Dinamani - உலகத் தமிழர் - https://www.dinamani.com/specials/world-tamils/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3191698 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஒரு கண்ணோட்டம் வ.ச. பாபு DIN Saturday, July 13, 2019 03:05 PM +0530  

10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019ம் ஆண்டு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் நடைபெற்றதை பலர் அறிவர். நிகழ்ந்தது, நிகழப் போவது எவையெவை என்பதை தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். விரும்புவோர் படிக்கலாம்.

அரசியல் கட்சிகளின் சாயமின்றி, தனிமனிதத் துதிப் பாடல்களின்றி, புலம் பெயர்ந்த தமிழ் வழித்தோன்றல்களால், வல்லரசு நாடான அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் மாநாடு என்பது தனிச் சிறப்பு.

விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் படிக்காத பாமரர்கள் அல்லர். வாட்டிப் படைக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களும் அல்லர் . மருத்துவர்கள்,  பொறியாளர்கள்,  தொழில் முனைவோர்,  அறிஞர்கள், செல்வந்தர்கள், உயர்பதவிகளில் வீற்றிருப்போர் என வேறுபாடு பல இருப்பினும், சிந்தனைச் சிதறலின்றி 
"தமிழ் மொழி என்தாய் மொழி,
தமிழ் இனம்  எனது இனம் "
என்ற ஒற்றை இலக்கோடு, ஆங்கிலம் அரசாட்சி செய்யும் நாட்டில், "தமிழனாய் வாழ்வோம், தமிழால் இணைவோம்"  என்ற முழக்கத்தைப் பறைகொட்டி, பேரணி நடத்திக் காட்டி விட்டனர்!

தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் கலாச்சார உடையணிந்து நடனமாடி, கும்மியடித்து, முளைப்பாரி ஏந்தி, சிலம்பாட்டம், புலியாட்டம் இடம் பெற, "தமிழண்டா "என்று  நடிகர் திலகம் சிவாஜியைப் போல் சிம்மக்குரல் எழுப்பி, விண்ணையும் மண்ணையும் தமிழ் மணக்கச் செய்து விட்டனர்.

காட்சி காண வந்து கலந்திட்ட அமெரிக்க ஆங்கிலேயர்தமை தமிழர்கள் கூட்டம் அதிரவைத்து, ஆச்சிரியத்தில் மூழ்க வைத்து விட்டது.  செம்புலப் பெயனீரென, தமிழ் நெஞ்சங்கள் இனிதாய் கலந்து, ஒற்றையினப் பெருந்திரளாய் திரண்டனர்; எதிர்கொண்டவர்கள் மகிழ்ச்சியால் மருண்டனர் காணும் பேறு, பிறவிப்பயன் என! 

தமிழர்களின் பேருணர்ச்சி, விண்ணைப் பிளந்து, மண்ணை அகழ்ந்து, "மெல்லத் தமிழினிச் சாகாது வெல்லத் தமிழினி வாழும் " என்ற நம்பிக்கை விதையையும் விதைத்து விட்டது. தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை முத்தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் ஆழிப்பேரழிவுக்கு இரையாயின.         முச்சங்கம் அழிந்தால் என்ன, முன்னூறுக்கு மேற்பட்ட சங்கங்கள் அந்நிய மண்ணில் முளைத்தோங்கிவிட்டன.   
 தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி; இது தமிழ்நாட்டில்!  தமிழனுக்கு தமிழவரோடு, வேற்று நாட்டவர் யாவருமே உறவு; இது அமெரிக்க நாட்டில்!        அமெரிக்க வாழ் தமிழர்களில் எட்டப்பர்கள், எடுபிடிகள், அடிவருடிகள் இல்லை. நாம் யார்க்கும் அடிமை இல்லை எமனை அஞ்சோம் என்று வஞ்சகம் தவிர்த்து, நெஞ்சகம் நிமிர்த்தி வாழ்கின்றனர். 

இந்த உணர்வு எப்படி வந்தது, யார் உருவாக்கியது ?

உலகத்தின் எந்த மூலையிலும் தமிழினம் படுகொலைக்கு ஆளாகக் கூடாது என்று முன்னெச்சரிக்கைச் செய்யும் முகத்தான், ஈழத் தமிழர்கள் பாடை சுமந்து பேரணியில் வந்த காட்சிநெஞ்சை நெகிழ வைத்துவிட்டது.
"போராளிகள் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்"
ஆய்வுக் கட்டுரைகள் பற்றி அடுத்து எழுதுகிறேன்.

தஞ்சாவூர்,
தமிழறிஞர்

மற்றுமோர் கண்ணோட்டம் - விழா பொறுப்பாளரில் ஒருவர்
 வட  அமெரிக்கத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் தமிழுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தோம்!

சிகாகோ! சிகாகோ தான்! அமெரிக்க மண்ணில் புலம் பெயர் தமிழரின் முதல் தமிழ்ச்  சங்கத்தின் முத்தாய்ப்பான 50 வது ஆண்டு நிகழ்ச்சி!

உலகமே வியக்கும் வண்ணம் மழலையர், மங்கையர், இளையோர், முதியோர்,  அறிஞர், கலைத்துறை, தொழிற்துறையில் பொருள் ஈட்டும் வல்லுநர்கள் என்று அனைவரும் ஒன்று கூடிய திறமைகள் பொங்கி வழிந்தன!  நான்கு நாட்கள் மகிழ்ந்தோம்!

அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள், உலகெங்கும் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள். ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மகிழ்வுடன் கூடினோம். புகழ் பாடினோம். பெருமை சேர்த்தோம், தமிழுக்கு!

அனைத்தையும் அமைப்புகளையும் சேர்த்தணைத்தது வட அமெரிக்கத் தமிழ்ச்  சங்கப் பேரவை, விழா பொறுப்பேற்றுக் கொண்டது சிகாகோ தமிழ்ச்சங்கம், தமிழன்புடனே அனுமதி அளித்திட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலகத்தொழில் முனைவோர் அமைப்பு உடன் சேர்ந்தது, எவர் அழைப்புமின்றி இணைந்து கடுமையாக உழைத்த தன்னார்வத் தொண்டர்படை (தமிழுலகு காணா வரலாற்று நிகழ்வு) இணைந்து முப்பெரு விழாதன்னை மாபெரும் வெற்றிச் செயலாக்கிக் உலகத்தமிழருக்குக் காட்டி விட்டனர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/13/w600X390/newyork.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/jul/13/10வது-உலகத்-தமிழ்-ஆராய்ச்சி-மாநாடு-ஒரு-கண்ணோட்டம்-3191698.html
3176284 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்! ஜேசு ஞானராஜ் DIN Friday, June 21, 2019 05:34 PM +0530
 
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப் மற்றும் முகநூல் வாயிலாக பிராங்பேர்ட்டில் நடக்கவிருந்த யோகா நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ் பலராலும் பரிமாறப்பட்டுகொண்டிருந்தது. அதுவே நிறைய பேருக்கு இந்நிகழ்ச்சி பற்றி தெரிய உதவியாக இருந்தது. டெக்னாலஜி முன்னேற்றத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று மாலை 5 மணிக்கு பிராங்பேர்ட்டில் உள்ள 'வால்தெர்-பான்-க்ரோன் பெர்க் பிளாட்ஸ்' என்ற இடத்தில நிகழ்ச்சி ஆரம்பமானது. உடலுக்கு இதமாக சூரியன் 30 டிகிரி வெப்பத்தில் பிரகாசிக்க, அருகிலேயே குளிர்ந்த நீரூற்று உள்ளதைக் குதூகலிக்கச்செய்ய, சூழ்நிலைகள் அற்புதமாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சித் தொடக்கத்தில், தேவதைகள் போல வெள்ளை உடை மற்றும் இறக்கைகளுடன் ஆண், பெண்கள் மேடையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, கொள்ளை அழகு!

பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சமஸ்கிருத பாடல் ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.

முன்னதாக வந்து டீ சர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்தபடியால் பலர் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்து பெற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தங்களுக்கு வசதியான தளர்வான உடைகளை அணிந்து வந்திருந்தனர். சேலையிலும் சிலரைக் காணமுடிந்தது.

மேடையில் யோகா நிபுணர்கள் செய்து காட்ட, வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் யோகா செய்தனர்.

3 வயது குழந்தையும் யோகா செய்ததைப் பார்த்தபோது, துள்ளிக்குதித்த நம் மனதும் அந்த குழந்தையோடு சேர்ந்து யோகா செய்தது.

பிராங்பேர்ட்டின் இந்திய தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்களும் மற்றவர்களுடன் இணைந்து யோகா செய்தது அவரின் அர்பணிப்புக்கு ஒரு சான்று. அருகே, ஒருசில ஸ்டால்களில் யோகா சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 15ம் தேதி கொலோன் நகரத்திலும் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புகைப்படங்கள்: இந்திய தூதரகம், பிராங்பேர்ட்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/21/w600X390/65259912_1059988274204816_3526505021480894464_o.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/jun/21/ஜெர்மனியில்-இந்தியத்-தூதரகம்-கொண்டாடிய-யோகா-தினம்-3176284.html
3164322 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த முன்சென் தமிழ்ச்சங்கம்   Jesu Gnanaraj DIN Monday, June 3, 2019 05:53 PM +0530
புலவர்களை கவி புனையச் சொல்லி, அவர்களுக்கு பொற்கிழியையும், பொற்காசுகளையும் வழங்கிய மன்னர்களுக்கு மத்தியில் தன் பாடலின் மூலம் பல நல்ல உள்ளங்கள் கல்விச்சாலைகள் ஆரம்பிக்க ஊக்கப்படுத்திய அதிவீரராம பாண்டிய மன்னனின் புகழ், தமிழுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அப்படி என்ன பாடலை அவர் எழுதினார் என கேட்கிறீர்களா? பதில் உள்ளே!

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது போல, சித்திரை 1ம் தேதி முதலே, எம் தமிழர்களின் சந்தோஷம், ஜெர்மனியின் முன்சென் நகரையும் தொற்றிக்கொண்டது. ஏன் தெரியுமா? இங்கு வாழும் தமிழ் மக்கள், தஞ்சை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்ததுடன் இணைந்து "முன்சென் தமிழ் அகாடமி"யை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இது தமிழ்ப் பள்ளி என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பாணியில், கலை மற்றும் கலாச்சாரம், பண்பாடு, நாட்டுப்புற கலைகள், இலக்கியம், நூல் நிலையம் என்று ஒரு பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த அகாடமி. கல்வி மற்றும் பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம் என அனைத்தையுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மாதிரி இவர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பலரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் தான் இந்த தமிழ் அகாடமி. 2018-ம் ஆண்டு முன்சென் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்தபோதே இந்த தமிழ் அகாடமிகான விதை ஊன்றப்பட்டது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள திரு.செல்வகுமார் பெரியசாமி அவர்களை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டோம்.

பேசும் போதே அவர் குரலில் அத்தனை உற்சாகம்! அவர் பேசும் போது " அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் சங்கங்களிடம், பள்ளிக்கூடம் அமைப்பது தொடர்பாக பேசி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் , தஞ்சை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு, பாடத்திட்டங்கள் சம்பந்தமாக சில விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்ற பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பாடத்திட்டங்கள் வரை எங்கள் எதிர்காலப் பட்டியலின் நீளம் ரொம்ப அதிகம்" என்றார். மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது "திலக் ஸ்ரீராம் அவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் முன்சென் நகர அலுவலகங்களில் அனுமதி வாங்குவது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், மக்கள் தொடர்பு போன்ற பல வேலைகளைப் பார்த்துக்கொள்ள, திரு.நிர்மல் ராமன் அவர்கள் அகாடமியின் கட்டமைப்பு, செயல்முறை வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதல் சம்பந்தமான வேலைகளை சிறப்பாக கவனித்துக் கொண்டார்" என்றார்.

அவரைத்தொடந்து இந்த அகாடமிக்கு விதை ஊன்றிய  அருண் சின்னமணி பேசும் போது " முன்சென் நகர நிர்வாகம், தங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 'Grundschule an der Swanthalerstr' என்ற அரசு பள்ளியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள்" என்றார். தன்னார்வத் தொண்டர்களை ஒன்றிணைத்து அகாடமி சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடித்து சித்திரை திருநாளில் திறப்புவிழா ஏற்பாடுவரை இவரின் பங்கு மகத்தானது.

இங்கு அமைந்துள்ள இந்தியத் தூதரகமும் இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, பக்க பலமாய் துணை நிற்கிறது. மேலும் தமிழ் இசை மன்றத்திற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கிக்கொடுக்கவும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

ஜெர்மனியைப் பொறுத்தவரையில், கல்வியாண்டு செப்டெம்பரில் ஆரம்பிப்பதால், இவர்களும் தமிழ் அகாடமி வகுப்புகளை அதே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளார்கள். ஆனால், தற்போது ஆயத்தவகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 40 பிள்ளைகள் இது வரையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லிக்கொடுப்பது என்றும், 6 முதல் 11 வரை உள்ள பிள்ளைகளுக்கு எழுதுவது, படிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது என்றும் அகாடமி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் உள்ள இந்த குழு பயிற்றுவித்தலில் கவனம்செலுத்த, மற்றோர் குழு பாடத்திட்டங்கள் வரையறுத்தல், தேர்வுத் தாள் தயாரித்தல் போன்ற பணிகளை ஈடுபட்டுள்ளது.

மூன்றாவதாக, இன்னொரு 10 நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவானது, மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவேடு, பள்ளியில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு, சமூக ஊடகங்களில் அகாடமி பற்றிய செய்திகளை அப்டேட் செய்வது போன்ற வேலைகளை கவனித்துக்கொள்ளும்.

மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற நம் தமிழ் கலாச்சாரம் சம்பந்தமான இசைக்கருவிகள் பயிற்றுவித்தல், சிலம்பாட்டம் கற்பித்தல் போன்ற நம் மரபு சார்ந்த கலைகளும் இனி வரும் காலங்களில் கற்றுக்கொடுக்கப்படும் என்பது சந்தோஷமான கூடுதல் செய்தி!

கடந்த வார ஆயத்த வகுப்புக்கு தன் 7 வயது மகள் லியாவுடன் வந்திருந்த கவிதா ஜியோ நம்மிடம் " முன்சென் நகரைப் பொறுத்தவரை, தமிழ் பள்ளி என்பது ஒரு கனவு தானோ! என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அகாடமி ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி என் மகளும் 'பொன்னியின் செல்வன்' படிப்பாள்" சொல்லும் போதே அத்தனை பெருமிதம் அவரது குரலில்!.

கலை, கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியம் என்னும் உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்சென் தமிழ் சங்கத்துடன் ரயில் தண்டவாளம் போல இந்த தமிழ் அகாடமியும் நடை பயில ஆரம்பித்திருக்கிறது.ஆம்! சித்திரை 1 ம் தேதி மிகப் பிரமாண்டமாக திறப்புவிழா நடத்தினார்கள். எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் கடவுளை நினைத்து குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிப்போம். ஆனால் இங்கோ, அந்த இறைவனே வந்து விளக்கேற்றினார். என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா? "குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்று நம் முன்னோர்கள் காரணமாய்தான் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி பலரின் முயற்சியாலும், கடின உழைப்பாலும், ஜெர்மனியின் முன்சென் நகரில் இன்று தமிழ் அகாடமி உயர்ந்து நிற்கிறது.விவேகானந்தர் தேடிய 100 இளைஞர்களில் இந்த நல்ல உள்ளங்களுக்கு நிச்சய இடம் உண்டு.

ஆம்! அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கையின் "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்பது முன்சென் தமிழ்ச்சங்கத்துக்கு சாலப்பொருந்தும்.

அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்!
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/3/w600X390/1_2.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/jun/03/ஜெர்மனியில்-கல்விக்கண்-திறந்த-முன்சென்-தமிழ்ச்சங்கம்-3164322.html
3138568 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்! Jesu Gnanaraj DIN Thursday, May 9, 2019 01:20 PM +0530  

வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள், இந்த சமயம் பூக்களைத் துளிர் விட ஆரம்பித்து விடும். இலைகள் அதற்கு அடுத்து தான்! அதனால் தான் செர்ரி மரங்களை தெருவெங்கிலும் நட்டு வைத்திருக்கிறார்கள்.

ஜப்பானில் Cherry blossom திருவிழா எவ்வளவு பிரபலமோ அதே மாதிரி ஜெர்மனியின் Bonn நகரம் ஏப்ரல் மாதத்தில் டூரிஸ்ட் வருகையால் நிரம்பி வழியும். அதிலும் குறிப்பாக Heerstr பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பூக்களின் எண்ணிக்கை அதிகமா! இல்லை இங்கு நடமாடும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமா என்றால் பதில் சொல்வது சற்று கடினம் தான்.
 

பத்து நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை இந்த செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். ஏப்ரலில் ஆரம்பித்து சில சமயம் மே மாதம் வரையிலும் கூட சில இடங்களில் காலநிலைக்கேற்ப மலர்கிறது. அதன் பிறகு தான் ஒன்றிரண்டாக இலைகள் துளிர் விட ஆரம்பிக்கிறது.

வசந்த காலம் ஆரம்பித்துவிட்டதை இம்மலர்கள் பறைசாற்றியதை அடுத்து, மக்களும் ஜெர்கின் மற்றும் கம்பளி ஆடைகளுக்கு விடை கொடுத்து சற்று ரிலாக்ஸ் ஆகின்றார்கள். காலநிலையும் அதிகாலையில் ஒற்றைப்படையில் இருந்தாலும் நேரம் செல்ல செல்ல இரட்டை இலக்கத்துக்கு மாறுவது மக்களுக்கு இன்னும் சந்தோசத்தை அதிகப்படுத்துகிறது!.

தொடந்து 3 மாத காலம் குளிர் மற்றும் பனியின் காரணமாக மரங்கள் அனைத்தும் இலைகள் முழுவதையும் உதிர்த்து வெறும் கம்பாக காட்சியளிக்கும். வசந்தகாலத் தொடக்கத்தில் பூக்கள் துளிர் விட்டு, பார்க்கும் மக்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது. அது மட்டுமா! பலவித வண்ண மலர்களை பார்த்து தேனீக்களும் பறவைகளும் அதை நாடி வர, மக்கள் அதன் பின்னணியில் selfie எடுத்துக் கொள்வது என்று வசந்தகாலம் களை காட்டுகிறது.

Tulip போன்ற பிற மலர்கள் இந்த சமயத்தில் பூக்க ஆரம்பித்தாலும் செர்ரி பூக்களுக்கு இருக்கும் மவுசு சற்று அதிகம் தான்! நான் 1997ல் முதல் முறை ஜெர்மனி வந்தபோது, பிராங்பேர்ட் Leipziger தெருவில் நிறைய செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கிறேன். இந்த வருடமும் அதே மாதிரி நிறைய மரங்கள்! நிறைய மலர்கள்!! ஆம்! மரங்களை பாதுகாக்கவும் தெரிந்தவர்கள் ஜெர்மானியர்கள்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/23/w600X390/1.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/apr/23/ஜெர்மனியில்-செர்ரி-மலர்களின்-கோலாகலம்-3138568.html
3144376 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஒன்பதாம்  தமிழ் அமர்வு இரமேஷ் பரமசிவம் DIN Thursday, May 2, 2019 02:51 PM +0530  

தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் ஒன்பதாம்அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைகழகத்தில் (National Taiwan University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்:
நிகழ்ச்சியின்தொடக்கமாக''தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி கே. திலகவதி அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார்.

‘ஒல்காப்புகழ் கொண்ட தொல்கப்பியம்’ ஒரு மிகச்சிறந்த அறிவியல் நூல் எனவும் தொல்காப்பியர் ஒரு மொழியியல் அறிஞர் மட்டுமல்ல அவர் ஒரு அறிவியல் அறிஞர் எனவும் கூறி தொல்காப்பியத்தின் பகுப்புகளை விவரித்து கூறினார்.

தொல்காப்பியர் மனித வாழ்வியலுக்கு தேவையானவற்றை மூன்றே விடயங்களாக கூறியுள்ளார். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.  முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும், அவற்றைப்பற்றி தொல்காப்பியர், “மாயோன் மேய காடுறை உலகமும் , சேயோன் மேய மயில்வரை உலகமும், வேந்தன் மேய பெருமணல் உலகமும்” என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். அதாவது இவ்வுலகம் காடும் காடும் , வயலும் வயலும், நீரும் நீரும் சார்ந்ததாக உள்ளதையே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். கருப்பொருள் பற்றி "தெய்வம், உணா, மா, மரம், புள் " எனத்தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார். உரிப்பொருளில் மனித ஒழுக்கத்தை பற்றி "புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்" எனத்தொடங்கும் பாடல் மூலம் அழகாக விளக்கியுள்ளார். 
உலக இயக்கம் பற்றி தொல்காப்பியர் இவ்வுலகம்  ஐம்பூதங்களால் ஆகி எவ்வாறு இயங்குகிறது என்பதை "நிலம், நீர், தீ,வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த உலகமாதலின்" என்ற நூற்பா மூலம் கூறியுள்ளார். மேலும் பல்வேறு நூற்பாக்கள் மூலம்  எண்ணுவியல் கணிதவியல், விண்வெளியியல் , சூழ்நிலையியல் போன்ற அறிவியல் கூறுகளை அழகாக எடுத்துரைத்துள்ளார். 

மிக முக்கியமாக தமிழர் நாகரிகத்தை மலர் நாகரிகம் என்பார்கள். தமிழனின் மங்கள, அமங்கள மற்றும் எந்த நிகழ்வாகினும் மலர்கள் முக்கிய இடம்பெறும். அத்தகைய மலர் நாகரிகம் பற்றி பல்வேறு பாக்கள் மூலம்  விளக்கியுள்ளார். குழந்தையின்மை மற்றும் அதற்கு தீர்வாக "காட்சி, வேட்கை, உள்ளுதல், காமம் செப்பல்" என்ற நூற்பா மூலம் விளக்கியுள்ளார்.  இயற்கை மருத்துவம் பற்றி "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடும்பும் போல எம்சொல் வெஞ்சொல் தாங்குதலின்றி" என்ற நூற்பா மூலம் விளக்கியுள்ளார். மேலும் பல்வேறு நூற்பாக்கள் எடுத்துக்கூறி, அதன் மூலம் தொல்காப்பியர் ஒரு மிகசிறந்த அறிவியல் அறிஞர் என்பதை அழகுற விவரித்தார்.

தமிழ் கொரிய நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒப்பீடு:
இரண்டாவதாக கொரிய வாழ் தமிழர் முனைவர். சுரேஷ்குமார் மந்திரியப்பன் அவர்கள் “தமிழ் கொரிய நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒப்பீடு”என்ற தலைப்பில் பேசினார். ஒரு மொழி உருவாகும் முன்னே முதலில் ஒலி உருவாக்கம் அவசியம். அவ்வாறாக பல்வேறு கொரிய வார்த்தைகளின் ஒலி நம் தமிழ் வார்த்தைகளின் ஒலியோடு இணைந்து செல்வதை கொக்கரக்கோ - கொக்கிக்கோ போன்ற வார்த்தைகளின் மூலம் அறியலாம்.  கொரியர்களின் பூர்விகம்  பற்றிய ஆய்வாளர் அல்பெர்ட் அவர்களின் கூற்றுப்படி தென் கொரியர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள் தென் இந்தியாவின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகின்றன. 

எடுத்துக்காட்டாக இன்றளவும் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் பகுதிகளில் உள்ள காளைச்சண்டை கொரியாவில் மிகப்பிரபலம். மேலும், நம் பொங்கல் பண்டிகையில் மாட்டிற்கு படைத்தல் மற்றும் மாட்டு பொம்மைகள் செய்து வணங்குதல், கும்மி பாட்டு - காங்காங், சாங்கு- கேரளாவின் இடக்கை (உடுக்கை போன்ற பெரியது), பொங்கல் பண்டிகையின் புது தாணியப்படையல் கொரியாவின் - புது தாணியப்படையல் போன்றவற்றின் மூலம் தென் கொரியர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள் தென் இந்தியாவின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போவதை அறியலாம். தட்டான்கள், புனலாடல் அல்லது நீராடல் - கொரியாவின் தாலோ பண்டிகை, கயிறுமேல் நடத்தல், இளவட்டக்கல் தூக்குதல், முழுநிலவு கொண்டாட்டம், காக்கைசோறு அளித்தல் (பித்ரு), எல்லைச்சாமி, கல்திட்டு அமைத்தல், புதுமனை புகுவிழா, தீமை சக்திக்கெதிராக கரியை பயன்படுத்துதல், முறப்பயன்பாடு, மிளகாய்-எலுமிச்சை தோரணம் கட்டுதல், வசம்பு பயன்பாடு போன்றவை தமிழர்களின்பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகின்றன என்று சிறப்பாக எளிமையாக விவரித்தார்.  


கிளிபாட்டி:
திரு விவேகாந‌ந்தன் அவர்கள் "கிளிபாட்டி" என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையின் தொடக்கமாக கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்/ பாடலில் வரும் மற்றொரு வரியில்  "திறவோர் கட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே" என தமிழரின் வாழ்வியலை அழகாக எடுத்துரைத்துள்ளார். அத்தகைய அழகான வாழ்வியலை வாழும்  "கிளிப்பாட்டி" என்ற கதையின்  மூலம் அழகாக எடுத்துரைத்தார்.  ''தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' என்ற குறளிற்கேற்ப கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாக இருந்தாள் என பேசி முடித்தார்.

தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள்:
முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் திரு. டேவிட் அச்சுதர் பேசுகையில் ஈன்றெடுத்த தாயையும் தாய் மொழி தமிழையும் வணங்கி “தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள்” என்ற தலைப்பில் புறநானூறு குறுந்தொகை மற்றும் பல சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசினார். விழுமியம் என்றால் என்ன?  விழுமியம் என்பது தனிநபர் சமூக வாழ்க்கையை வளப்படுத்துகின்ற அர்த்தமுள்ளதாக்குகின்ற மனித குணப்பண்பாகும். மனிதனது செயலுக்கு வழிவகுக்குகின்ற விழுமியங்கள் மனிதத்தன்மையினுள் நிலவுகின்ற இயற்கையின் விடயமாகும் என்றார்.

அவர் மேலும் தன் உரையில், வாழ்க்கையில் குறிக்கோள் வேண்டும், அதனை நோக்கி முற்பட வேண்டும், தோற்றே போனாலும் கவலையில்லை முயல் வேட்டையாடி மனம் துவண்டு போவதைவிட, யானையை வேட்டையாடி தோற்றுப் போவது மேல், இதனையே வள்ளுவர் "காண முயலெய்த" எனத்தொடங்கும் குரல் மூலம் ஓங்கி ஒலிக்கிறார். இவ்வுலகில் நிலைபெற வாழ வேண்டும் என்று எண்ணியவர்கள் தம் புகழினை நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களை மட்டுமே செய்துவிட்டு மாண்டு போனார்கள் என பெருந்தலைச் சாத்தனார் "மன்னா வுலகத்து மன்னுதல்" எனத்தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

ஒன்றை கற்றுக்கொள்வது சுலபம் கற்றலின் வழி நடப்பது சிரமம் “மனிதப்பிறவியும் வேண்டுவதே, “அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பார் அறிவிற்ச்  சிறந்த ஒளவை பிராட்டியர். “எப்படியாவது வாழலாம் என விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும்” என்று மனதிற்கு உறுதி மேற்கொண்டு, அதனை செயலில் நடத்தி காட்டுதல் வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர். இவ்வுலகில் பிறந்துவிட்டால் ஒருநாள் சாதல் வேண்டும் என்பது உறுதி, அது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. மின்னுகின்ற மேகம் குளிர்ந்த மழையை பொழிந்து, அம்மழை நீர் கற்களை புரட்டிக் கொண்டு ஆற்று நீரின் போக்கிலே செல்லும் ஓடம் போன்று ஆருயிர்கள் ஊழின் போக்கிலேயே செல்லும் என்பது வாழ்க்கையில் அனுபவப்பட்ட நம் முன்னோர்கள் கண்ட உண்மையாகும் என பேசி முடித்தார். 

இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும், தைவான் தமிழ் சங்க நிர்வாகிகள் மற்றும் முனைவர்பட்ட ஆராய்ச்சி தமிழ் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/2/w600X390/group1.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/may/02/தைவான்-தமிழ்ச்சங்கத்தின்-ஒன்பதாம்--தமிழ்-அமர்வு-3144376.html
3091241 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநகரில் தமிழ் விழா DIN DIN Thursday, February 7, 2019 04:15 PM +0530  

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பெர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்திர தமிழ் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வு கடந்த ஆண்டு நவம்பரில் தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும்  சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது. தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும்  சுமார் 300-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/7/w600X390/001.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2019/feb/07/ஆஸ்திரேலியாவின்-பெர்த்-மாநகரில்-தமிழ்-விழா-3091241.html
3089255 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் கதிரொளிநிறை குயீன்ஸ்லாந்து மாநில பொங்கல் கொண்டாட்டம்!  - திருமதி லலிதா நடராஜா (கண்டி, பொற்கரை) DIN Monday, February 4, 2019 05:51 PM +0530
புலம் பெயர் நாட்டிலின்றி, தாயகத்தில் நடந்த விழாவோ என எண்ணத்தக்க வகையில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். சிறப்பான காலநிலையும் வைபவத்திற்கு வெகுவாகக் கைகொடுத்தது. 

திட்டமிட்டவாறே பிற்பகல் 3 மணியளவில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்தமை “காலந்தவறாமை“ என்று தமிழர் போற்றும் உயர்பண்பினை வலியுறுத்தியது. தகிக்கும் கதிரவன் கனலையும் பொருட்படுத்தாமல் – பாலரும் விருத்தரும், இளைஞரும் மூத்தோரும், ஆண்களும் பெண்களும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழரோடு மற்ற இனத்தவர்களும் களிப்போடு கலந்துகொண்டமை, நிகழ்வை களியாட்டமாக்கியது. இசை நாற்காலி, எலுமிச்சை ஏந்தி ஓடல், மூன்று காலோட்டம், கயிறு இழுத்தல் என இடம்பெற்ற போட்டிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை உவகை அளித்தது. அதேநேரம் கோலப் போட்டி, பொங்கல் போட்டி என்று பெண்கள் தம் கைவண்ணத்தை வெளிப்படுத்தத் தக்க போட்டிகளும் இடம்பெற்றமை மனநிறைவைத் தந்தது. இவை இலைமறை காயாக இருந்த நம் தமிழ்ப் பெண்களின் திறமையையும், தமிழ்ப் பண்பாட்டின் உயர்வையும் பல்வேறு இனத்தவரும் அறிந்துகொள்ள வழிவகுத்தன. இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கிய வரதராஜ், செல்வன் அருண் பாராட்டுக்குரியவர்கள்.

மைதானத்தில் அனைவரும் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளத்தக்கக் கூடியளவில் அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு உணவுகளையும் குளிருணவுகளையும் மக்கள் அருந்தி மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் வசதியாக அமர்ந்து விழாவைப் பார்வையிட அழகிய கொட்டகைகளும் இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலுமொரு சிறப்பம்சமாகும்.

சிறப்பு விருந்தினர்களாக, 2019 ஆம் ஆண்டு பொங்கல் விழாவின் அரசு தூதர் சாரிச் முல்லன் அவர்களுடன் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், காவல்துறை ஆணையரின் பிரதிநிதியும், இந்திய தூதர் அர்ச்சனா சிங் அவர்களும், விழா ஆதரவாளர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியமையும் நிகழ்விற்கு மெருகூட்டின.

குயீன்ஸ்லாந்து காவல்துறை வாத்தியகுழுவினரின் “ பாண்ட்” இசையுடன் மேடைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கலைஞர்களின் இசை மட்டுமல்லாது, பிற கலாசாரங்களைப் போற்றும் அவர்தம் பெருந்தன்மையும் போற்றுதற்குரியது. அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். மிக அமர்க்களமாக இடம்பெற்ற இவ்விழாவில் எள்ளளவிற்கும் பங்கம் ஏற்படாதவகையில், காவல்துறையினர் வழங்கிய பாதுகாப்பு பாராட்டுக்குரியது. “பல இனக் கலாச்சாரங்களுக்கிடையே புரிந்துணர்வும் பகிர்வும் ஏற்பட ஐக்கியம் இன்றியமையாதது” எனப் பொங்கல் விழாவிற்கு குயீன்ஸ்லாந்து ஆணையர் வாழ்த்துரை வழங்கியது பொன்போன்றது.

சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பறையிசை முழங்க பொற்கரை “சங்கமம்” கலைக் குழுவினர் வழங்கிய கலாசார ஊர்வலத்துடன் வரவேற்கப்பட்டனர். இதில் காவடி, கரகம், பொய்க்கால் குதிரை என தமிழர்களுக்கே உரித்தான கலைகள் பிரதிபலித்தன. மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர்கள் தம்கொடியோடும், குடையோடும் கம்பீரமாக பவனி வந்தது கண்கொள்ளா காட்சி.

பின் சங்கர் ஜெயபாண்டியனும், செல்வி. ரீனா அகஸ்டினும் தங்களின் கணீர் குரல்களில் நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க நடைபெற்ற மேடைநிகழ்ச்சிகளில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் கூறுகளும் இடம்பெற்றன. தன் இனிய குரலில் மகாகவியின் பாடல்களை வழங்கிய செல்வி ரோஷினி ஸ்ரீராமும், அவரின் இசை வாரிசான செல்வன் கவின் ஸ்ரீராமும் பாராட்டுக்குரியவர்கள். “டான்ஸ் கலாட்டா” குழுவினரின் அழகிய நடனங்களும், சிலம்பமாடிய சிறுவர்களும், அதிலும் குறிப்பாக தீச்சுடரோடு சுழன்றாடிய இருவரும் மிகவும் பாராட்டுதற்குரியவர்கள்.

தமிழ்ப்பண்பாட்டை பிரதிபலித்த “சங்கமம்” கலைக்குடும்பத்தின் நடன நிகழ்வு , தமிழின் தொன்மை இங்கும் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதிலும் அந்த ஒன்றை வயது தளிரின் நடனம் மிக மிக மெச்சத்தக்கது.

பல்வேறு பாணியிலான பாடல்களை ஆடலுடன் வழங்கி கலகலப்பூட்டினர் ஹரி – வித்யா தம்பதியினர். விழாவில் இடம்பெற்ற, செங்கம்பள நிறுவனத்தின், நவனாகரீக அணிவகுப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்தகு பெருவிழாவைத் திறம்படத் திட்டமிட்டு, அதன்படி செயற்படுத்திய “ குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தாரும்”, “ தாய்த்தமிழ்ப்பள்ளியினரும்” பாராட்டுக்குரியவர்கள். 

குழுவினரின் தன்னலமற்ற சேவையால் கவரப்பட்ட, பல இன கலாச்சாரத்தை போற்றும் குயீன்ஸ்லாந்து அரசு விழாவிற்கு, நிதியுதவி வழங்கி ஊக்கம் அளித்தது. விழாவின் பிரதான அனுசரணையாளரான, சென்னை ட்ரீம் ஹோம்ஸ் நிறுவனம், பிரிஸ்பெனின் கான்செப்ட் ப்ராபெர்டீஸ் நிறுவனத்தாருடனும் ஏனைய அனுசரணையாளர்களுடனும், குயீன்ஸ்லாந்து மண்ணில் தமிழ்க் கலாச்சாரத்தை நீரூற்றி வளர்க்கிறார்கள். அதன்மூலம் பல இன ஐக்கியமும் வளர்க்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இதற்கு, பேருதவியாக பிரிஸ்பேன் 4ஈபி தமிழ் ஒலி, எஸ்பிஎஸ் தமிழ், வானொலிகள் நிகழ்ச்சிகளை நேரலையாக வழங்கி ஊக்குவித்தனர். திடலில் எங்கிருந்தவாறும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பெரிய திரையில் நேரலை செய்து மகிழ்வித்தனர் ஈஸ்வர் முதலான பல்கலைகழக மாணவர்கள் குழு. நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப் பரிசுகளும் வாரி வாரி வழங்கப்பட்டன.

முத்தாய்ப்பாக, 2019 ஆம் ஆண்டின் பொங்கல் விழா, வானை ஒளிரவைத்து பல இன மக்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் பிரம்மாண்ட வானவேடிக்கையோடு இனிதே நிறைவுற்றது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பண்டைப் புலவர் கனியன் பூங்குன்றனாரின் வாக்கைப் பிரதிபலித்தது இந்தப் பொங்கல் கொண்டாட்டம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்தறிந்து, புதியதோர் உலகம் செய்வோம்.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/4/w600X390/image001_1.png https://www.dinamani.com/specials/world-tamils/2019/feb/04/கதிரொளிநிறை-குயீன்ஸ்லாந்து-மாநில-பொங்கல்-கொண்டாட்டம்-3089255.html
2852334 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா DIN DIN Saturday, January 27, 2018 05:53 PM +0530  

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.

 தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று புக்கிட் பாஞ்சாங், பெண்டிங் LRT  அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வடமேற்கு மாவட்ட மேயருமான டாக்டர் தியோ ஹோ பின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவின் சிறப்பு அம்சமாக, சிங்கப்பூர் சாதனை முயற்சியாக சீன மலாய்காரர்களின் நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிவகுப்பு நடைபெற்றது.
 

 அத்துடன் சிங்கப்பூர் புகழ் மணிமாறன் குழுவினரின் இசை, நடனம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சியுடன் கிராமிய சூழ்நிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து 11வது ஆண்டாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான பரோட்டா செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டதோடு, அனைத்து இனத்தவரும் ஒரே நேரத்தில் பங்குகொண்டு பரோட்டா செய்யும் காட்சி இடம்பெற்றது.

மேலும் விழாவை மெருகூட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை சிறப்பு விருந்தினர்களும் கண்டு மகிழந்தனர்.

பொங்கல் விழாவின் சிறப்பு அம்சமாக ஜோதி மாணிக்கவாசகம் அவர்களின் சிந்தனை தூண்டும் தமிழர் திருநாள் சிறப்புரை இடம்பெற்றது.

 பலதரப்பு மக்களும்  குடும்பத்தோடு கலந்துகொண்டு இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/IMG-20180127-WA0022.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2018/jan/27/சிங்கப்பூர்-புக்கிட்-பாஞ்சாங்கில்-களைகட்டிய-11ஆம்-ஆண்டு-பொங்கல்-விழா-2852334.html
2719193 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் நியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா DIN DIN Monday, June 12, 2017 05:38 PM +0530  

நியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.

காலை 10 மணிக்குத் தொடங்கி, எட்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் நானூறு மாணவர்கள் பங்குகொண்டு, இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்க, இவ்விழா தமிழ்ப்பள்ளியைக் கொண்டாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டைக் கொண்டாடும் விழாவாகவும் அமைந்தது.  

"வெள்ளம்போல் தமிழர் கூட்டம் 
வீரங்கொள் கூட்டம்; 
அன்னார் உள்ளத்தால் ஒருவரே 
மற்று உடலினால் பலராய் காண்பார், "

என பாரதிதாசன் கூறியதை நினைவூட்டுகின்ற வகையில், விழாவிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர். மலர் மாலைகள்,  தமிழ் ஆளுமைகளின் ஓவியங்கள் என மேடை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

பள்ளிக்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தை மேடையில் பாட, அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய கீதமும் இசைக்கப்பட, ஆண்டு விழா இனிதே துவங்கியது. தமிழ்ப்பள்ளி மூத்த ஆசிரியை ஆன்னி ஜெயராம் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள், விசாலாட்சி நாகராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம், சௌமியா பாலசுப்ரமணியன், பாலா தனசேகரன், யசோதா கிருஷ்ணராஜ், குரு ராகவேந்திரன்,  இந்திரா கண்ணன், மற்றும் ஆனந்த் தமிழரசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். 

மூன்று முதல் பதினாறு வயது வரையிலான சுமார் 425 குழந்தைகள் கவிதை ஒப்புவித்தல், பாடுதல், நடனம் ஆடுதல், நாடகத்தில் நடித்தல் என ஐம்பதற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர்.  இவ்வருடம் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளையான பார்சிபனி நகரப் பள்ளி மாணவர்களும், விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கவிதை ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளில், ஆத்திசூடி பாக்கள்,  திருக்குறள்,  பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை உடல் மொழி, முகபாவனைகளோடு மாணவர்கள் ஒப்புவித்தனர். ஆண்டு விழாவில், ஏராளமான மழலையர், மொழிப்பற்று, திரைப்படப் பாடல்களை மாணவர்கள் இன்புற்றுப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

விழா நெடுக, பல வகையான நடனங்களும் அரங்கேறின.  குழந்தைப் பருவ பாடல்களுக்கும், கிராமிய மண்வாசனை வீசும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும்,  இந்திய தேசபக்தி பாடல்களுக்கும், இளைஞர் எழுச்சியை ஆதரித்த ஜல்லிக்கட்டு பாடல்களுக்கும், வாழ்வோடு பிணைந்துவிட்ட திரைப்பட பாடல்களுக்கும், பரத நாட்டியம், குத்து ஆட்டம், ஹிப் ஹாப், திரை நடனம், நவீன நடனம் என்று பல பாணிகளில் மாணவர்கள் நடனமாடினர். குறிப்பாக, பறையாட்டம், தீச்சட்டியாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம் போன்ற தமிழர் மரபு நடனங்கள் காண்போரின் கவனத்தைக் கவர்ந்தது.
 

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறு நாடகங்களும் அரங்கேறின. பீர்பால், தெனாலிராமன் கதைகள்,  திருக்குறள், ஆத்திசூடி நீதிக்கதைகள், சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற வள்ளல் பாரி-புலவர் கபிலர் நட்புக்கதை,  மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்றிய பல ஔவையார்கள் பற்றிய நாடகம், சுற்றுபுறச் சூழலைப் பேணும் கதைகள்,  இராமாயணம், மகாபாரதம்,  சிலப்பதிகார கதைகள், அரசியல் சார்ந்த கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள் என பல விதமான நாடகங்களில் மாணவர்கள் நடித்தனர். 

நியூஜெர்சி வாழ் தமிழ்க் குழந்தைகள், ஆங்கிலத்தை முதல் மொழியாக படிக்கின்ற போதும், தமிழில் அழகுற ஆடியதும், பாடியதும், பொருள் புரிந்து நாடகத்தில் நடித்ததும் கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.  

“அகரம் முதலாம் தமிழெனுந் தேன் 
அடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,”

என்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டு, 2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயிற்றுவித்து வருகிறது. தொடக்கத்தில் 65 மாணாக்கர்களையும் 12 தன்னார்வலர்களையும் கொண்டிருந்த இப்பள்ளி, தற்போது 65 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 425 மாணவர்களுக்குத் தமிழ்ச் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறது. 

தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாக இயங்கிட உறுதுணையாக நிற்கும் அனைத்து தன்னார்வலர்களின் தொடர் சேவையைப் பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் போற்றினார். மேடையில் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

ஹார்வர்ட் தமிழ் மொழி அமர்வின் முக்கியத்துவத்தைப் பறைச்சாற்றும் நிகழ்ச்சியாகவும் இவ்விழா அமைந்தது. பிரபல வலைப்பதிவர் PK சிவக்குமார், பள்ளி தன்னார்வலர் சரவணக்குமார், முதல்வர் சாந்தி தங்கராஜ் ஆகியோர் பார்வையாளர்களை நன்கொடைகள் வழங்குமாறு கோரிக்கைவிடுத்தனர். தமிழ்ப்பள்ளியின் சந்தைப்படுத்தல் குழுவின் உதவியுடன், ஒரே நாளில் 7500 டாலர் நிதியும் (சுமார் 5 லட்சம் ரூபாய்) திரட்டப்பட்டது.
 

மே 14 அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க பார்வையாளர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைத்து தாய்மார்களையும் பாட்டிமார்களையும் கரவொலியுடன் வாழ்த்தினர். அன்னையர் சிறப்பைப் போற்றும் மாணவர் குறுநாடகம் ஒன்றும் அரங்கேறியது.

இவ்வாண்டு விழா வெற்றிகரமாக நடைபெற, பல நிறுவனங்களும் நிதி தந்து உதவின.  ஓட்டல் சரவணபவன் காலை/மாலை சிற்றுண்டியும், மதிய உணவும் மலிவு விலைக்குத் தந்து உதவியது.   

ஆண்டு விழாவின் இறுதியில் அரங்கேறிய ஆசிரியர்கள் நடித்த  “பண்ணையாரம்மாவும் பருந்துக் கூட்டமும்” என்ற அரசியல் நையாண்டி நாடகம் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியது.

முடிவில், தமிழ்ப்பள்ளியின் துணைமுதல்வர் லக்ஷ்மிகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றி கூறினார். ஒலிப்பெருக்கியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட, கூத்தும் கும்மாளமும் மகிழ்ச்சியுமாக நீடித்த பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா சிறப்பாக நிறைவுபெற்றது. 

- சாந்தி தங்கராஜ் 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/12/w600X390/TTS-AnnualDay1.jpeg https://www.dinamani.com/specials/world-tamils/2017/jun/12/நியூஜெர்சியில்-திருவள்ளுவர்-தமிழ்ப்பள்ளியின்-ஆண்டு-விழா-2719193.html
2704501 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் லய இசையில் லயித்த மெல்பெர்ன்! DIN DIN Thursday, May 18, 2017 03:33 PM +0530
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகின்றேன். 

Indian Arts Academy-ன் 44-வது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். Rivergum Performing Arts Centre மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நவரத்னம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு ஸ்ரீ யோகராஜா கந்தசாமி இரத்தினச் ருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது.

தொடக்கமே எம்மையெல்லாம் நிமிர்ந்து இருக்க வைத்த அந்த இசையொலி உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வினை எங்கும் கண்டதில்லை. ஆதி தாளத்தில் அமைந்த நவராகமாளிகா வர்ணத்தோடு நிகழ்வு ஆரம்பித்து தொடர்ந்து Gowla ராகத்தில் அமைந்த முத்துச்சுவாமி தேசிகரின் பாடலான ஸ்ரீ மகா கணபதியோடு தொடர்ந்தது. 

பாடகர் அகிலன் சிவானந்தனின் குரல் வளத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த தாயே திரிபுர சுந்தரி என்ற பாடலும் பின்னர் பேகாக் ராகத்தில் அமைந்த ஆடும் சிதம்பரம் பாடலும் சபையோரை கட்டி வைத்துவிட்டது. செல்வன். கணாதீபனின் அமைதியான ஆனால் லாவகமான வாசிப்பு அவரது திறமையையும் குருவின் பயிற்சியையும் புடம்போட்டு காட்டி நின்றது.

அணியிசைக் கலைஞர்கள் தமது திறமையை வெளிக்கொண்டு வந்ததோடு அரங்க நாயகன் கணாதீபனுக்கு முழு உற்சாகத்தை கொடுத்து அவரை மிளிரச் செய்து, அவரது திறமையை சபையோர் முன் படைக்க வழங்கிய ஒத்துழைப்பு அபாரம்.

அதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. Hindola ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சந்திர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தேறியது. தொடர்ந்து கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது சபையோரின் பாராட்டைப் பெற்றது.

தொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது. இந்நிகழ்ச்சிகளின் இடையிடையே பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கி சிந்தனைக்கு விருந்தளித்திருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரகுராம். பக்கவாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி பத்ரி அவர்களும், கெஞ்சீரா வாசித்த தென்காசி ஹரிகரன் பரமசிவம் அவர்களும், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம். தீனதயாளு அவர்களும், கடம் வாசித்த உள்ளூர் கலைஞரான திவாகர் யோகபரன் அவர்களும் தம்புரா வாசித்த செல்வி. கீர்த்தனா ராஜசேகர் மற்றும் செல்வன். நிவாஷன் தயாபரன் ஆகியோர் பாடகர் சிறீ. அகிலன் சிவானந்தன், நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் மிருதங்க இசையோடு பார்வையாளர்களை பரவசப்படுத்தி விட்டனர்.

மிக மிகக் கடுமையான ஜதிகளையும் தாளக்கட்டுக்களையும் கொண்ட கீர்த்தனைகள் பாடல்களுக்கு கணாதீபன் அசராமல் மிருதங்கத்தினை கையாண்டவிதம் தானொரு தலைசிறந்த கலைஞன் என்பதனை உணர்த்தி விட்டார். நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளியின் நிறுவனர் சிறீமதி. ஷோபா சேகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சுப்ரமணியம் ராஜரத்னம் அவர்களும் சிறப்பித்தனர்.

சுருங்கக் கூறின் ஒரு அரங்கேற்ற நிகழ்வு என்ற எண்ணத்தையே மனதை விட்டு அகல வைத்து மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது அரங்கேற்றம். அனைத்து கலைஞர்களும் மிகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு மேல் குரு யோகராஜா கந்தசாமியும் அரங்க நாயகன் கணாதீபனுக்கும் வாழ்த்துக்கள்.

- சித்தம் அழகியான்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/miru_1.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2017/may/18/லய-இசையில்-லயித்த-மெல்பேர்ண்-2704501.html
2687860 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூரில் தமிழர் பாரம்பரிய உணவின் மகத்துவம் பற்றிய நிகழ்ச்சி DIN DIN Thursday, April 20, 2017 03:25 PM +0530 சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் பதினோராவது ஆண்டாக நடைபெறும் தமிழ் மொழி விழா 2017ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் பங்கெடுப்பது இது நான்காவது ஆண்டாகும்.
மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், பண்பாடு தொன்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியை நடத்தியது. தொடக்க கல்லூரி மாணவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி விழா 2017ல் உயர் நிலை பள்ளி மாணவர்களையும் தொடக்க கல்லூரி மாணவர்களையும் பங்கெடுக்க வைப்பதென்று முடிவு செய்தது செயற்குழு.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் அந்த தலைப்பை ஒட்டி ஆய்வு செய்து படைக்க வேண்டும். மாணவர்களின் ஆய்வின் ஆழம், குரல் வளம், படைக்கும் திறன், பார்வையாளர்களை தொடர்பு படுத்தும் திறன் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்ய படுகிறார்கள். அதே தலைப்பை ஒட்டி அந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் சிறப்புரை ஆற்றுவார்.

இவ்வாண்டு 'உணவை' கருப்பொருளாக வைத்து 'தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பினை மாணவர்கள் படைப்புக்காகவும் 'உணவுக்கும் அமுதென்று பெயர்' என்ற தலைப்பினை சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது.இந்த ஆண்டு முன் இறுதிச்சுற்றில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினை படைத்தது சிறப்புக்குரியதாகும். பெற்றோர்களும், பள்ளி ஆச்சிரியர்களும் மாணவர்களும் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை பறைசாற்றுவதாகவே இந்நிகழ்வு அமைந்தது.

ஏப்ரல் 15 மாலை உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட உயர் நிலை பள்ளி மாணவர்கள் இருவரும் தொடக்க கல்லூரி மாணவர்கள் இருவரும் தங்கள் ஆய்வினை சிறப்பாக படைத்தனர். அதில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்திய எள், மஞ்சள்,மிளகு போன்ற பல  பொருட்களின் முக்கியத்துவத்தை தற்கால வாழ்க்கைமுறைக்கேற்றவாறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலக பள்ளியின் மாணவிகளாகிய வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் ஆகியோர் உயர்நிலைப் பள்ளிகள் பிரிவிலும், செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரியைச் சார்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் ஆகியோர் தொடக்கல்லூரி பிரிவிலும் முதல் பரிசைப் பெற்றனர்.
 

சிறப்புரை ஆற்றிய மருத்துவர் கு.சிவராமன் தமிழர் பாரம்பரிய உணவின் சிறப்பையும் சிறந்த உணவு வகைகளையும் உணவு பழக்கங்களையும் எடுத்து கூறியதோடு உணவு தொடர்பாக உலக அளவில் நடத்த ஆய்வுகளையும், அந்த ஆய்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழர்களின் உணவுமுறை சிறந்து விளங்குவதையும் எளிமையாக விளக்கினார். மேலும் தமிழர்களின் உணவுமுறை சாதாரணமாக தோன்றியது அல்ல,அது பல ஆயிரம் ஆண்டுகளின் அறிவியல் என்றும் மிக நீண்ட உரையை நேர்த்தியோடுத்த தந்தார் மருத்துவர் கு. சிவராமன். விழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜாராம் உட்பட பல்வேரு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அ. இளங்கோவன் வரும் ஆண்டுகளில் இதே போன்ற மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொடரும் என்றும், ஆதரவு அளித்துவரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். சங்கத்தின் செயலாளர் ரா.சங்கர் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அரங்கேறிய இவ்விழா தமிழர்களின் உணவுமுறைகளை பற்றிய சிறு விழிப்புணர்வை உருவாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/singapore_dr.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2017/apr/20/tamil-mozhi-vizha-2017-2687860.html
2599677 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஜெர்மனியில் கலாச்சார தீபாவளி சரவணன் DIN Wednesday, November 16, 2016 01:01 PM +0530 ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், நவம்பர் பன்னிரெண்டாம் தேதி தீபாவளி பண்டிகை 'கொலோன் வாழ் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களுடைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டன. புலம்பெயர் வாழ்வில், கலாச்சார பண்டிகைகளின் தேவைகளை முன்னிறுத்தும் வகையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்காக அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் உறுப்பினர்களின் பங்களிப்புடன், தமிழ்நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/16/w600X390/kolon_1.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2016/nov/16/ஜெர்மனியில்-கலாச்சார-தீபாவளி-2599677.html
2559586 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் குவின்ஸ்லாந்து பொற்கரையில் சங்கத்தமிழும் நவீன இலக்கியமும சங்கமித்த எழுத்தாளர் – கலைஞர் ஒன்றுகூடல்! DIN DIN Friday, September 9, 2016 05:40 PM +0530  

முதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் கடந்த 27-08-2016 ஆம் திகதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் Auditorium, Helensvale Library மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவை இலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திருமதி. தாமரைச்செல்வி மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். திரு. பவனேந்திரகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான விழா நிகழ்ச்சிகளில், மறைந்த படைப்பாளிகள், கலைஞர்களின் ஒளிப்படக் கண்காட்சி, கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நூல் விமர்சன அரங்கில் – கந்தசாமியும் கலக்சியும் ( நாவல்) – (ஜே.கே.’ ஜெயக்குமாரன்) – கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) – கவிஞர் அம்பி – கீதையடி நீ எனக்கு (குறுநாவல்கள்) கறுத்தக்கொழும்பான் (படைப்புக்கட்டுரைகள்) – (பேராசிரியர் கந்தராஜா) – வாழும் சுவடுகள் (தொழில்சார் அனுபவப் பதிவுகள்) (மருத்துவர் நடேசன் )ஆகிய நூல்கள் இடம்பெற்றன.

மருத்துவர் நடேசன், திரு. முருகபூபதி, மருத்துவர் வாசுகி சித்திரசேனன், திரு. செல்வபாண்டியன் ஆகியோர் இந்த அரங்கில் உரையாற்றினர்.

கருத்தரங்கில் கன்பராவிலிருந்து வருகைதந்த இலக்கிய ஆர்வலர் மருத்துவர் கார்த்திக் வேல்சாமி “சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின் எழுத்துலகம்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். ” வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா?” என்ற தலைப்பில் சிட்னியிலிருந்து வருகைதந்த திரு. திருநந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற பட்டி மன்றத்தில் மருத்துவர் கண்ணன் நடராசன் அறிமுக உரையாற்றினார். வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா? என்னும் தலைப்பில், திருமதி.வாசுகி சிவானந்தன், திரு.காந்தன் கந்தராசா, திரு.சிவகைலாசம் ஆகியோரும் இழந்தது அதிகமா ? என்னும் தலைப்பில், திருமதி சாரதா இரவிச்சந்திரன் திருமதி இரமாதேவி தனசேகர், திரு. குமாரதாசன் ஆகியோரும் வாதாடினார்கள்.

கலையரங்கில் வீணையிசை – பரதம் முதலான நிகழ்ச்சிகளில் செல்வி. சிவரூபிணி முகுந்தன், ஸ்ரீமதி. பத்மலக்ஷ்மி ஸ்ரீராமும் குழுவினரும், செல்வி மதுஜா பவன், செல்வி சிவகௌரி சோமசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட தமிழ்நதி சிறப்பிதழை முனைவர் பிரதீப்குமார், திருமதி தாமரைச்செல்விக்கு வழங்கி வெளியிட்டுவைத்தார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வாசுகி சித்திரசேனன் தொகுத்து வழங்கிய மூவேந்தர் வளர்த்த சங்கத்தமிழின் பெருமை பற்றிய முத்தமிழ் விருந்து கதம்ப நிகழ்ச்சியில், சங்கமம் கலைக்குழுவைச்சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.இவ்விழாவில் அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா பல கதைகள் சிறுகதைப்போட்டி முடிவுகளை அறிவித்த அதன் ஏற்பாட்டாளர் திரு. முகுந்தராஜ் , விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் நன்றியுரை நிகழ்த்தினார்.

அவுஸ்திரேலியா பல கதைகள் – சிறுகதைப்போட்டி முடிவுகள்:

முதல் பரிசு – இமிகோலிங் – அகிலன் நடராஜா – மேற்கு அவுஸ்திரேலியா

இரண்டாம் பரிசு – காவோலைகள் – சியாமளா யோகேஸ்வரன்; – குவின்ஸ்லாந்து.

மூன்றாம் பரிசு – தாயகக்கனவுகள் – கமலேந்திரன் சதீஸ்குமார் – தெற்கு அவுஸ்திரேலியா

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/ATLAS-Festival-2016.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2016/sep/03/குவின்ஸ்லாந்து-பொற்கரையில்-சங்கத்தமிழும்-நவீன-இலக்கியமும-சங்கமித்த-எழுத்தாளர்-–-கலைஞர்-ஒன்றுகூடல்-2559586.html
2556916 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தமிழ் சந்ததிகளுக்காக ஆஸ்திரேலியாவில் அவ்வை தமிழ்ப்பள்ளி DIN DIN Monday, August 15, 2016 03:21 PM +0530 ஆஸ்த்ரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகளுக்காக, நம் மூதாட்டி அவ்வையாரை பெருமை படுத்தும் விதமாக அவர்கள் பெயரிலேயே 'அவ்வை தமிழ்ப் பள்ளி' உருவானது.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து தமிழ் நண்பர்கள் - அந்தோணி, அரசு, ருத்ரா, செல்வா, செந்தில் என அனைவரும் ஒன்று சேர்ந்து தன் தாய்மொழி தமிழுக்கு அவர்கள் வாழும் மெல்பெர்ன் மண்ணில் எப்படி சிறப்பு சேர்க்கலாம் என எண்ணிய பொழுது உருவானது மெல்பெர்ன் தமிழ் மன்றம் ஆகும்.

அவர்கள் ஒன்று சேர்ந்து முதலில் மெல்பெர்ன் தமிழ் மன்றம் (Melbourne Tamil Mandram - (MTM)) என்ற ஓர் இலாப நோக்கற்ற அமைப்பை ஆஸ்ட்ரேலியன் விதி முறைகளின் படி பதிவு செய்தார்கள். பின்னர் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்ற விவாதத்தில், உடனே ஆற்ற வேண்டிய முதல் பணியாக அவர்கள் எடுத்த முடிவுதான் அவ்வை தமிழ்ப் பள்ளி உருவாகக் காரணமானது.

இளைய தலைமுறையை காக்கும் ஒரே பணி தமிழ்ப் பள்ளித் தொடங்குவதுதான் எனத் தீர்மானித்து அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. . அவ்வாறு தொடங்கிய அவ்வைப்பள்ளி மூலம் தமிழ் வாயிலாக, நமது தமிழ்க் குடியின் சிறப்பு, 50,000 ஆண்டுகள் மூத்தகுடித் தமிழனின் பெருமை, பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்து இங்கு வாழும் நமது அடுத்தத் தலைமுறை தங்களது சொந்த அடையாளத்தை தொலைத்து விடாமலும் சுயமரியாதையுடனும் வாழ வழி செய்வது என தீர்மானித்தோம்.

அவ்வாறு கடந்த ஏப்ரல் 16ந் தேதி சனிக்கிழமை காலை இனிதே அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் சீனிவாசன், வாசன் சீனிவாசன் அவர்களை அழைத்திருந்தோம். அவர்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்து அருமையான சொற்பொழிவை ஆற்றினார்கள். எதிர்பார்த்ததை விட அதிக தமிழ்க் குடும்பங்கள், பெற்றோர்கள், குழந்தைகள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.

ஐந்து இயக்குனர்கள் முறையே பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டனர். அதன்படி அந்தோணி அவர்கள் வெளியுறவுகளை கவனிக்க, அரசு அவர்கள் விழாவில் வரவேற்புரையை நிகழ்த்தினார். செந்தில் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்த,அவ்வைப் பள்ளியின் தலைமையாசிரியரான செல்வா அவர்கள் ஆசிரியைகளின் அறிமுகம் மற்றும் பாடத் திட்ட வரைவு போன்ற அனைத்தையும் விளக்கி கூறினார்கள். ருத்ரா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கமிஷனர் சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் அவ்வை தமிழ்ப்பள்ளியின் சீரிய பணியை பாராட்டி, இப்படிப்பட்ட இன்றியமையாத சேவை இன்றைய உலகின் அவசியத்தேவை என்பதை தன் இயல்பான பேச்சினால் விளக்கி கூறினார்கள். தமிழ், சமஸ்கிருதம், பெங்காலி, ஆங்கிலம், ஜாப்பனீஸ் போன்று பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழையும் அதன் சிறப்பையும் கண்டு பிரம்மித்ததோடு, தமிழில், தான் உரையாடும்பொழுது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி தனக்குள் ஏற்படுவதை நினைவு கூர்ந்தார்கள். அதோடு தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்கு அதனை ஏற்று அதன்படி பல வழிகாட்டுதல்கள், மற்றும் உற்சாகப் படுத்துதல் தொடர்பான கருத்துகளை தயார் செய்து வந்து பேசுவதை தனக்குக் கொடுத்த பொறுப்போடு நியாயப்படுத்திக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது!!

அடுத்ததாக பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் வாசன் சீனிவாசன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து அதன்படி, தான் புரிந்துள்ள தமிழ்ப் பள்ளியின் அவசியம் பற்றியும் இது போன்ற பள்ளிகள் முன்பு தமிழர்களுக்காக இல்லாதது குறித்தும், சிரமங்களை விளக்கினார்கள். அடுத்து தன்னுடைய விடாமுயற்சியால் 71 படுக்கைகள் அடங்கிய முதியோர் இல்லத்தை, நோபல்பார்க் புறநகர் பகுதியில், இந்தியர்களுக்காகவே அரசாங்கத்திடம் போராடி பெற்றதன் சிறப்பை விளக்கினார்கள். இதற்கு முன் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குமுன் கேரம்டோவ்ன்ஸ் புறநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு கோவில் உண்டானபோது, அதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து, இந்தியாவிலிருந்து விநாயகர் சிலையை வடிவமைத்து அதனை, ஜீயர், மற்றும் சங்கராச்சாரியார் மகாசுவாமிகள் மூலம் உருவேற்றி அதனைச் சக்தி குறையாமல் இங்கு கொண்டு வந்து ஸ்தாபித்தது முதல் தன் முக்கிய பொறுப்புகளைக் கூறியபொழுது, கூடியிருந்த ஒவ்வொரு தமிழனும் வாழ்கையில் நாமும் ஏதாவது செய்யவேணும் என என்னத் தோன்றியது.

ஒரு மனிதன் அவனது உடலையும் உலகத்தில் அவனது இருப்பையும் இணைப்பது அவனுடைய மூச்சுக்காற்று ஆகும்.

அதுபோல அவன் பிறந்த சமூகத்தில் அவனுக்கும் அவன் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை அவனது சொந்த தாய்மொழியால் மட்டுமே அறிய முடியும்.. அத்தோடு அவனது அடையாளம் அவன் சமூகம் சார்ந்த பெருமை அனைத்தும் அவனது தாய்மொழியால் மட்டுமே காக்கப்படும்.. அந்த வகையில் இங்கு தொடங்கப்பட்டுள்ள அவ்வை தமிழ்ப் பள்ளியானது தனது சிறந்த சேவையைத் தொடர்வதன்மூலம், தமிழ்ச் சமுகம் காக்கப்பட்டு இன்னும் சில வருடங்களில் உலகத் தமிழர்கள் போற்ற சரித்திரம் படைக்கும் என்பது மட்டும் நிச்சயம்!!!

மெல்பெர்ன் வாழ் தமிழர்களே!! வாருங்கள், உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள். தமிழ் பயிலுவோம்!! தமிழ் கற்பிப்போம்!! தமிழ் வளர்ப்போம்!! உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடியின் சிறப்பு, தமிழனின் பெருமை, பண்பாடு, நாகரிகம் பாரம்பரியம் அனைத்தையும் நம் தாய்மொழியாம் தமிழின் மூலம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு வழங்கி, நம் வருங்கால சந்ததிக்கு பெருமை சேர்ப்போம். வாழ்க தமிழ்!! வாழிய பல்லாண்டு!!!

அவ்வை தமிழ்ப் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஹன் டிங்டேல் தொடக்கப் பள்ளி, ஓக்ஃலி தெற்கு (Huntingdale Primary School, Grange Street, Oakleigh South, Victoria-3167) புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்று மகிழ்கிறோம். நன்றி.

]]>
world tamils, dinamani, Austraila, Melbourne, Tamil school https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/avvai_tamil_school.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2016/aug/15/தமிழ்-சந்ததிகளுக்காக-ஆஸ்திரேலியாவில்-அவ்வை-தமிழ்ப்பள்ளி-2556916.html
2556914 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சாக்ரமெண்டோவில்    மும்மூர்த்திகள் இசை விழா DIN DIN Monday, August 15, 2016 03:16 PM +0530 மே 21ம் நாள் காலை 8-30 மணியளவில் சாக் பல்கலைக் கழகத்தின் காபிஸ்ட்ராநோ இசை அரங்கம் இசையில் நாட்டம் மிகுந்தவர்களால் நிரம்பி வழிந்தது. காரணம் சாக்ரமெண்டோ ஆராதனா நடத்திய சங்கீத மும்மூர்த்திகள் விழா.

சில ஆண்டுகளுக்கு முன் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டிலிருந்து மும்மூர்த்திகள் விழாவாக விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் இது இவர்களின் இரண்டாம் ஆண்டு இசை விழா ஆகும்.

விழா குழலிசை விதூஷி சிக்கில் மைதிலி சந்திரசேகரின்  சேதுலாரா  என்ற  பாடலுடன் துவங்கியது. பின்னர் கர்நாடக இசை வித்வான் சிக்கில் குருசரண் வழியொட்டி தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் சேர்ந்திசையாக இசைக்கலைஞர்களால் தக்க பக்க வாத்யங்களுடன் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சாக்ரமெண்டோ மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள பல இசைப்பள்ளிகளிலிருந்து வந்த மாணவ மாணவியர்கள் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் நேர்த்தியாகப் பாடி தங்கள் இசைத்திறனை காட்டி, தங்கள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பெருமை சேர்த்தனர். மேலும்  இசைக்கருவிகளில் பயிற்சி பெற்றவர்கள் தம் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.

தவிர, மேடையில், இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற, வளரும் கலைஞர்களின் தனி வீணை, வயலின் கச்சேரிகள் இடம் பெற்றன.

இன்னும் சில மாணவ, மாணவியர் சீர்காழி மூவர் என்றழைக்கப்பட்ட தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பாடி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.

விழாவில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக சௌராஷ்டிர மும்மூர்த்திகளின் ஓர் அறிமுகம் என்ற ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை முனைவர் அர்ச்சனா வெங்கடேசன் பார்வையாளர்கள் கவனத்திற்கு வைத்தார்.

கூடவே வித்வான் சிக்கில் குருசரண் சௌராஷ்டிர மும்மூர்த்திகளான வெங்கட ரமண பாகவதர், கவி வெங்கடசூரி, நாயகி சுவாமிகள்  ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி  விளக்கமளித்தார். பாடல்களின் சிறப்பு அவை பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி இயற்றப்பட்டவையாகும்.

முத்தாய்ப்பாக, விதூஷி சங்கீதா சுவாமிநாதனின் இசைக்கச்சேரி சிறப்பாக நடந்தேறியது. வயலினிலில் வித்வான் சரவணபிரியன், மிருதங்கத்தில் ஸ்ரீ கோபால் ரவீந்த்ரன்  பக்க துணையாக இருந்தனர்.

சம்பந்தபட்டவர்களுக்கு விழாக்குழுவினர் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.

ரஜனிகோபாலன்
சாக்ரமெண்டோ

]]>
dinamani, world tamil, heritage, music, trinity, USA https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/sacremento_aaradhana.jpg https://www.dinamani.com/specials/world-tamils/2016/aug/15/சாக்ரமெண்டோவில்   -மும்மூர்த்திகள்-இசை-விழா-2556914.html