Dinamani - ஐபிஎல்-2020 - https://www.dinamani.com/sports/ipl2020/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3384074 விளையாட்டு ஐபிஎல்-2020 ஐபிஎல் நடக்காவிட்டால் தோனியின் நிலைமை என்னவாகும்?: பகீர் கேள்விக்கு விடையளிக்கும் முன்னாள் வீரர்! எழில் DIN Wednesday, March 18, 2020 11:28 AM +0530  

கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதன் எதிரொலியாக சிஎஸ்கே பயிற்சியும் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டது. கேப்டன் தோனி சொந்த மாநிலமான ராஞ்சிக்குத் திரும்பினாா்.

இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன என்பதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ரா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனி போன்ற ஒரு வீரருக்கு ஐபிஎல் எல்லாம் அளவுகோலாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் தோனி ரன்கள் எடுத்திருந்தால் எல்லா நிபுணர்களும் தோனியைத் தேர்வு செய்யவேண்டும் என்பார்கள். தான் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பவேண்டுமா என்பது தோனிக்குத் தெரியும். 

அவருடைய தேர்வுக்கு ஐபிஎல் ஒரு முக்கியக் காரணமாக இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியில் மீண்டும் விளையாட அவர் விருப்பப்பட்டால், அவர் விளையாடத் தயாராக இருப்பார், அவரைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய நினைத்தால் தானாகத் தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் அனுபவம் என்பது சூப்பர் மார்க்கெட்டில் கிடையாது. 

மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் தோனி. இந்திய அணிக்கு அவர் தேவைப்பட்டால், ஐபிஎல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மீண்டும் அணிக்குள் இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 

]]>
Corona Virus https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/18/w600X390/doni_new_wc.jpg https://www.dinamani.com/sports/ipl2020/2020/mar/18/what-will-happen-to-ms-dhoni-if-ipl-2020-is-cancelled-due-to-covid-19-3384074.html
3381373 விளையாட்டு ஐபிஎல்-2020 இந்தச் சூழலில் ஒரு ரூபாய் கூட வேண்டாம்: ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு எழில் DIN Saturday, March 14, 2020 05:25 PM +0530  

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதையடுத்து நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என பிசிசிஐயும் ஐபிஎல் அணி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவை பொருத்தவரை இதுவரை 84 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக இருந்தது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோத இருந்தன. 

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ அதிகாரிகள், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள். ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களின் உடல்நலன் மீது தான் எங்களுக்கு அக்கறை உள்ளது. இச்சூழலில் நாங்கள் பணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நிலைமை மாறாவிட்டால், ஐபிஎல் நடக்காமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. பிசிசிஐ, ஐபிஎல், ஸ்டார் நிறுவனம் என யாரும் ஐபிஎல் போட்டியை நடத்தி வருமானம் ஈட்ட எண்ணவில்லை. இச்சமயத்தில் ஒரு ரூபாய் வருமானத்தைக் கூட எண்ணுவது சரியல்ல என்றே எண்ணினோம். எனவே, எங்களுக்குப் பணம் முக்கியமல்ல. இந்தச் சூழலில் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. அனைவருடைய உடல்நலன் தான் முக்கியம் எனக் கருதியுள்ளோம். 

அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவோம். யாருக்கும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும் எனத் தெரியாது. இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து நிலவும் சூழலை ஆராய்வோம். அப்போது கரோனா பாதிப்புகள் குறையும் என நம்புகிறோம். உடல்நலனும் பாதுகாப்பும் தான் இப்போது முக்கியமானது. லாப நஷ்டமல்ல. நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. மக்களைப் பாதுகாக்க எண்ணுகிறோம். 90 நிமிடக்கூட்டத்தில் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை மாற்றுவது குறித்து விவாதித்தோம் என யாரும் தவறாக எண்ணவேண்டாம். அதற்கான நேரமல்ல இது. அடுத்ததாக, எப்போது வெளிநாட்டு வீரர்கள் வருவார்கள் என்று கேட்பீர்கள். விசாவுக்கான தடை 15-ம் தேதி வரை உள்ளது. எனவே பார்க்கலாம். ஐபிஎல் நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை என்றார். 

]]>
IPL https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/14/w600X390/dhoni_crowd12.jpg https://www.dinamani.com/sports/ipl2020/2020/mar/14/bcci-to-wait-and-watch-before-fixing-ipl-schedule-3381373.html
3380567 விளையாட்டு ஐபிஎல்-2020 கரோனா எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு எழில் DIN Friday, March 13, 2020 03:14 PM +0530  

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வருட ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோா் கரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவிலும் சுமார் 70 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியே ஒத்தி வைக்கப்படலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக இருந்தது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோத இருந்தன. 

நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் சூழலில், வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலா் தாமு ரவி, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் உள்ளிட்டோா் தில்லியில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தாமு ரவி பதிலளித்ததாவது: தற்போதைய சூழலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாம் என்பதே வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுரையாகும். ஆனால், அதன் ஏற்பாட்டாளா்கள் போட்டியை நடத்த விரும்பினால் நடத்தலாம். அது அவா்களது முடிவு என்றார். 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்திய விளையாட்டுத்துறை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது: இந்தியாவில் நடைபெறவுள்ள எல்லா சர்வதேச நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை அனைத்து விளையாட்டுச் சங்கங்களும் பின்பற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மட்டும் கூறியுள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார நலனுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். ஐபிஎல் போட்டியைக் காண வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரக்கூடாது. வேறு எதை விடவும் நாட்டின் நலன் தான் முக்கியம். ஐபிஎல் ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்றால் போட்டி அமைப்பாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும். அது இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாது. ஐபிஎல் போட்டியை நிறுத்த நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆட்டத்தை நடத்த நீங்கள் முயன்றால், விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம். மக்களின் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினார். 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்குவதை வரும் ஏப்.15-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக 2020 ஐபிஎல் டி20 தொடரில் வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பது சந்தேகம் நிலவுகிறது. விசாக்கள் வழங்குவதில் புதிய விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் ஆஸி, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கன் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 60 வீரா்கள் கலந்துகொள்ள உள்ளனா். இவா்களுக்கான விசாக்களும் ரத்து செய்யப்படுமா எனத் தெரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

]]>
IPL 2020 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/13/w600X390/ipl_cup_1222.JPG https://www.dinamani.com/sports/ipl2020/2020/mar/13/bcci-suspends-ipl-2020-till-15th-april-2020-3380567.html