Dinamani - சினிமா எக்ஸ்பிரஸ் - https://www.dinamani.com/specials/cinemaexpress/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2695486 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் அவள் அப்படித்தான் ஒரு மாஸ்டர் பீஸூ ன்னு என்னால சொல்ல முடியல - கமல் DIN DIN Wednesday, May 3, 2017 04:18 PM +0530  

அந்த குதூகலமான மாலை நேரத்தில் கமல்ஹாசனுக்காக அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  காத்திருந்தேன். உள்ளே வந்த கமல், "ஹலோ , ஹௌ ஆர் யூ, எப்ப வந்தீங்க" என்று எங்களை வினவினார்.

"ஃபைன் கமல், பை தி வே, உங்க ப்ரோக்ராம் என்ன இன்னிக்கு" என்று கேட்டேன்.

"இன்னிக்கா, 12 மணி வரைக்கும் "மாற்றுவின் சட்டங்களே (தமிழ் "சட்டம் ஒரு இருட்டறை")"  மலையாளப் பட ஷூட்டிங். அப்புறம் டிக்..டிக்..டிக் பாட்ச் ஒர்க்; மத்தியானதுக்கு மேல மகாபலிபுரம்" என்றார்.

"வி வாண்ட் டு  கம் அலாங் வித் யூ கமல்"          

"ஓ . எஸ்.வாங்க..வித் ப்ளஷர்..வண்டியில அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.ஓ கே" என்றுஉடனே சம்மதம் தந்தார்.

காரில் போகும் பொழுது பம்பாய பத்திரிகையாளர்கள் பற்றிச் சொன்னார் கமல்.

பாம்பே பத்திரிக்கைகாரங்களுக்கும் மெட்றாஸ் பத்திரிக்கைகாரங்களுக்கும் அடிப்படைல நிறைய வித்தியாசம் இருக்கு. இங்கிருக்கறவங்க ஒரு ஆர்ட்டிஸ்ட்டை விமர்சிக்கிறதுல ஒரு எல்லை வச்சிருக்காங்க. கோடு போட்டுக்கிட்டிருக்காங்க .ரொம்ப ரேரா சில சமயங்கள்ல பர்சனல் விஷயங்கள் வெளிய வர்றதுண்டு . பம்பாய் ஜர்னலிஸ்ட்டுகளோட அடிப்படையே இந்த பர்சனல் சமாச்சாரங்கள்தான்.  என் வீடு, மனைவி, உறவினர்கள், இப்படி எல்லாத்தையும் போட்டு கொதறுவாங்க.  இது என்ன விதமான ஜர்னலிசம்ன்னு எனக்கு புரியல. என்னை விமர்சியுங்கள், என் நடிப்பை அக்கு வேறு ஆணி வேறாக அலசுங்கள்.என் குடும்பத்தை  எதிலுமே சம்பந்தபபடுத்தாதீர்கள்.

"மாற்றுவின் சட்டங்களே" மலையாளப் பட ஷூட்டிங் முடிந்து எங்களை ஆழ்வார்பேட்டை வீட்டில் இறக்கி  விட்டுச் சென்ற கமல், " ஜஸ்ட் ரிலாக்ஸ்..ஓன் அவர் கழிச்சு நாம மறுபடி புறபபடலாம்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

மகாபலிபுரம் நோக்கி பயணம் மீண்டும் தொடர்ந்தது.

"இங்க எல்லாருக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பிடிச்சிருக்கு. மிகைப்படுத்துறது ரத்தத்துல கலந்திருக்கு. 'கமல் பெர்பார்மென்ஸ் ஸூப்பர்ப்'னு யாராவது சொன்னா நிச்சயமா  அது மிகைதான்  அப்படி நான் இன்னும் ஒரு படமும் பண்ணல. ஓரளவு பண்ணினது "அவள் அப்படித்தான்"னும் , "ராஜ பார்வை"யும். ஒவ்வொருத்தத்தரோட லைன் ஆஃப்  திங்கிங் வேற மாதிரி இருக்கு.

ஏன் கமல் , "அவள் அப்படித்தான்"னுக்குப் பிறகு அந்த மாதிரி ஒரு படம் ஏன் செய்யல இதுவரை? என்று கேட்டேன்.

வாய்க்கலை.அவவளவுதான். அவள் அப்படித்தான் னுக்கு ஒரு ருத்ரய்யா இருந்தார். பல பேர் சொல்ற மாதிரி அதை ஒரு மாஸ்டர் பீஸூ ன்னு என்னால சொல்ல முடியல. அது ஒரு நல்ல அப்ரோச். மனப்பூர்வமான முயற்சி. டெக்கினிக்கலா பல ஓட்டைகள்  அந்தப் படத்துல. அப்ப பாப்புலரா இருந்தவங்க நடிச்சதுனாலயும், கருப்பு வெள்ளையா இருந்ததுனாலயும் அந்த ஓட்டைகள்  பெரிசா தெரியல. அவரோட "கிராமத்து அத்யாயம்" பார்த்தேன். ஸ்க்ரிப்ட் ரொம்ப வீக். டெக்னிகலா கூட புவர்தான்.

ஹீரோயின் டாமினேஷன் அதிகம் இருக்கிற "மூன்றாம் பிறை" மாதிரி படத்துல நடிக்க எப்படி ஒத்துக்கிட்டிங்க?

"இட் எஸ் அ ப்யூட்டிபுல் சப்ஜெக்ட் . ஸ்ரீதேவி டாமினேட்  பண்ற சப்ஜெக்டா இருக்கலாம். பட் அந்த கேரக்டர் டாமினேட் பண்றதுக்கு தூண்டுகோலான  அழுத்தமான கேரக்டர் என்னோடது. இயல்பாவே நல்ல ஆர்டிஸ்ட்டான ஸ்ரீதேவி கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் பண்ணினா போதும்; அவார்ட் வாங்குற கேரக்டர் அது. 

நடிக்க நடிக்கதான் நடிப்பு மெருகேறும். நான் ரஜினி மாதிரி ஓவர் நைட் ஸ்டாராயிடல.எப்படியெல்லாமோ என்னவெல்லாமோ செஞ்சு அலைஞ்சு நடிகனானேன். என்னதான் திறமையிருந்தாலும் விதி என் பக்கம் சாதகமா இல்லனா என்னிக்கோ நான் வாஷ் அவுட் ஆகி இருப்பேன். "உல்லாசப் பறவைகள்", "அவள் அப்படித்தான்" மாதிரி படம் பண்ணா போதும்னா, "மீண்டும் கோகிலா", "குரு"  போன்ற படங்களில் நான் இருந்திருக்கமாட்டேன். இது ஒரு கத்தி முனை சஞ்சாரம் மாதிரி. பேலன்ஸ்ட் தவறாமயிருக்கணும். எவ்வளவுதான் ஜாக்கிரதையா இருந்தாலும் சில சமயம் பேலன்ஸ் தடுமாறுது. கீழ விழாம சமாளிச்சுகிட்டு நிக்கணும்.

இரவு ஏழரை மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டுக்குள் கார் நுழைந்தது. இதற்கு மேலும் அவரை தொந்தரவு செய்யாமல் புறப்பட்டோம்.

சந்திப்பு: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.12.83 இதழ் ) 

]]>
dinamani, cinema express, tamil cinema, kamalhassan, mumbai, acting https://www.dinamani.com/specials/cinemaexpress/2017/may/03/அவள்-அப்படித்தான்-ஒரு-மாஸ்டர்-பீஸூ-ன்னு-என்னால-சொல்ல-முடியல---கமல்-2695486.html
2695484 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் பயமும் பொறுப்புணர்வும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன - இளையராஜா DIN DIN Wednesday, May 3, 2017 04:14 PM +0530  

மிகக் குறுகிய காலத்திற்குள் இசைத்துறையில் இமாலய சாதனை புரிந்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.  இளையராஜாவின் வெற்றிக்கு காரணம் என்ன? அவரது இசை ஞானமா? பயிற்சியா? திறமையா?  அவரே சொல்கிறார்.

நான் என் தொழிலை தெய்வமாக கருதி உழைக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன். தொழிலை மதிக்கிறேன்.காலை ஏழு மணிக்கு பாடல் பதிவு ஆரம்பம் என்றால் அதற்கு முன்பே வந்துவிட வேண்டும் என்ற பயமும் பொறுப்புணர்வும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன. பணம் சம்பாதிப்பது என்பது மனிதனுக்கு முக்கியமான விஷயம்தான். ஆனால் பணமே பிரதானம் என்று நான் நினைப்பதில்லை. பணம்தான் குறிக்கோள் என்றால் பல படங்களுக்கு நான் ரெக்கார்டிங்கே செய்திருக்க மாட்டேன்.  இசை ஒன்றுதான் என் வாழ்க்கையில் இப்போது லட்சியம் குறிக்கோள் எல்லாமே!

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிப்பதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்பது உண்மையா?

இளையராஜா லேசாகப் புன்னகைத்தார். பிறகு சொன்னார்.

எனக்குப் பத்திரிகைகள்  அளித்த ஆதரவை நிச்சயமாக மறக்க முடியாது. என் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகளும் காரணம் என்பதை உணர்ந்தவன் நான். ஆனால் சிலநேரங்களில் சில பத்திரிக்கைகளில் எழுதப்படும்  கணிப்புகள் தவறாக இருந்த பொழுதிலும் எனக்கு பத்திரிக்கைகள் மீது வெறுப்பு கிடையாது.

பொதுவாக விமர்சனம் என்பது கலைஞர்களுக்கு உரமும் உற்சாகமும் ஊட்டக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.அதற்காக குறையே கூறக் கூடாது; துதி பட வேண்டும் என்று அர்த்தமில்லை.விமர்சனத்தை படிப்பவர்கள் அதனைப் படித்து விட்டு அதனை ஒப்புக் கொள்ள வேண்டும்.  "பாட்டுக்கள்  சரி இல்லை" என்று எழுதப்பட்ட பிறகு, அந்த பாட்டுக்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆகும் நிலை வந்தால் அந்த விமர்சனம் தவறான கணிப்புதானே?

சந்திப்பு: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.82 இதழ் ) 

]]>
dinamani, cinema express, memeories, tamil cinema, music director, ilaiyaraja https://www.dinamani.com/specials/cinemaexpress/2017/may/03/பயமும்-பொறுப்புணர்வும்-எப்போதும்-என்னிடம்-இருக்கின்றன---இளையராஜா-2695484.html
2695483 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் பரபரப்பாக வந்து விட்டு, பரபரப்பாக போய் விடுகிறார்கள் - எஸ்.பி.முத்துராமன் DIN DIN Wednesday, May 3, 2017 04:12 PM +0530  

திரையுலகில் எல்லோருக்கும் நல்லவராக திகழும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அன்று ஏ.வி.எம்மின் 'நல்லவனுக்கு நல்லவன்' படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். சமீபத்தி ல் கண் ஆப்பரேசன் செய்து கொண்ட அவரை குசலம் விசாரித்து விட்டு, அடுத்த நாள் காலையில் அவரைப் பேட்டி காணச் சென்றேன்.    

பள்ளி நாட்களில் நீங்கள் எந்த இயக்குனரின் விசிறி?

'பராசக்தி' படம்பார்த்து இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சின் விசிறியானேன். அதையடுத்து 'நெஞ்சில் ஒரு ஆலயம்' பார்த்து ஸ்ரீதரின் ரசிகரானேன்.

நீங்கள் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரின் உதவியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.அவர் இயக்கிய படங்களில் உங்களை கவர்ந்த காட்சி ஒன்றினை கூற முடியுமா?

'ராமு' படத்தில் தனது கண் முன்னே தன் தாயார் நெருப்பில் எரிவதை பார்த்த பையன் (ராஜ்குமார்)       ஊமையாகி விடுவான். ராணுவத்திலிருந்து திரும்பி வரும் தகப்பன் ஜெமினி, மகனை மனைவியின் சமாதிக்கு அழைத்துச்  செல்வார். பையன் 'அம்மா..அம்மா' என்று சொல்ல முயற்சி செய்வான். கடைசி வரை மனதில் உள்ளத்தை சொல்ல முடியாமல் துடிப்பான். 

இந்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு கிழவி உணர்ச்சி வசப்பட்டவராக  "கண்ணா அம்மானு சொல்லி விடப்பா" என்றார். இதை தியேட்டரில் நேரில் பார்த்தோம்.  என்னால் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று.

இயக்குனர் என்று ஒருவர் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வேண்டுமென்பதற்காக டைரக்டர்கள் 'சிம்பாலிக் ஷாட்' வைக்கிறார்களே?

'சிம்பாலிக் ஷாட்' வைப்பதில் தவறவில்லை.அனால் படத்தில் அது சரிவரப் பொருந்த வேண்டும். நான் முதலில் இயக்கிய 'கனி முத்து பாப்பா' படத்தில் ஒரு குழந்தை தந்தியடிக்க வேண்டுமென்றதும் அப்பா தனது பெயரைக் காட்டுவது போல கட்டினோம். சுருக்கமாகச் சொன்னால் இந்த உத்தி இயற்கையாக இருக்க வேண்டும். .செயற்கையாக இருக்க கூடாது.

உங்கள் யூனிட்டுக்கு 'மினிமம் கேரண்ட்டி யூனிட்' என்று பெயராமே?

ஆமாம் ..ரசிகர்களும் பத்திரிகை விமர்சனங்களுமே எங்களை மேலும் மேலும் பாலீஷ் செய்து கொள்ள உதவுகிறது. கதை கெட்டுப் போகாமல் சொல்லப்பட வேண்டும். விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படும் தவறுகளை கவனத்துடன் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரை ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கு மேல் இயக்க ஒப்புக் கொள்வதில்லை. அத்துடன் ஒவ்வொரு படத்துக்கும் தலா பத்து நாட்கள் ஒதுக்குகிறோம். மூன்றாவது படத்தின் டிஸ்கஷனையும் ஓய்வாக கவனிப்போம்.

அத்துடன் தொழிலில் நானும் எனது யூனிட்டும் முழு அளவில் சின்சியராக பணியாற்றுவதுதான் 'மினிமம் கேரண்ட்டி யூனிட்' என்ற பெயரைப் பெற முடிந்தது.

படப்பிடிப்பின் முதல் நாள் சென்டிமெண்டாக என்ன காட்சி எடுப்பீர்கள் ?

ஓப்பனிங் ஷாட்டில் நல்ல வார்த்தைகள் வருமாறு எடுப்போம். சில படங்களில் இந்த சீன் இடம்பெறும். கதையைப் பொறுத்தது.  

திரையுலகில் இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் வந்து விட்டார்களே? 

திரையுலகில் நிறைய இளைஞர்கள் இயக்குனர்களாக வருவது நல்ல விஷயம்தான். வரவேற்க தகுந்ததும் கூட.ஆனால் அவர்கள் பலர் நிலைபெற்றிருப்பது ரொம்பக் கம்மி. பரபரப்பாக வந்து விட்டு, பரபரப்பாக போய் விடுகிறார்கள்.

தங்கள் இயக்கிய படங்களில் பிடித்தமான லொகேஷன் எது?

புதுக்கவிதை படத்தில் இடம்பெறும் "மூணாறு" பகுதி. இடமும் சரி.பாடலும் சரி சிறப்பாக அமைந்தன. ரஜினிகாந்தும் ஜோதியும் சிறப்பாக நடித்திருந்தனர்.

தாங்கள் டைரக்ட் செய்த படங்களில் மனதை தொட்ட காட்சி எது?

'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினிகாந்தும் அம்பிகாவும் சந்திக்கும் காட்சி.  ஓடிப்போன மனைவியை கணவன் பத்து வருடம் கழித்து சந்திக்கிறான். மனைவி தன்னுடைய தவறை மன்னித்து தான் இறந்து விட்டால் தன்னை அனாதைப்பிணம் ஆக்கி விடக் கூடாது என மன்றாடுகிறாள். இந்த சீனில் பஞ்சு அருணாசலத்தின் வசனமும், ரஜினி-அம்பிகாவின் நடிப்பும்  மெருகூட்டியது. மறக்க முடியாத காட்சி.

சவுரிராஜன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)

]]>
dinamani, cienma express, memeories, tamil cinema, director, SP muthuraman https://www.dinamani.com/specials/cinemaexpress/2017/may/03/பரபரப்பாக-வந்து-விட்டு-பரபரப்பாக-போய்-விடுகிறார்கள்---எஸ்பிமுத்துராமன்-2695483.html
2695481 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் சிவாஜி என்னை டான்ஸ் பண்ணச் சொன்னாரு - ஏ .வீரப்பன்          DIN DIN Wednesday, May 3, 2017 04:09 PM +0530  

நகைச்சுவை நடிகர்  ஏ.வீரப்பன் பலவிதத்தில் கெட்டிக்காரர். அவர் இருக்க வேண்டிய இடம் வேறு...அந்த இடத்தில் அவர் இல்லையே என்பது குறித்து எனக்கு நிரம்ப வருத்தமுண்டு. அவர் கவுண்டமணியிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் போனேன். என்னை பார்த்தவுடன் வீரப்பனுக்கு குஷால் கிளம்பி விட்டது. கவுண்டமணியிடம் பேசுவது போல என்னிடம் பேச ஆரம்பித்தார். "இப்ப வர்ற நடிகர்களுக்கு பேசத் தெரியல...பாடத் தெரியல..ஆடத் தெரியல.அந்த காலத்துல நாங்க அப்படியில்ல. எதுவும் செய்வோம்.

ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிச்ச 'படித்தால் மட்டும் போதுமா' படத்துல நான், சதன் இன்னும் சிலர் சேர்ந்து ஆட வேண்டிய சீன். அந்த நேரத்தில  கம்பெனிக்கும், டான்ஸ் மாஸ்டர் சின்னி சம்பத்துக்கும் ஏதோ உள்நாட்டு பிரச்சினை . டான்ஸ் கம்போஸ் பண்ண மாட்டேன்னுட்டாரு. சிவாஜி என்னை பண்ணச் சொன்னாரு.அவ்வளவுதான் ..ஒரு மணி நேரத்துல..'கோமாளி..கோமாளி' அப்டின்னு துவங்குற அந்த பாட்டுக்கு இதுதான் டான்ஸ்..இப்படி மூவ்மென்ட்ஸ்னு கம்போஸ் பண்ணி  ஷூட் பண்ணவும் ஆரம்பிச்சாச்சு. பாட்டிலே கடைசி அடி இருக்கும் பொழுது டான்ஸ் மாஸ்டர் சின்னி சம்பத் வந்து அங்கே நடக்கிறதைப் பாத்துக்கிட்டு நின்னாரு. அப்புறம்தான் நான் அவரை சமாதானம் பண்ணி பாக்கியுள்ள அடிக்காவது கம்போஸ் பண்ணுங்கன்னு சொல்லி பண்ண வச்சேன்.  அப்போ நான் டான்ஸ் மாஸ்டரிடம் , 'அண்ணே,பாய்ஸ் கம்பெனி பசங்கள விட்டா என்ன வேணா பண்ணுவாங்கண்ணு ' சிரிச்சுகிட்டு சொன்னேன்.

அப்புறம் ஒரு சமயம் தொழில் சரியா நடக்காத சமயம். வறுமை வறுத்துக் கொட்டுது.  பதமினி பிக்சர்ஸ் தயாரிக்கிற கன்னடப் படத்துக்கு கோரஸ் பட ஆளுங்க வேணும்னு வந்தாங்க. எனக்கும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவனுக்கும் கன்னடமும் தெரியாது.ஒரு எழவும் தெரியாது. செம பட்டினி. அதனால ஒத்துக்கிட்டு போய் கன்னட கோரஸ் பாடினோம். இதுல ஒரு பியூட்டி என்னன்னா ..கோரஸ் பாட வந்த கன்னடப் பசங்கள்ல ரெண்டு பேர ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. நாங்க ஓகே ஆகிட்டோம். ஏன்னா நாங்க பாய்ஸ் கம்பெனி நடிகனுங்க. விட்டா எதுவும் செய்யுற டாலன்ட் எங்களுக்கு இருக்கு...என்று சொல்லி சிரித்தார்.

அப்பொழுது நாடகங்களில் பாய்ஸ்களாக நுழைந்து அடி உதை பட்டு தேர்ந்து சினிமாவுக்கு மெச்சூரிட்டியுடன் வந்தார்கள். இப்பொழுது சினிமாவுக்குள் நுழையும் போது எல்.கே.ஜி, யூ.கே.ஜி பேபீஸ்களாக நுழைந்து பத்து படங்களுக்கு பிறகுதானே பாய்ஸ்களாகவே மாறுகிறார்கள்.!

பேட்டி: இமருதம்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.84 இதழ்)             

]]>
dinamani, cinema express, memories, tamil cinema, comedy actor, a.veerappan https://www.dinamani.com/specials/cinemaexpress/2017/may/03/சிவாஜி-என்னை-டான்ஸ்-பண்ணச்-சொன்னாரு---ஏ-வீரப்பன்-2695481.html
2558343 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் டைரக்டர் கே.பி குடுத்த கடமையை நன்கு முடித்த திருப்தி.    கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 26, 2016 03:35 PM +0530 "நெற்றிக்கண்" படத்தின் முதல்  பிரிண்ட்டை பார்க்கிறோம்.  கதைக் கோர்வை - வசனம் - பாடல்கள் - இசை - நடிப்பு - ஒளிப்பதிவு - எடிட்டிங் - கலை - ஒப்பனை  அத்தனை கலைஞர்களைடைய  உழைப்பும் படத்தில் அபாரமாக  தெரிகிறது. பிறந்த  குழந்தை அழகாக இருப்பதைக் கண்ட  நிலையில் நான்  இருக்கிறேன். டைரக்டர் கே.பி அவர்கள் பாராட்டுகிறார்கள். அவர் குடுத்த கடமையை நன்கு முடித்த திருப்தி.   

இரவு சத்யா 'மூவிஸின் ராணுவ  வீரன்'படத்திற்காக திருநீர்மலையில் பல லட்சம் செலவு செய்து செயற்கையாக ஒரு திருவிழாவை நடத்துகிறோம். அக்கோயில் தோன்றிய காலத்தில் இருந்து அப்படி ஒரு அலங்காரம் செய்ததே இல்லையாம். 30  மோட்டார் சைக்கிள்களில் சிரஞ்சீவியின் ஆட்கள் வந்து கலாட்டா   செய்கிறார்கள்.ரஜினி  சண்டைபோடுகிறார்.என் கண்ணான ஒளிப்பதிவாளர் பாபுவுக்கு மகிழ்ச்சி. மலைக்கெல்லாம்  லைட்  போட்டு அக்காட்சிக்கு உயிர்  கொடுக்கிறார்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ் )

]]>
Cinema express, memories, director SP.Muthuraman, K.balachander, netrikan https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/26/டைரக்டர்-கேபி-குடுத்த-கடமையை-நன்கு-முடித்த-திருப்தி-2558343.html
2558342 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் 'இந்த வீடு எனக்கு சாஸ்வதம் கிடையாது' கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 26, 2016 03:31 PM +0530 ட்ரஸ்ட்புரத்தில் எனக்கு வாடகைக்கு வீடு குடுத்த பொழுது நடிகை என்று தெரிவதுதான் கொடுத்தார்கள்.அந்த வீட்டின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்தார். அவருடைய உறவினர்தான் அந்த வீட்டின் உரிமையாளார்க இருந்து வாடகையும்  வாங்கினார்.

ஆரம்பத்தில் அன்பாக இதமாக பழகி வந்தனர். போக போக நிலைமை மாறியது. கடுமையான வார்த்தை வெடித்தது.

காலி செய்ய வேண்டும் என்றனர். அதற்கு காரணம் வாடகை தகராறு கிடையாது. எல்லா மாதமும் முதல் தேதிக்கு முன்பே நூறு, இருநூறு  என்று சிறுக சிறுக வாங்கி விடுவார்கள்.

வீட்டின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றனர். உண்மை அதுவல்ல. என்னுடைய வளர்ச்சியைக் கண்டு, இனிமேல் இவர்கள் காலி செய்வார்களோ என்ற அச்சம்.

அடுத்து கங்கா நகருக்கு குடி வந்தேன். இங்கு மூன்று ஆண்டுகள் குடி இருந்தேன். அடிக்கடி "நீங்கள் காலி செய்தால்,எங்களுக்கு இன்னும்  நிறைய வாடகை கிடைக்கும்"என்று கூறி வந்தனர். அடிக்கடி இந்த மாதிரி கூறுவதை கேட்டு ஒரு  நாள் எனக்கு பொறுமை போய் விட்டது.

"இந்த வீடு எனக்கு சாஸ்வதம் கிடையாது.எனக்குத் தெரியும். கட்டாயம் இந்த வீட்டை  காலி செய்யத்தான் போகிறேன் . அதற்கு குறைந்தது மூன்று மாதங்களாகும். சொந்த வீடு வாங்கி கொண்டுதான் காலி செய்வேன்"என்றேன்.

குறிப்பிட்டபடி வீடு வாங்கி கொண்டு நான் காலி  செய்தேன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.81 இதழ்)

]]>
Cinema express, memories, Actress Sumithra, Rent house https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/26/இந்த-வீடு-எனக்கு-சாஸ்வதம்-கிடையாது-2558342.html
2558340 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் ஐயாயிரம் ரூபாய் ஏமாற்றிய எழுத்தாளர் ! கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 26, 2016 03:27 PM +0530 ஒரு எழுத்தாளர் நண்பர் என்ற முறையில் எனக்கு அறிமுகமானார். அவரும், அவர்  மனைவியும் அடிக்கடி என்னை அடிக்கடி தம் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுவார்கள். சமயம் இருந்தால் நான் செல்வேன் .எப்போதாவது விருந்தாளியாக நான் சென்ற போதெல்லாம் அவர்கள் அன்பு என்னைத் திக்கு முக்காட வைத்து விடும்.  அவர்களைப் பற்றிய என் எண்ணம் மிக உயர்வாகவே இருந்தது.

ஒரு சமயம் எழுத்தாளரின் மனைவி தனக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்றும், அப்பணத்தை கடனாகப்  பாவித்து உடனே திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்.

நான் உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகு அவரகள் பழகும் முறையில்  வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் முன்பு போல அன்புடன் பேசாததையும் நான் உணர்ந்தேன். எனக்கு காரணம் புரியவில்லை.

நாளாக நாளாக அந்த பிரிவு விரிசலாக மாறியது. இதற்கிடையே ஓரிரு முறை நான் கடனாக குடுத்த பணத்தைப் பற்றிக் கேட்டேன். அவரகள் எந்தவிதமான சுமுகமான பதிலையும் சொல்லவில்லை. எனக்கு குழபபமே ஏற்பட்டது.

கமலிடம் என் குழப்பத்தை சொன்னேன். நன்றாகத் திட்டினான். "நாலு தரம் சாப்பிடக் கூப்பிட்டவுடன் ஐந்தாயிரம் ரூபாய் குடுத்து விட்டாயாக்கும்,பெரிய பரோபகாரி !"என்று கேலி பண்ணினான்.

"ஏன் கமல், ஆபத்துக்கு உதவினேன், தப்பா? அவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தார்களோ? ஏதோ நம்மாலான உதவி, அவ்வளவுதானே? என்றேன்.

"ம்ஹூம், உனக்கு சொன்னாப் புரியாது, தவி" . என்று சபித்தான்.

அவர்களால் அந்த  தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு ஏதேனும் கஷ்டம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து அவ்ர்கள் பல நண்பர்களுக்கு பார்ட்டிகள் கொடுப்பதும், அவர்களை  உற்சாகப்படுத்துவதாகவும் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன்.,

வித விதமாக  விருந்தளித்து நண்பர்களை சந்தோஷபப்டுத்தி, பிறகு நண்பர்களையே ஏமாற்றுவதுதான்  நட்பின் இலக்கணமா?

சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)

]]>
Cinema express, memories, Actres Lakshmi, Tamil writer, Kamalahasan https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/26/ஐயாயிரம்-ரூபாய்-ஏமாற்றிய-எழுத்தாளர்--2558340.html
3397 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் திரைக்கதை பயன்படுத்தப்பபடாமல் தடுத்த இடைத்தரகர்கள்! கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 12, 2016 04:23 PM +0530 கண்ணதாசன் தொடர்

1947-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திய 'சண்ட மாருதம்' பத்திரிகையில் நான் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது வயது எனக்கு 20. மிக அமைதியான வாழ்க்கை.

125 ரூபாய் சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை.

சேலத்தில் அமைதியான சூழ்நிலையியில் எங்களுக்கு என ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் நாங்கள் மூவர்தான் தங்கி இருந்தோம்.

ஒருவர் முக்தா பிலிம்ஸ் சீனிவாசன். மற்றொருவர் அவரது சகோதரர் ராமசாமி. அவர்கள் இருவரும் மாடர்ன் தியேட்டர்சில் டைப்பிஸ்ட்டுகள்.

எனக்கென ஓரு மானேஜர், ஒரு குமாஸ்தா, ஒரு ஊழியர் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.

நான் போய்ச் சேர்ந்த சில மாதங்களில் திரைக்கதை எழுதும் வாய்ப்பை திரு டி..ஆர்.எஸ் கொடுத்தார். முதன்முதலில் ஆதித்தன் கனவு என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினேன். அங்கிருந்த இடைத்தரகர்கள் அது பயன்படுத்தப்பபடாமல் தடுத்து விட்டார்கள். நகைச்சுவைக்கு காட்சிகள் மட்டும் சில பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

பிறகு மாயாவதிக்கு எழுதினேன்.அதுவும் பயன்படுத்தபபடவில்லை.

மாதச் சம்பளத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்த பொழுது சில வேடிக்கைகள் நிகழ்ந்தன, மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ஒரு ஹாஸ்டல் உண்டு. நாட்டிய நடிகைகள் அங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களது அறையில்தான் போய் பேசிக் கொண்டிருப்பேன். அந்த அறைக்கு அடுத்த அறைதான் என்னுடையது.

யார் அப்படி நடந்தாலும் சீட்டுக் கிழிந்து போகும். என்னை பற்றி தயாரிப்பு நிர்வாகி எம்.ஏ .வேணு முதலாளியிடம் நிறைய ரிப்போர்ட் கொடுப்பார்.

முதலாளி உடனே இரண்டு அறைகளுக்கும் நடுவே உள்ள கதவை ஆணி வைத்து அறைய சொல்லி விட்டார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து நான் விலகிய பதினைந்தாம் நாளே எனக்கு தந்தி கொடுத்து வரச் சொன்னார் டி .ஆர்.எஸ். அப்போது டால்மியாபுரம் வழக்கில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அதற்குப் பணமும் கொடுத்தார்.

நான் புகழ் பெற பெற மாடர்ன் தியேட்டர்ஸுடன் நெருக்கம் இன்நும் அதிகமாயிற்று.

 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)

]]>
dinamani, cinema express, memories, poet Kannadasan, salem, modern theaters https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/12/திரைக்கதை-பயன்படுத்தப்பபடாமல்-தடுத்த இடைத்தரகர்கள்-3397.html
3394 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் கதையிலும் சில சமயங்களில் பைனான்சியர் தலையீடு உண்டு!  கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 12, 2016 04:16 PM +0530 ஏ .வி.எம் சரவணன் பேட்டி

எந்த மாதிரி கதையைக் கொண்ட படம் ஓடும், எது ஓடாது என்பதற்கு சில பைனான்சியர்கள் தரும் வியாக்கியானம் வேடிக்கையாக இருக்கும். இந்தக் கணிப்பில் அனுபவசா லிகள் கூட ஏமாந்திருக்கிறார்கள்.

மறைந்த ஜாவர் சீதாராமன் அவர்கள் நல்ல எழுத்தாளர். சிந்தனையாளர். ஒரு டிஸ்ட்ரிபியூட்டருடைய யோசனையை கேட்டு, சிவாஜி அவர்கள் நடித்த படங்களான, "பாகப்பிரிவினை", படிக்காத மேதை " இரண்டையும் மிக்ஸ் பண்ணி "வளர்பிறை" என்ற பெயரில் சிவாஜியை வைத்தே படம் எடுத்தார். படம் தோல்வி அடைந்தது.

அடுத்து நட்சத்திர தேர்வு. கதைக்கு ஏற்ற நடிகர் யார் , நடிகை யார் என்று யோசிப்பதற்குள், "இந்த நட்சத்திரத்தை போடுங்க, இவரைப் போடாதீங்க" என்று அதிலும் தலையிடுவார். அப்புறம் தாங்கள் சொன்னதையே திடீரென்று மாற்றிக் கொள்வார்கள் .

கதையிலும் சில சமயங்களில் பைனான்சியர் தலையீடு இல்லாமல் தப்பாது.

"இந்த சப்ஜெக்ட் சரி இல்ல, பேசாம இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக எடுத்து விடுங்கள். இப்போப் பாருங்க. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் உள்ள படங்கள்தான் பிச்சுக்கிட்டு போகுது. " என்பார்கள்.

என்ன செய்வது பாவம்! , அவர் சொல்படிதான் தயாரிப்பாளர் கேட்டாக வேண்டும்.பைனான்ஷியராயிற்றே? இப்படியெல்லாம் ஒரு படத்தை தயாரிக்கும் முன்னயே பிரச்சினைகள் ஆரம்பமாகி விடுகின்றன.

 

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.10.81 இதழ்)

]]>
dinamani, cinema express, cinema production, memories, AVM Saravanan https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/12/கதையிலும்-சில-சமயங்களில்-பைனான்சியர்-தலையீடு உண்டு-3394.html
3389 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் கலைச்சேவை, அது இதுங்கறதெல்லாம் நம்ப முடியல! கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 12, 2016 03:49 PM +0530 "டாக்டர் சிவா" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி குறைந்த வருடங்களில், 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அல்லது நடனமாடி, அப்பா! எவ்வளவு பெரிய சாதனை இது?

தி.நகர் சாரி தெருவில் அதே பழைய வீடு, அதே பழைய ஜெயமாலினி அவரிடம் இந்த கேள்வியை கேட்ட பொழுது புன்னகைத்தார். .

"சாதனையா..ம்ஹூம்ம்.. இல்லீங்க..அந்த எண்ணமே இன்னும் வரல.உள்ளுக்குள்ள ஆசைய அடக்கி வெச்சு வெச்சு , ஒரு நாள் பட்டுத் தெறிச்சு சிதறி விடுதலை கிடைச்சாப்பல, ஒரு வசதியான சவுகரியமான க்ஷணத்துல நான் நடிகையாகிட்டேன். நடிகையா என்னை ரெகக்னைஸ் பண்றது பெரிய விஷயம். அதுக்கு குடுத்து வச்சிருக்கணும்.

இந்த வெற்றிக்கு எது அடிப்படையா இருந்தது ?

பணம் சம்பாதிக்கணுங்கிற பரப்புதான். வேற என்ன? பணம் சம்பாதிக்கணும்னுதான் எல்லாரும் இந்த பீல்டுக்கு வராங்க. கலைச்சேவை, அது இதுங்கறதெல்லாம் நம்ப முடியல.உண்மையாவே நம்ப முடியல. . அபப்டிச் சொல்றவங்க பேச்சுல ஒரு பொய் தோணுது எனக்கு.

ஏன் தமிழ்ல அதிகமா உங்களால் படம் பண முடியல?

என்னால முடியாதது எதுவும் இல்ல. நான் என்னமோ வேண்டாம்னு விலகிப் போற மாதிரி எல்லாரும் நினைச்சுக்கறாங்க. பட் , ஒரு நல்ல கேரக்டர் ரோல் தர யார் தயாரா இருக்காங்க? இத ஒரு சவாலாவே சொல்றேன்.

சென்சார் போர்டு அவசியம்னு தோணுதா உங்களுக்கு?

நிச்சயமா. கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கறப்பவே வேணும்னு திணிக்கிற சீன்ஸ் நிறைய..அதுவும் இல்லனா அவ்ளோதான். இல்லேனா நான் கொஞ்சம் சிரமப்படுவேன். இன்னும் கொஞ்சம் போல்டர பண்ணுமாங்கிற தொந்தரவெல்லாம் வரும்.

இப்படி வாழ்க்கையெல்லாம் ஆடிக்கிட்டு, ஆடறதே வாழ்க்கையாகிட்டா என்ன பண்ணுவீங்க?

வாழற வரைக்கும் ஆடிக்கிட்டிருப்பேன். என் தொழில் நான் செய்யுறேன். உங்களுக்கு ஒரு வயசுல ரிட்டயர்மெண்ட் வருதில்லயா? அது போல் என்னால் ஆட முடியாத நிலை வர்றப்ப, எனக்கு மூச்சிரைக்கிறப்போ நிறுத்திடுவேன்.

உங்கள பாத்தா பரிதாபமா இருக்கு எனக்கு.

பரிதாபப் பார்வை பார்க்க நான் காட்சி பொருள் இல்லை. இன்னிக்கு என்னோட அந்தஸ்த்து என்ன? சோசியல் ஸ்டேட்டஸ் என்ன? இருபத்தோரு வயசுல நான் சம்பாதிச்சத நீங்க சம்பாரிக்கணும்னா எத்தனை வருஷம் ஆகும்?

டான்ஸ் மாஸ்டர் ஆடிக் காட்டுற மூவ்மென்ட்ஸை அபப்டியே செயயப் போறீங்க. இதுல சாதனைனு என்ன இருக்கு?

நடிக்கிறத விட டான்ஸ் ஆடுறது ரொம்ப கஷ்டம். டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவாரு வாஸ்தவம். அத்துப்படி ஒரு நிமிஷம் கூட உங்களால் ஆட முடியாது. ஜஸ்ட் உணர்ச்சிகளை ஒருங்கிணைச்சு பண்ற விஷயம் இல்ல இது. உடம்போட ஓவ்வொரு நரம்பும் ஆடணும்.

ஜனங்களோட அபிமானத்த பாக்கும் போது . இத்தனைக்கும் ஆதாரமா நமக்கு என்ன யோக்கியதையிருக்குனு தோணாதா?

நிச்சயமா தோணும். பட் உள்ளுக்குள்தான். வெளில காட்டிக்கிறதைல்லை.

சந்திப்பு: உத்தமன்

படங்கள்: லில்லியன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

]]>
dinamani, cinema express, memories, actress jayamalaini, dancer, tamil film industry https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/12/கலைச்சேவை-அது-இதுங்கறதெல்லாம்-நம்ப-முடியல-3389.html
3387 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் வளர்ந்து விட்டதாக நான் எந்த சூழ்நிலையிலும் நினைக்கிறதேயில்லை! கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, August 12, 2016 03:35 PM +0530 வளர்ச்சி

ஒரு நண்பர் 'முள்ளும் மலரும்' படத்திலிருந்து 'நண்டு' வரை எடுத்துக்கிட்டா டைரக்டர்ங்கிற முறையில வளர்ச்சி அடைஞ்சிருக்கீங்களா? ன்னு கேட்டார். வளர்ந்து விட்டதாக நான் எந்த சூழ்நிலையிலும் நினைக்கிறதேயில்லை. வளர்ந்திட்டோம்னு என்றைக்கு நினைக்கிறோமோ அன்றைக்கே தளர்ச்சியை நோக்கி போய்கிட்டிருக்கோம்னு அர்த்தம்.எல்லாமே ஆரம்பம்தான்!

என் மனசுல எவ்வளவோ செய்யணும்னு நினைச்சிருக்கேன். அதையெல்லாம் நினைச்சு பார்க்கும் போது இதுவரை செஞ்சதெல்லாம் ஆரம்பம்னுதான் நினைச்சுக்குவேன் மன நிறைவு இல்லாததையே என் மன நிறைவா நான் நினைக்கிறேன். இதை இதை செய்து முடிக்கலியேன்னு ஏற்படுற அதிருப்திதான் என்னோட திருப்தி.

ஒருமைப்பாடு

சிலர் மொழி தெரியாதவங்கள அறிமுகப்படுத்தறதாக குறைபட்டுக்குறாங்க. அது தவறான வாதம். ஒரு சுரேஷையும் அஸ்வினியையும் என் படத்தில நடிக்க வைச்சேன்னா, புதியவங்கள அறிமுகப்படுத்தணும்கிற ஆவல்தான். அதுக்காக தமிழ் தெரிஞ்சவங்கள பயப்படுத்தாம இல்ல.தேசிய ஒருமைப்பாடுன்னு சொல்றோமே , எப்படி?

யூனிட்

ஒரு படத்தின் வெற்றிக்கு யூனிட் ஒர்க்கும் முக்கிய காரணம். நாங்க ஒரு யூனிட்டா, குடும்ப பாங்கோட நம்பிக்கையா ஒர்க் பண்றோம். நல்ல யூனிட்டை வச்சு படம் பண்றதுல, எவ்வளவோ நன்மை இருக்கு. என்னை நம்பி படம் எடுக்கறவங்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய வகையில்தான் யூனிட் வச்சு படம் எடுக்கிறேன்.

செண்டிமெண்ட்

எனது திரைக்கதையில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்கையில் நடந்தவைதான். சிலர் செண்டிமெண்ட், ஆன்டி செண்டிமெண்ட் என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டி செண்டிமெண்ட் என்பதாக ஒன்று கிடையாது. எல்லாமே சென்டிமென்ட்தான். நாம ரொம்ப முன்னேறியாக்கணும். வேகமான வளர்ச்சி தேவை.

எச்சரிக்கை

ஒரு படம் வெற்றியடையும் போது அடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவர் என்னை பாராட்டும் போது எனக்கு ஏற்படுவது மயக்கம் அல்ல தயக்கம்தான்.

பேட்டி: சுடர்வண்ணன்

படங்கள்: ரவி.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

]]>
dinamani, cinema express, memories, tamil cinema, director mahendiran, https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/12/வளர்ந்து-விட்டதாக-நான்-எந்த-சூழ்நிலையிலும்-நினைக்கிறதேயில்லை-3387.html
2553111 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் என்னுடைய தெலுங்கைத் திருத்துங்கள் - ரஜினி கேட்டது யாரிடம்? கார்த்திகேயன் வெங்கட்ராமன் Thursday, August 4, 2016 09:31 PM +0530 'செலக்கமா செப்பந்தி'  (நிழல் நிஜமாகிறது) என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலில் அவர் என்னோடு கதாநாயகனாக நடித்தார். அப்போது அவருக்கு சரியாக தெலுங்கு பேச வராததால் அவர் பேசும் தெலுங்கு மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். இதை உணர்நத அவர் ஒரு நாள் என்னிடம், "நான் ஏதாவது தப்புத் தவறாகப் பேசினால், அதை நீங்கள் சொல்லித் திருத்தினால் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

அபபோது அவரிடம் நான் "இப்போது உங்களுக்கு இப்படிச் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றாலும் உங்களிடம் நல்ல நடிப்புத் திறமையிருக்குன்னு நினைக்கிறேன் . பேச்சில் உள்ள குறைகள் போகப் போக சரியாகி விடும். அப்போது எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்கள் " என்று சொன்னேன். இப்போது முதல் தர நட்சத்திர வரிசையில் இருக்கிறார்.

(ரஜினிகாந்த் பற்றி நடிகை சங்கீதா)

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)

]]>
https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/aug/05/என்னுடைய-தெலுங்கைத்-திருத்-2553111.html
2876 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் பாக்யராஜுடன் சுற்றிய பொழுது..! கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, July 29, 2016 06:02 PM +0530 "உங்களை சென்னை நகரில் சில முக்கியமான இடங்களுக்கு இப்பொழுது அழைத்துக் கொண்டு செல்லப் போகிறேன்" என்றதும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவது மாதிரியா? என்று கேட்டார் பாக்யராஜ் சிரித்துக் கொண்டே.

காரில் பேசிக்கொண்டே போனோம். சும்மா இல்லாமல் அவரது வாயைக் கிண்டிய பொழுது கிடைத்த விஷயங்கள்.

"சினிமாவில் நான் எழுதத் தொடங்கியதோ, நடிக்கத் தொடங்கியதோ பெரிய சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அல்ல .ஏதோ ஒரு ஆசை. எழுத வேண்டும், நடிக்க வேண்டும். அவ்வளவுதான். இருந்தும் டைரக்டர் கே.பாலசந்தரை நான் 'காப்பி' பண்ணுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சிலர் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைப்பதுதான் அவர்களுக்கு நியாயம். ! டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர் கே.பாலசந்தர் ஆகியவர்கள் பெரிய சிந்தனையாளர்கள். அவரகளது 'பாணி' எனக்கிலை. எனக்கு அந்த 'பாணியை' பின்பற்றும் எண்ணமும் இல்லை. அவகாசமும் இல்லை.

சிலர், ஆர்ட் பிலிம்! ஆர்ட் பிலிம்! என்று கூச்சலிடுகிறார்கள்! எது ஆர்ட் பிலிம்? தயாரிப்பாளர் டைரக்டர் இரண்டு பேரையும் சந்தோசப்படுத்துற பிலிம்தான் ஆர்ட் பிலிம் என்பதுதான் என் அபிப்ராயம் !" என்று அடித்துச் சொன்னார் பாககியராஜ்.

இப்படி பேசிக்கொண்டே 'வள்ளுவர் கோட்டம்' வந்து விட்டோம். அங்கு கார் நின்றதும் ரசிகர் கூட்டம் , "பாக்யயராஜ்! பாக்யராஜ்! என்று அவரது காரை சுற்றிக் கொண்டது.

பாக்கியராஜே அத்தனைப் பேரிடமும் கலகலப்பாகப் பேசினார்.

"எல்லோரிடமும் பிரீயாக பேசிப் பழகுகிறீர்களே" என்று கேட்டேன்.

இவர்களுக்காகவே நான் படமெடுக்கிறேன். இவர்களால்தான் நாங்கள் வாழ்கிறோம் என்றார் பாக்யராஜ்.

பேட்டி: ப்ரெய்ன் லால்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ் )

]]>
cinema express, director Bhaghyaraj, one day trip, interview, tamil cinema https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/jul/29/பாக்யராஜுடன்-சுற்றிய-பொழுது-2876.html
2867 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் அலைகள் ஓய்வதில்லை; சாதனைகள் மறைவதில்லை கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, July 29, 2016 05:57 PM +0530 தமிழ்ப்பட உலகில் ஒரு பெரிய திருப்பதையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அவரது "நிழல்கள்" வெளியான நேரத்தில். "போதுமான வரவேற்பை பெறவில்லை என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாமே தவிர அதை ஒரு தோல்விப் படமென்று நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று அவர் சொன்னார்.

அவரது இந்த கருத்து கான்ட்ரவர்ஸி ஆகியது.நிவாஸ் , பாக்கியராஜ் துணையில்லாமல் அவரால் தனித்து நிற்க முடியாது என்கிற அளவுக்கு கூடப் பேசப்பட்டது. அதிலிருந்து அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை பார்த்த மறுநாள் அவருக்கு போன் பண்ணி பாராட்டினேன். உங்களை உடனடியாக பேட்டி காண வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தேன்.

நானே உங்கள் அலுவலகத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்தார் பாரதி.

சினிமா எக்ஸ்பிரஸுக்கு பாரதிராஜா வருகை தருகிறார் என்ற தகவல் 'எக்ஸ்பிரஸ் எஸ்டேட் ' முழுவதும் தீயாய் பரவியது. கரெக்ட்டாக 11.05 மணிக்கு பாரதிராஜாவின் கார் வந்திறங்கியது. அடுத்து பேட்டி ஆரம்பமாகியது.

தங்களது படங்களில் புதுமைகளும், டெக்னிக்கல் சிறப்புகளும் இடம்பெறும் அளவுக்கு கதை வலுவாக அமைந்திருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு உங்கள் பதில்.. ?

கதை என்றால் என்ன? நெஞ்சைத் தொடும் சம்பவங்களின் கோர்வையை வைத்து ஒரு அழகான மெஸேஜ் சொல்ல வேண்டும். அதுதான் கதை.இதுவரை நான் உருவாகியுள்ள எல்லாப் படங்களிலும் மெஸேஜுடன் கூடிய அழகான கதையைக் கொடுத்திருக்கிறேன். கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், அது அவர்களது 'வ்யூ' அவ்வளவுதான்.

ஒரு தயாரிப்பாளர், ஒரு டைரக்டர் கண்ணோட்டத்தில் 'வெற்றிப் படம்' எனபதற்கு சரியான விளக்கம் அளியுங்கள். .

வெற்றிப்படமா அல்லது தோல்விப்படமா எனபது முழுக்க முழுக்க சிலர் வெளியிடுகின்ற விமர்சனங்களை வைத்து மட்டும் தீர்மானிப்பதல்ல. என்னைப் பொறுத்த வரை தோல்விப் படம் என்று நீங்கள் நினைக்கின்ற படம் முழு அளவில் (படத்தை உருவாக்கிய இயக்குனர் என்ற முறையில்) எனக்கு மன நிறைவை அளிக்கிற படமாக இருக்கலாம். அந்தப் படத்தை வெற்றி படமாகத்தான் ஏற்றுக் கொள்கிறேன். ஆகவே இது அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்த விஷயமாகும்.

பட உலகில் சிறந்த சாதனையை படைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் எந்த சாதனையையும் புரிந்திருப்பதாக நினைக்கவில்லை. யாரவது சொன்னால் அது அவர்கள் கருத்து.

"தமிழ்ப்பட உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த "ஸ்டார் சிஸ்டத்தை " உடைத்து எறிந்தது நீங்கள்தானே?

ஸ்டார் சிஸ்டத்தை நான் உடைத்தேன் என்று சொல்லப்படுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அது என் வேலையல்ல. என் படங்களுக்கு "பொருத்தமான " நடிகர்களை நடிகைகளை தேர்ந்தெடுப்பதால் "ஸ்டார் சிஸ்டத்தை" ஒழித்ததாகி விடாது.

"நிழல்கள்" வெற்றி படம் என்கிறீர்களா?

வெளிவர வேண்டிய காலத்திற்கு சில ஆண்டுகள் முன்னால் வந்து விட்டது. அதை ஜீரணிக்கும் சக்தியை மக்கள் இன்னும் பெறவில்லை.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.81 இதழ்)

]]>
cinema express, interview, controversy, director bharathiraja, alaikal oivathillai https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/jul/29/அலைகள்-ஓய்வதில்லை-சாதனைகள்-மறைவதில்லை-2867.html
2866 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் அவர் ஒரு மாமனிதர் - கமலஹாசன் கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, July 29, 2016 05:56 PM +0530 அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி என் காதுகள் வழியாக கேட்ட செய்திகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்த சமயம்.

கேட்ட செய்திகளெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் என்னை அருகில் அழைத்தார்.

நான் நெருங்கிச் சென்று வணங்கி விட்டு, என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஏன்ப்பா..இப்படி ரொம்ப ஒல்லியா இருக்கே..? உடம்பு நல்லா இருந்தா ஹீரோவா நடிக்கலாமே.. என்று அவர் சொன்னார்.

இதை அவர் என்னிடம் சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் அத்துடன் விடவில்லை. தொடர்ந்து அறிவுரை கூறினார்.

நல்லா கலரா இருக்கே..அறிவு இருக்கு. நடனம் தெரியுது.உடம்பை நல்லவிதமா வைச்சுகிட்டா சீக்கிரமே முன்னுக்கு வந்துடலாம்.அசிஸ்டெண்டாவே இருந்துடக் கூடாது.இதைச் செய்துகிட்டே உன்னை நீ வளர்த்துக்கனும். இப்படி சொல்லிவிட்டு, "என்னென்ன எக்சர்சைஸ் செய்யறே?" என்று கேட்டார்.

நான் என்ன எக்சர்சைஸ் செய்கிறேன் என்பதைச் சொன்னேன்.

"ஹூகும்..அப்படியெல்லாம் செய்யக் கூடாது.. தப்பு! எக்சர்சைஸ் செய்வது முறையோடு ஒழுங்கா தொடர்ந்து செய்யனும்" என்று சொல்லிவிட்டு, அவர் பத்து எக்சர்சைஸ்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து அவரோடு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது,ஒவ்வொரு நாளும் என்னை சந்திக்கும் போதெல்லாம், " என்ன எக்சர்சைஸ்.. ஒழுங்கா. செய்யறியா..?" என்று கேட்பார்.

நான் சொல்வதை பரிவோடு கேட்டு ஏதாவது குறை தென்பட்டால் திருத்துவார். எக்சர்சைஸ்கள் செய்வது குறித்து விளக்கமாக சொல்லித் தருவார்.

இதற்குப் பிறகு "நான் ஏன் பிறந்தேன்?" என்ற ஒரு படம் செய்த பின்பு, அவரோடு எனக்கு அதிகத் தொடர்பு இல்லை.அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

சில வருடங்கள் சென்றன. உடம்பில் சதைப்பிடிப்பு ஏற்பட்டது.எம்.ஜி.ஆர் சொல்லித் தந்த எக்சர்சைஸ்களை தொடர்ந்து செய்து கொண்டே வந்தேன். இப்போது இருக்கும் உடற்கட்டு வந்ததுக்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்.

என்னைப் பார்த்து விட்டு,அதன் பின்னர் எம்.ஜி.ஆர் ரொம்ப மகிழ்ச்சியடைந்து பாராட்டினார். இப்படித்தான் இருக்கணும் என்று தட்டிக் கொடுத்தார்.

அப்பொழுதுதான் நான் என் காதுகளில் விழுந்து, மனதில் குழப்பத்தை ஏற்படுத்திய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு ஹீரோவோ இன்னொரு நடிகனோ முன்னுக்கு வரக் கூடாது என்று நினைக்கக் கூடியவராக இருந்தால் கண்டிப்பாக இப்படியெல்லாம் உள்ளன்போடு பழகியிருக்க மாட்டார். அப்புறம் ஏன் இப்படியெல்லாம் அவரைப் பற்றி இல்லாததைச் சொல்லுகிறார்கள்?

அவரை பற்றி அப்படிச் சொன்னதெல்லாம் அபத்தம் பொய் என்பது நான் அறிந்த அனுபவ உண்மை.

எழுத்து: நாகை தருமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.12.81 இதழ் )

]]>
actor, kamalhasan, MGR, cinema express, meeting experience, exercise https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/jul/29/அவர்-ஒரு-மாமனிதர்---கமலஹாசன்-2866.html
2872 ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ் பாக்யராஜ் பற்றி ராதிகா கார்த்திகேயன் வெங்கட்ராமன் DIN Friday, July 29, 2016 05:55 PM +0530 ராஜனை நான் முதல்ல சந்திச்சது 'கிழக்கே போகும் ரயில்' படத்துல அஸிஸ்டண்ட் டைரக்டராகத்தான். ஷூட்டிங் ஆரம்பிக்கிற அன்னிக்கு பாண்ட் , சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு டைரக்டர் பாரதிராஜாவோட லொகேஷன்ல போய் நின்னப்ப, "கதாநாயகி எங்க சார்" னுதான் ராஜன் பாரதிராஜாகிட்ட கேட்டார். மெதுவா என் பக்கம் கை காட்டினார் பாரதிராஜா. "யாரு இந்த பூசணிக்காயா கதாநாயகி?" ராஜன் என்னைக் காண்பித்து கேட்ட பொழுது வெகுண்டு போனேன் . இந்த ஆளை எப்படியாவது எந்த சந்தர்ப்பதிலியாவது பழி வாங்க வேண்டுமென்று மனதில் குறித்துக் கொண்டேன்.

மறுநாள் எடுக்கப்போகும் சீனை விவரித்து சொல்வதற்காக ராஜன் அன்று இரவு ஃபைலுடன் ரூமுக்கு வந்த போது, நானும் சக நடிகை உஷாவும் தீர்மானித்துக் கொண்டோம். சீரியஸாக சீனை ராஜன் விவரிக்கும் போதெல்லாம் "ஏன் உஷா அந்தப் புடவை நல்லாயில்ல? என்று நானும், அதே மாதிரி பதிலுக்கு அவளும் முழுக்க முழுக்க பேச்சை மாற்றி வேண்டுமென்றே மூன்று நாலு தடவை இக்னோர் பண்ணினோம். கோபம் பொத்துக் கொண்டு வந்தது ராஜனுக்கு ஃபைலைத் தூக்கி போட்டு விட்டு , "நாளைக்கு ஷூட்டிங்ல் டைரக்டர்கிட்ட பாட்டு வாங்கினாத்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்" என்று சத்தம் போட்டு விட்டுப் போய் விட்டார்.

படம் முடிஞ்சு டப்பிங் ஸ்டேஜ்ல எனக்கு யாரோட வாய்ஸ் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது , ராதிகாவே பேசட்டும், அவளைத் தவிர யார் வாய்ஸ் கொடுத்தாலும் இந்தக் காரெக்டருக்கு நிச்சயமா சூட் ஆகாது என்று அடித்துச் சொன்னவர் ராஜன்தான்.

ஆஸ் எ மேன், ராஜனைப் பத்தி சொல்லனும்னா, ஹீ ஈஸ் எ ஜெம். வெரி சாப்ட் ஸ்போக்கன். அவனுக்கு கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை.

ஸ்க்ரீன் ப்ளேயில ராஜன் அசாத்திய இன்டலிஜெண்ட். இவருக்கு பக்க பலமா இருக்கறது அதுதான்.வரிசையான வெற்றிக்கு ஆதாரம் அதுதான்

கண்டிப்பா இருக்க வேண்டியவங்ககிட்டயும் சாஃப்ட்டா இருக்கறதுதான் இவரோட பெரிய குறைன்னு எனக்கு தோணுது.

ராஜன்கிற மனிதரோட பிரண்ட்ஷிப் கெடச்சதுக்காகவும், ராஜன்கிற டைரகடரோட பரிச்சயம் ஏற்பட்டதுக்காகவும் நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். கொஞ்சம் கர்வம் கூடப்படுறேன்.

பேட்டி: உத்தமன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.81 இதழ் )

]]>
cinema express, actress radhika, director baghyaraj, working experience, memories https://www.dinamani.com/specials/cinemaexpress/2016/jul/29/பாக்யராஜ்-பற்றி-ராதிகா-2872.html