Dinamani - மகளிர்மணி - https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3179697 வார இதழ்கள் மகளிர்மணி துணிவு இவரது அடையாளம்!   DIN DIN Wednesday, June 26, 2019 11:54 AM +0530 சி.ஆர்.பி.எப்பின் ஒரு பகுதியான கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்ஷன் (COBRA) பிரிவினர், ஆள் நடமாற்றம்மில்லாத அடர்ந்த காடுகளில் தங்கி மறைமுகமாக அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தும் நக்சல்களை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையாகும். இதில் மிக குறைந்த வயதில் சி.ஆர்.பி.எப் கமாண்டோ பெண் அதிகாரியாக பணியாற்றும் உஷா கிரண் ( 29) தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இலக்குத் தெரியாத காட்டில் நக்சல்களை ஒடுக்க பணிபுரிந்து வருகிறார்.
முன்னாள் தேசிய விளையாட்டு வீராங்கனையும், ரசாயன பட்டதாரியுமான உஷாகிரண், அவரது குடும்பத்தில் சி.ஆர்.பி. எப்பில் பணியாற்றும் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர் ஆவர். இவரது தாத்தா, அப்பா ஆகிய இருவருமே சி.ஆர்.பி.எப்பில் பணியாற்றியவர்கள் என்பதால் இவருக்கும் சி.ஆர்.பி.எப்பில் சேர ஆசை தோன்றியுள்ளது. சி.ஆர்.பி.எப்பில் உள்ள கோப்ராவில் சேருவதுதான் இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. கதார்புர் குருகிராமில் உள்ள சி.ஆர்.பி. எப் அகாதெமியில் உஷாகிரண் சேரும்போது, பெண்கள் யாருமே இல்லை. எல்லாருமே ஆண்கள், கோப்ராவில் சேர பெண்கள் யாரும் விரும்பவில்லையாம்.
அகாதெமியில் தேர்ச்சிப் பெற்றவுடன், சத்தீஸ்கரில் பாஸ்டர் பகுதியில்தான் பணியாற்ற வேண்டுமென்று தீர்மானித்தேன். நான் எதிர்பார்த்தபடி அந்த பகுதியிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு தங்கியிருந்த ஓராண்டிலேயே சி.ஆர்.பி.எப் எடுக்கும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், கோப்ரா செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. கமாண்டோ படையில் சேர நான் எடுத்த முடிவு சரியானது என்று தோன்றியது.
என்னுடைய சிறுவயதில் ஆண்டுதோறும் டெல்லியில் குடியரசு தினத்தன்று நடக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு என்னை தவறாமல் என் தந்தை அழைத்துச் செல்வதுண்டு. ராணுவ வீரர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்துவதை பார்த்து நான் வியப்படைவேன். 
விவரம் தெரிந்த பிறகுதான் ராணுவத்தினர் வெறும் அணிவகுப்பு மட்டும் செய்வதில்லை. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறிய உஷா கிரண், கோப்ராவில் சேர்ந்த அனுபவத்தைப் பற்றி விவரிக்கிறார்:
"கோப்ராவில் பெண்கள் சேருவது அத்தனை சுலமல்ல, கோப்ராவில் 10 பட்டாலியன் கமாண்டோ பிரிவுகள் இருந்தாலும், ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. என்னுடைய விண்ணப்பத்தை பார்த்த மூத்த அதிகாரிகள் என் துணிச்சலுக்காக கோப்ராவில் சேர அனுமதித்தனர். கோப்ரா ஒரு சிறப்பு அமைப்பு என்பதால் இதற்கென்று பிரத்யேக பயிற்சிகள் உண்டு. உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் அளிக்கப்படும் இந்த பயிற்சியின்போது பெண்கள், தங்கள் சக்தியை ஆண்களின் வலிமைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். பயிற்சியின்போது ஆண்-பெண் வித்தியாசம் ஏதுமில்லை.
கோப்ரா ஒரு சிறப்பு படை என்பதால், மற்றொரு கோப்ரா கமாண்டோவுடன் போராடக் கூடிய வலிமை பெற்றிருக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக பயிற்சி பெறும்போது, பெண் என்பதற்காக கூடுதல் நிமிடங்களோ, விநாடிகளோ ஒதுக்க மாட்டார்கள் இதன் மூலம் எனக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ, அது எதிர்காலத்தில் என்னைப் போன்று கமாண்டோ படையில் சேரும் பெண்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று நினைப்பேன்.
நக்சல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பாஸ்டரில் நியமிக்கப்பட்ட எனக்கு ஒரு கம்பெனிக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர். வெளி தொடர்பில்லாத காட்டில் எனக்கு கீழ்படிந்து நடக்கும் வீரர்களை ஒரு குடும்பத் தலைவிபோல் அவர்களை அரவணைத்து அவர்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. இருப்பினும் நக்சல்களின் சவால்களை சந்திப்பதற்காக பழங்குடியினர் வசிக்கும் காட்டில், மொபைல் தொடர்பற்ற சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு குழுவுக்கு நான் ஒருத்தி கமாண்டராக தலைமை ஏற்று நடத்துவது முதலில் சங்கடமாக தெரிந்தது. அதேபோல் முதன்முறையாக தங்களை ஒரு பெண் தலைமை ஏற்று நடத்துவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள் என்பதை அறிந்து ஒரு பாதுகாப்பான கமாண்டரின் கீழ் பணியாற்றுகிறார்கள் என்று உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டேன். நாளடைவில் ஏற்பட்ட மாறுதல்களால், என் தலைமை மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதோடு, என்னுடைய நடவடிக்கைகள் சரியானதுதான் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். எதிரிகளை ஒடுக்க முன்னணியில் நின்று தலைமைதாங்கி போரிடுவது ஒரு சவாலான விஷயமாகும். என்னுடைய படை வீர்கள் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் என் கட்டளையை ஏற்று செயல்படும்போது எனக்கு வலி தெரிவதில்லை. என் மீது வைத்துள்ள நம்பிக்கை அவர்கள் கண்களில் தெரியும்போது என் மனச்சோர்வு நீங்கிவிடும்.

என்னுடைய பணி நேரம் முடிந்த பின்னரும் அந்த மலைப் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை முகாமுக்கு அழைத்து வந்து பாடம் சொல்லிக் கொடுப்பேன். தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் சரிசமமாக கவனிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் நம்முடைய குடும்பத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதும், விவேகமுள்ள கணவரும் இருந்துவிட்டால் கவலையே இல்லை என்னுடைய கணவர் டாக்டர் கிரணும் சி.ஆர்.பி.எப்பில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுவதால், பணி தொடர்பாக நான் எடுக்கும் முடிவுகளை புரிந்து கொண்டு எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நான் சி.ஆர்.பி.எப்பில் சேர்ந்தது முதல் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்பட்டதில்லை முதன்முறையாக நான் கமாண்டோ அதிகாரியாக பொறுப்பேற்றதை என் குடும்பத்தினர் பெருமையாக கருதுகிறார்கள்'' என்றார் உஷாகிரண்.
- பூர்ணிமா

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/துணிவு-இவரது-அடையாளம்-3179697.html
3179696 வார இதழ்கள் மகளிர்மணி குழந்தைக் கவிஞரைத் தொடர்ந்து... DIN DIN Wednesday, June 26, 2019 11:50 AM +0530 குழந்தை இலக்கியத்தில் சிறப்பான படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில், சாகித்ய அகாதெமி அமைப்பு 2010- ஆம் ஆண்டு முதல் "பால சாகித்ய புரஸ்கார்' என்ற விருதினை வழங்கி வருகிறது. அந்த வகையில் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் குழந்தை இலக்கியத்திற்கு ஆற்றிய ஒட்டு மொத்த பங்களிப்பிற்காக 2019 -ஆம் ஆண்டிற்கான "பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 இவ்விருதினைப் பெறும் முதல் பெண் எழுத்தாளர் இவர். குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள்.
 தேவி நாச்சியப்பனின் இயற்பெயர் தெய்வானை. தமிழ்மொழி முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் மொழிபெயர்ப்புக் கதை 1983-ஆம் ஆண்டில் கோகுலம் சிறுவர் மாத இதழில் வெளியானது.
 இவருடைய முதல் சிறார்களுக்கான மொழி பெயர்ப்பு நூல்கள் "பல தேசத்துக் குட்டிக் கதைகள் - பகுதி 1' மற்றும் "பல தேசத்துக் குட்டி கதைகள் - பகுதி -2' என இரண்டு தொகுப்புகளாக 1984-ஆம் ஆண்டில் வெளியானது. இதைத் தொடர்ந்து 1997-இல் "பந்தும் பாப்பாவும்', 2002 -இல் "பசுமைப்படை' மற்றும் "நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்' போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். 2013- இல் "பேசியது கைபேசி' மற்றும் 2005-இல் "புத்தகத் திருவிழா' என இரண்டு சிறுகதைத் தொகுப்பு வெளியானது.
 2016-இல் குழந்தைக் கவிஞர் "செல்லகணபதி' , "பட்டிமன்றம்' என்கிற நூலினையும், 2018 -இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் வரலாறு போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
 இவர், பல்வேறு விருதுகளைப் பெற்றவர். குறிப்பாக தமிழக அரசு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' மற்றும் "தமிழ்ச் செம்மல்' விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
 - ஆர்.வி.பதி

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/குழந்தைக்-கவிஞரைத்-தொடர்ந்து-3179696.html
3179695 வார இதழ்கள் மகளிர்மணி காணாமல் போன ஆறும் மீட்டெடுத்த பெண்களும்! DIN DIN Wednesday, June 26, 2019 11:49 AM +0530 முன்பெல்லாம் தண்ணீர் வறட்சி வட இந்திய மாநிலங்களை வாட்டிக் கொண்டிருந்தது. பல்வேறு நதி திட்டங்களால் தண்ணீர் வறட்சிக்கு அங்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாதி பாலைவனமாக இருக்கும் ராஜஸ்தானில் கூட இப்போது தண்ணீர் பற்றாக்குறையில்லை. ஆனால் தென்னிந்திய மாநிலங்கள் படிப்படியாக வறட்சியின் பிடியில் வந்துவிட்டன. மஹாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ளது. நகரங்களில் குறிப்பாக மெகா நகரமான மும்பையில் நீர் மேலாண்மை சரிவர நடப்பதால் தண்ணீருக்குப் பஞ்சமில்லை.
 இந்நிலையில், சுமார் இருபதாயிரம் பெண்கள் சேர்ந்து இறந்து போன ஆற்றிற்கு உயிர் தந்திருக்கிறார்கள் என்கிற செய்திதான் அது.
 "நூறு நாள் வேலை' திட்டம் உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காமல் செய்து கெடுத்துவிட்டது. "தினமும் சும்மா ரெண்டு மணி நேரம் வேலை செய்யற மாதிரி போக்கு காட்டிட்டு பொம்பளைங்க போயிறாங்க..' என்று விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இப்படி ஒரு அதிரடி திருப்பம் ஏற்படும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.
 நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இறந்து போன நதியை மீட்க முடியுமா?
 "முடியும்' என்று செய்து கட்டியிருக்கிறார்கள் வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த 20,000 பெண்கள். நான்கு ஆண்டுகள் இவர்கள் செய்த அயராத உழைப்பு ஒரு வெற்றிக் கதையாகியுள்ளது.
 ஜிபிஎஸ் உதவியோட நாகநதியின் வழித் தடங்களை புதுப்பித்து, நதி பாதைகளில் மீள் ஊற்று கிணறுகள் உருவாக்கியதுடன், ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டி நதியில் வரும் நீரின் வேகத்தை மட்டுப்படுத்தி பூமி நீரை ஆற அமர குடிக்கச் செய்திருக்கிறார்கள்.
 தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்போது வேலூர் மாவட்டத்தின் பல வட்டங்கள் செழித்து நிற்கிறது.
 தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பசுமையாகாத்தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை தலைகீழ். தண்ணீர் வறட்சி காரணமாக விளைந்து கொண்டிருந்த நிலம் நீர் வளமற்ற தரிசு நிலங்களாக மாறிவிட்டன. காரணம்..? ஜவ்வாது மலைகளில் உற்பத்தியாகி திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தின் ஜீவ நாடியாக இருந்த நாகநதி ஆற்றினை அறிவியல் பூர்வமாகக் கையாளாததும், கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததும் தான். விளைவு ? திருவண்ணாமலை, வேலூர், சுற்றுவட்டாரங்களில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டது. முன்பு நாகநதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை நனைத்துவிட்டு காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் இணையும்.
 நாகநதியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றால் நதியின் பாதையில் தடுப்பணைகள், மீள் நிரப்பு கிணறுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவானது. தன்னார்வத் தொண்டர்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 2014 -ஆம் ஆண்டு 5 கோடி பட்ஜெட்டில் மத்திய அரசு ஒப்புதலுடன் "நாகநதி மறுவுருவாக்கத் திட்டம்' துவங்கப்பட்டது. 69 கிராமங்களில் இந்தத் பணித்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டது.

"வாழும் கலை' இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களுடன், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு' திட்டத்தில் பதிவு செய்திருந்த பெண்கள், சுய உதவி மகளிர் குழுக்கள் என 20,000 பெண்கள் ஒன்றிணைந்து வேலூர் மாவட்டத்தின் பத்து வட்டங்களில் சுமார் 3500 கிணறுகளை 250 தடுப்பு அணைகளையும் கட்டி முடித்துள்ளனர்.
 ஒவ்வொரு கிணற்றின் அளவு இருபதடி ஆழம் ஆறு அடி அகலம். நதியோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 இரண்டு ஆண்டுகளாக பெய்த மழையில் நதியின் பாதையில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர், தோண்டப்பட்ட கிணறுகளையும் தடுப்பு அணைகளையும் நிரப்பிச் சென்றதால் தண்ணீர் பூமிக்குள் இறங்கி நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த சுற்று வட்டார கிணறுகளில் தண்ணீர் அளவும் கூடியுள்ளது. தண்ணீர் இல்லாததால் உழவுத் தொழிலை விட்டு விட்டு வேறு வேலைகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் நெல், தக்காளி, சோளம், நிலக்கடலை பயிரிடுதலை உற்சாகமாகத் தொடங்கி விட்டனர்.
 இந்த திட்டத்தின் வெற்றியில் பெரும் பங்கு சுமார் இருபதாயிரம் பெண்களுக்குச் சொந்தம். தமிழகத்திற்கு முன்மாதிரியாக மாறியிருக்கும் இவர்கள், கிணறு தோண்டுவது, கான்கிரீட் வளையங்களை உண்டாக்குவது, அவற்றை தோண்டப்பட்ட பள்ளத்தில் இறக்குவது , கல்களைச் சுமந்து வந்து தடுப்பு அணைகள் கட்டுவது என்று எல்லா நிலை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துள்ளனர்.
 வியர்வை சிந்தி நீர் மேலாண்மைக்கு அடித்தளம் இட்டுள்ளனர். "முன்பெல்லாம் வீட்டுச் செலவுக்கு கணவரிடம் காசு கேட்பேன். இந்த திட்டத்தில் தினமும் ரூ.224 கிடைத்தது. அதனால் பயிரிட முடியாத கஷ்ட காலத்திலும் வீட்டு செலவுகளை நானே பார்த்துக் கொள்ள முடிந்தது' என்று சொல்லும் பெண்கள் ஏராளம். இறந்த நதிக்கு மீண்டும் உயிர் கொடுத்து, வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிய பெண்களிடமிருந்து நாமும் பாடம் கற்போம்.
 - பிஸ்மி பரிணாமன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/காணாமல்-போன-ஆறும்-மீட்டெடுத்த-பெண்களும்-3179695.html
3179693 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, June 26, 2019 11:21 AM +0530 சிறுதானிய சத்துமாவு

தேவையானவை:
மக்காச்சோளம் - கால் கிலோ, கோதுமை, கம்பு, வெள்ளை சோளம், கேழ்வரகு, கறுப்பு கொண்டைக்கடலை, அவல், சிவப்பரிசி, தினை - தலா 100 கிராம், முந்திரி, கறுப்பு எள், ஜவ்வரிசி - தலா 50 கிராம், ஏலக்காய் - 5.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, ஆறியபின் ஒன்றுசேர்த்து, மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைக்கவும். தேவையானபோது இந்த மாவில் கஞ்சி செய்து, பால் சேர்த்துப் பரிமாறலாம். கஞ்சியுடன் பழ வகைகளை சேர்த்தும் தரலாம். இந்தக் கஞ்சி உடலை உறுதியாக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

கம்பு லஸ்ஸி

தேவையானவை: 
கம்பு மாவு - ஒரு கிண்ணம், தயிர் - 3 கிண்ணம், இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - 10 இலைகள், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கம்பு மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறி வேகவிடவும். மாவு நன்கு வெந்தபின் இறக்கி ஆறவிடவும். பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குதிரைவாலி கிச்சடி

தேவையானவை: 
குதிரைவாலி அரிசி - ஒரு கிண்ணம், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - அரை கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறி கலவையும் சேர்த்துக் கிளறவும். இதனுடன் உப்பு சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும்வரை கிளறவும். நன்கு வெந்த பின் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ராகி முறுக்கு

தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கிண்ணம், அரிசி மாவு - அரை கிண்ணம், கடலை மாவு - கால் கிண்ணம், பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி, எள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். 6 தேக்கரண்டி எண்ணெய்யைத் தனியே சுடவைத்து மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைக்கவும். முறுக்கு குழலில் "ஸ்டார்' வடிவ துளையிட்ட அச்சை போடவும். பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்குகளாகப்பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

வரகு புளியோதரை

தேவையானவை: 
வரகரிசி - ஒரு கிண்ணம், மல்லி (தனியா), எள் - தலா ஒரு தேக்கரண்டி, வெந்தயம் - கால் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 10, புளி - பெரிய எலுமிச்சை அளவு, வேர்க்கடலை - 5 தேக்கரண்டி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, பொடித்த வெல்லம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. 
செய்முறை: வரகரிசியை 10 நிமிடம் ஊறவைத்து, களைந்து, இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி... மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால்... புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

சிறுதானிய இடியாப்பம்

தேவையானவை: சிறுதானிய சத்துமாவு - ஒரு கிண்ணம், தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம், சர்க்கரை - தேவைக்கேற்ப, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு, அதனுடன் எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மேலே தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்
- கே.அஞ்சம்மாள்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/சமையல்-சமையல்-3179693.html
3179688 வார இதழ்கள் மகளிர்மணி முகத்தில் கரும்புள்ளிகளை குறைக்க... DIN DIN Wednesday, June 26, 2019 11:08 AM +0530 • காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும். 

• ஒரு எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மறையும். 

• ஜாதிக்காயை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணிநேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும். 

• சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கினை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

• இரவில் படுக்கப் போகும் முன் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை சாற்றில் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிகள் மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்.

• பாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம். 

• அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பராகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.

• கொத்துமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும். 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/முகத்தில்-கரும்புள்ளிகளை-குறைக்க-3179688.html
3179687 வார இதழ்கள் மகளிர்மணி எளிய வைத்தியம்! DIN DIN Wednesday, June 26, 2019 11:06 AM +0530 இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டுவலி. வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் தற்போது மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.
 உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த மூட்டுவலி பிரச்னையிலிருந்து தீர்வு பெற ஒருசில உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் போதும்.
  ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (ஙர்ப்ஹ்க்ஷக்ங்ய்ன்ம்) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.
  எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகி வரலாம். இது உடல் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தி வலிகளை குறைக்கும்.
  பாதாம் பருப்பு போன்ற "நட்ஸ்' வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே, சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.
 - கவிதா பாலாஜிகணேஷ்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/எளிய-வைத்தியம்-3179687.html
3179686 வார இதழ்கள் மகளிர்மணி தோட்டம் அமைக்கலாம் வாங்க...நா.நாச்சாள் DIN DIN Wednesday, June 26, 2019 11:04 AM +0530 வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல. ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும். ஆரோக்கியம் என்றாலே அதற்கு செடி கொடிகள் மரங்கள் போன்றவை அவசியம் தானே. நமக்கு முந்தைய தலைமுறையினர் வரை வீடு என்பது மனிதர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் அதனுடன் வீட்டைச்சுற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான செடி, கொடிகளும் கட்டாயம் இருந்தது. 
இன்றோ இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. மண் தரைகளே இல்லாது அடுக்கிவைத்த வத்திப்பெட்டி போன்ற நவ நாகரீக வீடுகள்.. செருப்பைக்கூட சுதந்திரமாக கழட்ட முடியாத நிலைக்கு வாசல்.. போன் செய்தால் வீட்டிற்கே வரும் உணவு.. பின் ஆரோக்கியம் எங்கிருக்கும். 
இந்நிலையில் செடி வளர்ப்பதும், அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து சில மாதத்திற்குப் பின் கிடைக்கும் சொற்ப விஷயங்களுக்காக வீணாக நேரத்தையும், நிலத்தையும் விரையம் செய்ய முடியுமா? இதெல்லாம் இன்று சாத்தியமா? கைபேசியும் கையும் இணைந்தே இருக்கும் இந்த காலத்தில் மண்ணும் செடியும் நினைக்கவே வேடிக்கையாகவும், புதிதாகவும் தான் இருக்கும். 
ஆனால், ஆரோக்கியமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. உணவிற்கு ஆதாரமே செடி கொடிகளும் மரங்களும் தானே. இவைகள் இல்லாத வீடு உயிரோட்டமில்லாத வாழ்க்கைக்கு சமமே.
ஆம்! ஆத்திர அவசரத்திற்கு நமக்கு தேவையான வீட்டு வைத்தியம் செய்வதற்கு சிலவகை செடிகள் அவசியமல்லவா.. உதாரணத்திற்கு இருமல், சளி, காய்ச்சலுக்கு உடனடி தீர்வைத் தரும் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவைகளும், உடலை குளிர்விக்க வெந்தயக்கீரை, சோற்றுக் கற்றாழை போன்றவைகளும், ரத்தசோகையிலிருந்து நம்மைக் காக்க சிலவகை கீரைகளும் அன்றாடம் அவசியமாகிறதே.. இவைகூட இல்லாத வீடு எவ்வாறு வீட்டிற்கு சமமாகும். 
ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக் கொண்டிருக்கிறது.
சந்தையில் கிடைக்கும் உணவுகளும், அதன் மூலப் பொருட்களான காய்கள், கீரைகள், பழங்கள் மற்ற பொருட்கள் எல்லாமே இன்று அதிகப்படியான ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், மாறுபட்ட விதைகளால் உருவானவைகளாக வலம் வருகிறது. இவற்றை அன்றாடம் உட்கொள்வதால் மனதாலும், உடலாலும் ஆரோக்கியக்கேடு ஏற்படுகிறது. இவற்றிலிருந்து நம்மையும் நமது குழந்தைகளையும் தற்காத்துக் கொள்ள அவசியமாகிறது வீட்டுதோட்டம். 
இந்தியாவில் மழை பொய்த்தது, நிலம் நஞ்சானது, விவசாயிகள் தற்கொலை என பல காரணங்களால் விவசாயம் பொய்க்க, பல நாடுகளில் இருந்து நமக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதியாகிறது. உதாரணத்திற்கு தக்காளி பல நாடுகளில் இருந்து இறக்குமதியானாலும் அவை எந்தவித பாதிப்பும் இல்லாமல் உடையாமல், அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பளபளப்பாக நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்பதற்காக அதில் ஏற்றப்படும் நச்சுக்கள் ஒன்றிரண்டல்ல.. 
தக்காளிகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறுகள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.. இனி பளபளப்பாக இருக்கும் பழங்களையும் பளிச்சென்று இருக்கும் கீரைகளையும் பார்த்தாலே விழித்துக் கொள்ளவேண்டும்.
மண்தரையே இல்லாமல் மொட்டை மாடியிலும் எவ்வாறு தேவையான சத்தான நஞ்சற்ற உணவைப்பெறுவது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறோம். 
ஆம், நவநாகரீக உலகிலும் நமக்கான நமது குடும்பத்திற்கான சத்தான ஆர்கானிக் உணவுகளை எவ்வாறு நாமே நமது வீட்டில் எளிமையாக பெறுவது என்பதை தெரிந்து கொள்ளப் போகிறோம். செலவின்றி வீட்டு தோட்டத்தினை எவ்வாறு வடிவமைப்பது, எதனைக்கொண்டு தோட்டமமைக்கலாம், நாமே நமக்கான காய்கறிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில், விதைகள், மண் கலவை, தண்ணீர் பற்றாக்குறையில் எவ்வாறு குறைந்த அளவு நீரைக் கொண்டு செடிகளை வளர்க்கலாம், பூச்சி, நோய்த்தாக்குதல் என பலவற்றை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ள உள்ளோம். 
இதன்மூலம் தேவைக்கேற்ப பசுமைக் காய்களை பறித்து பயன்படுத்தலாம். வீட்டில் வெயிலால் இறங்கும் சூட்டினை ஆறு முதல் எட்டு டிகிரி வரை இது குறைக்கலாம். உலக வெப்பமயமாக்கலை தடுக்க நம்மால் இயன்ற முயற்சியும் இந்த வீட்டுத் தோட்டமாக அமையும். சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம். 
lifestyle diseases எனப்படும் உடல்பருமன், ரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய், மூட்டு வலி, இருதய நோய், பக்கவாதம், சிலவகை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கலாம். 
ஒவ்வொரு நாளும் தனியாக உடற்பயிற்சி என்று கூட செய்யாமல் தோட்ட வேலைகளை பத்து நிமிடம் பார்த்தால் உடலும் மனதும் அமைதியாகும். இதுவே சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும். குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த வாழ்வியல் பாடத்தையும், அனைத்து சூழலையும் சமாளிக்கும் கலையை எளிதில் கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகள் மண்ணை தொடுவதால் உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும். 
ஏனென்றால், வருங்காலத்தில் புவி வெப்பமயம், மழையின்மை போன்றவை அதிகரிக்கலாம். அதனை சமாளிக்கவும், எதிர் கொள்ளவும் வருங்காலத்தினருக்கு ஏற்றவகையில் இயற்கை தோட்டத்தினை அமைக்கும் கலையை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்ல, மேலும் பலப்பல நன்மைகளை உடலாலும் மனதாலும் நமது சின்னஞ்சிறு வீட்டு தோட்டத்தின் மூலம் பெறலாம். இருக்கும் இடங்களிலும் செலவின்றி வீட்டிலிருக்கும் பழைய பொருட்களையும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையிலும் எளிதாக அடுத்தடுத்த இதழ்களில் தோட்டத்தை அமைக்கும் முறை தொடங்கி செடிகளை வளர்ப்பது, பராமரிப்பது மட்டுமல்லாமல் தரமான, செழிப்பான காய்களையும் கீரைகளை பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் எவ்வாறு பெறுவது வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதனோடு இயற்கை பூச்சிவிரட்டி, செடிவளர்ச்சிக்கு தேவையான பஞ்சகவ்யா, மண்புழு உரம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
(அடுத்த இதழில்)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/தோட்டம்-அமைக்கலாம்-வாங்கநாநாச்சாள்-3179686.html
3179684 வார இதழ்கள் மகளிர்மணி சடை பின்னி சாதனை!   DIN DIN Wednesday, June 26, 2019 10:58 AM +0530 24 மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடைபின்னி சாதனை நிகழ்த்தியுள்ளார் சென்னை, அசோக் நகரை சேர்ந்த அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நமது கலாசார மாற்றத்தாலும், உணவு பழக்க வழக்கங்களாலும் ஆரோக்கியம் குறைந்து பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் தங்களது கூந்தலை இழந்து வருகின்றனர். நவீன காலத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் கூந்தலின் மீது அக்கறை குறைந்துவிட்ட இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சடை பின்னுவதை நாகரிகமாற்றம் என்றும், மிக சிரமமாகவும் நினைப்பதால் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நீளமான கூந்தலை வளர்க்க விரும்புவதில்லை. இதனால் நமது பாரம்பரியமான அழகு கலையில் ஒன்றான சடை பின்னுதல் அழிய தொடங்கி வருகிறது.
ஆங்காங்கே திருமண சடங்குகளிலும், சுப நிகழ்வுகளிலும் காட்சியளிக்கும் சடைகளும் கூட ரெடிமேட் சடைகள், அல்லது போலி (சவுரி) முடியினை வைத்து அழகு படுத்தப்பட்ட சடைகளாகவே இருக்கிறது. 
மேலும், மேலை நாட்டு கலாசாரம் இப்போது படிப்படியாக நம் தமிழ் பெண்கள் தலைகளிலும் கை வைக்க தொடங்கிவிட்டது என்பது நாம் வருந்த வேண்டிய விஷயம்.
சடை பின்னுதல் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. 
இரவு 7.15 மணிக்கு தொடங்கி மறு நாள் இரவு 7.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வின் இறுதியில் 167 பேருக்கு தலைமுடி பின்னப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வானது முறையாக கின்னஸ், மற்றும் யுனிக் வோர்ல்டு ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து நடத்தப்பட்டது, அதன் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றி சடைபின்னுதல் சரியான முறையில் பின்னப்பட்டதா என்பதை அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள் நேரடியாக கண்காணித்தனர்'' என்றார். 
கூடுதலாக இந்த உலக சாதனை முயற்சியின் காட்சி ஆதாரத்திற்காக 6 வீடியோ கேமராக்கள், 4 சிசிடிவி கேமராக்கள் என 10-க்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் 24மணி நேரமும் பதிவு செய்யப்பட்டது. சாதனை நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் இதனை புதிய உலக சாதனை "Most Head's Braided in 24 Hours" என பதிவு செய்தும், வாசுகி மணிவண்ணனை உலக சாதனையாளராக அங்கீகரித்தும், உலக சாதனை சான்றிதழினை Unique World Records Limited-இன் தலைமை தீர்ப்பாளர் மற்றும் "சாதனை சிகரம் கிரியேஷன்ஸ்' தலைவர் ரஹ்மான் வழங்கி கௌரவித்தார். 
- ஜி.அசோக்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/சடை-பின்னி-சாதனை-3179684.html
3179681 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்! 22 - பாரததேவி DIN DIN Wednesday, June 26, 2019 10:54 AM +0530 'சரி அப்படித்தான் மயங்கி விழுந்த என் பொண்ண ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போவ வழியில்லாம எங்க வீட்டுக்கே அனுப்பி வச்சிட்டீங்க'' என்றதும்.
 சங்கரி அவசரமாக, "இல்லங்க நாங்க ஆசுபத்திரிக்குப் போகத்தேன் நெனச்சோம். ஆனா, உங்க மவ என்ன உடனே எங்க வீட்டுல கொண்டு போயி விடறீங்களா, இல்லயான்னு ஒரே கூப்பாடு போட்டா நாங்க என்ன செய்ய முடியும். நீங்களே அவகிட்ட கேளுங்க'' என்றவள் ""தாயீ, தாயீ'' என்று கூப்பிட்டாள்.
 "வீட்டுக்கு வந்த மருமகள கௌசிகான்னு கூப்பிடக் கூட உங்களுக்கு கசக்குதோ'' என்றார் கனகராசு ஏளனமாக.
 "அய்யய்யோ அதெல்லாம் இல்லீங்க, அந்தப் பேரு என் வாய்க்குள்ள நுழையமாட்டேங்கு'' என்றாள் சங்கரி.
 "பட்டணத்து ஆளுங்க அவங்களுக்கு என்ன தெரியுமீன்னு ரொம்ப லேசா நினைச்சிராதீக, இந்த மாதிரியெல்லாம் கொடுமை பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா, வரதட்சணை கொடுமைன்னு உங்க எல்லாரையும் போலீசுல எழுதி வச்சிருவேன்'' என்றார் கனகராசு.
 அவர் சொன்னதைக் கேட்டதும் சங்கரி மட்டுமல்ல தங்கராசுவும் அரண்டு போனான்.
 அந்த கிராமத்து ஆட்கள் இதுவரை போலீஸ் என்று சும்மா தமாசுக்குக் கூட பேசியதில்லை. அதோடு போலீசும் இன்று வரை அந்த ஊருக்குள் வந்ததுமில்லை.
 சங்கரிக்கு வருத்தமென்றால் சொல்ல முடியாது. தங்கராசுவிற்கு பொண்டாட்டி மீதே வெறுப்பு வந்துவிட்டது.
 "என்ன தம்பி சின்ன விசயத்துக்கெல்லாம் போயி பெரிய, பெரிய வார்த்தயப் பேசிக்கிட்டு இருக்கீக. இது வரைக்கும் உங்க மகள வெடுக்கின்னு ஒரு வார்த்த சொல்லியிருப்போமா? தங்கமின்னு தாங்கி... ஏலமின்னு ஏந்தியில்ல வச்சிருக்கோம்'' என்றாள் சங்கரி. அவள் குரல் நொந்து, நூலாகிக் கிடந்தது.
 "நாங்க கொடுமைக்காரகன்னு நெனச்சா, நீங்க தாராளமா உங்க மகள கூட்டிட்டு போகலாம். இங்க யாரும் தடுக்கல'' என்று சொல்லிவிட்டு தங்கராசு அங்க நிற்கப் பிடிக்காமல் வெளியேறினான்.
 "பாத்தீங்களா, பாத்தீங்களா உங்க புள்ள எப்படி பேசிட்டு போறார்''ன்னு
 " ஆமா தம்பி, எனக்கும் அப்படித்தேன் தோணுது. உங்க மவளுக்கு இங்க ஒரு கொடுமையும் நடக்கல அப்படி நடக்கிறதா நெனச்சா, நீங்க உங்க மவள இங்க விட வேண்டாம். கூட்டிட்டுப் போங்க'' என்ற சங்கரி, ""நானு, ஆடுகளுக்கு தண்ணிவிடணும், கோழிகளுக்கு தவுடு பெணஞ்சி போடணும். எனக்கு நிறைய வேலை இருக்கு'' என்றவள் தொழு பக்கமாக நடந்தாள்.
 "இவளால மாடுகளுக்கு பாதுகாப்பு இல்லாம வெட்ட வெளி பொட்டல்ல கட்டியிருக்கோம். எவனும் அவுத்துட்டுப் போனாலும் ஏன்னு கேப்பாருல்ல, வந்துட்டான் நாயம் பேச' என்று தனக்குள்ளே எண்ணி மறுகினாள் சங்கரி.
 "அப்ப, நானு போய்ட்டு வாரேன்'' என்று கனகராசு வந்து சொல்லவும் முகத்தைச் சுளித்தாள் சங்கரி.
 " உங்க மவள அதேன் எம்மருமவளயும் கூட்டிட்டுப் போ தம்பி , எங்க மேல எப்ப நம்பிக்க வருதோ அப்பக் கொண்டாந்துவிடுங்க''.
 "அவளக் கெஞ்சி, கெஞ்சி கூப்புட்டாச்சி. அவ இந்த குப்பயிலயாச்சிலும் இருப்பேன்னு சொல்றாளே தவிர. அங்கே வரமாட்டங்கராளே என்ன செய்றது?''
 "அப்ப எங்கள இனிமே குத்தங், கொறச் சொல்லாம உங்க மவகிட்ட சொல்லிட்டுப் போங்க'' என்றவள் அங்கே நின்ற பாண்டியனிடம்.
 " ஏலேய் பாண்டி, நம்ம வீட்டுக்கு வந்த மாமா வெறுங்கையோட ஊருக்குப் போவக் கூடாது. அஞ்சாறு தேங்காயும், அரமூட நெலக்கடலையும் கொண்டு போயி பஸ் ஸ்டாண்டுல கொடுத்துட்டு வா'' என்றாள் கரிசனத்தோடு.
 அன்று தன் அறைக்குள் நுழைந்த தங்கராசுவிற்கு கௌசிகாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை "என்னென்ன தப்பை அவள் செய்கிறாளோ அதை அப்படியே போய் அழுகையும், கண்ணீருமாய் தன் மீது திருப்பிவிட்டு விடுகிறாள். இவள் அப்பனும், ஆத்தாளும் அவள் சொன்னதை அப்படியே நம்பிவிடுகிறார்கள். இப்படி நடந்தது உண்மைதானா? என்று தன்னிடம் ஒரு வார்த்த கேக்க மாட்டேங்காங்க' என்று கோபத்தோடு நினைத்தவன், கௌசிகா அறைக்குள் நுழையுமுன்பே சுவர் பக்கமாய் தூங்குவது போல் படுத்துக் கொண்டான்.
 கணவனின் கோபத்தை நன்றாகவே அறிந்திருந்தாள் கௌசிகா. அவள் எண்ணமெல்லாம் எப்படியாவது இவனை நம்ம கூடப் பட்டணத்திற்கு கூட்டிப்போய் விட வேண்டுமென்ற, ஒரே எண்ணத்தில்தான் இருந்தாள்.
 அன்று அவள் ரோசாப்பூ நிறத்தில் மெல்லிய நைட்டி அணிந்திருந்தாள். அதே நிறத்தில் உதட்டில் லைட்டாக லிப்ஸ்டிக். கூந்தலை வாரி தளரப் பின்னி முன்னால்விட்டு அதற்கு ஒரு மணிச் சலங்கையை கொத்தாக கோர்த்திருந்தாள். புருவங்களிலும், கண் இமைகளிலும் மஸ்காராவும், மையும் தனி அழகு கூட்டித் தெரிந்தது. முகத்தில் ரோஸ் வண்ணப்பவுடர். சடையின் கீழ்பக்கமாக வளைத்து மேலே கொண்டு வந்த மல்லிகை மொட்டு மெல்ல மலரத் துடித்துக் கொண்டிருந்தது. தான் கொண்டு வந்த பாதாமை அரைத்து, ஏலக்காயோடு சேர்த்து ஒரு டம்ளர் நிறைய பாலோடு வந்து நின்றாள்.
 தங்கராசுவிற்கு எல்லா வாசனையும் கூடியதில் இமைகள் பொருந்த மறுத்தன எப்போது கண்ணை திறந்து பொண்டாட்டியைப் பார்ப்போமென்று அவன் மனம் தவித்தது. ஆனாலும் அவனைவிட்டு மெல்ல, மெல்ல அவிழும் வைராக்கியத்தோடு கண்ணை மூடிக் கொண்டிருந்தான்.
 கௌசிகா மெல்ல அவன் அருகில் வந்து அவனின் சுருண்ட ரோமம் படர்ந்த நெற்றியில் தன் பூ இதழால் முத்தமிட்டாள். பிறகு, ""தூங்குங்க நான் இங்கேயிருந்தால் உங்களை தூங்க விட மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு கால் கொலுசு சத்தம் கேட்க வெளியே போவது போல் பாவனை செய்தாள்.
 இத்தனை நேரமும் அவனோடு போராடிக் கொண்டிருந்த இமைகள் சட்டென திறந்து கொண்டன. அவளின் அழகைப் பார்த்தபோது அவனிடமிருந்த கோபமெல்லாம் சூறாவளிக் காற்றாய் சுழன்று அவள் மீதிருந்த குற்ற உணர்வையெல்லாம் அடித்துக் கொண்டு போயே போனது.
 கட்டிலிலிருந்து இறங்கியவன் தாவி அவளை அணைத்தான். அவள் அழகும், அவளுக்குள்ளிருந்த வாசனையும் அவனை உணர்ச்சி வசப்படச் செய்தது.
 தங்கராசு மீது படுத்துக் கொண்ட கௌசிகா, அவனிடம் குறும்புகள் செய்து கொண்டே "உக்கும் இம்புட்டு ஆசை இருக்குறவர்தான் என்னை வந்து கூட்டிட்டு வந்துட்டீங்களாக்கும்'' என்றாள் பொய் கோபத்தோடு.
 "அதேன் நீயே வந்திட்டயே...''
 "அய்யோ அதுக்கு நானு என்ன பாடுபட்டேன்னு தெரியுமா? உங்களப் பாக்கணுமின்னு நான் ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம தவிச்சுட்டேன். இனியும் பொறுக்க முடியாதுன்னுட்டு அப்பாவ கூட்டிக்கிட்டு வந்துட்டேன்'' என்று அவள் சொன்னபோது தங்கராசுக்கு அவள்மீதிருந்த ஆசை இன்னும் கூடிப்போனது.
 அன்று கருதறுப்பு நெல் கருதறுப்பு என்றால் நெல் மூட்டைகள் வீடு வந்து சேரும் வரை விவசாயிகளுக்கு பயம் அடி வயிற்றில் தேளாய் கொடுக்கைத்தூக்கிக் கொண்டு அலையும். ஆள் கிடைக்க மாட்டார்கள். ஆள் கிடைத்தால் களம் கிடைக்காது.
 கருது அடிக்க களம் கிடைத்தால் பிணையலுக்கு மாடுகள் கிடைக்காது. இது போக வானத்தில் அவ்வப்போது வெண்மேகங்கள் கருமேகங்களாகி இவர்களை குலை நடுங்கச் செய்யும். சட, சடவென்று ஒரு ஐந்து நிமிஷத்திற்கு தூத்தல் விழுந்தாலும் போதும். ஆறுமாதமாக இரவென்றும், பகலென்றும் பார்க்காமல் உழைத்த அத்தனை உழைப்பும் பாழாகிவிடும். களத்தில் சிந்திய நெல் எல்லாம் மழை நீரில் முளைத்துவிடும்.
 அதனால் சங்கரியிலிருந்து கமலா வரை வயலிலும், களத்திலும் தான் கிடந்தார்கள். இவர்கள் காட்டிலேயே வேலை செய்யும் வீரணணுக்கு வயலே தஞ்சமென்று ஆகிவிட்டது. காலை நான்கு மணிக்கு எழுந்து அடுப்பு வேலையை முடித்துவிட்டு தூக்குச் சட்டியோடு வேலைக்குப் போகிறவர்கள்தான். இரவிலும் அங்கேயே கிடந்தார்கள்.
 கௌசிகாவிற்கு வீட்டிற்குள்ளிருந்து, இருந்து போரடித்துவிட்டது. அன்றுதான் தங்கராசு வீட்டுக்கு வந்தான். ஒருவழியாக நெல் கருதை அடித்து முடித்தாகிவிட்டது. நாளைக் காலையில் வியாபாரியை கூட்டி வந்து வீட்டுக்குப் போக மீத நெல்லை அளந்துவிட்டால் போதும். பட்ட பாட்டுக்கு பழுது இல்லாமல் பணமும் வந்து சேர்ந்துவிடும். நிம்மதியாகவுமிருக்கும். ஆனால் இன்றைக்கென்று வானத்தில் கருமேகங்கள் திட்டுத் திட்டாக கூடி, கூடி குலாவின. சங்கரியிலிருந்து கமலா வரைப் பதட்டத்திலிருந்தார்கள்.
 "ஆத்தா மாரி, நாங்க நெல்ல அள்ளி வீடு சேர்க்கும் வரைக்கும் ஒரு தூத்தலு பொட்டுன்னு தரையில விழுவக் கூடாது.
 அப்படி நீ செஞ்சிட்டேன்னா உனக்கு வெண் பொங்க வச்சி, வெள்ளச் சாவல களுப் போடுதேன்' என்று கோயிலுக்கு நேந்திருந்தாள் சங்கரி.
 கருதறுப்பு ஆரம்பமாகும் போதே தங்கராசு கௌசிகாவிடம், "கருதறுப்பு வேல நடக்கப் போவுது கௌசி, உன்னக் கூட்டிட்டுப் போயி உங்க வீட்டுல விட்டுட்டு வாரேன். ஒரு அஞ்சாறு நாளைக்கு இரு. பெறவு நானே வந்து உன்ன கூட்டிட்டு வந்துரேன்'' என்று கெஞ்சினான்.
 அவளோ, "இப்பத்தான் நான் ஊருல இருந்து வந்திருக்கேன். மறுபடியும் இப்பவே நானு திரும்பிப் போனா என் பிரண்ட்ஸ்கள்லாம் கேலி பண்ணுவாக'' என்று மறுத்துவிட்டாள்.
 - தொடரும்..

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/என்-பிருந்தாவனம்-22---பாரததேவி-3179681.html
3179667 வார இதழ்கள் மகளிர்மணி அடையாளம் தெரியாமல் மாறிப்போனேன் - சமீரா ரெட்டி Wednesday, June 26, 2019 10:51 AM +0530 1997-ஆம் ஆண்டு பங்கஜ் உதாஸின் "அவுர் அஷிஷ்டா' என்ற இசை ஆல்ப வீடியோவில் இடம்பெற்ற 17 வயது இளம் பெண் ஒருவர், கேபிள் டிவி பிரபலமாகாத அந்த சமயத்தில் நாடுமுழுவதும் பலரது கவனத்தை கவர்ந்தார். அப்படி பார்த்தவர் மனதில் பதியும் முகப்பொலிவு, கவர்ச்சிகரமான புன்னகையுடன் கூடிய முகம் என வசிகரித்தவர் சமீரா ரெட்டி. அதன்பின்னர், சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். அக்ஷய் வார்தே என்ற தொழிலதிபரை மணந்து நான்காண்டுகளுக்கு முன் ஹன்ஸ் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகி, மீண்டும் தாய்மை அடைந்துள்ள சமீரா ரெட்டி, பிரசவத்திற்குப் பின் எப்படி பழைய நிலைமைக்குத் திரும்பினார் என்ற அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 "நான்காண்டுகளுக்கு முன் முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கர்ப்ப காலத்தில் எடை கூடுவது இயற்கைதானே என்று நான் சற்று அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியபோது, இது நான் தானா என்ற சந்தேகம் எழுந்தது. மருத்துவ பரிசோதனை செய்தபோது "ப்ளசென்ட்டா ப்ரிவிலா' என்ற பாதிப்பு காரணமாக எடை கூடியிருப்பது தெரிந்தது. ஐந்து மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும், தினமும் இன்ஜெக்ஷன் போட வேண்டுமென்றும் கூறினார்கள். தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி, பார்ட்டி என்றிருந்த எனக்கு திடீரென முழு ஓய்வு எடுக்க வேண்டுமென்று கூறியது, ஏதோ என்னை தனிமை படுத்துவதை போல் தோன்றியது. பிரசவத்துக்குப் பின்னரும் எடை குறையவில்லை. 32 கிலோ அதிகரித்திருந்தது என்னை நானே கண்ணாடியில் பார்க்க அச்சப்பட்டேன். புகைப்படம் எடுக்கவும் யாரையும் அனுமதிக்கவில்லை குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டேன்.
 மனதை தளரவிடாமல் எடையை குறைக்க நடவடிக்கைகளை மேற் கொண்டேன். ஹோமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்தேன். கவுன்சிலிங் எடுத்துக் கொண்டேன். பிரவசத்திற்கு முன்பும், பின்னரும் நினைத்ததை எல்லாம் சாப்பிடும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டேன். வீட்டு வேலைகளை நானே செய்யத் தொடங்கினேன். முதல் ஓராண்டிற்குள் உடல் எடை. 102 கிலோவிலிருந்து 15 கிலோ குறைந்தது.
 என் தேவைகளை நானே செய்யத் தொடங்கினேன். தனி பயிற்சியாளரையோ, டயட்டீசீயனையோ அமர்த்திக் கொள்ளவில்லை. ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவில் சேர்ந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன். இது எனக்கு அனுகூலமாக இருந்தது. ஏறிய எடையை குறைப்பது கடினமென்று சொல்வதை தவறு என நிரூபிக்க வீட்டு சாப்பாட்டைத் தவிர வேறு உணவுகளை சாப்பிடவில்லை. இப்போது 30 கிலோ குறைந்து முதல் பிரசவத்திற்கு முன் இருந்த நிலைக்கு திரும்பிவிட்டேன்.
 நான் அதிக எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்ப என்னுடைய கணவர் அக்ஷய் வார்தே பெரும் உதவியாக இருந்தார். இரண்டாவது குழந்தைக்கு தயாரா? என்று அவர் கேட்டபோது, எனக்கு எப்போதுமே இரண்டு குழந்தைகள் வேண்டுமென்று சொன்னேன். தற்போது 38 வயதாகும் நான் இரண்டாவது குழந்தையை பெறத் தயாராகிவிட்டேன். ஜூலை மாதம் பிரசவத்தை எதிர்பார்க்கிறேன்.
 இந்த முறை எடை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக தினமும் துடிப்புடன் செயல் படுகிறேன். கர்ப்பிணிகள் நீச்சல் செய்வது களைப்பை போக்கும் என்று கூறியதால் ஸ்விம்மிங் செய்கிறேன். ஏற்கெனவே எனக்கு ஓரளவு ப்ளசென்ட்டா ப்ரிவிலா பாதிப்பு இருப்பதால் அதை குறைக்க யோகா பயிற்சியும் செய்கிறேன்.
 என்னுடைய கணவர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் வைத்திருப்பதால் அவருக்கு உதவியாக இருக்கிறேன். என்னுடைய இரண்டாவது பிரசவம் எங்களைப் பொருத்தவரை ஒரு விழாவாகவே கருதுகிறோம். என்னுடைய சமீப கால தோற்றத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை பார்த்த சிலர், கர்ப்பமுற்றிருப்பதை வெளியிட்ட முதல் தென்னிந்திய நடிகை நீங்கள் தான் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மீண்டும் என் தோற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வர எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதை மற்ற பெண்களுக்கு தெரிவிக்கவே இதை வெளியிட்டேனே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை'' என்றார் சமீரா ரெட்டி.
 - பூர்ணிமா
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/அடையாளம்-தெரியாமல்-மாறிப்போனேன்---சமீரா-ரெட்டி-3179667.html
3179671 வார இதழ்கள் மகளிர்மணி திரையுலகில் 20 ஆண்டுகள் Wednesday, June 26, 2019 10:49 AM +0530 2000-ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டபின், பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, உச்சத்தைத் தொட்ட நடிகையானார். தற்போது தன்னுடைய 20-ஆண்டு கால நினைவுகளை "அன்ஃபினிஷ்ட்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறார். "என்னுடைய வாழ்க்கை இன்னும் முடியவில்லை. சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை ஒரு சாதாரண பெண் என்ற கோணத்தில் பார்க்க விரும்புகிறேன். வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே, நான் எழுதும் புத்தகத்திற்கு "அன்ஃபினிஷ்ட்' என்று தலைப்பிட்டுள்ளேன்'' என்கிறார் பிரியங்கா சோப்ரா.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/திரையுலகில்-20-ஆண்டுகள்-3179671.html
3179672 வார இதழ்கள் மகளிர்மணி நடன நிகழ்ச்சி நடுவராக கரீனா கபூர் Wednesday, June 26, 2019 10:48 AM +0530 பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் கான். தற்போது "டான்ஸ் இந்தியா டான்ஸ்' என்று டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளார். "கிளாசிகல் நடனம் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் உள்ளது. எங்கள் குடும்பத்தில் ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் அனைவருமே அவரவர் பாணியில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்ததுண்டு. இப்போது டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பது உள்ளுக்குள் சற்று உதறலாக இருந்தாலும், என்னுடைய மனசாட்சிப் படி நியாயமாக சிறந்தவர்களை தேர்வு செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று கரினா கபூர் கூறியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/நடன-நிகழ்ச்சி-நடுவராக-கரீனா-கபூர்-3179672.html
3179675 வார இதழ்கள் மகளிர்மணி "சின்ட்ரல்லா' படத்தில் மூன்று வேடங்கள் Wednesday, June 26, 2019 10:48 AM +0530 படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள மூன்று வித்தியாசமான கதைகளைக் கொண்ட "சின்ட்ரல்லா' படத்தில் நடிக்கும் ராய்லட்சுமி, சின்ட்ரல்லாவாகவும் ராக் ஸ்டாராகவும் நடிக்கிறாராம். மூன்றாவது வேடம் என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறும் ராய் லட்சுமி, "திகில் படத்தில் வித்தியாசமான கேரக்டர்கள் இருப்பது தெரிந்ததால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அடுத்து வரும் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்திருப்பதால் கதைக்கேற்ப உடல் எடையை குறைத்து அதிக சக்தியைப் பெற்றிருப்பது ஒரு புதுமையான அனுபவம்'' என்கிறார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/சின்ட்ரல்லா-படத்தில்-மூன்று-வேடங்கள்-3179675.html
3179678 வார இதழ்கள் மகளிர்மணி கபில்தேவ் வரலாற்று படத்தில் தீபிகாபடுகோன்   Wednesday, June 26, 2019 10:48 AM +0530 1983-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதை மையமாக வைத்து "83' என்ற தலைப்பில் எடுக்கப்படும் கபில்தேவ் வரலாற்று படத்தில் கபில்தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க கபில்தேவ் மனைவி ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன் நடிக்கிறார். கடந்த அக்டோபரில் திருமணம் செய்து கொண்ட ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் இந்த படத்தில் தம்பதியாக நடிப்பது புதிதல்ல திருமணத்திற்கு முன் ஏற்கெனவே இருவரும் "கோலியான் கீ ராஸ்லீலா', "ராம் லீலா', "பாஜிராவ் மஸ்தானி', "பத்மாவத்' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/கபில்தேவ்-வரலாற்று-படத்தில்-தீபிகாபடுகோன்-3179678.html
3179680 வார இதழ்கள் மகளிர்மணி யாமி கவுதமுக்கு ஜாக்கிசான் அனுப்பிய பரிசு DIN DIN Wednesday, June 26, 2019 10:47 AM +0530 2017-ஆம் ஆண்டு வெளியான "காபில்' என்ற படத்தில் யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் கண் பார்வையற்ற காதலர்களாக நடித்திருந்தனர். அண்மையில் இந்தப் படம் பீஜிங் நகரத்தில் திரையிடப்பட்டபோது அதன் புரமோஷனுக்காக யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் சீனா சென்றிருந்தனர். அப்போது யாமி கவுதமுக்கு பாரம்பரிய போர்வை ஒன்றை பிரபல நடிகர் ஜாக்கிசான் பரிசாக அனுப்பியிருந்தார். "சிறுவயது முதலே ஜாக்கிசான் ரசிகையான நான், அவர் இந்தியா வந்தபோது, சந்திக்க முடியாமற் போய்விட்டது. இப்போது நான் பீஜிங்கில் இருப்பதை அறிந்து இந்த நினைவு பரிசை அவர் அனுப்பியது என்னை நெகிழ வைத்தது. விரைவில் அவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் யாமி கவுதம்.
 - அருண்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/யாமி-கவுதமுக்கு-ஜாக்கிசான்-அனுப்பிய-பரிசு-3179680.html
3179679 வார இதழ்கள் மகளிர்மணி திகில் படங்களை பார்க்கப் பயப்படும் நடிகை Wednesday, June 26, 2019 10:47 AM +0530 'திகில் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பயம். தேவையின்றி பயப்பட நான் விரும்புவதில்லை. நானே திகில் படத்தில் நடித்திருந்தாலும் பார்க்க மாட்டேன் என்று கூறும் காத்ரீனா கைப்பிற்கு கதையம்சமும், பாடல்களும் நிறைந்த படங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகமாம். பழைய படங்களை திரும்ப எடுத்தால் ஆங்கில படமான "கான் வித் தி விண்ட்' படத்தில் நடிக்க தயார்'' என்கிறார் காத்ரினா கைப்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/திகில்-படங்களை-பார்க்கப்-பயப்படும்-நடிகை-3179679.html
3179669 வார இதழ்கள் மகளிர்மணி நங்கை உணவகம்! DIN DIN Wednesday, June 26, 2019 10:30 AM +0530 தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்து நகர் பகுதியில் ஆரோக்கிய புரம் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது அந்த உணவகம். பெயரே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆம்!. அந்த உணவகத்தின் பெயர் "நங்கை உணவகம்'. உணவகத்தின் உரிமையாளர் ஒரு திருநங்கை. அவரது பெயர் காயத்ரி.
 அரசுப் பணிகளில், காவல் பணிகளில் திருநங்கை இடம் பெற்று விட்டாலும், உணவு சம்பந்தப்பட்ட துறையில் கால் பதித்து அனைவரும் ருசித்து உண்ணும்படி உணவுகளை சமைத்து பெயர் பெற்று வருகிறார் திருநங்கை காயத்ரி. ஏழைத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடையேயும் நங்கை உணவகத்துக்கு தனி மவுசு தான். ஆச்சரியத்துக்கு காரணமான நங்கை உணவகத்தின் உரிமையாளரான 25 வயது திருநங்கை காயத்ரி, உணவகம் குறித்தும், தனது எதிர்காலத் திட்டம் குறித்தும் தொடர்கிறார்:
 "எனது சொந்த ஊர் தூத்துக்குடி தாளமுத்துநகர். 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். உடன் பிறந்தவர்கள் 7 பேர். நான்கு அக்கா. மூன்று அண்ணன். 8 ஆவதாக பிறந்த எனக்கு வீட்டில் செல்லம் அதிகம். பிறப்பில் ஆணாக இருந்த எனக்கு பெற்றோர் வைத்த பெயர் சஞ்சீவி.
 5 -ஆம் வகுப்பு படிக்கும்போது எனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. உடன் படித்தவர்களிடம் தெரிவித்தபோது எள்ளி நகையாடினர். குடும்பத்துக்கும் தெரியவந்தது. சில ஆண்டுகள் ஓடினாலும் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், 14 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினேன்.
 என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் கட்டட தொழிலுக்கு சித்தாள் வேலைக்குச் சென்றேன். பின்னர் உப்பளத் தொழிலுக்கு சென்றேன். அப்புறம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டேன். சில இடங்களில் வேலை செய்த போதிலும் எப்படியாவது சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

 சமையல் தெரியும் என்பதால் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வங்கி கடனுதவி பெற்று "நங்கை உணவகம்' என்ற பெயரில் டிபன் சென்டரை தொடங்கினேன். காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல் ஆகியவை சமைத்து விற்பனை செய்கிறேன்.
 உணவகத்துக்கு சாப்பிட வருவோர் யாரும் முகம் சுளிக்கவில்லை. வீட்டில் ஒருத்தியாக என்னை நினைத்து அக்கா சட்னி நன்றாக உள்ளது, சாம்பார் சூப்பர் என புகழ்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். அவர்களின் பாசம் என் மனதுக்கு திருப்தியாக உள்ளது.
 தொடக்கத்தில் குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தற்போது அண்ணன், அக்கா வீடுகளுக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருவேன். அவர்களும் என்னை பாசத்தோடு ஏற்கின்றனர். தற்போது 18 வயது திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்.
 நங்கை உணவகம் போல, தூத்துக்குடியில் மேலும் நான்கு உணவகங்கள் தொடங்கி அதில் திருநங்கைகளை உரிமையாளராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்'' என்றார் மிகவும் தன்னம்பிக்கையோடு.
 - தி. இன்பராஜ்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/26/நங்கை-உணவகம்-3179669.html
3174758 வார இதழ்கள் மகளிர்மணி நடிகை மாதவியின் புதிய அவதாரம்..! Thursday, June 20, 2019 10:41 AM +0530 "தில்லு முல்லு', "ராஜபார்வை', "டிக் டிக் டிக்' போன்ற படங்களில் நடித்த மாதவியை மறக்க முடியுமா..?
பதினேழு ஆண்டுகள் நடிகையாக இருந்த மாதவி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்கள் உட்பட சுமார் முன்னூறு படங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆனதும் அமெரிக்க வாசம் என்பதினால் எல்லா படவுலகுக்கும் முழுக்கு போட்டுவிட்டு போனார். இப்படி பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா சென்றாலும் சில நடிகைகள் மீண்டும் நடிக்க வந்தனர். ஆனால் மாதவி போனவர் போனதுதான். திரைப்படவுலகை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் நாற்பது ஏக்கர் பரப்புள்ள மனையில் கட்டப்பட்ட பங்களாவில் மாதவி வசித்து வருகிறார். மாதவிக்கு திருமணம் நடந்தது 1996- இல். கணவர் ரால்ஃப் பாதி இந்தியர். பாதி ஜெர்மன்காரர். மாதவி - ரால்ஃபிற்கு மூன்று மகள்கள்.
வீட்டு நிர்வாகத்துடன் கணவரின் பிசினஸ்சிலும் உதவும் மாதவி புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். விமான ஓட்டியாக பயிற்சி பெற்று லைசென்சும் வாங்கிவிட்டார். சொந்த விமானம் இருந்தும் விமானத்தில் போக வேறொரு பைலட்டின் துணை வேண்டியிருக்கிறதே என்று நினைத்த மாதவி விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்து தேர்வும் பெற்றுவிட்டார். மாதவி இப்போது விமானத்தை தானே ஒட்டி பறக்கிறார்..! அநேகமாக இந்திய நடிகைகளில் விமானம் ஓட்டத் தெரிந்த நடிகை மாதவியாகத்தான் இருப்பார்.!
- சுதந்திரன்

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/நடிகை-மாதவியின்-புதிய-அவதாரம்-3174758.html
3174757 வார இதழ்கள் மகளிர்மணி விண்வெளி ஆய்வு பயிற்சியில் தேனி மாணவி!   DIN DIN Wednesday, June 19, 2019 12:00 PM +0530 தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகா. அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவியான இவர், போலந்தில் விண்வெளி ஆய்வுப் பயிற்சி பெறுவதற்கு தேர்வாகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும்.
 ஆம். தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை தமிழ் வழிக் கல்வி பயின்ற உதயகீர்த்திகா, உக்ரைன் நாட்டில் உள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக் கழகத்தில் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை 92.5 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இம்மாதம் நிறைவு செய்கிறார்.
 அதனடிப்படையில், உதயகீர்த்திகாவிற்கு தற்போது போலந்து நாட்டில் உள்ள அனலாக் ஆஸ்ரோநட் பயிற்சி மையத்தில் போலந்து, ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், விண்வெளி ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பயிற்சிக்கு சர்வதேச அளவில் 20 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், இந்தியாவில் இருந்து உதயகீர்த்திகாவும் ஒருவர். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "மகேந்திரகிரியில், இஸ்ரோ சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டியில், கடந்த 2012-இல் நான் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சமர்பித்த கட்டுரைக்கும், 2014-இல் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த போது சமர்பித்த கட்டுரைக்கும் முதல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசுகள் விண்வெளி ஆய்வு படிப்பின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 பிளஸ் 2 முடித்தவுடன் ஐ.ஐ.டியில் சேர்வதற்கு முயற்சித்தேன். அப்போது, உக்ரைனில் உள்ள கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது.
 எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தால் அங்கு ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் படித்து வருகிறேன். இந்த நிலையில் தற்போது போலந்து நாட்டில் அனலாக் ஆஸ்ரோநட் பயிற்சி மையத்தில் போலந்து விண்வெளி ஆய்வு பயிற்சி பெற தேர்வாகியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு உடல் மற்றும் மன ரீதியிலான தகுதி குறித்து 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
 வரும் 2021-இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் நானும் தேர்வு பெற்று, இஸ்ரோவில் இருந்து விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் மற்றும் லட்சியம்.
 உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்கு பொருளாதாரம், மொழி ஒரு பிரச்னை இல்லை. தமிழ் மொழியை ஊன்றிக் கற்றவர்கள், எம்மொழியையும் எளிதில் கற்கலாம். பள்ளிப் பருவத்தில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டிகளில் இணைய தள உதவியுமின்றி, புத்தகங்களை படித்து தான் கட்டுரைகளை சமர்பித்து பரிசு பெற்றேன். இலக்கை நோக்கிய திட்டமிட்ட நகர்வு, விடாமுயற்சி, லட்சியம் ஆகியவை நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்லும்'' என்றார் அவர்.
 - கோ.ராஜன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/விண்வெளி-ஆய்வு-பயிற்சியில்-தேனி-மாணவி-3174757.html
3174752 வார இதழ்கள் மகளிர்மணி தன்னம்பிக்கை தரும் "தன்யா' DIN DIN Wednesday, June 19, 2019 11:29 AM +0530 முன்னேறத் தூண்டும் பேச்சாளராக இருந்து கொண்டே பல ஆன்லைன் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர் தன்யா ரவி. ‘Brave Bangle Award 2012’ மற்றும் Annual Inspired Indian Foundation (IIF) Award 2014, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கு சேவை செய்ததற்கான தேசிய விருது.. என்று பல விருதுகளும் தன்யாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. வெறும் தலைவலி வந்தால் பலரும் துடிதுடித்துப் போவார்கள். மூட்டு வலி என்றால் நடக்க முடியலையே என்று அரட்டுவார்கள். வாழ்க்கை முழுவதும் இரு சக்கர தள்ளு வண்டியில்தான் என்றாகிவிட்ட நிலையிலும் முடக்கிப் போடும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியிருப்பவர் தன்யா. 
தன்யா கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். கடந்த 29 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தடவைகள் தன்யாவுக்கு எலும்பு அறுவை சிகிச்சை நடந்திருக்கின்றன. ஏன்.. எதற்கு என்ன ஆச்சு என்ற கேள்விகளுக்கு தன்யாவே விளக்கம் தருகிறார்: 
"நான் பிறந்தது பெங்களூருவில். பிறந்த வருஷம் 1989. அம்மாவுக்கு சுகப் பிரசவம். பிறக்கும் போது எந்த குறையும் இல்லை. சில நாட்களில் நான் தொடர்ந்து அழ ஆரம்பித்திருக்கிறேன். நிறுத்தாமல் அழுகை தொடரவே பெற்றோர்கள் என்னை மருத்துவர்களிடம் காட்டினார்கள். பலனில்லை. பல மருத்துவர்களிடம் மாறி மாறி காட்டினார்கள். ஆனாலும் எனது அழுகை நின்றபாடில்லை . கடைசியில் ஒரு டாக்டர் என்னை அரிய நோயான "ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' (Ostrogenesis Imperfecta) தாக்கியுள்ளதாகக் கண்டுபிடித்தார். இந்த நோய் வந்தால் எலும்புகள் பலமில்லாமல் மென்மையாக இருக்கும். சின்ன குலுக்கலையும் தாங்க முடியாமல் ஒடிந்து போகும். எழுந்து நடக்க முடியாது... எதையும் தூக்க முடியாது. இவ்வளவு ஏன்... கை காலை வேகமாக அசைக்க முடியாது. இருமல், தும்மல் வந்தால் கூட அந்த அசைவில் எலும்புகள் ஒடிந்து போகும். அந்த அளவுக்கு எலும்புகள் சக்தியில்லாமல் அமைந்திருந்தன. இதுவரைக்கும் முன்னூறுக்கும் அதிகமாக எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னால் மற்ற குழந்தைகள் போல ஓடியாடி விளையாடுவது இருக்கட்டும்... சில அடிகள் கூட நடக்க முடியாது என்றாகிவிட்டது. தொடர் எலும்பு முறிவு ஏற்பட்டதினால், நான் வீட்டில் இருந்த நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில்தான் வசித்தேன். 

சில தருணங்களில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் உடலில் எங்காவது எலும்பு உடைந்து போகும். வலியால் அலறுவேன். வீட்டிற்குப் போகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்புவோம். இப்படி பல முறை நடந்துள்ளது. இந்த நோய் வந்தால், "ராடிங்' சிகிச்சை என்றுள்ளது. அதை எனக்கு பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை. அப்போது போதிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். விதி எனக்காக ஒன்றை எழுதி முடித்துவிட்டதே! பெற்றோர்களோ எனக்காக மிகவும் சிரமப்பட்டார்கள். பல டாக்டர்கள்.. பல மருத்துவமனைகள் கண்டாகிவிட்டது. கடைசியில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்றோம். நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் என்னால் நடக்க முடியவில்லை. 
அதனால் நான் பள்ளிக்குப் போவதை பெற்றோர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். நான் சுட்டித்தனமாகப் பேசுவேன். அதனால் அருகில் வசித்து வந்த விக்டோரியா ஆண்ட்டிக்கு என்மேல் கொள்ளைப் பிரியம். தனது மகள்களுடன் வீட்டிற்கு வந்து அந்தக் குழந்தைகள் முன்னிலையில் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அவரது குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தது போலாச்சு.. எனக்கும் சொல்லிக் கொடுத்தது மாதிரியாச்சு. ஆண்டுகள் ஓடின... 
ஆனால் எனது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. உருவமும் சிறு பிள்ளை வடிவத்தில் நின்று கொண்டது. விக்டோரியா ஆண்ட்டியின் பயிற்றுவிப்பில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து ஆயத்த படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். புதினம் எழுதுவது எப்படி என்ற சான்றிதழ் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளும், ஆய்வுகளும், ஆலோசனைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. சிகிச்சைகள் எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளாக மாறியிருந்தன. பத்து வயது வரை வலியை உணர முடியாமல் இருக்க மருந்து மாத்திரைகள் தந்து வந்தார்கள். பிறகு வலியைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று பெயின் கில்லர் மாத்திரைகளை விலக்கிவிட்டேன். 
"இணையம் எனக்கு அறிமுகமானது எனது வாழ்க்கையின் ஒரேயொரு நேர்மறை திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றி யோசித்து வாழ்க்கையை நமக்கு பொருந்திப் போகிற மாதிரி மாற்றிக் கொள்வதும் சாத்தியம்தான் என்று இணையம் என்னை ஒப்புக் கொள்ள வைத்தது. வாழ்க்கையின் நோக்கம் நன்றாக வசதியாக உல்லாசமாக வாழ்வது மட்டுமில்லை. கிடைத்த வாழ்வை எதிர் கொள்வதும்தான் என்பதை புரிந்து கொண்டேன். இசை என்னை என் மனதை லேசாக்குவது போல உணரத் தொடங்கினேன். இணையம் மூலம் எனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டேன். யேசுதாஸ். சித்ரா பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். போகப் போக யேசுதாஸ். சித்ரா அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டார்கள். 
இணையம் மூலமாக வயநாட்டில் "பினு' என்ற பையனுக்கு என்னைப் போலவே நோய் தாக்கியிருப்பதை அறிந்தேன். சிகிச்சை செய்ய பண வசதியில்லாமல் கஷ்டப்படுவதை அறிந்ததும், "என்னைப் போல பினுவும் தளர்ந்து விழுந்துவிடக் கூடாது... நடக்க வேண்டும்.. நாலு பேரை பார்க்க வேண்டும்.. பேச வேண்டும்... பழக வேண்டும்.." என்பதற்காக இணையம் மூலம் பினுவுக்காக நிதி திரட்டத் தொடங்கினேன். 
அப்போதுதான் திருவனந்தபுரத்தில் சமூக சேவைகள் செய்துவரும் லதா நாயர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாகவும் பினுவிற்காக நிதி திரட்டினேன். இந்த பண உதவியால் பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தவழ்ந்து மட்டுமே போக முடியும் என்ற நிலையிலிருந்து "நடக்க உதவும் கைத்தடி' கொண்டு பினு மெல்ல மெல்ல நடக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்க்கிறார். இது ஆச்சரியமான முன்னேற்றம்.
இந்த நிகழ்வின் மூலம் எனக்கு சில உண்மைகள் பாடங்கள் தெரியவந்தது. உதவி செய்வதற்கு விசால மனம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். உதவி வேண்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு துருவங்களை இணைக்க பாலம் அமைவதில்லை. அப்படி பாலம் அமைந்தால் கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒரு விடியல் .. வாழ ஒரு நம்பிக்கை கிடைக்கும். சக்கர நாற்காலியில் இருக்கும் என்னாலும் பாலமாக ஆக முடிந்ததே..! இந்த உதவி மூலமாக எனக்கு இன்னொரு அவதாரம் எடுக்கவும் முடிந்தது. 
"ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதன்முதலாக அரசு சாரா நிறுவனமாக "அம்ரிதவர்ஷினி சாரிடபிள் சொசைட்டியை' திருவனந்தபுரத்தில் லதா நாயர் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு பொது மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி மூலமாகவும் இந்த எலும்பு நோய் குறித்த விழிப்புணர்வையும் மாற்றுத்திறனாளிகளுக்குக் காட்ட வேண்டிய கரிசனம் குறித்தும் பேசுகிறேன். கேரள தனியார் சானல்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறேன்". 
வீல்சேரில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தாலும்... எலும்புகள் முறியலாம் என்ற அபாயம் இருந்த போதும், தன்யா பயணிக்கிறார். சமீபத்தில் அமெரிக்கா வரை சென்று வந்திருக்கிறார். அமெரிக்காவிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
"மாற்றுத்திறனாளிகளிடம் "இதுதான் உனது எல்லை.. இதற்கு மேல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.." என்று எல்லைகளை நிர்ணயிக்காதீர்கள்.. அவர்கள் மற்றவர்களுடன் பேசப் பழக அனுமதியுங்கள். "என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் துளிர்விடும்..'' என்கிறார் தன்யா.
- பிஸ்மி பரிணாமன்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/தன்னம்பிக்கை-தரும்-தன்யா-3174752.html
3174749 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, June 19, 2019 11:23 AM +0530 பெப்பர் ரைஸ்

தேவையானவை
 பாசுமதி அரிசி - கால் கிலோ
 மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
 தேங்காய்த்துருவல் - அரை டம்ளர்
 இஞ்சி விழுது - சிறிது, பூண்டு விழுது - சிறிது
 முந்திரி பருப்பு - 6, நெய் - 3 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: அரிசியுடன் போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் உதிரியாக வடித்து கொள்ளவும். முந்திரி பருப்பை துண்டுகளாக ஒடித்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் உதிரியான சாதம், முந்திரி பருப்பு, மிளகுத்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மீதமுள்ள நெய் இவைகளைச் சேர்த்து நன்கு கிளறி கொடுத்து மூன்று நிமிடங்களில் இறக்கவும். பெப்பர் ரைஸ் ரெடி. இத்துடன் வெங்காய தயிர் பச்சடி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
 
 சப்பாத்தி டிலைட்

தேவையானவை:
 கோதுமை மாவு - 200 கிராம்
 சர்க்கரை - 150 கிராம்
 பால் - 2 டம்ளர்
 நறுக்கிய முந்திரி,
 பாதாம் - தலா 2 தேக்கரண்டி
 நெய் - 3 தேக்கரண்டி
 ஏலக்காய்த் தூள் - சிறிது
 செய்முறை: கோதுமை மாவுடன் நீர் தெளித்து நன்கு பிசைந்து, அடித்து இரண்டு மணிநேரம் வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக நெய் தடவிய தோசைக்கல்லில் இருபக்கமும் நன்கு சுட்டு எடுக்கவும். ஆறினதும், கத்தியால் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், பாலுடன் கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பால் நன்கு காய்ந்ததும், அத்துடன் சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் இட்டு நன்கு கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை இட்டு, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சப்பாத்தி டிலைட் ரெடி.
 - உத்ரா ஆனந்த், சென்னை.

மின்ட் ஆலு ஃப்ரை

தேவையானவை:
 பெரிய அளவு உருளைக் கிழங்கு - 2
 புதினா - 1 கட்டு
 வெங்காயம் - 1
 தயிர் - கால் கிண்ணம்
 பட்டை - 1 துண்டு
 தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
 கிராம்பு, ஏலக்காய் - தலா 2
 கரம் மசாலா - அரை தேக்கரண்டி
 இஞ்சி - 1 துண்டு
 பச்சைமிளகாய் - 4
 சோம்பு - அரை தேக்கரண்டி
 பூண்டு - 6 பல்
 எலுமிச்சைச்சாறு - அரை தேக்கரண்டி
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 கொத்துமல்லி - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புதினா இலையை சுத்தம் செய்து, அத்துடன் இஞ்சி, பூண்டு சோம்பு, தனியாத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு எலுமிச்சைச் சாறு, சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
 பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் அரைத்து வைத்துள்ள புதினா விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி கிளறி முடிவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கவும். கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும், மிகவும் ருசியாக இருக்கும்.

பிரெட் வித் கார்ன் கிரேவி

தேவையானவை:
 பிரெட் துண்டுகள் - 10
 ஸ்வீட் கார்ன் - 2
 பெரிய வெங்காயம் - 2
 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 தக்காளி சாஸ் - அரை கிண்ணம்
 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 ஃப்ரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி
 சர்க்கரை - சிறிது
 உப்பு - சிறிது
 செய்முறை: ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து முத்துக்களாக உதிர்த்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது வெண்ணெய் விட்டு உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், உப்பு, சர்க்கரை, உதிர்த்த சோளம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடாக்கி, வெண்ணெய் தடவிய ப்ரெட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும். அதன்மேல் கார்ன் கிரேவியைச் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
 - சு.இலக்குமணசுவாமி, மதுரை.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/சமையல்-சமையல்-3174749.html
3174736 வார இதழ்கள் மகளிர்மணி மீண்டும் வெள்ளித்திரையில் ..! Wednesday, June 19, 2019 11:19 AM +0530 தென்னகத்தின் "சூப்பர் லேடி' என்று பாராட்டப்பட்ட நடிகை விஜயசாந்தி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியதும் நடிப்பிற்கு விஜயசாந்தி முழுக்கு போட்டார். "மன்னன்' படத்தில் ரஜினியின் நாயகியும் விஜயசாந்திதான்..! தெலுங்கு படத்தின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு' படத்தில் விஜயசாந்தி நடிப்பில் தனது இரண்டாம் அத்தியாயத்தை தொடங்குகிறார்.
 "நான் 1980 - இல் அறிமுகமானதே அன்றைய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் ஜோடியாகத்தான். அவரது மகன் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது' என்கிறார் விஜயசாந்தி.
 - அங்கவை

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/மீண்டும்-வெள்ளித்திரையில்--3174736.html
3174747 வார இதழ்கள் மகளிர்மணி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா? DIN DIN Wednesday, June 19, 2019 11:15 AM +0530 நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.
 நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும்.
 அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
 திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
 அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும். அதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
 குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைப் வாசனை தெரியாது.
 உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது.
 எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.
 - கே. அஞ்சம்மாள், திருவாடானை.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/பழங்களில்-உப்பு-தூவி-சாப்பிடுவது-ஏன்-தெரியுமா-3174747.html
3174744 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ் ... டிப்ஸ்... டிப்ஸ்... Wednesday, June 19, 2019 11:10 AM +0530 ✦ பொட்டுக்கடலை மாவுடன் கருப்பட்டி - முட்டை கலந்து அடையாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் புஷ்டி உண்டாகும்.
 ✦ முளைக்கட்டிய கோதுமையை வெயிலில் காயவைத்து அதனுடன், பாதாம், முந்திரி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு. தினமும் பாலில் 1 தேக்கரண்டி கலந்து கொடுத்து வர குழந்தைகளுக்கு உடல் எடை கூடும்.
 - ரக்ஷனா சக்தி, திருநெல்வேலி.
 ✦ குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்யும்போது காய்கறிகளை பெரியத் துண்டாக வெட்டிப் பயன்படுத்தினால் அதன் சத்துக்கள் வீணாகாது.
 ✦ குளிர்ச்சியும், இருட்டும் உள்ள இடத்தில் பாலை வைத்திருந்தால் அதிக நேரம் கெடாமலிருக்கும்.
 - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
 ✦ 200 கிராம் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு கிரைண்டரில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 4 தேக்கரண்டி அரிசி மாவைத் தூவி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கொத்துமல்லித் தழை போட்டுக் கலந்து வடை தட்டினால் வடை சூப்பராக இருக்கும்.
 ✦ எந்த வகை கட்லட் செய்தாலும் அதனுடன் ஏதாவது ஒரு கீரையை சிறிது சேர்க்கவும். கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும்.
 ✦ ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம்பழம் இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி, கன்டென்ஸ்ட் மில்க், தேன் கலந்து வைத்துக் கொள்ளவும். அதில் அரிசிப் பொரியைக் கலந்து கொடுத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
 ✦ காய்கறி வேக வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது எடுத்து சூப், குருமா, சப்பாத்தி மாவு செய்யும் போது சேர்க்கலாம்.
 ✦ சூப் வகை எதுவாக இருந்தாலும் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்தால் சூப் சூப்பராக இருக்கும்.
 ✦ வெஜிடபிள் சமுசா தயாரித்தவுடன் அதை ஒரு தட்டில் வரிசையாக அடுக்கி, ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு எடுத்து, சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சூப்பராக இருக்கும். நீண்ட நேரம் மொறு மொறுப்பாக இருக்கும்.
 ✦ வெந்தயக் கீரையில் சாம்பார் செய்யும்போது தாளிக்கும் போதே கீரையை வதக்கிவிட்டு, பிறகு பருப்பு சேர்த்தால் சாம்பார் கசக்காமல் இருக்கும்.
 - எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
 ✦ வெயில் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீர்ச்சுருக்கு அதிகம் ஏற்படும். அதிலும், பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே காரணம். நீர்சுருக்கு ஏற்படாமலிருக்க, தாராளமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. அதுபோன்று இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
 எளிய வைத்தியம் நூலிலிருந்து
 - சி.பன்னீர் செல்வம், செங்கற்பட்டு.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/டிப்ஸ்--டிப்ஸ்-டிப்ஸ்-3174744.html
3174740 வார இதழ்கள் மகளிர்மணி மாற்றும் திறன் கொண்டவர்கள் நாங்கள்...   DIN DIN Wednesday, June 19, 2019 10:59 AM +0530 ஆயிரம் அதட்டல்களைக் காட்டிலும், ஓர் அன்பான வார்த்தை எப்பேர்ப்பட்ட மனிதரையும் மயங்கச் செய்யும் ஆயுதமாகும். அழகு, அறிவு, ஆபத்து என எதையும் அறியாமல் உதட்டுப் புன்னகையை மட்டும் வெளிக்காட்டிக் கொண்டு, தங்களுக்குள்ளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றுத் திறன் கொண்ட அனைவரும் இறைவனின் பிள்ளைகளே. அவ்வாறு உள்ளோரை அரவணைத்து எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள நியூ லைப் சிறப்புப் பள்ளி.
 2013 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், ஆரம்பத்தில் எட்டு குழந்தைகள் மட்டுமே சேர்ந்தனர். நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அரசு அங்கீகாரம் பெற்றுள்ள இப்பள்ளியில், மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஆட்டிசம் குறைபாடு, கவனச்சிதறல், கற்றல் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயது முதல் 18 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இங்கு 12 வகையான திறன் பயிற்சி அளித்து, அக் குழந்தைகள் சிறப்புப் பள்ளியில் இருந்து கல்வி பயிலும் வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 நிகழாண்டில் 32 குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பள்ளி இயங்குகிறது. அதிகாரிகளின் குழந்தைகள் முதல் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் (பாதிப்புக்குள்ளான) வரை ஒன்றாக அமர்ந்து விளையாடுவதும், தங்களால் இயன்றதைச் செய்ய முயற்சிப்பதும் நாள்தோறும் இப்பள்ளியில் நடைபெறும் வேடிக்கை கலந்த மகிழ்ச்சியான தருணங்கள்.
 பணிக்குச் செல்லும் பெற்றோர் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை தனியாக விட்டுச் செல்கிறோமே? என்ற தவிப்பை ஈடுகட்டும் வகையில் சிறப்புப் பள்ளியில் அனைத்து வசதிகளும் அக்குழந்தைகளுக்கு செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களைக் கண்காணிக்கவும், கவனிக்கவும் 5 பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளில் இருந்து அழைத்து வருவதற்கான வாகன வசதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை இப்பள்ளியானது அங்குள்ள குழந்தைகளுக்கு பெற்றுத் தருகிறது. பேருந்து அட்டை, காதொலிக் கருவி, மாதாந்திர உதவித்தொகை, நடமாடும் நாற்காலி போன்றவை அவற்றுள் சில.
 இது குறித்து, நியூ லைப் சிறப்புப் பள்ளியின் நிர்வாகி எம்.பாக்கியலட்சுமி கூறியது:
 ""நாங்கள் தன்னார்வ அமைப்பாக இருந்தபோதும், அரசு அங்கீகாரம் பெற்று இப்பள்ளியை நடத்தி வருகிறோம். பி.எட். சிறப்பு கல்வி பயின்றுள்ளதால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்புக்கு தேவையானவற்றைச் செய்ய முடிகிறது. இங்கு, தனிப்பட்ட முறையில் இவ்வளவு கட்டணம் என்ற கட்டாய வசூல் என்பது கிடையாது. மருத்துவர், பொறியாளர், அதிகாரிகள் போன்றவர்கள் தங்களால் இயன்ற உதவியை பள்ளியின் நலனுக்காக வழங்குவர். அதன் மூலம் பள்ளிக்குத் தேவையானவற்றைச் செய்கிறோம்'' என்றார் பாக்கியலட்சுமி.
 - எம்.மாரியப்பன், நாமக்கல்.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/மாற்றும்-திறன்-கொண்டவர்கள்-நாங்கள்-3174740.html
3174738 வார இதழ்கள் மகளிர்மணி இலக்கியம் படித்தவர், இப்போது விவசாயி!   DIN DIN Wednesday, June 19, 2019 10:57 AM +0530 கரூர் அருகேயுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து தேர்ச்சி பெற்றவர். தற்போது முழு நேர விவசாயியாக மாறியிருக்கிறார். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? அவரிடம் பேசினோம்:
 "நான் திருமணமாகி குடும்பத்துடன் வசிப்பது கிருஷ்ணாராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரம் கிராமம். இங்கு பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலம். என்னுடைய கணவர் நாகராஜன் பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அதனை வெற்றிகரமாக அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அப்படி அவர் பயிர் செய்த முக்கிய பயிர்களில் ஒன்று கரும்பு.
 அந்த கரும்பை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். ஆங்கில இலக்கியம் படித்த எனக்கு விவசாயப்பணியா என்று யோசித்தேன். "உன்னால் முடியும் களத்தில் இறங்கி துணிச்சலுடன் வேலை செய்'' என்றார். அவர் வேண்டுகோளை ஏற்று நானும் களத்தில் இறங்கினேன்.
 கரும்புக்கு, நெல் சாகுபடியை விட குறைவாகத்தான் தண்ணீர் தேவைப்படும். ஒரு வயலில் ஒரு தடவை கரும்புக்கரணை நட்டுவிட்டால், அந்த விவசாயிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பலன் தரும் பணப்பயிர் இது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வேறு பயிர் சாகுபடி செய்து கொள்ளலாம். அதுவும் ஓர் ஆண்டு மட்டுமே பயிர் செய்துவிட்டு மீண்டும் கரும்பு சாகுபடிக்கே நாங்கள் வந்துவிடுவோம். நாள்தோறும் பராமரிக்க வேண்டிய தேவை கரும்பு பயிருக்கு கிடையாது. சற்று ஒய்வாக குடும்ப வேலை பார்த்து கொள்ளலாம். கணவர், குழந்தைகளை கவனித்து கொள்ளலாம்'' என்றவரிடம், வயலில் நீங்கள் செய்யும் பணிகள் என்ன என்று கேட்டோம்:
 "முதலில் வயலில் பார் புடிச்சி கரும்புக் கரணைகளை நடணும். கரணை நட்ட ஐந்து நாட்களில் களைக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். அத்துடன் நம்முடைய வேலை முடிந்துவிட்டது. 30 நாட்கள் காத்திருந்தால் நட்ட கரணையில் இருந்து கிளைப்பருவம் வந்துவிடும். அதனைத் தொடர்ந்து 35 நாள்களுக்கு ஒரு முறை வீதம், ஆண்டுக்கு மூன்று முறை உரம் வைப்பது அவசியம். இப்படியாக ஒவ்வொரு கட்டமாக கடந்து ஐந்தாவது மாதம் கரும்புத் தோகைகளை உரித்து கீழே போட்டு விட வேண்டும். அந்த தோகைகள் மண்ணில் மக்கி அவைகளே உரமாகிவிடும்.
 இதே போன்று ஏழாவது மாதம் ஒரு தடவை அதே போல கரும்புத் தோகைளை உரிச்சுப் போடணும். கரும்பு பன்னிரெண்டு மாத பணப்பயிர். இந்த பன்னிரெண்டு மாதத்தில் குறைந்து 40 முறையாவது கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பணப்பயிர்களில் லாபம் தரக்கூடியதில் கரும்பு முக்கியமானது'' என்கிறார் முழு நேர விவசாயியான லதா.
 - ராஜன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/இலக்கியம்-படித்தவர்-இப்போது-விவசாயி-3174738.html
3174737 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்! 21 - பாரததேவி   DIN DIN Wednesday, June 19, 2019 10:55 AM +0530 "சரி கௌசி... இம்புட்டு நேரமும் இருந்ததுபோதும் வா'' என்று அவள் அருகில் சென்று சொல்லவும்.
 கல, கலவென்று சிரித்தவாறே அவனை மணலில் பிடித்துத் தள்ளினாள். "இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு ஒரு மனிதரும் இல்லை. இப்படியொரு தனிமை நமக்கு இனி எங்கே கிடைக்கப் போகுது. விடியும் வரை நாம இங்கேயே இருக்கலாம்'' என்றாள். அவள் முகம் நிலவொளியில் பொலிவு கண்டு பிரகாசித்தது.
 ஆனால், அவனுக்குள் பயமும், கவலையும் ஏற, ஏற நிமிஷத்துக்கு, நிமிஷம் நிலை கொள்ளாமல் தவித்தான். இவள் இப்படி செய்வாள் என்றால் ஆட்களோடு, ஆட்களாக இன்னொரு முறை இரண்டாம் ஆட்டம் சினிமாவே பார்த்திருக்கலாம் என்று நினைத்தவன், ""போதும் கௌசி நேரம் நடுச்சாமமாகப் போகிறது. எத களவாம்போமின்னு, ரா விடிய களவாணிப்பயக அலைவாக வா நாம போயிருவோம்'' என்றான்.
 அவன் சொன்னதைக் கேட்டு அவள் கோபமடைந்தாள். " நீங்களும் ஒரு ஆம்பளத்தான வரவங்கள சினிமாவில வர ஹீரோக்கள் அடிச்சமாதிரி பெறட்டி, பெறட்டி அடிக்க வேண்டியதுதானே''.
 "உன்ன மாதிரி சினிமாவையும், வாழ்க்கையையும் ஒன்னாப் பாக்கிறதினாலதேன் சில பேரு குடும்பம் கெட்டுக்கிடக்கு. வா போவோம். இதுக்குமேல இங்க இருக்கக் கூடாது'' என்று வம்படியாக இழுத்துக் கொண்டு வந்தான்.
 ரோட்டுக்கு வந்தவன் திடுக்கிட்டுப் போனான். அங்கே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிளை காணோம். பதட்டத்தோடு சுற்றிலும் பார்த்தான். ரோடு விரீரென்று நீண்டு கிடந்தது. நிலவு வெளிச்சத்தில முயல்களும், கீரிப்பிள்ளைகளுமாக குறுக்கும் மறுக்குமாக ஓட, ஒரு நீளமானப் பாம்பும் தோலின் மினு, மினுப்பு தெரிய சர, சரவென்று நழுவியவாறு இவர்களை நோக்கி வந்து கடந்து சென்றது.
 கௌசிகா பயத்துடன் அவன் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டவள், "இப்ப நம்ம என்னங்க செய்றது?'' என்றாள்.
 தங்கராசுவுக்கே எதுவும் புரியவில்லை. திரும்பவும் டவுனுக்கே போய்விடலாமென்றால் அதுவும் இவன் ஊர் தூரமிருந்தது. இனி ரோட்டில் நிற்க முடியாது. ஊருக்கு நடந்துதான் ஆக வேண்டும். இந்த விஷயத்தை கௌசிகாவிடம் சொன்னதுமே அவள் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டாள்.
 "இப்படியெல்லாம் தூரமாக நடந்து எனக்குப் பழக்கமில்லை. போன் பண்ணி கால்டாக்ஸியை வரவழையுங்கள். நாம் போகலாம்'' என்றாள் ரொம்பவும் கெத்தாக.
 அப்புராணி தங்கராசு, உழவு மாட்டோடு கிடப்பவன் கால் டாக்ஸியை கண்டானா.. எதைக் கண்டான். அவனுக்கு கோபம்தான் மூக்கு முட்ட வந்தது.
 "கௌசி நீ இப்படியெல்லாம் முரண்டு பிடிக்காத, நாம எப்படியும் வீட்டுக்குப் போய்தான் ஆகணும். இங்க உட்கார்ந்திருக்கிறதில எந்த ராவமுமில்ல. எந்திரி பேசிக்கிட்டே நடப்போம் கொஞ்ச தூரம் தான் நம்ம போயிருவோம்'' என்று கெஞ்ச.. அவள் பிடிவாதமாக மறுத்ததோடு ரோட்டிலேயே படுத்தும் விட்டாள்.
 தங்கராசுவிற்கு வந்த கோபத்தில் அவன் உச்சி மண்டையே எரிந்தது. மூவாயிரம் ரூபாய் சைக்கிள் மோசம் போனவனை இவள் இன்னும் சேர்ந்து படுத்துகிறாள். நம்ம ஊரு பொண்ணுகன்னா இப்படி இருக்குமா? நம்மளயும் இழுத்துக்கிட்டுல்ல ஓடுவா. இவ இப்படி படுத்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினா நம்மளால என்ன செய்ய முடியும்? இந்த மானைக்கு, நாலு மிதி, மிதிச்சி அங்கேயே விட்டுவிட்டு போக வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளின் குணம் அவனுக்கு நன்றாக தெரியுமாதலால். அவள் அருகில் சென்று மெல்ல எழுப்பினான்.
 ""கௌசி இந்த இடம் மோசமான இடம் இனியும் இங்க இருக்கக் கூடாது. நிலாவோட சேர்ந்து காத்தும் சிலு,சிலுன்னு அடிக்கு வா நாம பேசிக்கிட்டே நடப்போம். நீயும் அதுக்குத்தானே ஆசப்பட்ட''
 "அதுக்காக, எவ்வளவு தூரம் நடக்கிறது. எங்க வீட்டில் பக்கத்தில இருக்க பிரண்டஸ் வீட்டுக்குப் போனாக் கூட ஆட்டோவுலதான் அனுப்புவாங்க''.
 "உங்க வீட்டுப் பேச்ச கேக்க இப்ப நேரமில்ல, எந்திரி நடப்போம்'' என்று அவளின் கையைப் பிடிக்க, உதறினாள்.
 ""நான் வரமுடியாதுன்னா முடியாதுதான்'' என்று கௌசிகா சொல்லிக் கொண்டிருக்கையில் பெரிய வெருவு (ஆண் பூனை) இவளைத்தாண்டி ஓடியது. வீலென்று அலறிக் கொண்டு எழுந்தாள்.
 பக்கத்து பனைமரத்திலிருந்து கோட்டான் ஒன்று அலற கௌசிகா பயத்துடன் கண்களை மூடிக் கொண்டு கோட்டானுக்கு மிச்சமாக அலறினாள்.
 "இதுக்குத்தேன் சொன்னேன். இங்க இருக்க வேண்டாம்ன்னு. வா போகலாம்'' என்று தங்கராசு, அவளைத் தோளோடு அணைக்க அவனிடமிருந்து விருட்டென விலகி அந்த ஆற்றின் மணலை நோக்கி ஓடினாள்.
 அவளைப் பிடித்து நிறுத்தினான் தங்கராசு.
 "என்னை விடுங்க, விடுங்க'' என்று கௌசிகா திமுறினாள்.
 தன் உள்ளத்துக்குள் எழுந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு, "இப்ப உனக்கு என்ன செய்யணும் கௌசி?'' என்றான் தங்கராசு அமைதியாக.
 ""நாம அந்த ஆத்து மணலுக்குப் போறோம். விடிய, விடிய கதை பேசுறோம். விடிஞ்சப் பெறவு வீட்டுக்குப் போறோம்'' என்றாள்.
 அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன தங்கராசு.. கௌசிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் அந்த நேரத்தில் அவன் பொண்டாட்டியாக தெரியவில்லை. விஷம் கொண்ட மோகினியாகத் தெரிந்தாள்.
 இறுகப் பிடித்திருந்த அவள் கைகளை சட்டென்று விட்டுவிட்டு, விரு விருவென்று வேகமாய் எட்டுகளை வைத்து தன் வீட்டை நோக்கி நடந்தான்.
 "என்னங்க, என்னங்க...'' என்றபடி பின்னாலிருந்து கௌசிகா கூப்பிட்டச் சத்தம் அவனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால், அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. இதற்குள் விடியும் நேரம் வந்துவிட்டது.
 சங்கரி பசுவின் பால் கறந்து கொண்டிருந்தாள்.
 வாசல் தெளிக்க வந்த கமலம், "என்னண்ணே சினிமாவுக்குப் போயிட்டு இப்பத்தேன் வாரியா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தவள் இவன் பின்னாலேயே ஓடிவந்த கௌசிகா மயக்கம் போட்டு விழுவதை அப்போதுதான் பார்த்தாள்.
 கையிலிருந்த சாணி சட்டியை கீழே போட்டுவிட்டு, "மதினி'' என்று ஓடிப்போய் பிடித்தாள் கமலா. கூடவே தங்கராசும் ஓடினான்.
 "என்ன நடந்தது'' என்று சங்கரி கேட்க, தியேட்டரிலேயே சைக்கிள் காணாமல் போனதாகவும், அங்கிருந்து தாங்கள் நடந்து வந்ததில் இவ்வளவு நேரமாகிவிட்டதாகவும், முதன் முதலாக அம்மாவிடம், தாங்கள் ஆற்றங்கரைக்குப் போனதை மறைத்து பொய் சொன்னான் தங்கராசு.
 மயக்கம் தெளிந்து கண்விழித்த கௌசிகா, யாருடனும் பேசவுமில்லை, சாப்பிடவுமில்லை. தன் ஊருக்குப் புறப்பட்டு விட்டாள். அவளுடன் கூட போனால் பல பிரச்னைகள் வரும். நாம் சொல்வதை ஒருவரும் நம்ப மாட்டார்களென்று தங்கராசு அப்போதே பிஞ்சைக்குப் புறப்பட்டுவிட்டான்.
 பிறகு கௌசிகாவை தனியாக அனுப்பி வைத்தால் நன்றாக இருக்காதென்று அவள் கூடப் பாண்டியை அனுப்பி வைத்தாள் சங்கரி.
 இருபது நாட்கள் வரை சென்றுவிட்டன.
 இவர்கள் யாரும் வரச்சொல்லாமல் மட்டுமல்ல; யாரும் கூப்பிடப் போகாமலே தன் அப்பாவோடு வந்துவிட்டாள் கௌசிகா.
 தன் சம்பந்திக்காரர் மகளோடு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட உடனே தாங்கள் செய்த வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட சங்கரி கூடவே தங்கராசுவையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.
 தங்கராசுவிற்கு இப்போது பொண்டாட்டியிடம் ஆசை இருந்ததைவிட , இனி என்ன அழிச்சாட்டியம் பண்ணுவாளோ என்ற பயம்தான் இருந்தது.
 "சம்பந்தி' என்ற பேச்சு கிராமத்தில் இல்லையாதலால், ""வாங்க தம்பி நேத்தே நீங்க வாரது தெரிஞ்சிருந்தா விடியமின்ன காட்டுக்கு போயிருக்க மாட்டோம்'' என்று கனகராசுவை அன்போடு வரவேற்றாள் சங்கரி.
 ஆனால், அவர் முகம் கடு, கடுவென்றிருந்தது.
 "என்ன தம்பி ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா? காப்பி குடிக்கிறீங்களா? இல்ல பால் தரட்டுமா?'' என்று பிரியத்தோடு கேட்க,
 கனகராசு, ""நானு உங்க வீட்டுல வந்து காப்பியும், பாலும் குடிக்கிற மாதிரியா வச்சிருக்கீங்க? என் மக, என்ன மாதிரி செல்லமா வளந்தவன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள்ல்லாம் பட்டிக்காட்டு ஆளுங்கதான உங்களுக்குக்கெங்க அந்த அருமையெல்லாம் தெரியப்போவுது'' என்று சிடுசிடுக்க, சங்கரி ரொம்பவும் நொந்து போய்விட்டாள்.
 "என்ன தம்பி பட்டிக்காட்டுல இருந்தாமட்டும் பிள்ளைகளோட வளப்பு, அருமையெல்லாம் தெரியாமயா இருக்கும். நானும் என் புள்ளைகள செல்லமாத்தேன் வளத்திருக்கேன். அதோட, நீன்னு சொன்னா நீதி குலைஞ்சி போயிரும்ங்கிற மாதிரிதேன் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். உங்கப் பொண்ண இங்க யாருமே கொடும பண்ணல. நாங்க ஏதோ எங்களுக்குத் தக்கன வசதி செஞ்சு கொடுத்துப் பொன்னும், கண்ணுமாத்தேன் வச்சிருக்கோம்''என்றாள்.
 "அதான் உங்க பையன் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டு தனியா ரோட்டுல விட்டுட்டு வந்திருக்கான்'' என்று சொல்ல,
 கௌசிகா, "அப்பா...' என்றாள் அதட்டலாக..
 "இதுல ஒன்னும் குறைச்சலில்ல பாத்தீங்களா? என் பொண்ணோட பெருமையை, மோசமான புருஷன் கிடைச்சிருந்தும், அவர, அவன், இவன்னு சொல்லக் கூடாதாம்''.
 ""நீங்க கோபப்படுத அளவுக்கு எதுவுமே நடக்கல தம்பி, சினிமா போறயில சைக்கிள்ல்ல ஏறிப் போனாக வரும்போது சைக்களப் பாத்திருக்காக, சைக்கிள எந்தக் களவாணிப்பயலோ தூக்கிட்டுப் போயிட்டானாம். அதனால ரெண்டு பேரும் நடந்தே வந்திருக்காக''
 "என் மகள பத்து நிமிஷம் கூட நடக்க விட்டது கிடையாது. ஆட்டோ, கால் டாக்ஸி என்று அனுப்பிதான் பழக்கம். அதுபோல தியேட்டருல சைக்கிள காணோமின்னா டவுன்ல்ல இருக்க ஓட்டல்ல, ஒரு ரூம் போட்டு தங்கணும். இல்லாட்டி, கால் டாக்ஸிப் புடிச்சி வரணும்.''
 "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது தம்பி. எங்கயும் போவனும்ன்னா மாட்டு வண்டிக்கட்டிக்கிட்டு போவோம். இல்லாட்டி நடந்துதான் போவோம்.''
 "அதான் பட்டிக்காட்டு ஆளுங்கிறது, சரியாத்தான் இருக்கு. உங்கள போல ஆளுங்க நடப்பாங்க, எம்மவ நடப்பாளா? சரி அவள நடக்கவிட்டவரு , கூடவே உங்க மகனும் நடந்து வரலாமில்ல. கூடவே, பேசிக்கிட்டு நடப்போமின்னு இவ எவ்வளவோ சொல்லியும் அவள ஒத்தையா அந்த ரோட்டில விட்டுட்டு இவரு வேகமா நடந்து வீட்டுக்கு வந்திருக்காரு. பாவம் என் பொண்ணு ஓட்டமும் நடையுமா அவர் பின்னாலேயே வந்தவ வீட்டு வாசல்லயே மயங்கி விழுந்திருக்கா. இப்படி ஒரு அநியாயமும், அக்ரமும் எங்கேயாவது நடக்குமா?'' என்று அதிகாரத்தோடு தங்கராசுவைப் பார்த்து மிரட்டியபோது,
 தங்கராசுவுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் உடல் எங்கும் நரம்புகள் முறுக்கேறியது. அப்படியே வந்தது வரட்டுமென்று கனகராசுவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிடலாமா'' என்று பரபரத்தவனின் உணர்ச்சிகளைப் புரிந்தவள் போல் சங்கரி மகனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
 - தொடரும்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/என்-பிருந்தாவனம்-21---பாரததேவி-3174737.html
3174735 வார இதழ்கள் மகளிர்மணி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஷீலா DIN DIN Wednesday, June 19, 2019 10:46 AM +0530 கடைசியாக "பஷீரிண்டே பிரேமலே காணம்' என்ற படத்தில் நடித்த செம்மீன் புகழ் ஷீலாவுக்கு, கேரள அரசின் மிகவும் கௌரவ விருதாக கருதும் "ஜே.சி. டேனியல் விருதை' வாழ்நாள் சாதனையாளராக கருதி வழங்குகிறது. ஏற்கெனவே பலமுறை மாநில விருதுகளை பெற்ற ஷீலா "அகலே' என்ற படத்தில் நடித்தபோது, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களிடையே "ஷீலாம்மே' என்றழைக்கப்படும் ஷீலாவுக்கு இந்த விருது வரும் ஜூலை 27-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வழங்குகிறார்கள்.
 - அருண்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/வாழ்நாள்-சாதனையாளர்-விருது-பெறும்-ஷீலா-3174735.html
3174731 வார இதழ்கள் மகளிர்மணி மீண்டும் ஸ்ரேயா Wednesday, June 19, 2019 10:46 AM +0530 2015 -ஆம் ஆண்டு அஜய்தேவ்கன், தபு ஆகியோருடன் "த்ரிஷ்யம்' என்ற இந்தி படத்தில் நடித்த ஸ்ரேயா சரண், அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக தமிழில் இவர் நடித்த "நரகாசூரன்' இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் ஆலிவுட் நடிகை சான்ட்ரா புல்லக் நடித்த "தி புரபோசல்' என்ற படத்தை தழுவி மலையாளத்தில் எடுத்த "மைபாஸ்' தற்போது தமிழில் "சண்டைக்காரி' என்ற பெயரில் தயாராகிறது. இருமாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இதில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ரேயா, தற்போது தனது கணவர் ஆன்ட்ராய் கோஸிவ்வுடன் ரஷ்யா சென்றிருப்பதால், அடுத்த மாதம் இந்தியா திரும்பியவுடன் சென்னையில் படப்பிடிப்பு துவங்குமென தெரிகிறது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/மீண்டும்-ஸ்ரேயா-3174731.html
3174732 வார இதழ்கள் மகளிர்மணி தமிழ் கற்கும் கங்கனா! Wednesday, June 19, 2019 10:46 AM +0530 தமிழில் "தலைவி' என்றும் இந்தியில் "ஜெயா' என்றும் எடுக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கங்கனா ரனாவத், தமிழில் பேசி நடிப்பதற்காக தமிழ் கற்கத் தொடங்கியுள்ளார். "ஜெயலலிதா போல் சக்தி வாய்ந்த பெண்மணியாக நடிக்க கங்கனா பொருத்தமானவர் என்பதால் அவரைத் தேர்வு செய்தோம். இதில் நடிக்க அவருக்கு 24 கோடி ரூபாய் கொடுப்பதாக வந்த தகவல் உண்மையல்ல. நாங்கள் அவருக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பது ரகசிய ஒப்பந்தமாகும். அவரது நடிப்புக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்.டி.ஆர் வரலாறு போல் இருபகுதிகளாக எடுக்கும் எண்ணமில்லை. ஒரே பகுதியாக எடுக்கப்படும்'' என்று தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி கூறியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/தமிழ்-கற்கும்-கங்கனா-3174732.html
3174734 வார இதழ்கள் மகளிர்மணி தமிழுக்கு வருகிறார் அனுஷ்கா சர்மா! Wednesday, June 19, 2019 10:45 AM +0530 பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, அண்மையில் தயாரித்து வெளியிட்ட "பரி' என்ற இந்திப் படத்தை தமிழில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். "பரி' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அனுஷ்காவின் புதுமையான நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. தமிழில் நயன்தாராவை நடிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடையவே, அனுஷ்கா சர்மாவே தமிழில் நடிக்க ஆலோசித்து வருகிறாராம். ஏற்கெனவே இவரை தமிழில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்ததும் உண்டு.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/தமிழுக்கு-வருகிறார்-அனுஷ்கா-சர்மா-3174734.html
3174733 வார இதழ்கள் மகளிர்மணி அகதி குழந்தைகள் முகாமில் பிரியங்கா சோப்ரா DIN DIN Wednesday, June 19, 2019 10:43 AM +0530 "ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி' நல்லெண்ண தூதுவரான பிரியங்கா சோப்ரா, அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற பின்னர், ஆப்ரிக்காவில் உள்ள மிகப்பெரிய 9 லட்சம் பேர் தங்கியுள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளை சந்தித்துள்ளார். சூடான் எரித்ரியா நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு தங்கியுள்ள அகதிகளின் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/அகதி-குழந்தைகள்-முகாமில்-பிரியங்கா-சோப்ரா-3174733.html
3174729 வார இதழ்கள் மகளிர்மணி ஹிந்திப் படத்தை இயக்கும் மராத்தி நடிகை! DIN DIN Wednesday, June 19, 2019 10:38 AM +0530 கடைசியாக தன்னுடைய அம்மா சாந்தா கோகலேயின் "ரீடா வெல்லிங்கர்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து "ரீடா' என்ற பெயரில் மராத்தி படத்தை இயக்கிய ரேணுகா சகானே, தற்போது "திரிபங்கா' என்ற ஹிந்திப் படத்தை இயக்கவுள்ளார். மும்பையில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சப்னா ஆஷ்மி, மிதிலா பால்கர் ஆகியோருடன் கஜோலையும் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் ரேணுகா. அவர்களது ஒப்புதல் கிடைத்தவுடன் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதாம்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/ஹிந்திப்-படத்தை-இயக்கும்-மராத்தி-நடிகை-3174729.html
3174727 வார இதழ்கள் மகளிர்மணி திரும்பி பார்க்காமல் போய்கிட்டே இரு... கீர்த்தி சுரேஷ் Wednesday, June 19, 2019 10:30 AM +0530 திரையுலகில் அறிமுகமான வேகத்தில் ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்து சாதனை புரிந்த கீர்த்தி சுரேஷ், அண்மை காலமாக திரைப்படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்துவதால் புதிய படங்கள் வெளியாவதில் தாமதமேற்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்று கேட்டபோது, திரைக்கு வந்தது முதல் இதுவரையிலான தன் அனுபங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்:
 திரைப்படங்களில் கதாநாயகிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து..
 கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இது அனைத்துமே கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களாகும். ஒரு கமர்ஷியல் படத்தில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இல்லையென்றாலும், சில காட்சிகளுக்காக ஒப்பந்தம் செய்வதும் உண்டு. ஆனால் அனைத்து கமர்ஷியல் படங்களுக்கும் இது பொருந்தாது. சில படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதுண்டு. அப்படி எடுக்கப்பட்ட படம் தான் "நடிகையர் திலகம்'. இது நடிகை சாவித்திரியின் வரலாற்றுப் படம் என்பதால் வெற்றிப் பெற்றது. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களை தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு மாறுதலான விஷயமாகும்.
 உங்களைப் பற்றிய விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதுண்டா?
 என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை பாதித்ததில்லை. ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ளவும், எங்கே தவறு செய்தேன் என்று கண்டுபிடிக்கவும் முயற்சித்ததுண்டு. இப்போது இந்த விமர்சனங்களை நான் கண்டு கொள்வதும் இல்லை. என்னை பாதிப்பதும் இல்லை.
 "நடிகையர் திலகம்' படம் உங்களுக்கு ஒரு திருப்புமுனையா?
 நிச்சயமாக. வெற்றி எனக்கு அதிக பொறுப்புகளைத் தந்துள்ளது. அடுத்து எந்த படத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்கும்போது, திரைப்படத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை என்பதை உணர வைத்தது. இதனால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த எனக்கு சற்று இடைவெளி தேவைப்படுவதாக நினைத்தேன். தமிழ்ப் படங்களில் நடிக்கும்போதுதான் இந்த எண்ணம் தோன்றியது. விரைவில் புதிய வாய்ப்புகள் கிடைக்குமென்ற நம்பிக்கையும் இருக்கிறது.
 மீண்டும் மலையாளப் படங்களில் நடிப்பது பற்றி?
 ஆமாம். பிரியதர்ஷன், மோகன்லால் ஆகியோருடன் நான் முதன் முதலில் அறிமுகமானதே மலையாள படங்களில் தான். தற்போது மீண்டும் அவர்களுடன் "குஞ்சாலி மரைக்கார்' என்ற படத்தில் நடித்தாலும், எனக்கு இதில் அதிக முக்கியத்துவம் இல்லை. "ராமாயணம்' போன்று பல கிளைகள் கொண்ட இக்கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 2015-ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமான பின் ஏற்பட்ட அனுபவங்கள்?
 "திரும்பி பார்க்காமல் போய்க்கிட்டே இரு...' என்று தான் சொல்ல வேண்டும். நான் நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் சினிமாவில் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமென்ற கனவு சிறுவயது முதலே இருந்தது. பேஷன் டிசைனிங் படித்து காஸ்ட்யூம் டிசைனராக வேண்டுமென்று நினைத்தேனே தவிர நடிகையாக வேண்டுமென்று விருப்பப்பட்டதில்லை. மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது, தமிழில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. தமிழில் நடிக்கும்போது, தெலுங்கில் வாய்ப்பு வந்தது. மூன்று தென்னிந்திய மொழிகளில் நடித்த நான் தற்போது இந்தியில் அஜய்தேவ்கனுடன் நடித்து வருகிறேன். இந்தப்படம் முடிந்த பிறகு மீண்டும் அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவேன் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பொதுவாகவே நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தானாக வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதால் பல படங்களை இழந்ததுண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை வேண்டாமென்று சொல்வதை விட, எல்லா படங்களிலும் நடிக்கலாம் அல்லவா என்று சிலர் கேட்பதுண்டு. எனக் கென்று சில உரிமைகள் உள்ளன. அதன்படி முடிவெடுப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய தந்தை சுரேஷ்குமார் ஒரு மலையாள திரைப்படத் தயாரிப்பாளர். என்னுடைய அம்மா மேனகா ஒரு நடிகை. இந்த பின்னணி காரணமாக நான் திரையுலகில் நுழைவது எனக்கு சுலபமாக இருந்தது.
 இருந்தாலும் எந்த ஒரு விஷயமானாலும் நான் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறேன். படப்பிடிப்பு சம்பந்தபட்ட தேதிகளைக் கூட நானே கவனிக்கிறேன். இதற்கென்று தனியாக யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. சினிமா பின்னணி இருப்பதால் இதை நிர்வகிப்பது சுலபமாக இருக்கிறது. எனக்கென்று ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. திரையுலகில் இதுவரை நான் படிக்கட்டுகள் மூலமாக ஏறி வெற்றிப் பெற்றேனே தவிர, சுலபமாக முன்னேற நகரும் படிக்கட்டுகளை ( எஸ்கலேட்டர்) பயன்படுத்தவில்லை என்றார் .
 - பூர்ணிமா
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/19/திரும்பி-பார்க்காமல்-போய்கிட்டே-இரு-கீர்த்தி-சுரேஷ்-3174727.html
3169983 வார இதழ்கள் மகளிர்மணி ஒரே ஆண்டில் இரண்டு தங்கம்! - அங்கவை  DIN Wednesday, June 12, 2019 06:14 PM +0530
துப்பாக்கியால் குறி பார்த்து  சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் அபூர்வி சந்தேலா. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி களேபரத்தில் இந்த  வெற்றி செய்தி அமுங்கிவிட்டது.  ஜெர்மனியில் நடந்த போட்டியில்தான் இந்தியாவைச் சேர்ந்த  வீராங்கனை அபூர்வி  இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்த வெற்றி அபூர்விக்கு ஒலிம்பிக்ஸ் செல்லும் இந்தியக் குழுவில் இடம் பிடித்து தந்துள்ளது. அபூர்வியின்  வெற்றியுடன் இந்தியக் குழுவின் வெற்றியும் சேர, இந்தியா சீனாவை துப்பாக்கி சுடுதலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அபூர்வி இந்த ஆண்டு டில்லியில் நடந்த  உலகப் போட்டியிலும் பத்து மீ தூரத்தில் குறி நோக்கி சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். ஆக,  அபூர்விக்கு ஒரே ஆண்டில்  இரண்டு தங்கப் பதக்கங்கள்..!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/ஒரே-ஆண்டில்-இரண்டு-தங்கம்-3169983.html
3169982 வார இதழ்கள் மகளிர்மணி இது புதுசு - அருண் DIN Wednesday, June 12, 2019 06:12 PM +0530  

ஹகஜகஸ்தான் நாட்டு பழங்குடியினரின் பாரம்

பரிய  பெல்லி நடனத்தை  ஆய்வு செய்த  பாலிவுட் நடிகை  ரிச்சா சட்டா, தானும் அதை கற்றுணர்ந்ததோடு,  "ஷகிலா'  வரலாற்று  படத்தில்  ஒரு   காட்சியில் ஆடி  தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.  ""பெல்லி நடனத்தில் வயிற்றுப்  பகுதியை தாளத்திற்கேற்ப  அசைப்பதுதான் மிகவும்  முக்கியம். நான் ஆடியுள்ள அந்த நடன காட்சியைப்  பார்ப்பதற்காகவே  "ஷகிலா' படத்தை  ஆவலோடு  எதிர்ப்பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார் ரிச்சா சட்டா.

மீரா நாயர் இயக்கத்தில் விக்ரம் சேத் நாவல்!

1994-ஆம்  ஆண்டு  வெளியாகி  அதிக அளவில்  விற்பனையான  எழுத்தாளர் விக்ரம்  சேத்தின்  "சூட்டபிள் பாய்'  நாவலை,  இயக்குநர்  மீரா நாயர்,  பிபிசி சீரியலுக்காக ஆறு ஒரு மணி நேர எபிசோடுகளை இயக்கவுள்ளார். தபு, ஷிபாலிஷா,  ரசிகா  துகல், நஸ்ருதீன் ஷா  உள்பட பலர் இந்த  தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால், கதையில்  முக்கியத்துவம் பெற்ற லதா என்ற கதாபாத்திரத்திற்கான நடிகையை  மீராநாயர்  இன்னும் தேர்வு செய்யவில்லையாம்.

புத்தக விருது பெற்ற பெண் எழுத்தாளர்!

லண்டனில் உள்ள  நைன் டாட்ஸ்  அறக்கட்டளை,   சமூக  பிரச்னைகளை புதிய கண்ணோட்டத்தில்   எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டுமென்பதற்காக வைக்கும் கட்டுரை போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஏழு மாதத்திற்குள் அதே கருத்தை வைத்து புத்தகமாக எழுதுபவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.69.82 லட்சம் வழங்குகிறது. இந்தப் பரிசுத் தொகை மும்பையை  சேர்ந்த  பெண் எழுத்தாளர்  ஆன்னி ஜைதி  எழுதிய  "பிரெட், சிமெண்ட், காக்டஸ்'  என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது.  பகுதிநேர எழுத்தாளரான  ஆன்னி ஜைதி  ஏற்கெனவே  பல விருதுகளைப்  பெற்றுள்ளார். பரிசு பெற்ற  இவரது புத்தகத்தை அடுத்த ஆண்டில்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  பிரசுரிக்கவுள்ளது.

வெள்ளிவிழா பிரபஞ்ச அழகி!

1994- ஆம் ஆண்டு பிரபஞ்ச  அழகியாக  தேர்வு செய்யப்பட்டு  25  ஆண்டுகள் நிறைவடைந்ததை,  தற்போது  43 வயதாகும்  சுஷ்மிதா  சென்  தன் காதலர் மற்றும் பெண் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ""என் தாய்நாடு இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் வகையில் அன்றைய போட்டியில்  பங்கேற்ற  77  பெண்களில்  இந்தியாவில்  முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக  என்னை தேர்ந்தெடுத்ததற்கு  நன்றி.  இந்தியா  சார்பில் அப்போது  18 வயதான என்னை  போட்டிக்கு  அனுப்பிவைத்த  குழுவினருக்கும், தேர்வு  செய்தவர்களுக்கும்  நன்றி'' என்று  தன்னுடைய  இன்ஸ்டாகிராமில் தகவலையும்,  புகைப்படங்களையும்  வெளியிட்டுள்ளார்  சுஷ்மிதா  சென்.

ஹாலிவுட்டில் டிம்பிள்!  

நீண்ட  காலமாக  லாஸ் ஏஞ்சல்ஸில்  தங்கியுள்ள  முன்னாள்  பாலிவுட்  நடிகை டிம்பிள்  கபாடியா,  ஹாலிவுட்  தயாரிப்பாளர்  கிரிஸ்டோபர்  நோவன் தயாரிக்கும்  "பாஸ்ட் அண்ட்  ஃப்யூரியஸ் -7'  என்ற படத்தில்  நடிக்கும் வாய்ப்பைப்  பெற்றுள்ளார்.  ""இப்படத்தின்  படப்பிடிப்பு  ஏழு நாடுகளில் நடக்கவுள்ளது. திறமையும்  அழகும்  உள்ளவர்கள்  நடிப்பதற்கு வயது தடையல்ல. டிம்பிள் கபாடியா திரும்ப நடிக்க  வந்திருப்பது  மற்ற பெண்களுக்கு  முன்னுதாரணமாகும்'' என்று அவரை பாராட்டி  பாலிவுட்  நடிக- நடிகைகள் கருத்து  தெரிவித்துள்ளனர்.


தமிழுக்கு வரும் நிதி அகர்வால்!

இந்தியில்  டைகர்  ஷெராப்புடன்  "முன்னா மைக்கேல்'  என்ற படத்தில் நடிக்கும்  நிதி அகர்வால்,  ஏற்கெனவே  தெலுங்கில்  இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25-ஆவது  படத்தில் முதன்முறையாக தமிழில்  நிதி அகர்வால்  அறிமுகமாகிறார்.   கீர்த்தி சுரேஷ்  நடிப்பதாக முதலில் வந்த தகவல்  தவறானது.  ""கதைகேற்ப  நல்ல நாகரீகமான படித்தப் பெண் தேவை என்பதால்  நிதி அகர்வாலை  தேர்வு  செய்தேன்'' என்று இயக்குநர் லட்சுமணன்  கூறியுள்ளார்.  இந்தப் படத்தில்  ஜெயம்ரவி  ஒரு விவசாயியாக நடிக்க,  அவரது  மாமியார்  சுஜாதா  விஜயகுமார்  படத்தை தயாரிக்கிறார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/இது-புதுசு-3169982.html
3169979 வார இதழ்கள் மகளிர்மணி மேரிகோம் மீது எனக்கு எவ்வித துவேஷமும் இல்லை!  - பூர்ணிமா DIN Wednesday, June 12, 2019 06:06 PM +0530 ""பிங்கியிடம்  நான் தோற்றதால்,  நான் மூர்க்கதனமாக  தாக்குவதாக ஒவ்வொருவரும்  நினைக்கலாம். என்னுடைய  நுட்பத்தை  வலுவாக பயன்படுத்துவதென முடிவு  செய்தேன்.  இதன்மூலம் பிங்கியை  வீழ்த்த சிறந்த குத்துச்சண்டை  வீராங்கனையாக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொரு போட்டியிலும் என் திறமையை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கிறது''  என்று கூறும்  நிக்கத்,  இருமுறை உலக சாம்பியன் விருது பெற்ற கஜகஸ்தானை சேர்ந்த  நசீம்  கெய்சய்போவை  ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்  வீழ்த்தி  வெண்கல  பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியாவை பொருத்தவரை மகளிருக்கான 51கிலோ பிரிவு போட்டியில் பங்கேற்பது  மிகவும் கடினமாக கருதப்பட்டாலும், ஆறுமுறை உலக சாம்பியன் விருது பெற்ற மேரிகோம், அடுத்து மீண்டும் ஒலிம்பிக்ஸில் போட்டியிடப் போவதாக கூறியிருப்பது எனக்குள் புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேரிகோம், பிங்கியைப்போன்று என்னாலும் மகளிர் 51கிலோ  பிரிவில் போட்டியிட முடியும்  என்ற நம்பிக்கை  உள்ளது.

2016-ஆம் ஆண்டு ரியோ போட்டிகளின்போது 51 கிலோ பிரிவில்  பயிற்சி பெற்ற மேரிகோமுடன் 54 கிலோ பிரிவில் என்னைப் போட்டியிடும்படி என்னுடைய பயிற்சியாளர்கள் கூறினர். ஆனால்,  ரியோ போட்டியில் மேரிகோம் பங்கேற்கவில்லை. உலக சாம்பியன்ஷிப்  ஆயத்தங்களின் போதே பிரச்னைகளும், கருத்து வேற்றுமைகளும் எழுந்தன.

மேலும் 48 கிலோ  பிரிவிலிருந்து  முன்னேறிச் சென்ற  மேரியுடன் போட்டியிடுவது  சுலபமான விஷயமல்ல, அதிக  எடை பிரிவுகளில்  போட்டியிட வேண்டுமென்பது  மேரிக்கு  பிடித்திருந்தது.  2012-ஆம் ஆண்டு  லண்டன் போட்டியில்  வெண்கல பதக்கம் பெற்றவர். அக்டோபரில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டு மென்பதற்காக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை  மேரி தவிர்த்தார்.  

""எனக்கும்  இந்த போட்டியில்  பங்கேற்க  வேண்டுமென்ற  ஆர்வம் உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க  ஒவ்வொருவரும்  ஆயத்தமாகி வருகின்றனர். எனக்கு தேவை ஆதரவு.  ஏனெனில்  மிகவும்  கடினமான  இந்தப் போட்டியில் மேரிகோம்  உள்ளார்.  அவருக்கு  தேவையான  ஆதரவு  உள்ளது.  எனக்கு   இந்தப் போட்டியில்  கலந்து கொள்ள தேவையான  திறமையும்,  நம்பிக்கையும் இருக்கிறது.  இதில் வெற்றிப்  பெற்றால்  நிச்சயம்  டோக்கியோவில்  நடக்கும் ஒலிம்பிக்ஸில்  கலந்து கொள்ளும்  வாய்ப்பு  கிடைக்கும்.

குத்துச் சண்டை  போட்டிகளில்  பங்கேற்பவர்களுக்கு  உயரம்  தேவையில்லை என்று சிலர் கருதுகிறார்கள்.  ஆனால்,  அனைத்து சர்வதேச  51 கிலோ போட்டிகளிலும்  பங்கேற்பவர்கள் உயரமாக  இருப்பது,  அவர்களுக்கு உதவியாக இருப்பதாக  நான் கருகிறேன்.  இந்தியாவில்  உள்ள குத்துச்சண்டை வீராங்கனைகளில் நான் மிகவும்  உயரமானவள்.

மேரிகோம்  மீது எனக்கு எவ்வித  துவேஷமும் இல்லை.  முகாமில்  அவரை சந்திக்கும் போதெல்லாம்  என்னிடம்  அவர் அன்பாகவே  பேசுவார்,  பழகுவார், தவறுகளை சுட்டிக்காட்டுவார்.  

எனக்கு 51கிலோ பிரிவில் போட்டியிடுவது பிடித்தமானது. இந்தியாவில் இந்தப் பிரிவில் என்னையும்  ஒரு திறமைசாலியாக கருதுகிறேன்'' என்கிறார்  நிக்கத் ஜரீன்.

நிக்கத், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் விருது பெற்றவுடன் எதிர்காலத்தில் இவரும் மேரிகோம் போன்று பிரபலமாவார்  என விளையாட்டு விமர்சகர்கள் கூறினர். அதே போன்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளில் இவர் முதலிடம் பெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பார்க்கின்றனர்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/மேரிகோம்-மீது-எனக்கு-எவ்வித-துவேஷமும்-இல்லை-3169979.html
3169978 வார இதழ்கள் மகளிர்மணி பொடுகைப் போக்கும் கல் உப்பு! - பொ.பாலாஜிகணேஷ் DIN Wednesday, June 12, 2019 06:01 PM +0530 இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை. இதற்கு இன்று எத்தனையோ ஷாம்புகள், செயற்கை மருந்து பொருட்கள் இருந்தாலும் இயற்கை முறையிலான முயற்சியே தீர்வை தருகிறது  என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் பொடுகைப் போக்க கல் உப்பு பெரிதும் உதவுகிறது. அது எப்படி என்று பார்ப்போம்:

தேவையான பொருட்கள்: கல் உப்பு - 2   தேக்கரண்டி,  ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி,  எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி,  கண்டிஷனர் - 1 தேக்கரண்டி.

செய்முறை :  ஒரு கிண்ணத்தில் கல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பின்னர் உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும்.  உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும். ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். 

ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலைக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு தொல்லை நீங்கி, கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகின்றன.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/பொடுகைப்-போக்கும்-கல்-உப்பு-3169978.html
3169977 வார இதழ்கள் மகளிர்மணி சமையல் டிப்ஸ் - ஆர்.ஜெயலட்சுமி,  திருநெல்வேலி. DIN Wednesday, June 12, 2019 05:59 PM +0530 ஆப்பத்திற்கு  மாவு அரைக்கும்போது  பச்சரிசியை  வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால்,  ஆப்பம் மெத்தென்று இருக்கும்.

தக்காளிப் பச்சடி, கீரை  மசியல்  செய்யும்போது  தாளிக்க  கடுகுக்குப்  பதில் சீரகம்  சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

பருப்பு உருண்டைகள்  குழம்பில்  கரையாமல்  இருக்க, அதனுடன்  அரிசி மாவையும்  சேர்த்து  உருட்டி  செய்தால் கரையாது.

உளுந்து வடைக்கு  மாவு  அரைத்து, அதனுடன்  வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை  சேர்த்து வடை செய்தால்  வடை மிகவும் சுவையாக இருக்கும். 

பாகற்காய்  கறி செய்யும்போது  அதனுடன் சிறிது ஆம்சூர்  பொடி அல்லது புளி கரைசலைச் சேர்த்தால்  கசப்பு அதிகமாக தெரியாது.

நூடுல்ஸ்  ஒன்றோடு  ஒன்று ஒட்டாமல்  இருக்க  அதனை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி  எண்ணெய் விட்டு வேகவிடவும்.

வாடிப்போன  கொத்துமல்லித் தழையை வெதுப்பான நீரில்  போட்டு எடுத்தால் ப்ரஷ் ஆகிவிடும்.

இட்லிப் பொடியுடன்  வெங்காயத்தை நறுக்கிப் போட்டு ஒரு சுற்று  அரைத்து எடுத்தால்  வெங்காயச் சட்னி தயார்.

பொரித்த குழம்பு  செய்வதற்கு  தேங்காய் இல்லையெனில்  எருமைப்பாலில் திட்டமாக  அரிசி  மாவைக் கரைத்துக் குழம்பில்  சேர்த்தால்  ருசியாக இருக்கும்.

வெந்தயக் குழம்பு, பாகற்காய் பிட்லை  மணமாகவும், சுவையாகவும்  இருக்க மூன்று  உளுந்து அப்பளங்களைப் பொரித்து  நொறுக்கிச் சேர்த்து இறக்கினால் சுவை பிரமாதமாக இருக்கும்.

குருமா குழம்பு  செய்யும்போது  தேங்காயுடன்  ஒரு கரண்டி  பொரி அரிசி, வெங்காயம்,  கொத்துமல்லி  சேர்த்து  அரைத்தால்  சுவையாக  இருக்கும். 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/சமையல்-டிப்ஸ்-3169977.html
3169975 வார இதழ்கள் மகளிர்மணி குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்! - கே.முத்தூஸ். DIN Wednesday, June 12, 2019 05:56 PM +0530
✦    குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
✦    குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்கலாம்.
✦    மேலும் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
✦    நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயில் உள்ளது.
✦    மஞ்சள் குடைமிளகாய், சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமான சுரப்பிகளை அதிகம் கட்டுப்படுத்துகிறது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/குடைமிளகாயின்-மருத்துவப்-பயன்கள்-3169975.html
3169973 வார இதழ்கள் மகளிர்மணி என்  பிருந்தாவனம்! - 20 - பாரததேவி DIN Wednesday, June 12, 2019 05:55 PM +0530
தங்கராசுவுக்கும் பொண்டாட்டியோடு சினிமா பார்க்க ஆசைதான். ஆனால் வருகிற நேரத்துக்கு  பஸ் எதுவும்  இல்லை வெள்ளாமைகளும், தோப்புகளும் நிறைந்த காட்டுப்பாதை.  யாரும் அந்த ஊரில்  கணவன், மனைவியாக சினிமாவிற்கு  போவதில்லை.  ஏதாவது  சாமி படம் வந்தால் மட்டுமே கிழவி, குமரியென்று வயது  வித்தியாசமில்லாமல்  மாட்டு வண்டிகளைக் கட்டிக் கொண்டு  சினிமாப் பார்க்கப் போவார்கள்.

தங்கராசு,  அதை எடுத்து சொன்னபோது, கௌசிகா  ஒரேடியாக மறுத்தாள்.  

""புருஷனும், பொண்டாட்டியும்  சினிமாவுக்குப்  போகும்போது, யாராவது  கூட ஒருத்தரைக் கூட்டிக் கொண்டு  போவார்களா?  உங்கள்  ஊரில் எல்லாம் வித்தியாசமாகத்தான்  இருக்கிறது'' என்று  கேலி செய்து சிரித்தாள்.  பிறகு, ""நாம் இருவரும், இன்னைக்கு கண்டிப்பாக  சினிமாவுக்குப் போகிறோம் என்ன'' என்று கெஞ்சலும், கொஞ்சலுமாய் சொன்னபோது தங்கராசுவால் மறுக்க இயலவில்லை.

அவன் அம்மாவிடம்போய்  இந்த விஷயத்தைப் பற்றி சொன்னதும்,  சங்கரி பெருமூச்சுவிட்டாள்.

""பாத (ரோடு) சரி இல்லையேப்பா,  காத்தும், கருப்பும்  அலையிற இடம். அதிலயும்  களவாணிப் பயக  வேற சாமமும்,  ஏமமும்  வெளஞ்ச  வெள்ளாமைய மட்டுமில்ல, தோப்புல  காயி, கனின்னு  என்னத்தாயாவது  களவாங்கணுமின்னு அலயிதாக. நீ ஒத்தையா, பொம்பளபுள்ளயோட போவணுமிங்கிற, என்னம்மோ என் மனசுக்கு இது சரியாய்  படல.  சரி மாட்டு வண்டியக்கட்டிக்கிட்டு போவலாமில்ல'' என்று  சொன்னபோது, கௌசிகா, ""அய்யய்ய  மாட்டு வண்டியா? அது சுத்த போருங்க  சைக்கிள்ல உங்கப் பின்னால உக்காந்துக்கிட்டு  ஜாலியா  சுத்திப் பாத்துக்கிட்டு  போற மாதிரி இருக்குமா?'' என்று கௌசிகா சொன்னது ஞாபகம் வர, ""இல்லம்மா  அவ, சைக்கிள்ல்லதேன்  போவணும்மின்னு சொல்லுதா'' என்றான்.

""உன்  பொண்டாட்டிதான்  தான்புடிச்ச   முயலுக்கு  மூணு காலுன்னு சொல்லுவாளே.  நம்ம  சொன்னா  கேக்கவா போறா  சரி என்னம்மோ  பதனமா கூட்டிட்டுப் போயிட்டு வா''  என்றாள்  கவலையோடு.

சினிமாவுக்கு  போவதற்கென்றே  அழகாக சிங்காரித்திருந்தாள் கௌசிகா. அவள் சிங்காரித்திருந்த அழகைப் பார்த்தபோது,  தங்கராசுவுக்கு சினிமாவிற்கே போக வேண்டாமென்று  தோன்றியது. ஆசையும்,  காதலுமாக அதைப்பற்றி  அவளிடம்   சொன்னபோது, முகத்தை   தூக்கி வைத்தவாறு, ""ஆமாமா களத்துக்குப் பிஞ்சைக்கு  காவலுக்குப் போவணுமின்னு சொன்னாமட்டும் எப்படி ஓடுறீங்க''  என்று சொன்னதோடு   கோபமாக  ஒரு மூலையில்  போய் உட்கார்ந்து கொண்டாள்.

""இனி அவளை  சமாதானப்படுத்துவது  கஷ்டமென்று நினைத்தவன், சரி புறப்படு  கௌசி''  என்று அம்மாவிடம்  வந்து சொன்னபோது,  கௌசியும் கூடவே வந்தாள். இருவரும்  சங்கரியிடம்  சொல்லிவிட்டு  சைக்கிளில்  ஏறி புறப்பட்டபோது,  சங்கரி கவலையோடு  அவர்கள் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரைவிட்டு கொஞ்சம்  தூரம்  போன உடன் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த  கௌசிகாவிற்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. காற்று சிலு, சிலுவென்று  வீசியது. சூரியன் மேற்கு வானத்தில் இறங்கிக் கொண்டிருந்ததால்,  பூமியெங்கும்  பொன்னொளியாக  மாறிக் கொண்டிருந்தது.  இரைத் தேடப் போன  பறவைகள்  எல்லாம்  கூச்சலிட்டவாறு வானத்தில் பறந்து  வரும் நேர்த்தியைப்  பார்த்து அவளும் ஒரு பறவையாக மாறி குதூகலித்தாள்.  அவன் தோளில்  கை போட்டவாறு,  அவன்முதுகில், தன் கன்னத்தைத் தேய்த்தபோது,  தங்கராசு  சைக்கிளில்  கொஞ்சம் தடுமாறினாலும் கூட அவனுக்கும் இது ஒரு புது அனுபவமாயிருந்தது. மனதிற்குள்  கௌசிகாவின் மீது இருந்த ஆசையும்,  காதலும்  அளவுக்கதிகமாகப் பெருகியது.

"நல்ல வேள நானு இந்தப் பட்டிக்காட்டுல  இருக்கப் பொண்ணக் கட்டல, அப்படி கட்டியிருந்தா அவ இப்படி என் கூட சினிமா பார்க்க  சைக்கிள்ல வருவாளா? இப்படி  கட்டி அணைப்பாளா?  வேலையே  கதின்னு  என்னையும் வேல செய்ய சொல்லி  மூலையில  முடங்கிக்கிடப்பா'  என்று  நினைத்துக் கொண்டே இன்னும்  அழுத்தம்  கொடுத்து  சைக்கிளை  மிதித்தான்.

ரோட்டில்  வேலைக்குப் போன ஆண்களும்,  பெண்களும்  இவர்களை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டே போனார்கள்.  இவர்களுக்குப் போட்டியாக  ஒன்றிரண்டு சைக்கிள்களும்,  மாட்டு வண்டிகளும் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தன.

தியேட்டரில்  கிராமத்து  ஆட்கள்தான் கூடியிருந்தார்கள். கௌசிகாவையும், அவள் அலங்காரத்தையும்  அதிசயமாகப் பார்த்தார்கள்.  ஒருவேள  சினிமாவில் வருகிறவள்தான் இப்படி  கொட்டகைக்கு  முன்னால்  வந்துவிட்டாளோ  என்று கூடி,  கூடி  கிசு, கிசுப்பாக பேசினார்கள்.  டிக்கெட்  எடுத்துக் கொண்டு வந்தான் தங்கராசு.

சினிமா விட்டப்பின்  இருவருக்கும்  ஏன் சினிமாவிட்டார்கள்  என்று இருந்தது. 
""மீண்டும்  இரண்டு  டிக்கெட்  வாங்கி  இரண்டாவது  ஆட்டம் பார்ப்போமோ?'' என்று  கௌசிகா கேட்க, தங்கராசு  கஷ்டப்பட்டு தன் ஆசையை அடக்கினான். இரண்டாவது ஆட்டம்  பார்த்துவிட்டுப் போனால்  விடியும்  நேரமாகிவிடும். அம்மா வேறு  வருத்தப்படுவாள். பகலில்  வேலை  செய்யவும் கஷ்டமாயிருக்கும் என்று  நினைத்தவன்  இன்னொரு நாளைக்கு வரலாமென்று அவளை  சமாதானப்படுத்தினான்.  பிறகு, ஓட்டலுக்குப் போய் புரோட்டா,  பால் வாங்கி  சாப்பிட்டார்கள். அவர்கள் டவுனை விட்டு புறப்பட்டபோது  இரண்டாவது  படம் ஆரம்பித்திருந்தது.

பௌர்ணமிக்காக வளர்ந்து கொண்டிருந்த நிலா.  வானத்தில் மேகங்களையெல்லாம்  புறம் தள்ளிவிட்டு  தன்னந்தனியாக  உலா வந்து கொண்டிருந்தது.  கொட்டியப் பாலாய்  நிலமெங்கும்  நிலவின் வெளிச்சம் பரவியிருந்தது.  ரோட்டில்  ஒரு மனிதர்களைக் கூட காணோம்.

""கொண்டாங்க  சைக்கிளை  நான் ஓட்டுறேன்'' என்று  கௌசிகா  சொன்னதும், தங்கராசு  ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டான்.

"" என்ன நீ சைக்கிள் ஓட்டுவியா?''

""பின்ன, நான் காரே ஓட்டுவேன்.  உங்க பட்டிக்காட்டுல என்னத்த ஓட்டுறது'' என்றவள்.   அவனை உட்கார வைத்து மிதித்தாள்.  ரோட்டின்  வலது
புறம்  குறுக்கே  ஒரு பெரிய ஓடை  மணல் சரிவோடு ஓடியது, ஓடையின் இருபக்கமும்  வரிசையாக  நிறைய மரங்களும் , செடிகளும்  அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

இத்தனை மரங்கள், செடிகள் இருந்ததால், காட்டுப் பூக்களின் வாசம் நெஞ்சை அள்ளியது.

கௌசிகா,  தங்கராசுவை  இறங்கச் சொல்லி தானும்  இறங்கினாள்.  நிலவின் வெளிச்சத்திற்கு ஓடைமணல்  வெள்ளித் துகள்களாக மின்னின. மரத்தின் இலைகளினூடே  நிலவு புகுந்து  கண்ணாமூச்சுக் காட்டிக் கொண்டிருந்தது.

கௌசிகா  ஓடைக்குள்  இறங்கி ஓடினவள், அப்படியே  கிறு,கிறுமாம்பழம் சுற்றினாள்.  அவள் முகமே நிலவாக பூத்திருந்தது.  

தங்கராசும் அவள் பின்னாலேயே ஓடினான். அந்த நேரத்திற்கு ஓடையும், மணலும்  வானத்தின்  நடுவிலிருந்த  நிலவும் அழகாய்தான் இருந்தது தங்கராசுவிற்கு.  

ஆனால், ஹோவென்ற அந்த தனிமையும், நிலவின் வெளிச்சம் புகமுடியாத இடங்களில் இருந்த இருட்டும்.  அந்த இருட்டுக்குள் கேட்ட வித்தியாசமான உறுமல் சத்தமும், அவனை பயமுறுத்தியது.

அதோடு , அம்மா  சொன்ன காத்தையும்,  கருப்பையும்  நினைத்து  அவன் பயப்பட்டான்.  கௌசிகாவின் கொலுசு சத்தம் கேட்டபோதெல்லாம் வேறொரு கொலுசு  சத்தமும்   கேட்பது  போலிருந்தது அவனுக்கு.  அதேபோல்  அவள் சிரிக்கும்போது  அடர்ந்த கத்தாழை செடிகளினூடே  இன்னொருப்  பெண்ணும்  சிரிக்கும் சத்தம் கேட்டது.

தங்கராசு  இந்த அமானுஷ்ய  ஒலிகளுக்குப் பயப்படவில்லை என்றாலும்,  தன் பெண்டாட்டிக்காக  பயந்தான். 

இரண்டொரு  தங்க  நகைகளே  அணிந்திருந்தாலும்,  மரிக்கொழுந்து  நிறத்தில் சேலையும், லவுக்கையும்  பசுமை நிறத்திலிருந்தாள்  கௌசி.  தலைநிறைய மெட்டாக சூடிய  பிச்சிப்பூ  அப்போதுதான் வானத்து  நட்சத்திரங்களாக மொட்டவிழ்ந்து  மணம் வீசி அந்த இடத்தையே  ஆக்ரமிப்பு  செய்ய, இப்போது அவளே ஒரு தங்க ஆபரணமாக விளங்கினாள்.  அதுதான் அவனுக்குப் பயமாயிருந்தது. 

அம்மா சொன்னது போல் நாலைந்து பேர் களவாணிகள்  இந்நேரத்துக்கு   வந்துவிட்டால்,  தன்னால்  என்ன செய்ய முடியும்?  இரண்டு, மூன்று பேரை வேண்டுமானால் அவனால்  சமாளிக்க முடியும். அதுகூட கஷ்டம்தான். தான் என்ன சினிமா ஹீரோவா?

களவாங்க வந்தவர்கள் அவளையே களவுப் பொருளாக ஆக்கிவிட்டால்.. என்று நினைக்கும்போதே  அவன் மனதுக்குள்  திடுமென்று  ஒரு பாறாங்கல் விழுந்ததைப் போலிருந்தது.

 - தொடரும்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/என்--பிருந்தாவனம்---20-3169973.html
3169971 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! சமையல்! - பத்மப்ரியா குமரன், சென்னை DIN Wednesday, June 12, 2019 05:48 PM +0530  

சுரைக்காய்  சேமியா பாயசம்

தேவையானவை:  துருவிய சுரைக்காய்  - 1 கிண்ணம்
கம்பு சேமியா  - அரை கிண்ணம், நெய் -  2 தேக்கரண்டி
உப்பு -  1 சிட்டிகை, வெல்லம்  -  ஒன்றரை  கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  -  1 சிட்டிகை
முந்திரி திராட்சை -  சிறிதளவு
பாதாம்  பவுடர்  -  1 தேக்கரண்டி, பால்  - 1 டம்ளர்
செய்முறை:  பிஞ்சு  சுரைக்காயை துருவிக் கொள்ளவும். பின்னர்,  1 தேக்கரண்டி  நெய்யில்  வதக்கி வைத்துக் கொள்ளவும்.  பின்னர்,  வாணலியில் தண்ணீர்விட்டு கம்பு சேமியாவை  2  நிமிடம்  ஊற வைக்கவும்.  1 நிமிடத்திற்கு மேல் ஊற வைத்தால்  குழைந்துவிடும்.  பின்பு  சுரைக்காயுடன்   சேமியாவை சேர்த்து  பால் சேர்த்து  பாதாம்  பவுடர்  சேர்க்கவும்.  நன்கு வேக வைத்து பின்னர் வெல்லம்   வடிகட்டி  ஊற்ற வேண்டும்.  பின்பு நெய்யில்  வருத்த முந்திரி,  ஏலக்காய் சேர்த்து  ஆரியதும்  குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து பருகவும்.
 

ராகி ஃப்லூடா

தேவையானவை:  ராகி சேமியா - 1 கிண்ணம்
சுண்ட காய்ச்சியப் பால்  -  300 மி.கி
மாதுளை, ஆப்பிள் துண்டுகள்  - 1கிண்ணம்
சப்ஜா  விதை - அரை தேக்கரண்டி
நன்னாரி  சிரப் - 2 தேக்கரண்டி
வென்னிலா  ஐஸ்கீரிம் -  1 கிண்ணம்
செய்முறை:  முதலில்  பாலை சுண்ட காய்ச்சி பின்னர்  குளிர வைக்க வேண்டும். பின்பு  சேமியாவை  உதிரியாக வேக வைக்க வேண்டும்.  பின்னர், ராகி  மற்றும் கம்பு சேமியாவை  வேக வைத்து  கொள்ளவும்.  பின்னர், மாதுளை முத்துகள், ஆப்பிள்  துண்டுகள் ஒரு  நீளமான கண்ணாடி டம்பளரில் ஊறவைத்த சப்ஜா விதை, பிறகு சேமியா, பின்பு பழத்துண்டுகள். பின்னர், மீண்டும்  சப்ஜா விதை, சேமியா, பழத்துண்டுகள்   என மாற்றி மாற்றி இடவும். பின்னர், குளிர வைத்துள்ள  பாலை ஓர் ஓரமாக  ஊற்ற வேண்டும்  தொடர்ந்து ஐஸ்க்ரீம்  பின்பு  நன்னாரி  சிரப்  மேலே   போட்டு  கொடுக்கவும்.  ஐவ்வரிசியும் நன்கு  வேகவைத்து  சேர்க்கலாம்.

 

நுங்கு இளநீர் சர்பத்

தேவையானவை: நுங்கு - 3, இளநீர் - 1, நாட்டுச் சர்க்கரை  -  தேவைக்கேற்ப
ஏலக்காய்ப் பொடி -  1 சிட்டிகை,
ஐஸ்க்யூப் - தேவையானவை
செய்முறை:  இளநீர்  வழுக்கையோடு  வாங்கி  அதை மிக்ஸியில்  போட்டு பின்பு இளநீர்,  நுங்கு  போட்டு அரைத்து  பின்பு தேவையான  அளவு நாட்டுச் சர்க்கரை  சேர்த்து  குளிர  வைத்து குடித்தால் சுவையாக  இருக்கும். ஐஸ்கட்டி சேர்த்து  நன்கு அரைத்து  குடிக்கலாம்.  

 

மாங்காய்  சர்பத்

தேவையானவை: மாங்காய்  - 1
மிளகு -  சிறிதளவு
சீரகம் -  2 சிட்டிகை
கருப்பு  உப்பு -  1 சிட்டிகை
புதினா  - 5-6  இலை
நாட்டுச் சர்க்கரை  - தேவையான அளவு
செய்முறை:  மாங்காய்  தோல் சீவி  வேக வைத்து  பின்பு  மிக்ஸியிலிட்டு பின்பு மிளகு,  சீரகம்  (வறுத்த சீரகம்),  கருப்பு உப்பு  புதினா  சேர்த்து  நன்கு அடித்து நாட்டுச் சர்க்கரை  சேர்த்து  கலந்து  தேவையான அளவு குளிர்ந்த  நீர் சேர்த்து அருந்தவும்.  தேவை என்றால்  இஞ்சிச்சாறு  சேர்த்து  கொள்ளலாம். 

 

கேரட் சர்பத்

தேவையானவை:  கேரட் -  1
துருவியத் தேங்காய் -  அரை மூடி
துருவிய இஞ்சி  - 1 சிட்டிகை,  ஏலக்காய்  - 1
நாட்டுச் சர்க்கரை  - தேவைக்கேற்ப
செய்முறை:  மிக்ஸியில்  துருவிய  கேரட்,  தேங்காய், இஞ்சி,  ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் போட்டு நன்கு  அரைத்து  குளிர வைத்து  அப்படியே குடிக்கலாம். சுவையாக இருக்கும்.

 

கம்பு குல்பி


தேவையானவை:    கம்பு  -  1 கிண்ணம்
சோளமாவு  -  2 தேக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை -  தேவைக்கேற்ப
பாதாம்,  முந்திரி  -  தலா 10
ஏலக்காய்த் தூள்  -  அரை லிட்டர்
செய்முறை:  அடிகனமான  பாத்திரத்தில்  பாலை நன்கு  காய்ச்சி  கொள்ளவும். நன்கு காய்ந்து  சுண்டிவந்ததும் பாதாம், முந்திரி  கொர கொரப்பாக  பொடித்து அதில் சேர்க்கவும்.  பின்னர்  சிறிது தண்ணீரில்  கலந்து சோளமாவு சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும்  நாட்டுச் சர்க்கரை  சேர்க்கவும்.  பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஏலக்காய்த் தூள்  சேர்க்கவும்.  பின்பு ஆறியதும்  குல்பி மோல்டில் ஊற்றி  4-5  மணி நேரம்  குளிர்சாதன பெட்டியில்  வைத்து எடுத்தால் குல்பி ரெடி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/சமையல்-சமையல்-சமையல்-3169971.html
3169969 வார இதழ்கள் மகளிர்மணி  ஆட்டிஸத்தைத் தவிர்க்க: கர்ப்ப காலத்தின்போது ஊட்டச்சத்து உணவு தேவை டாக்டர் நித்யா ராமமூர்த்தி DIN Wednesday, June 12, 2019 05:40 PM +0530 கர்ப்பகாலம் என்பது, அதிக மென்மையான மற்றும் இக்கட்டான நிலையாகும். இக்காலகட்டத்தில் மிக அதிகமாக அக்கறையும், பராமரிப்பும் தேவைப்படுகிறது.  கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை இவ்வேளையில் எதிர்கொள்கின்றனர்.  எனவே, இக்காலகட்டங்களில் கருவுற்ற பெண்களுக்கு கூடுதல் கவனிப்பு கட்டாயம் தேவை. 

காரணம்,  கருவில் இருக்கும் குழந்தையின் ஆரம்பகட்ட  சூழல் மிக முக்கியமானது.  ஏனென்றால், ஆட்டிஸம் என அழைக்கப்படுகின்ற மதியிறுக்க நிலையானது, கருவுற்ற காலத்தின்போதுதான்  உருவாகிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கருவுற்ற காலத்தின்போது உயர்ரத்த அழுத்தம் அல்லது அசாதாரண இரத்தக்கசிவு ஆகியவற்றோடு சிசேரியன் முறையிலான பிரசவம் அல்லது மிக முன்னதாகவே ஏற்படுகின்ற குறை பிரசவம் (26 வாரங்கள்) போன்ற சிக்கல்களும் ஆட்டிஸம் பாதிப்பிற்கு காரணமாகிறது.  

ஆட்டிஸம் (மதியிறுக்கம்) என்பது, ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு என அழைக்கப்படுகிற தொடர்புடைய நிலைகளின் ஒரு பெரிய குழுவின் ஓர் அங்கமாகும்.  ஆட்டிஸம் ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.  

கருவுற்ற காலத்தின்போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 250,000 நியூரான்களை வளர்கருவில் மூளை உற்பத்தி செய்வதால் குழந்தை வளரும் ஆரம்பநிலை சூழலான கருவகம் மிக மிக முக்கியமானதாகும்.  இந்த செயல்முறையில் ஏதேனும் தடை ஏற்படும்போது,  அது மூளையில் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.  

அதாவது, தாயின் உணவுமுறை,  உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அவரது மனநலம், நோயெதிர்ப்பு திறன் மற்றும் உயர்ரத்த அழுத்த நிலை மற்றும் கருவுற்ற காலத்தில் ஏற்படுகின்ற நீரிழிவு ஆகியவை உட்பட, வளர்சிதை மாற்ற நிலைகள் இதில் உள்ளடங்கும்.  

கர்ப்பகால நீரிழிவு இருக்கின்ற பெண்கள் கருவுற்ற காலத்தின்போது மனநல சிகிச்சைக்கான மருந்துகளை உட்கொள்ளும்போது ஆட்டிஸத்திற்கான இடர் இரு மடங்காக அதிகரிக்கும் எனவும் ஆய்வு கூறுகிறது. மேலும், குருதி உறைதல் சீர்கேடு,  கருப்பை வளர்ச்சி மந்தம், தன்எதிர்ப்பு நோய்கள், உடற்பருமன் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய வைரஸ் தொற்று பாதிப்பு, தாய் சுவாசிக்கின்ற காற்றின் தரம் ஆகியவையும் கூட குழந்தையின் மூளையை பாதித்து ஆட்டிஸம் உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன.  

பிரசவ சிக்கல்கள் மற்றும் பிரசவ நேரம் ஆகியவையும் இதில் ஒரு பங்கை ஆற்றக்கூடும் என்று சில ஆய்வுகள் கருத்து தெரிவிக்கின்றன.  அதாவது, கருதரித்த பிறகு முதல் சில நாட்கள் உட்பட, கருவுற்ற காலம் முழுவதும் நிகழ்கின்ற நிகழ்வுகளோடு ஆட்டிஸம் தொடர்புடையதாக இருக்கிறது.  

கருவுற்ற காலத்தின் மூன்று பருவங்களில் கடைசி மூன்று மாத காலமானது, குழந்தையின் உடல் எடை மற்றும் கணிசமான வளர்ச்சி ஏற்படுகின்ற காலமாகும்.  எனவே,  கருவுற்ற காலத்தில் முதல் மற்றும் இரண்டாவது பருவகாலத்தின்போது ஏற்படுகின்ற நிகழ்வுகளோடுதான் ஆட்டிஸம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள்  சுட்டிக்காட்டுகிறது.  

அதுபோன்று ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியும் சரியாக நிகழ்கிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுபோன்று பேச்சு, இயக்கமுறை, உடல்சார்ந்த இன்னபிற தசை வளர்ச்சியில் ஏதாவது தாமதங்கள் காணப்படுமானால், உடனடியாக  அதற்குரிய சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகி  சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.  

இரும்புச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கு ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக 2014- ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி  மேற்கொண்ட  ஆய்வு கண்டறிந்தது.  

அதுபோன்று, ஒரு தாய் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவராக அல்லது உடற்பருமன், உயர்ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற வளர்சிதை பாதிப்பு நிலையை கொண்டிருந்தாலும்,  ஆட்டிஸம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.  

பொதுவாக, ஆண் குழந்தைகளுக்குதான் ஆட்டிஸம் ஏற்படுவதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.  அநஈ இருக்கிற ஒரு குழந்தையை ஏற்கெனவே குடும்பத்தில் இருந்தால், அக்குடும்பத்தில் இதே சீர்கேட்டுடன் மற்றொரு குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. 

எனவே,  ஒரு பெண்ணின் ஆரோக்கியமானது, அவரது குழந்தையின் நல்ல உடல்நலத்திற்கு அத்தியாவசியமானதாகும்.  பிரசவத்திற்கு முன்பு குறித்த காலஅளவுகளில் உரிய பரிசோதனைகளுடன் சேர்த்து நன்றாக உணவு உட்கொண்டு, தவறாது உடற்பயிற்சி செய்கின்ற பெண்களுக்கு கர்ப்பகாலத்தின்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும்.  

அதுபோன்று, கர்ப்ப காலத்தின்போது ஊட்டச் சத்துள்ள உணவு உட்கொள்வதும்,  கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,  சரியான  எடை  ஆகியவற்றிற்கு துணை புரிகிறது.  மேலும், நல்ல ஊட்டச்சத்தானது,  குழந்தையின் உணர்வுகளின் ஏற்ற இறக்கத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.  அத்துடன், இயல்பான நல்ல பிரசவம் நடைபெறவும் உதவுகிறது.

-மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர்
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/ஆட்டிஸத்தைத்-தவிர்க்க-கர்ப்ப-காலத்தின்போது-ஊட்டச்சத்து-உணவு-தேவை-3169969.html
3169967 வார இதழ்கள் மகளிர்மணி தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை! எஸ்.பி. உமாமகேஸ்வரன். DIN Wednesday, June 12, 2019 05:32 PM +0530 தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியை, தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை படைத்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி(23). பரத நாட்டிய ஆசிரியையான இவர் தற்காப்புக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அதைக்கற்றுத் தேர்ந்து அதிலேயே கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தனது சாதனை குறித்து ஸ்ருதி தெரிவித்தது: 

""மதுரையில் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனது மூன்றாம் வகுப்பு முதல் பரதநாட்டியத்தை முறையாக பல ஆண்டுகள் கற்றுத் தேர்ச்சி பெற்றேன்.  குச்சுப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட நடன வகைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். நடனத்தில் தேர்ச்சிப் பெற்றாலும் அதை வெளிக் கொண்டு வருவதில் எனது குடும்பத்தினருக்கு ஆர்வம் இல்லை.  பட்டப்  படிப்பு முடித்தவுடன் எனது வீட்டில் திருமணத்துக்கு வரன் பார்த்தனர். 

அப்போது மதுரையைச் சேர்ந்த தற்காப்புக்கலை நிபுணர் நாராயணனுடன் 2016-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சிறுமிகளுக்கு பரதநாட்டிய பயிற்சி அளித்து வந்தேன். முதலில் தற்காப்புக் கலையில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனால்  எனது கணவர் பல இடங்களுக்கு தற்காப்புக் கலையை பயிற்றுவிக்க செல்லும்போது நானும் உடன்செல்வேன். இதனால் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் எனது கணவரும் என்னை ஊக்குவித்து தற்காப்புக் கலையில் பயிற்சி அளித்தார். 

இதற்கிடையில் எனது கணவர் தற்காப்பு கலையில் 13 கின்னஸ் சாதனைகளை படைத்ததால் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன. இதைப் போன்று நாமும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதற்குள் கர்ப்பம் அடைந்ததால் சாதனை முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது. இதனால் உடலும் மிகவும் பலவீனமடைந்தது. இதனால் எனது குடும்பத்தினர் அனைவரும் தற்காப்புக்கலை பயிற்சியை நிறுத்துமாறு கூறி விட்டனர். ஆனால் எனது கணவர் நாராயணன் என்னை தொடர்ந்து  ஊக்குவித்து பயிற்சி அளித்து வந்தார்.  

இதில் கொரிய தற்காப்புக்கலையான டேக்வாண்டோவில் எல்போ ஸ்ட்ரைக் எனப்படும் இரு முழங்கைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி தாக்கும் முறையில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இதையடுத்து தினசரி ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் பயிற்சி எடுத்து வந்தேன். பயிற்சியின்போது இரு முழங்கைகளையும் தொடர்ந்து பயன்படுத்துவதால் கைகளை தூக்க முடியாமல் ஆகிவிடும். பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பயிற்சியைத் தொடருவேன். 

ஒருபுறம் பச்சிளம் குழந்தையையும் பார்த்துக் கொண்டு மறுபுறம் பயிற்சியையும் தொடருவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் கணவர் அளித்த ஆதரவால் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு பின்னர்  ஏப்ரல் 26-இல் ஒரு நிமிடத்தில் 211 முறை எல்போ ஸ்ட்ரைக் செய்து முடித்தேன். இதற்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எல்போ ஸ்ட்ரைக்கில் ஒரு நிமிடத்தில் 140 முறை செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. நான் பாகிஸ்தான் பெண்ணின் சாதனையை முறியடித்து ஒரு நிமிடத்தில் 211 முறை எல்போ ஸ்ட்ரைக் செய்ததால் எனது சாதனையை கின்னஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டு சாதனைக்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. 

இதையடுத்து அனைத்து தரப்பிலும் இருந்து எனக்கு பாராட்டுகள் குவிகின்றன,
இதன் காரணமாக பலரும் என்னை தொடர்பு கொண்டு தற்காப்புக் கலை பயிற்சி குறித்து கேட்டு வருகின்றனர். 

நீலப்பட்டை பெற்றுள்ள நான் கருப்புப்பட்டை பெற்று பெண்களுக்கு தற்காப்புக் கலையை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் எனது கணவரும் எல்போ ஸ்ட்ரைக்கில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதால், சாதனை தம்பதிகள் என கின்னஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் வேறு எவரும் புரியாத சாதனை. தற்போது 3 நிமிடங்களில் 520 எல்போ ஸ்ட்ரைக் செய்து கின்னஸ் அமைப்புக்கு அனுப்பியுள்ளேன். தற்காப்புக் கலையில் வேறு சில கின்னஸ் சாதனைக்கும் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் ஸ்ருதி.       

படங்கள்-ப. விஜயகுமார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/தற்காப்புக்-கலையில்-கின்னஸ்-சாதனை-3169967.html
3169966 வார இதழ்கள் மகளிர்மணி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம்  ஏறியவர்! - கண்ணம்மா பாரதி DIN Wednesday, June 12, 2019 05:30 PM +0530
உலகத்தின் மிகப் பெரிய சிகரமான  எவரெஸ்டில் காலடி எடுத்து வைக்க பெருங்கூட்டமாம்.  அதுபோல அசம்பாவித மரணங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளன. பனி உருகத் தொடங்கியிருப்பதால் முன்பு எவரெஸ்ட் பயணத்தின்போது இறந்தவர்களின் பனி மூடிய சடலங்கள் இப்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளனவாம்.  இவற்றைக் கண்டு பயப்படாமல்   பலரும் எவரெஸ்ட் சிகரம்  ஏறி சாதனை படைத்து வருகின்றனர்.  

சென்ற வாரம்  எவரெஸ்ட்  சிகரம்  ஏறி சாதனை படைத்தவர்களில் ஒருவர் ஷீத்தல் ராஜ். இருபத்திரண்டு வயதாகும் ஷீத்தல் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

உலகில் உயரத்தில் மூன்றாவது சிகரமாக இருக்கும் கஞ்சஞ்சங்கா சிகரத்தில் ஏறி ஷீத்தல் சாதனை படைத்திருந்தார்.  இந்த  சாதனையின் அடிப்படையில்   2019  எவரெஸ்ட்  சிகரம் ஏறும் குழுவில்  ஷீத்தல் இடம் பெற்றார்.  

""பள்ளியில் சாரணர் பயிற்சியில் சேர்ந்த போதுதான் எனக்கு மலை ஏறுவதில் ஆர்வம் பிறந்தது. அந்த  ஆர்வம்தான் குறைந்த வயதில் என்னை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்தது.  அப்பா ஒரு கார் டிரைவர். "இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை படங்களில் மட்டுமே பார்த்து வந்தோம். இப்போது நீ  எவரெஸ்ட் சிகரத்தில்  கால் பதித்து  திரும்பியிருக்கிறாய்' என்று வாழ்த்தினார்'' என்கிறார் ஷீத்தல் ராஜ். மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம்  ஏறிய  பெருமை ஷீத்தலுக்குச் சொந்தமாகியிருக்கிறது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/மிகக்-குறைந்த-வயதில்-எவரெஸ்ட்-சிகரம்--ஏறியவர்-3169966.html
3169965 வார இதழ்கள் மகளிர்மணி ஹிந்தி - ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன தாய்மொழியில் பேசுவேன்! - பிஸ்மி பரிணாமன் Wednesday, June 12, 2019 05:29 PM +0530
நாடாளுமன்ற தேர்தல்களில்  தற்போது  நடைபெற்ற 2019   தேர்தலில் தான் அதிக எண்ணிக்கையில் பெண்கள் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இம்முறை  78  பெண் எம்.பிக்கள் 
நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறார்கள். அவர்களில் சாதனை படைத்தவர் சிலர்:


பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள்  பெண் வேட்பாளர்களை  தேர்தலில் களம் இறக்கியிருந்தாலும், சதவீத அடிப்படையில் வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஒடிஸாவின்  பிஜு ஜனதா தளம் கட்சியும் அதிக அளவில் பெண்களை வேட்பாளர்களாக அறிவித்திருந்தன.  வெற்றி பெற்ற பெண் எம்.பிக்கள் அதிகமாக பா.ஜ.க,  திரிணாமுல், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பெண் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்தால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் முறியடித்திருக்கின்றன. வெற்றி பெற்ற பெண் எம்.பிக்கள் பெரும்பாலும் படித்தவர்கள். அரசியல் பின்னணி உள்ளவர்கள். சிலர்  அரசு வேலைகளிலும் பணி புரிந்திருக்கிறார்கள். 

அதே சமயம் மூன்றாம் வகுப்பு படித்த  பிரமிளா பிúஸாயி   பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.  மகளிர்  சுய உதவி குழுவின் தலைவியாக இருந்து பெண்களின் வளர்ச்சிக்காக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஒடிசா அரசுத் துறையில் கடைநிலை ஊழியராக இருந்து  ஓய்வு பெற்றவர். கணவரது  ஓய்வு ஊதியத்தைச்  சேர்த்துதான்  பிரமிளா  சொத்தாக தேர்தல் சமயத்தில் காட்டியுள்ளார். கணவரின் வருமானத்தை  தவிர்த்தால், பெண் எம்.பி.க்களில் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர் பிரமிளாதான். பிரமிளாவுக்கு வயது எழுபது. ஐந்து வயதில் திருமணம் ஆனவர். வசிப்பது  தகரக் கூரை வேய்ந்த வீட்டில்.  

"ஆங்கிலமும் ஹிந்தியும்  தெரியாத பிரமிளா  நாடாளுமன்றம் போய் எதை எப்படி பேசப் போகிறார்' என்பதுதான் தேர்தலின் போது எழுப்பப்பட்ட  கேள்வி.  ஆனால், "ஆங்கிலம் ஹிந்தி  வராதுன்னா என்ன.. தாய் மொழியான ஒரியாவில் பேசுவேன்..' என்று பதிலடி  கொடுத்து வெற்றிபெற்றவர். 

மம்தா பானர்ஜி  வங்காளத்தில்  முன்னணி நடிகைகளை  களம் இறக்கியபோது,   முப்பது வங்காள படங்களில் நடித்திருக்கும் லாக்கெட் சட்டர்ஜி என்ற  நடிகையை  ஹூக்ளி  தொகுதியில்  பா.ஜ.க நிறுத்தியது. வெற்றியும்  பெற்றது. லாக்கெட் சம்பாதித்திற்கும் சொத்தின் மதிப்பு இரண்டு கோடி.  கணவர் ஒரு பத்திரிகை நிறுவனத்தில்  மேலாளர்.

முதலீட்டுத் துறையில் உயர்ந்த  பணியை உதறி விட்டு திரிணாமுல் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹுவா மோத்ரா தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார். இவரது சொத்தின் மதிப்பு இரண்டரை கோடி.

ஹேமமாலினி  இரண்டாம் முறையாக மதுரா  தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர். பெண் எம்.பி.க்களில் அதிக சொத்து கொண்டிருப்பவரும் இவர்தான். 250  கோடி.  ஹேமா  இரண்டு முறை ராஜ்ய சபா  எம்.பியாகவும்  நியமனம் பெற்றிருந்தார்.

ஸ்மிரிதி இரானி 2014  தேர்தலில் ராகுல் காந்தியிடம்  தோற்றவர். 2019 தேர்தலில் ராகுலை தோற்கடித்திருப்பவர்.  தேர்தலுக்கு முன்பே அமேதி தொகுதியில் அடிக்கடி  வருகை தந்து நல்ல பெயர் சம்பாதித்ததால்  ஸ்மிரிதி இரானி எளிதாக வெற்றி பெற்றார்.  ஸ்மிரிதி இரானியின்  சொத்து மதிப்பு ஐந்து கோடி. மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் மீண்டும் ஜவுளித் துறை அமைச்சராகியிருக்கிறார்.

அகதா  கே  சங்மா. மேகாலயா  எம்.பி.  2009 -இல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற  அவைத் தலைவருமான பி.ஏ. சங்மாவின்  புதல்வி. முப்பத்தெட்டு வயது.  தந்தை தொடங்கிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வழக்கறிஞர். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர். படம் பிடிப்பது இவரது பொழுதுபோக்கு.  

தியா  குமாரி. ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நரேந்திர சிங்  என்பவரைக் காதலித்து  எதிர்ப்புகளிடையே திருமணம் செய்து கொண்டவர். இரண்டு மகன்கள். ஒரு மகள். திருமணமாகி 21  ஆண்டுகள் கழித்து கணவரை 2018 -இல்  விவாகரத்து செய்தார்.  பா.ஜ.க சார்பில்  ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியா  இந்த தேர்தலில்  எம்.பியாகியுள்ளார். நாற்பத்தெட்டு வயதாகும்  தியாவின் சொத்து   மதிப்பு பதினாறு கோடி. 

நடிகை சுமலதாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின்  இரண்டாவது சுயேட்சை   வேட்பாளர். நவ்நீத்  கவுர் ராணா. மகாராஷ்டிராவில்  அமராவதி  தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர். கன்னடம், தெலுங்கு,  மலையாள  பட  நடிகையாக இருந்தவர்.  பூர்வீகம் பஞ்சாப். கணவரும் சுயேட்சை  சட்டசபை உறுப்பினராக இருப்பவர். 2014- ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த  ராணா, இம்முறை   வெற்றி பெற்றுள்ளார். வயது 28 . ராணாவுக்கு மூன்று கோடி மதிப்புள்ள சொத்துள்ளது. 

பஞ்சாப் பாட்டியாலா  தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இரண்டாம் முறையாக   வெற்றி பெற்றிப்பவர் மஹாராணி  பிரநீத் கவுர். பஞ்சாப்   முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி. முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. பாட்டியாலா ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரநீத். 2019 தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பெண் எம்.பி.க்களில்  மூத்தவர்.  74  வயதாகிறது. "ஆறு கோடி சொத்து எனக்குள்ளது' என்கிறார் கவுர்.

தெலங்கானாவில் எப்படி ஒரே ஒரு பெண் எம்.பியாக மலோத்  கவிதா வெற்றி பெற்றாரோ, அப்படி  பெண் உரிமைகளை மறுக்கும் ஹரியானா மாநிலத்தின் ஒரே ஒரு பெண் எம்.பி. சுனிதா துகல். ஐம்பத்தொன்று வயதாகும்  சுனிதா  இந்திய வருமானத் துறையில் உயர்மட்ட அதிகாரியாக பணி புரிந்தவர். அரசியலில்  ஈடுபடவேண்டும் என்று  முடிவு செய்ததால் வேலையை ராஜினாமா செய்தார். 2014 -இல் சட்டசபை   தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர்.  நடந்து முடிந்த  தேர்தலில் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி நடத்திய  வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சுமிதாவுக்கு   சொந்தம். 

நடந்து முடிந்த தேர்தலில்  வெற்றி பெற்றிருக்கும்  பெரும்பாலான  பெண் எம்.பி.க்கள் கோடீஸ்வரிகள். 2014  தேர்தலில்  மொத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11.3  சதவீதம்  பெண்கள்  எம்.பிக்களாக தேர்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.  2019  நாடாளுமன்ற தேர்தலில் பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை  பதினான்கு  சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு 33.33  சதவீத   இட ஒதுக்கீடு  எப்போது  சாத்தியமாகும்?  இந்த தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  பெண் எம்.பி.க்கள்  ஒருசேர  குரல் எழுப்பினால் 33.33 ஒதுக்கீடு  சாத்தியமாகாவிட்டாலும் குறைந்த பட்சம்  பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை  நூறையாவது  தொடும் அல்லவா ?

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/12/ஹிந்தி---ஆங்கிலம்-தெரியாவிட்டால்-என்ன-தாய்மொழியில்-பேசுவேன்-3169965.html
3165532 வார இதழ்கள் மகளிர்மணி வெற்றிப் பெண்மணிகள் DIN DIN Wednesday, June 5, 2019 11:14 AM +0530 இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் புதுமுகங்கள் மட்டுமல்ல;
 மிகவும் இளம் வயதினர். அவர்களின் பின்னணி விவரம் இதோ:
 ரம்யா ஹரிதாஸ்

32 வயதான ரம்யா கேரள மாநிலத்தின் ஆலத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தெடுக்கப்பட்டிக்கும் எம்.பிக்களில் ஒருவர்.கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் தான். இவரது தந்தை ஹரிதாஸ் ஒரு கூலித் தொழிலாளி. தாய் டெய்லரிங் தொழில் செய்பவர். கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை, அவமானங்களைச் சந்தித்து வந்தார். ஆனால், எதையும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. "நான் மக்களுக்காகச் சேவை செய்ய வந்துள்ளேன். அதுவே எனது குறிக்கோள்' எனக் கூறி பம்பரமாகச் சுழன்று பிரச்சாரத்தில் மக்களைச் சந்தித்தார் ரம்யா. பிரச்சாரத்தின்போது குடும்பம் குடும்பமாகப் போய் மக்களை சந்தித்தார். அவர்கள் வீட்டுப் பிள்ளை போல மாறிவிட்டார். அவரது அணுகுமுறை, ஏழை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. எங்க வீட்டுப் பொண்ணு ரம்யா என இவருக்கே வாக்களிக்க - அதுவே அவரது வெற்றிக்குக் காரணம்.
 சுமலதா அம்பரிஷ்

சினிமா மற்றும் அரசியலில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அம்பரிஷ். அவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்ததையடுத்து சுமலதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கினார். அவருக்குப் பா.ஜ.க ஆதரவு அளித்தது. மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்தார்.
 சாத்வி ப்ரக்யா சிங்

கடந்த 2006-ஆம் ஆண்டு மாலேகான் மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டவர் சாத்வி ப்ரக்யா சிங். பல ஆண்டு சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டங்கள், உடல் நல பாதிப்பு எனப் பல தடைகளைத் தாண்டியவர். காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட்டுப் போபால் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றவர்.
 சந்திராணி முர்மு

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதே ஆன சந்திராணி முர்மு. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், புவனேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பி டெக் முடித்திருந்தாலும் சந்திராணி சமூகச் சேவை செய்து வருகிறார்.
 இவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு தேவை என்றால் சந்திராணியைத் தேடி வருகிறார்கள். இவரும் தன்னைத் தேடி வருபவர்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகிறார். உதவி செய்வதற்கு இவர் மறுப்பதும் இல்லை. இவரது தந்தை சஞ்சீவும் சமூக சேவை செய்து வருகிறார். நம்பிக்கையில்லாமலே விருப்ப மனு தாக்கல் செய்த சந்திராணிக்கு ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அழைத்து வாய்ப்புக் கொடுத்துள்ளார். கியோன்ஜர் தொகுதியில் இவரை எதிர்த்து இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்த பாஜகவை சேர்ந்த ஆனந்த் நாயக் என்பவர் போட்டியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தபோது சந்திராணி கடுமையாகப் பிரச்சாரம் செய்து வென்று காட்டியுள்ளார். 25 வயது 11 வருடங்கள் நிரம்பிய இவர் மிக இளவயது எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார். எம்.பி யாக பதவி ஏற்றபின் "தனது தொகுதி மக்களின் வறுமையைப் போக்குவதே தனது லட்சியம்' என்று கூறுகிறார்.
 கொடெட்டி மாதவி

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அருகு லோக்சபா தொகுதி முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஒய்எஸ்ஆர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அருகு எம்பியாக உள்ளார், 26 வயதான கொடெட்டி மாதவி. அங்கு உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்தியாவின் மிக ஏழ்மையான எம்.பி இவர். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ஆறு முறை எம்.பியாக தேர்தெடுக்கப்பட்ட கிஷோர் சந்திர தியோவை தோற்கடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
 மிமி சக்ரபோர்த்தி

திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கினர் பிரபல வங்காள நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டார் 30 வயது நடிகையான மிமி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். ஆனால், தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 நுஸ்ரத் ஜகான்

பசிராத் தொகுதியில் போட்டியிட்டவர் 29 வயது வங்காள நடிகை நுஸ்ரத் ஜகான். மதக் கலவரங்களுக்குப் பெயர் போன இடம் இது. மிமி சக்ரபோர்த்தி போல் நுஸ்ரத்தை வேட்பாளராக அறிவித்ததற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலியல் ரீதியான ஆபாச எதிர்ப்புகளை எதிர்கொண்டார். ஆனால், பின் வாங்காமல் தேர்தல் களத்தில் போராடி மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 மேற்கு வங்கத்திலிருந்து எம்பியாகி இருக்கும் இந்த 2 இளம் நடிகைகளுக்கு வரவேற்பு குவிகிறது. இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, "வாவ் வாவ் வாவ், வங்கத்திலிருந்து புது எம்பிக்கள். மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான். இந்தியா உண்மையிலேயே முன்னேறியிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.
 தமிழ் நாட்டில் 64 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு அதில் திமுக கூட்டணி சார்பில் கனிமொழி, ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வெற்றிபெற்று மக்களவைக்கு சென்று இருக்கிறார்கள்.
 மக்கள் மனதில் இடம் பிடித்து மக்களவைக்கு சென்றுள்ள இந்தப் பெண்களின் குரல் நிச்சயம் பாராளுமன்றத்தில் ஓலிக்கும்!
 -வனராஜன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/வெற்றிப்-பெண்மணிகள்-3165532.html
3165530 வார இதழ்கள் மகளிர்மணி கைத்தறி சேலையில் புரட்சி! DIN DIN Wednesday, June 5, 2019 11:02 AM +0530 இன்றைய ஃபேஷன் உலகில், குறைந்த விலையில், உடனடி பயன்பாட்டுக்கு உதவும் ஆயத்த ஆடைகளின் மோகம் அதிகரித்துவிட்டதால், கைத்தறி ஆடைகள் விற்பனை சரிவு நிலைக்கு வந்துவிட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் "கைத்தறி' சேலைகளுக்கு அகில இந்தியமுக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கில் பழமையையும் புதுமையையும் ஒருங்கிணைத்து "எத்திக்கஸ்' (Ethicus) என்ற பிராண்டை பிரபலப்படுத்தியிருக்கிறார் பொள்ளச்சியைச் சேர்ந்த விஜயலட்சுமி நாச்சியார். கைத்தறி சேலைகளில் புரட்சி செய்து வரும் இவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:
"பொள்ளாச்சியைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தொழில் பருத்தி விற்பனை செய்வது. பருத்தியை குஜராத்திற்கு அனுப்பி வந்தது எனது முந்தைய பரம்பரை. நான் மும்பையில் "துணி மற்றும் ஆடைகள் வடிவமைப்பில்' முதுகலை படித்தவள். படித்து முடிந்ததும் கைத்தறி தொழிலை தொடங்கவில்லை. திருமணமான பிறகும் தொடங்கவில்லை. திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். கணவருக்கு சொந்தமாக நூற்பாலை உள்ளது. அவர் இயற்கை உரங்கள் இட்டு வளர்க்கப்படும் பருத்திக்கு முக்கியத்துவம் தந்து வந்ததால், நானும் அந்தத் துறை நோக்கி ஈர்க்கப்பட்டேன். 
பருத்தி செடிகள் வளர்ப்பில் அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சுற்றுப்புறச் சூழலுக்கு பலவிதத்தில் கேடுகளை உருவாக்குகின்றன. அதனால், என் கணவர் இயற்கை உரங்கள் கொண்டு வளர்க்கப்படும் பருத்திச் செடிகளிலிருந்து கிடைக்கும் பருத்தி கொண்டு நூல் நூற்பதால் அதை பயன்படுத்தி கைத்தறி சேலைகளுக்கு ஒரு "புதுமுகம்' தந்து என் பயணத்தை 2009-இல் தொடங்கினேன். 
மேன்மையான தரம்... இன்றைய காலத்திற்கு ஏற்ற நவீன டிசைன்... கண்ணைக்கவரும் இயற்கை நிறம்.. இந்த அறத்துடன்தான் பொள்ளாச்சியில் வசிக்கும் திறமையான நெசவாளிகளுடன் எத்திக்கஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பல கண்காட்சிகள், ஃபேஷன் ஷோக்களில் பங்கு பெற்று எங்கள் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தியதால் எத்திக்கஸ் கைத்தறி சேலைகள் அகில இந்திய சந்தையையும் தாண்டி வெளிநாடு வாழ் இந்திய பெண்களாலும் விரும்பப்படுகிறது. எங்கள் தயாரிப்புகள் முன்னணி ஜவுளி விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
சேலை டிசைன்களில் மாற்றம், கவர்ச்சி, மற்ற கைத்தறி சேலைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் திறமையான கலைஞர்களைக் கொண்டு சேலைகளை வடிவமைக்கிறோம். மும்பை நகரின் பூங்காக்கள், டாக்சிகள் வரிசை, ஹிந்திப்பட போஸ்டர்கள் வண்ணக் கலவை, நீல தார்பாலின் ஷீட்டுகள் விரிக்கப்பட்ட குடிசைகள், மும்பையின் கோழிக்கூடு போன்ற குடியிருப்புகளின் நிறக் கூட்டு, இவற்றின் வண்ண விநோதங்களை சேலையில் விரியச் செய்து அதை தொகுப்பாக வெளியிட்டோம். நல்ல ஆதரவும் விளம்பரமும் கிடைத்தது. 
கை விரல்களால் சேலைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வண்ணங்களைக் கொண்டு கலங்காரி ஓவியங்களை வரையச் சொல்கிறோம். கை கொண்டு நூல் ஓவியம் (எம்பிராய்ட்டரி) பின்னச் சொல்கிறோம். இந்த வேலைகளுக்காக குஜராத்தில் கட்ச், உத்திர பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களுக்குச் செல்கிறோம். இதனால் எங்கள் சேலைகளில் அகில இந்திய பாரம்பரிய கலை வேலைகள் சங்கமமாகின்றன. 
சேலை நெய்யும் நெசவாளி, டிசைன் செய்யும் கலைஞரின் பெயர்களை அவர்கள் படத்துடன் அச்சிட்ட தகவல் அட்டையையும் சேலையுடன் இணைக்கிறோம். அருமையான சேலையை உருவாக்கியவர்களின் உழைப்பை கெளரவிக்கும் விதமாக, அங்கீகரிக்கும் விதமாக இந்த முறையை 2009-இல் அறிமுகம் செய்தோம். சேலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பருத்தி எங்கு விளைந்தது போன்ற விபரங்கள் அந்த அட்டையில் இருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்த தயாரிப்பின்போது இன்னும் கற்பனை கலந்த அதிக உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குவார். அதனால் ஒவ்வொரு சேலையும் வித்தியாசமான கலை வடிவம் பெறும். நுகர்வோர்களையும் கவரும். இந்த " தகவல் அட்டை' முறையை இப்போது பல சேலை தயாரிப்பு நிறுவனங்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. 
இன்றைய சூழ்நிலையில் இளம் பெண்களிடம் சுடிதார், ஜீன்ஸ், லெக்கின்ஸ் புழக்கம் அதிகமாகிவிட்டது. வயதான பெண்மணிகள் கூட சுடிதார் அணிய ஆரம்பித்து விட்டார்கள். 
இந்த சூழ்நிலையில் கைத்தறி சேலைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற எண்ணம்தான் ஊக்கத்தையும் முனைப்பையும் தந்தது. வர்த்தக உண்மை என்னவென்றால் கைத்தறி சேலைகளின் விற்பனை கூடியிருக்கிறது என்பதுதான். தயாரிப்புகளை புதுமையுடன் வித்தியாசமாக தயாரித்தால் நிச்சயம் நுகர்வோர்களின் ஆதரவு அதிகமாகும். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் துணிகளுக்கு ஆதரவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. சேலைகள் அணிவதும் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. பாரம்பரிய சேலை பெண்களிடம் பிடித்திருக்கும் இடத்தை சுடிதாரும் ஜீன்ஸும் எடுத்துக் கொள்ள முடியாது. விழாக்கள் சடங்குகள் சம்பிரதாயங்களின் போது சேலைதான் முன்னணியில். எங்கள் சேலையின் விலை ஆயிரத்தில் தொடங்குகிறது. சிக்னேச்சர் மற்றும் டிசைனர் சேலைகள் பிரத்யேகமாக ஆர்டர் கிடைக்கும் போது அதன் விலை மாறும். தங்கம், வெள்ளி ஜரிகைகள் சேர்த்து செய்யும் சேலைகள் லட்சத்தைத் தாண்டும். எங்களிடம் நாற்பது தறிகள் உள்ளன. அதில் உழைக்கும் நெசவாளிகள்தான் எத்திக்கஸ்ஸின் உயிர்நாடி'' என்கிறார் விஜயலட்சுமி நாச்சியார். 
- பிஸ்மி பரிணாமன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/கைத்தறி-சேலையில்-புரட்சி-3165530.html
3165529 வார இதழ்கள் மகளிர்மணி செவித்திறனற்ற பெண்ணின் துணிகர பயணம்! DIN DIN Wednesday, June 5, 2019 10:59 AM +0530 பெங்களூருக்கும் போர்ச்சுகல் நாட்டிற்கும் இடைப்பட்ட தூரத்தை விமானம் மூலம் சென்றடைய சுமார் 8,700 கி.மீ ஆகும். பெங்களூரைச் சேர்ந்த 34 வயதாகும் அர்ச்சனா திம்மராஜூ, தன் வாழ்நாள் சாதனையாக தரைவழியே பெங்களூரிலிருந்து போச்சுகலுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதில் என்ன சாதனை இருக்கிறது?
 அர்ச்சனாவுக்கு செவித்திறன் இல்லை. உலகிலேயே முதன் முறையாக செவித்திறனற்ற ஒரு பெண் 40ஆயிரம் கி.மீ.தூரத்தை பைக் மூலம் கடந்தவர் என்ற சிறப்பைப் பெற வேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாகும்.
 அதன்முதற்கட்டமாக, பிறவிலேயே செவித்திறனற்ற அர்ச்சனா, அடுத்த ஆண்டு பெங்களூரிலிருந்து நேபாளம் , பூடான், மியான்மர், கசகஸ்தான், மாஸ்கோ, ஐரோப்பா வழியாக போர்ச்சுகலுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றடைய திட்டமிட்டுள்ளார். போர்ச்சுகல் சென்றடைந்தவுடன் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் திரும்ப இருக்கிறார். தற்போது, இந்த துணிகர பயணத்திற்காக, அந்தந்த நாட்டின் அனுமதி பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
 மல்லய்யா அதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றும் இவர், தனியாக இந்த பயணத்தை மேற்கொள்ள போவதில்லையாம். செவித்திறனற்றவர் என்பதால் தனியாக பயணம் செய்வது பிரச்னை என்பதோடு, வழியில் மக்களுடன் கலந்துரையாட முடியாது என்பதால் உடன் அபிஜித் சோமசேகர் என்பவரையும் அழைத்துச் செல்லவுள்ளார்.
 பல நாடுகளின் கலாசாரத்தையும், உணவு வகைகளையும் தெரிந்து கொள்வதோடு, ஆசிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள செவித்திறனற்றவர்களுக்காக நடத்தப்படும் 60 பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களையும் சந்திப்பதென்பது இவரது நோக்கமாகும். ஏற்கெனவே, கடந்த ஆண்டில் பெங்களூரிலிருந்து உலகிலேயே மிக உயரமான வாகன பாதையான கார்டங்லா வழியே பூடானில் உள்ள லீ என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
 ""பைக் சத்தத்தை கேட்க முடியாதே தவிர, அதன் அதிர்வுகளை என்னால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் யமஹா ஆர்எக்ஸ் 100 என்ற பைக் மூலம் ஒட்ட கற்றுக் கொண்டேன். எனக்கு செவித்திறன் இல்லை என்பதை உணர்த்துவதற்காக பைக்கின் பின்னால், வண்டி ஒட்டுபவருக்கு காது கேட்காது. என்னைப் பற்றி ஏதாவது விமர்சித்தால் அதை கேட்கும் சக்தி எனக்கில்லை என்று எழுதி வைத்துள்ளேன்'' என்கிறார் அர்ச்சனா.
 2018-ஆம் ஆண்டை பொருத்தவரை இவருக்கு மறக்க முடியாத ஆண்டாகும். இவர் தன்னுடன் பள்ளியில் பணிபுரியும் நண்பர் டேனியல் சுந்தரம் துணையுடன் மௌன பயணம் ஒன்றை தொடங்கி செவித்திறனற்றவர்களை சந்தித்து உதவிகள் செய்துள்ளார். இவரது துணிகர பயணங்களுக்கு பெற்றோர் ஆதரவு அளித்து வருவதோடு, ராயல் என்பில்ட் தண்டர்பேர்ட் 350 சிசி பைக் ஒன்றையும் வாங்கி தந்துள்ளனர்.
 - பூர்ணிமா
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/செவித்திறனற்ற-பெண்ணின்-துணிகர-பயணம்-3165529.html
3165528 வார இதழ்கள் மகளிர்மணி சமையல் டிப்ஸ்! DIN DIN Wednesday, June 5, 2019 10:57 AM +0530 ✦ தயிர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரை புளிக்காமல் இருக்க தேங்காய்த் துண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
 ✦ ரசம் செய்யும்போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
 ✦ மோர்க் குழம்பு செய்யும் போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
 ✦ ஆப்பத்துக்கும், இடியாப்பத்துக்கும் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட பால் எடுக்கும் போது, அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து அரைத்தால் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
 ✦ சப்பாத்தி மாவு பிசையும் போது, சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்தாலும், பாலாடைக் கட்டி சேர்த்துப் பிசைந்தாலும், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.
 ✦ வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது, சிறிதளவு கடலை மாவு மற்றும் தயிர் ஊற்றிப் பிசைந்தால் சுவையாக இருக்கும்.
 ✦ உப்பு நீர்த்துப் போகாமல் இருக்க உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.
 ✦ மிளகாய்ப் பொடியில் வண்டு வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்பொடி டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
 ✦ பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள் விரைப்பாவதைத் தவிர்க்க, அத்துடன் உருளைக் கிழங்கை போட்டு வைப்பது நல்லது.
 ✦ தேங்காய்ச் சட்னி அரைக்கும் போது, பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
 - ஏ.எஸ். கோவிந்தராஜன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/சமையல்-டிப்ஸ்-3165528.html
3165527 வார இதழ்கள் மகளிர்மணி கண்களுக்கு மையிடும்போது கவனிக்க வேண்டியவை... DIN DIN Wednesday, June 5, 2019 10:55 AM +0530 ✦ கண்கள் மூக்கின் மேல் பகுதியில் அமையப் பெற்றவர்கள் மூக்கின் அருகே அமையுமாறு மைக்கோடுகளை இட வேண்டும்.
 ✦ கண்கள் புருவத்திலிருந்து சற்றே அதிகமாகக் கீழே இருக்கக் கூடியவர்கள், மைக் கோட்டை புருவப் பகுதியில் ஓரளவு தடிப்பாக இழுக்க வேண்டியது அவசியம்.
 ✦ கண்களுக்கு மைத்தீட்டுவது எல்லாப் பெண்களுக்கும் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மை தீட்டாமல் இயல்பாக அழகிய கண்களைக் கொண்டவர்கள் மை தீட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.
 ✦ மைக்குப் பதிலாக மை பென்சில்களைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பென்சில்களால் மைதீட்டுவது ஓரளவுக்கு மெல்லியதாகவே இருக்கும்.
 ✦ கண்களில் மையிட, கண்ட கண்ட குச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனால் கண்களுக்குப் பாதிப்பு நேரும். குச்சிகள் சிராய்த்து ஏதேனும் சிறு காயங்களை அல்லது கீறல்களை ஏற்படுத்திவிடவும் கூடும். எனவே இதற்கென உள்ள மெல்லிய பிரஷ்களைப் பயன்படுத்துவதே மிகமிக நல்லது.
 ✦ கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன் கண்களை நன்றாகக் கழுவித் துடைத்தப் பிறகே மை தீட்டத் தொடங்க வேண்டும். என்பதையும் மறந்துவீடாதீர்கள். மேலும் தினமும் ஒரே மாதிரி மை தீட்டுவதை விடுத்து அன்றன்று உடுத்தும் உடையின் நிறத்திற்கேற்ப அடிக்கடி மாற்றித் தீட்டிக் கொள்வதும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
 (பெண்களுக்குப் பயனுள்ள பல்வேறு குறிப்புகள் என்னும் நூலிலிருந்து)
 - முக்கிமலை நஞ்சன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/கண்களுக்கு-மையிடும்போது-கவனிக்க-வேண்டியவை-3165527.html
3165526 வார இதழ்கள் மகளிர்மணி சுண்டைக்காயின் சிறப்பான பயன்கள் DIN DIN Wednesday, June 5, 2019 10:54 AM +0530 காய்கறிகளுள் மிகவும் சிறிய காயான சுண்டைக்காயில் பல்வேறு பலன்கள் மிகுந்துள்ளன. சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
 நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அவசியம்.
 வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது சுண்டைக்காய். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச், கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.
 சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
 சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
 காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும் , புண்களையும் விரைந்து ஆற வைக்கும்.
 இது தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கக்கூடியது.
 சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
 சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பலவகை மருந்துகள் தயாரிப்பதற்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
 பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக "அங்காயப் பொடி' என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.
 பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டும். அத்துடன் உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தியையும் கொண்டது சுண்டைக்காய்.
 - எல்.மோகனசுந்தரி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/சுண்டைக்காயின்-சிறப்பான-பயன்கள்-3165526.html
3165525 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்!19 - பாரததேவி DIN DIN Wednesday, June 5, 2019 10:51 AM +0530 பிஞ்சை முழுக்க சோளக்கருதுகள் காற்றுக்கு தலை அசைத்து நின்றன. அவைகளையெல்லாம் எப்போது களம் கொண்டு சேர்ப்பது என்ற நினைப்பே அவனுக்கு மலைப்பாக தோன்றியது. 
"என்னங்க என்னம்மோ கேட்டீங்க?'' என்று கௌசிகா அவன் யோசனையை தன் பக்கம் திருப்பினாள்.
"ஆமா, ஆமா'' என்று தன் உணர்வுக்குத் திரும்பியவன், " அது வந்து கௌசி நானு பட்டிக்காட்டுகாரன்னு தெரிஞ்சிதான என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டே?''
"இதென்னங்க உங்களுக்கு இவ்வளவு நாள் கழிச்சி இப்படி ஒரு சந்தேகம்?''
"அப்படீன்னா நீ இந்தப் பட்டிக்காட்டுக்கு தகுந்தபடி உனக்கான வசதிய கொஞ்சம் மாத்திக்கணும்''
" எப்படி?''
இந்த வேதாளம் எப்ப முருங்க மரத்தில ஏறுமின்னே தெரியலயேயென்று கொஞ்சம் பயத்துடனேயே... "வந்து... நீ காலையில டிபன் கேக்கிற பாரு அதக் கொஞ்சம் மாத்திக்கிடணும். அம்மாவும், தங்கச்சியும் காலையிலேயே உனக்காவத்தேன் சோறாக்கிட்டுப் போறாக அதனால நீ காலையில் சோறு சாப்பிட்டுப் பழகிக்கோ'' என்றான் தயக்கத்தோடு.
" சரி பழகிக்கிறேன். ஆனா மத்தியானத்துக்கும் அதே சோறுதானே. அப்ப ராத்திரிக்கு? என்று கௌசிகா கேட்டபோது மௌனமாக இருந்தான் தங்கராசு.
" மூணு வேளைக்கும் சோறு மட்டும் சாப்பிட்டு என்னால இருக்க முடியாது. அது உடம்புக்கும் நல்லதில்லன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.
"சரி சோளக்கஞ்சி, கம்மஞ்கஞ்சி'' என்று சொல்லுவுமே பதறினாள். அதெல்லாம் நான் குடிக்க மாட்டேன். ஏன்னா என் உடம்புக்கு ஏதாவது அலர்ஜி வந்திடும்''
"அப்ப என்ன பண்ணலாமின்னு நீயே சொல்லு ஏன்னா தினமும் காலையில டவுனுக்குப் போயி என்னால் டிபனெல்லாம் வாங்கிட்டு வர முடியாது'' என்று தங்கராசு சொல்லவும்,
கௌசிகாவின் முகத்தில் பளிச்சென்று ஒரு சந்தோஷம் தோன்றி மின்னியது. இன்னும் நெருக்கமாய் அவனை ஒட்டிக் கொண்டு உட்கார்ந்தவள் "அப்போ நம்ம டவுனுக்கே குடிபோயிரலாம்ங்க. இந்தப் பட்டிக்காட்டுல எனக்கு பிரண்டஸ் யாருமில்ல படிக்க பத்திரிகை, கதைப் புத்தகமின்னு கூட இல்லாம எனக்கு தனியா இருக்க போரடிக்குது'' என்றாள் குழந்தை சிணுங்கலாக.
தங்கராசு திடுக்கிட்டுப் போனான். கொஞ்சம் விட்டால் உண்ணாவிரதமிருந்து காரியத்தை சாதித்துவிடுவாள் என்று நினைத்தவன் அவசரமாய், " டவுன்ல மட்டும் என்ன இருக்காம். வெறும் கடைகதேன் இருக்கு. கடையில போயி தினமும் என்ன வாங்கப்போறே?''
"என்ன அப்படி சொல்லிட்டீங்க , ஓட்டல் இருக்கும். சினிமா தியேட்டர் இருக்கும், லைப்ரேரி இருக்கும்''
"நீ சொல்றதெல்லாம் இருக்கும். நம்ம ஆடு, மாடுகள கட்டவும், தானியம், தவசத்தப் போடவும் எவன் வீடு கொடுப்பான். இதோபாரு கௌசி , நீ இங்கதான் இருக்கணும். நல்லா யோசிச்சுவை நானு பிஞ்சைக்குப் போயிட்டு வாரேன்'' என்று சைக்களில் பறந்தான் தங்கராசு.
மறுநாள் வாசலுக்கு முன்னால் அடுப்புக்கட்டி நெல்லை அவித்துக் கொண்டிருந்தாள் சங்கரி; கமலா சமையல் செய்து கொண்டிருக்க தங்கராசுவும், பாண்டியும் சோளக்கருதைக் காயப் போட களத்திற்குப் போயிருந்தார்கள். சூரியன் புறப்பட்டது தெரியாமல் மேகத்துக்குள் புதைந்து கிடந்தான். வானத்தில் மெல்ல போய்க் கொண்டிருந்த பஞ்சு மேகங்கள் சட்டென கருமையாக மாறி, எதையோ கூடி, கூடி பேசின.
தங்கராசுவுக்கு பயமாயிருந்தது. "டேய் பாண்டி மூடி இருக்க கருத நம்ம அக்கறையா காயப் போடப் போறோம். வானம் என்னடான்னா, மூடி முள்ளரிஞ்சு கரி மூட்டம் போட்டது போல இருக்கு. ஒரு வேள மழ, கிழ வந்துருமோ?'' என்றான் சற்று பதட்டத்தோடு.
"அதேன்ணே எனக்கும் பயமாயிருக்கு. அம்மா வேற நெல்ல அவிச்சுக்கிட்டு இருக்கா. சட, சடன்னு ஒரு மழ இந்த மானைக்குப் புடிச்சதோ... அம்புட்டும் நாசக்காடயிரும்'' என்று பாண்டி சொல்ல,
இரண்டு பேரும் பயமும், பதட்டமுமாய் நடந்தார்கள்.
இங்கே நெல் வெந்த உடன், புழுக்கத்தின் வீச்சம் வீடு எங்கும் பரவியது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கௌசிகா சட்டென கண் விழித்தாள். நெல் வெந்து மலர்ந்த வீச்சம் (அவளைப் பொருத்தவரை அது வீச்சம்தான்) அவளுக்கு குடலைப் புரட்ட "உவ்வே' என்று ஒங்காரித்துக் கொண்டே பாத்ரூம் நோக்கி ஓடினாள்.
மருமகள் எழுந்ததும், ஏழாததுமாக குமட்டிக்கிட்டு ஓடுதாளே, ஏதும் பேரன், பேத்தி உண்டாயிருக்குமோ? என்ற ஆர்வமும், சந்தோசமுமாய் அவள் பின்னாலேயே ,
"என்ன தாயீ இம்புட்டுக்கு குமட்டலு எடுத்துக்கிட்டு ஓடிவாரே நாளு, கீளு தள்ளிப் போச்சா? என்று கேட்டுக் கொண்டே சங்கரி கௌசிகாவின் பின்னால் வர, அவளுக்கு கோபம் தாங்க முடியவில்லை.
"நாளும் தள்ளிப் போவல, தேதியும் தள்ளி போவல, அது என்னத்த ஒரே நாத்தம்?''
"என்ன தாயீ சொல்லுத நெல்லுல்ல அவிச்சிக்கிட்டு இருக்கோம். நெல்லு அவிச்சிக் கிட்டு இருக்கையில உனக்கு நாத்தம் எங்கிட்டு இருந்து வந்துச்சு?''
"அய்யோ உங்களுக்கு ஒன்னும் தெரியல. எனக்கு அப்படியே குடலப் புரட்டுது. தயவு செய்து இனிமே இந்த வேலய இங்கே செய்யாதீங்க'' என்று கௌசிகா சொல்ல சங்கரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
வீட்டிற்கு முன்னால் ஆடு, மாடுகளை கட்ட வேண்டாமென்று சொல்லி பிடிவாதம் பிடிக்க இப்போது, ஆடு, மாடுகள் சுற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் வெறும் ஓலைமேய்ந்த தொழுவத்தில் கட்டியிருந்தார்கள். எப்போதும் ஆடு, மாடுகள் வீட்டின் முன்னால் கட்டியிருந்தால்தான் எல்லோரின் கண்பார்வையில் பாதுகாப்பாக இருக்கும். அதன் காடியில் தீனி இருக்கிறதா? என்று ஆளாளுக்குப் பார்த்து தீவனம் போடுவார்கள். காளைகளுக்கு மேக்கால் சுமந்து, சுமந்து லேசாக கழுத்து புண் ஆரம்பித்திருக்கும். அதை காக்கைகள் கொத்தி, கொத்தி பெரிய புண்ணாக்கிவிடும். மனிதப் பார்வையில் மாடுகள் இருந்தால்தான் காக்கைகள் வராது, அப்படியே வந்தாலும் இவர்கள் விரட்டி அடிப்பார்கள்.
கௌசிகா இந்த வீட்டுக்கு வந்ததும், வராததுமாய் நாத்தம் பொறுக்கவில்லை என்று சொல்ல ஆடு, மாடுகள் எல்லாம் வீட்டிற்குப் பின்னால் போய்விட்டன. இப்போது நெல்லும் அவிக்கக் கூடாது என்கிறாளே தலநாளயில வீட்டுக்கு நல்ல மருமவளத்தேன் கொண்டு வந்தோமென்று சங்கரி வேதனைப்பட்டாள்.
மாமியாரின் வேதனையையறியாத கௌசிகா எதுக்காக அத்தை நெல்லை அவிச்சி ஊரெல்லாம் நாத்தத்த எழுப்புறீங்க'' என்று கேட்க, சங்கரி நெஞ்சம் நிறைய துக்கத்தோடு பேசாமல் போய்விட்டாள்.
கமலாதான் சொன்னாள். "மதனி பச்ச நெல்ல அவிச்சாதான் புழுங்கலா வரும்'' என்றாள். 
அதற்கு கௌசிகா, "புழுங்க நெல்லா ஆக்குறதுக்கு பதில் நீ சொன்ன புழுங்க நெல்லையே விதைச்சிறலாமில்ல?'' என்றதும் "அய்யோ மதினி'' என்று தலையிலடித்துக் கொண்டே பேசாமல் போய்விட, 
கௌசிகாவிற்கு கோபமாய் வந்தது. நான் டவுன்ல்ல இருந்து, அதுவும் படிச்சவளா வந்திருக்கேன். ஆனா இங்க யாரும் மதிக்கிறதில்ல என்று நினைத்தாள்.
இந்த கிராமத்திற்கு கௌசிகா வந்து நான்கு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவள் அம்மா வீட்டில் வாரம் ஒருமுறை பிரண்ட்ஸ்களோடு சினிமாப் பார்த்து பழகியவளுக்கு இங்கே சினிமா என்ற பேச்சே இல்லாததால் இப்போது சினிமா பார்க்க வேண்டுமென்று ஆசை அவளை ஆட்டுவித்தது. அதனால் புருஷனை நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
- தொடரும்..


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/என்-பிருந்தாவனம்19---பாரததேவி-3165525.html
3165524 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, June 5, 2019 10:48 AM +0530 கேப்பை, கோதுமை மாவு புட்டு

தேவையானவை: கேப்பை மாவு - அரை கிண்ணம், கோதுமை மாவு - அரை கிண்ணம், பொடித்த வெல்லம் - 1 கிண்ணம், ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்.
 செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானவுடன் ஒவ்வொரு வகை மாவையும் போட்டுப் பொன்னிறமாக, நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒரு சிட்டிகை உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்துக் கொஞ்சம் கெட்டியாகப் புட்டு மாவு பதத்திற்குப் பிசையவும். இந்த மாவை இட்லித் தட்டில் வைத்துப் பரத்தி 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பிறகு, எடுத்து ஒரு தட்டில் போட்டு பொடித்த வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தினையரிசி ரவா லட்டு

தேவையானவை: தினையரிசி மாவு - 1 கிண்ணம், பொரிக்கடலை மாவு - 1 கிண்ணம், பம்பாய் ரவை - 1 கிண்ணம், பொடித்த வெல்லம் - இரண்டரைக் கிண்ணம், பால் பவுடர் - அரை கிண்ணம், குளுக்கோஸ் பவுடர் - அரை கிண்ணம், டயமண்ட் கல்கண்டு - கால் கிண்ணம், முந்திரிப் பருப்பு - 15, உலர்ந்த திராட்சை - 15, ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, நெய் - தேவைக்கேற்ப.
 செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் 2 தேக்கரண்டி நெய்விட்டு, ஒவ்வொரு மாவு வகை, ரவையை தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்து எடுக்கவும். பிறகு, அதனுடன் பொடித்த வெல்லம், பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். டயமண்ட் கல்கண்டு, நெய்யில் வறுத்த உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு சேர்த்துக் கலக்கவும். பின்னர், நெய்யைக் காய்ச்சி ஊற்றி கலந்து, உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான லட்டு ரெடி.
 -ஆர். எஸ்.லட்சுமி, மதுரை.

புதினா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கிண்ணம், வேகவைத்த பட்டாணி - அரை கிண்ணம், புதினா மற்றும் மல்லித் தழை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2, நெய் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.
 கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி
 செய்முறை: புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய் மூன்றையும் மிருதுவாக அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையுடன் கோதுமை மாவு, சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை உருண்டைகளாக உருட்டி சிறிய சப்பாத்திகளாக செய்து தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் இட்டு சுட்டு பரிமாறவும். இதற்கு பதிலாக கேரட் சேர்த்து சப்பாத்தி செய்தால் ஆரஞ்சு வண்ண சப்பாத்தி தயார். பச்சை, ஆரஞ்சு வண்ண சப்பாத்திகளை பார்த்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்க மாட்டார்கள் இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

வெண்டைக்காய் சப்ஜி

தேவையானவை: வெண்டைக்காய் - கால்கிலோ, பெரிய வெங்காயம் - 4, தக்காளி - 2, பூண்டு - 4 அல்லது 5 பல்
 சீரகம் - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப, கொத்துமல்லித் தழை- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம் , காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்து வைத்திருக்கும், மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும். அதனுடன் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
 தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லித் தூவி இறக்கவும்.
 சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி. இந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண் ஆகியவற்றுக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
 - லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/சமையல்-சமையல்-3165524.html
3165523 வார இதழ்கள் மகளிர்மணி மகிழ்ச்சியும், புன்னகையும்தான் வெற்றி! DIN DIN Wednesday, June 5, 2019 10:38 AM +0530 நாம் வாழும் வீடு சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும், வீட்டை கலைநயத்துடன் அழகாக அமைத்து கொள்ள விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த வகையில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப அவர்களது இல்லத்தை அழகான கனவு இல்லமாக மாற்றி அமைத்து தருவதில் கைத்தேர்ந்தவர் இன்டீரியர் டிசைனர் லட்சுமி. கணினி பொறியியலில் பட்டம் பெற்ற இவர், இன்டீரியர் துறையை தேர்ந்தெடுத்தது எப்படி? நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
 "எனக்கு சின்ன வயதிலிருந்தே வரைவதிலும், கிராப்ட் ஓர்க் செய்வதிலும் ஆர்வம் உண்டு. கையில் வண்ணங்கள் கிடைத்தால் போதும், மனதில் தோன்றியவற்றிற்கு எல்லாம் உருவம் கொடுக்க தொடங்கிவிடுவேன். பள்ளி படிப்பை முடித்ததும், கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்தேன். அதன் பிறகு ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை. ஆனால், திருமணத்திற்கு பிறகு வேலையை தொடர முடியவில்லை.
 கணவர், குழந்தைகள் என்று கவனம் முழுவதும் குடும்பத்தின் மீதே இருந்தது. குழந்தைகள் சற்று வளர்ந்து பள்ளிக்குச் செல்ல தொடங்கியதும், கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
 அந்த சமயத்தில் என் கணவர் எங்களுக்காக ஒரு வீடு கட்டத் தொடங்கினார். என்னுடைய வீடு என்பதால், நான் பார்த்து பார்த்து உள் அலங்காரம் செய்ய தொடங்கினேன். அதை கவனித்த என் கணவர், "நீ இன்டீரியர் டிசைனராகலாமே. எனக்கும் உதவியாக இருக்கும்' என்றார்.
 ஏனென்றால், அவர் கட்டுமானத் துறையில் இருப்பவர். அப்பார்ட்மெண்ட், தனி வீடு கட்டித் தருவதுதான் அவரது தொழில். அதனால், "நான் கட்டும் வீடுகளுக்கு எல்லாம் நீயே இன்டீரியர் செய்து தரலாம்'' என்றார். எனக்கும் அது பிடித்திருந்தது. அதே சமயம், என்னுடைய வீடு என்னும்போது, நான் எப்படி வேண்டுமானாலும் டிசைன் செய்து கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர் வீட்டுக்கு செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு சுலபம் கிடையாது. அது குறித்து அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
 அதனால் இன்டீரியர் குறித்து தனிப்பட்ட முறையில் கோர்ஸ் எடுத்து படித்தேன். அதன் மூலம் தொழில்நுட்ப ரீதியான பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன்பின் என் கணவரின் வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு இன்டீரியர் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், மாடுலர் கிச்சன், வார்ட்ரோப் மற்றும் வரவேற்பறை, சுவரில் டிசைன் என சின்ன சின்னதாகதான் செய்ய தொடங்கினேன். அதன் மூலம் எனக்கு இந்த துறை சார்ந்த நல்ல அனுபவம் கிடைத்தது. நல்ல வரவேற்பும் கிடைக்கத் தொடங்கியது. இதுநாள் வரை நான் வீட்டில் இருந்துதான் டிசைன் செய்து கொடுத்து வந்தேன். எனக்கென்று அலுவலகம் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை.
 அதனால், அடுத்தக் கட்டமாக, பெரிய பட்ஜெட் , பெரிய பிராஜக்ட் எடுத்து செய்ய வேண்டும் என்று ஆசைவர, எனக்குன்னு ஒரு பிராண்ட் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில்தான் ஜெர்மன் இன்டீரியர் நிறுவனமான "ப்ளா' பற்றி கேள்விப்பட்டேன். அவர்களுடன் இணைந்து கடந்த 1 வருடமாக செயல்பட்டு வருகிறேன். தற்போது பெரிய பட்ஜெட்டில், பெரிய பிராஜக்ட்டும் எடுத்து செய்து வருகிறேன். அதே சமயம், பட்ஜெட்க்கு ஏற்ப என்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கும் இன்டீரியர் அமைத்து தருகிறேன்.
 வெறுமனே பிளைனாக இருக்கும் வீட்டில் ரசனைக்கேற்றபடி சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதுதான் இன்டீரியர் தொழில் நுட்பம். அப்படி அழகு சேர்க்கும்போது, வீட்டு உரிமையாளர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியும், புன்னகையும்தான் எங்களின் வெற்றி'' என்றார்.
 வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ் : ஒரு வீட்டின் இன்டீரியரில் முக்கிய பங்கு வகிப்பது சுவர் அலங்காரம். பொதுவாக வரவேற்பறையில் உள்ள சுவர்களுக்கு அடர்த்தியான நிறம் கொண்ட பெயிண்டினை தேர்வு செய்து அடிக்கக் கூடாது. ஏனென்றால், அடர்த்தியான நிறம் அந்த அறையை இருட்டாகவும், சிறியதாகவும் காண்பிக்கும். அதனால் வெளிர் நிற பெயிண்ட்டை தேர்வு செய்வது நல்லது. அப்போதுதான் சின்ன அறையாக இருந்தாலும், அதை அழகாகவும், பளிச்சென்று பெரியதாக காண்பிக்கும்.
 அதுபோன்று வரவேற்பறை என்றால், டிவி, சோஃபா செட், டீபாய் மிகவும் அவசியம். படுக்கை அறை என்றால் வார்ட்ரோப் மற்றும் டிரஸ்ஸிங் டேபிள்... கிச்சனில் மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்கள் வீட்டின் அடிப்படை. அதனால் முதலில் இதற்கான இடத்தை தேர்வு செய்து ஒதுக்கிவிட்டு. மீதமுள்ள இடத்தில் அலங்காரம் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.
 தற்போது, பல வடிவங்களில் சின்னதாக சுவற்றில் செல்ப் வைப்பது பேஷன். அதில் கலைப் பொருட்கள் அல்லது நமது புகைப்படங்களை அழகாக அடுக்கலாம்.
 எல் வடிவில் உள்ள கார்னர் இருந்தால், அங்கே வார்ட்ரோபை வைக்கலாம். இதனால் நிறைய பொருட்களை உள்ளே வைக்க இடம் கிடைக்கும். அதே சமயம் நாம் அதிகமான பொருட்களை வைத்து அடைக்கவும் வேண்டாம்.
 பெரும்பாலானவர்களுக்கு அவர்களது பட்ஜெட்டின்படி தற்போது அடுக்குமாடி குடியிருப்புதான் கைகூடுகிறது. இதனால் தோட்டம் வைக்க வேண்டும் என்ற கனவு கனவாகி போகிறது. அதனால், தற்போது என்னுடைய இன்டீரியரில் கோ கிரின் என்ற கான்செப்ட்டை வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இதன் மூலம் அவர்கள் வீட்டு பால்கனியில் சிறிய அளவில் செடிகளை வைத்து அழகு படுத்தலாம். சிலருக்கு பால்கனி இல்லாதபோது, அவர்கள் வரவேற்பறையிலேயே சிறய அளவிலான குரோட்டன்ஸ் போன்ற செடிகளை வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும்.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/மகிழ்ச்சியும்-புன்னகையும்தான்-வெற்றி-3165523.html
3165522 வார இதழ்கள் மகளிர்மணி பசுமை நாயகி ! DIN DIN Wednesday, June 5, 2019 10:34 AM +0530 திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு சின்ன கிராமம் பசுங்கரை. துரிஞ்சல் ஆறு ஓடி வளப்படுத்திய பூமி... கிராம மண்ணுக்கே உரிய இலக்கணங்களுடன் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள், கரும்பு பயிர்கள், நெற்பயிர்கள் எங்கும் காட்சி அளிக்கின்றன. அந்த கிராமத்தில் யாரை கேட்டாலும் "மெட்ராஸ்காரர்' வீட்டை காண்பிக்கிறார்கள்.. 20 ஏக்கர் நிலப்பரப்பில் "மாலா இல்லம்' நம்மை வரவேற்கிறது. வீட்டின் முகப்பில் திருவள்ளுவர் அமர்ந்த நிலையில் உயரமான பீடத்தில் காட்சி அளிக்கிறார். மண்ணின் மனத்தோடு நம்மை வரவேற்கிறார் மாலா சந்திரசேகர்.
 விவசாயத்தின் மீது கொண்ட காதலால் பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு, குடும்பத்தையும் விட்டு 15 ஆண்டுகளாக கிராமத்தில் தனித்து வசித்து வருகிறார் இந்த பசுமை நாயகி. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 " திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் கிராமம்தான் என் சொந்த ஊர்.. விவசாய குடும்பம்.. சிறு வயதிலேயே என் பெற்றோருடன் நிலத்தில் இருப்பேன். நாற்று நடுதல், களைப் பறித்தல், அறுவடை செய்தல் என எல்லாமே எனக்குத் தெரியும். சில சமயங்களில் ஏர்கூட ஓட்டி இருக்கிறேன். என் கணவர் சந்திரசேகரரும் இதே ஊர்தான். உறவுக்காரர்.
 அவருடைய அம்மா சின்னத்தாய்க்கு என்னை ரொம்ப பிடித்திருக்க .. சென்னையில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. என்னவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். காய்கனி அங்காடி நடத்தி வந்த அவர், கட்டட கலை மீது நாட்டம் கொள்ள சந்திரசேகர் பில்டராக மாறினார்.
 சென்னை மாம்பலத்தில் எங்களுக்கு திருமண மண்டபம், தி.நகரில் லாட்ஜ், உணவகம் இருக்கிறது. இரண்டு பிள்ளைகள், இரண்டு மகள்கள் எங்களுக்கு. மகன்கள் இருவரும் பொறியாளர்களாகி தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்கிறார்கள். ஒரு மகள் புதுச்சேரியிலும், மற்றொரு மகள் அமெரிக்காவிலும் வாழ்கிறார்கள்.
 என் பேரன், பேத்திகள் மருத்துவம், பொறியியல் என படித்து வருகிறார்கள். மருமகள் வீட்டை பார்த்துக் கொள்கிறார்கள். நிறைவான வாழ்க்கை, நிம்மதியான குடும்பம் அமைந்திருந்தாலும் ஏனோ எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. ஏசி அறையில் இருப்பதைவிட கிராமத்தில், நிலத்தில் பயிர் செய்து வாழத்தான் எனக்கு பிடித்திருந்தது அதை கணவரிடம் அடிக்கடி கூறுவேன். என்னை புரிந்து கொண்ட அவர், "நீ வேண்டுமானால் கிராமத்திற்குச் சென்று விரும்பியபடியே கொஞ்ச நாள் இருந்துவிட்டு வா' என்றார். இதனால் சென்னையை விட்டு இந்த கிராமத்திற்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
 நாள் முழுக்க விவசாயம், மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல்கள் என அவைகளுடனே என் பொழுதை கழிக்கிறேன்.
 ஆரம்பத்தில் நெல், மணிலா பயறு, கரும்பு என பயிர் செய்து வந்தேன். இப்போது தண்ணீர் பிரச்னை உள்ளதால் வீட்டு தேவைக்கு மட்டும் நெற்பயிர் செய்கிறேன். மீதி உள்ள இடம் முழுவதும் நெல்லித்தோப்பு மற்றும் வேப்பம், தேக்கு, குமிழ்தேக்கு, பூவரசம், தென்னைமரம், பழமரங்கள் என மரங்களை வளர்த்து வருகிறேன்.
 காலையில் எழுந்ததும் மாடுகள் - ஆடுகள் - கோழிகள் - முயல்கள் இவைகளுடன் பேசுவது பழகுவது உணவு இடுவது மனதை மகிழ்ச்சியாக்குகிறது.
 உலகத்திலேயே ரொம்ப சிறந்த தொழில் விவசாயம் தான். விவசாயம்தானே நாம் உயிர்வாழ சோறு தருகிறது. ஆனால், விவசாயம் இன்று லாபகரமான தொழிலாக இல்லாமல் நஷ்டம் தருகிறது. சரியான மழை இல்லை. கூலிக்கு ஆள் கிடைப்பது இல்லை. ஆள்கூலியும் ஏறிவிட்டது. ஆனால், இந்த நிலையிலும் விவசாயத்தை விட்டுவிட மனமில்லை. காரணம் என்னை நம்பி இங்கு 10 குடும்பங்கள் வாழ்கிறது.
 பரபரப்பான சென்னை வாழ்க்கையைவிட இந்த இயற்கை சூழலில் வாழ்வதும், விவசாயம் செய்வதும் மனதிற்கு உற்சாகம் அளிக்கிறது.
 என் மண்ணோடும் மரங்களோடும் கால் நடைகளோடும் வாழ்கின்ற இந்த வாழ்க்கை இனியது. இங்கு வந்தபின் மருத்துவரிடம் நான் போகவில்லை. இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். விவசாயத் துறையில் நான் ஈடுபட, என் கணவர் உள்பட அனைவருமே ஆதரவு தருவது எனக்கு உற்சாகமளிக்கிறது'' என்றார்.
 வள்ளுவர் சிலையின் பீடத்தில்...
 சுழன்றும் ஏர்பின்ன துலகம் அதனால்
 உழந்தும் உழவே தலை என்ற குறள் பளிச்சிடுகிறது.
 - இந்திராணி சண்முகம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/பசுமை-நாயகி--3165522.html
3165520 வார இதழ்கள் மகளிர்மணி அன்னையர் சந்தை DIN DIN Wednesday, June 5, 2019 10:30 AM +0530 இந்தியாவில் "ஆபரணங்களின் பூமி' என்றழைக்கப்படுவது இம்ப்பால், மணிப்பூர் மாநில தலைநகர். இங்கு, 1940-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் "அன்னையர் சந்தை' ( மதர்ஸ் மார்க்கெட்)க்கு தனிச் சிறப்பு உண்டு. ஆசியாவிலேயே முழுக்க முழுக்கப் பெண்களாலேயே நடத்தப்படும் பிரபலமான சந்தை இது என்பதுதான்.
 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடங்கிய இந்த சந்தையை பெண்களே நிர்வகிக்கின்றனர். இங்கு ஆண்கள் வந்து தேவையான பொருட்களை வாங்கலாம். ஆனால், கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியில்லை.
 பெண்களே தயாரிக்கும் கைத்தறி, பட்டுச் சேலைகள், கைவினைப் பொருட்கள், நகைகள், மப்ளர்கள், மணிப்பூர் பெண்கள் அணியும் பாரம்பரிய உடைகள் என அனைவரையும் கவரும். இங்கு பெண்கள் வயது வித்தியாசமின்றி வியாபாரம் செய்கிறார்கள். எந்த பொருளாக இருந்தாலும் அவர்கள் குறிப்பிடும் விலையை குறைத்து பேரம் பேசி வாங்க நினைத்தால் 20 அல்லது 30 ரூபாய்க்கு மேல் குறைக்க மாட்டார்கள்.
 இந்த சந்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டதாகவும் கூறுகிறார்கள். அந்த காலத்தில் ஆண்கள் போருக்கு செல்வது அல்லது வேலைக்காக வெளி இடங்களுக்குச் செல்வது என்றிருந்த நிலையில், பெண்கள் வீட்டுச் செலவை கவனிக்கவும். வேலையின்றி இருப்பதை தவிர்க்கவும் சுய தொழில் செய்ய தொடங்கினர். நாளடைவில் இந்த சந்தை விரிவடைந்து அன்னையர் சந்தை என்ற பெயரை பெற்றுள்ளது. கூடவே மூங்கில்களால் உருவாக்கப்படும் கூடைகள், களிமண் பொம்மைகள், சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளையும் விற்பனை செய்கின்றனர். பெண்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கடைகள் வைத்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் இயங்க இந்த அன்னையர் சந்தை உதவுகிறதாம்.
 - அ.குமார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/அன்னையர்-சந்தை-3165520.html
3165519 வார இதழ்கள் மகளிர்மணி நடிப்பது நடுக்கமாக இருக்கிறது DIN DIN Wednesday, June 5, 2019 10:29 AM +0530 1991-ஆம் ஆண்டு சஞ்சய் தத், பூஜாபட் நடித்து வெளியாகி வெற்றிப் பெற்ற "சடக்' படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் படத்தை இயக்கிய மகேஷ் பட்டே இயக்கவுள்ளார். இளைஞன் ஒருவன் விலைமாது ஒருத்தியை காதலிப்பதாக முதல் பகுதியின் கதை அமைந்திருந்தது. இதன் இரண்டாம் பாகத்திலும் சஞ்சய் தத், பூஜாபட் ஆகியோருடன் அலியா பட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "முதன்முறையாக என்னுடைய தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் நடிப்பது நடுக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதில் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது'' என்கிறார் அலியா பட்
 - அருண்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/நடிப்பது-நடுக்கமாக-இருக்கிறது-3165519.html
3165518 வார இதழ்கள் மகளிர்மணி சிறந்த தொழிலதிபர் விருது DIN DIN Wednesday, June 5, 2019 10:27 AM +0530 பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரிகான், கடந்த பத்தாண்டுகளாக சொந்தமாக இன்டீரியர் மற்றும் பேஷன் டிசைனர் தொழிலை செய்து வருகிறார். மும்பையில் 700 சதுர அடியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவரது நிறுவனம் இன்று மிகவும் பிரபலமாக இருப்பதுடன், பெரிய தொழில் நிறுவனமாக மாறியுள்ளது. ""சிறந்த தொழிலதிபராவதற்கு திரும்பி பார்க்காமல் ஒருமித்த மனதோடு திறமையுடன் செயல்பட்டால் தவறு ஏற்பட வாய்ப்பில்லை.
 மற்றவர்களை விட அதிக, வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. தோல்வியை கண்டு துவளக்கூடாது'' என்று கூறும் கவுரிகானுக்கு, இந்த ஆண்டின் "டைம்ஸ் ஷி அன்லிமிடெட்' தொழிலதிபர் விருது கிடைத்துள்ளது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/சிறந்த-தொழிலதிபர்-விருது-3165518.html
3165516 வார இதழ்கள் மகளிர்மணி சுய சரிதை எழுதுகிறார் லிசாரே DIN DIN Wednesday, June 5, 2019 10:26 AM +0530 மாடல் - நடிகை - டிவி தொகுப்பாளர் என பிரபலமாக இருந்தவர் லிசாரே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றபோது, தன்னுடைய எண்ணங்களையும், அனுபவங்களையும் அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வைத்திருந்தார். சிகிச்சைக்குப் பின் இந்தியா திரும்பிய லிசாரே, 1990-ஆம் ஆண்டு மாடலாக துவங்கிய தனது வாழ்க்கை மற்றும் வாடகைத் தாய் மூலம் இரு குழந்தைகளுக்கு தாய் ஆனது போன்ற அனுபவங்களை "குளோஸ் டூ தி போன்' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/சுய-சரிதை-எழுதுகிறார்-லிசாரே-3165516.html
3165515 வார இதழ்கள் மகளிர்மணி திகில் - காமெடியில் வித்யாபாலன் DIN DIN Wednesday, June 5, 2019 10:25 AM +0530 மோகன்லால் நடித்த "மணி சித்ரநாடு' என்ற மலையாள படம் 2007-ஆம் ஆண்டு இந்தியில் "பூல் புலாயா' என்ற பெயரில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பகுதியை பர்ஹான் சம்ஜி இயக்கவுள்ளார். பேய் குடியிருப்பதாக கூறப்படும் ராஜஸ்தான் அரண்மனையொன்றுக்கு வரும் மனோதத்துவ நிபுணராக அக்ஷய் குமார் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியில் வித்யா பாலன் இந்த புதிய திகில் - காமெடி படத்தில் நடிக்கவுள்ளார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/திகில்---காமெடியில்-வித்யாபாலன்-3165515.html
3165513 வார இதழ்கள் மகளிர்மணி ஜிம் நடத்தும் நடிகை DIN DIN Wednesday, June 5, 2019 10:23 AM +0530 "உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க ஆரோக்கியம், சீரான உடல் எடை, கல்வி ஆகிய மூன்றும் மிகவும் அவசியம்' என்று கூறும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, ரகுல் ப்ரீத், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் "என்.ஜி.கே' என்ற படத்தில் பங்கேற்றார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மாதந்தோறும் கால்ஃப் விளையாடும் இவர், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருவதால் ஹைதராபாத் மற்றும் செகந்திராபத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எடை குறைப்புக்காக ஜிம் நிலையங்களை நடத்தி வருகிறார். மேலும் தெலங்கானா மாநிலத்தில் "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்' என்ற இயக்கத்தில் பிரசார தூதுவராகவும் உள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/ஜிம்-நடத்தும்-நடிகை-3165513.html
3165512 வார இதழ்கள் மகளிர்மணி ஒன்பது வயதில் மேடையில் பாடியவர் DIN DIN Wednesday, June 5, 2019 10:20 AM +0530 2002-ஆம் ஆண்டு "பாரத ரத்னா' விருது பெற்ற லதா மங்கேஷ்கரின் 90-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, "1939-ஆம் ஆண்டு என்னுடைய தந்தை தீனாநாத் மங்கேஷ்கர், ஷோலாப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது பற்றி தன் குழுவினருடன் பேசிக் கொண்டிருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் பாடுவதாக கூறினேன். "நீ சின்னவள், உன்னால் மேடையேறி பாட முடியாது' எனக் கூறி தந்தை மறுத்துவிட்டார், ஆனால், உடனிருந்த இசைக்குழுவினர், "தந்தையும் , மகளும் மேடையேறி பாடினால் புதுமையாக இருக்கும்' என்று கூறவே தந்தை ஒப்புக் கொண்டார். தந்தையும் மகளும் சேர்ந்து மேடையேறி பாடுவதாக விளம்பரப்படுத்தினார்கள். அந்நிகழ்ச்சியில் நான் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 80 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது'' என்றார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/ஒன்பது-வயதில்-மேடையில்-பாடியவர்-3165512.html
3165511 வார இதழ்கள் மகளிர்மணி கரகம் எனது உயிர்மூச்சு! Wednesday, June 5, 2019 10:18 AM +0530 நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தில் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி நாட்டுப்புறக் கலைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் பணியாற்றி வருகிறார் கு.துர்காதேவி.
 இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். 15 வருடங்களுக்கு முன்பு சேலத்துக்கு தனது தந்தையாருடன் இடம் பெயர்ந்த இவர், கிச்சப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர். இவரது தந்தை ஆர்.குஞ்சிதபாதம், பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தார். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த துர்காதேவிக்கு தனது பத்தாவது வயதில் நாட்டுப்புறக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது.
 அதனைத் தொடர்ந்து, தந்தையின் ஊக்கத்தினால் பல்வேறு பயிற்சிகள் பெற்று, ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மேடை ஏறி நடனமாடத் துவங்கினார். பரத நாட்டியத்தில் ஆர்வம் செலுத்திய துர்காதேவி, பின்னர் கரகாட்டத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு, அதனைப் பின்பற்றத் துவங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 "எனது ஆசிரியர் சேகரிடம் கரகாட்ட நடனப் பயிற்சி பெற்றேன். கோயில் திருவிழாக்களில் கரகாட்டக் கலைஞர்கள் கரகத்தை தலையில் வைத்தபடி 2 நிமிடம் நடனமாடி பின்னர் அதனை வைத்துவிடுவர்.

கரகத்தை மட்டும் தலையில் வைத்து நடனமாடாமல், அனைவரையும் கவரும் வகையில் அடுக்கு சொம்பு, கண்ணாடி பாட்டில், பானை ஆகியவற்றின் மீது நின்று நடனமாடுதல் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். இதுதவிர, கரகத்தை தலையில் வைத்தபடி ஊசி, பிளேடு ஆகிய கூர்மையான பொருள்களை கண்ணில் எடுத்தும் சாதனை படைத்துள்ளேன். மேலும், ஆணிகள் கட்டிய காலணிகளை அணிந்து கொண்டும் கரகாட்டம் ஆடியுள்ளேன்.
 இதுவரை 15 பொருள்களை வைத்து தீப்பந்தம் வைத்தபடி 15 நிமிடம் கரகாட்டமாடி உலக சாதனை செய்துள்ளேன். மேலும் 23 விதமான நடனப் பொருள்களை வைத்து தொடர்ச்சியாக 26 நிமிடம் 40 விநாடிகளில் 50 கண்ணாடி லைட்டுகளை உடைத்து நடனமாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளேன். மேலும், உலக சாதனை விருது, கலை பேரரசு விருது, வீதி விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளேன். மீண்டும் கின்னஸ் சாதனை படைக்க மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எனது ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி தற்போது 100 லைட்டுகளை உடைப்பது, ஹோலா வளையத்தில் தீப்பந்தம் கட்டி நடனமாடுதல் போன்ற முயற்சிகளைச் செய்து வருகிறேன். இதனைத்தொடர்ந்து, மேடைகள் மட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடத் துவங்கினேன்.
 இதன் மூலம் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. சில நேரங்களில் குறைந்த தொகையும் கிடைக்கும். கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கும் தொகையை கருத்தில் கொள்ளாமல் கலையை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு ஒரு ஆண்டிற்கு 150 முதல் 200 நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். மேலும் கேரளம், கர்நாடகம் போன்ற வெளிமாநில நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்கும், காலத்திற்கும் ஏற்றவாறு "கிரிஸ்டல் டான்ஸ்' போன்ற புதிய சிந்தனைகளை புகுத்தி கலைத் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க முயன்று வருகிறேன்.
 இந்த நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்க பல வண்ணங்களைக் கொண்ட ஆடைகளையும் நானே வடிவமைக்கத் துவங்கினேன். இவ்வாறு சென்னை, பெங்களூரு போன்ற வெளியூர்களுக்கும் (வாட்ஸ் அப்) மூலம் ஆடையின் வடிவங்களை பகிர்ந்து மக்களுக்கு பிடித்தவாறு ஆடை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறேன்'' என்றார்.
 - எஸ்.ஷேக் முகமது
 படம்: வே.சக்தி
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/jun/05/கரகம்-எனது-உயிர்மூச்சு-3165511.html
3160896 வார இதழ்கள் மகளிர்மணி குடைமிளகாய் விளைச்சல் சாதனை! Wednesday, May 29, 2019 10:24 AM +0530 பெங்களூரை அடுத்த ராம்நகரம் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமான மாயகானஹள்ளியில் தங்களுடைய அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் அல்லது கிரீன் அவுஸ் பார்மிங் முறையில் குடைமிளகாய் பயிரிட்டு ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பாதிக்கிறார் 38 வயதாகும் கமலம்மா. சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் இவரை "காப்சிகம் கமலம்மா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
 பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கமலம்மா, தன் குடும்பத்துக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில் அடிப்படை தேவைக்கான பாரம்பரிய தானிய வகைகளையே தன் கணவருடன் சேர்ந்து பயிரிட்டு வந்தார். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருந்தாலும், விவசாயத் துறையில் புதிய உத்திகளை புகுத்த நினைத்த கமலம்மா. அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் முறையில் பருவ காலத்திற்கேற்ற காய்கறிகளை விளைவிக்க திட்டமிட்டார்.
 பாலி அவுஸ் அல்லது கீரின் அவுஸ் விவசாயம் என்பது பாரம்பரிய விவசாய முறையிலிருந்து மாறுபட்ட பாதுகாக்கப்பட்ட விவசாயமாகும். தாவரங்களை திறந்த வெளியில் வளர்க்காமல் பாதுகாப்புடன் பருவ நிலையை செயற்கை முறையில் கட்டுப்படுத்தி ஈரபதத்துடன் கூடிய திரை மற்றும் வென்டிலேட்டர் அமைத்து தாவரங்களை வளர்ப்பதாகும். மேற்கூரை மீது பாலிபிலிம் அமைக்கப்படுவதால் மழைநீர் ஒரு துளி கூட உட் பகுதிக்குள் வர வாய்ப்பில்லை.
 விவசாயக் கல்வி பற்றிய அடிப்படை அனுபவம் ஏதும் கமலம்மாவுக்கு இல்லாததால், விவசாயத்தை முழுமையாக அறிய குறுகிய கால வகுப்பு மூலம் தெரிந்து கொள்ள காந்தி கிரிஷி வித்யா கேந்திராவின் ( ஜி.கே.வி.கே) விவசாய அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே இவரது கணவர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கேழ்வரகு பயிரிட்டு வந்தார். கூடவே பால் பண்ணை, கோழிப் பண்ணை, பட்டுத் தொழில் போன்றவைகளையும் செய்ய தேவையான பயிற்சிகளை கற்றுணர்ந்தார்.
 2005-ஆம் ஆண்டு தங்கள் நிலத்திலிருந்து அரை ஏக்கர் நிலத்தில் பாலி அவுஸ் முறையில் காய்கறிகளை பயிரிடும் திட்டத்தைத் துவங்க தன் குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்தார். கூடவே, மாநில அரசிடமிருந்து உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற தீர்மானித்தார். இவரது பிள்ளைகள். என்ஜினியரிங் கல்வி கற்று வந்ததால், வங்கி கடனுதவி பெற கையெழுத்திட மறுத்து விட்டனர். அவர்களிடம் பலமுறை பேசி ஒப்புதல் பெற்று பாலி அவுஸ் திட்டத்தை செயல்படுத்த துவங்கினார் கமலம்மா. பாலி அவுஸ் பண்னை தொடங்குவது. அத்தனை சுலபமல்ல, அதிக முதலீடு செய்ய வேண்டும். கமலம்மாவின் அதிர்ஷடம் தொடக்கத்தில் செய்த முதலீடு ஒரே ஆண்டில் லாபத்தை அளிக்கத் தொடங்கியது. குடைமிளகாய் செடிகளை பயிரிட ஒரே ஆண்டில் 40 டன் விளைச்சல் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாக 10 டன் உற்பத்தி அதிகரித்தது.

 மார்க்கெட்டில் குடைமிளகாய் தேவை அதிகரிக்கவே, சிலரது யோசனைப்படி கூடுதல் விலை கிடைக்க மஞ்சள், சிவப்பு நிற குடைமிளகாய்களை பயிரிடத் தொடங்கினார். வண்ண நிற குடைமிளகாய் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் ஆறே மாதத்தில் வங்கி கடன் ரூ. 6 லட்சத்தை கமலம்மாவால் திரும்ப தெலுத்த முடிந்தது. கூடவே ஜி.கே.வி.கே அறிவுரைப்படி மீதமுள்ள நிலத்தில் மாந்தோப்பு, கோழி பண்ணை, பால் பண்ணை, பட்டுத் தொழில் போன்றவைகளையும் தொடங்கியதால் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சமும், குடைமிளகாயுடன் வெள்ளரி, தக்காளி, சுரைக்காய், முட்டை கோஸ், ஸ்ட்ராபெரி, மற்றும் தேவை அதிகமுள்ள அலங்கார பூக்கள், ரோஜா போன்ற செடிகளையும் வளர்த்து வருவதால் ஆண்டுக்கு 15 லட்சம் லாபம் கிடைத்து வருகிறது.
 கமலம்மாவின் சாதனை மாநில மற்றும் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றதோடு, பக்கத்து கிராமப் பெண்களிடமும் பரவி இவரது ஆலோசனைகளை கேட்டுச் செல்கின்றனர். "காப்சிகம் கமலம்மா' என்ற சிறப்பைப் பெற்ற இவரை, அண்மையில் ஜி.கே.வி.கே கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திரமோடி அழைத்து பாராட்டியுள்ளார்.
 - அ.குமார்
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/குடைமிளகாய்-விளைச்சல்-சாதனை-3160896.html
3160898 வார இதழ்கள் மகளிர்மணி மகாபலிபுரத்தின் குட்டி ராணி! Wednesday, May 29, 2019 10:23 AM +0530 மகாபலிபுரத்தைச் சேர்ந்த கமலியும் சரி.. கமலியின் தாய் சுகந்தியும் சரி... தங்களை குறித்து எடுக்கப்பட்ட செய்திப்படம் 2020 - ஆம் ஆண்டு "ஆஸ்கர்' விருதுக்கானப் "பரிந்துரை' பட்டியலில் இடம் பிடிக்கும் என்று கனவிலும் கற்பனை செய்து பார்க்கவில்லை. ஆனால், அது நடந்து இருக்கிறது. ஆம், வெறும் 24 நிமிடங்களே ஓடும் இந்த குறும்படத்தை இயக்கியவர் சாஷா. இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர்தான், கமலியையும், அவரது குடும்ப சூழலையும் "கமலி' என்ற பெயரில் குறும்படமாக தயாரித்தவர். சென்ற மாதம் அட்லாண்டாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் "சிறந்த செய்திப்பட விருது' மற்றும் 2018-இல் நடைபெற்ற மும்பை சர்வதேச குறும்பட விழாவில் "சிறந்த இயக்குநருக்கான' விருது என இரண்டு விருதுகளை இந்த குறும்படம் சாஷாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. 

காலணி ஏதும் அணியாமல் பிஞ்சு கால்களை ஸ்கேட்டிங் பலகையில் நிலை நிறுத்தி கான்கிரீட் ஸ்கேட்போர்டிங் களத்தில் மேலும் கீழுமாக வளைந்து நெளிந்து குதித்து விளையாடும் கமலியை தெரியாதவர்கள் மகாபலிபுரத்தில் யாரும் இல்லை. காரணம் , போக்குவரத்து குறைவாக உள்ள தார் ரோட்டிலும் கமலி தனது தோழமைக் கூட்டத்துடன் "ஸ்கேட் போர்டிங்' பலகையுடன் கிளம்பி விடுவது தான். சுருங்கச் சொன்னால் கமலி "மகாபலிபுரத்தின் குட்டி ராணி'. இது குறித்து கமலியின் தாய் சுகந்தி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"சாமான்ய மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனது கணவர் பிரிந்துவிட்டார். இதனால், தனிமைத்தாயாக மகள் கமலியையும், மகன் ஹரிஷையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அதற்காக மகாபலிபுர கடற்கரையில் குளிர்பானங்கள் மற்றும் மீன்களை பொறித்து விற்கும் கடை நடத்தி வருகிறேன். இரவு பத்து மணிக்கு தினமும் சென்னை காசிமேடு போய் மீன் வாங்கிக் கொண்டு, காலை ஆறு மணிக்கு மகாபலிபுரம் திரும்புவேன். பிறகு மீனை சுத்தம் செய்து கடைக்கு கொண்டு போய் பொரித்து விற்பேன். கடையை எனது தந்தை கவனித்துக் கொள்வார். நேரம் கிடைக்கும்போது கொஞ்ச நேரம் தூங்குவேன். பிறகு மறுபடியும் காசிமேடு பயணம். மகாபலிபுரம் பீச்சில் கடைகள் அதிகரித்துவிட்டதால் தற்போது வருமானம் குறைஞ்சு போச்சு.. எப்படியோ நாட்களை கடத்தறேன்.

கமலிக்கு ஸ்கேட்போர்டிங்கை அறிமுகம் செய்தவர் அய்ன் எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி. மகாபலிபுரத்தில் வாழும் வெளிநாட்டவர். சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். சனி ஞாயிறு மகாபலிபுரத்தில் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு வந்துவிடுவார். கமலியுடன் பொழுதைக் கழிப்பார். அவர், விளையாடுவதை பார்த்த கமலி, ஸ்கேட் போர்டிங்கை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள். அவள் விருப்பத்திற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை. 
கமலி சறுக்கி விளையாடும் போது கீழே விழுந்து கைகள் கால்களில் காயம் ஏற்படும் . ஏன்... கைகள் கால்கள் முறிஞ்சு போகவும் வாய்ப்பிருக்கு... பெண் குழந்தை ஆச்சே.. ஏதாவது ஏடாகூடமா ஆனா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க... பெண் குழந்தைக்கு ஸ்கேட் போர்டிங் தேவையா.. அது ஆம்பளப் பசங்க விளையாட்டுன்னு பலரும் என்னை எச்சரிச்சாங்க. பழைய சுகந்தியின்னா அவங்க சொன்னதை அப்படியே கேட்டிருப்பேன். இப்ப யார் என்ன சொன்னாலும் பயப்படாதே என எனக்கு நானே சொல்லிக் கொள்வதோடு, "எதுக்கும் பயப்படாதேன்னு கமலியிடமும் சொல்லி வருகிறேன்."
தொடக்கத்தில் கமலி மட்டும்தான் மகாபலிபுரத்தில் ஸ்கேட் போர்டிங் செய்து கொண்டிருந்தாள். நாளடைவில் கமலி ஸ்கேட் போர்டிங் குழுவுடன் இந்தியா முழுவதும் சுற்றி வரத் தொடங்கினாள். இதை அறிந்த ஏனைய சிறுவர் சிறுமியரும் ஸ்கேட் போர்டிங் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். 
கமலிக்கு கடலில் "சர்ஃபிங்' எனப்படும் அலையில் வழுக்கி சறுக்கும் விளையாட்டும் வரும். அதிலும் கமலிக்கு நல்ல பயிற்சி உண்டு. தமிழகத்தில் "ஸ்கேட் போர்டிங்', கடலில் "சர்ஃபிங்' செய்யும் ஒரே ஆள் கமலிதான். வாழ்நாளில் நான் சொந்தமாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் கமலி இந்தச் சின்ன வயதில் சாதித்துவிட்டாள், அதை எனது சாதனையாகப் பார்க்கிறேன். 
அய்ன் எட்வர்ட்ஸுடன் பழகி வருவதால், கமலிக்கு ஆங்கிலம் நன்றாக பேசவரும். கமலிக்காக பலரிடமும் பேசி நிதி உதவி பெற்றுத் தருபவரும் அவர்தான். கமலி நான்கு வயதாக இருக்கும் போதே ஸ்கேட்டிங் செய்யக் கற்றுக் கொண்டாள். "ஹோலிஸ்டோகேட் கலெக்ட்டிவ்' அமைப்பு இந்தியாவின் பல இடங்களில் ஸ்கேட்டிங் பயில களம் அமைத்துத் தருகிறது. இந்தியா ஸ்கேட்போர்டிங் குழுமத்தைப் பொருத்தவரையில் கமலிதான் ஸ்கேட்போர்டிங் விளையாட்டில் குழந்தை வித்தகி. இதனால், இந்திய ஸ்கேட்போர்டிங் குழு எங்கு சென்றாலும் கமலி உடன் செல்கிறாள். 
கமலியின் மாமாவின் நண்பரான வேலு என்பவர்தான் கமலிக்கும், ஹரிஷுக்கும் "சர்ஃபிங்' அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தார். ஸ்கேட் போர்டிங் பலகையும் அன்பளிப்பு செய்தார். 

ஸ்கேட் போர்டிங் ஜாம்பவானான ஜெமி தாமஸ் மகாபலிபுரத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய "சர்ஃபிங்' அமைப்பைச் சேர்ந்த ராம்மோகன் என்பவர் கமலியை ஜெமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். கமலியைப் பொருத்தவரையில் அது ஒரு திருப்பமாக அமைந்தது. கமலியின் ஸ்கேட் போர்டிங் திறமையைக் கண்டு உடனே தனது நாடு செல்லும் திட்டத்தை தள்ளிப் போட்டுவிட்டு புதுப்புது யுக்திகளை கமலிக்கு பயிற்றுவித்தார். 
பயிற்சியின்போது ஜெமி பிடித்த கமலியின் படத்தை, உலகின் இன்னொரு தலை சிறந்த ஸ்கேட்டிங் வீரர் டோனி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட.. ஸ்கேட் போர்டிங் உலக ஆர்வலர்களின் கவனங்கள் கமலி மேல் குவிந்தது. 
சாஷா, இங்கிலாந்தைச் சேர்ந்த வைல்ட் பீஸ்ட்ஸ் (Wild  Beasts) இசைக் குழுவிற்காக "ஆல்ஃபா ஃபீமேல்' (Alpha  Female) ஆல்பம் தயாரிப்பிற்காக இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் ஸ்கேட்டிங் செய்யும் பெண்களை சேலையில் ஸ்கேட் போர்டிங் செய்யச் சொல்லி ஆல்பம் தயாரித்தார். வெறுங்காலில் ஸ்கேட் போர்டிங் பலகையில் நின்று ஸ்கேட்டிங் செய்யும் கமலி குறித்து கேள்விப்பட்டு கமலியையும் அந்த ஆல்பத்தில் வெறுங்கால்களுடன் நடிக்க வைத்தார். காலணி வாங்க அப்ப வசதியில்லை. ஆல்பம் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்று வந்தோம். அப்படித்தான் சாஷா எங்களுக்கு அறிமுகமானார். அப்போது கமலிக்கு வயது ஆறு . கமலிக்காக நான் தினமும் அல்லாடுவதை பார்த்துவிட்டு குறும்படமாக தயாரிக்கிறேன் என்றார். 2017-இல் சாஷா குழுவினர் மகாபலிபுரம் வந்திருந்து ஆறு வாரம் தங்கியிருந்து "கமலி' படப்பிடிப்பை முடித்தனர். சாஷாவுடன் எங்கள் பந்தம் இன்னும் தொடர்கிறது.
- பிஸ்மி

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/மகாபலிபுரத்தின்-குட்டி-ராணி-3160898.html
3160894 வார இதழ்கள் மகளிர்மணி தேர்தல் பணியில் தேடி வந்த புகழ்...! DIN DIN Wednesday, May 29, 2019 10:00 AM +0530 நடந்து முடிந்த தேர்தல் வேலையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் அகில இந்திய அளவில் இணைய தளங்களில் பிரபலமாகியிருக்கிறார்கள். "தேர்தல் பணிகளை செய்ய நடிகை வந்திருக்காரா?'' என்று கேட்கும் அளவிற்கு சிலர் போய்விட்டார்கள். அந்த அளவுக்கு ஆர்வமாக அந்த இரண்டு பெண்களைப் பார்க்க, பேச வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். கூட்டம் கூடினர்.
 மத்திய பிரதேசம் போபால் நகரில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல்பெண் பணியாளர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்கிறார். சமீபத்தில் போபாலில் மக்கள் அவை தேர்தலின் ஆறாம் கட்ட தேர்தல் . வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தல் மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை மிக முக்கியமானதாகும்.
 பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் - காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் இருவரும் போட்டியிட்ட தொகுதி. இந்த இரு போட்டியாளர்களுக்கு இணையாக தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் அலுவலர் ஊடகங்களில் இடம் பிடித்துவிட்டார்.
 போபால் நகரின் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் யோகேஷ்வரி கோகித் என்ற பெண் அதிகாரி தேர்தல் பணியாற்றினார். யோகேஷ்வரி கோகித் கனரா வங்கியில் பணியாற்றுபவர்.
 யோகேஷ்வரி கோகித் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நடந்து வந்த புகைப்படம்தான் சமூக வலைதளத்தில் அதகளமாகியிருக்கிறது. இந்தப் பெண்ணுடன் அவர் அணிந்திருந்த உடையும் பிரபலமாகிவிட்டது. அவரது படங்கள் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டதும், பெண்கள் உட்பட பலரும் "யார் இந்த பெண்... என்ன பெயர்.. எங்கு வேலை செய்கிறார்..' என்று தேட ஆரம்பித்து யோகேஷ்வரி கோகித்தின் முகநூல் பக்கத்தையும் அணுகிவிட்டனர். யோகேஷ்வரி கோகித்தின் உடையும், வாக்காளர்களிடம் பழகிய விதமும், தேர்தல் பணிகளை திறமையாக கையாண்ட விதமும் வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரையும் கவர்ந்து விட்டது.
 "செல்ஃபி' எடுத்துச் சென்று தங்களது சமூக தள பக்கங்களில் பதிவேற்றம் செய்ய ... யோகேஷ்வரி கோகித்தைத் தொடருபவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் எகிறிவிட்டது. அதனால் அங்குள்ள சானல்கள் யோகேஷ்வரி கோகித்தை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். இவரைப் பார்க்க வெளியே பெரிய அளவிற்கு கூட்டம் கூடியிருந்ததாம். இவரது பக்கங்களில் "என்னை ஃபிரண்ட்'டாக்கிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுதல்கள் வருவது அதிகமாகிவிட்டதால், "என்னடா பெரிய வம்பா போச்சேன்னு' யோகேஷ்வரி கோகித் தற்சமயம் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகியிருக்கிறார். "எனக்கு பிடிக்கும் உடைகளை நான் அணிகிறேன். எனக்கு திருமணம் ஆகி ஐந்து வயதில் மகன் இருக்கிறான். எது எப்படியோ தேர்தல் வாக்குப் பதிவு எனது வாக்கு சாவடியில் ஒரு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. அதற்கு எனது தோற்றம் உதவி இருப்பதில் மகிழ்ச்சியே..' என்கிறார் யோகேஸ்வரி.
 யோகேஷ்வரி கோகித் வரிசையில் வரும் இன்னொரு பெண்மணி ரீனா திவேதி. ரீனா ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவர். உத்திர பிரதேச அரசுப் பணியாளர் ரீனா. பொது மராமத்து துறையில் இளநிலை உதவியாளராகப் பணி புரிகிறார். லக்னோ வாக்குச்சாவடி ஒன்றில் ரீனாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. ரீனா வாக்குப் பதிவு எந்திரத்தை தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அதுவும் வைரலானது. முப்பத்திரண்டு வயதாகும் ரீனா பட்டதாரி. கணினி பயிற்சியும் முடித்திருக்கிறார். "வாட்சப்' டிக் டாக்' தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால் பிரபலமாகியிருப்பது பழகிவிட்டதாம்.

"எனக்கு சின்ன வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மகன் இருக்கிறான். நான் 2014, 2017 தேர்தல்களிலும் பணி புரிந்திருக்கிறேன். அப்போதும் நான் கவனிக்கப்பட்டேன் என்றாலும், இப்போது போன்று சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் என்னைப் பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை. வாக்காளர்கள் என்னை விரும்புகிறார்கள். ஊடகங்களில் வெளிவந்த எனது படங்களை பார்த்த மகன் ஆதித் "படங்களில் இருப்பது நீங்கள்தான் என்று நண்பர்கள் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க.. வாக்கு சாவடியிலிருந்து எனக்கு ஒரு வீடியோ கால் பண்ணு' என்று கெஞ்சினான்" என்கிறார் ரீனா.
 ரீனா தேர்தல் பணி புரிவதை காணொலி காட்சியாகப் பலரும் படம் பிடித்துள்ளனர். ரீனா யாரையும் தடுக்கவில்லை. அப்படி எடுக்கப்பட்ட காணொலிகள் பல பொருத்தமான இந்தி திரைப்படப் பாடலுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 ரீனா, யோகேஷ்வரி பணி புரிந்த வாக்கு சாவடிகளில் அதிக வாக்குகள் பதிவாயின என்று சொல்ல வேண்டியதில்லை யே..! யோகேஷ்வரி, ரீனாவுக்குக் கிடைத்திருக்கும் நட்சத்திர அந்தஸ்த்தைக் கண்ட தேர்தல் ஆணையம் அடுத்து வரும் தேர்தல் சமயங்களில் இவர்களை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 - கண்ணம்மா பாரதி
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/தேர்தல்-பணியில்-தேடி-வந்த-புகழ்-3160894.html
3160889 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, May 29, 2019 09:55 AM +0530 வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இடியாப்பம் - 5, பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, நெய் - 2 தேக்கரண்டி, கொத்துமல்லி (நறுக்கியது) - கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கவும். 
குறிப்பு: இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.

வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: கேரட், குடமிளகாய், செளசெள, உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பீன்ஸ் 10, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகு- 10 , தனியா, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், பீன்ஸ், குடமிளகாய், செளசெள, உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், தனியா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பருப்பையும், அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு இறக்கவும். 
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் கூட்டை போட்டுப் பிசைந்து சாப்பிட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

பார்லி பாத்

தேவையானவை: பார்லி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - ஒரு கிண்ணம், பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி, நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி, நெய் - 1தேக்கரண்டி, துருவிய கேரட் - ஒரு கப். கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், இஞ்சியைச் சேர்த்து நன்கு வதக்கவும், நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டு உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும். 
குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

வெஜிடபிள் சான்ட்விச்

தேவையானவை: கோதுமை பிரெட் - ஒரு பாக்கெட், கேரட் துருவல் - ஒரு கிண்ணம், பெரிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் - தலா 1, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 100 கிராம், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி பேஸ்ட், வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பிரெட்டில் தடவவும். அதன்மேல் பரவலாக வதக்கிய காய்களை வைத்து, கொத்துமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து கொடுக்கவும். 
குறிப்பு: கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.

தினை மாவு பணியாரம்

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, நெய் - 4 தேக்கரண்டி , தினை மாவு - 200 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கிண்ணம், வாழைப்பழம் - 1, ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தினையை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக்கல்லில் நெய் தடவி, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும். 
குறிப்பு: தினை மாவு ஊட்டச்சத்து மிகுந்தது. பழம் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம்.

தேங்காய் அவல்

தேவையானவை: கெட்டி அவல் - கால் கிலோ, தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம், பொடித்த வெல்லம் - 1 கிண்ணம், ஏலக்காய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை: அவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும். 
குறிப்பு: காலை, மாலை நேர டிபனாக இதைக் கொடுத்தால் நீண்ட நேரம் பசி தாங்கும். வெறும் அவலில் தண்ணீர் அல்லது பால் விட்டுப் பிசறி, வெல்லம், தேங்காய் சேர்த்தும் கொடுக்கலாம். 
- கூ.முத்துலெட்சுமி ,தொண்டி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/சமையல்-சமையல்-3160889.html
3160848 வார இதழ்கள் மகளிர்மணி முகப்பருவை நிரந்தரமாக போக்க... DIN DIN Wednesday, May 29, 2019 09:45 AM +0530 இன்றைய இளம் தலைமுறையினர் உடல் ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:
✦ ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.
✦ வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.
✦ முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.
✦ ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
✦ துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
✦ வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
✦ பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.
- கவிதா பாலாஜிகணேஷ்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/முகப்பருவை-நிரந்தரமாக-போக்க-3160848.html
3160832 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ்... டிப்ஸ்... DIN DIN Wednesday, May 29, 2019 09:42 AM +0530 ✦ தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களைத் தயாரிக்கும்போது பொட்டுக்கடலையை வறுத்துச் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
 ✦ வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் அதிலுள்ள கசப்புச் சுவை நீங்கிவிடும்.
 ✦ பூரி செய்யும்போது மாவை நீண்ட நேரம் ஊற வைக்காமல் உடனே பூரி செய்தால் பூரி எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
 ✦ தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், அடுப்பில் இருந்து இறக்கிய பின்புதான் உப்பு சேர்க்க வேண்டும்.
 ✦ பச்சை மிளகாய் ஒரு வாரம் கெட்டுப் போகாமல் இருக்க அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அத்துடன் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடி விடவும். பச்சை மிளகாய் வாடாது, வதங்காது.
 ✦ ஒரு முறை கொதித்து காய்ச்சி இறக்கியப் பாலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடக் கூடாது. ஆறிப்போய் இருந்தால் தேவையான அளவுக்கு சூடு படுத்திக் கொள்ளலாம்.
 ✦ பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியைப் போட்டு வைத்தால் மற்றவை சீக்கிரம் பழுத்துவிடும்.
 - எல். நஞ்சன், நீலகிரி.
 
 மருத்துவ டிப்ஸ்!
 ✦ தொண்டை வலி நீங்க, உப்பை வெந்நீரில் கரைத்து தொண்டைக்குள் படும்படி கொப்பளித்து வர விரைவில் தொண்டைப் புண் ஆறும்.
 ✦ ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ஆரஞ்சு, பச்சை திராட்சைப் பழங்களை உண்டு வர கட்டுப்படும்.
 ✦ சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழச்சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்திட இருமல், ஆஸ்துமா குணமாகும்.
 - ஆர்.கே.லிங்கேசன்,
 மேலகிருஷ்ணன்புதூர்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/டிப்ஸ்-டிப்ஸ்-3160832.html
3160820 வார இதழ்கள் மகளிர்மணி 60 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் பாட்டி! Wednesday, May 29, 2019 09:39 AM +0530 சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்ப ஏசியிடம் தஞ்சம் அடைவோம். ஏசி இல்லாதவர்கள் மின்விசிறியை சுழலவிட்டே ஆக வேண்டும். இரவு வந்துவிட்டால் மின்விளக்கு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. டிவி ஓடாது.. சீரியல் பார்க்க முடியாது. மொபைலை சார்ஜ் செய்ய முடியாது. வாழ்க்கையின் உயிர்நாடியாகிவிட்ட மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்று நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத இயலாமையில் அனைவரும் இருக்கும் போது, மின்சாரம் இல்லாமல் அறுபது ஆண்டுகளாக ஒரு பெண்மணி வாழ்ந்து வருகிறார். நம்ப முடிகிறதா? புணே நகரில் முனைவர் ஹேமா சானே. வயது எழுபத்தெட்டு. தாவரவியல் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றிருப்பவர். ஹேமா அறுபது ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் மின் இணைப்பே இல்லை. மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் ? முனைவர் ஹேமாவே விளக்குகிறார்:
 "அந்தக் காலத்தில் மின்சாரம் இருந்ததா? மின்சாரம் இல்லாமல்தான் நம் முன்னோர்கள் வாழ்க்கை நடத்தினார்கள். எனது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி நான் வாழ்ந்து வருகிறேன். நான் வீட்டிலிருந்துதான் படித்தேன். பாடங்களைப் படித்தது பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் தரும் ஒளியில்தான். இப்போது சூரிய வெளிச்சத்தில் சக்தி உண்டாக்கி ஒளிரும் விளக்குகளையும், எண்ணெய் விளக்குகளையும் இரவு நேரங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன்.
 1940 - லிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனது தாத்தா பாட்டி வாழ்ந்த வீடு இது. காலையில் பறவைகளின் ஒலி கேட்டு எழுகிறேன். எனது சகோதரர் என்னுடன் இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் மரணித்தார். எனக்கு இப்போது வேறு உறவினர்கள் இல்லை. இப்படி தனியாக வாழ்வது குறித்து நான் கவலைப்படுவதில்லை.
 இந்திய சரித்திரம் குறித்தும் படித்திருக்கிறேன். பட்டம் பெற்றிருக்கிறேன். தாவரவியல், இந்திய சரித்திரம் குறித்து நூல்கள் பல எழுதியிருக்கிறேன். நான் எழுதியிருக்கும் தாவரவியல் நூல்கள் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, இணையம், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றில் ஆர்வம் இல்லை. பேட்டரி மூலம் இயங்கும் வானொலி மட்டும் கேட்பேன். வானொலியில் அறிவியல், புத்தரின் போதனைகள் குறித்து பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளேன். வானொலியின் நீண்ட நாள் நேயராக நான் இருப்பதால் என்னை புனா வானொலி கெளரவித்திருக்கிறது.
 வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்கள். வைக்க இடம் இல்லை. நூல்கள்தான் எனது நண்பர்கள். நான் கடைசியாக 2018 -இல் நூல் ஒன்றை மராத்தி மொழியில் எழுதி முடித்தேன். இதுவரை முப்பத்தைந்து நூல்களை எழுதியிருக்கிறேன். வயோதிகம் காரணமாக எலும்பு தொடர்பான உபாதைகள் உண்டு. காலை ஆறு மணிக்கு எழுந்துவிடுவேன். காலை பூஜை உண்டு. மாலை வேளைகளில் மரங்களின் கீழ் தீபம் வைத்து மரங்களை வணங்குவேன்.

 எனக்கு உதவ நண்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவர் வீட்டிற்கு வந்து போகிறார். மருந்து மற்றும் சாமான்கள் வாங்கித் தரவும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பார்க்கவும் பேசவும் பழைய மாணவர்கள் வந்து போகிறார்கள். என்னுடன் கல்லூரியில் பணி புரிந்தவர் தினமும் வருவார். வரும் போது பருப்பு, காய்கறிகள் சமைத்து கொண்டு வருவார். நான் சாதம் சமைத்துக் கொள்வேன். அதனால் நான் தனிமையில் இருக்கிறேன் என்ற எண்ணம் வருவதில்லை. இந்த தருணத்தில் எப்படி வாழ முடியுமோ அப்படி வாழுங்கள்.. நாளை பற்றி சிந்திக்க வேண்டாம். இப்படி வாழ்ந்தால் ஒரு பிரச்னையும் உங்களை நெருங்காது'' என்கிறார் முனைவர் ஹேமா சானே.
 - சுதந்திரன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/60-ஆண்டுகளாக-மின்சாரம்-இல்லாமல்-வாழும்-பாட்டி-3160820.html
3160815 வார இதழ்கள் மகளிர்மணி புரிதலே வேண்டும்... DIN DIN Wednesday, May 29, 2019 09:36 AM +0530 வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
 நான் மருத்துவர், என் கணவர் வழக்கறிஞர். என்னுடைய பணிச்சுமையைப் புரிந்து கொள்ளாமல் எப்போதும் சண்டைக்கு வருகிறார். வேறு துறையைச் சார்ந்தவரை மணம் முடித்ததால் இந்த பிரச்னையா?
 - பெயர் சொல்ல விரும்பாத வாசகி
 இது துறையினால் ஏற்படும் பிரச்னை என்பதைவிட, உங்கள் இருவரின் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, உங்களுடைய கணவரைவிட நீங்கள் செல்வாக்காகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டு, அதனால் அவருக்கு மனதளவில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகி, அதை வெளியில் காண்பிக்க தெரியாமல் இதுபோன்று சிறு சிறு விஷயத்திற்கு எல்லாம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கலாம். ஒரு வேளை அவரும் ரொம்ப பிசியாகவும், சக்சஸ்புல்லாகவும் இருந்தால் அவர் உங்களுடன் சண்டைப்பிடிக்க காரணமில்லாமல் போகலாம். நீங்கள் நினைப்பது போன்று ஒரே துறையில் இருப்பவரைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் இருவருக்குள்ளும் புரிதல் இருக்க வேண்டும். அதற்கான மன பக்குவம் இருக்க வேண்டும்.
 நீங்கள் திடீரென்று ஒரு பிரசவ கேஸ் வருகிறது என்று இரவு நேரத்தில் செல்ல நேர்ந்தால், அதன் முக்கியத்துவத்தை வழக்கறிஞராகிய உங்கள் கணவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை என்றால், அவருடைய அக்காவிற்கோ, தங்கைக்கோ இதுபோன்று பிரசவ நேர்த்தில் மருத்துவர் வரவில்லை என்றால் அவருடைய மன நிலை எப்படியிருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி உணர செய்ய வேண்டும். பொதுவாக மருத்துவர் என்றாலே, நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய தொழில் என்பதை நீங்கள்தான் அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். இது உங்கள் தொழில் ரீதியான பிரச்னைதானா அல்லது வேறு எதனால் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது என்பதை முதலில் ஆராய்ந்து, அதற்கான தீர்வை காணுங்கள்.
 
 திருமணத்திற்கு பிறகுதான் எனக்கு அரசு வேலை கிடைத்தது. ஆனால் என் கணவர் வேலைக்குச் செல்ல விடாமல் தடுக்கிறார். கணவரா? வேலையா? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது?
 எஸ். கீர்த்தனா, நெய்வேலி.
 இரண்டுமே முக்கியம்தான். பொதுவாக ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கையும் முக்கியம். கணவரும் முக்கியம். உங்கள் திறமையின் அடிப்படையில் தான் உங்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், முதலில் உங்கள் கணவர், ஏன் அந்த வேலையை வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 வீட்டை கவனிக்க முடியாது, குழந்தைகளை சரி வர கவனிக்க முடியாமல் போய்விடும் என்பதனால், இப்படி சொல்கிறார் என்றால், அதற்கு மாற்றாக உங்கள் பெற்றோரையோ அல்லது அவரது பெற்றோரையோ வரவழைத்து கவனித்து கொள்ள செய்யலாம் என்று சொல்லிப் பாருங்கள். அல்லது "நான் அதிகமாகத்தானே சம்பாதிக்கிறேன். நீ வேறு எதுக்கு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்' என்று சொன்னால், இது நிரந்தர வேலையாக இருக்கிறது. "நானும் வேலைக்குச் சென்றால் கூடுதல் லாபம் தானே, பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், எனக்கும் பொழுதுபோக்காகவும் இருக்கும்' என்று சொல்லி புரிய வையுங்கள்.
 அப்படிஇல்லை, நீங்கள் வேலைக்குச் சென்றால் உங்கள் கணவரைவிட நீங்கள் அதிகம் சம்பாதித்து அவரை ஆளுமை செய்து விடுவீர்கள் என்று பயப்படுகிறார் என்றால், அப்படி எல்லாம் நடக்காது என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும். முதலில் அவர் என்ன காரணத்தினால் வேண்டாம் என்கிறார் என்பதை அறிந்து, அவரின் பயத்தை போக்கி அவரை சம்மதிக்க வைப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. கணவனா, வேலையா என்பதை விட கணவன், வேலை இரண்டுமே தக்க வைத்துக் கொள்ள என்ன செய்வது என்று யோசியுங்கள். அப்படியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் இருவருமே ஒரு கவுன்சிலரை அணுகி பரஸ்பரம் பேசி முடிவு செய்யுங்கள்.
 சந்திப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
 மன நலம் சார்ந்த பிரச்னைகளா?
 குடும்பத்தில்... அலுவலகத்தில்... பள்ளி...கல்லூரிகளில்... என சமூகம் சார்ந்த உங்கள் மனநலப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் கேள்வி கேட்கலாம்.
 உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பிரபல மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்
 கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
 தினமணி - மகளிர்மணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
 29, இரண்டாவது முதன்மை சாலை,
 அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/புரிதலே-வேண்டும்-3160815.html
3160796 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்! 18 - பாரததேவி DIN DIN Wednesday, May 29, 2019 09:33 AM +0530 தன் அம்மாவின் குரலைக் கேட்டு தனக்குள்ளே. உடைந்து போனான் தங்கராசு. பழையபடிக்கு குழந்தையாக மாறி அம்மாவின் மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
 இதற்குள், அவனை நெருங்கிவிட்ட சங்கரி, தன் முந்தானையால் மகனின் முகத்தை துடைத்துவிட்டாள். "சொல்லுய்யா என்ன நடந்தது'' என்றாள்.
 தங்கராசுவுக்கு கண்கள் கலங்கி விட்டன. இமைகளில் தேங்கிய கண்ணீரை எங்கே அம்மா பார்த்துவிடுவாளோ ? என்று முகத்தை திருப்பியவாறு காலையில் நடந்த விஷயத்தையெல்லாம் திக்கி, திணறியபடி சொல்லி முடித்தான்.
 அவன் சொல்லி முடித்ததும் அப்படியே துவண்டாற்போல் சங்கரி நிலை தடுமாறி அந்த உழவுக்காட்டிலேயே உட்கார தங்கராசு " அம்மா'' என்று பதட்டத்துடன் பிடித்தான்.
 சங்கரி, "அட என்னவிடுய்யா நானு நாளைக்கு சாவப்போறவ, உன் பொழப்ப நெனச்சா எனக்கு குலையேவில்ல நடுங்குது. இப்படி இந்தப்புள்ள எதுக்கெடுத்தாலும் முரண்டு புடிச்சா நம்ம என்னதேன் செய்யிறது. நமக்கு கெடக்க வேலயில நிதமும் இட்லி, தோசைன்னு போட முடியுமா?'' என்றாள்.
 தங்கராசு மௌனமாக நின்றான். தப்பு செய்தது நானு இப்ப அம்மாவுமில்ல வேதனையில வெந்து உருகிக்கிட்டு இருக்கா என்று நினைத்தபோது அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
 "சரிய்யா, உன் பொண்டாட்டி (ஏனோ சங்கரிக்கு மருமகளின் பெயர் வாய்க்குள் நுழைவதில்லை) பிடிசாதனையா இருக்கவ, காலையிலேருந்து இன்னும் பட்டினியாத்தேன் இருப்பா. தங்கச்சி கொஞ்சநேரம் கருத சொமக்கட்டும், நீ போயி உன் பொண்டாட்டிய சமாதனப்படுத்தி மத்தியானச் சோறனாச்சிலும் சாப்பிட வச்சிட்டு வா'' என்று சங்கரி சொன்னதும், தங்கராசு குற்ற உணர்வில், "இருக்கட்டுமா நானு கருது சொமக்கேன். வேல முடிஞ்ச பெறவு வீட்டுக்குப் போவோம்'' என்றான்.
 " இல்லய்யா அப்படி சொல்லாத, ஊரார் பெத்த பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வந்துட்டா, உன்ன நம்பி வந்தவள பட்டினி போடுறது நாயமில்ல. வேல நமக்கு எப்பவும் இருக்கத்தேன் செய்யும். நீ போய்ட்டுவா'' என்று வலுகட்டாயமாக அனுப்பி வைத்தாள்.
 தங்கராசுவிற்கும், கௌசிகாவின் நினைவு அவன் உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை ஆக்ரமித்ததோடு அவனை அலைகழித்துக் கொண்டுதான் இருந்தது . என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவனுக்கு தன் அம்மாவே ஒரு வழி காட்டியது போல் உணர்ந்தான்.
 காலையிலேயே தான் அருகில் போனதும் முகம் சுளித்து, விலகியவளின் நினைவு வர, அங்கே இருந்த கிணற்றுக்குள் குதித்தான். கைவீசி நீச்சல் போட்டு குளித்தான். அவசரத்துக்கு உதவும் என்று பூவரசம் பொந்துக்குள் ஒளித்து வைத்திருந்த வெளுத்த வேட்டியை எடுத்து உடுத்திக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.
 இவன் வரவைத்தேடும் ஆடுகளும், மாடுகளும் பிஞ்சைக்கு போயிருந்ததால் வீடு அமைதியாயிருந்தது. இவன் தன் அறைக்குப் போனான், கதவு பூட்டியிருந்தது.
 "கௌசி, கௌசி'' என்று இரண்டு முறை தட்டினான். அவள் கதவை திறக்கவே இல்லை. இது அவன் எதிர்ப்பார்த்ததுதான்.
 "இதோ பாரு கௌசி இப்ப நீ கதவ தொறக்கலன்னு வச்சிக்கோ, நான் உன் ஊருக்குப் போயி உன் அம்மாவ கூட்டிட்டு வந்திருவேன்'' என்றான் காட்டமாக.
 உடனே கதவு பட்டென்று திறந்தது. எங்கே கதவை மீண்டும் மூடிவிடுவாளோ என்று விருட்டென்று உள்ளே நுழைந்த தங்கராசு மீண்டும் கதவை அடைத்தவன், கௌசிகாவை நிமிர்ந்துப் பார்த்தான். அழுதிருப்பாள் போல் இருக்கிறது, முகம் உப்பி சிவந்திருந்தது. கண்கள் நனைத்திருந்தன. காலையில் அலங்காரமாயிருந்தவள் இப்போது இதழ், இதழாக பிய்த்தெறிந்த பூவாக கலைந்து கிடந்தாள். கண்களில் தீட்டியிருந்த மையும் நெற்றிப் பொட்டும் லேசாக கலைந்ததில் அவள் இன்னும் அழகாகவே தோன்றினாள் தங்கராசுவின் கண்களுக்கு.
 இவளை இப்போது எப்படி சமாதானப்படுத்தலாமென்று நினைத்தவன், அவளை அணைத்தவாறு தன் பக்கத்தில் உட்கார வைக்க முயன்றான். அவள் அவனிடமிருந்து விலகி கட்டிலுக்கு அந்தப்புறம் போய் நின்றாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தாலும், பசியின் தாக்கமும் அதிகமாகவே இருந்தது.
 தங்கராசு மீண்டும் அவளை அணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்தான். அவள் உடனே ஒரு குழந்தையைப் போல் அவன் தோள் மீது சாய்ந்தவள் விக்கி , விக்கி அழுது கொண்டே , " இன்னும் நானு சாப்பிடவே இல்லை, வயிறு பசிக்குது'' என்று கௌசிகா சொல்ல,
 தங்கராசு துடித்துப் போனான். உடனே வேகமாக போய் தட்டுநிறைய சோறும், குழம்பும் ஊற்றிக் கொண்டு வந்து அவனே அவளுக்கு அள்ளி, அள்ளி ஊட்டினான்.
 சாப்பிடும் போதே நடுவில் வெள்ளந்தியாகச் சிரித்து " எங்கம்மா இப்படித்தாங்க ஊட்டுவாங்க'' என்றாள் கௌசிகா.
 தங்கராசுவின் கண்களுக்கு அவள் ஒரு குழந்தையாகத் தெரிந்தாள். அப்படியே வாரி அனைத்துக் கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.
 ஊறுகாயைத் தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டே, " நீங்க சாப்பிட்டீங்களா'' என்று கௌசிகா கேட்டபோது,
 " நீ சாப்பிடாட்டா நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன் கௌசி. எனக்கு சாப்பிட மனசில்ல உன்ன கூப்பிடலாமின்னா, நீ வேற கோபத்தோட கதவ அடச்சிட்டே, அதேன் என்ன செய்யிறதுன்னு தெரியாம அப்படியே பிஞ்சைக்குப் போயிட்டேன்'' என்று தங்கராசு சொல்ல கௌசிகாவிற்கு திக்கென்றது.
 "என்னை மன்னிச்சுடுங்க, என்னை மன்னிச்சுடுங்க நானாவது பாட்டுக் கேட்டுகிட்டு சும்மாவே படுத்திருந்தேன். ஆனா நீங்க பட்டினியா காட்டுக்குப் போயி வேலையில்ல பாத்திருக்கீங்க அய்யோ இப்ப சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுக்கணுமின்னு இருக்கு வாந்தி எடுத்திரட்டுமா?'' என்றாள்.
 தங்கராசுவிற்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் காலயிலதேன் நானு சாப்பிடாம போனேன். ஆனா இப்ப வரும்போது சோளக்கஞ்சி குடிச்சுட்டுதான் வந்தேன். உன்கிட்ட ஒன்னு, ரெண்டு விஷயத்தப் பேசிட்டு நானு உடனே பிஞ்சைக்குப் போகனும்'' என்றான்.
 அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் உடனே கூம்பிப் போனது. ""நீங்க ஒன்னும் காட்டுக்குப் போக வேண்டாம். என்னைப் பட்டினி போட்டதுக்கு தண்டனையா, இன்னைக்கு அரை நாள் லீவு எடுத்துக்கிட்டு என் கூடவே இருங்க'' என்றாள் கௌசிகா.
 அவள் சொன்னதைக் கேட்டதும், "கட, கட' வென்று சிரித்தான் தங்கராசு. அவனின் வெண்மையான பல்வரிசையில் கௌசிகா தன்னை மறந்தாள். தனக்கு எவ்வளவு அழகான கணவன் கிடைத்திருக்கிறான் என்று எண்ணியவளுக்கு கர்வம் கூடியது.
 ஆனாலும், இவர் எதற்காக இப்படி சிரிக்கிறார்? என்று நினைத்தவள். " என்ன சிரிக்கிறீங்க ?'' என்றாள் சிணுங்கலோடு.
 ""பின்ன நீ சொன்னதைக் கேட்டு சிரிக்காம என்ன செய்றது? இதென்ன சர்காரு வேலயா லீவு போட்டு உக்காரதுக்கு. இது விவசாய வேல, இதுக்கு லீவும் கிடையாது ஒன்னும் கிடையாது. நம்மதேன் நம்ம வேலயச் செய்யணும்''.
 " ஏங்க இந்த சினிமாவில எல்லாம் வார மாதிரி நிறைய நிலம் வச்சிருக்க, நீங்க பண்ணையார்தானே, பேசாம வேலையாட்கள கூப்பிட்டு வேல செய்யச் சொல்லிட்டு நீங்க என் கூட ஜாலியா இருக்கலாமில்ல. என்னைக்காவது ஒரு நாளைக்கு நீங்களும், நானும் போயி காட்டச் சுத்திப்பாத்துட்டு வந்துருவோம்.
 " அப்படியெல்லாம் சுத்திப் பாத்துட்டு வரமுடியாது. ஒரு விவசாயியா இருக்கிறவன் அவன் நிலத்தில் இறங்கி வேல செஞ்சாத்தேன். அவனோட நிலத்தையும், குடும்பத்தையும் தன்னோட தக்க வச்சிக்க முடியும். இந்த விஷயத்தப்பத்தி போக, போகத்தேன் உனக்குப் புரியும். அதை விடு இப்ப நீ என் செல்லப் பொண்டாட்டிதானே'' என்று தங்கராசு கேட்கவும் மலர மலர விழித்தவாறு "ஆமாம்' என்று தலையை ஆட்டினாள்.
 கௌசிகா மலர்ந்த விழி அசைவில் தங்கராசு தடுமாறிப் போனான். இப்போது அவனுக்கு நிஜமாகவே காட்டிற்குப் போகமனமேயில்லை. பேசாமல் கௌசிகா சொன்னதுபோல், அரைநாள் லீவு போட்டு விடலாமா? என்று எண்ணியவன் மறு நிமிஷமே திடுக்கிட்டுப் போய் தன் நினைவிற்கு வந்தான்.
 - தொடரும்..
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/என்-பிருந்தாவனம்-18---பாரததேவி-3160796.html
3160629 வார இதழ்கள் மகளிர்மணி பழைய உறவுகளை மறக்காத தீபிகா DIN DIN Wednesday, May 29, 2019 08:52 AM +0530 ஒரு காலத்தில் ரன்பீர் கபூர் - தீபிகா படுகோன் காதல் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில் தீடிரென இருவருமே பிரிந்து விட்டதாக தகவல்கள் வந்தன. அண்மையில் தீபிகா படுகோன், அமெரிக்காவில் நடந்த ஆடைகள் அறிமுக விழாவில் பங்கேற்க சென்றவர், அங்கு புற்றுநோய்காக சிகிச்சை பெற்றுவரும் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூரையும், அவரது மனைவி நீது கபூரையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். தீபிகாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீது கபூர் அவரது இன்ஸ்டா கிராமில் மறக்காமல் ரிஷிகபூரை பார்த்து நலன் விசாரித்த பெருந் தன்மையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
 - அருண்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/பழைய-உறவுகளை-மறக்காத-தீபிகா-3160629.html
3160622 வார இதழ்கள் மகளிர்மணி தாய்மை ஒரு சிறந்த பணி DIN DIN Wednesday, May 29, 2019 08:48 AM +0530 'குழந்தைகளுக்கு தாயாக இருப்பது போன்ற சிறந்த பணி ஏதுமில்லை. திருமணத்துக்கு முன்பே இரு பெண்களை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினேன். அப்போது தனிமைத்தாய் என்பது அவ்வளவாக பிரபலமாகவில்லை என்பதால் நான் எடுத்த முடிவு என் வாழ்க்கையை பிரச்னைக்குள்ளாக்கியது. இப்போது என் இரு குழந்தைகளையும் சேர்த்து நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று கூறுகிறார் ரவீனா டான்டன்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/தாய்மை-ஒரு-சிறந்த-பணி-3160622.html
3160615 வார இதழ்கள் மகளிர்மணி திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் உலக அழகி DIN DIN Wednesday, May 29, 2019 08:46 AM +0530 உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் இந்திய அழகிகளுக்கு உடனடியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா போன்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு யுக்தாமுகி, பூஜா குப்தா, சோனல் சவ்ஹன் ஆகியோருக்கு கிடைக்கவில்லை. இதே போன்று 2017-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு பெற்ற மானுஷி சில்லர். பிருத்விராஜ் சோஹன் என்ற வரலாற்று படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்க போவதாக வந்த தகவலை அதன் இயக்குநர் சந்திர பிரகாஷ் திவேதி மறுத்துள்ளார். ஏற்கெனவே மானுஷி, பாராகானை சந்தித்து வாய்ப்பு கேட்டதாக வந்த தகவலும் மறுக்கப்பட்டுள்ளது. நல்ல வாய்ப்புக்காக மானுஷி காத்திருப்பதாக கூறுப்படுகிறது.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/திரைப்பட-வாய்ப்புக்காக-காத்திருக்கும்-உலக-அழகி-3160615.html
3160609 வார இதழ்கள் மகளிர்மணி தாத்தா ராஜ்கபூர் சொத்துகளை மீட்கும் வாரிசுகள் DIN DIN Wednesday, May 29, 2019 08:45 AM +0530 மும்பையில் உள்ள காலஞ்சென்ற பிரபல நடிகர் ஆர். கே.ஸ்டுடியோவை விற்பதற்கான பேச்சு வார்த்தை நடப்பதாக வந்த தகவலை அவரது பேத்தியும், நடிகையுமான கரினாகபூர் கான் மறுத்துள்ளார். "இது எங்கள் தாத்தாவின் சொத்து. இதை போற்றி பாதுகாப்பது எங்கள் கடமை. ஆர்.கே. குடும்ப பெண்கள் இதை மீட்க முன்வந்துள்ளனர். முதலில் கரிஷ்மா, அடுத்து நான், இப்போது ரன்பீர் கபூர் என ராஜ்கபூரின் வாரிசுகளான நாங்கள் முயற்சியில் இறங்கியுள்ளோம். அடுத்து எங்கள் குழந்தைகளும் இதை மீட்க முயற்சிப்பவர்கள்'' என்று கரினாகபூர் கூறியுள்ளார்.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/தாத்தா-ராஜ்கபூர்-சொத்துகளை-மீட்கும்-வாரிசுகள்-3160609.html
3160602 வார இதழ்கள் மகளிர்மணி ஐசிசி போட்டி நடுவராக ஜி.எஸ். லட்சுமி நியமணம் DIN DIN Wednesday, May 29, 2019 08:44 AM +0530 செகந்தரபாத்தில் தெற்கு மத்திய ரயில்வேயில் மக்கள் தொடர்பு துறை தலைமை அதிகாரியாக பணியாற்றும் கண்டி கோட்டா சர்வலட்சுமி ஐசிசி போட்டி நடுவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். 1986 முதல் 2004-ஆம் ஆண்டு வரை இந்திய மகளிர், கிரிக்கெட் அணியில் விளையாடிய இவரை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அனைத்து மகளிர் ஐபிஎல் போட்டிகளிலும், இறுதி போட்டி உள்பட நடுவராக பணியாற்ற நியமனம் செய்துள்ளது. இவர் இதுவரை 3 மகளிர் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/ஐசிசி-போட்டி-நடுவராக-ஜிஎஸ்-லட்சுமி-நியமணம்-3160602.html
3160597 வார இதழ்கள் மகளிர்மணி இயக்குநர் பயிற்சி பெறும் நடிகை DIN DIN Wednesday, May 29, 2019 08:43 AM +0530 திரையுலகில் அறிமுகமானது முதல் சிறந்த நடிகையாக வலம் வந்த மாதுரி தீட்சித், திருமணமானவுடன் சில காலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்ததுடன் தயாரிப்பாளராகவும் உள்ளார். "இதுவரை பிரபல இயக்குநர்களின் கீழ் நடித்திருந்தாலும், படவுலகைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இப்போது தயாரிப்பாளராகவும் இருப்பதால் படங்களை இயக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளேன். சில பெண் இயக்குநர்கள் வெற்றிகரமாக செயல்படுவது பெருமையாக இருக்கிறது. இயக்குநராக பயிற்சி பெறுவதால் எதிர்காலத்தில் படங்களை இயக்குவேனா என்பதை உறுதியாக கூற இயலாது'' என்றார் மாதுரி தீட்சித்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/இயக்குநர்-பயிற்சி-பெறும்-நடிகை-3160597.html
3160592 வார இதழ்கள் மகளிர்மணி கேன்ஸ் படவிழாவின் "ஹைலைட்'டான "பட்டு' சேலை! Wednesday, May 29, 2019 08:42 AM +0530 பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் 72 -ஆவது கேன்ஸ் திரைப்படவிழா சென்ற வாரம் நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளிலிருந்து தெரிவுக்கு வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து அதிக அளவில் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், கங்கனா ரணாவத், ஹுமா குரேஷி, தீபிகா படுகோன்,சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஹினா கான், மாடல் டயானா பேண்டி போன்றவர்கள் இந்தக் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டாலும், இந்தியப் படம் எதுவும் கேன்ஸ் விழாவில் பங்கு பெறவில்லை.
 பிரியங்கா தன் கணவர் ஜாக்குடன் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா, மகள் ஆரத்யாவுடன் வலம் வந்தார். தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங் கேன்ஸ் பட விழாவிற்கு வரவில்லை. படப்பிடிப்புகள் இருந்ததால் வரவில்லையாம். பிரியங்காவும் ஹினாவும் முதல் முறையாக கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்டுள்ளார்கள்.
 கேன்ஸ் விழாவின் ஹைலைட் "பட்டு' சேலையாக மாறியிருந்தது. கங்கனா தங்க நிற காஞ்சிபுரம் பட்டு சேலையை வித்தியாசமான ஸ்டைலில் உடுத்தி கலக்கியது, விழாவில் கலந்து கொண்டவர்களைக் கவர்ந்தது.
 கேன்ஸ் படவிழாவில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இயக்கி இசையமைக்கும் "வர்ச்சுவல் ரியாலிட்டி' படமாக உருவாகிக் கொண்டிருக்கும் "லே மஸ்க்' ஆங்கிலப் படத்தில் வரும் "சென்ட் ஆப் தி சாங்' என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்திருந்தார். ரஹ்மானுக்கு திருமணமாகி இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதனாலோ என்னவோ 25 - ஆம் திருமண ஆண்டு விழாவின் முன்னோட்டமாக மனைவி சாய்ராவுடன் கேன்ஸ் வந்திருந்தார். தமிழ் திரைப்பட உலகிலிருந்து கேன்ஸ் வந்த இன்னொருவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கேன்ஸ் வரவில்லை. படப்பிடிப்பில் பிஸியாம்..!
 - பரிணாமன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/29/கேன்ஸ்-படவிழாவின்-ஹைலைட்டான-பட்டு-சேலை-3160592.html
3156581 வார இதழ்கள் மகளிர்மணி ரோல் மாடலாக இருக்க வேண்டும்! DIN DIN Wednesday, May 22, 2019 11:54 AM +0530 கடந்த மே-12 -ஆம் தேதி உலக செவிலியர் தினத்தையொட்டி பெரும்பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையிலும் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றும் அந்த மருத்துவமனையில் செவிலியர்களின் இயக்குநராக பணியாற்றுபவர் சி.நிர்மலா ஐயர். இவர், ராணுவ செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். செவிலியர் தினம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
செவிலியர் தினம் குறித்து? 
முதன்முதலில் செவிலியர்களுக்கு அடித்தளம் இட்டவரான நைட்டிங்கேலின் பிறந்த தினத்தின் நினைவாக ஆண்டு தோறும் மே 12 -ஆம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
உலகளவில், இன்டர்நேஷனல் நர்ஸிங் அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் மூலம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செவிலியர் தினத்திற்கும், ஒரு தீம் கொடுப்பார்கள். 
W.H.O அமைப்பு, அதை முன்னிறுத்தும். அதை பின்பற்றி செவிலியர் அமைப்புகள் அனைத்தும் செவிலியர் தினம் கொண்டாடுவார்கள். அதன் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக "ஏ வாய்ஸ் டூ லீட்' என்ற ஒரே தீமில் கொண்டாடி வருகிறோம். பணம் இருப்பவர்கள், இல்லாதவர், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
இந்த வாய்ஸ் டூ லீட் என்பதை பொருத்தவரை, செவிலியர்கள், நோயாளிகளிடம் அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி வாயை திறந்து பேச வேண்டும். ஏனென்றால், பொதுவாக மருத்துவரிடம் பேச தயங்கும் நோயாளிகள், செவிலியர்களிடம் நன்றாகப் பேசி பழகுவார்கள். மேலும், நர்ஸ் பணியில் இருப்பவர்கள், நோயாளியுடனும் பழகுவார்கள், குடும்பத்திலும் அவர்கள் பங்கு இருக்கும், சமூகத்திலும் அவர்களின் பங்கு இருக்கும். இதனால், உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எல்லோருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் செவிலியரின் பங்கு அதிகம். அதனால் அவர்கள் எல்லாரிடமும் வாய் திறந்து பேச வேண்டும் என்பதுதான் இந்த கான்சஃப்ட்டின் அர்த்தம். 
ராணுவ செவிலியராக பணியாற்றிய அனுபவம்?
எனது பூர்வீகம் தமிழகம்தான். பள்ளி படிப்பு முடித்ததும் நர்ஸாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட நர்ஸிங் படித்தேன். நர்ஸிங் முடித்ததும், ஆர்மியில் வேலை கிடைத்தது. நான் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள், இதனால் ஆர்மியில் சேர்ந்ததும், புரியாத மொழி, அசைவ உணவு இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு கட்டத்தில் ஆர்மியில் இருந்து ஓடி விடலாமென நினைத்தேன். 
அந்த சமயத்தில் ஓர் இடத்தில் பூகம்பம் ஏற்பட, அதில் சிக்கிய பொது மக்களைக் காப்பாற்ற சென்ற ஆர்மி ஆட்களும் பாதிக்கப்பட்டனர். அப்போது ஒரு நர்ஸ்ஸாக அவர்களுக்கு உதவ சென்றேன். அந்த சூழ்நிலைகளைப் பார்த்தபோது, இனி என்ன நடந்தாலும் ராணுவத்தில் இருந்து செல்லக் கூடாது என மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன். அதன்பிறகு, ஆர்மியில் நர்ஸாக இருந்து கொண்டே பரீட்சை எழுதி லெட்டினன்ட் ஆனேன். அப்போது எனக்கு 18 வயது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து லெட்டினன்ட் கர்னலாக ஆனனேன். 26 ஆண்டுகள் ஆர்மியில் பணியாற்றிவிட்டு குடும்ப சூழல் காரணமாக விருப்ப ஓய்வில் வெளியே வந்தேன். 
ஆர்மியைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் மல்டி பெர்ஸ்னாலிட்டியாக இருக்க வேண்டும். அதாவது நர்ஸாக வந்திருக்கிறேன், அதனால் நர்ஸ் பணியை மட்டும்தான் செய்வேன் என்று சொல்லக்கூடாது. டீச்சிங், நர்ஸிங், ரிஸர்வ்டு வேலை அதாவது தீடிரென்று தூப்பாக்கி எடுத்துச் சுட சொன்னாலும் செய்ய வேண்டும். தூப்பாக்கி சுடுவதற்கெல்லாம் பழக்கியிருப்பார்கள். அதனால், எல்லாருமே எல்லாமும் செய்ய வேண்டும். மல்டிபள் டாஸ்க்தான். 
ராணுவத்தில் பணியாற்றியபோது மறக்க முடியாத நிகழ்வுகள் இருந்திருக்குமே?
உண்மைதான்! ஒவ்வொரு நாளும் ஒரு சவால்தான். ஆனால், அவை எல்லாம் ராணுவ வீரர்களுக்கு பழகிப்போன ஒன்று. என்னை ரொம்பவும் நெகிழ வைத்த சம்பவம் என்றால் அது, நான் ஆர்மியில் இருந்து வெளியே வந்த பிறகு, பஞ்சாபில் உள்ள "பாட்னா' என்ற ஊரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸிங் பணியில் சேர்ந்தேன். அப்போது அங்கு வந்த சர்தார்ஜி இளைஞர் என்னைப் பார்த்ததும், என்னிடம் வந்து, என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டார். 
அவரது தோற்றத்தைப் பார்த்ததும், அவர் ஆர்மியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. ஆனால், யார் என்று எனக்கு நினைவில்லை. அதனால் யோசித்தேன். அதன் பிறகு அவரே சொன்னார். நான் புணேயில் பணியில் இருந்தபோது, குண்டு அடிப்பட்டு வந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய சென்றேன். அப்போதெல்லாம் ஆர்மியில் நர்ஸ்கள் மிகவும் குறைவுதான். அதனால், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பேரை ஒரேயொரு நர்ஸ் கவனிக்க வேண்டும். அதனால் லெட்டினன்ட் கர்னலாக, சீனியர் ரேங்கில் இருந்த நானும் உதவி செய்ய சென்றேன். ஒரு கர்னலாக இருந்து கொண்டு, அங்கு குண்டு அடிப்பட்டு கையை தூக்க முடியாமல் இருந்த ராணுவ வீரர்கள் பலருக்கும் உணவை ஊட்டிவிட்டு, அவர்களுக்கு தேவையான பணிவிடைகளும் செய்தேன். அப்படி உதவி செய்ததில் அந்த இளைஞரும் ஒருவர், சீனியர் ரேங்கில் இருந்து கொண்டு, நான் உதவி செய்ததை எண்ணி நெகிழ்ந்து போன அந்த இளைஞர், பல ஆண்டுகள் கழித்தும் அதை மறக்காமல் நினைவில் வைத்திருந்து என்னைப் பார்த்ததும், வந்து பாராட்டியது மறக்கவே முடியாது. 

திருமண வாழ்க்கை பற்றி?
ஆர்மியில் இருந்தபோதுதான் என் திருமணம் நடந்தது. பொதுவாக, ஒரு ஆண் ஆர்மியில் வேலை பார்க்கிறார் என்றாலே நமது ஊரில் பெண் கொடுக்க தயங்குவார்கள். அப்படியிருக்க, ஆர்மியில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். மாப்பிள்ளை கிடைத்தால், எனக்கு விடுமுறை கிடைக்காது, விடுமுறை கிடைத்தால் மாப்பிள்ளை கிடைக்க மாட்டார். எப்படியோ, 32 வயதில் திருமணம் ஆனது. ஆனால் அதிலும் சிக்கல், கணவருக்கு மத்திய அரசாங்கத்தில் பணி. அவருக்கும் அவ்வப்போது ஊர் ஊராக மாற்றல் வரும். இதனால், இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் பணி. ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதே சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், என் கணவர் என் பணிச் சூழல் குறித்து நன்கு புரிந்து வைத்திருந்ததால், என்னைப் புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். எங்கள் குழந்தையை பத்து வயது வரை என் கணவர்தான் பார்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் என் பணியை விட வேண்டிய சூழல் ஏற்படவே விருப்ப ஓய்வு பெற்றேன். அதன்பிறகு, கணவர் பணியில் இருந்த புணேவிற்கே சென்று அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியைத் தொடங்கினேன். அதிலிருந்து தொடர்ந்து பல மாநில மருத்துவமனைகளில் வேலை பார்த்தேன். 
இப்போதுதான் என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் பிறந்த தமிழ்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து ஓர் ஆண்டு ஆகிறது, தற்போது, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறேன். நர்ஸிங் சர்விஸ் இயக்குநராக இருக்கிறேன். எனக்கு கீழ் 400 நர்ஸ்கள் பணி புரிகிறார்கள். 
செவிலியர்களுக்கு இருக்க வேண்டிய குண நலன்கள்?
என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு செவிலியரும், ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். என்னென்றால், செவிலியர் பணி என்பது மற்றவர்களுக்கு சேவை செய்யும் பணி. இதில் பொறுமை மிக மிக அவசியம். அப்போதுதான், அவர்களுக்கு அடுத்து பணியில் சேரும், இளம் நர்ஸ்கள், நோயாளிகளிடம் எப்படி பழக வேண்டும், எப்படி அவர்களை கவனிக்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்வார்கள். நாம் ஒரு விஷயத்தை வாய்வழியாக சொல்லிக் கொடுப்பதைவிட செயலில் காட்டினால், அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். 
அதுபோன்று, செவிலியர் பணியில் இருப்பவர்களின், குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து, அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் செவிலியரை பொருத்தவரை, நாள்தோறும் எமோஷனலாக இருப்பவர்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் நோயாளிகளும், அவர்களின் வலியும், அழுகுரலும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அதைப் புரிந்து கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 
- ஸ்ரீதேவி குமரேசன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/ரோல்-மாடலாக-இருக்க-வேண்டும்-3156581.html
3156579 வார இதழ்கள் மகளிர்மணி செவ்வாய் கிரக ஆய்வு குழுவில் குடும்பத் தலைவி DIN DIN Wednesday, May 22, 2019 11:40 AM +0530 நான்காண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய இந்திய விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக எல்லைக்குள் சென்றடைந்தபோது, இந்திய விஞ்ஞானிகள் அந்த சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த குழுவில் சில பெண் விஞ்ஞானிகளும் இருந்தனர். அவர்களை ராக்கெட் பெண்கள் மற்றும் செவ்வாய் கிரத்திலிருந்து வந்த பெண்கள் என்று குறிப்பிட்டனர். அப்போதுதான் இந்த ஆய்வு குழுவில் பெண்களும் இடம் பெற்றிருப்பது தெரிந்தது. அவர்களுக்கு தலைமையாக இருந்த பி.பி. தாக்ஷாயிணி, இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கை கோள் எப்படி பாதை தவறாமல் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது என்பதை விவரித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
 கடினமான விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஒரு குடும்பத்தலைவி ஈடுபடுவதென்பது சாதாரண விஷயமல்ல, பாரம்பரிய, நடுத்தர, வைதீக குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம்தான். 1960-ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பத்ராவதியில் குழந்தை பருவத்தை தொடங்கிய தாக்ஷாயிணியின் ஆர்வத்திற்கு அவரது தந்தைதான் உறுதுணையாக இருந்தார். பத்ராவதியில் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்த ஒரே ஒரு பெண்மணியும் இவர்தான், பட்டம் பெற்றவுடன் பி.எஸ்.சி படிக்க வேண்டுமென்று தாக்ஷாயிணி விரும்பியபோது, படித்தவரை போதுமென்று இவரது தந்தை கூறினாலும், இவர் மேற்கொண்டு படித்து பட்டம் பெற்றார்.
 வேலைக்குச் செல்ல விரும்பியபோது, கல்லூரியில் கணித பேராசிரியை வேலை கிடைத்தது. ஆனால் இவருக்கு விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஆர்வமிருந்தது. அதற்கேற்றாற்போல் இஸ்ரோ விளம்பரமொன்றை பார்த்த இவர் வேலைக்கு மனு அனுப்பினார். இவரது, அதிர்ஷ்டம் இஸ்ரோவில் வேலை கிடைத்தது. 1984- ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் அடிப்படை தகவல்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்கினார். ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற நவீன வசதிகள் அறிமுகமாகாத அன்றைய காலகட்டத்தில் தினமும் புத்தகங்களை படித்தே கம்ப்யூட்டர் புரோகிராம் தகவல்களை கற்றுணர்ந்தார்.
 தாக்ஷாயிணி இஸ்ரோ பணியில் சேர்ந்த மறு ஆண்டே அவரது பெற்றோர் ஆர்தோபடிக் சர்ஜனான டாக்டர் மஞ்சுநாத் பசவலிங்கப்பா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குடும்ப தலைவியான தாக்ஷாயிணி, விண்வெளி ஆய்வு தொடர்பான பணியையும், வீட்டில் கணவருடன் உடன் பிறந்த ஐவர், மாமனார், மாமியார் மற்றும் தங்களது இரு குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
 தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து அனைவருக்கும் உணவை தயாரித்து வைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிச் செல்வாராம். மாலையில் வீடு திரும்பியவுடன் மீண்டும் வீட்டு வேலைகளை செய்வார்.
 "இப்படி நான் சிரமப்படுவதை பார்த்த உறவினர்களில் சிலர், வேலையை விட்டுவிடும்படி கூறியதும் உண்டு. அத்தனை சுலபமாக வேலையைவிட நான் தயாராக இல்லை. "முடிவு தெரியும் வரை முயற்சி செய்' என்று என்னுடைய தந்தை கூறுவதுண்டு. ஏதாவது புரியவில்லை என்றால் நான் திரும்ப திரும்ப புத்தகங்களை படிப்பேன். சில சமயங்களில் படுக்கச் செல்ல இரவு 2 மணி ஆகிவிடும். மறுபடியும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். இது குறித்து நான் யாரிடமும் சொல்லி குறைப்பட்டதில்லை. வாழ்க்கை - வேலை இரண்டிலும் பிரச்னைகளை சந்தித்து தீர்வு காண்பது எனக்கு பிடித்திருந்தது. சமையல் செய்வது அதிலும் சிறு மாற்றங்கள் செய்து ருசியான உணவுகளை சமைப்பது பிடிக்கும்.
 திருமணமான புதிதில் நான் என்ன பணி செய்கிறேன் என்பது குறித்து என் கணவருக்கு புரியவில்லை என்றாலும், விண்வெளி ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அறிந்து சந்தோஷ பட்டார். செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்படும் விண்கலம் எவ்வளவு தூரம் கடந்து எவ்வளவு நாட்களில் அதன் பாதையை சென்றடையும்? பின்னர் பூமிக்கு திரும்பும்போது பாதுகாப்பாக கடலில் எந்த பகுதியில் விழும் என்பதை நான் கணக்கிட்டு சொல்வதை ஆர்வமுடன் கேட்பார். ஒரு டாக்டர் என்ற முறையில் நான் தினமும் 18 மணி நேரம் உழைப்பதை போல், நீயும் விஞ்ஞானி என்ற முறையில் அலுவலகத்தில் அதிக நேரம் உழைப்பதில் தவறில்லை என்பார்.
 வீட்டைப் பொருத்தவரை இப்போது முன்னைப் போன்று பரபரப்பாக வேலை செய்யும் நேரம் குறைந்துவிட்டது. என்ஜினீயர்களான எனது மகன் மற்றும் மகள் இருவரும் தற்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய போகிறீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் உள்ள வித்தியாசங்கள், ஒற்றுமைகள் குறித்த பல தகவல்கள் என்னிடம் உள்ளன. அதை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் செய்வேன். பூமியை சுற்றிலும் உள்ள கிரகங்கள் என்னை கவர்ந்திருப்பது போல், பல இளம் பெண்களை கவர வாய்ப்புள்ளது. எனவே இந்த விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட பெண்களும் முன் வர வேண்டும்'' என்கிறார் தாக்ஷாயிணி.
 - பூர்ணிமா
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/செவ்வாய்-கிரக-ஆய்வு-குழுவில்-குடும்பத்-தலைவி-3156579.html
3156577 வார இதழ்கள் மகளிர்மணி பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்! DIN DIN Wednesday, May 22, 2019 11:18 AM +0530 பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ:
 ✦ தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.
 ✦ இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.
 ✦ ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
 ✦ பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.
 ✦ கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.
 ✦ 1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.
 - ஏ.எஸ். கோவிந்தராஜன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/பற்களில்-கறையா-இதைச்-செய்து-பாருங்கள்-3156577.html
3156576 வார இதழ்கள் மகளிர்மணி இளநீரில் இத்தனை நன்மைகளா...! DIN DIN Wednesday, May 22, 2019 11:16 AM +0530 இந்த கோடையினால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க மிகச்சிறந்த பானம் இளநீர். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையானது. மேலும், இளநீரில் எண்ணற்ற மருத்துவ குணகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்:
 ✦ இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
 ✦ பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.
 ✦ பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
 ✦ சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர்தான்.
 ✦ டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.
 ✦ இளநீர், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிபடுத்தும்.
 ✦ அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை உடனே பெறலாம்.
 ✦ சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும்.
 ✦ இளநீரை பருகினால் வயிறு நிறைந்து போகும். இதனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.
 ✦ இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதனாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
 ✦ இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
 ✦ இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.
 ✦ உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது.
 ✦ மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல்சூடு தணிக்கப்படுகிறது. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் சக்தி இளநீருக்கு உண்டு.
 ✦இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இளநீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இரவில் இனிமையான உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது.
 - என். சண்முகம்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/இளநீரில்-இத்தனை-நன்மைகளா-3156576.html
3156575 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ்... டிப்ஸ்... DIN DIN Wednesday, May 22, 2019 11:13 AM +0530 பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
 ✦ ஒரு ஜாரில் பூண்டைப் போட்டு வேகமாக குலுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
 ✦ மைக்ரோவேவ்வில் 20-30 விநாடிகள் வைத்தால் தோல் தனியாக வந்துவிடும்.
 ✦ பூண்டு மீது கத்தியை வைத்து உள்ளங்கையால் நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
 ✦ மைக்ரோ வேவ் இல்லை என்றால் பூண்டை வாணலியில் இட்டு லேசாக வறுக்கவும். தோல் தனியாக வந்து விடும்.
 ✦ பூண்டை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒவ்வொன்றாக எடுத்து தரையில் வைத்து நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
 வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
 ✦ லிக்விடு க்ளன்சர் அல்லது பினாயில் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து, வாஷ் பேஷனில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வர, உங்கள் வாஷ் பேஷன் பளபளக்கும்.
 ✦ கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. இருந்தாலும், பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.
 ✦ சமையல் செய்யும்போது கவனக் குறைவால் , செய்யும் சமையல் கருகிப்போய் கெட்ட வாடை வந்தால், ஒரு கிண்ணம் தண்ணீரில் 3 வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகளையும் அதோடு சில கிராம்புகளையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். அது கொதிக்க கொதிக்க அறையைச் சுற்றி வந்த சமையல் கருகிப் போன வாசனை காணாமல் போய்விடும்.
 ✦ கடல் உணவுகள் போன்ற அசைவம் சமைக்கும்போது ஏற்படும் வாசனையை போக்க ஈஸியான பொருள் பட்டை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் பட்டையை பொடித்துப் போட்டு கொதிக்க விடுங்கள். வாசனை ஓடிவிடும்.
 ✦ உப்பு வீட்டில் வருகிற துர்நாற்றங்களை போக்கும் அதிக ஆற்றல் கொண்டது. வீட்டில் எந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டுமோ, குறிப்பாக, பிசுபிசுவென்று இருக்கிற இடமாக இருந்தால் அந்த இடத்தில் 2 தேக்கரண்டி உப்பைக் கொட்டி, பின் குளிர்ந்த நீர் தெளித்து, நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிசுபிசுப்பும் போய்விடும். இந்த இடமும் பளிச் சென்று மாறிவிடும். அதுபோன்று வீட்டை தண்ணீரில் துடைத்தாலோ அல்லது கழுவினாலோ சிறிது உப்பை தண்ணீரில் கலந்தால், தரையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.
 - என். எஸ்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/டிப்ஸ்-டிப்ஸ்-3156575.html
3156573 வார இதழ்கள் மகளிர்மணி ரெடிமேட் இட்லி மாவு தேவைதானா?  DIN DIN Wednesday, May 22, 2019 11:10 AM +0530 ப. வண்டார்குழலி ராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
உடனடி தயாரிப்பு (Readymade) இட்லி மாவில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசையில் பெறப்படும் மணம், உண்பவருடைய மனம் ஏற்றுக்கொள்ளாத அளவிலும், சுவையற்றதாகவும் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இட்லி மாவின் புளிப்புத்தன்மை நேரம் செல்லச்செல்ல கூடிக்கொண்டே போகும். மணமும் நிறமும் மாறுவதால், இட்லி அழுத்தமாக அல்லது கொழகொழப்பாக இருப்பதுடன் தோசை சுவையின்றி, வெளுத்து அடைபோன்று காணப்படும். இந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணம், மாவு அடைக்கப்பட்ட பாக்கெட்டினுள் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் - டை - ஆக்ûஸடு வாயுக்களின் மாற்றமும், அதிக அழுத்தமான அல்லது கனம் அதிகமுள்ள நெகிழியும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. மேலும், மாவு அடைத்து வைக்கப்படும் நெகிழியின் அடர்த்தியை கணக்கில் எடுக்கும்போது, 0.012 மில்லி மைக்ரான் அடர்த்தியே உள்ள குறைவடர்த்தி நெகிழிப்பைகள் (Low Density Polythylene) ஏற்றதாகவும், உள்ளிருக்கும் வாயுக்களின் அளவாக கார்பன் டை ஆக்ûஸடு 0 % அளவிலும், ஆக்ஸிஜன் 7.5% முதல் 15% வரை அளவிலும் இருந்தால் ஓரளவிற்கு மாவு அதிக புளிப்பில்லாமல் இருக்கும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த முதலீட்டில், வருமானத்தை மட்டுமே மனதில் வைத்து அவசரகதியில் தயாரித்து, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மாவிற்கு இத்தகைய வரைமுறைகளை, மாவைத் தயாரிப்பவர்கள் மனதில் நிறுத்துவார்களா என்ற சந்தேக எண்ணமும் மேலோங்குகிறது. 
அதிலும், பொருட்களின் "லேபிலில்' அற்புதமாக பெயரிடப்பட்டு வருகிறது. தயாரிக்கும் தொழிற்சாலையும், தயாரிப்பவர்களும் சிரத்தையுடனும், மக்களின் ஆரோக்கியத்தின்மீது அக்கறையுடனும் தயாரிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
அதைவிடக் கூடுதல் கவலையளிக்கும் விஷயம், சிறுதானியம் படுத்தும்பாடு. வரகு, குதிரைவாலி, திணை, சாமை போன்ற தானியங்கள் நினைத்த நேரத்தில், அருகில் இருக்கும் கடைகளில் கிடைப்பதும், அதிலும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதும் சற்றே அரிதாக இருக்கும் நிலையில், எங்கு பார்த்தாலும் சிறுதானிய இட்லி தோசையும், பலதானிய இட்லி தோசையும் தாராளமாகக் கிடைப்பது எப்படிதானென்பது புரியவில்லை. 
மேலும், சிறுதானியங்களை குறைந்தபட்சம் ஐந்து முறைகளாவது அழுக்குநீங்குமாறு நன்றாகக் கழுவியபின்புதான் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தவேண்டும். 
இப்பொழுது இருக்கும் அவசரகதியில், அதிக அளவில் மாவு அரைத்து விற்பனை செய்பவர்களும், மிக்ஸாக செய்பவர்களும் இதுபோன்ற முறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதும், முளைகட்டிய தானியத்தில் தயாரிக்கப்பட்ட இட்லி தோசை மாவு என்று குறிப்பிடுவதும் கேள்வியே!. 
சில ஆண்டுகளுக்கு முன்னர், "நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி, கற்றல் மற்றும் பயிற்சி மையம்' நடத்திய பரிசோதனையில், ரெடிமேட் இட்லி மாவில் ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த வாயு, பொதுவாக மனிதக் கழிவுகளுடன் தொடர்புள்ள பொருட்களிலும், மனித குடலிலும் இருக்கிறது. மேலும் இந்த வாயு அடிக்கடி மனித உடலுக்குள் அதிக அளவு செல்வது சுவாச மண்டலத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் கூறப்படுகிறது. 
ஈரப்பதம் இல்லாத "உடனடி இட்லி மாவு' என்று கூறப்படும், (Instant idly mix) கூட ஓரளவிற்கு குறைவான கிருமிகளைக் கொண்டிருக்கும் என்றாலும், நீண்ட நாட்கள் கடைகளில் இருக்க வேண்டுமென்பதற்காக அவற்றிலும் வேதிப்பொருட்கள் கலக்கப்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்காக, சோடியம் பென்சோயேட், சோடியம் மெட்டாபைசல்பைட் போன்றவை தாராளமாகக் கலக்கப்படுகின்றன. 
மேலும், மாலையில் அரைத்து, ஈஸ்ட் கலந்துவிட்டு, வாங்குவோரிடம் காலையில் அரைத்து புளிக்க வைத்தது என்று தேவையற்ற பொய்யைக் கூறுவதையும் காண நேருகிறது. வெண்மையான நுரைப்போன்று மாவு பொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன் ஈஸ்ட் கலந்த மாவினை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த மாவில் செய்த இட்லி தோசையை சாப்பிடுபவர்களின் செரிமான மண்டலம் எளிதில் கெட்டுவிடும். வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும், தன்மையும் மாறிவிடுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், விரைவாக பணம் சம்பாதித்து விடவேண்டும் என்பதும், தற்போது வணிக ரீதியாக தயாரிக்கப்படும் இட்லி மாவு பாக்கெட்டுகளின் ஆயுட் காலத்தை அதிக நாட்களுக்கு நீடிக்க வைப்பதுமேயாகும். 
மாவு அரைக்கும் பழக்கம் இல்லத்தரசிகளிடம் எந்நிலையில் உள்ளது என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் ஏழு சதவிகிதத்தினரே தினமும் இட்லிக்கு மாவு அரைப்பதாகக் கூறியிருக்கின்றனர். ஏறக்குறைய 58.33 சதவிகிதத்தினர் வாரம் ஒருமுறை மட்டுமே அரைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து உபயோகப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களும், மாவே அரைக்காமல் வெளியில் வாங்கிக் கொள்வோரும், இட்லிக்கு மாவு அரைப்பதென்பது, அதிக நேரத்தையும், சில முன்செயல்பாடுகளையும், உடலுழைப்பையும் தம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளும் மிகவும் கடினமான வேலை என்றும் கருதுகின்றனர். இவர்களால்தான் இந்த உடனடி இட்லி மாவுப்புழக்கம் பரவலாகப் பெருகிவிட்டதென்றும் ஐயமின்றிக் கூறலாம். 
ஆனாலும், சற்றே நிம்மதியடையும் வகையில், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என்று பலர் இட்லி மாவை தாங்கள் வீட்டிற்குத் தயாரிப்பது போலவே அக்கறையுடனும், பக்குவமாகவும் அன்றாடம் அரைத்து புதிய மாவாக வீட்டின் வாயிலிலோ அல்லது சிறு சிறு கடைகளிலோ விற்பனை செய்கிறார்கள். அதிக பாக்டீரியாக்களையும், வேதிப்பொருட்களையும் சேர்த்து, பாக்கெட்டில் அடைத்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விற்கப்படும் மாவிற்குப் பதிலாக, இவர்கள் விற்பனை செய்யும் மாவினை தாராளமாக வாங்கலாம். அதிலும் தரத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அவரவர் கையில் உள்ளது. கூடுதலாக, தற்போது முடக்கற்றான், தூதுவளை, கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்தரைத்த மாவினையும் விற்பனை செய்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதே. 
அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக் கழுவி, காய வைத்து பக்குவமாக அரைத்துக்கொள்ளலாம். தேவையானபோது, நான்கு பங்கு அரிசி மாவிற்கு, ஒரு பங்கு உளுந்து மாவும், 1 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடியும் ஊற வைக்கவும். நன்றாக ஊறியபின், உப்பு சேர்த்து, கையால் அடித்துக் கரைத்து இரவு புளிக்கவிடலாம். அரிசியும் உளுந்தையும் ஊற வைத்துத்தான் அரைக்க முடியவில்லை என்று கூறும் பெண்கள், முடிந்த அளவு இந்த முறையையாவது பின்பற்றி, இட்லி, தோசை செய்து, உண்டு களித்து, குடும்பத்தினரின் நலனைக் காக்கலாம். பாக்கெட்டில் அடைத்த உணவுகள் இயற்கைவழி உணவாகாது; இயற்கையோடு ஒத்துப்போவதால் உடலுக்கு என்றுமே தீங்கு நேராது என்பதை ஒவ்வொருவரும் பின்பற்றுவதோடு, பிறருக்கும் எடுத்துரைப்பதை கடமையாக எண்ணவேண்டும்.
(நிறைவு)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/ரெடிமேட்-இட்லி-மாவு-தேவைதானா-3156573.html
3156571 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, May 22, 2019 11:05 AM +0530 பனீர் கச்சோரி

தேவையானவை: துருவிய பனீர், மைதா மாவு - தலா ஒரு கிண்ணம், சேமியா - கால் கிண்ணம், ஓமம் - அரை தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, வறுத்த எள், பொட்டுக் கடலை மாவு - தலா 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி, துருவிய இஞ்சி, நறுக்கிய கொத்துமல்லி - தலா ஒரு தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவு, உப்பு, சேமியாவுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் சிறிதளவு எண்ணெய்யை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும். அத்துடன் துருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்துமல்லி, உப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். பின்னர் மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து லேசாக குழி இருப்பது போன்று தட்டி , அதனுள் பனீர் கலவையை பைத்து மூடி வட்ட வடிவமாகத் தட்டி எண்ணெய்யில் சுட்டெடுக்கவும். சுவையான பனீர் கச்சோரி தயார்.

வாழைப்பூ ஃபுல்கா

தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ, பாசிப்பருப்பு - 5 தேக்கரண்டி, நறுக்கிய வாழைப்பூ - ஒரு கிண்ணம், சின்ன வெங்காயம் -10, பச்சைமிளகாய் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - 2 சிட்டிகை, உப்பு - தேவைகேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப் பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு கேஸ் அடுப்பில் ஒரு பர்னரில் தோசைக்கல் இட்டு சூடாக்கவும். மறு பர்னரில் தீயை சிம்மில் வைத்து அப்படியே எரிய விடவும். பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிய உருண்டையாக எடுத்து தேய்த்து தோசைக் கல்லில் இட்டு லேசாக சுட்ட பிறகு, நேரடியாக தீயில் சுடவும். சப்பாத்தி, பூரி போன்று புஸ்ùஸன்று எழும்பியதும் இறக்கி விடவும். சுவையான வாழைப் பூ ஃபுல்கா தயார். வாழைப் பூ சீக்கிரம் கறுத்துவிடும் என்பதால் மாவு பிசைந்ததும், சுட்டுவிடவும்.

கிர்ணிப்பழ மில்க் ஷேக்

தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தலா ஒரு தேக்கரண்டி, மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு மேசைக்கரண்டி.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும்.
கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். சுவையான கிர்ணிப்பழ மில்க் ஷேக் தயார். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பருகலாம்.

மசாலா வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை:
காய்கறிகள் - கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி, நூடுல்ஸ் - 2 பாக்கெட், வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது), தக்காளி - 1, கொத்துமல்லி -– சிறிது, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 3 அல்லது 4 பல், சோம்பு - கால் தேக்கரண்டி, பச்சை மிளகாய் -– 2, மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி, மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி, சீரகம் - கால் தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை: காய்களை கழுவி, நறுக்கிக் கொள்ளவும். காய்களுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு, நிறுத்தி விடவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நீளமாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை மிளகாய், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், தேவையான தண்ணீர் சேர்த்து நூடுல்ûஸ வேக விடவும். நூடுல்ஸ் வெந்ததும். வேக வைத்துள்ள காய்கறியை சேர்த்து கிளறவும். நன்கு கிளறியதும், மிளகுத்தூள் தூவி, எலுமிச்சைச்சாறு சில துளிகள் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையா மசாலா வெஜ் நூடுல்ஸ் தயார்.
- எஸ். சரோஜா

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/சமையல்-சமையல்-3156571.html
3156568 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்! 17 - பாரததேவி DIN DIN Wednesday, May 22, 2019 10:55 AM +0530 தொடைக்குமேல் தூக்கி கட்டிய வேட்டியும், தலைப்பாவுமாய் தங்கராசுவை பார்க்க, பார்க்க சகிக்கவில்லை கௌசிகாவிற்கு. பேண்ட், சட்டை, டை என்று இருக்க வேண்டாம். ஆனா காலையிலேயே குளித்து வெள்ளை வேட்டி சட்டையோட இருந்தா என்னவாம்? என்று எரிச்சல்பட்டவள்
 "என்னங்க காலையில குளிச்சிட்டு நல்ல டிரெஸ் பண்ணியிருந்தா பார்க்க கொஞ்சம் நல்லாயிருக்குமில்ல'' என்றாள் எரிச்சலோடு.
 காலை நேரத்திலேயே ஒரு ஈரம் தழுவிய பூவாக வந்து நின்ற கௌசிகாவை இமை சிமிட்டாமல் பார்த்தான் தங்கராசு. தனக்கு இப்படி ஒரு அழகானப் பொண்டாட்டி கிடைத்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோதே கௌசிகா, கடுப்புடன். "இப்படி அழுக்கு வேட்டியும், துண்டுமா இருந்தா நல்லாவா இருக்கு குளிக்கலாமில்ல?'' என்றாள்.
 "நாள் முழுக்க வெய்யிலில் கிடந்து புழுதியில உருள்றவனுக்கு காலை குளிப்பு என்ன வேண்டிக்கிடக்கு கௌசி'' என்று கேட்டவன் மீது எரிந்து விழுந்தாள்.
 "இப்பவே நீங்க காட்டுக்குப் போனா பொழுது சாயத்தானே வீட்டுக்கு வருவீங்க. அப்பநான் ஒண்டியா நாள் முழுக்க வீட்டுல இருக்கணுமாக்கும்''.
 "அதுக்குத்தேன் ரேடியோ கொண்டு வந்திருக்கயே, அதுல பாட்டு கேட்டுக்கிட்டு இரு நான் வேண்ணா உனக்காவ மத்தியானம் வீட்டுக்கு சாப்பிட வாரேன்'' என்றான்.
 "சரி மத்தியானம் சாப்பிட வந்துட்டு பிறகு காட்டுக்குப் போகக் கூடாது'' என்று சொன்ன கௌசிகா மீது அவனுக்கு கோபம்தான் வந்தது. இந்நேரத்துக்கே இவளுடன் வழக்காடல் வேண்டாமென்று மௌனமாக தன் வேலையிலேயே ஈடுபட்டிருந்தான்.
 கௌசிகாவிற்கு கோபம் கொதித்தது. பட்டிக்காட்டுக்காரகளுக்கு ரசனையே இருக்காது என்று தன் தோழிகள் சொன்னது எவ்வளவு சரியாப்போச்சு.
 "காலையிலேயே அலங்காரத்தோடு போயி அவர்கிட்ட நிக்கிறேன் என்ன, ஏதுன்னு என் பக்கத்தில ஓடிவரவேண்டாமா? அவர் வேலையைத்தானே ரொம்ப கவனமாப் பாத்துக்கிட்டு இருக்கார்' என்று நினைத்தவளுக்கு மனம் குமுறியது.
 "உங்க பாட்டுக்கு உங்க வேலய செய்ங்க ஆனா நான் இப்ப சாப்பிடனும் என்ன செய்றது?'' என்று கேட்க..
 "தங்கராசு ஏன் கௌசி இப்படி கேட்க அம்மாதேன் வெள்ளனத்திலேயே எந்திரிச்சி சோறு காய்ச்சி வெஞ்ஞனமெல்லாம் வச்சிட்டு போயிட்டாகளே, நீ போயி சாப்பிட வேண்டியது தானே'' என்றான் அப்பாவியாக
 "காலையிலேயே சோற யாரு சாப்பிடுவா எனக்கு டிபன்தான் வேணும்''
 "டிபனா..?''
 "ஆமா தோசை, இட்லி, பூரின்னு காலையில டிபன் சாப்பிட்டுத்தான் பழக்கம்'' என்றாள் கௌசிகா.
 "தங்கராசுவிற்கு எரிச்சலாயிருந்தது. காலையில இட்லிக்கும், தோசைக்கும் எங்கப் போவது'
 "என்ன பேசாம இருக்கீங்க? எனக்கு எப்படியும் டிபன் வேணும் இல்லாட்டி, நான் இப்படியே சாப்பிடாம பட்டினியே கிடப்பேன்'' என்றதும்,
 "தங்கராசு தனக்குள்ளேயே ஆகா இவ அழகுல மயங்குறப்பவெல்லாம் திண்டாடிப் போறயே தங்கராசு' என்று சொல்லிக் கொண்டே தன் வேலையைப் போட்டுவிட்டு "இந்தாப் பாரு கௌசி'' என்று அவள் அருகில் வந்தபோது,
 "அவள் தொடாதீங்க'' என்று விலகி நின்றாள்.
 அவனுக்கு மனதுக்குள் சுருக்கென்றது. ஆனாலும் தன்னையடக்கிக் கொண்டு ""கௌசி'' என்றான் காதலோடு
 "இதுல ஒண்ணும் குறைச்சலில்ல - சொல்லுங்க''
 "நம்ம வீட்டுல எப்பவும் டிபன் செய்றதில்ல கொளசி'' என்று அவன் சொல்லி முடிக்குமுன்பே,
 "அப்ப ஓட்டல்ல வாங்கியாந்து கொடுங்க'' என்றாள்.
 தங்கராசு பெருமூச்சு விட்டான். அந்த ஊரில் இட்லி கடையெதுவும் கிடையாது. இட்லி வாங்க வேண்டுமென்றால் டவுனுக்குத்தான் போகனும் அவ்வளவுதூரம் போக முடியுமா?
 "என்ன நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் நீங்க பேசாம இருக்கீங்க. அப்ப நான் இன்னைக்குப் பட்டினிதானா?''
 தங்கராசு இன்னும் கொஞ்சம் அவளை நெருங்க அவள் முகம் சுருங்கி விலகினாள்.
 "இதோ பாரு கௌசி, இப்ப நானு சொல்லப் போறதை நீ புரிஞ்சிக்கணும்.''
 " சரி சொல்லுங்க கேட்டுத் தொலைக்கிறேன்''
 ""கிராமத்திலே யாரும் நீ சொல்ற டிபனை செய்ய மாட்டாங்க, அது
 தீபாவளி, பொங்கல்ன்னு அப்பத்தேன் போடுவாங்க, விவசாயிக வீட்டுல காலையில இட்லி தோசன்னு சுட்டுக்கிட்டு இருந்தா காட்டு வேலைக்குப் போவமுடியுமா?''
 அவன் சொன்னதைக் கேட்டு கௌசிகா வெடுவெடுத்தாள். "இப்ப என்ன சொல்ல வரீங்க''
 "அதனால நீ வீட்டுல இருக்க சாப்பாட சாப்பிடு''
 "அப்படியெல்லாம் என்னால சாப்பிட முடியாது. இப்ப நீங்க எனக்கு டிபன் வாங்கிட்டு வாரீங்களா, இல்லையா?'' என்றாள் அதட்டலுடன்...
 "உனக்கு டிபன் வாங்குறதுக்காக என்னால் டவுனு போக முடியாது. இன்னைக்கு ஒரு நாள் எனக்காக.. சோறு சாப்பிடு, நாளைக்கு நீயே மாவாட்டி இட்லி சுட்டு வையி எனக்குங் கூட இட்லி சாப்பிடணுமின்னு ஆசை யா இருக்கு என்றான்''.
 "எனக்கு மாவு ஆட்டவும் தெரியாது இட்லி சுடவும் தெரியாது'' என்றவள் விறு, விறுவென்று தன் அறைக்குள் போய் கதவை அறைந்து சாத்தினாள்.
 தங்கராசுவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை . ""கௌசி, கௌசிகா'' என்று அவள் பின்னாலேயே போனான். ஆனால் கதவை கௌசிகா படார் என்று அறைந்து சாத்தியதில் சற்று நேரம் மௌனமாக நின்றான். உள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்டது.
 பிஞ்சையில் இன்று கருதறுப்பு சங்கரி காலைலேயே தங்கராசுவிடம் "எய்யா இன்னைக்கு சீக்கிரமா பிஞ்சைக்கு வந்து சேரு, சோளக்கருது கனமா இருக்கும் எவளும் சுமக்கமாட்டா நீ தேன் வந்து கருத களத்திலச் சேர்க்கணும்' என்று சொல்லிவிட்டு போனாள். இப்போது எப்படியும் இரண்டு சாட்டுக் கூடை வரை கருதைப் பெறக்கியிருப்பார்கள் என்ற நினைவு அவனை முன்னுக்குத்தள்ள, பொண்டாட்டியின் நினைவு பின்னுக்குத்தள்ள அவனுக்கு, நெஞ்சும் சேர்ந்து வலித்தது. கடைசியாக தானும் சாப்பிடாமல் பிஞ்சைக்கு சென்றான்.
 ஆட்கள் சிரிப்பும், பேச்சுமாய் கருதை பெறக்கிக் கொண்டிருந்தார்கள். சங்கரி ஆட்களை விரட்டிக் கொண்டிருக்க கமலம் எல்லோரிடமும் கருதை தன் பெட்டியில் வாங்கி, வாங்கி கூடையில் சேர்த்தாள். பாண்டி ஒரு பக்கம் தரிசு நிலத்தை உழுது கொண்டிருந்தான்.
 தங்கராசுவிற்கு உடலில் உள்ள பலத்தையெல்லாம் கௌசிகா எடுத்துக் கொண்டது போன்று தோன்றியது. அவன் உள்ளத்தையும் தாண்டி அவன் உடம்பு முழுக்க கௌசிகாவின் நினைவுதான். அவனால் வேலை செய்ய முடியவில்லை. மூச்சு திணறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எங்கேயாவது தனிமையில் நின்று கொண்டு ஓ... வென்று அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அவன் சும்மாட்டை தலையில் கூட்டி கருதை சுமக்க ஆரம்பித்தான் கரிச்சான் குருவிகளும், நாட வந்தான் குருவிகளும் கருதுக்கு படை எடுத்துக் கொண்டிருந்தன.
 மத்தியானக் கஞ்சிக்கு எல்லோரும் மர நிழலில் ஒதுங்கினார்கள். தங்கராசு சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். காலையில் சாப்பிடாமல் வந்ததால் வயிறு பசித்தது ஆனால் அதைவிட இந்தப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்ற நினைவுதான் அவனை தேள் கொடுக்காக கொட்டிக் கொண்டிருந்தது.
 எல்லாருக்கும் பின்னால் வந்த மகனைப் பார்த்த சங்கரிக்கு குபீரென்றது. காலையிலிருந்தே அவன் சாப்பிடவில்லை என்று அவன் ஒட்டிக்கிடந்த வயிறைப் பார்த்ததுமே அவள் தெரிந்து கொண்டாள். ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டவள் ஆமணக்கு இலையில் கத்தரிக்காய் வெஞ்ஞனத்தை வைத்து சோளக் கஞ்சியை ஈயச் சொம்பில் ஊற்றி கொடுக்க, வழக்கம்போல் அம்மாவிடமிருந்து ஆவலாய் கஞ்சியை வாங்கிக் குடிக்கவில்லை தங்கராசு.
 வேண்டா வெறுப்பாகத்தான் கஞ்சியை குடித்தான்.
 "என்னப்பா, தங்கராசு கல்யாண முடிச்சதிலருந்து உன் பொண்டாட்டிக் கிட்டதேன் பேசணும் மத்தவங்க கூட பேசக் கூடாதுன்னு நெனச்சிட்டயா?'' என்று கேட்டவாறே வந்து உட்கார்ந்தாள் ராக்கம்மா.
 தங்கராசுவிற்கு கூச்சமாயிருந்தது. "அதெல்லாம் ஒன்னுமில்ல பெரியம்மா, நானு எப்பவும் போலதேன் இருக்கேன்'' என்றான்.
 ""பொய்யெல்லாம் சொல்லாதய்யா, எப்பவும் காத்துக்கு பன ஓல சல சலத்தாப்பல பேசிக்கிட்டுருப்ப இப்ப என்ன பேச்சையே காணோம். அது போதாதுன்னு மூஞ்சிய வேற உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கே'' என்று கேட்டதும்.
 தங்கராசுவுக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது.
 "ஏம்மா நானு கூடய கொண்டு போயி கருது போட தோதா முருச வாய்க்கால்ல வைக்கேன்'' என்று சொல்லிக் கொண்டே எழுந்து நாலெட்டு வைக்க ,
 "எய்யா தங்கராசு'' என்று கூப்பிட்டுக் கொண்டே சங்கரி அவன் பின்னால் சென்றாள்.
 மகன் அருகில் போன சங்கரி, "என்னய்யா உம்மொவம் குன்னி, கொராவிக்கிடக்கே. மறுபடியும் உன் பொண்டாட்டி எதுவும் சொன்னாளா? உங்களுக்குள்ள எதுவும் பிரச்சன வந்துச்சா?'' என்றாள் வாஞ்சையோடு.
 - தொடரும்...
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/என்-பிருந்தாவனம்-17---பாரததேவி-3156568.html
3156566 வார இதழ்கள் மகளிர்மணி மன இறுக்கத்தை குறைக்க உதவும் கலை! DIN DIN Wednesday, May 22, 2019 10:45 AM +0530 பரதம், குச்சுபுடி நடனக் கலைஞராக மட்டுமின்றி எழுத்தாளர், நடிகை, சமூக ஆர்வலர், நாடக ஆசிரியர், பெண்ணியவாதி, முன்னாள் அரசியல்வாதி என பல துறைகளில் பிரபலமான, "பத்மபூஷண்' விருது பெற்ற மல்லிகா சாராபாய், மன இறுக்கம் ( ஆட்டிசம்), மன நலிவு பாதிப்பு( டவுன் சின்ட்ரம்) போன்றவைகளால் 
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டியம் ஒரு சிறந்த சிகிச்சையாக விளங்குவதை மக்கள் தற்போது ஏற்றுக் கொள்வதை பெருமையாக கருதுகிறார். இது குறித்த 
அவரது அனுபவங்களை கேட்போம்:
'பல ஆண்டுகளுக்கு முன் ஆட்டிசம் குழந்தைகள், டவுன் சின்ட்ரம் பாதிப்புடையவர்கள் நிறைந்த அரங்கில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. சோகத்தை உள்ளுக்குள்ளும். மகிழ்ச்சியை வெளியிலும் வெளிபடுத்தும் வகையில் நாட்டியமாடியபோது, அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதை கண்டேன். தொடர்ந்து இது குறித்து ஆமதாபாத்தில் உள்ள எனது அகாதெமியில் ஆய்வு செய்தபோது, மன இறுக்கம் மற்றும் மன நலிவு பாதிப்பு உடையவர்கள், நாட்டியத்தை ரசிக்கும்போது அவர்களிடம் மாறுதல் ஏற்படுவது தெரிந்தது. இந்த ஆய்வை இப்போது மக்களும் ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.
என்னை சந்திப்பவர்களில் பலர், நீங்கள் ஏன் உங்கள் தந்தை விக்ரம் சாராபாய் போல் விஞ்ஞானி ஆகாமல், தாய் மிருணாளினி சாராபாய் போன்று நடன கலைஞராக ஆனீர்கள் என்று கேட்பதுண்டு, எங்கள் குடும்பம் சைவம் என்பதால் கல்லூரியில் படிக்கும்போது அறிவியல் வகுப்பில் தவளையை வெட்டி பரிசோதனை செய்ய நான் மறுத்ததுண்டு.
மேலும் எங்களுக்கு அகிம்சையில் அதிக நம்பிக்கை உண்டு. என் தந்தையை பொருத்தவரை நான் அவரை விஞ்ஞானியாக மட்டும் கருதவில்லை. இந்த நாட்டை நிர்ணயித்ததில் அவருக்கும் பங்குண்டு. இந்தியர்கள் தங்கள் அறிவாற்றலை நிரூபிக்க அறிவியலை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டுமென அவர் நினைத்தார். என்னுடைய தாய் நாட்டியத்தை நேசித்தவர், என்னுடைய சகோதரன் சுற்றுச் சூழலை நேசிப்பவர். அதேபோன்று நானும் ஏதாவது ஒரு வகையில் இந்த தேசத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன். மொத்தத்தில் எங்களுக்குள் வெவ்வேறு எண்ணங்கள் இருந்தாலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நானும், என் சகோதரனும் சேவை செய்து வருகிறோம்.
ஒரே நேரத்தில் நடனம், நாடகம், எழுத்து என பல துறைகளில் உங்களால் எப்படி செயல்பட முடிகிறது என்று சிலர் கேட்பதுண்டு. என்னைப் பொருத்தவரை மக்களிடையே சுலபமாக சென்றடைவது கலை மட்டுமே. ஆனால் ஒவ்வொரு கலையும் ஒன்றுக்கொன்று வேறு படுவதுண்டு, சினிமாவை பொருத்தவரை நாடகத்திலிருந்து முற்றிலும் மாறுபடும். காமிரா முன் நடிக்கும்போது இயக்குநர் எதிர்பார்ப்பின்படி நடிப்பை வெளிப்படுத்தினால்போதும்.
மேடையில் நடிக்கும் போதோ, நடனமாடும்போதோ மேடை ஒளி - ஒலி அமைப்புகளுக்கு ஏற்ப நடிப்பையோ. முக பாவங்களையோ உங்கள் விருப்பத்திற்கேற்ப கொண்டு வரலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றமும் ஏற்படலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னுடைய சிந்தனைகளை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்தேன். அதன் வெளிப்பாடுதான் நான் எழுதிய "சக்தி - தி பவர் ஆப் உமன்' என்ற புத்தகமாகும்.
மேடையில் மட்டுமின்றி பல கோயில்களுக்குச் சென்று மேடை, ஒலி ஒளி அமைப்புகள் ஏதுமின்றி நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினேன். அதன்படியே பல கோயில்களில் நாட்டியமாடியதோடு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில், ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு நினைவு நிகழ்ச்சியின்போது, சுமார் 5 ஆயிரம் மக்கள் முன்பு நடனமாடியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும். இதன் மூலம் எனக்குள் இருந்த திறமையை சம்பிரதாயப்படி கடவுள் சந்நிதியில் சமர்பித்ததாகவே கருதுகிறேன்.
இன்று எனக்கு 64 வயதாகிறது. என் வயதுக்கேற்ற நடனங்களைத்தான் நான் ஆடுகிறேன். சில நடன கலைஞர்கள் அவர்கள் வயதுக்கு மீறி நடனமாட முயற்சிக்கின்றனர். உடல் ஒத்துழைக்கும் வரை நடனமாடலாம் என்பது என் கருத்து. வயதாகும்போது இளவயதில் ஆடியது போல் மேடையில் நடனமாட முயற்சிக்கக் கூடாது. பார்வையாளர்கள் நகைப்புக்கு இடமாகலாம். நம்முடைய திறமையை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை வரையறுத்துக் கொள்வது அவசியம். இதன்மூலம் பார்வையாளர்கள் பாராட்டை பெற முடியும். ஆனால் இன்று எத்தனை நடன கலைஞர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது'' என்கிறார் மல்லிகா சாராபாய்.
- பூர்ணிமா
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/மன-இறுக்கத்தை-குறைக்க-உதவும்-கலை-3156566.html
3156564 வார இதழ்கள் மகளிர்மணி 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்தவர்கள் DIN DIN Wednesday, May 22, 2019 10:42 AM +0530 "ஹம் சாத் சாத் ஹைன்' மற்றும் "து சோர் மெய்ன் சிபாஷி' ஆகிய படங்களில் சயீப் அலிகானுடன் ஜோடியாக நடித்த தபு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, "ஜவானி ஜானே மன்' என்ற படத்தில் இணைந்துள்ளார். டீன் ஏஜ் மகளுக்கு 40 வயது தந்தையாக சயீப் அலிகானும், அவரது மனைவியாக தபுவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் லண்டனில் தொடங்குகிறது. பூஜாபேடியின் மகள் அலையா இவர்களின் டீன்ஏஜ் மகளாக நடிக்கிறார்.
 - அருண்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/20-ஆண்டுகளுக்கு-பிறகு-ஜோடி-சேர்ந்தவர்கள்-3156564.html
3156562 வார இதழ்கள் மகளிர்மணி கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டவர் DIN DIN Wednesday, May 22, 2019 10:41 AM +0530 "ராத் அகேலி ஹை' என்ற படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஒப்பந்தம் செய்ய சென்ற இயக்குநர் ஹனி ட்ரெஹன் அவரிடம் கதையை கூறுவதற்கு முன்பே, "எப்போது படப்பிடிப்பை துவங்குகிறீர்கள்?'' என்று ராதிகா ஆப்தே கேட்டதோடு, "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால் கதையை கேட்க வேண்டிய அவசியமில்லை'' என்று கூறி நடிக்க ஒப்புக் கொண்டாராம். இவருடன் உத்திரப் பிரதேச காவல்துறை அதிகாரியாக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/கதையை-கேட்காமலேயே-நடிக்க-ஒப்புக்-கொண்டவர்-3156562.html
3156561 வார இதழ்கள் மகளிர்மணி பாட புத்தகத்தில் இடம் பெற்றவர்! DIN DIN Wednesday, May 22, 2019 10:39 AM +0530 விபத்தொன்றில் வலது காலை இழந்து, செயற்கை காலுடன் நாட்டியமாடி சாதனை படைத்த சுதா சந்திரனின் வாழ்க்கை அவரே நடித்து "மயூரி' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானதோடு, அவரது வாழ்க்கை குஜராத், மகாராஷ்ட்ரா, தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பள்ளி பாடப் புத்தகத்திலும் பாடமாக இடம் பெற்றது. பின்னர் பல மொழிகளில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் "யே வைர மொகபதீன்' என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். "ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த எனக்கு இந்த மாறுதலான பாத்திரம் பிடித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா என்பது தெரியாது. தொடர்ந்தாற்போல் இதே போன்ற பாத்திரம் கிடைத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை'' என்கிறார் சுதா சந்திரன்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/பாட-புத்தகத்தில்-இடம்-பெற்றவர்-3156561.html
3156560 வார இதழ்கள் மகளிர்மணி சமூக ஆர்வலரான நடிகை! DIN DIN Wednesday, May 22, 2019 10:38 AM +0530 தமிழில் முதன்முறையாக "உன் காதல் அறிந்தால்' என்ற படத்தில் நடிக்கும் கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, அண்மையில் ராய்ச்சூரில் காணாமற்போன என்ஜினீயரிங் மாணவி மது , பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். "நம்முடைய வாழ்க்கையில் சமூக அக்கறையும் தேவை'' என்று கூறும் ஹர்ஷிகா, நடிப்பதோடு சமூக பிரச்னைகள் குறித்தும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பே மற்றொரு தமிழ் படத்திலும் நடிக்க ஹர்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/சமூக-ஆர்வலரான-நடிகை-3156560.html
3156559 வார இதழ்கள் மகளிர்மணி அமெரிக்காவில் தமிழ் கொண்டாட்டம் Wednesday, May 22, 2019 10:29 AM +0530 அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவின் தலைநகரான சாக்ரமென்டோவில் வாழும் தமிழர்களின் தமிழ் மன்றம் சார்பில் சமீபத்தில் அங்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து அம்மன்றத்தின் உறுப்பினரான சந்தியா நவீன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 'நான் கடந்த 2009 -இல் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்று செட்டில் ஆனேன். நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களைப் போன்று தமிழர்கள் ஏராளாமானோர் வசித்து வருகின்றனர். இதனால் கடந்த 1999- ஆம் ஆண்டு இங்கு தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், மக்களின் ஆதரவுடன் இம்மன்றம் படிப்படியாக வளர்ந்து இன்று அந்நகரத்தில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போது இதன் தலைமைப் பொறுப்பை சிவராமகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரன் கவனித்துக் கொள்கின்றனர்.
 தற்போது இந்நகரத்தில் சுமார் 100 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதனால், நமது சிறந்த தமிழ் கலாசாரத்தை இங்கு வாழும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதும், பாதுகாப்பதுமே இந்த மன்றத்தின் நோக்கம்.

அதனடிப்படையில் திருக்குறள் போட்டி, பொங்கல் விழா, குளிர்கால கொண்டாட்டம், இசை நிகழ்ச்சி, தமிழ் புத்தாண்டுவிழா என பல நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
 அந்த வகையில், இந்த ஆண்டு மே 4 - 2019 அன்று தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் பழம்பெரும் தமிழ் புலவர்களை நினைவுபடுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார் என்று வேடமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
 மேலும், பரதநாட்டியம், கோலாட்டம் , சிறுவர்கள் பட்டிமன்றம், பாரதியார் பாடல்கள், வில்லுப்பாட்டு, மயிலாட்டம் , ஒயிலாட்டம் , கும்மி, சிலம்பாட்டம், காவடியாட்டம் என சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும், ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். நம் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் வினா விடை போட்டியும் நடைபெற்றது. நெல்லை கண்ணனின் "கேள்வி நேரம்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது .
 தமிழ்புத்தாண்டு விழாவில் பங்கு பெற்றவர்கள், இங்கு இயங்கிவரும் அனைத்து தமிழ் பள்ளிகளின் மாணவர், மாணவியர், ஆசிரியர் ஆவர்.
 தமிழ் குடும்பங்கள் மட்டுமின்றி பிற மொழி பேசுபவர்களும் மிகவும் ஆர்வமுடன் எங்களுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறக்க செய்தனர்'' என்றார்.
 - ஸ்ரீதேவி
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/அமெரிக்காவில்-தமிழ்-கொண்டாட்டம்-3156559.html
3152147 வார இதழ்கள் மகளிர்மணி முதுமையிலும் இளமை! DIN DIN Wednesday, May 15, 2019 10:45 AM +0530 இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்...மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
சமீபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் சிலர் "பணி ஓய்வு' பெற்றதைக் கேள்விப்பட்டு, "இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்று இதே கேள்வியைத் தனித்தனியாக அவர்களிடம் கேட்டபோது, "அதுதான் பணி ஓய்வு பெற்றாகிவிட்டதே... வேறு என்ன வேலை இருக்கிறது? நேரத்திற்கு சாப்பிடுவது, தூங்குவது, டி.வி. பார்ப்பது' என்பதுதான் அனைவரிடமிருந்தும் வந்த பதில். 
அவர்கள் அனைவருமே "பணி ஓய்வு' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பணி ஓய்வு என்பது நாம் செய்துவந்த அலுவலகப் பணியிலிருந்துதானே தவிர, நம் உடலுக்கோ, மனதுக்கோ அல்ல. முதுமையில் பிறருக்குப் பாரமாக இருக்கக் கூடாது, உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ளும் தருணம் இது என்பதை அவர்கள் உணரவில்லை. 
வேலைக்குச் சென்றவர்கள் திடீரென்று பணி ஓய்வு பெறும்போது ஒருமாத காலத்துக்குத் தடுமாறுவார்கள். முழு நேரமும் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது என்கிற கேள்வி எழும். முதுமையில் "தன் கையே தனக்கு உதவி' என்று வாழக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஓர் அற்புதப் பதிவு சமீபத்தில் எழுத்தாளர் சிவசங்கரியிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது.
"நரைகூடிக் கிழப்பருவம் எய்தினாலும்' அது உடலுக்குத்தானே தவிர, மனதுக்கு அல்ல. மனம் என்றைக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்க வேண்டும். பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், வீட்டிலும், வெளியிலும் நம்மால் பிறருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும், அதற்கான வழிமுறைகளைத் தேடிப்பிடித்து இணைய வேண்டும்.
எழுத்தாளர் சிவசங்கரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முதுமையை எப்படிக் கையாள வேண்டும், ஒருபடி மேலே போய் எப்படி முதுமையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை (காணொலி காட்சியாக) கற்றுக்கொடுக்கிறது. 
இதற்கு "மேரிக்கோ' எனும் அமெரிக்கப் பெண்மணிதான் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரைப் பார்த்து வியந்துபோன எழுத்தாளர் சிவசங்கரி, முதுமைப் பருவத்தை நாம் எப்படி எதிர்நோக்க வேண்டும்; அதை எப்படி ரசிக்க வேண்டும் என்பதைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு இங்கு மிகவும் அவசியமாகிறது.
அமெரிக்க அரசாங்கம் 1986-ஆம் ஆண்டு எழுத்தாளர் சிவசங்கரிக்கு எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது. அதை ஏற்று அவர் அங்கு சென்று மூன்று மாதங்கள் தங்கியிருக்கிறார். 
விருந்தினரான அவர் விரும்பிய இடங்களைப் பார்க்கலாம் என்றும் அமெரிக்க அரசு கூற, அவரும், "ஃபொனிக்ஸ்' (Phoenix) என்ற பாலைவனம் நிறைந்த ஒரு மாநிலத்திற்குப் போய் "செவ்விந்தியர்கள்' என்று சொல்லக்கூடிய "ரெட் இன்டியன்ஸ்'சைப் பார்க்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஏற்பாடு செய்த அமெரிக்க அரசு, "உங்களை உள்ளூர் ஆசாமி ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். மூன்று நாள்களும் உங்களுக்கு வேண்டியதை அவரே கவனிப்பார்' என்று கூறியிருக்கிறது. 
சிவசங்கரி மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், துள்ளலோடும் போய் விமான நிலையத்தில் இறங்கியபோது, உடம்பில் சுருக்கம் விழுந்த 82 வயதான பெண்மணி வந்து "ஹலோ சிவா, நான்தான் மேரிக்கோ. நான்தான் மூன்று நாளும் உன்னை கவனித்துக்கொள்ளப் போகிறேன்' என்று சொன்னவுடன் சிவசங்கரி பலூனில் ஊசி குத்தியதைப் போல (அப்படித்தான் அவர் கூறியுள்ளார்) ஆகிவிட்டார். எங்கெல்லாமோ சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர், இந்த முதிய பெண்மணியை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருக்கிறார். 
ஆனால், அந்த மூன்று நாள்களும் 82 வயதான அந்த மேரிக்கோ 18 வயது பெண்ணின் சுறுசுறுப்புடன் கார் ஓட்டிக்கொண்டு, அவரை ஒரு நாளைக்கு 15 இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அத்தனை இடங்களையும் சுற்றிக்காட்டியிருக்கிறார்.
இதைப் பார்த்து வியந்து போன சிவசங்கரி, "பாரதி சொல்வார் இல்லையா, "விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்' என்று.... அதேபோல அந்த அம்மாவைப் பார்த்தபோது அவர் மனதுக்கு ஏற்றமாதிரி அவர் உடலும் இருந்தது கண்டு வியந்தேன். கிழவியா இருக்கலாம், தோல் சுருங்கிப் போயிருக்கலாம், தினமும் எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய் காண்பித்துவிட்டு, இரவு 7 மணிக்கு என்னை அறையில் விட்டுவிட்டு, "சிவா... எனக்குத் தெரிந்த குழந்தைக்கு இன்றைக்கு பர்த் டே. நான் போய் 30, 40 பேருக்குக் கேக் செய்யணும்' என்பார். அடுத்த நாள், "அருகில் இருக்கும் ஆர்ஃபனேஜ் ஹோம் சென்று கணக்கு எழுதணும்' என்பார். மூன்றாவது நாள் முடிவதற்குள் மேரிக்கோவை கையெடுத்துக் கும்பிடலாம் போல ஒரு பரவசம் என்னுள் எழுந்தது' என்கிறார் சிவசங்கரி.
சிவசங்கரியை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மேரிக்கோ அம்மா சொல்லியிருக்கிறார், "சிவா... நீ வந்ததுனால எனக்குள்ள ஒரு விழிப்புணர்வு வந்தது' என்று.
அதற்கு சிவசங்கரி, "என்னம்மா...' என்று கேட்க, "சப்பாத்திக் கள்ளிகள் உள்ள பெரிய பெரிய வனங்கள் - பொட்டானிகல் கார்டர்ன்ஸ் போனபோது நீ பல கேள்விகள் கேட்டாய். அதற்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதனால் எனக்கு அறிவு போதாது என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்த வாரத்திலிருந்து இங்கிருக்கும் யுனிவர்சிட்டியில் சேர்ந்து பார்ட் டைம் கோர்ஸ் போகப்போறேன்' என்றாராம் அவர்.
"இந்த 82 வயது அம்மாவை "கிழவி' என்று இனி எப்படிச் சொல்ல முடியும்? இதுதாங்க மனது. மனது இளமையாக இருப்பது ரொம்ப முக்கியம். அந்த அம்மா முதுமைக்குத் தன்னை ரொம்ப அழகாகத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் அந்த மேரிக்கோவிடம், "மேரிக்கோ நான் 80 வயது வரைக்கும் உயிரோடு இருந்தால் உங்களைப் போன்று, உங்கள் மன முதிர்ச்சியோடு, உங்கள் மன சிந்தனைகளோடு நான் இருக்கணும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்'' என்று சிவசங்கரி பதிவு செய்கிறார். 
"நண்பர்களே.... முதுமை என்பது ரசிக்கக்கூடிய ஒன்று. நாம் கற்க வேண்டியது, நம் கடைசி மூச்சு நிற்கும் வரைக்கும் நிற்கக் கூடாது. உடம்பாலும், பொருளாதார ரீதியாகவும், மனதாலும் நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்... மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன், எனக்கே நான் பாரமாக இருக்கமாட்டேன்.. என் உறவினர்கள் என்னை நினைத்துப் பரவசப்படும்படி இருப்பேன் என்கிற முடிவோடு அதை எழுதி வைத்துக்கொண்டு, இரவு தூங்கப்போகும் முன்பு படித்து விட்டுத் தூங்குங்கள்' - இதுதான் எழுத்தாளர் சிவசங்கரி முதுமையை ரசிக்கச் சொன்ன பதிவு. 
- இடைமருதூர் கி.மஞ்சுளா


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/முதுமையிலும்-இளமை-3152147.html
3152146 வார இதழ்கள் மகளிர்மணி கல்வியோடு, கலைகளையும் போதிக்கும் அரசுப் பள்ளி! DIN DIN Wednesday, May 15, 2019 10:43 AM +0530 கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே. கல்வியின் அவசியத்தை இந்த வரிகளை விடவும் அழுத்தமாக வேறெந்த சொற்களாலும் கூறி விட முடியாது. இதனால்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கடன் பட்டாவது படிப்புக்குச் செலவிட பெற்றோர் ஒருபோதும் தயங்குவதில்லை. இப்படியான சூழலில், தரமான கல்வி, தனித்துவம், கணினி மயம், இலவச திறமை வளர்ப்புப் பயிற்சி என பல்வேறு சிறப்பம்சங்களோடு, தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டும், அரசுப் பள்ளிகளுக்கு முன் மாதிரியாகவும் மார்தட்டி நிற்கிறது மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.
 கோவை, பீளமேடு அவிநாசி சாலையில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மசக்காளிபாளையம். 1956- ஆம் ஆண்டு துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி,1966 - இல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
 தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு மற்ற அரசுப் பள்ளிகளைப் போலவே இந்தப் பள்ளிக்கும் மாணவர் சேர்க்கை பாதியாகக் குறைந்தது. இப்படியான சூழலில்தான் 2017-ஆம் ஆண்டு பள்ளியின் தலைமை ஆசிரியையாக க.மைதிலி பொறுப்பேற்றார். பணிக்கு வந்தோம், சம்பளம் வாங்கினோம், ஊதிய உயர்வுக்கு காத்திருப்போம் என்ற சராசரி ஆசிரியையாக இல்லாமல், தான் பணியாற்றும் பள்ளியை மேம்படுத்த நம்மால் இயன்றதைச் செய்வோம் என்ற எண்ணத்தை சக ஆசிரியர்கள் மனதில் விதைத்தார் இவர்.
 முதல் முயற்சியாக இங்கு பணிபுரியும் 8 ஆசிரியர்கள் தங்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பள்ளிக் கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்தினர். அடுத்ததாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் பலனாக 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. ஊருக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல் இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றும் லதா, இதே பள்ளியில் தனது மகள் இருவரையும் சேர்த்து மற்ற அரசு ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
 இங்கு, கணித ஆசிரியையாகப் பணியாற்றும் சுகுணா, மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வழிகாட்டியாக செயல்படுகிறார். ரயிலில் வீணாகும் நீர், கழிவுகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் செயல்முறை குறித்த இவரது அறிவியல் படைப்பு,கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் மூன்றாம் பரிசு பெற்றது.
 பொருளுதவி, நிதியுதவியைக் கடந்து, தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து மாணவர்களின் திறமையை வளர்க்கப் பேருதவி புரிகின்றனர். அந்த வகையில், மாணவ, மாணவியருக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமொரு பயிற்சியாக யோகா, மேற்கத்திய நடனம், பொம்மலாட்டம், பாரம்பரிய விளையாட்டுகள், கராத்தே, பறை, அபாகஸ், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு கலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்றுநர்கள் இந்தப் பயிற்சியை இலவசமாக கற்பித்துத் தருவது குறிப்பிடத்தக்கது.
 இப்பள்ளியின் அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்பட்டு, இணையதள இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளிலும் கணினி வசதியுடைய ஒரே மாநகராட்சிப் பள்ளி இதுதான். ஸ்மார்ட் வகுப்பறைகளும், அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகமும் இப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம்.
 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையின்போதே பள்ளியில் அதற்கான படிவங்களும் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆண்டுச் சந்தா பள்ளியில் இருந்து செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பள்ளியின் மீதுள்ள மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
 இது குறித்து தலைமை ஆசிரியை க.மைதிலி கூறியதாவது:
 "எங்கள் பள்ளியின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் என்னோடு பணிபுரியும் சக ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அளப்பரியது. குறிப்பாக தன்னார்வலர்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நிறைய சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் உதவியால்தான் இன்று கணினி மயம், காப்பீட்டுத் திட்டம், கலை வகுப்புகள், தனித்திறமை பயிற்சிகள் உள்ளிட்ட சிறப்புகள் பள்ளியில் சாத்தியமாகி உள்ளன. கல்வியையும் தாண்டி பல நல்ல, புதிய அறிவார்ந்த விஷயங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்'' என்றார்.
 வெ.செல்வகுமார்.
 புகைப்படம் - வி.பேச்சிக்குமார்.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/கல்வியோடு-கலைகளையும்-போதிக்கும்-அரசுப்-பள்ளி-3152146.html
3152144 வார இதழ்கள் மகளிர்மணி பதினேழு வயதிலேயே வானத்தைத் தொட்டவர்! DIN DIN Wednesday, May 15, 2019 10:40 AM +0530 'எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பலதுறைகளில் சிறந்தவர்களாக வரவேண்டுமென்று பெற்றோர் ஆசைபடுவதுண்டு. என்னுடைய அம்மாவோ நான் விமானியாக வேண்டுமென விருப்பப்பட்டார். அதுவே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால், சிறுவயதிலிருந்தே வானத்தை எட்டிப் பிடிப்பது போன்றும், மேகங்களை தொடுவது போன்றும் நான் கற்பனை செய்வதுண்டு'' என்று கூறும் ஆனி திவ்யா, இன்று உலகிலேயே போயிங்777 விமானத்தை இயக்கும் மிக குறைந்த வயது பெண் விமானி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
 மற்ற விமானங்களை விட நீளமும் அகலமும் கொண்ட இரட்டை என்ஜினுடன் கூடிய இந்த போயிங் 777 ஜெட் விமானம், போயிங் கமர்ஷியல் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாகும். இந்த விமானத்தில் விமானியாக பணியாற்றி கேப்டனாக பதவி உயர்வு பெற்று தற்போது மும்பையில் வசிக்கும் ஆனி திவ்யா, விமானியானதற்கு பின்புலமாக நல்ல பணவசதி இருந்திருக்கலாமென பலர் கருதலாம். ஆனியின் தந்தை ஆனி முராஹரி, ராணுவத்தில் பணியாற்றியவர் என்றாலும், விருப்ப ஓய்வு பெற்று விஜய வாடாவில் குடியேறிய பின்னர், ஆனி அங்கேயே பள்ளியில் சேர்ந்து படித்தார். நடுத்தர குடும்பம். போதிய வருமானம் இல்லை. தாய்மொழி தெலுங்கு என்பதால் துவக்க ஆண்டுகளில் ஆங்கிலம் கற்க மிகவும் சிரமமாக இருந்தது. பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பும் ஆதரவும் திவ்யாவுக்கு பெரும் பலமாக இருந்தது. நீ அடைவது வெற்றியோ, தோல்வியோ அவைகளை ஒரு சவாலாக ஏற்று, உன் லட்சியத்தை அடைய முன்னேறுவதற்கு முயற்சி செய் என்று இவரது அம்மா அடிக்கடி கூறுவதுண்டாம்.
 17 வயதில் பள்ளி படிப்பை முடித்தவுடன் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், இந்தியாவில் உள்ள முன்னணி விமான பயிற்சி நிலையங்களில் ஒன்றான இந்திராகாந்தி ராஷ்ட்ரிய யுரான் அகாதெமியில் சேரும் வாய்ப்பு திவ்யாவுக்கு கிடைத்தது. இரண்டாண்டு கால பயிற்சிக்குப் பிறகு திவ்யாவுக்கு விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டதோடு, ஏர் இந்தியாவில் வேலையும் கிடைத்தது. தொடர்ந்து 21 -ஆவது வயதில் போயிங் 777 விமானத்தை இயக்கும் விமானியாக பணியில் அமர்ந்தார். தற்போது 30 வயதாகும் திவ்யாவுக்கு ரியாத்திலிருந்து மும்பை செல்லும் போயிங் 777 விமானத்தில் கமாண்டராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் போதே, ஏவியேஷனில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றதோடு, தன் உடன் பிறந்தவர்கள் கல்விச் செலவுக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். பெற்றோருக்கு ஒரு வீடும், தனக்கு ஹைதராபாத்தில் ஒருவீடும் வாங்கியுள்ளார். ஆனி திவ்யாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்ன ?
 "17 வயதில் பெற்றோரை பிரிந்து புதிய வாழ்க்கையை தொடங்க நான் விரும்பியபோது, தொடக்கத்தில் பயிற்சி காலத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மீறி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உறுதி என் மனதில் இருந்தது. நம் மனதில் ஏற்படும் துணிவு நமக்கு சரியான பாதையை வழிகாட்டுவதோடு சவால்களை எதிர்கொண்டு முன்னேற உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
 என்னுடைய 21-ஆவது வயதில் மேற்கொண்டு பயிற்சிபெற லண்டனுக்கு அனுப்பப்பட்டேன். முதலில் போயிங் 737 விமானத்தில் பயிற்சிபெற்ற நான் போயிங் 777 விமானியாக அமர்த்தப்பட்டேன். அதன்பிறகு என்னுடைய வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத அபூர்வமான அனுபவங்களை பெற்றதோடு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு பறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 இன்று முன்னேற்றமடைந்த பல நாடுகள் விமானத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வாய்ப்பளித்து வருவதைபோன்று, இந்தியாவிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பெண் விமானிகள் எண்ணிக்கை 14 சதவீதமாக இருக்கும் நிலைமாற வேண்டும் என்பதுதான் என் ஆசை'' என்கிறார் ஆனி திவ்யா.
 - பூர்ணிமா
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/பதினேழு-வயதிலேயே-வானத்தைத்-தொட்டவர்-3152144.html
3152143 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்! சமையல்! DIN DIN Wednesday, May 15, 2019 10:38 AM +0530 சுவையான சூப் வகைகள்..
உருளைக்கிழங்கு சூப்

தேவையானவை :
உருளைக் கிழங்கு - கால் கிலோ 
பெரிய வெங்காயம் - 1 
பால் - 100 மில்லி
மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி 
பாலேடு - 2 தேக்கரண்டி 
கொத்துமல்லி - சிறிது
தேவையான அளவு - உப்பு 
செய்முறை: உருளைக் கிழங்கை தோல் நீக்கி, வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் மிக்சியில் அரைக்கவும். இதனுடன் மைதா மாவு, பால், மிளகுத் தூள் சேர்க்கவும். வாணலியில் இந்த கலவையை ஊற்றி நன்றாக சூடாக்கவும். இது கெட்டியாக வரும் வரை கிளறிவிடவும். பின் இதனுடன் பாலேட்டை சேர்த்து உருகும் வரை கிளறி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பின் கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம். 
(குழந்தைகள் விரும்பி 
அருந்தும் சுவையான சூப்)

முருங்கை காம்பு சூப்

தேவையானவை :
முருங்கை காம்பு - 200 கிராம்
தக்காளி, பெரிய வெங்காயம் தலா - 50 கிராம்
மிளகு - 6, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
லவங்க பட்டை - சிறிது, பச்சை மிளகாய் -1
பாசி அல்லது துவரம் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: முருங்கை காம்பை சிறிது சிறிதாக நறுக்கி அலசி வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நீள வாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பருப்பை வேக வைத்து மசிக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்க பட்டை, இலை, மிளகு, வெங்காயம், தக்காளி, முருங்கை காம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்றாக வெந்தவுடன் மஞ்சள் தூள், உப்பு, மசித்த பருப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விட்டு இறக்கி மிதமான சூட்டில் சூப்பை அருந்தலாம்.
குறிப்பு: இதில் முருங்கை காம்புக்கு பதிலாக முருங்கைக் கீரையையும் பயன்படுத்தி சூப் செய்யலாம். டேஸ்டுக்கு டேஸ்ட், நரம்புப் பலத்திற்கும் ஏற்றது. 

வெண்டைக்காய் சூப்

தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ
தக்காளி -1, பெரிய வெங்காயம் -2
மிளகு - 6, நீண்ட பச்சை மிளகாய் -1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்துமல்லி - ஒரு கொத்து 
லவங்கபட்டை - சிறிது
துவரம் பருப்பு - 50 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, மிளகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேக விடவும். வெந்தவுடன் மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்து மசித்த துவரம் பருப்பை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி கொத்துமல்லி இலையை தூவி பரிமாறவும். வெண்டைக்காயை வதக்கும்போது ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சீக்கிரம் வதங்குவதுடன் சுவை தூக்கலாக இருக்கும்.
(இது மூளையை பலப்படுத்தும். 
ஞாபக சக்தியை அதிகரிக்கும்)

பீட்ரூட் சூப்

தேவையானவை :
பீட்ரூட் }கால் கிலோ
பல்லாரி வெங்காயம்,
உருளை கிழங்கு - தலா 100 கிராம்
எலுமிச்சை பழம் - பாதி
புதினா - ஒரு கொத்து
மிளகுத்தூள் -அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
கிரீம் - அரை கிண்ணம்
செய்முறை: பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல் சீவி வேக வைக்கவும். வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து வேக வைத்து கொள்ளவும். பின்னர் பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து பின்பு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பருகலாம்.
(உடலுக்கு வலுவை தருவதுடன்
புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும்)

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/சமையல்-சமையல்-3152143.html
3152141 வார இதழ்கள் மகளிர்மணி என் பிருந்தாவனம்!16- பாரததேவி DIN DIN Wednesday, May 15, 2019 10:18 AM +0530 தங்கராசு மீண்டும் "அம்மா.... அம்மா..'' என்றான்.
 "அதேன் சொல்லிட்டேனே.. கொத்தனாரு கிட்டச் சொல்லி காலா, காலத்தில வேலய முடிச்சிட்டு, உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வார வழியப்பாரு. இன்னைக்கு ஆளுக வெங்காயம் அருக்க வாராக, நானு பிஞ்சைக்குப் போறேன்'' என்ற சங்கரி வாசற்புறம் நோக்கி நடந்தாள்.
 தங்கராசு அம்மா போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அம்மா காலில் விழ வேண்டும் போல் இருந்தது. அவளைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இருந்தது.
 இடுப்பில் பண்ணரிவாளும், கையில் பெட்டியோடும் தன் அம்மாவுடன் நடந்த கமலா,
 "என்னம்மா நம்ம ஊருக்காரக ஒரு ஆத்திரம், அவசரத்துக்கு வீட்டுல கொல்லைப்புறமா ஒதுங்குனாலே, காடெல்லாம் திரிஞ்சிட்டு வந்தவ இப்படி போனா வீடுவிளங்குமா.. வீட்டுக்குள்ள சீதேவிதேன் தங்குவாளான்னுப் பேசுவாகளே நீ என்னன்னா கக்கூச கட்டச் சொல்லுத ஊர்க்காரக சிரிப்பாகளேம்மா'' என்றாள் கவலையோடு.
 "அடி போடி, மறுவீடு வந்த மறுநாளே உன் மதினி அவ அம்மா வீட்டுல போயி இருந்துக்கிட்டு கக்கூச கட்டுனாத்தேன் வருவேன்னு ஒருமாசமா முரண்டுப் புடிச்சிக்கிட்டு இருக்கா. எம்புள்ள என் கிட்டவும் பேச மாட்டாம, பொண்டாட்டிக் கிட்டவும் பேச முடியாம பரிதவிச்சிக்கிட்டு வாரதப் பாக்கையில் என் பெத்த வயிறு பத்தி எரியுது. இதுக்கெல்லாம் ஊருக்காரக என்ன சொல்லவாகளோன்னு நானு பயந்துக்கிட்டிருந்தா எம்புள்ள கதி என்னாவது? சின்னஞ்சிறுசுக இப்பத்தேன் கல்யாணம் முடிச்சிருக்கு. அதுக ஒன்னா, மன்னா இருந்தாத்தான குடிச்சக் கஞ்சி எனக்கு கூட்டோட சேரும்'' என்றாள் சங்கரி.
 ஒரே வாரத்தில் பாத்ரூமையும்,
 கக்கூசையும் கட்டி முடித்துவிட்டான் அய்யனார் கொத்தனார். அந்த ஊர்க்காரர்களுக்கு வேலைக்குப் போகும்போதும் சரி, வரும்போதும் சரி சங்கரி வீட்டில் கொல்லைப்புறமாக புதிதாய் கட்டியிருக்கும் கக்கூசைப் பார்ப்பதே வேலையாகவும், வேடிக்கையாகவும் போய்விட்டது. இந்த கக்கூசைப் பார்க்க வருகிறவர்கள் பேசாமல் போவதில்லை.
 அப்பவும், "கஞ்சிப்பான இருக்க வீட்டுக்குள்ள கக்கூசையுமா கட்டுவா இந்த சங்கரி, அவளுக்கென்ன கூறு கெட்டுப் போச்சா? மருமவ கேட்டாளாம். இவ கட்டுதாளாம். மருமவ என்னமும் சொன்னான்னா அடியே எங்க ஊர்க்காரக கணக்கா ஓட, தாவுன்னு போ இல்லாட்டா உன் ஆத்தா வீட்டுலயே இருன்னு சொல்லுக்கில்லாம இப்படி ஒரு பொம்பள மதிகெட்டு அலைவாளா?'' என்று கூடி, கூடி பொரணி பேசினார்கள்.
 சங்கரி எதையுமே கண்டு கொள்ளவில்லை. கக்கூஸ் கட்டிய உடனே மருமகளை கூட்டி வரச் சொல்லி மகனை பட்டணத்துக்கு அனுப்பி வைத்தாள்.
 புதிதாக கட்டிய குளிக்கும் அறையைப் பார்த்த கௌசிகாவிற்கு எரிச்சல் பிடுங்கியது. ஷவர்பாத் வைத்துக் கட்டவில்லை. புருஷனைக் கூப்பிட்டு, "எங்க வீட்டுல இருந்த ஷவர் பாத்தில எப்படி மலை அருவியில குளிச்சமாதிரி குளிச்சீங்க இங்க மட்டும் ஏன் அத வைக்கல நானு அதிலேயே குளிச்சிப் பழக்கப்பட்டவ குழாயில நானு தண்ணிப்புடிச்சி குளிக்க மாட்டேன்'' என்றாள்.
 "அப்படி ஒரு ஷவர் வைக்க சொல்லித்தான் கொத்தனாரிடம் சொன்னான் தங்கராசு. ஆனால் அய்யனாரோ அப்படியெல்லாம் எனக்கு வைக்கத் தெரியாது தம்பி. அதுக்கு நீங்க பட்டணத்தில இருக்க கொத்தனாரத்தேன் கூட்டிட்டு வரணும்'' என்று சொல்லிவிட்டான்.
 இந்த ஷவர் பாத்துக்காக பட்டணத்துக்குப் போய் கொத்தனார்களைத் தேட முடியாத தங்கராசு அதை அப்படியே விட்டுவிட்டான். ஆனால் அதற்காக கௌசிகா இப்படி சண்டைக்கு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
 முகம் கனன்று கோபத்தோடு எகிறிக் கொண்டிருந்த கெளிசிகாவை சமாதானப் படுத்தினான் தங்கராசு.
 ""கொஞ்சம் பொறுத்துக்கோ கௌசி, கூடிய சீக்கிரம் அத வச்சிருவோம்'' என்று அவன் சொல்ல முகத்தை சிலுப்பினாள் கௌசிகா.
 "இன்னும் மூணு மாதத்தில் ஷவர்பாத் வைக்காட்டி நானு எங்கம்மா வீட்டுக்குப் போயிருவேன் ஆமா'' என்று ஒற்றை விரலைக்காட்டி அவனை மிரட்டினாள்.
 "இப்ப காட்டுல நிறைய வேலையிருக்கு ஒரு ஆறு மாதம் பொறுத்துக்கோ'' என்று தங்கராசு கெஞ்ச,
 " அதெல்லாம் முடியாது'' என்றாள் கௌசிகா பிடிவாதத்துடன்.
 அன்று இரவு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, "என்ன கௌசி காப்பிப் போட, சமையல் வைக்கன்னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்தயா?'' என்று தங்கராசு பயத்தோடு தன் மனைவியிடம் கேட்டான்.
 அதைப்பற்றி காதிலேயே வாங்காமல், "நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாத்தீகளா?'' என்று சூட்கேஸிலிருந்து ஒரு ரேடியோவை எடுத்து அவன் முன்னால் வைத்து ஆன் பண்ணினாள் உடனே அதில்,
 "தொட்டு விட , தொட்டுவிடத் தொடரும்..., கைப்பட்டு விட பட்டுவிட மலரும்...' என்று பாட்டு கேக்க தங்கராசு மயங்கினான்.
 ஏற்கெனவே அவனுக்குப் பாட்டுக் கேட்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதற்கெல்லாம் அந்தக் கிராமத்திலே வாய்ப்பில்லை. சித்திரை மாதத்தில் வரும் பொங்கத் திருவிழாவுக்கு மட்டுமே மந்தையில் ரேடியோ கட்டி பாட்டு போடுவார்கள். ஊர்ப் பொங்கல் என்பதால் அதைக் கேட்க ஊரின் இளவட்டங்களுக்கு அவ்வளவாக நேரம் இருப்பதில்லை.
 "ரொம்ப நல்லா இருக்கு கௌசி, அதிலயும் இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்'' என்று தங்கராசு சொல்லவும்.
 "உக்கும்..'' என்று உதட்டைச் சுழித்த கௌசிகா, "என்னையும்தான் உங்களுக்குப் பிடிக்கும்ன்னு சொல்றீங்க.. ஆனா எனக்கான வசதி எதையும் செஞ்சி தர மாட்டீங்க'' என்றாள் பொய்யான கோபத்தோடு.
 கொளசிகாவின் உதட்டுச் சுழிப்புக்கே கிறங்கிப்போனான் தங்கராசு, கிராமத்திலிருக்கும் பெண்கள் இந்த மாதிரியெல்லாம் அழகு காட்டுவதில்லை. தானுன்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். தேவையென்றால் மட்டுமே பேசுவார்கள்.
 அதனால், "அவளின் தோளை அணைத்தவாறு உனக்கு எல்லா விதத்திலேயும் வசதி செய்யணுமின்னுதேன் நினைக்கேன். ஆனா, முடியல இது கிராமம் கொஞ்சம், கொஞ்சமாத்தேன் வசதி செஞ்சி தரமுடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்''.
 "நீங்க நாலு வருசத்துக்குக் கூட இழுத்து அடிப்பீங்க அதுவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது'' என்றாள். அவள் குரலில் கண்டிப்பும், அதிகாரமும் இருந்தது.
 "சரி கௌசி, காப்பிபோட , சோறு காய்ச்சன்னு எல்லாம் உன் அம்மா வீட்டுல கத்துக்கிட்டு வந்தயா?''
 "என் அம்மா காப்பிப் போட சொல்லிக் கொடுத்ததோட அதுக்காக ஸ்டவ்வும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால நானே காப்பிப் போட்டு குடிக்கதுமில்லாம, வென்னியும் போட்டு குளிச்சிருவேன்'' என்றாள் பெருமையாக. "ஆனா, மண்ணெண்ணெய்ய நீங்கதான் வாங்கித் தரணும்'' என்றாள்.
 "அப்பாடா' என்று நிம்மதியாக பெருமூச்சுவிட்டான் தங்கராசு.
 "சரி சோறு, குழம்பு?''
 "அது இன்னும் தெரியலைங்க.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டு இருக்கேன். ஏன் இங்கதான் சோறு ஆக்குறாங்கள்ல்ல. பிறகென்னவாம்''.
 "இருந்தாலும், அடுப்பு வேலய நீ பாத்துக்கிட்டா நாங்க காட்டுல இன்னும் கொஞ்சம் கூட வேல பாக்கலாமேன்னு கேட்டேன்''.
 "அந்த யோசனையெல்லாம் விட்டுருங்க எனக்கு அப்படியெல்லாம் வேலை செய்யத் தெரியாது'' என்றாள் எச்சரிக்கையோடு.
 மறுநாள் காலை கௌசிகாவே எழுந்து காப்பிப் போட்டு குடித்துவிட்டு அவளே, வென்னியும்போட்டு குளித்துவிட்டு வந்தாள். அவளுக்கு நிறைய முடி என்பதால் காற்றலைக்கு முடி அவள் முகத்தின் மீது பறந்து அலைபாய்ந்தது. பவுடர் பூசியதும் முகத்தில் மஞ்சள் வர்ணம் காட்டியது. மெல்லி வாயில் சேலை, நடு நெற்றியில் சிவந்த குங்குமத்தில் அவள் அழகு கூடியது. கண்களில் இமைகளுடன் சேர்ந்த மை தீட்டப்பட்டதில் கௌசிகாவை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது தங்கராசுவுக்கு.
 குளித்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வெளியே வந்த கௌசிகா புருஷனைத் தேடினாள். தங்கராசு துடைக்குமேல் தூக்கிக் கட்டிய வேட்டிக்கட்டும், தலையில் தலைப்பாவுமாய் வெற்று உடம்போடு மாடுகளுக்காக படப்பில் கூளம் பிடுங்கிக் கொண்டிருந்தான்.
 - தொடரும்..
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/என்-பிருந்தாவனம்16--பாரததேவி-3152141.html
3152139 வார இதழ்கள் மகளிர்மணி உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை! DIN DIN Wednesday, May 15, 2019 10:15 AM +0530 ✦    அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும்.
✦    உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
✦    பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் உணவை உண்ணக் கூடாது.
✦    இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.
✦    காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
✦    வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்தும் உண்ணக் கூடாது.
✦    சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
✦    தொலைக்காட்சியைப் பார்த்தபடியும் உணவினை சாப்பிடக்கூடாது.
✦    சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
✦    இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
✦     உணவினை நின்று கொண்டு சாப்பிடக் கூடாது மற்றும் அதிக கோபத்துடனும் உணவினை உண்ணக் கூடாது.
✦    சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
- முத்தூஸ், தொண்டி.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/உணவு-உண்ணும்போது-கடைபிடிக்க-வேண்டியவை-3152139.html