Dinamani - விவசாயம் - https://www.dinamani.com/agriculture/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3379200 விவசாயம் மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு Thursday, March 12, 2020 12:28 AM +0530 கோவை: அறுவடை செய்யும் மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
மிளகாய் அதன் காரத்தன்மை, நிறத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மிளகாயில் சோடியம், கொழுப்பின் அளவு குறைவாகவும், வைட்டமின் ஏ, சி, ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை அதிகமாகவும் உள்ளன.
மிளகாய் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. மிளகாய் உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய மசாலா வாரியத்தின் கணக்கெடுப்பின்படி 2018-19-ஆம் ஆண்டில் இந்தியாவில் 7.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு 16.89 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய மிளகாயின் நிறம், காரத்தன்மை காரணமாக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலிருந்து சீனா, வியத்நாம், தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு மிளகாய் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, கரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவுக்கான மிளகாய் ஏற்றுமதி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்து, வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில், ஆந்திரம் (49 சதவீதம்), கர்நாடகம் (18 சதவீதம்), மகாராஷ்டிரம் (6 சதவீதம்), தமிழகம் (3 சதவீதம்) ஆகியவை மிளகாய் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் 2018-2019-ஆம் ஆண்டில் 46,873 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு 21,693 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குண்டு, சன்ன ரகம் மிளகாய்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் முண்டு ரகமும், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சன்ன ரகமும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. மிளகாய் அதிக அளவில் விளைவிக்கும் மாவட்டங்களில் பொதுவாக அக்டோபர் மாதத்தில் விதைப்பு நடைபெறுகிறது.
இந்தியாவில் மிளகாய் சந்தைக்கு வரத்தானது நவம்பர் முதல் மே வரை இருக்கும். நவம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசம், கர்நாடகத்திலிருந்தும் அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் மிளகாய் வரத்து உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, விருதுநகர் சந்தைக்கு மார்ச் முதல் மே வரை அதிகமாக வருகிறது.
தமிழகத்தில் ஒருபோகம் பயிர் சாகுபடி நடைமுறையில் உள்ளது. எனவே வியாபாரிகள் மிளகாய் அறுவடையின்போது, அதிக அளவில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதற்கான தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் - ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மிளகாய் விலை, சந்தை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மிளகாயின் பண்ணை விலை (2020 மார்ச் முதல் செப்டம்பர் வரை) கிலோவுக்கு ரூ.160 முதல் 170 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என்றும், இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வாசனை - நறுமணப் பொருள்கள் துறைத் தலைவரை 0422-2431405, 6611284 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/agri2.jpg https://www.dinamani.com/agriculture/2020/mar/12/மிளகாய்க்கு-நல்ல-விலை-கிடைக்கும்-வேளாண்-பல்கலைக்கழகம்-முன்னறிவிப்பு-3379200.html
3379193 விவசாயம் உளுந்து சாகுபடியில் உயரிய தொழில்நுட்பம்... Thursday, March 12, 2020 12:26 AM +0530 பெரம்பலூர்: உளுந்து இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இப்பயிர் வளி மண்டலத்திலுள்ள தழைச்சத்தை தன் வேர் முடிச்சுகள் மூலம் மண்ணுக்கு அளித்து அதன் வளத்தை மேம்படுத்துகிறது. உளுந்தில் அதிக புரதச்சத்து உள்ளது. இப்பயிரானது 25 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வளரக்கூடியது. பயிர் முதிர்ச்சி அடையும் காலம் வறண்ட காலமாக இருந்தால், அதிக மகசூல், தரமான விதைகள் கிடைக்கும்.
 இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் சு. திவ்யா கூறியது:
 நிலத்தை தேர்ந்தெடுத்தல்: விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வயல் முந்தைய ஆண்டுகளில் பயறுவகை செடிகளைச் சாகுபடி செய்யாத வயலாக இருக்க வேண்டும். பயறுவகை பயிர்கள் அல்லது உளுந்துப் பயிரை தொடர்ந்து பயிரிடும்போது, வயல்கள் வேரழுகல் அல்லது வாடல் நோய்க் கிருமிகளைக் கொண்டிருக்கலாம்.
 வெளியிடப்பட்ட புதிய ரகங்கள்: வம்பன் -6, 8, 11 போன்ற ரகங்கள் வேளாண் பல்கலைக் கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புச் சக்தி கொண்ட ரகமாக விளங்குகிறது.
 பருவம், விதை அளவு: ஜனவரி 3-வது வாரம் முதல் பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் விதைக்கலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதும்.
 விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்க டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். அல்லது கார்பண்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை ரசாயன பூசண மருந்துடன் கலக்கக் கூடாது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கி பாக்டீரியாக்கள் 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் ஹெக்டேர்) உடன் ஆறிய அரிசி கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 மேலும், உயிர் உரங்கள், துத்தநாகம், மாலிப்டினம், கோபால்ட் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு விதைக்கு மேல்பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5 கிராம் பயன்படுத்த வேண்டும்.
 விதைப்பு: விதைகளை 30 -10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு 5 முதல் 10 நாள்கள் இருக்கும்போது விதைகளை தூவும்போது, மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வரப்பின் ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
 இலைவழித் தெளித்தல்: வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு 100 பி.பி.எம். போரான் பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
 தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்: 50 சதவீத நைட்ரஜனுக்கு மாற்றாக உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்) பயறு வகை பயிர்களில் கார அமிலத் தன்மை 6.0-க்கும் குறைவான மண்ணில் சுண்ணாம்பு அளிக்கலாம்.
 நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர் தண்ணீர் 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும்.
 காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
 களை மேலாண்மை: மென்டிமெதலின் 3.3 லிட்டர் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன நிலையிலும், மானாவாரி சாகுபடியில் 2.5 லிட்டர் ஹெக்டேர் 500 லிட்டர் தண்ணீருடன் சேர்ந்தும் பயன்படுத்தலாம். களைக்கொல்லிகள் பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15- 30 நாள்களில் கையால் களை எடுக்க வேண்டும்.
 ஊட்டச்சத்து மேலாண்மை: பயறு வொண்டரில் பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளதால் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இதை 2 முறை பூக்கும் சமயத்திலும், 15 நாள்கள் கழித்தும் ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கவும். இதை பயன்படுத்துவதால் வறட்சியைத் தாங்கி வளரவும், பூ உதிர்வைத் தவிர்க்கவும், 10- 20 சதம் மகசூல் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
 பூச்சி, நோய் மேலாண்மை: 5 வகையான காய்த் துளைப்பான்கள் உளுந்து பயிரைத் தாக்கக்கூடும். அவை பச்சை காய்த் துளைப்பான், புள்ளி காய் துளைப்பான், முள் காய்த் துளைப்பான், நீல வண்ணத்துப்பூச்சி, புல் நீல வண்ணத்துப்பூச்சி, காய்ப் புழுக்களில் முக்கியமாக பச்சைக் காய்ப்புழுவான (ஹெலிகோவர்பா ஆர்மிஜிரா) மற்றும் புள்ளிகாய்ப் புழு (மருகா விட்ரேடா) மருகாவகை காய்ப்புழு பூக்கள் மற்றும் காய்களை நூலாம்படைகொண்டு பின்னச் செய்யும். பின்பு மொட்டுகள், காய்கள், இலைகளை துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும். தட்ப வெப்பநிலை மாறும் சமயம் சாம்பல் நோய் தாக்க வாய்ப்புண்டு. சாம்பல் நோய் தாக்கிய செடியின் இலைகள் சாம்பல் நிறம் படிந்து காணப்படும். இதைக் கட்டுப்படுத்த புரப்பிகோனாசோல் பூஞ்சாணக் கொல்லி மருந்தை லிட்டருக்கு 1 மில்லி கலந்து தெளிக்கவும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/12/w600X390/agri1.jpg https://www.dinamani.com/agriculture/2020/mar/12/உளுந்து-சாகுபடியில்-உயரிய-தொழில்நுட்பம்-3379193.html
3362220 விவசாயம் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் Thursday, February 20, 2020 12:53 AM +0530 பெரம்பலூா்: பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கானது 17 ஆம் நூற்றாண்டில் போா்த்துக்கீசியா்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நைஜீரியா நாட்டில் அதிகளவில் மரவள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளத்தில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டாலும், உற்பத்தியைப் பொருத்தவரை தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு காரணம் கேரளத்தை விட தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித்திறன் அதிகரித்து காணப்படுவதேயாகும். தமிழ்நாட்டில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய தோடடக்கலை தொழில்நுட்ப அலுலா் ஜெ. கதிரவன் கூறியது:

ரகங்கள்:

கோ4: மானாவாரி மற்றும் இறவை ஆகிய இரண்டு நிலங்களுக்கும் ஏற்றது. 250 நாள்கள் வயதுடையது. 40 சதவீதம் ஸ்டாா்ச் உடையது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் தரக்கூடியது.

முள்ளுவாடி 1: இறவை சாகுபடிக்கு ஏற்றது. 300 நாள்கள் வயதாகும். 34.5 சதவீதம் ஸ்டாா்ச் கொண்டது. தேமல் நோயைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

ஏத்தாப்பூா் 1: 270 முதல் 300 நாள்கள் வயதுடையது. மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்றது. ஏக்கருக்கு 19 டன் வரை மகசூல் தர வல்லது. 25 முதல் 27 சதம் ஸ்டாா்ச் உள்ளது. தேமல் நோயின் தாக்கம் குறைவு.

ஏத்தாப்பூா் 2: தேமல் நோய்க்கு தாங்குதிறன் உடையரகம். ஏக்கருக்கு 18 டன் மகசூல் தரவல்லது. 30 சதவீதம் ஸ்டாா்ச் உடையது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

நல்ல வடிகால் வசதியுடைய அமில காரத் தன்மை 5.5 முதல் 7 வரையுள்ள மணல் சாரி நிலங்களிலும், இரும்பொறை மண் வகை கொண்ட நிலங்களிலும் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டா் உயரம் வரையுள்ள பகுதிகளில் மரவள்ளி செழிப்பாக வளரும் தன்மை பெற்றது. ஆண்டு மழையளவு 100 செ.மீ வரையும், காற்றின் ஈரப்பதம் மிதமான வெப்பத் தன்மையுடன் உள்ள வெப்ப மண்டலப் பிரதேசத்திலும் நன்கு வளரும். மரவள்ளி ஒரு வறட்சியைத் தாங்கக்கூடிய பயிா். ஆனால், உறைபனி மற்றும 10 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்ப நிலையைத் தாங்கி வளராது.

நடவு:

நீா்ப்பாசன வசதியுள்ள பகுதிகளில் மரவள்ளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நச்சுயிரி நோய் தாக்காத தாய்ச் செடிகளின் தண்டுகளைத் தோ்வு செய்து, அதன் உயரத்தில் 3-இல் 2 பாகம் அடிப்பக்கத்திலிருந்து கரணைகள் வெட்டி எடுக்கலாம். கரணைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ நீளத்தில் 8 முதல் 10 கணுக்களை உடையதாக நறுக்க வேண்டும். கரணைகளை நறுக்கி எடுப்பதற்கு இதற்கென பிரத்யேகமாக உள்ள மரவள்ளிக் கரணை நறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், கூா்மையான அரிவாளைப் பயன்படுத்தலாம்.

கரணைகளை நறுக்கும்போது பிளவோ அல்லது தோல்களில் காயமோ ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். நறுக்கிய கரணைகளை 1 லிட்டா் நீருக்கு 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிா் உரங்கள் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து பின்னா் நடலாம்.

30 செ.மீ ஆழத்திற்கு நிலத்தை 4 முதல் 5 முறை உழவு செய்து 3 அடி இடைவெளியில் பாா்கள் அமைக்கலாம். பாா்களின் ஒருபுறத்தில் 75 முதல் 90 செ.மீ இடைவெளியில் கரணைகளை நடலாம். நடும்போது கணுக்கள் மேல்நோக்கியவாறு இருக்க வேண்டும். 90-க்கு 75 செ.மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 5,925 கரணைகளும், 90-க்கு 90 செ.மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 4,938 கரணைகளும் தேவைப்படும்.

சொட்டுநீா்ப் பாசன முறையில் 30 செ.மீ இடைவெளியில் 120 செ.மீ அகலமுள்ள பாா்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பக்கக் குழாய்களை 150 செ.மீ இடைவெளியில் பொருத்தி ஒவ்வொரு பாரின் மையத்திலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். இதில், சொட்டுவான்களை 60 செ.மீ இடைவெளியில் பொருத்தி சொட்டுவான்களின் இருபுறமும் 60 செ.மீ இடைவெளியில் 2 வரிசையாக கரணைகளை நடலாம்.

நடும்போது முதல் முறை தண்ணீரும், உயிா்த் தண்ணீா் 3-ஆவது நாளும் பின்னா் மண்ணின் தன்மைக்கேற்ப முதல் 3 மாதங்களுக்கு 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், பின்னா் 3 வாரத்திற்கு ஒரு முறையும் நீா் பாய்ச்சலாம். சொட்டுநீா்ப் பாசன முறையில் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீா் பாய்ச்சலாம்.

உர மேலாண்மை:

உழவின்போது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு முறையே 18, 36, 48 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை வழங்க வேண்டும். இதற்கு 40 கிலோ யூரியா 225 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 80 கிலோ மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரங்களைப் பயன்படுத்தலாம். நடவுசெய்த 90-வது நாள் தழை மற்றும் சாம்பல் சத்துகள் ஏக்கருக்கு முறையே 18 மற்றும் 48 கிலோ அளிக்க வேண்டும். உரநீா்ப் பாசன முறையைப் பின்பற்றினால் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 36, 36, 96 கிலோ தேவைப்படும். இதில், 75 சதவீத மணிச்சத்து உரத்தை அடியுரமாகவும், ஏனைய சத்துகளுக்கு நீரில் கரையும் உரங்களை சொட்டுநீா்ப் பாசனம் வழியாக 3 நாள்களுக்கு ஒரு முறையும் பயிரின் ஆயுள்காலம் முழுதும் கொடுக்கலாம். இதற்கு ஏக்கருக்கு 19 கிலோ 19:19:19 உரம், 56 கிலோ 13:0:45 உரம், 9 கிலோ 12:61:0 உரம், 134 கிலோ 0:0:50 உரம் மற்றும் 53 கிலோ யூரியா தேவைப்படும்.

நுண்ணூட்டம் அளித்தல்:

மரவள்ளிக்கு இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் அவசியம் தேவைப்படுகின்றன. நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படும்போது இலைகள் வெளிா் பச்சை முதல் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். இதைத் தவிா்க்க 1 லிட்டா் நீருக்கு 10 கிராம் பெரஸ்சல்பேட், 5 கிராம் துத்தநாக சல்பேட் உரங்களை கரைத்து நடவுசெய்த 60, 90-வது நாளில் இலை வழியாகத் தெளிக்கலாம்.

பின்செய் நோ்த்தி:

நடவு செய்த 20 நாள்களுக்குள் குச்சிகள் முளைக்காத இடங்களில் புதிய கரணைகளை நட வேண்டும். 20-ஆவது நாளில் முதல் களையும், மாதம் 1 முறை 5 மாதங்களுக்கும் களையெடுக்க வேண்டும். ஒரு கரணையிலிருந்து 2 குச்சிகளை மட்டும் விட்டுவிட்டு எஞ்சியவற்றை நீக்க வேண்டும். இதை நடவு செய்த 60-வது நாள் மேற்கொள்ளலாம். சின்ன வெங்காயம், கொத்தமல்லி, உளுந்து போன்ற பயிா்களை ஆரம்பகால கட்டத்தில் ஊடு பயிராக பயிரிடலாம்.

பயிா் பாதுகாப்பு

வெள்ளை ஈ: இவை இலைகளில் சாறை உறிஞ்சி உற்பத்தியை பாதிக்கும். மஞ்சள் தேமல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி வெள்ளை ஈ மூலமாகப் பரவும். இதைக் கட்டுப்படுத்த வேப்பம் எண்ணை 1 லிட்டா் நீருக்கு 30 மில்லி அளவிலும், ஒட்டும் திரவம் 1 மி.லி அளவிலும் கலந்து தெளிக்கலாம். மீத்தைல் டெமட்டான் பூச்சிக்கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2 மிலி அளவில் பயிரின் ஆரம்ப வளா்ச்சி நிலையிலும், பாசலோன் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 2 மி.லி அளவில் பயிரின் பிந்தைய வளா்ச்சி நிலையிலும் தெளிக்கலாம். துத்திச் செடியானது வெள்ளை ஈ-க்கு மாற்று ஊன் வழங்கியாகச் செயல்படுவதால் மரவள்ளி நிலங்களில் துத்திச் செடிகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மாவுப்பூச்சி: மரவள்ளியின் இளம் தளிா், தண்டு மற்றும் இலையின் அடிப் பரப்பிலிருந்து காற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். நுனிக் குருத்துகள் உருமாறி வளா்ச்சி குன்றி காணப்படும். இடைக் கணுக்களின் நீளம் குறைந்து தண்டுகள் சிதைவடையும். இதைக் கட்டுப்படுத்த அசிரோபாகஸ் பப்பாயே என்னும் நன்மை செய்யும் ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 100 எண்ணிக்கையில் விடலாம். மாலத்தியான் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 1 மி.லி அளவில் கலந்துதெளிக்கலாம்.

செஞ்சிலந்திப்பேன்: இலைகளில் சாறை உறிஞ்சி இலைகளை உருமாறச் செய்வதோடு, இலைகள் தடித்துக் காணப்படும். இலைகளின் பின்புறம் மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்திற்கு மாறும். தாக்குதல் தீவிரமானால் வளா்ச்சி தடைபடும். இதைக் கட்டுப்படுத்த புராபா்கைட் பூச்சிக்கொல்லி 1 லிட்டா் நீருக்கு 1.5 மி.லி வீதம் தெளிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்:

பூஞ்சை மூலம் ஏற்படக்கூடிய இந்நோய் பாதித்த இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மாங்கோசெப் பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2 கிராம் கலந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம்.

கிழங்கு அழுகல்: நீா் தேங்கும் பகுதிகளில் கிழங்குகள் அழுகிவிடும். அதனால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். டிரைக்கோடொ்மா ஆஸ்பரெல்லம் உயிரிப் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் நடவு செய்த உடனேயும் 3, 6-வது மாதங்களில் நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது எருவுடன் கலந்து தூவ வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் காப்பா் ஆக்ஸி குளோரைடு பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 2.5 கிராம் கலந்து ஊற்றலாம்.

அறுவடை: இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். செடிக்கு அருகில் நிலத்தில் வெடிப்புகள் உருவாகும். இது அறுவடைக்கான அறிகுறிகள். இச்சமயத்தில் குச்சிகளை நிலத்திலிருந்து பிடுங்கி கிழங்குகளை தனித்தனியே வெட்டி எடுக்கலாம். ரகம், பராமரிப்பு முறைகளைப் பொறுத்து 1 ஏக்கருக்கு 18 முதல் 25 டன் கிழங்குகள் மகசூலாகக் கிடைக்கும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/swee.JPG https://www.dinamani.com/agriculture/2020/feb/20/மரவள்ளிக்-கிழங்கு-சாகுபடி-தொழில்-நுட்பங்கள்-3362220.html
3350109 விவசாயம் தென்னையில் எலி, மர நாய்களை கட்டுப்படுத்தும் வழிகள் Thursday, February 6, 2020 12:34 AM +0530
பெரம்பலூர்:  தென்னையைத் தாக்கி சேதப்படுத்தக்கூடிய விலங்கினங்களில் முதலிடத்தில் இருப்பது எலிகள் தான். அதனால், தென்னந்தோப்புகளில் எலிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. எலிகள் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்தில் தோன்றிவிட்டது.

அனைத்து விதமான தட்பவெப்ப நிலையிலும், சுற்றுச் சூழலிலும் உயிர் வாழும் உடல் அம்சங்கள் எலிக்கு உண்டு. எலிகளுடைய இனப்பெருக்க ஆற்றல் மிக அதிகம். ஒரே பிரசவத்தில் 20 குட்டிகள் வரையும், ஆண்டுக்கு 8 முறை குட்டி ஈனும் தன்மையும் எலிக்கு உண்டு. இந்த அளவில்லாத இனப்பெருக்க ஆற்றல் பெற்றிருப்பதால் எலிகளை சுலபமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது:

நாற்று பருவத்தில் தென்னங்கன்றின் வேர் பகுதிகளை எலி கடித்து சேதப்படுத்துவதோடு, தென்னை நாற்றுகளின் நடு குருத்து மற்றும் ஓலைகளின் அடி தண்டு பகுதிகளைக் கடித்து உண்ணும். எலிகள் தென்னை மரத்தில் இருக்கும் இளம் காய்களை கடித்து சேதப்படுத்தும். இதனால் பெருத்த மகசூல் இழப்பு ஏற்படும்.
பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையிலும் எலிகளின் தாக்குதல் அதிகளவில் இருக்கும்.

பெரும்பாலும் இளநீர் காய்களை எலி விரும்பும். விரியாத பூம்பாளை, பெண் பூக்கள் போன்றவற்றையும் கடித்து சேதப்படுத்தும். தென்னை மர எலி, தென்னை மரத்தின் தலைப் பகுதியில் குடியிருக்கும். மரத்தைவிட்டு கீழே இறங்கி வருவதில்லை. தென்னை ஓலைகள் வழியாக மரத்துக்கு மரம் தாவி சேதப்படுத்தும். இந்த எலிகளின் நடமாட்டம் இரவு நேரத்தில் தான் இருக்கும். பகல் நேரத்தில் இருக்காது. மரச் சுண்டெலி என்னும் ஒருவகை எலியும் தென்னை மரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மரச் சுண்டெலி உடம்பின் மேல்பகுதி இளஞ்சிவப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

மரச் சுண்டெலி தென்னை மரத்தின் தலைப்பகுதியில் கூடுகட்டி பூம்பாளைகளையும், இளநீர்க் காய்களையும் கடித்து சேதப்படுத்தும். கருப்பு எலி எனப்படும் ஒருவகை எலி வீடுகளில் அதிகமாக இருக்கும். இவ்வகை எலிகள் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் காய்களையும், முதிர்ந்த தேங்காயையும் கடித்து சேதப்படுத்தும். வயலில் இருக்கக்கூடிய வயல் எலி தென்னை நாற்றுகளை கடித்து சேதப்படுத்தும். சொட்டு நீர் குழாய்களையும் இந்த எலி சேதப்படுத்தும்.

எலித்தொல்லைகளிலிருந்து தென்னை மரத்தைப் பாதுகாக்க சரியான இடைவெளி அதாவது வரிசைக்கு வரிசை 25 அடி மற்றும் மரத்திற்கு மரம் 25 அடி இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.  தென்னை மரத்தின் தலைப்பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்து ஓலை இடுக்குகளில் இருக்கும்  எலிக்கூடு, பன்னாடை போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். தென்னை மரத்தின் தண்டுப் பகுதியை தரைமட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் கருப்பு பாலித்தீன் தாளை சுற்றி கட்டிவைக்கலாம். இந்த பாலித்தீன் தாள் வழவழப்பாக இருப்பதால் இதன்மீது எலிகளால் ஏறிச் செல்ல முடியாது. 
தோப்பில் 10 மரத்திற்கு ஒரு மரம் வீதம் பாலித்தீன் தாளைச் சுற்றி கட்டிவைத்தால், அதனைப் பார்த்த எலிகள் பயம் கொண்டு தோப்பிலிருந்து வெளியேறி விடும். எலிகளைக் கொல்லக்கூடிய ஜிங் பாஸ்பைடு மற்றும்  புரோமோடையலான் போன்ற எலி  கொல்லிகளை தென்னை மரங்களின் தலைப்பகுதியில் வைக்கலாம். இவற்றை ஒருமுறை சாப்பிட்டாலே எலிகள் இறந்துவிடும்.

ஒரு வாளியில் 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் 200 கிராம் புதிய தேங்காய் பிண்ணாக்கைக் கரைத்து வாளியை தென்னை மரத்தின் தலைப்பகுதியில் ஒரு மட்டையில் கட்டிவிட்டால், தென்னைமரத்தில் கூடுகட்டி வாழுகின்ற எலிகள் பிண்ணாக்கு வாசத்தால் கவரப்பட்டு கரைசலில் விழுந்து இறந்துவிடும். செங்காய் பதத்தில் இருக்கும் பப்பாளிக் காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைத்துவிட்டால் இந்த பப்பாளி துண்டுகளைக் கடித்து சாப்பிடும் எலிகளின் பற்களில் பப்பாளிபால் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு பால் ஒட்டுவதால் பற்களில் கூச்சம் ஏற்பட்டு வேறுபொருள்களைக் கடிக்க முடியாமல் பற்கள் அதிகமாக வளர்ந்து உணவு உட்கொள்ள முடியாமல் இறந்துவிடும். 

கோதுமை சப்பாத்தியின் இரண்டு பக்கத்திலும் தேன் அல்லது வெல்லப் பாகினைத் தடவி சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து, அவற்றில் சிமென்ட் தூள் சிறிதளவு இட்டு புரட்டி எடுத்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.
100 கிராம் நிலக்கடலை பருப்பையும், 100 கிராம் எள்ளையும் ஒன்றாக கலந்து இடித்து பொடியாக்கி, அதனுடன் சிறிதளவு வெல்லப்பாகு கலந்து நன்றாக கிளறிவிட வேண்டும். அதனுடன், 50 கிராம் சிமென்ட் தூள் சேர்த்து நன்றாக கலக்கி சிறு, சிறு உருண்டையாக உருட்டி தென்னை மரத்தின் மட்டை இடுக்குகளிலும், தென்னந்தோப்பில் இருக்கும் எலி வளைக்குள்ளும் வைக்கவேண்டும்.  இவற்றை சாப்பிடும் எலிகளின் வயிற்றுக்குள் சிமென்ட் சென்று எலிகள் இறந்துவிடும்.

பூவன் வாழைப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று கார்போ பியூரான் குருணைகளை திணித்து தென்னை மட்டை இடுக்குகளில் வைத்தால் பூவன் வாழைப்பழத்தின் மணத்திற்கு கவரப்பட்டு எலிகள் இந்தப் பழங்களை சாப்பிட்டு இறந்துவிடும். ஒரு தோப்பில் 5 அல்லது 6 தென்னை மரங்களில் இவற்றை வைத்தால் போதும்.
வாய் அகலமாக உள்ள பானையில் பாதி அளவுக்கு சாண கரைசலை நிரப்பி, அதன் மேல் பகுதியில் சிறிதளவு அரிசி சாதமிட்டு தென்னந்தோப்பில் ஆங்காங்கே மண்ணில் புதைத்துவைக்கலாம். இந்த சாதத்தை சாப்பிட வரும் எலிகள் சாணக் கரைசலில் மூழ்கி இறந்துவிடும். 

மரநாய் கட்டுப்பாடு: மர நாய் என்பது கீரிப்பிள்ளை இனத்தைச் சார்ந்தது. தென்னை மரத்தில் இருக்கும் இளநீரில் ஓட்டைபோட்டு இளநீரை குடித்துவிடும். மர நாயின் முகம் நரிபோன்றும், உடல் மற்றும் வால் கீரிபிள்ளை போன்றும் இருக்கும். மர நாயின் உடல் கரும்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். உடல் முழுவதும் முடிகள் அடர்த்தியாக வளர்ந்து, முதுகில் மூன்று பழுப்புநிற கோடுகள் இருக்கும். வால் நீண்டு அடர்த்தியான முடி கொண்டதாக இருக்கும். 

மரநாய் மிக வேகமாக ஓடக்கூடியது. ஒரே தாவலில் 20 அடி தூரம் வரை தாண்டக்கூடிய தன்மைகொண்டது. இந்த தன்மை இருப்பதால் ஒருதென்னை மரத்தில் ஏறும் மரநாய் கீழே இறங்காமலேயே மரத்துக்கு மரம் சுலபமாக தாவிச்செல்லும். ஒரு மரநாய் ஒரே நாளில் 8 முதல் 10 இளநீரை ஓட்டைபோட்டு சேதப்படுத்தும். இதனால் தேங்காய் மகசூல் வெகுவாகக் குறையும்.
இரும்பு கம்பியால் செய்யப்பட்ட பெரிய கூண்டுகளில் வாழைப் பழத்தை வைத்து மரநாயை தந்திரமாக சிக்கவைக்கலாம். எலிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் புரோமோடைலான் நச்சுச் துண்டுகளை தென்னை மரத்தின் இளநீர் குலையில் அடிப்பக்கத்தில் மட்டை இடுக்கில் வைக்கவேண்டும்.  இளநீரை குடிக்க வரும் மரநாய் இந்த நஞ்சு துண்டுகளை சாப்பிட்டு ரத்தக்குழாய் வெடித்து இறந்துவிடும்.

மரநாய் வாழைப் பழத்தை விரும்பி சாப்பிடும். அதனால், வாழைப் பழத்தில் அரை கிராம் அளவுக்கு கார்போபியூரான் குருணைகளை திணித்து மட்டை இடுக்குகளில் வைத்தால், இந்த பழத்தை சாப்பிட்டு மர நாய் இறந்துவிடும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/cocunut.JPG https://www.dinamani.com/agriculture/2020/feb/06/தென்னையில்-எலி-மர-நாய்களை-கட்டுப்படுத்தும்-வழிகள்-3350109.html
3350108 விவசாயம் நிலக்கடலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள்! Thursday, February 6, 2020 12:32 AM +0530 தருமபுரி: நிலக்கடலை பயிா் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக ஊட்டச்சத்துகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. நிலக்கடலைப் பயிரில் ஏற்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து சாகுபடி செய்ய விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் குறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் மற்றும் முனைவா் ம.சங்கீதா ஆகியோா் கூறும் வழிமுறைகளாவன:

தருமபுரி மாவட்டத்தில், தற்போது நிலக்கடலைப் பயிரானது இறவையில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் நீா்ப் பற்றாக்குறையினால் நிலக்கடலையில் கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகளின் பற்றாக்குறை அறிகுறிகள் பரவலாகத் தென்படுகின்றன. இதனால் இளம் இலைகள் அளவில் சிறியதாகவும், பச்சையம் இழந்து வெளிறி மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் விளைவாக பயிா்களின் ஒளிச்சோ்க்கை அளவு குறைந்து மகசூல் குறைபாடு ஏற்படும். மேலும், விதைகள் அளவில் சிறியதாகவும் தரம் குறைந்தும் காணப்படும். எனவே, நிலக்கடலையில் வளா்ச்சி நிலைகளில் தென்படும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைக் கண்டறிந்து அதனை நிவா்த்தி செய்வது அவசியம்.

வழிமுறைகள்: நிலக்கடலையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகளை நிவா்த்தி செய்ய, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிலக்கடலை ரிச் ஊட்டச்சத்துக் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பூக்கும் மற்றும் காய்ப் பிடிக்கும் தருணத்தில் தேவையான அளவு ஒட்டு திரவம் (0.5 மி.லி.) சோ்த்து இலைகளின் மீது நன்றாகப்படும்படி தெளிக்க வேண்டும். அவ்வாறு நிலக்கடலை ரிச் கிடைக்காத சமயத்தில் ஓா் ஏக்கருக்கு டி.ஏ.பி. (1 கிலோ), அம்மோனியம் சல்பேட் (400 கிராம்) மற்றும் போராக்ஸ் (200 கிராம்) ஆகியவற்றை 15 லிட்டா் தண்ணீரில் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டி கிடைக்கும் கரைசலுடன் 200 லிட்டா் தண்ணீா் கலந்து பயிரின் வளா்ச்சிக் காலத்தில் 25 மற்றும் 35 -ஆவது நாள்களில் இலைகளின் மீது நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு ஊட்டச் சத்துகளைத் தெளிப்பதன் மூலம் செடிகளில் பூ பிடிக்கும் திறன் மற்றும் திரட்சியான காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், 15 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். எனவே, விவசாயிகள் இத்தகைய ஊட்டச்சத்துக் கலவையை இலைவழித் தெளிப்பு செய்வதன் மூலம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து, தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலையில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/6/w600X390/groundnut.JPG https://www.dinamani.com/agriculture/2020/feb/06/நிலக்கடலையில்-ஊட்டச்சத்து-பற்றாக்குறையை-நிவா்த்தி-செய்யும்-வழிமுறைகள்-3350108.html
3343416 விவசாயம் நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற சிங் சல்பேட்பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள் Wednesday, January 29, 2020 07:53 AM +0530 திருநெல்வேலி: நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற சிங் சல்பேட் பயன்படுத்துமாறு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நுண்ணுட்டச் சத்துகளை, குறிப்பாக துத்தநாக சத்தை (சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெற்பயிா் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

நெற்பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிா்வேதி வினைகளில் துத்தநாகம் உதவி புரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

துத்தநாக சத்தின் குறைபாட்டுக்கான காரணிகள்: அதிக கார மண்ணில் (பிஎச் 7க்கு மேல்) தொடா்ந்து வயலில் நீா் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிகளவு பைகாா்பனேட் உப்பின் அளவு இருத்தல், அதிகளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடா்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடா்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தை பயிா்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பற்றாக்குறை, களா் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாகச் சத்தானது பயிா்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும். பின்னா் பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிா்களின் வளா்ச்சி குன்றிக் காணப்படும்.

இதை சரிசெய்ய ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டங்களின் கீழ் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/9/4/0/w600X390/paddy.jpg https://www.dinamani.com/agriculture/2020/jan/29/நெற்பயிரில்-அதிக-விளைச்சல்-பெற-சிங்-சல்பேட்பயன்படுத்த-வேளாண்-துறை-வேண்டுகோள்-3343416.html
3337755 விவசாயம்  தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்கள்: வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது Thursday, January 23, 2020 12:57 AM +0530
தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 இது தொடர்பாகப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களின் தேவையை அறிந்து ஆண்டுதோறும் பல புதிய பயிர் ரகங்களை வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசாக 7 வேளாண்மைப் பயிர்கள், 6 தோட்டக்கலைப் பயிர்கள் என மொத்தம் 13 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 நெல் - கோ 53: இது தமிழ்நாட்டின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்ற ரகம். வறட்சி, பகுதியளவு வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய இது குறுகிய கால (115 - 120 நாள்கள்) ரகமாகும். மானாவாரி நேரடி விதைப்புக்கு ஏற்றது. இந்த ரகத்தின் சராசரி நெல் மகசூல் ஹெக்டேருக்கு 3,866 கிலோ. இது வறட்சியைத் தாங்கி வளருவதுடன், மேட்டூர் அணை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் பயிரிட ஏற்ற ரகமாகும்.

நெல் - ஏடீடி 54: இது அதிக மகசூல் தரக் கூடிய, அதாவது ஹெக்டேருக்கு சராசரியாக 6,307 கிலோ நெல் தரக் கூடிய மத்திய கால (130 - 135 நாள்கள்), வெள்ளை மத்திய சன்ன அரிசி ரகமாகும். அதிக அரவைத் திறன் (72.3 சதவீதம்) கொண்ட இது, பின் சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்றது.
கரும்பு - கோ.க. 13339: இந்தப் புதிய ரக கரும்பு 330 - 360 நாள்களில் முதிர்ச்சியடைந்து ஹெக்டேருக்கு அதிகபட்ச மகசூலாக 141.60 டன் கரும்பும், 18.20 டன் சர்க்கரையும் கொடுத்துள்ளது. நடுப்பட்டம், பின்பட்டத்துக்கு ஏற்ற ரகம். கடந்த 20 ஆண்டுகளாகப் பயிரிடப்படும் கோ 86032 ரகத்துக்கு மாற்றாக இது வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தி - கோ 17: இது 130 நாள்களில் முதிர்ச்சி அடைந்து ஹெக்டேருக்கு 2,504 கிலோ விதைப் பருத்தி மகசூலாகக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் காய்கள் முதிர்வடைதல், செடிகள் அதிக கிளைகள் இல்லாமலிருத்தல், குறுகிய காய்ப் பிடிக்கும் கிளைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். தமிழ்நாட்டின் நெல் தரிசு, குளிர்கால மானாவாரி, கோடைக்கால நீர்ப்பாசன பகுதிகளுக்கு ஏற்றது. மேலும் இது அடர் நடவு முறைக்கும், இயந்திர அறுவடைக்கும் ஏற்ற ரகமாகும்.

உளுந்து - வம்பன் 11 (வி.பி.எண்.11): இது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய உளுந்து ரகமாகும். இதன் வயது 70 - 75 நாள்களாகும். ஆடி, புரட்டாசி, மார்கழி, சித்திரை என 4 பட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரியில் ஹெக்டேருக்கு 865 கிலோவும், இறவையில் 940 கிலோவும் மகசூல் கொடுக்கவல்லது.

சோளம் - கோ 32: இந்த ரக சோளம், மானாவாரியில் தானிய மகசூலாக ஹெக்டேருக்கு 2,445 கிலோவும், உலர் தட்டை மகசூலாக 6,490 கிலோவும் கொடுக்கவல்லது. தானியம் அதிக புரதச்சத்தும் (14.6 சதவீதம்), அதிக நார்ச்சத்தும் (5.80 சதவீதம்) கொண்டது. மானாவாரி, இறவையில் தமிழ்நாடு முழுவதிலும் பயிரிடலாம்.

தினை - ஏ.டி.எல். 1: இந்த தினை ரகம் ஹெக்டேருக்கு 2,117 கிலோ தானியம், 2,785 கிலோ தட்டு ஆகியவற்றை மகசூலாகக் கொடுக்கவல்லது. இது குழந்தைகள், கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யப் பயன்படுகிறது. குறைந்த செலவில் இருமடங்கு வருவாய் கொடுக்கவல்லது.
வாழை - கோ 2 (வீரிய ஒட்டு): கோ 2 வீரிய ஒட்டு ரக வாழை, நெய்பூவன் போன்று தோற்றத்தில் இருக்கும். ஹெக்டேருக்கு 32 டன் மகசூல் கொடுக்கும். நூற்புழு, வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
தக்காளி - கோ 4 (வீரிய ஒட்டு): இந்தப் புதிய ரக தக்காளி பயிரில், காம்பை ஒட்டிய பகுதி பழுக்கும்போது பச்சை நிறம், இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால் தக்காளியை அதிக தூரம் எடுத்துச் செல்லவும், அதிக நாள்கள் சேமிக்கவும் பயன்படும். நீண்ட நாள்களுக்கு அதிக மகசூல் தரவல்ல இந்த ரகம், ஹெக்டேருக்கு 92.30 டன் மகசூல் கொடுக்கவல்லது. பழங்களில் அமிலத்தன்மையும் அதிகம் இருக்கும்.

சின்ன வெங்காயம் - கோ 6: இந்த வகை சின்ன வெங்காயம், குமிழ்கள், விதை உற்பத்தி செய்ய ஏற்ற ரகமாகும். குமிழ் மகசூலாக ஹெக்டேருக்கு 19.10 டன் கிடைக்கும். விதை மகசூலாக ஹெக்டேருக்கு 300 கிலோ கிடைக்கும். அதிக நாள்களுக்கு சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது பயிரிடப்பட்டு வரும் கோ 5 ரகம், குறைவான சேமிப்புத் திறனே கொண்டது. இந்தப் புதிய ரகம், பெரம்பலூர், நாமக்கல், கடலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஏற்றது.
மரவள்ளி - ஒய்.டி.பி. 2: இந்த மரவள்ளி ரகம் ஹெக்டேருக்கு 46.20 டன் கிழங்குகளை மகசூலாகக் கொடுக்கவல்லது. இதில் 30 சதவீத மாவுச்சத்து உள்ளது.

கொடுக்காபுளி - பி.கே.எம். 2: இந்த ரகம் ஆண்டுதோறும் சீராகக் காய்த்து, அதிகபட்சம் ஒரு மரத்துக்கு 90 கிலோவும், ஒரு ஹெக்டேருக்கு 13.50 டன் பழங்களையும் மகசூலாகக் கொடுக்கவல்லது. இடுபொருள்கள் குறைந்த அளவே போதுமானது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பழங்கள் சத்துகள் நிறைந்தவை. பழத்தின் வெளிப்புறத்தோல் இளஞ்சிவப்பு நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பு நிறத்திலும் இருக்கும். தமிழ்நாட்டின் களர், உவர் நிலங்கள், மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற ரகம்.
மணத்தக்காளி - கோ 1: மணத்தக்காளி கோ 1 ரகம் கீரை மகசூலாக ஹெக்டேருக்கு 30 - 35 டன்கள் கொடுக்கவல்லது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச்சத்து மிகுந்த கீரையாகவும், மருந்துத் தன்மைக்காகப் பயன்படுத்தவும் உகந்தது. வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டங்களிலும் வளர்க்க உகந்தது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/23/w600X390/cotton.jpg https://www.dinamani.com/agriculture/2020/jan/23/தமிழக-விவசாயிகளுக்குப்-பொங்கல்-பரிசாக-13-புதிய-பயிர்-ரகங்கள்-வேளாண்மை-பல்கலைக்கழகம்-வெளியிட்டுள்ளது-3337755.html
3327107 விவசாயம் சின்ன வெங்காயப் பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை Thursday, January 9, 2020 02:52 AM +0530
பெரம்பலூர்: தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிரில், வெங்காய ஈ தாக்குதல் பரவலாகத் தென்படுவது குறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன், ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆனந்தன், உதவி தோட்டக்கலை அலுவலர் தேவராஜன் ஆகியோர் ஆலத்தூர், இரூர் ஆகிய கிராமங்களில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர்.  

இந்த ஆய்வின்போது, சில வயல்களில் வெங்காய ஈ தாக்குதல் இருப்பதை கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த வேளாண் அலுலர்கள் கூறிய ஆலோசனை:
டேலியா ஆன்டிகுவா என்னும் அறிவியல் பெயர் கொண்ட வெங்காய ஈ உருவத்தில் வீட்டு ஈ போல இருக்கும். இவை தனது முட்டைகளை இலைகள், குமிழங்கள் அல்லது குமிழத்துக்கு அருகிலிருக்கும் மண் மீது இடும். இவை 3 முதல் 8 நாள்களில் பொரித்து புழுவாக வெளிவரும். இவற்றிற்கு கால்கள் கிடையாது. புழுக்கள் வேர்பாகத்திலிருந்து குமிழங்களைக் குடைந்து தாள்பாகம் வரை வரும். ஒரு குமிழத்தை பல புழுக்கள் குடைந்து செல்லும்.  புழுப்பருவம் 20 நாள் வரையிலிருக்கும். பின்னர் கூட்டுப்புழுவாக மண்ணுக்குள் இருக்கும்.  
பாதிப்புக்குள்ளான வெங்காயச் செடிகளின் தாள்கள் மஞ்சள் நிறமாக மாறி செடிவாடும். இவற்றைப் பிடுங்கிப் பார்த்தால் குமிழங்கள் அழுகிக் காணப்படும். குமிழங்களுக்குள் புழுக்கள் கூட்டமாகக் காணப்படும். பொதுவாக இதன் பாதிப்பு குமிழங்கள் உருவாகும் தருணத்தில் அதிகம் இருக்கும்.

பாதிப்புக்குள்ளான குமிழங்களில் துளைகளை ஏற்படுத்தி விடுவதால், குமிழங்கள் அழுகிப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இப்புழுக்கள் அடுத்தடுத்த குமிழங்களைத் தாக்குவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.  

இவற்றைக் கட்டுப்படுத்த வயலைத் தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி எரித்துவிட வேண்டும். புழுக்களால் ஏற்படும் காயம் காரணமாக பாக்டீரியா தாக்குதலுக்குள்ளாகி குமிழங்கள்அழுகிவிடும். ஈக்கள் மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படும் தன்மைகொண்டது. எனவே, ஈக்களைக் கவர்ந்து அழிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 10 வைக்கலாம். 
ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் பயிரின் எஞ்சிய பாகங்கள் அனைத்தையும் வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

குளிர்ச்சியான, ஈரப்பதமான சூழலில் புழுக்கள் உற்பத்திக்கு சாதகமாகவும், வெப்பமான வறண்ட சூழல் பாதகமாகவும் இருக்கும். நிலத்தில் நன்கு மக்காத எரு அதிகளவில் இடுதலை தவிர்க்கவேண்டும். எருவிட்ட நிலங்களில் நன்கு மக்கிய பின்னரே நடவுசெய்ய வேண்டும். தொடர்ந்து வெங்காயம் பயிரிடுவதைத் தவிர்த்து மாற்றுப்பயிர் சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும்.
அசாடிராக்டின் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 3 மி.லி அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் ஈக்களை வயலிலிருந்து விரட்டலாம். குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. ரசாயனப் பூச்சிக்கொல்லி ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி அளவில் கலந்து நிலத்தில் படுமாறு தெளித்து, குளோர் பைரிபாஸ் 10 ஜி குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ அளவில் நிலத்திலிட்டு நீர்ப்பாய்ச்சி புழுக்களைக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/9/w600X390/visit.JPG https://www.dinamani.com/agriculture/2020/jan/09/சின்ன-வெங்காயப்-பயிரில்-ஈ-தாக்குதலை-கட்டுப்படுத்த-ஆலோசனை-3327107.html
3326986 விவசாயம் சிறந்த கவனிப்பே சினை மாட்டைப் பாதுகாக்கும் Thursday, January 9, 2020 01:36 AM +0530 நல்ல தரமான கன்றுக் குட்டிகளைப் பெற நல்ல தீவனமும் முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகள் பிறப்பதற்கு முன்பிருந்தே மாட்டை நன்கு கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், கவனிப்பற்ற மாடுகள் ஈனும் கன்று மெலிந்து பலவீனமானதாக இருக்கும். எனவே, கன்று ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்பிருந்தே சினை மாட்டுக்கு சிறந்த கவனிப்பு அவசியம் என்கிறாா் கால்நடை பராமரிப்புத்துறை வேலூா் மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன்.

கால்நடை பராமரிப்பில் மாடுவளா்ப்பு, கவனிப்பு, பராமரிப்பு குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

பிறந்த கன்றின் பராமரிப்பு:

கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போா்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை சுத்தம் செய்ய வேண்டும். தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதையும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிட்டால் அல்லது குளிா்காலத்தில் ஈரமற்ற துணி அல்லது சணல் பையின் மூலம் கன்றை சுத்தம் செய்து கன்றுக்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் வயிற்றிலும் நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும்.

தொப்புள் கொடியை வயிற்றில் இருந்து 2 செ.மீட்டரில் இருந்து 5 செ.மீ. நீளம் விட்டு அறுத்து விட்டு அயோடின் அல்லது டிஞ்சா் தடவி முடிச்சுப் போட்டு விட வேண்டும். குட்டி தானாக எழுந்து தாய்ப்பால் அருந்த முடியவில்லை என்றால் அதைத் தூக்கி விட்டு உதவி செய்யலாம். முடிந்தவரை 30-இல் இருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்யவேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் சீம்பால்

குடிக்கச் செய்ய வேண்டும்.

பிறந்த கன்றின் எடையை அளக்க வேண்டும். மாட்டின் காம்பை நீரால் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த வேண்டும். கன்றுக்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும். குளிா்காலமாக இருந்தால் அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

சீம்பால் ஊட்டம் :

கன்று பிறந்தவுடன் மாட்டிலிருந்து வரும் முதல் பாலை சீம்பால் என்பாா்கள். இது கெட்டியான மஞ்சள் நிற திரவம். இதில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் நோய் எதிா்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். பிறந்த 10 முதல் 12 மணி நேரம் வரை கன்றுகளின் சிறுகுடல் சவ்வுகள் நோய் எதிா்ப்புச் சக்தி பொருள்களை உட்கிரகிப்பதற்கு வசதியாக இருக்கும். இச்சமயத்தில் சீம்பாலை உட்கொள்ளச் செய்தல் சிறந்தது. பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு கன்றுக்கு தவறாமல் சீம்பால் தர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம். கன்று பலவீனமாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கச் செய்யலாம். இது கன்றின் உடல் வெப்பத்தை உயா்த்தி வெதுவெதுப்படையச் செய்கிறது. ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும் 4 மாதங்களுக்குப் பிறகு உலா்தீவனமும் அளிக்கலாம்.

பிற பராமரிப்புகள்:

கன்றுகளை அடையாளம் காண நிரந்தர அல்லது தற்காலிக அடையாள குறிகளைப் பயன்படுத்தலாம். காதின் அடிப்பகுதியில் எண்களையும் எழுத்துகளையும் பச்சை குத்தியும் உலோக காதணிகளை அணிவித்தும் செயல்படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறி தகடுகளைத் தொங்க விடலாம். பிறந்து 7 முதல் 10 நாட்களுக்குள் கொம்பு குருத்தை நீக்கி கொம்பு வளா்வதைத் தடுக்கலாம். இதை காய்ச்சிய இரும்பு அல்லது காஸ்டிக் குச்சிகள் அல்லது மின்சார முறையிலும் செய்யலாம். நீக்கிய உடன் கொம்பின் மேல் வாயில் கிரீம், வேப்பெண்ணெய் போன்றவற்றைத் தடவ வேண்டும். கன்றுகளுக்கு முறையாக குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். இதை மாதம் ஒரு முறை அளித்தல் நல்லது.

பிறந்த இரண்டாவது வாரத்தில் இருந்து கன்றுக்கு தூய தண்ணீரை குடிப்பதற்கு அளிக்கலாம். கன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனி கொட்டிலில் பராமரிக்க வேண்டும். 3 முதல் 6 மாதம் வரை குழுவாக வளா்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு காளைக்கன்றுகள் மற்றும் கிடாரிகளை தனித்தனியே வளா்க்க வேண்டும். கன்றுகளின் வளா்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒரு முறையும் அதன் பின்பு மாதம் ஒரு முறையும் எடை பாா்த்தல் அவசியம்.

கன்றுகளின் முதல் மாதத்தில் குடற்புழு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிக அளவில் இருக்கும். எனவே அவற்றை வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளா்த்தால் இழப்பைக் குறைக்கும். கிடாரி கன்றில் 4-க்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த இரு மாதங்களுக்குள் நீக்கி விட வேண்டும். காளைக் கன்றுகளுக்கு 8 அல்லது 9 மாதங்களில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும். கன்றுகளை தாய்ப் பசுவிடம் இருந்து தனியே வளரப் பழக்க வேண்டும்.

கிடேரி பராமரிப்பு:

பசுவின் வளா்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தை பொருத்தே அமையும். அதே சமயம் தேவையான உலா்தீவனமும் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறு காலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது. திறந்தவெளிக் கொட்டில் அமைப்பே கிடேரிக்கு மிகவும் ஏற்றது. கிடேரி கருத்தரிக்கும் போது அதன் வயதை விட எடை மிக முக்கியம். ஏனெனில், வயதான கிடேரிகள் கூட நல்ல கன்றுகளை ஈனும். மெலிந்த கிடேரிகள் கன்று ஈனுவதற்கு மிகுந்த சிரமப்படும். மேலு,ம் அதன் கன்றுகளும் நல்ல உடல்நலமுடையதாக இருக்காது.

வயதான மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாகவே இருக்கும். எந்த அளவு சதைப்பற்றுடனும் எடையுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமாக பால் உற்பத்தி செய்ய முடியும். கன்று ஈனுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாகவே கிடேரியை தனித்தொட்டிலில் பராமரிக்கப்பட வேண்டும்.

மாட்டுக்கு சாப்பிடும் அளவுக்கு பசுந்தீவனமும் 2-3 கிலோ அடா்தீவனமும் அளிப்பது அவசியம். ஒரு சுகாதாரமான இடத்தில்தான் நல்ல வளா்ச்சி சாத்தியம். எனவே, சரிவிகித உணவுடன் நோய்த் தடுப்புக்குத் தேவையான பொருட்களையும் முன்கூட்டியே தயாா்செய்து கொள்வது நல்லது. முதல் கன்று ஈனும் மாடுகளுக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

கறவை மாடுகளின் பராமரிப்பு:

கறவை மாடுகளுக்கு தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம் உட்கொள்ளுமளவு உலா் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம். கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் பால் அளவு குறையும். எனவே 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு இரண்டு லிட்டருக்கும் 1 கிலோ கலப்புத்தீவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.

கறவை மாடுகளை மென்மையாக கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும். கன்று ஈன்ற 18ஆவது நாளிலேயே அதன் சூடு குறையும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரலாம். சரியான நேரம் பாா்த்து அடுத்த கருத்தரிப்புக்கு தயாா்செய்ய வேண்டும். பால் உற்பத்தி அளவை ஒவ்வொரு முறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தித் திறனை அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தனித்தனி பதிவேடுகள் அவசியம்.

கலப்புத் தீவனத்தை பால் கறக்கும் முன்பும் அடா் தீவனத்தை பால் கறந்த பிறகும் அளிப்பது சிறந்தது. ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீா் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

தினசரி பால் கறப்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு மூன்று முறை கறப்பது பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால் அதிக பால் சுரப்பதைக் குறைக்கிறது. முடிந்த வரை முழுக் கையையும் பயன்படுத்தி பால்கறக்க வேண்டும். இரண்டு விரல் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டிவிரல்) கொண்டு கறப்பது சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் காம்பில் வலி உண்டாகிறது.

கன்று ஊட்டாமலேயே பசு பால் (சுரக்குமாறு) கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றை பசுவிடம் இருந்து பிரிக்க முடியும். திறந்தவெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகளை சுதந்திரமாக உணர வைக்கும்.

எருமை மாடுகளை பால் கறக்கும் முன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி எருமை மற்றும் பசு மாடுகளைக் குளிப்பாட்டுவது உதிா்ந்த முடியை நீக்க உதவும். ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை அறிந்து நீக்க வேண்டும். உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்கிப்பாா்த்தல் போன்றவை இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். ஒவ்வொரு கறவைப் பருவத்திற்கும் இடையே 60-90 நாட்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இடைவெளி இல்லா விட்டால் பால் தரும் நாட்கள் குறையும்.

சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் அடையாள எண் இட்டு அதன் பால் அளவு, கொழுப்புச் சத்து அளவு, உணவு உட்கொண்ட அளவு, கன்று ஈனும் பருவங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் கோமாரி நோயைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசிகள் போடப்படுவது மிகவும் அவசியம். கறவை மாடுகள் வளா்ப்பு குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் கால்நடை பராமரிப்புத்துறையின் அதிகாரிகளையோ அல்லது அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் உள்ள கால்நடை மருத்துவா்களையோ அணுகினால் தேவையான ஆலோசனைகளைத் தருவாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/9/w600X390/cow.JPG https://www.dinamani.com/agriculture/2020/jan/09/சிறந்த-கவனிப்பே-சினை-மாட்டைப்-பாதுகாக்கும்-3326986.html
3324514 விவசாயம் பொன்னேரி பகுதியில் புகையான் பூச்சித் தாக்குதல்: 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் பாதிப்பு Monday, January 6, 2020 12:37 AM +0530 பொன்னேரி வட்டத்தில் புகையான் தாக்குதல் காரணமாக 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது. வேளாண்மைத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, விதை நெல் வாங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

பயிா் நன்றாக வளா்ந்து வந்த நிலையில் திடீரென புகையான் பூச்சித் தாக்குதலால் பயிா்கள் அனைத்தும் சேதமடைந்தன. இது குறித்து விவசாயிகள் மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறையினரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, அவா்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பயிா்களை பாா்வையிட்டு சென்றனா்.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து, பயிா்கள் நன்கு வளா்ந்து 30 மூட்டை நெல் அறுவடை செய்யலாம் என்ற நிலையில் திடீரென புகையான் தாக்குதல் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனா். இது குறித்து அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயில் செல்வகுமாா் கூறியதாவது:

பயிா் நன்கு வளா்ந்து கதிா் வந்த நிலையில் புகையான் பூச்சித் தாக்குதலால், பயிா்கள் அனைத்தும் பதராகின. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பயிா் செய்த நிலையில் அது பதராகிப் போனது.

எனவே, அரசு இழப்பீடு மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கினால் மட்டுமே வரும் நாட்களில் தங்களால் விவசாயம் செய்ய இயலும் என்றாா் அவா்.

புகையான் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்ட நெற்பயிா் குறித்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுத்து இழப்பீடு வழங்குமாறு இப்பகுதி விவிசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/6/w600X390/5prina.jpeg_ch0292_05cnn_1_637138494013969860 https://www.dinamani.com/agriculture/2020/jan/06/பொன்னேரி-பகுதியில்-புகையான்-பூச்சித்-தாக்குதல்-10-ஆயிரம்-ஏக்கா்-நெற்பயிா்-பாதிப்பு-3324514.html
3315694 விவசாயம் கூடுதல் வருவாய் கிடைக்க  தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி Thursday, December 26, 2019 11:39 AM +0530
 பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகுபதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர்ப்பயிர்கள் என்னும் பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், அதிக செலவின்றி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது: 
மண் வகை: களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர்நிலத்தில் பச்சைப் பயிறு நன்கு விளையும். ஏடிடீ 3, 5, டி.எம்.வி 1 கோ-4 
ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ 3, கே.எம் 2 ஆகிய பாசிப்பயறு வகைகளும் நல்ல மகசூலைத் தரும். சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த  வேண்டும்.  
தைப்பட்டம் மிகவும் ஏற்றதால், ஜனவரி 15-இல் தொடங்கி பிப்ரவரி 15- ஆம் தேதிக்குள் விதைத்துவிட வேண்டும்.  ஏனெனில், அந்த நாள்களில் வயலில் காணப்படும் ஈரப்பதமும், பனிஈரமும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
விதையளவு: ஏக்கருக்கு 10 கிலோ விதைபோதும். இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில் 12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் வயல்களில் பயிர்கள் நன்கு வளரும். 
ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளுடன், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றை கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதைப்பு: சம்பா, தாளடி அறுவடை ஆள்கள் மூலம் நடைபெறும் இடங்களில், அறுவடைக்கு 7 முதல் 10 நாள்களுக்கு முன்பும், இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில் 4 முதல் 6 நாள்களுக்கு முன்பும், மெழுகுப் பதத்தில் விதைக்க வேண்டும். இந்தப் பதம் இல்லையெனில் பாசனம் செய்து பதம் வந்ததும் விதைக்க வேண்டும். 

ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளைகட்டிய விதைகளை மீண்டும் விதைத்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவேண்டும்.  விதைத்த 20 -ஆம் நாளில், ஏக்கருக்கு 400 மி.லி குயினால் பாஸ் ஈதைல் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். 

அடியுரம் இடமுடியாத இடங்களில் 2 சதவிகித டி.ஏ.பி. கரைசல், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு ஒண்டரைத் தெளிக்க வேண்டும்.
 பூக்கும் காலமான 25-ஆவது நாள், காய்கள் பிடிக்கும் காலமான 45-ஆவது நாள்களில் 2 சத டி.ஏ.பி. கரைசல், ஒரு சத பொட்டாசியம் குளோரைடு, 40 பி.பி.எம். பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை காலையில் அல்லது மாலையில் இலைகளில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.  

2 சத கரைசல் தயாரிப்பு: ஒரு ஏக்கருக்கு தயாரிக்க 4 கிலோ டி.ஏ.பி தேவை. இதை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
 இத்துடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மில்லி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். 

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பயறு ஒண்டர் தேவை. இதை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளித்தால், செடிகள் வறட்சியைத் தாங்கி அதிகளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் மகசூலைக் கொடுக்கும். 
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப் பூச்சி, இலைச் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 3 சதவிகித வேம்பு எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சதவிகித வேப்பம் பருப்புக் கரைசலைத் தெளிக்கலாம். 

அல்லது ஏக்கருக்கு டைமெத்தயேட் 30 ஈசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்கலாம். 
காய்களைத் துளைத்துப் பருப்பைத் தின்னும் பச்சைக் காய்ப்புழு, பூ மற்றும் மொக்குகளைத் துளைத்துப் தின்னும் காய்ப்புழு, இலைகளைத் தாக்கிப் பெருஞ்சேதத்தை உண்டாக்கும் புகையிலை வெட்டுப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். 

இதற்கு, ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளையும், ஒரு விளக்குபொறியை வைத்து, தாய் அந்துப் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கவேண்டும். இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைத் தாண்டினால், தயோடிகார்ப் 75 டபிள்யூ மருந்து 250 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 ஈசி மருந்து 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 ஈசி மருந்து 400 மில்லியை, 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்கவேண்டும்.
 மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்கவேண்டும்.

மேலும், இதைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த டைமெத்தயேட் 30 ஈசி மருந்து 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.80 சதவிகிதத்துக்கும் அதிகமான காய்கள் முற்றியதும் தரைமட்டத்துக்குச் சற்று, மேலே  செடிகளை அறுவடை செய்யவேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் வேர் மண் வளத்தை பெருக்க உதவும். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/2.jpg https://www.dinamani.com/agriculture/2019/dec/26/கூடுதல்-வருவாய்-கிடைக்க--தரிசு-நிலத்தில்-பயறு-வகை-சாகுபடி-3315694.html
3315695 விவசாயம் நெற்பயிரில் குலைநோய்  தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் Thursday, December 26, 2019 11:39 AM +0530
சம்பா, தாளடி நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ப. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதலின் அறிகுறிகள் காணப்படுகின்றன. இலையுறை தண்டுப் பாகத்திலுள்ள கணுக்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சேதம் ஏற்படுவதன் மூலம் கண்டறியலாம்.

குலைநோய் தாக்குதலின் அறிகுறிகள்....முதலில் இலையின் மேல் பகுதியில் அளவில் சிறிய பசுமை கலந்த நீல நிறப் புள்ளிகள் உருவாகும். பின்பு இந்த புள்ளிகள் பெரிதாகும்போது இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து, நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் காணப்படும். இது பார்ப்பதற்கு நமது கண் வடிவத்தை ஒத்திருக்கும். இந்த கண் வடிவ புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பு நிறத்திலும், உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

தாக்குதல் அதிகமாகும்போது, இலையில் காணப்படும் பல புள்ளிகள் ஒன்றுசேர்வதால் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். இறுதியாக இலைகள் உதிர்ந்துவிடும். இதன் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் வரை நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையின் காரணமாக, இந்தப் புள்ளிகள் பால்பருவம் முதல் முற்றும் நிலையில் உள்ள கதிர்களின் கழுத்து பகுதிகளில் புள்ளிகள் ஏற்பட்டு கதிர் ஒடிந்து விழும். இதனால் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படும்.

நோய் பரவுவதற்கான சூழ்நிலை: குலை நோயானது, காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலமாக பரவக்கூடியத் தன்மை உடையது. 
இரவு நேரங்களில் 20 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலை, அதிக நேரப் பனிப்பொழிவு, 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் ஆகிய காரணிகள் இந்த நோய் பரவுவதற்கு உகந்த சூழ்நிலைகளாகும். 

குலைநோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்: வயல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள களைகளை அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் எதிர் உயிர்க்கொல்லி மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். குலைநோயின் அறிகுறிகள் தென்படும்போது தழைச்சத்து உரங்கள் இடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

தொடக்க நிலையில், குலைநோய்த் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவுநட்ட 45 நாள்கள் கழித்து, நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரித்துக் காணப்படும். 

தாக்குதல் அதிகமாகக் காணப்படும்போது, ஓர் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 சதவீதம் டயுள்யுபி 200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோர்பின் 25 சதவீதம் எஸ்ஸி 200 மில்லி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து குலைநோயைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/26/w600X390/1.jpg https://www.dinamani.com/agriculture/2019/dec/26/நெற்பயிரில்-குலைநோய்--தாக்குதலை-கட்டுப்படுத்தும்-முறைகள்-3315695.html
3309608 விவசாயம் தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்: கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் Thursday, December 19, 2019 12:33 AM +0530 கிருஷ்ணகிரி:

இந்தியா முழுவதும் பயிரிடப்படும் பயிா்களில் தென்னையும் ஒன்று. இது ஒரு முக்கிய எண்ணெய் வித்து மற்றும் தோட்டக்கலை பயிராகும்.

தென்னையில் 800-க்கும் மேற்பட்ட பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டா மிருக வண்டு, கருந்தலைப் புழு மற்றும் ஈரியோ பையிட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மட்டுமே தமிழகமெங்கும் காணப்படுகின்றன. இந்த பூச்சி தாக்குதலால் தென்னையில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், சமீப காலமாக, தென்னையை ருகோஸ் சுருள் வெள்ளை ஈ அலிரோடைக்கஸ் ருஜியோபொ்குளோடஸ் (A‌l‌e‌u‌r‌o‌d‌i​c‌u‌s ‌r‌u‌g‌i‌o‌p‌e‌r​c‌u‌l​a‌t‌u‌s)  எனும் புதிய சாறு உறிஞ்சும் பூச்சி பெருமளவில் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்குதல் முதன் முதலாக 2004-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தென் புளோரிடா மாகாணத்தில் காணப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் இந்த புதியவகை பூச்சிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டது.

அதன்பிறகு, வாழை, சப்போட்டா, பாமாயில், மா, முந்திரி, மக்காச் சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பனை அல்லது செடிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தை தொடா்ந்து, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.

தென்னங் கன்றுகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்தப் பூச்சிகள் பரவுகின்றன. இந்த சுருள் வெள்ளை ஈயின் பாதிப்பு மற்றும் அதன் மேலாண்மை முறைகளப் பற்றி தகவல்களை தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறாா் கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி டி.சுந்தர்ராஜ்.

வாழ்க்கைப் பருவம்:

வயதில் முதிா்ந்த பெண் ஈக்கள் மஞ்சள் நிற, நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இந்த முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிவரும் நகரும் தன்மை கொண்ட இளஞ்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளா்க்கின்றன.

மூன்று பருவங்களைக் கடந்து, கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து பின்னா் முதிா்ந்த ஈக்களாக வெளிவருகின்றன. சுமாா் 22 முதல் 30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி, கூட்டம் கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படும். இவை காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் இதர பயிா்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தாக்குதல் அறிகுறிகள்:

இலைகளின் அடிப்பாகத்தில் சுல் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிா்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் நிறமற்ற தேன்போன்ற திரவக் கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் லெப்டோ சைபியம் என்னும் கரும்பூசணம் படா்கிறது. இந்தப் பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுவதில்லை என்றாலும், ஒளிச்சோ்க்கை தடைபட்டு பயிரின் வளா்ச்சி பெருமளவில் குன்றிவிடுகிறது.

இந்தப் பூச்சிகளினால், ஓலை அல்லது இலைகளின் சாறு உறிஞ்சப்பட்டு, பயிரின் வளா்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும், பயிா் முழுவதுமாக இறந்துவிடுவதில்லை. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்படும். செளகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் பட்டை குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, ஆகிய குட்டை ரகங்களில் தாக்குதல்களை ஏற்படுத்துகின்றன.

மாற்றுப் பயிா்கள்:

இந்தப் பூச்சிகள் வாழை, சப்போட்டா, மா, கொய்யா, பாமாயில், முந்திரி, எலுமிச்சை, சீத்தாப்பழம், பாதாம், மக்காச்சோளம், அலங்கார பனை மற்றும் செடிகளில் பெரும் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வளா் சூழல்:

பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிக அளவில் வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன இந்த பூச்சிகளின் பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நிா்வாக முறைகள்:

1. பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். 2. பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி, பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும், இவற்றை அதிக அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கலாம். 3. பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க, மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீா் தெளிக்கவும். 4. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தென்னை நாற்றுகளை வாங்க வேண்டாம். 5. கிரைசோபொ்லா இரை விழுங்கிகள், இந்த பூச்சிகளின் இளம் பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவம் நிலைகளை நன்றாக உள்கொள்ளுவதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்கருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விடவும். 6. முக்கிய இயற்கை எதிரியான என்காா்ஸிடோ குடோலோபே என்னும் ஒட்டுண்ணி இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். இல்லையெனில், இந்த ஒட்டுண்ணிக் குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து, புதியதாக தாக்கப்பட்ட தோட்டங்களில் ஓலைகளை சிறிய அளவில் வெட்டி விடவும். 7. கல் வாழை மற்றும் வாழை பயிா்களை, தென்னை மரங்களுக்கு இடையில் பயிரிடுவது மூலம் இந்த இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்கவும் இயலும். 8. வேப்பெண்ணெய் 1 சதம் மருந்தை ஒரு மில்லி ஒட்டு திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தெளிக்கவும். 9. கருப்பூசணத்தை நிவா்த்தி செய்ய மைதா மாவு கரைசல் (ஒரு லிட்டா் நீருக்கு 25 கிராம் பசை) மற்றும் பெவிஸ்டின் 2 சதம் கலந்து தெளிக்கவும்.

கவனத்துக்கு..

அதிக அளவு பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயனப் பூச்சிக் கொல்லிகளை வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். இந்தப் பயிா்களுக்கு எதிரியாக, இயற்கையிலேயே காணப்படும் நன்மைப்பூச்சிகளான பச்சை கண்ணாடி இயற்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள் முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு டி.சுந்தர்ராஜ், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா், ஐ.சி.ஏ.ஆா் - வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி - 635120 என்ற முகவரியிலோ அல்லது 80982 80123 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்ந்ஸ்ந்.ா்ழ்ஞ்/ என்ற இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/19/w600X390/leaf.jpg ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தென்னை ஓலை. https://www.dinamani.com/agriculture/2019/dec/19/தென்னையில்-வெள்ளை-ஈக்கள்-தாக்குதல்-கட்டுப்படுத்தும்-மேலாண்மை-முறைகள்-3309608.html
3309568 விவசாயம் வருவாயை பல மடங்கு பெருக்கித் தரும் மதுரை மல்லி ! Thursday, December 19, 2019 12:06 AM +0530 அரக்கோணம்: மல்லி என்றதும் அனைவருக்கும் மதுரை மல்லிதான் ஞாபகத்துக்கு வரும். கடந்த காலங்களில் இந்த மதுரைமல்லி மதுரை மாவட்டத்தில் மட்டுமே விளைந்து வந்த நிலையில் ‘தற்போது மதுரை மல்லியை நாங்களும் பயிரிடத் தயாா்; எங்களது மண்ணையும் மதுரை மண்ணுக்கு இணையாக தயாரிக்கத் தயாா்’ என தென் தமிழக மக்களுடன் போட்டியிட்டு வட தமிழக மக்களும் மதுரை மல்லியைப் பயிரிடத் தயாராகி வருகின்றனா்.

பிலிப்பின்ஸ் நாட்டின் தேசிய மலரான மல்லிகை இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பயிராக மாறி வருகிறது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுச் சந்தைகளில் உயா் வருமானம் தரும் மல்லிகை எப்போதுமே விலையிலும் ஏற்றத்திலேயே இருக்கும் மலா்ப் பயிராகும். இது குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் மு.பாண்டி தெரிவித்தது:

மண் பரப்பும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுடைய வளமான இரு மண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் மல்லிகைச் சாகுபடிக்கு மிகவும் உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்க வேண்டும். மல்லிகைப் பயிா் அதிக மழையை தாங்கி வளரக்கூடிய வெப்ப மண்டலப் பயிராகும்.

இனப்பெருக்கம்: மல்லிகைப் பயிரானது குச்சிகள் மற்றும் பதியன்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நன்கு முதிா்ந்த குச்சிகளை சேதமின்றி வெட்டி எடுத்து அவற்றை மண் மற்றும் கம்போஸ்டு உரம் நிரப்பப்பட்ட பைகளில் நட்டு வைத்து நிழல் வலைக் கூடாரங்களில் பராமரித்து வர வேண்டும்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின் 30 செ.மீ. நீளம், அகலம் உள்ள குழிகளை 1.2 மீட்டா் இடைவெளியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் நன்கு மக்கிய 20 கிலோ தொழுஉரம் இட்டு, குழியின் 4 மூலைகளிலும் காலநிலை நெகிழ்திறன் விவசாய (சிஆா்ஏ) முறைப்படி மணல் தொழு உரமிட்டு கம்போஸ்டு உரம் அல்லது மண்புழு உரம் இட்டு குழியின் மத்தியில் பதியனை நட்டு நீா் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீா்ப் பாசனம்: மல்லிகைப் பயிருக்கு சொட்டு நீா்ப் பாசனம் மூலம் மட்டுமே நீா்ப் பாசனம் செய்ய வேண்டும். இதனால் நீா்த்தேவை குறைவதுடன் களை வளா்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

உர மேலாண்மை: மல்லிகைச் செடிக்கு 60: 120: 120 எனும் அளவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்து கவாத்து செய்த பின் மாத இடைவெளிகளில் இரு முறை செடியைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும் அல்லது சொட்டு நீா்ப் பாசனம் மூலம் 19:19:19 நீரில் கரையும் உரம் பயன்படுத்தலாம்.

கவாத்து செய்தல்: மல்லிகைச் செடிகளை பயிா்ப் பராமரிப்பில் கவாத்து செய்வது மிக முக்கிய பணியாகும். தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்யும்போது நோயுற்ற உலா்ந்த குச்சிகளையும், குறுக்காக வளா்ந்த கிளைகளையும் கவாத்து கத்தரி கொண்டு வெட்டி விட்டு நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு: மொட்டுப் புழுக்கள், இளம் மல்லிகை மொட்டுக்களைத் தாக்கி பெருத்த சேதத்தை உண்டாக்கி விடும். இதற்கு மனோகுரோட்டோபாஸ் குழு 2 மி.லி. மருந்தை தெளிக்க வேண்டும்.

இலைகள் மஞ்சளாதல்: வோ்புழு தாக்குதலால் இலைகள் மஞ்சளாவது, இரும்புச்சத்துக் குறைபாடு, வோ் அழுகல் ஆகியவை உண்டாகின்றன. இரும்புச்சத்து குறைபாட்டால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். வோ் அழுகல் நோய்க்கு காப்பா் ஆக்ஸி குளோரைடு 0.25 சதவீதம் கரைசலை செடியைச் சுற்றி மண்ணில் ஊற்றி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வோ்ப் புழு தாக்குதலுக்கு 5 கிராம் ப்யூரடான் குருணைகளை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து நீா் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: மல்லிகைச் செடி மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். முதல் ஆண்டில் இருந்து பூக்க ஆரம்பிக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்துதான் விளைச்சல் இருக்கும். நன்கு வளா்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்து விட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 9,000 கிலோ வரை பூ மொட்டுக்கள் கிடைக்கும்.

மல்லி பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் மல்லிகைப் பதியன் மற்றும் நுண்ணுயிா் உரங்களை தோட்டக் கலைத்துறை மூலம் அரசு, மானியமாக வழங்கி வருகிறது. இது தொடா்பாக அந்தந்த வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு உரிய நில ஆவணங்களை ஒப்படைத்து மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசின் வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டு நீா்ப் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக் கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம் என்றாா் அவா்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/19/w600X390/mali.jpg https://www.dinamani.com/agriculture/2019/dec/19/வருவாயை-பல-மடங்கு-பெருக்கித்-தரும்-மதுரை-மல்லி--3309568.html
3303527 விவசாயம் நடவு செய்த 45- -ஆவது நாளில் அறுவடைக்கு வரும் வெண்டை Thursday, December 12, 2019 12:23 AM +0530
 காய்கறிகள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் குறுகிய காலத்தில் உடனடி பலனைப் பெற வெண்டை சாகுபடியில் ஈடுபடலா ம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.  நடவு செய்த 45-ஆவது நாளில் அறுவடைக்கு வந்துவிடும் வெண்டையால் மகசூலும், வருவாயும் இரட்டிப்பாகும்.

 கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
வெண்டை கோ.பி.ஹெச் 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு மற்றும் பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகமாகும். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்ற வகை. பழமானது அடர் பச்சை, இளம், குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும்.

கோ 1 (1976): இது ஹைதராபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான இரகம். பழமானது இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூலான 90-ஆவது நாளில் 12 டன் கிடைக்கும்.
கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகமாகும். மகசூல் 16 முதல் 18 டன் கிடைக்கும்.
கோ 2 (1987): இது ஏ.ஈ 180 மற்றும் பூசா சவானியன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகமாகும். பழத்தின் பரப்பானது குறைந்த முடிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், சந்தைக்கு சிறந்ததாகவும் உள்ளது. பழமானது நீளமாக 7-8 மேடுகள் கொண்டது. 90 நாள்களில் 15 முதல் 16 டன் மகசூல் தரவல்லது.

வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். 
குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். ஜூன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடவு செய்யலாம்.  ஹெக்டேருக்கு 7.5 கிலோ விதை போதுமானது. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழுதிடவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்: விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.

 நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு, இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும். நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.12 கிலோ இடவேண்டும்.

நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.  நடவு செய்த 45 நாள்களிலேயே காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். காய்கள் முற்றுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது அவசியமானது. ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 15 டன்கள் வரை காய்கள் கிடைக்கும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/12/w600X390/flow.JPG https://www.dinamani.com/agriculture/2019/dec/12/நடவு-செய்த-45---ஆவது-நாளில்-அறுவடைக்கு-வரும்-வெண்டை-3303527.html
3303522 விவசாயம் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைத் தடுப்பது எப்படி? Thursday, December 12, 2019 12:20 AM +0530 காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைத் தொடா்ந்து சம்பா சாகுபடியானது நடைபெறும். அண்மையில், பெய்த வட கிழக்குப் பருவமழையால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்டம்பா் மாதம் தொடங்கி டிசம்பரில் பயிா் அறுவடை நிலையை எட்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விவசாயிகள் அவற்றை அறுவடை செய்வா்.

பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை ஏற்கெனவே வேளாண் துறை விவசாயிகள் பாா்வைக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக, முதலில் வயல்களில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும்.

இளம் பயிா்கள் அதிக நாள்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு, இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழியாக உரமிட வேண்டும்.

பயிா் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீா் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் நீரில், முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து, மறுநாள் வடிகட்டி, அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். தண்ணீா் தேக்கத்தினால் பயிா் வளா்ச்சி குன்றி காணப்பட்டால், தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 4 கிலோவை ஒரு நாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.

மேலும், நெல் பயிா் அதிக நாள்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில், நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இளம் பயிா்களில் தண்ணீா் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருந்தால், இருப்பில் உள்ள நாற்றுகளைக் கொண்டு ஊடு நடவாகச் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரைக் கலைத்து பயிா் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே, சம்பா பருவத்தில் ஒரு சில மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிா்களில், குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடா் மழையினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாள்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்தப் பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கைச் சுழற்சியானது 14 - 21 நாள்களைக் கொண்டது. இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூா்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப்போல் தோன்றும். பாா்ப்பதற்கு யானையின் கொம்பை போன்று தோற்றம் இருக்கும்.

தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிா்களின் குருத்துகளைத் துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூா்களில் நெற்கதிா்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிா்களைப் பாதுகாக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக, நெல் வயல்களில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன் நோய்க்கு எதிா்ப்புத் திறனுடைய குறுகிய கால ரகங்களான ஏடிடி-39, ஏடிடி-45, மத்திய கால ரகமான எம்டியு-3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தை இட வேண்டும்.

ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், பின்வரும் ரசாயனக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஓா் ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். காா்போசல்பான் 25 சதவீதம்- ஏக்கருக்கு 400 மில்லி, பிப்ரோனில் 5 சதவீதம்- ஏக்கருக்கு 500 கிராம், பிப்ரோனில் 0.3 சதவீதம், ஏக்கருக்கு-10 கிலோ, குளோா்பைரிபாஸ் 20 சதவீதம்-500 மில்லி, பாசலோன் 35 சதவீதம் - 600 மில்லி, தயோமீதாக்ஸம் 25 சதவீதம் - 50 கிராம், குயினைல்பாஸ் 5 சதவீதம் - ஏக்கருக்கு 2 கிலோ தெளிக்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்துப் பின்பற்றினால் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலா் அல்லது வேளாண் அலுவலரைத் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்று உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/12/w600X390/gallmidgeinfection_1112chn_122_8.jpg https://www.dinamani.com/agriculture/2019/dec/12/சம்பா-பயிரில்-ஆனைக்கொம்பன்-ஈ-தாக்குதலைத்-தடுப்பது-எப்படி-3303522.html
3297634 விவசாயம் பயன் தரும் பனை மரம் Wednesday, December 4, 2019 11:52 PM +0530
பெரம்பலூர்: உலகின் மூத்த குடியான தமிழ்க்குடிக்கும், பனை
மரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுபட்டது என்பதற்குச் சான்றாக 
சங்க கால நூல்களான  தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படும் பனையானது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.  போராசஸ் பிளாபெல்லிபர் என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இப்பனையானது, பனைக் குடும்பத்தில் தென்னைக்கு அடுத்ததாக சிறப்பிடம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது: 

பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருள்களாக விளங்குகின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்களைத் தரும் பனையானது கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது. பனை மரமானது 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலம் வாழும் தன்மையுடையது.  

பனை பொருள்களின் மருத்துவக் குணங்கள்: வெயில் காலங்களில் உடம்பில் தோன்றும் வியர்க்கூர் மேல் நுங்குநீரைத் தடவினால் வியர்க்கூர் மறைந்துவிடும். தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்பநோய்கள் குறையும். செரிமானத்தை அதிகப்படுத்தவும், உடல் சூட்டை தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பதநீர் பயன்படுகிறது. தொண்டைப் புண்களை குணப்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும் பனங்கற்கண்டு பயன்படுகிறது. 
பனை வேர் தொழு நோயைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. பனங்கொட்டையிலுள்ள வெண்மை நிற தேங்காய் போன்ற பருப்பு எலும்பு முறிவைக் குணப்படுத்தும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. 
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது. சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.

 வறண்ட சூழலில் 500 முதல் 900 மி.மீ வரை சராசரி மழைப்பொழிவு உள்ள பகுதிகளிலும், ஈரப்பதம் மிகுந்த சூழலில் 5,000 மி.மீ வரையுள்ள பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மைபெற்றது. 
பனை விதை வழியாக பெருக்கம் செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய, குட்டைத் தன்மைகொண்ட, விரைவில் ஈனக்கூடிய, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத தாய் மரங்களிலிருந்து பனம் பழங்களை சேகரிக்கவேண்டும். இவற்றை நான்கு வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதில் எடை குறைந்த, சுருங்கிய, துளைகள் உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும். தரமான பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைப்பு செய்வதன் மூலம் முளைப்புத் திறனை அதிகப்படுத்தலாம்.  

விதைக் கொட்டைகளைப் பழங்களிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் அளவில் கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி கலந்த கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து நடவுசெய்வதால் விரைவாக முளைப்பதோடு கிழங்கு அழுகல் நோய் தடுக்கப்படும். 
மணல், மண், மட்கிய எரு ஆகியவற்றை சரிக்கு சரி கலந்து, அதில் பனங்கொட்டைகளை விதைத்தால் விரைவாக முளைக்கும். பொதுவாக பிடுங்கி நடப்படும் நாற்றுகள் வயலில் வேர் பிடிக்காமல் வாடி மடிந்து விடுகின்றன. எனவே, ஏதேனும் கொள்கலனில் நாற்று விட்டு, வளர்ந்தவுடன் வேர் மண்ணுடன் வயலில் நடவுசெய்வதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம். அல்லது பனை விதைகளை நடவுசெய்ய வேண்டியஇடத்தில் நேரடியாக விதைப்பது சிறந்தது. 

நடவு: 3 முதல் 6 மீட்டர் இடைவெளியில் 1 அடி நீளம் மற்றும் அகலம், 2 அடி ஆழம் உள்ள குழிகளைத் தோண்டி, அதில் குழி ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம், மணல் கொண்டு நிரப்பவேண்டும். இதில் வளமான விதைகளை 10 செ.மீ. ஆழத்தில் விதைக்கலாம். நாற்றுகளாக இருந்தால் நடுவில் பள்ளம் பறித்து நடவுசெய்யலாம். 
உரமிடல்: பனையின் வயது அதிகமாகும் போது ஊட்டச் சத்துகளின் தேவையும், ஊட்டச்சத்துகள் அதிகம் வழங்கும்போது மகசூலும் அதிகரிக்கும். பனை நடவுசெய்த 1 மற்றும் 2}ஆவது ஆண்டுகளில் செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரமும் 3 மற்றும் 4 }ஆம் ஆண்டுகளில் 20 கிலோ தொழு உரமும், 5 மற்றும் 6 }ஆம் ஆண்டுகளில் 30 கிலோ தொழு உரமும், 7 மற்றும் 8}ஆம் ஆண்டுகளில் 40 கிலோ தொழு உரமும், 9 மற்றும் 10}ஆம் ஆண்டுகளில் 50 கிலோ தொழு உரமும், 11}ஆம் ஆண்டிலிருந்து 60 கிலோ தொழு உரமும் இட வேண்டும். 

ஓலை நீக்குதல்:ஓராண்டுக்கு 12 மட்டைகள் விடும். நன்கு வளர்ச்சியடைந்த பனை மரத்தில் 30 முதல் 40 ஓலைகள் காணப்படும். ஓலைகள் தோன்றியதிலிருந்து விரிவடைவதற்கு 31 முதல் 58 நாள்களாகும். பனையின் வயது அதிகரிக்கும்போது ஓலைகள் விரிவடையும் காலம் குறையும். நாற்று நிலையில் விரிவான வளர்ச்சியடைய அதிக நாள்களாகும். 
பனையின் உயரம் 2 மீட்டராக இருக்கும்போது, ஓரிரு ஓலைகளை நீக்கலாம். முதிர்ச்சியடைந்த பனையில் 16 முதல் 22 வரை ஓலைகளை விட்டு விட்டு எஞ்சியவற்றை நீக்கலாம். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பழைய காய்ந்த ஓலைகளையும் ஓலையடிகளை அகற்றவேண்டும். 
 பனை நடவுசெய்த 12 முதல் 15 ஆம் ஆண்டிலிருந்து பூக்க தொடங்கும். தமிழகத்தில் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை பூக்கும். ஆண்டுக்கு 5 முதல் 8 பாளைகள் வரை ஈனும். ஆண் பாளைகள் 68 நாள்களிலும், பெண் பாளைகள் 11 நாள்களிலும் பூப்பதை நிறைவுசெய்யும்.

பயிர்ப் பாதுகாப்பு: தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன.
காண்டாமிருக வண்டு: ஓலையின் அடிப்புறம், நுனி ஓலை, ஓலைத் தண்டு, பாளை போன்றவற்றை முதிர்ந்த வண்டுகள் தாக்கும். ஓலை அச்சுக்கும், தண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலத்தியான் நான்கு சத தூள் 250 கிராமை மணலுடன் கலந்து இட வேண்டும். ஆமணக்கு பிண்ணாக்கை சிறிய மண் பானைகளில் ஊறவைத்து ஆங்காங்கே வைப்பதன் மூலம் முதிர்ந்த வண்டுகளைக் கவர்ந்தழிக்கலாம். 

சிவப்புக் கூண் வண்டு: இளம் புழுக்கள் தண்டின் மெல்லிய பகுதியையும், ஓலைத் தண்டின் அடிப்பகுதியையும் உண்பதால் பனைகள் காய்ந்து விடும். கூண் வண்டு தாக்கிய தண்டுப் பகுதியிலிருந்து பசை போன்ற திரவம் வெளியாகும். காயங்கள் உள்ள இடத்தில் மாலத்தியான் 50 விழுக்காடு நனையும் தூள் மற்றும் தார் ஆகியவற்றைக் கலந்து பூசலாம். பதநீர் எடுக்காத மற்றும் விளைச்சல் இல்லாத காலங்களில் 10 மி.லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக் கொல்லியை 30 மி.லி நீரில் கலந்து பாலித்தீன் பையில் எடுத்து வேர் வழியே அளிக்கலாம்.

இலைக்கருகல் நோய்: பாதிப்புக்குள்ளான இலைகளில் நீள வடிவில் சாம்பல் நிற விளிம்புகளுடன் பழுப்பு நிற மையத்துடன் காணப்படும். பல புள்ளிகள் ஒருங்கிணைந்து ஓலைக்கருகல் ஏற்படுகிறது. காப்பர் ஆக்ஸி குளோரைடு பூஞ்சாணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 

குருத்து அழுகல் நோய்: ஓலையின் ஓரங்களிலும் உறைகளிலும் சிறு சிறு புள்ளிகள் தோன்றி உள்
புறமாகப் பரவும். தாக்குதல் தீவிரமடைந்ததும் குருத்து அழுகி பனை மடிந்துவிடும். இவ்வாறு மடிந்த பனைகளை உடனே எரித்துவிடுவதோடு பனை மரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் குருத்தழுகலைத் தவிர்க்கலாம். 

மகசூல்:   நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு பனைமரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 150 லிட்டர் பதநீர், 20 கிலோ கருப்பட்டி, 15 கிலோ பனங்கற்கண்டு, 12 ஓலைகள் மற்றும் 10 கிலோ விறகு கிடைக்கும்.                                                   


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/4/w600X390/panai.jpg https://www.dinamani.com/agriculture/2019/dec/04/பயன்-தரும்-பனை-மரம்-3297634.html
3297632 விவசாயம் விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய் Wednesday, December 4, 2019 11:50 PM +0530 அரக்கோணம் : விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய், அறுவடையின் போது வாரந்தோறும் விவசாயிக்கு வருவாயை கொடுக்கும். குறிப்பாக ஜனவரி மாதத்தில் பாகற்காய் விதைத்தால் மாா்ச் மாதத்தில் அறுவடை செய்து தொடா்ந்து தமிழ்ப் புத்தாண்டில் அதிக வருவாயை அள்ளித்தரும் என தோட்டக்கலைத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற அரக்கோணத்தை சோ்ந்த எஸ்.ஸ்வேதா சுதா பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

பாகற்காய் விவசாயம் குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

கோ 1, எம்டியூ 1, அா்காஹரீத், ப்ரீயாப்ரீத்தி, கோபிஜிஎச் 1 என பாகற்காயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் தோ்வு செய்து வாங்கி விதைக்கலாம். நல்ல மண்ணும், மணலும் கலந்த நிலத்தில் பாகற்காய் நன்கு வளரும். மிதமான வெப்பநிலை இப்பயிா்களுக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு காரத்தன்மை 6.5 - 7.5 இருத்தல் வேண்டும். ஜனவரி - ஜூலை பாகற்காய்க்கு சிறந்த பருவமாகும்.

பாகல் பயிரிட நிலத்தை நன்கு உழவு செய்து சமன் செய்த பின்பு 2.5 - 2 மீட்டா் என்ற இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிகளை 30 செ.மீ. நீளம் 30 செ.மீ அகலம் 30 செ.மீ. ஆழம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தோண்டிய குழிகளை 7-10 நாள்கள் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழுஉரம் 10 கிலோ இட வேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை மணி சாம்பல் சத்துக்கலவையை 100 கிராம் அளவுக்கு இட வேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.

பாகற்காய்க்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல்சத்து முறையே 200: 100: 100. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். விதைத்த அல்லது நடவு செய்த நாள் முதல் மூன்று நாள்களுக்கு ஒரு முறை உரப்பாசனம் அளிக்க வேண்டும். பாகற்காய்க்கு விதை நோ்த்தியை கையாளுதல் முக்கியம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் எனும் அளவில் கேப்டான் அல்லது திரம் மருந்தினைக் கலந்து 24 மணி நேரம் வைத்து பின்னா் விதைக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 செ.மீ. ஆழத்தில் 3 - 4 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன் குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை விதைக்குழிகளுக்கு நீா் ஊற்ற வேண்டும். சுமாா் 8 - 10 நாள்களில் விதைகள் முளைத்து வரும். பின்பு வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீா் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த 15-ஆவது நாளிலும் முப்பதாவது நாளிலும் களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும். பாகற்காய்க்கு கொடிகள் படா்வதற்கு பந்தல் அல்லது மூங்கில் தட்டிகள் மிகவும் அவசியம். செடிகள் தோன்ற ஆரம்பித்தவுடன் 2 மீட்டா் உயரத்திற்கு பந்தல் அல்லது தட்டிகளை அமைத்து கொடிகளை அவற்றில் படர விட வேண்டும். எத்ரல் கரைசலை 100 பிபிஎம் ஒரு மில்லி 10 லிட்டா் தண்ணீரில் கலந்து முதல் இரண்டு இலைகள் (விதையிலை தவிர) உரவாகிய பின் ஒரு முறை, பின்பு வாரம் ஒரு முறை என்ற இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். காப்பா் மற்றும் கந்தகத்தூள்களை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

பாகற்காயில் சாம்பல் நோய் வரலாம். இதனை கட்டுப்படுத்த டைனோகாப்பா் 1 மில்லி அல்லது காா்பெண்டாசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால் மான்கோசெப் அல்லது குளொரோதலானில் 2 கிராம் ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

பாகற்காயை விதைத்த 60 - 65 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிா்ச்சியடை ஆரம்பிக்கும் முன்பே அறுவடை செய்ய வேண்டும். பாகற்காய் ஹெக்டேருக்கு 140 - 150 நாள்களில் 14 டன் காய்கள் கிடைக்கும். வீரிய ஒட்டு ரகங்களில் 40 டன் கிடைக்கும்.

மேற்கண்ட முறைகளுடன் பாகற்காயை பயிரிட்டு அருகில் உள்ள சந்தைக்கு எடுத்துச் சென்றால் கூடுதல் வருவாயைப் பெறலாம். மேலும் இதுகுறித்த விவரங்களை தேவைப்படுவோா் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் தோட்டக்கலைத் துறையினரை அணுகினால் அவா்கள் சிறந்த பயிரிடும் முறைகளையும் தெரிவிப்பதுடன் பாகற்காய் பயிரிடுதலுக்கு அரசு உதவிகள் இருப்பின் அவற்றையும் பெற ஆலோசனைகள் அளித்து உதவுவா் என்றாா் அவா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/4/w600X390/074503akmbbb_ch0307_03cnn_1_637109847085086557.jpg பாகற்காய்த் தோட்டம். https://www.dinamani.com/agriculture/2019/dec/04/விதைத்த-இரண்டே-மாதத்தில்-அறுவடைக்கு-தயாராகும்-பாகற்காய்-3297632.html
3291670 விவசாயம் கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி Thursday, November 28, 2019 02:13 AM +0530
கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் விதை தரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப்பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன், திருவாரூர்  விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி  ஆகியோர் தெரிவித்திருப்பது: 
பொதுவாக கார்த்திகை பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்துக்குள் விதைப்பு செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அளிக்கிறது. இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது போதிய மழை, சரியான தட்பவெப்பநிலை சாதகமாக இருப்பதால், அதிக மகசூல் பெறப்படுகிறது.
மணிலா உற்பத்தியால் அதிக மகசூலை பெற அந்த பகுதிகளுக்கு ஏற்ற குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து அந்த ரகங்களின் தரமான விதைகளைப் பயன்படுத்துவது முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். 
அதிகபட்ச இனத்தூய்மையும், மண் தூசி பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காமலும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியை தரவல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும்.
நிலக்கடலையைப் பொருத்தவரை பயன்படுத்தப்படும் விதைகளுக்கு குறைந்தபட்சம் 70 சதவிகிதம் முளைப்புத்திறனும், 96 சதவீதம் புறத்தூய்மையும் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் விதைகளில் 4 சதவீதம் மட்டுமே கல், மண், தூசிகள் இருக்கலாம். பிற இனப்பயிர் விதைகள், பிற ரக விதைகள் ஒன்றுமே இருக்கக்கூடாது. மேலும் விதையின் அதிகப்பட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்கவேண்டும். நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. எனவே நல்லத் தரமான சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்பு செய்யும்போது ஏக்கருக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 333 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து உயர் விளைச்சல் பெறலாம்.
ரகங்களும், குணங்களும்: கார்த்திகைப் பட்டத்தில் டி.எம்.வி.7, கோ.3, கோ.(ஜி.என்)4, வீ.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3,  ஏ.எல்.ஆர்.3, வீர்.ஆர்.(ஜிஎன்) 5, வி.ஆர்.(ஜின்-6), டி.எம்.வி.(ஜின்.13),  டிஎம்வி-(ஜின்)14,  வீஆர்ஐ-8  ஆகிய ரகங்கள் பயிரிட உகந்த ரகங்களாகும். மேலும் இந்த ரகங்களின் குணங்களை அறிந்து தேர்வு செய்து அதற்கேற்ப சாகுபடி முறைகளைப் பின்பற்றவேண்டும்.
டி.எம்.வி.7 ரகம் 105 நாள்கள் வயதுடைய வறட்சியை தாங்கி வளரக்கூடிய கொத்து வகையைச் சேர்ந்தது. கடந்த 44 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது டென்னஸி என்ற ரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகமாகும். இதன் காய்களின் பின்பகுதி ஒட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக் கொண்டு இந்த ரகத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். இது 74 சதம் உடைப்புத் திறனும், 49.6 சதம் எண்ணெய் சத்தும் கொண்டது. வெளிறிய சிவப்பு நிற விதைகளைக் கொண்ட இந்த இரகத்தின் 100 விதைகளின் எடை 36 கிராம் ஆகும். 10 நாள்கள் விதை உறக்கம் உள்ள இந்த ரகம் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 1400 கிலோ விளைச்சல் தரவல்லது.
அதேபோல் கோ.3 ரகம் மொட்டு கருகுதல் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. கோ.(ஜி.என்)-4 ரகம், டி.எம்.வி.(ஜி.என்).13, வீ.ஆர்.ஐ.(ஜி.என்)-5 போன்றவையும் நல்ல விளைச்சல் தரக்கூடியவை.
வீ.ஆர்.ஐ.(ஜி.என்)-6 ரகம் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இது ஏ.எல்.ஆர்.2 மற்றும் வி.ஜி. 9513 ஆகியவற்றை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது.
கடலை விதை ரகங்களின் குணங்களையும், தரங்களையும் அறிந்த விவசாயிகள் கடலை விதைகளின் முளைப்புத்திறனை அதிகமாக்கவும், அவை விரைவில் முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பெற விதைகளை முளைக்கட்டி விதைத்தல் முறையை கடைப்பிடிக்கலாம்.
இதற்கு ஏக்கருக்கு தேவைப்படும் விதை அளவு 55 கிலோ மற்றும் 140 கிராம் கால்சியம் குளோரைடு மற்றும் 28 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். முதலில் 140 கிராம் கால்சியம் குளோரைடை 28 லிட்டர் நீரில் கரைத்து, அந்த கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்பி அதை மற்றொரு ஈரச்சாக்கு கொண்டு 24 மணி நேரம் மூடிவைக்கவேண்டும். 
பின் விதையில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளைக்கண்ட விதைகளைப் பிரித்து நிழலில் உலர்த்தவேண்டும். மிக நீளமான கருமுளை வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியே பிரித்து எடுத்துவிடவேண்டும். இவ்வாறு நல்ல தரமான முளைப்பு திறனுடைய விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்துவது நன்மை தரும்.
மேலும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நிலக்கடலையைக் கட்டாயம் பரிசோதனை செய்த பிறகே நடவுப் பணியில் ஈடுபடவேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள விதை நிலக்கடலைக் காய்களில் இருந்து 500 கிராம் அளவுக்கு விதைமாதிரி எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/28/w600X390/groundnut.jpg https://www.dinamani.com/agriculture/2019/nov/28/கார்த்திகை-பட்ட-நிலக்கடலை-சாகுபடி-3291670.html
3291541 விவசாயம் எலுமிச்சையில் வோ், கழுத்து அழுகல் நோய் மேலாண்மை Thursday, November 28, 2019 12:17 AM +0530 எலுமிச்சை செடியில் வோ் மற்றும் கழுத்துப் பகுதி அழுகல் நோயால் பாதிக்கப்படுவதால், செடிகள் முற்றிலும் காய்ந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிா்க்க, நோய் அறிகுறிகள் மற்றும் மேலாண் முறைகள் குறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம், முனைவா் ஸ்ரீதரன், முனைவா் ப.அதியமான் ஆகியோா் கூறும் வழிமுறைகளாவன:

ருட்டேசியே குடும்பத்தைச் சோ்ந்த புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையுடைய எட்டு வகையான சிட்ரஸ் இனங்கள் உள்ளன. அவற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு, நாா்த்திரங்காய் மற்றும் கிடாரங்காய் தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. இதில், ஆரஞ்சு குளிா் பிரதேசப் பழமாகவும் மற்றவை வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தன்மையுடைவை. இந்த வகையான பழங்களின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆந்திரம், குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. எலுமிச்சையானது சுய மகரந்த சோ்க்கை செய்யும் ஒரு பயிராகும். இது உவா் நிலத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியது. இதில் நுனி மற்றும் துணை கிளைகள் பூக்கள் பூக்கும் தன்மையுடையது. எலுமிச்சையில் சிட்ரிக், மாலிக், சக்சினிக் அமிலங்கள், வைட்டமின் பி 6, தையமின், தாது உப்புகளான கால்சியம், அயான், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இப் பழத்தின் சாறு நேரடியாக சமையலுக்கும் மற்றும் பலவகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

வோ், கழுத்து அழுகல் அறிகுறிகள்: எலுமிச்சையின் வோ் மற்றும் கழுத்து அழுகலானது மண்ணில் அதிக ஈரப்பதம் இருப்பதனால் ஏற்படுகிறது. இதன் முதன்மை அறிகுறிகளாக இலைகள் மஞ்சள் நிறம் அடைந்து, பின் மரத்திலிருந்து முழுவதுமாகக் கொட்டிவிடுகிறது. பின்பு வோ்கள் பழுப்பு நிறமடைகின்றன. மேலும், அடிமரத்தண்டில் புள்ளிகள் அல்லது தேன் நிற திரவ ஓழுகல் ஆரம்பிக்கின்றது. பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிற அழுகல் மற்றும் நொதித்தல் போன்ற வாசனை வரும்.

நோய் காரணிகள்: மரத்தின் கிடைமட்ட கிளைகள் மண்ணின் மேற்பரப்பில் தழுவி காணப்படுதல். காற்று மற்றும் மண்ணின் வெப்ப நிலை 26-32 டிகிரி செல்சியஸ். மரத்தின் கிளைகளில், அடித்தண்டில் வெட்டு அல்லது காயங்கள் இருப்பது. இவ்வகையான அழுகல் நோய் எதிா்ப்பு திறனற்ற ரகங்களைப் பயிரிடுவது போன்ற பல காரணிகளால் ஏற்படுகின்றது.

மேலாண்மை: வோ் அழுகலைக் கட்டுபடுத்தும் மேலாண்மை முறைகளாக, பயிரிடுவதற்கு முன் மற்றும் பின்பு செய்ய வேண்டிய சில செய்முறைகளாவன.

செடி நடவு செய்வதற்கு முன்பு, அழுகல் நோய் எதிா்ப்புத்திறன் உடைய ரகங்கள் அல்லது ஒட்டுக்கன்றுகளைத் தோ்தெடுத்தல் அவசியம். களிமண் மற்றும் நீா் வடிகால் வசதி இல்லாத நிலங்களில் பயிரிடுவதைத் தவிா்க்கலாம். மேலும், நாற்றாங்காலில் செடிகளில் வோ் அழுகல் பாதிப்பு உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

நடவு குழியில் எருவுடன் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் டிரைக்கோடொ்மா விரிடி குடில் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் இட வேண்டும்.

செடி நடவுக்கு பின்பு, வயலில் களைகள், எதுவும் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மிக கீழ் சரிந்த கிடைமட்ட கிளைகளை மரத்தின் ஒரு மீட்டா் உயரத்துக்கு நீக்கிவிட வேண்டும். அதிக மழைப் பொழிவின் போது நீா் எங்கேனும் தேங்கி உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அடி மரத்தண்டில் ஏதேனும் தேன் நிற திரவ சுரப்பு உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்தை தோட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும்.

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் டிரைக்கோடொ்மா விரிடி ஆகிய உயிரிக் கட்டுப்பாடு காரணிகளை ஹெக்டேருக்கு 2.5 கிலோகிராம் வீதம் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் வோ்ப்பகுதியில் இட வேண்டும். மழைக் காலங்களில் காப்பா் ஆக்ஸி குளோரைடுவை நீரில் கலந்து பசைபோல் செய்து, அதனை அடிமரத்தண்டில் பூசிவிட வேண்டும்.

இத்தகைய, நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றி வோ், கழுத்துப் பகுதி அழுகுவதிலிருந்து எலுமிச்சை செடிகளைப் பாதுகாத்து, கூடுதல் மகசூல் பெற்று விவசாயிகள் லாபம் பெறலாம் என்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/28/w600X390/lemon.JPG https://www.dinamani.com/agriculture/2019/nov/28/எலுமிச்சையில்-வோ்-கழுத்து-அழுகல்-நோய்-மேலாண்மை-3291541.html
3285656 விவசாயம் மக்காச்சோளத்தின்  விலை குறைய வாய்ப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் Thursday, November 21, 2019 01:23 AM +0530 பருவ மழையால் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை, விவசாய நல அமைச்சகத்தின் நான்காவது முன்கூட்டிய மதிப்பீடு 2018- 19-ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்காச்சோளம் 93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.72 கோடி டன் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கிறது. 
இந்தியாவில், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், பிகார், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக  அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
வர்த்தக மூலங்களின்படி, தமிழ்நாட்டுக்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரம், கர்நாடகம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த  3 மாநிலங்கள் தமிழ்நாட்டின் மக்காச்சோளத் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன. கர்நாடகத்தில் இருந்து வரும் வரத்து செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். ஆந்திரம், பிகாரில் இருந்து வரத்து அக்டோபர் மாதத்தில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவு வரத்தானது அரியலூர், பெரம்பலூர், தேனி, கோவில்பட்டி, கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து டிசம்பரில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்து ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 கோழித் தீவனத்தில் மக்காச்சோளம் முக்கியப் பங்கு வகிப்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மக்காச்சோளம் விளையும் முக்கிய மாநிலங்களில் படைப்புழுவின் தாக்கத்தால் முந்தைய மாதங்களில் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது. 
தற்போது பருவ மழை காரணமாக படைப்புழுவின் தாக்கம் குறைந்து பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. எனவே உற்பத்தியும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
கர்நாடகத்தில் இருந்து வரத்து ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் அது போதுமானதாக இருப்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 

அந்த ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது (நவம்பர் - ஜனவரி) படைப்புழுவின் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையெனில் குவிண்டாலுக்கு ரூ. 1,800 முதல் ரூ.2,000 வரையே இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம்.
 இது தொடர்பான மேலும் விவரங்களை, உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, சிறு தானியத் துறைத் தலைவரையோ நேரில் 
அணுகியோ அல்லது 0422-2431405, 2450507 என்ற தொடர்பு எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/solam.jpg https://www.dinamani.com/agriculture/2019/nov/21/மக்காச்சோளத்தின்--விலை-குறைய-வாய்ப்பு-வேளாண்மைப்-பல்கலைக்கழகம்-தகவல்-3285656.html
3285655 விவசாயம் அதிக வருவாய் ஈட்டித்தரும் முயல்மசால் தீவனம் Thursday, November 21, 2019 01:21 AM +0530 கால்நடை தீவனப் பயிரான முயல்மசால் பயிரிட தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை உதவி செய்யும் நிலையில் தற்போது தேவை அதிகம் உள்ளதால் விவசாயிகள் அரசு உதவியுடன் முயல்மசால் பயிரிட்டு வருவாய் ஈட்டலாம்.

கால்நடை தீவனப் பயிா்களுக்கு தற்போது தேவை அதிகம் உள்ளது. கடந்த காலங்களை விட தற்போது கால்நடை தீவன உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, தேவை அதிகமாக இருப்பதாலும் அரசு உதவி கிடைப்பதாலும் விவசாயிகள் முயல்மசால் எனும் கால்நடை தீவனப் பயிரை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முயல்மசால் தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகை தீவனப்பயிா். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆண்டுமழை அளவான 450-840 மி.மீ. இதற்கு போதுமானது. அனைத்து மண் வகைகளுக்கும் இது ஏற்றது. இதன் புரதச்சத்து 15 முதல் 18 சதவீதம். மானாவாரியில் கொழுக்கட்டை புல்லை முயல்மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் கலப்பு பயிராகவும் இடலாம்.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக்காலம் முயல்மசால் விதைப்புக்கு ஏற்றது. முயல்மசாலில் ‘ஸ்டைலோசான்தாஸ் ஹெமடா’ எனும் ஒரு வருட பயிரும், ‘ஸ்டைலோஸான்மஸ்’ எனும் பல்லாண்டு பயிா் எனும் இருவகைகள் உள்ளன. ஏதாவது ஒன்றைத் தோ்வு செய்துக்கொள்ள வேண்டும்.

இப்பயிரைப் பயிரிட நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது கம்போஸ்டை உழவின்போது மண்ணில் கலக்க வேண்டும். பிறகு 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்க வேண்டும். மண் பரிசோதனையின்படி உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 20:60:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும்.

விதைப்பின்போது விதைகளை ரைசோபியக் கலவையில் ஹெக்டேருக்கு 600 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். விதைகளை 30:15 கோடுகளில் விதைத்தல் அவசியம். ஹெக்டேருக்கு 6:10 கிலோ தூவலாம். விதைகளை 1 செ.மீ. ஆழத்துக்கு மேல் விதைக்கக் கூடாது. முயல் மசால் விதைகள் கடினமான உறைகளை உடையவை. எனவே, விதைகளை அடா்கந்தக அமிலத்தில் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிா்நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அல்லது வெந்நீரில் 4 நிமிஷம் ஊறவைத்து பின்னா் இரவு முழுவதும் குளிா்நீரில் ஊற வைக்கலாம்.

இது மானாவாரி பயிா் என்பதால் முன்வளா்ச்சி பருவத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும். விதைத்த 76 நாள்களில் பூக்கும் தருணத்தில் முதல் அறுவடை செய்ய வேண்டும். பிறகு வளா்ச்சியைப் பொறுத்து அறுவடை செய்துக்கொள்ளலாம்.

முதல் வருடத்தில் பயிரின் வளா்ச்சி குறைவாக இருக்குமென்பதால் மகசூலும் குறைவாக இருக்கும். பிறகு விதை உதிா்ந்து முளைப்பதால் பயிா் நன்கு வளா்ந்தவுடன் ஹெக்டேருக்கு 30-35 டன்கள் தீவன மகசூலை மூன்றாவது வருடத்தில் இருந்து அறுவடை செய்யலாம்.

முயல்மசால் தீவனப் பயிரைப் பொருத்தவரை விதை உற்பத்தி மிகவும் முக்கியம். விதை உற்பத்திக்குத் தோ்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றி பயிா் அற்ாக இருக்க வேண்டும். அதாவது தோ்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் அதே ரகப்பயிா் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் விதை சான்றளிப்புத் துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே ரகமாக இருத்தல் வேண்டும். இப்பயிரை அக்டோபா் முதல் ஜனவரி வரை விதைக்கலாம். இது இப்பயிருக்கு ஏற்ற காலம்.

இப்பயிரின் விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற ரகம் மற்றும் சான்று பெறாத அதே ரகத்தில் இருந்து வயலைச் சுற்றி 25 மீட்டா் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும். அடா் கந்தக அமிலம் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 200 மி.லி. என்ற அளவில் விதைகளை 4 நிமிஷம் உராய்வு ஏற்படுத்தும்போது விதையின் கடினதன்மை (விதை உறக்கம்) நீங்கி நல்ல முளைப்புத் திறனை பெறலாம். விதை உறக்கம் நீக்கப்பட்ட விதைகளை 0.25 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் 3 மணி நேரம் ஊற வைப்பதால் விதையின் முளைப்புத் திறன் அதிகமாகும். நெல்லின் உமி நீக்கும் இயந்திரத்தின் சுற்றும் தட்டுகளின் இடைவெளியை 0.2 மி.மீ. என்ற அளவில் வைத்து விதைகளை பிரிப்பதால் நல்ல தரமான விதைகளைத் தோ்வு செய்யலாம்.

விதைகளை 16-16 அளவு கொண்ட பிஎஸ் பிஎஸ் சல்லடை கொண்டு சலித்து நல்ல தரமான விதைகளைப் பிரித்து எடுத்தல் வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை 8 முதல் 10 சதவீதமாக குறைத்து பின், சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்புக்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம். விதைகளின் ஈரப்பதத்தை 8 முதல் 9 சதவீதமாகக் குறைத்துப் பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய, இடைக்கால சேமிப்புக்காக (12 -16 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.

விதைகளின் ஈரப்பதத்தை 8 சதவீதத்துக்கும் குறைவாக உலா்த்தி 700 காஜ் கனஅளவு கொண்ட அடா் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமித்து வைக்கலாம். பிற மேலாண்மை முறைகளைப் பொறுத்தவரை பிற தீவனப் பயிா்களைப் போன்றே பின்பற்றலாம்.

தற்போது கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மேய்ச்சகால் புறம்போக்கு நிலங்களைத் தோ்வு செய்து விவசாயிகளுடன் இணைந்து கால்நடை தீவனப் பயிா்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் தற்போது கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களை அணுகி இப்பயிா் வளா்க்க இருப்பது குறித்து தெரிவித்து அவா்களிடம் தமிழக அரசின் உதவிகளை கேட்டு பராமரித்து இப்பயிரை விற்று வருவாயை அதிகரித்துக்கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/21/w600X390/masal.JPG https://www.dinamani.com/agriculture/2019/nov/21/அதிக-வருவாய்-ஈட்டித்தரும்-முயல்மசால்-தீவனம்-3285655.html
3279022 விவசாயம் சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதல் Thursday, November 14, 2019 12:15 AM +0530 பெரம்பலூர்: சின்ன வெங்காயப் பயிரில் வேரழுகல் நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தமிழகத்தில் திருநெல்வேலி, ஈரோடு, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டாலும், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இதில்,  பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது. தமிழகத்தின் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 23 சதவீதம் சாகுபடியாகிறது. அதன்படி, நிகழாண்டு இதுவரை 3,291 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மே, ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் சின்ன வெங்காயம் சாகுபடிக்கு முக்கிய பருவங்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் சாகுபடி பரப்பளவு குறைந்ததால் டிசம்பரில் அறுவடை குறைந்து, வெளி மாநில வரத்தும் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக விலையும் அதிகரித்துள்ளது. அதேபோல, பெரிய வெங்காயத்தின் வரவு குறைந்து விலை அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, உழவர் சந்தைகளில் கிலோ ரூ. 44-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 60 முதல் ரூ. 70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் காணப்படுவதால், மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதையறிந்த வெளி மாவட்ட வியாபாரிகள் மலைக் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை வாங்கி வந்து கிலோ ரூ. 25-க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த வெங்காயத்தின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.   

இதுகுறித்து ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ். மணி கூறியது:
ஏக்கருக்கு 500 - 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும் நிலையில் ரூ. 1 லட்சம் வரை செலவாகும். மேலும், ஆள் கூலி, உரம், களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.50 லட்சம் செலவழித்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நடவுப்பணியின் போது, போதியளவில் மழை பெய்ததால் சின்ன வெங்காயத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அண்மையில் பரவலாக பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 90 சதவீத வெங்காயத்தில் தற்போது வேரழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
வெங்காயப் பயிர்களின் மேல்புறத்தில் நோய் தாக்குதல் காணப்பட்டால், அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இந்நோயானது, வேர் பகுதியில் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்நோயால் மகசூல் இழப்பு ஏற்பட்டு, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்றார் அவர். 
வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது:
வேரழுகல் எனப்படும் திருகல் நோயைக் கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட பல மருந்துகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்ணில் உள்ள பூஞ்சைகளால் இந்தநோய் வேகமாகப் பரவுகிறது.நோய் தாக்குதலுக்கு ஆளான செடிகளைப் பிடுங்கிவிட்டு  மருந்து   தெளிக்க வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் இதை முறையாகச் செய்யவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்த புணேவில் உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகத்திடம் தொழில்நுட்ப உதவி கேட்டுள்ளோம். மேலும், இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற  பரிந்துரையையும்  அந்த நிறுவனமும் ஏற்றுள்ளது. 
வைகாசி, மாசி பட்டங்களில் இந்நோய் தாக்குதல் இருக்காது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மழை பெய்தால் மட்டுமே இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட பயிர்களில் இந்நோய் தாக்குதல் இருக்கும். இப் பிரச்னைகளைக் களைய புரட்டாசி பட்டத்தை விவசாயிகள் தவிர்த்து, மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/14/w600X390/onion.jpg https://www.dinamani.com/agriculture/2019/nov/14/சின்ன-வெங்காயத்தில்-வேரழுகல்-நோய்-தாக்குதல்-3279022.html
3278955 விவசாயம் பசுந்தீவனம் தயாரிக்க ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு Thursday, November 14, 2019 12:11 AM +0530 கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் நோக்கில், கறவை மாடுகளுக்கு குறிப்பிட்ட நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில், நிகழாண்டில் பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏரிகள் நிறைந்து காணப்படுவதால் விவசாயத் தொழிலே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் கால்நடை வளா்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனா். இம்மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2.92 லட்சம் கால்நடைகள் உள்ளன. தற்போதைய நிலையில், கிராமங்களில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் விளைநிலங்கள் குறைந்து வருவதுடன், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளதால் விளைநிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள நிலையில், விளைநிலங்களுக்குள் கால்நடைகள் நுழைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிலும், வீடுகளில் கால்நடை வளா்ப்போா் தீவனத்துக்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில், காய்ந்த நெல் வைக்கோல் கட்டுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் மூலம் (விதை மற்றும் தண்ணீா்) மட்டும் இருத்தல் போதுமானது. அதை வைத்து 7 நாள்களில் பசுந்தீவனத்தை தயாா் செய்வதற்காக கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஹைட்ரோபோனிக்ஸ் என்ற உபகரணத்தின் அடுக்குகளில் மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் பயறு வகை போன்ற தானிய விதைகளை நனைத்து பரப்ப வேண்டும். அதைத் தொடா்ந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை சிறிய மோட்டாா் மூலம் தண்ணீா் தெளித்தால் போதுமானது.

இந்த உபகரணம் மூலம் மண் இல்லாத நிலையில் ஒவ்வொரு அடுக்குகளிலும் பரப்பிய விதைகள் முளைக்கத் தொடங்கும். அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு அடுக்காக மாற்றிக் கொண்டே வந்தால் ஒரு வாரத்தில் ஒரு விதையில் 7 கிலோ பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும். இந்த உபகரணம் இருந்தால் வீட்டிலேயே பல்வேறு அடுக்குகள் மூலம் நாள்தோறும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் போதுமான சத்தான பால் கிடைக்கும்.

இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனத்தில் கழிவு என்பது கிடையாது. இது குடியிருப்புப் பகுதிகளில் கால்நடைகள் வளா்ப்போருக்கு ஹைட்ரோபோனிக்ஸ் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் வீட்டிலேயே ஹைட்ரோ போனிக்ஸ் மூலம் பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும் என்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நிகழாண்டில் திருவள்ளூா், திருத்தணி பகுதிகளுக்கு மட்டும் 80 ஹைட்ரோ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உபகரணம் தலா ரூ. 22,800 மதிப்பில், 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. தற்போது இதற்கான தீவன அடுக்குகள், உபகரணங்கள் தனித்தனியாக கால்நடைத் துறை அலுவலகத்துக்கு வந்துள்ளன. இதை தயாா் செய்து பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/13/w600X390/2825tvlr12hytro_1211chn_182_1.jpg திருவள்ளூா் கால்நடை இணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஹட்ரோ போனிக்ஸ் உபகரணத்தில் பொருத்துவதற்கான ரேக்குகள். https://www.dinamani.com/agriculture/2019/nov/13/பசுந்தீவனம்-தயாரிக்க-ஹைட்ரோபோனிக்ஸ்-உபகரணங்கள்-வழங்க-ஏற்பாடு-3278955.html
3272921 விவசாயம் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பு Thursday, November 7, 2019 02:51 AM +0530
கோவை: காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பயிரிடப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை ஆகிய காய்கறி பயிர்களின் விலை முன்னறிவிப்பை விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைப் பல்கலைக்கழக உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தக்காளி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2018 -19-ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 2.05 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. 
மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவை தக்காளியை அதிகமாக உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தமிழகத்தில் அனைத்துப் பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து தக்காளி வரத்து அக்டோபர் முதல் தொடங்கியுள்ளது. இது டிசம்பர் மாத இறுதி வரை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, இந்தியாவில் 7.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டு 1.29 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி கோவை, மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு உள்ளூரில் இருந்தும் கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து போதுமான அளவு வரத்து உள்ளது.
வெண்டை: வெண்டை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிர்களில் ஒன்றாகும். நாட்டில் 5.11 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெண்டை பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் உற்பத்தியில் மேற்கு வங்கம், குஜராத், பிகார், ஒடிஸா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. கோவை சந்தைகளுக்கு திருச்சி, தலைவாசல், வைகுந்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வரத்து அதிக அளவில் உள்ளது. 
இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டைக்காய் விலைகள் குறித்து சந்தை ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில் அறுவடையின்போது, தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரையும், நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.25 முதல் 27 வரையும், வெண்டைக்காயின் விலை ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கும்படியும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்று அறிவித்துள்ள பல்கலைக்கழகம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் 
0422 2431405, 6611374.
 

]]>
https://www.dinamani.com/agriculture/2019/nov/07/காய்கறி-பயிரிடும்-விவசாயிகளுக்கான-விலை-முன்னறிவிப்பு-3272921.html
3272911 விவசாயம் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பு Thursday, November 7, 2019 02:41 AM +0530
கோவை: காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பயிரிடப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை ஆகிய காய்கறி பயிர்களின் விலை முன்னறிவிப்பை விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைப் பல்கலைக்கழக உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தக்காளி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2018 -19-ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 2.05 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. 
மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவை தக்காளியை அதிகமாக உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தமிழகத்தில் அனைத்துப் பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து தக்காளி வரத்து அக்டோபர் முதல் தொடங்கியுள்ளது. இது டிசம்பர் மாத இறுதி வரை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, இந்தியாவில் 7.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டு 1.29 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி கோவை, மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு உள்ளூரில் இருந்தும் கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து போதுமான அளவு வரத்து உள்ளது.
வெண்டை: வெண்டை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிர்களில் ஒன்றாகும். நாட்டில் 5.11 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெண்டை பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் உற்பத்தியில் மேற்கு வங்கம், குஜராத், பிகார், ஒடிஸா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. கோவை சந்தைகளுக்கு திருச்சி, தலைவாசல், வைகுந்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வரத்து அதிக அளவில் உள்ளது. 
இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டைக்காய் விலைகள் குறித்து சந்தை ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில் அறுவடையின்போது, தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரையும், நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.25 முதல் 27 வரையும், வெண்டைக்காயின் விலை ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கும்படியும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்று அறிவித்துள்ள பல்கலைக்கழகம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் 
0422 2431405, 6611374.
 

]]>
https://www.dinamani.com/agriculture/2019/nov/07/காய்கறி-பயிரிடும்-விவசாயிகளுக்கான-விலை-முன்னறிவிப்பு-3272911.html
3272867 விவசாயம் கொண்டைக்கடலை சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் Thursday, November 7, 2019 12:51 AM +0530 தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், களிமண் நிலப் பகுதிகளில் குளிா்காலத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயறுவகைப் பயிா், கொண்டைக் கடலை ஆகும்.

இப் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகள், இப் பயிா்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் மற்றும் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் ம.சங்கீதா ஆகியோா் கூறும் ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள்:

பருவம் மற்றும் ரகங்கள்: மானாவாரி மற்றும் இறவையில் ஐப்பசி-காா்த்திகை (நவம்பா் - டிசம்பா்) மாதத்தில் சாகுபடி செய்யலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கோ 4, மகாராஷ்டிர மாநிலத்தின் ஜேஏகேஐ 9218, ஆந்திர மாநிலத்தின் என்பிஇஜி 3 ஆகிய ரகங்களைத் தோ்வு செய்து சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: கொண்டைக்கடலை சாகுபடி செய்ய கரிசல் மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிா் சாகுபடிக்கு முன்பு சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும், ஏக்கருக்கு 5 டன் என்றளவில் நன்கு மக்கிய தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு ஒரு முறையும் நிலத்தை கட்டி இல்லாமல் உழவு செய்ய வேண்டும்.

விதை அளவு மற்றும் இடைவெளி: ஓா் ஏக்கருக்கு விதைப்பு செய்ய 30-40 கிலோ விதை தேவைப்படும். டிராக்டரால் இயங்கும் விதைப்புக் கருவி கொண்டு வரிசையில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு, 30 கிலோ விதையும், கை விதைப்புக்கு 40 கிலோ விதையும் தேவைப்படும். விதைகளை வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியிலும், செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியிலும் விதைப்பு செய்ய வேண்டும்.

பூஞ்சாண விதை நோ்த்தி: விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி உயிா்எதிா்க்கொல்லி மருந்து அல்லது 10 கிராம் சூடாமோனாஸ் புளுரோசன்ஸ் உயிா்எதிா்க்கொல்லி மருந்து அல்லது 2 கிராம் காா்பன்டாசிம் பூஞ்சாண மருந்து என்றளவில் கலந்து வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பயிா்களை வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்த் தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தலாம்.

உயிா் உர விதை நோ்த்தி: தழைச்சத்தை நிலைப்படுத்தும் ரைசோபியம் (600 கிராம்) மற்றும் மணிச்சத்தை கரைக்கவல்ல பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிா் உரங்களை 1 லிட்டா் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் நன்றாக கலக்க வேண்டும். இக் கலவையில் பூஞ்சாண விதைநோ்த்தி செய்த விதைகளை இட்டு நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலா்த்தி பின்பு விதைக்க வேண்டும். இவ்வாறு விதைப்பதால் பயிா் வளா்ச்சிக்குத் தேவையான தழை மற்றும் மணிச்சத்துகள் எளிதில் கடைப்பதுடன், 15 சதவீதம் ரசாயன உரச் செலவையும் சேமிக்கலாம்.

உரமிடுதல்: மண்ஆய்வு முடிவிற்கேற்ப உரமிடுதல் வேண்டும். அவ்வாறு, செய்யாத பட்சத்தில் இறவைப் பயிருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து தரவல்ல யூரியா (22 கிலோ), சூப்பா் பாஸ்பேட் (125 கிலோ) மற்றும் பொட்டாஷ் உரங்களை (16 கிலோ) விதைப்பின்போது அடியுரமாக இடவேண்டும் . மானாவாரி பயிருக்கு இதில் பாதியளவு உரங்களை இடவேண்டும். சூப்பா் பாஸ்பேட் உரத்தினை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய தொழு உரமாக இடுவதன் மூலம் மணிச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, பயிருக்கு முழுமையாக எளிதில் கிடைக்கும். மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயறுவகைப் பயிா்களுக்கான நுண்ணூட்டச் சத்துக் கலவையை ஏக்கருக்கு 3 கிலோ என்றளவில் 1:10 என்ற விகிதத்தில் ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி அடி உரமாக மண்ணில் இட வேண்டும்.

களையெடுத்தல் மற்றும் மண் அணைத்தல்: விதைத்த 18-20-ஆம் நாள் ஒரு களை எடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு அல்லது செடிகளைக் கலைத்து, தேவையான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். பிறகு தேவைப்பட்டால் 40-ம் நாளில் இன்னொரு முறை களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

இலைவழி ஊட்டச்சத்து அளித்தல்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயறு ஒண்டா் ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பூ பூக்கும் சமயத்தில் இலைகளின் மீது நன்றாக படும்படி காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிா்வது குறைந்து 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், திரட்சியான மணிகளைப் பெறுவதுடன் பயிா்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகரிக்கப்படுகிறது. பயறுஒண்டா் கிடைக்காத தருணத்தில் டீஏபி 2 சதவீதக் கரைசலை (ஒரு லிட்டா் தண்ணீரில் 20 கிராம் டீஏபி கரைக்க வேண்டும்) பயிா்களின் பூ பூக்கும் தருணத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைகளின் மீது நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும்.

பயிா்ப் பாதுகாப்பு: கொண்டைக்கடலை பயிரில் காய்ப் புழுக்கள் அதிகளவு சேதத்தை உண்டு பண்ணும். இதன் தாக்குதலைக் கண்காணித்து கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். தாக்குதலின் அளவு பொருளாதார சேத நிலையை அடையும் போது ஏக்கருக்கு நிம்பிசிடின் 1, பிபிஎம் 2 மி.லி.,லி அல்லது டைகுளோரோவாஸ் 2 மி.லி., அல்லது இன்டாக்சோகாா்ப் 1 மி.லி., ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மேலும், இப் பயிரில் வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்த் தாக்குதல் அதிகளவு தென்படும். இதனைக் கட்டுப்படுத்த விதைகளை விதைப்பதற்கு முன்பு பூஞ்சாண மருந்துகளுடன் விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

அறுவடை: கொண்டைக்கடலை பயிரானது 85-95 நாள்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகள் மற்றும் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்களில் உள்ள மணிகள் முற்றிய நிலையில் அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஓா் ஏக்கரில் மானாவாரியில் 400-500 கிலோவும், இறவையில் 600 - 750 கிலோவும் தானிய மகசூலாகப் பெறலாம். எனவே, விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியில் இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம் என்றனா்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/7/w600X390/dh06cong_0611chn_8.jpg கொண்டலைக்கடலை பயிா்கள். https://www.dinamani.com/agriculture/2019/nov/07/கொண்டைக்கடலை-சாகுபடியில்-மேம்படுத்தப்பட்ட-தொழில்நுட்பங்கள்-3272867.html
3266732 விவசாயம் மழைக்காலங்களில் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள் Thursday, October 31, 2019 03:25 AM +0530 மழைக் காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் மு.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட தகவல்:

காவிரி பாசனப் பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களைப் பாதுகாக்க முடியும்.  

தண்ணீரை வடிகட்டி பயிர் எண்ணிக்கையை பராமரித்தல்: 
    தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதனால் வேர்ப் பகுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும்.
   இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான சமயங்களில் அதே ரகம் மற்றும் வயதுடைய நாற்றுகளை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால், வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களைப் பிடுங்கி, கரைந்து போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

நெற்பயிரானது தண்ணீரில் மூழ்குவதால்  உண்டாகும் பாதிப்புகள்:
  தண்ணீர் தேங்கிய நிலையில் நெற்பயிருக்கு  பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும்.    பிராண வாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனைச் சார்ந்த நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும்.

  மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பம் அடைய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாக மற்றும் தாமிரச்சத்துகளைப் பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் பற்றாக்குறையினால் நெற்பயிரின் வளர்ச்சி தடைபடும்.     மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துகளின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு  கலந்து வெளியேறிவிடும். இதனால் நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து  சரிவர கிடைப்பதில் தடை ஏற்படும்.    குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்ககப் பொருள்கள் பதனமாற்றமாகி சத்துகளாக உருமாற்றமாவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறிக் காணப்படும். 

மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்துக் குறைந்து இலைகளின் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு இரும்பின் அளவு அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையினால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும். 
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிருக்கான ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்:
   வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும்.   ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து  மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.  நுண்ணூட்ட உரக்கலவையினையும் மேலுரமாக  தெளிக்க வேண்டும். 
   இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன்  1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது மணிச்சத்தை டி.ஏ.பி. உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்க
வேண்டும் அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன்  2 கிலோ பொட்டாஷ் உரத்தினையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/1.JPG https://www.dinamani.com/agriculture/2019/oct/31/மழைக்காலங்களில்-நெற்பயிரைக்-காக்கும்-வழிமுறைகள்-3266732.html
3266614 விவசாயம் மக்காச்சோளம், கரும்புப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் Thursday, October 31, 2019 12:31 AM +0530 நாமக்கல்: மக்காச் சோளம், கரும்பு உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறையின் அட்மா திட்ட இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியப் பயிா்களிலேயே அதிக விளைச்சலாக, ஒரு ஹெக்டேருக்கு சுமாா் 70 குவிண்டால் என்ற அளவில் மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டது. இப் படைப்புழுவானது, மக்காச் சோளம் மட்டுமின்றி, நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிா்களைத் தாக்குகிறது.

படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். அனைத்து விவசாயிகளும் பருவத்தில், ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்வதால், வளா்ச்சி நிலையில் உள்ள பயிா்களில் படைப்புழு அதிகளவில் தாக்கக் கூடும். குறிப்பாக, மக்காச்சோளத்தை படைப் புழுக்கள் அதிகம் தாக்கும்.

பேவேரியாபேசியானாவை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது தயோமிதாக்சம் 10 கிராம் கலந்து விதை நோ்த்தி செய்வதன் மூலம் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மக்காச் சோளத்தைப் பொருத்தமட்டில், இறவையில் 60-25 செ.மீ. இடைவெளியிலும், மானாவாரியில் 45 -20 செ.மீ. இடைவெளியிலும் சாகுபடி செய்ய வேண்டும், மேலும், ஒவ்வொரு வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு சாகுபடி செய்ய வேண்டும். மக்காச்சோளம் விதைக்கும்போது, அதனுடன் வயல் ஓரங்களில் சூரியகாந்தி, சாமந்திப் பூ மற்றும் எள் ஆகியவற்றை விதைப்பதன் முலம் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், அங்கு ஊடு பயிராக உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு பயிரிட வேண்டும்.

இளம் புழுக்களைக் கண்காணித்து அழித்தல்: விவசாயிகள் எந்தப் பயிரை நடவு செய்தாலும், பயிா் விதைத்தது முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து, இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக் குவியல்கள் மற்றும் இளம்புழுக்களை கைகளில் பொறுக்கி அழிக்க வேண்டும். விதைத்த நாள் அன்றே ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் இனக் கவா்ச்சி பொறி வைப்பதன் மூலம் புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த ஏழாவது நாள் 2 மில்லி லிட்டா் வேப்ப எண்ணெயை, ஒரு லிட்டா் தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டையிடுவதை தவிா்க்க முடியும். உயிரியியல் பூச்சிக்கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பேவேரியாபேசியனா போன்றவற்றை 8 கிராம் என்ற அளவில், ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து, விதைத்த 40 - 50ஆம் நாளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் புழுவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல், மணல், களிமண் கரைசல் ஆகியவற்றை பயிரின் குருத்தில் இடுவதன் மூலமாகவும் பூச்சிக்களைக் கட்டுப்படுத்த முடியும். மேற்கண்ட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பூச்சிகளை அழிக்க முடியாத பட்சத்தில், ஸ்பினோசாட் 12 எஸ்பி, இமாமெக்டின் பென்சோயேட், குளோரன்டிரானிலிபுரோல் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் தண்ணீரில் கலந்து விதைத்த 15 முதல் 20 -ஆம் நாள்களில் தெளிக்க வேண்டும். இத் தொழில் நுட்பங்களை விவசாயிகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/31/w600X390/corn.jpg https://www.dinamani.com/agriculture/2019/oct/31/மக்காச்சோளம்-கரும்புப்-பயிரைத்-தாக்கும்-படைப்புழுக்களைக்-கட்டுப்படுத்தும்-முறைகள்-3266614.html
3261351 விவசாயம் நெல்பயிருக்கு துத்தநாக நுண்ணூட்டச் சத்து இடுவதால் அதிக மகசூல் பெறலாம் Thursday, October 24, 2019 12:53 AM +0530
அரியலூர்: நெல் பயிரில் அதிக மகசூல் பெற துத்தநாக நுண்ணூட்டச் சத்து இட வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தது: 
நெல்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும், ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நுண்ணூட்டச் சத்துக்களை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தினை (சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெல்பயிர் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நெல்பயிரில் பச்சையம் உருவாவதில் தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைவுகளுக்கு துத்தநாகம் உதவிபுரிகிறது. துத்தநாகச்சத்து அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
துத்தநாகச் சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான காரணிகள்: அதிக கார அமில மண்ணில் (பிஎச் 7-க்கு மேல்), தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிகளவு பை கார்பனேட் உப்பின் அளவு இருத்தல், அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாகத் தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து நெல்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணில் உள்ள துத்தநாகச் சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை, மேலும், களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாகச் சத்தானது பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
பயிர்களில் துத்தநாக சத்தின் செயல்பாடுகள்: துத்தநாகம் பயிர்களின் செல்களிலுள்ள பல்வேறு நொதிகளிலும், உயிரணுக்களில் உள்ள ரைபோ நியூக்கிளிக் அமிலத் தயாரிப்பிலும் பங்கு பெறுகின்றன. செல்களில் உள்ள சைட்டோபிளாசத்தின் ரைபோசு என்ற சர்க்கரைப் பொருளின் அளவைக் கட்டுப்படுத்த தேவைப்படுகிறது. பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கும், பயிர்களில் நடைபெறும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது. 
துத்தநாகச் சத்து பற்றாகுறையால் உண்டாகும் அறிகுறிகள்: நெல்பயிரில் துத்தநாகக் குறைபாடுகளை நடவு வயலில் நான்கு வாரத்துக்குள்  காண முடியும்.
இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டுத் திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும்.
துத்தநாகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்: வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெல்பயிரில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வயலில் எப்போதும் தண்ணீர் தேங்காத வகையில், போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும். பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவில் வயலுக்கு இடவேண்டும். நெல்பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள் போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/24/w600X390/rice.jpg https://www.dinamani.com/agriculture/2019/oct/24/நெல்பயிருக்கு-துத்தநாக-நுண்ணூட்டச்-சத்து-இடுவதால்-அதிக-மகசூல்-பெறலாம்-3261351.html
3261350 விவசாயம் அதிக விளைச்சலுக்கு விதை பரிசோதனை அவசியம் Thursday, October 24, 2019 12:52 AM +0530
திருவாரூர்: அதிக விளைச்சலுக்கும், விதை சேமிப்புக்கும் விதை பரிசோதனை செய்வது அவசியமாகும்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப் பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன், திருவாரூர்  விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன், வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி  ஆகியோர் தெரிவித்திருப்பது: 
வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் விதைகளின் பங்கு இன்றியமையாததாகிறது. வித்தே  விளைவின் ஆதாரம், விதை பாதி, வேலை பாதி, சொத்தைப் போல் வித்தைப் பேண வேண்டும் ஆகிய பழமொழிகள் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். நல்ல தரமான விதைகள் என்பது இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத்திறன், வீரியம் மற்றும் விதைநலம் போன்ற குணாதிசயங்களில் மேம்பட்டு இருக்க வேண்டும். நல்ல தரமான விதைகளின் பயன்பாடு மட்டுமே உற்பத்தியில் 15 சதவீதம் அதிகரித்த விளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
தமிழகத்தில் விதை உற்பத்திக்காக தானியங்கள் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படுவதில்லை. எனவே நம் விதை தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, அறுவடைக் காலத்தில் விதைகளை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். விதை சேமிப்பு என்பது பாரம்பரியமாக  நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கையாண்டு வரக்கூடிய  பழக்கமாகும்.
உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உடனே விற்பனை செய்ய இயலாது. ஆதலால், விதைகளை அதன் விதைப்பு காலம் வரும் வரை விதை உற்பத்தியாளர்கள், விதை விநியோகம் செய்பவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதைகளை சேமித்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. சேமிப்பின் போது விதைகள் அதிக காலம் சேமித்து வைக்கப்படுவதால் சேதமடைகின்றன. இது காலநிலை, ஈரப்பதம் மற்றும் வெளிப்புற உயர்க் காரணிகளான பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகளால் அதிகமாகிறது. விதையினுள் உள்ள நோய்க் கிருமிகள் மற்றும் சேமிப்பு பூச்சிகள் மற்றும் எலிகள் அவற்றின் உணவுக்காக விதைகளைத் தாக்குகின்றன.
ஈரப்பதம் முக்கியம் : விதைகளை சேமிக்கும் போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். விதையில் ஈரப்பதம் இருப்பதை பொருத்தே விதைக்குவியலின் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு விதையின் ஈரப்பதம் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்க கூடாது. சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சான தாக்குதலின்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும். மேலும் விதைகளின் ஈரப்பதத்தை சேமிப்புக் காலம் முழுவதும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பத சதவீதம் மாறுபடும். நெல் அதிகபட்ச ஈரப்பதம் 13 சதவீதம், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகிற்கு அதிகபட்ச ஈரப்பதம் 12 சதவீதம் உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, சூரியகாந்தி, கொண்டைக்கடலை, எள், கொத்தவரை, முருங்கை பயிர்களின் விதைக்கு 9 சதவீதமும் இருக்க வேண்டும். பருத்தி, வெண்டை, தக்காளி பயிர்களின் விதைகளுக்கு 10 சதவீத ஈரப்பதமும், கொடிவகை காய்கறி பயிர்களான பாகல், புடலை, பீர்க்கன், பூசணி, தர்ப்பூசணி, பரங்கி விதைகளுக்கு 7 சதவீத ஈரப்பதமும் இருக்க வேண்டும். மேலும் கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம், கேரட் மற்றும் கீரை வகை விதைகளுக்கு 8 சதவீதமும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
பூச்சிகள்:  விதை சேமிப்பின் மிகப்பெரும் எதிரிகளாக கருதப்படுபவை புழுக்கள் மற்றும் பூச்சிகளாகும். இவற்றால் ஏற்படும் விதை இழப்பு 2.55 சதவீதமாகும். பூச்சிகள் விதைகளைத் துளைத்து அவற்றின் சத்துப் பகுதிகளை உண்பதோடு மட்டுமின்றி தங்களுடைய கழிவுப்பொருட்களால், விதைகளை அசுத்தப்படுத்தி அவற்றை விதைப்பு செய்வதற்கே தகுதியற்றவையாக்கி விடுகின்றன.     விதைகளில் பூச்சிகளின் கழிவுப் பொருட்கள் சேர்வதால் ஈரப்பதம் அதிகரிக்கும். ஈரப்பதம் அதிகமுள்ள விதைகளில் பூஞ்சானம் தோன்றி விதைகளைக் கெட்டியாக்கி, துர்நாற்றம் வீசச் செய்வதோடு விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை இழக்கச் செய்கின்றன.     பூச்சிகள் அறுவடையின்போது வயலில் இருந்து சேமிப்புக் கிடங்குக்கு வருகின்றன. விதைகளின் ஈரப்பதத்தின் மூலமாக பூசனங்கள் வருகின்றன. பூச்சிகளும், பூசனங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனவே விதைகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது அவசியமாகிறது. 
விதைகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் முறைகள்... விதைகளை சேமிக்கும் கதிர்கள் மற்றும் கிடங்குகளை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். உடைந்த விதைகள், குப்பைகள், தூசு போன்றவற்றை அகற்றிவிட வேண்டும். விதைகளை குறிப்பாக நெல் விதைகளை சூரிய ஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது, சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளி வைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் கடுக்கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்தே நெல் 12 சதவீத ஈரப்பதத்துடன் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். 
   விதை மூட்டைகளை தரையில் அடுக்காமல் டன்னேஜ் கட்டைகள் மீது அடுக்க வேண்டும். மூட்டைகளை சுவரை ஒட்டி வைக்காமல் தனித்தனியாக, அடுக்காக, நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைக்க வேண்டும். விதை சேமிப்புக்கு பயன்படுத்தப்படும் சாக்குப்பைகள் புதியதாக இருக்க வேண்டும். மாலத்தியான் 0.1 சதவீதக் கரைசலை மூட்டை நனையாமல் தானியங்கள் மேல்படாமல் அளவாக தெளித்து வரவேண்டும். பூச்சிகள் விதை மூட்டையில் காணப்பட்டால் அவற்றை அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையிட்டு (ஒரு டன் விதை மூட்டைகளுக்கு மூன்று மாத்திரை வீதம்) பாலித்தீன் உறைகளால் மூடி 5 நாட்களுக்கு நச்சுப் புகையிட்டு வைப்பதன் மூலம் அழிக்கலாம்.     மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விதை மாதிரிகளை எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைகளின் ஈரப்பதம் மற்றும் விதை நலன் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளின்படி சில பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். 
தற்போது குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட ரகங்களான ஆடுதுறை-43, ஆடுதுறை-45, ஏ.எஸ்.டி-16, கோ-51, ஆடுதுறை-53 ஆகியவற்றில் விவசாயிகள் விதைகளுக்காக காய வைத்து சேமித்து வைத்து கொள்வர். அவ்வாறு சேமித்து வைத்துள்ள விதைகளில் ஈரப்பதம், புறத்தூய்மை பரிசோதனை, முளைப்புத்திறன் மற்றும் விதை நலன் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு விதை சேமிப்பு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.    விதையின் ஆரோக்கியம் தான் விவசாயத்திற்கு அடிப்படை. சிறு விதையே விருட்சம் ஆகிறது. அத்தகைய விதைகளை தரமாக பராமரித்து சேமித்து வைக்க வேண்டும். 
திருவாரூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் டிஜிட்டல் ஈரப்பதம் சோதனை செய்யும் கருவி கொண்டு விதையின் ஈரப்பதம் துல்லியமாக ஆய்வு செய்து முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தியாளர்கள், விதை விநியோகம் செய்வோர், விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதையின் ஈரப்பதம் மற்றும் விதை நலன் குறித்த பரிசோதனை மேற்கொள்ள ரூ.30 கட்டணத்துடன் விதை பரிசோதனை நிலையம், பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/24/w600X390/seeds.jpg https://www.dinamani.com/agriculture/2019/oct/24/அதிக-விளைச்சலுக்கு-விதை-பரிசோதனை-அவசியம்-3261350.html
3255631 விவசாயம் மண்புழு உரத் தயாரிப்பு தொழில்நுட்பம்: வேளாண்துறை யோசனை Thursday, October 17, 2019 12:35 AM +0530
மண்புழு உரம் என்பது மண்புழு உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. மண்புழு உரம் தயாரிப்பு நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மக்கச் செய்வதற்கான ஒரு சரியான பயனுள்ள செலவு குறைந்த மற்றும் திறமையான மறுசுழற்சி தொழில் நுட்பமாகும். 
மண் புழு வளர்ப்பு முறை, உரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம்  குறித்து வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன்   வெளியிட்ட செய்திக் குறிப்பு:


மண்புழு உரம்  உற்பத்தி செய்யும் முறை: மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டியின் அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருப்பது நல்லது.நீளம் இடவசதிக்கு ஏற்ப இருக்கலாம்.
அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களைப் பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். குழியில் காய்ந்த எருவை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண்புழுக்களைவிட வேண்டும். 
 சாணத்தை உணவாக எடுத்துக்கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும். மண்புழுக்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க தென்னங்கீற்றைக் கொண்டு குழியை மூட வேண்டும். ஈரப்பதம் மற்றும் தட்பவெப்பநிலையை உர குழியில் சரியாகப் பராமரிப்பது நல்லது. வாரம் இரு முறை உரக் கழிவுகளைக் கிளரிவிடவேண்டும்.வெப்பநிலை பராமரிக்க வாரம் இரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.ஒரு மாதத்திற்குப் பிறகு அதன் நிறம் கருப்பாகவும் அளவு பாதியாகவும் மாறும்.
மண்புழுக்கள் விரைவாகவும் திறமையாகவும் அங்கக கழிவுகளைச் சிதைக்கும் திறன் கொண்டது. மண்புழுக்கள் கழிவுகளை உரமாக மாற்றும் போது துர்நாற்றம் வீசாது. அதுவே இதன் முக்கிய அம்சமாகும்.

மண்புழு உரத்தின் பயன்கள்
   மண்புழு உரமிடுவதால், மண் அமைப்பு மேம்படும்.
   நீர்ப் பிடிப்பு திறனை அதிகரிக்கும்
   மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.
   மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் 
      தாவரங்களினால் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் 
      நீரில் எளிதில் கரையும் பொருளாக உள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/sand.JPG https://www.dinamani.com/agriculture/2019/oct/17/மண்புழு-உரத்-தயாரிப்பு-தொழில்நுட்பம்-வேளாண்துறை-யோசனை-3255631.html
3255627 விவசாயம் நெல் பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை Thursday, October 17, 2019 12:26 AM +0530 தமிழ்நாட்டில் பருவமழை பெய்ததையடுத்து, விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வதில் ஆா்வம் செலுத்தி உள்ளனா். நெல் தற்போது, இளம் பயிா் முதல் முதிா்ச்சி பருவம் வரை பல்வேறு வளா்ச்சி நிலைகளில் உள்ளது. தற்போது காணப்படும் பருவ நிலை மாற்றத்தால் புகையான் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. பூச்சித் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய தாக்குதல் இழப்பைத் தவிா்க்கலாம் என கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் தோ.சுந்தராஜ்.

தாக்குதல் அறிகுறிகள்: புகையான் பூச்சியானது நெல் வயல் நீா் மட்டத்துக்கு மேலிருக்கும். பயிரின் அடிப் பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் காணப்படும். தாக்கப்பட்ட பயிா்கள் முற்றிலும் காய்ந்தது போலவும் குறிப்பாக தீயால் தீய்ந்தது போலவும் காண்படும்.

புகையான் பூச்சியானது வாடிய முட்டை நோய், புல்தழை குட்டை நோய், காய்ந்த குட்டை நோய் போன்ற நோய்களைப் பரப்பும் தன்மையுடையது. தாக்கப்பட்ட பயிா்கள் தூரத்திலிருந்து பாா்த்தால் வட்ட வட்டமாக காய்ந்தவாறு காண்படும். மற்ற பூச்சித் தாக்குதலிருந்து எளிதாக வேறுபடுத்திக் காண்பதற்கு கரும்புகை பூசணத்தின் மூலம் காணலாம்.

பூச்சி பற்றிய விவரங்கள்:

புகையான் பூச்சியின் முட்டைகள், பயிரின் அடிப்பகுதியின் அருகிலோ அல்லது இலைத் தாள்களின் அடிப்பக்க நடு நரம்புகளில் 2-12 தொகுதிகளாகக் காணப்படும். முட்டையானது வெள்ளை நிறத்தில் ஒளி ஊடுருவுகின்ற, மெல்லிய நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நோ்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

இளம்பூச்சி: முட்டையிலிருந்து வெளியே வந்த இளம் பூச்சி வெண்மையான நிறத்தில் இருக்கும். வளா்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காண்ப்படும்.

அந்துப்பூச்சி: நன்கு வளா்ந்த முதிா்ச்சியடைந்த தத்துப்பூச்சியானது 4.5 - 5.0 மி.மீ.நீளத்துடன் மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். மேலும், இறக்கைகள் மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும். இரண்டு இறக்கைகளின் வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் தூண்டப்படுகிறது. அதாவது, இளம் உயிா்ப் பருவத்தில் தட்டையாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு மற்றும் குறைந்த வெப்ப நிலை ஆகியவை முதிா்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன.

புகையான பூச்சியினைக் கட்டுப்படுத்துதல்

பொருளாதார சேத நிலை: ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி இருக்கும் நிலையில், ஒரு தூருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சிகள் இருக்கலாம். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்து உரங்களை இட வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீா் பாய்ச்சுவதைத் தவிா்க்க வேண்டும். விளக்குப் பொறி அமைத்தும் புகையானை கவா்ந்து அழிக்கலாம்.

பின்வரும் பூச்சிகொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

1. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல்-40 மி-ஏக்கருக்கு. 2. பிப்ரோனில் 5%எஸ்எல்-40மில்லி/ஏக்கா். 3. குளோரான்ட்ரேனி ப்ரோல் - 18.5எஸ்எல் - 60 மில்லி/ஏக்கா்.

குறிப்பு: புகையானுக்கு எதிா்ப்பு சக்தி மற்றும் மீட்சியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரித்திராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினல்பாஸ் போன்ற மருந்துகள் உபயோகிப்பதைத் தவிா்க்கவும். வயலில் நன்றாக தண்ணீா் வடிந்த பிறகு, மருந்தைத் தெளிக்கவும் எனத் தெரிவித்தாா் அவா்.

மேலும், விவரங்களுக்கு தோ.சுந்தர்ராஜ், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா், வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 9443888644 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/17/w600X390/paddy3.jpg https://www.dinamani.com/agriculture/2019/oct/17/நெல்-பயிரில்-புகையான்-பூச்சி-மேலாண்மை-3255627.html
2817454 விவசாயம் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு Thursday, November 30, 2017 01:06 AM +0530 பட்டுக்கோட்டை: நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வை.தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நெற்பயிரில் தற்போது நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
நெல் வயல்களில் வளரும் அல்லது தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களைத் தாக்கும் இப்புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. 
இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின்போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயத்தில் தழைச்சத்து உரமிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், புழுக்கள் பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டும் காணப்படும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7-10 நாள்கள் கூட்டுப் புழுக்களாக இருக்கும். அந்துப் பூச்சியான முதிர்பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும். 
நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலைச் சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல் களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து, அதனை கொல்ல வேண்டும். 10 ஏக்கருக்கு குறைந்தது 1 விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும். 
நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சியை உண்ணும் பறவைகள் நிற்பதற்காக தென்னை குரங்கு மட்டைகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே வயல்களில் பொருத்த வேண்டும். பொருளாதார சேத நிலை அளவு, வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவீதம் இலைச்சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலைச் சேதத்திற்கு மேற்பட்டால் மட்டுமே கீழ்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 400 மிலி அல்லது அசிபேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும். 
தவிர, ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணையை தெளிக்க வேண்டும். விவசாயிகள் மேற்கூறிய ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு, நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/rice.jpg https://www.dinamani.com/agriculture/2017/nov/30/நெற்பயிரில்-இலை-சுருட்டுப்புழு-2817454.html
2817459 விவசாயம் வீரிய கலப்பின வெண்டை சாகுபடி Thursday, November 30, 2017 01:05 AM +0530 பெரம்பலூர் : மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த வெண்டை, இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிராகும். உலகளவில் வெண்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெண்டை பயிரிடப்படுகிறது.
வெண்டைக்காய் சத்து மற்றும் சுவை மிகுந்த காய் கறி ஆகையால், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 1.9 கிராம் புரதம், 6.4 கிராம் கார்போஹைட்ரேட், 1.2 கிராம் நார்ச்சத்து, 0.7 கிராம் தாதுச்சத்து மற்றும் 0.2 கிராம் கொழுப்புச்சத்து அடங்கியுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழிழ்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் மேலும் கூறியது:
வெண்டை அதிக பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிராகும். குறிப்பாக, மஞ்சள் தேமல் எனப்படும் நச்சுயிரி நோய் வெண்டையை தீவிரமாக தாக்கக்கூடியது. வெள்ளை ஈக்கள் மூலம் பரவக்கூடிய இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் 50 முதல் 94 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்துவது சிரமமான காரியம். எனவே, இந்நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை பயிரிடுவதே சிறந்தது. அந்த வகையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட 3 வீரிய கலப்பின வெண்டை ரகங்கள் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையவை. 
கோ.பிஎச்- 1:மஞ்சள் தேமல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது. காய்கள் அடர் பச்சை நிறத்திலிருக்கும். குறைவான நார்த்தன்மை மற்றும் குறைவான முடிகள் கொண்டது. ஏக்கருக்கு 8 டன் மகசூல் தரக்கூடியது. 
கோ. பிஎச் -3:செடிக்கு 25 முதல் 29 காய்கள் உருவாகும். ஏக்கருக்கு 10 டன் மகசூல் தரவல்லது.
கோ. பிஎச் 4: மலைப் பிரதேசங்கள் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. செடிக்கு 25 முதல் 29 காய்கள் உருவாகும். ஒரு பருவத்தில் 22 அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 12 டன் மகசூல் தரக்கூடியது. 
மண் மற்றும் தட்ப வெப்பநிலை:வெண்டை அனைத்து வகையான மண் வகையிலும் வளரும் என்ற போதிலும், அமில காரத்தன்மை 6.5 முதல் 7.5 வரையுள்ள கரிசல் மண் முதல் செம்மண் வகைப்பாட்டு நிலங்களில் வெண்டை நன்கு வளரும். வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்டநேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையுள்ள சமயங்களில் வெண்டையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலங்களிலும் வெண்டையை வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். மண்ணின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை விட குறையும்போது விதை முளைப்புத்திறன் வெகுவாக பாதிக்கப்படும்.
விதையளவு:வீரிய கலப்பினத்தைப் பொருத்த வகையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை தேவைப்படும். 
நிலம் தயாரிப்பு மற்றும் விதைப்பு:நிலத்தை மூன்று முதல் நான்கு முறை நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். விதைப்புக்கு 24 மணி நேரம் முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, 1 கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மாவிரிடி 5 கிராம் அல்லது திரவம் 2 கிராம் கொண்டு நேர்த்தி செய்யலாம். பின்னர், 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதைகளின் மீது தெளித்து நன்கு கிளறி நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 45 செ.மீ இடைவெளியில் 2 செ.மீட்டர் ஆழத்தில் விதைப்பு செய்யலாம். 
நீர் மற்றும் களை நிர்வாகம்:விதைத்த உடனே, பின்னர் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மைக்கேற்ப 5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சலாம். களைகள் முளைக்கும் முன் விதைத்த 3-வது நாள் ஆக்சி புளுரோபென்களைக்கொல்லி ஏக்கருக்கு 250 மி.லி அல்லது புளுகுளோரலின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 800 மி.லி அளவில் தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம். பின்னர், 30-வது நாள் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவேண்டும். 
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்:அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு முறையே 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ மட்கிய எருவுடன் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். வீரிய கலப்பினங்களுக்கு அடியுரமாக ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் ஒவ்வொன்றும் முறையே 40 கிலோ தேவைப்படும். இதை அளிப்பதற்கு யூரியா, சூப்பர் பாஸ்பேட், மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரங்கள் முறையே 87 கிலோ, 250 கிலோ மற்றும் 66 கிலோ தேவைப்படும். மேலுரமாக விதைப்பு செய்த 30- வது நாள் யூரியா 87 கிலோ இடலாம். இலைவழித் தெளிப்பாக நீரில் கரையக்கூடிய 19:19:19 உரத்தை 1 லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் கலந்து 35 மற்றும் 50-வது நாள் தெளிக்கலாம். நுண்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பச்சைநிற நேரான காய்கள் கிடைக்க காய்கறி நுண்ணூட்டக் கலவையை 1 லிட்டர் நீருக்கு 3 கிராம் அளவில் கலந்து 40 மற்றும் 60-வது நாளில் இலைவழியாகத் தெளிக்கலாம்.
பூச்சி மேலாண்மை

காய்த் துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வைக்க வேண்டும். காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும். ஏக்கருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரûக்கோகிரம்மா 40 ஆயிரம் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். இவற்றுடன், வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
செஞ்சிலந்தி பேன்: இவை சிவப்புநிற சிறிய அளவிலான சிலந்திப் பேன்கள். இலையில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சி அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க வேப்பம் கொட்டை சாறு கரைசலை 15 நாள் இடைவெளியில் இலைவழியாக தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் புராபர்கைட் 5 7ஈ.சி பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லி அளவில் தெளிக்கலாம். 
நூற்புழு தாக்குதலைத் தடுக்க: ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து 5 கிலோ அல்லது போரேட் 10 ஜி குருணைமருந்து 5 கிலோ இட வேண்டும்.
அசுவினிப் பூச்சி:இதைக் கட்டுப்படுத்த, இமிடாகுளோப்ரிட் 70 டபள்யூ.ஜி குருணையை 1 ஏக்கருக்கு 12 கிராம் அளவில் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நோய் மேலாண்மை

மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக்கூடிய ஒருநச்சுயிரி நோயாகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மி.லி வேம்பு எண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடைக் காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரக் கூடிய ரகங்களைப் பயிரிடவேண்டும்.
சாம்பல் நோய்:இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத் தூள் 2 கிராம் ஒருலிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒருமுறை தெளிக்கவேண்டும். 
அறுவடை: நட்டுவைத்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்துவிட வேண்டும். 1 முதல் 2 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வது முக்கியமாகும்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/lades-finger.jpg https://www.dinamani.com/agriculture/2017/nov/30/வீரிய-கலப்பின-வெண்டை-சாகுபடி-2817459.html
2804220 விவசாயம் நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு Thursday, November 9, 2017 01:00 AM +0530 நீடாமங்கலம்: நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராஜா. ரமேஷ் பரிந்துரை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: நெற்பயிரானது விதைப்பு முதல் அறுவடை வரையில் பல்வேறு வகையான பூச்சிகளால் சேதம் உண்டாக்கப்பட்டு 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இலைச் சுருட்டுப்புழுவானது குறிப்பிடத்தக்க வகையில் சேதத்தை உண்டாக்கி மகசூல் இழப்புக்குக் காரணமாக அமைகிறது.
இலைச் சுருட்டுப்புழுவின் முட்டை பெண் அந்துப்பூச்சியானது வெள்ளை நிற தட்டையான அளவில் சிறிய 10 முதல் 12 முட்டைகளை தனித்தனியாக இளம் இலைகளின் நடுநரம்புக்கு அருகில் வரிசையாக இடும். ஒரு பெண் அந்துப்பூச்சி 300 முட்டைகள் வரை இடும்.
இளம் புழுக்கள் முட்டையிலிருந்து 4 முதல் 7 நாள்களில் வெளிறிய மஞ்சள் கலந்த பச்சை நிற இளம் புழுக்கள் வெளிவரும். புழுப்பருவமானது 15 முதல் 27 நாள்களைக் கொண்டது.
கூட்டுப்புழு: கூட்டுப்புழுவானது சுருட்டப்பட்ட இலைகளுக்கு உள்ளே காணப்படும். கூட்டுப்புழுவிலிருந்து 6 முதல் 8 நாட்களில் அந்துப்பூச்சி வெளிவரும்.
அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். அவற்றின் முன் மற்றும் பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்துடன் அலை அலையாய் கோடுகள் காணப்படும். இறக்கைகளின் கீழ்பகுதி ஓரங்களில் அடர்ந்த கரும்பழுப்பு நிற பட்டை காணப்படும். இதன் வாழ்க்கைச் சுழற்சியானது 26 முதல் 42 நாள்களைக் கொண்டது.
தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை
1. அதிக அளவில் தழைச்சத்து இடுதல்.
2. மர நிழலை ஒட்டிய வயல் பகுதிகளில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
3. மிதமான வெப்பநிலை கொண்ட அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும்.
சேதத்தின் அறிகுறிகள்
1. புழுக்கள் திறக்கப்படாத புது இலையின் அடிப்பகுதிக்குச் சென்று உண்ணும். பின்பு இலைகள் நீளவாக்கில் மடக்கப்பட்டு ஆங்காங்கே பட்டு போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டிருக்கும். புழுக்கள் சுருட்டப்பட்ட இலைக்குள்ளே இருந்து கொண்டு இலைகளின் பச்சையத்தை சுரண்டித் தின்பதால் தாக்கப்பட்ட இலைகளின் பல இடங்களில் வெள்ளையான சருகு போன்று காணப்படும். மடக்கப்பட்ட இலைக்குள்ளே புழுக்களின் கழிவுகளும் காணப்படும்.
2. ஒரு புழுவானது 3 முதல் 4 இலைகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டது.
3. நிழற்பகுதிகள் மற்றும் வரப்பு ஓரங்களில் இதன் தாக்குதல் முதலில் தோன்றி பின்பு வயலின் உட்பகுதியில் வேகமாக பரவும்.
பொருளாதாரச் சேத நிலை
1. பயிர்களின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் 10 சதவீத இலைகளில் சேதம்.
2. பூக்கும் பருவத்தில் 5 சதவீத இலைகள் பாதிக்கப்பட்டு இருத்தல்.
இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை முறைகள்
1. நிழற்பகுதிகள் மற்றும் வரப்பு ஓரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, வயல்களில் நிழல் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2. வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. விளக்குப்பொறியை இரவு நேரங்களில் 5 ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயிர் பரப்பிலிருந்து 20 அடி தொலைவுக்கு தள்ளி வைத்து வளர்சியடைந்த அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
4. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 2 சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் மூன்று முறை அதாவது நடவு நட்ட 37, 44 மற்றும் 51 -ஆவது நாள்களில் வயலில் வெளியிட வேண்டும்.
5. தழைச்சத்தை பிரித்தும், யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்தும் இடவேண்டும்.
6. வயலில் காணப்படும் தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்போன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் முதலிய நன்மை செய்யும் பூச்சிகளையும் மற்றும் சிலந்திகள் போன்ற உயிரினங்களையும் பாதுகாத்து பெருக்குதல் வேண்டும்.
7. வேப்பெண்ணைய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சதவீதம் மருந்தை ஏக்கருக்கு 400 மில்லி அல்லது வேப்பங்டிகர்டைக் கரைசல் 5 சதவீதம் என்ற அளவில் ஒட்டும் திரவத்தை சேர்த்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
8. கீழ்கண்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி.-20 மில்லி, ஃப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ.ஜி.- 50 கிராம், புரபினோபாஸ் 50 ஈ.சி. - 400 மில்லி, கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 எஸ் பி - 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மில்லி, குளோரன்ட்ரான்லிபுரோல் 4 ஜி - 4 கிலோ, டிரையசோபாஸ் 40 ஈ.சி. - 400 மில்லி, குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. - 500 மில்லி, டைகுளோர்வாஸ் 76 டபிள்யூ. எஸ்.சி. - 250 மில்லி, பாஸ்போமிடான் 40 எஸ்.எல் - 240 மில்லி. இவ்வாறு அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/9/w600X390/plant.jpg https://www.dinamani.com/agriculture/2017/nov/09/நெற்பயிரில்-இலைச்-சுருட்டுப்புழு-2804220.html
2804215 விவசாயம் பிசான பருவத்தில் இயந்திர நெல் நடவு! Thursday, November 9, 2017 12:59 AM +0530 திருநெல்வேலி: நிகழ் பிசான பருவத்தில் விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைப் பின்பற்றி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகள் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆள் பற்றாக்குறை, கூடுதல் செலவினம் போன்ற காரணத்தால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இப்பிரச்னையை சமாளிக்க விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைக் கடைப்பிடித்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
இயந்திர நடவுக்கு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. வேளாண்மையில் இயந்திரத் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி செலவினங்களைக் குறைக்கலாம். 
இயந்திர நடவு: சான்று பெற்ற விதைகளை ஏக்கருக்கு 3 கிலோ எனப் பயன்படுத்தி ஒரு சென்ட் பரப்பில் (40 ச.மீ.) பாய் நாற்றங்கால் அல்லது நாற்றங்கால் தட்டுகளில் நாற்றுவிட வேண்டும். நன்கு சமன் செய்த நடவு வயல்களில் 10 முதல் 14 நாள் வயதுடைய நாற்றுகளை, ஒரு குத்துக்கு ஒன்று வீதம் வரிசைக்கு வரிசை முக்கால் அடி (22.5 செ. மீ.), குத்துக்கு குத்து முக்கால் அடி (22.5 செ. மீ.) என, சதுர நடவாக நடவேண்டும். நிலத்தில் 2.5 செ.மீ. உயரத்துக்கு மட்டும் நீரைத் தேக்க வேண்டும்.
நடவு செய்த 10ஆம் நாளிலிருந்து 10 நாளுக்கு ஒருமுறை என 4 முறை கோனோவீடர் களைக்கருவி அல்லது விசைக் களைக் கருவியை குறுக்கும் நெடுக்குமாகப் பயன்படுத்தி களைகளை நிலத்துக்குள் அமுக்கிவிடவேண்டும்.
இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி நிறச்செறிவு நன்கு இருக்குமாறு தேவைக்கு தழைச்சத்து உரமிட வேண்டும்.
நன்மைகள்: விதையின் அளவும், விதைச் செலவும் குறைவு. ஓர் ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதும். நடவு நேரத்தில் ஆள் கிடைக்கவில்லை என்ற அச்சம் தேவையில்லை. நடும் செலவு குறைவு. சீரான நடவு, களைக் கருவி மூலம் களையை மண்ணுக்குள் அமுக்கிவிடுவதால் தழை உரமாகிறது. களையெடுக்கும் ஆள் செலவு குறைகிறது.
களையெடுக்கும் கருவியை குறுக்கும் நெடுக்குமாக இயக்குவதால் வேர்களின் வளர்ச்சி, வேர்கள் அதிகரித்து உரச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. 
இதனால் அதிக தூர்கள், அதிக கதிர்கள், அதிக நெல் மணிகள், அதிக மகசூல், அதிக வைக்கோல் என நெல் சாகுபடி மகசூல் அதிகரிக்கிறது.
களை முளைக்குமோ என்ற அச்சமின்றி, நீர்மறைய நீர்கட்டுவதால் 40 சதவீதம் பாசனநீர்த் தேவை குறைகிறது. மோட்டார் பயன்படுத்தும் பகுதிகளில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மோட்டார்களுக்கு டீசல் பயன்பாடு குறைகிறது. பயிர்கள் சாயாமல் திரட்சியாக இருக்கும். 
மானியம்: இயந்திர நடவு முறையால் பல நன்மைகளும், மகசூல் அதிகரிப்பும் உள்ளதால் லாபம் கிடைக்கிறது. இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நெல் இயக்கத்தின் கீழ் வேளாண் துறை மூலம் ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் நடவுக்குப் பிந்தைய மானியாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பரப்புக்கு இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. 
இத்திட்டத்தில் நாற்றங்காலுக்குத் தேவையான நாற்றங்கால் தட்டுகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 
இயந்திர நடவு முடிந்ததும் அரசு வழங்கும் மானியம் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நில உரிமை இயந்திர நடவு செய்த பரப்பளவைக் குறிக்கும் அடங்கல், வங்கிக் கணக்கு விவரம், மார்பளவு புகைப்படம் 2, நடவு முடிந்த பின்னர், விவசாயி அந்த வயலில் நிற்கும் புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/9/w600X390/agri-land.jpg https://www.dinamani.com/agriculture/2017/nov/09/பிசான-பருவத்தில்-இயந்திர-நெல்-நடவு-2804215.html
2795757 விவசாயம் நெற்பயிரைத் தாக்கும் ஹைட்ரஜன் சல்பைடு Thursday, October 26, 2017 12:32 AM +0530 கோவை: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளில் தற்போது பாசன நீர் சார்ந்த பிரச்னைகள் தோன்றியுள்ளன. நடவு செய்த பிறகு பயிர்கள் வளர்ச்சியற்று, நுனியில் இருந்து பின்னோக்கி அழுகி, மண்ணோடு மண்ணாக மறைந்து விடுகின்றன.
இத்தகைய நிலங்கள் வடிகால் வசதியற்று தொடர்ந்து நீர் தேங்கி, எப்போதும் நிலம் சதுப்புத் தன்மையுடன் காணப்படுவதும், மண்ணின் காற்றோட்ட வசதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்தப் பிரச்னை கந்தகச் சத்து மிகுந்த இடங்களில், குறிப்பாக ஆழ்துளை நீரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த கந்தகமானது தண்ணீரில் கரைந்து ஹைட்ரஜன் சல்பைடு எனும் நச்சு வாயுவைத் தோற்றுவிக்கிறது. இந்த வாயு நெற்பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதால், நடவு செய்யப்பட்ட பயிர்கள் நிலத்தில் இருந்து ஊட்டச் சத்துகளை வேர் மூலம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் திறன் குறைந்து, அதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அழிந்துவிடுகிறது.
எனவே, இந்தப் பகுதி உழவர் பெருமக்கள் நெற்பயிரில் ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் முறைகள், வந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நிவர்த்தி முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை முதுநிலை ஆய்வாளர் கி.மருதுபாண்டி, பூச்சியியல் துறை ஆய்வாளர் ஏ.சஞ்சீவிகுமார் ஆகியோர் கூறியதாவது: 
ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மைக்கான காரணிகள் கந்தகச் சத்து மிகுந்த நீரை தொடர்ந்து பாசனத்துக்குப் பயன்படுத்தும்போது தண்ணீரில் ஹைட்ரஜன் சல்பைடின் அளவு அதிகரிக்கிறது. 
வயலில் வடிகால் வசதியின்றி தொடர்ந்து நீர் தேங்கியிருப்பதால் ஏற்படும் குறைந்த காற்றோட்டத்தால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் மேலும் அதிகரிக்கிறது.
நெற்பயிருக்கு சாம்பல் சத்தைக் குறைவாக இடுவதாலும், மணிச்சத்து சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் போன்ற ஏனைய சத்துகளின் குறைபாடும் சல்பைடு நச்சுத் தன்மை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன.
ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் அறிகுறிகள்: ஹைட்ரஜன் சல்பைடு பாதிப்புள்ள வயல்களின் அருகில் சென்றால் அழுகிய முட்டையின் வாடை வருவதுடன் வயலில் இறங்கும்போது தண்ணீரில் இருந்து நுரையாக வாயு வரும். இலைகளின் நரம்புக்கு இடைப்பட்ட பகுதிகள் மஞ்சளாகி வெளிறி காணப்படும். நச்சுத்தன்மை அதிகமாகும்போது பயிர் நுனியிலிருந்து பின்னோக்கி அழுகி மண்ணோடு மண்ணாக மறைந்துவிடும்.
நெற்பயிரின் சல்லி வேர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தும் வளர்ச்சியின்றியும் கரும்பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
மண்ணில் இருந்து பயிரானது ஊட்டச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் குறைவதால் பயிரில் சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், சிலிக்கான் போன்றவற்றின் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும். ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஊட்டச் சத்துகளின் சமச்சீர் தன்மை பாதிக்கப்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைந்து தண்டு அழுகல், செம்புள்ளி போன்ற நோய்கள் பயிரைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தடுக்கும் வழிகள்: ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தாங்கி வளர, பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரின் வேர் வளர்ச்சி துரிதப்படுவதாலும், ஊக்குவிக்கப்படுவதாலும் இந்த நச்சுத் தன்மையைத் தாங்கி வளர வாய்ப்பு உள்ளது. மேலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் கோனோவீடர் எனும் களை எடுக்கும் கருவியைக் கொண்டு களையை சேற்றில் அமுக்கி கலக்கும்போது மண்ணின் காற்றோட்டம் மேம்படுவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயு வெளியேறி பாதிப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.
கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து கந்தகம், இரும்பு அயனிகளின் மாற்றம் அதிகமாவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் தேங்குவது குறைகிறது. கந்தகச் சத்து மிகுந்த ஆழ்துளைக் கிணற்று நீரை பாசனத்துக்குப் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து வயலில் நீர் தேங்கி இருப்பதைத் தவிர்ப்பதுடன், வடிகால் வசதியற்ற, கந்தகம் அதிகம் உள்ள வயல்களில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்ய வேண்டும். பயிருக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைத் தேவைக்கு ஏற்ப, சமச்சீர் அளவில் பயிருக்கு அளித்தல், சாம்பல் சத்தை பரிந்துரைக்கப்படும் அளவை விட 10 சதவீதம் வரை கூடுதலாக இடுவது அவசியம்.
பாசன நீர் உப்பாக இருக்கும்போது பம்ப் செட்டில் இருந்து நீரை நேரடியாக வயலுக்குப் பாய்ச்சாமல், சிறிய குட்டையில் தேக்கியோ, நீண்ட வாய்க்காலில் ஓடி பிறகுப் பயிருக்குப் பாயுமாறோ செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது சல்பைடு நச்சு ஆவியாகி அதன் தாக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
நீரை நன்கு வடித்த பிறகு ஏக்கருக்கு 10 கிலோ யூரியாவுடன் 10 கிலோ பொட்டாஷ் உரத்தைச் சேர்த்து சீராக தூவ வேண்டும். பிறகு 2 நாள்கள் கழித்து லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேற்கூறிய உரமிடுதலை 7 - 10 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் மேற்கொள்ள வேண்டும். பிறகு தேவையான ஊட்டச் சத்தை இலை வழியாக அளித்தும், பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம்.
இரும்புச் சத்துள்ள உப்பு, உரங்களை (அன்னபேதி உப்பு) அதிக அளவு மண்ணில் இடலாம். இதனால் ஹைட்ரஜன் சல்பைடானது பெர்ரஸ் சல்பைடாகி நெற்பயிரில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். எனவே, காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நெல்லுக்குப் பரிந்துரைக்கப்படும் உர மேலாண்மை, நீர் மேலாண்மை முறைகளை சரிவர கையாள்வதுடன் திருந்திய நெல் சாகுபடி முறையையும் கடைப்பிடித்து ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் பாதிப்பைத் தவிர்த்து நெல்லில் நிறைவான மகசூல் பெறலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/26/w600X390/rice1.jpg https://www.dinamani.com/agriculture/2017/oct/26/நெற்பயிரைத்-தாக்கும்-ஹைட்ரஜன்-சல்பைடு-2795757.html
2788570 விவசாயம் 'நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம்' Thursday, October 12, 2017 12:53 AM +0530 அரியலூர்: இறவை நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
அரியலூர் மாவட்டத்தில் இறவை நிலக்கடலை ஏறக்குறைய 18 ஆயிரம் ஹெக்டரில் பயிர் செய்கின்றனர். டிஎம்வி-7, கோ-3, கோ-4, விஆர்ஐ-2, விஆர்ஐ-3, விஆர்ஐ-5, டிஎம்வி-13 மற்றும் விஆர்ஐ-8 போன்ற ரகங்கள் இப்பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இறவையில் நிலக்கடலை விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை போதுமானதாகும். பெரிய பருப்பு ரகங்களான விஆர்ஐ-2, விஆர்ஐ-8, கோ-2, கோ-3 போன்ற ரகங்களுக்கு கூடுதலாக 5 கிலோ பயன்படுத்த வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்தல் மிக அவசியம். விதைகளை உயிர் பூஞ்சாணமான டிரைகொடெர்மா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைநேர்த்தி செய்து பின்பு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உடன் தலா 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைநேர்த்தி செய்வதன் மூலம் விதைகள் மூலம் வரும் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தலாம். விதைகளை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். இயந்திரத்தின் மூலம் விதைப்பதினால் விதை அளவு மற்றும் விதைப்பு செலவு குறைகிறது.
மேலும் நிலக்கடலை விதைப்பதற்கு முன் அடியுரமாக 5 டன் தொழு உரம், யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ, ஜிப்சம் 80 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மற்றும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் 1 கிலோ இட வேண்டும். மண் பரிசோதனையின் படி உரமிடுதல் நல்லது.
மேலும் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, கம்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடுதல் மூலம் பூச்சியின் தாக்கத்தை தவிர்க்கலாம், ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயிறு, கம்பு ஆகிய பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
விளக்கு பொறிகளை இரவு 7-10 மணி வரை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், இனக்கவர்ச்சி பொறிவைத்து புரோடீனியா, கிலியோதீஸ் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்களை கவர மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம்,
மேலும் நோய் தென்படும் சமயங்களில் சூடோமோனாஸ் ப்ளோரொசன்ஸ் எதிர் உயிர் பாக்டீரியா லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் மற்றும் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிலக்கடலையில் ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1200 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/seed.jpg https://www.dinamani.com/agriculture/2017/oct/12/நிலக்கடலையில்-விதை-நேர்த்தி-செய்தால்-அதிக-மகசூல்-பெறலாம்-2788570.html
2788567 விவசாயம் கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள் Thursday, October 12, 2017 12:52 AM +0530 கிருஷ்ணகிரி: கொள்ளு பயிரானது செப்டம்பர் - நவம்பர் - மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 
ரகங்கள்: கோ-1, பையூர் -1, பையூர் - 2. 
சாகுபடி முறைகள்: நிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும்.
விதையளவு: ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். 
ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா (1 பாக்கெட்) 200 உயிர் உரத்தை 400 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து, பின் நிழலில் உலர்த்தி பின் 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 
விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும். 
ஊட்டச்சத்து மேலாண்மை: விதைப்பதற்கு முன்பாக அடி உரமாக ஹெக்டேருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவும். மண் பரிசோதனை ஆய்வுப்படி உரம் இட வேண்டும். இல்லையெனில், பொது பரிந்துரைக்காக ஏக்கருக்கு 5:10:5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 11 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷே அடியுரமாக இட வேண்டும். 
களை கட்டுப்பாடு: 20 முதல் 25 நாள்களுக்குள் ஒருமுறை களை எடுக்க வேண்டும். 
அறுவடை: அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன், அறுவடை செய்ய வேண்டும். பின்னர், காய்களைக் காயவைத்து கதிரடித்து பருப்புகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும். 
மகசூல்: ஏக்கருக்கு 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மிகக் குறைந்த சாகுபடி செலவுகளைக் கொண்டுள்ள கொள்ளு பருப்பானது மருத்துவ பலன்களைக் கொண்டது. 
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கொள்ளுப் பயிரை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04343-290639 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/kollu.jpg https://www.dinamani.com/agriculture/2017/oct/12/கொள்ளு-சாகுபடி-தொழில்நுட்பங்கள்-2788567.html
2723094 விவசாயம் வைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஜி.ராஜன் Monday, June 19, 2017 12:33 AM +0530 முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலும், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பாசனப் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவிலும் இருபோக நெல் சாகுபடி நடைபெறும்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பெரியாறு அணையில் இருந்து காலதாமதமாக 14.7.2016 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 8,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
அதே போல் பெரியாறு அணை மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், கடந்த 2016, செப்டம்பர் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட வில்லை.
அணைகளில் போதிய தண்ணீரில்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு, முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள், இந்த ஆண்டு கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பில் ஓரிரு நாள்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடிக்கும் மேல் உயர்ந்தால் மட்டுமே தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். தற்போது, பெரியாறு அணை நீர்மட்டம் 108.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 75 கன அடியாகவும் உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 739 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதே போல், வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 22.90 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 158 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை இல்லாததால் தேனி, மதுரை, திண்டுகல் மாவட்டங்களில் இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிருப்தி: கடந்த 2016-ஆம் ஆண்டு வறட்சியால் அணைகளில் போதிய தண்ணீரின்றி முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட வில்லை. தற்போது, அணைகளில் நீர்மட்டம் சரிந்து இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/DAM.jpg வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை 22.90 அடியாக சரிந்துள்ள நீர்மட்டம். https://www.dinamani.com/agriculture/2017/jun/19/வைகை-அணையில்-வறட்சி-தேனி-திண்டுக்கல்-மதுரை-மாவட்டங்களில்-முதல்-போக-நெல்-சாகுபடிக்கு-தண்ணீர்-திற-2723094.html
2560311 விவசாயம் விவசாய நிலத்தின் தரத்தினை தெரிவிக்கும் மண்வள அட்டைகள்: வேளாண் துறை வழங்கல் dn Tuesday, September 6, 2016 07:54 AM +0530 விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத்தில், விவசாயிகளுக்கு “மண்வள அட்டைகள்” வழங்கிடும் பணியை ஆட்சியர் எம்.லட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் விளக்கிப் பேசியது:  தேசிய மண்வள அட்டை இயக்கமானது, பிரதமரால் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் ராஜஸ்தானில் துவக்கி வைத்து நாடு முழுவதிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையில், குறைந்து வரும் சாகுபடி பரப்பு மற்றும் அதிகரிக்கும் பருவநிலை மாற்றங்கள் என நகரும் இக்கட்டான இக்காலகட்டத்தில் விவசாயத்திற்கு அடிப்படையான மண்ணின் தன்மை, சத்துகளின் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை சரியாகவும், சரிவிகிதமாகவும் அளிப்பதன் மூலம் மண்வளம் காப்பதோடு, உரச்செலவினைக் குறைத்து விவசாயிகள் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் எடுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் “கிரிட் முறையில்” வேளாண்துறை மூலம் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் 85,409 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள மண் ஆய்வுக்கூடங்கள் மூலம், இதுவரை 44,401 மண் மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்டு முடிவுகள் வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 5,19,000 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளதால், வரும் டிசம்பருக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.
இந்த மண்வள அட்டையில், விசாயிகளின் மண்ணின் நயம், கார அமிலத்தன்மை, தழை,  மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும்நுண்சத்துக்களின் அளவுகள் தெளிவாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் மண்ணிற்கு இடவேண்டிய உரங்களின் விவரங்கள் சாகுபடி செய்திட வேண்டிய பயிர்களின் விவரங்கள் அதில் அளிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள், தங்கள் நிலத்திலுள்ள சத்துக்களின் அடிப்படையில் உர மேலாண்மை செய்வதால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் மகசூல் அதிகரித்து வருவாயும் அதிகரிக்கும்.
மாவட்டத்திலுள்ள விவசாயிகள், தேசிய மண்வள அட்டை இயக்கத்தில் பயன்பெற வேண்டும் என்றார்.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/sep/06/விவசாய-நிலத்தின்-தரத்தினை-தெரிவிக்கும்-மண்வள-அட்டைகள்-வேளாண்-துறை-வழங்கல்-2560311.html
2559931 விவசாயம் ஒகேனக்கல்லில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து dn Monday, September 5, 2016 09:47 AM +0530 தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை வரை நொடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்த வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுப்பணித் துறையினர் பிற்பகல் தண்ணீர் வரத்து அளவீடு செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. காலை தண்ணீர் வரத்து நிலவரம் குறித்த குறுஞ்செய்தி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.
 

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/sep/05/ஒகேனக்கல்லில்-நொடிக்கு-10-ஆயிரம்-கன-அடி-நீர்-வரத்து-2559931.html
2559911 விவசாயம் தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு: திரும்பி சென்ற வனத்துறையினர் dn Monday, September 5, 2016 08:45 AM +0530 புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான  இடத்தில் தைல மரகன்றுகளை நடவு செய்ய வந்த வனத் துறையினர் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றனர்.

திருமயம் வட்டம், குலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில் தைல மரக்கன்றுகளை நடுவதற்காக வியாழக்கிழமை சென்றனர்.

தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து  தைல மரக்கன்றுகளை நடுவதற்கு பதிலாக பலன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டுமென வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ராமதீர்த்தார் கூறியது:

தைல மரக்கன்றுகள் நடுவதால் அதைச் சுற்றி உள்ள பாசனக் குளங்களில் உள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

மேலும் வனத்துறையினர் 4 அடி உயரத்துக்கு மழை நீர்  வெளியேறாத வகையில் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் செய்வதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தைல மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என்றார்.

தகவலறிந்த பனையப்பட்டி போலீஸார், வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வனத்துறையினர் தைல மரக்கன்றுகளை நடாமல் திரும்பிச் சென்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/agri1.jpg https://www.dinamani.com/agriculture/2016/sep/05/தைல-மரக்கன்றுகளை-நட-மக்கள்-எதிர்ப்பு-திரும்பி-சென்ற-வனத்துறையினர்-2559911.html
2559913 விவசாயம் கொல்லிமலை மிளகு கொடியில் பூக்கள் அதிகரிப்பு: கூடுதல் மகசூல் எதிர்பார்ப்பில் விவசாயிகள் dn Monday, September 5, 2016 08:44 AM +0530 நாமக்கல்:  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடியில் பூக்கள் அதிகம் முளைத்துள்ளன. இதனால் அடுத்த ஆண்டு அறுவடையின்போது கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சுமார் 3,000 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வருமானால், செப்டம்பர் மாதத்தில் நல்ல முறையில் பூப் பிடித்து அடுத்த ஆண்டில் நல்ல விளைச்சல் இருக்கும்.
 2015-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கொல்லிமலையில் போதிய மழை இல்லை. இதனால் கொடிகளில் பூப் பிடிப்பது குறைந்து, விளைச்சல் பெருமளவில் குறைந்துவிட்டது. சராசரியாக ஒரு சில்வர் ஓக் மரத்தில் ஏற்றிவிடப்படும் ஒரு கொடியில் 2 முதல் 3 கிலோ வரை மிளகு விளைச்சல் இருக்கும். நிகழாண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் 1 கிலோ கூடக் கிடைக்கவில்லை.
 ஏக்கருக்கு 440 சில்வர் ஓக் மரங்களை வைத்து, மிளகு கொடிகளை ஏற்றிவிட முடியும். கொடிக்கு 2 முதல் 3 கிலோ வரை விளைச்சல் இருக்கும். இதன்மூலம் ஏக்கருக்கு 1,000 முதல் 1,200 கிலோ வரை மிளகு கிடைக்கும். கிலோ சராசரியாக ரூ.500-க்கு விற்றாலே ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வருவாய் ஈட்ட முடியும்.
 ஆனால், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் ஏக்கருக்கு 500 கிலோ கூட கிடைக்கவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.30,000-க்கும் குறைவாகவே வருவாய் கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. போதிய அளவு விளைச்சல் இல்லாமல் போனதால்தான் இப்போது விளைச்சல் பகுதியிலேயே கிலோ ரூ.1,000 வரை விற்கிறது.
 இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியினர் நல அமைப்பு மாநிலத் தலைவரான விவசாயி கே. குப்புசாமி கூறியது:
 கொல்லிமலை மிளகு அடர்த்தியாகவும், காரமாகவும் இருக்கும். ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாததும், இங்குள்ள இயற்கைச் சூழலும் மிளகு விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. இங்கு விளையும் மிளகு தரமானதாக இருப்பதால், நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
 இப்போது பூ வைத்துள்ள மிளகு கொடியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்ப் பிடிக்கத் தொடங்கும். பின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
 கடந்த ஆண்டு போதிய மழைப் பொழிவின்மை காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாத அறுவடையில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு மிளகு மகசூல் கிடைக்கவில்லை. நிகழாண்டு ஏப்ரல், மே மாதங்களில் போதிய மழைப்பொழிவு இருந்ததால், இப்போது நன்றாக பூப்பிடித்துள்ளது.
 கடந்த ஆண்டு எதிர்பார்த்த மகசூல் இல்லாமல் கடும் இழப்பைச் சந்தித்த விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு அறுவடையில் கூடுதல் மகசூலை எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய சூழலில் மிளகுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/milaku5b.jpg https://www.dinamani.com/agriculture/2016/sep/05/கொல்லிமலை-மிளகு-கொடியில்-பூக்கள்-அதிகரிப்பு-கூடுதல்-மகசூல்-எதிர்பார்ப்பில்-விவசாயிகள்-2559913.html
2559919 விவசாயம் "மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யலாம்' dn Monday, September 5, 2016 08:44 AM +0530 தஞ்சாவூர்:  டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்யலாம் என மூத்த வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர்கள் பி. வெங்கடேசன், ஏ. பழனியப்பன், பி. கலைவாணன் ஆகியோர் தெரிவித்திருப்பது:

காவிரி படுகையில் சம்பா நெல் சாகுபடி பருவம் நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு அக். 25-ம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் வளர்ச்சி நிலையில் இருந்தால்தான், வெள்ளச் சேதம் இன்றி பயிர்கள் காப்பாற்றப்படும்.

தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பைக் கொண்டும், அணைக்கு வருகிற நீர்வரத்தைக் கொண்டும் உடனடியாக அணையைத் திறந்து, அனைத்து சம்பா பரப்பிலும் நாற்றுவிட்டு நடவு செய்ய இயலாத நிலையே உள்ளது.

மேட்டூர் அணை நீரை சம்பா பருவ இறுதியில் மழை கிடைக்காத தருணத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சேமித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது பெய்யும் மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை அனைத்து விவசாயிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் சம்பா பரப்பு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக பயிர் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு வரமுடியும். மொத்த நீர் தேவை குறையும். பயிர் மேலாக முளைப்பதால், அதிக சிம்புகள் தோன்றி அதிக மகசூல் கிடைக்கும்.

நாம் எதிர்பார்த்தபடியே ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக வயலை தயார்நிலையில் வைத்திருப்போர் விதைப்புப் பணியைத் தொடங்கிவிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் சில இடங்களில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். வயல் தயார்நிலையில் இல்லாதவர்கள் உடனடியாக உழுது, புழுதி செய்து நேரடி நெல் விதைப்பு செய்யலாம். செப்டம்பர் முதல் வாரம் வரை நீண்டகால ரகங்களான சி.ஆர். 1009 (சாவித்திரி) ஆடுதுறை 44, ஆடுதுறை 50 ஆகியவற்றையும், 135 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகங்களையும் விதைக்கலாம். ஒரு சதுர மீட்டரில் 200 விதைகள் முளைக்க, ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதையைப் பயன்படுத்துவதே போதுமானது.

நேரடி விதைப்பு திட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள சம்பா தொகுப்புத் திட்ட மானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி உடனடியாக நேரடி நெல் விதைப்பை மேற்கொண்டு பயன்பெறலாம்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/nel-vithaippu.jpg https://www.dinamani.com/agriculture/2016/sep/05/மழையைப்-பயன்படுத்தி-நேரடி-நெல்-விதைப்பு-செய்யலாம்-2559919.html
2183 விவசாயம் இரு மடங்கு வருவாய்க்கு:நீடித்த - நிலையான கரும்பு சாகுபடி! ஜங்ஷன் - intro Saturday, August 13, 2016 04:18 PM +0530 விழுப்புரம்: கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் பாசனத்தில் இரு மடங்கு வருவாய் பெற நீடித்த- நிலையான சாகுபடி முறையை (எஸ்.எஸ்.ஐ) விவசாயிகள் பின்பற்றலாம்.
இயல்பான கரும்பு சாகுபடி முறையில், 7 முதல் 9 மாத வயதுடைய 3 பருவ விதைக் கரணைகளை ஹெக்டேருக்கு 16 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் விவசாயிகள் பயன்படுத்துவர்.
பாருக்கு பார் இரண்டரை முதல் 3 அடி இடைவெளி விட்டு விதைக் கரணைகளை நடுவர். வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படும். பாய்ச்சலும், காய்ச்சலும் ஏற்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைகிறது. களை பிரச்சனையும் அதிகம் ஏற்படுகிறது. இயல்பான முறை சாகுபடியில் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.
இயல்பான முறையில் முதல் வருடம் மட்டுமே ஊடு பயிர்கள் சாகுபடி செய்ய முடியும்.
மகசூலும் ஏக்கருக்கு 40 முதல் 50 டன் வரை மட்டுமே கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு, உரச்செலவு மற்றும் இதர செலவினங்கள் என ரூ.60 முதல் 65 ஆயிரம் வரை செலவாகும். இதனால் ஏக்கருக்கு நிகர லாபம் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரையே கிடைக்கிறது.
நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி: ஆனால், நீடித்த-நிலையான கரும்பு சாகுபடியை பொருத்தவரை விதைக் கரணைகளுக்குப் பதில் தரமான விதைக் கரும்பில் இருந்து ஒரு பருவ கரணைகள் எடுக்கப்பட்டு குழித் தட்டுகளில் நடப்பட்டு நிழல் வலைக் கூடாரங்களில் வளர்க்கப்படுகின்றன.
ஆலைகளே வழங்கும் தரமானக் கன்றுகள்: தரமான கன்றுகளை உற்பத்தி செய்து சர்க்கரை ஆலைகளே விவசாயிகளுக்கு வழங்குகின்றன. 25 முதல் 35 நாள் வயதுடைய தரமான நாற்றுகள் நன்கு உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் பாருக்கு பார் 5 அடி மற்றும் செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் நடப்படுகிறது.
குறைந்த நீர்ப் பாசனம்: அடி உரமாக ஏக்கருக்கு ஜிப்சம் 200 முதல் 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ மற்றும் சிங்க் பாஸ்பேட் 15 கிலோ இட வேண்டும். நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நாள் ஒன்றுக்கு மண்ணின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 4 மணி நேரம் பாய்ச்சினால் போதுமானது.
நீராதாரம் பாதுகாப்பு: இந்த சாகுபடி முறைகளைக் கையாளுவதால் 40 முதல் 50 சதவீதம் வரை நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் சீரான பாசனம் கிடைப்பதால் ஏக்கருக்கு 70 முதல் 80 மெட்ரிக் டன் மகசூல் கிடைப்பதோடு ஊடு பயிரிலும் கூடுதல் வருவாயாக, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதில், இயந்திர அறுவடை செய்வதால் பெரும் பலன் கிடைக்கும். பெருமளவு வேளாண் தொழிலாளர்கள் பிரச்சினை குறைந்திடும்.
தற்போதைய சிறப்புப் பருவத்தில் பயிரிடலாம்: தற்சமயம் சிறப்புப் பருவத்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் கரும்பு நடவு செய்திடும் விவசாயிகள் நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து பயன்பெறலாம்.
தமிழக அரசு ஊக்குவிப்பு மானியம்: கரும்பில் அதிக லாபம் தரும் வகையில், தமிழக அரசு நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி திட்டம் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி வேளாண் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த வகை சாகுபடியை ஊக்குவித்திட தமிழக அரசு வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்க்கரை ஆலைகள் மூலம் தரமான கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கு ஏதுவாக நிழல் வலைக் கூடங்கள் நிறுவி உள்ளது. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.55 ஆயிரத்து 828 என்ற அளவில் மானியம் வழங்குகிறது என விழுப்புரம் வேளாண் உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தெரிவித்தார்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/16/w600X390/sugarcane.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/16/இரு-மடங்கு-வருவாய்க்குநீடித்த---நிலையான-கரும்பு-சாகுபடி-2183.html
2526263 விவசாயம் இரு மடங்கு வருவாய்க்கு:நீடித்த - நிலையான கரும்பு சாகுபடி! விழுப்புரம் Saturday, August 13, 2016 04:17 PM +0530 விழுப்புரம்: கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் பாசனத்தில் இரு மடங்கு வருவாய் பெற நீடித்த- நிலையான சாகுபடி முறையை (எஸ்.எஸ்.ஐ) விவசாயிகள் பின்பற்றலாம்.

இயல்பான கரும்பு சாகுபடி முறையில், 7 முதல் 9 மாத வயதுடைய 3 பருவ விதைக் கரணைகளை ஹெக்டேருக்கு 16 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் விவசாயிகள் பயன்படுத்துவர்.

பாருக்கு பார் இரண்டரை முதல் 3 அடி இடைவெளி விட்டு விதைக் கரணைகளை நடுவர். வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சப்படும். பாய்ச்சலும், காய்ச்சலும் ஏற்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைகிறது. களை பிரச்சனையும் அதிகம் ஏற்படுகிறது. இயல்பான முறை சாகுபடியில் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.

இயல்பான முறையில் முதல் வருடம் மட்டுமே ஊடு பயிர்கள் சாகுபடி செய்ய முடியும்.

மகசூலும் ஏக்கருக்கு 40 முதல் 50 டன் வரை மட்டுமே கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு, உரச்செலவு மற்றும் இதர செலவினங்கள் என ரூ.60 முதல் 65 ஆயிரம் வரை செலவாகும். இதனால் ஏக்கருக்கு நிகர லாபம் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரையே கிடைக்கிறது.

நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி:

ஆனால், நீடித்த-நிலையான கரும்பு சாகுபடியை பொருத்தவரை விதைக் கரணைகளுக்குப் பதில் தரமான விதைக் கரும்பில் இருந்து ஒரு பருவ கரணைகள் எடுக்கப்பட்டு குழித் தட்டுகளில் நடப்பட்டு நிழல் வலைக் கூடாரங்களில் வளர்க்கப்படுகின்றன.

ஆலைகளே வழங்கும் தரமானக் கன்றுகள்: தரமான கன்றுகளை உற்பத்தி செய்து சர்க்கரை ஆலைகளே விவசாயிகளுக்கு வழங்குகின்றன. 25 முதல் 35 நாள் வயதுடைய தரமான நாற்றுகள் நன்கு உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் பாருக்கு பார் 5 அடி மற்றும் செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் நடப்படுகிறது.

குறைந்த நீர்ப் பாசனம்:

அடி உரமாக ஏக்கருக்கு ஜிப்சம் 200 முதல் 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ மற்றும் சிங்க் பாஸ்பேட் 15 கிலோ இட வேண்டும். நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நாள் ஒன்றுக்கு மண்ணின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 4 மணி நேரம் பாய்ச்சினால் போதுமானது.

நீராதாரம் பாதுகாப்பு:

இந்த சாகுபடி முறைகளைக் கையாளுவதால் 40 முதல் 50 சதவீதம் வரை நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் சீரான பாசனம் கிடைப்பதால் ஏக்கருக்கு 70 முதல் 80 மெட்ரிக் டன் மகசூல் கிடைப்பதோடு ஊடு பயிரிலும் கூடுதல் வருவாயாக, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதில், இயந்திர அறுவடை செய்வதால் பெரும் பலன் கிடைக்கும். பெருமளவு வேளாண் தொழிலாளர்கள் பிரச்சினை குறைந்திடும்.

தற்போதைய சிறப்புப் பருவத்தில் பயிரிடலாம்: தற்சமயம் சிறப்புப் பருவத்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் கரும்பு நடவு செய்திடும் விவசாயிகள் நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

தமிழக அரசு ஊக்குவிப்பு மானியம்: கரும்பில் அதிக லாபம் தரும் வகையில், தமிழக அரசு நீடித்த-நிலையான கரும்பு சாகுபடி திட்டம் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி வேளாண் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த வகை சாகுபடியை ஊக்குவித்திட தமிழக அரசு வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்க்கரை ஆலைகள் மூலம் தரமான கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வதற்கு ஏதுவாக நிழல் வலைக் கூடங்கள் நிறுவி உள்ளது. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.55 ஆயிரத்து 828 என்ற அளவில் மானியம் வழங்குகிறது என விழுப்புரம் வேளாண் உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தெரிவித்தார்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/16/0/w600X390/sugarcane.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/16/இரு-மடங்கு-வருவாய்க்குநீடி-2526263.html
3368 விவசாயம் தண்ணீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கேற்ற நெல் ரகம் dn Friday, August 12, 2016 09:59 AM +0530 நீடாமங்கலம்:  தண்ணீர் தேங்கும் பள்ளக்கால் பகுதிகளுக்கேற்ற நெல் ரகம் சிஆர் 1009 சப் 1 என  நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் இராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் ரெ.பாஸ்கரன்  ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

 இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டாவில் மட்டும் சம்பா பருவத்தில் அதிக பரப்பளவாக 4.1 லட்சம் எக்டரிலும், தாளடி பருவத்தில் 1.2 லட்சம் எக்டரிலும் நெல் பயிரிடப்படுகிறது.

 வடகிழக்குப் பருவமழையின்போது காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் சூழல் உருவாகும். அத்தருணங்களில் தண்ணீர் தேங்குவதால் நெற்பயிருக்குப் பாதிப்பு உண்டாகி விளைச்சல் பாதிக்கும்.

 எனவே, இதை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 15 நாட்கள் வரை நெற்பயிரானது வெள்ளத்தால் சூழ்ந்திருந்தாலும் எவ்விதப் பாதிப்புமின்றி வளரும் சிறப்புடைய சிஆர் 1009 சப் 1 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளது. இந்த ரகமானது சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்றது ஆகும்.

சிஆர் 1009 சப் 1 ரகத்தின் சிறப்புகள்  இந்த ரகமானது 155-160 நாட்கள் வயதுடையது. நீண்ட கதிர்களில் குறுகிய பருத்த மணிகளைக் கொண்டது. எக்டருக்கு 5,759 கிலோ மகசூல் தரவல்லது. 1000 மணிகள் எடை 23.5 கிராம் ஆகும்.

அதிக அரவைத்திறனும் முழு அரிசி காணும் திறனும் கொண்டது. அதிக மாவுச்சத்து உள்ளதால் இட்லி தயாரிப்பதற்கு சிறந்தது. நேரடி விதைப்பிற்கும் ஏற்ற ரகம்.

புகையானுக்கு எதிர்புத்திறன் கொண்டது. இலைப்புள்ளி, குலைநோய், வெண்முதுகு தத்துப்பூச்சி ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது என்றனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/12/w600X390/nel1.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/12/தண்ணீர்-தேங்கும்-பள்ளக்கால்-பகுதிகளுக்கேற்ற-நெல்-ரகம்-3368.html
3367 விவசாயம் காடையாம்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை dn Friday, August 12, 2016 09:56 AM +0530 ஓமலூர்:  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை, வடகம்பட்டி, சின்னேரிக்காடு, தீவட்டிப்பட்டி, மூக்கனூர், பூசாரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது நன்கு விளைந்துள்ள நிலையில் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும் தற்போது சின்ன வெங்காயம் விலைக் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 இதுகுறித்து காடையாம்பட்டி பகுதி விவசாயிகள் கூறியது: ஆண்டுதோறும் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. தோட்டத்தில் இருந்து சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து அவற்றை வெங்காயமாக பிரித்து மூட்டையாக, சேலம் சந்தைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10-க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. மேலும், வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கமுடியாது. இருப்பு வைத்து விற்றால் அதன் எடை குறைந்து கூடுதலாக இழப்பீடு ஏற்படும் என்பதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/12/w600X390/oni.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/12/காடையாம்பட்டி-பகுதியில்-சின்ன-வெங்காயம்-அறுவடை-மும்முரம்-விலை-வீழ்ச்சியால்-விவசாயிகள்-கவலை-3367.html
3366 விவசாயம் 50 ஆயிரம் ஏக்கரில் இயந்திர நெல் நடவு: வேளாண் இணை இயக்குநர் தகவல் dn Friday, August 12, 2016 09:27 AM +0530 திண்டிவனம்: மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் இயந்திர நெல் நடவு சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் புதன்கிழமை தெரிவித்தார்.
 திண்டிவனத்தை அடுத்த கட்டளை கிராமத்தில் இயந்திர நெல் சாகுபடி திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் நடப்பாண்டு 147 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு வேளாண் துறை எடுத்து வருகிறது.
 உணவு தானிய உற்பத்தியை அதிகரித்திட அதிக மகசூல் தரும் புதிய ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ. 10 மானியம், பசுத்தாள் உர சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 1500 மானியம், வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 100 மானியத்தில் உளுந்து விதைகள், மானிய விலையில் இயந்திரக் கருவிகள் உள்ளிட்டவை தேசிய வேளாண் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
 அதன் ஒரு பகுதியாக இயந்திர நெல் சாகுபடி திட்டத்தை அரசு வேளாண் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
 மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கரில் சொர்ணவாரி, சம்பா மற்றும் நவரை பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு 50 ஆயிரம் ஏக்கரில் இயந்திர நெல் நடவு செய்யத் திட்டமிட்டப்பட்டு அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
 இயந்திர நெல் சாகுபடி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் அரசு மாணியம் வழங்குகிறது. மாவட்ட விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி, தானிய உற்பத்தியை அதிகரித்திட வேண்டும் என்றார்.
 வேளாண் துறை அலுவலர்கள் சுப்பிரமணியன், செந்தில்குமார், சந்துரு, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் விவசாயத் தொழில்நுட்ப சம்பந்தமாக விளக்கமளித்தனர். கட்டளை, குருவம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/12/w600X390/nel.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/12/50-ஆயிரம்-ஏக்கரில்-இயந்திர-நெல்-நடவு-வேளாண்-இணை-இயக்குநர்-தகவல்-3366.html
3365 விவசாயம் இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானியம் dn Friday, August 12, 2016 09:22 AM +0530 வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து,  வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் முருகேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் விரிவுபடுத்தப்பட்ட தொழில்நுட்பப்படி நாற்றங்கால் அமைப்பதற்கு 2-க்கு 1 அடி அளவுள்ள தட்டுகளில் கரம்பை மற்றும் தென்னை நார்கள் நிரப்ப வேண்டும். பின்னர், விதை நெல்லை அதில் பரப்பி தண்ணீர் தெளித்து, விதைநெல் முளையிட்ட பின்னர் 15 நாள் கழித்து நெல் நடவு இயந்திரம் மூலமாக 25-க்கு 25 செ.மீ. அளவு இடைவெளியில் நாற்று நடவு செய்யவேண்டும்.

  அதன்பின்னர், 10 நாள் முதல் 40 நாள்கள் வரை இயந்திரம் மூலம் களை எடுத்து வழக்கம்போல் நெல்லுக்கு இடும் ரசாயன உரங்களை இடவேண்டும். இத்தகைய முறையை கடைபிடித்தால், ஏக்கருக்கு 3,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு, ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/12/w600X390/agri.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/12/இயந்திரம்-மூலம்-திருந்திய-நெல்-சாகுபடி-செய்யும்-விவசாயிக்கு-மானியம்-3365.html
3364 விவசாயம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு dn Friday, August 12, 2016 09:18 AM +0530 சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைள் வந்துள்ளன.

இந்த கோரிக்கைகளை ஏற்று, முதல் போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 12) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி வட்டங்களில் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்களும், ஈரோடு வட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/2/w600X390/jayalalitha.jpg jayalalitha https://www.dinamani.com/agriculture/2016/aug/12/பவானிசாகர்-அணையில்-இருந்து-இன்று-முதல்-தண்ணீர்-திறப்பு-முதல்வர்-ஜெயலலிதா-அறிவிப்பு-3364.html
3280 விவசாயம் 'சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்' dn Thursday, August 11, 2016 07:19 AM +0530 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஏக்கர் வரை நிலமுள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் 5 ஏக்கருக்கு அதிகமுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைப் பயிர்களான வாழை, காய்கறிகள், மலர்கள், வாசனைப் பயிர்களிலும், வேளாண்மை பயிர்களான தென்னை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களிலும், சொட்டுநீர்ப் பாசன வசதி அரசு மானியத்துடன் செய்து தரப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட விவசாயிகள் உடனடியாக தங்களது நில உடைமை ஆவணங்களான கணினி பட்டா, அடங்கல், குடும்ப அட்டை, நிலவரைபடம் ஆகியவற்றின் நகல்களுடன் மனுதாரர் புகைப்படத்தை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள  சொட்டுநீர்ப் பாசன மனுக்கள்  பெட்டியில் போடவும்.

இல்லையெனில்,  அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் வழங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பிக்கும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தகுதியின் அடிப்படையில் உடனடியாக சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/wp1.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/11/சொட்டுநீர்ப்-பாசனத்-திட்டத்தில்-பயன்பெற-ஆதிதிராவிட-விவசாயிகள்-விண்ணப்பிக்கலாம்-3280.html
3279 விவசாயம் தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்: பெண் விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் dn Thursday, August 11, 2016 07:12 AM +0530 கன்னியாகுமரி: தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 14ஆவது களஞ்சியம் பெண் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் 14ஆவது களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க 2 நாள் மாநாடு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பெண்கள் இணைப்புக் குழுவின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் பொன்னுத்தாய் தலைமை வகித்தார். குமரி மாவட்ட பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் பிலோமினாள் வரவேற்றார். தக்கலை தோட்டக்கலை உதவி இயக்குநர் யோ.ஷீலா ஜாண் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், "இந்தியாவில் புவிவெப்பமடைதல், அதிக ரசாயன உரங்கள் கலப்பு ஆகியவற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்; கம்பு, குதிரைவாலி, வரகு, காடைகன்னி, சாமை, கேழ்வரகு, பனிவரகு, சோளம், தினை ஆகிய சிறு தானியங்களின் பயன்களை மக்களுக்கு விளக்க வேண்டும்; சிறுதானிய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; பெண் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும்; பெண் விவசாயிகளுக்கு ஊராட்சிகளிலுள்ள தரிசு நிலங்களை வழங்க அரசு முன்வர வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 170 பெண் விவசாயிகள் பங்கேற்றனர். விவேகானந்த கேந்திர நார்டெப் செயலர் ஜி.வாசுதேவ், இயக்குநர் வி.ராமகிருஷ்ணன், நாகர்கோவில் நஞ்சில்லா விவசாயிகள் சங்கச் செயலர் ஏ.மரிய ஜேம்ஸ், ஆயிலியம் இயற்கை மருத்துவ இயக்குநர் சரசம், பெண்கள் இணைப்புக்குழு நிர்வாகிகள் சித்ராதேவி, சுலோச்சனா, சாராள், மேரி ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீட்டுத் தோட்டம் அமைப்பது, இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகியன குறித்து பிரேமலதா, இயற்கை உரங்கள் மற்றும் மண்புழு உரம் குறித்து ராஜாமணி ஆகியோர் மாநாட்டில் விளக்கமளித்தனர். மதுரை பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் காமேஸ்வரி நன்றி கூறினார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/agri.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/11/தமிழகத்தில்-சிறுதானிய-உற்பத்தியை-அதிகரிப்பது-அவசியம்-பெண்-விவசாயிகள்-மாநாட்டில்-தீர்மானம்-3279.html
3238 விவசாயம் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்: வேளாண் மையங்களில் விண்ணப்பிக்கலாம் test Wednesday, August 10, 2016 07:55 AM +0530 விழுப்புரம்:  தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் வேளாண் மையங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இது குறித்து, விழுப்புரம் தோட்டக்கலைத் துணை இயக்குநர் மணிமொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்கி, இரு தினங்கள் நடைபெறுகிறது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
 பப்பாளி, கறிவேப்பிலை, பாக்கு மற்றும் வெற்றிலை போன்ற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. பந்தல் அமைப்புகள், கைத்தெளிப்பான்கள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி, தேனி வளர்ப்பு, நிழல் வலைக்குடில், மஞ்சள் நாற்றாங்கால் உள்ளிட்ட பல இனங்களுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
 இது தொடர்பான விளக்கங்கள், இரு தினங்கள் நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்று, விண்ணப்பிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/ha.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/10/தோட்டக்கலைப்-பயிர்களுக்கு-மானியம்-வேளாண்-மையங்களில்-விண்ணப்பிக்கலாம்-3238.html
3237 விவசாயம் ஒசூரில் தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்பனை test Wednesday, August 10, 2016 07:51 AM +0530 ஒசூர்: ஒசூரில் தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மண் வளம், தட்பவெப்ப நிலை காரணமாக தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக தக்காளியை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
 ஒசூர் பகுதியில் விளையும் தக்காளி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
 நிகழாண்டில் ஒசூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி விளைச்சல் அதிகரித்து, விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 20 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் இழப்பீட்டை சந்தித்துள்ளனர்.
 தக்காளிக்கு போதிய விலைக் கிடைக்காததால் விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி வருகின்றனர். மேலும், தக்காளியைப் பறிக்காமல் நிலத்திலேயே விட்டு விடுகின்றனர். சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர். ஒரு ஏக்கரில் தக்காளிப் பயிரிட ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் செலவு செய்த பணத்துக்கு தக்காளி விற்பனை செய்யப்படாததால் பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/tomoto.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/10/ஒசூரில்-தக்காளி-கிலோ-ரூ2-க்கு-விற்பனை-3237.html
3236 விவசாயம் பொது இடங்களில் கருவேல மரங்களை அழிக்கும் பணி தொடக்கம் test Wednesday, August 10, 2016 07:48 AM +0530 காரைக்கால்:  காரைக்காலில் பொது இடங்கள், சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அழிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் சாலையோரப் பகுதியிலும், அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் வளர்ந்திருக்கின்றன. சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்களால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. மண்டிக் கிடக்கும் கருவேல மரங்கள் பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதையடுத்து, காரைக்கால் மாவட்டம் முழுவதும் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையடுதது, பொதுப் பணித் துறை நிர்வாகம் இதை சீரமைக்க கவனம் செலுத்துமாறு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, திருநள்ளாறு பகுதியில் திட்டப் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார். திருநள்ளாறு பிரதான சாலை முதல் அம்பகரத்தூர் வரையிலான பகுதி, பேட்டை, அத்திப்படுகை, அகலங்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காரைக்காலின் பிற பகுதிகளிலும் கருவேல மரங்கள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.  இப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன், கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/karuvelam.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/10/பொது-இடங்களில்-கருவேல-மரங்களை-அழிக்கும்-பணி-தொடக்கம்-3236.html
3235 விவசாயம் வேளாண் துறை விதை நெல்லை பயன்படுத்த அழைப்பு DIN Wednesday, August 10, 2016 07:43 AM +0530 காரைக்கால்:  காரைக்காலில் வேளாண் துறை சார்பில் விதை நெல் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சான்றுடன் கூடிய இந்த நெல்லை விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், மாதூரில் உள்ள விதைப் பண்ணையில் புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் விதை நெல் விற்பனை தொடங்கப்பட்டது. கூடுதல் வேளாண் இயக்குநர் கா.மதியழகன் விற்பனையைத் தொடங்கிவைத்துப் பேசியது:

மாதூர் விதைப் பண்ணையில் இனத்தூய்மை, புறத்தூய்மை,நல்ல வீரியமும், முளைப்புத் திறனுமுடைய விதை உற்பத்தி கடந்த 56 ஆண்டுகளாக செய்யப்படுகிறது. நடப்பு சம்பா, தாளடி பட்டத்திற்கேற்ற நெல் ரகங்கள், சான்றளிக்கப்பட்டு நேரடி விற்பனைக்குத் தயாராக உள்ளன.

சாவித்திரி, காரைக்கால்-1 நெல் ரகங்களின் ஆதார நிலை கிலோ ஒன்றுக்கு ரூ.36, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி சான்று நிலை விதை ரூ.29, ஆடுதுறை-38, 39, 46 ஆகியவை ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆடுதுறை -50 என்ற புதிய ரகமும் போதுமானளவு உற்பத்தி செய்து, ஆதார நிலை விதை ரூ.37-க்கும், சான்று நிலை விதை ரூ.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காரைக்கால் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ந.ராஜேந்திரன், துணை இயக்குநர் ஜெ.செந்தில்குமார் வேளாண் அலுவலர் கே.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய ரகமான ஆடுதுறை -50 குறித்து வேளாண் துறையினர் கூறியது:

ஆந்திரா பொன்னி, சாவித்திரி ஆகிய ரகங்களைக் கொண்டு ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால், அவ்விரு ரகங்களின் நல்ல குணங்களைப் பெற்றுள்ளது. இதன் வயது 150 நாள். காரைக்கால் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் விதைப்பதற்கு ஏற்ற ரகமாகும். பயிர் உயரமாக வளரும், இலை சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்பு சக்தியும், தண்டு துளைப்பான் பூச்சிக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தியும் உண்டு.

ஒரு ஹெக்டேருக்கு 10 டன் விளைச்சல் திறனுடைய ஆடுதுறை -50 நெல் ரகத்தின் சராசரி மகசூல் 6 டன் ஆகும். வைக்கோல் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/nel.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/10/வேளாண்-துறை-விதை-நெல்லை-பயன்படுத்த-அழைப்பு-3235.html
3234 விவசாயம் விவசாய ஆணையம் அமைக்கக் கோரி: குமரியில் இருந்து சென்னைக்கு விவசாயிகள் வாகனப் பயணம் DIN Wednesday, August 10, 2016 07:38 AM +0530 கன்னியாகுமரி:  விவசாய ஆணையம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து சென்னை நோக்கி செவ்வாய்க்கிழமை வாகன விழிப்புணர்வுப் பிரசார பயணத்தை தொடங்கினர்.

அமைப்பின் தலைவர் செ.நல்லசாமி தலைமையில் தொடங்கியுள்ள இந்தப் பயணத்தில், "கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்; காவிரித் தீர்ப்பை அரசுகள் ஏற்க வேண்டும்; மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்; எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்த வேண்டும்; விவசாய ஆணையம் அமைக்க வேண்டும்; தேர்தல் முறைகேடுகளைக் களைய வேண்டும்; கலப்படத்தை ஒழிக்க வேண்டும்; இந்தியா தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக பாடுபட வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இந்தப் பயணம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்கள் வழியாக வருகிற 11-ஆம் தேதி சென்னையை சென்றடையும். தொடக்க நிகழ்வில் பனை, தென்னை தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கே.முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ. 10 கோடி பரிசு: முன்னதாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் செ.நல்லசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கள் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதைப் பொருள்தான் என்பதையும், வெளிநாட்டு இறக்குமதி மதுவகைகள் மற்றும் டாஸ்மாக் மதுவும் நல்லவை என அரசும், அரசியல் கட்சிகளும் நிரூபித்தால் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும். இதை சவாலாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும், மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரையும், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் அவர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/kan.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/10/விவசாய-ஆணையம்-அமைக்கக்-கோரி-குமரியில்-இருந்து-சென்னைக்கு-விவசாயிகள்-வாகனப்-பயணம்-3234.html
3072 விவசாயம் மண் வளத்தை அதிகரிக்க கோடை உழவு அவசியம்! DIN Friday, August 5, 2016 12:53 PM +0530 புதுக்கோட்டை:  தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்யலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கிடைக்கும் மழை கோடைமழை எனப்படுகிறது.
 இதைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். வெப்ப மண்டலத்தில் உள்ள நம் புவியானது, கோடைக் காலத்தில் மேல்மண் அதிக வெப்பமடைகிறது.
 இந்த வெப்பமானது கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, மேல் மண்ணை உழுது ஒரு புழுதிப்படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர் சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்திலுள்ள ஈரம் ஆவியாகாமல் இப்புழுதிப் படலம் தடுத்துவிடும்.
 கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. கோடை உழவால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும்.
 இதனால் நிலத்தில் நீர் இறங்கும் திறன் உயரும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. வயலிலுள்ள களைகள், குறிப்பாக கோரை போன்றவை கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் உலர வைத்து அழிக்கப்படுகின்றன. கோரைக் கிழங்குகளைக் கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
 நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காயவைக்கபட்டு அழிக்கப்படுகின்றன. பறவைகள் அவற்றை உண்டு, கூண்டுப் புழுக்களை அழிக்கின்றன.
 அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களிலுள்ள முந்தைய பயிரின் தாள்கள், வேர்கள், தட்டைகள் போன்றவை கோடை உழவின்போது மடக்கி விடப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
 கோடை உழவைச் சரிவுக்குக் குறுக்கே செய்தல் வேண்டும். அதனால் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் மழை பெய்கிறபோது அம்மழை நீரானது வேகமாக வழிந்தோடி மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 இதுகுறித்து குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் (பொ) பெ. கந்தசாமி கூறியது:
 கோடை உழவு செய்வதால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் நிலத்துக்குள் எளிதாகப் புகுந்து சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் உயரும். எனவே, உழவர்கள் தங்கள் பகுதியில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து மண்வளம், நீர்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/5/w600X390/uzhavu.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/05/மண்-வளத்தை-அதிகரிக்க-கோடை-உழவு-அவசியம்-3072.html
3069 விவசாயம் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கும் சிலந்தி கட்டுப்பாடு மேலாண்மை DIN Friday, August 5, 2016 12:43 PM +0530 திருவள்ளூர்: தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரைத் தாக்கும் சிலந்தியைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி அறிவுறுத்தியுள்ளார்.
 தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரில் வெப்பநிலை, ஈரப்பதம் அதிகளவில் காணப்படும். அந்த நேரத்தில் ஒலிகோநிகஸ் ஒரைசே எனப்படும் சிலந்தியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும்.
 சிலந்தி தாக்குதலால் முதலில் அடி இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத் துகள்கள் போன்ற புள்ளிகள் தோன்றும். இலை நரம்புகளுக்கிடையில் பகுதி வெளிறிக் காணப்படும்.
 பின்னர் அனைத்து இலைகளிலும் இப்புள்ளிகள் தோன்றி வெண்ணிறமாகக் காணப்படும். இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.
 கட்டுப்பாடு மேலாண்மை: வறட்சியான காலங்களில் சிலந்தி தாக்குதல் அதிகம் காணப்படுவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியம். பின்னர் புரபார்கைட் 1.5 மில்லி லிட்டர் அல்லது ஃபெனாசகுயின் 1.5 மில்லி லிட்டர் என்ற அளவில் 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
 இவ்வாறு செய்வதன் மூலம் சிலந்தியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி தெரிவித்தார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/5/w600X390/padi.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/05/தாக்குதலில்-இருந்து-நெற்பயிரைக்-காக்கும்-சிலந்தி-கட்டுப்பாடு-மேலாண்மை-3069.html
3027 விவசாயம் மண் வளம் காக்க பசுந்தாள் உரமிட வேண்டும்: வேளாண் அதிகாரி அறிவுரை டாக்டர் வெங்கடாசலம் Wednesday, August 3, 2016 12:58 PM +0530 விழுப்புரம்: மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், மகசூலை அதிகரிக்கவும் பசுந்தாள் உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண் துறை மூலம் 40 ஏக்கர் அளவில் பசுந்தாள் உரம் (தக்கை பூண்டு) சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 இப்பயிர்களை, விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் விவசாயிகளிடம் கூறியது:
 விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் கார, அமில தன்மைகள் மாறுகின்றன. மேலும், நிலத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது.
 தொடர்ந்து சாகுபடி செய்தல் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறி அங்ககசத்துகள் குறைந்து மண் வளமற்றதாகிவிடுகிறது.
 ஆகையால், மண் வளத்தினை அதிகரித்திட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் முன்னர், தக்கைப்பூண்டு பயிரிடலாம். இதற்காக ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ விதைகளை விதைக்கலாம்.
 தக்கைப்பூண்டு களிமண் பகுதிக்கு ஏற்றது. மணல் பகுதிகளுக்கு சணப்பை ஏற்றது. 30 முதல் 35 நாள்களில் பூக்கும் தருணத்தில், இதனை மடக்கி உழுதால் ஏக்கருக்கு சுமார் 20-25 டன்கள் வரை தழைகள் கிடைக்கிறது.
 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரம் சாகுபடி செய்தால் மண்ணின் வளம் கூடி மகசூல் அதிகரிக்கிறது. ரசாயன உரங்களின் செலவு குறைகிறது என்றார்.
 அரசு பசுந்தாள் உரப்பயிர்களை ஊக்குவித்திட, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 மானியம் வழங்குகிறது. விவசாயிகள் பெருமளவு இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றார்.
 வேளாண் அலுவலர்கள் செந்தில், கங்காகௌரி மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/aug/03/மண்-வளம்-காக்க-பசுந்தாள்-உரமிட-வேண்டும்-வேளாண்-அதிகாரி-அறிவுரை-3027.html
2990 விவசாயம் சோலார் பம்பு அமைத்து விவசாயம் செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள் டாக்டர் வெங்கடாசலம் Tuesday, August 2, 2016 11:07 AM +0530 திருச்சி:  எரிசக்தி மின்சாரத்துக்கு மாற்று, மொத்த தொகையில் 80%ம் மானியமாக வழங்கப்படுவதால் சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்புகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள்.

சுற்றுச்சூழல் மாசுபடாதவகையிலும், கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின் சேமிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும் வகையிலும் திருச்சி மாவட்டத்தில் 2013-14-ம் ஆண்டு முதல் சோலார் பம்பு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மானியங்கள் எவ்வளவு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு 50%,மத்திய அரசு 30% மானியத்தை வழங்குகிறது. மீதமுள்ள மொத்த விலையில் 20% தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும். சோலார் பம்பு அமைக்க 200 ச.மீட்டர் அளவுக்கு நிழல்படாத திறந்தவெளி இடம் தேவைப்படும்.  ஆழ்துளைக் கிணறு பகுதியாக இருந்தால் 200 அடி ஆழத்துக்கு நீரும், திறந்தவெளிக் கிணறு என்றால் 100 அடி ஆழத்துக்கு நீர் வளமும் உள்ள இடங்களில் சோலார் பம்பு அமைத்துத் தருகிறோம்.

மாவட்டத்தில் இதுவரை 67 விவசாயிகளுக்கு ரூ. 2.30 கோடி மானியத்தில் சோலார் பம்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்தாண்டு 23 சோலார் பம்புகள் அமைத்துத் தர ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நிகழாண்டில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 20% அதிகமாகும்.

இதுவரை 5 குதிரைத்திறன் சக்தி கொண்ட சோலார் பம்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் 7.5, 10 குதிரைத்திறன் கொண்ட பம்புகள் அமைத்துத் தரவும் விண்ணப்பங்களைப் பெற்று வருகிறோம்.

5 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு பணியை மோட்டார் பொருத்திய நிறுவனம் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி. திருச்சி மாவட்டம், தெற்கு மகிழம்பாடி கிராமத்தில் சோலார் பம்பு அமைத்து பாசனம் செய்து வரும் விவசாயி ப. பலராமகிருஷ்ணன் கூறியது: பொது நிர்வாகப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற நான் அடிப்படையில் விவசாயி. ஏற்கெனவே மின் மோட்டார், டீசல் என்ஜின் மூலம் சாகுபடி மேற்கொண்டு வந்தாலும், பல நேரங்களில் விவசாயத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பாதிப்பைச் சந்தித்தேன். இந்நிலையில் 5 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்பு அமைத்துள்ள எனக்கு மின்சாரம்,டீசல் சிக்கனம் ஏற்பட்டது. தேவையானபோது தேவையான அளவு சூரியசக்தி மின்சாரம் பெற்று பாசனம் செய்து வருகிறேன்.

ரூ. 5.01 லட்சம் மதிப்புடைய சோலார் பம்பு அமைக்க, அரசு மானியம் ரூ. 3.84 லட்சம் வழங்கியது. மீதமுள்ள தொகையை நான் செலுத்தி இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறேன்.

சூரிய ஒளியைக்கொண்டு உற்பத்தியாகும் மின்சாரம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்தும் வகையில் பேட்டரி போன்ற வசதிகள் இருந்தால், இரவு நேரத்திலும் பயன்படுத்த முடியும் என்றார் பலராமகிருஷ்ணன். இந்தப் பயணத்தில் வேளாண் இணை இயக்குநர் இரா. சந்திரசேகரன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவிச் செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/2/w600X390/solar-pumb.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/02/சோலார்-பம்பு-அமைத்து-விவசாயம்-செய்ய-ஆர்வம்-காட்டும்-விவசாயிகள்-2990.html
2988 விவசாயம் நெல் நடவு இயந்திரத்துக்கு மானியம் வழங்கல் டாக்டர் வெங்கடாசலம் Tuesday, August 2, 2016 11:00 AM +0530 மதுராந்தகம்:  மதுராந்தகம் வட்டாரத்தில் நெற்பயிர்களை நடவு செய்ய, நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநர் மா.சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மதுராந்தகம் சுற்றுப்புறத்தில்  பெரும்பாலான விவசாயிகள் தமது நிலங்களில் நெற்பயிர்களை பயிரிட்டு விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

எனினும், போதுமான கூலி ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிபடுகின்ற நிலை உள்ளது. அவ்வாறு கூலி ஆட்கள் கிடைத்தாலும், அவர்கள் அதிகமான கூலியை கேட்கின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் சார்பாக அளிக்கப்படும் நெல் நடவு இயந்திரம் மூலம் நாற்றுகளை நடுவது எளிதாகவும், செலவு குறைவாகவும் உள்ளது. இந்நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்கின்ற கையில் நெல் நடவு செய்கின்ற விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ. 5 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/2/w600X390/padi.jpg https://www.dinamani.com/agriculture/2016/aug/02/நெல்-நடவு-இயந்திரத்துக்கு-மானியம்-வழங்கல்-2988.html
2978 விவசாயம் ஆடிப்பட்டத்தில் நிறைந்த மகசூல் பெற மக்காச்சோளம் பயிரிடலாம்: வேளாண் துறை தகவல் DN Sunday, July 31, 2016 09:37 PM +0530 செஞ்சி: ஆடிப்பட்டத்தில் குறைந்த நீரில் நிறைந்த மகசூல் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கோழி மற்றும் இதர கால்நடைகளுக்குப் பயன்படுத்தும் தீவனங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகளில் மக்காச்சோளம் ஸ்டார்ச் போன்ற பொருள்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுகிறது.
 இதனால் மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், உற்பத்தி குறைவாக இருப்பதால், வியாபாரிகள் போட்டி அடிப்படையில் விலையை நிர்ணயிக்கிறார்கள். எனவே, மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது.
 நெல் சாகுபடி செய்ய 120 முதல் 130 செ.மீ. நீர் தேவைப்படுகிறது. ஆனால், மக்காச்சோள சாகுபடிக்கு 65 முதல் 70 செ.மீ. நீர் போதுமானது. ஒரு ஏக்கர் நெல் பயிரிட தேவையான நீரைக்கொண்டு 4 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடலாம்.
 ஆடிப்பட்டத்துக்கு ஏற்ற ரகங்கள்: ஆடிப்பட்டத்துக்கு கோ 1, கோஎச் (எம்) 4, கோஎச் (எம்) 5 போன்ற ரகங்கள் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது.
 முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் சட்டிக்கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து, பின்பு கொக்கி கலப்பையில் இரு முறை உழவு செய்து, பின்பு தொழுவுரமிட்டு, கொக்கி கலப்பையால் இரு முறை உழவு செய்ய வேண்டும். 2 அடி இடைவெளியில் 6 மீட்டர் நீளம் கொண்டு பார் அமைக்க வேண்டும்.
 இவ்வாறு அமைக்கப்பட்ட பார்களில் செடிக்குச் செடி 20 மீட்டர் இடைவெளியில் ஒரு குழிக்கு 2 விதைகளை 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். 15ஆவது நாளில் நன்கு வீரியமாக வளர்ந்த 1 செடியை மட்டும் விட்டுவிட்டு மற்றதை களைய வேண்டும்.
 மண் பரிசோதனைக்கு ஏற்ற தழை, மணி, சம்பல் சத்துக்களை இட வேண்டும். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச் வேண்டும். பின்பு 4ஆவது நாளும், 12ஆவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும்.
 வளர்ச்சிப் பருவமான 25 மற்றும் 36ஆவது நாளில் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவமான 48 மற்றும் 60ஆவது நாளில் நீர் பாய்ச்ச வேண்டும்.
 முதிர்ச்சி பருவமான 72ஆவது நாளில் மற்றும் 85ஆவது நாளில் நீர்பாய்ச்ச வேண்டும்.
 மக்காச்சோளக் கதிரில் உள்ள விதைகள் காய்ந்து கடினமாகி பின் வெளியே மூடியுள்ள சோகை மஞ்சள் நிறமாக மாறும்போது, கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் மணிகளை பிரித்தெடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4,000 கிலோ மகசூல் கிடைக்கும். எனவே, மேல்மலையனூர் வட்டார விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு நல்ல லாபமடையலாம் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/31/w600X390/mc.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/31/ஆடிப்பட்டத்தில்-நிறைந்த-மகசூல்-பெற-மக்காச்சோளம்-பயிரிடலாம்-வேளாண்-துறை-தகவல்-2978.html
2977 விவசாயம் 'அரசு மானியத்துடன் எருமைப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்' DN Sunday, July 31, 2016 09:32 PM +0530 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் எருமைப் பண்ணைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் எருமை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 எருமைப் பண்ணைகள் அமைத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், முதல்கட்டமாக 4 எருமைப் பண்ணைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எருமைப் பண்ணை அலகு ஒன்று 5 எருமைகள் கொண்டதாக இருக்கும். முதலில் 3 எருமைகள் வாங்கி வழங்கப்படும். எருமைப் பண்ணை அலகு ஒன்றின் மொத்த நிதி ரூ.4,32,500 ஆகும். இதில்,  25 சதவீதம் நிதி ரூ.1,08,125 மட்டும் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டும். மீதமுள்ள 75 சதவீத நிதி ரூ.3,24,375 அரசு மானியமாக வழங்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

பயனாளிகளுக்கு 300 சதுர அடி காலியிடம் மாட்டுக்கொட்டகை அமைத்திட இருத்தல் வேண்டும். மேலும், ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கால்நடை தீவனப்பயிர்கள் மற்றும் தீவனப்புல் வளர்த்திட சொந்தமாகவோ குத்தகை நிலமாகவோ இருந்திட வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் பயனாளியின் பெயர், பாலினம், வயது, ஜாதி விவரம், முகவரி, தொடர்பு தொலைபேசி எண் மற்றும் தற்போது பயனாளிகளிடமுள்ள பசு மாடுகள் மற்றும் எருமை இனங்கள் விவரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலத்திற்கான பட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்படும். பயனாளிகள் எருமைகளை குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து வளர்த்திட வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 25 சதவீத தொகை ரூ.1,08,125 சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் கணக்கில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

மேலும் 300 சதுரஅடி நிலப்பரப்பில் கொட்டகை கட்டுவதற்கு மதிப்பீடான ரூ.1,50,000 செலவில் கட்ட வேண்டும். கால்நடை தீவனப்புல் 24 சென்ட் நிலப்பரப்பில் வளர்த்திட புல் கரணைகள் மற்றும் உரம் வாங்கிடும் வகையில் ரூ.2,600 மற்றும் 76 சென்ட் நிலப்பரப்பில் டெஸ்மாந்தஸ் தீவனப்புல் விதைகள் மற்றும் உரம் வாங்கிடும் வகையில் ரூ.4400 மற்றும் ஒரு தெளிப்பு நீர் பாசன கருவி நிறுவுவதற்கு ரூ.25,000 மற்றும் ஒரு புல் வெட்டும் கருவி வாங்கிட ரூ.20,000 ஆக மொத்தம் ரூ.52,000 கால்நடை தீவனம் ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்வதற்காக வழங்கப்படும்.

முர்ரா இன எருமைகள் முதல்கட்டமாக மூன்று எருமைகள் பிற மாநிலத்தில் இருந்து வாங்கி வழங்கப்படும். எருமை ஒன்றின் விலை ரூ.40,000 வீதம் மொத்தம் 5 எருமைகள் வாங்கிட ரூ.2,00,000 நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எருமைகளை காப்பீடு செய்வதற்கு ரூ.10,000 மற்றும் போக்குவரத்து கட்டணம் ரூ.10,000 வழங்கப்படும்.

மேலும், எருமைப் பண்ணை அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்கிட ரூ.10,000 வழங்கப்படும். மேலும் இரண்டு நாள்கள் மாவட்ட தலைமையிடத்தில் வைத்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி வழங்க ரூ.500 செலவினம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் பண்ணையில் இந்தத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட எருமைகளின் பால் அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதியைச் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/31/அரசு-மானியத்துடன்-எருமைப்-பண்ணைகள்-அமைக்க-விண்ணப்பிக்கலாம்-2977.html
2976 விவசாயம் கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்து பயிற்சி DN Sunday, July 31, 2016 09:21 PM +0530 காரைக்கால்:  தென்மாநிலங்களைச் சேர்ந்த மீன் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்து காரைக்காலில் பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் அருகே உள்ள கருக்களாச்சேரி கிராமத்தில், மத்திய அரசின் ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு, கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன் வளர்ப்பு குறித்து பயிற்சிப் பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீன் வளர்ப்பு ஆர்வலர்கள் 13 பேர் கடந்த 4 நாள்களாகப் பயிற்சிப் பெற்றனர். வெள்ளிக்கிழமையுடன் அவர்களுக்கானப் பயிற்சி நிறைவுபெற்றது. இவர்களுக்கு, கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்தும், அதற்கான முதலீடு மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. முன்னதாக, இவர்கள் 13 பேரும் சீர்காழியில் உள்ள குஞ்சு பொறிப்பகத்தில் ஒரு வாரம் பயிற்சி பெற்றனர்.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/31/கொடுவா-மீன்-கல்-நண்டு-வளர்ப்பு-குறித்து-பயிற்சி-2976.html
2875 விவசாயம் லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை  dn Friday, July 29, 2016 05:58 PM +0530 நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது என தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் அ.செந்தில்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியது: கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டு ஆகியவற்றில் இருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்கவும், சிறந்த முறையில் வெள்ளாடுகளை வளர்க்கவும் கொட்டகை அமைப்பது மிக அவசியம். கொட்டகைகளை மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டகை சுத்தமாகவும், காற்றோட்டம், வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். கொட்டகையின் கூரையை பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அமைக்கலாம். அஸ்பெஸ்டாஸ் கொண்டும் கூரையை அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு மேற்காகவும், அகலப் பகுதி வடக்கு தெற்காகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் கொட்டகையினுள் நல்ல காற்றோட்டமும், குறைவான சூரிய வெப்பத்தையும் பெறலாம்.

கொட்டகை அமைப்பு: கொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டு அமைத்தால் உயரம் 10-12 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். பிற பொருள்களைக் கொண்டு கூரை அமைத்தால், உயரம் 8-10 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி 1 அடி உயரத்தில் சுவர் அமைத்து, அதன் மீது 5 அடி உயரத்திற்கு கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத்தினால் ஆன தட்டிகளை அமைக்கலாம். கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக் கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கு ஏறத்தாழ 12-15 சதுர அடி இடவசதி தேவை. எனவே, 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 600 சதுர அடி இடவசதி அவசியம். கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருந்தால், மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும் "கொட்டில்" முறையில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதி கொட்டகையை ஒட்டிய திறந்த வெளி பகுதியில் கொடுக்கப்பட வேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.

கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிக பட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி தடுப்புகள் அமைப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப 20 அடிக்கு குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது. கொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைத்தாலும் தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் நிரந்தரமான ஒன்று. துத்தநாகத் தகடு (தகரம்) கொண்டும் கூரை அமைக்கலாம்.

சல்லடைத் தரை அல்லது பரண்மேல் ஆடு வளர்ப்பு:
உயர் ரக ஆடுகளை வைத்திருப்போர் சல்லடைத்தரை அமைப்பு முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 3 முதல் 4 அடி உயரத்தில் 1 முதல் 2 அடி அங்குல அகலம் கொண்ட மரச்சட்டங்களை 1 அங்குல இடைவெளி விட்டு வரிசையாக அடிக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகள் வழியாக கீழே விழ வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கீழே விழுந்து விடும். இதன் மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்க வழி வகுக்கும். இம்முறையில் கொட்டகையினை பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். இம் முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்த பிறகு அகற்றினால் போதும்.

இடவசதி: குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10 முதல் 15 சதுர அடியும் மற்றும் கிடாக்களுக்கு 15முதல் 20 சதுர அடியும் இடவசதி கொடுக்க வேண்டும். அதிக அளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும், நோய்த்தாக்கமும் அதிகமாக இருக்கும். கொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளை தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே, கொட்டகையில் கம்பி வலை கொண்டோ அல்லது மூங்கில் தட்டிகள் கொண்டோ சிறு சிறு அறைகளாக பிரித்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.

தண்ணீர் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு :
 ஆடுகள் நீர் பருகுவதற்கு வட்ட வடிவிலான அல்லது நீள் செவ்வக வடிவிலான சிமெண்ட் தொட்டிகள் இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உள்பக்கம் சுண்ணாம்பு அடிக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை. இரும்புத்தகடு அல்லது மரத்தினால் ஆன தீவனத் தொட்டிகளை அரை வட்ட வடிவில் அமைக்க வேண்டும். இதன் நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். 10 முதல் 12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை.
தீவனத் தொட்டியை ஆடுகள் அசுத்தம் செய்வதை தடுக்க தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர் தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்:
வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதனால் அதன் சக்தி விரயமாவதோடு அதன் உடல் எடை குறையும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வைத்து கொடுக்கும் போது அதன் உடல் எடை வெகுவிரைவில் கூடுவதால் அதிக இலாபத்திற்கு ஆடுகளை விற்கலாம். ஆடுகளை 12 மாதங்கள் வரை காத்திருக்காமல் 6 முதல் 8 ஆவது மாதங்களிலேயே விற்பனை செய்யலாம். அதிக எடையுடைய குட்டிகளைப் பெறலாம். நோய் பாதிப்பு அதிகம் இருக்காது. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம்.பராமரிப்பு எளிது. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் எளிதாகிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும்.எரு சேமிக்கப்பட்டு நிலத்திற்கு உரமாகக் கிடைக்கின்றது என்றார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/29/w600X390/Goat.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/29/லாபம்-தரும்-பரண்மேல்-ஆடுகள்-வளர்ப்பு-முறை-2875.html
2870 விவசாயம் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி: தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமா dn Friday, July 29, 2016 05:55 PM +0530 காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்:
தக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனன்யா ஆகியன ஆடிப்பட்டத்துக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், தக்காளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

விதை நேர்த்தி - நாற்று நடல்:
ஹெக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகளுடன் 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்த விதைகளை 1 மீ அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செமீ வரிசை இடைவெளிகளில் விதைக்க வேண்டும். பின்பு பார்கள் அமைத்து 25 நாள்கள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். அதற்கு முன்பு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நீர்-உரம் நிர்வாகம்:
 நாற்ற நட்ட 2-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு தொழுஉரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலா, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நாற்று நட்ட 15 ஆவது நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 30 ஆவது நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:
காய்ப்புழு மற்றும் புரொடீனியா புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைக்கலாம். புழு தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்க வேண்டும். காய்ப்புழுவுக்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்கலாம். புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்:
இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாக இருக்கிறது. வெண் ஈக்கள் மூலமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மிலி-ஐ 250 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

களை, பூச்சி, நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் 135 நாள்களில் ஹெக்டேருக்கு 35 டன் பழங்கள் மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/29/w600X390/Tomato.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/29/ஆடிப்பட்ட-காய்கறி-சாகுபடி-தக்காளி-சாகுபடியில்-அதிக-மகசூல்-பெற-வேண்டுமா-2870.html
2735 விவசாயம் இலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை டாக்டர் வெங்கடாசலம் Thursday, July 28, 2016 12:41 PM +0530 ஆண்டிபட்டி: நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது என தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் அ.செந்தில்குமார் தெரிவித்தார்.
 அவர் கூறியது: கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டு ஆகியவற்றில் இருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்கவும், சிறந்த முறையில் வெள்ளாடுகளை வளர்க்கவும் கொட்டகை அமைப்பது மிக அவசியம். கொட்டகைகளை மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டகை சுத்தமாகவும், காற்றோட்டம், வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். கொட்டகையின் கூரையை பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அமைக்கலாம். அஸ்பெஸ்டாஸ் கொண்டும் கூரையை அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு மேற்காகவும், அகலப் பகுதி வடக்கு தெற்காகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் கொட்டகையினுள் நல்ல காற்றோட்டமும், குறைவான சூரிய வெப்பத்தையும் பெறலாம்.
கொட்டகை அமைப்பு:  கொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டு அமைத்தால் உயரம் 10-12 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். பிற பொருள்களைக் கொண்டு கூரை அமைத்தால், உயரம் 8-10 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி 1 அடி உயரத்தில் சுவர் அமைத்து, அதன் மீகு 5 அடி உயரத்திற்கு கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத்தினால் ஆன தட்டிகளை அமைக்கலாம். கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக் கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கு ஏறத்தாழ 12-15 சதுர அடி இடவசதி தேவை. எனவே, 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 600 சதுர அடி இடவசதி அவசியம். கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருந்தால், மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும் "கொட்டில்" முறையில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதி கொட்டகையை ஒட்டிய திறந்த வெளி பகுதியில் கொடுக்கப்பட வேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.
 கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிக பட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி தடுப்புகள் அமைப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப 20 அடிக்கு குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது.  கொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைத்தாலும் தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் நிரந்தரமான ஒன்று. துத்தநாகத் தகடு (தகரம்) கொண்டும் கூரை அமைக்கலாம்.
சல்லடைத் தரை அல்லது பரண்மேல் ஆடு வளர்ப்பு:
 உயர் ரக ஆடுகளை வைத்திருப்போர் சல்லடைத்தரை அமைப்பு முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 3 முதல் 4 அடி உயரத்தில் 1 முதல் 2 அடி அங்குல அகலம் கொண்ட மரச்சட்டங்களை 1 அங்குல இடைவெளி விட்டு வரிசையாக அடிக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகள் வழியாக கீழே விழ வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கீழே விழுந்து விடும். இதன் மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்க வழி வகுக்கும். இம்முறையில் கொட்டகையினை பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். இம் முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்த பிறகு அகற்றினால் போதும்.
இடவசதி:   குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு  10 முதல் 15 சதுர அடியும் மற்றும் கிடாக்களுக்கு 15முதல் 20 சதுர அடியும் இடவசதி கொடுக்க வேண்டும். அதிக அளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும், நோய்த்தாக்கமும் அதிகமாக இருக்கும். கொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளை தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே, கொட்டகையில் கம்பி வலை கொண்டோ அல்லது மூங்கில் தட்டிகள் கொண்டோ சிறு சிறு அறைகளாக பிரித்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.
தண்ணீர் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு :
 ஆடுகள் நீர் பருகுவதற்கு வட்ட வடிவிலான அல்லது நீள் செவ்வக வடிவிலான சிமெண்ட் தொட்டிகள் இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உள்பக்கம் சுண்ணாம்பு அடிக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை. இரும்புத்தகடு அல்லது மரத்தினால் ஆன
தீவனத் தொட்டிகளை அரை வட்ட வடிவில் அமைக்க வேண்டும். இதன் நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். 10 முதல் 12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை.
தீவனத் தொட்டியை ஆடுகள் அசுத்தம் செய்வதை தடுக்க தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர் தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்:  
வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதனால் அதன் சக்தி விரயமாவதோடு அதன் உடல் எடை குறையும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வைத்து கொடுக்கும் போது அதன் உடல் எடை வெகுவிரைவில் கூடுவதால் அதிக இலாபத்திற்கு ஆடுகளை விற்கலாம். ஆடுகளை 12 மாதங்கள் வரை காத்திருக்காமல் 6 முதல் 8 ஆவது மாதங்களிலேயே விற்பனை செய்யலாம். அதிக எடையுடைய குட்டிகளைப் பெறலாம். நோய் பாதிப்பு அதிகம் இருக்காது. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம்.பராமரிப்பு எளிது. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் எளிதாகிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும்.எரு சேமிக்கப்பட்டு நிலத்திற்கு உரமாகக் கிடைக்கின்றது என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/sheep.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/28/இலாபம்-தரும்-பரண்மேல்-ஆடுகள்-வளர்ப்பு-முறை-2735.html
2732 விவசாயம் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி: தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமா! DN Thursday, July 28, 2016 12:34 PM +0530 காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும்  ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது.
 இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்:
  தக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனன்யா ஆகியன ஆடிப்பட்டத்துக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், தக்காளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
 விதை நேர்த்தி - நாற்று நடல்: ஹெக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகளுடன் 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்த விதைகளை 1 மீ அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செமீ வரிசை இடைவெளிகளில் விதைக்க வேண்டும். பின்பு பார்கள் அமைத்து 25 நாள்கள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். அதற்கு முன்பு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
 நீர்-உரம் நிர்வாகம்: நாற்ற நட்ட 2-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு தொழுஉரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலா, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நாற்று நட்ட 15 ஆவது நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 30 ஆவது நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்.
 பயிர் பாதுகாப்பு: காய்ப்புழு மற்றும் புரொடீனியா புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைக்கலாம். புழு தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்க வேண்டும். காய்ப்புழுவுக்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்கலாம். புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.
 இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்: இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாக இருக்கிறது. வெண் ஈக்கள் மூலமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மிலி-ஐ 250 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 களை, பூச்சி, நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் 135 நாள்களில் ஹெக்டேருக்கு 35 டன் பழங்கள் மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/tomato.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/28/ஆடிப்பட்ட-காய்கறி-சாகுபடி-தக்காளி-சாகுபடியில்-அதிக-மகசூல்-பெற-வேண்டுமா-2732.html
2548228 விவசாயம் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி: தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமா மதுரை Thursday, July 28, 2016 12:33 AM +0530 காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்:

தக்காளி ரகங்களில் கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனன்யா ஆகியன ஆடிப்பட்டத்துக்கு ஏற்றவை. நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், தக்காளி சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்

விதை நேர்த்தி - நாற்று நடல்:

ஹெக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகளுடன் 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்வது அவசியம். இந்த விதைகளை 1 மீ அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செமீ வரிசை இடைவெளிகளில் விதைக்க வேண்டும். பின்பு பார்கள் அமைத்து 25 நாள்கள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும். அதற்கு முன்பு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

நீர்-உரம் நிர்வாகம்:

 நாற்ற நட்ட 2-ஆவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு தொழுஉரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலா, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும். நாற்று நட்ட 15 ஆவது நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 30 ஆவது நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

காய்ப்புழு மற்றும் புரொடீனியா புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைக்கலாம். புழு தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்க வேண்டும். காய்ப்புழுவுக்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்கலாம். புரொடீனியா புழுவிற்கு ஹெக்டேருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்:

இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாக இருக்கிறது. வெண் ஈக்கள் மூலமாக இந்த நச்சுயிரி பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மிலி-ஐ 250 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

களை, பூச்சி, நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் 135 நாள்களில் ஹெக்டேருக்கு 35 டன் பழங்கள் மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/0/w600X390/Tomato4.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/28/ஆடிப்பட்ட-காய்கறி-சாகுபடி-த-2548228.html
2548227 விவசாயம் லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை dn Thursday, July 28, 2016 12:33 AM +0530 நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது என தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் அ.செந்தில்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியது: கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டு ஆகியவற்றில் இருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்கவும், சிறந்த முறையில் வெள்ளாடுகளை வளர்க்கவும் கொட்டகை அமைப்பது மிக அவசியம். கொட்டகைகளை மேட்டுப்பாங்கான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டகை சுத்தமாகவும், காற்றோட்டம், வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். கொட்டகையின் கூரையை பனை அல்லது தென்னை ஓலை கொண்டு அமைக்கலாம். அஸ்பெஸ்டாஸ் கொண்டும் கூரையை அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு மேற்காகவும், அகலப் பகுதி வடக்கு தெற்காகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் கொட்டகையினுள் நல்ல காற்றோட்டமும், குறைவான சூரிய வெப்பத்தையும் பெறலாம்.

கொட்டகை அமைப்பு: கொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்டு அமைத்தால் உயரம் 10-12 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். பிற பொருள்களைக் கொண்டு கூரை அமைத்தால், உயரம் 8-10 அடி உள்ளவாறு அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி 1 அடி உயரத்தில் சுவர் அமைத்து, அதன் மீது 5 அடி உயரத்திற்கு கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத்தினால் ஆன தட்டிகளை அமைக்கலாம். கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக் கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கு ஏறத்தாழ 12-15 சதுர அடி இடவசதி தேவை. எனவே, 50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 600 சதுர அடி இடவசதி அவசியம். கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருந்தால், மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும் "கொட்டில்" முறையில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதி கொட்டகையை ஒட்டிய திறந்த வெளி பகுதியில் கொடுக்கப்பட வேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.

கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிக பட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி தடுப்புகள் அமைப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப 20 அடிக்கு குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது. கொட்டகையின் கூரை அஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைத்தாலும் தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் என்றாலும் நிரந்தரமான ஒன்று. துத்தநாகத் தகடு (தகரம்) கொண்டும் கூரை அமைக்கலாம்.

சல்லடைத் தரை அல்லது பரண்மேல் ஆடு வளர்ப்பு:

உயர் ரக ஆடுகளை வைத்திருப்போர் சல்லடைத்தரை அமைப்பு முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 3 முதல் 4 அடி உயரத்தில் 1 முதல் 2 அடி அங்குல அகலம் கொண்ட மரச்சட்டங்களை 1 அங்குல இடைவெளி விட்டு வரிசையாக அடிக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகள் வழியாக கீழே விழ வேண்டும். இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் கீழே விழுந்து விடும். இதன் மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்க வழி வகுக்கும். இம்முறையில் கொட்டகையினை பராமரித்தால் ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். இம் முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்த பிறகு அகற்றினால் போதும்.

இடவசதி: குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10 முதல் 15 சதுர அடியும் மற்றும் கிடாக்களுக்கு 15முதல் 20 சதுர அடியும் இடவசதி கொடுக்க வேண்டும். அதிக அளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும், நோய்த்தாக்கமும் அதிகமாக இருக்கும். கொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளை தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே, கொட்டகையில் கம்பி வலை கொண்டோ அல்லது மூங்கில் தட்டிகள் கொண்டோ சிறு சிறு அறைகளாக பிரித்து அதில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.

தண்ணீர் தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு :

 ஆடுகள் நீர் பருகுவதற்கு வட்ட வடிவிலான அல்லது நீள் செவ்வக வடிவிலான சிமெண்ட் தொட்டிகள் இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உள்பக்கம் சுண்ணாம்பு அடிக்க வேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை. இரும்புத்தகடு அல்லது மரத்தினால் ஆன தீவனத் தொட்டிகளை அரை வட்ட வடிவில் அமைக்க வேண்டும். இதன் நீளம் 5 முதல் 6 அடி இருக்கலாம். 10 முதல் 12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை.

தீவனத் தொட்டியை ஆடுகள் அசுத்தம் செய்வதை தடுக்க தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர் தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்:

வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்வதனால் அதன் சக்தி விரயமாவதோடு அதன் உடல் எடை குறையும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வைத்து கொடுக்கும் போது அதன் உடல் எடை வெகுவிரைவில் கூடுவதால் அதிக இலாபத்திற்கு ஆடுகளை விற்கலாம். ஆடுகளை 12 மாதங்கள் வரை காத்திருக்காமல் 6 முதல் 8 ஆவது மாதங்களிலேயே விற்பனை செய்யலாம். அதிக எடையுடைய குட்டிகளைப் பெறலாம். நோய் பாதிப்பு அதிகம் இருக்காது. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம்.பராமரிப்பு எளிது. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் எளிதாகிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வளர்க்க முடியும்.எரு சேமிக்கப்பட்டு நிலத்திற்கு உரமாகக் கிடைக்கின்றது என்றார்.

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/28/லாபம்-தரும்-பரண்மேல்-ஆடுகள்--2548227.html
2545654 விவசாயம் மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை செலவை குறைக்க வலியுறுத்தல் காஞ்சிபுரம் Saturday, July 23, 2016 03:46 AM +0530 மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விதைப் பரிசோதனை அலுவலர் ஹேமேந்திர குமார் பாண்டே வெளியிட்ட அறிக்கை:

ஆடிப் பட்டத்தில் சாகுபடியாளர்களுக்கு அதிக இடுபொருள் தேவைப்படுவது, மணிலா விதைக்கேயாகும். எனவே, தரமான விதையாக இருந்தால் தேவையானவற்றை மட்டும் பயன்படுத்தி விதைச் செலவை

குறைக்கலாம். மணிலாவைப் பொருத்தவரை, குறைந்தபட்ச முளைப்புத் திறன் 70 சதவீதம் இருந்தால் தான் ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

இவ்வாறு பராமரிக்கும்பட்சத்தில், ஒரு செடிக்கு 40 காய்கள் கிடைக்கும். இதனால் விவசாயிகள் தற்போது பெறுகின்ற மகசூலைவிட 50 சதவீதம் கூடுதலாகப் பெற முடியும்.

எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள மணிலா விதையில் அரை கிலோ அளவுக்கு விதை மாதிரி எடுத்துக்கொண்டு விதைப் பரிசோதனை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம்,

காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனை கட்டணத்துடன் நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/23/மணிலா-சாகுபடி-செய்யும்-விவச-2545654.html
2544240 விவசாயம் பலன் தரும் பனிவரகு! திருநெல்வேலி Thursday, July 21, 2016 12:26 AM +0530 திருநெல்வேலி: சிறுதானியங்கள் பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் குறுகிய காலத்தில் பலன் தரும் பனிவரகு சாகுபடி செய்து நிகர லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தோற்றம்: இது, தோராயமாக இந்தியாவில் தோன்றியிருக்கலாம். இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கலாம். இது இந்தியா, ஜப்பான், சீனா, எகிப்து, அரேபியா, மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மத்தியப்பிரதேசம், கிழக்கு உத்தரப்பிரதேசம், பிகார், தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

பருவம், ரகம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் மானாவாரிப் பயிராக செப்டம்பர், அக்டோபரில் பயிரிடப்படுகிறது. கோ 4, கே 2, கோ பிவி 5 ஆகிய ரகங்கள் ஏற்றவை. பாசனப் பயிராக பிப்ரவரி, மார்ச்சில் பயிரிடப்படுகிறது. கே 2, கோ 4, கோ பிவி 5 ரகங்கள் ஏற்றவை.

சிறப்பு அம்சம்: விதை உதிராத, சாயாத, வறட்சி தாங்கி வளரும் தன்மை கொண்டது. அதிக தூர், பரந்த சூழ்நிலைக்கு ஏற்ப வளரும். குறைந்த காலம், மானாவாரியில் இரட்டைப் பயிர் செய்யும் பகுதிக்கு ஏற்றது.

பயிர் மேலாண்மை: இது, வெப்ப காலநிலைப் பயிர். உலகின் வெப்பமான பகுதிகளில் பரவலாக வளர்ந்து வருகிறது. மிகவும் வறட்சி எதிர்ப்பு தன்மை உடையது, மழை பற்றாக்குறை பகுதிகளில் பயிரிடலாம். ஓரளவு அதிகப்படியான தண்ணீர் தேக்கத்தைத் தாங்கி வளரும்.

மண்: கரிசல் மண், களிமண் நிலங்களில் நன்கு வளரும். பெரிய மணல் போன்ற மண் ஏற்றதல்ல. அதிகப்படியான அங்ககத் தன்மையுடன் மணல் கலந்த களிமண் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்: முந்தைய பயிர் அறுவடைக்குப் பின்னர் வயலை நன்கு உழுது மண்ணை சூரிய ஒளியில் வெளிக்கொணர வேண்டும். இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். பருவமழை தொடங்கியதும் மண்ணை பிளேட் ஹோரோவால் 2 அல்லது 3 முறை உருவகப்படுத்தி சமப்படுத்த வேண்டும். கோடைக்காலப் பயிர் என்றால் நிலம் தயாரிக்கும் முன்பாக ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மண் தயாரான பின்பு ஹேரோ கலப்பையால் விதைப் படுக்கை தயாரித்து பின்னர் தளமிட வேண்டும்.

விதை, விதைப்பு: விதைகளை செரசான் 2.5 கிராம் வீதம் கிலோ ஒன்றுக்கு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். காரீப் பருவத்தில் பருவமழை தொடங்கியதும் ஜூலை மாதத்தின் முதல் 15 நாளுக்குள் விதைக்க வேண்டும்.

கோடைக்கால பயிர் என்றால் ஏப்ரல் மாதம் உகந்தது. விதை தெளிப்பு அல்லது வாய்க்காலில் 3 அல்லது 4 செ.மீ. ஆழத்துக்கு துளையிடுதல் முறையில் விதைக்கலாம். பயிர் நடவு இடைவெளி 25-க்கு 10 செ.மீ. அளவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரிசை விதைப்பு முறை முளைப்புத் திறனை அதிகரிக்கும். விதையளவைக் குறைப்பதுடன் இடையுழவுக்கு ஏற்றது. ஹெக்டேருக்கு 12 கிலோ விதை தேவை.

உர நிர்வாகம்: குறைந்த வயதுடைய பயிர் என்பதால் மற்ற தானியப் பயிர்களைவிடக் குறைந்த அளவே உரம் தேவை. நீர்ப்பாசனப் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். னஅரை மடங்கு தழைச்சத்து, முழு அளவான மணிச்சத்து, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள அரை மடங்கு தழைச்சத்தை முதல் முறை நீர் பாய்ச்சும்போது இட வேண்டும்.

நீர் மேலாண்மை: காரீப் பருவத்தில் பயரிடும்போது பொதுவாக நீர் பாய்ச்சுதல் தேவைப்படாது. தூர் பிடிக்கும் பருவத்தில் மண் உலர்ந்து காணப்பட்டால் ஒருமுறை நீர் பாய்ச்சலாம். கோடைக்காலப் பயிராகப் பயரிடும்போது மண்ணின் தன்மை, காலநிலைக்கேற்ப 2 முதல் 4 முறை நீர் பாய்ச்சலாம்.

30, 40 நாளுக்குப் பிறகு முறையே முதல், இரண்டாம் முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

களை கட்டுப்பாடு: விதைத்த 35 நாள் வரை வயலில் களையின்றி பார்த்துக்கொள்ள வேண்டும். 2 முறை 15 நாள் இடைவெளியில் கைகொத்து அல்லது சக்கர மண் வெட்டியால் களையெடுக்கலாம்.

நோய் கட்டுப்பாடு: தலை கரிப்பூட்டை நோய் பொதுவாக பனிவரகில் காணப்படும். இதை செரசான் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். அல்லது சூடான நீரில் 12 நிமிடங்கள் நனைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சில நேரங்களில் காணப்படும் பாக்டீரியா கீற்று நோயை 5 சதவீத மெக்னீசிய ஆர்சனேட் கொண்டு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம்.

பூச்சிக் கட்டுப்பாடு: தண்டு ஈயைக் கட்டுப்படுத்த திமெட் குருணை 15 கிலோவை நிலம் தயாரித்தலின்போது இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை: பெரும்பாலான பனிவரகு ரகங்கள் விதைத்த 65 நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். விதைகள் 3இல் 2 பங்கு பழுத்தவுடன் அறுவடை செய்யலாம். கையால் அல்லது மாடுகளைக் கொண்டு கதிரடிக்கலாம்.

மகசூல்: உயர்ந்த தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்வதன் மூலம் 20 முதல் 23 குவிண்டால் தானியம், 50 முதல் 60 குவிண்டால் வைக்கோல் பெறலாம்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/21/0/w600X390/pani.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/21/பலன்-தரும்-பனிவரகு-2544240.html
2544239 விவசாயம் அனைத்துப் பட்டங்களிலும் ஆமணக்கு! திருநெல்வேலி Thursday, July 21, 2016 12:25 AM +0530 திருநெல்வேலி: எண்ணெய்வித்துப் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடியாகும் ஆமணக்கைத் தேர்வு செய்யலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பருவம், ரகங்கள்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆமணக்கு சாகுபடி செய்யலாம். மானாவாரியாக ஆடிப்பட்டத்தில் (ஜூன் - ஜூலை) டிஎம்வி 5, டிஎம்வி 6 ரகமும், கலப்பினமாக டிவிஎம்சிஹெச் 1, ஒய்ஆர்சிஹெச் 1 ஆகிய ரகமும் பயிரிடலாம்.

இறவைப் பயிராக வைகாசிப் பட்டம் (மே - ஜூன்), கார்த்திகைப் பட்டம் (நவம்பர் - டிசம்பர்), பங்குனிப் பட்டம் (மார்ச்- ஏப்ரல்) ஆகியவற்றில் ஒய்ஆர்சிஹெச் 1 ரகம் பயிரிடலாம். தோட்டநிலத்தில் (வரப்பு) பல்லாண்டுப் பயிராக கோ 1 ரகம் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்: அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையால் 2 அல்லது 3 தடவை உழவேண்டும். மானாவாரி ரகங்களுக்கு 90-க்கு 60 செ.மீ. இடைவெளியும், இறவை ரகங்களுக்கு 90-க்கு 90 செ.மீ. இடைவெளியும் அவசியம். கலப்பினங்களில் மானாவாரிக்கு 120-க்கு 90 செ.மீ. இடைவெளியும், 150-க்கு 120 செ.மீ. இடைவெளியும் அவசியம். இறவையில் களிமண் உள்ள பகுதிகளுக்கு 150-க்கு 150 செ.மீ. அகன்ற இடைவெளி அளிக்க வேண்டும்.

விதைத் தேர்வு: சிறந்த தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி, பூஞ்சாண நோய்கள் தாக்கிய, உடைந்த விதைகளை நீக்கவேண்டும்.

விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில் விதைப்புக்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் 1 சதம் பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை, பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.

விதைப்பு: பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில், 4-க்கு 6 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை போதும்.

பாடு நிரப்புதல்: விதைத்த 15ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். அப்போதே குழிக்கு ஒரு செடி வீதம் விடுத்து பயிர் கலைத்தல் வேண்டும்.

உரம்: உழாத நிலத்தில் 12.5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிடவேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மானாவாரி பகுதிகளில் 100 சதவீத மணிச்சத்து, 50 சதவீத தழை, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

மீதமுள்ள அளவை ஒன்று அல்லது இரண்டு முறை தகுந்த ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும். இறவைப் பகுதிகளில், 100 சதவீத மணிச்சத்து, 50 சதவீத தழை, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள தழை, சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து விதைத்த 30, 60ஆவது நாளில் இட வேண்டும். ஹெக்டேருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.

களை நிர்வாகம்: ஹெக்டேருக்கு பென்டிமெத்தாலின் 3 லிட்டர் (அல்லது) ப்ளுக்ளோரலின் 2 லிட்டரை விதைத்த 3ஆம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 20, 40 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

அறுவடை: பயிரின் வயதைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துகள் காய்ந்திருந்தால் அறுவடை செய்யலாம். முற்றிய விதைக் கொத்தை இதர கொத்துகளைப் பாதிக்காதவாறு அறுவடை செய்ய வேண்டும். விதைகளை நிழலில் குவிக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.

காய்ந்த கொத்தை குச்சியால் அடித்து முத்துகளைப் பிரித்தெடுத்து, தூசியை நீக்க வேண்டும். விதை பிரித்தெடுக்கும் கருவியால் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/21/அனைத்துப்-பட்டங்களிலும்-ஆம-2544239.html
2540404 விவசாயம் லாபம் தரும் கன்று வளர்ப்பு! dn Thursday, July 14, 2016 12:22 AM +0530 கன்றுகளுக்கு முறையான தொடக்க தீவனமிடுதலும் பராமரிப்பும் அதன் ரூமென் எனப்படும் அசையூன் இரைப்பை வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த அசையூன் இரைப்பையின் வளர்ச்சியே பெண் கன்றுகளின் பிற்கால இனப்பெருக்க வயதை குறைத்து அதிக லாபம் ஈட்ட காரணமாகிறது.

கன்றுகள் பிறக்கும்போது அதன் அசையூன் இரைப்பை வளர்ச்சி அற்றதாக இருக்கும். அந்த சமயத்தில் பால் மட்டுமே அதற்கு முழு உணவாகும். பால் திரவ உணவாக இருப்பதால் உணவுக் குழாய்க்குரிய பள்ளம் (உணவுக்குழாயையும் செரிமான இரைப்பையையும் இணைக்கும் குழாய்) வழியாக எளிதில் அசையூன் இரைப்பையைக் கடந்து செரிமான இரைப்பையை சென்றடைகிறது. எனவே கன்று பாலை மட்டும் தன் முழு உணவாக உட்கொள்ளும் வரையில் அதன் அசையூன் இரைப்பை வளர்ச்சி பெறாது.

இரைப்பையின் வளர்ச்சி: அசையூன் இரைப்பையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக விளங்குபவை அசையூன் இரைப்பை நுண்ணுயிரிகளும் அதற்குத் தேவையான ஈரப்பதமும், அசையூன் நுண்காம்பும் அதன் உறிஞ்சும் தன்மையும் மற்றும் நிலை மாறும் கொழுப்பு அமிலம்.

நுண்ணுயிரிகள்: கன்றின் பிறப்பில் அவற்றின் அசையூன் இரைப்பையில் நுண்ணுயிரிகள் இருப்பதில்லை. மாறாக தண்ணீர் அல்லது தொடக்க தீவனம் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நுண்ணுயிரிகள் தனக்குத் தேவையான ஈரப்பதத்தை நீரிலிருந்து எடுத்துக்கொண்டு அசையூன் நுண்காம்பின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

நுண்காம்பின் முக்கியத்துவம்: நுண்காம்பானது, விரல் போன்ற மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட ஒரு அமைப்பு. இது அசையூன் இரைப்பையின் மேற்பரப்பில் பரவலாகக் காணப்படும். இந்த நுண்காம்பு உணவிலிருக்கும் அனைத்து ஊட்டச்சத்தையும் உடலுக்கு முறையாக கடத்துகிறது. இவ்வாறு கன்றின் இளவயதில் முறையாக எடுத்துக் கொள்ளப்படும் சத்தானது கன்றின் பிற்கால இனப்பெருக்க வயதை குறைக்கிறது.

நீர்: கன்று பிறந்த மூன்றாவது நாளில் இருந்தே நீரானதை தவறாமல் வழங்க வேண்டும். நீர், அசையூன் இரைப்பையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும், நுண்காம்பு வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமைகிறது.

நிலைமாறும் கொழுப்பு அமிலம்: கன்று தீவனம் எடுக்க துவங்கியதும், நுண்ணுயிரிகள் அந்தத் தீவனத்தை செரித்து, அதிலிருந்து ஊட்டச்சத்தையும், நிலைமாறும் கொழுப்பு அமிலத்தையும் வழங்குகிறது. இந்த நிலை மாறும் கொழுப்பு அமிலத்தை அசிடேட், பூயூட்டிரேட் மற்றும் ப்ரோபயனட் என மூன்றாகப் பிரிக்கலாம்.

இவற்றில் கன்று தீவனத்திலிருந்து பெறப்படும் பூயூட்டிரேட், அசையூன் இரைப்பை மற்றும் அதன் நுண்காம்பின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மாறாக புற்களிலிருந்து பெறப்படும் அசிடேட் அசையூன் இரைப்பை மற்றும் அதன் நுண்காம்பின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே கன்று பிறந்தது முதல் இரண்டு மாதங்களுக்கு புற்களை தவிர்த்தல் நல்லது.

தொடக்கத் தீவனம் கொடுக்கும் முறை: கன்று பிறந்த மூன்றாவது நாளில் பாலும் அதனுடன் சேர்த்து 100 கிராம் அளவு தீவனமும், தேவையான அளவு நீரும் வழங்க வேண்டும். ஆரம்பத்தில் கன்று குறைந்த அளவே தீவனம் எடுக்கும்.

தொடர்ந்து தீவன அளவை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும். கன்று தன் ஆறு வார வயது காலத்தில் நாள் ஒன்றுக்கு 900 முதல் 1000 கிராம் அளவு தீவனம் எடுக்க துவங்கும். அச்சமயத்தில் கன்றை பால் மறக்க செய்ய வேண்டும்.

அதிக தரமுள்ள, 16-20 புரதச்சத்து நிறைந்த, சுவையான தீவனத்தை வழங்குதல் அவசியம். சுவைக்காக வெல்லப்பாகு சேர்க்கலாம். இறுதியாக தீவன துணைமம் சேர்த்தல் ஓரணு ஒட்டுண்ணி நோயை தவிர்க்க உதவுகிறது.

பெண் கறவைக் கன்றுகளை குறைந்த செலவில் பராமரிக்கவும், பிற்காலத்தில் அதிக லாபம் ஈட்டவும் கன்று தொடக்கத் தீவனம் மற்றும் தேவையான அளவு நீர் வழங்குதல் மிகவும் அவசியம்.

இத்தகவலை கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை டாக்டர் மு.செந்தில்நாதன், உணவியல் துறை நிபுணர் அ.ரமாதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/14/0/w600X390/cow-calf.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/14/லாபம்-தரும்-கன்று-வளர்ப்பு-2540404.html
2540401 விவசாயம் துவரையில் நாற்று நடவு தொழில்நுட்பங்கள் dn Thursday, July 14, 2016 12:21 AM +0530 துவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்: மண் வளத்தைப் பாதுகாப்பதில் துவரை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரை பயிர், தனது சாகுபடி பருவத்தில் ஏக்கருக்கு சுமார் 8 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. அறுவடைக்குப்பின் இப் பயிரின் வேர்ப் பகுதிகள், உதிர்ந்த இலைகள் மண்ணின் பெüதிக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது.

துவரைப் பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் உழவியல் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்பயிரை, தனிப் பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடலாம்.

தற்போது, பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்க தாமதமாவதால், சாகுபடி பணிகள் ஜுலை மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, விதைப்பு தாமதமாவதால், இப் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், துவரையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு நாற்று நடவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.

நாற்றங்கால் தயாரிப்பு: இப் பருவத்துக்குப் பரிந்துரைக்கப்படும் கோ(ஆர்.ஜி.) 7, எல்ஆர்ஜி.41, வம்பன் 2, 3, பி.எஸ்.ஆர்.1 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். துவரை நடவுமுறை சாகுபடிக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பின், ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும்.

மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் உள்ள 6-க்கு 4 அளவுள்ள பாலிதீன் பைகளில் நிரப்பி, விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க 4 துளைகள் போடலாம். பின்பு விதைநேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாள்கள் பராமரிக்கப்பட வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்யலாம்.

நடவு செய்தல்: தனிப் பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2904 பயிர்/ஏக்கர்), ஊடுபயிர் சாகுபடிக்கு 6-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2420 பயிர்/ஏக்கர்) எடுக்க வேண்டும்.

நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன் குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்து, உடன் நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப் பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் மேற்கொள்ளலாம். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.

நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன், மானாவாரி சாகுபடியாக இருந்தால் ஏக்கருக்கு 11 கிலோ யூரியா, 62 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 124 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 16 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 4 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும். நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு குருத்தைக் கிள்ளிவிடுவதால், பக்க கிளைகள் அதிகரித்து கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.

நடவு முறை சாகுபடியின் நன்மைகள்: நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். அதிக ஆழத்தில் செய்யப்படுவதால் வேர் வளர்ச்சி அதிகமாவதோடு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறையில் செய்யப்படுவதால், பயிர்ப் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் மேற்கொள்ள முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி மற்றும் போதிய அளவு நீர்ப் பாசனம் அளிப்பதால், நிலம், காற்று, ஈரப்பதம் மற்றும் பயிர் சத்துகள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்குக் கிடைப்பதால், பயிர் மகசூல் அதிகரிக்கிறது. பக்கவாட்டுக் கிளைகள் அதிக அளவில் உருவாவதன் மூலம் அதிகக் காய்கள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்கிறது. எனவே, நாற்று நடவு முறையில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் துவரை சாகுபடி செய்து அதிக விளைச்சலைப் பெற்று லாபம் அடையலாம் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/14/0/w600X390/thuvarai.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/14/துவரையில்-நாற்று-நடவு-தொழில-2540401.html
2536757 விவசாயம் பட்டுப் புழு, மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் காஞ்சிபுரம் Thursday, July 7, 2016 12:35 AM +0530 காஞ்சிபுரம்: பட்டுப் புழு மூலம் பட்டுக் கூடு தயாரிப்பதாலும், அதற்குத் தேவையான மல்பெரி செடிகளை உற்பத்தி செய்வதன் மூலமும், ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கும் குறையாத லாபம் பெற முடியும் என்று பட்டுப் பண்ணை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல் பகுதியில் அரசின் பட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இந்தப் பண்ணையில் 1,30,000 மல்பெரி செடிகள் உள்ளன. இந்தப் பண்ணை மூலம் பட்டுப் புழு உற்பத்தி செய்வது தொடர்பாக 24 நாள் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் விவசாயிகளுக்கும், பட்டுப் புழு வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கும் பட்டுப் புழு, மல்பெரி செடி நாற்றுகள் விற்கப்படுகின்றன. பட்டுப் புழு உற்பத்தியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அரசின் மூலம் பல்வேறு மானிய உதவிகளும் பெற்றுத் தரப்படுகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பட்டுப் புழுக்களையும், அதற்குத் தேவையான மல்பெரி செடிகளையும் வளர்த்து அதிக லாபம் ஈட்டலாம் என்று பட்டுப் பண்ணை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் பட்டுப் புழுக்களை வளர்க்க வேண்டுமானால் மல்பெரி செடிகளை வளர்க்க வேண்டும். மல்பெரி நாற்றுகள் காஞ்சிபுரம் விச்சந்தாங்கல் பகுதியில் உள்ள அரசுப் பட்டுப் பண்ணைகளில் கிடைக்கிறது. இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டுப் பண்ணைகளிலும் கிடைக்கின்றன. ஒரு செடி ரூ. 1.50 என்ற விலையில் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 5,240 செடிகள் தேவைப்படும். இந்தச் செடிகளை வாங்கி வந்து நட்டு, மூன்று மாதங்கள் வளர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்கள் வளர்த்தால், அவை பட்டுப் புழுவுக்கான உணவாக தயாராகிவிடும். இவை 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வளர்ந்து பயன் கொடுக்கக்கூடியவை ஆகும்.

இந்த மெல்பெரி செடி வளர்ப்பதற்கு 60 நாள்கள் ஆகும்போதே பட்டுப்புழு வளர்ப்பதற்கான ஒரு கூரைக் கொட்டகையையும், அலமாரிகள் போன்று சட்டங்களை போட்டு படுக்கைகளையும் (ரேக்) அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாள்கள் வளர்ந்த பட்டுப் புழுக்கள் அந்தந்த அரசு பட்டுப் பண்ணைகளிலேயே கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு வந்து, அந்த ரேக்குகளில் விட்டு வளர்ந்துள்ள மல்பெரி செடிகளை அதன் மேல் போட வேண்டும். அதனை பட்டுப் புழுக்கள் உண்ண ஆரம்பிக்கும். முதலில் குறைவாக உண்ணும் புழுக்கள் 20 நாள்களை நெருங்கும்போது அதிக அளவில் உண்ணுவதுடன் 24 நாள்கள் கடந்த பின் கூடு கட்டும். அந்த கூடுகள்தான் பட்டு நூலுக்குத் தேவையான மூலப்பொருளாகும். ஒரு ஏக்கர் மல்பெரி செடிக்கு தேவையான புழுக்களை வளர்ப்பதன் மூலம், மாதம்தோறும் 100 கிலோ கூடுகளை எடுக்க முடியும்.

ஒரு கிலோ பட்டுக் கூடுகள் ரூ. 920-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் மாதத்துக்கு ரூ.92 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. செலவு, ஆட்கள் கூலி ஆகியவை கழிக்கப்பட்டால் கூட மாதம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரத்துக்கு குறைவில்லாத வருமானம் கிடைக்கும் என்று பட்டுப்புழு வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் விச்சந்தாங்கல் பட்டுப்பண்ணை ஆய்வாளர் அலெக்ஸாண்டரிடம் கேட்டபோது அவர் கூறியது:

பட்டுப் புழு வளர்ப்பதற்கு முதலில் மல்பெரி செடி வளர்ப்பது, கொட்டகை அமைப்பது ஆகியவற்றுக்குத்தான் அதிக செலவு ஆகும். ஆனால் அதற்கும் அரசு சார்பில் பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக 1,000 சதுர அடியில் கொட்டகை அமைப்பவர்களுக்கு ரூ.87,500 மானிய உதவி அளிக்கப்படுகிறது. இதை அமைப்பதற்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் செலவாகும். இதேபோல் மருந்துகள், மோட்டார் உள்ளிட்டவற்றுக்கும் மானிய உதவிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு முறை செலவு செய்துவிட்டால், மாதம்தோறும் வருமானம் கொடுக்கும். இந்த பட்டுக் கூடுகளை அரசே கொள்முதல் செய்வதால் விற்பனையில் எந்தச் சிக்கலும் இல்லை. இந்தக் கூடுகளில் இருந்து தான் பட்டு நூல்கள் தயாரிக்கப்படுகினறன.

தற்போது பட்டுக் கூடுகள் கிலோ ரூ.920-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு ஏக்கரில் மல்பெரி செடி வளர்த்து, அதில் உள்ள தழைகள் மூலம் பட்டுப் புழு வளர்த்தால் 1,600 கிலோ பட்டுக் கூடுகள் எடுக்க முடியும். இது விலை மிகவும் குறைந்து கிலோ ரூ.200-க்கு எடுக்கப்பட்டு, 100 கிலோ எடுக்க முடிந்தால் கூட ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கும். ரூ. 80 ஆயிரம் செலவு போனால் கூட, ரூ. 1.2 லட்சம் லாபம் கிடைக்கும். இது விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாகும். உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் அதிகம் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். இதற்குத் தேவையான பயிற்சிகளை, காஞ்சிபுரம் பட்டுப் பண்ணை மூலம் அளிக்க தயாராக உள்ளோம். பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், 94458 38713 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

 

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/07/பட்டுப்-புழு-மல்பெரி-உற்பத்-2536757.html
2536754 விவசாயம் பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் கட்டுப்பாடு:வேளாண்மை அதிகாரி தகவல் கோபி Thursday, July 7, 2016 12:35 AM +0530 கோபி: பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஒர் ஆண்டில் 2 லட்சம் டன் பயறு வகைகளான உளுந்து, பாசிப் பயறு, தட்டை, துவரை, கொள்ளு, அவரை, சோயாமொச்சை போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையோ ஏழு லட்சம் டன்கள் ஆகும். தமிழக மகசூல் திறன் ஹெக்டேருக்கு 340 கிலோவாக உள்ளது. ஆனால், இந்திய சராசரி மகசூல் திறன் 620 கிலோவாக இருக்கிறது. எனவே, பயறு வகைகளில் மகசூல் மற்றும் மகசூல் திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதில் மகசூல் குறைவுக்கும், பயறு சாகுபடிப் பரப்பு அதிகரிக்காமைக்கும் முக்கியக் காரணமாக இருந்து வருவது பூச்சி மற்றும் நோய்கள் ஆகும். சில முக்கிய பூச்சி, நோய்கள் குறித்து காண்போம்.

பயறு வகைகளைத் தாக்கும் பூச்சிகள்: பூ வண்டுகள், புள்ளிக்காய்ப் புழு, பச்சைக் காய்ப்புழு, கதிர் நாவாய்ப்பூச்சி, நீல வண்ணத்துப் பூச்சி ஆகியன முக்கியமானவையாகும். இதனை கீழ்க்கண்டவாறு எளிதில் கட்டுப்படுத்தலாம்.

கட்டுப்பாடு: பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த என்.பி.வி கரைசல் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி தெளிக்கலாம்.

பூ மற்றும் காய் பிடிக்கும் சமயத்தில் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கலாம். (5 கிலோ வேப்பங்கொட்டையை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து நன்கு அரைத்து அதை ஒரு துணியில் வடிகட்டி 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து இந்தக் கரைசலை தயார் செய்யலாம்)

பத்து லிட்டர் தண்ணீரில் 7.5 மில்லி இண்டக்சாகார்ப் அல்லது மானோகுரோடோபாஸ்-20 மில்லி என்ற அளவுகளில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிக்கலாம். ஸ்பினோசாட் என்ற மருந்தை ஏக்கருக்கு 65 மில்லி என்ற அளவில் தெளித்தும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள்: மஞ்சள் தேமல் நோய், மஞ்சள் கலந்த பழுப்பு நிற இலைகள் உண்டாகி எல்லா இலைகளும் காய்ந்து விடும். மஞ்சள் நிற தேமல் திட்டுகள் இலைகளில் காணப்படும்.

இலைகள் சுருங்கியிருக்கும். இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. வெள்ளை ஈக்கள் மூலம் ஒரு செடியிலிருந்து மற்ற செடிகளுக்குப் பரவுகிறது.

கட்டுப்பாடு: நோய் தாக்கிய பயிரை உடனுக்குடன் வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மானோகுரோடோபாஸ்- 200 மில்லி (அல்லது) டைமீதேயோட் - 200 மில்லி தெளிக்கலாம்.

வேர் அழுகல் நோய்: வேர்களில் பட்டை உறிந்து நார்போலக் கிழிந்து விடும். தண்டுப் பகுதியில் பூஞ்சான வளர்ச்சி இருக்கும். நோயுற்ற செடிகள் திட்டுத் திட்டாக மடிந்து விடும்.

தடுப்பு முறைகள், விதை நேர்த்தி: விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைக்கலாம். டி.விரிடி ஏக்கருக்கு 1 கிலோ அல்லது சூடோமோனாஸ் 1 கிலோ ஏதேனும் ஒன்றை தொழு உரத்தடன் கலந்து கடைசி உழவில் அடியுரமாக இடலாம்.

சாம்பல் நோய்: இது ஒரு பூசணத்தால் உண்டாகிறது. நோயுற்ற இலைகளில் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வெண்மை நிறத்துக்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி வாடிவிடும். காய்கள், பிஞ்சுகள் சுருங்கி, கருமை நிறமாகி விழுந்துவிடும்.

தடுப்பு முறைகள்: ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் - 100 கிராம் அல்லது நனையும் கந்தகம் ஒரு கிலோ இதில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம். இவ்வாறு பயறு வகைப் பயிர்களில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/7/0/w600X390/velan.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/07/பயறு-வகைப்-பயிர்களில்-பூச்ச-2536754.html
2514 விவசாயம் குறுவை பருவத்திற்கேற்ற புதிய ரகங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை நாகூர் ரூமி Tuesday, July 5, 2016 10:53 AM +0530

குறுவை பருவத்துக்கேற்ற புதிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் இராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் ரெ.பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

கோயம்புத்தூர் 51:

2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. தூர் பிடித்து சாயாத தன்மை கொண்டது.

ஹெக்டருக்கு 6,623 கிலோ விளைச்சல் அளிக்கவல்லது.  மத்திய சன்ன ரக வெள்ளை நிற அரிசி. குலைநோய்,  பச்சை தத்துப்பூச்சி மற்றும் புகையான் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்  கொண்டது.

எம்டியு 6:

2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகம் 110-115 நாள்களைக் கொண்ட குறுகிய கால ரகமாகும்.   எம்டியு 5 மற்றும் ஏசிம் இணைந்து உருவாக்கப்பட்ட ரகம்.  சராசரி மகசூலாக இறவையில் ஹெக்டருக்கு 6118 கிலோ. ஏடிடீ 43-ஐ விட 9.8 சதம் மற்றும் ஏடிடீ 45-ஐ விட 10.2 சதம் அதிக  மகசூல் தரவல்லது. இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் வெண்முதுகுப் பூச்சி  ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. இந்த ரகத்தை தமிழ்நாட்டில் சொர்ணாவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களிலும் ஏனைய குறுகிய கால ரகங்கள் சாகுபடி செய்யும் பகுதிகளிலும் பயிரிடலாம்.

நீண்ட சன்ன அரிசியை உடைய இந்த ரகம் சிறந்த சமையல் பண்புகளை உடையது. பச்சரிசியாக பொங்கல், அவல் மற்றும் பொரி தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.

திருப்பதிசாரம் 5 (டிபிஎஸ்5):

2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம். ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 6,300 கிலோ விளைச்சல் தரவல்லது. அம்பை 16 ரகத்தை விட 14 சதம் அதிக விளைச்சல் தரவல்லது.அம்பை 16 மற்றும் ஏடிடீ 37 இணைத்து உருவாக்கப்பட்டது.  118 நாள்கள் வயதுடையது.  தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு மற்றும் புகையான் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்  கொண்டது.  நல்ல அரவைத்திறன் கொண்ட  இந்த ரகத்தின் அரிசி குறுகிய தடிமனானது. அரிசியின் அமைலோஸ்  இடைப்பட்ட அளவில் இருப்பதால் சமைக்க உகந்தது.   இவ்வாறு அந்த பரிந்துரையில் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/4/w600X390/chandra.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/04/குறுவை-பருவத்திற்கேற்ற-புதிய-ரகங்கள்-வேளாண்-விஞ்ஞானிகள்-பரிந்துரை-2514.html
2513 விவசாயம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் முழுமையான செயல்பாட்டிற்கு வருவது எப்போது? நாகூர் ரூமி Monday, July 4, 2016 05:33 PM +0530

ரூ.10 கோடி செலவில் இந்தோ- இஸ்ரேல் தொழில்  நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தை, முழுமையான பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்தோ- இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 29 மகத்துவ மையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் காய்கறி மகத்துவ மையம் தொடங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

 சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மையத்தில், கூட்ட அரங்கு, சாலை வசதி, பசுமைக் குடில் உள்ளிட்ட பணிகள் ரூ.10.18 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய தோட்டக்கலை இயக்கத்துடன், தமிழக அரசின் 15 சதவீத நிதி உதவியுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு பணிகளையும் 2015ஆம் ஆண்டிற்குள் முடித்து, இந்த மையத்தை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்தபோதிலும், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், காய்கறி மகத்துவ மையத்தின் திறப்பு விழாவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆனாலும், திறப்பு விழா காணும் முன்பே, 26.5 லட்சம் குழித்தட்டு நாற்றுகளை (தக்காளி மற்றும் கத்தரி) விற்று ரூ.40 லட்சம் வருமானத்தை இந்த மையம் ஈட்டியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள செடிகளின் மூலம் ரூ.9.8 லட்சம் மதிப்பிலான காய்கறிகளையும் விற்பனை செய்துள்ளது.

  தற்போது வரை, விவசாயிகள், வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 10ஆயிரம் பேர் இந்த மையத்தை பார்வையிட்டுள்ளனர்.

 திறப்பு விழா நடந்தால் மட்டுமே பயன்:  இந்தியாவில், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மகத்துவ மையங்கள் ஏற்கனவே முழுமையான பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அதேபோல், ரெட்டியார்சத்திரம் மையத்திலும் முறைப்படி திறப்பு விழா நடத்தினால் மட்டுமே, சொட்டுநீர் பாசனம், நிலப் போர்வை அமைத்தல், நீர்வழி உரமிடல், குழித்தட்டு நாற்றின் நன்மைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு இஸ்ரேல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரிடையாக வந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிலை உருவாகும். 

 மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பயிற்சி மையத்தையும் விவசாயிகள் பயன்படுத்த முடியும். ஒரு நுழைவு வாயிலை கட்டுவதற்காக 8 மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

 வெளிநாட்டு (இஸ்ரேல்) தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த மையத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து காய்கறி மகத்துவ மையத்தின் அலுவலர் ஒருவர் கூறியது:  மையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் மின் விளக்கு பொருத்தும் பணியும், நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளும் முடிக்க வேண்டி உள்ளது.

 50 நாள்களில் இந்த பணிகள் முடிவைடந்த பின், முறைப்படி திறப்பு விழா நடைபெறும் என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/4/w600X390/agri.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/04/ரெட்டியார்சத்திரம்-காய்கறி-மகத்துவ-மையம்-முழுமையான-செயல்பாட்டிற்கு-வருவது-எப்போது-2513.html
2512 விவசாயம் கார் சாகுபடி பாதிக்கும் அபாயம்: கடனா, ராமநதி அணைகளைத் திறக்க வலியுறுத்தல் நாகூர் ரூமி Monday, July 4, 2016 05:31 PM +0530

கார் சாகுபடி பாதிக்கும் அபாயம் நிலவுவதால், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடனாநதி, ராமநதி அணைப் பாசனத்தில் கார் சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழை காலத்தில் சுமார் 100 நாள்களுக்கும் மேலாக கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியிருந்தன.

மராமத்துப் பணிகள்: இந்நிலையில் அணையின் மதகுகளில் கசிவு இருந்ததால் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாமல் தண்ணீர் வெளியேறி அணைகள் வறண்டு காணப்பட்டன. இதனால், தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்து அணைக்கு நீர்வரத்து இருந்தால்தான் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முடியும் என்ற நிலை உருவானது.

இதனிடையே, இவ்விரு அணைகளிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளபட்டு, மதகுகள் சரிசெய்யப்பட்டதால் நீர்கசிவு நிறுத்தப்பட்டுள்ளது.

நீர்மட்டம் உயர்வு: தற்போது,தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக பெய்து வருவதால் கடனாநதி, ராமநதி அணைகளிளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 57 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 99 கன அடியாகவும், அணைப் பகுதியில் மழையளவு 10 மி.மீ. அளவும் பதிவாகியிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 10 கன அடிதண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ராமநதி அணையில் 62 அடி நீர்மட்டம் ( கொள்ளளவு 84 அடி) உள்ளது. அணைக்கு நீர்வரத்து 35 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 11 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் கார் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8.5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தப்பிக்கும்: கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இன்னும் தாமதமாவதால் பயிர் அறுவடை நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கார் சாகுபடியில் கடனாநதி அணை மூலம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும், ராமநதி அணை மூலம் சுமார் 4.5 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/04/கார்-சாகுபடி-பாதிக்கும்-அபாயம்-கடனா-ராமநதி-அணைகளைத்-திறக்க-வலியுறுத்தல்-2512.html
2511 விவசாயம் திருநெல்வேலி: கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் ரூமி Monday, July 4, 2016 05:30 PM +0530

உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்களை விவசாயிகள் குழுவாக இணைந்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் பைந்தமிழ் உழவர் மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, உழவர் மன்றத்தை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:

தற்போதைய விவசாய முறைகள் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும் வகையிலேயே உள்ளன. விவசாயிகளுக்கு சாகுபடி முறைகள், இடுபொருட்கள், கடனுதவி என பல்வேறு விதமான உதவிகளை அரசு செய்கிறது. எனவே, விவசாயிகள் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட வேண்டும்.

அந்தந்தப் பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்தால், அதை எளிதில் சந்தைப்படுத்துவதோடு, அதிக விலைக்கு விற்பனை செய்யவும் முடியும். கடினமாக உழைத்து பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், இறுதியில் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் முழுமையாக அக்கறை காட்டுவதில்லை என்பதால் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில், விருத்தி வேளாண் ஆலோசனை மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாராயணன், திருவரங்குளம் வேளாண் உதவி இயக்குநர் எம். சக்திவேல், அம்புலி ஆறு விவசாய உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஆர். சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jul/04/திருநெல்வேலி-கரும்புத்-தோகையை-உரமாக்கி-மகசூலை-அதிகரிக்கலாம்-எனத்-தெரிவிக்கப்பட்டுள்ளது-2511.html
2510 விவசாயம் கரும்புத் தோகையை உரமாக்கலாம்; மகசூலை அதிகரிக்கலாம்! நாகூர் ரூமி Monday, July 4, 2016 05:27 PM +0530

திருநெல்வேலி: கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது:

தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது.

கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.50-லிருந்து 0.42 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.

மண்ணில் உள்ள நுண்துளைகளால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது; அங்ககத் தன்மை அதிகரிக்கிறது; ஊட்டச் சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.

உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா, ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாணங்களைப் பயன்படுத்தலாம். இதனுடன், ராக் பாஸ்பேட், ஜிப்சம் முதலியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கிய உரம் தயாரிக்க குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம். உலர்ந்த தோகை நீளமானது. இதைக் கையாளுவதும் குவிப்பதும் கடினம். எனவே, உலர்ந்த தோகைகளை சிறுசிறு துண்டுகளாக்கி பின்னர் பயன்படுத்தலாம். இதனால் அளவு குறைவதுடன், வெளிபரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளில், அதிக இலைப்பரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும்.

இது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியைப் பயன்படுத்தி அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம்.

கரும்புகளைத் துண்டுகளாக்கும் கருவியை இதற்குப் பயன்படுத்தலாம். தோகையைத் துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.

இடுபொருள்கள்: வேளாண் பல்கலைக்கழகம் "பயோமினரலைசர்' என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கிறது. 1 டன் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இதுதவிர, மற்றொரு இடுபொருள் சாணக் கரைசல். சாணக் கரைசலில் மக்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மக்கும் காலம் அதிகமாகிறது.

கோழி எரு, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைக்க ஆதாரமாகப் பயன்படுகிறது. ஒரு டன் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் நீரில் கலந்து பின்னர், தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.

அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.

கழிவுகளை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமன்றி கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பிவிடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது. மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயமுண்டு. ஈரப்பதம், மக்குவதற்கு முக்கிய காரணி.

அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவை மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலரவிட வேண்டும். 24 மணிநேரத்துக்குப் பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம். மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அúஸாஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. 20 நாளில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டேருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என்றனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/4/w600X390/leaf.jpg https://www.dinamani.com/agriculture/2016/jul/04/கரும்புத்-தோகையை-உரமாக்கலாம்-மகசூலை-அதிகரிக்கலாம்-2510.html
2533065 விவசாயம் கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்! திருநெல்வேலி Thursday, June 30, 2016 12:25 AM +0530 திருநெல்வேலி: கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது:

தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது.

கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.50-லிருந்து 0.42 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.

மண்ணில் உள்ள நுண்துளைகளால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது; அங்ககத் தன்மை அதிகரிக்கிறது; ஊட்டச் சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.

உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா, ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாணங்களைப் பயன்படுத்தலாம். இதனுடன், ராக் பாஸ்பேட், ஜிப்சம் முதலியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கிய உரம் தயாரிக்க குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம். உலர்ந்த தோகை நீளமானது. இதைக் கையாளுவதும் குவிப்பதும் கடினம். எனவே, உலர்ந்த தோகைகளை சிறுசிறு துண்டுகளாக்கி பின்னர் பயன்படுத்தலாம். இதனால் அளவு குறைவதுடன், வெளிபரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளில், அதிக இலைப்பரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும்.

இது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியைப் பயன்படுத்தி அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம்.

கரும்புகளைத் துண்டுகளாக்கும் கருவியை இதற்குப் பயன்படுத்தலாம். தோகையைத் துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.

இடுபொருள்கள்: வேளாண் பல்கலைக்கழகம் "பயோமினரலைசர்' என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கிறது. 1 டன் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இதுதவிர, மற்றொரு இடுபொருள் சாணக் கரைசல். சாணக் கரைசலில் மக்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மக்கும் காலம் அதிகமாகிறது.

கோழி எரு, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைக்க ஆதாரமாகப் பயன்படுகிறது. ஒரு டன் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் நீரில் கலந்து பின்னர், தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.

அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.

கழிவுகளை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமன்றி கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பிவிடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது. மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயமுண்டு. ஈரப்பதம், மக்குவதற்கு முக்கிய காரணி.

அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவை மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலரவிட வேண்டும். 24 மணிநேரத்துக்குப் பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம். மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அúஸாஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. 20 நாளில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டேருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என்றனர்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/30/0/w600X390/leaf.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/30/கரும்புத்-தோகையை-உரமாக்கலா-2533065.html
2533064 விவசாயம் வருவாய்க்கு வழிவகுக்கும் வாத்து வளர்ப்பு! திருநெல்வேலி Thursday, June 30, 2016 12:24 AM +0530 திருநெல்வேலி: தமிழகத்தில் வருவாய் தரும் வேளாண் தொழில்களில் வாத்து வளர்ப்பும் ஒன்று. இந்தியாவின் வட மாநிலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் வாத்து வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், தென்னிந்தியாவில் வாத்து வளர்ப்பு இன்றளவும் உள்ளது. வாத்து முட்டைகளுக்கு கேரளம், ஆந்திரம் மாநிலங்களில் மக்களிடையே அதிக தேவை உள்ளது. இதுதவிர வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் வாத்து முட்டைகள் ஏற்றுமதியாகின்றன.

வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிடும். சாதாரணமாக வாத்து முட்டை 65 - 70 கிராம் எடை இருக்கும். 5 - 6 மாத வயதில் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடத் தொடங்கியதும் 5 முதல் 6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும். குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாள்தோறும் காலை ஒருமுறையும், மாலை இருமுறையும் தீவனம் அளித்தல் சிறந்தது.

நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சி) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை.

முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ. அகலம், 45 செ.மீ. ஆழம் 30 செ.மீ. உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம். மக்காச்சோளம், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, எள் பிண்ணாக்கு, சோயாபீன் துகள், உலர்த்தப்பட்ட மீன், கடற்சிற்பி ஓடுகள், தாது உப்புக்கலவை, உப்பு போன்றவற்றை முட்டையிடும் வாத்துகளுக்கு அளிக்கலாம். ஒவ்வொரு 100 கி.கி. தீவனக் கலவையுடன் வைட்டமின் ஏ 600, வைட்டமின் பி2 600 மில்லி கிராம், நிக்கோட்டினிக் அமிலம் 5 கிராம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாத்துக் குஞ்சு பராமரிப்பு: வாத்துக் குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழக் குட்டையிலும், 29.5 அடி கூண்டுகளிலும் 16ஆவது வார வயதுவரை வளர்க்க வேண்டும். முதல் சில நாள்களுக்கு வெப்பக் கூட்டுக்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2 - 3 நாள்களுக்கு ஒருமுறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8 - 10 நாள்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2 - 3 வாரங்கள் வரைகூட வைத்திருக்கலாம்.

16 வாரங்களைக் கடந்த வாத்துகளை மிகவும் எளிதாகப் பராமரிக்க முடியும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாசன வயல்கள், நீர்நிலைகளின் கரைகள் போன்றவை அதிகம். இங்கு வாத்துகள் எளிதாக சென்றுவரும். சிறிய குட்டைகள் அமைத்துக் கொடுத்தால் அவற்றிலேயே முட்டையிடும் வாய்ப்பும் உள்ளது. வேளாண்மைக்கு பெரிதும் உதவுவதோடு, வருவாய்க்கும் வாத்து வளர்ப்பு உதவுகிறது. வாத்து வளர்ப்பில் தேவையான சந்தேகங்களை திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குச் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/30/0/w600X390/duc2.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/30/வருவாய்க்கு-வழிவகுக்கும்-வ-2533064.html
2529476 விவசாயம் கரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை! தருமபுரி Thursday, June 23, 2016 12:31 AM +0530 தருமபுரி: கரும்பின் வேர்ப் பகுதியைச் சுற்றி வளரக் கூடிய சுடுமல்லி எனும் ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாகப் பாதிக்கும். இதைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெற பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர்கள் ம.சங்கீதா, பா.ச.சண்முகம் ஆகியோர் கூறும் வழிமுறைகள்:

கரும்புப் பயிரின் வேர்ப் பகுதியைச் சுற்றி வளரக்கூடிய ஒட்டுண்ணி களை என்பது சுடுமல்லி ஆகும். இந்த களைச் செடியானது தனக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பயிர்களிலிருந்து பெற்றுக்கொண்டு வளரும். இந்த களைச் செடியின் விதைகள் கரும்பு நடவு செய்த 10 நாள்களுக்குப் பிறகு கரும்பு பயிர்களின் வேர்களிலிருந்து வெளிப்படக் கூடிய வேதிப்பொருளின் தூண்டுதலால் முளைக்க ஆரம்பிக்கும்.

இவற்றின் விதைகள் மண்ணில் 40 செ.மீ. ஆழத்தில் முளைத்து, மண்ணுக்கு அடியில் தண்டு மற்றும் வேர்ப்பகுதிகளை உருவாக்கும். இந்த செடியானது 3-7 நாள்கள் வரை தனித்து வளரும். இதன் தண்டுப் பகுதியிலிருந்து ஹாஸ்டோரியா எனும் குழாய் போன்ற அமைப்பை உருவாக்கி, பயிரின் வேர்ப் பகுதிக்குள் ஊடுருவி வளர ஆரம்பிக்கும். இவை கரும்புப் பயிரிலிருந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை உறிஞ்சிக் கொண்டு வளரும். இந்த ஒட்டுண்ணிக் களையானது மண்ணின் அடிப்பாகத்தில் 4-8 வாரங்கள் வரை வளர்ந்து, பின்பு மண்ணின் மேற்பகுதியில் சிறிய பச்சை நிற இலைகளைத் தோற்றுவிக்கும். பிறகு இவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்களைத் தோற்றுவித்து, செடிக்கு 1-15 விதைகளை உருவாக்கும். இந்த விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். எனவே, நீர், காற்று மற்றும் மனிதர்கள் வாயிலாக எளிதில் மற்ற இடங்களுக்குப் பரவும். இவற்றின் விதைகள் மண்ணில் 10-15 ஆண்டுகள் வரை நல்ல முளைப்புத் திறனுடன் இருக்கும்.

கரும்பில் இந்த ஒட்டுண்ணி களையின் பாதிப்பு கரும்பு பயிர் பாதிக்கப்பட்ட பின்பு, அதாவது களை முளைத்து 4-8 வாரங்களுக்குப் பிறகுதான் வேர்ப்பகுதியைச் சுற்றி தெரியவரும். அவ்வாறு, தெரியவரும்போது, அவை பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி பயிரில் மகசூல் இழப்பை ஏற்படுத்திவிடும்.

இந்தக் களையானது நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பயிர்களிலிருந்து பெற்றுக் கொள்வதால், கரும்பின் வளர்ச்சி குறைந்து, பழுப்பு நிறமடைந்து, காய்ந்து விடும்.

இந்த அறிகுறிகள் பயிர்களில் தென்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வறட்சி பாதிப்பினால் ஏற்படும் அறிகுறிகள் போன்று காட்சியளிக்கும்.

கரும்பில் சுடுமல்லியின் பாதிப்பால் 20-70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஒட்டுண்ணிக் களையானது சோளம், மக்காச்சோளம் மற்றும் நெல் ஆகிய தானியப் பயிர்களில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது இந்த ஒட்டுண்ணி களைச்செடியின் பாதிப்பு தருமபுரி மாவட்டத்தில் பரவலாகத் தென்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்: சுடுமல்லி ஒட்டுண்ணி களை வகையைச் சார்ந்தது. கரும்பில் இதன் பாதிப்பினை முற்றிலுமாக அகற்ற இயலாது. ஆகையால், களைகளின் எண்ணிக்கையும் பாதிப்பையும் குறைக்க இயந்திர, ரசாயன மற்றும் உயிரியல் முறை ஆகியவை இணைந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.

கரும்பு நடவு செய்யும்போது நல்ல சுத்தமான சுடுமல்லி பாதிக்காத வயல்களிலிருந்து விதை (அ) விதைக்கரணைகளைச் சேகரித்து உபயோகிக்க வேண்டும்.

வயல்வெளியை களைகள் இல்லாமல் கைக்களை (அ) இயந்திரங்களைக் கொண்டு களை எடுத்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

சுடுமல்லி களையானது விதைகள் மூலம் பெருக்கம் அடையக் கூடியது. எனவே, பூ பூப்பதற்கு முன்பு கையினால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். தாமதப்படுத்தும்போது, அதாவது பூ பூத்த 2-3 வாரங்களில் விதைகள் உருவாகிவிடும். அந்த தருணத்தில் விதைகள் செடியிலிருந்து மண்ணில் விழாதவாறு பிடுங்கி எடுத்துவிட வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் இந்த களைச் செடிகளின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு குறைந்துவிடும்.

இந்த ஒட்டுண்ணிக் களைச் செடியை கையினால் நீக்கும்போது மீண்டும், மீண்டும் அதிகளவில் தூர்களுடன் வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, இதற்கு பதிலாக 2, 4, டி சோடியம் உப்பு என்ற களை முளைத்த பின்பு இடும் களைகொல்லியை லிட்டருக்கு 5 கிராம் என்றளவில் செடிகளின், மீது நன்றாகப் படும்படி கைத்தெளõப்பான் கொண்டு தெளõக்க வேண்டும். இவ்வாறு தெளõப்பதன் மூலம் களைகளின் மேற்பக்க வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, விதை உற்பத்தியைத் தடைபடுத்துவதன் மூலம் களைகளின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பை கரும்பு மற்றும் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் தடுக்கலாம்.

மண் வளம் குறைந்த நிலங்களில் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து குறைபாடுள்ள நிலங்கள் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நிலங்களில் சுடுமல்லியின் பாதிப்பு அதிகம் தென்படும். எனவே, தொழு உரம், கம்போஸ்ட், தழைச்சத்தினை அளிக்கக்கூடிய ரசாயன உரங்கள் ஆகியவற்றை இட்டு மண் வளத்தை அதிகரித்து, பயிரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் வாயிலாக சுடுமல்லியின் வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கலாம்.

தானியப் பயிர்களான நெல், கரும்பு, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை தொடர்ந்து, சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பயிர் சுழற்சி முறையில் தட்டைப்பயிறு, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகிய மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தக் கூடிய பயறு வகைப் பயிர்கள் ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் சுடுமல்லியின் முளைப்புத் திறன் தடுக்கப்படுகிறது. மேலும், இவ் வகைப் பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யும்போது சுடுமல்லியின் வளர்ச்சி தடைபடுகிறது.

பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு முன்பு சுடுமல்லி பாதிக்கப்பட்ட வயலில் அதன் முளைப்புத் திறனை ஊக்குவிக்கும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களான சோளம், மக்காச்சோளம் மற்றும் நெல் ஆகியவற்றை சாகுபடி செய்து களைச் செடிகளை முளைக்க வைத்து பூ பூப்பதற்கு முன்பு மண்ணில் மடக்கி உழவு செய்து விட வேண்டும் (அ) அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெற முடியும் என்றனர்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/0/w600X390/sugarcane.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/23/கரும்பில்-சுடுமல்லி-ஒட்டுண-2529476.html
2529474 விவசாயம் நெல் சாகுபடியில் விதை நேர்த்தி நீடாமங்கலம் Thursday, June 23, 2016 12:30 AM +0530 நெல் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம். இதுபற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இராஜா.ரமேஷ், ரெ.பாஸ்கரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விதை நேர்த்தியென்பது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கவும், பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கவும் விதைக்கும் முன்பு விதைகளை ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதே ஆகும்.

விதை நேர்த்தி செய்வதால் உண்டாகும் பயன்கள்: விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கின்றது.

விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது.

பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி பல மடங்காகப் பெருகி செடிகளுக்கு நீண்ட காலப் பாதுகாப்பை தருகிறது.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்றவை பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தையும், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தையும் கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உதவி செய்கின்றன.

தரமான நெல் விதைகளைத் தேர்வு செய்யும் முறை: விதைகளின் முளைப்புத் திறனானது 80 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வயலில் அறுவடை செய்து விதைகளாகப் பயன்படுத்தும்போது, விதைகளை 1.2 சத உப்பு நீரில் (3 கிலோ கல் உப்பை 18 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்) இட்டு உப்புக் கரைசலில் மிதக்கும் எடை குறைந்த தரமற்ற விதைகளை நீக்கிவிட்டு மூழ்கிய விதைகளை மட்டுமே நன்கு கழுவி விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

ரசாயனக்கொல்லி விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் என்ற பூஞ்சாணக்கொல்லி மருந்தைக் கலந்து 24 மணி நேரம் வைக்கவும். பின்பு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஏக்கருக்குத் தேவையான விதைக்கு 200 கிராம் (ஒரு பொட்டலம்) மற்றும் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் (ஒரு பொட்டலம்) ஆகியவற்றை 500 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைகளோடு கலக்கி நிழலில் உலர்த்தி பின்பு விதைப்பதற்கு பயன்படுத்தவும்.

உயிர் எதிர்க்கொல்லி விதை நேர்த்தி: உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து விதைகளை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதை மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈர சாக்கிலிட்டு நிழலில் உலர்த்தி பின்பு இருட்டு அறையில் வைத்திருந்து 3 முதல் 5 மி.மீ. வரை முளை கட்டவேண்டும்.

விதைப்பதற்கு முன்பு முளைக் கட்டிய விதைகளை ஒரு பாக்கெட் (200 கிராம்) அசோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் (200 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நாற்றின் வேர்களை நனைத்தல்: ஒரு கிலோ சூடோமோனஸ் பாக்டீரியா கலவையை 10 சதுர மீட்டர் நாற்றங்காலில்

உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஓர் ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களைக் குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஊறவைப்பதால் அதன் செயல்திறன் கூடுகிறது.

சூடோமோனாஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியா மண்ணின் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் தண்ணீர் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் சூடோமோனாஸ் ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுவதால் பயிர்கள் செழித்து திரட்சியுடன் வளர்ந்து மகசூல் அதிகரிக்கின்றது. இத்துடன் பயிர்களில் எதிர்ப்புத் திறனைக் கூட்டி பூச்சித்தாக்குதலையும் ஓரளவு குறைக்கும்.

விதை நேர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விதைநேர்த்தி செய்தால் குறைந்தது 24 மணி நேரம் இடைவெளி விட்டு பின்பு தான் உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை உயிர் உரங்களுடன் கலக்கக் கூடாது. விதைகளை நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.

இத்தகைய மிக சிக்கனமான, எளிய தொழில்நுட்பமான விதை நேர்த்தி முறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய்களை வரும்முன் தடுத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். ஏனெனில் நல்ல விதையும், விதை நேர்த்தியும் மட்டுமே 10 முதல் 20 சதம் வரை மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/23/0/w600X390/rice5.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/23/நெல்-சாகுபடியில்-விதை-நேர்த-2529474.html
2184 விவசாயம் சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் திறக்கலாம்:மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரைன dn Thursday, June 16, 2016 01:05 AM +0530 தஞ்சாவூர் : சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் திறக்கலாம் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரை செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்தப் பேரவையின் தஞ்சைக் கிளை 11 ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் வழங்கல் திட்டக் கருத்துருவைத் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பி வருகிறது. நிகழாண்டிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து எதிர்பார்ப்பு, சாகுபடி பரப்பு, நீர்த் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, தயாரிக்கப்பட்ட பரிந்துரை கையேட்டை புதன்கிழமை வெளியிட்டனர்.
பிறகு, பேரவையின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் பி.கலைவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மேட்டூர் அணையில் நிகழாண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடக்க இருப்பாக 15 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. சாகுபடி காலமான ஜூன் முதல் ஜனவரி மாதம் வரை காவிரி நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்புப்படி 182 டி.எம்.சி. தண்ணீரும், 50% நம்பகத்தன்மையின்படி 179 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேட்டூர் அணை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு மொத்தம் 250 முதல் 265 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், குறுவை சாகுபடிக்கு ஜூலை மாதத்தில் நாற்றுவிட்டு சாகுபடி தொடங்கினால், நன்மையைவிட தீமைகளே அதிகம் ஏற்படும். எனவே, ஜூலை மாதத்தில் அணை திறப்பது சிறந்த செயல் அல்ல.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அணை திறக்கப்பட்டால், ஜனவரி மாதம் வரை சாகுபடிக்கு சுமார் 225 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அணை திறக்கப்பட்டால் 200 டி.எம்.சி. நீரைக் கொண்டும், வடகிழக்குப் பருவமழை நீர் மூலமும் சம்பா நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள இயலும்.
எனவே, நிகழாண்டு பயிர் சாகுபடிக்காக ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூர் அணையைத் திறக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி அணை திறக்கப்பட்டால், பாசனப் பகுதியில் நிலத்தடி நீர் மூலம் குறுவை பருவத்தில் 1 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 4.65 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி பருவத்தில் 80 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி எதிர்பார்க்கலாம். வாழை, கரும்பு போன்ற பிற பயிர்கள் 55 ஆயிரம் ஹெக்டேரில் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பா பட்டத்தில் குறைந்தது 2 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறை மேற்கொண்டால்தான், நீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி செய்ய முடியும்.
மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு அமைக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அணை திறந்தவுடன் தண்ணீர் கடைமடை பகுதி வரை உடனடியாகச் சென்றடையும் விதமாக ஆறு, கால்வாய்களை
முன்னதாகவே தூர் வாரி செப்பனிடவும், ஏரிகளைச் சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பரிந்துரையைத் தமிழக அரசுக்கு அனுப்பவுள்ளோம் என்றார் கலைவாணன்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/16/w600X390/farmae.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/16/சம்பா-நெல்-சாகுபடிக்காக-மேட்டூர்-அணையை-ஆகஸ்ட்-கடைசி-வாரத்தில்-திறக்கலாம்மூத்த-வேளாண்-வல்லுநர்-பேரவை-2184.html
2182 விவசாயம் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரகம் dn Thursday, June 16, 2016 01:03 AM +0530 திருவள்ளூர்: தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 ரக நெல்லைப் பயிரிட்டால் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும் என்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
திருவள்ளூரை அடுத்த திரூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.
இந்த நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிகேஎம் 13 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது. இந்த ரகமானது பிபிடி 5,204 ரகத்துக்கு மாற்று ரகமாகும். இதன் வயது 130 நாள்களாகும்.
இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்துக்கும் (செப்டம்பர் விதைப்பு) இதர மாவட்டங்களுக்கு சம்பா பட்டத்துக்கும் (ஆகஸ்ட்- செப்டம்பர்) விதைப்பு ஏற்றது.
இது ஹெக்டேருக்கு 5,938 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. மத்திம, சன்ன ரக வெள்ளை அரிசியைக் கொண்டது. அதிக அரைவைத்திறன், முழு அரிசி காணும் திறன், சிறந்த சமையல் பண்புகளுடன், நல்ல சுவையும் கொண்டது இந்த நெல்.
இது இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்புத்திறன் கொண்டது. நெல்கதிர் சாயாத தன்மை கொண்டது.
இந்த டிகேஎம் 13 நெல் ரகத்தின் விதையானது திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 4 டன் இருப்பு உள்ளது. இதன் விலை கிலோ ரூ. 30 ஆகும். ஐýலை முதல் வாரத்திலிருந்து விதை விநியோகிக்கப்பட உள்ளது.
விதை நெல் தேவைப்படுவோர், திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது 044-2762 0233 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/16/w600X390/rice.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/16/ஹெக்டேருக்கு-6-டன்-மகசூல்-தரும்-டிகேஎம்-13-நெல்-ரகம்-2182.html
2526264 விவசாயம் சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் திறக்கலாம்:மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரைன தஞ்சாவூர் Thursday, June 16, 2016 12:36 AM +0530 தஞ்சாவூர் : சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் திறக்கலாம் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்தப் பேரவையின் தஞ்சைக் கிளை 11 ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் வழங்கல் திட்டக் கருத்துருவைத் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பி வருகிறது. நிகழாண்டிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து எதிர்பார்ப்பு, சாகுபடி பரப்பு, நீர்த் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, தயாரிக்கப்பட்ட பரிந்துரை கையேட்டை புதன்கிழமை வெளியிட்டனர்.

பிறகு, பேரவையின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் பி.கலைவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மேட்டூர் அணையில் நிகழாண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடக்க இருப்பாக 15 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. சாகுபடி காலமான ஜூன் முதல் ஜனவரி மாதம் வரை காவிரி நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்புப்படி 182 டி.எம்.சி. தண்ணீரும், 50% நம்பகத்தன்மையின்படி 179 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேட்டூர் அணை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு மொத்தம் 250 முதல் 265 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், குறுவை சாகுபடிக்கு ஜூலை மாதத்தில் நாற்றுவிட்டு சாகுபடி தொடங்கினால், நன்மையைவிட தீமைகளே அதிகம் ஏற்படும். எனவே, ஜூலை மாதத்தில் அணை திறப்பது சிறந்த செயல் அல்ல.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் அணை திறக்கப்பட்டால், ஜனவரி மாதம் வரை சாகுபடிக்கு சுமார் 225 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அணை திறக்கப்பட்டால் 200 டி.எம்.சி. நீரைக் கொண்டும், வடகிழக்குப் பருவமழை நீர் மூலமும் சம்பா நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள இயலும்.

எனவே, நிகழாண்டு பயிர் சாகுபடிக்காக ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூர் அணையைத் திறக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி அணை திறக்கப்பட்டால், பாசனப் பகுதியில் நிலத்தடி நீர் மூலம் குறுவை பருவத்தில் 1 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 4.65 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி பருவத்தில் 80 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி எதிர்பார்க்கலாம். வாழை, கரும்பு போன்ற பிற பயிர்கள் 55 ஆயிரம் ஹெக்டேரில் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பா பட்டத்தில் குறைந்தது 2 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறை மேற்கொண்டால்தான், நீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி செய்ய முடியும்.

மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு அமைக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அணை திறந்தவுடன் தண்ணீர் கடைமடை பகுதி வரை உடனடியாகச் சென்றடையும் விதமாக ஆறு, கால்வாய்களை

முன்னதாகவே தூர் வாரி செப்பனிடவும், ஏரிகளைச் சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரையைத் தமிழக அரசுக்கு அனுப்பவுள்ளோம் என்றார் கலைவாணன்.

 

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jun/16/சம்பா-நெல்-சாகுபடிக்காக-மேட-2526264.html
2526262 விவசாயம் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரகம் திருவள்ளூர் Thursday, June 16, 2016 12:34 AM +0530 திருவள்ளூர்: தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 ரக நெல்லைப் பயிரிட்டால் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும் என்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

திருவள்ளூரை அடுத்த திரூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிகேஎம் 13 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது. இந்த ரகமானது பிபிடி 5,204 ரகத்துக்கு மாற்று ரகமாகும். இதன் வயது 130 நாள்களாகும்.

இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்துக்கும் (செப்டம்பர் விதைப்பு) இதர மாவட்டங்களுக்கு சம்பா பட்டத்துக்கும் (ஆகஸ்ட்- செப்டம்பர்) விதைப்பு ஏற்றது.

இது ஹெக்டேருக்கு 5,938 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. மத்திம, சன்ன ரக வெள்ளை அரிசியைக் கொண்டது. அதிக அரைவைத்திறன், முழு அரிசி காணும் திறன், சிறந்த சமையல் பண்புகளுடன், நல்ல சுவையும் கொண்டது இந்த நெல்.

இது இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்புத்திறன் கொண்டது. நெல்கதிர் சாயாத தன்மை கொண்டது.

இந்த டிகேஎம் 13 நெல் ரகத்தின் விதையானது திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 4 டன் இருப்பு உள்ளது. இதன் விலை கிலோ ரூ. 30 ஆகும். ஐýலை முதல் வாரத்திலிருந்து விதை விநியோகிக்கப்பட உள்ளது.

விதை நெல் தேவைப்படுவோர், திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது 044-2762 0233 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/16/0/w600X390/rice.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/16/ஹெக்டேருக்கு-6-டன்-மகசூல்-தரு-2526262.html
2522398 விவசாயம் குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் dn Thursday, June 9, 2016 12:37 AM +0530 நடவு வயலில் குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இராஜா. ரமேஷ், ரெ. பாஸ்கரன் ஆகியோர் தெரிவித்தது:

நடவு வயல் தயாரிப்பு கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 - 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். மேலும், களைகளை கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணிலுள்ள பூச்சிகளின் கூண்டுப்புழுப் பருவம், நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, 200 கிலோ ஜிப்சத்தை இட்டு நன்றாக மண்ணுடன் கலந்து சமன் செய்ய வேண்டும். பிறகு 10 கிலோ துத்தநாகசல்பேட் அல்லது 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

உரமிடுதல்: மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும் அல்லது பொதுப் பரிந்துரைப்படி ஏக்கருக்கு 50 : 20 : 20 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். அதாவது 109, 125 மற்றும் 34 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

தழைச்சத்து: 28 கிலோ யூரியாவை அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ள யூரியாவை தலா 27 கிலோ என்ற அளவில் நடவு நட்ட 15, 30, 45 ஆம் நாள்களில் மேலுரமாக இட வேண்டும்.

யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5: 4 :1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும். அப்போதுதான் யூரியாவிலுள்ள தழைச்சத்து உடனடியாக கிரகிக்கப்பட்டு பூக்கள் மலர்ந்து கருவுற்று அதிக எடையுடன் கூடிய நெல் மணியாக மாறி அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும். கடைசி முறையாக இடப்படும் யூரியா மட்டும் எதனுடனும் கலக்காமல் தனியாக இடப்பட வேண்டும். 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை முழுவதுமாக அடியுரமாக இடவேண்டும்.

சாம்பல் சத்து: 17 கிலோ பொட்டாஷ் உரத்தை அடியுரமாகவும், மீதமுள்ள 17 கிலோ பொட்டாஷ் உரத்தை நடவு நட்ட 30 நாளிலும் இடவேண்டும்.

களை நிர்வாகம்: நாற்று நட்ட 3 ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது பிரிட்டிலாகுளோர் அல்லது 45 கிராம் ஆக்ஸாடயர்ஜில் அல்லது 4 கிலோ பென்சல்ப்யூரான் மீதைல் பிரிட்டிலாகுளோர் மருந்துகளில் ஏதாவது ஒரு களைக் கொல்லியை 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவி களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நாற்று நட்ட 15 - 20 நாள்களுக்குள் 100 மில்லி பிஸ்பைரிபேக் சோடியம் அல்லது 30 கிராம் அசிம்சல்ப்யூரான் அல்லது 600 கிராம் 2, 4 டி சோடியம் இவற்றுள் ஏதாவது ஒரு மருந்தை 200 விட்டர் தண்ணீரில் கலந்து கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி இடும்போது வயலில் சிலிர்ப்பு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு 2 - 3 நாள்களுக்கு நீரை வடிக்கக் கூடாது.

நீர் நிர்வாகம்: நெல் வயலுக்கு தொடர்ந்து தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதனால் 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

நெற்பயிரின் மிக முக்கிய நீர்த் தேவை பருவங்களான தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம், பால் பிடிக்கும் பருவங்களில் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும்.

இலைவழி ஊட்டச்சத்து: யூரியா 1 சதவீதம் (2 கிலோ ஏக்கருக்கு), டிஏபி 2 சதவீதம் (4 கிலோ ஏக்கருக்கு), பொட்டாஷ் 1 சதவீதம் (2 கிலோ ஏக்கருக்கு) கலவையை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கதிர் உருவாகும்போது ஒரு முறையும், பின்பு 10 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிப்பதனால் நெல் மகசூல் அதிகரிக்கும்.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு: நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

பூச்சி, நோய்களுக்கு எதிர்ப்புத் திறனுள்ள ரகங்களை பயன்படுத்துவது: கோடை உழவு செய்தல் வேண்டும். அடியுராக வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும் வயலில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வயல், வரப்புகளில் களை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். நோய்த் தாக்கப்பட்ட செடிகளை உடனே பிடிங்கி அப்புறப்படுத்த வேண்டும்.

வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.

20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/9/0/w600X390/paddy.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/09/குறுவை-நெல்-சாகுபடி-தொழில்ந-2522398.html
2522394 விவசாயம் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்துப் பயிர்! ஜங்ஷன் - intro Thursday, June 9, 2016 12:37 AM +0530 புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பயறு வகைகள் சாகுபடியில் 90 சதவீதம் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையும், மண்வளமும் உளுந்து பயிர் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.

அதன் சாகுபடி குறித்து விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் வி.ரவி கூறியது:

உளுந்துப் பயிரில் வன்பன் 3, வம்பன் 4, வம்பன் (பிஜி) 5, வம்பன் (பிஜி) 6, வம்பன்(பிஜி) 7, டிடி 9 ஆகிய ரகங்கள் உள்ளன. கோடைப்பருவத்தில் வம்பன் 5, வம்பன் 6, டிடி 9 பயிரிடலாம். ஆடிப்பட்டத்தில் (ஜூன்,ஆகஸ்ட்) வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 பயிரிடலாம்.

விதையளவு: ஒரு ஏக்கருக்கு 8 கிலோ (ஹெக்டேருக்கு 20 கிலோ).

விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் பூஞ்சான் நோய்களை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கிலோ விதையில் கார்பண்டசிம் 20 கிராம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடெர்மோ விரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.

உயிர் உர விதை நேர்த்தி: வேர் முடிச்சுகள் காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை பூமியில் நிலை நிறுத்தும் பொருட்டு ஒரு ஹெக்டேருக்கு தேவையான 20 கிலோ விதைக்கு 3 பொட்டலங்கள் (200 கிராம்) ரைசோபியத்தை 750 மில்லி, ஆறிய அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதைப்புக்கு 30 நிமிடத்துக்கு முன்பு கலந்தும், அதனை நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும். பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தையும் கலந்து விதைக்கலாம்.

விதைப்பு: வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்குச் செடி 10 செ.மீ. இருக்கும்படி, இதற்கான விதைப்புக் கருவியை பயன்படுத்தி விதைப்பு செய்வதால், பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். வேளாண் மையங்களில் தேவையான விதைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

நீர் நிர்வாகம்: விதைத்த நாளில் முதல் தண்ணீரும், 3ஆவது நாளில் இரண்டாவது தண்ணீரும் பாய்ச்சுவதோடு, தொடர்ந்து மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாள்கள் இடை வெளியிலும், பூக்கும் பருவம் மற்றும் விதை பிடிக்கும் தருணங்களிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.

களைக்கட்டுப்பாடு: ஒரு ஹெக்டேருக்கு 2 லிட்டர் புளுகுளோரலின் அல்லது பெண்டிமெத்திலின் களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3 நாள்களுக்குள் தெளித்து களையை கட்டுப்படுத்தலாம். களைக்கொள்ளியை நிலத்தில் ஈரம் இருக்கும் போது பயன்படுத்த வேண்டும், தெளித்த மூன்று நாள்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரம் இடுதல்: ஹெக்டருக்கு 12.5 டன் தொழு உரமும், பாஸ்போபாக்டீரியா 10 பொட்டலங்களை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மண் மாதிரி பரிசோதனை முடிவின்படி அல்லது பொது சிபாரிசாக, இறவை பயிருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்தை இட வேண்டும். தேவையெனில் ஜிப்சம் 110 கிலோ இடுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறவும், திரட்சியான காய்கள் பெறவும் 2 சதவீதம் டிஏபி கரைசலை விதைப்பு செய்த 25ஆவது நாள் (பூக்கும் பருவம்) மற்றும் 15 நாள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும் போது இக்கரைசலை தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: நல்ல கோடை உழவு, வயல் வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூச்சிநோய் எதிர்ப்பு திறன் கொண்ட விதை ரகங்களை பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைத்தல், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை ஒழித்தல் வேண்டும்.

அறுவடை: விதைப்பு செய்த 65 முதல் 75 நாள்களுக்குள் செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி காய்ந்தவுடன் செடியைப் பிடுங்கி காய்களை பிரித்தெடுத்து சுமார் 10 சதவீதம் ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.

பயறுவகையை இளம் வெயிலில் உலர்த்தி மருந்து தெளிக்காமல் சேமித்து வைப்பதோடு, தேவையெனில் உளுந்தை உடைத்து சேமித்து வைத்தால் பூச்சிகளின் சேதாரம் இருக்காது.

உளுந்து பயறு வகைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மிகக்குறைந்த செலவில், குறைந்த நீருடன், குறுகிய காலத்தில் அதிகப்படியான லாபம் தரும் என்பதால், மேற்கூறிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உளுந்து பயிரிட்டு விவசாயிகள் நன்மை பெறலாம்.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jun/09/குறைந்த-செலவில்-அதிக-லாபம்-த-2522394.html
2518606 விவசாயம் லாபம் தரும் ஜாதிமல்லி! dn Thursday, June 2, 2016 12:55 AM +0530 திருநெல்வேலி: மலர் சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகள் ஜாதி மல்லி சாகுபடி செய்து, லாபம் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
 ரகங்கள்: கோ 1, கோ 2 இளஞ்சிவப்பு நிற மொட்டுகள் கொண்ட ரகங்கள் சிறந்தவை.
 மண்: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண், வண்டல் மண் ஏற்றது.
 களர், உவர் நிலங்கள் உகந்தவை அல்ல. போதிய அளவு வசதி, சூரிய வெளிச்சம் இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை.
 பருவம்: ஜூன் - நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம்.
 நிலம் தயாரித்தல்: நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழுது 30 செ.மீ. நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆறவிடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்இடவேண்டும்.
 பதியன் தயாரிப்பு: பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை கத்தியால் தண்டின் ஒரு பகுதியில் லேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர், அத்தண்டை வளைத்து வெட்டிய பாகத்தை மண்ணில் புதைக்கவேண்டும். பிறகு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
 சீவப்பட்ட பகுதியிலிருந்து சல்லி வேர் தோன்றும். 3 மாதம் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவுக்கு பயன்படுத்தலாம். நுனிக்குச்சிகளைப் பதியன்களாகத் தயாரித்து பனி அறையில் நட்டு எளிதில் வேர் பிடிக்கச் செய்யலாம்.
 வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம், இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர்பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாளில் வேர் தோன்றும்.
 நடவு: வேர் வந்த பதியன்களை தாய்ச் செடியிலிருந்து பறித்ததும் குழியின் மத்தியில் நடவேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் நடவேண்டும்.
 ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: செடிக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை ஆண்டுக்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும்.
 டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின் ஒருமுறையும், பின்பு ஜூன் - ஜூலை மாதங்களில் ஒருமுறையும் இடவேண்டும்.
 உரமிடும்போது செடியிலிருந்து 30 செ.மீ. தள்ளிவிட்டு நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு தேவையான அளவு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
 கவாத்து: செடிகளை ஆண்டுக்கு ஒருமுறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்யவேண்டும். தரையிலிருந்து 45 செ.மீ. உயரம் வரை வெட்டிவிடவேண்டும். செடிகளை குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். படரவிடக்கூடாது.
 செடிகள் நட்டு ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும். ஒரு ஹெக்டருக்கு இடவேண்டிய சத்துகளை பரிந்துரைப்படி இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகளையும் இட வேண்டும்.
 நீர் நிர்வாகம்: 10 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.
 ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: மொட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
 சிவப்பு சிலந்திப் பூச்சி: இவ்வகை பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பாதிக்கப்பட்ட இலைகள் பழுத்து வெண்மையான வலை பின்னியதுபோல் காணப்படும்.
 இதைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
 இலை வண்டு: இந்த வண்டுகள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் மஞ்சள் நிறமாகிப் பின்னர், பழுத்து உதிரும். மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
 இலைப்புள்ளி நோய்: ஜாதிமல்லியை அதிகம் தாக்கி சேதமேற்படுத்துவது இலைப்புள்ளி நோய். ஆரம்பத்தில் இலைகளில் சிறுசிறு கரும்புள்ளிகள் தோன்றி பிறகு இலை முழுவதும் பரவும். தாக்கப்பட்ட இலைகள் தீயால் கருகியதுபோல் காட்சி அளிக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
 அறுவடை: செடிகள் நட்ட ஓராண்டிலேயே பூக்கத் தொடங்கும். இருப்பினும் 2ஆம் ஆண்டிலிருந்துதான் சீராக மகசூல் கொடுக்கும். மொக்குகள் விரியும் முன்னதாகவே காலையில் பறிக்கவேண்டும். வாசனை எண்ணெய் தயாரிக்க மொக்குகள் மலர்ந்த பின்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.
 மகசூல்: ஹெக்டேருக்கு 11 டன் பூ மொக்குகளை விளைச்சலாகப் பெறலாம்.
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/2/0/w600X390/25.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/02/லாபம்-தரும்-ஜாதிமல்லி-2518606.html
2518605 விவசாயம் மண் வளத்தை அதிகரிக்க கோடை உழவு அவசியம் dn Thursday, June 2, 2016 12:53 AM +0530 புதுக்கோட்டை: தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்யலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கிடைக்கும் மழை கோடைமழை எனப்படுகிறது.
 இதைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். வெப்ப மண்டலத்தில் உள்ள நம் புவியானது, கோடைக் காலத்தில் மேல்மண் அதிக வெப்பமடைகிறது.
 இந்த வெப்பமானது கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, மேல் மண்ணை உழுது ஒரு புழுதிப்படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர் சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்திலுள்ள ஈரம் ஆவியாகாமல் இப்புழுதிப் படலம் தடுத்துவிடும்.
 கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. கோடை உழவால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும்.
 இதனால் நிலத்தில் நீர் இறங்கும் திறன் உயரும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. வயலிலுள்ள களைகள், குறிப்பாக கோரை போன்றவை கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் உலர வைத்து அழிக்கப்படுகின்றன. கோரைக் கிழங்குகளைக் கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
 நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காயவைக்கபட்டு அழிக்கப்படுகின்றன. பறவைகள் அவற்றை உண்டு, கூண்டுப் புழுக்களை அழிக்கின்றன.
 அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களிலுள்ள முந்தைய பயிரின் தாள்கள், வேர்கள், தட்டைகள் போன்றவை கோடை உழவின்போது மடக்கி விடப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
 கோடை உழவைச் சரிவுக்குக் குறுக்கே செய்தல் வேண்டும். அதனால் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் மழை பெய்கிறபோது அம்மழை நீரானது வேகமாக வழிந்தோடி மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 இதுகுறித்து குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் (பொ) பெ. கந்தசாமி கூறியது:
 கோடை உழவு செய்வதால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் நிலத்துக்குள் எளிதாகப் புகுந்து சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் உயரும். எனவே, உழவர்கள் தங்கள் பகுதியில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து மண்வளம், நீர்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்றார்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/2/0/w600X390/24.jpg https://www.dinamani.com/agriculture/2016/jun/02/மண்-வளத்தை-அதிகரிக்க-கோடை-உழ-2518605.html
1670 விவசாயம் மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை:  நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் kirthika Wednesday, June 1, 2016 03:53 PM +0530 மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை:  நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
2016 - 17ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 5 மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
அதே போல, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களையும், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இணைச் சீருடைகளை வழங்கும் திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 5  மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், இணைச் சீருடைகளையும் வழங்கினார்.
14
சாக்ரமெண்டோவில் மும்மூர்த்திகள் இசை விழா
மே 21ம் நாள் காலை 8-30 மணியளவில் சாக் பல்கலைக் கழகத்தின் காபிஸ்ட்ராநோ இசை அரங்கம் இசையில் நாட்டம் மிகுந்தவர்களால் நிரம்பி வழிந்தது. காரணம் சாக்ரமெண்டோ ஆராதனா நடத்திய சங்கீத மும்மூர்த்திகள் விழா.
சில ஆண்டுகளுக்கு முன் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டிலிருந்து மும்மூர்த்திகள் விழாவாக விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் இது இவர்களின் இரண்டாம் ஆண்டு இசை விழா ஆகும்.
விழா குழலிசை விதூஷி சிக்கில் மைதிலி சந்திரசேகரின்  சேதுலாரா  என்ற  பாடலுடன் துவங்கியது. பின்னர் கர்நாடக இசை வித்வான் சிக்கில் குருசரண் வழியொட்டி தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் சேர்ந்திசையாக இசைக்கலைஞர்களால் தக்க பக்க வாத்யங்களுடன் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சாக்ரமெண்டோ மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள பல இசைப்பள்ளிகளிலிருந்து வந்த மாணவ மாணவியர்கள் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் நேர்த்தியாகப் பாடி தங்கள் இசைத்திறனை காட்டி, தங்கள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பெருமை சேர்த்தனர். மேலும்  இசைக்கருவிகளில் பயிற்சி பெற்றவர்கள் தம் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.
தவிர, மேடையில், இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற, வளரும் கலைஞர்களின் தனி வீணை, வயலின் கச்சேரிகள் இடம் பெற்றன.
இன்னும் சில மாணவ, மாணவியர் சீர்காழி மூவர் என்றழைக்கப்பட்ட தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பாடி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.
மேலும் நாயன்மார்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் இயற்றிய தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. அவை கேட்போரின் செவிகளை நிறைத்து மகிழ்ச்சியூட்டின.
விழாவில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக சௌராஷ்டிர மும்மூர்த்திகளின் ஓர் அறிமுகம் என்ற ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை முனைவர் அர்ச்சனா வெங்கடேசன் பார்வையாளர்கள் கவனத்திற்கு வைத்தார்.
கூடவே வித்வான் சிக்கில் குருசரண் சௌராஷ்டிர மும்மூர்த்திகளான வெங்கட ரமண பாகவதர், கவி வெங்கடசூரி, நாயகி சுவாமிகள்  ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி  விளக்கமளித்தார். பாடல்களின் சிறப்பு அவை பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி இயற்றப்பட்டவையாகும்.
முத்தாய்ப்பாக, விதூஷி சங்கீதா சுவாமிநாதனின் இசைக்கச்சேரி சிறப்பாக நடந்தேறியது. வயலினிலில் வித்வான் சரவணபிரியன், மிருதங்கத்தில் ஸ்ரீ கோபால் ரவீந்த்ரன்  பக்க துணையாக இருந்தனர்.
சம்பந்தபட்டவர்களுக்கு விழாக்குழுவினர் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
14–

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ.713 கோடியை ஒதுக்கீடு செய்ய புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்  வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஏராளம். மாறி வரும் உணவுப் பழக்க வழக்கத்தால் இந்த நோய் பலரையும் தொற்றிக் கொண்டு உள்ளது.
ஆனால், அதே உணவுப் பழக்க வழக்கத்தால் மலச்சிக்கலை வென்று விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.
அதாவது,
தக்காளி பச்சடி, மல்லிச்சட்னி, பாசிப்பருப்பு பாயாசம், பீட்ருட் அல்வா, மூலிகை டீ, முருங்கைக் கீரை, காய்சூப், வெந்தய அடை, வெஜிடபுள் கோதுமை தோசை, முள்ளங்கி ஊறுகாய், காரட் பாயாசம், பிடிகருணை குழம்பு/மசியல் போன்ற உணவுகளை உண்டால் மலச்சிக்கல் விலகும் என இயற்கை வைத்தியம் தெரிவிக்கிறது.
9
கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்
புது தில்லி
உள்நாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதுதொடர்பான தகவல்களை புதன்கிழமை முதல் தாமாக முன்வந்து வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துளது.
இந்த முறையின் கீழ் வருமான வரி மற்றும் அபராதமாக மொத்தத் தொகையில் 45 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில், தாமாக முன்வந்து கருப்புப் பண விவரங்களை அளிப்பவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மொத்தத் தொகையில் இருந்து 45 சதவீதம் மட்டும் வரி மற்றும் அபராதமாக செலுத்தினால் போதும் என்றும் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, கருப்புப் பண விவரங்களைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது. 4 மாதங்களுக்குள் அதாவது, வரும் நவம்பர் மாதத்துக்குள் கருப்புப் பண விவரங்களைத் தெரிவிப்பவர்கள் மீது வழக்குகள் பதியப்படமாட்டாது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியதுடன், இந்த விவகாரம் குறித்து சில விளக்கங்களையும் வெளியிட்டது. இந்தத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை கூறுகையில், "கருப்புப் பணத்தைப் பதுக்கி வரி ஏய்ப்பு செய்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
10
குளத்தை காணவில்லை: அறிவிப்பு பலகையுடன் வந்த காந்தியவாதி
சி. உதயகுமார்
விராலிமலை: விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் குளத்தை காணவில்லை என்ற அறிவிப்பு பலகையுடன் வந்த காந்தியவாதியால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை வட்டத்தில் 1425-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வருகிற 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஜமாபந்தியில் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, வருவாய்த் துறையினரின் ஆய்வுக்கு பின் தீர்வு காணப்பட உள்ளது.
கொடும்பாளூர் குருவட்டத்திற்குட்பட்ட 16 வருவாய் கிராமங்களுக்கு புதன்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.
விராலிமலை வட்டாட்சியர் ஆர். சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் ஜெ. சரவணசதிஷ்குமார், துணை வட்டாட்சியரும், வட்ட வழங்கல் அலுவலருமான வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜமாபந்தி தொடங்கிய சிறிது நேரத்தில், கொடும்பாளூரைச் சேர்ந்த காந்தியவாதி என். செல்வராஜ் கொடும்பாளூரில் இருந்த சத்திரம் குளத்தை காணவில்லை என்றும் அக்குளத்தை கண்டுபிடித்து தருமாறு சைக்கிளில் அறிவிப்பு பலகையை  மாட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஜமாபந்தி முடிந்த பிறகு, மேற்கண்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக காந்தியவாதி என். செல்வராஜிடம் உறுதி அளித்தார்.
இதுகுறித்து காந்தியவாதி என். செல்வராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் சத்திரத்தின் ஊரின் மையப்பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சத்திரம் குளம் மற்றும் குளத்தின் நடுவே இருந்த கிணறும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வந்தது. தற்போது இக்குளம் ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கிணற்றையும், குளத்தையும் காணவில்லை, இதுகுறித்து கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது அதனைத்தொடர்ந்து, அம்மனு மனு மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது ஆனல் இதுவரை எவ்வித நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்ச்சத்தில் வரும் ஆக, 11-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அம்மனுவில் கூறியுள்ளார்.
11
மீனவர்களின் பிரச்னை என்று தான் தீருமோ? கருணாநிதி ஆதங்கம்
தமிழக மீனவர்களின் பிரச்னை என்று தான் தீருமோ என திமுக தலைவர் கருணாநிதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“Men may come and  Men may go, But I will go on for ever”  என்று   நதியொன்று பாடுவதாக ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் எழுதிய  ஒரு கவிதை உண்டு.  அதைப் போல இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும்,   நம்முடைய  மீனவர்கள் பிரச்சினைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படாது போல உள்ளது!   45 நாட்கள்  மீன் பிடித் தடைக் காலம் முடிந்து  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற  முதல் நாளே  தமிழக மீனவர்கள்  ஏழு பேர்  இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்றையதினம்  தான் கிழக்குக்  கடற்கரை பகுதி மீனவர்கள்  கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள்.
இவர்களில் பலர் கச்சத் தீவு அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,  அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர்  தமிழக மீனவர்களைத் தாக்கி, விரட்டி அடித்ததுடன்,  சேசு இருதயம் என்பவரின்  விசைப்படகையும், அதிலிருந்த  இராமேஸ்வரம்  மீனவர்கள் 7 பேரையும் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
மீன் பிடித் தடைக்காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற  முதல் நாளிலேயே  இவ்வாறு 7 மீனவர்களை இலங்கைக் கடற்படை இரக்கமின்றிப்  பிடித்துச் சென்றிருப்பது,  இந்திய மீனவர்கள் மத்தியில் கடும் வெறுப்பையும், விரக்தியையும்  ஏற்படுத்தியுள்ளது.  மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டதற்கு  இராமேஸ்வரம்  மீனவர் சங்கம் தனது கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும்  முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பதவியேற்றதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் நேரில் பார்ப்பதும், அவர்களிடம் மாநிலப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் விவாதிப்பதும் வாடிக்கை.  அதைப் பயன்படுத்திக் கொண்டு கூட  நம்முடைய முதலமைச்சர் டெல்லி சென்று  இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்போது சிறைப் பிடிக்கப்படும்  தமிழக மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்தை  எடுத்துக் கூறித் தீர்வு காண முயற்சி செய்திருக்கலாம்.
ஏற்கனவே  இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து  இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது.   இந்தத் தீர்வு எட்டப்படாத பிரச்னையில் தகுந்த முடிவு காண  இந்திய அரசு இனியாவது அக்கறை செலுத்துமா?  அல்லது எப்போதும் நடைபெறுகின்ற ஒரு தொடர் சம்பவம் தானே என்று அலட்சிய எண்ணத்தோடு  விட்டு விடுமா?
மாநில அரசு, மத்திய அரசை நேரடியாகச் சென்று சந்தித்து  மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்  இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு  ஒரு முற்றுப்புள்ளி வைத்திடத் தேவையான  அக்கறையோடும் அனுதாபத்தோடும் முயற்சிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
12

93வது பிறந்தநாளன்று என்ன செய்யப் போகிறார் கருணாநிதி
சென்னை
திமுக தலைவர் கருணாநிதி வரும் 3ம் தேதி 93வது பிறந்த தினத்தைக் கொண்டாட உள்ளார்.
அன்றைய தினம் காலை 7 மணியளவில் சென்னையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார் கருணாநிதி.
பிறகு 7.15 மணியளவில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
அதன்பிறகு, 9 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்து, கலைஞர் அரங்கத்தில் திமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் வாழ்த்துகளை பெற உள்ளார்.
இதையடுத்து, மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கிறார் கருணாநிதி.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/jun/01/மாணாக்கருக்கு-புத்தகம்-நோட்டு-சீருடை -நலத்திட்டத்தை-துவக்கி-வைத்தார்-முதல்வர்-1670.html
1060 விவசாயம் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் kirthika Thursday, May 26, 2016 07:23 PM +0530 அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதை மற்றும் இடுபொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்று வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2016-2017 ஆம் ஆண்டுக்கான சொர்ணவாரி பட்டத்தில் விதைக்க நெல்விதை கோ-51 ரகம் பூச்சி மற்றும் நோய்களை தாங்கி சிறந்த மகசூல் ஈட்டித் தருகிறது.

உளுந்து விலை வம்பம் - 4, நெல் வயலில் வரப்போரங்களில் விதைத்து இரட்டிப்பு லாபம் பெறலாம். கேழ்வரகு விதை, மணிலா நூண்ணூட்டக் கலவை, மணிலாவுக்கு சிறந்த முறையில் சத்துகளை அளித்து மணிலா திறட்சியாக வளர ஏதுவாக அமைகிறது.

நீலபச்சை பாசி, நெற்பயிருக்கு அடியுரமாக இட்டால் களைகளை கட்டுப்படுத்தி சிறந்த மகசூல் கிடைக்கும். வேப்பெண்ணெய் நெற்பயிரில் சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுகிறது. விவசாயிகள் வேளாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் விதை மற்றும் இடுபொருள்களை பெற்று பயன் அடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

]]>
https://www.dinamani.com/agriculture/2016/may/26/விவசாயிகளுக்கு-வேளாண்-இடுபொருள்கள்-1060.html