Dinamani - தினந்தோறும் திருப்புகழ் - https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3075084 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 940 ஹரி கிருஷ்ணன் Friday, January 11, 2019 12:00 AM +0530  

‘நினது திருவடிகளைத் தொழவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

 

கறுவமிக் காவியைக் கலகுமக் காலனொத்

         திலகுகட் சேல்களிப்              புடனாடக்

      கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்

         களவினிற் காசினுக்              குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்

         றுயர்பொருட் கோதியுட்          படுமாதர்

      ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்

         புணையிணைத் தாள்தனைத்      தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்

         செறிதிருக் கோலமுற்            றணைவானும்

      மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்

         றிடஅடற் சூரனைப்               பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்

         றயருமச் சேவகப்                பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/11/பகுதி---940-3075084.html
3073223 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 939 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, January 10, 2019 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது

 

கயல் விழித்தேன்: கண்விழித்தேன்; பெறுமாது: பெற்ற தாய்;

கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே

 

 

பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும்

 

 

பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தர வேணும்

 

பரிய: பருத்த; பரிகரித்து: நீக்கி, நிவர்த்தி செய்து;

அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே

 

அயில்: வேல்; அறச் சேவல்: அறத்தை நிலைநாட்டும் சேவல்;

அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே

 

அமரர் அத்தா: தேவர் தலைவா; சிறு குமரி: தேவானை; சிவத்து: சிவனை;

புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே

 

புயல் இளைப்பாறு: மேகங்கள் தங்கம்; பொன் சயிலம்: வள்ளி மலை; புன மறப் பாவையை: வேடர் குலத்து வள்ளியை;

பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே.

 

பூதரம்: மலை—கிரெளஞ்சம்; சேவகப் பெருமாளே: பராக்கிரமம் நிறைந்த பெருமாளே;

கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென கணவகெட்டேனெனப் பெறுமாது... கண்விழித்து உனக்குப் பல சேவைகளைச் செய்த என்னைச் செயலற்றுப் போகச் செய்தாயே என்றும்; கணவனே உன்னை இழந்ததால் அழிந்தேன் என்றும் மனைவி அழவும்;

கருதுபுத்ராஎன புதல்வர் அப்பா எனக் கதறிட பாடையிற் றலைமீதே... ‘நினைவில் நிற்கும் மகனே’ என்று தாயார் அழவும்; மக்கள் ‘அப்பா’ என்று கதறவும்; பாடையின் தலைமாட்டில்,

பயில்குலத்தாரழப் பழையநட்பாரழ பறைகள்கொட்டாவர சமனாரும்... நெருங்கிய சுற்றத்தார்கள் அழவும்; பழைய நண்பர்கள் அழவும்; பறைகளை முழக்கியபடிப் பலர் வரவும்; யமனும்,

பரியகைப் பாசம்விட்டெறியுமப்போது எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும்... பருத்த கையில் உள்ள பாசக் கயிற்றை என்மீது எறிகின்ற சமயத்தில் என்னைக் காத்து, உன் உயிரை ரட்சித்தருள வேண்டும்.

அயில் அறச் சேவல்கைக்கு இனிதர தோகையுற்று அருணையிற் கோபுரத்துறைவோனே...வேலும், அறநெறியைக் காக்கின்ற சேவற்கொடியும் திருக்கரங்களிலே விளங்க, இனிதே மயில்மீது அமர்ந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே!  

அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா சிவத்தரியசொற் பாவலர்க்கு எளியோனே... தேவர் தலைவனே! அருமையான சொற்களைக்கொண்டு சிவபெருமானைப் பாடும் புலவர்களுக்கு எளியவனே!

புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் புனமறப் பாவையைப் புணர்வோனே... மேகங்கள் தங்கி ஓய்வெடுக்கின்ற அழகிய வள்ளிமலையின் சாரலில், தினைப்புனம் காத்திருந்த வேடர்குலப் பெண்ணான வள்ளியை அணைத்தவனே!

பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனை பொருமுழுச் சேவகப் பெருமாளே.... கிரெளஞ்ச மலையைத் தூளடித்து கடலில் மாமரமாக நின்ற சூரனைப் போரிட்டு அழித்த பராக்கிரமம் வாய்ந்த பெருமாளே!

சுருக்க உரை

வேலையும் சேவற்கொடியையும் ஏந்தி திருக்கரத்தோடு மயில் மீது அமர்ந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே!  தேவர் தலைவனே!  தேவசேனையை மகிழ்பவனே! அருமையான சொற்களைக் கொண்டு சிவபெருமானை பாடும் புலவர்களுக்கு எளியவனே! மேகங்கள் தங்குகின்ற அழகிய வள்ளிமலையின் சாரலிலே தினைப்புனத்தைக் காத்துநின்ற வள்ளியை அணைத்தவனே! கிரெளஞ்ச மலையைத் தூளடித்து, கடலுக்குள் மாமரமாக நின்ற சூரனைப் போரிட்டு அழித்த பராக்கிரம் மிகுந்த பெருமாளே!

‘பலகாலம் கண்விழித்து உனக்குப் பணிவிடைகள் செய்த என்னைக் கலங்கவிட்டுப் பிரிந்த கணவனே!’ என்று மனைவியும்; ‘என் மனத்திலேயே நிற்கின்ற மகனே’ என்று பெற்ற தாயும்; ‘அப்பா’ என்று மக்களும் கதறி அழ; நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்திருக்க, பறைகள் முழங்க, யமன் தன் பாசக் கயிற்றை என் மீது வீசும்போது அதை விலக்கி என்னைக் காத்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/10/பகுதி--939-3073223.html
3073222 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 938 ஹரி கிருஷ்ணன் Wednesday, January 9, 2019 12:00 AM +0530  

 

‘யமன் வரும்போது அடியேனைக் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்று எழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

 

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்

         கணவகெட் டேனெனப்           பெறுமாது

      கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்

         கதறிடப் பாடையிற்              றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்

         பறைகள்கொட் டாவரச்           சமனாரும்

      பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்

         பரிகரித் தாவியைத்              தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்

         தரியசொற் பாவலர்க்             கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்

         புனமறப் பாவையைப்            புணர்வோனே

      பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்

         பொருமுழுச் சேவகப்             பெருமாளே.

 

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/09/பகுதி---938-3073222.html
3069776 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 936 ஹரி கிருஷ்ணன் Thursday, January 3, 2019 12:00 AM +0530  

‘உன்னுடைய திருவடியைப் பெறுவதும் ஒருநாளே’ என்றோதும் இந்தப் பாடல் திருத்தணிகைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களிலும்;   இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களிலும் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களிலும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

தனத்த தத்தன தனதன தனதன       

      தனத்த தத்தன தனதன தனதன

                தனத்த தத்தன தனதன தனதன                                                   தனதான

 

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்

                        குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்

                        சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள்                               முழுமோசந்

      துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்

                        முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்

                        துமித்த மித்திரர் விலைமுலை யினவலை              புகுதாமல்

அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்

                        தரித்த வித்ரும நிறமென வரவுட

                        னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு                              விளையாடி

      அவத்தை தத்துவ மழிபட இருளறை

                        விலக்கு வித்தொரு சுடரொளி பரவந   

                   லருட்பு கட்டியு னடியிணை யருளுவ                              தொருநாளே

படைத்த னைத்தையும் வினையுற நடனொடு

                        துடைத்த பத்தினி மரகத சொருபியொர்

            பரத்தி னுச்சியி னடநவி லுமையரு                                   ளிளையோனே

      பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்

                     தொடுத்த சக்கிர வளைகர மழகியர்

                    படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்                        மருகோனே

திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட

                        கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்

                        திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு           மயில்வீரா

      தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்

                        குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்

                      திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு                பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/03/பகுதி---936-3069776.html
3069781 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 937 ஹரி கிருஷ்ணன் Wednesday, January 2, 2019 04:05 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தொட துளக்கிகள் அ பகட நினைவிகள் குருட்டு 
மட்டைகள்குமரிகள் 
கமரிகள் சுதை சிறுக்கிகள்குசலிகள் 
இசலிகள்முழு மோச

 

துளக்கிகள்: (துளக்குதல்: அசைதல்) நெளிபவர்கள்; அபகட: அ பகட—அ: அந்த; பகட: வஞ்சக; நினைவிகள்: நினைப்புக் கொண்டவர்கள்; குருட்டு மட்டைகள்: அறிவுக்கண் அற்ற மூடர்கள்; கமரிகள்: குற்றம் உள்ளவர்கள்; சுதைச் சிறுக்கிகள்: பிளவுண்ட நிலத்தில் தள்ளுபவர்கள்; குசலிகள்: தந்திரசாலிகள்; இசலிகள்: பிணக்குக் கொள்பவர்கள்;

துறுத்த மட்டைகள்அசடிகள் கசடிகள்
முழுபுரட்டிகள் நழுவிகள்மழுவிகள் துமித்தமித்திரர் விலை முலைஇன வலை புகுதாமல்

 

துறுத்த மட்டைகள்: அடைபட்டுள்ள பயனிலிகள்; அசடிகள்: அசடர்கள்; கசடிகள்: குற்றம் உள்ளவர்கள்; நழுவிகள்: நழுவுபவர்கள்; மழுவிகள்: மழுப்புபவர்கள்; துமித்த: அறுக்கின்ற, துணிக்கின்ற; மித்திரர்: நண்பர்கள்; விலை முலை: தனத்தை விற்பவர்கள்;

அடைத்தவர்க்கு இயல்சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம்என வர உடன்  அழைத்து 
சக்கிர கிரிவளை படி கொடுவிளையாடி

 

சரசிகள்: சரசமாடுபவர்கள்; விரசிகள்: துன்பத்தை ஊட்டுபவர்கள்; வித்ரும: பவளம் (போன்ற); நிறம் என: ஒளியைப் போல; சக்கிர கிரி: சக்கரவாள கிரி—அண்டத்தின் எல்லையாக இருக்கும் மலை; வளைபடி: வளைக்கப்பட்ட (சூழப்பட்ட) படி—பூமி;

அவத்தை தத்துவம்அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர்ஒளி பரவ ந(ல்)ல அருள்புகட்டி உன் அடி இணைஅருளுவது ஒரு நாளே

 

அவத்தை: ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி என்ற மூன்று அவதிகள் (நிலைகள்); இருளறை விலக்குவித்து: (ஆணவம் முதலான மும்மலங்களின்) இருட்டை நீக்கி;

படைத்துஅனைத்தையும் வினைஉற நடனோடு துடைத்த பத்தினி மரகதசொருபி ஓர் பரத்தின்உச்சியில் நடன(ம்)நவில் உமை 
அருள்இளையோனே

 

வினையுற: இயக்கி—காத்து; நடனொடு: நடராஜப் பெருமானோடு; துடைத்த பத்தினி: அழித்த பத்தினி; மரகத சொருபி: பச்சை நிறத்தவள்;

பகைத்த அரக்கர்கள்யமன் உலகு உற அமர் தொடுத்த  சக்கிர வளைகரம் அழகியர் படிகடத்தையும் வயிறுஅடை 
நெடியவர்மருகோனே

 

சக்கிர: சக்கரப் படை; வளை: சங்கு; கரமழகியர்: கரத்தில் ஏந்திய அழகர்; படி: பூமி(யாகிய); கடத்தையும்: பாண்டத்தையும்; வயிறடை: வயிற்றிலே அடக்கும்; நெடியவர்: திருமால்;

கடல் திடுக்கிடஅசுரர்கள்  முறிபட கொளு திசை கிரிபொடிபட சுடர் அயில் திருத்தி விட்டு ஒருநொடியினில் 
வலம் வருமயில் வீரா

 

திசைக்கிரி: எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு மலைகள்; சுடர் அயில்: ஒளிர்கின்ற வேல்;

தினை புனத்து இரு தனகிரி குமரி நல் குறத்திமுத்தோடு சசிமகளோடு புகழ் திருத்தணி பதி மலைமிசை 
நிலை பெறு(ம்)பெருமாளே.

 

குறத்தி முத்து: வள்ளி; சரி மகளோடு: இந்திராணியின் மகளான தேவானை;

தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோசம்... தொடும்போது கூசுவதைப் போல நெளிபவர்களும்; வஞ்சகமான எண்ணத்தைக் கொண்டவர்களும்; அறிவற்ற மூடர்களும்; இள மகளிரும்; குற்றம் உள்ளவர்களும்; பிளவுபட்ட பூமியில் தள்ளுபவர்களும்; தந்திரம் நிறைந்தவர்களும்; பிணக்கம் கொள்பவர்களும்; மோசம் நிறைந்த,

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல்... பயனற்றவர்களும்; மூடர்களும்; கசடர்களும்; புரட்டு நிறைந்தவர்களும்; நழுவுபவர்களும்; மழுப்புபவர்களும்; பொருளைப் பறிப்பவர்களும்; நண்பர்களைப் போல நடிப்பவர்களும்; மார்பகத்துக்கு விலை பேசுபவர்களுமான பெண்களுடைய வலையில் நான் வீழாமல்;

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன் அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி... (நற்கதிக்கான பாதையை) அடைத்தவர்களும்; சரசமாடுபவர்களும்; துன்பத்தைத் தருபவர்களும், பவளம் போன்ற ஒளியைப் படைத்தவர்களுமான பெண்களை உடன் அழைத்துக்கொண்டு, சக்கரவாள கிரியால் சூழப்பட்ட இந்த பூமியில் அவர்களோடு வீணே உழலுகின்ற,

அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ ந(ல்)ல அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே... விழிப்பு, கனவு, சுழுத்தி ஆகிய நிலைகளும் தத்துவ சேட்டைகளும் ஒடுங்கும்படியாக என்னுடைய அறிவீனத்தை நீக்கி, என்னுள்ளே ஞானத்தின் ஒளி பரவ; உன்னுடைய நல்ல திருவருளைப் புகட்டி, உன்னுடைய இரண்டு திருவடிகளையும் அருளும் நாள் ஒன்று உண்டோ? (உனது திருவடிகளை இப்போதே அருள வேண்டும்.)

படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஓர் பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை அருள் இளையோனே... எல்லாவற்றையும் படைப்பதையும், அவற்றைத் தொழிற்படுத்திக் காப்பதையும், நடராஜப் பெருமானோடு சேர்ந்து அழிப்பதையும் செய்கின்றவளும்; பச்சை நிறத்தவளும்; ஒப்பற்ற பரவெளியின் உச்சியில் நடனமாடுபவளுமான உமாதேவியார் ஈன்ற இளையவனே!

பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே... பகைகொண்டு வந்த அசுரர்கள் யமலோகத்தை அடையும்படியாகப் போரிட்டவரும்; சக்கரத்தையும் சங்கையும் ஏந்திய திருக்கரத்து அழகரும்; பூமியான பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமான திருமாலின் மருகனே!

கடல் திடுக்கிட அசுரர்கள் முறிபட கொளுத் திசைக் கிரி பொடிபட சுடர் அயில் திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம் வரு மயில் வீரா... கடல் திடுக்கிடவும்; அசுரர்கள் சிதறியோடவும்; எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் பொடியாகவும் கதிர்வேலை வீசி (அண்டத்தை) ஒருநொடியில் வலம் வந்த மயில் வீரனே!

தினைப் புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தொடு சசி மகளொடு புகழ் திருத்தணிப் பதி மலை மிசை நிலை பெறு(ம்) பெருமாளே....தினைப்புனத்தைக் காத்தவளும்; மலையை ஒத்த மார்பகங்களைக் கொண்டவளும் குறத்தியும் நன்முத்துமான வள்ளியுடனும்;  இந்திராணியின் மகளான தேவாயுடனனும், புகழ்பெற்ற திருத்தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உலகம் அனைத்தையும் படைத்தும் காத்தும் நடராசப் பெருமானோடு சேர்ந்து அழித்தும் அருளுபவளும்; மரகத நிறத்தவளும்; ஒப்பற்ற பரவெளியின் உச்சியில் நடனமாடுபவளுமான உமாதேவியின் இளைய மகனே! பகையோடு வந்த அசுரர்கள் யமலோகத்தை அடையும்படியாகப் போரிட்டவரும்; சங்கு சக்கரத்தை ஏந்திய அழகரும்; பூமியாகிய பாண்டத்தைத் தனது வயிற்றிலே அடக்கியவரும் நெடியவருமான திருமாலின் மருகனே!  கடல் திடுக்கிடும்படியாகவும்; அசுரர்கள் சிதறியோடும்படியாகவும் எட்டுத் திசைகளிலுமுள்ள குலபர்வதங்கள் பொடிபடும்படியாகவும் கதிர்வேலை வீசியவனே! உலகை ஒருநொடியில் வலம்வந்த மயில்வீரனே! தினைப்புனத்தைக் காத்தவளும் அழகிய மார்பகத்தைக் கொண்டவளும் குறமங்கையுமான வள்ளியுடனும்; சசிதேவியாகிய இந்திராணியின் மகளான தேவானையுடனும் திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அறிவற்ற மூடர்களும்; கபடிகளும்; தந்திரவாதிகளும்; பிணக்கம் கொள்பவர்களும்; பயனிலிகளும்; குற்றம் நிறைந்தவர்களும்; பொருளைப் பறிக்கின்றவர்களும்; நண்பர்களைபோல நடிக்கின்றவர்களும்; மார்பகத்தை விலைபேசுபவர்களுமான பெண்களுடைய வலையில் நான் வீழாமலும்; (நற்கதிக்கான பாதையை) அடைத்தவர்களும்; சரசமாடுபவர்களும்; துன்பத்தைத் தருபவர்களும், பவளம் போன்ற ஒளியைப் படைத்தவர்களுமான பெண்களை உடன் அழைத்துக்கொண்டு, சக்கரவாள கிரியால் சூழப்பட்ட இந்த பூமியில் அவர்களோடு வீணே உழலுகின்ற என்னுடைய ஜாக்கிரதாதி மலங்களும் தத்துவ சேட்டைகளும் ஆணவ மலமும் நீங்கப் பெற உனது திருவருளை ஊட்டி, உன்னுடைய திருவடிகளை எனக்கு அளிக்கின்ற நாளும் உண்டோ? (உனது திருவடிகளை அடியேனுக்கு இப்போதே அளித்தருள வேண்டும்.)

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/04/பகுதி---937-3069781.html
3069132 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 935 ஹரி கிருஷ்ணன் Wednesday, January 2, 2019 10:57 AM +0530

பதச் சேதம்

சொற் பொருள்

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு

 

வாள்: ஒளிகொண்ட; மனைச்சி: மனைவி; குதலை: மழலை; பதி: (தனது) ஊர்; நாடு: (தனது) நாடு;

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக

 

அத்தம்: செல்வம்; அயலாக: (என்னை விட்டு) நீங்க;

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்

 

மோட்டெருமை: பெரிய எருமை; முட்டர்: மூடர்—யம தூதர்கள்;

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்

 

சுருதி: வேதத்தினுள்ளும்; குராக்குள்: குரா மலருக்குள்;

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா

 

பட்டம்: நெற்றிப் பட்டம்; நால்பெரும் மருப்பினால்: நான்கு பெரிய தந்தங்களால் (ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள்); கர: துதிக்கை; இபத்தின்: யானையின்; வாள் பிடியின்: ஒளிபொருந்திய பெண்யானை(யாகிய தேவானை)யின்;

பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே

 

வேய்: மூங்கில்; பணவை: பரண்; கொச்சை: குழறலான பேச்சு—குதலை; வேட்டுவர் பதிச்சி: வேடர்களின் ஊரிலிருந்தவள்—வள்ளி;

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டுமா குலைய எறி வேலா

 

 நால்கர: தொங்குகின்ற கரம், துதிக்கை; ஒருத்தல்: யானை; மா திகிரி: பெரிய மலைகள்;

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே.

 

எத்திடார்க்கு: ஏத்திடாருக்கு—போற்றாதவர்களுக்கு; முத்த: பாசங்களிலிருந்து நீங்கியவனே; எத்தினார்க்கு: போற்றியவர்களுக்கு;

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய்க் கிழவி பதி நாடு... வட்டமாகவும் ஒளிகொண்டதாகவும் உள்ள மார்பகத்தைக் கொண்ட மனைவியும்; அவளிடத்தில் பெற்ற மழலைச்சொல் பேசுகின்ற மக்களும்; எனது தாயும்; எனது ஊரும்; எனது நாடும்;

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக... என்னுடைய தோட்டமும் வீடும் செல்வமும் சம்பாதித்த பொருளும் மற்றும் உறவுக் கூட்டமும் என்னுடைய அறிவும் (என எல்லாமும்) என்னைவிட்டு நீங்க;

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்... நன்றாக ஓட்டப்பட்டு மிகவும் நெருங்கி வருகின்ற பெரிய எருமையின் மீதமர்ந்து வருகின்ற மூடர்களான யமதூதர்கள் என்னை (பாசக்கயிற்றால்) கட்டி இழுத்துச்செல்வதன் முன்னால்,

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்... அடியேன் முக்தியாகிய வீட்டை அடைவதற்காகவும்; என்னை முத்தனாக்குவதற்காகவும்; வேதத்தினுள்ளும் குரவ மலர்களுக்குள்ளும் ஒளிர்கின்ற உன்னுடைய திருக்கழல்கள் இரண்டையும் தந்தருள வேண்டும்.

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா... நெற்றிப் பட்டத்தையும்; நான்கு பெரிய தந்தங்களையும்; தொங்குகின்ற துதிக்கையையும் உடைய (ஐராவதம் என்னும்) யானை வளர்த்தவளும்; ஒளிபொருந்திய பெண் யானையைப் போன்ற (நடையை உடைவளுமான) தேவானையில் மணாளனே!

பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே... பச்சை மூங்கிலால் அமைக்கப்பட்ட பரண்மீது நின்று (தினைப்புனத்தைக் காத்தவளும்) குழறிப் பேசும் மழலைச் சொல்லை உடையவளும் வேடர் குலத்தவளுமான வள்ளியின் தோளை அணைத்தவனே!  திருத்தணிகையின் தலைவனே!

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும் மாக் குலைய எறி வேலா... தொங்குகின்ற எட்டுத் துதிக்கைகளை உடைய அஷ்டதிக் கஜங்களும்; குலபர்வதங்கள் எட்டும் நடுங்கும்படியாக வேலை எறிந்தவனே!

எத்திடார்க்கு அரிய முத்த பாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே.... உன்னைப் போற்றாதவர்களுக்கு அரியவனே! முத்தனே!  தமிழ்ப் பாக்களால் உன்னைப் போற்றுபவர்களுக்கு எளிய பெருமாளே!

சுருக்க உரை

நெற்றிப் பட்டத்தையும் நான்கு பெரிய தந்தங்களையும் தொங்குகின்ற துதிக்கையையும் உடைய ஐராவதம் வளர்த்தவளும்; பெண்யானையைப் போன்ற மதர்த்த நடையைக் கொண்டவளுமான தேவானையின் மணாளனே!  பச்சை மூங்கில்களால் அமைக்கப்பட்ட பரணின் மீது நின்றுகொண்டு தினைப்புனத்தைக் காத்தவளும் வேடர் குலத்தவளும்; மழலைப் பேச்சைக் கொண்டவளுமான வள்ளியின் தோளை அணைத்தவனே! குலகிரியான எட்டு மலைகளும்; தொங்குகின்ற துதிக்கையை உடைய எண்திசை யானைகளும் நடுங்கும்படியாக வேலை எறிந்தவனே!  போற்றாதவர்களுக்கு அரியவனே! முக்தனே! தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிய பெருமாளே!

வட்டமான மார்பகத்தை உடைய மனைவி; அவளிடத்திலே பெற்ற மதலை; வயதான தாய்; எனது ஊர்; எனது நாடு; என்னுடைய தோட்டம்; என்னுடைய வீடு; செல்வம்; நான் சேர்த்த பொருள்; என்னுடைய உறவினர்கள்; என்னுடைய அறிவு என்று எல்லாமும் என்னைவிட்டு நீங்கிப் போகும்படியாக,

நன்றாகச் செலுத்தப்பட்ட எருமைக் கிடாக்களின் மீதேறி மூடர்களான யமதூதர்கள் பாசக் கயிற்றை வீசி என்னை இழுத்துச் செல்வதன் முன்பாக அடியேன் முக்தியாகிய வீட்டை அடையும்படியாகவும்;  முக்தனாக ஆகும்படியாகவும், வேதங்களினுள்ளும் குரா மலர்களுக்குள்ளும் ஒளிர்கின்ற உன்னுடைய இரண்டு திருப்பாதங்களையும் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/02/பகுதி---93-3069132.html
3069130 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 934 ஹரி கிருஷ்ணன் Tuesday, January 1, 2019 01:07 PM +0530  

‘உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்’  என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளது.

தத்தனாத் தனன தத்தனாத் தனன

      தத்தனாத் தனன                    தனதான

 

வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை

         மக்கள்தாய்க் கிழவி              பதிநாடு

      வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்

         மற்றகூட் டமறி                  வயலாக

முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை

         முட்டர்பூட் டியெனை             யழையாமுன்

      முத்திவீட் டணுக முத்தராக் கசுரு

         திக்குராக் கொளிரு               கழல்தாராய்

பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ

         பத்தின்வாட் பிடியின்             மணவாளா

      பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப

         திச்சிதோட் புணர்த               ணியில்வேளே

எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி

         யெட்டுமாக் குலைய             எறிவேலா

      எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ

         டெத்தினார்க் கெளிய             பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2019/jan/01/பகுதி---934-3069130.html
3030774 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 933 ஹரி கிருஷ்ணன் Wednesday, October 31, 2018 04:17 PM +0530

 

 

பதச் சேதம்

சொற் பொருள்

சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத

 

சாந்தம் இல்: அடங்காத; மோக எரி: மோகம் என்னும் தீ; காந்தி: (காந்துதல்) வருத்துதல்; அவா: ஆசை; அனிலம்:  காற்று; அவியாத: தணியாத;

சாம் கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல்

 

சாம்: சாகும், அழியும்; கலை வாரிதியை: கலையாகிய கடலை;

ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி

 

முளரி: தாமரை மொட்டு; உருகா: உருகி;

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான்

 

இயல்போதான்: நீதியோ, தகுமோ;

காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே

 

மான்தரு கான மயில்: மான் பெற்றவளான வள்ளி; காந்த: மணாளனே;

காண் தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆண்டகையே இபம் மின் மணவாளா

 

காண்டகு: காணத் தகுந்த, அழகிய; இபம்: யானை (வளர்த்த); மின்: மின்னற்கொடி போன்றவரான தேவானை;

வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே

 

சேந்த: முருகனே; மயூர: மயில் வாகனனே;

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.

 

 

சாந்தமில் மோக எரி காந்தி அவாவனில மூண்டு அவியாத சமயவிரோத... தணியாத மோகம் என்னும் தீ மூண்டு வருத்த; ஆசையாகிய பெருங் காற்று வீச; எப்போதும் அடங்காததாகிய சமய விரோதம் என்னும்,

சாங்கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாந்துணை யாவரென... அழியப்போகும் சாத்திரமாகிய கடலை நீந்தமுடியாமல் போய்; உலகத்தவரே (மனைவி, மக்கள், சுற்றத்தாரே) துணையாவார்கள் என்று நம்பிக்கொண்டு,

மடவார் மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி ஏங்கிட... மார்புக் கச்சையை அணிந்துள்ள பெண்களுடைய தாமரை மொட்டைப் போன்றதும் சந்தனக் கலவையைப் பூசியதுமான மார்புகளில் தோய்ந்து, மனமுருகி, அறிவுத் தடுமாற்றம் ஏற்பட்டு,

ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவது இயல்போதான்... அடியேனுடைய உயிரைக் கவர்ந்து செல்கின்ற காலனிடத்தில் வசப்பட்டு, துணைக்கு ஒருவருமின்றித் தனியாக நான் யமலோகத்துக்குச் செல்வதுததான் இயல்போ? (தகுதியோ, முறையோ) – (அவ்வாறு யமன் வசப்படுவதைத் தவிர்த்தருள வேண்டும்.)

காந்தளின் ஆனகர மான்தரு கானமயில் காந்த விசாக சரவணவேளே... காந்தள் மலரைப் போன்ற விரல்களை உடைய கரத்தவளும்; காட்டிலே மானின் இடத்திலேருந்து தோன்றியவளுமான வள்ளியம்மையயின் மணாளனே! விசாகனே! சரவணனே!

காண்டகு தேவர்பதி யாண்டவனே சுருதி யாண்டகையே இபமின் மணவாளா... காண்பதற்கு இனிதான தேவலோகத்தை ஆண்டவனே!  வேதங்களாலே துதிக்கப்படுகின்ற மா வீரனே!  யானையால் வளர்க்கப்பட்ட தேவானையின் துணைவனே!

வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே... வேந்தனே! என்றும் இளமையானவனே! குகனே! சேந்தனே! வடக்கே உள்ள திருவேங்கட மலையில் வீற்றிருப்பவனே!

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாது உதவு பெருமாளே.... அடியார் வேண்டிய போதெல்லாம் அவர்கள் வேண்டுகின்றனவற்றை எல்லாம் சுளிக்காமல் அவர்களுக்குத் தந்தருள்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

காந்தள் மலரைப் போன்ற விரல்களை உடையவளும்; மான் ஈன்றளுமான வள்ளியின் மணாளனே!  ஐராவதமாகிய யானை வளர்த்த தேவானையின் துணைவனே!  வேந்தனே! குமாரனே! குகனே! சேந்தனே!  வடக்கிலுள்ள திருவேங்கட மலையில் வீற்றிருப்பவனே!  அடியார் வேண்டுகின்ற போகங்களையெல்லாம் அவர்கள் வேண்டுகின்ற போதெல்லாம் சலிக்காமல் வழங்கியருள்கின்ற பெருமாளே!

தணியாத மோகம் என்னும் தீ மூண்டு வருத்தவும்; அப்போது ஆசை என்னும் பெருங்காற்றும் வீசவும்; எப்போதும் தணியாததான சமயவாதங்களுக்கானதும் அழிந்து போவதுமான சாத்திரங்களின் கடலை நீந்திக் கடக்க முடியாமல்; மனைவி, மக்கள், சுற்றத்தார் என்று இவர்களே துணையாவார்கள் என கருதிக்கொண்டும்; பெண்களுடைய இளமையானதும் சந்தனம் பூசியதுமான மார்பகங்களில் மனம் உருகி, அறிவு தடுமாற்றம் அடைந்து, யமன் என் உயிரைக் கொண்டு செல்ல வரும்போது, நான் துணைக்கு எவரும் இல்லாமல் தவிப்பது முறையோ? (அடியேன் யமன்வசப்படாதபடி அருள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/nov/01/பகுதி---933-3030774.html
3030737 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 932 ஹரி கிருஷ்ணன் Wednesday, October 31, 2018 11:54 AM +0530

 

‘காலன் எனை அணுகாமல் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வடவேங்கடத்துக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாந்தன தானதன தாந்தன தானதன

      தாந்தன தானதன                   தனதான

 

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில

         மூண்டவி யாதசம               யவிரோத

      சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்

         தாந்துணை யாவரென            மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு

         தோய்ந்துரு காவறிவு             தடுமாறி

      ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்

         யான்தனி போய்விடுவ           தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்

         காந்தவி சாகசர                  வணவேளே

      காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி

         யாண்டகை யேயிபமின்          மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட

         வேங்கட மாமலையி             லுறைவோனே

      வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

         வேண்டவெ றாதுதவு             பெருமாளே.

 

 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/31/பகுதி---932-3030737.html
3029413 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 931 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, October 30, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நிறை மதி முகம் எனும் ஒளியாலே

 

 

நெறி விழி கணை எனு(ம்) நிகராலே

 

 

உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ

 

 

உன திருவடி இனி அருள்வாயே

 

 

மறை பயில் அரி திரு மருகோனே

 

 

மருவலர் அசுரர்கள் குலகாலா

 

மருவலர்: பகைவர்கள்;

குற மகள் தனை மணம் அருள்வோனே

 

 

குருமலை மருவிய பெருமாளே.

 

குருமலை: சுவாமி மலை;

நிறைமதி முகமெனும் ஒளியாலே... முழுமதியை ஒத்த முகத்தின் பிரகாசத்தாலும்;

நெறிவிழி கணையெனு நிகராலே... வழிகாட்டுகிற கண்கள் என்னும் அம்புகள் செய்கின்ற போராலும்;

உறவுகொள் மடவர்கள் உறவாமோ... உறவு கொண்டாடுகின்ற பெண்களுடைய உறவு தகுமோ?

உனதிரு வடியினி யருள்வாயே... இனியேனும் உன்னிரு திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

மறைபயி லரிதிரு மருகோனே... வேதங்களில் விளங்குகின்ற திருமாலுக்கும் இலக்குமிக்கம் மருகனே!

மருவல ரசுரர்கள் குலகாலா... பகைவர்களாகிய அசுரர்களின் குலத்துக்குக் காலனாக விளங்குபவனே!

குறமகள் தனை மண மருள்வோனே... குறமகளான வள்ளியை மணமுடித்தவனே!

குருமலை மருவிய பெருமாளே.... சுவாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வேதங்களில் பயில்கின்ற திருமாலின் மருகனே! பகைவர்களான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக விளங்குபவனே!  குறமகளான வள்ளியை மணமுடித்தவனே! சுவாமி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பூரண சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும்; வழிகாட்டுகின்ற கண்களாகிய அம்புகள் விளைக்கின்ற போராலும் என்னோடு உறவாடவரும் பெண்களுடைய தொடர்பு முறையானதோ? இத்தகைய தீவினைகள் அறும்படியாக உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/30/பகுதி---931-3029413.html
3029410 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 930 ஹரி கிருஷ்ணன் Monday, October 29, 2018 12:07 PM +0530  

‘உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சுவாமிமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் இரண்டு நெடிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனதன                           தனதான

 

நிறைமதி முகமெனு                      மொளியாலே

      நெறிவிழி கணையெனு              நிகராலே  

உறவுகொள் மடவர்க                      ளுறவாமோ

      உனதிரு வடியினி                   யருள்வாயே

மறைபயி லரிதிரு                         மருகோனே

      மருவல ரசுரர்கள்                   குலகாலா

குறமகள் தனைமண                      மருள்வோனே

      குருமலை மருவிய                 பெருமாளே

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/29/பகுதி---930-3029410.html
3025489 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 929 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, October 24, 2018 12:00 AM +0530

 

பதச் சேதம்

சொற் பொருள்

நினைத்தது எத்தனையில் தவறாமல்

எத்தனையில்: எல்லா வகையிலும்;

நிலைத்த புத்தி தனை பிரியாமல் 

 

 

கனத்த தத்துவம் உற்று அழியாமல்

கனத்த: பெருமை வாய்ந்த;

கதித்த நித்திய சித்த(ம்) அருள்வாயே

 

சித்தருள்வாயே: சித்தத்தை அருள்வாயே;

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

 

மதித்த முத்தமிழில் பெரியோனே

 

 

செனித்த புத்திரரில் சிறியோனே

செனித்த: உதித்த; (சிவகுமாரர்கள், விநாயகன், வீரபத்திரன், பைரவன், முருகன் என நால்வர். இவர்களில் இளையவன் முருகன் என்பது கருத்து.)

திருத்தணி பதியில் பெருமாளே.

 

 

நினைத்தது எத்தனையில் தவறாமல்... நினைத்தது சற்றும் மாறாமல் அப்படியே கைகூடும்படியாகவும்;

நிலைத்த புத்திதனைப் பிரியாமல்... நிலையான புத்தி என்னைப் பிரியாமல் இருக்கும்படியாகவும்; (என் புத்தி எப்போதும் ஒருவழியில் நிலைத்திருக்கவும்;)

கனத்த தத்துவம் உற்றழியாமல்... பெருமை வாய்ந்தனவாகிய (முப்பத்தாறு) தத்துவங்களைக் கடந்த நிலையை அடியேன் அடைந்து அதனாலே அழியாமல் இருக்கும்படியாகவும்;

கதித்த நித்தியசித்தருள்வாயே...வெளிப்படுவதும் நிரந்தரமானதுமான அறிவை அளித்தருள வேண்டும்.

மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே... மனிதர்களுக்குள்ளே பக்தி நிறைந்தவர்களுக்கு எளியவனே!

மதித்த முத்தமிழில் பெரியோனே... மதிக்கப்படுகின்ற முத்தமிழில் சிறந்தவனே!

செனித்த புத்திரரிற் சிறியோனே... சிவனாரிடத்தில் தோன்றிய நான்கு குமாரர்களில் இளையவனே!

(சிவகுமாரர்கள், விநாயகன், வீரபத்திரன், பைரவன், முருகன் என நால்வர்.)

திருத்தணிப்பதியிற் பெருமாளே.... திருத்தணிப் பதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மனிதர்களுக்குள் பக்தர்களுக்கு எளிவயனே!  மதிக்கப்படும் முத்தமிழில் சிறந்தவனே!  சிவகுமாரர்களுள் இளையவனே!  திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

நினைத்தது எல்லாம் நினைத்தபடி கைகூடுவதற்காகவும்; நிலையான புத்தி என்னைவிட்டு அகலாகமல் இருப்பதற்காகவும்; அடியேன் உண்மைப் பொருளை உணர்ந்து அதன் பயனாக முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையை அடைந்து நிலையான அறிவைப் பெறும் நிலையை அடைவதற்காகவும் சாசுவதமான அறிவை அளித்தருள வேண்டும்.

 
 
 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/24/பகுதி---929-3025489.html
3025487 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 928 ஹரி கிருஷ்ணன் Tuesday, October 23, 2018 11:20 AM +0530  

‘சாசுவதமான அறிவை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக உள்ள தொங்கல் சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக அமைந்துள்ளன. தொங்கல் சீரில் நெடிலெழுத்தின் அமைப்பு மாறி வரலாம்.

தனத்த தத்ததனத்                         தனதானா

 

நினைத்த தெத்தனையிற்                  றவராமல்       

      நிலைத்த புத்திதனைப்               பிரியாமற்   

கனத்த தத்துவமுற்                       றழியாமற்   

      கதித்த நித்தியசித்                   தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக்                       கெளியொனே   

      மதித்த முத்தமிழிற்                 பெரியோனே   

செனித்த புத்திரரிற்                        சிறியோனே   

      திருத்த ணிப்பதியிற்                 பெருமாளே.

 

 
 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/23/பகுதி---928-3025487.html
3016958 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 927 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, October 10, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

ஒரு பொழுதும் இரு சரண(ம்) நேசத்தே வைத்து உணரேனே

 

 

உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே

 

 

பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே

 

 

பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ

 

ஆசைப்பாடை: ஆசைப்பாட்டை—ஆசையை;

துரிதம் இடு நிருதர் புர சூறை கார பெருமாளே

 

துரிதம் இடு: கலக்கத்தைத் தரும்

தொழுது வழி படும் அடியர் காவல் கார பெருமாளே

 

 

விருது கவி விதரண விநோத கார பெருமாளே

 

விதரண: தயாள;

விறல் மறவர் சிறுமி திரு வேளை கார பெருமாளே.

 

 

ஒருபொழுதும் இருசரண நேசத் தேவைத்து உணரேனே... ஒருவேளைகூட உன்னுடைய திருவடிகளில் நேசத்தை வைத்து அறிந்தவனல்லன்;

உனது பழநி மலையெனும் ஊரை சேவித் தறியேனே... உன்னுடைய பழநிமலையாகிய தலத்தை வணங்கி அறிந்தவனல்லன்;

பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே... இந்தப் பெரிய உலகத்தில் உயர்ந்ததும் அரியதுமான வாழ்வையே முற்றிலும் விரும்பிக் குறித்தவனல்லன்;

பிறவியற நினைகுவன் என்ஆசைப் பாடைத் தவிரேனோ... (என்றாலும்) பிறவியை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.  என் ஆசைகளை ஒழிக்கமாட்டேனோ? (அடியேனுடைய ஆசைகள் ஒழியுமாறு அருள்புரிய வேண்டும்.)

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே... கலக்கத்தைத் தருகின்ற அரக்கர்களுடைய ஊர்களைச் சூறாவளிபோலச் சுழற்றி வீசிய பெருமாளே!

தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமாளே... உன்னைத் தொழுது வழிபடுகின்ற அடியவர்களுக்கு காவற்காரனாக இருக்கின்ற பெருமாளே!

விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே... வெற்றி நிறைந்த கவிதைகளை உலகுக்கு வழங்கிய தயாள குணம்படைத்த அற்புதமான (ஞானசம்பந்தப்) பெருமாளே!

விறன் மறவர் சிறுமி திருவேளைக் காரப் பெருமாளே... வீரம் நிறைந்த வேடர்குலப் பெண்ணான வள்ளிக்குக் காவலாயிருந்த பெருமாளே!

சுருக்க உரை

கலக்கத்தை விளைத்த அசுரர்களுடைய ஊரில் சூறைக்காற்றாய் வீசியழித்த பெருமாளே! தொழுது வழிபடுகின்ற அடியவர்களுக்குக் காவற்காரனாய் இருக்கின்ற பெருமாளே! வெற்றிக் கவிகளை உலகுக்குத் தந்த தயாளமூர்த்தியான திருஞான சம்பந்தராய் அவதரித்த பெருமாளே! வீரம் நிறைந்த வேடர் குலப்பெண்ணுக்குக் காவலிருந்த பெருமாளே!

ஒருவேளைகூட உன்னுடைய திருவடியில் அன்புவைத்து அறிந்தேனல்லன்; உனது பழநிமலையை வணங்கி அறிந்தவன் அல்லன்; இந்தப் புவியில் உயர்ந்ததும் அரியதுமான வாழ்வைக் குறித்தவன் அல்லன்; இருப்பினும் பிறவி ஒழியவேண்டும் என்று கருதுகிறேன்.  என்னுடைய ஆசைகளை விட்டொழிக்க மாட்டேனோ? (என் ஆசைகளை அழித்தருள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/10/பகுதி---927-3016958.html
3016957 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 926 ஹரி கிருஷ்ணன் Tuesday, October 9, 2018 10:57 AM +0530  

‘ஆசை அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 36 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனன தனதனன தானத் தானத்            தனதானா

 

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்        துணரேனே

      உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே

பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்       குறியேனே

      பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்              பெருமாளே

      தொழுதுவழி படுமடியர் காவற் காரப்    பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப்           பெருமாளே

      விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/09/பகுதி---926-3016957.html
3015061 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 925 ஹரி கிருஷ்ணன் DIN Sunday, October 7, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்

 

அருத்தி: ஆசை; தனகிய: சிணுங்குகிற—கொஞ்சிப் பேசும்;

அடுத்த பேர்களும் இதம் உறு மகவொடு வளநாடும்

 

 

தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன் தனை

 

 

பராவியும் வழிபடு தொழிலது தருவாயே

 

பராவியும்: போற்றியும்;

எருத்தில் ஏறிய இறையவர் செவி புக

 

எருத்தில்: எருதில் (வலித்தல் விகாரம்)—இடபத்தில்;

இசைத்த நாவின இதண் உறு குற மகள் இரு பாதம்

 

இதண்: பரண்;

பரித்த சேகர மகபதி தர வரு(ம்) தெய்வ யானை

 

பரித்த: தாங்குகின்ற; சேகர: திருமுடியை உடையவனே; மகபதி: இந்திரன்;

பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே.

 

பதிகொள்: பதியாகக் கொண்ட;

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்... ஆசையைப் பெருக்குகின்ற இந்த வாழ்வில் கொஞ்சிப் பேசும் மனைவியும் உறவினர்களும்,

அடுத்த பேர்களும் இதமுறு மகவோடு வளநாடும்... நண்பர்களும் இதத்தைத் தருகின்ற மக்கறும் வாழ்கின்ற செழிப்பான நாடும்,

தரித்த வூரும் மெய் எனமன நினைவது நினையாது...வாழ்ந்திருக்கின்ற ஊரும் நிலையானவை என்று மனம் கருதுகின்ற நினைப்பை ஒழித்து,

உன் த(ன்)னைப் பராவியும் . வழிபடு தொழிலது தருவாயே .. உன்னைப் போற்றுவதையும் வழிபடுவதையுமே செயலாகக் கொண்ட நிலையைத் தந்தருள வேண்டும்.

எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம்... நந்தியை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுடைய செவியில் புகும்படியாக பிரணவத்தின் பொருளை உபதேசமாக,

இசைத்த நாவின இதணுறு குறமகள் இருபாதம்... உரைத்தருளிய நாவை உடைவனே!  (தினைப்புனத்தில்) பரணில் இருந்த வள்ளியின் இரண்டு பாதங்களையும்,

பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை... சுமக்கின்ற திருமுடியை உடையவனே! இந்திரனுடைய மகளான தெய்வயானை,

பதிக்கொள் ஆறிரு புய பழநியிலுறை பெருமாளே.... கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே! பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

ரிஷபத்தில் ஏறிவருகின்ற சிவபெருமானுடைய திருச்செவியில் பிரவத்தின் பொருளை உபதேசமாக உரைத்தருளிய நாவினனே!  தினைப்புனத்தில் பரணில் இருந்தபடி காவல் காத்த வள்ளியின் திருப்பாதங்களைச் சுமக்கின்ற திருமுடியை உடையவனே!  இந்திரன் மகளான தேவசேனையின் கணவனே! பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே!

ஆசைப் பெருக்கத்தைத் தருகின்ற இந்த வாழ்வும்; கொஞ்சிப் பேசம் மனைவியும் உறவினர்களும் நண்பர்களும் குழந்தைகளும் வாழும் நாடும் ஊரும் நிலையானவை என்று நினைத்து மயங்கி அழியாமல், உன்னைப் போற்றி வழிபடுவதையே பணியாகக் கொண்டிருக்கும்படி அருள வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/07/பகுதி---925-3015061.html
3014471 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 924 ஹரி கிருஷ்ணன் Saturday, October 6, 2018 11:06 AM +0530  

‘உன்னை எப்போதும் வழிபட வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்த தானன தனதன தனதன              தனதானா

 

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு      முறவோரும்

      அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு    வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது         நினையாதுன்

      தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது  தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக          வுபதேசம்

      இசைத்த நாவின இதணுறு குறமக      ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு                  தெய்வயானை

      பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை     பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/06/பகுதி---924-3014471.html
3013175 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 922 ஹரி கிருஷ்ணன் Thursday, October 4, 2018 11:04 AM +0530  

‘உன்னுடைய திருக்கழல்களைப் போற்றுகின்ற உயர்ந்த குணசீலத்தைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக ஐந்தெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்ததன தனதான தனத்ததன தனதான

      தனத்ததன தனதான                தனதான

 

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை

         மயக்கிவிடு மடவார்கள்          மயலாலே

      மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி

         வயிற்றிலெரி மிகமூள           அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி

         ஒருத்தர்தமை மிகநாடி           யவரோடே

      உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட

         உயர்ச்சிபெறு குணசீல            மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை

         மிகுத்தபல முடனோத           மகிழ்வோனே

      வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள

         விளைத்ததொரு தமிழ்பாடு       புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது

         திருக்கையினில் வடிவேலை     யுடையோனே

      திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான

         திருத்தணிகை மலைமேவு       பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/04/பகுதி---922-3013175.html
3013180 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 923 ஹரி கிருஷ்ணன் Thursday, October 4, 2018 11:04 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே

 

கலை: கலைமான்; விழிக்கடை: கடைக்கண்;

மதி குளறி உள்ள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே

 

மதி குளறி: அறிவு தடுமாறி; உதவி: கொடுத்து; மிடியாகி: வறுமையடைந்து; வயிற்றில் எரி மிக மூள: ஜாடராக்கினி—பசித் தீ;

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரோடு பகையாகி ஒருத்தர் தமை மிக நாடி அவரோடே

 

 

உணக்கை இடு படு பாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே

 

உணக்கையிடு: உண்ணக் கை இடு(ம்)--கையேந்தும்;

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே

 

 

வெடித்து அமணர் கழு ஏற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே

 

ஒருத்தி கணவனும் மீள: மங்கையர்கரசியாருடைய கணவனான கூன் பாண்டியன் சமணர்களிடமிருந்து மீள;

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே

 

 

திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திருத்தணிகை மலை மேவு பெருமாளே.

 

 

வரிக்கலையி னிகரான விழிக்கடையில் இளைஞோரை மயக்கியிடு மடவார்கள் மயலாலே....வரிகளைக் கொண்டிருக்கின்ற கலைமானைப் போன்ற கடைக்கண் பார்வையால் இளைஞர்களை மயக்குகின்ற பெண்களின்மீது ஏற்பட்ட மையலால்,

மதிக்குளறி யுளகாசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள அதனாலே... அறிவிலே தடுமாற்றம் ஏற்பட்டு, கையிலுள்ள காசையெல்லாம் அவர்களுக்கே கொடுத்து, வறுமையை அடைந்து, வயிற்றிலே பசியாகிய தீ மூண்டு எழ, அதன் காரணத்தால்,

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி ....ஒருவரோடு நட்புகொண்டும் ஒருவரோடு பகைகொண்டும் இன்னொருவரை மிகவும் விரும்பியும்,

அவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீலம் அருள்வாயே... அவர்களோடு சேர்ந்து உண்பதற்காகக் கையேந்துகிற பாவியான எனக்கு, உன்னுடைய கழல்களைப் போற்றிப் பாடுகின்ற நல்ல குணநலனைத் தந்தருள வேண்டும்.

விரித்து அருண கிரிநாதன் உரைத்த தமிழெனு மாலை மிகுத்தபல முடனோத மகிழ்வோனே... அருணகிரிநாதன் விரிவாகத் தமிழில் பாடியிருக்கிற திருப்புகழை உரக்கச் சொல்லும்போது மகிழ்பவனே!

வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே... (அவமானத்தாலும பொறாமையாலும் மனம்) வெடித்த சமணர்கள் கழுவில் ஏறும்படியாகவும்; மங்கையர்க்கரசியாருடைய கணவனான கூன்பாண்டியன் சமணநெறியைவிட்டு மீளும்படியாகவும் தேவாரமாகிய தமிழ் மறையைப் பாடிய (திருஞானசம்பந்தராக அவதரித்த) புலவனே!

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது வடிவேலை திருக்கையினில் உடையோனே... செருக்கோடு போருக்கு எழுந்த சூரனுடைய குலத்தை வேரோடு சாய்க்கும்படியாகப் போரிட்ட கூரியவேலைக் கையில் ஏந்துபவனே!

திருக்குலவும் ஒருநீல மலர்ச்சுனையில் அழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே.... அழகு குலவுவதும் ஒப்பற்ற நீலோற்பல மலர் மலர்கின்ற குளத்தை உடையதுமான திருத்தணிகை மலையின்மேல் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

அருணகிரி நாதன் விரிவாகப் பாடியுள்ள தமிழ்மாலையான திருப்புகழை உரக்க ஓதும்போது மகிழ்வடைபவனே!  சமணர்கள் அவமானத்தாலும் பொறாமையாலும் மனம் வெடிக்கும்படியாக அவர்களைக் கழுவேற்றி; மங்கையர்க்கரசியாரின் கணவனான கூன்பாண்டியன் சமண மதத்திலிருந்து மீளும்படித் தேவாரமாகிய தமிழ்மறையைப் பாடிய திருஞானசம்பந்தராக அவதரித்தவனே!  அழகு மிகுந்ததும், நீலோற்பல மலர்கள் மலர்வதுமான குளங்களை உடைய திருத்தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மானைப் போன்று கடைக்கண்ணால் பார்க்கின்ற பெண்களிடத்திலே மோகம் கொண்டு கையிலுள்ள அத்தனை பணத்தையும் அவர்களிடத்தில் அளித்துவிட்டு வறுமை எய்தி; ஒருவரிடம் நட்பும் ஒருவரிடம் பகையும் ஒருவரிடத்திலே நாட்டமும் கொண்டு அவர்களோடு சேர்ந்து பசிக்காகக் கையேந்துகின்ற பாவியாகிய எனக்கு உன்னுடைய திருவடிகளைப் பாடும்படியான சிறந்த குணநலனைத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/05/பகுதி--923-3013180.html
3010498 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 920 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, October 2, 2018 12:00 AM +0530  

‘பலவிதங்களிலும் தாழ்ந்தவான அடியேனை ஆண்டருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சிதம்பரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, ஐந்து, ஆறு, ஒன்பது பத்து ஆகிய சீர்களில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூனறெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனதன தானான தானன

      தனதன தனதன தானான தானன

      தனதன தனதன தானான தானன                தந்ததான

 

அவகுண விரகனை வேதாள ரூபனை

         அசடனை மசடனை ஆசார ஈனனை

         அகதியை மறவனை ஆதாளி வாயனை       அஞ்சுபூதம்

      அடைசிய சவடனை மோடாதி மோடனை

         அழிகரு வழிவரு வீணாதி வீணனை

         அழுகலை யவிசலை ஆறான வூணனை      அன்பிலாத

கவடனை விகடனை நானா விகாரனை

         வெகுளியை வெகுவித மூதேவி மூடிய

         கலியனை அலியனை ஆதேச வாழ்வென     வெம்பிவீழுங்

      களியனை யறிவுரை பேணாத மாநுட

         கசனியை யசனியை மாபாத னாகிய

         கதியிலி தனையடி நாயேனை யாளுவ        தெந்தநாளோ

மவுலியி லழகிய பாதாள லோகனு

         மரகத முழுகிய காகோத ராஜனு

         மனுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட    னும்பர்சேரும்

      மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்

         மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென

         மலைமக ளுமைதரு வாழ்வே மனோகர      மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம

         தெரிசன பரகதி யானாய் நமோநம

         திசையினு மிசையினும் வாழ்வே நமோநம   செஞ்சொல்சேருந்

      திருதரு கலவி மணவாளா நமோநம

         திரிபுர மெரிசெய்த கோவே நமோநம

         ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்          தம்பிரானே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/02/பகுதி---920-3010498.html
3010495 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 919 ஹரி கிருஷ்ணன் DIN Monday, October 1, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்

 

நீரிழிவு: சர்க்கரை நோய்; குட்டம்: குஷ்டம்; ஈளை: சளி; வாதம்: வாயு; வெதுப்பு: சுரம்;

நேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு  நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ

 

நான்முகன் எடுத்த வீடு: பிரமன் படைத்த உடல்;

பாரிய நவ துவார நாறும் மு(ம்)மலத்தில் ஆறு  பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்

 

பாரிய: பருத்த; முமலத்தில்: மும்மலத்தில்—(ஆணவம், கன்மம் மாயை); ஆறு: வழியாக; பாய்பிணி: பாய்கின்ற நோய்கள்; பாவை: பொம்மை;

பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ

 

பாறொடு: பாறு—பேய்களோடு; கழுக்கள்: கழுகுகள்; கூகை: ஆந்தை;

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத  நாயகரிடத்து காமி மகமாயி

 

நாரணி: நாராயணி; நாரி: மங்கை, தேவி; ஆறு சமயத்தி: சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய ஆறு சமயங்களுக்கும் உரியவள்; நாயகரிடத்து காமி: (நாயகர் இடத்து காமி): நாயகரின் இடது பாகத்தை விரும்புபவள்;

நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத  நாயகி உமைச்சி நீலி திரிசூலி

 

 

வார் அணி   முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே

 

கலைச்சி: கலைகளுக்குத் தலைவி; நாக: மலையின் வாணுதல்: ஒளிகொண்ட நெற்றியை உடையவள் (மலைமகள்);

மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.

 

வாகுள: அழகுள்ள;

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்... நீரிழிவு, குஷ்டம், கோழை, வாயு, பித்தம், குளிர்சுரம், ஜுரம் முதலாக மற்ற நோய்கள்,

நேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ... நேர்ந்திருப்பதுவாய்; புழுக்கள் சேருவதற்கு இடமானதாய்; பிரமனால் படைக்கப்பட்ட இந்த உடலாகிய வீட்டில் எல்லா இடத்திலும் பரவியுள்ள ரத்தம், மூளை, தோல், சீழ் எல்லாமும் சேர்ந்ததுவாய்;

பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை...பருத்ததும் ஒன்பது துவாரங்களை உடையதும் நாற்றமெடுப்பதும்; ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மலங்களின் காரணமாக ஏற்படுகின்ற பிணிகளால் நிறைந்ததுமான பொம்மை;

நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ... நரியும் நாயும் பேய்களும் கழுகுகளும் ஆந்தைகளும் தின்பதற்கான பாழும் உடலை எடுத்து நான் வீணாகத் திரிந்துகொண்டிருப்பேனோ? (வீணே திரியாதபடி தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி மகமாயி... நாராயணியும்; தர்மங்களைப் பெருக்குகின்ற தேவியும்; ஆறு சமயங்களுக்கும் உரியவளும்; பூதகணங்களின் தலைவரான சிவபிரானுடைய இடதுபாகத்தை விரும்பி வீற்றிருப்பவளும்; மகமாயியும்;

நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி நீலி திரிசூலி... உலகமாகிய திருவிளையாடலை நடத்துபவளும்; நீல வண்ணத்தை உடையவளும்; வேதநாயகியும்; உமையும் திரிசூலியும்;

வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே... கச்சணிந்த மார்பகத்தை உடையவளும்; பூரணமான ஞானத்தைத் தருபவளும்; கலைகளின் தலைவியும்; மலைமகளுமான தேவியார் ஈன்ற வீரா! மயில் வாகனனே!

மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.... மாடங்களும் மதில்களும் முத்தால் ஆன மேடைகளும் கோபுரங்களும்; நறுமணம் கமழும் சோலைகளும் உள்ள அழகான (புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள) குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

நாராயணியும்; அறங்களை வளர்க்கும் நாயகியும்; ஆறு சமயங்களுக்கும் உரியவளும்; பூதகணங்களின் தலைவரான சிவபெருமானின் இடதுபாகத்தை விரும்புபவளும்; மகமாயியும்; உலகமாகிய திருவிளையாடலை நடத்துபவளும்; நீல நிறத்தவளும்; திரிசூலத்தை ஏந்தியவளும்; கச்சணிந்த மார்பகங்களை உடையவளும்; பூரண ஞானத்தைத் தருபவளும்; கலைகளுக்குத் தலைவியும்; ஒளிவிடும் நெற்றியை உடையவளுமான உமையம்மை பெற்ற வீர மயில் வாகனனே!  மாடங்களும் மதில்களும் முத்து பதித்த மேடைகளும் கோபுரங்களும் நறுமணம் கமழ்கின்ற சோலைகளும் நிறைந்திருக்கின்றதும் அழகு நிறைந்ததும் (புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளதுமான) குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே!

நீரிழிவு, குஷ்டம், கோழை, வாயு, பித்தம், மூலம், குளிர்சுரம், சுரம் முதலான பல நோய்களால் பீடிக்கப்பட்டதும்; புழுக்களுக்கு இருப்பிடமானதும்; பிரமனால் படைக்கப்பட்டதுமான இந்த உடலெங்கும் பரவியிருக்கின்ற ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் என்றும்; பருத்துள்ள ஒன்பது துவாரங்களைக் கொண்டு நாற்றம் எடுப்பதும்; மும்மலங்களால் ஏற்படுகின்ற பிணிகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ள பொம்மையான இந்த உடலைச் சுமந்து வீணே திரிவேனோ! (அவ்வாறு வீணே கழியாமல் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/01/பகுதி---919-3010495.html
3010494 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 918 ஹரி கிருஷ்ணன் Sunday, September 30, 2018 12:00 AM +0530  

 
இந்த உடலைப் பிடித்த நோய்களும், உடலை எடுக்க நேர்ந்த பிறவியான நோயும் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் குறட்டி என்னும் தலத்துக்கானது.  இத்தலம் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும் உள்ளன.  (குறிப்பு: படிப்பதற்கு வசதியாகப் பிரிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் அமைப்பை, தாளக் கணக்குக்கு ஏற்ப ‘நேருறுபு ழுக்கள்’, ‘பாரியந வத்து’ என்று மாற்றிப் பிரித்தால்தான் இந்த எழுத்துக் கணக்கு சீராக வரும்.)

தானதன தத்த தான தானதன தத்த தான

      தானதன தத்த தான                தனதான

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல

         நீள்குளிர் வெதுப்பு வேறு         முளநோய்கள்

      நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு

         நீடிய விரத்த மூளை             தசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு

         பாய்பிணி யியற்று பாவை        நரிநாய்பேய்

      பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான

         பாழுட லெடுத்து வீணி           லுழல்வேனோ

நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்திபூத

         நாயக ரிடத்து காமி              மகமாயி

      நாடக நடத்தி கோல நீலவரு ணத்தி வேத

         நாயகி யுமைச்சி நீலி             திரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக

         வாணுத லளித்த வீர             மயிலோனே

      மாடமதில் முத்து மேடை கோபுர மணத்த சோலை

         வாகுள குறட்டி மேவு            பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/30/பகுதி---918-3010494.html
3010504 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 921 ஹரி கிருஷ்ணன் Saturday, September 29, 2018 05:39 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை  அஞ்சுபூதம்

 

அவகுண: குணக்கேடான; விரகன்: வல்லவன்; மசடன்: குணம்கெட்ட; அகதி: கதியற்றவன்; மறவன்: மலை வேடன்; ஆதாளி வாயன்: வீம்பு பேசுபவன்;

அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத

 

அஞ்சுபூதம் அடைசிய: ஐந்து பூதங்களால் நிரப்பப்பட்ட; சவடனை: பயனற்றவனை; மோடாதி மோடன்: மூடருக்குள் மூடன்; அழிகரு: அழிந்துபோன கருவின்; அவிசலை: அவிந்து போனவனை; ஆறான: ஆறு வகையான (சுவைகளைக் கொண்ட); ஊணனை: உணவை அருந்துபவனை;

கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும்

 

கவடனை: கபடனை, வஞ்சகனை; விகடனை: உன்மத்தம் கொண்டவனை; நானா: பலவிதமான; கலியனை: கலியால் பீடிக்கப்பட்டவனை; அலியனை: ஆண்மையற்றவனை; ஆதேச வாழ்வனை: நிலையற்ற வாழ்வை உடையவனை; 

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய கதி இலி தனை நாயேனை ஆளுவது எந்தநாளோ

 

களியன்: குடிகாரன்; கசனி: பதர்; அசனியை: இடிபோன்ற பேச்சை உடையவனை; கதியிலி: கதியற்றவன்;

மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும் மநு நெறி உடன் வளர் சோழ நாடர் கோனுடன் உம்பர் சேரும்

 

மவுலியில்: மகுடத்தில்; பாதாள லோகனும்: ஆதிசேடனும்; மரகத முழுகிய: உடலெங்கும் பச்சை நிறமுள்ள; காகோத ராஜன்: சர்ப்ப ராஜனாகிய பதஞ்சலி (காகோதரன்: பாம்பு);

மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான்  நாடர் கோ என மலை மகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும்

 

மகபதி: இந்திரன்; புலியூர்: சிதம்பரம்; மடமயில்: சிவகாம சுந்தரி; மன்றுள்: அம்பலத்துள்;

சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோந ம திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும்

 

 

திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே.

 

திரு தரு: வள்ளி தருகின்ற; சுர அதிபர்: தேவர் தலைவர்;

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை...துர்க்குணமும் தந்திரமும் நிறைந்தவனும்; வேதாளமே வடிவெடுத்ததைப் போன்ற உருவத்தைக்கொண்டவனும்; மூடனும்; குணக்கேடனும்; ஆசாரக் குறைவுள்ளவனும்; கதியற்றவனும்; வீம்பு பேசுபவனும்;

அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத... ஐம்பூதங்களால் அடைக்கப்பட்ட உடலைக்கொண்ட பயனற்றவனும்; மூடர்களுக்கெல்லாம் மூடனானவனும்; அழிந்து போகின்ற கருவிலிருந்து தோன்றிய வீணனும்; அழுகியும் அவிந்தும் போன பண்டமானவனும்; அறுசுவை உணவை விரும்பி அருந்துபவனும்; அன்பே அற்றவனும்;

கவடனை  விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங் களியனை... வஞ்சகனும்; உன்மத்தம் கொண்டவனும்; பலவகையான விகாரங்களைக் கொண்டவனும்; கோபம் கொண்டவனும்; தரித்திரத்தால் சூழப்பட்டவனும் கலியால் பீடிக்கப்பட்டவனும்; ஆண்மையற்றவனும்; நிலையற்ற வாழ்வை உடையவனும்; வீணாய் விழுகின்ற குடிகாரனும்;

அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மாபாதனாகிய கதியிலி தனை அடி நாயேனைஆளுவது எந்தநாளோ...நல்ல அறிவுரைகளைப் போற்றாத மானிடப் பதரானவனும்; இடியைப் போல பேசுபவனும்; பெரும் பாதகனும்; கதியற்றவனுமான நாயேனை நீ என்று ஆண்டுகொள்ளப் போகிறாய்? (உடனே ஆண்டருள வேண்டும்.)

மவுலியில் அழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன்...அழகிய மணிமுடிகளைக் கொண்டவனும் பாதளலோகத்தவனுமாகிய ஆதிசேடனும்; உடலெங்கும் பச்சை நிறத்தைக் கொண்ட பாம்பரசனான பதஞ்சலியும்; மனுநீதி தவறாத சோழநாட்டரசன் (அநபாயனும்);

உம்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர மன்றுளாடும்...... தேவர்கள் புடைசூழ்ந்திருக்கும் இந்திரனும் புகழ்வதான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வீற்றிருக்கின்ற தலைவரான நடராஜரும் அவரருகிலுள்ள இளமயிலான சிவகாமசுந்தரியும் மகிழுமாறு தேவர்களுடைய தலைவனாக விளங்குபவனே! மலைமகள் ஈன்றெடுத்த செல்வமே! மனத்துக்கு இனியவனே! பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற,

சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினும் இசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேரும்... சிவசிவ ஹரஹர தேவா* நமோநம! நேரெதிரில் காட்சிதருகின்ற மேலான கதியாக விளங்குபவனே நமோநம! எல்லாத் திசைகளுக்கும் இசைக்கும் செல்வமாக விளங்குபவனே நமோ நம!  இனிய சொற்களை உடைய,

(* சிவனே முருகன், முருகனே சிவன் என்பது கருத்து.)

திருதரு கலவி மணாளா நமோநம திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபா தம்பிரானே.... வள்ளியம்மையின் மணாளனே நமோநம!  திரிபுரங்களை எரித்தவனே* நமோநம!  ஜெயஜெய ஹரஹர தேவா! தேவர் தலைவனுடைய தம்பிரானே!

(* சிவனே முருகன், முருகனே சிவன் என்பது கருத்து.)

சுருக்க உரை

அழகிய மணிமுடிகளை உடைய ஆதிசேடனும் உடலெல்லாம் பச்சை நிறமாக விளங்கும் சர்ப்பராஜனான பதஞ்சலியும்; தேவேந்திரனும்; சோழநாட்டரசனும்; நடராசப் பெருமாளும் சிவகாமசுந்தரியும் மகிழும் வண்ணமாக தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே!  மலைமகள் ஈன்ற செல்வமே! அம்பலத்திலே ஆடுகின்ற சிவசிவ ஹரஹர தேவா போற்றி போற்றி! கண்ணெதிரில் காட்சிதரும் நற்கதியே போற்றி போற்றி! திசைகளுக்கும் இசைக்கும் செல்வமாக விளங்குபவனே போற்றி போற்றி! இனிய சொற்களை உடைய வள்ளி மணாளனே போற்றி போற்றி! திரிபுரங்களை எரித்தவனே போற்றி போற்றி! ஜெயஜெய ஹரஹர தேவா!  தேவர் தலைவனுடைய தம்பிரானே!

அடியேன் துர்க்குணம் கொண்டவன்; தந்திரசாலி; வேதாளம் ஒரு உருவத்தை எடுத்ததைப் போன்ற வடிவத்தை உடையவன்; முழு மூடன்; குணக்கேடன்; ஆசாரமற்றவன்; கதியற்றவன்; மலைவேடனை ஒத்தவன்; வீம்பு பேசுபவன்; பஞ்சபூதச் சேர்க்கையால் உருவான பயனற்றவன்; மூடருள் மூடன்; அழிவடையும் கருவிலிருந்து தோன்றிய வீணருள் வீணன்; அழுகியும் அவிந்தும் போன பண்டத்தை ஒத்தவன்; அறுசுவை உண்டியை விரும்புபவன்; வஞ்சகன்; உன்மத்தன்; பலவிதமான விகாரங்களைக் கொண்டவன்; கோபம் கொண்டவன்; தரித்திரன்; ஆண்மையற்றவன்; நிலைமாறுபட்ட வாழ்வை உடையவன்; குடியன்; அறிவுரைகளைப் போற்றாத மாநுடப் பதர்; இடிபோன்ற குரலை உடையவன்; பாதகன்; கதிகெட்டவன். இப்படிப்பட்ட கடையனும் நாயனுமாகிய என்னை நீ என்று ஆண்டுகொள்ளப் போகிறாய்? (உடனே ஆண்டுகொள்ள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/oct/03/பகுதி---921-3010504.html
3009081 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 917 ஹரி கிருஷ்ணன் Friday, September 28, 2018 10:48 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும் ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே

 

ஆனாத: மாறாத, கெடாத; ஆதேச வாழ்வினில்: நிலைபெறாத வாழ்வு; ப்ரமித்து: பிரமித்து, மயங்கி;

ஆசா பயோதியை கடக்க விட்டதும் வாசா மகோசரத்து இருத்து வித்ததும் ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும்

 

ஆசா: ஆசையாகிய; பயோதி: பயோததி—பாற்கடல், கடல்; வாசாமகோசரத்து: வாக்குக்கு எட்டாத நிலையில்; ஆபாதனேன்: கீழ்ப்பட்டவனான நான்; ப்ரசித்தி பெற்று: கீர்த்தியைப் பெற்று;

யான் ஆக நாம(ம்) அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எத்திசை புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி

 

எத்திசைப் புறத்தினும்: எல்லாத் திசைகளிலும்: ஏடு ஏவு: சீட்டை அனுப்புகிற; ராஜதத்தினை: பெருமையை, பெருமிதத்தை; இடராழி: துன்பக் கடல்;

ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே

 

ஏறாத: கரையேற முடியாத; மாமலத்ரய: ஆணவம், கன்மம், மாயை எனப்படும மூன்று மலங்கள்; குணத்ரய: சத்வம், ராஜசம், தாமசம் எனப்படும் மூன்று குணங்கள்; ஏமமாய்: காவலாய், பாதுகாப்பாய்; புற்புதம்: நீர்க்குமிழி;

மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர்

 

மாநாகம்: பெரிய பாம்பு—வாசுகி; வலுப்புற: வலுவாக; துவக்கி: கட்டி; பூதர(ம்): மலை; தனு: வில்; மாலாய வாளி: திருமாலாகிய அம்பு;

மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே முதல் சிரித்த வித்தகர் வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும்

 

புரத்ரயத்தவர்: முப்புரத்து அசுரர்கள்; தூளாகவே: பொடியாகவே; முதல்: முன்பு; வலாரி: வலன் என்ற அரக்கனைக் கொன்றவன்—இந்திரன்; வலாரி பெற்றெடுத்த: தேவானை; கற்பக வனம்: கற்பகச் சோலை;

தே(ம்) நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல் சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி

 

தேநாயகா: தேவானை கேள்வனே; துணித்து: வெட்டி; அ-வரை: அந்த வரை (மலை, கிரெளஞ்சம்);

சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.

 

சோரி: குருதி; அளக்கர்: கடல்; நிசாசரக் குலத்தை: அரக்கர் குலத்தை; சீராவினால்: குறுவாளால்;

ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும் ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே... என்றும் கெடாததாகிய ஞானத்தைக் கொடுத்ததையும்; ஆராய்ந்து அறியத்தக்க நூல்களை (ஆராய்கின்ற) கருத்தைத் தந்ததையும்; ஒரு தன்மையில் நிலைத்திருக்காததும் மயக்கம் உள்ளதுமான இந்த வாழ்வினில் பிரமிப்பு அடைந்து தளர்ச்சியடைந்து உயிர் போகாமல்,

ஆசா பயோதியைக் கடக்க விட்டதும் வாசா மகோசரத்து இருத்து வித்ததும் ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும் யான் ஆக நாம(ம்)... ஆசையாகிய கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் கொடுத்ததையும்; வாக்குக்கு எட்டாத நிலையில் நான் நிற்கும்படி அருளியதையும்; கீழ்ப்பட்டவனான நான் பெரும் புகழைப் பெற்று, ஏழு உலகங்களில் உள்ளோர் எல்லோரும் நானே என்னும்படியான (அத்துவித நிலையைப் பெற்றுப் புகழ்கொண்டதையும்;

அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும்... மிகவும் அற்புதமான திருப்புகழ்ப் பாக்களைத் தேனொழுகப் பாடி; எந்தத் திக்கிலும் நான் அனுப்புகிற சீட்டு மரியாதையுடன் போற்றப்படுகின்ற மேன்மையை எனக்குத் தந்ததையும்;

இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே...துன்பக் கடலிலிருந்து கரையேற முடியாமல் செய்யும் (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும்; (சத்துவம், இராஜசம்; தாமசம் என்னும்) முக்குணங்களும்; பலவிதமான கலக்கங்களும்* நிறைந்ததும்; நீர்க்குமிழியைப் போல நிலையற்றதுமான பிறவித் துன்பம் நீங்கும்படிச் செய்து எனக்குக் காவலாய் நின்று அனுக்கிரகித்ததையும் என்றும் மறவேன்.

(* காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியம்; அகந்தை, அசூயை என்னும் எட்டையும் குறிக்கிறது.)

மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து...வாசுகியாகிய பாம்பை வலுவான நாணாகக் கட்டி; ஒப்பற்ற மேரு மலையை வில்லாகப் பிடித்து; திருமாலை பாணமாகத் தொடுத்து;

அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே முதல் சிரித்த வித்தகர் வாழ்வே... (திரிபுரங்களில் இருந்த) அரக்கர்களில் மூவர் மட்டும் பிழைக்கும்படியாகவும்*; பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்த மற்ற அரக்கர்கள் பொடிபட்டு வீழும்படியாகவும் முன்பு முறுவல் பூத்து எரித்த வித்தகரான சிவபெருமான் பெற்ற செல்வமே!

(* திரிபுரங்களை அழிக்கும்போது சிவனை வழிபட்டு வந்த மூன்று அரக்கர்கள் மட்டும் மாளாமல் பிழைத்தார்கள்; ஏனையோர் அழிந்தார்கள்.  பிழைத்த அரக்கர்களில் இருவர் துவாரபாலர்களாக ஆனார்கள்; ஒருவருக்கு முழவை முழக்கும் பேறு கிடைத்தது.)

வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் தே(ம்) நாயகா... இந்திரனுடைய மகளாக வளர்ந்தவளும்; கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத்தில் வாழ்பவளுமான தேவானையுன் கேள்வனே!

எனத் துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரமத் திருக் கழல் சேராத சூரனைத் துணித்து அடக்கி... என்றெல்லாம் துதித்த உத்தமமான தேவர்கள் வாழும்டிபயாக; வல்லமை நிறைந்த உனது திருவடிகளை நினையாத சூரபத்மனை வெட்டி வீழ்த்தி;

அ-வரை மோதி சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.... அந்தக் கிரெளஞ்ச பர்வதத்தைத் தாக்கி; சேற்றைப் போன்ற ரத்தம் பாய்கின்ற காரணத்தால் கடலும் மேடாகிப் போக; அரக்கர் குலத்தை இப்படியும் அப்படியுமாக ‘சீரா’ என்னும் குறுவாளால் அறுத்து அறுத்து வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

‘மகாமேருவை வில்லாக எடுத்து; பெரியதான வாசுகிப் பாம்பை நாணாக இழுத்துக்கட்டி; திருமாலாகிய பாணத்தைத் தொடுத்து; திரிபுரங்களில் இருந்த அரக்கர்களில் மூவர் பிழைக்க, மற்றோர் இறக்கும்படியாகப் புன்முறுவல் பூத்த வித்தகரான சிவபிரானுடைய செல்வனே!  இந்திரன் வளர்த்ததவளும்; கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத்தைச் சேர்ந்தவளுமான தேவானையின் நாயகனே!’ —என்றெல்லாம் போற்றிய தேவர்கள் வாழும்படியாக, உன்னுடைய திருவடியை நினைக்காத சூரபத்மனை வெட்டி வீழ்த்தி; கிரெளஞ்ச மலையைத் தூளடித்து; ரத்தம் சேறுபோலப் பெருகியதால் கடல் மேடிட்டுத் திடலாகச் செய்து; பகைத்து நின்ற அரக்கர்களை ‘சீரா’ எனப்படும் குறுவாளால் அறுத்துத் துண்டாடிய பெருமாளே!

அடியேனுக்கு நீ,

அறிவைக் கொடுக்கும் நூல்களை ஆராய்ந்து அறியும்படியான புத்தியைக் கொடுத்ததையும்; நீர்க்குமிழியைப் போன்ற நிலையற்ற இந்த வாழ்வில் தளர்ச்சியுறு அழிந்துபோகாதபடி, ஆசையாகிய கடலைக் கடப்பதற்கான ஆற்றலைத் தந்ததையும்; வாக்குக்கு எட்டாத நிலையில் என்னை இருக்கச் செய்ததையும்; கீழ்மையுள்ளவனான அடியேன் மிகவும் கீர்த்திபெற்று ஏழு உலகமும் நானே என்னும்படியான அத்துவித நிலையில் இருக்கச் செய்ததையும்; அற்புதமான திருப்புகழ்ப் பாக்களைத் தேனொழுகப் பாடி; நான் அனுப்புகின்ற சீட்டு எல்லாத் திசைகளிலும் அன்புடனும் மரியாதையுடனும் போற்றப்படும் பெருமிதத்தைப் பெறச் செய்ததையும்; துன்பக் கடலிலிருந்து கரையேறமுடியாமல் செய்கின்ற ஆணவ, கன்ம, மாயா மலங்களையும் முக்குணங்களையும் பலவிதமான விகாரங்களையும் கொண்டுள்ளதும் நீர்க்குமிழியைப் போல நிலையற்றதுமான பிறவியை ஒழித்து அடியேனுக்கு அனுக்கிரகித்ததையும் எப்போதும் மறக்க மாட்டேன்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/29/பகுதி---917-3009081.html
3009078 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 916 ஹரி கிருஷ்ணன் Friday, September 28, 2018 12:00 AM +0530 ‘அடியேனுக்கு நீ அனுக்கிரகித்ததை எப்போதும் மறவேன்’ என்று சொல்கின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்று, நான்கு, பதின்மூன்று, பதினான்கு, ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும்; ஐந்து, பத்து, பதினைந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெபழுத்துகளும் அமைந்திருக்கின்றன.

தானான தான தத்த தத்த தத்தன

      தானான தான தத்த தத்த தத்தன

      தானான தான தத்த தத்த தத்தன                தனதான

 

ஆனாத ஞான புத்தி யைக்கொடுத்ததும்

         ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்

         ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி      ரழியாதே

      ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்

         வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்

         ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி         துலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்

         தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்

         ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்         இடராழி

      ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய

         நானாவி கார புற்பு தப்பி றப்பற

         ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும்           மறவேனே

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்

         மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு

         மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி        லொருமூவர்

      மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்

         தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்

         வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக        வனமேவும்

தேநாய காஎ னத்து தித்த வுத்தம

         வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்

         சேராத சூர னைத்து ணித்த டக்கிய           வரைமோதிச்

      சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ

         மாறாதி சாச ரக்கு லத்தை யிப்படி

         சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய          பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/28/பகுதி---916-3009078.html
3006903 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 914 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, September 26, 2018 12:00 AM +0530  

‘பரம்பொருளை உணர வேண்டும்’ எனக் கோரும் இப்பாடல் ஸ்ரீ புருஷ மங்கை என்னும் தலத்துக்கானது.  தற்காலத்தில் இத்தலம் நாங்குநேரி என்று வழங்கப்படுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தானதன தந்த தந்தன

      தானதன தந்த தந்தன

      தானதன தந்த தந்தன               தனதான

 

ஆடல்மத னம்பின் மங்கைய

         ராலவிழி யின்பி றங்கொளி

         யாரமத லம்பு கொங்கையின்     மயலாகி

      ஆதிகுரு வின்ப தங்களை

         நீதியுட னன்பு டன்பணி

         யாமல்மன நைந்து நொந்துட     லழியாதே

வேடரென நின்ற ஐம்புல

         னாலுகர ணங்க ளின்தொழில்

         வேறுபட நின்று ணர்ந்தருள்       பெறுமாறென்

      வேடைகெட வந்து சிந்தனை

         மாயையற வென்று துன்றிய

         வேதமுடி வின்ப ரம்பொரு       ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்

         மாமுனிம கஞ்சி றந்தொரு

         தாழ்வறந டந்து திண்சிலை       முறியாவொண்

      ஜாநகித னங்க லந்தபின்

         ஊரில்மகு டங்க டந்தொரு

         தாயர்வ சனஞ்சி றந்தவன்        மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட

         வாடைமுழு தும்ப ரந்தெழ

         தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட    நடமாடுஞ்

      சீர்மயில் மஞ்சு துஞ்சிய

         சோலைவளர் செம்பொ னுந்திய

         ஸ்ரீபுருட மங்கை தங்கிய          பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/26/பகுதி--914-3006903.html
3006902 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 913 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, September 25, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

முத்து நவ ரத்ந மணி பத்திநிறை 
சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி 
தருஎன ஓதும்

 

சத்திஇடம்: இடது பாகத்திலே பத்தி நிறை: வரிசையாகப் பொருந்தியுள்ள; சக்தியோடு; மொய்த்த கிரி: கூடிநிற்கும் மலை—சிவன்; முத்தி தரு: முக்தியைத் தரும் விருட்சம் (தரு: மரம்);

முக்கண் இறைவர்க்கும்அருள் வைத்த 
முருககடவுள் முப்பது மூவர்க்கசுரர் 
அடி பேணி

 

முக்கண் இறைவர்க்கும்: சிவபெருமானுக்கும்; முப்பது மூவர்க்க: முப்பத்து மூன்று வகையான; சுரர்: தேவர்கள்;

பத்து முடி தத்தும் வகைஉற்ற 
கணை விட்ட அரி பற்குனனை 
வெற்றி பெறரதம் ஊரும்

 

பத்துமுடி: (இராவணனுடைய) பத்துத் தலை; பற்குனனை: பல்குணனை—அர்ஜுனனை;

பச்சை நிறம் உற்ற புயல்அச்சம் அற 
வைத்தபொருள் பத்தர் மனதுஉற்ற 
சிவம் அருள்வாயே

 

பச்சை நிறம் உற்ற புயல்: கருமேகத்தை ஒத்த திருமால்; அச்சமற: திருமாலுடைய அச்சம் கெட;

தித்திமிதி............தெனனான

 

 

திக்கு என மத்தளம்இடக்கை துடி தத்தகுகு........
என ஆடும்

 

 

அத்தனுடன் ஒத்த நடநிதிரி 
புவனத்தி நவ சித்திஅருள் சத்தி அருள் பாலா

 

அத்தனுடன்: தலைவனுடன்; நடநி: நடனம் புரிபவள்; நவசித்தி: புதுமையான சித்திகள்;

அற்ப இடை தற்பம் அதுமுற்று நிலை 
பெற்று வளர் அல் கனக பத்ம புரி
பெருமாளே.

 

அற்ப இடை: மெல்லிய இடை; தற்பம்: மெத்தை வீடு; அல்: மதில்;

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்... முத்தும் நவரத்தின மணிகளும் வரிசையாக நிறைந்திருக்கின்ற உமையம்மையைத் தனது இடது பாகத்திலே வைத்துள்ள மலைபோன்றவரும்; முக்தியை அளிக்கின்ற விருட்டசம் போன்றவரும என்றெல்லாம் சொல்லப்படுகின்ற,

முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள் முப்பது முவர்க்க சுரர் அடி பேணி... மூன்றாவது கண்ணை உடைய இறவருக்கும் அருளைத் தந்த முருகக் கடவுள், தன்னுடைய திருவடியை முப்பத்து மூன்று வகையான* தேவர்களம் போற்றி வணங்க;

(* ருத்திரர் 11; ஆதித்யர் 12; வசுக்கள் எட்டு; அஸ்வினி தேவர்கள் இருவர் என முப்பத்து மூன்று வகை.)

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்...(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பை எய்த ராமனும்; பாரதப் போரில் அர்ஜுனன் வெற்றிபெறும்படியாகத் தேரைச் செலுத்திய கண்ணனுமாக (வந்த),

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே...கருநிறத்து மேகத்தை ஒத் பெருமானான திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்திலே கொண்டிருந்த) அச்சத்தைக் கெடுத்தருளியவனே!  பக்தர்கள் மனத்திலே விளங்குவதான மங்கலத்தை எனக்கும் அருள்வாயாக.

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென மத்தளம் இடக்கைதுடி...தித்திமிதி முதலான ஓசைகளோடு மத்தளமும் இடக்கை என்ற மேளமும் உடுக்கையும் ஒலியெழுப்ப;

தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும்... தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடுகின்ற, 

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா... தலைவனான சிவனுடன் ஒத்து நடனம் புரிபவளும்; மூன்று லோகங்களுக்கும் தலைவியும்; புதுமையான சித்திகளை அடியார்களுக்கு அருள்பவளுமான உமையம்மை ஈன்ற பாலனே!

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்ம புரி பெருமாளே....மெல்லிய இடையையுடைய மாதர்களுடைய மெத்தை வீடுகள் நிலைபெற்று, உயர்ந்த மதில்களோடு விளங்குவதும் பொற்றாமரைக் குளம் அமைந்ததுமான மதுரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு….தெனான என்ற ஒலிகளோடு மத்தளமும் இடக்கை மேளமும் உடுக்கையும் தத்தகுகு தத்தகுகு என்றும் செச்சரிகை செச்சரிகை என்றும் முழங்க நடனமாடுகின்ற பெரியோனாகிய சிவனுடைய நடனத்துக்கு ஒப்ப நடமாடுபவளும்; மூன்று உலகங்களுக்கும் முதல்வியும்; அடியாருக்குப் புதுமையான சித்திகளை அருள்பவளுமான சக்திதேவி ஈன்ற பாலனே!  மெல்லிய இடையையுடைய மாதர்களுடைய மெத்தைவீடுகள் உயர்ந்த மதில்களோடு விளங்குவதும், பொற்றாமரைக் குளம் விளங்குவதுமான மதுரையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

முத்தும் நவமணிகளும் வரிசையாக விளங்குவளான உமாதேவியைத் தன் இடது பாகத்தில் வைத்திருப்பவரும் முக்தியாகிய கனியைத் தன் அடியாருக்கு அருளும் விருட்டசம் என்று சிறப்பாகச் சொல்லப்படுபவருமான சிவபெருமானுக்கு அருள் செய்து பிரணவத்தை உபதேசித்த முருகனே!  முப்பத்து மூன்று வகையான தேவர்களாலும் விரும்பிப் போற்றப்படுபவனே! ராமனாக வந்து ராவணனுடைய பத்துத் தலைகளையும் அரிந்தவரும்; கண்ணனாக வந்து, அர்ஜுனன் வெல்லுமாறு பாரதப் போரில் தேரைச் செலுத்தியவருமான திருமாலுக்கு, சூரனிடத்திலும் அவனுடைய தம்பியரான சிங்கமுகன், தாரகனிடத்திலும் இருந்த அச்சத்தைக் கெடுத்தவனே! பக்தர்களுடைய மனத்தில் நிலைபெற்றிருக்கின்ற மங்கலத்தை அடியேனுக்கும் அருளவேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/25/பகுதி---913-3006902.html
3006905 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 915 ஹரி கிருஷ்ணன் Monday, September 24, 2018 11:30 AM +0530

 

பதச் சேதம்

சொற் பொருள்

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி

 

ஆடல்: போருக்கு எழும்; ஆல விழி: விஷம்போன்ற விழி; பிறங்கு: விளங்கும்; ஆரம்: முத்து மாலை; அலம்பு: அசைசின்ற;

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே

 

ஆதி குரு: ஆதியானவரான சிவபெருமானுடைய குருவான முருகன்;

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு என்

 

 

வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே

 

வேடை: வேட்கை, ஆசை; துன்றிய: நெருங்கிய, பொருந்திய;

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண்

 

உரம்: வலிமை; ஒளிர்: பெருமைவாய்ந்த; மாமுனி: விசுவாமித்திரர்; மகம்: வேள்வி; திண்சிலை: வலிமையான வில்; முறியா: முறித்து;

ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே

 

மகுடம் கடந்து: பட்டாபிஷேகத்தைத் துறந்து; ஒரு தாயர்: ஒப்பற்ற தா(யான கைகேயி);

சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும்

 

வாடை: வாடைக் காற்று;

சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே.

 

மயில!: மயில் வாகனனே!; மஞ்சு துஞ்சிய: மேகம் தங்கிய;

ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி...போருக்கு எழுகின்ற மன்மதன் எய்யும் அம்பைப் போன்றதும்; விஷம் நிறைந்ததுமான (பெண்களுடைய) கண்ணில் தோன்றும் பொய் அன்பின்மேலேயும்; விளங்கிப் பிரகாசிப்பதும் முத்துமாலை அசைவதுமான மார்பின் மீதும் ஏற்பட்ட மையலால்;

ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே.... முதல்வனான சிவனுக்கும் குருவான உன்னுடைய திருவடிகளை அன்போடு வணங்காது, அதனாலே மனம் நைந்து, உடல் நொந்து அழிந்து போகாதபடி,

வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறு பட நின்று உணர்ந்து அருள் பெறுமாறு....வேடர்களைப்போல நிற்கின்ற ஐம்புலன்களின் செயல்களும்; (புத்தி, மனம், சித்தம், அகங்காரம் என்ற) நான்கு அந்தக்கரணங்களுடைய செயல்களும் என்னோடு மாறுபாடு கொண்டு என்னைத் தாக்காதபடி (நான் உன்னை) உணர்ந்து உன் அருளைப் பெறும்படியாகவும்;

என்வேடை கெட வந்து சிந்தனைமாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம் பொருள் அருள்வாயே...என்னுடைய ஆசைகள் அழியும்படியாகவும்; நீ என் எண்ணத்தில் கலப்பதனால் எனக்குள்ள மன மாயைகள் அறும்படியாகவும் வெற்றிகொண்டு; நெருங்கிய வேதங்களின் முடிவாக விளங்குகின்ற பரம்பொருளை (அடியேனுக்கு) உபதேசித்தருள வேண்டும்.

தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா... தாடகையின் வலிமையை அழித்தும்; பெருமைபெற்ற முனிவரான விசுவாமித்திரருடைய வேள்வியை முடித்துக்கொடுத்தும்; தாழ்வின்றி வலிய சிவ தனுசை முறித்தும்;

ஒண் ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே... ஒளிபடைத்த ஜானகியை மணந்து ஒன்று கலந்ததற்குப் பிறகு; தன் மகுடத்தைத் துறந்து ஒப்பற்ற கைகேயியின் சொல்லைப் போற்றிச் சிறந்த ராமனுடைய மருகனே!

சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும் சீர் மயில...ஆதிசேடனுடைய முடிகள் கலங்கும்படியும்; கடுமையான காற்று எங்கும் அடர்ந்து வீசும்படியும்; தேவர்கள் மகிழ்ந்து பொங்கிடும்படியும் நடனம் புரிகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே!

மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம் பொன் உந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய பெருமாளே.... மேகங்கள் படிந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ளதும் சேல்வம் நிறைந்ததுமான ஸ்ரீபுருட மங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தாடகையின் வலிமையை அழித்து; விஸ்வாமித்திரருடைய வேள்வியை முடித்துக் கொடுத்து; ஜனகருடைய வில்லை முறித்து; சானகியை மணந்து; கைகேயியின் சொற்படித் தன் மகுடத்தைத் துறந்தவரான இராமருடைய மருகனே!  ஆதிசேடனுடைய முடிகள் கலங்கும்படியும்; காற்று எங்கும் வீசும்படியும்; தேவர்கள் மகிழும்படியும் நடனம் செய்கின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே! மேகங்கள் படிந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்திருக்கும் ஸ்ரீபுருஷ மங்கையில் (நாங்குநேரியில்) வீற்றிருக்கின்ற பெருமாளே!

மன்மதனுடைய மலர்கணைகளையும் விஷத்தையும் போன்ற கண்களின் மீதும்; முத்துமாலை புரள்கின்ற மார்பின் மீதும் மையலுற்று; ஆதியாகிய சிவனுக்குக் குருவாக விளங்குகின்ற உன்னைத் துதிக்காமல் மனச்சோர்வடைந்து வருந்தி; வேடர்களைப் போலிருக்கின்ற ஐம்புலன்கள், நான்கு அந்தக் கரணங்கள் ஆகியனவற்றின் செயல்களால் நான் தாக்கப்படாமல் உன்னுடைய திருவருளைப் பெறவேண்டும்.  என் ஆசைகள் எல்லாம் அழிந்து, மாயாசக்திகள் அடங்கி, என் மயக்கம் கெட்டு, வஞ்சனை, பொய் எல்லாவற்றையும் வென்று, வேதங்கள் முடிவாகக் காட்டுகின்ற பரம்பொருளை அடைய உதவவேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/27/பகுதி--915-3006905.html
3006901 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 912 ஹரி கிருஷ்ணன் Monday, September 24, 2018 11:02 AM +0530  

‘சிவத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கு உரியது. முதற்பாடலான ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’யைப் பெரிதும் நினைவுபடுத்துவது.  ஆனால் சந்தத்தால் மாறுபட்டது. இப்பாடலில் மதுரை, ‘பத்மபுரி’ என்று குறிக்கப்படுகிறது. 

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறுவரையிலான அத்தனைச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

                தத்ததன தத்ததன                                                    தனதான

 

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட

                        மொய்த்தகிரி முத்திதரு                             எனவோதும்

      முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்

                        முப்பதுமு வர்க்கசுர                                       ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

                        பற்குனனை வெற்றிபெற                           ரதமூரும்

      பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

                        பத்தர்மன துற்றசிவம்                                  அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு

                        தெய்த்ததென தெய்த்ததென                  தெனனான

      திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு

                        செச்சரிகை செச்சரிகை                                யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ

                        சித்தியருள் சத்தியருள்                               புரிபாலா

      அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள

                        ரற்கனக பத்மபுரி                                               பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/24/பகுதி---912-3006901.html
3004285 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 910 ஹரி கிருஷ்ணன் Friday, September 21, 2018 12:00 AM +0530  

‘உனது திருவடிகளைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்’ என்று கோரும் இப் பாடல் மயிலம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலுமாக அமைந்திருக்கின்றன.

தனதந்த தானன தானா தானா

            தனதந்த தானன தானா தானா

            தனதந்த தானன தானா தானா                                  தனதான

 

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ

                  விடமிஞ்சு பாதக வேலோ சேலோ

                  குழைகொண்டு லாவிய மீனோ மானோ          எனுமானார்

      குயில்தங்கு மாமொழி யாலே நீரே

                  யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்

                  குளிர்கொங்கை மேருவி னாலே நானா            விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா

                  யலையம்பு ராசியி னூடே மூழ்கா

                  வுடல்பஞ்ச பாதக மாயா நோயா                         லழிவேனோ

      உறுதண்ட பாசமொ டாரா வாரா

                  எனையண்டி யேநம னார்தூ தானோர்

                  உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா              ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ

                  எனநின்று வாய்விட வேநீள் மாசூ

                  ரணியஞ் சராசனம் வேறாய் நீறா                        யிடவேதான்

      அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ

                  ரனலங்கை வேல்விடும் வீரா தீரா

                  அருமந்த ரூபக ஏகா வேறோர்                             வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்

                  குறமங்கை யாளுட னேமா லாயே

                  மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ்          குமரேசா

      மதிமிஞ்சு போதக வேலா ஆளா

                  மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா

                  மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்       பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/21/பகுதி---910-3004285.html
3004287 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 911 ஹரி கிருஷ்ணன் Thursday, September 20, 2018 04:19 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கொலை கொண்ட போர்விழி கோலோ 
வாளோ விடம் மிஞ்சு பாதகவேலோ 
சேலோ குழைகொண்டு உலாவியமீனோ மானோ 
எனும்மானார்

 

கொலைகொண்ட: கொலைத் தொழிலைக் கொண்டுள்ள; கோலோ: அம்போ; குழைகொண்டு: காதிலுள்ள குழை வரை நீண்டு; மானார்: பெண்கள்;

குயில் தங்கு மாமொழியாலே 
நேரே இழை தங்கு நூல்இடையாலே
மீது ஊர்  குளிர் கொங்கைமேருவினாலே 
நானாவிதமாகி

 

 

உலை கொண்ட மாமெழுகாயே 
மோகாய் அலை அம்புராசியின்ஊடே 
மூழ்கா டல்பஞ்ச பாதகமாய் ஆய்நோயால் 
அழிவேனோ

 

உலை: நெருப்பு உலை; மோகாய்: மோகமாய், மோகம் கொண்டு; அம்புராசி: கடல்; பஞ்ச பாதகமாய்: கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை என்னும் ஐந்தும் பஞ்சமகா பாதகங்கள்;

உறு தண்டம் பாசமொடுஆரா 
வாரா எனைஅண்டியே நமனார் 
தூதுஆனோர் உயிர்கொண்டு போய்விடுநாள்
 நீ மீ தாள் அருள்வாயே

 

தண்டம்: கால தண்டம்; பாசம்: பாசக் கயிறு; ஆரா வாரா: ஆரவாரித்து; மீ: மேன்மை வாய்ந்த;

அலை கொண்ட வாரிதிகோகோ 
கோகோ எனநின்று வாய் விடவே 
நீள்மா 
சூர் அணி அம்சராசனம் வேறாய்நீறாயிடவே தான்

 

வாரிதி: கடல்; மாசூர்: மாமரத்தின் வடிவமாக நின்ற சூரன்; சராசனம்: வில்; நீறாயிட: பொடிபட;

அவிர்கின்ற சோதியவார் ஆர் 
நீள் சீர் அனல்அம் கை வேல் 
விடும்வீரா தீரா அருமந்தரூபக ஏகா வேறு 
ஓர்வடிவாகி

 

அவிர்கின்ற: பிரகாசிக்கின்ற;

மலை கொண்டவேடுவர் கான் 
ஊடேபோய் குறமங்கையாளுடனேமால் 
ஆயே மயல்கொண்டு உலாய் அவள்தாள் மீதே 
வீழ் குமரேசா

 

கானூடே: காட்டின் வழியாக; உலாய்: உலாவி;

மதி மிஞ்சு போதகவேலா 
ஆளா மகிழ்சம்புவே தொழு 
பாதாநாதா மயிலம் தண் மாமலை வாழ்வேவானோர் 
பெருமாளே.

 

சம்புவே: சிவனே;

கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ குழை கொண்டு உலாவிய மீனோமானோ எனு(ம்மானார்... கொலையாகிய தன்மையைத் தன்னிடத்தே கொண்டவையும் போரிட வல்லவையுமான விழிகள் அம்போ, வாளோ; அல்லது விஷம் நிரம்பியதும் வஞ்சகமானதுமான வேலோ, சேல் மீனோ; அல்லது குழைகளை அணிந்த காதுகள் வரையில் நீண்டவையான மீனோ, மானோ என்று சொல்லத்தக்க பெண்களுடைய,

குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி...குயிலின் குரலைப் போன்ற இனிய மொழிகளாலும்; நூலிழையைப் போன்ற மெலிந்த இடையாலும்; இடைக்கு மேலே அமைந்துள்ள மேருமலையைப் போன்ற மார்பகத்தாலும் பலவிதமாக மனம் கலங்கி;

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா... கொல்லுலையில் விழுந்த மெழுகைப் போல உருகி; அலை வீசுவதான மோகக் கடலிலே விழுந்து மூழ்கி;

உடல் பஞ்ச பாதகமாய் (ய்நோயால் அழிவேனோ... என் உடல் பஞ்சமகா பாதகங்களுக்கும் ஆளாகி நோய்கொண்டு அழிவேனோ?

உறு தண்ட(ம்பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள்அருள்வாயே... (அவ்வாறு அழியாத வண்ணம்) கையிலே கால தண்டத்தையும் பாசக் கயிற்றையும் எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் என்னை நெருங்கி, என் உயிரை யமதூதர்கள் கொண்டுபோய்விடும் அந்த நாளில் உன்னுடைய மேலான திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே...அலைகள் புரள்கின்ற கடல், வாய்விட்டு ‘கோகோ’ என்று அலறவும்; பெரிய மாமரமாக நின்ற சூரன் தரித்திருந்த நீண்ட வில் பொடிப்பொடியாகப் போகவும்;

தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா... பிரகாசிக்கின்ற ஒளியைத் தன்னிடத்தில் கொண்ட; சிறந்த, பெரிய, பெருமைவாய்ந்த நெருப்பின் வடிவமாக, கையிலேந்திய வேலை வீசிய வீரா! தீரா! அருமைவாய்ந்த அழகுள் உருவம் கொண்டவனே! ஒப்பற்றவனே!

வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே... வேடனாகிய வேறுபட்ட வேடத்தைத் தரித்து, வள்ளி மலையின் வேடர்கள் இருந்த காட்டுக்குள் சென்று, குறப்பெண்ணாணன வள்ளியின் மீது மயக்கம் கொண்டு,

மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா... மையலோடு உலாவி அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கிய குமரேசா!

மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா... அறிவு நிறைந்த ஞான வேலனே; ஆட்கொண்டவனே; மகிழ்பவரான சிவபெருமானே வணங்குகின்ற திருவடியை உடைய நாதனே!

மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே....  மயிலம் என்னும் குளிர்ந்த மலையில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

அலை வீசுகின்ற கடல் கோகோகோ என்று கதற; அந்தக் கடலுக்குள்ளே மாமரத்தின் வடிவத்திலே நின்றிருந்த சூரன் தரித்திருந்த வில் தெறித்து விழுந்து தூளாக; பிரகாசிக்கின்ற ஜோதியைத் தன்னிடத்தே கொண்டிருக்கின்ற, சிறந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு என்று சொல்லும்படியாக, திருக்கையிலே ஏந்தியிருக்கும் வேலை வீசிய வீரனே! தீரனே!  அரிய அழகை உருவத்தை உடையவனே! ஒப்பற்றவனே!  வேடனான வேற்று உருவத்தைத் தரித்து, மலையை இருப்பிடமாகக் கொண்ட வேடர்கள் வாழ்ந்திருந்த காட்டினிடையே சென்று, அங்கிருந்த குறமகளான வள்ளியின் மீது மோகம் கொண்டு உலாவி அவளுடைய பாதத்தில் மையலுடன் விழுந்து வணங்கிய குமரேசனே!  அறிவு நிறைந்த ஞான வேலனே!  உனக்கு ஆட்பட்ட சிவபெருமான் மகிழ்ந்து உன்னுடைய பாதத்தைத் தொழ நின்ற பாதனே! நாதனே!  மயிலம் என்னும் குளிர்ந்த மலைத் தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர்கள் பெருமாளே!

கொலைத் தன்மையைக் கொண்டவையும் போரிட வல்லவையுமான கண்கள் அம்புதானோ, வாள்தானோ; அல்லது விஷம் நிறைந்ததும் பாதகம் கொண்டதுமான வேலோ, சேல் மீனோ; அல்லது காதிலுள்ள குழைகளைத் தொடுமளவுக்கு நீண்டிருக்கின்ற மீனோ, மானோ என்று சொல்லத்தக்க மாதர்களுடைய குயில்போன் குரலால் எழுகின் இனிய மொழிகளாலும்; நூலின் இழைபோலத் தோன்றுகின்ற மெல்லிய இடையாலும்; அந்த இடையின் மேல் மேருமலையைப் போல அமைந்திருக்கின்ற மார்பகங்களாலும் பலவிதமாக நெஞ்சம் கலங்கி; நெருப்பு உலையிலே விழுந்த மெழுகைப் போல உருகி, அலை வீசுவதான மோகம் எனப்படும் கடலிலே விழுந்து முழுகி, என் உடல் பஞ்சமஹா பாதகங்களுக்கும் உள்ளாகி தீராத நோயாலே அழிவேனோ! கால தண்டத்தையும் பாசக் கயிற்றையும் ஏந்தியபடி, ஆரவாரித்து என்னை நெருங்குகின்ற யமதூதர்கள் என்னுடைய உயிரைக் கவர்ந்து போய்விடுகின்ற அந்த நாளிலே நீ உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/22/பகுதி---911-3004287.html
3002171 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 909 ஹரி கிருஷ்ணன் Thursday, September 20, 2018 10:50 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கொடாதவனையேபுகழ்ந்து குபேரன்எனவே 
மொழிந்து குலாவி அவமே திரிந்துபுவிமீதே

 

 

எடாத சுமையே சுமந்துஎ(ண்)ணாத 
கலியால்மெலிந்து எ(ல்)லாவறுமை தீர அன்று உன்அருள் பேணேன்

 

எடாத சுமை: தூக்க முடியாத சுமை—குடும்ப பாரம்;

சுடாத தனமானகொங்கைகளால்இதயமே 
மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில்ஒழுகாமல்

 

சுடாத தனம்: பசும்பொன் (தனம்: பொன்); சுகாதரம்: சுகாதாரம்—சுகமான வழி;

கெடாத தவமேமறைந்து கிலேசம்அதுவே 
மிகுந்து கிலாதஉடல் ஆவி நொந்துமடியா முன்

 

கிலேசம்: துக்கம்; கிலாத: ஆற்றல் இல்லாத;

தொடாய் மறலியே நீஎன்ற சொ(ல்)லாகி அதுநா 
வரும்
கொல் ல்ஏழு உலகம் ஈனும்அம்பை அருள் பாலா

 

மறலியே: யமனே;

நடாத சுழி மூல விந்துநள் ஆவி விளை 
ஞானநம்ப நபோ மணி சமானதுங்க வடிவேலா

 

நடாத சுழி: நட்டு வைக்காத சுழிமுனை (தசநாடிகளில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவே உள்ளது); நள்: நடுவே; நபோமணி: சூரியன்; துங்க: தூய;

படாத குளிர் சோலைஅண்டம் அளாவிஉயர்வாய் 
வளர்ந்து பசேல் எனவுமேதழைந்து தினமே தான்

 

படாத: வெயில் படாத;

விடாது மழை மாரிசிந்த அநேக மலர் 
வாவிபொங்கு விராலிமலைமீது கந்த பெருமாளே.

 

 

கொடாதவனையே புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து குலாவி யவமே திரிந்து புவிமீதே... எதுவும் கொடுக்காதவனையே புகழ்ந்து; அவனைக் குபேரன் என்று வாழ்த்தி; அவனோடு வீணாகத் திரிந்து இந்த உலகின்மீது,

எடாதசுமையே சுமந்து எணாதகலியால் மெலிந்து எலாவறுமை தீர அன்றுனருள்பேணேன்... தூக்க முடியாத குடும்ப பாரத்தைத் தூக்கி; நினைக்கவும் முடியாத கலியால் வாட்டமடைந்த எல்லாவிதமான வறுமைகளும் தீரும்படியாக, அந்த நாளிலேயே உன்னுடைய திருவருளை நாடாதவனாகத் திரிந்தேன்.

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்... தீயில் சுட்டெடுக்காத பசும்பொன்னைப் போன்ற மார்புகளைக் கொண்ட பெண்களிடம் மனம் மயங்கி; சுகத்தைக் தருகின்ற வழியில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளாமல்,

கெடாத தவமே மறைந்து கிலேசமதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியாமுன்... கெடுதல் இல்லாத தவநெறி கெட்டுப் போக; துன்பமே மிகவும் பெருகி; வலிமை இல்லாத உடலில் (தங்கியுள்ள) உயிர் நொந்து இறந்துபோவதன் முன்,

தொடாய்மறலியே நி யென்ற சொல் ஆகியது உன் நா வருங்கொல் சொல் ஏழுலகம் ஈனும் அம்பை யருள்பாலா... ‘இவனுடைய உயிரைத் தொடாதே யமனே’ என்ற சொல் உன்னுடைய நாவிலிருந்து வெளிப்படுமோ என்பதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்,  ஏழு உலகங்களையும் ஈன்றவளான உமாதேவியின் குமாரனே!

நடாதசுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோமணி சமான துங்க வடிவேலா... (யாராலும்) நட்டு வைக்கப்படாததான சுழிமுனை, மூலாதாரம் (முதலான ஆறு ஆதாரங்கள்); விந்து ஆகியவற்றுக்கு நடுவிலே உயிரோடு கலந்து இருக்கின்ற ஞான மூர்த்தியே! சூரியனை ஒத்த ஒளியையும் பரிசுத்தத்தையும் கொண்ட வடிவேலனே!

படாதகுளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேலெனவ மே தழைந்து தினமேதான்... வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் அளாவ உயர்ந்து வளர்ந்து பச்சைப் பசேல் என்று தழைத்தும்;

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது உகந்த பெருமாளே.... இடைவிடாமல் மழை பொழிகின்றபடியால் பல மலர்கள் நிறைந்திருக்கின்ற தடாகங்களால் சூழப்பட்டுள்ள விராலிமலையை உவப்போடு அடைந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

யாராலும் நடப்படாத (இறைவனால் அமைக்கப்பட்ட) சுழுமுனை, ஆறு ஆதாரங்கள், விந்து ஆகியனவற்றிலன் நடுவிலே உள்ள ஆவியோடு கலந்து விளங்குகின்ற ஞான மூர்த்தியே! சூரியனைப் போன்ற ஒளியை உடைய பரிசுத்தமான கூரிய வேலனே!  வெயில் படாத சோலைகள் வானத்தையளாவி உயர்ந்து வளர்ந்து பச்சென்று தழைத்திருக்க; நாள்தோறும் விடாது மழை பொழிவதால் பல நீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கின்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற விராலிமலையை உவந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!

கொடுப்பது என்பதையே அறியாவனைப்போய்ப் புகழ்ந்து; அவனைக் குபேரன் என்று போற்றி; வீணாகத் திரிந்து இந்த பூமியிலே, தூக்க முடியாததாகிய குடும்பப் பாரத்தைத் தூக்கியலைந்து; கலிபுருஷனுடைய கொடுமையால் நான் வாட்டம் அடைந்து; அதனால் உண்டான என்னுடைய சகல துன்பங்களும் நீங்குமாறு நான் உன்னுடைய திருவருளை எப்போதோ நாடியிருக்கவேண்டும்; அவ்வாறு நாடாமல் வீணே காலங்கழித்தேன்.  பசிய பொன்னைப் போன்ற மார்பகங்களை உடைய பெண்களிடத்திலே மயக்கம் கொண்டு; சுகத்தைத் தரக்கூடிய வழியில் முறையோடு நடக்காமல்; கெடுதலில்லாத தவநெறியும் கெட்டுப்போய்; துக்கமே பெருகி; வலிமையற்ற உடலில் தங்கியுள்ள ஆவி நொந்து நான் இறப்பதற்கு முன்னாலே, ஏழு உலகங்களையும் ஈன்றவளான உமையின் குமாரனே, ‘யமனே! இவனுடைய உயிரைத் தொடாதே’ என்ற சொல் உன்னுடைய நாவினின்றும் பிறக்குமோ? (அவ்வாறு பிறக்கும் என்பதை) நீ சொல்லியருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/20/பகுதி---909-3002171.html
3002168 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 908 ஹரி கிருஷ்ணன் Wednesday, September 19, 2018 12:00 AM +0530  

‘யமனை விலக்கியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் விராலி மலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் நான்கு குறிலுமாய் ஐந்தெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனாதனன தான தந்த தனாதனன தான தந்த

            தனாதனன தான தந்த                               தனதான

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து

                  குலாவியவ மேதி ரிந்து                      புவிமீதே

      எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து

                  எலாவறுமை தீர அன்று                      னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி

                  சுகாதரம தாயொ ழுங்கி                      லொழுகாமல்

      கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து

                  கிலாதவுட லாவி நொந்து                   மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்

                  சொலேழுலக மீனு மம்பை                யருள்பாலா

      நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப

                  நபோமணி சமான துங்க                     வடிவேலா

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து

                  பசேலெனவு மேத ழைந்து                  தினமேதான்

      விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு

                  விராலிமலை மீது கந்த                       பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/19/பகுதி---908-3002168.html
3002164 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 907 ஹரி கிருஷ்ணன் Monday, September 17, 2018 05:42 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கரி குழல் விரித்தும் புறகயல் 
விழித்தும் கரிகுவடு இணைக்கும் 
தனபார

 

கயல்: கயலைப் போன்ற கண்; கரி: யானை; குவடு: மலை; இணைக்கும்: இணையான, இரண்டான;

கரத்து இடு வளைசங்கிலி 
சரம் ஒலித்தும் கலை துகில்மினுக்(கி)யும்
பணிவோரை

 

மினுக்யும்: மினுக்கியும்—பளபளப்பாக உடுத்தும்; பணிவோரை: தன்னைப் பணிகின்றவர்களை;

தரித்து உளம் அழிக்கும்கவட்டர்கள் 
இணக்கம் தவிர்த்து உனது 
சித்தம்களி கூர

 

தரித்து: ஏற்று; கவட்டர்கள்: வஞ்சகர்கள்;

தவ கடல் குளித்துஇங்கு உனக்கு 
அடிமைஉற்று
உன் தலத்தினில்இருக்கும்படி பாராய்

 

 

புரத்தையும் எரித்து அம்கயத்தையும் 
உரித்துஒண் பொடி பணி என்அப்பன் குருநாதா

 

புரத்தையும்: திரிபுரத்தையும்; கயத்தையும்: கஜத்தையும்—யானையையும்; ஒண்பொடி: ஒளிமிகுந்த திருநீறு; பணி: பாம்பு; என் அப்பன்: சிவபெருமான்;

புய பணி கடப்பம்தொடை சிகரம் 
உற்றுஇன் புகழ்ச்சி அமுததிண் புலவோனே

 

புய: தோளில்; பணி: ஆபரணமாக; கடப்பம் தொடை: கடப்ப மாலை (தொடை: மாலை);

 

திரள் பரி கரிக்கும்பொடிப்பட
அவுணர்க்கும் தெறிப்புஉற விடுக்கும் 
கதிர்வேலா

 

பரி: குதிரை; கரி: யானை; அவுணர்: அரக்கர்; தெறிப்புற: சிதறும்படியாக;

சிறப்பொடு குற பெண்களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும்பெருமாளே.

 

 

கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும் கரிக் குவடு இணைக்கும் தன பாரக்...கரியதான கூந்தரை விரித்தும்; வெளியே தென்படுகின்றதும் கயல்மீனை ஒத்ததுமான கண்களை விழித்தும்; யானையையும் மலையையும் ஒத் மார்பகங்கங்களைக் கொண்டவர்களாக,

கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும் கலைத் துகில் மினுக்(கி)யும் பணிவாரைத்... கைகளில் அணிந்துள்ள வளையல்களையும் சங்கிலி மாலைகளையும் ஒலிக்கச் செய்தும்; ஒட்டியாணம் அணிந்துள்ள சேலையைப் பளபளக்கச் செய்து உடுத்தியும்; தங்களைப் பணிகின்ற ஆடவர்களை,

தரித்து உளம் அழிக்கும்  கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களி கூரத்... ஏற்று அவர்களுது மனங்களை அழிக்கின்ற வஞ்சகர்களான பெண்களுடைய தொடர்பை நீங்ககி, உனது மனம் மகிழும்படியாக (நான்),

தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்... தவமாகிய கடலிலே குளித்து, உனக்கே அடிமையாகி உன்னுடைய தலமான திருத்தணியில் இருக்கும் பேற்றைப் பெறும்படியாக கடைக்கண் பாலித்தருள வேண்டும்.

புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடிப் பணி என் அப்பன் குருநாதா... முப்புரங்களையும் எரித்து; யானையின் தோலை உரித்து அணிந்து; திருநீற்றையும் பாம்பையும் அணிந்திருக்கும் என் அப்பனான சிவபெருமானுடைய குருநாதனே!

புயப் பணி கடப்பம் தொடைச் சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுதத்திண் புலவோனே... தோளில் கடப்ப மாலையை ஆபரணமாக அணிந்து, மேலான தன்மையை உற்று இனிய புகழாகிய அமுதத்தைக் கொண்ட திண்மையான புலவனே!

திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்பு உற விடுக்கும் கதிர் வேலா... திரளான குதிரைகளும் யானைகளும் பொடிபடும்படியாகவும் அரக்கர்கள் சிதறும்படியாகவும் வேலை வீசிய கதிர்வேலனே!

சிறப்பொடு குறப் பெண் களிக்கும் விசயத் தென் திருத்தணி இருக்கும் பெருமாளே.... சிறப்போடு குறப்பெண்ணான வள்ளி மனம் மகிழ்கின்றதும்; வெற்றியும் அழகும் நிறைந்ததுமான திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரத்தை எரித்து, யானையின் தோலை உரித்து, திருநீற்றையும் பாம்பையும் ஆபரணமாக அணிந்திருக்கும் அப்பனான சிவபெருமானுடைய குருநாதனே!  தோளில் கடப்ப மாலையை அணிந்து மேலான தன்மையை உற்று; புகழாகிய இனிய அமுதத்தைக் கொண்ட திண்மையான புலவனே! குதிரைப் படைகளும் யானைப் படைகளும் அரக்கர்களும் தெறித்து ஓடும்படியாக வேலை வீசியவனே! வள்ளியம்மை மகிழ்பவனே! வெற்றியும் அழகும் நிறைந்த திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

கரிய கூந்தலை விரித்தும் கயல்போன்ற கண்களை விழித்தும்; ஒலிக்கின்ற வளையல்களாலும் பொன் சங்கியிலகளாலும் ஆடவர்களை மயக்குபவர்களான பொதுப்பெண்களுடைய நட்பைத் தவித்ர்து; உனது மனம் மகிழும்படியாகத் தவமாகிய கடலில் குளித்து; உன் தலமான திருத்தணியில் தங்கியிருக்கும் பேற்றை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/18/பகுதி---90-3002164.html
3000881 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 906 ஹரி கிருஷ்ணன் DIN Sunday, September 16, 2018 12:00 AM +0530  

‘எப்போதும் திருத்தணிகையில் வாசம் செய்யும் பேறு கிடைக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் ஒரு மெல்லொற்றும்  என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

            தனத்தன தனத்தந்                                      தனதான

 

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்

                  கரிக்குவ டிணைக்குந்                           தனபாரக்

            கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்

                  கலைத்துகில் மினுக்யும்                    பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்

                  தவிர்த்துன துசித்தங்                           களிகூரத்

             தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்

                  தலத்தனி லிருக்கும்                            படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்

                  பொடிப்பணி யெனப்பன்                       குருநாதா

            புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்

                  புகழ்ச்சிய முதத்திண்                           புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்

                  தெறிப்புற விடுக்குங்                            கதிர்வேலா

            சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்

                   திருத்தணி யிருக்கும்                         பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/16/பகுதி---906-3000881.html
3000871 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 905 ஹரி கிருஷ்ணன் Saturday, September 15, 2018 11:09 AM +0530  

 

பதச் சேதம்

சொற் பொருள்

இடம் அடு சுறவைமுடுகிய மகரம் எறிகடல் இடை எழுதிங்களாலே

 

அடும்: வருத்தும்; சுறவை: சுறா மீனை; முடுகிய: துரத்துகிற; மகரம்: மகரமீன், முதலை;

இரு வினை மகளிர்மருவிய தெருவில் எரிஎன வரு சிறுதென்றலாலே

 

 

தட நடு உடைய கடி படுகொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே

 

தட நடுவுடைய: குளத்தின் நடுவிலே உள்ள; கடிபடு: மணம் கமழும்; சரம்: மலர்க்கணை (தாமரை, நீலோத்பலம்); அநங்கனாலே: மன்மதனாலே;

சரி வளை கழல மயல்கொளும் அரிவை தனிமலர் அணையில்நலங்கலாமோ

 

சரிவளை: வளையின் வகை; நலங்கலாமோ: நோகலாமோ;

வட குல சயில நெடுஉடல் அசுரர் மணி முடிசிதற எறிந்த வேலா

 

வடகுல சயில: வடக்கே உள்ள மேருமலை;

மற மகள் அமுத புளகிதகளப வளர் இளமுலையை மணந்தமார்பா

 

மறமகள்: வள்ளியுடைய; களப: சந்தனக் கலவை;

அடல் அணி விகடம்மரகத மயிலில் அழகுடன்அருணையில் நின்றகோவே

 

அடல்: வலிமை; அணி: அலங்காரம்; விகடம்: அழகு; அருணை: திருவண்ணாமலை;

அரு மறை விததிமுறை முறை பகரும் அரி அர பிரமர்கள்தம்பிரானே.

 

விததி: கூட்டம், தொகுதி; அரி அர: ஹரி, ஹர—திருமால், சிவன்;

இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே ... வருத்துகின்ற சுறாமீனை இருக்கும் இடத்திலிருந்தே விரட்டுவதான முதலைகள் வாழ்வதும்; அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்;

இரு வினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே ... நல்வினை தீவினை இரண்டுக்கும் காரணர்களாக உள்ள மாதர்கள் வாழ்கின்ற தெருவிலே தீயைப்போல வீசுகின்ற சிறிய தென்றலாலும்;

தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறு கண் அநங்கனாலே ... குளத்தின் நடுவே இருப்பதும் நறுமணம் வீசுவதுமான (தாமரை, நீலோத்பலம் ஆகிய) மலர்க்கணைகளை செலுத்தும் கொடியவனான மன்மதனாலும்;

சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ ... சரியும் வளைகளும் கழன்று விழும்படியாக மையல் கொண்டிருக்கின்ற இந்தப் பெண் தனித்த மலரணையில் நோவதும் முறைதானோ? (அவ்வாறு நோவாத வண்ணம் ஆட்கொள்ள வேண்டும்.)

வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா ... வடதிசையிலுள்ள மேருமலையைப் போன்ற பெருத்த உடலைக் கொண்ட அரக்கர்களுடைய மணிமுடிகள் சிதறும்படியாக வேலை எறிந்தவனே!

மற மகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா ... வேடர் மகளும்; புளகிதம் உடையதும்; சந்தனக் கலவை பூசப்பெற்றதும் இளையதுமான மார்பகத்தை உடையவளுமான வள்ளியை மணந்த திருமார்பனே!

அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே... வலிமையும் அலங்காரமும் அழகும் நிறைந்த பச்சை மயிலில் ஏறித் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே!

அரு மறை விததி முறை முறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே. ... அருமறைகளின் தொகுதி திரும்பத் திரும்ப ஓதுகின்ற திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவருக்கும் தம்பிரானே!

சுருக்க உரை

வடக்கிலுள்ள மேருமலையைப் போன்ற உடலைக் கொண்ட அசுரர்களுடைய மணிமுடி சிதறிப் போகும்படி வேலை வீசியவனே! வேடர் மகளும்; அமுதமும் புளகிதமும் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பட்டதுமான மார்பை உடைய வள்ளியை மணந்தவனே! வலிமையும் அலங்காரமும் அழகும் பச்சை நிறமும் உடைய மயிலில் ஏறி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தலைவனே! அரிய வேதங்களின் தொகுதி மீண்டும் மீண்டும் ஓதுவதான திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவருக்கும் தம்பிரானே!

இருந்த இடத்தில் இருந்தபடியே பெரிய சுறாமீன்களை விரட்டியடிக்கின்ற முதலைகள் வாழ்கின்ற கடலில் முளைக்கின்ற சந்திரனாலும்; நன்மைக்கும் தீமைக்கும் காரணர்களாக இருக்கின்ற மாதர்கள் வாழ்கின்ற தெருவில் தீயைப் போல வீசுகின்ற தென்றல் காற்றாலும்; குளத்தின் மத்தியிலுள்ளதும் நறுமணம் கமழ்வதுமான தாமரை, நீலோற்பலம் போன்ற மலர்க்கணைகளை வீசுகின்ற மன்மதனாலும் வருத்தம் உண்டாக்கப்பட்டு இந்தப் பெண் மையல்கொண்டு மலரணையில் தனியாக நோவது முறையா?  (அப்படி நோவாமல் ஆண்டுகொண்டு அருள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/15/பகுதி---905-3000871.html
2998969 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 904 ஹரி கிருஷ்ணன் Friday, September 14, 2018 11:30 AM +0530 ‘நொந்து போகாமல் ஆண்டருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

            தனதன தனன                                             தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர

                  மெறிகட லிடையெழு                         திங்களாலே

            இருவினை மகளிர் மருவிய தெருவி

                  லெரியென வருசிறு                             தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய

                  சரம்விடு தறுகண                                 நங்கனாலே

            சரிவளை கழல மயல்கொளு மரிவை

                  தனிமல ரணையின                             லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்

                  மணிமுடி சிதறஎ                                  றிந்தவேலா

            மறமக ளமுத புளகித களப

                  வளரிள முலையைம                          ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி

                  லழகுட னருணையி                            னின்றகோவே

            அருமறை விததி முறைமுறை பகரு

                  மரியர பிரமர்கள்                                   தம்பிரானே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/14/பகுதி---904-2998969.html
2998964 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 903 ஹரி கிருஷ்ணன் Wednesday, September 12, 2018 04:32 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

விந்து பேதித்தவடிவங்களாய்
எத்திசையும் மின் சரஅசர குலமும் வந்துஉலாவி

பேதித்த: பேதம், வேறுபட்ட; மின்: ஒளிபெற்ற; சராசர்க் குலமும்: சர, அசரக் குலமும்—அசையும், அசையாப் பொருட்கள்;

விண்டு போய் விட்டஉடல் சிந்தை தான்
உற்று அறியும் மிஞ்ச நீவிட்ட வடிவங்களாலே

 

விண்டுபோய்: பிரிந்து போய்;

வந்து நாயில் கடையன்நொந்து 
ஞான பதவி வந்து தா இக்கணமேஎன்று கூற

 

 

மைந்தர் தாவி புகழதந்தை தாய் 
உற்றுஉருகி வந்து சேயைதழுவல் சிந்தியாதோ

 

 

அந்தகாரத்தில் இடிஎன்ப வாய்விட்டு
வரும் அங்கி பார்வை பறையர்மங்கி மாள

 

அந்தகாரத்தில்: பேரிருளில்; வாய்விட்டு வரும்: கூச்சலிட்டு வரும்; அங்கி: அக்கினி; பறையர்: இழிந்தவர்களான அசுரர்கள்;

அம் கை வேல் விட்டுஅருளி இந்திரலோகத்தில் 
மகிழ் அண்டர் ஏற கிருபைகொண்ட பாலா

 

 

எந்தன் ஆவிக்கு உதவுசந்த்ர சேர்வை 
சடையர் எந்தை பாகத்துஉறையும் அந்த மாது

 

சந்த்ர சேர்வைச் சடையர்: சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள சடையார்;

எங்குமாய் நிற்கும் ஒருகந்தனூர் 
சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ்தம்பிரானே.

 

 

விந்துபேதித்த வடிவங்களாய் எத்திசையு மின்சரா சர்க்குலமும் வந்துலாவி... விந்து, வெவ்வேறு உருவங்களாய் வடிவெடுத்து எல்லாத் திசைகளிலும், அசைகின்றனவும் அசையாதனவுமான கூட்டங்களாக இவ்வுலகிலே உலாவி, காலம் கழிந்து;

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதான் உற்றறியு மிஞ்சநீ விட்டவடிவங்களாலே... அதன்பிறகு உடலை விட்டுப் பிரிவதை என் மனம் ஆராய்ந்து அறியும்.  இவ்வாறு நீ எனக்கு அளித்த பல வடிவங்களையுடைய பிறவிகளிலே,

வந்து நாயிற்கடையன் நொந்து ஞானப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற... நான் நாயினும் கடையேனாக வந்து தோன்றி மனம் நொந்து, உன்னிடத்தில் ஞான நிலையை இப்போதே தரவேண்டும் என்று கோரும்போது,

மைந்தர்தாவிப்புகழ தந்தைதாய் உற்றுருகி வந்துசேயைத்தழுவல் சிந்தியாதோ... குழந்தைகள் பெற்றோர்களிடத்திலே தாவி வந்து புகழ்ந்தால் அவர்களுடைய மனம் உருகி, அக்குழந்தைகளை வாரித் தழுவிக்கொள்ளும் மனநிலையை நீ சிந்திக்க மாட்டாயா? (குழந்தைகளைத் தழுவிக்கொள்ளும் பெற்றோரின் மனநிலையை நீ அடைந்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும்.)

அந்தகாரத்தில் இடி யென்பவாய் விட்டுவரும் அங்கிபார்வைப்பறையர் மங்கிமாள... பேரிருட்டிலே வாய்விட்டுக் கூச்சலிட்டபடியும் கண்களில் பொறி பறக்கும்படியும் வருகின்ற இழிவான அசுரர்கள் மங்கி அழிந்து போகும்படியாக,

அங்கைவேல் விட்டருளி இந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டர் ஏறக்கிருபை கொண்டபாலா... அழகிய கையிலுள்ள வேலை எறிந்தருளி, தேவர்கள் மீண்டும் இந்திரலோகத்தில் குடியேறும்படி கிருபை செய்தருளிய குமரா!

எந்தன் ஆவிக்குதவு சந்த்ரசேர்வைச்சடையர் எந்தை பாகத்துறையும் அந்தமாது... என்னுடைய ஆன்மாவுக்கு உதவியவரும்* பிறைச்சந்திரனைச் சடையிலே சூடியுள்ளவரும் என் தந்தையுமான சிவபெருமானும் அவருடைய இடது பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்மையும்,

(அருணகிரிநாதரின் வாழ்விலே சிவபெருமானே அவர்முன் தோன்றி திருநீறு அளித்தருளியதை இது குறிக்கிறது.)

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ் எந்தைபூசித்துமகிழ் தம்பிரானே.... எல்லா இடங்களுமாக நிறைந்து விளங்குகின்ற கந்தனூரில், தேவியால் புகழப்படுபவரான எந்தையான சிவபெருமான் பூசித்து மகிழ்கின்ற தம்பிரானே!

சுருக்க உரை

பேரிருளிலே, இடி இடிப்பதைப்போல கூச்சலிட்டு வருபவரும், தீப்பொறி பறக்கின்ற கண்களை உடையவர்களுமான அரக்கர்கள் அழிந்துபோகும்படியாக, திருக்கரத்திலுள்ள வேலை எறிந்தவனே!  அதனால் தேவர்களை மீண்டும் அமரலோகத்தில் குடியேற வைத்தவனே! என் ஆன்மாவுக்கு உதவியவரும் சந்திரனைச் சடையிலே சூடியவரும் எந்தையும் ஆன சிவபெருமானும் அவருடைய இடது பாகத்தில் வீற்றிருக்கும் உமையம்மையம் எங்கும் நிறைந்து வீற்றிருப்பதான ஒப்பற்ற கந்தனூரில் தேவியால் புகழப்படுபவரான எந்தை, சிவபெருமானால் பூசிக்கப்படுகின்ற தம்பிரானே!

பற்பல வடிவங்களான உயிர்களாக உருவெடுக்கின்ற விந்து, அசைகின்ற, அசையாத பொருள்களின் கூட்டமாக இந்த உலகத்திலே வந்து தோன்றி, சிலகாலம் வாழ்ந்து அதன்பின்னே மடிந்து, உடலைவிட்டுப் பிரிந்து போகின்றது என்பதை அடியேன் நன்கு ஆராய்ந்து; நீ எனக்குக் கொடுக்கின்ற பலவிதமான பிறவிகளில் நாயினும் கடையேனாக வந்து தோன்றியுள்ள இந்தச் சமயத்தில் அடியேனுக்கு ஞானநிலையைத் தந்தருள வேண்டும் என்றுவந்து முறையிடும்போது, தங்களிடத்திலே தாவிவந்து போற்றுகின்ற குழந்தைகளைப் பெற்றோர் வாரியெடுத்துக்கொள்வதைப் போல நீ என்னை ஆட்கொண்டருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/sep/13/பகுதி---903-2998964.html
2986082 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 902 ஹரி கிருஷ்ணன் Friday, August 24, 2018 12:00 AM +0530  

‘ஞானம் தந்து என்னை ஆதரித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கந்தனூருக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சிர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன

            தந்தனா தத்ததன                                        தந்ததான

 

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு

                  மின்சரா சர்க்குலமும்                          வந்துலாவி

      விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு

                  மிஞ்சநீ விட்டவடி                                 வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி

                  வந்துதா இக்கணமெ                            யென்றுகூற

      மைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி

                  வந்துசே யைத்தழுவல்                       சிந்தியாதோ

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு

                  மங்கிபார் வைப்பறையர்                     மங்கிமாள

      அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்

                  அண்டரே றக்கிருபை                           கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்

                  எந்தைபா கத்துறையு                           மந்தமாது

      எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்

                  எந்தைபூ சித்துமகிழ்                             தம்பிரானே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/24/பகுதி---902-2986082.html
2985392 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 901 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, August 23, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கலை மேவு ஞானபிரகாச

 

கலை மேவு(ம்): கலைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய;

கடல் ஆடி ஆசை கடல்ஏறி

 

 

பலம் ஆய வாதில்பிறழாதே

 

பலமாய: பலம் பொருந்திய, வலிமை வாய்ந்த;

பதி ஞான வாழ்வைதருவாயே

 

 

மலை மேவு மாயகுறமாதின்

 

 

மனம் மேவு வாலகுமரேசா

 

வால: இளைய;

சிலை வேட சேவல்கொடியோனே

 

சிலை வேட: வில் ஏந்திய வேடனே;

திருவாணி கூடல்பெருமாளே.

 

திரு வாணி கூடல்: திருமகளும் கலைமகளும் பொருந்தியுள்ள கூடல்—மதுரை;

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி... எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கின்ற ஞான ஒளியாகிய கடலிலே குளித்து,

ஆசைக் கடலேறி... (மண், பெண், பொன் என்ற) மூவாசைகளான கடல்களைக் கடந்து கரையேறி,

பலமாய வாதிற் பிறழாதே...பலமாக நடைபெறும் சமய வாதங்களிலே நான் அகப்பட்டு, மாறுபட்டுக் கிடக்காமல்,

பதிஞான வாழ்வைத் தருவாயே... கடவுளைப் பற்றிய சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

மலைமேவு மாயக் குறமாதின்... வள்ளி மலையிலே இருந்தவளும், ஆச்சரியகரமான தோற்றத்தைக் கொண்டவளும் குறமகளுமான வள்ளியின்,

மனமேவு வாலக் குமரேசா... மனத்திலே குடியிருக்கின்ற இளம் குமரேசா!

சிலைவேட... (பொய்யாமொழிப் புலவருக்காக) வில்லேந்திய வேடனின் கோலத்திலே வந்தவனே!

சேவற் கொடியோனே... சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!

திருவாணி கூடற் பெருமாளே.... திருமகளும் கலைமகளும் பொருந்தியிருக்கின்ற மதுரையம்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வள்ளிமலையில் இருந்தவளும் ஆச்சரியகரமான தோற்றத்தை உடையவளும் குறப்பெண்ணுமான வள்ளியின் மனத்திலே வீற்றிருப்பவனே!  பொய்யாமொழிப் புலவருக்காக (அல்லது வள்ளிக்காக) வில்லை ஏந்திய வேடனின் வடிவத்திலே வந்தவனே! சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!  திருமகளும் கலைமகளும் பொருந்தி விளங்குகின்ற மதுரையிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிற ஞான ஒளியே!  உன்னிலே குளித்து, மூவாசைகளான கடலிலிருந்து கரையேறி; வலுவான சமய வாதங்களிலே நான் மாறுபட்டுக் கிடக்காதபடி எனக்குச் சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

 

வள்ளிமலையில் இருந்தவளும் ஆச்சரியகரமான தோற்றத்தை உடையவளும் குறப்பெண்ணுமான வள்ளியின் மனத்திலே வீற்றிருப்பவனே!  பொய்யாமொழிப் புலவருக்காக (அல்லது வள்ளிக்காக) வில்லை ஏந்திய வேடனின் வடிவத்திலே வந்தவனே! சேவற்கொடியை ஏந்தியிருப்பவனே!  திருமகளும் கலைமகளும் பொருந்தி விளங்குகின்ற மதுரையிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிற ஞான ஒளியே!  உன்னிலே குளித்து, மூவாசைகளான கடலிலிருந்து கரையேறி; வலுவான சமய வாதங்களிலே நான் மாறுபட்டுக் கிடக்காதபடி எனக்குச் சிவஞான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/23/பகுதி---901-2985392.html
2985390 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி -900 ஹரி கிருஷ்ணன் Wednesday, August 22, 2018 11:01 AM +0530  

ஞான வாழ்வைக் கோரும் இந்தப் பாடல் மதுரைக்கானது.  சிலர் இதனை ஈரோடு, பவானிக்கு உரியது என்றும் கருதுகிறார்கள்.

அடிக்கு 20 எழுத்துகள் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் ஒரு நெடிலுடன் கூடிய நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனதான தானத்                                                      தனதான

 

கலைமேவு ஞானப்                                                 பிரகாசக்

      கடலாடி ஆசைக்                                         கடலேறிப்

பலமாய வாதிற்                                                      பிறழாதே

            பதிஞான வாழ்வைத்                                 தருவாயே

மலைமேவு மாயக்                                                 குறமாதின்

            மனமேவு வாலக்                                        குமரேசா

சிலைவேட சேவற்                                                 கொடியோனே

            திருவாணி கூடற்                                       பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/22/பகுதி--900-2985390.html
2984038 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 899 ஹரி கிருஷ்ணன் Monday, August 20, 2018 12:55 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்

 

மகரம்: மகர மீன்; குமிழ்: குமிழம்பூ—நாசி(க்கு உவமை); அடைசி: அடைசுதல்—நெருங்குதல்;  வார் ஆர்: நீளமான; சரங்கள்: அம்புகள்;

மதர் விழி வலை கொ(ண்)டு உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம்

 

மதர்விழி: மதர்த்த விழி, செருக்குள்ள விழி;

பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவி

 

ம்ருகமத(ம்): கஸ்தூரி; களப பாடீர: பாடீரக் களப—சந்தனக் கலவை (பாடீர(ம்): சந்தனம்; களப(ம்): கலவை; கும்பம்: குடம்—மார்பகம்; வாவி: தாவி, பாய்ந்து;

படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ

 

படி மனது: படிகின்ற மனது; பரிபுர(ம்): சிலம்பு; பாதாரவிந்தம்: பாத அரவிந்தம்—பாதத் தாமரை;

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக

 

நக(ம்): மலை; நகமுக சமுக: மலையிடங்களிலே வாழ்கின்ற குடி; நிருதரும்: அரக்கர்களும்; நானா: பலவிதமான; விலங்கல்: மலை;

நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே

 

நதிபதி: கடல்;

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும்

 

அகல்: அகன்ற; நக: மலையான; கனக: கனகனே—செம்பொன் ஆனவனே; ஆராம(ம்): சோலை; பந்தி: வரிசை;

அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.

 

அரி: அழகிய; அளி: வண்டுகள்; விததி: கூட்டம்;

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் மதர் இருவிழி வலை கொ(ண்)டு... மகர மீனும் (தன் முன்னே) நிலைகெடும்படியாக; குமிழம்பூவை;ப போன்ற மூக்கின் இரு பகுதிகளையும் நெருக்கிச் சேர்த்து; நீளம் மிகுந்த அம்புகள் எனத்தக்க அம்புளைப் போல நீண்டதும் செருக்குள்ளதுமான கண்களாகிய வலையைக் கொண்டு,

உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவிப் படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ... உலகத்திலுள்ள ஆண்களுடைய வாழ்நாள் சுருங்கும்படியாக எதிரிலே வருபவர்களான பெண்கள் பேசுகின்ற பேச்சின் மீதும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையும் பூசிய குடம்போன்ற மார்பகங்களின் மீதும் தாவிப் படிகின்ற என்னுடைய மனம், உன்னுடைய சிலம்பணிந்த பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாதோ? (நினைக்கும்படி அருளவேண்டும்.)

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே...மலைகளில் வாழ்பவர்களான அரக்கர்கள் இறக்கும்படியாகவும்; பலவகையான மலைகள் பொடியாகும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும் ஒப்பில்லாத அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே!

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும் அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.... அகன்ற மலைகளுக்கு உரியவனே!  செம்பொன் வடிவினனே! சிவதலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே! வரிசையான சோலைகள்தோறும் வண்டுக் கூட்டங்கள் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) விரும்பி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மலை இடங்களில் வாழும் அரக்கர்கள் இறந்துபடும்படியாகவும்; பலவிதமான மலைகள் பொடிபடும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும்; ஒப்பற்ற அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே! அகன்ற மலையிடங்களுக்கு உரியவனே! செம்பொன்னின் வடிவினனே! எல்லாச் சிவதலங்களிலும் அமர்ந்திருக்கின்றவனே!  சோலைகளின் வரிசைதோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் மலர்தேனை எண்ணி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மகர மீனும் தன் நிலைகெடும்படியாக நெருக்கிச் சேர்க்கப்பட்ட இரு குமிழ மலர்களைப் போன்ற மூக்கும்; நீண்ட அம்புகளுக்கு இணையான கண்கள் என்னும் வலையை வீசுகின்ற பெண்களுடைய பேச்சிலும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையையும் பூசிய மார்பகங்களிலும் சென்று சென்று படிகின்ற என் மனம், சிலம்புகளை அணிந்த உன் பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாவோ? (நினைக்கும்படியாக அருள வேண்டும்.)

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/20/பகுதி---899-2984038.html
2983023 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 898 ஹரி கிருஷ்ணன் Sunday, August 19, 2018 12:00 AM +0530

 

‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

      தானான தந்த                       தனதான

 

மகரம துகெட இருகுமி ழடைசி

         வாரார்ச ரங்க                    ளெனநீளும்

      மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்

         வாணாள டங்க                  வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப

         பாடீர கும்ப                      மிசைவாவிப்

      படிமன துனது பரிபுர சரண

         பாதார விந்த                     நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய

         நானாவி லங்கல்                 பொடியாக

      நதிபதி கதற வொருகணை தெரியு

         நாராய ணன்றன்                 மருகோனே

அகனக கனக சிவதல முழுது

         மாராம பந்தி                     யவைதோறும்

      அரியளி விததி முறைமுறை கருது

         மாரூர மர்ந்த                    பெருமாளே.

 

 
 
 
 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/19/பகுதி---898-2983023.html
2982344 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 897 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, August 18, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரோ சற்று அல ஆவி

 

போனார்: பிரிந்து போனவர்; கூடாரோ: திரும்பவந்து சேராரோ;

கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை

 

கோது ஆனேன்: சக்கையாகப் போனேன்; கோளே கேள்: சுற்றத்தார் கோள் மூட்டுகிறார்கள் (கேள்: சுற்றத்தார்); இளவாடை: தென்றல்;

ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்

 

ஈர்வாள் போலே: அறுக்கின்ற வாளைப் போலே;

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ

 

 

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும்

 

 

தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே

 

தோலா: தோற்காத; வீறு: மேம்பட்ட;

சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார் தம்

 

நீதீ: நீதி—நீட்டல் விகாரம்; சேரார்: பகைவர்களுடைய; ஊரை: திரிபுரங்களை;

சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே.

 

 

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ)... கூர்மையான அலகை உடைய நாரையே! இங்கே வா! என்னைவிட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைச் சேர மாட்டாரா?

சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்... கொஞ்சமாக இல்லை.  என்னுடைய உயிர் சக்கையாகவே போய்விட்டது.  என் தாயோ என்னோடு பகைகொண்டவளாக ஆனாள்.

கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே வீசா... என்னுடைய உறவினர்கள் கோள்மூட்டுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.  தென்றலோ அறுக்கின்ற வாளைப் போல என் மீது வீசி,

ஏறா வேறிட்டு அது தீயின்... எரிகின்ற நெருப்பைப் போல உடலைத் தீய்க்கிறது.

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ... யாருக்கும் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாமல் தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும் தோலா வேலா... சூரன் வாழாதபடிக்குத் தங்களுடைய சுகவாழ்வைத் தேடுகின்ற தேவர்களுக்கு அருள்பாலிக்கின்றவனே!  தோல்வி அறியாத வேலா!

வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய்... மேம்பட்டதான திருவாரூரில் வீற்றிருக்கின்ற சோதிமயமான சிவபெருமானுக்கும் அவருக்கு இடதுபாகத்தில் அமர்ந்துள்ள உமாதேவிக்கும் இடையே (சோமாஸ்கந்த மூர்த்தியாக) விளங்குபவனே!

நீதி வானோர் வீரா... நீதி நிறைந்தவனே! தேவர்களுடைய சேனைக்குத் தலைமை தாங்குகின்ற வீரனே!

சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே... பகைவர்களுடைய ஊராகிய திரிபுரங்களை எரித்தவரான சிவபிரானுடைய மகனே! வேளே! பொலிவுள்ளவனே! தேவனே! தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

சூரன் வாழாதபடி தேவர்களுடைய நல்வாழ்வைப் பாதுகாத்து, தோல்வியே கண்டறியாத வேலனே! திருவாரூரில் சோதி வடிவாக விளங்குகின்ற சிவபெருமானுக்கும் அவருடைய இடதுபாகத்தில் உள்ள உமைக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்குபவனே!  நீதிமானே!  பகைவர்களின் ஊரான திரிபுரங்களை எரித்த சிவபிரானின் மகனே! வேளே!  பொலிவுள்ளவனே!  தேவனே! தேவர்கள் பெருமாளே!

கூரிய அலகை உடைய நாரையே இங்கே வா.  என்னைவிட்டுப் பிரிந்து சென்றவர் திரும்பிவந்து என்னைச் சேர மாட்டாரோ.  என் உயிரோ சக்கையாகிவிட்டது.  தாயும் பகைமை பூண்டிருக்கிறாள்.  உறவினர்களோ கோள்மூட்டுகிறார்கள்; தென்றலோ என் மீது பட்டுத் தீயைப் போலச் சுடுகிறது.  அடுத்தவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாது தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?  (நான் தவிக்காதபடி என்னைக் காக்கவேண்டும் என்று அந்த வேலனிடம் நீபோய்ச் சொல்லவேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/18/பகுதி---897-2982344.html
2982334 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 896 ஹரி கிருஷ்ணன் Friday, August 17, 2018 10:55 AM +0530  

‘அவன் என்னையாட்கொள்ள மாட்டானா’ என்று நாரையை விளித்துக் கேட்பதைப் போன்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாயக-நாயகி பாவத்தில் அமைந்தது; திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்றுமுதல் ஐந்து வரையிலான எல்லாச் சீர்களிலும் இரண்டு நெட்டெழுதுகளும்; ஆறாவது சீரில் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ன.

தானா தானா தானா தானா

      தானா தானத்                       தனதான

 

கூர்வாய் நாராய் வாராய் போனார்

         கூடா ரேசற்                      றலஆவி

      கோதா னேன்மா தாமா றானாள்

         கோளே கேழ்மற்                 றிளவாடை

ஈர்வாள் போலே மேலே வீசா

         ஏறா வேறிட்                     டதுதீயின்

      ஈயா வாழ்வோர் பேரே பாடா

         ஈடே றாரிற்                      கெடலாமோ

சூர்வா ழாதே மாறா தேவாழ்

         சூழ்வா னோர்கட்                 கருள்கூருந்

      தோலா வேலா வீறா ரூர்வாழ்

         சோதீ பாகத்                      துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா

         சேரா ரூரைச்                    சுடுவார்தஞ்

      சேயே வேளே பூவே கோவே

         தேவே தேவப்                    பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/17/பகுதி---896-2982334.html
2980524 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 895 ஹரி கிருஷ்ணன் Thursday, August 16, 2018 05:09 PM +0530

 

பதச் சேதம்

சொற் பொருள்

புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்

 

புரைபடும்: குற்றத்தை உடைய; செற்ற(ம்): கோபம்; சுத்த: கலப்பற்ற; சத்ய: மெய்யாக; அசத்யன்: பொய்யன்; சுற்ற: சுற்றுகின்ற, சுழல்கின்ற; செத்தையுள்: குப்பையைப் போல; துரிசாளன்: துக்கத்தை உடையவன்;

பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்

 

பொறை இலன்: பொறுமை இல்லாதவன்; கொத்து: பலதரப்பட்ட; வெற்றன்: பயனற்றவன்;

கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்

 

கட்டைப் புத்தியன்: மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டன்: மட்டமானவன்—மூடன்; செச்சை: வெட்சி மாலை;

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ

 

கதிரையும்: கதிர்காமத் தலத்தையும்; சக்ரப் பொற்றையும்: வட்ட மலையையும் (இது கோவைக்கு அருகிலுள்ளது); பதிகளும்: தலங்களும்; கச்சியும்: காஞ்சியையும்;

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க் கண் புர(ம்) துட்டன் குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி

 

குரைதரும்: ஒலிக்கின்றதும்; சுற்றும்: சுற்றியுள்ளதும்; சத்த சமுத்ரம்: சப்த சமுத்திரம்—ஏழு கடல்; நேமி: அடுத்த அடியில் காண்க;

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் குலிச துங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற

 

நேமிக் குவடு: சக்கரவாளகிரி (நேமி: சக்கர); இடுக்கம்: துன்பம்; நடுங்கத் திக்கில் கிரிவர்க்கம்—திக்குகளில் உள்ள மலைகள் நடுக்கம் எய்த; குலிச: குலிசாயுதத்தை (வஜ்ராயுதத்தை); துங்க: தூய; நத்தம்: ஊர் (தன் ஊரில், தேவலோகத்தில்);  

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததம் வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட

 

சிட்டித்த: சிருஷ்டித்த, படைத்த; இருக்கன்: ரிக் வேதத்தை ஓதுபவன்—பிரமன்; சிட்சைபட்டு: தண்டிக்கப்ப்பட்டு; சந்ததம்: எப்போதும்; வந்திக்கப்பெற்றவர்: வணங்கப்படுபவர்கள்;

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே.

 

தகைய: அழகிய; சரண கஞ்சத்தில்: திருவடித் தாமரையில் (கஞ்சம்: தாமரை);

புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்... தீராத கோபம் முதலான குற்றங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் கறைபடிந்த மனத்தை உடையவன்; தவம் அற்றவன்; கலப்பற்ற பொய்யையே பேசுபவன்; கதியற்றவன்; காற்றில் சுழல்கின்ற குப்பையைப் போன்றவன்; துக்கத்தை உடையவன்;

பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றி பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்...பொறுமையற்றவன்; மாறுபட்டிருக்கின்ற பலவிதமான உண்மைகளைப் பற்றிக்கொண்டவன்; பற்றில்லாமல் நிற்கின்ற மெய்ப்பொருளின்மீது பற்று வைக்காதவன்; பயனற்றவன்;

கொடியேன் நின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும்...கொடியவன்; உன்னுடைய எல்லையில்லாத அழகிய புகழைக் கற்கும் ஞானமற்றவன்; மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டமானவன்; நற்கதியை அடைகின்ற பேறில்லாதவன்; வெட்சிமலரைச் சூடிய மலைபோன்ற தோள்களையும் ஒளிவீசுகின்ற வேலாயுதத்தையும்,

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு அடைவேனோ...கதிர்காமத்தையும், வட்டமலையையும்* மற்ற திருத்தலங்களையும், அழகான காஞ்சீபுரத்தையும் எப்போதும் கனவிலும் நனவிலும் தியானித்து உன்னை அடையப் பெறுவேனா? (அடையும்படி அருள்புரிய வேண்டும்.)

(* வட்டமலை: கோவைக்கு அருகிலுள்ள தலம்.)

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் கதறிவெந்து உட்க கட்புர துட்டன் குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய... இரைச்சலிடுகின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வற்றிப் போக; வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரன் தன் குலத்தோடு முற்றவும் அழியவம்;

சென்று ஒருநேமிக் குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கங் கெட நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் குடியேற... ஒப்பற்ற சக்ரவாளகிரி தன் இடத்தைவிட்டுப் பெயரவும்; தேவர்கள் தங்களுடைய துன்பம் நீங்கப் பெறவும்; எட்டுத் திக்குகளிளும் உள்ள மலைகளின் கூட்டங்கள் எல்லாம் நடுங்கவும்; வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் ஏந்தியிருக்கின்ற இந்திரன் தன்னுடைய ஊரான பொன்னகரத்திலே மீண்டும் குடியேறவும்;

தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட... பூமியையும் ஆகாயத்தையும் படைத்தவனும், ரிக் வேதத்தில் வல்லவனுமான நான்முகப் பிரமன் தண்டனைபெற்று (குட்டப்பட்டு) விலகவும்; எப்போதும் வணங்கப் பெறுபவர்களான தேவர்களுடைய பகைவர்கள் (அசுரர்கள்) ஓட்டம்பிடிக்கவும்;

தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங்கைக் கொத்து ஒத்துமு ழக்குஞ் சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் பெருமாளே... அழகிய தண்டையும் பொன்னாலான சதங்கைக் கொத்துகளும் ஒலிக்கின்ற பாதத் தாமரைகளில் வீரக் கழலைக் கட்டிக்கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

ஒலிக்கின்றதும் உலகைச் சூழ்ந்திருப்பதுமான ஏழு கடலும் கதறி வற்றிப் போகும்படியும்; பெருமையுள்ள வீர மகேந்திரபுரத்திலிருந்த துஷ்டனான சூரபதுமன் தன்னுடைய குலம் முழுவதும் அழிபட்டு ஓடும்படியும்; சக்ரவாளகிரி தன்னுடைய இடத்தைவிட்டு ஒதுங்கும்படியும்; தேவர்களுடைய துன்பம் தொலையும்படியும்; திக்கிலுள்ள மலைக்கூட்டங்களெல்லாம் நடுங்கும்படியும்; குலிசாயுதத்தை ஏந்திய இந்திரன் தன்னுடைய அமராவதிக்குத் திரும்பும்படியும்; மண்ணையும் விண்ணையும் படைத்த நான்முகப் பிரமன் குட்டுப்பட்டு விலகும்படியும்; எப்போதும் வணங்கப்படுகின்ற தேவர்களுடைய பகைவர்களான அசுரர்கள் ஓட்டம்பிடிக்கும்படியும்,

தண்டையும் பொற்சதங்கையும் திகழ்கின்ற திருவடித் தாமரையில் வீரக்கழலைக் கட்டிய பெருமாளே!

தணியாத கோபம் முதலான குற்றங்களைச் சுமந்திருக்கும் மனத்தை உடையவனும்; தவம் இல்லாதவனும்; பொய்யனும்; கதியற்றவனும்; துக்கம் நிறைந்தவனும்; பொறுமையற்றவனும்; வேறுபடுகின்ற பலவிதமான உண்மைகளின் மீது பற்று வைத்தவனும்; தெய்வத்தின் மீது பற்று வைப்பதற்கான ஞானமற்றவனும்; மழுங்கிய அறிவை உடையவனும்; மூடனுமான நான் வெட்சிமாலையை அணிந்த அழகிய புய மலைகளையும்; ஒளிவீசும் வேலாயுதத்தையும்; கதிர்காமத் தலத்தையும்; வட்டமலையையும்; மற்றுமுள்ள தலங்களையும்; அழகிய கச்சிப் பதியையும் எப்போதும் என்னுடைய உள்ளத்தில் தியானித்துக்கொண்டு உன்னை அடையும் பேற்றைப் பெறவேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/16/பகு--895-2980524.html
2980523 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 894 ஹரி கிருஷ்ணன் Wednesday, August 15, 2018 12:00 AM +0530  

‘உன்னைக் கனவிலும் நனவிலும் நினைத்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சீபுரத்துக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்                  தனதான

 

புரைபடுஞ் செற்றைக் குற்றம னத்தன்

         தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்

         புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்         துரிசாளன்

      பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்

         சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்

         பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்      கொடியேனின்

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்

         கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்

         கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்       கதிர்வேலுங்

      கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்

         படிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்

         கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்         டடைவேனோ

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்

         கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்

         குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்      றொருநேமிக்

      குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்

         கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்

         குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்         குடியேறத்

தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்

         சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்

         ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்          பகையோடத்

      தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்

         தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்

         சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்          பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/15/பகுதி---894-2980523.html
2980489 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 893 ஹரி கிருஷ்ணன் Tuesday, August 14, 2018 12:49 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கமரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகிலதை நெகிழ் மாதர்

 

கமரி: கமம் அரி—கமம்: நிறைய, நிறைந்திருக்கும், அரி: வண்டு;

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல

 

 

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள் இதழ் ஊறல்

 

புழுகு: புனுகு;

திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்

 

பல சுளை: பலாச் சுளை;

குமர குருபர..........குமர குருபர என தாளம்

 

 

குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமடடம......என குமுற திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட 

 

சலரி: சல்லரி—பறைவகை; கினரி: கின்னரி—யாழ் வகை;

அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா

 

அயனும்: பிரமனும்; பரி: குதிரை; கரி: யானை;

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே.

 

 

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்...வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் அவிழ்ந்து சரிய; புளகிதம் கொண்டதும், பொன் மலையைப் போன்றதுமான மார்பு அசைய; போரிடுகின்ற விழிகள் அம்பாக மாற; நெற்றி புரள; ஆடையை நெகிழ்த்துகின்ற பெண்களின்,

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல...கழுத்திலே கரிய மணியாலான மாலை புரள்வதனால் அதிலிருந்து ஒளி பரவ; காதில் இரண்டு குண்டலங்களும் அசைய; ஒளி வீசுகின்ற பொன் வளையல்கள் கலகல என ஒலிக்க; மயில்போல நடைபழகுபவர்கள்,

திமிரு மத புழுகு ஒழுக தெருவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்... பூசியிருக்கிற புனுகு கரைந்து ஒழுகும்படியாக வீதியில் அலைய; விலைக்கு வைத்திருக்கும் மார்பு தெரிய; திலகமணிந்து, மயக்கத்தை ஊட்டி அழகிய முகத்துடன் திரிந்துகொண்டிருக்கின்ற பெண்களுடைய,

இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்... இதழ்களில் ஊறும் எச்சிலைப் பாற்கடலில் எடுத்த அமுது என்றும்; கருப்பஞ்சாறு என்றும்; பலாச் சுளை இது என்றும் கருதிக்கொண்டு அவர்கள் மீது மோகம் கொண்டு தழுவுகின்ற அசடனாகிய என்னுடைய குற்றங்களும்; இழிந்த குணங்களும்; கொலைக்கு ஒப்பான துன்பங்களும் சிதறிப்போகும்படியாக அருள்புரிய வேண்டும்.

குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற... குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் சப்தத்துடனுடத போர்ப்பறையைப் போன்ற தாளத்துடனும் முரசங்கள் டமட டமடம டமட டமடம என்ற ஓசையோடு வெற்றி ஒலியை எழுப்ப,

திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற...திமிலைப் பறையும் சல்லரிப் பறையும் கின்னரி என்னும் யாழ் வகையுமான வாத்தியங்கள் முழங்க, முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் நிறைந்த பூக்களைக் கொண்டு வணங்கி அவரவருக்கான பதவிகளைப் பெற,

அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா... அசுரர்களுடைய குதிரை, யானை, ரதங்கள் எல்லாமும் அழியும்படியாக வேலை எறிந்தவனே!

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே....எல்லா உலகங்களும் ஒன்றுசேர ஒளிபெறுமாறு திருப்பாதத்தை மயிலின் மீது வைத்து ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணாகிய வள்ளியை அடைந்த பெருமாளே!

சுருக்க உரை

கும குருபர, குமர குருபர என்ற சப்தத்தோடு தாளங்களை எழுப்பி ஒலிக்கின்ற முரசங்கள் வெற்றி ஒலியை எழுப்பி டமட டமடம டமட டமடம என்று அதிர; திமிலைப் பறைகளும் சல்லரிகளும் கின்னரி யாழோடு முழங்க; தேவர்களும் முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் ததும்புகின்ற மலர்களால் அர்ச்சித்துத் தத்தமக்குரிய பதவிகளைப் பெறும்படியாக அசுரர்களுடைய குதிரை, யானை, தேர்ப்படைகள் அழியும்படியாக வேலை வீசியவனே! உலகங்கள் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் ஒளியால் நிறையும்படியாக திருப்பாதத்தை மயில் மீது வைத்து; ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணான வள்ளியை அடைந்த பெருமாளே!

வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் சரிந்துவிழ; புளகிதம் கொண்ட தனங்கள் அசைய; கண்கள் அம்பைப் போன்று விளங்க; நெற்றி புரய; ஆடையை நெகிழ்த்துகின்ற விலைமாதர்கள் வீதியிலே மயில்போன்று நடந்து வர, அவர்களின் மீது மோகம்கொண்டு இது கடலைக் கடைந்து பெற்ற அமுது என்றும் கரும்பு என்றும் பலாச்சுளை என்றும் தழுவுகின்ற அசடனான என்னுடைய குற்றங்களும் இழிவான தன்மைகளும் துன்பங்களும் தீமைகளும் சிதறி விலகுமாறு அருள்புரிய வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/14/பகுதி---893-2980489.html
2978635 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 891 ஹரி கிருஷ்ணன் Sunday, August 12, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கு இந்த்ரியம் மாறி

துறுந்து: நெருங்கி; சட்டம்: சட்டகம்—frame; எய்த்து: நெகிழ்ந்து; எற்புத் தளை: எலும்புக் கட்டுகள்; நெக்கு: தளர்ந்து; இந்திரியம்: ஐம்புலன்கள்;

தடி கொ(ண்)டு திக்கு தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்த பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று

 

விருத்தன்: வயோதிகன்; பல் கொத்துகள்: பல் வரிசைகள்; கழலா நின்று: கழன்று;

அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து என கண்டு உமியா மற்றவரும்

 

அசலரும்: அயலாரும்; செச்செ: சே சே; சந்ததிகளும்: பிள்ளைகளும்; உமியா: உமிழ;

நிந்திக்க தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சை சித்ர மணி தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே

 

அலம் அலம்: போதும் போதும்; செச்சை: வெட்சிப் பூ; அரவிந்தத்தில்: பாத கமலத்தில்;

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி

 

குசை: கடிவாளம்; பக்கரை: அங்கவடி (Stirrup); நத்தும்: விரும்பும்; குரகதம்: குதிரை; கதிர்: சூரிய, சந்திரர்; நேமி: (தேர்ச்) சக்கரம்;

குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா

 

ஒற்றைக் கணை: திருமாலைக் கணையாக்கியது; குரிசில்: தலைவன்; கச்சி: காஞ்சிபுரம்;

திசை முகன் தட்டு பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி

 

திசைமுகன்: பிரமன்; தட்டுப் பட்டு: தடைப்பட்டு; வற்கும்: வலிமையான; சிகரியும்: மலையும்—கிரெளஞ்சமும்; அலங்கத்து: கொத்தளத்தில் (Rampart);

சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை  கட்கம் சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே.

 

அதுங்க: நசுங்க; திகையிட்டு: திசையில் இட்டு, பிரமிப்படைந்து; கட்கம்: வாள்;

தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து... மாமிசத்தாலும் நெருக்கமான தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளர்ந்து போக; தலை மயிர் கொக்கைப் போல வெண்ணிறமாக நரைத்தும்;

அம் தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி இந்த்ரிய(ம்) மாறி... அழகான தலையும் உடலும் இளைத்தும், எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சியுற்றும்; ஐம்புலன்களும் (தத்தமக்கு உரிய) தொழில்களில் மாறுபாட்டை அடைந்தும்;

தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று... தடியை ஊன்றியபடி, திசைத் தடுமாற்றம் ஏற்பட்டு நடக்கும்படியாகத் தளர்ச்சி எய்தியும்; வரிசையாக இருந்த பற்கள் அத்தனையும் கொட்டிப் போகவும்;

அசலரும் செச்செ செச்செ எனச் சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து எனக் கண்டு உமியா... அயலார்கள் ‘சே சே’ என்று இகழ; பிள்ளைகள் ‘சீ சீ’ வெறுக்க; உடனுறையும் பெண் (மனைவி) தூத்தூ என்று உமிழ்ந்து அவமதிக்க;    

மற்றவரு(ம்) நிந்திக்கத் தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சைச் சித்ர மணித் தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே... மற்றவர்கள் எல்லோரும் நிந்தனை செய்யத்தக்கதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சிப் பூவைச் சூடியதும்; அழகிய ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததும் தாமரையைப் போன்றதுமான பாதங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை எனக்கு எப்போது அளிப்பாய்? (உடனே அளித்தருள வேண்டும்.)

குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண் திசையினும் தத்தப் புத்தியை நத்தும் குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும் கதிர் நேமி குல ரதம் புக்கு... கடிவாளம் இடப்பட்டும் அங்கவடி பூட்டப்பட்டும் எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லக்கூடியவையும் ஞானத்தை விரும்புவதுமான (வேதங்களாகிய நான்கு) குதிரைகளை நெருங்கப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த ரதத்தில் ஏறிக்கொண்டு,

ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டைப் பரப்பும் குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா... (திருமாலாகிய) ஒற்றை அம்பை வில்லில் பொருத்தி, திரிபுரங்களைப் பொசுக்கித் தம் வெற்றியைப் பரப்பிய தலைவான சிவபெருமான் வணங்கிநிற்கும்படியாகக் காஞ்சீபுரத்தில் நிற்கின்ற கதிர்வேலா!

திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று எதிர் ஏறிச் சிரம் அதுங்க... பிரமன் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் எல்லா மதில்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று, அவர்களுடைய தலைகள் நசுங்கி நாசமடையும்படியாகவும்;

பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்திக் கறை கட்கம் சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும் பெருமாளே....அகன்ற கண்களில் திகைப்புப் படரும்படியாகவும் அசுரர்களுடைய மார்பில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறித் தெறித்துப் பொடியாகும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

கடிவாளத்தை இட்டு, அங்கவடிகளைப் பொருத்தி, எட்டுத் திக்கிலும் தாவிச் செல்லக் கூடியவையும் ஞானத்தை விரும்புபவையுமான வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த தேரில் ஏறி அமர்ந்து, திருமாலாகிய ஒற்றைக் கணையை வில்லிலே பொருத்தித் திரிபுரங்களைச் சுட்டுப் பொசுக்கித் தமது வெற்றியை எட்டுத் திக்குகளிலும் பரப்பிய சிவபெருமான் வணங்கி நிற்க, கச்சியில் நிற்கின்ற கதிர்வேலா!  பிரமனும் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிய கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் கோட்டை கொத்தளங்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று அவர்களுடைய தலைகள் நசுங்கும்படியாகவும்; அரக்கர்களுடைய அகன்று விரிந்த கண்களிலே திகைப்புப் படரும்படியாகவும் அவர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறும்படியாகப் போரிட்டு அவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே!

மாமிசத்தாலும் நெருங்கிய தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளந்ரு போக; தலைமயிர் நரைத்து வெளுக்க; தலையும் உடலும் இளைத்துப் போக, எலும்புக் கட்டுகள் தளர்ச்சியடைய; ஐம்புலன்களும் தங்கள் தொழிலிலே மாற்றம் அடைய; தடியை ஊன்றியபடி, திசையை உணராமல் தடுமாறு நடந்து; பித்தம் கொண்ட கிழவனாகி; பல்வரிசை அத்தனையும் கொட்டிப் போய்; அயலார் சேசே என்று தூற்ற; பிள்ளைகள் சீ சீ என்று பரிகசிக்க; மனைவியும் தூ தூ தூ என்று உமிழ்ந்து அவமதிக்க; பிறர் எல்லோரும் நிந்திக்க, இப்படிப்பட்டதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சி மலரைச் சூடியதும், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததுமான உனது பாத கமலங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை அடியேனுக்கு உடனடியாக அருளவேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/12/பகுதி--891-2978635.html
2978636 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 892 ஹரி கிருஷ்ணன் Saturday, August 11, 2018 05:42 PM +0530  

‘எனது கலி நீங்கப்பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தனதன தனன தனதன

      தனன தனதன தனன தனதன

      தனன தனதன தனன தனதன             தனதான

 

கமரி மலர்குழல் சரிய புளகித

         கனக தனகிரி யசைய பொருவிழி

         கணைக ளெனநுதல் புரள துகிலதை    நெகிழ்மாதர்

      கரிய மணிபுர ளரிய கதிரொளி

         பரவ இணைகுழை யசைய நகைகதிர்

         கனக வளைகல நடைகள் பழகிகள்      மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி

         லலைய விலைமுலை தெரிய மயல்கொடு

         திலத மணிமுக அழகு சுழலிக         ளிதழூறல்

      திரையி லமுதென கழைகள் பலசுளை

         யெனவு மவர்மயல் தழுவு மசடனை

         திருகு புலைகொலை கலிகள் சிதறிட   அருள்தாராய்

குமர குரபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர              எனதாளங்

      குரைசெய் முரசமொ டரிய விருதொலி

         டமர டமடம  டமட டமவென

         குமுத திமிலைச லரிகி னரிமுத        லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு

         மதுகை மலர்கொடு தொழுது பதமுற

         அசுரர் பரிகரி யிரத முடைபட           விடும்வேலா

      அகில புவனமொ டடைய வொளிபெற

         அழகு சரண்மயில் புறம தருளியொ

         ரருண கிரிகுற மகளை மருவிய        பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/13/பகுதி---892-2978636.html
2977926 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 890 ஹரி கிருஷ்ணன் Saturday, August 11, 2018 12:00 AM +0530  

‘பிறவி போதும் போதும்’ என்று நெகிழும் இப்பாடல் காஞ்சிபுரத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்                  தனதான

 

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்

         சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்

         தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந்     த்ரியமாறித்

      தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்

         தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்

         தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங்      கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்

         ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்

         கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண்        டுமியாமற்

      றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்

         கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்

         டையரவிந் தத்திற் புக்கடை தற்கென்         றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்

         டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்

         குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங்               கதிர்நேமிக்

      குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்

         டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்

         குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங்          கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்

         சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்

         டிரையலங் கத்துப் புக்குல விச்சென்          றெதிரேறிச்

      சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்

         றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்

         சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும்       பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/11/பகுதி---890-2977926.html
2977878 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 889 ஹரி கிருஷ்ணன் Friday, August 10, 2018 10:57 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே

 

கறுக்கும்: கரிய, கருத்த; அஞ்சன: மை; அயில்கொடு: வேலைக் கொண்டு;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியே மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி

 

களம்: கழுத்து; களக் கொழும் கலி: கழுத்திலிருந்து எழுகின்ற ஒலி; கவற்சி: மனவருத்தம், கவலை;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே

 

நறைத்த: மணம் தோய்ந்த; மிடறு: தொண்டை;

நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே

 

நன்கொடு: நன்றாக; மறுகிட: கலக்கம் அடைந்திட; நழுப்பு: மயங்கச் செய்கின்ற; நஞ்சன: நஞ்சைப் போன்ற;

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என

 

உரத்த: வலிமையான; கஞ்சுகி: பாம்பு--ஆதிசேடன்;

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு நிண குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா

 

நிவத்த: உயர்ந்த, உயர்வான; நிசிசரர்: அரக்கர்களுடைய;  உரமொடு: மார்புகளோடு; மலை புர தர: மலைக்கு ஒப்பாக; இரு: பெரிய; நிணக்குழம்பொடு: கொழுப்புக் குழம்புடன்;

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே

 

புழைக்கை: தொளையுடைய கை—துதிக்கை; தண் கட: குளிர்ச்சியான மதநீர்; கயமுக: கஜமுக—யானை முக;

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.

 

சமன்: யமன், யமனை; பரற்கு: சிவபெருமானுக்கு;

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே... கரிய மை தீட்டிய கண்களாகிய இரண்டு வேல்களைக் கொண்டு நெருக்கி, நெஞ்சம் அழியும்படியாக வீசுகின்ற சமயத்தில்; பழச்சுவையையும் அமுதத்தைய்ம் சிந்துகின்ற ஒப்பற்ற புன்னகையால்;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி... கழுத்திலிருந்து எழுகின்ற வளமான ஒலி என்கின்ற வலையை வீசி, ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று மனத்தை உருக்கும்படியாகவும், உள்ளே கவலை எழும்படியாகவும் வீட்டுக்கு அழகாக அழைத்துச் சென்று;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும்... மணம் மிகுந்த பஞ்சணையின் மேலே மனமாரத் தழுவி, மார்போடு மார்பு பொருந்தவும்; நகம் அழுந்தவும்; இதழின் அமுதைப் பருகியும்;

மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே... தொண்டையிலிருந்து நடனமாடியபடி வெளிப்படுகின்ற குரல், பறவைகளின் ஒலியைப் போல குமுகுமுகுமு என்று சப்திக்க; நன்றாக மனம் கலங்கிட; மயங்கச் செய்கின்ற பெண்களால் ஏற்படுகின்ற துன்பம் விலகும்படியாக அருள வேண்டும்.

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என...நிரம்பியிருக்கினற கடலின் குளிர்ந்த அலைகள் பொங்கி, மொகு மொகு மொகு என்று ஒலிக்கவும்; ஆதிசேடனது முடி நெறுநெறு எனப் பொடிபடவும்; அண்டங்களின் உச்சி கிடுகிடுக்கவும்;

வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக் கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா... மலைபோல உயர்ந்திருக்கின்ற திண்மையான கழல்களை அணிந்திருக்கின்ற அரக்கர்களுடைய மார்புகளும் கொத்துக் கொத்தான தலைகளும் மிகுதியான மாமிசக் குழம்போடு ரத்தம் சொரியும்படியாக வெட்டித் தள்ளிய தீரனே!

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன கணபதியுடன் வரும் இளையோனே... ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை அருளியவரும்; துதிக்கையையும் குளிர்ந்த மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தைக் கொண்டவரும்; சிவக்கொழுந்தைப் போன்றவருமான கணபதியோடு உலவுகின்ற இளையவனே!

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.... கோபத்தோடு எமனை உதைத்தவரான சிவபெருமானுடைய உள்ளம் அன்புகொள்கின்ற புதல்வனே!  நல்ல மாணிக்கங்கள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கினற சரவணப் பெருமாளே!

சுருக்க உரை

கடல் அலைகள் ‘மொகு மொகு மொகு’ என்று ஆரவாரிக்கவும்; ஆதிசேடனுடைய முடிகள் நெறுநெறு என்று பொடிபடும்படியும்; மலையைப் போல பெரிய கழல்களை அணிந்திருக்கும் அரக்கர்களுடைய மார்புகளும் தலைகளும் கொத்துக் கொத்தாகச் சிதறுபடும்படியும்; அவற்றிலிருந்து மாமிசக் குழம்போடு ரத்தம் பெருக்கெடுக்கும்படியும் வெட்டிச் சாய்த்த தீரனே! ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை ஈன்றவரும்; துதிக்கையையும் மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தவருமான கணபதிக்குத் தம்பியே! யமனை உதைத்தவராகிய சிவபெருமானுடைய உள்ளம் அன்புறும் மகனே!  நல்ல மணிகள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற சரவணப் பெருமாளே!

கரியதும் மைதீட்டியதும் வேல் போன்றதுமான கண்களைக் கொண்டு நெருக்கி, இனிய புன்னகையைச் சிந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று மணம் மிகுந்த பஞ்சணையில் மார்போடு மார்பு பொருத்தியும் நகம் அழுந்தவும் கலவியாடும் பெண்களால் விளைகின்ற துன்பத்திலிருந்து விடுவித்தருள வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/10/பகுதி---889-2977878.html
2976737 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 888 ஹரி கிருஷ்ணன் Thursday, August 9, 2018 12:00 AM +0530  

பொதுமகளிரால் வருகின்ற துன்பம் நீங்கவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருப்பரங்குன்றுக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூனறெழுத்துகளும்; மூன்று-நான்கு, ஏழு-எட்டு, பதினொன்று-பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன,

 

தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன                  தனதான

 

கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு

         நெருக்கி நெஞ்சற எறிதர பொழுதொரு

         கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு      நகையாலே

      களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ

         மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்

         கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு    கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

         அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர

         நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு             மிடறூடே

      நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

         இசைத்து நன்கொடு மனமது மறுகிட

         நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற              அருள்வாயே

நிரைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

         உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென

         நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென         வரைபோலும்

      நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

         சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு

         நிணக்கொ ழம்பொடு குருதிகள் சொரிதர      அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

         புழைக்கை தண்கட கயமுக மிகவுள

         சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு         மிளையோனே

      சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

         பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு

         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண            பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/09/பகுதி---888-2976737.html
2975568 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 887 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, August 8, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத உணர்வின் ஊடு வான் ஊடு முது தீ ஊடு

 

 

உலவை ஊடு நீர் ஊடு புவியின் ஊடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான

 

உலவை: காற்று;

சுடரின் ஊடு நால் வேத முடியின் ஊடும் ஊடாடு(ம்) துரிய ஆகுல அதீத சிவ ரூபம்

 

துரிய: (யோகியர்) தன்மயமாய் நிற்கும்; ஆகுல அதீத: துன்பங்களைக் கடந்த நிலையிலுள்ள;

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொட உபாயம் ஏதோ சொல் அருள்வாயே

 

துரிசு: குற்றம்;

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி

 

வாரீச அடவி: தாமரைக் காட்டை; வரால் குவால்: வரால் மீன்  கூட்டம் (குவால்: கூட்டம்);

மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறு ஊடு தடமாக

 

உழவர் ஆல அடாது ஓடி: உழவர்கள் தம்மை வருத்தாதபடி ஓடி;

கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி

 

கடல் புகா: கடலில் புகுந்து; மகா மீனை: பெரிய மீனை; வாவி: சுனை;

கடவுள் நீல(ம்) மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.

 

கடவுள்: தெய்வ (மணமுள்ள); நீலம்: நீலோற்பலம்;

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு... உடலுக்கு உள்ளேயும்; அந்த உடலுக்குள் சென்று திரும்புகின்ற உயிருக்குள்ளேயும்; அழிவடையாத உணர்வுக்கு உள்ளேயும்; வானத்துக்குள்ளேயும்; முதிர்ந்த தீக்கு உள்ளேயும்;

உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத... காற்றுக்கு உள்ளேயும்; நீருக்கு உள்ளேயும்; மண்ணுக்கு உள்ளேயும்; சமய வாதங்களில் ஈடுபடுகின்ற யாரிடத்திலும் இல்லாததான,

தனிஞானச் சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுல அதீத சிவரூபம்... இணையற்றதான ஞான ஒளிக்கு உள்ளேயும்; நான்கு வேதங்களின் உச்சிகளிலும் ஊடாடுகின்ற துரிய* நிலையில் இருப்பதும்; துன்பங்களைக் கடந்த நிலையில் இருப்பதுமான சிவரூபத்தை,

(* ஜாக்ரத் (விழிப்பு நிலை), ஸ்வப்ன (கனவு நிலை) ஸுஷுப்தி அல்லது சுழுத்தி (கனவற்ற ஆழ்துயில்) என்ற மூன்று நிலைகளையும் கடந்தது துரியம்.)

தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே... தீராத பேராசையும் குற்றமும் எப்போதும் நீங்காமல் நிற்கின்ற மூடனாகிய நான் அடைவதற்கு உரிய வழி எதுவென்று உபதேசித்தருள வேண்டும்.

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி... இதழ்கள் அவிழாத தாமரைக் காட்டை அழித்தும்; தன்னுடைய பகையான வரால் மீன்களின் கூட்டம் பின்வாங்குமாரும் போர்புரிந்து,

மதகு தாவி மீதோடி உழவரால அடாது ஓடி மடையை மோதி யாறூடு தடமாக... போகும் வழிகளில் இருக்கும் மதகுகளைத் தாவி; வயலில் உழுகின்ற உழவர்கள் தம்மை வருத்தாதபடி தப்பியோடி; வழியிலுள்ள மடைகளை மோதி உடைத்து; ஆற்றின் வழியே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவி... கடலுக்குள் புகுந்து, அங்கிருக்கின்ற பெரிய மீனைத் துரத்தியடித்த வாளை மீன் வந்து விழுகின்றதான இந்தத் தாமரைக் குளத்தில்,

கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.... தெய்வீக மணம் கமழுகின்ற நீலோத்பல மலர் மலர்வது தவறாத திருத்தணிகையின் காவலனே! வீரா! கருணையில் மேருவைப்போல் உயர்ந்து நிற்பவனே!  தேவர் பெருமாளே!

சுருக்க உரை

இதழ் பிரியாத தாமரைகளின் காட்டைப் போல இருக்கின்ற குளங்களில் வாழ்கின்ற மீன்கள் வரால் மீன்களைத் துரத்தி, மதகுகளைத் தாவி உழவர்களிடமிருந்து தப்பித்து, மடைகளை உடைத்துக்கொண்டு, ஆற்றின் போக்கிலே சென்று கடலுக்குள் புகுந்து, அங்குள்ள பெரிய மீன்களைத் துரத்தியடித்து, அதன்பிறகு மீண்டும் அதே தாமரைத் தடாகத்தில் வந்து விழக்கூடிய செழிப்பான திருத்தணிகையின் காவலனே! கருணை மேருவே! தேவர்கள் பெருமாளே!

உடலுக்குள்ளேயோ உயிருக்குள்ளேயோ; ஆகாயம், தீ, காற்று, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களுக்குள்ளேயோ; சமயச் சண்டைகளை இடுவார்களிடத்திலேயோ காணக் கிடைக்காததும் ஒப்பற்றதுமான ஞான ஒளியின் உள்ளும்; வேதங்களின் முடிவிலும்; யோகியர் தன்வசமாக நிற்கின்ற உயர்ந்த நிலையிலும்; துன்பங்களைக் கடந்ததாய் உள்ள சிவரூபத்தை, மூடனாகிய அடியேன் அடைவதற்கான உபாயத்தை உபதேசித்து அருளவேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/08/பகுதி--887-2975568.html
2975566 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 886 ஹரி கிருஷ்ணன் Monday, August 6, 2018 05:04 PM +0530  

‘சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச் சொல்லியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தான தானான தனன தான தானான

      தனன தான தானான                தனதான

       

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத

         உணர்வி னூடு வானூடு          முதுதீயூ

      டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு

         மொருவ ரோடு மேவாத         தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு

         துரிய வாகு லாதீத               சிவரூபம்

      தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை

         தொடுமு பாய மேதோசொ       லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான

         வரிவ ரால்கு வால்சாய          அமராடி

      மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி

         மடையை மோதி யாறூடு        தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு

         கமல வாவி மேல்வீழு           மலர்வாவிக்

      கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர

         கருணை மேரு வேதேவர்        பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/07/பகுதி---886-2975566.html
2975517 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 885 ஹரி கிருஷ்ணன் DIN Monday, August 6, 2018 10:53 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்

 

வினைக்கு இனமாகும்: வினைகளை (அதிகரிப்பதற்குத்) தொடர்புள்ள; தனத்தினர்: மார்பை உடையவர்கள்; வேள் அம்பினுக்கு: மன்மதன் கணைக்கு; எதிராகும்: இணையாகும்;

மிக பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி

 

மானம்தனில்: அவமானகரமான செயல்களில்; புகுதா: நுழைந்து, அகப்பட்டு; சமத்திடை: (கலவிப்) போரிடை

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழி தோறும் கவிழாதே

 

விசாரம்: கவலை;

கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்

 

கலை தாராய்: கல்வியை (ஞானத்தைத்) தாராய்;

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே

 

வாகம்புய: வாகு அம் புய—அழகிய தோள்களை உடையவனே;

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கெழ வானும் புகை மூள

 

பொருப்பு: மலை—கிரெளஞ்சம்; பொருக்கெழ: வற்றிப் போக;

சினத்தோடு சூரன் கனத்த தி(ண்)ணிய மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா

 

 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.

 

 

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்... துன்பங்கள் பெருகுவதற்குக் காரணமான மார்பையும் மன்மதனுடைய கணைக்கு இணையான கண்களையும் கொண்ட பெண்களின் (மீது வைத்த ஆசையால்;

மிகப் பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி... பல அவமானகரமான செயல்களில் ஈடுபட்டு; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பத்தில் மூழ்கி;

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும் கவிழாதே... பொறுக்க முடியாத கவலைப்பட்டு; பிறப்புக்கு வழி வகுக்கின்ற கருக்குழிக்குள் நான் தலைகுப்புறக் கவிழாதபடி,

கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்... நூல்களிலே தேர்ச்சியுள்ள புலவர்கள் இசைகூட்டி ஓதுகின்ற உனது திருவடிகளுடைய புகழை ஓதித் துதிக்கின்ற ஞானத்தைத் தரவேண்டும்.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப் புணர் வாகம் புய வேளே... தினைப்புனத்தில் புகுந்து, கொடிய வில்லை ஏந்திய குறக்குலத்தில் தோன்றி கொடியைப் போன்ற வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே!

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ வானும் புகை மூள... கிரெளஞ்ச பர்வதம் இரண்டு கூறாகும்படியும் கடல் வற்றும்படியும் வானத்தைப் புகை சூழும்படியும்,

சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா... கோபம் கொண்டு, சூரனுடைய பருத்த, வலிமையான மார்பு பிளக்கும்படியாகப் போரிட்ட வேலனே! 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.... திருப்புகழை ஓதும்* ஆர்வமுள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* அருணகிரிநாதருடைய வாக்கை மெய்ப்பிக்கும் வகையிலே அடியார்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியன்று திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகிறார்கள்.)

சுருக்க உரை

வள்ளி மலையிலுள்ள தினைப்புனத்துக்குச் சென்று, குறக்குலப் பெண்ணான வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே! கிரெளஞ்ச மலை இரண்டு துண்டாகும்படியும்; கடல் வற்றிப் போகும்படியும்; சூரனுடைய வலிய மார்பு பிளக்கும்படியும் போரிட்ட வேலாயுதனே!  திருப்புகழை ஓதும் ஆர்வத்தோடு அன்பர்கள் கூடியுள்ள திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

துன்பங்களுக்குக் காரணமான கொங்கைகளையும்; மன்மதனுடைய கணைக்கு நிகரான விழிகளையும் கொண்ட பெண்களின் மீது பூண்ட ஆசையால் பலவிதமான அவமானகரமான செயல்களைச் செய்து; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பங்களில் மூழ்கி; கவலை அடைந்து; பிறப்புக்குக் காரணமாக இருக்கின்ற கருக்குழிக்குள் நான் மீண்டும் மீண்டும் தலைகுப்புறக் கவிழாதபடி,

புலவர்கள் பண்ணோடு பாடியிருக்கின்ற உன்னுடைய திருவடிகளின் புகழைப் பாடுவதற்கான ஞானத்தைத் தந்தருள வேண்டும்.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/06/பகுதி---885-2975517.html
2974383 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 884 ஹரி கிருஷ்ணன் Sunday, August 5, 2018 12:00 AM +0530

 

‘எப்போதும் உனது திருவடிகளை ஓதவேண்டும்’ என்று கோரும் இப் பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என இரண்டெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

தனத்தன தானந் தனத்தன தானந்

      தனத்தன தானந்                    தனதான

 

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்

         பினுக்கெதி ராகும்                விழிமாதர்

      மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்

         சமத்திடை போய்வெந்            துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்

         கருக்குழி தோறுங்                கவிழாதே

      கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்

         கழற்புக ழோதுங்                 கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்

         சியைப்புணர் வாகம்              புயவேளே

      பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்

         பொருக்கெழ வானும்             புகைமீளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்

         திறக்கம ராடுந்                   திறல்வேலா

      திருப்புகழ ழோதுங் கருத்தினர் சேருந்

         திருத்தணி மேவும்               பெருமாளே.

 

 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/05/பகுதி---884-2974383.html
2973656 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 883 ஹரி கிருஷ்ணன் Saturday, August 4, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே

 

அமைவுற்று: மன அமைதியோடு; அடையப் பசியுற்றவருக்கு: முற்றப் பசியோடு வந்தவர்களுக்கு (அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று—என்று மாற்றிக்கொள்ள வேண்டும்);

அடையப் பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே

 

அடையப் பொருள்: வைத்துள்ள பொருள்; மதத்து: செருக்கால்; அயராதே: தளர்ச்சி அடையாமல்;

தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்

 

தமர்: உறவினர்கள்; சமன்: யமன்;

சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ

 

சரிரத்தினை: சரீரத்தினை, உடலை;

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே

 

மயிற்கு: மயிலுக்கு—உமைக்கு;

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரை விட்டிடும் விக்ரம வேலா

 

இரணத்தினில்: போரில்; எற்றுவரை: மோதுபவரை;

சமயச் சிலுகு இட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்

 

சிலுகு: குழப்பம், சேட்டை;

சடு பத்ம முக குக புக்கு கனம் தணியில் குமரப் பெருமாளே.

 

சடு பத்ம முக: ஷட் பத்ம முக—ஆறு தாமரைகளைப் போன்ற முகங்களை உடையவனே; தணியில்: திருத்தணியில்;

அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று அமுதைப் பகிர்தற்கு இசையாதே... முற்றவும் பசியோடு வந்தவர்களுக்கு மன நிறைவோடு அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனமில்லாமலும்;

அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து அருள்தப்பி மதத்து அயராதே...கையில் வைத்துள்ள பொருளை, இளமை(ச் செயல்களு)க்கு என்று கையிலே வைத்துக்கொண்டு; அருள் நெறியினின்றும் தவறிப்போய்; செருக்கடைந்து தளராமலும்;

தமர் சுற்றியழப் பறைகொட்டியிட சமன் நெட்டுயிரைக் கொடுபோகும்... உறவினர்கள் சுற்றிலும் நின்றபடிக் கதறவும்; பறைகள் முழங்கவும்; யமன் உயிரை நெடுந்தொலைவுக்குக் கவர்ந்து செல்லவும் (என்றே அமைந்திருக்கின்ற);

சரிரத்தினை நிற்குமெனக் கருதி தளர்வுற்று ஒழியக் கடவேனோ... இந்த உடல் நிலைபெற்று நிற்கும் என்று நினைத்துக்கொண்டு, (இந்த உடலுக்காகவே) நான் உழைத்துத் தளர்ந்து அழிவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ? (அவ்வாறு ஆகாமல் காத்தருள வேண்டும்.)

இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்தவருக்கு இசையப் புகல்வோனே... இமகிரியரசனுடைய மகளான உமைக்கு, இடது பாகத்தைத் தந்த சிவபெருமானுடைய உள்ளம் இசைவுறுமாறு உபதேசித்தவனே!

இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா... போர்க் களத்தில் வந்து மோதித் தாக்குபவர்களைக் கழுகுகளுக்கு இரையாக ஆக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!

சமயச் சிலுகிட்டவரைத் தவறி தவம் முற்ற அருள் புக நாடும்... சமயச் சேட்டைகளைச் செய்கின்ற சமயவாதிகளிடமிருந்து விலகி, என் தவம் முற்றுப்பெறுமாறு உன்னுடைய திருவருளுக்குள் புகுவதற்காக நான் நாடுகின்ற,

சடுபத்ம முகக் குக புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே.... தாமரையை ஒத்த ஆறு முகங்களைக் கொண்ட குகனே! (வள்ளியை மணமுடித்த பிறகு) வந்தடைந்த பெருமை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

இமகிரி ராஜனுடைய மகளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்திருக்கும் சிவனார் மனத்துக்கு இசையும்படியாக உபதேசித்து அருளியவனே!  போர்க்களத்தில் எதிர்த்து வந்து மோதுபவரைக் கழுகுகளுக்கு இரையாக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!  சமயச் சேட்டைகளைச் செய்து திரிகின்றவர்களுடைய கூட்டத்திலிருந்து நான் விலகுவதற்காகவும்; என் தவம் நிறைவுறுவதற்காகவும் நான் நாடுகின்றவையும்; ஆறு தாமரைகளைப் போன்றவையுமான திருமுகங்களை உடைய குகனே! வள்ளியை மணமுடித்த பிறகு நாடிவந்ததாகிய திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பசியோடு வருபவர்களுக்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமலும்; சேர்த்து வைத்திருக்கிற எல்லாப் பொருளும் என் இளமைக்காகவே என்று வைத்துக்கொண்டும் ஆணவத்தால் தளராமலும்; உறவினர்கள் கதறியழ; பறைகள் முழங்க, நெடுந்தொலைவுக்கு யமன் இந்த உயிரை எடுத்துப் போவதற்காகவென்றே அமைந்திருக்கின்ற இந்த உடல் நிலைபெறும் என்று கருதிக்கொண்டு, இந்த உடலுக்காகவே பாடுபட்டு நான் தளர்வடைவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதா? (அவ்வாறு தளர்வடையாமல் காத்தருள வேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/04/பகுதி---883-2973656.html
2972947 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 882 ஹரி கிருஷ்ணன் Friday, August 3, 2018 10:56 AM +0530  

‘இந்த உடல் நிலைத்திருக்கும் என்று நம்பி அழியாமல், பசித்து வந்தவருக்கு உணவளித்திடும் பேற்றைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று குறிலும் ஒரு வல்லொற்றுமாக மூன்று-மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

      தனனத் தனனத்                     தனதான

 

அமைவுற் றடையப் பசியுற் றவருக்

         கமுதைப் பகிர்தற்                கிசையாதே

      அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்

         தருள்தப் பிமதத்                 தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்

         சமனெட் டுயிரைக்               கொடுபோகுஞ்

      சரிரத் தினைநிற் குமெனக் கருதித்

         தளர்வுற் றொழியக்               கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்

         தவருக் கிசையப்                 புகல்வோனே

      இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்

         கிரையிட் டிடுவிக்                ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்

         தவமுற் றவருட்                 புகநாடும்

      சடுபத் மமுகக் குகபுக் ககனத்

         தணியிற் குமரப்                 பெருமாளே.

 

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/03/பகுதி-882-2972947.html
2971556 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 881 ஹரி கிருஷ்ணன் Thursday, August 2, 2018 02:09 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவர் மயலோ அமளி விதமோ எனேன செயலோ அணுகாத

 

 

இருவர் மயலோ: வள்ளி, தேவானை ஆகிய இருவர் மீது கொண்ட காதலாலா; அமளி விதமோ: (உன் ஆலயத்தில் எழுகிற) ஆரவாரங்களாலா; எனென செயலோ: அல்லது வேறு என்னென்ன செயல்களாலலா (அறியேன்); அணுகாத: உன்னை அணுக முடியாத;

இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது

 

 

இருடி: ரிஷி, முனிவர்கள்; அயன்: பிரமன்; மால்: திருமால்; அமரர்: தேவர்கள்; அடியார்: உன்னுடைய அடியார்கள்; இடையும் ஒலி: முறையிடும் ஓசை;

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ

 

 

பரிவாய்: அன்போடு; மொழிவாரோ: உன்னிடத்திலே தெரிவிப்பார்களோ;

உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ

 

பத தூள்: திருவடியிலுள்ள தூசு; புவன கிரி: உலகிலுள்ள மலைகள்; கிருபாகரம்: திருவருளின் தன்மை;

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத

 

பவன(ம்) முதல் ஆகிய: காற்று முதலான (பவனன்: வாயு);

படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா

 

படையும் உடையாய்: சேனைகளாக உடையவனே;

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே

 

அரி: திருமால்; அயனோடு: பிரமனோடு; அயிலை: வேலை; இருள் மேல்: இருளின் வடிவமெடுத்த சூரனின் மேல்;

அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருண கிரி வாழ் பெருமாளே.

 

கொடு நோய்: (என்னைப் பீடித்த) பொல்லாத நோய்;

இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ .... நீ வள்ளி தேவானையாகிய தேவியர் மீது கொண்டிருக்கும் மையலாலா; அல்லது உன்னுடைய திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் ஆரவாரத்தாலா; அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளாலா (என்பதை அறியேன்);

அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் இசையும் ஒலிதான் இவைகேளாது... உன்னை அணுக முடியாத முனிவர்கள், பிரமன், திருமால், தேவர்கள், அடியார்கள் ஆகிய அனைவரும் முறையிடுகின்ற ஓசை உனது திருச்செவிகளில் விழாதபோது;

ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ... இங்கே தன்னந்தனியாக நின்றபடி அடியேன் அலறிக்கொண்டிருப்பதை யாரேனும் அன்போடு உன்னிடத்தில் வந்து தெரிவிப்பார்களா?

உனது பததூள் புவன கிரிதான் உனது கிருபாகரம் ஏதோ... (உன்னுடைய விஸ்வரூபத்தில்) உன்னுடைய திருப்பாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தூசு, பூமியிலுள்ள மலைகளுக்குச் சமமாக இருக்குமென்றால், உன்னுடைய திருவருளின் தன்மை எவ்வளவு பெரிதாக இருக்குமோ (அடியேன் அறியேன்);

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதலாகிய பூதப் படையும் உடையாய்... பரம குருவாக இருப்பவனே; அணுக்களிலே இயங்கும் இயக்கமாகவும் இருப்பவனே; காற்று முதலான ஐம்பூதங்களையும் சேனைகளாகக் கொண்டுள்ளவனே;

சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா... எல்லா வடிவங்களுமாக உள்ளவனே; தொன்மையான வடிவமாகவும் விளங்குகின்ற வேலா!

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை யிருள்மேல் விடுவோனே...திருமாலும் பிரமனும் உன்னிடத்தில் அடைக்கலம் புக, இருளின் வடிவத்தை எடுத்த சூரனின்மேல் உன்னுடைய வேலை வீசியவனே!

அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் பெருமாளே.... அடியேனுடைய பொல்லாத நோயை நீக்கியவனே!* திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* இது அருணகிரிநாதரைப் பீடித்திருந்த தொழுநோயைக் குறிக்கிறது; குருநாதர் தன் அனுபவம் கூறுகிறார் என்பார் உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள்.)

சுருக்க உரை

மேலான குருமூர்த்தியே! அணுக்களுக்குள்ளே அசைவை ஏற்படுத்துபவனே!  எல்லா வடிவங்களுமாய் இருப்பனே! பழைமை முதல் புதுமை வரையில் எல்லா வடிவங்களுமாக இருப்பவனே!  திருமாலும் பிரமனும் உன்னிடத்திலே அடைக்கலம் புகுந்தபோது, இருளின் வடிவத்தை எடுத்த சூரபத்மனின் மீது உன்னுடைய வேலை வீசியவனே!  அடியேனைப் பீடித்திருந்த கொடிய நோயைப் போக்கியவனே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

நீ உன்னுடைய தேவியர் இருவரின் மீதும் கொண்டுள்ள ஆசையாலோ அல்லது உன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் எழுகின் ஆரவாராத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ, உன்னை அணுக முடியாத முனிவர்களும் பிரமனும் திருமாலும் உன்னுடைய அடியார்களும் உன்னிடத்திலே முறையிட்டு அலறும் ஓசை உன்னுடைய திருச்செவிகளிலே விழாதபோது, இங்கே தனியொருவனாக அடியேன் முறையிட்டுக் கூவிக்கொண்டிருப்பதை என்மீது அன்புகொண்டு யார்தான் உன்னிடத்தில் வந்து தெரிவிக்கப்போகின்றார்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின்போது இந்த பூவுலகில் உள்ள மலைகளே உன் திருவடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசின் அளவாக இருக்கும் என்றால் உன்னுடைய திருவருளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அறியேன்.  (அடியேனால் அறியமுடியாத உன்னுடைய கிருபாசாகரத்தில் அடியேன் முழுகவேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/02/பகுதி---881-2971556.html
2971554 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 880 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 31, 2018 03:34 PM +0530  

‘உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்து, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனன தனனா தனன தனனா

      தனன தனனா                      தனதான

 

இருவர் மயலோ அமளி விதமோ

         எனென செயலோ                அணுகாத

      இருடி அயன்மா லமர ரடியா

         ரிசையு மொலிதா                னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா

         னொருவர் பரிவாய்               மொழிவாரோ

      உனது பததூள் புவன கிரிதா

         னுனது கிருபா                   கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்

         பவன முதலா                   கியபூதப்

      படையு முடையாய் சகல வடிவாய்

         பழைய வடிவா                   கியவேலா

அரியு மயனோ டபய மெனவே

         அயிலை யிருள்மேல்            விடுவோனே

      அடிமை கொடுநோய் பொடிகள் படவே

         அருண கிரிவாழ்                 பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/01/பகுதி---880-2971554.html
2967612 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 879 ஹரி கிருஷ்ணன் DIN Friday, July 27, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இரவு பகல் பல காலும்

 

இயல் இசை தமிழ் கூறி

 

 

திரம் அதனை தெளிவு ஆக

திரம் அதனை: நிலைத்திருப்பதை;

திரு அருளை தருவாயே

 

 

பரம கருணை பெரு வாழ்வே

 

பர சிவ தத்துவ ஞானா

 

 

அரன் அருள் சற் புதல்வோனே

 

அருண கிரி பெருமாளே.

 

 

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி... இரவு பகல் இரண்டு வேளைகளிலும் பற்பல முறை இயல், இசை நாடகம் என்ற மூன்ற தமிழாலும் உன்னைப் போற்றிப் பாடுவதால்,

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே... எது நிலையான பொருளோ அதை நான் தெளிவாக உணரும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

பரகருணைப் பெருவாழ்வே... மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே!

பரசிவதத்துவஞானா... உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே!

அரனருள்சற் புதல்வோனே... சிவபெருமான் அருளிய நன் மகனே!

அருணகிரிப் பெருமாளே.... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே!  உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே! சிவபெருமான் அருளிய நன்மகனே!  திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

இரவு பகல் இரண்டு வேளையும் அடியேன் உன்னை இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழால் போற்றிப் பரவவேண்டும்.  நீ எனக்கு நிலையான பொருள் எதுவோ அதை உணர்வதற்கான தெளிவைத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/27/பகுதி---879-2967612.html
2967610 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 878 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, July 26, 2018 12:00 AM +0530  

‘திருவருளைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

நான்கே சீர்களைக் கொண்டு, தொங்கல் சீர் இல்லாமல் அமைந்திருக்கும் இப்பாட்டில் அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் உள்ளன. ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனதனனத் தனதான

      தனதனனத் தனதான

                                               

இரவுபகற் பலகாலும்

      இயலிசைமுத் தமிழ்கூறித்          

திரமதனைத் தெளிவாகத்

      திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே

      பரசிவத் துவஞானா

அரனருள்சற் புதல்வோனே

      அருணகிரிப் பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/26/பகுதி---878-2967610.html
2966844 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 876 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 24, 2018 11:09 AM +0530  

‘அடியேன் கலைஞானங்களைப் பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித் 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் உள்ளன.  ஆறாவது சீரில் மட்டும் ‘தனத்தத்’ என்றும் ‘தத்தத்’ என்றும் குழிப்பு மாறுபடுவதால் சில இடங்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன. இதைப்போலவே இரண்டாம் அடியின் முதற் சீரும் லேசான மாற்றத்தைக் கொண்டிருக்கிறது.

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்

      தனத்தா தனத்தத்                   தனதான

 

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்

         கடுத்தாசை பற்றித்               தளராதே

      அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்

         டறப்பே தகப்பட்                  டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்

         கலிச்சா கரத்திற்                 பிறவாதே

      கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்

         கலைப்போ தகத்தைப்            புகல்வாயே

ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட்

         டுரைப்பார்கள் சித்தத்             துறைவோனே

      உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்

         டொளித்தோடும் வெற்றிக்        குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்

         செருச்சூர் மரிக்கப்                பொரும்வேலா

      திறப்பூ  தலத்திற் றிரட்சோ ணவெற்பிற்

         றிருக்கோ புரத்திற்               பெருமாளே.

 

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/24/பகுதி---876-2966844.html
2966846 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 877 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 24, 2018 11:09 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே

 

அருக்குஆர்: அருமை வாய்ந்த; நலத்தை: உடல் நலத்தை; திரிப்பார்: கெடுப்பார்; மனத்துக்கு அடுத்த ஆசை: மனம் விரும்பியேற்ய ஆசை;

அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப் பட்டு அழியாதே

 

அடல்:  வலிய; காலனுக்கு: யமனுக்கு; கடைக்கால்: அந்திமக் காலத்தில்; மிதித்திட்டு: அடிப்படையை ஏற்படுத்தி; பேதகப்பட்டு: மனவேறுபாடு கொண்டு;

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே

 

கருக்காரர்: பிறவிக்கு ஏதுவாகின்றவர்கள்; பெருக்கா: மிகவும்; சரித்து: கைக்கொண்டு; கலிச் சாகரத்தில்: கலியாகிய கடலில் (துன்பக் கடலில்);

கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே

 

போதகத்தை: ஞானத்தை;

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே

 

ஒருக்கால் நினைந்திட்டு: ஒருமுறை உன்னை நினைத்து; இருக்கால் மிகுத்திட்டு: உன் இரு கால்களையும் மிகுதியாக;

உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா

 

உரத்தோள் இடத்தில்: வலிமையுள்ள தோளிலே; குறத்தேனை: வள்ளியை; வைத்திட்டு ஒளித்து ஓடும்: சுமந்தபடி மறைவாக ஓடியவனே;

செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா

 

சுரச்சூர்: தெய்வத் தன்மை கொண்ட தேவர்களை;

திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே.

 

திரள்: (தீயுருவாகத்) திரண்ட;

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே... அருமை நிறைந்த (உடல்) நலத்தைக்  கெடுப்பவர்களான விலைமாதர்களின் மேல் மனம் இசைந்த ஆசையைக் கொண்டு சோர்வடையாமலும்;

அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு அறப் பேதகப் பட்டு அழியாதே... வலியவனான யமனுக்கு என்னுடைய இறுதிக் காலத்தில் என் உயிரைக் கவர்வதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து அதனால் மனவேறுபாடு அடைநது நான் அழியாமலும்;

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலிச் சாகரத்தில் பிறவாதே... பிறவிக்குக் காரணமான செயல்களை உடையவர்களுடைய நட்பை மிகவும் கைக்கொண்டு துன்பக் கடலில் பிறக்காமலும்;

கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து கலைப் போதகத்தைப் புகல்வாயே... என்மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்தருளி, கலை ஞானத்தை அடியேனுக்க உபதேசித்து அருளவேண்டும்.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே... உன்னை ஒருமுறை தியானித்து, உன் இரண்டு திருவடிகளையும் போற்றி உரைப்பவர்களுடைய மனத்தில் உறைபவனே!

உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா... வலிமையுள்ள தோளிலே இனிமையான குறப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா!

செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா... ஆணவத்தால் தெய்வத் தன்மையை உடைய தேவர்களை ஒடுக்கி; போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே!

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் திருக் கோபுரத்தில் பெருமாளே.... நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கும் திருவண்ணாமலையின் திருக்கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உன்னை ஒருமுறை தியானித்து, உன்னுடைய இரண்டு பாதங்களையும் போற்றுபவர்களுடைய மனத்தில் உறைபவனே!  வலிமை மிகுந்த தோள்களிலே குறப் பெண்ணான வள்ளியைத் தூக்கிக்கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா!  ஆணவத்தால் தேவர்களை ஒடுக்கி, போருக்கு எழுந்த சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே! நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கின்ற திருவாண்ணாமலையின் திருக் கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அருமை வாய்ந்த உடல் நலத்தைக் கெடுப்பவர்களான பொதுப் பெண்டிரின் மீது மனம் வைத்திருக்கும் ஆசையால் தளர்ச்சி அடையாமலும்; வலிமை வாய்ந்த காலனுக்கு என் அந்திம காலத்தில் என் உயிரைப் பறிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து மனவேறுபாடுற்று அழியாமலும்; மீண்டும் பிறக்கச் செய்கின்ற செயல்களை மேற்கொண்டிருப்பவர்களுடைய நட்பைப் பெருக்கிக்கொண்டு துன்பக் கடலுக்குள் மீண்டும் பிறவமலும்

என்மீது நீ மனம் வைத்து, உனது திருத்தாளைத் தந்து, கலை ஞானத்தையும் உபதேசிக்க வேண்டும்.

 

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/25/பகுதி---877-2966846.html
2964883 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 875 ஹரி கிருஷ்ணன் Monday, July 23, 2018 01:14 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி

 

ஊண்: உணவு; பசும்பை: புதிய பை; கூன் குடம்பை: கூன்விழுந்த, கோணலான கூடு; பொதும்பு: குகை; அகித(ம்): தகாதது, தீமை; வாரி: கடல்;

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு

 

இடைதிரி: (கடலுக்கு) நடுவிலே திரியும்; சோங்கு: மரக்கலம்; கந்தம்: மலச்சேறு; மது: நீர் (சிறுநீர்); கும்பம்: குடம்;

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று

 

அஞ்சும் மருவிய கூண்டு: ஐம்புலன்களும் பொருந்தியிருக்கிற கூடு; குரம்பை: சிறுகுடில்;

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ

 

ஏன்றுகொண்ட: ஏற்றுக்கொண்ட; கரும பிராந்தி: வினை மயக்கம்; உபய: இரண்டு; பதாம்புயங்கள்: திருவடித் தாமரைகள்;

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்

 

அருணை: திருவண்ணாமலை; துங்க: தூய; சிகரம்: மலை; கராம்புயங்கள்: கர அம்புயங்கள்—கரமாகிய தாமரைகள்;

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே

 

பாங்க: தோழனே; பண்டு புகல்: முற்காலத்திலிருந்து சொல்லப்படுகின்ற; அபிநவ: புதுமையான; சார்ங்க: சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய; கண்டன்: வீரன் (திருமால்);

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்

 

ம்ருகேந்த்ர: மிருகசிரேஷ்டரான வியாக்ரபாதர்—புலிக்கால் முனிவர்; உரகேந்த்ரர்: (உரகம்: பாம்பு) பாம்பு வடிவான—பதஞ்சலி முனிவர்; நடேந்த்ரர்: நடனத்தின் தலைவன்—நடராஜன்; வரை சாடும்: மலைகளைத் தூளாக்கும்;

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.

 

கலபக: தோகையை உடைய—மயில்வாகனனே!; கேந்த்ர தந்த்ர: நூல்களில் வல்லவனான; நிசேந்த்ர: நிஜ இந்த்ர—சத்தியத்தின் தலைவனே; குலிசகர: வஜ்ராயுதத்தை ஏந்திய;

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு... இருவினைகளும் தின்பதற்கான உணவை அடக்கிய புதுவிதமான பையும்; கரு வளர்வதற்கு இடமான வளைசலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருக்கிறதும், பாழடையப் போவதுமான குகையும்;

அகித வாரி இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்... தகாதனவாகிய கடலுக்கு நடுவே திரிகின்ற மரக்கலமும்; மலமும் மூத்திரமும் நிரம்பியுள்ள குடமும்;

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல் பாண்டம்... இரவிலே தூங்குகின்ற பிணமானதும்; நோவே வடிவாக அமைந்ததுமான பாத்திரமும்;

அஞ்சும் மருவிய கூண்டு... ஐம்பூதங்களும் பொருந்தியிருக்கிற கூடும்;

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று... என் மனமும் உயிரும் குடியிருக்கும் சிறு குடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்து நிற்குமென்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ... வினைப் பயனால் வருவதும்; உலகத்தாரிடம் நான் ஏற்றுக்கொண்டுள்ளதுமான மயக்கம் நீங்கப்பெற்று உன்னுடைய இரு திருவடித் தாமரைகளை அடையப்பெறுவேனோ? (உன் திருப்பாதங்களை அடியேன் அடைய வேண்டும்.)

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க .... திருவண்ணாமலையில் ஓங்கி நிற்கின்ற, தூயதான கோபுரத்தைச் சூழ்ந்திருக்கும் தேவர்கள், தங்கள் தாமரைக் கரங்களைக் குவித்து வணங்குகின்றவனே! அடியார்கள் தோழனே!

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே... சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் முன்னொரு காலத்தில் விழுங்கியவனும்; புதுமை நிறைந்த சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனுமான திருமாலின் மருகனே!

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த... கருணை நிறைந்தவரான புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரும்; சர்ப்ப உத்தமரான பதஞ்சலி முனிவரும் தரிசிக்கும்படியாக* நடனமாடிய நடராஜரின் மைந்தனே!

(* சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் கண்டு தரிசிக்கும்படியாக இறைவன் நடமாடியருளினான் என்பது புராணம்.)

வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.... மலைகளைப் பொடியாக்கும் தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! நூல்களில் வல்லவனே! அரசே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே! கையிலே வஜ்ராயுதத்தைத் தாங்குபவனான இந்திரனுடைய தலைவனாகிய பெருமாளே!

சுருக்க உரை

திருவண்ணாமலையில் உயர்ந்தோங்கிய, பரிசுத்தமான கோபுர வாயிலில் வீற்றிருப்பவனே! தேவர்கள் தங்கள் தாமரையைப் போன்ற கைகளைக் குவித்துத் தொழுகின்றவனே! அடியவர் தோழனே!  முன்னொரு காலத்தில் எல்லா அண்டங்களையும் உண்டவனும் புதுமையான சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டவனுமான திருமால் மருகனே! கருணை நிறைந்த வியாக்ரபாதரும் பதஞ்சலியும் கண்டு தரிசிக்கும்படி நடனம் புரிந்தருளிய நடராஜரின் மைந்தனே!  மலைகளைத் தூளடிக்கின்ற தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே!  கையிலே வஜ்ரப் படையைத் தாங்கியிருக்கின்ற இந்திரனுடைய தலைவனான பெருமாளே!

இருவினைகளுக்கு உணவாக அமைந்திருக்கின்ற பையும்; கரு வளர்வதற்கு இடமான கோணலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருப்பதும் பாழாய்ப் போவதுமான குகையும்; தகாதனவையாகிய கடலுக்கு நடுவே செல்கின்ற மரக்கலமும்; மலத்தாலும் மூத்திரத்தாலும் நிறைந்துள்ள குடமும்; இரவிலே தூங்குகின்ற பிணம்போன்ற நோய்க்க உருவாக அமைந்த பாத்திரமும்; ஐந்து பூதங்களும் பொருந்தியிருக்கின்ற கூடும்; உயிரும் மனமும் குடியிருக்கும் சிறுகுடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்திருக்குமென்று இந்த உலகத்தாரோடு நான் ஏற்றுக்கொண்டுள்ள வினையின் பயனால் வருகின்ற மயக்கத்தை ஒழித்து அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடைவேனோ? (அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடையுமாறு அருளவேண்டும்.)

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/23/பகுதி---875-2964883.html
2964882 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 874 ஹரி கிருஷ்ணன் Saturday, July 21, 2018 05:46 PM +0530  

‘உனது திருவடிகளை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது. 

அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், மூனறு குறில், இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகள் என நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த

      தனதன தாந்ததந்த                  தனதான

 

இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை

         யிடரடை பாழ்ம்பொதும்ப         கிதவாரி

      இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப

         மிரவிடை து|ங்குகின்ற           பிணநோவுக்

குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ

         டுயிர்குடி போங்குரம்பை          யழியாதென்

      றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து

         னுபயப தாம்புயங்க               ளடைவேனோ

அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க

      ளமரர் குழாங்குவிந்து               தொழவாழும்

      அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட

         அபிநவ சார்ங்ககண்டன்          மருகோனே

கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட

         கடவுள்ந டேந்த்ரர்மைந்த         வரைசாடுங்

      கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த

         கரகுலி சேந்த்ரர்தங்கள்           பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/22/பகுதி---874-2964882.html
2964145 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 873 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, July 21, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்

 

கருப்பற்றி: (ஒரு தாயின்) கருவைப் பற்றிக்கொண்டு; பருத்து: வளர்ந்து;

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி

 

கணக்கிட்டு: ஆயுளைக் கணக்கிட்டு; பிணக்கிட்டு: மாறுபாடு கொண்டு; கதித்திட்டு: விரைந்து வந்து; கொதித்திட்டு: கோபம் கொண்டு; கயிற்றிட்டு: பாசக் கயிற்றை வீசி; பிடித்திட்டு: உயிரைக் கவர்ந்து; சமன்: யமன்;

பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் போய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்

 

ஆவி பெருக்க: ஆவியைப் பிரிக்க; புடை: பக்கதிலுள்ள; துக்கக் கிளை: துக்கத்திலிருக்கும் உறவினர்கள்

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய்

 

பிறத்தல்: (அந்தப்) பிறப்பில்; தொக்கு: சருமம், தோல்—இங்கே உடல்; கத்து பிறப்பு: அழுது கதறும் பிறப்பு; செச்சை: வெட்சிப் பூ;

பொருப்பு கர்ப்பூர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே

 

 

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொற் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே

 

புரத்தை: திரிபுரத்தை;

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா

 

குக்கர்: நாய்கள், நாய் போன்றவர்கள் (குக்கல்: நாய்);

திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே.

 

 

கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று... ஒரு தாயுடைய கர்ப்பத்தை அடைந்து, வளர்ந்து, உரிய காலம் வந்ததும் பூமியை வந்தடடைந்து; அந்தந்தப் பருவங்களுக்கு உரிய உருவங்களை முறைப்படி அடைந்து;

கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்... எண்ணத்திலே பொருள் சேர்ப்பதையே குறியாகக் கொண்டு காலத்தைச் செலுத்துகின்ற சமயத்திலே,

கணக்கிட்டுப் பிணக்கிட்டு கதித்திட்டுக் கொதித்திட்டுக்... ஆயுள் முடிந்ததைக் கணக்கிட்டுப் பார்த்து, மாறுபாடு கொண்டு விரைந்து வந்து, கோபித்து,

கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமன் ஆவி பெருக்க... பாசக் கயிற்றை வீசி, யமன் உயிரைப் பிரித்து எடுத்துச் செல்லும்போது (அது),

புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் போய்... புத்தியில் உறைத்து, துக்கத்தில் ஆழ்ந்தபடி சுற்றியிருக்கின்ற உறவினர்கள் பின்னாலே வந்து,

பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்... பிணத்தை எரித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவந்து எல்லோரும்,

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து... அந்தப் பிறவியில் சுற்றத்தார்களாக உள்ள அனைவரையும் வரும்படிச் செய்து, அவர்கள் உடல் சோர்ந்து தளரும்படியாக அழுது கரைகின்ற,

பிறப்புப் பற்று அறச் செச்சைக் கழல் தாராய்...பிறவி என்பதில் உள்ள பற்று நீங்கும்படியாக, வெட்சிமாலையால் சூழப்பட்ட உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன... மலையை ஒத்ததும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததும் அழகுள்ளதுமான மார்பகத்தை உடையவளும்; பசுமையான தினைப்புனத்தைக் காத்தவளும்;

கொச்சைக் குறத் தத்தைக்கு இனியோனே... மழலைச் சொல்லைப் பேசுபவளுமான குறக்கிளியான வள்ளிக்கு இனியவனே!

புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை... திரிபுரங்களைச் சுட்டெரித்துப் பகைவர்களாயிருந்த திரிபுராதிகளுக்கு மேலான பதவி நுகர்ச்சியை,

திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை 

புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே... கூட்டிவைத்த பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாக நின்று) பிரணவப் பொருளை ஓதுவித்து அருளியவனே!

செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி... செருக்குடைய நாயைப் போல இழிந்தவர்களான அசுரர்களைக் குத்தியும் போருக்குச் சென்று பிடித்து எற்றியும்,

சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா... கோபித்து அழிவடையச் செய்து போரிட்ட வீரனே!

திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய... பிழையில்லாமல் ஓதப்படும் சுத்தமான முத்தமிழால் சொல்லப்படுகின்ற,

சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.... சிறப்பு வாய்ந்ததும் மேன்மையானதுமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!

சுருக்க உரை

மலையைப் போன்றதும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததுமான மார்பகத்தை உடையவளும்; மழலை பேசுபவளும்; தினைப்புனத்தைக் காத்தவளுமான வள்ளிக்கு இனியவனே! திரிபுரங்களை எரித்த சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை குருவாக நின்று உரைத்தவனே! செருக்குடையவர்களும் நாயிலும் கடையவர்களுமான அசுரர்களை அழித்தவனே! பிழையில்லாமல் ஓதப்படும் சுத்மான முத்தமிழால் சொல்ப்படுகின்ற சிறப்பை உடையதும் மேன்மையானதமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தாயின் கருவில் தோன்றி, வளர்ந்து, காலக் கணக்குப்படி பத்து மாதங்களில் பிறந்து, பொருள்தேடி வாழ்ந்து, வாழ்நாளைச் செலவழிக்கின்ற சமயத்தில், ஆயுள் முடிந்தது என்பதைக் கணக்கிட்டு யமன் வந்து பாசக்கயிற்றை வீசி, உயிரைப் பிரித்தெடுத்துச் சென்ற பிறகு, சுற்றத்தார் அனைவரும் துக்கமடைந்து, பிணத்தை எரித்து வீட்டுக்குத் திரும்புகின்ற இயல்பையுடைய இந்தப் பிறவிச் சுழற்சியில் உள்ள பற்று நீங்கும்படியாக வெட்சிமாலையைப் புனைந்த உன் திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/21/பகுதி---873-2964145.html
2964141 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 872 ஹரி கிருஷ்ணன் Friday, July 20, 2018 11:07 AM +0530  

‘என்னுடைய பற்றுகள் அற்றுப்போக வேண்டும்’ என்று வேண்டும் இப் பாடல் காஞ்சீபுரத்துக்கானது,

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையில் உள்ள எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று-மூன்று (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன.

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்

      தனத்தத்தத் தனத்தத்தத்             தனதான

 

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்

         கருத்திற்கட் பொருட்பட்டுப்       பயில்காலங்

      கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்

         கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்         சமனாவி 

பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்

         பிணத்தைச்சுட் டகத்திற்புக்       கனைவோரும்

      பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டளைத்துத்தொக் கறக்கத்துப்

         பிறப்புப்பற் றறச்செச்சைக்         கழல்தாராய்

பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்

         புனக்கொச்சைக் குறத்தத்தைக்    கினியோனே

      புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்

         புணர்த்தப்பித் தனைக்கற்பித்      தருள்வோனே

செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்

         சினத்திட்டுச் சிதைத்திட்டுப்       பொரும்வீரா

      திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்

         திருக்கச்சிப் பதிச்சொக்கப்         பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/20/பகுதி---872-2964141.html
2961956 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 871 ஹரி கிருஷ்ணன் Thursday, July 19, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி

 

இருவினை: நல்வினை, தீவினை; இருள் பிணி: அஞ்ஞானமும் நோயும்;

இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொ(ண்)டு அளி பாடக்

 

கடம்புவின்: கடம்பின், கடப்ப மாலையின்; அதகமும்: உயிர் தரு மருந்தையும் (அதகம்: உயிர் தரு மருந்து); அளி பாட: வண்டுகள் பாட;

கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்

 

கரிமுகன் எம்பி: யானைமுகன் தம்பியே; அண்டர்: தேவர்கள்; களி: களிப்புடன்;

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொ(ண்)டு அருள்வாயே

 

கடுகி: விரைவில்; நடம் கொடு: நடனம் புரிந்து;

திரி புரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி

 

மதன் உடல் மங்க: மன்மதனுடைய சரீரம் அழிய; நகைகொண்ட: சிரித்த; விடையேறி: விடையை வாகனாமாகக் கொண்ட சிவபெருமான்;

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண

 

சிவம்: சிவன்; வெளி அங்கண்: வெட்டவெளியின்கண்—வெட்டவெளியிலே; ஈண: ஈன்ற;

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா

 

அரசி: உமையம்மை; இடம்கொள்: இடதுபாகத்தில் வைத்திருக்கும்; மழுவுடை எந்தை: மழுவை (கோடரியை) ஏந்திய தந்தயான;

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே.

 

அருணை: திருவண்ணாமலை; விலங்கல்: மலை;

இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி... என்னுடைய நல்வினையும் தீவினையும் அச்சம்கொண்டு நீங்கவும்; ஆணவ, கன்ம, மாயா மலங்கள் மங்கிப் போகவும்; நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து;

இனவருள் அன்பு மொழிய க டம்புவின் அதகமும் கொடு அளிபாட... அருள்வாக்குகளையும் அன்பான மொழிகளையும் சொல்ல; உன்னுடைய கடப்ப மாலையிலுள்ள உயிர்தரும் மருந்தாகிய தேனைச் சுற்றி வண்டுகள் மொய்த்து ரீங்காரமிட;

கரிமுகன் எம்பி முருகனென அண்டர் களிமலர் சிந்த அடியேன்முன்...விநாயகன், ‘என் தம்பியே, முருகா’ என்று அழைக்க; தேவர்கள் மகிழ்ச்சிகொண்டு மலர்களைத் தூவ; அடியேன் முன்னாலே,

கருணைபொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடங்கொடு அருள்வாயே...கருணை நிறைந்தவனாகவும் மலர்ந்த முகத்தவனாகவும் விரைவில் நடனமாடியபடி எழுந்தருள் புரிய வேண்டும்.

திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறிச்... திரிபுரங்கள் அழியவும்; மன்மதனுடைய உடல் எரியவும் புன்னகை புரிந்தருளியவனும்; விடையேறுபவனுமான,

சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு திகழந டஞ்செய்து... சிவன் வெட்டவெளியில் (பரவெளியில்) பேரருளோடு திருநடனம் செய்து,

எமையீண் அரசியிடங்கொள மழுவுடை யெந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா... எம்மை ஈன்றவளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்தபடி, மழுவாயுதத்தை ஏந்தியிருப்பவனான எந்தையும், மாசற்றவனுமான (சிவபிரான்) மனம் மகிழ்ந்த குருநாதனே!

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.... திருவண்ணாமலைக் குன்றிலிலே மகிழ்ந்திருக்கின்ற குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரம் அழியும்படியும் மன்மதனுடைய உடல் எரியும்படியும் புன்னகை பூத்தருளியவரும்; விடையேறுபவரும்; எம்மை ஈன்றவளான உமையம்மையை இடதுபாகத்தில் வைத்திருப்பவரும் எந்தையும் நிமலருமான சிவபெருமான் மகிழ்ந்த குருநாதனே!  திருவண்ணாமலைக் குன்றிலே மகிழ்ந்திருக்கும் குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

அடியேனுடைய இருவினைகளும் மும்மலங்களும் அஞ்ஞானமும் பிணிகளும் ஒழியும்படியாக மயில்மீது ஏறியமர்ந்துகொண்டு; அருள் நிறைந்த மொழிகளைப் பேசி; தேன் நிறைந்த கடப்ப மலர் மாலையில் வண்டுகள் மொய்த்தபடிப் பாட; ‘தம்பியே, முருகா!’ என்று விநாயகன் அழைக்க, தேவர்கள் மலர்மாரி பொழிய, நடனமாடும் கோலத்தில் அடியேன் எதிரிலே எழுந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/19/பகுதி---871-2961956.html
2961954 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 870 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 17, 2018 03:08 PM +0530  

 

‘அடியேன் முன் நடனம் புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தந்த தனதன தந்த

      தனதன தந்த                        தனதான

 

இருவினை யஞ்ச மலவகை மங்க

         இருள்பிணி மங்க                மயிலேறி

      இனவரு ளன்பு மொழியக டம்பு

         வினதக முங்கொ                டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்

         களிமலர் சிந்த                   அடியேன்முன்

      கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

         கடுகி நடங்கொ                  டருள்வாயே

திரிபுர மங்கை மதனுடல் மங்க

         திகழ்நகை கொண்ட              விடையேறிச்

      சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு

         திகழந டஞ்செய்                  தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை

         அமலன்ம கிழ்ந்த                குருநாதா

      அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை

         அமளிந லங்கொள்               பெருமாளே.

 

 

 
 
 
]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/18/பகுதி---870-2961954.html
2961923 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 869 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 17, 2018 12:07 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே

 

வரி சேர்ந்திடு: செவ்வரி படர்ந்திருக்கின்ற; உழை: மான்; நீலம்: நீலோத்பலம்—கருங்குவளை; வடு: மாவடு; வாங்கிடு வாள்: வீசத் தயாராய் இருக்கின்ற வாள்;

வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள மாந் தளிர் போல் நிறமாகிய வடிவாலே

 

இள மா முகை: இள மொட்டைப் போன்ற அழகிய;

இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீது உற இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே

 

பாயல்: படுக்கை; குழல் நீழலில்: கூந்தலின் ஒளியாலும் (நீழல்: ஒளியென்றும் பொருள்);

எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே

 

 

கரி வா(வு)ம் பரி தேர் திரள் சேனையுடன் ஆம் துரியோதனன் ஆதிகள் களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி

 

கரி: யானை; வாவும் பரி: தாவும் குதிரை; பாரதம் அதில் ஏறி: பாரதப் போர்க்களத்திலே ஈடுபட்டு;

கன பாண்டவர் தேர் தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்

 

கன பாண்டவர்: பெருமை வாய்ந்த பாண்டவர்; எழுபரி: ஏழு குதிரைகளை; தூண்டிய: நடத்திய; நேமியனாம்: சக்ராயுதத்தைக் கொண்டவனாம்;

திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக

 

திரை: அலை; வாரியும்: கடல் (மீதும்); தெசமாம் சிர: பத்துத் தலைகளின் (மீதும்);

சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு திரு வேங்கட மா மலை மேவிய பெருமாளே.

 

சிலை வாங்கிய: வில்லை வளைத்த;

வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் உழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே... செவ்வரிகள் படர்ந்திருக்கின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்றும்; மானோ என்றும்; பெரிய கடலோ என்றும்; கருங்குவளை மலரோ என்றும்; மாவடுவோ என்றும்; உருவப்பட்ட வாளோ என்றும் (நினைக்கச் செய்கின்ற) கண்களை உடைய பெண்கள் விரித்திருக்கிற வலையாலும்;

வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையிலே முக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே... வளர்வதும்; கோங்கு மரத்தின் இளம் மொட்டைப் போன்றதுமான தனங்களின் மீது ஏற்பட்ட ஆசையாலும்; செழுமையான மாந்தளிரைப் போன்ற மேனி வண்ணத்தாலும் வடிவத்தாலும்;

இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே... இருட்டைப் போல கறுத்திருக்கும் நீண்ட கூந்தலுடைய ஒளியாலும்; மயக்கத்தை ஏற்படுத்தும் படுக்கையின் மீது பொருந்தி; இனிய கோவைக் கனியைப் போன்ற இதழ்களில் ஊறுகின்ற அமுதத்தைப் பருகாதபடியும்;

எனதாந் தனதானவை போயற மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே இரு தாளினை யருள்வாயே... ‘என்னுடையது’ ‘தன்னுடையது’ என்ற உணர்வுகள் அற்றுப் போகவும்; அசுத்தமான மோக விகாரங்களெல்லாம் அற்றுப் போகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் உடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி... யானைப் படையையும்; தாவிப் பாய்கின்ற குதிரைப் படையையும்; தேர்ப் படையையும்; திரண்ட காலாட் படையையும் கொண்டிருக்கும் துரியோதனாதியர் போர்க்களத்தில் மாண்டொழிய; ஒப்பற்ற பாரதப் போர்க்களத்துக்குச் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே எழுபரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமியனாம் அரி ரகுராமன்... பெருமை நிறைந்த பாண்டவ(னான அர்ஜுனனுடைய) தேரிலே (பூட்டப்பட்ட) ஏழு குதிரைகளை வழிநடத்திய சாரதியும்; ஒளிமிகுந்த சக்ராயுதத்தைக் கையில் தரித்தவனுமான ஹரி, ரகுராமனாகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்குமராமரம் ஏழொடு தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக... அலைகள் மிகுந்து ஒலிக்கின்ற கடலையும்; வாலியையம்; ஓங்கி உயர்ந்த ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடிசெய்யும்படியாக,

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.... வில்லை வளைத்த நாராயணனுடைய (ராமனுடைய) மருமகனாகிய குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கும் திருவேங்கடமாகிய மாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரான

சுருக்க உரை

யானை, தாவுகின்ற குதிரை, தேர், திரண்ட காலாட்படை என்று சதுரங்க சைனியங்களையும் கொண்டிருந்த துரியோதனன் முதலானோர் போர்க்களத்திலே வந்து இறந்துபோகும்படியாக ஒரு பாரத யுத்தத்தில் ஈடுபட்டு; பெருமைவாய்ந்த பாண்டவனுடைய (அர்ஜுனனுடைய) தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளையும் செலுத்திய சாரதி; ஒளிவீசும் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் ஹரி; ரகுராமன்; ஒலிக்கின்ற கடலையும் வாலி என்னும் குரங்கரசனையும் உயர்ந்து ஓங்கி நின்ற ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய முடி தரித்த பத்துத் தலைகளையும் பொடியாக்கும்படி வில்லை வளைத்த நாராயணனுடைய மருமகனான குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கின்ற திருவேங்கடத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரிகள் ஓடுகின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்று மயக்கம் தருவதும்; மான் போன்றதும் கடலைப் போன்றதும்; நீலோத்பலத்தையும் கடலையும் வீசத் தயாராய் இருக்கும் வாளையும் போன்ற கண்களை உடைய மாதர்கள் வீசுகின்ற வலையில் அகப்பட்டும்; வளர்வதும் கோங்கின் இளமொட்டைப் போன்றதுமான மார்பகத்தின் மீது எழும் ஆசையாலும்; செழிப்பான மாந்தளிரைப் போன்ற மேனி நிறத்தாலும்; இருள்போன்ற நீண்ட கூந்தலாலும் மோகமடைந்து பாயிலே கிடந்து கொவ்வைக் கனியைப் போன்ற உதடுகளில் ஊறும் சுவையைப் பருகாமலிருக்கவும்; ‘எனது’, ‘தனது’ என்ற உணர்வுகள் என்னை விட்டு அகலவும்; காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மும்மலங்களின் சேஷ்டைகள் விலகும்படியாகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/17/பகுதி---869-2961923.html
2924772 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 832 ஹரி கிருஷ்ணன் Tuesday, May 22, 2018 04:21 PM +0530  

 

‘உன் திருவடிகளை எப்போதும் துதிக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று குற்றெழுத்துகளால் அமைந்திருக்கின்றன.

தனன தனன தனன தனன

                தனன தனன                                                                தனதான

 

பணிகள் பணமு மணிகொள் துகில்கள்                   

                        பழைய அடிமை                                                 யொடுமாதும்    

      பகரி லொருவர் வருக அரிய    

                        பயண மதனி                                                        லுயிர்போகக்    

குணமு மனமு முடைய கிளைஞர்    

                        குறுகி விறகி                                                        லுடல்போடாக்    

      கொடுமை யிடுமு னடிமை யடிகள்    

                        குளிர மொழிவ                                                   தருள்வாயே    

இணையி லருணை பழநி கிழவ    

                        இளைய இறைவ                                              முருகோனே    

      எயினர் வயினின் முயலு மயிலை    

                        யிருகை தொழுது                                            புணர்மார்பா     

அணியொ டமரர் பணிய அசுரர்     

                        அடைய மடிய                                                     விடும்வேலா     

      அறிவு முரமு மறமு நிறமு     

                        மழகு முடைய                                                   பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/23/பகுதி---832-2924772.html
2820749 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 706 ஹரி கிருஷ்ணன் Tuesday, December 5, 2017 10:32 AM +0530  

‘அடியேன் சிவஸ்வரூப மஹாயோகியாகுமறு என்னை ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவானைக்காவுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டு எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு நெட்டெழுத்தும் ஒரு குற்றெழுத்துமாக மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தனத்த தான தானான தனத்த தான தானான
      தனத்த தான தானான               தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
         யடைத்து வாயு வோடாத        வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
         அசட்டு யோகி யாகாமல்         மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
         சிரத்தை யாகி யான்வேறெ       னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
         சிவச்சொ ரூப  மாயோகி         யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
         சுதற்கு நேச மாறாத              மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
         தொடுத்த நீப வேல்வீர           வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
         மகப்ர வாக பானீய               மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
         மதித்த சாமி யேதேவர்           பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2017/dec/05/பகுதி---706-2820749.html
2820149 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 705 ஹரி கிருஷ்ணன் Monday, December 4, 2017 09:51 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அறிவு இலாப் பித்தர் உன்றன்
அடி தொழா கெட்ட வஞ்சர்
அசடர் பேய் கத்தர்
நன்றி அறியாத

 

பேய்க்கத்தர்: பேய்க் குணம் கொண்டவர்கள்;

அவலர் மேல் சொற்கள்
கொண்டு கவிகளாக்கி
புகழ்ந்து அவரை வாழ்த்தி
திரிந்து பொருள் தேடி

 

அவலர்: வீணர்கள்;

சிறிது கூட்டி கொணர்ந்து
தெரு உலாத்தி திரிந்து
தெரிவைமார்க்கு சொரிந்து
அவமே யான்

 

தெரிவைமார்க்கு: பெண்களுக்கு; அவமே: வீணே;

திரியும் மார்க்கத்து நிந்தை
அதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை
என்று அருள்வாயே

 

பரிந்து: பரிவோடு;

இறைவர் மாற்று அற்ற
செம்பொன் வடிவம் வேற்று
பிரிந்து இடபம் மேல் கச்சி
வந்த உமையாள் தன்

 

வேற்றுப் பிரிந்து: வேறுபட்டுப் பிரிந்து; இடபம் மேல்: நந்தி வாகனத்தின் மேல்;

இருளை நீக்க தவம் செய்து
அருள நோக்கி குழைந்த
இறைவர் கேட்க தகும்
சொல் உடையோனே

 

 

குறவர் கூட்டத்தில் வந்து
கிழவனாய் புக்கு நின்று
குருவி ஓட்டி திரிந்த
தவ மானை

 

 

குணமதாக்கி சிறந்த வடிவு
காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே.

 

குணமதாக்கி: தன் வசப்படுத்தி;

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர்... அறிவற்ற பித்தர்களும்; உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சனை உடையவர்களும்; அசடர்களும்; பேய்க்குணம் கொண்டவர்களும்;

நன்றி யறியாத அவலர் மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி... செய்ந்நன்றியை உணராத வீணர்களுமானவர்கள் மீது சொற்களைக் கொண்டு பாடல் புனைந்து அவர்களை வாழ்த்தி அலைந்து திரிந்து பொருள்தேடியும்;

சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து தெரிவைமார்க்குச் சொரிந்து... (அப்படி ஈட்டிய பொருளை) சிறிதளவுக்குச் சேர்த்து வைத்துக்கொண்டு தெருக்களில் அலைந்து திரிந்து பெண்களுக்குச் வாரியிறைத்து,

அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே... வீணாகத் திரிகின்ற என் நடத்தையால் எனக்கு ஏற்படுகின்ற பழிச்சொல்லைப் போக்கி; அன்புகூர்ந்து நான் தெளிவடைவதற்கான மோட்சத்தை என்று எனக்கு அருளப்போகிறாய்? (அடியேனுக்கு மோட்சத்தை அளித்தருள வேண்டும்.)

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த உமையாள்... சிவபெருமானுடைய மாற்றுக் குறையாத செம்பொன் வடிவத்திலிருந்து தனியே பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சிக்கு வந்த உமையவள்,

தன் இருளைநீக்கத் தவஞ்செய்து அருளநோக்கிக் குழைந்த இறைவர் கேட்கத் தகுஞ்சொல் உடையோனே... தன்னைச் சூழ்ந்த பிரிவென்ற இருளை நீக்குவதற்காகத் தவம் செய்வதைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த ஈசரான சிவபெருமான் கேட்டு மகிழத் தகுந்ததான உபதேசச் சொல்லை உடையவனே!

குறவர்கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட்டித்திரிந்த தவமானை... குறவர்களுடைய கூட்டத்திலே தோன்றி கிழவனாக வேடம் தரித்துக்கொண்டு தினைப்புனத்தில் குருவிகளைக் கடிந்தோட்டிக்கொண்டிருந்த தவமானாகிய வள்ளியை,

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே.... தன் வசப்படுத்திக்கொண்டு; உன்னுடைய தெய்வ வடிவத்தைக் காட்டி அவளை மணந்துகொண்டவனே! ‘குமரகோட்டம்’ என்னும் காஞ்சித் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

 

மாற்றுக் குறையாத இறைவனுடைய திருமேனியிலிருந்து தனியாகப் பிரிந்து ரிஷப வாகனமேறிக் காஞ்சிக்குத் தவம்புரிய வந்த உமையம்மையின் தவக்கோலத்தைக் கண்டு மனம் குழைந்தவரான சிவபெருமான் கேட்டு மகிழத்தக்க உபதேச மொழிகளை உடையவனே!  குறவர்கள் கூட்டத்திலே கிழவன் வேடத்தில் தோன்றி, தினைப்புனத்தில் கிளி, குருவிகளை ஓட்டிக் கொண்டிருந்த வள்ளியை வசப்படுத்திக்கொண்டு, உன்னுடைய தெய்வக் கோலத்தை அவருக்குக் காட்டி மணந்துகொண்டவனே!  குமரகோட்டம் என்னும் காஞ்சித் திருப்பதியில் அமர்ந்திருக்கின்ற பெருமாளே!

அறிவற்ற பித்தர்களையும்; உன் திருவடிகளைத் தொழாத வஞ்சகர்களையும்; மூடர்களையும்; பேயின் குணம் கொண்டவர்களையும்; நன்றியறிதல் இல்லாத வீணர்களையும் புகழ்ந்து கவிபாடி பொருள் சேகரித்து; தெருக்களில் சுற்றித் திரிந்து அந்தப் பொருளைப் பெண்களுக்கு வாரியிறைத்து வீணே காலங்கழித்து வருகிற நான் இப்படித் திரிவதனால் ஏற்படும் பழிச்சொல் நீங்கும்படியாக அருளி, என்மீது அன்புகூர்ந்து, நான் தெளிவுபெறுமாறு மோட்ச இன்பத்தை என்றைக்குத் தருவாய்?  (தவறாமல் தந்தருள வேண்டும்.)

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2017/dec/04/பகுதி---705-2820149.html
2768306 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 647 ஹரி கிருஷ்ணன் Wednesday, September 6, 2017 09:03 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர்

 

கலைகொடு: (கற்ற) கலையைக் கொண்டு; காம கருமிகள்: (சாத்திரங்கள் விதித்த) கர்மங்களிலே பற்று வைத்தவர்கள்; மாய: மாயா வாதத்தினர்; அ: அந்த; கணாதர்: கணாதன் என்னும் முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட வைசேடிக மதத்தினர்; உலகாயர்: உலகாயதர்கள்;

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே

 

வாம: வாம மார்க்கத்தவர்; விருத்தர்: மாறுபட்ட கொள்கையை உடையவர்; கலகலென: இரைச்சலோடு;

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்

 

சிலுகி: சண்டையிட்டு; எதிர் குத்தி: எதிர்த்துத் தாக்கி; நீதி: உண்மை; சித்தியான: சித்தியைத் (வீடு பேற்றைத்) தருவதான;

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே

 

தெரிதர: அறியும்படி; வீறு: மேம்பட்ட;

கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்

 

இப முக: யானை முக; குரகத முகத்தர்: குதிரை முகத்தவர்; சீய முக வீரர்: சிங்க முகத்தை உடைய வீரர்கள்;

குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே

 

அலகை: பேய்; குலவியிட: மகிழ்ந்து களிக்க;

பல மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா

 

பலமிகு: பலன் மிகுந்த;

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே.

 

யூகம்: கருங்குரங்கு; மழை முகிலை ஒட்டி: மழை மேகத்தின் காரணத்தால் (அஞ்சி);

கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர் ....கற்றுக்கொண்ட கலைகளை (அடிப்படையாகக்) கொண்ட பௌத்தர்களும்; (சாத்திரங்கள் விதித்த) கிரியைகளையே விரும்புபவர்களும்; முகமதியர்களும்; மாயாவாதிகளும்; கபில முனிவரைப் பின்பற்றும் சாங்கியர்களும்; (கணாதன் நிறுவிய) வைசேடிக* மதத்தவர்களும்;

(“தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி” என்று மணிமேகலை {27-81, 82} குறிக்கிறது.)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே... தர்க்கங்களைச் செய்து கலகமிடுகின்ற வாம மார்க்கத்தவரும்; பைரவர்களும்; தம்மிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை உடையவர்களும் பல நூல்களை மேற்கோள் காட்டி ‘கலகல’வெனும் ஓசையோடு;

சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்... சண்டையை வளர்த்தும்; எதிர்த்துத் தாக்கியும்; வாதிட்ட போதிலும் யாருக்குமே ‘இதுதான் உண்மை’ என்று அறிந்துகொள்வதற்கு அரிதானதும்; வீடு பேற்றை அளிப்பதுமான உபதேசத்தை;

தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே... அடியேன் அறிந்துகொள்ளம்படியாக விளக்கி; ஞான தரிசனத்தைத் தந்து; மேலான உன் திருவடியை எனக்குத் தருவாயோ?  (உடனே தந்தருள வேண்டும்.)

கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்... கொலைகளைச் செய்தபடி எதிர்த்துவந்த கோரமான யானை முகத்தையுடைய தாரகாசுரன்; குதிரை முகத்தையும் சிங்க முகத்தையும் உடைய பல அரக்க வீரர்கள் ஆகியோருடைய,

குறை உடல் எடுத்து வீசி  அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே…குறைபட்டுச் சிதைந்த உடலை எடுத்து வீசிப் பேய்களும் பத்ரகாளியும் மகிழ்ந்து குலவையிடும்படியாக வெற்றிவேலை வீசியவனே! 

பல மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா... நல்ல பலனைத் தருகின்ற தினைப்புனத்தில் உலாவும் குறமகளாகியி வள்ளியின் அழகானதும் பாரமானதுமான தனத்தைத் தழுவிய அழகிய மார்பை உடையவனே!

படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே....ஒன்றையொன்று சண்டையிடுகின்ற கருங்குரங்குகள் மழைபொழிகின்ற கருமுகில்களைப் பார்த்து அஞ்சி ஏறி ஒளிந்துகொள்கின்ற பழனி மலையில் வீற்றிருக்கும் தேவர் பெருமாளே!

 

சுருக்க உரை:

கொலைகளைச் செய்தபடி எதிர்த்துவந்த, கோரமான முகத்தையுடைய தாரகாசுரன்; குதிரை முகத்தையும் சிங்க முகத்தையும் கொண்ட பல அரக்க வீரர்கள் ஆகியோருடைய சிதைந்த உடல்களை அள்ளி வீசும் பேய்களும் பத்ரகாளியும் மகிழ்ச்சியால் குலவையிடும்படியாக வேலை எறிந்தவனே!  வளமான தினைப்புனத்திலே உலவுகின்ற குறப்பெண்ணான வள்ளியின் பாரமான தனத்தைத் தழுவிய அழகிய மார்பனே!  தமக்குள்ளே போரிட்டுக்கொள்கின்ற கருங்குரங்குகள், மழைபொழிகின்ற மேகங்களைப் பார்த்து அஞ்சி ஏறி ஒளிந்துகொள்வதான பழனி மலையில் வீற்றிருக்கின்ற தேவர்கள் பெருமாளே!

பௌத்தர்களும்; சாத்திரம் விதித்த கிரியைகளைப் பின்பற்றுவதையே விரும்புகின்றவர்களும்; முகமதியர்களும்; மாயாவாதிகளும்; கபில முனிவரைப் பின்பற்றுகின்ற சாங்கியரும்; வைசேடிகர்களும்; கலகத்துடன் தருக்கம் செய்பவர்களும்; வாம மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும்; பைரவர்களும் தாங்கள் கற்ற பல வகையான நூல்களின் துணையோடு, தம்மோடு மாறுபட்ட கொள்கையை உடையவர்களோடு ஓசை எழும்படியாக வாதித்தாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டாலும் ‘இதுதான் உண்மை’ என்று அறிய முடியாததும் வீடு பேற்றைத் தருவதுமான உபதேசத்தை அடியேன் அறியும்படியாக விளக்கி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உனது திருவடிகளை இப்போதே எனக்குத் தந்தருள வேண்டும்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2017/sep/06/பகுதி---647-2768306.html
2764405 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 646 ஹரி கிருஷ்ணன் Thursday, August 31, 2017 12:00 AM +0530
பற்பல சமயத்தவரும் தமக்குள்ளே வாதிட்டு மோதிக் கலகமிட்டும் அறிய முடியாததாகிய பொருளை உபதேசித்தருளி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உன்னுடைய திருவடியைத் தந்தருளவேண்டும் என்று கேட்கின்ற இந்தப் பாடல் பழநி மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் ஒரு வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் பயில்கின்றன.


தனதனன தத்த தான தனதனன தத்த தான
      தனதனன தத்த தான தனதான

கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
         கபிலர்ப ரக்க ணாதர் உலகாயர்

கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
         கலகலென மிக்க நூல்க ளதனாலே

சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
         தெரிவரிய சித்தி யான வுபதேசந்

தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
         திருவடியெ னக்கு நேர்வ தொருநாளே

கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
         குரகதமு கத்தர் சீய முகவீரர்

குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
         குலவியிட வெற்றி வேலை விடுவோனே

பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
         பரிமளத னத்தில் மேவு மணிமார்பா

படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
         பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2017/aug/31/பகுதி---646-2764405.html
2600313 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 417 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, November 22, 2016 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

சிகரிகள் இடிய நட(ம்) நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்

 

சிகரிகள்: மலைகள் (சிகரத்தை உடையது சிகரி); கலவி: கலாபி. கலாபத்தை உடைய (மயில்); சிறுவாள்: சீரா என்ற பெயரால் பல பாடல்களில் குறிக்கப்படுவது; செவ்வி: புதிய;

திரு முக சமுக சததள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்

 

சமுக: சமூக, கூட்டமான (ஆறுமுகங்களின் கூட்டம்); சததள முளரி: நூறு இதழ்களைக் கொண்ட தாமரை; பொரு: பொருந்திய;

அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன(ம்) வெற்பில் வஞ்சி கணவா என்று

 

அடிபறிய எரிதிரை: வேரோடு பறித்தெறிகின்ற மோதுவதான அலை; ஐவனம்: மலைநெல்; வெற்பு மலை; வஞ்சி கணவா: வள்ளி மணாளா;

அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ

 

அகிலமும் உணர: உலகெல்லாம் உணரும்படி; மொழிதரு: எடுத்துச் சொல்கின்ற; மொழியின் அல்லது: சொன்னாலொழிய;

நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குரு நாதா

 

நிர்வசன: சொல்லில்லாமல்; ப்ரசங்க: சொற்பொழிவு;

நிரை திகழ் பொதுவர் நெறி படு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம

 

நிரை: கூட்டம், ஆநிரை: பசுக்கூட்டம்; பொதுவர்: இடையர்; நெறிபடு: வழியிலுள்ள; அபிராம: அழகனே;

வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெரு வாழ்வே

 

வெகுமுக: பல கிளைகளையுடைய; ககன நதி: ஆகாய கங்கை; இதழி: கொன்றை; நம்பர்: தலைவர், பரமேஸ்வரர்; வாழ்வே: செல்வமே;

விகசித கமல பரிமள முளரி வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே.

 

விகசித: மலர்ந்த; கமல: தாமரை; பரிமள: மணம் வீசும்; முளரி: தாமரை;

சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு சிறுவாள்வேல்... மலைகளெல்லாம் இடியும்படியாக நடனமாடுகின்ற கலாபத்தை உடைய மயிலும்; புதிதாக அன்று பூத்த கடப்ப மலரும்; சீரா* எனப்படும் சிறுவாளும்; வேலும்;

(‘நவரத்தனம் பதித்த நற்சீராவும்’ என்பது சஷ்டி கவசம்.  திருப்புகழிலும் கந்தரலங்காரம் முதலானவற்றிலும் பலமுறை குறிக்கப்படுவதும்; முருகனுடைய ஆயுதங்களில் ஒன்றானதுமான குறுவாள்.)

திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்திணங்கு பொருசேவல்... ஆறுமுகங்களும் ஒன்றாகச் சேர்ந்த கூட்டமான நூறு இதழ்த் தாமரைகளும்; திவ்யமான கரத்தில் ஏந்தியிருப்பதும் போர்செய்ய வல்லதுமான சேவற்கொடியும் (விளங்கித் தோன்றுபவனும்);

அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவனவெற்பில் வஞ்சி கணவா என்று... அகில் மரங்களை வேரோடு பறித்து வீசுகின்ற அலைகள் மோதும் அருவிகள் நிறைந்ததும்; மலைநெல் விளையும் வள்ளிமலைக்குரிய வள்ளியின் கணவனே என்று

அகிலமு முணர மொழிதரு மொழியினல்லது பொற்பதங்கள் பெறலாமோ... உலகம் எல்லாமும் உணரும்படியாக எடுத்துச் சொல்லும் சொற்களாலன்றி உன்னுடைய பொற்பாதங்களை அடைய முடியுமா!

நிகரிட அரிய சிவசுத பரம நிர்வசனப்ர சங்க குருநாதா... ஒப்பிடுவதற்கு முடியாதவரான சிவனுடைய மகனே!  (சொற்களற்று மௌனமாக இரு என்று) மௌன மொழியால் உபதேசிக்கும் குருநாதனே!

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்தமர்ந்த அபிராம... பசுக்கூட்டங்களை மேய்க்கும் இடையர்கள் போகும் வழியிலிருக்கிற பழைய நெல்லி மரத்தினடியில்* வீற்றிருக்கின்ற அழகனே!

(இது எந்த நெல்லிமரம் என்று ஊகிக்க முடியவில்லை என்று குறிப்பிடும் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளையவர்கள், இது திருவேரக மான்மியத்தில் குறிக்கப்படும் சுவாமிமலை நெல்லி மரமாகவும் இருக்கலாம்; அல்லது திருவாவினன்குடியின் தல விருட்சமான நெல்லிமரத்தைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்கிறார்.)

வெகுமுக ககன நதிமதி இதழி வில்வ முடித்த நம்பர் பெருவாழ்வே... பல கிளைநதிகளாக ஓடுகின்ற ஆகாய கங்கையையும்; பிறைச் சந்திரனையும்; கொன்றைப் பூவையும்; வில்வத்தையும் சடையிலே அணிந்த தலைவரான சிவபிரானுடைய பெருஞ்செல்வமே!

விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே.... மலர்ந்த, நறுமணம் வீசுகின்ற தாமரையை ஒத்த திருவடிகளை உடையவனே!  வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

ஒப்பிட முடியாதவரான பரமசிவனாரின் சேயே!  மௌன மொழியாலே உபதேசிப்பவனே!  பசுக்கூட்டங்களை மேய்க்கின்ற இடையர்கள் செல்லும் வழியிலே இருப்பதான பழைய நெல்லிமரத்துக்கடியில் அமர்ந்த அழகனே!  பல கிளைநதிகளோடு ஓடும் ஆகாய கங்கையையும்; பிறைச் சந்திரனையும்; கொன்றைப் பூவையும்; வில்வத்தையும் சடையிலு சூடிய சிவபெருமானுடைய பெரும் செல்வமே!  மலர்ந்தததும் நறுமணம் கமழ்வதுமான தாமரைகளை ஒத்த திருவடிகளைக் கொண்டவனே!  வெள்ளிகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

எல்லா மலைகளும் பொடிபடும்படியாக நடனம் செய்கிற மயிலும்; அன்று பூத்த கடப்ப மலரும்; குறுவாறும்; வேலும்; ஒவ்வொன்றும் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைப் போலக் கூட்டமாகப் பூத்திருக்கும் ஆறுமுகங்களும்; திருக்கரத்தில் ஏந்திய சேவற்கொடியும் விளங்கித் தோன்ற நிற்பவனே என்றும்; அகில் மரங்களை வேரோடு பறித்தெறியும்படியாக அலைவீசிக் கொண்டிருக்கிற அருவிகள் நிறைந்ததும், மலைநெல் விளைவதுமான வள்ளிமலைக்குரிய வள்ளியம்மையின் கணவனே என்றும்,

எல்லா உலகமும் அறியும்படியாக எடுத்துரைக்கும் சொற்களால் அன்றி (சொற்களின் துணையில்லாமல்) உன்னுடைய பொற்பாதங்களைப் பெற முடியுமோ!

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/nov/22/பகுதி--417-2600313.html
2600312 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 416 ஹரி கிருஷ்ணன் DIN Monday, November 21, 2016 12:00 AM +0530  

இது அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெள்ளிகரம் என்னும் தலத்துக்கான பாடல். இறைவன் திருவடியைப் பெறுவதற்கான உபாயத்தைக் கூறுகிறது.  மூன்றாமடியில் இறைவனை ‘நிர்வசன ப்ரசங்க குருநாதா’ என்று விளிக்கிறது.  நிர்வசன ப்ரசங்க என்றால், ‘மெளனமாக உரையாற்றுபவனே’ என்று பொருள்.  ‘சும்மா இரு சொல்லற’ என்று மௌனமாக இருப்பதை மௌனமாக உபதேசிக்கின்ற குருநாதனே’ என்கிறார்.

அடிக்கு ஒற்றொழித்து 27 எழுத்துகள் உள்ள பாடல்; ஒவ்வொரு அடியிலும் முதல் பாதியில் அனைத்தும் குற்றெழுத்துகள்; மடக்கிவரும் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்தாக முறையே இடையின ஒற்றும், வல்லொற்றும் மெல்லொற்றும் பயில்கின்றன.

தனதன தனன தனதன தனன
      தய்யன தத்த தந்த    -
சிகரிக ளிடிய நடநவில் கலவி
         செவ்விம லர்க்க டம்பு    -     சிறுவாள்வேல்
      திருமுக சமுக சததள முளரி
         திவ்யக ரத்தி ணங்கு  -    பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
         ஐவன வெற்பில் வஞ்சி   -    கணவாவென்
      றகிலமு முணர மொழிதரு மொழியி
         னல்லது பொற்ப தங்கள்   -    பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
         நிர்வச னப்ர சங்க       -      குருநாதா
      நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
         நெல்லிம ரத்த மர்ந்த    -     அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
         வில்வமு டித்த நம்பர்   -     பெருவாழ்வே
      விகசித கமல பரிமள முளரி
         வெள்ளிக ரத்த மர்ந்த   -     பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/nov/21/பகுதி---416-2600312.html
2600311 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 415 ஹரி கிருஷ்ணன் Sunday, November 20, 2016 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல

 

தத்தை: கிளி; மோக நகை: மோகத்தை ஏற்படுத்த வல்ல புன்னகை; நாணி: வெட்கப்பட்டு;

தை சரசமோடு உறவே ஆடி அகமே கொடு போய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி

 

தை: தைக்கும்படியான; எத்தி: சாய்த்து; அணைமீதில்: படுக்கையில்; நிர்: நீர்; புழுகு: புனுகு; சவாதை: ஜவ்வாதை;

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர

 

உடைசோர: உடை நெகிழ; குழல் அளாவ: கூந்தல் கலைய;

மச்ச விழி பூசலிட வாய்  பு(ல்)லி  உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாகுமோ

 

மச்சவிழி: மீன்போன்ற விழி; பூசலிட: (மன்மதப்) போரை எழுப்ப; வாய் பு(ல்): வாய்ந்து புல்லி, நெருங்கி அணைத்து;

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா

 

சத்தி: உமை; சரசோதி: சரஸ்வதி; திருமாது: இலக்குமி; வெகுரூபி: பல உருவங்களைக் கொண்டவள்; ஈண: ஈன்ற;

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே

 

சக்ரகிரி: சக்ரவாளகிரி; மூரி: வலிய; சத்தியினை ஏவி: சக்திவேலை விடுத்து;

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா

 

துத்தி: பசலை; சுகவாரி: சுகக் கடல் (போன்றவள்); சித்ரமுக: அழகிய முக; எனது ஆயி: என் தாய்; சுத்த அணையூடு: பரிசுத்தமான படுக்கையில்; வட: மாலை (அணிந்த);

சுத்த அ(ம்) மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே.

 

 

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்... கிளியைப் போல இனிமையாகப் பேசியும்; மயிலைப் போல நடித்தும்; மோகத்தைத் தூண்டுவதுபோலச் சிரித்தும்; உடனே வெட்கப்பட்டும்; மார்பகத்தை ஆடையால் மூடிக்கொண்டும்;

சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்... ‘இதோ இங்கேதான் வீடு இருக்கிறது.  அங்கே நீங்கள் வரவேண்டும் என்று மடியைப் பற்றிக்கொள்வதைப் போலப் பிடித்து அழைத்துச் சென்றும்; மனத்தில் தைக்கும்படியாக சரசமாடியும்; வீட்டுக்கு அழைத்துச் சென்றும்;

எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக... படுக்கையில் சாய்த்து, ‘இது தக்க சமயமல்லவா?  இப்போது பார்த்து நீங்கள் போகத்தான் வேண்டுமா’ என்றெல்லாம் பேசி; தட்டு நிறைய புனுகு, பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களைக் கொண்டுவந்து (வந்த) அவர்களுடைய உடலில் பூசி; முகத்தோடு முகம் வைத்து; உதட்டின் ஊறலாகிய ரசம் பெருக்கெடுக்க;

குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின்... கூந்தல் நெகிழ; ஒளிகொண்ட விழிகள் சுழன்று பதற; வட்டமான முலை மார்பிலே புதைய; வேர்வை தோன்ற; தேளை இறுகத் தழுவி; உடை நெகிழ; மீனைப் போன்ற விழகள் மன்மதப் போரை எழுப்ப; நெருங்கித் தழுவி; இருவரும் மனமொப்பி உல்லாசமாக மையலில் கலந்தபின்னால்,

ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ... வந்தவர்களுடைய ஆபரணங்களை எடுத்து அடகு வைத்தும்; தேடிய பொருளையெல்லாம் கொள்ளை கொண்டும் செல்பவர்களோடு கலந்து கிடக்கலாமோ?

சத்தி சரசோதி திருமாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா... சக்தியாகவும்; சரசுவதியாகவும்; இலக்குமியாகவும் பலவிதமான வடிவங்களை உடையவளும்; சுக நிலையில் நிற்பவளும்; நித்திய கல்யாணியும்; என்னைப் பெற்ற தாயுமான மலைமகளும்; சிவையும்; தற்பரனாகிய பரமேஸ்வரனோடு நடனமாடும் அபிராமியும்; சிவகாமியுமான உமாதேவியார் ஈன்ற பாலனே!

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே... (அண்டத்தின் புற எல்லையான) சக்ரவாளகிரியும்; வலிமையுள்ள மேருவும்; கடலும் புழுதிபறக்குமாறு, ரத்தினமயமான மயிலின் மீது ஏறி, விளைடிய, அசுரர்கள் மாளுமாறு சக்திவேலைச் செலுத்தி; அமரர்களைச் சிறை மீட்டு நடமாடுபவனே!

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா... பசலை படர்ந்த தனபாரத்தைக் கொண்டவரும்; பெரிய மோகத்தைத் தருகின்ற சுகக்கடல் போன்றவரும்; அழகிய முகத்தைக் கொண்டவரும்; என் தாயும் ஆன வள்ளியம்மையை, தூயதான மெல்லணையிலே (இருந்தபடி), முத்துவடங்களை அணிந்த அவருடைய மார்பகத்தை விட்டுப் பிரியாத திருக்கரத்துடன் கூடிய மணிபார்பனே!

சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக... ‘தூய, அழகிய பெரிய தவசிகாமணியே’ என்று ஓதுகின்ற அடியார்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு உறைகின்ற ஆறுமுகனே!

சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே.... சுப்ரமணியனே!  புலியூரிலே பொருந்தி வீற்றிருக்கின்றவனே!  தேவர்கள் புகழ்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

சக்தியாகவும்; சரஸ்வதியாகவும்; திருமகளாகவும் பலவிதமான ரூபங்களை உடையவளும்; சுகநிலையில் நிற்பவளும்; நித்ய கல்யாணியும்; என்னை ஈன்ற மலைமகளும்; சிவையும்; தற்பரனாகிய பரமேஸ்வரனுடன் நடனமாடுபவளும்; அபிராமியும்; சிவகாமியுமான உமையம்மை ஈன்ற பாலனே!  சக்ரவாளகிரியும் வலிமையுள்ள மேருவும் கடலும் புழுதி பறக்கும்படியாக ரத்னமயமான மயிலின்மேல் ஏறிக்கொண்டு சக்திவேலைச் செலுத்தி, தேவர்களை சிறையிலிருந்து விடுவித்து நடனமாடுபவனே!

பசலைபூத்த தனபாரங்களையுடையவரும்; பெரிய மோகத்தையூட்டுகின்ற சுகக்கடல் போன்றவரும்; மிக அழகிய முகத்தவரும்; என் தாயும் ஆன வள்ளியம்மையுடன் மெல்லணையில் இருந்தபடி அவரது தனத்தைவிட்டுப் பிரியாத கரத்தை உடையவனே!  அழகிய மார்பனே!

கிளிபோலப் பேசியும்; மயில்போல நடித்தும்; மோகத்தையூட்டும்படியாக முறுவல் பூத்தும்; உடனே வெட்கப்படுவதைப் போல ஆடையால் மார்பகத்தை மூடிக்கொண்டும்; ‘வீடு அருகில்தான் இருக்கிறது, நீர் வரவேண்டும்’ என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டுபோய்; மனத்தில் தைக்குமாறு சரசமாடி; வீட்டுக்குள் அழைத்துச் சென்று; ‘இது தக்க சமயமல்லவா?  இப்போது நீங்கள் பிரிந்து போகலாமா’ என்றெல்லாம் பேசி, படுக்கையில் சாய்த்து; புனுகு, பன்னீர் ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசி; இருவரும் மனமொப்பிக் கலந்தபின்னால், கையிலுள்ள ஆபரணங்களைப் பறித்துக்கொண்டும், அடகுவைத்தும் அத்தனை செல்வங்களையும் கொள்ளைகொள்பவர்களான இவர்களோடா நான் கூடிக்கிடப்பது?  (இவ்வாறு நான் அழிந்துபோகாமல் அடியேனை ஆண்டுகொள்ள வேண்டும்.)

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/nov/20/பகுதி---415-2600311.html
2599081 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 414 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, November 19, 2016 12:00 AM +0530 அண்மையில் நம்முடைய 366ம் தவணையில் ‘வங்கார மார்பிலணி’ என்ற பாடலில், “வளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா” என்ற அடியை (367ம் தவணையில்) விளக்கும்போது, இதேபோன்ற ஒரு குறிப்பு ‘தத்தைமயில்’ என்ற பாடலிலும் பயில்கிறது.  அந்தப் பாடலைப் பேசும்போது இதன் பொருளை விரிப்போம் என்று குறிப்பிட்டிருந்தோம்.  அந்தப் பாடலைத்தான் இன்று காண்கிறோம்.  இது புலியூர் எனப்படும் சிதம்பரம் தலத்துக்கான பாடல்.

இந்தப் பாடலின் நான்காமடியில் ‘எனது ஆயி வளிநாயகியை சுத்தஅணையூடு வடமா முலை விடாதகர மணிமார்பா’—‘என் தாயான வள்ளி நாயகியின் மார்பை விடாத கரத்தவனே’—என்று பாடுகிறார்.முருகனின் திருக்கரம் எப்போதும் வேலையும் வள்ளியம்மையின் மார்பையும் விடாது பிடித்திருக்கும் என்பது பொருள்.  வள்ளியம்மையின் மார்பு என்பது ‘உண்மை அடியார்களின் பக்குவ நிலைக்கு’க் குறியீடாக விளங்குவது என்று தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் விளக்குகிறார்கள்.  அந்தக் கரம், ‘மெய்யடியார்களுடைய பக்குவநிலை எப்போது விடாமல் விரும்பி அணைத்துக் காக்கும் கரம்’ என்று அவர் குறித்திருக்கிறார்.  ‘ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்’பது அடியார் கடன்.

அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகள்; ஒவ்வொரு 1, 5, 9 சீர்களிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; ஒவ்வொரு இரண்டாம், மூன்றாம் நான்காம் சீரிலும் முதெலெழுத்து நெடில் என்ற அமைப்பைக் கொண்டது இந்தப் பாடல்.

தத்ததன தானதன தானதன தானதன
      தத்ததன தானதன தானதன தானதன
      தத்ததன தானதன தானதன தானதன                 தனதான

தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
         யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
         சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி  -  பிடிபோல
      தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
         யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
         தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ   -    ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
         கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
      வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி -  யுடைசோர
      மச்சவிழி பூசலிட வாய்புலிய லாசமுட
         னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
         வைத்தடகு தேடுபொருள் சூரைகொளு வார்கலவி- செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
         நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
         தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை   -   யருள்பாலா
      சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
         ரத்தமதி லேறிவிளை யாடியசு ராரைவிழ
      சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட -  மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
         சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
         சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர  -  மணிமார்பா
      சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
         சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
         சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர் புகழ்  -  பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/nov/19/பகுதி---414-2599081.html
2600829 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 418 ஹரி கிருஷ்ணன் Friday, November 18, 2016 04:08 PM +0530  

திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல், நாயகி பாவத்தில் பாடப்பட்டது.  இறைவனை மயில் மீதில் ஏறி எப்போதும் வரவேண்டும் என்று கோரும் பாடல்.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 31 எழுத்துகள்; 1, 4, 7 ஆகிய சீர்களில் குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று.

தனனதன தான தத்த தனனதன தான தத்த
      தனனதன தான தத்த   -   தனதான

தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
         தழலமளி மீதெ றிக்கு   -     நிலவாலே
      தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
         தறுகண்மத வேள்தொ டுத்த -   கணையாலே      
வருணமட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்று
         மருவுமென தாவி சற்று   -     மழியாதே
      மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
         மயிலின் மிசை யேறி நித்தம் -  வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
         கலவிதொலை யாம றத்தி  -   மணவாளா
      கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
         கடியமல ராத ரித்த    -      கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
         அருணை நகர் கோபு ரத்தி -   லுறைவோனே
      அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
         அமரர்சிறை மீள விட்ட  -     பெருமாளே.

 

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/nov/23/பகுதி---418-2600829.html
2559597 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 353 ஹரி கிருஷ்ணன் Sunday, September 4, 2016 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு

 

அதலம், விதலம் முதல் அந்தத் தலங்கள்: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் ஆகிய ஏழு கீழ் உலகங்கள்; அமரர் அண்டத்து அகண்டம்: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம் ஆகிய ஏழு மேல் உலகங்கள்; அகில சலதி: அனைத்துக் கடல்களும்; விண்டு: மலை; அங்கி: அக்கினி; பாநு: சூரியன்;

அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்

 

அமுதக் கதிர்கள்: குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன்; அந்தித்த: சந்தித்த, கலந்த; அரும் தத்துவங்கள்: 96 தத்துவங்கள்; சம்ப்ரதாயம்: (வழக்கம் என்பது பொதுப் பொருள்) குருபரம்பரையாக வந்த உபதேசம், ஆகவே பேருண்மை;

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்

 

இருதய கமலம் முகிழம்: இதயத் தாமரையாகிய மொட்டு; கட்டவிழ்ந்து: இதழ் பிரிந்து, மலர்ந்து;

உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ

 

இயலின் இயல்: உழுவலன்பு எனப்படும் பல பிறவிகளாகத் தொடரும் அன்பு;

ததத .........................................

 

 

சகக …………………………………

என்று தாளம்

 

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ரண துங்க காளி

 

பதலை, திமிலை, துடி, தம்பட்டம்: பறை, மேள வகைகள்; நிசிசரர்: அரக்கர்; பரிய: பெரிய, தடித்த; பழு எலும்பு: விலா எலும்பு; ரணதுங்க காளி: போர்வெல்லும் காளி;

பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.

 

பவுரி: மண்டலக் கூத்து—வட்ட வட்டமாக வந்து ஆடும் கூத்து; கவரியிட: சாமரம வீச; இகலை: போரை; சிகண்டி: மயில்;

 

அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என ... அதலம், விதலம் முதலான அந்தக் கீழ்லோகங்கள் ஏழு எனவும்;

அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என ... இந்த பூமியும்; தேவர்களுடைய மேல் உலகங்கள் ஏழு எனவும்;

அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என ... அனைத்துக் கடல்களும்; எட்டுத் திசைகளிலுமுள்ள மலைகள் எனவும்;

அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என ... அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் ஆகிய அனைத்தும் சந்தித்த—ஒன்று கலந்த—மந்திரங்கள் எனவும்;

அறையும் மறை என அரும் தத்துவங்கள் என ... ஓதுகின்ற வேதங்கள் எனவும்; (96 வகையான) தத்துவங்கள் எனவும்;

அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் ... அணுவுக்குள் அணு எனவும்—எங்கும் எல்லாவற்றிலம் நிறைந்து நிற்பதான ஒரு பேருண்மை,

உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் ... (என் உள்ளத்திலே) உதிக்கவும், என் மனத்தை மூடியிருந்த அஞ்ஞானமாகிய இருள் ஒழிந்து, அக்கணமே,

இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ ... மொட்டு நிலையிலிருந்த இதயமாகிய தாமரை இதழ்கள் அவிழ்ந்து மலர; உணர்வாலே உணரப்படும் அனுபவத்தை நான் பெற்றிடும்படியாக முன்னர் நீ உதவியருளியதால்;

இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என ... (பல பிறப்புகளாகத் தொடரும்) தொடர்ச்சியான அன்பால், செம்மையான சொற்களால் ஆன பாடல்களாக;

மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய ... (இப்படிப்பட்ட) இனிமையான பாடல்களில் மனம் பற்று வைத்து, ‘திருப்புகழ்’ (என்னும் சந்தப் பாவால் பாடும்) உரிமை(யாகிய பேற்றைப்) பெற்ற,

அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ ... அடிமையான நான் உன்னையல்லாது இவ்வுலகத்தையோ உலகவாழ்வையோ நம்பமாட்டேன்.

(‘உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்’—திருமுருகாற்றுப் படையின் இறுதியில் வரும் வெண்பாக்களில் ஒன்று.)

ததத ததததத தந்தத்த தந்ததத  திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி   தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி    சகக சககெணக தந்தத்த குங்கெணக     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி      தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம் ... என்ற தாளக்கட்டில், 

பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக ... பதலை திமிலை முதலான மேளங்கள், உடுக்குகள், தம்பட்டங்கள் எல்லாமும் பேரோசையை எழுப்ப;

அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ... உலகெங்கிலும் உள்ள அரக்கர்கள் நடுக்கம் அடைய; கொடிய கழுகுகள் (விழுந்த பிணங்களின்) தடித்த குடலையும் விலா எலும்புகளையும் பறித்து எடுக்க;

ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட ... வெற்றிக் காளி போர்க்களத்தில் வட்டமிட்டு நடனம் புரிய; நரிகள் ஊளையிட; பருந்துகள் தம் சிறகுகளான சாமரங்களை வீச;

இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே. ... போரிலே வெற்றிபெற்று, மயில்மீது அமர்ந்து, பழனி மலைக்கு வந்து வீற்றிப்பவனே!  தேவர்கள் தலைவனே!

சுருக்க உரை

பலவிதங்களான தாளக்கட்டுகளோடு பதலை, திமிலை, உடுக்கை, தம்பட்டம் முதலான வாத்தியங்கள் முழங்க; உலகெங்கிலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள; விழுந்துகிடக்கும் பிணங்களின் தடித்த குடலையும் விலா எலும்புகளையும் கொடிய கழுகுகள் பறித்தெடுக்க; ரணதுங்க காளி போர்க்களத்தில் வட்டமிட்டு நடனமாட; நரிகள் ஊளையிட; பருந்துகள் தங்களுடைய சிறகுகளான சாமரங்களை வீச, போரிலே வென்று மயில்மீது அமர்ந்து பழனி மலையில் வந்து வீற்றிருப்பவனே!  தேவர்கள் தலைவனே!

 

கீழ் உலகங்கள்; மேல் உலகங்கள்; ஒளிவீசும் சூரிய சந்திர அக்கினியாகிய முச்சுடர்கள்; எட்டுத் திசைகளிலுமுள்ள மலைகள்; வேதங்கள்; அணுவுக்குள் இருக்கும் அணு—என்னுமாறு எங்கும் நிறைந்திருப்பதான பேருண்மை, முன்னர் நீ என்முன்னே தோன்றி உபதேசித்து அருளியதால், தோன்றவும்; அக்கணமே,

 

என் உள்ளத்தில் நிலவிய அஞ்ஞானமாகிய இருளானது அழிந்து, இனிய தமிழ்ப் பாக்களால் உன் திருப்புகழைப் பாடும் பேறுபெற்ற அடிமையாகிய நான் உன்னை மட்டுமே நம்புவேனேயல்லாமல், இந்த உலகையோ, உலக வாழ்வையோ நம்பேன்.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/sep/04/பகுதி--353-2559597.html
2559596 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 354 ஹரி கிருஷ்ணன் Saturday, September 3, 2016 05:22 PM +0530  

இந்தத் திருச்செந்தில் திருப்புகழ் பலவிதங்களில் பெயர்பெற்ற ஒன்று.  மனிதன் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய், எத்தனை கடன் வைத்திருக்கிறாய்’ என்று மொய்த்துக் கொள்ளும் மக்களும் உடலை வருத்தும் பிணியும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படுவது ஒருபுறம்.  இராமாயணக் காட்சிகளை ஆங்காங்கே சொல்லிக்கொண்டு வரும் குருநாதர், இந்தப் பாடலில் மிக அழகான இராமாயணக் காட்சியொன்றைத் தீட்டியிருக்கிறார்.  இராமனுடைய பால லீலைகளை வால்மீகியோ கம்பனோ பாடவில்லையென்றாலும்—குலசேகர ஆழ்வார் பாடியதைச் சேர்க்காமல்—அருணகிரிநாதர் இராமனை பாலருந்த அழைக்கும் கோசலையை இதில் காட்டுகிறார். 

இத்தனைத் துன்பங்களும் சேர்த்து உயிரை வருத்தி, உயிர் ஓய்ந்துபோகின்ற நேரத்தில் மயில்மீது இருந்தபடி காட்சிதந்தருள வேண்டும் என்பது பாடலின் மையக் கருத்து.  மூன்றாமடியிலிருந்து சந்தம் ஒன்றே என்றாலும் தொனி சட்டென மாறுகிறது. 

அடிக்கு ஒற்றுநீக்கி 43 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் எட்டாவது எழுத்து நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  ஒற்று சேர்த்து இரண்டாமெழுத்து மெல்லொற்று. 

தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன             தனதான

 

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை

         தந்த மசைய முதுகே வளையஇதழ்

         தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி

      தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்

         கிண்கி ணெனமு னுரையே குழறவிழி

         துஞ்சு குருடு படவே செவிடுபடு        செவியாகி

வந்த பிணியு மதிலை மிடையுமொரு

         பண்டி தனுமெ யுறுவே தனையுமிள

         மைந்த ருடமை கடனே தெனமுடுகு    துயர்மேவி

      மங்கை யழுது விழவே யமபடர்கள்

         நின்று சருவ மலமே யொழுகவுயிர் 

         மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை   வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக

         மைந்த வருக மகனே யினிவருக

         என்கண் வருக எனதா ருயிர்வருக      அபிராம

      இங்கு வருக அரசே வருகமுலை

         யுண்க வருக மலர்சூ டிடவருக

         என்று பரிவி னொடுகோ சலைபுகல     வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள

         வஞ்சி மருவு மழகா அமரர்சிறை

         சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய      அடுதீரா

      திங்க ளரவு நதிசூ டியபரமர்

         தந்தகுமர அலையே கரைபொருத

         செந்தி னகரி லினிதே மருவிவளர்      பெருமாளே.

]]>
https://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2016/sep/05/பகுதி--354-2559596.html
2555857 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 329 ஹரி கிருஷ்ணன் Wednesday, August 10, 2016 04:50 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்

 

கடியவேகம்: கடுமையான கோபம்; மாறாத விரதர்: கோபம் மாறாமல் அதையே விரதமாகக் கொண்டிருப்போர்; ஆபாதர்: கீழ்மக்கள்; வினைவேடர்: தீவினைகளையே நாடுவோர்;

கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா

 

கபட: வஞ்சக; ஈனர்: இழிந்தோர்; ஆகாத இயல்பு: ஆகாத குணங்களை; நீடு: நெடிய; கன: வலிமையுள்ள; விகாரம்: அருவருப்பான;

கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே

 

ஓராது: ஆராயாது; விரக: ஆசை; சாலமே: ஜாலமே; குடில்: உடல்;

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே

 

வாகு: புயம்;

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி

 

படி: பூமி; சேட: ஆதிசேடனுடைய; பணம்: மணியை உடையதாகிய படம்; நீடு வரை: நீண்ட, பெரிய மலை;

பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா

 

பரவை: கடல், பரந்த; ஆழி: கடல்; நிருதர்: அரக்கர்;

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே

 

வடிவு உலாவி: அழகு விளங்கி; வனச(ம்): தாமரை; வாவி: குளம்;

மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே.

 

மணிசெய்: அழகுள்ள; சிகரம்: உச்சி, மாடங்களின் உச்சி;