Dinamani - வெள்ளிமணி - https://www.dinamani.com/weekly-supplements/vellimani/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3118734 வார இதழ்கள் வெள்ளிமணி வேண்டியதை அருளும் வேம்படி விநாயகர்! DIN DIN Friday, March 22, 2019 10:10 AM +0530 திருப்போரூர் என்று அழைக்கப்படும் சமராபுரி திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் பெற்று விளங்கும் ஊர். (சென்னையிலிருந்து சுமார் 42 கி.மீ. தூரத்தில் உள்ளது) இவ்வூரின் மலைமேல் ஸ்ரீகைலாச நாதர் அம்பாள் பாலாம்பிகையுடன் கோயில் கொண்டுள்ளார். மலையின் அடிவாரத்திற்கு அருகில் முருகப்பெருமான் ஆலயத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாய் உள்ளார். மூலவருக்கு புனுகு சட்டம் சார்த்தப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழும், ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் இயற்றிய திருப்போரூர் சந்நிதி முறை பாடல்களும் அனைவராலும் பேசப்படுகிறது. பல கல்வெட்டுக் குறிப்புகள் இதன் பழைமையை பறைசாற்றுகின்றன.
 திருப்போரூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் முன்பு முதலில் ஸ்ரீ வேம்படி விநாயகரை (சுமார் 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் செல்லுவதற்கு முன் சாலை ஓரம் உள்ளது) வழிபட்ட பின்பு செல்ல வேண்டும் என்பது மரபு. "சாப விமோசனம் செய்த வேம்படி விநாயகர்' என்று இப்பெருமானின் சிறப்பை எழுதிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய தலபுராணம் குறிப்பிடுகிறது.
 முன்பொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் தங்களில் யார் அதிக பலவான் என்னும் சர்ச்சையினால் ஒருவருக்கொருவர் நெடுங்காலம் யுத்தம் புரிந்து வந்தனர். தேவர்கள் தோற்றுவிட, அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கிற்று. திருமாலிடம் சென்று முறையிட்ட தேவர்களை காக்கும் பொருட்டு அசுரர்களின் கொட்டத்தை அடக்க தானே களத்தில் இறங்கி அசுரர்களை அழிக்கத் தொடங்கினார். கலக்கமடைந்த மீதமுள்ள அசுரர்கள் ஓட ஆரம்பித்தனர். அவர்களை மகா விஷ்ணு விடாமல் துரத்த, பிருகு முனிவர் ஆசிரமத்தை அடைந்து முனிபத்தினியிடம் மன்றாடி அடைக்கலம் ஆயினர். அவர்களை வெளியேற உதவும்படி, திருமால் ரிஷிபத்தினியிடம் கூற, அபயம் அடைந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று அவர் மறுத்துவிட்டார். வேறுவழியின்றி மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தை ஏவ, அது முனிபத்தினியின் கழுத்தை அறுத்து வீழ்த்தி விட்டது. இதனை அறிந்து அங்கு வந்த பிருகு முனிவர் கடுங்கோபங்கொண்டு மகாவிஷ்ணுவை நோக்கி "நீ உனது தாய்க்கு சமமாக எண்ண வேண்டியவளை "ஹத்தி' செய்ததால் பத்து ஜனனம் எடுக்கக் கடவீர்' என சாபமிட்டார். பின் திருமகளை நோக்கி "உன் கணவனின் மார்பில் தயை எதுவும் இன்றி மரம்போல் நின்றாய், அதனால் நீயும் "கசப்பு வேப்பமரமாகக் கடவாய்" என்று சாபமிட்டார். பின் சுக்ராச்சாரியாரை வருவித்து மிருத சஞ்சீவினி மந்திரத்தால் அறுந்து போன கழுத்தை சேர்த்து தன் பத்தினியை உயிர்பெறச் செய்தார்.
 பிருகு முனிவரின் சாபத்தினால், இத்தலத்தில் வேப்பமரமாய் இருந்த திருமகளுக்கு மூஷிக வாகனன் ஆன விநாயகர் தரிசனம் கொடுத்து இழந்த அனைத்தையும் திருமகள் திரும்பப் பெறச் செய்து சாபவிமோசனமும் அளித்தாராம். இன்றும் வேம்படி ஆலயத்தின் பின்புறம் இரண்டு பழைமையான வேப்பமரங்கள் உள்ளன.
 - வசந்தா சுரேஷ்குமார்.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/வேண்டியதை-அருளும்-வேம்படி-விநாயகர்-3118734.html
3118733 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 33- டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, March 22, 2019 10:05 AM +0530 இயற்கையும் இலக்கணமும் பெயர் கொடுத்திருந்தாலும், அறக்கருத்துகளை இப்பெயர்களுக்குள் புகுத்தி, உள்ளூர்க் கதைகளை உருவாக்கி, வருங்காலத் தலைமுறைகளுக்கு வாழ்க்கைச் செய்திகளை வடிவமைத்துக் கொடுப்பதுதானே உயர் நாகரிகத்தின் அடையாளம்! காலம் காலமாகப் பண்பட்ட இத்தகைய மானுட நாகரிகத்தின் கதையொன்று, "தலை அணை' என்னும் பெயர் உருவானதற்குக் காரணமாக இப்பகுதிகளில் வழங்குகிறது.
 தலைஅணை பெயர்க்காரணம்
 முன்னொரு காலத்தில், கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக வேணாடு என்னும் சிற்றரசு விளங்கியது. சில காலம், சேர நாட்டுப் பகுதியாகவும் சில காலம், பாண்டிய நாட்டுப் பகுதியாகவும் திகழ்ந்தது. இந்த வேணாட்டில், செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக, எட்டு வீட்டில் பிள்ளைமார் என்னும் பிரிவினர் விளங்கினர். ஏதோவொரு காலகட்டத்தில், பாண்டிய மன்னர் ஒருவருக்கும் எட்டு வீட்டில் பிள்ளைமாருக்கும் பிணக்கு ஏற்பட்டதாம். பிணக்கு போராக மாற, பிள்ளைமார் பாண்டியனை விரட்ட, பொதிகையிலிருந்த தன்னுடைய கோட்டையில் ஒளிந்துகொண்ட பாண்டிய மன்னர், சுற்றிலும் பிள்ளைமார் சூழ்ந்துவிட்டனர் என்னும் அச்சத்தில், அவர்கள் கையில் சிக்காமலிருக்க, கோட்டைமீது நின்று, தன் தலையைத் தானே கொய்துகொண்டாராம். தலையும் உடலும் தாமிரவருணியில் வீழ்ந்தனவாம். தலை சரிந்த இடம் "தலை அணை' என்றும் உடல் மட்டும் (தலையில்லா முண்டம்) வீழ்ந்த இடம் "முண்டந்துறை' என்றும் அழைக்கப்படலாயினவாம். ஆட்சியும் அதிகாரமும் இருந்தாலும், மானுட வாழ்வும் தேகமும் நிலையில்லாதவை என்பதைப் புரியவைப்பதற்காக இப்படியொரு கதையைப் பொருநையாள் உலவவிட்டாளோ?
 ஆரம்பகாலங்களில் கல்பாறைகளும் கூழாங்கற்களுமாக இருந்த கோடை மேல் அழகியான் தடுப்பணையை, அவ்வப்போது வந்த மன்னர்களும் ஆட்சியாளர்களும் செப்பம் செய்து, வலு கூட்டியுள்ளனர். ஆயினும், காலப்போக்கில் மழை வெள்ளங்களால், அணை சேதப்பட்டது. 19- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மிகுதியும் சிதைந்திருந்த இதன் பாறைத் தடுப்புகளை அகற்றிவிட்டு, புதியதாக ஓர் அணையைக் கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டினார் கேப்டன் ஹார்ஸ்லி; 1854 -இல் செலவு மதிப்பீட்டையும் வரைந்து அரசுக்கு அனுப்பினார் (இதே 1854-55 -இல்தான், ஸ்ரீ வைகுண்ட அணைத் திட்டத்திற்கும் பாபநாச நீர்த்தேக்கத் திட்டத்திற்குமான முன்வரைவுகளையும் ஹார்ஸ்லி தயாரித்துக் கொடுத்தார்; இந்தக் காலகட்டத்தில், பொருநைக் கரையின் நீர் தொட்டு நடந்து, கிராமம் ஒவ்வொன்றுக்கும் இவர் பயணித்ததாகத் தெரிகிறது).
 அரசின் அனுமதி கிட்டாததால், பழைய கற்களுக்கு வலு சேர்ப்பதற்காகப் பெரும் கற்பாறைகள் வைக்கப்பட்டு, பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு தலை மதகுகள் அமைக்கப்பட்டு, 1084 அடி நீளத்திற்கு இந்த அணை செப்பனிடப்பட்டது. வெறும் தடுப்புச் சுவராக மட்டும் இல்லாமல், தடுப்புக்கு முன்பாக, நதி நீரைச் சேகரிக்கும் நீர்த்தேக்கமாகவும் இது செயல்படுகிறது.
 வடக்கு மற்றும் தெற்குக் கோடை மேல் அழகியான் கால்வாய்கள் இந்தத் தேக்கத்திலிருந்து பாய்கின்றன. இக்கால்வாய்களின் வழியாக, அம்பாசமுத்திரம் தாலுக்காவின் 17 குளங்கள் நிரம்பியதாக, மதராஸ் மாநிலத்தின் முக்கியமான பாசனத் திட்டங்கள் பற்றிய 1955 -ஆம் ஆண்டின் பொதுப்பணித் துறை பதிவு குறிக்கிறது. இன்றளவும்கூட, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், மன்னார்கோவில், பிரம்மதேசம் பகுதிகளின் குளங்கள் பல, இக்கால்வாய்களின் நீர் வரத்தால் நிரம்புகின்றன; சுமார் 1400 ஹெக்டேர் பாசனப் பரப்பு பயனடைகிறது.
 நலம் பெருக்க ஒரு நதியுண்ணி
 தாமிரவருணிக்குக் குறுக்காக உள்ள அடுத்த தடுப்பணை, நதியுண்ணி அணைக்கட்டு. பண்டைய ஏழு அணைகளில் மிகவும் பழைமையானதாக இது கருதப்படுகிறது. அம்பாசமுத்திரத்திற்குச் சற்றே மேற்காக இருக்கிறது; சொல்லப்போனால், இந்த அணைக்கட்டு அமைந்திருக்கும் பகுதிக்கு மேல அம்பாசமுத்திரம் என்றே பெயர். அணைக்கட்டின் பெயரும் வித்தியாசமானதுதான் "நதி உண்ணி'. இதென்ன பெயர்? "நதியை உண்டுவிடுதல் அல்லது அருந்திவிடுதல்'. பொருநையின் வெள்ளப்போக்கு, இந்த இடம் வந்ததும், அணையால் தடுக்கப்படும்; மிகை நீர் கால்வாய்களில் பாய்ந்துவிடும்; இதனால், நதியின் நீர் குறைந்ததுபோன்ற தோற்றம் ஏற்படும். இவற்றையெல்லாம் கண்ட நம்முடைய முன்னோர், நதியின் நீரை இந்த அணைக்கட்டு அருந்திவிடுவதாகக் கொண்டு, "நதியுண்ணி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
 மிகப் பழங்காலத்தில் பாண்டிய மன்னர்களால் இந்தத் தடுப்பணை அமைக்கப்பட்டது. 1759- ஆம் ஆண்டில், கான் சாஹேப் என்னும் முஹம்மது யூசுஃப் கான் (இவர்தான் மருதநாயகம் என்றும் அறியப்பட்டவர்), தன்னுடைய அறக்கொடையாக இதனைச் சீரமைத்துள்ளார். சிமெண்ட் பயன்படுத்தப்படாமல், பெரிய பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ள நதியுண்ணி அணைக்கட்டின் நீளம் 1680 அடி. பொருநையின் பாதையில் சற்றே சாய்வாக அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டின் வடக்குப் பகுதியிலிருந்து புறப்படும் நதியுண்ணிக் கால்வாய் வழியாக, மேல அம்பை, கீழ அம்பை, பிரம்மதேசம் பகுதிகளின் சுமார் 996 ஹெக்டேர்கள், நேரடி ஆயக்கட்டின் கீழ் வருகின்றன.
 வறண்டு கிடந்த அம்பைப் பகுதிக்கு விவசாய வாழ்வு கொடுத்தது நதியுண்ணிதான் என்றே வரலாற்றுப் பதிவுகள் செப்புகின்றன. சோழப் பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில் (10-11 - ஆம் நூற்றாண்டுகளில்), அம்பாசமுத்திரத்திற்குச் சற்றே வடக்கிலுள்ள பிரம்மதேசத்திற்குக் கிட்டிய முக்கியத்துவம் அம்பைக்குக் கிட்டவில்லை. ராஜ ராஜ சதுர்வேதி மங்கலமாக பிரம்மதேசம் உருவான காலத்தில், மழை நீரைத் தேக்கிய குளங்களால் பிரம்மதேசம் நீர் வளம் கொண்டிருந்ததாகவும், அதே சமயம் அம்பை வறண்டிருந்ததால், மக்களைக் குடியமர்த்துவதில் சங்கடங்கள் எழுந்ததாகவும் தெரிகிறது. இதே காலகட்டத்தில்தான் நதியுண்ணி அணை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். நதியுண்ணிக் கால்வாயின் நேரடிப் பாசனம் கிடைத்தபின்னர், முள்ளி நாட்டு இளங்கோக்குடி என்னும் பெயரில் வணிகர் குடியிருப்பாக இருந்த அம்பை, வேளாளப் பெருமக்கள் குடியமர்ந்த வேளாக்குறிச்சியாகவும், அம்பாசமுத்திரமாகவும் மாறியது.
 - தொடரும்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/பொருநை-போற்றுதும்-33--டாக்டர்-சுதா-சேஷய்யன்-3118733.html
3118732 வார இதழ்கள் வெள்ளிமணி யோசேப்புவை உயர்த்திய தேவன்! DIN DIN Friday, March 22, 2019 10:03 AM +0530 தெய்வ பக்தியுள்ளவர்கள் அப்பாவியாக தம் வாழ்வில் பிறர்க்கு நன்மை செய்து நலம் பயப்பர்.
 வேதாகமத்தில் யோசேப்பு என்பவர் வரலாறு உண்டு. யாக்கோபு என்னும் தெய்வபக்தியுள்ள மனிதரின் இரண்டாவது மனைவியின் முதல் மகன். மிக அழகிய ரூபம் உள்ள மகனை யாக்கோபு மிகவும் நேசித்தார். யோசேப்பு தான் கண்ட கனவை தன்அண்ணன்களிடம் சொல்லுவார். அவர் கனவில் சூரியனும் நிலாவும் பதினொரு நட்சத்திரங்களும் தன்னை வணங்கியது என்றார் (ஆதியாகமம் 37: 9) அறுவடை செய்து அரிகட்டுகள் கட்டி கொண்டிருந்தோம். அப்போது என் அரிகட்டு நிமிர்ந்து நின்றது . உங்கள் அரிகட்டுகள் என் பக்கமாய் சாய்ந்து வணங்கி நின்றது என்றார்.
 யோசேப்புவின் அண்ணன்கள் அவன் மீது மிகவும் கோபம் கொண்டிருந்தனர். யோசேப்பு அவன் தம்பியும் தம் தந்தையுடன் வீட்டில் இருக்கும்போது அவர்களது அண்ணன்கள் ஆடு மேய்த்துக்கொண்டே பல மாதம் செல்வர். யாக்கோபு தன் அண்ணன்களை சென்று பார்த்துவர, உணவுப்பொருள்களையும் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். தூரத்தில் வரும் போதே யோசேப்பை கண்ட அவன் அண்ணன்கள் அவனைக் கொன்று விட நினைத்தனர். அவன் அணிந்திருந்து பலவண்ண அங்கியை கழட்டிக்கொண்டு, ஒரு பாழுங்கிணற்றில் போட்டனர்.
 தூர தெரியும் எகிப்து வியாபாரிகளிடம் யோசேப்பை கிணற்றிலிருந்து எடுத்து இருபது வெள்ளிகாசுக்கு விற்று விட்டனர். இவ்வாறு எகிப்து தேசத்தில் வணிகன் போத்திபார் மனைவியின் காம இச்சைக்கு விலகினதால், அப்பாவியான யோசேப்பு சிறைக்கு கொண்டு போகப் பட்டார். தன்னுடன் சிறையிலிருந்த இருவரின் கனவுக்குப் பொருள் சொல்லி, அவர்களில் அரசருக்குமான பானபாத்திரக்காரன், எகிப்து அரசரின் கனவு கண்டு அர்த்தம் விளங்காமல் தவித்தான். சிறையிலிருந்த யோசேப்பு எகிப்து அரசரின் கனவில் நையில் நதியிலிருந்து கரையேறின எழு பசுக்கள் கொழுகொழுவானவை . ஏழு ஆண்டு செழுமையையும் பின்னர், கறையேறின எலும்பும் தோளுமான ஏழு பசுகள் பஞ்ச காலம் வரும் என்றும் விளக்கி, செழுமை காலத்தை பஞ்ச காலமாக்கும் என்று பொருள் சொல்லி யோசேப்பு எகிப்து அரசரின் பிரதிநிதியாகி செழுமை கால கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து பஞ்ச காலத்தில் களஞ்சிய தானியத்தை அரசே மக்களுக்கு விற்று அரசனை மிகப் பெரிய செல்வந்தராக ஆக்கியது.
 இவ்வாறு யோசேப்பு தனக்கு வந்த துன்பத்தை பொறுத்து தேவன் காட்டிய வழியில் நேர்மையாகச் சென்று எகிப்து மக்களை மட்டும் அல்ல, தன் அப்பா, அண்ணன்கள், தம்பியின் குடும்பத்தின் மக்களையும் காப்பாற்றிய வரலாறு வேதாகமத்தில் உள்ளது.
 தேவகுமாரனாகிய இயேசுவும் இப்பூமியில் நம்மை மீட்க மனித குமாரனாக வந்தார். நம்மை மீட்க இப்பூவுலகில் வாழ்ந்து ஓர் அப்பாவி போல் மனிதரிடம் இருந்தார். தமக்கு கொடுத்த கொடுமை, துன்பத்தைப் பொறுத்துக்கொண்டார். நமது பாவம், சாபம் தண்டனை நீங்கி நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி சிலுவை சுமந்து கால்களிலும் கைகளிலும் நெஞ்சிலும் காயம்பட்டு பரிசுத்த ரத்தத்தை சிந்தி பாவ மீட்பு பரிகாரியாக ஆனார். இந்த உபவாச காலத்திலும் இயேசு ஆண்டவரின் பாடுகளில் பங்கு கொண்டு உபவாசிப்போம்.
 - தே. பால் பிரேம்குமார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/யோசேப்புவை-உயர்த்திய-தேவன்-3118732.html
3118731 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, March 22, 2019 10:02 AM +0530 • எந்த உயிரிடமும் பகை பாராட்டாமை, 2. மன நிறைவோடிருத்தல், 3. ஒழுக்கத்தைக் கண் போன்று பாதுகாத்தல், 4.கபடமின்மை, 5. தவம் இயற்றுதல், 6. மனதையும் புலன்களையும் கட்டுதல், 7. உண்மையே பேசுதல், 8. தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு தானம் அளித்தல் ஆகிய இந்தக் குணங்களில் ஒவ்வொன்றும் பெரிய பெரிய வேள்விகளுக்குச் சமமாகும்.
- மகாபாரதம்
• மூடனுடைய பாவம் அவனிடமே பிறந்தது, அவனே படைத்தது. வைரம் மற்ற மணிகளை அறுப்பது போல, அவன் செய்த பாவமே அவனை அழித்துவிடும்.
- புத்தர்
• இந்த உலகம் எதிலிருந்து பிறந்து வளர்கிறதோ அதுவேதான் பிரம்மம். உலகின் தோற்றம், அது நிலைத்திருப்பது, பிறகு அழிந்து போவது என்ற எல்லாவற்றையும் நடத்தும் சக்தியே பிரம்மம் எனப்படுவது.
- பிரம்ம சூத்திரம்
• முன்பிறவியில் பெறப்பட்ட தத்துவ ஞானத்தாலும், சிறப்பான தர்மம் செய்து பெற்ற பயனின் விளைவாகவும் சமாதி நிலை தோன்றும்.
- நியாய தரிசனம்
• யோகம் என்பது சித்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல்; அதாவது மனதில் எழும் எண்ணங்களை அடக்கியாளுதல் ஆகும்.
- யோக தரிசனம்
• சுகத்திலிருந்துதான் வேதனை பிறக்கிறது. சுகத்திலிருந்துதான் பயம் பிறக்கிறது. சுகத்திலிருந்து விடுபட்டவன் வேதனையையோ பயத்தையோ அறியான்.
- புத்தர்
• எங்கே உழைப்பு இகழப்படுகிறதோ, அங்கே அழிவும் மரணமும் தேக்கமும் உண்டாகி, வளர்ச்சி கடினமாகிறது. எங்கே உழைப்பு விரும்பிப் போற்றப் பெறுகிறதோ, அங்கே வாழ்வும் ஒளியும் வளர்ந்து உழைப்பே இனிமையாக மாறுகிறது.
- சுவாமி ராமதீர்த்தர்
• பரம்பொருளான பரமாத்மாவிடம் குறை எதுவும் கிடையாது. அது குறைபாடு எதுவும் அற்றும், எல்லா தெய்விகக் குணங்களும் பொருந்தியும் விளங்குகிறது.
- பிரம்ம சூத்திரம்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3118731.html
3118730 வார இதழ்கள் வெள்ளிமணி தொழுகை அழைப்பு - அதான் DIN DIN Friday, March 22, 2019 10:00 AM +0530 மாநபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து குன்றுகள் சூழ்ந்த அந்த பாலைவன நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் குடியேறினர். குடிசைகள் கட்டி வாழ்ந்தனர். அவர்கள் தொழுகை நேரம் அறிந்து கூடி தொழ கூடுவதற்கு ஏற்பாடு செய்ய நிர்ப்பந்தம் உண்டானது. நீதர் நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஆலோசனை சேட்டார்கள்.
 சில தோழர்கள் கொடியை நட்டு தொழுகை நேரத்தை நினைவு படுத்தலாம் என்றனர். கொடி நடப்பட்டிருப்பதைத் தேடி வந்து பார்ப்பது எளிதன்று என்று ஏற்கபடவில்லை. மணியடித்து அறிவிக்க சொன்ன ஆலோசனையும் கிறித்துவத்தில் கடைபிடிக்கப்படுவதால் நடைமுறையில் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஏற்கப்படவில்லை. சிலர் கொம்பு வைத்து குழலூதுவது போல் சங்கு ஊத உரைத்தனர். யூத முறை என்பதால் இதுவும் ஏற்படையதல்ல என்று தள்ளப்பட்டது. நெருப்பு மூட்டி நினைவுபடுத்துவது மஜூஸிகளின் வழக்கம் என்பதால் நிராகரிக்கப்பட்டது. உமர் (ரலி) உரைத்தபடி குரல் வளமுடைய பிலால் (ரலி) தெரு தெரு, பகுதி பகுதியாக சென்று மக்களைக் கூடி தொழ வருமாறு கூவி அழைத்தார். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. இதனை உறுதிபடுத்துகின்றனர் இமாம் நவவீ (ரஹ்) இமாம் இப்னு ஹஜர் (ரலி)
 ஒருநாள் இரவு உமர் (ரலி) அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) முதலிய நபி தோழர்கள் இன்று சொல்வது போல் பாங்கு- அதான் அறிவிப்பதைக் கனவில் கண்டார்கள். அம்முறையே நடைமுறை படுத்தப்பட்டது. வைகறை- சுபுஹ் தொழுகை அழைப்பில் தூக்கத்தைவிட தொழுகை மேலானது என்னும் அதிக அழைப்பைச் சேர்த்து 17 சொற்றொடர்களும் மற்ற தொழுகை அழைப்புகளில் 15 சொற்றொடர்களும் மற்ற தொழுகை அழைப்புகளில் 15 சொற்றொடர்களும் சொல்லப்படும். இந்த தொழுகை அழைப்பிற்கு அரபியில் அதான் என்றும் பார்சியில் பாங்கு என்றும் பெயர். அதான் சொல்பவருக்கு முஅத்தின் என்றும் பெயர். அல்லாஹ்வின் பக்கம் அழைத்து நற்செயல் புரிந்தவரை விட அழகிய சொல்லுடையவர் யார் என்ற எழில் மறையின் 41-33 ஆவது வசனப்படி முஅத்தின் நற்சொல் கூறி அல்லாஹ்வைத் தொழ அழைத்து நற்செயல் புரிகிறார்.
 உளு இன்றி பாங்கு கூறுவது கூடாது என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ. பாங்கு சொல்பவர் ஈர்க்கும் இனிய குரலில் உரக்க பாங்கு உரைக்க வேண்டும். நேரம் அறிந்து உளு என்னும் உடல் தூய்மை செய்து பேணுதலோடு பேராளன் அல்லாஹ்வைப் பணிந்து பாங்கு சொல்ல வேண்டும்.
 அதான் குறித்து அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள் (1) பாங்கு ஒலித்து தொழுகைக்கு அழைப்பதில் உள்ள சிறப்புகளையும் சீரான ஏராளமான நன்மைகளையும் அறிந்தால் மக்கள் அதான் அழைப்பு கூற போட்டியிடுவர். நூல்- புகாரி, முஸ்லிம். (2) தொழுகைக்காக பாங்கு ஒலிக்கப்படும் பொழுதும் அதன்பின் கூட்டு (ஜமாஅத்) தொழுகை துவங்குவதற்கான இகாமத் கூறப்படும் பொழுதும் சாத்தான் புறமுதுகு காட்டி அவ்வொலிகள் அவன் காதில் விழாத தொலைவிற்கு ஓடி ஒளிகிறான். அதன்பின் தொழுபவர் உட்பட அனைவரின் அகத்திலும் அலைபாயும் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி உளைச்சலை உருவாக்குகிறான். நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத் , நஸஈ. (3) நாங்கள் நந்நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்பொழுது பிலால் (ரலி) பாங்கு முழங்கினார்கள். பாங்கு முடிந்ததும் பாச நபி (ஸல்) அவர்கள் எவர் இவரைப் போல உறுதியுடன் பாங்கு முழங்குகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார். நூல்- நஸஈ. (4) பாங்கு ஒலிப்பவரின் ஒலி எவ்வளவு தொலைவு கேட்கிறதோ அவ்வளவு தொலைவு அளவிற்கு பாங்கு உரைப்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அத்தொலைவு அளவில் உள்ள பசுமையான உலர்ந்தன அனைத்தும் சாட்சி பகரும். நூல்- அபூதாவூத், நஸஈ. (5) ஒருவர் இருபது ஆண்டுகள் பாங்கு சொன்னால் அவரை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கச் செய்வான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடு இரவுக்குப் பிறகு தொழும் தஹஜ்ஜுத் தொழுகைக்குப் பிலால் (ரலி) அவர்களும் வைகறை சுபுஹு தொழுகைக்கு இப்னு மக்தூம் (ரலி) அவர்களும் பாங்கு கூறினார். இன்றும் மதினாவிலும் மக்காவிலும் தஹஜ்ஜுத் தொழுகைக்குப் பாங்கு சொல்லப்படுகிறது.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/தொழுகை-அழைப்பு---அதான்-3118730.html
3118729 வார இதழ்கள் வெள்ளிமணி பினாங்கு தண்ணீர்மலை முருகன் DIN DIN Friday, March 22, 2019 09:59 AM +0530 தமிழர்களின் கோயில்கள், அயல்நாடுகளிலும் விரிந்து பரந்துள்ளன. தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அந்த வகையில், மலேசிய நாட்டின் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது, பினாங்கு மாநிலத்தில் உள்ள, தண்ணீர்மலை முருகன் திருக்கோயில் ஆகும்.
 பினாங்கு தீவு
 மலேசிய நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக விளங்குவது பினாங்கு தீவு ஆகும். மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி, 305 சதுர கி.மீ. பரப்புள்ளது. இங்கு 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இங்குதான் தண்ணீர்மலை முருகன் ஆலயம் உள்ளது.
 இயற்கை வளம் கொண்ட இந்த தீவில், தண்ணீர்மலை முருகன், பினாங்கு மலை, தேசிய பூங்கா, கேக் லோக் சி புத்தர் ஆலயம், செபராங் பிறை, ஜார்ஜ் டவுன் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
 தமிழர்கள் குடியேற்றம்
 ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்காலம் முதல் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது. கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என புகழப்படும் சோழமன்னன் புலி கொடி நாட்டி வென்ற கடாரம் என்ற ஊர், பினாங்குத்தீவின் அருகேயுள்ள, கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது.
 கி.பி. 1786 -இல் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர் குடியேற்றம் தொடங்கியது. 1802 -இல் தமிழகத்துப் போர்க் கைதிகள் இத்தீவை வளமாக்கும் விதமாக கப்பலில் நாடு கடத்தப்பட்டு தீவின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர். நிதி நிறுவனங்கள் அமைத்து நிதி நிர்வாகம் மேற்கொண்ட நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாகவும் பினாங்கு விளங்குகின்றது. பிறகும் ஏராளமான தமிழர்கள் கப்பல் மூலம் குடியமர்த்தப்பட்டனர். மருதுபாண்டியனின் மகன் துரைசாமி, பினாங்கு தீவிற்கு கடத்தப்பட்டதை வரலாறு கூறுகிறது.
 தண்ணீர்மலை முருகன்
 தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போன்று, மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை: பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை ஆகும். பினாங்கு தண்ணீர்மலை முருகன்ஆலயத்தில் தைப்பூச விழாக் காலத்தில், தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
 தலவரலாறு
 கி.பி. 1810 -இல் நகரத்தார் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி கி.பி. 1854- இல் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதைய தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயத்தை எழுப்பினர். இது தவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழைப் பரவச் செய்து வருகிறது.
 தொடக்க காலத்தில் அமைச்சர்களுக்கு இணையாகப் புகழ்பெற்று வந்த செல்வந்தரான ஆறுமுகம் பிள்ளை, தண்ணீர் மலை முருகன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்துள்ளார். இதே போல, பினாங்கு மலையுச்சியின் கொடிமலை முருகன் ஆலயமும் இவரால் அமைக்கப்பட்டது.
 என்றாலும், தண்ணீர்மலை முருகன், கி.பி. 1991 -ஆம் ஆண்டிற்குப் பிறகே வெளியுலகிற்குப் பெரிய அளவில் தெரியவந்தது. அதற்கு முன்பு, பாலதண்டாயுதபாணி இளைஞர் குழுவின் மூலம் நில அளவையாளர் குவனராஜீ, டத்தோ இராஜ சிங்கம் மூலமாக குடமுழுக்கு செய்யும் பணி தொடங்கியது. இதற்கு இந்து அறப்பணி வாரியமும், புதிய கோயில் எழுப்ப முன்வந்தது. இதற்கு இம்மாநில துணை முதல்வர் டாக்டர். இராமசாமியும் உதவிபுரிந்தார்.
 மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி தேர்வு செய்யப்பட்டது. சமன்படுத்தப்பட்ட அங்கே 513 படிகளைக் கொண்ட பிரம்மாண்ட ஆலயம், சுமார் 400 அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரமும் கொண்டு அமைக்கப்பட்டது. இம்மலையின் இடைப்பகுதியில் ஐயப்பன் ஆலயமும் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டது.
 எளிதாக மலையேற சிறுசிறு படிகள் அமைந்துள்ளன. இடையிடையே தண்ணீர் ஊற்றுகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. மலையடிவாரத்தில் கணேசர் ஆலயம் நம்மை வரவேற்கிறது. பினாங்கில் வாழும் தமிழர்களின் காவல் தெய்வமாகவும் , தமிழர்களின் இஷ்டதெய்வமாகவும் விளங்குவது இந்த முருகனின் சிறப்பை உணர்த்துகிறது.
 தண்ணீர்மலை
 பினாங்கு நகரின் உயரமான மலையே தண்ணீர் மலையாகும். தண்ணீர் ஊற்றுகள் நிறைத்துள்ளதால் இம்மலைக்கு இப்பெயர் உண்டானது. உச்சியில் உள்ள முருகப்பெருமான் நின்ற கோலத்தில் எழிலான வடிவில் திருச்செந்தூர் முருகனை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளார்.
 மலேசியாவில் தைப்பூசத்தன்று இக்கோயிலுக்கு கோலாலம்பூர் கூட்டரசு, சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலத்தற்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இசுலாமிய நாட்டில் அமைந்துள்ள அரசுகள், இந்து சமயத்திற்குத் தரும் மரியாதையாக இது போற்றப்படுகிறது. தைப்பூசத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், ஜாதி மத பேதமின்றி கூடி வழிபடுவது, கண்கொள்ளாக் காட்சியாகும்.
 அமைவிடம்: மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரில் இருந்து வடமேற்கே 295 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது. பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளது.
 - பனையபுரம் அதியமான்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/பினாங்கு-தண்ணீர்மலை-முருகன்-3118729.html
3118728 வார இதழ்கள் வெள்ளிமணி மன்னரைக் காத்த மடாதிபதி! DIN DIN Friday, March 22, 2019 09:57 AM +0530 மத்வ சம்பிரதாயத்தில் மூன்று ஆசார்யபுருஷர்கள் முனித்ரயர்கள் (மும்மூர்த்திகள்) என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் மத்வர், ஜெயதீர்த்தர் மற்றும் வியாஸராஜர். கிருதயுகத்தில் அவதரித்த ஸ்ரீபிரகலாதரே மீண்டும் கலியுகத்தில் வியாஸராஜராகவும், பின் ராகவேந்திரராகவும் அவதாரம் செய்ததாக சொல்வது உண்டு.
 ஸ்ரீ வியாஸராஜர், அவர் காலத்தில் வெறும் மடாதிபதியாக மட்டும் திகழவில்லை. விஜய நகர சாம்ராஜ்யத்தின் ராஜ குருவாக இருந்து தலைசிறந்த ராஜதந்திரியாக, சமூக சீர்திருத்தாளராக, ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டவராகவும் இருந்தார். இவரின் அற்புத மகிமைகள் இவருடைய இளமைக் காலத்திலேயே வெளிப்படத் தொடங்கியது. ஸ்ரீ பாதராயர் என்ற இவர் குருவின் போதனைகளும், காஞ்சி உட்பட பல இடங்களுக்கு செய்த தேச சஞ்சாரங்களும் இவரின் புகழுக்கு மேன் மேலும் மெருகூட்டியது.
 திருமலையில் வேங்கடவனுக்கு சுமார் 12 ஆண்டு காலம் பூஜை கைங்கர்யத்தை மிகவும் சிரத்தையுடன் செய்தவர். பல அபூர்வ கிரந்தங்களையும், நூல்களையும் இயற்றியதோடு மட்டுமல்லாமல், கீர்த்தனைகளையும் புனைந்துள்ளார். "கிருஷ்ணா நீ பேக பாரோ' என்ற பிரபலமான பாடல் இவரால் இயற்றப்பட்டதே. இவருடைய பாட்டிற்கும், தாளத்திற்கும் இவர் பூஜை செய்யும் ஸ்ரீ வேணு கோபாலனே விக்ரக வடிவிலேயே நடனமாடிய தகவல்களும் உண்டு. ஆஞ்சநேய பக்தரான இவர் தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 732 ஆஞ்சநேய சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார். இவரால் வெறும் கரிக்கோட்டினால் வரையப்பட்ட ஆஞ்சநேயர் ரூபமே நாளடையில் புடைப்புச் சிற்பமாக ஆனதாகக் கூறுவர். மகாமேதைகளான, ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ கனகதாஸர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ விஜயீந்திரர் போன்றோர்களும் கூட இவரிடம் ஆசிபெற்று பல அரிய விஷயங்களை அறிந்து கொண்டனராம்.
 இவர், ஒரு சமயம் (1521- இல்) விஜயநகர சமஸ்தானத்தில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரிடம் ராஜகுருவாக பணியாற்றிய தருணத்தில், மன்னரின் ஜாதகப்படி ஒரு குறிப்பிட்ட அமாவாசை நாளில் "குஹியோகம்' என்னும் ஒரு வகை தோஷத்தினால் ராஜாங்கத்திற்கும், ராஜாவிற்கும் பாதிப்பு ஏற்பட்டு பேராபத்தில் முடியும் என்பதை தெரிந்து கொண்டார். அது மிகப்பெரிய கண்டமாகும். அதனை எதிர் கொள்வதற்கு ஓர் உபாயம் மேற்கொண்டார். அதன்படி, அந்த கரிநாளன்று ஸ்ரீ வியாஸ தீர்த்தரை தனது ராஜபீட சிம்மாசனத்தில் அமரச் செய்து அனைத்தையும் மன்னர் தானமாக தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்.
 குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பெரும் தீப்பிழம்பானது சிம்மாசனத்தை நெருங்க ஆரம்பித்தது. (சர்ப்ப ரூபத்தில் வந்தது என்றும் ஒரு சிலர் கூறுவர்) உடனே ஸ்ரீ வியாஸ தீர்த்தர் தனது காவிமேல் வஸ்திரத்தை எடுத்து சிம்மாசனத்தில் வீசி தான் இறங்கிக் கொண்டார். அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலானது. ராஜாவை அழிக்க வந்த வீர்ய சக்தியும் பரிபூர்ணமாக களையப்பட்டது. மீண்டும் கிருஷ்ணதேவராயரை சிம்மாசனத்தில் அமர்த்தி அரசனாக்கி தனது யாத்திரையை மேற்கொண்டார். இந்நிகழ்விற்கு பின்னரே ஸ்ரீவியாஸ தீர்த்தர், ஸ்ரீ வியாஸராஜர் என அழைக்கப்பட்டார்,
 கர்நாடக மாநிலத்தில் கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி தாலுக்காவில் உள்ள ஆனேகுந்தேயில் உள்ள நவபிருந்தாவனத்தில் நடுநாயகமாக இவரது பிருந்தாவனம் உள்ளது. ஸ்ரீ வியாஸராஜ குருஸார்வபௌமரின் 480 -ஆவது ஆண்டு ஆராதனை மகோத்சவம், மார்ச் 23, 24, 25 தேதிகளில் பலவித ஆன்மீக நிகழ்வுகளுடன், ஸ்ரீ வியாஸராஜ மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஸ்ரீ வித்யாஸ்ரீஸதீர்த்தஸ்ரீ பாதங்களவர்களின் ஆணைப்படி அவரின் அருளாசியுடன் விசேஷமாக நடைபெறுகின்றது.
 ஸ்ரீ வியாஸராஜரின் மூலப்பிருந்தாவன சந்நிதியில் நடைபெறும் இந்த வைபவங்களில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வதுடன் ஸ்ரீவியாஸராஜ மடத்தின் சார்பில் நவபிருந்தாவனம் உட்பட பல முக்கிய கிளைமடங்கள் உள்ள சில இடங்களில் மேற்கொள்ளவிருக்கும் யாத்ரிபவன் (தங்கும் விடுதி) கட்டுமான பணிக்கும் பக்தர்கள் உதவிடலாம்.
 தொடர்புக்கு: 97891 72197 / 99620 14684.
 - எஸ்.வெங்கட்ராமன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/மன்னரைக்-காத்த-மடாதிபதி-3118728.html
3118727 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, March 22, 2019 09:52 AM +0530 பன்னிரு திருமுறை இசைவிழா
 "அரனருள்' சார்பில் நடைபெறும் பதினாறாம் ஆண்டு பன்னிரு திருமுறை இசை விழா, மார்ச் 25 - இல் தொடங்கி ஏப்ரல் 5 வரை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சமயப் பிரசார நிலைய வளாகத்தில் நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் வேத சிவாகம புராண இதிகாச தோத்திர சாத்திர சைவசமயக் கருத்தரங்குகளும் இடம் பெற்றுள்ளன. திருமுறையே சிவமாகக் கொண்டு நடைபெறும் இத்தெய்வீக இசை விழாவில் பக்தர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்.
 தொடர்புக்கு: சாமி. தண்டபாணி - 9444156335.
 ஸ்ரீ யோக நரசிம்மர் பூஜை
 சென்னை, மேற்கு முகப்பேர் அருள்மிகு கனகதுர்க்கா திருக்கோயிலில் ஸ்ரீ யோகநரசிம்ம சுவாமிக்கு சுவாதி நட்சத்திர தினம் (24.03.2019, ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையும்; மீண்டும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கலச அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றது. காவேரி புண்ணிய தீர்த்தம் ஒவ்வொரு மாதமும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையிலிருந்து கொண்டு வரப்பட்டு அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
 தொடர்புக்கு: 044 2653 6606/ 94447 77811.
 திருப்பணி
 நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பாண்டூர், விக்ரமன் ஆனந்தகுடி கிராமத்தில் தொன்மை சிறப்பு மிக்க அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஆனந்த நடனபுரீஸ்வரர் ஆலயம் மிகவும் சிதலமடைந்து இருந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் முழுமையான ஆலயமாக புனரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கர்ப்ப கிரகம், மகாமண்டபம் வரை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி தொடர்ந்து நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் இச்சிவாலய திருப்பணியில் பங்குகொண்டு சிவனருள் பெறலாம்.
 தொடர்புக்கு: சிவாலய சேவா சங்கம் - 69555 92303.
 ******************
 மன்னார்குடி, கீழப்பாலம், மந்தக்காரத் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காத்தாயி அம்மனுக்கு புதிதாக கோயில் அமைத்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், பரிவார சிலைகள் அமைக்கும் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம்.
 தொடர்புக்கு: 99655 26557.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/நிகழ்வுகள்-3118727.html
3118726 வார இதழ்கள் வெள்ளிமணி அரனைப் போற்றும் அற்புதத் திருவந்தாதி! Friday, March 22, 2019 09:51 AM +0530 சிவபெருமானின் புனிதத் திருவாயால் "அம்மையே" என்று அழைக்கப் பெற்ற திருத்தொண்டர், காரைக்கால் அம்மையார் ஆவார். புனிதவதியார் என்ற இயற்பெயர் பெற்ற அம்மையார், பரமதத்தன் என்ற வணிகரை மணந்து வாழ்ந்த போது, இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி விட்டது. பரமதத்தன் புனிதவதியாரை தெய்வ அம்சமாகவே கருதினான். எனவே புனிதவதியார் இல்லறவாழ்வினை துறக்க, பேய் வடிவனை தனக்கு தருதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டி பெற்றார். இறை அருள்பெற்ற அம்மையார் தன்னை ஆட்கொண்ட இறைவனைப் போற்றி திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் மற்றும் திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய இருநூல்களையும் பாடி அருளினார். இதில் பின்னர் சொல்லப்பட்ட இரண்டும் தமிழ் இலக்கியத்தின் இரு பொக்கிஷங்கள். சைவத்திருமுறைகளில் இந்த இரண்டு நூல்களும் பதினோராம் திருமுறையைச் சேர்ந்தவை. காரைக்கால் நகரத்தைப் போல "ரத்னசபை' எனப்போற்றப்பெறும் திருவாலங்காடு திருத்தலமும் அவரால் பெருமை பெற்றது.
 சிவபெருமானின் அருள்பெற்ற அம்மையார் முதன் முதலாகப்பாடி அருளியது "அற்புதத் திருவந்தாதியாகும்'. 101 பாடல்களைக் கொண்டது. மிகவும் சிறப்பானது. ஓதுவதற்கு எளிமையானது சிவஞானத்தின் இயல்பினை தெளிவாக விளக்குகிறது. இப்பாடல்களில் சிவபெருமானின் திருக்கோலம், திருமேனி, ஆடை அணிகலன்கள், ஆர்வம், ருத்ராட்சம், இறைவனது திருவடி சிறப்பு, சிவபெருமானின் லிங்கோத்பவ மூர்த்தி. திரிபுராந்தக மூர்த்தி, அர்த்த நாரிவடிவம், ஹரிஹரன்வடிவம், அட்ட மூர்த்தி வடிவம், காலசம்கார மூர்த்தி போன்ற வடிவங்களின் சிறப்பும் கூறப்படுகிறது. இறைவனின் தாண்டவத்தின் வேகம் "திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு (பாடல் 77)" பற்றி கூறப்படுகிறது. இறைவனது திருவடிகளை "நாமாலை சூடியும், பொன்னடிக்கே பூமாலை கொண்டு வழிபட்டால் வினை என்னும் இருள் அணுகாது (பாடல் 87) என்று போற்றுகின்றார்.
 அற்புதத் திருவந்தாதியில் வரும் "பிறந்து" என்று சொல்லே, அந்தாதியின் துவக்கப்பாடலில் முதலில் வருவது சிறப்பாகும். பூச்சரத்தை இரு முனைகளை இணைத்தால் மாலை போன்று அமையும். அம்மையாரின் அந்தாதி பாடல்களும் வட்டமாக (மண்டலித்தலாக) வருவது தனிச்சிறப்பாக அமைகிறது. காரைக்கால் அம்மையாரின் திருநட்சத்திரம் மார்ச் 23 (பங்குனி-9) அன்று வருகிறது. அந்நாளில் அவர் அருளிய அந்தாதி பாடல்களை பக்தியோடு துதித்துப் போற்றினால் இறைவன் அருளை எளிமையாகப்பெறலாம்.
 - கி.ஸ்ரீதரன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/22/அரனைப்-போற்றும்-அற்புதத்-திருவந்தாதி-3118726.html
3114358 வார இதழ்கள் வெள்ளிமணி பகைவரையும் நண்பராக்கும் வண்ண பண்டிகை! DIN DIN Friday, March 15, 2019 10:23 AM +0530 அன்பின் உச்சத்திலிருந்த சதி தேவியை இழந்த சிவனார்; அவள் உடலை தூக்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். நாராயணன் உலக நன்மை கருதி தன் சுதர்ஸன சக்கரத்தால் சதியின் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார். அவளது உடல் துண்டானது இந்திய மண்ணின் பல பாகங்களில் விழுந்து 64 சக்தி பீடங்களாகின்றது. இதன் பின் உலகின் நாயகன் மஹாதேவன் யோக நித்திரையில் அமர்ந்து விடுகிறார். அதனால் அழிக்கும் தொழில் நின்று விடுகிறது. இவருக்காகவே பிறந்து வளர்ந்து வரும் சதி தேவியின் மறுபிறப்பான பார்வதி தேவி, இவரை அடைய தவம் இருக்கிறாள்.
 சிவனாரது நித்திரை கலைந்தால் தான் உலக இயக்கங்கள் சமனடையும் என்பதை உணர்ந்த அனைத்து தேவர்களும் மன்மதனின் உதவியை நாடினர். மன்மதனும் இதனால் சிவனாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது தெரிந்தும் இதற்கு உடன்பட்டான். சிவனின் யோகநித்திரையை கலைக்க காமன் தன் அம்பினை அவர் மீது பயன்படுத்தினான். அதன் விளைவாக தன் மூன்றாம் கண்ணினை திறந்த மஹாதேவரால் அந்த இடத்திலேயே எரிக்கப்பட்டான். ஆனால் மன்மத அம்பின் தாக்கத்தால் கட்டுண்ட மஹாதேவருக்கு; பார்வதி மீது காதல் பிறந்ததால் சிவனார் அவளை மணந்து தன் சுயநிலையை அடைந்தார். பின் ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை உயிர்ப்பித்தார். காமனை எரித்த இந்த நாளே நம் தமிழகத்தில் "காமன் பண்டிகையாக" கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காமதகனம் என்ற நிகழ்ச்சி கிராமங்களில் இரவு முழுவதும் கூத்துக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
 பண்டைய காலத்தில் ஆரம்பித்த இந்த விழா; காலத்திற்கேற்ப பலப்பல மாற்றங்களை ஏற்று இன்றும் தொடர்கிறது. தமிழ் பங்குனி என்றழைக்கப்படும் பல்குனி மாதத்தில் முழுநிலவன்று மாலை ஆரம்பித்து இரண்டு நாள்கள் நடைபெறும். அந்தந்த வருடத்தின் கடைசி பெளர்ணமி மற்றும் அடுத்து வரும் நாளில் வசந்த ருது ஆரம்பிப்பதால்; வெவ்வேறு காரணங்களுக்காக இந்த விழா வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடினாலும், இந்த நாள் சந்தோஷத்தின் தொடக்க நாளாக (நல்ல தட்ப வெப்ப நிலை) உள்ளது.
 தென் இந்தியாவில் மாசி பெளர்ணமியில் காமன் பண்டிகை என்று தமிழகத்திலும், காம தகனம் என்று ஆந்திரத்திலும் பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். பொதுவாக ஹோலி பண்டிகை என்பது வட இந்தியர்கள் ஒருவர் மீது ஒருவர் சாயப்பொடிகளை தூவிக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொள்வார்கள் என்பதோடு அந்தப் பண்டிகையை பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம். அதைத்தாண்டி மிக அருமையான சமுதாய நல்லிணக்கம் இந்த ஹோலி பண்டிகையில் உள்ளது.
 சக்தி வாய்ந்த புராதனமான சநாதன தர்மத்தின் பின்னணியைக் கொண்ட மிக முக்கியமான விழாவாகும் இந்த ஹோலி. காதல் நாயகன், மாயக்கண்ணனின் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், பர்சனா மற்றும் நந்த்காவுன் ஆகிய ஊர்களில் கிருஷ்ணனை நினைத்து ரங்கபஞ்சமி என்று கொண்டாடுகிறார்கள். அந்த பக்கத்தில் ஒரு செவிவழிச்செய்தி சொல்கிறார்கள். மாயக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் தான் இவ்வளவு கருநிறமாக இருக்கின்றேனே; அனைத்து கோபிகைகளும், ராதை உள்பட செக்கச்செவேலென்று அழகாய் உள்ளார்களே; எனக்கு வெளியில் செல்ல கூச்சமாய் உள்ளது என்று கவலைப்பட்டான். தாயின் குணம் தான் தெரியுமே; தன் குழந்தை தான் உலகிலேயே அழகன் என்பார்கள்; அதற்கு யசோதையும் என்ன விதிவிலக்கா! கவலைப்படாதே கண்ணா; ஒன்று செய்வோம் அனைவர் மீதும் கலர் பொடியை தூவி விட்டால் உன்னைப்போல் அனைவரும் மாறிவிடுவார்கள் என்றாளாம் அந்த அன்னை. அப்படி ஆரம்பித்தது தான் இந்த கலர் பொடி தூவும் விழா.
 இன்னொரு செய்தியும் கூறுகிறார்கள். ஹிரண்யகசிபுவின் சகோதரி பெயர் ஹோலிகா; அவளுக்கு தீயின் தாக்கம் ஒன்றும் செய்யாது என்ற வரத்துடன் ஒரு கம்பளியையும் பெற்றாள். ஹிரண்யகசிபு, பிரஹலாதனை கொல்வதற்கு பல முயற்சியெடுத்தும் அவன் சாகாததால்; தன் சகோதரி ஹோலிகாவை அனுப்பி அவள் மடியில் அமர்த்திக் கொள்ளச்செய்து பிரஹலாதனை மட்டும் தீயினால் அழிக்க முயற்சித்தார்கள். அவளும் சென்று பிரஹலாதனை கட்டி அணைத்தாள். பிரஹலாதன் கண்ணை மூடிக்கொண்டு நாராயணனை தியானிக்க; அப்போது எறிந்த தீப்பிழம்பில் ஹோலிகா மாண்டாள். அவள் மாண்ட தினத்தை அவள் பெயரால் "ஹோலி" என்று கொண்டாடுகிறோம்.
 வட இந்திய கிராமங்களில் நம்மூர் போகிப் பண்டிகையைப் போல் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஊரையே சுத்தம் செய்வார்களாம். அப்போது வீட்டிலுள்ள, தெருவிலுள்ள பூச்சி பொட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட, மஞ்சள், சுண்ணாம்பு, படிக்காரம் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகளை ஓர் அண்டாவில் கலக்கி வரும் வண்ண நீரினை ஊரிலுள்ள அனைவர் மீதும் பீய்ச்சி அடிப்பார்கள். இது ஒரு விஷ முறிவு நடவடிக்கை. இந்த உள் நோக்கம் மறைந்து தற்போது கலர் பொடியினை ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொண்டு ஹோலி விழாவாக மறுவி விட்டதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.
 இந்த வருடம், 20.03.2019 புதன் அன்று மாலை ஆரம்பிக்கப்பட்டு 21.03. 2019 வியாழன் அன்று இந்த ஹோலிப்பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படுகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/பகைவரையும்-நண்பராக்கும்-வண்ண-பண்டிகை-3114358.html
3114357 வார இதழ்கள் வெள்ளிமணி திருத்தொண்டர் பெருமை சேர்க்கும் அறுபத்துமூவர் திருவிழா! DIN DIN Friday, March 15, 2019 10:22 AM +0530 சிவபெருமான் மீது ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த 63 சிவதொண்டர்களின் சரித்திரத்தைக் கூறுவது, தெய்வத்திரு சேக்கிழார் இயற்றிய, பன்னிரண்டாவது சைவத்திருமுறை நூலான பெரிய புராணம். இந்த சிவ தொண்டர்களே நாயன்மார்களெனப் போற்றப்படுகின்றனர்.
 உலகம் உய்யவும், சைவம் தழைத்து ஓங்கவும், பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தீந்தமிழ்ப் பாடல்களால் அமையப்பெற்ற இந்நூல், தில்லை அம்பலத்தரசனே அடியெடுத்துக் கொடுத்த பெருமை உடையது என்றால், அந்த சிவனடியார்களின் பெருமை புரிந்து கொள்ளலாம். இந்த அடியார்களைப் போற்றும் வகையிலும், அவர்களின் பெருமையை அடுத்த தலைமுறைகள் புரிந்து கொள்ளவும், தமிழகத்தின் பல திருக்கோயில்களில் அறுபத்து மூவர் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 அவ்வண்ணமே தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் சிறப்புற்று விளங்கும் மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் உறையும் திருக்கோயிலிலும் அறுபத்து மூவர் உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழாவின் ஓர் அங்கமாகக் கொண்டாடப்படுகிறது.
 மயிலாப்பூர் என்பதே மயிலை என்று மருவியது. "மயிலையே கயிலை கயிலையே மயிலை'"என்ற சொல் வழக்கு இத்தலத்தின் பெருமையை விளக்கும். மயில்+ஆர்ப்பு + ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானது. ஒரு காலத்தில், மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடமாக இது இருந்தது. ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட அற்புதமான திருத்தலம். எனவே மயூராபுரி, மயிலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
 இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழா இவ்வாண்டு, 11.3.2019 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா 17- ஆம் தேதியும், அதற்கு மறுநாள் 18- ஆம் தேதி, பங்குனி விழாவின் சிகரமாக விளங்கும் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறுகின்றது.
 அன்று காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள, பூம்பாவையின் அஸ்தி கலசத்துடன் சிவநேசர் செட்டியாரும் வர, ஓதுவா மூர்த்திகள் - மட்டிட்ட புன்னையங் கானல் - திருப்பதிகத்தினை மனமுருகப் பாடுவர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தீபாராதனை நிகழும். இறுதிப்பாடலான பத்தாம் பாடலின் போது அஸ்தி கலசமாகப் பாவிக்கப்பட்ட மலர் குவியலில் இருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுகின்றாள். சுற்றி நிற்கும் பக்தர்கள் மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.
 அன்று மாலையில் அறுபத்து மூவர் ஆனந்தப் பெருவிழாவில் விநாயகர் முன் செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் அருள்மிகு கபாலீஸ்வர்-கற்பகவல்லியும், வள்ளி, தேவயானியுடன் முருகப் பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர். அவர்களுடன் - திருவள்ளுவர் வாசுகி, முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரெளபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் - என பலரும் சேர்ந்து கொண்டு இவ்விழாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
 இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கு வருகைதரும் பக்தர்களின் பசியார, பல தர்ம ஸ்தாபனங்களும், அடியார்களும், ஆங்காங்கே நீர் மோர், குளிர்பானங்கள், மதிய உணவு, இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கி, ஆனந்த கோலாகலமாக திருவிழா நிநடைபெறுகின்றது. மார்ச் 20 -ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
 - ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/திருத்தொண்டர்-பெருமை-சேர்க்கும்-அறுபத்துமூவர்-திருவிழா-3114357.html
3114356 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 32 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, March 15, 2019 10:21 AM +0530 பற்பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட வேளாண் கையேடு, தென்னிந்தியாவைக் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறது: அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மாதங்களில், வடகிழக்குப் பருவக் காற்றால் சிறிதளவு மழை பெற்றாலும், தெற்கு தக்காணம் என்பது ஒரு பகுதிப் பாலைவனம்.
 வேகம் தடுத்த வெள்ளத் தடைகள்
 திருநெல்வேலி ஜில்லாவின் (அப்போதைய திருநெல்வேலி ஜில்லா -- இப்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்) கிழக்குப் பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றின் மழையைப் பெற்றாலும், பொதிகை மலைப் பகுதிகள் தென்மேற்குப் பருவக்காற்றின் பலனைப் பெறுவது, இந்த ஜில்லாவின் சிறப்பு. தென்மேற்குப் பருவக்காற்றின் மழை வரத்தானது, பொருநையில் பாயும். நதிப்பாய்வுதான் இந்தப் பகுதியின் விவசாயத்திற்குப் பிரதானம் என்பதையுணர்ந்த ஆட்சியாளர்கள், பொருநையின் குறுக்கே ஆங்காங்கே அணைத் தடுப்புகளை ஏற்படுத்தி, நதி நீரைப் பயன் கொண்டனர்.
 ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்குக் கடற்கரை வரையான 20 மைல் தொலைவுக்கான நிலங்களுக்கு நீர் தருவதற்கு வழி தேடினார், மாவட்டக் குடியியல் பொறியாளராகப் பணியாற்றிய கேப்டன் எல்.எச்.ஹார்ஸ்லி. 1855- இல் ஹார்ஸ்லி தீட்டிய திட்டம், பற்பல தடங்கல்களுக்குப் பின்னர், 1868-இல், ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டுத் திட்டமாக உருப்பெற்றது. இன்னும் பல தடங்கல்களைக் கண்டு, மொத்தம் 18 லட்சத்து 97ஆயிரம் ரூபாய் செலவினத்தில் 1889- இல் இந்த அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டது. (ஸ்ரீவைகுண்டம் திட்டம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும், இப்பகுதிகளின் நீர்த்தேவைகள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால்தான், மலைமீதே நீர்த்தேக்கம் உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகி, அதன் விளைவாக எழுந்ததே பாபநாசம் நீர்த்தேக்கத் திட்டம் – இதை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.)
 பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திருநெல்வேலி ஜில்லாவுக்கு வழங்கப்பட்ட நன்மைகளில் ஒன்று என்றே ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு வர்ணிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னதாகவே, திருநெல்வேலிச் சீமையின் பாண்டிய, நாயக்க, நவாப் ஆட்சியாளர்களும், ஜமீன்தார்களும், உள்ளூர் செல்வந்தர்களும், பொருநைக்கும் சிற்றாற்றுக்கும் குறுக்கே சில அணைத்தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பாவநாசத்திலிருந்து ஸ்ரீ வைகுண்டம் வரை, பண்டைய ஆட்சியாளர்களால் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டுகள் ஏழு. எந்தெந்த அணையினை யார் யார் கட்டினார்கள் என்பதற்கான தனி விவரங்கள் இல்லையாயினும், அனைவருமே அவ்வப்போது மராமத்துப் பணிகளை மேற்கொண்டு வேளாண் மேலாண்மைக்கு உதவியுள்ளனர். ஒவ்வொரு அணைக்கட்டிலிருந்தும் கால்வாய்கள் வழியாகவும் குளங்கள் வழியாகவும் நீரானது வயல்களுக்குக் கொண்டு செல்லப்படும் வகையில் இவை அமைக்கப்பட்டன.
 ஏற்றம் தருவதற்கான ஏழு அணைகள்
 பாவநாசத்திலிருந்து தொடங்கி, பழைமைமிக்க இந்த அணைகள் ஏழினையும் ஒவ்வொன்றாகக் காண்போம். அணைகளை நெருங்குவதற்கு முன்னதாக ஒரு சொல். பெரிய பெரிய அணைகளை மனதில் வைத்துக்கொண்டு, இவற்றையும் அந்த அளவில் எதிர்பார்க்கக்கூடாது. நான்கு அல்லது ஐந்தடி உயரத்திலிருந்து நீர் விழும் அளவுக்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் இவை. மழை வெள்ள நீர் பாய்ந்தோடிவிடாமல், அதனைத் தடுத்து, வேகத்தைக் குறைத்து, கால்வாய்களிலும் மடைகளிலும் திருப்பி விடுவதற்கு வசதியாகவும், நீரை மடைமாற்றிக் குளங்களில் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்காகவும் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் எனலாம். ஆகவேதான், இவற்றுக்கு, "அணை', "நீர்த்தேக்கம்' போன்ற வகை வகையான பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அணைக்கட்டு என்றவுடன் உயரமும் பிரம்மாண்டமும் கொண்ட சுவர்களை எதிர்பார்த்துச் செல்பவர்கள், "குட்டையாக இருக்கும் இதுவா அணை?' என்பார்கள். "அணை' என்பது தடுப்பு; "கட்டு' என்பது கட்டப்படுவது; "அணைக்கட்டு' என்பது தடுப்புக்காகக் கட்டப்படும் கட்டுமானம்.
 இந்த ஏழினுள், முதலாவதான தலை அணை, பாவநாசம் திருக்கோயிலுக்கு அருகிலே அமைந்துள்ளது. 17-18 -ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதி எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டால், இந்தத் தலை அணையின் முக்கியத்துவம் புரியும். பாவநாசம் அருவியிலிருந்து கீழே விழுந்து, சம தரையைப் பொருநையாள் தொட்டாள் (நினைவில் கொள்ளுங்கள், அப்போது பாபநாசம் அப்பர் டேம், லோயர் டேம் கட்டுமானங்கள் கிடையாது), இல்லையா? இவ்வாறு தரையைத் தொட்டவுடன், குறுகலான மலையிடுக்குகளுக்குள் புகுந்து பாறைப்பாதையில் ஓடினாள். மலையும் தரையும் சேரும் இடம் என்பதால், இந்தப் பகுதியில் சிறிய சிறிய பாறைகள் தனித்தனியாகவும் ஒன்றையொன்றுத் தொட்டுக்கொண்ட சங்கிலித் தொடர்களாகவும் கிடந்தன. பொருநையாளின் வெள்ள வேகத்தை இந்தப் பாறைகளே ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிடும் என்பதை உணர்ந்த நம்முடைய முன்னோர், பாறைகளுக்கு மேலும் வலு சேர்த்தனர். எப்படி? தனித்தனிப் பாறைகளையும் கற்களையும் கொண்டு வந்து இடுக்குகளில் வைத்து, தடுப்புச் சுவர் போல் உருவாக்கினர்.
 வெள்ளம் பெருக்கெடுத்தால் அதிவேகமாக ஓடிவரும் கூடுதல் நீரை வயல் பகுதிகளுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பயன்பாட்டுக்காக மடைமாற்ற இன்னொன்றையும் தொடர்ந்துவந்தவர்கள் செய்தனர். நதியின் பக்கவாட்டில் இருந்த பாறைகளிலும் தடுப்புப் பாறைகளில் சிலவற்றிலும் துவாரங்கள் செய்தனர். இந்த துவாரங்களில் பனை மரக் கம்பங்களைச் செருகினர். குறுக்குக் கம்பங்களுக்கு அருகே மரங்களை நட்டு வளர்த்து, சிறு சிறு காடுகளை உருவாக்கினர். அதாவது, நதியின் இரு மருங்கிலும் ஆங்காங்கே குறுங்காடுகள். இதனால், இந்த இடங்களில் நதியின் வேகம் மட்டுப்படும். மரங்களைச் சுற்றிலும் நீர் சேகரமாகிச் சுழலும். இங்கிருந்து கால்வாய்களை வெட்டிவிட்டு, மண்டியிட்டுச் சுழலும் நீரைக் கால்வாய்களுக்குள் மடைமாற்றினர். மரங்கள் இருப்பதால், நதி நீர் நிலத்துக்குள்ளும் இறங்கும்; நிலத்தடி நீர் சேகரமாகும்; உடனடித் தேவைகளைத் தாண்டி, எதிர்காலத் தேவைகளுக்கு உதவும்.
 இயற்கையாக அமைத்த எழில் தடுப்பு
 இவ்வாறு இயற்கையோடு இணைந்து அமைக்கப்பட்ட இந்த அணைக்குத் தலை அணை என்று ஏன் பெயர் வந்தது? பொருநையாள் தரையைத் தொட்டவுடன் அமைந்த முதல் தடுப்பு இது. ஆகவே, "முதல்' என்னும் பொருள்படும்படியாகத் தலை அணை. பொதிகை மலைகளையே பொருநையாளின் கேசமாகவும் பாவநாசம் தொடங்கிப் புன்னைக்காயல் வரையான நிலப்பகுதியை இவளின் உடலாகவும் உருவகித்த இவளின் புதல்வர்களுக்கு, இது தாயின் தலைப் பகுதியில் அமைந்த தடுப்பு; இவளின் பாசத்தைப் பிரதிபலிக்கும் தடுப்பு; ஆகவேயும், இது தலை அணை.
 தலை அணைக்குக் "கோடை மேல் அழகியான்' அணை என்றும் பெயருண்டு. பனைமரக் குறுக்குக் கம்பங்களும் அவற்றைச் சூழ்ந்த குறுங்காடுகளும் சுழித்து மண்டியிடும் நீருமாகப் பச்சை பசேல் என்று எத்தனை அழகு கொஞ்சியிருக்கும்! கோடை காலத்தில், வெயிலின் வெளிச்சம் பட்டுப் பொருநையாள் பளபளத்திருப்பாள்; இவளின் நீரோசை நட்டுவாங்கத்திற்குப் பச்சை மரங்கள் தங்களின் கிளைக் கரங்களை ஆட்டி ஆட்டி அபிநயத்திருக்கும்; இந்த நாட்டிய நாடகத்தில் மயங்கி, விலங்குகளும் பறவைகளும் பரவசமாகியிருக்கும்; பாபவிநாசப் பெருமான்கூட ஆனந்தத் தாண்டவம் ஆடியிருந்திருப்பார். கோடை காலத்திலும் கொள்ளை எழிலோடு காட்சியளித்த அழகைக் கண்ட தமிழ் மக்கள், "கோடை மேல் அழகியான்' என்றே இப்பகுதிக்கு புகழ்ப்
 பெயர் சூட்டிப் பூரித்தனர்.
 - தொடரும்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/பொருநை-போற்றுதும்-32---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3114356.html
3114355 வார இதழ்கள் வெள்ளிமணி பங்குனி உத்திர திருநாளும் பஞ்சகருட சேவையும்! DIN DIN Friday, March 15, 2019 10:18 AM +0530 தஞ்சை மாநகரம், மகதம், மாளவம், புலிந்தம், மத்ஸ்யம் முதலான 56 தேசத்துள் மேலான தெய்வ பூமியாகத் திகழ்கின்றது. தஞ்சைக் கோயில், தஞ்சை மாமணிக்கோயில், என்றவாறெல்லாம் போற்றப்பெறும் இந்த ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசத்திற்கு "ஸித்தி திக்ஷத்திரம்' என்ற மற்றொரு பெயரை கண்டியூர்த் தலபுராணம் தெரிவிக்கின்றது.
 "கண்டன திக்ஷத்திரம்' ஆகிய திருக்கண்டியூர் திவ்யதேசம் காவிரி நதிக்கு தெற்கிலும், "ஸித்தி திக்ஷத்திரம்' விண்ணாற்றங்கரைக்கு வடக்கிலும், "ஸங்கம திக்ஷத்திர'மாகிய "கூடலூர்' ஆடுதுறை பெருமாள் கோயிலுக்கு தென்மேற்கிலும் அமைந்துள்ளது. இத்தலத்துறை எம்பெருமான் தன்னை அண்டிவருபவர்களின் பாபங்களை அகற்றுவதால் தலத்திற்கும் கண்டனபுரம் என்பது பெயர்.
 ஒரு காலத்தில் பலிச்சக்கரவர்த்தி இத்தலத்தினை பிரதிஷ்டை செய்தார் என்பதால் இதற்கு பலி திக்ஷத்திரம் என்ற பெயருமுண்டு. இத்தல வழிபாடு சாயுஜ்ய முக்தியை அளிக்கும் என்கிறது இத்தல புராணம். கமலாக்ருதி விமானத்தையும், கமலவல்லி நாதனையும் வணங்குதல் அளவற்ற பயனைத்தரும்.
 ஒருசமயம், ஜகத்ஸ்ருஷ்டியின்போது மிகத் தத்துவரூபமாக பிரம்மதேவனை விஷ்ணு படைத்தார். பிரம்மதேவருக்கு ஐந்து முகங்கள் இருந்தபடியால் அதைக்கண்டு மகாலட்சுமி திடுக்கிட்டாள். இயற்கைக்கு மாறான இந்த பிரமனை ஈன்றதால் மகாவிஷ்ணு நம்மைப் பார்க்காமல் இருந்துவிடுவாரோ என மகாலட்சுமி ஐயமுற்றாள். தன் மகனான பிரம்மாவின் நடுமுகத்தை அகற்ற சிவபெருமானை வேண்ட, பிரம்மாவின் நடுமுகத்தை எடுத்தார் ஈஸ்வரன். அதனால் பிரம்மஹத்திதோஷம் சிவபெருமானைப் பற்றுகிறது. பின்னர் நாராயணன் அருளால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுதலை பெற்றார் என கண்டனபுர திக்ஷத்திர மாகாத்மியம் கூறுகிறது.
 பஞ்சகருடசேவை
 திருக்கண்டியூர் திவ்யதேசம்- ஸ்ரீ அரசாப விமோசனப் பெருமாளுக்கு 9 நாள்கள் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் நிறைவடையுமாறு கொண்டாடப்பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவையாற்றுக்கு அருகிலுள்ள ராயம்பேட்டைக்கு ஸ்ரீ அரசாபஹரன் எழுந்தருளுகிறார். ராயம்பேட்டையில் ஸ்ரீ வரதராஜகோபாலப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். ஆதிகாலத்தில் கொள்ளேகாலப் பகுதியைச் சார்ந்த சத்யாகால ஸ்ரீவைஷ்ணவர்களான சடமர்ஷண கோத்திரத்தவர்கள் ராயம்பேட்டையில் குடியேறி பஞ்சகருட சேவை விழாவினை சிறப்பாகச் செய்து வந்தனர். அவ்விழாவில் தலத்து எம்பெருமான் ராயம்பேட்டை ஸ்ரீ வரதராஜகோபாலன், கல்யாணபுரம் ஸ்ரீநிவாசன், பெரும்புலியூர் ஸ்ரீ சுந்தரராஜன், திங்களூர் ஸ்ரீ வரதராஜன், கண்டியூர் ஸ்ரீ அரன்சாபம் தீர்த்தவன் ஆகியோர் கருடசேவைக் காட்சிதருவர்.
 அவ்வாறமையும் பஞ்சகருட சேவைக்கு பதிலாக இன்றைய நாளில் கல்யாணபுரம், பெரும்புலியூர் எம்பெருமான்களைத் தவிர மற்ற ராயம்பேட்டை, திங்களூர், கண்டியூர் ஆகிய மூன்று தலத்துப் பெருமாள்களை மட்டும் கருடசேவைதனில் கண்டு மகிழலாம்.
 இவ்வாலயத்தில் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வருகின்றது. 16.3.2019 அன்று நான்காம் திருநாள் கருடசேவை. அன்றைய தினம் காலை வீதியுலாவை முடித்துக்கொண்டு ஸ்ரீ அரசாப விமோசனப் பெருமாள் ராயம்பேட்டை விஜயம் செய்து, கருடசேவையில் கண்டியூருக்கு எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும். 21.3.2019 அன்று பங்குனி உத்திரத்தில் திருத்தேர் பவனியுடன் விழா நிறைவடைகிறது. திருக்கண்டியூர் திவ்யதேசம் தஞ்சைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 - முனைவர் ஆ. வீரராகவன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/பங்குனி-உத்திர-திருநாளும்-பஞ்சகருட-சேவையும்-3114355.html
3114354 வார இதழ்கள் வெள்ளிமணி பாசத்தை வென்ற ஆபிரகாமின் பக்தி DIN DIN Friday, March 15, 2019 10:15 AM +0530 தந்தை தன் பிள்ளையிடம் வைக்கும் பாசம் மிகவும் வலிமையுள்ளது. வேதாகமத்தில்  பாசமா? பக்தியா? எது வலிமையுடையது என்பதை விவரிக்கும் நிகழ்ச்சி உள்ளது.  ஆபிரகாம், சாரா வாழ்வில் நடந்த நிகழ்ச்சி அது.  ஆபிரகாம் நூறு வயது அடைந்தபோது தேவன் ஆசீர்வதித்தப் படி ஈசாக்கு என்கின்ற ஆண் பிள்ளையை சாராள் மூலம் கொடுத்தார். வானத்து நட்சத்திரங்களைப் போல், ஆற்றின் மணல் போல் உன் சந்ததி பலுகி பெருகும் என்பது கர்த்தரின் வாக்கு ஆபிரகாமின் நூறு வயதில் நிறைவேறியது.
ஆபிரகாம் தன் பிள்ளை ஈசாக்கின் மேல் மிக ஆழமான பாசம் வைத்தார். தனக்கு பிள்ளை வரம் அளித்து கானான் தேசத்தையும் கொடுத்திருந்த தேவனிடத்தில் மிகவும் பக்தி வைத்தார். இந்நிலையில் கர்த்தர் ஆபிரகாம் கனவில் தோன்றி "மிகவும் பாசத்துடன் வைத்திருக்கும் உன் ஒரே மகனான ஈசாக்கை நான் காண்பிக்கும் மலைக்கு அழைத்துச்சென்று அவனை தகன பலியிடுவாயாக'  என்றார். (ஆதியாகமம் 22: 2)
அதிகாலையில் எழுந்து தன் மகனை அழைத்துக்கொண்டு விறகு, கத்தி, நெருப்புடன் மூன்று நாள் பயணம். கர்த்தர் காண்பித்த மலைமேல் ஏறினான். ஈசாக்கு தம் அப்பாவைப் பார்த்து "விறகு, நெருப்பு, கத்தி உள்ளது பலியிட செல்லுகிறீரே ஆட்டுக்குட்டி எங்கே?'' எனக் கேட்டான். நீதான் அந்த பலி ஆடு! நான்தான் கர்த்தர் கேட்டபடி உன்னை தகன பலியிட போகிறேன் என்று பாசமுள்ள ஆபிரகாமினால் சொல்ல முடியவில்லை. நிச்சயம் பாசமுள்ள தந்தை இருதயம் வெடித்துப்போகும் . 
மலை உச்சியில் பலிபீடம் கட்டி விறகு அடுக்கி ஈசாக்கின் கைகால்களைக் கட்டி விறகு மீது கிடத்தி கத்தியை எடுத்து கழுத்தை அறுக்க ஓங்கின வேலையில் வானத்திலிருந்து சத்தம்  "ஆபிரகாமே' உன் மகன் மேல் கையை போடாதே. பாசத்தை தள்ளி தெய்வ பக்திக்கு கீழ்படிந்தாயே. அதோ.. புதரில் ஓர் ஆடு சிக்கியுள்ளது. அதைக் கொண்டுவந்து பலியிடு'' என்றது. ஆபிரகாமின் தந்தை பாசத்தைவிட, அவர் கர்த்தரிடத்தில் வைத்திருந்த பக்தி பெரியது.
பிதாவாகிய தேவன் அவர். பிள்ளையாகிய நம்மீது மிகப் பெரிய பாசம் வைத்துள்ளார். நாம் மீட்படைய பாவம் சாபம் நீங்க, தம் ஓரே பேரான குமரன் இயேசுவை இப்பூமிக்கு அனுப்பி நம்மை மீட்க அவரை பார சுமை சிலுவையை சுமக்க பாடுபட, காயம் அடைய  கைகளிலும் கால்களிலும் ஆணி அறைய  ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பாவமில்லாத ரத்தம் பரிகாரமாக நமது பாவத்துக்கும் சாபத்துக்காக கொடுக்கப்பட்டது. பிதா நம்பேரில் வைத்த பாசம் தம் மகன் இயேசுவையே பலியாகத் தந்து மரித்த இயேசுவை உயிரோடு எழுப்பினார்.
உபவாச காலம், இயேசு பாடுபட்ட காலம் இது. இயேசுவின் பாடுகள் ரத்தம் சிந்தியது. சிலுவை மரணம். தேவன் அவரை உயிரோடு எழுப்பியதை தியானிப்போம். பாசத்தோடு பக்தியில் சிறந்தவர் ஆவோம். இயேசுவின் பாடுகள் துன்பத்தில் பங்கு பெறுவோம். நம் பேரில் பாசம் வைத்த பிதாவைப் போற்றுவோம்.
- தே. பால் பிரேம் குமார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/பாசத்தை-வென்ற-ஆபிரகாமின்-பக்தி-3114354.html
3114345 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, March 15, 2019 10:01 AM +0530 நவ கலஸ சிறப்பு திருமஞ்சனம்
குரோம்பேட்டை நேரு நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில் 24 -ஆவது ஆண்டு பங்குனி உத்திர மகோத்ஸவம், மார்ச் 21 -ஆம் தேதி - எஸ்.சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நாதஸ்வர இன்னிசை, சிறப்பு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போன்றவைகளுடன் நடைபெறுகின்றது. இதற்கென்று பிரத்யேகமாக குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ பூமி நீளா சமேத லட்சுமி நாராயணப்பெருமாள் உற்சவமூர்த்தி எழுத்தருளச் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் அன்று காலை 8.00 மணியிலிருந்து ஆரம்பமாகிறது. 
தொடர்புக்கு: 98414 98690 / 044 - 22237480
பங்குனி உத்திர மஹோத்ஸவம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள திருச்சோற்றுத் துறை ஸ்ரீ அன்னபூரணி அம்பிகா சமேத ஸ்ரீ ஓதவனேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்ச் 18 - அதிகாரநந்தி, காமதேனு வாகனம், மார்ச் 20 - திருத்தேர், மார்ச் 21 - தீர்த்தவாரி, ரதம். 
தொடர்புக்கு: 99438 84377.
***********************
நாச்சியார் கோயில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருத்தேர் திருவிழா, மார்ச் 21 வரை நடைபெறுகின்றது. மார்ச் 15 - கல்கருட சேவை, மார்ச் 20 - திருத்தேரோட்டம். 
தொடர்புக்கு: 0435 - 2467167.
**********************
மதுரை சௌராஷ்டிர சபைக்கு பாத்தியமான ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் 125- ஆது ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோத்தஸவம் மார்ச் 23 வரை நடைபெறுகின்றது. மார்ச் 15- ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம், மார்ச் 16- திருக்கல்யாணம் , மார்ச் 17- திருப்பல்லக்கு வெண்ணெய் தாழி கிருஷ்ணன், மார்ச் 18 - திருத்தேர், மார்ச் 22- மோஹினி அலங்காரம்; மார்ச் 23- கள்ளர் திருக்கோலத்துடன் புறப்பாடு.
உருத்திரபாகத் திருவிழா
தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் வட்டம் திருபுவனம் அருள்மிகு ஸ்ரீ கம்பகரேசுவரசுவாமி ஆலயத்தில் உருத்திர பாதத் திருவிழா நடைபெற்று வருகின்றது. மார்ச் 16 - சகோபுர தரிசனம், மார்ச் 18 - திருக்கல்யாணம், மார்ச் 19 - ரதாரோகணம், மார்ச் 20 - திருத்தேர், மார்ச் 21 - காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் மார்ச் 24 - ஸ்ரீ சரபேஸ்வரர் ஏக தின உற்சவம், மார்ச் 25 - ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம்.
ஸ்ரீராதாமாதவ விவாக மகோத்சவம்
முற்றிலும் மகளிர் பங்கேற்று நடத்தும் ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மகோத்ஸவம், சென்னை , அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச் 31-இல் நடைபெறுகின்றது. இதனையொட்டி பிரபல பாகவதர்கள் கலந்துகொண்டு நடத்தும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி மார்ச்- 29, 30 தேதிகளில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 93814 30775 .
திருக்கல்யாணம் 
பெரம்பலூர் மாவட்டம், திருமழப்பாடியில் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் மார்ச் 16 -ஆம் தேதி மாலை 7.00 - 9.00 வரை நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: கணேச சிவாச்சாரியார் - 98433 60716.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/நிகழ்வுகள்-3114345.html
3114291 வார இதழ்கள் வெள்ளிமணி வேதராஜபுரத்து வேடுபறி! Friday, March 15, 2019 10:00 AM +0530 கால ஓட்டத்தில் ஆழ்வார்கள் வரிசையில் இளையவர் திருமங்கை மன்னன். சீர்காழிக்கு அருகே திருக்குறையலூர் என்ற தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் அவதரித்தவர். சோழநாட்டில் திருவாலி பகுதியை நீலன் என்ற பெயரில் சிற்றரசனாக ஆட்சிபுரிந்தார். எதிரிகளுக்குக் காலனாக விளங்கியதால் பரகாலன் என்ற பெயரும் உண்டு.
 ஒரு நாள் திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற பெண்ணினால் ஈர்க்கப்பட்டு, அவளை மணக்க ஆசைப்பட்டபோது அவள் பல நிபந்தனைகளை விதித்தாள். அதில் ஒன்று "ஸம்ஸ்காரம்' செய்து கொண்டு வைணவனாக ஆவது, மற்றொன்று நாள்தோறும் வைணவ அடியார்கள் ஆயிரம் பேருக்கு ததியாராதனம் (அன்னதானம்) வழங்குவது )என்பதாகும்.
 அதற்கு உட்பட்ட மன்னன் முதல்காரியமாக திருநறையூர் திவ்யதேசத்து எம்பெருமானிடம் சம்ஸ்காரம் பெற்றார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றும் பொருட்டு திருமங்கைமடம் என்ற ஊரில் (பூம்புகார் போகும் பாதையில் உள்ளது) தினமும் ஆயிரம் பேருக்கு தன்னுடைய கைப்பொருளைக்கொண்டு அன்னம் பாலித்தார். நாளடைவில் கைப்பொருள் குறைந்ததால் சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய கப்பத் தொகையை எடுத்து பயன்படுத்தினார். கோபம் கொண்ட மன்னன் இவரை கைது செய்து சிறையில் அடைத்தான். அந்நிலையிலும் தன் அன்னதானப் பணியில் தடங்கல் ஏற்பட்டதை நினைத்து வருந்தி, பெருமாளை நினைத்து தீவிர தியானத்தை மேற்கொண்டார்.
 இறைவன் கூறிய அசரீரிவாக்கின்படி, காஞ்சிபுரத்திற்கு அருகில் வேகவதி நதிக்கரையை அடைந்து, அங்கு பொருளைப் பெற்று சோழனுக்கு செலுத்தவேண்டிய திரைப்பணத்தைச் செலுத்தி, அவரின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் அனுமதியுடன் இந்த கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்தி வரலானார், தினம், தினம் அடியார்கள் கூட்டம் அதிகமானதால், கைப்பொருள் கரைய, "களவு' மேற்கொண்டாவது ததீயாராதனம் செய்யலானார்.
 இவரைத் திருத்தி ஆட்கொள்ள நினைத்த பெருமாள், ஒரு நாள் திருமணம் குழுவுடன் தானே மணமகனாக, பிராட்டியுடன் எழுந்தருளினார். வந்திருப்பது பெருமாள் என்று தெரியாமல் அவரிடமே நகைகளைப் பறிக்கும் செயலை மேற்கொண்டார் நீலன். எல்லா நகைகளை பறித்தாலும், பெருமாள் திருவடியில் அணிந்திருந்த அணிகலனை (தண்டை) மட்டும் கழற்ற முடியாமல் பற்களால் கடித்து அதனை கழற்ற முயல பெருமாள் சிரித்தார். கொள்ளையடித்த மூட்டையை தூக்க முடியாமல் தவிக்கும் திருமங்கை மன்னனின் தலையை தன்னுடைய திருக்கரத்தால் வருடி "நம் கலியனோ" என்று அழைத்து, செவியில் திருமந்திரத்தை உபசேதித்தார். உடனே மன்னரின் ஆணவம் மறைந்தது, அகங்காரம் போனது, ஞானம் பிறந்தது, அக்கணமே தன்னை மாற்றிக்கொண்டு எம்பெருமான் அருகிலேயே நின்று ஆழ்வாரானார். "வாடினேன் வாடி" என்று தொடங்கும் முதல் பாசுரம் இவர் திருவாயில் பிறந்தது. "ஆலிநாடன்' என்றே தன் பாசுரங்களில் தன்னை அழைத்துக் கொள்கிறார். இது நடந்த மாதம் பங்குனி (உத்திர நட்சத்திரம்). ஞானம் பிறந்த இடம் அருகிலுள்ள வேதராஜபுரம்.
 இந்நிகழ்வை நினைவு படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் வேதராஜபுரத்தில் இந்த விழாவானது, வேடுபறி விழா' என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் குழுமியிருக்க வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு மார்ச் 20 -ஆம் தேதி மாலை திருவாலியில் ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கல்யாணமும், இரவு வேதராஜபுரத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு ஞானஜன்மாவதார திருவேடுபறி உத்ஸவமும் நடைபெறுகின்றது. திருவாலி - திருநகரி சீர்காழியிலிருந்து பெருந்தோட்டம் பேருந்து மார்க்கத்தில் உள்ளது.
 தொடர்புக்கு: 94441 06752 / 94436 79303.
 - சடகோப கல்யாணராமன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/வேதராஜபுரத்து-வேடுபறி-3114291.html
3114303 வார இதழ்கள் வெள்ளிமணி நரம்பு கோளாறுகளை நீக்கும் சோளீஸ்வரர் DIN DIN Friday, March 15, 2019 10:00 AM +0530 தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற தக்கோலம், இலம்பையங்கோட்டூர், திருவாலங்காடு, திருப்பாசூர் தலங்களுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது, பேரம்பாக்கம். பேரம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சோளீஸ்வரர் ஆலயம் சித்தர் பெருமக்களால் போற்றிப் பாடப் பெற்ற ஆலயமாகும். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி. 1112 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைமையான கோயில் என்ற பெருமையுடையது! 
இன்றைய பேரம்பாக்கம், சோழர் காலத்தில் பெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. பெரும்பாக்கம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி, பேரம்பாக்கம் என அழைக்கப்படுகின்றது. இத்தலம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யும் தலமாக விளங்கியதை, நாடி ஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் இத்திருக்கோயிலில் ரிஷிகளும், மகான்களும் வழிபட்டு பேறு பெற்றதையும் அறிய முடிகிறது. 
இவ்வாலயம், பேரம்பாக்கம் நகரில் ஈசான மூலையில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சோளீஸ்வரர், அம்பாள் காமாட்சி அம்மன். இவ்வாலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் காணப்படவில்லை.
ஆலயத்தினுள் நுழைந்ததும் இடது புறம் சக்தி கணபதி. அவருக்கு அருகில் காசி விஸ்வநாதர். நுழைவாயிலுக்கு நேர் எதிரே காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் சந்நிதி இருக்கிறது. ஆலயத்தில் இந்த அமைப்பு மட்டுமே பழைமைத் தன்மையுடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசோளீஸ்வரர் கிழக்கு நோக்கி எழிலுடன் காட்சி தருகின்றார். அன்னை காமாட்சி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தின் மேற்புறத்தில் வள்ளி தெய்வயானை உடனுறை முருகன் சந்நிதி அமைந்துள்ளது. கீழ்ப்புறத்தில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயமும், அதனருகே நாக தெய்வங்களும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தின் தலவிருட்சம் வில்வ மரமாகும்; தலத்தீர்த்தம் கூவம் ஆறு.
நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்களுக்கு பாதிக்கப்பட்ட இடங்களில் திருநீறு பூசி நீவி விடுவார்கள். இது சோளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த திருநீறு என்பதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு. 
நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாரநாள்களில் ஒரு முறை சென்று சோளீஸ்வரரை தரிசித்துவிட்டு நரம்புக் கோளாறுகள் நீங்க செய்யவேண்டிய பரிகார பூஜை விவரங்களை அறிந்துகொண்டு பின்னர், திங்கள்கிழமையன்று இக்கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. 
பரிகார நபர்கள் செய்ய வேண்டியவை:
* காலையில் எழுந்து குளிக்க போகும் முன்பு ஒரு சிட்டிகை பரிகார விபூதியை குளிக்கும் தண்ணீரில் போட்டு, ""ஸ்ரீ காமாட்சியம்பாள் சமேத ஸ்ரீ சோளீஸ்வரர் நமஹ'" என்று கூறி குளிக்கவும்.
* தினமும் அதிகாலை ஒரு டம்ளரில் நீர் எடுத்து அதில் ஒரு சிட்டிகை பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் போட்டு சுவாமியை பிரார்த்தனை செய்து தங்களின் உடம்பில் உள்ள நோய் போக வேண்டும் என்று கூறி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* காலை குளித்த பின்பும், இரவு படுக்கைக்கு போகும் முன்பும், பரிகார விபூதியை உடலின் எந்த இடத்தில் நரம்பு பிரச்னை உள்ளதோ, அங்கு பூசிக்கொள்ளவும்.
* இவ்வாறு தொடர்ந்து ஆறு வாரங்கள் பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் திருக்கோயிலிலிருந்து பெற்று வைத்தியம் செய்து பிறகு ஏழாவது வாரம் சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்து முழு பலன் பெறவும். 
இவ்வாலயத்தில் பங்குனியில் பிரம்மோற்சவம், காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை ஆகியவை சிறப்புடன் கொண்டாடப் படுகின்றன.
நரம்பு நோயால் வெகுவாக பாதிக்கப்பட்டு நேரில் வர முடியாதவர்களுக்கு, அவர்கள் வேண்டுகோளின் பேரில் அபிஷேக விபூதியும், வில்வ பொடியும் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறார்கள். 
இவ்வூருக்கு ரெயில் மார்க்கமாக வர விரும்புவோர், சென்னைஅரக்கோணம் வழித்தடத்தில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலமாக அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக பேரம்பாக்கத்தை அடையலாம். சென்னையிலிருந்து மாநகர பேருந்துகள் மூலமாகவும் பேரம்பாக்கம் செல்லலாம்.
- அறந்தாங்கி சங்கர் 


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/நரம்பு-கோளாறுகளை-நீக்கும்-சோளீஸ்வரர்-3114303.html
3114323 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, March 15, 2019 10:00 AM +0530 * ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் அவனுடைய நாக்கைச் சார்ந்தே இருக்கிறது.
- சாணக்கியன்
* உலகத்தில் கோபம் வந்ததென்றால் அதன் விளைவாக பாவச் செயல்கள் செய்யாதவர்களைப் பார்க்க முடியுமா? கோபமுற்றவன் தன் குருவையே கொன்றுவிடுவானே!
* கோபம் வந்த மனிதன் கொடூரமான சொற்களினால் நல்லவர்களையும் பெரியோர்களையும் அவமானத்திற்குள்ளாக்குவான்.
- வால்மீகி ராமாயணம்
* பிறரிடம் தீய சொல் பேசுவது உனக்கு இன்பமானால், அவர்கள் உன்னைத் திருப்பித் தாக்குவதையும் நீ இன்பமாகவே கொள்ள வேண்டும். 
- புத்தர்
* சிறப்பான சமாதியைப் பயிற்சி செய்வதனால் தத்துவ ஞானம் உண்டாகிறது.
- நியாய தரிசனம்
* மனம் எதில் குறி வைக்கிறதோ அதை உடனே பெற்றுவிடுகிறது.
- யோக வாசிட்டம்
* தன் உள்ளத்திலிருந்து பொங்கி எழும் கோபத்தை நாகப்பாம்பு சட்டையை உரிப்பதைப்போல உதறிவிடக் கூடியவனே, உண்மையில் மனிதன் என்று சொல்லத்தக்கவன்.
- வால்மீகி ராமாயணம் 
* ஒருவனுக்கு அஹிம்சை கைவந்துவிட்டதென்றால், அவனை அணுகும் கொடிய பகைவனும் தன் பகையை மறந்து போவான்.
- யோகதரிசனம்
* இந்த உலகில் மேம்பாடும், பிறகு மோட்சமும் எதனால் எய்தப்படுமோ அதன் பெயரே தர்மம் என்பது.
- நியாய தரிசனம் 
* கோவணாண்டிக் கோலமோ, ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடப்பதோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதோ ஆசையை வெல்லாத ஒருவனைப் பரிசுத்தவனாக்கி விடாது.
- புத்தர்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3114323.html
3114343 வார இதழ்கள் வெள்ளிமணி நேசனின் நேசர்களை நேசித்தல் DIN DIN Friday, March 15, 2019 10:00 AM +0530 எல்லா சமயங்களும் தோற்றுவித்தவர்களையும் தோன்றல்களையும் தோத்திரம் செய்ய சாத்திரம் படைக்கும். இறைதூது பெற்றவர்களும் வேதம் பெற்றவர்களும் வேறுபட்டவர்கள் அல்ல. கூறு படுத்தி பார்க்க வேண்டாம். அவர்கள் அனைவரும் இறைவனாம் நேசனின் நேசர்களே. நேசனின் நேசர்களை நேசிக்க சொல்லி விசுவாசத்தை விரிவாக்குகிறது திருகுர்ஆனின் 2-136 ஆவது வசனம் "அல்லாஹ்வையும் எங்கள் மீது அருளப்பட்டவைகளையும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாத், யாகூப் இன்னும் இவர்களின் சந்ததிகள் முதலியோரின் மீது அருளப்பட்டவற்றையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசம் கொண்டோம். அவர்களில் எவருக்கும் இடையில் நாங்கள் பாகுபாட்டைச் செய்ய மாட்டோம். நாங்கள் அவனுக்கே கீழ்படிகிறவர்கள் என்று நீங்கள் கூறுங்கள்''.
 அல்லாஹ்வை வணங்காது அவனின் படைப்புகளை அவனுக்கு இணையாக வைத்து வணங்குபவர்கள் இறைவனாம் நேசனின் நேசர்கள் அல்லர். உறுதியுடன் அல்லாஹ்வை மட்டும் அடிபணிபவர்களே நேசனின் நேசர்கள். நேசனின் நேசர்களை நேரிய வழியில் சீராய் வாழ செப்புகிறது செம்மறை குர்ஆனின் 2-165 ஆவது வசனம். நபிமார்கள் நேசனின் நேசர்கள். அவர்கள் காட்டியபடி அல்லாஹ்விற்கு அஞ்சி நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை நம்பி இறைவனைத் தொழுது தக்கோருக்குத் தக்கபடி தர்மம் கொடுத்து ஒப்பந்தங்களை ஒழுங்காய் நிறைவேற்றி சிரமங்கள் ஏற்படும் பொழுது பொறுமை காப்போரே நேசனின் நேசர்களை நேசிப்பவர்கள் எனறு பேசுகிறது 2-177 ஆவது வசனம்.
 நேசனின் நேசர்களை நேசிப்பது என்பது அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் தூதர்களையும் விசுவாசித்து அல்லாஹ்விடம் மீளுவதை உணர்ந்து மன்னிப்பு கோருவதும் ஆகும் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 2-285 ஆவது வசனம். உங்களிலிருந்து ஒரு சாரார் நன்மையின்பால் அழைப்பவர்களாகவும் நன்மையை ஏவுகிறவர்களாகவும் தீயதை விட்டு விலக்குகிறவர்களாகவும் இருப்பார்கள். அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று நேசனின் நேசர்களின் நேரிய வழியைச் சீராய் சொல்கிறது செம்மறை குர்ஆனின் 3-104 ஆவது வசனம். விசுவாசம் கொண்டவர்கள் விசுவாசிகளை அல்லாது பிறரை நேசிக்க கூடாது என்ற 3-118 ஆவது வசனம் நேசனின் நேசர்களையே நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
 விசுவாசிக்கும் ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் மற்றவருக்கு நேசர்களாக இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஏவி தீயதைத் தடுப்பார்கள். தொழுகையை நிறைவேற்றி ஜகாத்தைக் கொடுப்பார்கள். அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் வழிபடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வான் என்று செப்பும் செம்மறை குர்ஆனின் 9-71 ஆவது வசனம் அல்லாஹ்வின் நேசனின் நேசர்களின் ஆறு பண்புகளைப் பகர்ந்து அப்பண்புகளைக் கடைபிடிப்போரை நாம் நேசிக்க போதிக்கிறது. அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்போருக்கு நன்மாராயம் கூற நந்நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்தும் திருமறை குர்ஆனின் 9-112 ஆவது வசனப்படி நேசனின் நேசர்களை நேசிக்க வேண்டும். விசுவாசிகள் அல்லாஹ்விற்குப் பயந்து உண்மையாளர்களுடன் உறவு பூண புகலும் 9-119 ஆவது வசனமும் நேசனின் நேசர்களை நேசிக்க சொல்கிறது.
 நீதியாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்று 49-9, 60 -8 ஆவது வசனங்கள் வரையறுக்கின்றன. உலகில் அதிகமான நாடுகளில் குடியாட்சி கோலோச்சும் தற்காலத்தில் மக்கள் ஆட்சியின் மாண்புகள் மதிப்பு இழக்கும் பொழுதும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் மனித நேயம் பாதிக்கப்படும் பொழுதும் தறிகெட்ட நெறிபிறழும் சட்டங்கள் முறையற்று இயற்றப்படும் பொழுதும் நிறையை குத்திகாட்டி நிறைவான தீர்ப்புகள் வழங்கி தியாகத்தை வியாபாரமாக்காமல் விலைக்கு விற்காமல் நிலை நாட்டும் நீதிபதிகள் நேசனின் நேசர்கள் என்பதையும் அந்த நேசர்கள் மக்களால் நேசிக்கப்படுவதையும் நிதர்சனத்தில் காண்கிறோம்.
 எங்கள் நட்பு (இறைவன்) அல்லாஹ் என்று கூறி உறுதியாக இருப்பவர்கள் நேசனின் நேசர்கள் என்று உறுதிபடுத்துகிறது 41-30 ஆவது வசனம். நபி தோழர் ஸýப்யானுப்னு அப்தில்லாஹித் தக்பீ (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவரிகளிடம் பற்றி பிடித்து பக்குவமாய் நடக்கும் செயலைச் செப்புமாறு கேட்பொழுது இவ்வசனத்தை இயம்பிய நயமான நபி (ஸல்) அவர்கள் என் இறைவன் அல்லாஹ் என்று கூறி அதில் நிலையாக நிற்க நினைவுறுத்தினார்கள். உங்களில் மிக கண்ணியமானவர் அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உள்ளவர் என்ற 49- 13 ஆவது வசனம் ஆதம்- ஹவ்வா இணையில் உருவான மக்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லாரும் சமமானவர்களே. ஆயினும் அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உடையோர் கண்ணியப் படுத்தப்படுவர் என்று உரைத்திறது. நேசனின் நேசர்களை நேசிப்பது நேசர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் கண்ணியம்.
 ஈசா நபி அவர்களிடம் மனிதரில் உயர்ந்தவர்கள் யார் என்று கேட்டனர். இருபிடி மண்ணை கையில் எடுத்து இம்மண்ணில் உயர்ந்தது எது என்று மக்களையே வினவினார். இருபிடி மண்ணையும் ஒரு பிடி மண்ணாக்கி எறிந்து விட்டு மண்ணால் படைக்கப்பட்ட மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உடையவர் அவர்களில் கண்ணியம் ஆனவர் என்று அறிவித்தார்கள்.
 அல்லாஹ்வையும் அவனின் நூதரையும் விசுவாசித்து ஐயமின்றி அவர்களின் உயிர் உடைமைகளை அல்லாஹ்வின் பாதையில் பணயம் செய்கிறவர்கள் உண்மையானவர் என்று உரைக்கும் 49- 15 ஆவது வசனம் நேசனின் நேசர்களை நிதர்சனத்தில் காண காட்சிபடுத்துகிறது. அல்லாஹ்வை அந்தரங்கத்தில் அஞ்சுபவர்கள் நேசனின் நேசத்தைப் பெற்றவர்கள் என்பது 67-12 ஆவது வசனத்தில் உணர்வோர் உணரும் உட்பொருளாக உரைக்கப்படுகிறது. பகிரங்கத்தில் பலரும் அறிய அல்லாஹ்வை அஞ்சுவதைவிட தனித்து யாரும் காணாத பொழுது அல்லாஹ்வை அஞ்சி விஞ்சிடாது வரம்பு மீறாது வரையறுத்தபடி செயல்படும் செம்மல்கள் நேசனின் நேசர்கள்.
 அல்லாஹ்வின் படைப்புகள் நேசத்திற்குரியவை அல்ல. அல்லாஹ் மட்டுமே நேசன் என்று கூறும் 26-77 ஆவது வசனப்படி எண்ணற்ற இன்னல்களையும் இடுக்கண்களையும் இடையுறாது துய்த்த பொழுதும் துவளாது ஏக இறை கொள்கையை மறுப்பவர்களுக்கு மறைக்காது மக்களுக்கு எடுத்துரைத்த இப்ராஹீம் நபி ஹலீலுல்லாஹ்- நேசனின் நேசர் என்ற பெயரைப் பெற்றார்கள். அந்த நேசனின் நேசரின் நேர்வழியே சீராய் செப்பப்பட்டது இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாலும். அந்த நேசனின் நேசர் இன்றும் நேசிக்கப்படுகிறார்கள்.
 நேசனின் நேசர்களை நேசித்து நேரிய வழியில் சீராய் வாழ்வோம். பேராளன் அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/15/நேசனின்-நேசர்களை-நேசித்தல்-3114343.html
3109811 வார இதழ்கள் வெள்ளிமணி கணவனைக் காத்த காரிகை! DIN DIN Friday, March 8, 2019 10:18 AM +0530 "ஏதர்மராஜரே, நான் உண்மையான பதிவிரதை; உன்னைத் தொடர்ந்து நான் வரும்போதே இது உனக்கு தெரியவில்லையா? என் கணவன் உயிரை திரும்பத் தா' என்றாள் அந்த காரிகை. அதற்கு யமதர்மர் "தாயே மானிட பெண்ணான நீ என்னை பின் தொடர்வதால் உன் பதிவிரதா சக்தியை உணர்கிறேன். அதற்காக உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன். ஆனால் என்னை நீ பின் தொடராதே' என்றார். "சரி, அப்படியானால் சால்வ நாட்டின் சிபி வம்சத்து மன்னனும், என் மாமனாரும் ஆன தியுமத்சேன மஹாராஜாவிற்கு; அவர் இழந்த பார்வையையும், நாட்டையும் திரும்பத் தரவேண்டும்' என்றாள். தர்மராஜனும் தந்தார். அவளும் வணங்கி திரும்பவும் பின் தொடர்ந்தாள்.
 "தாயே என்னோடு இப்படித் தொடராதே; உன் கணவனின் உயிரை மட்டும் என்னால் தர இயலாது' என்றார். அந்த நங்கை நல்லாள் சமயோஜிதமாக, "சரி தர்மரே, உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை; என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்யவானின் மகன்களுக்கு கிடைக்கவும் வரம் தாருங்கள்' என்றாள். கொஞ்சம்கூட யோசிக்காமல் "தந்தேன்' என்று கூறி யமதர்மர் மாட்டிக் கொண்டார். பின்னர், "எனக்கு குழந்தை வரம் தந்த மஹாப்பிரபுவே; தங்களின் வரத்தின்படி என் குழந்தை பேற்றுக்கு என் கணவரைத் தாருங்கள்' என்றாள். திகைத்துப்போன எமதர்மர், "ஓர் உயிருக்கு அதன் காலம் முடிந்தபின் அந்த உயிரை எடுப்பதற்கு மட்டுமே எனக்கு உரிமை உண்டு; நீ கேட்பதைப்போல் திரும்பத் தரும் அதிகாரம் எனக்கு இல்லை' என்றாலும் உன் விடாமுயற்சிக்குப் பரிசாக உன் கணவனின் உயிரைத் தருகிறேன்; உன் குழந்தைகள் அரசாளும், அன்பு மரணத்தை வெல்லும் என்பதற்கு நீ சான்று' என்றார். அவளே, சாவித்ரி ஆவாள்.
 மந்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியனின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்ரி என பெயரிட்டு வளர்த்து வந்தான். சாவித்ரிக்கு திறமையான மணாளனை அவளே தேர்வு செய்ய விரும்பினாள். விதியின் வலிமையால் தன் நாட்டைத் துறந்து காட்டில் தன் தாய், தந்தையருடன் இருந்த இளவரசரான சத்தியவான் மீது விருப்பம் கொண்டு; நாரதர் இன்னும் 12 மாதங்களில் சத்தியவான் இறந்துவிடுவான் என்று எச்சரித்தும் கேளாமல்; அவனையே மணப்பேன் என்ற உறுதியுடன் தன் தாய் தந்தையின் ஆசியுடன் மணந்தாள்.
 வாழ்வு நகர்ந்தது; என்றைக்கு சத்தியவான் இறப்பான் என்பது சாவித்ரிக்கு தெரிந்திருந்தாலும்; அவனிடம் சொல்லாமல்; இறப்பதற்கு மூன்று நாள்களே உள்ள நிலையில் ஊன் உறக்கமின்றி கடும் விரதம் மேற்கொண்டாள். அடுத்த நாள் காட்டிற்கு விறகு வெட்டச்சென்ற தன் கணவனுடன் தானும் சென்றாள். களைப்பின் மிகுதியால் சாவித்ரியின் மடிமீது தலைவைத்து சற்று உறங்க ஆரம்பித்த அவன் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவானின் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதூதர்களால் அவனை நெருங்க முடியவில்லை. எனவே எமனே நேரில் வந்து சாவித்ரியைப் பார்த்து உயிர் பிரிந்த உடலை விட்டுவிடு, மரணம் என்பது மனிதனின் விதி; என்றபின் சாவித்ரி உடலை விட்டு விலகி நின்றாள். இதன் தொடர்ச்சி தான் நாம் ஆரம்பத்தில் படித்த சம்பாஷனை. மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது மார்கண்டேய முனிவர் பதிபக்தியின் மேன்மையை போற்றும் முகமாக இந்த கதையை சொன்னார்.
 தமிழ் மாதம் மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் சாவித்ரி விரதம் இருந்து இந்த பேற்றினை பெற்றதால்; மங்கையர்கள் ஒவ்வொரு வருடமும் இதனை காமாட்சி நோன்பு, கெüரி நோன்பு, சாவித்ரி விரதம் என்று பல பெயர்களில் கூறினாலும் நம் தமிழகத்தில் காரடையான் நோன்பு என்றே அழைக்கின்றனர்.
 இந்த நன்னாளில் சுமங்கலிகள்; காலையிலிருந்து பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் எதையும் உண்ணாமல், பழவகைகளை மட்டும் சாப்பிட்டு மாலைவரை நோன்பிருந்து காராமணி என்ற தானியத்தை ஊற வைத்து கார் அரிசியில் போட்டு வேகவைத்து வெல்ல அடை, உப்பு அடை, கெட்டி வெண்ணெய் மற்றும் பலவகையான பழங்களை வைத்து காமாட்சி அம்மனுக்கு படைத்து மாங்கல்ய பலம் வேண்டி கீழ்கண்ட மந்திரத்துடன் பூஜை செய்வார்கள்.
 ஸ்லோகம்: "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நான் நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்'
 என்று வணங்கி, வீட்டிலுள்ள மூத்த சுமங்கலி. பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்தி மற்றவர்களுக்கு மஞ்சள் கயிற்றினை கழுத்தில் கட்டிவிடுவார்கள்.
 இந்த வருடம் 15.3.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 5:00 மணி முதல் 5:30 மணிக்குள் மாசியும் பங்குனியும் கூடும் காரடையான் நோன்பு வருகிறது. கால தேவனுடன் போராடி தன் கணவனைக் காத்த காரிகை சத்தியவான் சாவித்ரி இந்த விரத நாளில் மானசீகமாக வந்து ஆசிர்வதிப்பாள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/கணவனைக்-காத்த-காரிகை-3109811.html
3109810 வார இதழ்கள் வெள்ளிமணி மக்களுக்காக விரதமிருக்கும் மகமாயி! DIN DIN Friday, March 8, 2019 10:16 AM +0530 தீயசக்திகளை அழித்து, நல்லவர்களைக்காக்க அன்னை பராசக்தி எடுத்த பல ரூபங்களைப்பற்றி தேவிபாகவதமும், மற்ற புராணங்களும், மந்திர தந்திர சாஸ்திரங்களும் உயர்வாகப் பேசுகின்றன. இதில் மாரியம்மன் ரூபமும் ஒன்று. மாரியம்மன் என்று நினைத்த மாத்திரமே நினைவில் வருவது சமயபுரம்தான். மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரமாகும். திருச்சி அருகில் உள்ள மிகவும் புகழ்பெற்ற இத்திருத்தலம் தென்னிந்தியாவில் முக்கியமான கோயிலாகும். அன்னை இத்திருத்தலத்தில் வந்தமர்ந்ததே ஒரு வரலாற்று நிகழ்வாகும். தன் கண் பார்வையாலேயே பல கோடி பக்தர்களை தன்பால் ஈர்த்து அருள்பாலிக்கிறாள் சமயபுரத்தாள்.
 மானிடர்களாகிய நாம் அம்பிகைக்கு நேர்ந்து கொண்டு விரதமிருப்பது வழக்கம். ஆனால் கருணையே உருவான இந்த மாரியம்மன் மக்களுக்காக விரதமிருக்கிறாள் என்பது ஓர் ஆச்சரியமான தகவல் அல்லவா? அதுவும் பச்சைப்பட்டினி விரதமாகும். இருபத்து எட்டு நாள் விரத நாட்களில் துள்ளுமாவு, நீர்மோர், கரும்புபானகம், இளநீர் போன்றவை தான் அம்மனுக்கு நிவேதனம். சமைத்த உணவு எதையும் படைப்பதில்லை. மா விளக்கு சமர்ப்பித்தலும் கூட கிடையாது. எதற்காக இந்த விரதம்? பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சீதோஷ்ண நிலை தாக்கங்களினால் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களுடன் நலமுடன் வாழ அம்மனே பக்தர்களுக்காக இந்த விரதம் மேற்கொள்கிறாள் என்று ஐதீகம்.
 இத்திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மாசிமாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழா முக்கியமாகும். கத்திரி வெயிலின் தாக்கத்தை தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு மக்களை குளிரவைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூ மாரி பொழியப்படுகின்றது. இந்த விழாவில் தமிழகத்தில் மட்டுமில்லாது அனைத்து மாநிலங்களிலிருந்தும் உள்ள பக்தர்களின் காணிக்கை மலர்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. திருவிழா அன்று (இவ்வாண்டு மார்ச் - 10) காலை 8.00 மணி அளவில் அம்பாளுக்கு பச்சைபட்டினி விரத காப்பு கட்டுதல் நடைபெறும். கணபதி பூஜை முடிந்தவுடன் பூச்சொரிதல் ஆரம்பமாகும். முதலில் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்க நாதஸ்வாமி திருக்கோயிலிருந்து மேளதாளத்துடன் கோயில் யானை மேல் கொண்டுவரும் புஷ்பங்களைச் சமர்ப்பித்தப் பிறகுதான் மற்ற பக்தர்களின் புஷ்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது அண்ணனாகிய அருள்மிகு ரங்கநாத ஸ்வாமி தங்கைக்கு அளிக்கும் மரியாதையாகக் கருதப்படுகிறது. கருவறையில் அம்மன் சிரசு மட்டும் தான் அன்று தரிசிக்க முடியும் என்ற அளவிற்கு பூச்சொரிதலுக்காக கூடை கூடையாக பூக்கள் அன்று முழுவதும் வந்த வண்ணம் இருக்கும்.
 இந்த பூச்சொரிதல் விழாவில் பங்கேற்பதற்கு சென்னையிலிருந்து ஜி.சிதம்பரம் ஐயர் என்பவரால் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த 43 வருடங்களாக சென்னையிலிருந்து அனைத்து வித வாசனை புஷ்பங்களை ஏற்பாடு செய்து அம்பாளின் அருளோடு புஷ்ப அபிஷேகம் செய்கிறார்கள். விரதம் முடிவில் மகாஅபிஷேகம் ஒன்றினையும் நடத்துகிறார்கள். இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற பக்தர்கள் ஆதரவு அளித்து ஸ்ரீ சமயபுரத்தாளின் பேரருளுக்கு பாத்திரராகலாம்.
 தொடர்புக்கு: 97898 56037 / 98407 32978.
 - எஸ்.வெங்கட்ராமன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/மக்களுக்காக-விரதமிருக்கும்-மகமாயி-3109810.html
3109809 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 31- டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, March 8, 2019 10:14 AM +0530 கன்னடியன் அணையும் கால்வாயும், 15 அல்லது 16 நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறப்பட்டுள்ள கதையெல்லாம் உண்மையா, கற்பனையா என்று சிலர் பரிகாசம் பேசக்கூடும். யாரோ ஒருவர் இருந்திருக்கிறார், ஊருக்கு நல்லது செய்திருக்கிறார்! கதையில் வருகிற தகவல்கள் சில, கற்பனையாகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும்; அதனாலென்ன? தர்ம வழியில் செல்வத்தைச் செலவழிக்கவேண்டும் என்பதற்கும், பிறப்பும் குலமும் முக்கியமல்ல, எண்ணச் சிறப்பே முக்கியம் என்பதற்கும், சத்தியம் சாமி வடிவில் வெளிப்படும் என்பதற்கும், பொருநையாள் கற்பிக்கும் பாடம்தான் கன்னடியன் கால்வாயின் கவின் வரலாறு. "என் காதல் மலையளவு உயரமானது' என்றுரைக்கும் காதலனின் கற்பனையில் கவித்துவம் இருப்பதாக நினைத்தால், அறத்தை அறிவுறுத்தும் ஆற்றுக் கதையும் கவிதைதான்!
 1880 - வாக்கில், கேப்டன் ஹார்ஸ்லி, கன்னடியன் அணையைச் செப்பனிட்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்திலும் அணையும் கால்வாயும் பற்பல சீர்பணிகளைக் கண்டிருக்கக்கூடும். இன்றளவில் சுமார் 33.95 கி.மீ. நீளம் கொண்ட கன்னடியன் கால்வாய், வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதிகளில் 17 -க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களுக்கு நீர் தருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சாகுபடிக்குக் கொணர்ந்து, இந்தப் பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமை, கன்னடியன் கால்வாய்க்கு உண்டு.
 பிடித்த புளியும் எரித்த சுவாமியும்
 ஆற்றுப் போக்கும் அறப் போக்குமாக இருக்கும் இந்தக் கதையின் வரலாற்றுப் படிவுகளை அம்பாசமுத்திரத்திலும் காணக்கூடுகிறது. இதற்காக, இப்போதைய அம்பையின் தெற்குப் பகுதியிலுள்ள அருள்மிகு காச்யபநாத சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லலாம், வாருங்கள்.
 மக்கள் வழக்கில் காசிநாத சுவாமி என்று வழங்கப்படுகிற இக்கோயில் மூலவர், காச்யப முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர்; ஆகவே, காச்யப நாதர் அல்லது காச்யபேச்வரர். காச்யப முனிவர் இப்பகுதிக்கு வந்தார்; தாமிராவின் திருக்கரையில் மணல் லிங்கம் பிடித்து வழிபட்டார்; இறைவனைத் தீர்த்தமாட்டுவதற்காகத் தீர்த்தம் ஏற்படுத்தினார்; அபிஷேக ஆராதனைகள் செய்தார். இவ்வாறு இங்கே எழுந்தருளிய காச்யபேச்வரருக்குத் திருப்போத்துடையார், திருப்போத்துடைய நாயனார், போத்துடைய ஆழ்வார், போத்துடைய மாதேவர், போத்து பட்டாரகர் என்றெல்லாம் திருநாமங்கள். "போத்து' என்பது விலங்குகளின் இளங்கன்றைக் குறிக்கும் சொல்; பொதுவாக விலங்கினக் கன்று என்றாலும், இளங்காளைக்குக் குறிப்பாகப் பயன்படுத்தப்படும். ரிஷபக் காளையை வாகனமாகக் கொண்டவர் என்பதால் சிவனாருக்குப் போத்தீசர் என்று திருநாமம். போத்தீச்வரம் என்றழைக்கப்பட்ட அம்பை, காலப்போக்கில் "போற்றீச்வரம்' ஆனது (போற்றி என்று சொல்லவேண்டியதைப் பழக்கத்தில் "போத்தி' என்று கொச்சைப்படுத்தி விட்டதாகக் கருதிவிட்டனர் போலும்!).
 ராஜ ராஜ சோழன், முதலாம் குலோத்துங்கன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகியோர் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். கோயிலின் தெற்கு நுழைவாயில் அருகே, பொருநையாள் சுழித்துப் பாய்கிறாள். இங்கு, கங்கை நல்லாள் வந்து பொருநையோடு கலப்பதாக ஐதீகம். ஆகவே, இந்தப் பகுதியைக் காசி என்றும், சுவாமியை காசிநாதர் என்றும் போற்றுவது வழக்கம். கிழக்கு நோக்கியவராக அருள்கிறார் அருள்மிகு காச்யபேச்வரர்.
 இந்த சுவாமிக்குப் பூஜைகள் செய்த அர்ச்சகர்தான், தங்க மூட்டையைப் பருப்பு மூட்டை என்று சொன்னவர். இந்த சுவாமியின் சக்தியைத்தான் புளியமரத்திற்கு மாற்றினார். காச்யபேச்வரர் சந்நிதியை வலம் வரும்போது, பிராகாரத்தின் தென் சுற்றில் அருள்மிகு எரித்தாள் உடையாரையும் தரிசிக்கலாம். சிவலிங்கத் திருமேனியாக, மேற்கு நோக்கியவராக எழுந்தருளியிருக்கிறார். அர்ச்சகரை எரித்தவர் என்பதாலும் தீமையைத் தடுத்து ஆட்கொண்டவர் என்பதாலும், எரித்தாட்கொண்டார், எரிச்சாடுடையார், எரித்தாள் உடையார் (எரித்த திருவடி கொண்டவர்) போன்ற பெயர்கள். இந்தக் கோயிலையே எரித்தாளுடையார் கோயில் என்று குறிப்பிடுவார்கள்.
 கன்னடியருக்கு பதிலாக, சிவசர்மா என்னும் அந்தணர் பெருஞ்செல்வத்தோடு தென்னாடு வந்தார் என்றும், அம்பாசமுத்திர அர்ச்சகரிடத்தில் செல்வத்தைக் கொடுத்துவிட்டு அகத்தியரைக் காணச் சென்றார் என்றும், ஏமாற்ற முற்பட்ட அர்ச்சகருக்குச் சாந்தவேதப் பிரமோதனன் என்று பெயர் என்றும் மாற்றுத் தகவல்கள் சில இப்பகுதியில் உலவுகின்றன.
 புதிய சிக்கலும் பிள்ளையார் மிளகும்
 கன்னடியன் கால்வாயின் கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்கிறது. அணையையும் கட்டி, கால்வாயையும் அமைத்து, காலாச்சி மதகையும் உருவாக்கிவிட்டார் கன்னடியர். ஆனால், ஆற்றுவரத்து குறைந்த காலத்தில், அணையின் காரணமாகவும் கால்வாய்ப் பாய்ச்சல் காரணமாகவும், ஆற்றின் கிழக்குத் தொடர்ச்சிக்கு நீர் குறைந்தது. கலங்கிவிட்டார் கன்னடியர். "ஐயோ, சில பகுதிகளின் பாசனத்திற்கு உதவும் என்று பார்த்தால், பிற பகுதிகளுக்கு நீர் குறைகிறதே' என்று தவித்தார். அகத்தியரை எண்ணித் தவமிருந்தார். அந்தணரின் உள்ளத்தில் தோன்றிய அகத்தியர் வழி ஒன்றைக் காட்டினார்.
 கால்வாய்க்குப் பக்கத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார். இந்த விநாயகரின் திருமேனி முழுவதும் மிளகை அரைத்துப் பூசி, பின்னர் அபிஷேகம் செய்யச் சொன்னார். அபிஷேக நீர் கால்வாயில் கலந்துவிடும். இவ்வாறு செய்தால், கால்வாயிலும் சரி, பொருநையிலும் சரி, நீர் வரத்து குறையாது என்றருளினார். சேரன்மாதேவியில் எழுந்தருளியிருக்கும் இந்தப் பிள்ளையாருக்கே "மிளகுப் பிள்ளையார்' என்று பெயர். இப்போதும், தண்ணீர்க் கஷ்டம் வரும்போதெல்லாம், பொருநைக் கரை விவசாயிகள் மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்துப் போடுகிறார்கள்.
 பாசனத்திற்காகத் திறந்துவிடும்போது, கன்னடியன் அணைக்கட்டில்தான் முதலில் திறக்கவேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். கால்வாயில் நீர் பாய்ந்துவரும்போது, மிளகுப் பிள்ளையார் மகிழ்ச்சி அடைகிறாராம். தம்முடைய அருளை நீராவியாக்கிப் பொதிகைமீது மேகங்களாகச் செலுத்துகிறாராம். இதனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து, தாமிரவருணியில் தண்ணீர் பிரவாகம் பொங்கும். கன்னடியன் அணை மட்டுமல்லாமல், பிற அணைகளிலும், கிளை நதிகளிலும், கால்வாய்களிலும் நீர் வரத்து அதிகரிக்கும். விளைச்சல் பெருகும். சுபிட்சம் நிறையும். மக்களின் வாழ்வு சிறக்கும்.
 - தொடரும்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/பொருநை-போற்றுதும்-31--டாக்டர்-சுதா-சேஷய்யன்-3109809.html
3109808 வார இதழ்கள் வெள்ளிமணி யோபுவின் வியாகுலம் DIN DIN Friday, March 8, 2019 10:10 AM +0530 வலி, வேதனை, பலவீனம், நோய், துன்பம், கைவிடப்பட்ட நிலை, பசி, தாகம், வறுமை, காயம், பழி, தண்டனை இவைகள் ஒரு மனிதனை காத்து உடல், மனம், உயிர் காயப்பட்டால், உயிர் போகும் நிலையில் உள்ளவர் துன்பத்தை வியாகுலம் (agony) உயிர்போகும் நிலையை அனுபவத்தை அடைவர். உடல் மட்டும் மரண அவஸ்தை அனுபவிக்கும் என்பதல்ல, மனமும் ஆன்மாவும் அத்துன்பத்தை அனுபவிக்கும். நல்ல நிலையில் உள்ளவர் திடீரென்று துன்புற்றால் வியாகுலம் அடைந்தால் மிக கொடியதாக இருக்கும்.
வேதாகமத்தில் அவ்வாறு துன்புற்றவர் வரலாறு உள்ளது. அவர் பெயர் யோபு. அவர் பெரிய செல்வந்தர். பெரிய அளவில் நிலங்கள், ஆடு மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அவரிடம் இருந்தன. சேவகம் செய்ய வேலைக்காரர்களும் இருந்தார்கள். ஏழு ஆண் பிள்ளைகளும் மூன்று அழகான பெண் பிள்ளைகளுடன் மகிழ்வான குடும்பம் அவருடையது. யோயுவின் தெய்வபக்தியும் சன்மார்க்கமும் தேவனாலேயே போற்றத் தக்கதாயிருந்தது. 
ஒரு நாள் கர்த்தருடைய சந்நிதியில் சாத்தான் போய் நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து, " எங்கிருந்து வருகிறாய்?' என்றார். " பூமியைச் சுற்றி வந்தேன்' என்றான். கர்த்தர், " என் தாசனாகிய யோபுவை பார்த்தாயோ உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல் பூமியில் ஒருவனும் இல்லை' என்றார்.
சாத்தான், " நீர் யோபுவுக்கு எல்லா நன்மைகளையும் தந்துள்ளீர். அவன் செல்வ சீமான், அவன் பக்தியுள்ளவனாய் இருப்பதில் சிறப்பு இல்லை. அவன் துன்பத்துக்கு உட்பட்டால் உம்மையே மறுதலிப்பான்' என்றான். 
கர்த்தர் யோபுவை சாத்தானிடம் உபத்திரவம் படுத்துவதற்கு அனுமதி தந்தார். (யோபு 1: 6-11) சாத்தான் யோபுவின் மீது கை வைத்தான். அவனது பத்து பிள்ளைகள் மீதும் அவர்கள் வீட்டு கூரை விழுந்து பத்துபேரும் மரித்து போனார்கள். அவனது ஆடு, மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகளை எல்லாம் திருடர்கள் வந்து ஓட்டிச் சென்று விட்டனர். யோபுவின் வேலைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 
ஒரே நாளில் எல்லாம் பறிபோயின. யோபுவுக்கு சாத்தான் கொடிய பருக்கள் நோய் உண்டாகும்படி செய்தான். கொடிய பருக்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலை வரை உண்டாகியது. பருக்கள் பழுத்து சீழ் வைத்து வலியெடுத்தது. வலிதாங்காமல் யோபு ஓட்டை எடுத்து தன் உடல் முழுவதும் கீறிக்கொண்டான். அவனது உடல் உருகுலைந்தது. யோபுவின் மனைவி யோபுவின் வியாகுலம் கண்டு வருந்தி, கடவுளை தூசித்து உயிர் விடும்படியாகக் கூறினாள். 
யோபு தன் துன்ப நிலையிலும் கடவுளை தூசிக்காமல் தான் பிறந்த நாளை சபித்துக் கொண்டான். சாம்பலை தன் தலையின் மேல் போட்டு தெருவில் உட்கார்ந்தான். 
எத்தகைய இழப்பிலும் நோயிலும் வலியிலும் யோபுவை சாத்தான் மாற்றமுடியவில்லை. சாத்தான் யோபுவிடத்தில் தோற்றுப் போனான். கர்த்தர் யோபுவின் பக்தியைக் கண்டு அவனை ஆசீர்வதித்தார். அவன் நோய் நீங்கியது. செல்வம் திரும்பி வந்தது. அவனுக்கு பத்து பிள்ளைகள் திரும்ப கிடைத்தனர். 
இயேசு ஆண்டவரும் இப்பூமியில் வாழும்போது எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தார். மனிதரின் பாவம், சாபம் நீங்க, தம் பரிசுத்த ரத்தத்தை சிந்தி சிலுவையில் அறைந்து மரித்தார். இயேசுவின் பாடுபட்ட காலங்களை இவ்வுலகம் நினைவு கூர்ந்து சாம்பல் புதன் (மார்ச்- 6) அன்று தொடங்கி நாற்பது நாள்கள் இயேசுவை நினைத்து உபவாசிப்பர். தங்கள் உடலை ஒடுக்கி எளிமையாக இருந்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்வர். 
நமக்காகவே இயேசு பாடுபட்டார். துன்புற்று சிலுவையில் மரித்து ரத்தம் சிந்தி நம்மை ரட்சித்தார். எனவே, நாமும் உபவாசிப்போம்.
- தே. பால் பிரேம்குமார்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/யோபுவின்-வியாகுலம்-3109808.html
3109806 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, March 8, 2019 10:08 AM +0530 பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம்
குரோம்பேட்டை, குமரன் குன்றம் மலைக்கோயில் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்சவம் மார்ச் 12 -இல் துவங்குகிறது. முக்கியமான நாட்கள் மார்ச் 17 - ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாணம், மார்ச் 22-வள்ளிகல்யாணம், மார்ச் 23 - இடும்பன் பூஜை விடையாற்றி உற்சவம். விழா நாட்களில் சிறப்பு யாகசாலை, பூஜை, ஹோமங்கள், வேதபாராயணம் தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
தொடர்புக்கு: 94441 78434 / 91766 82911. 
******************
பூச்சொரிதல் விழா
சென்னை புழல், காவாங்கரை தனலட்சுமி நகரில் அமைந்துள்ள அருள்மிகு மகமாயி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மார்ச் 10 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 -ஆம் தேதி முடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 97911 28962.


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/நிகழ்வுகள்-3109806.html
3109805 வார இதழ்கள் வெள்ளிமணி சுற்றுச்சூழல் மாசு DIN DIN Friday, March 8, 2019 10:07 AM +0530 சுற்றுச்சூழலை மாசுறாது காப்போம் என்பது வெற்று முழக்கம் அல்ல. பற்றில்லாமல் பறை சாற்றும் விளம்பர மோகிகளின் வேடிக்கை விளையாட்டல்ல. ஒவ்வொருவரும் உற்று நோக்கி சுற்றியுள்ள வாழும் பகுதியை ஊரைச் சுத்தமாக வைத்து சுகாதாரம் பேணி நோயற்று வாழ நேயமுடன் செயல்படுவதே.
 வானையும் பூமியையும் இவ்விரண்டில் உள்ளதையும் உல்லாசத்திற்காக உருவாக்கவில்லை. உண்மையான உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டவை என்பதைப் பகிரங்கமாக பறைசாற்றுகிறது இறைமறை குர்ஆனின் 21-16,17 ஆவது வசனங்கள். உல்லாசத்திற்காக உலகை ஆளும் அதிகார மமதையில் இயற்கையை சிதைத்து சீரழித்து சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வல்லரசு நாடுகளின் பொல்லா நாடகத்தைப் புலப்படுத்தும் வசனங்கள் இவை. ஒன்றாய் இருந்த வானத்தையும் பூமியையும் இரண்டாய் பிரித்த இறைவன் உயிரினங்களை நீரால் படைத்ததைச் சீராய் செப்புகிறது 21-30 ஆவது வசனம்.
 பூமி ஆடாது நிலையாக இருப்பதற்காக உறுதியான மலைகளையும் மலைகளுக்கிடையே பாதைகளையும் படைத்ததாக பகர்கிறது 21-31 ஆவது வசனம். மலைகளுக்கு இடையே உள்ள பாதை கணவாய். பூமியைத் தொட்டில் ஆக்கி மலைகளை முளைகள் ஆக்கியதாக அறிவிக்கின்றன 78 -6, 7 ஆவது வசனங்கள். குழந்தைகள் சுகமாக தூங்க தொட்டில்கள் இருப்பதை நாம் அறிவோம். மனிதர்கள் மகிழ்வாய் வாழ அகிலத்தில் பூமி தொட்டிலாக துலங்குவதை இவ்வசனம் விளக்குகிறது. 7-ஆவது வசனத்தில் வரும் "அல்தாத்' என்னும் அரபி சொல் "வதத்' என்ற சொல்லின் பன்மை. ஆடும் பலகையில் முளை வைத்து அடித்தால் அப்பலகை ஆடாமல் நிற்கும். அதுபோல பூமி ஆடாமல் அசையாமல் நிற்க மலைகள் முளைகளாக தாங்கி நிற்கின்றன. அம்மலைகளையும் மாசுபடுத்தி மக்கள் குப்பைகளைக் கொட்டி சுரங்கங்கள் தோண்டி சூறையாடுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 31 குன்றுகளைக் காணோம் என்ற செய்தி மலையினும்மான பெரிய வியப்பைத் தருகிறது. நியாயப் படுத்த முடியாத குன்று கொள்ளை நிலத்தை குலைநடுங்க வைக்கிறது.
 அல்லாஹ் மேகத்தை மெதுவாக நகர வைத்து ஒன்று சேர்த்து அடர்த்தியாக்கி மழையை பொழிய செய்கிறான் என்பதை எடுத்துரைக்கிறது 24-43 ஆவது வசனம். மேகம் நகர்வதும் ஒன்றாகி அடர்ந்து மழை பொழிவதும் காற்றால். அந்த காற்றைக் கனிவாய் வழங்கும் மரங்களை வெட்டி வேரோடு வீழ்த்தி கட்டடங்களைக் கட்டி காற்று எழாமல் தடுத்து மழை பொழியாமல் செய்கின்றனர். மழைக்கு முன்னால் காற்று வீசுவதை விளக்குகிறது 25-48 ஆவது வசனம். அக்காற்றை மாசுபடுத்தும் பொழுது தூய மழை நீரும் நோய் பரப்பும் பாதக நீராக மாறுவதைப் பார்க்கிறோம்.
 இறந்த நிலங்களை உயிர்ப்பித்து படைக்கப்பட்ட மனிதர்களும் விலங்குகளும் பருக மழையை பெய்விப்பதாக பேசுகிறது 25-49 ஆவது வசனம். வறண்ட பூமி மழையால் வளம் பெறுவதையே இறந்த நிலம் உயிர் பெறுவதாக உரைக்கிறது இந்த வசனம். ஒவ்வொரு ஆண்டும் மழை ஒரே அளவு பெய்வதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். அம்மழையளவு ஆண்டுக்கு ஆண்டு இடத்திற்கு இடம் மாறுபடுவது அவ்விடத்தில் உள்ளோர் சுற்று சூழலைச் சுத்தமாக காக்காது மாசுபடுத்துவதால் விளைவதே.
 பகலைப் பணிபுரிவதற்காகவும் இரவை ஓய்விற்காகவும் ஆக்கி வைத்திருப்பதை அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 27-86, 28-73 ஆவது வசனங்கள்.
 ஓய்விற்குரிய இரவில் கூத்து, கும்மாளம், நாட்டியம், ஆடல்பாடல் என்று பொழுதைப் போக்குவோரும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரே.
 மேகங்களிலிருந்து மழையை பொழிய வைத்து வித்தையும் தாவரத்தையும் வெளியாக்கி சோலைகளை உருவாக்குவதாக உரைக்கிறது 78-14, 15,16 ஆவது வசனங்கள். 14 ஆம் வசனத்தில் வரும் முஃஸிராத்து என்னும் அரபி சொல் நீர் நிரம்பிய கார்மேகத்தையும் கார்மேகத்தை நீராக்கும் குளிர்ந்த காற்றையும் குறிப்பிடும். மாஅன் தஜ்ஜாஜா என்னும் சொல் தொடர்ந்து பெய்யும் மழைத்துளிகளைக் குறிப்பிடும். 15 -ஆவது வசனத்தில் "ஹப்பன்' என்பது வித்துகளையும் "நபாத்தன்' என்பது புல்பூண்டுகளையும் தானியங்களையும் தானிய தாள்களையும் குறிப்பிடும். மழையால் தாவரங்கள் விளைந்து தானியங்கள் மனிதர்களுக்கு உணவாக தானிய தாள்கள் விலங்குகளுக்கு உணவாவதை இவ்வசனம் குறிப்பிட 16 ஆவது வசனம் சுற்றுச்சூழல் சுகமாக அமைய சுவாசிக்க சுத்த காற்றைப் பெற சோலைகளை, மரங்கள் அடர்ந்த தோட்டங்களை, காடுகளை உருவாக்கி இருப்பதை உரைக்கிறது.
 தொடர்ந்து 78-25 முதல் 32 வரை உள்ள வசனங்கள் மழையால் மண் செழித்து செடி கொடிகள் முளைத்து மரங்களாய் வளர்ந்து தோட்டங்கள் உருவாவது காய்கனிகளை மனிதர்களும் மிருகங்களும் உண்டு வாழ உண்டாக்கி இருப்பதை இயம்புகிறது. இவ்வுண்மையை உணராது இயற்கையை மாசுபடுத்தி சூறையாடினால் உலகம் அழிவதை அறிவிக்கின்றன 78-33 முதல் 42 வரை உள்ள வசனங்கள்.
 மழையால் ஒரு நீர் நிலையில் ஆற்றில் ஏரியில் வாய்காலில் குளத்தில் நீர் இருந்தால் அந்நீர்நிலையை சுற்றி உள்ள பல கி.மீ. தொலைவு வரை நிலம் ஈரமாக இருக்கும். ஈர நிலம் வனங்கள் உருவாகவும் வளர் உயிரினங்கள் வாழவும் உதவும். மக்களுக்குத் தேவையான நீரும் கிடைக்கும். காற்று மாசைக் குறைக்கும். காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை உயிர்களை அழிக்காமல் காட்டிலேயே வனவிலங்குகள் வாழ வழி வகுக்கும்.
 காற்று வீசாவிடில் இவ்வுலகம் நாற்றத்தில் நலியும் அழியும் என்று அறிவிக்கிறார் அறிஞர் வக்கீஉ (ரஹ்) காற்று மாசுபட்டால் உலகில் மக்கள் நோய்க்கு உள்ளாகி நொந்து வெந்து மடிவதையே அந்த அறிஞர் குறிப்பிடுகிறார்.
 இஸ்லாமியர்களின் விழாக்களான ஈதுல்பித்ர், ஈதுல் அல்ஹா, பெருநாள்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மீலாது நபி, புத்தாண்டு துவக்கமான முஹர்ரம், ஆசுரா நாள்களில் மசூதிகளில் கூடி தொழுது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதும் ஏழைகளுக்குத் தானதர்மங்கள் வழங்குவது மட்டுமே வழக்கம். இவ்வழக்கம் காற்று ஒலி மாசு ஏற்படுத்தி சீரழிக்கும் ரசாயன நெகிழி பொருள்களை நீர்நிலைகளான குளத்தில் ஆற்றில் நதியில் கடலில் கரைத்து நீரை மாசுபடுத்துவதோ சுற்றுச்சூழலைக் கெடுப்பதோ அல்ல. இதுபோல தனி மனித, சமூக, சமுதாய நிகழ்ச்சிகள் அனைத்திலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது தூசு துகள் இல்லாத உலகில் தூய்மையாய் வாழ்வோம். தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/சுற்றுச்சூழல்-மாசு-3109805.html
3109804 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, March 8, 2019 10:06 AM +0530 * கண் விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டு காணப்படும். களைத்திருப்பவனுக்கு வழி வெகு தொலைவாக இருக்கும். நல்லறத்தை அறியாத முட்டாள்களுக்குச் சம்சாரத் தொடர் எல்லையற்றது. நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப் பெற்ற மனம்தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும்.
* இந்த உலகில் எந்தக் காலத்திலும் பகை, பகையால் தணிவதில்லை; பகை அன்பினாலேயே தணியும்; இதுவே பண்டைநெறி. பெரியோர்கள், பகை என்னும் நெருப்பை நட்பு என்னும் நீரால் அணைப்பார்கள்.
- புத்தர் 
* இறைவன் அறிவுக்கு எட்டாதவன், முடிவற்றவன், அவன் பெருமை எல்லையற்றது.
இறைவன் காலத்தாலும் மாயையாலும் தீண்ட முடியாதவன். வினைப்பயன் அவனைப் பாதிப்பதில்லை. அவனுக்குப் பிறப்பே கிடையாது; ஜாதிமத பேதமும் அவனுக்கு இல்லை. அவன் சுயம்பிரகாசன்; மயக்கமற்றவன். அந்தச் சாசுவத சத்திய சொரூபனுக்கே என்னை அர்ப்பணிக்கிறேன். உருவமற்ற அவனை அறிய, சத்தியமான குருபோதனையால்தான் இயலும்.
- குருநானக்
* உலோபமும் கருமித்தனமும் எல்லா நற்குணங்களையும் அழித்துவிடும். தன் பொருள்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கும் அளவிற்குச் சுயநலத்தைத் துறந்தாலன்றி உய்யும் வழி கண்டறிவது அரிது.
- ஆதிசங்கரர் 
* பேராசைக் குணம் மக்களின் வாழ்க்கைக் குணமாக வளர்ந்துவிட்டால், அதுவே அறிவை அழித்துவிடுகிறது.
கோபத்தைவிட்டால் மனிதனுக்குத் துயரம் ஏற்படுவதில்லை.
- வியாசர் 
* செய்நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப முடியாது. 
- சாணக்கியன் 
* உலக மக்கள் இகழும் வகையில் தீய செயல்களைச் செய்யும் கொடியவர்கள் செல்வம் பெறினும், வேர் அறுந்த மரங்கள்போல நீண்ட காலம் வாழ்வதில்லை.
- வால்மீகி ராமாயணம் 
* தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து நெய் பெறுவது வழி. அதுபோல் தானே முயன்று ஞானத்தைப் பெறுவது முறை.
* வெண்ணெயாக வாங்கிச் சாப்பிட்டு ஊட்டம் பெறுவதும் உண்டு. அதுபோல் ஞானியின் சொல்லைக் கேட்டு அதன்படி வாழ்ந்து ஞானம் பெறுவது.
* "கடையவும் மாட்டேன். வாங்கவும் மாட்டேன்; நெய்யே நீயே வா!'' என்றால் அது வராது. ஒருவேளை அபூர்வமாக எவருக்கேனும் அது வருமானால், அவர் முன்பிறவிகளில் அதற்காகப் பாடுபட்டவராக இருந்திருப்பார்.
- சதாசிவ பிரம்மேந்திரர்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3109804.html
3109803 வார இதழ்கள் வெள்ளிமணி தன்வந்திரி திருத்தலத்தில் தெய்வத் திருமணங்கள்! DIN DIN Friday, March 8, 2019 10:02 AM +0530 திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதாவது பிறக்கும்போதே பிரம்மன் நம் தலையில் "இன்னார்க்கு இன்னார்' என்று எழுதிவிடுகிறார்! இறைவனும் நம்மில் ஒருவராக இப்பூவுலகில் பிறந்து நம்முடன் வளர்ந்து, நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று வழிகாட்டப்பட்டிருக்கிறார். இறைவனும், இறைவியும் இவ்வுலகிலேயே திருமணமும் செய்து கொண்டு அரசாட்சியும் செய்திருக்கின்றனர்.
 தெய்வத் திருமணங்களைத் தனி கலாசார விழாவாகக் கொண்டாடுகிறோம். சிவன் - பார்வதி, திருமால் - திருமகள், பிரம்மா-சரஸ்வதி, முருகன் - வள்ளி, தெய்வானை, விநாயகர்- சித்தி புத்தி என்று பெரும்பாலும் எல்லா கடவுள்களும் தம்பதிகளாகவே காட்சி தருவதைக் காணலாம். இவர்கள் தெய்வங்களாக இருந்தாலும், அவர்களது திருமணங்கள் இப்பூவுலகிலேயே நடந்திருக்கின்றன என்பதனைப் புராணங்களும், தலவரலாறுகளும் தெரிவிக்கின்றன.
 இவ்வாறு திருக்கோயில்களில் நடைபெறும் தெய்வத் திருமணங்களை, திருக்கல்யாண உற்சவம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.
 இந்த தெய்வத் திருமணங்களில் நாம்முடைய திருமணம் போலவே மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, ஊஞ்சல், கன்னிகாதானம், தாரை வார்த்தல், தாலியணிதல், அம்மி மிதித்தல், சப்தபதி, பொரியிடல், அருந்ததி பார்த்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இத்தகைய திருமணங்கள் திருக்கோயில்களில் வருடத்திற்கொருமுறை குறிப்பிட்ட தினத்தில் நடைபெறுகிறது. அது தவிர, பக்தர்கள் தங்கள் குறை தீரவும், திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும் இவ்வாறு இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
 தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றது பங்குனி மாதத்தில்தான் என்கின்றன புராணங்கள். கன்னிப் பெண்கள், பங்குனி உத்திர நாளில் கல்யாண விரதம் கடைப்பிடித்து, ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பர்.
 இதனையொட்டி, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அனந்தலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழ புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் "திவ்ய அபிமான úக்ஷத்ரம்' என்றழைக்கப்படும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், அப்பீடத்தின் 15 -ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும், அப்பீடத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் 58 -ஆவது ஜெயந்தியை முன்னிட்டும் 13.3.2019 முதல் 17.3.2019 வரை பல தெய்வீக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இத் திருத்தலத்தில், பிரதான தெய்வமாய் அருள்புரியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன், ஷண்மத தெய்வங்களும், சித்த புருஷர்களுக்கும் திருச்சந்நிதிகள் அமையப் பெற்று ஆண்டு முழுவதும் பல்வேறு ஹோமங்கள், யாகங்கள் இடைவிடாது நடைபெற்று வருவதுடன் சமூக நலப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 இப்பீடத்தின் 15 -ஆம் ஆண்டு விழாவின் ஓர் அங்கமாக கோமாதா திருக்கல்யாணம் மற்றும் 108 சுமங்கலி பூஜை (13.3.2019), துளசி-நெல்லி திருக்கல்யாணம் மற்றும் 108 கன்யா பூஜை (14.3.2019), வேம்பு-அரசு திருக்கல்யாணம் மற்றும் 108 தம்பதி பூஜை (15.3.2019), ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 15-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேக விழாவை முன்னிட்டு, சகஸ்ர கலசாபிஷேகம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம் மற்றும் 600 }க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கம நிகழ்ச்சிகளும் (16.3.2019) நடைபெறுகின்றன.
 இந்நிகழ்ச்சிகளின் நிறைவுநாளான 17.3.2019 அன்று, ஸ்ரீ சித்தி புத்தி சமேத விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், ஸ்ரீ சரஸ்வதி சமேத பிரம்மா, ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், ஸ்ரீ அனகாதேவி சமேத தத்தாத்ரயேர், ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, ஸ்ரீ சித்ரலேகா சமேத குபேரர், ஸ்ரீ சொர்ணம்பிகை சமேத சொர்ண பைரவர், ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான், ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி சமேத நரசிம்மர், ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயவதன பெருமாள், ஸ்ரீ ரமா சமேத சத்யநாராயணர், ஸ்ரீ விஜய லக்ஷ்மி சமேத சுதர்சன பெருமாள், ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத ராமர், மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கரா சமேத சரபேஸ்வரர் ஆகிய பதினாறு தெய்வத்திருமணங்கள் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் நடைபெறவுள்ளன.
 இந்நிகழ்ச்சியில் பக்தர்களுடன் பல்வேறு துறையைச் சார்ந்த பெரியோர்கள், மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள், மஹான்கள், அருளாளர்கள், சாதுக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இறையருளால் நோயற்ற வாழ்வு, நல்ல கல்வி, குறையாத செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட ஆயுள், எடுத்தக் காரியத்தில் வெற்றி, அதிர்ஷ்டம், மன மகிழ்ச்சி, போன்ற பதினாறு பேறுகளும் பெற்று வளமாக வாழ்வோம்.
 இப்பீடம் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில், வாலாஜாபேட்டை பேரூந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 தொடர்புக்கு: 04172-230033 / 94433 30203.
 - என். பாலசுப்ரமணியன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/தன்வந்திரி-திருத்தலத்தில்-தெய்வத்-திருமணங்கள்-3109803.html
3109802 வார இதழ்கள் வெள்ளிமணி விலோம காலசர்ப்ப யோகம் DIN DIN Friday, March 8, 2019 09:59 AM +0530 முன்னால் கேதுபகவான் பின்னால் ராகுபகவான் இருப்பது, அனைத்து கிரகங்களும் கேதுபகவானின் வாயை நோக்கிப் பயணப்படுவது, கேதுபகவானின் வாயிலிருந்து வெளிப்படும் விஷத்தால் தாக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகுபகவான், தனது வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக்கொண்டு விலகிச் செல்வதால் அதிலிருந்து வெளிப்படும் விஷத்தாலும் தாக்கப்படுகின்றன. இதுதான் காலசர்ப்ப தோஷமாகும்.
 அனுலோம காலசர்ப்ப யோகம்: முன்னால் ராகுபகவான் பின்னால் கேதுபகவான் இருப்பது அனைத்து கிரகங்களும் ராகுபகவானின் வாயை நோக்கி நகருகின்றன. கேதுபகவான் தன் வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக்கொண்டு செல்கிறது. ராகுபகவானுக்கு வாயில் விஷமில்லை. கேதுபகவானுக்கு வாலில் விஷமில்லை. இதனால் அதிக பாதிப்பு இல்லை. இது காலசர்ப்ப யோகமாகும். இதை சர்ப்ப ராஜயோகம் என்றும் அழைப்பார்கள்.
 பொதுவாக, காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள் 32 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றமடைகிறார்கள். ராகு- கேது பகவான்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் ஆகியவைகள்பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றன. பல குடும்பங்களில் குடும்பத்தினர் அனைவருக்குமோ அல்லது பெரும்பான்மையினருக்கோ அனைத்து கிரகங்களும் ராகு- கேது பகவான்களின் பிடிக்குள்ளோ, லக்னம், குடும்பம், சுகம், அல்லது பஞ்சமம் (ஐந்து) ஆகிய ஸ்தானங்களிலோ அல்லது கிரகங்கள் ராகு- கேது பகவான்களின் சாரம் பெற்று சுபக்கிரகச் சேர்க்கை, பார்வை பெறாமல் போவதோ பெரும்பான்மையாக அமைகிறது. இத்தகைய குடும்பத்தினருக்கு திருமணத் தாமதம், தடை, புத்திர பாக்கிய தாமதம், தடை ஆகியவை பரவலாக அமைகிறது. இத்தகைய குடும்பத்தினர் சர்ப்ப சாந்தி, நாகப் பிரதிஷ்டை ஆகியவைகளைச் செய்து குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். இவைகள் பெரும்பாலும் சர்ப்பத்துக்கு முற்பிறவியில் செய்த துன்பங்களின் காரணமாக அமைகிறது என்று கூற முடிகிறது.
 - கே.சி.எஸ். ஐயர்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/விலோம-காலசர்ப்ப-யோகம்-3109802.html
3109801 வார இதழ்கள் வெள்ளிமணி தம்பதியர் ஒற்றுமைக்கு ஒரு விழா! Friday, March 8, 2019 09:58 AM +0530 திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, "பங்குனி உத்திரம்' திருவிழா தான்! பிரம்மா இவ் விழாவைக் கொண்டாடியதால் இது "ஆதி பிரம்மோற்சவம்' எனப்படுகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்திருந்து மீண்டும் இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்.
 பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் "பாசப் போராட்டம்' என்பார்கள். அதாவது, ஜீவாத்மாவான மனைவியும் பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிது படுத்தாமல் அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.
 இந்தக் கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீ ரங்கத்தில் "மட்டையடி உற்சவம்' நடைபெறுகிறது.
 சரி, பெருமாளுக்கும் தாயாருக்கும் அப்படி என்ன ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் ஒரு சோழ மன்னன். அந்த சோழனுக்கு குழந்தை பாக்கியமில்லை. அந்தக் குறையை போக்க மகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தார். அதனால் அவள் கமலவல்லி! அவளை ரங்கநாதர் திருமணம் செய்தார். உறையூரில் கமலவல்லி நாச்சியார் என்ற பெயரில் கோயிலும் அமைந்துள்ளது.
 தாயாரின் திருநட்சத்திரம் -ஆயில்யம். எனவே, பங்குனியில் ஆயில்ய நட்சத்திர நன்னாளில் ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார் சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார். உறையூரில் நாச்சியாருடன் வீதிவுலா வந்துவிட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன். பெருமாளைக் காணாமல் அவரின் வருகைக்காக காத்திருப்பார் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார்.
 பெருமாள் எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதனை அறிந்து, கோபத்துடன் புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகளை பெருமாள் மீது வீசியெறிவார். பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது என தடைகள் செய்வார் பிராட்டியார். இந்தப் பிணக்கை தீர்த்து வைக்கிறார் நம்மாழ்வார்.
 பெருமாள் தாயாரிடன் சொல்லி மன்னிப்பு கேட்க, தாயாரும் சமாதானம் ஆகிறார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாய் எழுந்தருளி "சேர்த்தி' என்னும் சேவை சாதிப்பர். இந்த சேவை, ஆலயத்தின் 5-ஆவது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவைக் காண்பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.
 பங்குனி உத்திர நாளன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள், மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
 - டி.எம். இரத்தினவேல்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/08/தம்பதியர்-ஒற்றுமைக்கு-ஒரு-விழா-3109801.html
3105399 வார இதழ்கள் வெள்ளிமணி சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி! DIN DIN Friday, March 1, 2019 10:26 AM +0530 சிவராத்திரி வழிபாடு ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வழிபாட்டு முறைகளால் மாறுபடுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களுக்கு உட்பட்ட 12 சிவாலயங்களையும், 112 கி. மீ. தூரம் ஓடியும் நடந்தும் சென்று தரிசிக்கின்றனர். இதனை, "சிவாலய ஓட்டம்' என அழைக்கின்றனர். இந்த சிவாலய ஓட்டம் திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர்கோயில், பொன்மனை தீம்பிலாங்குடிமகாதேவர் கோயில், திருபன்னி பாகம்சிவன்கோயில், கல் குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு சிவன்கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு சிவன் கோயில், திருபன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ஆகிய 12 திருக்கோயில்களையும் தரிசனம் செய்வதாகும். மகாபாரதக் காலத்திலிருந்து இவ்வகை வழிபாடு நடந்தாலும் சுமார் 300 ஆண்டுகளுக்கு சான்றுகள் இருப்பதாக அறியப்படுகிறது.
பழம்பெருமை வாய்ந்த இந்த நிகழ்வு வரலாறு அடிப்படையானது. சிவ பக்தரான வியாக்ரபாத மகரிஷியே மனிதவடிவும், புலி வடிவம் கொண்ட புருஷாமிருகம் ஆனார். புருஷா மிருகம் விஷ்ணுநாமத்தை கேட்க விரும்பாத சிவமே சிந்தையுள் கொண்டது.
தர்மரின் ராஜசூய யாகத்திற்கு புருஷாமிருகத்தின்பால் தேவைப்பட்டது. தர்மர் பீமரிடம்12 ருத்ராட்ச கொட்டைகளைத் தந்து "நீ திருமால் பெருமையை பேசினால் புருஷாமிருகம் உன்னைத் துரத்தும். அவ்வாறு துரத்தும் போது ருத்ராட்சக் கொட்டைகளை வீசி எறிந்தால் அது லிங்கமாக ஸ்தாபிதமாகும். அங்கே சிவபூஜை செய்த பிறகே, மீண்டும் உன்னைத் துரத்தும். அந்த இறுதி கொட்டை எங்கே விழுகிறதோ அங்கே அரியும் அரனும் காட்சி தருவர்' என்றார்.
அவர் கொடுத்த ருத்ராட்ச கொட்டையுடன் காட்டிற்கு சென்றான் பீமன் புருஷாமிருகம் திருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பீமன் "கோவிந்தா, கோபாலா' என்று உரக்க கூறினார். தவம் கலைந்த புருஷாமிருகம் பீமனை துரத்தியது. அப்போது பீமன் ஒரு ருத்ராட்சத்தை தூக்கி எறிந்தான். அது சிவலிங்கமாக மாறியது. உடனே புருஷாமிருகம் சிவனை பூஜிக்க தொடங்கியது. அடுத்து திக்குறிச்சி உட்பட 10 இடங்களிலும் பீமனால் போடப்பட்ட ருத்ராட்சம் சிவலிங்கமாகியது. அங்கெல்லாம் பூஜை செய்தது. இறுதியாக நட்டாலம் என்னும் ஊரில் சென்று பீமன் "கோவிந்தா, கோபாலா' எனக்கூற அங்கு வீசிய ருத்ராட்சத்திலிருந்து சிவனும் திருமாலும் சங்கரநாராயணராகக் காட்சிதர, புருஷாமிருகமும் அரியும் சிவனும் ஒன்று என உணர்ந்து வழிபட்டு யாகத்திற்கும் பால் தந்தது.

இவ்வரலாற்று அடிப்படையில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் கோவிந்தா! கோபாலா!! கோஷத்துடன் மாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று மாலையணிந்து பக்தர்கள், கையில் விபூதியுடன்கூடிய மஞ்சள் பை மற்றும் பனைஓலை விசிறியுடன்12 சிவாலயங்களுக்கும் ஓடிச் சென்று இறுதியில் நட்டாலம் என்னும் ஊரில் சங்கரநாராயணரை வணங்கி ஓட்டத்தை நிறைவு செய்து அன்று இரவு முழுவதும் சிவநாமம் சொல்லி வழிபாடு செய்வது இந்தவிழாவின்சிறப்பம்சம் ஆகும்.
சிவாலயம் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப் பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சிவன் கோயில்களில் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை சொல்லி ஓடும் இந்த மகாசிவராத்திரி திருவிழா குமரிமாவட்டத்தில் மிகச் சிறப்பானது.
இது தொடர்பாக, மற்றொரு வரலாறும் மக்களின் வழக்கில் வழங்கி வருகின்றது.
ஒருமுறை சுண்டோதரனுக்கு அவன் கை காட்டி சுண்டினால் எதிரில் இருப்பவர் எரியக்கூடிய வரத்தை சிவபெருமான் அருளினார். வரத்தை பெற்ற சுண்டோதரன் சிவபெருமானிடமே அதனை சோதிக்க எண்ணினான். அவனைப் புரிந்து கொண்ட சிவபெருமான் 11 இடங்களில் ஓடி ஒளிந்து கொண்டார். 12-ஆவது இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிவனிடம் விவரம் கேட்க, நடந்தது அறிந்து சிவபெருமானை ஒளித்துவிட்டு, கிருஷ்ணர் அழகான பெண் வேடத்தில் சுண்டோதரன் முன் தோன்றினார். அவன் அவளை திருமணம் செய்ய கேட்டான். அந்த பெண் தன்னைப் போல் நடனம் ஆடினால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாள் . இருவரும் நடனமாடினர். ஒரு கட்டத்தில் அந்த பெண் தன் தலை உச்சிக்கு நேராக கையை சுண்டினாள். சுண்டோதரனும் தான்பெற்ற வரத்தை மறந்து சுண்டுவிரலை தன் தலை உச்சியில் சுண்ட, எரிந்து சாம்பலானான். சிவனும், ஸ்ரீகிருஷ்ணரும் ஒன்றாக சேர்ந்து தோன்றி எரிந்த சுண்டோதரனை அதே நட்டாலம் என்னும் ஊரில் உயிர் பெறச் செய்தனர்.
சிவனும், விஷ்ணுவும் ஒரேஇடத்தில் தோன்றி அருள் அளித்ததால் சிவனாகிய சங்கரனும், விஷ்ணுவாகிய நாராயணரும் ஒன்றாகக் கலந்து சங்கரநாராயணராக 12-ஆவது சிவாலயமான திருநட்டாலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்குத் திருநீறு வழங்கப்படும். 12-ஆவது திருக்கோயிலில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது.
சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுவோர் பீமனாக கையில் இருக்கும் பையில் ருத்ராட்சத்திற்கு பதிலாக விபூதியும் கொண்டு செல்கின்றனர். கும்பல் கும்பலாக பக்தர்கள் "கோபாலா கோவிந்தா' எனச் சொல்லிக் கொண்டு நடந்தும் ஓடியும் 112 கி. மீ. தொலைவைக் கடப்பது என்பது அற்புத நிகழ்வே. இவ்வாண்டு, மார்ச் 3 -ஆம் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கி மார்ச் 4 -ஆம் தேதி நட்டாலத்தில் முடிவடைகிறது.
தொடர்புக்கு: 70108 63361.
- எஸ். அஜீத்

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/சிவனும்-அரியும்-ஒன்றான-சிவன்ராத்திரி-3105399.html
3105398 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 30 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, March 1, 2019 10:24 AM +0530 இதுவரைக்கும் கதையின் முதல் பகுதி. இனிமேல்தான், இரண்டாம் பகுதி. இரண்டாம் பகுதிக்கு முன்னோடு முக்கியமான திருப்பம். பசுவின் பாதையைக் குறித்துவிட்ட, அந்தப் பாதையோடு கால்வாய் அமைக்கவேண்டுமென்பதற்காகத் தன்னுடைய தங்கப் பிரதிமையை நாடினார் அந்தணர். அதுதான் துண்டம் துண்டமாக மூட்டையில் இருக்கிறதே. எந்த அர்ச்சகர் வீட்டில் கொடுத்து வைத்தாரோ, அந்த அர்ச்சகர் வீட்டுக்குச் சென்றார். தான் கொடுத்து வைத்த மூட்டையைத் திரும்பக் கேட்டார். இந்த அந்தணர், தங்கப் பிரதிமை பெற்ற விவரம், மாத்யானிகப் பலனைக் கொண்டு அரசர் நோயை நீக்கிய விவரம் யாவும் அர்ச்சகருக்குத் தெரியும். பருப்பு மூட்டை என்று தன்னிடம் கொடுக்கப்பட்டது தங்க மூட்டை என்று சந்தேகித்த அவர், அதனை ஏற்கெனவே (திருட்டுத்தனமாகத்தான்) திறந்துபார்த்து உறுதி செய்திருந்தார். இப்போது அந்தணர் வந்து கேட்டவுடன், அதே அளவுக்குப் பருப்பு மூட்டையைக் கொடுத்து, "இதோ தங்களின் பருப்பு மூட்டை' என்றார் (பருப்பு மூட்டை என்றுதானே அந்தணரும் சொல்லியிருந்தார்). ஆஹா! அர்ச்சகர் ஏமாற்றுகிறார் என்பதை அந்தணர் உணர்ந்தார். சேர மன்னரிடம் புகார் செய்தார்.
 மன்னரும் அர்ச்சகரைக் கூப்பிட்டு விசாரித்துவிட்டு, அந்த அர்ச்சகர் பூஜை செய்யும் காச்யபேச்வரரின் லிங்கத் திருமேனியைக் கட்டித் தழுவி சத்தியம் செய்யச் சொன்னார். அர்ச்சகர் பார்த்தார்; சிக்கிக் கொண்டது புரிந்தது. தன்னுடைய மந்திர சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி, சுவாமியின் சக்தியைப் பக்கத்திலிருந்த புளிய மரத்துக்கு மாற்றிவிட்டார். அடுத்த நாள் காலையில், காச்யபேச்வரர் திருமேனியைக் கட்டித் தழுவி சத்தியம் செய்ய ஆயத்தமானார்.
 மனிதர்கள் செய்யும் மாயாஜாலங்களைப் பார்த்துக்கொண்டு மகேசனார் சும்மா இருப்பாரா? அந்தணரின் கனவில் போய் அர்ச்சகரின் திருட்டுத்தனத்தைக் காட்டிவிட்டார். அவரும் அரசரிடம் கூறிவிட... புளியமரத்தைக் கட்டித் தழுவியபடியே சத்தியம் செய்யச் சொல்லி அரசர் ஆணையிட, அர்ச்சகர் அவ்வாறே செய்ய... மரம் பற்றியெரிய, அர்ச்சகரும் எரிந்து சாம்பலானார்.
 கன்னடியர் வரலாறா? கற்பனைக் கதையா?
 சென்னை ஆர்க்கியலாஜிகல் இலாகாவால் 1925-இல் வெளியிடப்பட்ட திருநெல்வேலி ஜில்லா சரித்திரக் குறிப்பேட்டிலும் மராமத்துத் துறையால் 1910-களில் பதிவு செய்யப்பட்ட பாசனக் குறிப்பேடுகளிலும் கன்னடியன் கால்வாய் பற்றிய வரலாறு, மேற்குறிப்பிட்டவாறு உள்ளது. சங்குண்ணி மேனன் என்பவர் எழுதிய திருவாங்கூர் சரித்திரம் என்னும் நூலைப் பற்றிக் கால்ட்வெல் பாதிரியார் குறிப்பிடுகிறார். இதன்படி, இந்தக் கதை சிறிதளவு மாறுபடுகிறது. வேலூர் பகுதியை ஆண்டுகொண்டிருந்த பிரதாப ருத்திர மகாராஜாவிடமிருந்து குண்ணாடிய (தெலுங்கு பார்ப்பனர்களில் ஒரு வகையினர்) வம்சத்தைச் சேர்ந்த ஒருவர், நிறைய செல்வம் பெற்றனர். அதனை அறவழியில் செலவழிக்க ஆசை கொண்டார். தென்னாடு அடைந்தார். அகத்தியரின் வழிகாட்டுதலில் பசுவின் வாலைப் பற்றிக் கொண்டு பின் தொடர்ந்தார். விவசாய வாய்க்காலையும் நீர்த்தேக்கங்களையும் அமைத்தார். மீதமிருந்த பணத்தில் சேரன்மாதேவியில் சத்திரம் கட்டினார். இந்தச் செயல்பாடுகளை மேற்பார்வை பார்த்து இவற்றை நிர்வகிப்பதற்கு ஸ்ரீவத்ஸ கோத்ர நாராயணப்பப் பிள்ளை நிரந்தர மானியதாரராக நியமிக்கப்பட்டார்.
 எப்படியாயினும், தன்னுடைய செல்வத்தைக் கொண்டு அணையை உருவாக்கிய கன்னடியர் (அல்லது குண்ணாடியர்), கால்வாயையும் அமைத்தார். கால்வாய் அமைக்கும்பொழுது சிக்கல் வந்தது. தாசி ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து பசு வந்ததல்லவா? கால்வாய் வெட்டுவதற்காகத் தன்னுடைய வீட்டை இடிக்க அந்த தாசி ஒப்பவில்லை. தான் வெட்டும் கால்வாயின் பாதியளவு நீர் போகக்கூடிய விதத்தில் மதகையும் கிளைக்கால்வாயையும் அந்த இடத்தில் அமைப்பதாக கன்னடியர் வாக்குக் கொடுத்தார். அவளும் வீட்டை விட்டுக் கொடுத்தாள். அவளுடைய பெயர் காலாச்சி. இதனால், "கன்னடியன் கால் (வாய்) பாதி, காலாச்சி மடை பாதி' என்னும் சொலவடை தோன்றியது. பசுமாடு படுத்த இடங்களில் குளங்களையும் கன்னடியர் அமைத்தார். கடைசியாகப் போய் அப்பசு படுத்துக்கொண்டு மறைந்துபோன இடத்திலும், கால்வாயை முடிப்பித்துப் பெரிய ஏரி அமைக்கப்பட்டது. பசு பறந்துவிட்ட இடம் (ஏதேனும் ஒன்று கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தால், பறந்துவிட்டது என்று சொல்வது வழக்கம்) என்பதால் "பறந்தேரி' என்றழைக்கப்பட்ட இந்த இடம், காலப்போக்கில் பிராஞ்சேரி ஆகிவிட்டது.
 - தொடரும்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/பொருநை-போற்றுதும்-30---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3105398.html
3105395 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, March 1, 2019 10:22 AM +0530 மகா கும்பாபிஷேகம்
"திரு மந்திரம்' என்னும் பத்தாம் திருமுறையை உலகுக்கு நல்கிய திருமூல நாயனார் அவதாரத் தலம் சாத்தனூர். இவ்வூரின் கண், ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ மகாசாஸ்தா ஆலயமும், திருமூலர் ஆலயமும் அடுத்தடுத்து ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்விரு ஆலயங்களுக்கும் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் மகாகும்பாபிஷேக வைபவம் மார்ச் 3 -ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 99765 68899 / 94453 76944.
•••••••••••••••
மகா சிவராத்திரி விழா
தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் சிங்கபெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள குளத்தூர் கிராமம், ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீதுளலீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 4- ஆம் தேதி இரவு 7.00 மணி முதல் நான்கு காலங்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 94440 22133 / 99402 06679.
••••••••••••
கும்பகோணம் அருகில் திருவிசலூர் ஸ்ரீ ஸ்ரீ அய்யாவாள் சந்நிதியில் மகாசிவராத்திரி வைபவம் மார்ச் 2 -ஆம் தேதி ஏகாதசி தீபப்பிரதட்சிண திவ்ய நாமபஜனை, மார்ச் 3- பாராயணம், தேவார இன்னிசை, டோலோத்ஸவம், மார்ச் 4 - மகன்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94440 56727.
••••••••••••
திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வர நகரில் உள்ள சர்வேஸ்வர தியான நிலையத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 4 -ஆம் தேதி காலை 6.00 மணி அளவில் சின்மயாமிஷன், கொட்டிவாக்கம் அப்பயதீட்சதர் பவுண்டேஷன், வேதபாராயண சமிதி இணைந்து மகாருத்ரபாராயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பாராயணத்தில் பங்கு பெற முன்னதாக தெரிவிக்க வேண்டும். 
தொடர்புக்கு : 98844 65404 / 95000 43938.
••••••••••••••
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுகுன்றத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் திருநிலை. இங்கு, அமைந்து அருள்
புரியும் அருள்மிகு பெரியாண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா, 04.03.2019 - அன்று மாலை 3.00 மணியளவில் துவங்கி, நான்கு கால அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98427 40957.
•••••••••••••••••
திருவாசக முற்றோதல்
சென்னை அசோக்நகர், சத்தியமூர்த்தி பிளாக்கில் உள்ள விநாயகர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் குழுவினரின் 75- ஆவது முற்றோதலை "ஓதலும்- உரைத்தலும்' என்கிற வகையில், திருவாசக முற்றோதல் மார்ச் 3 -ஆம் தேதி, காலை 6.30 மணி முதல் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: அ. தேசிகன்- 90031 51343 / 94440 33841.
••••••••••••••••
சுந்தரர் தேவாரம் முற்றோதுதல்
திருவாவடுதுறை ஆதீனம் இருபத்தி நான்காவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியோடு 7- ஆம் திருமுறை முற்றோதுதல் இன்னிசைப் பெருவிழா, பிரதி ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருப்பூர், ஏ.வி.பி. அறக்கட்டளை கலையரங்கில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98439 44122 / 90039 59113.
•••••••••••••••••••
பிரம்மோற்சவம்
சென்னை, தரமணி, ஸ்ரீ பக்த ஆஞ்நேய சுவாமி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளது. வரும் 05.03.2019 -ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். 
தொடர்புக்கு: 99625 90803.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/நிகழ்வுகள்-3105395.html
3105394 வார இதழ்கள் வெள்ளிமணி இறைவனை கரம் குவித்து வணங்குவோம்! DIN DIN Friday, March 1, 2019 10:18 AM +0530 இறைவனின் படைப்பில் மனிதனின் படைப்பு மிகவும் சிறப்பானது. மனிதனின் உடல் உறுப்புகளில் இரு கரங்கள் மிகவும் சிரேஷ்டமானது. ஐந்து விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து மணிக்கட்டுடன் இணைத்து, முழங்கை, தோளுடன் பொருத்தியுள்ளார்.
 கையின் மூட்டுகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கையை எப்படியும் அசைக்கலாம், திருப்பலாம், உயர்த்தலாம். பிறப்பில் இரு கரங்களும் சம செயல்பாடு உடையவை. மேலும் அனைத்து விரல்களின் செயல்பாடுகளையும் நாம் போற்றியே ஆக வேண்டும். அத்தனை சிறப்புமிக்கவை நமது கரங்கள்!
 வேதாகமத்தில் கையில்லாத ஒருவரின் செய்தி உள்ளது. இயேசு ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே செயல்பாடு இல்லாத கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். இயேசு ஓய்வு நாளில் அவனை சுகமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று நோக்கமாயிருந்தார்கள் சிலர்.
 அப்பொழுது இயேசு, செயல்பாடு இல்லாத கையுடைய மனிதனை நோக்கி, "" எழுந்து நடுவே நில்'' என்று சொன்னார். கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓய்வு நாளில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ எது நியாயம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர்கள் பேசாமல் இருந்தனர். அவர்களின் இதயம் அத்தனை கடினமாக இருப்பதை எண்ணி அவர் விசனப்பட்டு கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தார். அந்த மனிதனை நோக்கி, "" உன் கைகை நீட்டு'' என்றார். அவன் நீட்டினான். அவனது கை மறுகையைப் போன்று சொஸ்தமாயிற்று. (மாற்கு 3:1-5)
 பிறவியிலேயே அவனது வலதுகை சரியாக வளர்ச்சி அடையாத நிலையிலேயே அவன் பிறந்திருந்தான். இருகரங்கள் இருந்தால்தான் வேலை செய்து பிழைக்க முடியும். ஆனால் தெய்வமாகிய இயேசு , "கையை நீட்டு' என்றார். "என்ன அற்புதம்! குறைபாடுடன் இருந்த அவனது கை நன்றாக செயல்படும்படி ஆயிற்று.
 மனிதனால் ஆகாதவை இறைவனால் கூடும். இவ்வாறு நமக்கு இப்பிறவியைத் தந்து எல்லா உறுப்புகளையும் தாயின் கருவில் உருவாக்கிய கர்த்தர் நல்லவர். நாம் பெற்றிருக்கும் இவ்வுருவம் நம்மை குறைவின்றி படைத்தமைக்கு தினமும் இருகரம் குவித்து வணங்குவோம். கர்த்தரின் அருள், அன்பு, ஆசீர்வாதம் நம்மை மகிழ்வாய் இப்பிறவியில் காக்கும்.
 - தே. பால் பிரேம்குமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/இறைவனை-கரம்-குவித்து-வணங்குவோம்-3105394.html
3105393 வார இதழ்கள் வெள்ளிமணி உத்தமோத்தம சோமவார மகாசிவராத்திரி! DIN DIN Friday, March 1, 2019 10:17 AM +0530 மாசிமாதம், தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் மகாசிவராத்திரி எனப்படுகின்றது. இவ்வாண்டு, மாசி மாதம் 20 -ஆம் தேதி (04.03.2019) சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை அன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகின்றது.
 திரயோதசி திதி என்னும் பார்வதி தேவியும் சதுர்த்தசி திதி என்னும் சிவபெருமானும் இணையும் இரவே சிவராத்திரி ஆகும். இதுபோன்று சில ஆண்டுகள் இணையும் , இணையாமலும் போகும் வாய்ப்புகள் அதிகம். சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் மறுநாள் "பாரணை' என்று சொல்லக்கூடிய சாஸ்திரீய போஜனத்தை (உணவை) உட்கொள்ள வேண்டும். பொதுவாக, சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை வருவதால் சாஸ்திரீய உணவை உட்கொள்ள இயலாது. (அமாவாசை முன்னோர்களின் தினமாதலால் அனைவரும் பாரணை மேற்கொள்ள இயலாது)
 அவ்வாறே, சிவராத்திரி தினம் எப்போதாவது சிவனாருக்கு உகந்த தினமான திங்கள்கிழமையுடன் இணையும். இவ்வாறு இணைவதும் அபூர்வம். மறுநாள் செவ்வாய்க்கிழமை பாரணை எனச் சொல்லக்கூடிய போஜனத்தை செய்ய ஏதுவாக, இருப்பதாலும் இரவில் திரயோதசி திதியும் சதுர்த்தசி திதியும் உமை ஐயன் சந்திப்பு ஏற்படுவதாலும் மிகச் சிறப்பான மகத்துவத்தை அடைந்த நாளாக இந்த மகாசிவராத்திரி அமைகிறது. மேற்சொன்ன மூன்று நியமங்களும் ஒரே நாளில் அமையவதென்பது அபூர்வ சிவராத்திரி ஆகும்.
 எனவே, இந்த அதி அற்புதமான சிவராத்திரி நன்னாளில் சிவாலய தரிசனம், ஐôகரணம் எனும் இரவில் கண் விழித்தல் , விரதம், வீட்டில் சிவனுக்கு பூஜைகள் செய்வது, ஆலயத்தினுள் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை அனுசரித்தால், மூன்று கோடி சிவராத்திரி தினத்தில் சிவனாரை தரிசனம் முதலானவற்றைச் செய்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ, அந்த அளவிட முடியாத புண்ணியம் இச்சிவராத்திரியினால் கிட்டும் என ஸ்ரீமத் உத்தரகாரணாகமத்தில் உள்ள சிவராத்திரி பூஜை செய்யும் முறையை கூறும் படலம் (33) அறுதியிட்டு கூறுகிறது.
 கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் கூட மூன்றுகோடி சிவராத்திரியை தரிசித்தல் என்பது இயலாத காரியம். எனவே, ஆஸ்தீக அன்பர்கள் இவ்வாய்ப்பினை நழுவவிடாமல், மார்ச் 4-ஆம் தேதி சோமவாரத்துடன் கூடிய சிவராத்திரி விரதங்களை கடைபிடித்து சிவனருளால் இகபர சுகங்களை அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 - கே. ராஜப்பா சிவாச்சாரியார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/உத்தமோத்தம-சோமவார-மகாசிவராத்திரி-3105393.html
3105392 வார இதழ்கள் வெள்ளிமணி தடையில்லா நடைபாதை DIN DIN Friday, March 1, 2019 10:15 AM +0530 இருவழி பாதைகளில் இருபுறமும் நடைபாதைகள் நடைமேடைகள் இருந்தன. நான்கு வழி தங்க சக்கர சாலைகள் ஆறு வழி பொங்கும் பொன்னான சாலைகள் ஏக வேகத்தில் பறக்கும் வாகனங்களுக்கான எட்டு வழி சாலைகளில் பாதசாரிகளைப் பாவிகளாய் பாவித்து நடைபாதையில் நடப்போரைப் படைப்பில் கடையராய் கணித்து நடைபாதைகளுக்கு விடை கொடுத்து விட்ட விபரீதத்தால் விளையும் விபத்துகள் நாளுக்குநாள் கூடிகொண்டே போவதைக் காண்கிறோம்.
 வளர்ந்த வளரும் நாடுகளில் இருவர் நடக்கும் நடைபாதை ஐந்து அடி அகலமும் பாதையின் உயரம் 4 முதல் 8 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. உயரம் உயர்ந்தால் சாலையிலிருந்து நடைபாதையில் காலைத்தூக்கி குதித்து ஏறுவது சிரமமாக இருக்கும். உயரம் இல்லாவிட்டால் இரண்டு மூன்று சக்கர வாகனங்களை நடைபாதையில் மெதுவான வேகத்தில் மட்டும் அல்ல. வேகமான வேகத்தில் அவசரமாக ஓட்டிச் செல்வார்கள். இம்மாதிரி மும்பையில் நகர எல்லையை தாண்டிய புறநகர் பகுதிகளில் தினசரி நடப்பதை நான் பார்த்தேன். பாதசாரிகள் பயந்து ஓடி ஒதுங்குவது பரிதாபமான காட்சி. விபத்துகளும் நடக்கின்றன.
 சென்னையில் தியாகராய நகர் நங்கநாதன் தெருவில் 30 அடி சாலையில் இருபுறமும் 10 அடி நடைபாதைகள் இருந்தன. நடைபாதையை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து விட்டன. மீதமுள்ள 20 அடி சாலையில் வாகனங்கள் வரிசையாய் நகர, பாதசாரிகளும் பதறி துடித்து பரிதாபமாக ஓடுகின்றனர்.
 நடைபாதைகள், கடைகளால் பறிக்கப்படுகின்றன. கடைக்கு வருவோரின் இரு சக்கர வாதனங்கள் நிறுத்தப்பட்டு வெற்றிடங்கள்சுற்றி வளைக்கப்படுகின்றன. தள்ளு வண்டி வியாபாரிகள் நடைபாதைகளின் மீதமுள்ள பாதையை பறித்து விடுகின்றனர்.
 பாதசாரிகள் பாதையின்றி பரிதவித்து பாய்ந்து சாய்ந்து சரிந்து சாலையில் இறங்கி சங்கடப்படுகின்றனர். ஒரு கடைகாரர் ஓரடி முன்னே இழுத்தால் அடுத்த கடைகாரர் ஈரடியை இழுக்க இப்படியே பல ஊர்களில் சாலைகளைச் சாப்பிட்டு அகல தெருக்களை ஒற்றையடி பாதையாக ஓரம் கட்டுவதும் சாரம் கட்டுவதும் சகஜமாகிவிட்டது. சங்கோஜப்பட வேண்டிய இழி செயலைச் சந்தோஷமாக செய்கின்றனர்.
 நடைபாதை குறித்து மதீனத்து மக்கள் மாறுபட்ட கருத்துகளோடு வேறுபட்ட பொழுது நடைபாதைக்கு ஏழு முழம் இடம் விட இனிய நபி (ஸல்) அவர்கள் கனிவாய் மொழிந்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. தற்காலத்தில் ஏழு முழம் பாதையை ஆக்கிரமித்து ஏழு அங்குலம் ஆக்கும் அபகரிப்பாளர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் அபாய எச்சரிக்கை. எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவருடைய கழுத்தில் அல்லாஹ் ஏழடுக்கு பூமியை வளையம் இடுவான். அறிவிப்பவர் - ஆயிஷா (ரலி) நூல் - புகாரி, முஸ்லிம். எவரேனும் அநியாயமாக ஒரு சாண் நிலத்தை எடுத்தாராயின் அவர் மறுமையில் ஏழு பூமிக்கு அடியில் அழுத்தப்படுவார். அறிவிப்பவர்- இப்னு உமர் (ரலி) நூல் - புகாரி.
 இமாம் அஹ்மத் பின்ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் கல்வி பயின்ற மாணவர் ஒருவரிடம் உரையாடுவதைத் தவிர்த்தார்கள். வருந்திய மாணவர் பொருந்தாதது எதையும் செய்து விட்டேனா? என்று ஆசிரியரிடம் வினவினார். உங்கள் வீட்டு சுவர் ஒன்றைத் தெரு மண்ணை எடுத்து எழுப்பி இருக்கிறீர். தெரு பள்ளமாகி விட்டது. அத்தெருவில் வாழும் மக்களை அவதிக்கு ஆளாக்கி விட்டீர். கற்றதன் பயன் மற்றவருக்கு நன்மை பயப்பதே. பிறருக்குத் தீங்கு இழைக்கும் உங்களுக்கு கற்பிப்பது பொற்புடையது அல்ல என்று புகன்றார்கள் புனிதமான ஆசிரியர். வருந்திய மாணவர் திருந்தினார். கற்றபடி ஒழுகும் பெற்றிமை உடையவர் ஆனார்.
 தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவது இறை நம்பிக்கையின் எழுபதுக்கும் அதிகமான கிளைகளில் ஒன்று என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்துரைக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். ஒருமுறை ஒருவர் அவர் சென்ற வழியில் முட்கள் நிறைந்த மரக்கிளை ஒன்று கிடப்பதைக் கண்டு அதனை அப்புறப்படுத்தினார். அல்லாஹ் அந்நற்செயலுக்கு நன்றியாக அவரை மன்னித்து விட்டான் என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ. நன்மை பயக்கும் நற்செயல் ஒன்றை அறிவிக்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அபூபர்ஸாத் (ரலி). மக்கள் செல்லும் வழியிலிருக்கும் தீமை பயக்கும் பொருள்களை அப்புறப்படுத்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை பகர்கிறார் அபூபர்ஸாத் (ரலி) நூல்- முஸ்லிம்.
 தேவைக்கு அதிகமாக ஆடம்பரமாக கட்டடம் கட்டுவதைக் காருண்ய நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அப்படி தேவையற்று தேடிய பொருளை வீணாக்கி விரயமாக்கி கட்டும் கட்டடங்கள் இயற்கைக்கு இடையூறாக இருக்கும். நடைபாதைக்கும் தடையாக அமையும்.
 நடைபாதைகளில் உட்காருவது தடுக்கப்பட்டது என்று தாஹா நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். தோழர்கள் சிறிது நேரம் பாதை ஓரங்களில் அமர்ந்து இருப்பதும் ஆகாதா? என்றுகேட்டபொழுது தவிர்க்க முடியாது என்ற நிலையில் பாதை ஓரத்தில் அமரும் பொழுது பாதைகளின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க போதனை செய்தார்கள் நீதர் நபி (ஸல்) அவர்கள். அறிவிப்பவர் அபூஸயீதில் குத்ரீ (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். பாதைகளின் உரிமைகள் என்பது அவ்வழியில் செல்லும் பாதசாரிகளுக்குச் சொல்லால் செயலால் இடையூறு செய்யாமல் பாதைகளில் தடை ஏற்படுத்தாமல் இருப்பது.
 நடைபாதைகளில் பாதை ஓரங்களில் மக்கள் ஓய்வு எடுக்க நிழல் தரும் பாதைகளின் இருபுறமும் உள்ள மரங்களின் கீழ் சிறுநீர் மலம் கழிப்பதை மாநபி (ஸல்) அவர்கள் தடுத்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். அதுபோலவே தெருக்களில் பிற இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் சிறு நீர் கழிப்பதையும் விலக்கிட விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியதை விவரிக்கிறார் ஜாபிர் (ரலி) நூல்- முஸ்லிம்.
 தற்காலத்தில் அற்புத மருந்துகளால் ஆற்றமுடியாத கொதிப்பு, கொழுப்பு, இனிப்பைக் குறைக்க, இன்னபிற நோய்கள் அண்டாது தடுக்க, அனுதினமும் இரு சக்கர வாகனங்களில் வளைய வரும் வழக்கத்தை ஒழித்து அருகில் உள்ள கடைகளுக்கும் பிற இடங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நடந்து செல்ல நவீன மருத்துவர்களும் பொருத்தமாய் கருத்து கூறுகின்றனர். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் எத்தனை எண்ணில் எத்தனை வழி சாலைகள் அமைத்தாலும் பாதசாரிகளையும் மனிதர்களாய் மதித்து நடைபாதைகள் அமைக்க வேண்டும்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/தடையில்லா-நடைபாதை-3105392.html
3105391 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, March 1, 2019 10:13 AM +0530 • வீடுகளில் புதுமனைப் புகுவிழா, உபநயனம், திருமணம், சீமந்தம், அன்னப்ராசனம் (குழந்தைக்கு முதல் பிரசாதம் அளித்தல்) போன்ற சுபகாரியங்கள் நிகழும்போது, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தந்தை, தந்தையின் தந்தை, தாத்தாவின் தந்தை, அவர்களின் பத்தினிகள் ஆகியோருக்கு "நாந்தீஸ்ராத்தம்' எனப்படும் ஸ்ராத்தத்தை (ஆண்டுதோறும் செய்யும் ஸ்ராத்தத்தைப் போன்றே) முன்னோர்களுக்கு வஸ்திரம் அளித்து, போஜனம் செய்வித்து, சிறிது தட்சிணை கொடுத்து, அவர்களை வணங்கி, அவர்களது அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். 
• நம் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும் நம் முன்னோர்கள் மிகவும் மனமுவந்து, தாங்களாகவே எழுந்தருளி அந்த சுபகாரியத்தையும் நடத்திக்கொடுத்து பரம அனுக்கிரகம் செய்கின்றனர்.
- ஆபஸ்தம்ப மகரிஷி 
• திருமாங்கல்யத்தை சுமங்கலிப் பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும், எத்தருணத்திலும் தங்கள் கழுத்தை விட்டுக் கழற்றக்கூடாது.
• எவ்வித தோஷமற்ற முகூர்த்த நேரத்தில், பித்ருக்களின் ஆசி, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ பரமேஸ்வரன் ஆகிய மூம்மூர்த்திகளின் பரமானுக்கிரகம், மகரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் ஆசி ஆகியவற்றைப் பெற்று அக்கினியை சாட்சியாக வைத்து, கன்னிகாதானத்தை மந்திரபூர்வமாக கணவன் ஏற்கிறான். அதனால் "திருமாங்கல்யம்' எனப்படும் மஞ்சள் சரடு மகத்தான சக்தி பெற்றதாகும். அது புனிதமும் வாய்ந்தது, அது கணவரின் ஆயுளை வளர்க்கும், சத்புத்திரர்களை அளிக்கும், பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு அளிக்கும்.
• எக்காரணத்தைக் கொண்டாவது, ஒரு சுமங்கலிப் பெண், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ திருமாங்கல்யத்தைக் கழற்றிவிட்டால், அந்த விநாடியே கணவர் இருந்தாலும்கூட, அவள் விதவையாகிவிடுகிறாள்.
• "குடும்பத்தில் எத்தகைய வறுமை நேரிட்டாலும்கூட, திருமாங்கல்யத்தை மட்டும் எதுவும் செய்துவிடக் கூடாது' என்பதற்காகவே, அது சாதாரண மஞ்சள் கயிற்றினால் செய்யப்படுகிறது.
- தர்மசாஸ்திரம்
• தன்னிடமிருந்து தோற்றுவித்த நூலில் சிலந்திப்பூச்சி தன்னை மறைத்துக்கொள்ளும். அதுபோல், தன்னிடமிருந்து தோற்றுவித்த இயற்கையில் தன்னை மறைத்திருக்கும் ஏக தெய்வமே, உன்னிடம் நாங்கள் ஊறியிருக்க எங்களுக்கு அனுக்கிரகம் செய்யுங்கள்.
- சுவேதாஸ்வர உபநிஷதம்
• பொறாமையும் பேராசையும் தீய குணங்களும் உள்ள ஒருவன், பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.
- புத்தர்
• உலக இன்பங்கள் என்று பல இருக்கின்றன. அவை யாவும் அழியக் கூடியவைதான். நம் உள்ளம் இறைவனிடம் ஒன்றி இன்பமடையும்போதுதான் உண்மையான இன்பம் உண்டாகிறது; அதாவது பூரணமும் அழிவில்லாததுமான இன்பம் ஏற்படுகிறது.
- ஆதிசங்கரர்
• கடலில் இருக்கும் மீன் நீரை நாடி எங்கும் போக வேண்டியதில்லை. அதன் உள்ளும் புறமும் நீரே நிறைந்திருக்கிறது. இது போலவே இறைவன் நம் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் சாந்நித்தியத்தை உணர்வதே நல்ல அர்ச்சனையாகும்.
- ஒளவையார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3105391.html
3105389 வார இதழ்கள் வெள்ளிமணி நங்கைநல்லூரில் மங்கையொரு பாகன்! Friday, March 1, 2019 10:09 AM +0530 சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு நாள், சன்யாச தர்மங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்த காஞ்சி மகாசுவாமிகள், அதன் அங்கமாக புனித யாத்திரை விஜயம் மேற்கொண்டு சென்னைக்கு அருகே மீனம்பாக்கம் வழியாக அந்த காலத்தில் சிறிய கிராமமாக விளங்கிய நங்கநல்லூர் சமீபம் வந்தார். அவ்வமயம் கண்ணில் தென்பட்ட ஒரு குளத்தில் அனுஷ்டானம் செய்ய வந்தவர், குளக்கரையில் ஒரு சிவலிங்கத்திருமேனி கவிழ்ந்து கிடக்க அதனை ஒரு துணி தோய்க்கும் கல்லாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்டறிந்தார். உடனே தன்னுடன் கூட வந்த அடியார்களை அந்த கல்லை நிமிர்த்தி வைக்க சொல்லிவிட்டு அந்த லிங்கம் மிகவும் ப்ராசீனமானது என்றும் அதற்கு தினமும் அபிஷேகம் செய்து, புஷ்பம் சாற்றுமாறும் அதனால் ஊருக்கு செழிப்பு உண்டாகும் என்றும் அருளாசி வழங்கினார்.
 அவர் உத்திரவிற்கு இணங்க, சிறிய தட்டுப் பந்தலில் எழுந்தருளச் செய்யப்பட்டு, நாளடைவில் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு, உப சந்நிதிகள் உண்டாகி, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பெரிய ஆலயமாக உருவெடுத்தது. 5-ஆவது மஹாகும்பாபிஷேகத்தை (ஏப்ரல் 2019 -இல்) எதிர்நோக்கியிருக்கும் ஆலயமே இன்று நாம் காணும் நங்கநல்லூர் 4 -ஆவது பிரதான சாலை (மார்க்கெட்) யில் உள்ள "ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்' ஆலயம். லிங்கம் கண்டெடுக்கப்பட்ட அந்த பொதுக்குளமும் ஆலயம் அருகில் உள்ளது.
 அர்த்த நாரீஸ்வரர் கோலம்: ஆண் - பெண், ஒளி - இருள், தோற்றம் - அழிவு என்பனவாகிய படைப்பின் மொத்த வடிவமாகவே சிவபெருமான் திகழ்கின்றார். அவர் உலகுய்யக் கொண்டருளிய திருக்கோலங்களில் "மாதொருபாகன்' எனப் போற்றப்பெறும் ஒரு பாதி ஆணும், ஒரு பாதி பெண்ணுமாக அமைந்த அர்த்தநாரீசுவரக் கோலமும் ஒன்றாகும். இந்த கோலம் எழுந்தது ஏன் என்பதற்கு புராண வரலாறு உண்டு. சுருங்கக்கூறின் சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற தத்துவத்தினை உணர்த்தும் பொருட்டு பார்வதி தேவியை தன் இடப்பாகத்தில் ஈசன் இருத்தி உமையொரு பாகனாகக் காட்சியளித்த கோலம். சிவ வடிவங்களில் ஒன்று.
 கயிலாயத்திற்கே சென்று அங்கே சிவபெருமானையும், பார்வதியையும் நேரிலேயே தரிசித்து அவர்கள் முன்னாலேயே "உமாமகேஸ்வரர்' துதியை செய்தருளினார் ஆதிசங்கரர். அந்த துதியில் ஒரே சரீரத்தில் இணைபிரியாது இருப்பவர்கள் என்று போற்றுகின்றார். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "தொன்மைக் கோலம் இக்கோலமே' என்பார். ஞானசம்பந்தப்பெருமான் அருளிய கோளறு பதிகத்தில் 7-ஆவது பாடலில் "செப்பிள முலை நன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வனடைவார்' என்று தொடங்கி பாடியுள்ளார். திரு மூலர் இந்த கோலத்தை பரஞானம், அபரஞானம், இரண்டையும் தரவல்ல ஒரு "அற்புதக் கூத்து' என்று போற்றுகின்றார். குமர, குருபர சுவாமிகள், "மாதொருபாகன்' என்ற திருக்கோலங் குறித்து "எந்தாய்' என்ற சொல்லை இருபொருள் படக் கூறிபோற்றுகின்றார். "வாம பாகத்தை வவ்வியதே' என்று அம்பாள் இடது பக்கத்தை ஆக்கிரமித்துள்ளதை தன் அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகிறார், அபிராமிபட்டர். இந்த கோலத்தில் இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும்: அமைதி நிலவும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர்.
 ஆலய அமைப்பு: ஐந்து நிலை ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் ஆலய வளாகத்தின் முன் பாதியில் சிவன் ஆலயமும், பின் பாதியில் அஷ்டபுஜ சாந்தி துர்கையம்மனுக்கு ஒரு சிறு ஆலயம் என்று சொல்லுமளவிற்கு மகாமண்டபம், ரதம் போன்ற அமைப்பில் கருவறையில் சந்நிதி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி எம்பெருமான் லிங்கத் திருமேனி கொண்டு ஆவுடையாரும், பாணமும் ஒரே அளவு உயரத்தில் ( 18 அங்குலம்) காணப்படும் அற்புத பிரதிஷ்டை. இவர்தான் குளக்கரையில் தன்னை வெளிப்படுத்துக் கொண்டவர். கருவறை லிங்கத்திற்கு பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்துடன் காட்சி தரும் அற்புதக் கோலம்.
 பாலவிநாயகர், பாலசுப்ரமண்யர், மண்டபத்தில் தென்புறம் நோக்கி அர்த்த நாரீஸ்வரி அம்மன், ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சோமாஸ்கந்தர் சந்நிதி கொண்டுள்ளார்கள். கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை அருளுகின்றனர். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. அஷ்டபுஜ சாந்தி துர்கையம்மன், கிழக்கு திசையை நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் மகிஷத்துடன் மிகுந்த சாந்நித்தியம் கொண்டு அமைந்துள்ளது சிறப்பு.
 நடைபெறும் விழாக்கள்: முக்கியமாக செவ்வாய்க்கிழமைகளில் சாந்தி துர்கையம்மன் சந்நிதியில் நடைபெறும் ராகுகால பூஜை, சிவனுக்கு நடைபெறும் பிரதோஷ பூஜை, அஷ்டமி பைரவர் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, விஜய தசமியன்று துர்கையம்மன் திருவீதி உலா, ஆருத்ராவின் போது நடராஜப் பெருமான் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.
 சிவராத்திரி விழா: ஸ்ரீ அர்த்த நாரீசுவரர் ஆலயத்தில் 51-ஆவது ஸம்வத்ஸர மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 4 -ஆம் தேதி இரவு நான்கு காலங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஏகாதச ருத்ர பாராயணம், ஏக தின லட்சார்ச்சனை போன்ற பைவங்களுடன் நடைபெறுகின்றது.
 மேலும், மார்ச் 4 -ஆம் தேதி காலை இவ்வாலயத்தில் கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஆதிசங்கராசார்ய சாரதா ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பீடம் ஸ்ரீ மடத்தின் பீடாதிபதிகள் அருளாசியுடன் கொண்டுவரப்படும் மண்ணினால் செய்த லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கரங்களினாலேயே வில்வதளம் சமர்ப்பித்து வழிபடும் பேற்றினைப்பெறலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
 தொடர்புக்கு: எஸ். முத்துமணி- 94441 08022
 க.எஸ். ஸ்ரீநிவாஸன்- 99412 14302.
 - எஸ். வெங்கட்ராமன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/mar/01/நங்கைநல்லூரில்-மங்கையொரு-பாகன்-3105389.html
3100738 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 * "நடந்து நடந்து காலும் சோர்ந்தது; கேட்டுக் கேட்டு வாயும் சோர்ந்தது; நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது; இனி இந்தப் பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்?' என்று கண்ணீர் வடிக்கும் ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே ஜீவகாருண்யம்.
- வள்ளலார்

* எந்த உயிரிடமும் அன்பாக இரு. அன்பே உயிரின் இயல்பு. எல்லாரிடமும் அன்புடன் பழகு. நீயும் வாழ். பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம்.
- மகாவீரர்

* மனதின் மாசு பொறாமை; நாக்கின் மாசு பொய் பேசுதல்; கண்களின் மாசு பிறர் செல்வத்தையோ அவரது மனைவியின் அழகையோ உற்று நோக்குதல்; செவிகளின் மாசு பழிச் சொற்களைக் கேட்பது மறைமுகமாக இவற்றைச் செய்பவன் நன்கு கற்ற அறிஞனாயினும் நரகத்திற்கே செல்வான்.
- குருநானக் 

* நெஞ்சில் படியும் தீப்பொறியைவிட, மனதில் படியும் துவேஷம் விரைந்து பரவும்.
- புத்தர் 

* தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கவல்லது. இதை அறியாதவர்கள் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவர்கள் ஆவர்.
- மகாகவி பாரதியார்

* இந்த உலகில் எதுவரை ஏதோ ஓர் மூலையில், ஒரு பெரியவராவது நீராடி, காயத்ரி மந்திரம் சொல்லி, சூரிய பகவானுக்கு "அர்க்யம்' சமர்ப்பித்து, வணங்குகிறாரோ, அதுவரையில்தான் பூமியில் மழை பெய்யும்.

* அந்த ஒருவரும் இல்லாத நிலை ஏற்படும்போது, உலகில் மழை பெய்வதும் அடியோடு நின்றுவிடும். அனைத்து ஜீவராசிகளும் உயிருக்கு ஆதாரமாக விளங்கும் நீர் இல்லாமல், "தாகம்', "தாகம்' என்று தவித்து, அழியும். அதுவே கலியின் முடிவும் ஆகும்.
- ஸ்ரீ வேத வியாசர் 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3100738.html
3100745 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 சிவாலய ஓட்டம்
குரோம்பேட்டை அஸ்தினாபுரம், சிவகாமி நகரிலிருந்து 12- ஆம் ஆண்டு சிவாலய ஓட்டம் மார்ச் 4 -ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.00 மணிக்கு வந்தடைகிறது. இவ்வாண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைமையான சிவாலயங்களைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: ஒருங்கிணைப்பாளர்: கண்ணன் - 98410 20857.
**************
ஜயந்தி மகோத்ஸவம்
ஸ்ரீ பிரத்யக்ஷ அறக்கட்டளை சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜயந்தி உத்ஸவம் , திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள தண்டலம் கிராமத்தில் பிப்ரவரி 24 -ஆம் தேதி தொடங்கி மார்ச் 3 வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி, மேற்படி நாள்களில் சூரிய நமஸ்காரம், வேதபாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், ரிக்வேத சம்ஹித ஹோமம், சகஸ்ர நாம பாராயணம் நடைபெறுகின்றது.
**************
திருவையாறு தியாகப்ரஹ்மத்தின் பிரதம சீடர் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதரின் 238 -ஆவது ஜயந்தி இசைவிழா, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கீத மஹாலில் நடைபெறுகின்றது. 
*************
மஹா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலுக்கும்; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயிலுக்கும்; வள்ளலார் சுவாமி கோயிலுக்கு வடகிழக்கிலும்; புள்ளிருக்கு வேளூர் வைதீஸ்வரன் கோயிலுக்கு தெற்கேயும்; திருக்கண்ணாயிரமுடையார் குருமாணக்குடி கோயிலுக்கு தென் மேற்கிலும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு மேற்கேயும் அமைந்துள்ளது ஜெயமங்கலம் எனப்படும் சேமங்கலம் கிராமம்! இங்கு, ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவ்வாலய திருப்பணிகள் செவ்வனே நடைபெற்று, 24.02.2019, காலை 8.00 - 9.30 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94424 21681/ 99444 40830.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/நிகழ்வுகள்-3100745.html
3100787 வார இதழ்கள் வெள்ளிமணி ஏற்றமான கிப்லா மாற்றம் DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 கிப்லா என்னும் அரபி சொல்லின் பொருள் எதிரிலே உள்ள ஒன்று-ஒருவர் முன்னோக்கும் ஒன்று என்பது. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் அறிவுரைக்காக- ஆலோசனைக்காக முன்னோக்கப்படும் அறிஞர் ஹழரத் கிப்லா என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவார். தற்பொழுது கிப்லா தொழும் திசையை குறிப்பதாக உள்ளது. கிப்லா தொழும்பொழுது முகம் நோக்கும் திசை. ஏற்றமான கிப்லா மாற்றம் குறித்து குர்ஆனின் 2-142, 143, 144 ஆவது வசனங்கள் விவரிக்கின்றன.
 தானியல் ஜெருசலத்தைக் கிப்லாவாக முன்னோக்கி ஒரு நாளில் மூன்றுமுறை தொழுததாக பைபிளில் கூறப்படுகிறது. ùஸமிட்டிக் இன மக்கள் கிழக்குத் திக்கைக் கிப்லாவாக நோக்கி தொழுதனர். ஞாயிறு எழும் திக்கே சிலரின் கிப்லாவாக இருந்தது. சிரியன் கிறித்துவர்கள் கிழக்கு திசையை நோக்கி தொழுதனர். மூசா நபி அவர்களைப் பின்பற்றியோர் கஃபாவை நோக்கி தொழுதனர். இப்ராஹீம் நபி கஃபாவைக் கிப்லாவாக நோக்கி தொழுதார்கள்.
 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று குடியேறிய பின்னும் ஏறத்தாழ 17 மாதங்கள் வரையிலும் அல்லாஹ் அருளியபடி பைத்துல் முகத்தûஸக் கிப்லாவாக நோக்கி தொழுதார்கள் என்பதைப் புகாரி, முஸ்லிம் நூல்களில் காணலாம். கண்ணிய நபி (ஸல்) அவர்களுக்குப் புண்ணிய கஃபாவை நோக்கி தொழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளுக்குள் உருவாகி இருந்தது. ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எண்ணியதை எவரிடமும் வெளிப்படுத்தவில்லை. உள்ளக் கிடக்கையை உணரும் அல்லாஹ் விழைவை வினையாக்கி தருவான் என்ற வேணாவுடன் காத்திருந்தார்கள் காருண்ய நபி (ஸல்) அவர்கள்.
 குறைஷிகளின் கொடுந் தொல்லையினால் மக்காவில் இருந்த பொழுது மாநபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கி தொழ இறைவன் கட்டளையிட்டான் என்று இயம்புகிறார் பராஉபின் ஆஜிப் (ரலி) நூல்- புகாரி. கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் நாடியோரை நேரிய பாதையில் நடத்தாட்டுவான் என்று நவில்கிறது நற்குர்ஆனின் 2-142 ஆவது வசனம். இந்த வசனம் கிப்லா மாற்றப்பட்டால் ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் தொடுக்கும் வினாக்களுக்கு விடுக்கும் விடையாக பகரப்பட்டது. மதீனாவிலிருந்து கஃபாதெற்கிலும் பைத்துல் முகத்தஸ் வடக்கிலும் உள்ளன. அவ்விரு திசைகள் மட்டும் அன்றி கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன என்று உரைக்கிறது இந்த வசனம். திசைகளைப் படைத்தவனே பாராளும் அல்லாஹ் என்பதைப் பாரில் வாழும் மக்களுக்குப் பறைசாற்றுகிறது இந்த வசனம்.
 பைத்துல் முகத்தûஸ கிப்லாவாக நோக்கி தொழுவதை யூதர்கள் அவர்களின் கிப்லாவை நோக்கி தொழுவதாக நோகும் வண்ணம் கொடிய சொற்களால் இடித்துரைத்தான். கிப்லாவாக கஃபா மாற்றப்பட்டதும் எதிர்ப்போரை வலுவிழக்க செய்ததைச் செப்புகிறது 2-143 ஆவது வசனம். இப்ராஹீம் நபி அவர்களின் கிப்லா கஃபா. கஃபா பைத்துல் முகத்தûஸ விட பழைமையானது 144 ஆவது வசனம் உங்கள் முகம் வானின்பால் திரும்பி கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் பார்க்கிறோம். நீங்கள் பொருந்தும் கிப்லாவிற்கு உங்களைத் திருப்புகின்றோம். ஆகவே நீங்கள் தொழுகையின் பொழுது புனித கஃபாவின் திசையில் உங்கள் முகத்தைத் திருப்புங்கள் என்று ஏவியது இவ்வசனம். மாலை அசர் தொழுகையின் முதல் இரு ரக்அத்துகள் முடிந்த நிலையில் அருளப்பட்டது. வடக்கு நோக்கி தொழுத தோழமை நபி (ஸல்) அவர்கள் தெற்கில் திரும்பி தொழுதார்கள். பின்னால் நின்றவர்களும் எதிர்திசையில் திரும்பி தொழுதனர். அப்பள்ளி இரட்டை கிப்லா என்று அழைக்கப்படுகிறது. மதீனாவிற்கும் உஹதுக்கும் இடையில் பனூசலீமுக்கு உரிய நிலத்தில் இப்பள்ளி மஸ்ஜிதுல் கிப்லதைன்- இரு கிப்லாக்கள் உள்ள பள்ளி இன்றும் இருக்கிறது. என் புனித ஹஜ் உம்ரா பயணங்களில் அப்பள்ளியில் நான் தஹிய்யத்துல் மஸ்ஜித் என்னும் காணிக்கை நபில் தொழுகை தொழுதேன். இவ்வாறு கிப்லா மாற்றப்பட்டு தொழுத பழுதிலாத பாசநபி (ஸல்) அவர்களுக்கு ஸாஹிபுல் கிப்லதைன் (இரு கிப்லாக்களைப் பெற்றவர்கள்) என்ற சிறப்பு பெயரும் உண்டு.
 கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் கிப்லா இருப்பதாக இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- திர்மிதீ. இந்த நபி மொழிக்கு உமர் (ரலி) அவர்கள் அளித்த விளக்கம். மதீனாவில் வாழ்வோர் அவர்களின் வலது கையை மேற்கு பக்கமாகவும் இடது கையைக் கிழக்கு பக்கமாகவும் வைத்துக் கொண்டு கிப்லாவை நோக்கினால் கஃபா கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் இருக்கிறது. அறிவிப்பவர் - நாபிஃ. நூல் - முஅத்தா.
 இந்தியாவிற்கு மேற்கே கஃபா இருப்பதால் இந்த இஸ்லாமியர்கள் மேற்கு நோக்கி தொழுகின்றனர். தென்அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கிழக்கு நோக்கியும் கிரீஸில் வாழும் இஸ்லாமியர் தெற்கு நோக்கியும் தொழுகின்றனர். இதனையே பாரதியார் திக்கை வணங்கும் துருக்கர் என்று பாடினார். கஃபாவைச் சூழ சுற்றி நின்று தொழுகின்றனர். அங்கே திக்கு நோக்கி தொழும் நிலை இல்லை.
 இமாம் ஜமா அத்தில் கூட்டாக தொழும்பொழுது இமாம் எம்முறையில் கிப்லாவை நோக்கி நிற்கிறாரோ அம்முறையில் இமாம் பின்னால் வரிசையில் நின்று தொழுபவர்களும் கிப்லாவை நோக்கி நிற்க வேண்டும். தொழும் பள்ளிகளில் கிப்லாவைக் காட்டும் அடையாளமே மிஃராப். கிப்லாவை நோக்காத தொழுகை நிறைவேறாது. தொழுபவரின் முகம், நெஞ்சு, காலின் பெருவிரல்கள் கிப்லாவை நோக்கி இருக்க வேண்டும். பெரியார் ஜாஃபர் சாதிக் (ரஹ்) இதனைக் கவனமாக கடைபிடித்ததாக அறிவிக்கிறார்கள்.
 புதிய ஊருக்குச் செல்பவர் கிப்லாவைச் சரியாக தெரிந்து தொழ வேண்டும். கேட்டறிய யாரும் இன்றி கிப்லாவை அனுமானித்து தொழுதபின் நோக்கி தொழுதது கிப்லா அல்ல என்று அறிந்தால் மீண்டும் சரியான கிப்லாவை நோக்கி தொழ வேண்டும். வாகனங்களில் செல்லும்பொழுது கிப்லாவை நோக்கி தொழத் துவங்கியபின் வாகனம் வேறு திசையில் திரும்பினாலும் தொழுகை நிறைவேறும். இறந்தவர்களின் முகம் கிப்லாவை நோக்கும் வண்ணம் வைத்தே இறந்தவர்களைப் புதைக்க வேண்டும். கிப்லாவின் திசையில் கால்களை நீட்டுவதோ எச்சில் துப்புவதோ சிறுநீர் மலம் கழிப்பதோ கூடாது.
 கணித்து பணித்த வண்ணம் நோக்கும் நோக்கம் அறிந்து நோக்க வேண்டிய கிப்லாவாம் கஃபாவை நோக்கும் முறையில் நோக்கி நோக்கம் நிறைவேற இறைவனை இடையறாது தொழுவோம். இடையூறு இன்றி இனிதாய் வாழ்வோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/ஏற்றமான-கிப்லா-மாற்றம்-3100787.html
3100795 வார இதழ்கள் வெள்ளிமணி தேடி வந்து நலம் தரும் தேவன் DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 "நலமா... சுகமா... எப்படி இருக்கின்றீர்கள்?' என நலம் விசாரிப்பதும் "நலமாக இருக்கின்றேன்' என பதில் அளிப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம். நோய் வந்த போது நாம் போய் பார்த்து நலம் விசாரித்து தைரியம் சொல்வது நமது வழக்கம். பலர் வந்து நலம் விசாரித்தாலே பாதி நோய் நீங்கி சுகம் அடைவது உண்டு. நலம் விசாரிப்பது நமது உறவை, நட்பை, பாசத்தை வெளிப்படுத்தும் நல்ல செயல்.
 வேதாகமத்தில் தேடிச் சென்று சுகம் அளித்த இயேசு ஆண்டவரைப் பற்றிய நிகழ்ச்சி இருக்கிறது. எருசலேம் நகரத்துக்கு ஐந்து பிரதான வாசல்கள் உள்ளன. அதில் ஒரு வாசலின் பெயர் ஆட்டு வாசல். அதன் அருகே பெதஸ்தா என்ற பெயர் கொண்ட ஒரு குளம் இருந்தது. அக்குளத்தைச் சுற்றி படிகள் கட்டப்பட்டிருந்தன. அப்படிகளில் நோயால் துன்புற்றவர்கள் படுத்திருந்தனர். அக்குளத்தின் சிறப்பு என்னவென்றால், இரவோ, பகலோ, நடு இரவோ எதுவாக இருந்தாலும் அச்சமயம், தேவதூதன் குளத்தைக் கலக்குவான். குளத்தின் நீர் கலங்கும் , கொப்பளிக்கும். அப்பொழுது நோயாளிகள் உடனே குளத்தில் இறங்கி குளிப்பர். அதில் முதலில் குளிப்பவர் எவராக இருந்தாலும், அவர் எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும் முற்றிலும் சுகம் பெறுவார். இது ஓர் அற்புத குளம்!
 எருசலேமுக்கு வந்த இயேசு தம் சீடருடன் அக்குளம் இருக்குமிடத்திற்குப் போனார். குளத்தைச் சுற்றி பார்வையற்றோர், கை, கால்கள் முடமானவர்கள் படுத்திருந்தனர். அவர்களின் நோக்கம் குளம் எப்போது கலக்கப்படும் என்பதும் அதில் முதலில் இறங்குவது தாங்களாக இருக்கவேண்டும் என்பதே!
 இயேசு அக்குளத்தைச் சுற்றி வந்தார். முப்பதெட்டு வருடங்களாக வியாதி கொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனைக் கண்ட இயேசு , அவன் வெகு காலமாய் வியாதியுடன் போராடுவதை அறிந்தார். அவனை நோக்கி, "" சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?'' என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன் ""ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போவதற்குள்ளாகவே வேறொருவன் குளத்தில் இறங்கி விடுகின்றான்'' என்றான்.
 இயேசு அவனிடம், ""எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட!'' என்றார். உடனே அந்த மனிதன் குணமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:6-9)
 முப்பதெட்டு ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்தவனை இயேசு தாமே அவன் துன்பத்தை அறிந்து தேடி வந்து சுகம் அளித்தார். நாம் கேட்பதற்கு முன்னரே இயேசு ஆண்டவர் நம் நிலையறிந்து உதவி செய்வார். நாம் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் உதவி அளிப்பார். குணமாக்குவார். நம் துன்பத்தையும் வறுமையையும் நீக்குவார்.
 - தே. பால் பிரேம்குமார்
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/தேடி-வந்து-நலம்-தரும்-தேவன்-3100795.html
3100804 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 29 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 கன்னடியன் கால்வாய் குறித்துப் பற்பல தகவல்கள் உலவுகின்றன. இந்தத் தகவல்கள் பலவும், காலப்போக்கிலும் மக்கள் புழக்கத்திலும் , முன்னும் பின்னும் மாறி, ஆங்காங்கே "இடைச்செருகல்கள்' கூடி. . . சுவாரசிய அரட்டைகளாக உலவுகின்றன. இவற்றின் முக்கியமான கட்டுக்கோப்பை மட்டும் காணலாம்.
 சேரன்மாதேவிப் பகுதியைப் பிரதானமாகக் கொண்டு அரசாண்ட மன்னர் ஒருவர், கொடிய நோயினால் பீடிக்கப்பட்டார்; அதனைப் போக்கிக் கொள்ள வழி தேடினார்; தன்னைப் போலவே தங்க உருவம் ஒன்று செய்து, அதன்மீது துன்பங்களையும் பாவங்களையும் சார்த்தி, அந்தப் பிரதிமத்தை அந்தணர் ஒருவருக்கு தானம் கொடுத்துவிட்டால், நோய் நீங்கிவிடும் என்று யாரோ யோசனை சொல்லிவிட்டார்கள்; மன்னரும் அதே போல, பிரதிமம் செய்து, பாவங்களை ஏற்றியும் விட்டார்.
 ஆனால், பிரதிமத்திற்குப் பின்னிருக்கும் கதை தெரிந்தால், எந்த அந்தணர் அதனை வாங்கிக் கொள்ளச் சம்மதிப்பார்? யாரும் வரவில்லை; அரசருக்கும் நோய் தீரவில்லை. இந்த நிலையில், பல காலத்திற்குப் பிறகு, கன்னட தேசப் பகுதியிலிருந்து (அல்லது கன்னடம் பேசுபவர்களுக்கு இடையேயிருந்து) அந்தணர் ஒருவர் வந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டார். முறையாகச் சந்தியாவந்தனமும் அனுஷ்டானங்களும் செய்து, காயத்ரி மந்திரத்தின் ஆசீர்வாதங்களைப் பூரணமாகப் பெற்றிருந்த அவருக்கு, அனுஷ்டானங்களின்மீதும் காயத்ரி மாதாவின் மீதும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தானத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.
 பிரதிமையின் முன்சென்று, "போ,போ' என்று விரட்டினார் (பிரதிமைக்குள் பொதிந்துகொண்டிருந்த பாவங்களின் மூட்டையைத்தான் விரட்டினார்). பாவங்களைத் துடைக்கக்கூடிய அளவுக்கு காயத்ரியின் பலன்களைக் கேட்டது பிரதிமம். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று கால அனுஷ்டானப் பலன்களையும் அது கேட்க, முடியாது என்று மறுத்தார் பிரம்மசாரி. "இரண்டு வேளைப் பலன்களைக் கொடு' என்று பிரதிமம் பேரத்தைத் தொடர்ந்தது. அதற்கும் முடியாது என்று அந்தணர் மறுக்க. . . நெருப்பாகக் கனன்ற அவருடைய காயத்ரி பலத்திற்கு முன்னால் நிற்கமுடியாமல் தவித்த பாவமூட்டை, விட்டால் போதுமென்று, ஒருவேளை பலனுக்கு ஒத்துக்கொண்டது. அந்தணரின் மாத்யானிகப் பலன்களால் பாவமூட்டை அழிந்துவிட, தங்கப் பிரதிமமும் தூய்மையாக, அரசரின் நோய் அகன்றது. தன்னுடைய நோயைப் போக்கிய அந்தணருக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் அரசர் கொடுத்தார்.
 மாட்டுவாலும்
 மடைநீர்ப் பாதையும்
 பொருளைப் பெற்றுக்கொண்ட சில காலத்தில், அந்தணருக்குப் பாவம் சேர்ந்தது. எப்படி என்கிறீர்களா? காயத்ரியின் பலன்களை பேரம் பேசினால் பாவம் வராதா? வந்தது. தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்ள, இப்போது அந்தணர் வழிதேடினார். அகத்தியரை நாடினால் வழிகிட்டும் என்று அறிந்தார்.
 இங்கேதானே, பொருநைப் பகுதியில்தானே, அகத்தியர் நித்யவாசம் செய்கிறார். தேடித் தேடி அலைந்தார். அவ்வளவு சுலபத்தில் அகத்தியர் அகப்பட்டுவிடுவாரா என்ன?
 கையில் தங்கப் பிரதிமையை வைத்துக் கொண்டு அலைவது சங்கடமாக இருந்தது. விட்டுவிட்டும் போகமுடியவில்லை. தங்கமாயிற்றே! யுக்தி ஒன்றைக் கண்டுபிடித்தார். பிரதிமத்தை உடைத்துச் சிறு சிறு துண்டுகளாக்கினார்; சாக்கு மூட்டையில் கட்டினார். அம்பாசமுத்திரப் பகுதியில் கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். கொடுக்கும்போது, "இது பருப்பு மூட்டை; திரும்ப வரும்போது எடுத்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டுப் போனார்.
 இவ்வாறு தேடி அலைந்த காலத்தில், மலையுச்சிப் பகுதியில், ஒரு நாள் நண்பகல் வேளையில், முதியவர் ஒருவர் மேலே போகவொட்டாமல் அந்தணரைத் தடுத்தார். அகத்தியரைக் காணாமல் அவ்விடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அந்தணர் அடம் பிடிக்க. . . பிடிவாதத்திற்குப் பணிந்த அகத்தியர், முதியவர் வேடத்திலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அருகில் அமர்ந்திருந்த பசு ஒன்றைக் காட்டி, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு புறப்படும்படியும், முதலில் போய் அப்பசு எங்கே நிற்கிறதோ, அங்கே அணை ஒன்றைக் கட்டும்படியும், தொடர்ந்து அது போகும் பாதையில் வாய்க்கால் வெட்டும்படியும், இவ்வாறு போகும்பொழுது, எங்கெல்லாம் அப்பசு இளைப்பாறிப் படுத்துக் கொள்கிறதோ, அங்கெல்லாம் குளங்கள் அமைக்கும்படியும் அறிவுறுத்தினார். அணையும் வாய்க்காலும் குளமும், நதி நீரை மடை மாற்றிவிடும்; இதனால், ஏராளமான பகுதிகள் சாகுபடி செய்யப்படும்; விளைச்சலே பாவத்திற்கான பரிகாரமாகும் – இப்படிப்பட்ட ஏற்பாடே அகத்தியரின் கருத்து.
 பசுவின் வாலைப் பற்றியபடியே அந்தணர் நடந்தார். மணிமுத்தாறும் பொருநையும் கலக்கும் இடத்தைத் தாண்டியவுடன் பசு நின்றுவிட்டது. இங்கேதான் கன்னடியன் அணைக்கட்டு.
 பின்னர் நடக்கத் தொடங்கிய பசுவைப் பிடித்தபடியே பின் சென்ற அந்தணர், பசு போன பாதையின் அடையாளம் தெரிவதற்காக, வழியெல்லாம் முளைகள் அடித்துக் கொண்டே போனார். பசுவானது, தாசிப்பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து சென்றது. அங்கேயும் முளையடித்து கால்வாய்க்கான வழி குறிக்கப்பட்டது.
 ஆங்காங்கே சில இடங்களில் படுத்தெழுந்த பசு, ஓரிடத்தில் போய் படுத்துக் கொண்டது; அப்படியே மறைந்தும் போனது.
 - தொடரும்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/பொருநை-போற்றுதும்-29---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3100804.html
3100815 வார இதழ்கள் வெள்ளிமணி குண்டனி சக்தி அருளும் குண்டலீஸ்வரர்!! DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வெண்பாக்கம் கிராமத்தில், தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூன்று வகையிலும் சிறந்து விளங்கிய ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ குண்டலீஸ்வரர் திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையானது.
 தொண்டைவள நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான திருக்கச்சூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்கு மேற்கிலும், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு மேற்கிலும் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வெண்பாக்கம் கிராமமாகும். இந்த ஊரின் பழைமையான பெயர் கல்வாடி என்பதாகும். இவ்வூரின் கிழக்கே கல்லடி மலை எனும் சிறப்பு வாய்ந்த அறியவகை மூலிகைகள் நிறைந்த மலை உள்ளது. இம்மலையில் தேவர்களும், ரிஷிகளும், சித்தயோகிகளும் தவமியற்றியுள்ளனர்.
 இந்த மலையடிவாரத்தின் அருகே உள்ள ஏரியை மழைக்காலத்தில் பலப்படுத்த மராமத்துப்பணிகள் செய்யும்போது பூமிக்கு அடியில் சிவலிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அடித்தளமும் சுவர்களும் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. இத்திருக்கோயில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.
 இந்த ஊருக்கு செல்லும் வழியில் கொளத்தூர் என்ற கிராமத்தில் அகத்தியரால் துளசியால் பூஜிக்கப்பட்ட துளசீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு அகத்தியர் மூலிகை ஆராய்ச்சி செய்துள்ள தகவலும் தெரிய வருகிறது.
 வெண்பாக்கம் ஸ்ரீ குண்டலீஸ்வரரும், கொளத்தூர் துளசீஸ்வரரும், திருக்கச்சூர் மருந்தீஸ்வரரும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதும் சிறப்பாகும்.
 மார்கண்டேய புராணப்படி, எமனைக்கண்டு பயந்து 16 வயது பாலகன் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டித் தழுவிக் கொண்டு பரமனை துதித்த ஸ்தோத்திரம் ஸ்ரீ சந்திரசேகர அஷ்டகம் எனப் பெயர் பெற்றது. அதில் ஆறாவது ஸ்லோகத்தில்
 "குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹணம்'" என்று வருகிறது. நாகத்தை காதில் வளையமாக அணிந்தவன் பரமேஸ்வரன் என்பது பொருள்படுகிறது.
 குண்டலினி யோகத்தில் கூறப்படும் சூக்ஷ்ம நாடியில் செல்லும் சர்ப்பமும் அந்த குண்டலினி தேவதை தலையின் உச்சியில் சதாசிவனுடன் ஐக்யம் ஆவது எல்லாம் இவ்வாறே என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே, ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் சுவாமியை தரிசித்து முக்கியமான ஜீவபிரம்ம ஐக்யம் அடைய முடியும். ஏரிக்கரை அருகிலேயே புதியதாக கோயில் கட்டப்பட்டுள்ளது.
 கருவறை : கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் குண்டலீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
 அம்பிகை சந்நிதி : தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகை யோகாம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
 நந்திமண்டபம் : சிறிய நான்குகால் மண்டபத்தில் நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார். விநாயகர் சந்நிதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர் சந்நிதி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரஹ மண்டபம், தனிச் சந்நிதிகளாகவும் அமைந்துள்ளது. கோஷ்டங்களில் தெற்கில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மஹாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் அமைய உள்ளனர்.
 பரிகாரங்கள்: திருக்கோயில் அருகிலுள்ள குண்டலி தீர்த்தக் குளத்தில் நீராடினால் குட்டநோய், சரும நோய்கள் குணமாகும். திருமணத் தடைகள் நீங்கும். புத்திரப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் குறைகள் அகன்று குழந்தை பாக்கியம் கிட்டும். கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கி மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமும் ஈடுபாடும் ஏற்பட்டு மேன்மை பெறுவர்.
 இச்சிவாலய வளர்ச்சியிலும், குடமுழுக்கு வைபவத்திலும் நாமும் பங்கேற்போம். வளமும் நலமும் பெற்று நீடுவாழ எம்பெருமான் ஸ்ரீ குண்டலீஸ்வரர் திருவருள் கூட்டுவார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
 பிப்ரவரி 22 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி பிப்ரவரி 24 -ஆம் தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 பேருந்து வசதிகள் : சிங்கபெருமாள் கோயில் இருந்து தனியார் சிற்றுந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சென்று வருகிறது. தாம்பரத்திலிருந்து வெண்பாக்கம் செல்ல அரசு பேருந்து தடம் எண். 500 குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகிறது.
 தொடர்புக்கு : 93806 76799 / 94447 07073.
 - க. கிருஷ்ணகுமார்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/குண்டனி-சக்தி-அருளும்-குண்டலீஸ்வரர்-3100815.html
3100820 வார இதழ்கள் வெள்ளிமணி ஆழ்வார்திருநகரி மாசி தீர்த்தவாரி! DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 தென் தமிழ்நாட்டை வளப்படுத்தும் தன்பொருநைநதியாம் தாமிரபரணியின் வடகரையிலும், தென்கரையிலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒன்பது வைணவத் திருத்தலங்கள் அமைந்துள்ளது. அவை "நவதிருப்பதிகள்' என அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஆழ்வார்திருந்நகரி திருத்தலம் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. வைணவ குலபதி எனப்போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தலமாதலால் "ஆழ்வார் திருநகரி' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு அமைந்துள்ள பல்வேறு சிறப்பு பெயர்களில் "திருக்குருகூர்' என்ற பெயரும் உண்டு. "குருகு' என்றால் சங்கு என்று பொருள். சங்கு இத்தலத்து பெருமாளை வலம் வந்து வழிபட்டதால் "குருகூர்' என்று அழைக்கப்படுகிறது.
 ஊருக்கு நடுவில் ஆதிநாதர் திருக்கோயிலும், அதனைச்சுற்றி திரு வேங்கடமுடையான், திருவரங்கநாதன் கோயிலும், ஆண்டாள், பிள்ளை லோகாச்சாரியார், அழகர் கோயிலும் அமைந்துள்ளன. மேற்கில் உடையவர், பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் கோயில்களும் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகள் ராமானுஜ சதுர்வேதி மங்கலம், ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் எனப் பெயர் பெற்று விளங்கியது.
 ஆதிநாதர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறவாயிலில் பந்தல் மண்டபம், சிற்ப வேலைப்பாடு மிக்க ராஜகோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் பலிபீடம், துவஜஸ்தம்பம் அமைந்துள்ளன. திருச்சுற்றின் தென்புறத்தில் வராக மூர்த்தி ஞானபிரானாகக் காட்சி அளிக்கிறார். மூலஸ்தான விமானம் கோவிந்த விமானம் என அழைக்கப்படுகின்றது. கருவறையில் அருள் செய்கின்ற ஆதிபிரான் நின்றகோலத்தில் பிரயோகச் சக்கரத்தை தனது வலது கரத்தில் தாங்கி, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்து அருள்புரியும் அற்புதக் கோலம். கருவறையின் பின் புறம் பரமபதநாதர், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் ஆதிநாதவல்லி - குருகூர்வல்லி தாயார் சந்நிதிகள் அமைந்துள்ளன.
 வடக்குத் திருச்சுற்றில் நம்மாழ்வார்க்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ளது. அருகில் நம்மாழ்வார் ஞானம் பெற்ற "உறங்காபுளி' என்ற ஸ்தல விருட்சமான புளியமரமும் உள்ளது. ஏழுகிளைகளுடன் கூடிய இம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் நம்மாழ்வார் திருவாய்மொழிந்த 33 தலங்களில் உள்ள பெருமாளின் திருக்கோயில்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. தனிக்கோயிலில் நம்மாழ்வாரை உபதேசிக்கும் ஞானமுத்திரையோடு காட்சி தரும் அற்புதவடிவினை தரிசிக்கலாம். இறை அருளால் பேச்சுத்திறன் வரப்பெற்று தமிழ்க்கவி ஆயிரம்பாடி, மகிழ்ந்தார் நம்மாழ்வார். இவர் இயற்றிய நான்கு பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன. "வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்புகழ் பெற்றார். இவருக்கு அமைந்த பல்வேறு சிறப்புப்பெயர்களில் "சடகோபன்' என்பதும் ஒன்றாகும். திருமால் கோயில்களில் வழிபடச் செல்லும்பொழுது அவர் திருவடி நம் தலையில் வைக்கப்படுவது உண்டு. அதற்கு "சடகோபன்' "சடாரி' என வழங்கப்படுகிறது. சமயப்புரட்சி செய்த ராமானுஜர் இத்தலத்தை "சடகோபன் ஊர்', "பரமபத்தின் எல்லை' என்றெல்லாம் போற்றுகின்றார். ஸ்ரீமந்நாத முனிகள் திராவிட வேதமான நாலாயிரத் திவ்யபிரபந்த பாடல்களை - பாசுரங்களைப் பெற்ற தலச்சிறப்புடன் ஆழ்வார் திருநகரி விளங்குகிறது.
 சுவாமி நம்மாழ்வாரின் திவ்யமங்கள விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணித்தர வேண்டும் என இவரை குருவாக அடைந்த மதுரகவிகள் பிரார்த்திக்க ஒரு மாசிமாதம் திருவிசாகத்தன்று தாமிரபரணி பெருநல்சங்கணித் துறையிலிருந்து தீர்த்தம் எடுத்துக் காய்ச்சவும் அதிலிருந்து இன்றும் நாம் சேவித்து வருகின்ற வடிவில் அர்ச்சா மூர்த்தியாக தோன்றி விளங்குகின்றார் நம்மாழ்வார். இந்த நன்னாளை போற்றும் முறையிலேயே ஆண்டுதோறும் மாசிமாத உற்சவம் இத்தலத்தில் நடைபெறுகின்றது. இவ்வாண்டு, உற்சவம் பிப்ரவரி 14 கொடியேற்றத்துடன் துவங்குகியது. பிப்ரவரி 22 - திருத்தேர், பிப்ரவரி 23 - பெருமாள் தெப்பம், பிப்ரவரி 24 - நம்மாழ்வார், ஆசார்யர்கள் தெப்பம், பிப்ரவரி 25 - மாசி தீர்த்தவாரி (முக்கியமான நாள்)
 ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளி அருள்புரியும் ஆதிநாதன் திருக்கோயில் சென்று வழிபட்டு வரம் அனைத்தும் பெறுவோம். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
 - கி.ஸ்ரீதரன்
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/ஆழ்வார்திருநகரி-மாசி-தீர்த்தவாரி-3100820.html
3100662 வார இதழ்கள் வெள்ளிமணி ராகு - கேது பகவான்கள் தோன்றிய வரலாறு! Friday, February 22, 2019 10:00 AM +0530 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுத்ததை உண்ண தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போட்டா போட்டியை தீர்த்து வைக்க மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களைத் தன் அழகால் வசியப்படுத்தி அமுதத்தை தேவர்களுக்குப் பெரும் பகுதியை வழங்கிக்கொண்டிருந்தபோது சுவர்பானு என்கிற அசுரன் (இவர் சூரியபகவானின் ஐந்தாவது மனைவிக்குப் பிறந்தவர்) தனக்கு அமுதம் கிடைக்காது என்று உணர்ந்து சூரிய சந்திரபகவான்களுக்குக்கிடையே தேவர் ரூபமெடுத்து அமர்ந்து அமுதத்தை வாங்கி உண்டார்.
 இதனை, சூரிய, சந்திர பகவான்கள் மஹாவிஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்தனர். ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் தலை முதல் மார்பு வரை தனியாக கழன்று தனியாக உருண்டது. உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது. அமுதம் உண்டதால் தலை பாகமும் உடல் பாகமும் உயிரோடு இருந்தன. தலை பாகத்தை மைடினஸன் என்கிற மன்னன் எடுத்து வளர்த்து ராகுபகவானாகி தன் கடும் தவத்தால் பாம்பு உடலைப் பெற்று கிரக அந்தஸ்தும் பெற்றார். தனியாக விழுந்து கிடைந்த உடல்பாகத்தை மினி என்கிற அந்தணர் வளர்த்து கேதுபகவானாகி ஞானமார்க்கங்களை அவரிடம் கற்று, விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பாம்புத் தலையை பெற்று கிரகப் பதவியை அடைந்தார்.
 - கே.சி.எஸ். ஐயர்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/ராகு---கேது-பகவான்கள்-தோன்றிய-வரலாறு-3100662.html
3100663 வார இதழ்கள் வெள்ளிமணி கல்லுவயல் ஸ்ரீகண்டீஸ்வரர்! DIN DIN Friday, February 22, 2019 10:00 AM +0530 ஒரு கோயிலை பார்க்கும் போது அதில் உள்ள கல் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் மற்றும் பண்டை ஓவியங்கள் அக்கோயிலின் தல வரலாற்றை எடுத்துரைக்க உதவுகிறது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வைப் பிராட்டியாரின் நல்லுரையாகும். அறம் காத்த பண்டைத் தமிழ் மன்னர்கள் அறச்சின்னங்களாக ஆலயங்களை எழுப்பி, தத்தம் இயல்பிற்கேற்றவாறு பொன்னும் பொருளும் வழங்கி அவைகளைப் பண்புக் களஞ்சியங்களாக உருவாக்கி வைத்துள்ளனர். இப்படிப் பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம்; அதைவிட இன்னும் வெளி உலகிற்கு வராத சில கோயில்கள் சிதிலமடைந்து இருக்கின்றன. அதில் ஒன்று தான் கண்டீஸ்வரமுடையார் திருக்கோயில்.
 இவ்வாலயம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் தொலையானூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பெரிய கல்லுவயலில் அமைந்துள்ளது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதைப் போல கண்டீஸ்வரமுடையார் கோயில் சின்னஞ்சிறிய கோயிலாக இருப்பதாலும் சுமார் 1000ஆண்டுப் பழைமையான கட்டடக் கலை மரபைக் கொண்ட முற்காலச் சோழர்கள் கலைப்பாணியில் அமைந்த கோயிலாகவும் சூரக்குடி குறுநில மன்னர்களின் ஆதரவிலும், போற்றுதலிலும் வளர்ந்து வந்த கான நாட்டைச் சேர்ந்த கோயிலாகும்.
 கானநாடு என்பது வடக்கில் வெள்ளாற்றையும் மேற்கில் புதுக்கோட்டை மலைக்கோயிலையும், விராச்சிலையின் கிழக்கு பகுதியையும், கண்ணனூரையும், துருமாவையும், தெற்கில் காரைக்குடியையும், கிழக்கில் நெடுங்குடியையும், மிரட்டு நிலையையும் எல்லையாகக் கொண்ட நாடாகும். தொலையானூர் கானநாட்டின் எல்லையும், கல்வாசல் நாட்டு எல்லையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
 கண்டம் என்றால் கழுத்து, ஈசுபரன் என்றால் சிவன்- கண்டீசுபரன் என்பதற்கு சிவன் தேவர்களுக்கு நன்மை செய்தல் பொருட்டு ஆலகால விஷத்தை (நஞ்சை) உண்டு அது கழுத்தில் தேங்கியதால் கண்டீசுபரர் என்ற பெயர் ஏற்பட்டதாகும். கோயில் அமைப்பு கிழக்குப் பார்த்த கோயிலாகும் இது கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும். கோயிலின் கூரையிலுள்ள போதிகைளும் அரைத்தூண்களின் வடிவமைப்பும் பார்க்கின்றவர்களை ஆச்சரியப்படப் வைக்கிறது. கோயில் கருவறை அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய அங்கங்களையும், உபானம், ஜகதி, முப்பட்டை குழுதம், கண்டம்பட்டி, சுவர், கூரை, அரைத்தூண்கள் ஆகிய கோயில்களுக்குரிய பொதுவான கட்டட அமைப்பைக் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலின் கட்டடக்கலை சோழர்கால அமைப்பாக இருந்தாலும், சோழர்களது கல்வெட்டு ஒன்று கூட இங்கே இல்லை.
 பிற்கால பாண்டிய மன்னர்களின் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள், சடையவர்மன் குலசேகரனின் ஒரு கல்வெட்டும், கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்குரிய விஜயநகர அரசரின் கல்வெட்டும், வன்னியன் சூரக்குடி சிற்றரசர்களது நான்கு கல்வெட்டும் இந்த கோயிலின் பூசைகள், விழாக்களுக்கு கொடுத்த கோயிலின் வனப்பையும், வளத்தையும் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கே அம்மன் கோயில் சிலை இருந்ததாகக் செவி வழிச்செய்தி சொல்லப்படுகிறது ஆனால் இப்போது அந்த அம்மன் இல்லை ஆனால் சின்ன பலிபீடம் இருந்ததை இப்போது உள்ள அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 அதனால் அவ்விடத்தில் முதல் பணியாக அம்மனுக்கு என்று ஒரு தனி சிறிய கோயிலை முதலில் எழுப்புவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாலயத் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு நலம் பெறலாம்.
 வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி காட்டுபாவா பள்ளிவாசல் நிறுத்தத்தில் இறங்கி 1.கி.மீ. செல்லவேண்டும்.
 தொடர்புக்கு: 94435 51794.
 - பொ.ஜெயச்சந்திரன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/கல்லுவயல்-ஸ்ரீகண்டீஸ்வரர்-3100663.html
3100727 வார இதழ்கள் வெள்ளிமணி அடியார்களின் ஆதரவை நாடும் தொரவி கயிலாசநாதர்! Friday, February 22, 2019 09:24 AM +0530 பல்லவர்கள், சோழர்கள் என மன்னர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட திருக்கோயில், இன்று அடியார்களின் ஆதரவுக்கரம் வேண்டி காத்து நிற்கின்றது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான கயிலாசநாதர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் தொரவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. தன் இருப்பிடம் சிதிலமடைந்திருந்தாலும், தன்னை நம்பி வந்தவர்களைக் கைதூக்கி விடும் பணியினை இன்றும் செம்மையாகச் செய்து வருகின்றார், தொரவி பெரிய நாயகி உடனுறை கயிலாசநாதர்.
 தொன்மைச் சிறப்பு: சோழமன்னர் காலத்தில், ராஜேந்திர சோழ வளநாட்டில் புனையூர் நாட்டின் துணை நாடான பனையூர் நாட்டின் ஊர்களுள் ஒன்றாகக் தொரவி விளங்கியது. பல்வர்கள், சோழமன்னர்களின் காலம் என்பதற்குச் சான்றாக இக்கோயிலில் அமைந்துள்ள இறை வடிவங்கள் விளங்குகின்றன.
 விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. இவை பல்லவர் காலத்தவை என்பது வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அருகேயுள்ள நாகச்சிலையும் பழைமையானதே. இதே போல, இத்தலத்து இறைவன் திருமேனி சோழர் காலம் என்பதையும் அறிய முடிகிறது.
 என்றாலும், சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைத்த போது , இதன் வரலாறு கூறும் பல்வேறு கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து காணாமல் போய்விட்டன. இறைவன் திருவருள் கூடி வரும் போது அதுவும் வெளிச்சத்திற்கு வரும்.
 இவ்வூரின் மேற்கே அமைந்துள்ள பனையபுரம், சோழநாட்டு ஆளுகையில் குறுநாட்டின் தலைநகரமாக விளங்கியிருந்ததை அவ்வூர் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அவ்வூரில் புகழ் பெற்ற தேவாரத்தலம் இருப்பதும், அவ்வூரில் மன்னரின் அரண்மனை, கோட்டைகள் முதலானவை இருந்ததையும் இப்பகுதியில் அமைந்துள்ள இடங்கள் சான்று கூறுகின்றன. அந்த வகையில் மகான்கள் மற்றும் துறவிகளின் வாழ்ந்த விருப்பமான இடமாக விளங்கிய பகுதி துறவியாகும். இன்று இப்பெயர் மருவி ,தொரவி என அழைக்கப்படுகிறது. அருளை வழங்கவும், கயிலைப்பேறு தரவும் இங்கே தோன்றிய இறைவன் கயிலாசநாதர் ஆவார்.
 ஆலய அமைப்பு: இவ்வாலயம் வழுதாவூர் நெடுஞ்சாலையினை ஒட்டி விசாலமான பகுதியில் அமைந்துள்ளது. சாலையை ஒட்டிய, இறைவன் சந்நிதி செங்கற்களைக் கொண்டு சுதையால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
 எளிய பலிபீடம், எளிய நந்திதேவர் மேற்கு முகமாக இறைவனை நோக்க, மகான்களுக்கும் துறவிகளுக்கும் அருள் வழங்கிய இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியாகக் காட்சி தருகின்றார். ஆலயம் சிதிலமடைந்து இருந்தாலும், தன் அருளில் எவ்வித குறையும் வைக்காமல் அருள்வழங்கி வருகின்றார்.
 ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், பல்லவர் கால விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அமைந்துள்ளன. வலம் வந்தால் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் சந்நிதி, அதனையடுத்து, பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.
 தற்போது திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருவதால், மூலவர் திருவுருவங்கள் அனைத்தும் தனிக் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்படுகின்றது. இறைவனின் திருவுருவங்கள் பாலாலயம் செய்யப்பட்டு முறையாக வழிபாடும் நடந்து வருகிறது.
 கேணீஸ்வரர்: இந்த தொன்மையான ஆலயத்தின் தெற்கே சுமார் 400 மீட்டர் தொலைவில் வயல்வெளியின் நடுவே பெரிய வடிவிலான வேப்பமரமும் அதன் வேர்ப்பகுதியில் சிவலிங்கத்திருமேனி அமைந்துள்ளது. இவர் கேணீஸ்வரர் என வழங்கப்படுகிறார். இவருடன் மற்றொரு சிவலிங்கம், தட்சிணாமூர்த்தியின் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இதன் அருகே, லிங்கத்திருமேனி மற்றும் கொம்பு இல்லாத நந்தியின் கல் திருமேனிகள் பூமியில் புதையுண்டு காட்சி தருகின்றன.
 மகா பெரியவர்: விழுப்புரத்தில் தோன்றிய மகா பெரியவர், இப்பகுதியில் உள்ள ஆலயங்களைத் தரிசித்த போது, தொரவிக்கும் வருகை தந்து , இவ்வூர் திருக்குளத்தில் நீராடி, இங்குள்ள கயிலாசநாதரை மனமுருகி வணங்கி வழிபட்டதை, இவ்வூர் பெரியவர்கள் இன்றும் நினைவுகூருகின்றனர்.
 பரிகாரத் தலம்: ஆலயம் சிதிலமடைந்து இருந்தாலும், மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் தன்னை நம்பி வரும் அடியார்களைக் கைதூக்கி விடுகிறான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளையும், சம்பவங்களையும் இப்பகுதிவாழ் அடியார்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர்.
 இறைவன் நினைத்தால் இயலாதது ஒன்றுமில்லை என்றாலும், இத்திருப் பணியைத் தன் அடியார்கள் மூலமே நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுகின்றான்,இறைவன்.
 இதற்கு அடியார்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அந்த உதவி சிறுதுளி அளவாவது இருந்தால் போதும். பணி விரைவில் நிறைவு பெறும்.
 அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில், விக்கிரவாண்டி டோல் கேட்டிற்கு தென்கிழக்கே 3 கி.மீ, தொலைவில் தொரவி திருத்தலம் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: சிவத்திரு. சரவணன்- 90252 65394 / 86808 36164.
 - பனையபுரம் அதியமான்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/22/அடியார்களின்-ஆதரவை-நாடும்-தொரவி-கயிலாசநாதர்-3100727.html
3087380 வார இதழ்கள் வெள்ளிமணி ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் Friday, February 15, 2019 11:44 AM +0530  

இந்த ஸ்ரீ விளம்பி ஆண்டு மாசி மாதம் 1- ஆம் தேதி (13.02.2019) அன்று நண்பகல் 13.30 மணி (ஐஎஸ்டி) அளவில் வாக்கிய பஞ்சாங்கப்படி, ராகு- கேது பகவான்கள் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

வாசன் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மாசி 23 (07.03.2019) அன்று விடியற்காலை 5.30 மணி (ஐஎஸ்டி) அளவில் ராகு- கேது பகவான்களின் பெயர்ச்சி உண்டாகிறது.

மற்றொரு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பங்குனி மாதம் 9 -ஆம் தேதி (23.03.2019) மாலை 4.14 மணி அளவில் ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சி ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ராகு-கேது பகவான்கள் 17.09.2020 வரை சஞ்சரித்துவிட்டு, 18.09.2020 அன்று இரவு 8.45 மணி (ஐஎஸ்டி) அளவில் ரிஷப, விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இந்த ஆண்டு, 05.11.2019 அன்று குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அடுத்த ஆண்டு 24.01.2020 அன்று காலை 9.55 மணி (ஐஎஸ்டி) அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்களை இரண்டு பாகங்களாகப் பிரித்து அதாவது, 24.01.2020 வரை ஒரு பாகமாகவும்; 18.09.2020 வரை இரண்டாவது பாகமாகவும் பிரித்து சனி, குரு பகவான்களின் பெயர்ச்சிகளையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

நமது வாசகர்கள் அனைவருக்கும் இந்த ராகு- கேது பகவான்களின் ஆசிகள் கிடைக்க தினமணியின் மூலமாகப் பிரார்த்திக்கிறோம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவான்களாகிய ஏழு கிரகங்களும் வலமிருந்து இடமாகச் சுற்றி வருகிறார்கள். இதற்கு பிரதட்சிணம் என்று பெயர். அதாவது, கடிகாரம் எப்படி சுற்றுகிறதோ அதுபோன்றுதான் என்று பொருள். அதேநேரம், உருவம், பருமன் ஏதுமின்றி நிழல் வடிவில் இந்த ராசி வீடுகளில் ராகு- கேது பகவான்கள் இடமிருந்து வலமாக அதாவது அப்பிரதட்சிணமாக வலம் வருகின்றன. நவநாயகர்களான சூரியபகவான் முதல் சனிபகவான் வரையில் உள்ள ஏழு கிரகங்களையும் எதிர்த்து வலம் வருகின்ற ராகு- கேது பகவான்களின் செயல்திறன் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் மற்ற ஏழு கிரகங்களின் தசைகளில் நாம் செய்யக் கூடிய குற்றங்குறைகளை (பாரபட்சத்தன்மை) எல்லாம் ராகு- கேது பகவான்கள் துப்பறிந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அவைகள் தமக்கு அதிகாரம் வரும்போது மற்ற கிரகங்களால் சலுகைப் பெற்ற அந்த ஜாதகரை வாட்டி வதைத்து விடுகிறார்கள் என்பது சாஸ்திர விதி. இது அந்த கிரகங்களைப் பழி வாங்குவது போன்றது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ராகு-கேது பகவான்கள் ஒரு ராசியைக் கடந்து செல்ல ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) ஆகின்றன. இப்படிப்பட்ட சலனத்தில் ஒரு நட்சத்திர பாதத்தைக் கடந்து செல்ல 2 மாதங்கள் பிடிக்கின்றன. இப்படி 9 பாதங்களைக் கடக்க 18 மாதங்கள் ஆகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மற்ற எல்லா கிரகங்களும் ஒன்றோடு ஒன்று சேர முடியும். ஆனால் ராகு- கேது பகவான்கள் எக்காலத்திலும் 180 பாகை இடைவெளியில் மட்டுமே சஞ்சரிப்பார்கள். இவர்கள் இருவரும் எக்காலத்திலும் ஒன்று சேர முடியாது.
 ராகு- கேது பகவான்களுக்கு என்று சொந்த வீடு (ஆட்சி வீடு) கிடையாது. எந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ அந்த இல்லத்து அதிபதிகள் போன்று அவர்கள் பலன் தருவார்கள் என்பதும் சாஸ்திர விதி. சுபர் வீடுகளில் சஞ்சரிக்கும்பொழுது சுபப் பலனும் அசுபர் வீடுகளில் சஞ்சரிக்கும்பொழுது அசுபப்பலனும் தருவார்கள் என்பதும் சாஸ்திர விதி. இதை ஒரு பொழுதும் மறக்கக் கூடாது.

பொதுவாக, ராகு-கேது பகவான்கள் எந்தெந்த இடங்களில் நன்மையை செய்ய முடியும் என்றால், சந்திரபகவானுக்காவது (ராசி) அல்லது லக்னத்திற்காவது 3,6,11 -இல் இருந்தால் பிரபல யோகத்தைச் செய்வார்கள். அல்லது ராகு - கேது அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து மற்ற மூன்று கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் அவர்கள் பெருமைப்படத்தக்க ராஜயோக வாழ்க்கையை வாழக்கூடியவர்களாவார்கள் என்பது சாஸ்திர விதி. இது பர்வத யோகம் என்று சொல்லப்படுகிறது.

இப்படியாக, ஒரு ஜாதகரின் ஜெனன காலத்தில் அமர்ந்திருந்தால் ராகு- கேது பகவான்களின் தசையில் பிற்பகுதியில் லட்சாதிபதிகளாக்கி விடுவார்கள். அதோடு ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ ராகு-கேது பகவான்கள் பத்தாமிடத்தில் இருப்பதையும் ஜோதிட சாஸ்திரம் சிறப்பாக கூறுகிறது. "பத்தில் ஒரு பாபி' சிறப்பென்பதும் ஜோதிட வழக்காகும். அதோடு மறைவு ஸ்தானங்களில் ராகு-கேது பகவான்கள் அமர்ந்திருந்தாலும் நன்மை அளிக்கும் என்கிற வழக்கிற்கு ஏற்ப, 8 -ஆம் இட ராகு- கேது பகவான்களும் நன்மை செய்கிறார்கள். எட்டாம் வீட்டைப் " புதையல் வீடு’ என்பார்கள்! இந்த புதையல் வீட்டில் சர்ப்பக் கிரகங்கள் இருந்தால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.
 ராகுபகவான் நின்ற ஸ்தானாதிபதி எந்த கிரகமாக இருந்தாலும் சரி, அது சந்திர சூரியர்களுக்கு ஆகாது. அதேபோல் சூரிய சந்திரர்கள் நின்ற ஸ்தானாதிபதி ராகுபகவானுக்கு ஆகாது. இதன்படித்தான் ஒவ்வொருவருக்கும் பலாபலன்கள் தப்பாது நடைபெற்று வருகின்றன. இதற்கான பாடல்:

 "அரவிருந்த வீட்டுக்காரன் அம்புலி இரவிக்கு ஆகாது. இரவி இந்து இருந்த வீட்டாரிருவரும் அரவுக்கு ஆகார்'

(அம்புலி, இந்து சந்திரபகவானைக் குறிக்கும்; இரவி சூரியபகவானைக் குறிக்கும்)

ராகு- கேது பகவான்கள் நல்ல இடத்தில் சஞ்சரித்து குருபகவானின் பார்வை சேர்க்கை பெற்று விட்டால் "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அது போன்று அமைந்துவிடும். மற்ற இடங்களில் ராகு- கேது பகவான்கள் அமர்ந்து குருபகவானின் பார்வை கிடைத்தால், ராகு- கேது பகவான்களின் அசுபத்தன்மை மறைந்து சுப பலன்கள் நடக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தற்சமயம், ஏற்பட்டுள்ள ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சியால் குருபகவானின் பார்வை, ராகு- கேது பகவான்களுக்குக் கிடைக்கவில்லை. அதேநேரம் இந்த ஆண்டு 05.11.2019 அன்று குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்திலிருந்து 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குருபகவான் கேதுபகவானுடன் இணைந்து ராகுபகவானைப் பார்வை செய்கிறார்.

அதேபோல் குருபகவான் அதிசார கதியில் 29.03.2019 அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு குருபகவான் 24 நாள்கள் சஞ்சரித்து விட்டு 23.04.2019 அன்று மறுபடியும் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த 24 நாள்களும் கேதுபகவானுடன் குருபகவான் இணைந்து ராகுபகவானைப் பார்வை செய்கிறார். இந்த காலகட்டத்திலும் சற்றுக் கூடுதலான பலன்கள் கிடைக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் மறுமலர்ச்சி உண்டாகும். நாடு நலம் பெறுவது போன்று தனி மனிதர்களுடைய நிலைமையும் நல்ல சீர்த்திருத்தப் பாதையில் திரும்பிச் செல்லக் கூடியதாகவே இருக்கும். அதோடு குரு, கேது பகவான்களின் இணைவு கோடீஸ்வர யோகமாகும்.

இந்த ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் மகர ராசி அல்லது மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் ஆறிலும் கேதுபகவான் பன்னிரண்டிலும் அமர்ந்திருப்பது விசேடமாகும். மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்களே இனி நடக்கத் தொடங்கும். சிம்ம ராசி, அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு பகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் நல்ல பலன்களே நடைபெறும். இதுபோலவே, துலா லக்னம் அல்லது துலா ராசிக்காரர்களுக்கு கேதுபகவான் மூன்றாமிடத்திலும் கடக லக்னம் அல்லது கடக ராசிக்காரர்களுக்கு கேதுபகவான் ஆறாமிடத்திலும் கும்ப ராசி அல்லது கும்ப லக்னக்காரர்களுக்கு கேதுபகவான் பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்களே உண்டாகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ராகுபகவானின் நட்சத்திரங்களாகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் பிரபல யோகத்தைச் செய்வார். அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் கேதுபகவானின் நட்சத்திரங்களாகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேதுபகவான் நன்மையை செய்வார்.

ஜோதிட சாஸ்திர ரீதியில் பார்க்கப் போனால், சூரியபகவான் வலது கண், சந்திரபகவான் இடது கண். செவ்வாய், புதன், சுக்கிரன், சனி பகவான்கள் கர்ம இந்திரியங்கள் மற்றும் ஐம்புலன்களாகும். ராகு- கேது பகவான்கள் தசை நரம்புகளாகும். அந்த ஞானத்திற்குரியவன் ஞானகாரகராகிய கேதுபகவானேயாவார். ராகுபகவானை யோக, போக, பயண காரகர் என்று அழைப்பார்கள். ராகுபகவான் சனிபகவான் போன்றும்; கேதுபகவான் செவ்வாய்பகவான் போன்றும் பலனளிப்பார்கள் என்பது ஜோதிட வழக்கு. ராகுபகவானின் தசை 18 வருடங்கள் (சனிபகவானின் தசை 19 வருடங்கள்) கேது மற்றும் செவ்வாய்பகவான்களின் தசை முறையே 7 வருடங்கள். அவர்களின் குணாதிசயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.

பொதுவாக, ராகுபகவானுக்கு போகம், யோகம் என்ற இரண்டு முக்கிய காரகத்துவம் இருந்த போதிலும்; ஞானம், பிரதாபம், செப்பிடு வித்தை, களவு, அடிமைத் தொழில், பரதேச வாசம், விகட விநோதம், கருநாகம் தீண்டல், ஜலகண்டம், சிறை தண்டனை போன்ற கெட்ட பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பலமிழந்த ராகுபகவான் பெண்களால் அவமானத்தையும் அதன்மூலம் பொருளிழப்பையும் உண்டாக்குகிறார் என்பதும் அனுபவ உண்மை. ராகுபகவானுக்கு அதிதேவதை துர்க்காதேவி; கேதுபகவானுக்கு விநாயகர் ஆகும். ராகு- கேது பகவான்களின் தசையின் முற்பகுதி நல்ல பலன்களைச் செய்வதில்லை. பிற்பகுதியில் நல்ல பலன்களைச் செய்கின்றனர். இதற்காகத்தான் " பெருஞ்சனி பாம்பு இரண்டும் பிற்பலனைச் செய்வர், பெரும் பலனைச் செய்வர்’ என்று கூறப்படுகிறது.

சனிபகவான் எப்படி சந்திரபகவானுக்கு முன்பு, பின்பும் வரும்போது (ஏழரை நாட்டு சனிக் காலம்) எப்படி கஷ்டங்களைத் தருகிறாரோ அதேபோன்று ராகுபகவான் வரும் காலங்களிலும் கடின பலன்களே நடைபெறும் என்று பழைய கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலம் அஷ்டமாதிபத்யத்திற்கு என்னென்ன தோஷங்கள் உண்டோ அத்தனையும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே ராகுபகவான் குருபகவானின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது குருபகவானுடன் கூடியிருந்தாலும் தோஷங்கள் பாதிப்பதில்லை. அதாவது ராகுபகவான் சந்திரபகவானுக்கு பன்னிரண்டில் தனித்து நின்றால்தான் அசுப பலன் நடைபெறும் என்றும்; வேறு கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கெடுபலன்கள் நடைபெறுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/ராகு--கேது-பெயர்ச்சி-பலன்கள்-ஜோதிடர்-கேசிஎஸ்-ஐயர்-3087380.html
3096329 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 28 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையாக விளங்கியபோதிலும், சோழர் ஆட்சிக் காலத்திலும், தொடர்ந்து வந்த சோழ பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், மன்னார் கோயில் போன்ற இடங்களுக்குக் கிட்டிய முக்கியத்துவம், கல்லிடைக்குறிச்சிக்குக் கிட்டவில்லை. ஆனால், இதன் பின்னர், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலம், கல்லிடைக்குறிச்சிக்குப் பொற்காலம் எனலாம். இந்தக் காலகட்டத்தில்தான், ஏராளமான திருக்கோயில்கள் இங்கு எழுப்பிக்கப்பெற்றன; சிதிலம் நோக்கிச் சென்ற பழங்கோயில்கள் திருப்பணி செய்யப்பெற்றன. சமீபகாலங்களில், மங்கல இசைக்கும் நாயன மேளத்திற்கும் இங்கு இருக்கும் ஈடுபாட்டைக் கண்டு, ஸ்ரீ ஜகத்குரு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், "கல்லிடைக்குறிச்சியா, கல்யாணக்குறிச்சியா' என்றே சிலாகித்தார்களாம்.
 இதெல்லாம் சரி, அதென்ன "கல்லிடைக்குறிச்சி' என்கிறீர்களா? மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம், இல்லையா? குறிஞ்சி நிலப் பகுதியின் மக்கள் குடியிருப்புகளுக்குக் "குறிச்சி' என்று பெயர். அதாவது, குறிச்சி என்பது குறிஞ்சி நிலத்து ஊர். நெல்லைச் சீமையின் பல பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுகளிலும், சரிவுகளை ஒட்டியும் அமைந்துள்ளன. இதனால், ஆங்காங்கே மலைக் குன்றுகளும் பாறைகளும் விரவிக் கிடக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைப்பகுதியின் கிழக்குச் சரிவில் உள்ளது கல்லிடைக்குறிச்சி; மலைக் குன்றுகளுக்கு இடையில், தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையிலான கணவாய்ப் பகுதியில் இருப்பதால், அவ்வப்போது சேரர் ஆளுகைக்குள்ளும் இவ்வூர் இருந்துள்ளது.
 "செண்பகராம மஹாராஜா' என்று செல்லமாக அழைக்கப்பட்ட கோதை ஆதித்ய வர்மன், வேணாட்டின் அரசராக 1469 -இல் பட்டமேறி 1484 - வரை ஆட்சி நடத்தினார். தம்முடைய ஆட்சிக்காலம் முழுவதும் கல்லிடைக்குறிச்சியையே தலைநகரமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இங்கிருந்தே ஆட்சி புரிந்தார்.
 கல்லிடைக்குறிச்சியின் திருக்கோயில்கள் புகழ் பெற்றவை. பண்டைய காலத்தில் பிரபலமாகவிருந்த சில கோயில்கள் இன்றில்லை; அல்லது சிதிலமாக மட்டுமே உள்ளன. நிலையுடைய பாண்டீச்வரமுடையார் கோயில், நாலாயிரம் உடையார் கோயில், நாகேச்வரமுடையார் கோயில், கொசக்குடி பெருமாள் கோயில் போன்றவை இவ்வகையைச் சேரும். குலசேகரமுடையார் கோயிலும் பகழிக்கூத்தர் கோயிலும் வரலாற்றுப் பெருமை கொண்டவை. ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள மானேந்தியப்பர் ஆலயமும் மேற்குப் பகுதியில் உள்ள லக்ஷ்மிவராஹர் கோயிலும் பற்பல திசைகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கின்றன.
 லக்ஷ்மிவராஹர் மீது ஆபோகி ராகத்தில் "ஸ்ரீ லக்ஷ்மி வராஹம் பஜேஹம்' என்னும் க்ருதியை இயற்றியுள்ள முத்துஸ்வாமி தீக்ஷிதர், "சங்கர ப்ரியகரம் குபேர ப்ரதிஷ்டிதம் சங்க சக்ரதரம்' என்றே பாடுகிறார். இந்தக் கோயிலைக் குபேரன் எழுப்பினானா? சிலை பிரதிஷ்டை செய்தானா?
 தலபுராணத்தில் காணப்படுகிற சுவாரசியம் இது. சிலசாலிபுரத்தில் ஆட்சி நடத்திய விஷ்ணுதர்மன் என்னும் மன்னன், பெரும் யாகம் ஒன்றைச் செய்தான். இந்த யாகத்துக்கு, பிரம்மா, மஹேச்வரன், தேவேந்திரன், குபேரன் ஆகியோர் தத்தம் சுற்றம் நட்புடன் வந்திருந்தனர். யாகம் நிறைவடைந்தவுடன், பிறரெல்லாம் புறப்பட்டுச் சென்றுவிட, புறப்பட மனமில்லாத குபேரன் மட்டும் தயங்கினான். பின்னர், யாகம் நடைபெற்ற இடத்தில் கோயில் எழுப்பச் சொன்னான். அவனுடைய யோசனைப் படியே லக்ஷ்மி வராஹர் கோயில் எழுப்பப்பட்டதால், "குபேர ப்ரதிஷ்டிதம்'. மூல விக்ரஹத்தைக் குபேரனே ப்ரதிஷ்டை செய்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த வராஹர் மீது, ஆதிவராக வருக்கக்கோவை என்னும் நூல் பாடப்பெற்றுள்ளது. கரந்தையார் பாளையம் என்பதைச் சுருக்கிக் கரந்தை ஆதிவராகர் வருக்கக்கோவை என்றே வழங்கப்பட்டுவரும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
 "கரந்தையார் பாளையம்' என்னும் பெயர் நம் கவனத்தை ஈர்க்கிறதல்லவா? கரந்தையார் பாளையம் சமூகம் என்னும் அமைப்பு, கல்லிடைக்குறிச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டுப் பல்வகையானும் தொண்டாற்றியுள்ளது. இவ்வூரில் வசித்த அந்தண இனத்தார் (பிராமணர்கள்), வணிகத்தில் ஈடுபட்டு, பற்பல ஊர்களுக்கும் வியாபாரப் பொருட்களைக் கொண்டு சென்று தொழில் நடத்தியுள்ளனர். பொருட்களை வண்டிகளில் எடுத்துச் செல்லும்போது, வண்டிகள் பலவும் பெருந்தொடர் போல் செல்லுமாம். வழிப்பறியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களோடும் ஆட்படையோடும் சென்றது மட்டுமின்றி, பயணத் தொலைவுக்கு இடையில் தங்கி இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சத்திரங்களையும் கட்டியுள்ளனர். இந்தச் சத்திரங்களைக் கரந்தையார் பாளைய சமூக அமைப்பே பராமரித்தும் வந்தது. கரந்தையார் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே கரந்தையார் பாளையத்தார் என்னும் பெயருக்குக் காரணமானது.
 இந்தியாவின் தொழில் புரட்சியில் கல்லிடைக்குறிச்சிக்கு முக்கிய பங்குண்டு. என்ஃபீல்ட் சுந்தரம் ஐயர், ஈசன் எஞ்சினியரிங் ஈஸ்வர ஐயர், சிமெண்ட் தந்தை சங்கரலிங்க ஐயர் போன்ற பெயர்கள், வரலாற்றின் பொன்னெழுத்துகள்.
 வரலாற்றுக்கே வரலாறு கொடுத்தவரும் கல்லிடைக்குறிச்சிக்காரர்தாம்! திரு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்! 1892- ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் நாள், கல்லிடைக்குறிச்சியில், ஏழை நியோகி பிராமணக் குடும்பம் ஒன்றில் தோன்றினார் கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரியார். திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியிலும் சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் பயின்ற சாஸ்திரியார், அண்ணாமலைப் பல்கலையின் கலைக் கல்லூரி முதல்வராகவும், திருச்சி தேசியக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலையின் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகவும், மைசூர் பல்கலையின் இந்தியவியல் பேராசிரியராகவும், மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குநராகவும், பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். யுனெஸ்கோ அமைப்பின் தென்கிழக்காசிய பாரம்பரிய கலாசாரக் கழகத்தின் இயக்குநராகவும் சிகாகோ பல்கலையின் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவரின் வரலாற்று நூல்கள், தென்னிந்திய வரலாறு குறித்த அதிகாரபூர்வ ஆவணங்கள். இவருடைய தமிழ் மொழிப் புலமை குறித்த சர்ச்சைகள் பல இருந்திருப்பினும், இவருடைய வரலாற்றுப் புலமை குறித்தும் தென்னிந்திய வரலாற்றை கூரிய பார்வையோடு இவர் தொகுத்திருப்பது குறித்தும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
 கல்லிடைக்குறிச்சி என்றவுடனேயே எல்லோருடைய நினைவையும் வருடுவது, "கன்னடியன் கால்வாய்' பற்றிய சிந்தனைதான்! கன்னடியன் கால்வாய் உருவானது குறித்தும் இதற்குக் காரணமானவர்கள் குறித்தும், தம்முடைய கருத்தை மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவு செய்கிற ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள், இவ்வாறு கூறுகிறார்கள்: கால்வாய்க்கே காரணபூதம், கருவி எல்லாமாயிருந்தவன் தன் பெயரே உலகுக்குத் தெரியாமலிருந்து அப்படியே போய்விட்டான்! இன்றைக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடிக்கும், ஆயிரக்கணக்கான மனுஷ்யர்கள், மிருகங்கள் குடிக்கவும் குளிக்கவும் நீரைத் தந்துகொண்டு அக்கால்வாய் மாத்திரம் இருக்கிறது. பேர் தெரியாதவனுடைய ஊரை வைத்து அதைக் "கன்னடியன் கால்வாய்' என்றே சொல்கிறார்கள். "கர்நாடக குல்யா' என்று சேரமாதேவி சாஸனத்தில் சமஸ்கிருதப் பெயர் கொடுத்திருக்கிறது.
 அகத்தியரோடு வந்தபோதே ஆங்காங்கே தன்னுடைய இளைய சகோதரிகளாம் துணைநதிகளைத் தவழவிட்ட பொருநையாளுக்கு, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குட்டித் தங்கச்சிதான் "கன்னடியன் கால்வாய்'!
 - தொடரும்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/பொருநை-போற்றுதும்-28---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3096329.html
3096330 வார இதழ்கள் வெள்ளிமணி மாசி மகத்தில் ரத்தின வேல் தரிசனம்! DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையைச் சார்ந்த நயினப்பச் செட்டியார் கொழும்புவில் தொழில் செய்த போது ஒருரத்தின கற்கள் பதித்த வேலினைச் செய்தார். கொழும்புவில் இருந்து அவர்கள் பரம்பரையினர், தேவகோட்டைக்கு வந்தபோது பாதுகாப்பு கருதி ரத்தினவேலை விபூதி பெட்டிக்குள் வைத்து, பூமிக்குள் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். அதன் மகிமை வெளிப்பட ஆரம்பித்தபின், உலக நலனுக்காக அந்த வேலினை, பூஜை செய்து அதனால் அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தகுதியான நபராக தீர்மானித்து கண்டனூர் அருளாடியார் குட்டையய்யா என்பவரிடம் ஒப்படைத்தனர். அருளாடியார் அவர்களும் அவர்கள் பரம்பரையினரும் ரத்தின வேலை விபூதி பைக்குள் வைத்து குன்றக்குடி அன்னதான மடத்தில் பாதுகாப்பாக வைத்து நித்ய பூஜைகளையும் பழநி, பாதயாத்திரை சமயத்தில் பையுடன் எடுத்தும் செல்வார்கள். வழிநெடுகிலும் மக்கள் தரிசனம் செய்வார்கள். பைக்குள்தான் வேல் வைக்கப்பட்டிருக்கும்.
 சிறப்பு வாய்ந்த இந்த ரத்தின வேலினை தேவகோட்டை நகரத்தார்கள் குன்றக்குடியில் இருந்து பெற்று வந்து ஆண்டுதோறும் மாசிமகத் திருநாளில் தேவகோட்டை நகரச்சிவன் கோயிலில் இருந்து வெள்ளித் தாம்பாளத்தில் பட்டுத்துணியின் மேல் வைத்து நகரப் பள்ளிக் கூடத்திற்கு (கோட்டையம்மன் கோயில் அருகில்) எடுத்துச் செல்வார்கள். நாற்பது வகை நகரத்தார்களில் அறங்காவலராக இருக்கும் அறுபது வயது நிரம்பிய ஒருவர் இதனை எடுத்துச் செல்வார். இதற்காக அவர் ஒரு மாத கால விரதம் மேற்கொள்வார் என்பது சிறப்பு.
 மங்கல வாத்யம் முழங்க முருகப்பெருமான் பக்தி பாடல்களுடன், கட்டியம் கூறிட பயபக்தியுடன் விபூதி பையிலிருந்து ரத்தின வேலை எடுத்துக்கொண்டு பாதையெங்கும் "மாத்து' எனப்படும் துணிகளை விரித்து அதன்மேல் நடந்து செல்வார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் ரத்தின வேலுக்கு பன்னீரால் தங்கள் கைகளாலேயே (ஆண்கள் மட்டும்) அபிஷேகம் செய்து மகிழ்வார்கள். ஒரு கி. மீ. தொலைவிலுள்ள நகரப்பள்ளிக் கூடத்திற்கு எடுத்துச்சென்று அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் முருகப்பெருமான் திருக்கரங்களில் சார்த்தி சிறப்பு பூஜை செய்வார்கள்.
 ஒரு முறை இந்த ரத்தினவேலை வெளியே எடுத்தால் குறைந்தது 32 மூட்டை அரிசி சாதம் வடித்து ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற ஒரு நியதி பின்பற்றப்படுவதால், முதல் நாள் அந்தணர்களுக்கு அரிசியும், காய்கறிகளும் வழங்குவார்கள். மாசிமகத்தன்று மகேஸ்வர பூஜை என்னும் அன்னம் பாலிப்பினை ஊர் மக்கள் அனைவரும் உண்ணும் வண்ணம் நகரத்தார் பெரு மக்கள் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றார்கள்.
 "வேலை வணங்குவதே வேலை' என்பார்கள் முருகபக்தர்கள். இவ்வாண்டு, பிப்ரவரி 19 (மாசி- 7) மாசி மகத் திருநாள் அமைகின்றது.
 - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/மாசி-மகத்தில்-ரத்தின-வேல்-தரிசனம்-3096330.html
3096334 வார இதழ்கள் வெள்ளிமணி வெப்பநோய் நீக்கும் வேதநாதர்! DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 சைவசமய திருமுறைத்தலங்கள் வரிசையில் தேவாரம், திருவாசகத்தை அடுத்து 9 - ஆம் திருமுறையில் சிறப்பிக்கப்படும் திருவிசைப்பா - திருப்பல்லாண்டு தலங்களுள் கருவூர்த்தேவரின் (சித்த புருஷர்) பதிகம் பெற்ற பேறுடையது திருச்சாட்டியக்குடி. மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்கப்படுகின்றது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூருக்கு மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூர், மாசிமக உற்சவம் நடைபெறும் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 புராண வரலாறு: தேவர்கள் பிரகஸ்பதியை அவமதித்தால் ஏற்பட்ட துன்பங்களை, நாரதருடைய ஆணையின்படி இத்தலத்தில் வந்து வேத தீர்த்தத்தில் நீராடி வேதமந்திரங்களால் இறைவனை பூசித்து அருள்பெற்றனர். ஆத்ரேய குலத்தில் உதித்தவரான சாண்டில்ய மகா முனிவர் இங்கு வந்து பேறு பெற்றார். குபேரனுக்கு இறைவர் அம்மை, அப்பராக காட்சியருளிய தலம். வெப்ப நோய்க்குரிய தேவதையான ஜ்வர
 தேவதை வழிபட்ட தலம். அதன் பொருட்டே இத்தலம் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) எனப் பெயர் பெற்றது என்பர். சாட்டியம் என்றால் வெப்ப நோய் என்று பொருள்.
 தலச்சிறப்புகள்: இத்தல இறைவனுக்கு வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர் என்றும் இறைவிக்கு வேதநாயகி என்றும் திருநாமங்கள். தலமரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான வன்னிமரம் உள்ளது. தீர்த்தம் வேத தீர்த்தம், மூலஸ்தானத்தில் ஸ்ரீவேதநாதர் சற்று உயர்ந்த பாணத்துடன் ஏழு அடுக்குகள் போன்ற வடிவ அமைப்புடன் கூடிய சதுர்வடிவ ஆவுடையார் மேல் லிங்க ரூபமாய் காட்சியளிக்கின்றார்.
 அனந்தாசனம், சிம்மாசனம், விமலாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசன ஊர்த்தவம், பத்மாசன ஊர்த்தவம் என்ற ஏழு ஆசனங்களின் மேல் இறைவன் வீற்றிருப்பதாய் ஐதீகம். மற்றொரு கூற்றின்படி, ஆறு ஆதாரங்களாகிய மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா ஆகியவற்றுக்கும் மேலாக ஏழாவதாக துவாதசாந்த இருக்கையின் மேல் வீற்றிருப்பதாகவும் கொள்ளலாம். இக்காரணம் பொருட்டு, இத்தலத் திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும், "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே' என்று பாடிப் போற்றியுள்ளார்.
 அம்பாள் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையாக காட்சிதரும் அற்புதக்கோலம். ஆலயத்தில் உள்ள கற்தெய்வத் திருமேனிகளில், சாண்டில், முனிவர், கருவூர்த்தேவர், குபேரன் போன்றவர்களுக்கும் இடம் உண்டு. கி.பி. 4 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னரேயிருந்து இத்தலம் வழிபாட்டில் உள்ளது. பிற்காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட சோழமன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையுடையது. கடைசியாக 2010 -இல் மஹாகும்பாபிஷேகம் நடந்தேறியது.
 பரிகாரம்: இத்தலத்தில் உள்ள வேதபுஷ்கரணியில் முக்கியமாக ஐப்பசி மாத பிறப்பிலும், "மாசி மாத பௌர்ணமியிலும்', வைகாசிமாத பௌர்ணமியிலும் முதல் நாள் இரவே தங்கி முறைப்படி நீராடி ஈசனை வழிபட எப்பேர்பட்ட வெப்ப நோய்களும் நீங்கி சரீர சுகம் பெறலாம் என்ற திடமான நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகின்றது. தீர்த்தக் குளத்தைச் சுற்றி மூலிகைச் செடிகள் படர்ந்துள்ளன. மேலும் திருமணங்கள் கூட்டி வைக்கும் தலமாகவும் கருதப்படுகின்றது.
 திருவிழா: இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாக வரும் பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி (மாசி -7) மாசிமகத்தன்று சிறப்பு அபிஷேகங்களும், இரவு ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94424 46077 / 04366-279410.
 - எஸ். வெங்கட்ராமன்
 
 
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/வெப்பநோய்-நீக்கும்-வேதநாதர்-3096334.html
3096215 வார இதழ்கள் வெள்ளிமணி வேலைக்கு வழிகாட்டும் வீரட்டேஸ்வரர்! Friday, February 15, 2019 10:00 AM +0530 தொன்மைச் சிறப்புடைய தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம்-காஞ்சிபுரம் சாலையில் படப்பை என்ற கிராமத்தில் கீழ்படப்பையில் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோயில் காரண ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இத்திருக்கோயில் சிதிலமடைந்திருந்த காரணத்தினால் இதனை சீரமைக்க இக்கிராம மக்களின் முயற்சியாலும், பரமேஸ்வரப் பெருமானின் திருஉளப்படியும் முழுவதும் கருங்கல் திருப்பணியாக நடைபெற்று வருகிறது.
தொல்லியல் நோக்கில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயில் அமைந்துள்ள படப்பையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மணிமங்கலம் என்ற பெரிய ஊர் உள்ளது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மணிமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிற்றரசர்கள் ஆண்டு வந்துள்ளனர். அக்காலத்தில் போர்புரிய பயிற்சியளிப்பதற்கான ஊராக படப்பை இருந்துள்ளது. அதன்படியே போரில் வெற்றி பெறும் பொருட்டு சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே வீரட்டேஸ்வரர் திருக்கோயிலாகும்.
அந்தப்போரில் வெற்றிபெற்ற பின்னர் இக்கோயில் கற்றளியாக கட்டப்பட்டது. அதன்பிறகு அவ்வூரில் குடியேறிய கைத்தறி நெசவாளர்களால் இக்கோயிலில் வழிபாடுகள் செய்யப்பட்டது. 
இத்திருக்கோயில், மஹாமண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி வீரட்டேஸ்வரர் அமைந்து அருளுகின்றார். சுவாமிக்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவமைப்பு உள்ளது சிறப்பு. மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பிகை சாந்தநாயகி அபய, அஸ்தம் தாங்கி வரத முத்திரையோடு அருளுகின்றார்.
வெளிச்சுற்றில் நந்திமண்டபம், கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, தட்சாணமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை அலங்கரிக்கின்றனர். மேலும், கன்னிமூலை கணபதி, காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சந்நிதிகள் அமைந்துள்ளன. ஈசான்ய பகுதியில் வடகிழக்கில் பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. சூரியன், சந்திரன் நால்வர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் ஓரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை வேண்டி, இத்தல ஈசனை வழிபட்டால் பரிபூரணமான திருவருள் கிட்டும். மாமியார், மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புகள் நீங்க வழிபடவேண்டிய தலமாகும். சகோதரர்களிடையே ஏற்படும் தோஷங்கள் தீர, இங்கு வந்து வழிபடவேண்டிய தலம். 
தந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பின் அவரது பிள்ளைகள் சுவாமியை மனமுருகி வழிபட அந்நோய் குணமாகும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்களின் குறைபாடுகள் இத்திருக் கோயிலிலுள்ள சந்திரனை வழிபட நீங்கும். பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்குகொண்டு சிவனருள் பெறலாம்.
ஆலயம் செல்ல: தாம்பரத்திலிருந்து கீழ்படப்பை சென்று அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு : 99418 47979. 
- எழுச்சூர். க. கிருஷ்ணகுமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/வேலைக்கு-வழிகாட்டும்-வீரட்டேஸ்வரர்-3096215.html
3096236 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 * பெருந்தன்மையுடையவர்கள், மிகவும் புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லோருடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியோர் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள்.
- வால்மீகி ராமாயணம் 
* எவனுக்குத் தர்மத்தில் நம்பிக்கையும் பிடிப்பும் இல்லையோ, அவனுக்கு மற்ற எதிலும் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படாது. கற்றறிந்தவன் சந்தேகப்படாமல் தர்மத்தை நம்ப வேண்டும். அதனால் அவனுக்கு நற்கதி உண்டு. வாழ்க்கை என்ற கடலைக் கடப்பதற்கு ஓடம்போல் தர்மம் இருந்து உதவி செய்யும். தர்மத்துக்கு நிச்சயமாகப் பயன் உண்டு.
- மகாபாரதம் (வியாசர்)
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்கள்தான். இறைவனை உள்ளத்தால் தொட வேண்டும். இறைவன் திருநாமத்தை நெஞ்சில் ஒரு விநாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்; அது அறுபத்தெட்டு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவதற்குச் சமமாகும். 
- கபீர்தாஸ்
* கோபத்தால் நீ கவரப்படும்பொழுது மெüனத்தை மேற்கொள் அல்லது இறைவன் திருநாமத்தை நினை. கோபத்தை வளர்க்கக் கூடிய எண்ணங்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் அவை மிக்க தீமையை விளைவிக்கும்.
- வடலூர் வள்ளலார்
* கொலை, களவு, காமம், கள், புலால் உண்ணல் ஆகிய செயல் குற்றங்கள் நிகழாதவகையில் பார்த்துக்கொள்ளுதல் ஒவ்வொருவருடைய கடமையாகும். உயரிய, சீரிய வாழ்க்கையை நாம் அடைவதற்கு இது மிகவும் துணை செய்யும்.
- இந்துமதம் 
* காமம், கோபம் போன்ற தீய எண்ணங்கள் மனதில் தோன்றாதபடி தவிர்க்க வேண்டும். மீறித் தோன்றிவிட்டால் அவற்றைச் சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்.
- புத்தர்
* "நான் கோயிலுக்குத் திருப்பணி செய்தேன்' என்றும், "ஏழைகளுக்குப் பணி செய்தேன்' என்றும், பெருமை பேசிக்கொள்ளாதே. அவ்விதம் செய்கிறவர்கள், தங்களின் சுயநலத்தைத் திருப்தி செய்கிறவர்களே தவிர, ஒருபோதும் இறைவனுக்குப் பணி செய்பவர்கள் அல்லர்.
- பசுவேசர்
* புதல்வனுக்குத் தந்தையின் ஆணையே சிறந்த அணி என்று கூறப்படும்; அதனால் அல்லவா ராமன் வனத்தை அடைந்தான்!
- சுக்கிர நீதி
* பாவங்கள் நன்னெறியிலிருந்து விலக்கும், துயரத்தைத் தரும், அது திறம் மிக்க மதுவைப் போல வெறியூட்டும். அதனால் விரைவில் தேய்ந்து அழியும், உண்மையிலன்றி அமர வாழ்க்கை இல்லை.
- புத்தர்
* ஒளியில்லாமல் எந்தப் பொருளையும் காண முடியாது. அதுபோல ஞான ஆராய்ச்சியின்றி ஞானம் தோன்றாது. நெருப்பின்றிச் சமையல் இல்லை, அதுபோல ஞானமின்றி வீடுபேறு கிடையாது.
- ஆதிசங்கரர்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3096236.html
3096243 வார இதழ்கள் வெள்ளிமணி அயலகத்தாரோடு நயத்தகு நட்பு DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 அயலகத்தாரோடு அவர் அந்நியராயினும் நன்மை செய்யுங்கள் என்று செம்மறை குர்ஆனின் 4-36 ஆவது வசனம் செப்புகிறது. இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் அயலகத்தார் உறவினராகவும் இருக்கலாம். உறவினர் அல்லாதவராகவும் இருக்கலாம். அதனால்தான்அந்நியராயினும் என்றுஅழுத்தம் கொடுக்கப்படுகிறது. அயலகத்தார் அறிந்தவராக இருந்தாலும் அறியாதவர் ஆனாலும் தெரிந்தவர்களாக இருந்தாலும் தெரியாதவர்கள் ஆயினும் அவர்களிடம் நட்போடு பழகி நன்மை செய்ய வேண்டும். அயலகத்தார் நோயுற்று இருந்தால் நலம் விசாரிப்பதோடு மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, மருந்து வாங்க உதவுவது, அவருக்கு நேரும் இடையூறுகளைத் தகர்க்க தக்கன செய்வது, அல்லல்படும் பொழுது ஆறுதல் கூறி ஆவன செய்வது, அயலகத்தாரைக் காணும் பொழுது புன்முறுவல் பூக்க முகமன் கூறுவது, அவருக்கு நல்லன நடக்கும்பொழுது வாழ்த்துரைப்பது முதலியவை அயலகத்தாரோடு நயத்தகு நட்பு பேணும் நற்செயல்கள்.
 அயலகத்தார் யார் என்பதற்கு வரையறை வகுத்த சட்டமேதை ஷாபியீ (ரஹ்) அடுத்துள்ள நாற்பது வீடுகள் என்றார். அதனை யொட்டி பெரியார் ஹஸன் பஸரீ (ரஹ்) அயலகம் என்பது முன்னால் நாற்பது வீடுகள், பின்னால் நாற்பது வீடுகள், வலது புறத்தில் நாற்பது வீடுகள், இடது புறத்தில் நாற்பது வீடுகள் என்று விளக்கம் தருகிறார். இவ்விரிவான விளக்கம் அயலகம் என்பதைச் சுருக்காது விரிவாக்கி நட்பை உறவைப் பெருக்கி ஒருவருக்கொருவர் உதவும் உன்னத பண்பைப் பரவலாக்குகிறது. இருபக்க அயலகத்தாரில் அன்பளிப்பு அளிக்கும்பொழுது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்று கேட்ட பொழுது வீட்டு வாசலுக்கு மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை கொடுக்க கோமான் நபி (ஸல்) அவர்கள் பதிலிறுத்ததைப் பகர்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- புகாரி.
 ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிப்பது அவரைப் பற்றி அவரின் அயலகத்தாரின் அபிப்ராயம் என்று எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அறிவிக்கிறார் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்- இப்னு மாஜா. அயலகத்தாரால் பயனுடையவர் என்று நயமாக உரைக்கப்படுபவர் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர் என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் அப்துல்லாஹ் பின் அமரு (ரலி) நூல்- திர்மிதீ. இந்நபி மொழியை நடைமுறைப்படுத்திய நிகழ்ச்சி.
 ஸயீத் இப்னு ஆஸ் (ரலி) அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை ஒருவர் விலைக்குக் கேட்டார். அவ்வீடு சாதாரணமான எளிய வீடு. வீட்டிற்கு உரியவர் ஒரு லட்சம் திர்ஹம் விலை கூறினார். வாங்க வந்தவர் வீட்டின் விலையை விட பன்மடங்கு அதிக விலை கேட்பதின் காரணத்தை வினவினார். பக்கத்து வீட்டில் வாழ்பவர் ஸயீத் இப்னு ஆஸ் (ரலி) பக்கத்து வீட்டுக்காரனின் தேவையை தெரிந்து தேவைக்குரிய பணத்தைக் கொடுத்து தேவையை நிறைவேற்ற உதவி அயலகத்தார் அவரின் வீட்டில் தொடர்ந்து வாழ துணை புரிந்தார்.
 ஒருநாள் அன்னை ஆயிஷா (ரலி) தன் கைகளால் மாவு அரைத்து ரொட்டிகள் தயாரித்தார்கள். வீட்டிற்கு வந்த விழுமிய நபி (ஸல்) தொழ துவங்கினார்கள். அயர்ச்சியில் அன்னை ஆயிஷா (ரலி) உறங்கி விட்டார்கள். அடுத்த வீட்டு ஆடு இவர்களின் வீட்டில் புகுந்து ரொட்டிகளைத் தின்று விட்டது. திடுக்கிட்டு விழித்த அன்னை ஆயிஷா (ரலி) ஆட்டைத் துரத்திச் சென்று அடிக்க முயன்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் அடுத்த வீட்டு ஆடும் அண்டை அயலாரே. நம் உணவில் அவைகளுக்கும் பங்கு உண்டு என்று பதறாமல் பகர்ந்தார்கள், "அயலகத்தாரை எனக்கு வாரிசுகளாக ஆக்கி விடுவாரோ' என்று எண்ணும் அளவுக்கு அயலகத்தாரோடு நயத்தகு நட்பு பூண வானவர் ஜிப்ரயீல் அவர்கள் தொடர்ந்து போதித்ததாக பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 அயலகத்தார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் உண்மையான இறையச்சம் உடையவன் அல்லன் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- மிஷ்காத். குழம்பு சமைக்கும்பொழுது அயலகத்தாருக்குக் கொடுக்கும் அளவு நீர்விட்டு நிறைய காய்ச்சிட நீதர் நபி (ஸல்) அவர்கள் நினைவுறுத்தியதை அறிவிக்கிறார் அபூதர் (ரலி) நூல் - முஸ்லிம். ஓர் ஆட்டுக்கால் குழம்பாயினும் அயலகத்தாருக்குக் கொடுப்பதைக் குறைவாக எண்ணி கொடுக்காதிருக்க வேண்டாம் என்று பெண்மணிகளுக்குப் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் போதித்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 எவரின் தீங்குகளை விட்டும் பக்கத்து வீட்டுக்காரர் பயமின்றி இருக்கின்றாரோ அந்த வீட்டுக்காரரே இறை நம்பிக்கை கொண்டவர் என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். ஒரு சமயம் அவன் உண்மை விசுவாசியல்ல என்று மும்முறை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்த பொழுது அவன் யார் என்று வினவினர் தோழர்கள். அயலகத்தார் அவதியுற எவன் தீங்கிழைக்கிறானோ அவனே என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. அயலகத்தார் பயமின்றி வாழ அவர்களோடு நயமாய் பழகி நட்பைப் பேணி ஒல்லும்வகை எல்லாம் ஓவாது- நல்லுதவி செய்ய வேண்டும்.
 மாநபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். சிறுமிகள் சிலர் தஃப் அடித்து பாட்டு பாடினர். அப்பாட்டில் நாங்கள் பனூநஜ்ஜார் குடும்பத்து சிறுமிகள். ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் ஏற்றமான அண்டை வீட்டுக்காரர் என்ற கருத்து கீழையோடியது. நான் நேசிப்பதை இச்சிறுமிகள் யோசித்து பாடுகின்றனர் என்று பாராட்டினார்கள் பாச நபி (ஸல்) அவர்கள். அறிவிப்பவர் -அனஸ் (ரலி) நூல்- இப்னு மாஜா.
 அருமறை குர்ஆன் கூறுகிறபடி அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் நடந்து காட்டிய நன்முறையில் அயலகத்தாரோடு நடத்தகு நட்பு பேணி வியத்தகு சாதனைகள் புரிவோம். வியனுலகு போற்ற வாழ்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/அயலகத்தாரோடு-நயத்தகு-நட்பு-3096243.html
3096245 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 மஹாகும்பாபிஷேகம்
 வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஞானாம்பாள் சமேத அருள்தரும் ஞானபுரீஸ்வரர் எழுந்தருளி அருள்புரியும் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் 17.02.2019 , காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94862 58863/ 85084 43811.
 திருநட்சத்திர மஹோத்ஸவம்
 காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சியில் அமைந்துள்ள திருமலைவையாவூர் திருமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் குலசேகராழ்வார். ஸ்ரீ குலசேகராழ்வாருடைய திருவவதாரத் திருநாள், மாசி, புனர்பூசம் நட்சத்திரம் ஆகும். ஆழ்வாரின் திருநட்சத்திர மஹோத்ஸவம், 17.02.2019, காலை 6.00 மணிக்கு துவங்கி அன்று முழுவதும் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98400 64029.
 திருப்பணி
 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வந்தவாசி சாலை வழியில் உள்ளது கீழ்க்குளத்தூர். இவ்வூரின் வடகிழக்கு மூலையில் பழைமையான அகத்தீசுவரமுடையார் திருக்கோயில் உள்ளது. கோயிலின் கருவறைச் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012 - 1044) காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லையும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் இக்கோயில் சிறப்பிடம் பெற்று விளங்கியதை அறியமுடிகின்றது.
 ஒரு காலத்தில் சீரும், சிறப்புமாக வழிபாட்டில் தலைசிறந்து விளங்கிய கீழ்க்குளத்தூர் அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில், காலப்போக்கில் முறையாகப் பராமரிக்காததால் விமானத்தின் மீதும் மகாமண்டபத்தின் மீதும் புதர்கள் மண்டியிருந்தன. இக்கோயிலின் நிலைபற்றி அறிந்த சென்னை அண்ணாமலையார் அறப்பணிக்குழு என்ற அமைப்பினர் கடந்த 2015- ஆம் ஆண்டு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் உழவாரப் பணியை மேற்கொண்டு ஆலயத்தை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து ஊர் மக்கள் முயற்சினால் புனராவர்த்தன வேலைகள் மேறகொள்ளப்பட்டு ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மஹாகும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 18 -ஆம் தேதி காலை 6.00 மணியளவில் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 16 -இல் ஆரம்பமாகிறது.
 தொடர்புர்கு: 97860 98250.
 - ஸ்ரீதரன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/நிகழ்வுகள்-3096245.html
3096252 வார இதழ்கள் வெள்ளிமணி நட்பைப் போற்றும் இயேசு DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 "உறவினரை கடவுள் தருகிறார். நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க கடவுள் உரிமை தந்துள்ளார்' என்ற பொதுமொழிகேற்ப, கடவுள் நமக்கு நாம் விரும்பியபடி நண்பர்களை தேர்ந்து மகிழ்வுடன் நட்பு பாராட்டி வாழ உரிமை தந்துள்ளார்.
 பலரின் நட்பு வயது முதிர்வு காலத்திலும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். பள்ளியில் தொடர்ந்த நட்பு வாலிபர் ஆனபின்பும் வேலை நிமித்தம் தூர தேசம் சென்றாலும் தொடர்கிறது. தாம் படித்த பள்ளியில் "பழைய மாணவர் சங்கம்' என்று வருடம் ஒரு நாள் குடும்பமாக எங்கிருந்தாலும் வந்து மகிழ்வுறுதல் நமக்குத் தெரியும். பெண்களின் தோழியர், தம் தோழியை மறப்பது இல்லை. நல்லது கெட்டது போன்ற சமயங்களில் இன்றும் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பதைப் பார்க்கின்றோம்.
 வேதாகமத்தில் ஐந்து நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நண்பருக்கு உதவிய நிகழ்ச்சி காணப்படுகிறது. வாலிபனான நண்பன் திமிர்வாத நோயால் படுத்தபடுக்கையானான். மருந்து நோயைக் கட்டுப்படுத்தவில்லை. நோய் முற்றியது. எலும்பும்தோலுமாக மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டான். அவனின் நண்பர்கள் உதவி செய்ய முடியவில்லை.
 இயேசு ஆண்டவர் அக்காலத்தில் பல அற்புதங்களை செய்தார். எப்பேர்பட்ட நோயும் குணமாயிற்று. பார்வையிழந்தோர் பார்வை பெற்றனர்; கால் ஊனமானவர் நடந்தனர்; தொழுநோயாளிகள் நோய் நீங்கி சுகம் பெற்றனர்; மரித்தவர் உயிரோடு எழுந்தனர். இவற்றை கேள்விபட்ட நான்கு நண்பர்களும் தங்கள் திமிர்வாத நோயால் பாதிக்கப்பட்டவனை இயேசுவிடம் கொண்டுபோய் சுகம் பெற விரும்பினர். அவனை பாடை போன்று நான்கு முனைகளில் கயிறு கட்டி தூக்கிக்கொண்டு போயினர். நீண்ட தூரம் தூக்கிச் சென்றனர். இயேசு ஆண்டவரோ ஒரு வீட்டினுள் பிரசங்கம் பண்ணி நோயுற்றோரை குணமாக்கி கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் வீட்டைச் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்தனர். தூக்கி வந்த நண்பர்களால் தங்கள் நண்பரை உள்ளே கொண்டு போக முடியவில்லை. யோசித்தனர் முடிவில் அவ்வீட்டின் கூரையின்மேல் ஏறி ஓட்டைப் பிரித்து இயேசுவுக்கு முன்பாக இறக்கினார்கள். நான்கு முனையிலும் நான்கு நண்பர்கள் கயிற்றை பிடித்து பத்திரமாக இயேசுவின் முன் இறக்கினார்கள். இயேசு நிமிர்ந்துப் பார்த்தார். அவனை இறக்கி கயிற்றை பிடித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் துணிவு, நட்பு இயேசுவிடம் கொண்ட பற்றுறுதியைக் கண்டு ""உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது'' என்றார்.
 "நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்கு போ என்று உனக்கு சொல்கிறேன்'' என்றார் (லுக்கா 5:18- 26)
 என்ன ஆச்சரியம் திமிர்வாத நோயால் அவதிப்பட்டவர் தன் நண்பர்கள் உதவியால் குணமானான். இயேசுவும் தம் சீடர்களை ""நண்பர்கள்'' என்று அழைத்தார். நாம் நல்ல நண்பரை, நல்ல தோழியரை தேர்வு செய்து நட்பு பாராட்ட வேண்டும். நாமும் நல்ல நண்பனாய், தோழியராக இருத்தல் வேண்டும். நாமும் நம் நண்பராக்கி கொள்வோம். அவரின் நட்பு நம்மை வாழ்விக்கும், உயர்த்தும் பேர் பெற்றவராக்கும்.
 - தே. பால் பிரேம்குமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/நட்பைப்-போற்றும்-இயேசு-3096252.html
3096262 வார இதழ்கள் வெள்ளிமணி காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி! DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் எட்டு வீரட்டத்தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பதிகம் பெற்ற காவிரித் தென் கரைத் தலங்களில் இத்தலம் 47 -ஆவது தலமாகும். இறைவன் மார்க்கண்டேயருக்காக யமனை உதைத்ததலம். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரை வழிபட்டு என்றும் 16 ஆண்டாக இருக்கும் சிரஞ்சீவித்தன்மையை பெற்றார்.
 இத்தலவரலாற்றினை குறிக்கும் விதமாக காலசங்காரக் கடவுள் இவ்வாலயத்தின் மகாமண்டபத்தின் வடபால், சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில், யமனை
 நிக்கிரகானுக்கிரம் செய்த அவதாரத்தில் (தோற்றநிலை) தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். வலகத்திருக்கரங்களில் சூலமும், மருவும் உள்ளன. இடத்திருவடியால் உதையுண்ட யமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்ந்து கிடக்கும் யமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்பறப்படுத்தும் காட்சி காணற்கரியது.
 இறைவனார் வலப்பக்கத்தில் ஸ்ரீ மார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார். இடப்பக்கத்தில் பாலாம்பிகை திருமகள், கலைமகளாகிய சேடியருடன் விளங்குகின்றார். இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக, யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன், ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.
 காலசங்காரக் கடவுளாகிய காலசம்ஹாரமூர்த்திக்கு ஆண்டில் பன்னிரெண்டு முறை அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரைப் பெருவிழாவில் ஆறாம் திருநாள் மட்டும் தான் வீதியுலா வருவார். மாசி மாதம் கும்ப சதுர்த்தசி திதியில் இரவு இரண்டாம் காலம் இம்மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது.
 இவ்வாண்டு, இவ்வைபவம் பிப்ரவரி 18 -ஆம் தேதியன்று நடைபெறுகின்றது. மூலஸ்தானத்திலேயே இம்மூர்த்திக்கு நடைபெறும் இந்த அபிஷேகத்தை கண்ணாறக்கண்டு இறைவனையும், இறைவியையும் வழிபட்டு எம பயம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழும் பேற்றினைப் பெறுவோம்.
 தொடர்புக்கு: 04364 - 287429.
 - எஸ். கோவிந்தராஜன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/காலனை-கடிந்த-கால-சம்ஹாரமூர்த்தி-3096262.html
3096265 வார இதழ்கள் வெள்ளிமணி கிருத கம்பளத்தில் கிருபாகரன்! DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 திருமால் "அலங்காரப்பிரியர்" என்றால் சிவபெருமானை "அபிஷேகப் பிரியர்" எனச் சிறப்பித்து அழைப்பர். "ஆடினாய் நறு நெய்யோடு பால் தயிர் என்றும்; "நெய்யும் பாலும் தயிருங்கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றால்" என்றும் இறைவனை திருமுறைகள் போற்றுகின்றன. ஒவ்வொரு மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் என்னென்ன என்பதை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக "காமிக ஆகமம்" என்னென்னப் பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதனையும், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் கூறுகின்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் ஈசனுக்கு நடைபெறும் அபிஷேக பொருட்களைப்பற்றி தருமை ஆதினத்தைச் சேர்ந்த, "கமலை ஞானப்பிரகாச பட்டாரகர்' அருளிய "புட்பவிதி' என்னும் நூல் குறிப்பிடுகிறது. அதன் பிரகாரம், சித்திரை - மருக்கொழுந்து, வைகாசி - சந்தனம், ஆனி - முப்பழம், ஆடி - பால், ஆவணி - சர்க்கரை, புரட்டாசி - அதிரசம், அப்பம் வகைகள், ஐப்பசி - அன்னம், கார்த்திகை - விளக்கொளி, மார்கழி - நெய், தை - தேன், மாசி - நெய் தோய்த்த கம்பளம், பங்குனி - தயிர் என்பதாகும். மாசி மாத அபிஷேகத்தை "கிருத கம்பளம் சாத்துதல்" எனவும் அழைப்பர். முக்தி தரும் சிறப்பு மிக்க இந்த அபிஷேகம் வெகு சில ஆலயங்களிலே மட்டும் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. அத்தகைய ஆலயம் எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு அங்கு சென்று வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி கிருத கம்பளத்துடன் கிருபாகரனைத் தரிசிப்போம்.
 - கி. ஸ்ரீதரன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/கிருத-கம்பளத்தில்-கிருபாகரன்-3096265.html
3096269 வார இதழ்கள் வெள்ளிமணி அஷ்டமஹா நாகயோகம்! DIN DIN Friday, February 15, 2019 10:00 AM +0530 பொதுவாக, சனிமஹா தசை நான்காம் தசையாகவும் செவ்வாய்பகவானின் தசை ஐந்தாம் தசையாகவும் குருமஹா தசை ஆறாம் தசையாகவும் ராகுபகவானின் தசை ஏழாம் தசையாக வந்தால் அவைகள் துயர் தரும் தசைகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த துயர் தரும் கிரகங்களின் தசை காலத்தில் இந்த கிரகங்களை செவ்வாய், சனி, ராகு, சூரியபகவான்கள் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் துயரத்திற்கு பதிலாக யோகம் ஏற்படும். லக்னாதிபதியும் ஆயுள் ஸ்தானாதிபதியும் மிகுந்த பலகீனம் அடைந்து, இந்த துயர்தரும் கிரகங்களும் மேற்கூறிய அசுபர் சம்பந்தமின்றி தனித்து நின்றால்தான் துயரங்கள் உண்டாகிறது. அதனால் பிறப்பில் கேதுமஹா தசை தொடங்கியவர்களுக்கு ஐந்தாவது தசையாக செவ்வாய் தசை நடந்தால் மேற்கூறிய வகையில் நிவர்த்தி உண்டானால் செவ்வாய் மஹா தசை யோக தசையாகவே அமையும் என்று கூறவேண்டும். அதோடு கேதுபகவான் குழந்தை பருவத்தில் தரவேண்டிய நற்பலன்களை செவ்வாய்பகவான் தன் தசையில் தருவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 யோக லட்சணம் பெறும் கேதுபகவான்: கேதுபகவானானவர் திரிகோண வீடுகள் ஒன்றில் இருந்து கேந்திர வீடுகளில் அதிபதிகளோடு சம்பந்தம் பெற்றால் யோக லட்சணம் பெறுவார். அதேபோல் கேந்திர வீடுகளில் அமர்ந்து திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் கேதுபகவானால் யோக பலன்கள் ஏற்படும்.
 அஷ்டமஹா நாகயோகம்: ராகுபகவான் ஆட்சி, உச்சம் பெற்றுள்ள கிரகங்களுடன் இணைந்து இருப்பது அஷ்டமஹா நாகயோகம் என்று கூறப்படுகிறது. இந்த எட்டு நாகங்களில் முதலாவதாக கருதப்படுவது ஆனந்தன் என்கிற சேஷனாகும். இந்த அனந்தனை படுக்கையாகக் கொண்டு மஹாவிஷ்ணு சயனத்திருப்பதை அனந்த சயனம் என்று அழைக்கிறார்கள். மற்ற ஏழு நாகங்களாவன வாசுகி, தக்சாகன், குளிகன், கார்கோடகன், பத்மன், மஹாபத்மன் மற்றும் சங்கபாலன் ஆகியவைகளாகும். இத்தகைய ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும் ராகுபகவான் தன் தசையில் அந்த ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் சுப பலத்தை கிரகித்துக் கொண்டு தங்கள் தசையில் மேன்மையான பலன்களைத் தருகின்றன என்பது அனுபவ உண்மை.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/15/அஷ்டமஹா-நாகயோகம்-3096269.html
3091674 வார இதழ்கள் வெள்ளிமணி சக்தி பீடங்களின் சங்கமம்! Friday, February 8, 2019 10:00 AM +0530 அம்மை அப்பராகிய சிவசக்தியர் உலக மக்களின் நன்மைபொருட்டு செய்த நாடகம் (திருவிளையாடல்) தட்சபிரஜாபதியின் யாகசாலையில் செவ்வனே நடந்தது. இதன் முடிவு, சிவபெருமான் தட்சனுடைய வேள்வியை அழித்து அவனுக்கு தக்க பாடம் புகட்டி அருளினார். சக்திதேவி தன்னுடைய உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் விழுமாறு செய்தாள். அந்த புனித ஸ்தலங்களே சக்தி பீடங்கள் ஆகும். சக்தியின் பூர்ண சைதன்யம் ஒவ்வொரு இடத்திலும் நிலைத்து அருள்பாலிக்கத் தொடங்கியது. அதன் மூலம் சக்தி வழிபாட்டிற்கான மார்க்கம் தோன்றியது. மகரிஷி ஸ்ரீவேதவியாசர், பராசக்தியின் 108 சக்தி பீடங்களைப் பற்றி மத்ஸ்ய மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் விவரித்துள்ளார்.
 இந்த சக்தி பீடங்கள், அன்னையின் அருளையும், அன்பையும் தவ சீலர்கள் நேரடியாக அனுபவம் பெற்ற இடங்கள். பாரத நாட்டைத் தவிர அண்டை தேசங்களிலும் பரவியிருந்த இந்த சக்தி பீடங்கள் காலதேச பரிமாண மாற்றங்களினாலும், வழிபாடு செய்ய இயலாத நிலையிலும் மறைந்து உள்ளது என்பதே உண்மை. சிதறிக்கிடக்கும் சக்தி பீடங்கள் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சக்திபீடங்களின் சங்கமாக தனக்கு ஓர் ஆலயம் அமைய வேண்டும் என்று அம்பிகை நினைத்திருப்பாள் போலும், அது அமைய வேண்டிய அனைத்து அம்சங்களையும் சூட்சமமாக, ஓர் ஆக்ஞையாக குருஜி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் என்ற தேவி பக்தருக்கு உணர்த்தி அவர் மூலமாக நிறைவேற்றிக் கொண்டாள்.
 காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்திலிருந்து சுமார் 12. கி.மீ. தூரத்தில் மதுரமங்கலம் அருகில் உள்ளது கண்ணந்தாங்கல் கிராமம். காஞ்சி புராணத்துடன் தொடர்புடைய கம்பாநதியின் கிளையான கம்பாநதி கால்வாய் கரையில் அமைந்துள்ளது. 1930 -ஆம் ஆண்டில் இக்கிராமத்தில் இருந்த ஒரு மாந்தோப்பில் காஞ்சி மகாசுவாமிகள் சிலகாலம் தங்கி பூஜைகள் ஆற்றிய புண்ணிய பூமி. பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஆத்மசீடர் எம்பார் சுவாமிகள் ஆராதித்துவந்த பழைமையான வைகுண்ட பெருமாள் ஆலயம் இவ்வூர் அருகில் மதுரமங்கலத்தில் உள்ளது. கம்பா நதி கால்வாயில் ஒரு காலத்தில் நிறைய நீர் வரவு உண்டு. மங்களபுரி என ஆன்மீகச் சிறப்புடன் அழைக்கப்படும் இப்பகுதியில்தான் அன்னை காமாட்சிக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் வாழ்வின் நான்கு நிலைகளின் பிரதிபிம்பமாய் ஸ்ரீஸ்வர்ண காமாட்சி ஆலயம் முற்றிலும் கற்கோயிலாக புராதன சிற்ப சாஸ்திர முறைப்படி அமையப்பெற்ற, வேத வழியிலே கும்பாபிஷேக வைபவம் கடந்த 2014 -ஆம் ஆண்டு நடைபெற்றது. இங்குதான், இரண்டாம் கட்டமாக 108 சக்தி பீட நாயகியருக்கும், அன்னை ஸ்வர்ண காமாட்சியை சுற்றி ஓர்அழகான செவ்வகவடிவான அமைப்பில் சிறு ஆலயங்களாக தற்பொழுது கட்டப்பட்டுள்ளது.
 உலக நன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அன்னை காமாட்சி தேவி கருவறையில் அமர்ந்த கோலத்தில் கரங்களில் பாச அங்குசம், கரும்பு வில், புஷ்பபாணம் தாங்கி, சரஸ்வதி, லட்சுமி இருவரையும் தன் கண்களாக வைத்திருக்கும் ஐதீகத்துடன், தன் கருணை விழிகளால் அருள்பாலிக்கும் அற்புதக் கோலத்தைக் காணலாம். அம்மனின் முன் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை உண்டு. உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் உற்சவ காமாட்சி, சுவர்ண மகாகணபதி, மகாபைரவர் சந்நிதிகளையும் இவ்வாலயத்தில் தரிசிக்கலாம். சிறப்பு அம்சமாக காஞ்சி மகாசுவாமிகளின் பத்மாசன கோலத்தில் பஞ்சலோக விக்ரகம் அவரது பார்வையும், அம்பிகையின் பாதங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு அமைந்து உள்ளதை ஆலய மண்டபத்தில் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தைச் சுற்றி பிராகரத்தில் 108 சக்தி பீட ஆலயங்கள் சுமார் 14 அடி உயரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி செய்யப்பட்ட பிரத்யேக தேவியரின் சிலாரூபத்துடன் கர்ப்பகிரஹம் மற்றும் தனி விமானத்துடன் உள்ளது. ஒவ்வொரு சக்தி பீடநாயகியரும் தனிபெரும் பண்புடன் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றலை படைத்தவர்களாக பிரதிஷ்டையாகி உள்ளது சிறப்பு. இந்த சக்தி பீட ஆலயங்களை இணைக்கும் விதமாக மூன்று நிலை ராஜகோபுரம் சுமார் 35 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. நூதன துவஜஸ்தம்பம் பிரதிஷ்டையாகி உள்ளது. பசு மடம் பராமரிப்பில் உள்ளது. பிரதான வாயிலைத்தவிர இதர மூன்று பக்கங்களில் வழியும், அங்கு சிறிய ராஜகோபுரங்களும் அமைந்துள்ளன. இந்துசமய வரலாற்றில் இந்த சக்திபீட சங்கம ஆலயம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
 ஸ்ரீ குரு காமாக்ஷி சுவாமிகள் வழிகாட்டுதலின்படி ஸ்ரீ காமாக்ஷி கைங்கர்ய அறக்கட்டளையினரால், இந்த சக்தி பீட ஆலயத்தின் மகாகும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 10 -ஆம் தேதி காலை 8.15 மணிக்கு மேல் 9 .00 மணிக்குள் மூல ஸ்வர்ண காமாட்சிக்கும், ராஜகோபுர விமானங்களுக்கும், 108 சக்தி பீட ஆலயங்களுக்கும் சமகாலத்தில் வைதீக முறைப்படி 250 மறறும் அதற்கு மேலான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்ள, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது. இந்த வைபவத்தில் தமிழக ஆளுநர் உட்பட முக்கிய பிரமுகர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் கலந்து கொள்கின்றனர்.
 தொடர்புக்கு: 98412 85245 / 94449 04243.
 - எஸ்.வெங்கட்ராமன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/சக்தி-பீடங்களின்-சங்கமம்-3091674.html
3091688 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 27- டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 விக்கிரமசிங்கபுரத்தில் அருள்மிகு சிவந்தியப்பர் கோயில் கொண்டிருக்கிறார். சிவந்தியப்பர் என்னும் அரசரால் ஸ்தாபிக்கப்பெற்ற இந்தச் சிவனார், அந்த அரசரின் பெயராலேயே அழைக்கப்படுகிறார். அரசராக வீற்றிருந்து, தம்முடைய அடியார்களை ஆண்டவனார் காக்கிறார் என்னும் முறையில், சிவலிங்கத்திற்கு ராஜ தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது. இங்கெழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு விநோதமான திருநாமம்: வழியடிமை கொண்ட நாயகி. நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நமக்கு வழிகாட்டி, பிறவிச் சக்கரத்தின் சுழற்சியிலிருந்து வழி மாற்றி, முக்தி வழியில் அழைத்துப் போனவள். லெüகீகப் பாதையில் சிக்கிக் கொள்ளாமல், இறைவனை அடையும் உயர்பாதையில் செலுத்துபவள். வடமொழியில், மார்க்க ஸம்ரக்ஷணி என்றழைக்கப்படுகிறாள்.
 அழகு கொஞ்சும் அம்பை சிறிது தொலைவு கிழக்காகப் பயணித்தால், பொதியச் சாரலின் புகழ்மிக்க அம்பாசமுத்திரம். காசிநாதசுவாமி திருக்கோயில், திருமூலநாதசுவாமி திருக்கோயில், அம்மையப்பர் திருக்கோயில், வீரமார்த்தாண்டேச்வரர் திருக்கோயில் என்னும் பற்பல கோயில்களின் ஊர். காச்யப முனிவர் வழிபட்ட இறைவனார், காச்பய நாதர் என்னும் திருநாமத்தோடு இங்கே கோயில் கொண்டுள்ளார். காச்யபநாத சுவாமி அல்லது காசிபநாத சுவாமி என்பதே, காலப்போக்கில் காசிநாதசுவாமி என்றாகிவிட்டது.
 தாமிரவருணியின் வடகரையில் அமைந்து, சமீபகாலங்களில் "அம்பை' என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூருக்குப் பழங்காலப் பெயர்கள் பலப்பல. காச்யபநாதசுவாமி கோயிலில் காணப்படுகிற 9 -ஆம் நூற்றாண்டு காலத்திய வட்டெழுத்துக் கல்வெட்டுகள், "முள்ளிநாட்டு இளங்கோய்க்குடி' என்கின்றன. வணிகர்களுக்கு "இளங்கோக்கள்' என்று பெயர்; வணிகர்கள் அதிகமாகக் குடியேறியதால், இவ்வூர், இளங்கோக்குடி என்றழைக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கும் முன்னர், திருச்சாலைத்துறை என்றும் திருமூலபுரம் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 10, 11-ஆம் நூற்றாண்டுக்காலத்தில், முதலாம் ராஜராஜப் பேரரசரின் ஆளுகைக்குள் பாண்டிநாடு வந்தபோது, இளங்கோக்குடியும் அருகிலுள்ள ஊர்கள் சிலவும் சேர்ந்து ராஜராஜ சதுர்வேதி மங்கலம் உருவானது. 14,15 -ஆம் நூற்றாண்டுவாக்கில், இளங்கோக்குடி என்னும் இந்த ஊர், பூதலவீர உதய மார்த்தாண்ட சேரமன்னரின் ஆளுகைக்குள் வந்தது. ஊரின் மையப் பகுதி (காச்யபநாத சுவாமி கோயிலையும், திருமூலநாத சுவாமி கோயிலையும் உள்ளடக்கிய பகுதி), அப்போது வேளாக்குறிச்சி என்று வழங்கப்பட்டு வந்தது. வேளாளர் குடியேறிய பகுதி வேளாளக்குறிச்சி என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும்; அதுவே காலப்போக்கில், வேளாக்குறிச்சி என்றாகியிருக்கும். ஊரின் பிரதானப் பகுதிகளை வேளாக்குறிச்சி என்று குறிப்பிட்டுவிட்டு, ஊரின் கிழக்குப் பகுதிக்குத் தம்முடைய பெயரைச் சேர்த்து, உதயமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என்னும் புதுப்பெயர் சூட்டினார். இந்தக் கிழக்குப் பகுதியில்தான், பட்டர் கோயில் என்றழைக்கப்பெறும் வீரமார்த்தாண்டேச்வரர் கோயில் உள்ளது.
 17- ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த காலங்களிலேயே "அம்பாசமுத்திரம்' என்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடும். நெல்லைச் சீமையின் ஊர்கள் பலவற்றுக்குச் "சமுத்திரம்' என்னும் பின்னொட்டு இருப்பதைக் காணலாம். மன்னர்கள், ஆட்சியதிகாரிகள், படைத்தலைவர்கள், தனவந்தர்கள் போன்றோர் அவ்வப்போது ஊர்மக்கள் பயன்பாட்டுக்காக ஏரிகளும் குளங்களும் வெட்டியுள்ளார்கள். இத்தகைய ஏரிகளுக்கும் குளங்களுக்கும் அவற்றை வெட்டுவித்தவரின் பெயர்களைச் சூட்டி, சமுத்திரம் என்னும் பின்னொட்டைச் சேர்த்து அழைத்துள்ளனர். ரவணன், கோபாலன், வாலன், தளபதி போன்றோர் பெயர்களால், ரவணசமுத்திரம், கோபாலசமுத்திரம், வாலசமுத்திரம், தளபதிசமுத்திரம் போன்ற ஊர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஊரின் பெயரும் ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். 15 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த கோதை ஆதித்யவர்மன் என்னும் செண்பகராம ஆதித்ய சேர மன்னர், தம்முடைய தங்கைக்குச் சீதனமாக இவ்வூரைக் கொடுத்ததாகவும் கருதப்படுகிறது.
 இந்த ஊரில் கோயில் கொண்டுள்ள காச்யபநாத சுவாமியின் பிராட்டியாம் அம்பிகை அருள்மிகு மரகதவல்லியின் அருள் சமுத்திரத்தில் மூழ்கினால் நற்கதி பெறலாம் என்னும் வகையில், "அம்பாள்சமுத்திரம்' என்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடும்.
 கல்யாணக்குறிச்சியான கல்லிடைக்குறிச்சி அம்பையின் இரட்டைப்பிறவியாகக் கருதப்படுவது, ஆற்றின் அக்கரையில் (அதாவது வடகரையில் இருக்கும் அம்பைக்கு அக்கரையில்; பொருநையின் தென் கரையில்) இருக்கும் கல்லிடைக்குறிச்சி.
 முதலாம் ராஜராஜப் பேரரசரின் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்பது, இளங்கோக்குடி (அம்பாசமுத்திரம்), பிரம்மதேசம் ஆகிய ஊர்களைப் பிரதானமாகவும், பெரிய ஊரான இளங்கோக்குடியின் பிடாகைகளாக (சிற்றூர்கள்) மன்னார் கோயில், கல்லிடைக்குறிச்சி, சொக்கங்குளம், வழுதியூர், இடைக்கால் போன்ற ஊர்களையும் கொண்டிருந்தது. ஆகவே, பலகாலத்துக்கும் அம்பாசமுத்திரப் பிடாகைக் கல்லிடைக்குறிச்சி என்றே இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துத் தென் பிடாகையாக (தென்பகுதிச் சிற்றூர்) இது இருந்த காலத்தில், மகிழக்குறிச்சி, மதிள்குறிச்சி, மதுக்குறிச்சி போன்ற பெயர்களும் இருந்திருக்கின்றன. தொடர்ந்து வந்த காலங்களில், க்ஷத்திரிய சிகாமணிபுரம், ராயசிகாமணி போன்ற பெயர்கள் இவ்வூருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 தவிர, சிலசாலிபுரம், சிலா மத்ய ஹரிஸ்யம் (சிலா=கல்; கல்லிடைக்குறிச்சி என்பதற்கான வடமொழிப் பெயர்கள்), கரந்தையார் பாளையம், கரந்தை (சமணக் குடியேற்றம்), சேரமானார் (சேரர் பகுதி), நல்லூர் போன்ற பெயர்களாலும் அவ்வப்போது இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. ராஜராஜப் பேரரசர் காலத்தில், சதுர்வேதி மங்கலத்து மையமாக பிரம்மதேசம் திகழ, பிடாகையான கல்லிடைக்குறிச்சி, பேரரசரின் பெரும்பட்டமான க்ஷத்திரிய சிகாமணி என்பதைக் கொண்டு சிகாமணிபுரம் என்றே அறியப்பட்டுள்ளது.
 தொடரும்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/பொருநை-போற்றுதும்-27--டாக்டர்-சுதா-சேஷய்யன்-3091688.html
3091694 வார இதழ்கள் வெள்ளிமணி உளு என்னும் உறுப்பு தூய்மை DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவன் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஏற்கும் ஈமானுக்கு அடுத்த இரண்டாவது கடமை தொழுகை. தொழுகைகளில் மிக முக்கியமானது தூய்மை. அத்தூய்மைக்காக உளு செய்யப்படுகிறது. உளுவைப் பிறர் உதவியின்றி தானே நிறைவேற்றுவது தக்கது. பிறரை ஏவி பிறர் நீரை ஊற்ற உளுசெய்வது உகந்ததல்ல. உறுப்புகளைக் கழுவி தூய்மை படுத்த உயர்ந்த இடத்தில் கிப்லாவை நோக்கி உட்கார வேண்டும். உலக நிகழ்ச்சிகள் பிற பேச்சுகளைப் பேசாது சைத்தானை விரட்டும் அவூது ஓதி அல்லாஹ்வைப் புகழும் பிஸ்மி சொல்லி துவக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் பொழுது அது அதற்குரிய துஆவை (இறைவேட்டலை) ஓதி இறைவனை இறைஞ்ச வேண்டும். உளுவை நிறைவேற்றுவதாக நிய்யத்து (உறுதிமொழி) உரைக்க வேண்டும்.
 முதலில் முன் கைகள் இரண்டையும் மணிக்கட்டு வரை கழுவ வேண்டும். சாய்த்து நீரைக் கவிழ்க்கும் பாத்திரமாக இருந்தால் பாத்திரத்தை இடப்பக்கம் வைத்து வலது கையில் நீரை எடுத்து கழுவ வேண்டும். உங்கள் கைகளைக் கோதி கொள்ளுங்கள். முதல் தடவை கழுவுவது கடமை. மூன்று முறை கழுவுவது கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி- சுன்னத்.
 வாய் கொப்பளிக்கும் பொழுது மறுமையில் ஹவ்லுல் கௌதர் தடாக நீரைக் குடிக்க துஆ செய்ய வேண்டும். தலையை நிமிர்த்தி தொண்டை வரை நீரைச் செலுத்தி கனைத்து காறி கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் பொழுது மிஸ்வாக் குச்சியால் பல் துலக்க வேண்டும். மிஸ்வாக் இல்லாவிட்டால் விரலால் பல் துலக்க வேண்டும். நீள வாக்கில் மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். அகல வாக்கில் பல் துலக்கக் கூடாது. இன்றைய பல மருத்துவர்கள் பகரும் இம்முறைய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்றே செய்து காட்டி அறிவுறுத்தினார்கள். மிஸ்வாக் செய்வதால் 22 பயன்கள் உண்டு.
 நாசிக்குள் நீர் செலுத்தி தூய்மைப் படுத்தும் பொழுது அல்லாஹ்வின் அருள் மணத்தை நுகரும் வாய்ப்பை அளிக்க வேண்ட வேண்டும். வலது கையால் நாசிக்குள் நீரைச் செலுத்தி மூக்கு சிந்தி இடது கைவிரலை மூக்கிற்குள் விட்டு தூய்மை செய்ய வேண்டும். ஒற்றைப்படை எண்ணில் தூய்மை செய்ய வேண்டும். அதனால்தான் மும்முறை வழக்கமாகி இருக்கிறது.
 முகம் கழுவும் பொழுது மறுமையில் முகம் ஒளிவீசி பிரகாசிக்க பிரார்த்திக்க வேண்டும். முகம் கழுவும் பொழுது காதுகளிலும் முன் தலையிலும் தாழ்வாய் கட்டையின் கீழ் பகுதியையும் சேர்த்து கழுவ வேண்டும். முகத்தில் மேற்புறம் தலையின் முற்பகுதியிலும் கழுவ வேண்டும்.
 வலது கையைக் கழுவும் பொழுது ஈட்டியது தீட்டிய நன்மைகள் நிறைந்த நல்லோர்களுக்கு நல்கப்படும் பட்டோலையை வலது கையில் வழங்க வாகாய் துஆ கேட்க வேண்டும். முன் கையிலிருந்து முழங்கை வரை கழுவ வேண்டும். இடது கையைக் கழுவும் பொழுது தீமைகள் நிறைந்த தீயோருக்குத் தரப்படும் பட்டோலையை இடது கையில் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்க வேண்டும்.
 முன் நெற்றி முடியில் நீர் தடவும் பொழுது உடலையும் முடியையும் நெருப்பு தீண்டாதிருக்கவும் நிழல் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் நிற்க அபயம் அளிக்கவும் பயபக்தியோடு பணிவாய் வேண்ட வேண்டும்.
 காதுகளைக் கழுவும்பொழுது சொர்க்கம் புகும் நற்செய்தி கேட்கும் வண்ணம் நற்செயல் புரிந்து நல்லவனாக நடந்திட அடக்கமுடன் துஆ செய்ய வேண்டும். இரு காதுகளையும் பெருவிரலால் வெளிப்புறமும் கலிமா விரலால் (பெருவிரலுக்கு அடுத்த ஆள்காட்டி விரலால்) உட்புறமும் தூய்மைப் படுத்த வேண்டும். இரு சுண்டு விரல்களாலும் இரு காதுகளின் குழிகளையும் தூய்மை படுத்த வேண்டும்.
 கால்கழுவும் பொழுது மறுமையில் பாதங்கள் பாதாளத்தில் விழாது சிராதுல் முஸ்தகீம் பாவத்தைச் சருகாது சாயாது கடந்திட கருணை புரிய உரிய துஆவை உருக்கமாய் கேட்க வேண்டும். காலின் விரல் நுனியிலிருந்து கழுவ வேண்டும். இடது கை சுண்டுவிரலால் வலது காலின் சுண்டு விரலில் கீழ் பாகத்திலிருந்து ஆரம்பித்து இடது கால் சுண்டு விரல் வரை எல்லா விரல்களின் இடுக்குகளையும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். உளு செய்தவர் காலில் நக அளவு கழுவாமல் விட்டதைச் சுட்டிக்காட்டி சுந்தர நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்று முழுமையாக உளு செய்ய உத்தரவிட்டதை உரைக்கிறார் உமரிப்னுல் கத்தாப் (ரலி) நூல் - முஸ்லிம்.
 ஒருவர் உளுவில் முகத்தைக் கழுவும் பொழுது அவரின் பார்வையினால் உண்டான தவறுகள், கைகளைக் கழுவும் பொழுது கைகளினால் ஏற்பட்ட தவறுகள், கால்களைக் கழுவும்பொழுது நடந்துசென்று செய்த நடைமுறைக்குப் புறம்பான தடை செய்யப்பட்ட தவறுகள் அனைத்தும் நீருடன் அல்லது நீரின் கடைசி துளியுடன் வெளியேறுகின்றன. உளு முடிந்ததும் அவன் தூய்மை அடைகிறான் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
 நல்ல முறையில் சொல்லியவாறு உளு செய்பவரின் பாவங்கள் அனைத்தும் அவரின் நகத்தின் அடியில் உள்ளது உட்பட வெளியேறி விடுகின்றன. உரைப்பவர்- உதுமான், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- முஸ்லிம். கடினமான சூழ்நிலைகளிலும் உளுவை முழுமையாக செய்பவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரின் மதிப்பு உயர்த்தப்படும். உரைப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
 முறையாக முழுமையாக நிறைவாக உளு செய்து இறைவனைத் தொழுது நரகில் சிறை பிடிக்கப்படாமல் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இம்மையில் தூய்மையாய் வாழ்ந்து மறுமையிலும் மாறா பேற்றினைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/உளு-என்னும்-உறுப்பு-தூய்மை-3091694.html
3091699 வார இதழ்கள் வெள்ளிமணி நல் அஸ்திவாரத்தின் மேல் வீடு கட்டுவோம் DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 நம் வாழ்வு மிக இன்பமானதும் மகிழ்வானதும் வளமானதும் பெருமையானதும் ஆகும். நம் வாழ்வு ஓர் அழகான சகல வசதியுடைய ஒரு வீட்டைப் போன்றது. நம் வாழ்வு சமூக அமைப்புக்கு உட்பட்டது. வீடு, அப்பா, அம்மா, பிள்ளைகள், தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் செல்ல பிராணிகள் உண்டு உறங்கி தொழில் செய்து, கல்விகற்று, அடைக்கலம் தரும் இடம் ஆகும். இவ்வாறு வீட்டைக் கட்டித் தருபவரையும் கடவுள் எனலாம். ஒரு வீடு கட்டப்படும்போது பூமிக்கு அடியில் நல்ல அஸ்திவாரம் போட வேண்டும். உறுதியான பூமியில் அமைந்துள்ள அஸ்திவாரமே வீட்டைத் தாங்கும்.
 வேதாகமத்தில் இயேசு ஆண்டவர் இரண்டு பேர் கட்டிய வீட்டைப் பற்றி உவமையாகச் சொன்ன செய்தியுள்ளது. "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.
 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்திறாதவன் எவனோ , அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுகிறான். பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்து முழுவதும் அழிந்தது'' என்றார் (மத்தேயு: 7: 24-27)
 இந்த உவமை கதையில் புத்தியுள்ள, புத்தியில்லாத இரண்டு மனிதர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ளவர் தம் வீட்டை கட்ட நல்ல இடத்தை கண்டுபிடித்தார். அது மேடான இடம்! பூமியோ கன்மலையான கெட்டியான பாறை இடம். அஸ்திவாரம் போட தோண்ட மிகக் கடுமையாக வேலை வாங்கியது. பாறையை வெட்டி நல்ல அடித்தளம் அமைத்தார். வீடு மிக நேர்த்தியாக வசதியாகக் கட்டப்பட்டது. தன் அன்பு குடும்பத்துடன் குடி சென்றார். இயற்கையின் சீற்றம் பெருமழை, காற்று அடித்தும் அவ்வீடு பாதுகாப்புடன் நிலைத்து நின்றது. அக்குடும்பம் மகிழ்வாக இருந்தது.
 புத்தியில்லாதவர் வீடு கட்ட இடம் தேடினார். அவர் தேர்வு செய்த இடமோ வறண்ட ஆற்றின் நடுபகுதி. அதில் அஸ்வாரம் தோண்டுவது மிக சுலபமாக இருந்தது. மணல் வேண்டிய மட்டும் கிடைத்தது. ஆற்றில் தண்ணீரும் கட்டடம் கட்ட கிடைத்தது. ஆனால் பெருமழை, பெரும் காற்று, மழை வெள்ளத்தால் ஆற்றில் கட்டிய வீடு தாக்கப்பட்டு அழிந்தது. வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவரும் அவர் குடும்பமும் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்.
 அடிதளம் என்ற அஸ்திவாரம் வீட்டிற்கு மட்டும் அல்ல, நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி என்ற அடிதளம், நல்ல தொழிலுக்கு, வியாபாரத்திற்கு நல்ல அஸ்திவாரம் போடவேண்டும். கடின உழைப்பு, உண்மை, தெய்வ பக்தி, அன்பு, நற்செயல்கள் என்ற அடிதளம் வாழ்வு என்ற வீட்டிற்கு அமைதல் வேண்டும். இயேசுவும் அவர் வார்த்தைகளுமே நமது வாழ்வு என்ற வீட்டிற்கு அடிதளம்! புத்தியுள்ளவராக மகிழ்வுடன் வாழ்வோம்.
 - தே. பால் பிரேம்குமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/நல்-அஸ்திவாரத்தின்-மேல்-வீடு-கட்டுவோம்-3091699.html
3091706 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 * நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன்; கணவன் மனைவிக்கு அணிகலன்; அரசன் குடிகளுக்கு அணிகலன்; கல்வியறிவோ அனைவருக்கும் அணிகலனாகும். 
- கெளடில்ய அர்த்தசாஸ்திரம் 
• உங்களுக்கு, "இறைவனுக்குச் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் இருந்தால், அந்தப் பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
- வடலூர் வள்ளலார்
• புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால், உள்ளத்தின் ஆழத்தில் உறையும் ஈசனை நீ உறுதியாகக் காண்பாய். 
- ஆதிசங்கரர்
• பிற எளிய உயிர்களைப் பலியிடுவதால் ஒருவன் மேன்மையடைய முடியாது. அவ்வாறு பலியிடுவது மிகப் பெரிய பாவம். 
- புத்தர்
• ஜீவகாருணிய ஒழுக்கத்திற்கு முதல்படியாக அமைந்திருப்பது புலால் உண்ணாமையாகும். 
- வடலூர் வள்ளலார்
• தீய செயல்களைச் செய்யும் மக்கள் சமூகம், வசந்தம் முதலிய பருவ காலங்கள், அந்த அந்தப் பருவங்களுக்கேற்ப மலர்களைப் பெறுவதுபோல, காலம் வந்தபொழுது கொடிய பயனை நிச்சயம் அனுபவிக்கிறது. 
- வால்மீகி ராமாயணம்
• எந்த உயிரும், தனது உயிரை அருமையாகவும் புனிதமாகவும் நேசிக்கும் எந்த உயிரும், இறக்க விரும்பாது. துன்பம், நோய், மரணம் ஆகிய மூன்றையும் எந்த உயிருமே விரும்புவதில்லை. ஆகையால் அகிம்சைதான் அனைத்திலும் தலையாய அறம். ஆகவே, ஒவ்வொருவரும் தமது உயிரை நேசிப்பது போலவே பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும். 
- மகாவீரர் 
• எல்லா உயிரையும் தன் உயிர்போல் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பது மேல், ஊனைத் தின்று ஊனை வளர்க்காமல் இருப்பது இனிது.
• நண்பர்களுக்கு நல்லதைச் செய்வது நல்லது. நல்லதைச் செய்து தீமையை விரட்ட முனைவது நல்லது. கடன் பெற்றாவது நல்லதைச் செய்வது நல்லது. தங்களை வந்து அடைந்தவர் துன்பத்தைப் போக்க முயல்வது இனியதாகும்.
- இனியவை நாற்பது
• துன்பத்தை ஒழிக்கும்பொருட்டுப் புனித வாழ்க்கை நடத்துங்கள். 
- புத்தர்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3091706.html
3091709 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 மஹாகும்பாபிஷேக விழா
 புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருள்மிகு பிராணாம்பிகா சமேத அருள்மிகு தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மூலவர் -அம்பாள் மற்றும் ஸ்ரீ நகவிடங்க செண்பக தியாகேச பெருமான், அனுக்கிரக மூர்த்தியாகிய அருள்மிகு சனீஸ்வர பகவான் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் வரும், 11.02.2019, காலை 9.10 மணிக்குமேல் 10.10 மணிக்குள்ளாக மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள் மற்றும் பூஜைகள் பிப்ரவரி 3 -ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், காசிபாளையம் தடப்பள்ளி கிராமம் சிவகிரி எனும் குமரன் கரட்டில் அமைந்துள்ள மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலில் 15.02.2019, காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 82480 04435/ 97862 85405.
 ராகு-கேது பெயர்ச்சி விழா
 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையிலுள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே (கூழமந்தல் ஏரிக்கரை) எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராகு-கேது பகவான், 13.02.2019, புதன்கிழமை மதியம் 1.25 மணியளவில் மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அதனை முன்னிட்டு ராகு-கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94451 20996.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/நிகழ்வுகள்-3091709.html
3091711 வார இதழ்கள் வெள்ளிமணி பலம் பெறும் ராகுபகவான்! DIN DIN Friday, February 8, 2019 10:00 AM +0530 பொதுவான விதி என்னவென்றால் ராகு- கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் வீட்டுக்கதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது ஒரு பலமான அமைப்பு என்று கூறவேண்டும்.
 மேஷ ராசியில் ராகுபகவான் அமர்ந்து தசையை நடத்தினால் யோகம் ஓரளவுக்கு குறைந்தாலும் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.
 ரிஷப ராசியில் ராகுபகவான் நின்று தசையை நடத்தினால் ஏகப்பட்ட செலவினங்களை முன்னிட்டு செய்யப்படுபவை அவை: மாடு, கன்றுகள், வாகனங்கள் இவையெல்லாம் சேரும்.
 கடக ராசியில் ராகுபகவான்இருந்து தசையை நடத்தினால் சமூகத்தில் ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி வாகை சூடி, கெட்டிக்காரரென பெயரெடுப்பார்கள். ஜாதகருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தொல்லை கொடுக்கலாம் என்பதால் இந்த தசை முடியும் வரை ஜாதகர் உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
 கன்னி ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் பெரியவர்கள் யாருக்காவது கண்டம் கொடுக்கத் தவறுவது இல்லை. ஆனால் கல்வி வளமும் அயல்நாட்டுப் பயணங்களும் அடிக்கடி நிகழும்.
 மகர ராசியில் ராகுபகவான் இருந்து தசையை நடத்தினால் நல்லவர்கள் வல்லவர்கள் என்று பெயரெடுக்கலாமே தவிர, பொருள் சேர்வது கடினம். அப்படி பொருள் சேர்ந்தாலும் பலருக்கு கொடுத்து விடுவார்கள். ஜாதகருடைய கணிப்பு கண்ணோட்டம் தவறிவிடும். தவறான நெறியற்ற வழிகளில் அறவே செல்லக்கூடாது. இப்படிச் செய்தால் பெருத்த அவமானத்தைச் சந்திக்க நேரிடும்.
 பொதுவாக, பலமற்ற ராகுபகவான் தன் தசை காலத்தில் குடும்பத்தில் வயது முதிர்ந்தவர் யார் இருந்தாலும் கண்டம் ஏற்படும். நாற்கால் ஜீவன்கள் தொலைந்து போகும். குடும்பத்தில் பிரிவினை உண்டாகும். சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க முடியது. இடம் விட்டு இடம் மாற வேண்டிய அவசியம் நிச்சயம் வரும். சிலருக்கு உட்கொள்ளும் மருந்தும் உணவும் கூட மயக்கத்தை உண்டு பண்ணிவிடும்.
 பலமுள்ள ராகுபகவானின் தசையில் நல்ல வருவாய், சந்தோஷம், செல்வம், செல்வாக்கு ஆகியவைகள் அபரிமிதமாக உண்டாகும். தினங்களில் ராகுகாலம், எமகண்டம் ஆகியவை ராகு- கேது பகவான்களுக்குரியதாகும். தினமும் ராகு காலம் ஒன்றரை மணி நேரமும், எமகண்டம் ஒன்றரை மணி நேரமும் கொண்டு மூன்று மணி நேரத்தை ஒரு நாளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு வாரத்தில் இவர்களுக்கு 21 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 கேதுபகவான் ஞான மோட்சத்திற்குரிய காரகத்துவத்தைப் பெற்றுள்ளார். இதனால் லக்னத்திற்கு கடைசி ஸ்தானமாகியப் பனிரெண்டாமிடத்தில் கேதுபகவான் இருந்தால் அந்த ஜாதகருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஜோதிட விதி.
 ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுமஹா தசை ஏழாவது தசையாக வரும். அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஐந்தாவது தசையாக வரும்.
 
 
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/பலம்-பெறும்-ராகுபகவான்-3091711.html
3091859 வார இதழ்கள் வெள்ளிமணி கருணை பொழியும் சிவகாம சுந்தரி! Friday, February 8, 2019 09:46 AM +0530 தில்லை சிவகாம சுந்தரி ஆலயம் குடமுழுக்கு: 11-02-2019
 சைவநெறி விளங்கச் செய் சிவநேயச் செல்வர்களால் கோயில் என்னும் பெயர் கொண்டுப் போற்றப் பெறுவது திருச்சிற்றம்பலம் (சிதம்பரத்தலம்) ஆகும். இது சிதம்பரம் ஸ்ரீசபாநாயகர் கோயில் எனவும் அழைக்கப்பெறும்.
 இக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி பஞ்சகிருத்திய பரமானந்தத்தாண்டவம் எனும் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) நிகழ்த்தும் தன்மையால் ஸ்ரீ ஆனந்த நடராஜமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார். இத்தாண்டவத்தை முழுமையாக அனுபவிப்பவள் அன்னை சிவகாமி ஆவாள். இவ்வன்னை இக்கோயிலின் பிராணமய கோசப் பிரகாரத்தில் (சிவகங்கை தீர்த்தத்திற்கு மேற்கில் கீழ்த்திசை ஸ்ரீவகாமகோட்டம் உறை ஞானசக்தியாய் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையாய் அருள்பாலிக்கின்றாள். இது அம்பிகையின் மூலத்தானமாகவும் விளங்குகின்றது.
 இறைவனின் நடனத்தை நாதாந்த நாடகம் என்று ஞானிகள் மொழிவர். இதனை நன்கு அனுபவித்து அகிலத்திற்கு உணர்த்துபவள் இந்த அன்னை சிவகாமியே ஆவாள். இச்செயல்,
 "பாலுண் குழவி பசுங்குடர் பெறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கே' என்று குமரகுருபர சுவாமிகள் தம் சிதம்பர மும்மணிக் கோவையில் மொழிவார். இதில் தாய் என்பது அன்னையையும், குழவி என்பது உலக உயிர்கள் எனவும் குறிக்கப்பெறும். இதன் மூலம் அன்னை சிவகாமியே ஜீவராசிகள் அனைத்திற்கும் தாயாம் தன்மையொடு உலக பேரியக்கச் சக்தியாக விளங்கும் தன்மைப் புலப்படும். உயிர்களெல்லாம் பிறவிப்பயனை எளிதாய்ப் பெற, பேரருள் புரிபவள் இந்த ஞானசக்தியே ஆவாள்.
 இச்சாசக்தி: ஸ்ரீ நடராஜர் சந்நிதியில் அன்றாடம் நிறைவு பூசையாகிய இரவு அர்த்த சாம பூஜையின் போது இறைவனின் ஸ்ரீ பள்ளியறையில் அம்மனாய் அமர்ந்து உள்ளவள். இவள், சிவபோக சுந்தரி எனவும் அழைக்கப்பெறுபவள் ஆவாள்.
 கிரியாசக்தி: பொற்சபையில் பொற்புறு நடனம் பயிலும் ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உடனுறை தேவியாக இடப்பாகந்தன்னில் உறைபவள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆவாள்.
 ஞானசக்தி: இச்சக்தியே ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை என வழங்கப் பெறுகிறாள். இவளே பிரதான மூர்த்தியாய் விளங்கி புனராவர்த்த நிலையில் 11.02.2019 -இல் நடைபெறும் கும்பாபிஷேகம் பெறுபவள் ஆவாள்.
 இந்த ஞானசக்தி அம்பிகைக்கு ஆண்டு தோறும் ஐப்பசிப் பூரத் தினத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும். இத்திருவிழாவைப் பாலிவளத் திருநாள் (பூரச்சலங்கை) எனவும் அழைப்பர். இம்மூவகை சக்திகளும் இணைந்த நிலையே அன்னை பராசக்தி, மகாசக்தி என்பர் மகான்கள். இவர்கள் முறையே, ஆன்மாக்களின் மும்மலங்களையும் அகற்றி தனு, கரண, புவன, யோகங்களைத் துய்த்திடச் செய்து பேரருள் பொழிபவள் ஆவாள்.
 ஸ்ரீ சிவகாம சுந்தரி உறையும் சிவகாமக் கோட்டம்: கி.பி.1118 முதல் 1136 வரை சோழ வளநாட்டை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் கற்றளியாக்கினான். இவனுடைய சேனாதிபதியாய் விளங்கியவன் மணவிற் கூத்தன் காளிங்கராயன் ஆவான். இவன் இக்கோட்டம் பீடுற இக்கோயில் சூழ்ந்த திருச்சுற்றும் (பிரகாரம்) திருமாளிகைப்பத்தியும் அமைத்தான்.
 மேலும் முன்கூறிய விக்கிரமசோழன் மகன் 2-ஆம் குலோத்துங்கன் தம் காலத்தில் இக்கோட்டம் மிகவும் விரிவுடையதாய்ப் புதுக்கி இங்குறை அன்னை தாம் பிறந்த இமய வெற்பையும், மறக்கும் நிலையில் சிறப்பாக அமைத்த நிலை சிறப்பிற்குரியது ஆகும். இதனால் இவன் ஸ்ரீ பீடங்கண்ட பெரிய பெருமாள் என்று போற்றிப் பாராட்டு பெற்ற நிலை "நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப' எனும் வரிகளால் தக்கயாகப் பரணியில் குறிக்கப் பெறுகிறது. இச்சிறப்புகளொடு இரண்டடுக்குள் கொண்ட திருமாளிகைப்பத்தி, கீழ்க்குறடுகளில் பரத நாட்டிய நுட்பங்கள், பண்டைய இசைக்கருவிகள், கற்சிற்பங்கள், முன்மண்டப தென் வட பகுதிகளில் மேலே வரையப் பெற்றுள்ள காவி நிறம் கொண்ட இன்றளவும் மெருகு குறையாத பழங்கால ஓவியங்கள், இக்கால நுண்கலை வினைஞர்களும் கண்டு வியக்கும் தன்மையில் அமைக்கப் பெற்றுள்ளன.
 கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் நித்ய பூஜையில் ஏற்படும் குறைகள், நைமித்தக பூஜை என்னும் பிரம்மோற்சவம் (ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறும் பெருந்திரு விழாக்கள்) மூலம் நிறைவாய் ஆக்குவது. திருக்கோயில்களின் வழக்கமான நிகழ்வாகும். இதுதவிர கோயில்களில் உள்ள மூர்த்தங்களின் சந்நிதிகள் பழுதடைந்து சில பகுதிகள் முரிந்தும், உடைந்தும் காணப்பெறின் அவற்றை முற்றிலும் மேம்பட பழுது நீக்கி கோயிலின் மூர்த்தம் தொடர்ந்து அருள்மழையைப் பொழிந்திடவும், திருக்கோயில் மேலும் பன்மடங்கு சாந்நித்யம் பெறவும் நிகழ்த்தப் பெறும் பெருஞ்சாந்தயே கும்பாபிஷேக விழா ஆகும். இதில் யாகசாலை தன்னில் நடத்தப்பெறும் ஞான வேள்வி கோயிலின் புனிதத்தன்மையைப் பன்மடங்கு மேம்படச்செய்யும் என்பது திண்ணம். கும்பாபிஷேக விழா கோயில் பூசை முறைகளில் சிறப்பான ஒன்றாக கருதப்படுவது ஐதீகமாகும்.
 இவ்விழாவில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்பெறுவது மூர்த்தங்களுக்குச் சாற்றப்பெறும் அஷ்டபந்தன மருந்து ஆகும். இது 8 மருந்துகளினால் ஆன கலவைப் பொருள்கள் (கொம்பரக்கு, கருங்குங்கிலியம், சுக்கான், காவிக்கல், வெண்மெழுகு, செம்பஞ்சு, வெண்ணெய், உலர்ந்தலிங்கம்) கொண்டு அரைக்கப்படுவதாகும். இவ்வாறு அரைக்கப் பெற்ற சாந்தே அஷ்டபந்தன மருந்தாகும். இது கும்பாபிஷேகம் காணும் இறைவன் இறைவி ஆகியோரின் பீடத்தில் பூசப்பெறுவதால் பூமிக்கும், மூர்த்தத்துக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் இது தெய்வீக பந்தனம் எனவும் சிறப்பிக்கப் பெறுகிறது.
 சிவகாம கோட்டத்தில் பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, சாமுண்டி, வாராஹி, இந்திராணி, கெüமாரி ஆகிய தேவிகளுக்கு சந்நிதிகள்அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீ சுப்பிரமணியரும் சிவகாமகோட்டத்தில் முறையே அன்னைக்குத் தெற்கே மூத்தவரும் வடக்கில் இளையவரும் எழுந்தருளுகின்றனர்.
 ஸ்ரீ சித்ரகுப்தர் இக்கோட்டத்துள் மேற்கு நோக்கி அமர்ந்தருளுகிறார். ஸ்ரீ நடுக்கந்தீர்த்த விநாயகர் ஸ்ரீ சித்ரகுப்தர் சந்நிதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கி அருளுகிறார். அம்பிக்கைக்கு துணைபுரியும் ஸ்ரீ சண்டிகேஸ்வரி (சண்டிகேசி) அன்னை மூலவராய் வீற்றிருக்கும் சந்நிதிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.
 சிவகாமி அன்னையின் சந்நிதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது துவஜஸ்தம்பம் (கொடிமரம்). திருவிழா தொடங்கியதற்கு அடையாளமாய் இதில் கொடியேற்றம் நிகழும்.
 சிவகாம கோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகைக்கும், (ஞானசக்தி) மேற்கூறிய சபரிவார மூர்த்தங்களுக்கும் சிறப்பான வைதீக முறைகொண்டு யாகசாலை வேள்விகள் சிறப்பாக நடத்த முடிவு செய்து, விழாவின் முக்கிய அம்சமான அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம் தைத்திங்கள் 28 -ஆம் நாள் (11.02.2019) திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பொற்காசுகள் கொண்டு சுவர்ணாபிஷேகமும் நிகழ்த்தப்பெறும்.
 இப்பெருவிழா, ஆன்மீக அன்பர்களின் பேருதவியாலும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் என்கிற ஸ்ரீ சபாநாயகர் கோயிலை நிர்வகித்து வைதீக நெறிப்படி பூஜைகளைச் சிறப்புற புரிந்து வரும் தில்லைவாழ் அந்தணர்களாகிய பொது தீஷிதர் பெருமக்களாலும் நிகழ்த்தப் பெறுகிற நிலை குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இக்குடமுழுக்கு விழாவினை கண்டு களித்து ஞானசக்தி அம்பிகையின் பேரருளை பெறுவோம்.
 தொடர்புக்கு: 98433 84066.
 - புலவர். செ.சி.குப்புசாமி தீஷிதர்
 சிதம்பரம்.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/கருணை-பொழியும்-சிவகாம-சுந்தரி-3091859.html
3087381 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்!26 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, February 1, 2019 10:02 AM +0530 பிரபஞ்சத்தின் ஆற்றல் சக்தியை, ஓர் உத்தம ஆடவனாக உருவகப்படுத்தினர் நம்முடைய முன்னோர். பிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச உயிர்களின் தோற்றம், பராமரிப்பு ஆகியவற்றின் பொறுப்பாளியான விராஜ் (அல்லது விராட்), சிவப்பரம்பொருளை வழிபட விழைந்து, பாவநாசம் வந்து வழிபட்டான். விராஜ் வழிபட்டதால், இந்தப் பெருமான் "வைராஜர்' ஆகிறார் (இந்தத் திருநாமமே, மக்கள் புழக்கத்தில் வயிராசர் என்றும் வழங்கப்படுகிறது). 
இதே போன்று, வேதங்கள் நான்கும் இங்கு வந்து இறைவனை வழிபடுவதற்கு ஆசைப்பட்டன. அதர்வண வேதம் வான் வடிவம் கொள்ள, ரிக்—யஜுர்—சாம வேதங்கள் மூன்றும், மூன்று களா மரங்களாக உருக்கொண்டன. மூன்று களா மரங்கள் வழிபட்டதால், சுவாமி "முக்களாலிங்கர்' ஆனார். வேதங்கள் வழிபட்டதால், பழமறை நாதர். தலமரமான களாவின் அடியில், அகத்தியர்—புலஸ்தியர் திருமேனிகள் உள்ளன. இறைவனை அகத்தில் கண்டு வழிபட்டவர் அகத்தியர்; புறத்தே புலப்படுகிற பொருட்கள் யாவற்றிலும் இறைவனைக் கண்டு வழிபட்டவர், புலஸ்தியர். 
பாவநாசத் திருத்தலத்தின் அம்பிகை, அருள்மிகு உலகம்மை என்னும் லோகநாயகி. இந்த அம்பிகைதான், விக்கிரமசிங்கபுரத்தின் நமச்சிவாயக் கவிராயரோடு உடன் நடந்து, அவருடைய பாடல்களை ரசித்து, அவரின் தாம்பூலத் துளிகளைத் தன்னுடைய ஆடையில் ஏந்திக் கொண்டவள். 
பாவநாசத் திருத்தலம், நவகைலாயங்களில் முதன்மையானதும் ஆகும். அகத்தியரின் பிரதம சீடரான ரோமசர், முக்திக்கான வழியை யாசித்தார். சிவபெருமானை வழிபட்டால் முக்தி கிட்டும் என்று உபதேசித்த அகத்தியர், ஒன்பது தாமரை மலர்களைத் தாமிரவருணியில் போட்டு, அந்த மலர்கள் எங்கெல்லாம் கரை சேர்கின்றனவோ அங்கு அவை சிவலிங்கங்களாக வடிவெடுக்கும் என்றும், அவ்வவ்விடங்களில் சிவபூஜை செய்து, நிறைவாகத் தாமிரா கடலரசனோடு சங்கமிக்கும் இடத்திலும் வழிபட்டால் முக்தி கிட்டும் என்றருளினார். இதன்படி, தாமரை மலர்கள் தாமிராவின் கரையில் சிவலிங்கங்களாக வடிவெடுக்க, இத்தலங்களே "நவ கைலாயத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஒன்பது தலங்களின் சுவாமிகளுக்கும், அருள்மிகு கைலாயநாதர் என்னும் திருநாமம் உண்டு. பாபவிநாச நாதரும், அருள்மிகு கைலாயநாதர் ஆவார். 
அப்பர் பெருமானின் தேவாரப் பாசுரத்தில், "பறியலூர் வீரட்டம் பாவநாசம்' என்று குறிக்கப்பெறுவதால், இத்தலம் தேவார வைப்புத் தலமும் ஆகும். "பாவநாசா, உன் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்' என்று மாணிக்கவாசகரும் பாடுகிறார். 
கோயிலுக்கு எதிரிலுள்ள ஆற்றில் காணப்படும் மீன்கள் சாந்தமானவை, மனிதர்களோடு பழகியவை. நோய்களின் தீர்வுக்காக இங்கு நேர்ந்துகொள்ளும் பக்தர்கள், தங்கள் நோய்கள் தீர்ந்தவுடன், இந்த மீன்களுக்கு உணவளிப்பது வழக்கம். இந்த மீன்களுக்குத் தீங்கிழைத்தால், கண் பார்வை போய்விடும் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. 
அருள்மிகு உலகம்மை உடனாய பாவநாசரை வணங்கிவிட்டுத் தாமிரா நகர்கிறாள். நம்மையும் அழைத்துக் கொண்டுதான்..!
சிங்காரத் தமிழ் தந்த சிங்கை 
பாபநாசத்தோடு இணைந்த ஊர், விக்கிரமசிங்கபுரம். சொல்லப்போனால், விக்கிரமசிங்கபுரத்தின் ஒரு பகுதியே பாபநாசம் எனலாம். இப்போதைய அஞ்சல் முகவரிகளில் வி.எஸ்.புரம் என்று குறிக்கப்படுகிற இவ்வூருக்குத்தான் சிங்கை என்றும் பெயர். பாபநாசத் தலபுராணம் பாடிய முக்களாலிங்கப் புலவர், அவருடைய மகன்களான ஆனந்தக்கூத்தர் மற்றும் நமச்சிவாயக் கவிராயர், ஆனந்தக்கூத்தரின் மகனான சிவஞான முனிவர் ஆகிய புலவர் பெருமக்களை ஈன்று பெருமை கொண்டது சிங்கை. பாபநாசம் உலகம்மையின் பக்தரான நமச்சிவாயப் புலவர், உலகம்மையின்மீது உலகம்மைப் பிள்ளைத் தமிழ், உலகம்மை அந்தாதி, உலகம்மை கொச்சகக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்த விருத்தம் என்னும் நூல்களைப் பாடினார். பின்னர், பாபநாசத்தில் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய, அருள்மிகு திருமணக்கோல நாயகி உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரர்மீது சிலேடை வெண்பா பாடினார். இந்த நூலுக்குச் சிங்கைச் சிலேடை வெண்பா என்று பெயர்; நமச்சிவாயப் புலவரின் ஆறு நூல்களுக்கும், மொத்தமாகச் சேர்த்து "சிங்கைப் பிரபந்தத் திரட்டு' என்றே பெயர். 
பேர்த் தண்டமிழ் வரையும் பேரறமும் சேர்ந்து கலி
தீர்த்தங் கொடுக்கும் இயல் சிங்கையே ஊர்த்தம்
முயலு நடத்தினார் மூதண்டத் தெல்லாச்
செயலு நடத்தினார் சேர்வு 
என்று சிங்கையின் பெருமையையும் சிவனாரின் பெருமையையும் ஒருசேரக் காட்டுகிறது சிங்கைச் சிலேடை வெண்பா.
- தொடரும்


 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/பொருநை-போற்றுதும்26---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3087381.html
3087378 வார இதழ்கள் வெள்ளிமணி மஹோதய புண்ணிய காலம் (4.2.2019) DIN DIN Friday, February 1, 2019 09:31 AM +0530 நம் தேசத்தில் ஓடும் எல்லா நதிகளும் சுற்றியுள்ள சமுத்திரங்களும் புண்ணிய நீர் நிலைகள்தான். ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு நதிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக புண்ணிய காலங்கள் கொண்டாடப்படுகின்றன. அப்படிபட்ட குறிப்பிட்ட தினங்களில் அந்த புண்ணிய நதிகளில் நீராடி, பித்ரு பூஜைகள் செய்வது பல மடங்கு பலனைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய காலங்களில் ஒன்றுதான் "மஹோதய புண்ணிய காலம்' என்பது. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் "மஹோதய புண்ணியகாலம்' பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை மாதம், அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, கூடிய நாளில் அஸ்வினி, திருவாதிரை, திருவோணம், அவிட்டம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அது "வ்யதி பாதம்' அல்லது "வ்யதி பாத யோகம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாள் நூறு சூரிய, சந்திர கிரகணங்களுக்கு இணையான புண்ணிய நாளாகும். அதைப் போலவே தை மாதம் அமாவாசை, திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணியகாலமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய தினங்களில், புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும், நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிறைவான வாழ்வு கிட்டும்.
பல்லாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இத்தகைய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம், 4.2.2019 - திங்கட்கிழமை அன்று வருகிறது.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பின்பு, புண்ணிய நதிகள், தீர்த்தங்கள் மற்றும் சமுத்திரங்களில் ஸ்நானம் சங்கல்பத்துடன் செய்துவிட்டு மஹோதய புண்ணியகால தர்ப்பணம் செய்யவேண்டும். கடலில் நீராடிய பின்பு, மீண்டும் நன்னீரில் குளிக்கக் கூடாது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், கடலில் நீராடிக் கடற்கரை மணலிலே தர்ப்பணம் செய்து, ஹோமங்கள், தான தர்மங்கள் செய்வது மிகுந்த பலனைத் தரும். இந்நாளில் வாழும் நாம் மிகுந்த பேறு பெற்றவர்கள்.
மஹாதய புண்ணிய கால தர்ப்பணங்களை செய்ய பல இடங்கள் தமிழகத்தில் உள்ளன. கோடியக்கரை வேதாரண்யம் - வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்ட தலம். ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம். ராமர் இங்கு துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார். ராவணனைக் கொன்ற "பிரம்மஹத்தி தோஷம்' நீங்க, மீண்டும் இங்கு வந்து, சமுத்ர ஸ்நானம் செய்து இறைவனை வணங்கி போக்கிக் கொண்டார். அத்தகைய பேறு பெற்ற தலத்தில் மஹோதய புண்ணிய காலம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இந்தப் புனித நாளன்று மக்கள் முதலில் கோடியக்கரை ஆதிசேது என்றழைக்கப்படும் சித்தர் கட்ட கடற்கரை பகுதியிலும், வேதாரண்யம் சந்நிதி கடல் என அழைக்கப்படும் வேதநதியிலும், பின்பு கோயிலில் உள்ளே தென்புறமாக அமைந்துள்ள மணி கர்ணிகை தீர்த்த குளத்திலும் புனித நீராடுவர். அதன்பின் மஹோதய புண்ணிய காலத்திற்கான தர்ப்பணத்தையும், அமாவாசை தர்ப்பணத்தையும் செய்து, பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வர்.
இதேபோல் பூம்புகார் கடற்கரையிலும் திருவையாறு புஷ்ப மண்பட படித்துறையிலும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர்.
திருப்புல்லாணி ஸ்ரீ ராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இங்கு நீராடி, தர்ப்ப சயன ராமனாய் அரிதுயில் கொண்ட திவ்ய தேசம். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி, மகாவிஷ்ணு ஸ்தல சயனமாய்க் கிடந்து இம்முனிவருக்குக் காட்சி தந்த இடம் மாமல்லபுரம். எம்பெருமானே இந்தக் கடற்கரை நீரைத் தன் திருக்கைகளால் வாரி இறைத்தமையால் இந்தக் கடற்கரை அர்த்த சேது என்றே போற்றப்படுகிறது. மாமல்லபுரத்தில் இந்த புனித நாளில், ஸ்தல சயனப் பெருமாளும், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் தன் கருட வாகனத்தில் அடியார்களுடன் எழுந்தருளி அதிகாலை சூரிய உதயத்தில் தீர்த்தவாரி மஹோற்சவம் காண்பர்.
- என். பாலசுப்ரமணியன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/மஹோதய-புண்ணிய-காலம்-422019-3087378.html
3087377 வார இதழ்கள் வெள்ளிமணி தொழில் சிறக்கச் செய்வார் தேவன் DIN DIN Friday, February 1, 2019 09:28 AM +0530 நாம் எல்லாரும் ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நமது வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வை வளப்படுத்துதல் நமக்கு ஒரு பொது நீதி. எல்லாருமே தொழில் செய்யலாம். ஆனால் செய்யும் தொழிலை சிறப்பாகச் செய்தல் வேண்டும். தொழிலின் நுணுக்கம், நுட்பம் அறிந்து செய்பவர் வாழ்வில் வளம் பெறுவர். தொழிலை அக்கறையுடன் நேர்த்தியாக குறித்த நேரத்தில் செய்பவர் வாழ்வில் மேன்மை அடைவர்.
வேதாகமத்தில் மீன் பிடிக்கும் தொழில் பரம்பரையாகச் செய்து பிழைத்து வந்த பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோப்பு தம் படகின் மூலம் வலை வீசி, வலையில் பிடிப்பட்ட மீனை பிடித்து பிழைப்பு நடத்தி சாதாரண மீனவராக இருந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் சகோதரர்கள்; யோவானும் யாக்கோபும் சகோதரர்கள். மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கக் கடலில் சென்று மீன் பிடித்து காலையில் கரை திரும்புவர்.
ஒரு நாள், இரவு மீன் பிடிக்கச் சென்ற அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. வலையை வீசி வீசி மீன் பிடிக்க முயன்றும் தங்கள் தொழிலில் வெற்றி அடையவில்லை. கரை திரும்பிய அவர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைத்தது.
அப்போது இயேசு, கடற்கரையில் நின்ற இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த படகுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையது. அதை கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக் கொண்டு அந்த படகில் உட்கார்ந்து போதகம் பண்ணினார்.
அவர் போதகம் பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். அதற்கு சீமோன் "ஐயரே இரவு முழுவதும் நாங்கள் பிரயாசைப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடுகிறேன்'' என்றான். அவ்விதமே அவர்கள் செய்து தங்கள் வலை கிழிந்து போகதக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்போது மற்ற படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிச் சைகைக் காட்டினார்கள். அவர் வந்து இரண்டு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். (லூக்கா 5: 1-7)
பரம்பரையாக மீன் பிடித்தொழில் செய்து வந்த மீனவர்கள் தங்கள் தொழிலில் பிடித்திராத அளவு இரண்டு படகு நிரம்பத்தக்க மீன்களைப் பிடித்து, பிரமித்தார்கள். நேரமோ மதியம், மீன்களோ ஆழ்கடலுக்குள் சென்று விடும். மீன் கிடைப்பது அரிது. அதுவும் ஒரு மீனவர் தம் அனுபவத்தில் எப்போது பிடிக்க வலை வீச வேண்டும் எங்கே மீன் கிடைக்கும் என்ற அறிவு உண்டு. ஆனாலும் மதிய வெயில் வேளையில் தங்கள் தொழிலில் ஒரு புதிய அற்புதத்தைக் கண்டார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அர்ப்பணிப்பு நேரம் தவறாமை, அக்கறை, நுட்பம், தொழில் அனுபவம், ஆகியவையே ஒரு தொழிலாளிக்கு தொழிலில் உயர்வு தரும். கர்த்தர் நம் அனைவருக்கும் ஒரு பணியை (தொழிலை) கொடுத்துள்ளார்.
இப்பணி மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி மகிழ்வுடன் நாமும் நம் குடும்பமும் வளமாய் வாழ வழி தந்துள்ளார். கடவுளின் கனிவுதான் தனக்கு கொடுக்கப்பட்ட தொழில். மேன்மையாக அக்கறையுடன் கடினமாக உழைப்பை செய்வேன் என்பவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறார். தொழில் வளம் வீட்டை, நாட்டை வளப்படுத்தும்.
-தே. பால் பிரேம்குமார்

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/தொழில்-சிறக்கச்-செய்வார்-தேவன்-3087377.html
3087376 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, February 1, 2019 09:25 AM +0530 பிருஹதீஸஹஸ்ர மகாயாகம்
 உலக நன்மையை முன்னிட்டும், நோய் நொடியின்றி நிறை ஆயுள் வாழவும் மிகவும் அரிதான பிருஹதீஸஹஸ்ர மகாயாகம் திருவள்ளூர் -ஊத்துக் கோட்டை சாலையில் சூர்யோதயா நகர் ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் பிப்ரவரி -9, 10 தேதிகளில் நடைபெறுகின்றது. இதன் சிறப்பு, ஆயிரம் நாமங்களால் ஸ்ரீ விஷ்ணுவை ஆராதிப்பதே ஆகும். இது ரிக்வேதத்தில் உள்ளது. இந்த மகாயாகத்தில், யாகசாலையில் கருடனைப்போன்று பெரிதான சிற்பம் வைத்து அதன்மீது ஸ்ரீ நாராயணரை எழுந்தருளச் செய்து கருடனைச் சுற்றிலும் 1000 கலசங்கள் பிரதிஷ்டை செய்து, யாக குண்டம் அமைத்து, 1000 விதமான ஹோம திரவியங்களுடன் செய்யப்படுகின்றது. இந்த யாக கலசத்தை வீட்டில் வைத்தால் சகல சௌபாக்கியங்கள் கிட்டும் என்றும் முன்னதாக பெயரைப்பதிவு செய்துகொண்டால் உதவியாக இருக்கும் என்றும் க்ரந்தாலயா சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 தொடர்புக்கு: 94459 52585 / 98845 52585.
 ஸ்ரீ மதுரகாளியம்மன் மஹோபிஷேகம்
 ஸ்ரீ மதுரகாளியம்மன் மஹோபிஷேக அறக்கட்டளை சார்பில் 45-ஆவது ஆண்டு மஹாபிஷேகம், சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலயத்தில் பிப்ரவரி 8 -ஆம் தேதி சண்டி ஹோமம், 108 பால்குட அபிஷேகம் போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. முன்னதாக, பிப்ரவரி 7 -ஆம் தேதி மகாகணபதி ஹோமம், மகன்யாச ஏகாதசிவார ருத்ரஜபம், ருத்ர ஹோமம் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94442 52699 / 98413 49430.
 மஹாகும்பாபிஷேகம்
 காஞ்சி மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் கடம்பூர் கிராமத்தில் விஜிலென்ஸ் நகரில் உள்ள 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலய மஹாகும்பாபிஷேகம் பிப்ரவரி 10 -ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது. அகத்திய மாமுனிவரால் வழிபடப்பட்ட சிறப்புடையது. காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் சிவநேயச் செல்வர்கள் ஒன்று கூடி புனரமைப்பு வேலைகளைத் தொடங்கினர். தற்போது ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. மறைமலை நகர் ரயில் நிலையத்திலிருந்து இவ்வாலயம் செல்லலாம்.
 தொடர்புக்கு: 94444 82939 / 98410 13020.
 ஸத்குரு ஸ்ரீ புரந்தரதாஸர் ஆராதனை
 சங்கீத பிதாமகர் ஸத்குரு ஸ்ரீபுரந்தரதாஸரின் 455 -ஆவது வருட ஆராதனை மகோத்சவம் சென்னை சாலிக்கிராமம் தேவராஜ்க்ஷி நகரில் ஸ்ரீராமர் தெருவில் உள்ள ஸ்ரீராகவேந்திர மடத்தில் நடைபெறுகின்றது. இதனையொட்டி அபிஷேகம், பூஜை, அலங்கார பந்தி, தோஸர் கீர்த்தனைகள் கானத்துடனும் பிப்ரவரி 4 -ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98840 08493 / 96000 49248.
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/நிகழ்வுகள்-3087376.html
3087375 வார இதழ்கள் வெள்ளிமணி உறவைப் பேணும் உயர்வு DIN DIN Friday, February 1, 2019 09:24 AM +0530 அல்லாஹ்வின் சிறப்பு பெயர்களில் ஒன்று ரஹ்மான். இந்த ரஹ்மான் என்னும் சொல்லில் அடங்கியுள்ள "ரஹம்' என்ற வேர் சொல்லுக்கு உறவு என்று பொருள். அல்லாஹ்வோடு நெருக்கமாக நினைப்பவர்கள் உறவினர்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு நெருக்கம் என்பது உறவினர்களோடு பகை கொண்டு அவர்களோடு பேசாது அவர்களைப் பார்க்காது புறந்தள்ளி விடாது உறவினர்களோடு உறவாடி உதவி புரிந்து கலந்து வாழ்வதே.
 பெற்றோரின் பெற்றோர்களான தாத்தா பாட்டிகள், சகோதர சகோதரிகள், பெற்றோரின் சகோதர சகோதரிகள், அவரவர் சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் நெருக்கமான ரத்த பந்த உறவினர்களில் முதலிடத்தைப் பெறுபவர்கள். அக்கால கூட்டு குடும்பத்தில் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள்.அடுத்து "லிஹ்ரு' என்னும் திருமண வழியில் வரும் உறவினர்கள், "கராபத்' என்னும் பொது உறவினர்கள் என்று வரிசை நீளும்.
 உறவினர்களோடு நல்லுறவு பூண்டு வாழ்வது குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உருவாக்கும். பல குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி ஊரிலும் நாட்டிலும் ஒருமைப்பாட்டை நிலைக்க வைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். பிரச்னைகளால் ஏற்படும் பிணக்குகளும் இணக்கமில்லா சண்டைகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஆகிவிடும்.
 உறவினர்களுக்குப் பொருள் கொடுத்து உதவியவரும் நன்மை புரிந்தவர் என்று புகல்கிறது புர்கானின் 2-177 ஆவது வசனம். இவ்வசனம் குறிப்பிடும் உறவினருக்கு உதவி என்பது உறவினரில் தேவையை தீர்க்கும்பொருளின்றி வாடுவோரைத் தேடி சென்று அவர்களின் தேவையை நிறைவேற்றும் பொருளைக் கொடுப்பது. இத்தகு உதவி இறைவனின் நிறைவான அருளைப் பெறும் பெரிய நன்மை என்று எடுத்துரைக்கும் ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழி. "அறியாத அந்நிய ஏழைகளுக்குக் கொடுத்து உதவுவது ஒரு தர்மம். உறவினர்களுக்குக் கொடுத்து உதவுவது இரு தர்மம்'' அறிவிப்பவர்-ஸல்மான் பின் ஆமிர் (ரலி) நூல்-நஸஈ. உறவினருடைய ஏழை குழந்தைகள் கல்வி கற்க உதவினால் அவ்வுறவினரின் குடும்பம் உயர்வு பெறும். உறவு பலப்படும். உழைத்து உண்ணும் வலிமை இருந்தும் பிழைப்பின்றி இருக்கும் உறவினர்களுக்குப் பிழைக்க வழிகாட்டுவது பேருதவி.
 ரத்த பந்த உறவுகளை ஆதரிக்க அறிவுறுத்துகிறகு 4-1 ஆவது வசனம். அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் நெருங்கிய உறவினர்களோடு நெருக்கமான உறவைப் பேண வேண்டும். ரத்த பந்த உறவினர்களின் உரிமையை பேணாதவர் சொர்க்கம் புகமாட்டார் என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிக்கிறார் ஜுபைர் பின் முத் இம் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 உறவுக்குக் கைகொடுத்தால் உரிமைக்குரல் கொடுக்காமலே நமக்கு உரியவை நமக்குக் கிடைக்கும். உறவினர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுக்க உத்தரவு இடுகிறது உத்தம குர்ஆனின் 17-26 ஆவது வசனம். உறவினர்களுக்கு இடையே சொத்து பங்கிடும்பொழுது இறைமறை குர்ஆன் இயம்பும் வண்ணம் உறவினர்களுக்கு உரிய பாகம் கொடுக்க வேண்டும் என்று உரைக்கிறது 8-75 ஆவது வசனம். பங்கீடு செய்பவர் பாகம் பிரிக்கும்பொழுது பாரபட்சம் இன்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் இறுக்கம் இன்றி உறவினர்கள் மத்தியில் மனக்குறை ஏற்படாது குர்ஆன் கூறும் முறையில் பிரித்திட வேண்டும்.
 தன்னலத்திற்காக பதவி பெற்று உறவினர்களின் உறவைத் துண்டிப்போர் நயவஞ்சகர்கள் என்று நவில்கிறது நற்குர்ஆனின் 47-22 ஆவது வசனம். உறவினர்கள் அவர்களுக்கு மூன்று நாள்களுக்கு மேல் உறவை முறித்துக் கொள்ள கூடாது என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல் -அபூதாவூத். பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் முறித்த உறவினரோடும் இணைகிறவரே உறவைப் பேணுபவர் என்ற உத்தம நபி (ஸல்) அவர்களின்சத்திய மொழியைச் சாற்றுபவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்- புகாரி.
 உறவினரோடு உறவாடி வாழ்வது நம்மை நரகிலிருந்து தூரம் ஆக்கி சொர்க்கத்தில் சேர்க்கும் என்று மார்க்கம் போதித்த மாநபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பகர்கிறார் அபூ அய்யூப் (ரலி). அபூ அய்யூப் (ரலி) நரகிற்குச் செல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்லும் செயலைச் செப்புமாறு கேட்டபொழுது கேண்மை நபி (ஸல்) அவர்கள் இறைவனுக்கு இணை வைக்காது அல்லாஹ்வை மட்டும் தொழுது வணங்கி உறவினரை ஆதரிக்க அறிவுறுத்தினார்கள். நூல்- புகாரி, முஸ்லிம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே உறவினரை ஆதரித்து உதவி செய்தார்கள். அவர்கள் இறைத்தூது பெற்றதை முதலில் உறவினரைக் கூட்டி அறிவித்தார்கள். குடும்பத்தில் பெற்றோர் மனைவி மக்களைப் பேணி ஆவன செய்வதற்கு அடுத்து உறவினர்களோடு உறவாடி உற்றுழி உதவுவது உயர் பண்பு.
 சகோதர, சகோதரி போன்ற உறவினர்களுக்கு உதவி செய்வது கடமை என்று கூறுகிறார் இமாம் அபூஹனீபா (ரஹ்) தோவர் ஸýரக்கா பின் ஜஃஷம் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலாக்-மண விலக்கு பெற்ற அவரின் மகளுக்கு அவரின் சம்பாத்தியத்திலிருந்து உதவி செய்ய வேண்டும் என்று செப்பினார்கள். நூல்-அதபுல் முப்ரது. உறவினர்களுக்கு உதவுவோரை அல்லாஹ் மானக்கேடான செயல்கள் தீமைகள் அக்கிரமங்களில் இருந்து விளக்குகிறான் என்று விளம்புகிறது 16-90 ஆவது வசனம்.
 அன்பளிப்புகள் பரிமாறும் பொழுது உறவுகள் உறுதியாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பைப் பெற்று பகரமான அன்பளிப்பு அனுப்பியதையும் அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்-அபூதாவூத், திர்மிதீ. பொருள் பெருகி நிலைக்க நினைப்பவர் ரத்த பந்துக்களை ஆதரிக்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்ததை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
 உறவை அறுப்பவர்களும் மறுப்பவர்களும் அல்லாஹ்வை விட்டு விலகியவர்கள். உறவுகளை வெறுத்து ஒதுக்கக் கூடாது. உறவைத் துண்டித்தவர் உள்ள கூட்டத்தில் அல்லாஹ்வின் அருள் இறங்காது என்று இயம்பிய இனிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை எடுத்துரைக்கிறார் அப்துல்லாஹ் பின் அவ்பா (ரலி) நூல்- பைஹகீ, அதபுல் முப்ரது. உறவைத் துண்டிப்பது மறுமையில் வேதனைக்கு உள்ளாக்குவதோடு உலகிலும் வேதனையுற வைக்கும் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழியை அறிவிக்கிறார் அபூபக்கர் சித்தீக் (ரலி) நூல்-அஹ்மது, திப்ரானி.
 உறவினர்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுது சந்திப்பது, சந்தர்ப்பம் அறிந்து சமயத்தில் தக்கபடி உதவுவது, ஏழைகளுக்கு ஏற்றதை அவர்கள் போற்றும் வண்ணம் எண்ணம் அறிந்து ஆவன செய்வது, அன்பளிப்புகள் அளிப்பது, நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்து நாடிய உதவியை உடனே செய்வது, வெளியூர்களில் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களோடு இக்கால தொலைத்தொடர்பு சாதனங்களால் தொடர்பு கொண்டு உடனிருந்து உதவுவதுபோல் உரிய ஆலோசனைகளை வழங்குவது, செயல்படுத்த நாடுவோருக்கு நாடிய செயலைச் செய்து உதவுவது முதலிய உதவிகளை உறவினர்களுக்கு வழங்கி உறவைப் பேணி உயர்வோம்.
 -மு. அ. அபுல் அமீன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/உறவைப்-பேணும்-உயர்வு-3087375.html
3087374 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, February 1, 2019 09:23 AM +0530 • வாழ்க்கையில் சற்றும் பயன்படாத விஷயங்களை உருப்போட்டு ஒப்புவிப்பது கல்வி அன்று.
- சுவாமி ராமதீர்த்தர்
• பித்தளைப் பாத்திரம் சுத்தமாகப் புளி, சாணம், மண் முதலியவற்றால் தேய்க்க வேண்டும். வெள்ளிப் பாத்திரங்கள் சுத்தமாக வேண்டுமானால் சுண்ணாம்பைத் தடவி ஜலத்தில் சுத்தம் செய்ய வேண்டும். தங்கமானால் சர்க்கரையால் தேய்த்து அலம்ப வேண்டும். 
நம் உடல் தூய்மைக்கு நல்ல நீரில் நீராட வேண்டும். அதில் இருக்கும் பிராணனைச் சுத்தம் செய்ய, பிராணாயாமம் செய்ய வேண்டும் மனம் சுத்தமடையக் காமக் குரோதங்களை அகற்ற வேண்டும். ஜீவன் சுத்தமடைய, பகவத்ஞானம் பெற வேண்டும். கடைசியாக, பரமாத்மாவான ஆனந்தமயமான சக்தி பெற நாம் ஆச்சாரியனிடம் சரணாகதி அடைய வேண்டும்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன்
• ஏராளமான தானியத்தைத் தர்மத்தில் செலவு செய்வதைவிட, தகப்பன் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுப்பதே நல்லது.
- நீதி கெளமுகி
• விருப்பு வெறுப்பின்றித் தம்மைக் கட்டுப்படுத்தியவர்களே மகான்கள்.
- வால்மீகி ராமாயணம்
• சுகபோகங்களில் மேன்மேலும் விருப்பமுள்ளவன் மூடன். அவன் மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்துக்கொள்கிறான். 
- புத்தர்
•  அறிவுதான் அரசன்; மனமும் புலன்களும் உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்குக் கெடுதி உண்டாகும்.
-மகாகவி பாரதியார் 
• பகை எதையும் அழிக்கிறது; அன்பு எதையும் வளர்க்கிறது. இரண்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் உண்டு. 
- நீதி சாஸ்திரம்
• வேடன் மானைக் காட்டி மானைப் பிடிப்பதைப் போல, இறைவன் நம்மைப் போலத் தேகம் எடுத்து, நம்மை வசப்படுத்துவான். அதை உணர்வதே வழிபாடாகும்.
- ஞானரத்னாவளி
• கொடுப்பதைச் சிரத்தையுடனும் தாராளமாகவும் அடக்கத்துடனும் அன்புடனும் கொடுப்பாயாக. 
- தைத்திரீய உபநிஷதம்
• பத்து ஆசிரியர்கள் ஒரு குருவுக்குச் சமம். நூறு குருக்கள் ஒரு தந்தைக்குச் சமம். ஆயிரம் தந்தையர் ஒரு தாய்க்குச் சமம்.
-மனு
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3087374.html
3087372 வார இதழ்கள் வெள்ளிமணி ராகு - கேது தோஷம் போக்கும் தங்கமேடு! Friday, February 1, 2019 09:21 AM +0530 விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானம் நிறைந்த அற்புதத் தலங்களில் தங்கமேடு தம்பிக்கலை ஐயன் கோயிலும் ஒன்று. இன்றும் விஷப் பூச்சிகள், ஜந்துக்கள் தீண்டியவர்களை சந்நிதிமுன் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டு தலைமாட்டில் வேப்பந்தழையை வைத்துவிட்டு இருபது நிமிஷம் கோயிலை சார்த்திக் கொண்டு அனைவரும் வெளியேறி விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்தில் தாமாகவே எழுந்து எதுவும் நடவாதது போல் வெளியே வருகிறார்கள். மருத்துவ வசதிகளே இல்லாத காலத்தில் ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் தம்பிக்கலை ஐயன் என்றழைக்கப்படும் மகாசித்து கைவரப்பட்ட புனிதரால் பிரசித்தமான திருத்தலம் ஆகும்.
 ஈரோடு, காஞ்சி கோயில் பகுதியில் வசித்தவர் தம்பி கவுண்டர் என்ற விவசாயி. தினமும் அவருடைய சகோதரர் நல்லய்யன் என்பவருடன் மாடுகளை மேய்ப்பதற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் போவது வழக்கம் மேயப்போன ஒரு பசுவின் மடியில் ஒருநாள் பால் இல்லை என்றதால் தம்பியைக் கண்காணிக்கச் சொன்னார். மறுநாள், தம்பி நல்லையன் அவ்வனத்தில் ஒரு புற்றிலிருந்த நாகம் ஒன்று வெளிவந்து பசுவின் காம்பில் வாய் வைத்து பாலை உறிஞ்சிக் குடித்ததைச் சொன்னார். அதனை நம்பாத அவரது அண்ணன், அவரை அடித்தார். ஊரார் மறுநாள் உண்மையறியச் சென்றவர்கள் நல்லையன் சொன்னதை உறுதி செய்தனர்.
 இரவு வருந்தியபடியே தூங்கிவிட்ட தம்பி கவுண்டரின் கனவில் சர்ப்பம் ஒன்று தோன்றி பசு பால் தந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுவோர்களின் ராகு-கேது, சர்ப்ப தோஷங்கள் முற்றிலும் நீக்குவதோடு எதிர்கால சந்ததியை பாதுகாப்பேன் எனக்கூறியது. தம்பி கவுண்டர் அப்போதே அந்த புற்றருகில் சென்று அமர்ந்து தியானம் செய்யத் துவங்கினார்.
 அந்த இடம் முன்பு நாகவனமாக இருந்தது. அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாக அவதரித்து இங்கு ஈசனை வழிபட்டாள். அங்கு சிவலிங்கத்தின் மீது நாகேஸ்வரி எழுந்தருளி தம்பி! நீ, கலியுகத்தில் இவ்விடத்தில் இருந்து மக்களுக்கு ரோகம் தவிர்த்து நலம் தரும் செயலைச் செய்ய வேண்டுமெனவும் அருளினாள். தெய்வக் கட்டளையை தொண்டாக நினைத்து அந்த இடத்திலிருந்து நகரவும் மறுத்து வருவோருக்கு சித்த வைத்தியம் மற்றும் அருளிச்செயல்கள் மூலம் நலன்களை தொண்டாகச் செய்தார். அவ்விடத்தில் எழுப்பப்பட்ட நாகேஸ்வரியம்மன் கோயிலில் இறையருள் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
 அவரின் அற்புதங்களைக் கேள்விப்பட்டதொரு மலையாள மந்திரவாதி கிண்டல் செய்தான். அவனுடலில் ஏற்பட்ட குறைபாட்டை ஸ்பரிசதீட்சை மூலம் குணப்படுத்தினார்.
 ஒரிஸ்ஸா வணிகர் ஒருவரின் பேச முடியாத மகளை அங்கு அழைத்து வந்து அவள் நாக்கில் மூலிகைச்சாறைத் தடவி ஜபம் செய்ய, அந்தப்பெண் பேசத் துவங்கினாள். அதனால் அந்நாட்டு விஜய கர்ணா என்ற மன்னன் தம்பிக் கவுண்டரின் சீடரானார். அவந்தியில் இருந்து வந்த கண் பார்வையற்ற ஒரு பிராமணனுக்கு கண் பார்வை தந்தார்.
 இறையருளால் வந்தவர் அனைவரும் குணமானார்கள். அவரது புகழ் பரவியது. தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளைக் கற்று தங்கமேடு எனும் இடத்தில் சிவனின் திருமணக்கோல அன்னபூரணி உடனமர் நீலகண்டேஸ்வரரை கோயிலில் நிறுவி சித்தராக வாழ்ந்தார்.
 மருத்துவம், ஆன்மிகம் போன்றவற்றில் தெளிவான அறிவு, நோய் தீர்க்கும் திறன் போன்றவற்றில் வல்லவரான இவர் சித்தக் கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்' வல்லவராக விளங்கினார். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களை ஐயன் என அழைப்பது பழக்கம்.
 பல காலம் மக்கள் பணி செய்து தெய்வமான தம்பிக் கவுண்டரை தம்பிகலை ஐயன் என அழைத்து ஆலயம் அமைத்தனர் தம்பிக்கலை அய்யன் திருக்கோயில் சித்தர் பீடமாக மாறியது.
 ஐந்துநிலை ராஜ கோபுரம் வித்தியாசமான இரட்டை விமான அமைப்புடைய வடக்கு பார்த்த ஐயனின் சந்நிதியில் கருவறையில் அருவுருவமாகத் தம்பிக்கலை ஐயன் பூசித்த நாகமும் ஐயனும் பிரதிஷ்டையாகியுள்ளனர்.
 அருள்தரும் நாகேஸ்வரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர், நல்லையன் பாலமுருகன், சங்கரநாராயணர், கருப்பணசுவாமி, துர்க்கை , திருமூலர், நவக்கிரகம், செல்வ முத்துக்குமார சுவாமி சந்நிதி தண்ணீர் மந்தரித்துத் தரும் இடம் ஆகியவை வெளிப்பிரகாரத்தில் உள்ளன. வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ராகு-கேது மூலவர்கள் மற்றும் உற்சவர்கள் கன்னிமார் சனீஸ்வரன் ஆகியோருக்கு என தனி சந்நிதிகளும் உள்ளன.
 பொது ஆண்டு, 1820 வாக்கில் பிறந்து நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ஐயன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலப் பதிவேடுகளில் இவ்விடம் "தம்பிக்கலை அய்யன் ஃபாரஸ்ட்' என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயன் தவமிருந்த இந்த தங்கமேடு பெரிய பாம்புப்புற்றுகள் நிறைந்த வனமாக இருந்தது. இன்றும் நல்ல பாம்புகள் பலனுக்கு ஏற்ப பக்தர்களுக்கு காட்சித் தருகின்றன. தம்பிக்கலை அய்யனே சூட்சமமாக தன்னிடம் வரும் பக்தர்களுக்கு எவ்விதமான ரோகங்களாக இருந்தாலும் தீர்த்து அருளாசி வழங்குகிறார்.
 பக்தர்களுக்கு நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எந்த விஷக்கடி, பூச்சிக்கடி, புறத்தோல் உபாதை போன்றவை இருந்தாலும் வேப்பிலை அடித்து திருநீரு போட்டு புதிய மண்சட்டியில் தீர்த்தம் மந்திரித்துத் தரப்படுகிறது. இன்றுவரை தீராத நோய்கள், தோல் நோய்கள் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமாகிப் போகிறார்கள்.
 இங்கு வேண்டிக்கொண்டு திருமணம் ஆனோர் மருத்துவப்படிப்பு படித்தோர் தோஷம் நீங்கியோர் மற்றும் குழந்தை உருவானோர் ஆகியோருக்கு என அவரவர்களின் உருவங்களை சிமெண்ட் பிரதிமைகளாக 1000 கணக்கில் செய்து வைத்து உள்ள திருக்கோயிலாகும்.
 மருத்துவ குணம் கொண்ட ஊசல் மரமே தலவிருட்சம்!
 இங்கு செவ்வாய், வெள்ளிக் கிழமை, அமாவாசை, பெüர்ணமி நாட்களில் மக்கள் வரவு அதிகம். சித்திரை மாதத்திருவிழா, கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபம் ஆகியவை முக்கியமானவையாகும்.
 சிவகங்கை தீர்த்தத்தை தீர்த்தமாக உடைய இத்திருக்கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2.30 முதல் இரவு 7.00 மணிவரையும் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
 இங்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி விழா மிகச்சிறப்பானதாகும். எதிர்வரும் 2019, பிப்ரவரி 13 -ஆம் தேதி பக்தர்கள் நலனுக்காக ராகு கேது பெயர்ச்சியாவதை முன்னிட்டு, ராகு கேது தோஷ பரிகாரத்துக்கென பகல் 12.00 மணிக்கு விநாயகர் பூஜை துவங்கி பரிகார சிறப்பு மகாயாகம் குறிப்பாக, ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்காக நடக்க உள்ளது.
 ஈரோடு கோபி சாலையில் செல்லும் பேருந்தில் கவுந்தப்பாடி அல்லது காஞ்சிக்கோயில் நிறுத்தத்தில் இறங்கி மினி பேருந்து மூலம் தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி கோயிலை அடையலாம்.
 தொடர்புக்கு: 04294235053 / 99652 61238.
 -இரா. இரகுநாதன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/01/ராகு---கேது-தோஷம்-போக்கும்-தங்கமேடு-3087372.html
3082940 வார இதழ்கள் வெள்ளிமணி அகிலம் காத்தருளும் ஆட்சீசுவரர்! DIN DIN Friday, January 25, 2019 09:58 AM +0530 சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் - மேல்மருவத்தூரை அடுத்துள்ளது அச்சிறுபாக்கம். இங்கு, தொண்டை நாட்டில் அமைந்துள்ள 32 தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது, அருள்மிகு இளங்கிளி நாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் பிப்ரவரி 10 -ஆம் தேதி நடைபெறுகின்றது.
 புராண வரலாறு: பாண்டிய மன்னன் ஒருவர் முல்லைக் கொடிகள் சூழ்ந்த இப்பகுதியில் செல்லும் பொழுது பொன் நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அதனைத் துரத்திச் சென்றான். அந்த உடும்பு சரக்கொன்றை மரத்தில் இருந்த பொந்தில் புகுந்து கொண்டது. அரசனது ஆணைப்படி காவலர்கள், அம்மரத்தினை வெட்ட அம்மரத்திலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. இதனை "திருநேத்திரதாரி' என்ற முனிவரிடம் கூறி இறைவனுக்கு திருக்கோயில் எழுப்பக் கூறினான். அம்முனிவர் தம்மை ஆட்கொண்ட சுயம்புவடிவான இறைவனுக்கு என ஒரு கருவறையும், மன்னன் வழிபட உமையாட்சீசுவரர் சந்நிதியையும் எழுப்பினார். ஆக, இத்திருக்கோயிலில் இறைவனுக்கு இரண்டு சந்நிதிகள் அமைந்துள்ளன.
 சுயம்புவடிவாக அருள்புரியும் இறைவனுக்கு ஆட்சீசுவரர், ஆட்சிகொண்ட நாதர், பார்க்கபுரீசுவரர் எனவும், இறைவி இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை எனவும் போற்றப்படுகின்றனர். மற்றொரு சந்நிதியில் அருள்புரியும் இறைவனுக்கு உமையாட்சீசுவரர் என்றும், அம்பிகைக்கு உமாதேவி, மெல்லியலாள் என்றும் திருநாமங்கள். உமையாட்சீவரருக்கு பின்புறம் கருவறை சுவரில் திருமணக் கோலத்தில் இறைவனும், இறைவியும் காட்சியளிப்பது சிறப்பு. அகத்தியருக்கு திருமணக் கோலத்தோடு இறைவன் காட்சி தந்த திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
 திரிபுராந்தகர்: சிவபெருமான் எடுத்த பல வடிவங்ளில் திரிபுராந்தகர் வடிவம் சிறப்பானது. தேவர்களுக்கு துன்பம் அளித்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழிக்க சிவபெருமான் தேரில் செல்லும் முன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் தேரின் அச்சு முறிந்தது. இதனை அருணகரிநாகர் பெருமான் தனது திருப்புகழில் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த "அதிதீரா" எனப் போற்றுவதைக் காணலாம். ஒரு செயலை தொடங்கும் முன்னர் விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும் என்ற விதியினை உலகத்தாருக்கு உணர்த்தவே சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளார் என்பர்.
 இலக்கியச் சிறப்பு: இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை திருஞானசம்பந்தர் பெருமான் போற்றி பதிகம் (முதல் திருமுறை) பாடி அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவில் "அச்சிறுபாக்கம் ஆட்சிகொண்டவரே" எனப் போற்றுவதைக் காணலாம். அவர் அருளிய பதிகங்களில் "ஏறுமொன்றேறி" எனத் தொடங்கும் 7 -ஆவது பாடலில் இத்தலவரலாற்றினை குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். மற்றும் அவர் அருளிய திருசேத்திரக் கோவை, திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப்பதிகத்திலும், சேக்கிழார் பெருமானின் திருஞானசம்பந்தர் புராணத்திலும் இத்தலத்தினைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் உமாபதி சிவாச்சாரியார், வள்ளலார் பெருமானும், இத்தலத்தினை போற்றுகின்றனர்.
 திருக்கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில் வாயிலில் ஐந்து நிலை ராஜகோபுர திருப்பணி செய்யப்பட்டு வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது. நுழைவு வாயிலை அடுத்து தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. தேவி, கரண்ட மகுடம் அணிந்து மேலிரு கரங்களில் தாமரை - அல்லி (நீலோத்பவம்) மலர்களைத் தாங்கியும், முன் இரு கரங்கள் அபய - வரத முத்திரைத் தாங்கி அருள்புரியும் அழகியவடிவினைக் கண்டு வணங்கி மகிழலாம்.
 கோபுர வாயில் எதிரே பலிபீடம், கொடி மரம் அடுத்து நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இக்கோயிலின் உள் திருச்சுற்றில், சித்தி புத்தி விநாயகர், நால்வர், பரவையார் - சுந்தரர் சந்நிதி, அறுபத்து மூவர், ஸ்ரீநிவாசப் பெருமாள் - தாயார், உமையாட்சீசுவரர் சந்நிதி, அவரை நோக்கி யோகநிலையில் அமைந்த நந்தி, ஆகியவை அமைந்துள்ளன.
 கருவறை சுவரில் சண்டேசுவரர், கண்ணப்பர் வரலாறு, யானை வழிபடும் காட்சி போன்ற புராண வரலாற்றைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன.
 வெளித்திருச்சுற்றில் கல்யாண மண்டபம், சனீசுவரர் - சித்தரகுப்தர் சந்நிதிகள், தலவிருட்சமான கொன்றைமரம், அதன் கீழே திரிநேத்தரரி முனிவர் வழிபடும் காட்சி, சிம்மதீர்த்தம், யாகசாலை அமைந்துள்ளன.
 கல்வெட்டுகள் வரலாறு: இக்கோயிலில் கருவறை சுவரில் காணப்படும் இருபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இக்கோயிலின் வரலாறு, எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. இக்கோயிலுக்கு சோழமன்னர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் தானமளித்து சிறப்பான வழிபாட்டிற்கு தொண்டு செய்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து களத்தூர்க் கோட்டத்து ஸ்ரீமதுராந்தக சதுர்வேதி மங்கலத்து தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்" என்று ஊர்பெயர் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் தொன்மையானது முதலாம் ராஜேந்திர சோழனது (கி.பி. 1015) ஆகும்.
 உற்சவங்கள், வழிபாடுகள்: இத்திருக்கோயிலில் பௌர்ணமி, பிரதோஷ நாள்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும், கார்த்திகை நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாதந்தோறும் இறைவன் திருவீதி எழுந்தருளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரைப் பெருவிழாவின் 7 -ஆம் நாள் இறைவன் தேரினின்றும் இறங்கி திரிநேத்ரதாரி முனிவருக்கு காட்சியளிக்கும் "கொன்றையடி சேவை' என்ற வைபவமும் சிறப்பானதாகும். 11 -ஆம் நாள் ஆட்சீசுவரர் இளங்கிளி அம்மையோடு அருகில் உள்ள பெரும்பேறு தலத்திற்கு எழுந்தருளி முருகப்பெருமானுடன் அகத்தியருக்கு காட்சியளிக்கும் பைவமும் சிறப்பான ஒன்றாகும்.
 கும்பாபிஷேகம்: இவ்வாலயத்தில் தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்தினருடன் இவ்வூரில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இணைந்து திருப்பணி வேலைகளை மேற்கொண்டு பணிகள் முடிவுற்றுள்ளன. கும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 10 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது.
 தொடர்புக்கு: 99440 70920 / 94432 09267 / 98423 09534.
 - கி.ஸ்ரீதரன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/அகிலம்-காத்தருளும்-ஆட்சீசுவரர்-3082940.html
3082938 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 25 - டாக்டர் சுதா சேஷய்யன் DIN DIN Friday, January 25, 2019 09:55 AM +0530 வானதீர்த்தம், காரியாறு மேலணையிலிருந்து பாய்ந்து வருகிற பொருநை நல்லாளோடு, சேர்வலாறு வந்து சேர்ந்துகொள்கிறது. இந்த இடத்தைத் தாண்டியதும், இயற்கையாக அமைந்த பள்ளத்தாக்கு.
 இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான், வளைந்து நெளிந்து பிரிந்து சேர்ந்து பொருநையாள் விளையாடினாள். பிரிந்து பிரிந்து சேர்ந்ததால், ஆங்காங்கே அகலமும் ஆழுமும் குறைந்து, இடையிடையே பாறைகளைத் தொட்டு விளையாடியபடி இவள் மிளிர்ந்த இந்த இடமே, கல்யாண தீர்த்தம் என்று வழங்கப்பட்டது. இவ்வாறு விளையாடியபின்னர், மலைப் பாறைகளின்மீது படர்ந்து, இடுக்குகளில் சுருண்டு, ஒரு பாறையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக் குதித்து, சுமார் 300 அடிக்குக் கீழே சரிந்தாள். இந்த அருவியானது, நேர்ச் செங்குத்தாக இருக்கவில்லை. ஆனால், பாறையிலிருந்து பாறை என்பதாக, அடுக்கடுக்காகவும், பாறைகளுக்கு இடையில் நிறைய இடுக்குகளோடும் அமைந்தது. இதனால், மேலிருந்து கீழே விழுகிற நீரின் வேகமும் குதிப்பும் புரட்டலும் அதிகமாக இருந்தன. இப்படிப்பட்ட புரட்டலில்தான், வ.வே.சு.ஐயரைத் தனது மடியில் உறங்க வைத்துக் கொண்டாள் பொருநையாள்.
 மேலே குறிப்பிட்டவாறு, நுப்பும் நுரையுமாகக் கீழே விழுந்த அருவிக்குக் கல்யாண தீர்த்த அருவி, பாபவிநாச அருவி, தாமிரவருணி அருவி, பாபநாசத் தீர்த்தம், அகத்தியர் அருவி, கல்யாணி அருவி (கல்யாணியான பார்வதி நீராடுகிற அருவி), திருமணப் புண்ணிய தீர்த்தம் என்று பலவிதமான பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. 300 அடி உயரத்திலிருந்து கீழே விழும்போது, பாறைப் பிளவுகள் அதிகமான ஒரு பகுதியில், இரண்டாகப் பிரிந்து, ஆனால், கீழே தரையைத் தொடுவதற்கு முன்பாகவே ஒன்றாகச் சேர்ந்து இந்த வீழ்ச்சி இருந்துள்ளது. பிரிந்து சேர்ந்த கடைசிப் பகுதி மட்டும், 90 அடிக்குக் கீழே விழுந்தது. ஆற்றின் பிரவாகம் முழுமையாக இருந்த காலங்களில், இரண்டு பிரிவுகளும் கலந்து, பிரம்மாண்டமான நீர்ச் சுவர்போல் காணப்படுமாம். தரையைத் தொடும்போது, மூன்று கிளைகளாகப் பிரிந்து பொருநையாள் பாய்ந்துள்ளாள்.
 மலைப் பகுதிகளில் பாய்ந்து தவழ்ந்து, ஓடிப் பெருகி, வளைந்துச் சுழிந்து நீண்டு நெளிந்து, சமவெளிகளைத் தொடுவதற்காகப் பேரொலியுடனும் பேரழகுடனும் உயரத்திலிருந்து கீழே விழுகிற தாமிராவைக் கண்ட நம்முடைய முன்னோர், இந்த நீர்வீழ்ச்சியில் நீராடினால், பாவங்கள் தொலைவதை உணர்ந்தனர். எனவே இந்த இடத்திற்கு பாபவிநாசம், பாபநாசம், பாவநாசம் என்றே பெயர்கள் சூட்டினர் (தமிழில் "பாவம்' என்று வழங்கும் சொல், வடமொழியில் "பாபம்' எனப்படும்).
 மூன்று கிளைகளாகப் பிரிந்து பாய்ந்தபோது, மூன்றாவது கிளையின் கரையில், அருவியிலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாம் அருள்மிகு பாபவிநாசர் திருக்கோயில். பெரிய அருவியாக இருந்தாலும், பாபநாசம் ஊருக்குள் வந்தால்தான், இதனை முழுமையாகக் காணமுடியும் என்பதைக் கீழ்க்காணுமாறு பதிவிடுகிறார் ஜகதீச ஐயர்: பாபநாசம் சென்றாலொழிய இவ்வீழ்ச்சி முற்றும் கண்ணுக்குத் தெரிய முடியாதபடி, பாறைகளும் குன்றுகளும் இயற்கையாக ஏற்பட்டிருக்கின்றன. "பாபவிநாசர் கோயில், அதன் மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள் ஆகிய யாவும் சேர்ந்து "பாபநாச மஜரா' ஏற்பட்டது' என்கிறார் ஜகதீச ஐயர் (மஜரா என்றால் குறுங்கிராமம் என்று பொருள்).
 பாபநாசம் கீழணை கட்டப்பட்டபிறகு, நீர் வரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, கல்யாண தீர்த்தம், பாபநாச அருவி, கீழே பாய்ந்த கிளை நீரோட்டங்கள் ஆகியவற்றின் போக்குகளும் பரிமாணங்களும் நிறையவே மாறிவிட்டன. கீழணையின் கிழக்குக் குழை ஒன்றின் நீர், ஏற்கெனவே பாறைப் பிளப்புகளில் இறங்கிக்கொண்டிருக்கும் நீரோட்டத்தில் கலக்கிறது. இவ்வாறு கலந்துவிழும் நீரோட்டத்திற்கு "மேலருவி' அல்லது "அகத்தியர் அருவி' என்று மராமத்துத் துறையினர் பெயர் சூட்டிவிட்டனர். கீழணையின் மேற்குக் குழைகளின் நீர், புனல் மின் நிலையம் சென்று, மின் உற்பத்திக்குத் துணை புரிந்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு கீழே விழும் நீர், மேலருவிக்குக் கீழே இருக்கிறது; "கீழருவி' என்றும் "பாபநாச அருவி' என்றும் அழைக்கப்படுகிறது.
 இதே பகுதியில்தான், அகத்தியருக்கு ஆதிப்பரம்பொருள் தம்முடைய திருமணக் கோலம் காட்டினார். ஆகவேதான், அகத்தியரோடும் திருமணக் காட்சியோடும் தொடர்புள்ள பெயர்கள். பழைய அருவி சமவெளியைத் தொட்ட இடத்தில், அகத்தியர் கோயிலிருக்கிறது. இந்தப் பகுதிக்கு இப்போது பழைய பாவநாசம் என்று பெயர். இப்போதும், சிவபெருமானுடைய வாக்கையும் செயலையும் நிறைவேற்றும்பொருட்டு, ஆண்டுதோறும் சித்திரைத் திருமண விழாவின்போது, அகத்தியர் கோயிலிலிருந்து அகத்தியத் திருவுருவச் சிலை, பாப விநாசர் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 அருள்மிகு உலகம்மை உடனாய பாபவிநாசர் திருக்கோயில், அளவில் பெரியது. கோயிலுக்கு முன்னர், பணிந்தோடுகிற பொருநையும் பொருத்தமான படித்துறையும் பக்தர்களின் மனங்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளன. திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர்த் தெருவழகு என்பதுபோல், "பாவநாசப் படி அழகு' என்றே சொலவடை உண்டு. "பொதும்பர் நிழல் குளிர் தூங்கப் பொலிந்த படித்துறை' என்று பாடுகிறார் புலவர் ஒருவர். பாவங்களை மட்டுமல்ல, நீரில் கலந்துள்ள மலை மூலிகைகளால், உடல் பிணிகளையும் ஆறும் தீர்த்தமும் போக்கவல்லன. மார்கழி மாதந்தோறும் கங்காதேவி இங்கு வந்து தங்கி விடுவதாக முக்களாலிங்கனார் இயற்றிய பாபநாசத் தலபுராணம் தெரிவிக்கிறது. ஆக, பாபநாசத் தீர்த்தத்தில் நீராடினால், காசியில் நீராடிய புண்ணியம் கிட்டும். சுவாமிக்குப் பாவநாசர், பழமறைநாதர், முக்களாலிங்கர், பரஞ்சோதி, வைராஜர் என்றெல்லாமும் திருநாமங்கள்.
 -தொடரும்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/பொருநை-போற்றுதும்-25---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3082938.html
3082937 வார இதழ்கள் வெள்ளிமணி பூமி பூஜைக்கு அருள் புரியும் செவலூர் ஸ்ரீபூமிநாதர்! DIN DIN Friday, January 25, 2019 09:42 AM +0530 செவ்வலூர் அதாவது செவ்வல் + ஊர் செவலூர் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் சிவந்த மண்ணை உடைய ஊர் என்பதால் செவ்வலூர் என்ற பெயர் பெற்றது என அறியலாம். செவலூரின் தெற்கில் ஊரணியின் வடகரையில் அருள்மிகு ஆரணவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூமிநாதர் கோயில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இவ்வாவலயம் செயல்பட்டு வருகிறது.
 இந்த கோயிலானது சுவாமி கோயில், அம்மன் கோயில் என தனித்தனிக் கோயில்களாக கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன. சுவாமி கோயிலானது கருவறை அர்த்த மண்டபம், இடைக்கட்டு, மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. கோயில் கட்டட அமைப்பை பொருத்தவரை உபானம், ஜகதி, முப்பட்டைக் குதம், பட்டி, வேதிகை சுவர், போதிகை, பிரஸ்தரம், யாளிவரி என்ற அமைப்புடன் கருவறை முதல் மகாமண்டபம் வரை இவ்வமைப்பே காணப்படுகிறது.
 கருவறையில் தெற்கு மேற்கு, வடக்கு பக்கங்களில் மொத்தம் மூன்று தேவகோட்டங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு தேவகோட்டங்கள் உள்ளன. கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் மட்டும் தட்சிணாமூர்த்தி உள்ளார். மற்றவைகளில் தெய்வ உருவங்கள் இல்லை. சுவரில் ஆங்காங்கே அரைத்தூண்கள் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் ஒவ்வொன்றும் கால், குடம், கலசம் பலகை என்ற அமைப்பினை உடையதாக உள்ளது. போதிகைகள் பிற்கால பாண்டியர் காலத்து போதிகைகளாகும்.
 கருவறையில் லிங்கமூர்த்தியாகக் காணப்படும் மூலவர், 16 பட்டைகளை உடைய பாணலிங்கமாகும். இக்கோயிலின் பழைய மூலவர் சிதிலமடைந்ததின் காரணமாக அதை எடுத்து வைத்துவிட்டு புதிதாக லிங்கம் செய்து வைக்கப்பட்டு தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது. ஆவுடையார் வட்டவடிவமுள்ளது. சுவாமி கோயிலுக்கு வடகிழக்கில் பைரவருக்குத் தனிக்கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
 சுவாமி கோயில் வசந்த மண்டபத்தில் நந்தியும், நந்திக்கு அடுத்து பலிபீடமும் உள்ளது. பின்புறத்தில் தென்மேற்கு மூலையில் மூலப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலப்பிள்ளையார் சுமார் 9, 10 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது கோயிலின் காலத்திற்கு முற்பட்டவராக காணப்படுகிறார்.

ஆரணவல்லி அம்மன் கோயில் சுவாமி கோயிலுக்கு வடபுறத்தில் தனிக்கோயிலாக கிழக்கு பார்த்து கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் ஆகியவைகளைக் கொண்டதாகும். அம்மன் கோயில் உபபீடம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், பட்டி, சுவர், பிரஸ்தரம் ஆகியவைகளை கொண்டதாகும். இது கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.
 சுப்பிரமணியர் ஆறுமுகங்கள், பன்னிரு கைகள் உடையவராக மயில் மீது அமர்ந்துள்ளார். வலப்புறத்தில் தெய்வானை, இடப்புறத்தில் வள்ளி ஆகியோருடன் அமைந்துள்ளார். சண்டிகேசுவரர் கருவறையின் வடபுறம் கருவறையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.
 மகாமண்டபத்தின் வாசற்படிக்கு தென்புறத்தில் சூரியன் மேற்கு பார்த்து நிற்கிறார். வலது இடது கைகளில் தாமரை மொட்டுகள் உள்ளன. இக்கோயிலில் சந்திரன் கிடையாது. வாஸ்து நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இடம் வாங்க, விற்க, புதிதாக பூமிபூஜை போடுவதற்கு முன்பாக இங்குள்ள பூமிநாதரை வேண்டி அர்ச்சனை செய்து அந்த வேலையை தொடங்கினால் தடையில்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம்.
 வழித்தடம்: புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் செவலூர் உள்ளது. அங்கிருந்து தென்புறத்தில் 3 கி.மீ. தொலைவில் கோயிலை அடையலாம்.
 தொடர்புக்கு- 98426 75863 / 97512 39014.
 - பொ.ஜெயச்சந்திரன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/பூமி-பூஜைக்கு-அருள்-புரியும்-செவலூர்-ஸ்ரீபூமிநாதர்-3082937.html
3082936 வார இதழ்கள் வெள்ளிமணி தேவன் மனிதருக்கு கற்பித்த ஜெபம் DIN DIN Friday, January 25, 2019 09:39 AM +0530 கடவுளால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளும் இறைவனோடு தொடர்பு கொள்கின்றன. மனிதரும் இறைவனோடு தொடர்பு கொள்வது ஜெபம் எனப்படும். மனிதர் தன்னைத் தாழ்த்தி முழங்காலில் நின்று கண்களை மூடி ஜெபிக்கின்றனர். காலங்காலமாக மனிதர் இறைவனிடம் ஜெபம் என்ற தொடர்பால் இறைவனோடு பேசுகின்றனர். தெய்வமும் மனிதர் ஏறெடுக்கும் ஜெபங்களை கேட்கின்றார். அவரவர் ஜெபங்களுக்கு பதில் அளிக்கின்றார்.
ஜெபத்தின் மூலம் மனிதர் இறைவனின் அருள் ஆசீர்வாதத்தைப் பெற்று நோய் நீங்கி வறுமை நீங்கி, துன்பம் நீங்கி கடவுளின் அன்பு பெற்று நல்ல இன்ப வாழ்வை பெற்றுக் கொள்கின்றனர். எல்லா மக்களும் ஜெப தொடர்புக் கொண்டு இறைவனிடம் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர்.
இயேசு ஆண்டவர், இப்பூமியில் வாழும்போது அவர் அதிகமாக செலவழித்த நேரம் ஜெப நேரமே. வனாந்திரத்திலும் மலை உச்சியிலும் தெய்வ ஆலயத்திலும் அவர் ஜெபித்தார். மனிதருக்கு ஜெபம் அவசியம்! ஜெபம் இல்லா வீடு கூரையில்லா வீடு என்ற பழமொழி அந்நாளில் கூறப்பட்டது. இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் ஜெபிக்க கற்றுத் தரும்படி வேண்டினர். இயேசு அவர்களுக்கு ஒரு ஜெபத்தை கற்றுக்கொடுத்தார். இந்த ஜெபம் (Lords Prayer) இயேசு கற்பித்த ஜெபம் என எல்லா இடங்களிலும் வீடுகளிலும் ஆலயத்திலும் எல்லா கூட்டங்களின் இறுதியிலும் தனி மனிதர் ஜெபத்தின் இறுதியிலும் சொல்லப்படுகிறது. 
இயேசு கற்பித்த ஜெபமானது: " நீங்கள் ஜெபம் பண்ண வேண்டியவிதமாவது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தபடுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல் எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று ரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே" - ஆமேன் (மத்தேயு 6:9-13)
இந்த ஜெபம் ஒரு மந்திரம்போன்று இன்று உலகமெங்கும் ஜெபிக்கப்படுகிறது. அவர் ஒரு தந்தையின் அருள் உள்ளவர். எனவே, அவர் எல்லாருக்கும் அப்படி அப்பா, தன் பிள்ளையின் பேரில் எவ்வளவு அன்பு, பரிவு, பாசம், அர்ப்பணிப்பு தியாகம் அக்கறையுள்ளவராக இருக்கிறாரோ அப்படி, நம் இறைவன் நம் பேரில் அன்புள்ளவர். அப்பா- மகள் உறவு, நம் இறை உறவு! சக மனிதரை மன்னிக்கவும் நம் உணவு தினமும் அளிக்கப்படவும் வேண்டும். இறைவனின் திட்டம் நம்மில் செய்யப்பட்டு நாம் சுகமாக வாழ, இயேசு ஆண்டவர் இந்த ஜெபத்தை ஜெபிக்கும்படி இது நம் வாழ்வின் மந்திரமாக ஜெபிக்கும் போதெல்லாம் இயேசு கற்று தந்த ஜெபத்தை ஜெபிப்போம். நம் ஜெபம் இறைவனால் கேட்கப்பட்டு இறைவனின் ஆசி என்ற அருள் பதில் பெற்று இப்பூவுலகில் இன்பமாக வாழ்வோம்.
- தே. பால் பிரேம்குமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/தேவன்-மனிதருக்கு-கற்பித்த-ஜெபம்-3082936.html
3082935 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, January 25, 2019 09:37 AM +0530 ஸம்வத்ஸரா அபிஷேகம்
கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிப்ரவரி 1-ஆம் தேதி ஸம்வத்ஸரா அபிஷேகமும் தொடர்ந்து, பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவமும் நடைபெறும். 
தொடர்புக்கு: 094436 77936.
ஸ்ரீகோவிந்த தாமோதரஸ்வாமிகள் ஆராதனை
திருச்சிக்கு அருகில் பழூர் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் மகானின் 15 -ஆம் வருட ஆராதனை மகோத்ஸவம் பிப்ரவரி 3 -ஆம் தேதி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 99622 19944.
ஸ்ரீராதா கல்யாண மகோத்சவம்.
திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூரில் உள்ள ஸ்ரீ பூமி நீலா சமேத நீலமேனி வரதராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உத்சவம் பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94438 63887 / 94862 89728.
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும் பாதையில் கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள 7 -ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழைமையான அருள்மிகு பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேசுவார் திருக்கோயிலின் தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10- ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது. இதனையொட்டிய வேள்விகள், வழிபாடுகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது. 
தொடர்புக்கு: 96882 92283 / 95511 43024. 
மஹாகும்பாபிஷேம்
திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஆதிகாமாட்சி அம்பாள் உடனுறை கற்கடேஸ்வரர் ஆலயத்தில் 27.01.2019, காலை 10.00 - 11.30 மணிக்குள் மஹாகும்பாபிஷேம் நடைபெறுகின்றது. முன்னதாக, ஜனவரி 25, 26 -ஆம் தேதிகளில் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன.
உழவாரப்பணி
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை , தண்டலம் ஊரில் எழுந்தருளி அருள்புரியும் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்தரும் தடுத்தால் ஈஸ்வரர் திருக்கோயிலில், 27.01.2019, காலை 8.30 மணி முதல் உழவாரப்பணி நடைபெறுகின்றது. அடியார் பெருமக்கள் இந்த தெய்வீகப் பணியில் இணைந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். இச்சிவாலயம் செல்ல, சென்னையிலிருந்து வரும் அடியார்கள், புறநகர் ரயிலில் "செவ்வாய்ப்பேட்டை ரோடு' ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் வரலாம். 
தொடர்புக்கு: ராமஜெயம் - 98410 02159 / 98402 48378.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/நிகழ்வுகள்-3082935.html
3082934 வார இதழ்கள் வெள்ளிமணி வார கூட்டு தொழுகை DIN DIN Friday, January 25, 2019 09:35 AM +0530 வார கூட்டு தொழுகை வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுவது. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக நண்பகல் தொழும் லுஹர் தொழுகை தொழாமல் ஒரு மசூதியைச் சேர்ந்த முஹல்லா வாசிகள் ஒன்று கூடி சொற்பொழிவைக் கேட்டு பின்னர் இரண்டு ரக்அத்துகள் கூட்டாக தொழுவது. சொற்பொழிவைக் கேட்பதற்காக வழக்கமான நண்பகல் லுஹர் தொழுகை நான்கு ரக்அத்துகள் கூட்டாக தொழுவது. சொற்பொழிவைக் கேட்பதற்காக வழக்கமான நண்பகல் லுஹர் தொழுகை நான்கு ரக்அத்துகள் குறைக்கப்படுகிறது. சொற்பொழிவைக் கேட்பது கட்டாயம். அச்சொற்பொழிவு குர்ஆன் நபி மொழிகளைக் காலத்திற்கேற்ற முறையில் மொழிந்து வரலாற்று எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி தற்பொழுதைய சூழலில் இதனைக் கடைபிடித்து பெறும் பயனைப் பக்குவமாய் மக்கள் மனதில் பதியும் வண்ணம் பகருவது.
 முற்காலத்தில் அரபியர் ஒன்று கூடும் நாளுக்கு அறுபா என்று பெயர். இதனைக் கவ்புப்னு லுவய்யி ஜும் ஆ என்று பெயர் மாற்றினார். அவர் காலத்தில் சந்தை கூடும் நாளுக்கு இப்பெயரை வைத்தார்.
 மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பனூ ஸாலி மிப்னு அவ்ப் (ரலி) வீட்டில் முதல் ஜும் ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள். அதன்பின்னர் உலகில் இரண்டாவதாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஜவாûஸ என்னும் இடத்தில் அப்துல் கைஸ் உடைய பள்ளி வாயிலில் ஜும் ஆ தொழுகை நடந்ததை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் }புகாரி, அபூதாவூத்.
 ஜும் ஆ நாளில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர விரைந்து சொல்லுங்கள். இன்னும் வியாபாரத்தை விட்டு விடுங்கள். அறிந்தவர்களுக்கு இதுவே சிறந்தது என்று செப்புகிறது செம்மறை குர்ஆனின் 62-9 ஆவது வசனம். இக்குர்ஆனை வசனத்தை வலியுறுத்தும் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்புகள்.
 ஜும் ஆ தொழுகையை ஜமா அத்தாக (கூட்டாக) தொழுவது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமை ஆகும். நால்வருக்கு விதிவிலக்கு உண்டு. அடிமை, பெண், சிறுவர், நோயாளி. அறிவிப்பவர்- தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) நூல்- அபூதாவூத். ஓர் ஊரில் தொழு கடமையுடைய நாற்பது ஆண்கள் இருந்தால் அந்த ஊரில் ஜும் ஆ தொழுவது கடமையாகும் என்று இமாம் ஷாபியீ (ரஹ்) சட்டம் வகுத்துள்ளார். பருவம் அடைந்த ஆண்கள் அனைவர் மீதும் ஜும்ஆ கடமையாகும். ஜும் ஆவிற்குச் செல்லும் அனைவர் மீதும் குளிப்பது கடமையாகும். அறிவிப்பவர் - ஹஃப்ஸா (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ.
 வெள்ளிக்கிழமை குளித்து அழகிய ஆடைகளை அணிந்து நறுமணம் பூசி பள்ளிவாயில்களுக்குச் சென்று பணிவுடன் அமர்ந்து அமைதியாக சொற்பொழிவைக் கேட்டு அதன்பின் இரு ரக் அத்துகள் கூட்டாக தொழுவது சிறப்பு என்று கூறும் கோமான் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. எவர் குளித்து முன்னரே பள்ளிவாயிலுக்கு நடந்து சென்று வீண் பேச்சு பேசாது காது தாழ்த்தி சொற்பொழிவைக் கேட்டு கூட்டாக தொழுது நடந்து வீட்டிற்குத் திரும்புகிறாரோ அவருக்கு ஓராண்டு பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கிய பயன் உண்டு. அறிவிப்பவர் - அவ்ஸýப்னு அவ்ஸýஸ் ஸகஃபீ (ரலி) நூல்- ஸýனன். உன்னால் இயன்றவரை உன்னுடைய ஆடையை தூய்மையாக்கி அழகாக்கி கொள் என்று அறிவுறுத்தினார் இமாம் மாலிக் (ரஹ்).
 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜும் ஆவில் இரு சொற்பொழிவுகள் (குத்பா) நிகழ்த்துவார்கள். முதல் குத்பா முடிந்ததும் சில நாழிகை அமர்ந்து பின் எழுந்து இரண்டாவது குத்பா உரை நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர்- இப்னு உமர் (ரலி). அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஜும் ஆ தொழுகையும் குத்பா உரையும் நடுத்தரமானவை. அறிவிப்பவர்- ஜாபிர் இப்னு ஸமுரா. இரு திருமொழிகளும் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ நூல்களில் உள்ளன. கண்ணிய நபி (ஸல்) அவர்கள் கதிரவன் சாய்ந்துவிட்ட பொழுது ஜும்ஆ தொழுததை அறிவிக்கிறார் அனஸ் (ரலி). நூல் - புகாரி, அபூதாவூத், திர்மிதீ. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜும் ஆ தொழுகையில் 87- ஆவது 88 ஆவது அத்தியாயங்களை ஓதியதைச் செப்புகிறார் ஸமுரதுப்னு ஜுன்துப் (ரலி) நூல்- அபூதாவூத், நஸஈ. ஜும்ஆ தொழுகைக்குப்பின் பெருமானார்- நபி (ஸல்) அவர்கள் இல்லம் சென்று இரண்டு ரக் அத்துகள் சுன்னத் தொழுததை அறிவிக்கிறார் அப்துல்லாஹ் பின்உமர் (ரலி) நூல் - முஸ்லிம்.
 ஜும் ஆவிற்கு முந்தி செல்பவர் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பதிலும் முந்தியிருப்பார்கள். ஒரு வார ஜும்ஆவிலிருந்து மறுவார ஜும்ஆ வரை ஐந்து நேரமும் தவறாது தொழுது ஜும்ஆவையும் தொடர்ந்து தொழுவது அவ்வாரத்தில் நிகழ்ந்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்பட பரிகாரமாகிறது என்ற பாச நபி (ஸல்) அவர்களின் நேச மொழியை நினைவுறுத்துகிறார் அபுஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம். ஜும் ஆவின் நன்மைகளைப் பெற்று விட்டால் போதும் என்று வெள்ளிக்கிழமை வார கூட்டு தொழுகை ஜும் ஆ தொழுகையை மட்டும் தொழுது நாளும் தொழும் ஐங்கால தொழுகையை தொழாது இருப்பவர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்காது. இதுபோன்ற தவறான அனுமான அறியாமையை அகற்றி சிந்தித்து செயல்பட செப்பும் செம்மறை குர்ஆன் கூறும் நேரிய வழியில் நித்தமும் சித்த தெளிவுடன் ஐங்காலத் தொழுகைகளைத் தொழுது வார கூட்டு தொழுகையை ஜும் ஆவையும் விடாது தொழுது தூயவன் அல்லாஹ்வின் நேயமுடைய நேசனாக ஊசலாட்டம் இல்லாத உயர்வாழ்வு வாழவேண்டும்.
 இமாம் குத்பா பேருரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்பொழுது பேசிக் கொண்டிருக்கும் அடுத்தவரிடம் பேசாது மௌனமாயிருக்க கூறினாலும் கூறியவரும் பேசியவர் ஆகி ஜும் ஆவின் பயனை இழப்பர் என்று இனியநபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
 எவர் அலட்சியமாக மூன்று ஜும் ஆக்களை விட்டு விடுவாரோ அவரின் இதயத்தில் இறைவன் முத்திரை இடுவான் என்ற இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அறிவிக்கிறார் அபூஜஃதல் ஸமீரிய்யி (ரலி) நூல்- ஸýனன். முத்திரை இடப்பட்ட இதயம் உண்மையை உணராது நன்மையை அறியாது தன்மை இழந்து வன்மை வழியில் பாழ்படும்.
 நாளும் ஐங்கால தொழுகைகளையும் வார ஜும்ஆவையும் சீராக தொழுது நேராக வாழ்வோம். பேராளன் அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/வார-கூட்டு-தொழுகை-3082934.html
3082933 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, January 25, 2019 09:34 AM +0530 * கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு. அதில் மேலானது, கீழானது என்பதில்லை. கடமையைச் செய்யாதவன் ஒழுக்கம் தவறியவன். கடமையைச் செய்பவனே கடவுளுக்கு உகந்தவன் ஆவான்.
- பஞ்சதந்திரம்
* நம்மால் எங்கே எந்தப் பெரிய காரியத்தைச் செய்ய முடியும்? என்று நினைத்து, நல்ல செயல்களைச் செய்யாமல் இருந்துவிடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம் நிரம்பிவிடும்.
- புத்தர்
* சுகவாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
- விதுரநீதி
* இம்மைக்கும் மறுமைக்கும் பயனைத் தரும் வழியில்தான் நாம் தங்கியிருக்க வேண்டும். 
* தீய காரியம் செய்பவன் குருடனுக்கு ஒப்பானவன்.
* நல்லதைக் கேளாதவன் செவிடனுக்கு ஒப்பானவன்.
* சந்தர்ப்பம் கிடைத்தபோதுகூட இனிமையான வார்த்தைகளைப் பேசாதவன் ஊமையே ஆவான்.
- ஆதிசங்கரர்
* இறைவா! என்னுடையது என்று என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பதெல்லாம் உன்னுடையதுதான். உன்னுடையதை உன்னிடம் தந்துவிடுவதில் எனக்கு என்ன செலவு?
- கபீர்தாசர்
* நாம் அளிப்பது மிகவும் குறைவு என்ற எண்ணத்தில் நாணி தானமளிக்க வேண்டும்.
- தைத்திரீய உபநிஷதம்
* நீ துன்பப்படுவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், பிறருக்கு இன்னாதனவற்றைச் செய்யாதே.
- புத்தர்
* காமத்தாலாவது கோபத்தாலாவது எதிலும் அலட்சியத் தன்மையைக் காட்டக் கூடாது.
- வால்மீகி ராமாயணம்
* எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது.
- புத்தர்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3082933.html
3082932 வார இதழ்கள் வெள்ளிமணி மஹாசுவாமிகள் போற்றிய மஹான்! Friday, January 25, 2019 09:32 AM +0530 திருவண்ணாமலையில் திடீரென ஓர் உணவு விடுதியில் நுழைந்த அவர், அங்கு மூட்டையிலிருந்த மாவினை ஒரு தண்ணீர் இருந்த பெரிய பாத்திரத்தில் கொட்டிவிட்டார். இதனைப் பார்த்த விடுதிக்காவலர்கள் அவரை "சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்' என நினைத்து திட்டி விரட்டி அடித்தனர். சிறிது நேரம் சென்று ஒரு வாகனத்தில் அந்த கடைக்கு வந்த ஆட்கள் அவ்வூரில் சர்க்கஸ் அமைக்க கூட்டமாக வந்திருப்பதாகவும், பசிக்கு ஏதேனும் உணவு உடனே வேண்டுமென்றும் அவர்கள் கேட்க; அவர் கொட்டி ஊர வைத்த அனைத்து மாவும் வந்தவர்களுக்கு உணவானது. அப்படியே மெய்சிலிர்த்த அந்த உணவு விடுதி ஆட்கள் அவரது மகிமையைக்கூறி போற்றினர். இந்த செய்தி ஊர் முழுக்கப்பரவி அவர் நம் கடைக்கு வரமாட்டாரா என அனைவரும் ஏங்க ஆரம்பித்தனர்.
 பக்தர் ஒருவர் ஒரு சாப்பாட்டு பொட்டலத்தைக் கொண்டு அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிய அவர் சிறிது எடுத்து உண்டுவிட்டு மீதத்தை மேலேயும் கீழேயும் வீசியடித்தார். இதைப்பார்த்த அந்த அன்பர் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர் "பூதங்களும், தேவதைகளும் என்னிடம் கேட்கிறார்கள், அதனால் கொடுத்தேன்' என்றார். இதனை அந்த பக்தர் "ஆச்சர்யமாக இருக்கிறது நீங்கள் கூறுவது; பூதமும் தேவதைகளும் என் கண்களுக்குத் தெரியவில்லையே" என்று கிண்டல் தொனியில் கூறினார்.
 இதற்கு அவர் "நான் சொல்வதை நம்பவில்லை அப்படித்தானே' என்று கேட்க அந்த பக்தரும் "ஆமாம்' என்று கூற; உடனே அவர்; பக்தரின் இரு புருவங்களுக்கும் இடையில் தனது விரலை வைத்து சிறிது அழுத்தி கண்ணைத் திறந்து பார்க்கச் சொன்னார். அங்கு இவர் தூக்கி எறிந்த உணவினை கோரைப்பற்களுடன் இருந்த பூதங்கள் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நடுங்கிப்போய் சரணாகதியடைந்தார் அந்த பக்தர். அவரே "தங்கக்கை சாமியார்" என்று அழைக்கப்பட்ட சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆவார். மக்கள் நலனுக்காக அவர் இது போன்ற பல சித்து வேலைகளை தேவையானவர்களுக்கு, அவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ளும் வண்ணம் செய்த மஹான் ஆவார்.
 1870, ஜனவரியில் வரதராஜ (ராஜா) ஐயருக்கும் மரகதம்மாளுக்கும், ஓர் உன்னதமாக ஜோஸ்யர் பரம்பரையில் தமிழ் தை மாத ஹஸ்த நட்சத்திரத்தில், தலைமகனாய் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். அவரது 7-ஆவது வயதில் உபநயனம் (பூணூல்) செய்யப்பட்டு கல்விப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. 13 -ஆவது வயதில் தந்தை மரணமடைந்து; தனிமை துயரில் இருந்த தாயையும் தனயனையும் அவரது மாமா காமகோடி சாஸ்திரியார், தன் ஊருக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்டார். அவர் வேதம் கற்று கொள்ள ஆரம்பித்து, அதன் மூலம் வேதாந்தம் தன் மாமாவிடமே படித்தார்.
 இப்படி ஒவ்வொன்றாய் கற்று வந்த சத்குருவின் 17-ஆவது வயதில் திருமண ஏற்பாடு நடந்தது. இந்த சமயத்தில் சின்னக்காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜபெருமாள் கோயில் தெற்கு மாட வீதியில் அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. இதற்காக அவரது ஜாதகத்தை பார்த்த ராமஸ்வாமி ஜோஸ்யர்; சத்குருவின் தாயாரிடம்; ஆத்ம ஞானியாக, சன்யாசியாகத்தான் இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது என்றார். அதனால் திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என தடுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த தாய் உணவருந்தாமல் தன்னை வருத்திக் கொண்டார்.
 சத்குருவிற்கு தாயின் மறைவு பெரிதாக பாதித்தது. காஞ்சிபுரத்திலிருந்து அனைத்தையும் துறந்து கிளம்பிவிட்டார் சத்குரு. தடுப்பதற்கு யாரும் இல்லை. எங்கு சென்றாலும் அவரைச் சுற்றி கூட்டம் அலை மோதியதால்; பல ஊர்களில் சுற்றிவிட்டு அருணசலத்தை காண தன் 19-ஆவது வயதில், 1889-ஆம் ஆண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். கண்டவர் விண்டிலர் (கடவுளை பார்த்த பின் பேச்செங்கே வரும்) என்ற சொல்லிற்கு ஏற்ப; அருணாசலமே கதி என்று திருவண்ணாமலையிலிலேயே தங்கிவிட்டார்.
 ரமண மகரிஷி அண்ணாமலையாரிடம் வந்தபோது அவரை பொதுமக்கள் மிகவும் துன்புறுத்தியதால் அவர் கோயிலிலுள்ள பாதாளலிங்க சந்நிதியில்; தன்னை பாம்பு, பல்லி போன்ற உயிரினங்கள் தன் மேலூருவதைக்கூட உணராமல் வெகு நீண்ட தவம் செய்தார். இதனைப் பார்த்த சத்குரு அவரை காப்பாற்றி வெளியுலகிற்கு அவரது பெருமையை தெரியப்படுத்தியவர் இவரே. தன்னை பார்வதியாகவும்; ரமணரை அவள் மகன் சுப்ரமண்யராகவும் கூறுவாராம். சத்குரு ரமணரை விட 10 வயது மூத்தவர்; ஒரே காலத்தில் பேதமின்றி வாழ்ந்த மஹான்கள்.
 சத்குருவின் மீதுள்ள அதீத அன்பினால்; சத்குரு தடுத்தும் கேட்காமல் அவரது பக்தர்கள் அவருக்கு செய்த அபிஷேகங்கள், அவரை காய்ச்சல் அடைய செய்தது. அதன் பின், 4.1.1929 (மார்கழி 21-ஆம் நாள்) முக்தி அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டனர். இவரது அதிஷ்டானம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாத்தனூர் சாலையில் அமைந்துள்ளது.
 இந்த வருடம், அவரது 149 - ஆவது ஜெயந்தி விழா வரும், 26.1.2019 அன்று அவரது அதிஷ்டானங்களில் கொண்டாடப்படுகிறது.
 ந.ந. சீதாராமன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/25/மஹாசுவாமிகள்-போற்றிய-மஹான்-3082932.html
3078739 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் Tuesday, January 22, 2019 11:19 AM +0530  

ஆராதனை வைபவம்

கும்பகோணம் - திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் குடவாசல் அருகே உள்ளது சேங்காலிபுரம். இங்கு,  ஸ்ரீ ராமானந்த ப்ரம்மேந்திர சுவாமிகள் திருக்கரங்களினால் ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ரீ தத்தாத்ரேயர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ளது. மேலும் சுவாமிகளின் அதிஷ்டானமும் இங்கு உள்ளது. சுவாமிகளின் 51 }ஆவது ஆராதனை, ஜனவரி 19 }ஆம் தேதி வைதீக சடங்குகளுடன் அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94872 92481/  04366 260819.

மஹாகும்பாபிஷேகம் 

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கலிங்கியம் கிராமம், அவ்வையார்பாளையத்திலுள்ள அருள்மிகு சஞ்சீவி விநாயகர் சுவாமி ஆலயத்தில் 20.01.2019 அன்று காலை 9.50 மணி முதல் 10.20 மணிக்குள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக, ஜனவரி 18 மற்றும் 19} ஆம் தேதிகளில் ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 98427 40197.


திருச்சி, ஜான்தோப்பு, பாரதியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியப்ப சுவாமி ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக விழா, 21.01.2019, காலை 9.45 மணியளவில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94422 71481.


தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஆத்தனஞ்சேரியில் அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க வளாகத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா, ஜனவரி 20, 21 } ஆம் தேதிகளில் நடைபெறுகின்றது. 20.01.2019 }இல் சுத்த சன்மார்க்க கருத்தரங்கம், சன்மார்க்க ஊர்வலம், ஆய்வரங்கமும்; 21.01.2019 } இல் 7 திரை நீக்கி முதல் ஜோதி தரிசனம், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்,  7 மாயாதிரைகள்  தத்துவ விளக்கம், 7 திரை நீக்கி  2 மற்றும் 3 }ஆவது ஜோதி தரிசனமும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 99625 69966/ 96004 85481.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/நிகழ்வுகள்-3078739.html
3078734 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! - 24 - டாக்டர் சுதா சேஷய்யன் Tuesday, January 22, 2019 11:16 AM +0530 சட்டம் பயின்று திருச்சியில் வழக்கறிஞராகப் (அக்காலத்தில், ப்ளீடர்) பணிபுரிந்தவர்; பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்று, அங்கு தேசியப் போராட்ட எண்ணங்களில் மூழ்கி அதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்; லண்டன் இந்தியா ஹவுஸில் வீர சாவர்க்கரோடு நெருங்கிப் பழகி, சில ஆண்டுகளுக்கு அவரின் வலது கையாகவே திகழ்ந்தவர்; லண்டனிலேயே பாரிஸ்டர் காந்தியைச் சந்தித்து விடுதலைக்கான செயல்பாடுகள் குறித்து விவாதித்தவர்; புதுச்சேரியில், அரவிந்தருடனும் பாரதியாருடனும் நீலகண்ட பிரம்மசாரியுடனும் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவர்; மேடம் காமா அவர்களோடு இணைந்து புரட்சிவாதியாக விளங்கியவர்; பல்வேறு வேடங்கள் போட்டு (பிணம் வேடம் உட்பட) பிரிட்டிஷார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தேசியப் போராட்ட முயற்சிகளை மேற்கொண்டவர்; இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய மொழிகளும் அறிந்த பன்மொழிப் புலவராகத் திகழ்ந்து, பாரத இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்;  தமிழ் உரைநடை இலக்கிய முன்னோடி; தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பான "மங்கையர்க்கரசியின் காதல்' என்னும் நூலின் ஆசிரியர்; திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்; 1915}இல் புதுச்சேரியில் இரண்டாம் முறையாகச் சந்தித்து, அந்தச் செல்வாக்கால் முழுக்க முழுக்க காந்தீயவாதியாக மாறியவர். இன்னும் இன்னும் ... வ.வே.சு. ஐயரைப் பற்றிச் சொல்வதற்கு உண்டு. 

பொருநையோடு இவருக்கு ஏற்பட்டுவிட்ட விபரீத உறவை மட்டும் இப்போது காண்போம். 

இயற்கைப் பிரியரான ஐயர், குருகுலப் பிள்ளைகளிடமும் அதே சிந்தனையை வளர்த்தார். அவ்வப்போது அவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வார். மலையேற்றம், நீச்சல், உடல் உறுதிப் பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்துவார். 1925 }ஆம் ஆண்டு மே மாத ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், பாபநாசப் பகுதிக்குச் சுற்றுலா கிளம்பினார்கள். குருகுல ஆசிரியர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், பிள்ளைகளையும் பிற ஆசிரியர்களையும் அனுப்பிவிட்டு ஐயர் சேரன்மாதேவியில் தங்கிவிட்டார். ஜூன் 1 }ஆம் தேதி அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். ஐயரின் மகள் சுபத்திராவுக்கு ஏக வருத்தம். அப்பாவை நச்சரித்தாள். மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த ஐயர் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு ஜூன் 2-ஆம் தேதி மாலை கிளம்பினார். அம்பாசமுத்திரத்தில் இரவு தங்கி, அடுத்த நாள் ஜூன் 3 }ஆம் தேதி காலை பாபநாசத்தை அடைந்தார். பிறரோடு சேர்ந்துகொண்டார். பாபநாச அருவியில் எல்லோரும் ஸ்நானம் செய்தார்கள். ஏற்கெனவே தம்மைச் சேரன்மாதேவியில் சந்தித்துவிட்டு, பாபநாசம் பகுதிக்கு வந்து ஏகாந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரம்மசாரி ஒருவரையும் ஐயர் இங்குச் சந்தித்தார். தம்முடைய தோளில் தொங்கிய கதர்ப்பையை அந்த பிரம்மசாரியிடம் கொடுத்துவிட்டுத்தான் ஸ்நானம் செய்தார். நீராடியபின், அனைவரும் காலைச் சிற்றுண்டி அருந்தினர். ஏகாதசி நாள் என்பதால் ஐயர் மட்டும் முழு உபவாசம் இருந்தார். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அனைவரும் மலையேறினர். 

சேர்வலாறு சேர்கிற இடத்திற்குக் கிழக்காக, இயற்கையான பள்ளத்தாக்கில் தாமிரா வளைந்து நெளிந்து, பிரிந்து சேர்ந்து பாறைத் தீவுகளை உருவாக்கினாள் என்று பார்த்தோமில்லையா? வளைந்து நெளிவதாலும், பாறைகளால் பிரிக்கப்படுவதாலும், அப்போதைய தாமிரா இந்த இடத்தில் அகலமும் ஆழமும் குறைவாக, ஆனால் வேகம் அதிகமாகப் பாய்ந்தாள். ஆற்றில் இறங்கி இக்கரையிலிருந்து மக்கள் அக்கரைக்குச் செல்வது வழக்கம். ஆங்காங்கே பாறைத் திட்டுகளும் இருக்கும். அகலமும் ஆழமும் குறைவாக, தீர்த்தம் போன்ற அமைப்பை உருவாக்கியதாலும், இங்கேயே சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் கண்டார் என்னும் ஐதீகத்தாலும், இதற்குக் கல்யாண தீர்த்தம் என்று பெயர். இதன் பின்னர்தான், பல்வேறு பாறைகளை அணுகியோடிய தாமிரா, பற்பல சிற்றோடைகளாகப் பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து, சிற்றருவிகளாகப் பாறைக்குப் பாறை தாவி, நுப்பும் நுரையுமாகக் காற்றில் நீர்த்திவலைகளை மிதக்கவிட்டு, 300 அடி கீழே சரிந்தாள். அந்த அருவியைத்தான், கல்யாண தீர்த்த அருவி என்றும் பாபநாச அருவி என்றும் மக்கள் அழைத்தார்கள். நேர்ச் செங்குத்தாக விழாமல், இந்த அருவியானது இண்டு இடுக்குகளில் புகுந்து, வெகு வேகமாகப் "பொதேர்' என்று கொப்பளித்து விழும். 

மலையேறி வந்து, கல்யாண தீர்த்தத்தை அடைந்தார்கள் ஐயரும் பிறரும். குறிப்பிட்ட இடத்தில் ஆற்றைக் கடக்கவேண்டுமென்று சுபத்திரா வலியுறுத்தினாள். ஐயருக்கு விருப்பமில்லை. பாறைகள் வழுக்கிவிடக்கூடும், தாங்களோ பெரிய கோஷ்டி என்று தயங்கினார். சுபத்திரா பிடிவாதம் பிடித்தாள். மகளுக்காக ஒத்துக் கொண்ட ஐயர், ஆற்றில் இறங்கி, வலுவான பாறை ஒன்றில் நன்றாக ஊன்றி நின்று, பிள்ளைகளை ஒரு கரையிலிருந்து மறுகரைக்குக் கைகொடுத்து மாற்றிவிட்டார். தானும் அவ்வாறே தாவ வேண்டுமென்று சுபத்திரா விரும்பினாள். பாவாடை தடுக்கும் என்று மறுத்தார் தந்தை. தன்னைப் பெண் என்று சுட்டிக் காட்டித் தந்தை தடுக்கிறார் என்று ஆவேசப்பட்ட சுபத்திரா, "இதுதான் நீங்கள் என்னை ஜான்சிராணியாக இருக்கச் சொல்லும் லட்சணமா?' என்று கொந்தளித்தாள். வாய் பேச நா எழாமல், சுபத்திரா அக்கரைக்குச் செல்ல உதவி செய்தார். சுபத்திரா அந்தப் பக்கத்துப் பாறையில் பத்திரமாகச் சேர்ந்துவிட்டாள் என்றெண்ணி, அடுத்த பிள்ளைக்குக் கைகொடுக்கத் திரும்பினார். 

"அப்பா' என்னும் குரல், ஐயரைத் தாக்கியது. பாறை வழுக்கிவிட, சுபத்ரா நீருக்குள் விழுந்துவிட்டாள். நீச்சல் வித்தகரான ஐயர், மகளைக் காப்பாற்ற நீருக்குள் பாய்ந்தார். அநேகமாக மகளைப் பிடித்தும்விட்டார். ஆனால், ஐயரின் கையிலிருந்து மகளின் கூந்தல் நழுவ, சுபத்திரா மொத்தமாக மூழ்கினாள். அவளைப் பற்றும் முயற்சியில் ஐயரும் துழாவ . . . ஆற்றின் வேகம் அதிகம் இருந்த அந்த இடத்தில் . . . சில அடிகளிலேயே அருவியின் சரிவும் நேர்ந்துவிட . . . அருவியின் வேகத்தில் ஐயர் அடித்துச் செல்லப்பட்டார். 

கல்யாண தீர்த்தத்திலேயே, பாறைகளுக்குள் செருகிக்கொண்ட சுபத்ராவின் உடல், ஜூன் 7}ஆம் தேதி கிடைத்தது. ஜூன் 8}ஆம் தேதி, ஐயரின் உடல், பாபநாசம் அருவி கீழே விழுந்து கொப்பளிக்கும் குளத்தில் கிடைத்தது. 

வ.வே.சு.ஐயர் தாமிரவருணிக்குள் தஞ்சமடைந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன், வீர சாவர்க்கர் எழுதினார்: உன்னுடைய நற்குணங்கள் பற்றி எழுத பேனா துடிக்கிறது. எதிரிகள் உன்னைக் காட்டிக்கொடுத்தபோதும் நீ கலங்காமல் எப்படி நின்றாய்...

கடமைப்படாதவர்களுக்கும் தொண்டு செய்தாய் . . . துளியும் உனக்கென புகழ் நாடவில்லை . . .பேனா உடைந்து விட்டதே. 

விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த கவியரங்கமொன்றில், வ. வே.சு.ஐயரைப் பற்றி, கவியரங்கத் தலைமை ஏற்ற தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இவ்வாறு உரைத்தார்: "நீர் வீழ்ச்சிக் கொடுமையால் தமிழ் வீழ்ச்சி அடைந்ததன்றோ!' 

-தொடரும்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/பொருநை-போற்றுதும்-3078734.html
3078738 வார இதழ்கள் வெள்ளிமணி தாயைப் போற்றுவோம்! DIN DIN Friday, January 18, 2019 03:47 PM +0530  

அம்மாவின் அன்பு போற்றுதலுக்குரியது. அம்மா என்ற சொல், பாசம், பரிவு, தியாகம், தாழ்மை, எளிமையின் பிரதிபலிப்பு. தாய் மடியில் அன்பை உணராதவரோ, தாயின் தோளில் உறங்காத மனிதரோ எவரும் இலர்! 

தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் என்ற வரிசையில் முதல் தெய்வம் தாய்தான். 

அம்மாவின் அன்பு, அவரின் பேச்சு குழந்தையை வீரமுள்ள அறிவுள்ள குழந்தையாக்கும். தாயின் அன்புக்கு எதையும் ஈடாக வைக்க முடியாது. 

பரிசுத்த வேதாகமத்தில், இயேசுவின் தாய் அன்னை மரியாளும் இயேசுவும் ஒரு திருமணத்திற்குச் சென்ற ஒரு நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ""கானா ஊரிலே ஒரு கல்யாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கே இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும்  அந்த கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். கல்யாண விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது இயேசுவின் தாய் அவரை நோக்கி அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை' என்றார். அதற்கு இயேசு,  "அம்மா என் வேலை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி, " அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள்' என்றார். (யோவான் 2:1}5).

இயேசு தம் தாயின் சொற்களை கேட்டார். அவர் வேலைக்காரரை நோக்கி கூறிய சொற்களையும் கேட்டார். தம் தாய் தன்னிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்தார். அங்கே யூதர்கள் பருக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஜாடிகளைக் கண்டார். அங்கே ஆறு கற்ஜாடிகள் இருந்தன. இயேசு, வேலைக்காரரைப் பார்த்து ஜாடிகளில் தண்ணீர் நிரப்பும்படி கூறினார். நிரப்பியவர்கள் ஜாடிகளில் வாய் நிரம்பும்படி தண்ணீர் நிரப்பினார்கள். இயேசு, அவ்வேலைக்காரரைப் பார்த்து ஜாடியில் உள்ளதை மொண்டு பந்தி விசாரிப்பவரிடம் கொடுக்கும்படி சொன்னார். 

அவர்கள் கொண்டு வந்து பரிமாறிய தண்ணீர், நல்ல ருசியுள்ள, வாசனை நிறைந்த உயர்ந்த திராட்சை ரசமாக மாறியிருந்தது. பந்தி விசாரிப்பவர் ருசி பார்த்து வியந்து போனார். மணமகனை நோக்கி, "இவ்வளவு விலை உயர்ந்த திராட்சை ரசத்தை வைத்திருந்தீரே' என்று பாராட்டினார். தம் தாயின் சொற்படி இயேசு, அவர்களின் குறையைப் போக்கி நிறைவாக்கி தண்ணீரை - திராட்சை ரசமாக மாற்றி இவ்வுலகில் அற்புதம் செய்தார். 

தண்ணீர், திராட்சை ரசமாக மாறிய அற்புதம் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் சீடருக்கும் வேலைக்காரருக்கும் மட்டுமே தெரியும். இயேசு, இந்த அற்புதத்தை செய்ய வல்லவர் என்று தாய் மரியாளுக்கு தெரிந்திருந்தது. தெய்வமே தன் வயிற்று பிள்ளையானாலும் மரியாள் தன் மகனை உயர்த்தி தன்னை தாழ்த்தி, தான் பாசமிகு அம்மா என்பதை காட்டி உயர்ந்த அம்மாவாக போற்றப்படுகின்றார். 

இயேசு தேவகுமாரனாய் இருந்தாலும் தம் தாய் தந்தையை மதித்து கீழ்ப்படிந்து சொற்கேட்டு தம் பெற்றோரை பெருமைபடுத்தினார். தம் தந்தையின் தொழிலாகிய தச்சு தொழிலையும் செய்தார் என அறிகிறோம்.

நாமும் இயேசுவை பின்பற்றி நமது அம்மாவையும் அப்பாவையும் போற்ற வேண்டும். பெற்றோரை போற்றுவோர் வாழ்வில் உயர்வடைவர்.

- தே. பால் பிரேம்குமார்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/தாயைப்-போற்றுவோம்-3078738.html
3078737 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! Friday, January 18, 2019 03:44 PM +0530  

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து; காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ அவனே உண்மையான அழகுள்ளவன். அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள், ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.     

- புத்தர்

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன. குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது. அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் 

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார். அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார். எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப் பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்

ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன் யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத் தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ, எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால் இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய் இருக்க நேருகிறதோ  அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும் ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம் 

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்; தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன். அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும் சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில் அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை. அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு. என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன? அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக் கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும் துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள். பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்; சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர் 

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது. தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

-  சுவாமி கமலாத்மானந்தர்

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/பொன்மொழிகள்-3078737.html
3078736 வார இதழ்கள் வெள்ளிமணி விருத்திக்கு வித்திடும் விருந்து DIN DIN Friday, January 18, 2019 03:40 PM +0530  

தற்காலத்தில் மண்டபங்களில் திருமணம் பிற நிகழ்வுகளில் ஊரழைத்து நடக்கும் பெரிய விருந்துகளில் வாசலில் நிற்கும் காவலர்கள் பசியோடு பரிதாபமாக யாசிப்பவர்களை யோசிக்காது ஏசி விரட்டுவர். உல்லாச கார்களில் தள்ளாடி வருவோர் நிலையில் தட்டுகளில் பரிமாறும் வகைவகையான தொகை தொகையான உணவுகளைத் தொட்டு தொட்டு பிட்டு சாப்பிட முடியாமல் பெருமூச்சு விட்டு இனிப்பு கொதிப்பு கொழுப்பு சாப்பிட கூடாது என்று எக்காளமாய் சொல்லி எழுந்து செல்ல குப்பையில் கொட்டப்படும் கோர காட்சியைக் காணும் பொழுது ஈரம் இரக்கமுள்ள நெஞ்சு துடிக்கிறது. இவ்விருந்துகள் விரும்பத்தகாத இரும்பு இதயம் படைத்த இரக்கமற்ற அரக்க குணம் உடையவர்களின் கோமாளி கூத்து. 

உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள். அல்லாஹ் அளவு மீறியவர்களை நேசிக்க மாட்டான் என்று எச்சரிக்கிறது எழில் மறை குர்ஆனின் 7}31 ஆவது வசனம். அளவு மீறுதல் என்ற சொற்றொடர் ஆடம்பரமாக அளவின்றி உணவைத் தயாரித்து நியாயமின்றி விரையமாக்கி வீணாக்கி வீசி எறிவதைக் குறிக்கிறது. இச்சொற்றொடர் மீதூண் உண்டு மீளா நோய்க்கு ஆளாகி அவதியுறுவதைத் தடுக்க தரப்படும் எச்சரிக்கை. அளவுக்கதிமாக விரையம்  செய்வோர் படைத்தவனுக்குப் பணியாத சைத்தானின் சகோதரர்கள் என்று சாடுகிறது. 17}27 ஆவது வசனம். ஒரு பருக்கையை கூட விழுந்து விட்டதே என்று விடக்கூடாது என்ற கோமான் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. உங்களில் ஒருவர் சாப்பிடும்பொழுது ஒரு துண்டு உணவு கீழே விழுந்துவிட்டால் எடுத்துக் கழுவி சுத்தமாக்கி சாப்பிடவேண்டும். அறிவிப்பவர் } அனஸ் (ரலி)  நூல் - முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

இல்லற வாழ்வின் நல்லறங்களில் ஒன்று நல்ல முறையில் நாடி வரும் விருந்தினர் தேடிய உணவைப் பரிமாறி கூடி உண்பது. அவ்விருந்தினர் பசி தீர்ந்து பக்குவமாய் படைத்தவனுக்கு நன்றி நவிலும் பொழுது அந்நன்றியின் பயன் விருந்து கொடுத்தவன் வாழ்வில் என்றும் ஏற்றம். உண்டவர்கள் அருந்திய உணவுக்கு அல்ஹம் துலில்லாஹ் என்று அல்லாஹ்விற்கு நன்றி சொல்லும் பொழுது நம் நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால் தோன்றும் இன்பம் இம்மை மறுமை இரண்டிலும் நமக்கு நல்வாழ்வை நல்கும். ஆயுள் நீட்டிக்கும் அமிர்தம் ஆனாலும் விருந்தாளியை வீட்டிற்கு வெளியில் அமர வைத்துவிட்டு வீட்டில் உள்ளோர் மட்டும் உண்பது கூடவே கூடாது. வீட்டில் இருப்பதை விருந்தாளியோடு பங்கிட்டு உண்பதே விருந்தோம்பலின் உயர்வு. 

நாளும் விருந்தை எதிர்பார்த்து விருத்தினருக்கு விருந்து படைப்பது விரும்பத்தக்க விழுமிய குணம். அக்குணமுடையாரை எத்துன்பமும் துன்புறுத்தாது. நாளும் விருந்தாளிக்கு விருந்து கொடுத்து அதன் பின்னரே உணவு உண்ட இப்பாஹீம் நபி அவர்களை ஏக இறை கொள்கையை ஏற்காத  கொடுங்கோல் மன்னன் நம்ரூது நெருப்பு குண்டத்தில் வீசிய பொழுது நெருப்பு அவர்களைத் தீண்டவில்லை. 

உண்டு பசி தீர்த்து செல்லும் விருந்தினரை உபசரித்து அனுப்பி அடுத்த விருந்தினரை ஆவலோடு எதிர்பார்ப்பவர் மறுமையில் மட்டற்ற பேறுகளைப் பெற்று  பேரின்பமாய் வாழ்வார். விருந்தினர் முகம் கோணாது உபசரிக்க வேண்டும். விருந்தினருக்கு  விருந்து படைப்பவரின் விளைநிலத்தில் விதை நட்டு வித்திட்டதைவிட விளைச்சலில் விருத்தியைக் காணலாம். 

வானவர்கள் மனித உருவில் விருந்தினர்களாக வந்தபொழுது விருந்தினரைக் கண்ணியப்படுத்தும் இறைகட்டளைப்படி ஒவ்வொரு விருந்தாளிக்கும் ஓர் ஆட்டின் இறைச்சியைப் பொரித்து வைத்தார்கள் இப்ராஹீம் நபி. பின்னரும் விருந்தாளியைக் கண்ணியப்படுத்த கட்டளை பிறப்பிக்கப்பட ஒவ்வொருவருக்கும் ஒரு காளை கன்றின் மாமிசத்தைப் பொரித்து வைத்தார்கள். அதன்பின் அதே கட்டளை மீண்டும் இடப்பட்டதும் திகைத்த இப்ராஹீம் நபி உணவைச் சுவையாய் வகையாய் வழங்குவது விருந்தினரை உபசரிக்கும் உரிய முறையன்று என்று உணர்ந்து வந்த விருந்தினர்களுக்கு இப்ராஹீம் நபி நேரடியாக தானே பணிவிடை செய்து விருந்து பரிமாறினார்கள். அப்பொழுது விருந்தினரைக் கண்ணியப்படுத்தியதாக இறை செய்தி கிடைத்ததைச் செம்மறை குர்ஆனின் 51} 24 ஆவது வசனம் தெரிவிக்கிறது. உணவு அளிப்பது மட்டும் விருந்தினரை உபசரிப்பதாக ஆகாது. பணிவோடு பாங்காக பரிமாறுவதே விருந்தினரைக் கண்ணியப்படுத்துவது என்று பெரியோர்கள் கூறுவர். 

இதனை, வலியுறுத்தும் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழிகள். யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ அவர் தன்னிடம் வரும் விருந்தினரைக் கண்ணியப்படுத்த வேண்டும். அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்} புகாரி, முஸ்லிம். உணவு தட்டு வைக்கப்பட்டால் அத்தட்டு திரும்ப எடுக்கப்படும் வரை எவரும் எழ கூடாது. ஒருவருக்கு வயிறு நிரம்பி விட்டாலும் கூட்டத்தினரின் வயிறு நிரம்பும்வரை அவரின் கையைத் தட்டிலிருந்து எடுக்கக் கூடாது. ஏனெனில் அவருடன் சாப்பிடுபவருக்கு உணவு தேவைப்படும் நிலையில் வெட்கப்பட்டு அவரின் கையை எடுத்துவிடக் கூடும். அறிவிப்பவர் } இப்னு உமர் (ரலி) நூல்} இப்னு மாஜா.

ஆடம்பர விருந்தெல்லாம் விருந்தல்ல. வீடு தேடி வரும் தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்கும் பசி தீர பரிமாறி உண்ண செய்து பசிபோக்கும் விருந்தே விருத்திக்கு வித்திடும் விருந்து என்பதை உணர்ந்து உண்மையான பசியாளிக்கு உணவு அளிப்போம். உயர்வு பெறுவோம்.

- மு.அ.அபுல் அமீன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/விருத்திக்கு-வித்திடும்-விருந்து-3078736.html
3078735 வார இதழ்கள் வெள்ளிமணி "எந்தரோ மகானுபாவுலு..!' DIN DIN Friday, January 18, 2019 03:36 PM +0530  

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வசித்தவர். ஸ்ரீ வால்மீகியின் அவதாரமென்று கருதப்படுபவர். நாரதர் இவர் கனவில் தோன்றி "ஸ்வரார்ணவம்' என்ற கிரந்தத்தை அளித்தார். 96 கோடி ராமநாம ஜபம் செய்து ஸ்ரீராமபிரானை ப்ரத்யக்ஷயமாக பார்த்தவர். "ராம' என்ற இரு அக்ஷரங்களை நினைத்து விட்டால் வேறு ஒன்றும் அவர் மனதில் தோன்றவே தோன்றாது. எளிய உஞ்சவிருத்தி வாழ்க்கையை மேற்கொண்டு ஸ்ரீராமனின் புகழ்பாடும் கீர்த்தனங்களை இயற்றினார். பலவித கர்நாடக சங்கீத ராகங்களினால் மாலை தொடுத்து சங்கீதத்தினால்தான் பகவானுக்கு இவர் செய்யும் ஆராதனை, அவருடைய எல்லா கிருதிகளுமே அழகு. அவருடைய ஸ்மரணத்தின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. இவருடைய கீர்த்தனங்கள் உலகில் இவர் காலத்திலேயே பிரஸித்தி அடைந்தன.

இவருடைய ஆழ்ந்த ராம பக்தியையும், இசைப்புலமையையும் கேள்வியுற்று பல ஊர்களிலிருந்து பல சங்கீத மேதைகள் இவரைக்காண திருவையாறுக்கு வந்து சென்றனர். அப்படிவந்தவர்களில் ஒருவர், கேரள மாநிலத்தில் ராமமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த "கோவிந்த மாரார்' என்ற சிறந்த நாதயோகி. இவர் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பல்லவியை ஆறுகாலங்களில் அனாயசமாகப் பாடுபவராகத் திகழ்ந்ததால் "ஷட் கால கோவிந்த மாரார்' என்று அழைக்கப்பட்டார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய வித்வானாக இருந்தார்.  "தனக்கு ராமபக்தியை விட உயர்ந்த பதவி உலகத்தில் வேறு என்ன இருக்கிறது?" என்ற வைராக்யத்துடன் வாழ்ந்தவர். தியாக பிரம்மத்தைக் காண கோவிந்தர் மிகவும் ஆவல்கொண்டு திருவையாறுக்கு ஒரு சமயம் வந்தார்.

கோவிந்தமாரார் வந்த சமயத்தில், ஸ்ரீ தியாக பிரம்மம் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருந்தார். புகழ்பெற்ற வித்வான் மாராரைக் கண்டதும் தியாகராஜருடைய சீடர்களுக்கு வியப்பும், பரபரப்பும் உண்டாயிற்று. அதே சமயம் தங்களது குருவின் தியானத்தின் இடையே குறுக்கிடவும் பயம் ஏற்பட்டது. சற்றுநேரத்தில் தியானம் கலைந்த தியாகராஜர், மாரார் காத்திருப்பதை அறிந்து அவரைக் காக்க வைத்ததற்காக சீடர்களைக் கடிந்துகொண்டார். வந்த விருந்தாளியிடம் மன்னிப்பும் கேட்டார். இதனால் பதைபதைத்துப் போன மாரார், "இப்படி தாங்கள் மன்னிப்புக் கேட்கும் படியான அருகதை எனக்கில்லை, தங்களுக்குள்ள ராம பக்தியை எனக்குக் கொஞ்சம் பிச்சை  போட்டால் போதும்" என்று சொல்லிவிட்டுக் கண்ணீர் உகுத்தார்.

மாரார், தியாகராஜரை சந்தித்த தினம் ஒரு "ஏகாதசி' நாள். அன்றிரவு ஏகாதசி பஜனைக்கு வேண்டிய ஏற்பாடுகளை வழக்கம்போல் சீடர்கள் செய்திருந்தனர். ஆனால் தியாகபிரம்மம் சீடர்களிடம், "இன்றைக்கு கோவிந்த மாரார் பஜனை செய்வார். நாம் கேட்டுக் கொண்டிருப்போம்' என்று சொன்னார்.தியாகராஜர் முன்னால் பாடவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்த கோவிந்தமாராருக்கு இந்த வார்த்தை தேனாகப் பாய்ந்து தன்னுடைய ஏழு தந்திகள் கொண்ட தம்பூராவை மீட்டிக்கொண்டு, இனிய குரலில் கானம் இசைக்கத்தொடங்கினார். "சந்தன சர்ச்சித' என்று தொடங்கும் ஜயதேவர் அஷ்டபதியை விடியவிடியப் பாடினார். ஜய தேவரின் அஷ்டபதியிலும், மாராரின் கானத்திலும், லய லாவண்யத்திலும்  மனம் பறிகொடுத்த தியாகராஜர், அவரைப் பாராட்டி அக்கால வழக்கப்படி அவருடைய தம்பூராவின் சிரத்தில் ஒரு பட்டு நூலைச் சுற்றி அவரிடம் தனக்குள்ள பெருமதிப்பை வெளியிட்டார்.

மிகவும் பரவச நிலையில் இருந்த மாராரும் தியாக பிரம்மத்திடம் ஒரு கீர்த்தனம் பாடும்படி வேண்டினார். சுவாமிகளும் மனமுவந்து மாராரைப் போன்று ஒரு சிறந்த ராமபக்தரைக் காண கிடைத்தது தன்னுடைய பாக்கியம் என்றும், தான் முன்னதாகவே திருவாங்கூருக்கு வந்து அவரை சந்தித்திருக்க வேண்டும் என்றும், தன்னுடைய பக்தன் ஒருவனை தியாகையரின் இடம் தேடி வரும்படிச் செய்து தியாகராஜனுடைய அன்பராக்கி ஸ்ரீராமன் கிருபை புரிந்துள்ளான் என்றும், மாராரைப் போன்று பகவானுடைய பாதார விந்தங்களில் தன்னுடைய இதயக்கமலத்தை அர்ப்பணம் செய்பவர்கள் அனைவருக்கும் தான் மிகவும் கடமைபட்டவன் என்றும் சொல்லி, இன்று நாம் அனைவரையும் ஈர்க்கவல்ல, நாம் உலகெங்கும் அனுபவித்துப் பாடும் "எந்தரோ மகானுபாவுலு" என்றும் ஸ்ரீராக பஞ்சரத்ன கீர்த்தனையைப் பாடினார். இந்த கீர்த்தனையில் தவமுனிசிரேஷ்டர்கள் முதல் யார்யார் எந்த எந்த வகையில் மேன்மையுடையவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இட்டு அத்தனை பேருக்கும் தன் வந்தனம் என்று தெரிவிக்கின்றார் தியாகபிரும்மம். 

தியாகராஜரால் "மகானுபாவர்கள்' (பெருமக்கள்) என்று குறிப்பிடப்பட்டவர்களுள் கோவிந்தமாராரும் ஒருவர் என்று ஊகிக்க முடிகின்றது. இந்த அதிசயமான கீர்த்தனத்தை சுவாமிகள் பாடக்கேட்ட மாரார் மெய் மறந்தார். தியாக பிரம்மத்தின் இசைப்புலமையையும், பக்தியையும் மேலும் அனுபவிக்க விருப்பம் கொண்டு சில நாட்கள் அவரின் தனிப்பட்ட விருந்தினராகத் தங்கிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தார் என்பர்.

ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 172 ஆவது ஆராதனை விழா திருவையாறில் காவிரிக்கரையில் அவருடைய சமாதி வளாகத்தில் ஜனவரி 21} இல் ஆரம்பமாகிறது. ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் நாடெங்கும் உள்ள சங்கீத வித்வான்களும், விதூஷிகளும் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துகின்றனர். ஜனவரி 25 }ஆம் தேதி வெள்ளிக்கிழமை (புஷ்ய பகுள பஞ்சமி தினம்) அவருடைய ஆராதனை நாளாகும். அன்று காலை 9 மணி அளவில் அவருடைய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் கோஷ்டிகானமாக பாடப்படும். ஏற்பாடுகளை ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்சவ சபா விரிவாகச் செய்துள்ளது. தஞ்சாவூரிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவையாறு.

- எஸ்.வெங்கட்ராமன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/எந்தரோ-மகானுபாவுலு-3078735.html
3078733 வார இதழ்கள் வெள்ளிமணி பூசத்தில் அருளும் மாமதலை! DIN DIN Friday, January 18, 2019 03:25 PM +0530  

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடி வரும் நன்னாள் தைப்பூசமாகும். தைப்பூசத்திற்கும் பெருமாளுக்கும் தமிழகத்தை வளமாக்கும் காவிரிக்கும் ஒரு தொடர்புண்டு. 

நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்  மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் உத்தரவுப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்கு திருச்சேறை வழியே கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அமைச்சர் நரசபூபாலனுக்கு சாரநாதப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி. திருப்பணிக்கு என்று வண்டிக்கு ஒரு கல் என இங்கே இறக்கி வைத்தான். காதுக்கு வந்த தகவலை உறுதி செய்ய ,மன்னன் தலத்துக்கு வந்தான். பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். மனம் மகிழ்ந்த மன்னனே, இந்தக் கோயிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான். 

மஹாபிரளயம் நடப்பதற்கு சிறிது காலம் முன்பு  பிரம்மன் மண் எடுத்து ஒரு கடம் செய்து, அதில் வேதங்களை அழிந்து விடாமல் பாதுகாப்பாக வைத்து காப்பாற்ற எண்ணினான்.  உலகெங்கும் பல இடங்களில் மண் எடுத்துப்பானை செய்ய, எல்லாம் உறுதியின்றி உடைந்து போனது. அனைத்தையும் எப்போதும் காக்கும் கடவுளான திருமாலைத் துதி செய்தான். அவருக்குப் பிடித்தமானதும்  பல ரிஷிகள் எப்போதும்  தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான ஸார க்ஷேத்திரத்தில் மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூறினார். பிரம்மனும் ஸார க்ஷேத்திரம் என்னும் திருச்சேறை வந்து மண் எடுத்துக் கடம் செய்து வேதங்களை அதிலிட்டு வைத்துக் காத்தார். மண் எடுத்த அந்த இடமே இன்றும் சார புஷ்கரணி என்னும் திருக்குளமாக உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காவிரித்தாய் தவமிருந்த தலம் 

ஒரு நேரத்தில் விந்திய மலையடியில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கோதாவரி நர்மதா காவேரி, ஆகிய 7 நதிகளும் கன்னிகைகளாக  மாறி விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியில் சென்ற விச்வாவஸ்  என்னும்  கந்தர்வன் இவர்களை கண்டதும் வணங்கிவிட்டுச் சென்றான். இவன் வணங்கியது யாரை என்று அவர்களுக்குள் சந்தேகம் வந்துவிட்டது. அப்போது மீண்டும் அவ்வழியே திரும்பி வந்த அவனைக் கண்டு "தாங்கள் யாருக்கு வணக்கம் செலுத்தினீர்கள்?' என்று கேட்டனர். "உங்களில் யார் உயர்ந்தவரோ, அவருக்கே!' என்று மீண்டும் மறைபொருளாகச் சொல்லிச் சென்றுவிட்டான். 

மற்ற நதிகள்  விலகிக்கொள்ள, கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் உயர்ந்தவர் என்று இருவருக்குள்ளும் வாதம் வளர்ந்து முடிவில் பிரம்மனிடமே கேள்வியோடு சென்றனர். காவிரி தனக்கு பெருமைமிக்கவள் என்ற பெயரைத்  தரவேண்டுமென்று கேட்டாள். பிரம்மன் தன்னால் முடியாதென்றும் சர்வ வல்லமை பொருந்திய பெருமாள் திருவடியைத் தொட்டு கழுவியதால் கங்கை பெருமை பெற்றாள். 

உனக்கு அப்பதம் வேண்டுமென்றால் ஸார புஷ்கரணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து தவஞ்செய் ! என்றார். காவேரி கோடையில் பஞ்சாக்கினி நடுவிலும், குளிர் காலத்தில் நீரின் மத்தியிலும் கடுந்தவஞ் செய்தாள். திருமால் ஒரு தைமாத பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வந்தார். ஆயிரம் கோடி சூரிய ஒளியோடு வந்த குழந்தையை கண்ட காவிரி, அது  எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது வாரி எடுத்து மடியிலிருத்திக் கொண்டாள். 

எம்பெருமான் தனது மழலை உருவிலிருந்து மாறி ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ரத்துடன் காட்சியளித்தார். இக்காட்சியில் பேரானந்தம் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானை வணங்கினாள். காவேரிக்கு என்ன வேண்டும் என பெருமாள் கேட்டார். தாங்கள் இதே கோலத்தில் இங்கு பஞ்ச (ஐந்து) லட்சுமிகளுடன் நிரந்தரமாக காட்சியருள வேண்டுமென்றும், கங்கையைவிட மேன்மையை தனக்கு தந்தருள வேண்டுமெனவும் வேண்டினாள். 

"அவ்விதமே ஆகுக' வென வாக்கு அருளிய எம்பெருமான் நான் திரேதாயுகத்தில் உன்னிடத்தில் வந்து  தங்குவேன் என்று கூறினார். அதன்படி, ராமாவதாரம் முடிந்து, விபீஷணன் ராமனின் குல சொத்தான எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டு காவிரிக்கு மரியாதையும்  சிறப்பும் சேர்த்தார். திருமால் காவிரிக்கு நேரிடையாகக் காட்சி தந்தது தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரிக்கும்போது இந்த ஸார புஷ்கரணியில் நீராடுவது 12  மகாமகத்தில் நீராடியதற்கு ஈடானதாகும் எனப்படுகிறது.

திவ்ய பிரபந்தத்தில் 13 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். பெரியவரான எம்பெருமான் "மதலை' எனப்பட்ட குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் "மாமதலை' யாய் என அழைக்கிறார் காவிரிக்கும் மேன்மை கிடைத்ததால் கங்கையிற் புனிதமாய காவேரி என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் அழைக்கிறார்.

இதன் அடிப்படையான உற்சவங்கள் தைப்பூசத் திருத்தேரோட்டத் திருவிழா எதிர்வரும் 2019 ஜனவரி 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சூரியபிரபை, சேஷவாகனம், கருடவாகனம், அனுமந்தவாகனம் என தினம் ஒரு வாகனப்புறப்பாடு நடைபெறுகிறது.  உற்சவத்தில் முக்கிய நிகழ்வாக ஜனவரி 18ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், இரவு யானை வாகனமும் நடைபெறும். 19ஆம் தேதி பஞ்சலட்சுமிகளுடன் கோ ரத சேவையும், 20-ம் தேதி குதிரை வாகனப் புறப்பாடும் 22ம் தேதி  தைப் பூசத்தன்று திருத்தேரில் பஞ்ச லட்சுமிகளுடன் காவிரிக்குக் காட்சி கொடுத்த நிகழ்வும் நடைபெறுகின்றது. 22-ஆம் தேதி திருக்கொடி இறங்கி 28ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும்.  

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்சவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம்  சாத்துகின்றனர். இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முழுகி எழுந்த புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது.

சந்நிதி திறக்கும் நேரம்:

காலை 6-11 ;  மாலை 5-8 வரை. 

தொடர்புக்கு: 0435}2468001/ 94435 16075.

- இரா.இரகுநாதன் 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/பூசத்தில்-அருளும்-மாமதலை-3078733.html
3078729 வார இதழ்கள் வெள்ளிமணி சீரான வாழ்வருளும் சின்னக்கடை மாரியம்மன்! Friday, January 18, 2019 03:09 PM +0530  

தன் திருவடித் தாமரையை தஞ்சம் என்று பற்றிக்கொள்ளும் பக்தர்களின் இன்னல்களைக் களைத்து இன்ப வாழ்வளிக்கும் தாயாய் பல்வேறு தலங்களில் வீற்றிருந்து நம்மைத் தாங்கி காக்கின்றாள் அன்னை பராசக்தி. அவற்றுள் ஒன்றாய், சென்னைவாசிகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஊர்களில் வாழும் மக்களுக்கும் அருள்புரியும் தேவியாய் சின்னக்கடை மாரியம்மன் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்புரியும் கோயில் சென்னையில் என்.எஸ்.சி.போஸ் ரோடு தங்கசாலைத் தெரு சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் ஈஸ்ட் இண்டியா  கம்பெனியில் சென்னையில் 1775}இல் குண்டப்பன் என்பவர் மேஸ்திரி வேலை பார்த்து வந்த காலத்தில் அவருக்கு நண்பர்கள் மூலம் ஆந்திரமாநிலத்தில் இந்த கோயிலின் மூலஸ்தான கற்சிலை (அம்மன் சிலை) இனாமாகக் கிடைத்தது. அந்த சிலையை சென்னைக்கு கொணர்ந்து தன் சொந்தச் செலவில் இக்கோயிலைக்கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு பைவபவத்தையும் நிறைவேற்றி ஒரு கால உச்சிவேளை பூஜிக்கும் வழி செய்தார். இந்த அம்மனின் முதல் பெயர் சீதளசக்தியம்மன் என்று கூறப்படுகிறது. பின் இதன் ஸ்தாபகர் அம்மனுக்கு புராணங்களில் சிறப்பிக்கப்பட்ட ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி என்ற திருநாமம் இட்டு அழைக்கலானார்.

பிரதான நுழைவு வாயிலில் நுழைந்த உடன் கிழக்கு திசையை நோக்கி மூலஸ்தானத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் சாந்தமாக, சௌமியமாக, ஆனந்த புன்னகையுடன் அழகு மிளிர, கருணைப் பொழியும் கண்களால் தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு வாரிவழங்கும் அமுத சுரபியாய் அன்புத்தாயாக கம்பீரமாக காட்சியளிக்கின்றாள். அம்மனின் வலப்புறம் விநாயகர் சந்நிதியும், இடப்புறம் காசிவிஸ்வநாதர், விசாலட்சி சந்நிதியும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நாகர் சிலைகள் பிரதிஷ்டையாகியுள்ளது. 

ஆடி மாதம் மற்றும் தை மாதம் சூரிய ஒளிக்கதிர்கள் அம்மனின் மேல் நேடியாக விழுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும். பிரதி மாதம் பௌர்ணமி பூஜை, ஆடி மாதம், நவராத்திரி காலங்களில் உற்சவங்கள், விஜயதசமி வீதியுலா, சித்ராபௌர்ணமி பூஜை என அனைத்து விசேஷ தினங்களும் ஆலய பரம்பரை அறங்காவலர் குழுவினரால் சிறப்பாக செய்யப்படுகிறது.

எங்கும் கேட்டறியாத நிலையில் இவ்வாலயத்தில் நினைத்த காரியம் கைகூட பிரதான வாயிலில் உள்ள அகண்டத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் தினமும் காலையில் கடையைத் திறக்கும் முன்பும், மீண்டும் இரவு மூடிய பிறகும் கடையின் சாவிக்கொத்தை அம்பாள் பாதத்தில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். மேலும் எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் கயிற்றில் சேர்க்கப்பட்டு திருஷ்டி மாலையை அம்மன் பாதத்தில் வைத்து எடுத்துச் சென்று வீட்டின் முன் வாசலிலோ அல்லது தொழில் ஸ்தானத்தின் முன் வாசலிலோ கட்டி வைத்தால் சகலதிருஷ்டிகளும் விலகும் என ஒரு நம்பிக்கை இப்பகுதியில் நிலவுகின்றது. இந்த ஆங்கிலப்புத்தாண்டில் அனைத்து நலன்களையும் பெற நாமும் இந்த அன்னையை சென்று தரிசிப்போம்!

- வசந்தா சுரேஷ்குமார்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/சீரான-வாழ்வருளும்-சின்னக்கடை-மாரியம்மன்-3078729.html
3078730 வார இதழ்கள் வெள்ளிமணி அறம் வளர்த்த அம்மன்! DIN DIN Friday, January 18, 2019 03:08 PM +0530
சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலையன் திருக்கோயிலில் இறைவியாக நின்று அருள்புரியும் அன்னை "அறம் வளர்த்த நாயகி'. இந்த அம்மன் பற்றிய கதை ஒன்று உண்டு. சுசீந்திரத்தை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த "பள்ளியறை நாச்சியார்' என்ற கன்னி 

தாணுமாலையன் கோயிலுக்கு வந்தார். கோயிலைச் சுற்றி வந்துபோது அவர், மாயமாய் மறைந்தார். இறைவன் அவரை ஆட்கொண்டார் என்பர்.இந்த நிகழ்ச்சி, 1444 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் நினைவாக, மாசி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

- சு. நாகராஜன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/18/அறம்-வளர்த்த-அம்மன்-3078730.html
3074904 வார இதழ்கள் வெள்ளிமணி குணம் தரும் கோபிநாதன்! Friday, January 11, 2019 10:00 AM +0530 ஆந்திரத்தில் உள்ள பெல்லாரி பகுதி தேசத்து நாட்டு மன்னன் வல்லாள தேவனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற கால்நடைகள் பசு மந்தைகள் இருந்தன. வறட்சி உண்டாகி நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. வல்லாள மன்னனும் மறைந்துபோக மனைவியும், மகனும் பணியாட்கள் பசு மந்தைகளுடன் பாண்டிய நாட்டுக்குப் பயணமானார்கள். ரெட்டியார் சத்திரம் என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் குன்றின் அடிவாரத்தில் தங்கி பசுக்களைக் காத்து வந்தனர். கோபிநாதன் தினமும் பகலில் மாடுகளை மேய விட்டு கையில் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு வாசிப்பதுமாகவும் மாலையில் தங்குமிடத்திற்குத் திரும்புவதுமாக இருந்தான்.
 சில ஆண்டுகளில் இப்பகுதியிலும் மழை குறையவே வறட்சி உருவாகி மாடுகள் தீவனமின்றி வாடத்துவங்கின. பசுநேசன் கோபி நாதன் எப்பாடு பட்டாவது ஆவினங்களைக் காக்க விரும்பினான். கோபிநாதன் அவர்களின் குலதெய்வத்திடம் மாடுகளுக்கு தீவனமாகப் புல், முளைத்து அனைவரின் வறுமையும் தீர்ந்தால் காணிக்கையாத் தன் உயிரை பிராணத்தியாகம் செய்கிறேன் என வேண்டிக் கொண்டான். அன்று இரவு நல்லமழை பெய்து, மலை முழுவதும் தீவனப்புல் மண்டியது. அப்பகுதியே செழிப்பானது. வேண்டுதல் நிறைவேறியதால் பிரார்த்தனையை நிறைவேற்ற மலை உச்சியில் உள்ள வேப்ப மரத்தில் எருதைக் கட்டி மர உச்சிக்குச் சென்று அங்கிருந்து எருதின் கொம்பில் பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தான்.
 மகனும் மாடுகளும் மறுநாள் கூட இருப்பிடம் திரும்பாததால் அவனது தாய் மகனைத் தேடிக்கொண்டு மலை உச்சிக்கு வந்தாள். கால்நடைகள் கோபிநாதனின் உடலைச் சுற்றியே நின்று கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்து நடந்திருப்பதை அறிந்த அவனது தாயும் உயிர் துறந்தாள்.
 இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர், மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் கோடாங்கி மூலம் முன் நடந்தவைகளைக் கூற திகைத்தார் ஜமீந்தார்.
 அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் ஜமீன்தாரைச் சந்தித்தார். "இம்மலை கோபாலன் அருள் பெற்ற மலை. கோவர்த்தனகிரியைக் குடையாய் பிடித்து ஆநிரைகளைக் காத்த கண்ணன் கோபிநாதன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். சென்ற கிருஷ்ணாவதாரத்தினைப் போலவே இப்பிறவியில் கோபிநாதன் என்ற பெயரோடு பசுக்களிடம் அதீதஅன்பு கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்து வர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய். மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையருள் பெற்று சிறப்பாய் என கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி, மலைமேல்இருந்த வேப்பமரத்தடியில் கோபி நாதனுக்கு குழல் ஊதுகின்ற பாவனையிலும் கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்த நிலையில் அவன் தாயார் கோப்பம்மாளுக்கும் சிலை அமைத்தார். இருவரும் எழுந்தருளும் கோயிலை அமைத்தார் . ஏராளமான பசுக்களை மலை கோபிநாதனுக்கு காணிக்கையாகச் செலுத்தினார். கருவறையில் மூலவருக்கு முன் உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
 ரெட்டியார் சத்திரம் அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயிலுக்கு சனிக்கிழமையும் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் வரவு அதிகம். போகி, பொங்கல் , மாட்டுப்பொங்கல் மூன்று நாள்களும் மக்கள் வரத்து அதிகமாகவே இருக்கும். போகியன்றும் பொங்கல் அன்றும் குடம் குடமாகப் பால் கொண்டு வந்து கோபிநாதனை அபிஷேகம் தரிசனம் செய்து அந்ததீர்த்தத்தை இங்கிருந்து பிடித்துச் சென்று மாடுகள்மீது தெளிக்க நோய்நொடிகள் துர்தேவதைகள் விலகிப்போகும் என்பது மக்களின் உறுதிப்பாடு. மாட்டுப்பொங்கல் அன்று பாலபிஷேகம் செய்து அந்தப் பாலை எடுத்துச் சென்று மாட்டுக்கு பொங்கல் வைத்துப் படைப்பது வழக்கம்.
 கால்நடைகளுக்கு நோய் என்றால், ஸ்ரீகோபிநாத சுவாமியை வேண்ட, வாயில்லா ஜீவனைக் காத்தருள்வார் என்பர். மாடுகள் சரிவர உணவெடுக்காமலிருந்தால் ஸ்ரீகோபிநாத ஸ்வாமியை வணங்கி, மலையில் உள்ள தீர்த்தம் அல்லது ஒரு பிடி புல்லை எடுத்துச் சென்று, பசுக்களுக்குத் தர மாடுகள் சரியாகும். இவருக்குப் பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது மக்களின் உறுதி.
 திண்டுக்கல் -பழநி சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கோபிநாத மலை அமைந்துள்ளது.
 தொடர்புக்கு 79046 57671 / 96005 19180.
 - ஆர். அனுராதா
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/குணம்-தரும்-கோபிநாதன்-3074904.html
3074987 வார இதழ்கள் வெள்ளிமணி பொருநை போற்றுதும்! 23 - டாக்டர் சுதா சேஷய்யன் Friday, January 11, 2019 10:00 AM +0530 1925-ஆம் ஆண்டு ஜூன் 16 -ஆம் தேதி, தமிழ் ஸ்வராஜ்யா நாளிதழில், புதுச்சேரி பாரதிதாசன் அவர்கள் கவிதையொன்றைப் படைத்திருந்தார். அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்:
 ..............................நாம் என் செய்வோமால்
 நலம் விளைக்கும் கற்பகத்தைப் புது நினைப்புக்
 குன்றத்தை, குன்றம் சார் குளிர் புனல்தான்
 கொண்டதுவோ பகைவர் உளம் குளிர்ந்ததேயோ?
 குன்றம் சார்ந்த குளிர்புனலான பொருநை அப்படி யாரைக் கொண்டுவிட்டாள்? என்னதான் செய்துவிட்டாள்? பொருநைக் கரையோரமாகவே அவளுடைய ஊற்றுக்கண் நோக்கி நகர்ந்ததுபோல, வரலாற்றின் கரையோரமாக 1920 -களின் தொடக்ககாலத்துக்கு நகர்வோம்.
 மதராஸ் ஜார்ஜ் டவுன் பகுதியிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது "தேச பக்தன்' இதழ். இந்த இதழில் வெளியான தலையங்கம் ஒன்றைக் குறித்து ராஜதுவேஷ குற்றம் சாட்டி, இதழின் கூட்டு ஆசிரியர்களான பி.வி.ராஜகோபாலாசாரி, டி. மகாலிங்க ஐயர், வி.வி.எஸ்.ஐயர் ஆகியோர் மீதும், இதழின் சொந்தக்காரரான நாகேஸ்வர சாஸ்திரி மீதும், மதராஸ் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரúட் ஜாமீனில்லாத கைது வாரண்ட் ஒன்றை, 1921, செப்டம்பர் 9 -ஆம் நாள் பிறப்பித்தார். மற்ற மூவரும் அதே நாளில் கைது செய்யப்பட, வெளியூர் சென்றிருந்த வி.வி.எஸ். ஐயர் மட்டும் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
 அது 1921,செப்டம்பர் 11. போலீஸாரோடு செல்வதற்கு முன், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த தம்முடைய நண்பர் பாரதியாரைச் சந்தித்தார் ஐயர். "என்ன பாரதி, மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே.. உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?' என்று அன்பும் கனிவும் தோழமையும் பொங்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
 அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்பாக, இரவே பாரதி காலமானார். சுப்பிரமணிய பாரதி என்னும் செல்வத் திருமகன் நிலவுலகை நீத்தபோது, பொருநைத் தாய் பேதலித்திருக்கவேண்டும். அந்தப் பேதலிப்பு, சுப்பிரமணிய ஐயர் என்னும் வி.வி.எஸ். ஐயரின் மறைவுவரை தொடர்ந்துவிட்டது போலும்!
 மேற்கூறிய "தேசபக்தன்' வழக்கின் விசாரணை, செப்டம்பர் 12 -ஆம் தேதி தொடங்கியது. மற்ற மூவருக்கும் தொடக்கத்தில் வழக்கறிஞர்கள் இருந்தார்கள்; ஐயருக்கு இல்லை. 1920-இல், ஐயர் வேலைக்குச் சேர்ந்தபோது, தேசபக்தன் இதழை நடத்தியவர் எம்.எஸ். காமத். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக, 1920-இல் முடிவிலேயே நாகேஸ்வர சாஸ்திரிக்கு இதழை விற்றுவிட்டார். சாஸ்திரியோடும் சாஸ்திரியால் நியமிக்கப்பட்ட பிற ஆசிரியர்களோடும் ஐயருக்கு ஒத்துப்போகவில்லை. 1921, ஆகஸ்ட் 28 -ஆம் நாள் பத்திரிகைப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்; தாம் விலகியதை அன்றைய தேதியிலேயே அறிவித்தும்விட்டார்.
 இதற்கிடையில், 1921, மே மாதம் 6 -ஆம் நாள் வெளியான தலையங்கம் குறித்துத்தான், வழக்கும் வாரண்டும்! செப்டம்பர் 12- ஆம் நாள் தொடங்கிய வழக்கு விசாரணை, 17-ஆம் நாள் தொடர்ந்தபோது, வழக்கறிஞர்கள் வைத்திருந்த மூவரும், தலையங்கம் வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரி விடுதலை பெற்றுக்கொண்டார்கள். ஐயர்மீது மட்டும் வழக்கு நின்றது. மே மாதம் முதல் வாரம் முழுக்கத் தாம் விடுமுறையில் இருந்ததைச் சுட்டிக் காட்டித் தாம் அத்தலையங்கத்தை எழுதவே இல்லையென்பதைத் தெரிவித்த ஐயர், எப்படியாயினும் இந்தியாவின் பாரமார்த்திகப் பெருமையைக் காப்பாற்றுவதற்கான அமைப்பிலேயே தம்முடைய எழுத்துகள் இருந்ததையும் கூறினார். இந்தியர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்னும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அப்போதைய அரசாங்கம், குறிப்பிட்ட தலையங்கத்தை ஐயர் எழுதவில்லையென்றாலும், ஆசிரியர் குழுவின் தார்மீகப் பொறுப்பு இவருக்கு உண்டு என்று வாதாடியது. இந்தியாவின் நலனையும் விடுதலையையும் உயிர்மூச்சாகக் கொண்ட ஐயர், மன்னிப்புக் கோர மறுத்தார். இதுவே அரசாங்கத்துக்கு வசதியானது. மற்றவர்கள் மன்னிப்புப் போர்வையில் தப்பித்துக் கொள்ள, தவறே செய்யாத ஐயருக்கு, 9 மாதங்கள் காவல் என்னும் தீர்ப்பு, செப்டம்பர் 19 -ஆம் நாள் வெளியானது. தன்னுடைய கணவர் நாட்டுத் தொண்டுக்காகச் சிறை செல்வதற்குத் தான் மகிழ்வதாகக் கூறி மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாள் கை கூப்ப, அப்பாவின் காலில் விழுந்து மகள் சுபத்திரா வணங்க, மகன் கிருஷ்ணமூர்த்தி "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷமிட, போலீஸாரால் ஐயர் அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் பெனிடென்ஷியரி என்றழைக்கப்பட்ட சென்னை மத்திய சிறைக்கும், பின்னர் பெல்லாரி மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
 பெல்லாரி சிறையிலிருந்து ஐயர் விடுதலையான பின்புதான், விதியின் ஆர்ப்பாட்டம் அதிகமானது. தேசியச் சிந்தனையை நவீன முறைமைகளையும் ஒருசேர போதிக்கக்கூடிய கல்விக்கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்னும் ஆசை இவர் உள்ளத்தில் முகிழ்த்திருந்தது. சென்னைக் கோடம்பாக்கம் தொடங்கி பல்வேறு ஊர்களுக்கும் சென்று பார்வையிட்டார். இந்த சமயத்தில்தான், திருநெல்வேலி, கோவில்பட்டிக்குச் சென்ற ஐயர், அருகிலிருக்கும் கல்லிடைக்குறிச்சிக்குச் சென்றார். அங்கிருந்த ஆசிரியர்கள், தாங்கள் நடத்திவந்த திலகர் வித்யாலயம் என்னும் பள்ளிக்கூடத்தை எடுத்து நடத்தும்படி ஐயரை வேண்ட, தம்முடைய நோக்கத்திற்குப் பயன்படும் என்பதால் ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர், தாமிரவருணிக் கரையில், சேரன்மாதேவியில் அழகான இடமொன்று விலைக்கு வர, கையில் காசில்லாத நிலையிலும், கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் செட்டியாரின் ஆதரவில் அதைப் பெற்றார். கல்விக்கூடம் தொடங்கும் அவா, பாரத்வாஜ ஆச்ரமமாகவும் தமிழ் குருகுலமாகவும் மலர்ந்தது. இப்படித்தான், திருச்சி வரகனேரி வேங்கடேச ஐயர் காமாக்ஷி அம்மாளின் மகன் சுப்பிரமணிய ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியன் என்பதன் சுருக்கமே வி.வி.எஸ்), சேரன்மாதேவி வாசியாக, பொருநைத் தாயின் ஸ்வீகாரப் புத்திரன் ஆனார்.
 தொடரும்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/பொருநை-போற்றுதும்-23---டாக்டர்-சுதா-சேஷய்யன்-3074987.html
3075007 வார இதழ்கள் வெள்ளிமணி செல்லப்பிராட்டி ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை! DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 காலப் பிரம்மம் என்ற காலத்தின் சக்தி வடிவம் தான் பார்வதி தேவி. அர்த்தப் பிரம்மம் என்ற ஒளியின் சக்தி வடிவம் இலக்குமி தேவி. நாதப் பிரம்மம் என்ற ஒலியின் சக்தி வடிவம் சரஸ்வதி தேதி. இந்த மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான் ஆதி பராசக்தி. இவரையே பரப்பிரம்ம சக்தி, பரம் பொருள் என்றெல்லாம் அழைக்கிறார்கள். அற்புத சக்திகள் நிறைந்த இந்த பரம்பொருள் ஆதிபராசக்திக்குத் தமிழகத்தில் ஒரு கோயில் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள செல்லப்பிராட்டி என்ற சிற்றூரில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அன்னையின் பெயர் ஸ்ரீலலிதா செல்வாம்பிகை.
 ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம், ஒரு பிரகாரம் என அழகாக அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறையில் எட்டு திருக்கரங்களுடன் நீண்ட சூலாயுதம் தாங்கி, நாகக் குடையுடன் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறாள் அன்னை.
 இந்த ஆலயம் மிக மிகத் தொன்மையானது. ராமாயண காலத்தில் (திரேதாயுகம்) ரிஷிய சிருங்கர் என்ற முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் இது. தசரத சக்ரவர்த்திக்குப் புத்திர காமேஷ்டி யாகம் நடத்திக் கொடுத்தவர் ரிஷிய சிருங்க முனிவர் என்பது தெரிந்திருக்கும். ரிஷிய சிருங்க முனிவர் தமது தவ வலிமையால், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்கிற மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து உலகைக் காக்கும் தாயாக மூல ஒலிக் கோடுகளைக் கொண்டு சூரியனின் பன்னிரண்டு மண்டலங்களையும் பன்னிரண்டு கட்டங்களில் பீஜாட்சரங்களாக இந்த யந்திரத்தில் பொறித்து விட்டார். இந்த யந்திரம் தான் இந்த ஆலயத்தின் மூலவர் அன்னை ஸ்ரீ செல்வ லலிதாம்பிகை. தம்மை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்குப் பேறுகள் பதினாறையும் வழங்கி வருகிறாள்.
 இப்போதிருக்கும் கோபுரம், ஆலயம் எல்லாம் சமீப காலத்தில் கட்டப்பட்டவை.
 பஞ்ச பூதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? வெளி (ஆகாயம்), வளி (காற்று), நீ, நீர் நிலம் இவை பஞ்சபூதங்கள். இவற்றுடன் ஒளி, ஒலி, காலம் ஆகிய சக்திகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பரப்பிரம்மம் பீடம்தான் இத்தலம். இங்கு வந்து வழிபட்டு வேண்டுபவர்கள் வேண்டியது அனைத்தையும் பெறுவார்கள்.
 செஞ்சிக்கு அருகில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கிறது செல்லப்பிராட்டி கிராமம். செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் செஞ்சி- சேத்பட் சாலையில் செல்ல வேண்டும்.
 தொடர்புக்கு: 94440 67172.
 - மாயூரன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/செல்லப்பிராட்டி-ஸ்ரீ-லலிதா-செல்வாம்பிகை-3075007.html
3075014 வார இதழ்கள் வெள்ளிமணி மக்களை மகிழ்விக்கும் மகரசங்கராந்தி! DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 ஒன்பது கோள்களில் சூரியனே ஆதாரமாகவும்; அதனை மையப்படுத்தியே அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இயங்குகிறது என நம் மகரிஷிகள், நம் முன்னோர்கள் விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்து அதனை ஒட்டியே நமக்கு பல பண்டிகைகள் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வரும் சூரியன் தனது பயணத்தை தை மாதப் பிறப்பன்று, வடதிசை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறார். இதனை உத்திராயண புண்ணியகாலம் என்று கூறுவர்.
 சூரியன் மேஷ ராசி முதல் மீன ராசி வரையிலுள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சித்திரை மாதத்தில், மேஷ ராசியில் சூரியன் உச்ச நிலையிலும், ஐப்பசி மாதத்தில் பலவீன நிலையிலும் உள்ளார். இதனை நீச்சமடைதல் என ஜோதிடர்கள் கூறுவார்கள். சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி ஆகும். தை மாதம் சூரியனை வழிபட்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. உத்திராயணம் சுபகாரியங்கள் செய்வதற்கு சிறந்தது. தான் நினைத்தபோது இறக்கலாமென்ற வரம் பெற்ற மஹாபாரதச்சிற்பி பீஷ்மப் பிதாமகர் தட்சிணாயனத்தில் வீழ்ந்தாலும், உத்திராயணம் வரை காத்திருந்து சொர்கலோகம் அடைந்தார் என பாரதம் போற்றுகிறது.
 ஆடியில் விதைத்தால் ஆறு மாத காலம் சென்று தை மாதம் அறுவடை செய்யலாம். நெல்லே நம் உணவிற்கு முக்கிய வாழ்வாதாரம் ஆகையால் அதனை விற்று நம் கையில் பணம் புறளும் காலத்தில் தான் நம்மால் மகிழ்ச்சியாய் எந்த பண்டிகையையும் கொண்டாட முடியும். இதுவே "தைப்பிறந்தால் வழிபிறக்கும்" என்ற பழமொழி வழக்கில் வந்துள்ளது.
 வயலும் வயல் சார்ந்த இடங்களுக்கு மருதநிலமெனப் பெயர். இதற்கு தெய்வமாக இந்திரனையும்; உலக உயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தரும் சூரியனையும், நிலத்தினை உழுவதற்கு பயன்படும் காளை மாடுகளையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்து மூன்று நாள்கள் தென் இந்தியாவில்; முக்கியமாக நம் தமிழகத்தில் தைப்பொங்கல் திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். ஏற்றம் தரும் ஏர் வழிபாட்டைப்பற்றி வள்ளுவரும் போற்றுகின்றார்.
 தைப்பொங்கல் முதல் நாள் சூரியனை, பொங்கலிட்டு நன்றியுணர்வுடன் வழிபாடு செய்கிறோம். அன்று சூரியன் உதித்தபின் வெட்ட வெளியில் அரிசி மாவில் அழகான கோலமிட்டு, களிமண்ணால் ஆன புதிய அடுப்பினை தயார் செய்து, புதுப்பானை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு பசுமையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்தினை அந்த பானையின் கழுத்தில் கட்டி, கரும்பினை இருபக்கமும் வைத்து, வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி சூரிய பகவானுக்கு புத்தரிசிப் பொங்கலைப் படைத்து, "பொங்கலோ பொங்கல்" என கூவும் போது ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாதது. இந்த சமயத்தில் தான் இளஞர்களின் வீர விளையாட்டான மஞ்சு விரட்டு என்ற காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
 இரண்டாம் நாள், நமக்கு உதவும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணங்குகிறார்கள். மூன்றாம் நாள், கன்னிப்பொங்கல் என்று அனைத்துப் பெண்களும் முக்கியமாக புகுந்தவீடு சென்ற திருமணமான பெண்கள்; தன் பிறந்த வீட்டு உறவு மேம்பட, தன் சகோதரர்கள் நல்ல முறையில் நோயற்று சுபீஷமாக வாழ, "கனுப்பொங்கல் வைத்தல்' என தஞ்சை தரணியில், காவிரிக்கரையில் பல நிறங்களுடன் கூடிய சாதத்தை காக்கைக்கு மஞ்சள் இலையில் வைத்து படைத்து அங்கே கும்மியடித்து, குலவை பாடி மகிழ்வார்கள்.
 தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் "காணும் பொங்கல்' என உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் நண்பர்களுடன் சென்று கண்டு மகிழ்கிறார்கள். இதில் முக்கியமாக, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் ஒரு திருவிழா இந்த தைப்பொங்கல் திருவிழா மட்டுமே!
 வட இந்தியாவில் இதனை மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாக சூரியனை அனைத்து மக்களும் வழிபடுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற கும்பமேளா இந்த நாளில் தொடங்குகிறது. மஹாவிஷ்ணு ஒரு குடத்தில் அமிர்தத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது நான்கு துளிகள் இந்த பாரத பூமியில் ப்ரயாக், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைனி ஆகிய ஊர்களில் விழுந்தது. இதை நினைவு கூறும் முகமாக மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு ஊரிலும் இதனை கும்பமேளா என்றும்; 12 வருடத்திற்கு ஒருமுறை இதனை மஹாகும்பமேளா என்றும் கொண்டாடுகிறார்கள்.
 14.1.2019 திங்கள் அன்று போகிப்பண்டிகையில் ஆரம்பித்து, 15.1.2019 செவ்வாய் அன்று தைப்பொங்கல் விழாவும், 16 மற்றும் 17 தேதிகளில் முறையே மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என தொடர்ந்து வருகிறது. "பொங்கலோ.. பொங்கல்!'

 15.1.2019
 பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்:
 காலை 8.00 - 9.00 மணி (அல்லது) 10.30 - 11.30 மணி
 

 - எஸ்.எஸ். சீதாராமன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/மக்களை-மகிழ்விக்கும்-மகரசங்கராந்தி-3075014.html
3074769 வார இதழ்கள் வெள்ளிமணி சாட்சியாய் வந்த சபாநாயகன்! Friday, January 11, 2019 10:00 AM +0530 ஒரு தலவிருட்சமே தலத்தின் கடவுளாக நின்ற திருக்கோயில் இது. கோயில் என்று வணங்கப்பட்டாலும் கோபுரம் விமானம் கொடிமரம் ஆகிய அங்கங்கள் இல்லை . வாரம் ஒருமுறை சோமவாரத்தில் (திங்கட்கிழமையன்று) இரவு 10.30 மணிக்கு நடை திறந்து, நந்திக்கும் பரிவார வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் ஆகியோருக்கு பூஜை முடிந்து பின்னர் மூலஸ்தானத்துக்கு நடைபெறும். ஒவ்வொரு தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோயில் திறந்து பூஜை செய்து முதல் பொங்கல் கோயிலில் வைத்தபின்பே ஊர் முழுவதும் பொங்கல் வைப்பார்கள்.
 சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் பாட்டுவனாச்சி ஆற்றங்கரையில் இருந்த அந்த கிராமத்தில் ஒரு கூடை முடையும் குடும்பம் வசித்தது. பக்கம் உள்ள காட்டிற்குள் சென்று அங்கு விளையும் பொருட்களைக் கொண்டுவந்து கூடை முடைந்து விற்று வாழ்க்கை நடத்தினர். ஒருநாள், கூடைபின்ன மூங்கில் வெட்டிவர, கணவன் சென்றான். அங்கிருந்த வெள்ளால மரத்தடியில் விளைந்திருந்த பிரம்பையும் மூங்கிலையும் கழித்தபோது வாள் பட்டு மரத்தடியில் இருந்து ரத்தம் பீறிட்டுவர அதிர்ந்தான். அவன் பார்வை மங்கி ஒளி இழந்து அங்கேயே அமர்ந்து விட்டான். இரவாகியும் கணவன் இல்லம் திரும்பாததால் ஊராருடன் காட்டுக்குள் தீப்பந்தம் ஏந்தி தேடிச்சென்றாள் மனைவி. அங்கு பீறிட்டு ஓடும் ரத்தமும் கண் தெரியாமல் இருந்த கணவனையும் கண்டு திகைத்து நிற்க ஒருவர் மீது ஆவேசம் வந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரண்டாம் சாமத்தில் சபாநாயகர் அந்த மரத்தடியில் வந்து நின்று அருள்புரிவதாகவும் அவர் நிற்கும் மரம் வெட்டப்பட்டதால் வெட்டியவனுக்கு கண் போயிற்று எனக் கூறினார்.

 தவமுனிவர்கள் பலருள் தவறு நடப்பதைக் கண்டு வானளவு கோபம் கொள்பவர் வான்கோபர். அதே போல் அளவிட முடியாத அளவு கோபம் கொள்பவர் மஹாகோபர். பரம் பொருளாகிய இறைவனை அடைய இல்லறமே சிறந்தது என வான்கோபரும் துறவறமே சிறந்தது என மஹாகோபரும் பிடிவாதமாக நிற்பவர்கள். தங்கள் கொள்கையில் எது சிறந்தது என அறிய இருவரும் தில்லைக் கூத்தனிடம் சென்று தங்களின் வாதங்களைக் கூறினர். அவர்களை பட்டுவனாச்சி நதிக்கரைக்குச் சென்று அங்கு உறங்கும் புளி உறங்காப்புளி என இரு புளிய மரங்கள் உள்ளன. அங்கு சென்று தவம் செய்தால் உண்மை விளங்கும்; விளங்காவிடில் கார்த்திகை சோமவாரம் தில்லையில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு யாமங்கு வந்து உண்மை விளக்குவோம் எனக் கூறினார். அதன்படி இருவரும் வந்து இரு புளியமரங்களின் அடியில் அமர்ந்து மோனத்தவம் செய்யத் துவங்கினர்.
 புளி காய்த்து பழமாகும். காய்நிலையில் ஓட்டோடு ஒட்டிக்கொண்டு கனமாக உறுதியாக இருக்கும். பழுக்கும் போது ஓடும் சதையும் தனித்தனியாக நிற்கும். இல்லறமாயினும் துறவறமாயினும் பற்றற்ற ஆன்மா தன் உயர்விற்கு இந்த உடலாகிய கூட்டைப் பயன்படுத்திக் கொண்டு பரம்பொருளை அடையும் என்ற தத்துவத்தை உணர்வர் என்பதற்காகத்தான் புளியமரத்தடியில் தவம் இருந்து உணரச் சொன்னார். கோபக்குன்றில் நிற்கும் இருவரும் அதை உணராமல் தவத்தையேத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
 கார்த்திகை சோமவாரத்தன்று முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தில்லை சபாநாயகர் அர்த்தஜாமத்தின் பிறகு தன்படைபரிவாரங்களுடன் பொய்கைநல்லூர் சென்றார். வெள்ளால மரத்தடியில் தடம் பதித்து இருவரையும் புளியால் மனமாசை அகற்றி தெளியவைத்து இருவரையும் இவ்விடத்தில் மத்யஸ்தராக இருந்து உலக இயற்கையை அறிய வைத்தார். அதனால் இந்த இடம் "மத்யபுரி' எனவும் இங்கு வந்து நின்ற ஈசன் "மத்யபுரீஸ்வரர்' எனவும் அழைக்கப்பட்டார்.
 கருவறையில், தலமரமான வெள்ளால மரமே தெய்வமாகும் . அதைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ள பரப்பே கருவறையாகும். மரத்தின் அடியில் சந்தனக்கலவை பூசி அதன்மேல் வெள்ளியில் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம், திருக்கண்கள், திருநாசி, திருவாய் முதலியவை பதிக்கப்பட்டுள்ளது. முன்புறம் பிரபை நிறுத்தியவுடன் சிவலிங்க வடிவம்போல் தெரியும்.
 எதிர்மேடையில் வெள்ளால மரத்தினடியில் வந்து நின்ற இறைவனின் திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் முன்பு பித்தளைத் தகட்டினால் தோரணவாயில் அமைக்கப்பட்டு மரத்தின் முழு உருவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. முன்புறம் முன்மண்டபமும் மஹாமண்டபமும் அமைந்துள்ளன.
 கார்த்திகை சோமவாரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கோயிலில் வந்து பலவகை காணிக்கைகளைச் செலுத்தி திருநீறும் வெள்ளால மரத்தின் கீழே உதிர்ந்த இலையில் இறைவன் உறைவதாக கருதி வீட்டுக்கு எடுத்துச் சென்று வழிபடும் இயற்கை கோயிலாகும் இது.
 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 -ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் வருகிறது. அதற்கு முன், 14 -ஆம் தேதி சோமவாரம் ஆகும். அன்று இரவு கதவு பூஜை முடிந்து சந்நிதிகள் திறக்கப்படும். தொடரந்து 15 -ஆம் தேதி காலை பூஜையைத் தொடர்ந்து கோயில் பொங்கல் வைக்கப்படும். பின்னர், ஊர் முழுவதும் பொங்கல் வைக்கப்படும். அன்று இரவு 10.00 மணி வரை தொடர்ந்து சந்நிதி திறந்து இருக்கும்.
 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் பரக்கலக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 04373283295 /
 94861 54477.
 - இரா.இரகுநாதன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/சாட்சியாய்-வந்த-சபாநாயகன்-3074769.html
3074770 வார இதழ்கள் வெள்ளிமணி ஆற்றங்கரை அற்புதர்! DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 மகாராஷ்டிரத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர் சுப்புபட்டர் - கங்காபாய். பெரும் தனவான்களாக இருந்தபோதிலும் அவர்களுக்கு மழலை பாக்கியம் அமையவில்லை. அதற்காக தினமும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை மனமுருக வேண்டிவந்தனர்.
 ஒரு நாள் அவர்கள் கனவில் ஸ்ரீராமபிரானே தோன்றி அவ்வூருக்கு வரும் சுவாமிகளை (துறவி) இல்லத்திற்கு பிûக்ஷ ஏற்க அழைக்குமாறும், அதன் பயனாய் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்றும் அருளினார். அவ்வமயம், அவ்வூருக்கு விஜயம் செய்த உத்ராதிமட பீடாதிபதி ஸ்ரீரகுவர்ய தீர்த்தரை தம்பதிகள் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். தன்னை அணுகிய செல்வந்தரிடம் "உமக்கு பிள்ளை இல்லாததால் உம் வீட்டில் பிûக்ஷ எடுக்க இயலாது" என்றார் மடாதிபதி. மனம் வருந்திய தம்பதியினர் ஸ்ரீராமபிரான் தங்கள் கனவில் வந்ததைத் தெரிவிக்க, மடாதிபதியும் தனக்கு பின் மடத்தை நிர்வகிக்க தகுந்த ஒரு நபரை காட்டும்படி ஸ்ரீமத்வரிடமும், ஸ்ரீராமபிரானிடமும் பிரார்த்திக் கொண்டது நினைவுக்கு வர, தனக்கு இறைவன் இட்ட கட்டளையாகவும் எண்ணி தம்பதியிடம் "உங்களுக்கு பிறக்கப் போகும் முதல் மகவை ஸ்ரீமடத்திற்கு தந்துவிட வேண்டும், அப்படியென்றால் பிûக்ஷயை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் மடாதிபதி. மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் அந்த செல்வந்தர்.
 ஒரு நன்னாளில், ஸ்ரீ ஹரியின் அருளாசியுடன் ஓர் ஆண் மகவை செல்வந்தரின் மனைவி பெற்றெடுத்தாள். ஏற்கெனவே, மடாதிபதி விதித்திருந்த நிபந்தனையின்படி பிறந்த குழந்தை பூஸ்பரிசம் தங்கத் தாம்பளத்தில் வைக்கப்பட்டு மடத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை மடத்தில் நித்ய ஆராதனை பூஜை செய்த அபிஷேகப் பாலையே அருந்தி வளர்ந்து வந்தது. இறையருளால் பிறந்த அந்த குழந்தையின் மகத்துவம், பாலபருவத்திலேயே தெரியவர ஆரம்பித்தது. இளம் பாலகனுக்கு ஏழு வயதில் முறைப்படி உபயநயனம் செய்வித்து, எட்டாவது வயதில் ரகூத்தம தீர்த்தர் எனும் நாமத்தை அளித்து சன்னியாசம் அளித்தார் ஸ்ரீரகுவர்யதீர்த்தர்.
 தனது குரு பிருந்தாவனஸ்தரான பிறகு மடத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார் ரகூத்தமர். இளம் வயதில் இருந்த ரகூத்தமருக்கு, மடத்துபண்டிதர் சற்று அலட்சிய மனோபாவத்துடன் மாத்வ பாடங்களை அவருக்கு சரியாக போதிக்கவில்லை. இதற்காக வருத்தப்பட்ட ரகூத்தமரின் கனவில் ஒரு நாள் ஸ்ரீ ஹரியே அவரது குரு உருவில் வந்து அனைத்து கலைகளும் பயிலாமலேயே அவருக்கு கிடைக்குமாறு அருளினார். (நாவில் பீஜாட்சரம், எழுதியதாகவும் சொல்வது உண்டு) அது முதல் ரகூத்தமர் தாமாகவே சகல மாத்வ சாஸ்திரங்களையும் குறித்துப் பேசலானார். இவரின் பேச்சில் வசீகரமும் இருந்தது.
 எல்லோரையும் இறைவன் பால் திருப்பி ஆன்மிகத்தை தழைக்கச் செய்தார் ரகூத்தம சுவாமிகள். இவர் இயற்றிய கிரந்தங்கள் பல. மாத்வ குருமார்கள் ஸ்ரீமத் வாச்சாரியர் மற்றும் ஜெயதீர்த்த சுவாமிகள் செய்தருளிய கிரந்தங்களில் மறைந்துள்ள தத்துவார்த்தங்களையும், சித்தாந்தங்களையும், விளக்கும் விதத்தில் ஐந்து அரிய நூல்களை இயற்றினார். இச்செயல் மிகச் சிறந்த சாதனையாக கருதப்பட்டு ஸ்ரீரகூத்தமர் "பாவபோதகாரர்" என அழைக்கப்பட்டார்.
 சுமார் 38 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ ரகூத்தமர் தென்னகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சகிருஷ்ணாரண்ய úக்ஷத்ரத்தில் ஒன்றான திருக்கோயிலூருக்கு சமீபத்தில் உள்ள மணம்பூண்டி கிராமத்தில் தக்ஷிண பினாகினி நதிக்கரையில் வாசம் செய்து, இறுதியில் அங்கேயே பிருந்தாவனவாசி ஆனார். (அவரது ஆக்ஞைப்படி பிருந்தாவனம் மேற்கூரையின்றி வெட்ட வெளியில் உள்ளது சிறப்பு). இவர் பீடாதிபதியாய் இருந்த போது இறை தொண்டுடன், மக்களின் பிணி துயரம், ஆபத்துகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் பணியையும் செய்து வந்தார். இவரிடம் மந்திர தீட்சைப்பெற்று பலனடைந்தவர் ஏராளம். தனக்கு வாய்க்கப்பட்ட மந்திர சக்திகளை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தி கணக்கற்ற அற்புதங்கள் நிகழ்த்தினார். இன்றும் இவரது பிருந்தாவனம், வருபவர்களுக்கு அதிசயப்படும் விதத்தில் காரியங்கள் சித்திடைகின்றன.
 ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்ரீபாதங்களவர்களின் 446-ஆவது ஆண்டு ஆராதனை மகோத்சவம் ஜனவரி 16 (புஷ்யசுத்த தசமி) , ஜனவரி 17 (ஏகாதசி), ஜனவரி - 18, (துவாதசி), ஜனவரி 19 (திரயோதசி) ஆகிய தேதிகளில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, பாவபோத பாராயணம், ப்ரவசனம், ரதோத்ஸவம், மூலராமதேவர் மகாபூஜை, பஜனை இசை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94428 65395.
 - எஸ்.வெங்கட்ராமன்

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/ஆற்றங்கரை-அற்புதர்-3074770.html
3074771 வார இதழ்கள் வெள்ளிமணி குடும்ப பாசம் குவலய நேசம் DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன். முதலில் படைக்கப்பட்ட ஆதி மனிதன் ஆதம் நபியின் விலா எலும்பிலிருந்து ஒரு பெண் அன்னை ஹவ்வாவைப் படைத்தான் அல்லாஹ். அத்தம்பதிகளின் இணக்கமான இல்லற குடும்ப வாழ்விலிருந்து மனிதன் இனம் மனித சமுதாயம் உருவானது. அன்பு என்பது பிரியம். நேசம் என்பது இரக்கம். இவ்விரண்டின் அடிப்படையில் அமைகிறது குடும்பம். இந்த அடிப்படையில் தந்தை தன் குடும்பத்தை நேசிக்கிறாள். குடும்ப பொறுப்பை ஏற்று குடும்பத்திற்காக உழைக்கிறார்.
 பொழுது புலருமுன் புறப்பட்டு இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பும் வியாபாரி, பகல் எல்லாம் பாடுபடும் பாட்டாளி, சுடும் கடும் வெயிலிலும் கொட்டும் பனி குளிரிலும் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி, நாற்று நட்டு, அறுவடை செய்யும் உழவன், சுழலும் காற்றையும்சூழும் அலையையும் தாழ்த்தும் குளிரையும் வீழ்த்தி ஆழ்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும் மீனவன், இன்றைய கணினி யுகத்தில் இரவென்று பகலென்று இல்லாது முறை வைத்து தரப்படும் பணியை அரசு, பொது, தனியார் துறைகளில் ஊழியரால், அலுவலராய், அதிகாரியாய், பொறியியல் வல்லுநராய், பணிபுரியும் படித்த, பட்டம் பெற்றவர்கள் உழைப்பது அவரவர் குடும்பத்தைக் காப்பதற்கே. அந்த தந்தையின் தியாகத்தை உணரும் குழந்தைகள் தந்தையோடு தாயிடமும் காட்டும் பாசமே பெற்றோர் சொல் கேட்டு நல்லவற்றை நாளும் கற்று பெற்றோர் மகிழ, வளர்ந்து சிறந்து வாழும் பொழுது அந்த தாய்ப்பாசமே தாய் நாட்டு பாசமாகி வீட்டோடு நாட்டையும் நேசிக்கும் நற்பயிற்சி தருகிறது.
 தந்தை ஆண் மக்களுக்குக் குடும்பத்தின் முன் மாதிரியாக திகழ்கிறார். குடும்பத்தை நடத்தும் தாய் பெண் மக்களுக்கு முன் மாதிரி. இப்படித்தான் குடும்பத்தில் அன்போடு பாசமும் நேசமும் பின்னிப் பிணைகிறது. குடும்பத்தில் அமைதி நிலவ மகிழ்ச்சி மலர்கிறது. மலரும் மகிழ்ச்சியில் இழையும் மென்மை அன்பை அதிகமாக்கி பாசத்தைப் பரவ செய்கிறது. நேரிய முறையில் நீதமாக கண்ணியமாக சங்கையாக சகல செயல்களையும் செம்மையாக செய்ய வழிகாட்டுகிறது. இதுவே இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பிரியத்தையும் புரிந்துணர்வையும் பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்குகிறது. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது பிரியத்தையும் பிரியா பாசத்தையும் உருவாக்குகிறது. ஒருவர் முயற்சியில் மற்றவர் பங்கு கொள்ள வைக்கிறது. உறுதுணையாக உதவ உந்துகிறது. ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டும் பண்பைப் பரவலாக்குகிறது. மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தமாட்டார் என்பது ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழி. நூல்- அஹ்மத். நன்றி பாராட்டும் நற்பண்பு சமூக வாழ்வில் சங்கமிக்க வைக்கும். குடும்ப ஒற்றுமை சமுதாய ஒற்றுமைக்கு வித்து. சமூக அமைப்பின் இணைப்பே நாட்டின் முன்னேற்றத்திற்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும்.
 நாங்கள் உண்கிறோம், பசி தீருவதில்லை என்று பகர்ந்தவர்களிடம் குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுங்கள். அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். பசி தீரும். பாசம் வளரும் என்று பாசநபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். வீடுகளில் மனைவியின் வேலைகளில் கணவன் உதவினால் குழந்தைகளும் பெற்றோர் வேலைகளில் உதவ பயிலும். இப்பயிற்சி வளர்ந்தபின் உற்றுழி உதவும் உயர் பண்பாகும். இப்பண்பு தாய்நாட்டின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் புறப்படும் வரை அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்களின் மருமகன் அலி (ரலி) அவர்கள் அவர்களின் மனைவி பாத்திமா (ரலி) ரொட்டி சுடும்பொழுது நீர் இறைத்து எடுத்து வருவார்கள்.
 உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அல்லாஹ் ஏவியதை ஏற்று செய்திட செம்மறை குர்ஆனின் 66- 6 ஆவது வசனம் ஏவ, 20-132 ஆவது வசனம் உங்கள் குடும்பத்தினர் தொழுகையைத் தொடர்ந்து நிறைவேற்ற தூண்டுமாறு உரைக்கிறது. குழந்தைகளை ஏழு வயதில் தொழுகையை கடைபிடிக்க தூண்டுமாறும் பத்து வயதில் கண்டிப்புடன் தொழ வைக்குமாறும் தோழமை நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- அபூதாவூத். ஏழுவயது வரை குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாடும்படியும் ஏழு வயதில் இருந்து நல்லதை நயமாய் கற்பிக்க துவங்கி பத்து வயதில் கண்டித்து ஒழுக்கத்தை ஒழுங்காக கடைபிடித்து பழக்கமாக்க பாசநபி (ஸல்) அவர்கள் பகன்றார்கள். அதன் முதல் படியே தொழுகை. ஒழுங்காக தொழுதால் இறையச்சம் உள்ளத்தில் உருவாகி குழந்தைகள் அறமே செய்யும். பிற வழியில் பிறழ மாட்டார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நல்ல ஒழுக்கமுடன் நடக்க வேண்டும். பெற்றோரின் பழக்க வழக்கமே குழந்தைகளின் இதயத்தில் பதியமாகிறது. அப்பதியமே உதயத்தை உயர்த்தி உன்னதமாய் உலகில் வாழ வைக்கிறது.
 குடும்பத்திற்காக செலவு செய்வது மேலான பயனை நல்கும் என்ற நந்நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் புகல்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். குடும்பத்திற்குச் செலவிடுவது நற்செயல் என்ற நம்பிக்கையோடு செலவழிப்பவரின் செலவு அற செயலாகும் என்று செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதை அறிவிக்கிறார் அபூமஸ்வூதல் பத்ரீ (ரஹ்) நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. ஆசுரா நாளன்று குடும்பத்தினருக்குத் தாராளமாக செலவு செய்கிறவருக்கு அல்லாஹ் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி அருளைப் பொழிகிறான் என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- ரஜீன். இதனை, நடைமுறை படுத்தி வெற்றி கண்டதாக விளம்புகிறார் பெரியார் ஸுப்யான்.
 குடும்பத்தில் உறவினர்களோடு உறவாடுவது குழந்தைகள் படிக்கும் காலத்திலும் பணிபுரியும் சூழலிலும் பலரோடு பழகும் பண்பை வளர்க்கும். குடும்ப பாசத்தில் பரிணமிக்கும். இப்பழக்கமும் பண்பும் ஊரிலும் நாட்டிலும் உலகிலும் ஆளுமைத் திறனோடு அறவழியில் முறையோடு வாழவைக்கும்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/குடும்ப-பாசம்-குவலய-நேசம்-3074771.html
3074772 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 * 1. அகங்காரம், 2. எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், 3. அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், 4. கோபம், 5. தான் மட்டும் வாழ்ந்தால்போதும் என்று கருதுதல், 6. நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீயகுணங்களும் கூர்மையான கத்திபோல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால் இவையே மனிதர்களைக் கொல்லுகின்றன அல்லாமல் யமன் கொல்லுகிறான் என்பதில்லை. - விதுரநீதி
* வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள். இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள். நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள். எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள். எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள். உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். அனைத்தையும் பகவானிடம் ஒப்படையுங்கள். "நம்மால் ஆவது ஒன்றுமில்லை' என்ற எண்ணம் மிகவும் முக்கியம்.
- மயான யோகி
* சத்தியமே ஜயிக்கும், பொய்யல்ல. ஆசைகள் பூர்த்தி பெற்ற ரிஷிகள் சத்தியத்தின் எல்லை நிலமாகிய மோட்சத்திற்கு எந்த மார்க்கத்தில் செல்லுகிறார்களோ, அந்தத் தேவயாண மார்க்கம் சத்தியத்தாலேயே பரப்பப்பட்டுள்ளது. 
- முண்டக உபநிஷதம்
* உடலுக்குள்ளேயே ஜோதிர்மயமாகப் பரிசுத்தமாய் விளங்கும் எந்த ஆத்மப் பொருளைச் சித்தமலம் நீங்கிய சந்நியாசிகள் காண்கிறார்களோ, அந்த ஆத்மப் பொருள் அகண்டமான பிரம்மசரியத்தாலும் தெளிந்த ஞானத்தாலும், இடைவிடாத தவத்தாலும் சத்தியத்தாலும் அடையப் பெறும்.
- முண்டக உபநிஷதம்
* உண்மை பேசு; தர்மவழியில் நட.
- தைத்ரிய உபநிஷதம்
* எவர்களிடம் சூதும் பொய்யும் வஞ்சனையும் இல்லையோ, அவர்களுக்கே இந்தக் குற்றமற்ற பிரம்மலோகம் உரியது.
- ப்ரச்ன உபநிஷதம்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-3074772.html
3074773 வார இதழ்கள் வெள்ளிமணி இயேசுவும் உபவாசமும் DIN DIN Friday, January 11, 2019 10:00 AM +0530 உபவாசம் தெய்வ வழிபாட்டில் ஒரு முக்கிய பகுதி. உபவாசம், உடலையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தி இறைவன்பால் அன்பும் மதிப்பும் பக்தியும் வளர்க்கும். ஒருபொழுது, உண்ணாநோன்பு என இருப்பர். பிரார்த்தனை நேர்ந்துகொள்ளும் பொழுதும் எடுத்த காரியங்களை செம்மையாக முடிக்கவும் உபவாசம் இருப்பார்கள். பண்டிகை நாள்களிலும் அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும் கிறிஸ்துவர்கள் இயேசு ஆண்டவர் சிலுவையில் பாடுபட்ட நாள்களை நினைவு கூர்ந்து உபவாசிப்பது வழக்கம். மிருகங்கள், பறவைகள் மற்ற ஜீவராசிகளும் உபவாசிப்பதை நாம் பார்க்கின்றோம். நம் வீட்டில் வாழும் செல்லப் பிராணியான நாய் கூட வாரம் ஒருநாள் காலையில் ஒன்றும் சாப்பிடுவது இல்லை. உபவாசிப்பது மனதை இறைவனிடம் ஒருமுகப்படுத்தும். ஜீரண உறுப்புகளை ஒழுங்குபடுத்தும்.
 வேதாகமத்தில் இயேசு ஆண்டவர் தம் ஊழியத்தை தொடங்குவதற்குமுன் உபவாசம் இருந்தார். "(இயேசு) அவர் இரவும் பகலும் நாற்பது நாள்கள் உபவாசமிருந்த பின்பு அவருக்கு பசியுண்டாயிற்று (மத்தேயு 4:2). தெய்வமே நாம் வாழும் பூமியில் வாழும்போது நாற்பது நாள்கள் உண்ண உணவும் பருக தண்ணீரும் இன்றி 40 நாள்கள் உபவாசித்தார்.
 உபவாசத்திற்குப்பிறகு சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து "நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்த கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்றான். "இயேசு மறுமொழியாக மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையினாலும் பிழைப்பான்' என்றார்.
 பிசாசு, "இயேசுவை தேவ ஆலயத்தின் உப்பரிகை உயரத்தில் நிறுத்தி கீழே குதியும் தேவ தூதர்கள் உம்மை விழாதபடி தங்கள் கரங்களில் ஏந்திக்கொள்வர்' என்றான். இயேசு அவனுக்கு பதிலாக "கடவுளை சோதிக்க வேண்டாம் என எழுதியிருக்கிறதே?' என்றார்.
 பின்பு பிசாசு இயேசுவை மலையின் உச்சியில் நிறுத்தி உலகின் மகிமையை காண்பித்து. "என்னை நீர் தாழ விழுந்து வணங்கும், அப்போது இவ்வுலகின் சகல பெருமையையும் தருவேன்' என்றான். இயேசு, "கடவுள் ஒருவரை தவிர வேறு எவரும் வணங்கத் தகுதியில்லாதவர்' என்று எழுதி இருக்கிறது என்றார். இப்படி பிசாசு இயேசுவிடம் தோற்றுப் போனான். இயேசு தேவகுமாரனாக இருந்தும் இப்பூமியில் மனித குமாரனாக வாழ்ந்தபோது வெற்றி பெற்றவராக இருந்தார். இயேசுவின் நாற்பது நாள்கள் உபவாசம் மிகப் பெரிய வல்லமை, பலம், அறிவு, சரியாக பதில் அளிக்கவும், சோதனையிலிருந்து வெற்றி பெறவும் பலம் தந்தது. மனிதராகிய நமக்கு பலமும் பக்தியும் அறிவும் வேண்டின் நிச்சயம் நாம் உபவாசிக்க வேண்டும். உபவாசம் வெற்றியுள்ள வாழ்வு தரும். உபவாசம் தவவாழ்வில் ஓர் அங்கம். நம் வாழ்வு கடவுள் தந்த தவ வாழ்வே. இவ்வாழ்வு வெற்றியாய் அமைய, நம்மால் அனுசரிக்கக் கூடிய உபவாசம் இருப்பது நல்லது. உபவாசிப்பவர்களுக்கு இயேசுவின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.
 - தே. பால் பிரேம்குமார்
 
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jan/11/இயேசுவும்-உபவாசமும்-3074773.html