Dinamani - கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 - https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3192990 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஓய்வு பெறுவாரா தோனி?: எதிர்பார்க்கும் பிசிசிஐ! எழில் DIN Monday, November 4, 2019 04:50 PM +0530  

2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதிச்சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிடுவதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிசிசிஐ உறுப்பினர் ஒருவர் பேசியுள்ளதாவது:

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் முடிவு பெறாதது ஆச்சர்யம் அளிக்கிறது. ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளக் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையிலேயே பார்த்தோம், முன்பு போல தோனியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. 6-ம் நிலை, 7-ம் நிலை வீரராகக் களமிறங்கியும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவரைச் சேர்க்கும் திட்டம் இந்திய அணிக்கு இல்லை என்றுதான் எண்ணுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெளரவமாக அவர் விடைபெறவேண்டும். தானாக இனிமேல் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

அவர் இனிமேல் சாதிக்க எதுவுமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நிரூபிக்க எதுவுமில்லை. இனிமேலும் அவர் இந்திய அணிக்குத் தேர்வாவார் என எண்ணவில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து அவர் அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

]]>
MS Dhoni https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/dhoni_100.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/ms-dhoni-no-more-an-automatic-choice-3192990.html
3193717 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 சூப்பர் ஓவரும் 'டை'? இந்த நடைமுறையை கடைபிடிக்கலாம்: சச்சின் கருத்து DIN DIN Tuesday, July 16, 2019 10:26 PM +0530
சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல் இன்னொரு சூப்பர் ஓவரை கடைபிடிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான சூப்பர் ஓவரும் சமனில் முடிய, அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் தோல்வியடையாத பட்சத்திலும் நியூஸிலாந்து அணி கோப்பையை இழந்தது சர்வதேச அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக அமைந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், மற்ற கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பில் பல கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, 

"இரண்டு அணிகள் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல் மற்றொரு சூப்பர் ஓவரை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையில் மட்டுமல்ல. அனைத்து ஆட்டங்களுமே முக்கியமானது. கால்பந்தைப் போல், கூடுதல் நேரத்துக்கு ஆட்டம் சென்றால் அது பெரிய பிரச்னை கிடையாது" என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு எலிமினேட்டர் வாய்ப்பு இருப்பது போல், உலகக் கோப்பை போன்ற தொடர்களிலும் புதிய நடைமுறையை கொண்டுவரலாம் என்று விராட் கோலி அரையிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பேசியதையே சச்சின் டெண்டுல்கரும் தெரிவிக்கிறார். இதுகுறித்து, அவர் பேசுகையில், 

"முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு, தொடர் முழுவதும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இரண்டாவது வாய்ப்பாக ஏதேனும் இருக்க வேண்டும்" என்றார். 

உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை 7-வது வரிசையில் களமிறக்கியது குறித்து கருத்து தெரிவிக்கையில், 

"நான் தோனியை அவரது வழக்கமான வரிசையான 5-வது வரிசையில் தான் களமிறக்கியிருப்பேன். இந்திய அணி அப்போது இருந்த சூழ்நிலை மற்றும் அவருக்கு இருக்கும் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இன்னிங்ஸை கட்டமைக்க அது தோனிக்கான நேரம். ஹார்திக் பாண்டியா 6-வது இடத்திலும், அவரைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 7-வது இடத்திலும் களமிறங்கியிருக்க வேண்டும்" என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/29/w600X390/sachin.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/16/tendulkar-bats-for-second-super-over-to-decide-wc-winner-in-case-of-tie-3193717.html
3193709 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 டெண்டுல்கரின் உலகக் கோப்பை அணியில் தோனிக்கு கல்தா DIN DIN Tuesday, July 16, 2019 07:13 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த அணியை இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், தொடரை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சிறந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியை வெளியிட்டது. இதில், இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் ஜாஸ்பிரித் பூம்ரா ஆகியோர் மட்டுமே தேர்வாகியிருந்தனர்.

ஐசிசி தேர்வு செய்துள்ள உலகக் கோப்பை அணி: http://bit.ly/2LmzgKb

இதேபோல் தினமணி இணையதளமும் சிறந்த உலகக் கோப்பை அணியை தேர்வு செய்திருந்தது. அதிலும், இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் ஜாஸ்பிரித் பூம்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ள உலகக் கோப்பை அணி: http://bit.ly/2LmQtU2

இந்த நிலையில், இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சிறந்த உலகக் கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியில் 5 இந்தியர்கள் தேர்வாகியிருந்தாலும், எம்எஸ் தோனிக்கு இடமில்லை. 


சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ள உலகக் கோப்பை அணி:

 

 • ரோஹித் சர்மா
   
 • ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்)
   
 • கேன் வில்லியம்ஸன் (கேப்டன்)
   
 • விராட் கோலி
   
 • ஷாகிப் அல் ஹசன்
   
 • ஹார்திக் பாண்டியா
   
 • பென் ஸ்டோக்ஸ்
   
 • ரவீந்திர ஜடேஜா
   
 • மிட்செல் ஸ்டார்க்
   
 • ஜோப்ரா ஆர்ச்சர்
   
 • ஜாஸ்பிரித் பூம்ரா
]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/16/w600X390/MS_Dhoni.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/16/ms-dhoni-missing-from-sachin-tendulkars-world-cup-2019-xi-3193709.html
3192997 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 தினமணி இணையதளத்தின் சிறந்த உலகக் கோப்பை லெவன் சுவாமிநாதன் DIN Monday, July 15, 2019 09:59 PM +0530 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த உலக லெவன் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ளது. 

கடந்த ஒன்றரை மாதங்களாக உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி ஆட்டத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத இங்கிலாந்து முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தாலும், தொடரில் பங்கேற்ற மற்ற 9 அணிகளிலும் உள்ள வீரர்கள் வெற்றி பெற தங்களது முழு அர்ப்பணிப்பை அளித்துள்ளனர். உதாரணத்துக்கு ஷாகிப் அல் ஹசன், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் போன்ற வீரர்களது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறாமல் போனாலும், இந்த வீரர்கள் தங்களது முழு அர்ப்பணிப்பை அணிக்காக அளித்துள்ளனர். இதன்மூலம், பல புதிய சாதனைகளையும் இவர்கள் புரிந்துள்ளனர்.  

எனவே, இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து, அவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த லெவன் அணியை தினமணி இணையதளம் உருவாக்கியுள்ளது.

தேர்வுக்கான காரணம் அடங்கி வீரர்கள் விவரம்:

ரோஹித் சர்மா:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஒரு உலகக் கோப்பையில் மொத்தம் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா புரிந்தார். இவர் 5 சதங்கள் அடித்தாலும், ஒவ்வொரு சதமும் வெவ்வேறான முறையில் வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதங்கள், கடினமான சூழலில் திணறலுடன் விளையாடி அடித்த சதங்களாகும். மாறாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்கம் முதலே துரிதமாக விளையாடி சதம் அடித்தார். இப்படி எந்த சூழலாக இருந்தாலும், ஆடுகளத்துக்கும் ஆட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு சதம் அடித்துள்ளார் என்பது முக்கியமானது. 

நியூஸிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தில் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஹென்ரியின் அற்புதமான பந்துவீச்சால் தான் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் தவறான ஷாட்களை தேர்வு செய்து தவறு செய்யவில்லை. 

இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் 648 ரன்களுடன் அவர் முதலிடத்திலேயே உள்ளார். எனவே, இவர் எந்தவித சந்தேகமும்மின்றி தொடக்க ஆட்டக்காரராக தேர்வு இடம்பெறுகிறார். 

டேவிட் வார்னர்:

ஓராண்டு தடைக்குப் பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் கேப்டன் பிஞ்சுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தையே அளித்திருக்கிறார். உலகக் கோப்பை தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக வார்னர் அரைசதம் அடித்தாலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமாக சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

அதன்பிறகு, வங்கதேசத்துக்கு எதிராக 166 ரன்கள் குவித்து இமாலய ரன்களுக்கு அடித்தளம் அமைத்தார். இந்த ஆட்டத்தில் இவருடைய சதத்தால் ஆஸ்திரேலிய அணி 381 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்த உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்திருந்தாலும் வார்னர் சதம் அடித்து கடைசி வரை நம்பிக்கையளித்து வந்தார். 

இந்த உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் ரோஹித்துக்குப் பின் 3 சதங்களுடன் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் ரோஹித்துக்குப் பின் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் 647 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஜேசன் ராயும் சிறப்பாக விளையாடினாலும், இடக்கை பேட்ஸ்மேன் என்பதாலும், அதிக சதம் மற்றும் அரைசதம் உள்ளிட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலும் இவர் ஜேஸன் ராயை முந்தியுள்ளார்.  

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்):

வில்லியம்ஸன் நியூஸிலாந்து அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் என்றாலும், இந்த உலகக் கோப்பையில் அவர் பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரர் போலவே விளையாடியுள்ளார். நியூஸிலாந்து அணியில் வில்லியம்ஸனை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இல்லை. பேட்டிங்கில் தனி ஒரு நபராகவே அவர் நியூஸிலாந்து அணியை இறுதி ஆட்டம் வரை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில், முன்ரோ மற்றும் நிகோல்ஸ் ஆகியோர் படுமோசமான தொடக்கத்தையே அளித்துள்ளனர். எனவே, இவர் முதல் 10 ஓவருக்குள்ளேயே களமிறங்கியுள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, கேன் வில்லியம்ஸன் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து அந்த அணியை வெற்றி பெறச் செய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க, மீண்டும் நெருக்கடியான சூழலில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் அவர் 148 ரன்கள் குவித்தார். இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில், ரன் ரேட் குறைவாக இருந்தபோதும் ஆடுகளத்தின் சூழ்நிலை உணர்ந்து பெரிதாக எண்ணாமல் முன்னதாகவே ஆடுகளத்துக்கு உகந்த ஒரு வெற்றி இலக்கை நிர்ணயித்து சாமர்த்தியமாக அந்த இலக்கை அடையச் செய்தார். அதன்பிறகு, அதை டிபெஃன்டும் செய்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதில், பேட்டிங் திறன் மட்டுமின்றி, கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார்.  

அவருடைய ஸ்டிரைக் ரேட் அந்த ஆட்டத்தில் சற்று குறைவாக இருந்தாலும் அவர் களத்தில் நேரத்தை செலவழித்து அடித்த அந்த அரைசதம் முக்கியமானது. இப்படி கச்சிதமாக கணக்கிட்டு வியூகம் வகுத்து பேட்டிங் செய்துள்ளார். அதற்கு பலனாக அந்த அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. 

இறுதி ஆட்டத்திலும் இதே வியூகத்தை வகுத்து ஆடுகளத்தை கணித்து விளையாடிய அவர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற 12 வருட சாதனையை அவர் முறியடித்தார். இங்கிலாந்து பலம் வாய்ந்த அணி என்பதால், உலகக் கோப்பையை அந்த அணியே வெல்லும் என்று பெரும்பாலானோர் கணித்தபோதும், இறுதிவரை விட்டுக்கொடுக்காமல், போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார். சொல்லப்போனால், நியூஸிலாந்து அணி தோல்வியடையாமலே கோப்பையை இழந்துள்ளது. இவர், எந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும், அதை எளிதாக கையாண்டு தோனிக்குப் பிறகு அடுத்த கேப்டன் கூலாக இருக்கிறார். 

இவருக்கு தனது அணியின் பலம் என்னவென்பது தெரியும். வீரர்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டாலும், எந்த வீரரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் இவர் கில்லாடி. இறுதி ஆட்டத்தில் அந்த அணியின் 7-வது பந்துவீச்சாளரான கிராண்ட்ஹோம் 3-வது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்டார். அவருடைய ஸ்பெல் மிக முக்கியமான ஸ்பெல்லாகும். இங்கிலாந்து பக்கம் நெருக்கடி திரும்பியதற்கு மிக முக்கியமான பங்களிப்பு கிராண்ட்ஹோம் அளித்ததாகும். இந்த நெருக்கடிக்கு பலனாக நியூஸிலாந்துக்கு ரூட் விக்கெட் கிடைத்தது. இந்தியாவுடனான அரையிறுதியிலும் இந்தியா முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தபிறகு, அவர் தேர்ட் மேன் மற்றும் மிட் ஆஃப் பீல்டர்கள் இல்லாமல் ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கான பீல்டிங்கை நிறுத்தி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தார். 

நெருக்கடி வெற்றிக்கு வித்திடும் என்றால், எதிரணிக்கு அந்த நெருக்கடியை எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் வில்லியம்ஸன் வல்லவர் என்றே சொல்லலாம்.  

எனவே சிறந்த கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த கிரிக்கெட் வீரராகவும் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய இவரை தேர்வு செய்யலாம். 

ஜோ ரூட்:

இங்கிலாந்து அணியில் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஜோ ரூட், அந்த அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். நடு ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை நிலையாக வைக்க இவர் மிக முக்கியமான வீரர். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறனும், ஸ்டிரைக்கை மாற்றும் திறனும் இவருக்கு உள்ளது. இவரை லைசன்ட் ஹீரோ என்றும் கூட அழைக்கலாம். ஆட்டத்தின் முடிவில் இவர் ஆற்றிய பங்களிப்பு எளிதாக ரசிகர்கள் பார்வைக்கு வராது. ஆனால், இவர் அணிக்கா முக்கியமான பங்களிப்பை அளித்திருப்பார். 

காரணம், ஆக்ரோஷமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மத்தியில் களமிறங்கி, அந்த அணியை ஆட்டத்தில் இருந்து விலக விடாமல் ஒரு நிலையிலேயே தன் கட்டுக்குள் வைத்திருப்பார். இதுதான் இவருடைய பலம். இந்த உலகக் கோப்பையில், இவர் இரண்டு சதம் மற்றும் 3 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 556 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார். பேட்டிங் சராசரி: 61.77.

ஷாகிப் அல் ஹசன்:

இந்த உலகக் கோப்பை ரோஹித் சர்மாவுக்கு எப்படி மிக முக்கியமான உலகக் கோப்பையோ, அதேபோல் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசனுக்கும் இது மிக முக்கியமான உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பையில், பேட்டிங் வரிசையில் இவர் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றப்பட்டு களமிறக்கப்பட்டார். இது வங்கதேச அணிக்கு அட்டகாசமான வகையில் உதவியது. அவர் இந்த உலகக் கோப்பையில் 8 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தபட்சம்  அரைசதத்தை அடித்துள்ளார். 7 இன்னிங்ஸில் 2 சதம், 5 அரைசதம் அடித்து பேட்டிங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அரைசதம் அடிக்காத அந்த ஒரு இன்னிங்ஸிலும்கூட அவர் எடுத்த ரன்கள் 41 ஆகும். 

387 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றாலும், நம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு சதம் அடித்து விளையாடினார். இந்த இன்னிங்ஸில் இவர் 121 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 44 ஆகும். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மீண்டும் அபார சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றி இலக்கை அடையச் செய்தார். இந்த உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்தது இந்த இன்னிங்ஸில் மட்டும் தான். 

பேட்டிங் இப்படி என்றால் பந்துவீச்சிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இவர் இந்த உலகக் கோப்பையில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் சுழற்பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக சாஹல் 12 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 11 விக்கெட்டுகளுடன் ஷாகிப் இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை அவர் தனிநபராக தோளில் சுமந்துள்ளார். 

ஒரு உலகக் கோப்பையில் பேட்டிங்கில் 500 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற அரிய சாதனையை ஷாகிப் அல் ஹசன் புரிந்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ்:

இங்கிலாந்து அணியில் நடுவரிசை பேட்ஸ்மேனாக இக்கட்டான நிலையில் களமிறங்கி நெருக்கடி சூழலை துல்லியமாக எதிர்கொண்டு ஒரு போராட்ட குணத்தை இந்த உலகக் கோப்பையில் வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஆட்டத்திலேயே 89 ரன்கள் குவித்து அந்த அணியை 300 ரன்களைக் கடக்க உதவினார். 

முதல் போராட்டம்:

இதன்பிறகு, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப, பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்து வந்தார். அந்த அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றும் டெய்லண்டர்களால் கடைசி கட்டத்தில் அவருக்கு ஒத்துழைக்க முடியாமல் போனது. இதனால், இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் இருந்திருந்தாலும்கூட இவர் அணியை வெற்றி பெறச் செய்வதற்கான வாயப்பு பிரகாசமாக இருந்தது.   

இரண்டாவது போராட்டம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 286 ரன்கள் என்ற இலக்கை விரட்டி களமிறங்கிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்து வந்தார். 89 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ் மிட்செல் ஸ்டார்க்கின் அற்புதமான யார்க்கர் பந்தில் போல்டானார். எப்படிப்பட்ட ஜாம்பவான் பேட்ஸ்மேனாலும் இந்த பந்தை எதிர்கொள்ள முடியுமா என்று தெரியாது என்கிற அளவுக்கு அற்புதமான யார்க்கரால் போல்டானதால் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இந்த இன்னிங்ஸில் இவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 27 என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் நடு ஓவர்களில் ஆட்டத்தை இழக்கத் தொடங்கிய அந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் அதிரடியான பினிஷிங்கை அளித்தார். அவர் 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தது இன்னிங்ஸில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது போராட்டம், அதேசமயம் முக்கியமான போராட்டம்:

இறுதி ஆட்டம் என்பதே மிகப் பெரிய நெருக்கடி. கடினமான ஆடுகளத்தில் 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி வரை களத்தில் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற வியூகத்துடன் விளையாடி வந்தார். அதற்கேற்றார்போல் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருநதார். இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது வெற்றி இலக்கை அடையமுடியாவிட்டாலும், 14 ரன்கள் எடுக்க வைத்து சமன் செய்தார். அதன்பிறகு, சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து 15 ரன்கள் எடுக்க உதவினார். அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தாலும், அணியை வெற்றி பெறச் செய்து இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்படி அணிக்கு தேவையான நேரத்திலும், இக்கட்டான நேரத்திலும் கைகொடுத்த போராட்ட நாயகம் ஸ்டோக்ஸ். 

இவர் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் உதவுவார் என்பதால், தேவையான நிலையில் 6-வது பந்துவீச்சாளராக அணியில் பயன்படுவார். இந்த உலகக் கோப்பையில் அவர் 468 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி: 66.85. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்):

இந்த உலகக் கோப்பையில் சிறந்த விக்கெட் கீப்பராக தோனி, பட்லர், ஷை ஹோப், டி காக் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அணியின் பினிஷிங் என்றாலும் சரி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலை என்றாலும் சரி முழு பங்களிப்பேன் என்று கில்லியாக விளையாடியுள்ளார். 

முதல் ஆட்டத்திலேயே முக்கியமான கட்டத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்தார். அதன்பிறகு, இந்தியாவுடன் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தாலும், இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான தொடக்கம் அமைந்தபோதிலும், அந்த அணி ஃபினிஷங்கில் திணறியது. ஆனால், கேரி 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அந்த அணியை 280 ரன்களை எட்டச் செய்தது. 

இதன்பிறகு, நியூஸிலாந்துக்கு எதிராக 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய அந்த அணியை கவாஜாவுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அந்த சூழ்நிலையில், 100 ஸ்டிரைக் ரேட்டில் அவர் 71 ரன்கள் குவித்தது, ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. இதனால், ஆஸ்திரேலியாவும் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 326 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி, 120 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் களமிறங்கிய கேரி, வார்னருடன் இணைந்து இலக்கை நோக்கி விளையாடினார். வார்னர் சதம் அடித்து ஒத்துழைக்க இவர் அரைசதம் அடித்தார். வார்னர் 122 ரன்களுக்கு முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். எனினும், 46 ஓவர் வரை போராடிய கேரி 69 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். 

இதன்பிறகு, அரையிறுதியில் மீண்டும் ஒரு நெருக்கடியான நேரத்தில் களமிறங்கினார் கேரி. டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் ஆட்டமிழக்க 7-வது ஓவரிலேயே களமிறங்கினார். ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து நம்பிக்கையளித்தார். ஆர்ச்சரின் ஆக்ரோஷமான பவுன்சர் இவரது ஹெல்மட்டை தாக்க இவருக்கு ரத்தம் வழிந்தது. எனினும், அவர் களத்தைவிட்டு வெளியேறாமல் விளையாடினார். அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும், இவர் இந்த இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். 

இந்த உலகக் கோப்பையில் இவர்  20 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 62.50 ஆகும். மொத்தம் 375 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு நெருக்கமாக வேறு விக்கெட் கீப்பர்கள் போட்டியில் இல்லை. 

மிட்செல் ஸ்டார்க்:

ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். 2007 உலகக் கோப்பையில் மெக்ராத் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த முறை ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி, அந்த சாதனையை முறியடித்துள்ளார். இவர் ஒவ்வொரு 20.51 பந்துக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார். இடக்கை வேகப்பந்துவீச்சாளரான இவர் இன்ஸ்விங் மூலம், தொடக்க ஆட்டக்காரர்களை திணறடித்தார். நடுஓவர்களில் பவுன்சர்களில் திணறடித்தார். 

இங்கிலாந்துடனான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு கச்சிதமான யார்க்கர் பந்து அது. இப்படி, தொடக்க ஓவராக இருந்தாலும் சரி, நடு ஓவர்களில் பாட்னர்ஷிப்புகளை பிரிக்க வேண்டும் என்றாலும் சரி, டெத் பௌலிங்கில் மிரட்ட வேண்டும் என்றாலும் சரி, பிஞ்ச் அழைக்கும் போதெல்லாம் இவர் தனது பணியை கச்சிதமாக செய்து வந்தார். 

இவர் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 

ஜோஃப்ரா ஆர்ச்சர்:

இவர் மேற்கிந்தியத் தீவுகளில் பிறந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆக்ரோஷமான பவுன்சர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அரையிறுதியில் அலெக்ஸ் கேரிக்கு வீசியதும், இறுதி ஆட்டத்தில் கிராண்ட்ஹோமுக்கு வீசியதும் ஆக்ரோஷமான பவுன்சர்களுக்கு எடுத்துக்காட்டு. ஓரளவுக்கு நல்ல மனநிலையில் இருந்த கிராண்ட்ஹோம், இந்த பவுன்சருக்கு பிறகு தன்னம்பிக்கை இழந்து திணறினார். 

இவர் இந்த உலகக் கோப்பையில் ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் 371 டாட் பந்துகளை வீசி முதலிடத்தில் உள்ளார். இப்படி அதிகப்படியான டாட் பந்துகள் மற்றும் பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு பலனாக மறுதிசையில் வீசும் பந்துவீச்சாளருக்கு சில சமயங்கள் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. எனவே, இவர் தானும் விக்கெட் வீழ்த்தி, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அந்த நெருக்கடி சூழலை ஏற்படுத்துகிறார். குறிப்பாக டெத் பௌலங்கில் ரன்களை கச்சிதமாக கட்டுப்படுத்துகிறார். இவருடைய எக்கானமி 4.77 ஆகும். முதல் பவர்பிளேவில் மட்டும் அதாவது, முதல் 10 ஓவரில் மட்டும் இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

லாக்கி பெர்குசன்:

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க்குக்கு அடுத்தபடியாக 21 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் பெர்குசன். இவர், நியூஸிலாந்து அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இந்த உலகக் கோப்பையில் செயல்பட்டுள்ளார். தொடக்கத்தில் ஹென்ரி மற்றும் போல்ட் சிறப்பாக பந்துவீசி ஒரு களம் அமைக்க, அதன்பிறகு நடு ஓவர்களில் இவர் பவுன்சர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார். 

வேகம் கொண்ட பவுன்சர் பந்தை வீசி அதற்கான தகுந்த பீல்டிங்கையும் நிறுத்தி விக்கெட் வீழ்த்தி நியூஸிலாந்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவதற்கு வகுத்த திட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவர் இந்த உலகக் கோப்பையில் 4 முறை  3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். ஒரு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஒரு பாட்னர்ஷிப் அமைத்து அடித்தளம் அமைக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது இந்த உலகக் கோப்பையில் இவருடைய ஸ்பெஷலாக இருந்துள்ளது. இறுதி ஆட்டத்திலும் கூட முக்கியமான பாட்னர்ஷிப்பான ஸ்டோக்ஸ், பட்லர் இணையை பிரித்து ஆட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இவர் தான். எனவே, இவர் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். 

ஜாஸ்பிரித் பூம்ரா:

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் நம்பர் -1 பந்துவீச்சாளர் என்பதற்கு ஏற்றவாறு விராட் கோலிக்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளார் பூம்ரா. இந்திய அணி தரப்பில் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார். இவர் முதல் 10 ஓவர் என்றாலும், கடைசி 10 ஓவர் என்றாலும் தனது பணியை கச்சிதமாக செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், அந்த அணி கடைசி 10 ஓவரில் 92 ரன்கள் குவித்தது. இதில் 5 ஓவர்களை வீசிய பூம்ரா வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது இவரது முக்கிய அம்சமாகும். 

வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்த அந்த அணி இந்திய அணிக்கு ஒரு கட்டத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பந்துவீச வந்த பூம்ரா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை ஒரே ஓவரில் முடித்தார். இப்படி அணிக்கு தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை இவர் ஆற்றியுள்ளார். 

இந்த உலகக் கோப்பையில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியதில் 9 ஓவர்கள் வீசி இவரே முதலிடத்தை வகிக்கிறார். ஒரு பக்கம் விக்கெட்டையும் வீழ்த்துகிறார், பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்கவிடாமலும் தடுக்கிறார். எனவே, இவரது பங்களிப்பு என்பது ஆட்டத்தின் எந்த கட்டமாக இருந்தாலும், அது முக்கியமானதே.  

இவர்கள் அல்லாது பல்வேறு வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பை சிறப்பாக அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்தில் நீஷம் ஆல்-ரௌண்டராக ஜொலித்துள்ளார். இங்கிலாந்தில் பேர்ஸ்டோவ் ஆகட்டும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மார்கன் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்ததாகட்டும் என பல்வேறு வீரர்கள் அணிக்கு தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

]]>
ஐசிசி, உலகக் கோப்பை கிரிக்கெட், கிரிக்கெட் உலகக் கோப்பை, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்ஸன், CWC 2019, Cricket World Cup, Rohit Sharma, Kane Williamson, Ben Stokes, பென் ஸ்டோக்ஸ், https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/Dinamani_World_Cup_Eleven.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/dinamani-com-picked-its-best-world-cup-team-3192997.html
3192986 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஐசிசி உலகக் கோப்பை அணியில் இரு இந்திய வீரர்களுக்கு இடம்! கேப்டனாக வில்லியம்சன் தேர்வு! எழில் DIN Monday, July 15, 2019 04:21 PM +0530  

2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஐசிசி அணி

ஜேசன் ராய் (இங்கிலாந்து)
ரோஹித் சர்மா (இந்தியா)
கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூஸிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா)
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
ஃபெர்குசன் (நியூஸிலாந்து)
பும்ரா (இந்தியா)

]]>
ICC, Team of the Tournament https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/PTI7_15_2019_000028B.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/icc-reveals-official-team-of-the-tournament-3192986.html
3192972 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இங்கிலாந்து அணிக்கு 6 ஓவர் த்ரோ ரன்கள் வழங்கியது நடுவர்களின் தவறு: பிரபல நடுவர் சைமன் டாஃபல் கருத்து! எழில் DIN Monday, July 15, 2019 03:28 PM +0530  

இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றதில் புதிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடைசி ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை மார்டின் கப்தில் ஃபீல்டிங் செய்தார். அதில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார் ஸ்டோக்ஸ். அவர் இரண்டாவது ரன்னை ஓடி முடிக்கும்போது கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து, எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓவர் த்ரோ ரன்கள் வழங்கப்பட்டன (பவுண்டரி 4 + ஓடியதற்கு 2 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதற்கு முன்பு 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தது. அந்த 6 ஓவர் த்ரோ ரன்களுக்குப் பிறகு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என நிலைமை அடியோடு மாறியது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிச்சுற்றை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த 6 ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.

ஆனால் ஐசிசி விதிமுறையின்படி இதுபோல ஆறு ஓவர் த்ரோ ரன்கள் வழங்கியது தவறு என்று கூறப்படுகிறது. ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னை எடுக்கும்போதுதான் அது ஓவர் த்ரோவாக மாறியது. அப்போது கப்தில் த்ரோவை வீசத் தொடங்கிய தருணத்தில் இரு பேட்ஸ்மேன்களும் ஒருவரையொருவர் தாண்டவில்லை. இருவருமே எதிர் எதிர் கிரீஸ்களில் இருந்து இரண்டாவது ரன் எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். இந்த நிலையில் 2-வது ரன்னை நடுவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது. ஆனால் அதையும் கணக்கில் கொண்டு 6 ரன்களாக வழங்கியதுதான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு 5 ஓவர் த்ரோ ரன்கள் மட்டுமே வழங்கியிருக்கவேண்டும் என்று முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

கப்தில் த்ரோ வீசிய தருணம்...

 

இது தவறு. முடிவெடுப்பதில் நேர்ந்த தவறு.

எனினும் அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் த்ரோ வீச முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார். ஆனால் டிவி ரீப்ளேக்கள் வேறொரு காட்சியைக் காண்பித்துள்ளன. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அடில் ரஷித் தான் 5-வது பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும். எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/final33.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/umpires-made-mistake-in-awarding-england-six-runs-not-five-says-simon-taufel-3192972.html
3192961 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள்: ஒரு வருட முழு அட்டவணை! ச.ந. கண்ணன் DIN Monday, July 15, 2019 02:15 PM +0530  

2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்கள் அடங்கிய முழுச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 

வரும் ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி மொத்தமாக 9 டெஸ்டுகளிலும் 15 ஒருநாள் ஆட்டங்களிலும் 20 டி20 ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. கடைசியாக, அடுத்த வருட மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உள்ளூரில் 3 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது இந்திய அணி. இதற்குப் பிறகு 2020 ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும்.   

ஆகஸ்ட் முதல் அடுத்த வருட மார்ச் வரை இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள், தொடர்களின் அட்டவணைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுப்பட்டியல்:
 

இந்திய அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஆகஸ்ட் 3 - முதல் டி20, ஃப்ளோரிடா

ஆகஸ்ட் 4 - 2-வது டி20, ஃப்ளோரிடா 

ஆகஸ்ட் 6 - 3-வது டி20, கயானா 

ஒருநாள் தொடர்

ஆகஸ்ட் 8 - முதல் ஒருநாள், கயானா

ஆகஸ்ட் 11 - 2-வது ஒருநாள், டிரினிடாட் 

ஆகஸ்ட் 14 - 3-வது ஒருநாள், டிரினிடாட் 

டெஸ்ட் தொடர் 

ஆகஸ்ட் 22 - 26 - முதல் டெஸ்ட், ஆண்டிகுவா

ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 3 - 2-வது டெஸ்ட், ஜமைக்கா

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

டி20 தொடர்

செப்டம்பர் 15 - முதல் டி20, தர்மசாலா 

செப்டம்பர் 18 - 2-வது டி20, மொஹலி 

செப்டம்பர் 22 - 3-வது டி20, பெங்களூர் 

டெஸ்ட் தொடர் 

அக்டோபர் 2-6 - முதல் டெஸ்ட், விசாகப்பட்டிணம்

அக்டோபர் 10-14 - 2-வது டெஸ்ட், ராஞ்சி 

அக்டோபர் 19-23 - 3-வது டெஸ்ட், புணே 

இந்தியா vs வங்கதேசம் தொடர்

டி20 தொடர்

நவம்பர் 3  - முதல் டி20, தில்லி 

நவம்பர் 7  - 2-வது டி20, ராஜ்கோட் 

நவம்பர் 10  - 3-வது டி20, நாகபுரி 

டெஸ்ட் தொடர் 

நவம்பர் 14-18 - முதல் டெஸ்ட், இந்தூர் 

நவம்பர் 22-26 - 2-வது டெஸ்ட், கொல்கத்தா 

இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் தொடர் 

டி20 தொடர்

டிசம்பர் 6 - முதல் டி20, மும்பை 

டிசம்பர் 8 - 2-வது டி20, திருவனந்தபுரம் 

டிசம்பர் 11 - 3-வது டி20, ஹைதராபாத் 

ஒருநாள் தொடர்

டிசம்பர் 15 - முதல் ஒருநாள், சென்னை 

டிசம்பர் 18 - 2-வது ஒருநாள், விசாகப்பட்டிணம் 

டிசம்பர் 22 - 3-வது ஒருநாள், கட்டாக் 

இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் - 2020

டி20 தொடர்

ஜனவரி 5 - முதல் டி20, குவாஹாட்டி 

ஜனவரி 7 - 2-வது டி20, இந்தூர்

ஜனவரி 10 - 3-வது டி20, புணே 

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

ஒருநாள் தொடர்

ஜனவரி 14 - முதல் ஒருநாள், மும்பை 

ஜனவரி 17 - 2-வது ஒருநாள், ராஜ்கோட் 

ஜனவரி 19 - 3-வது ஒருநாள், பெங்களூர் 

இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி

ஒருநாள் தொடர்

பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி

டெஸ்ட் தொடர் 

பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா தொடர்

ஒருநாள் தொடர்

மார்ச் 12 - முதல் ஒருநாள், தர்மசாலா 

மார்ச் 15 - 2-வது ஒருநாள், லக்னோ 

மார்ச் 18 - 3-வது ஒருநாள், கொல்கத்தா 

]]>
India Cricket Schedule, World Cup, Kohli https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/indian_team_kohli_90.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/india-cricket-schedule-3192961.html
3192939 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்: முறியடிக்க முடியாத  சச்சினின் சாதனை! எழில் DIN Monday, July 15, 2019 01:06 PM +0530  

பரபரப்பாக நடைபெற்ற 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனை இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் முறியடிக்கப்படவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் பெற்ற சாதனை சச்சின் வசம் உள்ளது. 2003 உலகக் கோப்பையில் 673 ரன்களை அவர் சேர்த்திருந்தார். 

2019 உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில், ரோஹித் சர்மா 647  ரன்களும் வார்னர் 638 ரன்களும் எடுத்திருந்தார்கள். இதனால் அரையிறுதியில் இவ்விருவரும் சச்சின் சாதனையைச் சுலபமாக முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 32 வயது ரோஹித் அரையிறுதியில் 1 ரன்னும் அதே வயது கொண்ட வார்னர் 9 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்கள். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோற்றதால் சச்சினின் சாதனையை இவ்விருவராலும் தகர்க்க முடியாமல் போனது.

இறுதிப்போட்டியிலும் இரு வீரர்களுக்கு சச்சினின் சாதனையைத் தாண்ட வாய்ப்பு இருந்தது. ரூட் 123 ரன்களும் வில்லியம்சன் 124 ரன்களும் எடுத்தால் சச்சினைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் ரூட் 7 ரன்களிலும், வில்லியம்சன் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். இதனால் 2003 உலகக் கோப்பையில் சச்சின் நிகழ்த்திய சாதனை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்

673 ரன்கள் - சச்சின் (2003)
659 ரன்கள் - ஹேடன் (659)
648 ரன்கள் - ரோஹித் சர்மா (2019)
647 ரன்கள் - டேவிட் வார்னர் (2019)
606 ரன்கள் - ஷகிப் அல் ஹசன் (2019)

]]>
world cup, Sachin Tendulkar, sachin tendulkar world cup record, sachin tendulkar records in cricket, sachin tendulkar odi record, sachin tendulkar world records, sachin tendulkar records total runs, sachin tendulkar icc records https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/sachin_tendulkar_wc.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/sachin-tendulkars-record-of-most-runs-in-a-world-cup-edition-stays-unbroken-again-3192939.html
3192948 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 யாதும் ஊரே யாவரும் கேளிர்: வெளிநாடுகளில் பிறந்த வீரர்களைக் கொண்டு சாதித்த இங்கிலாந்து அணி! எழில் DIN Monday, July 15, 2019 12:52 PM +0530  

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்துடன் தொடங்கினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதுபோல இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல நாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து இங்கிலாந்து அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்கள். 

இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், அயர்லாந்தில் பிறந்தவர். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்துடன் தொடங்கினார். எனினும் தன்னுடைய தாய், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தன்னிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் உள்ளது என்று கூறி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணியில் இணைந்துகொண்டார். பிறகு இங்கிலாந்து கேப்டனாகி, உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். 

அதேபோல பார்படாஸில் (மேற்கிந்தியத் தீவுகள்) பிறந்து அங்கு கிரிக்கெட் விளையாடி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்,  சமீபத்தில்தான் இங்கிலாந்து அணியில் விளையாடத் தகுதி பெற்றார். ஆனால் தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் அற்புதமாகப் பந்துவீசி இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்துள்ளார்.

இங்கிலாந்தின் அதிரடித் தொடக்க வீரர் ஜேசன் ராய், தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாகும்போது ஜேசன் ராயின் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. தற்போது இங்கிலாந்து அணி முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார்.

நியூஸிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயதாகும்போது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். தற்போது, இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்ற போட்டியில், இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றுள்ளார். 

இதுதவிர மொயீன்  அலி, அடில் ரஷித் என பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த இரு வீரர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளார்கள். அடில் ரஷித் இங்கிலாந்தில் பிறந்தாலும் அவருடைய பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 1967-ல் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்கள். மொயீன் அலியின் தாத்தா பாகிஸ்தானின் மிர்புரிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவர். மொயீன் அலியின் பாட்டி பெட்டி காக்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.

இப்படி பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று அந்த அணி உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்ல முக்கியக் காரணமாக இருந்துள்ளார்கள்.

]]>
England Players, World Cup https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/stokes1_final1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/england-players-born-abroad-3192948.html
3192934 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 விருதுகள் பெற்ற ஸ்டோக்ஸ் & கேன் வில்லியம்சன்: உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் சாதித்த வீரர்களின் பட்டியல்! எழில் DIN Monday, July 15, 2019 10:53 AM +0530  

பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து, தனது அணியை நன்கு வழிநடத்தி 2-ம் இடத்தைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. 

உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்

1975: லாயிட்
1979: ரிச்சர்ட்ஸ்
1983: அமர்நாத்
1987: பூன்
1992: அக்ரம்
1996: அரவிந்த் டி சில்வா
1999: வார்னே
2003: பாண்டிங்
2007: கில்கிறிஸ்ட்
2011: தோனி
2015: ஃபாக்னர்
2019: ஸ்டோக்ஸ்

உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது பெற்ற வீரர்கள்

1992: குரோவ்
1996: ஜெயசூர்யா
1999: க்ளூஸ்னர்
2003: டெண்டுல்கர்
2007: மெக்ராத்
2011: யுவ்ராஜ்
2015: ஸ்டார்க்
2019: வில்லியம்சன் 

]]>
world cup https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/williamson_man_of_the_series1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/விருதுகள்-பெற்ற-ஸ்டோக்ஸ்--கேன்-வில்லியம்சன்-உலகக்-கோப்பை-இறுதிச்சுற்றில்-சாதித்த-வீரர்களின்-பட்டிய-3192934.html
3192932 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 பரபரப்பான இறுதி ஆட்டத்தை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Monday, July 15, 2019 10:34 AM +0530  

பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

]]>
England, world cup, Super Over https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/champion123.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/england-win-world-cup-on-countback-in-super-over-thriller-3192932.html
3192399 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 தொடர் நாயகன் விருதை வென்றார் வில்லியம்ஸன் DIN DIN Monday, July 15, 2019 12:42 AM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் விருதை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் வென்றார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் ஒருவழியாக இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. இதையடுத்து, தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. அதிக ரன்கள் குவித்ததன் அடிப்படையில் ரோஹித் சர்மா, அதிக விக்கெட்டுகள் எடுத்ததன் அடிப்படையில் மிட்செல் ஸ்டார்க், 600-க்கும் மேற்பட்ட ரன்கள் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன் என இந்த விருதுக்கு கடுமையான போட்டி நிலவியது. 

ஆனால், பேட்டிங் சராசரி 82.57 உடன், 578 ரன்கள் குவித்து அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி ஆட்டம் வரை கொண்டுவந்த கேன் வில்லியம்ஸன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/Williamson_-_AP.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/தொடர்-நாயகன்-விருதை-வென்றார்-வில்லியம்ஸன்-3192399.html
3192384 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 சூப்பர் ஓவரும் டை: அதிக பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பை வென்றது இங்கிலாந்து DIN DIN Monday, July 15, 2019 12:17 AM +0530
சூப்பர் ஓவரும் டை ஆனதால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது. 

உலகக் கோப்பை இறுதி ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து சூப்பர் ஓவர் பேட்டிங்: http://bit.ly/30xirQ9

16 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூஸிலாந்து அணி சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. நியூஸிலாந்து தரப்பில் நீஷம் மற்றும் கப்தில் களமிறங்கினர். முதல் பந்தை ஆர்ச்சர் வைடாக வீசினார். இதனால், முதல் பந்து மீண்டும் வீசப்பட்டது. அந்த பந்தில் நீஷம் இரண்டு ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தை நீஷம் இமாலய சிக்ஸர் அடிக்க இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது. 

3-வது பந்தில் நீஷம் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க, முதல் 3 பந்தில் நியூஸிலாந்துக்கு 11 ரன்கள் கிடைத்தது. 4-வது பந்திலும் கப்தில் சிறப்பாக ஒத்துழைக்க நீஷம் மீண்டும் இரண்டு ரன்கள் ஓடினார். இதனால், இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ஆர்ச்சர் ஷாட் பிட்ச்சாக வீச நீஷமால் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. 

மிட் விக்கெட் திசையில் பந்தை தட்டிவிட்டு கப்தில் ஓடினார். இரண்டாவது ரன்னுக்காக கப்தில் கீப்பர் திசைக்கு ஓடினார். ஆனால், ராய் வீசிய பந்தை பிடித்து பட்லர் அதற்குள் ஸ்டம்புகளைத் தகர்த்தார். இதனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதனால், அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரை வென்றது. 

இறுதி ஆட்டத்திலும் போராடி, சூப்பர் ஓவரிலும் போராடியபோதும் வெறும் பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் துரதிருஷ்டவசமாக உலகக் கோப்பையை இழந்தது நியூஸிலாந்து.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/15/w600X390/EnglandWins.jpg நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/15/சூப்பர்-ஓவரும்-டை-அதிக-பவுண்டரிகள்-அடிப்படையில்-கோப்பை-வென்றது-இங்கிலாந்து-3192384.html
3192362 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வெற்றிக்கு 16 ரன்கள் இலக்கு DIN DIN Sunday, July 14, 2019 11:44 PM +0530
உலகக் கோப்பை இறுதி ஆட்டம் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வெற்றிக்கு 16 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து பேட்டிங்: http://bit.ly/2Gb4TlS

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளை போல்ட் அற்புதமாக வீச ஸ்டோக்ஸால் ரன் எடுக்க முடியவில்லை. 3-வது பந்தில் ஸ்டோக்ஸ் சிறப்பாக சிக்ஸர் அடித்தார். இதனால், கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 

4-வது பந்தில் ஸ்டோக்ஸ் இரண்டு எடுக்க முயன்றார். ஆனால், கப்தில் வீசிய த்ரோ ஸ்டோக்ஸ் பேட்டில்பட்டு பவுண்டரிக்கு போக இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டமாக 6 ரன்கள் கிடைத்தது. இதனால், கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரஷித் ரன் அவுட் ஆக 1 மட்டுமே கிடைத்தது. கடைசி 1 ரன் தேவை என்ற நிலை இருந்தது. இந்த பந்தும் மிட் ஆன் திசைக்கு அடித்து ஓட 1 ரன் மட்டுமே கிடைத்தது. பந்துவீச்சாளர் புறத்தில் மார்க் வுட் ரன் அவுட் ஆனார். இதனால், இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படுகிறது. இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்தது. 

இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்கினர். நியூஸிலாந்து சார்பில் போல்ட் பந்துவீசினார். 

முதல் பந்தில் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் பட்லர் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்து அசத்தினார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்தார். அடுத்து 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த பட்லர், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி இங்கிலாந்துக்கு நல்ல பினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம், இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/14/w600X390/D_dGuX-XkAYk39I.jpg நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/உலகக்-கோப்பை-இறுதி-ஆட்டம்-சூப்பர்-ஓவரில்-நியூஸிலாந்து-வெற்றிக்கு-16-ரன்கள்-இலக்கு-3192362.html
3192355 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 நியூஸிலாந்தை மிரட்டும் பட்லர், ஸ்டோக்ஸ்: 8 ஓவரில் 65 ரன்கள் தேவை DIN DIN Sunday, July 14, 2019 10:38 PM +0530
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 8 ஓவரில் 65 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. 

நியூஸிலாந்து பேட்டிங்: http://bit.ly/2XLVFSP

242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஹென்ரி மற்றும் போல்ட் திணறடித்தனர். அவர்களால் பந்தை எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து மீள பல்வேறு ஷாட்களை ஆட முயற்சித்த ராய் 17 ரன்களில் தோல்வியடைந்தார். ஹென்ரி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் ரன் குவிக்க திணறினார். நியூஸிலாந்தின் ஆல்-ரௌண்டர் கிராண்ட்ஹோம் இந்த ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்தி இங்கிலாந்துக்கு நெருக்கடியளித்தது. 9, 10, 11 ஆகிய மூன்று ஓவர்கள் மைடனாக இங்கிலாந்து நெருக்கடியை உணர்ந்தனர். இந்த நெருக்கடியால் இங்கிலாந்து அணி ரூட்டையும் இழந்தது. அவர் 30 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன் மட்டுமே எடுத்தார். இவரது விக்கெட்டை கிராண்ட்ஹோம் கைப்பற்றினார்.

அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவும் 36 ரன்களுக்கு பெர்குசன் ஓவரில் போல்டானார். இதையடுத்து கேப்டன் மார்கனை நியூஸிலாந்து வேகங்கள் தொடர்ந்து ஷாட் பிட்ச் பந்துகளில் மிரட்டினர். அதனால், அவரும் அதற்கேற்றவாறு அடக்கியே வாசித்து வந்தார். இதற்கு பலனளிக்கும் வகையில் நீஷம் வீசிய முதல் பந்திலேயே பெர்குசனின் அற்புதமான கேட்ச்சால் மார்கனும் ஆட்டமிழந்தார். அந்த அணி 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸுடன் ஜாஸ் பட்லர் இணைந்தார். இந்த இணை வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை அதிகரிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு ரன் சேர்த்தனர். மொத்தமாக இங்கிலாந்து பக்கம் இருந்த நெருக்கடி இந்த பாட்னர்ஷிப்பால் படிப்படியாக நியூஸிலாந்து பக்கம் திரும்பியது.

பந்துகளை எதிர்கொள்ள திணறிய இங்கிலாந்து அணி, இந்த இணைக்குப் பிறகு எளிதாக ஒன்றிரண்டு ரன்களை எடுக்கத் தொடங்கியது. கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றியும் பலனளிக்கவில்லை. இதன்மூலம், இந்த இணை 5-வது விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 50 ரன்களை கடந்தது. 

சற்று முன் வரை இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 8 ஓவரில் 65 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. ஸ்டோக்ஸ் 47 ரன்களுடனும், பட்லர் 44 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/14/w600X390/StokesButtler.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/நியூஸிலாந்தை-மிரட்டும்-பட்லர்-ஸ்டோக்ஸ்-8-ஓவரில்-65-ரன்கள்-தேவை-3192355.html
3192353 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 கபில் தேவ் ஆவாரா கேன் வில்லியம்ஸன்? சுவாமிநாதன் DIN Sunday, July 14, 2019 08:24 PM +0530
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 241 ரன்கள் எடுத்துள்ளது. 242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 

உலகக் கோப்பை இறுதி ஆட்டங்கள் வரலாற்றில் முதலில் பேட் செய்து 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்தது 4 முறை. 

 • 1983 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
   
 • 1996 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.
   
 • 1999 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
   
 • 2015 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
   

இதில், 1983-இல் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் எதிரணியை வெற்றி இலக்கை அடையச் செய்யாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்த மற்ற மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளன. 

எனவே, இந்த முறை கேன் வில்லியம்ஸன் இங்கிலாந்து அணியை 241 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் 1983-இல் கபில் தேவ் வென்றதைப் போல் அதே லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வெல்லலாம். 1983-இல் கபில் தேவ் பெற்றுத் தந்த உலகக் கோப்பை தான் இந்திய அணியின் முதல் உலகக் கோப்பையாகும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/19/w600X390/kane.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/கபில்-தேவ்-ஆவாரா-கேன்-வில்லியம்ஸன்-3192353.html
3192352 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இங்கிலாந்து மிரட்டல் பந்துவீச்சு: 241 ரன்களுக்கு கட்டுப்பட்டது நியூஸிலாந்து DIN DIN Sunday, July 14, 2019 07:21 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணிக்கு உலகக் கோப்பை முழுவதும் மோசமான தொடக்கத்தையே அளித்து வந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இறுதி ஆட்டத்திலும் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

மார்டின் கப்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அரையிறுதி ஆட்டம்போல் இந்த ஆட்டத்திலும் ரன் ரேட்டை குறித்து கவலை கொள்ளாமல் வில்லியம்ஸன் மற்றும் நிகோல்ஸ் பொறுமையாக விளையாடினர். இதனால், நியூஸிலாந்து அணி வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் வீசிய முதல் 10 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பிறகு மார்க் வுட், பிளங்கட் மற்றும் ரஷித் ஓவர்களை குறிவைத்து துரிதமாக ரன் சேர்த்தனர். இதனால், அடுத்த 10 ஓவரில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. 

ரன் வேகத்தை உயர்த்தி வந்த இந்த முக்கியமான தருணத்தில் வில்லியம்ஸன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், நிகோல்ஸ் ஒரு வழியாக இறுதி ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பி அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த அவரும் 55 ரன்களுக்கு பிளங்கட் பந்தில் ஆட்டமிழந்தார். 

குறுகிய நேரத்தில் இரண்டு விக்கெட்டுகள் என்பதால், ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் நிதானமாக விளையாடினர். இந்த இணை அதிரடியாக விளையாட நினைத்தாலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அதற்கு இடமளிக்கவில்லை. கச்சிதமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை பவுண்டரிகளே அடிக்கவிடவில்லை. 

இந்த நிலையில், அனுபவ வீரரான டெய்லர் வெறும் 15 ரன்களுக்கு வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நீஷம் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இப்படி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அடுத்தடுத்து திணறினர். 

அதிரடி ஆட்டக்காரராக களமிறங்கிய கிராண்ட்ஹோம் ஆர்ச்சர் வீசிய பவுன்சருக்குப் பிறகு திணறத் தொடங்கினார். இதனால், 28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 47-வது ஓவரில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் களத்தில் இருந்தும் துரிதமாக ரன் குவிக்கத் திணறிய லாதமும் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், நியூஸிலாந்து அணியின் ரன் ரேட் கடைசி வரை உயரவே இல்லை.

இதன்மூலம், நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் வுட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

நியூஸிலாந்து வெறும் 14 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளது. அந்த அணிக்கு சொல்லிக்கொள்ளும்படியான பாட்னர்ஷிப்பும் அமையவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/14/w600X390/EnglandBowlers.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/accuracy-bowling-from-england-new-zealand-scored-241-in-finals-3192352.html
3192348 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்தார் கேன் வில்லியம்ஸன் DIN DIN Sunday, July 14, 2019 04:56 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை கேன் வில்லியம்ஸன் படைத்துள்ளார். 

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அப்போதைய இலங்கை கேப்டன் மகிளா ஜெயவர்தனே மொத்தம் 548 ரன்கள் எடுத்தார். ஒரு உலகக் கோப்பை தொடரில் ஒரு கேப்டன் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். 

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 550 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/20/w600X390/williamson12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/new-zealand-captain-kane-williamson-creates-a-new-world-cup-record-3192348.html
3192345 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 முதல் உலகக் கோப்பை யாருக்கு? இறுதியில் நியூஸி. முதல் பேட்டிங் Raghavendran DIN Sunday, July 14, 2019 03:06 PM +0530  

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14 ஜூலை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 

குறிப்பிடத்தக்க அம்சமாக இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்து ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது. 

இதனால் முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு எனப்படும் இங்கிலாந்து அதிகபட்சமாக 5 முறை உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி உள்ளது.

1979, 1987, 1992 உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தையே பெற்றிருந்தது

அதே நேரத்தில் நியூஸிலாந்து அணியும் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற சிறப்புடன் திகழ்கிறது. மேலும் 6 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

இங்கிலாந்து:

ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மார்க் உட்.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்ரி, ட்ரென்ட் போல்ட், லாகி ஃபெர்கூஸன்.

]]>
2019 World Cup final England vs NewZeland, 2019 World Cup, world cup, World Cup final, 2019 WC final, CWC2019, CWC2019final, England, Newzeland, ENGvsNZ, NZvsENG https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/14/w600X390/kane_morgan.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/14/முதல்-உலகக்-கோப்பை-யாருக்கு-இறுதியில்-நியூஸி-முதல்-பேட்டிங்-3192345.html
3191727 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பையை வெல்வது இந்த அணி தான்: பாண்டிங் DIN DIN Saturday, July 13, 2019 10:28 PM +0530
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே தெரிவித்தது போல் இங்கிலாந்து தான் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லாததால், நாளைய இறுதி ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் அணி குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது,

"இங்கிலாந்து வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் தெரிவித்தேன். இங்கிலாந்து தான் விருப்பமான அணியாக இருந்தது, அதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. 

நியூஸிலாந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற சிறப்பாக செயல்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது மிகச் சிறந்த சாதனை. கடந்த இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் நியூஸிலாந்துக்கு உள்ளது. அதேசமயம், இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் எந்தவொரு இங்கிலாந்து வீரர்களுக்கும் கிடையாது. 

எனினும், இங்கிலாந்து அணியிடம் கொஞ்சம் கூடுதல் தரம் உள்ளது. அது நியூஸிலாந்து வெற்றி பெறுவதை தடுக்கும்" என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/Ricky_Ponting.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/13/ricky-ponting-predicts-england-will-win-icc-world-cup-3191727.html
3191713 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பையை மீண்டும் வெல்லுமா உள்ளூர் அணி?: ஹாட்ரிக் சாதனைக்கு வாய்ப்பு! எழில் DIN Saturday, July 13, 2019 05:54 PM +0530  

1975 முதல் 2007 வரை உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுகளை நடத்திய எந்தவொரு நாடும் உலகக் கோப்பையை வென்றதில்லை. 1996-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியது இலங்கை. பாகிஸ்தானில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அந்த அணி கோப்பையை வென்றது. 

இங்கிலாந்து 1975, 1979, 1983, 1999, 2019 ஆகிய வருடங்களில் உலகக் கோப்பையை நடத்தியுள்ளது. 1975, 1979-ல் தனியாக போட்டியை நடத்தியது. 1983, 1999, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளை அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. எனினும் அந்த அணி இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. 

இந்தியா மட்டுமே 2011-ல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியதோடு இந்தியாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் வென்று கோப்பையைத் தட்டிசென்றது. பிறகு 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியை உள்ளூர் அணியான ஆஸ்திரேலியா வென்றது. 

இந்நிலையில் 2019 உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் இங்கிலாந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன. 

நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டால், உலகக் கோப்பையைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாக உள்ளூர் அணி வென்ற பெருமை ஏற்படும். இதனால் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகள் கோப்பையை வென்றே ஆகவேண்டிய ஓர் அழுத்தமும் இனி ஏற்படும். 

2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/eng_team_90.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/13/will-it-be-a-hattrick-of-wins-for-the-host-nation-3191713.html
3191631 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றாலும் பணியில் நீடிக்க விரும்பாத பயிற்சியாளர்! எழில் DIN Saturday, July 13, 2019 12:45 PM +0530  

உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார் டிரெவோர் பேலிஸ்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நீங்கள் நன்றாகச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான்கு வருடங்கள் போதுமானது. வீரர்களுக்குப் புதிய குரல் தேவை. அது, அவர்களை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவும். செப்டம்பர் மாதத்துடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். 

2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 2019 போட்டியை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம். அந்தக் கனவை நிறைவேற்றும் தருணம் இப்போது வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

2019 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இறுதிச்சுற்றில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன.

]]>
world cup, Ashes, England coach Trevor Bayliss https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/Trevor_Bayliss1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/13/england-coach-trevor-bayliss-will-quit-even-if--team-win-world-cup-and-ashes-3191631.html
3191038 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மெளனம் கலைத்தார் ஏபி டி வில்லியர்ஸ்: சர்ச்சை குறித்து விளக்கம்! எழில் DIN Friday, July 12, 2019 05:54 PM +0530  

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் முயன்றார் என்கிற அதிரடித் தகவல் கடந்த மாதம் வெளியானது.

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ். ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி, உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் சமயத்தில் வெளியானதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தன்னைப் பற்றிய இந்த சர்ச்சைக்கு ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்க அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதால், இதன்மூலம் அவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படாது என்பதால், என் மீதான நியாயமற்ற விமரிசனத்துக்குப் பதில் அளிக்கவுள்ளேன். 

உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எனக்கும் கேப்டன் டு பிளெஸ்ஸிக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட உரையாடலுக்கு விளக்கமளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்ன நடந்தது என்று கூறுகிறேன்.

என்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் 2018 மே மாதம் என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். பணத்தின் காரணமாக இந்த முடிவை நான் எடுத்ததாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் சொல்வது தவறு. உண்மையில் அதிக வருமானம் உடைய வாய்ப்புகள் வந்தபோதும் அதை நான் மறுத்துள்ளேன். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் எட்டு மாதங்கள் விளையாடியதிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைத்தேன். 

பிறகு எனக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் அவர்களை அழைக்கவில்லை, அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துவிட்டேன். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியும் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் மற்றும் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் தலைமையில் வெற்றிகளைக் கண்டது. 

இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்ததிலிருந்து நானும் டுபிளெஸ்ஸியும் நண்பர்களாக உள்ளோம். உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு, அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஐபிஎல்-லில் ஓரளவு நன்றாக விளையாடிக்கொண்டிருந்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு என்னிடம் கேட்டபோது சொன்னதையே அப்போதும் மீண்டும் சொன்னேன், தேவைப்பட்டால் நான் அணிக்குள் வரத் தயார் என்றேன். தேவைப்பட்டால் மட்டும்தான் என்றேன்.

எவ்வித நிபந்தனையையும் நான் விதிக்கவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தென் ஆப்பிரிக்க அணிக்குள் என்னை பலவந்தமாக நுழைக்கவில்லை. என்னைத் தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. என் பக்கமிருந்து எவ்வித புகாரும் இல்லை, அநியாயம் நடைபெற்றதாகவும் கருதவில்லை. 

ஆனால் திடீரென, இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தோற்றபிறகு, மூன்றாவது தொடர் தோல்வியைச் சந்தித்த பிறகு, எங்களுக்குள் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடல் ஊடகங்களுக்குக் கசிந்தன. என்னை வில்லனாகச் சித்தரித்தன.

அந்தத் தகவல் என்னாலோ என்னைச் சேர்ந்தவர்களாலோ, டுபிளெஸ்ஸிஸாலோ வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை, உலகக் கோப்பை தோல்வி விமரிசனங்களை வேறு பக்கம் திருப்புவதற்காகச் சொல்லியிருக்கலாம். தெரியவில்லை.

இதனால் சுயநலக்காரனாக, ஆக்ரோஷமானவனாக நான் சித்தரிக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் தெளிவாக உள்ளேன். நியாயமான காரணங்களுக்காக நான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். உலகக் கோப்பைப் போட்டிக்கு நான் வருவேனா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைக்க சம்மதித்தேன். உலகக் கோப்பைப் போட்டியில் அணி நல்லவிதமாக என்னுடைய ஓய்விலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருந்தது. இதனால் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. 

என் வாழ்க்கையின் இக்கட்டத்தில் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகளவில் நடைபெறும் குறிப்பிட்ட சில டி20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவெடுத்துள்ளேன். 

என் நாட்டுக்காக விளையாடியதைப் பெருமையாக எண்ணுகிறேன். தென் ஆப்பிரிக்க வீரர்களுடான என்னுடைய உறவு எப்போதும் வலுவாக உள்ளது. அடுத்தத் தலைமுறைக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளேன்.

தேவையற்ற இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தும் வேளையில், எனக்கு நட்புகளையும் வாய்ப்புகளையும் அளித்த அணிக்கும் கிரிக்கெட்டுமான என்னுடைய ஆதரவை எப்போதும் அளிப்பேன் என்று கூறியுள்ளார். 

]]>
world cup, AB de Villiers https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/23/w600X390/de_Villiers21111.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/12/ab-de-villiers-clears-air-on-world-cup-offer-3191038.html
3191019 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதித்தது ஐசிசி! எழில் DIN Friday, July 12, 2019 02:14 PM +0530  

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது. 

இந்நிலையில் ஐசிசி விதிமுறையை மீறிய குற்றத்துக்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி பெற உதவினார் ஜேசன் ராய். எனினும் அவர் எதிர்பாராத விதத்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய பந்து லெக் சைட் பக்கம் வந்தபோது அதை அடிக்க முயன்றார் ராய். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதற்கு கேட்ச் அப்பீல் கோரினார்கள் ஆஸி. வீரர்கள். அதை ஏற்றுக்கொண்ட கள நடுவர் தர்மசேனா, ராயை அவுட் என அறிவித்தார். இதனால் மிகவும் கோபமுற்ற ராய், தர்மசேனாவிடம் விவாதம் செய்தார். அதை நீங்கள் வைட் என அறிவித்திருக்கவேண்டும் என்று தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டினார். சதமடிக்கும் நல்ல வாய்ப்பு இருந்ததை நடுவர் பறித்ததாக அவர் உணர்ந்தார். 

இந்நிலையில் ஜேசன் ராயின் இந்த நடவடிக்கை ஐசிசி விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதாக அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவரிடம் ஐசிசி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டதால் இரு அபராதப் புள்ளிகளுடன் ஆட்ட ஊதியத்திலிருந்து 30% அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு அபாரதப் புள்ளி பெற்றார் ராய். இத்துடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஒரு வீரர் ஒரே ஆட்டத்தில் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றால் தான் அவரால் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாமல் போகும். ஆனால், இரு ஆட்டங்களில் மொத்தமாக 3 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளதால் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஜேசன் ராய் விளையாட எவ்விதத் தடையும் ஏற்படவில்லை. 

]]>
Jason Roy, ICC Code of Conduct breach https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/12/w600X390/jason_roy_umpire1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/12/jason-roy-found-guilty-of-icc-code-of-conduct-breach-3191019.html
3190977 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Friday, July 12, 2019 11:38 AM +0530  

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி.  அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு அதற்கு பாதகமாக அமைந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஸ்மித் மட்டுமே நிலைத்து ஆடி 85 ரன்களை சேர்த்தார். ஏற்கெனவே புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலமான இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜூலை 14 -ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து.

]]>
England, World Cup final https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/12/w600X390/sf.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/12/england-ends-27-year-wait-to-reach-world-cup-final-3190977.html
3190999 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பைப் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்திய மிட்செல் ஸ்டார்க்! எழில் DIN Friday, July 12, 2019 11:24 AM +0530  

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது. 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்த ஸ்டார்க் 1 விக்கெட் எடுத்தார். ஏமாற்றமான நாளாக அமைந்தாலும் புதிய சாதனை படைக்க அந்த ஒரு விக்கெட் போதுமானதாக இருந்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளில் 2007ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் ஆஸி. அணியிக் கிளென் மெக்ராத். இந்நிலையில் அவரை விடவும் அதிகபட்சமாக ஒரு விக்கெட் எடுத்து 27 விக்கெட்டுகளுடன் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இருமுறை 5 விக்கெட்டுகளும் இருமுறை 4 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார். 

அதேபோல உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 18 ஆட்டங்களில் 49 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார் ஸ்டார்க். 39 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் மெக்ராத். இதையடுத்து அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் மெக்ராத்தின் சாதனையை ஸ்டார்க் முறியடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

]]>
Mitchell Starc, McGrath https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/12/w600X390/starc12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/12/mitchell-starc-breaks-glenn-mcgraths-12year-world-cup-record-with-27th-wicket-3190999.html
3190349 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 27 வருடங்களுக்குப் பிறகு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து: அரையிறுதியில் ஆஸி., தோல்வி DIN DIN Thursday, July 11, 2019 09:54 PM +0530
ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலியா பேட்டிங்: http://bit.ly/2XVPuzT

224 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இந்த இணை சேஸிங்குக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் வகையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து பெரிதளவில் ஸ்விங் ஆகவில்லை. எனவே, சூழ்நிலை உணர்ந்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட் குறைவு என்பதையும் உணர்ந்து முதல் 10 ஓவரில் 50 ரன்கள் சேர்த்து அடித்தளத்தை அமைத்தனர்.

இதன்பிறகு, ஜேசன் ராய் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு மாறினார். ரன்கள் மளமளவென உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் முக்கியமான பந்துவீச்சாளரான ஸ்டார்க் ஓவரிலேயே அதிரடியாக ரன் குவிக்க அந்த அணி செய்வதறியாது திணறியது. இதன்மூலம், ஜேசன் ராயும் தனது அரைசதத்தை அடித்தார். 

வழக்கமான பந்துவீச்சாளர்கள் மூலம் எந்த பலனும் கிடைக்காத நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தை பந்துவீச அழைத்தார் ஃபின்ச். ராய் அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க, அந்த ஒரு ஓவரில் மட்டும் இங்கிலாந்துக்கு 21 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம், இந்த இணையும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. இதனால், ஆஸ்திரேலிய உளவியல் ரீதியாக மிகப் பெரிய பின்னடைவில் இருந்தது. 

இந்த நிலையில், பேர்ஸ்டோவ் 34 ரன்களுக்கு ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராய் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 85 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு, புதிதாக களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயான் மார்கனுக்கு நெருக்கடியளிக்க ஆஸ்திரேலியா முயற்சித்தது. ஆனால், சிறிது நேரம் அடக்கி வாசித்த இந்த இணை அதன்பிறகு இலக்கை நோக்கி துரிதமாக விளையாடியது. 

இதன்மூலம், அந்த அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 226 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூட் 49 ரன்களுடனும், மார்கன் 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1992-க்குப் பிறகு முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/11/w600X390/Roy.jpg நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/11/england-beat-australia-comfortably-by-8-wickets-and-qualified-to-final-3190349.html
3190343 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம்: 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா DIN DIN Thursday, July 11, 2019 06:46 PM +0530
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்த வார்னர் மற்றும் ஃபின்ச் இந்த முறை சொதப்பினர். ஃபின்ச் முதல் பந்திலேயே ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, வார்னர் 9 ரன்களுக்கு வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையில் முதன்முதலாக களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுக்கு வோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். இதனால், அந்த அணி 14 ரன்களுக்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இதன்பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணை விக்கெட்டுகளை பாதுகாத்து நிதானமாக விளையாடியது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்களைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தனர். ஸ்டீவ் ஸ்மித்தும் அரைசதம் அடித்தார்.  

இந்த நிலையில், அடில் ரஷித் பந்தை தூக்கி அடித்து கேரி ஆட்டமிழந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் என்பதால் ஆஸ்திரேலிய அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. 

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வழக்கமான பாணியில் சற்று துரிதமாக ரன் சேர்த்தார். ஆனால், அவரும் ஆர்ச்சர் பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், அந்த அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. 

இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் பாட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை 200 ரன்களைக் கடக்கச் செய்தனர். இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு நல்ல வேகத்தில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுக்கு 48-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே ஸ்டார்க் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பெஹரன்டோர்ஃப் 1 ரன்னுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் ரஷித் தலா 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/11/w600X390/SteveSmith.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/11/australia-all-out-for-223-against-england-in-the-second-semi-final-3190343.html
3190337 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இந்தியாவைப் போல் திணறும் ஆஸி.,: 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழப்பு DIN DIN Thursday, July 11, 2019 03:57 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.  

எட்ஜ்பாஸ்டன் மைதானம் என்பதால் ரன் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளம் முற்றிலும் மாறாக இருந்தது. ஆர்ச்சரின் முதல் பந்திலேயே ஃபின்ச் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த விக்கெட் இழப்பு மூலம் ஆஸ்திரேலிய அணி ரிவியுவையும் இழந்தது.

அடுத்த ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்குள் ஹேண்ட்ஸ்கோம்பும் வெறும் 4 ரன்களுக்குள் வோக்ஸ் பந்தில் போல்டானார். இதனால், அந்த அணி 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி திணறியது போல், 15 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறுகிறது.

சற்று முன் வரை அந்த அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.  

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/11/w600X390/Warner.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/11/australia-lost-3-wickets-below-15-runs-england-on-top-in-2nd-semi-3190337.html
3189669 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஓய்வு குறித்து தோனி எங்களிடம் எதுவும் கூறவில்லை: விராட் கோலி DIN DIN Wednesday, July 10, 2019 11:07 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு முடிவு குறித்து தோனி எங்களிடம் எதுவும் கூறவில்லை என்று கோலி தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது, தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து எதுவும் தெரிவித்தாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த விராட் கோலி, "இல்லை. அவர் இதுவரை எங்களிடம் எதுவும் கூறவில்லை" என்றார்.  

ஆனால், ரசிகர்கள் பலர் தோனி ஓய்வு முடிவை அறிவித்ததுபோல் சமூக வலைதளங்களில் மீம்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி தனது முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும், நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

முன்னதாக, உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், "நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் கடைசி ஆட்டமே தோனியின் இறுதி ஆட்டமாக இருக்கும்" என்று தகவல்கள் வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்படி திடீரென ஓய்வை அறிவித்தாரோ அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிவிக்கலாம் என்று செய்திகள் வெளியானது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/DhoniRunOut.jpg நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/dhoni-has-not-told-us-anything-about-retirement-kohli-3189669.html
3189668 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஜடேஜாவை பாராட்டிய மஞ்ச்ரேக்கர்: இதற்கு பிறகும் பாராட்டாமல் இருக்க முடியுமா.. DIN DIN Wednesday, July 10, 2019 10:27 PM +0530
உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவரை பாராட்டியுள்ளார்.    

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களுக்கு இடையே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவீந்திர ஜடேஜாவின் திறன் குறித்து ஊடகத்தில் மட்டமான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு ரவீந்திர ஜடேஜாவும் டிவிட்டர் பதிவில் பதிலடி தந்தார். எனினும், இருவருக்கும் இடையிலான இந்த கருத்து மோதல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா பீல்டிங்கிலும் அசத்தினார். இது போதாததற்கு பேட்டிங்கிலும் கலக்கினார் ஜடேஜா. இந்தியா தோல்வியடைந்துவிட்டது என்று அனைவரும் முடிவுக்கு வந்த நேரத்தில் களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக விளையாடி இந்திய அணி வசம் இருந்த நெருக்கடி அனைத்தையும் நியூஸிலாந்து பக்கம் திரும்பினார். சிறப்பாக விளையாடிய அவர் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மொத்தம் 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்த அவர் வெற்றிக்கு மிக அருகில் வந்து ஆட்டமிழந்தார். 

ஆட்டத்தின் போக்கினையே மாற்றிய ஜடேஜாவின் இந்த செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

இந்த வரிசையில், மஞ்ச்ரேக்கரும் இந்த ஆட்டத்துக்குப் பிறகு ஜடேஜாவை பாராட்டியுள்ளார். "சிறப்பாக விளையாடினாய் ஜடேஜா" என்று மஞ்ச்ரேக்கர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/Jadeja.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/ஜடேஜாவை-பாராட்டிய-மஞ்ச்ரேக்கர்-இதற்கு-பிறகும்-பாராட்டாமல்-இருக்க-முடியுமா-3189668.html
3189663 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது நியூஸிலாந்து DIN DIN Wednesday, July 10, 2019 07:46 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது. 

240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு களமிறங்கிய கார்த்திக்கும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க 24 ரன்களுக்குள் 4-வது விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி. 

இதன்பிறகு, ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர். எனினும், இந்த இணை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பந்த் மற்றும் பாண்டிா தலா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன்மூலம், இந்திய அணி 92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்த நிலையில், தோனியுடன் ஜடேஜா இணைந்தார். தோனி விக்கெட்டை பாதுகாத்து விளையாட, ஜடேஜா நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளிக்கும் வகையில் துரிதமாக விளையாடினார். இதுவரை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி அதன்பிறகு ஓவருக்கு சராசரியாக 5-க்கு மேல் என்ற நிலையில் விளையாடி வந்தது. இதனால், நியூஸிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஜடேஜாவும் தனது 38-வது பந்தில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். 

இந்த இணையும் 7-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. 14 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார். 

எனினும், அடுத்த ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், அந்த ஓவரில் கப்திலின் சூப்பர் த்ரோவால் தோனி துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்தது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு, புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் ஆட்டமிழக்க இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. 

நியூஸிலாந்து தரப்பில் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், பெர்குசன் மற்றும் நீஷம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹென்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/Dhoni_Jadeja.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/jadeja-dhoni-fight-back-went-in-vain-nz-beat-india-and-qualifies-to-final-3189663.html
3189660 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மோசமான சாதனை புரிந்த இந்தியாவின் டாப்-3 DIN DIN Wednesday, July 10, 2019 06:24 PM +0530
இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனையை புரிந்துள்ளனர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான தொடக்கத்தை தந்தனர். 

ரோஹித், கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா 1 ரன்னுக்கு அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. எனவே, இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த மோசமான வரலாற்றுச் சாதனைக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனால், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

சற்று முன் வரை இந்திய அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 109 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/indiantoporder.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/indian-top-order-scripts-embarrassing-record-3189660.html
3189649 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இந்தியாவின் டாப்-3 காலி: சேஸிங்கில் திணறல் பேட்டிங் DIN DIN Wednesday, July 10, 2019 04:00 PM +0530
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து நேற்று (செவ்வாய்கிழமை) முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், ஆட்டம் இன்றைய தினம் தொடங்கும் என்று நடுவர்கள் தெரிவித்தனர். 

நேற்றைய ஆட்டம்: http://bit.ly/2XCPXCT

அதன்படி, இன்று ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி கடைசி 23 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், இந்திய அணி மிக மோசமான தொடக்கத்தை தந்தது. 2-வது ஓவரில் ரோஹித், 3-வது ஓவரில் கோலி, 4-வது ஓவரில் ராகுல் என வரிசையாக தலா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

தற்போது, ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/KohliRahul.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/india-lost-rohit-kohli-rahul-in-chasing-3189649.html
3189600 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மரண கலாய்க்கு பயந்து மைக்கெல் வானை பிளாக் செய்த சஞ்சு மஞ்சு! Raghavendran DIN Wednesday, July 10, 2019 12:12 PM +0530  

சஞ்சய் மஞ்சுரேக்கர் தன்னை சமூக வலைதளமான ட்விட்டரில் பிளாக் செய்திருப்பதாக ஸ்க்ரீன்ஷாட்டுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கெல் வான் பதிவிட்டுள்ளது நெட்டிசன்களின் ஆகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்திய ரசிகர்களே இதற்கு மிகப்பெரிய ஆதரவு அளித்து வருவது கவனிக்கத்தக்கது.

2019 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெறும் ''பிட்ஸ் அண்ட் பீஸஸ்'' வீரர் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கிண்டல் செய்திருந்தார். அதற்கு, ''உங்க வாயால போற வெத்துப் பேச்சுக்கள நிறுத்துங்க'' என்று ரவீந்திர ஜடேஜா பதிலடி தந்தது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லீக் ஆட்டங்கள் வரை சப்ஸ்டிட்யூட் வீரராக மட்டுமே செயல்பட்டு வந்த ஜடேஜா, நியூஸிலாந்துடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இணைந்தார். அதுமட்டுமல்லாது துல்லியப் பந்துவீச்சால் அந்த அணியின் ரன்குவிப்பை அடியோடு நிறுத்தி ஒரு விக்கெட்டையும் சாய்த்தார்.

இதனிடையே ரவீந்திர ஜடேஜா தொடர்பான சஞ்சய் மஞ்சுரேக்கரின் விமர்சனம் குறித்து வர்ணணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் மைக்கெல் வான் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். அதோடு நிறுத்தாமல் ட்விட்டரிலும் சென்று மரண கலாயில் ஈடுபட்டார். 

அரையிறுதிக்கு முன்பாக ''உங்கள் அணி எது சஞ்சய், அதில் பிட்ஸ் அண்ட் பீஸஸ் வீரர்களுக்கு இடமிருக்கா'' என்ற மைக்கெல் வானின் கேள்விக்கு, ''இது எதிர்பார்த்ததுதான், இது என்னுடைய அணி அல்ல'' என்று சஞ்சய் பதிலளித்தார். பின்னர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற்றபோது ''இது பிட்ஸ் அண்ட் பீஸஸ் டைம்'' என்ற மற்றொரு பதிவை வான் வெளியிட்டார். அதோடு நிறுத்தாமல், ''அடடே! பிட்ஸ் அண்ட் பீஸஸ் வீரரால் இப்படி சிறப்பாக சுழற்பந்து வீச முடியுமா'' என்று கிண்டல் செய்தார். 

இதனால் ரசிகர்கள் மத்தியில் ''சஞ்சு மஞ்சு'' என்று அன்போடு அழைக்கப்படும் சஞ்சய் மஞ்சுரேக்கர், மைக்கெல் வானை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டார். இதையே ஸ்க்ரீன்ஷாட் எடுத்த வான், ''இதோ பிரேக்கிங் நியூஸ், சஞ்சய் மஞ்சுரேக்கர் என்னை பிளாக் செய்துவிட்டார், எனது வாழ்க்கையே பூர்த்தியாகிவிட்டது'' என்று மறுபடி கலாய்த்திருப்பது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. 

]]>
Twitter, Sanjay Manjrekar, 2019 World Cup, world cup, Michael Vaughan, Vaughan on being blocked by Manjrekar https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/10/w600X390/vaughan_on_sanju_2.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/10/my-life-is-now-sorted-vaughan-on-being-blocked-by-manjrekar-3189600.html
3188974 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இந்தியா, நியூஸிலாந்து அரையிறுதி ஆட்டம் நாளை தொடங்கும் DIN DIN Tuesday, July 9, 2019 11:07 PM +0530
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக நாளைய (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் திணறிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கத் திணறினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் 3.5 ஆகவே இருந்து வந்தது. அதன்பிறகு, 35 ஓவர்களைக் கடந்த பிறகு ஓரளவு துரிதமாக ரன் சேர்க்க அந்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு 4-ஐ கடந்தது. 

இந்த நிலையில் 46.1 ஓவரில் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மழை தொடர்ந்து இடைவெளிவிட்டு பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் இன்று நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்தனர். இதனால், இந்த ஆட்டம் நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

எனவே, இந்த அரையிறுதி ஆட்டம் நாளை மீண்டும் இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கவுள்ளது. அப்போது, நியூஸிலாந்து அணி தனது பேட்டிங்கில் மீதமுள்ள 23 பந்துகளை எதிர்கொள்ளும். அதன்முடிவில் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.  

நியூஸிலாந்து பேட்டிங் விவரம்: http://bit.ly/2Lea5t5

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/ManchesterGround.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/rain-interrupted-india-new-zealand-semi-final-match-resumes-tomorrow-3188974.html
3188971 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இந்திய பந்துவீச்சில் தடுமாறும் நியூஸிலாந்து: மழையால் ஆட்டம் தற்காலிக நிறுத்தம் DIN DIN Tuesday, July 9, 2019 07:09 PM +0530
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கேன் வில்லியம்ஸன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். நியூஸிலாந்து அணியில் டிம் சௌதிக்குப் பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். 

முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் பந்திலேயே கப்தில் விக்கெட்டுக்கு நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்க மறுக்க இந்திய அணி ரிவியு செய்து அதை முதல் பந்திலேயே இழந்தது. எனினும், புவனேஷ்வர் மற்றும் பூம்ரா தொடக்க ஆட்டக்காரர்களை திணறடித்தனர். இதன் விளைவாக கப்தில் வெறும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

இந்த திணறலில் இருந்து மீளமுடியாமல் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு சராசரியாக 3.5 என்ற நிலையிலேலே இருந்து வந்தது. 15 ஓவர்கள் கடந்தும் இதே ரன் ரேட் நீடித்து வந்தது நெருக்கடியை அதிகரித்தது. இந்த நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நிகோல்ஸ் 28 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் போல்டானார்.

இதன்பிறகு களமிறங்கிய அனுபவ பேட்ஸ்மேனான ராஸ் டெய்லரும் வில்லியம்ஸனுடன் இணைந்து ரன் குவிக்க திணறினார். இந்த இணை விக்கெட்டை பாதுகாத்து விளையாடினாலும், ரன் ரேட் மந்தமான நிலையிலேயே நீடித்து வந்தது. மிகப் பெரிய இன்னிங்ஸுக்காக அரைசதம் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்ஸன் சாஹல் சுழலில் 95 பந்துகளில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, ரன் ரேட்டை உயர்த்துவதற்காக டாம் லாதமுக்குப் பதில் நீஷம் முன்னதாக களமிறக்கப்பட்டார். ஆனால், நியூஸிலாந்துக்கு அது பலனளிக்கவில்லை. அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், டெய்லர் விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்தார். 

சாஹல் வீசிய 44-வது ஓவரில் இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடித்த டெய்லர், தனது அரைசதத்தையும் எட்டினார். இதனால், ரன் ரேட் மெல்ல மெல்ல உயர்ந்து ஓவருக்கு 4.5 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், புவனேஷ்வர் குமார் பந்தில் கிராண்ட்ஹோம் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டாம் லாதம் களமிறக்கப்பட்டார்.

இதையடுத்து, டெய்லரும், லாதமும் அதிரடியான ஃபினிஷங்கை நோக்கி விளையாடி வந்தது. இந்த நிலையில், மழை தொடர்ந்து குறுக்கிட்டதால் 47-வது ஓவரில் ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவர்கள் முடிவெடுத்தனர். இதனால், ஆட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது வரை நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. டெய்லர் 85 பந்துகளில் 67 ரன்களுடனும், லாதம் 3 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இந்திய அணித் தரப்பில் பூம்ரா, ஜடேஜா, சாஹல், பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/Williamson.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/new-zealand-struggles-to-score-quick-runs-and-rain-interuppted-now-3188971.html
3188963 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 முதல் பவர்பிளேயில் குறைந்த ரன்கள் கொடுத்துள்ள இந்தியா; அதிக மெயிடன் ஓவர்கள் வீசியுள்ள பும்ரா! எழில் DIN Tuesday, July 9, 2019 04:17 PM +0530  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரும் பும்ராவும் வீசிய முதல் இரு ஓவர்களும் மெயிடன்களாக இருந்தன. இதன் மூலம் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பும்ரா. 

2019 உலகக் கோப்பை: அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர்கள்

9 - பும்ரா 
8 - ஆர்ச்சர் 
6 - கம்மின்ஸ், வோக்ஸ் 
5 - அமிர், மாரிஸ், ஸ்டார்க். 

பும்ரா 9 மெயிடன் ஓவர்களை வீசியிருக்க, இதர இந்தியப் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக ஆறு மெயிடன் ஓவர்களை வீசியுள்ளார்.

இதுதவிர இந்த உலகக் கோப்பைப் போட்டியில் முதல் பவர்பிளேயில் (1-10 ஓவர்கள்) குறைந்த ரன்கள் கொடுத்த அணி என்கிற பெருமையும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. 

இன்றைய ஆட்டத்துடன் முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் எகானமி 3.91 ரன்கள் ஆக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களில், ஒரு ஓவருக்கு 4.52 ரன்கள் கொடுத்துள்ளது.

லீக் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடிப்பதற்கு அதன் பந்துவீச்சும் முக்கியக் காரணம். பும்ராவின் பந்துவீச்சு இந்திய அணிக்குக் கூடுதல் பலம் அளித்துள்ளதை இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/bumrah717171.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/முதல்-பவர்பிளேயில்-குறைந்த-ரன்கள்-கொடுத்துள்ள-இந்தியா-அதிக-மெயிடன்-ஓவர்கள்-வீசியுள்ள-பும்ரா-3188963.html
3188959 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 2015-ல் சூப்பர் ஸ்டார்; 2019-ல்?: நியூஸிலாந்து ரசிகர்களை ஏமாற்றிய மார்டின் கப்தில்! எழில் DIN Tuesday, July 9, 2019 03:45 PM +0530  

2015 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றாலும் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் தான் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். 

2 சதங்கள் 1 அரை சதத்துடன் 547 ரன்கள் எடுத்து அந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அதில் ஒரு இரட்டைச் சதமும் உண்டு. 

ஆனால் இந்தமுறை நியூஸிலாந்து ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமளித்துவிட்டார் கப்தில். 

73*, 25, 0, 35, 0, 5, 20, 8, 1

இதுதான் 2019 உலகக் கோப்பையில் கப்தில் எடுத்த ரன்கள். 167 ரன்கள். சராசரி - 20.87. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடக்க வீரர்களில் குறைந்த சராசரி கொண்டவர் கப்தில் மட்டுமே. 

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலாவது சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் இன்று ஆட்டமிழந்தார் கப்தில். இதனால் அவருக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஏமாற்றமாகவும் சோகமாகவும்  முடிவடைந்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/guptil88811.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/2015-ல்-சூப்பர்-ஹீரோ-2019-ல்-நியூஸிலாந்து-ரசிகர்களை-ஏமாற்றிய-மார்டின்-கப்தில்-3188959.html
3188955 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 அரையிறுதி: முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்த இந்திய அணி! எழில் DIN Tuesday, July 9, 2019 03:27 PM +0530  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். கப்தில் முதல் பந்தை எதிர்கொண்டபோது அது அவர் காலில் பட்டது. இதனால் புவனேஸ்வர் உள்பட இந்திய வீரர்கள் எல்பிடபிள்யூ அவுட் கேட்டார்கள். ஆனால் நடுவர் மறுத்துவிட்டார். இதனால் டிஆர்எஸ் முறையீடு குறித்து கோலி, தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் விவாதித்தார்கள். சரியாக கால அளவு முடிவும் தருணத்தில் டிஆர்எஸ் கோரினார் கோலி.

பந்து பேட்டில் படவில்லையென்றாலும் லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது. இதனால் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்தது. 

இதற்குப் பிறகு மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் ஆடினார்கள் நியூஸிலாந்து வீரர்கள். முதல் ரன்னை எடுக்கவே அவர்களுக்கு 17 பந்துகள் வரை தேவைப்பட்டன. 14 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்த கப்தில், பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப் பகுதியில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூஸிலாந்து அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/bumrah71.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/அரையிறுதி-முதல்-பந்திலேயே-ரெவ்யூவை-இழந்த-இந்திய-அணி-3188955.html
3188949 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை அரையிறுதி: நியூஸிலாந்து முதலில் பேட்டிங்! எழில் DIN Tuesday, July 9, 2019 02:34 PM +0530  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்து.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/indian_team12211111xx.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/உலகக்-கோப்பை-அரையிறுதி-நியூஸிலாந்து-முதலில்-பேட்டிங்-3188949.html
3188900 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உ.கோ. அரையிறுதிப் போட்டிகளில் இதுவரை தோற்றிராத ஆஸ்திரேலியாவும் அதிக தடவை தோல்வியடைந்துள்ள நியூஸிலாந்தும்! எழில் DIN Tuesday, July 9, 2019 10:49 AM +0530  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்து.

எனினும் இந்திய அணிக்குச் சாதகமான ஒரு புள்ளிவிவரம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டங்களில் அதிக தடவை தோல்வியடைந்த அணியாக நியூஸிலாந்து உள்ளது. உ.கோ. அரையிறுதிகளில் இந்திய அணி 3 தடவையும் (1987, 1996, 2015) நியூஸிலாந்து அணி 6 தடவையும் (1975, 1979, 1992, 1999, 2007, 2011) தோற்றுள்ளன.  

உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியில் அதிக தடவை தோல்வி

6 நியூஸிலாந்து 
4 பாகிஸ்தான் 
3 இந்தியா 
3 தென் ஆப்பிரிக்கா 
2 இங்கிலாந்து 
1 கென்யா 
1 இலங்கை 
1 மேற்கிந்தியத் தீவுகள் 
0 ஆஸ்திரேலியா 

]]>
semi final defeats, Cricket World Cup, Today's Sports News https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/9/w600X390/williamson1811.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/09/most-semi-final-defeats-in-the-cricket-world-cup-3188900.html
3188198 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ரோஹித் சர்மாவிடமிருந்து இன்னும் இரு சதங்கள்: விராட் கோலி எதிர்பார்ப்பு எழில் DIN Monday, July 8, 2019 04:27 PM +0530  

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது:

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டியில் நானும் வில்லியம்சனும் விளையாடியுள்ளோம். இப்போது அவரவர் நாடுகளுக்கான அணி கேப்டனாக உலகக் கோப்பை அரையிறுதியில் மீண்டும் சந்திக்கிறோம். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த நாளை நினைவில் கொள்வார் என நினைக்கிறேன். நாளை அவரைச் சந்திக்கும்போது அப்போது விளையாடிய நாளை நான் நினைவுபடுத்துவேன். யு-19 அணியிலிருந்து முன்னேறி இந்திய அணியின் கேப்டனாக ஆனது நன்றாக உள்ளது. அப்போது இருவரும் விளையாடியபோது மீண்டும் இப்படியொரு தருணத்தில் சந்திப்போம் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

இந்த உலகக் கோப்பையில் என்னுடைய பணி வித்தியாசமாக உள்ளது. ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். களத்தில் ஆட வரும்போது உங்களுக்காக கடமைகள் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். தனிப்பட்ட சாதனைகளில் யாரும் கவனம் செலுத்தவில்லை. ரோஹித்தும் இதேயே சொல்லியிருக்கிறார். அணி விளையாட்டுகளில் நீங்கள் சூழலுக்கு ஏற்பட விளையாடவேண்டும். அதைச் செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். 

ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையில் இன்னும் இரு சதங்கள் அடிப்பார் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இத்தருணத்தில் அவர் உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக உள்ளார். 

டாஸ் பற்றி கவலைப்படவில்லை. அது எப்படி அமைந்தாலும் விளையாடித்தானே ஆகவேண்டும். டாஸில் தோற்றால் நம்பிக்கையிழக்கக்கூடாது. டாஸில் தோற்று 2-வதாக பேட்டிங் செய்த அணிகள் தோல்வியடைந்ததற்குக் காரணம், ஆடுகளம் அல்ல. அவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் தான் என்று கூறியுள்ளார்.

]]>
Rohit Sharma, Virat Kohli https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/8/w600X390/kohli_rohit12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/08/hope-rohit-sharma-scores-2-more-hundreds-says-virat-kohli-3188198.html
3188179 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியிலிருந்து பிரபல பேட்ஸ்மேன் விலகல்! காயத்தில் அவதிப்படும் மற்றொரு வீரர்! எழில் DIN Monday, July 8, 2019 01:00 PM +0530  

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியிலிருந்து பிரபல பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா காயம் காரணமாக விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் காயமடைந்ததால் பேட்டிங் செய்தபோது பாதியில் விலகினார். பிறகு மீண்டும் அவர் விளையாட வந்தும் ஆஸி. அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது. 

கவாஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக நான்கு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது. கவாஜாவுக்குப் பதிலாக மேத்யூ வேட் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கவாஜா விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதவிர தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஃபீல்டிங் செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஒருவேளை அவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலக நேர்ந்தால் நிலைமையைச் சமாளிக்க மிட்செல் மார்ஷ் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

]]>
Usman Khawaja, World Cup, Today's Sports News https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/8/w600X390/khawaja717111.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/08/usman-khawaja-out-of-world-cup-3188179.html
3188158 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்! எழில் DIN Monday, July 8, 2019 10:46 AM +0530  

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்றுகளின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

எண்    பெயர்  இன்னிங்ஸ்  ரன்கள்  சதங்கள்   அரை   சதங்கள்   சிக்ஸர் 
 1.

 ரோஹித் சர்மா   (இந்தியா)

 8  647  5  1  14
 2.  டேவிட் வார்னர்   (ஆஸ்திரேலியா)  9  638  3  3  8
 3.  ஷகிப் அல் ஹசன்   (வங்கதேசம்)   8  606  2  5  2
 4.  ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)   9  507  2  3  18
 5.  ரூட்   (இங்கிலாந்து)  9  500  2  3  2

அதிக விக்கெட்டுகள்

எண்    பெயர்  இன்னிங்ஸ்   விக்கெட்டுகள்   5   விக்கெட்டுகள்          எகானமி 
 1.

 ஸ்டார்க்   (ஆஸ்திரேலியா) 

 9  26  2  5.18
 2.  முஸ்தாபிசுர்   ரஹ்மான்   (வங்கதேசம்)  8  20  2  6.70
 3.  ஃபெர்குசன்   (நியூஸிலாந்து)  7  17  0  4.96
 4.  பும்ரா   (இந்தியா)   8  17  0  4.48
 5.  முகமது அமிர்   (பாகிஸ்தான்)  8  17  1  4.90
]]>
Most wickets, Most runs https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/8/w600X390/rohit_ton1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/08/highest-run-scorers-and-wicket-takers-list-after-australia-vs-south-africa-tie-3188158.html
3187559 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஐசிசி ஒருநாள் தரவரிசை: கோலியை முந்துகிறாரா ரோஹித்? DIN DIN Sunday, July 7, 2019 08:03 PM +0530
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடத்தை வகித்தாலும், ரோஹித் சர்மா அவரை நெருங்கியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை வெளியாகியுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவர் 1 புள்ளி கூடுதலாகப் பெற்று 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 

உலகக் கோப்பையில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை புரிவதற்கு முன் ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையிலான இடைவெளி 55 புள்ளிகளாகும். ஆனால், தற்போது அந்த இடைவெளி வெறும் 6 புள்ளிகளாக குறைந்துள்ளது. ரோஹித் சர்மா 885 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். 

அதேசமயம், இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்த பாகிஸ்தானின் பாபர் அஸாம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஓராண்டு தடைக்குப் பிறகு உலகக் கோப்பையில் 600 ரன்கள் குவித்து அசத்தி வரும் டேவிட் வார்னர் மீண்டும் டாப் - 10-இல் நுழைந்துள்ளார். அவர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இதேபோல், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா முதன்முறையாக 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் ராய் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளனர். ராய் முதன்முறையாக 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

பந்துவீச்சு:

பந்துவீச்சைப் பொறுத்தவரை பூம்ரா 814 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறார். உலகக் கோப்பையில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், முதல் இரண்டு இடங்களுக்கான இடைவெளி 21 புள்ளிகளில் இருந்து 56 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.போல்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாட் கம்மின்ஸ் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்தாலும், முஜீப் மற்றும் ரஷித் கான் தொடர்ந்து டாப் - 10-இல் நீடிக்கின்றனர். மிட்செல் ஸ்டார்க் 7-வது இடத்துக்கும், ஆமீர் 12-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆர்ச்சர் 103 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தைப் பிடித்துள்ளார். மார்க் வுட் 10 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய இளம் அப்ரிதி 34 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஆல்-ரௌண்டரில் ஷாகிப் கிங்:

உலகக் கோப்பையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாகிப் அல் ஹசன் ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 9 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். 
 

அணிகள் தரவரிசை:

இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியும் 123 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், தசம புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 3-வது மற்றும் 4-வது இடத்தில் தலா 112 புள்ளிகளுடன் முறையே நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. 

இந்த தரவரிசையில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளே உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/7/w600X390/kohli_rohit.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/07/rohit-closes-in-on-his-captain-kohli-at-the-top-of-icc-odi-rankings-3187559.html
3187553 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 அதே கோலி, அதே வில்லியம்ஸன்: 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு அரையிறுதிப் போர் DIN DIN Sunday, July 7, 2019 06:08 PM +0530 முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுவதன் மூலம், 11 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையில் மீண்டும் ஒரு அரையிறுதிப் போர் அரங்கேறவுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் கோலி தலைமையிலான இந்தியாவும், வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்தும் மோதவுள்ளன. 

ஆனால், கோலி மற்றும் வில்லியம்ஸனுக்கு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கேப்டன்களாக நேருக்கு நேர் மோதுவது இது முதன்முறையல்ல. 

11 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அப்போதைய அரையிறுதிப் போர்:

ஆம், 2008-இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை விராட் கோலி கேப்டனாக வழிநடத்தினார். இதேபோல், நியூஸிலாந்து அணியை கேன் வில்லியம்ஸன் கேப்டனாக வழிநடத்தினார். 

இந்த தொடரின் அரையிறுதிச் சுற்றில் விராட் கோலியும், கேன் வில்லியம்ஸனும் நேருக்கு நேர் மோதினர். இதில், விராட் கோலி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். பந்துவீச்சில் கோலி ஆட்டமிழக்கச் செய்ததில் வில்லியம்ஸனும் ஒருவர். இதில் தோல்வியடைந்ததன் மூலம், நியூஸிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்திய அணியோ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையும் வென்றது. 

இந்த நிலையில், 11 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை அரையிறுதியில் கோலியும், வில்லியம்ஸனும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோதவுள்ளனர். 

அன்றைய அரையிறுதியில் ஆதிக்கம் செலுத்திய கோலி, இந்த முறையும் தனது ஆதிக்கத்தை தொடருவாரா? அல்ல அன்றைய அரையிறுதியின் தோல்விக்கு பதிலடி தரும் வகையில், இந்த முறை வில்லியம்ஸன் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்துவாரா?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/7/w600X390/Kohli_Williamson_U_19.jpg புகைப்படம்: டிவிட்டர் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/07/kohli-and-williamson-were-captain-for-india-vs-new-zealand-in-2008-u19-world-cup-3187553.html
3187549 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா: முதல் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் மோதல் DIN DIN Sunday, July 7, 2019 04:35 PM +0530
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. 

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைந்தது. நேற்றைய ஆட்டங்களில் இந்தியா - இலங்கை, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின.   

முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம், 15 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.

அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. எனவே, அந்த அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே நீடித்தது. 

அரையிறுதி ஆட்டங்களைப் பொறுத்தவரை முதலிடம் பிடித்த அணியும், நான்காவது இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட வேண்டும். இரண்டாமிடம் பிடித்த அணியும், மூன்றாமிடம் பிடித்த அணியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் விளையாட வேண்டும். 

எனவே, இந்திய அணி முதல் அரையிறுதி ஆட்டத்தில் நான்காமிடம் பிடித்துள்ள நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியா மூன்றாமிடம் பிடித்துள்ள இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 


முதல் அரையிறுதி ஆட்டம்: ஜூலை 9 (செவ்வாய்கிழமை)

அணிகள்: இந்தியா - நியூஸிலாந்து 

இடம்: எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்   


இரண்டாவது அரையிறுதி ஆட்டம்: ஜூலை 11 (வியாழக்கிழமை)

அணிகள்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து 

இடம்: எட்ஜ்பேஸ்டன், பிர்மிங்கம்


லீக் சுற்றில் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால், இந்த இரு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோதுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/7/w600X390/World_Cup.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/07/india-top-points-table-to-face-new-zealand-in-semis-3187549.html
3186860 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மேத்யூஸ் அபார சதம்: இலங்கை அணி 264 ரன்கள் குவிப்பு DIN DIN Saturday, July 6, 2019 07:01 PM +0530
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இதையடுத்து, மேத்யூஸ் உடன் இணைந்தார் திரிமானே. இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால், அந்த அணி விக்கெட்டையும் இழக்கவில்லை, ரன் ரேட்டையும் 4.5 ஆக கடைபிடித்து வந்தது. இருவரும அரைசதம் அடித்தனர். இருவரும் நல்ல நிலையில் விளையாடி வந்த நேரத்தில் திரிமானே 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது. 

அதன்பிறகு, டி சில்வா துரிதமாக ரன் சேர்க்க திணறினாலும், மேத்யூஸ் ரன் வேகத்தை படிப்படியாக அதிகரித்து சதத்தை எட்டினார். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 113 ரன்கள் எடுத்திருந்த மேத்யூஸ் 49-வது ஓவரில் பூம்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெரேரா 2 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில், பூம்ரா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, பாண்டியா, குல்தீப், புவனேஷ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/Mathews.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/mathews-scored-important-hundred-against-india-and-guides-sl-to-264-3186860.html
3186858 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஆரம்பத்தில் அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: இலங்கை அணி நிதான ஆட்டம்! எழில் DIN Saturday, July 6, 2019 05:56 PM +0530  

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆரம்பம் முதல் இலங்கை பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி அளித்தார் பும்ரா. கருணாரத்னே 10 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக குசால் பெரேராவும் அதே பாணியில் பும்ரா பந்துவீச்சில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகும் இலங்கை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. குசால் மெண்டிஸ் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 3 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவர்களில், நன்கு விளையாடி நான்கு பவுண்டரிகள் அடித்த அவிஷ்கா, 20 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்கிற பரிதாபமான நிலையில் இருந்தது இலங்கை அணி.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூஸும் திரிமான்னேவும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். ஒருகட்டத்தில் தொடர்ந்து 8 ஓவர்களுக்கு மேல் இலங்கை அணியால் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியாமல் போனது. எனினும் 30 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்கிற பாதுகாப்பான நிலையை அடைந்தது இலங்கை அணி. 

மேத்யூஸ் 76 பந்துகளிலும் திரிமன்னே 63 பந்துகளிலும் அரை சதங்களைக் கடந்தார்கள். பிறகு சிக்ஸர் அடிக்க முயன்று குல்தீப் யாதவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார் திரிமன்னே. அவர் 53 ரன்கள் எடுத்தார். 

இலங்கை அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 85, தனஞ்ஜெயா டி சில்வா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

]]>
Leeds, ICC Cricket World Cup, today's sports news https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/bumrah_sl.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/icc-cricket-world-cup-at-leeds-3186858.html
3186852 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 பிறந்தநாளை முன்னிட்டு தோனியைக் கெளரவப்படுத்திய ஐசிசி! எழில் DIN Saturday, July 6, 2019 05:27 PM +0530  

இந்திய கிரிக்கெட் பிரபலம் தோனி, தனது 38-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தோனியைக் கெளரவப்படுத்தும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி.

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய தோனி என்கிற தலைப்பில் உள்ள அந்த விடியோவில் தோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விடியோவில் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் தோனியின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசியுள்ளார்கள்.

]]>
dhoni, ICC https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/doni_new_wc.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/dhoni-changed-the-face-of-indian-cricket-says-icc-3186852.html
3186845 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 100 விக்கெட்டுகள்: பும்ராவின் புதிய சாதனை எழில் DIN Saturday, July 6, 2019 03:29 PM +0530  

ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் தொடக்க வீரரும் இலங்கை அணி கேப்டனுமான கருணாரத்னேவை 10 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

மேலும் 100 விக்கெட்டுகளை அதிவிரைவாக எடுத்த 2-வது இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.

குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள்

56 ஷமி
57 பும்ரா
59 இர்பான் பதான்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/bumrah12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/jasprit-bumrah-becomes-second-fastest-indian-to-100-odi-wickets-in-world-cup-clash-vs-sri-lanka-3186845.html
3186841 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது: தோனி பதில் எழில் DIN Saturday, July 6, 2019 03:13 PM +0530  

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகுத் தான் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு தோனி விளக்கமளித்துள்ளார்.

ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு நான் ஓய்வு பெறவேண்டும் எனப் பலர் விரும்புகிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

]]>
MS Dhoni, Retirement https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/dhoni_dp.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/ms-dhoni-opens-up-on-retirement-talk-3186841.html
3186830 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இந்திய அணியில் இரு மாற்றங்கள்: இலங்கை அணி முதலில் பேட்டிங்! எழில் DIN Saturday, July 6, 2019 02:47 PM +0530  

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று, அடுத்து நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்றுவிட்டால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்படும். 15 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்து அரையிறுதியில் நியூஸிலாந்தைச் சந்திக்கவேண்டும் என்பதே ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 

டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/indian_team12211.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/sri-lanka-won-the-toss-and-elected-to-bat-3186830.html
3186769 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பைப் போட்டியுடன் தங்களது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்ட வீரர்கள் எழில் DIN Saturday, July 6, 2019 12:49 PM +0530  

உலகக் கோப்பைப் போட்டியுடன் ஓய்வு பெறும் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் சோயிப் மாலிக். 

வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். எனினும் அபார வெற்றி பெற்றும் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் தங்களுடைய கடைசி ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய முக்கியமான வீரர்கள் குறித்து கிரிக்கெட் நிபுணர் பரத் சீர்வி வெளியிட்டுள்ள பட்டியல் இது:

1983 உலகக் கோப்பை

லில்லி (ஆஸ்திரேலியா)
டர்னர் (நியூஸிலாந்து)

1987 உலகக் கோப்பை

கவாஸ்கர், பின்னி (இந்தியா)
டையஸ், டி மெல் (இலங்கை)

1992 உலகக் கோப்பை

மார்ஷ், டெய்லர், ரெயிட் (ஆஸ்திரேலியா)
ஸ்ரீகாந்த் (இந்தியா)
ஐயன் ஸ்மித் (நியூஸிலாந்து)
இம்ரான் கான் (பாகிஸ்தான்)
மால்கம் மார்ஷல் (மே.இ. தீவுகள்)

1996 உலகக் கோப்பை

மெக்டர்மாட் (ஆஸ்திரேலியா)
ராபின் ஸ்மித் (இங்கிலாந்து)
பிரபாகர் (இந்தியா)
மியாண்டட் (பாகிஸ்தான்)
ரிச்சர்ட்சன் (மே.இ. தீவுகள்)

1999 உலகக் கோப்பை

ஃபேர்பிரதர் (இங்கிலாந்து)
லார்சன் (நியூஸிலாந்து)
சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
ரனதுங்கா, மஹானாமா (இலங்கை)
பில் சிமன்ஸ், ஆதுர்டன் (மே.இ. தீவுகள்)

2003 உலகக் கோப்பை

நைட், ஹுசைன், ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
ஸ்ரீநாத் (இந்தியா)
வாசிம், வக்கார், அன்வர் (பாகிஸ்தான்)
டொனால்ட், கிர்ஸ்டன், ரோட்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
அரவிந்த் டி சில்வா (இலங்கை)
ஹூப்பர் (மே.இ. தீவுகள்)
ஆண்டி பிளவர், கேம்பெல், விட்டால் (ஜிம்பாப்வே)

2007 உலகக் கோப்பை

மெக்ராத் (ஆஸ்திரேலியா)
வாஹ்ன் (இங்கிலாந்து)
கும்ப்ளே (இந்தியா)
பிளெமிங், மேக்மில்லன் (நியூஸிலாந்து)
இன்ஸமாம், அஸார் முகமது (பாகிஸ்தான்)
அர்னால்ட் (இலங்கை)
லாரா (மே.இ. தீவுகள்)

2011 உலகக் கோப்பை

டைட் (ஆஸ்திரேலியா)
ஸ்டிராஸ், பிரியர், கோலிங்வுட் (இங்கிலாந்து)
ஸ்ரீசாந்த், நெஹ்ரா (இந்தியா)
ஸ்டைரிஸ் (நியூஸிலாந்து)
அக்தர் (பாகிஸ்தான்)
முரளிதரன் (இலங்கை)
சந்தர்பால் (மே.இ. தீவுகள்)

2015 உலகக் கோப்பை

கிளார்க், ஜான்சன், ஹேடின் (ஆஸ்திரேலியா)
பெல், ஆண்டர்சன் (இங்கிலாந்து)
வெட்டோரி (நியூஸிலாந்து)
அப்ரிடி, மிஸ்பா (பாகிஸ்தான்)
ஜெயவர்தனே, சங்கக்காரா (இலங்கை)

]]>
world cup, today's sports news, last ODI https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/srikanth_kris.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/prominent-players-who-played-their-last-odi-in-wc-3186769.html
3186750 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Saturday, July 6, 2019 10:48 AM +0530  

வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். எனினும் அபார வெற்றி பெற்றும் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

இரு அணிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 315/9 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரன்ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

]]>
Pakistan vs Bangladesh https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/6/w600X390/Imam-ul-Haq.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/06/pakistan-vs-bangladesh-3186750.html
3186173 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இமாம் உல் ஹக் 100, பாபர் அஸாம் 96: வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் ரன்கள் குவிப்பு! எழில் DIN Friday, July 5, 2019 05:55 PM +0530  

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். இதனால் டாஸ் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பத்தின்படி டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் மஹ்முதுல்லா, மெஹிடி இடம்பெற்றுள்ளார்கள். 

316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். ஆனால், ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தெளிவாக இருந்தார்கள். 500 ரன்களுக்கு அடிக்க ஆசைப்பட்டுத் தோற்பதை விடவும் 300-க்கு முயற்சி செய்து பொறுப்புடன் விளையாடி, வெற்றிக்கு முயல்வோம் என்பதாக இருந்தது அவர்களுடைய முயற்சி. ஃபகார் ஸமான் இந்தமுறையும் ஏமாற்றினார். 13 ரன்களில் சைஃபுத்தீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். பாபர் அஸாமும் இமாம் உல் ஹக்கும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 25-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 115 ரன்களாக உயர்ந்தது.

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரராக இருந்தார், ஜாவாத் மியாண்டட். 1992-ல் அவர் 437 ரன்கள் எடுத்தார். எனினும் அந்த இலக்கை இன்று 59 ரன்கள் எடுத்தபோது தாண்டினார் பாபர் அஸாம். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். பாபர் அஸாம் 62 பந்துகளிலும் இமாம் உல் ஹக் 52 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள்.

சிறப்பாக ஆடிய பாபர் அஸாம், சதமெடுக்கும் நிலையை நெருங்கியபோது ஆட்டமிழந்தார். 96 ரன்களில் சைஃபுத்தீன் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும் இமாம் உல் ஹக் பதற்றமின்றி விளையாடி 99 பந்துகளில் சதமடித்தார். ஆனால் அதே ஓவரில் முஸ்தாஃபிசுர் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். 

42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி.

]]>
ICC cricket world cup, today's sports news https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/5/w600X390/Imam-ul-Haq12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/05/இமாம்-உல்-ஹக்-100-பாபர்-அஸாம்-96-வங்கதேசத்துக்கு-எதிராக-பாகிஸ்தான்-ரன்கள்-குவிப்பு-3186173.html
3186162 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இலங்கையுடனான உலகக் கோப்பை ஆட்டத்தில் புதிய சாதனைகளை நிகழ்த்துவாரா ரோஹித் சர்மா? எழில் DIN Friday, July 5, 2019 03:43 PM +0530  

இந்தியா - இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. அரையிறுதிச்சுற்றுக்கு முன்பு இந்திய அணி விளையாடவுள்ள கடைசி லீக் ஆட்டம் இது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 544 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சில சாதனைகளை நிகழ்த்த ரோஹித்துக்கு வாய்ப்புள்ளது. 

1. அதிக சதங்கள்

ஒரே உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் என்கிற பெருமை இலங்கையின் சங்கக்காராவுக்கும் இந்தியாவின் ரோஹித் சர்மாவுக்கும் உண்டு. இருவரும் தலா 4 சதங்கள் எடுத்துள்ளார். நாளை மீண்டும் சதமெடுத்தால் ஒரே உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் எடுத்த ஒரே வீரர் என்கிற பெருமையை அடைவார் ரோஹித் சர்மா.

உலகக் கோப்பையில் அதிக சதங்கள்

குமார் சங்கக்காரா - 4 சதங்கள் (7 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா - 4 சதங்கள் (7 இன்னிங்ஸ்)
மார்க் வாஹ் - 3 சதங்கள் (7 இன்னிங்ஸ்)
மேத்யூ ஹேடன் - 3 சதங்கள் (10 இன்னிங்ஸ்)
செளரவ் கங்குலி - 3 சதங்கள் (11 இன்னிங்ஸ்)

2. ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் 

சச்சின் - 673 ரன்கள் (2003)
ஹேடன் - 659 ரன்கள் (2007)
ஜெயவர்தனே - 548 ரன்கள் (2007)
கப்தில் - 547 ரன்கள் (2015)
ரோஹித் சர்மா - 544 ரன்கள் (2019)
ஷகிப் அல் ஹசன் - 542 ரன்கள் (2019)

3. உலகக் கோப்பை லீக் போட்டியின் முடிவில் அதிக ரன்கள்

சச்சின் - 586 ரன்கள் (2003)
ஹேடன் - 580 ரன்கள் (2007)
ரோஹித் சர்மா - 544 ரன்கள் (2019)
ஷகிப் அல் ஹசன் - 542 ரன்கள் (2019)

]]>
Rohit Sharma, today's sports news https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/5/w600X390/rohit_bang123.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/05/rohit-sharma-can-break-3-world-records-with-one-big-innings-3186162.html
3186154 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்! எழில் DIN Friday, July 5, 2019 02:48 PM +0530  

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். இதனால் டாஸ் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பத்தின்படி டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் மஹ்முதுல்லா, மெஹிடி இடம்பெற்றுள்ளார்கள். 

316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். அதிசயம் நிகழ்த்துமா பாகிஸ்தான் அணி?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/5/w600X390/Sarfaraz_Ahmed_bang1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/05/உலகக்-கோப்பை-டாஸ்-வெற்றி-பெற்ற-பாகிஸ்தான்-முதலில்-பேட்டிங்-3186154.html
3186116 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 வெற்றியுடன் உலகக் கோப்பையை நிறைவு செய்த மே.இ.தீவுகள்: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Friday, July 5, 2019 11:31 AM +0530  

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியை  வெற்றியுடன் நிறைவு செய்தது முன்னாள் சாம்பியன் மே.இ.தீவுகள். 

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 311/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் அணி விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து ஒரு வெற்றி கூட பெறாமல் தோல்வியடைந்தது.

]]>
Afghanistan v West Indies, afg vs wi, cricket score, afg vs wi live score, afg vs wi live match, live score streaming, live score updates, live circket score updates, highlights of afg vs wi, afghanistan vs west indies live score, afghanistan vs west indi https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/5/w600X390/AfghanistanvsWestIndies.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/05/afghanistan-v-west-indies-3186116.html
3185365 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 கடைசி ஆட்டத்திலும் தோல்வி கண்டது ஆப்கானிஸ்தான்: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி DIN DIN Thursday, July 4, 2019 11:20 PM +0530
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 288 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 311 ரன்கள் குவித்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்: http://bit.ly/2XnuxhQ

312 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் குல்பதின் நைப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, ரஹ்மத் ஷாவுடன் இக்ராம் அலி இணைந்தார். 

இந்த இணை தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 133 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரஹ்மத் ஷா 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, நஜிபுல்லா ஸத்ரானும் இக்ராம் அலியுடன் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை நன்றாக விளையாடி வந்த நிலையில், 86 ரன்கள் எடுத்திருந்த இக்ராம் அலியை கெயில் ஆட்டமிழக்கச் செய்தார். இவரைத்தொடர்ந்து, ஸத்ரானும் ஆட்டமிழந்தார். 

இவர்களைத் தொடர்ந்து அஸ்கார் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை 5 புள்ளிகளுடன் நிறைவு செய்துள்ளது. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து உலகக் கோப்பையை நிறைவு செய்துள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/WestIndies.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/windies-beat-afghanistan-by-23-runs-3185365.html
3185358 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 கடைசி கட்டத்தில் பூரன், ஹோல்டர் அதிரடி: ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு DIN DIN Thursday, July 4, 2019 06:48 PM +0530
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, எவின் லீவிஸ் மற்றும் ஷை ஹோப் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை நிதானமாக விளையாடினாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், இருவரும் அரைசதம் அடித்தனர். 

அரைசதம் அடித்த லீவிஸ் 58 ரன்களுக்கு ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெத்மயர் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் துரிதமாக விளையாடினார். 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அவர் தவ்லாத் ஸத்ரான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோப் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

குறுகிய நேரத்தில் இரண்டு விக்கெட்டுகள் என்பதால், அந்த அணி சற்று சறுக்கலை சந்தித்தது. ஆனால், நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ஹோல்டர் பாட்னர்ஷிப் அமைத்தது மட்டுமில்லாமல் துரிதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் கணிசமாக உயர்ந்தது. 

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த பூரன் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இந்த துரிதமாக ரன் சேர்த்து வந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பூரன் 58 மற்றும் ஹோல்டர் 45 ரன்கள் எடுத்தனர். 
 
கடைசி ஓவரில் களமிறங்கினாலும், பிராத்வைட் தான் எதிர்கொண்ட 4 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து அணிக்கு அதிரடியான ஃபினிஷிங்கை தந்தார். இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. 

ஆப்கானிஸ்தான் சார்பில் ஸத்ரான் 2 விக்கெட்டுகளையும், ஷிர்ஸாத், நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/PooranHolder.jpg நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட் https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/pooran-holder-powers-windies-to-gone-past-300-against-afghans-3185358.html
3185342 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 பிரையன் லாராவின் சாதனையைத் தாண்ட முடியாமல் ஏமாற்றிய கிறிஸ் கெயில்! எழில் DIN Thursday, July 4, 2019 06:06 PM +0530  

கிறிஸ் கெயிலுக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

தனது கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய கெயில் 9 ஆட்டங்களில் 242 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 2 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 88.32. சிக்ஸர்கள் - 12. இதற்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கெயில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மிகவும் எதிர்பார்த்த ஒரு சாதனையையும் அவரால் நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. 

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் சச்சின். 44 இன்னிங்ஸில் 2278 ரன்கள். நான்காவது இடத்தில் பிரையன் லாரா உள்ளார். அவர் 33 இன்னிங்ஸில் 1225 ரன்கள் எடுத்துள்ளார்.  மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களில் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் அவருக்குத்தான் முதலிடம்.

ஆனால் லாராவின் சாதனையை கெயில் தாண்டுவதற்கான வாய்ப்பு இருந்தது. எனினும் 5 உலகக் கோப்பையில் விளையாடிய கெயில், 1186 ரன்களுடன் தனது பங்களிப்பை முடித்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார் கெயில். இதனால் லாராவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ள முடியாமல் போய்விட்டது. 

கெயிலால் முடியாத நிலையில் லாராவின் சாதனை அடுத்தச் சில உலகக் கோப்பைப் போட்டிகள் வரை நீடிக்கும் என்று நம்பிக்கையாகக் கூறலாம்.

]]>
world cup, Brian Lara, West Indies’ highest scorer https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/gayle12xx.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/brian-lara-remains-west-indies-highest-scorer-in-the-world-cup-3185342.html
3185356 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 லூயிஸ், ஷாய் ஹோப் அரை சதம்: நிதானமாக ரன்கள் எடுக்கும் மே.இ. அணி! எழில் DIN Thursday, July 4, 2019 06:00 PM +0530  

மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. எவின் லூயிஸ், கெமர் ரோச் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் சயத் ஷிர்ஸாத், தவ்லத் ஸத்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களை இரு அணிகளும் பிடித்துள்ளன. 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பெரிய அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பெற போராடும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த ஆட்டத்திலும் கெயில் ஏமாற்றினார். அவர், 7 ரன்களில் தவ்லத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் எவின் லூயில் ஆரம்பம் முதல் விரைவாக ரன்கள் எடுத்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது. 

அரை சதத்தை நெருங்கும்போது நிதானமாக ஆடினார் லூயிஸ். இதனால் அவர் 62 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பிறகு 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மே.இ. அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. 14.1 ஓவர்களின்போது அந்த அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போனது. எனினும் ஹெட்மையர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். 65 பந்துகளில் அரை சதமெடுத்த ஷாய் ஹோப், 77 ரன்களில் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. பூரான் 20, ஹோல்டர் 6 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/evin_lewis_afg.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/icc-cricket-world-cup-at-leeds-3185356.html
3185338 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பைப் போட்டியின் போது சச்சின் - சுந்தர் பிச்சை சந்திப்பு! எழில் DIN Thursday, July 4, 2019 03:51 PM +0530  

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது சச்சின் - சுந்தர் பிச்சை சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து பள்ளிக் கல்வியை முடித்த சுந்தர் பிச்சை, மேற்கு வங்கத்தின் கராக்பூரில் உள்ள இந்திய தொழில்கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு, ஜெர்மனியில் உள்ள ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பொறியியல் பயின்ற அவர், அமெரிக்காவிலுள்ள வார்ட்டன் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது சச்சின் டெண்டுல்கர் - சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த நிகழ்வின் புகைப்படத்தை சச்சின் வெளியிட்டுள்ளார். 

]]>
Tendulkar, Google CEO https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/sachin_sundar23.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/tendulkar-3185338.html
3185328 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங்! எழில் DIN Thursday, July 4, 2019 02:43 PM +0530  

மேற்கிந்தியத் தீவுகள் அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. எவின் லூயிஸ், கெமர் ரோச் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் அணியில் சயத் ஷிர்ஸாத், தவ்லத் ஸத்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களை இரு அணிகளும் பிடித்துள்ளன. 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பெரிய அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பெற போராடும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/rashid_khan12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/ஆப்கானிஸ்தானுக்கு-எதிராக-மேற்கிந்தியத்-தீவுகள்-அணி-முதலில்-பேட்டிங்-3185328.html
3185300 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 நியூஸிலாந்தை எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Thursday, July 4, 2019 10:49 AM +0530  

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 3-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 

அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேயிருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த 1992-ஆம் ஆண்டில் இங்கிலாந்து உலகக் கோப்பை  இறுதி ஆட்டம் வரை முன்னேறியிருந்தது. 

இங்கிலாந்தின் செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/4/w600X390/bairstow_nz.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/04/நியூஸிலாந்தை-எளிதாக-வென்று-அரையிறுதிக்கு-முன்னேறிய-இங்கிலாந்து-ஹைலைட்ஸ்-விடியோ-3185300.html
3184627 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 நான் உங்களைவிட 2 மடங்கு அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளேன்: மஞ்ச்ரேக்கருக்கு ஜடேஜா பதிலடி DIN DIN Wednesday, July 3, 2019 08:17 PM +0530
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு தனது டிவிட்டர் பதிவு மூலம் பதிலடி தந்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா குறித்து ஊடகத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நான் ஜடேஜா போன்று அவ்வப்போது அணியில் இடம்பெறும் வீரர்களின் ரசிகன் அல்ல என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார்.

மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்துக்கு ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டர் பதிவில் பதிலடி தந்துள்ளார். அந்த பதிவில், 

"நீங்கள் வாய்க்கு வந்தபடி பேசியதை நான் கேட்டேன். நீங்கள் விளையாடியுள்ள ஆட்டங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான ஆட்டங்களில் நான் விளையாடியுள்ளேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" என்றார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு இதுவரை விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/22/w600X390/jadeja.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/learn-to-respect-people-jadeja-hits-back-to-manjrekar-3184627.html
3184625 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 சறுக்கிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்: 305 ரன்களுக்கு கட்டுப்பட்டது இங்கிலாந்து DIN DIN Wednesday, July 3, 2019 07:03 PM +0530
நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இந்த ஆட்டத்திலும் அற்புதமான தொடக்கத்தை தந்தனர். 

பேர்ஸ்டோவ் வழக்கம்போல் அதிரடியாக ரன் குவிக்க, ராய் தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடினார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராய் 55-வது பந்திலும், பேர்ஸ்டோவ் 46-வது பந்திலும் ஒரே ஓவரில் அரைசதத்தை எட்டினர். ராய், தொடர்ச்சியாக அடிக்கும் 4-வது அரைசதம் இதுவாகும். 

இந்த நிலையில், ஜேசன் ராய் 60 ரன்களுக்கு நீஷம் பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், பேர்ஸ்டோவ் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன்மூலம், பேர்ஸ்டோவ் 95-வது பந்தில் தனது சதத்தை எட்டினார்.

இந்த நிலையில், ஜோ ரூட் 24 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, பேர்ஸ்டோவ் 106 ரன்களுக்கும், பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 11 ரன்களுக்கும், வோக்ஸ் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 350 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி இப்படி மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. இந்த இக்கட்டான நிலையில், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் மார்கனும் 47-வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  

இதன்மூலம், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. 

நியூஸிலாந்து தரப்பில் போல்ட், நீஷம், ஹென்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சௌத்தி மற்றும் சான்ட்னர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

நடுவரிசை பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி கடைசி 10 ஓவரில் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/Bairstow.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/new-zealand-pulls-back-england-to-305-despite-bairstows-ton-3184625.html
3184623 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ராயுடு ஓய்வு: தேர்வுக்குழுவினரைக் குற்றம் சாட்டும் கெளதம் கம்பீர்!  எழில் DIN Wednesday, July 3, 2019 06:10 PM +0530  

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பட்டி ராயுடு இன்று அறிவித்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் தேர்வுக்குழுவினரின் தவறான முடிவுகளால் தான் ராயுடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் மிகவும் அதிருப்தியடைய வைத்துள்ளார்கள். அவர்களால் தான் ஓய்வு முடிவை ராயுடு எடுத்துள்ளார். அவர்களுடைய முடிவுகளைத்தான் இதற்குக் குற்றம் சாட்ட வேண்டும். இந்த 5 தேர்வுக்குழு உறுப்பினர்களும் எடுத்த ரன்களை ஒன்று சேர்த்தால் அது ராயுடு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த ரன்களை விடவும் குறைவாக இருக்கும். இந்த ஓய்வு அறிவிப்பினால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்கள். ராயுடு இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதுகுறித்து ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். 

]]>
Gambhir, Rayudu, Rayudu's Retirement, Ambati Rayudu retired, indian batmans retirement, Ambati Rayudu Retires, ambati rayudu recent news, ambati rayudu retirement news, ambati rayudu tweet, 2019 cricket world cup https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/rayudu12.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/gambhir-blasts-indian-selectors-for-rayudus-retirement-3184623.html
3184615 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 குஜராத்தில் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்குக் கூடுதல் பார்வையாளர்கள்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறித்து ஆர்ஜே பாலாஜி கிண்டல்! எழில் DIN Wednesday, July 3, 2019 04:28 PM +0530  

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமரிசனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு பக்கச் சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமரிசனங்கள் அதிகமாக எழுந்தன. அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக ரசிகர்கள் அவருடைய வர்ணனை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். இதனால் அவரை வர்ணனையாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கும்படி பலரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை வைத்து தனது வர்ணனையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்துள்ளார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணையாளரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி. நேற்றைய ஆட்டத்தில் வர்ணனை செய்த ஆர்ஜே பாலாஜி, சஞ்சர் மஞ்ச்ரேக்கரின் நிலை குறித்துக் கிண்டலாகக் கூறியதாவது:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலைத் திடீரென பலர் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் எங்கள் வீட்டுக்கு மூட்டை மூட்டையாப் பணம் வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம், சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்த கோட் வாங்கினது, வாட்ச் கட்டியிருப்பது, பேண்ட், ஷூ எல்லாம் போட்டிருப்பதற்குக் காரணம், உங்களுடைய வர்ணனையால் தான். குஜராத்தில் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்குச் சந்தாதாரர்கள் அதிகமாக உள்ளார்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்தார். 

]]>
RJ Balaji, Star Sports Tamil , Manjrekar https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/manjrekar32xx.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/rj-balaji-takes-dig-manjrekar-over-star-sports-tamil-cricket-viewership-increase-3184615.html
3184610 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இச்செய்தி உண்மையாக இருக்கக் கூடாது: ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு ‘சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிர்ச்சி! எழில் DIN Wednesday, July 3, 2019 03:26 PM +0530  

அம்பட்டி ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகே அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடிந்தது. 2018 ஐபிஎல்-லில் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார் ராயுடு. ஒரு சதமும் மூன்று சதங்களுடன் 34 சிக்ஸர்கள் அடித்தார். இதையடுத்து இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் ராயுடு. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ராயுடு, கோலி, தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ராயுடு அறிவித்துள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ராயுடு வேண்டாம். இது உண்மையாக இருக்கக்கூடாது என்று ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

]]>
Ambati Rayudu https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/rayudu_100.JPG https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/ambati-rayudu-3184610.html
3184591 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பட்டி ராயுடு அறிவிப்பு! எழில் DIN Wednesday, July 3, 2019 03:10 PM +0530  

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அம்பட்டி ராயுடு.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடுவுக்கும் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

இதுவரை 55 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு, 1694 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். மேலும், ஆறு சர்வதேச டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.

]]>
Ambati Rayudu, Ambati Rayudu retirment, India batsman Ambati Rayudu , ambati rayudu retirement news, ambati rayudu news, ambati rayudu retires, Latest news of ambati rayadu https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/rayudu7171.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/ambati-rayudu-announces-retirement-from-international-cricket-3184591.html
3184606 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 அரையிறுதிக்குத் தகுதி பெறுமா இங்கிலாந்து?: நியூஸிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங்! எழில் DIN Wednesday, July 3, 2019 02:46 PM +0530  

உலகக் கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்ட இங்கிலாந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும் என்கிற இக்கட்டான நிலைமையில் அந்த அணி உள்ளது. இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வெல்லவேண்டும். 

செஸ்டர் லே ஸ்டீரிடில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணியில் ஃபெர்குசன், சோதிக்குப் பதிலாக செளதி, ஹென்றி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 3-ம் இடத்திலும் இங்கிலாந்து அணி அடுத்த இடத்தில் 10 புள்ளிகளுடனும் உள்ளன. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/eng_team12222222.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/england-won-the-toss-and-elected-to-bat-3184606.html
3184554 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 தோற்றாலும் இந்திய அணியைச் சற்றே மிரட்டிய வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ எழில் DIN Wednesday, July 3, 2019 10:45 AM +0530  

வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2-ஆவது அணி என்ற சிறப்பை பெற்றது இந்தியா.

பிர்மிங்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதலில் ஆடிய இந்தியா 314/9 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

]]>
ICC Cricket World Cup, Birmingham https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/3/w600X390/indian_team_bang1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/03/india-won-by-28-runs-3184554.html
3183862 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: வங்கதேசத்தை வீழ்த்தி அபாரம் DIN DIN Tuesday, July 2, 2019 11:30 PM +0530
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.  

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடின. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. 

இந்திய பேட்டிங்: http://bit.ly/2XGbIFN

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் மற்றும் சோமியா சர்கார் களமிறங்கினர். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவிலான பாட்னர்ஷிப்பை அமைக்க தவறினர். தமிம் 22 ரன்களுக்கும், சர்கார் 33 ரன்களுக்கும், ரஹிம் 24 ரன்களுக்கும், லிட்டன் தாஸ் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி மிகப் பெரிய பாட்னர்ஷிப் அமைக்க முடியாமல் திணறியது. 

ஷாகிப் அல் ஹசன் மட்டும் வழக்கம் போல் பேட்டிங்கில் நம்பிக்கையளித்து அரைசதம் அடித்தார். ஆனால், அவரும் 66 ரன்களுக்கு பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், வங்கதேச அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 

எனினும், அடுத்து ஷபிர் மற்றும் சைஃபுதின் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடியளித்தனர். இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. இதனால், வங்கதேச அணி வெற்றி இலக்கையும் நெருங்கியது. இந்த முக்கியமான நிலையில், ஷபிர் 36 ரன்களுக்கு பூம்ரா பந்தில் போல்டானார். 

ஆனால், சைஃபுதின் தொடர்ந்து தனிநபராக போராடினார். இதனால், வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்த நிலையில், பூம்ராவை பந்துவீச அழைத்தார் கோலி. அந்த ஓவரின் முதல் 4 பந்தில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார் பூம்ரா. இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. ஆனால், பூம்ரா தனது அற்புதமான யார்க்கரில் ரூபெல்லை போல்டாக்கினார். அடுத்த பந்தில் முஸ்தபிஸுர் ரஹ்மானையும் யார்க்கர் மூலம் போல்டாக்கினார். இதனால், கடைசி வரை விறுவிறுப்புடன் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் 48-வது ஓவருடன் முடிவுக்கு வந்தது. 

வங்கதேச அணி 48 ஓவரில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அரைசதம் அடித்து கடைசி வரை நம்பிக்கை அளித்து வந்த சைஃபுதின் 38 பந்துகளில் 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

இந்திய அணித் தரப்பில் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாஹல், புவனேஷ்வர் மற்றும் ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

எனவே, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 13 புள்ளிகளைப் பெற்ற இந்தியா இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/KohliPandyaRohit.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/india-beat-bangladesh-and-qualifies-for-the-semi-final-3183862.html
3183861 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே முதன்முறை: ஷாகிப் புதிய சாதனை DIN DIN Tuesday, July 2, 2019 10:54 PM +0530
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 500 ரன்கள் குவித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் ஆல்-ரௌண்டர் ஷாகிப் அல் ஹசன் அட்டகாசமான நிலையில் உள்ளார். பேட்டிங்கில் தொடர்ந்து அரைசதங்களையும், சதங்களையும் அடித்து வருகிறார். பந்துவீச்சிலும் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்துகிறார். 

இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய அவர் 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். குறிப்பாக துரிதமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார். இது நடப்பு உலகக் கோப்பையில் அவருடைய 11-வது விக்கெட்டாகும். 

பிறகு பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மற்றொரு அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்த அவர் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின்மூலம், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஷாகிப் 542 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 544 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 

இதன்மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 500 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 10 விக்கெட்டுகள் வீசிய முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். முன்னதாக, 2007 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து ஆல்-ரௌண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் 10 ஆட்டங்களில் விளையாடி 499 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/shakib-ap-hasan.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/shakib-becomes-first-player-to-score-500-plus-runs-and-claim-10-plus-wickets-in-wc-history-3183861.html
3183853 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 கடைசி கட்டத்தில் அசத்திய முஸ்தபிஸுர்: திணறிய இந்தியா 314 ரன்கள் குவிப்பு DIN DIN Tuesday, July 2, 2019 06:58 PM +0530
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித், ராகுலின் அற்புதமான தொடக்கத்தால் இந்திய அணி நல்ல ரன் ரேட்டில் ரன் குவித்து வந்தது. ரோஹித் சதம் அடித்தும், ராகுல் அரைசதம் அடித்தும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய கோலி 26 ரன்களுக்கும், பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி சற்று நெருக்கடிக்குள்ளானது. எனினும், ரிஷப் பந்த் தோனியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி நம்பிக்கையளித்தார் . 

முதல் 40 ஓவர்கள் பேட்டிங்: http://bit.ly/2xqDFTs

துரிதமாக ரன் குவித்து வந்ததால், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 45-வது ஓவரில் ஷாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 ரன்களுக்கு முஸ்தபிஸுர் பந்தில் ஆட்டமிழந்தார். 

எனினும், தோனி கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்து சற்று துரிதமாக ரன் சேர்த்தார். முஸ்தபிஸுரின் சிறப்பான பந்துவீச்சில் அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 314 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவரில் இந்திய அணி 63 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிஸுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப், சர்கார் மற்றும் ரூபெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

கடைசி 10 ஓவரில், முஸ்தபிஸுர் 4 ஓவர் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகிப் 3 ஓவர் வீசி 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/Mustafizur.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/mustafizur-pulls-back-india-to-314-for-9-from-50-overs-3183853.html
3183851 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ரோஹித் சதம், ராகுல் அரை சதம்: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ரன்கள் குவிப்பு! எழில் DIN Tuesday, July 2, 2019 05:58 PM +0530  

6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேச அணியில் மெஹிடி சஹன், மஹ்முதுல்லா ஆகியோருக்குப் பதிலாக ருபெல் ஹூசைன், சபி ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக ரன்கள் குவிக்கச் சிரமப்பட்ட இந்தியத் தொடக்க வீரர்கள் இன்று ஆரம்பம் முதலே விரைவாக ரன்கள் எடுத்தார்கள். ஆரம்பத்தில் ரோஹித்துக்கு ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது. 9 ரன்களில் இருந்தபோது அவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் தமிம். இதனால் பெரிய சிக்கலில் இருந்து தப்பித்தார் ரோஹித். இதன்பிறகு அவருடைய ஆட்டத்தைத் தடுத்த நிறுத்தமுடியவில்லை. முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் கிடைத்தன. ராகுல் வழக்கம்போல நிதானமாக விளையாடினாலும் இந்தமுறை அதிகப் பந்துகளை வீணடிக்காமல் ஆடினார். 

45 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 18-வது ஓவரில் இந்தக் கூட்டணி 100 ரன்களை எட்டியது. 57 பந்துகளில் அரை சதமெடுத்தார் ராகுல். 75 ரன்களில் இருந்தபோது ஒரு பவுண்டரி அடித்து 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 520 ரன்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி 230 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. இதுதவிர ரோஹித் - ராகுல் கூட்டணி 164 ரன்கள் எடுத்தபோது இந்த உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்கிற பெருமையையும் பெற்றார்கள். 

29 ஓவரின் முடிவில் ரோஹித் சர்மா சதத்தைப் பூர்த்தி செய்தார். 90 பந்துகளில் அவர் இந்த இலக்கை எட்டினார். 

இந்தச் சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுத்துள்ள 4-வது சதம் இது. இதன்மூலம் ஓர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகச் சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா 4 சதங்கள் எடுத்தார். இப்போது ரோஹித்தும் 4 சதங்களுடன் சாதனை படைத்துள்ளார்.

சதமடித்தவுடன் இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு மீண்டும் ரோஹித் சர்மா 200 ரன்கள் அடிக்கவேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் இந்தமுறை 104 ரன்களுடன் ஆட்டமிழந்தார் ரோஹித். சில ஓவர்கள் கழித்து, 92 பந்துகளில் 77 ரன்களில் எடுத்த ராகுல், ருபெல் ஹூசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராகக் களமிறங்கினார் ரிஷப் பந்த். இதன்பிறகு கோலியும் ரிஷப் பந்தும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். 

எனினும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள் எடுத்த கோலி, இன்று சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து, 26 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதன்பிறகு பாண்டியா களமிறங்கினார். பாண்டியா - ரிஷப் பந்த் ஜோடி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்த்த நிலையில், டக் அவுட் ஆனார் பாண்டியா. கோலி, பாண்டியா ஆகிய இரு முக்கியமான விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்தார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரிஷப் பந்த் 36 ரன்களுடனும் தோனி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/rohit_bang1122.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/icc-cricket-world-cup-at-birmingham-3183851.html
3183846 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: 4-வது சதமடித்து ரோஹித் சர்மா புதிய சாதனை! எழில் DIN Tuesday, July 2, 2019 05:56 PM +0530  

6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேச அணியில் மெஹிடி சஹன், மஹ்முதுல்லா ஆகியோருக்குப் பதிலாக ருபெல் ஹூசைன், சபி ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக ரன்கள் குவிக்கச் சிரமப்பட்ட இந்தியத் தொடக்க வீரர்கள் இன்று ஆரம்பம் முதலே விரைவாக ரன்கள் எடுத்தார்கள். ஆரம்பத்தில் ரோஹித்துக்கு ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது. 9 ரன்களில் இருந்தபோது அவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் தமிம். இதனால் பெரிய சிக்கலில் இருந்து தப்பித்தார் ரோஹித். இதன்பிறகு அவருடைய ஆட்டத்தைத் தடுத்த நிறுத்தமுடியவில்லை. முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் கிடைத்தன. ராகுல் வழக்கம்போல நிதானமாக விளையாடினாலும் இந்தமுறை அதிகப் பந்துகளை வீணடிக்காமல் ஆடினார். 

45 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 18-வது ஓவரில் இந்தக் கூட்டணி 100 ரன்களை எட்டியது. 57 பந்துகளில் அரை சதமெடுத்தார் ராகுல். 75 ரன்களில் இருந்தபோது ஒரு பவுண்டரி அடித்து 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 520 ரன்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி 230 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. இதுதவிர ரோஹித் - ராகுல் கூட்டணி 164 ரன்கள் எடுத்தபோது இந்த உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்கிற பெருமையையும் பெற்றார்கள். 

29 ஓவரின் முடிவில் ரோஹித் சர்மா சதத்தைப் பூர்த்தி செய்தார். 90 பந்துகளில் அவர் இந்த இலக்கை எட்டினார். 

இந்தச் சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுத்துள்ள 4-வது சதம் இது. இதன்மூலம் ஓர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகச் சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா 4 சதங்கள் எடுத்தார். இப்போது ரோஹித்தும் 4 சதங்களுடன் சாதனை படைத்துள்ளார். 

]]>
Rohit Sharma https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/rohit_bang123.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/rohit-sharma-3183846.html
3183841 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மயங்க் அகர்வால் சரியான தேர்வா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? எழில் DIN Tuesday, July 2, 2019 04:35 PM +0530  

கால் பாதத்தில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக இனி வரும் உலகக் கோப்பை ஆட்டங்களில் இருந்து விலகினார் இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். அவருக்கு பதிலாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராயுடு, ரஹானே ஆகியோர் இருக்கும்போது மயங்க் அகர்வால் ஏன் தேர்வானார் என உங்களுக்குக் கேள்வி எழுந்திருக்கும். ஆனால், சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் 28 வயது மயங்க் அகர்வால். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகி 2 டெஸ்டுகளில் விளையாடி, இரு அரை சதங்கள் எடுத்தார். 

மேலும், லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் ஆட்டங்களில் அபாரமாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மயங்க் அகர்வால்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் - மயங்க் அகர்வால்

31 இன்னிங்ஸ் - 1747 ரன்கள், 58.23 சராசரி, 105.75 ஸ்டிரைக் ரேட், 7 சதங்கள், 6 அரை சதங்கள்

இங்கிலாந்தில் - 6 இன்னிங்ஸில் 442 ரன்கள். 88.40 சராசரி, 113.62 ஸ்டிரைக் ரேட், 3 சதங்கள். 

இந்தக் காரணங்களால், விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டவுடன் மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்துள்ளது தேர்வுக்குழு. இதையடுத்து இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் மயங்க் அகர்வால் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
Mayank Agarwal https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/mayank8.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/mayank-agarwal-3183841.html
3183830 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 15 வருடங்கள் கழித்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமாகியுள்ள தினேஷ் கார்த்திக்! எழில் DIN Tuesday, July 2, 2019 02:50 PM +0530  

6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

2004-ல் தோனி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய அணி வீரராக அறிமுகமானார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வானார் தினேஷ் கார்த்திக். ஆனால் அணியில் விக்கெட் கீப்பராக தோனி இருந்ததால் தினேஷ் கார்த்திக்குக்கு ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2011, 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் தேர்வாகவில்லை. (இதனிடையே 2007 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக், 4 ஆட்டங்களில் இடம்பெற்றார்.)

2019 உலகக் கோப்பைப் போட்டியில் தேர்வான 34 வயது தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். இதன்மூலம் அவர் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறார். 

]]>
Dinesh Karthik, World Cup debut https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/23/w600X390/dk88.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/dinesh-karthik-finally-makes-his-world-cup-debut-nearly-15-years-3183830.html
3183828 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: இந்திய அணியில் இடம்பெற்றார் தினேஷ் கார்த்திக்! எழில் DIN Tuesday, July 2, 2019 02:50 PM +0530  

6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேச அணியில் மெஹிடி சஹன், மஹ்முதுல்லா ஆகியோருக்குப் பதிலாக ருபெல் ஹூசைன், சபி ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

]]>
ICC cricket world cup, Birmingham, ind vs ban, ind vs ban live score, ind vs ban live, ind vs ban live streaming, ind vs ban dream11, live score ind vs ban , world cup 2019, cricket world cup 2019, 2019 cricket world cup https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/indvsban.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/icc-cricket-world-cup-at-birmingham-3183828.html
3183813 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஆரஞ்சு வண்ண உடையில் அரசியலைக் கலக்க வேண்டாம்: ஹர்பஜன் சிங் வேண்டுகோள்! எழில் DIN Tuesday, July 2, 2019 01:01 PM +0530  

2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு வண்ணத்துடன் கூடிய உடையை அணிந்தது. இதனால் சர்ச்சை எழுந்தது. காவி உடையை இந்திய அணி அணிந்துள்ளதாக விமரிசனங்கள் எழுந்தன. பிறகு ஆட்டத்தில் தோற்ற பிறகு, ஆரஞ்சு வண்ண உடையை அணிந்தததால் தான் ராசியில்லாமல் போய்விட்டது என்றும் ரசிகர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

இதுபோன்ற கருத்துகளுக்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

ஆரஞ்சு வண்ண உடையை இந்திய அணி பலமுறை அணிந்துள்ளது. ஆரஞ்சு வண்ணம் கொண்ட உடையுடன் நான் விளையாடியுள்ளேன். 2007 டி20 உலகக் கோப்பையை நாங்கள் வென்றபோது, மென் இன் ஸ்கை ப்ளூ கலர் என்றழைத்தார்கள். அணியினர் எப்போது விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அரசியல் காரணங்களைக் கூறவேண்டாம். அரசியலில் இருந்து விளையாட்டை ஒதுக்கி வைப்பது நல்லது. எங்கள் உடை எந்த நிறத்தில் இருக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லவேண்டாம். வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அணியின் உடையில் உள்ள வண்ணத்தால் எப்படி ஓர் அணி போட்டியில் தோற்கும்? ஆரஞ்சு வண்ண உடை அணிந்ததால் தான் இந்திய அணி தோற்றது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? உள்ளுர் அணியுடன் விளையாடும்போது உடையின் வண்ணத்தை மாற்றவேண்டும் என்பது ஐசிசியின் விதிமுறை என்று கூறியுள்ளார்.

]]>
Harbhajan Singh, orange jersey https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/chahal817171xx.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/harbhajan-singh-urges-people-not-to-politicize-indias-orange-jersey-3183813.html
3183794 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை ஆட்டத்தைக் கண்டுகளித்த பிரபல பாடகி ரிஹான்னா (படங்கள் & விடியோ) எழில் DIN Tuesday, July 2, 2019 11:27 AM +0530  

முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மே.இ.தீவுகளும், அரையிறுதிக்கு தகுதி பெற நூலிழை வாய்ப்புள்ள இலங்கையும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. 

முதலில் ஆடிய இலங்கை அவிஷ்கா பெர்ணான்டோவின் அதிரடி சதத்தால் 338/6 ரன்களை குவித்தது. இளம் வீரர் அவிஷ்கா பெர்ணாண்டோ, 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 315/9 ரன்களைக் குவித்து தோல்வியுற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை பிரபல பாப் பாடகி ரிஹான்னா நேரில் வந்து கண்டுகளித்தார். ரிஹான்னா, பார்படாஸைச் சேர்ந்தவர். மேற்கிந்தியத் தீவுகள் அணி என்பது பார்படாஸ், கயானா, ஜமைக்கா, டிரினிடாட் டொபகோ, லீவேர்ட், விண்ட்வேர்ட் தீவுகள் ஆகிய ஆறு கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். 

பார்படாஸைச் சேர்ந்த ரிஹான்னா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதனால் நேற்றைய ஆட்டத்தைக் காண வந்த ரிஹான்னா, மே.இ. அணிக்குத் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்தார். மே.இ. அணியின் கொடியைத் தாங்கிப் பிடித்து வீரர்களை உற்சாகமூட்டினார். ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களின் ஓய்வறைக்கு வந்து வீரர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.  

31 வயது ரிஹான்னாவை உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பாடகி என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

]]>
Rihanna, West Indies, Sri Lanka https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/riahanna2222.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/rihanna-cheers-from-the-stands-for-west-indies-against-sri-lanka-3183794.html
3183779 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 புதிய நாயகன் உதயம்; மே.இ. அணியை வீழ்த்திய இலங்கை - ஹைலைட்ஸ் விடியோ எழில் DIN Tuesday, July 2, 2019 10:41 AM +0530  

முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மே.இ.தீவுகளும், அரையிறுதிக்கு தகுதி பெற நூலிழை வாய்ப்புள்ள இலங்கையும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. 

முதலில் ஆடிய இலங்கை அவிஷ்கா பெர்ணான்டோவின் அதிரடி சதத்தால் 338/6 ரன்களை குவித்தது. இளம் வீரர் அவிஷ்கா பெர்ணாண்டோ, 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 315/9 ரன்களைக் குவித்து தோல்வியுற்றது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/Avishka_Fernando111.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/02/புதிய-நாயகன்-உதயம்-மேஇ-அணியை-வீழ்த்திய-இலங்கை---ஹைலைட்ஸ்-விடியோ-3183779.html
3183143 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 சதமடித்த பூரான் போராட்டம் வீண்: இலங்கை வெற்றி DIN DIN Monday, July 1, 2019 11:45 PM +0530
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பூரான் சதமடித்தபோதிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. 

இலங்கை பேட்டிங்: http://bit.ly/2xmfrK9

339 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கியது. அந்த அணிக்கு அம்ப்ரிஸ் மற்றும் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த கிறிஸ் கெயில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் விளையாடி வந்த ஹெத்மயரும் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்த நிலையில், நிகோலஸ் பூரானுடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். பூரனுடன் இணைந்து சற்று நேரம் தாக்குப்பிடித்த ஹோல்டர் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தபோதும், பூரன் அரைசதம் அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்து விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்த பிராத்வைட் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பூரனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. 

பிராத்வைட் ஆட்டமிழந்தபோது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 96 பந்துகளில் 140 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில், ஆலென் களமிறங்கினார். பூரானுடன் இணைந்து ஆலெனும் துரிதமாக விளையாட அந்த அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10 என்ற நிலையிலேயே இருந்து வந்தது. இது இலங்கை அணியை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கியது. பூரானும் சதத்தை நெருங்கினார். ஆலெனும் 30 பந்திலேயே அரைசதத்தை எட்டினார். 

ஆட்டத்தின் மிக முக்கியமான இந்த கட்டத்தில், 51 ரன்கள் எடுத்திருந்த ஆலென் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இது திருப்புமுனை ஏற்படுத்தியது. 

இதன்பிறகு, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதமடித்த பூரான் இலக்கை நோக்கி விளையாடி வந்தார். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பந்துவீசாத மேத்யூஸ் பந்துவீச அழைக்கப்பட்டார். எனினும், அவர் தனது முதல் பந்திலேயே பூரான் விக்கெட்டை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் நம்பிக்கையை சிதைத்தார். பூரான் 103 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 118 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் டெய்லண்டர்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கை அணித் தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா, வாண்டர்சே மற்றும் மேத்யூஸ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஹெத்யமர், பிராத்வைட் மற்றும் ஆலென் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை ரன் அவுட் மூலம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/Pooran.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/சதமடித்த-பூரான்-போராட்டம்-வீண்-இலங்கை-வெற்றி-3183143.html
3183137 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 விலகியது ஆல்-ரௌண்டர், சேர்க்கப்பட்டது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்: இந்தியாவின் வியூகம் என்ன?  DIN DIN Monday, July 1, 2019 08:39 PM +0530
உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள விஜய் சங்கருக்கு பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரௌண்டர் விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்று (திங்கள்கிழமை) நீக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வாலை சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஐசிசி ஏற்றுக்கொண்டது. 

இதன்மூலம், இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

"இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்படி, அணியில் முன்னணி பேட்டிங் வரிசை பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்ட விஜய் சங்கர், ஆல்-ரௌண்டர் என்றாலும், அணியில் சேர்க்கப்பட்டது முன்னணி பேட்டிங் வரிசை வீரரான மயங்க் அகர்வால். அணித் தேர்வின் போதும், விஜய் சங்கரை பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தையும் மனதில் கொண்டே தேர்வு செய்தோம் என்று தேர்வுக் குழு கூறியது. அதனால், விஜய் சங்கருக்கு மாற்று வீரராக ஆல்-ரௌண்டர் அல்லது குறைந்தபட்சம் 4-வது பேட்டிங் வரிசை பேட்ஸ்மேன் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐயிடம் முன்னணி பேட்டிங் வரிசை பேட்ஸ்மேனை கேட்டிருக்கிறது.   

இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுலுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக பீல்டிங்கில் இருந்து வெளியேறினார். இதன்காரணமாக, அவர் அந்த ஆட்டத்திலேயே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது கேள்விக்குறியானது. எனினும், அவரே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். எனவே, ராகுலின் இந்த காயத்தினை மனதில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் முன்னணி பேட்டிங் வரிசை பேட்ஸ்மேனை கேட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக நீக்கப்பட்டார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களில் களமிறங்கவில்லை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/Vijay_Shankar_Mayank_Agarwal.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/icc-confirms-mayank-agarwal-as-replacement-player-for-vijay-shankar-3183137.html
3183135 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இலங்கை வீரர் ஃபெர்ணாண்டோ சதம்: மே.இ. அணிக்கு 339 ரன்கள் இலக்கு DIN DIN Monday, July 1, 2019 07:31 PM +0530
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே மற்றும் குசால் பெரேரா நல்ல தொடக்கம் அளித்தனர். இதைப் பயன்படுத்திய இலங்கை நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், அந்த அணி முதல் 39 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. 

முதல் 39 ஓவர் பேட்டிங்: http://bit.ly/2RIKby4

இந்த நிலையில், அனுபவ வீரரான மேத்யூஸ் 40-வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய திரிமானே அவிஷ்காவுடன் இணைந்து துரிதமாக ரன் சேர்த்தார். இதனால், இலங்கை அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம், அவிஷ்காவும் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதமடித்த அவர் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திரிமானே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், காட்ரெல், தாமஸ் மற்றும் ஆலென் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/AvishkaFernando.jpg நன்றி: டிவிட்டர்/ஐசிசி https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/இலங்கை-வீரர்-ஃபெர்ணாண்டோ-சதம்-மேஇ-அணிக்கு-339-ரன்கள்-இலக்கு-3183135.html
3183130 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 மே.இ. அணிக்கு எதிராக இலங்கை அணி அபார பேட்டிங்! எழில் DIN Monday, July 1, 2019 06:02 PM +0530  

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 250 ரன்களை எட்டாத இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பெரிய ஸ்கோரை எடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலைமை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்கான போட்டியில் இல்லை. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். 6 புள்ளிகளுடன் இலங்கை அணி, புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்திலும் மே.இ. அணி 3 புள்ளிகளுடன் 9-ம் இடத்திலும் உள்ளன.

தொடக்க வீரர்களான குசால் பெரேராவும் கருணாரத்னேவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இதனால் இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. கேப்ரியல் வீசிய 11-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை அடித்தார் குசால் பெரேரா. நன்கு விளையாடி வந்த கருணாரத்னே, ஹோல்டர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதமெடுத்து பெரிய இன்னிங்ஸை நோக்கி விளையாடி வந்த குசால் பெரேரா, வீணாக ரன் அவுட் ஆகி, 64 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு குசால் மெண்டிஸும் அவிஷ்கா ஃபெர்ணாண்டோவும் சிறப்பாக விளையாடினார்கள். 25 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. 

41 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த குசால் மெண்டிஸ், ஆலனின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். 57 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் அவிஷ்கா. 

இலங்கை அணி, 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அவிஷ்கா 74, மேத்யூஸ் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

]]>
ICC Cricket World Cup 2019 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/sl_wi1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/icc-cricket-world-cup-2019-3183130.html
3183115 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ஆறுதல் வெற்றி கிடைக்குமா?: மே.இ. அணிக்கு எதிராக இலங்கை அணி முதலில் பேட்டிங்! எழில் DIN Monday, July 1, 2019 05:55 PM +0530  

இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலைமை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்கான போட்டியில் இல்லை. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். 

6 புள்ளிகளுடன் இலங்கை அணி, புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்திலும் மே.இ. அணி 3 புள்ளிகளுடன் 9-ம் இடத்திலும் உள்ளன.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/holder123.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/ஆறுதல்-வெற்றி-கிடைக்குமா-மேஇ-அணிக்கு-எதிராக-இலங்கை-அணி-முதலில்-பேட்டிங்-3183115.html
3183124 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற இந்த அணிகள் என்ன செய்ய வேண்டும்? எழில் DIN Monday, July 1, 2019 04:40 PM +0530  

இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலைமை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அரையிறுதிக்கான போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. இந்த 5 அணிகளிலிருந்து 3 அணிகள் தேர்வு பெறவேண்டும். ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. 14 புள்ளிகளுடன் ஜம்மென்று முதலிடத்தில் உள்ளது. 

இந்தியா (11 புள்ளிகள்)

வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடவேண்டும். இந்த இரு ஆட்டங்களிலிருந்து 1 புள்ளி கிடைத்தாலும் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

நியூஸிலாந்து (11 புள்ளிகள்)

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் அரையிறுதி உறுதி. ஒருவேளை தோற்றுப்போனால்? வங்கதேச அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துவிட்டால் நியூஸிலாந்து உள்ளே சென்றுவிடும். ஒருவேளை வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்திவிட்டாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அரையிறுதிக்குச் செல்ல முடியும். இதனால் இங்கிலாந்துக்கு எதிராகத் தோற்றாலும் கேவலமாகத் தோற்கக்கூடாது. 

இங்கிலாந்து (10 புள்ளிகள்)

நியூஸிலாந்தை வீழ்த்திவிட்டால் அரையிறுதி உறுதி. தோற்றாலும் உள்ளே செல்லமுடியும். எப்படி? இந்தியா வங்கதேசத்தையும் வங்கதேசம் பாகிஸ்தானையும் வீழ்த்தவேண்டும். அப்போது, இங்கிலாந்து அணி பிரச்னையில்லாமல் அரையிறுதிக்குச் சென்றுவிடும். 

பாகிஸ்தான் (9 புள்ளிகள்)

பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தவேண்டும். அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டுமே நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஒருவேளை, இங்கிலாந்திடம் நியூஸிலாந்து தோற்றுவிட்டால்? பாகிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிராகப் பெரிய அளவில் வெல்லவேண்டும்.  சூழ்நிலை சரியாக அமைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லலாம். 

வங்கதேசம் (7 புள்ளிகள்)

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வங்கதேசம் முதலில் தோற்கடிக்கவேண்டும். பிறகு நெட்ரன் ரேட்டைப் பற்றி யோசிக்கலாம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/captains1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/உலகக்-கோப்பை-அரையிறுதிக்குத்-தகுதி-பெற-இந்த-அணிகள்-என்ன-செய்ய-வேண்டும்-3183124.html
3183109 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இங்கிலாந்துக்கு எதிரான தோனியின் ஆட்டம் குறித்து நிபுணர்கள், ரசிகர்கள் அதிருப்தி! எழில் DIN Monday, July 1, 2019 03:18 PM +0530  

2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 337/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான்  அணி அரையிறுதிக்குச் செல்வது தற்போது மேலும் கடினமாகிவிட்டது. 9 புள்ளிகள் கொண்ட பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேச அணியைத் தோற்கடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் மற்றும் அவருடைய முயற்சி குறித்து கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. பாண்டியா ஆட்டமிழந்தபிறகு இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கிப் பயணிக்கவில்லை. இங்கிலாந்து அணி 13 சிக்ஸர் அடித்த நிலையில் இந்திய அணி 1 சிக்ஸர் மட்டுமே அடித்தது. கடைசி 5 ஓவர்களில் தோனியும் ஜாதவும் சேர்ந்து 20 சிங்கிள்கள், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் மட்டுமே அடித்தார்கள். இங்கிலாந்து அணியின் இலக்கை நெருங்க இந்த வேகம் துளியும் போதவில்லை. 

தோனியும் ஜாதவும் ஆடிய விதத்தைக் கண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பில் நாசர் ஹுசைனும் செளரவ் கங்குலியும் ஆச்சர்யப்பட்டார்கள். என்னிடம் இதற்கான விளக்கம் கிடையாது. இந்த சிங்கிள் ரன்களை என்னவென்று விளக்குவது? 338 ரன்களை விரட்டும்போது கைவசம் 5 விக்கெட்டுகளை வைத்திருந்து தோற்பதா என்று கேள்வியெழுப்பினார் கங்குலி. பந்து எப்படி வந்தாலும் நீங்கள் பவுண்டரி அடித்தாக வேண்டும் என்று தனது கோபத்தை மறைக்காமல் பேசினார். 

எனினும் தோனியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் கோலி. பவுண்டரி அடிக்க மிகவும் முயற்சி செய்தார் தோனி. ஆனால் அது முடியவில்லை. அவர்கள் நன்குப் பந்துவீசினார்கள். பந்து சீரான வேகத்தில் பேட்டை நோக்கி வரவில்லை. எனவே கடைசியில் அடிக்கமுடியாமல் போனது என்றார்.

தொலைக்காட்சியில் தோனி விளையாடிய விதத்தைக் கண்டு ரசிகர்கள் கடுப்பானார்கள். சமூகவலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்தார்கள். கிரிக்கெட் நிபுணர்கள் தோனியின் பேட்டிங் குறித்து தங்களுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடைந்த தோல்வியை விடவும் தோல்வியடைந்த விதம் தான் இந்திய ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது.  

 

]]>
dhoni, Kohl https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/dhoni_pak.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/dhoni-criticised-for-baffling-innings-but-gets-kohlis-backing-3183109.html
3183098 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: இந்திய அணியின் முயற்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வக்கார் யூனுஸ்! எழில் DIN Monday, July 1, 2019 12:56 PM +0530  

2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 337/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான்  அணி அரையிறுதிக்குச் செல்வது தற்போது மேலும் கடினமாகிவிட்டது. 9 புள்ளிகள் கொண்ட பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேச அணியைத் தோற்கடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டும் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். 

நேற்று இந்திய அணி விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ரசிகர்களையும் நோகடித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்காக பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் இந்திய அணி விளையாடிய விதம் கடும் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. வெற்றி பெறவேண்டும் என்று விளையாடியது போல இல்லை என்று இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் கருத்து கூறியுள்ளார்கள். 

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனூஸும் இந்திய அணி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

நீங்கள் யார் என்பதல்ல, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்கள் என்பதே உங்களை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறதா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் விளையாட்டு அறம் குறித்த சோதனையில் சிலர் தோல்வியடைந்துவிட்டார்கள் என்று கூறி #INDvsEND #CWC2019 போன்ற ஹேஷ்டேக்குகளையும் தன்னுடைய ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவருடைய கோபம், இந்திய அணி மீதானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

]]>
waqar younis, sportsmanship https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/kohli_sad1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/waqar-younis-questions-virat-kohli-and-cos-sportsmanship-3183098.html
3183086 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 உலகக் கோப்பை: இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்! எழில் DIN Monday, July 1, 2019 11:55 AM +0530  

2019 உலககக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று முடிவடைய இன்னும் ஆறு நாள்களே உள்ளன. எல்லா அணிகளுக்கும் ஓரிரு ஆட்டங்களே மீதமுள்ளன. இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்குச் சமமாகப் பந்துவீச்சாளர்களும் இந்தப் போட்டியில் அசத்தி வருகிறார்கள். இதுவரையிலான அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று சதங்கள் அடித்த ஒரே வீரர், ரோஹித் சர்மா. ஆனால் அவரால் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கமுடியவில்லை. அவருக்குத் தற்போது 6-ம் இடமே (440 ரன்கள்) கிடைத்துள்ளது. 382 ரன்களுடன் கோலி 7-ம் இடத்தில் உள்ளார்.

எண்    பெயர்  இன்னிங்ஸ்  ரன்கள்  சதங்கள்   அரை   சதங்கள்   சிக்ஸர் 
 1.

 டேவிட் வார்னர்   (ஆஸ்திரேலியா)

 8  516  2  3  6
 2.  ஃபிஞ்ச்   (ஆஸ்திரேலியா)   8  504  2  3  18
 3.  ஷகிப் அல் ஹசன்   (வங்கதேசம்)   6  476  2  3  2
 4.  ரூட் (இங்கிலாந்து)  8  476  2  3  2
 5.  வில்லியம்சன்   (இங்கிலாந்து)  6  454  2  1  3

அதிக விக்கெட்டுகள்

3 ஆட்டங்களே விளையாடினாலும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் ஷமி. ஸ்டார்க் போல 8 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பாரோ?

எண்    பெயர்  இன்னிங்ஸ்   விக்கெட்டுகள்   5   விக்கெட்டுகள்          எகானமி 
 1.

 ஸ்டார்க்   (ஆஸ்திரேலியா) 

 8  24  2  5.01
 2.  ஃபெர்குசன்   (நியூஸிலாந்து)  7  17  0  4.96
 3.  முகமது அமிர்   (பாகிஸ்தான்)  7  16  1  4.95
 4.  ஆர்ச்சர்   (இங்கிலாந்து)  8  16  0  5.01
 5.  ஷமி (இந்தியா)  3  13  1  4.77
]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/rohit_ton1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/உலகக்-கோப்பை-இதுவரை-அதிக-ரன்கள்-அதிக-விக்கெட்டுகள்-எடுத்த-வீரர்கள்-3183086.html
3183076 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி: ஹைலைட்ஸ் விடியோ! எழில் DIN Monday, July 1, 2019 10:53 AM +0530  

2019 உலகக் கோப்பையில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் தோல்வியைப் பரிசளித்தது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 337/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

]]>
England vs India https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/1/w600X390/rohit666.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jul/01/england-vs-india-3183076.html
3180470 விளையாட்டு கிரிக்கெட் உலகக் கோப்பை-2019 ரோஹித் சர்மா அவுட்டா?: நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள்! எழில் DIN Thursday, June 27, 2019 05:35 PM +0530  

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் இன்றைக்கும் விஜய் சங்கர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார். மே.இ. அணியில் ஆஷ்லி நர்ஸ், எவின் லூயிஸுக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ், ஃபெபியன் ஆலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

5 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோச் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் ரோஹித் சர்மா. ஆனால் கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் முறையீடு செய்தார் மே.இ. அணி கேப்டன். அதில் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. 

பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்றது. விடியோவில் பார்க்கும்போது பந்து எதில் முதலில் பட்டது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை. இதனால் மூன்றாவது நடுவர், சந்தேகத்தின் அடிப்படையில் நாட் அவுட் என்றே அறிவித்திருக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். நடுவரின் முடிவைக் கண்டு ரோஹித் சர்மா மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ரித்திகாவும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். 

]]>
Rohit Sharma, DRS https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/27/w600X390/rohit1_review1.jpg https://www.dinamani.com/sports/cricket-world-cup-2019/2019/jun/27/rohit-sharma-given-caught-behind-using-drs-3180470.html