாவை வச்சுக்காப்பாத்துற பாக்கியம் மட்டும் போதும்!... விசாவுக்கு விண்ணப்பிச்சிருக்கேன். வந்ததும் மறுபடி வெளி நாடு போயிடுவேன். அங்கே எனக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் வரும்,. என் அண்ணன் படிக்காதவர். பாவம்!.... விவசாயத்திலே வேறே நஷ்டப் பட்டிருக்கிறார்!...
 அவருக்கு நிலம் கூடுதலா தர்றதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே!.... சந்தோஷம்தான்!...
 தலைவர் : இரு,.... உன் அம்மா கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்கணும்!.... உன் பொஞ்சாதி கருத்தும் கேட்கணும்!....
 என்னம்மா.. உங்க பிள்ளைங்க இப்படி பிரிச்சுக்கிறதுக்கு சம்மதமா.
 தாயார் அலமேலு : பிள்ளைங்க ஒற்றுமையா எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தானுங்க....
 தலைவர் : (கோவிந்தன் மனைவி ருக்மணியைப் பார்த்து ) உனக்கு சம்மதமா?....
 ருக்மணி : சம்மதம்தானுங்க. என் வீட்டுக்காரருக்குத் தெரியாததா?>... அவர் என்ன சொல்றாரோ அது படி இருக்கட்டும்!....
 தலைவர் : சரிப்பா.. கேளுங்க,.... காலமாயிட்ட குப்புசாமி பையன்களான பெரியவர் கோபாலன் மேட்டுப்பகுதி ஏழு ஏக்கர், சின்னவர் கோவிந்தன் பள்ளப்பகுதி மூணு ஏக்கரை பிரிச்சு அனுபவிக்க பஞ்சாயத்து ஏத்துக்குது. இதை ஒரு பாகப் பிரிவினை பத்திரப் பதிவாக பதிவாளர் அலுவலகத்தில் நீங்க பதிவு பண்ணிக்க வேண்டியது. சாட்சியாக நாங்க ஒப்பமிடறோம்.
 (காலம் வேகமாகச் சுழல்கிறது. கோவிந்தன் அயல் நாட்டில் நல்ல உத்யோகத்தில் வருமானம் அதிகம் பெறுகிறான்)
 
 காட்சி - 3
 மாந்தர் - கோவிந்தன், ருக்மணி.
 
 (தொலைபேசி உரையாடல். துபாயில் இருந்து கோவிந்தன் பேசுகிறான்)
 கோவிந்தன் : என்ன ருக்மணி,... எல்லாரும் நல்லா இருக்கீங்ககளா, அம்மா நல்லா இருக்காங்களா?.... மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறாங்களா?.... பசங்க நல்லா படிக்குதா?..... அப்புறம் உனக்கு பல் வலின்னு சொன்னியே.... சரியாபோயிடுச்சா?...... சேதி ஏதும் இருக்கா?...
 ருக்மணி: இருக்குங்க. நம்ம மூணு ஏக்கர் நிலத்தை பள்ளமா இருக்கேன்னு பயிர்வக்காம இருக்கோமில்லியா. மூத்தார் ஏழு ஏக்கர் நல்ல கண்டு முதல்ன்னு அக்கா பாமா சொல்லிக்கிட்டாங்க. போனவாரம் ஒரு தனியார் பெட் ரோலிய கம்பெனி அதிகாரி வந்து நம்ம நிலத்தை அடியில் தோண்டி மண் பரிசோதனை செய்ய வந்தார்ன்னு சொன்னேனே... ஞாபகம் இருக்கா?....
 கோவிந்தன் : நான் தான் சரின்னு சொல்லச் சொன்னேனே!.... அது என்ன ஆச்சு?....
 ருக்மணி : நம்ம இடத்தில் ஒரு பெரிய மெஷின் வச்சு சோதிச்சாங்க, அடி மண்ணை எக்ஸ்ரே என்னவோ காமா கதிராம் வச்சு பரிசோதிச்சாங்க..... நம்ம நிலத்தின் அடியில் பெரிய பெட்ரோலியம் படுகை ஊற்றுக்கு வாயாக நம்ம வயல் இருக்காம். அப்புறம் துரப்பணப் பணிக்கு அனுமதி கொடுத்தோமா.... கச்சா எண்ணெய் பீறிட்டு வருது!... அவங்க இருபது வருஷ குத்தகை எடுத்துக்கிட்டு ஏக்கருக்கு பத்து லட்சம் வீதமும் எடுக்கும் எண்ணெயில் லாப விகிதாச்சாரம் பத்து சதவீதமும் தருவாங்களாம். அது எவ்வளவுன்னு கேட்டேன் வருஷத்துக்கு நாற்பது லட்சம் வருமாம்!.... சாமி கண்ணைத் திறந்துட்டார்!.... நீங்க வந்து, இருபது வருஷ குத்தகைக்கு ஒப்பந்தம் கையெழுத்துப் போடணுமாம்!... நீங்க எப்போ வர்றீங்க?...
 கோவிந்தன் : இதோ,.... இந்த வாரமே வர டிக்கட் போட்டுடறேன்!
 
 (பெட்ரோலியக் கம்பெனியின் லாரிகளில் கச்சா எண்ணெய் செல்கிறது. கோவிந்தனுக்கு பல லட்சம் சொத்து சேருகிறது..செல்வம் கொழிக்கிறஸ்து.. ஊரில் பெரிய மதிப்பு மிக்கவர் ஆகிறார் கோவிந்தன்.பெரிய பண்ணையை நிர்வகிக்கிறார்.)
 
 காட்சி 4,
 இடம் - கோபாலன் இல்லம்,
 மாந்தர் - கோபாலன், பாமா
 
 பாமா: கேட்டீங்களா அநியாயத்தை?....
 கோபாலன்: என்ன அநியாயம் நடந்திடுச்சி!...
 பாமா: மொத்த இடத்தையும் எனக்குன்னு நீங்க பஞ்சாயத்தில் பேசி வாங்கி இருக்கணும். அப்பாவை பார்த்துக்கிட்டதுக்கு... இப்போ உங்க தம்பி அந்த கம்பெனியோட ஒப்பந்தம் பேசி சொந்தமா டவுனில் பெட்ரோல் பங்க் வச்சிட்டார். என்ன ஓட்டம். கார், லாரி, டிராக்டர், நடவு மெஷின், அறுவடை மெஷின் வச்சிருக்கார். ஹூம்..... அந்த் அதிருஷ்டம் எனக்கு இல்லையே?......பெட்ரோல் கொட்டுதாமே அங்கே!.... நம்ம இடம் மேடாம்!.... ஒண்ணும் இல்லியாமே!....
 கோபாலன்: அடியே பாமா.. தம்பி வசதியானதும் நம்ம பிள்ளைங்க படிக்க உதவுறானே.. அது போதாதா. எண்ணம் போல தாண்டி வாழ்க்கை!.... விடு!... அவன் நல்லா இருந்தா நமக்கும் பெருமை தானே!...
 பாமா : ஹூம் .... ருக்மணி போன வாரம் வந்து ஒரு பட்டு புடவை தந்துட்டுப் போனா. பத்தாயிரம் விலையாம். என்ன... ஜரிகைதான் கொஞ்சம் கம்மி!.... கலர் பரவாயில்லே....
 கோபாலன்: திருப்திப் படு பாமா!...... என் தம்பி கோவிந்தன், அவன் மனைவி ருக்மணி ரெண்டு பேருக்குமே நல்ல மனசு! அவங்க நல்ல எண்ணத்துக்கு எங்கேயோ போகப் போறாங்க பார்..
 (ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.... தற்போது கோபாலனும் ஒரு ஸ்கூட்டரில் போகிறார். கோவிந்தன், கோபாலனுக்கு ஒரு காரும் வாங்கித் தந்திருக்கிறார்!... நூறு ஏக்கர் பரப்பளவுள்ள கோவிந்தன் விவசாயப் பண்ணை, மற்றும் இருநூறு பசுக்கள் அடங்கிய பால் பண்ணையை அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாகப் பார்த்துக் கொள்கின்றனர்! அண்ணன் கோபாலனுக்கு ஒரு நல்ல வீடும் கட்டித் தந்திருக்கிறார் கோவிந்தன்! )
 
 காட்சி - 5
 இடம் - கோபாலன் வீடு
 மாந்தர் - கோபாலன், பாமா.
 
 (பாமா கையில் காபியுடன் வருகிறார்.... கோபாலன் அவளிடம் காபியை வாங்கிக் கொள்கிறார்)
 
 கோபாலன் : இப்போ என்ன சொல்றே, என் தம்பியைப் பற்றி?....
 பாமா: நான்தாங்க ரொம்ப தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன்!....அவரோட நல்ல மனசு எனக்கில்லாமப் போச்சேன்னு வருத்தமா இருக்கு!.... ருக்மணிக்குக் கூட எவ்வளவு நல்ல மனசு!.... அவங்ககிட்டே மன்னிப்புக் கேட்கணும் போல இருக்கு!
 கோபாலன் : திருந்தி மன்னிப்புக் கேட்கணும்னு சொல்றியே!.... இனிமே நிம்மதியான வாழ்க்கைதான்!.... அம்மா கேட்டா சந்தோஷப்படுவாங்க!....
 
 (திரை)
 என் எஸ் வி குருமூர்த்தி
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/எண்ணம்-போல்-வாழ்வு-3119362.html
3119361 வார இதழ்கள் சிறுவர்மணி கல்வியும் செல்வமும் DIN DIN Saturday, March 23, 2019 10:05 AM +0530 காளிங்கன் என்று ஓர் அரசன் இருந்தான். இவன் கோடிக்கணக்கான திரவியம் உள்ளவன். விலை உயர்ந்த அணிகலன்களை எப்போதும் அணிந்து கொண்டிருப்பான். யாரையும் மதிக்கமாட்டான். தனக்கு சமமானவர் ஒருவருமே இல்லை என்று கர்வம் கொண்டவன். இவனிடம் ஏழைப் புலவர் ஒருவர் பாடி பரிசில் பெற வந்தார்.
 அரசன் அந்தப் புலவரிடம் ""நீர் புலமைக்காக வீணாக காலத்தை போக்கிவிட்டீர். பணத்தைத் தேடியிருந்தால் நன்றாய் உண்டு உடுத்து சுகமாக இருக்கலாம். அநியாயமாய் கெட்டுவீட்டீர்'' என்று உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.
 "அரசே உம்முடைய அணிகலன்கள் உபயோகமற்றவை. நாளுக்கு நாள் தேய்ந்து போவன. பிறரால் கவரப்படுவன. பெரும் பாரமாயிருப்பன. என்னிடதிலுள்ள ஆபரணமான கல்வியோ யாதொரு குற்றமுமில்லாத உத்தமமான அணிகலன்'' என்றார்
 அரசன் புலவரிடம் சவால் விட்டான். ""நீர் உம்மிடத்திலுள்ள ஆபரணத்தை எடுத்துக் கொள்ளும். நானும் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு பேரும் தேசாந்தரம் போவோம்.''
 இருவரும் அடுத்த ராஜ்ஜியம் சென்றனர். புலவர் அரசரைச் சந்தித்தான். அவர் புலவரின் பெருமையை கல்வியை அறிந்து தன் கூட வைத்துக் கொண்டான்.
 அரசனோ, அந்த நகரில் ஒரு மாளிகை வாடகைக்கு எடுத்து வசிக்கையில் ஒரு நாள் இரவு திருடர்கள் பணம், நகைகளை அபகரித்துக் கொண்டு போய்விட்டார்கள். எல்லாவற்றையும் பறிகொடுத்து வெறுங்கையோடு நின்றான். அரையாடை தவிர கையில் எதுவும் இல்லை. பட்டினி கிடந்தான். புலவர் அவன் நிலை அறிந்து அரசனிடம் பணம் பெற்று அவனக்கு கொடுத்து உதவி அவன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அரசன் புலவரின் பெருமையை அறிந்து கொண்டான். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணர்ந்து கொண்டான்.
 -மயிலை மாதவன், சென்னை
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/கல்வியும்-செல்வமும்-3119361.html
3119360 வார இதழ்கள் சிறுவர்மணி மரங்களின் வரங்கள்! ஈட்டி மரம் DIN DIN Saturday, March 23, 2019 10:04 AM +0530 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் ஈட்டி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் டால்பெர்ஜியா லாட்டி ஃபோலியா என்பதாகும். பண்டைக்கால போர்க் கருவிகளுள் ஈட்டி மிகவும் உறுதியானது என்பதாலும், நான் இரும்பைப் போல உறுதியாக இருப்பதாலும் என்னை ஈட்டி மரம் என்றழைக்கின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே என் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். நான் மண் அரிப்பை தடுக்க பயன்படுவேன், நீண்ட வறட்சியைத் தாங்குவேன். ஆனால், பனியைத் தாங்கி வளர மாட்டேன். என்னை தமிழில் தோதகத்தி எனவும், ஆங்கிலத்தில் ரோஸ்வுட் எனவும் அழைக்கிறாங்க.
 நான் என் நண்பன் தேக்கு மரத்தை விட 60 சதவீதம் அதிகக் கடினத் தன்மையும், பளுவை தாங்குவதில் 40 சதவீதத்திற்கு மேல் திறனும் கொண்டவன். நான் தண்ணீர்க்குள்ளேயே மூழ்கியிருந்தாலும் எனக்கு ஒன்றும் ஆகாது. என்னை பூச்சிகளும், பூஞ்சான்களும் தாக்காது. எனது மென்பகுதி சிறிய அளவில் பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். என் வைரப்பகுதி பலவகையான நிறங்களில் கரும் ஊதா சாயலுடன் இருக்கும்.
 என் மரக்கட்டையை நீங்கள் பயன்படுத்தும் போது மனதை மயக்கும் ஒரு சுகந்தமான நறுமணம் உங்கள் நாசிகளைத் துளைக்கும். இந்த மணத்திற்காகவே வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் என்னை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.
 நான் மேஜை, நாற்காலி, பீரோ, அலமாரி, இரயில் பெட்டிகளில் மர வேலைப்பாடுகள் போன்றவைகளைச் செய்ய பெரிதும் பயன்படுகிறேன். நாளாக நாளாக நான் பளப்பளப்பாகத் தான் மாறுவேனேயொழிய மங்க மாட்டேன். குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் எனும் வணிகக் குழுவினர், எனது ஒரே மரப் பலகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜையைச் செய்து வெலிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்தார்களாமே. இன்றைக்கும் அது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் காண்போர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் காட்சிப் பொருளாக உள்ளது.
 நான் அரிய மரம் என்பதால் தமிழ்நாடு அரசு, 1994-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈட்டிமரப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி என்னைப் பாதுகாத்து வருகிறது.
 குழந்தைகளே, என் இலையை கிள்ளாதீங்க, கிள்ளினால் சிறை தண்டனை உறுதி. என் மரத்தின் பட்டையை தூளாக்கி அதை நீரிலிட்டு காய்ச்சி தினமும் பருகினால் உங்கள் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிப்பதோடு, சர்க்கரை அளவையும் குறைத்து, பித்தத்தைத் தணிக்கும். என் பட்டைகளிலிருந்து வடியும் பிசினை உலர்த்தி, பாலுடன் சேர்ந்து பருகினால், உடல் இறுகி வலுவாகும், தளர்ந்த உடல் புத்துணர்வாகும். என் வேரை நன்கு அலசி, தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அந்நீரைச் சூடாக்கி அருந்தினால் நாள்பட்ட வயிற்றுப் புண் சரியாவதோடு, இரத்தத்திலுள்ள கொழுப்பும் குறைந்து உடலும் வலுவாகும். என் இலைகள் மக்கி மண்ணுக்கு ஊட்டச் சத்தை அளிக்கிறது.
 என்னுடைய ராசி மகரம். நட்சத்திரம் அஸ்வதி. மரங்கள் இயற்கையின் கொடை, தண்ணீர் பஞ்சத்தில் சிக்காமல், வறட்சியைப் போக்க வேண்டுமென்றால் குழந்தைகளே மரங்களை நடுங்க. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/மரங்களின்-வரங்கள்-ஈட்டி-மரம்-3119360.html
3119359 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, March 23, 2019 10:03 AM +0530  கேள்வி: வானவில்லில் ஏன் ஏழு வண்ணங்கள் மட்டுமே உள்ளன?
 பதில்: வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....
 பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.
 சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளி அல்லது பிரிசம் போன்றவற்றை ஊடுருவும்போது இன்னும் நிறைய வண்ணங்கள் தோன்றக் கூடும்.
 ஆனால் மனிதக் கண்களால் வானவில்லில் ஏழு வண்ணங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
 
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 வானவில் இரவில் தோன்றுமா? தோன்றினாலும் மனிதக் கண்களுக்குத் தெரியுமா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/அங்கிள்-ஆன்டெனா-3119359.html
3119358 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, March 23, 2019 10:01 AM +0530  1. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லு வான்...
 2. எங்கம்மா பிள்ளைத்சாச்சி, எங்கப்பன் சுவர் ஏறிக் குதிப்பான்...
 3. பச்சைக்கீரை சமையலுக்கு உதவாது... வழுக்க உதவும்...
 4. சிவப்பானவன் எரிவான், கருப்பானவன் தெரிவான்...
 5. கால் நான்கு நடக்காது, கண் ஆயிரம் இமைக்காது...
 6. ஆடி ஆடி நடப்பான் அமைதியாக அதிர வைப்பான்...
 7. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது...
 8. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை...
 விடைகள்:
 1. எதிரொலி
 2. பூசணிக்காயும் கொடியும்
 3. பாசி
 4. நெருப்பு புகை
 5. நார்க்கட்டில்
 6. யானை
 7. செருப்பு
 8. மழை
-ரொசிட்டா

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/விடுகதைகள்-3119358.html
3119357 வார இதழ்கள் சிறுவர்மணி பொருத்துக... DIN DIN Saturday, March 23, 2019 10:00 AM +0530 ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளவை மாறிக் கிடக்கின்றன...
 சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. சிவாஜி - சீக்கியர்
 2. கனிஷ்கர் - ரோமர்
 3. அசோகர் - மேவார்
 4. மஹாரானா பிரதாப் - கிரேக்கர்
 5. ரஞ்சித் சிங் - குஷானர்
 6. அலெக்ஸôண்டர் - ஆங்கிலேயர்
 7. ஜூலியஸ் சீசர் - மராத்தியர்
 8. நெல்சன் - மௌரியர்
 விடை
 1. மராத்தியர், 2. குஷானர்
 3. மௌரியர், 4. மேவார்
 5. சீக்கியர், 6. கிரேக்கர்
 7. ரோமர், 8. ஆங்கிலேயர்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/பொருத்துக-3119357.html
3119356 வார இதழ்கள் சிறுவர்மணி புதிர் Saturday, March 23, 2019 10:00 AM +0530 9 - 6 = 3, 9 + 6 = 3
அப்படியானால் 8 + 6 = ?
 
 இதில் மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டுபிடிக்க வேண்டியதெல்லாம் கிடையாது. சும்மா லாஜிக் புதிர்தான் இது. விடை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்...
 புதிருக்கு விடை:
 ரொம்பவும் எளிதான புதிர்... இதற்கு இவ்வளவு யோசித்திருக்க வேண்டாம்...
 முதலில் என்ன இருக்கிறது?

9 - 6 = 3
 அப்படியானால்...
 8 - 6 = 2 சரிதானே...
 இரண்டாவது என்ன இருக்கிறது?
 9 + 6 = 3
 அப்படியானால்...
 8 + 6 = 2
 இதுதான் சரியான விடை...

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/புதிர்-3119356.html
3119355 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, March 23, 2019 09:57 AM +0530 • "அண்ணா!.... பேச்சு சுதந்திரத்திலே
உனக்கு நம்பிக்கை இருக்கா?...''
"கண்டிப்பா!.... ஒவ்வொருத்தருக்கும்
பேசறதுக்கு சுதந்திரம் அவசியம் வேணும்!...''
"அப்போ உன் ஃபோனைக் கொடு!... நான் நாலைந்து பேருக்கு ஃபோன் பண்ணனும்!...''.''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

• "நம்ம லோகநாதன் "ஸ்லோகன்' 
போட்டியிலே கலந்துக்கிட்டு
பரிசு வாங்கியிருக்கான்!...''
"லோகநாதன், "ஸ்லோகநாதன்' 
ஆயிட்டான்னு சொல்லு!...''
உ.சபாநாயகம், சிதம்பரம்.

• "என்னடா இது?....
ரூம் பூரா கிறுக்கி வெச்சிருக்கே....''
"நீதானே இது ட்ராயிங்
ரூம்னு சொன்னே?...''
எம்.அசோக்ராஜா, 3/14ஏ,
அரவக்குறிச்சிப்பட்டி, அசூர்,
திருச்சிராப்பள்ளி - 620015.

• "எதுக்கு பரீட்சை ஹால்லே
உன்னோட ஐந்தாவது கேள்விக்கு
சத்தம்போட்டு பதிலைச் சொல்றே?....''
"..."விடை கூறுக' ன்னு போட்டிருந்திச்சி!.... அதனாலேதான் சார்!...''!...''
ச.ஷகிலா பானு, 278, திரேஸ்புரம், 
தூத்துக்குடி - 628001.

• "இந்தியாவில் சணல் 
எங்கெல்லாம் கிடைக்கும்?''
"எல்லா மளிகைக் கடைகளிலும்
கிடைக்கும்!''
எஸ்.சடையப்பன், திண்டுக்கல்

• "அப்பா!...., விசில் வாங்கித்தாங்கப்பா!....''
"வேண்டாண்டா!.... நீ அதை ஊதி, ஊதி யாரையும் தூங்கவிடாம பண்ணுவே!....''
"இல்லேப்பா!.... நீங்க எல்லாரும்
தூங்கினப்புறமா சமத்தா விசில்
ஊதறேம்ப்பா.... ப்ளீஸ்!... வாங்கித்தாப்பா!...'''
ஏ. அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/கடி-3119355.html
3119354 வார இதழ்கள் சிறுவர்மணி  இங்கிலீஷ் போயம்! சுகுமாரன் DIN Saturday, March 23, 2019 09:55 AM +0530 சூப்பர் சிவா! 1
"சிவா, என்ன பண்றே?.... ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சி!.... "இப்படி அவனுக்கு அம்மா மூன்று முறை சொன்ன பிறகுதான் புறப்படுவான்.
 சிவாவின் முழுப்பெயர் சிவகுமார். உள்ளூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு உதயன் என்கிற தம்பியும், ஜெயா என்கிற தங்கையும் உண்டு. உதயன் 7-ஆம் வகுப்பு படிக்கிறான். ஜெயா 3-ஆம் வகுப்பு படிக்கிறாள். போகிற வழியிலுள்ள தொடக்கப்பள்ளியில் தங்கையை விட்டுவிட்டு அவன் பள்ளிக்கூடம் போவான். இது தினமும் நடக்கிற வேலை.
 இன்று அவன் ஒரு வேலையில் மும்முரமாக இருந்தான். பைக்குள்ளிருந்து ஒரு வெள்ளைத் தாளை எடுத்தான். அந்தத் தாளை தலையில் வைத்துத் தடவினான். தலையிலிருந்த எண்ணெய் தாளில் ஒட்டியது. ஆங்கில புத்தகத்தை எடுத்தான். ஒரு செய்யுளின் மீது வைத்துப் பார்த்தான். செய்யுள் கண்ணாடியில் பார்ப்பது போல் தெரிந்தது. பென்சிலால் செய்யுளை எழுதி அச்சு எடுத்தான். இப்போது அச்சை ஒரு வெள்ளைத் தாளின் மேல் வைத்து அழுத்தி எழுதினான். செய்யுள் கோடுகளாக வெள்ளைத் தாளில் பதிந்தது!
 இதைச் செய்யும்போது சிவாவின் மனம், "தடக்....தடக்' என்று அடித்துக் கொண்டது. இன்று ஆங்கில வகுப்பில் செய்யுள் மனப்பாடமாக எழுத வேண்டியிருந்தது! காப்பி அடிப்பதற்கு சிவா ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்திருந்தான். அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே தாளை ஆங்கிலப் புத்தகத்துக்குள் வைத்தான். இதை அருள் கண்டுபிடிக்க்க கூடாது....
 அருள் அவனுடன் படிப்பவன். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டி! சிவாவுக்கு அருளுடன்தான் போட்டி!
 காலையில், அம்மா, அவனுக்குப் பிடித்த புட்டு செய்திருந்தாள். வாழைப்பழத்தைப் போட்டு பிசைந்து ஒரு நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டான். பிறகு பள்ளிக்கூடம் புறப்பட்டான். மதிய உணவுக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருவான். கடைத்தெரு வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவான். வீடுகள் இருக்கும் வழியாக அவனுடைய தம்பியும் , தங்கையும் வருவார்கள்.
 சிவா தங்கையைப் பள்ளிக்கூடத்தில் விட்டான். அவனுடைய பள்ளிக்கு வீடுகள் இருக்கும் தெரு வழியாகப் போக முடியும். ஆனால் அவன் அப்படிப் போகாமல் மீண்டும் கடைத்தெருவிற்கு வந்தான். கடைத்தெருவிற்கு வரும் சந்தின் முனையில் ஒரு "லாலா' கடை இருந்தது. கடையில் பூந்தியை கூம்பு போல் வைத்திருந்தார்கள். அதை ஆசையோடு பார்த்தான். அந்த "லாலா' கடையில் மாலையில் சூடாக அல்வா போடுவார்கள். அவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது பார்ப்பான். அல்வா வைத்து சாப்பிட்ட வாழை இலைத் துண்டுகள் பூசிய நெய்யுடன் தரையில் கிடக்கும்! வாயில் எச்சில் ஊற பார்த்துக் கொண்டே செல்வான்.
 கவிழ்த்து வைத்த "ப' வடிவில் அவனுடைய பள்ளிக் கட்டிடம் இருந்தது. முன் பக்கம் மட்டும் சுற்றுச் சுவர். வாசலில் "ஆர்ச்' வடிவில் "அரசினர் உயர் நிலைப்பள்ளி' என்று பெயர்ப் பலகை. அவனுடைய வகுப்பு முதலிலேயே இருந்தது. சிவா பையை அவனுடைய இடத்தில் வைத்துவிட்டு "பாத்ரூம்' போனான்.
 பாத்ரூமில் அவனுடைய நண்பன் " செல்வம்' இருந்தான். சிவாவைப் பார்த்ததும், " போயம் படிச்சிட்டியா?...'' என்று கேட்டான்.
 "தமிழ் படிச்சிட்டேன்'' என்றான் சிவா.
 ""போடா, பிசுக்கு!.... திருக்குறள் ரெண்டு வரி..... யார் படிக்கமாட்டா?.... இங்கிலீஷ் போயம்,.... பன்னிரண்டு வரி படிச்சிட்டியா?....'' என்றான் செல்வம்.
 அப்போது ராஜன் வந்தான். அதனால் சிவா பதில் சொல்வது தடைப்பட்டது. காப்பி அடிக்க அவன் செய்திருக்கும் காரியத்தை நண்பர்களிடம் சொல்வதா, வேண்டாமா என்று யோசித்தான்.
 நண்பர்கள் மூவரும் வகுப்பிற்கு வந்தார்கள். அங்கே அருள் படித்துக் கொண்டிருந்தான். "போயம்' படித்து விட்டாயா?... என்று அவனைக் கேட்க வேண்டியதில்லை. கண்டிப்பாகப் படித்திருப்பான்!
 "ஃபர்ஸ்ட் பெல்' அடிக்கும் சத்தம் கேட்டது. காலைக் கூட்டத்திற்கு மாணவர்கள் மைதானத்தில் கூடினர். சிவாவும் அவனுடைய வகுப்பு வரிசையில் போய் நின்றான். உயரத்தின் அடிப்படையில்தான் நிற்க வேண்டும். ராஜனும் அவனும் ஒரே உயரம்தான். ஒரு நாள் ராஜன் முன்னாடி நிற்பான்....இன்னொரு நாள் சிவா முன்னாடி நிற்பான். இப்படி இருவரும் விளையாடுவார்கள். அன்று திங்கட்கிழமை என்பதால் தேசியக்கொடி ஏற்றினார்கள்.
 காலைக்கூட்டம் முடிந்து மாணவர்கள் வரிசை கலையாமல் வகுப்பிற்குச் சென்றனர். கடைசி மாணவன் போகும்வரை "டிரில் மாஸ்டர்' கையில் பிரம்புடன் கவனித்துக் கொண்டு நிற்பார். அவர் அரைக்கால் சட்டை போட்டிருப்பார். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் முழு "பேண்ட்' போட்டிருக்கும்போது அவர் மாணவர்கள் மாதிரி அரைக்கால் சட்டையில் இருப்பது வேடிக்கையாக இருக்கும்.
 டிரில் மாஸ்டரை அவனுக்குப் பிடிக்கும். அவர் மூலம்தான் சிவா, அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். டிரில் மாஸ்டரும் அவனுடைய அப்பாவும் ஒன்றாகப் படித்தவர்கள். அதனால் சில நேரங்களில் அவர் அவனை அக்கறையுடன் விசாரிப்பார்.
 முதல் "பீரியட்' தமிழ். தமிழாசிரியர் அறம் வளர்த்த நாதன் தாமதமில்லாமல் வந்து விடுவார். தமிழ் அவனுக்குப் பிடித்த பாடம்! அதிக மதிப்பெண்ணும் வாங்குவான். ஆங்கிலம்தான் தகராறு!.... இரண்டாவது "பீரியட்' ஆங்கிலம். "போயம்' டெஸ்ட் இருந்தது. விக்டர் சார்தான் ஆங்கிலப் பாட ஆசிரியர்.
 விக்டர் சார் வந்தவுடன் முதல் வேலையாக "டெஸ்ட்' வைப்பார். "போயம்' மனப்பாடம் பண்ணி எழுதுவது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. "ஸ்பெல்லிங் மிஸ்டேக்' நிறைய இருக்கும். அதனாலேயே அவனுக்கு "மார்க்' போய்விடும். இரண்டாவது "பீரியட்' வந்தது! விக்டர் சார் வந்ததும், ""போயம் படிச்சாச்சா?...'' என்று கேட்டார். எல்லோரும் "எஸ் சார்' என்றனர். சிவா ஒன்றும் சொல்லவில்லை.
 தொடரும்....
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/இங்கிலீஷ்-போயம்-3119354.html
3119353 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: தாத்தா DIN DIN Saturday, March 23, 2019 09:54 AM +0530 உண்மை, அன்பு, நேர்மை கொண்டு
 உயர்ந்து நிற்பவர்!
 உயர்ந்தோர் வாழ்ந்த நெறிமுறையில்
 ஒன்றி வாழ்பவர்!
 கண்ணியமாய் விட்டுக் கொடுக்கக்
 கற்றுத் தருபவர்!
 கலங்கி நாங்கள் நின்றால் தேற்றக்
 கடிதில் வருபவர்!
 அறிவுத்தகுதி மிகுதியாக
 அமையப் பெற்றவர்!
 ஆழமாகப் பொருளுணர்த்தும்
 நூல்கள் கற்றவர்!
 
 சிறிதும் சோம்பல் இன்றி நாளும்
 திடமாய் உழைப்பவர்!
 செருக்கிலாது பணிவு கொள்ள
 எம்மை அழைப்பவர்!
 எங்கள் தாத்தா பெருமைக்கென்றும்
 எல்லை இல்லையே!
 என்றும் கேட்டு நடப்போம் அவர்
 சொல்லும் சொல்லையே!
 தங்கத்தாத்தா பெருமை சொல்லும்
 பெயரர்கள் நாங்கள்!
 சற்றும் அவர் சொல்லை மீறோம்
 நிச்சயம் நாங்கள்!
 }புலவர் முத்துமுருகன், திட்டக்குடி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/கதைப்-பாடல்-தாத்தா-3119353.html
3119352 வார இதழ்கள் சிறுவர்மணி தடகள வீரருக்குப் பாராட்டு DIN DIN Saturday, March 23, 2019 09:52 AM +0530 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
 பாராட்டுப் பாமாலை! 36
 விரிவான சென்னை நகரினிலே
 விருகம்பாக்கத்தில் எல்லோர்க்கும்
 தெரிந்த ஆவிச்சி பள்ளியிலே
 திறமை மிக்க ஆசானாய்
 உடற்கல்வித் துறையில் பணிபுரிந்து
 ஓய்வு பெற்றவர் அரங்கசாமி
 திடமாய் இன்னும் இளமையுடன்
 திகழ்பவர் வயது எழுபத்தொன்பது
 மூத்தோர் தடகளப் போட்டிகளில்
 மூன்று தங்கம் வென்றுள்ளார்
 பார்த்தோர் வியந்திட ஓட்டத்திலும்
 ஈட்டி குண்டு எறிதலிலே!
 எழுபது வயதில் தொடங்கி, இவர்
 முப்பது நான்கு பதக்கங்களும்
 விருதுகள் பதினேழும் இதுவரையில்
 எளிதாய்ப் பெற்று இருக்கின்றார்!
 இன்னொரு சிறப்பு இவர்க்குண்டு
 இளையராஜாவின் இசைக்குழுவில்
 முன்னொரு சமயம் இணைந்தேதான்
 முயன்று பாடகர் ஆகியுள்ளார்
 சின்னத்திரையிலும் தோன்றுகிறார்
 தினமும் மிகவும் சுறுசுறுப்பாய்
 இன்னிசை பரப்பும் வசந்தராகம்
 இசைக்குழு நடத்தி வருகின்றார்!
 இன்னும் இலக்கிய விழாக்களிலே
 இவரது பாடல் ஒலிக்கிறதாம்
 என்றும் புரியும் கவியரசின்
 தத்துவப் பாடல்கள் பாடுகின்றார்!
 ஆடியும், பாடியும் மகிழ்விக்கும்
 அன்பு இளைஞராம் தாத்தாவை
 தேடிச் சென்றும் வாழ்த்திடலாம்
 திறமை தன்னைப் போற்றிடலாம்!
 இன்னும் ஆண்டுகள் பலவாக
 இவரும் வாழ்க வளமுடனே
 என்னும் பாராட்டுப் பாமாலை
 சூடிடுவோம்! பாடிடுவோம்!
 
 -அ.கருப்பையா, பொன்னமராவதி
 இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
 அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/தடகள-வீரருக்குப்-பாராட்டு-3119352.html
3119351 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: பஞ்சாப்! DIN DIN Saturday, March 23, 2019 09:51 AM +0530 பஞ்சாப் மாநிலத்தை அறிந்து கொள்ளலாமா?....
 பஞ்சாப் வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ளது. வளமான வண்டல் மண் பூமி. விவசாயமே பிரதானத் தொழிலாகக் கொண்ட மாநிலம். நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட மாநிலம். சீக்கியர்களே இங்கு பெருமளவில் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் பிராந்திய மொழி பஞ்சாபி.
 பஞ்சாப் மாநிலத்தைச் சுற்றிலும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களும், மேற்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணமும் சூழ்ந்துள்ளன.
 சிந்து நதியின் கிளை நதிகளான் ராவி, பியாஸ். சட்லெஜ், ஜீலம், சேனாப் ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்பதால் பஞ்சாப் எனப்படுகிறது. பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பூமி என்பதே பொருள்.
 இம்மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி.யில் இமயமலையின் அடிவாரத்தில் 2400 கி.மீ. நீளத்திற்கு 180 மீ. முதல் 500 மீ. வரை உயரம் கொண்ட ஏற்ற இறக்கமான சிவாலிக் மலைக் குன்றுகள் உள்ளன. இவை 10 முதல் 50 கி.மீ. வரை அகலம் கொண்டவை.
 பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள "சண்டிகர்' நகரமே (யூனியன் பிரதேசம்) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாகும். 50,362 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம் இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
 சில வரலாற்றுத் தகவல்கள்!
 சிந்து சமவெளி நாகரிகம் பஞ்சாப் பகுதி வரை பரவி இருந்துள்ளது. அவற்றின் தொல்லியல் களங்கள் "ரூப் நகர்' போன்ற இடங்களில் உள்ளன. இங்கு ஒரு சிறிய தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.
 வேதகால நூல்களில் பஞ்சாப் பற்றிய தகவல்கள் உள்ளன. மகாபாரதத்தில் பஞ்சாப் "திரிகர்த்த நாடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 பண்டைய பஞ்சாப் என்பது இன்றைய பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள், சண்டிகர் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளும் உள்ளடக்கியது.
 கி.மு. 326 - இல் கிரேக்க மன்னர் அலெக்ஸôண்டர் மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்துகுஷ் கணவாய் வழியாக படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றி தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். கி.மு. 305 - இல் சிறப்புடன் திகழ்ந்த மெüரியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.
 இந்த பஞ்சாப் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள், மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
 இதனால் செழிப்பான பஞ்சாப் சார்ந்த பகுதிகளை காந்தார அரசர்கள், நந்தர்கள், மெüரியர்கள், கங்கர்கள், குஷாணர்கள், குப்தர்கள், பாலர்கள், கூர்ஜரர்கள், காபூல் சாகிப்கள், துருக்கியர்கள், மற்றும் ஆப்கானியர்கள் எனப் பல பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
 காலப்போக்கில், பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து வட இந்தியாவை வென்ற பாபரின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் தோன்றி வலுப்பெறத் தொடங்கியது. அவர்கள் பஞ்சாப் பகுதியை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தனர்.
 புவியியல் அமைப்பு காரணமாக இப்பகுதியின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் தொடர்ந்து பலரும் தாக்குதல் நடத்தியதால் பல போர்களை பஞ்சாப் பிரதேசம் சந்தித்துள்ளது.
 பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் ஆரம்பத்தில் பஞ்சாபைக் கைப்பற்ற செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் நடந்த போரில் சீக்கியர்கள் தோல்வியுற்றனர். அதனால் 1849 - இல் லாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எடுத்துக்கொண்டது. அதன்பின் பஞ்சாப் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணமாயிற்று.
 சுதந்திரத்திற்கு முந்தைய பஞ்சாப் மாகாணம் பெரியதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபோது மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு பஞ்சாபின் 52% நிலப்பகுதி பாகிஸ்தானிற்கும், எஞ்சிய இந்துக்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாபின் 48% நிலப்பகுதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலமாகவும் ஆனது.
 ராபி, பியாஸ், சட்லெஜ் ஆறுகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கும், ஜீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானுக்குமாகப் பிரிக்கப்பட்டது.
 அமிர்தசரஸ் பொற்கோயில்!

சீக்கியர்களின் பழமையான தலம்! அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருத்வாரா. சீக்கியர்களின் புனித நூலான "குருகிரந்த சாகிப்' இங்கு வைக்கப்பட்டுள்ளது. மஹாராஜா ரஞ்சித் சிங் குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். அதனால் "கோல்டன் டெம்பிள்' என்ற பெயரைப் பெற்றது. ஜாதி மத பேதமின்றி இங்கு அனைவரும் வழிபடலாம்!
 ஜாலியன் வாலாபாக் நினைவிடம்!

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் போற்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது இந்த நினைவிடம். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவ்விடத்தில் நடந்த "ஜாலியன் வாலாபாக் படுகொலை' நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.
 ஜாலியன் வாலாபாக் என்ற இடம் 6.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தோட்டம் ஆகும். சுற்றிலும் மதில் சுவர்களும் ஒரே ஒரு சிறிய வாயிலும் நடுவில் ஒரு பெரிய கிணறும் கொண்டது.
 அத்தோட்டத்தில் 1919 - ஆம் ஆண்டு ஏப்ரல் 13 - ஆம் நாள் வைசாகி திருவிழாவைக் கொண்டாட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்பொழுது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரெஜினால்ட் "டயர்' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் மக்களை நோக்கி 10 நிமிடங்கள் தொடர்ந்து சுட்டனர்.
 மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதில் 379 பேர் இறந்து விட்டதாக பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்டவர்களின் கருத்துப்படி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இது சுதந்திரப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 துப்பாக்கி சூட்டில் இறந்த தியாகிகளின் நினைவாக இத்தோட்டத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது
 வாகா எல்லை!

வாகா என்னும் சிற்றூர் அமரிதசரஸில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. 1947 - இல் நடந்த பிரிவினையின்போது, பிரிப்பதற்காக போடப்பட்ட "ராட் கிளிஃப் கோடு' இச்சிற்றூரின் குறுக்காகச் செல்கிறது. இதனால் வாகாவின் கிழக்குப்பகுதி இந்தியாவிற்கும், மேற்குப் பகுதி பாகிஸ்தான் வசமும் உள்ளன. அமிர்தசரசில் இருந்து லாகூர் வரையிலான ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை வாகா கிராமத்தின் வழியாகச் செல்கிறது.
 வாகாவில் உள்ள வாயில் பகுதியில் இரண்டு வாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தினம் மாலையில் இரு நாட்டு தேசிய கொடிகளும் இறக்கப்படும்போது அதை ஒரு சடங்காக நடத்துவார்கள். இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் நிகழ்வாக உள்ளது.
 ரஞ்சித் சிங் அருங்காட்சியகம்!
 அமிர்தசரஸ் நகரில் உள்ளது. இங்கு பல்வேறு ஆயுதங்கள், பழமையான நாணயங்கள் மற்றும் எழுத்துப் பிரதிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த அரசர்களின் அரண்மனைகள், அரசவைக் காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் ஓவியங்களும் இங்கு உள்ளன. கோஹினூர் வைரத்தின் மாதிரி ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 மஹாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்!
 இந்த அருங்காட்சியகம் லூதியானாவில் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் 1999 - இல் நிறுவப்பட்டது. பல்வேறு போர்களில் பங்கேற்று உயிர்தியாகம் செய்தவர்கள் தைரியமான வீரர்கள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 இங்கு பண்டைய காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளைக் குறிக்கும் 12 காட்சியகங்கள் உள்ளன. மேலும் போர் டாங்கிகள், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பலின் மாதிரிவடிவம் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசால் பிரித்யேக கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது.
 கிலா முபாரக் கோட்டை!

பாட்டிண்டா நகரின் மையத்தில் அமைந்துள்ளது இக்கோட்டை. கி.பி. 90 - 110-இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிலா முபாரக் எனப்படும் இந்த செங்கற்கோட்டை பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.
 கிலா - முபாரக் - பாட்டியாலா அரண்மனை!
 தென்மேற்குப் பகுதியில் உள்ள பாட்டியாலா நகரத்தின் மையப் பகுதியில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சீக்கிய அரண்மனைக் கட்டடக் கலைக்கு ஓர்அரிதான மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இது 1793 - இல் "பாபா ஆலா சிங்' என்பவரால் கட்டப்பட்டது.
 கிலா முபாரக் - பரித்கோட் கோட்டை!

வடமேற்கே உள்ள பரித்கோட் நகரில் இக்கோட்டை உள்ளது! ராஜா மோகல்சி என்பவரால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. நன்கு கட்டப்பட்டு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோட்டை.
 மேலும் சில தகவல்கள்!
 கி.பி. 15 - ஆம் நூற்றாண்டில் "குருநானக்' சீக்கிய மதத்தை தோற்றுவித்தார். அதனால் அவருக்குப் பின் வந்த 9 சீக்கிய குருமார்களும் ஒருவர் பின் ஒருவராக (1469 - 1708 வரை) தலைமையேற்று மதத்தை வளர்த்தனர். பத்தாவது குருவான குரு கோவிந்த சிங். நீதி போதனைகள் அடங்கிய "ஆதி கிரந்த்'தத்தை கடைசி குருவாக அறிவித்தார். அப்போதிலிருந்து புனித நூலான "ஆதி கிரந்த்' சீக்கியர்களின் குருவாக உள்ளது.
 பொற்கோயிலே சீக்கியர்களின் முதல் மற்றும் மிகப் பழமையான குருத்வாரா (கோயில்). பஞ்சாபில் சுமார் 60 சதவீதம் மக்கள் இந்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
 சிந்து நதிநீர் ஒப்பந்தம்!
 சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக 1960 - இல் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் நேருவும், பாகிஸ்தானின் அதிபர் முகம்மது அயூப்கானும் கையெழுத்திட்டனர். உலக வங்கி மூன்றாவது சாட்சியாகக் கையெழுத்திட்டது.
 இதன்படி சிந்து ஆறும், அதன் துணை ஆறுகளும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், சேனாப் ஆகிய மேற்குப் பகுதி ஆறுகளின் நீர் பாகிஸ்தானிற்கும், பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று கிழக்குப் பகுதி ஆறுகளின் நீர் இந்தியாவிற்கும் எனப் பிரிக்கப்பட்டன.
 பாங்க்ரா நடனம்!
 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதியில் ஆடப்படும் ஒரு பிரபலமான நடனம்!
 எஃகு நகரம்!
 இந்தியாவில் உள்ள எஃகு உருக்காலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன. இங்குள்ள "மண்டி கோபிந்த்கர்' நகரம் எஃகு நகரம் எனப்படுகிறது.
 இந்தியாவின் ரொட்டிக் கூடை!

வளமான பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிக அளவில் விளைகிறது. அதனால் இந்தியாவின் "ரொட்டிக் கூடை' எனச் செல்லமாக பஞ்சாபை அழைக்கின்றனர். கோதுமை தவிர, நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் பழவகைகளும் ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன.
 தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/கருவூலம்-பஞ்சாப்-3119351.html
3119350 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை! நுண்ணறிவு DIN DIN Saturday, March 23, 2019 09:37 AM +0530 ஒரு மன்னனின் அரசவையில் விதூஷகன் ஒருவன் நேரத்துக்கேற்றவாறு பேசுவதில் வல்லவனாக இருந்தான்.
 மன்னன் ஒரு நாள் விதூஷகனிடம் உள்ளங்கையைக் காட்டி என் உள்ளங்கையில் ஏன் ரோமம் இல்லை? எனக் கேட்டான்.
 அதற்கு விதூஷகன் சாதுர்யமாக "மன்னா அடுத்தவர்க்கு கொடுத்துக் கொடுத்து உங்கள் கைகளில் ரோமம் வளரவில்லை'' என்றான்
 அதற்கு மன்னர், ""நாட்டு மக்களின் கைகளில் கூட ரோமமில்லையே ஏன்?'' என்றார்.
 விதூஷகன் உடனே, ""நீங்கள் வாரி வாரி வழங்கும் போது அதை வாங்கி வாங்கி அவர்களுக்கு ரோமம் வளரவில்லை'' என்றான்.
 விதூஷகனை மடக்க மன்னன் "அதெல்லாம் சரி, நம் நாட்டு எதிரிகளின் உள்ளங்கைகளிலும் கூட ரோமம் இல்லையே ஏன்? '' எனக் கேட்டு திணறச் செய்தார்.
 விதூஷகன் சற்று யோசித்து மன்னா, "உங்களின் வீரம், திறமை, ஆற்றல் இதனையெல்லாம் கண்டு செய்வதறியாது. கைகளைப் பிசைகின்றனர். அதனால் தான் அவர்களின் கைகளிலும் ரோமமில்லை'' என்றதும் விதூஷகனின் நுண்ணறிவைப் பாராட்டினார் மன்னன்
 
 -கடலூர் உ. இராசமாணிக்கம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/முத்துக்-கதை-நுண்ணறிவு-3119350.html
3119349 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, March 23, 2019 09:36 AM +0530 உண்மை நேசிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பிழை மன்னிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. - வால்டேர்
 மன நிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், முதலிய குணங்கள் பணத்தால் வருவன அல்ல. - விவேகானந்தர்
 எறும்பைப் போல உபதேசிப்பவர் யாரும் இலர்!.... ஆனால் எறும்போ பேசுவதே இல்லை! - பிராங்க்ளின்
 கண்பார்வையற்றவன் குருடனல்ல!.... தன் குற்றங்களை உணராமல் இருக்கிறானே அவன்தான் சரியான குருடன்! - காந்தியடிகள்
 நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைவிட, நல்ல மனிதனால் ஆளப்படுவது சிறப்பாகும் - அரிஸ்டாட்டில்
 இன்று உன் செயல்களை முடிந்த வரை நன்றாகச் செய்!...நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்! - நியூட்டன்
 விஞ்ஞானம் என்பது முறைப்படுத்தித் தொகுக்கப்பட்ட அறிவாகும்! - ஹெர்மர்ட் ஸ்பென்சர்
 பழகும் விதம் பரிசுப் பொருளைவிட மேன்மையானது- ஹியூகோ
 இயற்கையின் அழகு இறைவனின் புன்னகை!.... நல்லதோர் இசை இறைவனின் குரல்! - ஜான்சன்
 தொகுப்பு: அ. கருப்பையா, பொன்னமராவதி
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/பொன்மொழிகள்-3119349.html
3119348 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: இடன் அறிதல் DIN DIN Saturday, March 23, 2019 09:35 AM +0530  பொருட்பால் - அதிகாரம் 50 - பாடல் 6
 கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
 நாவாயும் ஓடா நிலத்து.
                                          -திருக்குறள்
 வலிய பெரிய சக்கரங்கள்
 கொண்ட உயர்ந்த தேர் கடலில்
 ஓடாமல் மூழ்கிப் போய்விடும்
 நிலத்தில் நன்றாய் ஓடிடும்
 
 கடலில் ஓடும் கப்பல்கள்
 நிலத்தில் ஓடாமல் நின்றிடும்
 எந்தச் சக்தியிருந்தாலும்
 இடம் போல் சக்தி பயன்படும்
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/குறள்-பாட்டு-இடன்-அறிதல்-3119348.html
3119347 வார இதழ்கள் சிறுவர்மணி  அகில்குட்டியின் டைரி! DIN DIN Saturday, March 23, 2019 09:34 AM +0530 சேவை!
இன்னிக்கு ராமு சித்தப்பா வர்றதா ஃபோன் பண்ணியிருந்தாரு. நானும், ரகுவும் ஆவலா அவரோட வருகையை எதிர்பார்த்திருந்தோம்!.....வாசலிலிருந்த செம்பருத்தி, நந்தியாவட்டைச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தோம். கேட்டைத் திறந்துகொண்டு, அம்மா காலையிலே போட்டிருந்த கோலத்ததை மிதிக்காமல் சித்தப்பா வந்தார்! ரகு ஓடிப்போய் "சித்தப்பா'' ன்னு கட்டிக்கொண்டான். சித்தப்பா அவன் முகவாய்க்கட்டையை செல்லமாக தடவிக்கொடுத்தார். எல்லோரும் குளித்து அம்மா தந்த டிபனைச் சாப்பிட்டோம்!...
 வாசலில் வள்ளி அக்கா (எங்க வீட்டிலே வேலை செய்யறவங்க) தன் சின்னக்குழந்தை லட்சுமியோட வந்திருந்தாங்க.....
 "வா!..'' ன்னு அம்மா கூப்பிட்டாங்க... குழந்தைக்கு ரெண்டு பிஸ்கட்டைக் கொடுத்தாங்க... அப்பாவும், சித்தப்பாவும் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க.... வள்ளி அக்காவின் குழந்தை லட்சுமிக்கு மூணு வயசு ஆகுது... இந்த வருஷம் ஸ்கூல்லே போடணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க....குழந்தை வள்ளியின் பின்னாலேயே சென்றது. அவளுக்கு வேலை செய்யறதுக்கு இடைஞ்சலா இருந்தது.
 நானும், ரகுவும் லட்சுமிக்கு எங்களோட விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்துக் கொஞ்ச நேரம் விளையாடச் சொன்னோம்.... குழந்தை ஹாலில் விளையாடிக்கிட்டு இருந்தாள்.
 அப்போது குழந்தையின் முகத்தை ஏனோ சுளித்துக் கொண்டிருந்தாள்.... எனக்கும், ரகுவுக்கும் காரணம் தெரியலே.... அப்பாவும், சித்தப்பாவும் குழந்தையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.... "வள்ளியைத் தேடுதோ என்னமோ...'' ன்னு அப்பா சொன்னார்...
 "இல்லே,... அதுக்கு டூ பாத்ரூம் வருதுன்னு நினைக்கிறேன்...'' அப்படீன்னார் சித்தப்பா.
 "சரி,... வள்ளியைக் கூப்பிடு...'' ன்னார் அப்பா. வள்ளி மாடியில் துணிகளைக் காயப்போடப் போயிருந்தாள்.
 "அதற்குள் குழந்தை ஹாலிலேயே போயிடும்...
 நான் பாத்ரூமுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்...''ன்னு
 சொல்லிட்டு குழந்தையை எடுத்துக்கிட்டார்.... கக்கூஸýக்கு அழைச்சுக்கிட்டுப் போனார்.... குழந்தை சமத்தா ஆய் போச்சு!....சித்தப்பா குழந்தைக்கு அலம்பி விட்டுத் துடைச்சு விட்டார். குழந்தை என்னோட கரடி பொம்மையை வெச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே விளையாட ஆரம்பிச்சிடுச்சி!....''
 துணியைக் காயப்போட்டுட்டு வள்ளியக்கா வந்தாங்க.... நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டாங்க.... "ஐயா, நீங்க ஏன் செய்தீங்க..., ஒரு குரல் கொடுத்திருந்தா நான் வந்திருப்பேனே...'' ன்னாங்க.... ''
 "அதனாலே என்ன?... நீங்க எங்களுக்கு தினமும் உதவி செய்யறீங்க.... நான் ஒரு நாளைக்குத்தானே செய்தேன்.... பரவாயில்லே...'' ன்னாங்க....
 ராமு சித்தப்பாவை நினைச்சா எப்பவும் எல்லோருக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்!
 அகில்குட்டி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/அகில்குட்டியின்-டைரி-3119347.html
3119346 வார இதழ்கள் சிறுவர்மணி  நேரு காட்டிய நகைச்சுவை! Saturday, March 23, 2019 09:31 AM +0530 நினைவுச் சுடர் !
ஒரு சமயம் அமெரிக்காவுக்குச் சென்றார் நேரு. அங்கு வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் நேருவிடம், "எங்கள் பள்ளியில் ஒரு மாணவன் இருக்கிறான்.... அவன் சிரிக்கவே மாட்டான்! யார் என்ன ஜோக் சொன்னாலும் அவன் முகத்தில் சிரிப்பே வராது!... உங்களால் அவனைச் சிரிக்க வைக்க முடியுமா?...'' என்று கேட்டனர்.
 நேருவுக்கு அந்த மாணவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது!... அவனை எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று எண்ணினார். அந்த மாணவன் இருந்த வகுப்பறைக்குச் சென்றார். அவனோ முகத்தை "உம்' என்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்!
 நேரு யோசித்தார். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு சீப்பை எடுத்தார். எடுத்து தனது வழுக்கைத் தலையைச் சீவினார். உடனே அந்த மாணவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்!... அந்த மாணவன் மட்டும் அல்ல.... அங்கிருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்! குழந்தைகளைச் சிரிக்க வைப்பதில் கில்லாடிதான் நம்ம நேரு மாமா!
 
 ஜோ.ஜெயக்குமார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/23/நேரு-காட்டிய-நகைச்சுவை-3119346.html
3115610 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்! கோட்டாறு ஆ.கோலப்பன் Tuesday, March 19, 2019 03:48 PM +0530 "போகிபீல் பாலம்' என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் நாட்டிலேயே மிக நீளமான ரெயில்  மற்றும் சாலைப் போக்குவரத்துப்பாலம்! அது மட்டுமின்றி பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட நான்காவது ரெயில் மற்றும் சாலை பாலம் ஆகும்!

அடுக்கு மாடி போல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மேற்புறம் தரை வழிப் போக்குவரத்தும், கீழே ரயில்களும் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது! 

பாலத்தின் நீளம் 4.94 கி.மீ. ஆகும். பாலத்தைத் தாங்கும் வகையில் 42 உறுதியான தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

கீழ்ப்பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்காக இரட்டை அகல ரெயில் பாதை போடப்பட்டுள்ளது. 

மேலேயுள்ள தளத்தில் சாலைப் போக்குவரத்துக்காக மூன்று வழிச்சாலை போடப்பட்டுள்ளது. 

இந்த சாலையால், திப்ரூகருக்கும், அருணாசல பிரதேச தலைநகர் இடா நகருக்கும் இடையிலான சாலை வழி தூரம் 150 கி.மீ. குறையும். அதே சமயத்தில் ரயில் வழி தூரம் 705 கி.மீ. குறையும். பயண நேரம் 10 மணி நேரம் குறையும்.

திப்ரூகரில்தான் பெரிய ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரிகள், விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால், அங்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் மிக உதவியாக இருக்கும்.

இந்தியா - சீனா எல்லையில் 75 சதவீதப் பகுதி அருணாசல பிரதேசத்தில்தான் உள்ளது. அருணாசல பிரதேசம் அருகே இப்பாலம் அமைந்திருப்பதால் அங்கு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு போர் தளவாடங்கள் கொண்டு செல்ல இப்பாலம் பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. 

ராணுவ வீரர்களை விரைவாக வந்து சேருவதற்கும் பயன்படும். அவசர காலத்தில் இந்தச் சாலையில் போர் விமானங்கள் கூடத் தரையிறங்க முடியும்! இப்பாலம் தேசப் பாதுகாப்புக்குப் பெரிதும் துணை புரியும் என ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்!

மிகப் பெரிய ரயில்வே பாலம்!

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைய இருக்கிறது. இந்த ரயில் பாலம் மலைகளுக்கு இடையே ஆர்பரித்து ஓடும் ஆற்றின் மேலே பிரம்மாண்டமான வளைவுகளுடன் உருவாகி வருகிறது! 

இந்த ரயில்வே பாலம் காஷமீரில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் பெயர் "சேனாப் பாலம்' ஆகும்! 

காஷ்மீரின் "கவரி'  - "பத்கல்'  பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலம் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் தரை மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில் 1315 மீட்டர் நீளத்தில் கட்டப்படுகிறது. இந்தப் பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும்.  மற்றும் இப்பகுதியில் சில நேரங்களில் மணிக்கு நூறு கிலே மீட்டர் வேகத்தில் பலமாகக் காற்று வீசும்! எனவே இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க அதி நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இப்பாலத்தைக் கட்டுகின்றனர்! 

இருமலைகளுக்கு இடையே 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் பாலம் உருவாக்கப்படுகிறது. டில்லியில் உள்ள குதுப் மினாரைவிட இந்தப் பாலம் ஐந்து மடங்கு உயரம் அதிகமாயிருக்கும்! உலகிலேயே அதிக உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட இது 17 மீட்டர் உயரம் அதிகம்!

 

 

உலகின் அதி வேகப் போக்குவரத்துத் தொழில் நுட்பங்கள்!

புல்லட் இரயில், பறக்கும் டாக்ஸிகள், ஹைபர் லூப், சூப்பர்சானிக் விமானங்கள், டிரைவரில்லா டாக்ஸிகள் போன்றவை அடங்கிய போக்குவரத்துப் புரட்சியை இந்த உலகம் சீக்கிரமாக சந்திக்க இருக்கிறது. பயண நேரத்தை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு குறைக்க முடியுமா?.... என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் தொழில் நுட்பம் ஹைபர் லூப்!

ஹைபர் லூப்!

காற்றின் அழுத்தம் மிகக் குறைவாக உள்ள ஒரு கண்ணாடிக் குழாயில் அமர்ந்து மணிக்கு 1500 கிலோ மீட்டருக்கும் மேலாக, அதிவேகமாகப் பயணிக்கும் போக்குவரத்துத் தொழில் நுட்பமே ஹைபர் லூப்! இத்தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் "எலன் மாக்ஸ்!'

பூமிக்கு மேலே பாலத்திலோ அல்லது பூமிக்கு உள்ளே குழாய் போன்ற சுரங்கம் அமைத்தோ இந்தப் போக்குவரத்தை நடத்தலாம்!

பயணிகள் அமர்ந்து பயணிக்க உதவும் இருக்கைகள் அடங்கிய கண்ணாடிக் குழாய்க்கு  "கேப்ஸ்யூல்கள்' என்று பெயர்.  இந்த பயணிகள் அமர்ந்திருக்கும் கண்ணாடிக் குழாய் கேப்ஸ்யூல்கள் ஒரு மிக நீண்ட ஓடு பாதைக் குழாயின் உள்ளே இருக்கும்! கேப்ஸ்யூலுக்கும் வெளிக்குழாய்க்கும் இடையில் காந்தப் புலம் உருவாக்கப்படும். அதனால் ஏற்படும் காந்த விசையின் காரணமாக கண்ணாடிக்குழாய் காப்ஸ்யூல் நதரும். பொதுவாக வாகனம் ஒன்று நகரும்போது  காற்றினால் உராய்வு ஏற்படும். அதனால் வாகனத்தின் வேகம் குறையும்.  இந்த உராய்வைகக் குறைக்கவும், வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கவும் ஒரு அருமையான யுக்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 
அதாவது ஹைபர் லூப் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதுவாக குழாயின் முன் பகுதியில் உள்ள காற்றை உறிஞ்சி பின்னுக்குத் தள்ளும் கம்ப்ரஸர் அமைப்பும் இதில் இருக்கும்! 

எரிபொருள் தேவையில்லை!

இந்த வாகனம் எரிபொருள் ஏதுமின்றி குழாய்களின் மேலே பதிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தகடுகளில் இருந்து கிடைக்கும் மாசற்ற எரிசக்தியின் மூலம் இயங்கும்! இது 2013-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது. அந்த ஹைபர் லூப் கண்ணாடிக் குழாயில் ஐந்து பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போது கேப்ஸ்யூல் கண்ணாடிக் குழாய்களை அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்! 

சீனாவில்....

இந்த ஹைபர்லூப் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி "மின்னல் வேக ரயிலை' உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது! இந்த மின்னல் வேக ரயிலை வெள்ளோட்டம் விடுவதற்கு சீனா ஆர்வமாக இருக்கிறது. இந்த ரயில் சீனாவின் தென்மேற்கு "சிச்சுவான்' மாகாணத்தில் இயக்கப்பட உள்ளது! வேகம் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?.... மணிக்கு சுமார் 1500 கிலோ மீட்டர்கள்! 

இந்தியாவில்!

முதல் முறையாக ஹைபர் லூப் போக்குவரத்து ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கும், விஜயவாடா நகருக்கும் (35 கி.மீ. தொலைவு) அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான ஒரு மணி நேரப் பயணம் வெறும் ஐந்து நிமிடப் பயணமாகக் குறைகிறது. )

அதாவது சென்னையிலிருக்கும் ஒருவர், மதுரையில் இருக்கும் ஒருவரை, ""அரை மணி நேரத்தில் வந்து சேர்!.... டிபன் ரெடி !.... என்று கூப்பிடலாம்!...'' ஆனால் இப்போது ரயிலில் ஜன்னல் ஓர சீட்டுகளில் காடுகளையும், மலைகளையும், வயல்களையும் வேடிக்கை பார்த்து ரசித்துக்க்கொண்டே செல்லும் அனுபவம் அதில் கிடைக்குமா?.... 

மேலும் சில தகவல்கள்!

உலகின் வேகமான பயண மார்க்கங்கள்!
சூப்பர் சானிக் விமானம் மணிக்கு    2179 கி.மீ. 
ஹைபர் லூப் மணிக்கு    1200 கி.மீ
(இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.)
ஜெட் விமானம் மணிக்கு    900 கி.மீ. 
ஃபுக்ஸிங் புல்லட் இரயில் மணிக்கு    350 கி.மீ. 
மாக்லெவ் புல்லட் இரயில் பிரான்ஸ் மணிக்கு    320 கி.மீ.

இந்தியாவின் முதல் 14 வழிச்சாலை

இந்தியாவின் முதல் 14 வழிச்சாலை தில்லி - மீரட் பாதையில் அமையவிருக்கிறது. இதன் தூரம் 149 கி.மீ. இத்தூரத்தில், முதல் 27.74 கி.மீ. வரை 14 வழிச் சாலையாகவும், எஞ்சிய தொலைவு ஆறு வழிச் சாலையாகவும் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான மதிப்பீடு 10,000 கோடி ரூபாய். 

இத்திட்டத்திற்கு 2015 அடிக்கல் நாட்டப்பட்டது. 14 வழிச் சாலை அமையும் 27.74 கிலோ மீட்டரில் தற்போது, முதல் 9 கி.மீ. வரையிலான பணிகள் நிறைவடைந்து விட்டன. உத்திரப் பிரதேசத்தில் உள்ள "பக்பத்'  என்ன இடத்தில் பிரதமர் இச்சாலையைத் திறந்து வைத்தார்.

சூரிய ஒளியால் இயங்கும் விளக்குகள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் மழை நீர் சேமிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன! இதன் மூலம் தில்லி - மீரட் இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறையும். தில்லியின் மாசு 27 சதவீதமும், போக்குவரத்து நெரிசல் 41 சதவீதமும் குறையும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது. 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/கருவூலம்-மிக-நீளமான-போகிபீல்-பாலம்-3115610.html
3115604 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவுச் சுடர்!: நானும் கை விட்டு விட முடியுமா? பி.எஸ்.சின்னப்பாண்டியன் Saturday, March 16, 2019 12:00 AM +0530 காந்தியடிகள் பூனாவில்  பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு தொழுநோயாளி வந்து அமர்ந்தான். இதைக் கண்ணுற்ற அருகிலிருந்தோர் முகம் சுளித்தனர்.  அவன் மீது ஆத்திரமுற்றனர். 

காந்தியடிகள் நோயாளியைக் கண்டார். அவன் அருகே சென்றார். அவனது புண்ணிலிருந்து வடியும் நீரைத் தன் போர்வையால்  துடைத்தார். பின் துடைக்கப் பயன்படுத்திய  போர்வையை மீண்டும் தன் மீதே போர்த்திக் கொண்டார்! பின் அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, உரையைத் தொடர்ந்தார். 

கூட்டம் முடிந்தபின் தொழுநோயாளியை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இன்னும் சில தொழுநோயாளிகள் இருந்தனர். அவர்களது புண் நிறைந்த உடம்புகளைத் தன் கையால் கழுவித் தக்க சிகிச்சை அளித்தார். அவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டார். 

இதைக் கண்ட டாக்டர் ஒருவர், ""பாபுஜி, இப்படி தொழு நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை செய்கிறீர்களே.... இது சரியா?....'' எனறு ஆதங்கத்துடன் கேட்டார்.

காந்தியடிகள் நோயாளியைச் சுட்டிக்காட்டி,  டாக்டரிடம், ""இவரை இவரது மனைவி கை விட்டு விட்டார்.... உறவினர்களும் கை விட்டு விட்டனர்.... மக்களும் கை விட்டு விட்டனர்.... அநாதையாக இருக்கிறார்... இங்குள்ள ஒவ்வொரு தொழுநோயாளியும் இப்படித்தான்!.... ஆதரவற்று இருக்கின்றனர்....நானும் கைவிட்டு விட முடியுமா?...'' என்று பதில் கூறினார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/நினைவுச்-சுடர்-நானும்-கை-விட்டு-விட-முடியுமா-3115604.html
3115605 வார இதழ்கள் சிறுவர்மணி அகில்குட்டியின் டைரி!: தோல்வி தரும் பாடம்! - அகில் குட்டி DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 பள்ளிக்கூட வருடாந்திர விழா!... அதில் நிறையப் போட்டிகள் வைப்பாங்க. நான் ஒரு பேச்சுப் போட்டியிலும், 500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியிலும் கலந்து கொண்டேன்.. பேச்சுப் போட்டி தலைப்பு "தோல்வி தரும் பாடம்!' ...நன்றாக ஓடிப் பயிற்சி செய்தேன்..... இரண்டு வருஷமா நான் முதலாவது  பரிசைத் தட்டிக்கொண்டு வந்தேன்! 

இன்று அந்த ஓட்டப்பந்தயப் போட்டி! ஓட்டப் பந்தயம் ஆரம்பமானது.... சென்ற வருடம் இரண்டாவதாக வந்த "சி' செக்ஷன் சரஸ்வதி இப்பவும் என் பின்னாடிதான் ஓடி வந்துக்கிட்டிருந்தா.... இன்னும் பத்துப் பதினஞ்சு அடிகள்தான் பாக்கி! நான் முதலாவதாகத்தான்  இருந்தேன்!......என்ன  ஆச்சோ தெரியலே....கால் ஒரு பக்கமா பிசகி தொபுக்கடீர்னு கீழே விழுந்துட்டேன்!..... வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த சில பேர் பரிதாபப்பட்டாங்க.... சில பேர் சிரிச்சுட்டாங்க..... எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது! அழுகை கூட வந்தது! என்னை முந்திக்கிட்டு எல்லோரும் ஓடிட்டாங்க.... என்னாலே எழுந்திருக்கக்கூட முடியலே!.... லட்சுமி டீச்சர்தான் ஓடு பாதையிலே வந்து என்னைத் தூக்கி விட்டாங்க....  முழங்காலில் நல்ல சிராய்ப்பு! ஸ்கூல்லே இருந்த முதலுதவிப் பெட்டியிலேயிருந்து கொஞ்சம் பர்னால் போட்டாங்க.... உடனே வீட்டுக்குப் போகச் சொன்னாங்க.... ஆனா நான் போகலே.... சரஸ்வதி முதலாவதா வந்திருக்கா.... அப்புறமா லதான்னு "பி' செக்ஷன்லே ஒரு பொண்ணு இரண்டாவதா வந்திருக்கா.... என்னோட வகுப்புத் தோழி ஜெயா மூணாவது!

சரஸ்வதி எங்கிட்டே வந்து, ""ரொம்ப வலிக்குதா?...'' ன்னு கேட்டாள். 

""ஆமா கொஞ்சம் வலிககுது!....'' ன்னு பதில் சொன்னேன். ஒரு வழியா வீட்டுக்குப் போனேன்.... எனக்கு ஓட்டப்பந்தயத்திலே எந்தப் பரிசும் கிடைக்காது! நாளைக்கு "தோல்வி தரும் பாடம்' ங்கிற தலைப்பலே நான் பேசணும்! ஹும்.... நான் எங்கே ஒழுங்கா பேசப்போறேன்!... அதிலும் எனக்குத் தோல்விதான் கிடைக்கும்னு தோணுது.

வீட்டுக்குப் போனேன். டாக்டர் கிட்டே அழைச்சுக்கிட்டுப் போய் சிகிச்சை செய்தாங்க...வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்து ரொம்ப கவலைப்பட்டாங்க... மறுநாள் பேச்சுப் போட்டி!.... எனக்கு ஆர்வமே இல்லே!... ஆனா ஜானகி சித்திதான் என்னை ஊக்கப்படுத்தி என்னைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்தாங்க....

மறுநாள், பள்ளிக்கூட  அரங்கத்தில் கூட்டத்தைப் பார்த்து,  ஜானகி சித்தி சொன்னபடி, ஆயிரக்கணக்கான முறை ஆராச்சியில் தோல்வி பெற்றுப் பின் வெற்றி கண்ட  எடிசன் மற்றும் எத்தனை முறை அறுந்தாலும் தளராமல் சிலந்தி வலையைப் பின்னிய சிலந்தியிடம் பாடம் கற்ற ஸ்காட்லாந்தின் ராபர்ட் தி ப்ரூஸ் எல்லா உதாரணங்களையும் காட்டி,  ....முயற்சி செய்யறதே பரிசு பெறுவது மாதிரிதான்!....அடுத்த வருஷமும் நான் ஓட்டப்பந்தயத்திலே கலந்துகிட்டு முதல் பரிசை வெல்ல முயற்சி பண்ணுவேன்' னு சொன்னப்ப கூட்டத்திலே பலத்த கைதட்டல் கேட்டது! பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது!.... எல்லோரும் கை தட்டிப் பாராட்டினாங்க....மேடையிலிருந்து கீழே வந்தபோது நான் சரஸ்வதி, லதா, ஜெயா எல்லோரோடும் கை குலுக்கி என்னோட வாழ்த்துக்களைத் தெரிவிச்சேன்!....எனக்கும் ரொம்பப் பேர் வாழ்த்துத் தெரிவிச்சாங்க....வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்!.... நேற்றைக்கு இருந்த வருத்தம் எல்லாம் கரைஞ்சு போச்சு!... பேச்சுப் போட்டியிலே கூட நான் பரிசு வாங்காம போயிருந்தா நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்!

தோல்வியைத் தாங்கிக்கிற சக்தி இப்போ எனக்கு வந்திடுச்சு!இப்போவெல்லாம் நான் பரிசைப் பற்றிக் கவலைப்படறதில்லை... ஆனா அதுக்காக தோல்விக்கு பயந்துக்கிட்டு எதிலும் கலந்துக்காமயும் இருக்க மாட்டேன்!

ஜானகி சித்திதான் வெற்றிக்கும், தோல்வியைத் தாங்குற சக்திக்கும் காரணம்! பின்னே! முயற்சிதான் வெற்றிக்கு மந்திரம்னு சொல்லிக் கொடுத்தது அவங்கதானே!

அடுத்த வாரம் மாநில அளவில் ஒரு ஓவியப் போட்டி! அதற்கு நான் என் பெயரைக் கொடுத்தேன்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/அகில்குட்டியின்-டைரி-தோல்வி-தரும்-பாடம்-3115605.html
3115606 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: காலம் அறிதல் DIN DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 பொருட்பால்  -  அதிகாரம் 49  -  பாடல் 6

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேரும் தகைத்து.


-திருக்குறள்

ஆக்கச் செயல்களில் முயல்வோர்கள் 
ஆரவாரம் ஏதும் இல்லாமல் 
ஊக்கம் தளர்ந்து போகாமல் 
ஒடுங்கி அடங்கி வாழ்வார்கள்

எதிரியைத் தாக்கும் நேரத்தில் 
பின்னோக்கிச் சென்று பாய்வதுபோல் 
தாக்குப் பிடித்துக் கொள்வார்கள் 
தருணம் பார்த்து வெல்வார்கள்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/குறள்-பாட்டு-காலம்-அறிதல்-3115606.html
3115607 வார இதழ்கள் சிறுவர்மணி விவேகானந்தரின் பொன்மொழிகள் DIN DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென ஒதுக்கி விடுங்கள்!

கோழைகளே பாபம் புரிபவர்! தைரியமுடையோர் ஒருக்காலும் பாபம் செய்யார்! 

அன்பாலும், உண்மையை நாடும் பேரவாவாலும், முழு ஆத்ம சக்தியாலும்தான் பெருங்காரியங்கள் யாவும் நிறைவேறுகின்றன! 

உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்!
இவ்வுலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்! இல்லையேல் உங்களுக்கும், மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்!

முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! எஜமானனாகும் தகுதி பின்னர் தானே வரும்!

நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தாலன்றி உமது மனதில் உள்ளதை வெளியிட வேண்டாம்!

சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை! கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.

பிறருக்காகச் செய்யும் மிகச் சிறிய முயற்சியும் உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது. பிறருக்காக மிகச் சிறு நன்மையை எண்ணுவதும் வரவர சிங்கத்தின் பலத்தை நெஞ்சிற்குள் ஊட்டும்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/விவேகானந்தரின்-பொன்மொழிகள்-3115607.html
3115608 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை!:  கடவுளின் கருணை - ஜோ .ஜெயக்குமார் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.
இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. 
அதே ஊரில் தங்கையா என்பவன் இருந்தான். தங்கையா கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?
""நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா?'' இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.
அதற்கு அருணாச்சலம், "" எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான்''  இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.
ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வியர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி!
வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். ""என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?' என்று கிண்டல் செய்தான்.
வெயில் கொடுமை ஒரு பக்கம்..... தங்கையாவின் தொல்லை ஒரு பக்கம்.... எல்லாம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.
""அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்து
விடாதே. இறைவனது கருணையை
எப்போதும் கிண்டல் செய்யாதே'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.
பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா! நாயோ பயங்ரமாக துரத்தியது.
குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/முத்துக்-கதை--கடவுளின்-கருணை-3115608.html
3115611 வார இதழ்கள் சிறுவர்மணி வீரன் வந்தான்: பாராட்டுப் பாமாலை!  - 36 - செ.சத்தியசீலன் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530
பறவை காத்தான் சிபி மன்னன்
பாரதம் காத்தான் அபிநந்தன்!
உறவை உயிரை மறந்தான்
உயரே தனியே  பறந்தான்!

பயங்கர வாதப் பூமியில்
தயங்கி வீழ்ந்த மகனைப் 
பாய்ந்து பிடித்துக் கொண்டார்
பயமற அபிநந்தன் நின்றான்!

அடிமேல் அடியும் விழுந்தது
தடியால் தாக்கவும் செய்தனர்!
கொடியைக் காத்த குமரன்போல்
அடிகளை ஏற்றான் அபிநந்தன்!

அரசின் கவனம் அவன்மீது
அனைத்து நாடுகளின் நல்லெண்ணம்
விரைந்து செயல்பட வெற்றியுடன் 
வீரன் வந்தான் டில்லி நகர்!

வான்படை தன்னில் பணிபுரியும் 
மூன்றாம் தலைமுறை அபிநந்தன்
செந்தமிழ்  மண்ணின்  தவப்புதல்வன்!
சென்றான்! வென்றான்! வந்தானே!

வர்த்தமான் நந்தனின் தந்தை 
அர்த்தம் உள்ள வார்த்தை சொன்னார்!
வீரமகனைப் பெற்றேன் பெருமிதம் 
விளங்கிட வாழ்கிறேன் என்றார்!

இந்தியர் யாவரும் பெருமிதம் எய்திடப்
போற்றுவோம் அபி நந்தனின் வீரம்!
நந்தனைப் பெற்ற தந்தை, தாயினைப் 
போற்றுவோம்!...போற்றுவோம்!... போற்றுவோமே!


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/வீரன்-வந்தான்-பாராட்டுப்-பாமாலை----36-3115611.html
3115612 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: சிறுமிகளின் அரிய செயல்! - கொ.மா.கோதண்டம் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530  

பள்ளியில் கற்றிடும் சிறுமிகளே
பாதையில் கூடி வந்தார்கள்
வெள்ளை நிற உடை அழகுடனே 
வேண்டி நன்கொடை கேட்டார்கள்!

""எம்முடன் கற்றிடும் மாணவியாம் 
இனியவள் "மாலா' அவள் பெயராம்! - அவள் 
அம்மா இதய நோயாலே
அவதிப்பட்டே இருக்கின்றாள்!

அறுவை சிகிச்சை செய்திடவே 
ஆகும் செலவோ ஒரு இலட்சம்!
உருவம் மெலிந்தே வாடுகிறாள்
உதவிடவேண்டும் அவளுக்கே!

அப்பா டீக்கடை நடத்துகிறார்!
அவரிடம் பணங்காசு ஏதுமில்லை!
இப்படியான சூழ்நிலையில் 
எங்களு தோழிக்கு உதவிடுங்கள்!

முதல்வர் கல்வி அமைச்சுருக்கும் 
முதலில் விண்ணப்பம் போட்டுள்ளோம்!
இதயம் உள்ளோர் உதவிடுங்கள்! - என 
எல்லோரிடமும் கேட்டார்கள்!

கையில் அறிவிப்பு அட்டையுடன் 
கடைகடையாகவும் கேட்டார்கள்!
கையில் இருந்த உண்டியலில் 
காசுகள் பலரும் போட்டார்கள்!

""பொங்கல் திருநாள் எங்களுக்கே 
புத்தாடை வேண்டாம் என்றிட்டோம்!
எங்களுக்கான அப்பணத்தை 
இதற்கே உதவிட எண்ணியுள்ளோம்!'' - என்ற 

சிறுமிகள் செய்யும் இப்பணியைத் 
தெரிந்து என் மனம் வியந்ததுவே!
உறுதியாய் நூறு ரூபாயை 
உடனே போட்டேன் உண்டியலில்!

உதவிக்கரங்கள் கூடியதால் 
உடனே சிகிச்சையும் முடிந்ததுவே!
நல்ல விதமாய்  மாலாவின் 
தாயின் உடல் நிலை தேறியதே!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/கதைப்-பாடல்-சிறுமிகளின்-அரிய-செயல்-3115612.html
3115613 வார இதழ்கள் சிறுவர்மணி கூழாங்கல்  - பிரபுசங்கர் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 ஒரு கிராமத்தில் ஒரு மகான் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
அவரிடம் தனசேகரன் என்று ஒரு சீடன் இருந்தான். அவன் மூடன்! மகானின் அறிவுரைகள் அவனுடைய புத்தியில் ஏறவில்லை.  அவனுக்குத்   தான் பெரும் செல்வந்தனாக வாழ வேண்டும் என்ற பேராசை இருந்தது!
நல்ல வாய்ப்புக்காக அவன் காத்திருந்தான். மகானை தரிசிக்க வருவோரிடம் எப்பொருளையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுவார். அன்பு மிகுதியால் வரும் காணிக்கைகளை உடனே அங்குள்ள எளியோருக்குத் தந்துவிடுவார். தனசேகரனுக்கு இது பெரிய வருத்தம் தரும். ஒரு காலம் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். 
ஒரு சமயம், மகானைப் பார்க்க வந்திருந்த ஒரு பிரமுகரிடம் அவர் மகானுக்குச் சமர்ப்பிக்கும் காணிக்கையைத் தன்னிடம் தனியாகத் தந்துவிடும்படி கேட்டுக்கொண்டான். இதை பிரமுகர் மகானிடம் தெரிவிக்க, இனி அவன் தன்னுடன் தங்கியிருக்கலாகாது என்று புரிந்துகொண்டார் மகான். அதுமட்டுமல்லாமல், அந்த ஊரை விட்டே தான் போய்விடுவதுதான் சரி என்றும் யோசித்தார். அவ்வாறு போகுமுன் அவனுக்கு நல்லதொரு பாடம் கற்பித்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவு செய்தார். 
தனசேகரனைக் கூப்பிட்டார். ""தம்பி, நான் புண்ணியத் தலங்களுக்குப் போய்வர விரும்புகிறேன்.  நீ இந்த ஊரிலேயே தங்கிவிடு. உனக்காக ஒரு அன்பளிப்பை நான் கொடுக்க விரும்புகிறேன்'' என்றார். 
இந்த சாமியாரிடம் அன்பளிப்பாகக் கொடுக்க என்னதான் இருக்கும் என்று அலட்சியமாக நினைத்துக் கொண்டான். இவரிடம் என்ன அப்படி ஒரு மதிப்பு வாய்ந்த பொருள் இருந்துவிடப் போகிறது?' என்று எண்ணிக்கொண்டான்.      
மகான் ஒரு கூழாங்கல்லை அவனிடம் கொடுத்து,  ""தம்பி, இது வெறும் கூழாங்கல் அல்ல, அற்புதமானது. இதனால் நீ எந்த உலோகத்தைத் தொட்டாலும் அது தங்கமாக மாறும்!''
சீடனுக்கு மகிழ்ச்சி!....""மிக்க நன்றி குருவே!'' என்றான்.
 "" ஆனால் நீ இந்தக் கல்லைப் பயன்படுத்தத் தொடங்கி இரண்டு நாள்தான் இதற்கு அந்த மகிமை இருக்கும். பிறகு கல் தன் சக்தியை இழந்து சாதாரண கூழாங்கல்லாகத்தான் இருக்கும்...''
அந்தக் கூழாங்கல்லை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டான்.
மிகுந்த சந்தோஷம் அவனுக்கு. இரண்டே நாட்களில் தான் மிகப் பெரிய பணக்காரனாக விளங்கப் போகிறோம், யாரிடத்தும் இல்லாத அளவுக்குத் தன்னிடம் தங்கம் சேரப்போகிறது என்று மனப்பால் குடித்தான். அந்தக் கூழாங்கல்லை பத்திரமாகப்  பூஜையறையில் கொண்டு வைத்தான். அதை அவன் வெளியில் எடுத்துச் செல்லத் தயங்கினான். மனதில் பேராசைத்  தீ மூண்டது! 
கட்டுப்படுத்த முடியாத ஆசையுடன்  இரும்பு உலோகங்களை நிறையச் சேமிக்கத் துடித்தான்!
அந்த ஊரில் இரும்புப் பட்டறை ஒன்று இருந்தது. அங்கே உபயோகமற்ற பழைய இரும்பு சாமான்கள் ஏராளமாக இருந்தன. அந்த இரும்பையெல்லாம் டன் டன்னாகத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்துவிட வேண்டும், பிறகு எளிதாகத் தங்கமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பேராசையுடன் யோசித்தான்.
கடைக்காரர் தனசேகரனை சந்தேகமாகப் பார்த்தார். சும்மா வெறும் கையை வீசிக்கொண்டு வந்திருக்கிறான், அப்படியே வந்தவன் தன்னிடம் எதுவும் பேசாமல், மலைபோல் குவித்து வைத்திருக்கும் இரும்பு ஓட்டை உடைசல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று யோசித்தார். ""என்னப்பா வேண்டும்? இந்தப் பழைய இரும்பு சாமான்களிலிருந்து ஏதாவது புது இரும்பு சாமான் உருவாக்கித் தரவேண்டுமா?'' என்று கேட்டார். 
""அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,'' அலட்சியமாக பதிலளித்தான் தனசேகரன். தன்னிடம் மந்திர கூழாங்கல் இருக்கும் பெருமை அவனுக்கு!
அவனுடைய முகபாவத்தைக் கடைக்காரர்,  ""உனக்கு என்னதான் வேண்டும்?'' என்று கேட்டார்.  
""இதோ, இந்த இரும்பெல்லாம் எனக்கு மொத்தமாக வேண்டும். என்ன விலை?'' என்று தனசேகரன் கேட்டான்.
கடைக்காரர் யோசித்தார்.  இவனுக்கு எதற்காக இத்தனை பழைய இரும்பு? நம்மிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, வேறு யாரிடமாவது விற்கப் போகிறானோ?...
""சீக்கிரம், நாளைக்குள் நான் இந்த இரும்பு எல்லாவற்றையும் எடுத்திட வேண்டும்... விலை சொல்லுங்கள்,'' என்று தனசேகரன் பரபரத்தான். 
""சரி, உங்கிட்ட எத்தனைப் பணம் வெச்சிருக்கே?'' கடைக்காரர் கேட்டான். 
""பணம் என்ன, பெரிய பணம்! ரெண்டுநாள் கழித்து வந்தீர்களென்றால் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மேலேயே நான் தருவேன்,'' என்றான் தனசேகரன்.
இந்தப் பையனிடம் ஏதோ மர்மம் இருப்பதைப் புரிந்துகொண்ட கடைக்காரர், ஒரு விலையைச் சொல்லி, எடுத்துக்கொண்டு போகுமாறு சொன்னார். ""இங்கே வண்டி எதுவும் இல்லை. நீயாக ஏதேனும் வண்டி அமர்த்திக்கொண்டு எடுத்துக்கொண்டு போ.''
தனசேகரன் யோசித்தான். எதற்காக அனாவசியமா வண்டி வாடகை கொடுக்கவேண்டும்? ரெண்டுநாள் அவகாசம் இருக்கிறதே, நாமே கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தான். 
அப்போதே பாதிநாள் கடந்துவிட்டது. மிகவும் சிரமப்பட்டு பெரிய பெரிய இரும்பு சாமானாக எடுத்துப் போக ஆரம்பித்தான். அதற்குள் ஊரில் அனைவரும் கூடிவிட்டார்கள். "என்ன செய்யறான், இந்தக் கிறுக்கன்!' என்று தங்களுக்குள் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால தனசேகரனோ யாருடைய உதவியையும் கேட்கவில்லை. தானே தூக்கமாட்டாமல் பழைய இரும்புச் சாமான்களை எடுத்துக்கொண்டு போனான். 
மாலை நேரம். கடைக்காரர் கடையை மூடினார். ""இன்றைக்குக் கடைநேரம் முடிந்துவிட்டது; மறுபடி நாளைக்குதான்,'' என்றார்.
தனசேகரனுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. இன்னும் முக்கால்வாசி சாமான்களை அவன் கடையிலிருந்து எடுக்க வேண்டும். மறுநாள்வரை காத்திருக்க அவன் தயாராக இல்லே. அதனால் இரவு முழுவதும் தூங்காமல், தெருத்தெருவாக அலைந்து கீழே கிடந்த ஆணி, ஊசி என்று எல்லா இரும்பு சாமான்களையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தூக்கமே இல்லை!....   இப்படி இரவு முழுவதும் சுத்தியவன், காலையில், கடைக்கு முன்னால் காத்திருந்தான். கடை திறந்தவுடனேயே உள்ளே பாய்ந்துபோய் இரும்பு சாமான்களை வேகவேகமா எடுத்துக்கொண்டான். இரவு முழுவதும் தூங்கவில்லை; சாப்பிடவும் இல்லை. மிகவும் சோர்வாகிவிட்டான். ஐந்து கிலோ இரும்பைக் கூட இப்போது இழுத்துக்கொண்டு போக அவனால முடியவில்லை. மயக்காமாய் வந்தது.  அப்படியே பொத்தென்று விழுந்துட்டான்.
அவனுக்கு மயக்கம் தெளிந்து எழுந்தபோது இரண்டுநாள் பொழுது போய்விட்டது. "ஓ'ன்னு அழுதான் தனசேகரன். இனி அந்தக் கூழாங்கல் பயன்படாதே!
 எல்லாம் பேராசையால் விளைந்த விபரீதம்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/கூழாங்கல்-3115613.html
3115616 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530
""அங்கிள் நீங்க அந்த படத்திலே செகண்ட் ஹீரோன்னு சொன்னீங்க....
படத்திலே ஆளையே காணோமே.... 
""ஆமா!... நான்  படத்திலே மூணு செகண்ட்தானே வரேன்!....''

எஸ்.வேல் அரவிந்த், குளத்தூர்.

 

"" ஜான்  ஏறினா முழம் சறுக்குது!...''
"" அது எப்படி?.... ஜான் ஏறினா
ஜான்தானே சறுக்குவான்!...''

கு.வைரச்சந்திரன், திருச்சி -620008

 

""பரீட்சை பேப்பரிலே குருசாமி துணைன்னு எழுதினியே... 
அது உங்க குலதெய்வமா?
""இல்லே..... பேப்பரைத்
 திருத்தற வாத்தியார்!...''

ஜி,சரவணன், நாமக்கல்-638183.

 

""என்ன படிக்கிறே?...''
""எம்.பி.ஏ. படிக்கிறேன் பாட்டி!...''
""ஏன்?... எம்பாமல் படிக்க முடியாதா? 

வி. ரேவதி, தஞ்சாவூர்.

 

""ஜோசியமே பொய்தான்!...''
""கிளி ஜோசியம்?...''
""பச்சைப் பொய்!...''

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி

 

""ஒரு ஓவருக்கு ஆறு பால்...''
""என்னது இது பயித்தியக்காரத்தனமா
 இருக்கு?... ஆடறவர் ஆறு பாலை
எப்படி பாட்டிங் பண்ண முடியும்?...''

ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/கடி-3115616.html
3115618 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்:  ஞாபகம்! சுமன் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 காட்சி - 1
இடம் - மீனாவின் வீடு,   
மாந்தர் - மீனா (ஆறாம் வகுபபு)
 யோகா (மீனாவின் அம்மா),  ஈஸ்வர் (அப்பா) 

(காலை வேளை. மீனா குளித்து விட்டு வருகிறாள்...)
மீனா : (அம்மாவிடம்) என்னம்மா இது?... அப்பா ஏன் இவ்வளவு வேகமா குளிக்கப் போறாரு?
அம்மா (யோகா)  : அவருக்கு இன்னிக்கு ஆபீஸூக்கு சீக்கிரமா போகணுமாம்.... இன்னிக்கு அவரோட  ஆபீஸூக்கு வெளியூரிலேர்ந்து உயரதிகாரி வர்றாராம்.... அதான்!
மீனா: இன்னிக்கு எனக்கு ஒரே ஒரு கணக்குலே சந்தேகம் இருக்கும்மா.... அவரு சொல்லித் தருவாரா? 
அம்மா: அவரு குளிச்சுட்டு வந்த உடனே நீயே கேட்டுக்கோ!.....

(அப்பா குளித்துவிட்டு வருகிறார்..... அவருடைய செல்போன் ஒலிக்கிறது....அப்பா செல்ஃபோனை எடுக்கிறார்... மீனா அப்பாவிடம் கணக்கு பற்றிய சந்தேகத்தைக் கேட்கக் காத்திருக்கிறாள்......)

அப்பா (ஈஸ்வர்) : ச்சே!..... பாதியில் சார்ஜர் தீர்ந்துடுச்சு!.... ம்ம்.... 
மீனா: அப்பா, எனக்கு ஒரே ஒரு கணக்குலே டவுட் இருக்குப்பா!.... கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா.... மீதி எல்லா ஹோம் ஒர்க்கையும் முடிச்சுட்டேன்....
அப்பா: அடப் பாவமே.... இன்னிக்கு எனக்கு ரொம்ப வேலை இருக்கே மீனா.... ஆறு ஃபைலை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கேன்.... முப்பது நிமிஷத்திலே பார்க்கணும்.... சாரிம்மா.....
மீனா: சரிப்பா,.... சாயங்காலம் முடியுமாப்பா?
அப்பா : ஓ.கே..... எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு... 
மீனா: என்னப்பா....
அப்பா : இந்த செல்ஃபோனை சார்ஜர்லே போடறியா?....
மீனா : சரிப்பா!....
அம்மா : டிபன் ரெடி....வாங்க!....

(மீனா போனை சார்ஜரில் போடுகிறாள். மீனாவும், அப்பாவும் சாப்பிடுகிறார்கள்..... அப்பா சில ஆபீஸ் ஃபைல்களைப் பார்க்கிறார்... சில பேருக்கு கம்ப்யூட்டரில் மெயில் அனுப்புகிறார்.... அம்மா மதிய உணவைக் கட்டித் தருகிறாள்... மதிய உணவு டப்பா, தண்ணீர் பாட்டில்...  பர்ஸ்,  ஆபீஸ் கைப்பை சில எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில்  அப்பா புறப்பட்டுச் சென்று விடுகிறார்....மீனா சாப்பிட்டுக் கைகழுவிக்கொண்டு ஹாலுக்குச் செல்கிறாள்.... ஹாலில் அப்பாவின் செல்போன் சார்ஜரில் இருக்கிறது!....) 
 
மீனா : அம்மா!.... அப்பா செல்போன் சார்ஜரில் இருக்கும்மா!..... அப்பா மறந்து வெச்சுட்டுப் போயிட்டாரும்மா!....
அம்மா : இப்போ என்ன செய்யறது?..... அவருக்கு ஒரு கால் வேறே வந்து கட்டாயிடுச்சு!.... ஏதாவது முக்கிய 
அழைப்பு வந்தா என்ன செய்யறது?.... அவரைத் தொடர்பு கொள்ளக் கூட முடியாதே!....
நான் வேணும்னா அப்பாவோட சிநேகிதர் நாராயணன் அங்கிளுக்குப் ஃபோன் செஞ்சு பார்க்கறேன்.... அப்பா போன்லே அவர் நம்பர் இருக்கு!.....அப்பா அவர் வீட்டைத் தாண்டித்தான் ஆபீஸூக்குப் போயாகணும்!....
அம்மா: அதனாலே என்ன பிரயோஜனம்?.... உனக்கும் ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னா?...  
மீனா: எங்கிட்டேதான் சைக்கிள் இருக்கே!.... நாராயணன் அங்கிள் கிட்டே, அப்பாவை அவர் வீட்டுகிட்டே நிறுத்தச் சொல்லிடறேன்.... நான் சைக்கிள்லே போய் அப்பாவோட செல்ஃபோனைக் குடுத்துடறேன்....இருபது நிமிஷத்திலே திரும்பி வந்துடுவேன்..... ஸ்கூலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே!.... 
அம்மா : சரி பண்ணிப்பாரு!.... 

(மீனா நாராயணன் அங்கிளுக்குப் ஃபோன் செய்கிறாள்.... நாராயணன் அங்கிள் அப்பாவைப் பார்த்தால் தடுத்து நிறுத்தி வைப்பதாக உறுதியளிக்கிறார்....மீனா, செல் போனுடன்  சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைகிறாள்)

காட்சி - 2
 இடம் - நாராயணன் வீடு
மாந்தர் - அப்பா, நாராயணன் , மீனா.

(நாராயணன், தன் வீட்டின் வெளியில் நின்று  கொண்டு மீனாவைப் பார்த்து நிறுத்துகிறார். )

மீனா : அங்கிள்!.... அப்பா வந்தாரா?..... 
நாராயணன் : வந்தாரும்மா.... நான் அவரை மடக்கி உள்ளே  உட்காரச் சொல்லியிருக்கேன்....உள்ளே வா!

(மீனா செல்ஃபோனை அப்பாவிடம் தருகிறாள்.... அதில் இரண்டு மெசேஜ் வந்திருக்கிறது!.... அதைப் பார்க்கிறார் மீனாவின் அப்பா ஈஸ்வர்)

நாராயணன் : நீ ரொம்ப சமத்துப் பொண்ணும்மா!.... டக்குன்னு யோசிச்சு இப்படி செல்ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்திட்டியே!.... வெரிகுட்!....
ஈஸ்வர் : எனக்கு ரெண்டு மெúஸஜ் வந்திருக்கு!
நாராயணன் : என்ன அது தெரிஞ்சுக்கலாமா?..... 
ஈஸ்வர் : ஒரு மெúஸஜ்!.... இன்னிக்கு வரதா இருந்த என்னோட உயரதிகாரி நாளைக்குத்தான் வர்றாராம்....இன்னைக்கு வரமுடியலையாம்!.... 
மீனா : இன்னொரு மெúஸஜ்?......
ஈஸ்வர் : எனக்கு பிரமோஷன்!.... இன்னைக்கு பதினோரு மணிக்குள்ள நான் மற்றொரு கிளையிலே ஜாயின் பண்ணனுமாம்!..... மீனாவுக்கு ரொம்ப தேங்ஸ் சொல்லணும்!.... இல்லேன்னா எனக்கு என்ன மெúஸஜ் வந்ததுன்னே தெரியாது!.... இப்ப எனக்கு டென்ஷன் ரொம்ப குறைஞ்சுடுச்சு!.... 
நாராயணன்: வெரிகுட்!.... சபாஷ்!.... நாளைக்கு ஸ்வீட்டோட வா ஈஸ்வர்!.....
ஈஸ்வர் : நிச்சயமா!.... அதுக்கென்ன!.....

(ஈஸ்வர் உயரதிகாரிக்குப் போன் செய்கிறார்....மெúஸஜைப் பார்த்து விட்டதாகவும்....காலையில் செல் போன் சார்ஜ் தீர்ந்து விட்டதால் தொடர்ந்து பேச முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்.... மேலும் பிரமோஷன் ஆர்டர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.... இன்றே ஜாயின் பண்ணுவதாகவும் சொல்கிறார்....-- பிறகு நாராயணன் அங்கிளிடம் விடை பெற்றுக் கொண்டு ஸ்கூட்டரில் மீனாவை ஏறச் சொல்கிறார்.....)

மீனா : அப்பா எதுக்குப்பா நான் ஸ்கூட்டரிலே ஏறணும்!.... நான்தான் சைக்கிள் கொண்டு வந்திருக்கேனே...
ஈஸ்வர் : சரிம்மா..., அது நாராயணன் அங்கிள் வீட்டிலேதானே இருக்கு.... நீ வா,.... போகலாம் எனக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கு.... உனக்கு அந்தக் கணக்கைச் சொல்லித் தரேன்.... 

காட்சி - 3
இடம் - மீனாவின் வீடு
 மாந்தர் - மீனா, அம்மா, அப்பா.

(மீனாவும் அப்பாவும் ஸ்கூட்டரில் வீடு வந்து சேர்கிறார்கள்!...)

மீனா : அம்மா ஒரு ஸ்வீட் நியூஸ்!.... 
யோகா(அம்மா) : என்ன நியூஸ்!.... என்னங்க திரும்பி வந்துட்டீங்க?.... 
மீனா : அப்பாவுக்கு பிரமோஷன்!.... 
(அப்பா எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறார். - மீனா கணக்குப் புத்தகத்தையும் நோட்புக்கையும் கொண்டு வருகிறாள்.... அப்பா சொல்லித்தருகிறார்!)
மீனா : தேங்ஸ்ப்பா!.... நல்லா புரிஞ்சிடுச்சு!.... 
சமையற்கட்டிலிருந்து நெய் மற்றும் ஏலக்காயோடு கேசரி செய்யும் வாசனை வருகிறது. )
அம்மா : இந்தாங்க ஸ்வீட்! கங்கிராஜுலேஷன்ஸ்!
மீனா : சூப்பரா இருக்கும்மா! அப்பா,  கொஞ்சம் நாராயணன் அங்கிளுக்கும் ஒரு டப்பாவிலே போட்டு எடுத்துக்கிட்டுப் போங்க... அவர் கேட்டாரில்லே!.... அவரு சந்தோஷப்படுவாரு!
அப்பா :  வெரிகுட்! ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கியே!.... நீயும் வா!... உன்னைப் பள்ளிக்கூடத்திலே விட்டுட்டு நான் ஆபீஸ் கிளம்புறேன்....... நாளைக்கு சைக்கிளை எடுத்துக்கலாம்...
மீனா : இப்போ ஒண்ணையும் மறக்கலேயே... 
அப்பா : (சிரித்துக்கொண்டே) இல்லேடா தங்கம்!.... 

(இருவரும் ஸ்கூட்டரில் ஏறிச் செல்கிறார்கள்.... அம்மா டாடா காண்பிக்கிறாள்)

(திரை)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/அரங்கம்--ஞாபகம்-3115618.html
3115619 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் -ரொசிட்டா DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530  

1. பச்சைக் கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள் ளாம்...
2. மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சொப்புகள்...
3. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள்...
4.  வினா இல்லாத ஒரு விடை...
5. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது.
6. அத்தானில்லா அத்தை, என்ன அத்தை?
7. கோயில் குளம் இல்லாமல் கொட்டித் திரிகிறார் ஒரு வர்..
8. கோயிலைச் சுற்றி கருப்பு, கோவிலுக்குள்ளே வெளுப்பு...
9. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கக் கம்பி..

விடைகள்:


1. கள்ளிச்செடி
2. உருளைக்கிழங்கு
3. கப்பல்கள்
4. பணிவிடை
5.  தென்றல்
6.  சித்தரத்தை
7.  குயவர்
8.  சோற்றுப்பானை
9.  தேங்காய்

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/விடுகதைகள்-3115619.html
3115620 வார இதழ்கள் சிறுவர்மணி மரங்களின் வரங்கள்!: மருத்துவ பொக்கிஷம் - பாதிரி மரம் -பா.இராதாகிருஷ்ணன் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?  

நான் தான் பாதிரி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஸ்டீரியோஸ்பெர்மம் ஸ்வாவேலென்ஸ் அல்லது  பிக்னோனியா ஸ்வாவேலென்ஸ் என்பதாகும். நான் பிக்னானியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி என வேறு பெயர்களும் உண்டு.   ஒரு காலத்தில் கடலூர் மாவட்டம், கெடில நதியின் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர், என் பெயரால் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது.  ஆனால், இன்றோ உங்களுக்குக் காணக் கிடைக்காத அரிய மரமாகி விட்டேன்.   

நான் வேனிற் காலத்தில் பூக்கும் ஒரு வகைப் பூ மரம்.  அதனால் தான் குறுந்தொகையும், “வேனிற் பாதிரிக் கூன் மா மலர் அன்ன” என்று குறுந்தொகையும், “பாதிரித் தூத் தகட்டு எதிர் மலர் வேந்த கூந்தல்” என நற்றிணையும்  என் சிறப்பை உணர்த்துகிறது.   நம்ம ஒளவை மூதாட்டியும் தனது தனிப்பாடலில் என்னை மனிதர்களுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறாங்க. “சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்; சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல; குலாமலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்; பலா, மாவைப் பாதிரியைப் பார்” என்கிறார்.  அதாவது மனிதர்களிலே மூன்று வகை இருப்பார்களாம். சிலர் நல்ல விஷயங்களைச் சொல்லாமலே செய்வார்கள், பலா மரம் பூக்காது. ஆனால், காய்த்து இனிமையான பலாச்சுளைகளைத் தரும். முதல் வகை மனிதருக்கு பலா மரம் உவமை.  வேறு சிலர் சொல்லிவிட்டு செய்வார்கள், மாமரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும், எதையும் சொல்லிவிட்டுச் செய்கிற இரண்டாவது வகை மனிதருக்கு இது உவமை. வேறு சிலர் சொல்வார்கள், ஆனால்,  செய்ய மாட்டார்கள். பாதிரி மரம் பூக்கும், ஆனால், காய்க்காது  பழுக்காது, பந்தாவாகச் சொல்லி விட்டு எதுவும் செய்யாமல் இருக்கிற மூன்றாவது மனிதருக்கு இது உவமை. 

குழந்தைகளே,  என்னை தப்பா நினைக்காதீங்க. இது இயற்கை எனக்குத் தந்த வரம்.  நான் உங்களுக்கு இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கொடுக்கிறேன். சங்கக்காலப் புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் என்னை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போல என் தூய மலர் இருக்கும்.  எனது இலை, பூ, விதை,  அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. 

எனது வேர் உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். வேரை காய வைத்து இடித்து, சலித்து வைத்துக் கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும், இரத்தத்தில் சேரும் நச்சுப் பொருள்களை நீக்கி, இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்தச்சோகையைக் கட்டுப்படுத்தும்.    எனது பூவை அரைத்து தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும். பூவை நசுக்கி தேனுடன் கலந்து உண்டால் இதயத்தின் தசைகள், இரத்தக் குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றை பலப்படுத்தும். ஆஸ்துமா, காய்ச்சல், மூலநோய், புண், வீக்கம், எரிச்சல், மலச்சிக்கல், மூச்சுவிடுதலில் சிரமம், வாயுத்தொல்லை, குடல்புண், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை சரிசெய்யும் மருத்துவக் குணங்கள் என்னிடம் உண்டு. 

நான் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், அருள்மிகு பாடலீஸ்வரர், திருவாரூர்,  அருள்மிகு தியாகராஜர்,  திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அருள்மிகு இலிங்கேஸ்வரர், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை,  அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, சென்னை, பாடி, திருவலிதாயம், அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/மரங்களின்-வரங்கள்-மருத்துவ-பொக்கிஷம்---பாதிரி-மரம்-3115620.html
3115621 வார இதழ்கள் சிறுவர்மணி வரம்! - அழகு இராமானுஜன் DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530 பரபரப்பான சிந்தனையோடு படுத்துக் கிடந்தது ஆட்டுக்குட்டி! கொக்கு பறந்ததையும், குருவி பறந்ததையும் அண்ணாந்து பார்த்தது! அதற்குப் பறந்து போக ஆசை வந்துவிட்டது!
எதிரில் இருந்த கனகாம்பிகை அம்மன் கோயிலுக்குப் போனது. உள்ளம் உருகி வணங்கியது. அம்மன் தோன்றினாள்.
""ஆட்டுக்குட்டியே!... உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!...'' என்று அம்மன் கேட்டாள்.
அம்மனை வியப்புடன் பார்த்த ஆட்டுக்குட்டி, ""நான் ஆகாயத்தில் அந்தப் பறவைகள் போலப் பறக்க ஆசைப்படுகிறேன்....'' என்றது.
""ம்ம்.... தருகிறேன்!....ஆகாயத்தில் ஏதேனும் ஆபத்து வந்தால் என்னைக் கூப்பிடு!... நான் உடனே வருவேன்!...'' என்றாள் அம்மன்.
""ஆபத்தா?.... எனக்கா?....வரவே வராது!....'' என்றது ஆட்டுக்குட்டி.
இது குட்டியின் சிறுபிள்ளைத்தனம் எனறு புரிந்து கொண்டது அம்மன்.  குட்டிக்கு இறக்கைகளை அருளினாள் அம்மன். 
ஆட்டுக்குட்டி உற்சாகமாக ஆகாயத்தில் கிளம்பியது.
 உயரம் போகப் போக உற்சாகம் கூடியது! தலைகால் புரியவில்லை!.... பறந்து திரிந்தது. திசை தெரியாமல் யோசிக்காமல் விரைந்தது! பொழுதும் போய்விட்டது! ஆட்டுக்குட்டிக்குக் களைப்பு ஏற்பட்டது! உடல் கனப்பதை உணர்ந்தது! உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது. 
பூமியாகுமா வான வெளி? கடிக்கப் புல்லும், குடிக்க நீரும், படுக்க இடமும் அங்கே ஏது?...ஆட்டுக்குட்டிக்கு திகிலாகிவிட்டது!
இருட்ட ஆரம்பித்து விட்டது! அந்த நேரம் பார்த்து சூறாவளியுடனஅ கூடிய மழை வேறு வந்துவிட்டது! குட்டியின் இறக்கை  நனைந்து விட்டது!....தலைகால் புரியாமல் பறந்ததால் ஒரு இறக்கை முறிந்தும் விட்டது! குட்டி பயந்தே விட்டது! அச்சத்தால் அலற ஆரம்பித்து விட்டது!
அம்மன் தோன்றினாள்!.... காப்பாற்றினாள்! திகைப்புடன் அம்மனை நோக்கி அழுதது குட்டி.  
சிறகுகளை அகற்றும்படி வேண்டியது.  அம்மன் அகற்றினாள். 
 ""வேறு வரம் வேண்டுமா?...''  என்று கேட்டாள் அம்மன். 
""வேண்டாம் தாயே!.... வாழ்க்கையே நீ கொடுத்த வரம்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்''  என நன்றியோடு சொன்னது ஆட்டுக்குட்டி!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/வரம்-3115621.html
3115623 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா  -ரொசிட்டா DIN Saturday, March 16, 2019 12:00 AM +0530
கேள்வி: பூமி இவ்வளவு எடை என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள், அது போல வானத்துக்கு எவ்வளவு எடை என்று கணக்கிட்டிருக்கிறார்களா?

பதில்:  விஞ்ஞானிகள் சும்மா இருப்பார்களா? கில்லாடி களாச்சே!  அதையும் கணக்கிட்டிருக்கிறார்கள்.

பூமியின்  மொத்தப் பரப்பளவு 197 மில்லியன் சதுர மைல்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த 197 மில்லியனை நான்கு பில்லியனால் பெருக்கினால் பூமியின் மொத்தப் பரப்பளவு சதுர அங்குலங்களில் கிடைத்து விடும். ஆனால் அந்த எண்ணை நீங்கள்தான் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். முடிந்தால் பாருங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை.

வான்வெளியின் அழுத்தம் 1 சதுர அங்குலத்துக்கு  6.6 கிலோ என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதையும் பூமியின் மொத்தப் பரப்பளவையும் வைத்துக் கணக்கிட்டால் வானத்தின் எடை 5.2 மில்லியன் பில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இதை இங்கிலாந்திலுள்ள விஞ்ஞானக் கழகம் ஒன்று மிக எளிதாகச் சொல்லியிருக்கிறது. அதன்படி இந்தியாவிலுள்ள நன்கு வளர்ச்சி பெற்ற 570,000,000,000,000 யானைகளின் மொத்த எடைதான் நமது வானத்தின் எடை என்கிறார்கள். அப்பாடி, மூச்சு முட்டுகிறதா? 

சரி, இந்தக் கணக்கெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு பெரிய அழுத்தத்தை நாம் எப்படி உணராமல் இருக்கிறோம் என்று யோசித்தீர்களா?  நாம் குழந்தைகளாக இருக்கும்போதிலிருந்தே இதற்குப் பழகிப் பழகி, அழுத்தத்தை உணராத நிலைக்கு வந்து விட்டோம்.  நம்மை திடீரென்று காற்று கொஞ்சமாக இருக்கும் கிரகம் ஒன்றில் கொண்டு போய் விட்டால்தான் இந்த அழுத்தத்தை நாம் உணருவோமாம்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/mar/16/அங்கிள்-ஆன்டெனா-3115623.html