Dinamani - அரசுப் பணிகள் - https://www.dinamani.com/employment/goverment-jobs/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3167709 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் சவூதியில் மருத்துவப் பணிகளுக்கு ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்கலாம் Sunday, June 9, 2019 03:00 AM +0530 சவூதி அரேபிய நாட்டின் ரியாதிலுள்ள மருத்துவமனையின் பல்வேறு பணிகளுக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ரியாதிலுள்ள முன்னணி மருத்துவமனையில் மருத்துவர்கள் (ஆண்/ பெண்), பார்மஸிஸ்ட் (ஆண்/ பெண்), ஓ.டி. டெக்னிஸியன், எக்ஸ் ரே டெக்னிஸியன், லேப் டெக்னிஸியன் (ஆண்), பிஸியோதெரபிஸ்ட், செவிலியர்கள், ரேடியாலஜிஸ்ட், மைக்ரோ பயாலஜிஸ்ட், இ.சி.ஜி டெக்னிஸியன் போன்ற பல்வேறு காலிப் பணி இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 
மருத்துவர் பணிக்கு 55 வயதுக்கு மிகாமல் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மற்ற பணிகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
ஊதியமானது மருத்துவர்களுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ஆகவும் , மைக்ரோ பயாலஜிஸ்ட், எக்ஸ் ரே டெக்னிஸியன்களுக்கு ரூ.76 ஆயிரமாகவும், செவிலியர்கள், லேப் டெக்னிஸியன், இ.சி.ஜி டெக்னிஸியன், ஓ.டி டெக்னிஸியன், பார்மஸிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட், ரேடியாலஜிஸ்ட் போன்ற பணிகளுக்கு ரூ.67 ஆயிரமாகவும் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டு அனுபவத்துக்கு ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்படும். 
மேலும் இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்துக்குள்பட்டு வழங்கப்படும்.
இதற்குத் தகுதியுள்ளவர்கள் ovemclsn@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 14 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு  www.omcampower.com  என்ற இணையதளத்தையோ 044 - 2250 5886 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2019/jun/09/சவூதியில்-மருத்துவப்-பணிகளுக்கு-ஜூன்-14-க்குள்-விண்ணப்பிக்கலாம்-3167709.html
3109881 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை டெலிகாம் அதிகாரி வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! Friday, March 8, 2019 10:49 PM +0530  
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 198 இளநிலை டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இளநிலை டெலிகாம் அதிகாரி (JUNIOR TELECOM OFFICER (CIVIL & ELECTRICAL)

காலியிடங்கள்: 198 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/srd_jto_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.03.2019  

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2019/mar/08/பிஎஸ்என்எல்-நிறுவனத்தில்-இளநிலை-டெலிகாம்-அதிகாரி-வேலை-வேண்டுமா-உடனே-விண்ணப்பிக்கவும்-3109881.html
2693398 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: கடினமான உளவியல், எளிதான கணிதம்: இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு Sunday, April 30, 2017 01:09 AM +0530 தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 2.7 லட்சம் பேர் எழுதினர். குழந்தைகளுக்கான உளவியல் பகுதி வினாக்கள் கடினமாகவும் கணிதம், தமிழ் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
முதல் வகுப்பு முதல்...: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான (முதல் தாள்) தேர்வு நடைபெற்றது. இதற்கு கல்வித் தகுதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
இத்தேர்வுக்காக தமிழகத்தில் 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன் தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்லிடப்பேசி, கால்குலேட்டர், கைக்குட்டை போன்றவற்றைத் தேர்வர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு:சென்னை மாவட்டத்தில் அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளித் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பார்வையிட்டார்.
அசோக்நகர், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 10,147 பேரில் 9,657 பேர் தேர்வெழுதினர்.
அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய என்.பிரபாகரன், எஸ்.கோகிலா உள்ளிட்டோர் கூறியது:
தமிழ், ஆங்கிலம், கணிதம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (கல்வி உளவியல்), சூழ்நிலை அறிவியல் ஆகிய 5 பாடப் பகுதிகளில் தலா 30 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
உளவியல் பகுதியில் தானியங்கி நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளால் தூண்டும் செயல்களால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர், ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரான் தூண்டலைப் பெறும் பாகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. தமிழ் பிரிவில் சில இலக்கண வினாக்களுக்குப் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது.
கணிதப் பிரிவில்...கணிதப் பிரிவில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 8 சதவீத மதிப்புக்கூட்டு வரியுடன் ரூ.15,660 எனில், மதிப்புக்கூட்டு வரியின்றி அதன் விலை என்ன உள்பட சூழ்நிலை அறிவியல், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. கடந்த தேர்வுகளில் 30 சதவீதம் வரை பாடப் பகுதிக்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால், இந்த முறை 50 சதவீத வினாக்கள் அவ்வாறு கேட்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முதல் தாள் சற்று கடினமாகவே இருந்தது என்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான (இரண்டாம் தாள்) தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெறவுள்ளது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

 

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/30/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-முதல்-தாள்-கடினமான-உளவியல்-எளிதான-கணிதம்-இன்று-பட்டதாரி-ஆசிரியர்களுக்கான-2693398.html
2692904 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இன்று தொடக்கம்: 7.40 லட்சம் பேர் எழுதுகின்றனர் Saturday, April 29, 2017 10:07 AM +0530 தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
இன்றும் நாளையும் தேர்வு: இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (சனிக்கிழமை-ஏப்.29), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு (ஞாயிற்றுக்கிழமை-ஏப்.30) என இரண்டு நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசாணை காரணமாக...: அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ரூ.33.5 கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்குக் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறும் முதல் தாளுக்கு உரியதாகும்.
சென்னை மாவட்டத்தில்...: சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ள தாள்-1 தேர்வை, 27 மையங்களில் 10,147 தேர்வர்களும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ள தாள்-2 தேர்வை 88 தேர்வு மையங்களில் 31,235 தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
அதிக கண்காணிப்புடன்...: தேர்வு நடைபெறுவதைக் கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியைக் கண்காணிப்பதிலும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

 

]]>
ஆசிரியர் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பு,தமிழ்நாடு,TET Exam,Employment News,Tamilnadu https://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/29/ஆசிரியர்-தகுதித்-தேர்வுகள்-இன்று-தொடக்கம்-740-லட்சம்-பேர்-எழுதுகின்றனர்-2692904.html
2686706 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் பள்ளிக் கல்வித்துறையில் 6,390 இடங்கள் காலி: ஆண்டு திட்ட அறிக்கை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை Wednesday, April 19, 2017 01:27 AM +0530 பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள 6,390 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கால அட்டவணையை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
வருங்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழி மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஆசிரியர் பிரிவில்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பிரிவில் 2,119 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப மே 2-வது வாரத்தில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும். தேர்வு ஜூலை 2-ஆம் தேதியும், தேர்வு முடிவு ஆகஸ்ட்டிலும் வெளியிடப்படும்.
விரிவுரையாளர் பிரிவில்...பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,137 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 13-இல் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்.
சிறப்பு ஆசிரியர்கள் பிரிவில்: சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் 1,188 காலியாக உள்ளன. இதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஆகஸ்ட் 19-இல் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.
வேளாண் பிரிவில்: வேளாண் கல்வி கற்பிப்போர் பிரிவில் 25 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கு ஜூலை 3-வது வாரத்தில் அறிவிக்கையும், ஆகஸ்ட் 20-இல் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.
உதவிப் பேராசிரியர் பிரிவில்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பிரிவில் 1,883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 4-வது வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு செப்டம்பரில் தேர்வும், அக்டோபரில் தேர்வு முடிவுகளும் வெளியாகும்.
கல்வி அலுவலர் பிரிவில்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் காலியாகவுள்ள 38 இடங்களுக்குத் தேர்வு அறிவிக்கை ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-லிலும், தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும்.
இணையவழி விண்ணப்பம்: வருங்காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி மூலமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் கணினி வழித்தேர்வினை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
பள்ளிக் கல்வித் துறை,செங்கோட்டையன், வேலைவாய்ப்பு,Employment News,Jobs https://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/19/பள்ளிக்-கல்வித்துறையில்-6390-இடங்கள்-காலி-ஆண்டு-திட்ட-அறிக்கை-வெளியிட்டது-பள்ளிக்-கல்வித்துறை-2686706.html
2679984 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குடிமைப் பணி: நிகழாண்டில் 980 அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம் Friday, April 7, 2017 03:19 AM +0530 நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டில் குடிமைப் பணியிடங்களுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனர்? என்பது குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டில் (2016) குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 1,209 காலியிடங்கள் இருந்தன. அவற்றுக்குத் தகுதியான நபர்களை நியமிப்பதற்காக யுபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் தோராயமாக 980 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: இதனிடையே, மற்றொரு கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜிதேந்தர சிங், சரிவர பணியாற்றாத 5 ஐஏஸ் அதிகாரிகளையும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
குடிமைப் பணி அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர்களது பதவிக் காலத்தில் இரு முறை மதிப்பீடு செய்வது வழக்கம். அதில் அதிகாரிகள் சரிவர பணியாற்றாதது தெரியவந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்
படும். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

 

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/07/குடிமைப்-பணி-நிகழாண்டில்-980-அதிகாரிகளை-தேர்வு-செய்ய-மத்திய-அரசு-திட்டம்-2679984.html
2675743 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஏப்.6 இல் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி Friday, March 31, 2017 02:24 AM +0530 வேளாண் தகவல் மையத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி திடக்கழிவு மக்க வைக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்த விவரம்:
நகர்ப்புறங்களில் கிடைக்கப்பெறும் திடக்கழிவுகளை மக்கவைத்து மாடித்தோட்டம் வளர்ப்பு உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் பயன்பெறும் வகையில், திடக்கழிவுகளை மக்கவைக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி வேளாண் தகவல் மையத்தில் அளிக்கப்படுகிறது.
நீர் தர மதிப்பீடு பயிற்சி: அதுபோல் வீடுகளில் குடிநீர், இதர பயன்பாடுகளுக்கு, நீரின் தரத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம், உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படுகிறது.
திடக்கழிவு மக்கவைத்தல், நீரின் தரம் அறிதல் ஆகிய பயிற்சிகளை ஏப்ரல் 6 -ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் இளைஞர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். ரூ.600 பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும்.
பயிற்சி நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044 2626 3484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என வேளாண் தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/31/ஏப்6-இல்-திடக்கழிவு-மேலாண்மை-பயிற்சி-2675743.html
3229 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் 4 தேர்வுகள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு Venkatesan.R Thursday, August 11, 2016 12:06 PM +0530 தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345

**இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121

**வரி தண்டலர் - 8

**நில அளவர் - 532

**வரைவாளர் - 327

**தட்டச்சர் - 1714

**சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.

விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://www.dinamani.com/employment/goverment-jobs/2016/aug/10/குரூப்-4-தேர்வுகள்-தமிழ்நாடு-அரசு-பணியாளர்-தேர்வாணையம்-அறிவிப்பு-3229.html