Dinamani - தினமணி கதிர் - https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3230274 வார இதழ்கள் தினமணி கதிர் வதை சுப்ரா DIN Sunday, September 8, 2019 10:53 AM +0530 "குக்கூ ... குக்கூ ...' சீனா கடிகாரம் எழுப்பிய உரத்த குரல் கேட்டு கண் விழித்தான் பிரபு. கீதா, "மணி ஐந்தாயிட்டுதா ?''" என்றாள் கண்களைத் திறக்காமலே. 
"ஆமாம். நான் போய் வர்த்தினியை எழுப்புகிறேன். நடன வகுப்புக்கு போய்ட்டு வந்து குளிச்சிக்கிடறோம். காஃபி வழியில் குடிச்சுக்கிறேன். வெளியே பூட்டிட்டு சாவியைக் கையில் கொண்டு போயிடறேன்''
"இன்னைக்கு புதன்கிழமைல்ல. ஏழு மணிக்கு மியூசிக் வகுப்பும் உண்டு" கீதா படுக்கையில் இருந்து எழாமலே பதில் கொடுத்தாள்.
பிரபு வர்த்தினி படுத்திருந்த அறைக்குச் சென்று கதவைத் திறந்து நுழைந்தான். வர்த்தினி கழுத்து வரை போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். பிரபு அருகில் சென்று மெதுவாக குரல் கொடுத்தான். " 
"குட்டிம்மா எழுந்திரு. டான்ஸ் க்ளாஸ் போகணுமில்ல" வர்த்தினி எழவில்லை. இரவு வெகுநேரம் உட்கார்ந்து படித்த அசதி. "
"தூக்கமா வருதுப்பா. கொஞ்ச நேரம் கழிச்சு எழுந்திருக்கவா?" என்றாள் மெல்லிய குரலில்.
"மணி ஐந்தாயிடுச்சு. இப்போ எழுந்தாத்தான் ஐந்தரை மணிக்கு டான்ஸ் க்ளாஸிற்குப் போக முடியும். ஏழு மணிக்கு ம்யூசிக் க்ளாஸ் வேற போகணும். அப்புறம் வந்து ஸ்கூலுக்கு போகணும். எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வரை தூங்கலாம், குட்டிம்மாவும் , அப்பாவும். சரியா ? " 
சரியாக தூக்கம் கலையாமல் எழுந்து குளியல் அறை நோக்கி நடந்த எட்டு வயது வர்த்தினியைப் பார்க்கையில் பிரபுக்கு மனம் சங்கடப்பட்டது. வர்த்தினி தயாராவதற்குள் அவனும் குளியலறைக்குச் சென்று தயாராகி உடைகளை மாற்றிக் கொண்டான். மீண்டும் வர்த்தினியின் அறைக்கு வந்தபோது வர்த்தினி
தயாராக இருந்தாள். 
அதிகாலை என்பதால் சாலையில் போக்குவரத்து அதிகமில்லை. பத்தே நிமிடங்களில் நடனப் பள்ளியை அடைந்து விட்டது கார். வர்த்தினியை உள்ளே அனுப்பிவிட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று சூடாக காஃபி சாப்பிட்டுவிட்டு வாகனத்தை அருகில் இருந்த மரத்தின் நிழலில் நிறுத்தி இருக்கையில் சாய்ந்தவாறே தூங்கி விட்டான்.
"அப்பா, போகலாமா ?" வர்த்தினியின் குரல் கேட்டதும் விழித்துக் கொண்டு முன் கதவைத் திறந்து விட்டான். வர்த்தினி ஏறிக் கொண்டாள். 
வீட்டையடைந்து இருவரும் குளித்துவிட்டு கீதா பரிமாறிய இட்லிகளைச் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறே முக்கால். மீண்டும் பயணித்து நடன வகுப்பை அடைந்தபோது மணி ஏழு. வர்த்தினி அவசரமாக உள்ளே போனாள். பிரபு நிழல் பார்த்து வாகனத்தை நிறுத்தினான். கைபேசி அழைத்தது.
"ஹலோ... மிஸ்டர் பிரபுவா ? நான் இயக்குநர் ராம் சங்கர் பேசறேன். இப்ப பண்ணிக்கிட்டு இருக்கிற படத்தில ஒரு சின்ன குழந்தை பாத்திரம். உங்க மகள் ஞாபகம் வந்துச்சு. இன்னைக்கு சூட்டிங் இருக்கு. வர முடியுமா ? மகாபலிபுரம் போற வழியில கடற்கரை ஸ்பாட். மத்தியானம் ஒரு மணிக்கு அங்கே இருந்தால் போதும். நல்ல ரோல். நல்லா பண்ணுவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு" 
"ஓ... நன்றி சார். முன்னதாகவே வந்து விடுகிறோம்'' என்றான். இயக்குநர் இடம் குறித்து சரியான அடையாளங்களைச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். பிரபு கைபேசியில் கீதாவை அழைத்தான். கீதாவின் குரலிலும் பரபரப்பு. 
"பள்ளிக்கூடத்திற்கு போன் செய்து விடுமுறை சொல்லிவிடு. வகுப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடறோம். கொஞ்சம் முன்னாடியே கிளம்பிப் போயிடலாம். நீயும் தயாராக இரு. வழியில சாப்பிட்டுக்கிடலாம்''
வகுப்பு முடிந்து வர்த்தினி வந்ததும் விஷயத்தைச் சொன்னான். வர்த்தினியின் முகத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும். " 
"அப்ப ஸ்கூல்?''
"லீவ் சொல்லிடலாம்'' சொல்லியவாறே வாகனத்தைக் கிளப்பினான். 
வர்த்தினி அடையப்போகும் உயரம் குறித்து கற்பனைகளில் மிதந்தவாறே வாகனத்தை ஓட்டினான். வர்த்தினி முதல் வகுப்பு படிக்கையில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் அவள் ஆடிய தனி நடனம்தான் எல்லாவற்றிற்குமே ஆரம்பம். பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டும் அளவிற்கு அழகாக ஆடினாள். இன்னொரு விழாவில் பாடியபோதும் அதே அளவிற்கு வரவேற்பு. பிரபுவும் கீதாவும் அவளை நடன வகுப்பு, இசை வகுப்பு எனச் சேர்த்துவிட அவளது திறமை மெருகடைந்து கொண்டே போனது. பள்ளியில் மட்டுமில்லாது வெளி இடங்களிலும் அவளது திறமை வெளிப்பட ஆரம்பித்ததும், எதிர்பாராமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதும், தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவளுக்கு வாய்ப்புகள் கிடைத்ததும்... எல்லாமே ஒரு கனவு போலத் தொடர்ந்தன. முத்தாய்ப்பாக சில மாதங்களுக்கு முன் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வந்த இயக்குநர் ராம் சங்கர் வர்த்தினியின் திறமையைப் பாராட்டியதோடு , தனது அடுத்த படத்தில் குழந்தைப் பாத்திரத்தில் அவளுக்கு வாய்ப்பு உண்டு என்று உறுதி அளித்தார். இயக்குநரின் வாக்குறுதி இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என எதிர்பார்க்கவில்லை.
வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள் கீதா. வர்த்தினியை வாரி அணைத்து முத்தமிட்டாள். 
"லீவ் சொல்லிட்டியா ?" 
"தலைமை ஆசிரியரிடமே பேசி விட்டேன். உடனே சரி சொன்னதும் இல்லாமல் வர்த்தினிக்கு வாழ்த்துகளையும் கூறினார்"
இயக்குநர் சொன்ன இடத்திற்குப் போக இரண்டு மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு சற்று முன்னதாகவே கிளம்பினார்கள்.
அந்த இடம் ஒரு படப்பிடிப்பிற்கு தயாராவதற்கான பரபரப்பில் இருந்தது. இரவு அடித்த பனிக்கு மாறாக மதியப்பொழுது சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான். ஒரு குடையின் கீழ் உட்கார்ந்திருந்த இயக்குநருக்கு பிரபுவும் , கீதாவும் வணக்கம் வைத்தார்கள். இயக்குநர் புன்சிரிப்போடு பதில் வணக்கம் சொன்னார். " "வாம்மா ... வருங்கால சூப்பர் ஸ்டார்'' என்று புன்னகைத்தார். பக்கத்தில் இன்னொரு குடையின் கீழ் கதாநாயகிக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள். " 
"ஹீரோ இப்போ வந்திடுவார். வந்ததும் ஆரம்பிச்சிடலாம். சாப்பிட்டீங்களா ?" 
பிரபு ஆமென்று தலையாட்டினான். மூவருக்கும் குளிர்ச்சியான பானம் கொடுத்தான் சிறுவன் ஒருவன். மூவரையும் தன் அருகிலேயே உட்கார வைத்துக் கொண்டார். 
"தன்யா... பாப்பா ரொம்ப சூட்டிகை. நீயேதான் பார்க்கப் போறியே" கதாநாயகி புன்னகை செய்தாள்.
"பாப்பா... சீன் என்னான்னு சொல்றேன். கேட்டுக்க. அதோ அந்த அம்மாதான் உன்னோட சித்தி. உன்னைப் பிடிக்காது. உங்க அப்பா , அதாவது சினிமா அப்பா... நம்ம ஹீரோ, சித்தி, நீ மூன்று பேரும் பிக்னிக் வந்திருக்கீங்க. உன்னோட விருப்பமான பூனைக் குட்டியையும் நீ சித்திக்குத் தெரியாமல் ஒரு கூடையில வச்சு கொண்டு வந்திருக்கே. சித்திக்கு உன்னையும் பிடிக்காது, அந்த பூனைக் குட்டியையும் பிடிக்காது. அது திடீர்னு சத்தம் கொடுத்ததும் சித்திக்கு தெரிஞ்சு உன்னைத் திட்டுறா. கூடையைத் திறந்து பூனைக்குட்டியை விரட்டி விடுகிறாள். சூடான மணலில் பூனைக்குட்டி கத்தியவாறே ஓடுகிறது. நீயும் அதன் பின்னாலேயே ஓடறே. அவசரத்தில செருப்பு கூட போடாம ஓடறே. சூடு தாங்காமல் வெளிப்படற வலியை உன் முகத்தில் காட்டணும். ரொம்ப இயற்கையா இருக்கணும். ரொம்ப தூரம் ஓடுனப்புறம் அதைப் பிடிச்சிடுறே. வாரித் தூக்கி முகத்தோடு வச்சு அணைச்சுக்கிறே. அப்ப உன் மகிழ்ச்சியை அப்படியே பார்க்கிறவங்க உணர்கிற மாதிரி காட்டணும். ஜமாய்ச்சுடணும்'' " இயக்குநர் வலியையும் , மகிழ்ச்சியையும் தன் முகத்தில் உருவாக்கிக் காட்டியதை வர்த்தினி ஆச்சரியமாகப் பார்த்தாள். இவ்வளவு உணர்ச்சிகளைத் தன்னால் வெளிப்படுத்த முடியுமா என்று யோசித்தாள். இயக்குநர் ஒப்பனைக்காரர் ஒருவரிடம் வர்த்தினிக்கு ஒப்பனை செய்யச் சொன்னார்.
தூரத்தில் ஓர் ஆள் கையில் ஒரு பூனைக்குட்டியோடு நின்று கொண்டிருந்தான். வெள்ளை நிறத்தில் "புசு புசு'வென்று முடியோடு இருந்தது. மின்னும் கண்கள். அதைப் பார்க்கையில் வர்த்தினிக்கு ஓடிச் சென்று அதை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "கெட்டிக்கார பூனைக்குட்டிம்மா. அந்த ஆள் சொல்றா மாதிரி கேட்கும். இதோட நாற்பது படத்திற்கு மேல நடிச்சிருக்கு" 
திடீரென்று இடம் பரபரப்பானது. விலை உயர்ந்த வெளிநாட்டுக்கார் ஒன்று வந்து நின்றது. கதவைத் திறந்து கதாநாயகன் இறங்கினார். ஏற்கெனவே ஒப்பனை செய்து "பள பள'வென்று இருந்தார். இயக்குநர் தவிர உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். கதாநாயகன் நேராக இயக்குநரின் அருகில் வந்து காலியாக கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்." 
"சார், நாலு மணிக்கு கிஷோர்குமார் பட ஷூட் இருக்கு. சட்டுன்னு முடிச்சு அனுப்பிடுங்க" 
இயக்குநர் பலரைக் கூப்பிட்டு ஏதேதோ சொன்னார். ஒளிப்பதிவாளர் காமிராவைத் தயார் நிலைக்கு கொண்டு வந்தார். இயக்குநர் காட்சி குறித்து மற்றவர்களுக்கும் விளக்கினார். 
படப்பிடிப்பு ஆரம்பமானது. கதாநாயகன் , நாயகி, வர்த்தினி மூவரும் கதாநாயகன் வந்த காரில் இருந்து இறங்குகிறார்கள். வர்த்தினி கையில் பூனைக்குட்டி இருந்த கூடை. கதாநாயகன் காரில் இருந்து பெரிய குடை ஒன்றை எடுத்து மணலில் குத்தி நிறுத்துகிறான். கதாநாயகி காரில் இருந்து சாப்பாட்டுக்கூடை , குளிர்பான பாட்டில்கள் எல்லாம் எடுத்து மணல் தரையில் பரப்புகிறாள்.
"சிந்து .... நைஸ் ப்ளேஸ் இல்லே" 
"ஆமா டார்லிங். இயற்கை எப்பவுமே அழகுதான்'' " கதாநாயகியின் தமிழில் ஆங்கில வாடை.
"ப்ரவீனாக்குட்டி , கடல் எவ்வளவு அழகா இருக்கு பாரு. அலைகள் எப்படி கரையில வந்து மோதுது"
"ஆமா டாடி. ரொம்ப நல்லா இருக்கு. கடல் பக்கமாப் போய் அலைகள் காலில படற மாதிரி நிற்கலாமா ?''
வர்த்தினி இயக்குநர் சொன்ன மாதிரியே உச்சரித்தாள். இயக்குநர் பிரபு பக்கம் திரும்பி திருப்தி கலந்த புன்னகையைப் பரிமாறினார். 
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பூனைக்காரன் மெல்லிய குரலில் ஏதோ கூற , அதுவரை கூடைக்குள் இருந்த பூனைக்குட்டி மெல்லியதாக இரு தடவைகள் "மியாவ்...'' " என்று குரல் கொடுத்தது. கதாநாயகி கோபத்தோடு வர்த்தினியின் கையில் இருந்த கூடையைப் பிடுங்கினாள். " "எத்தனை தடவைச் சொன்னாலும் கேட்க மாட்டியே நீ. இந்தச் சனியனையும் எனக்குத் தெரியாமல் தூக்கிட்டு வந்திட்டியா?''
கோபத்தோடு வர்த்தினியைப் பார்த்து முறைத்தாள். 
பின்னர் கூடையைத் திறந்து பூனைக்குட்டியைத் தூக்கி வெளியே போட்டாள். மணலில் கலந்து கிடந்த சிறு கற்களைப் பொறுக்கி அதன் மீது எறிந்தாள். பூனைக்குட்டி பயந்து மணலின் சூடு தாங்காமல் அலறியவாறே ஓடியது. வர்த்தினிக்கு உண்மையிலேயே பாவமாக இருந்தது. "சட்'டென்று எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்தாள் கதாநாயகி. 
வர்த்தினி தன் கையை உருவிக் கொண்டு பூனைக்குட்டியின் பின் ஓடினாள். மணலின் அதீத சூடு செருப்பு போடாத அவள் கால்களைப் பொசுக்கியது. சூடு தாங்காமல் கால்களை மாற்றி மாற்றி உதறியவாறு ஓடினாள். முகத்தில் கால்களைப் பொசுக்கிய சூட்டின் வலி தெரிந்தது. சிறிது தூரம் ஓடியதும் நின்று கால்களை மாற்றி மாற்றி தூக்கி கைகளால் தடவிக் கொண்டாள். முழுப் பாதங்களும் மணலில் பதியாதவாறு விரல் நுனிகளை மட்டும் ஊன்றி ஓடினாள். பூனைக்குட்டிக்கும் சூட்டின் வலி. அதுவும் வலியோடு கத்தியவாறே ஓடிக் கொண்டிருந்தது. இயக்குநர் பிரபுவை பார்த்து விரல்களைக் காட்டினார்.
"க்ளாஸ் ... ! '' பிரபுவுக்கும் , கீதாவுக்கும் உள்ளுக்குள் பெருமிதம். 
வர்த்தினி பூனைக்குட்டியை நெருங்கப் போகும்போது வேகமாக வந்த வேன் ஒன்று அங்கு வந்து நின்றது. மூன்று பேர்கள் இறங்கி நேராக இயக்குநரிடம் போனார்கள். வந்தவர்களில் ஒருவர் இளம் வயதுப் பெண். மூவருமே இயக்குநரிடம் ஏதோ கோபமாகப் பேசினார்கள். தூரத்தில் இருந்ததால் வர்த்தினிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. இயக்குநரும் அவர்களிடம் ஏதோ கூறினார். படப்பிடிப்புக் குழுவினரும் அந்த இடத்திற்கு வந்து சூழ்ந்து கொண்டனர். 
இயக்குநர் ஒளிப்பதிவாளரை நோக்கி ஏதோ சொல்ல அவரும் காமிராவை நிறுத்திவிட்டு அங்கே போனார். வர்த்தினியையும் வந்து விடுமாறு கை காட்டினார் இயக்குநர். ஏற்கெனவே மணலின் சூட்டால் கொப்பளிக்கத் தொடங்கியிருந்த கால்களின் வலி பொறுக்காமல் அவள் ஓடி வந்து குடைக்குள் நின்று கொண்டாள். அவளது முகத்தைப் பார்த்ததும் அவள் வலி புரிந்த பிரபு அவளைத் தூக்கிக் கொண்டான். கீதா வர்த்தினியின் மெல்லிய பாதங்களை வருடி விட்டாள். ஏற்கெனவே ஏற்பட்டிருந்த கொப்புளங்களில் கை பட்டதும் வர்த்தினிக்கு வலி தாங்காமல் அழுகை வந்து விட்டது. பிரபு கைக்குட்டையை நனைத்து பாதங்களில் ஒத்தடம் கொடுத்தான். பூனைக்காரன் பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றான்.
வேனில் வந்த பெண் அவனிடம் இருந்து பூனைக்குட்டியைப் பிடுங்கி வேனின் பின் பக்க இருக்கையில் வைத்து விட்டு அவளும் ஏறிக் கொண்டாள். பூனைக்காரன் அவளிடம் சென்று கெஞ்சுவது போல ஏதோ பேசினான். அவள் அவனை மிரட்டுவது போலப் பேசி விரட்டி விட்டாள். 
வேனில் வந்த இன்னொருவர் சில காகிதங்களை இயக்குநரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். முதலில் மறுத்த இயக்குநர் பின்னர் கையெழுத்திட்டார். பூனைக்காரரிடமும் கையெழுத்து வாங்கிய பின்னர் இன்னும் சிலரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்ட பின் இயக்குனரிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறிவிட்டு வேனில் ஏறிப் புறப்பட்டனர். பூனைக்காரன் அழாத குறையாக வேனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"சாரி .... இப்படி ஓர் இடைஞ்சல் வரும்னு எதிர்பார்க்கல. என்ன பண்றதுன்னு யோசிச்சு அப்புறம் சொல்றேன்" இயக்குநர் எல்லாரிடமும் சொல்வதைப் போலப் பொதுவாகப் பேசினார். நாயகனும், நாயகியும் அவரவர் கார்களில் ஏறி உடனே கிளம்பி விட்டார்கள். 
இயக்குநர் பிரபு பக்கம் திரும்பினார். "
"சாரி, எதிர்பாராத இடைஞ்சல். குட்டியோட முகபாவம் , நடிப்பு எல்லாமே ரொம்ப இயற்கையாக பிரமாதமாக இருந்தது. எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிடானுங்களே இவனுக. நான் திரும்பக் கூப்பிடறேன். இதை அட்வான்ஸாக வச்சுக்குங்க'' " பிரபுவின் கையில் உறை ஒன்றைக் கொடுத்தார். வர்த்தினியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி "பிரமாதமாக வருவம்மா'' என்றார்.
பிரபு காரில் ஏறினான். வர்த்தினியைத் தூக்கிக் கொண்டு கீதாவும் ஏறிக் கொண்டாள். கைக்குட்டையால் பாதங்களை வருடிக் கொடுத்தாள். 
"ரொம்ப வலிக்காம்மா ?" பிரபுவின் குரல் கம்மியிருந்தது. 
"ஆமாப்பா .... ரொம்ப சூடு மணல். பாவம் இல்ல. எனக்கே இப்படி இருந்தால் அந்த பூனைக் குட்டிக்கு எப்படி இருந்திருக்கும்" 
மீண்டும் அவள் விழித்தபோது வாகனம் அவளது பள்ளியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வளாகத்துக்குள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். உற்சாகமான குரல்கள் நகரத்தின் இரைச்சல்களையும் மீறி ஒலித்தன. 
வர்த்தினி முன் பக்கம் சாய்ந்து பிரபுவின் தோளைத் தொட்டாள். " 
"அந்த பூனைக்குட்டியை ஏம்பா தூக்கிட்டுப் போனாங்க. அவங்கள்லாம் யாருப்பா ?"
"அவங்கல்லாம் மிருக வதை தடுப்பு இயக்கக்காரங்கம்மா. மிருகங்களைக் கொடுமைப்படுத்தினால் அதைத் தடுக்க சட்டம் இருக்கு. அதனால மிருகங்
களைக் கொடுமைப் படுத்தறது தெரிஞ்சால் அவங்க வந்து அந்த மிருகங்களை காப்பாற்றிக் கூட்டிட்டுப் போய் ஓரிடத்தில வச்சு வளர்ப்பாங்க. கொடுமைப் படுத்தினவங்க மேல வழக்கு போட்டு தண்டனையும் கொடுப்பாங்க. எஸ் பி ஸி ஏ ன்னு சொல்லுவாங்க" 
வர்த்தினி பின்னால் சாய்ந்து கொண்டு ஏதோ யோசிப்பதுபோல இருந்தாள். பின்னர் மீண்டும் முன்னால் குனிந்தாள். 
"ஏம்பா.... மிருகங்களை வதை பண்ணினால் மட்டும்தான் அவங்க தடுப்பாங்களா? அந்த சட்டம் மிருகங்களை வதை பண்றதை மட்டும்தான் தடுக்குமா?" 
பிரபு சட்டென்று வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தினான். வர்த்தினியின் கேள்வி அவனையும் கீதாவையும் உறைந்து போக வைத்திருந்தது. 
"ஆமாம்மா .... அப்புறம் நாளையில இருந்து நீ எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் போக வேண்டாம். காலையில மெதுவா எழுந்திருச்சு பள்ளிக்கூடம் போனால் போதும். மற்றது எல்லாம் மெதுவாக் கத்துக்கலாம். நாளைக்கு இந்த பணத்தையும் திருப்பிக் கொடுத்திடலாம். சினிமால்லாம் இப்ப வேண்டாம்''" பிரபு மீண்டும் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான். கீதா வர்த்தினியின் பாதங்களைத் தன் மடியில் வைத்து வருடிக் கொடுத்தவாறே வந்தாள். வர்த்தினியின் முகத்தில் வலி குறித்த அறிகுறிகள் காணாமல் போயிருந்தன.

தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019
ரூ.1,250 பரிசு பெறும் - ஆறுதல் பரிசு


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/k5.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/வதை-3230274.html
3230273 வார இதழ்கள் தினமணி கதிர்  உடல் ஆரோக்கியம்: இளைய சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?   DIN DIN Sunday, September 8, 2019 10:41 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 பழமையான ஆயுர்வேத மருத்துவம், நவநாகரீகமான இளைஞர் சமுதாயத்திற்கு எந்த வகையில் பாதுகாப்பைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தப் போகிறது? தடாலடி வைத்திய முறைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், ஆயுர்வேதத்தின் பங்களிப்பு எவ்வாறு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவப் போகிறது?
 - ராமகிருஷ்ணன் , சென்னை.
 இன்றைய இளைஞர் சமுதாயம் மிகப்பெரிய உடல் உபாதைகளுக்கான விதையை தம் உடலில் விதைத்து வருவதை அறியாதிருக்கிறது. ஐம்புலன்களில் மிக முக்கியமான கண்களுக்கும், காதுகளுக்கும் ஓய்வு தராத வகையில் வந்துள்ள நவீனக் கருவிகள் மூலம் ஏற்படும் மூளை மற்றும் மனச்சோர்வை, தம் இளமையின் வாயிலாக அறிய முடியாமல் மகிழ்ச்சி பொங்க அனுபவிக்கும் சுகமானது, அப்புலன்களை நிரந்தர உபாதைகளுக்குக் கொண்டு போய் விடப்போவது நிஜம். ருசி அறியும் நாவினையும் அவர்கள் விடவில்லை. முன் தலைமுறையினர் அறிந்திராத கேடுதரக் கூடிய உணவு முறைகளை கையேந்தி பவனில் நின்று கொண்டு, சுவைத்து மகிழும் இவர்களுக்கு இரைப்பை, தன் பங்கிற்கு தண்டனை அளிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தோல் வனப்பை மெருகூட்ட இவர்கள் எடுக்கும் முயற்சிகளால் தோலில் தொடு உணர்ச்சியும், வியர்வைக் கோளங்களின் செயல்பாடும் பாழ்பட்டுப்போகும் நிலையும் வருவதற்கு நெடுந்தூரமில்லை. பல தரப்பட்ட வாசனாதி திரவியங்களை உடலெங்கும் பீச்சி அடித்து, உடல் துர்நாற்றத்தை மறைக்க முயற்சி செய்யும் இவர்களால், பிறருக்கு ஏற்படும் மயக்கமும், அவர்கள் அருகே செல்வதற்கே ஏற்படும் வெறுப்பையும் உணராத நிலையில், தம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் அவலத்தை இனி மாற்ற முயற்சித்தால் அது செவிடன் காதில் ஊதிய சங்கிற்குச் சமமாகும்.
 வார இறுதியில் கிடைக்கும் விடுமுறை நாட்களையும் நண்பர்களுடன் சேர்ந்து உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் இவர்கள் செய்யும் அட்டகாசங்களின் பின்விளைவுகள் ஆபத்தானவை. இந்த இளைஞர் சமுதாயத்திற்குப் பாதுகாப்பைத் தந்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், புலன்பாதுகாப்பு, மனநலம் காக்கும் வகையில் எண்ணற்ற உபதேசங்கள் மருந்துகளையும் தன்னலமற்ற, தொலைநோக்குப் பார்வை கொண்ட முனிவர்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றை சரியாகப் பயன்படுத்தினால், தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது. பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்து கொள்ள வேண்டிய வைத்திய முறையை அவர்களுக்கே உரிய அவசரத்தை இதிலும் காட்டினால், எந்தவிதமான நல்ல பயன்களையும் பெற இயலாது.
 கண்பாதுகாப்பைத் தரும் திரிபலாதி தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதையும், திரிபலா சூரணத்தை இரவு பயன்படுத்துவதையும், பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக் கீரை, பசும்பால், கேரட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்வதையும் செய்து கொண்டு, கண்ணுக்குச் சோர்வைத் தரும் கருவிகளின் பயன்பாட்டைக் குறைத்து கண்களுக்கு நல்ல ஓய்வைத் தரும் வகையில் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செவிப்புலன் கேடு உறாத வகையில், வெது வெதுப்பாக காதினுள் 4 - 5 சொட்டுகள் மூலிகைத் தைலமாகிய வசாலசுனாதியையோ, கார்ப்பாஸாஸ்தியாதி தைலத்தையோ விட்டுக் கொள்ளுதலும், செவிப்பறைக்கு தன் சக்திக்கு மீறிய அளவில் வேலையைத் தராமல் பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.
 நாக்கிற்குச் சுவை அளிக்கும் உணவுகளின் மீது காட்டும் ஆர்வத்தை அடக்கி, வீட்டில் அம்மா தயாரித்துத் தரும் சுகாதாரமான ஊட்டம் தரும் உணவுகளைப் பழக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அன்றைய உடல் நிலை அறிந்து, அதற்குத் தக்கபடி அறிவுரை தரும் ஆயுர்வேத உணவுத் திட்டத்தையும் தாய்மார்களும், மனைவியும் அறிந்திருத்தல் நலம். இதனால், குடும்ப ஆரோக்கியமானது மேம்படும். நாக்கின் சபலத்திற்கு அடிமையாகி, வயிற்றுப் புண், உணவுக்குழாய் எரிச்சல், வாந்தி, பேதி என கஷ்டப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சாட் அயிட்டம்ஸ், கையேந்தி பவன் உணவுகளின் தரம் அறியாமல் சாப்பிட்டு வயிற்றில் நுண்கிருமிகளின் பாதிப்பால், இளைஞர் சமுதாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அகற்ற, மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை மாதம் ஒரு முறை சாப்பிட்டு, நீர்பேதியாகி, குடல் கிருமிகளை அழித்து வெளியேற்ற வேண்டும்.
 அழகு நிலையங்களில் புருவத்தை நூல் போட்டு "வெடுக் வெடுக்' என பிடுங்குவதும், முகத்திலுள்ள ரோமத்தையும் அகற்ற முயற்சி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் தோல் அலர்ஜியானது பெரும் துன்பத்தை அளிக்கிறது. கஸ்தூரி மஞ்சளின் தொடர் உபயோகத்தால், அதிக ரோமத்தை நீக்க முயற்சி செய்வதே தரம்.
 சென்ட் அடித்து வாழ்வதைத் தவிர்த்து, இயற்கையான வாசனையைத் தரும் சந்தனம், அகில், ஜவ்வாது போன்றவற்றைப் பயன்படுத்தி, பிறரது மயக்கத்தைத் தவிர்க்கலாம். இயற்கை வளத்தை மேம்படுத்தும் மரங்களை - அவற்றின் மருத்துவ குணங்களை - ஆயுர்வேதம் மூலம் அறிந்து பயிரிட்டு வளர்த்து தூய காற்றைப் பெறுவதே சமுதாய முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாகும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/AYUL.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/உடல்-ஆரோக்கியம்-இளைய-சமுதாயம்-என்ன-செய்ய-வேண்டும்-3230273.html
3230272 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, September 8, 2019 10:39 AM +0530 காலை எட்டு மணி.  அவசர அவசரமாய் ஆபிசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் ராகவன்.  சமையலறையிலிருந்து மனைவியின் குரல்.
"என்னங்க... அரிசி தீர்ந்துபோச்சு. சாயங்காலம் வரும்போது அரிசிக் கடையிலே சொன்னா வீட்டுல கொண்டுட்டு வந்து போட்டுடுவாங்க''
ராகவனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.  
"ரெண்டு நாளைக்கு முன்னாடி இதைச் சொல்லக் கூடாதா?  கடைசி நேரத்திலேதான் சொல்வியா?  அறிவு இருக்கா?  இல்லையா?''
கோபத்தில் கத்திவிட்டு,  வீட்டுக்கு வெளியே வந்து பைக்}ஐ  ஸ்டார்ட் செய்தான்.  பைக் ஸ்டார்ட் ஆகவில்லை.  அப்போதுதான் பைக் இரண்டு நாளாய் ரிசர்வில் ஓடியது ஞாபகத்துக்கு வந்தது.   பெட்ரோல் தீர்ந்துவிட்டது. 
வெளியே வந்து அவனைப் பார்த்த மனைவி, "என்னங்க வண்டி ஸ்டார்ட் ஆகலையா?'' என்று கேட்டாள்.
"என்ன பிரச்னைன்னு தெரியலை...''
வார்த்தைகளை மென்று விழுங்கினான் ராகவன்.
பால் ராமமூர்த்தி, அம்பாசமுத்திரம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/KATHAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/மைக்ரோ-கதை-3230272.html
3230271 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, September 8, 2019 10:37 AM +0530 கண்டது
• ( சங்கராபுரத்தில் கண் கண்ணாடிக் கடை ஒன்றில்)
தாய்மொழி கண் போன்றது;
பிற மொழி கண்ணாடி போன்றது.
கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.

• (சங்கரன்கோவில் முப்பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள ஒரு சலூனின் பெயர்)
அம்பாசிட்டர் சலூன்
சு.ஆறுமுகம், கழுகுமலை.

• (ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
JAIL  ARREST TO THE FASHION
மு.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

• (நன்னிலத்தில் ஒரு கும்பாபிஷேக போஸ்டரில்)
வசனம் தேவையில்லை...
வரலாறு தேவை.
சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம். 

எஸ்எம்எஸ்
உலகிலேயே எல்லாரையும் 
அமைதிப்படுத்தி
சும்மா இருக்க வைக்கும் ஆயுதம்...
செல்போன்.
சக்திக்கொடி, சேலம்.

கேட்டது
• (திருவண்ணாமலை கார்கானாத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கணவனும், மனைவியும்)
"ஏங்க இன்னிக்கு காலையிலே உங்க ஊர்ல இருந்து போன் வந்திச்சா?''
"எதுக்கு கேக்குற?''
"இன்னிக்கு விடிகாத்தலே உங்கம்மா சீரியசா இருக்குற மாதிரி கனவு 
கண்டேன்''
டி.யாழினி, திருவண்ணாமலை.

• (சங்கரன்கோவிலில் ஒரு பிரபலமான மருத்துமனையில் )
"டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிடச் சொன்ன 
மாத்திரையை காலைல 6 மணிக்கே 
சாப்பிட்டுட்டேன்''
"அப்புறம் என்னாச்சு?''
"கடிகாரத்தை 12 மணிக்குத் திருப்பி வச்சுட்டேன்''
க.சூரிய பிரகாஷ், மேல அழகு நாச்சியாபுரம்.

யோசிக்கிறாங்கப்பா!
தேடி அலைந்து கொண்டே இரு...
வேண்டியது கிடைக்கும் வரை.
அது உன் அருகில் இருந்தால் அதிர்ஷ்டம்.
தூர இருந்தால் நம்பிக்கை.
கிடைக்காமல் போனால் அனுபவம்.
பி.சி.ரகு. பள்ளிச்சேரி.

அப்படீங்களா!
குழந்தைகளைப் பள்ளிக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு பயந்து கொண்டே இருப்பது இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இருக்கவே செய்கிறது. செக்கோஸ்லோவேகியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் SKODA கார் நிறுவனம், தற்போது இணைய தள இணைப்புடன் கூடிய காரைத் தயாரித்துள்ளது. அது அந்தப் பயத்தைப் போக்கியுள்ளது. 
இந்தக் கார் ஜிபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, கார் எங்கு செல்கிறது என்பதை கார் உரிமையாளர் தனது செல்போன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 
குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கார் டிரைவர், பாதை மாற்றி பயணம் செய்தால், உடனே அந்தத் தகவல் குழந்தையின் பெற்றோரின் செல்போனுக்கு வந்துவிடும். 
ஒரு காரை வீட்டில் உள்ள நான்கு பேர் நான்கு வெவ்வேறிடங்களுக்கு... வெவ்வேறு நேரங்களில் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், காரின் உரிமையாளரின் செல்போனில் பாதை மாறியது தெரிந்துவிடும். 
கல்லூரிக்கு "கட்' அடித்துவிட்டு, ஊர் சுற்றும் மாணவர்களுக்குத்தான் பிரச்னை!
என்.ஜே., சென்னை-58


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/KETTA.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/பேல்பூரி-3230271.html
3230270 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக்கதிர் DIN DIN Sunday, September 8, 2019 10:19 AM +0530 * தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு ஹிந்தி படவுலகுக்குச் சென்றவர் ஸ்ரீதேவி. ஒரு கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைக் கொண்டிருந்தார் அவர். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் மகள் ஜான்வி நடிகை ஆனார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வியின் தந்தையும், "நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளருமான போனிகபூர் பேசும் போது...
"தென்னிந்தியப் படங்களை எங்கள் குடும்பமே விரும்பிப் பார்க்கும். ஸ்ரீதேவி இங்கு நிறையப் படங்களில் நடித்திருக்கிறார். இங்குள்ள நடிகர்களுடன் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம். ஜான்வி தென்னிந்தியப் படங்களை ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு நல்ல கதை அமைய வேண்டும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படியொரு கதை அவருக்குக் கிடைக்கவில்லை. தென்னிந்தியப் படங்களை ஜான்வி நிராகரிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை'' என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.

• புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கி கொண்டவர் அபி நந்தன். பின்னர் பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இந்த நிலையில் அபி நந்தனின் வாழ்க்கையைத் தழுவி சினிமா உருவாகவுள்ளது. 
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறார். பாகிஸ்தான் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கான தேர்வு நடக்கிறது. இது குறித்து விவேக் ஓபராய் கூறுகையில், ""இந்தியப் படையின் வீரத்தைப் போற்ற வேண்டியது, இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்பட பல வீரர்கள் செய்த சாகசங்கள் இதில் இடம்பெறும். முறையான அனுமதி பெற்று இப்படத்தைத் தயாரிக்கிறேன். இவ்வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார்.

• "பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. உலக அளவில் பெரும் சாதனை படைத்தது. இப்போது தனது அடுத்த படமான "ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பையும் பல்கேரியாவில் நடத்தச் சென்றிருக்கிறார். கதைப்படி ஜூனியர் என்டிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்கேரியாவில் படமாக்குகிறார் ராஜமௌலி. இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா, அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். அவரையும் ராஜமௌலி தேர்வு செய்துவிட்டார். விரைவில் அவரைப் பற்றி அறிவிப்பார் என்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது. பல்கேரியாவில் படமாக்குவது என்பது அவருக்கு சென்டிமெண்டான விஷயம் என்கிறார்கள். 

• பெரும் ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை படமாகி வருகின்றன. 
வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கை பரப்புரை எனப் பல வடிவங்கள் இருந்தாலும், இது ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையைத் தழுவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. "பசும்பொன் தெய்வம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் அவரின் பிறப்பு, படிப்பு, குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நேதாஜியுடனான சந்திப்பு, கைரேகைச் சட்டத்தை எதிர்த்தது, சுதந்திரப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், பார்வர்டு பிளாக் கட்சி பணி, "நேதாஜி' என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் பணியாற்றிய அனுபவங்கள், அவரின் மரணம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதில் தொகுக்கப்படவுள்ளன. சூலூர் கலைப்பித்தன் இப்படத்தை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "சாட்டையில்லாத பம்பரம்', "சுதந்திர பாரதி', "துளசி மாலை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். ராஜா முகம்மது, அண்ணாதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

• "என்னமோ ஏதோ', "கரையோரம்', "நாரதன்', "7 நாட்கள்', "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் "பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார். இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்காக வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கிக்குப் பறந்தார். கடற்கரைப் பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து "என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏகத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். "சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது?' என்று பலர் கேட்டிருக்கின்றனர்.
ஜி.அசோக்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/k4.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/திரைக்கதிர்-3230270.html
3230269 வார இதழ்கள் தினமணி கதிர் இப்படியும் சிலர்! மனோரஞ்சிதம் சு.பாபு DIN Sunday, September 8, 2019 10:15 AM +0530 தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பார்கள். ஆனால் வந்துவிட்டது. சும்மா இருப்பவனையும் தேடி ஒரு பிரச்னை வரக்கூடும் என நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. பல திரைப்படங்களில் பார்த்து, நமக்கே சலித்துப் போன பிரச்னை போல இருந்தாலும், நிஜத்தில் நேருக்குநேர் சந்திக்கும்போது புதியதாகவும், பயமாகவும் இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல், பாவமும் பழியும் எங்கிருந்து வருகின்றன எனத் தெரியவில்லை. ஒருவேளை, "பட்டாம்பூச்சித் தியரி' என்கிறார்களே, அதைப் போல எங்கோ, என்றோ, என்னவோ நிகழ்ந்து, படிப்படியாய் வளர்ந்து பிரச்னையாகி, இன்று என் முன்னால் வந்து நிற்கிறதா? 
எப்போதும் அந்த கடைவீதியில் கூட்டம் "நசநச'வென இருந்து கொண்டேயிருக்கும். எல்லாரும் அங்கே பொருட்களை வாங்குவதற்காக வருகிறார்களா அல்லது அந்த பகுதியைக் கடந்து போகிறார்களா என யாரையாவது கேட்டால், இரண்டுமே என்பார்கள். காரணம், பழைய பேருந்து நிலையத்திற்கு போகும் வழிகளில் அதுவும் ஒன்று. அது ஒரு வழிப்பாதை தான் என்றாலும், எதிரெதிரே வரும் வாகனங்களால் வழியடைத்துக் கொண்டு, எப்போதும் திணறிக் கொண்டிருக்கும். போதாக்குறைக்கு, சாலையின் இருபக்கமும் கடைகளைப் பெரியதும் சிறியதுமாக விரித்து, ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சில்லரை வியாபாரிகள், எந்நேரமும் கூவிக்கூவி மக்களை அழைத்துக் கொண்டிருக்கும் இரைச்சலான இடம் அது.
அங்கே இருக்கும் மிகப் பழைய கட்டடத்தில்தான் என் புதிய அலுவலகத்தைத் தொடங்கியிருந்தேன். அச்சகங்களுக்கு கணினியில் விளம்பர வடிவமைப்பு செய்து தருவதுதான் என் வேலை. அங்கே போய் சில மாதங்கள்தாம் ஆகின்றன. அக்கம் பக்கம் நன்றாகப் பழக்கமாகி விட்டார்கள். இதுவரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிரச்னையே இல்லை என நானும் நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறதே. 
நான் அன்று வழக்கம் போல, முற்பகல் சுமார் பன்னிரண்டு மணிக்கு தேநீர் குடிக்க, மாடியிலிருந்து இறங்கி கடைவீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். தேநீர் கடைக்கு சிறிது தூரமாகப் போகவேண்டும். அதிக வெயில் காரணமாக சாலையோரக் கடைகள் கொஞ்சம் குறைந்திருந்தன. ஆனாலும் கூவி அழைக்கும் வணிகக் குரல்களுக்கு குறைவில்லை.
அந்த கலவையான இரைச்சலிலும் கூட, ஒரு பெண்ணுடைய குரல் "அண்ணா' என்று கூப்பிடுவது தனியாகக் கேட்டது. இந்த ஊரில் யாராக இருந்தாலும், யாரையும் வயது பாராமல் மரியாதையோடு "அண்ணா, அக்கா' என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.
யாரோ யாரையோ அழைத்தாலும் யாருமே திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள். யாருக்குமே இயல்பான செயல்தானே அது? இரண்டாவது முறையாக அந்த குரல் இன்னும் சத்தமாகக் கூப்பிட்டதால், நானும் திரும்பிப் பார்த்தேன். "என்னையா? யாராயிருக்கும்?' என கண்களால் தேடினேன். சாலையோரம் சின்னதாக சோளக்கதிர் கடைவிரித்து அமர்ந்திருந்த பெண்மணி என்னைப் பார்த்து, வருமாறு கையால் சைகை காட்டியதால், அழைக்கப்படுவது நான்தான் என்பதை அறிந்து கொண்டேன். 
என்னை அழைத்த பெண்மணிக்கு அறுபதைக் கடந்த வயதிருக்கும். முக்கால் நரையோடு, ஒல்லியாகவும் இல்லாமல், செழிப்பாகவும் இல்லாமல், திடமான கிராமத்து தோற்றம். கண்களில் கூரான பார்வை. என் வயதோடு ஒப்பிடும் போது அந்தம்மா தான் எனக்கு அக்கா மாதிரி. அதுவும் பெரியக்கா. 
அந்தம்மா வியப்பான விழிகளோடு, வெற்றிலைக்கறைப் பல்வரிசையுடன் என்னை பார்த்துச் சிரித்தார். நன்றாகப் பழகியவர்கள் ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் போது, எப்படி உரிமையோடு சிரிப்பார்களோ, அப்படி நெருக்கமாக இருந்தது அந்தச் சிரிப்பு. 
"ஆனால், பழகிய முகமாக இல்லையே. யாராயிருக்கும்?' என எனக்குள் தடுமாற்றம். சாதாரணமாக இங்கே ஒருவரைச் சந்தித்து விட்டு, அடுத்த நாள் வேறிடத்தில் அவரையே மீண்டும் பார்த்தால் திருதிருவென விழிப்பவன் நான். சிலபேர் என்றைக்கும் மறக்காமல் முகங்களை நினைவில் வைத்திருக்கிறார்களே, அது எப்படி? எனக்கு வியப்புதான். ஒருவேளை வெண்டைக்காய், வல்லாரை, சுரைக்காய் சாப்பிட்டால் எனக்கும் அது சித்திக்குமா எனத் தெரியவில்லை. எதுவானாலும் நமக்குள் என்ன இருக்கிறதோ அதுதானே நம் இயல்பு. 
இருந்தாலும் இப்படி முகமலர்ச்சியான சிரிப்புடனும், நேச பாவனையுடனும், மிகவும் உரிமையோடு அழைத்தால், யாராயிருந்தாலும் பதிலுக்குச் சிரிக்காமலோ, குறைந்தபட்சம் ஒரு மரியாதை நிமித்தமாவது அருகில் சென்று, ""நீங்க... யாருன்னு நினைவில்லையே...''" என்று அசடு வழிய விசாரிக்காமலோ கடந்து செல்லவே முடியாது. நான் மட்டும் என்ன செய்துவிட முடியும்? 
யோசனையுடன் நானும் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கடை அருகில் சென்றேன். அந்தம்மாவை விசாரிக்கலாமா வேண்டாமா என தயங்கிய நேரத்தில் அவரே முந்திக்கொண்டு என்னை விசாரித்தார்.
""ஏண்ணா, நீ உடையாப்பட்டியில தானே இருக்கே? நல்லாயிருக்கியா? எங்க இந்தப் பக்கம்?''" என்று கேட்டதால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 
உடையாப்பட்டியா? அங்கே சில வேலைகளுக்காக ஓரிரு முறை போயிருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி வெளியூருக்குப் போகிற வழியில் அது ஒரு பேருந்து நிறுத்தம் என்பது தெரியும். அங்கு என்னை எப்படிப் பார்த்திருக்க முடியும்? ஒருவேளை தூரத்துச் சொந்தமா? நான்தான் மறந்து விட்டேனா? எப்படிப் பார்த்தாலும் நம்ம ஆளுங்க சாயலோ சாடையோ தெரியவில்லையே. நானும் யோசனையுடன் சிரித்தபடி, "இல்லைங்களே, நான் சின்னத்திருப்பதியில இருக்கேன்''" என்றேன்.
அதற்கு எதிர்வினையாக அந்தம்மாவிடமிருந்து நீலாம்பரித்தனமான சிரிப்பை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என் பதிலை அவர் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பே காட்டியது. " 
"இல்லையில்லை, நீ உடையாப்பட்டிதான்னு எனக்கு நல்லாத் தெரியும். என் வீட்டுக்கு நீ எத்தனை முறை வந்து போயிருக்கே எனக்குத் தெரியாதா? இப்ப எதுக்காக நீ பொய் சொல்றே?'' என்றார் என்னை கூர்மையாகப் பார்த்தபடி.
நான் திகைத்தேன். பொய்யா? அந்தம்மாவின் வீடு எங்கே இருக்கு? எப்போ போனேன், வந்தேன்? எதுக்காக? எத்தனை முறை? என்று என் நினைவுத்தரவுகளைத் துழாவிப் பார்த்தேன். துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இப்போது அந்தம்மாவின் முகத்தில் சிரிப்பெல்லாம் வடிந்து, விசாரணை தொனி படிந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. சிறந்த புலன் ஆய்வாளரைப் போல என் முகத்தையே ஆழமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார். அதனால் எனக்குள் இனம் புரியாத பயம் கலந்த எச்சரிக்கை உணர்வு மேலோங்கியது. " சில நேரங்களில் சில இடங்களை விட்டு அகன்று விடுவதே அறிவான செயலாகும்' என என் தாயார் சொன்னது நினைவுக்கு வந்து போனது. 
"இல்லேம்மா, நீங்க யாரையோ நினைச்சி, நான்தான்அவருன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசறீங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்ததாகக்கூட எனக்கு ஞாபகமில்லை. சரியா யோசனைப் பண்ணிப் பாருங்கம்மா''" என சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு வெகு இயல்பாக அந்த இடத்திலிருந்து கழன்று வந்து விட்டேன்.
நான் தேநீர் கடைக்கு போய்விட்டு திரும்பும் போதும்கூட எனக்கு ஒரே யோசனையாகவே இருந்தது. ஓர் ஆளை ஒருவருக்கு அடையாளம் தெரியாவிட்டால் என்ன? தன்னை இன்னார் என மறு அறிமுகம் செய்துக் கொள்வதால் என்ன குறைந்து விடும்? அந்த அடிப்படை நாகரிகம் எப்போது இவர்களுக்கு வரும்?
ஒருவேளை என்னைப் போல எவனாவது இருப்பானோ? என்னையே அச்சில் வார்த்தது போல யாராவது நிஜத்தில் இருக்கலாமோ, அதுவும் இதே ஊரில்? ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பதாக சொல்வார்கள். அது எல்லாம் உண்மைதானா? ச்சேச்சே, அதற்கு வாய்ப்பே இல்லை. அந்தம்மாதான் அடையாளக் குழப்பத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன். 
நம் திரைப்படங்களில் தோன்றும் இரட்டை வேடங்களை நான் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருப்பேன். அதில் வரும் குழப்பங்கள் எல்லாம் எனக்கு அபத்தமாய் தெரியும். ஆனால் இப்போது? 
எனக்கு ஒருவரைத் தெரியும். தினமும் செய்தித்தாள்களை வீடு வீடாகப் போடுகிறார். அவரை பார்த்தால், என் நெருங்கிய நண்பரின் சாயலில் அப்படியே இருப்பார். அருகில் சென்று பார்த்தால் தான் ஆறு முதல் அறுபது வேறுபாடுகள் வரை தெரியும். 
என் அலுவலகத்திற்கு நான் வரும் போது, அந்த சாலை முனையிலிருந்து அருகில் வரும் வரை, அந்தம்மா வைத்த கண் வாங்காமல் என்னையே மிக உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார். நான் அதை தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும் இயல்பான ஒருவித மன உந்துதலால் கடை பக்கம் பார்க்க நேரிட்டது. நான் பார்த்ததை அந்தம்மாவும் கவனித்து விட்டார். மீண்டும் பிடித்துக் கொண்டார். "
"ஏண்ணா, இங்க வா...''" என மறுபடியும் அழைத்தார். நான் தயக்கத்துடன் கடை அருகில் போனேன்.
"ஏண்ணா, என்னை இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே கிடையாதா? என்னை யாருன்னே உனக்குத் தெரியாதா?''" என நக்கலான குரலில், வம்பு இழுக்கும் தோரணையில் கேட்டதால், எனக்குள் கோபம் எட்டிப் பார்த்தது. மரியாதையும் குறைந்து போனது.
"அட, என்னம்மா, நல்லா யோசனைப் பண்ணி பாரும்மா. நீ நினைச்சிக்கிட்டிருக்கிற ஆள் நான் இல்லே. சும்மா போறப்ப வர்றப்ப எல்லாம் தொந்தரவு பண்ணாதே. அப்புறம் நல்லாயிருக்காது... சொல்லிட்டேன்''" என்றேன் எரிச்சலுடன்.
"நான் என்னாத்துக்கு உன்னை தொந்தரவு பண்றேன்''" என்று அந்தம்மா யோசனையோடு சிரித்தபடி, சமாதானமாகச் சொன்னதால் எனக்குள் நிம்மதி வந்தது. அந்த நிம்மதி ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவர் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டார். அது வெள்ளைக்கொடி சிரிப்பு இல்லை என பிறகு புரிந்தது.
"இல்லையில்லை, எனக்கு நல்லாவே தெரியும். நீ உடையாப்பட்டிதான்''" என மிகவும் அழுத்தமாக, உறுதியான குரலில், சத்தமாகச் சொன்னதால் என் கோபம் வீங்கியது. என்னால் பொது இடத்தில் கோபத்தைக் காட்ட முடியவில்லை. அதுவும் வயதான ஒரு பெண்ணிடம் கோபத்தைக் காட்டினால் பார்ப்பவர்கள் என்னை நிச்சயம் வாழ்த்தமாட்டார்கள். 
ஒருவன் சொல்கிறானே, ஒருவேளை அது உண்மையாக இருக்குமா? இல்லையா? என கொஞ்சம் கூட யோசிக்காமல், அந்தம்மா பிடிவாதமாய் பேசுவதைக் கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. "நான் உடையாப்பட்டியில் இருந்தால் என்ன? உடைந்த பெட்டியில் இருந்தால் என்ன?' 
என் கோபத்தை வெளியே காட்டாமல், ""நான் எங்கேயோ இருந்துட்டுப் போறேன். அதுல உனக்கு என்னம்மா பிரச்னை?'' எனக் கேட்டேன் . 
அந்தம்மாவும் இந்த கேள்விக்காகவே தான் காத்திருந்தது போல தெரிந்தது. " 
"ஆங்.. ஞாபகமில்லீயா? சோளக்கதிரை வாங்கி தரேன்னுட்டு ஐநூறு ரூபா அட்வான்சு வாங்கிட்டுப் போனீயே, மறந்துட்டியா? நீ மாசக்கணக்கா வராம போனா நான் மறந்துடுவேனா? பேண்டு சொக்காவ கலர்கலரா மாத்திக்கிட்டு போனா எனக்கு தெரியாதா?'' என்றதும், மின்சாரம் தாக்கியது போல எனக்குள் தூக்கிவாரிப் போட்டது. வெயிலில் எனக்கு இன்னும் அதிகமாகவே வியர்த்தது. 
இது என்ன புதுக்கதையா இருக்கே? யார் மீதோ விழவேண்டிய பழி, என் மேலேயா சுமத்தப்பட வேண்டும்? அதுவும் ஒரு பெண் சொன்னால் உடனே நம்பி விடும் இந்த சமுதாயத்தில்? இது பைத்தியமாய் இருக்குமோ? பதிலுக்கு நான் எதிர்த்து பேசாமல் அலட்சியமாக இருந்தால் அது என் தரப்பை பலவீனமாக்கி விடும் என்பதை உணர்ந்து விழிப்பானேன். 
ஒருவேளை, என்னை முந்திக்கொண்டு முதலில் அந்தம்மா சத்தம் போட்டு பேசிவிட்டால், பிறகு எல்லாருடைய பார்வையிலும் நான் தப்பான ஆளாகத்தான் தெரிவேன். யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் எளிதான மக்களாயிற்றே நம் மக்கள். போயும், போயும் ஒரு கிழவியை ஏமாற்றி பணம் பறித்தவன் என்ற பிம்பம் எல்லோர் மனதிலும் படிந்து விடும். பிறகு அதை அழிப்பது என்பது ஆகாத வேலை. அதனால் இங்கே யோசிப்பதை விட அதிரடியாக செயல்படுவதே அவசியத் தேவை என என் உள்மனம் எச்சரித்தது. எனவே இந்த விசயத்துக்கு மென்மையான அணுகுமுறை எடுபடாது எனத் தீர்மானித்தேன்.
சுதாரித்து, "" நீ யாருகிட்ட பணத்தை குடுத்தியோ அங்கே போயி கேளு. ஆள் தெரியாம என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டிருக்கே. என்னைப் பத்தி உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்கே? இந்த ஏரியாவுல கேட்டுப்பாரு... என்னைப் பத்தி சொல்வாங்க. போ, போ, உன் ஊருக்குள்ள போயி நல்லா விசாரிச்சு பாரு, போம்மா, யாருகிட்ட வந்து பேசறே நீ?''" என்று கோபத்தையும், அதனால் ஏற்பட்ட உதறலையும் வெளிக்காட்டாமல் பேசிவிட்டு விடுவிடுவென என் அலுவலகத்திற்கு வந்து விட்டேன். 
பக்கத்து அலுவலக நண்பரிடம் இதை சொன்னேன். அவர் ஆர்வத்துடன் கேட்டுவிட்டு, "அட பணமா சார் முக்கியம். போனாப்போவுது, ஐநூறுறை ஆயிரமாக் குடுத்துட வேண்டியதுதானே'' என்றார் சிரித்தபடி.
எனக்கு வேதனை, அவருக்கு நகைச்சுவை. எருது புண் காக்கைக்குத் தெரியாது என்பார்களே. நானும் வேண்டாவெறுப்பாய் லேசாகச் சிரித்து விட்டுவந்தேன்.
இதை உடனடியாக சரிசெய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு எனக்கு தெரிந்த ஒரு நண்பரைத் தேடிப் போனேன். அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டார். பிறகு பெரிய நகைச்சுவை காட்சியைக் கேட்டதைப் போல, தவணை முறையில் சத்தம் போட்டுச் சிரித்தார். பிறகு அவருடைய விசயத்துக்குத் தாவி விட்டார். துன்பம் வரும் வேளையில் யாரை சிரிக்கச் சொன்னார் வள்ளுவர் எனத் தெரியவில்லை. எனக்கு மறுபடியும் ஏமாற்றமாக இருந்தது. 
எதற்காக இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கிக் கொண்டு? அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் அதுவே நீர்த்துப் போகும் என நினைத்திருந்த சமயத்தில், இன்னொரு நாள், நான் தேநீர் கடையிலிருந்து திரும்பி வரும்போது அந்தம்மாவின் அருகில் யாரோ ஓர் ஆள் அமர்ந்திருக்க, குற்றம் சாட்டும் முகத்தோடு, அவனிடம் என்னை சுட்டிக்காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அந்த ஆள் அதை கேட்டவாறு பகைமுகத்துடன், சிவப்பேறிய கண்களால் என்னை அழுத்தமாகப் பார்த்தபடி இருந்தான். 
அப்புறம், பூண்டு விற்கிற அந்த பெண், ""உங்கள பாத்தா அப்படி தெரியலேண்ணா. அந்த கெழவியும் பாவம்தான். அப்படி எதாச்சும் இருந்தா குடுத்துட்டு போங்கண்ணா''" என்கிறாள். 
அந்த மாதுளம் பழக்காரி, "அந்த கிழவி சரியான லூசுண்ணா. இன்னிக்கு காசை குடுத்துட்டு நாளைக்கே கேப்பா. நல்ல மனுசனுங்க யாரும் அவ கிட்ட யாவாரம் பண்ண முடியாது. பேசாம, அந்த காசை, அவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டுப் போங்க''" என்கிறாள். 
இவர்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் எப்படித்தான் தோன்றுமோ? அந்தம்மா இந்த விசயத்தை இன்னும் எத்தனை பேரிடம் ஒப்பாரி வைத்திருக்கிறதோ? தெரியவில்லை. ஆனால், இப்படியே விட்டால், என் மானம், மரியாதையை கெடுத்துவிடும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இதற்கு ஒரு முடிவுகட்டியே தீர வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். அதற்கு என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்தேன்.
இன்னொரு நண்பர் நினைவுக்கு வரவும் கொஞ்சம் தெம்பானேன். என் அலுவலகத்தின் பக்கத்து தெருவில் கடை வைத்திருக்கிறார். எனக்கு இருபது வருடங்களாகப் பழக்கம். கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர். எதையும் அதிரடியாக உரக்க பேசக் கூடியவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பார். வம்பு தேடி வந்தால் விடமாட்டார். கடைசிவரை அதுவா, அவரா எனப் பார்த்து விடுவார். அங்கிருக்கும் அடாவடித்தனமானத் தறுதலைகள், ஆட்டோ நிறுத்த ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் பலருக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவரிடம் மரியாதையாகவும், உரிமையாகவும் பழகுவார்கள். இந்த பிரச்னைக்கு அவர்தான் சரி என மனதுக்குப் பட்டது. 
அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் இல்லை. அவரோடு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். வெளிவேலையாக தூரத்தில் இருப்பதால் மாலை வந்து பார்ப்பதாகச் சொன்னார். "செத்தாள் கிழவி' என்று நினைக்கும் போதே எனக்குள் சிரிப்பு வந்தது. நம்பிக்கையோடு என் அலுவலகத்திற்கு வந்து விட்டேன். என்னுடைய வேலைகள் எல்லாம் அப்படியே கிடந்தன. செய்து முடிப்பதற்கு மனம் தான் அமைதியாக இல்லை.
மாலை நண்பரும் சொன்னபடியே வந்து விட்டார். மீண்டும் ஒருமுறை நடந்தவற்றைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டார். என்னுடன் புறப்பட்டு 
வந்தார். 
(அடுத்த இதழில்)

"சு.பாபுவுக்குச் சொந்த ஊர் வேலூர். தற்போது சேலத்தில் வசிக்கும் இவர் விழுப்புரம் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், இளங்கலை உளவியல் மற்றும் முதுகலை சமுகவியல் படித்திருக்கிறார். கல்லூரிகளில் அனிமேட்டராக, டிசைனராக இருந்த இவர், தற்போது சொந்தமாக சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2006 கல்கி சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது."

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/k1.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/இப்படியும்-சிலர்-3230269.html
3230267 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி...  DIN DIN Sunday, September 8, 2019 10:10 AM +0530 * "நீங்க செய்ற தவறுக்கெல்லாம் உங்க பையன் அடி வாங்குறான்''
"என்ன சார் சொல்றீங்க?''
"ஹோம் ஒர்க் பூராவும் தப்பு, தப்பா இருக்கு''
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

* "தலைவர் மைக்செட்காரங்ககிட்ட லஞ்சம் 
வாங்கிட்டாரா எப்படி?''
"மேடையில பேசும்போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை
சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு ராஜா சவுண்ட் 
சர்வீஸ்னு சொல்றாரே''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

* "ஏங்க என்கிட்டே உங்களுக்குப் பிடிச்சது என்னோட அன்பா? அழகா?''
"அப்பப்போ இப்படி ஜோக் அடிக்கிறியே அந்த நகைச்சுவை உணர்வுதான்''
த.ஜோதி, சென்னை-19.

* இவர்: உங்க நகைச்சுவை சிரிக்கவும்
சிந்திக்கவும் வைக்குது சார்
அவர்: அட, அப்படியா?
இவர்: ஆமா சார் முதல்ல சிரிச்சுடறோம் . 
அப்புறம்தான் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்.
எஸ்.பொருநைபாலு, திருநெல்வேலி.

* "அந்த கிளி ஜோசியர் நவீனமா 
கிளி ஜோசியம் சொல்றாரா? 
எப்படி?''
"லேப் டாப்ல கிளி வருது... அது சீட்டு எடுத்து கொடுக்குது''
பி.பரத், கோவிலாம்பூண்டி.

* "என்னடா "கெக்கு'னு எழுதியிருக்கிறே.. அது "கொக்கு'டா மக்கு..''
"நீங்க தானே நொண்டிக் "கொக்கு'னு 
சொன்னீங்க அதான் காலை
எடுத்திட்டேன்''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* "நாமதான் ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் இலவசமாத் தர்றோம்மே... அப்படியிருந்தும் அந்தக் கடையில் கூட்டம் நிரம்பி வழியுதே?''
"'அவங்க ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் தண்ணி இலவசம்ன்னு அறிவிச்
சிருக்காங்களே''
பி.பால்ராம மூர்த்தி, அம்பாசமுத்திரம்.

* "உங்களை தண்ணீர் இல்லாத 
காட்டுக்கு மாத்திடுவேன்னு மிரட்டுறாரே... கொஞ்சங்கூட பயமில்லாம 
இருக்குறீங்க?''
"எல்லா ஊர்லயும்தான் தண்ணி இல்லை.... இதுல இவர் என்ன புதுசா மாத்திடப் போறாரு?''
ரா.ராஜதுரை, சீர்காழி.


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/joke.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/சிரி-சிரி-3230267.html
3230266 வார இதழ்கள் தினமணி கதிர் அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர்! DIN DIN Sunday, September 8, 2019 10:08 AM +0530 அரசுப்பள்ளி மாணவர்களுடன் சில மணி நேரம் கலந்துரையாடிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தனது வாழ்க்கைச் சம்பவத்தை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.
 திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்துக்குள்பட்ட, புளியங்குடி அருகே மிக குக்கிராமமான மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன்தான் இந்த கலந்துரையாடலை ஆட்சியர் மேற்கொண்டார். அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களது பல்திறனை உயர்த்தும் நோக்கிலும், கடையநல்லூர் வட்டாட்சியர் அழகப்பராஜா சார்பில் மாணவர்களுக்கு ஆட்சியர் புத்தகங்களை வழங்கினார்.
 அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். பல மாணவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
 "9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டிய காலம் இது. இந்த காலம்தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய காலம். உங்களுக்கென்று கண்டிப்பாக எதிர்காலக் கனவு உருவாக வேண்டிய தருணம் இது. குறிக்கோளை மனதில் உருவாக்க வேண்டிய தருணம். குறிக்கோள் இருந்தால் மட்டும் போதாது. அந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு முயல வேண்டும். அதற்கான தொடக்க நிலை விவரங்களை ஆசிரியர்கள் வாரத்திற்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்பு இதே தேதியில் நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். உங்களின் குறிக்கோளை எட்ட படிப்படியாக உழைக்க வேண்டும். மாடியிலுள்ள குடிநீர்த் தொட்டியைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் ஏணி வைத்து அதிலுள்ள படிகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஏறி அந்த தொட்டியைப் பார்க்க வேண்டும். நேரடியாக அந்த தொட்டியை எட்டிப் பிடிக்க முடியாது. ஏணியிலும் 4 படிகளைத் தாண்ட நினைக்கக் கூடாது. அது தோல்வியைத் தரும்.
 இலக்கை அடைய, முயற்சி தேவை. பல்வேறு இடையூறுகள் அதில் வரும். எனக்கும் ஆட்சியர் கனவு எளிதாக நிறைவேறவில்லை. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் வர முடிந்தது. கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்கலாம். குறிக்கோளை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும். வாழ்வில் வெற்றி பெற விருப்பங்கள் தேவை. ஆசை இருந்தால் அதை நிறைவேற்ற உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 நம்முடைய குறிக்கோளை, கனவைச் சொல்லும் போது நமது நண்பர்கள் கூட சிரிப்பார்கள். எப்படி ஆக முடியும் எனக் கேட்பார்கள். நான் எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக விரும்புகிறேன் என கூறியபோது, எனது நண்பர்கள் எப்படி முடியும்? என கேட்டு நகைத்தார்கள். நம்பவில்லை.
 ஆனாலும், நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தேன். சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் விட்டு விடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
 மற்றவர்களுக்காகப் படிக்கிறோம்; கிடைத்த பாடப்பிரிவைப் படிக்கிறோம் என்று இல்லாமல், குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம். ஐஏஎஸ் அதிகாரி என்று இல்லை. நமது விருப்பம் எனனவோ, அதில் சிறந்தவராக ஜொலிக்க இடைவிடாது முயற்சி செய்யுங்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்'' என்ற அவரின் பாசிட்டிவ்
 பேச்சுக்கு மாணவர் கூட்டம் உற்சாகமாக கரவொலி எழுப்பி மகிழ்ந்தது.
 - வி.குமாரமுருகன்
 
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/SHILFA.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/அரசுப்-பள்ளி-மாணவர்களுடன்-ஆட்சியர்-3230266.html
3230265 வார இதழ்கள் தினமணி கதிர் தற்காப்புக் கலைக்குத் தங்கம்! Sunday, September 8, 2019 10:06 AM +0530 ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பல வழிகளில் போராடுகிறான். எதிரி தாக்க வரும்போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் திருப்பித் தாக்குவதை தற்காப்புக் கலை எனலாம். பல வகை தற்காப்புக் கலைகள் இருந்தாலும் இலக்கு ஒன்றே. அது எதிரியை வீழ்த்துவது. தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் கைகளை மட்டுமே பயன்படுத்தும் வர்மக்கலை, குத்துவரிசை, மல்யுத்தம் போன்றவையும் தற்காப்புக் கலைகளே. சிலம்பம், வாள், இரட்டை வாள், சுருள்பட்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் ஆயுதங்களைப் பயன்படுத்தி செய்யப்படுபவையாகும்.
 தற்காப்புக் கலையைக் கற்பதனால், தன்னம்பிக்கை மற்றும் சகிப்புத்தன்மை வளரும். உடல் எடையைக் குறைக்க, எலும்புகளை வலுவாக்க இந்தக் கலையில் பயிற்சி பெறலாம். இந்த கலை பயின்றவர்களுக்கு கவனக்குறைவு என்பது இருக்காது என பயற்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்காப்புக் கலையின் சர்வதேச அளவிலான போட்டியில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்தவ மாணவ, மாணவிகள் 4 பேர் வியட்நாம் நாட்டிற்குச் சென்று போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் என 5 பதக்கங்களைப் பெற்று வந்துள்ளனர்.
 இது குறித்து விருதுநகர் மாவட்ட சிலம்பம் கழகம் சார்பில் திருத்தங்கலில் தற்காப்புக் கலை பயிற்சி அளித்துவரும் எஸ்.முத்து கிருஷ்ணனிடம் கேட்டபோது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
 "நாங்கள் சிலம்பம், களரி, குத்துவரிசை, வர்ம முறை ஆகியவை குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். எங்களிடம் முதலாம் வகுப்பு மாணவர் முதல் கல்லூரி படிக்கும் மாணவர் வரை 80 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என வார நாள்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை பயிற்சி அளிக்கிறோம். தொடக்கத்தில் சிலம்பம், வாள், இரட்டை வாள், சுருள்பட்டை உள்ளிட்ட 4 வகையான கலைகளிலும் பயிற்சி கொடுப்போம். அதில், எந்த கலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுகிறார் என கண்டறிந்து, பின்னர் அதில் மட்டும் பயிற்சி அளிப்போம்.
 பயிற்சி பெற்றவர்களை முதலில் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும், பின்னர் மாநில அளவிலான போட்டியிலும், தொடந்து தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெறச் செய்வோம்.
 கடந்த 2018 ஜூலை 13ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை, தெற்காசிய சிலம்பம் சம்மேளனம், கன்னியாகுமரியில் 2 ஆவது தெற்காசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தினர். இதில் எங்களிடம் பயிற்சி பெற்ற 5 ஆம் வகுப்பு மாணவி ஏ. முருகலட்சுமி, 8 ஆம் வகுப்பு மாணவி பி.லத்திகாஸ்ரீ, 8 ஆம் வகுப்பு மாணவர் ஜி.துளசி ராம், பத்தாம் வகுப்பு மாணவர் ஏ.வென்னிமலைராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் வியட்நாம் அரசு மற்றும் அங்குள்ள ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இணைந்து 2019 ஆகஸ்ட் 6 ஆம் தேதிமுதல் 12 ஆம் தேதி வரையில் சர்வதேச அளவிலான தற்காப்புக்கலைப் போட்டியை நடத்தின.
 இப்போட்டியில் ரஷ்யா, சீனா, மலேசியா, மெக்சிகோ உள்ளிட்ட 22 நாடுகளிலிருந்து வீரர்கள் மற்றம் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவிருந்து கலந்து கொண்ட 12 பேரில், எங்களிடம் பயிற்சி பெற்ற 4 பேரும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட முருகலட்சுமி ஓப்பன் வாள்வீச்சில் தங்கப் பதக்கமும், லத்திகா ஸ்ரீ (18 வயது குட்பட்டோர் பிரிவு) கை ஜோடி முறையில் தங்கப் பதக்கமும், வாள்வீச்சில் வெண்கலப் பதக்கமும், துளசிராம் (18 வயதுக்குட்பட்டோர் பிரிவு) சுருள் வாள் வீச்சில் வெள்ளிப் பதக்கமும் , 19 வயதுக்கு மேலான பிரிவில் வென்னிமலைராஜா சுருள்வாள் வீச்சில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இப்போட்டியில் எதிரிகளுடன் மோத வேண்டும் என்றில்லை. மோதுவதுபோல பாவனை செய்தால் (வேகம், விறுவிறுப்பு, ஆயுதத்தைக் கையாளும் முறை) அதற்கு ஏற்றார்போல மதிப்பெண்கள் உண்டு. இதில் பதக்கம் பெற்ற 4 பேரும் வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் அக்டோபர் 2 ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை நடைபெறும் சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். அந்தப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை'' என்றார்.

 - ச.பாலசுந்தரராஜ்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/8/w600X390/SUNDA_1.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/08/தற்காப்புக்-கலைக்குத்-தங்கம்-3230265.html
3226993 வார இதழ்கள் தினமணி கதிர் மருத்துவ மாணவர்களின் பொக்கிஷங்கள்! - சலன் Sunday, September 1, 2019 12:00 AM +0530 இன்று மருத்துவம் படிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக  மாறிவிட்டது.

இன்று தேர்வுக்கு மேல் தேர்வு எழுதி மருத்துவக்  கல்லூரியில் சேர்ந்தால், மாணவர்கள் படிக்கும் பல்வேறு புத்தகங்கள் எல்லாமே வெளிநாட்டு மருத்துவர்கள் எழுதிய புத்தகங்களாகத்தான் இருக்கின்றன. மருத்துவ மாணவர்களுக்குப் புத்தகம் எழுதும் ஆற்றல் இந்தியாவில் ஒருவருக்குமே இல்லையா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதை மாற்ற விரும்பினார் ஒருவர். அவர்தான் பேராசிரியர் டாக்டர்.டி.வி.தேவராஜன். 

சுமார் 30 வருடங்களாக மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் (Madras medical College) ஒரு ரூபாய் பணம் கூட  வாங்காமல் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். இந்த அனுபவத்தின் மூலம் இவருக்குத் தோன்றிய யோசனைதான், நமது மருத்துவ மாணவர்களுக்கு நாம் ஏன் ஒரு புத்தகம் எழுதக் கூடாது என்பது.  அதற்கு இவரது மனைவியும், மகப்பேறு மருத்துவருமான லக்ஷ்மி தேவராஜன் புத்தகம் எழுதியே ஆகவேண்டும் என்று சொன்னதுடன் நில்லாமல் மகப்பேறு மருத்துவத்தை பற்றி ஒரு சிறந்த கட்டுரையும் எழுதித் தந்து விட்டார். 

இப்படி ஆரம்பித்தார் டாக்டர் தேவராஜன். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 11 ஆண்டுகள் அதற்காகவே தனது பல்வேறு பணிகளை ( இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர்) ஒதுக்கி வைத்து விட்டு புத்தகத்திற்காக உழைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் அந்த புத்தகம் வெளிவந்தது எல் லாராலும் பாராட்டப்பட்டது. 

"சிலவற்றை நாம் சேர்த்து இருக்கலாமோ' என்று  வெளியான புத்தகத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்ததும் டாக்டர் தேவராஜனுக்குத் தோன்றியது. அதன் விளைவே சென்ற வாரம் வெளியான நான்கு புத்தகங்கள். முதல் புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான Apollo Hospitals Textbook of Medicine புத்தகத்தின் இரண்டாம் பாகம். இந்த புத்தகத்தை அப்போலோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி வெளியிட,  விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். 

ஏ.கணேசன் பெற்றுக் கொண்டார்.Rmk குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் 5000 MCQ in Medicine என்ற புத்தகத்தை வெளியிட, அப்போலோ குழுமத்தின் இஉஞ சிவகுமார் பெற்றுக் கொண்டார். புரொஃபசர் டாக்டர். ஆர்.ஜெயந்தி A to Z 1000 pearls in Medicine என்ற புத்தகத்தை வெளியிட, அதை விநாயகா மிஷனைச் சேர்ந்த டாக்டர்.அனுராதா கணேசன் பெற்றுக் கொண்டார். Completion of 300 Cases in Apollo advance Fever Clinic என்ற புத்தகத்தை வைரமுத்து வெளியிட, அப்போலோ குழுமத்தின் இயக்குநரான டாக்டர்.சத்யபாமா பெற்றுக் கொண்டார். இந்த வெளியீட்டுக்குப்பின் பேசிய அப்போலோ குழுமத்தின் தலைவரான பிரதாப் சி.ரெட்டி,   டாக்டர்.தேவராஜனை மிகவும் புகழ்ந்து பேசினார்: ""இவருக்கு இரண்டே இரண்டுதான் தெரியும். ஒன்று மருத்துவம், மற்றொன்று எழுத்து. அதனால்தான் அவரால் 4 புத்தங்களையும் ஒரே வருடதில் எழுதி வெளிக்கொணர  முடிந்தது. எங்கள் அப்போலோ குழுமம் மருத்துவ மாணவர்களுக்கு செய்யும் தொண்டாக நான் இதை நினைக்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் டாக்டர். தேவராஜனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கூறியதாவது:“""முதல் புத்தகம் எழுத 11 வருடங்கள் ஆனது. இந்த நான்கு புத்தகங்கள் எழுத எனக்கு ஒரு வருடம் தான் பிடித்தது. இந்த இரண்டாம் புத்தகத்தை பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கிளாஸ்கோ என்ற இடத்தில் உள்ள  Royal college of physician தலைவர் டேவிட் "மருத்துவ மாணவர்களுக்கு இவை போக்கிஷங்கள்' என்று மிகவும் பாராட்டி இருக்கிறார். அதுபோன்று British medical journal தலைமை ஆசிரியரான Fianona Goodly தனியாக ஒரு பாராட்டுக் கடிதமே எழுதியுள்ளார். தினமும் இரவு 8 மணி முதல் தூக்கம் வரும் வரை இந்த புத்தக வேலையில் முழ்கி இருப்பேன். 14 chapter களை இதில் நானே எழுதி உள்ளேன். இந்திய நோய்களும் அதன் தோற்றம் மற்றும் சிகிச்சை முறைகளும், இந்த இரண்டாம் புத்தகத்தில் இருக்கிறது. இந்த இரண்டாம் புத்தகத்தில் 1000 charts, 1000 புகைபடங்கள், 1000 ஷ் ழ்ஹஹ்ள் இருக்கு'' என்றார் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். தேவராஜன்.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir1.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/மருத்துவ-மாணவர்களின்-பொக்கிஷங்கள்-3226993.html
3226994 வார இதழ்கள் தினமணி கதிர் வெள்ளியைத் தங்கமாக மாற்றிய சாதனைப் பெண்! - பா.சுஜித்குமார்  DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530  

முக்கியமான சர்வதேசப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் தொடர்ந்து வெள்ளிப் பதக்கமே வென்று வந்து விமர்சனத்துக்கு ஆளாகி வந்த பி.வி. சிந்து உலக பாட்மிண்டன் போட்டியில் அதை தங்கப் பதக்கமாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் தான் அனைவரின் நினைவுக்கு வருவது வழக்கம். ஏனென்றால் அந்த அளவுக்கு கிரிக்கெட் பொது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. சர்வதேச ஆட்டங்களின் போது மைதானங்களில் திரண்டிருக்கும் பார்வையாளர்களே இதற்கு சாட்சியாகும்.

தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும், கிரிக்கெட்டையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தற்போது ஹாக்கியும் மெதுவாக தனது புகழை மீண்டும் பெற்று வருகிறது. 

வேகம், துடிப்பு, நுணுக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது பாட்மிண்டன். இந்த ஆட்டத்தில் பாரம்பரியமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, கொரியா, டென்மார்க், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளே வலுவாக உள்ளன. இந்தியாவில் பாட்மிண்டன்  ஆட்டத்துக்கு முதலில் அடையாளம் தந்தவர் பிரகாஷ் பதுகோன், சையது மோடி, கோபிசந்த் போன்ற வீரர்கள் தான்.

குறிப்பாக பிரகாஷ் பதுகோன் சர்வதேச அளவில் முக்கிய போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றார்.

குறிப்பிட்ட அளவிலேயே ஆடப்பட்டு வந்த பாட்மிண்டனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஸ்வினி, ஸ்ரீகாந்த், போன்றவர்களை சாரும்.

அதிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா என்ற இரு பெயர்களே பிரசித்தம். சாய்னாவை விட 4 வயது இளையவர் சிந்து.புசர்லா வெங்கட சிந்து எனப்படும் பி.வி.சிந்து கடந்த 5.7.1995-இல் பிறந்தார். விளையாட்டுக் குடும்பமான அதில் தந்தை பி.வி.ரமணா இந்திய வாலிபால் அணியிலும், தாயார் பி.விஜயாவும் தேசிய அளவிலும் ஆடியவர்கள். ரமணா, 1986 சியோல் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். அர்ஜுன விருதும் பெற்றவர். சிந்துவின் மூத்த சகோதரி பி.வி.திவ்யாவும், தேசிய ஹேண்ட்பால் வீராங்கனையாக திகழ்ந்தார். எனினும் அவர் மருத்துவத்துறைக்கு மாறி விட்டார்.

வழிகாட்டி கோபிசந்த்

பெற்றோர் வாலிபால் வீரர்களாக இருந்தாலும், சிந்துவுக்கு பாட்மிண்டனில் தான் நாட்டம் சென்றது. ஹைதராபாத்தில் வசித்து வரும் அவர், இளம் வயதில் செகந்தராபாத்தில் உள்ள இந்தியன் ரயில்வே சிக்னல் பிரிவு மைதானத்தில் மெகபூப் அலி என்பவரிடம் அடிப்படை அம்சங்களைக் கற்றார். அதன் பின் கோபிசந்த் அகாதெமியில் சேர்ந்தார் சிந்து. 

தற்போது தேசிய தலைமைப் பயிற்சியாளராக உள்ள கோபிசந்த் 2001-இல் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றவர். அவரைத் தனது வழிகாட்டியாக கொண்டார் சிந்து. அவரிடத்தில் காணப்பட்ட ஆட்டத்திறமை, எளிதில் விட்டுக்கொடுக்காத தன்மை போன்றவற்றை உணர்ந்து, தீவிர பயிற்சியளித்தார். அதன் பின் சிந்துவின் விளையாட்டு வாழ்க்கை பொலிவு பெறத் தொடங்கியது.

10 வயதில் முதலில் இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் தேசியப் போட்டியில் பட்டம் வென்றார். தேசிய பள்ளிகள் விளையாட்டிலும் தங்கம் வென்றார்.

சர்வதேச அறிமுகம்

2009-இல் சர்வதேச அளவில் அறிமுகமான சிந்து, தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றார். 2010 உலக ஜூனியர் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார்.  2012 சீன மாஸ்டர்ஸ் போட்டியில் லண்டன் ஒலிம்பிக் தங்க மங்கை லி ஸியுரெயை வென்றதே திருப்புமுனையாக அமைந்தது. பாட்மிண்டன் வட்டாரத்தில் முக்கிய போட்டிகளான ஜப்பான் ஓபன், இந்தோனேஷிய ஓபன், மலேசிய ஓபன், மக்காவ் ஓபன், சையது மோடி கிராண்ட் ப்ரீ போட்டிகளில் வெற்றி வாகை சூடினார்.

உலகப் போட்டியில் வெண்கலம்

2013 உலக சாம்பியன் போட்டியில் அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவின் வாங் ஸியானை வென்ற சிந்து, அதில் முதல் பதக்கமாக வெண்கலம் வென்றார். 2014 உலகப் போட்டியிலும் தொடர்ந்து 2-ஆவது முறையாக வெண்கலத்தைக் கைப்பற்றினார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி

2016 ரியோ ஒலிம்பிக் போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் கடுமையாகப் போராடி தோல்வியுற்று வெள்ளி வென்றார். இதன் மூலம் இளம் வயதில் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இறுதி ஆட்டங்களில் தொடர்கதையான தோல்வி

2016 ரியோ ஒலிம்பிக், 2017, 2018 உலக பாட்மிண்டன், 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டி, கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டி, தாய்லாந்து, இந்தோனேஷிய, இந்திய ஓபன் போட்டி இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றதால், கடும் விமர்சனத்துக்கு ஆளானார். 2018-இல் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக சாம்பியன் பட்டம்  

இடையில் காயத்தாலும் அவதிப்பட்ட சிந்து, அதையெல்லாம் தாண்டி, தீவிரப் பயிற்சி, விடாமுயற்சி போன்றவற்றால் பேஸலில் நடைபெற்ற உலகப் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இறுதி ஆட்டங்களில் தொடர் தோல்விப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். சிந்துவின் இந்த அதிரடி வெற்றியில் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம்மின் பங்கு அளப்பரியது. அவர் தான் சிந்துவின் ஆட்டமுறையையே மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை

கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து அதிகம் வருவாய் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையும் சிந்துவுக்கு உண்டு. ஒலிம்பிக் வெள்ளிக்கு பின் சிந்துவின் பெயர் மிகவும் பிரபலமடைந்து விட்டது. கடந்த 2018-இல் மட்டும் ஸ்பான்ஸர்கள், விளம்பர வருவாயாக அவருக்கு ரூ.66 கோடி கிடைத்தது. பாட்மிண்டன் லீக் போட்டியான யுடிடியிலும்  அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற சிறப்பும் சிந்துவுக்கு உண்டு.

பிரிட்ஜ்ஸ்டோன் டயர்ஸ், மூவ் நிவாரண மருந்து, ஜேபிஎல், பிளிப்கார்ட், பானசோனிக், பரோடா வங்கி, பூஸ்ட், ஸ்டே ப்ரீ, போன்றவற்றின் விளம்பரங்களிலும் நடிக்கிறார். மேலும் வைஸாக் ஸ்டீல், சிஆர்பிஎப் படையின் விளம்பரத் தூதுவராகவும் திகழ்கிறார். 

பிரபல விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களான யோனக்ஸ், சீனாவின் லி நிங் போன்றவற்றுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

துணை ஆட்சியராக நியமனம் 

சிந்துவின் அபாரமான சாதனைகளைப் பாராட்டி ஆந்திர மாநில அரசு, விஜயவாடாவில் நிலநிர்வாக துறையில் துணை ஆட்சியராக நியமித்தது. 

உயரிய விருதுகள் 

2013-இல் அர்ஜுன்,  2015-இல் பத்மஸ்ரீ, 2016-இல் ராஜீவ் கேல் ரத்னா போன்ற விருதுகள் சிந்துவைத்  தேடி வந்தன.

பிரதான போட்டியாளர்கள் 

கரோலினா மரின், டைசூ, அகேன் எமகுச்சி, நúஸாமி ஒகுஹரா, சென் யுபெய், போன்றவர்கள் தான் தொடர்ந்து அவருக்கு போட்டியாளர்களாகத் திகழ்கின்றனர்.

ஒலிம்பிக் கனவு

உலக சாம்பியன் ஆகி விட்ட சிந்துவுக்கு மற்றொரு கனவு நீடித்து வருகிறது. அது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதாகும்.

வரும் 2020-இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தர தயாராகி விட்டார் சிந்து.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir2.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/வெள்ளியைத்-தங்கமாக-மாற்றிய-சாதனைப்-பெண்-3226994.html
3226995 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530  

கேட்டது

(செங்கல்பட்டு அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில்)

""அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடு''
""அப்பா சாப்பிட வா''
""அப்பாவை மரியாதையா சாப்பிடக் கூப்பிடணும்டா''
""அப்பா மரியாதையா சாப்பிட வா''

க.அருச்சுனன், செங்கல்பட்டு. 

 

(திருவாரூரில் ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில்)

""அண்ணே சின்ன ரிப்பேர் மாதிரிதான் தெரியுது. கொஞ்சம்  ஞ.ட.யாவே சீர் பண்ணுங்களேன்.  இருந்து எடுத்துட்டுப் போறேன்''
""அட்மிஷன் (ஐ.ட) போட்டாலே கஷ்டம்தான். எப்படியும் உறுப்பு மாற்று செய்றது மாதிரிதான் இருக்கும்''
""அந்த அளவுக்கு எனக்கு வசதி இல்லை...  அது சரி, இதுக்கு எதுவும் காப்பீட்டு திட்டம் கிடையாதா?''

பரதன், திருவாரூர்.


கண்டது

(அறந்தாங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் எழுதப்பட்டுள்ள வாசகம்)

நன்கொடை அன்பாகத்  தவிர்க்கப்படுகிறது

ப.விஸ்வநாதன், கீரமங்கலம்.

 

(திருவண்ணாமலை மத்தலாங்குளத்தெருவில் ஒரு மளிகைக் கடையின் பெயர்)

ங.க.அ. மளிகைக் கடை

டி.தாமினி,  திருவண்ணாமலை.

 

(சிவகாசியில் உள்ள ஒரு சிற்றுண்டிக் கடையின் பெயர்)

எட்டணா வடைக் கடை

எஸ்.மோகன், கோவில்பட்டி. 


எஸ்.எம்.எஸ்.


சில காயங்கள் மருந்தால் சரியாகும்...
சில காயங்கள் மறந்தால் சரியாகும்.

ஏ.எம்.ஷெரீப்,  புதுக்கோட்டை.


கேட்டது


(செங்கல்பட்டு அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில்)

""அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடு''
""அப்பா சாப்பிட வா''
""அப்பாவை மரியாதையா சாப்பிடக் கூப்பிடணும்டா''
""அப்பா மரியாதையா சாப்பிட வா''

க.அருச்சுனன், செங்கல்பட்டு. 

 

(திருவாரூரில் ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில்)

""அண்ணே சின்ன ரிப்பேர் மாதிரிதான் தெரியுது. கொஞ்சம்  ஞ.ட.யாவே சீர் பண்ணுங்களேன்.  இருந்து எடுத்துட்டுப் போறேன்''

""அட்மிஷன் (ஐ.ட) போட்டாலே கஷ்டம்தான். எப்படியும் உறுப்பு மாற்று செய்றது மாதிரிதான் இருக்கும்''

""அந்த அளவுக்கு எனக்கு வசதி இல்லை...  அது சரி, இதுக்கு எதுவும் காப்பீட்டு திட்டம் கிடையாதா?''

பரதன், திருவாரூர்.

மைக்ரோ கதை


பத்துநாட்களுக்கு முன்பு துபாயில் இருக்கும் மகனிடமிருந்து  ரங்கநாதனுக்கு போன்.

""அப்பா... எங்கள் கம்பெனியிலே பிரச்னை. இன்னும் சம்பளம் போடலை. இந்த மாதம் பணம் அனுப்ப முடியாது. அடுத்த மாதம் சேர்த்து அனுப்புறேன்'' என்றான். 

ரங்கநாதனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இந்த மாதச் செலவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த ரங்கநாதன், தன் மனைவி மீனாட்சியிடம் வளையல்களை அடகு வைக்கக் கேட்டார்.   மீனாட்சியோ மறுத்துவிட்டாள்.

வேறு வழியில்லாமல் எதிர்வீட்டு சண்முகத்திடம் வட்டிக்கு  கடன் வாங்கினார்.  
கடன் வாங்கிய மறுநாள், காலையில் பால் வாங்க ரங்கநாதன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவரைக் கைதட்டிக் கூப்பிட்டான்  சண்முகம். இதை சன்னல் வழியாகப் பார்த்த மீனாட்சி திடுக்கிட்டாள்.  ரங்கநாதனிடம் பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி சண்முகம் காசு கொடுப்பதைப் பார்த்தாள் மீனாட்சி. 

பால் வாங்கி திரும்ப வீட்டுக்கு வந்த ரங்கநாதனிடம், தன் இரு வளையல்களையும் கழற்றிக் கொடுத்தாள் மீனாட்சி அடகு வைக்க. 

""அவன்ட்ட வாங்கின கடனை திருப்பி அவன் மூஞ்சியில் அடிங்க. வயசுக்கு மூத்த உங்களை கைதட்டி மரியாதை இல்லாமக் கூப்புடுறான்'' என்றாள் கோபமாக.

சி.ஸ்ரீரங்கம், திருச்சி -13.

 

யோசிக்கிறாங்கப்பா!

திருட தைரியமில்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்...
பிச்சை எடுக்க வெட்கப்படுபவர்கள் திருடி விடுகிறார்கள்...
இவ்விரண்டையும் சேர்த்துச் செய்ய விரும்புபவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்.

ஏ.எம்.சி, புதுக்கோட்டை.


அப்படீங்களா!

இங்கிலாந்தைச் சேர்ந்த  23 வயது இளைஞர் சாம் ரோஜர்ஸ்,  லோபோரோவ் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.  அவர் 3 டி முறையில் எடை குறைவான ஜெட் ஷ்யூட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.  அலுமினியம், ஸ்டீல், நைலான் ஆகியவற்றைக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள  இந்த ஜெட்   ஷ்யூட் - ஐ அணிந்து கொண்டால் 10 ஆயிரம் அடி உயரத்தில்  மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பறக்கலாம்.  இந்த ஜெட்  ஷ்யூட்டை இயக்கும் கட்டுப்பாட்டுக் கருவிகள் எல்லாம் கைகளால் இயக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.  மண்ணெண்ணெயால்  இது  இயங்குகிறது.

2017 -ஆம் ஆண்டு  கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்  சாம் ரோஜர்ஸ் உருவாக்கிய  ஜெட் ஷூட்  இடம் பெற்றது.  அது மணிக்கு 51 கி.மீ. வேகத்தில்தான் பறந்தது.  இப்போது அதை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடன் வடிவமைத்துள்ளார். 

இந்த ஜெட்  ஷூட்டின் தற்போதைய  விலை ரூ.3 கோடியே 1 லட்சம். 

என்.ஜே., சென்னை-58

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir3.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/பேல்பூரி-3226995.html
3226996 வார இதழ்கள் தினமணி கதிர் பூரணியும் கொலு போட்டியும் பவித்ரா நந்தகுமார் DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530
தன் மனதுக்கு நெருங்கிய மகளிர் பத்திரிகையில் "பிரம்மாண்ட மெகா கொலு போட்டி' அறிவிப்பைப் பார்த்ததும் பூரணிக்கு தொண்டை குழியில் தேன் இறங்கியதைப் போல இனித்தது. 
அழகிய கொலு புகைப்படத்துடன் போட்டி குறித்தான அறிவிப்பும் அதற்கான விதிமுறைகளும் வழவழ காகிதத்தில் பூரணியின் கண்களுக்கு விருந்தாய் தெரிந்தது.  
"சொக்கா... 1000 பொற்காசுகளும் எனக்கே எனக்கா!'” என பரிசுக்கு ஏங்கிய திருவிளையாடல் தருமி போல் அவள் மனம் பரிசு குறித்து அதிகம் யோசித்து கொண்டாட்ட நிலைக்கு தாவியது.  6 சிறப்புப் பரிசுகளும் 12 ஊக்கப் பரிசுகள் என மொத்தம் 18 இல்லக் கொலுவுக்கு பரிசுகள் கிடைக்கப் போகின்றன.  ஆறு சிறப்புப் பரிசுகளுள் ஒன்றை அடைந்தே தீருவது என பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவு செய்து  கொண்டாள். ஏனெனில் சிறப்பு பரிசுக்கான தொகை மிக அதிகம் மற்றும் பூஜைக்கு தகுந்த வெள்ளிப் பொருட்களும் அதனுள் அடக்கம்.
விண்ணப்பிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர் இல்லத்துக்கு திடீர் விஜயம் செய்து பரிசுக்
குரியவர்களை தேர்வு செய்வர் என விதிமுறையில் இருந்தது.  விண்ணப்ப கூப்பனையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனைத்தும் செய்து அனுப்பினாள்.
அந்த கடிதத்தை தபால் பெட்டியில் சேர்ப்பித்த அடுத்த நொடியிலிருந்து பூரணியின் மனம் றெக்கை கட்டி பறந்தது.
இத்தனைக்கும் பூரணி சென்ற வருடம் புரட்டாசியில் கூட, "இந்த வருடம் கொலு வைக்கலாமா' என யோசித்தவள்.  ஏனெனில் அவளின் குடும்பம் கொலு வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தது தான்.  ஆனால் அவளின் மாமியார் 15 வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட மனக்
கஷ்டங்களால் கொலு வைக்கும் முறையையே தவிர்த்து விட்டிருந்தார். பின்னால் வந்த பூரணியும் தன் வேலைப்பளு, உடல் அசதி, சோம்பேறித்தனத்தை கருத்தில் கொண்டு மாமியாரின் செயலுக்கு அச்சுஅசலாய் ஒத்துப் போனாள். அந்த பழைய சோம்பேறித்தனத்தை தற்போது சுருட்டி பரண் மீது வீசியெறிந்தது சாட்சாத் இந்த போட்டியேதான்.
15 நாட்களுக்கு முன்பிருந்தே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டாள் பூரணி.  பூசலார் மனதிலேயே சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது போல பூரணியும் மனதிலேயே கொலுப் படிகளை அடுக்கி இன்னின்ன படியில் இத்தனை பொம்மைகள் என இறுதியில் கலசம் கூட நிறுத்தி விட்டாள். எந்தெந்த விதத்தில் கொலுவில் புதுமைகளை புகுத்த முடியும் என அவள் மூளை தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தது.
பொம்மைகளை கொலுவில் வைக்காது பரணிலோ பெட்டியிலோ வருடக்கணக்காக பூட்டியே வைத்திருப்பது குடும்பத்துக்கு நல்லதல்ல. அந்த பொம்மைகள் சாபம் இட்டுவிடும்” என பலரும் அவளுக்குச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தனை பேரின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுக்காதவளின் மனம் ஏனோ இந்த பத்திரிகை நடத்தும் "மெகா கொலு போட்டி'யின்பால் வீழ்ந்து  போயிற்று.
கொலு செய்திகளை தேடித் தேடி வாசித்தாள்.  நவதானியங்களை முன்கூட்டியே பலசரக்குக் கடைகளில் சேகரித்தாள்.  வீட்டில் ஒட்டடை காணாமல் போயின.  ஜன்னல் கம்பிகள், கண்ணாடி, கதவுகள், மரச்சாமான்கள் துடைக்கப்பட்டு பளிச்சென மின்னியது.  படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், கால் மிதிப்பான்கள் துவைத்து அலசி காய வைக்கப்பட்டன.  பழைய ஓட்டை ஒடைசல் பாத்திரங்கள் ஒழிக்கப்பட்டு அடைசல்கள் விலகின.  தலைவாசற்கால் தூசியின்றி பளிச்சென உருமாறியது. வீடே அமர்க்களமாக மிரட்டியது.
பத்திரிகையின் போட்டி குழு தம் வீட்டுக்கு வரும்போது அவர்களை எப்படி வரவேற்பது, எங்கே அமரவைப்பது, எதை உண்ணக் கொடுத்து உபசரிப்பது என்றவரையில் மூளையில் வலை பின்னல்கள் பூரணிக்கு.
வரும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க மஞ்சள், குங்கும குப்பிகள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழ இத்யாதிகள், சுண்டல் செய்ய 9 வகை தானியங்கள் எனப் பார்த்துப் பார்த்து வாங்கினாள்.  லலிதா சகஸ்ரநாமம் மற்றும் தேவி மகாத்மிய பாடல் சி.டி.க்கள் கைவசம் பெற்றாயிற்று.  இன்னும் இன்னும் புதுப்புது உத்திகள் என்பதாய் அவள் மனமெங்கும் கிளை
பரப்பி ஓடியது.
நவதானியங்கள் ஊற வைத்து முளை கட்டப்பட்டு செம்மண்ணில் விதைத்தும் ஆயிற்று.  முளைத்து வருவது தான் பாக்கி.
இன்னும் இரண்டே நாளில் அமாவாசை. அன்று தான் நல்ல நேரம்  பார்த்து கலசம் நிறுத்த வேண்டும்.  வீடு நீரால் கழுவப்பட்டு தூய்மை பெற்றது.
ஏற்கெனவே எக்கச்சக்க பொம்மைகள் அவள் இல்லத்தில் நிறைந்துள்ளது. வருடத்திற்கு ஒன்று உயிர் கொடுக்க வாங்கி வைக்க வேண்டும் என்ற சாங்கியத்துக்கு புதுவிதமான பொம்மை வைக்க விரும்பி அழகான கிருஷ்ணர் பொம்மை ஒன்றை மட்டும் வாங்கினாள்.
பூரணியின் இந்த அபரிமித மாற்றம் தீனாவை புருவம் உயர்த்தச் செய்தது. எத்தனையோ முறை உறவுகள் சொல்லி கேட்காத இவள் ஒரு பத்திரிகை போட்டிக்காகவா இப்படி மாறிப் போனாள் என அசந்து போனான்.  நாளுக்கு நாள் அவள் முகத்தின் தேஜஸ் கூடிக் கொண்டே போனது.
விடிந்தால் அமாவாசை.  இன்றைய தினமே பரணிலிருந்து பொம்மைப் பெட்டிகளை தீனாவின் உதவியுடன் இறக்கினாள்.  காகித கிழிசல்கள் மற்றும் வைக்கோல் சூழ பொதியப்பட்டுக் கிடந்த பொம்மைகளைக் கையிலெடுக்கையில் கருப்பையிலிருந்து குழந்தைகளை எடுப்பதுபோல இருந்தது அவளுக்கு.  ஏனோ திடீரென கண்கள் பனித்தன.  தொண்டை அடைத்தது.  கை கால்களில் ஒருவித நடுக்கம்.  இத்தனை பொம்மைகளை தன்னால் சரிவர வைத்து சுத்தபத்தமாக  நவராத்திரியைக் கடக்க முடியுமா என்ற பயம் தோன்றி அவளுக்குள் உலவத் தொடங்கியது.  இது சிறு குழந்தைகள் ஆடும் சொப்பு விளையாட்டு போன்றதல்ல, பூஜை புனஸ்காரங்களை அத்தனை ஆச்சாரமாக செய்ய வேண்டும் எனும் பக்தி அவளுக்குள் பயமாக அவ்வப்போது வெளிப்பட்டது.
கொலு வைக்கும் நாளும், ஒரு வழியாக வந்தே வந்தது.  மஹாளய அமாவாசையில் தலைமுழுகி காலையிலேயே ஒன்பது படிகளை பலகைகள் போட்டு நிரவினான் தீனா.  ஆரம்பத்தில் விருப்பமின்றி மொழிந்திருந்தாலும் பூரணியின் பேரார்வம் அவனுக்குள்ளும் சற்றே இறங்கி மந்திரச்செயல் புரிந்திருந்ததால் அவளுக்கு முடிந்தவரையில் உதவி செய்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிப் போனான்.
அரைப்படி பச்சரிசியை ஆழ அகல இட்டு நிரப்பி அதன்மேல் பளிச்சென துலக்கி வைக்கப்பட்டிருந்த பித்தளை கலச சொம்பின் வாயளவு சுத்தமான  நீர் நிரப்பினாள்.  பின் அதில் சிட்டிகை பச்சைக் கற்பூரம், கதம்பப்பொடி, தட்டிய ஏலக்காய், சிறிதளவு கோமியம், ஒரு ரூபாய் நாணயத்தை வரிசையாகப் போட்டாள்.  அத்தனையும் தன் மாமியார் அலைபேசியில் சொல்லச் சொல்ல குறித்து வைத்தவை தாம்.  நல்ல பச்சை வாசம் கொண்ட தேர்ந்த பாங்கான மாவிலையைத் தேர்ந்தெடுத்து விரித்து கிடத்தி மட்டை தேங்காயைச் சீராக நிறுத்தி மூன்று பட்டை விபூதி பூசி, நடுவே குங்குமத் திலகம் இட்டாள். அவ்வளவு தான்.  கலசம் நிறுத்தியாயிற்று.    
அடர்ந்து கட்டிய கனகாம்பரம் மற்றும் மல்லிச்சரங்களை கலசத்தில் இட்டு நடுநாயகமாக ஒற்றை ரோஜாவை இருத்தியதும் தெய்வீகக் கலை கலசத்தில் அமர்ந்து கொண்டது.
வீடெங்கும் அந்த  நேர்மறை வீச்சின் தன்மை எதிரொலித்தது. பெருவாரியாக இருந்த சுவாமி பொம்மைகளை அதன் உயரம் அளவுகளுக்கேற்ப படியினில் நிரவினாள்.  பருத்தி துணியினால் துடைத்துவிட்டு அடுக்கும்போது ஒவ்வொரு பொம்மையின் பேசும் கண்கள், கூரிய மூக்கு, அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த ஆபரணங்கள் என ரசித்து அடுக்கியதில்... மனம் லேசாகியது அவளுக்கு. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு கதையை சுவாரஸ்யமாக தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.  அதிலும் அவளின் ஆதர்ச கடவுள் ஸ்ரீராமனின் உருவம் கொண்ட பொம்மை உயிர் பெற்று அவளிடம் பேசுவது போல் இருந்தது.
கூட்டாக இடம்பெறும் குழு பொம்மைகள், அடுக்கி வைக்கப்படும் நேர்த்தியில் ரசனை கூடிக் கொண்டிருந்தது.
பூரணி காலை முதல் மாலை வரை பொம்மைகளுடனே புழங்கி, பொம்மைகளுடனே பேசி, பொம்மைகளுடனே சிரித்தாள்.
இத்தனை காலம்... கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் பூட்டியே கிடந்த பொம்மைகளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கும் விதமாய் இருந்தது அவளது செயல்கள்.
மாலை வீடு வந்த தீனா மலைத்து போனான்.  அவர்களது வீட்டில் ஓரளவு பெரிய கூடம் தான்.  இவர்கள் இருவரும் புழங்குவதற்காக கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டு மீதி இடங்களிளெல்லாம் பொம்மைகளை நிரப்பி இருந்தாள்.
தன்னந்தனி பெண்ணாக பூரணி மேற்கொண்ட சிரமத்தைப் பார்த்த அவனுக்கு இது நாள் வரை இல்லாது அவள் மேல் பெரிய மரியாதை ஏற்பட்டது.  அவளின் தனித்திறன் அவனுக்கு விளங்கியது.
மறுநாள் மாலைக்குள் பூங்கா, கோயில் வளாகம், திரையரங்கம், துணிக்கடை, சாலைகள், மருத்துவமனை, குடில்கள், திருமண மண்டபம் என அமர்க்களமாய் தயாராகி விட்டது கொலு... மக்கள் பார்வைக்காக.
நவராத்திரியின் முதல் நாளிலேயே காலை, மாலை என சுத்த பத்தமாக நைவேத்யம் செய்து படைத்தாள்.  பொம்மைகளைப் பார்க்கப் பார்க்க மனம் கொண்டாட்டமாக இருந்தது.  இது அத்தனையும் தன் ஒருவளின் முயற்சியிலா சாத்தியமாகியது என்று நினைக்கையில் உடல் முழுவதும் புல்லரித்தது.  உடல் அசதி ஒரு புறம் இருந்தாலும், அது நீங்கி பூரணம் பெற்றது போல மனம் நிறைந்தாள் பூரணி.
பக்கத்து வீட்டு குட்டிப் பாப்பாவை நன்றாக அலங்கரித்து தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழைப்பு விடுக்கச் செய்தாள்.
முதல் இரண்டு நாட்களுக்கு கூட்டம் கொஞ்சம் குறைவு தான்.  பின் பூரணி வீட்டில் புதிதாய் மீண்டும் கொலு வைக்கத் தொடங்கியிருப்பது காட்டுத்தீ போல் பரவி அடுத்தடுத்த நாட்களில் அவளை மூச்சுத் திணற வைக்கும் விதமாய் அக்கம்பக்கத்தார் வந்து வாய்பிளந்தனர்.
வந்திருந்த அத்தனை பேரும் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காது பூரணி திரும்ப கொலு வைக்கத் தொடங்கியதை வாழ்த்திய வண்ணம் இருந்தனர்.
தன் முயற்சிக்கு இத்தனை பாராட்டா என நெக்
குருகினாள் பூரணி.  பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகை வந்திருந்த அனைவரும் பாராட்டித் தள்ளினர்.  பூரணிக்கு தனி அந்தஸ்து கூடிவிட்டதாக வாய்ஜாலம் செய்தனர்.
அக்கம் பக்கத்து தெரு மழலைகள் பட்டாளத்துடன் வந்து சுண்டல் பெற்றுச் சென்றதுகள்.  அவர்கள் அத்தனை பேருக்கும் அவள் “கொலு ஆன்ட்டி” ஆனாள்.
வந்திருந்தவர்களில் ஒரு சில பெண்கள் அமர்க்களமாய்ப் பாட்டு பாடினார்கள். 7 மணிக்கெல்லாம் செய்து  வைத்த சுண்டல் தீர்ந்து போகும் அளவு கூட்டம் வந்தது.  பூரணி கொலு வைத்த செய்தி அறிந்த உறவினர் பெண் ஒருத்தி தன் மகளின் திருமணம் விரைந்து நடக்க வேண்டி மனதில் பிரார்த்தித்துக் கொண்டு கிருஷ்ணர் ராதை பொம்மையை வாங்கிக் கொடுத்தாள்.
சிறுவர் சிறுமிகள் கண்களை அகல விரித்து பொம்மைகளைக் கண்டார்கள். ஒரே இடத்தில் இத்தனை பொம்மைகளைப் பார்த்ததும் வழக்கமாக பொம்மை வேண்டும் என அடம் பிடிக்கும் சில வாண்டுகள் கூட செய்வதறியாது பிரமித்துப் போயின. பூரணியின் வீட்டை விட்டு நகர்வேனா என்றதுகள்.
சில பிள்ளைகளோ ஆர்வக்கோளாறில் பொம்மைகளை முன்னும் பின்னும் நகர்த்தின.  செல்லக் கோபத்தை முகத்தில் காண்பித்து அவர்களைத் திருத்தினாள் பூரணி.
தீனா தன் நட்பு வட்டத்திலிருந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். அவர்களும் கொலு பொம்மைகளைப் பார்த்து பரவசமடைந்து கொலு தத்துவம் என்றால் என்ன என்பது வரை இவர்களிடம் கேட்டு விளங்கிச் சென்றார்கள்.
வழக்கமான வீட்டு வேலைகள் மட்டுமல்லாது, கூடுதலாகிப் போன இந்த பணிச்சூழல் கடுமையாக இருப்பினும் மனம் ஒன்றி செய்ததால் அயர்ச்சி தெரியவில்லை அவளுக்கு. நவராத்திரியை முன்னிட்டு தினசரி அவள் படுப்பதற்கு இரவு 11.30 தாண்டியது.  
ஒரு பெண்ணாக இருப்பதன் சிறப்பை தாம்பூலம் கொடுக்கும்போது பூரணி பூரணமாய் உணர்ந்தாள்.  பெண்ணாக பிறந்து வளர்வதில் இது போன்ற சில செளகர்யங்கள் உண்டு தானே!
ஐந்து நாட்கள் கடந்து விட்டன.  நவராத்திரியின் ஆறாம் நாளும் துவங்கியாயிற்று.  அதுவரை இயல்பாக இருந்துவிட்டவளின் கண்கள் ஆறாம் நாள் அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தது.
முதல் மூன்று நாட்கள் விடுத்திருந்தாலும் நான்காம் நாளிலிருந்து அந்த பத்திரிகைக் குழு கொலு இல்லத்தை தேர்ந்தெடுத்து சென்று வந்திருப்பார்கள். ஐந்து நாள் கழித்தும் தனக்கு அழைப்பு ஏதும் வராததை எண்ணி அவள் மனம் மெல்லிய நடுக்கத்திற்கு ஆட்பட்டது.
தீனாவிடம் சொன்னால் தன்னைக் கடிந்துக் கொள்வான் என்பது அவளுக்குத் தெரியும்.  இன்னும் 4 நாட்கள் மீதமிருப்பதை எண்ணி கண்டிப்பாக தம் இல்லம் வருவார்கள் என நம்பினாள்.
5 ஆம் நாள், 6 ஆம் நாள், 7 ஆம் நாள் என அடுத்தடுத்த நாட்கள் அவளை பொறுத்த அளவில் விரைவிலேயே கடந்து போயிற்று.  நவராத்திரியின் 8 ஆம் நாளும் வந்துவிட்டது.  மறுநாள் சரஸ்வதி பூஜை.  
எண்ணெய் கையிலிருந்து பாத்திரம் வழுக்கியதைப் போல பூரணியின் நம்பிக்கை நழுவிப் போயிற்று.  8 ஆம் நாளின் இரவு சுண்டல் பாத்திரம் தன் கனம் இழந்து வெறுமை பூசிக்கொண்ட நேரம்.  பூரணிக்கோ நெஞ்சு பகுதியில் கனமான கல்லை வைத்தது போல ஆற்றாமை அழுத்தியது.
எத்தனை எதிர்பார்ப்பு! எத்தனை பிரயத்தனம்! அத்தனையும் வீணாகி விட்டதோ என்ற தவிப்பு.  இனி தீனா கூட தன்னை இது குறித்து அடிக்கடி 
கிண்டல் செய்வான்.  பூரணிக்கு உள்ளுக்குள் புழுங்கியது.  இனி பத்திரிகைக் குழு தம் வீட்டுக்கு வர சாத்தியமே இல்லை என்ற உண்மை புரிந்தது. இருப்பினும் இரவு 8.30ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.  இந்நேரம் தொடர்பு கிடைப்பது அத்தனை எளிது அல்ல.  ஆனால் தொலைபேசியில் அழைத்து ஒருமுறை பத்திரிகை அலுவலகத்துக்கே கேட்டுவிட்டால் என்ன?  என்ற யோசனை அழுத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தாள்.  அழைப்பை ஒரு பெண் குரல் ஏற்றது.
“""மேடம்... நான் பூரணி.  வேலூரிலிருந்து பேசறேன்.  உங்க பத்திரிகை நடத்துற கொலு போட்டிக்கு விண்ணப்பிச்சிருந்தேன்.  தேர்வானா திடீர் விசிட் வருவாங்கன்னு போட்டிருந்தீங்க.  நானும் இந்த நாள் வரை எதிர்பார்த்திட்டிருக்கேன்.  எங்க வீடு தேர்வாயிருக்கா?  எங்க வீட்டுக்கு குழு வருவாங்களா?  நாளைக்கு சரஸ்வதி பூஜை.  இன்னும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கு''”
“""ஹலோ... ஹலோ... மேடம்.  உங்க ஆர்வத்துக்கு நாங்க தலைவணங்குறோம். ஆனா நீங்க ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும்.  தேர்வான 18 பேருக்கும் முன்னமே போன்ல தகவல் தெரிவித்தாச்சு.  எங்க குழு அவங்க வீட்டுக்கும் விசிட் போயிட்டு வந்துட்டாங்க.  நேத்தோட அந்த புராஜெக்ட் முடிஞ்சிடுச்சி.  úஸா... இனிமே எதிர்பார்க்காதீங்க.  போட்டியில் கலந்து கொண்டதுக்கு எங்க பத்திரிகை சார்பா நன்றி.  கண்டிப்பா அடுத்த வருஷம் கலந்துக்குங்க மேடம். அடுத்த வருடத்தில் உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்''” என்றார்.
பூரணிக்கு தலை சுற்றியது.  இப்போது தன் மீதே அவளுக்கு கழிவிரக்கம் பொங்கியது.  இதை 3 நாட்
களுக்கு முன்பே கேட்டுத் தொலைத்திருந்தால் கூட இத்தனை நாள் நிம்மதியாகவேனும் இருந்திருக்
கலாம்.  மனதில் முளைத்த ஆசை தீய்க்கு நெய் விட்டு நெய் விட்டு வார்த்து இப்போது குபீரென அணைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? எதிர்பார்த்து ஏமாந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தற்போது வெடித்து அழ வேண்டும் போல் இருந்தது.  வெளியே தீனாவின் "புடு புடு' வண்டிச் சத்தம்.  உள் நுழைந்த தீனா பூரணியின் முக வாட்டத்தை அறிந்து துருவினான்.  மடை திறந்த வெள்ளம் போல மொத்தத்தையும் கொட்டி முடித்து விம்மினாள்.  வீட்டில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் "கரக் கரக்' சத்தம் அவளுடன் சேர்ந்து அழுவது போல் இருந்தது.
கொலு வைத்த வீட்டில் கண் கலங்கக் கூடாது என ஒருவாறு சொல்லி அவளைத் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனுக்கு.
மறுநாள் சரஸ்வதி பூஜை.  காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தான் வேலை செய்து கொண்டிருந்தாள்.  ”அம்மாவும் அண்ணியும் சாயந்திரம் வருகிறார்களாம்” என தனக்கு பேசியில் வந்த தகவலை பூரணியிடம் தெரிவித்திருந்தான் தீனா. அவர்களின் வருகையை ஒட்டி சற்றே இயல்பாகி இருந்தாள் பூரணி. 
மாமியார் அறிவழகி ஓர்ப்படி மீனா மற்றும் மீனாவின் இரு மகன்கள் என நால்வரும் காரில் வந்து இறங்கினார்கள். அறிவழகி முதுமை காரணமாக இயலாமையில் தாங்கியபடி நிதானமாக நடந்து வந்து உள்நுழைந்தாள். வந்ததும் சோபாவில் பொத்தென அமர்ந்தவள் ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு கூடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
உதடுகள் துடித்தன.  அவள் கண்கள் விரிந்தன.  புருவம் எழும்பியது. தொண்டை குழி மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.  பக்கத்தில் நின்றிருந்த பூரணியை பார்த்தாள்.
தான் வாழ்ந்த வீட்டில் மற்றொரு முறை கொலு வைக்கப்பட்டு பார்த்ததே அவளுக்கு பேரானந்தம் தந்தது.
பூரணியின் மேல் பெரிதாகப் பிடிப்பு ஏற்படாத நிலையில் பெரியவன் குடும்பத்துடனே தங்கிவிட்டவள் தான் அறிவழகி.  தற்போது பூரணியை ஆழ்ந்து பார்த்தார்.  பூரணி கொஞ்சமாக இதழ் விரித்து அறிவழகியின் பார்வை தீட்சையை அழகாக உள்வாங்கினாள்.
”""பூரணி... ரொம்ப அழகா கலை நேர்த்தியா கொலு வெச்சிருக்க.  உனக்கு எப்படி கொலு வைக்கணும்னு தோணுச்சு?''” அங்கே ஒரு சின்ன அமைதி.  பின் அதை உடைக்கும் விதமாக அவரே தொடர்ந்தார்:  
""உன் மாமனார் காலமான பிறகு சுமங்கலிங்களுக்கு எப்படி தாம்பூலம் கொடுக்கறதுன்னு அந்த வருஷத்தோட கொலு வைக்குற பழக்கத்த விட்டவ தான்.  ம்ம்ம்... மீனா வந்த பிறகு எத்தனயோ முறை சொல்லிப் பாத்துட்டேன்.    அவ அதப்பத்தி நெனச்சிக்கூட பாக்கல.  ஆனா நீ இந்த வருஷம் கொலு வெச்சு என் வயித்துல பால வார்த்துட்ட.  நம்ம குடும்பத்துல பல தலைமுறையா கொலு வெச்சு என்னால தொடர முடியாம போயிடுச்சேங்குற குற்ற உணர்வு என்னை அரிச்சிட்டே இருந்துச்சு.  இன்னிக்கு தான் அதிலிருந்து விலக்கு கெடச்சிருக்கு''” என பூரணியின் கைப்பிடித்து அறிவழகி நெக்குருகினாள்.  
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல் இருந்தது பூரணிக்கு.
அவ்வளவு சீக்கிரம் தன் அம்மாவிடமிருந்து நல்ல பெயர் வாங்கி விட முடியாது என்பது தீனாவுக்குத் தெரியும். தன் தாயிடம் இப்படி சில வார்த்தைகளை கேட்டதும் சந்தோஷத்தில் அவனுக்கும் தலைகால் புரியவில்லை.  பூரணியை வாஞ்சையுடன் பார்த்தான்.
தன் மாமியாரின் ஆசிர்வாதம் கிடைத்த திருப்தியில் அந்த பத்திரிகைக்கு மனதிற்குள்ளாகவே மானசீக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் பூரணி.
இப்போது அந்த பத்திரிகையின் பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலை துளிக்கூட மிஞ்சாமல் முழுவதும் துடைக்கப் பட்டு விட்டது பூரணியின் மனதில்.   
ஒரு பத்திரிகை பரிசுப் போட்டி தன் வாழ்க்கையில் இப்படியும் மலர்ச்சி ஏற்படுத்துமா என்று ஆச்சர்யத்தில் அசந்து போனாள் பூரணி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir4.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/பூரணியும்-கொலு-போட்டியும்-3226996.html
3226998 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன அழுத்தத்திற்கு மருந்து! DIN DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530  

நன்கு படித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சில நாட்களிலேயே விவாகரத்துப் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. சில வருடங்களுக்குப் பிறகு மறுமணம் செய்து வைத்ததும் பிரச்னையாகி அதுவும் விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் ஏற்பட்ட மன பாதிப்பால் DEPRESSION ஏற்பட்டு, தற்சமயம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதுடன், பெற்றோர் ஆகிய எங்களை ஒருமையில் திட்டுவதும், கத்துவதும், வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் பேசுவதுமாக எங்கள் மனதை மிகவும் புண்படுத்துகிறாள். ஆங்கில மருந்துகளால் அதிகம் தூங்குகிறாளே தவிர, குணமாகவில்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் மருந்துள்ளனவா?

 -சீனிவாசன், நங்கநல்லூர்.

சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று தர்க்க சாஸ்திரம் கூறுகிறது (சாக்ஷôத்காரே சுக துக்கா நாம் கரணம் மன உச்யதே). ஆனால் அந்த மனம் என்பது என்ன என்பதை ஒருவரும் சொல்லவில்லை. சிந்தனை செய்யக் கூடிய சக்தி மூளையில் ஆரம்பமாவதாக விஞ்ஞானங்கள் தெரிவிக்கின்றன. மூளையில் ஏதாவது ஒருபகுதி பாதிக்கப்பட்டு வேலை செய்யாவிட்டாலோ அல்லது அறுத்து வெளியே எடுத்தாலோ மனதின் வேலைகள் சில குறைக்கப்பட்டோ அல்லது இல்லாமலோ ஆகின்றன. அதனால் மூளைக்கும் மனதின் காரியங்களுக்கும் ஒரு சம்பந்தமிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் என்ன சம்பந்தமென்று தான் தெரியவில்லை. மூளையிலிருந்து இது உண்டாகிறதா? அது திரவமா? அல்லது காரியத்தினால் தான் கணக்கிடக்கூடிய வஸ்துவா? என்பது சரியாகத் தெரியவில்லை.

உங்களுடைய மகளுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நிறைந்த உணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை தான் என்று தெளிவாகிறது. அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக திருமணம் இருமுறை அமைந்துவிட்டதாலும், விவாகரத்திற்கான காரணங்களால் மனமும் மூளையும் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடே அவரின் செய்கைகளும் பேச்சும் என்று நாம் அறிய முடிகிறது.

கோபம் வரும் சமயத்தில் அதிகமாக சுரக்கும் அட்ரீனலின் என்னும் திரவம் மூளையைப் பெரிதாக பாதிக்கின்றது. மனதின் இருதோஷங்களாகிய ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் ஆதிக்கமே, சத்வம் எனும் மனதின் தூய குணத்தைக் குறைத்து, மூளையின் மேல் புறத்திலுள்ள CEREBRAL CORTEX எனும் பகுதிகளிலுள்ள அநேக வளைவுகளில் பொதிந்துள்ள கோடிக்கணக்கான கோசாணுக்களை (Brain cells) பாதிக்கின்றன. 

ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளிருக்கின்றன (Tendrils). இவற்றின் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் (Electrochemical) செய்திகள் பரவுகின்றன. வலி, ஞாபகம், கோபம் முதலியவை  இவ்வணுக்கள் மூலம், மின்ரசாயனச் செய்திகளால் தான் பரவுகின்றன.

பித்ததோஷத்தின் ஆதிக்ககுணங்களாகிய ஊடுருவும் தன்மை மற்றும் சூடும், ரஜோதோஷத்தின் உட்புறப்பகுதிகளில் ஆவேசத்தைப் பெறும் போதும், கபதோஷத்தின் நெய்ப்பும், குளிர்ச்சியும், கனமும், மந்தமும் தமோதோஷத்தின் உட்புறப்பகுதிகளில்  ஆவேசத்தை அடையும் போதும் ஏற்படும் குழப்பமான தன்மையே மனதைச் சஞ்சலமடையக் காரணமாகின்றன. பெற்றோர் மீது வெறுப்பும், கூறத் தகுதியற்ற வார்த்தைகளின் பிரயோக விசேஷத்திற்கும் இவையே காரணமாகின்றன.

படிப்பினால் அவருக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, காலச் சூழ்நிலையினால் மறைக்கப்பட்டுப் போன நிலையை மறுபடியும் மாற்ற நேர்மையான சிந்தனை, தர்க்கரீதியாகப் பேசுதல், மனதின் பண்பாடு ஆகியவற்றைக் கொண்டே சாதிக்க முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளால் ஏற்படும் ELECTRO CHEMICAL  மாற்றம் சாதித்துத் தராது. ஆனால் அதற்கு அவரைத் தயார்படுத்த சிறந்த COUNSELLING செய்யக்கூடிய மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களை நாடுவதே இத்தருணத்தில் தங்களுக்குப் பயன்தரக்கூடும். அவர்களிடம் அழைத்துச் செல்வதற்கு அவர் மனரீதியாக ஒத்துக் கொள்வாரா? என்பதும் சந்தேகமே!

அவருடைய பிடிவாதம், வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பு, மனக் கொதிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்த அவர் அறியும்படி மருந்து கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். மருந்தை அவர் தூக்கி எறியலாம், வாயிலேயே வைத்திருந்து பிறகு துப்பி விடலாம் என்பதால், அவர் அறியா வண்ணம் உணவிலேயே சேர்த்துக் கொடுக்கக் கூடிய மூலிகை நெய் மருந்துகள் உள்ளன. உடல் நிலைக்குத் தகுந்தவாறு அவற்றைத் தேர்ந்தெடுத்து சீரகம், கடுகு தாளித்து சாம்பார், ரசம் போன்றவற்றில் சேர்த்துக் கொடுக்க, மருந்தினுடைய வீர்யமானது மூளைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஜ - தம தோஷங்களின் தாக்கத்தை மட்டுப்படுத்தி அவருக்கு ஒரு நிதானத்தை ஏற்படுத்தித் தரலாம். 

அதன் பிறகு அவரின் சம்மதத்தின் பேரில், வைத்திய முறைகளான தலையில் மூலிகைத் தளமிடுதல், மூலிகைத் தைலம் கொண்டு தலையில் ஊற்றப்படும் சிரோதாரா, போன்றவற்றைச் செய்ய முயற்சிக்கலாம். எதுவாயினும் மனோதத்துவ அறிஞர்களும், தேகதத்துவ விஞ்ஞானிகளும் மனம், புத்தி, ஞாபகசக்தி, மூளை முதலிய விஷயங்களைப் பற்றி அறியாத உண்மைகள், அறிந்ததை விட அதிகம் என்றே கருதுகிறார்கள்.

(தொடரும்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir5.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-மன-அழுத்தத்திற்கு-மருந்து-3226998.html
3226999 வார இதழ்கள் தினமணி கதிர் சில  நெய்யூர்கள் DIN DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530  

தஞ்சை, நாகை,  திருவாரூர்  மாவட்டங்கள்  மற்றும்  பிற பகுதிகளில்  "நெய்'  என்ற  பெயரைக்  கொண்டு அமைந்த  ஊர்கள்  சில: 

நெய்வேலி, நெய்வே, நெய்வாசல்,  நெய்வாவித்துதி, நெய்க்குன்னம், நெய்குப்பை, நெய்தலூர், நெய்விளக்கு, திருவெண்ணெய்  நல்லூர்  முதலியன


"தமிழ் தாத்தா' எனப்  போற்றப்படும்  உ.வே.சாமிநாத ஐயருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர்  வெங்கட்ராமன். வீட்டில்  அவரை "சாமா'  என்றே அழைத்தார்கள்.  அதையொட்டி  அவரது  ஆசிரியரான  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சாமிநாதன் எனப் பெயரிட்டார். பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.

இந்தப் பெயர்  மாற்றம் அவரது  18-ஆவது  வயதில்  நடந்தது.

 

ஓ ஹென்றி,  ஜவஹர்லால்  நேரு,  செர்வாண்டிஸ், வால்டேர்,  ஆஸ்கார் ஒயில்டு - இவர்களிடையே  உள்ள ஒற்றுமை ?  

இவர்கள்  அனைவருமே  சிறையில்  இருந்தபோது  எழுதியவர்கள்.

 - முக்கிமலை நஞ்சன்

நாயக்க  மன்னர்களின் காலத்தை  நிலைக்களமாக  வைத்து எழுதப்பட்ட "மோகனாங்கி'  என்ற நாவலே தமிழில் வெளிவந்த  முதல் வரலாற்று  நாவல். வெளியான  ஆண்டு  1895.  இதை  எழுதியவர்  இலங்கையைச் சார்ந்த  தி.த. சரவணமுத்துப் பிள்ளை. 

எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

 

அதிசயம் ஆனால் உண்மை!

நாமெல்லாம்  பல் துலக்கும்போது எச்சில்  துப்புவோம்.  அதில் பற்பசை நுரையுடன்  பல்லில்  படிந்த அழுக்குகளும்  வெளியே தள்ளப்படும்.  ஆனால் விண்வெளி வீரர்கள்  பல் துலக்கினால் எச்சிலைத் துப்ப முடியாது.  அப்படியே விழுங்கி விட வேண்டியதுதான். அல்லது  ஒரு துண்டு துணிக்குள்  துப்பி எடுத்து,  பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அப்படியில்லாமல்,  சும்மா வெளியே  துப்பித் தொலைத்தால்  ஈர்ப்பு  விசையற்ற விண்வெளியின்  அறை எங்கும் அந்த எச்சில்  மிதந்து கொண்டிருக்கும் என்பதை நீங்கள்  அறிவீர்களா?

ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

 

பெங்களூரு  சென்ட்ரல்  ஸ்கூலில்  ஐந்தாம்  வகுப்பு  படிக்கும் பையன் சமந்த், ஓர்  ஓவியப்  போட்டியில்  முதல்  பரிசாக  ஒரு கணிசமான  தொகையை பரிசாக  பெற்றான்.  அந்தப் பரிசை வைத்து அவன் தனக்காக  எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.  பள்ளிக்காக  50 மரக்கன்றுகள் வாங்கி  பள்ளியில்  நட்டான். துணை  கமிஷனர்  ராமச்சந்திரன்  அவரைப் பாராட்டி  திரும்பவும்  அதே தொகையை  அவனுக்கு பரிசாக  தந்தார்.

- கே.ராமச்சந்திரன்,  பெங்களூரு. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir6.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/சில--நெய்யூர்கள்-3226999.html
3227001 வார இதழ்கள் தினமணி கதிர் பாசக் கயிறு தி.தா.நாராயணன் DIN Sunday, September 1, 2019 12:00 AM +0530
சென்ற இதழ் தொடர்ச்சி...

""ராகவ்... கண்ணே... இப்ப எப்படி போச்சி?''” அதற்கு குமரன்தான் பதில் சொன்னான்.

""கொஞ்சங்கூட நிக்கல, அப்படியேதான் இருக்கு. நானே பார்த்தேன் தண்ணி தண்ணியா அதிகமா போச்சி''

""சரி... சரி... டோண்ட் ஒர்றி. குமரன்... சீக்கிரம் இப்ப மறுபடியும் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் குடு. சீக்கிரம்'' 

சற்று நேரம் காத்திருந்தார். இவர் பார்க்க ராகவ் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் தண்ணியை குடித்து முடித்தான்.

""ஓகே...ஓகே..குட். ராகவ்... ஜுரம் இருக்கா சொல்லு''

ராகவ் ஈன ஸ்தாயியில், “""நேத்துல இருந்து லேசா ஜுரம் அடிக்குது டாட்''”  
""குமரா... நீ தொட்டு பார்த்து சொல்லு''

""எஸ்... லேசா இருக்கு''” 

""ஒகே...  அப்ப பேதிக்குக் காரணம் இன்ஃபெக்ஷன் தான். ஏ.ஜி.இ, பேஸில்லரி.  ஃபுட் பாய்ஸனாக கூட இருக்கலாம்''  

அடுத்த  தடவை இருவரும் டாய்லெட்டிலிருந்து வெளியே வரும்போது மாதவன் கவனித்தார்.  ராகவ் தள்ளாடுகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொடகொடவென வாந்தி எடுத்தான்.

""டேய்... ராகவ்...''” - வாந்தி எடுத்துவிட்டு ஒரு நிமிடம் நின்றான். 
""ஏங்க...அவனைப் பாருங்க. ஐயோ... என்னவோ மாதிரி பார்க்கிறானே'' 
துர்கா மாதவனை உலுக்குகிறாள். அவன் கண்கள் செருக தடாரென்று கீழே விழுந்தான். அவர் பதற, துர்கா அலறினாள். 

""ராகவ்......ராகவ்...'' குமரன் சிரமப்பட்டு அவனை தூக்கி படுக்க வைத்தான்.   மாதவனுக்கு கவலை எழுந்தது. அவர் பயந்தது நேர்ந்து விட்டது. வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டான். 

கடவுளே... இந்த கண்டிஷனில் ஐ.வி. ஃப்ளூயிட்ஸ் ஏத்தாமல் எப்படி காப்பாத்தப் போகிறோம்?  அவர் பரபரத்தார்.


""குமரன்... ப்ளீஸ் சீக்கிரம் மெடிசன் பாக்ûஸ திற''

லேப் டாப்பில் காட்சிகள் விரிய எதிரில் அவன் பாக்ûஸத் திறந்தான். உள்ளே கொட்டி வைத்தாற்போல மாத்திரை அட்டைகள் கிடக்கின்றன. இதில நான் சொல்ற மருந்தை அவன் தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள.

""குமரன் கொஞ்சம் வெயிட் பண்ணு''”-எழுந்து "காக்க காக்க' சொல்லிக் கொண்டே ஓடினார். இரண்டிரண்டு படியாக தாவி  மாடியேறி உள்ளே நுழைந்து ரெண்டு நிமிஷந்தான், அதே வேகத்தில் திரும்ப இரண்டிரண்டு படிகளாக இறங்கி ஓடி வந்தார். மூச்சு இரைக்கிறது. ஆயாசமாக இருக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. இப்படி ஓடி வந்த அவருக்கு வயசு ஐம்பத்தெட்டு. போதாக் குறைக்கு வறுத்தெடுக்கும் பிரஷரும், ஷுகரும். அவர் கையில் பல்வேறு மாத்திரை அட்டைகள். 

""குமரன்... இதோ பார். என் கையில் இருப்பது சைக்ளோபாம் டேப்லெட். வயித்து வலிக்கு. அட்டையின் கலரை கவனி, பச்சை. இன்னொன்றையும் பார்த்து விடு. இது எமிùஸட் 8. மி.கி. டேப்லட். வாந்திக்கு. சீக்கிரமா ரெண்டையும் எடு''” 

பார்த்துவிட்டு ஐந்து...ஆறு நிமிஷங்கள் தேடி குமரன் சரியாக எடுத்து காட்டினான்.   

""எஸ்... இதுதாம்பா. இந்த ரெண்டிலும் ஒவ்வொரு மாத்திரையைக் குடு''
அவள் கண்ணெதிரே குமரன் கொடுக்க ராகவ் எலெக்ட்ரால் தண்ணீரில் விழுங்கினான்.

""குமரன்... அடுத்ததாக இதோ இந்த மாத்திரையைப் பாரு. சிப்ளாக்ஸ் டீ இஸட்... மாத்திரையைப் பாரு ஆரஞ்சு கலர். பார்த்துக்கிட்டியா? ஸ்பெல்லிங் பார்த்துக்க. சிப்லா கம்பெனி தயாரிப்பு''

""ம்... பார்த்துட்டேன்'' 

""அதை எடு'' அவன் ஒரு மூன்று நிமிட தேடலில் எடுத்து காட்டினான்.                                                                                                                                “""எஸ்... இதுதான் குட். இன்னும் பத்து நிமிஷம் கழிச்சி அதில ஒரு மாத்திரையைப் போட்டு எலெக்ட்ரால் தண்ணிய குடிக்க வைக்கணும்''

ஆயிற்று. சிப்ளாக்ஸ்-டீ இஸட்  மாத்திரையையும் சாப்பிட்டு  முடிச்சாச்சி. மேலும் ஒரு கிளாஸ் எலெக்ட்ரால் இறங்கியது. அத்துடன் அமைதியாக அரை மணி நேரம் காத்திருந்தார்கள். நடுவில்  டாய்லெட் போகிறானா? என்று கவனித்துக் கொண்டிருந்தார். இல்லை. அடுத்த ஸ்டெப்பை சொல்ல ஆரம்பித்தார். 

""குமரன்''

""அங்கிள்''

""இப்ப ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் கொடு.'' 

அவர்கள் பார்வையில் குமரன் அவ்வப்போது எலெக்ட்ரால் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தான். குமரன் இடையில் ராகவ் எடுத்த வாந்தியை துடைத்தெடுத்து விட்டுக் கழுவினான். மதியம் இரண்டு மணியளவில்  ராகவ் கொஞ்சம் தெளிவாகியிருந்தான். இப்போது அவனை பார்த்து  துர்கா உணர்ச்சி வசப்பட்டாள்.

"ராகவ்... இப்ப வயித்து வலி இருக்கா?''

""இருக்கு டாட். ஆனா முன்ன மாதிரி இல்ல, வயிற்றிரைச்சல் கூட குறைஞ்சிருக்கு டாட். பேதி இல்லை''

""வாந்தி வர்ற ஃபீலிங்?'' 

""எல்லாமே குறைஞ்சிருக்கு''

எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளுக்கு போகப் போக இப்போது இன்னும் தெளிவாகப் பேசினான். ""அவ்வளவுதான் இனிமேல் பயமில்லை. குமரன்... ரொம்ப தேங்ஸ் கண்ணா. நாம ஜெயிச்சிட்டோம். நல்லவேளை ராகவ்க்கு ஒரு மாத்திரையிலேயே வாந்தி கண்ட்ரோலுக்கு வந்திடுச்சி. சென்னையில இருந்து அமெரிக்காவுக்கு இப்படி கூட வைத்தியம் செய்ய முடியும்னு சொன்னா யாரும் நம்பக் கூட மட்டாங்க. நான் இங்கிருந்து சொல்றதை நீ அப்படியே செஞ்சி என் பிள்ளையை உயிரோடு மீட்டு எங்க கிட்ட கொடுத்துட்டப்பா. அவன் வாந்தியை கூட வாரி சுத்தம் பண்ணியே. உனக்கு நாங்க என்ன செஞ்சி இந்த கடனை தீர்க்கப் போறோம்? மறக்க மாட்டேன் தம்பீ. இந்த நிமிஷம் எங்க ராகவ்வுக்கு எல்லாமே நீதாம்பா''” சொல்லிவிட்டு  ஸ்க்ரீனில் கண்ணீருடன் அவனைக் கும்பிட்டார், கூடவே துர்காவும் கும்பிட்டாள். 

""அங்கிள்... ஆண்ட்டி... ப்ளீஸ்'' குமரன் கையால் மறுத்தான்.

""ராகவ்'' 

""டாட்'' ”--ஸ்கிரீனில் தெரியும் அப்பாவையும், அழும் அம்மாவையும் பார்த்து சிரிக்க முயன்றான்.

""இதுவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லிட்டர் எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளே போயிருக்கு. அமைதியாக தூங்குடா. ரெண்டு மணி நேரங் கழிச்சி கூப்பிட்றோம். ஓகே?''

ஸ்கைப்பை அணைத்தார். 

""பேஷண்ட்டுங்களை பார்த்துப் பார்த்து பார்த்து உங்களுக்கு கல் மனசுங்க. கண்ணெதிரில் ராகவ் துவண்டு போய் தொபீர் தொபீர்னு கீழே விழுறான். என்னால அழுகையை அடக்க முடியல. ஆனா நீங்க?  திட மனசு'' ”என்றாள் துர்கா.

""நான் அழலேன்னு உனக்குத் தெரியுமா? சரி அழுது இன்னா சாதிக்கப் போற, இல்லே சாதிச்ச? சொல்லு. பையன் என்ன நிலைமையில் கிடக்கிறான்? நம்முடைய முதல் குறி பிள்ளையைக் காப்பாத்தறதில இருக்கணுமேயொழிய இப்படி அழறதில இல்லை. இப்படி அழறதால நீஅவனுடைய தைரியத்தைத்தான் உடைக்கிற'' 

""இன்னைக்கு சரியான நேரத்துக்கு  நீங்க வரலேன்னா அவன் கதி என்னாயிருக்கும்?''“சொல்லும் போதே மறுபடியும் அழுதாள்.

""இதுபோல சிச்சுவேஷன் யாருக்கும் வரக் கூடாது. வந்திடுச்சி, என்ன பண்றது? சமாளிக்கணும். இப்படி பேசிப் பேசி நம்ம துக்கத்தை நாமே தூண்டி தூண்டி அழறதில அர்த்தமிருக்கா துர்கா? ஏர்போர்ட்ல போய் பாரு. எவ்வளவு பிள்ளைங்க? அதில பெரும்பாலும் யு.எஸ். போறவங்கதான். இன்னைக்கு இளைஞர்களின் கனவு அமெரிக்கா. டாலர் சம்பாத்தியத்துக்கு ஓடுறாங்க. நல்லா சம்பாதிக்கறாங்க. உலகம் சுருங்கி போச்சு துர்கா.  இந்த சூழலுக்கு நம்மளை நாம தயார் படுத்திக்கணுமே ஒழிய, முகாரி பாடிட்டிருக்கக் கூடாது. நம்ம பிள்ளைங்க சொந்தக் கால்ல நின்னு அசலூர்ல போய் ஆனை பிடிக்கிறாங்கம்மா. நமக்கு அது பெருமைதானே? உள்ளூரிலேயே இருந்து வேலை கிடைக்காம நம்ம கையை எதிர்பார்த்து நம்ம காலையே சுத்திக்கிட்டு கிடக்கிறது நமக்குப் பெருமையா என்ன? சொல்லு. அடுத்த வருஷம் பாரு, எல்லாருக்கும் இவன் தண்ணி காட்டுவான்''”

அப்போது ராகவ்விடமிருந்து கால் வந்தது. ஸ்கைப்பை ஆன் பண்ணினார்கள். ஸ்க்ரீனில் சற்று தெளிவாக ராகவ் சிரித்தான். பக்கத்தில் குமரன் உட்கார்ந்திருந்தான்.

""டாட்... மம்மீ......சரியாயிடுச்சி. இப்ப எனக்கு ஒண்ணுமில்லேம்மா''

""மறுபடியும் பேதி போ''றியா?''

""நோ டாட். இரைச்சல், வலி, வாந்தி, எதுவுமே இல்லை. ஆக்சுவலா இப்பத்தான் பசியெடுக்கிற மாதிரி இருக்கு''

""அ..ப்..ப்..பா... பெரிய ரிலீஃப். ஆயில் இல்லாத இலகுவாக செரிக்கும் உணவை சாப்பிடு. அங்கே என்ன கிடைக்கும்?''

""இந்த ப்ளாக்கிலேயே மெஸ் இருக்கு அங்கிள். சவுத் இண்டியன் டிஷ்ஷஸ் கிடைக்கும். எந்நேரமும் சூடா இட்லி சாம்பார், தோசை கிடைக்கும்''”என்றான் 
குமரன்.

""தட் ஈஸ் ஃபைன். இட்லி சாப்பிடட்டும்''

""ராகவ்... நீ சாப்பிட்ட மூன்று மாத்திரைகளையும் தினசரி ரெண்டு வேளை, மூணு  நாட்களுக்கு சாப்பிட்டு முடிக்கணும். புரியுதாடா?''

""ஓகே டாட்''”  அவர் எழுந்து  கொண்டார்.

""வெரி சாரி டாட். என் தப்புதான். நேத்து நிறைய கேக் சாப்பிட்டு விட்டேன். அதுதான்''

""மூடனே... நீ பண்ண பெரிய தப்பு எது தெரியுமா? நீ எலெக்ட்ராலை கலக்கி குடிக்காதது. அதைவிட பெரிய தப்பு கிட்ல பேதிக்கான மருந்துகளை விளக்கங்களோடு வெச்சிருந்தும் நேரத்துக்கு எடுத்து பயன்படுத்தாதது. இதைப் பத்தி குறைஞ்சது பத்து தடவை உங்கிட்ட சொல்லியனுப்பினேன். வெளிநாட்டில் நிராதரவா இருக்கிறப்போ  நீ எவ்வளவு அலர்ட்டா இருக்கணும்? ஹும்''துர்கா பையனைப் பார்த்து கலங்கினாள்.

""மம்மீ... ப்ளீஸ் அழாதே. இனிமே நான் ஜாக்கிரதையாக இருப்பேன். ப்ராமிஸ்''
மாதவன் பொரிந்து தள்ளினார்.

""ஃபூல்.. படித்த முட்டாள். நான் உனக்கு எதுவும் அட்வைஸ் சொல்லப் போறதில்லை. உன் சூழல் அறிஞ்சி நடந்துக்கோ. பிரச்னை வர்றப்ப அழறது கோழைத்தனம். எப்படி அதிலிருந்து ஜெயித்து வெளியே வர்றதுன்னுதான் நீ யோசிக்கணும். அப்படி யோசிச்சி யோசிச்சுத்தான் இன்னைக்கு உலகம் பூராவும் நம்ம தமிழாளுங்க வெற்றி பெற்ற மனுஷங்களா வாழறாங்க.

குமரனுக்கு தேங்ஸ் சொல்லு. அவன் இல்லேன்னா இப்ப என்கூட  இப்படி பேசிக்கிட்டிருக்க முடியாது. ரெண்டு பேருக்குமே சொல்றேன். உங்க கிட்ட மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லாத பட்சத்தில் வெளியில் சாப்பிடறப்போ பழங்களைத் தவிர, மத்ததை தொட பத்து முறை யோசிக்கணும். ஓகே டேக் கேர். அப்புறம் பேசலாம்''”

தொடர்பு துண்டிக்கப் பட்டது.  

அப்படியே சோபாவில் ஒரு மாதிரி இறுக்கத்தோடு சரிந்தார். நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டார். துர்கா கவனித்து விட்டாள். காலையிலிருந்து இவ்வளவு நேரம் அனுபவித்த மென்ட்டல் ஸ்ட்ரெஸ், டென்ஷன். பி.பி. நோயாளியான அவருக்கு ஆகாது. வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவாக அவர் தோள் பற்றி மேலே சாய்த்துக் கொண்டாள். மிருதுவாக அவர் கழுத்தின் பின்புறத்தை நீவி விட்டாள். அவ்வளவுதான் மடை உடைந்து போய், விசும்பலாக வெளிப்பட, மாலை மாலையாக கண்ணீர் வடிகிறது. அப்போது தனம் கூடுதலாக சர்க்கரை போட்ட காபியை இரண்டு பேருக்கும் கொண்டு வந்து வைத்தாள். மதியமாகி விட்டது. காலையிலிருந்து ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடவில்லை. இரண்டு பேருமே சர்க்கரை நோயாளிகள்.

அங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் குமரன் ராகவ்வை பார்த்து சிரிக்கிறான்.

""எ.ப்.ப்.பா... உங்கப்பா டெரர்டா சாமி. என்னா கேப்டன்ஷிப்? என்னா அதிகாரம்? என்னா கமாண்டிங் பவர்?, ஓட்டம், பரபரப்பு, எப்பா... கடைசியில எனக்கு தேங்ஸ் சொல்றப்போதான்டா அழுதார். அது கூட அளவாக'' ”

""எங்க டாடிய உனக்குத் தெரியாது குமரன்''”சொல்லும்போதே அவனுக்கு கண்ணீர்  கொப்பளித்துக் கொள்கிறது. 

""நான் பயந்திடுவேன்னுதான் அவர் எதையும் வெளிகாட்டல. அவருடைய டென்ஷனை மறைக்கிறதுக்குத்தான் என்னை திட்டிக்கிட்டே இருந்தார். ஊர்ல இப்ப அழுதுக்கிட்டு இருப்பாரு. எங்க மம்மி சமாதானம் சொல்லிக்கிட்டிருப்பாங்க''” சொல்லும்போதே ராகவ் அழுகிறான்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/3/w600X390/kadhir7.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/sep/01/பாசக்-கயிறு-3227001.html
3221141 வார இதழ்கள் தினமணி கதிர் பாசக் கயிறு DIN DIN Sunday, August 25, 2019 02:33 PM +0530 டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின்  காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி வயிற்றைக்  கிள்ளுகிறது. உடல் முழுக்க அப்படியொரு வலி. நைட் டியூட்டியை முடித்துவிட்டு வருகிறார். இரவு முழுக்க தூக்கமில்லை. ஏழெட்டு ஆக்ஸிடென்ட் கேஸ்கள். அதில் மூன்று டெத். சில ஆண்டுகளாகவே தினசரி ஆக்ஸிடென்ட் மரணங்கள் ஒன்றிரண்டை தாண்டுவது சராசரி நிகழ்வாகப் போய்விட்டது. கிளம்பும் போது வருத்தமுடன் டெத் சர்டிஃபிகேட்களில் கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார். எல்லாமே அவருடைய பிள்ளை ராகவ் வயசு பிள்ளைகள்தான். ரெண்டு மூணு வயசு குறைவாகவே இருக்கலாம். உச்சியில்  புதர் போல முடி வளர்த்து, கீழே மூன்று பக்கங்களிலும் முழுமையாக முடியில்லாமல் இருக்கிற ஹை ஃபேட் கிராப் தலை இளைஞர்கள். பல்ஸர் வண்டிகளில் இந்த அடர்த்தியான வாகன நெரிசல்களில் "சர் சர்'ரென்று நூற்றி இருபதில் பறந்து  முட்டி மோதி செத்து, சாகடித்து, குடும்பத்தார்களின் இரங்கல் சடங்குகளுடன் மடிந்து போகும் அப்பாவி சாகஸ இளைஞர்கள்.  வீட்டு வேலைக்காரி தனம் வந்து கதவைத் திறந்தாள். சோர்வாக  நுழைந்தார். நுழையும் போதே, "" ஏங்க...ஏங்க...'' என்று அழுது  கொண்டே அவர் மனைவி துர்கா ஓடி வருகிறாள். கண்டதுக்கெல்லாம் டென்ஷனாகி அழும் மனுஷி அவள். ஆசிரியை.

""எ...என்னம்மா என்னாச்சி?''”

""ஐயோ என்னான்னு சொல்லுவேன்? அமெரிக்காவில நம்ம ராகவ் சீரியஸா கிடக்கிறானாங்க. ராத்திரியிலிருந்து பேதியாம். தண்ணி தண்ணியா போவுதாம்.  பத்து பதினைஞ்சி தடவைக்கு மேல போயிட்டு, பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறானாம்''

""யா..யார்...யார் சொன்னா?''”

""யாரோ குமரன்னு ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்''” சொல்லிவிட்டு துடிக்கிறாள். அந்த செய்தி கூர்மையாக  அவரைத் தாக்கி விட்டது. அக்யூட் ஸ்டேஜில் பேதி என்பது எவ்வளவு வலிமையான உயிர்க் கொல்லி என்பதை நன்கறிந்தவர். மருத்துவத்தில் பாலபாடம் அது. 

அதிர்ந்து நிற்கும் இந்த டாக்டருக்கும், அழும் ஆசிரியைக்கும் பிறந்த ஒரே பிள்ளைதான் ராகவ் என்கிற ராகவன். பிரபலமான கல்லூரியில் பி.டெக் முடித்து விட்டு இவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லாஸ் ஏஞ்சல்ஸில் எஸ்.ப்ரோ. கம்பெனியில் மூன்று வருட காண்ட்ராக்டில் பணிபுரிய சரியாக நாலு நாட்களுக்கு முன்னால்தான் போய் ஜாய்ன் பண்ணியிருக்கிறான். ஏர்போர்ட் போய் வழியனுப்பி வைத்துவிட்டு அழுத அந்த  நினைவுகள் இன்னும் அவர்கள் மனசில் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது.  

""டாட்...மம்மீ... ஜஸ்ட் மூணே மூணு வருஷம்தான்''னு சொல்லி சிரிச்சிட்டு "டாட்டா' காண்பிச்சானே.. இப்போது துர்காவின் அழுகை சத்தம் கூடியது. 

""வேணா  வேணான்னு எவ்வளவு சொன்னேன்? கேக்கலியே. ராகவா...''”பெருத்த குரலில் கதறுகிறாள். டாக்டர் மாதவனுக்கு மாலை மாலையாய் வியர்த்துக் கொட்டுகிறது. அவசரமாக செல்லில் ராகவ்வின் நம்பரைத் தட்டினார். காத்திருந்தார். ரிங் போகிறது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. விட்டு விட்டு மூன்று தடவை ட்ரை பண்ணியும் நோ யூஸ். இப்போது அவர்களுக்கு பதட்டம் அதிகமாகிறது. துர்கா ஆயாசம் மேலிட கீழே சரிந்தாள்.  ஐந்தாவது தடவை ட்ரை பண்ண, ரொம்ப நேரம் கழித்து எடுத்தது யாரோ ஒரு வேற்று குரல்.

""நான் ராகவ்வோட ஃப்ரண்ட் அங்கிள், குமரன். கூட ஒர்க் பண்றேன். பக்கத்து ஃப்ளாட்லதான் இருக்கேன். இங்க ராகவ் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு அங்கிள். டயோரியா. தண்ணி தண்ணியா பீச்சியடிக்குது. நேத்து சாயந்திரத்தில இருந்தே இருந்திருக்கு, எங்கிட்ட கூட சொல்லல. இப்ப நினைவில்லாமதான் கிடக்கிறான். என்ன பண்றதுன்னு தெரியல.  பயமா இருக்கு அங்கிள். ஃப்ரண்ட் சுனிலை ஹெல்ப்புக்கு கூப்பிட்டிருக்கேன்.''

ஆஸ் எ டாக்டர் - அவருக்கு பையன் நிலைமையின் தீவிரம் புரிந்து விட்டது. டிஹைட்ரேஷன். இடையில் பதினாலாயிரம் கிலோ மீட்டர் தூரம். "குப்'பென்று மார்பு அடைக்கிற மாதிரி இருந்தது. "ஜிவ்'வென்று காதோரங்களில் உஷ்ணமாய் உணர்ந்தார். மயக்கம் வரும் போலிருக்கிறது. ஒரே பிள்ளை. வேலைக்காரி தனமும், பொம்மியும் அவர் தள்ளாடுவதைப் பார்த்து அரக்க பரக்க ஓடி வந்து அவரை தாங்கிப் பிடித்து உட்கார வைத்தார்கள். துர்கா ""ஏங்க...ஏங்க'' என்று கத்துகிறாள். "உஷ்' என்று எச்சரித்து விட்டு சுதாரித்துக் கொண்டு போனில் பேசுகிறார். 

""ப்ளீஸ்.. குமரன்... ராகவ்வை எழுப்புபா, டாடி கூப்பிடுறார்னு சொல்லு. முகத்தில தண்ணி அடி. டேய்... ராகவ்...ராகவ்...''”உடல் அதிர கத்தினார். குரலில் நடுக்கம். நாலைந்து குரலுக்கப்புறம் ராகவ் மெதுவாக வாயைத் திறந்தான். பலவீனமான குரல் 

""டாட்... டாட்...'' “ சொல்லிவிட்டு அழுகிறான். விசும்பும் சத்தம் கேட்கிறது.  
""மயக்கமா இருக்கு. நிறைய பேதியாயிடுச்சி''” அதுக்கு மேல என்ன கத்தியும் பதிலில்லை. குரல் அடங்கிவிட'. 

""ஏங்க... ஏங்க ராகவ்வை வந்துடச் சொல்லுங்க. வம்சத்துக்கு ஒத்த புள்ளை. ராகவா...ராகவா... டாய் அம்மா சொல்றேன் வந்துடு''-டாக்டர் மாதவன் மவுனமாக நிற்கிறார். 

இல்லை... இல்லை... நாம தைரியத்தை விடக்கூடாது. அவனுக்கு அது புது இடம். மனுஷாள் எதுவும் பழக்கமாகியிருக்காது. கூச்ச சுபாவம், உதவின்னு யார் கிட்டேயும் கேக்க மாட்டான். தனிமை பயம். நேரம் பார்த்தார். பத்தரை மணி. நமக்கும் லாஸ் ஏஞ்சல்ஸூக்கும் டைம் டிஃபரன்ஸ் மைனஸ் பன்னிரண்டரை மணி நேரம். úஸா இப்ப அங்க ராத்திரி பத்து மணி . இவ்வளவையும் இரண்டு நிமிட யோசிப்பில் முடித்துக் கொண்டு நிமிர்ந்தார். ஒரு நொடி சுதாரித்தார்.                                                                                                                                         
""கண்ணே டேய்... ராகவ்...  ராகவ்... தைரியத்தை வுட்ராதடா... முதல்ல எலெக்ட்ரால் பவுடரை கலக்கிக் குடிச்சியான்னு சொல்லு?''
""இ...ல்...லை...''  
""மடையனே... எதைச் செய்யணுமோ அதைச் செய்யாதே. ஃபூல்...ஃபூல்.. படிச்சிப் படிச்சி சொல்லியனுப்பினேனே. எதுக்கு மெடிசன் கிட்டுன்னு ஒரு பாக்ûஸ தயார் பண்ணி கொடுத்தனுப்பினேன்? வயசான காலத்தில எங்களை ஏம்பா இப்படி கஷ்டப் படுத்தறே?''” அவனிடமிருந்து பதில் இல்லை.
""தம்பி  குமரன்'' 
“""இருக்கேன் அங்கிள். ராகவ்வுக்கு நினைவு தப்பிடுச்சி அங்கிள்''”
""பயப்படாதப்பா இப்ப நீதாம்பா அவனுக்கு அம்மா அப்பா எல்லாம். கண்ணா. சீக்கிரமா ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிடணும். ஆம்புலன்ஸூக்கு கால் பண்ணு''” 
""இல்லை அங்கிள். எங்க ரெண்டு பேருக்குமே மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லை. அதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேலாகும். ஒரு மாசத்துக்கான ட்ராவல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கு.  பட் அது அகெய்ன்ஸ்ட் ஆக்ஸிடென்ட் இஞ்சுரி ஒன்லி''”

""ஐயோ அப்ப என் பையன் கதி? இன்ஷூரன்ஸ் கவரேஜ்  ஜாயின் பண்ணவுடனே கிடைச்சிடும்னு சொன்னானே?''”அவருக்கு பயத்தில் பேச்சு குழறியது, தடுமாறினார்.  துர்கா தலை தலையென்று அடித்துக் கொண்டு அழுகிறாள்.

டாக்டர் மாதவனுக்கு அமெரிக்க மருத்துவ விதிமுறைகள் தெரியும். அந்த நாட்டில் ட்ரீட்மெண்ட்டுக்கு மெடிகல் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருக்கணும். அது இல்லையென்றால், எந்த ஆஸ்பிட்டலிலும், எந்த டாக்டரிடமும், ட்ரீட்மெண்ட் கிடைக்காது. எமெர்ஜென்சின்னு ஒரு வழி இருக்கு. பட் அதுக்குக் கூட ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறது. பத்து மடங்கு பணத்தை பிடுங்கிடுவாங்க. அப்படியும் அவசரத்துக்கு  உதவாது. அதுக்கு ஒரு பெரிய க்யூ நிற்கும். அதற்குள் பட்டணம் பறி போய்விடுகிற சாத்தியம் இருக்கு. அமெரிக்காவும் நம்மைப் போல சுதந்திர நாடு என்பதால் ஏதாவது குறுக்கு வழிகூட இருக்கலாம். போய் நாலே நாளான இவர்களால் அதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கும் அங்கே உதவிக்கு ஒரு ஜீவன் கிடையாது. ஐயோ உன்னை எப்படிடா காப்பாத்தப் போறேன்?  எந்த அமெரிக்க டாக்டர்களும் அவனை காப்பாற்றப் போவதில்லை என்ற நிதர்சனம்; கையறு நிலையில் அவர். சூழ்நிலையின் பயங்கரம் உறைக்க, பீதியில் மவுனமாக அலறினார். அவரை துர்கா உலுக்க உலுக்க கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கிறார்.

நிதானமாக யோசித்தார். இனி அழுது கொண்டிருப்பதில் எவ்வித பலனுமில்லை. பதினாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஆபத்தான கட்டத்தில் கிடப்பவனை இங்கிருந்தே ட்ரீட் பண்ண முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. இருக்கும் ஒரே வழி இது.  "கடவுளே  எனக்கு மனவலிமையைக் குடு' நாலு வரிகள் கந்தசஷ்டி கவசத்தை மனமுருகி சொல்லிவிட்டு திடமாக எழுந்தார் ""குமரா'' என்று சத்தம் போட்டு கத்தினார்.

""எஸ்... அங்கிள்...''”

""சீக்கிரமா நீ ராகவ்வின் லேப்டாப்பை ஆன்பண்ணி ஸ்கைப்புக்கு வாப்பா ப்ளீஸ்... க்விக்...சீக்கிரம்... சீக்கிரம்ப்பா... ஆச்சா... ஆச்சா?''”  விஷயம் புரிந்து துர்கா ஓடிப்போய் லேப்டாப்பை ஆன் பண்ணி  அவரெதிரில் கொண்டு வந்து வைத்தாள். இரண்டொரு நிமிடங்களிலேயே ஸ்கைப் ஓப்பன் ஆகிவிட்டது.

எதிரே படுக்கையில் அவர்களுடைய எல்லா ஆசைகளுக்கும், சம்பாத்தியங்களுக்குமான, ஒரே வாரிசு, துன்பங்களுக்கும், சந்தோஷங்களுக்குமான, ஒரே வடிகால், ராகவ் கிழிந்த நாறாய் பேச்சு மூச்சின்றி கிடக்கிறான். அசைவில்லை. நாலு முறை கூப்பிட்டால் ஒரு தடவை உடம்பை முறுக்குகிறான். அத்தோட சரி. அவன் கோலத்தைப் பார்த்ததும், ""கண்ணே'' என்று ஓடி அணைத்துக் கொள்ள மனசு பரபரக்கிறது. ஊஹும் அழக்கூடாது. ஒரே மகனின் நிலையை கண்ணால் பார்த்ததும் துர்காவின் பினாத்தல் அதிகமாகி விட்டது.  இப்போது மாதவன் ஸ்கைப்பில் பார்த்தபடி ஒவ்வொரு செயல் முறைகளாக குமரனிடம் சொல்லிக் கொண்டே வர...”

""எஸ். சொல்லுங்க அங்கிள்''”   

""க்ரீன் கலர்ல உள்ளே ஒரு அட்டைப் பெட்டி இருக்கும் பாரு. அவனுடைய மெடிசன் பாக்ஸ். மேலே மெடிசன்னு எழுதியிருக்கும். அதில் எலெக்ட்ரால் -
(ELECTROL) பாக்கெட்டுகள் இருக்கும். அதில ரெண்டு பாக்கெட்டை பிரிச்சி ரெண்டு லிட்டர் தண்ணியில கலக்கிக் கொண்டா... க்விக்..க்விக்... வேகம்... வேகம்...''” அவன் தடதடவென்று உள்ளே ஓடினான்.  கடவுளே வாந்தி வராம இருந்தால் காப்பாத்திடலாம். துர்கா பக்கத்திலிருந்தபடி  ராகவ்...ராகவ்..என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள்.

""ஆச்சா... ஆச்சா...தம்பி குமரா... சீக்கிரம்ப்பா''”  மீண்டும் கட்டடமே அதிரும்படி கத்தினார். டி ஹைட்ரேஷன் என்ற கான்செப்ட் அவரை அலைக்கழிக்கிறது. பேதிக்கு சிகிச்சை என்பது பெரிய விஷயமில்லைதான். ஆனால் சிகிச்சை பண்ண வழியே இல்லாத இடத்தில் அடுத்து டி ஹைட்ரேஷன் மரணந்தான். "ஐயோ பிள்ளையை கைசோர விட்ருவேனோ? ''                                                                                  
""அங்கிள் எலெக்ட்ரால் கலக்கிவிட்டேன்''

""குட்...  இப்ப அதிலிருந்து ரெண்டு டம்ளர் தண்ணியை அவனுக்கு குடிக்கக் கொடு''

""ஆச்சா... ஆச்சா...?''”வீறிட்டுக் கத்துகிறார். 

""போச்சு லைன் கட் ஆயிடுச்சி'' கணவனும், மனைவியும் தொடர்புக்கு மும்முரமாக போராடுகிறார்கள். ஊஹும். அவர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்.  துர்கா முடியாமல் முந்தானையால் முகத்தை பொத்திக் கொண்டு குலுங்குகிறாள்.  அவள் கதறுவதைப் பார்த்து விட்டு மாதவன் அவளை முறைக்கிறார். இப்போது ஸ்கைப் மீண்டும் ஓப்பன் ஆகியது.
""அங்கிள்..அங்கிள்...  ராகவ்வை ரெண்டுடம்ளர் குடிக்க வெச்சிட்டேன். பட் இன்னும் கண்ணை திறக்கல''”   

""தேங்க்யூ தம்பி.  சீக்கிரமா அவனை நிமிர்த்தி படுக்க வைப்பா. அப்படித்தான், நேராக குட். ராகவ்வின் கால்களை நீட்டி வை. கரெக்ட் அப்படித்தான். வெரி குட். 

குமரன் நீ இப்ப ராகவ்வின் வயித்து தசையை கொத்தாய் பிடிச்சி இழுத்து விடு. லேப்டாப்பை கிட்ட கொண்டு போ... அதை நான் பார்க்கணும்'' குமரன் சொன்ன மாதிரி செய்தான். அவள் பார்த்துக் கொண்டிருக்க இழுத்து விட்டதினால் குவிந்த ராகவ்வின் வயிற்று தசை நாலு செகண்டில் நார்மலுக்குப் போனது.

""ஓ.கே. குமரன் பயப்படாத. நான் பயந்த அளவு அவனுக்கு டி ஹைட்ரேஷன் இல்லை. சமாளிச்சிடலாம். ஆனா அவன் அடிக்கடி எலெக்ட்ரால் தண்ணியை குடிச்சிக்கிட்டே இருக்கணும். சரியா?''

அந்நேரத்திற்கு ராகவ் சைகை காட்ட, மறுபடியும் குமரன் அவனை டாய்லெட்டுக்கு தாங்கி பிடித்துக் கொண்டு போனான். துர்கா அவரிடம். 

நிஜமா? பயமில்லையே?” அவளை சற்று தூரமாய் இழுத்து வந்தார். பேசுவதற்கு முன் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டார். கொட்டிவிடும் விளிம்பில் கண்ணீர்.

""துர்கா தைரியமாக இரு, அழாத. தெய்வத்தை வேண்டிக்குவோம். நம்ம பையன் சீரியஸ்ஸான கட்டத்தில் இருக்கான்''”தாளாமல் ஓவென்று கத்தியவளை அடக்கினார். அவள் முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டாள். அப்போது டாய்லெட்டிலிருந்து குமரன் தோளில் தொங்கியபடி வந்த ராகவ்வைப் பார்த்து, ""ராகவ் வயித்த வலிக்குதாடா?''

மெதுவாக, ""ஆமாம்'' என்று தலையாட்டினான். ""இருக்கட்டும். ராகவ் பயப்படாதேப்பா. அப்பா இருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன். சொல்லு வாந்தி வருதா?'' இல்லையென்று தலையாட்டினான். கொஞ்ச நேரத்திற்கொரு முறை "உஸ்' என்று ஆயாசமாக கண்களை மூடிக் கொள்கிறான். 

அடிக்கொருதடவை வறண்ட உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டேயிருக்கிறான்.""குமட்டல் இருக்கா?''""இல்ல''. ""குட். வயித்தில இரைச்சல் இருக்குதா?''"ஆமாம்' என்று தலையாட்டிவிட்டு குமரனை பிடிச்சிக்கிட்டு மறுபடியும் அவசரமாக டாய்லெட்டுக்கு  ஓடினான். காத்திருந்தார்கள். 

""இப்ப பரவாயில்லையா?'' என்று துர்கா அவரை துளைத்துக் கொண்டே இருந்தாள்.

""இன்னும் அதற்கான ட்ரீட்மெண்ட்டையே ஆரம்பிக்கல'' கொஞ்ச நேரத்தில் குமரன் அவனை கைத்தாங்கலாக திரும்ப அழைத்து வந்து படுக்க வைத்தான்.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)     

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir10.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/பாசக்-கயிறு-3221141.html
3221140 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... சிரி... சிரி...  DIN DIN Sunday, August 25, 2019 02:27 PM +0530
""தினமும் காலையில் சேவல் கொக்கரக்கோன்னு கத்துதே ஏன்?''
""காலையில் மட்டுமல்ல... எப்பவும் கொக்கரக்கோன்னுதான் கத்தும்''

வி.ரேவதி, தஞ்சை.

 

""என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்''
""அப்புறம்?''
""அழிச்சுட்டுத்தான் தாண்டுவான்''

ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

 

""மன்னர் இதுவரை புறமுதுகிட்டு ஓடியதே இல்லை...''
""சபாஷ்''
""யோவ்... ரிவர்ஸிலேயே ஓடிப் போயிடுவார்''

எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.


""கனவுகள் தரும்  பலன்னு புத்தகம் எழுதியிருந்தேன். ஒரே நாள்ல ஆயிரம் 
பிரதி வித்திடுச்சி''
""எப்போ வித்துச்சு?''
""நேத்து ராத்திரி கனவுல சார்''

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
""ராத்திரி  ஆனா  பேசவே முடியலை டாக்டர்''
""ராத்திரி  "ஆனா' பேச முடியலைன்னா என்ன?  "ஆவன்னா',  "இனா',  "ஈயன்னா' பேசுங்களேன்.

எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.

 

""நேற்று திருடப் போன இடத்துல மாட்டிக்கிட்டேன்''
""அப்புறம்?''
""அது போலீஸ்காரர் வீடு. மாமூல் கொடுத்து தப்பிச்சு வந்தேன்''

கு.அருணாசலம், தென்காசி.


""தலைவர் மேடையிலே உள்ள எல்லாருக்கும் ஏன் விசிறி கொடுக்குறாரு?''
""கொஞ்ச நேரத்துல அனல்கக்குற மாதிரி பேசப் போறாராம்''

ம.வேதவள்ளி, பொரவச்சேரி.


""கமலா ஊர் பூரா காய்ச்சல் பரவுதாம்''
""நீங்க ஏன் பயப்படுறீங்க. பரவுறது மூளைக்காய்ச்சல்''

பி.பரத், கோவிலாம்பூண்டி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir9.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/சிரி-சிரி-சிரி-சிரி-3221140.html
3221139 வார இதழ்கள் தினமணி கதிர் நானும் இசைப்பேன் -  மயிலை மாதவன் Sunday, August 25, 2019 02:24 PM +0530
எழுத்தாளர்  புதுமைப்பித்தன்  ராயப்பேட்டை  நெடுஞ்சாலையில்  வசித்து வந்தார்.  அவரது வீட்டில்  தவில், நாதஸ்வரம்  போன்ற இசைக்கருவிகள் இருந்தன.  அதைப் பார்த்த  அவரது நண்பர்களில் ஒருவர்,  ""இந்த கருவிகள் எல்லாம்  உங்களுக்கு எதற்கு? நீங்கள்  ஒரு எழுத்தாளர் தானே''  என கேட்டார். 

அதற்கு  புதுமைப்பித்தன்,  ""நான் நாதஸ்வரம்  வாசிப்பதற்காகவே வாங்கி வைத்துள்ளேன்.  மேலும்,  ராஜரத்தினம் பிள்ளை  எனக்குப் போட்டியாக  கட்டுரை எழுதும்போது,  நான் ஏன் நாதஸ்வரம்  வாசிக்கக் கூடாது''  என்று நகைச்சுவையாக  விளக்கம்  அளித்தார்.  இதனைக்கேட்ட  நண்பர் புதுமைப்பித்தனின் பேச்சில், இழைந்தோடிய  நகைச்சுவையை  ரசித்து மகிழ்ந்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir8.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/நானும்-இசைப்பேன்-3221139.html
3221138 வார இதழ்கள் தினமணி கதிர் வாரியார்   சொன்னது! DIN DIN Sunday, August 25, 2019 02:17 PM +0530
""நான் சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வரும்போது  கம்பராமாயணப் புத்தகங்களில்  நூறு பிரதி  எடுத்து வந்தேன்.  கோலாலம்பூர் ரசிகர்கள், நான் முந்தி,  நீ முந்தி  என்று வாங்கினர்.  இரண்டே  நாள்களில், 75  பிரதிகள் விற்பனையாகிவிட்டன.  அத்துடன்  விற்பனையை  நிறுத்திக்  கொள்ளச் சொல்லி
விட்டேன்.  பிறகு சிங்கப்பூருக்கு  வந்திருக்கிறேன். எனக்கோ உள்ளூர பயம். கோலாலம்பூரை விட சிங்கப்பூரில்  ரசிகர்கள்  அதிகமாயிற்றே. தமிழன்பர்களுக்கு, 25 புத்தகங்கள் எப்படி போதும் என்றெல்லாம்  எண்ணினேன். ஆனால்,  இரண்டாம்  நாள் புத்தகம்  விற்றுக் கொண்டிருப்பவரிடம், "எத்தனை புத்தகங்கள்  விற்பனையாயின?'  என்று விசாரித்தேன்.  அவர், "இதுவரை  ஐந்து புத்தகங்கள்தான்  விற்றிருக்கின்றன' என்றார்.   இது எதைக் காட்டுகிறது?

இங்கு சில நொடிகள் நிறுத்தி,  வாரியார்  மேலும்  சொன்னார்:   "இது எதைக் காட்டுகிறது  என்றால்,  சிங்கப்பூர்  ரசிகர்கள்  ஒவ்வொருவர் வீட்டிலும்,  ஏற்கெனவே  கம்பராமாயணப்  பிரதி  இருக்கிறது என்பதயே காட்டுகிறது'  என  நாசூக்காக இடித்துக் காட்டினார்.  மீதி புத்தகங்கள்  உடனே விற்றுத் தீர்ந்தன''.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir7.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/வாரியார்---சொன்னது-3221138.html
3221137 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர்  ஜி.அசோக் DIN Sunday, August 25, 2019 02:14 PM +0530 நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் "கன்னிராசி'. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் பேசும் போது....

""புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். "கன்னிராசி' படத்தின் திரைக்கதை நகைச்சுவைப் பகுதிகள் நிறைந்தது.  இந்த படக்குழு மிகுந்த உற்சாகமானது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு  திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன். இந்தப் படத்தைப் போல் வேறு எந்தப்படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்'' என்றார்  வரலட்சுமி.

 

தேசிய விருதுகள் பட்டியலில்  தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. "பரியேறும் பெருமாள்', "பேரன்பு' படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும் பெற்றன. அப்படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக மம்முட்டி நடித்த "பேரன்பு' படத்திற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது தராததற்கு அவரது ரசிகர்கள் தேசிய விருது தேர்வு குழுத் தலைவரைத் திட்டி தீர்த்திருக்கின்றனர். அத்துடன் அவரது குடும்பத்தினரையும் கெட்டவார்த்தைகளால் வசைபாடி உள்ளனர். மம்முட்டி ரசிகர்களின் இந்தப் போக்கு தேசிய விருதுக் குழுவை எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதுபற்றி விருதுக் குழு தலைவர் தரப்பில் கூறும்போது,""பேரன்பு படம் விருது போட்டிக்கு வரவே இல்லை. அது பிராந்திய அளவிலான தேர்வு பிரிவிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது விருதுக்கான  தேர்வுக்கு எப்படிப் பரிசீலனை செய்வது? இதைப் புரிந்துகொள்ளாமல் மம்முட்டி ரசிகர்கள் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார்கள். இதற்காக தனது ரசிகர்கள் சார்பில் மம்முட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களின் செயலுக்காக விருதுக் குழுவினரிடம் மன்னிப்பு தெரிவித்திருக்கிறார் மம்முட்டி.

 

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான "குயின்' பட ரீமேக், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் தனித்தனியே உருவாகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாரூல் யாதவ் நடிக்கிறார்கள். தமிழில் "பாரீஸ் பாரீஸ்' என தலைப்பு வைத்துள்ளனர்.      நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தைத்  தணிக்கை குழுவுக்கு  காண்பிக்க சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தில் வரும் பல காட்சிகள், வசனங்களில் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். அந்த காட்சிகளையும் குறிப்பிட்ட வசனங்களையும் நீக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். 

குறிப்பிட்ட காட்சிகளில் ஆபாசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் காட்சிகளை நீக்கவும் வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு சம்மதிக்கவில்லை. இதையடுத்து சான்றிதழ் தர சென்சார் மறுத்துவிட்டது. இந்தநிலையில் படத்தை மும்பையிலுள்ள ரிவைசிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குநர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க "தலைவி' பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க "ஐயர்ன் லேடி' பெயரில் பிரியதர்ஷனியும் இயக்குகின்றனர். பாரதிராஜா இப்படம் பற்றிய விவரம் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி "தலைவி'  படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாய லேஷ் ஆர்.சிங்...""ஒரு தயாரிப்பாளராக ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்காக நான் ஒருபோதும் வித்யாபாலனை நடிக்க கேட்டு அணுக வில்லை. இப்படியொரு தகவல் வெளியானது எனக்கும் தெரியும். ஆனால் இப்படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்னிடம் கதையைக் கூறும்போதே கங்கனாதான் ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே நானும் சரி, கதாசிரியரும் சரி கங்கனாவை தவிர வேறு யாரையும் நடிக்க கேட்டு அணுகவில்லை. வேறு யாராவது கால்ஷீட் கேட்டு வித்யாபாலனை அணுகினார்களா என்பது எனக்குத் தெரியாது. பட குழுவுடன் இணைந்த நாங்கள் அனைவரும் கங்கனாவை ஜெயலலிதாவாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம்'' என்றார்.

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் "மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து சிம்புவை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  சிம்பு இல்லாத நிலையில் வேறு ஒரு பரிணாமத்தில் வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் "மகா மாநாடு' என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "மகா மாநாடு'  படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். "மாநாடு' படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir6.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/திரைக்-கதிர்-3221137.html
3221136 வார இதழ்கள் தினமணி கதிர் மாற்றொலி DIN DIN Sunday, August 25, 2019 02:09 PM +0530 செய்தியைப் பார்த்ததுமே வாய்க்குள் போன காபியை வெளியே துப்பினார் அன்பரசன். துப்பி தெறித்த காபியை செய்தித்தாள் உறிஞ்சிக் குடித்தது.

"ஏன் சொல்லல... பைத்தியக்காரன். இவ்ளோ பெரிய இஷ்யூ ஆயிருக்கு... பேப்பர்ல போட்டு நாறடிச்சிருக்காங்க... என்கிட்ட ஏன் சொல்லல...' மனம் துடித்தது. காற்றிற்கு அடித்துக் கொள்ளும் ஜன்னல் கதவுகள் போல அடித்துக் கொண்டது.
"எனக்கு ஏன்டா ஒரு வார்த்தை சொல்லல?  லூசாடா நீ இப்படி மண்ணள்ளி தலையில போட்டுக்கணும்னு விதியாடா..?' எதிரில் கணபதி நின்றிருந்தால் "பளார் பளார்' என்று அறைந்திருப்பார்.
போன் போட்டார். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. கெளரிக்கு போன் போட்டார். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அம்மாவுக்கு போன் போட்டார். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. பச்சையாகத்  திட்ட வேண்டும் போலிருந்தது.
"செத்துட்டாங்களா.. மொத்தமா செத்துட்டாங்களா...' தலையில் அடித்துக் கொண்டார்.
""ஏங்க ஹீட்டர் போட்டு பத்து நிமிஷம் ஆச்சு, குளிச்சிட்டு வந்து பேப்பர் பாருங்க... என்னாதான் நியூஸ் பார்ப்பீங்களோ.. டி.வி.ல நியூஸ், செல்லுல நியூஸ்... பேப்பர்லயும் நியூஸ்...''”
""வாயை மூடிக்கோ...''”
சங்கரி அதிர்ந்தாள். “
""என்னங்க... என்ன தப்பா சொல்லிட்டேன்?''” கண்ணீர் கசிய வந்தாள்.
""ஸாரிடி.. மனசு சரியில்ல...''”
செய்தியை எடுத்துக் காண்பித்து, ""வேணாம்னு விட்டுட்டு தூரமாக வந்துட்டாலும் நியூஸ்ல சாகடிக்கிறாங்க...'' என்றார். ”
சங்கரிப் பார்த்தாள். "ஐந்நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது' - கொட்டை எழுத்துக்களில் இருந்தது.
அன்பரசனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சங்கரிக்கும் ஏற்பட்டது.
மத்தியில் கணபதி, அவரைச் சுற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொண்ட  படம்.
தீவிரவாதியைப் பிடிச்சாலும் இப்படித்தான் படம் போடுறாங்க... திருடனைப் பிடிச்சாலும் இப்படித்தான் படம் போடுறாங்க.. கொலைகாரனைப் பிடிச்சாலும் இப்படித்தான் படம் போடுறாங்க....”
அதுக்கு ஒரு சட்டம், இதுக்கு ஒரு சட்டம் இல்லை... ஐநூறு கோடி லஞ்சம் வாங்கினாலும் அதே போலீஸ்தான் பிடிப்பாங்க.. வெறும் ஐந்நூறு ரூபா வாங்கினாலும் அதே போலீஸ்தான் பிடிப்பாங்க.. அதே சட்டம்தான், அதே செக்சன்தான்.. அதே லஞ்சம் வாங்கறவங்கதான் பிடிப்பாங்க.. லஞ்சம் வாங்காத நேர்மையானவங்க யாரும் பிடிச்சிருக்க மாட்டாங்க....”
ஐநூறு ரூபா...! சரியா சொல்லணும்னா... கேவலம் ஐநூறு ரூபா நம்ம குடும்பம் கேவலமாயிடுச்சு.” அவருக்கு நெஞ்சம் அடைக்கும் போலிருந்தது.
அன்பரசன் காவல் துறையில் மூத்த அதிகாரி. கணபதி சொந்த தம்பி.   கணபதியும் குரூப் ஒன்று, குரூப் இரண்டு எல்லாம் எழுதி கடைசியில் குரூப் நான்கில் தேர்ச்சிப் பெற்று, கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து, வருவாய் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
நல்லவேளை! செய்திக்காரர்கள் காவல்துறை அதிகாரி அன்பரசுவின் சொந்தத் தம்பி என்று மோப்பம் பிடிக்கவில்லை.
பிறகு இன்னொன்னு தெரிந்தது. தொன்னூற்றி ஒன்பது சதவீத மகாத்மா காந்திகள் முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் இருந்தார்கள். அவர்களும் கணபதியின் படத்தைப் போட்டு, அவர்களுக்குத் தோன்றின மாதிரி பதிவுகள் எழுதி லைக்கோ, ஆட்டினோ, சிரிப்போ வாங்கினார்கள்.
அன்பரசன் சங்கரியை அழைத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார்.
சாவு வீடு மாதிரி இருந்தது. மயான அமைதி.
கணபதியின் மாமியார், மைத்துனன்,  நண்பன் இலியாஸ் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். அசைவற்ற கோடை மரங்கள் மாதிரி உட்கார்ந்திருந்தார்கள். கணபதியின் மனைவி கெளரி நெஞ்சை அடித்துக் கொண்டு கதறினாள். சங்கரியை கட்டிக் கொண்டாள். அம்மாவும் அழுதாள். குழந்தைகளும் கால்களைக் கட்டிக் கொண்டது.
அமைதியாக உட்கார்ந்திருந்த கணபதி கத்தினான். “
""நான் செத்துட்டா.. என் பிணத்துகிட்ட எப்படி அழுவீங்கன்னு செய்து காட்டறீங்களா? நல்லா அழுங்க...''”
அன்பரசன், “""அமைதியா இருங்க... அவனே மனசு கெட்டு இருக்கான். மேலும் நோகடிக்காதீங்க...''” 
என்றார்.
""நான் நார்மலா இருக்கேன். எந்த வருத்தமோ, வேதனையோ வலியோ எனக்கில்லை, என்னென்ன நடக்குமோ அது நடக்கட்டும்னு விட்டுட்டேன்''” கணபதி சொன்னார். 
ஆனால் அவர் சொன்னதை யாராலும் நம்ப முடியவில்லை. ஏற்க தயாராக இல்லை. அவருக்குள் வேதனை வலி எல்லாமே இருக்கிறது. அதை மறைப்பதற்கு முயற்சிக்கிறான் என்றே எடுத்துக் கொண்டார்கள்.
மறுபடியும் வீடு அமைதியானது. மீண்டும் உறவினர் யாராவது துக்கம் விசாரிக்க வந்தால் பூர்ணிமாஅக்காவோ, அம்மாவோ அவர்களிடம் அழுவார்கள்.
சொந்தக்காரர்களின் பார்வையில் கணபதி லஞ்சம் வாங்கியக் குற்றவாளி அல்ல; ஏதோ சதி வலையில் சிக்கிக் கொண்ட துரதிருஷ்டசாலி.
எவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும்?
""இலியாஸ்'' -” அன்பரசன் அழைத்தார். “
""பசி தாங்கல, ஓட்டலுக்கு போலாம் வா''” என்றார்.
""எனக்கும் பசிக்குது, ரெண்டு இட்லி போதும்''  என்றார் கணபதி.
கணபதிக்கு பசிக்காது; பசிக்கவில்லை. அவர் சாப்பிடாவிட்டால் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்பதால் "பசிக்குது' என்றார்.
அன்பரசனும், இலியாசும் காரில் புறப்பட்டார்கள்.
""சொல்லு இலியாஸ் என்ன நடந்தது? உனக்கு சொல்லி இருப்பானே?''”
""சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லீங்க அண்ணே... எல்லா ஆபிஸ்லயும் நடக்கிற விஷயம்தான்.  அவன் விஜிலன்úஸாட வருவான்னு தெரியாதாம்''”
சுதந்திர போராட்ட தியாகி மாதிரி வயசான இந்தியன் தாத்தாவா?”
""இல்லிங்க அண்ணே... பையன் பத்தொன்பது வயசு பையன். மீசைக் கூட வரலன்னு சொன்னான்''”
""பையனா?''”
""படிக்கிற பையன், கவர்மெண்ட் காலேஜ்ல பி.காம் படிக்கிறான். அவனோட அக்காவுக்கு ஆதரவற்ற விதவை சர்டிபிகேட் வாங்க வந்தவன்ணே, சர்டிபிகேட் கிடைச்சா, சத்துணவுல அமைப்பாளர் வேலை வாங்கிடலாம்னு வந்திருக்கான். ஆனா அது முடியாது. ஒரு போஸ்ட்டிங் மேல மூணு லட்சம் லஞ்சம் கேட்
கிறாங்க. அது அவன் பாடு, விதவை சர்டிபிகேட் வாங்கறதுக்கு எல்லா ஆபிஸ்லயும் மூவாயிரம் வாங்கறாங்க''
“""அவன் ஏன் விஜிலன்ஸ் போனான்?''”
“""பசங்க அப்படித்தான். புது ரத்தம். இன்னும் நடைமுறை வாழ்க்கை பழகி இருக்க மாட்டான் அண்ணே... நாமும் அந்த வயசுல அப்படித்தான் இருந்தோம், பொய் பேசக் கூடாது, திருடக் கூடாது, ஏமாத்தக் கூடாது, ஓட்டுக்கு துட்டு வாங்கக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது, வட்டி வாங்கக் கூடாது. இதெல்லாம் வயசுலதான் வரும்ண்ணே...  பெரியவனானா பழகிடும்''
“""இலியாஸ், தத்துவார்த்தமா பேசறதை நீ விடலையா?''”
“""அண்ணே...''”
“""இப்போது முக்கியம் அந்தப் பையனை விலை பேசணும், லஞ்சம் கொடுக்கலை, கணபதி லஞ்சம் வாங்கலைன்னு சொல்ல வைக்கணும்''”
“""கேஸ் விசாரிக்க, இன்னும் மூனு மாசம் ஆகுமா?''”
“""அதுவரைக்கும் வெயிட் பண்ண வேணாம்...  விசாரணைக்கு போற வரைக்கும் ஏன் விடணும்?''”
“""முடியுமாண்ணே... டி.வி.யில... பேப்பர்ல வந்தாச்சு, கோர்ட்டுக்கு போய் கேஸ் நடக்கும்தானே?''
“""இங்கே எல்லாமே சாத்தியம்... லஞ்சம் இல்லாத ஆபிஸ்னு ஒரு இடத்தைக் காட்ட முடியாது. எனக்குத் தெரியாத அதிகாரி யார் இருக்காங்க...? நேத்தே போன் பண்ணி இருந்தா, இந்த விசயத்தை ஒண்ணும் இல்லாம பண்ணி இருப்பேன்.''”
“""கணபதி விடலண்ணே... யாருக்கும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டான்''”
""பைத்தியக்காரன்''”
ஓட்டல் முன்பு காரை நிறுத்தினார்கள். காரில் உட்கார்ந்தபடியே ஆர்டர் சொன்னார்கள். பார்சல் வரும் வரை காபி பருகினார்கள்.
“""காலையில் இருந்து பச்சைதண்ணி குடிக்கல, காபி வாய்ல வைக்கும்போதுதான் நியூஸ் பார்த்தேன். தொண்டையில இறங்கல... எனக்கே காரை விட்டு வெளியே வர கஷ்டமா இருக்கு... கணபதி எப்படி நடமாடுவான்?''”
“""இறுகிப் போய் உட்கார்ந்திருக்கான்... தனியாவே இருந்தான் யார் கூடவும் பேசல...''”
""இந்த விஷயத்தை எப்படி அணுகுவது, நேரடியாகப் பையனிடம் பேசலாம், அவங்க ஊர் முக்கியஸ்தர்கள் யாரையாவது பேச வைக்கலாமா?''
அன்பரசனுக்கு எம்.எல்.ஏ. எம்.பி மட்டுமின்றி அனைத்துக் கட்சியிலும் முக்கியஸ்தர்களும் பழக்கம்தான். லட்சம் கோடி என்று வரும் புகார்களையே ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறார்.
ஐந்நூறு ரூபாய் லஞ்சம் என்பதை நினைத்தாலே அவருக்குள் கசந்தது. இதை லஞ்சம் என்று சொல்ல முடியுமா? இந்தக் காலத்தில் அது ஒரு பணமா?
அந்தப் பையன் மீது ஆத்திரம் வந்தது.
உள்ளுர் ஸ்டேசனில் சொன்னால் பையன் மீதே கேஸ் போட முடியும்.
“ஐந்நூறு ரூபாய்க்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் கூட அவனுக்குக் கொடுக்கலாம். மறுத்தானா ஐம்பதாயிரம் வரைக்கும் பேசலாம். ஒத்துக்கலைன்னா கஞ்சா, அபின் ஏதாவது வைச்சிருந்தான்னு கேஸ் போடலாம். அவனுக்கு லவ் இருக்கான்னு பார்க்கணும். கோர்ட்டுக்கு போக விடாமல் இன்னைக்கே முடிக்கணும். பையன்கிட்ட லஞ்சம் தரலைன்னு எழுதி வாங்கணும்.
வீட்டுக்குப் போய் எல்லாரையும் சாப்பிட வைத்தார்.
யாருக்கும் சாப்பிடும் எண்ணம் இல்லை. துக்கம் போகவே இல்லை. வீட்டில் யாராவது செத்திருந்தால் கூட புதைக்கும் வரைதான் துக்கம் இருக்கும். இந்த வடு, செத்தாலும் ஆறாது போலிருந்தது.
“""இது விஷயமே இல்லை, சாப்பிடுங்க... எனக்கு ஒரு போன் பண்ணிருந்தால் இவ்ளோ பெரிசா ஆகி இருக்காது. எந்த மீடியாவுலயும் வராமல் தடுத்திருப்பேன். லோக்கல் ரிப்போர்ட்டர்ஸ் தெய்வசிகாமணி, சுடர்
நிலவன், வினோத் யார் தெரியாதவங்க நமக்கு? ஹெட் ஆபீசுக்கே போன் பண்ணி போடாதீங்கன்னு சொல்லி இருப்பேனே...''” என்றார்.
தான் சாப்பிட உட்கார்ந்தால்தான் மற்றவர்களும் சாப்பிட உட்காருவார்கள் என்று கணபதி சாப்பிட ஆரம்பித்தார். அதே எண்ணத்தில் அன்பரசனும், இலியாசும் உட்கார்ந்தார்கள். மற்றவர்களையும் சாப்பிட வைத்தார்கள்.
“""அன்பண்ணா இந்த விஷயத்தை விட்டுடுங்க... நான் லஞ்சம் வாங்கினது உண்மை, என்ன தண்டனையோ அது கிடைக்கட்டும்...''” என்றார் கணபதி.
“""சும்மா இருடா... ஒரு ஓட்டுக்கு ஐநூறு லஞ்சம் வாங்கறாங்க.. இடைத்தேர்தல் ரெண்டாயிரம் ரூபா லஞ்சம் வாங்கறாங்க. எத்தனை கட்சிகாரன் தந்தாலும் வாங்கறாங்க. அவங்க அத்தனை பேரையும் பிடிச்சி தரட்டும்.  நூற்றி நாற்பது கோடி ஜனங்களும் லஞ்சம் வாங்கற குற்றவாளிகள்தான்.  விஜிலன்சுக்கு பிடிச்சி தரட்டும். ரேசன்ல அரிசி இலவசமா தர்றதை கோதுமை இலவசமா தர்றதை வேணாம்னு சொல்வானா?''” என்றவர் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
“""அன்பண்ணா விட்டுடு, என்னை நிம்மதியா விடு. இதுக்காகத்தான் உனக்கு சொல்லலை...''”
“""சும்மா இருடா கவர்மெண்ட்ல வேலை செய்றவங்க என்ன யோக்கியமா? இனிமேல் எந்த ஊழியரும் லஞ்சம் வாங்க மாட்டாங்களா?''
“""விட்டுடு நிறைய பேசலாம். எனக்கு கூட தெரியும். நானே லஞ்சம் தர்றேன். டிரான்ஸ்ஃபருக்காக மூணு முறை லஞ்சம் தந்து இருக்கேன். நான் லஞ்சம் வாங்கலைன்னாலும், மேலே இருக்கிறவங்க வந்தால் செலவு பண்ணனும்... அதிகாரிகள் சென்னை போனா டிக்கெட் ரிஸர்வ் பண்ணித் தரணும். ஜீப்புக்கு பெட்ரோல் போடச் சொல்றாங்க.. ஆபிஸ்ல சம்பளம் இல்லாம உதவியாளர்கள் இருக்காங்க. அவங்களுக்குத் தரணும்... வேலைக்குச் சேரும்போது நேர்மையா இருக்கணும்னுதான் நினைச்சேன். பத்து நாள் கூட நேர்மையா இருக்க முடியல. எலிஜிபல் கிடையாது; சர்டிபிகேட் தரமுடியாதுன்னா, மேலே இருந்து போன் போட்டு சர்டிபிகேட் கொடுய்யாங்கறாங்க... எலிஜிபல் இருந்து சர்டிபிகேட் தந்தா கேட்காமயே பணம் கொடுத்துட்டு போறான். நான் வாங்கலைன்னா என் பேரைச்சொல்லி சிப்பந்தி வாங்கறான். சம்பளமே அவனுக்கு இல்லை. ஆனா இருபது லட்ச ரூபாயில வீடு கட்டி இருக்கான். அவன் வீட்டு கிரகபிரவேசத்துக்கு எல்லாரும் வந்து கிஃப்ட் தந்துட்டு போறாங்க.  பத்து வருஷத்துல பத்தாயிரம் சர்டிபிகேட் தந்திருப்பேன். ஒரு பையன் கிட்ட மாட்டணும்னு விதி. விதிப்படி நடக்கட்டும்  அன்பண்ணா.. அந்த பையனே இந்த வேலைக்கு வந்தான்னாலும் லஞ்சம் வாங்குவான். சமூகத்தோட நிலைமை அப்படி ஆகிப் போச்சு... பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடும்ங்கிற மாதிரி, லஞ்சம் தந்தாத்தான் வேலை ஆகும்ங்கிறது நடைமுறை ஆகிருச்சு, யாருக்கும் தப்புன்னு தெரியல... ஒருத்தனுக்கு தப்புன்னு தெரிஞ்சிருக்கு''” கணபதி மூச்சு வாங்க சொன்னார். இரண்டு நாட்களாய் பேசாது இருந்தவர், இரண்டு இட்லிக்குப் பிறகு மனதிலிருந்த, மனதுக்குள் அசைப் போட்டுக் கொண்டிருந்த குமுறலைக் கொட்டினார்.
""எனக்கு இந்த வேலையில் விருப்பம் இல்லை அன்பண்ணா, பிஸினஸ் பண்றேன். எந்த பிஸினஸ் பண்ணாலும் நாலு பர்சன்ட் முதல் நாற்பது பர்சன்ட் வரை லாபம் இருக்கு''” என்றார்.
அன்பரசன் பதில் பேசவில்லை. நிலத்தைப் பார்க்கப் போவதாக சொல்லிவிட்டு இலியாûஸ அழைத்துக்கொண்டு அந்தப் பையன் முகவரி தேடிப்போனார்.
""கணபதி ரொம்ப விரக்தி அடைஞ்சிட்டிருக்கான்டா... பரவாயில்லை கொஞ்சம் கெட்டி மனுசுதான்... இல்லைன்னா  தூக்குல தொங்கலாம்னு முடிவுப் பண்ணி இருந்தால்... என்ன ஆகறது?''
“""நைட் பூராவும் கூடவே இருந்தேன் அண்ணே... பயமா இருந்தது. நைட் பன்னிரண்டு ஆயிருச்சு ஜாமீன்ல அழைச்சிட்டு வர்றதுக்கு.. வீட்ல விட்டுட்டு போறதுக்கு பயமா இருந்தது. அவனும் பயந்தான் போலிருக்கு. இங்கேயே இருடான்னு சொன்னான். தூக்கமே வரலை அண்ணே... உளறிட்டே இருந்தான். எத்தனையோ நாள் கரண்ட் இல்லாமப் போகுது. இன்னைக்கு ஒரு நாள் கரண்ட் இல்லாமல் போனா எப்படி இருக்கும். ஒரு சுனாமி அடிச்சதுன்னா ஜனங்க மொத்த பேரும் அதை பேச ஆரம்பிச்சுடுவாங்க, என்னை மறந்துடுவாங்கன்னு சொன்னான். கடவுள் எனக்கு திடீர்னு ஆர்ட் அட்டாக்கையோ பக்கவாதத்தையோ தந்திருந்தால் பரவாயில்லை... கெட்ட நேரத்தை இப்படியா தரணும்னு புலம்பினான். என்னை விட கொடுங்கோலன்கள் இருக்காங்கடா... கருணையே இல்லாதவனுங்க இருக்காங்க... பிணத்துக்கு சர்டிபிகேட் தர்றதா இருந்தாலும் பணம் வாங்கறவங்க இருக்கானுங்க.. மனசாட்சி இல்லாம மிருகங்களா இருக்காங்க... அவங்க மாட்டல, நான் மாட்டிட்டேன்னு அழுதான்... அழுத பிறகுதான் அமைதியானான். மாடியில யாரும் இல்லை. நாங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தோம். அதிகாரிகள் கூட கணபதிக்கு ஹெல்ப் பண்ண பார்த்திருக்காங்க, பையன் பிடிவாதமா இருந்தானாம்'' - இலியாஸ் சொன்ன போது கணபதி நினைத்து கவலைப்பட்டார்.
அந்தப் பையனின் முகவரிக் கேட்டுப் போனார்கள். காரை தூரமாக நிறுத்தி விட்டு நடந்தே போனார்கள்.
அது அரசாங்கம் கட்டிக் கொடுத்த இலவச வீடு.
வயதான பாட்டியம்மா வாசலில் உட்கார்ந்து இருந்தாள்.
எதுவும் கேட்பதற்கு முன்பே “""தங்கதுரை! யாரோ வந்திருக்காங்க...''” என்றாள். தொன்னூறு வயதில் கண்ணாடி இல்லாமல், காதுகேட்கும் கருவி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்.
ஒல்லியாய் மாநிறத்தில் ஒரு பெண் வெளியே வந்தாள். அந்தப் பெண்தான், பையனின் அக்கா என்று புரிந்து கொண்டார்கள்
“""வணக்கம் சார் வாங்க, தங்கதுரையைப் பாக்க வந்தீங்களா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...''” என்றாள். சொல்லி விட்டு உள்ளே போனாள்.
அன்பரசனுக்கு கோபம் வந்தது. "தகுதி, தராதரம் தெரியாத நாயிங்க... எல்லாம் நேரம்.. இவன் வீட்டு வாசல்ல நிற்கணும்னு விதி.' நொந்துக் கொண்டார்.
கொஞ்ச நேரமில்லை பதினைந்து நிமிடங்கள் காத்திருந்தார்கள். திரும்பிப் போய்விடலாம் என்று கூட தோன்றிற்று. "என்ன செய்வது நம்ம குடுமி அவன் கையில் இருக்கே...' என்று சமாதானம் செய்து
கொண்டார்.
சின்ன க்ரீச் சத்தம் கேட்டு தலை உயர்த்திப் பார்த்தபோது சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தான். சக்கரத்தை கைகளில் உருட்டிக் கொண்டு வந்தான். பின்னாடியே வந்த அவனின் அக்கா செல்ஃபோனை கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். எது பேசினாலும் பதிவாகும் என்பது புரிந்தது.
“""வணக்கம் சார்!''” என்றான்.
சுயநினைவின்றி “""வணக்கம்!''” என்றார்.
“""என்ன சார் விசயம்?''”
“""வந்து... வந்து...''” வார்த்தைகள் வரவில்லை.
அந்தப் பெண் செல்ஃபோனை கேமராவாய் பிடித்திருந்தாள்
“""சார்! நீங்க சொல்லலைன்னாலும் எனக்குப் புரியுது சார். லஞ்ச வழக்குல மாட்டினவருக்கு ஆதரவா பேச வந்திருக்கீங்க... என்னைப் பார்த்து, என்கிட்டயே ஒருத்தர் லஞ்சம் வாங்கனார்னா... நல்லா இருக்கிறவங்ககிட்ட எவ்ளோ வாங்குவார்ங்க.. காலு, கை நல்லா இருக்கிறவங்களால எந்த அநியாயத்தை எதிர்த்தும் போராட முடியாது சார்... வேலை முடிஞ்சா போதும்னு லஞ்சம் கொடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க...  என்னை மாதிரி லஞ்சம் கொடுக்க வக்கில்லாதவங்கதான் சார் போராட முடியும். ஆனா முடியல சார். போராட முடியல... இந்த இலவச வீட்டை கட்டி வாங்கறதுக்கு எவ்ளோ போராடினேன் தெரியுங்களா? நான் படிக்கறதுக்கு எவ்ளோ போராடினேன் தெரியுங்களா? ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு அதிகாரிகிட்ட சர்டிபிகேட்டுக்கு போகணும். அலைய வைக்கிறாங்க சார். கார்ல, பைக்குல வர்றவனை கூப்பிட்டு சேர் போட்டு உட்கார வைக்கிறாங்க.  போலியோவுல செயலிழந்த காலோட போற என்னை அடுத்த வாரம் வா, அடுத்த மாசம் வான்னு அலைய வைக்கிறாங்க.  ஆறு மாசமா அலைஞ்சி மனசு நொந்துதான் மாட்ட விட்டேன் சார். நூறு கோடி பேருக்கு மேல வாழுற ஒரு தேசத்துல ஒரே ஒருத்தன் லஞ்சத்துக்கு எதிரா நிற்கறதுக்கு சந்தோசப்படுங்க, நூறு கோடி பேரும் நின்னா லஞ்சம் இருக்காது''” என்றான்.
“""தம்பி! ஒண்ணுமில்லை.  நாங்க வர்றோம்'' என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
“""இவன் கிட்ட லஞ்சம் வாங்கி இருக்கானே... நல்லா இருப்பானாடா...''” - கோபமாய் சொன்னார் அன்பரசன்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir5.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/மாற்றொலி-3221136.html
3221135 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, August 25, 2019 02:06 PM +0530 கண்டது

(விராலிமலையில் ஒரு கடையில்)

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எனக்குக் கடவுள் மாதிரி.
கடவுளுக்கே கடன் கொடுக்கும் தகுதி எனக்கு இல்லை.
தயவுசெய்து கடன் சொல்லாதீர்கள்... தெய்வமே!

செ.ரா.ரவி,  செம்பட்டி.

 

(தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

மறியல்

பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை-28

 

(அரக்கோணத்தில் காய்கறி தள்ளுவண்டி கடையின் பலகையில்)


உங்கள் விவசாய நண்பன் - காய்கறி கந்தன்

ஆர்.சுசிலா ரவி, கொண்டபாளையம்.

 

(மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு புத்தகக் கடையின் பெயர்)


ஞானம் வளர்

ஆர்.நிஷா,  சோளிங்கர்.

 

எஸ்.எம்.எஸ்.


நம்மிடையே,     உழைக்காது வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழாது உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆதினமிளகி, வீரசிகாமணி.கேட்டது

(பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நடுத்தர வயதுள்ள இருவர்)

""எனக்கு முதன்முதலில் பார்த்த பொண்ணு காஞ்சி காமாட்சி மாதிரி இருந்தா. அடுத்ததா பார்த்த பொண்ணு காசி விசாலாட்சி மாதிரி  இருந்தா''
""அது இருக்கட்டும்.  உங்க மனைவி எப்படி இருப்பாங்க?''
""அந்த "கல்கத்தா காளி'யை இப்ப எதுக்கு ஞாபகப்படுத்துறீங்க?''

 க.சரவணகுமார், திருநெல்வேலி.

 

(விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்தில் அப்பாவும் மகனும்)

""நான் தினமும் பத்து கிலோ மீட்டர் நடந்து சென்று படிப்பேன்... 
தெரியுமா?''
""அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமாப்பா?''

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.


மைக்ரோ கதை

வீதி வழியே சவப்பெட்டி ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவன், ""சவப்பெட்டி ஊர்வலம் போகும்போது அதுக்கு முன்புறமாகப் போவது நல்லதா?  பின்புறமாகப் போவது நல்லதா?'' என்று கேட்டான். 

அடுத்தவன் சிறிது நேரம் யோசனை செய்தான். 

""சவப்பெட்டியில் நீ இல்லாதவரை எப்படிப் போனாலும் ஒன்றுதான்'' என்றான். 

எம்.எஸ்.மயில், திருநெல்வேலி.

 

யோசிக்கிறாங்கப்பா!

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் எல்லாரும்.
பிச்சைக்காரன் மட்டும் வாசலில் நின்று "அம்மா' என்று அழைத்தான்.

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.


அப்படீங்களா!

நாய்களில் பல விதமான நாய்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின்  மெஷின் பெர்செப்சன் அண்ட் காக்னிட்டிவ் ரோபாட்டிக்ஸ் (ஙடஇத) ஆய்வுக் கூடம்  ஆஸ்ட்ரோ என்ற இந்த ரோபோ நாயை உருவாக்கியுள்ளது.  

சென்சார்கள், ராடார் இமேஜிங்,  கேமாராக்கள்,  மைக்ரோபோன்கள் ஆகியவற்றின் மூலம் இயங்கக் கூடிய இந்த ரோபோ நாய்,  உட்கார் என்றால் உட்காரும், நில் என்றால் நிற்கும், கீழே படு என்றால் படுக்கும்.  

நமது  நாய்களைப் போல நடந்தும் செல்லும்.  அது மட்டுமல்ல, மனிதர்களின் கை அசைவுகளைப் புரிந்து கொள்ளும் திறனும் இதற்கு உண்டு.  நிறங்களை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியும்.  மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும்.  ட்ரோன்களுடன் இணைந்து  செயல்படும்.  அதுமட்டுமல்ல, சுற்றியுள்ள இடத்துக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும் அதற்குத் தெரியும். 

இந்த ரோபோ நாய் காவல்துறை, ராணுவம், பாதுகாப்புப் பிரிவினருக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கிகள், வெடிபொருட்களை மோப்பம் பிடித்து கண்டுபிடித்துக் கொடுத்துவிடும். வித்தியாசமான  வாசனைகள்,  ஒலிகளையும் கண்டறிந்து சொல்லிவிடும்.

தன்னை வாங்கியவர்களைப் பார்த்ததும் வாலாட்ட  இதற்குக் கற்றுக் கொடுத்தால், வசதியானவர்கள் இந்த ரோபோ நாயுடன் பெருமையாக வாக்கிங் கூட செல்வார்கள். ரோபோ நாயுடன்  வாக்கிங் செல்கிறார் அமேசான் 
நிறுவனத்தின் அதிபர் ஜெஃப்.

என்.ஜே., சென்னை-58.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir4.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/பேல்பூரி-3221135.html
3221132 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெல்லமும்... ஆரோக்கியமும்! பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன் DIN Sunday, August 25, 2019 02:01 PM +0530 எனது எட்டு வயது மகன் நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வெல்லத்தைத் எடுத்துத் தின்கிறான். எப்படியாவது தெரிந்து கொண்டு திட்டினாலும் அடித்தாலும் திருந்த மாட்டேன் என்கிறான். இது எதனால்? உடலில் ஏதேனும் கோளாறு காரணமாக இப்படி செய்கிறானா?      

 - சுபா, நங்கநல்லூர், சென்னை.

உங்களுடைய மகன் கூடவே பொட்டுக்கடலையையும் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்! வெல்லத்துடன் அதனையும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் வலுவாவதற்கும் அதே சமயம் ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கும் உதவிடக்கூடும். உடலில் ஏற்படும் சில பிரச்னைகளைச் சரி செய்வதற்காக இயற்கையே மகனைத் தூண்டிவிடுவதாக நாம் கருதலாம். உருண்டை வெல்லத்தை விட, அச்சுவெல்லம் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும். வெல்லத்தின் மீது குழந்தைகளுக்கு ஏற்படும் மோகம் இன்றல்ல நேற்றல்ல, பல யுகங்களாக நடந்து வரும் சமாசாரம் தான்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கக் கூடிய வெல்லம், அழுக்கற்ற சுத்தமான வெல்லமாக இருந்து, அதைப் பையன் சாப்பிட்டால், கபம் எனும் தோஷத்தை சளியாக மாற்றி வெளிப்படுத்தி, குடலையும் சிறுநீர்ப்பையையும் சுத்தமாக வைத்திருக்கும்.

ஆனால், நன்கு சுத்தம் செய்யப்படாத வெல்லம், சாக்குப் பைகளில் திறந்த நிலையில் வைத்திருந்து, அதில் ஈ மொய்த்திருந்த நிலையில் உள்ளதைச் சாப்பிட்டால், குடலில் கிருமிகள் வளரும். எலும்புகள், ரத்தம், கொழுப்பு, மாமிச சதைப் பகுதிகள், கபம் ஆகியவை நல்ல வகையில் வளர்ச்சியை அடையாமல் அதிகரிக்கக் கூடும்.

சுத்தமான பழைய வெல்லத்தைச் சாப்பிட்டால் இதயத்தைப் பலப்படுத்தும்; உடம்புக்கு உகந்தது. ஆனால், புதிய வெல்லம் கபத்தை   அதிகரித்து, பசியை மந்தமாக்கும்.

கரும்புச் சாறு நன்கு சுண்டக் காய்ச்சப்படுவதால், கெட்டியான வெல்லம் நமக்குக் கிடைக்கிறது. இதில் இனிப்பும் உப்பும் உணரப்படும். கரும்பினுடைய நுனிப்பகுதியும், கணுப்பகுதி நெருக்கமும் முற்றி வளராத இளங்கரும்பும் மூலப் பொருளாக இருந்தால் உப்பு அதிகமாகவே இருக்கும். சூடான வீர்யம், வயிற்றில் வாயு சேரவிடாது. நெய்ப்புடன் உடலுக்குப் புஷ்டி தரும். 

சிறுநீரைப் பெருக்கி அதிகம் வெளியேற்றும். கல்லீரலின் உட்பகுதிகளில் சென்று சுத்தப்படுத்தி அங்குள்ள விஷப் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்ட வெல்லத்தை உங்கள் மகன் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதல் நேர்ந்துவிடப் போகிறது?

வெல்லத்தில் பொதிந்துள்ள அய்ற்ண்ர்ஷ்ண்க்ஹய்ற்ள், தாதுப்பொருட்களாகிய ழண்ய்ஸ்ரீ மற்றும் நங்ப்ங்ய்ண்ன்ம் ஆகியவற்றால் இளம் வயதிலேயே மூப்பை உண்டாக்கும் ஊழ்ங்ங் ழ்ஹக்ண்ஸ்ரீஹப்ள் களைத் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இன்று பெருமளவு பேசப்படும் ஐய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய் என்ற விஷயத்தை முறியடிக்கும் திறன் கொண்டது.

வெல்லம் சாப்பிடும் மகனுக்கு குடலில் கிருமிகள், புழுக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தங்களுக்கு இருந்தால், வாய்விடங்கம் எனும் மருந்தை நன்கு பொடித்து, சிறிய அளவில் வாரமிருமுறையோ, மூன்று முறையோ சிறிது தேனுடன் குழைத்துக் கொடுக்க,   வெளியேற்றிவிடும்.

இப்பழக்கம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் வெல்லத்தின் மீது கொண்ட மோகம் காரணமாக, அவன் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு, சர்க்கரை நோய் வந்து துன்பப்படுவானோ? என்ற பயமும் தங்களுக்கு இருந்தால், அந்த எண்ணம் சரியானதாக நாம் கருத முடியாது. 

ஒருவரது கணையம், நல்ல முறையில் இயங்கித் தகுந்த அளவு இன்சுலின் அவருக்குக் கிடைக்குமாயின், எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாகவே, பிள்ளைகள் இந்த வயதில் நன்கு ஓடி ஆடி விளையாடக் கூடியவர்கள். அதற்கான நேர அமைப்பை நீங்கள் மகனுக்கு ஏற்படுத்தித் தந்தால், இந்த வெல்லம் சாப்பிடும் பழக்கத்தால் சர்க்கரை உபாதை  வராது.

வெறும் வெல்லத்தை இப்படி சாப்பிடுகிறானே என்று நீங்கள் பயந்தால், வெல்லம் வைத்திருக்கும் பாத்திரத்தை, மகன் எடுக்க முடியாதபடி உள்ள இடத்தில் நீங்கள் வைக்கலாமே? வெல்லம் கலந்த எள்ளுருண்டை, கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை போன்றவற்றை அவனுடைய கண்களில்படுமாறு வைத்தால், அவற்றின் மீது எற்படும் விருப்பம். நாளடைவில் வெறும் வெல்லம் சாப்பிடும் பழக்கத்தை மாற்றி இதுபோன்ற சத்து உருண்டைகளை விரும்பி சாப்பிடத் தொடங்கி விடுவான். அவன் விரும்பும் வெல்லமும் கிடைக்கும், கூடவே ஆரோக்கியமும் நிலைக்கும்!

(தொடரும்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir3.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-வெல்லமும்-ஆரோக்கியமும்-3221132.html
3221131 வார இதழ்கள் தினமணி கதிர் திருப்பூர் சிறுமிக்கு விருது! - பனுஜா    DIN Sunday, August 25, 2019 01:58 PM +0530 சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்த  குறும்பட திரைப்படவிழாவில் திருப்பூரைச் சேர்ந்த  சிறுமி மகேஸ்வேதாவிற்கு  "சிறந்த குழந்தை நட்சத்திர' விருது கிடைத்துள்ளது.  மகேஸ்வேதா  திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர். நான்காம் வகுப்பு மாணவி. மகேஸ்வேதா நடித்திருக்கும் குறும்படம் மலையாளை மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

படத்தைத்  தயாரித்திருப்பவர் மகேஸ்வேதாவின் தந்தை கிருஷ்ணன். திருப்பூரில் சார்ட்டட் அக்கெளன்டன்ட்டாக தொழில் செய்து வருகிறார். குறும்படம் தயாரிக்க ஒன்றரை  லட்சம் ரூபாய் செலவானதாம். குறும்படம் என்பதற்காக  சிறிய  காமிராவில் படம் பிடிக்காமல், தொழில்முறைக் காமிரா கொண்டு படம் எடுக்கப்பட்டதாம்.  அறுபது நாடுகளிலிருந்து  தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டியில் பரிசீலிக்கப்பட்டன.

தனது வேலையில் பிசியாக இருக்கும் தந்தை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு, தோழிகளிடம்  பேசி அலைபேசியில் நேரம் செலவழிக்கும் அம்மா... இவர்களுக்கு மகளிடம் பேச நேரமில்லை. மகள் சொல்வதைக் கேட்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து  மனைவியிடம் சொல்ல வந்தால் "நான் என்ன செய்ய'  என்று விலகும் மனைவி... மனைவிக்கு  ஏற்படும் பிரச்னையை காதில் வாங்காத கணவன்...

பெற்றோரின்  அன்பு, அரவணைப்பு, அருகாமைக்காக  ஏங்கும்  சிறுமி, படிப்பு... பாட்டு... நடனம்  என்று தனக்கென்று  ஓர் உலகத்தை   ஏற்படுத்திக் கொண்டு புழுங்கி  நாட்களைக் கடத்துகிறாள். ... தனது  பிரச்னைகளை யாரிடம் சொல்வது என்று  மூன்று பேரும்    தனக்குத்தானே  புலம்புகிறார்கள்.  இதைச் சொல்வதுதான் "யாரிடம் பறையும் ?'    என்ற குறும்படம்.  சமகாலப் பிரச்னையை சொல்லும்  படம். 

""எனக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும்... நடிக்கவும் விருப்பம்...  எனக்குப் பிடித்த  நடிகை  கீர்த்தி சுரேஷ்... படத்தில்தான்  அப்பா, அம்மா  நேரமில்லாமல் பிசியாக  இருக்கிறார்கள்.  நான்  அவர்களிடம் பேச  பழக ஏங்குகிறேன். நிஜ வாழ்க்கையில்   எனது பெற்றோர்  என்னிடம்  தேவைப்பட்ட நேரத்தைச் செலவழிக்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று சொல்கிறார் படத்தில் சிறுமியாக நடித்திருக்கும் மகேஸ்வேதா.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir2.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/திருப்பூர்-சிறுமிக்கு-விருது-3221131.html
3221130 வார இதழ்கள் தினமணி கதிர் மரம் வடிவில் அணிவகுத்த மாணவிகள்! - ச.பாலசுந்தரராஜ் Sunday, August 25, 2019 01:55 PM +0530 உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

எனவே  தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் மரக்கன்றுகளை நடுவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.   மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ், தமிழகம் எங்கும் கிராமப் பகுதிகளில் கண்மாய்க்கரை, நீர்நிலைகள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நட்டு, முள்வேலி அமைத்து தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள மரங்களில் சுமார் 40 சதம் பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன என ஒரு தகவல் உண்டு. எனவே மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில்  மாணவிகள் 1000 பேர் இணைந்து, ஆகஸ்ட் 17 - ஆம் தேதி, மிகப்பெரிய மரம் போல உடலை வளைத்து நின்று உலக சாதனை புரிந்ததோடு, மரம் வளர்ப்பது குறித்து சமுதாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.   மாணவிகளின் இந்தச் சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்தன் மற்றும் அந்த நிறுவனத்தின் தமிழக நடுவர் கதிரவன் ஆகியோர் அங்கீகரித்து, நோபல் உலக சாதனை நிகழ்வாக, மாணவிகளின் சாதனையைப் பதிவு செய்து, பாராட்டி உலக சாதனைச் சான்றிதழை வழங்கினர். 

இதற்கான சான்றிதழை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், கல்லூரித் தலைவர் திலகவதி ரவீந்திரனிடம் வழங்கினார்.

கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குநர் சா.விஜயகுமாரி ஆகியோரிடம் இது குறித்துக்  கேட்டபோது, ""சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சிந்தித்தபோது, மரங்கள் குறித்து நினைவுக்கு வந்தது. மரங்கள் அழிக்கப்படுவதால், மீண்டும் மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.  எனவே மரங்களை வளர்க்கவும், அவற்றைப் பாதுகாக்கவும், மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் மேலும் பலருக்குத் தெரியப்படுத்துவார்கள் என முடிவு செய்தோம். இதையடுத்து மாணவிகளை மர வடிவத்தில் அமர வைத்தால் அது சாதனையாகுமா என நோபல்  உலக சாதனை நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் இதுவரை யாரும் இந்த நிகழ்வைச் செய்யவில்லை எனக் கூறினார்கள். தொடர்ந்து அனைத்து துறையிலிருந்தும் 1000 மாணவிகளைத் தேர்வு செய்தோம். பின்னர் பச்சை மற்றும் பிரவுன் வண்ணத்தில் டீ சர்ட் வாங்கி, மாணவிகளை அணியச் செய்து நான்கு முறை ஒத்திகை பார்த்தோம். அது சிறப்பாக இருக்கவே மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர் முன்னிலையில் இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்து, நிகழ்ச்சியை நடத்தினோம். 

அது நோபல் உலக சாதனை நிகழ்வாக இருந்ததால் பங்கேற்ற மாணவிகளும், மற்ற மாணவிகளும் சந்தோஷப்பட்டனர். மேலும் கல்லூரி மாணவிகளுக்கு தங்களது வீடுகளில் நட்டு வளர்க்க 1000 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினோம். இதுபோல பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, மழையும் பெய்யும். நாடும் நாமும் வளம் பெறுவோம்'' என்றார்கள்.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/25/w600X390/kadhir1.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/25/மரம்-வடிவில்-அணிவகுத்த-மாணவிகள்-3221130.html
3216292 வார இதழ்கள் தினமணி கதிர்  புழுதி  அலையாத்தி செந்தில் DIN Sunday, August 18, 2019 11:25 AM +0530 தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

 (சென்ற இதழ் தொடர்ச்சி)
 "ஹே... இரு இரு ட்டே ஏரப்ளாஞ் சத்தம் மாரி இருக்குடா''
 இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் விரிய பார்த்தபடி கைகோர்த்து "ஹே...'வென ஆரவாரித்து மரத்தடியிலிருந்து வெட்டவெளிக்கு ஓடிவந்தனர்
 "ப்ப்ப்ப்ரேம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்...''
 "ஹே... அந்தோ போவுதுபாரு அந்த பார்ண்ணே''
 "எங்கடா?''
 "எனக்கு தெரியுதே... அந்த பாரு றெக்க தெரியிது பாரு''
 "ஹே... ஹே...'
 "டேய்... எந்த எடத்துலடா? எனக்கு தெரியல''
 "இந்தாப் பாருண்ணே. இங்க என் கைக்கு நேரா பாரு''
 "ப்ப்ரேம்ம்ம்ம்ம்..''
 "ப்போ போச்சி மறஞ்சிட்டு, ப்போ அதுபோய்ட்டு நீ பாக்காம உட்டுட்ட... இன்னேரங் கடலதாண்டி போயிருக்கும். அப்பா சொன்னிச்சி அந்த பக்கந்தாங் கடலு இருக்காம்னே''
 "ச்சே... போச்சா நா பாக்காம உட்டுட்டன்டா''
 "நீ எங்காக்க பாத்த? நான்தான் கைய காட்டுனேல்ல அங்ன பாக்க வேண்டிதான... முந்தா நேத்து ஒரு ஏரப்ளானு இந்தா இங்க கீழ இங்குன போவுனிச்சி. பனமரத்த தொட்டுகிட்டு போவுனிச்சி''
 "உண்மையாவாடாய்யே... புளுவுதான நான் நம்ப மாட்டேன்''
 "ஹே... சத்தியமாண்ணே உண்மையிலே பனமரத்த தொட்ட்டுகிட்டு போவுனிச்சி. சரியான சத்தம் இத விட பெரிசு தெரியுமா? சத்தியமா நான் பாத்தேன்...''
 "டே புளுவாதடா நீ... சத்தியம் சக்கரப் பொங்க... விடிஞ்சா வைத்து பொங்க னு சொல்ற ஆளு... நா நம்ப மாட்டேன்..''
 "ப்போண்ணே நம்புனா நம்பு நம்பாட்டி ப்போ...நம்ம நொண்டிவீரஞ் சாமி சத்தியமா...''
 "நொண்டிவீரஞ் சாமி சத்தியமாவா? சரிடா சரிடா ரொம்ப பெருசோ...''
 "சரி பெருசுன்னஅய்யோ ஆ...கால் சுடுது. வா மரத்தடிக்கு போவோம். ஊகூவ்.''
 "ஹா... ஹா......சோப்ளாங்கி ஒங்காலு சுத்தமா சூடு பொருக்க மாட்டங்குதுடா... ஹா... ஹா..... என்னதான் சாப்புடுறே நீ ப்போ...''
 "அண்ணே அம்மா வந்துச்சினா சொல்லுண்ணே ஓடணும்..''
 "ஏன்டா''
 "இல்ல அம்மா வெறவுக்கு கூராஞ்சி பொருக்க சொன்னிச்சி. நான் அப்டியே ஓடிவந்துட்டேன். வந்தா அடிக்க தொரத்தும்.''
 "ச்சரி எந்திரி எந்திரி இந்தா கிட்ட வந்துட்டாருடா...''
 "ம்...எப்டின்ன நாமலா கேக்குறதா...''
 "அதல்லா வேண்டாம் அவருக்கு என்னய தெரியும். அவரே மூச்சுவாங்கி எறங்குறாரு பாரு கண்டிப்பா நம்மள கூப்டுவாரு. இந்தா ஏதோ பேச வாராரு''
 ஐஸ்வண்டிகாரருக்கு இவர்களைப் பார்த்தும்தான் பாதி உயிர் வந்தது. தினமும் காலையில் பெட்டியை சைக்கிளில் வைத்து கட்டும்போது இந்த புழுதி பாதை நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. இந்த இடத்திலிருந்து கால்மணி நேர நடைதூரம்தான். அதைக் கடந்தால் ஒரு தார்சாலை வந்துவிடும். ஆனால், கணுக்கால் புதையுமளவு புழுதி, உச்சி வெயிலின் இறுதி நேரமிது. புழுதி கொதிப்பின் உச்சத்தில் இருக்கும் நேரம் இவ்வளவு கனத்தை வைத்து கொண்டு எவர் உதவியுமில்லாமல் அவரால் இதைக் கடக்கவே முடியாது.
 பூவரச மரநிழலையடைந்ததும் இறங்கினார். புழுதிக்குள் சக்கரம் புதைந்து நழுவும் சைக்கிளை தனக்கே விதிக்கப்பட்ட அபிநயத்தில் சீட்டை தன் பக்கவாட்டு இடுப்பில் அணைய வைத்து முழுப் பளுவையும் ஒற்றை காலில் தாங்கிகொண்டார். சைக்கிள் கைப்பிடியில் கட்டி வைத்திருந்த துண்டை உருவி தன் முகத்தில் ஒழுகிய வியர்வையைத் துடைத்தார். அதே நிலையில் பின்புறமாக திரும்பி ஐஸ்பெட்டியின் மத்திமத்தில் இருந்த கையகல சதுரவடிவ மூடியை திறந்து உள்ளிருந்து ஒரு பாட்டில் தண்ணீரை யெடுத்து மடமடவென குடிக்கத் தொடங்கினார். பாதி குடித்ததும் பாட்டிலை இறக்கி ஒருமுறை அதைப் பார்த்தார். அது ஒரு பழைய பிராந்தி பாட்டில். முழங்கை உயரமுள்ள அதை ஒரு வருடங்களுக்கு முன்பு அவருடைய மச்சானின் பழைய இரும்பு வாங்கும் வண்டியிலிருந்து "இத எடுத்துகிறேம் மாப்ள தாவத்துக்கு தண்ணி கொண்டு போவ' ன்னு வாங்கிவந்தது தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் பாட்டிலைப் பார்க்கையில் இந்த நினைவு வரும் கூடவே வர்ர தைய்யிகுள்ற மச்சானுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிப்புடனும் என்று எண்ணிக்கொள்வார். மீதி தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டு இவர்களைப் பார்த்து புன்னகைத்தார்
 "த்தம்பியாளா வெயிலு என்ன இந்தோ கொளுத்து கொளுத்துது... யப்பா முடியலப்பா... செத்த நெழல்ல நின்னுட்டு போவோமா?''
 "ஆங் சாண்டு போட்டுட்டு வாங்கனே''
 "இல்லப்பா ஒடனே போவனும். சீக்கிரம் போனாதான் தெக்காட்டு பள்ளிகோடத்ல சாயந்தரம் மூன்றுமணி ஒன்னுக்கு பெல்லு அடிக்குறத்துகுள்ள போ முடியும். லேட்டாவுனிச்சினா இன்னிக்கு யாவாரம் அவ்ளதான் படுத்துக்கும்...நின்ன நெலயில போ வேண்டிதான்''
 "சரிண்ணே இந்த பொட்டிக்குள்ள ஐஸ் தயாரிக்குற மிசினு இருக்காண்ணே...''
 "மிசினா ஹா... ஹா... ஹா... அதல்லாம் இல்லப்பா உள்ள தெர்மகோலு அட்டையும் அது உள்ள ஐஸ்கட்டி சுத்தி இருக்கும். அதுல ஐஸ் குச்சி அடுக்கி வைச்சிருக்கோம் அவ்ளதான்...''
 "ஓ..அப்டியா சரிண்ணே''
 "சரி... தம்பி போலாமா''
 "ரொம்ப வேகமா தள்ளிப் புடாதிங்க லேசா
 தள்ளுங்க''
 "ஆங்... சரிண்ணே ட்டே நீ இந்தப் பக்கம் வாடா...''
 "ஆங் சைக்கிள நேரா புடிச்சிக்கெங்கண்ணே போலாம்''
 "தள்ளு... தள்ளு... ஹே...தள்ளு..தள்ளு''
 "தம்பி... தம்பி... மெதுவா தள்ளுங்கப்பா இல்லனா புழுதியில சருக்கியூட்ரும் மெதுவா மெதுவா''
 "ஆங்... போதும் போதும்... ஆனா சுத்துவட்டத்துல ஒங்கூரு சலங்க புழுதி மாதிரி எங்கயும் பாத்ததில்ல தம்பியளா..''
 ஐஸ் பெட்டியின் பின்புறம் இருவரும் தரையை பார்த்தபடி புழுதிக்குள் கால் புதைய சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றனர்
 "ட்டே தலய தூக்காத... கீழ குமிஞ்சி தள்ளு அங்க சித்தப்பா மட்ட கிழிச்சிகிட்டு இருக்கு. பாத்தா சத்தம் போடுன்டா''
 "ஆங்...ச்சரிண்னே காலு ரொம்ப சுடுதுண்ணேபுலுதி கொதிக்கி...''
 "அட இன்னும் கொஞ்சதூரந்தான்டா... இந்தா ரவி யண்ண ஊட்டு வாசவரைக்கும் இப்டி தள்ளிட்டா அப்பறம் கப்பி ரோடு வந்துரும் அவ்ளதான்ம்... தள்ளு ரொம்ப சுட்டுச்சின்னா ந்தோ அந்த பில்லு திட்டுல நின்னுக்க நான் கப்பி ரோடு போனதும் நீ ஓடி வந்துக்கலாம்ப்போ...''
 "இல்லனே வேண்டாம் நானுந் தள்றேன்''
 "ம்ஹூம்ம்ம்...ஹா......ஊ...ஹா......ஊ..ஹே... ''
 "ட்டே சோப்ளாங்கி ஏன்டா இப்டி எறைக்கிது? நீ போ அந்த பனமரத்தடில கொஞ்சம் சருவு கெடக்குபாரு, அதுல நின்னுக்க நா ஒனக்கும் வாங்கிட்டு வாறேன் இல்லனா வண்டி கப்பி ரோட்ட நெருங்ககுள்ள நீயும் ஓடி வந்டு''
 "ஹூஹூ...வேண்டாண்ணே... நான் தள்றேன். காலுதான் கொதிக்கிது.''
 "இன்னும் பத்து தப்படிதான்... வாயால மூச்ச உடாத ரொம்ப எறைக்கும்ம்...''
 "ஆங் தம்பியளா போதும்ப்பா...கப்பி ரோடு வந்துருச்சி இப்ப ஏறி அழுத்துனா தெக்காட்டுக்கு போவ சரியா இருக்கும். போதும் போதும் ஆங் சொல்லுப்பா செவத்ததம்பி ஒனக்கு எப்பவும் போல சேமியா ஐசா''
 "ஆமாண்னே இவனுக்கும் சேமியா ஐசே குடுங்க...''
 "சரிப்பா தம்பியளா என்ன வேணுமோ வாங்கிக்குங்க... எவ்ளோ வேணுமோ வாங்கிக்குங்க... நீங்க இல்லனா இந்த பாழும்புலுதில இவ்ளோ சொமய வச்சிகிட்டு தள்ளிகிட்டு வரமுடியுமா.''
 "ஆங்.. இந்தாங்க ரெண்டு சேமியா ஐஸ் அப்பறம்...
 புதுத்தம்பி ஒங்களுக்கு என்ன வேணும்...''
 "வேற ஏதாவது வேணுமா...''
 "பாலைஸ் எனக்கொன்னு அண்ணனுக்கு ஒன்னு குடுங்க''
 "ஓ...கருப்புதம்பிக்கு பாலைசுதான் வேணுமா..ஹா... ஹா... ஹா... இந்தாங்க புடிங்க புடிங்க என்ன இப்டி வேத்து ஊத்துது ஐûஸ சாப்ட்டுட்டு இப்டி நெலல்ல ஒங்காந்துட்டு போங்க... சரிப்பா வேற ஏதும் வேணுமா''
 "வேண்டாண்னே கைய்யி ரெண்டுதான இருக்கு''
 "ஹா... ஹா... ஹா... சரிப்பா நா போறேன் எனக்கு நேரமாய்ட்டு''
 "அட வேற என்னப்பா இந்த தம்பி இன்னும் ஏதோ வேணும்போல பாக்குது இன்னொரு ஐஸ் வேணுமா...''
 "இல்லண்னே அந்த ஆரன ஒரே ஒருவாட்டி அமுக்கி பாத்துகிறேண்னே...''
 "அட அதுக்கென்ன இங்கிட்டு வாங்க''
 "அண்ணே இந்த ஐûஸ செத்த புடியேன் ஹே...ய்... மாத்தி ஏன் ஐûஸ உறிஞ்சிபுட மாட்டியே''
 "ஹா... ஹா... ஹா... இல்லடா ...ப்போ.''
 "ப்பார்ம்...ப்பார்ம்..ஹி ஹி ஹே......ப்பார்ம்...ஹி ஹி..''
 "ட்டேய்...கிறுக்கு பெயலே இங்க வாடா... ஐஸ்காரண்ணே நீங்க கௌம்புங்கண்னே''
 "ஹா... ஹா... ஹா... சரிப்பா வாரனப்பா நாளைக்கும் வந்துருங்க...''
 "ஆங் வந்துர்றோம். ஆனா இன்னும் ஒருவாரந்தான் எங்க தாத்தாவுக்கு கருமாதி முடிஞ்சா அப்பறம் நாங்களும் பள்ளிகோடம் போயிருவோம்''
 " படிப்புதான் முக்கியம். கண்ணுகளா,அதுக்கு நெகரா எதுவும் இல்ல சரிப்பா நேரமாய்ட்டு நான் ய்யேம் பொழப்ப பாக்குறேன்''
 என சொல்லிவிட்டு சிறிய வருத்தத்தை உதிர்த்தபடி சைக்கிளில் ஏறி மிதிக்கலானார்.
 "ப்ராம் ப்ராம்' சத்தம் இவர்கள் காதுகளை விட்டு முழுமையாக அடங்கும் வரை அவர் போன திசையையே பார்த்தபடி நின்றிருந்தனர்.
 "அண்ணே வெயிலு மண்டய பொளக்குது அங்க பாருனே மேச்சல்ல நின்ன மாடல்லாம் ஈச்சமரத்தூருல போயி ஒன்டி கெடக்கு. நாம...செத்த இந்த நொச்சி மர நெலல்ட்ட நிக்கலாம்னே ஒரு ஐûஸ தின்னுட்டு இன்னொரு ஐஸ நடந்துட்டே தின்னுட்டு போவலாம்''
 "ம்...சரி...சீக்கிரம் சாப்புடு இல்லனா உருவி போய்டும்...மொதல்ல நீ எத சாப்டபோற''
 "பாலைஸ''
 "ஸ்ர்ர்ர்...ஊவ்.ஊ...ஊஊ...அண்ணே ஐûஸ கடிச்சிபுட்டேன் ய்யோ...ஊஊ.ஊ.ஊ பல்லு கூசுது''
 ஹா... ஹா... ஹா...
 "சிரிக்காத...சரி இப்ப வெயில்ல இந்த காலு பொதையிற சுடு புலுதில எப்டினே வூடு போயி சேர்ர்ரது''
 "அதுக்கும் ஒரு வழி இருக்கு... ஒரு கைல மிச்சமிருக்க சேமியா ஐûஸ வச்சிக்க இன்னொரு கையால இந்த நொச்சு கொப்ப ஏழெட்டு ஒடிச்சிக்க வா போவலாம்''
 "இது எதுக்கு நொச்சி கோப்பு ஆடு கோட மோந்துபாக்காது''
 "ட்டே வா...டா நான் சொல்றேன்''
 "ம் வெயில் புழுதி வந்துட்டு''
 "ஓடு...''
 ஓடு...காலு ஆ... ஸ்ஸ்ஸ்ஸ்...ஆ...சுடுது சுடுது...ஸ் ஆ...இதுக்குமேல என்னால ஒரு அடி எடுத்து வக்க முடியாது காலு கொதிக்கிஅய்யோஸ்ஸ்ஸ்ஸ்...ஆ''
 "ஆங் இப்ப கைல இருக்க நொச்சி கொப்ப புழுதில போட்டு அதுல நின்னுக்க...''
 "அய்... ஓ...இதுக்குதானா.இந்த நொச்செலயா... ஹா... ஹா... .சரியான ஐடியாண்னே...காலு குளு குளுனு இருக்குணே''
 "ஹா... ஹா... ஹா... இப்ப ஐûஸயும் உறிஞ்சிக்க இன்னும் குளு குளுன்னு இருக்கும் ட்டே... என்னடா ஐசு உருவி மொழங்கை வரையும் வழியிது பார்ரா... ஓடுனதுல ஐஸ உறிய மறந்திட்டியா ஹா... ஹா... ஹா...''
 "கொஞ்சதூரம் ஓடணும். அப்றம் ரொம்ப சுட்டா இத தரையில போட்டு நின்னுக்கனும்அவ்ளதான் புலுதி சுடாது...''
 "ஆமா.. போம்போது ஐஸ் ஞாவத்துலயே தள்ளிட்டு போனதுல சூடு ஓரளவு தாங்கனு மாறிதான்டா இருந்துச்சி. இப்ப ஏன் இவ்ளோ சுடுது...''
 "அது ஒன்னும் இல்லனே ஒரு ஐஸ் தின்னதுல நம்ம ஒடம்பு கால் வரைக்கும் குளுந்து போச்சி...''
 "ஹா... ஹா.....ஹா..... ம்...இருக்கலாண்டா''
 இருவரும் சேமியா ஐஸ் தந்த லயிப்பில் சின்னத்தேவர் வீட்டு வாசலைக் கடந்து கொண்டிருந்தபோது, அவருடைய கட்டை குரல் ஒலித்தது
 "எலேய்..ய்யேய்... ஒங்களத்தான்டா நில்லுங்கடா யே
 மருதா இந்தா இந்த மட்டைய கொஞ்ச கிழிச்சி போடு இந்த வந்துர்றேன். ஒரு வெசாரண இருக்கு. அந்தா போவுதுவோ பாத்தியா எல்லாந் தெக்க அலயாத்திகாட்ல திரிய வேண்டியதுவோ பூரா யேன் அண்ணந்தம்பியோலுக்கு புள்ளய வந்து பொறந்துருக்குவோ, எல்லாஞ் சரியான காட்டுப்பாக்கம்... எலேய் ங்கேருங்கடா செத்த நில்லுங்க எங்க இப்டி எடுப்புந்தொடுப்புமா போறீய ஆங்''
 பெரியவன் ஓடிவிடலாமா என நினைத்தான். தம்பியிடம் ஒரு முறை எச்சரித்தான்,
 "ட்டே சித்தப்பா கூப்டுது... நம்ம ஐஸ்வண்டி தள்ளிட்டு போனத பாத்ருக்கும் போல''
 அதற்குள் அவர் கேட்டே விட்டார்
 "ஏதுடா கைல ஐசே...''
 "ஐஸ்வண்டிகார்ருட்ட வாங்குனோம்''
 "ஒங்கள்ட்ட ஏதுடா காசு, வண்டி தள்ளி கொண்ட கொடுத்து வாங்கி நக்குறியளோ? ஒழச்சி திங்கனும்டா... இப்டி கண்டவன்கிட்ட கைநீட்டி நக்கப்புடாது''
 "இல்ல நாங்க ஒன்னும் எரவதீனி திங்கள நாங்களும் ஒழச்சிதான் திங்கிறோம். இந்த புழுதில அவரலா தள்ளமுடியல. நாங்க தள்ளிட்டு போன ஒழச்ச காசுதான் இதுஆமா...''
 "ட்டே... ட்டே சித்தப்பா பேசிட்டே கிட்ட வந்து வேலில கம்ப ஒடிக்கும். தெக்கால காட்ட பாக்க ஓட தயாரா நில்லு...வேட்டிய மடிச்சி கட்டுனிச்சினா ஓடிரலாம்''
 சின்னத்தேவருக்கு முகத்தில் எள்ளுங்கொள்ளும் வெடித்தது...
 "ஓ ஹே...ô இன்னும் பால்பல்லு உளுந்து மொளைக்கல, அதுக்குள்ள நாயம் பொளக்குறியளோ''
 தனது தம்பியை இடையிடையே தோளைப் பிடித்து பேசாதே பேசாதே என குறிப்பாக சொன்னபோதிலும் வார்த்தைகள் அதன்போக்கில் வந்து விழுந்துகொண்டிந்தன.
 "எங்கடா ஓன் ஓயா...இன்னிக்கு வரட்டும் வரம் வாங்கி தவம்வாங்கி பெத்தபுள்ளனு மடில போட்டு சீராட்டுனத்துக்குத்தான்... நீ இப்டித்தான்டா வாய் கொளுப்பெடுத்து பேசுவ''
 "...''
 "சின்னபுள்ளயே..சின்னபுள்ளேய் எங்கூட்டு ஆட்ட காவடிய பாத்தியளா? வெறவுக்கு கூராஞ்சி பொறுக்க சொன்னே அது எங்கயோ கால்ல றெக்கய கட்டிகிட்டு தொலஞ்சிட்டு பொழுதுபட்டதும் ஊட்டுக்கு தான வரணும் ரெண்டு காலயும் ஒடிச்சி போட்டாதான் அது அடங்கும்...''
 கொல்லைப் புறத்திலிருந்து ஒலித்த குரல் வைக்கோல் போரை கடந்து இவர்களிடத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தது.
 தம்பியின் கையை மீண்டும் பிடித்தான். அவன் பெரும் ஆபத்தில் சூழப்பட்டிருப்பதை உணர்ந்தவன் போல "ட்டே அந்தோ ஒங்க அம்மாவும் வாராவோடாஇன்னிக்கு தொலைஞ்ச. வேலி நெருங்கி வந்தா ஓட ரெடியா இருந்துக்க''
 இவர்கள் மீது ஒரு கண்வைத்தபடியே சின்னத்தேவர் பதிலளித்தார்...
 "இங்க வா ஓன் புத்ரபாக்கியம் ... இந்தா வேலி படலுகிட்டதான் நிக்கிதுயான்டா ஓன் ஒப்பன் மத்தவங்க ஊட்ல ஒரு கொவள தண்ணி கொட தொடமாட்டான். நீ என்னடான்னா ஐசிகாரனுக்கு சேவகம் பண்ணேன்னு நாக்கு தூக்கிட்டு திரியிற ட்டே மொதல்ல ரெண்டுபேரும் அந்த ஐûஸக் கீழ போடுங்கடா யாண்டா இவ்ளோ பேசுறனே ஒங்களுக்கு ஒரக்கைலயாடா...''
 "இல்ல ஒரைக்கல சித்தப்பா... சேமியா ஐசு இனிக்கி''
 "அடிங்க... ங்கொப்ந்தன்னான...''
 பட்பட்படார்...
 "ட்டே டே வேலி கம்ப ஒடிக்கிறார்டா ஓடு ஓடு ஓடு''
 "யேய்...நில்லுங்கடா''
 "சின்னபுள்ள...என்னாச்சி''
 "இங்க ஓடியா ஓன் மொவன் தெக்கால காட்ட பாக்க பரியிறான். இங்கன குள்றயே வெரட்டி புடிச்சாதான் உண்டு. காட்டுக்குள்ள பூந்துட்டானுவோனா புடிக்க முடியாது நீ அந்தபக்கமா ப்போ''
 "ஹா... ஹா... ஹா......ஓடுறா ஓட்றா... இன்னிக்கு மாட்டுனா அவ்ளதான் தொலஞ்சோம் அப்டியே ஓடு அவங்க ஈச்சங்காட்ட தாண்டி வந்து நம்ள பாக்குறத்துள்ள நம்ம அத தாண்டி ஓடி அந்தோ அந்த நாவ மரத்துல ஏறிட்டா தப்பிடலாம் ஓடு ஓடு ஹா...''
 "ஹா... ஹா... ட்டே ட்டே...ட்டே ஐசு கீழ உளுந்துர போவதுடா இன்னொரு கையால புடிச்சிக்க ஓடு ஓடு ஹா... ஹா... ஹா....''
 சின்னவன் ஓடிய திசையைப் பார்த்து தேவர் பதறி நின்றுவிட்டார்
 "அடே ட்டே நில்றா எலேய் ஓடுனா புழுதிலேயே ஓடு முள்ளுகாட்டுகுள்ற ஓடாதடா. டேய்... ஈச்சமுள்ளு கெடக்கும் கால்ல ஏறிட போகுது ட்டே நா தொரத்தலடா ஓடாத நில்றா'' என சின்னத்தேவர் கத்திகொண்டிருக்கும்போதே சின்னவன் ஈச்சஞ்சருவில் கால் வைத்தபோது, "அம்மோ...'' என கதறியபடி சுருண்டு விழுந்தான். ஓடிக்கொண்டே பார்த்த அண்ணங்காரனுக்கு விபரீதம் பெரிதானது புரிந்துவிட்டது. திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான். யாரோ இந்த காட்டில் வீசிய உடைந்த பாட்டில் மூன்று விரல் சுற்றளவிருக்கலாம். அநேகமாக அது பன்னீர் பாட்டிலாகதான் இருக்கும் அருகில் இருக்கும் யார்வீட்டிலோ இறுதிச்சடங்கு முடித்துவிட்டு வீசபட்டது. இப்போது உடைந்த நிலையில் இருந்ததால் எளிதாக குதிகாலில் கால்வாசி ஏறி இருந்தது
 இதை பார்த்து அப்படியே நின்ற மூத்தவன், திடீரென தன்னை சுதாரித்து, சேமியா ஐûஸ உதறி வீசிவிட்டு வேறு திசையில் ஓடத்தொடங்கினான்.
 பின்னால் சாலையில் எச்சரித்த சின்னத்தேவர் ஓடி வந்து "அய்யய்யோ...''என கதறியபடி துடித்து கிடந்த அவனை இருகையால் வாரி அள்ளினார்.
 அவனது அம்மா ஓடிவந்து தலையடித்து கொண்டு "க்கோ...'' வென அழத்தொடங்கினாள்.
 "ய்யே மருதா... ஓடியா ஓடியா அந்த முருங்க எலயில நாலு கொப்பு ஒடிச்சா''
 சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த மட்டை முடையும் பெண்கள் சாலைக்கு ஓடி வரத்தொடங்கினர்.
 பாட்டிலை மெதுவாகப் பிடித்து கணுக்காலை ஒரு கையால் பிடித்தபடி உருவத்தயாரானார்.
 லேசாக அசைத்ததில்,
 "ம்மா ஆ...''என அலறினான். சட்டென உருவியதும் ரத்தம் சலசலவென கொட்ட தொடங்கியது.
 அதை பார்த்தில், அவன் அம்மா மறுபடி பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.
 "ந்தேரு ப்ப வாய் மூடுறியா இல்லையா ஹே... இப்ப எல்லா வழிய உடு காத்த மறைக்காதிய... ஒதுங்குங்குங்க இங்குட்டு'' என்று அவர் சத்தமிட்டதும் எல்லோரும் விலகி ஒருபக்கமாகினர். ஆனால், அதே புழுக்கம் சூழ்ந்திருந்தது. வெக்கை அவர்களை மூச்சடைக்க கட்டித் தழுவியிருந்து. இந்த கொடுந்துயரை கண்டு உருமி ஆனந்தம் கொள்வதை போல அந்த ஊர் முழுவதும் சொல்லி சிரித்தபடி நின்றது.
 "தண்ணி கொண்டாங்க'' என்று ஒருவர் சத்தமிட்டதும் இரு பெண்கள் பைப்படிக்கு ஓடத்தொடங்கினர்.
 குதிகாலில் தண்ணீரை ஊற்றியதில் அந்த இடமே ரத்தமயமானது.
 முருங்கையிலையை கைகளாலயே கசக்கி கசக்கி ஒரு டம்ளர் அளவு பிழிந்துவிட்டார். ரத்தம் நிற்பதாக தெரியவில்லை. பச்சையும் சிவப்புமாக கரைத்துக் கொண்டு ஓடியது.
 அவரது மடியில் படுத்தபடி தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாய்திறந்த அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான்.
 கசக்கிய முருங்கை இலையை அப்படியே வெட்டு
 வாயில் வைத்து வேட்டி துணியை கிழித்து கட்டினார்.
 தோளில் தூக்கி வைத்தபடி எழுந்தார்.
 செய்தி தெரிந்து சமையல்கட்டிலிலிருந்து கொல்லைபுறமாக ஓடி வந்துகொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்து...
 "எட்டியேய் அந்த சட்டய எடுத்தா அப்டியே சாமி மாடத்துல ஆயர் ரூவா பணம் வச்சிருந்தேன் அதையும் எடுத்தாடி'' என குரலெழுப்பினார்...
 ஓலமிட்டுக் கொண்டிருப்பவனை அவனது தாயிடம் கொடுத்துவிட்டு சட்டையைப் போட்டுக் கொண்டு மருதன் ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு வந்து கொடுத்த சைக்கிளில் ஏறி,
 "புள்ளய பத்தரமா புடிச்சிகிட்டு ஒக்காரு'' என சத்தமிட்டார்.
 கொஞ்சம் வேகமாக போனால் கோயிலடியை அடைந்துவிடலாம் "ஆட்டோதாஞ் சரி இந்த ஊர்ல பஸ்க்கு நிக்கிறதும் கோடமழைக்கி தொன்னாந்து நிக்கிறதும் ஒண்ணுதான்... ரெண்டு ஆட்டோவுல ஏதாவது ஒன்னு சவாரி போய்ட்டாலும், இன்னொன்னு இருக்கும் சாப்பாட்டு நேரமாக வேற இருக்கு. ஒருவேள ரெண்டுமே இல்லனா என்ன பண்றது? நேரா இடும்பாவனத்த பாக்க கம்போன்ட்ரு வீட்டுக்கு மிதிக்கலாமா’ என யோசித்து கொண்டே மிதிக்கையில் அவனது அலறல் சத்தம் மேலும் குழப்பமூட்டியது. நிமிர்ந்து பார்க்கையில் தூரத்தில் ஆட்டோ ஒன்று வருவது தெரிந்தது. "நம்ம மேலக்கர ராமசாமியண்ன மொவனாத்தான் இருக்கும். சவாரி போய்விட்டு கோவிலடி யோ அல்லது சாப்பாட்டுக்கு வீட்டுக்கோ போறான்போல' என நினைத்துகொண்டார்.
 "எறங்கு எறங்கு புள்ள பத்தரம்'' அவர்கள் இறங்கியதும் இவரும் இறங்கி ஆட்டோவுக்காக நின்றனர்.
 ஆட்டோவின் வேகம் குறைந்தது, இவர்கள் நின்ற கோலத்தையும் சிறுவனின் அலறல் சத்தத்தையும் கேட்டதில் உள்ளிருப்பவனுக்கு ஏதோ விபரீதமென புரிந்துவிட்டது. ஆட்டோவை வந்த திசையை நோக்கியே வளைத்து நிறுத்திவிட்டு உள்ளிருந்து பதறியபடி குதித்து இறங்கினான் ஒரு தாடி வைத்த இளைஞன்.
 " அண்ணே என்னாச்சிண்ணே எங்க போவனும் அய்யோ! இது என்ன புள்ள கால்ல இவ்ளோ ரத்தம்? ஏறுங்க ஏறுங்க உள்ள ஒக்காருங்க'' என்றதும் எதுவும் யோசிக்காமல் உள்ளே ஏறி அமர்ந்தார். ரத்தம் ஒழுகி கட்டு நனைந்த கால்களை தன் மடியில் வைத்து கணுக்காலை சிறிது இறுக்கிப் பிடித்தார். ஒருவேளை ரத்தப்பெருக்கு குறையாலாம் என்ற நினைப்பில்.
 அவன் தனது தாயின் மடியில் தலை வைத்தபடி கேவி கேவி அழுது கொண்டிருந்தான்.
 அவளது கண்களில் கண்ணீர் வடிந்து காய்ந்து போயிருந்தது, தொண்டை கம்மல்குரலில், "ஒரு எடத்துல அடங்கி இருனா கேட்டாதான... எல்லா ஏன் தல விதி பட்ட கால்லயே படும் கெட்ட குடியே கெடும்பவோ ஏங்குடி கரயேற வழியே இல்லயாடி ஓடக்கர மாரியாத்தா'' என ஆட்டோவுக்குள் வானத்தைத் தேடி புலம்பியபடி அடுத்த அழுகைக்குத் தயாரானாள்.
 இவ்வளவு நேரம் அமைதியாக யோசனையிலேயே வந்துகொண்டிருந்த சின்னதேவர் ஆவேசமாகி கத்தத் தொடங்கினார்:
 "நா அப்பவே தலமூச்சா அடிச்சிகிட்டேன். இந்த கெழப்பெய செத்த ரெண்டான் நாளே இவனுவோள பள்ளிகோடத்துக்கு அனுப்பியுட்ரலாம்னு. கேட்டாதான, நீங்களுவோதான் பேரப்புள்ளவோ பூராப்பேரும் பதினாறு நாளும் ஊட்லயே இருக்கனும்னிய. இப்பே நேத்து ஒருத்தனுக்கு கைய்யி ஒடயிது. இன்னக்கி ஒருத்தனுக்கு கால்ல கிளாஸ் ஓடேறுது. அவன் என்ன
 பெரியமகாத்மா காந்தியா? இப்ப அவனுக்கு பதினாறு நாளு துக்கம் விசாரிக்கலனா குடியா முழுவிப் பொய்டும்...''என்று பெருங்குரலெடுத்து கத்தினார்
 அவரது தந்தையாரின் ஆத்மா கேட்டிருந்தால் அப்போதே சாந்தியடைந்திருக்கும்
 "எங்கண்ணே போவணும்''
 "முத்துபேட்ட மீராஉசன் ஆசுபித்திரிக்கு உடப்பா பயலுக்கு கால்ல தையல் போடணும். கிளாஸ் ஓடு ஏறிட்டு''
 அது வரை அழுது கொண்டிருந்தவன் சட்டென நிறுத்தினான். முத்துபேட்டை என்ற வார்த்தையைக் கேட்டதும் முந்திரி பருப்புகளும் இன்னும் சில பெயர்தெரியாத பருப்புகளும் தூவிய ஐஸ்க்ரீம் கண்முன்னே வந்து போனது. இப்போது அழுது தொண்டை கம்மிவிட்டால் பிறகு அழமுடியாதென நினைத்த கணத்திலிருந்து பல்லைக் கடித்து வலியை விழுங்கத் தொடங்கினான்.
 தனது கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டே மகன் முகத்தை குனிந்து பார்த்தாள். அவன் பல்லை இறுகக் கடித்து கொண்டிருந்ததில் தலை லேசாக நடுங்கி கொண்டிருந்து
 ஆட்டோ பட்டுகோட்டை செல்லும் மெய்ன் ரோட்டை பிடித்து வேகமாக விரைந்தது வீசியடித்து படபடக்கும் காற்றில் வெக்கை கொஞ்சம் விலகி இருந்தது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/k6.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/புழுதி-3216292.html
3216291 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, August 18, 2019 11:22 AM +0530 ஒருவருடைய மனைவியை அவர்   வளர்த்த காளை மாடு முட்டிக் கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான  சம்பவத்தைக் கவனித்தார். துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, "ஆமாம்'' என்று தலையசைத்தார்.  ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கி வந்து ஏதோ சொல்கிறபோது, "இல்லை'' என்று தலையசைத்தார். 
அது தொடர்ந்து கொண்டே இருந்தது.  இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பின்னர் புரோகிதர் அந்த விவசாயியிடம், " பெண்களிடம் பேசும்போது ஆமாம் என்றும் ஆண்களிடம் பேசும்போது இல்லையென்றும் தலைஅசைத்தீர்களே, அது ஏன்?''  என்று கேட்டார்.  அதற்கு அந்த விவசாயி சொன்னார்: " பெண்கள் எல்லாம் வந்து என் மனைவியின் நல்ல குணத்தைப் புகழ்ந்து பேசினார்கள். அதனால் ஆமாம் என்றேன். ஆண்கள் எல்லாரும் என்னிடம் வந்து அந்தக் காளை மாட்டை விலைக்குக் கேட்டார்கள். இல்லை என்றேன்''
மா.உலகநாதன், திருநீலக்குடி.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/KATHAI.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/மைக்ரோ-கதை-3216291.html
3216290 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, August 18, 2019 11:20 AM +0530 கண்டது
• (கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் ஓர் அறையில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
உங்கள் வலியை மறக்க...
மனதைக் கவரும் புத்தகம் படிக்கவும்
அருகில் இருப்பவர்களிடம் பேசவும்
இசையில் மனதைச் செலுத்தி 
கேட்கவும்
வலி மறந்து (மறைந்து) போகும்.
மு.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர் -6

• (பொன்னமராவதியில் ஒரு ப்ளக்ஸ் கடையில்)
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்...
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்...
அ.கருப்பையா, பொன்னமராவதி.

• (நாகூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
வாய்க்கால் வெட்டு
என்.கஜேந்திரன், நிரவி.
யோசிக்கிறாங்கப்பா!
நீ மனுசனா... மிருகமான்னு 
கேட்டால் கோபப்படுறாங்க...
நீ சிங்கம்டா, புலிடான்னா 
சந்தோஷப்படுறாங்க.
க.அருச்சுனன், செங்கல்பட்டு.

கேட்டது
• (பட்டுக்கோட்டை கடைத்தெருவில் இருவர்)
" உங்களைப் பார்த்து நாலு வருஷமாச்சு. எப்படி இருக்கீங்க?''
"இந்த நாலு வருஷமா நல்லா இருக்கேன்''
தா.ஜெசிமா பர்வின், கரம்பயம்.

• (சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே இருவர்)
"யோவ்... உன் மகனும் உன்னை மாதிரி குசும்பு பிடிச்சவன்தான்யா''
"எப்படிச் சொல்றே?''
" போன வாரம் நான் வீட்டுக்கு வந்து உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கும்போது... போரடிக்குது ஏதாவது புக் இருந்தா குடுன்னு உன் மகன்கிட்ட சொன்னேன். அதுக்கு உன் மகன் கூச்சப்படாம கெமிஸ்ட்ரி புத்தகத்தைக் கொண்டு வந்து நீட்டுறான்யா''
வி.சீனிவாசன், சென்னை-62.

எஸ்எம்எஸ்
நண்பர்களெல்லாம் 
நம்பர்களாக
செல்போனில்...
க.நாகமுத்து, திண்டுக்கல்.

அப்படீங்களா!
மொழி தெரியாத இடங்களுக்குச் சென்றால் பிறர் பேசுவதைப் புரிந்து கொள்வது சிரமம். "பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்' என்ற இந்த காதில் மட்டும் கருவியை மாட்டிக் கொண்டால், தெரியாத மொழியைப் பிறர் பேசினாலும், இந்தக் கருவி மொழிபெயர்த்து உங்களுக்குத் தெரியும் மொழியில் சொல்லிவிடும். ஆனால் பேசிய உடனே மொழிபெயர்த்து இந்தக் கருவி சொல்லாது. அதற்கு சிறிது கால தாமதமாகும். 
தற்போது இந்தக் கருவி இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுகிறது. இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே செயல்படும்வகையில் இதை மாற்றி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இந்தக் கருவி ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளை மட்டுமே மொழிபெயர்த்துச் சொல்கிறது. ஆனால் உலகின் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கும் திறனை இந்தக் கருவிக்கு ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 
"நம் மொழி தெரியாது' என்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைச் சத்தமாகத் திட்டுபவர்கள் இனிமேல் அவர்கள் காதில் ஏதேனும் கருவியை மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்துத் திட்ட வேண்டும். 
- என்.ஜே., சென்னை-58.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/KANDA.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/பேல்பூரி-3216290.html
3216289 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... DIN DIN Sunday, August 18, 2019 11:17 AM +0530 • "உப்பு, காரத்தை தவிர்த்துடுங்க...
இனிப்பு புளிப்பை மறந்துடுங்க''
"துவர்ப்பு, கசப்பை விட்டுட்டீங்களே
டாக்டர்''
வி.ரேவதி, தஞ்சாவூர்.

• "புட்டிப்பாலை விட தாய்ப்பால்தான்
சிறந்தது...''
"ஆமாம் டாக்டர்... புட்டிப்பால்ன்னா பாட்டில் அப்பப்ப அழுக்காயிடுது. புட்டியைக் கழுவிக்கிட்டே
இருக்க வேண்டியிருக்கு''
அமுதா அசோக்ராஜா.

• காதலன்: எங்க குடும்பத்துல
நம்ம கல்யாணத்தை நடத்தவிட மாட்டாங்க போலிருக்கே
காதலி: நம்ம கல்யாணத்தை
யார் தடுத்து நிறுத்தப் போறாங்க?
காதலன்: என் மனைவியும்
மாமியாரும்தான்.

• நீதிபதி: பார்த்தா அப்பாவியா
தெரியுற... நீயா பிக்பாக்கெட்?
நம்பவே முடியலையே
திருடன்: உங்களை
மாதிரிதான்ங்க...எல்லாரும்
ஏமாந்துடுறாங்க
உமர் ஃபாரூக், கடையநல்லூர்.

• "டிவி கடையிலே ரிமோட் கேட்டதுக்கு அதெல்லாம்
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்னு சொன்னாங்களா? அப்படியென்ன ரிமோட் கேட்டீங்க?''
"பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட் இருக்கான்னு கேட்டேன்''
வி.ரேவதி, தஞ்சாவூர்.

• "இனி உன் புடவையை வேலைக்காரிக்குக் கொடுக்காதே''
"ஏங்க?''
"அவ துடைப்பத்தை எடுத்துக்கிட்டு வர்றதைப் பார்த்து பயந்துட்டேன்''
தீ.அசோகன், சென்னை-19.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/k5.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/சிரி-சிரி-3216289.html
3216288 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் DIN DIN Sunday, August 18, 2019 11:15 AM +0530 • வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் "மாநாடு'. "அதோ தொடங்குகிறார்கள்; இதோ தொடங்குகிறார்கள்' என செய்திகள் மட்டும் அவ்வப்போது அலையடிக்கும். 
இந்த மாதத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்தநிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்தப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். "அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். தன்னை வைத்து "மாநாடு' படத்தை எடுக்க என்னைத் தூண்டிய அவருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன். அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்கவிருந்த "மாநாடு' படத்தினைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க "மாநாடு' படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்'' என்று தெரிவித்தார். இந்தநிலையில் வெங்கட் பிரபு, "மாநாடு' படத்தில் எனது சகோதரருடன் வேலை செய்ய முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளர் அனுபவிக்கும் உணர்ச்சி மற்றும் பண அழுத்தத்தை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர் எடுக்கும் முடிவை நான் மதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

• தமன்னா சினிமாவில் நடிக்க வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அதிக படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். தெலுங்கில் "சைரா நரசிம்ம ரெட்டி', ஹிந்தி குயின் ரீமேக்கான "மகாலட்சுமி', தமிழில் "பெட்ரோமாக்ஸ்', சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அவர், கிளாமர் கலந்த ஹீரோயின் வேடங்களை மறுக்க ஆரம்பித்துள்ளார். காரணம், விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இது குறித்து தமன்னா கூறுகையில், "என்னைச் சந்திப்பவர்கள் முதலில் கேட்கும் அல்லது கடைசியாகக் கேட்கும் கேள்வி, எனக்கு எப்போது திருமணம் என்பதுதான். நானும் நல்ல மாப்பிள்ளையைத் தேடி வருவதாகப் பலமுறை சொல்லிவிட்டேன். தற்போது எனக்குப் பொருத்தமான மாப்பிள்ளை தேடும் பணியில் அம்மா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நான் யாரையும் காதலிக்கவில்லை. எனவே, என் திருமண விஷயத்தை பெற்றோர் முடிவுக்கு விட்டுவிட்டேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

• தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் "நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன் கூறும்போது, "நேர்கொண்ட பார்வை படத்தில் கெளரவ வேடம் என்றாலும் நல்ல அணியுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அஜித், ரொம்பவும் எளிமையானவர். இதற்கு முன் "கபாலி', "காலா' படங்களில் ரஜினியுடன் நடிக்க மறுத்ததாகச் சொல்கிறார்கள். "காலா' படத்துக்கு என்னிடம் யாரும் பேசியதில்லை. "கபாலி' வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் ஹிந்தி படத்தில் நடித்து வந்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆரம்பத்தில் மாதவனுடன் "ரன்' படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப்பட்டேன். "மனசெல்லாம்' படத்திலும் அதேபோல் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது. பின்னர் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது சினிமா பயணம் மாறியது'' என்றார். 

• "ஆடை' பட சர்ச்சைகளுக்குப் பின் அவரைப் பற்றித்தான் இணையதளங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. 
போராட்டத்துக்குப் பிறகு அந்த படம் வெளியானது. பெரிய சர்ச்சை எழும் என்று எதிர்பார்த்தநிலையில் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இனி அமலாபால் பற்றி பேச பரபரப்பு ஒன்றுமில்லை என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டநிலையில், இதோ மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்... சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து அரசியல்வாதிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நடிகை அமலாபால் இதுகுறித்து கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். "காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான ஆர்ட்டிகிள் 370-ஆவது பிரிவை ரத்து செய்திருப்பது ஆரோக்கியமான, நம்பிக்கை தரக்கூடிய தேவையான மாற்றம். கல்வி, வளர்ச்சி, அமைதிக்கு காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள். 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீரில் பெரிய வளர்ச்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எளிதான காரியம் அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று அமலாபால் ஏற்கெனவே ஒருமுறை குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அரசியல்ரீதியான கருத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். 

• மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில் நுட்பம் மூலம் உருவான "கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் தனக்குள்ள குறையை வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதாவது தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது அனுபவித்த வேதனைகளை அவர் தெரிவித்திருந்தார். 
"ஏழை, பணக்காரன் என்று யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரும். அதை மறைக்காமல் தகுந்த நேரத்தில் டாக்டரிடம் சொல்லி உதவி பெற வேண்டும். எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியுமே போராட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் அசதியாக உணர்வேன். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். யாருக்கும் மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அதை வெளியில் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதை வெளியில் சொல்ல சிலர் பயப்படுகிறார்கள்'' என்றார் தீபிகா படுகோனே. 
ஜி.அசோக்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/k4.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/திரைக்-கதிர்-3216288.html
3216287 வார இதழ்கள் தினமணி கதிர்  அவர் வருவாரா...? ஊத்தங்கால் ப.கோவிந்தராசு DIN Sunday, August 18, 2019 11:11 AM +0530 தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019 ரூ 5 ஆயிரம் பரிசு பெறும் இரண்டாம் பரிசு கதை
 கோபத்தில் மாமாவை விட்டுப் பிரிந்து வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டிருந்தன. பிரிந்து வந்திருந்த ஓரிரு நாட்களிலேயே என்னை அழைத்துச் செல்ல மாமா வந்திருந்தபோதெல்லாம் அவருடன் போகாமலிருப்பதற்காக அவரை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தியிருக்கிறேன். என் செயல்களைப் பெரிதுபடுத்தாத மாமா தொடர்ந்து என்னை அழைத்துச் சென்றுவிட பல தடவைகள் முயற்சி செய்திருக்கிறார்.
 திருமண பந்தத்தில் இணைத்து வைக்க அநேகம் உறவுகள் வந்து குதூகலித்தது போலவே, பிரிந்திருக்கும் எங்களுக்குள் சமரசம் செய்து சேர்த்து வைக்க முயற்சிகள் பல செய்தும் நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்தான் என்கிற என் மூர்க்க குணத்தால் அவர்கள் என்ன சொல்லியும் என்னால் சமாதானம் ஆகிவிட முடியாத சூழலில் இருவருக்குமான பேச்சு வார்த்தைகள் அப்படியே நின்று போயிருந்தன. இதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சேர்வோமா மீண்டும் உறவுகள் ஒன்றிணைந்து எங்களைச் சேர்த்து வைப்பார்களான்னும் தெரியல. அதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லாதிருப்பதுபோல எண்ணும்படியாக உணர்கிறேன். ஆனாலும் அவரோடு சேர்ந்திருக்க வேண்டுமாய் மனம் தவியாய் தவிக்கிறேன். என்னை அழைத்துச் செல்ல அவர் வருவாரா...
 மாமாவையே நெனச்சிக்கிட்டிருக்கிறதால சரியா தூக்கம் வர்றதில்ல. அப்படியே கண்ணசந்து தூக்கம் புடுச்சி படுத்திருந்தேன்னா பயப்படும்படியான ஏதேனும் காட்சிகள் தோன்றி திடுக் திடுக்கென்று விழிப்பு வந்துவிடுகிறது. சில்வண்டுகளின் ரீங்கார ஓசையுடன் கூடிய நடுச்சாம இரவின் அமைதி மனதிற்கு குதூகலமாயிருந்தாலும் அவரின் பிரிவு தந்திருக்கும் ஞாபகங்களினால் ஏற்பட்ட வலி வெப்பமாய்த் தகிக்கச் செய்கிறது. மின்னல் பளிச்சிட்டது போல காணும்படியான உருவத் தோற்றங்களை உணரத் தோன்றுகிறது. நிசப்தமான இரவும்கூட பேரிரைச்சலாய் இருக்கிறதேவென்று எண்ணும்படியான அசூயையான பேச்சுக்குரல்கள் கேட்டபடியிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். நடக்க முயற்சிக்கிறேன். தூக்கமின்மையால் உடல் சோர்ந்து கண்ணில் பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோன்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. மின்னதிர்வாய் குலுங்கி உடல் லேசானதுபோல நடை பிசகியது. ஆனாலும் சிவந்திருக்கும் கண்களில் சிரித்த முகமாய் அவரின் உருவமே வந்து நிற்கிறது.
 தோட்டத்து வெளிவாசல் சென்று முகம் கழுவி முந்தானையால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தேன். ஸ்டேண்டில் மூலையிலிருந்த டிவி முன் நின்று அதனோரம் ஒட்டியிருந்த ஒரு சிவப்புக் கலர் சிறிய வட்ட ஸ்டிக்கர் பொட்டினை விரல் நகத்தினால் சுரண்டியெடுத்து நெற்றியில் இரு புருவங்களுக்கும் மத்தியில் ஒத்தினேன். இரவு நேரத்தில் கண்ணாடிப் பார்க்க கூடாதென்பார்கள். அது ஏனென்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அந்த நேரத்தில் நான் கண்ணாடிமுன் நின்று மங்கலான இரவு விளக்கு வெளிச்சத்தில் ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டினைப் பார்த்தேன். என் மாமாவே என் நெஞ்சில் குடிவந்தது போலிருந்தது. கலைந்திருந்த தலைமுடியை இருகைகளாலும் நீவி காதோரமாய் வழித்துவிட்டு சரி செய்துகொண்டே படுத்திருக்கும் அம்மாவின் அருகில் வந்தமர்ந்தேன். அம்மா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். சற்றுத் தள்ளி தம்பி, அவனையடுத்து அப்பா. என்னைத் தவிர என்னைப்பற்றிய கவலை யாருக்குமில்லையென்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எல்லோருமே நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 தம்பி... அவன் என்ன செய்வான். அவன் சின்னப்பையன். அவனோடு விளையாட, செல்லமாய்ச் சண்டையிட, அவனுக்குத் தேவையானவைகளை நேரத்தில் செய்து கொடுக்க நான் பக்கத்தில் இங்கேயே இருந்து கொண்டிருந்தால் அவனுக்கும் நல்லதுதானே? நான் மாமாவோடு சேர்ந்திருந்தாலென்ன... இல்லாமல் போனால் அவனுக்கென்ன? அதனை யோசிக்குமளவுக்கு அவனுக்கு போதிய வயதுமில்லைதானே. ஆனால் சின்ன சலனம் கூட இல்லாதவர்களாய் இவர்களால் மட்டும் எப்படித் தூங்க முடிகிறது? எங்களை சேர்த்து வைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களாவென்றால் எதுவுமில்லை. அதுபற்றிய கவலை கொஞ்சமும் இவர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் இப்படி தன்னிலை மறந்தவர்களாய் தூங்கிக் கொண்டிருப்பார்களா...
 இன்னும் விடிய வெகு நாழிகையிருந்தது. யோசித்தபடியேயிருந்தேன். என்னருகில் படுத்திருந்த அம்மா புரண்டு படுத்தாள். தூக்கத்திலும் கைகள் என் பக்கமாய் நீண்டு தடவிப்பார்த்து நான் படுத்திருக்கவில்லை; உட்கார்ந்திருக்கிறேன் என்பதனை உணர்ந்து கொண்டவளாய் கண்விழித்துப் பார்த்தாள்.
 "ஏய்... ஏண்டி ஒக்காந்திருக்க?'' என்றபடி கண்களை மூடிக்கொண்டாள். "என்னை இங்கேயே தங்க வைச்சிக்கிட்டு என்னம்மா பண்ணப் போற... புருஷன் வீட்லயிருந்து கோவிச்சிக்கிட்டு தெரியாம வந்திட்டேன். சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிசாக்கி பொட்டுன்னு வெடிக்க வைச்சிட்டியேம்மா. நான்தான் சின்னப் பொண்ணு விவரம் தெரியாம அதையெல்லாம் பெரிசா நெனைச்சி வந்திட்டேன். எனக்கு புரிய வைச்சி அப்பவே என்னை என் புருஷன் வீட்டோட அனுப்பியிருக்கலாமே... நானும் சந்தோஷமாயிருந்திருப்பேனேன்னு'’ கேட்டுவிடவே மனம் பரபரத்தது. என் பதிலை எதிர்பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்பவள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமே. நேரங்கள் கரைந்தன. அவளின் முகத்தைப் பார்த்தபடியேயிருந்தேன். அம்மா கண்விழிப்பதாய்த் தெரியவில்லை. எனக்கும் தூக்கம் வருவதாயில்லை. ஏன் கோவிச்சிக்கிட்டு வந்தோம்ன்னு மாமாவின் நினைவுகள்தான் வந்தபடியிருந்து கொண்டிருந்தது.
 மாமாகிட்ட எது கேட்டாலும் அவர் அம்மாக்கிட்ட கேக்கறேன்னு சொல்றது... உடனே கிடைக்காமல் போகிற அந்த ஏமாற்றம் வெறுப்பைத் தந்தது. ஒரு சினிமாயில்ல. பார்க்கு இல்ல. ஒரு நாள் லீவு போட்டாலும் சம்பளம் போயிடும். சம்பளம் இல்லேன்னா கல்யாணத்திற்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதில் இழுபறி நிலையேற்பட்டுவிடும் போன்ற காரணங்களினால் வேலை வேலையென்று இயந்திரகதியில் ஓடிக்கொண்டேயிருந்த மாமா மீது கோபம் கோபமாய் வந்தது. அடைபட்ட கிளியின் மனவோட்டமான புழுக்கம் எனக்குள். நான் கேட்கிற எதுவும் சில நாட்கள் கடந்து அல்லது இரண்டொரு முறை நினைவூட்டலுக்குப் பிறகு எனக்கு கிடைக்கக் கூடியதாயிருந்தது மேலும் மாமாவின்மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இனிப்பாய் துவங்கியிருந்த வாழ்க்கை சின்ன சின்னதான ஆசைகளுக்கும் அத்தையின் அனுமதிக்கு காத்திருக்கும் மாமாவை வெறுக்கச் செய்தது. அவரைப் பிரிந்து வருவதற்கான உச்சபட்சமான கோபமாய் இதுவே எனக்கு அப்போதிருந்திருந்தது. கடனை அடைச்சிட்டு வந்து என்னை கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.
 கணவனுக்கு உள்ள கஷ்டங்கள், லாப, நஷ்டங்கள் சுக, துக்கங்கள் அனைத்திலும் மனைவியானவள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிற சின்ன விஷயத்தைக்கூட புரிஞ்சிக்காதவளா இருந்திருக்கிறேனே... பங்கெடுத்துக்க வேணாம். குறைஞ்சபட்சம் அவருக்கு நெருக்கடி கொடுக்காமலாவது இருந்திருக்கலாம்ன்னு எண்ணத்தோணுது. அதுமட்டுமல்லாமல் மாமாவை விட்டுப் பிரிந்து வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு தோணும்படியா கடந்துபோன இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகள் உணரும்படியாய் செய்து விட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்களால், "ஏன்... புருஷன் வீட்டுக்கு போகாம இங்கேயே வந்து தங்கியிருக்க. ஏதாவது பிரச்னையான்னு கேட்கிறபோது அதனால் ஏற்படுகிற ரணங்கள் பெரும் துயரம். நான் சொல்கிற பதிலைக்கேட்டு முகம் சுளிக்கிறபோது நான் செய்ததுதான் தவறோ என நினைக்க வைக்கிற வலி பெரும் சுமை. கல்யாணமாகி ஜோடி ஜோடியாகப் போகிறவர்களைப் பார்க்கும்போதும் திரும்பும் திசையெல்லாம் அவர் முகம் தெரிவது போலவே அவரை ஞாபகப்படுத்திய உணர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது அவரோடு பேச வேண்டும் போலிருக்கிறது. அவர் வருவாரா...
 எங்களைச் சேர்த்து வைக்க பேச வருகிறவர்களையெல்லாம், "இந்த விஷயத்துல தலையிடாதீங்க. இது விஷயமா பேசறதாயிருந்தா இப்பவே கிளம்பிடுங்க'' என்று கறாராக முகத்திலடித்தாற்போல சொல்லி அவர்களின் வாயை அடைத்து உதாசீனப்படுத்தியிருந்ததினால் இனி அவர் வருவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. அவர் வருவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வதெவ்வாறென்று என்னால் விளங்கிக் கொள்ளவியலாமல் தவிக்கும்படியானது என் நிலைமை.
 இத்தனை நாட்கள் இல்லையில்லை இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்திருக்கக் கூடாது. மாமா வந்து அழைத்துச் செல்லாமல் நானே அங்கு சென்றுவிடலாம்தானே. நான் புகுந்தவீடு என்வீடுதானே. அங்கே செல்ல எனக்கென்ன தயக்கம். இப்படியான கேள்விகள் என்னை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி நான் செல்வது அவமானமாய் உணரத் தோன்றியது. நான் இங்கிருந்து சென்று விட எண்ணியிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால், என் கழுத்தை நெரித்துப் போடவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாயிருக்கும். அந்த அளவுக்கு மாமா மீது வெறுப்பு ஏற்படும்படியாய் என்னால் சித்திரிக்கப்பட்டிருந்ததினால் அதற்கும் வழியில்லாமல் போனது. ஒருவேளை மாமாவே என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டால் ஏதேனும் சமாதானம் சொல்லி அவரோடு சென்றுவிட மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. வந்துவிட மாட்டாராவென தினந்தினமும் வழியைப் பார்த்தபடியிருக்கிறேன்.
 அவர் என்னிடம் போனில் தொடர்புகொண்டு பேசியபோதெல்லாம் அவரிடம் பேசக் கூடாதென்பதற்காகவே போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அவரை தொடர்பு கொள்ள எண்ணி முயற்சித்தபோது உபயோகத்திலில்லை என்கிற தகவல் வந்தபடியிருந்தது. என்னைப்போல் தொடர்புகொள்ள முயற்சித்து என் போன் உபயோகத்திலில்லை என வர அவரும் கோபத்தில் போனை சுவிட்ச் ஆஃப் செய்திருப்பாரோ... இப்படித்தான் விளையாட்டாய் எங்களுக்குள் தொலைபேசி விசாரிப்புகளும் துண்டிக்கப்பட்டிருக்குமென்று எண்ணுகிறேன்.
 மாமாவைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாத படிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததுபோல அமைதி சூழ்ந்திருந்தது. வேறெங்கிருந்தாவது போன் வந்தாலும் யாரிடமிருந்து வந்திருக்கிறதென்று அதட்டலாய்க் கேட்கிற அம்மாவின் குரல் எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது வீட்டினில். அதையும் தாண்டி இப்பொழுது பேசமாட்டாரா என்கிற ஏக்கத்தில் இப்பொழுதெல்லாம் போனையே பார்த்தபடியிருந்து கொண்டிருக்கிறேன்.
 எங்களை ஒன்றுசேர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் எனக்கும் அவருக்குமான ஈகோவின் பின்னணியில் தவறான தூண்டுதலாய் முழுக்க முழுக்க என் அம்மாவே இருந்துவிட்டிருக்கிறார் என்பது, நான் தாமதமாய் உணர்ந்தறிந்த உண்மை.
 கல்லூரி இறுதியாண்டு முடிச்சிட்டு வீட்டிலிருந்த ஒருநாள். அத்தை வந்திருந்தார்கள். அப்பாவின் கூடப்பிறந்த சகோதரி.
 "வா அத்த...''
 நான் அழகாயிருக்கேன்னு நானே சொல்லிக்கக் கூடாது. ஆனால் அப்படித்தான் என் உறவுல எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்படியே முழுங்கிட்ற மாதிரி அத்தை என்னை ஏற இறங்கப் பார்த்து எல்இடி பல்பின் வெளிச்சமாய் முகம் பிரகாசித்து ""வரன் ஆயி... அம்மா இல்ல...''" என்றது.
 "இருக்கே... அம்மா... ,'" குரல் கொடுத்தேன்.
 "அப்பா...''"
 "அப்பா இல்ல... வெளிய போயிருக்கு''
 உள்ளேயிருந்து வாசலுக்கு வந்த அம்மா அத்தையைக் கண்டதும் திடீரென்று கருத்த மேகம் சுழ்ந்து எதுவும் தெரியாமல் இருட்டானதுபோல முகம் சுருங்கி சுரத்தில்லாமல், "வா அண்ணி...''" என்று வேண்டா வெறுப்பாய் வரவேற்றாள்.
 அம்மாவின் முகபாவனையில் வெளிப்படும் வெறுப்பினைப் புரிந்து கொண்டாலும் காரியம் சித்தியாக வேண்டுமென்கிற மனவோட்டத்தில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவளாயும் எனக்கு காலேஜ் படிப்பு முடிந்திருந்த விஷயம் தெரிந்து கொண்டே அதனை அம்மா வாயால் சொல்ல வைக்க வேண்டுமென்பது போலவும்,
 "பாப்பா காலேஜுக்குப் போவலியா?'' ஓர விழியால் என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் அத்தை.
 "படிப்பு முடிஞ்சிடுச்சே. வீட்லதான் இருக்கா...'' ஒத்தை வார்த்தையாய் சொன்னாள் அம்மா. அத்தையைக் கண்டாலே அம்மாவுக்கு பிடிக்கிறதில்ல. அம்மா கட்டிக்கிட்டு வந்ததிலயிருந்து பனிப்போராய் அவர்களுக்குள் இருந்து கொண்டிருந்த நாத்தனார்ப் பிரச்னை காரணமாயிருக்கலாம்.
 "தம்பியிருப்பான்... ஒரு விஷயம் பேசிட்டுப் போலாம்ன்னு வந்தேன்'' என்றிழுத்தாள்.
 "உங்க தம்பிக்கிட்டதான் பேசணும்ன்னா அது இராத்திரிக்குத்தான் வரும். இல்ல ஏதாவது சொல்லணும்ன்னா எங்கிட்டச் சொல்லு. வந்ததும் நான் சொல்றேன்...'' என்று அத்தையை அப்படியே கிளம்பி போகும்படியான தொனியிலேயே பட்டென்று மூஞ்சியிலடித்தாற்போல சொன்னாள் அம்மா.
 ஆனாலும் அத்தை விடாகண்டியாய் தான் வந்திருக்கும் நோக்கம் பலிக்க வேண்டுமென்பதிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவளாய் வாங்கி வந்திருந்த பழம், பேக்கரி வகைகளை சுவரோரம் கீழே வைத்து அதில் மேலேயேயிருந்த பூப்பொட்டலத்தை வெளியே எடுத்தவளாய் இரண்டு முழம் அளவுக்கு நீட்டமாய் விட்டு வாயில் வைத்து பற்களால் கடித்து துண்டாக்கி டிவி பார்த்துக் கொண்டிருந்த என் தலையில் வைத்துக் கொண்டே , "ஒனக்குத் தெரியாமயா... எல்லாம் நம்ம பாப்பா விஷயமாத்தான்''" என்று சொல்லி எங்கள் முகங்களில் ஏற்படப்போகிற சலனங்களை காணும் எண்ணத்தில் என்னையும் அம்மாவின் முகத்தையும் கூர்ந்து பார்த்தபடியிருந்தார்.
 என்னைப் பற்றி என்றதும் நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கண்டுக்காததுபோல டிவியில் பார்வையைச் செலுத்தியபடியிருந்தேன். அம்மாவுக்கும் கூட சட்டென்று புரிந்திருக்கவில்லையோ என்னவோ "ஆனந்தியப் பத்தியா?'" என்றார்கள்.
 மாமாவுக்கு என்னைப் பெண் கேட்க எப்படிப் பேச்சைத் துவக்குவது என்றறியாதவளாய் ஏதேதோ பேசியபடியிருந்தாள் அத்தை. ஆனால் அதற்காகத்தான் வந்திருக்கிறாள் என்பது அத்தை என்னைப் பார்க்கும் விதம் அவளின் பேச்சினிடையில் தெளிவாகியிருந்தது எனக்கு. எனக்கே புரிகிறதென்றால் அம்மாவுக்கு புரியாமலாயிருந்திருக்கும். பிடிகொடுக்காமல் கெழுத்தி மீனாய் வழுக்கி நழுவியபடியிருந்தாள் அம்மா.
 சுத்திவளைத்துப் பேசியதில் அம்மாவின் எண்ணத்தினைப் புரிந்துகொள்ள முடியாதவளாய் திணறிய அத்தை இதற்குமேலும் அவ்வாறு பேசி அம்மாவின் பிடி வாங்க முடியாதென்கிற முடிவுக்கு வந்தவளாய், "எனக்கு சுத்தி வளைச்சிப் பேசத் தெரியாது தாயி... நான் நேராவே கேட்டுடறேன். நம்ம அருணுக்கு ஆனந்திய கட்டிக்கலாமுன்னு எண்ணமிருக்கு. நீ என்னா சொல்ற?' என்றாள் அத்தை.
 கீறல் கீறலாய் கோடு விழுந்து கீச்கீச்சென்று ஒலியெழுப்பும் சிடிபோல முகம் சுழித்து கடுகடுத்து முகத்தை விகாரமாய் மாற்றியிருந்த அம்மா, " "தே... சும்மா ஏதாவது பேசிட்டிருக்காத...' என்றாள்.
 அதன் அர்த்தம் இங்க வந்து பொண்ணு கேக்குற வேலையெல்லாம் வச்சிக்காதன்னு நாசூக்கா கண்டிக்கிற அம்மாவின் ஒரு விதம். அத்தைக்குப் புரியாமலில்லை. எப்படியாவது என்னை மாமாவுக்கு கட்டிக்க சம்மதம் வாங்கணும்ங்கிற முடிவோட வந்திருந்ததினால் குரலில் ஏக்கம் ஒரு தவிப்புத் தெரிய, "இல்ல ஆயி... நான் நெசமாத்தான் கேக்குறன்'' என்றார்.
 எத்தனையோ தடவை வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் மாமா. பேசியுமிருக்கிறேன். ஆனால் அவரை கட்டிக்கிறதுப் பத்திய எந்த எண்ணமும் என்னிடம் இல்லாதிருந்ததை நினைத்துக் கொண்டேன். அதேசமயத்தில் மாமாவைக் கட்டிக்கிட்டா என்னங்கற மாதிரிய ஒரு எண்ணம் எனக்குள் உருவாகியிருந்ததை அம்மா உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அம்மா என்ன சொல்லப் போகிறார் என்பது பற்றிய சிந்தனையில் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அம்மா பேச்சில்லாமல் அத்தையையே பார்த்தபடி நின்றிருந்தார்கள். இருவரின் பார்வையும் நேருக்கு நேராய் பார்த்திருக்க சிறிது நேர மௌனம்.
 "என்ன ஆயி... கேட்டதும் எதுவும் பேசாம நிக்குற..." அத்தைதான் முதலில் பேசி அம்மாவின் மௌனத்தைக் கலைத்தார்கள்.
 இஷ்டமில்லையென்பதை எப்படிச் சொல்வது என்று யோசித்த அம்மா பொத்தாம்பொதுவாய், "அவ இப்பத்தான் படிப்ப முடிச்சிருக்கா... அவளுக்கு கல்யாணம் பண்றது பத்தியே நாங்க யாரும் இன்னும் யோசிக்கவேயில்லை... நீ அருணுக்கு கல்யாணம் பண்ணப் போறியா?''" என்று எதிர்கேள்வி கேட்டாள்.
 அத்தையும் கொஞ்சமும் அசர்வதாய் தெரியவில்லை. "
 "நீ பாப்பாவைக் குடுத்தீன்னா இப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணுவேன். இல்லைன்னா பொறுமையாத்தான் செய்யணும்'' என்றாள்.
 "பொறுமையான்னா... கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவெடுத்திட்டேயில்ல...'' என்று தெளிவாய் சிந்தித்தவளாயும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் அந்த விஷயத்தில் விருப்பமில்லையென்பதனை நாசூக்காய் சொல்வது போலவும் பேசினாள் அம்மா.
 எத்தனை பதனமாயிழுத்து வலை கிழிந்துபோனாலும் மாற்றுவழியில் தன் நோக்கத்தினை நிறைவேற்ற துடிப்பாயிருக்கும் ஒரு மீன்பிடிக்காரனின் மனநிலையாய் அத்தை, "என்ன ஆயி புடி குடுக்காமப் பேசுற... பாப்பாவைக் கட்டணும்ன்னுதான் இப்ப அவனுக்கு கல்யாணப் பேச்சே எடுத்திருக்கோம்''" என்று மாற்று வலையாய் தன் வார்த்தையஸ்திரத்தை மீண்டும் பிரயோகித்துப் பார்த்தாள்.
 "அவள விடு அண்ணி... அவளையொரு வேலைக்கு அனுப்பி சொந்தக்கால்ல நிக்க வைச்சாத்தான் கல்யாணத்தப் பத்தியெல்லாம் யோசிக்கவே முடியும்''" என்று வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா திரும்பவும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
 வாளையுருவிய விக்கிரமாதித்தன் செயலாய், "வேலைக்கு அனுப்பறதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். முடிவா நீ என்னதான் சொல்ற... பொண்ண மட்டும் குடுத்தீன்னாப் போதும்''" என்று தன் நிலையிலிருந்து மாறாதவளாய் நிர்ப்பந்தப்படுத்தும் விதமாய் உரத்துச் சொன்னாள் அத்தை.
 "நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல. நீ உன் தம்பிக்கிட்டேயே கெட்டுக்க''" ஒரே வார்த்தையில் தடாலடியாய் அடித்துச் சொன்னாள் அம்மா. என்னை அவரின் அண்ணன் மகனுக்கு கொடுக்க எண்ணியிருந்தது எப்பவாவது அம்மாவின் அண்ணன் வரும்போது அவரிடம் பேசுவதிலிருந்து புரிந்திருந்தது எனக்கு. ஆனால் அவன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் குடிப்பழக்கம் இருப்பதனாலயும் அவனை ஒரு பொறுப்பானவனா மாற்றும்படி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. ஒருவேளை அதற்காகத்தான் அத்தையிடம் பிடிகொடுக்காமலிருந்தாரோ என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது எனக்கு.
 அப்பாவிடம், "அக்கா பொண்ணு கேக்குது... நீ என்ன சொல்ற...'' என்று சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டியென்று உறவுக்குள்ளே எல்லோருக்கும் என் கல்யாணப்பேச்சு மெல்வதற்குச் சுவையான அவலாகி ஒருவர் மாற்றியொருவரென்று எல்லோருமே என் கல்யாண விஷயமாய் பேச அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியிருந்தனர்.
 "இப்ப கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதில்லங்க''றதத் தவிர வேறேதுவும் இவர்களால் சொல்ல முடியவில்லை.
 ஒரு சித்தப்பா, " ஏன் கட்டிக்குடுக்கிறதில்ல. கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்''ங்கற பழமொழியைச் சொன்னவர், "பொண்ணுன்னு இருந்தா கட்டிக்குடுத்துத்தானே ஆவணும்?''
 அவர்களும் அம்மாவின் எண்ணத்தைப் புரிந்து வைத்திருந்ததினால், "இப்பப் பிரச்னை அக்கா பையன் அருணுக்கு நீ குடுப்பியா?ங்கறதுதான்''" என்றொரு சிக்கலான கேள்வியைக் கேட்கவும் அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அசடு வழிந்தார்.
 மாமாவிற்கு என்னைக் கொடுக்க பிரியமில்லாதிருந்த அம்மா, மனைவி சொல்றதக் கேக்குறதா... உறவுக்காரர்கள் சொல்றதைக் கேக்குறதா என்கிற குழப்பத்தில் தவிப்போடிருந்த அப்பா, அம்மாவின் வாய்க்கு பயந்தவராய் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் போனதுபோல, " எனக்கு இஷ்டமில்ல. நீ வேற எடத்துல பாத்து பொண்ணு கட்டிக்க''ன்னு அத்தையிடம் நறுக்குத் தெறித்தாற்போல கறாராகச் சொல்லிவிட்டார். அப்பாவின் இந்த திடீர் பேச்சினால் வந்திருந்த அனைவர் முகத்திலும் திகில் படர்ந்தது போன்ற வெளுப்புத் தெரிந்தது. எப்படியாவது பேசி சேர்த்து வச்சிடலாம்ன்னு வந்திருந்தவர்களுக்கு அம்மா அப்பாவின் பேச்சு வருத்தத்தைத் தரவே எதுவும் பேசாமல் எழுந்து கிளம்பத் தயாரானார்கள்.
 அங்கிருந்தவர்கள் அனைவரின் மனப்போக்கினையும் துல்லியமாய் கணக்கிட்ட பெரியப்பா யாரையும் எழுந்திரிக்க விடாதவராய் உட்காரும்படியாய்க் கைகாட்டினார். முக்கியமான முடிவெடுக்கப்போகிறாரென்பது மட்டும் புரிவதுபோலிருந்தது எனக்கு.
 பெரியப்பாவின் இந்த செய்கையினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அல்லது இதன் பின்னணியென்னவாயிருக்கும் என்கிற யோசனையாய் கூட இருக்கலாம். ஒருவர் முகத்தையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அமைதி நிலவியது. யார் முதலில் வாயைத் திறப்பது என்பது போலிருந்தது அவர்களிடையே திகழ்ந்த மௌனம்.
 "எப்பவுமே ஒரு விஷயத்த வளவளன்னு இழுத்துக்கிட்டிருக்கக் கூடாது'' என்று ஆரம்பித்த பெரியப்பா ஏதோ யோசனையாய் என்னைப் பார்த்தவர், "ஆனந்தி ஒரு சொம்பு தண்ணிக்குடும்மா...'' என்றார். நான் உள்ளே சென்று சொம்பையெடுத்து தண்ணீர் முகர்ந்து கொண்டு பெரியப்பாவிடம் கொடுக்க வர அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இல்லாததினால் நான் சொம்புடன் வெளியில் வந்தேன். வெளியே நின்றிருந்த அவரிடம் தண்ணீர் சொம்பை நீட்டியதும் கையில் வாங்கி அண்ணாந்து வாயிலூற்றி கொப்பளித்துத் துப்பி மீண்டும் வாயில் தண்ணீரையூற்றும் அந்த இடைப்பட்ட நேரத்தில் ""ஆனந்தி... நீ என்னம்மா சொல்ற... ஓங்கல்யாண விஷயமாத்தான் பேசிக்கிட்டிருக்கோம். மாமனக் கட்டிக்க உனக்கு இஷ்டமிருக்கா இல்லையான்னு நீ எங்கிட்ட வெளிப்படையாச் சொல்லு. உனக்கு இஷ்டமில்லேன்னா யாரும் எதுவும் பேசாம எல்லாத்தையும் அப்படியே நிறுத்திட்றோம்''" என்று மெதுவாய்க் கெட்டு என் பதிலுக்கான நேரத்தினை அவர் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை மட்டுமே என்பதனை சொல்லாமல் சொல்லி தண்ணீரை மடக்மடக்கென்று குடித்து என்ன சொல்லப் போகிறேனென என்னைப் பார்த்தார்.
 எனக்கான அவகாசம் அவர் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை மட்டுமே என்றிருந்தாலும் நான் என் மனதில் மாமாவை நினைத்திருந்ததினால் சட்டென்று சொன்னேன்: "எனக்கு இஷ்டந்தான் பெரியப்பா...'' என்றேன்.
 பெரியப்பா என்னிடம் கேட்டதோ நான் அவரிடம் சொன்னதோ யாருக்கும் தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன். அப்படியே நாங்கள் பேசியதனைக் கேட்டிருந்தாலும் அது இந்த விஷயமாயிருக்காது. வேறெதுவாவது பேசியிருக்கலாம் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் அந்த குறுகிய விநாடிகளில் இந்த விஷயத்தைப் பேசியிருக்க வாய்ப்பேயிருக்காது என்றுதான் அவர்கள் நினைக்கக்கூடும். அல்லது நாங்கள் பேசியதைக் கவனியாமல் ஆனந்தி விஷயத்தில் நாம் சரியாகத்தான் யோசித்திருக்கிறோமா... என்கிற சிந்தனையிலிருந்து கொண்டிருக்கலாம்.
 பெரியப்பா மீண்டும் வந்து அவரிடத்தில் உட்கார்ந்து, "நீ அருணுக்கு குடுக்கக் கூடாதுன்னு இருக்கிறதுக்கு என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?'' என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார். கட்டிக்குடுக்கிற நிலைமையில பொருளாதாரம் இடங்கொடுக்கலேங்கறதுதான் அப்பாவின் பதிலாயிருந்தது. அத்தை அதனையொரு பிரச்னையாவே எடுத்துக்கொள்ளாதவராய், "என்னா செய்யப் போறீங்க. எதுவும் செய்ய வேணாம். பொண்ணுக் குடுத்தாப் போதும்'' என்று பிடிவாதமாய் இளகி நிற்க பெரியப்பா சமரசம் பேசினார். அப்பாவைப் பொருத்தவரை பொருளாதாரமொன்றே பிரச்னையாயிருந்ததினால் அதற்கொரு முடிவு கிடைத்தவுடன் அம்மாவைப் பேசி சரிகட்டிக் கொள்ளலாம் என்கிற துணிச்சலில் வேறு வழியில்லாமல் எப்படியாவது முடிஞ்சாப் போதுமென்கிற மாதிரியே சம்மதம் தெரிவித்திருந்தார். கடைசிவரை பிடி கொடுக்காதிருந்த அம்மாவை அவர்கள் வலையில் விழும்படியாய் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனமொன்றில் சைட் இன்சார்ஜ் ஆக வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம் என்றதும் வாய்பிளந்த அம்மா, "அண்ணன் மகனும் ஊதாரியா சுத்துறான். சரி எப்படியாவது இருந்துட்டுப் போவட்டும்'ன்னு நினைச்சாங்களோ என்னவோ... இருதலைக்கொள்ளி எறும்பாய் இருந்தவர் சமாதானமானவராய் ஒப்புக்கொள்ளும்படியாய் ஆனதில் என் திருமணம் இனிதே நடந்து முடிந்திருந்தது.
 அம்மாவுக்கும் என் மனசப் புரிஞ்சிக்கத் தெரியில. அப்பாவும் கட்சி, நண்பர்கள்ன்னு சுத்த கிளம்பிடுறாரு. யாருக்கும் என்னைப் பத்தின அக்கறையிருக்கிறதாவே தோணல. ஆனா மாமாவை அப்படி நினைக்கத் தோணல. அவுங்க என் நினைப்பாத்தான் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். மாமாவைப் பிரிஞ்சி வந்திருந்த ஆறேழு மாதங்களுக்குள்ளேயே எத்தனையோ முறை வந்து என்னை இட்டுக்கிட்டு போறதுக்காக எப்படியெல்லாமோ முயற்சிப் பண்ணியிருக்காங்க. அப்பெல்லாம் இங்க வந்ததுனால என்னால அம்மாவால அப்பாவாலயும் அவமானங்களைச் சுமந்துதான்போயிருக்காங்க. மாமாவை மறக்க வைக்க அம்மா செஞ்ச தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை?
 "ஏய்... சின்னம்மா வரச்சொல்லுது. போய் ஒரு நாலு நாளைக்கு இருந்துட்டு வாயேன்டி. உனக்கும் அவனப்பத்தின "ஞாபகம் இல்லாம இருக்கும்''" என்று மாமாவை மறக்க மறந்திருக்க அம்மாவே எனக்கு யோசனை சொல்லியிருக்கிறார்களே என்று நினைக்கும்பொழுது இப்பொழுது நினைத்தாலும் மிகுந்த வேதனையாயிருக்கிறது. அப்போது எனக்கு அது புரியாததினால் அம்மா சொன்னார்களேயென்று சின்னம்மா வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.
 டவுன் கடை பார்க்க பிரம்மாண்டமாய்த் தெரியும். பல மாடிக்கட்டிடங்கள் ஏதேனும் விசேஷங்கள்... சீரியல் பல்பு வெளிச்சம் ரேடியோ பாட்டுச் சத்தம். சென்றுகொண்டும் வந்து கொண்டும் அநேகம் பேர். பரபரப்பான டவுன் வாழ்க்கையை ரசிக்கலாம் என்கிற உந்துதல். அம்மா சொன்னவுடனே சின்னம்மா வீட்டிற்குச் செல்ல உடன்பட்டது எல்லாமே மாமாவை மறக்க வைப்பதற்கான ஒரு சூழ்ச்சியென்பதனை அறியாமலேயே இருந்திருக்கிறேன். எவ்வளவுதான் சுகபோகமான வாழ்க்கையை என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினாலும் நான் மாமாவோடு இருந்த அந்த நினைவுகளினால் அவரை மறக்கவும் முடியல. நினைக்காம இருக்கவும் முடியல.
 கணவன் மனைவிக்குள்ளயிருக்கிற ஊடலும் கூடலும் சகஜமானதுன்னு அப்ப எனக்குப்புரியல்ல. இந்த சின்ன விஷயத்தைப் பெரிசா எடுத்துக்கிட்டு கட்டுன வீட்டவிட்டு பொறந்த வீட்டுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் எனக்குப் புரியுது. ஆனா அங்கிருந்து கிளம்பி இங்க வந்தமாதிரி இங்கிருந்து கிளம்பி அங்க போக முடியலையே...
 "ஆனந்தி நீ வந்திடு... நீயில்லாம வீடே வெறிச்சின்னு இருக்கு'' என்று என்னை அழைத்துச் செல்ல எத்தனையொமுறை வந்து கெஞ்சியிருக்கிறது மாமா. அப்பொழுதெல்லாம் இரக்கம் காட்டாத நான், இப்பொழுது அவர் வரமாட்டாரா என்பதுபோல பார்த்திருக்கிறேன்.
 விடிகாலை கோழி கூவியது. எனக்கான விடியல் ஒருநாள் வருமென்கிற நம்பிக்கையுடன் வாசல் தெளிக்க எழுந்து சென்றேன். அவர் வருவார்.

 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளர் இவரின் "நெருஞ்சி' என்ற சிறுகதைத் தொகுப்பு 2010 - இல் வெளிவந்தது. தினமணி கதிர், கணையாழி, செம்மலர், தாமரை உட்பட பல இதழ்களில் இவருடைய கதைகள் வெளி வந்திருக்கின்றன.
 
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/k3.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/அவர்-வருவாரா-3216287.html
3216285 வார இதழ்கள் தினமணி கதிர் ஏழை மாணவர்களுக்கு உதவும் கனவு ஆசிரியை! DIN DIN Sunday, August 18, 2019 10:59 AM +0530 எழுத்தாளராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியை, வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
 சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி என்ற சிற்றூரில் வசித்து வரும் ம.ஜெயமேரி ஏழை மாணவர்ளுக்கு உதவி செய்யும் ஆசிரியை. அவரிடம் பேசியதில்இருந்து...
 "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறேன்.
 என் ஒரு வயதில், எனது தந்தை இறந்து விட்டார். எனது அம்மா தீப்பெட்டி ஒட்டி, மாவரைத்துக் கொடுத்து, இட்லி அவித்து விற்று, என்னையும் எனது உடன்பிறந்தவர்களையும் வளர்த்தார். வறுமையால் என் உடன்பிறந்தவர்களால் பெரிய அளவில் படிக்க முடியவில்லை.
 ஆனால், என்னை ஆசிரியராக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவிற்கு இருந்தது. ஆனாலும், பணமில்லாததால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உடனடியாக சேர்க்க முடியவில்லை. மேல்நிலை படிப்பு முடிந்த பின்னர் சில வருடங்கள் நானும், அம்மாவும் சேர்ந்து பல்வேறு வேலைகளைச் செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன்.
 என் வாழ்க்கையில் ஏற்பட்ட இத்தகைய சம்பவங்கள்தான், நான் ஆசிரியரான பின்னர், வறுமையால் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. ஆனாலும், கிடைக்கும் ஊதியம் குடும்ப செலவுகளுக்குப் போதுமானதாக இருந்த நிலையில், பெருமளவு பணத்தை ஏழை மாணவர்களுக்காகச் செலவிட முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது.
 பொதுவாகவே, எழுத்து, பேச்சு உள்ளிட்டவற்றில் எனக்கு அதிக நாட்டம் இருந்ததால் அவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை மாணவர்களுக்காக செலவிடுவது என முடிவு செய்து அதன்பின் தொடர்ந்து இதழ்களில் எழுதவும், பட்டிமன்றங்களில் பேசுவதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். முதல்முதலாக நான் எழுதிய படைப்பிற்கு கிடைத்த பணத்தை கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தினேன். அந்தப் பணம் அவருக்கு அன்றைய நிலையில் மிக பெரிய பணமாக இருந்தது. அவரின் மகிழ்ச்சியை உணர்ந்த நான், அதைத் தொடர்ந்து பிற பணிகளின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, உண்டு, உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு என அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் புரிந்து கொண்டு வாங்கி கொடுக்கத் தொடங்கினேன்.
 மாணவர்களுக்கும், பள்ளிக்கும் நான் செய்து வரும் பணிகளைப் பாராட்டி 2018 - ஆம் ஆண்டு தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது' எனக்கு வழங்கப்பட்டது. விருதுடன், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்தது. அத்துடன், பட்டிமன்ற பேச்சாளருக்கு கொடுக்கப்படும் வெகுமதியைக் கொண்டு பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வாங்கி கொடுத்தேன்.
 தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது', "ஒளிரும் ஆசிரியர் விருது', "லட்சிய ஆசிரியர் விருது', "வைர மங்கை விருது', "பாரதி விருது', "அப்துல் கலாம் விருது', "லயன்ஸ் கிளப் விருது' உள்ளிட்ட எண்ணிலடங்கா விருதுகளைப் பெற்றுள்ள இவர், "விருதுகளைப் பெறும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட ஒரு மாணவருக்கு உதவும் பொழுது கிடைக்கும் சந்தோஷமே அதிகம். மேலும், செய்யும் உதவி சிறிதென்றாலும், அன்றையச் சூழலில் மாணவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்'' என்கிறார் மகிழ்ச்சியாக.
 புதிய பாடத் திட்ட மாநில கருத்தாளராகவும், மதுரைப் பண்பலை வானொலியில் தொடர்ந்து தன்னம்பிக்கை உரை நிகழ்த்துபவராகவும், மாவட்ட, ஒன்றிய ஆசிரியர் கருத்தாளராகவும், பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் இவரின் ஓர் ஆசை... இன்னும் பல கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பலர் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலையிலுள்ளனர். அத்தகையவர்களுக்காக காலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வந்தால் ஏழை மாணவர்களின் கல்வி மேம்படும் என்பதுதான்.
 - வி.குமாரமுருகன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/k1.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/ஏழை-மாணவர்களுக்கு-உதவும்-கனவு-ஆசிரியை-3216285.html
3216284 வார இதழ்கள் தினமணி கதிர் பழைய கருவிகளைப் பாதுகாப்பவர்! DIN DIN Sunday, August 18, 2019 10:55 AM +0530 நெல் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் மறந்து போன அல்லது கைவிட்ட வேளாண் கருவிகளையும், உபகரணங்களையும் பாதுகாத்து பத்திரப்படுத்திக் கொண்டு வருகிறார் தோவாளை வட்டம், துவரங்காட்டைச் சேர்ந்த விவசாயி செண்பகசேகர பிள்ளை (63).
 இளங்கலை பட்டதாரியான இவர், கலப்பை முதல் மரக்கால்கள் வரை ஏறக்குறைய 45 வகையான வேளாண் கருவிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். இது மட்டுமன்றி நெல் விவசாயத்தில் புதிய ரகங்களைப் பயன்படுத்துவது, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, வேளாண் சார்ந்த பயிற்சி முகாம்களில் பங்கேற்று தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து அவற்றை பெற்றுக் கொடுப்பது என வயலோடும், கரையோடும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பவர் செண்பகசேகர பிள்ளை.
 செண்பகசேகரபிள்ளையுடன் உரையாடியதிலிருந்து:
 " எங்கள் குடும்பத்திற்கு நெல் வயல்கள் இருந்தன. வயலில் வேலை செய்யும் அப்பாவுக்கு கஞ்சி எடுத்துச் செல்வதில் தொடங்கி வேளாண் சார்ந்த வாழ்க்கை எனக்கு சிறு வயது முதல் ஆரம்பமாகிவிட்டது. கல்லூரி படிப்பைத் தொடர்ந்து ராமநாதபுரம் மண்டபத்தில் சிறிது காலம் மீன் வளத்துறையில் பணி செய்தேன். பின்னர் திருமணத்தைத் தொடர்ந்து ஊரில் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கினேன். நெல் விவசாயத்திலும், தென்னை நடவு செய்து பார்ப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.
 குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் கன்னிப்பூ பருவத்தில் கட்டிச் சம்பா, கும்பப்பூ பருவத்தில் செந்தி, வல்லரக்கன், சி.ஓ. 25 போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. இவை 150 முதல் 180 நாள்கள் வரையிலான பயிர்கள். இந்நிலையில் குறைந்த நாள்களில் அறுவடையாகும் கன்னிப்பூ பருவத்திற்கு அம்பை-16, கும்பப்பூ பருவத்திற்கு பொன்மணி மற்றும் திருப்பதிசாரம் வரிசைகளான டிபிஎஸ் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரகங்களை நான் அதிக உற்சாகத்துடன் நடவு செய்து மகசூல் எடுத்தது மட்டுமின்றி, பிற விவசாயிகளுக்கும் இந்த ரகங்களை நடவு செய்வது குறித்து ஊக்கமூட்டினேன்.
 தற்போது விவசாயத்தில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதென்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள், உபகரணங்கள் அனைத்தும் பழங்காலத்து பொருள்கள் போல் மாறிவிட்டன. இன்றைய தலைமுறைக்கு கடந்த காலங்களில் பயன்படுத்த வேளாண் கருவிகள் குறித்து தெரியவில்லை. வருங்கால தலைமுறைக்கு வேளாண்மை குறித்து குறிப்பாக நெல் விவசாயம் குறித்து தெரியவருமா என்ற கேள்வியும் எழுகிறது. அதே வேளையில் நாளையத் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் வேளாண்மையில் பயன்படுத்தப்பட்ட சுமார் 45 கருவிகளையும், தளவாடங்களையும் பாதுகாத்து பத்திரப்படுத்தி வருகிறேன்.
 இதில் கலப்பை, நுகம், மரம், வள்ளக்கை, குறுங்காவளையம், மாட்டையும், கலப்பையும் இணைக்கும் தொடக்கயிறு, பொழி தட்டுப் பலகை, நாற்றுப் பாவும் போது பயன்படுத்தப்படும் மூங்கில் களை, ஊடு மண்வெட்டி, தண்ணீர் இரைக்கும் ஓணி, பனை ஓலை இறவெட்டி, தகரத்திலான இறவெட்டி, துறண்டி, பனையோலை காக்கட்டை, தகரத்திலான காக்கட்டை, கொம்புக் குப்பி, மாட்டுக்கு மருந்து கொடுக்கும் கொட்டம், லாடம் மற்றும் ஆணி, பறவைகளை துரத்தும் கவுண், மாட்டை வதக்கும் சூட்டுக்கோல், சுளவு, விதை நெல்லைச் சேமிக்கும் குலுக்கை, பாதாள கரண்டி, மரக்கால் வகைகளான பாட்டம் மரக்கால், நெல் சீட்டு மரக்கால், பொது அளவு மரக்கால், கூலி மரக்கால் என பல்வேறு வேளாண் கருவிகளையும் தளவாடங்களையும் பாதுகாத்து வருகிறேன். வேளாண்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது வந்து இவற்றைப் பார்வையிட்டுச் செல்வதுடன், இவற்றை எடுத்துச் சென்று வேளாண் சார்ந்த கண்காட்சிகளிலும் வைக்கின்றனர்'' என்றார்.
 செண்பகசேகரபிள்ளையின் பணிகளைப் பாராட்டி கடந்த 2004 -ஆம் ஆண்டு அப்போதைய குமரி மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 -ஆம் தேதி தற்போதைய குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த மு. வடநேரே ஆகியோர் சிறந்த விவசாயிக்கான பாராட்டுச் சான்றிதழும் ரொக்கப் பரிசும் வழங்கி கெளரவித்துள்ளனர். விவசாயிகளுக்கான அரசின் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில், தொடர்ந்து பணி செய்து வருகிறார் செண்பகசேகரபிள்ளை. மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர், வேளாண் விற்பனைக் குழு உறுப்பினர், வேளாண் இடுபொருள் கொள்முதல் குழு உறுப்பினர் என அரசு துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருடைய பணிகளுக்கு, இவருடைய மனைவி பிரேமா உறுதுணையாக இருந்து வருகிறார்.
 - ஜே. லாசர்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/KLM.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/பழைய-கருவிகளைப்-பாதுகாப்பவர்-3216284.html
3216282 வார இதழ்கள் தினமணி கதிர் துப்பாக்கி சுடும் சாதனை வீராங்கனை! DIN DIN Sunday, August 18, 2019 10:53 AM +0530 சிட்னியில் சென்ற ஆண்டு நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் (International  Shooting  Sport Federation) ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார், துப்பாக்கி சுடும் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், .
சென்ற மே மாதம் மியூனிச் நகரில் நடந்த போட்டியில் இளவேனிலுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
சென்ற வாரம் ஜெர்மனியில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனியாக தங்கப் பதக்கம், குழுவினருடன் இன்னொரு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, இத்தாலியின் நாப்போலியில் நடந்த உலக பல்கலைக்கழகங்கள் விளையாட்டுப் போட்டியில் இளவேனிலுக்கு வெளிப் பதக்கம் கிடைத்தன. 
இளவேனிலுக்கு இருபது வயதாகிறது. கடலூரைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இளவேனில், பெற்றோருடன் வசிப்பது அகமதாபாத்தில். 
"அப்பா வாலறிவன் ருத்ரபதி. தனியார் நிறுவனம் ஒன்றில் மேட்டூரில் விஞ்ஞானியாகப் பணி புரிகிறார். அண்ணன் ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறார். அவர் விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது துப்பாக்கிகளைப் பற்றி சொல்வார். 
"சிறுவயதில் ஒருமுறை அப்பா அகமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவ துப்பாக்கி சுடும் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பயிற்சி பெறுபவர்களைக் கண்டதினால் துப்பாக்கி ஏந்த எனக்கும் ஆசை வந்துவிட்டது. 2013 -இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டேன். சீராக எனது வெற்றிப் புள்ளிகள் அதிகரித்தன. அதனால் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன். 
சொந்தமாக துப்பாக்கி வாங்கியது 2016 -இல் தான். ஜெர்மனியில் நடந்த 28 - ஆவது ஜுனியர் உலகப் போட்டியில் எனக்கு இருபத்தெட்டாவது இடம் கிடைத்தது. பயிற்சிகளின் போது சர்வதேச சாதனையான 252 .1 புள்ளிகளை என்னால் எடுக்க முடிந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகளில் ஒரு பிரிவில் தேசிய சாம்பியனாக வந்தேன். எனக்கு கிடைத்த வெற்றி புள்ளிகள் புதிய தேசிய சாதனையாக மாறியது. 
சிட்னியில் நான் எடுத்த மொத்த புள்ளிகள் (631.4) ஓர் உலக சாதனையாகும். பயிற்சிக்காக சென்னைக்கும், புனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். 
இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் தங்கப் பதக்கம் மிகவும் சிறப்பானது. என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறது. சென்ற உலகக் கோப்பைக்கான போட்டியில் எனது முத்திரையை விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்தேன். அது முடியவில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இந்தத் தடவை சென்றேன். இந்தப் போட்டிக்குத் தகுதி பெறுவோமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது. தகுதி பெற்றதும் என்னை முழுமையாகத் தயாராக்க பயிற்சிகளில் ஈடுபட்டேன். முடிந்தவரை சிறப்பான முறையில் குறி பார்த்துச் சுடுவோம் என்ற முடிவுடன்தான் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர் நேஹா சவான், கவனத்தை ஒருநிலைப்படுத்த பயிற்சி தரும் கிருத்திகா பாண்டே இருவருக்கும் பெரும் பங்குண்டு. மற்றபடி போட்டிகளில் சாதனைகள் நிகழ்த்துவதும் நிகழ்வதும் சகஜம்தானே'' என்கிறார் இளவேனில்.


- சுதந்திரன் 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/ELAVENIL.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/துப்பாக்கி-சுடும்-சாதனை-வீராங்கனை-3216282.html
3216281 வார இதழ்கள் தினமணி கதிர் குடி... கல்லீரலைக் கெடுக்கும்!   Sunday, August 18, 2019 10:49 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
நான் சில நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். தொடர்ந்து குடித்து வந்ததால் என் கல்லீரல் கெட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டார்கள். மேலும் குடித்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கிறார்கள். கல்லீரல் அத்தனை முக்கிய உறுப்பா? அது இல்லாமல் வாழ முடியாதா?
- ராஜசேகர், நெல்லூர்.
உணவை உடல் ஏற்க வேண்டுமானால் அதற்கு ஒரு ரசாயனசாலை தேவைப்படுகிறது. அந்த ரசாயனசாலையில் பல இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன. அவற்றின் உதவியால்தான் நாம் உண்ணும் உணவுகள் பிரிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, உடலின் தேவைக்குத் தகுந்த மாதிரி அங்கீகரிக்கப்படுகின்றன. இப்பணியைச் செவ்வனே நடைபெறுவதற்கு கல்லீரல் மிகப்பெரிய பங்கை ஆற்றுகிறது. 
உடலுக்குத் தேவையான கொழுப்பு, இனிப்புச் சத்துகள், புரதம், விட்டமின் சத்துகளை சேர்த்து வைத்திருக்கும் கல்லீரல், ஒரு கஜானாவிற்குச் சமமானது என்றே கூறலாம். எந்தெந்த சமயத்தில் உடல் போஷாக்கிற்கு எந்த ஜீவசத்து வேண்டுமோ, அவை கல்லீரலிருந்து அளிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தின் மூலமாக தேவைப்படும் இடங்களுக்கு அவை கொண்டு போகப்படுகின்றன.
உணவுப் பொருட்களிலிருக்கும் கொழுப்பு பொருட்களை ஜீரணம் செய்ய பித்தம் (BILE) தேவை. அது கல்லீரலிலிருந்து தான் உண்டாகிறது. உணவைச் செரிக்க அநேக திரவாம்சங்கள் தேவைப்படுகின்றன. இவை ஈரலிலிருந்து தான் உண்டாகின்றன. உணவு ஜீரணமானவுடன் அச்சத்து இந்த உறுப்பின் மூலமாகத் தான் போக வேண்டும். அப்பொழுது இந்த உறுப்பு, விஷத்தன்மை உள்ளவற்றையும், தேவைப்படாதவற்றையும் தன்னிடத்திலேயே வடிகட்டி வைத்துக் கொள்ளுகிறது. இந்த ஏற்பாட்டினால் தான் நாம் சில விஷங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறோம். உடலுக்குத் தேவைப்படாத மருந்து வகைகளையும் இது தடுத்து பயனற்றவையாகச் செய்துவிடுகிறது. கல்லீரலில் இருக்கின்ற ரத்தக் குழாய்களின் உள்புறம் ஒருவிதமான ஜீவ அணுக்களால் (CELLS) மெழுகப்பட்டிருக்கின்றது. இந்த ஜீவ அணுக்கள் தான், விஷத்தன்மையுள்ள கிருமிகளையும் மற்றும் வேண்டாத பொருள்களையும் பிடித்து இழுத்து ஜீரணித்து விடுகின்றன. இவற்றுக்கு குப்ஃபெர் ஜீவ அணுக்கள் என்று பெயர். ஜெர்மன் தேசத்திலிருந்து உடல்கூற்று விஞ்ஞானியாகிய காரல் வில்ஹெம் குப்ஃபெர் (Karal Wilhelm Kupffer) என்பவரால் இந்த ஜீவ அணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஈரலால் உண்டாக்கப்படுகிற அநேக வஸ்துக்களில் கம்மா குளோபிலின் (Gumma Globulin) என்பதும் ஒன்று. இது தேகத்திற்கு முக்கியமானது. பலவிதமான பெருவாரி நோய்களிலிருந்தும் தொத்து வியாதிகளிலிருந்தும் இது மனிதனைப் பாதுகாக்கிறது. இது உடலில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதிக நாட்கள் பட்டினியாக இருக்கும்போது நமது தசைகளிலிருக்கிற புரதத்தை உடல் உபயோகப்படுத்துகிறது. அதனால் தான் மனிதன் இளைத்து விடுகிறான். அதே போன்று கல்லீரலிலும் புரதம் , கொழுப்பு, இனிப்புச் சத்து முதலிய போஷகப் பொருள்களை சேகரித்து வைத்து உடலுக்குத் தேவைப்படும் போது வெளிப்படுத்துகிறது.
உடலுக்கு வேண்டாத பொருள்களைச் சேகரித்துக் கழிவுப் பித்தத்தின் மூலமாக வெளியேற்றுகிறது. ரக்தத்திலிருக்கும் செந்நிற ரத்த அணுக்கள் அதிக நாள் வாழ்வதில்லை. அவை அதி சீக்கிரமாக அழிவடைகின்றன. அவை வெளியேற்றப்பட வேண்டும். அழிந்தவற்றைக் கல்லீரல் சேகரித்து கழிவுப் பித்தத்தின் மூலம் குடலுக்குள் தள்ளி, பிறகு வெளியே செலுத்துகிறது. அப்பொழுது அவ்வணுக்கள் சிவப்பிலிருந்து பச்சையாக மாற்றப்படுகின்றன. கொழுப்பு வஸ்துகளை நேரடியாக இப்பித்தம் ஜீரணிக்காவிட்டாலும், கொழுப்பை இப்பித்தம் சிறு திவலைகளாக மாற்றிப் பிறகு இதர திரவங்களால் ஜீரணமாகும் படி செய்கிறது.
நமது தேகத்தில் காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளியேறுகிறது. சிறிது காலத்தில் அந்த ரத்தம் உறைந்து அதிக ரத்தம் போகாமல் பாதுகாக்கிறது. அதற்கு முக்கியமாக வேண்டியது விட்டமின் "கே' என்னும் பொருள். இதை நமது ஆகாரத்திலிருந்து சிறிது சிறிதாகச் சேகரித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்பட்டபோது இந்த விட்டமின் "கே' யை ஈரல் மாற்றி அமைத்து ப்ரோ திராம்பின் (Pro thrombin) என்பதாக வெளியேற்றுகிறது. இந்த வஸ்து ரத்தம் உறைவதற்கு அதிக முக்கியமானது.
ஆக, கல்லீரல் உடலுக்கு ஓர் இன்றியமையாத உறுப்பாகும். அதை நீங்கள் குடித்துப் பாழாக்கியதை அறிய மிகவும் வருத்தமளிக்கிறது. கல்லீரலை வலுப்படுத்தும் நிறைய ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. அது சம்பந்தமாக மருத்துவர்களை நேரடியாக அணுகவும். 
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/18/w600X390/AYUL1.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/18/குடி-கல்லீரலைக்-கெடுக்கும்-3216281.html
3211671 வார இதழ்கள் தினமணி கதிர் நிவேதா நீட் எழுதுகிறாள் ஆதலையூர் சூரியகுமார் DIN Sunday, August 11, 2019 01:26 PM +0530 இன்று வரப்போகிற "நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து பதைபதைப்புடன் காத்திருந்தாள் நிவேதா. இந்த தேர்வின் முடிவில்தான் தன்னுடைய எதிர்காலமே இருக்கிறது. அப்பாவிடம் பண்ணியிருக்கிற சவாலில் ஜெயித்தால் தான் அப்பாவின் முகத்தில் விழிக்க முடியும்.
"இறைவா எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ண வச்சிருப்பா, நல்லாத்தான் எழுதிருக்கேன்''"
குளக்கரை ஆஞ்சநேயரை வலம் வந்தபடி மனசுக்குள் இமைகள் படபடக்க வேண்டிக் கொண்டிருந்தாள் நிவேதா.
நல்ல மார்க் எடுக்காமல் அப்பாவிடம் செய்திருக்கிற சவாலில் தோற்றுவிட்டால், எங்காவது போய் எம்ப்ராய்டரி கற்றுக் கொள்வது, கம்ப்யூட்டர் கிளாஸ் போவது என்று வாழ்க்கையே திசை மாறிப் போய்விடுமோ?"
நிவேதாவுக்கு நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்தது இந்த பயம்.
அன்று வந்திருந்த ப்ளஸ்-டூ ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள் நிவேதா.
பிரிண்ட் அவுட் எடுத்திருந்த ரிசல்ட் பேப்பருடன் அப்படியே ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
"அம்மா, நான் அறுநூறுக்கு ஐந்நூற்று தொண்ணூறு மார்க் வாங்கியிருக்கேம்மா. நான் தான் பள்ளிக்
கூடத்துலயே பர்ஸ்ட் மார்க். இத்தனைக்கும் இது புது பாடத்திட்டம்''
ரிசல்ட் பேப்பரைக் காட்டிக்கொண்டே சிறு பிள்ளையாய் குதித்தாள் நிவேதா.
அம்மா அப்படியே வாரி அணைத்துக்கொண்டு கொண்டாடுவாள் என்று எதிர்பார்த்தாள் நிவேதா.
ஆனால் அம்மா வசந்தி ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு மகளின் தலையை வருடினாள்.
அப்படியே முகம் வாடிப்போய்விட்டது, நிவேதாவுக்கு.
"என்னம்மா, இவ்ளோ சந்தோஷமான சேதி சொல்றேன், நீங்க சாதாரணமா சிரிக்கிறீங்க!''"
வாய்விட்டு கேட்டாள் நிவேதா.
"போங்கம்மா... உங்ககிட்ட சொன்னேன் பாரு, நான் அப்பா கிட்ட சொல்லப்போறேன்.''"
அப்பாவின் அறையை நோக்கி ஓடினாள் நிவேதா.
"ஏய்.. நிவேதா இங்க வா, அப்பா கிட்ட போய் சொன்னா, நீ இன்னும் அப்செட் ஆயிடுவே''"
"ஏம்மா... என்னாச்சு?'' "
"நீ நல்ல மார்க் எடுத்திருக்க, மேல படிக்கணும்னு ஆசைப்படறே! ஆனா, உங்க அப்பா வேற மாதிரியில்ல முடிவெடுத்திருக்காரு''"
"என்னம்மா சொல்றீங்க ?'' "
அதற்குள் சப்தம் கேட்டு அறையிலிருந்து வந்துவிட்டார் அப்பா வேலுமணி.
சந்தோஷமாய் அப்பாவிடம் ஓடிச்சென்று தான் எடுத்திருந்த மதிப்பெண்களை காட்டினாள் நிவேதா.
"வெரிகுட் நீவி, ரொம்ப சந்தோஷம்..''
அப்பாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை''.
"அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா நிவேதா?'' "
அப்பா ஏதோ பொடி வைத்துக் கேட்டார்.
"இல்லப்பா ஒண்ணும் சொல்லலியே...''"
"சரி... சரி... நானே சொல்லிடறேன்'' 
"காசிபாளைத்துலேந்து உன்னை பொண்ணு கேட்டு வந்தாங்க நிவேதா. ரொம்ப நல்ல இடம். பையன் பி.இ., படிச்சுகிட்டு சென்னையிலே செய்யறாரு''"
சொல்லி முடிப்பதற்குள் "அப்பா' என்று கத்தினாள் நிவேதா.
"அப்பா இவ்வளவு மார்க் எடுத்திருக்கேன். டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லிகிட்டு இருக்கேன். நீங்க என்னப்பா, மாப்பிள்ளை கல்யாணம்னு பேசிகிட்டு இருக்கீங்க?''"
"நல்ல இடம்டா நிவேதா, நாம தேடிப்போனாலும் கூட இப்படியொரு குடும்பம் கிடைக்காது''"
"அப்பா, எனக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல! இப்பதான் ப்ளஸ்-டூ முடிச்சிருக்கேன்''
"ஒண்ணும் அவசரம் இல்ல நிவேதா. இன்னும் ஒரு வருஷம் போகட்டும், பதினெட்டு வயசு முடியட்டும். அதுவரைக்கும் வீட்ல சும்மா இல்லாம எம்பிராய்டரி, கம்ப்யூட்டர் கோர்ஸ்-ன்னு ஏதாவது படி, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்''"
"எனக்கு டாக்டருக்குப் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பா, உயிரியல் பாடத்துல சென்டம் எடுத்திருக்கேம்ப்பா''
"எல்லாம் சரிதான் நிவேதா. நம்ம சாதி சமூகத்துல பொம்பளைப் புள்ளைங்கள சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுவாங்க நிவேதா. உனக்கும் தெரியும்ல, வயசுக்கு வந்த புள்ளைகள ரொம்ப நாளைக்கு வீட்ல வச்சிருக்கிறது இல்ல நிவி''
"அம்மா, அப்பா பாட்டுக்கு பேசிகிட்டு இருக்காங்க. நீங்க ஏதாவது சொல்லுங்கம்மா''"
அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு கெஞ்சினாள் நிவேதா.
"நான் என்ன தனியா சொல்லணும் நிவேதா? பொம்பளைப் புள்ளைங்களுக்கு நல்ல வரன் வர்றப்ப கல்யாணம் பண்ணி வக்கிறதுதான் நல்லது. அப்பா சொல்றதக் கேட்டுக்கோ. இவ்வளவு நாள் நீ படிச்சது போதும்''"
"என்னம்மா இன்னும் பழைய காலம் மாதிரியே பேசிகிட்டு இருக்கீங்க. என்னை படிக்க வைங்கம்மா, ப்ளீஸ்''
நிவேதாவின் எந்தக் கெஞ்சல்களையும், கண்டு கொள்ளாமல் போய் விட்டார்கள் அம்மாவும், அப்பாவும்."
அன்று முழுவதும் வீட்டின் அறையில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள் நிவேதா. அம்மா பல தடவை சாப்பிடக் கூப்பிட்டும் போகவே இல்லை. 
"என்னங்க காலைலேந்து நிவேதா எதுவுமே சாப்பிடலங்க. அழுதுகிட்டே இருக்கா. அவளோ தோழிங்க 
ஃபோன் பண்ணி கூட எடுக்க மாட்டேங்றா''"
தன் கணவரிடம் கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டிருந்தாள் வசந்தி.
"காலைலேந்து சாப்பிடலயா? நிவேதாவை இங்க வரச்சொல்லு''"
அப்பா கத்தினார்.
அப்பாவின் வற்புறுத்தலுக்காக ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடித்து விட்டு அப்பா முன் தலையை குனிந்து கொண்டு நின்றாள் நிவேதா.
"இங்க பாரு நிவேதா, டாக்டருக்கு படிக்கணும்னு ஆசைப்படற, பல லட்சம் பேர் நீட் எக்ஸாம் எழுதறாங்க, அவங்களோட போட்டி போட்டு ஜெயிக்கணும். அப்படி படிச்சு உன்னால டாக்டர் சீட் வாங்க முடியுமான்னு எனக்கு தெரியல''"
"எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா, ஒரு வருஷம் முழுக்க நீட் எக்ஸாம்க்கு படிச்சு பாஸ் பண்ணிடறேன். அரசாங்க கல்லூரியில சீட் கிடைக்கற அளவுக்கு மார்க் வாங்கிடுவேம்ப்பா. அப்படி இல்லைன்னா, நீங்க சொல்றதை நான் கேட்டுக்கறேன்பா''"
"சரி நிவேதா, நீ கேட்ட மாதிரியே உனக்கு ஒரு சான்ஸ் தாரேன். இந்த வருஷம் முழுக்க நீ நீட் எக்ஸாம்க்கு படி, கோச்சிங் சென்டர்ல கூட சேத்து விடறேன். நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கி கவர்ன்மென்ட் காலேஜ்ல சீட் வாங்கிடணும். அந்த அளவுக்கு உன்னோட கட் ஆஃப் மார்க் இருக்கணும் நிவேதா. ஒரு வேளை மார்க் குறைஞ்சிருக்குன்னா, இன்னொரு சான்ஸ் கிடையாது. வர்ற நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம். இதை நீ சேலஞ்சா எடுத்துக்க''"
"சரிப்பா'' தீர்க்கமா தலையாட்டினாள் நிவேதா.
"வாழ்த்துக்கள் நிவேதா''
"ரொம்ப நன்றிப்பா''
நிவேதா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நிவேதாவைத் தேடி அன்று மாலையே வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஓடிச்சென்று தலைமை ஆசிரியரை வரவேற்று நாற்காலியில் உட்காரச் சொன்னாள் நிவேதா.
தலைமை ஆசிரியர் வீடு தேடி வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது வேலுமணிக்கு. " வணக்கம்" சொல்லிவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்.
"வாழ்த்துக்கள் நிவேதா, ஸ்வீட் எடுத்துக்கோ, நீங்களும் ஸ்வீட் எடுத்துக்கோங்க''"
நிவேதாவின் அப்பா அம்மாவுக்கும் ஸ்வீட் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.
"எதற்கு ஸ்வீட்?'' என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள் வேலுமணியும், வசந்தியும்.
"இன்னைக்கு வந்திருக்கிற ப்ளஸ் டூ ரிசல்ட்டுல நிவேதாதான், பள்ளிக்கூடத்துலேயே முதல் மதிப்பெண். பொதுவா அரசாங்க விதிப்படி "ரேங்க்' சொல்லக்கூடாது, இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சொல்றேன்''"
நிவேதாவின் அப்பாவிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு நிவேதாவை திருப்பிப் பார்த்தார்.
"என்ன நிவேதா... பள்ளிக்கூடமே உன்னை வலைபோட்டு தேடிக்கிட்டு இருக்கு, நீ இன்னைக்கு பள்ளிக்
கூடம் பக்கமே வரல... போன் போட்டும் எடுக்கல... அதான் என்னாச்சுன்னு விசாரிச்சிடடுப் போகலாம்னு வந்தேன், ஏதாவது உடம்புக்கு முடியலையா நிவேதா?''"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், பாப்பா டாக்டருக்குப் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருக்கா, அதுல எங்களுக்குள்ள கொஞ்சம் வாக்கு வாதம் அவ்ளோ தான்''"
வேலுமணி பதில் சொன்னார்.
"வெரிகுட், உண்மையிலேயே டாக்டருக்குப் படிக்கறதுக்கு தகுதியான பொண்ணு சார், நிவேதா. பள்ளிக்கூடத்துல எப்ப கேட்டாலும் " நான் டாக்டருக்குப் படிக்கணும்னுதான் சொல்லிகிட்டு இருப்பா, நிவேதா டாக்டருக்கு படிக்கறது பத்தி நான் நிறையவே அறிவுரை சொல்லிருக்கேன்''"
".......''"
"இந்த வருஷம் நீட் எக்ஸாம்க்கு அப்ளிகேஷன் போடலைன்னா பரவால்ல நிவேதா. அடுத்த வருஷம் எழுதலாம். இப்போதிருந்தே தயாராகணும். நீட் எக்ஸாம் பெரிய கஷ்டமே கிடையாது. இப்போ இருக்கற தமிழ்நாட்டு புத்தகங்களைப் படிச்சாலே போதும்! இதுல மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு சமமா இருக்கு, இதைப் படிச்சா போதும் எளிமையா பாஸ் பண்ணிடலாம்''"
"ரொம்ப நன்றி சார்''"
"நிறையப் பேர் எப்படி தயார் ஆகணும்னு தெரியாம இருக்காங்க நிவேதா. நீ அப்படி இல்ல, உனக்கு நல்லா தெரியும், இருந்தாலும் சில ஷாட்கட் சொல்றேன் நிவேதா."இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடங்கள். இதுல உனக்கு தாவரவியல், விலங்கியல் நல்லா வரும். அதை மட்டும் ரொம்ப நல்லா படிச்சா போதும். முன்னூத்தி ஐம்பது மார்க் வரை எடுத்திடலாம். அப்புறம் இயற்பியல், வேதியியல்ல உனக்கு தெரிஞ்ச கேள்விக்கு பதில் எழுதினாலே, நானூறு மார்க் தாண்டிடலாம். கவர்மெண்ட் காலேஜுக்கான கட் ஆஃப் கிடைக்கும்''"
பாடமே நடத்தி முடித்திருந்தார் தலைமை ஆசிரியர். அது பெரிய நம்பிக்கையாக இருந்தது நிவேதாவுக்கு. 
அடுத்த நாளில் இருந்தே தீவிரமாக படிக்கத் தொடங்கிவிட்டாள் நிவேதா. முதலில் பழைய தேர்வுகளின் வினாக்களை எடுத்து மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்தாள். எந்தெந்த பாடங்களில் மதிப்பெண் குறைவாக இருக்கிறதோ அந்தப் பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிப்பாள்.
அதிகாலை எழுந்து படித்து விட்டு, ஒன்பது மணிக்கு கோச்சிங் சென்டர் போய் விடுவாள். மறுபடியும் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள்.
பல நாட்கள் தூங்காமல் கூட விடிய விடிய நிவேதா படிப்பதைப் பார்த்து அம்மா பதறியிருக்கிறாள். இரவு இரண்டு மணிக்கு எழுந்து காபி போட்டு கொடுப்பாள் அம்மா.
அம்மாவை நன்றிப் புன்னகையோடு பார்ப்பாள் நிவேதா.
கஷ்டப்பட்டு படித்த நீட் தேர்வு ரிசல்ட் இன்று.
பதைபதைப்போடு வீட்டில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தாள் நிவேதா.
" "யா... சக்சஸ்'' என்று கத்திய நிவேதாவின் முகம் அடுத்த நொடியே வாடிப்போய்விட்டது."
முன்னூற்றி எழுபத்திரெண்டு மதிப்பெண்கள் நல்ல மதிப்பெண்கள் தான். ஆனால் கவர்மெண்ட் காலேஜ் கட்-ஆஃப் க்கு நான்கு மதிப்பெண்கள் குறைந்து போயிருந்தது. முன்னூற்றி எழுபத்தாறு மதிப்பெண்களோடு கட்-ஆப் நின்று போய்விட்டது.
"என்ன நிவேதா, பாஸ் பண்ணிட்டியா ? எவ்வளவு மார்க்?'' "
கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அப்பா.
"அப்பா, நான் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிருக்கேன்ப்பா, முன்னூற்றி எழுபத்திரண்டு மார்க். ஆனா கவர்ன்மெண்ட் காலேஜ்ல சீட் வாங்கற அளவுக்கு மார்க் வரலப்பா, ஜஸ்ட் நாலு மார்க்ல மிஸ் பண்ணிட்டேம்பா''"
"உங்ககிட்ட போட்ட சவால்ல நான் தோத்துட்டேம்ப்பா...ஸாரிப்பா''"
கண்களில் இருந்து நீர் வழிந்தது நிவேதாவுக்கு.
அப்பாவின் இறுக்கமான முகத்தைப் பார்த்து பயந்து கொண்டிருந்தாள் நிவேதா. அப்பா என்ன சொல்லப் போகிறார் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. திட்டுவாரா? கல்யாணப் பேச்சை எடுப்பாரா?
அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் நிவேதா.
"இல்லடா செல்லம் நீ தோற்றுப் போகலடா, உண்மையிலேயே ஜெயிச்சிருக்க''"
அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் நிவேதா. கண்கள் இன்னும் கலங்கின.
"உண்மையிலேயே நீ ஜெயிச்சிருக்க நிவேதா. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி நல்ல மார்க் வாங்கியிருக்க. உன் மனசு முழுக்க நீ டாக்டருக்கு படிக்கணும் என்கிற வெறி இருக்கு. உன்னோட கனா டாக்டர் ஆகணுங்கிறது தான். கவர்ன்மென்ட் காலேஜ் கட்-ஆப் நூலிழையிலதான் மிஸ் ஆயிருக்கு. இதெல்லாம் தோல்வியே கிடையாது. நீ ஜெயிச்சுட்ட. உன் விருப்பம் போலநீ டாக்டருக்கு படிக்கலாம். ஒண்ணு நம்ம நகை, இடத்தை வித்து உன்னை பிரைவேட் காலேஜ்ல படிக்க வைக்கிறேன். இல்லன்னா, இன்னொரு வருஷம் படிச்சு அடுத்த வருஷம் நீட் எழுது. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்''" என்று சொன்ன அப்பாவை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் நிவேதா.

முதல் பரிசு பெற்றுள்ளஆதலையூர் சூரியகுமார் கும்பகோணம் அருகே உள்ள தென்குவவேலி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பல்வேறு தமிழ் வார, மாத இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கிறார். தினமணி சிறுகதைப் போட்டிகளில் தற்போது இவர் ஐந்தாவது முறையாகப் பரிசு பெறுகிறார்.


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/SOORYA_KUMAR.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/நிவேதா-நீட்-எழுதுகிறாள்-3211671.html
3211669 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, August 11, 2019 01:21 PM +0530 செல்வந்தர் ஒருவர் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. விருந்தைத் தொடங்க நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. பிரபலமான ஓர் அரசியல் பிரமுகர் ஒருவரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தார்கள். அப்போது விருந்துக்கு வந்திருந்த ஒருவருக்கு ரொம்ப பசி. அவர் பந்தியில் அமர்ந்து தனக்கு உணவு தரும்படி கேட்டுக் கொண்டார். அவரைப் போலவே நிறையப் பேரும் அமர்ந்து உணவு கேட்கவே, உணவு பரிமாறப்பட்டது. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் செல்வந்தருக்கு கோபம் வந்துவிட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரிடம், "சாப்பிடுவதில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்: "பசிக்கும்போது சாப்பிடுபவன் மனிதன். கிடைக்கும்போது சாப்பிடுவது மிருகம்''
 செல்வந்தர் எதுவும் பேசாமல் திரும்பிச் சென்றார்.
 பே.சண்முகம், செங்கோட்டை.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/STORY.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/மைக்ரோ-கதை-3211669.html
3211668 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, August 11, 2019 01:19 PM +0530 கண்டது
* (விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே ஒரு பூக்கடையின் பெயர்)
மலர்வனம்
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

* (திண்டுக்கல்லில் ஒரு ஹெல்மெட் கடையின் பெயர்)
மண்டை பத்திரம்
பி.பழனிச்சாமி, தாடிக்கொம்பு.

* (செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் பிரிவு பகுதியில்)
இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க 
வேண்டும் என்றால்...
ஒன்று குழந்தைகளாக இருக்க வேண்டும். 
இல்லையென்றால் குழந்தைகளோடு 
இருக்க வேண்டும். 
க.அருச்சுனன், செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!
உண்மையான அன்பு கிடைக்கும்போது,
அலட்சியமாகத்தான் தெரியும்.
தொலைக்கும்போதுதான்...
அதன் மதிப்பு தெரியும்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

கேட்டது
* (விருதுநகரில் ஒரு பள்ளியில் ஆசிரியரும் மாணவனும்)
"எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு 
காயம் ஏற்பட்டுச்சு?''
"அதோ அங்கே ஒரு மரம் தெரியுதாப்பா?''
"ஆமாம் சார்... தெரியுது...'' 
"அந்த மரம் நேத்து எனக்குத் தெரியலைப்பா''
ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

* (திருச்சி தபால் நிலையம் ஒன்றில்)
"போஸ்ட்கார்டு இருக்கா?''
"இல்லை''
"ஐந்து ரூபாய் தபால் கவர் இருக்கா?''
"இல்லை''
"சரி...ஐந்து ரூபாய் ஸ்டாம்பாவது இருக்கா?''
"ஸ்டாக் இல்லைங்க''
"பூட்டு இருக்கா?''
"இருக்கு''
"சரி... பூட்டிட்டு கிளம்புங்க''
ஆர்எம்.வி.ராமசாமி, கோட்டையூர்.

எஸ்எம்எஸ்
பென்சில் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான்...
கூர்மையாக இரு...
இல்லாவிட்டால் சீவி விடுவார்கள்.
கே.முத்தூஸ், தொண்டி.

அப்படீங்களா!
APPLE WATCH SERIES 4 கைக்கடிகாரம் நேரத்தைக் காட்டுவதற்கு மட்டும் தயாரிக்கப்படவில்லை. அதைக் கட்டியிருப்பவரின் உடல் நலத்தைப் பற்றி எச்சரிக்கை செய்யும் கருவியாகவும் அது இருக்கிறது. 
இதயம் ஒவ்வொருமுறை துடிக்கும்போதும் நமது உடலில் மின் தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது. அந்த மின்தூண்டுதல்களை நமது உடலின் இரத்த ஓட்டத்தின் வாயிலாக அறிந்து கொள்ள இசிஜி ஆப் என்ற செயலி இருக்கிறது. 
இந்தச் செயலி இணைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டால், அது நமது இதயத்துடிப்பைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. இதயத்துடிப்பு அதிகமாக இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து உடனே எச்சரிக்கை செய்கிறது. இந்த எச்சரிக்கைத் தகவல் நமது செல்போனுக்கும் அனுப்பப்படுகிறது. 
உதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கும் ஒருவர் கீழே விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே இந்த கைக்கடிகாரம் செல்போன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. அந்த எச்சரிக்கையைக் கீழே விழுந்தவர் உடனே பார்க்காமல் அரை நிமிடம் தாண்டிவிட்டது என்றால், இந்தக் கைக்கடிகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள செல்போன், ஆம்புலன்ஸுக்கும். கீழே விழுந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துவிடுகிறது. எந்த இடத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்? என்பதையும் அவருடைய மருத்துவ அடையாள அட்டையையும் காண்பிக்கிறது. உயிர் காக்கும் கைக்கடிகாரம் என்று இதைச் சொல்லலாம்.
என்.ஜே., சென்னை-58. 


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/ASK.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/பேல்பூரி-3211668.html
3211666 வார இதழ்கள் தினமணி கதிர்  நட்புடன்... உணவும், மருந்தும்! Sunday, August 11, 2019 01:15 PM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
ஆங்கில மருந்துகளைப் போல அல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடும் போது மட்டும் எதற்காக நிறைய உணவு மற்றும் செயல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன? மன மகிழ்ச்சி தரும் உணவு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டே மருந்துகளையும் சாப்பிட்டால் நோய் குணமடையாதா?
 -சங்கரன், திண்டுக்கல்.
 "என் செளகர்யம் போல விரும்பியதைச் சாப்பிடுவேன். நீங்கள் மருந்து கொடுத்து என் உடல் தொல்லையைக் குணப்படுத்துங்கள்' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மருந்தைக் கொடுத்தால், நோய்க்கும் மருந்துக்கும் மட்டுமே சண்டை நடக்க வேண்டுமே தவிர, மருந்துக்கும் உணவுக்கும் சண்டையை ஏற்படுத்துவது தவறு. மேலும், உணவு, சாப்பிடப்பட்ட மருந்துக்குத் துணை நின்று நோய்க்கு எதிராக நிற்க வேண்டுமே தவிர, கட்சி மாறி உடல் உபாதைக்கு ஓட்டுப் போட்டுவிட்டால், ஐந்தாண்டுகளல்ல, பத்து ஆண்டுகள் ஆனாலும் நோய் மாறாது. உதாரணத்திற்கு, உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் இளைக்க மருந்து மற்றும் செயல்களைச் செய்து கொண்டே, புலால் உணவு- எண்ணெய்யில் பொரித்தது, நொறுக்குத்தீனி சாப்பிடுவது, பகலில் படுத்து உறங்துவது, சோம்பேறித்தனமான சுகம் தரும் இன்ப வாழ்வு அனுபவிப்பது போன்றவற்றால், உடல் மேலும் பருத்துவிடுமே தவிர, குறைய வாய்ப்பேயில்லை.
 கோதுமையை வறுத்து தண்ணீர் விட்டு கஞ்சி போலக் காய்ச்சி வடிகட்டி, ஆறிய அந்த கஞ்சியில் தேன் கலந்து காலையில் சாப்பிட, உடல் இளைக்கும் என்கிறார் சரகர் எனும் முனிவர். அவர் சொல்வதைக் கேட்காமல், உடலை இளைக்கச் செய்யும் வராதி கஷாயத்தை தேனுடன் காலையில் சாப்பிட்ட பிறகு, மாவுப்பொருட்களாகிய இட்லி, தோசை, வடை அல்லது வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல் என்றெல்லாம் சாப்பிட்டால் வேலைக்கு ஆகுமா?
 மேலும் சில உதாரணங்கள்:
 கார்ப்போகரிசி எனும் விதையைக் கஞ்சியாகக் காய்ச்சி வடிகட்டி, காலையில் சாப்பிட, உடலில் உள்ள விஷ சேர்க்கையானது நீங்கி விடுகிறது. ஆனால், எந்த உணவால் விஷம் ஏற்பட்டதோ, அதைத் தொடரும் பட்சத்தில் இந்தக் கஞ்சி வேலை செய்வதில்லை.
 கறுப்பு எள்ளைக் கஞ்சியாக்கி, அதில் பசு நெய்யும் உப்பும் சேர்த்துச் சாப்பிட, குடல், நுரையீரல், கல்லீரல், மூட்டுகள் ஆகிய பகுதிகளுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையானது கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடுமோ என்று பயந்து கொண்டு சிறிதும் நெய்ப்பே தராத உணவு வகைகளைத் தரும் குதிரை வாலி, பார்லி, சாமை, சோளம் போன்றவற்றை உணவாக்கிச் சாப்பிடுபவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் இந்தக் கஞ்சியுடன், வறட்சி ஏற்படுத்தும் இவ்வகை உணவுகளைத் தடை செய்து எள்ளுக்கஞ்சியை உணவாகக் கொள்ள, மூட்டுகளில் ஏற்படும் உராயும் சத்தம், உள்ளுறுப்புகளின் உரசிக்கொள்ளும் நிலை மாறி நன்மையை ஏற்படுத்தும்.
 நெருஞ்சி விதையையும், கன்டங்கத்திரியையும் வேகவைத்த நீரை கரும்புச்சாறுடன் கலந்து சாப்பிட, சிறுநீரகங்களிலிருந்து உற்பத்தியாகும் சிறுநீரின் அளவு கூடி வெளியேறத் தொடங்கும். அதன் உற்பத்தியைத் தடுத்துவிட்ட காரசாரமான உணவு வகைகளை நிறுத்தி நீரை சுரந்துவிடும் தன்மையுடைய வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை உணவாகக் கொள்ள, மருத்துடன் உறவாடி நன்மையைத் தரும்.
 தொண்டையைச் சார்ந்த உபாதைகள் பலவற்றையும் உருவாக்கும் ஐஸ்கிரீம், மிகச்சூடான காபி, டீ சாப்பிடுதல், அதிகப் பேச்சு, பாட்டு பாடுதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுப்பதற்காக குரலை உயர்த்திப் பேச வேண்டிய நிர்பந்தம், தயிர், ஊறுகாய், இனிப்பு அதிகம் சாப்பிடுதல், தைராய்டுகட்டி- அதனால் ஏற்படும் தைராய்டு சுரப்பிகளின் கெடுதல்கள் போன்ற நிலையில், இவ்வகை உணவு- செயல் போன்றவற்றை நிறுத்தி, பார்லியுடன் நெய், நல்லெண்ணெய், திப்பிலி மற்றும் நெல்லிக்காய் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி சாப்பிட, நல்ல பயன் தரும். அதைவிடுத்து, தொண்டைக்கு கெடுதலைத் தரும் உணவையும் சாப்பிடுவேன், நீங்கள் தரும் மருந்தும் வேலை செய்ய வேண்டும் என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை.
 ஆக, உணவும்- மருந்தும் நட்புப் பாராட்டி, நோய்க்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து முத்திரை பதித்தால் வெற்றி உறுதி. மனம் எனும் ஆட்சி பீடத்தில் அமர, ஆரோக்கியத்தை நிலை நாட்ட, உணவும் மருந்தும் துணை நிற்கட்டும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/AYUL.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/நட்புடன்-உணவும்-மருந்தும்-3211666.html
3211665 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... DIN DIN Sunday, August 11, 2019 01:13 PM +0530 * "நீங்க "ஒரு' பல் டாக்டரா?''
"ஒரு பல்லுக்கு மட்டுமில்லை...
32 பல்லுக்கும் டாக்டர்''
எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

* "ஆனாலும் உங்க பையன் 
படுமோசம் சார்...''
"என்னாச்சு சார்?''
"பிறவிப் பெருங்கடல் எந்த கண்டத்தில் இருக்குன்னு 
கேக்குறான் சார்''
எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிபட்டி.

* "ராப்பிச்சைக்கு ஏன் நெட்கார்டு இலவசமாப் போடுறே?''
"என் சமையலைப் பத்தி
பேஸ்புக், வாட்ஸ் அப்ல புகழ்ந்து பேசுறான்''
ம.வேதவள்ளி,
பொரவச்சேரி.

* "கமலா இன்னைக்கு 
நீ சமைக்கப் போறியா?''
"அட... எப்படி கரெக்டா 
கண்டுபிடிச்சீங்க?''
"என் ராசிக்கு இன்னைக்கு மரண பயம்ன்னு 
போட்டிருந்தது''
சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/k6.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/சிரி-சிரி-3211665.html
3211664 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் DIN DIN Sunday, August 11, 2019 01:11 PM +0530 * நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்குப் படம் "நின்னு கோரி'. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. "கொடி' படத்துக்குப் பின் தமிழுக்கு வந்துள்ள அனுபமா பரமேஸ்வரன் இது பற்றிக் கூறும்போது, ""கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அதன் பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. நிவேதா தாமஸ் தெலுங்குப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்புப் பாணியிலேயே நான் நடிப்பேன். படத்தில் பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறேன். கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த வேடம் எனக்குக் கூடுதல் பலமாக அமையும். சரியான தருணத்தில் எமோஷனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர் இது. அதைப் புரிந்து நடித்து வருகிறேன்'' என்றார்.

* மலையாளத்தில் "வந்தே மாதரம்' படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். அதன் பின் மலையாளத்தில் அவர் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஜேக் டேனியல்' என்ற மலையாளப் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் திலீப்புடன் அவர் நடிக்கிறார். "வந்தே மாதரம்' படம் 2010-இல் வெளியானது. 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மலையாளத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. "இரும்புத்திரை' படத்துக்குப் பிறகு அவருக்கு வில்லன் வேட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் அவற்றில் சில படங்களை மட்டுமே ஏற்பதாக அர்ஜுனுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

* சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த பின்னர் கீர்த்தியின் சினிமா வாழ்க்கை முழுவதும் திருப்பு முனை. சமீபமாக தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். இதற்காக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஈஸ்வர் என்ற புதியவர் இயக்குகிறார். இந்தப் படத்துடன் ரதிந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள். இந்த படங்களைத் தயாரித்தபடி தனுஷ் நடிப்பில் "கேங்ஸ்டர்' கதையை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

* தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட "டியர் காம்ரேட்' படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தானா, அடுத்து விஜய் ஜோடியாகவும், தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாகவும் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "எப்போதுமே என்னை மிகப் பெரிய நடிகையாக நான் நினைத்ததில்லை. நல்ல கதைகளைக் கேட்கிறேன். அதில் எனக்குப் பொருத்தமான கேரக்டரைத் தேர்வு செய்கிறேன். மற்றபடி வீண் விவகாரங்களில் ஈடுபட மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், ஒரு நிமிடம் கூட என்னால் சோகமாக இருக்க முடியாது. இதை வைத்து, படத்தில் எனக்கு அழத் தெரியாது என்று சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக "டியர் காம்ரேட்' படத்தில் என் நடிப்பு அமைந்துள்ளது. சோகமான காட்சிகளில் என் நடிப்பு எப்படி இருந்தது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்'' என்றார். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறார்.

* ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினியின் புதிய கெட்அப் சமீபத்தில் வெளியாகி டிரெண்டில் இடம் பிடித்தது. இதற்கிடையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டி வருவதுடன் ஓரிரு இயக்குநர்களிடம் ஒன் லைன் கேட்டு அதை டெவலப் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு பேர் ரஜினியின் அடுத்த படம் இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் இன்னும் எந்த படம், யார் இயக்குநர் என்பதை முடிவு செய்யாமலிருக்கிறார். ஒவ்வொரு படம் முடிந்தவுடன் இமயமலை செல்லும் ரஜினிகாந்த் "தர்பார்' படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை சென்று ஒரு வாரத்துக்கும் மேல் தியானத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறாராம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப புறப்படும் தேதியை முடிவு செய்து செப்டம்பர் வாக்கில் இமயமலைக்குச் செல்வார் என்று தெரிகிறது.
ஜி.அசோக்


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/k5.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/திரைக்-கதிர்-3211664.html
3211663 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... DIN DIN Sunday, August 11, 2019 01:08 PM +0530 * "எனக்கும் என் தலைவருக்கும் "தோற்ற' 
ஒற்றுமை உண்டு''
"பார்த்தால் அப்படித் தெரியலையே?''
"அந்தத் தோற்றமில்லை. தேர்தலில் நானும் அவரும் நிறைய தோற்றுப் போன ஒற்றுமையைச் சொன்னேன்''
டி.கே.சுகுமார், குனியமுத்தூர்.

* கணவன்: உன் சொந்த பந்தமெல்லாம் 
அறிவிப்பு இல்லாத கரண்ட் கட் மாதிரி
மனைவி: புரியலையே...
கணவன்: எப்ப வருவாங்க... எப்ப போவாங்கன்னு தெரிய மாட்டேங்குதே!
செ.ரா.ரவி, செம்பட்டி.

* "தலைவர் ரொம்ப சந்தோஷமாயிருக்காரே... ஏன்?''
"அவர் சிலையை யாரோ திருடி வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்காங்க. அதை அங்கே மியூசியத்துல வச்சிட்டாங்களாம்''
எஸ்.மோகன், கோவில்பட்டி.

* "அப்பா மேல உள்ள மரியாதைக்கும், உங்க பையனிடம் நீங்க "போங்க... வாங்க' ன்னு மரியாதையாப் பேசுறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''
"என்னுடைய பையனுக்கு என் அப்பா 
பெயரைத்தானே வச்சிருக்கேன்''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/k4.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/சிரி-சிரி-3211663.html
3211662 வார இதழ்கள் தினமணி கதிர் புழுதி அலையாத்தி செந்தில் DIN Sunday, August 11, 2019 01:06 PM +0530 தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

வெயில் அந்த ஊரை முழுவதுமாக விழுங்கியிருந்தது, காற்றே மரித்துவிட்டது போல, மூச்சுவிட மறந்து அசைவற்றுக் கிடந்தது...
இத்தனைக்கும் தென்னை மரங்களடர்ந்த ஊரது.ஆங்காங்கே, சில வீடுகளில், இதுநாள் வரை சேகரித்த பழுப்பு மட்டைகளைச் சுருங்கி கிடந்த ஊமச்சி குட்டையில் ஊற விட்டிருந்தனர். ஊமச்சி குட்டையைச் சுற்றி காட்டாமணக்கும் கற்றாழைகளும் சூழ்ந்திருந்தன. அதையொட்டி எண்ணிலடங்கா ஈச்சைமரங்கள், பனைமரங்கள், இலுப்பை, நாவல் மரங்களடங்கிய பெருங்காடு நீண்டு விரிந்திருந்தது. முழங்கால் அளவே தண்ணீர் கிடந்த குட்டையில் மட்டைகட்டுகளை தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கடிக்க, அதன் மீது உடைந்த கருங்கற்களையும் இடுப்புயர மரக்கட்டைகளையும் வைத்திருந்தனர். அவற்றுள் சில தன் தலைமீதான சுமைகளை உருட்டிவிட்டு வீட்டுக்கு அடங்காத பிள்ளைகளைப் போல மிதப்பில் கிடந்தன. நன்றாக ஊறிய முடையும் பதம் வந்த மட்டை கட்டுகள் கரையேற்றப்பட்டு அந்த பகுதியே மட்டை ஊறல் வாடையில் நிரம்பியிருந்தது.
சில வீடுகளில் பெண்களை வேலைக்கு வைத்து மட்டைகளை முடைந்து கொண்டிருந்தனர்.
"என்னடியாயா வெயிலு இந்தோ எரி எரிக்கிது ய்யே...யப்பா...''
"சரி உடாத்தா இன்னயோட மட்டமொடையறது முடிஞ்சிரும் நாளலேர்ந்து பழயதை அரிச்சி தின்னுட்டு செவனேனு படுத்து தூங்கேன், யாரு வேண்டான்னா'' 
"ஆ... நான் தூங்குனேன், பளயாத்தாங்கரைக்கு கட்டையில போற மட்டும் இந்த மட்டயோடதான்டி எம்பொழப்பு. ஆன... என்ன ஒன்னு இன்னயோட இந்த தவணைக்காரர்க்கு சோலி முடியுதுடி. ரெண்டு மாத்தக்கி முன்னாடி எடுத்ததுடியாயா ஒரு சொப்புக் கொடம், அது இன்னக்கி நாளக்கினு இலுத்துகிட்டே போவுனுச்சி, பொழுது சாய சின்னத்தேவரு பழையபாக்கிய குடுத்தவோனே ஒரேயடியா பூரா காசையும் உட்டெறிஞ்சிரலான்னு இருக்கண். ஆமாங்குறேன், "வாழ்றவன் வூட்டு வாசல்லையும் பத்து பேரு வாங்குனவன் வூட்டு வாசல்யும் பத்து பேரு'ங்குற மாரி இனி நம்ம வூட்டுக்கு இந்த ரோடு போட்ற வேல இருக்கப்புடாதுந்றேன்....''
"ம்க்கும்...நல்லாச்சொன்ன ப்போ...சின்னத்தேவர்ட்ட ஏதாத்தா காசு, எப்டியும் தேங்கா வெட்டு முடிஞ்சாதான் கைக்கு காசு வரும்னு தெரியாதா ஒனக்கு, என்னமோ ப்புதுசா கனாக்காண்ற...''
"இல்லடீ... இன்னக்கி காலைல நீ வாரத்துக்கு முன்னாடி தேவரு சொன்னாவோ, "சாய்ந்தரம் பழைய பாக்கியெல்லாம் பட்டுவாடா பண்ணிபுடலாம்... நான் டெப்போ மேனசரு ஊட்ல போயி ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா வாங்கியாரேன்... மலமலன்னு பாக்கி மட்டயல போட்டடிச்சி மொடஞ்சிபுட்டு இன்னக்கி பொழுது இருக்க சோலிய முடிச்சிபுடனும்' ன்னவோடி.''
"சரி அப்ப நடயகட்டு... வெயிலு உச்சிக்கு வந்துட்டாத்தா ரெண்டு சோத்த தின்னுட்டு மிச்ச மட்டையையும் மொடைஞ்சிபுட்டு காலத்தோட ஊடு போயி சேருவோம்....''
எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் பருவமழை தொடங்கிவிடும். அதற்குள், தங்கள் கூரை வீட்டையும் தமது ஆநிரைகள் உறங்கும் மாட்டுகொட்டகையையும் சீர் செய்து
விடவேண்டுமென்ற முனைப்பில் ஆங்காங்கே மட்டைகள் முடையலாகிக்கொண்டிருந்தன.
தற்சமயம் மழை பெய்ய தொடங்கிவிட்டால் நடந்துகொண்டிருக்கும் வேலை தடைபட்டுவிடும் எனினும், அவர்
களால் அந்த வெக்கையை வசைபாடாமலிருக்க இயலவில்லை. 
"யாண்டா மருதா ஒரு இல கொட முடையலயே... பாழும் வெய்லு மனுசன பொசுக்கிபுட்டுத்தான் தொலயும் போலயே''
சின்னத்தேவர் சொல்லிக் கொண்டே மட்டையைக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தார்.
"ஆமாம் தேவர நம்மூட்டு மாமரத்த பாத்தியளா? க்கா பீச்சி எடுத்துருக்கு இப்டி மாங்காய் காச்சி தள்ளினாக்க மழை ரொம்ப பிந்துன்னு சொல்லுவோம். இன்னும் என்ன செய்ய காத்துருக்கோ...''
"ஆமாடா பாத்தன் பாத்தன்...."மாவுக்கு மங்கும் புளிக்கு பொங்கும்'னு அந்தகாலத்லே சும்மாவா சொன்னானுவோ? நம்ம கள்ளு
கடையடில உள்ள புளியமரத்த பாத்தியா ஒத்த பிஞ்சியக் கூட உடலையே... பத்தாதத்துக்கு பூவரசு ஒதியல்லாம் மொசுக்கட்ட புளுத்து எளயிது, நாசமாப்போன இந்தூருக்கு இந்த வருசமும் காச்சபாடுதான் போல... இது என்னக்கிதான் நமக்கு சாதகமா இருந்துருக்ங்ற... எரிச்சா ஒரேயடியா எரிச்சி கொட்டும்... வக்காளி ஊத்துனிச்சினா பத்துப்பயஞ்சி நாள்ன்னு பொத்துகிட்டு ஊத்தும். அதுவும் கருதறுப்பப்பதான்டா அடச்சிகிட்டு கொட்டும்... அட... அத ஏஞ்சொல்ற இப்ப யேன் அண்ணன் அம்பதறுவது ஆள வுட்டு கோரை யாத்தாங்கரை சேத்த கொழச்சி, நெதம் பச்ச கல்ல காய வச்சி சுண்டிபாத்து சுண்டிப் பாத்து அடுக்கிட்டு கெடக்றானே.. நீனா நாளைக்கு ஒரு மேஸ்த்ரிய வுட்டு அருவுனி கல்ல அடுக்கிப் புட்டு காளா வைய கொளுத்த சொல்லேன் பாப்போம். ஹா... ஹா... ஹா... இப்போ ஊர மெரட்டி எரிக்கிதே வக்காளி, மானம் அப்பயே பொத்துகிட்டு ஊத்தும்டா ஹா... ஹா... ஹா....''"
"ஹா... ஹா... ஹா அது என்னமோ உண்மதான் தேவர...''"
"நானும் பத்துப் பதினைஞ்சி வருசமா பாத்துட்டன்டா மருதா, வருசா வருசம் எங்க நடுளவங் காளவாய கொளுத்றன்னிக்கு மட்டும் பெயமொவன் மானம் வேலய காட்டிப்புடும் பாத்துக்க. நீ காளவாய கொளுத்துறன்னிக்கு எங்க நடுளவன பாத்ருக்கியா... ச்சும்மா மேலு பூரா துன்னுத்து பட்டய பூசிக்கிட்டு துண்ட சுருட்டி இடுப்புல கட்டிக்கிட்டிக்கிட்டு மாவேசு மருவேசா நிப்பான், முன்னடியாரப்பா, தூண்டிகாரா, நொண்டிவீரானு....இந்த வெளிபட்டசாமியயும் கூப்ட்டு ரெண்டே ரெண்டுநா காவந்து பண்ணியூட்ரப்பான்னு காளவாய சுத்திசுத்தி வருவான் பாரு... பகலு பூரா வேண்டுதலுக்கு நல்லா வெட்டாப்பு கொடுக்கும் மசண்ட நேரமா அப்டி தீய போட்டுட்டு, பொட்டுகல்ல சக்கரைய குடுப்பான், குடுத்துட்டு கொளுத்தியூட்ட கையோட ஒரு தரத்துக்கு வெத்தலை பாக்கு போடலான்னு செத்த அப்படி அசந்து ஒக்காருவாம் பாரு... பெயமொவன் மானம் அப்பயே பொத்துகிட்டு ஊத்தும்டா - அப்டியே தலையில கைவச்சிகிட்டு கொட்டாவைல போயி ஒக்காந்ருவான். இப்ப எதுக்கு இந்த மானம் இப்டி பண்ணுதுங்குற எல்லா நம்ப குடிய கெடுக்குறத்துக்குத்தான். பெயமொவன் மானம் நம்பள அழிச்சிபுட்டுதான்டா ஓயும் போல...''
இதைச்சொல்லும் போது இதுவரை குனிந்து மட்டையை கிழித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவர் நிமிர்ந்து வெட்டரிவாளை தனது கட்டைவிரலால் ஒருமுறை பதம் பார்த்தார். தற்சமயம் தீட்ட தேவையில்லை என தனக்குள் சொல்லிக் கொண்டார்..." 
"ஆங் எடுத்துபோடு அடுத்தமட்டைய...''"
"நீங்க வேற யாந் தேவர. நான் என்ன செத்தா பொய்ட்டேன்... என்னமோ இப்பத்தான் புதுசா கத சொல்றிய, நானும் பூரா கூத்தையும் பாத்துகிட்டுதான கெடக்குறேன். ஏன் மூனாவருசம் நம்ப பாளையங் கோட நானும் காளவாய்க்கி மரம் உடைக்க போவலயா, அந்த வருசமும் மானம் இப்டித்தான் கூத்து கட்டி அடிச்சிது. ஆனா, நடுத்தேவரு பாடு என்னமோ காலொடிஞ்ச ஒழவுமாடு கத தான்''"
"நூத்ல ஒரு வார்த்தடா மருதா, மொடவங் கொம்பு தேனுக்கு ஆசபட்ட கதயா அவஞ் சத்திக்கு மீறி இதல்லாம் பண்ணிட்டு கெடக்றான். நா எத்னயோ மொற அவங்கிட்ட நேர்லயே சொல்லிபுட்டனே. கடனொவுடன வாங்கியல்லாம் பண்ணாத... இதுக்கு சொந்தமா டிராக்கிட்டரு இருக்கணும். படுவைல சேத்துமண்ணுக்கு ஒரு ஒன்னு ஒன்ற மா சொந்தமா நெலம் இருக்கணும். வெறவுக்கு மரம் வாங்க கைக்காசு இருக்கணும். நீ உறியமட்ட வாங்க கோட அஞ்சு வட்டிக்குதான் வாங்குற. இதல்லாம் பெருந்தனக்காரன் பன்ற வேலப்பா... நம்ப ஏதோ ஊரோட ஊரா நாத்த பறிச்சமா போட்டு நட்டமா பொங்க கெளிச்சி துண்ட ஒதறி முண்டாச கட்டிகிட்டு அறுப்புக்கு ஆளு பாத்தமானு இருக்கனும்னு... எத்னயோ வாட்டி சொல்லியாச்சி... அவன் இங்க வந்து சொல்றத்துக்கு போயி எரவானத்ல சொல்றாங்ற கணக்கா, நம்ப பேச்சு அங்க எடுபடல. அது கொளுத்தியுட்ட பெறவு வெந்த கள்ளு பாதி வேவாத கள்ளு பாதினு ஒருபக்கம் உருக்கு உளந்தது போவ கெட்டத்துக்கு பாதியா வித்து நட்டத்துக்கு இல்லாம ஏதோ வாய்க்குங் கைக்கும் ஒட்டியிட்டு கெடக்றான்... இருந்தாலும் இவ்ளத்துக்கு அவனும் தாக்குப்புடிச்சி ஓட்றாம்பாரு அதச்சொல்றா மருதா, நான்னா ஒருவாட்டி நொடிச்சாக்க மாக்குனு செத்துப் பொய்ருவேன். அவனுக்கு அப்பைலேருந்தே இடிமேல இடிதான்டா. 
ஆனா அவனுக்கு ஒன்னு வந்து பொறந்துருக்கே யேப்பா செத்த அசந்தா செகத்தயே அழிச்சிபுடும். அப்பன மாதிரியே அதுக்கும் வாயிதான் மூலதனம்... கண்டதக் காணலம்பான், காணாததக் கண்டாதா சொல்லுவான்... வாயத்தொறந்தாலே புளுவுதான்.
இங்கேரு ஒரு கதயா கேளு... ஹா... ஹா... ஹா, ரெண்டு நா முன்னாடி மசன்ட நேரமா இந்தபய ஊட்டுக்கு வந்தான்டா, வந்தான்னாக்க என்னமோ பனமட்டயில மூத்தரம் பேஞ்சா மாறி வாயி சும்மா படபடனு பொரியும். அன்னிக்கும்,"அப்பா ஊசி நூலு வாங்கியார சொன்னிச்சி ஊசி நூலு வாங்கியார சொன்னிச்சின்னு ஒரேதா குதிச்சான். 
ஏலேய்! இப்ப எங்கடா கால்ல சுடுதண்ணி ஊத்ன மாரி குதிக்கிற? தேடிதான எடுக்க முடியும்? செத்த ஒக்கார்ன்னே.
"நாளைக்கு கருக்கல்ல அப்பா தலைஞாயித்துக்கு மாடு வாங்க போவுது கால்ச்சட்ட தக்கைணும் இருட்னபெறவு துணி தக்கைப் புடாதுனு ஆத்தா திட்டுது. இந்தால இருட்டபோவுது. நீ ஒடனே தா ஒடனே தான்னு குதிச்சான். சரினு குடுத்துட்டேன். 
கொண்டுகிட்டு இந்தப் புழுதிகுள்ள கெடந்து ஓடுனதுல எங்கயோ ஊசி, நூலு ரெண்டையும் உட்டுட்டான் போல...''
"ஹா... ஹா... ஹா...'' 
"கதய முழுசா கேளு... நீ பெறவு சிரிக்கலாம்... சரின்னுட்ட அப்பறம் அன்னநட போட்டு என்ன சொல்லாங்குற நெனப்புலயே இவ்வோ ஊடு போயி சேந்ருக்கவோ... ஊடு போயி சேந்தாச்சி... ஹ் ஹி... ஹி... ஹி... நடுளவன் அங்க கிழிஞ்சி போன பட்டாபட்டிய கைல வச்சிகிட்டு, எங்கடா ஊசின்ட்ருக்கான். அதுக்கு இந்தப்பய என்ன சொல்லிருக்காங்ற... 
"வர்ர வழில ஒரு பாம்ப பாத்தம்ப்பா. இதுக்கு கண்ணு தெரியிறதாலதான எல்லாரையும் கடிக்கிதுனுட்டு அது கண்ண தச்சியுட்ரலாம்னு அத புடிச்சி அதோட கண்ணதச்சிகிட்டு இருந்தனா ஒத்த கண்ண தச்சதோட அப்டியே ஊசிய நூலோட பரிச்சிக்கிட்டு விருட்னு ஓடிட்டப்பானு" போட்டானாம் ஒரு போடு...''
"ஹா ஹா ஹா...''
"எல்லாங்கெடந்து விழுந்து சிரிச்சி...அங்க நம்ம மாட்டுத்தரவு கோயிந்தண்னே வேற இருந்ருக்கு. அதுவும் கெடந்து சிரிச்சிபுட்டு ஒன் புள்ளகிட்ட பாத்து பத்ரமா இருக்னும்யா. அசந்தா நம்பளோட சேத்து தில்லாவிளாகத்தையே வித்துபுடுவான்ட்டு துண்ட சுருட்டிகிட்டு ரெண்டு அடிகுடுத்துட்டு போனாராம்...'' 
"ய்யேப்பா பெரிய கூத்தாவுல இருக்கு''
"இன்னுயிருக்கு கேளு...முழுசா, பெறவு என்னாச்சினா மறுநா நம்ப பெரியண்ணவூட்டு மாட்டுகொட்டாவையில ஒரு சாரைப்பாம்பு பூந்துட்டு சரியான லெகிடு.... ஒரேதா சத்தங்குடுத்தவோ அப்பறம் நானும் நம்ம தேங்காவெட்டு வீரையனும் ஓடிப்போயி கலச்சூட்டு அடிச்சிப்புட்டோம்னு வச்சிக்கயேன்...
பொதச்சிப் புடலாந் தேவரேன்னான். ஏலேய் நீ செத்த இருடான்னுட்டு இந்த பய யேன் ஊட்டடிலதான் ஆடிகிட்டு கெடந்தான். ரெண்டு விடுத்தான உட்டு வெவரத்த சொல்லதாதியடா சித்தப்பா கூப்டுச்சினு மட்டுஞ்சொல்லுனு சொல்லி அலச்சிட்டு வரச் சொன்னே... நா வைக்கப்போரு பின்னாடி பாம்பபோட்டுகிட்டு அங்கயே நின்னுகிட்டு இருந்தனா...இவ்வொ வந்தவோ பாரு வந்தவோளா.....ஹி ஹி ஹி....
மொதல்ல நான் ஒன்னுங் காட்டிக்காம எனம்பனமா கேட்டேன். யாண்டா புள்ள நேத்து பாம்ப கண்ண தச்சது நெசமாடான்னே...
ஆமா சித்தப்பா நெசமாதான்னான். ஏலேய் ச்சும்மா புளுவாதடா புளுவுனிப்பயலேன்னல... அதுக்கு அவன் ங்கேர்றா மருதா, "சத்தியமா சித்தப்பா இத்தோ பெரிசு" ன்னு ரெண்டு கையையும் விரிச்சிட்டு அப்டியே தாந்தலயிலே மடார்னு அடிச்சி இப்டிச் சத்தியம் பண்ணாம்பாரு....
எங்க இந்த பாம்பானு பாருனுட்டு வைக்க போரடிலேருந்து....அப்டி சாரகெடாய கம்பால தூக்கி போட்டன்ல்ல....ஹா ஹா ஹா உட்டாம் பாரு ஓட்டம்... தெக்காக்க உளுந்து ஓடுனாம் பாரு.... ச்சும்மா பிகிலு பிகிலா போனவோ...ஹா ஹா ஹா...
"ஹோ"......ன்னு அலறிகிட்டு ஓடுனவன் நம்ம நாவமரத்தடி போயிதான் திரும்பி பாத்துருக்கான். ஹா ஹா ஹா புளுவுன்னா புளுவு...யேப்பா அண்டபுளுவு ஆகாசபுளுவு... இங்கதான் எங்காவது நே மாரி திரியும் இப்ப அதோட எங்க சின்னவன் மொவனும் கூட்டு ரெண்டிபேரும் சேந்துகிட்டு இந்த வெளிமுழுக்க லோலாயிதான்...''"
"ஆமாந்தேவர நாங்கோட நேத்து ரெண்டியேரையும் தெக்க அளத்துல பாத்தனே...''"
"அளத்லயா அங்க எங்கடா வந்தானுவோ?''"
"ஏதோ பொன்வண்ட தேடி வந்தாங்களாம்....சாயந்தரம் வர அங்க தெக்குக்கடசி கருவக்காட்ல பூந்து பெரப்போட கர அந்த வடக்குகடசி கொடுக்காபுளி மரத்தடி வரயும் முலுகோட்டவத்தையும் தப்படிபோட்டு அளவையாவுனுச்சி'' "
"ங்கொப்புறான... இப்ப இந்தப்பயலுக்கு யேன் அப்பஞ் செத்ததுலதான் கொலுப்பு கொண்டு ஆடுதுவோ... இந்த பதுனாறு நாளும் பள்ளிகோடம் போ வேண்டான்னதும் அதுவோ நெலகொள்ளாம நிக்கிதுவோ... வரட்டும் இன்னக்கி வளைச்சி வச்சி ஒதச்சாதான் சரிபடுவானுவோ படவாக்க''
இப்படி கோபத்தில் திட்டி சிலநேரங்களில் அடித்தாலும் அண்ணன் மகன் மீது அவருக்கு எல்லையில்லாப் பிரியம். எப்போதாவது சாலையில் திரிபவனை இழுத்து கொண்டுவந்து பைப்படியில் அமர வைத்து சீயக்காயை உச்சந்தலையில் வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றுவார். அழுக்கு திரண்டோடுவதைப் பார்த்தபடி,
"புள்ள வளக்குறானுவோ புள்ள....எட்டியேய்....அந்தத் துண்ட எடுத்தாடி...'' 
என தன் மனைவிக்கு குரல் கொடுப்பார். 
அவளுக்கும் இது விருப்பமான நிகழ்வு "அந்த குதிகால தேயுங்கங்றேன் பாருங்களேன் எவ்ளோ அழுக்குனு....''
"இந்த ஊர்ல இது கால்படாத எடம்னு ஒன்னு இருக்குங்ற.... ச்சும்மா..எங்கயோ கெடந்த தத்தாரி....மூளி....''
"ஏங்றேன்.... ஊரா ஊட்டு புள்ளய திட்டாதிங்கங்றேன்''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படியே நொறுங்கிப் போவார்.
தனக்கொரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் இவனுயரத்தில் இன்னும் கொஞ்சம் கருப்பாக தன்னைப்போல இருந்திருப்பானோ என இவனைப் பார்க்கும்போதெல்லாம் நினைக்காமல் இருந்ததில்லை.
"சரி நீ போயி சோத்தப்போடு....அந்த வெண்ணய சிலுப்பி வச்சிருந்தியே... அதுல ரெண்டு முருங்க கொளுந்த போட்டு உருக்கி வைடி. புள்ள நெய்யின்னா பிரியமா சாப்புடுவான்''
என ஏதாவது காரணம் கூறி இதுபோல தான் உறுதியிழக்கும் தருணங்களில் மனைவியை தூரமாக்கிவிடுவார்.
அடுத்த குவளை தண்ணீரைத் தலையில் ஊற்றும்போது, "யகேவ்....வ்வ்... சித்தப்பா ச்சித்ப்பா தேமுது ச்சித்தப்பா யகேகேவ்வ்வ்....'' என்பான்.
"ஒப்புறான புள்ளக்கி தேம்புதுல செத்த பொறுமையாத்தான் ஊத்துங்களேன்'' என சமையல் கட்டிலிருந்து சத்தம் வரும்.
தலையைத் துவட்டி நடுவீட்டில் ஒரு வேட்டியை விரித்து அவனை அமர வைத்து 
"எட்டியேய் சோத்தப்போட்ரி, அடங் கொப்றான தண்ணி யார்ரீ வப்பா? அதுக்கு வளவனாத்துக்கு கெழக்கேர்ந்து ங்கொப்பனா கொண்டாருவான் ப்போ தண்ணியெடுத்தா''
"அட செத்த இருங்கங்றேன் ஒங்களுக்கு மொவன கண்டா தலகாலு புரியாதே''
"இந்தாடா புள்ள ஒனக்கு புடிச்ச கோலா உருண்ட கொழம்பு, ஊருகாட்ல ஒத்த கொளங்குட்ட இல்ல பூரா வத்தி வறண்டு பொருக்கு தட்டி போச்சி இல்லனா புள்ளக்கி விராமீன கொதிக்க உட்ருப்பேன். இன்னய பாடு இதான். ஏட்டி அங்க என்னடி பன்ற அந்த நெய்ய எடுத்தா ஆங்..ஊத்து நீ..சாப்ட்ராபுள்ள''
எனச்சொல்லி அவன் சாப்பிடுவதை ஆவலோடு பார்க்கும் நாட்களில் இரவு படுத்தவுடனே உறங்கிவிடுவார்.
"அந்தோ அந்த வெய்க்கப்போரும் அத ஒட்டியே ஒரு கூரகட்டு ஊடும் தெரியுதுல... அதாங்க நீங்க கேட்ட ச்சின்னத்தேவ ரூடு, இப்டியாளபோங்க இந்த புலுதிரோடுதாம் பாத ஆளு தங்கமான மனுசன் ஆனா என்ன ஒன்னு ஒரு புள்ளகுட்டி இல்ல '' என கை நீட்டி வழி சொல்பவன் பேச்செல்லாம் அன்றிரவு அவரின் நிம்மதியைக் குலைக்கும் வலிமையிழந்து போயிருக்கும்.
கட்டுதரி எதிரில் மட்டைகட்டை பிரித்து கொண்டிருந்த மருதனிடம் குரல் கொடுத்தார். 
"ஆங் மருதா ரொம்ப நேரமாய்ட்டு வா வா, செத்த வெரசா கட்ட பிரி....எடு அந்த மட்டய இழுத்து இங்க போடு... பொண்டுவோ ஆளுவோ சாப்ட்டு வாரத்துக்குள்ள ரெண்டு கட்ட கிழிச்சி போட்டுட்டா நம்ப சாப்ட்டு செத்த காத்தாட ஒக்காரலாம்'' 
"ஆமாந் தேவரே காத்து எங்க ஆடுது நாம வேணும்னா செத்த ஆடிக்கலாம்....இந்தோ புழுங்கு புழுங்குது ச்செய்...''"
சாலைவழி ஓடிக்கொண்டிருந்த ஒரு கருப்பு நாய் அந்த ஈரமான மட்டை குவியலைக் கண்டதும் வேலியிடுக்கில் புகுந்து மட்டைக் குவியலை நோக்கி ஓடி வந்தது."அட்றா வக்க மாற.. நன்றியெட்ட ந்நாயி சோத்தமட்டும் இங்க திங்கிறது காவலுக்கு மாரியப்பன் ஊட்டுக்கு வாசலுக்கு போய்ர்றது, உட்டெறி சொல்றேன் அருவாள...ஆங் அப்டித்தான்...''"
வ்வவ்....வ்வோவ்.... 
"ங்கொப்பறான தப்பிட்டு...''
நாய் முழுவேகத்தோடு ஓடத் தொடங்கியது. கண்களை பாதி மூடி காதுகள் பின்புறமாக தலையோடு தலையாக ஒட்டியிருக்க இன்னும் தனது வேகத்தை கூட்டி ஒரு பட்டுப்போன கிளவை வேலி பகுதியைக் குறிவைத்து விரைந்தது.
"பூரா எடத்துலையும் பொத்தல போட்டுபுர்ரது, இங்கனக்குள்ள இருக்க இந்த வெளிப்பட்ட ஆடுமாடுவோலும் இந்த தோப்புகுள்றதான் குடியே. இங்ன இருக்கவளுவோ எவதான் ஆடுமாடுவோளுக்கு தும்பு போடுறாளுவோ?அவளுவோ ஆடுமாடுவோதான் பட்டி மூளியேன்னா அவளுவோ அதுக்குமேல பட்டியா இருக்காளுவோ. அப்பறென்னத்த, சொல்றது? மொதல்ல இந்த நே பன்னய ஒழிச்சி கட்னா எல்லாஞ்சரியாய்டும்''"
வெக்கையின் மீதான வெறுப்பு கருப்புநாய் ஒரு பலமான அடி வாங்கியிருந்தால் கொஞ்சம் குறைந்திருக்கும் தப்பிவிட்டுது... அந்த வெறுப்பை தன்குரலை உயர்த்தி அண்டைவீட்டாட்களுக்கு மடைமாற்றினார்... இந்த வசவு தினசரி வாடிக்கைதான் இது கோடை
காலமாதலால் நிறைய வேலி கம்புகள் பட்டு போயிருக்கும். கோடைவெயிலில் மேய்ச்சல் இல்லாமையால் இயல்பாகவே ஆடுமாடுகள் தோப்புக்குள் வருவது இயல்புதான்.
"ய்யே யப்பா மருதா... அருவாள இப்டி வெட்டுவாய உட்டு வீசிருக்கியே... அய்யோ பொடங்கருவால உட்டு வீசப்பா வெட்டி இட்டி புட்டுச்சினா போச்சி நாங்க வைரங்கோயிலுக்கு பாத்தியபட்டவைங்கனு ஒனக்கு தெரியாதா என்ன?''" 
"நாயி தகட்டூரு வைரவரு வாகனம்ப்பா...எங்க கொல தெய்வம், அட நாலு வாட்டி அடிச்சி வெரட்டுனா இந்த பக்கம் வராது...'' "
"என்ன தேவர ஒருவாட்டி அடி கொல்லுங்கிரிய... அப்பறம் சாமி னு கும்புடுரீங்க...''"
"சரி....வ்வா வா... ஓடியா ஓடியா செத்த கரயேத்து இன்னம் ரெண்டு கட்ட இழுத்தா சொல்றேன்...செத்த நெலச்சாஞ்சிட்டா வேல இன்னங்கொஞ்சம் வெரசாபோவும்... ஓடியா ஓடியா...'' "ஓட்டமும் நடையுமாக சின்னத்தேவர் மட்டைகட்டுகளை நெருங்கினார்.
கருப்பு நாய் கொதிப்பேறிய புழுதிச்சாலை தொடங்கிய இடத்திலிருந்த ஒரு பூவரச மரத்தின் பின்புறம் தனக்கான இடத்தைக் கண்டுகொண்டது. ஓரிரு முறை அக்கரம் சுற்றி குழிபறித்து தனதுடலை லேசான குளிருக்குள் ஒடுக்கியது. தான் எதிர்பார்த்த அளவு பூமி குளிரவில்லை யென்றாலும் அது அப்போதைக்கு போதுமானதாக இருந்தபடியால்... கண்களை ஒடுக்கியது.
சின்னத்தேவரின் தேடுபொறிக்குள் இன்னும் அகப்படாத அவரது அண்ணன் மகன்கள் இருவரும் அதே பூவரச மரத்தடியை வந்தடைந்தனர். 
"ட்டே...ட்டே...பூசர மரத்துல போயி சாஞ்சி ஒக்காரகுள்ள பாத்து ஒக்காரனுமுடா... அங்கபாரு மொசுக்கட்ட அடயா இருக்கு....இன்னேரம் முதுவு பலுத்துருக்கும்...''"
"அய்யயோ ஆமான்ணே...''
"இங்க தள்ளி ஒக்காரு''
"நெலல்ல மரகலருக்கே இருக்கதால தெரியலண்ண..ஆமா, ஒரு மரத்துல நசுக்கட்ட இருக்குனு எப்டிண்ணே கண்டுபுடிக்கிறது?'' "
"இங்க பாரு, இப்டி மரத்தடி பூரா கருப்பு கருப்பா சின்ன சின்ன உருண்ட உருண்டையா புளுக்க கெடக்கும்''"
"அட ஆமா, இது என்னன அங்க ஒரு எடத்துலதான் நசுகட்ட அடயா இருக்கு இங்க பாத்தா மரத்தடி பூரா புளுக்க கெடக்கே...''
"ட்டே பகல்ல நசுக்கட்ட யெல்லாம் ஒரே எடுத்துல தூங்குண்டா, ராத்ரி மரம்பூரா எலஞ்சி பூசர எலய தின்னுட்டு அங்கங்க நின்னு புலுக்கபோட்டு வைக்கும்...பெறவு வெயிலு கௌம்புனதும் தூரடில ஒன்னா அடஞ்சிரும்''"
"ஓ...ஓ..ஆடு மாடு பகல்ல மேய்ரா மாரி மொசுக்கட்ட ராத்ரில மேயிது...சர்ன சர்ண்ணே... ஆமா, இன்னக்கி வெயிலு இந்தோ கொளுத்து கொளுத்துதே... இந்த வெயில்ல வருவாப்ளயா''"
"நீனா பாரு கண்டிப்பா வருவாப்ள...வெயிலு வந்தாதாண்டா அவுங்களுக்கு யாவாரமே...கொட்ற மழையில ஆரனடிச்சிகிட்டு வந்தா ஊருக்குள்ள அத்ன பேரும் சிரிப்பானுவோ...ஹா ஹா ஹா....''
"இது எப்டி இருக்குனா நேத்து ராத்திரி எங்கூட்டு ரேடியா பொட்டில எலங்கையில ஒரு பாட்டுபோட்டானுவோ. படம்பேரு ஏதோ சொன்னானுவோ. மறந்துட்டேன். புதுப்பட பாட்டுடா "ஒன்ன நெனச்சேன் பாட்டுபடிச்சேன்'...னு ஒரு பாட்டு அதுல நடுவுல ஒரு வரி வரும்டா பாடுறேம்பாரு.. 
கொட்டும் மழக்காலம் உப்பு விக்கப்போன
காத்தடிக்கும் நேரம் மாவு விக்கப்போன ....
இந்த மாரி இருக்கு, நீ கேட்டது. என்ன வெளங்குதா? ஆனா என்ன ஒன்னு நானும் நெறய வாட்டி பாடி பாக்குறேன் நம்ம பாடுறது அவனுக பாடுறது மாதிரி வரமாட்டுதுடா''"
"அது அவனுவோ மீசிக்கி அடிக்கிறானுவோல்ல அதாங்காரணம்னே''"
"ஆமாடா...அதான்ங்காரணம். சரி, ஒங்க வூட்ல இலங்க எடுக்குதா...?'' 
"ஆங்.. எடுக்கும்னே நேத்து நானும் ஒரு பாட்டுகேட்டனே. யாரோ நாவூர் கனிபா பாடுன பாட்டுனு போட்டானுவோ. கொரலு கொன கொனன்னு இருந்துச்சுனே''
"ட்டே ட்டே... இர்ரா... அந்தோ பார்ரா.... த்தூரத்துல ஒரு புள்ளியா தெரியுது பாரு பின்னாடி பொட்டி தெரிது பார்ரா.... வர்ரார்டா...''"
"ஆமாண்ணே...அவரேதான்....ஹா ஹா..அடிசக்க...ஒக்காந்து கெடந்தது வீண்போவலண்னே.... ஏ அங்க பாரேண்ன. அங்கயே அவரு மல்லுகட்டி பார்ல ஏறிதான் மிறிச்சிட்டு வாராரு இங்க தெக்கால போக்குள்ள சத்தியமா மிறிக்க முடியாது. சரியான புலுதி எதிருகாத்தோட வெயிலு வேற....கொளுத்துது....அப்ப நீ சொன்னது உண்மைதானா?''
"அப்பறம்,உண்மையில்லாம பொய்யா? ஆனா இது இங்க எவனுக்கும் தெரியாது நீ போயி முனியப்பன், செயமுருவன், சேகருட்டயெல்லாம் இங்க நடந்தத சொல்லிகிட்டு இருக்காத... யேன் அண்ணன் குமார்ட்ட கொட சொல்லாத... நாளலேருந்து அவனுவோலும் வந்துட்டானுவோன்னா அவ்ளோதான் நம்ம வெறுங்கையோட போ வேண்டிதான்...''"
"இல்ல இல்ல நா சொல்லல...''"
"அவரு மிறிச்சு இங்க வந்து சேர ரொம்ப நேரமாவும் நீ ஒக்காரு பொட்டிய கண்டதும் அப்டியே துள்ளுரியே ஹா ஹா ஹா...''"
"ட்டே நீ சேமியா ஐசு தின்ரிக்கியாடா...''"
"இல்லணே ஆனா பாலைசு தின்றுக்கேன்...''"
"சேமியா ஐசு செமயா இனிக்குன்டா உள்ள சேமியால்லாம் போட்ருப்பானுவோ...''"
"அப்படியா இது எப்டினே தயாரிக்கிறானுவோ?'' "ஆங் அப்பறம் நீ ஐசுபொட்டிக்குள்ள என்ன இருக்குனு பாத்துருக்கியா?''
" எனக்கு ஒயரம் பத்தலனே....''"
"ம்... பாத்ருக்கனே....அது உள்ள ஐசு தயாரிக்கிற மிசினு இருக்கும்டா உள்ள சின்ன சின்ன தொளையா இருக்கும் ஐசு வைக்கிறத்துக்கு, அது....எப்டினா நம்ம ராமரு கோவில்ல மாடப்புறாலாம் அடஞ்சிருக்கும்ல சின்ன சின்ன ஓட்ட, அதுமாரி அதவிட இன்னும் சின்னதா தொள தொளயா இருக்கும்...'' "பாத்துருக்கேன் ஆனா இருட்டா இருந்துச்சி சரியா தெரியல...''"
"அதுலதான் தண்ணி சேமியா பாலு சீனிலாம் போட்டு ஒரு குச்சி போட்டு வச்சிருப்பாங்களாம். ஒருநாளு நம்ம அட்டகண்ணி புள்ளயாரு கோயிலுகிட்ட போம்போது ஐசுகார்ரு எறங்கி திருவு பைப்புல தண்ணி புடிச்சி உள்ளேருந்து அந்த மிசின எடுத்து ஒன்னு ஒன்னா ஊத்தி சேமியா சீனி பாலெல்லாம் போட்டு குச்சி போட்டு பொட்டிகுள்ள வச்சத சத்திவேலு பாத்தானாம் உண்மயா என்னனு தெரியல...''
"ட்டே ஒனக்கொன்னு தெரியுமா யேன் அண்ணன் ஐஸ்கிரீம்லாம் சாப்ட்ருக்கான்டா...''
"ஐஸ்கிரீமா?''"
"ஆமாடா ஐஸ்கிரீம்ன்றது இந்த ஐச விடலாம் சூப்பரா இருக்குமாம்ன்டா. முந்திரி பருப்பு இன்னும் பேரு தெரியாத பருப்பெல்லாம் நெறைய போட்ருக்குமாம்...போன வாரம் மாட்டு கொட்டவைல ஊஞ்சலாடும்போது கீழ விழுந்ததுல எங்கண்ணனுக்கு கைய்யி ஒடஞ்சி போனிச்சில, அப்ப முத்துபேட்ட மீராஉசேன் ஆசுபித்திரிக்கு கொண்டு போனாவோ கட்டுகட்டும் போதாலாம் பயங்கரமா கத்திருக்கான். பஸ்ல ஏறும்போது ஐஸ்கிரீமு வாங்கி தந்தாலே தா னு முத்துபேட்டையே கிழிய கத்திருக்கான். எங்கம்மாவுக்கு சரி கோவம் போல. ராத்ரி சரி திட்டு. இன்னக்கி முத்துபேட்டை பஸ்டான்டுல இது அடிச்ச கூத்த வேடிக்க பாக்காத சனம் பாக்கியில்ல, கத்துன கத்துல பஸ்டான்டே ரெண்ட்ரெண்டா போவுனிச்சி. இது என்ன புள்ளயா இது எங்கயோ கெடந்த அவட்ட" னு அம்மா ராத்திரி அவன் அந்தோ திட்டு திட்னுச்சி.
இவன் அந்த திட்டல்லாம் காதுலயே வாங்கிக்கல. அவன் மத்தியானந்தின்ன ஐஸ்கிரீம் நெனப்லே படுத்துக்கெடந்தான். கட்டுபோட்ட கைய்ய தடவிகிட்டே அப்பப்ப என்கிட்ட ஐஸ்கிரீம் தின்னத பத்தி சொல்லி சொல்லி கடுப்பேத்னான். எனக்கப்டியே முறிஞ்ச கைலே ஏறி ஓங்கி ஒரு மிதி மிதக்கலாமானு இருந்துச்சி... பல்ல கடிச்சிகிட்டே படுத்ருந்தேன் அப்பறம் எப்படி தூங்னேன்னு தெரியலடா, மத்தியானம் இவங் கத்துன கத்துல வாங்கி குடுத்து கூட்டிவந்துருக்கவோ. தின்ன பெறவுதான் அவனுக்கே தெரியுமாம்டா எவ்ளோ ருசியா இருக்குனு. வந்து கதகதயா சொல்லி என்ன வெறுப்பேத்துனான். கொஞ்சம் மெதுவாவாவுது திங்க புடாது. ஊர்ல ஒருத்தன் இருக்காங்குற நெனப்பு கொட இல்ல. ஆனா அப்டி பாதி இருந்தாலும் வந்து எனக்கு குடுக்க மாட்டான்டா. பாக்கவச்சி திம்பான். சரி இவன உடு வாங்குனவைங்களாவது எனக்கு ஒன்னு வாங்கி வந்துருக்க கூடாது... ரொம்ப வெறுப்பாவுதுடாம்பி...''"
"அண்ணே கைய்யி ஒடிஞ்சி போச்சி அழுதான்னு வாங்கி குடுத்துருக்கவோ... எனக்கும் எப்பவாவது சொரம் அடிக்கும்ன்னே அப்ப முத்துபேட்ட மீரா
உசேன் ஆசுபித்ரி போனாக்க நானும் காட்டு கத்தா கத்தி அழுவுறேம்பாரு...''"
"ஹா ஹா ஹா..ட்டே கிறுக்கா சொரம் அடிக்க குள்ற எப்ட்றா ஐஸ்கிரீமு வாங்கி தருவோ... ஹா... ஹா... ஹா... நீ என்ன கத்னாலும் சொரம் அதிமாய்டும் னு சொல்லி பட்டாணி கல்ல இல்ல உப்பு கல்லய வாங்கி குடுத்து கூப்ட்டு வந்ருவானுவோ...ஹா ஹா... ஹா''"
"ஆமால்லா எனக்கு சொரம் மட்டுந்தான்ன எப்பவாவது வருது? வேற எதுவும் ஆவ மாட்டுதுன்னே..ச்சே...கைய்யி காலு ஏதும் ஒடஞ்சாக்க நானும் ஐஸ்கிரீமு திங்கலாம்ல....ரொம்ப நல்லாருந்துச்சாமா...''"
திடீரென அவர்களின் உரையாடல் நடுவே... வானிலிருந்து ஒரு சத்தம்... 
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

திருத்துறைப்பூண்டியை அடுத்த தில்லைவிளாகத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. துபையில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். "கஜா' புயல் பாதிப்புக்குப் பிறகு ஊர் திரும்பி, தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். புழுதி - இவரது இரண்டாவது சிறுகதை.


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/புழுதி-3211662.html
3211661 வார இதழ்கள் தினமணி கதிர் ஆழ்மனதில் பாசிட்டிவ் விதைகள்! DIN DIN Sunday, August 11, 2019 01:04 PM +0530 "BE POSITVE" என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் இவர் சொல்லும்போது அது வித்தியாசமானதாக மாறிவிடுகிறது. "நெஞ்சை நிமிர்த்து, தோளை உயர்த்து' என்றுதான் வழக்கமான சுயமுன்னேற்ற நூல்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. சுயமுன்னேற்றப் பேச்சாளர்களும் மனதை மேம்படுத்துவதைப் பற்றித்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் "பணத்தை ஈர்ப்பதற்கான' ரகசியங்களை மனதுக்குச் சொல்லிக் கொடுக்கிறார் இவர். 
http://www.bpositive.org.in என்ற இணையதளத்தின் மூலம் இவர் வழங்கிவரும் தன்னம்பிக்கை வீடியோக்களை இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். 
வீடியோக்களைப் பார்த்த பலர், தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பிரச்னைகளைச் சொல்லி நேரில் இவரைச் சந்திப்பதும் உண்டு. போனில் பேசியும் ஆலோசனை பெறுவதும் உண்டு. 
இளம் வயதினரான ஏ.எல்.சூர்யா, சோர்ந்து கிடக்கும் மனதை, உற்சாகமானதாக மாற்றும் கலையில் வல்லவராக இருக்கிறார். அதனால்தான் இவர் நடத்தும் பயிற்சி முகாம்களில் நிறையப் பேர் பங்கேற்கின்றனர். 
கேரளாவில் உள்ள ஆலப்புழை அருகே ஓடிக் கொண்டிருக்கும் படகில் இவர் நடத்திய ஆழ்மனது பயிற்சி வகுப்புகளில் பலர் கலந்து கொண்டனர். அதுபோல பாண்டிச்சேரியில் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள லீ பாண்டி ரிசார்ட்ஸ்- இல் இவர் நடத்திய வகுப்புகளில் பலர், தங்களுடைய சோர்ந்து போன மனதைத் தொலைக்க வந்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் சூர்யா, முறைப்படி உளவியல் பயின்றவர் அல்ல. அப்படியானால் இது எப்படி சாத்தியமாயிற்று அவருக்கு? என்ற வினாவுடன் அவரை அணுகினோம். 
"இந்த உலகம் பண உலகம். பணம் சம்பாதித்தால்தான் ஒவ்வொருவரும் இங்கே வாழ முடியும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டால் போதாது. பணம் சம்பாதிப்பதற்கு முதலில் மனதளவில்அவர் தயாராக வேண்டும். அதிலும் குறிப்பாக ஆழ்மனதில் அவர் தயாராக வேண்டும். அதற்கான பயிற்சிகளையே நான் அளித்து வருகிறேன். 
பள்ளிப் படிப்பு முடித்தவுடன் பி.டெக் படித்து ஓர் என்ஜினியராக வேண்டும் என்ற கனவுடன்தான் என் இளமைக்காலம் தொடங்கியது. ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வி. பி.டெக் படிக்க முடியவில்லை, ஏஎம்ஐஇ - ஆவது படிக்கலாம் என்று முயற்சி செய்தால் அதிலும் தோல்வி. கடுமையான மன உளைச்சலுடன் திரிந்தேன். மனஉளைச்சலில் இருந்து மீள நிறைய உளவியல் புத்தகங்களைப் படித்தேன். சித்தர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் தெளிவானேன். நானே என்னைத் தெளிவாக்கிக் கொண்டேன். அதுவே உளவியல்ரீதியான பயிற்சி வகுப்புகளை எடுக்கும் அளவுக்கு என்னைத் தகுதிப்படுத்திவிட்டது. 

தீபாவளி வாழ்த்துச் சொல்லும் ஒரு வீடியோவைத் தயாரித்து Money making secrets என்ற தலைப்பில் யூ ட்யூப்- இல் 4 ஆண்டுகளுக்கு முன்பு போட்டேன். "நரகாசுரனை அழித்ததற்குத்தான் தீபாவளி, நமது மனதிலுள்ள எதிர்மறையான சிந்தனைகளை இந்த தீபாவளி நாளில் நாம் அழிக்க வேண்டும்' என்ற கருத்தை அதில் பதிவு செய்தேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு அந்த வீடியோவுக்கு வரவேற்பு இருந்தது. அது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. தொடர்ந்து பணம் சம்பாதிப்பதற்கு உகந்த விதத்தில் ஆழ்மனதை மாற்றி அமைக்கும் பயிற்சிகளை அந்த வீடியோக்களில் நான் அளித்தேன். இதுவரை 200 வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. 
இந்த வீடியோக்களை உலகம் முழுவதும் பலர் பார்த்திருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தெல்லாம், குறிப்பாக பிரிட்டன், ஸ்ரீலங்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பலர் என்னுடன் பேசினார்கள். சிலர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து இரண்டு, மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஆலோசனைகள் பெற்றனர். 
இங்குள்ள பலரும் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து உளவியல் ஆலோசனைகள் பெற்றனர். உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். சென்னையில் உள்ள ஒரு பேராசிரியரிடமிருந்து ரூ.30 லட்சத்தை சிலர் ஏமாற்றிவிட்டனர். மிகுந்த மன உளைச்சலுடன், வாழ்க்கையில் கடும் வெறுப்புணர்வுடன் இருந்த அவர் என்னைச் சந்தித்தார். அவருடைய ஆழ்மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைத்தேன். இப்போது அவர் மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகி மாதம் ரூ.2 இலட்சம் வரை சம்பாதிக்கிறார். 
இவையெல்லாம் எனக்கு என் மேலேயே அதிக நம்பிக்கை ஏற்பட வழி வகுத்தன. அதன் பிறகு, பலர் பங்கேற்கும் "ஆழ்மனது பயிற்சி வகுப்பு'களை நடத்தத் தொடங்கினேன்.
இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற பலர், மிகுந்த உற்சாகத்துடன் தன்னம்பிக்கையுடன் செல்கிறார்கள். பெண்களும் பங்கேற்கிறார்கள். 
இந்த பயிற்சி வகுப்புகளில் முதலில் சிறிது நேரம் உடற்பயிற்சிகளைச் செய்வார்கள். வகுப்பு என்றால் ஒருவர் பேசுவது, பலர் கேட்பது என்பது மாதிரி இருக்காது. கலந்துரையாடல் போல இருக்கும். மனதில் புத்துணர்வை அவை ஏற்படுத்தும். ஆடல், பாடல்கள் கூட இருக்கும். நிறைய செய்முறைப் பயிற்சிகள் இருக்கும்.
உதாரணமாக, "நீங்கள் இப்போது கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். அந்தப் பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று கற்பனை செய்யச் சொல்வேன். இம்மாதிரியான பயிற்சிகளினால் ஒருவர் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்பினாரோ, அதுவாகவே ஆகிவிடுகிறார். அப்படி ஆன பிறகு என்ன செய்வாரோ, அதை இப்போதே செய்யத் தொடங்குகிறார். அதுவே ஆழ்மனதில் நன்கு பதிந்து, அவருடைய வாழ்க்கை நடைமுறையும் அதுவாக ஆகிவிடுகிறது. 
இந்த பயிற்சி வகுப்புகளை இயற்கை எழில் பொங்கும் இடங்களில் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒருவர் அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் மனதளவில் திணறிக் கொண்டிருப்பார். அவரை அதிலிருந்து விடுவித்து வித்தியாசமான சூழலில் அவரை இருக்க வைக்கிறோம். புதிய இடம், புதிய காட்சிகள், புதிய மன உணர்வுகள் என புதிய சூழலில் அவருடைய ஆழ்மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைப்பது எளிதாகிவிடுகிறது. 
ஆலப்புழையில் படகிலேயே நடந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒன்றுதான். படகிலேயே நல்ல வசதியான அறைகள் இருக்கின்றன. நல்ல உணவு வசதி உள்ளது. படகின் மேல்புறத்தில் உள்ள ஹால் போன்ற அரங்கில் வகுப்புகள் நடைபெற்றன. இத்தனைக்கும் படகு ஓர் இடத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. அது சென்று கொண்டே இருந்தது. அதில் பங்கேற்ற அனைவருக்கும் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. அதுபோலத்தான் பாண்டிச்சேரியில் நடந்த வகுப்பும். கடற்கரையோரமாக அமைந்த அந்த ரிசார்ட்ஸில் நீச்சல்குளம் உட்பட பல உயர் வசதிகள் இருந்தன'' என்றார். 
ஏ.எல்.சூர்யா இதுவரை 6 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 5 மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை விதைப்பவை. "அனிதா, பத்மா, பிருந்தா' என்ற நாவல் ஆறாவது நூல். திரைப்படத்துறையில் இளைஞர்கள் நுழைந்து வெற்றி பெறுவதே நாவலின் கதை. அந்த நாவலை இப்போது திரைப்படமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.சூர்யா.
- ந.ஜீவா


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/ALSURYA.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/ஆழ்மனதில்-பாசிட்டிவ்-விதைகள்-3211661.html
3211660 வார இதழ்கள் தினமணி கதிர் இளம் தலைமுறையின் கைகளில் நாட்டுப்புறக் கலை! Sunday, August 11, 2019 01:00 PM +0530 தமிழக மக்களின் வாழ்வில் திரைப்படம், தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் அனைத்தும் முக்கியமான அங்கமாக மாறிவிட்டன. மேலும் இணைய வளர்ச்சியின் காரணமாக, செல்லிடப்பேசிகளில் உள்ள "டிக் டாக்' உள்ளிட்ட செயலிகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டன.
 இத்தகைய சூழலில், நமது நாட்டுப்புறக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இக்கலைகளைத் தொழிலாகக் கொண்ட ஏராளமான கலைஞர்கள் கட்டட வேலை, ஆடை உற்பத்தி தொழிற்சாலை என மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முழுநேர நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர்.
 இந்நிலையில், நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் வகையில் மதுரையில் "முத்தமிழ் நாட்டுப்புறக் கலை மேம்பாட்டு மையம்' என்ற பெயரில் ஒரு கலைக்குழு செயல்பட்டு வருகிறது. எம்ஏ., பிஎட்., எம்பில் முடித்த சிவகங்கையைச் சேர்ந்த இளைஞரான ஞானவேல் (26), நாட்டுப்புறக் கலைகள் மீதான ஆர்வம் காரணமாக, பட்டதாரி இளைஞர்களை ஒருங்கிணைத்து இம் மையத்தை நடத்தி வருகிறார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
 "மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக் கட்டுரைக்காக தென்மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களைச் சந்தித்தேன். அப்போது பல கலைஞர்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் மக்களின் சினிமா மோகத்தால் பறிபோய்விட்டதே என்று கூட கவலைப்படவில்லை. மாறாக, சினிமா பாடல்களுக்கு நடனமாடும் நிலை இன்றைய நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வந்துவிட்டதே என்று கண்ணீர் விட்டனர். அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது, "நாட்டுபுறக் கலைஞர்களை பற்றி ஆய்வேட்டில் எழுதி பட்டம் பெற்றால் போதுமா? அழிவின் விளிம்பில் உள்ள கலையை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்' என முடிவெடுத்தேன். பின்னர், நாட்டுப்புறவியல் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த கிராமிய கலைமணி பட்டம் பெற்ற பிச்சைமணி என்ற நாட்டுப்புறக் கலைஞரிடம் முறையாகப் பயிற்சி பெற்றேன். அதையடுத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு தொழில்முறைக் கலைஞர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்தேன். அதில் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை என்பதால் தொழில்முறைக் கலைஞர்களை அடுத்தடுத்து ஒன்றிணைக்க முடியவில்லை. நான் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். அதன்மூலம் பல இளைஞர்கள் என்னிடம் கலையைக் கற்கவும், குழுவில் இணையவும் ஆர்வம் காட்டினர். தற்போது எனது குழுவில் பட்டதாரி இளைஞர்கள் 15 பேர் உள்ளனர். அவர்களைக் கொண்டு, தைப் பொங்கல் உள்ளிட்ட தமிழர் விழாக்களில் எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். மேலும் அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு விவசாயக் கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் இருந்து எங்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இக்குழுவில் உள்ளவர்களில் சிலர் பட்டம் பெற்றவர்கள், சிலர் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர். மேலும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் உள்ள இளைஞர் கூட இக்குழுவில் உள்ளார். எங்களுக்குப் போதிய வருவாய் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசப் பயிற்சியும் அளித்து வருகிறோம். நாங்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடுபவர்கள் இல்லை.
 பெரும்பாலும் நான் களஆய்வில் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகிறோம். கிராமியப் பாடல்களில் தாலாட்டு, உழவு, நடவு, காதல், கும்மி, பக்தி, ஒப்பாரி, எனப் பல வகைகள் உண்டு. நடனத்தில் பறை, காவடி, கரகம், கருப்பசாமி ஆட்டம், ஒயில், குறவன் குறத்தி, காளி ஆட்டம் எனப் பல வகைகள் உண்டு. இதன் வடிவம் மாறாமல் அடுத்த தலைமுறைக்கும் இக்கலையை கொண்டு செல்வதுதான் எங்கள் நோக்கம். அடுத்த ஆண்டு தைப் பொங்கலுக்கு அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புகள் எங்களை அழைத்துள்ளனர். நாட்டுப்புறக் கலையை அனைவரும் ரசிக்கிறார்கள், அதை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இளைய தலைமுறையின் கையில் தான் உள்ளது.
 தமிழக அரசு மற்றும் கலைப்பண்பாட்டுத் துறைக்கு அதிகாரிகளாக எங்களைப் போன்ற நாட்டுப்புறக் கலையை கற்றுத்தேர்ந்த பட்டதாரிகளை நியமித்தால், கலையை வளர்க்கும் பணியிலும், கலைஞர்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுவோம்'' என்றார்.
 மு.கார்த்திக்.
 படங்கள்: ப. விஜயகுமார்.
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/11/w600X390/k1.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/11/இளம்-தலைமுறையின்-கைகளில்-நாட்டுப்புறக்-கலை-3211660.html
3206929 வார இதழ்கள் தினமணி கதிர் பேய் பங்களா! DIN DIN Sunday, August 4, 2019 03:21 PM +0530 கொடைக்கானல். மூஞ்சிக்கல் மெயின் சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துபோகும் சிமெண்ட் சாலையில் போனால், சாலையின் முடிவில், சரிவில், தன்னந்தனியாகப் புல்தரையின் மத்தியில், ஐரோப்பியக் கட்டிடக்கலையின் மாதிரியில், பிரிட்டிஷ்காரர் ஒருவரால் கருங்கற்களால் கட்டப்பட்ட,  மேலே புகைபோக்கியுடன் கூடிய ஒரு பழைய குட்டி பங்களா இருக்கிறது. அங்கே, அதன் வாசல் முன்னால் வலதுபுறம் இருக்கும் நீலமலர்கள் பூத்துக்குலுங்கும் ஜகரண்டாமரம்,  அடியில் தரை முழுவதும் நீலநிற மலர்களை,  உதிர்த்துப் பரப்பி நீலப்பாய் விரித்திருந்தது. ஃபாரஸ்ட் ரேஞ்சர் பீட்டரும்  அவனுடைய மனைவி ரோஸியும் அந்த வீட்டுக்கு  அன்றுதான் குடிவந்தார்கள். 

இதற்குமுன் பீட்டர் திருநெல்வேலி மாவட்டத்தில்  களக்காடு ஃபாரஸ்ட் ரேஞ்சில் பணிபுரிந்ததால் அம்பாசமுத்திரத்தில் குடியிருந்தார்கள். ஒருமாதத்திற்கும் மேலாக கொடைக்கானல் முழுவதும் பல பகுதிகளிலும் வீடுதேடி அலைந்து திரிந்து இறுதியில் அந்த வீடு கிடைத்துக் குடிவந்தார்கள்.

அந்த வீட்டில்  இதற்கு முன் குடியிருந்தவர்கள் எவரும் அந்த வீட்டில் தொடர்ந்து குடியிருந்ததில்லை. ஓரிரண்டு மாதங்கள் மட்டும் குடியிருந்துவிட்டுப் போயிருந்தார்கள். கடந்த ஒரு வருடமாக அந்தவீடு பூட்டியே கிடந்தது. ஏதோவொரு அமானுஷ்ய சக்தி அங்கு உலவிக்கொண்டிருப்பதாகவும் அது இரவுநேரங்களில் அங்கு குடியிருப்பவர்களுக்குத்  தொல்லை தருவதாகவும், அதனால் அங்கு யாரும் தொடர்ந்து குடியிருப்பதில்லை என்றும் சொன்னார்கள். அதை எல்லோரும் "பேய் பங்களா' என்று அழைத்தார்கள்.
அவர்களுக்கு வேறு எங்கும் வீடு கிடைக்காத காரணத்தாலும், கொடைக்கானலில் வீடு  வாடகைக்குக் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு வாங்குவது போன்றது என்பதாலும்,  அந்த வீடு அழகான சூழ்நிலையில் அழகாக,  வசதியாக, குட்டி பங்களாவாக,  குறைந்த வாடகைக்குக் கிடைத்ததாலும் ஊரில் அதை "பேய் பங்களா' என்று அழைப்பது தெரிந்தும் அங்கு தைரியமாகக்   குடி வந்தார்கள்.

பீட்டரைப் போலவே ரோஸிக்கும் அந்த வீடு, அந்தச் சூழல் மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்து பார்த்தால்  கோக்கர்ஸ்வாக், பக்கத்தில் பழைமையான தேவாலயம், பள்ளத்தாக்கில் பேரிக்காய்த் தோட்டங்கள், மஞ்சு தவழும் பெருமாள்மலை எல்லாம் ஏதோவொரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியங்கள்போல் தெரிந்தன.

அது டிசம்பர் மாதம். அன்று இரவு கடும்குளிர். அவர்கள் தூங்கும்போது படுக்கை அறையில் இருந்த ஹீட்டர் உஷ்ணத்தையும், போர்த்தியிருந்த கம்பளிப் போர்வைகளையும் தாண்டி உள்ளே நுழைந்த கடுமையான குளிர், அவர்கள் தாங்க முடியாத அளவிற்கு உடலில் கூர்மையான ஊசி குத்துவதுபோல் குத்தியது. 

இரவு மணி இரண்டு என்று சுவரில் இருந்த பழைய காலத்துக் கடிகாரம் மணியடித்துச்சொல்லி நிசப்தத்தைக் கலைத்தது.  அசதியில்  பீட்டர் தூங்கிவிட்டான். தூக்கம் வராமல் ரோஸி படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தாள். அறையில் எங்கோ மறைந்துகொண்டு சுவர்க்கோழி ஒன்று "கிரீச் கிரீச்' என்று இறகுகளைக் கால்களில் இருக்கும் கூர்மையான முற்களால் வருடி ஓசை எழுப்பி நிசப்தத்தைக் குலைத்தது. எங்கோ ஓர்  ஆந்தையின்  "கர்... கர்...' குரலோடு  ஒரு கூகையின்   "கூ... ...கூ...' குரலும், ஒரு கோட்டானின் "கும்ம்... கும்ம்' என்ற  உறுமலும் இனம்புரியாத கலவையாக குழப்பமான சப்தமாக இரவின் உறைந்துகிடந்த அமைதியை உடைத்து, அவளுக்குள் பீதியைக் கிளப்பியது.  இடையிடையே மிக மிக அருகில் குதிரை  கனைக்கும்  சத்தம் கர்ணகொடூரமாய் ஒலித்து அவளுடைய காதைக் குடைந்தது. இதுவரையிலும் இப்படிப்பட்ட  சப்தங்களை அவள்  கேட்டதில்லை  என்பதால் பயத்தில் அவளுடைய உடல் சிலிர்த்தது.

ரோஸி முகத்தை மூடியிருந்த கம்பளிப் போர்வையை  விலக்கிக் கொண்டு பார்த்தாள். ஹீட்டரின் மங்கலான வெளிச்சத்தில் கருமையாகத் தோன்றிய நீலநிற ஜன்னல் திரைகள் காற்றில் ஆடி யாரோ பின்னால் மறைந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வெளியே மெலிதாக ஏதோ அரவம் கேட்பது போலிருந்தது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு மன ஓர்மையுடன் கூர்ந்து கவனித்தாள். வீட்டுக்கு வெளியே காய்ந்து தரையில் பரவி இருந்த இலைச்சருகுகள்மீது யாரோ  நடந்துபோவதுபோல் மெல்லிய காலடி ஓசை.  "சர... சர...'  என்ற சத்தம். பயம் தலைக்கேற உடல் முழுவதும் ஒரு நொடி இரத்தம் உறைந்துவிட்டது போன்றதோர் உணர்வு. அடுத்தவிநாடி அச்சத்தில் அந்தக் கடுங்குளிரிலும் உடல் முழுதும் வியர்த்துக்கொட்டியது. 
அதேநேரம் "டம்' என்று  ஏதோ விழுவதுபோன்று  ஒரு பெரும் சத்தம். அதைத் தொடர்ந்து  பாத்திரங்கள் சிதறி ஓடும்  ஓசை.  பயமும்,  பதட்டமும் தொற்றிக் கொள்ள சப்தநாடிகள் முழுதும்  ஒடுங்கியவளாய் போர்வையை உதறிவிட்டு எழுந்து உட்கார்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பீட்டரை ""எழுந்திருங்க, ஏதோ சத்தம் கேட்குது''  என்று சொல்லிக் கொண்டே அவனை உலுக்கி எழுப்பினாள். 

சட்டென்று போர்வையை  உதறிவிட்டுத் துணுக்குற்று எழுந்து உட்கார்ந்த பீட்டர், ""என்னாச்சு  ரோஸி,  நீ தூங்கலையா?'' என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.  

அவள், "" ஏதோ டமால்னு விழுந்தமாதிரி,  பாத்திரங்கள் சிதறி ஓடுனமாதிரி சத்தம் கேட்டுச்சுங்க'' என்றாள்.  

அதேநேரம் எங்கிருந்தோ கற்பூரமணம் வீசியது.  பயம் ரோஸியின் நெஞ்சைக் கவ்வி,  அவளுடைய அடிவயிற்றைப் பிசைந்தது. 

பீட்டர் படுக்கையைவிட்டு எழுந்து விளக்குகளைப்போட்டு  எல்லா அறைகளையும் பார்த்தான். குறிப்பாக  சமையல் அறையில் பாத்திரங்கள் ஏதாவது தரையில் விழுந்து கிடக்கிறதா? என்று பார்த்தான். பாத்திரங்கள் அடுக்கி வைக்கும் ஸ்டேண்டில் பாத்திரங்கள் அப்படியே அடுக்கி வைத்தபடியே இருந்தன. 

டார்ச் லைட்டை எடுத்து ஒளிபரப்பிக் கொண்டு முன்வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான். முன்னால் நிறுத்தி வைத்திருந்த ஜிப்ஸி ஜீப்பின் மேல் இரண்டு நெருப்புத் துண்டங்கள் தெரிந்தன. அதைப் பார்த்தவுடன் உடல் புல்லரித்தது.  அங்கு படுத்திருந்த ஒரு கரும் காட்டுப்பூனையின் கண்கள் அவை. அவனைப் பார்த்ததும் சட்டென்று அவன் தலைக்குமேல்  தாவிக் குதித்து அந்த இடத்தைவிட்டு ஓடி மறைந்தது. 

ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தவன் அடுத்த நொடியில் தாரித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கும் கருப்பு மையை அப்பி வைத்ததுபோல்  கும்மிருட்டு.  எங்கும் மூடுபனி.  அமானுஷ்யம் இரவின்  பயங்கரத்தை இன்னும் அதிகமாகக் கூட்டிக்காட்டியது. 

அதே நேரம் திடீரென்று பள்ளத்தாக்கிலிருந்து "ஊ......ஊ...' என்று  ஒரு நரியின் ஊளைச்சத்தம். அந்த திசையில்  டார்ச்லைட் ஒளியைப் பாய்ச்சினான். ஏதோ ஒன்று வெண்மையாக நகர்ந்துபோவது தெரிந்தது. திடுக்கிட்டு மூச்சு நின்றதுபோல் ஆனான். உடனே தன்னிலைக்கு வந்து அதன்மீது ஒளியைப் பாய்ச்சினான். அது காற்றில் நகர்ந்துபோன ஒரு மஞ்சுக்குவியல். அடுத்த கணத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே  போனான். 
ரோஸி அல்ட்டார் அறையில், சிலுவையில் அறையப்பட்ட ஜீசஸ் சிலைமுன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து  தரையில் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடி இரண்டு  உள்ளங்கைகளையும் முன்னால் உயர்த்தி நீட்டி, ""ஓ, ஜீசஸ், எங்களுடைய வலதுபுறமும், இடதுபுறமும், மேலும், கீழும் இடங்கொண்டு பெருகுவீராக. உங்கள் பரிசுத்த ஒளி எங்களையும், எங்கள் வீட்டையும், எங்கள் உடமைகளையும், என்றும், என்றென்றும் பாதுகாப்பதாக. ஆமென்'' என்று பிரார்த்தித்தாள். 

பிரார்த்தனை முடித்துவிட்டு  எழுந்துநின்ற ரோஸியிடம் பீட்டர், ""ரோஸி, முன்னால் வாசல் பக்கத்தில் எதுவும் இல்லை, ஒருவேளை வீட்டுக்கு ரெண்டு பக்கமும்,  பின்னாலும் ஏதாவது இருக்கான்னு பார்த்திட்டு வர்றேன். பயப்படாமல் இரு'' என்று சொல்லிவிட்டு டார்ச்லைட்டோடு வெளியே போனான். 

வீட்டின் பக்கவாட்டில்  பார்த்தான். ஒன்றும் இல்லை. பின்புறம் போனான். கற்பூரமணம் மூக்கைத் துளைத்தது. எங்கிருந்து வருகிறது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. பின்புறத்தில் தகரம் வேய்ந்த ஓர் அறை இருந்தது. அதன் தகரக்கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. டார்ச் விளக்கின் ஒளியை அதன்மீது பாய்ச்சிக் கொண்டே கதவைக் காலால் மெதுவாகத்  தள்ளித் திறந்தான்.  

அடுத்தநொடி பூனைக்குட்டி சைசில் கருப்பாக ஏதோ ஒன்று அவன் கால்களை நோக்கிப் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் வெலவெலத்துப்போய் விசுக்கென்று ஒதுங்கி நின்றபோது பெருச்சாளி ஒன்று அவனைக் கடந்துபோனது. அதேநேரத்தில் "கிரீச்' என்ற சத்தமிட்டுக்கொண்டே கன்னங்கரேலென்று ஏதோ ஒன்று உள்ளேயிருந்து அவனுடைய முகத்திலடிப்பதுபோல் பறந்துவந்தது. திடுக்கிட்டுச்  சட்டென்று உடலைச் சற்று கீழிறக்கிக் குனிந்தான்.  அது அவனுடைய தலைக்குமேல் பறந்துபோய் இருளில் மறைந்தது.  அது ஒரு பழம்தின்னி வவ்வால்... 

சர்வநாடிகளும் ஒடுங்கியவனாய் டார்ச் லைட் ஒளியை அறைமுழுவதும் தெரியும்படியாகப் பரப்பினான். அந்த தகரக் கூரை வேய்ந்த அறையில். தகரத்திற்குக் கீழே மரப்பலகைகளும், மரச்சட்டங்களும் அடித்திருந்தார்கள். மரப்பலகைகள் மற்றும் மரச்சட்டங்கள்கொண்டு பரண் அமைத்திருந்தார்கள். பரணில் இருந்த பெரிய தகர டிரங் பெட்டி. கீழே தரையில் விழுந்து திறந்து வாய் பிளந்து கிடந்தது. திறந்திருந்த அந்த தகரப் பெட்டியிலிருந்த பாத்திரங்களும், பரணில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களும் தரையில் விழுந்து இங்கும் அங்குமாய்ச் சிதறிக் கிடந்தன. பார்ப்பதற்கு அந்தக் காட்சி அலங்கோலமாக இருந்தது. பரண் அமைக்கப் பயன்படுத்தி இருந்த மரப்பலகைகளும்,  மரச்சட்டங்களும் விரைத்துக் கொண்டும்,  திருகிக்கொண்டும் விகாரமாகக் காட்சியளித்தன. அந்த அறையிலிருந்து "குப்' பென்று வந்த  கற்பூரமணம் அவனுடைய முகத்தில் மோதி மூக்கைத் துளைத்தது. 

அந்த அறையில்...  இருந்த தகரப்பெட்டி,  தட்டுமுட்டுச் சாமான்கள், பாத்திரங்கள் எல்லாம் அந்த  வீட்டின் உரிமையாளரின் பணியாளருடைய உடமைகளாக இருக்கலாம்  என்று நினைத்துக்கொண்டே  அங்கிருந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டுத் திரும்பினான்.

அவனுடைய வருகைக்காக எதிர்பார்ப்போடு வாசல் கதவருகே நின்றுகொண்டிருந்த ரோஸி  அவனைப்  பார்த்தவுடன், ""என்னாச்சுங்க, ஏன் இவ்வளவு நேரம்?''  என்று ஆவலோடு கேட்டுகொண்டே அவனுடைய முகத்தைப் பார்த்தாள். 

உடனே  அவன், ""பயப்படுறதுக்கு ஒன்னுமில்லே ரோஸி''  என்று சொல்லிக்கொண்டே உள்ளேவந்து,   ""உட்கார் சொல்கிறேன்''  என்று சொல்லிக் கொண்டே சோபாவில் அமர்ந்து சுவரில் மாட்டி இருந்த டிஜிட்டல் உஷ்ணமானியைப் பார்த்தான். அதன் சிவப்பு எழுத்துகள் ஏழு டிகிரி செல்சியஸ் காட்டியது. 

ரோஸி கதவுகளைச் சாத்தித் தாளிட்டுவிட்டு அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தவுடன் சொன்னான் : 

""நாம் பயப்படுறதுக்கான விஷயம் எதுவும் நடக்கலே. வீட்டுக்குப் பின்னால் இருக்கிற அறையிலே தகரக்கூறைக்குக் கீழே ஒரு மரப் பரண் போட்டிருக்காங்க. 

அந்தப்பரணை அமைக்கிறதுக்கு கற்பூரநாரி மரப்பலகைகளையும், கற்பூரநாரிமரக் கட்டைகளையும் பயன்படுத்தி இருக்காங்க. கற்பூரநாரி மரப்பலகைகளும், கட்டைகளும் குளிர்காலத்தில் உஷ்ணநிலை. எட்டு டிகிரிக்குக் கீழே  வரும்போது விரைச்சுத் திருகிக்கிரும். அப்ப கற்பூரமணத்தை வெளியிடும். குளிர் இன்னும் அதிகமாகும்போது அதுல இருந்து கற்பூரமணம் இன்னும் அதிகமா வரும். இங்கே அந்தப் பரண்மேல பாத்திரங்கள் வச்ச தகரப்பெட்டி,  தட்டுமுட்டுச் சாமன்களையெல்லாம் வச்சிருந்திருக்காங்க. இன்னைக்கு உஷ்ணநிலை ஏழு டிகிரிக்கு  வந்ததனாலே பலகைகளும், கட்டைகளும் முறுக்கிக்கிட்டு தகரப்பெட்டியையும், அதில வச்சிருந்த சாமான்களையும் கீழே தள்ளியிருக்கு. அதெல்லாம் தரையில விழுந்து சிதறி ஓடின சத்தம்தான் உனக்குக்  கேட்டிருக்கு''  நிறுத்தினான். 

அதைக்கேட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட ரோஸி அவனிடம், ""கற்பூரநாரி மரத்துக்கு இப்படிஒரு குணம் இருக்கா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு''  என்றாள். 

உடனே பீட்டர், ""அந்த மரம் தொட்டாச்சிணுங்கிச்செடி மாதிரி உணர்ச்சியை வெளிப்படுத்தும் வித்தியாசமான மரம்... "சென்சிட்டிவ் ட்ரீ'ன்னு சொல்லுவாங்க. குங்கிலியம்,  சந்தனம்,  சாம்பிராணி,  சுக்குநாரி, மிளகுநாரி, புனுகுநாரி மரங்கள் மாதிரி அதுவும் ஒரு  வகை வாசனைத் திரவிய  மரம். தேவாலயங்களில் தூபம் போடுறதுக்காக உபயோகிக்கிற ஃப்ராங்கின்சென்ஸ்னு சொல்ற வாசனைப் பிசின்கூட ஒருவகைக்  குங்கிலிய மரத்தில இருந்துதான் எடுக்கிறாங்க'' சொல்லிவிட்டு...  அவளுடைய முகத்தைப் பார்த்தான். அதில்  பயம் விலகி ஒரு தெளிவும் நிம்மதியும் தெரிந்தது. அதைப் பார்த்து அவனுடைய மனதிலும் நிம்மதி பிறந்தது.

உடனே ரோஸி, ""கர்த்தரே,  எங்கள் பரமபிதாவே, உங்களை என்றென்றும், எப்போதும் விசுவாசிக்கும் எங்களது பயத்தைப் போக்கி  ரட்சித்துப் பாதுகாத்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். பரமபிதாவே,  உமக்கு நன்றி, நன்றி, நன்றிகள். ஆமென்'' மனதிற்குள்ளேயே நன்றி  சொன்னாள்.

இப்படி இந்த வீட்டில் அமானுஷ்யமாக  நடப்பதன்  உண்மையான காரணம் என்னவென்று  அறியாததால்தான் எல்லோரும் இந்த பங்களாவை   "பேய் பங்களா'  என்று சொல்லிச்சொல்லி  எவரும் இந்த வீட்டுக்குக் குடிவராமல் செய்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பீட்டர் ஆச்சரியப்பட்டான். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir8.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/பேய்-பங்களா-3206929.html
3206928 வார இதழ்கள் தினமணி கதிர் வயோதிகத்தில் வாயுவின் சீற்றம்! பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன் DIN Sunday, August 4, 2019 03:18 PM +0530  

என் வயது 80. நான் ஆஸ்துமா நோயாளி. ஒரு வருடமாக முதுகுவலி, இடுப்புவலி, வயிற்றுவலி ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன். எல்லாவிதமான சிறப்பு டாக்டரிடமும் சென்று எல்லா விதமான பரிசோதனைகளும்  செய்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். "உடலில் எந்தக்  குறையும் இல்லை; வயது ஆகிவிட்டதால் வருகிறது, வலி வரும் பொழுது வலி மாத்திரை சாப்பிடுங்கள்' என்று  சொல்லி விட்டார்கள். 2 மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவமனையில் இரண்டு அல்லது மூன்று நாள் தங்கியிருந்து க்ழ்ண்ல்ள் கொடுத்து வருகிறார்கள்.  இதுவரை முப்பதிலிருந்து நாற்பதாயிரம் வரை செலவு செய்து விட்டேன். இப்போது தினமும் தூக்க மாத்திரை மற்றும் வலி மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். எல்லா விதமான மூலிகை எண்ணெய்களையும் உபயோகித்து வருகிறேன். மேற்குறிப்பிட்ட உபாதைகளிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி உள்ளதா?

 -த. ஷண்முகம், கோவை.

உங்களுடைய வயோதிகம், வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. உடலின் நெய்ப்பையும், கனத்தையும், வழுவழுப்பையும் பதம் பார்த்து விடும் வறட்சியும், லேசும், சுரண்டும் தன்மை கொண்ட குணங்களின் ஆட்சி ஒய்யாரமாக நடைபோடுவதால், நாடி நரம்புகள், ரத்தக் குழாய்கள் தசைநார்கள், எலும்புகள் ஆகியவை கல கலத்து விட்டன. "எண்ணெய்யால் என்னைக் கவனி' என்று அவற்றின் தனிப்பட்ட கூச்சல், வலி வழியாக உங்களுக்குத் தெரிய வருகிறது.   இதற்கான தீர்வை, நெய்-மஜ்ஜை - மாமிசநெய்ப்பு - நல்லெண்ணெய் ஆகியவற்றின் மூலமே நீங்கள் பெற முடியும் என்பதால் அவற்றை எப்படிச் சாப்பிட்டால், ஆஸ்துமா கூடாத வகையிலும், அதே சமயத்தில் சூழ்ந்துள்ள குணங்களின் சீற்றத்தை மட்டுப்படுத்தி, உடலை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என்பதை மட்டுமே ஆலோசிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நான்கு வகை நெய்ப்பிலும், நெய்யே சிறந்தது. 

ஏனென்றால், தன்னுடன் சேரும் எந்தப் பொருளின் தன்மையையும் குறைத்துவிடாமல், தன் சிறப்பையும் வெளிக் காட்டும் திறமை நெய்க்கு மட்டுமே இருக்கிறது. மேலும் நெய் இனிப்பான பொருளாக இருப்பதால், செரிமானத்தின் போது அது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துவதில்லை என்பதாலும், குழந்தைப் பருவம் முதலே அதை எளிதில் பழகி வருவதாலும் அது மற்றவற்றை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

நெய்யை விட தைலம் செரிப்பதற்குக் கடினமானது, மாமிச நெய்ப்பு தைலத்தை விட செரிப்பதற்குக் கடினமானது. மஜ்ஜை இவை மூன்றையும் விட செரிமானம் செய்வதில் மிகக் கடினம். எனவே, உங்களுடைய செரிமான நிலையை உத்தேசித்தே இவற்றைப் பயன்படுத்தி விடை காண முயற்சிக்க வேண்டும். தயிர் மற்றும் பாலிலிருந்து நெய்யைக் கடைந்து எடுக்கலாம். மாமிச சூப்பு வகைகளில் மாமிச நெய்ப்பு அடங்கியிருக்கிறது. பழம், விதை மற்றும் தண்டுப் பகுதிகள் அடங்கிய தாவரங்களிலிருந்து தைலம் சேகரிக்கப்படுகிறது. அதனால், உங்களுடைய பசியானது திடமான நிலையிலிருந்தால், உணவில் தயிர் சேர்ப்பதாலும், பாலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக அருந்துவதாலும், நெய்யின் சேர்க்கையைக் குடல் வழியாக, நாடி நரம்புகளுக்குக் கொண்டு போய் சேர்க்கிறீர்கள். மாமிசசூப்பு வகைகளில் சிட்டிகை திப்பிலி சூரணம், உப்பும் சேர்த்துச் சாப்பிட அவற்றிலுள்ள மாமிச நெய்ப்பானது விரைவாக குடல் வழி உறிஞ்சப்பட்டு, நரம்புகளுக்கு வலுவூட்டும்.
நல்லெண்ணெய்யை உணவோடும், வெளிப்புறமாகவும் உடலில் பயன்படுத்தி உங்களுக்கான தீர்வைப் பெறலாம்.

ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய இந்துகாந்தம் எனும் மருந்தை காலையிலும், விதார்யாதி எனும் நெய் மருந்தை மாலையிலும் குடல் தன்மை, பசியின் நிலை, கால நிலை, வயது, வசிப்பிடம் ஆகியவற்றை மனதிற் கொண்டு, அளவை நிர்ணயித்துச் சாப்பிட, முதுகுவலி, இடுப்புவலி, வயிற்றுவலி போன்றவை குணமடையலாம்.

ஆட்டின் மாமிசத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் அஜஅஸ்வகந்தாதி லேஹ்யம், அஜமாம்ஸரஸாயனம் ஆகியவையும் நீங்கள் சாப்பிட உகந்தவையே. தான்வந்திரம் தைலம், மஹாமாஷ தைலம், பலாஅஸ்வகந்தாதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைச் சூடாக்கி உடலில் தேய்த்துக் குளிப்பதும் நலமே. வாயுவை சீற்றமுறச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

 (தொடரும்)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir7.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/வயோதிகத்தில்-வாயுவின்-சீற்றம்-3206928.html
3206927 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... சிரி... சிரி...  DIN DIN Sunday, August 4, 2019 03:15 PM +0530  

""கல்யாண வீட்டுல என்ன கலாட்டா?''
""மொபலைப் பார்த்துக்கிட்டே மாப்பிள்ளை சாஸ்திரி கழுத்திலே தாலி கட்டிட்டாராம்''

ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

 

""டாக்டர் எப்பவும் ஆன்ட்ராய்டு போனுமா, கையுமா இருக்காரே?''
""பேஷண்டுகளுக்காகத்தான். கூகுளில் சர்ச் பண்ணி மருந்து எழுதித் தருவார்''

 

""பேய்ப்படம் எடுத்தது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே... ஏன்?''
""தினமும் ஒரு பேய் வந்து  என்னை மிரட்டிட்டுப் போகுது''

கு.அருணாசலம், தென்காசி.

 

கண்டக்டர்:  அடுத்த ஸ்டாப்புல செக்கர் ஏறுவாரு. எல்லாரும் டிக்கெட் எடுத்திடுங்க.
பயணிகள்:  செக்கருக்கு நாங்க ஏன் டிக்கெட் எடுக்கணும்?

சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir6.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/சிரி-சிரி-சிரி-சிரி-3206927.html
3206926 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர்  ஜி.அசோக் DIN Sunday, August 4, 2019 03:13 PM +0530
"இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 

 

அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். சமீபத்தில் தனது பிறந்தநாளை புளோரிடா நகரிலுள்ள மியாமி கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் சில நாட்கள் தொடர்ந்தது.  நடுக்கடலில் படகில் சென்றபடி கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா சோப்ரா, திடீரென்று கால் இடறி கடலில் தலைகுப்புற விழுந்தார். கடலில் தத்தளித்த அவரை மீட்க நிக் ஜோனஸ் முயன்றார். இந்த சம்பவத்தைப் பார்த்த கடல் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த  பிரியங்கா சோப்ராவை மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிரியங்கா சோப்ரா கடலில் விழுந்த புகைப்படக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலான பெண்கள் தங்களது அழகைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.  ஆனால்  40 வயதைக் கடந்தாலும் உடற்கட்டைப் பராமரிக்கும் நடிகைகள் இருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் வர்ணனையில் ஆண்கள்தான் கொடிகட்டிப் பறந்தனர். 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் மந்த்ரா பேடி. திரைப்பட நடிகையான இவர் வர்ணனை செய்யும் போது படுகவர்ச்சியான உடைகளில் தோன்றி இளவட்டங்கள் முதல் பெரிசுகள் வரை கவர்ந்திழுத்தார். சமீபகாலமாக நடிகைகள் சுற்றுலாப் பயணமாக மாலத்தீவுக்குப் பறந்துவிடுகின்றனர். நீச்சல் உடை அணிந்து தங்கள் இஷ்டத்துக்கு கடலில் நீந்தி மகிழ்கின்றனர்.  மந்த்ராபேடி அங்குள்ள மரமொன்றில் ஒயிலாகச் சாய்ந்து நின்றபடி சன் பாத் எடுக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். ""சூரிய ஒளிக்கீற்றுடனும், நீல கடலுடனும் என்னுடைய நாளை இன்று நல்லமுறையில் கழித்துள்ளேன். இதைவிட ஒரு சந்தோஷமான இடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..'' என குறிப்பிட்டிருக்கிறார் மந்த்ரா.

 

கன்னடத்தில் நடித்து வந்த  ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக  "கீத கோவிந்தம்'  படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இப்போது "டியர் காம்ரேட்' என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் டப்பிங்  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த மொழியில் நடிப்பது கஷ்டம் என ராஷ்மிகாவிடம் கேட்ட போது, ""கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் கஷ்டம்'' எனச் சொல்லியிருக்கிறார் ராஷ்மிகா. இதைக் கேட்டு கன்னட அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. ""கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியைப் புறம் தள்ளுவதா?'' என கொதித்து எழுந்துள்ளன. இந்தநிலையில் சுட்டுரையில் "பாய்காட்  டியர் காம்ரேட்' என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிராகப் போராட்டத்தை கன்னடர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் ராஷ்மிகா கலக்கம் அடைந்துள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir5.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/திரைக்-கதிர்-3206926.html
3206925 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, August 4, 2019 03:11 PM +0530  

கண்டது

(கோவில்பட்டியில் ஓர் ஆட்டோவில்)

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி - புன்னகை.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

 

(காடுவெட்டி அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

கோவில் வாழ்க்கை

தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.

 

(கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயர்)

32 பஉஉபஏ ஈஉசபஅக இஅதஉ

வி.வெண்ணிலா, எல்லப்புடையாம்பட்டி.

 

(சென்னையில் உள்ள வணிகவளாகத்தில் ஒரு தேநீர்க்கடையின் பெயர்)

நம்ம தேநீர்கடை

ஆர்.ராஜகோபாலன், சென்னை.


யோசிக்கிறாங்கப்பா!

ஒருவன் தட்டிக் கேட்டால்
கிறுக்கன் என்கிறார்கள்.
எல்லாரும் தட்டிக் கேட்டால்
விழிப்புணர்வு என்கிறார்கள்.

எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.


கேட்டது

(சென்னை சிட்லபாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது நண்பரும் மனைவியும்)

"" என்னம்மா... டிபன் ரெடியா? இல்ல... ஓட்டல்ல சாப்பிட்டுக்கவா?''
""பத்துநிமிஷம் வெயிட் பண்ணுங்க''
""அதுக்குள்ள ரெடி ஆகிடுமா?''
""இல்லை... 10 நிமிஷத்துல நானும் ரெடி ஆகிவிடுவேன். சேர்ந்தே ஓட்டலுக்குப் போவோம்''

எஸ்.மாரிமுத்து, சென்னை-64.

 

(காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் இரு பெண்கள்)

""எதிர்வீட்டு மாமியிடம் ஒரு மணி நேரம் பேசியும் ஒரு பயனுமில்லைடி''
""நீ என்ன சொன்னே... அவங்க என்ன கேட்கலை?''
""நான் போட்டிருக்கிற நெக்லûஸப் புதுசான்னு  கடைசிவரை ஒரு வார்த்தை கேட்கலைடி''

அ.பூங்கோதை,  செங்கல்பட்டு.


மைக்ரோ கதை

கடையில்  நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார் சுந்தரம்.  கூடவே அவருடைய மனைவியும் கடைக்கு வந்திருந்தாள்.  பழக்கப்பட்ட கடைக்காரருக்கோ  ஒரே ஆச்சரியம்.  சுந்தரத்துக்கு சர்க்கரை வியாதி உள்ளது.  அவர்   இதுவரை பிஸ்கெட் வாங்கியதில்லை. 

""என்ன சார் நிறைய பிஸ்கெட் வாங்குறீங்க?  பேரப் பிள்ளைகள் எல்லாம் வந்திருக்காங்களா?'' என்று கேட்டார் கடைக்காரர்.

""இல்லையில்லை. நாங்க ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறோம். அதனால வாங்கிட்டுப் போறோம்'' என்றார் சுந்தரம்.

""யாராவது சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா பழங்களை வாங்கிட்டுப் போவாங்க... நீங்க பிஸ்கெட்  வாங்கிட்டுப் போறீங்க?''

"" அது வேறொண்ணுமில்லீங்க.  சிலருக்கு சில பழம் பிடிக்கும்.  சில பழங்கள் பிடிக்காது.  நாம எதை வாங்கிட்டுப் போறது?  அது மட்டுமில்லை... நாம வாங்கிட்டுப் போற பழத்தை உடனே சாப்பிடலைன்னா ரெண்டு நாள்ல அழுகிப் போயிடும்''  என்றார் சுந்தரம்.

""சூப்பர் சார்... ஒரு பழம் வாங்கிட்டுப் போறதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்களே...''   கடைக்காரர் பாராட்டினார்.

பிஸ்கெட் வாங்கிவிட்டு கடையிலிருந்து சிறிது தூரம் வந்த பின், மனைவி சொன்னாள்:

""பழம்  வாங்கினா 200 ரூபாய்க்கு மேல செலவாகியிருக்கும். ஒரு நூறு ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்கிட்டு... என்னமா கடைக்காரன்கிட்டே பேசுறீங்க? உங்க கஞ்சத்தனத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா?''

சுந்தரம் சத்தமில்லாமல் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டார். 

சி.ஸ்ரீரங்கம்,  திருச்சி-13

 

எஸ்எம்எஸ்


நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மால் மாற்ற முடியாது.
ஆனால், நம்மைச் சுற்றி யார் 
இருக்க வேண்டும் என்பதை மாற்றலாம்.

 இசைவாணி, பாளையங்கோட்டை.

 

அப்படீங்களா!


சயனைடு ஒரு கொடிய நஞ்சு என்பது எல்லாருக்கும் தெரியும்.  அந்த கொடிய நஞ்சு நாம்  விரும்பி உண்ணும் ஒரு பழவிதையில்  இருக்கிறது.  

ஆப்பிள் விதைகளில் Amygdalin என்ற வேதிப்பொருள் உள்ளது. ஆப்பிள் விதைகளில்  மட்டுமல்ல, பாதாம் தோல்,  இலந்தைப் பழம், செர்ரி பழம் ஆகியவற்றின்  விதைகளிலும் இந்த Amygdalin உள்ளது.  இது உடலுக்குள் சென்று மாற்றம் அடையும்போது  ஹைட்ரஜன் சயனைடு என்ற நஞ்சை வெளியிடுகிறது.  விதையை முழுமையாக விழுங்கிவிட்டால், பாதிப்பு இல்லை. விதையைக் கடித்து மென்று தின்றால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். 

மனித உடலுக்குள் 0.2 இலிருந்து 1.6 மி.கிராம்  வரை சயனைடு சென்றால் ஆபத்தானது.  இதயம் செயல் இழந்துவிடுவது, நுரையீரல் நின்றுவிடுவது, கோமாநிலை, தசைகள் செயல் இழந்துவிடுவது உட்பட பல பாதிப்புகள் ஏற்படலாம்.  மரணம் கூட ஏற்படலாம். 

குறைந்த அளவு சயனைடு உடலுக்குள் சென்றால், வாந்தி, வயிற்று வலி, மயக்கம், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

1 கிராம் ஆப்பிள் விதையில் 1 முதல் 4 கிராம் Amygdalin இருந்தாலும், அது வெளிப்படுத்தும் சயனைடின் அளவு மிகவும் குறைவு.  எனவே  குறைந்தது 200 ஆப்பிள் விதைகள் முதல் 5000 ஆப்பிள் விதைகள் வரை ஒருவர் உட்கொண்டால்தான் ஆபத்து ஏற்படும்நிலை உருவாகக் கூடும். 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆப்பிள் விதைகளும் நஞ்சாகிவிடும்  என்றும் சொல்லலாம். 

என்.ஜே., சென்னை-58.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir4.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/பேல்பூரி-3206925.html
3206924 வார இதழ்கள் தினமணி கதிர் மனதில் ஆயிரமாயிரம் நதிகள்! பவித்ரா நந்தகுமார் DIN Sunday, August 4, 2019 03:01 PM +0530
"ஆச்சாரமான இல்லத்து அடுப்படியில் பணி செய்ய ஆள் தேவை' என்று பிரபலமான நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தியிருந்தார் நரசிம்மன்.  

""எதுக்கு இப்படி தலய வளச்சி மூக்கு தொடுறாப் போலான வார்த்தை விவரிப்பு? அதுவும் பத்திரிகையில...   சமையல் வேலைக்கு ஆள் தேவைனு போட்டிருந்தா சுலபமாப் புரிஞ்சிருக்குமே!  அடுப்படியில பணினதும் என்ன பணியோ ஏது பணியோனு ரொம்ப யோசிக்கப் போறாங்க. தேவையா இது?'' என்று தன் அங்கலாய்ப்பை புத்தகம் புரட்டிக் கொண்டிருந்த நரசிம்மனிடம் கொட்டித் தீர்த்தாள் லட்சுமி.

""பின்ன...வக்கீல் வீடுனு நம்ம முத்திரை அந்த விளம்பரத்துல தெரிய வேணாமா?'' வலது பக்க உதடு மெல்ல பின்வாங்கியபடியே சொன்னார் நரசிம்மன்.  

அவரது பதிலைக் கேட்டு சற்றே வதைந்தாலும் பதிலுக்கு பதில் உரைப்பதில் குறை வைக்கவில்லை லட்சுமியம்மா. அவள் எப்போதும் அப்படித் தான். தன் எண்ணத்தை சக மனிதர்களிடம் கடத்தி விட வேண்டும் என்ற பெருந்துடிப்புக் கொண்டவள்.  

""ம்கும்... இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.  அந்த நர்மதா பொண்ணு கல்யாணமாகிப் போயி முழுசா 3 மாசம் முடிஞ்சிருச்சு.  அவ போறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடியே வேற ஆள பாத்துக்கங்கம்மானு சொல்லிட்டா. கிட்டத்தட்ட 5 மாசமா ஆள் தேடிட்டிருக்கோம்.  நீங்க இப்படியே ஏக்கு மாக்கா வார்த்தை ஜாலம் காட்டி வர்றவங்கள எல்லாம் வழியனுப்பிட்டே இருங்க''

""அட... நான் என்னடி செஞ்சேன்?''

""பின்ன... இசைஞ்சு வர்றவங்ககிட்ட குலம் என்ன, கோத்திரம் என்னனு ரொம்ப அதீதமா கேள்வி கேட்டு கொடைஞ்சா... யாரு வருவா?''  உள்ளே உழன்ற ஆதங்கத்தில் கொஞ்சம் குரலை உயர்த்தியே பேசினாள் லட்சுமி இம்முறை.
""அதுக்கு என்ன பண்றது?  யாரு என்னனு தெரியாம ஒருத்தர வீட்டுக்கு வேலையாளா வெச்சிக்க முடியுமா? அதுவும் பத்து தேய்க்கவோ சலவை செய்யவோ இல்ல... நமக்கு சாப்பாடு செஞ்சி போட. உன்னையும் என்னையும் உக்காத்தி வெச்சி பலகாரம் சுட்டுப் போட.  தெய்வாம்சம் பொருந்திய அடுப்படிய சுத்த பத்தமா பராமரிக்க வேணாமா?  அதது காக்கிரி போக்கிரினு கலைஞ்சு போயிருந்தா எனக்கு சுத்தமா புடிக்காது.  இதோ இப்ப பேப்பர்லயே விளம்பரம் கொடுத்தாச்சு.  யாராவது நல்ல ஆள் தகையறாளானு பாப்போம்''

லட்சுமியிடம் இப்படி சொல்லி விட்டாரேதவிர இவருக்குள்ளும் ஓர் அசூயை குடிகொண்டு விட்டது.  எப்பொழுது தான் நல்லபடியாக ஒரு பெண் சோறு பொங்கிப் போட அமைவாள் என்ற நீள்யோசனை அவருள்ளும் வேரூன்றிவிட்டது.  லட்சுமியின் கைப்பக்குவத்துக்கு முன், வருபவர்கள் எல்லாம் தூசி தான். இருப்பினும் நான்கு வருடங்களுக்கு முன் அவளின் வலது கை, கால் செயலிழப்புக்கு பின் சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம்.  இப்போது மெல்ல அவள் தேறிவிட்டாலும்,  மீண்டும் அவள் அடுப்படியிலேயே உழன்று  கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் என்ன?  அதிலும் மனதளவில் அவளும் அந்த பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டாள்.  அதனால் இனியும் அவளை தொந்தரவுப்படுத்த வேண்டாம் என்றே தீவிர தேடுதலில் இறங்கினார் நரசிம்மன்.

அவர் விளம்பரப்படுத்தியது வீணாகிவிடவில்லை.  அன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் எண்ணற்ற விசாரிப்புகள், அழைப்புகள்.  இருபது  நபர்களுக்கு மேல் பார்த்தாயிற்று.  ஒருவர் கூட அவர் மனசுக்கு ஒத்துவரவில்லை.  புடவையை அள்ளி வாரி சுருட்டிக் கொண்டு வந்த அம்மாளைப் பார்த்து, ""இவங்களுக்கு புடவையவே ஒழுங்கா கட்டத் தெரியல. இவங்க எங்க எல்லாத்தியும் பதமா பதவிசா பக்குவமா சமையல் செய்வாங்க?'' என நிராகரித்தார்.  14 வயது பெண் குழந்தை ஒன்று வந்திருந்தது. ""நீயெல்லாம் பள்ளிக்கூடம் போகாம இங்க எங்க வந்தே!  போ... போய் படி'' என விரட்டியடித்தார்.  60 வயது தாண்டிய வயதில் மூன்று பெண்கள் வந்தனர். அதில் இருவருக்கு ஏற்கெனவே கைகள் நடுங்கிய வண்ணம் இருந்தன. அவர்கள் அலுப்புடன் சலிப்பு கலந்து சமையல் செய்வதாக அவர் மனதுக்குள் ஒரு கற்பனை விரிந்தது. பின் அவர்களும் நிராகரிக்கப்பட்டனர்.  இன்னும் நாலு பெண்மணிகள் வந்ததிலிருந்து வாய் ஓயாமல் பேசிய வண்ணம் இருந்தார்கள். நரசிம்மருக்கு எப்பொழுதும் கேட்ட கேள்விக்கு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என தேவையான சரியான பதில் வர வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் கிட்டத்தட்ட மணிரத்னம் பட வசனம் போல பதில் சொன்னால் போதும்.  சமயத்தில் “"ஆம்', "இல்லை'” என ஒற்றை வார்த்தை பதிலில் கூட நிறுத்திக்கொள்வாள் லட்சுமி, அவரின் குணம் தெரிந்து.  தொலைக்காட்சி பார்க்கும் சில நேரங்களில் அதுவும் கூட தலையாட்டுதல், சைகை மொழி என முடிந்து போவதும் உண்டு.  

இப்படிப்பட்டவருக்கு பக்கம் பக்கமாக ஒப்புவிக்கும் வசன உச்சரிப்புகள் எரிச்சலையே தந்தன.  பத்து நிமிடங்களே தாங்க முடியாதவருக்கு பொழுதன்னிக்கும் இப்படி இருந்தால் எவ்வாறு தோதுபடும்?  அவர்கள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் வரவேற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகவே போய்விட்டது.  அவர்களும் சென்று விட லட்சுமி ஒருவித வெறுப்புடன், ""இந்தச் ஜென்மத்துல ஆள் கிடைக்கிறது கஷ்டம். பகவானே!'' என்று அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லி விட்டு கூடத்தை விட்டு அறைக்குள் சென்றாள்.

வந்திருந்தவர்களில் யாரை மறுபரிசீலனை செய்யலாம் என்ற பலமான யோசனையில் அவர் ஆழ்ந்திருக்க... வெளியே கதவருகில் காலடி ஓசை. வரச்சொல்லிப் பார்த்ததில் வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் பாந்தமாக முன் நின்றார். 

""கேஸ் விஷயமா வந்தீங்களா? முன்வாசல் அறையில ஒக்காருங்க'' என்றார்.

""இல்லை சார்.  விளம்பரம் பார்த்தேன்.  சமையல் வேலைக்கு கேக்க வந்தேன்''  பவ்யமாக சொன்னார் வந்தவர்.  

நெற்றி சுருங்கியது நரசிம்மருக்கு.  ""சமையல் வேலைக்கா?  நீங்களா? தெரியுமா உங்களுக்கு?''

ஒரு சின்னப் புன்னகையை முகத்தில் தவழவிட்ட வேட்டி நபர், ""தெரியுங்கறதால தான சார் வந்திருக்கேன்''

""கல்யாண வீட்டுல வேல பாத்த அனுபவமோ? ரெண்டு பேர் இருக்குற வீட்டுக்கு சிக்கனமா செய்ய வருமா?''

""உங்களுக்கு எப்படி விருப்பமோ... அந்த பக்குவத்துல செஞ்சு கொடுப்பேன் சார்'' என்றதும் மனது "பச்சக்' என அவர் வசம் ஒட்டிக் கொண்டது நரசிம்மருக்கு.  இப்போது இன்னும் தீவிரமாக அவரை கூர்ந்தாய்வு செய்தார் வக்கீல்.கூடிய விரைவில் வழுக்கை விழலாம் என்ற அளவில் தலை.  நெற்றியில் ஒரு விரலால் நீளமாக இடப்பட்ட விபூதிக் கீற்று.  அரைக்கை சட்டை. கனமில்லாத ஜேபி. அதில் ஒரு சின்ன பழைய பட்டன் பேசி மட்டும் இருந்தது. சுத்தமாக வெட்டப்பட்ட நகங்கள்.  இடதுகையில் கட்டை விரலோடு ஒட்டிக்கொண்டிருந்தது ஆறாவது விரல்.

பின்னர் மெதுவாக ஒவ்வொரு கேள்வியிலும் கொக்கி போட்டு இழுக்க இழுக்க அருமையான பதில்களைச் சொல்லி மனதளவில் இன்னும் இன்னும் அவருக்கு நெருக்கமாகிப் போனார்.

குரல் கேட்டு வெளியே வந்த லட்சுமி, "இவரை எப்படி சமையல் செய்ய விடுவது?  அடுப்படியில் நான் போய் வர இருக்க வேண்டுமே!  பிறிதொரு ஆண் இருப்பது எப்போதும் தர்மசங்கடமாகி விடக்கூடும்!  இவர் வேண்டாமே' என்பது போல் பார்வையாலேயே தன் கருத்தை பதிவிட்டாள்.  

""நர்மதா இருக்கும் போது நானும் இந்த வீட்டில் தானே இருந்தேன்.  நீ ஏன் எதற்கெல்லாமோ முடிச்சு போடுகிறாய்.  மனதுக்கு நிறைவாய் தெரிகிறார்.  வைத்துக் கொள்வோம்.  சரிபட்டால் தொடரட்டும்.  இல்லையென்றால் போகச் சொல்லி விடலாம்'' என்றார்.  லட்சுமியும் தேடி களைத்த நிலையில் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.  

அன்றிலிருந்து அடுக்களை அமர்க்களப்பட்டது.  ராஜாராம் வந்த நேரம் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் விடுமுறைக்கு வர, சலிக்காது விதவிதமான பலகாரங்களையும் சேர்த்து அசத்தினார்.  சாம்பார், குழம்பு, பொரியல், கூட்டு, ரசம், அவியல், வறுவல் என அத்தனையிலும் ஒரு தனி ருசி. லட்சுமி சமையலறை பக்கமே ஒதுங்குவதில்லை.  மளிகை சாமான்களின் தேவைகளைச் சொல்லி வாங்கி வந்து அடுக்கி வைப்பது வரை அத்தனையும் ராஜாராமே நேர்த்தியாகக் கையாண்டார்.  இரவு நரசிம்மன் வர காலதாமதமானாலும் இருந்து அவருக்கான மூன்று சப்பாத்திகளைச் சுட்டுக் கொடுத்த பிறகே நகர்வார்.  

இதில் வேடிக்கை என்னவெனில் சமையல் வேலையில் மட்டும் ராஜாராம் நரசிம்மரை கவரவில்லை.  தன்னை வழக்குரீதியாகப் பார்க்க வரும் அத்தனை நபர்களையும் அருமையாக வரவேற்று அமர வைப்பார்.  கிடைக்கும் வரவேற்பிலேயே குளிர்ந்து போவார்கள் அவர்கள்.  மாலை நேரங்களில் வரும் இரண்டு ஜுனியர்களுக்கு இவரால் பல வேலைகள் மிச்சம்.

யார் யாருக்கு என்ன பிரச்னை என்பது வரை ராஜாராமுக்கு அத்துப்படி...  நரசிம்மருக்கு காப்பி ஆற்றிக் கொடுத்தபடியே அவர்கள் சொல்வதற்கும் செவி சாய்த்திருப்பார்.  பின் அவர்கள் சென்றது முதல் ""ஐயா... இந்த விஷயம் இப்படி இருந்திருக்கலாமில்ல,  அதையும் சேர்த்து விசாரிங்க'' என்று இவருக்கே சமயத்தில் ஆலோசனை சொல்வார்.

அவரது புத்திக் கூர்மையைக் கவனித்த நரசிம்மர். ""ராஜாராம்...சும்மா தானே இருக்க, இப்படி வா... இங்க வந்து உக்காரு'' என்று வம்படியாக ஜூனியர்களுடன் அறைக்குள் அமர வைத்து விடுவார்.  ஏனெனில் ராஜாராம் சொல்லும் யோசனைகள் வித்தியாசமாக வேறு கோணத்தில் இருக்கும். எதிர்பாராத வேறு ஒரு நிலையிலிருந்து யோசித்திருப்பார்.  அந்த வழியாகச் சென்று அதன் வேர் பிடித்து பிரச்னைகளை எல்லாம் அலசி ஆராயும் போது முடிவு சுலபமாக கைக்கு எட்டிவிடும்.  அவருடைய சமயோஜித புத்தி இவருக்கு ரொம்பப் பிடிக்கும்.  

""ராஜாராம்... நீ மட்டும் படிச்சிருந்தா வாழ்க்கையில எங்கயோ போயிருப்ப'' என்பார்.

ராஜாராம் உடனே சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்.  சில நேரங்களில் அவரை இயல்புக்கு கொண்டு வர ரொம்பவே மெனக்கெடுவார் நரசிம்மன்.

ராஜாராமுக்கென தனியறையை பின்கட்டிலேயே ஒதுக்கிக் கொடுத்திருந்தபடியால் நரசிம்மன் தூங்கப் போவது வரை அவரும் உடனிருப்பார்.  வழக்கு குறித்து சில வேளைகளில் இரவு நேரங்களில் குறிப்பெடுக்க வேண்டியிருக்கும்.  அப்போதெல்லாம் ராஜாராமும் டீ போட்டுக் கொடுத்து பேச்சுத்துணைக்கு உடனிருப்பார். 

ஓர் ஆணை சமையல் வேலைக்கு வைத்துக் கொள்வது உகந்ததா இல்லையா என்ற பெருங்குழப்பத்திற்கு பின்பே ராஜாராமை வேலைக்கு அமர்த்தினார். ஆனால் அது இப்பொழுது எத்தனை உபயோகமாக போயிருக்கிறது.  இதே பெண்ணாக இருந்திருந்தால் லட்சுமியுடன் மட்டுமே அந்த பணிப்பெண்ணின் பரிவர்த்தனைகள் அத்தனையும் அடங்கிப் போயிருக்கும்.  ஓர் ஆணாக இருந்தபடியால் வீட்டில் எப்போதும் ஒரு நண்பருடன் இருப்பது போன்ற செளகர்யம். 

அதிலும் கூப்பிட கொள்ள லாகவமாக தன் வயதை விட பத்து வயது குறைந்த, ஐம்பது வயதைக் கடந்து பொறுப்பு கூடிய ஒரு நிலையில் ராஜாராம் கிடைத்தது தம் குடும்பத்துக்கு கிடைக்கப் பெற்ற நல்ல பாக்கியம் என்றே கருதினார் நரசிம்மன்.

இரண்டு வருடங்கள் போனது தெரியவில்லை.  போகப் போக வழக்குக்காக வந்த சில பஞ்சாயத்துக்களை ராஜாராமே முடித்து வைத்த சம்பவங்களும் நடந்தன.  விவாகரத்துக்காக தன்னிடம் வந்த இரு வழக்குகளில் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சுமூகமாகப் பேசி முடித்து சேர்த்து வைத்த பெருமையும் ராஜாராமுக்கு கூடியது.  இதனால் அவரின் ஜூனியர்களுடன் சின்ன பிணக்கு கூட வந்து நீங்கியது.  அந்த நேரங்களில் லட்சுமியும் உடனிருந்தாள்.  பின் அவற்றை நரசிம்மனிடம் இப்படி விவரித்தாள்.  

""ராஜாராமுக்கு நிறைய விஷய ஞானம் இருக்கு.  குடும்பத்துல எப்படி விட்டுக் கொடுத்துப் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்னு அழகா எடுத்துச் சொன்னார். பிரிஞ்சிருந்ததுங்களும் எப்படியோ அதையெல்லாம் கேட்டுக்குச்சிங்க. நமக்கும் ரெண்டு குடும்பத்த சேத்து வெச்ச புண்ணியம் அவரால.  ஆனா பாவம்!  அவருக்குத் தான் பொண்டாட்டி சின்ன வயசுலயே தவறிப் போயிட்டிருக்கு.  பாவம்!''  சொல்லிவிட்டு பலமாக "உச்' கொட்டினாள் லட்சுமி.

சற்றே உடல் நலம் குன்றிப் போயிருந்த ஒரு அதிகாலை நேரத்தில், "தனக்கு இறப்பு நேரிட்டால் தன் இரு பிள்ளைகளும் வெளி நாட்டிலிருந்து வருவதற்குள் அத்தனை ஈமக்காரியங்களையும் நீ தான் கவனிக்க வேண்டும்' என ராஜாராமிடம் ஒரு கட்டத்தில் உடைந்து போய் சொன்னார் நரசிம்மன்.  ராஜாராமுக்கும் தனக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்க வேண்டும் என பலமாக நம்பத் தொடங்கினார் நரசிம்மன்.

மழைத் தூறல் பிசுபிசுத்த ஒரு புதன்கிழமை மாலை வேளையில் ஆட்டோவில் வந்திறங்கினர் அந்த இரு பெண்கள்.  பார்க்க தாயும் மகளுமாக தெரிந்தனர். 

""வக்கீல் சாரைப் பாக்கணும்''”

ராஜாராம் உள்ளே ஏதோ வேலையாக இருக்க, லட்சுமி அவர்களிடத்தில் அறையைக் காண்பித்து உள்ளே அமரச் செய்தாள்.  அவர்கள் இருவரின் முகத்திலும் துளியும் பொலிவு இல்லை.  இருண்ட வீட்டுக்குள் வசிப்பவர்கள் போல் முகம் களையிழந்து இருந்தது.  கைகளில் வெளுத்துப் போன கவரிங் வளையல்கள்.  தாலியை மட்டுமே சுமந்திருந்த கழுத்து.  முதியவள் அப்படியே தலைமுடியை அள்ளி கொண்டை போட்டிருந்தாள்.  இளவயதாளுக்கு நல்ல நீண்ட கூந்தல்.

இருவரும் அறையில் இருந்த பானையிலிருந்து தண்ணீரைப் பிடித்துப் பருகினர்.  இவர்கள் அதிர்ஷ்டம் அன்று பார்த்து ஒருவரும் இல்லை.  வழக்கமாக "ஜே ஜே' வென கூட்டம் இருக்கும் நேரம்.

நரசிம்மன் உள்ளே சென்றது தான் தாமதம், இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் கதையை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  வாழ்க்கையே வழக்காகிப் போன விசித்திரத்தை வார்த்தைகளால் விவரித்துக் கொண்டிருந்தனர்.  ஒலித்துக் கொண்டிருந்த லலிதா சகஸ்ர மாலையைத் தாண்டி அந்த முதியவளின் விசும்பல் உள்ளே கேட்டது.  என்ன பிரச்னையாக இருக்கும் என ராஜாராமுக்கு உள்ளே ஆர்வம் உந்தித் தள்ளியது.  அன்றைக்குப் பார்த்து அவருக்கு அத்தனை வேலைகள். எப்பொழுதும் வீட்டுக்கு வந்து சுட்டித்தனம் செய்யும் எதிர்வீட்டு வாண்டின் பிறந்த நாளுக்காக பால் கொழுக்கட்டை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.  ஆனாலும் அந்த அறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளுக்குள் சுழற்றியடித்தபடியே இருந்தது. 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்,  பெரிய சொத்து பிரச்னை போல. பத்திரம், கையெழுத்து என அவ்வப்போது காதினுள் விழுந்து வைத்தது. நரசிம்மன் அவர்கள் இருவருக்கும் காப்பி எடுத்து வர  அடுப்படியில் இருக்கும் ராஜாராமுக்கு கேட்கும்விதமாக பெருங்குரலில் சத்தமிட்டார்.  குட்டிப் போட்ட பூனைகள் போல் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் ஜூனியர் பிள்ளைகளுக்கு தவிர்த்து, வழக்குக்காக வருபவர்களுக்கு தண்ணீரைத் தவிர வேறு எதையும் குடிக்கக் கொடுக்க வக்கீல் என்றும் பணித்தது இல்லை. அது இல்லாது இப்படி நடக்குமானால் அது வருஷத்துக்கு ஒரு தரம் என்பதாக மட்டுமே இருக்கும். ஒன்று மிகவும் வேண்டப்பட்டவர்களுக்குத் தான் காப்பி கிடைக்கும் அல்லது நொந்து நூலாய் போனவர்களுக்கு என ஏற்கெனவே ராஜாராம் யூகித்திருந்தார்.
நல்ல பில்டர் காப்பியை மூன்று டம்ளர்களில் ஊற்றி கொண்டு போனார் ராஜாராம்.  மணம் அறையை நிறைத்தது.  முதலில் நரசிம்மருக்கு கொடுத்து விட்டு இரு பெண்கள் பக்கம் தட்டை நீட்டினார்.  அந்த முதியவளை கண்டதும் இவரின் கைகள் நடுக்கத்துக்கு உள்ளானது.  அந்த முதியவளும் ராஜாராமை வெறித்து வெறித்துப் பார்த்தாள்.  ஏதோ ஒரு பதற்றம் உந்தித் தள்ள குபீரென பூத்த வியர்வையுடன் ராஜாராம் வெளியே அகன்றார். முதியவள் கை கால் அசைக்காது பிரக்ஞை இன்றி அமர்ந்திருந்தாள்.  பின் சுதாரித்து தன் மகளிடம் குசுகுசுவென எதையோ காதினுள் போட்டாள்.  அதைக் கேட்டதும் இளையவள் வாய் மீது இரு கைகளையும் கொண்டு  சென்று நிறுத்தி கண்கள் விரித்து ஆச்சரியம் காட்டினாள்.  அவர்கள் எதிரில் வைத்த காப்பி வைத்தபடி இருந்தது. 

நரசிம்மனுக்கு நடப்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. "இவர்கள் யார்? எதற்காக ராஜாராமைப் பார்த்ததும் இப்படி ஆச்சரியப்பட்டார்கள்.  ராஜாராம் ஏன் இவர்களைப் பார்த்து அடித்தோம் பிடித்தோம் என ஓட வேண்டும்!'  அனைவருக்குள்ளும் குழப்ப ரேகைகள்.

அந்த முதியவள் சுய நினைவுக்கு வந்து கட்டிப் போன தன் குரலில் மெல்ல வக்கீலிடம், "அ...ஐயா... யார் இவரு?  இங்க என்ன பண்றாரு?'' என்றாள்.  

""அவரா... என் வீட்டுல சமையல் வேலை செய்யறாரு. ஏன்? உங்களுக்கு அவர தெரியுமா?''

""ம்...அவர் பேரு?''

""ராஜாராம். சொல்லுங்க... அவர உங்களுக்கு தெரியுமா?''

""அது வந்து... இல்லைங்கைய்யா, எங்களுக்கு தெரிஞ்ச நபர் ஒருத்தரு.  பேரு வளையாபதி.  அவரை மாதிரியே தெரிஞ்சது.  அதான் கேட்டேன்.  ஆனா நீங்க அவர் பேரு ராஜாராம்னு சொல்றீங்களே. அப்ப இவர் அவர் இல்ல.''

""ஓ...அப்படியா சேதி.  சரி சரி, காப்பி எடுத்துக்கோங்க!''

இளவயதாள் தன் தாயை குழப்பத்துடன் பார்க்க இருவரும் காப்பி பருகியதும் வெளியேறினார்கள்.

அந்த நிமிடத்திலிருந்து ராஜாராம் வீட்டிற்குள் இயல்பாக இல்லை என்பதை எடை போட்டு விட்டார் நரசிம்மன்.  இது அவரின் மூளைக்குள் எங்கோ இடித்தது.  அடுத்த ஒரு வாரத்தில் வீட்டுக்கு முன்கட்டில் உள்ள வக்கீல் அறை பக்கமே அவர் ஒதுங்கவில்லை.  சமையல் கட்டுண்டு தன் அறையுண்டு என முடங்கிப் போனார் ராஜாராம்.  அவரின் இந்த மாற்றம் நரசிம்மரை இருப்புக் கொள்ள விடவில்லை. 

தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து பூஜை புனஸ்காரங்கள் முடித்து தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் யாருடைய வரவையோ எதிர்பார்த்து வாசல் நோக்கி மற்றொரு கண்ணையும் வைத்து காத்திருந்தார். 

புதன் அன்று பேசிப் போன அந்த இரு பெண்களும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.  வெளியே பெரிய இரும்பு கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது.

பூரிக்கு மாவு பிசைந்துக் கொண்டிருந்த ராஜாராம் சமையலறை ஜன்னலிலிருந்து வெளி வாசலை எட்டிப் பார்த்தார்.  அங்கே தேவகியும் மதிவதனியும் வந்து  கொண்டிருந்தனர். நாலு அடி எடுத்து வைத்த லட்சுமியும் “""இவங்க...அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து போனாங்களே... அந்த பொம்மனாட்டிங்க தான?  இன்னிக்கு வரச்சொல்லி இருந்தீங்களா?'' என கணவரை பார்த்தபடி இழுத்தார். 

""ஆமாம்... அவங்களுக்கு சொந்தமான ஒரு பொருள் நம்ம வீட்டுல இருக்கு. அத கொண்டு போக வந்திருக்காங்க''

வக்கீல் ஐயா அனைத்து விஷயங்களும் அறிந்து வைத்து பேசுகிறார் என ராஜாராமுக்கு விளங்கிவிட்டது.  கைகளை கழுவிக் கொண்டு கூடத்துக்கு பெயர்ந்தார்.  லட்சுமி விளங்காமல் விழித்தாள்.  அனைவரும் கூடத்தின்  நான்கு மூலைகளில் நின்று கொண்டிருந்தனர்.  நரசிம்மன் மட்டும் தெற்கு மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார். ராஜாராமை பார்த்தார்.

""ராஜாராம்...இவங்க உன் குடும்பம்.  நீ இல்லாது அவங்க பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சமில்ல.  நீ விட்டுட்டுப் போனதால உன்னோட மூத்த குடும்ப உறுப்பினர்கள் அவங்களுக்கு சேர வேண்டிய நியாயமான சொத்தை பிரிச்சுக் கொடுக்க முன்வரல.  ஏமாத்திட்டாங்க.  இந்த ரெண்டு பெண்களும் இப்ப நிராதரவா நிக்குறாங்க.  அவங்களுக்கு உன்னோட பதில் என்ன?'' மிக இயல்பாக கேட்டார் வக்கீல் சின்ன மெளனத்திற்குப் பிறகு பேசத் தொடங்கினார் ராஜாராம்:

""நானும் தேவகியும் காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  ஒரு அஞ்சு வருஷம் எல்லாம் சுமூகமாத்தான் போச்சு.  அப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பிடிவாதம் ஜாஸ்தி.  நான் பிடிச்ச முயலுக்கு மூனே காலுன்னு வீராப்பா திரிவேன்.  குடும்பத்துக்குள்ளயும் அந்த மாதிரியே எக்கி உருண்டதுல எனக்கும் தேவகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போச்சு.  இப்ப இவ்வளவு பக்குவமா வேல செய்யுறேன்னு சொல்றீங்களே... ஆனா அப்ப இந்த மாதிரி சின்னச் சின்ன உதவிகள் பொண்டாட்டி புள்ளைகளுக்கு செய்யாம சலம்பிட்டு திரிஞ்சேன். காதல் திருமணம் செஞ்சதால குடும்பமும் ஆதரவு தரல,  வீட்டுலயும் என் பிடிவாதத்தால நிம்மதி இல்ல.  அதான் நண்பர்களோட... வீட்ல சொல்லாம கொள்ளாம மும்பைக்கு வேலைக்கு கிளம்பிட்டேன்.  ஒரு வருஷத்துல திரும்பி வரணும்னு தான் இருந்தேன்.  எதிர்பாராத சூழ் நிலையில் 3 வருஷம் ஜெயிலுக்குப் போக வேண்டியதாப் போச்சு.  அப்புறம் ஊருக்கு வந்து இவங்கள தேடிப் பார்த்தேன்.  ஊருல எங்கயும் காணல.  சுத்தி இருந்த யாருக்கும் இவங்களோட விவரம் தெரியல. 

ஓடிப் போனவன் ஓடிப் போனவனாவே காலத்துக்கும் அமைஞ்சு போச்சேனு கஷ்டப்பட்டேன்.  அப்புறம் பல இடங்கள்ல வேலை பார்த்து இதோ கடைசியா உங்க வீட்ல இப்ப இருக்கேன்.  விட்டுக்கொடுத்தல் இல்லாது போனதால தான் என் வாழ்க்கை இப்படி திசை மாறிப் போச்சு.  இவங்கள அன்னைக்கு பாத்த போதே உண்மையச் சொல்லி அரவணைச்சுக்கணும்னு தான் பாத்தேன்.  ஆனா உங்க கிட்ட பொண்டாட்டி குடும்பம்னு எதுவும் இல்லன்னு பொய் சொன்னது உறுத்துச்சு. அதுவும் இல்லாம இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் இப்படியே இருந்திடலாம்னும்  பேசாம இருந்திட்டேன்'' 

லட்சுமி வலது தாடையில் வலது கையை இருத்தி ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.  தேவகியும் மதிவதனியும் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்கள்.  ராஜாராமின் கண்களிலும் ஈரப்பசை. 

""ஐயா... நான் ஒண்டிக்கட்ட தானனு எதையும் சேத்துக்கூட வெக்கல.  எந்த சொத்து சுகமும் எங்கிட்ட இல்ல.  என்னால பெருசா எந்த ஒரு உதவியும் செய்யக்கூட முடியாது''

""ராஜாராம் ஒரு மனுஷனுக்கு உண்மையான சொத்து எது தெரியுமா? காசு பணமோ, மூளையோ, மூளைக்குள்ள சேத்து வெச்சிருக்குற அறிவோ இல்ல... மனசு முழுக்க வெச்சிருக்க அன்பு, பிறத்தியார் சொல்றத நிதானிச்சி கேக்குற காது... அப்புறம் அவங்களுக்கு உதவி செய்யுற கைகள்.  இதெல்லாம் உங்கிட்ட இப்ப இருக்கு.  நீ தான் அவங்களுக்கு பெரிய சொத்து''

""இல்லைங்கய்யா...''

""இனி ஒரு வார்த்த பேசாத ராஜாராம்.  இங்க வந்த பலபேருக்கு அறிவுரை சொன்னவன் நீ.  அதால நான் ஒன்னும் உனக்கு பெருசா சொல்றதுக்கில்ல. இதுவரை நடந்ததை யோசிக்கறத விட இனி எப்படி நடக்கணும்னு யோசிக்கறவங்க தான் வாழத் தெரிஞ்சவங்க.  நீ இனிமே இருக்க வேண்டியது அவங்களோட தான்.  உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையாம போயிடுச்சேன்னு நான் பல நாள் வருத்தப்பட்டிருக்கேன்.  அதுக்கு இனி அவசியம் இல்ல.  விட்டுப் போன பந்தத்தோட இணையுற நாள் வந்தாச்சு.  இனிமே நீ அவங்க கூடத்தான் வாழனும்.  போயிட்டு வா ராஜாராம்.  சீக்கிரமே உன் பொண்ணுக்கு நல்ல வரன் பாரு.  அவளுக்கு திருமண பரிசா உன்னோட பூர்வீக சொத்தை நான் வாங்கித் தரேன். சந்தோஷமா போயிட்டு வா.''

அந்தப் பெண்களின் பக்கம் திரும்பியவர், ""இங்க பாருங்கம்மா... அவரைப் பத்தி குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  ஆனா மன்னிக்கவும், மறக்கவும் ஒரே காரணம் தான் தேவைப்படும்.  அது அன்பு. பரிபூரண அன்போட அவரோட வாழுங்க'' பிரியாவிடை பெற்றது ராஜாராமின் குடும்பம்.

""ஏங்க..."ஆச்சாரமான இல்லத்து அடுப்படியில் பணி செய்ய ஆள் தேவை'ன் னு பழையபடி இன்னைக்கே பத்திரிகையில விளம்பரம் கொடுங்க.  ஆனா ஒரு ஆண் தான் தேவைனு அழுத்தமா தெரிவிச்சிடுங்க'  சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள் லட்சுமி கண்கலங்கியவாறே!  நல்ல சகோதரனை திடீரென இழந்த உளவியல் தவிப்பு.  பாவம் அவள்!

தற்போது நரசிம்மனுக்கும் தனிமை தேவைப்பட்டது.  ராஜாராமின் நினைவுகளை மனதுக்குள் அசை போட. மனதில் ஆயிரமாயிரம் நதிகள் பாய்ந்த உணர்வு!

 

தினமணி சிவசங்கரி  சிறுகதைப் போட்டியில்
ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir3.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/மனதில்-ஆயிரமாயிரம்-நதிகள்-3206924.html
3206923 வார இதழ்கள் தினமணி கதிர் பிரதமர்  ஆன பத்திரிகையாளர்! -பிஸ்மி பரிணாமன்  DIN Sunday, August 4, 2019 02:55 PM +0530
போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர், இங்கிலாந்து அரசின் வெளியுறவுச் செயலர் என பயணித்து  தற்போது  போரிஸ் இங்கிலாந்தின் பிரதமராகிவிட்டார்.  விமர்சனங்களும் சர்ச்சைகளும் அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் நிழலாகத் தொடர்ந்திருக்கின்றன.    

பத்திரிகையாளராக இருந்த போதும் சரி... அரசியல்வாதியாக மாறியபோதிலும் சரி... நட்பு,   விமர்சகர் வட்டங்களில்  போரிஸ் "குழப்பவாதி... ஒழுங்கற்றவர்..' என்று பெயர்    ஈட்டியுள்ளார். "போரிஸ் தனது கருத்துகளை விமர்சனங்களை அடிக்கடி மாற்றிக்  கொள்வார்' என்ற  நிரந்தரக் குற்றச்சாட்டும்   உண்டு. பலவகை விமர்சனங்கள் அவரை   நோக்கி பாய்ந்து கொண்டிருந்தாலும் அரசியலில் அவரது முன்னேற்றம் தடை படவில்லை. லண்டன்  நகரின்   மேயராக   எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அரசியலில்  போரிஸ் ஜான்சன் செய்த பரபரப்புகள்  மக்களுக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  இல்லையென்றால்  பலத்த விமர்சனங்களுக்கிடையிலும்  போரிஸ்  அரசியலில் முன்னேறியிருக்க முடியாது. அமெரிக்க, இங்கிலாந்து நாட்டின்  குடியுரிமையைப் பெற்றிருந்த போரிஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்தார்.  அதிரடி  அரசியலைக்  கையாண்ட போரிஸ் இன்னொரு  அதிரடி அமெரிக்க  அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக இருப்பதில் வியப்பில்லையே!  இந்திய பிரதமர்  மோடியை  முன்னரே  தெரியும் என்பதால்  இந்தியா-இங்கிலாந்து நட்புறவு பலப்படும்.   

போரிஸ் ஜான்சன் தனது முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து   கேரி சைமண்ட்ஸ் என்ற பெண் தோழியுடன் வாழ்ந்து வருகிறார். போரிசுக்கு ஐம்பத்தைந்து  வயதாகிறது. பிரதமர் பதவி ஏற்ற இரண்டு நாட்களுக்கு முன்  போரிஸ் வீட்டில் பெரிய களேபரம். போரிஸýக்கும்   கேரிக்கும்  சண்டை. கண்ணாடி  பொருள்கள் உடையும் சத்தம் பலமாகக் கேட்கவே, அக்கம் பக்கத்தவர்கள் போலீசை அழைக்க ... களேபரம் அமைதியானது. காலையில் அக்கம்பக்கத்தவர்கள் போரிûஸ ஒரு மாதிரியாகப்   பார்க்க,    "நேற்று இரவு ஒன்றுமே நடக்காத' மாதிரி  போரிஸ்  சிரித்துக் கொண்டே அவர்களைக் கடந்து போனாராம்..! 

"இந்தியாவின் மருமகன் நான்'  என்று பெருமையாகச்  சொல்லி வந்தார். போரிஸ் அவரது  இரண்டாம் மனைவி மெரினா வீலர்,  இந்திய வம்சாவளியில் வந்தவர். இங்கிலாந்தில் பள்ளியில் படிக்கும் போதே போரிஸýக்கு மெரினாவைத் தெரியும்.  வளர்ந்து மீண்டும் ப்ரஸ்ஸல்சில்  இருவரும் பணி புரிந்து கொண்டிருந்த போது சந்திக்கவே... அது காதலில் தொடங்கி 1993-இல் திருமணத்தில் முடிந்தது. போரிஸ்-மெரினா  தம்பதிக்கு நான்கு குழந்தைகள். மெரினாவின் உறவினர்களைச் சந்திக்க  போரிஸ் டில்லி,  மும்பாய்க்கு பல முறை வந்து சென்றுள்ளார்.   

மெரினா  பிரபல எழுத்தாளர்  குஷ்வந்த் சிங்கிற்கு மகள் முறை . மெரினாவின் தாய், தீப் சிங். குஷ்வந்த் சிங்கின் இளைய சகோதரர் தல்ஜித் சிங்கின் மனைவி. இந்த காரணங்களால்தான்  போரிஸ்  தன்னை "இந்தியாவின் மருமகன்'  என்று அழைத்துக் கொண்டார்.   

தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலரை போரிஸ் இணைத்துக் கொண்டுள்ளார்.  பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது போன்ற  முக்கிய விஷயங்களில்  முடிவெடுக்கும்   இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக  பொறுப்பேற்றிருப்பவர்   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல்.  இவரது பூர்வீகம்   குஜராத்.    பிரீத்தியின்  பெற்றோர்,  வேலை தேடி இங்கிலாந்து வந்தவர்கள்.  47 வயதாகும்  ப்ரீத்தி, 2010  -இலிருந்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகச்  செயல்படுகிறார். போரிஸ் ஜான்சனின்  தேர்தல் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததினால் பிரீத்தி  மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.  

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனான  ரிஷி சுனக், இந்திய வம்சாவளி அமைச்சர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது  நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை  ரிஷி சந்தித்தார்.  இருவரும் 2009-இல் திருமணம் செய்துகொண்டனர்.   தனது மாமனாரைப் போலவே ரிஷியும் பிசினஸ்ஸில் பிசி. அதே சமயம் இங்கிலாந்தின் முக்கியக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின்  தீவிர இடைநிலைத் தலைவர். கட்சிக்கு அவர் தன் பங்களிப்பின் காரணமாக  2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். 

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான "பிரெக்ஸிட்' ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாததால், தெரசா மே இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  இந்தப் பிரச்னையைப்  பதவியேற்ற மூன்று மாதத்திற்குள்  போரிஸ் தீர்க்க வேண்டும்... போரிஸ் இந்த முயற்சியில்  வெற்றி பெறுவாரா? இங்கிலாந்து மட்டுமல்ல... உலகமே  எதிர்பார்க்கிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir2.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/பிரதமர்--ஆன-பத்திரிகையாளர்-3206923.html
3206922 வார இதழ்கள் தினமணி கதிர் ஆடல்... பாடல்... அறிவியல்! -  வி.குமாரமுருகன்   Sunday, August 4, 2019 02:50 PM +0530  

நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தன்னாலும் சாதித்துக் காட்ட முடியும் என நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.  

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சு.முருகன்தான் ஆடல், பாடலுடன் அறிவியலைக் கற்பிக்கும்  சாதனைக்குச் சொந்தக்காரர்.  

""புதுப்புது பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், படிப்பை ரசனை மிக்கதாக மாணவர்கள் மத்தியில்  மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்  எனது மனதில் தோன்றிய சிந்தனைதான் ஆடல் பாடலுடன் அறிவியலைக் கற்பிக்க வேண்டும் என்பது.

பொதுவாக, பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலர் வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது முக்கியமான விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர். இதனால் தேர்வு நேரத்தில் பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த பிரச்னையைத் தீர்க்க மாணவர்களுக்கு பிடித்த வழியில் சென்று பாடங்களை நடத்தி வருகிறேன்'' என்கிறார் முருகன். 

ஒரு மாலைப் பொழுதில் அவரது சொந்த ஊரான சாம்பவர்வடகரையில் வைத்து அவரைச் சந்தித்தோம். ""சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் கல்விதான் ஒருவரை சாதனையாளராக்கும் என்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படித்தேன். இதனால் 4 பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 9 ஆண்டுகாலம் அரசு நூலகத்தில் நூலகராகப் பணியாற்றினேன். பின்னர் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 

நூலகராக இருந்ததால் நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. நூல்களில் உள்ள முக்கியமான  விஷயங்களை மாணவர்களிடம் நேரடியாகக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் சினிமா மெட்டில் பாட்டமைத்து அவர்கள் முன் பாடுவேன். இது மாணவர்களுக்கு பிடித்துப் போனது. இதையடுத்து அறிவியல் பாடங்களையும் பாடல், ஆடல் என பாடி நடத்தத் தொடங்கினேன். இதை கடைசி பெஞ்ச் மாணவர்கள் கூட வரவேற்றனர்.  

மேலும், பல குரலில் பாடங்களை நடத்தத் தொடங்கினேன். இதனால் சொல்ல வேண்டிய விஷயங்களை மாணவர்கள் மத்தியில் எளிதாகக் கொண்டு செல்ல முடிந்தது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்'' என்றார். 

தமிழக ஆளுநரிடமிருந்து சாதனையாளர் விருது, பல்வேறு அமைப்புகள் மூலம் கலைமதி விருது, கலைஜீவன் விருது, கலை ஞாயிறு விருது, கலை வளர்மணி விருது, விவேகானந்தர் விருது, சீர்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

மாணவர்களுக்காகப் பாடல்களை பாடி பாடம் நடத்தும் இவரை, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் அழைத்து பயிற்சி கொடுக்க சொல்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகள். 

"ஐயோ, இப்படியாகிவிட்டதே' என வருந்தி வாழ்வை முடக்கும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில்,  தான் மட்டுமல்ல தன்னாலும் சாதனையாளர்களை உருவாக்க முடியும் என ஆசிரியராகி சாதித்து வரும் முருகனின் முன்னேற்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும் என்றால் அது மிகையில்லை. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/4/w600X390/kadhir1.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/aug/04/ஆடல்-பாடல்-அறிவியல்-3206922.html
3202097 வார இதழ்கள் தினமணி கதிர் நேர் ஸிந்துஜா DIN Sunday, July 28, 2019 10:35 AM +0530 திருவாசகம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். ஆனால் உட்கார்ந்த இடத்தில் முள் குத்துவது போல உறுத்தியது.நெஞ்சில் பதிந்து கிடக்கும் முள்தான் அது என்று நினைத்தார். இன்னும் ஸ்கூல் ஆரம்பிக்கவில்லை. ஆட்டமும் சிரிப்புமாகக் குழந்தைகள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் மலர்ச்சியை சற்று அசூயையுடன் பார்த்தார். தன் கையை விட்டுப் போன நிம்மதி
 தான் அசூயைக்குக் காரணம் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை.
 நேற்று மாலை அவர் கணக்கைச் சரி பார்த்து கலெக்ஷன்களை வைக்கும் பெரிய பணப்பெட்டியை மூடும் சமயத்தில் அவரது கஷ்டகாலம் ஆரம்பித்தது. ஆனால் அதை நல்லகாலம் என்று அப்போது உடனடியாக மனது நினைத்ததுதான் உண்மை. அவருடைய கணக்குப் புத்தகத்துக்கும் பணப்பெட்டியில் வைத்திருந்த பணத்துக்கும் சரியாக ஐந்நூறு ரூபாய் வித்தியாசம் இருந்தது. கையிலிருந்த பணம் புத்தகம் காண்பித்ததுக்கும் மேலாக இருந்தது. அன்று வரவு வைத்த பணத்தையும் ரசீதுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் சரியாகவே இருந்தன. அன்று நிகழ்ந்த செலவுகளையும் அதற்கான வவுச்சர்களையும் சரி பார்த்தபோதும் வேறுபாடு எதுவும் தெரிய வரவில்லை. எண்களை எழுதும் போது ஏதாவது தவறு நிகழ்ந்ததா என்றும் சோதித்துப் பார்த்து விட்டார். எல்லாம் சரியாகவே இருந்தன. எனவே கையில் அதிகமாக இருப்பது யாரோ தவறுதலாகச் செலுத்திய பணம் என்று அவருக்குத் தெரிந்து விட்டது.
 ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு முதல் நாளாயிருந்ததாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் என்பதாலும் அதிகப் பெற்றோர்கள் வந்து பணம் கட்டிவிட்டுப் போனார்கள். இவர்களில் அதிகப் பணத்தை யார் கொண்டு வந்து கொடுத்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? பணம் கட்டுவதை பள்ளி நிர்வாகம் ஒரு மணி வரைதான் அனுமதித்திருந்தது. திருவாசகம் இந்தப் பண வித்தியாசத்தைக் கண்டுபிடித்த போது மணி நாலரை இருக்கும். அதுவரை யாரும் வந்து கேட்கவில்லை என்றால் கொடுத்தவனுக்கும் அவனுடைய இழப்பைப் பற்றி தெரியவில்லையோ என்று திருவாசகம் நினைத்தார். ஒரு பொருட்படுத்தக் கூடிய பணமாக அது அவன் நினைவில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
 அந்த ஐந்நூறு ரூபாய் அவருக்கும் வேண்டியிருந்தது. மாதம் முதல் தேதி வாங்கும் சம்பளம் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. சம்பளம் வந்தவுடன் அவர் மனைவி முதலில் மளிகைக் கடைப் பாக்கியைத் தீர்த்து விடுவாள். முந்திய மாதப் பாக்கியைத் தீர்த்தால்தான் கடைக்காரப் பிள்ளைவாள் அந்த மாத சாமான் லிஸ்டை ஏறிட்டுப் பார்ப்பார். அப்புறம் பால் சீட்டு, வேலைக்காரி சம்பளம், குடித்தனக்காரர்கள் சங்கத்து சார்ஜ், கேபிள் வாடகை, ஸ்கூட்டிக்காக வங்கிக்குக் கட்ட வேண்டிய மாதாந்திரத் தவணை ...என்று பெரிய லிஸ்ட்டே இருக்
 கிறது. ஏதோ மிச்சம் இருக்கும் பணத்தில் பஸ் சார்ஜ், மருந்து அப்புறம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பண்டிகைச் செலவு ஆகிய எல்லாவற்றையும் சுருக்கி சுருக்கி வாழ்க்கையை நடத்த வேண்டும்.
 அவர் அந்த ஐந்நூறு ரூபாயை எடுத்துத் தனியே தனது மேஜைக்குள் வைத்துக் கொண்டு கணக்குப் புத்தகத்தை மூடி வைத்தார். பிரணதார்த்தியிடம் மூன்று மாசத்துக்கு முன்பு வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்க் கடனில் இந்த ஐந்நூறைக் கொடுத்து விட்டால் அவனை இன்னும் இரண்டு மாதங்களுக்குக் காத்திருக்க வைக்கலாம். அவனும் பாவம். அப்படி ஒன்றும் மேட்டில் உட்கார்ந்திருக்கும் ஜாதி இல்லை. அவரைப் போலவே குழியிலிருந்து மேலே எழும்ப முயலும் ஜென்மம்தான்.
 ஆனால் இரவு படுக்கைக்குச் சென்றும் அவரால் உடனே உறங்கிவிட முடியவில்லை. இதற்கு முன் இந்த மாதிரி ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்தது இல்லை. எவ்வளவோ தடவை அவருடைய சொந்தப் பணத்தை இழந்ததாகத்தான் அவருக்கு நடந்திருக்கிறது. "அதற்கு இது ஈடு என்று சொல்கிறாயா?' என்று அவரது மனம் கேட்டது. "அதுதான் நாளைக்குத் தேடி வருபவரிடம் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேனே?' என்று அவர் பதிலுக்கு முனங்கினார்.
 இப்போது அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தது முதல் மனதின் ஓரத்தில் அந்த உறுத்தல் ஒரு விடாத வலியைப் போல நெருடிக் கொண்டிருந்தது. தினமும் பேப்பரில் போடுகிறான்கள், டிவி.யில் சொல்கிறான்கள், பெரிய மனுஷன் ஒவ்வொருத்தனும் கோடியில் அடித்துக் கொண்டு போகிறான்கள் என்று. லட்சம் கோடி என்றால் உறுத்தல் இருக்காது போலிருக்கிறது. ஐந்நூறுதான் இந்தப் பாடுபடுத்துகிறது. பிரணதார்த்தியின் கடன் இல்லாமல் இருந்திருந்தால் இந்தத் தொல்லை இருந்திருக்காது. ஓஹோ, இப்போது கடன் கொடுத்தவன்தான் இந்தப் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
 அவர் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். வேலை ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. அவர் தன்னுடைய கைபேசியை எடுத்து பிரணதார்த்திக்கு கால் போட்டார். எப்போது வந்தால் அவனைப் பார்க்கலாம் என்று கேட்கத்தான் போன் செய்தார். என்கேஜ்டு டோன் வந்தது. அலுத்துக் கொண்டே மேஜை மீது போனை வைத்தார்.
 பத்து மணிக்கு மேல் பணம் கட்டுபவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். வேலைப் பளு உள்ளே துருவிக் கொண்டிருந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டு விட்டது. ஒரு மணி வரை மூச்சு விடக் கூட நேரம் இல்லை. அவர் கவுன்ட்டரை மூடும் சமயம் ஓர் ஆள் வந்து நின்றான். வேலையாள் மாதிரி சீருடை அணிந்திருந்தான். நேரே வந்து பணம் கட்ட முடியாது போகும் போது சிலர் இம்மாதிரி வேலையாள் மூலம் பணம் கொடுத்து கட்ட அனுப்புவார்கள். நாற்பது வயதிற்கு இருக்க வேண்டாத சுருக்கங்கள் அப்பிய முகம். கச்சலான தேகத்தைத் துணிகள் கூட மறைக்க முடியவில்லை. ஆனால் கூனிக் குறுகி நிற்கவில்லை.
 "நேரமாச்சு. நாளைக்கு வந்து பணம் கட்டு'' என்றார் திருவாசகம்.
 "இல்ல ஐயா'' என்று அவன் தலையைச் சொறிந்தான்.
 "என்னப்பா, நான் சொல்றேனில்ல நாளைக்கு வான்னு'' என்றார் சற்றுக் கடுமையாக.
 "சாரே, கிறித்துமசு பணம் வாங்கிட்டு போக வந்தேன்'' என்றான்.
 பள்ளியில் கிறிஸ்துமஸ் வரும் போது வருடா வருடம் வெளியில் இருந்து பள்ளிக்காக வேலை பார்க்கும் கார்பொரேஷன், மின்சார வாரியம், டெலிபோன்,போஸ்டல் துறை ஆட்களுக்கு பக் ஷீஸ் கொடுப்பார்கள். அதைத்தான் இவன் இப்போது வந்து கேட்கிறான்.
 "நீ எதுல வேல பாக்கறே?'' என்று கேட்டார் திருவாசகம்.
 அவன் "சூவேசுல' என்றான். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம். அடையாளச் சீட்டை எடுத்து அவரிடம் நீட்டினான்.
 "ஏம்ப்பா இந்த மாதிரி உன் இஷ்டப்படி வந்து உயிரை எடுக்கறே? இப்ப வந்து நிக்கிறதுக்கு அப்பவே வந்திருக்க முடியாதா? எதையானும் பொய்யச் சொல்லிக்கிட்டு இப்படி வந்து நின்னா நான் என்ன பண்றது? கிறிஸ்துமஸ் சமயத்திலயே எல்லாருக்கும் பணம் குடுத்து கணக்க முடிச்சு வச்சாச்சு'' என்றார் எரிச்சலுடன்.
 "சார், அப்ப என் கொளந்த செத்து போயிருச்சு. அதான் நீங்க கிறித்துமசு இனாம் எல்லாருக்கும் குடுத்தப்ப நா வந்து வாங்க முடியாமப் போயிருச்சு'' என்று அவரைப் பார்த்தான்.
 அவர் திடுக்கிட்டார். அவன் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள சில நிமிடங்கள் ஆகின.
 அவன் கண்கள் இரங்கி நிற்பதை அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் கேஷ் பெட்டியைத் திறந்தார். வங்கியிலிருந்து வாங்கி வந்து இன்னும் பிரிக்கப்படாமல் வைத்திருந்த ஐம்பது ரூபாய்க் கட்டைப் பிரித்து ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தார். அவன் கைநீட்டி வாங்கிக் கொண்டான். அவரைப் பார்த்து " உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும் சாமி'' என்று கையைத் தூக்கி அவரை வணங்கினான்.
 அவர் தன்னுடைய மேஜைக்குத் திரும்பினார். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. டிபன் பாக்ஸை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தார். அப்போது கவுன்ட்டரின் வெளியேயிருந்து "ஐயா'' என்று கூப்பிடும் குரல் கேட்டது.
 சற்று முன் வந்து போனவன்தான். என்ன ஆயிற்று இவனுக்கு?
 உட்கார்ந்த இடத்திலிருந்தே "என்னப்பா?'' என்றார்.
 "சாமி, நீங்க அம்பது ரூபா சாஸ்தி குடுத்திட்டீங்களே'' என்று கவுன்ட்டர் வழியே கையை நுழைத்து நீட்டினான். அவன் கையில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு மொடமொடத்தது.
 அவர் எழுந்து அவனருகே வந்தார்.
 "புது நோட்டு ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கிடிச்சி போல. போன வருசம் நீங்க அம்பதுதான குடுத்திங்க!'' என்று சிரித்தான். அவரிடம் பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி வந்த வழியே நடந்தான்.
 ஒரு நேர்க் கோடு போல நடந்து சென்ற அந்த உருவத்தைப் பார்த்தபடி திருவாசகம் நின்றார்.
 அப்போது அவரது கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். பிரணதார்த்தி.
 "என்னப்பா காலேல கூப்பிட்டா மத்தியானம் லயனுக்கு வரே?'' என்று சிரித்தார் திருவாசகம்.
 "இன்னிக்கி இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேல. நீ எப்பிடி நல்லா இருக்கியா?'' என்று கேட்டான் நண்பன். "எதுக்கு போன் பண்ணினே?''
 "உங்கிட்ட பணம் வாங்கி ரொம்ப நாளாச்சே. அதான் ஏதோ கைல மீந்த பணத்துலேந்து கொஞ்சம் திருப்பிக் குடுத்துடலாம்னு. அஞ்சு மணிக்கு வரட்டா?'' என்று கேட்டார் அவர்.
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/CINDUJA_STORY.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/நேர்-3202097.html
3202096 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, July 28, 2019 10:33 AM +0530 குமரன் மிகவும் கஞ்சன். தான் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்த பணத்தைத் தான் இறந்த பின்பு கூட பிறர் அனுபவிக்க அவன் விரும்பவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த அவன், இறப்பதற்கு முன்பு மனைவியிடம், தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தனது சவப்பெட்டியில் வைத்து தன்னோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.
 சில நாட்களில் அவன் இறந்துபோனான். உறவினர்கள் எல்லாருக்கும் இது தெரியும் என்பதால், அடக்கம் செய்யும் நாளன்று சவப்பெட்டியில் வைக்கப் போகும் பணத்தைக் காண எல்லாரும் ஆவலாக இருந்தார்கள்.
 ஆனால் குமரனின் மனைவி பணத்தை வைக்கவில்லை. ஒரு கவரை மட்டும் உள்ளே வைத்தாள்.
 எல்லாரும் பணத்தை ஏன் சவப்பெட்டியில் வைக்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு குமரனின் மனைவி சொன்னாள்:
 "அவருடைய பணத்தை எல்லாம் என் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவர் பெயருக்கு செக் ஒன்றைக் கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்திருக்கிறேன். அதை அவர் பேங்கில் போட்டு எடுத்துக் கொள்ளட்டும்''.
 அ.பூங்கோதை, செங்கல்பட்டு.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/micro.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/மைக்ரோ-கதை-3202096.html
3202092 வார இதழ்கள் தினமணி கதிர் குறுந்தகவல்கள் Sunday, July 28, 2019 10:32 AM +0530 • சோனால் சிங், பிரபல ஏல நிறுவனமான கிருஸ்டியில் இந்தியாவின் நிர்வாக இயக்குநர். இந்த வகையில் அடிக்கடி உலகம் முழுவதும் சுற்றி வருபவர். இதனால் ஏராளமான விமானங்களில் பயணிப்பவர். ஒரு விமானத்தில் ஒரு தடவை பயணித்தால் அடுத்த தடவை அதனைத் தவிர்ப்பார். இந்த வகையில் ஜெட் ஏர்வே விமானங்களில் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே பயணம் செய்து விட்டாராம். இதனால் தற்போது ஜெட் விமானங்களில் பயணிப்பது இல்லை. செல்லும் விமானங்களின் இறக்கை எண், பயண நாள் ஆகியவற்றை மறக்காமல் குறித்து வைத்துள்ளாராம் இவர்.

• செஸ்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், போட்டிகளுக்கு முன், கடைசி நிமிட பயிற்சி செய்ய மாட்டார். மாறாக ஒரு குட்டித் தூக்கம் போடுவார். அடுத்து நோடியாக போட்டியில் ஆட ஆரம்பித்துவிடுவார்... 
தூக்கம் மூளையைச் சாந்தப்படுத்தி, போட்டியில் அதிக கவனம் செலுத்த வைக்கும் என்கிறார் ஆனந்த். வெற்றிக்கான காரணம் புரிகிறதா?

• பெப்சி நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இந்திராநூயி, கடைசியாக தனது ஊழியர்களுக்கு விடுத்த செய்தி இதுதான்...
"நேரம் பற்றி கடினமாய் சிந்தியுங்கள். இந்த பூமியில் நமக்கு கிடைத்திருக்கும் நேரம் மிக மிகக் குறைவு'' எனக் கூறியதுடன் அதற்கு தன் வாழ்க்கையின் ஏக்கத்தை இப்படி வெளிப்படுத்தினார்:
"எனக்கு வேலையில் வியக்கத்தக்க வாழ்வு கிடைத்தது. அதே சமயம் நேர்மையாக நான் ஒன்றையும் நினைத்துப் பார்க்கிறேன். அது என் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், மேலும் நிறைய நேரத்தைச் செலவிட்டிருக்கலாம் என ஏங்கிய நேரங்களும் உண்டு'' 
இதில் தாய்... மற்றும் மனைவியின் ஏக்கத்தை அற்புதமாய் வெளியிட்டுள்ளார். 

• இந்தி நடிகர்கள் சுயசரிதம் எழுதுவது சகஜம். இந்த வகையில் அனுபம்கெர், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை LESSONS  LIFE  TAUGHT ME UNKNOWINGLY என்ற பெயரில் எழுதி வருகிறார். வரும் ஆகஸ்டு -15-ஆம் தேதி வெளியாகிறது இந் நூல். 
அனுபம் கெருக்கு எழுத்து புதிதல்ல. ஏற்கெனவே இவர் எழுதிய The best thing about you is you என்ற புத்தகம் மிகச் சிறந்த விற்பனை என நிரூபித்துள்ளது. இதன் 22-ஆவது பதிப்பும் விரைவில் வெளிவர உள்ளது. 
தொகுப்பு: ராஜிராதா, பெங்களூரு.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/k3.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/குறுந்தகவல்கள்-3202092.html
3202093 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை... தலையணை அல்ல! Sunday, July 28, 2019 10:32 AM +0530 தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தே உறங்கிப் பழகியதால், காலையில் எழும்போது கை மரத்துப் போய் விடுகிறது. தலையணை வைத்துப் படுக்கும் பழக்கமில்லாமல் போனதால், அதை வைத்துப் படுத்தால், தூக்கம் வருவதில்லை. தரையில் துண்டு விரித்தோ, பாயைப் போட்டோ படுத்தால் நிம்மதியாக உறங்குகிறேன். இது நல்லதா? கெட்டதா? குஷன் மெத்தையில் படுக்க விருப்பமில்லை.
 -ஆதித்யன், செஞ்சி.
 தலையணையின்றிப் படுத்தல் நல்லதல்ல; தலையணையின் உயரம் பற்றிய "பதார்த்த குண சிந்தாமணி'யின் குறிப்பும் தங்களுக்கு உதவிடக் கூடும்: "கழுத்திற்கும் தோளிற்குங் கண்ட உயர்வாய், கழுத்து நீளத்தில் வைத்த மட்டாய் இழைத்த நறும் பஞ்சின் தலையணைக்கு'" என்கிறது. இடது அல்லது வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கும் போது தளத்திற்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும்படி, கழுத்திற்கும் தோளின் வெளிப்புறத்திற்கும் இடையே உள்ள உயரமுள்ளதாய் நீளமுள்ளதாய் அது அமைதல் நலம். விரிந்த தோளுள்ளவர்களுக்கு அதிக உயரம் தேவை. அவரவருக்குத் தக்க உயரமுள்ள தலையணையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கையை முட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், இந்த அறிவுரை இனி பயனளிக்குமா? எனத் தெரியவில்லை.
 கைகளை முழங்கைப் பகுதியில் மடக்கி தலை வைத்து படுப்பவர்களை விட, நீட்டி அதன் மீது தலை வைத்துப் படுப்பவர்களுக்கு பின் விளைவுகள் சற்று குறைவாகவே ஏற்படும். மணிக்கட்டு, முழங்கைப் பகுதி, தோள்பட்டை ஆகிய கைகளின் பகுதிகள் மர்ம ஸ்தானங்கள் எனப்படும் முக்கிய இடங்களாகும். அவற்றுக்குத் தொல்லை கொடுக்கும் விதத்தில் வைத்துக்கொண்டு செயல்பட்டால், நீங்கள் குறிப்பிடும் மரத்துப்போவதும், குடைச்சலும், செயலிழப்பதுமாகிய நிலைக்கு கைகள் பாதிக்கப்படலாம். கழுத்தின் தண்டுவடப் பகுதியிலிருந்து தோள்பட்டை வழியாக கைகளுக்குள் செல்லும் நரம்புகள், ரத்தக்குழாய்கள், தசை நார்கள், கைகளிலுள்ள எலும்புகள் போன்றவை, முட்டுக்கொடுக்கும் நிலையில், கடும் அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றன. இரவில் திருமண மண்டபத்தில், ரயில் பயணத்தில் தலையணை கிடைக்காமல் பலரும் தான் கொண்டு வந்துள்ள துணிப்பையை அது மேடுபள்ளமாக இருந்தாலும் வைத்துக்கொண்டு உறங்கிவிட்டு, மறுநாள் காலை தலையைத் திருப்ப முடியாமல் கடும் கழுத்து வலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. வலி நிவாரணக் களிம்புகளைப் பூசிக் கொள்வதும், வெந்நீரில் குளிப்பதற்காக அல்லல் படுவதையும் காணும்போது, குறைந்தது வாயினால் காற்று ஊதி மூடிவிடும் தலையணையாவது இவர்கள் கொண்டுவரக்கூடாதா? என்று தோன்றுகிறது.
 தலைக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், கழுத்துத் தண்டுவட நரம்பு அழுத்தம் குறையவும், சிறு துணியை மட்டுமே தலைக்கு முட்டுக் கொடுத்து உறங்கும் பழக்கமுள்ளவர்கள், முன் குறிப்பிட்ட பதார்த்தகுண சிந்தாமணியின் குறிப்பை அறிந்து அதன்படி செயல்படுதல் நலம். அதனால் நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட பழக்கத்தினால் ஏற்பட்டுள்ள உபாதையைச் சிறிது சிறிதாக மாற்றி, தலையின் கனத்தால் அழுந்தி விலகி பள்ளம் ஏற்படாதவாறு இலவம்பஞ்சு திணித்த மென்மையுள்ள தலையணையைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். கழுத்து நரம்புகளும் தசைகளும் இறுகாமல் தளர்த்தி உடற் களைப்பைப் போக்கிட உதவும்.
 தரையில் துண்டு அல்லது பாய் போட்டுப் படுப்பது இயற்கையானது என்றாலும் மிகவும் மென்மையான பட்டுப்பாய் எனும் கோரைப்பாயில் தூங்குவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது கோடை காலத்திற்கும் ஏற்ற விரிப்பு. இதில் நீங்கள் படுத்தெழுந்தால் பசி நன்றாக எடுக்கும். காங்கை எனும் உடற்சூடு குறையும். உடல் வறட்சி ஏற்படாது. இந்தப்பாயின் மீது துண்டு போட்டும் படுக்கலாம்.
 உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் பலருக்கும் குஷன் படுக்கையில் படுத்து உறங்குவதில் தான் ஆனந்தம் அடைகின்றனர். தற்சமயம் வரும் குஷன் மெத்தைகள் பலவும் நல்ல தரமாகவும் உடலுக்கு இதமாகவும் இருக்கின்றன. எலும்புகளில் அதிக வலியை உணருபவர்கள் தரையில் பாய் போட்டுப் படுப்பதை விட குஷன் மெத்தையில் படுப்பதே நல்லது. ஆனால் அந்த மெத்தை அதிகம் அமுங்கக் கூடாது.
 குஷன் படுக்கையில் படுக்கும் பழக்கமுள்ள பலரும் தலையணையை தவிர்த்து, தலையை நேரிடையாகவே மெத்தையில் வைத்துப் படுக்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்கள் குளிரூட்டப்பட்ட ஏஸி அறையில் இவ்வாறு படுத்து உறங்கினால், கழுத்துத் தண்டுவட வில்லைகளில் அழுத்தம் ஏற்பட்டு, எழும் போது தலைச்சுற்றலை உணர்வது தற்சமயம் அதிகரித்துள்ளது.
 பழக்கத்தை அவ்வளவு எளிதாக மாற்ற முடியவில்லையே என்று வருந்துபவர்களுக்கு, நல்லதின் மீது ஏற்படும் பற்று காரணமாக, சிறிது சிறிதாக முயற்சி செய்து, கெடுதலைத் தரும் பழக்கத்திலிருந்து விடுபட்டு நன்மை தரும் பழக்கத்திற்கு மாறுவதால், உடல் பாதுகாப்பு காப்பாற்றப்படுகிறது.
 (தொடரும்)
 
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/Neck-Pain.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-கை-தலையணை-அல்ல-3202093.html
3202095 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி Sunday, July 28, 2019 10:31 AM +0530 கண்டது
• (திண்டுக்கல்லில் ஒரு தேநீர்க்கடையின் பெயர்)
நாட்டு மாட்டுப்பால் டீக்கடை
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

• (வந்தவாசியில் முடித்திருத்தகம் ஒன்றில் )
சிகையை அழகு செய்வது எங்கள் வேலை...
மனதை அழகாக்கிக் 
கொள்வது உங்கள் வேலை
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

• (நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில் ஒரு மினி லாரியில் கண்ட வாசகம்)
இமயத்தில் இருந்தாலும் 
சமயத்தில் வருவேன்
ந.இரகுநாதன், நீடாமங்கலம்.

யோசிக்கிறாங்கப்பா!
மனிதன் தனக்கு கிடைக்கவில்லையே
என்று பேராசைப் படாத ஒன்று - மரணம்!
கு.அருணாசலம், தென்காசி.

கேட்டது
• (ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் இருவர்)
"டீ வாங்கிக் குடிச்சீங்களே... நல்லா இருந்ததா?''
"இதே ஜோலார்பேட்டை தண்ணீர், சென்னையிலே இலவசமா கிடைக்குது. புத்திகெட்டுப் போய் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிச்சுட்டேன்''
சம்பத்குமாரி, திருச்சி.

• (விருதுநகர் குமாரசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் அப்பாவும் மகனும்)
"இந்த கல்யாண ஆல்பத்துல யாருப்பா இது உங்க பக்கத்துல அழகா க்யூட்டா நிக்குறாங்க?''
"அதுதான் உங்க அம்மா டா...''
"அப்படின்னா இப்ப நம்ம வீட்ல குண்டா இருக்குறது யாருப்பா?''
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்.

எஸ்எம்எஸ்
பணத்தினால் ஏமாந்தவர்களை விட...
பாசத்தினால் ஏமாந்தவர்களே அதிகம்.
எம்.ஆர்.முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.

அப்படீங்களா!
வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால், ஒருவர் வீட்டுக்கு வந்து அந்த பொருள்களைத் தருவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இப்போது அந்த "ஒருவருக்கு'ப் பதிலாக "ரோபோ'கள் வேலை செய்கின்றன. 
சீனாவில் பீஜிங், டியான்ஜின், ஷாங்காய் உள்ளிட்ட பத்து நகரங்களில் களமிறங்கியுள்ள இந்த ரோபோகள், ஆர்டர் செய்யப்பட்ட பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றன. 
பொருள்களை ஆர்டர் செய்தவர்களின் இடத்துக்கு அருகில் ரோபோ வந்தவுடன் அவர்களுடைய மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் ஒரு பாஸ்வேர்ட் இருக்கும். அதைப் பயன்படுத்தி டெலிவரி ரோபோவிடம் இருந்து பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். இதே போன்று ஆளில்லா கடைகளையும் ஒரு நிறுவனம் சீனாவில் நடத்துகிறது. செல்பேசியுடன் கடைக்குள் நுழையும் ஒருவர் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு, ஆன் லைன் மூலம் பணத்தைச் செலுத்திக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கண்காணிக்கும் சென்சார்கள் கடை முழுக்கப் பொருத்தப்பட்டுள்ளன. 
என்.ஜே., சென்னை-58.


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/KETTA.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/பேல்பூரி-3202095.html
3202094 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... சிரி... சிரி...  Sunday, July 28, 2019 10:31 AM +0530 • "வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி 
அதிகமாகிக்கிட்டே வருது''
"எப்படிடா சொல்றே?''
"திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு, அதை எழுதியவர் யாருன்னு கேட்குறாங்களே''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை .

• "ஒரு லிட்டர் பால்
அம்பது ரூபாய்தானே?
நீ எதுக்கு 100 ரூபாய் கேட்கிறாய்?''
"இதுல கொஞ்சம் அதிகமா தண்ணி
கலந்திருக்கும்மா''

• அந்தபுரத்துக்குள் நுழைந்த எதிரிகள் 
ஏன் தலைதெறிக்க ஓடுகிறார்கள்?''
"மகாராணியை மேக் அப் இல்லாமல் 
பார்த்துவிட்டார்கள் போலிருக்கு''

• பொண்ணு கிளிமாதிரி இருப்பா...
பரவாயில்லையா?''
"பரவாயில்லை... மாப்பிள்ளை
பழக்கடைதான் வைச்சிருக்கிறார்''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

• அநியாயமாயிருக்கு... டார்ச் லைட்டோட போயிட்டிருந்த என்னை போலீஸ்காரர் 
மிரட்டி நூறு ரூபாய் வாங்கிட்டாரு ''
"எதுக்கு?''
"லைட்ல சைக்கிள் இல்லையாம்''
சி.ரகுபதி, போளூர்.

• கட்டின புடவையோட 
வீட்டை விட்டு ஓடிப் போகலாம்னு 
காதலர் சொன்னப்ப மறுத்திட்டேன்''
"ஏன்?''
"எனக்குத்தான் புடவை கட்டத் தெரியாதே''
ஆர்.சி.முத்துக்கண்ணு, ராயப்பட்டி.

• ஏங்க ஆடித் தள்ளுபடியில
ஜவுளி வாங்கப் போகலாமா?''
"இரு... இரு... மூணு வேளைக்கும்
சாப்பாடு கட்டி எடுத்துட்டு வர்றேன்''
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

• சொந்த வீட்டுக்கும் வாடகை வீட்டுக்கும் என்ன வித்தியாசம்?''
"கூரையிலே ஒட்டடையைப் பார்த்ததும் அதை உடனே நாம் தட்டினா, அது சொந்த
வீடு. அந்த ஒட்டடை நம் தலைமேலே விழுந்து அதைக் கீழே தள்ள நம்ம தலையை நாம் தட்டினா அது வாடகை வீடு''
வி.ரேவதி, தஞ்சை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/joke.JPG https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/சிரி-சிரி-சிரி-சிரி-3202094.html
3202090 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் DIN DIN Sunday, July 28, 2019 10:18 AM +0530 • திரைப்படங்களில் சிகரெட் புகைக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள்' என்று பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன்னணி ஹீரோக்கள் சிலர் தங்கள் படங்களில் புகைப்பிடிப்பதைத் தவிர்த்தனர். ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை. கதாபாத்திரத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களும் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்கின்றனர். "அக்னி நட்சத்திரம்' பட அமலா தொடங்கி "ஆடை' அமலாபால் வரை பல நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர். இந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத். நாகார்ஜுனா நடித்துள்ள "மன்மதடு 2' தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல். இதன் டீஸர் வெளியானது. அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதைக்கண்டதும் நெட்டிஸன்கள் ரகுலை திட்டி தீர்த்திருக்கின்றனர். இதற்கு ரகுல் பதில் அளித்திருக்கிறார்."இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை. அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கதைப்படி கதாபாத்திரத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ அதைச் செய்வேன்' என கேள்வி கேட்டவர்களை போட்டு தாக்கியிருக்கிறார் ரகுல். 

• நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியின் காதல் அம்பலத்துக்கு வந்து வருடங்கள் உருண்டோடிய நிலையில் திருமணம் எப்போது என்பதை இருவருமே உறுதி செய்யவில்லை. மகனுக்கு வயதாகிக் கொண்டே போகிறது கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் பெற்றோர் ஒரு பக்கம் முணுமுணுக்க, நயன்தாராவுக்கோ பட வாய்ப்பு குறைந்தபாடில்லை. கோடிகளில் சம்பளம் கொட்டுவதுடன் அவர் நடிக்கும் படங்களும் ஹிட்டாகிறது என்பதால் நடிப்பைக் கைவிட முடியாமல் இருக்கிறார். இந்தநிலையில் ரஜினியுடன் "தர்பார்', விஜய்யுடன் "பிகில்', சிரஞ்சீவியுடன் "செ ரா நரசிம்மரெட்டி' என 3 படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிய இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும். இந்தநிலையில் மேலும் பல இயக்குநர்கள் கால்ஷீட் கேட்டு வரிசைக் கட்டி நிற்கின்றனர். எப்படியும் இந்த ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொள்வது என்று நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்தால் போதுமா, இந்த ஆண்டில் திருமணம் முடியுமா? என்பதை கண்டறிய நயன்தாரா ஜாதகத்தை ஜோதிடரிடம் தர அவர் கிரகங்களின் பலன்களை கணித்து, நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று கூறியிருக்கிறாராம். ஜோதிட கணிப்பு இப்படி இருக்க, நயன்தாரா என்ன கணித்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

• அமலாபால் முன்னாள் கணவரும், இயக்குநருமான விஜய், 2 - ஆவது திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தானும் 2 - ஆவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார், அமலாபால். மேலும் கூறும் போது... "எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் பல வெற்றி, தோல்விகளைக் கடந்து வந்துள்ளேன். திருமண முறிவுக்குப் பிறகு நான் தனித்து விடப்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து என்னை மீட்டெடுத்து பக்குவப்படுத்தியது நான் சென்ற இமயமலைப் பயணம்தான். இப்போது எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் மனநிலைக்கு வந்திருக்கிறேன். எல்லா பிரச்னைகளையும் சந்திக்கும் துணிச்சல் வந்துள்ளது. என் சுதந்திரத்தையும், துணிச்சலையும் காட்டத்தான் ஆண்களைப் போல் கிராப் வைத்துக் கொண்டிருக்கிறேன். "ஆடை' படத்தில் நிர்வாணமாக நடித்ததும் அப்படித்தான். ரம்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தது கூட, ஏன் கொடுக்கக்கூடாது என்ற கேள்வியில் பிறந்ததுதான். "மைனா' படத்துக்குப் பிறகு என் மனதுக்கு நிறைவாக எந்தப் படமும் அமையவில்லை. "ஆடை' படம் மட்டுமே அமைந்துள்ளது. எனக்கு மறுமணத்தில் நம்பிக்கை இருக்கிறது. கட்டாயம் 2 -ஆவது திருமணம் செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன். மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்'' என்றார். 

• நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் "அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, துரை செந்தில்குமார் இயக்கிவரும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும், ராம்குமார் இயக்க இருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் "பேட்ட' படத்தில் இணைந்ததால் இந்த படத்தின் பேச்சு வார்த்தை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாகப் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா விஜயலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. மேலும் விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

• விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் கமலுடன் "இந்தியன் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். சில நாள் படப்பிடிப்பு நடந்தநிலையில் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநருக்கும், பட நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தொடராமல் இருக்கிறது. அப்படத்தின் படப்பிடிப்புக்காக காஜலும் ஆவலாக காத்திருக்கிறார். ஏற்கெனவே "பாரிஸ் பாரிஸ்' படத்தில் காஜல் நடித்திருந்தாலும் அப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த "சிடா' தெலுங்கு படம் எதிர்பார்த்த வெற்றி ஈட்டாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் வெற்றியோ, தோல்வியோ என்னுடைய சேட்டை குறையாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் காஜல். நீச்சல் தொட்டியில் தண்ணீரைக் குறைவாக நிரப்பி அதில் இறங்கி தண்ணீரை தட்டிவிட்டு ஸ்டைலாக நடப்பதுபோல் ஒரு படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு இது எப்படி இருக்கு? என்று உற்சாக துள்ளலுடன் கேட்டு சேட்டை செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.
- ஜி.அசோக்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/nayan.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/திரைக்-கதிர்-3202090.html
3202089 வார இதழ்கள் தினமணி கதிர் அப்பாவைத் தேடி சோ.சுப்புராஜ் DIN Sunday, July 28, 2019 10:15 AM +0530 தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
"இந்தியாவிலிருந்து வேலைக்காக மலேசியாவுக்கு வந்துருக்குறோம். யாருக்காவது ஏதாவது இலட்சியம் மாதிரி ஏதும் இருக்கிறதா''?" சீட்டாட்டத்தின் ஊடே இராமகிருஷ்ணன் தான் ஆரம்பித்தார்.
"என்னா பெரிய இலட்சியம். பணம் சம்பாதிக்கிறது தான் இலட்சியம்'' என்றான் சுப்ரமணி சிரித்துக் கொண்டே.
"சரித்தான். பணம் சம்பாரிச்சுட்டு என்னா செய்யப் போறீங்க?''" என்றார் இராமகிருஷ்ணன் விடாமல். 
"முதல்ல உங்களுக்கு இலட்சியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்'' " என்றான் நிர்மல்.
"எனக்கு ஊர் சுத்தனும். ஒவ்வொரு நாடாப் போய்ப் பார்க்கனும். இங்கருந்து ஒவ்வொரு வருஷமும் லீவுக்கு ஊருக்குப் போறப்ப, ஏதாவது புதிய நாட்டுக்குப் போயிட்டு வரலாம்னு நெனைச்சிருக்கேன். அதுக்கான செலவுகளுக்குத் தான் இங்க சம்பாதிக்க வந்திருக்கேன்'' " என்றார் இராம
கிருஷ்ணன். 
"எனக்கு இலட்சியம் புடலங்காய்ன்னு எல்லாம் எதுவுமில்ல; இந்தியாவுக்குத் திரும்பிப் போகவே நான் விரும்பல. மலேசியாவுலயே பி.ஆர். ஸ்டேட்டஸ் வாங்கி நிரந்தரமாத் தங்கிடணும். ஒரு ஏழெட்டு வருஷம் இங்கயே வேலை பார்த்துட்டா அது சாத்தியம்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லியிருக்காங்க...''" என்றார் அனந்து.
ஹிந்தியில் மிகப் பிரபலமாயிருக்கும் நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி, "நான் சம்பாரிச்சுக் கொண்டு போற காசையெல்லாம் அவளோட காலடியில் கொட்டியாச்சும் அவரோட நட்பு வைச்சுக்கணும். அதுதான் என்னோட வாழ்க்கை இலட்சியம்'' " என்றார் முருகவேள். எல்லோரும் சிரித்தார்கள்.
அழகர்சாமியும் சிரித்துக் கொண்டே, "எனக்கு தி.ஜானகிராமன் எழுதுன "தவம்ங்கிற' சிறுகதை ஒன்னு தான் ஞாபகத்திற்கு வருது'' என்றான். 
"அதென்ன கதை சொல்லுங்க பாஸ்; எல்லோரும் கேட்குறோம்'' " என்றான் சுப்ரமணி ஆர்வமாக. 
"நூத்தம்பது வேலி நெலத்துக்குத் சொந்தக்கார மிராசுதாரர் ஒருத்தர்ட்ட எடுபிடி வேலைகள் செஞ்சுக்கிட்டுருக்கார் ஒருத்தர். மிராசுதாரர் ஒருசமயம் தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு தாசி வீட்டுக்குப் போறப்ப வேலைக்காரரையும் கூட்டிக்கிட்டுப் போறார். 
தாசியோட பேரு சொர்ணாம்பாள். அம்பாளவிட அவள் அவருக்கு அழகாத் தெரியிறா. தீ மாதிரி சுடர்விடுகிற அழகுன்னு விவரிக்கிறார் தி.ஜா. அவளப் பார்த்ததுமே வேலைக்காரருக்கும் ஒருநாள் ஒரு பொழுதாச்சும் அவள்கூட இருக்கணும்னு ஆசை வந்துடுது.
அடுத்தநாள் தாசியோட வீட்டு வேலைக்காரி மூலமா சொர்ணாம்பாள் கூட ஒருநாள் இருக்கிறதுக்கு அறுநூறு எழுநூறு ரூபாய் ஆகும்னு தெரிஞ்சுக்கிறார். அப்ப அவரோட மாசச் சம்பளமே ஏழு ரூபாய் தான். வீட்டுக்குப் போனதுமே மனைவியோட நகைகள எல்லாம் வித்து, அதுல வர்ற பணத்தவச்சு சிங்கப்பூருக்கு வேலைக்குப் போறார். 
மனைவி மக்களப்பத்தி ஒருபோதும் நெனைக்காம, எப்போதுமே சொர்ணாம்பாள் பத்தியே நெனைச்சிக்கிட்டு கடுமையா உழைக்கிறார். யுத்தம் வந்து பலரும் பயந்து போய் அவங்க அவங்க நாட்டுக்குத் திரும்பிப் போன பின்னாடியும் அவர் ஒரே வெறியோட அங்கேயே தங்கி வேலை செய்றார். 
சாப்பிட்டும் சாப்பிடாமலும் சிக்கனமாகவே இருக்கிறார். பத்து வருஷம் போல அங்க இருந்து சம்பாதிச்சதையெல்லாம் எடுத்துக்கிட்டு கப்பல்ல ஊருக்குப் போனவர், அன்னைக்கு சாயந்திரமே சொர்ணாம்பாளைத் தேடித் தஞ்சாவூருக்குப் போறார். அவளப் பார்த்தா அடையாளமே தெரியாம வற்றி உலர்ந்து போய் சருகாட்டாம் இருக்கிறாள். ஆற்றாமையுடன் பணத்தை அவளின் காலடியில் கொட்டி அவரின் கதையைச் சொல்கிறார்.
"இதுக்காக யாராவது தவம் கிடப்பாங்களா?' என்று கடிந்து கொண்ட சொர்ணாம்பாள், அவரை ஆரத் தழுவி ஒரேஒரு முத்தம் கொடுக்கிறாள். பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த முத்தம் கிடைத்திருந்தால் வேலைக்காரர் சந்தோஷப் பட்டிருப்பார். அவருக்கு இப்பொழுது அது சாதாரணமாய்த் தெரிகிறது. ஆனால் சொர்ணாம்பாள் இப்போது தான் தனக்கு மனசு நெறைஞ்சு இளமையா, ரொம்பவே அழகாயிட்ட மாதிரி உணர்றதாச் சொல்லி அவரோட பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துடுறாள். 
இரவு தங்கிவிட்டு காலை ஆறரை மணிக்கு முதல் இரயில்ல அவரைக் கிளம்பிப் போகச் சொல்கிறாள். ஆனால் அவர் இராத்திரியே ஏதோ மெயில் இருப்பதாகச் சொல்லிக் கிளம்பி விடுகிறார்'' அழகர்சாமி கதை சொல்லி முடித்ததும் சபையே உறைந்து போய் உட்கார்ந்திருந்தது.
"நீங்க சொல்ற நடிகை மேக்கப்பக் கலைச்சிட்டா இப்பவே பாதிக் கிழவி தான் பாஸ். நீங்க சம்பாதிச்சுட்டு ஊருக்குப் போறப்ப, இன்னும் கண்றாவியா பார்க்கவே சகிக்க முடியாம ஆனாலும் ஆயிடுவாங்க. அதனால முதல் வருஷம் முடிஞ்சதும் கம்பெனியில ஒருமாசம் சம்பளத்தோட லீவு தருவாங்க. அப்பவே போயிட்டு வந்துடுங்க''" என்று நிர்மல் சீண்டவும் முருகவேள் வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார்.
"அழகர்சாமி, உங்களுக்கு இலட்சியம், ஆசைன்னு எதுவுமில்லையா'' " என்றார் இராமகிருஷ்ணன். அவன் சொல்வதா வேண்டாமா என்று ஒரு நிமிஷம் தயங்கினான். அப்புறம், "நான் மலேசியாவுக்கு வேலை பார்த்து சம்பாதிச்சுட்டுப் போக வரல. எங்க அப்பாவத் தேடித்தான் வந்துருக்கேன்'' என்றான். 
எல்லோரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
அழகர்சாமி அவனுடைய அப்பாவை நேரில் பார்த்தது கூட இல்லை. அவனுடைய வீட்டில் அப்பாவின் புகைப்படம் என்று ஒன்றே ஒன்று தான் இருந்தது. அது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமான புதிதில் அவர்கள் எடுத்துக் கொண்டது. 
சுமார் இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள அழகன்குளம் என்கிற கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மழை தண்ணி இல்லாமல் விவசாய நிலங்கள் எல்லாம் பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தன. 
தன்னுடைய கர்ப்பிணி மனைவி கஞ்சி தண்ணி குடிக்காமல் சுருண்டு கிடப்பதைக் கண் கொண்டு பார்க்க சகிக்க முடியாமல் சாவடியில் போய் உட்கார்ந்து கொண்டார் முத்தையா. 
அங்கிருந்த கந்தசாமிதான் சொன்னான். "இன்னும் ஒரு வாரத்துல நம்ம ஊர்லருந்து ஏழெட்டுப்பேர் இராமேஸ்வரம் போயி அங்கருந்து கப்பல்ல பினாங்குக்குப் போகப் போறோம். பினாங்கு போயிட்டா, அங்கருந்து மலேயா போயிடலாமாம். அங்க தோட்டங்கள்ல வேலை செய்ய நெறையா ஆளுகள் தேவைப்படுதாம். நீயும் வர்றியா?''" என்றான்.
முத்தையா சந்தோஷமானான். ஆனாலும் "என்கிட்ட ஒத்தப் பைசா கூட இல்லையேப்பா. நான் எப்படி வர்றது? கப்பல் சார்ஜுக்கெல்லாம் காசு வேண்டாமா?''" என்றான்.
"நம்மள ஒரு ஏஜெண்டு சரக்குக் கப்பல்லதான் கூட்டிக்கிட்டுப் போகப் போறார். கப்பல்ல அவங்க சொல்ற ஒன்னு ரெண்டு வேலைகளச் செஞ்சாப் போதும். திருட்டுத்தனமாத் தான் அந்த நாட்டுக்குள்ள போகனும். எப்படியாச்சும் உள்ள போயிட்டமின்னா அப்புறம் சனங்களோட சனமாக் கலந்துடலாம். 
ஏற்கெனவே அங்க நெறையாத் தமிழ்க்காரங்க இருக்காங்களாம். அதனால நம்மல யாரும் கண்டுபிடிக்க முடியாது. செம்பனை, ரப்பர், தேயிலைன்னு விளையுற நிறைய தோட்டங்கள் அங்க இருக்காம். வேலைக்குப் பஞ்சமே இருக்காதுன்றாங்க. வயிறாரச் சாப்பிட்டுக்கலாம். அதுல மிச்சம் புடிச்சு ஒன்னு ரெண்ட பொண்டாட்டி புள்ளைகளுக்கும் அனுப்பி வைக்கலாம். என்ன சொல்ற?''" என்று ஆசை காட்டினான் கந்தசாமி.
முத்தையா உடனேயே இதைப்பற்றி மனைவியிடம் சொன்னதும் அவள் மலர்ந்து போனாள். "என்னைப்பத்தியெல்லாம் நீ கவலைப் படாதைய்யா. நான் எங்க ஆத்தா வீட்ல போயி இருந்துக்குவேன். தைர்யமாப் போயிட்டு வாய்யா'' " என்று சொன்ன காமாட்சி, அவளின் மூக்கிலும் காதிலும் அணிந்திருந்த மூக்குத்தியையும் தோடுகளையும் கழற்றிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். 
அப்படி ஊரைவிட்டுப் போன முத்தையாவிடமிருந்து முதல் ஏழெட்டு வருடங்களுக்கு அவ்வப்போது கடிதங்களும் கொஞ்சம் பணமும் வந்து கொண்டிருந்தன. ஆனால் அதற்கப்புறம் அவரிடமிருந்து கடிதமும் வரவில்லை. பணமும் வரவில்லை. அவருக்கு என்னாயிற்றோ என்பது பற்றியும் ஒரு தகவலும் இல்லை.
அடுத்த சில வருஷங்களில் முத்தையாவை அழைத்துக் கொண்டு போன கந்தசாமியும் அவனுடைய கூட்டளிகளும் நிறைய சம்பாத்தியங்களுடன் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். ஆனால் முத்தையாவும் இன்னும் சிலரும் அவர்களுடன் திரும்பி வரவில்லை. 
கந்தசாமி முத்தையா பற்றி சொன்ன தகவலைக் கேட்ட காமாட்சிக்கு ஈரக்குலை நடுங்கியது. "எங்கள எல்லாம் ரெண்டு மூணு பேராப் பிரிச்சு வெவ்வேறு ஊர்களுக்கு தோட்ட வேலைக்கு அனுப்புனாங்க. நானும் உன் புருசனும் சுங்கப் பட்டாணிங்குற எடத்துல ரப்பர் தோட்டத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். வேலை கொஞ்சம் கஷ்டம் தான். உன் புருஷனுக்கு உடம்பு வளையல. 
மூணு வருஷம் போல எங்க கூட இருந்தவன் அங்கருந்து எப்படியோ தப்பிச்சுப் பினாங்குக்குப் போயிட்டான். அங்க எவளையோ சேர்த்துக்கிட்டு குடித்தனமும் பண்றான்னு செவிவழியாச் சேதி வந்துச்சு. அதனால உன் புருஷன் இனி ஊருக்கெல்லாம் திரும்பி வர மாட்டான். நீ உன் வழியப் பார்த்து வாழ்ந்துக்கோ''."
கந்தசாமி சொன்னதைக் கேட்டதும் காமாட்சிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போலாகி, மயங்கி விழுந்து விட்டாள். அவளால் முத்தையா செய்ததைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனி புருஷன் திரும்பி வரப் போவதில்லை என்கிற நிதர்சனம் உறைக்கவும் - அவளுடைய ஆத்தாளும் முந்தின வருஷந்தான் இறந்து போயிருந்தாள் - அழகர்சாமியையும் கையில் பிடித்துக் கொண்டு ஊரிலிருந்து வெளியேறி விட்டாள்.
இராமநாதபுரத்திற்கு வந்தவள் பஸ்úஸறி மதுரைக்குப் போனாள். மதுரையில் ஒரு அரவை மில்லில் கூட்டிப் பெருக்குகிற வேலை கிடைத்தது. அங்கேயே தங்கிக் கொண்டாள். வீடு மற்றும் கடைகளுக்கு முறைவாசல் செய்தாள். சில வீடுகளில் வீட்டு வேலைகளும் செய்தாள். அரவைமில் முதலாளி தான் அழகர்சாமியைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க 
வைத்தார்.
அழகர்சாமிக்கு மலேசியாவில் வேலை கிடைத்ததுமே கொஞ்சமும் யோசிக்காமல் உடனேயே ஒத்துக் கொண்டான். அங்கு போய் எப்படியாவது அப்பனைத் தேடிக் கண்டுபிடித்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, நீ செய்தது நியாயமாடா என்று கேட்டு முகத்தில் காறித் துப்ப வேண்டும். 
அழகர்சாமி மலேசியாவிற்குக் கிளம்பும் போது, முத்தையா அவனுடைய மனைவிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தையும், அவர்களின் கல்யாண போட்டோவையும் மறக்காமல் எடுத்துக் கொண்டான்.
***** ***** *****
நாட்கள் மிகமிக வேகமாகத் தான் ஓடுகின்றன. அழகர்சாமி கோலாலம்பூருக்கு வந்து ஆறு மாதங்கள் முடியப் போகிறது. காலையில் வேலைக்குப் போனால் வேலை முடிந்து வீட்டிற்கு வர இரவாகி விடுகிறது. அப்புறம் சமையல்; சாப்பாடு; தூக்கம் என்று வாழ்க்கையும் அவசர கதியில் தான் இயங்குகிறது. 
சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அழகர்சாமி சுப்ரமணியையும் அழைத்துக் கொண்டு பினாங்கிற்குப் போய் வந்தான். ஆனால் அப்பாவைப் பற்றி எந்தத் தகவலும் அங்கு கிடைக்கவில்லை. அப்பாவின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியில் பெரிய ரெஸ்ட்டாரெண்ட் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் யாருக்கும் அழகர்சாமியின் அப்பா பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அப்பாவைத் தேடிக் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்கிற நிதர்சனம் உறைக்க ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்கள். 
அப்பாவைத் தேடிக் கண்டுபிடிப்பது வரைக்குமாவது மலேசியாவில் தங்கியிருக்க முடியுமா என்பது அழகர்சாமிக்கு சந்தேகமாக இருந்தது. மலேசியாவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கத் தொடங்கி இருக்கிறது. அவன் வேலை பார்க்கும் சைட்டிலும் தினம் தினம் பிரச்னைகள் தான். 
காண்ட்ராக்டரிடம் வேலையில் வேகம் இருந்த அளவிற்கு சுத்தமாய்த் தரம் இல்லை. அதுபற்றி ஒருமுறை மீட்டிங்கில் அழகர்சாமி டெவலப்பரிடம் முறையிட்டபோது காண்ட்ராக்டரின் புராஜெக்ட் மேனேஜருக்கும் அவனுக்கும் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது.
"உங்களின் இந்தியா மாதிரி ஆமை வேகத்தில் கட்டிடம் கட்ட முடியாது; இங்கு வீணாகும் ஒவ்வொரு விநாடியும் காசு என்பதையும் புரிந்து பேசுங்கள்''" என்று எகிறினார். டெவலப்பரின் பிரதிநிதி லோலாமும் அவருக்கு சாதகமாகவே பேசினார்.
"உங்களின் மலேசியன் கல்ச்சர் என்பது இடிந்து விழுகிற கட்டிடத்தை வேகவேகமாகக் கட்டி முடிப்பதா லீ''" என்று அழகர்சாமியும் சத்தம் போட மீட்டிங் களேபரமானது. 
டெவலப்பரின் தலைமை அதிகாரி ஆல்பர்ட் முடிவாய்ப் பேசத் தொடங்கினார். "
"சரி மிஸ்டர் அழகர்சாமி, வேலையில் நீங்கள் கண்ட குறைபாடுகளை எல்லாம் தொகுத்து அதற்கான அத்தாட்சிகளுடன் எங்களுக்குச் சமர்ப்பியுங்கள். நாங்கள் பரிசீலித்து ஒரு முடிவிற்கு வருகிறோம்''" என்றார். 
பைல்கள் ஃபெயிலான புள்ளி விவரங்கள், கான்கிரீட்டில் காண்ட்ராக்ட்ர் பண்ணிய தில்லுமுல்லுகள், கான்கிரீட் பரிசோதனையில் ஃபெயிலான விவரங்கள், கான்கிரீட் கலந்து குறிப்பிட்ட நேரம் கடந்து தாமதமாகப் போட முயன்று அவற்றைப் போராடித் திருப்பி அனுப்பிய தருணங்கள், சேறையும் சகதியையும் முழுசாய் அப்புறப்படுத்தாமலேயே அவர்கள் கான்கிரீட் போட முயற்சித்த தருணங்களின் புகைப்படங்கள்... 
என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தேதி வாரியாக நேர்த்தியாக வரிசைப்படுத்தி ரிப்போர்ட் தயாரித்து அனுப்பி வைத்தான் அழகர்சாமி. ரிப்போர்ட்டை டெவலப்பர் ஏற்காதபட்சத்தில் அழகர்சாமி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவான்; ஏற்றுக் கொண்டால் காண்ட்ராக்ட் கேன்சல் ஆகும். ஆனால் ரிப்போர்ட் அனுப்பி பத்து நாட்களுக்கு மேலாகியும் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. 
அன்றைக்கு சனிக்கிழமை. சைட் மீட்டிங்கில் காண்ட்ராக்டரின் இன்ஜினியர்களுடன் அழகர்சாமி காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தபோது, டெவலப்பரின் அலுவலகத்திலிருந்து ஒருவன் வந்து கடிதம் ஒன்றை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டுப் போனான். 
ரெசினெண்ட் இன்ஜினியர் அழகர்சாமி கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தற்போதைய காண்ட்ராக்டருடனான வேலை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், புதிதான எந்த வேலை
களையும் அவர்கள் தொடங்கக் கூடாது எனவும் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருக்கிற குறைகளை எல்லாம் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்துவிட்டு வெளியேறி விடும்படியும் அதன் பின்பு புதிய ஒப்பந்தக்காரர் வேலைகளைத் தொடங்குவார் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. 
வேலைத்தளத்தில் இலேசான பரபரப்பு நிலவியது. வேலை ஆட்கள் எல்லோரும் அங்கங்கே குழுக்குழுவாகக் கூடி கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழகர்சாமியை சுட்டிக்காட்டி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு கர்வமாகவும் இலேசாய்ப் பயமாகவும் இருந்தது. 
காண்ட்ராக்டரின் மேனேஜர் லீ தாமதமாய்த் தான் சைட்டிற்கு வந்தான். வந்ததும் அழகர்சாமியிடம் சோர்ந்து போய்க் கை கொடுத்தான். "எனக்கு உன்மேல் எந்தக் கோபமும் இல்லை. நான் எங்கள் அலுவலகத்தில் சொன்னபடி செய்தேன். நீயும் என்னைக் கோபித்துக் கொள்ளாதே'' என்றான். அப்புறம் இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாம் என்று அழகர்சாமிக்கு அழைப்பு விடுத்தான். 
அழகர்சாமி மறுக்கவே, "சரி, ஹோட்டலுக்கு வராவிட்டால் பரவாயில்லை. அநேகமாக கேண்டீனை இன்றோடு மூடி விடுவோம். கடைசியாக எங்களோடு அங்கு வந்தாவது ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போ''" என்று அழைத்தான். லோலாமும் வற்புறுத்தினான்.
அழகர்சாமி எப்போதும் மைலோ தான் குடிப்பான் என்பதால் இவனைப் பார்த்ததுமே கேண்டீனில் இருந்தவன் மைலோ கலக்கத் தொடங்கி விட்டான். "இன்றைக்கு எங்களுடைய சீனத்து ஸ்பெஷல் கேக் ஒன்றை உனக்காக வாங்கி வந்திருக்கிறேன். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்''" என்ற லீ எழுந்து கேண்டீனிற்கு உள்ளே போய் ஒரு பிளேட்டில் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கேக் ஒன்றைக் கொண்டு வந்தான்.
"உனக்கு...?''" என்றான் அழகர்சாமி. "சொல்லி இருக்கிறேன். கொண்டு வருவார்கள். முதலில் நீ சாப்பிடு''" என்றான் லீ. அழகர்சாமி கேக்கை எடுத்துக் கடிக்கப் போகும் போது கேண்டீனின் பின்புறமிருந்து தலை தெறிக்கிற வேகத்தில் ஓடிவந்த ஒருத்தர் அவனுடைய கையிலிருந்த கேக்கையும் பெஞ்சின் மேலிருந்த மைலோ பானத்தையும் மூர்க்கமாகத் தட்டி விட்டார். அப்புறம் வழக்கம் போல் தரையை உதைத்து தமிழ்க் கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கினார்.
இவரை அழகர்சாமி வேலைத்தளத்திற்கு வந்த முதல் நாளிலேயே சந்தித்திருந்தான். அன்றைக்கும் இதைப்போலவே தமிழில் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் உச்சரித்துக் கொண்டு, இந்த மனிதர் ஓடிவந்து கேண்டீனுக்கு முன்நின்று கொண்டு கத்தத் தொடங்கினார். அவருக்கு நாற்பத்தைந்து அல்லது ஒன்றிரண்டு வயது கூடவோ குறைவாகவோ இருக்கலாம். 
மேல்ச்சட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை. அணிந்திருந்த அழுக்கு பேண்ட்டிலும் நிறைய கிழிசல்கள். தொண்டை நரம்புகள் புடைக்க கைகளையும் கால்களையும் ஆட்டி ஆட்டி குதித்துக் கொண்டிருந்தார். யாரிடம் என்றில்லாமல் மாயமான எதிரி ஒருத்தனைக் கற்பித்துக் கொண்டு காற்றுவெளியில் வார்த்தைகளை இரைத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் சிரித்தார்கள். 
அநேகமாக அவர் பேசிய தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தம் அங்கிருந்தவர்கள் யாருக்கும் விளங்கியிருக்காது. அதனால் தான் அத்தனை ஆபாச வார்த்தைகளைக் கேட்டும் அவர்களால் சிரிக்க முடிந்தது என்று அழகர்சாமிக்குத் தோன்றியது. 
"அவன் ஒரு பைத்தியம்''’ என்று லோலாம் அறிமுகப் படுத்துவதற்கு முன்பே அது அழகர்சாமிக்குப் புரிந்து விட்டது. வேலை ஆட்கள் சிலர் அவர்கள் சாப்பிட்டது போக மிச்சமிருக்கிற பண்டங்களைத் தர அவற்றை வாங்கிக் கொண்டு ஓரமாய்ப்போய் உட்கார்ந்து சாப்பிட்டார். அழகர்சாமியும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலானான்.
இவர் ஏன் இன்றைக்கு இப்படி நடந்து கொள்கிறார் என்று அழகர்சாமி யோசித்துக் கொண்டிருக்கும் போதே கேண்டீனில் இருந்த சிலர் அவரை கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். அழகர்சாமி அவர்களைத் தடுக்கவே விட்டு விட்டார்கள்.
கேண்டீனிலிருந்தவர் மறுபடியும் ஒரு மைலோ கலந்து கொண்டு வந்து கொடுக்க, அவரிடம் உள்ளே போய் வேறொரு கேக் கொண்டு வரும்படி சொன்னான் லீ. ஆனால் இந்த முறையும் அழகர்சாமியை எதையும் சாப்பிடவிடாமல் பைத்தியகாரத் தமிழர் தட்டிவிட்டு அழிச்சாட்டியம் பண்ணினார்.
வேலைக்காரர்கள் வெளியேற்றுவதற்காக அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது, "தயவு பண்ணி அவங்க எது குடுத்தாலும் சாப்பிடாதீங்க தம்பி. அதுல விஷம் கலந்துருக்கு''" என்று கத்திக் கொண்டு போனார். அழகர்சாமிக்கு சிலீரென்று இருந்தது.
"அவர் பேசுறது உன்னோட மொழியா. என்ன சொல்லிக் கத்தீட்டுப் போறார்?''" என்றான் லீ. "
"எதுவும் தெளிவா இல்ல. பல மொழிகளக் கலந்து கட்டிப் பேசுறார். என்ன சொல்றாருன்னு எனக்கும் புரியல''" என்றான் அழகர்சாமி இயல்பில்லாத ஒரு சிரிப்புடன்.
"பைத்தியங்களே இப்படித்தான். அவங்களுக்குன்னு தனி உலகம். தனி மொழி இல்லையா. பாவம் தான்''" என்று பரிதாபப்பட்ட லீ கேண்டீன்காரரிடம் மறுபடியும் மைலோ கலக்கச் சொன்னான். 
"வேணாம்; இன்னொரு நாள் பார்த்துக்கலாம்''" என்று சொன்ன அழகர்சாமி எழுந்து விட்டான்.
"பைத்தியகாரத் தமிழர் ஏன் அப்படிக் கத்தி விட்டுப் போனார். அவர் சொல்வது உண்மையா?' சைட்டில் வேலை நிறுத்தப்பட்டு விட்டதால் அழகர்சாமியும் சீக்கிரமே வீட்டிற்குக் கிளம்பி விட்டான். கொஞ்ச தூரம் நடந்து தெரு முக்கில் நின்று கொண்டு டாக்ஸிக்காக அவன் காத்திருந்த போது, எங்கிருந்தோ மறுபடியும் வந்து சேர்ந்தார் பைத்தியக்காரத் தமிழர். 
"அவங்க குடுத்தது எதையும் சாப்பிட்டீங்களா தம்பி''" என்ற பதட்டத்துடன் அழகர்சாமியிடம் விசாரித்தார்.
அவன் எதுவும் பேசாமல் அவரைக் கோபமாய்ப் பார்க்கவும், "நான் பைத்தியம் இல்ல தம்பி. நிஜமாகவே அவங்க உங்கள விஷம் வச்சுக் கொல்லப் பார்த்தாங்க''" என்றார் இலேசாய் விசும்பியபடி.
"சரி டாக்ஸியில ஏறுங்க; வீட்டுல போய்ப் பேசிக்கலாம்''" என்று சொல்லி அவரையும் தன்னுடன் டாக்ஸியில் ஏற்றி அபார்ட்மெண்ட்டிற்கு அழைத்துப் போனான் அழகர்சாமி.
அவர் தன்னுடைய பெயரை சடையாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 
"நான் கேண்டீன் கொட்டகைக்குப் பின்னால படுத்திருந்தேன் தம்பி. அப்ப அவசரமாய் உள்ள வந்த லீ அங்கிருந்த கேண்டீன் ஆளுகிட்ட பேசுறதக் கேட்டேன். அவங்க சீன மொழியில பேசிக்கிட்டாங்க. 
லீ கொண்டு வந்த கவருலருந்து ஒரு கேக் துண்டை எடுத்து பிளேட்டில வச்சு அதுக்கு மேல பசை போல இருந்த ஒன்னத் தடவுனான். அதைப்பார்த்த கேண்டீன் ஆளு " அய்யோ இது விஷமாச்சேன்னு பதறுனான். 
"ஆமா, இது அந்த இந்திய இன்ஜினியரக் கொல்றதுக்காகத் தான். எங்க ஆபீசுல வாங்கிக் குடுத்து அனுப்புனாங்கன்னான். "சைட்டுல விழுந்து அவன் செத்தான்னா நாம எல்லாம் மாட்டிக்க மாட்டமா?’ன்னு அவள் கேட்கவும், "அவன் இப்ப சாக மாட்டான். இது கொஞ்சம் ஸ்லோ பாய்சன். ரெண்டு மூனு நாளைக்கு அப்புறந்தான் சாவான். பிரேதப் பரிசோதணையிலயும் ஹார்ட் அட்டாக்குன்னு தான் ரிப்போர்ட் ஆகும். விஷம்ன்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டே விஷப் பசைக்கு மேல மறுபடியும் கேக்கோட கிரீமத் தடவுனான். அதான் நான் ஓடிவந்து தட்டி விட்டேன்''" என்று அவர் சொல்லி முடிக்கவும் அழகர்சாமி சிலிர்ப்புடன் அவரை அணைத்துக் கொண்டான். 
"அப்ப வாங்க போலீசுல போய் சொல்லிடலாம்'' என்று அவரை அழைத்தான் அழகர்சாமி.
"அவங்க உனக்கு விஷம் கொடுக்க முயற்சி பண்ணாங்கங்குறதுக்கு ஒரே சாட்சி நான் தான். ஆனால் என்னால போலீசுக்கெல்லாம் வந்து சாட்சி சொல்ல முடியாது. போலீசுக்கு வந்தால் அது எனக்கு சிக்கலாயிடும். ஏன்னா என்கிட்ட இந்த நாட்டுல தங்கி இருக்கிறதுக்குத் தேவையான எந்த பேப்பரும் இல்ல''" என்றவர் அவரின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
"எனக்கு சொந்த ஊர் கூத்தப்பாடிங்கிற கிராமம். அது தருமபுரி மாவட்டத்துல இருக்கு. அந்தக் காலத்து பெரிய எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணேன். வேலை ஒன்னும் சரியா அமையல. பக்கத்து ஊருல பால் சொசைட்டியில தான் வேலை கிடைச்சது. அதுல வர்ற வருமானம் குடும்பத்துக்குப் போதல. வெளிநாட்டுக்குப் போகலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.
தர்மபுரியில ஒரு ஏஜெண்ட் ஒரு லட்சரூபாய் புரட்டிக் குடுக்க முடிஞ்சா ரெண்டு மூனு மாசத்துல மலேசியாவுக்கு அனுப்பி வச்சுடுவேன்னார். எங்க அப்பா எங்க வாழ்க்கைக்கே ஆதாரமா இருந்த நெலத்தையெல்லாம் வித்துப் பணம் குடுத்தார். நானும் கொண்டு போயி ஏஜெண்டுகிட்ட கட்டுனேன். 
மலேசியாவுல எனக்கு சூப்பர்வைசர் வேலைன்னு சொல்லி அனுப்பி வச்சார். கம்பெனி முகவரி பத்துமலைன்னு ஓரிடத்துல இருந்துச்சு. அங்க தேடிப் போனால் அதுல கம்பெனி ஒண்ணும் இல்ல. வெட்டவெளி. அந்த அட்ரசுக்குப் பக்கத்துல முருகன் கோயில் ஒன்னு தான் இருந்துச்சு. 
இங்க வந்த பின்னாடி தான் அது ஏமாத்து வேலைன்னு புரிஞ்சது. டூரிஸ்ட் விசா எடுத்து அனுப்பி வச்சிருக்கார் ஏஜெண்ட். நான் அழுது அரட்டுறதப் பார்த்த அங்கிருந்த தமிழ்க்காரர் ஒருத்தர் என்னை ஒரு டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போயி சாப்பிடவச்சு பேசாம இந்தியாவுக்கே திரும்பிப் போயிடச் சொன்னார். 
ஆனால் நான் ஊருக்குத் திரும்பிப் போனால் கண்டிப்பா எங்க அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி அழுதேன். அப்புறம் தான் அவர் வேணுமின்னா இங்கயே தங்கிக்க. ஒன்னு ரெண்டு வேலை செஞ்சு சாப்பிட்டுக்கோ. ஆனால் சம்பளமெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டார்.
ஆனால் அவரும் ஒருசமயம் போலீஸ்காரங்க மலேசியா முழுக்க விசா இல்லாம வேலை செய்றவங்களப் பிடிக்கிறதுக்காக செக்கிங் நடத்திக்கிட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு வெளிய போகச் சொல்லிட்டார். அப்புறம் மலாக்கா, பினாங்கு, லங்காவீன்னு போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இல்லாத இடங்களுக்குப் போய்க் கிடைச்ச வேலைங்கள செய்துகிட்டு இருந்தேன். 
இப்பல்லாம் எல்லா இடத்திலயும் போலீசு கெடுபிடிகள் அதிகமா இருக்கிறதால எங்கள மாதிரியானவங்கள வேலைக்கு வச்சிக்கிடப் பயப்படுறாங்க. அதான் இப்படி பைத்தியக்கார வேஷம் போட்டுக்கிட்டு இரக்கப்பட்டு யாராவது ஏதாவது கொடுத்தால் சாப்பிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் தம்பி''" 
"நீங்க பினாங்குல இருந்துருக்கீங்களா சடையாண்டி?'' " என்று ஆர்வமாய் விசாரித்தான் அழகர்சாமி. "
"ஏந்தம்பி கேட்குறீங்க? நாலைஞ்சு வருஷம் போல அங்க இருந்துருக்கேனே'' என்றார் அவர். 
அழகர்சாமி தன்னுடைய சூட்கேசைத் திறந்து அவனுடைய அம்மாவும் அப்பாவும் இருக்கிற போட்டோவை எடுத்து அவரிடம் காட்டி "இவரை அங்க எப்பவாவது பார்த்திருக்கீங்களா?" என்றான்.
போட்டோவை மேலோட்டமாய்ப் பார்த்துவிட்டு, "பார்த்த மாதிரி ஞாபகமில்லையே''" என்று சொல்லி அவனிடமே புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்தார். அப்புறம் "கொஞ்சம் பரிச்சயமான முகமாத்தான் தெரியுது'' " என்ற சடையாண்டி.
மறுபடியும் அழகர்சாமியிடமிருந்து புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். 
"இவர நான் பினாங்குல வச்சுப் பார்க்கல; ஆனால் மலாக்காவில பார்த்த ஞாபகம் இருக்கு'' " என்று சொல்லவும் அழகர்சாமி பிரகாசமானான்.
அடுத்தநாள் சடையாண்டியையும் அழைத்துக் கொண்டு மலாக்காவிற்குப் பயணமானான் அழகர்சாமி. அழகர்சாமியின் அப்பா வேலை பார்த்த ஒரு சீனக்கடையில் தான் மிகக் குறுகிய காலத்திற்கு சடையாண்டியும் வேலை பார்த்திருக்கிறார். மலாக்காவில் சைனா டவுன் என்னும் பகுதிக்கு அழைத்துப் போய் அதனுள் ஜோன்க்கர் சாலை என்னும் மிகமிகப் பரபரப்பான கடைவீதிக்கு அழைத்துப் போனார் சடையாண்டி. பல கடைகள் முகப்பில் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் குழம்பினார் அவர். 
கடைகளைத் தயங்கித் தயங்கி நோட்டம் விட்டுக் கொண்டு வந்தவர் ஒரு கடையைப் பார்த்ததும் இதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அழகர்சாமியை உள்ளே அழைத்துப் போனார். அங்கிருந்த ஒருவனிடம் சடையாண்டி கடையின் ஓனரைப் பார்க்க வேண்டும் என்றான். அவன் சடையாண்டியிடம் மலாயில் ஏதோ விசாரிக்கவும் அவர் சீன மொழியில் பதில் சொன்னார். 
அவன் அவர்களைக் கடையின் பின் பகுதிக்கு அழைத்துப் போய் அங்கிருந்த இளைஞனைக் காட்டிவிட்டு அவனுடைய வேலைக்குத் திரும்பிப் போய்விட்டான். சடையாண்டி அவருக்கு சீனமொழியில் வந்தனம் சொல்லி தான் அவருடைய கடையில் ஏற்கெனவே வேலை பார்த்திருப்பதாகத் தெரிவித்தான். அவர், "இப்பொழுது கடையில் வேலை ஒன்றும் காலி இல்லை''’ என்றார் அவசரமாய். 
"வேலை எதுவும் வேண்டாம்; இங்கு ஏற்கெனவே வேலை பார்த்த ஒருவரைப் பற்றி விசாரித்துப் போக வந்திருக்கிறோம்'' ’ என்ற சடையாண்டி அழகர்சாமியிடமிருந்த அவனுடைய அப்பாவின் போட்டோவைக் காட்டினார். போட்டோவைப் பார்த்ததும் சீனனின் முகம் கறுத்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், "போட்டோவில் இருப்பவர் இங்கு வேலை பார்க்கவில்லை''என்றான்.
"இல்லை. அவர் இங்கு தான் வேலை பார்த்தார். நானும் கூடக் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். உங்களுடைய அப்பாவிற்குத் தெரிந்திருக்கலாம். அவரைப் பார்க்க முடியுமா?''’ என்றார் சடையாண்டி. "அவர் இரண்டு வருஷங்களுக்கு முன்பு இறந்து போய் விட்டார்'' ’ என்ற சீனன் "வியாபார நேரம்; தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சீக்கிரம் வெளியே போங்கள்''’ என்று அவர்களை அவசரமாய் விரட்டினான். 
சடையாண்டிக்கும் குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை கடை கை மாறி இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கடையின் இளைஞன் எதையோ மறைப்பதும் அவனுடைய முகமாற்றத்
திலிருந்தும் பதட்டத்திலிருந்தும் பளிச்செனத் தெரிந்தது. 
கடையிலிருந்து வெளியேறி, அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரிடம் அவனுடைய அப்பாவின் புகைப்படத்தைக் காட்டி, " இவரை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று விசாரித்துப் பார்த்தார்கள். யாரும் பாஸிட்டிவ்வான பதில்களைத் தரவில்லை. 
அந்தத் தெருவிலேயே இருந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்கப் போனபோது கல்லாவில் உட்கார்ந்திருந்தவன் தமிழனாய் இருக்கவே அவனிடமும் அப்பாவின் போட்டோவைக் காட்டி விசாரித்தான் அழகர்சாமி.
"எனக்கு இவர எங்கயும் பார்த்த ஞாபகம் இல்ல. ஆனா மலாக்கால தான் இருந்துருந்தார்னா எங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்'' " என்று சொல்லி வேறொருவனை அழைத்து கல்லாவில் உட்கார வைத்து விட்டு அவர்களை ஹோட்டலின் முதல் மாடிக்கு அழைத்துப் போனான். 
அங்கிருந்த முதியவர் அழகர்சாமியை ஆழமாய் ஊடுருவிப் பார்த்துவிட்டு, "இவர நீங்க எதுக்குத் தேடி வந்துருக்கீங்க; அவருக்கு நீங்க என்ன உறவு முறை?'' " என்றார் போட்டோவைப் பார்த்ததும். 
"அவரு எங்க அப்பா தான்'' " என்று அழகர்சாமி சொல்லவும், "அடப்பாவி மனுஷா, ஊருல இப்படி ஒரு புள்ளைய உட்டுட்டு வந்தா, இங்க ஒரு சிறுக்கிய சேர்த்துக்கிட்டு செத்துத் தொலைஞ்சான்'' " என்று விசனப்பட்டவர் சொல்லத் தொடங்கினார்.
"மலாக்காவுல கொஞ்ச நாள் தான் இருந்தான் உங்க அப்பன். அவன் வேலை பார்த்த சீனனோட கடையில அவன் பொண்டாட்டி கூடவே சிநேகமாயிட்டான். அவள் தான் உங்க அப்பன் மேல ஆசைப்பட்டு சேர்த்துக்கிட்டாள்னும் அப்பப் பேசிக்கிட்டாங்க. அது சீனனுக்குத் தெரிஞ்சு கண்டிச்சிருக்கான். அப்பயும் அவங்க தொடர்பை உட்டுடல. லங்காவித் தீவுலயும் சீனனுக்கு ஒரு கடை இருந்துச்சு. உங்க அப்பன சீனன் அங்க வேலைக்கு அனுப்பிட்டான். அங்க வேலைக்குப் போன கொஞ்சநாள்லயே, தாய்லாந்துலருந்து கள்ளத்தோணியில போதைப் பொருள் கடத்தீட்டு வந்தான்னு உங்க அப்பனப் போலீசு புடிச்சிருச்சு.
அவன் கொண்டு வந்த மூட்டையில போதை மருந்து இருக்குன்னே உங்க அப்பனுக்குத் தெரியாதுன்னும் சீனனே போலீசுக்குத் தகவல் சொல்லி உங்க அப்பன புடிச்சுக் கொடுத்தான்னும் பேசிக்கிட்டாங்க. ஆனா எதையும் நிரூபிக்க முடியல. மலேசியாவுல போதை மருந்து சம்பந்தமான குற்றங்களுக்கு மரணதண்டனைங்குறதால'' " அவர் பேச முடியாமல் கேவி அழத் தொடங்கினார்: 
அப்புறம் நிதானத்திற்கு வந்து, "உங்க அப்பன்கிட்ட அவன் இந்தியாவுலருந்து இங்க வந்ததுக்கான எந்த பேப்பரும் இல்ல. உங்க அப்பனும் சொல்லல. அவன் தன்னோடக் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம்னே சொல்லிட்டான். மலேசிய அரசாங்கம் இந்திய அரசுக்குத் தகவல் தெரிவிச்சதாகவும், அவங்களால உங்க அப்பன் பத்தின எந்த விவரத்தையும் கண்டுபிடிக்க முடியலைன்னும் அப்ப பேசிக்கிட்டாங்க'' " என்றார்.
அழகர்சாமி அன்றைக்கு இரவு அம்மாவிற்குப் போன் பண்ணி, " "அப்பாவை தேடிக் கண்டுபிடிக்கவே முடியலம்மா. உன்னை விட்டுட்டு என்னாலயும் இங்க இருக்க முடியலம்மா. அதனால நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துடப் போறேன்ம்மா'' " என்று சொல்லவும், " அவளும் சரிப்பா'' என்றாள்.

 

கட்டடப் பொறியாளரான சோ.சுப்புராஜ், எண்பதுகளின் மத்தியில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். நூற்று இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது கவிதைகள், ஐந்து குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுப்பு 
வெளிவந்திருக்கிறது. பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றிருக்கிறார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/28/w600X390/k2.jpg https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/jul/28/அப்பாவைத்-தேடி-3202089.html
3202088 வார இதழ்கள் தினமணி கதிர் நிலவில் கால் பதித்து 50 ஆண்டுகள் ! DIN DIN Sunday, July 28, 2019 10:10 AM +0530 "வானமென்ன வானம்... நிலவும் வசப்படும்' என்று நிலாவில் மனிதன் இறங்கி கால் தடம் பதித்து, அடி வைத்து நடந்து, ஐம்பது ஆண்டுகள், இந்த ஜுலை 21 இல் நிறைவாகியுள்ளது. 
ஆம்! 1969 ஜுலை மாதம் 16 - இல் நிலவு நோக்கி மூன்று விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட அமெரிக்க ராக்கெட், அப்போலோ 11 , ஜுலை 20 -இல் நிலவை நெருங்கியதும் "பருந்து' என்று பெயரிடப்பட்ட துணைக் கலம், இரண்டு விண்வெளி வீரர்களுடன் முதன்மை ராக்கெட்டிலிருந்து விடுபட்டு நிலாவில் 1969 ஜுலை 20 இரவு ஒன்பது மணி அளவில் பத்திரமாக இறங்கியது. 
"பருந்து' நிலவிலிருந்து கிளம்பி முதன்மை ராக்கெட்டுடன் இணையும் வரை நிலவைச் சுற்றிச் சுற்றி வரவேண்டும். தாய் கலத்தை இயக்கியவர் மைக்கேல் காலின்ஸ். துணைக் கலம் மூலம் நிலவில் இறங்கியவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின். இருவரில் நீல் தான் முதலில் நிலவில் கால் தடம் பதித்து நடக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவு செய்யப்பட்டவர். சுமார் ஏழு மணி நேரம் "பருந்து' துணைக் கலத்தின் உள்ளே அமர்ந்திருந்து ஜுலை 21 அதிகாலை மூன்று மணிக்கு நிலாவின் நிலப்பரப்பில் மனிதகுலத்தின் சார்பில் முதல் காலடி எடுத்துவைத்தார்.
நிலப்பரப்பு பாலைவனம் மாதிரி காட்சி தந்தது. தூசு போன்ற மணல் பரப்பைக் கொண்டிருந்தது. தரையில் கால் பதித்த போது, நீலின் காலணி முக்கால் அங்குலம் நிலவின் தரையினுள் இறங்கியதாம். நீல் நிலாவில் இறங்கியதும் சுறுசுறுப்பானார். கையிலுள்ள காமிரா மூலம் தனது காலணியின் தடத்தை மட்டும் மூன்று நான்கு முறை படம் பிடித்தார். பின்னர் நிலவின் நில அமைப்பை, பாறைகளை பல கோணங்களில் படம் பிடித்தார். 
நீல், நிலவில் நடக்கத் தொடங்கி சரியாக பத்தொன்பது நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின். நிலவில் இறங்கி நீலுடன் சேர்ந்து கொண்டார். 
நீல், எட்வின் ஆல்ட்ரினை பல கோணங்களில், நிலவின் நிலப்பரப்பு பின்னணியில் கணக்கில்லாமல் படம் எடுத்துத் தள்ளினார். பிறகு எட்வின் காமிராவை நீலிடமிருந்து வாங்கி தன்னை பல படங்கள் எடுத்த நீலை ஒரே ஒரு படம் மட்டும் பிடித்துவிட்டு, நிலவில் கொஞ்ச தூரம் நடந்து அவர் பங்கிற்கு நிலாவின் நில அமைப்பை பல க